Search This Blog

17.7.14

மதம் பிடித்ததன் கொடிய விளைவுகள் பாரீர்!
யூதர்களின் நாடான இஸ்ரேலால், பாலஸ் தீனப் பகுதியில் குறிப்பிட்ட சம்பவத்தை ஒரு சாக்காக வைத்து பாலஸ்தீனிய குழந்தைகள், பெண்கள் உள்பட கொன்று குவிக்கப்பட்டுள் ளனர். பாலஸ்தீனிய மக்கள் - பெரிதும் மதத்தால் இஸ்லாமியர்கள்.

இதனால் இது ஒரு மதத்தை அடிப்படை யாகக் கொண்டே இந்த இரு நாடுகளின் பிரச்சினைகள் பெருக்கப்பட்டும், சுருக்கப் பட்டும் வருகின்றன.
மதம் மக்களை ஒருபோதும் எங்கும் ஒற்றுமைப்படுத்தாது என்பதை அன்றாட உலக நிகழ்வுகள் தெளிவாக அறிவித்த வண்ணம் உள்ளன.

ஈராக்கில் வாழ்வோர் ஒரு மதத்தவர் என்றாலும், இரு வேறு பிரிவினர்களுக் கிடையே அமைதியின்மை; பயங்கரவாத வெறிச் செயல்களும், கொலைகளும் அங்கு நடைபெறுகின்றன.

உலக நாடுகள் இஸ்ரேலைக் கண்டித்தன; அமெரிக்காவின் ஆதரவு இஸ்ரேலுக்குத் தனித் துணிவை அளித்து வருவது மிகவும் கேடானது; மனிதநேயத்திற்கே முரணானது.

பாலஸ்தீன மக்கள்மீது இஸ்ரேல் புற்று நோயை உண்டாக்கும் ஆபத்தான எறிகுண்டு களை வீசி, அவர்களை அழித்து வருவதை விட மனிதநேயத்திற்கு நேர் எதிரான அறி வியல் காட்டுமிராண்டித்தனம் (‘‘Scientific Primitiveness’’) வேறு உண்டா?

ஆதி சமூகத்தின் தொடக்க காலத்தில் மக்களை ஒன்றுகூட்ட மதம் பயன்பட்டிருக்கக் கூடும்; பிறகு காலம் வளர, வளர, மதப் பிரிவுகளும், பிளவுகளும், சுரண்டல் வியாபாரிகளின் போட்டி வியாபாரத்தால், மிகப்பெரிய சண்டை சச்சரவு, யுத்தங்களுக்குத் தானே வழிவகுத்து, மனிதகுல அழிவுக்கும், ரத்த ஆறுகள் ஓடுவதற்கும் வழிவகை செய்வதாக உள்ளன!

கடந்த 2 நாள்களாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளன.

மும்பை ஓட்டலில் தொடர் குண்டுவெடிப் புக்கு முழுக் காரணமான காஷ்மீரின் தீவிரவாதியை - ராம் வேதா பிரதாப் வேதிக் சந்தித்துள்ளார். மத்திய அமைச்சர்கள் வேறு குரலில் பேசினாலும், அவர்களின் குருபீட மான ஆர்.எஸ்.எஸ். வேதிக் பக்கம் நின்று பச் சையாக ஆதரவு முஷ்டியை உயர்த்தியுள்ளது!

இதன்மூலம் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது!

மீண்டும் இங்கே மதக் கலவரங்களுக்குத் திட்டமிட்டு தூபமிடப்படுகிறதோ என்ற அச்சம் வந்த காரணத்தால், நாடாளுமன்றத்தை உலுக்குகிறது.
முந்தைய ஆட்சியில் இப்படி ஒரு சந்திப்பு - திட்டமிட்டு நடத்தப்படாமல், சாதாரணமாக நடந்திருந்தால்கூட, என்ன பாடுபடுத்தியிருப் பார்கள்? பா.ஜ.க.வும், அதன் சுற்றுக் கிரகங்க ளான பரிவாரங்களும் எண்ணிப் பார்க்கட்டும்!

எனவே, மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் என்று வள்ளலார் கூறிய மொழி போன்றவை இருந்தும், அக்கருத்தை ஏற் காமல் வெறும் பூசம் மட்டும் நடத்தி பஜனை பாடினால் போதுமா?

மதம் மக்களுக்கு அபின் என்பது காரல்மார்க்சின் கருத்து!

மதம் மக்களைப் பிரிக்குமே தவிர, ஒன்றாக்காது ஒரு போதும்!
ஆகவே, மதங்களற்ற ஒரு சமுதாயம் மட்டுமே மனித நேயத்தை நிலைக்கச் செய்யும் என்ற தந்தை பெரியாரின் அறிவுரையும், காலத்தால் அழியாத கல்வெட்டு மட்டும் அல்ல, ஞாலம் பின்பற்றவேண்டிய சீலம் - கொள்கை நெறியும் ஆகும்!


               ----------------- ஊசி மிளகாய்!--”விடுதலை” 17-07-2014

28 comments:

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க.வைத் தூக்கிப் பிடித்தவர்களுக்கு பட்டை நாமம்!


இந்திய அரசு நமக்கு ஆதரவாக இருக்கிறது! - இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜியெல் பிரீஸ்

காங்கிரஸ் ஆட்சியின் நிலைப்பாடே தொடரும்! - இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் சையத் அக்பருதீன் பேட்டி

பா.ஜ.க.வைத் தூக்கிப் பிடித்தவர்களுக்கு பட்டை நாமம்!

புதுடில்லி, ஜூலை 17_ இந்திய அரசு நமக்கு ஆதரவாக இருக்கிறது என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜியெல் பிரீஸ், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேசிய பின் தெரிவித்துள்ளார். இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளர் சையத் அக்பருதீன் செய்தியாளர் களிடம் பேசும்போது இந்தக் கருத்தை வழி மொழிந் தார். முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதுமில்லை என்று தெரிவித்தார்.

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு நல்ல முறையில் தீர்வு கிடைக் கும் என்று தமிழ்நாட்டில் துள்ளிக் குதித்தவர்களின் நெற்றியை இழுத்துப் பட்டை நாமத்தைச் சாத்தி விட்டது பி.ஜே.பி. ஆட்சி.

இந்தியப்பிரதமர் எங்களின் நிலையை நன்கு அறிந் திருக்கிறார். அவரது அனைத்து நடவடிக்கைகளும் எங்களுக்கு ஆதரவாக அமையும்.

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பிரீஸ் கூறுகிறார்

இலங்கைத் தொடர்பான நிலைப்பாட்டில் நமக்கு ஆதரவான நிலையை இந்திய அரசு எடுத்து வருகிறது என சமீபத்தில் டில்லி வந்து சுஷ்மா சுவராஜை சந்தித்துவிட்டுச் சென்ற இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பிரீஸ் தெரிவித்தார். இது தொடர் பாக அவர் லங்கவேப் என்ற அரசு இணையதளப் பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியின் விரிவு இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் குறித்து நமது அதிபர் அனைவரிடம் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

கடந்த மாதம் இந்தியா மற்றும் இலங்கையுடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக பல சந்திப்புகளை நிகழ்த்தும் திட்டம் வடிவமைக்கப்பட்டது.


தமிழ் ஓவியா said...

இதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் நான் டில்லி சென்று சுஷ்மா சுவராஜ் அவர் களைச் சந்தித்தேன். சுஷ்மா சுவராஜ் இலங்கையுடனான நட்புறவு மேலும் வலுப்பெறும் விதமாக நம்பிக்கையான பல உறுதிமொழிகளைக் கூறினார். முக்கியமாக மேற்குலக நாடுகள் இலங்கை அரசு மீது போர்க்குற்றச்சாட்டு என்ற அச்சுறுத்தலை தொடர்ந்து வைத்து வரும் வேளையில் சுஷ்மா சுவராஜ் அவர்களின் பேச்சு நமக்கு மிகுந்த ஆறுதலைத் தந்துள்ளது.

நீண்ட காலமாக இலங்கையில் நடந்து வந்த தீவிரவாதச் செயல்களை நமது அதிபர் தலைமையில் அடக்கி வைத்தோம். உலகெங்கும் சிதறியுள்ள தீவிரவாதிகளின் ஆதவாளர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை நம் மீது வைக்கின்றனர். மேலும் பொய்யான தகவலை மேற் குலகிற்கு வழங்கி நம்மீது அழுத்தம் கொடுக்க முயல் கின்றனர். சில மேற்குலக நாடுகளுக்கு அவர்களின் சொந்த லாபம் கருதி இலங்கை மீது பெரிய அச்சுறுத்தல்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் பொய்ப் பிரச்சாரங்களை நாம் ஒன்று கூடி தடுத்து வருகிறோம். இந்த நிலையில் நரேந்திர மோடி அரசின் பதவியேற்பு நமக்கு மிகவும் சாதக மானதாகும். இதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆசியப் பிராந்தியத்தில் இந்தியா நமக்கு ஆதரவாக இருக்கும் வரை மேற்குலக நாடுகள் நம்மை எதுவும் செய்ய முடியாது, நமது முடிவில் என்றும் உறுதியாக இருப்போம்.

மோடி அரசின் ஆதரவு

முக்கியமாக இந்தியாவும் தீவிரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு ஆகும். ஆகையால் தான் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒன்றிணைந்து உலக அரங்கில் தங்களது ஒன்றுபட்ட செயல்பாட்டை காட்டவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

அதே நேரத்தில், மோடி அரசும் நமக்கு ஆதரவான நிலையை எடுத்துள்ளது. இதை இந்திய வெளி யுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிபடக் கூறினார். சுமார் இரண்டு மணிநேரம் நீடித்த இந்த சந்திப்பில், இந்திய மீனவர்கள் விவகாரம், இலங்கை உள்நாட்டுப் போரில் பாதிப்படைந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் மற்றும் இருநாட்டு வர்த்தக உறவுகள் உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது

'உள்நாட்டுப் போருக்கு பிறகு எமது அரசாங்கம் மேற்கொண்டுவரும் சமாதான முயற்சிகள், வாழ் வாதாரத்திற்கு உத்தரவாதம் அளித்தல் போன்ற விவகாரங்கள் குறித்தும் பேசப்பட்டது. இலங்கை மீதான மேற்குலக நாடுகள் கொடுக்கும் அழுத்தம் குறித்து கருத்து தெரிவித்த சுஷ்மா சுவராஜ், இலங்கை எமது நட்பு நாடு மாத்திரமல்ல; கலாச்சார ஒற்றுமை கொண்ட நாடும்கூட; அய்நா விசாரணைக் குழு அமைக்கும் விவகாரத்தில் ஏற்கெனவே முன்னாள் அரசின் நிலைப்பாட்டையே நாங்களும் கையாள் வோம் என்று உறுதிபடக்கூறினார்.

மேலும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுடனும் சிறப்புக் கலந்தாய்வு நடைபெற்றது. என்று அந்த இணைய தளத்திற்கு ஜி.எல்.பிரீஸ் பேட்டியளித்தார்;

முந்தைய காங்கிரஸ் நிலைப்பாடே தொடர்கிறது!:சையத் அக்பருதீன்

தமிழ் ஓவியா said...

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சையத் அக்பருதீன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சுஷ்மா _ ஜி.எல்.பிரீஸ் சந்திப்பின்போது இந்திய அரசு இலங்கையில் செயல்படுத்திவரும் சிறப்புத் திட் டங்கள் குறித்தும் விரிவாகப் பேசப்பட்டன. இந்த ஆண்டில் மூன்றாவது தடவையாக இலங்கை வெளி யுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வந்துள்ளமை இருநாட்டுக்கும் இடையேயான உறவுகள் வலிமை பெற்று வருவதைக் காட்டுகிறது. இலங்கையில் அய்.நா. மனித உரிமைகள் பேரவை யின் விசாரணைக் குழு மேற்கொள்ளவுள்ள நட வடிக்கை குறித்தும் இந்த சந்திப்பின்போது ஆராயப் பட்டதா என்றும் இந்த விவகாரத்தில் இந்திய அரசின் தரப்பின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அய்.நா. மனித உரிமைகள் விசாரணைக் குழுவை அமைக்கும் விவகாரத்தில் இந்தியா ஏற்கெனவே தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறது. குறிப்பிட்ட அந்த பிரிவை எதிர்த்து வாக்களித்தது. அந்த நிலைப்பாட்டை இந்திய அரசு மாற்றவில்லை. அதே நிலைப்பாடே தொடர்கிறது என்று பதி லளித்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் சையத் அக்பருதீன்.

இலங்கை இராணுவ செய்தி இணையதளம்

இலங்கையில் நடந்தது தண்டனைக்குரிய குற்ற மல்ல, இலங்கையின் அனைத்து முயற்சிக்கு நாங்கள் ஒத்துழைப்பு நல்குவோம்! என்று இந்திய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உத்திரவாதம் அளித்துள்ளதாக இலங்கை இராணுவச் செய்தி இணையதளம் (http://www.defence.lk/) செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை மீது மீண்டும் போர்க் குற்றவிசாரணை என்ற பெயரில் தீர்மானம் கொண்டுவந்தால் இலங் கைக்கு ஆதரவான நிலையை நாங்கள் எடுப்போம் என்றும், மேலும் இலங்கையில் மனித உரிமைமீறல்கள் நடைபெறவில்லை, அங்கு நடந்தவை அனைத்தும் தீவிரவாத்திற்கு எதிரான நடவடிக்கைகளே என்றும் இந்திய அரசாங்கம் கூறியதாம்.

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ஈழத் தமி ழர்ப் பிரச்சினையில் நல்லதோர் தீர்வு கிடைக்கும் என்று துள்ளிக் குதித்து தமிழ்நாட்டு மக்களிடம் உத் தரவாதம் கொடுத்த கட்சிகள், தலைவர்கள் இந்த நிலைக்குப் பொறுப்பு ஏற்கவேண்டிய குற்றவாளி களாகவே கருதப்படுவார்கள் என்பதில் அய்யமில்லை.

Read more: http://viduthalai.in/e-paper/84194.html#ixzz37mKFzwtm

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்? .......
இம்மாதம் (ஆடி) உங் களுக்கு ஒரு இனிய மாத மாகும். எடுத்த காரியங் களில் எளிதில் வெற்றி கிடைக்கும். புதன் - சுக்ர சேர்க்கை இருப்பதால் ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.

கணவன் - மனை விக்குள் ஒற்றுமை பலப் படும். உங்கள் பெயரி லேயே சொத்துக்கள் வாங் கலாமா என்று குடும்ப உறுப்பினர்கள் பரிசீலனை செய்வர்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். சென்ற மாதத்தில் கொடுத்த கடன் இப்பொழுது வசூலாகும். செவ்வாய்க்கிழமை விரத மிருந்து வழிபட்டு வரு வதன் மூலம் செல்வ நிலையை உயர்த்திக் கொள்ளலாமாம்.

எந்த வேலையும் செய் யாமல் செவ்வாய்க்கிழமை யன்று விரதம் இருந்தால், இவ்வளவு வசதிகளும், வாய்ப்புகளும் பெருகுமா? இந்து மதக்காரர்களுக்கு மட்டும்தானா? மற்றவர் களுக்கும் சேர்த்தா?

ஒரு கேள்வி, இந்த செவ்வாய்க் கிழமைகளிலும், ஆடி மாதத்திலும் இந்துக்கள் திருமணங்களைச் செய்வதில்லையே, ஏன்?

Read more: http://viduthalai.in/e-paper/84189.html#ixzz37mL1pIKq

தமிழ் ஓவியா said...

வழிக்கு வந்தது கிரிக்கெட் கிளப்!

வேட்டி அணிவது தொடர் பாக தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்புக் காரணமாகவும், தமிழ்நாடு சட்டப்பேரவை யில் முதலமைச்சரின் அறி விப்புக் காரணமாகவும் கிரிக் கெட் கிளப்பின் விதிமுறை களை மாற்றத் தயாராக இருப்பதாக கிளப்பின் தலை வர் சீனிவாசன் தெரிவித் துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/84188.html#ixzz37mLEiaiP

தமிழ் ஓவியா said...


கோபமும், உப்பும்! ஓர் ஒப்பீடு!


பொதுவாக கோபப்படுதல் உடலுக் கும் நல்லதல்ல; நம் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும்கூட விரும்பத் தக்கதல்ல. சில பிள்ளைகளைத் தொட் டால் சிணுங்கிகளாக எதற்கெடுத்தா லும் கோபப்படுவது மாதிரி, குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்த்து விடு கிறார்கள்.

அதற்காக கோபமே வராதவர் களாகவே மனிதர்கள் எல்லாம் மாற வேண்டும் என்று கூறுவது வாழ்வியல் நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று என்பதை நாம் எவரும் மறந்துவிடக் கூடாது.

சினம் (கோபம்) என்பது சேர்ந் தாரைக் கொல்லிதான் - உண்மைதான்.

அடக்கமாக எதிர்கொள்ளவேண் டிய பலவற்றை, உரத்து ஓங்கிய குரலில் பேசி இருப்பதையும், இனி வர வேண் டிய பல உயர்வுகளையும் கூட இழந்த வர்கள் பல ஆயிரக்கணக்கில் உண்டு.

நமது உளப்பாங்கு, உடல்நிலை எல்லாவற்றையுமே அதிக கோபம் பெரிதும் கெடுத்துவிடுகிறது!

ரத்தக் கொதிப்பு (பிளட் பிரஷர்) பலருக்கு ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணம், அடிக்கடி சிலர் எல்லை மீறிய கோபத்தை அவர்கள் வெடித்த எரிமலை போல் கொட்டித் தீர்ப்பதேயாகும் என்பது மருத்துவர்களின் கணிப்புகளில் ஒன்று.

அதோடு, ரத்தக் கொதிப்பு (பிளட் பிரஷர்) உடைய பலருக்கு, திடீர் திடீ ரென்று கோபம் கொப்பளித்துக் கொண்டு வருவதும் தவிர்க்க இயலா தவை என்பது விசித்திரமான ஒன்றுதான்!

எல்லை மீறிய கோபம் வரும்போது அதை அடக்குவதைவிட, உடலுக்கு, உயிருக்கு மிகப்பெரிய ஆபத்து, கேடு வேறில்லை. வெடித்து வெளியே கொட் டப்பட்டு, கோபம் தாங்காமல் வெளி யேறி விடுவதனால், இயல்பு நிலைக்கு மனிதர்கள் திரும்பும் வாய்ப்புள்ளது.

அதிகக் கோபம் வரும்போது உடன் அந்த இடத்தை விட்டு எழுந்து, வேறு பகுதிக்குச் சென்று அமர்ந்தோ, நடந்தோ இருப்பது நாம் அதிலிருந்து விடுபட உதவி செய்வதாகும்!
எப்போதும் கோபமே வராதவர் இவர் என்று யாரையாவது நண்பர்கள் உங்களுக்கு அறிமுகம் செய்தால், அவரை எளிதில் நம்பி விடாதீர்கள்!

மனிதர்கள் அழவேண்டிய நேரத்தில் அழவேண்டும்; சிரிக்கவேண்டிய நேரத் தில் சிரிக்கவேண்டும் - கலகலப்பாக. வெட்கப்படவேண்டிய நேரத்தில் வெட்கப்படவேண்டும். அதுதான் இயல்பு நிலை. அதை விடுத்து, கோபம் வர வேண்டிய நேரத்தில்கூட அவர்கள் கொஞ்சுவதுபோலவோ அல்லது மிக சாந்தமாக அதனை சகித்துக் கொள் வதோ, சமாளித்துக் கொண்டதாகக் காட்டுவதோ, அவர் உண்மை மனிதர் அல்ல; ஒப்பனை மனிதர் என்பதற்கான அடையாளம் ஆகும். அவர் நம்மிட மிருந்தோ அல்லது அவரது தலைமை - எஜமானர் - மேலாளர் இவர்களில் எவரிடமிருந்தோ, எதையோ பெற, திட்டமிட்டு நாடகமாடுகிறார், நடிக்கிறார் என்று புரிந்துகொள்ளவேண்டிய முக்கிய அம்சமாகும்.

உடம்புக்கு உப்புச் சேர்க்கை போன் றதே, வாழ்க்கையில் கோபம் வருவதும், கொள்வதும்!
உணவில் உப்பு தேவைதான். அது கொஞ்சம் கூடி விட்டால், நன்கு சமைத்த உணவு உண்ணுவதற்கு ஏற்ற தாகாமல், குப்பையில் எறியவேண்டிய தாகி விடுகிறதல்லவா, அதுபோல!

ஆனால், அதேநேரத்தில் போதிய அடிப்படை உப்பு சத்து உடல்நலம் கெடாமல் இருப்பதற்கு மிகவும் இன்றி யமையாததல்லவா?

உடம்பில் உப்புச் சத்து கூடுதலில் சிறுநீரகம் கெடுகிறது; மிகவும் குறைந் தால் மற்ற முக்கிய உறுப்புகள் செயல் இழக்கும் அபாயம் - உயிர்க்கொல்லி யாகவும் ஆகிவிடுகிறது!

கூடினாலோ, இருதயம் திடீரென்று நின்று விடுகிறது - மாரடைப்புமூலம். எனவே, அளவான கோபம், நியாயமான கோபம் - அளவான உப்பு போன்றே தேவை! தேவை!!

அக்கிரமம், அநீதி இவற்றை சகிக் காத கோபம் தேவையல்லவா?- கி.வீரமணி - வாழ்வியல் சிந்தனைகள்

Read more: http://viduthalai.in/page-2/84210.html#ixzz37mLQXkZC

தமிழ் ஓவியா said...


பழைமைப் பித்துக் கோழையாக்கும்

முன்னோர்கள் செய்து வைத்ததை மாற்றக் கூடாது என்று கவலைப்படுகிறவர்கள் கோழைகளேயாவார்கள். முன்னோர்களைவிடக் கண்டிப்பாக நாம் அதிக அனுபவசாலிகளேயாவோம். நம்மைவிட நமக்குப் பின்னால் வருகிறவர்கள் இன்னும் அனுபவசாலிகளே யாவார்கள். - (குடிஅரசு, 18.12.1943)

Read more: http://viduthalai.in/page-2/84205.html#ixzz37mLZlFCm

தமிழ் ஓவியா said...


மனித எலும்புகள் பற்றி அறிவோம்


* மனிதனின் மண்டை ஓட்டில் 22 எலும்புகள் உள்ளன.

* மண்டை ஓட்டின் முக்கிய பகுதியான கிரேனியம் அல்லது கபாலம் என்ற எலும்புப் பேழைக்குள் தான் மூளை பாதுகாக்கப்படுகிறது.

* முகத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 14

* மண்டை ஓட்டில் உள்ள எலும்பு களில் அசையும் தன்மையுள்ள ஒரே ஒரு எலும்புப்பகுதி மாண்டிபிள் என்ற தாடை எலும்பு மட்டும்தான்.

* எலும்புகளுக்கு சக்தியையும் உறுதியையும் கொடுப்பது கால்சியம் பாஸ்பேட்

* கால்சியம் பாஸ்பேட் மற்றும் கால்சியம் கார்பனேட்டுகளின் கலவை தான் எலும்புகள்.

* எலும்புகளில் 85 விழுக்காடு கால்சியம் பாஸ்பேட் அடங்கி உள்ளது.

* பற்களில் அடங்கியுள்ள வேதிப் பொருள் கால்சியம் பாஸ்பேட்

* மனித உடலில் மிகவும் வலிமை வாய்ந்த பகுதி பற்களில் உள்ள எனாமல் பகுதி.

* மனித உடலில் உள்ள அனைத்து எலும்புகளின் எடை சுமார் 9 கிலோ கிராம்.

* மனித உடல்களிலுள்ள எலும்பு களின் எண்ணிக்கை 206

* பிறக்கும் குழந்தைகளுக்கு 300 எலும்புகள் காணப்படும். வளர வளர பல எலும்புகள் இணைந்து 270 - ஆக மாறும்.

* மனித உடலில் மிகப்பெரிய எலும்பு தொண்டை எலும்பு

* தைபோன் எனப்படும் தொடை எலும்புதான் மிக நீளமானதும் பெரியதும் ஆகும். இதனை விஞ் ஞானிகள் பீமர் என்று அழைக் கின்றனர்.

* எலும்புகள் பற்றிய படிப்பின் பெயர் ஆஸ்டியாலஜி

* ஆர்த்ரைட்டிஸ் என்பது எலும்பு மூட்டுகளை பாதிக்கும் நோயின் பெயராகும்.

* கால்களில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 30

* கால் பாதங்களிலுள்ள எலும்பு களின் பெயர் டிபியா, ஃபிபுலா.

* கைகளின் உள்ள முக்கியமான எலும்புகள் ரேடியஸ், அல்னா.

* மூளை மற்றும் மண்டை ஓட்டைப்பற்றி படிக்கும் படிப்பின் பெயர் பிரினாலஜி

Read more: http://viduthalai.in/page-7/84202.html#ixzz37mMCGu36

தமிழ் ஓவியா said...


பெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தை விட வேகமாக துடிக்கிறது

பெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தை விட வேகமாக துடிக்கிறது ஆய்வில் தகவல் இதயத்துடிப்பின் வேகம் உடம்பின் அளவைப் பொறுத்து அமையும். பெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தை விட வேகமாக துடிக்கிறது.

சுண்டெலி, மூஞ்சுறு போன்றவை மிகச் சிறிய பிராணிகள். அவற்றின் இதயம் நிமிடத்துக்கு ஆயிரம் தடவை துடிக்கிறது. திமிங்கலம் மிகப் பெரிய விலங்கு. அதன் இதயம் நிமிடத்துக்கு 5 முறைதான் துடிக்கிறது. வயது வந்த ஒரு ஆணின் இதயத்தின் எடை 284 கிராமில் இருந்து 430 கிராம் வரை இருக்கும். வயதுக்கு வந்த பெண்ணின் இதயம் 227 கிராமில் இருந்து 340 கிராம் வரை இருக்கும்.

குளிர் காலத்தை விட கோடை காலத்தில் இதயத்துடிப்பு அதிகம் காணப்படும். ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனில் 70 சதவிகிதத்தைத் தான் உபயோகத்துக்கு இதயம் எடுத்துக் கொள்கிறது. இதயம் துடிப்பதற்கு இவ்வளவு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. பொதுவாகவே ஆண்களின் இதயத்தை விட பெண்களின் இதயம் வேகமாக துடிக்கிறது.

சாதாரண மனிதனின் இதயம் நிமிடத்துக்கு 72 முறை துடிக் கிறது. ஒரு மணி நேரத்துக்கு 1,03,680 தடவை துடிக்கிறது. இதுவே ஒரு ஆண்டு என்று எடுத்துக் கொண்டால் 37 கோடியே 83 லட்சத்து 120 தடவை துடிக்கும்.

இதயத் துடிப்பு சாதாரணமாக காலையில் குறைவாக இருக்கும். பிற்பகலில் அதிகரிக்கும்.

100 மில்லி ரத்தத்தில் 20 முதல் 45 மில்லி கிராம் புரதமும், 50 முதல் 80 கிராம் வரை குளுகோசும், 700 முதல் 750 மில்லி கிராம் வரை குளோரைடுகளும் உள்ளன. ஒரு ஆணின் ரத்தம் ஒரு கன மில்லி மீட்டரில் 4.5 6.5 மில்லியன் சிவப்பு அணுக்கள் கொண்டதாக உள்ளது. அதே அளவு கொண்ட பெண்ணின் ரத்தத்தில் 4.05.5 மில்லியன் சிவப்பு அணுக்களே இருக்கின்றன.

ஹீமோகுளோபினை எடுத்துக் கொண்டால் ஆணின் ரத்தத்தில் 13.5 முதல் 18.0 வரை உள்ளது.

பெண்ணின் ரத்தத்தில் 11.5 முதல் 16.5 வரையே உள்ளது. பொதுவாக மனித ரத்தத்தில் 100 மில்லியன் லிட்டர் அளவில் 125300 மில்லி கிராம் கொழுப்பு உள்ளது. 1740 மில்லி கிராம் யூரியா உள்ளது. 14.5 மில்லி கிராம் யூரிக் அமிலம் உள்ளது.

Read more: http://viduthalai.in/page-7/84201.html#ixzz37mMNEPr4

தமிழ் ஓவியா said...


நட்புக்கு காரணம் மரபணுக்களா?


நல்ல நண்பர்களாக இருப்பவர்களின் மரபணுக்கள், அவர்களுக்கு அறி முகம் இல்லாத வேற்று ஆட்களின் மரபணுக் களைவிட, கூடுதலாக ஒரே மாதிரி இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கும் ஆய்வின் முடிவு மரபணுத்துறையில் இன்று மிகப் பெரிய விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.

நல்ல நண்பர்களாக இருப்பவர்களின் மரபணுக்கள், அவர்களுக்கு அறிமுகம் இல்லாத வேற்று ஆட்களின் மரபணுக் களைவிட, கூடுதலாக ஒரே மாதிரி இருப் பதாக அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கும் ஆய்வின் முடிவு மரபணுத்துறையில் இன்று மிகப்பெரிய விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.

அமெரிக்காவின் கலிபோர்னிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் பவுலர் மற்றும் யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் நிக்கோலஸ் கிறிஸ்டாகிஸ் ஆகிய இருவரும் சேர்ந்து செய்த ஆய்வின் முடிவுகளை அவர்கள் தற்போது வெளி யிட்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவின் சிறு நகரம் ஒன்றில் இவர்கள் மனித இதயம் தொடர்பிலான ஆய்வுக்காக தேர்வு செய்யப்பட்ட சுமார் 2000 பேரிடம், இவர்கள் தமது மரபணு தொடர்பான இந்த குறிப்பிட்ட ஆய்வையும் மேற்கொண்டனர். அதன் படி நண்பர்கள் மத்தியில் மரபணுக்கள் எந்த அளவு ஒத்துப் போகின்றன என்று இவர்கள் ஆராய்ந்தனர்.

அதன் முடிவில் நல்ல நண்பர்களாக இருப்பவர்களுக்கு இடையில், மற்றவர்களை விட குறைந்தபட்சம் 0.1 சதவீத மரபணுக்கள் அதிகமாக ஒரே மாதிரி இருப்பதை தாங்கள் கண்டறிந்திருப்பதாக இவர்கள் கூறுகிறார்கள்.

அதாவது முன் பின் அறிமுகம் இல்லாத வர்களை விட நல்ல நண்பர்களுக்கு மத்தியில் மரபணுக்கள் கூடுதலாக ஒரே மாதிரி இருப்பதாக இவர்கள் தெரிவிக்கிறார்கள். வழக்கமாக இப்படியான மரபணு ஒற்றுமை என்பது ஒன்றுவிட்ட சகோதரன் அல்லது சகோதரிகள் மத்தியில் மட்டுமே காணப்படும்.

அதுவும் கூட தலைமுறைகள் கடந்து செல்லச் செல்ல, இந்த மரபணு ஒத்துப்போகும் தன்மையும் படிப்படியாக குறையத் தொடங்கும். அப்படி பார்க்கும்போது, ஒருவரின் நான்கு தலைமுறைகள் கடந்த கொள்ளுத்தாத்தா-பாட்டிக்குப் பிறந்த இன்றைய நான்காம் தலைமுறையைச் சேர்ந்த வாரிசுகளுக்கு மத்தியில் என்ன மாதிரியான மரபணு ஒற்றுமைகள் காணப்படுமோ அதே மாதிரியான ஒற்றுமைகள் நல்ல நண்பர்கள் மத்தியிலும் காணப்படுவதாக இந்த இரண்டு அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்திருக் கிறார்கள்.

எந்த ஒரு குறிப்பிட்ட மரபணு அல்லது மரபணுவின் மூலக்கூற்றையும் தாங்கள் இங்கே குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்று கூறும் இந்த ஆய்வாளர்கள், நண்பர்களுக்கு மத்தியில் மரபணுக்கள் ஒத்துப்போகும் போக்கு, அளவு என்பது எண்ணிக்கை அடிப் படையில் அதிகமாகவும், ஒரே மாதிரி தொடர்ந்தும் இருக்கிறது என்பது மட்டுமே தங்களின் கண்டுபிடிப்பு என்றும் இவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

சக விஞ்ஞானிகள் உடன்படவில்லை

ஆனால் இவர்களின் இந்த கண்டு பிடிப்பை சகவிஞ்ஞானிகள் அப்படியே ஏற்க முடியாது என்று நிராகரித்திருக்கிறார்கள். இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் எல்லோரும் ஒரு சிறு நகரில் இருப்பவர்கள் என்பதை சுட்டிக்காட்டும் டியூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசியர் இவான் சார்னி, இவர்கள் எடுத்த மாதிரிகளில் பெரும்பான்மையான வர்கள் ஒரே இனக்குழுமத்தைச் சேர்ந்த வர்களாக இருந்திருக்கலாம் என்றும் அதனாலேயே கூட இந்த ஆய்வின் முடிவுகள் இப்படி வந்திருக்கலாம் என்றும் வாதாடுகிறார்.

மேலும் இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் யாரும் யாருக்கும் உறவு முறையானவர்கள் அல்ல என்பதையும் இந்த ஆய்வாளர்களால் உறுதி செய்ய முடியாத நிலையில், இப்படி நண்பர்களுக்கு மத்தியில் மரபணுக்கள் ஒத்துப்போவதாக பொத்தாம் பொதுவில் சொல்வது சரியான அறிவியல் அணுகு முறையல்ல என்றும் அவர் கூறுகிறார்.

Read more: http://viduthalai.in/page-7/84204.html#ixzz37mMa8OGz

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?


அவ்வையார்

தமிழ்ப் புலவர் அவ்வையார் ஒன்றும் புராணப் பாத்திரம் அல்ல - வரலாற்று மாந்தர்தான்! அவருக்கே கோவில்கள் என்றால் பலருக்கும் ஆச் சரியமாக இருக்கும் குமரி மாவட்டத்தில் தோவாளை தாலுகாவில் மூன்று கோவில்கள் இருக்கின்றன. ஆடி மாதம் செவ்வாய்க் கிழமைகளில் கொழுக் கட்டை வைத்துப் படைக் கின்றனர் - நோன்பும் இருக்கின்றனர்.

அப்படியானால் கடவுள் என்பதும், கோவில் என்பதும்தான் என்ன? இப்படித்தான் உண்டாகி இருக்கின்றன என்பது தெரியவில்லையா?

Read more: http://viduthalai.in/e-paper/84266.html#ixzz37sEFBrAE

தமிழ் ஓவியா said...


கிடைக்காது!


உலகில் எந்தத் தொண்டு செய்கிற வர்களுக்கும் மரியாதை கிடைக்கும். ஆனால், சமுதாயத் தொண்டுக் காரர்களுக்கு மட்டும் மரியாதை கிடைக்காது. - (விடுதலை, 26.12.1964)

Read more: http://viduthalai.in/page-2/84269.html#ixzz37sEYKFHP

தமிழ் ஓவியா said...

பிஜேபியின் கோட்பாடும் - சிந்தனையும்

விசுவ ஹிந்து பரிஷத்தின் தலைவர் அசோக் சிங்கால் - 88 வயது நிறைந்த முதியவர். புதுடில்லியில் அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி ஏடுகளில் இடம் பெற்றுள்ளது. அன்னிய சக்திகளும் பிளவு சக்திகளும் நமது அடையாளத்தை அழிப்பதற்காக முஸ்லிம் அரசியலை பயன்படுத்தினர். ஆனால் இந்தத் தேர்தலில் முஸ்லிம் அரசியலுக்குப் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது.

பா.ஜ.க. ஆட்சியில் முஸ்லிம்கள் பொது பிரஜைகளாக நடத்தப்படுவார்கள் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. மேலும் முஸ்லிம்கள் இந்துமத உணர்வுகளை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

முஸ்லிம்கள் இந்துக்களைத் தொடர்ந்து எதிர்த்து வந்தால் எவ்வளவு காலம் அவர்களால் இங்கு வாழ முடியும்?முஸ்லிம்கள் அயோத்தி கோவில் மற்றும் காசி, மதுரா கோவில்கள் ஆகியவற்றின் மீதான உரிமை கோரலை கைவிட வேண்டும். மேலும் முஸ்லிம்கள் பொது சிவில் சட்டத்தையும் ஏற்க வேண்டும். நாங்கள் முஸ்லிம்களுடன் அன்பாக நடந்து கொள்வோம், மேலும் மற்ற எந்த ஒரு மசூதி வளாகத்தின் மீதும் (ஆயிரக்கணக்கான மசூதிகள் பழைய கோவில் களின் இடிபாடுகளின் மேல் கட்டப்பட்டிருந்தாலும்) நாங்கள் உரிமை கோர மாட்டோம். ஆனால், முஸ்லிம்கள் இதனை ஒத்துக் கொள்ளா விட்டால், மேலும் ஏற்படவுள்ள இந்து ஒருமைப்பாட்டை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

தற்போது இது மத்திய அரசில் நிகழ்ந்துள்ளது. மற்ற மாநிலங்களிலும் இது நிகழும். தற்போதைய பா.ஜ.க. அரசு பின்வாங்காது. மேலும் பின்வாங்கவும் தேவையில்லை. ஏனெனில் மக்களவையில் பா.ஜ.க.வுக் குப் பெரும்பான்மை உள்ளது. மேலும் நாங்கள் எதை செய்ய வேண்டுமென்று விரும்புகிறோமோ அதனை அரசியல் சட்ட ரீதியாக செய்யவே விரும்புகிறோம்.

ராமர் கோவில் மற்றும் கோத்ரா விவகாரங்கள், தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறுவதை சாத்தியமாக்கின. பா.ஜ.க.வின் வெற்றிக்கு இந்த விவகாரங்கள் அடித்தளமாக இருந்தன. அத்துடன் வளர்ச்சி, நிர்வாகம் போன்ற விஷயங்களும் இளைஞர்களைக் கவர்ந்தன - இவ்வாறு சிங்கால் கூறியுள்ளார்.

இதுதான் சங்பரிவார்களின் - அதன் அரசியல் வடிவமான பிஜேபியின் கோட்பாடும் - சிந்தனையும் ஆகும். இந்த விசுவ ஹிந்து பரிஷத்துதான் பொது மக்கள் மத்தியில் திரிசூலங்களை வழங்கி வருபவர்கள்! திரிசூலத்தில் ஒரு முனை முஸ்லீம்களையும், ஒரு சூலம் கிறித்தவர்களையும், இன்னொரு சூலம் மதச் சார்பின்மைப்பேசுபவர்களையும் குத்திக் கிழிக்கும் என்று வெளிப்படையாகப் பேசி வந்தவர்கள் தான்.

இந்தக் காரணத்தால்தான் பிகாருக்கு வி.எச்.பி.யின் பொதுச் செயலாளரான தொகாடியா வரக் கூடாது என்று திருப்பி அனுப்பப்பட்டார்.

ஆர்.எஸ்.எஸின் குருநாதரான எம்.எஸ். கோல்வாக்கரால் எழுதப்பட்ட வரையறுக்கப்பட்ட நமது தேசியம் (We or our Nation hood Defined) என்ற நூல் என்ன சொல்லுகிறது தெரியுமா?

இந்துஸ்தானில் உள்ள இந்து அல்லாதவர்கள் அன்பு, தியாகம் போன்றவைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் தங்களை அயல்நாட்டினராகக் கருதக் கூடாது. அல்லது இந்தத் தேசத்தை முழுவதும் ஆதரிக்க வேண்டும். எதையும் கேட்காமல், எந்தச் சலுகைகளையும் பெறாமல் எதற்கும் முன்னுரிமை பெறாமல் குடி மக்களின் உரிமையும் இன்றி இருத்தல் வேண்டும் என்று அந்நூலில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனப்பான்மை தானே அசோக் சிங்கால் களுக்கு இருக்க முடியும். இதே அடிப்படையில் ஆர்.எஸ்.எஸின் முன்னாள் தலைவரான மறைந்து குப்பஹள்ளி சீத்தாராமய்யா சுதர்ஸன் (கே.எஸ். சுதர்ஸன்) என்ன சொன்னார்?

கிருத்தவர்கள் கிருஷ்ணனை வணங்க வேண்டும்; முஸ்லீம்கள் ராமனைத் தொழ வேண்டும் என்றெல்லாம் சொன்ன துண்டு.

இப்படி ஒரு பாசிச அமைப்பு இந்தியாவில் இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து விட்டது. இந்த நிலையில் இந்தப் பாசிசக் கும்பல் பந்தயக் குதிரை வேகத்தில்தான் நடந்து கொள்ளும் என்று எதிர்ப்பார்க்கத்தான் வேண்டும்.

இந்துத்துவ சக்திகள் ஆட்சியில் வந்தால் இந்து முஸ்லீம் ஒற்றுமை சீர்குலையும் என்று அரக்கோணம் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் (14.3.2014) கூறியதை நினைவு கொள்ள வேண்டும். மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தினாலொழிய இதற்கு வேறு மார்க்கம் கிடையாது.

குறிப்பாக தந்தை பெரியார் அவர்களின் தத்துவங்கள் சிந்தனைகள் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

மக்கள் சிந்தனை முன்னெடுத்துச் செல்லப்பட்டால் நொண்டி அடித்துக் கொண்டாவது அரசு பின்னால் வந்து சேரும் என்பதை இந்த இடத்தில் எண்ணிப் பார்ப்பது நல்லது.

அரசியல் கட்சிகள் - அவற்றின் தலைவர்கள் சங்பரிவாரை (பிஜேபி உட்பட) எவரும் அரசியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் அதைவிட - மிகப் பெரிய தவறு வேறு ஒன்றும் இருக்கவே முடியாது.

தெரிந்தோ தெரியாமலோ நம் நாட்டு சில அரசியல் கட்சிகள் இந்தத் தவறைச் செய்து கொண்டுதான் இருக்கின்றன என்பது வெட்கப்படத்தக்க பிற்போக் கான நிலையாகும்.
அசோக் சிங்கால் பேட்டியைப் படித்த பிறகாவது திருந்துவார்களா?

தமிழ் ஓவியா said...


மாணவர்களுக்கு அண்ணா அறிவுரை


நமது கலாச்சாரமும் நாகரிகமும் முதிர்ந்ததுதான் ஆனால் அவற்றின்மீது வடுக்களும், சுருக்கங்களும் ஏற்பட்டு உருக்குலைந்து போயிருக்கின்றன.

ஆகவே, நமது கலாச்சாரம், நாகரிகம் ஆகியவற்றில் உயர்ந்த அம்சங்களை ஆராய்ந்து கண்டுபிடித்து, பிறநாடுகளின் சாதனைகளில் நமக்குத் தேவையான வற்றைத் தாராளமாகப் பின்பற்றி முன் னேற்ற வேண்டும்.

இப்படிச் செய்யாமல் நாம் வடுக்களையும், சுருக்கங்களையும் அழுகிப்போன பகுதிகளையும் நீண்ட காலத்துக்கு மூடி மறைத்து வைத்திருந்தோம். புதிய எண்ணம் கொண்ட பெரியார் போன்றவர்களையும் கண்டித்து வந்தோம்.

பட்டம் பெற்றுவிட்ட நீங்கள் சமுதாயத்தை மாற்றி அமைப்பதிலும் சமுதாயத்தில் தாழ்ந்து கிடப்பவர்களுக்கு நம்பிக்கை ஒளி உண்டாக்கு வதிலும் அனைவருக்கும் புதுவாழ்வு மலரச் செய்வதிலும் பாடுபட வேண்டும்.

- 18.11.1967ஆம் நாள் அன்று
அண்ணாமலை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் அண்ணா

Read more: http://viduthalai.in/page-7/84262.html#ixzz37sFzjh30

தமிழ் ஓவியா said...

சென்னையில் கோயில்கள்

இன்று சென்னையிலி ருக்கும் கோயில்கள், ஒரு லட்சம் அல்ல. மேலும் பலரை குடியிருக்க ஏற்றுக்கொள்ளும் அமைப்பில்தான் இருக்கின் றன. ஒதுக்குப்புறங்களிலும் தெருக்களிலும் தங்கி இருப்ப வர்கள் நாஸ்திகர்களும் அல்ல. அவர்கள் அனைவரும் ஆண் டவன் குழந்தைகள்.

சிலருக்கு விரிந்த மனமும், அதிகாரத்திலிருப்பவர்களுக்குக் கொஞ்சம் துணிவும் இருந்தால் ஏழைகள் குடியிருப்புக் கஷ்டத்துக்கும் ஒரே நிமிடத்தில் நல்லதோர் முடிவு காணலாம்.

-21.12.1947 திராவிட நாடு தலையங்கத்தில் அண்ணா

Read more: http://viduthalai.in/page-7/84262.html#ixzz37sG85COM

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?

திருமணம்

பெற்றோர்கள், பிள்ளை களுக்கு திருமணம் பேசத் தொடங்கும்பொழுது காலா காலத்தில் கல்யா ணம் செய்ய வேண்டு மென்று சொல்வார்கள். வந்த வரன்கள் எல்லாம் வாயிலோடு திரும்பிச் சென்று விடுகிறதே என்று சிலர் அங்கலாய்ப்பர். சிலர் கை நிறையச் சம்பளம் வாங்கிய பிறகுதான் திரு மணம் செய்ய வேண்டு மென்று நினைப்பர். எவர், எப்படி நினைத்தாலும் ஜாதகம் சாதகமாகச் செயல்படும் பொழுதுதான் திருமணம் நடைபெறும். இல்லையென்றால் தள்ளிக் கொண்டே போகும். மனைவி அமைவதெல் லாம் இறைவன் கொடுத்த வரம், கணவர் அமைவ தெல்லாம் கடவுள் கொடுத்த வரம் என்று நினைக்க வேண்டும். ஒரு பெண் ணின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானாதிபதி 6,8 ஆகிய இடங்களில் இருந்தால் திருமணத்தில் தடைகள் ஏற்படும்.

குடும்ப ஸ்தானத்தில் கேது நின்றாலும், செவ் வாய், சனி களத்திர ஸ்தா னத்தில் சேர்க்கை பெற்று பலம் பெற்றாலும் அந்தப் பெண்ணிற்கு திருமணம் எளிதில் நடைபெறாது. தகுந்த பரிகாரங்கள் செய் தால் மனதிற்கினிய மண மகள் அமைவாளாம்.

இந்தியாவில் உள்ள மாப்பிள்ளை அமெரிக் காவில் சென்று கை நிறைய சம்பாதிக்கும் வேளையில் அங்குள்ள இன்னொரு மதப் பெண்ணையும் திரு மணம் செய்து கொண்டு ஜாம் ஜாமென்று வாழ்கிறார் களே! அவர்களின் ஜாதகத் தில் களத்திர ஸ்தானாபதி பதி 6,8 இடங்களில் இருப் பது தானோ?

Read more: http://viduthalai.in/e-paper/84321.html#ixzz37uqA4o7J

தமிழ் ஓவியா said...


காக்கிக்குப் பதில் காவி அணியலாமே!

சென்னை, ஜூலை 19: குற்றத்தை தடுக்க தனிப் பிரிவு, சைபர் கிரைம் மற்றும் வழக்கமான ரோந்து பணிகளையும், நேர்மையான முறையில் விசாரணை நடத்தினாலே குற்றத்தை பெரும்பாலும் காவலர் குறைத்துவிடலாம். ஆனால், காஞ்சி தாலுகா காவலர் என்ன நினைத் தார்களோ தெரியவில்லை, அதிகளவு குற்றங்கள் நடைபெறக் கூடாது என்பதற்காக கண் திருஷ்டி விநாயகர் படத்தை காவல் நிலையம் முன்பு வைத் துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட் டத்திலேயே மிகப்பெரிய எல்லை கொண்ட காவல் நிலையங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையம் உள்ளது. மாவட் டத்திலேயே காஞ்சி தாலுகா காவல் நிலையத் தில்தான் அதிக எண்ணிக் கையில் புகார்கள் வரு கின்றன.

இங்கு, காவலர் பற் றாக்குறை காரணமாக புகார்கள் மீது உடனடி நட வடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அருகில் உள்ள சிவகாஞ்சி மற்றும் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் இங்கு வந்து சில முக்கிய வழக்குகளை முடித்து தந்துவிட்டு செல்கின்றனர்.

இதனால், தாலுகா காவல் நிலைய ஆய்வாள ராக நியமிக்கப்படுபவர்கள், இங்குள்ள பணிச் சுமை யின் காரணமாக வந்த வேகத்திலேயே வேறு இடத்துக்கு மாறுதல் பெற்றுச் சென்று விடுகின் றனர். திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்ட எல்லைகள் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத் துக்கு உட்பட்டதாக அமைந்துள்ளது. சென்னை மற்றும் வெளி மாவட் டங்களில் கொலை செய் யப்பட்டு உடல்களை இர வோடு இரவாக பாலாறு, சென்னை-_பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளில் வீசிவிட்டு செல்கின்றனர். மேலும், அடிக்கடி விபத்து நடக்கிற இடமாகவும் இருக்கிறது.

இந்நிலையில், கம்ப்யூட்டர், மொபைல் போன் என தகவல் தொழில்நுட்பம் செழித் துள்ள இக் காலத்தில், பில்லி, சூன்யம், கண் திருஷ்டி பொம்மைகள், காத்து கருப்பு போன்ற பழைய பழக்க வழக்கங் களை காஞ்சி தாலுகா காவலர் இன்னும் நம்பி வருகின்றனர். காவல் நிலைய எல்லையில் குற் றங்கள் குறைய வேண்டும் என்பதற்காக தாலுகா காவல் நிலையம் முன்பாக கண் திருஷ்டி விநாயகரை காவலர் பொருத்தி இருக் கின்றனர் என்கின்றனர் சக காவலர் மற்றும் பொது மக்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/84324.html#ixzz37uqKq741

தமிழ் ஓவியா said...


வாரணாசி தொகுதியில் மோடி வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு


பிரச்சாரத்துக்கு கோடிக்கணக்கான பணம் செலவிடப்பட்டுள்ளது

மனைவியின் வருமான விவரம் குறிப்பிடவில்லை மோடிக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் தாக்கீது.

அலகாபாத், ஜூலை 19- வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதை எதிர்த்து, தோல்வி அடைந்த காங்கிரஸ் வேட்பாளர் தொடர்ந்த வழக்கில், மோடிக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் தாக்கீது அனுப்பியது.


பிரதமர் பதவி வகிக் கும் நரேந்திர மோடி, நாடாளுமன்ற தேர்தலில் குஜராத் மாநிலம் வதோ தரா, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அவர் வதோதரா தொகுதி உறுப்பினர் பதவியிலி ருந்து விலகினார்.

வாரணாசி தொகுதி யில் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை விட 3 லட்சத்து 71 ஆயிரம் வாக் குகள் அதிகம் பெற்றார். அந்த தொகுதியில் காங் கிரஸ் சார்பில் போட்டி யிட்ட அஜய் ராய்க்கு 3ஆ-வது இடமே கிடைத் தது. இவர் உத்தரபிரதேச மாநிலம் பிண்ட்ரா தொகு தியின் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.

வாரணாசி நாடாளு மன்ற தொகுதியில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதை எதிர்த்து, அலகாபாத் உயர்நீதிமன் றத்தில் அஜய் ராய் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

வாரணாசி தொகுதி யில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த வேட்பு மனுவில் நரேந்திர மோடி தனது மனைவி யசோதா பென்னின் வருமானம் குறித்தும், அவரது பான் கார்டு (வருமான வரி கணக்கு எண் அட்டை) பற்றிய விவரங்களையும் குறிப்பிடவில்லை. இது உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானது ஆகும்.

நாடாளுமன்ற தேர் தலில் போட்டியிடும் வேட்பாளர் பிரச்சாரத் துக்காக ரூ.70 லட்சத்துக்கு மேல் செலவிடக்கூடாது என்று தேர்தல் ஆணை யம் விதிமுறை உள்ளது. ஆனால், வாரணாசி தொகுதியில் மோடியின் பிரச்சாரத்துக்காக கோடிக்கணக்கான பணம் செலவிடப்பட்டுள்ளது. மோடியின் பெயர் மற்றும் உருவம் பொறிக்கப்பட்ட பனியன்கள் மற்றும் தொப்பிகள் மக்களுக்கு ஏராளமாக வழங்கப் பட்டன.

இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முரணா னது ஆகும். எனவே, வாரணாசி தொகுதியில் மோடி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தனது மனுவில் கூறி உள்ளார்.

நீதிபதி வி.கே.சுக்லா முன்பு நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், இந்த வழக்கு தொடர்பாக பிரத மர் நரேந்திர மோடிக்கு தாக்கீது அனுப்புமாறு உத்தரவிட்டார்.

அத்துடன், வழக்கு விசாரணையை வருகிற செப்டம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/84318.html#ixzz37uqVeWIp

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டில் சமஸ்கிருத வார விழாவை ஏற்க முடியாது பிரதமருக்கு முதல்வர் கடிதம்


சென்னை, ஜூலை. 19 பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல் அமைச்சர் ஜெயலலிதா இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத் தின் கீழ் உள்ள பள்ளி கல்வித் துறை செயலாளர், அனைத்து மாநில செய லாளர்களுக்கும் ஒரு கடி தம் அனுப்பி உள்ளார். அதில் அவர், ஆகஸ்டு மாதம் 7ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சமஸ் கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்று கேட் டுக் கொண்டிருப்பதாக அறிகிறேன்.

ஒவ்வொரு மாநிலங் களிலும் உள்ள மத்திய கல்வி கழகம் (சி.பி.எஸ்.சி.), கேந்திரிய வித்யாலயா (கே.வி.) மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சிக் கழகம் ஆகியவை இந்த சமஸ்கிருத வாரத்தை கொண்டாடும் என்று அந்த கடிதத்தில் கூறப் பட்டு இருப்பதாக தெரி கிறது. மேலும் மாநில அரசுகளும் அத்தகைய சமஸ்கிருத வாரத்தை மாநில, மாவட்ட, மற்றும் கீழ்மட்ட அளவில் கொண் டாட அந்த கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தமிழ்நாட்டில், பழமை யான தமிழ் மொழியா னது வளமான கலாச்சார சிறப்புக் கொண்டது என்பதை தாங்கள் அறி வீர்கள். அது போல தமிழ்நாட்டில் வலுவான சமூக நீதி மற்றும் மொழி இயக்கம் இருப்பதையும் தாங்கள் அறிவீர்கள்.

எனவே தமிழ்நாட்டில் சமஸ்கிருத வாரம் கொண் டாடப்படுவது மிகவும் பொருத்தம் இல்லாதது. அதை ஏற்க இயலாது.

ஒவ்வொரு மாநிலத் துக்கும் ஏற்ப, அந்த மாநில செம்மொழி கொண் டாட்டத்துக்கு ஏற்பாடு செய்வதே மிக, மிக பொருத்தமானதாக இருக் கும்.அந்தந்த மாநில மொழி மற்றும் கலாச் சாரத்துக்கு ஏற்ப கொண் டாட்டம் நடத்த கடிதத் தில் தேவையான மாற்றங் கள் செய்ய மத்திய அரசு அதிகாரிகளுக்கு அறிவு றுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். அந்தந்த மாநில மொழி, கலாச்சார கொண்டாட்டமானது, அந்த மாநிலத்தில் உள்ள சி.பி.எஸ்.சி. பள்ளிகள் உள்ளடக்கிய அனைத்து கல்விக் கூடங்களிலும் நடைபெற வேண்டும்.

இதுதான் நம்மை போன்ற மாறுபட்ட கலாச் சாரம், மொழித் தொன்மை கொண்ட நாட்டுக்கு பொருத்தமானதாக அமையும். இவ்வாறு முதல் அமைச்சர் ஜெய லலிதா அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/84323.html#ixzz37uqdsRja

தமிழ் ஓவியா said...


முல்லைப் பெரியாறில் அரசியல் மூக்கை நுழைக்கக் கூடாது!


முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக்கு வயது 35 - இவ்வளவு இடைவெளிக்குப் பிறகு ஒரு முடிவு இப்பொழுது கிடைத்திருக்கிறது.

1886 அக்டோபர் 29ஆம் நாள் சென்னை மாநிலத்திற்கும், திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கும் இடையே 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தமே முல்லைப் பெரியாறு என்பது.

152 அடி வரை நீரைத் தேக்கலாம் என்று வரையறை செய்யப்பட்டது. இடைக்காலத்தில் அணைக்குக் கடும் ஆபத்து என்று கேரளத்தவர்கள் கூக்குரல் கொடுக்க ஆரம்பித்தனர். அந்த நிலையில் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் கே.சி. தாமஸ் அணை யினைப் பார்வையிட்டதுண்டு - இது நடந்தது 1979 நவம்பரில்.

அதன்பின் பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட போது அணையைப் பலப்படுத்தும் பணியைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 21 கோடியே 51 லட்சம் ரூபாய் அதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டது. இந்தப் பணியைச் செய்து முடிக்கும் வரைக்கும் அணையின் நீர் மட்டத்தை 136 அடியாகக் குறைத்துக் கொள்ளவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. சீரமைப்புப் பணிகள் முடிந்தபிறகு 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்பதை கேரள மாநில அரசும் ஒப்புக் கொண்டதா இல்லையா? உண்மை என்னவென்றால் அணையைப் பாதுகாக்கும் பணிகள் முடிந்த நிலையிலும் கேரள அரசு ஏற்கெனவே ஒப்புக் கொண்டபடி நடந்து கொள்ளாமல் அணையின் நீர் மட்டத்தை உயர்த்தக் கூடாது என்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்து விட்டது. அதுதான் பிரச்சினைக்கே காரணம்.

ஏனிந்த முடிவை கேரளா எடுத்தது என்பதுதான் முக்கியம். 1976இல் கேரளாவில் இடுக்கி அணை கட்டப்பட்டது - இது முல்லைப் பெரியாறு அணையைக் காட்டிலும் ஏழு மடங்கு பெரியது. கேரளாவின் மின் தேவை முழுவதையும் இந்த அணையிலிருந்து உற்பத்தி செய்வதுதான் இந்த அணையை உருவாக்கியதன் இரகசியம் - ஆனால் எதிர்பார்த்த அளவு நீரைத் தேக்க முடியவில்லை. அதன் காரணமாக மின் உற்பத்தியும் கிடைத்த பாடில்லை. முல்லைப் பெரியாறு அணை என்ற ஒன்று இல்லையென்றால் அந்நீர் முழுவதும் இடுக்கி அணைக்கு கிட்டுமே! இதுதான் இதற்குள்ளிருக்கும் பிரச்சினை.

முல்லைப் பெரியாறில் தமிழ் நாட்டுக்குரிய உரிமை நிலை நாட்டப்படாத காரணத்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட இழப்புகளும் பாதிப்புகளும் அதிகம் 36,000 ஏக்கர் நிலங்கள் தரிசாகி விட்டன. 86,000 ஏக்கர் நிலங்கள் ஒரு போக சாகுபடிக்குத் தள்ளப்பட்டன. ஆற்று நீர்ப் பாசனத்தை இழந்து ஆழ் குழாய் நீருக்கு மாறிய விவசாய நிலங்களின் பரப்பளவு 30,000 ஏக்கர்; இதனால் ஆண்டு ஒன்றுக்கு ஏற்பட்ட நட்டம் ரூ.56 கோடி. மின் உற்பத்தி இழப்பு ரூ.75 கோடி.

இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் கேரளாவில் ஓடும் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆறுகளில் 50 சதவீதத்துக்கும் மேலான நீர் எவ்விதப் பயன்பாடும் இல்லாமல் கடலில் கலக்கின்றது.

35 ஆண்டுகளில் நீதிமன்ற ஆணைகள் - நிபுணர் குழுக்கள் என்று மாறி மாறி வந்திருக்கின்றன.

142 அடி நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்ற உச்சநீதிமன்ற ஆணை கறாராக நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தான் நமது எதிர்பார்ப்பு!

இப்பொழுது போய் தமிழக முதல் அமைச்சர் இதில் அரசியல் என்னும் மூக்கை நுழைய விடுவது பொறுப் பானதல்ல!

142 அடியிலிருந்து 136 அடியாகக் குறைத்துக் கொண்ட கால கட்டம் எது? அப்பொழுது ஆட்சியில் இருந்தவர் யார்? எந்தக் கட்சி? என்று பேச ஆரம் பித்தால், அது ஆளும் அதிமுகவுக்குத் தேவையில்லாத நெருக்கடியைத் தான் கொடுக்கும். கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிவது புத்திசாலித்தனமல்லவே!

பிற மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் நடந்து கொள்ளும் ஒற்றுமையைப் பார்த்த பிறகாவது நாம் புத்தி கொள் முதல் பெற வேண்டாமா? இதில் பொறுப்பாக நடந்து காட்ட வேண்டியது ஆளும் கட்சி என்பதை நினை வூட்ட வேண்டியது நமது முக்கிய கடமையாகும்.

Read more: http://viduthalai.in/page-2/84328.html#ixzz37urKTbEj

தமிழ் ஓவியா said...


சிவசேனாவை விமர்சித்த விவகாரம்


சிவசேனாவை விமர்சித்த விவகாரம் : கைது செய்யப்பட்ட மாணவிகளுக்கு ரூ. 50 ஆயிரம் நஷ்டஈடு மனித உரிமை ஆணையம் உத்தரவு

மும்பை, ஜூலை 19- -மும்பையில் சிவசேனா தலைவர் பால்தாக்ரே இறந்ததை தொடர்ந்து நடைபெற்ற சம்பவம் குறித்து பேஸ் புக்கில் விமர்சனம் செய்திருந்த இரு மாணவி களை மகாராஷ்டிரா காவல்துறை கைது செய்தது. இது குறித்து விசாரணை நடத்திய தேசிய மனித உரிமை ஆணையம், இது கருத்து சுதந் திரத்திற்கு எதிரானது. எனவே மாணவிகளை கைது செய்தமைக்காக அவர்களுக்கு நஷ்ட ஈடாக இரு வருக்கும் தலா ரூ. 50 ஆயிரம் வழங்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

சிவசேனாவின் தலைவராக இருந்த பால்தாக்ரே இறந்தபோது, மகாராஷ் டிராவின் பல பகுதிகளில் அக்கட்சி யினர் வன்முறையில் ஈடுபட்டு கடை களை அடைக்க செய்தனர். போக்கு வரத்தை அராஜகத்தின் மூலம் தடுத்து நிறுத்தினர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இது மும்பையில் வாழும் பலதரப்பு மக்கள் மத்தியில் கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. இது குறித்து இரு மாணவிகள் தங்களுக்குள் சமூக வலைத்தளமான பேஸ்புக்மூலம் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

அதில் மறைந்த தலைவர் மீதான மரியாதையை காண்பிக்க பந்த் நடத் துவது சரியான வழிமுறை கிடையாது. தாக்ரே மீதான மரியாதை காரணமாக கடைகள் மூடப்படவில்லை. பயத்தின் காரணமாகவே கடைகள் மூடப்பட் டுள்ளன என ஒரு மாணவி தெரிவித்தி ருந்தார். இதற்கு அவரது தோழி ஒருவர் அந்த கருத்தை ஆமோதித்து லைக் தெரிவித்திருந்தார். இதனைக்கூட சகித்துக்கொள்ள முடியாத சிவசேனா கட்சியினர் இது குறித்து காவல் துறையில் புகார் செய்து, சம்மந்தப்பட்ட மாணவிகளை கைது செய்து சிறையில் அடைக்க கோரினர். ஆனால் மும்பை காவல்துறையினர் எந்த வித சட்ட விதிமுறைகளையும் பின்பற்றாமல் சிவசேனாவிற்கு ஆதரவாக இரு மாணவிகளையும் கைது செய்தனர். இது இந்திய அளவில் பெரும் சர்ச் சையை உருவாக்கியது. பலதரப்பினரிட மிருந்தும் கடும் கண்டனம் எழுந்தது. இதனை தொடர்ந்து மகாராஷ்டிரா அரசு இந்த வழக்கை முடித்துக் கொண்டது. இருந்த போதிலும் தேசிய மனித உரிமை ஆணையம் இந்த விவ காரத்தை தானாகவே முன்வந்து கையி லெடுத்து விசாரணை நடத்திவந்தது. விசாரணையின்போது மாணவிகள், மத, இன உணர்வுகளுக்கு எதிராக கருத்து பதிவு செய்யவில்லை என்பது உறுதிபடுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் மகா ராஷ்டிரா அரசிற்கு ஓர் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதில் கூறியி ருப்பதாவது : மாணவிகளை எவ்வித விசாரணையும் இன்றி அவசர கதி யில் மகாராஷ்டிரா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு அம்மாநில அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இந்த நடவடிக்கை என்பது அரசமைப்பு சட்டம் பொது மக்களுக்கு வழங்கியுள்ள கருத்து சுதந் திரத்திற்கு எதிரானது.பாதிக்கப்பட்ட மாணவிகள் இருவருக்கும் தலா ரூ.50 ஆயிரத்தை அபராதமாக மகா ராஷ்டிர அரசு வழங்க வேண்டும். அல்லது, 1993ஆம் ஆண்டு மனித உரிமைகள் சட்டத்தின் 13ஆவது பிரிவின்கீழ் விளைவுகளை அந்த அரசு சந்திக்க வேண்டிவரும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது

Read more: http://viduthalai.in/page-2/84331.html#ixzz37urWgzHf

தமிழ் ஓவியா said...


நோக்கம்


சிறு கூட்டத்தாரால் நசுக்கப்பட்டும், வெறுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் செல்வமும், செல்வாக்கும் அற்ற பெரும்பான்மைக் கூட்டத்தார், சமுதாயத் துறைகளில் தங்களுக்குள்ள தடைகளை அரசியல்மூலம் நீக்கிக்கொண்டு முன்னேற்றமடையு மாறு செய்வதே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் நோக்கமாகும். - (விடுதலை, 21.7.1950)

Read more: http://viduthalai.in/page-2/84327.html#ixzz37ured8AO

தமிழ் ஓவியா said...


துண்டறிக்கைப் பிரச்சாரம் பாரீர்


வேலூர் மாவட்ட கழக அமைப்பாளர் கருப்புச்சட்டை மா.சீ.பாலன் அவர்களின் துண்டறிக்கைப் பிரச்சாரம் பாரீர்

நன்றி சொல்வீர்...

பல ஆயிரம் ஆண்டு காலமாக நம் முன்னோர்கள் சொன்ன வார்த்தை.
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு?

பொட்டப்புள்ள படிச்சு என்ன செய்யப் போகிறாள்? என்று பெண்களை ஏளனமாகவும், அலட்சியமாகவும் பேசி அவர்களை கல்வி கற்கவிடாமல் வீட்டிற்குள்ளேயே முடக்கி வைத்தனர் நமது முன்னோர்கள்.

இக்கொடுமையினை கண்டு எரிமலையாய் கொதித்தெழுந்த பகுத்தறிவு தந்தை பெரியார், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு கல்வி கற்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்று இரவு, பகல் பாராமல் இடைவிடாது தமிழ்நாடு முழுவதும் தீவிரப் பிரச்சாரம் செய்தார்.
அதன் பயனாய் அறியாமையிலும், பழமையிலும், மூடநம்பிக்கையிலும் மூழ்கிக்கிடந்த நமது இன மக்கள் மெல்ல, மெல்ல விழிப்புணர்வு பெற்று தங்கள் வீட்டுப்பெண் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்கவைக்க ஆர்வமுடன் முன்வந்தனர். இதைக் கண்ட பெரியார் மத்திய, மாநில அரசுகளுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 50 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டு வந்து சட்டம் இயற்ற வேண்டும் என்றார்.

பெண் மக்களே, நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் அறிவின் சுதந்திர ஊற்று எங்கிருந்து கிடைத்தது தெரியுமா-? பெரியார் 95 வயது வரை வாழ்ந்து அரசுகளை சிந்திக்க வைத்து தங்களுக்காகவே வாழ்ந்த அறிவு ஆசான். அவரின் சிலை, படம் தாங்கள் காணும்போது நன்றி அய்யா என்று உங்கள் மனதில் பதிவு செய்யுங்கள். பெண்களுக்கு பலப்பல புதிய சட்டங்கள் இயற்ற செய்த வரலாற்றுக்குரிய இடம் தான் பெரியார் திடல். 84/1, (50) சென்னை-_600007. உங்கள் குழந்தைகளுக்கு பெரியார் பிஞ்சு மாதஇதழ் வாங்கிக் கொடுப்பீர்! ஆண்டு சந்தா ரூ. 100.00 மட்டுமே. மாதா மாதம் உங்கள் இல்லம்தேடி வரும்.

வணக்கம் செய்வீர்...

தன் மகன் படித்து கலெக்டராகவோ போகிறான் அவன் தலையெழுத்து. இந்த ஆடு, மாடு மேய்த்தால் போதும், என்று இருந்த காலத்தில், பிரிட்டிஷ் ஆட்சியில் வாட்ச்மேனாக, பியூனாக, அமினாவாக, டபேதாரராக, பங்கா இழுப்பவராக வேலைப் பார்த்த தமிழர்களை கண்டு, எழுத்தறிவு தெரிந்துகொள்ள பெரியார் பிரச்சாரம் செய்து 1954ஆம் ஆண்டு, தமிழ்நாடு முதல்வர் கு.காமராசர் அவர்களைச் சந்தித்து கிராமந்தோறும் பள்ளிக்கூடங்களை திறக்க தாங்கள் உத்திரவிட வேண்டும். நம்மக்கள் கல்வியறிவு பெறவேண்டும் என்றார். முதல்வர் அவர்களும் நாடெங்கும் பள்ளிகள் திறக்க செய்தார்.
நம் மக்களும் படித்து கலெக்டராக என்ஜினியராக, டாக்டராக, மந்திரியாக இஸ்ரோ விஞ்ஞானியாக உலகுக்கு வழிகாட்டிகளாக இன்று வருகின்றவர்களே. இந்த ஆராய்ச்சி அறிவு யாரால் கிடைத்தது? சற்று சிந்தியுங்கள். அவர்கள் உருவம் தெரியுமிடமெல்லாம் கையெடுத்து வணக்கம் செய்யுங்கள். அப்போதுதான் நீங்கள் தமிழர்கள் (மனிதர்கள்) நன்றியுள்ளவர்கள்.

Read more: http://viduthalai.in/page-4/84349.html#ixzz37usHmrFt

தமிழ் ஓவியா said...


சுசீந்திரத்தில் சுயமரியாதை போர்

சுசீந்திரம் என்பது திருவாங்கூர் ராஜியத்தைச் சேர்ந்த ஒரு சேத்திர தலமாகும். அது திருநெல்வேலிக்கு 40ஆவது மைலில் உள்ள நாகர்கோவிலுக்கு 2, 3, மைல் தூரத்தில் உள்ள கிராமம். நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரிக்குப் போகின்ற வழியில் இருக்கின்றது. அந்த ஊரில் உள்ள ஒரு கோவிலைச் சுற்றியுள்ள ரோடுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்கள் செல்லக்கூடாது என்ற நிர்ப்பந்தம் இப்பொழுதும் இருந்து வருகின்றது.

அந்த ரோடுகள் திருவாங்கூர் சர்க்காரால் பொதுஜனங்களின் வரிப்பணத் திலிருந்து பாதுகாக்கப்பட்டு வருவதாகும். அந்த ரோடுகளுள்ள திருவாங்கூர் ராஜியமானது, ஒரு இந்து அரசரால் அதுவும் ஒரு இந்து கடவு ளாகிய பத்மநாபவாமி என்பதின் (தாசரால்) பிரதிநிதியால் அரசாட்சி செய்யப்பட்டு வருகின்றது. அந்த ரோடில் நடக்கக் கூடாது என்று சொல்லப்படும் ஜனங்கள் யாரென் றால் இந்துக்கள் என்று சொல்லப் படுபவர்களும், அந்த பத்மநாப சாமியின் பக்தர்களுமே யாவார்கள்.

மற்றபடி, அந்த சாமியின் பக்தர் களல்லாதவர்களும், இந்துக்கள் அல்லாதவர்களுமான கிருத்தவருக் கோ, மகமதியர்களுக்கோ, அவ் வழியில் நடப்பதற்கு யாதொரு ஆட்சேபணையும், தடங்கலும் சிறிதுகூட கிடையாது. இதுதவிர, மேற்கண்டபடி இந்துக்கள் என்பவர்களில் பெரும் பான்மையான மக்களாகிய சில சமூகத்தரைத்தவிர, மற்றபடி மனிதர்கள் அல்லாத எந்த ஜந்தும், மலம் முதலிய எந்த வதுவும் அந்த தெருவில் மேள வாத்தியங்களுடனும் பல்லக்குச் சவாரியுடனும் கூடப்போகலாம்.

அப்படிப் போவதில் யாருக்கும் ஆட்சேபணையும் கிடையாது. ஆனால் அந்த சுவாமியின் பக்தர்களான சில மனிதர்களுக்கு மாத்திரம்தான், அதுவும் இந்து என்று சொல்லிக் கொள்பவனுக்கு மாத்திரம்தான் ஒரு இந்து ராஜா ஆளும் ராஜ்யத்தில் உள்ள ஒரு தெருவில் நடப்பது மதவிரோதம் என்று இந்த 20ஆவது நூற்றாண்டில் மறுக்கப்பட்டு வருகின்றது.

இந்தக் காரியத்திற்காகவே, அதாவது அது போன்ற ஒரு தெரு வழி நடை பாத்தியத்திற்காகவே சென்ற 1923ஆம் வருஷத்தில் அதே திருவாங்கூர் ராஜியத்தைச் சேர்ந்த வைக்கம் என்னும் ஊரில் ஒரு தடவை சத்தியாக்கிரகம் செய்யவேண்டி ஏற்பட்டது வாசகர்களுக்கு ஞாபகமிருக் கலாம்.

அந்தச் சத்தியாக்கிரகம் சுமார் 5, 6 மாத காலம் நடைபெற்று பலர் பல தடவை சிறை சென்றும் வேறு பல கஷ்டங்களும் அனுபவித்த பிறகு அந்த வழி நடைப் பாதை எல்லோருக்கும் பொது உரிமையுடைய தாக ஆக்கப்பட்டது. இப்போதும் அதுபோலவே இந்தச் சுசீந்திரம் வழிநடைப் பாதையும் வைக்கத்தைப் போலவே சத்தியாக்கிரகம் செய்ய வேண்டியதாகி ஏற்பட்டு இப்போது சிறிது நாளாக சத்தியாக்கிரகமும் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த சத்தியாக்கிரகத்தின் பயனால் இதுவரை சுமார் 10, 15 பேர்கள் வரை சிறை சென்று இருப்ப தாகவும், இனியும் 10, 12 பேர்கள் மீது கேசு நடப்பதாகவும் சர்க்கார் மிகவும் கடுமையான அடக்கு முறையைக் கொண்டு சத்தியாக்கிரகத்தை அடக்கி விடத் தீர்மானித்திருப்பதாகவும் தெரியவருகின்றது.

அதற்கேற்றாப் போல் அந்த ராஜ்ஜியம் இதுசமயம் ஒரு வருணாசிரம பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்கத்தில் வெறிபிடித்த வருமான ஒரு திவானின் ஆட்சி யிலும் அந்தக் குறிப்பிட்ட இடமானது ஒரு பார்ப்பன ஜில்லா மேஜிட்ரேட் ஆட்சியிலும், ஒரு பார்ப்பன ஜில்லா போலிசு சூப்ரண்டு ஆட்சியிலும் இருந்து வருகின்றது.

இந்த பார்ப்பன போலீசு சூப்பிரண்டு யார் என்றால் வைக்கம் சத்தியாக்கிரகத்தின் போது அரசாங்கம் திகைத்த காலத்தில் தனக்குப் பூரண அதிகாரம் கொடுத்தால் 5 நிமிஷத்தில் வைக்கம் சத்தியாக்கிரகத்தை அடக்கிவிடு வதாகச் சொல்லி அரசாங்கத்தினிடம் பூரா அதிகாரம் பெற்று வந்து ஆட்சி செய்தவர்.

இவர் காலத்தில்தான் தொண்டர் களை அடித்தல், குத்துதல், கண்ணில் சுண்ணாம்பு பூசுதல், இராட்டினங்களையெல்லாம் ஒடித்து நொறுக்குதல், காலிகளை ஏவிவிட்டு சத்தியாக்கிரகிகளுடன் கலகம் செய்வித்தல், சத்தியாக்கிரகம் செய்யும் பெண்களிடம் மிக்க நீசத்தனமாக நடந்து கொள்ளுதல், எதிர்பிரசாரம், எதிர் பத்திரிகைகள் முதலியவைகள் செய்தல் முதலாகிய காரியங்கள் எல்லாம் நடைபெற்றதோடு திருவிதாங்கூர் ராஜ்யத்தின் இந்த மாதிரியான பெருமையை உலகத்திற் கெல்லாம் வெளிப்படுத்தினவர்.

அந்த அனுபவத்தைக் கொண்டுதான் இப்போதும் திருவிதாங்கூர் அரசாங்கத்தார், அவரையே சுசீந்திரம் சத்தியாக்கிரகத்திற்கும் போட்டு இருப்பதாய் தெரிகின்றது. திருவிதாங்கூர் ராஜ்யத்தின் பெருமை மற்றொருதரம் உலகமறிய ஒரு சந்தர்ப்பம் இந்த மகானாலேயே ஏற்பட நேர்ந்தது பற்றி நமக்கு மிக்க மகிழ்ச்சியேயாகும்.

Read more: http://viduthalai.in/page-7/84306.html#ixzz37utGuGSm

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

ஜாதிக்கென்று தொழில் செய் வதால்தானே, ஈன ஜாதி, இழிஜாதி என்று சொல்ல வாய்ப்பேற்படுகிறது. அந்த மாதிரி ஈன ஜாதி, இழி ஜாதி என்று சொல்வதற்கான வேலையை நீ செய் யாதே! நீ செய்து தொலைத்தாலும் உன் மக்களைச் செய்ய விடாதே. எல்லாத் தொழிலையும் எல்லோரும் செய்ய வேண்டிய நிலை ஏற்படட்டும்

Read more: http://viduthalai.in/page-7/84306.html#ixzz37utPqFUZ

தமிழ் ஓவியா said...


சட்டமறுப்பு இயக்கம்

தலைவர்களுக்குள் எங்கும் ராஜிப் பேச்சும் ராஜிக் கோரிக்கையுமே முழங்குகின்றது. ஆனால், சர்க்கார் ராஜிக்கு இடம் இல்லை என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்கள். குறைந்த அளவு ராஜி நிபந்தனையாக, சிறையிலிருப்பவர்களை விடுதலை செய்தால் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்துவதாக திரு. மாளவியா சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

தேசியப் பத்திரிகைகளும் அதை வலியுறுத்தி ராஜி! ராஜி!! என்று கதற ஆரம்பித்து விட்டன. எனவே தோல்வி கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்து விட்டது. ஜோசியப் புரட்டினாலாவது அதாவது திரு. காந்தி நாளைக்கு விடுதலை, நாளன்னைக்கு விடுதலை என்று எழுதி சிறு பிள்ளைகளையும் பாமர மக்களையும் ஏமாற்றி சிறைக்கு அனுப்பிக் கணக்குக் கூட்டி வந்ததும் கூட இப்போது சில ஜோசியர்களுக்கும் 144 போட்டுவிட்டதால் அவர்களும் அடங்கும்படியாகி விட்டது.

மற்றபடி ஜவுளிக்கடை, கள்ளுகடை, பள்ளிக்கூட மறியல்களோ வென்றால் தொண்டர்கள் எண்ணிக்கை போதாததால் நிறுத்த வேண்டிதாய் விட்டது. வேதாரணியத்திற்கு யாத்திரைக்குப் போகும் ஜனங்கள் பெயர்களைக் கூட பத்திரிகைகளுக்கு வெளிப்படுத்த முடியாமல் போய் விட்டது. மற்றும் எது எப்படியானாலும் சட்ட மறுப்பு இயக்கத்தால் ஒரு லாபம் ஏற்பட்டதை நாம் மறுக்க முடியவில்லை.

அதாவது அது சர்க்காரை ஒன்றும் செய்யமுடியவில்லை யானாலும் பணக்கார வியாபாரிகள் திமிர் சற்று அடங்கிவிட்டது. அநேக வியாபாரிகள் இயக்கத்தை வைத்துக் கொண்டே தூக்கமில்லாமல் இருக்கின்றார்கள். பணக்கார விவசாயிகள் திமிரும் சமீபத்தில் அடங்கிவிடும். தவசங்கள் (தானியங்கள்) விலை மிகவும் இறங்கிவிட்டதால் வரும்படி குறைந்து திண்டாடுகிறார்கள்.

ஆனால், ஏழைகளுக்குச் சற்று உணவு பொருள்கள் சல்லீசாய் கிடைக்க ஆரம்பித்து விட்டது. ஆகவே இந்த காரணங்களைக் கொண்டு இந்த கிளர்ச்சி இன்னமும் ஒரு மூன்று மாதத்திற்கு ஆவது நடந்தால் இன்னமும் சற்று ஏழைமக்களுக்கு அனுகூல மாகும் என்றே ஆசைப் படுகின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 20.07.1930

Read more: http://viduthalai.in/page-7/84305.html#ixzz37utYgHki

தமிழ் ஓவியா said...

பொருளாதாரத்தில் சரி பண்ணிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று பேசு கிறார்களே, பொருளாதாரத் தில் எவ்வளவு தான் உயர்ந்த வர்களாக ஆனாலும் கூடச் சூத்திரன் சூத்திரன் தானே! பறையன் பறையன்தானே!

Read more: http://viduthalai.in/page-7/84305.html#ixzz37uti3U49

தமிழ் ஓவியா said...


பராமரிப்பின்றி புத்தர் சிலைகள்தஞ்சாவூர், திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த, அய்யம்பேட்டை, ஆயிரவேலி அயிலூர், உள்ளிக்கோட்டை, ஒதுளூர், கரூர், கிள்ளியூர், பட்டீஸ்வரம், பரவாய், புஷ்பவனம், புத்த மங்கலம், புதூர், பெரண்டாக்கோட்டை, பெருஞ்சேரி, மங்கலம், மன்னார்குடி, மானம்பாடி, விக்கிர மங்கலம், விக்ரமம், வெள்ளலூர் உள்ளிட்ட பல இடங்களில், இப்போதும் மகாபுத்தர் வழிபாடு நடைமுறையில் உள்ளது. அய்யம்பேட்டையில், முனீஸ்வரன் என்றும், பெருஞ்சேரியில் ரிஷி, என்றும், புத்தரை வழிபடுகின்றனர். பல நூற்றாண்டுகளுக்கு முன், பவுத்த மதம் தமிழகத்தில் பரவியபோது, சோழ நாட்டில், அதன் தாக்கம் அதிகளவில் இருந்தது. அதனால், அப்பகுதி முழுவதும், புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டன. பிற்காலங்களில், சிலைகள் பராமரிக்கப்படாமல் அப்படியே விடப்பட்டன. தமிழக தொல்லியல் துறை, இருபது ஆண்டுகளுக்கு முன், காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள புத்தர் சிலைகளை கணக்கெடுத்து, அதில், 70 புத்தர் சிலைகள் இருப்பது தெரிய வந்தது. அவற்றில் 20 சிலைகளை உள்ளூர் மக்கள் வழிபட்டு வந்தனர். எனவே, அச்சிலைகளை அவர்களின் பொறுப்பிலேயே தொல்லியல் துறை விட்டது. மீதமுள்ள, 50 புத்தர் சிலைகள், போதிய பராமரிப்பின்றி அழியும் நிலையில் இருப்பதாக தொல்லியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே, புத்தர் சிலைகளைப் பராமரிக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/page8/84374.html#ixzz37uwQIcvs