Search This Blog

2.7.14

பழகிய யானையாகவே இருங்கள்! - கி.வீரமணி

பழகிய யானையாகவே இருங்கள்! 


ஒரு கொள்கையை பரப்புதற்கோ அல்லது நமது கருத்துக்கு மாறானவர்களை, அவர்கள் வழி தவறானது என்று உணர்த்தி, சரியான வழிக்குக் கொணரு தல்மூலம் வெற்றியடைய வேண்டுமாயின் என்ன செய்யவேண்டும் என்ற விவாதம் கடந்த சூழியம் கலந்துரையாடலில் (30.6.2014) எழுந்தபோது, பேராசிரியரும் பெரும் பகுத்தறிவுப் புலவருமான டாக்டர் மா.நன்னன் அவர்கள் பழகியவர்களை வைத்து, பழகாதவர்களையும் பழக மறுப்பவர்களையும், நம் வயப்படுத்திட முயலவேண்டும் என்ற சிறந்த கருத்துரையைச் சொன்னார்கள்.

யானைகளைப் பிடித்தல், பழக்குதலில் கும்கி யானையை வைத்து மற்ற யானைகளைப் பிடிப்பது போலவா என்று ஒருவர் கேட்க,
உடனே பேராசிரியர் மா.நன்னன் அவர்கள், இதற்கேற்ப, இதே கருத்தை வலியுறுத்தும் திருக்குறளை உடனடியாக, கணினியைத் தட்டியதும் கிடைக்கும் விடை போல எடுத்துரைத்தார்கள்!

எத்தனையோ ஆண்டு வகுப்பு களைச் சுவையுடன் எடுத்த இலக்கியப் பேராசிரியர் அல்லவா அவர்; எனவே, இது அருவிபோல் வந்து விழுந்ததில் வியப்பே இல்லை அல்லவா?

இணைந்த செயலையும், இணைத்துக் கொண்டால் விளையும் பயனும் அதிகம் என்பதே இக்குறள்!

வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று  (குறள் 678)

இதன் பொருள்: ஒரு வினையைச் செய்யும்போதே, அதனோடு ஒத்து வரக்கூடிய மற்றொரு வினையையும் சேர்த்து செய்து முடித்துக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு செய்வது வெறிநீர் ஒழுகக்கூடிய கன்னத்தையுடைய ஒரு யானையை, மற்றொரு யானையைக் கொண்டு பிடிப்பது போன்றதாகும்!

இதன் அடிப்படைத் தத்துவம் பழகியவர்களைக் கொண்டு பழகாதவர் களைப் பக்குவப்படுத்துங்கள்.

முரட்டுத்தனமோ, வன்முறை வழியோ தீர்வினைத் தராது என்பதும்,
ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதும்கூட இதில் தொக்கி நிற்கிறது என்பது நமது கருத்து.

எப்படியெனில், வினையால் வினை ஆக்கிக் கோடல், ஒரு செயலே மற் றொரு செயலுக்கு முன்னோடி - அச் சாரம் என்பதும் சிந்தித்தால் புலப்படும்.

பல நேரங்களில் நல்ல பயன் விளை யக்கூடிய செயல்கள்கூட, செய்யக் கூடாத முறையில் செய்யத் துவங்கு வதால், வெற்றியைத் தர முடியாம லேயே, தோல்வியில் முடிந்துவிடுவது உண்டு அல்லவா?

எப்போது நிறுவனங்களிலோ, வாழ் விணையரிடமோ அல்லது தலைவர் களிடமோ அல்லது மேலாண்மையாளர் களிடமோ அவர்கள் கருத்துக்களைக் கூறும்போது, எடுத்த எடுப்பிலேயே அதனை, பட்டென்று ((Blunt ஆக) முடியாதுங்க, எப்படி முடியுங்க என்பது போன்று எடுத்தேன், கவிழ்த் தேன் பதில்களை விட்டெறியாமல், இணக்கமாக அவர்கள் வழியிலே சிறிது நேரம் உரையாடி, பிறகு மெல்ல மெல்ல அதனுள் உள்ள தொல்லைகள், அதனால் ஏற்படக்கூடிய துன்பங்கள், துயரங்கள்பற்றியெல்லாம் மென்மையான வகையில் - அதேநேரத்தில் கருத்தில் சமரசமின்றி செய்தால், வெற்றி நிச்சயம்!

எடுத்தவுடன் மறுப்போர்கூட, சிறிது நேரத்தில், நாம் சொன்ன முறையினால் ஈர்க்கப்பட்டு, சிந்தித்து, கொண்ட கருத்தை மாற்றிக் கொள்ள முயலுவார்கள் என்பது திண்ணம். பழகிய யானையாக இருப்பது நல்லது - பக்குவமான அணுகுமுறையும் அவசியம் ஆகும்.


---------------------- கி.வீரமணி  அவர்கள் எழுதி வரும் வாழ்வியல் சிந்தனைகளில் ஒரு துளி --”விடுதலை” 2-7-2014

13 comments:

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?


பாண்டிய மன்னன் குதிரை வாங்கக் கொடுத்த பொன்னைக் கொண்டு கோவில் கட் டினான் அமைச்சனான மாணிக்கவாசகன். மன் னன் சிறைப்படுத்திய தால், தன் பக்தன் மாணிக்க வாசகனின் அல்லலைப் போக்க நரிகளைப் பரி களாக்கி (குதிரைகளாக்கி) தன் சீடனைக் காப்பாற்றி னான் சிவன்; மறுபடியும் அந்தப் பரிகள், நரிகளாகி ஓலமிட்டதால், மன்னன் மாணிக்கவாசகனைத் தண்டித்தான் என்கிற ஆன்மீகம் மெச்சத் தகுந் ததுதானா? மன்னன் கட் டளையை மீறி குதிரை வாங்காமல் கோவில் கட்டியது, கடமை தவறி யது ஆகாதா? கடமை தவறியவனை சிவனாகிய கடவுள் காப்பாற்றியது எந்த வகையில் நல் லொழுக்கம்?

தன்மீது பக்தி கொண் டால் எந்தக் கயமையை யும் முட்டுக்கொடுத்துக் காப்பாற்றுபவர்தான் கடவுளா?

இதனால் நாட்டில் ஒழுக்கம் வளருமா?

Read more: http://viduthalai.in/e-paper/83265.html#ixzz36Md5gIZz

தமிழ் ஓவியா said...


கீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் மட்டுமே தீர்ப்பு!

கீழ் நீதிமன்றங்களில்
இனி தமிழில் மட்டுமே தீர்ப்பு!

உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

மதுரை, ஜூலை 2_ சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் கடந்த 1994 ஆம் ஆண்டு ஓர் சுற்றறிக்கை வெளியிட்டார். தமிழகத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் தமிழ் மட்டுமின்றி ஆங்கிலத்தி லும் தீர்ப்புகள் எழுதலாம் என அதில் கூறப்பட்டிருந் தது. பதிவாளர் ஜெனரலின் இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் சோலை சுப்ரமணியம் உயர்நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந் தார். இந்த மனுவை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை ரத்து செய்து, கீழமை நீதிமன் றங்களில் தமிழில் மட்டுமே தீர்ப்புகள் எழுத உத்தரவிட வேண்டும் எனக் கோரி வழக்குரைஞர் ரத்தினம் என்பவர் சீராய்வு மனு ஒன்றை உயர்நீதிமன்றத் தில் தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. மனுமீதான விசாரணை நேற்று மீண்டும் நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலு மணி ஆகி யோர் முன் வந்தது.

இருதரப்பு வாதம் முடிந்த நிலையில் நீதிபதி கள் பிறப்பித்த உத்தரவு:

தமிழ் ஆட்சி மொழி சட்டத்தில் 1976 ஆம் ஆண்டு இரு முக்கிய திருத்தங்கள் மேற்கொள் ளப்பட்டது. பிரிவு 4 ஏவில் உயர்நீதிமன்றத்தின் எல் லைக்கு உட்பட்ட அனைத்து உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதி மன்றங்களிலும் சாட்சி விசாரணை தமிழில்தான் நடத்தப்பட வேண்டும். தீர்ப்புகளும் தமிழில்தான் இருக்கவேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

ஆட்சி மொழி சட்டத் திருத்தத்திற்கு எதிரானது

இது அரசியல் நிர்ணய சட்டத்திற்கு எதிரானது என வழக்குரைஞர் ரங்கா என்பவர் உயர்நீதிமன்றத் தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடியானது. இதன் பின் தமிழை தாய்மொழி யாக கொண்டிராத நீதி பதிகள் தங்களுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் மூத்த நீதிபதிகள் குழு கூடி ஆங்கிலத்திலும் தீர்ப்பு எழுதலாம் என கூறியது. இது சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. இது ஆட்சி மொழி சட்டத் திருத்தத்திற்கு எதிரானது.

இதுபோன்ற சூழ்நிலை யில் சில குறிப்பிட்ட காலத்திற்கு நீதிபதிகளுக்கு விலக்கு அளிக்கலாம். இது நிரந்தரமாக இருக்கமுடி யாது. ஆனால் ஆங்கிலத் திலும் தீர்ப்பளிக்கலாம் என்ற உயர்நீதிமன்ற பதி வாளரின் உத்தரவு நிரந்தர மான ஒன்றாக உள்ளது. எனவே இதுகுறித்த பதி வாளரின் சுற்றறிக்கை ரத்து செய்யப்படுகிறது. தமிழ் மொழி தெரியாதவர்களை பொறுத்தமட்டில், தமிழ் நாடு சார்நிலை பணியாளர் நியமன விதிப்படி குறிப் பிட்ட காலத்திற்குள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் தமிழ்மொழி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பையடுத்து இனிமேல் கீழ் நீதிமன்றங்களில் தமி ழில் மட்டுமே தீர்ப்பு வழங் கப்படும் நிலை உருவாகி யுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/83266.html#ixzz36MdIKITs

தமிழ் ஓவியா said...


ஒப்பற்ற ஆயுதம்உங்கள் தனிப்பட்ட நலனை அலட்சியம் செய்வது என்கின்ற அந்த ஓர் ஒப்பற்ற ஆயுதம் அணுகுண்டையும் வெடிக்காமல் செய்துவிடும்.
_ (குடிஅரசு, 9.3.1946)

Read more: http://viduthalai.in/page-2/83287.html#ixzz36MdWR311

தமிழ் ஓவியா said...


சூரத்தில் தமிழர்கள் தாக்கப்படும் கொடுமை!


குஜராத் மாநிலம் சூரத்தில் நெல்லை, தூத்துக்குடி, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த தமிழர்கள் பத்து ஆண்டுகளுக்குமுன் பிழைக்கப் போனார்கள். அங்கு நடைப் பாதைகளில் தள்ளுவண்டி இட்லிக் கடை களும், தேநீர்க் கடைகளும் வைத்துப் பிழைப்பை நடத்தி வருகின்றனர்.

அந்தப் பகுதியில் உள்ள பிரபல தாதா பூபேந்திர பாய் என்பவன் (பி.ஜே.பி.க்காரர்) நாள்தோறும் வந்து நடைப்பாதைகளில் கடை வைத்துள்ளவர்களிடம் மாமூல் வசூல் செய்வது வழக்கம். அவன் கேட்கும் பணத்தைக் கொடுத்தே தீரவேண்டும்; இல்லா விட்டால், அவன் வசம் உள்ள அடியாட்கள் வன்முறைகளில் இறங்கி விடுவார்கள். அதற்குப் பயந்து கேட்டதைக் கொடுத்து விடுவார்கள். (இதுதான் குஜராத் மாடல் போலும்!).

ஒரு நாள் நடைப்பாதைக் கடை வைத்துள்ளவர் களிடையே சிறு சச்சரவு. அப்பொழுது அங்கு வந்த அந்தப் பூபந்திரபாய் அதில் தலையிட்டான்.

எங்கள் பிரச்சினையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீ ஒன்றும் தலையிடவேண்டாம் என்று சொன்னதற்காக அந்தத் தமிழர்களை தனது ஆட்களை ஏவி கடுமையாகத் தாக்கி இருக்கிறான். தள்ளுவண்டிகளையும் தள்ளிக் கொண்டு போயிருக் கிறான்.

தங்கள் பொருள்களைக் கேட்கச் சென்ற தமிழர்களை மீண்டும் தாக்கி இருக்கின்றனர். இந்த நிகழ்வு நடந்த மறுநாள் அந்த பூபேந்திரபாய் கொல்லப்பட்டான். சூரத் நகர மேயர் அந்த ரவுடிக்குச் சொந்தக்காரர்.

இந்த நிலையில் தமிழர்கள்தான், பூபேந்திரபாய் என்ற அந்தப் பி.ஜே.பி.க்காரரைக் கொன்றதாகக் கிளப்பி விட்டார்கள்; விளைவு எங்கெங்கு தமிழர்கள் வாழ்ந்தார்களோ, அவர்களை எல்லாம் கடுமையாகத் தாக்க ஆரம்பித்தனர். உயிருக்குப் பயந்து பொருள்களைக்கூட விட்டுவிட்டு ஓடி விட்டார்கள்.

இந்த நிலையில், குருசாமி, ஆறுமுகச்செல்வன், ராஜா ஆகிய மூன்று தமிழர்கள் சேலம் நீதி மன்றத்தில் சரணடைந்துள்ளனர் (23.6.2014).

சூரத்தில் வாழும் தமிழர்களின் நலன் கருதி வழக்குரைஞர்களின் அறிவுரைப்படி சரணடைந் ததாக இம்மூவரும் தெரிவித்துள்ளனர். சூரத் பகுதியில் வாழும் தமிழர்கள் இன்னும் அச்சத்தின் பிடியிலிருந்து விலக முடியாத சூழல்!

வடமாநிலத்துக்காரர்கள், தமிழ்நாட்டில் ஏராளம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள். சென்னை மற்றும் அதனைச் சுற்றிலும் வடநாட்டுக்காரர்கள் ஏராளம் பேர் வேலை பார்த்து வருகின்றனர். உணவு விடுதி களில் எல்லாம் பரவலாகக் காணப்படுகிறார்கள்!

வங்கிக் கொள்ளை, பாலியல் வன்முறை உள்பட பல்வேறு குற்றங்களில் அவர்களில் சிலர் ஈடு பட்டார்கள் என்பதற்காக வடநாட்டுக்காரர்களைத் தமிழ்நாட்டுக்காரர்கள் சென்று தாக்குவதில்லை. வட இந்தியர்களுக்கு எதிராக வன்முறைகளிலும் ஈடுபட்டதில்லை.

தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் பெருந்தொழில்களில் மார்வாடிகள், குஜராத்திகள்தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அவர்கள் குடி யிருக்கும் பல அடுக்கு மாடிகளில் மற்றவர்களுக்கு இடம் கொடுப்பதும் கிடையாது.

எழும்பூர் போன்ற பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினரைத் தேர்வு செய்வதில் அவர்கள் எண்ணிக்கைதான் முக்கியமானதாக இருக்கிறது. என்றாலும், எந்தப் பிரச்சினையும் இன்றி, அமைதி யான சூழல்தான் இங்கு நிலவி வருகிறது.

அதேநேரத்தில், ஒரு பேட்டை ரவுடி கொல்லப் பட்டான் என்பதற்காக, தமிழர்கள் அடித்து நொறுக் கப்படுகிறார்கள் - விரட்டப்படுகிறார்கள் என்றால், அதன் விளைவு வேறு வகையாக திரும்பிவிடாதா?

அந்த ரவுடி பி.ஜே.பி.யைச் சார்ந்தவன் என்பதற்காக அரசும், காவல்துறையும் அதீதமாக நடந்துகொள்வதாகத் தெரிகிறது. இந்த நிலை தொடரக்கூடாது.
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டனையை அனுபவிக்கட்டும். அதில் ஒன்றும் அட்டியில்லை. அதற்காக ஒட்டுமொத்த தமிழர் களையே அடித்து விரட்டுவது என்றால், அதைக் கேட்டு வாளாயிருந்து விடவும் முடியாது.

தமிழ்நாடு அரசும் இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்தி, குஜராத் அரசுடன் தொடர்புகொண்டு, குஜராத்தில், குறிப்பாக சூரத்தில் வாழும் தமிழர் களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திட வழி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டு மக்கள் மற்ற பகுதிகளில் தாக்கப்படுகிறார்கள் என்பது வேதனைக்குரியதாகும். இந்த நிலை தொடரக்கூடாது. தேசியம்பற்றிப் பேசும் அரசியல் கட்சிகளும் இதில் கவனம் செலுத்தட்டும்!

Read more: http://viduthalai.in/page-2/83289.html#ixzz36MdeNjKW

தமிழ் ஓவியா said...


குற்றாலம் பெரியாரியல் பயிற்சி முகாமில் சா.கணேசன் அவர்களின் மலரும் நினைவுகள்


குற்றாலம் பெரியாரியல் பயிற்சி முகாம் நான்கு நாட்கள் நடைபெற்றது முதல் நாள் நிகழ்ச்சியில் (26.6.2014) கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகி யோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் சா.கணேசன் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு: இந்த அரிய நிகழ்ச்சியில் பேசுகின்ற வாய்ப்பை பெற்றமைக்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கே இந்த அரங்கத்தில் இளைஞர்களை, மாணவர்களைப் பார்க்கின்றேன். பெரியாரியல் அறிந்து, ஏற்று இந்தத் தமிழ்ச் சமுதாயத்துக்குத் தொண்டாற்ற முனைகின்ற உங்களுக்கு எனது பாராட்டையும், வாழ்த்தையும் தெரி வித்துக்கொள்கிறேன்.

மூடநம்பிக்கை ஒழிப்பும், பகுத் தறிவுப் பரப்பலும் அறிவியலை நோக்கி, தந்தை பெரியாரின் இலட்சி யத்தை முன்னெடுத்துச் செல்லுகின்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஏனெனில் 37 ஆண்டுகளாக இப் பயிற்சி முகாமினைத்தொடர்ந்து தொய்வில்லாமல் ஆண்டு தோறும் நடத்தி வரும் அரும் பெருமையை, கடமையை எண்ணி இலட்சக்கணக் கான தமிழர்கள் தமிழர் தலைவரைப் பாராட்டுவதை எண்ணிப் பார்க்கிறேன். பரவசம் அடைகிறேன். ஏனெனில் அரசியல் பதவியோ அதன் மூலமாக பொருளீட்டலும் உள்ள தமிழகக் களத்தில் எந்தப் பயனையும் எதிர்பார்க் காமல் நாள் தோறும் நாடெங்கும் சுற்றிச் சுழன்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் கருத்தை மேடை தோறும் முழங்கிவருவதும் விடுதலை நாளேட்டின் மூலம் எழுதி பரப்பி வருவது தமிழர் தலைவரின் தன்னலங் கருதாத் தொண்டாகும்.
தமிழகத்தில் பகுத்தறிவுப் பார்வையில் விடுதலை நாளேட்டை மக்களுக்குத் தேவையான நல்ல செய்திகளையும் குறிப்பாக வாழ்வியல் சிந்தனையும் அனைத்து மக்களும் ஏற்கின்ற வகையில், பொது நாளேடாக பல வண்ணங்களில் தமிழர்களின் கைகளில் தவழ்ந்து வருவதை பார்க்க வியப்பாக உள்ளது. பெருமகிழ்ச்சியாக உள்ளது. நானும் விடுதலை ஏட்டினைத் தொடர்ந்து படித்துவருபவர்களில் ஒருவனாவேன். மாணவர்களாகிய, இளைஞர்களாகிய உங்களைப் பார்க்கின்றபோது எனது இளமைக்கால நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன.

காலத்தின் அருமை கருதி ஒரு சம்பவத்தை மட்டும் இங்கே எடுத்துக் கூற விரும்புகிறேன்.

1948 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தமிழக அரசு கட்டாய இந்தியைப் புகுத் தியது. பள்ளிகளில் மாணவர்கள் இந்தி யைக் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்று ஆணை.

அரசின் ஆணை தமிழகத்தில் அதிர்வை ஏற்படுத்தியது. தமிழறிஞர் கள் ஒன்று கூடினர். தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் தலைமையில் தமிழ்த் தென்றல் திருவிக, நாவலர், சோமசுந்தர பாரதியார், பேராசிரியர் இலக்குவனார் போன்றோர் ஒன்று கூடினர் இந்தியை எதிர்த்து போராட் டம் நடத்த முடிவு செய்தனர்.

தந்தை பெரியார் விடுதலை ஏட் டின் மூலம் கட்டாய இந்தியை திரும் பப்பெற வேண்டும் என்று அறிக்கை விடுத்தார். பள்ளிகளின் முன்பு இந் தியை ஒழிக்கும் மறியல் நடத்தப்படும் என்றும் அறிஞர் அண்ணா அவர்கள் இந்தப்போராட்டத்திற்கு முதல் சர்வாதிகாரியாக செயல்படுவார் என்று அறிவித்துப்போராட்டத்தை தொடங் கினார்.

சென்னையில் தொண்டை மண்டல துளுவ வேளாளர் பள்ளி இந்து தியாலாஜிகல் பள்ளி, முத்தி யாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளின் முன்பு மறியல் தொடங்கியது.

தங்க சாலையிலுள்ள தொமதுவே பள்ளியில் படித்த நானும், த.கு.முரு கேசன், து.இராமலிங்கம், விசு கிருஷ்ண மூர்த்தி மற்றும் சில மாணவர்கள் முன்னின்று மறியல் போராட்டக்காரர் களை வரவேற்று மாலையிட்டு நாங்களும் மறியலில் பங்கு பெற்றோம்.

எல்லாப் பள்ளிகளிலும் மறியல் தொடர்ந்தது. தமிழகமே கொந் தளித்தது. சென்னை சிவஞானம் பூங் காவில் அண்ணா அவர்கள் உரை யாற்றி மறியலில் கலந்து கொள்ளும் தொண்டர்களை ஊக்கப்படுத்துவார். அவரது உரை தொண்டர்களை வீறு கொள்ளச்செய்தது. என்.வி.நடராசன் அவர்களும் உடன் இருப்பார்.

தந்தை பெரியாரின் பேச்சும், எழுத் தும் தமிழர்களைத் தட்டி எழுப்பியது. தமிழகமே இந்தி மொழிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தது. நாடு முழுவதும் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல மறுத் தனர். மக்களும், அரசின் மொழிக் கொள்கையை கடுமையாக எதிர்த் தனர்.

தந்தை பெரியாரின் தலைமையில் மக்கள் போராட்டத்தில் இறங்கியதால் தமிழக அரசு பணிந்தது.

கட்டாய இந்தி திரும்பப்பெறப்பட் டது. தந்தை பெரியார் இந்தியை எதிர்த்து நடத்திய இரண்டாவது போரிலும் வெற்றி பெற்றார். மாணவர் களும் மக்களும் பெரியாரின் தலைமை யால் வெற்றி பெற்றதை உணர்ந்தனர். அவரைப் பாராட்டினர். அவர் வழி நடக்க மேலும் ஆயிரக்கணக்கில் மக்கள், திராவிடர் கழகத்தில் இணைந் தனர்.

மேலும் சம்பவங்களைக் கூற நேர மில்லாத காரணத்தால் எனது உரையை நிறைவு செய்கிறேன் வணக்கம் என்று கூறி முடித்தார்.

Read more: http://viduthalai.in/page-2/83294.html#ixzz36MeCwLhS

தமிழ் ஓவியா said...


அட, காட்டு விலங்காண்டிகளே! காளி கோவிலுக்குள் இளம் பெண் பலி!


திந்தோரி (மபி) ஜூலை 2_ மத்தியபிரதேசம் திந்தோரி மாவட்டம் குர்னா கிராமத் தில் உள்ள காளி கோவில் பூசாரி இளம்பெண்ணைக் கொலை செய்து காளி கோவில் நகை மற்றும் பணத்தைக் கொள்ளைய டித்து தப்பி ஓட்டம் மத் தியப்பிரதேசம் திந்தோரி மாவட்டத்தில் உள்ளது குர்னா கிராமம்.

இந்த கிரா மத்தில் மிகவும் பழமை வாய்ந்த காளி(ப்ஹகுல முகி) கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு இமயமலையில் இருந்து தவமிருந்து கடவுள் அருள் பெற்று வந்ததாகக் கூறி ஒரு சாமியார் ஒருவர் வருகை புரிந்தார். தனது பெயரை சத்யானந்தா என் கூறிக்கொண்டு சுற்றிலும் உள்ள ஊர்களுக்கு சென்று அங்குள்ள கோவில்களில் பூசை செய்வார்.

பிறகு இதே கோவிலுக்கு வந்து தங்கிவிடுவார். ஊர்க் காரர்களும் சாமியாருக்கு சகலவசதிகளையும் செய்து அங்கேயே தங்குவதற்கு உறைவிடமும் கட்டித்தந் தனர். தோசம் கழிப்பது, செய் வினை எடுப்பது, மந்திரம் செய்வது என பல்வேறு வித தந்திரவித்தைகளால் மக்களை ஏமாற்றி தன் வசப்படித்தினார்.

பழமை வாய்ந்த கோவிலாகையால் பலர் கோவிலுக்கு காணிக் கையாக தங்க நகைகளை வழங்கினர். இந்த நிலை யில் கோவிலுக்கு குட முழுக்கு செய்யவேண்டும் எனக்கூறி மக்களிடம் பண மாக சேகரிக்கத்துவங் கினார். தான் தனிமையில் கோவில் பணிசெய்ய சிர மப்படுவதாகவும் தனக்குத் துணையாக ஒரு பெண் சீடர் ஒருவர் தேவை என்று கூறினார்.

இதனை அடுத்து அந்த கிராமத்தில் வாழ்ந்த பழங்குடியினப் பெண்ணான மஞ்சு சியாம் வயது (24) என்பவரை அந்த சாமியாருக்கு சீஷ்யாக பணிபுரிய ஊரார் வற்புறுத் தினர். மஞ்சு சிங்கின் குடும்பம் மிகவும் வறுமையில் இருந் ததால் அந்தப்பெண்ணின் பெற்றோரும் இதற்கு ஒப் புக்கொண்டனர். கடந்த ஜனவரிமாதம் மஞ்சு சிங் சாமியாரிடம் தீட்சிதை பெற்று சாமியாரினியாகி விட்டார். இந்த நிலையில் மஞ்சு சிங்கிற்காக சேர்த்து வைத்த நகையையும் அவ ரிடமே அவரது பெற்றோர் சமீபத்தில் கொடுத்துவிட் டனர்.

சில நாட்களுக்கு முன்பு குடமுழுக்குக்கு செய்வதற்காக முன்பணம் தரவேண்டும் பூசைச் சாமான்கள் எல்லாம் வாங்கவேண்டும் என்று கூறி மக்கள் கொடுத்த பணம் அத்தனையும் வங் கியில் இருந்து சத்யானந் தன் எடுத்துக்கொண்டார். கடந்த சனிக்கிழமை தனது மகளைப்பார்க்க கோவிலுக்கு சென்ற மஞ்சுவின் தந்தை கோவில் வெளிவரை ரத்தம் வழிந் திருப்பதை கண்டு திடுக் கிட்டார்.

இதனை அடுத்து ஊராரை அழைத்துக் கொண்டு கோவிலுக்குள் சென்ற போது அந்தப் பெண்ணின் தலை தனியாக துண்டிக்கப்பட்டு காளிதேவியின் காலடியில் கிடந்தது காளிதேவி சிலை யின் முன்பு உடல் கயிரால் கட்டப்பட்ட நிலையில் கிடந்தது. இளம்பெண் கொலை செய்யப்பட்ட தக வல் கிடைத்ததும் திந்தோரி மாவட்ட ஆணையர் அஸ்ரய் சவுபே நேரில் சென்று சம்பவத்தை பார் வையிட்டார். பிறகு இந்தக் கொலை குறித்து பத்திரிகை யாளர்களிடம் பேசும் போது பெண் கட்டி வைத்து கொல்லப்பட்டு உள்ளார்.

உடலிலும் பல பாகங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்தது, போஸ்ட்மார்டம் ரிப் போர்ட் வந்த பிறகு மேலும் பல தகவல்கள் கிடைக்கும். கொலை வெள்ளி இரவு நடந்து இருக்கலாம் என்று தெரி கிறது, காரணம் வெள்ளிக் கிழமை பலர் கோவிலுக்கு வந்து சென்றிருக்கின்றனர். மேலும் கோவிலில் உள்ள நகை பணம் எது வும் காணவில்லை, அதே போல் சமீபத்தில் தான் பெண்ணின் தந்தையும் பெண்ணிற்கான நகை களை கொலைகாரனிடம் ஒப்படைத்து உள்ளார்.

கொலை நோக்கம் நகைகள் மற்றும் பணத்தைக் கொள் ளையடிப்பதற்காக இருக் கலாம். சாமியார் குறித்த விவரங்களை நாங்கள் சேகரித்துகொண்டு இருக் கிறோம், கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயு தம் இங்கு தான் எங்காவது புதைத்து வைத்திருக்கக் கூடும் என்று தெரிகிறது. விரைவில் கொலைகா ரனை கண்டுபிடித்து கைது செய்வோம் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/83305.html#ixzz36MetWQoF

தமிழ் ஓவியா said...


சுகவாசி


திருப்பதி ஏழுமலை யானைத் தரிசிக்க தன் மனைவியுடன் சென்றார் சென்னையைச் சேர்ந்த பக்தர் முத்து கிருஷ்ணன்.

தமிழ்நாடு சுற்றுலாத் துறை மூலம் முன்பதிவு செய்து கொண்டு தன் பயணத்தைத் தொடங்கி னார். திரும்பும்போது ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்து சொகுசாக இல்லை. இந்த நிலையில் நுகர்வோர் நீதிமன்றத் தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

சுவாமி தரிசனத்துக் காகத் தானே சென் றீர்கள்? - அப்படி இருக்கும்போது சொகுசு பேருந்து தேவையா? என்று மாநில நுகர்வோர் தீர்ப்பாய நீதிபதி வழக் குத் தொடுத்தவரைப் பார்த்து கேள்வி ஒன் றைத் தூக்கிப் போட்டார்.

இந்தச் சேதி இன்று வெளிவந்த அதே தின மலர் ஏட்டின் (பக்கம் 7) இரண்டாம் பக்கத்தில் இன்னொரு தகவலும் வெளி வந்துள்ளது . தலைப்பு: காசிக்கு ஏசி என்பதாகும். உள்ளே சேதி என்ன தெரியுமா? ஆடி அமாவாசை தினத் தன்று வடக்கே காசி விசு வநாதன் கோயிலுக்குச் சென்று தரிசித்தால் புண்ணியமாம்.
அதற்காக இரயில்வே துறை ஒரு ஏற்பாட் டினைச் செய்துள்ளது. வரும் 23ஆம் தேதி பெங்களூருவிலிருந்து காசிக்கு முழுக்க குளிர் சாதன வசதி (ஏ.சி.) செய்யப்பட்ட சிறப்பு சொகுசு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுவாமிதரிசனம் செல்லுபவர்கள் சொகுசு களைத் தேடி அலைய லாமா என்று மாநில நுகர்வோர் தீர்ப்பாயம் கேட்கும் கேள்வி, காசிக்கு ஏசி ரயிலில் பயணம் செய்பவர்களுக்கும் பொருந்துமா? பொருந்தாதா?

இன்னொரு கேள்வியையும் பக்தர்கள் நீதிபதியைப் பார்த்துக் கேட்கலாமே! திருப்பதி ஏழுமலையானே இப் பொழுது குளுகுளு வசதி (ஏசி) செய்யப்பட்டுள்ள இடத்தில்தான் இருக் கிறார். கர்ப்பக்கிரகம் முழுவதும் அந்தவசதி செய்யப்பட்டுள்ளது.

ஏழுமலையான் சிலைக்கு வியர்க்குமா? புழுக்கம் இருக்குமா? எதற்கு ஏசி என்று அதிகப் பிரசங்கித்தன மாக யாரும் கேள்வி கேட்கக் கூடாது; கார ணம் இது பகவான் சம் பந்தப்பட்ட சமாச்சார மாயிற்றே!

ஆனால் , இதற்கு உள் நோக்கம் ஒன்று உண்டு கோயில் கர்ப்பக் கிரகத்தில் பக்தியின் பெயரால் தீவிர சுரண் டல் தொழிலில் ஈடுபட் டுக் கொண்டிருக்கும் அர்ச்சகர்ப் பார்ப்பனர் களுக்குக் குளு குளு ஏசி வசதி தேவைப்படுகிறதே - அது புரியாமல் சாமிக்கு வியர்க்குமா? புழுங்குமா என்ற கேள்விகளைக் கேட்கலாமா?

கொசுறு: கால்நடை யாக (நடந்து) செல்ல வேண்டிய சங்கராச்சாரி களே ஏசி கார்களிலும் விமானத்திலும் அல்லவா பறக்கிறார்கள்!

- மயிலாடன்

Read more: http://www.viduthalai.in/e-paper/83329.html#ixzz36STHwUYP

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?


கண்ணன்

சின்ன வயதில் வெண்ணெய்யைத் திருடினான், வாலிப வயதில் பெண்ணைத் திருடினான் கண்ணன் என்பது பின்பற்றத் தகுந்ததுதானா? இத்தகையவன் வழிபடத்தக்கவன் தானா?

Read more: http://www.viduthalai.in/e-paper/83332.html#ixzz36STaiip3

தமிழ் ஓவியா said...


என்ன படிக்கலாம்?


ஆசிரியருக்குக் கடிதம் >>>

என்ன படிக்கலாம்?

சென்னை சன் தொலைக்காட்சியின் என்ன படிக்கலாம் என்னும் நிகழ்ச்சி 29.6.2014 அன்று ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியினை பல லட்சம் நேயர்கள் கேள்வி கேட்டு உரிய கருத்தினை பகிர்ந்தமையை நானும் நண்பர்களும் பார்த்து மகிழ்ந்தோம்.

பல லட்சம் மாணவர் மாணவியர்கள் கடுமையான உழைப்பின் அடிப்படையில் பள்ளித் தேர்வினை முடித்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உயர்க்கல்வியை நோக்கி பயணிக்கின்ற அரிய நேரத்தில், அதாவது திசை தெரியாமல் புலம் விளங்காது படகில் தப்பி கரை ஏறுபவர்களுக்கு கலங்கரை விளக்கமாய் அமைந்தது என்ன படிக்கலாம் நிகழ்ச்சி.

என்னதான் குடும்ப பின்னணியும் உற்றார் உறவினர்களின் வழிகாட்டல் இருந்தாலும் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இமய வளர்ச்சி காணும் அறிவியல் உலகில் கல்வித்துறையில் ஆய்ந்து தோய்ந்து வழிகாட்டிகள் அமைவது அரிதிலும் அரிதாகும். இந்த வகையில் அனைத்துக் கல்வி சார்ந்த தகவல்களை விரல் நுனியில் வைத்துக்கொண்டு, நேயர்களும் மாணவ, மாணவியர்கள் உயர்கல்வியில் சேர கேட்கின்ற கேள்விகளுக்கு அதற்கான வழிகாட்டலை எவ்வித மனச்சலிப்பும் அலுப்பும் கொள்ளாமல், தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் முனைவர் நல்.இராமச் சந்திரன் அவர்கள் தன்னம்பிக்கையையும், விடா முயற்சியையும் ஊட்டி விடையளித் தமைக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகளை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கின்றேன்.

கடந்த அய்ந்தாயிரம் ஆண்டுகளாய் எந்தவித அறிவியல் முன்னேற்றமும், கல்வி யறிவு அற்ற சமுதாயமாக மிகப்பெரும் பான்மையினர் இருந்த காலம், சமுதாய விடிவெள்ளி தந்தை பெரியார் போன்ற மேதைகளால் மாற்றியமைக்கப்பட்டு மிகச்சாதாரண குடும்ப மாணவ, மாணவியர்களும் கல்வி பயின்று மிக உயர்ந்த பதவிகளிலும், நீதிவேந்தர்களாகவும், மாவட்ட ஆட்சியாளராகவும், அறிவியல் கண்டுபிடிப்பாளர்களாக விளங்குவதை இன்று நாம் காணும்போது மட்டிலா மகிழ்வும் பெரியார் கண்ட சமுதாய பெரும் விளைச்சல் வெற்றி பெற்றுள்ளது.

வாழ்கின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடம் என்கிறார் ஓர் சூரியக்கவிஞர். இதனை மெய்ப்பிக்கும் வகையில் துணை வேந்தர் அவர்கள் வாழ்வில் முன்னேற படிக்க வழி கேட்கும் இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டியாய் அமைந்திருந்த இந்நிகழ்ச்சி பலவாறு பாராட்டப்பட வேண்டும்.

நான் முற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவன். எனது மகனுக்கு குறிப்பிட்டக் கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கவில்லை என்றால் வேறு கல்லூரியை சொல்லுங்கள் என ஒரு பெற்றோர் கேட்கும் கேள்வி, மிகத்தெளிவாக இந்த இடத்தில் இருந்து கொண்டு ஒரு கல்லூரியை மட்டும் கூறுவது நல்லதல்ல. கட்டாயம் உங்களது மகனின் மதிப்பெண் அடிப்படையில் இடம் கிடைக்க வாய்ப்பு கிடைக்கும். எப்போது இரண்டாவதாக ஒரு கல்லூரியை தேர்ந்தெடுக்க முற்பட வேண்டும் என்று நடுநாயகமாக கூறிய கருத்து மிகவும் போற்றப்பட வேண்டியதாகும்.

அறிவாசான் தந்தை பெரியார் அவர் களாலும், இனமானத்தை போற்றிக்காக்கும் தமிழர் தலைவர் அய்யா கி.வீரமணி அவர்களின் சமூக நீதியையும், சமூக முன்னேற்றத்தினை மனதில் கொண்டு மிகப்பெரிய பல்கலைக்கழகத்தினை நிர் வகிக்கும் தங்களையும் காலத்தின் அருமைக்கருதி என்ன படிக்கலாம் எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சன் தொலைக்காட்சியை உளமார பாராட்டி மகிழ்கின்றோம்.

- மு. சானகிராமன் தலைவர்

(கர்நாடக மாநில திராவிடர் கழகம்)

Read more: http://www.viduthalai.in/page-2/83350.html#ixzz36SUK5uvC

தமிழ் ஓவியா said...


சூழ்ச்சியே இது!உண்மையான தகுதியும், திறமையும் கெட்டு ஒருவனை ஒருவன் கீழ்ப்படுத்துவதற்குச் சாதனம் எதுவோ அதுதான் இன்று தகுதி - திறமை ஆக்கப் பட்டு வருகிறது. கீழ்ச்சாதி ஆக்கப்பட்ட மக்களைக் கீழ் நிலையிலேயே நிரந்தரமாக இருத்தி வைக்கும் சூழ்ச்சியே இது. (விடுதலை, 28.10.1967)

Read more: http://www.viduthalai.in/page-2/83340.html#ixzz36SUTFCNN

தமிழ் ஓவியா said...


கச்சத்தீவு: இந்தியா- இலங்கை இடையே ஒப்பந்தமே இல்லையாம்!


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய வெளியுறவு அமைச்சகம் பதில்

கோவை, ஜூலை 3_ கச்சத்தீவில் மீன் பிடிப்பது தொடர்பாக இந்தியா மற்றும் இலங்கை இடை யே எந்த ஒரு ஒப்பந்தமும் இல்லை என்று மத்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவலை மய்யப் படுத்தி போராட்டத்தை தீவிரப்படுத்த மீனவ நல அமைப்புகள் முடிவெடுத் துள்ளன.

கச்சத்தீவை மீட்டு, அங்கு தமிழக மீனவர் களுக்கு மீன் பிடி உரிமை கள் வழங்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரப்பட்டு வருகிறது. தமிழக அரசியல் கட்சி களும் தொடர்ந்து இதை வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக பீட்டர் ராயன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் இந்தியா_இலங்கை இடையிலான 1974ஆ-ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க உரிமை இல்லை என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, கோவை யைச் சேர்ந்த சமூக சேவகர் எம்.சஞ்சய் காந்தி, மத்திய வெளியுறவு அமைச்சகத்தில் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ஒரு பதிலைப் பெற்றுள் ளார். இலங்கைக்கான இந்திய வெளியுறவு அமைச் சக துணைச் செயலாளர் மாயங்க் ஜோஷி கையெழுத் திட்டு அளித்துள்ள அந்த பதிலில், தற்போதைய அரசு ஆவணங்களின்படி, இந்தியா_இலங்கை இடையில் கச்சத்தீவு தொடர்பாக எந்த ஒப்பந்த மும் இல்லை. அதேநேரம் இரு நாடு களுக்கு இடை யிலான கடல் நீர் எல்லை தொடர்பாக மட்டும் ஒப் பந்தம் உள்ளது என்று குறிப்பிடப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோ பரில் இந்த பதில் வெளி யுறவுத் துறை மூலம் அளிக் கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல் மீனவர் கள் மற்றும் கச்சத்தீவு மீட்பு இயக்கத்தினருக்கு அதிர்ச்சி தருவதாக உள்ளது. இதுகுறித்து சமூக சேவகர் சஞ்சய் காந்தி கூறும்போது, கச்சத்தீவு ஒப்பந்தத்தின் நகல் வேண்டும் என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் மத்திய வெளி யுறவுத் துறையிடம் கேட் டேன். அவர்கள் அப்படி ஒரு விண்ணப்பமே இல்லை என்று பதில் அளித்துள்ள னர். எனவே, இல்லாத ஒப்பந்தத்தை இருப்பதாகக் கூறி தமிழக மக்களை ஏமாற்றும் வேலை நடக் கிறது. கடல் நீர் எல்லை தொடர்பான வரையறை யிலும், இரு நாடுகளிடை யே எந்தவிதமான அரசு முத்திரையோ, நாடாளு மன்ற அனுமதியோ, அரசு அதிகாரிகளின் கையெழுத் தோ இல்லை. எனவே, வெறும் வெற்றுத் தாளை ஒப்பந்தம் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ளக் கூடிய தாக இல்லை என்றார்.

சமூக நல அமைப்பு...

கச்சத்தீவு மீட்பு போராட்டங்களை நடத்தி வரும் தூத்துக்குடி வீராங் கனை சமூக நல அமைப் பின் தலைவர் பாத்திமா பாபு, கூறும்போது, மத்திய வெளியுறவுத் துறையின் இந்தத் தகவல் அதிர்ச் சியளிப்பதாக உள்ளது. வெற்றுத்தாளை எப்படி ஒப்பந்தமாக ஏற்க முடி யும். அதுவும் மீன் பிடிப்பது தொடர்பாகவே, தீவு யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாகவோ எந்தவித மான திட்டவட்ட வரைய றையும் இதுவரை இல்லை என்பதே எங்களுக்கு பெரிய ஆவணமாக உள்ளது. எனவே, மத்திய வெளி யுறவுத் துறையின் தகவலை மய்யமாக வைத்து, சட்ட ரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் அனைத்து அமைப்புகளுடன் சேர்ந்து போராட முடிவு செய்துள் ளோம் என்றார்.

மத்திய அரசு வெளி யிட்டுள்ள ஆவணத்தில், 1974-ஆம் ஆண்டு ஜூன் 26 மற்றும் 28ஆ-ம் தேதியில் ஒப்புக்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ள வரையறை பிரிவு அய்ந்தில், கச்சத் தீவுக்கு தமிழக மீனவர்கள் மற்றும் பக்தர் கள் சென்று வரலாம். இதற்கு இலங்கை அரசிடம் விசா போன்ற போக்குவரத்து ஆவணங் கள் எதுவும் பெறத் தேவை யில்லை. ஒவ்வொருவரின் கடல் பகுதியிலும், இரு நாட்டு பாரம்பரிய நீர் வழி கலங்கள் இயங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கச்சத்தீவு மீட்புக்குழு முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீதை யின் மைந்தன் கூறியதாவது:

இரு நாடுகளுக்கிடையே பாரம்பரிய நீர் வழிப் பகுதிகள் குறித்து எல்லை வரையறுத்ததில், நியாய மான முறை பின்பற்றப்பட வில்லை. இந்தியாவுக்கு 18 கி.மீ, வரை நீர் எல்லை வகுத்துவிட்டு, இலங்கைக்கு 22 கி.மீ. வரை வகுத்துள் ளனர். சர்வதேச நீர் எல்லை விதிகளின்படி, இந்தியாவுக்கு 20 கி.மீ. என்று குறிப்பிட்டிருந்தால், கச்சத்தீவு சொந்தமா, இல்லையா என்ற கேள்வி யே எழுந்திருக்காது.

மேலும் பாரம்பரிய நீர் எல்லை வரையறை ஒப்பந் தத்திலும், இரு நாட்டு நீர் வழிக் கலன்கள் (ஊர்திகள்) இயங்கலாம்; நீர் வழி உரிமைகளும் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒப்பந்தப் படியே மீன் பிடிக்கும் உரிமை, வலை காயவைக்கும் உரிமை அனைத்தும் இந்தியாவுக்கு உள்ளது என்றார்.

Read more: http://www.viduthalai.in/page-3/83364.html#ixzz36SUn4J7Y

தமிழ் ஓவியா said...


அடடே, கண்டுபிடித்துவிட்டாரே காரணத்தை! நாயுடு பொறுப்பேற்ற நேரம் சரியில்லையாம்! கூறுகிறார் சாரதா பீடம் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி


அய்தராபாத், ஜூலை 3_ தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின் உள்ள, ஆந்திர மாநில முதல்வர், சந்திரபாபு நாயுடு பதவி யேற்ற நேரம் சரியில்லை என்பதால் தான், அம் மாநிலத்தில் தொடர்ந்து சோக சம்பவங்கள் நடக் கின்றன என, சாரதா பீடத்தின் சுவாமி ஸ்வரூ பானந்த சரஸ்வதி கூறி யுள்ளாராம்.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர், சந்திர பாபு நாயுடு, சீமாந்திரா என அழைக்கப்பட உள்ள, தெலங்கானா மாநிலம் தவிர்த்து பிற பகுதியின் முதல்வராக, கடந்த மாதம் 8 இல், பொறுப்பேற்றார். தேர்தல் முடிவுகள் வெளி யாகி, 20 நாள்களுக்குப் பின், ஜூன் 8, இரவு 7:27 மணிக்கு, குண்டூர் மாவட் டத்தின் மங்களகிரி என்ற இடத்தில் பொறுப்பேற்றார்.

இதுகுறித்து, விசாகப் பட்டினம் அருகே உள்ள பெண்டுருத்தி என்ற இடத்தில் உள்ள, சாரதா பீடத்தின் சுவாமி, ஸ்வரூ பானந்த சரஸ்வதி கூறிய தாவது:

முதல்வர், நாயுடு பொறுப்பேற்ற நேரம் சரியில்லை. மன்னர்கள் முடிசூடும் நாள், மங்கள கரமான நாளாகவும், முன்னேற்றம் தரும் நாளா கவும் இருக்க வேண்டியது அவசியம். ஆனால், அதை கவனிக்காமல், 8 ஆம் தேதி பொறுப்பேற்றார்; அது மட்டுமின்றி, இரவு, 7 மணிக்கு மேல் பொறுப் பேற்றுள்ளார்.

இது போன்ற முக்கிய பொறுப்பு ஏற்பவர்கள், சூரியன் உலா வரும் காலத்தில் பதவியேற்க வேண்டும். சந்திரன் பார் வையுள்ள இரவு நேரத் தில் பதவியேற்கக் கூடாது. மேலும், நீண்ட தாமதத் திற்கு பின், முதல்வராகி யுள்ளார்.

அதனால் தான், பியாஸ் நதியில் ஆந்திர மாணவர்கள், 25 பேர் இறந்தனர்; விசாகப்பட்டி னம் ஸ்டீல் தொழிற் சாலையில் விபத்து ஏற் பட்டது; கிழக்கு கோதா வரியில், காஸ் பைப் உடைந்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மேலும், நாயுடு பொறுப் பேற்ற நாள் முதல், ஆந்திராவில் மழையே பெய்யவில்லை. இதனால், குடிநீர், தொழிற்சாலை களுக்குத் தண்ணீர் தட் டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மோசமான நேரத்தில் அவர் முதல்வராக பொறுப் பேற்றதால், இந்த ஆண்டு இறுதிவரை, இந்நிலை நீடிக்கும். அதற்குப் பரி காரங்களும் உள்ளன. அவற்றை செய்தால், பாதிப்பிலிருந்து சற்று விலகலாம் என்று கூறியுள்ளார்.

Read more: http://www.viduthalai.in/page-8/83355.html#ixzz36SW7GSwz

தமிழ் ஓவியா said...


பாம்புக்கடிக்கு மூக்கு மருந்து: கண்டுபிடிப்பில் முன்னேற்றம்

உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 50 லட்சம் பேர் பாம்புக் கடிக்கு ஆளாகிறார்கள் என மதிப்பிடப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாம்புக் கடியால் பலியாகிறார்கள்.

எவ்விதமான பாம்புக்கடிக்கும் சட்டென் றும் சுலபமாகவும் பயன்படுத்தப்படவல்ல பாம்புக்கடி மருந்து ஒன்றைக் கண்டு பிடிப்பதில் ஒருபடி முன்னேற்றம் கண்டுள்ள தாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பாம்புக்கடித்த நபருக்கு மூக்கிலே பீய்ச்சித் தெளிக்கின்ற ஸ்பிரேயாகவே கொடுக்கவல்ல மருந்தை ஆய்வாளர்கள் பரிசோதித்து வருகின்றனர்.

உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 50 லட்சம் பேர் பாம்புக் கடிக்கு ஆளாகிறார்கள் என மதிப்பிடப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாம்புக் கடியால் உயிரிழக்கிறார்கள்.

நிலக்கண்ணியில் சிக்கி ஆட்கள் உயிரிழக்கும் எண்ணிக்கையை விட இது முப்பது மடங்கு அதிகமான ஒரு எண் ணிக்கை.

உலகிலேயே அதிகம் பேர் பாம்புக் கடியால் உயிரிழப்பது இந்தியாவில்தான். அந்நாட்டில் ஹெச்.அய்.வி.யால் உயிரிழப் பவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு பாம்புக் கடியால் உயிரிழப் பவர்களின் எண்ணிக்கை அமைந்துள்ளது. பாம்புக் கடிக்கான பொதுவான சிகிச்சை என்பது விஷம் முறிக்க வல்ல மாற்று மருந்து ஒன்றை பாம்பு கடித்தவருக்கு கொடுப்பது தான்.

ஆனால் பாதிக்கப்பட்டவரை மருத்துவ மனையில் சேர்த்து, ஊசி மூலமாக அவருக்கு அந்த மருந்தை செலுத்தி, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பதாக இந்த முறை அமைந்துள்ளது. தவிர இந்த மருந்தின் விலையும் அதிகம்.

விஷ முறிவு மருந்து அல்லாது பாதிப்பு ஏற்படுத்துவதைத் தடுக்கவல்ல ஆன்டி பராலிடிக் மருந்தான நியோஸ்டிக்மீன் என்ற மருந்தை பாம்பு கடித்தவருக்கு வழங்கும் ஒரு சிகிச்சை முறையும் இருந்துவருகிறது.

ஆனால் இதுவும் நரம்பு ஊசி வழியாகத் தான் செலுத்தப்பட முடியும்.

அதிகம் பேர் பாம்புக்கடிக்கு ஆளாவது என்னவோ ஏழ்மையான, கிராமப் பகுதிகளில் தான், அவர்களால் எல்லா நேரத்திலும் மருத்துவ வசதிகளைப் பெற முடிவதில்லை.

எனவே பாம்புக்கடிக்கு மேம்பட்ட மருந்தும் சிகிச்சையும் தேவைப்படுகின்ற அவசியம் அதிகமாக உள்ளது.

இந்நிலையில்தான் விரைவாகவும் சுலபமாகவும் மூக்கில் அடிக்கக்கூடிய ஸ்பிரேயாக பயன்படுத்தவல்ல பாம்புக்கடி மருந்து ஒன்றை கண்டறிவதில் முன்னேற்றம் கண்டுள்ளதாக கலிஃபோர்னியா அறிவியல் கழகத்தில் சென்டர் ஃபார் எக்ஸ்ப்ளொ ரேஷன் அன்ட் டிராவல் ஹெல்த் என்ற மய்யத்தின் இயக்குநராகவுள்ள டாக்டர் மேத்யூ லூவின் கூறுகிறார்.

இந்த மருந்து எலிகளிடம் பரிசோதிக் கப்பட்டுள்ளது. மேற்கொண்டு மனிதர்களிடம் ஆய்வுகளை நடத்தி மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகளின் ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில், ஏராளமானோருக்கு பலன் தரும் மருந்தாக இந்தக் கண்டுபிடிப்பு உருவெடுக் கலாம்.

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் மனித தயாரிப்பு ஸ்புட்னிக் என்ற ரஷ்ய செயற்கைக்கோள் ஆகும். அனுப்பப்பட்ட ஆண்டு 1957.

Read more: http://www.viduthalai.in/page-7/83342.html#ixzz36SWUI7Hg