Search This Blog

29.7.14

இதுதான் வால்மீகி இராமாயணம் - 15



(இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.)



பால காண்டம்

பதினான்காம் அத்தியாயம் தொடர்ச்சி ஆரியப் பார்ப்பனர் மயக்கத்தில் எவ்வாறோ அகப்பட்டு மயங்குபவரோ?  அன்றி அவ்வகுப்பினரில் ஒருவரோ இச்சாமிநாதன்?  மேலே நாம் கூறியுள்ள மொழி பெயர்ப்பாளர் நால்வரில் அநந்தாச்சாரியாரும் சீனிவாசய்யங்காரும் வைணவ சமயத்தினர்.  மற்றிரு வரும் ஆரியரே.  இவர்கள் எல்லோரும் அகலிகை சோரம் போனமையையும் தசரதன் தன் பத்தினிமார் களை இரித்விக்குகளிடம் ஒப்படைத்ததையும் ஒப்புக் கொண்டு உண்மையை உள்ளவாறெழுதியிருக்க அவற்றைத் தாமும் படியாமல் படித்த நமது கூற்றையும் கேளாமல் இவர் பிதற்றுரை பல வரைகின்றனரே?  கொஞ்சம் எழுதப் படிக்கத் தெரிந்த அரைகுறைப் படிப்பாளியாகிய நம் சாமிநாதனே ஆரியப் புரளியில் இவ்வாறு ஏமாறி மயங்கிக் கிடந்தனரென்றால், கொஞ்சமும் படியாமலிருக்கும் சாதாரண மக்களின் நிலையைக் கூறவும் வேண்டுமா?  தாடகாபிராட்டி யாருடைய பெருமைகளை இவர் தேவாரத்தைப் படித்து உணர்வாராக !


இனி அவர் தமக்கே பொருள்படாதெழுதும் வெற்று ரைகளை விடுத்து, அவர் பின்னெழுதும் இராமா யணத்தில் அநேக ஜனங்கள் வெகுவாய்த் தெரிந்து கொண்டிராத - ராமனுடைய குற்றமெனக் கருதிக் கொண்ட ஒரு பார்ப்பனக் குழந்தையின் மரணத்துக்காக ஒரு சூத்திரனைச் சிரச்சேதம் செய்த கதையை எடுத்துக்காட்ட வந்த நாயக்கருக்கு, எல்லாராலும் ஸ்பஷ்டமாய்த் தெரிந்திருக்கும்படியான விஷயமாகிய குகனென்னும் படகோட்டி விஷயத்தில் ஜாதி வித்தியாச மின்றி அவனை அன்போடாதரித்து அவனையும் சகோதரர்களில் ஒருவனாகச் சேர்த்துக் கொண்ட உண்மை நெறியும், வானரர்களை வித்தியாசமின்றி அன்பினால் பிணித்துக் கொண்டு அவர்களுடன் ஒன்றாயிருந்து காலங் கடத்திய நீதிமுறையையும், மானிட வகுப்பைச் சேராத சடாயு என்னும் பக்ஷியின் மேல் வைத்த அன்பினால் தான் மரணத்துக்காகக் கண்ணீர் விட்டுக் கதறியழுது, அதைப் புள்ளினமெனக் கருதாது அதற்கும் மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய ஈமக் கடன்களைத் தாமே செய்த நேர்மையும், சபரி என்னும் ஓர் ஏழைப் பெண்ணாலளித்த உணவுவினை உண்ட அன்பின் பெருக்கும், அரக்கர் குலத்தைச் சேர்ந்த விபீஷணரின் நேர்மையான நடத்தையைக் கருதி, அவரை அரக்கனெனத் தள்ளாமல் தன்னுடன் சேர்த்துக் கொண்ட சமத்துவ நீதியும், நிராயுதபாணியாய்த் தன்னுடைய பாணத்தில் ஏற்படும் மரணத்தைத் தவிர வேறு கதியற்றவனாக நின்ற இராவணனை, இன்று போய் நாளை வா என்று சொன்ன அரச நீதியும், வண் ணான்தானே என்று அலட்சியம் செய்யாமல் அவனை ஒரு பிரஜா உரிமை உடையவனெனக் கருதி, அவன் சொல்லுக்கும் தான் கட்டுப்பட வேண்டும் என்னும் காரணத்தால், தன்னுடைய மனைவியாகிய நாட்டினர சியைக் காட்டிற்கனுப்பிய நன்னடத்தைகளும் இராமன் பால் இருக்க, சமத்துவ வேஷம் பூண்ட நாயக்கருக்கு இவையெல்லாம் விளங்காமல் அந்த ஒரு விஷயம் மட்டும் அடிக்கடி பல சமயங்களிலும் நிதர்சனமாய்க் கொண்டு வருகின்ற நேர்மைதானென்னே! என்ற கூற்றினை ஆராய்வோம்.  மேலே கண்ட கூற்றுகளைப் படித்துப் பார்த்தால், அது ஒரு பார்ப்பனன் தமிழாகவே காணப்படுகிறது.  ஆதலின் சாமிநாதன் என்பவர் ஒரு பார்ப்பனராதல் வேண்டும்.  அன்றி பார்ப்பனன் பெற்ற பிள்ளையை (கட்டுரையை)த் தாம் பெற்ற பிள்ளையாகக் கொண்ட ஒரு பார்ப்பனரல்லாதாராக வேண்டும்.  இவர் பார்ப்பனரல்லாதாரெனின், இவர் பிறருக்குப் பிறந்த பிள்ளைகளைத் தன்னவையெனக் கொண்ட தசரதன் செயலுக்குப் பரிந்து பேசுதற்கு ஒப்பமிட்டது வியப் பாகாது.  அன்றி பார்ப்பனரேயெனின், இவ்வாறெழு துவது அவரியல்பே.  இத்தகைய கட்டுரையை வெளிப் படுத்தியவரின் பெருமைதானென்னே!  இதனால் தமிழ்நாடு ஆசிரியர் பெருமையும், கல்வியும், ஆராய்ச்சி வன்மையும் இனிது புலனாகும்.  குலத்தைக் கெடுக்கும் கோடரிக் காம்புகளும் உள.  இனி மேலே குறித்துள்ள கூற்றுகளை ஆராய்வோம்.


இராமன் ஒரு பார்ப்பனனுக்காக ஒரு சூத்திரனுடைய தலையை வெட்டிய அநியாயத்துக்குச் சமாதானம் கூறுவதை விடுத்து, நம் சாமிநாதன் வேறு பல விரித்தார்.  விரித்தமையும் மிக அழகிதே.  இராமனைப் பற்றிய வேறு சில செய்திகளைக் குறித்தார்.  அவற்றை வரும்போது விவரமாக ஆராய்வோமேனும் ஈண்டுச் சுருங்கக் கூறுவோம்.  குகனுடைய உதவியில்லாமல் போனால், இராமன் கங்கையைக் கடத்தலரிது.  ஆதலின், அவனு டைய உதவி பெறுதற்காக இராமன் அவனை அவ்வாறு பேசி மயக்குகிறான்.  இராமன் ஒரு ராஜதந்திர நிபுணனே.  குரங்குகளோடு அவன் கூடி வாழ்ந்தது அவன் பெற்ற சாபப் பயனேனும், அவன் வாலியை மறைந்து நின்று கொன்று சகோதரத்துரோகியாகிய சுக்ரீவனோடு நட்பு கொண்டது.  பரதனாகிய தனது சகோதரனுக்குத் துரோகம் நினைத்த அவ்விராமனுக்கு இயல்பானதே.  இது போலவே சகோதரத் துரோகியாகிய விபீஷணனிடம் இராமன் நட்புக் கொண்டதும் அவனுக்கு இயல்பும் இராஜ தந்திரமுமாம்.  இவ்வாறாக இவ்விருவருடனும் நட்பு கொண்டதை இராமனுக்குப் பெருமையானதென மயங்கினார் சாமிநாதன்.


பேராசைக்காரனும் சகோதரத் துரோகியுமாகிய விபீஷணனைத் தன்பக்கம் சேர்க்காதிருந்தால், இராமன் இராவணனைக் கொன்றிருத்தல் இயலாது.  இராவண னுடைய நெஞ்சில் அம்பெய்து கொல் எனக் கூறி அருகே நின்றானே பாவி விபீஷணன்!  அநியாயம்!  அநியாயம்!  இன்று போய் நாளை வாவென இராமன் கூறியதாகக் கூறுவது, இராமனால் பற்றுடைய வால் மீகியும் கம்பரும் என்பதைச் சாமிநாதன் உணர்வாராக !  இனத்துரோகமும் இனத் துரோகச் சேர்க்கையும்தான் சாமிநாதனுக்குச் சமத்துவமாகத் தோன்றுகின்றன போலும்.  தனக்கு உதவி செய்த சடாயுவுக்கு  மனமிரங்  கியது உலக இயற்கையே.  நல்லுணவு கிடையாது திண்டாடிய இராமனுக்குச் சபரி நல்லுணவு தர அதை அவன் ஆவலுடன் வாங்கி உண்டதும் அவனுக்கு ஒரு பெருமையே!  நன்றாகச் சாப்பிட்டதை ஒரு பெருமை யாகக் காட்டியது சுவாமிநாதனுக்கு ஒரு பெருமையே.  இவற்றால் இராமனுடைய துரோகச் செயல்கள் இனிது புலனாகும்.  இராமன் சூத்திரனைக் கொன்றது அதிபாத கமே.  அதனால், இராமன் சிறந்த அதர்மராஜனே என்பதும் விளங்குகிறது.  இனி சீதையைப் பற்றி அவர் கூறுவதைக் கவனிப்போம்.


இராமன் சீதையின் கற்புடைமையில் அய்யுறுகிறான்.  சீதையை இராவணன் பற்றி மடியில் வைத்துப் போனதும் அவனுடைய வசமாக அவள் பத்துமாதம் வாழ்ந்ததுமே அவ்வையுறவுக்குக் காரணம்.  சீதையும் தன்னுடல் இராவணன் வசமிருந்ததை ஒப்புக் கொள்ளுகிறாள்.


இராமன் அரசாளும் நாளையிலே ஒரு வண்ணான் அந்நியனோடு வாழ்ந்த சீதையை இராமன் சேர்த்துக் கொண்ட இழிசெயலை மிக இழித்துப் பேசுகிறான்.  அதனால் மானம் பொறுக்க மாட்டாமல் இராமன், நிறைந்த கர்ப்பிணியாக இருந்த சீதையைக் காட்டுக்கு வஞ்சகமாக அனுப்புகிறான்.  இவ்விழிந்த செயலைப் பாராட்டிச் சாமிநாதன், வண்ணான்தானே என்று அலட் சியம் செய்யாமல் அவனும் ஒரு பிரஜா உரிமையுடை யவனெனக் கருதி, அவன் சொல்லுக்கும் தான் கட்டுப்பட வேண்டுமென்னும் காரணத்தால், தன்னுடைய மனைவியாகிய நாட்டின் அரசியைக் காட்டிற்கனுப்பிய நன்னடத்தைகளும் என்று எழுதினார்.  பிரஜா உரிமைபற்றியும் அரசாளும் முறைபற்றியும், நன்னடத்தை பற்றியும் இச்சாமிநாதனுக்குள் அறிவு மிக அழகியதே.  இவ்விழிந்த ஆராய்ச்சியையும் தமிழ்நாடு வெளிப் படுத்தியதே!  அறிவாளர் நகையாடக் கூடிய இத்தகைய கட்டுரைகளை வெளிப்படுத்துவதிலும் நல்ல கட்டுரைகள் கிடையாது போலும்.  வெள்ளைத் தாள்களை மடித்துச் சந்தாதாரர்களுக்கு அனுப்பின் மிக நலமாக இருக்குமே. வண்ணான் ஒருவன் தன் மனைவியின் நடத்தையில் அய்யுற்றது காரணமாகத் தன் மனைவியை - அதிலும் பூரணக் கர்ப்பிணியை ஒருவன் காட்டுக்கு அனுப்பினா னென்றால், அவனைப் போலும் அறிவில்லாத முழு மூடன் ஒருவன் இவ்வுலகத்தில் இதுகாறும் தோன்றி யிருப்பானா என்பதைச் சாமிநாதன் சிந்திப்பாராக!  இராமன் இதனால் மிகவும் முழுமூடனாதல் வேண்டும்.  அன்றியும் இரக்கமற்ற பாவியுமாதல் வேண்டும்.  தன்னுடைய மனைவியும் பூரணக் கர்ப்பிணியுமாகிய சீதையென்ற ஒரு பெண்ணிடத்திலே இவ்வாறு மிருகத் திலும் கேடு கெட்ட மிருகம்போல நடந்துகொண்ட இராமன், தவம் செய்து கொண்டிருந்த ஒரு சூத்திர னுடைய தலையை வெட்டினானென்பது ஒரு ஆச்சரிய மன்று.  விவேகானந்தர் கூறுகிறாரென நம்பும் இடைச் செருகலெனும் நம்பிக்கையைச் சாமிநாதன் விட்டொழிப் பாராக!  மேலும், சீதை கற்பிழந்தவளாகாதிருந்தால், அவள் கணவனாகிய இராமன் அய்யுற்றதோடு நில் லாமல் உறுதி கொண்டு அவளைக் காட்டுக்கு அனுப்பி யிரானன்றோ?  அவரது பாரதக் கூற்றாராய்ச்சியை வரும்போது எழுதுவோம்.இது இடனன்றாம். 


அய்யோத்தியா காண்டம்

முதல் அத்தியாயம் பரதன் சத்துருக்கனோடு மாமன் வீட்டில் வாழ்ந்து வந்தான். தசரதனுக்குத் தன் மக்கள் நால்வரிடத்திலும் சம அன்பு என்றாலும், இராமனிடத்தில் அதிக அன்பு. இராமனோ பிறரால் அறியமுடியாத எண்ணத்தை யுடையவன், ஆலோசித்த காரியம் முடியும் வரையில் பிறர்க்குத் தெரியாமல் மறைத்து வைத்துக்கொள்வான். இராமன் எல்லா ஜனங்களுக்கும், தசரதனுக்கும் மகழ்ச்சியைக் கொடுக்கும் நல்ல நடைகளோடு விளங்கினான். அதனால் ஜனங்கள் இவன் தங்களுக்கு அரசனாக வேண்டுமென்று ஆசை கொண்டார்கள். தசரதனும் நமது குழந்தை இராமனுக்குப் பட்டா பிஷேகம் செய்து இந்த முதிர்ந்த வயதில் அதனா லுண்டாகும் ஆனந்தத்தை அனுபவித்துத் தன் மந்திரிகளோடு யோசித்து இராமனுக்குப் பட்டங்கட்டத் தீர்மானித்தான். அதுவும் சீக்கிரம் நடைபெற வேண்டுனெ எண்ணினான். தூதர்களையனுப்பி அரசர்களை வரவ ழைத்தான்.  ஆனால் கேகய மன்னனும் சனகனும் வெகு தூரத்திலிருந்ததால், பிறகு கேட்டு மகிழட்டுமென்று அவர்களுக்குச் செய்தியனுப்பவில்லை. அவ்விரு வரையும் தவிர எல்லா அரசர்களும் வந்து சேர்ந்தனர். அவ்வரசர்களையும் தன் குடிகளையும் பார்த்துத் தசரதன் பின்வருமாறு கூறினான்.


எனக்கு வயது முதிர்ந்து விட்டது. அறுபதினாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து தளர்ந்துபோன இவ்வுடலுக்கு ஓய்வு வேண்டுகிறேன். அதனால் இப்போது இங்கிருக்கும் எல்லோருக்கும் சம்மதமானால் இளவரசாக இருக்கத் தகுந்தவனென்று நான் குறிப்பிடும் மூத்த மகனான இராமனை அரசனாகச் செய்து சுகமாக இருக்க நினைக்கிறேன். இராமன் உத்தம குணங்களையுடையவன், இவ்வெண்ணம் நலமெனத் தோன்றினால், நீங்கள் அனுமதி கொடுக்கலாம். இது உசிதமன்றென்றால், வேறு என்ன செய்யலா மென்று அதையும் சொல்லுங்கள். இராமனுக்குப் பட்டம் கட்டுவதே உசிதமென்று எனக்குத் தோன்றினாலும், மத்தியஸ்தர்களான உங்களோடு ஆலோசித்துச் செய்வதே உசிதமென்று நினைக்கிறேன் என்று சொன்னான். அதைக்கேட்ட எல்லோரும் அவனு டைய எண்ணப்படி செய்வதே நலமென்று கூறினர்.

               ------------------------ தொடரும்-"விடுதலை”  29-07-2014

26 comments:

தமிழ் ஓவியா said...


சலுகைகள் ஆயிரம் இருந்தும் அரசுப் பள்ளிகளின் செல்வாக்குக் குறைவானேன்? மூடப்படும் நிலை ஏற்பட்டது ஏன்? - கி. வீரமணி

சலுகைகள் ஆயிரம் இருந்தும் அரசுப் பள்ளிகளின் செல்வாக்குக் குறைவானேன்? மூடப்படும் நிலை ஏற்பட்டது ஏன்?

ஆசிரியர் பயிற்சி நிலையங்களும் மூடப்படும் நிலை ஏன்?

முதல் அமைச்சர் உடனடித் தீர்வு காண வேண்டும்! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

கி.வீரமணி

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளும், ஆசிரியப் பயிற்சி பள்ளிகளும் மூடப்படும் நிலை ஏற்படுவதற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்து, இந்த நிலையிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளை முதல் அமைச்சர் காண வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருந்த தமிழ்நாட்டுக் கல்வித் துறை இப்போது பல்வேறு அவலங்களுக்கும் குறைபாடுகளுக்கும் கடும் விமர்சனத்திற்கும் ஆளாவது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும்.

கிராமப் புறங்களில் அரசுப் பள்ளிகளாக உள்ளவை பல - போதிய அடிக்கட்டுமான வசதிகள், ஆசிரியர்கள் பற்றாக்குறை - அதன் காரணமாக, பல ஏழைப் பெற்றோர் கள்கூட, தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியதால் ஏற்பட்ட மாணவர்கள் போதாமை.

அரசுப் பள்ளிகளை மூடும் நிலை

அரசு பள்ளிகளில் மாணவர்கள் போதிய அளவில் இல்லாததால் பள்ளிகளை மூட வேண்டிய நிலை என்று சில பகுதிகளில் உள்ள கிராமப் பெற்றோர்கள் கூறுவதாக தொலைக்காட்சியில் செய்திக் கோவைகள் வருகின்றன.

அரசின் கல்வித் துறை இதற்குரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்; ஏற்கெனவே படிக்கும் பல லட்சக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு வசதிகள் - இலவச சைக்கிள், உயர் வகுப்பு மாணவர் களுக்கு மடிக்கணினி, சம்பளமில்லா படிப்புச் சலுகை எல்லாம் வரவேற்கத்தக்கவை என்றாலும், புதிதாக பல ஊர்களில் அரசுப் பள்ளிகளை மூடும் நிலை ஏற்படுவதைத் தவிர்த்திட, மாற்றுப் பரிகாரம் செய்ய வேண்டியதும் அவசர அவசியம் என்பதைச் சுட்டிக் காட்டவே இதனை எழுதுகிறோம். ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் பலவும் மூடப்படும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளை மூட வேண்டிய நிலை ஏன்?

தமிழ்நாட்டில் 38 அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், 42 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், 450 தனியார் பள்ளிகள் (ஒரு காலத்தில் வாரிவழங்கியதன் விளைவு இது) உள்ளன.

குழப்பமான ஆசிரியர் தகுதித் தேர்வு முறை

இந்தப் பள்ளிகளில் அரசு கல்வித் திட்டப்படி இரண்டு ஆண்டு பட்டயப் பயிற்சிப் படிப்பு வழங்கப்படுகிறது. தேர்வில் வெற்றி பெற்ற பிறகு டி.இ.டி. (T.E.T.) ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, தேர்வு, பெற்றால் அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்ற முடியும். (இப்படி ஒரு வடி கட்டலுக்குப் பதில் படித்து வெளியேறும் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தேர்வு முறையையும் பாட திட்டத்தையும் ஒழுங்குபடுத்தினால், இந்த இரட்டைத் தொல்லை நீங்கக் கூடும்).

இதில் எத்தனை வழக்குகள், தேவையற்ற விமர் சனங்கள், போராட்டங்கள், அரசுக்கும் தலைவலி - இவற்றை அடிப்படை மாறுதல்கள் மூலம் தவிர்க்க வேண்டும் அரசுகள். இப்போதும் காலந் தாழ்ந்து விடவில்லை. முதிர்ந்த ஓய்வு பெற்ற கல்வி ஆசிரியர்கள், கல்விஅறிஞர்களைக் கொண்ட கல்வி மேலாண்மை வாரியம் சுதந்தரமான முடிவு எடுத்து ஒழுங்குப் படுத்தும் அதிகாரத்துடன் ஏற்படுத்தப்பட்டு செயல் பட்டால் அது பல பிரச்சினைகள் எழுவதற்கே வாய்ப் பில்லாமல் செய்யும் என்பது உறுதி.

1. இடை நிலை ஆசிரியர் நியமனம் சரியாக நடை பெறாதது.

2. பல்வேறு போட்டிகளைச் சந்திக்க வேண்டிய வயதான ஆசிரியர்களின் பரிதாப நிலை.

இவை காரணமாக இப்படிப்பிற்குரிய கிராக்கி தேவை (Demand) குறைவதால், ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை மூட வேண்டிய கொடுமையான நிலை!

மாணவர் - ஆசிரியர் விகிதத்தில் மாறுதல் தேவை!

மாணவர் ஆசிரியர் விகிதாசாரம் 1:30 என்பதைக் கடைப்பிடித்தால், ஆசிரியர்கள் தேவையும் அதன் காரணமாக நியமனங்களும் அதிகம் வாய்ப்பாக அமையும்.

ஆரம்பக் கல்விக்கு அரசுகள் செலவழிக்க தாராளமான நிதி ஒதுக்கீடும், அதனைச் சரியாகச் செலவிடுவதுமான முறையில் மாறுதல் செய்தால் பள்ளிகளை - ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளை மூட வேண்டி இருக்காது.

ஆட்சியாளர் நோய் நாடி, நோய் முதல் நாட முன் வரவேண்டும்.

மாவீரர் லெனின் ரஷ்யாவில் பொறுப்பேற்றவுடன் அவர் முன்னுரிமை தந்தது இரண்டு துறைகளுக்கு E என்பதில் Education, Electricity)கல்வி, மின்சாரம் என்பவைகளில்தான்.

முதல் அமைச்சர் கவனிப்பாரா?

ஆட்சியாளர் மறவாமல் மற்ற இலவசங்களை விரிவுபடுத்துவதைவிட பள்ளிகள் மூடப்படாமல் பார்த்துக் கொள்ள உடனடித் தீர்வு காண முன் வர வேண்டும். தமிழக முதல்வர் கவனிப்பாரா?


கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
29.7.2014

Read more: http://viduthalai.in/e-paper/84886.html#ixzz38udDxLea

தமிழ் ஓவியா said...


தங்கம் வென்ற தமிழருக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள்!!

இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து பகுதியில் கிளாஸ் கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி விழாவில், 71 நாடுகள் கலந்துகொண்ட விளையாட்டுப் போட்டியில் சதீஷ்குமார் வேலூரைச் சேர்ந்த தமிழரான விளையாட்டு வீரர் பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வீரவிளையாட் டில் வெற்றி வீரராக சாதனை படைத்துள்ளார்.

அவருக்கு நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக் களைத் தெரிவித்து மகிழ்கிறோம். தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தவர். இவர் மேலும் ஒலிம்பிக் வீரராக வெற்றியின் உச்சத்திற்கே செல்வார் என்று நம்பி வாழ்த்துகிறோம்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்


சென்னை 29.7.2014

Read more: http://viduthalai.in/e-paper/84881.html#ixzz38udSOUw7

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?

ஆடி மாதம்

ஆடி என்பது ஒரு அசுரனின் பெயர். ஒரு முறை பார்வதிதேவி, சிவபெருமானை விட்டு விலகி இருந்தாள். இதை அறிந்த ஆடி என்னும் அசுரன் சிவபெருமானது தனிமையைப் பயன் படுத்திக் கொண்டு பாம்பு உருவம் எடுத்து உள்ளே நுழைந்தான். பிறகு பார்வதி தேவியாக உருமாறினான். சிவபெருமான் அருகில் சென்றான்.

தன்னோடு சேர்ந் திருக்க வந்திருப்பது ஆடி அசுரன் என்பதை சிவ பெருமான் உணர்ந்து கொண்டார். அசுரனுக்கு பாடம் புகட்ட நினைத்த சிவபெருமான் அவனோடு களித்திருப்பது போல் உறவாடி அவனைக் கொன்றார். இந்த நிகழ்வின் நினைவாகவே இந்த மாதம் ஆடி எனப் பெயர் பெற்றது.

கயிலையில் சிவபெரு மானுக்கு அணுக்கத் தொண்ட ராய் இருந்த சுந்தரர் பூவுலகில் நம்பி யாரூரார் என்ற பெயருடன் சிவபெருமானால் தடுத் தாட் கொள்ளப்பட்ட நாள் ஆடி மாத மூல நட்சத்திர நாளில்தான். இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட ஆடி மாதத்தில் தவறாமல் இறை வழிபாடு செய்து பயன் பெறலாமாம்.

இந்துப் புராணம் என்று எடுத்துக் கொண்டால் அசுரன் என்ற பாத்திரம் எப்படியோ வந்து புகுந்து விடும். அசுரன், அரக்கன், ராட்சதன் என்று எங்கு சொல்லபட்டு இருந்தாலும் அவன் வேறு யாருமல்ல- திராவிடன் தான் என்று வரலாற்றுப் பேராசிரியர்கள் கூறியுள்ளனர்.

இந்தக் கதையிலும்கூட அசுரன் கேவலமான தாகத்தான் படைக்கப் பட்டு இருப்பதைக் கவனிக் கத் தவறக் கூடாது; இந்தக் கதையும் சற்றும் அறிவுக் குப் பொருந்துகிறதா என் பதையும் ஆன்மிக சிரோன் மணிகள் சிந்திக்கட்டும்!

Read more: http://viduthalai.in/e-paper/84892.html#ixzz38udceXyF

தமிழ் ஓவியா said...


பிஜேபியின் 60 நாட்கள்


மத்தியில் பி.ஜே.பி. தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நரேந்திர மோடி தலைமையில் பொறுப்பேற்று 60 நாட்கள் பறந்தோடின.

இந்த 60 நாட்களில் இந்த ஆட்சியின் சாதனைகள் என்ன? வேதனைகள் யாவை? என்ற விமர்சனங்கள் நாட்டில் ஆங்காங்கே நடந்து கொண்டு தானிருக் கின்றன.

எடுத்த எடுப்பிலேயே சொல்ல வேண்டும் என்றால் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நகல் என்று பெரு வாரியான மதிப்பீடுகள் கூறுகின்றன.

2014-2015 ஆம் ஆண்டுக்கான நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நிதி நிலை அறிக்கையைப்பற்றிக் கூறும் பொழுது, முந்தைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் குரல் ஒலித்ததாகவும் பரவலாகப் பேசப்பட்டது.

பொருளாதாரக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை இரண்டிலும் காங்கிரசும், பி.ஜே.பி.யும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதும் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டு விட்டது.

எடுத்துக்காட்டாக, ஆயுள் காப்பீட்டுத் துறை, இராணுவத் துறைகளில் அந்நிய முதலீடு 49 சதவிகிதத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டது.

பெட்ரோல், டீசல் விலையை அவற்றின் உரிமையா ளர்கள் கச்சாப் பொருள் விலையின் அடிப்படையில் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டு விட்டது. (பி.ஜே.பி. எதிர்க்கட்சியாக இருந்தபோது எப்படியெல் லாம் இதனை எதிர்த்து எகிறிப் பாய்ந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே)

கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தைவிட விலைவாசி ஏற்றம் வானத்தை எட்டி விட்டது கறுப்புப் பணத்தைக் கொண்டு வரப் போகிறோம் என்று சவடால் விட்டவர்கள் சவுத்துப் போய் விட்டனர். டாலர் மதிப்பு ரூ.50லிருந்து 60 ரூபாயைத் தாண்டி விட்டது.

வெளிநாட்டுக் கொள்கையை எடுத்துக் கொண் டாலும் ஈழத் தமிழர் பிரச்சினையில் மோடி அரசு மேற்கொள்ளும் அணுகுமுறை ஒன்றே போதுமானது.

கச்சத் தீவு தொடர்பான வழக்கில் மேனாள் காங்கிரஸ் அரசு கொடுத்த அதே பிரமாணப் பத்திரத்தில் அரைப் புள்ளி வித்தியாசம் கூட இன்றிச் சமர்ப்பித்ததை நாடே பார்த்து கை கொட்டிச் சிரித்தது.

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்வது, படகுகளைப் பறி முதல் செய்வது என்பது அதிக அளவில் கிட்டத்தட்ட அன்றாடமே நடை பெற்றுக் கொண்டிருக்கிறது; இதிலும் எந்தவித மாற்றமும் இல்லை.

எல்லாவற்றையும் விடக் கொடுமை - அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு, இந்தியாவில் விசாரணை நடத்த அனுமதியில்லை என்று கூறுவது எவ்வளவுப் பெரிய கொடுமை!

அய்.நா.வின் பொதுச் செயலாளர் பான் கீ முன் அவர்களால் நியமிக்கப்பட்ட மூவர் குழுவை அனுமதிக்க மறுத்த ராஜபக்சேவுக்கும், அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தால் நியமிக்கப்பட்ட மூவர் குழுவை அனுமதிக்க மறுக்கும் நரேந்திர மோடிக்கும் அடிப்படையில் என்ன வேறுபாடு?

இலங்கை அதிபருக்கு இந்தியா சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுத்தது என்பதற்காக அன்றைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆர். வெங்கட்ராமன் அவர்களை நோக்கி முதுகெலும்பு இல்லாத மனிதர் என்று நாடாளுமன்றத்தில் முழங்கினார் மதிப்புக்குரிய வைகோ அவர்கள்.

அதே நிலைதானே இன்றும்; வைகோ அவர்கள் வேண்டுமானால் அதே வார்த்தைகளைப் பயன்படுத்த இன்றைக்குத் தயங்கலாம் - ஆனால் அடிப்படை ஒன்றே!

பிஜேபி ஆட்சி மத்தியில் அமைய வேண்டும் என்று ஊசி முனையில் தவமிருந்து ஓங்கி ஒலித்த தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் இன்றைக்கு மக்கள் மத்தியில் தோன்ற முடியாத ஒரு நிலையை உருவாக் கிய சாதனையின் பெருமை மோடி தலைமையிலான இன்றைய மத்திய ஆட்சிக்கு உண்டு.

தேர்தல் அறிக்கையில் பிஜேபி வெளியிட்டிருந்த ஆர்.எஸ்.எஸின் இந்துத்துவா கொள்கை தொடர்பான திட்டங்களைக் கையில் வைத்துக் கொண்டு, ஒவ்வொன்றாக சிவப்பு மையால் கோடு கிழித்துக் கொண்டு செயல்படத் துடித்துக் கொண்டு இருக்கிறது. அதில் ஒன்றுதான் சமஸ்கிருத வாரம் கொண்டாடச் சொல்லுவதாகும்.

இந்தியாவின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு என்பது சமஸ்கிருதத்தை இந்தியாவின் ஆட்சி மொழி ஆக்குவதே என்று ஆர்.எஸ்.எஸின் குரு நாதரான எம்.எஸ். கோல்வாக்கர் ஆர்.எஸ்.எஸின் வேதப் புத்தகமான ஞான கங்கையில் குறிப்பிட்டுள்ளதுதான் அவர்களின் வேத வாக்கு.

இந்தியாவின் பிற பகுதிகளில் இதுபற்றிப் போதிய எதிர் விளைவுகள் ஏற்படாமல் இருக்கலாம். தமிழ்நாட்டில் மட்டும் அது வேகாது; இன்னும் சொல்லப் போனால், தமிழ்நாடு கொடுக்கும் முழக்கம் இதுவரை உணர்ச்சி பெறாத மாநிலங்களில்கூட புத்தெழுச்சியைத் தட்டி எழுப்பும்.

பிஜேபி ஆட்சியைத் தலையில் வைத்துக் கரகாட்டம் ஆடும் ஒரு தனியார்த் தொலைக்காட்சி வெளியிட்ட கருத்துக் கணிப்பில்கூட இன்றைய பிஜேபி அரசுக்கு எதிராக 62 விழுக்காட்டினர் கருத்துத் தெரிவித்துள்ளதாக ஒளிபரப்பியது.

60 நாட்களுக் குள்ளேயே 62 சதவீத எதிர்ப்பு என்றால் சொச்ச காலத்தில்?

Read more: http://viduthalai.in/page-2/84894.html#ixzz38udtq0bS

தமிழ் ஓவியா said...

கடலூரில் காலிகளால் தந்தை பெரியாரின்மீது செருப்பு, பாம்பு வீசப்பட்ட நாள்

இந்நாள் :

கடலூரில் காலிகளால் தந்தை பெரியாரின்மீது செருப்பு, பாம்பு வீசப்பட்ட நாள்

13.8.1972இல் கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் தந்தை பெரியார் திருவருவச் சிலை திறப்பு விழா மேலவைத் தலைவர் சி.பி. சிற்றரசு அவர்கள் தலைமையில் நடந்தது. தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் அய்யா சிலையைத் திறந்து வைத்தார்கள். விழாவில் அமைச்சர்கள் ப.உ. சண்முகம், எஸ். இராமச்சந்திரன், பரூக் மரைக்காயர் உள்ளிட்டோரும் அன்பில் தர்மலிங்கம், முன்னாள் எம்.பி.யும் சென்னை மாநில கூட்டுறவு வங்கியின் மேனாள் தலைவருமான ஆர். கனகசபை, எம். செல்வராஜ், (தென்னார்க்காடு மாவட்ட தி.மு.க. செயலாளர்), சிதம்பரம் பிரபல டாக்டர் கே. அரங்கசாமி எம்.பி.பி.எஸ். (முன்னாள் எம்.பி.) வி.வி. சாமிநாதன், ஆர்.கோவிந்தராசன் எம்.எல்.ஏ., ஆர். சுப்பிரமணியம், (கடலூர் நகராட்சி தலைவர்) உள்ளிட்ட ஏராளமான பொது மக்களும் கலந்துகொண்டனர். விழாவில் நான் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினேன்.

தந்தைபெரியார் அவர்களின் சிலை திறப்பு விழா கடலூரில் ஒரு மாபெரும் இன எழுச்சி விழாவாக நடைபெற்றது. சிலை திறந்து வைத்து தமிழக முதல்வர் கலைஞர் அவர்களும் பிற தோழர்களும், அமைச்சர் பெரு மக்களும் ஆற்றிய பாராட்டுரைகள் பகுத்தறிவு முழக்கங்களாக அமைந்தன. முன்னதாகவே கடலூர் நகராட்சி வரவேற்பளித்து மகிழ்ந்தது.

விழாவிற்கு அய்யா அவர்களும் நாங்களும் சிலை அமைப்புக் குழு பொருளாளரும் வழக்குரைஞருமான எஸ். ஜனார்த்தனம் அவர்களின் (பிறகு இவர் மாவட்ட நீதிபதியாகி, உயர்நீதி மன்ற நீதிபதியாகி ஜஸ்டீஸ் எஸ். ஜனார்த்தனம் ஆகி, ஓய்வு பெற்ற பின்பும் மாநில நுகர்வோர் நீதிமன்றத் தலைவர் ஆகவும், பிற்படுத்தப் பட்டோர் நலக் கமிஷனராகவும் நியமிக்கப்பட்டவர்) இல்லத்தில் தங்கி இருந்த அய்யா அவர்களை கழகத் தோழர்களும், பிரமுகர்களும் குடும்பங் குடும்பமாக வருகை தந்து சந்தித்து, தங்கள் வணக்கங்களையும், நன்றியையும் தெரிவித்துச் சென்ற வண்ணமாக இருந் தனர். விழாவையொட்டி நகரமெங்கும் ஆங்காங்கே வரவேற்பு வளைவுகளும் பந்தல்களும் கலை வண்ணம் குலுங்க காட்சி அளித்தன. கழகக் கொடிகள் எங்கு நோக்கினும் காற்றில் அசைந்தாடி அனைவருக்கும் நல்வரவேற்பு அளிப்பதுபோல இருந்தன.

விழா சார்பாக மாலை 6.45 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட முத்துப் பல்லக்கில் திருப்பாதிரிப்புலியூரிலிருந்து இலட்சக் கணக்கான தமிழ் மறவர்கள் சூழ அய்யா அவர்கள், மேளவாத்தியம் கொட்டு முழக்கத்துடன் முடி சூடாமன்னராகப் பவனி வந்தார்கள். சாலையின் இரு மருங்கிலும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கூடி நின்று மலர் மாலைகள் அணிவித்து, அன்பளிப்பாக பழங்களும், ரூபாய் நோட்டுகளும் வழங்கி, தங்களை வாழ வைத்த தானைத் தலைவருக்குத் தன் நன்றிக் காணிக்கையைத் தெரிவித்துக் கொண்டனர்.

பல்லக்கில் துவக்கத்தில் தந்தை பெரியார் அவர்களும் பவனி வந்தார்கள். முதல்வர் கலைஞர் அவர்கள் தந்தை பெரியார் அவர்களுடன் ஊர்வலத்தில் பல்லக்கில் அமர்ந்து வர மிகவும் கூச்சப் பட்டு எங்கேயிருக்கிறார் என்று எவருக் கும் சொல்லாமலேயே தேவனாம் பட்டினம் கடற்கரை அருகில் இருந்த ஈ அய்.டி. பாரி நிறுவன பங்களாவுக்கு சென்று விட்டார். ஊர்வலத்தில் தந்தை யும் தனயர்களும் அமர்ந்து வரும் கண் கொள்ளாக் காட்சியைக் கடலூர் மக்கள், தந்தைபெரியார்மீது செருப்பு வீசியவர் கள், அய்யாவின் கொள்கை வெற்றியைக் கண்டு பூரிக்க வேண்டும் என்று திட்ட மிட்டிருந்தோம்.

அய்யாவை மட்டும் அமர வைத்து திருப்பாதிரிப்புலியூரில் ஊர்வலத்தை துவக்கி வைத்துவிட்டு, காரை எடுக்கச் சொல்லி, கலைஞர் சென்ற தேவனாம் பட்டினம் பங்களாவை அடைந்தேன். முதல்வர் கலைஞருக்கும் அமைச்சர் களுக்கும் இது அதிர்ச்சி! அவர்கள் ஊர்வலத்தில் வந்தே ஆக வேண்டும் என்று உரிமையெடுத்துக் கொண்டு வற்புறுத்தினேன். வேறு வழியின்றி, ஒப்புக் கொண்டு காரை எடுத்துக் கொண்டு ஊர்வலம் நோக்கி முதல்வருடன் நானும் அமைச்சர்களும் வந்தோம்!

தமிழ் ஓவியா said...


உங்களுடன் எப்போது போட்டி யிட்டாலும் வீரமணி வென்று விடுகிறார் என்று அமைச்சர் ப.உ. சண்முகம் உட்பட அனைவரும் வேடிக்கையாகக் கூற, முதல்வர் கலைஞர், அவர் பிடிவாதமாக எதையும் சாதித்தே தீருவார் என்று கூறி ரயில்வே கேட் அருகில் ஊர்வலம் வரும்போது முதல்வரை பல்லக்கில் ஏற்றி அமர வைத்தோம்.

ஜாதியை ஒழிக்க வந்த செம்மல் பெரியார் வாழ்க! இனக்காவலர் பெரியார் வாழ்க! சிந்தனை சிற்பி பெரியார் வாழ்க! என்ற ஒலி முழக்கங்கள் ஊர் வலம் முடிவுவரை கேட்டுக் கொண்டி ருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஊர்வலம் லாரன்ஸ் ரோட்டில் (திருப்பாதிரிபுலியூர் கடைத் தெரு) வந்து கொண்டிருக்கையில் முதல்வர் கலைஞர் அவர்களும், உணவுத்துறை அமைச்சர் ப.உ. சண்முகம் அவர்களும், போக்கு வரத்துத் துறை அமைச்சர் எஸ். இராமச்சந்திரன், அன்பில் தர்மலிங்கம் ஆகியோர் பல்லக்கிற்கு வந்து தந்தை பெரியார் அவர்களுடன் ஊர்வலத்தில் அமர்ந்து கொண்டார்கள். இந்தக் காணற்கரிய காட்சியைக் கண்ட தமிழர் இனம் அப்படியே உணர்ச்சி எல் லையின் உருவமாகி விட்டது! உணர்ச்சி வயப்பட்ட மக்கள் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த இயலாத ஒன்றாகி விட்டது. பெரியார் வாழ்க என்ற ஒலி முழக்கத்துடன், தஞ்சை கலைஞர்களின் அதிர்வேட்டுச் சத்தம் விண்ணையும் பிளக்கச் செய்தது. இந்த இடத்தில் மேலவைத் தலைவர் சிந்தனைச் சிற்பி சி.பி. சிற்றரசு அவர்கள் அய்யா அவர் களுடன் அலங்கார பல்லக்கில் அமர்ந்து கொண்டார்கள். மக்கள் சமுத்திரத்தின் ஒட்டு மொத்த வாழ்த்து முழக்கம் ஒலித்துக் கொண்டே இருந்தது.

அதற்கு முன்பு அங்கே அய்யா அவர்களுக்கும் அமைச்சர் பெரு மக்களுக்கும் எனக்கும் நகராட்சி மன்றத்தின் சார்பாக வரவேற்பு இதழ்கள் படித்தளிக்கப்பட்டன. அய்யா அவர்களும், கலைஞர் அவர்களும் வரவேற்புக்கு நன்றி தெரிவித்து உரை யாற்றினார்கள்.

Read more: http://viduthalai.in/page-2/84895.html#ixzz38ueHYmcB

தமிழ் ஓவியா said...

இட ஒதுக்கீட்டுக்கு உச்சவரம்பாக சட்டத்தில் எதுவும் இல்லை; தமிழகத்தை முன்மாதிரியாகக் கொண்டு 69 விழுக்காடு வழிமுறையினை பின்பற்ற முயற்சி செய்யும் தெலங்கானா ஆட்சியினருக்கு பாராட்டு!
அய்தராபாத் நகரில் நடைபெற்ற நீதியரசர் பி.எஸ்.ஏ.சுவாமியின் நினைவுநாள் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் உரை

தமிழ் ஓவியா said...

அய்தராபாத், ஜூலை 29- சமூகநீதிப் போராளி நீதியரசர் பி.எஸ்.ஏ சுவாமியின் 6 ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சி அய்தராபாத் நகரில் 27.7.2014 அன்று நடைபெற்றது. நகரின் மய்யப் பகுதியில் அமைந்த பாக்லிங்கம்பள்ளி பகுதியில் கிறிஷிஸிஜிசி கலா பவனத்தில் முற்பகல் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றது.

விழாவிற்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு நினைவுநாள் பேருரை ஆற்றினார். விழாவில் விடுதலைப் போராட்ட வீரரும், மத்திய அரசின் மேனாள் அமைச்சரும், மூத்த நாடாளுமன்ற வாதியுமான கெட்டம் வெங்கிடசாமி அவர்களுக்கு 2014ஆம் ஆண்டிற்கான சமூகநீதிக்கான நீதியரசர் பி.எஸ்.ஏ.சுவாமி விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் இந்நாள் மற்றும் மேனாள் அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற இந்நாள், மேனாள் நீதியரசர்கள், அரசு உயர் அதிகாரிகள் என மிகப் பலர் கலந்துகொண்டு நினைவுநாள் நிகழ்ச்சியில் சமூகநீதிக் கொள்கைச் சிறப்புக்கு வளம் சேர்த்தனர்.

நீதியரசர் பி.எஸ்.ஏ.சுவாமியின் நினைவுநாள் நிகழ்ச்சிக்கு ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி நீதியரசர் ஜி.சந்திரய்யா தலைமை வகித்தார். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக நீதியரசர் பி.எஸ்.ஏ.சுவாமி அவர்களின் உருவப் படத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பங்கேற்ற நீதியரசர்கள் மற்றும் இதர முக்கிய பங்கேற்பாளர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நீதியரசர் பி.எஸ்.ஏ.சுவாமி கல்வி அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்ட நினைவுநாள் நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் ஓராண்டு பணிகள் பற்றிய அறிக்கையினை அறக்கட்டளை யின் இயக்குநர் சுதாகர் வாசித்தார்.

தமிழ் ஓவியா said...

நீதியரசர் ஜி.சந்திரய்யாவின் தலைமை உரை

ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதியரசர் ஜி.சந்திரய்யா தலைமை ஏற்று ஆற்றிய உரையின் சுருக்கம் பின்வருமாறு:-

நிகழ்ச்சியில் போற்றப்படும் நீதியரசர் பி.எஸ்.ஏ.சுவாமி, வழக்குரைஞர், நீதிபதி என்ற பல்வேறு பொறுப்புகளை ஏற்றிருந்தாலும் அவர் இன்று நினைவுபடுத்தி போற்றப் படுவதற்கு அவரது சமூகநீதி சார்ந்த உணர்வு, செயல்பாடே முக்கிய காரணம். அவரது சமூகநீதிப் பணியால் விழிப்புணர்வு, பெற்று ஏற்றம் பெற்ற வழக்கறிஞர்கள் மற்றும் நீதியரசர்கள் மிகப் பலர்.

அரசு துறையில் பணியாற்றுபவர்களையும் அரவணைத்து சமூகநீதியின்பால் அக்கறை கொள்ள வைத்தவர் நீதியரசர் சுவாமி ஆவார். ஆந்திர மற்றும் தெலங்கானா மாநிலங்களில் இன்று நிலவிடும் சமூகநீதியின் நடைமுறைச் சாதனைகளுக்கு பங்காற்றியவர்களில் நீதியரசர் பி.எஸ்.ஏ.சுவாமியும் முக்கியமானவர்.

நீதியரசர் சுவாமி வாழ்ந்த காலத்தில் சமூகநீதிப் பயணத்தில் உடன் வழிநடத்திய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் அவர்தம் நினைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிப்பதே நீதியரசர் சுவாமி அவர்கள் ஆற்றிய சமூகநீதிப் பணியின் சிறப்பினை வெளிப் படுத்துவதாக இருக்கிறது.

தமிழ் ஓவியா said...

இந்த ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சியிலும் சமூகநீதித் தலைவர் கி.வீரமணி பங்கேற்க வந்துள்ளார். ஒவ்வொரு முறையும் அவர் பங்கேற்று, ஆற்றிடும் உரை சமூகநீதிப் பயணத்திற்கான அறிவாயுதங்களாக இருக்கின்றன. சமூகநீதி எதிர்ப்பாளர்களின் செயல்பாட்டை முறியடிக்க, சமூகநீதியின் நடைமுறையினை பரவலாக்கி முன்னெடுத்திட, அத்தகைய அறிவாயுதங்கள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் நீதியரசர் பி.எஸ்.ஏ.சுவாமி அவர் களின் நினைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் சமூகநீதிப் பாதையில் வலிமையுடன் பயணம் செல்வதை உறுதிப்படுத்திக் கொள்வோம். சுவாமி அவர்கள் வலிந்து போராடிய சமூக நீதிக் கொள்கையின் நடைமுறையில் விடுபட்ட பல தரப்பினரையும், ஏற்கெனவே பயன்பெற்று வருபவரையும் இணைத்து அடுத்த கட்ட நிலைமைகளுக்கு செல்லுவதற்கு இந்த நினைவுநாளில் உறுதி ஏற்போம்.

இவ்வாறு நீதியரசர் ஜி.சந்திரய்யா உரை ஆற்றினார்.

தமிழர் தலைவரின் பேருரை

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் ஆற்றிய நினைவுநாள் பேருரை சமூகநீதிக்கான உரிமைக் குரலாக ஒலித்தது. தமிழர் தலைவர் ஆற்றிய பேருரையின் சுருக்கம் பின்வருமாறு:-

சமத்துவத்திற்கான பெரும் பயணத்தில் மேற்கொள்ளப் பட்ட கடும் போராட்டத்தின் விளைவாக சமூகநீதியின் நடைமுறைக்கு அரசமைப்புச் சட்டத்தில் வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறையானது முழுமையாக சமூகநீதியை பிரதிபலிப்பதாக இல்லை. செல்ல வேண்டிய தூரம் அதிகமாக உள்ளது.

இந்தச் சூழலில் அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள சமூகநீதி நடைமுறைக்கான வைகளை செயல்படுத்துவதற்காகவே விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியுள்ளது. சமூகநீதியினை வலியுறுத்துகின்ற வகையில் அடிப்படை உரிமைகளுக்காக (Fundamental Rights) அரசமைப்புச் சட்டத்தில் விதிமுறைகள் உள்ளன.

இந்த விதிமுறைகள் மீறப்பட்டால் தனிநபர்கள் நீதிமன்றத்திற்கு சென்று விதி மீறலுக்கான தீர்வினை பெற இயலும். அர சமைப்புச் சட்டத்திலே அரசுக்கான வழிகாட்டு நெறிமுறை களாக (Directive Principles of State Policy) சில விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகள் சமுதாயம் முழுமைக்குமான அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகள்.
நீதியரசர் பி.எஸ்.ஏ.சுவாமி நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய தமிழர் தலைவருக்கு, ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதியரசர் ஜி.சந்திரய்யா அவர்கள் பயனாடை அணிவித்து, பரிசினை வழங்கினார். உடன் நீதியரசர் சுவாமி குடும்பத்தினர்

இந்த விதிமுறைகள் மீறப்பட்டால் நீதிமன்ற வாயிலுக்குச் சென்று தீர்வு பெற முடியாது. அடிப்படை உரிமைகள் தனிநபர் சார்ந் தவை. அதனுடைய மீறல் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டதாகும். அடிப்படை உரிமைகள் நீதிமன்ற ஆய்வு உரிமைகளாகும் (Justiceable Rights).
அரசின் வழிகாட்டுதல் நெறிமுறையில் உள்ள மீறல்கள் நீதிமன்ற முறையீட்டுக்கு ஆட்படுபவை அல்ல (Non Justiceable Rights). சமூகநீதி தொடர்பான தனிநபர் உரிமைக்கும், சமுதாயம் சார்ந்த வழிமுறைகளும் ஒரே நிலைப்பட்ட நடைமுறைகள் அல்ல. தனிநபருக்கு உகந்தது, தனி நபர்களின் ஒட்டுமொத்தமான சமுதாயத்திற்கு உகந்தது அல்ல; உரிமையாக பெறத்தக்கதல்ல என்பது விந்தையாக உள்ளது.

தமிழ் ஓவியா said...

ஜனநாயகத்தில் சட்டமன்றம், ஆட்சி நிர்வாகம் மற்றும் நீதித்துறை ஆகியவை ஆதார அங்கங்களாக இருக்கின்றன. சட்டமன்றம், ஆட்சி நிர்வாகம் ஆகிய துறைகளின் செயல் பாடுகளை கட்டுப்படுத்துகின்ற அதிகாரம் நீதித்துறையின் வசம் உள்ளது. சமூகம் சார்ந்த விதிமுறைகளின் மாற்றம் சட்டம், நீதித்துறை அளிக்கும் தீர்ப்புகளால் வலிமை பெறுகின்றன.

சிலநேரம் வலிமை இழக்கின்றன. தீர்ப்பு வழங்கும் நிலையில் உள்ள நீதிமன்ற உயர்துறையில் இன்னும் சமூகநீதியின் நடைமுறைக்கு வழிகோலும் இடஒதுக்கீடு அறிமுகம் செய்யப்படவில்லை உயர் நீதிமன்றங்களிலும், உச்சநீதி மன்றத்திலும் நீதிபதிகளின் நியமனத்தில் ஒடுக்கப்பட்டோருக் கான இடஒதுக்கீடு இதுவரை நடைமுறை காணவில்லை.

சொல்லப்படும் காரணமோ தகுதி அடிப்படையில் நீதிபதிகள் நியமிக்கப்பட்டால் தான் நீதிமன்ற நடைமுறையில் சரியாக இருக்கும் என சமூகநீதி எதிர்ப்பாளர்கள் கூறுகிறார்கள். எதிர்ப்பவர்கள் குரலையே உயர் மட்டத்தில் இருப்பவர்களும் எதிரொலிக்கிறார்கள்.

மாவட்ட அளவில் இடஒதுக்கீடு அடிப்படையில் நீதிமன்ற பணியில் நுழைந்து பதவி உயர்வு பெற்று, சிறப்பாக பணியாற்றிவரும் ஒடுக்கப்பட்ட பிரிவினைச் சார்ந்த நீதிபதிகள், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இடஒதுக்கீடு அடிப்படையில் நியமிக்கப்பட்டால் தகுதி என்பது இல்லாமல் போய்விடுமா? எந்த வகையில் செயல்பாட்டு திறமை குறைந்துவிடும்? சொல்லப்போனால் ஒடுக்கப்பட் டோரிடம் உள்ள நீதி, நாணய நேர்மை உணர்வு உயர்ஜாதி யினரிடம் இருப்பதில்லை.

தமிழ் ஓவியா said...

இவ்வாறு சமூகநீதிப் பயணம் முழுமையாக அனைத்துத் தளங்களிலும் நடைமுறையாக்கம் பெற கடுமையாகப் போராட வேண்டியுள்ளது. அந்தப் போராட்டத்திற்கு ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்று திரட்டும் பணி - உட்ஜாதி, மதம், அரசியல் கட்சி ஆகிய எல்லைகளைத் தாண்டி ஒன்று திரட்டும் பணி முன்னுரிமைப் பணியாகக் கருதப்பட வேண்டும்.

மேலும் அரசமைப்புச் சட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டில் உச்சவரம்பு என்பதாக ஒன்றும் விதிமுறையாக இல்லை. அரசமைப்புச் சட்டத்தில் இல்லாத வரம்பை இருப்பதாகக் கருதி, நீதிமன்றத் தீர்ப்புகள் வந் துள்ளன. ஆனால் மக்களின் சமூகநீதி உரிமைகளை பிரதி பலிக்கும் வகையில் பெரியார் இயக்கத்துடன் பலர் சேர்ந்து போராடிய காரணத்தால் தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டின் வரம்பு 69 விழுக்காடு என்ற உயர் அளவில் உள்ளது.

மற்ற மாநிலங்களுக்கு முன்மாதியாக உள்ளது. இந்த முன் மாதிரியை இன்று உருவாக்கியுள்ள தெலங்கானா, சீமாந்திரா மாநிலங்கள் பின்பற்றும் சூழல்கள் எழுந்துள்ளன. இன்றுள்ள அந்த மாநில ஆட்சியாளர்கள் தமிழக முன்மாதிரியை நடைமுறைப்படுத்திட உறுதிப்பூண்டுள்ளார்கள். இத்தகைய நிலைமைகள் இந்தி யாவின் அனைத்து மாநிலங்களிலும் வரவேண்டும்.

அதற்கான முயற்சிகளில் இறங்கி போராட்டத் தளங்களை உருவாக்கி சமூகநீதியின் முழுமையை நாடு முழுவதும் பரவலாக்குவதே நீதியரசர் பி.எஸ்.ஏ.சுவாமியின் நினைவு நாளில் நாம் உறுதி பூண்டு நிறைவேற்றிட வேண்டும். அதுவே நீதியரசர் பி.எஸ்.ஏ.சுவாமியின் போற்றுதலுக்கான அடையாளம்.

- இவ்வாறு தமிழர் தலைவர் தமது பேருரையில் குறிப்பிட்டார்.

தெலங்கானா மாநில உள்துறை அமைச்சர் பங்கேற்பு

நீதியரசர் பி.எஸ்.ஏ.சுவாமியின் நினைவுநாள் நிகழ்ச்சியில் தெலங்கானா மாநில அரசின் உள்துறை அமைச்சர் மாண்புமிகு நயானி நரசிம்மரெட்டி கலந்து கொண்டு, சமூகநீதிப் போராளி லட்சண்ணா காலத்திலிருந்து பி.எஸ்.ஏ.சுவாமியுடன் தமக்கிருந்த தொடர்பு மற்றும் சமூகநீதி நடைமுறைக்கு நீதியரசர் ஆற்றிய கடும்பணிகள் பற்றி எடுத்துரைத்தார்.

சமூகநீதிக்கான நீதியரசர் பி.எஸ்.ஏ.சுவாமி சமூகநீதி விருது வழங்கல்

நீதியரசர் பி.எஸ்.ஏ.சுவாமியின் நினைவாக சமூகநீதி விருது ஒவ்வொரு ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சியில், சமூகநீதிக்குப் பாடுபட்டு வரும் தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2014ஆம் ஆண்டு சமூகநீதிக்கான நீதியரசர் பி.எஸ்.ஏ சுவாமி விருது மத்திய அரசின் மேனாள் அமைச்சரும், மூத்த நாடாளுமன்றவாதியுமான ஜெட்டம் வெங்கிடசுவாமிக்கு நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.

விருது நாயகர் ஜெட்டம் வெங்கிடசுவாமி, உடல்நலக் குறைவால் நிகழ்ச்சிக்கு வர இயலாததால், அவரது மூத்த மைந்தரும் ஆந்திர மாநில அரசின் மேனாள் அமைச்சருமான ஜி.விவேக் விருதினை பெற்றுக் கொண்டார்.

விருது கேடயத்தினை ஆந்திர மாநில அரசின் உள்துறை அமைச்சர் நயானி நரசிம்ம ரெட்டி வழங்கியும் தமிழர் தலைவர் ஆசிரியர் சால்வை , மாலை அணிவித்தும் வாழ்த்தினர். விருது நாயகரின் இளைய மைந்தர்கள் ஜி.விவேக் ஆனந்த் மற்றும் பொன்ன பிரபாகர் ஆகியோர் உடன் இருந்தனர்

நிகழ்ச்சியில் பங்கேற்ற உயர்நீதிமன்ற நீதியரசர்கள்

தமிழர் தலைவரின் பேருரைக்கு முன்னர் ஆந்திர மாநில மற்றும் தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீதியரசர் பி.சந்திரகுமார், நீதியரசர் ஏ.வி.சேஷசாய், உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி நீதியரசர் முனைவர் ஜி.யதிராஜினு ஆகியோர் உரையாற்றினர்.

நிகழ்ச்சியில ஆந்திர சட்டமன்ற உறுப்பினர் ஜி.எஸ்.எஸ். சிவாஜி, ஆந்திர மாநில அரசின் மேனாள் தலைமைச் செயலாளர் கே.மாதவராவ், மேனாள் அமைச்சர் ஜி.இராஜேசம் கௌடு, மக்களவை மேனாள் உறுப்பினர் ஜி.விவேக் ஆனந்த், பணிநிறைவு பெற்ற இரயில்வே உயர்அதிகாரி ஏ.பாரத் பூஷண், உச்சநீதிமன்ற வழக்கறிஞரும் சமூகநீதிக்கான வழக்குரைஞர் மன்றத்தின் மேலாண்மை அறக்கட்டளையாளருமான ஏ.சுப்பாராவ் மற்றும் மூத்த வழக்குரைஞர் போஜ்ஜ தாரகம் ஆகியோர் உரையாற்றினர்..

நீதியரசரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள், சமூகநீதி ஆர்வலர்கள், பொதுநல உணர்வாளர்கள் என பலதரப்பட்ட மக்களும் வருகை தந்து அரங்கம் முழுவதும் நிரம்பி, நண்பகல் நேரம் தாண்டிய வேளையிலும் இறுதிவரை இருந்து பங்கேற்றது குறிப்பிடத்தக்கதாகத்தான் இருந்தது. நீதியரசர் பி.எஸ்.ஏ.சுவாமி நினைவுகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அனைவரது பங்கேற்பும் அமைந்தது.

Read more: http://viduthalai.in/page-8/84899.html#ixzz38ufQJmwe

தமிழ் ஓவியா said...


எப்பொழுதும் தொடரும் சமூகநீதிக் குடும்ப உணர்வு

நீதியரசர் பி.எஸ்.ஏ.சுவாமி ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் சமூகநீதியின் நடைமுறைக்குப் பங்களித்த முக்கியமான தலைவர் ஆவார். சமூகநீதிக்கான உந்துதல் உணர்வினை பெரியார் இயக்கத்திலிருந்தும், இயக்கத்தின் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களிடமிருந்தும் பெறுவதாக அடிக்கடி, கூட்ட மேடைகளில் வெளிப் படுத்தியவர்.

சமூகநீதி சார்ந்த பொது நிகழ்ச்சிகள் அய்தராபாத் நகரில் நடைபெறும் பொழுது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை தமது சொந்த விருந்தினராகக் கருதி அன்பினைப் பொழிந்தவர். தமிழர் தலைவரை விடுதியில் தங்கிட அனுமதிக்கமாட்டார்கள். தமது வீட்டிலேயே தங்க வைத்து, உணவு அளித்து ஒரு குடும்ப உணர்வோடு, கொள்கை உணர்வோடு வாழ்ந்தவர்.

நீதியரசர் மறைந்த பின்னரும், அவர்தம் பெயரால் அமைந்த கல்வி அறக் கட்டளை நிகழ்ச்சிகளில் பங்கேற்றிட தமிழர் தலைவர் அய்தராபாத் நகருக்குச் செல்லும் பொழுதெல்லாம் நீதி யரசரின் குடும்பத்தாரும் அதே வழக்கத்தை - வீட்டிலேயே தங்க வைத்து நிகழ்ச்சியில் பங்கேற்றபின் வழி அனுப்பிடும் வழக்கத்தினை தொடர்ந்து வருகின்றனர்.

தமிழர் தலைவருடன் செல்லும் பிற தோழர்களும், நீதிபதி சுவாமி குடும்பத்தார்களின் விருந்தோம்பில் திளைத்திடுவர். சுவாமி அவர்களின் துணைவியார் ஜெயலட்சுமி அம்மையார், மகள் சவீதாகுமாரி, மருமகன் சுதாகர் மற்றும் பேரப்பிள்ளைகள் அனைவரும் தமிழர் தலைவரின் வருகையை சொந்தக் குடும்பத்தவர் வருகையாகவே கருதிடும் வழக்கம் இந்த முறை சென்றபொழுதும் தொடர்ந்தது.

நீதியரசர் சுவாமி அவர்களின் சமூகநீதிக் கொள்கை உணர்வு, குடும்ப உணர்வாகவே தொடர்வது மிகவும் பாராட்டுதலுக்குரியது; அனைவரும் போற்றத்தக்கது.

Read more: http://viduthalai.in/page-8/84885.html#ixzz38ufxwonY

தமிழ் ஓவியா said...


ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்வதில் காங்கிரஸ் ஆட்சியை விஞ்சிய பி.ஜே.பி. அரசை எதிர்த்து ஒன்றுபட்டுப் போராடுவோம் வாரீர்!


ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்வதில் காங்கிரஸ் ஆட்சியை விஞ்சிய பி.ஜே.பி. அரசை எதிர்த்து

ஒன்றுபட்டுப் போராடுவோம் வாரீர்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அழைப்பு!

சலுகைகள் ஆயிரம் இருந்தும் அரசுப் பள்ளிகளின் செல்வாக்குக் குறைவானேன்? மூடப்படும் நிலை ஏற்பட்டது ஏன்? - கி. வீரமணி

ஈழத் தமிழர் பிரச்சினையில், ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்வதில் காங்கிரசை விஞ்சியதாகச் செயல்படும் இன்றைய பி.ஜே.பி. அரசை எதிர்த்துப் போராட அழைப்புக் கொடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:

இலங்கையில் நடைபெற்ற தமிழ்ப் பத்திரிகையாளர் பயிலரங்கம் - சிங்கள இனவெறியர்களின் அத்துமீறிய செயல்பாட்டால் தடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இலங் கைத் தீவில் கருத்துரிமைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தினை, நெருக்கடியை அமெரிக்கா கண்டித்துள்ளது - இந்தியா வழக்கம்போல் குறட்டை விடுகிறது.

சிங்கப்பூரில் பி.ஜே.பி. பொறுப்பாளர் சேஷாத்திரி சாரியின் கருத்து

சிங்கப்பூரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பி.ஜே.பி. யின் வெளிவிவகாரக் கொள்கையின் தேசிய அமைப் பாளர் சேஷாத்திரி சாரி என்பவர் பேசியுள்ளார்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை தமிழ்நாடு, மேற்குவங்காளம் மாநிலங்களைக் கருதி தீர்மானிக்க முடியாது என்று பேசியிருக்கிறார்.

சு.சாமி வகையறாக்கள்

சுப்பிரமணியசாமி தலைமையில் ஆன குழு இலங்கைக்கு சென்று மகிந்த ராஜபக்சேவை சந்தித்து விட்டுத் திரும்பியது. இலங்கையில் நடந்த பத்திரிகையாளர் குழுவி லேயே இலங்கையில் நடந்தது போர்க்குற்றமல்ல; மேலும் இலங்கையில் வாழும் தமிழர்கள் அவர்கள் சிக்கல் களை அவர்களாகவே பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டும் என் றும் சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அஞ்சத் தேவையில்லை என்றும் சுப்பிரமணியசாமி, பேட்டியளித்திருந்தார். பத்திரிகையாளர்களுக்கு நேற்று (29.7.2014) பேட்டி யளித்த முன்னாள் இணையமைச்சர் (வாஜ்பேயி ஆட்சிக் காலத்தில்) சுரேஸ் பிரபு கூறியதாவது, இலங்கை நமது நட்பு நாடு, வர்த்தகம் மாத்திரமல்ல; நமது பழம்பெரும் கலாச்சார உறவு கொண்ட நாடு, இலங்கையில் நடக்கும் எந்த ஒரு பாதிப்பும் நேரடியாக இந்தியாவையும் பாதிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! இந்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளாக இனவாதக்குழுக்கள் தோன்றி இலங்கையில் பெரிய அளவில் வன்முறையை நிகழ்த்தியுள்ளன.

தற்போது அங்கு அமைதி திரும்பியுள்ளது. அந்த நாட்டின் வர்த்தகம் மற்றும் உள்நாட்டுக்கட்டமைப்பின் வளர்ச்சிக்கு இந்தியா பெரிதும் துணை நிற்கும், அதேவேளையில் தமிழ் நாட்டில் சில அரசியல் அமைப்புகளும் இயக்கங்களும் இனவாதக் குழுக்களுக்கு துணைபோகும் நிலையில் உள்ளது. வாக்கு அரசியலுக்காக இலங்கைப் பிரச்சினையை இன்றளவும் தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் கைகளில் ஏந்திக் கொண்டு தீர்க்கமான முடிவெடுப்பதற்கு தடையாக இருக் கிறது. இதற்கு முன்பு இருந்த அரசு திராவிடக்கட்சிகளின் அழுத்தத்திற்கு ஈடு கொடுத்து மென்மையான நட வடிக்கை எடுத்து வந்தது.

தற்போது நரேந்திரமோடி தலைமையில் ஆன அரசு இலங்கை பிரச்சினையை தீர்ப்பதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். இலங்கையின் எந்த ஒரு நடவடிக்கையும் இந்தி யாவிற்கு நன்மை தருவதாக இருக்கும் பட்சத்தில் முழு மையான ஆதரவு அளிக்கும், இதற்கான உத்திரவாதத்தை நரேந்திரமோடி ஆட்சியேற்ற போது டில்லி வந்த மகிந்த ராஜபக்சேவிடமும், அதனைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் ஆன குழுவிடமும் நாங்கள் உறுதியாகக் கூறியுள்ளோம். தற்போது இலங்கையின் வளர்ச்சிக்காக பல்வேறு நட வடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். முக்கியமாக இந்திய தொழில் முனைவோர்கள் இலங்கையில் சென்று தொழில் தொடங்க முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசியல் கட்சிகளின் ஓட்டு வங்கிக்காக அவர்கள் கொடுக்கும் அழுத்தங்களுக்கு நாங் கள் பலியாக மாட்டோம், எங்களுக்குத் தேவை இலங்கை யில் வளர்ச்சி அதற்குத்தான் முக்கியத்துவம் தருவோம்.

விரைவில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அவர்கள் இலங்கை சென்று பல்வேறு முடிவு களை அறிவிப்பார் என்றும் ராஜபக்சேவின் உடன்பிறவா சகோதரராகப் பேட்டியளித்துள்ளார்.


தமிழ் ஓவியா said...

இதற்கிடையே நேற்று வெளிவந்த ஒரு தகவல்:

ஆகஸ்டு 18 முதல் 20 முடிய மூன்று நாள்கள் இலங்கை யில் நடைபெறவுள்ள இராணுவக் கருத்தரங்கில் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற் பார்களாம்!

இந்தக் கருத்தரங்கின் நோக்கம் இலங்கைக்கு அதன் நட்பு நாடுகள் பாதுகாப்பு ஒத்துழைப்பை எந்த அளவுக்கு வழங்குவது என்பதை முடிவு செய்வதற்காகவாம். அய்.நா. மனித உரிமை ஆணையம் இலங்கையில் நடந்துள்ள போர்க் குற்றங்களை விசாரிக்க ஒரு குழுவை நியமித்து, அது விசாரணையைத் தொடங்கும் இந்தக் காலகட்டத்தில், இலங்கையில் இந்தக் கருத்தரங்கம் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.

இராணுவ அதிகாரிகள் குழுவோடு பி.ஜே.பி. சார்பில் சுப்பிரமணியசாமி, தலைமையில் ஒரு குழுவும் செல்லு கிறதாம். (தொடக்கமுதல் ஈழப் பிரச்சினையில் எவ்வளவுப் பெரிய ஜாதி வெறியராக இவர் நடந்துகொண்டு வந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே!)

ஈழத் தமிழர் படுகொலை தொடர்பாக அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தால் நியமிக்கப்பட்ட மூவர் குழு விசாரணையை இந்தியாவில் நடத்துவதற்கு அனுமதி யில்லை என்று பி.ஜே.பி. அரசு ஏற்கெனவே அறிவித்து விட்டது.

காங்கிரஸ் பரவாயில்லை!

நிலைமைகளைப் பார்க்கும்பொழுது, முந்தைய காங்கிரஸ் ஆட்சி பல மடங்கு மேலானது என்று நினைக்கக் கூடிய வகையில், கொடுங்கோலன் ராஜபக்சேவுக்குத் தங்கக் காப்பு அணிவித்து - மிச்ச சொச்சம் இருக்கும் ஈழத் தமிழர்களையும் கூண்டோடு ஒழித்திட ஆணையிடுங்கள், செய்து முடிக்கிறோம் என்று ராஜபக்சேவிடம் மனு போடும் ஒரு நிலையை பி.ஜே.பி. அரசு எடுத்திருக்கிறதோ என்று கருத ஏராள இடம் இருக்கிறது.

இந்தப் பி.ஜே.பி.தான் மத்தியில் ஆட்சிப் பீடத்தில் அமரவேண்டும்; மோடி வந்தால் ஈழப் பிரச்சினையில் முழு வெற்றி தமிழர்களுக்குக் கிடைக்கும் என்று பீரங்கி முழக்கம் செய்த தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் உப்புக் கண்டம் பறிகொடுத்த பழைய பார்ப்பனத்தியைப் போல விழி பிதுங்கிய நிலையில், விண்ணப்பங்களைப் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் முகத்தில் எப்படி விழிக்கப் போகிறார்கள் என்றும் தெரியவில்லை.

தவறு செய்த அந்தத் தோழர்கள், வெட்கத்தை மறந்து விட்டு, வீதிக்கு வந்து போராட முன்வரவேண்டும். ஒட்டு மொத்த தமிழர்களும் கட்சிக் கோடுகளைத் தாண்டி ஒன்று பட்டு எழுந்தால்தான் இன்றைய பி.ஜே.பி. முரட்டுக் காளையை அடக்க முடியும்!

தமிழா இன உணர்வு கொள்!

தமிழா தமிழனாக இரு!

ஒன்றுபடுவோம் - வென்றுவிடுவோம்!

என்ற முழக்கத்தை மீண்டும் எழுப்புகிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்



சென்னை

30.7.2014

Read more: http://viduthalai.in/e-paper/84944.html#ixzz390YZuqy1

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?


விநாயகர் கூறியவாறு கார்த்திகை விரதத்தை 12 ஆண்டுகள் அனுஷ்டித்த நாரதர், முருகன் அரு ளால் தேவ ரிஷியாகப் பதவி பெற்றாராம்.

இதன்மூலம் விநாய கரைவிட முருகன் பெரிய கடவுள் என்று காட்டு வதற்காக யாரோ இடை யில் புகுந்து புராணம் எழுதியிருப்பார்கள்போல் தெரிகிறது.

தேவரிஷிப் பதவி பெறுவது இருக்கட்டும் - எத்தனை ஆண்டு கார்த் திகை விரதம் இருந்தால் எம்.எல்.ஏ. பதவி பெற லாம்?

அதற்குமேல் அமைச்சர் பதவியைப் பெறலாமாம்?

Read more: http://viduthalai.in/e-paper/84945.html#ixzz390Z61Dze

தமிழ் ஓவியா said...


குலத் தொழிலுக்குத் தலைமுழுக்கிடுக!



எப்பாடு பட்டாவது மக்களைப் படிக்க வைத்து வசதி செய்து கொடுத்துத் தகப்பன் வேலையைவிட்டு, ஜாதி வேலையைவிட்டு, வேறு வேலைக்கு அனுப்பவேண்டும். எந்தத் தலைமுறையும் தன் ஜாதி வேலைக்கே வராமல் செய்வதுதான் முக்கிய கடமையாகும்..

_ (விடுதலை, 9.5.1961)

Read more: http://viduthalai.in/page-2/84950.html#ixzz390Zgm34Y

தமிழ் ஓவியா said...

கோசாலைக்கு 500 கோடி ரூபாயா?



கோசாலைக்காக 500 கோடி ரூபாயை மத்திய பி.ஜே.பி. அரசு ஒதுக்கியுள்ளது. தேர்தல் அறிக்கை யிலே பசு பாதுகாப்புப்பற்றிக் கூறப்பட்டு இருந்தது. இந்துத்துவாவின் முக்கியமான கோட்பாட்டில் கோமாதாவுக்கு முக்கிய இடம் உண்டு அல்லவா!

பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் பசுவதைத் தடுப்புச் சட்டம் அமலில் உள்ளது.

காளை மாட்டைக் கொல்லலாம்; உண்ணலாம்; அதேநேரத்தில் பசுக்கறியைச் சாப்பிடக் கூடாது என்று சொல்லுவதற்கு இவர்கள் யார்?

உணவுப் பிரச்சினை என்பது தனி மனிதன் பழக்க வழக்கம் - அதில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது.

உலக முழுவதும் அனுமதிக்கப்பட்டது மாட்டுக்கறி! இன்னும் சொல்லப்போனால், உலகெங்கும் அதிக மக்களால் உணவுக்குப் பயன்படுத்தப்படுவது மாட்டுக் கறியே! உலகில் மலிவான சத்துணவு இதுவே!

இன்னொரு கேள்வியும் உண்டு. இந்துத்துவா கோட்பாட்டின் அடிப்படையில், பசுவைப் பாதுகாக்கப் புறப்பட்டுள்ளார்களே - அவர்களின் முன்னோர்கள் ஆரியர்கள் - பார்ப்பனர்கள் பசு மாமிசம் உண்ணாத வர்களா? எத்தனையோ எடுத்துக்காட்டுகளை அலை அலையாக அள்ளிக் கொட்ட முடியுமே!

இவர்களின் முக்கிய இதிகாசமான மகாபாரதத்தி லேயே இதற்கு ஆதாரம் உண்டே!
துரோணபருவமும் (67-1-2) சாந்தி பருவமும் (27-28) என்ன கூறுகின்றன?

அரசர்களின் மாளிகைகளில் பார்ப்பனர்களுக்கு விருந்து படைப்பதற்கென்றே 2000 சமையற்காரர்கள் இருக்கின்றனர். நாளொன்றுக்கு 2000 பசுக்கள் வீதம் கொல்லப்பட்டன.

பசு மாமிச ருசியில் மந்தை மந்தையாக பார்ப் பனர்கள் வந்ததால் சமாளிக்க முடியாமல் போய் விட்டதால், அவர்களைப் பார்த்து சமையற்காரர்கள் மாமிசம் குறைவாக இருப்பதால், தயவு செய்து சூப்பை அதிகமாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற நிலை ஏற்பட்டதாக மகாபாரதம் கூறுகிறதே!

ஸ்மிருதிகளுள் மிக முக்கியமாகப் பார்ப்பனர்கள் மதிக்கும் மனுதர்ம சாஸ்திரம் என்ன கூறுகிறது?

உலகத்தில் என்னென்ன உள்ளதோ அவை யாவும் பிரஜாபதியால் (உற்பத்திக் கடவுள்) ஜீவன்களுக்கு உணவுக்காகப் படைக்கப்பட்டவையேயாகும்; அவரது கட்டளைக்குட்பட்டதாகும். நடமாடுவனவும், நடமாட் டமல்லாது அசைவற்றிருப்பனவுமான எல்லாமுமே ஜீவப் பிராணிகளுக்கு உணவானவையே!
ஒருவன் ஒரு மிருகத்தை உண்ணும்போது அது தனக்குரிய உணவாகக் கருதுவானாகில் அவன் பாவம் செய்தவன் ஆகான். சில பிராணிகள் உண்பனவாக வும், மற்றவை அவற்றுக்கு உணவாகவும் இருப்பதே படைப்பின் தன்மை என்கிறது மனுதர்மம்.

தமிழ் ஓவியா said...

பிதுர்க்களுக்கு (இறந்துபோன முன்னோர்களுக்கு) சிரார்த்தம் செய்து, பிண்டம் போடுவதற்கான பொருள்களின் தார தம்மிய அம்சங்களைப்பற்றி மனுதர்மம் என்ன கூறுகிறது தெரியுமா?

காலஞ்சென்ற பிதுர்க்கள் ஓராண்டுவரை பசு மாமிசம், பால் இவற்றைக் கொண்டு அல்லது பாற் பொங்கலைக் கொண்டு திருப்தி அடைகின்றார்கள் என்று கூறப்பட்டுள்ளதே!

கோமாதா கோமாதா என்று கூக்குரலிடுகிறார்களே, இந்தப் பாரதப் புண்ணிய பூமியில் தெய்வாம்சமாக நடமாடும்(?) பசுக்கள் கொடுக்கும் பாலின் அளவு என்ன? பசுவைக் கோமாதாவாகப் பூஜிக்காத வெளி நாட்டுப் பசுக்கள் கொடுக்கும் பாலின் அளவு என்ன?

அமெரிக்கா 77.26 கிலோ, கனடா 69 கிலோ, நெதர்லாந்து 63.10 கிலோ, தெ.ஆப்பிரிக்கா 62.79 கிலோ, ஸ்பெயின் 61.82 கிலோ, ஜெர்மனி 67.17 கிலோ, டென்மார்க் 55.18 கிலோ, பிரிட்டன் 52.50 கிலோ, பிரான்சு 52.16 கிலோ, சுவீடன் 49.69 கிலோ, இத்தாலி 49.40 கிலோ, இஸ்ரேல் 44.46 கிலோ; பசு ஒன்று நாள் ஒன்றுக்குக் கொடுக்கிறது; இந்தியப் பசு சராசரியாக கொடுக்கும் பாலின் அளவோ வெறும் 2.29 கிலோதான்.

இந்த இந்துத்துவாவாதிகள் கொண்டாடும் கோமா தாவின் தகுதி இவ்வளவுதான்.

இதில் ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காக வெளிநாடுகளிலிருந்து பொலி காளைகளைக் கொண்டு வந்து, அவற்றின்மூலம் இந்தியக் கோமாதாவின் வயிற்றில் கருத்தரிக்கச் செய்து, அதன்மூலம் அதிக பால் கிடைக்கச் செய்ய சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் ஓரளவுக்கு வெற்றியும் கிடைத்து வருகிறது.

நம் கோமாதாவை மிலேச்ச நாட்டுக் காளைகள் சினையாக்குவதுபற்றி என்ன கருத்து இவர்களுக்கு?

பயன்பாடு என்று எடுத்துக்கொண்டால்கூட, பசுவை விட எருமை அதிக பால் கொடுக்கிறது. இந்து மதத்தவர் களின் கண்களில் எருமை மட்டம் - பசு உசத்தியோ!

விவசாய நிலங்கள் அருகிவரும் காலகட்டத்தில் மாமிச உணவு என்பதுதான் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியதாகவும் இருக்க முடியும் என்பதுதான் தந்தை பெரியார் அவர்களின் கருத்தாகும்.

பார்ப்பனர்கள் சைவம் பேசியதெல்லாம் கவுதமப் புத்தர் பார்ப்பனர்களின் யாகக் கலாச்சாரத்தை எதிர்த்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்த பிறகே - மாற்றத் திற்கு ஆளானார்கள் என்பதுதான் உண்மை வரலாறு.

கோஸவம் - பசு மாடு, காளை மாடு இவைகளைக் கொல்லும் யாகம்,

அஷ்டதச பசுவிதானம் - பதினெட்டுப் பசுக்களைக் கொன்று நடத்தும் யாகம்! ஏன், மனிதர்களைக் கொன்று கூட யாகம் நடத்தியவர்கள் இந்த ஆரியப் பார்ப்பனர் கள் - அந்த யாகத்தின் பெயர்; புருஷ யஜ்ஞ என்பதாகும்.

இத்தகையவர்கள்தான் கோமாதாக்களைக் காப் பாற்றப் போகிறார்களாம்.

Read more: http://viduthalai.in/page-2/84951.html#ixzz390ZvahkD

தமிழ் ஓவியா said...


இந்நாள் -30.7.1955


இந்நாள் -30.7.1955

ஆகஸ்ட் கிளர்ச்சி பற்றி பெரியார் அறிக்கை

ஆகஸ்ட் 1ஆம் தேதி இந்திய யூனியன் கொடி கொளுத்தப்படும் என்கின்ற திராவிட கழக தீர்மானம் சம்பந்தமாக சென்னை அரசாங்க முதல் மந்திரி காமராஜர் அவர்களது அறிக்கையைப் பார்த்தேன்.

அவ்வறிக்கையானது நான் விரும்பியபடி மத்திய அரசாங்கத்திற்கு ஆகவும், சென்னை அரசாங்கத்திற்கு ஆகவும் வெளியிடப்பட்ட அறிக்கை என்று பொருள் தரும்படியாகவிடப்பட்டிருக்கிறது.

அதிலிருந்து தமிழ்நாட்டவர் மீது இந்தி கட்டாயமாகத் திணிக்கப்படமாட்டாது என்று அரசாங்கம் வாக்குறுதி கொடுத்து கொடியைக் கொளுத்த வேண்டாம் என்று விரும்புவதாக உணருகிறேன். ஆகவே நான், எனது தீர்மானம் அமுல் செய்யப்படாமல் இருக்க வேண்டும் என்று சர்க்கார் விரும்பினால் எப்படிப்பட்ட வாக்குறுதி அளிக்க வேண்டுமென்று எதிர்ப்பார்த்தேனோ அப்படிப்பட்ட வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் நடைமுறையில் இந்த வாக்குறுதியை அமுல் நடத்துவத்தில் அரசாங்கத்தாரால் இந்தி கட்டாயப்படுத்தப்படவில்லை என்பதாக மக்கள் தெளிவாகக் கருதும்படி நடந்து கொள்ளுமோ, அல்லது இவ்வளவு நாள் நடந்து கொண்ட மாதிரி ஒன்றுக்கொன்று (அறிக்கைக்கும் செய்கைக்கும்) சம்பந்தமில்லாத மாதிரி நடந்து கொள்ளுமோ என்பதை நடைமுறையில் தெரிந்து கொள்ள வேண்டி இருப்பதால் முதல்மந்திரியாரின் விருப்பத்திற்கு ஏற்ப கொடி கொளுத்துவதை தற்காலிக மாகவே ஒத்திவைத்து திராவிட கழத்தாரையும் மற்றும் இதில் ஈடுபட இருக்கிற பொதுமக்களையும் ஆகஸ்டு 1ஆம் தேதியன்றைக்கு கொடியைக் கொளுத்தாமல் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.

மற்றபடி அவ்வறிக்கையில் கொடி கொளுத்துவோர் மீது தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிய படுத்தி இருப்பதுபற்றி நானோ பொதுமக்களோ எவ்வித ஆச்சரியமும் படத் தேவையில்லை. மக்கள் அரசாங் கத்தினுடைய கொடியைக் கொளுத்தினால் அரசாங்கம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கு மென்று எந்தப் பயித்தி யக்காரனும் நினைத்துக் கொண்டிருந்திருக்க மாட்டான். அடக்கு முறையினுடையவும் தண்டனையினுடையவும் கடைசி எல்லையை எதிர் பார்த்துத்தான் திராவிட கழகம் கொடி கொளுத்த தீர் மானம் செய்திருக்கிறது. இதை உலகறியவும் செய்திருக் கிறது. ஆதலால் அந்த சொற்களுக்காக அறிவாளி களுக்கு நான் ஏதும் சமாதானம் சொல்லத் தேவை இல்லை.

என்னுடைய இந்த கொடி கொளுத்தும் தீர்மானத் திற்கு எதிர்ப்பாக வீணர்கள் செய்த ஆர்ப்பாட்டம், பூச்சாண்டிகளைச் சிறிதும் மதிக்காமல் செயலில் இறங்கமுன் வந்து மடிகட்டிப் பெயர் கொடுத்த மொழிப்பற்றும் ஆண்மையும் மானமும் துணிவும் கொண்ட பதினாயிரக் கணக்கான வீரசிகாமணிகளுக்கு எனது பாராட்டுதலையும் உளம் நிறைந்த நன்றியையும் தெரிவித்துக்கொண்டு கொடிகொளுத்தும்படி மறுபடியும் எனது வேண்டுகோள் வரும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க சிரம் வணங்கி வேண்டிக்கொள்கிறேன்.

வீண் பொய் கவுரவத்தைப் பார்க்காமல் மிகவும் அறிவுடைமையுடன் நடந்து கொண்ட சென்னை அரசாங்கத்தையும் மனமாறப்பாராட்டுவதுடன் உறுதி மொழிக்கேற்ப நடந்து கொள்ளுமென்றே நம்புகிறேன்.

- ஈ.வெ.ரா

Read more: http://viduthalai.in/page-3/84962.html#ixzz390alsNZ3

தமிழ் ஓவியா said...


மோடி ஒரு சர்வாதிகாரி! மராட்டிய முதல்வர் சாடுகிறார்


மும்பை, ஜூலை 31_ முக்கிய விவகாரங்களில் பதில் அளிக்காமல் பிரதமர் நரேந்திர மோடி அமைதி காக்கிறார் என்று மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் குற்றம் சாட்டியுள்ளார். மோடி சர்வாதிகாரி யாக நடந்துகொள்கிறார். ஆரோக்கியமான ஜனநாய கத்துக்கு இது நல்லதல்ல என்றும் அவர் கூறினார். மும்பையில் அவர் கூறிய தாவது:

மோடி அரசால் மக்கள் ஏமாற்றம் அடைந் துள்ளனர். குஜராத் மாநி லத்தில் மோடி சர்வாதி கார ஆட்சியே நடத்தி வந்தார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மத்தியில் சர் வாதிகார ஆட்சிதான் அமையும் என்று நாங்கள் அச்சப்பட்டோம். அது நடந்துவிட்டது.

மத்திய அமைச்சர்கள் நடத்தப்படும் விதம் சரியில்லை. அவர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படவில்லை. முக்கிய விவகாரங்களில் பிரதமர் தனது நிலையை தெளிவுபடுத்துவதில்லை. மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தத் தவறி வருகிறார்.

தேர்தல் பிரச்சாரத் தின்போதே பல விவகா ரங்களில் மோடி தனது நிலையை தெரிவிக்க வில்லை. வெளியுறவுக் கொள்கை, பொருளா தாரம், சமூகப் பிரச் சினைகள் பற்றியோ ஆர். எஸ்.எஸ். முன்வைக்கும் பொது சிவில் சட்டம், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு தகுதி அளிக்கும் 370ஆ-வது பிரிவு நீக்கம், ராமர் கோயில் பற்றியோ மோடி எதுவும் பேசவில்லை.

மோடி அரசு என்ற கனவை மட்டுமே அவர் விற்பனை செய்தார். பல பிரச்சினைகளில் அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது மக்களுக்கு கோபம் இருந்தது. இதை மோடி தனக்கு சாதக மாகப் பயன்படுத்திக் கொண்டார். சந்தையில் பொருள் விற்பனை செய் வது போல் தன்னை சிறப் பாக சந்தைப்படுத்தியும் பெருமளவு விளம்பரங்கள் செய்தும் வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சர்களுக்கு மரியா தையும், பொறுப்புணர்வும் இருந்தது. அது தற்போது இல்லை. இதை மக்கள் ஒப்பிட்டுப்பார்க்கின்றனர். புதிய அரசிடம் நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், மக்கள் பெற் றதோ மிகவும் குறைவு. இவ்வாறு பிருத்விராஜ் சவாண் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/85012.html#ixzz396Jqp7It

தமிழ் ஓவியா said...


விவேகானந்தர் பார்வையில் சமஸ்கிருதம்


சுவாமி விவேகானந்தர், மதச் சண்டைகளும், சாதி வேற்றுமைக் கலகங்களும் பல்குதற்கு ஒரு பெருங் கருவியாய் இருந்ததும் - இருப்பதும் சமஸ்கிருத மொழியேயாகும் என்றும், சமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்து போகுமானால், இப் போராட்டங்களும் தொலைந்து போகுமென்று வருந்திக் கூறினார்.

(- மறைமலை அடிகள், தமிழர் மதம் நூலில் - பக்கம் 24)

இந்து மதத்தை அமெரிக்காவரை சென்று பரப்பிய விவேகானந்தரே சமஸ்கிருதம் பற்றி இவ் வாறு கூறியுள்ளார்! ஆகஸ்டு முதல் தேதி ஆர்ப் பாட்டம் ஆவேசமாய் நடக்கட்டும்! நடக்கட்டும்!!

Read more: http://viduthalai.in/e-paper/85011.html#ixzz396JypgpJ

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?

பிரசவம்

இன்று ஆடிப்பூரம் விழாவாம் - அம்பாளுக்கு வளைகாப்பாம்!

ஒரு கேள்வி: வளைகாப்பு நடந்தால் பிரசவம் (டெலிவரி எப்பொழுது என்ற கேள்வி எழாதா?)

Read more: http://viduthalai.in/e-paper/85016.html#ixzz396K7wdXG

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்கள்


நம்நாட்டில் பார்ப்பானுக்கு வேலை கொடுப்பது ஆட்டுப் பட்டிக்கு நரியைக் காவலுக்கு வைப்பதுபோல் தான் ஆகும். குற்றப் பரம்பரையை எப்படி நடத்துகிறோமோ அப்படி நடத்தப் படவே வேண்டியவர் களாவார்கள் இந்தப் பார்ப்பனர்கள்.
(விடுதலை, 12.11.1960)

Read more: http://viduthalai.in/page-2/85017.html#ixzz396KJzJwU

தமிழ் ஓவியா said...


80 வயது கடந்த ஓய்வூதியர்களும் - தமிழ்நாடு அரசின் பாரபட்சமும்


ஆசிரியருக்குக் கடிதம் >>>

80 வயது கடந்த ஓய்வூதியர்களும் - தமிழ்நாடு அரசின் பாரபட்சமும்

தமிழக அரசுப்பணியிலிருந்து 1.6.1988 முதல் 31.12.1995 வரை உள்ள ஏழு ஆண்டுகளில் ஓய்வு பெற்றவர்களுக்கு பாரபட்சமாக ஓய்வூதியம் கணக்கீடு செய்து வழங்கப்பட்டது.

இந்த முரண்பாட்டைக் களைந்து இந்த ஏழாண்டுக்கு முன்னும், பின்னும் ஓய்வு பெற்றவர்கட்கு வழங்கியதைப்போல ஓய்வூதியம் கணக்கீடு செய்து தருமாறு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மேல் முறையீட்டில் உச்சநீதிமன்றத்திலும் பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்கள் மற்றும் ஓய்வூதியச் சங்கங்கள் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டு பல ஆண்டுகள் முடிந்த நிலையில் உச்சநீதிமன்றம் 17.1.2013-இல் ஓய்வூதியர்களின் கோரிக்கை, நியாயத்தின் பால் பட்டதென்றும், தமிழ்நாடு அரசின் நடவடிக்கை அரசமைப்புச் சட்டம் 14 மற்றும் 16ஆவது பிரிவுக்கு விரோதமான தென்றும், ஓய்வூதியர்களுக்குள் பாகுபாடு காட்டக்கூடாதென்றும் தெளிவாக தீர்ப்பு வழங்கிவிட்டது.

தீர்ப்பு கிடைத்து எட்டு மாதங்கள் கழிந்த நிலையில் 23.8.2013இல் அரசு ஆணை 363அய் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அரசாணை நாள் 23.8.2013-இல் ஓய்வூதியர் களில் உயிருடன் இருப்பவர்கட்கு மட்டுமே இந்த அரசாணை பயன்தரும் என குறிக்கப் பட்டதால், ஓய்வூதியர் குடும்பத்தார்க்கு ஓர் பேரிடியாக உணரப்பட்டது. ஏனெனில் ஓய்வூதியர் இறக்கும் நிலையில் அவருக்கு கிடைக்க வேண்டிய பணப்பயன் அவர் குடும்பத்தார்க்கு சேரும் என்பதே பொது விதி.

இது ஒரு புறம் இருக்க ஓய்வுபெற்று 20, 25 ஆண்டுகள் கழிந்த நிலையில் எஞ்சியுள்ள ஓய்வூதியர்கள் அவர்கள் ஓய்வு பெற்ற அலுவலகங்களுக்கு படையெடுத்து தமது பணிப்பேரேடுகளைத்தேடிப்பிடித்து புதிய ஓய்வூதிய பிரேரணைகளை தயாரிக்கச் செய்து மாநில கணக்காயருக்கு மேற்படி அலுவலகம் மூலம் அனுப்பினர். இதிலும் ஒரு துயரச் செய்தி உண்டு. இந்த ஏழாண்டுகள் என்பது அய்ந்தாவது ஊதியக்குழு நடை முறையில் இருந்த காலமாகும். ஆனால் புதிய பிரேரணை தயாரிக்கப்பட்டதோ 31.5.1988 வரை அமலில் இருந்த நான்காவது ஊதியக்குழுவின் பரிந்துரையில் இருந்த குறைந்த சம்பள விகிதத்தில்!

மாநில கணக்காயர் அலுவலகத்தில் பெறப்பட்ட புதிய ஓய்வூதிய பிரேர ணைகள் பரிசீலிக்கப்பட்டு 31.12.1995 இல் ஓய்வூதியர்க்கான புதிய ஓய்வூதியம் எவ்வளவு என்பதை நிர்ணயம் செய்து, அந்த உத்தரவு சம்பந்தப்பட்ட கருவூலங் களுக்கு மாநில கணக்காயரால் அனுப்பப் பட்டு வருகின்றன. அதன் நகலும் ஓய்வூ தியர்களால் பெறப்படுகிறது. ஓய்வு பெறும்போது பெறப்பட்ட ஓய்வூதியத்தை விட புதிய ஓய்வூதியம் 31.12.1995 இல் சற்று கூடுதலாகவே உள்ளது. இதனால் ஓய்வூ தியம் பெறும் தேதியிலிருந்து 31.12.1995 வரை குறைந்த அளவிலேனும் ஓய்வூதிய நிலுவை பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது.

31.12.1995 இல் 5ஆவது ஊதியக்குழு பரிந்துரை முடிவுக்கு வந்து 1.1.1996 முதல் 6ஆவது ஊதியக்குழு பரிந்துரை, சம்பள விகிதம் உயர்த்தப்பட்ட நிலையில் நடைமுறைக்கு வந்தது. அரசாணை எண் 174/21/4/1998 வெளியிடப்பட்டு அதில் 1.1.1996இல் எந்த அடிப்படையில் ஓய்வூதியங்கள் நிர்ண யிக்கப்பட வேண்டும் என்கிற விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப் படையில் 31.12.1995இல் ரூ. 1750 வரை அடிப்படை ஓய்வூதியம் உள்ள ஓய்வூ தியர்கள் 1.1.1996 இல் உள்ள 148 சதவீத அக விலைப்படியை அடிப்படை ஓய்வூதியத் தோடு சேர்த்தும் ரூ.1751-க்கு மேல் அடிப்படை ஓய்வூதியம் பெறுகிறவர்கள் 111 சதவீத அகவிலைப்படியையும் சேர்த் தும் ஓய்வூதியம் பெற வேண்டும். ஆனால் இந்த அரசாணை புறக்கணிக்கப்பட்டு, புதிதாக ஓர் அரசு கடிதம் எண் 61495/4.2.2014 இல் வெளியிடப்பட்டு அகவிலைப் படி இணைப்பதில் குளறுபடி செய்து 1.1.1996 இல் ஏற்கெனவே பெறப்பட்ட ஓய்வூதியத்தைக் காட்டிலும் குறைவாக பெறும்படி செய்துள்ளார்கள். உச்சநீதிமன் றத்தின் தீர்ப்பினை செயலிழக்கச் செய்யும் நிலையில்தான் அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

மக்களாட்சியில் மனிதநேயம் பேணப் பட வேண்டும்! தமிழக முதலமைச்சரின் கவனத்துக்கு இது கொண்டு செல்லப்பட் டிருக்குமா என்ற கருத்து எல்லா ஓய்வூ தியச் சங்க பொறுப்பாளர்கள் முதலமைச் சர் அவர்களை நேரில் சந்தித்துப்பேசி நல்ல முடிவை பெற்றுத்தருவார்கள் என்ற நம்பிக்கை திடமாக இருக்கிறது.

- எம்.கே.கிருஷ்ணமூர்த்தி (கூட்டுறவு சார் பதிவாளர் ஓய்வு) மயிலாடுதுறை

Read more: http://viduthalai.in/page-2/85021.html#ixzz396KSOrNj

தமிழ் ஓவியா said...





செய்குதம்பிப் பாவலர்
தோற்றம்: 31.7.1874- மறைவு: 13.2.1950

மதங்களைக் கடந்தது தமிழ் என நிரூபித்துக் காட்டும் வகையில் வாழ்க் கையை தமிழ்த்தொண்டு சிறக்க வாழ்ந்தவர். பாவலர் என அன்புடன் அனைவ ராலும் அழைக்கப் பெற்றவர் செய்குதம்பிப் பாவலர்.

அக்காலத்து திருவி தாங்கூர் சமஸ்தானமாக வும் இன்றைய நாகர் கோவில் மாவட்டமாகவும் விளங்கக்கூடிய தமிழ கத்தின் தென்கோடிப் பகுதியான கோட்டாறு எனும் ஊரில் இசுலாமிய சமூகத்தில் பிறந்தவர். தந்தை பக்கீர் மீரான் சாகிபு. தாயார் ஆமினா. சிறுவயதில் அரபு மொழி கற்க பள்ளிக்கு அனுப் பப்பட்ட செய்கு தம்பி அங்கிருந்த ஆசிரியர் களைத் தன் இணையற்ற அறிவாற்றலால் வியக்க வைத்தார். திருக்குரானை அவர் கற்ற வேகத்தைக் கண்டு தேர்வில்லாமலேயே அவரை இரண்டாம் வகுப்புக்கு மாற்றினர்.

அதே ஆண்டில் மூன்றாவது வகுப்புக்கும் பின் நான்காம் வகுப்புக்கும் மாற்றப்பட்டார். பின் தமிழின் பால் ஆர்வம் கொண்டு அவ்வூரில் வாழ்ந்த சங்கர நாராயண அண்ணாவி என்பவரிடம் நன்னூல், இலக்கண விளக்கம், வீரசோழியம், தொல் காப்பியம் போன்ற இலக்கண நூல்களைக் கற்றார். தமிழில் தன்னிகரற்ற புலமை பெற்ற பாவலர் சென்னைக்கு வந்தார். கம்பராமாயணம் சீறாப் புராணம் பற்றி அவர் ஆற்றிய சொற் பொழிவுகள் கேட்போர் நெஞ்சில் நெருப்பைப் பற்றவைத்தன.

இச்சமயத்தில்தான் அவர்காலத்தில் வாழ்ந்த அன்பின் திருவுருமான இராமலிங்க அடிகளாரின் பால் ஈர்ப்பு கொண்டு இசுலாமியராக இருந்தும் சைவ நெறி பயின்றார். வரலாற்றுச் சிறப்புமிக்க அருட்பா மருட்பா வழக்கில் வள்ளலாருக்கு ஆதர வாக நீதிமன்றத்தில் தீர்ப்புக் கூறப்பட்ட பின்னும் அறிஞர்கள் சபையில் அந்த வாதம் தொடர்ந்து கொண்டிருந்தது. வள்ளலார் மற்றும் நாவலர் இறந்த பின்பும் இந்த மோதல் தமிழ் அறிஞர்கள் மத்தியில் தொடர்ந்து கொண்டிருந்தது.

திரு.வி.க. மற்றும் கதிரைவேற்பிள்ளை ஆகியோர் ஒரு பொது அரங்கில் அருட்பாவைக் கடுமையாக எதிர்த்து அதில் இலக்கணப் பிழைகள் இருப்பதாகக்கூறி அதனை நிராகரிக்க முற்பட்டப் போது பாவலர் மேடையில் ஏறி தன் நுண்ணிய இலக்கணப் பார்வையைக் கொண்டு ஆய்ந்து அகழ்ந்து வள்ளலார் எழுதியது அருட்பாதான் என விளக்கிக்கூறிய போது அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர்.

அதன் பின்னரே அந்த சர்ச்சை முடிவுக்கு வந்து வள்ளலாரை அனைவரும் ஏற்கத் துவங்கினர். இவர் எழுதிய நூல்களில் சம்சுத்தாசின் கோவை, நபிகள் நாயக மான்மிய மஞ்சரி, கல்லத்து நாயகம். இன்னிசைப் பாமாலை, திருக்கோட்டாற்றுப் பதிற்றுப் பத்தந்தாதி, திருநாகூர் திரிபந்தாதி, நீதிவெண்பா போன்றவை குறிப்பிடத்தக்கவை.

நினைத்த மாத்திரத்தில் தேர்ந்த கவிபுனையும் ஆற்றல் மிக்கவர். சதாவதானம் எனும் அரிய கலையை அவர் பலமேடைகளில் நிகழ்த்திய காரணத்தால் சதாவதானி செய்குதம்பிப் பாவலர் என்றே அழைக்கப்பட்டார்.

Read more: http://viduthalai.in/page-3/85027.html#ixzz396KxwwE6