Search This Blog

11.7.14

இதுதான் வால்மீகி இராமாயணம் - 10(இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.)


ஒன்பதாம் அத்தியாயம் தொடர்ச்சி

 ஸ்வாமித்திரன் பல தலங்களையும் சுற்றி வரு பவன்;   வசிட்ட முனிவன் இடத்தையும் அடைந் தானென வால்மீகி கூறுகிறார்.  கம்பரோ, அவன் வேட்டையாடச் சென்றவன் வசிட்ட முனி வனை யடைந்தானெனக் கூறுகிறார்.  வசிட்டன் அயோத் தியை அடுத்த வனத்திலேயே இருந்தவனாவன்.  அது அந்நிய நாட்டுக் காடாதலால், அங்கே வேட்டையைக் குறித்து விஸ்வாமித்திரன் சென்றானென்பது பொருந்தாத தாகும். வால்மீகி கூறும் வரலாறே பொருந்துவதாக உள்ளது.
விஸ்வாமித்திரன் தனது நூறு பிள்ளைகளும் மாண்டவுடன், மீந்த ஒரு மகனுக்குப் பட்டங்கட்டிச் சிவபெருமானை நோக்கித் தவம் செய்து, பின் வசிட்டனோடு சண்டையிட்டுத் தோற்றான் என்று வால்மீகி கூறுகிறார்.  கம்பரோ, இதற்கு மாறுபடக் கூறுகிறார்.  விஸ்வாமித்திரன் தன் மகனொருவனுக்குப் பட்டங் கட்டியதைக் கூற அவர் முற்றும் மறந்துவிட்டனர்.  மேலும், தன் பிள்ளைகள் நூறு பேரும் இறந்தவுடன், விஸ்வாமித்திரன் வசிட்டனோடு சண்டையிட்டான் என அவர் கூறுகிறார். 

அச்சண்டை மத்தியில் விஸ்வாமித் திரன் சிவபெருமானை நோக்கி வணங்கி வழுத்தவே, அவர் தோன்றி ஒரு படை தந்ததாகக் கம்பர் கூறுகிறார்.  வால்மீகி முனிவர் இவ்வாறு கூறாது, தன் பிள்ளைகள் இறந்தவுடன் விஸ்வாமித்திரன் இமயமலையை யடைந்து தவம் புரிந்து, சிவனருளால் எண்ணிறந்த படைகள் பெற்றுப் பின்னரே வந்து போர் தொடங்கினானென்பர்.  தோற்றவுடன் விஸ்வாமித்திரன் தவம்புரியத் தென் திசையை யடைந்தான் என்று வால்மீகி கூறுகிறார்.  ஆனால், கம்பரோ அவன் கிழக்குத் திசையை அடைந்ததாகக் கூறுகிறார்.  ஆதலின் கம்பர் முதற்கண்,
தேவ பாடையின் இக்கதை செய்தவர்
மூவ ரானவர் தம்முளு முந்திய
நாவி னாருரை யின்படி நான் தமிழ்ப் பாவினா லிது ணர்த்திய பண்பரோ
எனத் தாம் வால்மீகி கூறுகிறபடி இராம கதையைப் பாடுகிறேன் என உணர்த்தியதற்கு மாறாகவே இராமாய ணம் பாடுகிறாரெனத் தெரியவருகிறது.  கம்பருடைய கணக்கற்ற மாற்றங்களை அங்கங்கே குறித்து விளக்கி வந்திருப்பதை இவ்வாராய்ச்சி யுரையைத் தொடர்ந்து படித்து வரும் அன்பர்கள் நன்றாகக் கவனித்திருப்பார்கள்.  இனி காமதேனுவின் செயல்களை ஆராய்வோம்.

காமதேனு என்ற ஒரு பசு எண்ணிறந்த சேனை களுக்கு வேண்டிய பொருள்களையெல்லாம் தந்துதவிய தென்பது ஆச்சரியமாக இருக்கிறது.  இப்பசுவை விஸ்வாமித்திரன் கேட்டபோது, வசிட்டன் கொடுக்க மறுத்து விடுகிறான்.  ஆனால், கம்பரோ இங்கு மாறு படுகிறார்.  அவர் கூறுவது :-

வற்கலை யுடையன் யானோ
வழங்கலென் வருவ தாகிற்
கொற்கள்வே லுழவ நீயே
கொண்டகல் கென்று கூற
என்பது.  அதாவது நான் கொடுப்பதென்ன?  அது வருவ தானால் நீயே கொண்டுபோ என்று முனிவன் கூறினான் என்பர்.

காமதேனு அரசனிடமிருந்து தப்பி ஓடிவந்து முனி வனையடைந்து வினவ, அவன் அஞ்சியவன்போலக் கூறுகிறான்.  உடனே பசு, முனிவனுடைய விடைபெற்றுப் பல வீரரை உண்டாக்கிற்று என்பது வால்மீகி வரலாறு.  கம்பரோ முனிவனாணை பெறாமலே பசு சண்டை தொடங்கிற்றென்கிறார்.  பசு முக்கலிட்டது; உடனே அதன் மடியிலிருந்து சிலரும், யோனியிலிருந்து சிலரும், குதத்திலிருந்து சிலரும், மயிர்க் கால்களிலிருந்து சிலரும் தோன்றினர் என்று வால்மீகி கூறுகிறார்.  இது நான்முகன் முகத்திலிருந்து பிராமணரும், நெஞ்சிலிருந்து க்ஷத்திரி யரும், இடையிலிருந்து வைசியரும், காலிலிருந்து சூத்திர ரும் தோன்றினரென்று கூறும் வரலாறு போலவே மிகவும் ஆபாசமாக இருக்கிறது.  ஆண்மகனாகிய நான்முகன் பிள்ளை பெற்றான் என்பதே இயல்புக்கு மாறு.  அதில் முகத்திலிருந்து சிலரையும் தோற்றுவித்தானென்பது அறிவுக்கு அடாததாகும்.  கவுதம முனிவன் சாபத்தால் இந்திரனுக்கு உடலெங்கும் பெண்குறிகள் அமைந்தன என்று கம்பர் கூறுகிறார் என முந்தைய கட்டுரையில் ஆராய்ந்தோம்.  இந் நான்முகனுக்கு யார் சாபத்தால் இவ்வாறு நெற்றியிலும், மார்பிலும், இடுப்பிலும், காலிலும் பெறும் பெண்குறிகள்அமைந்தனவோ தெரியவில்லை.  கரு எவ்விடம் தங்கிற்றோ?  வெவ்வேறு விதமான கருக்களை உண்டு பண்ணியவர்கள் தாம் யாவரோ?  இவ்வளவு ஆபாசமான கதையைக் கட்டிவிட்டுள்ளனர் ஆரியப் பார்ப்பனர்கள்.  இச்சாதி வரலாற்றை வேறொரு சமயம் விரிவாக ஆராய்வோம்.  இவ்விழிந்த வரலாறு போலவே உளது இக்காமதேனுவின் மடி, யோனி முதலிய உறுப்புகளிலிருந்து வெவ்வேறு வகையினர் தோன்றின ரென்பது!  மடியிலிருந்து சிலரும், யோனியிலிருந்து சிலரும், குதத் (மலவாயில்) திலிருந்து சிலரும் தோன்றின ரென மொழி பெயர்ப்பாளரான அநந்தாச்சாரியாரும் மன்மத நாததத்தரும் தெளிவாக எழுதினும், நடேச சாஸ்திரியார் யோனி, குதம் முதலிய உறுப்புகளை ஆபாசமானவையென மறைத்து, மடியிலிருந்து சிலரும், அதன் உடம்பிலிருந்து சிலரும் தோன்றினரெனப் பொதுப் படக்கூறினர்.  கம்பரோ, உறுப்புகள் இன்னின்னவற்றி லிருந்து இன்னின்னார் தோன்றினாரென்னாமல் பொது வாகப் பசுவினிடம் இன்னின்னார் தோன்றினாரென்பர்.  அது வருமாறு :-
பப்பர ரெவனர் சீனர் சோனகர் முதல பல்லோர்
கைப்படை யதனி னோடும் கபிலைமாட் டுதித்து
பப்பரர் முதலிய கூட்டத்தினர் கையிலே ஆயுதங் களோடும் தோன்றினரென வால்மீகியார் கூறவில்லை.  இனி தவம் செய்யச் சென்ற விஸ்வாமித்திரர் வரலாற்றை ஆராய்வோம்.


விஸ்வாமித்திரன் தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு, தென் திசையை யடைந்து, பயங்கரமான தவத் தைச் செய்தான்.  அப்போது அவனுக்கு ஹவிஸ்யந்தர், மதுஷ்யந்தர், திருடநேத்ரர், மகாரதர் என்ற பெயரை யுடைய பிள்ளைகள் உண்டானார்கள்.  இவ்வாறு தவம் செய்வதில் ஆயிரமாண்டுகள் கழிந்தபின், நான்முகன் தோன்றி அவனுக்கு, ராஜ ரிஷி என்ற பட்டம் தந்தான்.  அதனால், விஸ்வாமித்திரன் கோபமடைந்து வெட்கத்தால் தலைகுனிந்து மறுபடியும் தவம் புரிந்து கொண்டிருந்தான்.

அக்காலத்தில் அயோத்தியில் திரிசங்கு என்னும் மன்னன் ஆண்டிருந்தான்.  அவன் அய்ம்பொறிகளையும் வென்று நல்லவனாக இருந்தான்.  அவன் உடலோடு சுவர்க்கம் (தேவருலகம்) போக எண்ணினான்.  அதற்காக அவனொரு யாகம் செய்ய விரும்பிக் குல குருவாகிய வசிட்டனை வரவழைத்துச் சொன்னான்.  வசிட்டன், அந்தச் சங்கதி முடியா தென்று கூறிவிட்டான்.  மன்னன் பின், வசிட்டனுடைய பிள்ளைகளிடம் போனான்.  வசிட்ட முனிவனுடைய நூறு பிள்ளைகளும் சின மடைந்து, எங்கள் தந்தையாலேயே முடியாத இச் செயலை நாங்கள் எவ்வாறு செய்வோம்? என்றனர்.  திரிசங்கு, அப்படியாயின் என் கருத்து நிறைவேற நான் வேறு யாரிடமேனும் செல்கிறேன் என்றனன்.  அதைக் கேட்ட அவர்கள் மிகச் சினந்து, சண்டாளனாகப் போக எனச் சபித்தனர்.  மன்னன் சண்டாளத் தன்மையை அடைந்து, கருத்துக் கடின உருவமுடையவனாகித் தலைமயிர் குறைந்து கருத்த உடையையும், சுடுகாட்டு எலும்பு மாலையையும், சாம்பலையும் இரும்பு நகையையும் அணிந்தவனாக ஆகிவிட்டான்.  மந்திரி முதலியோர் அவனை விட்டு ஓடி விட்டார்கள்.  சண்டாள உருவடைந்த திரிசங்குவை விஸ்வாமித்திர முனி கண்டான்.  மனமிரங்கி, தேறுதல் கூறி, அவ்வாறான மைக்குக் காரணம் வினவினான்.  மன்னவன், சுவாமி!  ஆணையிட்டுச் சொல்லுகிறேன்.  நான் இதுவரை ஒரு பொய்யும் கூறியதில்லை; இனியும் கூறேன்.  பல யாகங்கள் செய்தேன்.  அறநெறி தவறாது அரசாள் வதோடு, குருவுக்கும் மிகப் பணிவுடன் நடந்து வருகிறேன் என்று கூறி, நடந்த வரலாற்றையும் புகன்றனன்.  அதுகேட்ட முனிவன், நான் அந்த யாகத்தை முடித்து உன்னை உடலோடு தேவருலகத்துக்கு அனுப்புவேன் என்று கூறித் தன் பிள்ளைகளை அழைத்து, யாகத்திற்கு வேண்டியவற்றைத் தயாரிக்கக் கட்டளையிட்டான்.

பல முனிவர்களும் வந்து கூடினர்.  வசிட்ட முனி வனுடைய பிள்ளைகளும் மகோதயனென்ற முனிவனும் மட்டும் சண்டாளனுக்கு க்ஷத்திரியன் செய்து வைக்கும் யாகத்தின் அவிசை எப்படித் தேவர்களும் முனிவர்களும் உண்பார்கள் என்று சொல்லி வராமலிருந்து விட்டனர்.  அதனையறிந்த கோசிகன், என்னை இகழ்ந்த அந்த நூறுபேரும் சாம்பலாகிவிட வேண்டும்.  இப்போதே அவர்கள் எமவாதனை அடைந்து, எழுநூறு பிறப்பில் பிணத்தைத் தின்ன வேண்டும்.  அருளற்று என்றும் நாயிறைச்சியுண்டு இழிகுலத்தோராய் விகாரமான பேச்சும் செய்கையும் உருவமுடையவர்களாய்த் திரிய வேண்டும்.  மகோதயன் என்பவன் என்னை இகழ்ந்த தால், வேடனாகிப் பல காலம் நரகத்திலழுந்த வேண்டும் என்று கடுங் கோபத்தோடு கூறினான்.
யாகம் வெகு காலம் நடைபெற்றது.  அதன் முடிவில் தேவர்கள் அவிர்ப்பாகத்தை வாங்க வரவில்லை.  அதனால், அகப்பையை உயரத் தூக்கிக் கொண்டு, கடுஞ்சினத்தோடு விஸ்வாமித்திரன் தனது தவ மகிமையால் சுவர்க்கம் போக மன்னனை ஏவினான்.  உடனே திரிசங்கு சுவர்க்கத்தை நோக்கிச் சென்றான்.  அதுகண்ட இந்திரன் முதலிய தேவர்கள் அவனைச் சண்டாளனானதால், கீழே போகும்படி சொன்னார்கள். அதனால், திரிசங்கு கீழே நோக்கித் தலைகீழாக விழுந் தான்.  அதுகண்ட முனிவன், அவனை உயரவே நிற்கும் படி ஏவி அங்கேயே ஒரு சுவர்க்கத்தைச் சிருஷ்டித்தான்.  அதுகண்டு பயந்து தேவர்கள் முனிவனையழைத்து, அந்தத் திரிசங்கு சுவர்க்கத்தையும் ஒப்புக் கொண்டார்கள்.  பின் யாகமும் முடிந்தது.  இவ்வாறு தன்னுடைய தவத்திற்கு இடையூறு வந்ததாலே கோசிக முனிவன் அவ்விடத்தை விட்டு மேற்குத் திசையை அடைந்தான்.  இவ்வரலாறு 57, 58, 59, 60 ஆம் சருக்கங்கள்.  இதனை ஆராய்வோம்.

27 comments:

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?


பூமி பூஜை - வாஸ்து

பூமி பூஜையின்போது முதலில் வாஸ்து சாந்தியின் மூலம் வாஸ்து புருஷனை திருப்தி செய்ய வேண்டும். பூசணிக்காய் வெட்டுவது இதற்காகத் தான் பிறகு மஞ்சள் பிள்ளையார் பூஜை செய்து செங்கற்களில் நவக்கிரகங்களைப் பூஜிக்க வேண்டும் பின் பூமாதேவியை வழிபட்டு, கட்டடம் கட்டும் முகூர்த் தம் செய்ய வேண்டுமாம்.

ரொம்ப சரி போரூரையடுத்த முகலிவாக்கத் தில் 11 மாடிக் கட்டடம் இடிந்து 61 பேர் பரிதாப மரணம்!

இதுவும் பூமி பூஜை நடத்தி வாஸ்து பார்த்துக் கட்டப்பட்டது தானே!

Read more: http://viduthalai.in/e-paper/83815.html#ixzz37ATZYOli

தமிழ் ஓவியா said...


தேர்தலில் எத்தனை இடங்களை பெற்றோம் என்பதைவிட எத்தனை சு.ம. திருமணங்களை நடத்தினோம் என்பதுதான் முக்கியம்


தேர்தலில் எத்தனை இடங்களை பெற்றோம் என்பதைவிட
எத்தனை சு.ம. திருமணங்களை நடத்தினோம் என்பதுதான் முக்கியம்

முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருத்துரை

சென்னை, ஜூலை. 11 நாம் தேர்தலிலே வெற்றி பெற்றாலும், வெற்றி பெறா விட்டாலும், தேர்தலிலே எத் தனை இடங்களைப் பெற் றோம் என்பதை விட, எத்தனை திருமணங்களை இந்த ஆண்டு சுயமரி யாதைத் திருமணங்களாக நடத்தி வைத்தோம் என்ற அந்த எண்ணிக்கையிலே தான் நாம் பெருமையடை கிறோம். அந்தப் பெரு மையை தொடர்ந்து நாம் காப்பாற்ற, தொடர்ந்து நடைமுறைப்படுத்த, நம்முடைய இயக்கத்திலே இன்றைக்கு ஒரு தங்க வேலன் அல்ல, பல தங்க வேலன்கள் உருவாகியிருக் கிறார்கள். இன்றைய தினம் நாம் அரசியலிலே அடைய வேண்டிய அளவுக்கு வெற்றி அடைய விட்டாலும்கூட, சமுதாய சீர்திருத்தத்திலே நாம் பெற்ற வெற்றியை எண் ணிப் பார்த்து பெருமை அடையலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிலே இன்றைக்கு ஆளுங் கட்சியாக இருக்கின்ற அ.தி.மு.க. இடைத் தேர் தலில் டெபாசிட் தொகையை இழந்த கட்சி யாக விளங்கியதை மறந்து விட முடியாது. அதற்காக அவர்கள் யாரும் தற் கொலை செய்து கொள் கின்ற முயற்சியிலே ஈடு படவில்லை. தொடர்ந்து கட்சி நடத்திக் கொண் டிருக்கிறார்கள். நாமும் அவர்களைப் பார்த்துக் கொண்டு தான் இருக் கிறோம். எனவே வெற்றி தோல்வி என்பது ஒரு இயக்கத்தின் வளர்ச்சியை நிர்ணயித்து விடாது. நாம் நம்முடைய இயக்கத்தை, பெரியாரின் கொள்கை களை அடிப்படையாக வைத்து, பேரறிஞர் அண்ணா அவர்களுடைய வழிமுறைகளைப் பின்பற்றி வளர்ந்தவர்கள், இன்றைக்கும் வளர்த்துக் கொண்டிருப்பவர்கள்.

இன்றைக்குப் பெரியார் இல்லை, அண்ணா இல்லை என்றாலும் அவர்கள் வார்த்துத் தந்த கொள்கைகளும், இலட் சியங்களும் இருக்கின்றன. நமக்கு அவைகள் தான் துணை. பெரியாருடைய துணையும், அண்ணா துணையும், அவர்கள் வளர்த்து ஆளாக்கிய திராவிட இயக்கத்தின் துணையும் இருக்கிற வரையில் திராவிட முன் னேற்றக் கழகத்தை, திராவிட இயக்கத்தை யாராலும் வீழ்த்தி விட முடியாது என்பதை நான் உறுதிபடச் சொல்லி (பலத்த கைதட்டல்) இந்த உறுதி மொழி வழியில் நடக்கின்ற ஒரு குடும்பம், நெல்லை மாவட்டத்திலே வாழ்ந்து வருகின்ற சீர் திருத்த குடும்பம், செழிப் பான பகுத்தறிவைப் பெற்ற குடும்பம், தம்பி தங்கவேலனுடைய குடும்பம். அந்தக் குடும் பத்து செல்வங்கள் திலீ பன் -_ கலைவாணி இருவ ருக்கும் நடைபெற்றுள்ள இந்த வாழ்க்கை ஒப்பந்த திருவிழாவில் என்னு டைய இனிய வாழ்த்து களை மண மக்களுக்கு வழங்கி வாழ்க வாழ்க என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு நாடாளு மன்ற உறுப்பினர் ச. தங்க வேலு அவர்களின் இல்ல மணவிழாவில் திமுக தலை வர் கலைஞர் பேசினார்.

Read more: http://viduthalai.in/e-paper/83813.html#ixzz37ATiTdRU

தமிழ் ஓவியா said...


காவடி எடுத்தவரைக் கைவிட்ட கடவுள்!


மட்டக்களப்பு ஜூலை 11_ இலங்கை கிழக்கு மாவட்டமான மட் டக்களப்பு பகுதியில் உள்ள அம்மன் கோவில் விழாவை ஒட்டி பறவைக் காவடி எடுத்துச் சென்றவர் காவடி உடைந்ததன் காரணமாக மரண மடைந்தார்.

மட்டக்களப்பில் உள்ள அம்மன் கோவில் ஒன்றில் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அருகில் உள்ள ஊர்க்காரர்கள் அனைவரும் நேர்த்திக் கடன் என்ற பெயரில் அலகு குத்திக்கொண்டும் தேர் இழுத்துக் கொண்டும் வருவார்கள் இந்த நிலையில் கொக்கடிச்சோலைப் பகுதியில் இருந்து ஒரு குடும்பம் நேர்த்திக்கடனுக்காக பறவைக்காவடி என்ற பெயரில் டிராக்டரில் கட்டி அதில் கவடி எடுப்பவரை தொங்க விட்டுச் சென்றார்கள். சாலையில் ஒரு பள்ளத்தை கடக்கும் போதுஏற்பட்ட அதிர்வின் காரணமாக டிராக்டர் ஒருபுறம் சரியவே பறவைக்காவடி முறிந்து காவடி தூக்கியவர் மீதே விழுந்தது, இதில் உடல் நசுங்கி பறவைக்காவடி தூக்கியவர் சம்பவ இடத்தில் மரணமடைந்தார். மேலும் காவடி விழுந்ததால் டிராக்டரில் சென்ற 4 பேர் படுகாயம் அடைந்துள் ளனர். இச்சம்பவம் குறித்து மட்டக் களப்பு கொக்கடிச்சோலை காவல் துறை யினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/83812.html#ixzz37ATyIfax

தமிழ் ஓவியா said...


இயற்கைத் தடைகள்நாளைக்கு வேண்டும் என்று தேடும் தன்னம்பிக்கையற்ற தன்மை யும், எவ்வளவு கிடைத்தாலும் போதாது என்கிற ஆசை அடிமைத்தன்மையும், மனிதனின் பிறப்புரிமையாகிய தன் மானத்திற்கு இயற்கைத் தடைகள்.
(குடிஅரசு, 9.1.1927)

Read more: http://viduthalai.in/page-2/83817.html#ixzz37AUEb6lR

தமிழ் ஓவியா said...


இன்று உலக மக்கள் தொகை தினம் - ஜூலை 11மக்கள் தொகைப் பெருக்கத்தால் வரும் பாதிப்பை முதல்முதலில் உணர்ந்து கூறியவர் தந்தை பெரியாரே!

1990-ஆம் ஆண்டுக்கு முன்பு நெல்லை சந்திப்பில் இருந்து சென்னை பேருந்துப் பயணத்தில் தச்சநல்லூரைப் பேருந்து கடந்த உடனே பசுமை ஆக்ர மித்துவிடும். அதன் பிறகு கோவில் பட்டி வரை பசுமைதான். அதன் பிறகு திருமங்கலம், திருப்பரங்குன்றம் மற்றும் பசுமலை என கண்ணுக்கு குளிர்ச்சி யாக பசுமை மயமாக இருந்தது. மதுரை நகரம் அப்பொழுதெல் லாம் இரைச்சலின்றி மிகவும் அழகாக இருந்தது.

அப்போதைய மாட்டுத் தாவணி என்பது நகரத்தில் இருந்து நீண்ட தூரத்தில் இருந்த ஓரிடமாகும், பழைய நீதிமன்றத்தைத் தாண்டிய உடனே பசுமை, பிறகு திருச்சிவரை பசுமை அதன் பிறகு சென்னையை நெருங்கும் வரை பச்சைப் பசேலென்று தானிருக்கும். ஆனால், இன்றைய நிலை என்ன? அப்படி ஒன்றும் நாம் நூற்றாண் டுகள் கடந்து விடவில்லை. வெறும் 20 ஆண்டுகள் தான் கடந்து வந்தோம். இன்று சென்னையில் இருந்து திருச்சி வரை சிறு சிறு இடம் விட்டு கட்ட டங்கள் தான் தெரிகின்றன. மதுரைக் கும், திருநெல்வேலிக்கும் வித்தியாசம் தெரியவில்லை. வயல்வெளிகள் அழிந்து திருநெல்வேலிவரை எங்கும் நகரமயமாகிவிட்டது. ஏன் என்ற இந்தக் கேள்விக்கு ஒரே பதில் மக்கள் தொகைப் பெருக்கம். அங்கிங்கெனாதபடி எங்கும் மக்கள் தொகைப்பெருக்கம் நெருக்கடியான சூழ்நிலையைக் கொண்டு வந்துவிட்டது. வளர்ச்சியடைந்த நாடுகளைத் தவிர வளரும் மற்றும் வளர்ச்சியடையா நாடுகள் அனைத்திலுமே மக்கள் தொகைப் பெருக்கம் நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரிதும் அச்சுறுத்த லாக அமைந்துவிட்டது. முக்கியமாக தெற்காசியப் பகுதியில் வங்கதேசம் மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளின் முன்னேற்றத்திற்கு பெரிதும் தடையாக இருப்பது மக்கள் தொகைப் பெருக்கமேயாகும்.

உலக நாடுகளில் பல இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில்தான் மக்கள் தொகைப் பெருக்கத்தின் தாக்கம் குறித்து விரிவாக ஆய்வு செய்து சரியான சட்டதிட்டங்களை வகுத்து அதன்படி நடந்து வருகின்றன. எடுத் துக்காட்டாக ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை எடுத்துக்கொண்டால் 1970ஆம் ஆண்டுகளில் சிட்னி நகர நிர்வாகம் வரும் நூறு ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி, எவ்வாறு பெருகும் மக்கள் தொகைக்கு ஏற்ப இருப்பிட வசதி, குடிநீர்த்தேவை, போக்குவரத்து வசதி என பல்வேறு இன்றியமையாத தேவைகளுக்காக திட்டமிட்டது. அப்போது நகர நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்தனர். ஆனால் இன்று சுமார் 3-கோடி மக்கள் வசிக்கும் ஒரு நகரம் மிகவும் அமைதியாக எந்த ஒரு இன்றியமையாத தேவையான பொருட்கள் குறைவின்றி அளவாக திட்டமிடப்பட்டு நகர விரிவாக்கம் நடைபெறுகிறது. மக்கள் தொகைப் பெருக்கம் என்பது தற்போதைய நவீன மயமாகும் உலகத்தின் வளர்ச்சியின் குறுக்கே நிற்கும் மிகப்பெரிய தடையாக விளங்குகிறது. முக்கியமாக இந்தியா போன்ற நாடுகள் அனைத்து வளங்கள் இருந்தும், இன்றும் மேலைநாடு களோடு போட்டி போடமுடியாததற்கு காரணம் மக்கள் தொகைப் பெருக் கமேயாகும்.

தந்தை பெரியார் 1930ஆம் ஆண்டு-களில் மலேசியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழகம் திரும்பிய போது மக்கள் தொகைப் பெருக்கத் தினால் எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து குடும்பக் கட்டுப்பாட்டு திட்டம் ஒன்றை வலியுறுத்தினார். அப்போது மேலை நாடுகள் கூட மக்கள் தொகைப் பெருக்கத்தைப் பற்றிக் கவலைப்படா மல் உலகப்போரிலும், நாடுகளைப் பிடிக்கும் பேராசையிலும் திளைத் திருந்த காலகட்டமது. சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியாரின் சீர்திருத்த நட வடிக்கைகளைக் கேட்டு திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் இன்று மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார, சுகாதார, மற்றும் வசிப்பிட நெருக்கடி நமக்கு ஏற்பட்டிருக்காது.

தந்தை பெரியார் 1930-ஆம் ஆண்டுகளிலேயே மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை பட்டியலிட்டார் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை முன் மொழிந்தார்.

ஆனால் இன்றைய காலகட்டத் திலும் மதவாதிகள் நிறைய குழந்தை களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பொதுக்கூட்ட மேடைகளில் பேசி வருகின்றனர்.

அளவிற்கு மிஞ்சும் போது அது அமிழ்தானாலும் நஞ்சாக மாறிவிடும். இந்த முதுமொழி வேறு எந்த வகையில் ஒத்துப்போகிறதோ இல்லையோ இன்றைய காலகட்டத் தில் மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு பெரிதும் ஒத்துப் போகிறது. மக்கள் தொகைப் பெருக்கம் இடப்பற்றாக்குறை நகரவிரிவாக்கம் விளைநிலங்கள் அழிப்பு என தொடர் பாதிப்புகள் மக்கள் தொகை பெருக் கதால் ஏற்படுகின்றன. தற்போதைக்கு இப்பரந்த பெரு வெளியில் பூமி மட்டுமே நாம் உயிர் வாழ ஏற்ற ஒரே ஒரு இருப்பிடமாகும். இது நமக்கு மட்டும் சொந்தமானதல்ல என்பதை நினைவில் கொள்ளவும்.

- சரவணா ராஜேந்திரன்

Read more: http://viduthalai.in/page-2/83820.html#ixzz37AUoX3QQ

தமிழ் ஓவியா said...


சிதம்பரம் நடராசர் கோயிலில் தீட்சதர்களின் பகல் கொள்ளை


ஆசிரியருக்குக் கடிதம் >>>

சிதம்பரம் நடராசர் கோயிலில் தீட்சதர்களின் பகல் கொள்ளை

திராவிடர் கழகத்தின் விடுதலை 3.7.2014 தேதி இதழில் வெளிவந்துள்ள சிதம் பரம் தீட்சதர்களின் அடுத்த சுரண்டல் என்ற தலையங்கக் கட்டுரையை ஒவ்வொரு பெரியார் தொண்டரும் படித்து அதன் கருத்தை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

2008 ஆம் ஆண்டு வரை சிதம்பரம் கோவிலில் உண்டியல் என்பதே கிடையாது. அதுவரை ஆண்டு ஒன்றுக்கு வெறும் 30 ஆயிரம் ரூபாய் மட்டும்தான் வருமானம் என்று தீட்சதர்கள் கணக்கு காட்டி வந்தனர். ஆனால் திமுக ஆட்சியில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் அக்கோயில் வந்தவுடன் மூன்று ஆண்டுகளில் மட்டும் ஒன்றரை கோடி ரூபாய் உண்டியலில் சேர்ந்ததே! சுமார் 100 கிராம் தங்க நகைகளும் வந்ததுண்டே!

தீட்சதர்கள் எங்களுக்கே சிதம்பரம் கோயில் சொந்தம் என்று கூறும் இரகசியத் தின் பின்னணி இந்தப் பகற் கொள்ளைதான்

தீட்சதர்களின் இந்தப்பகல் கொள் ளையைக் கண்டிப்பதற்கு திராவிடர் கழகத்தைத் தவிர மற்ற அரசியல் கட்சிகள் முன்வரவில்லையே ஏன்? கோயில்கள் திருடர்களின் குகைகள் என்று யேசு கூறியது இன்றும் உண்மை யாகத்தானே இருக்கிறது?

சிதம்பரம் கோயிலுக்குப் பக்தர் ஒருவர் அளித்த மூன்றரை கோடி மதிப்புள்ள பவள மாலை கணக்கில் வராததால் இந்து அற நிலையத்துறை தீட்சதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சிதம்பரம் கோயிலுக்கு 2594 ஏக்கர் நஞ்செய் நிலமும், 895 ஏக்கர் புஞ்செய் நிலமும் என மொத்தம் 3489 ஏக்கர் நிலத்தில் இருந்து வரும் வருமானம் தீட்சதர்களால் அனுபவிக்கப்பட்டு வந்தது (முரசொலி 22.9.2009)

சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஏற்றுக்கொண்டது. இதை எதிர்த்து தீட்சதர்கள் டில்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். உச்ச நீதிமன்றம் தீட்சிதர் களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியது.

முல்லைப் பெரியாறு வழக்கில் டில்லி உச்ச நீதிமன்றம் அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து கேரள அரசு மறுசீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது. இதைப்போல் தமிழ்நாடு அரசு சிதம்பரம் கோயில் வழக்கில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு ஒன்றியத்திலும் உள்ள திராவிடர் கழகத் தலைவர்கள் 3.7.2014 தேதி விடுதலை தலையங்கத்தை ஆயிரக் கணக்கில் அச்சிட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.

இந்து அறநிலையத் துறையின் மேற் பார்வையில் இருக்கும் தமிழகக் கோயில் கள் மொத்தம் 38481 (விடுதலை 24.2.2014). இந்தக் கோயில்கள் அத்தனையும் தமிழர் களின் கடின உழைப்பால் உருவானவை. ஆனால் கருவறையில் அர்ச்சகர்களாக இருந்து ஆதிக்கம் செலுத்தி வருவதோ பார்ப்பனர்கள். அவர்கள் மந்திரம் ஓது வதோ வடமொழியில்!

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி யார் அவர்கள் சிதம்பரம் நடராசர் கோயிலை இந்து சமய அறநிலையத் துறையின் மேற்பார்வையில் கொண்டு வருவதற்கு தீவிர முயற்சியை மேற்கொள்ள பெரியரியார் தொண்டர்களின் சார்பாக வேண்டிக்கொள்கிறேன்.

- இர.செங்கல்வராயன், செய்யாறு

Read more: http://viduthalai.in/page-2/83821.html#ixzz37AUxPAVk

தமிழ் ஓவியா said...


நிதிநிலை அறிக்கை: எதிர்க்கட்சிகள் கருத்து


புதுடில்லி, ஜூலை 11_ மோடி தலைமையிலான அரசு நேற்று (10.7.2014) நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்தது. இது குறித்து எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு:

ப.சிதம்பரம்

மத்திய பட்ஜெட் குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ள கருத்து வருமாறு:-

நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட், முந்தைய அய்க்கிய முற்போக்குக் கூட் டணி அரசு கடைபிடித்த கொள்கைகளின் பிரதிபலிப்பு. இடைக்கால பட்ஜெட்டில் முந்தைய அரசு அறிவித்த அம்சங்களை அருண்ஜெட்லி ஆமோதித்திருக்கிறார். ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல திட்டங்கள் புதிய அறிவிப்புகளாக வெளிவந் துள்ளன.

வருமான வரி விலக்கு உச்சவரம்பை அதிகரித்திருப்ப தன்மூலம் ஆண்டுக்கு 22 ஆயிரம் கோடி ரூபாயை அரசு தியாகம் செய்திருக்கிறது. அதேசமயம் கூடுதல் உற்பத்தி வரி விதிப்புமூலம் 7 ஆயிரம் கோடி ரூபாயை ஈடுகட்டியிருக்கிறார்கள்.

பொருளாதார சீர்திருத்தங்களில் கடந்த ஆண்டு நம்பிக்கையிழந்த பாரதீய ஜனதா, இப்போது திடீரென தனது நிலையை மாற்றிக் கெண்டு அன்னிய நேரடி முதலீடுக்கான உச்சவரம்புகளை அதிகரித்திருக்கிறது. உற்பத்தித் துறைக்கான எந்தக் கொள்கை அறிக்கையும் பட்ஜெட்டில் இல்லை. உணவுப் பாதுகாப்பு சட்டம் பற்றிய குறிப்பும் இடம்பெறவில்லை.

_ இவ்வாறு சிதம்பரம் கூறியுள்ளார்.

மல்லிகார்ஜுன் கார்கே

மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறுகையில், ஏழை களுக்கு இந்த பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை. கார்ப்பரேட் மற்றும் தொழில் நிறுவனங் களுக்கு வரிச்சலுகை அறிவித் துள்ளனர்.

முந்தைய அரசு நிர்ணயித்த வரியை, தொடரப் போவதாக கூறும் அரசு, தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் நெருக்கடி காரண மாக வரிச்சலுகை அறிவித்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் போன்ற நலத்திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இடம் பெற வில்லை. பண வீக்கத்துடன் போராடும் சாதாரண மக்களுக்கு வரி விலக்கு உதவாது என்றார்.

நிதிஷ் குமார்

பிகார் முன்னாள் முதல்வரும், அய்க்கிய ஜனதா தள மூத்த தலைவருமான நிதிஷ் குமார் கூறுகையில், தேர்தல் பிரச்சாரத்தில் பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து, சிறப்பு சலுகை வழங்கப்படும் என பா.ஜ.வினர் வாக் குறுதி அளித்தார்கள். மக்களின் வாக் குகளை பெற்றபின் அனைத் தையும் மறந்து விட்டார்கள்.

பொருளாதார ஆய்வறிக் கையை பொருத்தவரை மொத்த உள்நாட்டு உற்பத்தி, மற்றும் வருமான வரி செலுத்துதல் ஆகியவற்றில் பிகார் சிறப்பாக செயலாற்றியுள்ளது. ஆனால், பிகார் மாநிலத் துக்கு எந்த சிறப்பு நிதியும் அளிக்கவில்லை. வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என தேர்தலின்போது அறிவித்தார்கள்.

அந்த வாக்குறு தியையும் நிறைவேற்றவில்லை. ராணுவம் மற்றும் காப் பீட்டுத் துறையில் அன்னிய முதலீட்டை அதிகரித்ததை தவிர இந்த பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை. என்றார்.

சரத்பவார்

தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் வேளாண்துறை அமைச்சரு மான சரத்பவார் கூறுகையில், அறிவிப்பு மழைகள், மயக்கும் சொற்கள், ஆனால் இறுதியில் வளர்ச்சி இயந்திரத்திற்குத் தேவையான எரிபொருள்தான் கொடுக்கப்படவில்லை.

இது கார்ப்பரேட் பட்ஜட். சிறப்பான எதுவும் இதில் இடம்பெறவில்லை. விலைவாசி உயர்வில் தத்தளிக்கும் சாதாரண மக்களுக்கு எதுவும் உதவாது. வருமான வரி விலக்கு வரம்பை ரூ 50 ஆயிரம் உயர்த்தியது பலன் அளிக்காது. மறைமுக வரிகளை உயர்த்தி இருப்பதால், எல்லா பொருள்களின் விலையும் மேலும் உயரும்.

மம்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், அன்னிய முதலீட்டாளர் களுக்காக, அன்னிய முதலீட் டாளர்களால் நடத்தப்படும் அன்னிய முதலீடு அரசு தாக்கல் செய்துள்ள பட் ஜெட்டில், தொலைநோக்குப் பார்வை இல்லை, குறிக்கோள் இல்லை, செயல்திறன் இல்லை. ஏழைகளின் வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட் உதவாது. சில்லரை விற்பனையில் ஏற்கெனவே அன்னிய முதலீடு உள்ளது.

தற்போது ராணுவம் மற்றும் காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீடு 49 விழுக்காடு அதிகரித் துள்ளது. மேலும் வங்கித் துறையில் தனியார்மயம் ஆகியவை பொதுமக்களை வெகுவாக பாதிக்கும். மேற்கு வங்கம் உட்பட பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்றார்.

Read more: http://viduthalai.in/page-8/83832.html#ixzz37AWTH6d8

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?


சங்கு

திருக்கழுக்குன்றத்தில் உள்ளது வேத கிரீஸ்வரர் கோயில் சங்கு தீர்த்தக் குளம்பற்றி பிரபலமாகப் பேசப்படும். மார்க்கண் டேய முனிவர் சிவனை நோக்கித் தவம் செய்த போது இந்தக் குளத்தில் சங்கு பிறந்ததாம். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு பிறந்து கொண்டுள்ளதாம். (தூய தண்ணீரில் சங்கு பிறக் காது என்பது அறிவியல்)

இந்தத் தீர்த்த குளம் இப்பொழுது சேறும் சகதி யுமாக உள்ளது. மார்க் கண்டேய முனிவர் தவம் இருந்தது - தெய்வ சக்தி நிறைந்தது எப்படி சகதி யாயிற்று? 12 ஆண்டுக் கொரு முறை சங்கு பிறக்கிறதா? கடைசியில் எப்பொழுது பிறந்தது? அந்த சங்கு இப்பொழுது எங்கு இருக்கிறது? அடுத்து எப்பொழுது பிறக்கும் விடை உண்டா?

Read more: http://viduthalai.in/e-paper/83921.html#ixzz37JM1bqe3

தமிழ் ஓவியா said...


கடவுளானாலும் சட்டம் ஒன்றுதான் நடைபாதைக் கோவில்களை அகற்றுக!கருநாடக உயர்நீதிமன்றம் பாராட்டத்தக்க தீர்ப்பு

பெங்களூர் ஜூலை 12-_ நடைபாதைக் கோயில் களை அகற்றலாம் கடவு ளானாலும் சட்டம் ஒன்று தான் என்று கருநாடக உயர்நீதிமன்றம் சிறப்பாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
நடைபாதைகளில் உள்ள ஆக்ரமிப்பு அகற் றுவதில், மனிதர்களானா லும் கடவுள்களானாலும் சட்டம் ஒன்றே என்று கருநாடக உயர்நீதிமன்றம் கருத்தறிவித்துள்ளது..


நடைபாதைகளில் உள்ள பகுதிகளில் உள்ள ஆக்ரமிப்புகளால், குழந்தை களும் மற்றவர்களும் சாலைகளில் நடக்க வேண்டியுள்ளது. அத னால் ஏற்படும் விபத்து களில் அவர்கள் இறக்கும் நிலைகளும் உண்டாகின் றன. நடைபாதைகளில் நிறுவப்பட்டுள்ள சிலை முக்கியமானதா? அல்லது சிறுவர்களின் உயிர் முக்கியானதா? என்று நீதிமன்றம் கேள்வி எழுப் பியுள்ளது. பெங்களூர் நகரில் உள்ள பெரும் பாலான நடைபாதை களை கோயில்களும் கடவுள் சிலைகளும் ஆக்ரமித்துள்ளதாக, பெங்களூர் பெருநகர மன்ற வழக்குரைஞர் நீதிமன்றத்தில் எடுத் துரைத்தபோது, தலைமை நீதியரசர் டி.எச். வகேலா, நீதியரசர் எச்.ஜி. ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 09.07.2014 அன்று மேற்கண்ட கருத்தைக் கூறியது.

உயர்நீதிமன்றம் ஏற் கெனவே அறிவுறுத்தி யதன் பேரில் பெங்களூரு மாநகரத்தில் உள்ள நடைபாதைகளின் நிலை குறித்த பெரு நகர மன்ற ஆணையர் நடத்திய கள ஆய்வின் அடிப்படையில் பகுதிவாரியாகப் பிரிக்கப் பட்டு அவற்றுள் எவை அகற்றப்படக் கூடியன; எவை அகற்ற இயலாதன என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக வழக்குரைஞர் கூறினார்.. கோயில்கள் போன்ற அகற்ற இயலாத ஆக்ர மிப்புகளை அகற்றுவதில் சிக்கல்கள் உள்ளதாக வழக்குரைஞர் கூறிய போது குறிக்கிட்ட நீதி யரசர்கள், அத்தகைய ஆக்ரமிப்புகளை அகற்று வதில் உங்களுக்குத் தடை யாக இருப்பது எது? நடை பாதைகளில் உள்ள ஆக்ர மிப்புகளை அகற்றுவதில் மனிதர்களானாலும் கட வுள்களானாலும் சட்டம் ஒன்றே. நடை பாதை களில் நிறுவப்பட் டுள்ள சிலைகள் முக்கியமான வையா? அல்லது சிறுவர் களின் உயிர் முக்கியான வையா? என்று கேட்டனர்.

நடைபாதைகளில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றிட உரிய அதிகாரி களுக்கு ஆணையிட வேண் டுமென்று ஜெனிபர் பிண்டோ, பிரியா ராவ் ஆகி யோர், கடந்த ஆண்டு தொடுத்த பொது நல வழக்கின் விசாரணையின் போது கருநாடக உயர்நீதி மன்ற நீதியரசர்கள் தெரி வித்த பொருள் பொதிந்த அறிவு நாணயம் மிக்க கருத் துரைகள் பெங்களூருக்கு மட்டுமன்று; இந்தியா வுக்கே பொருந்துவதாகும்.

Read more: http://viduthalai.in/e-paper/83907.html#ixzz37JMESYuK

தமிழ் ஓவியா said...


கருநாடக நீதிமன்றத்தில் நியாயத் தீர்ப்பு

கருநாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எச். வகேலா, எச்.ஜி. ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு ஓர் அருமையான தீர்ப்பினை வழங்கியுள்ளது.

நடைபாதைகளில் ஆக்கிரமித்துள்ள கோவில்களை அகற்றிட வேண்டும் என்று ஜெனிபர் பிண்டோ, பிரியாராவ் ஆகியோர் கடந்தஆண்டு கருநாடக உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கொன்றை தாக்கல் செய்தனர்.

நடைபாதைப் பகுதிகளில் உள்ள கோவில் ஆக்கிரமிப்புகளால் குழந்தைகளும், பெரியோர்களும், பொது மக்களும் சாலை விபத்துகளுக்கு ஆளாகி வருகிறார்கள்.

உயர்நீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தியதன் அடிப்படையில் பெங்களூரு மாநகரத்தில் நடைபாதைக் கோவில்கள் பகுதி வாரியாகப் பிரிக்கப்பட்டு அவற்றில் எவை அகற்றப்படக் கூடியவை? எவை அகற்ற இயலாதவை? என்று ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அரசு வழக்குரைஞர் கூறியபோது நீதிபதிகள் குறுக்கிட்டு, அத்தகைய ஆக்கிரமிப்புகளை அகற்று வதில் உங்களுக்குத் தடையாக இருப்பது எது? நடைபாதைகளில் உள்ள கோவில்கள் முக்கியமா? அல்லது சிறுவர்களின் உயிர்கள் முக்கியமா? நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பிரச் சினையினை மனிதர்களானாலும், கோவில்கள் ஆனாலும் சட்டம் ஒன்றே இதில் விதி விலக்குக் கிடையாது - என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாக கறாராகக் கருத்து கூறினார்கள்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இது ஒன்றும் புதுத் தீர்ப்போ, ஆணையோ அல்ல. உச்சநீதி மன்றமே இதைவிட அழுத்தமாக தீர்ப்புக் கூறியுள்ளது.

பொது இடங்களில் அரசுக்குச் சொந்தமான இடங் களில் ஏராளமான கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றைக் காலி செய்வதில் தன் இயலாமையை பல நேரங்களில் அரசுகள் காட்டி வருகின்றன. இந்தக் கோவில்களில் எவ்விதப் புனிதமும் கிடையாது. பொதுப் பயன்பாட்டுக்கும் போக்குவரத்துக் கும் இடையூறாக உள்ள கோவில்களை அகற்றும்போது பிரச்சினைகள் உருவாகும் நிலை உண்டு என்றாலும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான வழிமுறைகளை அரசுதான் நிர்ணயிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, எம்.கே. சர்மா ஆகியோர் உத்தரவு பிறப்பித்தனர். இந்தத் தீர்ப்பு வெளி வந்தது. 2006இல்.

அதன் தொடர்ச்சியாக 2010 செப்டம்பரில் இதே உச்சநீதிமன்றம் மிகக் கடுமையாக எச்சரித்தது. பொது இடங்களில் கட்டப்பட்டுள்ள வழிபாட்டு இடங்களை அகற்றாமல் இருக்கும் மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் உச்சநீதிமன்றத்திற்கு நேரில் வந்து பதில் சொல்ல வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர் (14.9.2010).

தமிழ்நாட்டில்தான் அனுமதியற்ற கோயில்கள் அதிக எண்ணிக்கையில் நடைபாதைகளில் கட்டப்பட் டுள்ளன. அதன் எண்ணிக்கை 77,450. ராஜஸ்தானில் 58,253, குஜராத்தில் 15,000 என்ற எண்ணிக்கையில் உள்ளன. அதே நேரத்தில் அருணாசலப் பிரதேசத்தில் அனுமதியின்றிக் கட்டப்பட்ட ஒரு கோவில் கூடக் கிடையாது என்று அம்மாநில அரசு வழக்குரைஞர் குறிப்பிட்டதை நீதிபதிகள் நாகரிகமான மாநிலம் என்ற வார்த்தைகளைக் கூடப் பயன்படுத்தினர்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? அனுமதியின்றியும், பொது மக்களுக்கு இடையூறாக கோயில்களைக் கட்டுவது அநாகரீகம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொல்லுவதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி தீர்ப்புக் கூறியிருப்பது தந்தை பெரியார் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு செயல்படுகிற திராவிடர் கழகத் தலைவரோ அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களோ அல்லர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்பதை மறந்து விடக் கூடாது.

சட்டத்தின் முன் அனைவரும் அனைத்தும் சமம் என்பதை அரசுகள் உணருமா? ஊடகங்களும் இந்த வகையில் வலியுறுத்துமா?

காலந் தாழ்ந்தாலும் மாநில அரசுகள், உள்ளாட்சித் துறைகள் செயல்படுத்துமா? எங்கே பார்ப்போம்!

யாருக்காவது கோவில்களை இடிப்பதில் தயக்கம் அச்சம் இருக்குமானால், அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கழகம் தயாரே! கலைஞர் சிலை திறப்பு விழாவின் போது கழகத் தலைவர் அன்னை மணியம் மையார் சொன்னதுதான் இது. (21.9.1975).

Read more: http://viduthalai.in/page-2/83923.html#ixzz37JMSrO9U

தமிழ் ஓவியா said...


தலையெழுத்தாம்


ஒருத்தரைப் போய் ஏண்டா உன் பையன் படிக்கவில்லை என்றால், அவன் தலையெழுத்து அவ்வளவு தான்; நமக்கெல்லாம் ஏதுங்க படிப்பு; அதெல்லாம் பார்ப்பானுக்குத்தான் என்பான்.
(குடிஅரசு, 6.7.1968)

Read more: http://viduthalai.in/page-2/83922.html#ixzz37JMb0hWG

தமிழ் ஓவியா said...


புரட்டு


பாமர மக்களை ஏமாற்றி, படித்த மக்கள் பல புரட்டுகள் செய்வதுண்டு. அவ்வக் காலங்களில் மக்கள் மனதைப் பற்றி நிற்கும் வார்த்தைகளை வாயால் சொல்லி மக்கள் நன்மதிப்பைப் பெற முயல்வது வழக்கமாகி விட்டது.

கதர் எப்படியிருக்குமென்று அறியாதவர்களும் பல கூட்டங்களில் கதர் உடுத்த வேண்டுமென்று சொல் வதுண்டு. நாட்டில் செய்யப்படும் வதுக்களில் ஒன்றையேனும் பார்த்தறியாதவர்கள் சுதேசியத்தைப் பற்றி வானளாவப் பேசுவதுண்டு.

அவ்வாறாகவே பஞ்சமர்கள் என்போர் யார்? அவர்கள் துயரென்ன? அவற்றைப் போக்கும் வழியென்னவென்று ஒரு நாளேனும் சிந்தித்துப் பார்த்து ஒரு சிறிய காரியத்தையேனும் அவர்களுக்காகச் செய்தறியாத தலைவர்களும், கூட்டங்களும் தீண்டாமை விலக்குத் தீர்மானத்தை நிறைவேற்றி வருகின்றன.

இத்தகைய புரட்டுத் தீர்மானமொன்று கடந்த வாரம் திருப்பூரில் நடைபெற்ற அரசியல் மகாநாட்டில் நிறை வேற்றப்பட்டிருக்கிறது. இத்தீர்மானப் புரட்டை ஆண்மையோடு எதிர்த்த வீரர் திரு. அய்யாமுத்து அவர்களை நாம் மனமாரப் போற்று கிறோம்.

தீர்மானத்தைச் சபையின்முன் வற்புறுத்திய தலைவர் திரு. ராஜன், அரசியல் சுதந்திரம் பெற்ற பின்னர் தீண்டாமை ஒரே நொடியில் பறந்துவிடும் என்ற புரட்டுச்சொல்லை வழக்கம் போலச் சொல்லிவிட்டார்.

மானமிழந்து, உரிமையிழந்து, அடிமை வாழ்வு பெற்று நிற்கும் காலத்தில் தோன்றாத சுயமரியாதை உணர்ச்சியும், காரியத்தில் பற்றும், ஊக்கமும், அரசியல் சுதந்திரம் பெற்று அரசாங்க மாளிகையில் (வர்ணாசிரமிகள்) வீற்றிருக்கும் போது ஏற்படுமா? என்ற உண்மையை நண்பர்கள் ஆராய வேண்டுகிறோம்.

கஷ்டமுற்ற காலத்தில் கடவுளை நினையாத மக்கள் சுகப்படும் காலத்தில் நினைப்பதில்லை என்பதுபோல அந்நிய ஆதிக்கத்தால் நசுக்குண்டு கிடக்கும் காலத்திலே ஜாதி சமய வேற்றுமை களைந்து ஒற்றுமையடைய மனதில்லாத மக்களா சுயராஜ்யப் போரை நடத்தப் போகிறார்கள்?

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 11. 05.1930

Read more: http://viduthalai.in/page-7/83875.html#ixzz37JNBvGjt

தமிழ் ஓவியா said...


சிவகாமி - சிதம்பரனார் புனர் (மறு) விவாகம்

இத்திருமணமானது மணமக்கள் மனமொத்து, மெய்க்காதல் கொண்டு, தாங்களாகவே தைரியமாய் முன்வந்து சீர்திருத்த முறையில் ஆண் பெண் இருவரும் சம உரிமையோடு வாழ்க்கையை நடத்து வதற்கேற்றதோர் சுயமரியாதைத் திருமணமாகும். இதைப் பலர் அதிசயமாக நினைக்கலாம். இதில் ஒன்றும் அதிசயமில்லை.

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து செய்து கொள்ளும் திருமணம்தான் இது, ஆனால் நம் நாட்டில் வெகுகாலமாக வேரூன்றிக் கிடக்கும் அர்த்தமற்ற சடங்குகள் இல்லாமலும், பெண்ணை ஆண் அடிமையாக்குவதற்கு அறிகுறியாகிய தாலிகட்டுதல் என்னும் சடங்கு இல்லாமலும் சீர்திருத்த உலகத்துக்கேற்ற முறையில் இத்திருமணம் நடந்திருக்கிறது.

பெண்கள் விடுதலையடைந்து ஆண்களோடு சம சுதந்திரத்துடன் வாழ வேண்டும் என்ற அடிப்படை யான கொள்கையுடைய சுயமரி யாதை இயக்கம் தோன்றி, இன் றைக்கு 4, 5 வருஷங்களே யாயினும் இதுவரை இம்மாதிரி பல சுயமரி யாதைத் திருமணங்கள் நடந்தேறி யிருப்பது உங்களுக்குத் தெரியும். இம்மாதிரி புதுமுறைத் திருமணத்தில் கர்னாடகப் பிடுங்கல்களால் பலவித இடைஞ்சல்கள் ஏற்படுவது சகஜமே. அதைப் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் தைரியமாய் முன் வர வேண்டும்.

இத்திருமணத்தில் தாலி கட்டுதல் என்னும் சடங்கு நீக்கப்பட்டி ருக்கிறது. கலியாண காலத்தில் பெண்ணுக்கு மாப்பிள்ளை தாலி என்னும் ஒரு கயிற்றைக் கழுத்தில் கட்டித் தனக்கு அடிமை என்று நினைத்து கேவலமாக நடத்தி வருவதானது எருமை மாடுகளை விலைக்கு வாங்கி அதன் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி இழுத்து வந்து நடத்துவது போலவேதானாகும்.

பெண்களுக்குக் கழுத்தில் தாலி கட்டுவதின் கருத்து கலியாணம் ஆனது, ஆகாதது என்ற அடையாளத்தைக் காட்டுவதற்கும் இன்னான் பெண்டாட்டி என்ற உரிமையை நிலை நாட்டுவதற்கும், பிறத்தியான் அப்பெண்ணைக் காதலிக்காதிருப்ப தற்குமென்றே கருதப்பட்டு வருகிறது.

அப்படியானால் ஆண்களில் கலியாணம் ஆனவன் ஆகாதவன் என்பதற்கும், இன்னாளுடைய புருஷன் என்பதற்கும், பிற மாதர் காதலிக்காதிருக்கும் பொருட்டு அடையாளம் வேண்டியதவசியமல்லவா?

அதற்காக கல்யாண காலத்தில் ஆண்கள் கழுத்திலும் ஒரு தாலிக் கயிறு கட்டவேண்டும். அப்படியல்லாமல் பெண்களை மட்டும் ஏமாற்றிக் கழுத்தில் தாலிக் கயிற்றைக் கட்டி அடிமைப்படுத்தி வருவது கண்டித்து ஒழிக்கத் தகுந்த தோர் சடங்காகும் என்பதில் கடுகளவும் சந்தேக மில்லை. அதோடு மனைவியிழந்த புருஷன் மறுமணம் செய்து கொள் ளலாம்.

கணவனையிழந்த கன்னிகை, தான் ஆயுள் மட்டும் தன் காலத்தை விதவை என்ற கட்டுப் பாட்டில் கழிக்கவேண்டும் என்ற மூடப்பழக்கம் ஒழிந்து நமது மணமகள் செல்வி சிவகாமிபோல தைரியமாய் முன்வர வேண்டும். இதற்குத் தோன்றும் இடையூறும் எதிர்ப்பும் அர்த்தமற்ற அநாகரிக மான செய்கை யென்றுதான் சொல்ல வேண்டும்.

அத்தகைய எதிர்ப் பையும், இடைஞ்சலையும், மூடக் கட்டுப் பாடுகளையும் உதறித்தள்ளி தம் பகுத்தறிவை உபயோகித்து அர்த்தத்தோடுகூடிய செய்கைகளையும், நடவடிக்கை களையும் நமது வாழ்வின் லட்சியமாகக் கொள்வதே மக்களின் சுயமரியாதைக் கடையாளமாகுமென்பதை உங்களுக்குக் கூறி மணமக்களை மனமார வாழ்த்துகிறேன்.

(05-05-1930 தேதி திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு கும்பகோணம் பிரபல மிராஸ்தாரும், முனிசிபல் கவுன்சிலரும் ஆனரிமேஜிஸ்திரேட்டுமாகிய உயர்திரு. குப்புசாமி பிள்ளை அவர்கள் செல்வி திருமதி சிவகாமி அம்மைக்கும் தமிழ் பண்டிதர் சாமி. சிதம்பரனார் அவர்கட்கும் ஈரோடு திரு.ஈ.வெ.ரா. அவர்கள் தோட்டத்தில் 2ஆவது சுயமரியாதை மகாநாட்டுக்கென அமைந்திருந்த சிங்காரக் கொட்டகையில், திருமதி ஈ.வெ.ரா. நாகம்மையார் அவர்கள் நடத்திவைத்த (தாலி கட்டுதல் ஒழிந்த) திருமணத்தில் பேசியது ).

- குடிஅரசு - சொற்பொழிவு - 11.05.1930

Read more: http://viduthalai.in/page-7/83877.html#ixzz37JNPVS6m

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

எப்போது உங்கள் மனச் சாட்சியும், பகுத்தறிவும் இடங் கொடுத்து, நீங்கள் கழகத்தில் அங்கத்தினர்களாகச் சேர்ந்து விட்டீர்களோ அப்போதிலிருந்து உங்கள் பகுத்தறிவையும், மனச் சாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு கழகக் கோட்பாடு களைக் கண்மூடிப் பின்பற்றி நடக்க வேண்டியது தான் முறை.

Read more: http://viduthalai.in/page-7/83877.html#ixzz37JNfggpu

தமிழ் ஓவியா said...


தேவஸ்தான போர்டும் துணிகர மந்திரியும்


தேவஸ்தான போர்டு நிருவாக கமிசனர்கள் நியமனமும், சர்க்கிள்கமிட்டி அங்கத்தினர் நியமனமும் ஒருவாறு முடிவு பெற்றது. இந்த நியமனங்களைப் பொறுத்த மட்டில் ஏற்பட்ட விசேஷம் என்னவென்றால் தேவதான போர்டு தலை வர்கள் அய்ந்து பேரும் பார்ப்பனரல்லாதவர்களாக நியமிக் கப்பட்டிருக்கின்றனர்.

அதோடு நீலகிரி ஜில்லா தேவதான கமிட்டிக்கு ஒரு ஆதிதிராவிட கனவானும் அங்கத்தினராக நியமிக்கப் பட்டிருக்கின்றனர். இந்த நியமனங்கள் உறுதியாகி சர்க்கார் கெஜட்டிலும் பிரசுரமாகிவிட்டது.

தேவதானம் என்னும் பதம் பார்ப்பனருக்கும் அவரைச் சுற்றி திரியும் சில ஆதிக்க கூலிகளுக்குமே உரியது. மற்றயோர் குறிப்பாக ஆதிதிராவிடர் போன்ற தாழ்த்தப்பட்ட மக்கள் அப்பதத்தை நினைக்கவும் உச்சரிக்கக் கூடாதென்ற கட்டுப்பாட்டைக்கொண்டு இருந்த காலத்தையும் ஒரு கூட்டத்தாரின் மனப் பான்மையும் விரட்டி அடித்து அவ்வித சுயநல துர் எண்ண ஆதிக்கத் திற்குச் சாவு மணி அடித்து மக்களில் உயர்வு தாழ்வு பேதம் ஒழிய வேண்டும் என்னும் சுயமரியாதைக்கு வழி காட்டி யாக முன்வந்து மேற்படி நியமனங்களைத் துணிகரமாக செய் துள்ள மந்திரி கனம் டாக்டர் சுப்பராயன் அவர்களுடைய தைரியத்தையும் நிருவாகத்தையும் சுயமரியாதை உலகம் பாராட்டற்பாலது.

தொட்டதற்கெல்லாம் தன் இஷ்டப்படி கைத்தூக்க இரட்டை மெஜாரிட்டி வைத்திருந்த ஜஸ்டிஸ் மந்திரிகள் காலத்திலும் செய்வதற்குப் பயப்படும்படியான காரியங்கள் இந்தக் காலத்தில் வெகுதாராளமாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.

- குடிஅரசு - கட்டுரை - 25.05.1930

Read more: http://viduthalai.in/page-7/83878.html#ixzz37JNocWXt

தமிழ் ஓவியா said...

கடவுள் ஒருவர் உண்டு, அவர் உலகத்தையும் அதிலுள்ள வஸ்த்துக்களையும் உண்டாக்கி அவற்றின் நடவடிக்கைகளுக்கெல்லாம் காரண மாயிருந்து நடத்துகிறார் என்று சொல்லிக்கொண்டு ஒவ்வொரு காரியத்தையும்தான் இச்சையால், புத்தியால் செய்துகொண்டு தனக்கு இஷ்டமில்லாத காரியங்களில் பிறரைத் தூஷித்துக்கொண்டு திரிபவன் அயோக்கியன்.

Read more: http://viduthalai.in/page-7/83878.html#ixzz37JNwVKdM

தமிழ் ஓவியா said...


கணிதவியலில் புதிய கண்டுபிடிப்பு: இந்திய அறிஞருக்கு பரிசு


கணிதவிய லில் 50 ஆண்டு களுக்கும் மேலாக தீர்க்க முடியாமல் இருந்த சிக்க லான கோட் பாட்டுக்கு இந் தியாவைச் சேர்ந்த நிகில் சிறீவாஸ்தவா, அமெரிக் காவைச் சேர்ந்த ஆடம் மார்க்கஸ், டேனி யல் ஸ்பீல்மேன் ஆகியோர் தீர்வு கண்டு பிடித்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்புக்காக, இவர்கள் மூவருக்கும் அமெரிக்காவில் உள்ள கணித வியல் மற்றும் தொழில்துறையியல் கூட்ட மைப்பு சார்பில் ஜார்ஜ் போல்யா-2014 என்ற பரிசு வழங்கப்பட்டுள்ளது.

வாஷிங்டனில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில், நிகில் சிறீவாஸ் தவா உள்ளிட்ட மூவரும் அந்தப் பரிசினை பெற்றுக் கொண்டனர்.

பெங்களூருவில் உள்ள மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவில் பணியாற்றி வரும் நிகில் சிறீவாஸ்தவா, அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழகத்தில் பி.எச்டி பட்டம் பெற்றவர்.

குவாண்டம் மெக்கானிக்ஸ் உடன் தொடர்புடைய கணிதவியல் கோட்பாடு களுக்கு, கணிதவியல் நிபுணர்களான காடிசன், சிங்கர் ஆகிய இருவரும், 1959 ஆம் ஆண்டு ஒரு கோட்பாட்டை வெளி யிட்டனர். ஆனால், அந்தக் கோட்பாடு நிரூபிக்கப்படவில்லை.

இந்நிலையில், அதற்கு நிகில் சிறீவாஸ் தவா உள்ளிட்ட மூவரும் நிரூபணம் கண்டுபிடித்துள்ளனர்.

ஹங்கேரியாவைச் சேர்ந்த கணித மேதை ஜார்ஜ் போல்யாவின் நினைவாக, அவரது பெயரில், அமெரிக்காவில் உள்ள கணிதவியல் மற்றும் தொழில்துறையியல் கூட்டமைப்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தப் பரிசை வழங்கி வருகிறது.

Read more: http://viduthalai.in/page-8/83883.html#ixzz37JOH9xoF

தமிழ் ஓவியா said...


உறவினரும் கொள்கையும்!


தந்தை பெரியார் அவர்களின் தொண் டர்களாகிய நமக்குப் பல நேரங்களில் எதிரிகளை விட உற்றார் உறவினரே பெரும் இடர்ப்பாடு தருகின்றனர். இது தந்தை பெரியாருக்கே நிகழ்ந்தது தான் நமக்கெல்லாம் சிரிப்பு மூட்டும்.

ஈரோட்டிலே முனிசிபல் தலைவராக இருந்து ஆச்சாரியார் அவர்களே உமது சுகாதார அதிகாரியைச் சேலத்திற்குக் கொஞ்ச நாள் கடன் தரவும் என்று வேண்டிய அளவு நன்மைகள் செய்தவர். குடிநீர் வசதிக்காகத் தண்ணீர்த் தொட்டி கட்டி, குழாய்களில் தண்ணீர் வரும்படிச் செய்தவர்.அதில் தீட்டு கழுவித் தண்ணீர் பிடிக்கும் நிகழ்ச்சியை நாம் பெரியார் படத்தில் பார்த்தோம்.

கடைசிவரை தந்தை பெரியார் அவர்களின் தாயார் அந்தக் குழாய் நீரைப் பயன் படுத்தாமல் ஆற்றிலிருந்து நீர் பிடித்து வந்துதான் பயன்படுத் தினார்களாம்.அய்யாவும் கடைசியில் ஏன் என்று பிடிவாதமாகக் கேட்க, அம்மா அந்தத் தண்ணீர் சுத்தமில்லாதது என்றாராம்.

ஒன்றும் புரியாத பெரியார் எப்படிச் சுத்தமில்லை என்று கேட்ட தற்கு அம்மா அளித்த பதில் நம் ஒவ் வொருவருக்கும் கன்னத்தில் கொடுக்கும் அறை போன்று அந்தக் காலத்தை நினை வூட்டும்.

" குழாய் தண்ணீரெல்லாம் சரி தான். ஆனால் அந்தப் பம்பு சுவிட்ச்சைப் போடும் ஆள் கீழ்ச்சாதிக்காரர்" என்றா ராம்.

இன்று நமது உற்றார், உறவினர் செய்கைகள் பல நமக்குச் சங்கடத்தைத் தருவது நம்மில் பலருக்கு வெட்கமும், வேதனையும் தரக்கூடியது என்றாலும் நாம் தலைவர் பெரியாரைப் போலவே பொறுமையாக நடந்து கொள்ள வேண்டுமே தவிர கோபமோ,முரட்டு வார்த்தைகள் வரும் படியோ வைத்துக் கொள்ள வேண்டியதில்லை.

தந்தை பெரியார் அவர்கள் சொன்ன படி "அவர்கள் சுபாவம் அது" என்று அவர் களுக்குத் துணிவில்லை, அறிந்தது அவ் வளவு தான் என்று எடுத்துக் கொண்டு அன்பு காண்பிக்க வேண்டுமே தவிர ஒதுங்கக் கூடாது. வெறும் வாய்க்கு அவல் கிடைத்த எதிரிகளின் வார்த்தைகளைப் பற்றிக் கவலை படக் கூடாது.

எனது மகள் ஆசிரியர் அவர்கள் தலைமையில் அமெரிக்காவில் கலப்புத் திருமணம் செய்து கொண்டு, திருச்சியில் வரவேற்பு வைத்திருந்தோம். அதை விரும் பாத எனது மாமியார் வரவில்லை. அவர்களைப் பார்க்கச் சென்ற மணமக்களைப் பார்க்கவும் இல்லை. இது வளர்ந்து எனக்கும் அவர்களுக்கும் பல ஆண்டுகளாகப் பேச்சு வார்த்தையே இல்லை. ஆசிரியர் அய்யா கூட நீங்கள் சென்று பார்க்க வேண்டும் என்று வற்புறுத்திச் சொல்லியும் நான் போக வில்லை. எப்படி ஆசிரியர் அவர்கள் கொள்கைக்காக தனது மாமனாருக்குக் கொள்ளி வைக்க மாட்டேன் என்று மாமியார் கொள்ளி வைக்காவிட்டால் அவ்வளவு சொத்துக்களையும் கிருத்துவ மிசனரிக்கு எழுதிக் கொடுத்து விடுவேன் என்று மிரட்டியும், தந்தை பெரியார் அவர்களும் " நெருப்புத் தானே, வைத்து விடு, அவ்வளவு சொத்துக்களும் போகப்போகின்றதே என்று சொல்லியும், வைக்க மறுத்துக் கடைசிவரை அவ ருடன் பேசாமலே இருந்தாரே அது மாதிரி நம்மில் பலருக்கு நேர்ந்துள்ளது.


தமிழ் ஓவியா said...

எனது மாமியார் கடும் உழைப்பாளி. நல்ல அறிவாளி. அத்தனை குழந்தை களையும் நன்றாகப் படிக்க வைத்து அனைத்தும் செய்தவர்.இரண்டு பெண் களையும் மருத்துவர்களாக்கி மகிழ்ந்தவர் எனது மாமனார் தனது பிள்ளைகளை விடத் தனது உடன் பிறப்புக்களுக்குத் தான் எல்லாம் செய்கின்றார், என்ற நமது அனைவர்க்கும் பழக்கப்பட்ட தொடர்கதை வசனந்தான். அதுவே என் துணைவியாரும், அவரது தங்கையும் இரண்டு குடும்பங்களும் நம் குடும்பங்கள் தான் என்று மனமாரச் செய்ய வழி செய்து விட்டது.

எனது அம்மா அமெரிக்காவில் பலகாலம் வாழ்ந்தாலும் கடைசியில் ஊருக்குத் தான் செல்ல வேண்டும் என் றார். ஏன் என்றால் இங்கே அமெரிக் காவிலே என்னைப் பெட்டியிலே போட்டு அனுப்பி விடுவாய். எனக்கு உற்றார், உறவினர் அனைவரும் வந்து கொட்டி, முழக்கித்தான் செல்ல வேண் டும் ,என்றார்கள். நான் அதெல்லாம் பார்க்க முடியாதே, காதிலேயும் விழாதே என்றேன். அதெல்லாம் எனக்குத் தெரியும், விழும் என்று சொல்லி, ஏன் மானமிகு ஆசிரியரின் இரங்கலுரை யையும் கேட்டுத் தான் சென்றார்கள். அவர்கள் கடைசியாக ஊருக்குப் போகப் போகின்றார்கள் என்பதால் உறவினர், நண்பர்கள் (அம்மாவுக்கு அமெரிக்கா வில் நிறைய நண்பர்கள் )அனைவரையும் வரச் சொல்லி பிரிவு விழா நடத்தினோம். அதில் பேரக் குழந்தைகளும், நண்பர் களும் ,ஒவ்வொருவரும் அப்பா, அம்மா விற்கு அவர்களைப் பற்றிச் சொன்னது அனைவரையும் அழ வைத்து விட்டது. இதை நான் பலரிடம் சொவதுண்டு. வய தானவர்கட்கு அவர்கள் இருக்கும் போதே விழாக்கள் நடத்த வேண்டும், சென்ற பின் சொல்வது அவர்களுக்குக் கேட்காது என்று.

ஒரு வழியாகச் சென்ற முறை ஊருக்கு வந்த பொழுது என் துணைவி யாரின் பெரு முயற்சியாலும், மாமியாருக் கும் கடைசிகால அச்சம் வந்ததாலும் மாமியார் எங்கள் வீட்டிற்கு வந்து எனது அப்பா அம்மா படங்களுக்கு வருத்தமும், வாழ்த்தும் தெரிவிக்க உறவு மீண்டது. நிற்க முடியாமல், திருவெறும் பூர் பெரியார் மணியம்மை செவிலியர் பயிற்சி மாணவியர் உதவியுடன் நின்று அவரது கையாலேயே செய்த அற்புத மீன் குழம்பைச் சாப்பிட்டு வந்தேன். அவரது குழந்தைகள், பேரக்குழந்தைகள் அனை வரும் சென்று பார்த்து விடை பெற்றும் வந்தனர். அவர் விருப்பப் படியே எளிமையாக அவர் இறுதி நிகழ்வுகளும், படத்திறப்பும் நடந்தது. நமக்குப் பிடிக்காத மந்திரங்கள் நிகழ்வுகளும் அவர் விருப்பப் படி நடந்தது.

அடுத்து நமக்கெல்லாம் பெரிய இடர் ப்பாடு நமது குழந்தைகள், நெருங்கிய உறவினர்கள் இல்லத் திருமணங்கள். இதிலேயும் நாம் எவ்வளவு தான் மந்திரங்களின் பொருளை விளக்கிச் சொல்லி வெட்கப் பட்டாலும், இன்றும் பலர் அர்த்தமற்ற மத வழித் திருமணங் கள் நடத்துகின்றனர். அதில் நாம் பெண்ணின் பெற்றோர்கள் என்றால் கட்டாயம் மணமகன் இல்லத்தார்க்கு விட்டுக் கொடுக்க வேண்டியுள்ளது. நான் சென்னையில் தங்கும் போது வசதிக்காக நியூ உட்லண்ட்சு விடுதியில் தங்குவேன்.அங்கு பார்க்க வந்த பழம்பெரும் பெரியார் பெருந்தொண்டர் அய்யா வேல் சோமசுந்தரம் அவர்கள் பார்ப்பன விடுதி என்று காபி குடிக்க மறுத்து விட்டார். அவருக்கே அவரது பெயர்த்தியின் மணவிழா நடந்தது பெரும் இடர்ப்பாடாகி விட்டது. விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை. இது நம்மில் பலருக்கு நிகழும் போது எதிரி களின் பேச்சுக்கள் பற்றிக் கவலையில்லை என்றாலும், நமது கொள்கையை நமது குழந்தைகள், பேரக்குழந்தைகளுக்கே செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் மகிழ்வைக் குறைத்து விடுகின்றது.

இதையெல்லாம் மானமிகு ஆசிரியர் அவர்கள் நமது கொள்கைக் குடும்பத் தினர்க்கே, எனக்கும் சேர்த்துத் தான் ,அறிவுரைகள், ஆறுதல்கள் வழங்கி அய்யா வழியில் "அவர்கள் சுபாவம்" ஆனால் எதிர் காலம் நமது தான் என்ற உறுதியைச் சொல்வார்கள். காலம் மாறித்தான் வருகின்றது. நாம் நமது கொள்கையைக் கடைப்பிடிப்போம், உற்றாரும் ,உறவுகளும் திருந்தும் காலம் வரும். அது வரை பொறுமை காப்போம், அவர்களிடம் அன்பு செலுத்துவோம், கோபம் தவிர்ப்போம்.

வாழ்க பெரியார். வளர்க பகுத்தறிவு.

- சோம.இளங்கோவன் (அமெரிக்கா)

Read more: http://viduthalai.in/page2/83871.html#ixzz37JOTrt85

தமிழ் ஓவியா said...


மதுரை வைத்திய நாதய்யரும் கோயில் நுழைவும் உண்மை வரலாறு என்ன?


- கி.தளபதிராஜ்

தினத்தந்தி நாளிதழ் மதுரை வைத் தியநாத அய்யரைப்பற்றிய கட்டுரை யொன்றை 8.7.14 அன்று வெளியிட்டி ருக்கிறது. மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை யும் நாடார்களையும் அழைத்துக்கொண்டு 75 ஆண்டுகளுக்கு முன்பே முதன்முறை யாக 8.7.1939இலேயே ஆலயப்பிரவேசம் செய்தவர் வைத்தியநாத அய்யர் என்று அக்கட்டுரை அவருக்குப் புகழாரம் சூட்டு கிறது.

யார் இந்த வைத்தியநாத அய்யர்? 1923ல் மதுரை மார்க்கெட் சதுக்கத்தில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார் தந்தை பெரியார். அந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தவர் உள்ளூர் ஆசாமி வைத்தியநாத அய்யர். "மாலை 6 மணிக்கு காங்கிரஸ் கமிட் டியின் ஆதரவில் வக்கீல் சீமான் வைத் தியநாதஅய்யர் அக்கிராசனத்தின் கீழ் மார்க்கெட் சதுக்கத்தில் ஒரு மாநாடு கூடிற்று.அக்கூட்டத்தில் சீமான் ஈ.வி.ராமசாமி நாயக்கர் அவர்கள் ஆலயச் சுதந்திரம் எனும் விஷயத்தைப்பற்றி பேசிய முக்கிய சாராம்சம்" எனக் குறிப் பிட்டு "நாடார்குல மித்திரன்" பத்திரிக்கை 11.8.1923இல் தந்தை பெரியார் அவர்க ளுடைய உரையை வெளியிட்டிருந்தது.

"நாடார் சகோதரர்களை உண்மை யான காரணமின்றி ஆலயத்திற்குள் பிரவேசிக்கத்தடுப்பதானது முட்டாள்தன மான காரியம். மதுரைக் கோவிலானது கிழக்கேயிருந்து மேற்கே செல்லவும், மேற்கேயிருந்து கிழக்கே வரவும் ஒரு பாதையாக உபயோகிக்கப்பட்டு வருகிறது. அம்மாதிரி செல்வதில் இதர மதத்தினர் செல்லவும் நாம் சம்மதப்படுகிறோம் இதர மதத்தினருடன் இவ்வளவுதூரம் சமத்துவம் கொண்டாடும் நாம் நமது நாடார் சகோதரருடன் சமத்துவம் கொண்டாட வெறுப்படைவது எவ் வளவு தூரம் பைத்தியக்காரத்தனமும், அயோக்கியத்தனமும் முட்டாள்தனமும் பொருந்திய தென்பதை யோசித்துப் பாருங்கள். நாடார் சகோதரர்களின் பாதம் பட்ட தும் சுவாமி மறைந்துவிடுமென்றால் சக்தியற்ற அக்கல்லை கட்டித் தொழு வதால் என்ன பிரயோஜனம் அடை வீர்கள்? அவர்கள் கொடுக்கும் காணிக் கையை, கட்டளையை வாங்கிக் கொள்கிறோம். அவர்கள் பணம் அக் கடவுளுக்கு ஆகும். அவர்கள் மட்டும் ஆகாதென்றால் என்ன நியாயம்? உங்களுக்கு சுயராஜ்ஜியதாகம் உண்டு என்றால், நாடு நல்ல நிலைமையடைய பிரியம் உண்டு என்றால், எல்லோரும் சமத்துவமடைய சம்பந்தம் உண்டு என்றால், இன்றே நாடார் சகோதரர் களை ஆலயத்திற்கு அழைத்துச்செல்லத் தயாராயிருக்கவேண்டும். எந்தத் தடைவரினும் நாம் எதிராடத் தயா ராயிருக்கவேண்டும். இல்லாது போனால் நாடார் சகோதரர்கள் ஆலயத்தில் நுழையாதிருக்கும் வரை நாமும் செல்வ தில்லை என்று கட்டுப்பாடாய் இருக்க வேண்டும்" என்று ஆலயப்பிரவேசத்தின் அவசியத்தை வலியுறுத்தி தந்தை பெரியார் அவர்கள் நீண்ட உரையாற்றி யிருந்தார். கூட்டத்திற்குத் தலைமை யேற்ற வைத்தியநாத அய்யரோ தனது தலைமையுரையில் நாடார் என்கிற வார்த்தையைக்கூட, மறந்தும் உச்சரிக் காதது நாடார் சமூகத்தினரிடையே பெரிய ஏமாற்றத்தை அளித்தது.

தமிழ் ஓவியா said...


"முடி வுரையில் அக்கிராசனர் சாதுரியமாய் வக்கீல் சம்பிரதாயப்படி நாடார் என்னும் சொல்லையே சொல்லாது இந்திய சகோதரர்கள் என்று பொதுவில் பேசி கூட்டத்தைக் கலைத்தார்" என்று நாடார்குல மித்திரன் எழுதியது. 1922 லேயே தாழ்த்தப்பட்டவருக்கான கோவில் நுழைவு உரிமைப் போராட் டத்தை கடுமையாக எதிர்த்தவர்தான் மேற்படி வைத்தியநாத அய்யர் என்பது "திரு.வி.க வின் வாழ்க்கை குறிப்புகள்" நூலிலேயே இடம்பெற்றிருக்கிறது.

திடீர் ஆலயப்பிரவேசம் ஏன்? எம்.சி.ராஜா கொண்டுவந்த ஆலயப் பிரவேச மசோதாவை அமல்படுத்த தயங்கிய ராஜகோபாலாச்சாரியாரை கடுமையாக எதிர்த்து குடியரசு, விடுதலை இதழ்களில் தொடர்ந்து எழுதினார் பெரியார்.

1939இல் எந்தவித முன்னறிவிப்பு மின்றி யாருக்கும் தெரியாமல் கடைசி நேர இரவு பூஜைக்குப்பிறகு சில தாழ்த்தப்பட்டவர்களோடு மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் நுழைந் ததன் மூலம் அகில இந்தியப் பத்திரிக் கைகளில் தன்னை விளம்பரப்படுத்தி கொண்டு ராஜாஜி, காந்தி போன்றவர் களின் பாராட்டை பெற்றவர் வைத்திய நாத அய்யர்.அய்யர்வாளின் திடீர் ஆலயப்பிரவேசத்திற்கு அவசியம் என்ன? தமிழகமெங்கும் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினால் தலை தூக்கமுடியாமல் கிடந்தது காங்கிரஸ் கட்சி. அதோடு கோவில் நுழைவு மசோதாவை அமல்படுத்தாத ராஜாஜி அமைச்சரவை பார்ப்பனரல்லாதாரின் கடுங்கோபத்திற்கு ஆளாகியிருந்தது. அப்படி ஒரு மோசமான சூழலில் நடை பெற இருந்த மதுரை, இராமநாதபுரம் ஜில்லா போர்டு தேர்தல்களில் காங்கிரஸ் மண்ணைக்கவ்வாமல் இருக்க ஏற் படுத்தப்பட்ட ரகசியத்திட்டம்தான் வைத்தியநாத அய்யரின் திடீர் ஆலயப்பிரவேசம் என்று "பெரியார் சுயமரியாதை சமதர்மம்" நூல் வரலாற்று ஆதாரங்களோடு விளக்குகிறது. மதுரை வைத்தியநாத அய்யர்தான் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை அழைத்து கொண்டு முதன்முறையாக ஆலயப் பிர வேசம் செய்ததாக அக்கட்டுரை குறிப் பிட்டிருப்பதிலாவது உண்மையிருக்கிறதா?

1921 லேயே மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பார்ப்பனரல்லாதாரை அழைத்துகொண்டு ஜே.என். இராம நாதன், டி.வி.சுப்ரமணியம், ஜே.எஸ். கண்ணப்பன் ஆகியோர் போராட்டம் நடத்த முயன்றனர். பெரும் கல்லடிக்கு ஆளாகியதோடு அவர்கள் மீது 300க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டிருக் கின்றன.

திருச்சி தாயுமானவர் மலைக்கு ஜே.என்.இராமநாதன் தாழ்த்தப்பட்ட வர்களை அழைத்துகொண்டு நுழைந்த போது ரவுடிகளால் தாக்கப்பட்டு மலையில் உருட்டிவிடப்பட்ட செய்தியை கேசரி இதழ் பதிவுசெய்திருக்கிறது. திருவண்ணாமலை கோவிலுக்குள் நுழைந்த ஜே.எஸ்.கண்ணப்பரை கோவிலுக்குள்ளேயே வைத்துப் பூட்டிய தகவல் குடியரசில் வெளிவந்திருக்கிறது. 1927ல் மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோவிலில் 1000க்கும் மேற்பட்ட பார்ப்பனரல்லாதாருடன் கி.ஆ.பெ.விசுவ நாதன் கோவில் நுழைவுப்போராட்டம் நடத்தியதை அறிவோம்.

மேலும் 1928இல் திருவானைக்கோவிலிலும், திருச்சி மலைக்கோவிலிலும் கோவில் நுழைவுப் போராட்டங்கள் நடைபெற்றிருக்கிறது. இவற்றையெல்லாம் திரு எஸ்.வி.ஆர் அவர்கள் தனது நூலில் வரிசைப்படுத்தி யுள்ளார். கோவில் நுழைவுப்போராட்டத்தின் நீண்ட நெடிய வரலாறு இப்படியிருக்க "குள்ளநரி" என்று பெரியாரால் அழைக்கப்பட்ட வைத்தியநாத அய்யரை தூக்கிப் பிடிக்கும் ஒரு கட்டுரையை தினத்தந்தி வெளியிட்டு மகுடம் சூட்டியிருப்பது வேதனையளிக்கிறது.

Read more: http://viduthalai.in/page3/83884.html#ixzz37JQFXF9R

தமிழ் ஓவியா said...


தாய்வழி பாட்டனாரின் சொத்தில் தந்தையின் உரிமை என்ன? சட்டம் என்ன சொல்கிறது?
பரம்பரை சொத்துப் பங்கீட்டில், பல்வேறு சட்டசிக்கல்கள்இன்னும் புரிந்து கொள்ளப்படாமலேயே உள்ளன. இவற்றில் மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படாததே, பல்வேறு குடும்பங்களின் சொத்துப் பங்கீடு தொடர்பான வழக்குகள் அதிகரிக்க, முக்கிய காரணமாக உள்ளது.

ஒரு குடும்பத்தில் தந்தையின் பெயரில் உள்ள, அவரின் சுய சம்பாத்திய சொத்துக்கள், அவர் காலத்துக்கு பின் யார் யாருக்கு சென்று சேர வேண்டும் என்பது, அவரது விருப்பத்தை பொறுத்தது. ஆனால் பரம்பரை வழியாக, அவரது பெயருக்கு வந்த சொத்தில் இப்படி அவர் செயல்பட முடியாது. அந்த சொத்து தனக்குப்பின், யாருக்கு சேர வேண்டும் என்று சட்டம் சொல்கிறதோ, அதன் படியே செயல்பட வேண்டும்.

இதில் குறிப்பாக பரம்பரை, ஒரு பொண்ணுக்கு வரும் சொத்து, அவரது தனிப்பட்ட சொத்தாகிடும். அந்த மனைவி இறந்து விட்டால் அந்த சொத்துகள், அவரது கணவரின் தனிப்பட்ட சொத்தாகி விடும். அதை அவர் யார் பெயருக்கு வேண்டுமானாலும் உயில் எழுதலாம். இது போன்ற சமயங்களில், அந்த கணவர் வேறு ஒரு பெண்ணை மறுமணம் செய்து கொண்டாலும், முதல் மனைவியின் முன்னோர் வாயிலாக வந்த சொத்து, அவரது தனிப்பட்ட சொத்தாகவே இருக்கும்.

இதில் மறுமணத்துக்கு பின் பிறக்கும் குழந்தைக்களுக்கும், அவர் அவர் பங்கு கொடுக்கலாம். சட்டம் இதை ஏற்கிறது. ஆனால் நடைமுறையில், முதல் மனைவியின் வாரிசுகள், இதை ஏற்பது அரிது. ஒரு வேளை மறுமணத்துக்கு பின் அவருக்கு குழந்தைகள் பிறக்காவிட்டால், முதல் மனைவியின் வாரிசுகள், தங்களுக்குள் பேசிவைத்து, சொத்தை பங்கிட்டுக் கொள்ளலாம்.

இதில் இன்னொரு அம்சமாக அந்த கணவர் உயில் எழுதாமல் இறந்துவிட்டால், அவரது முதல் மனைவியின் வாரிசுகள் சொத்து மீதான உரிமையைப் பெறுவர். இதுபோன்ற சொத்துகள், விற்பனைக்கு வரும்போது, அது, அப்போது, யார் வாயிலாக, தற்போதைய உரிமையாளருக்கு வந்தது. இதற்கு அடுத்து யார், யாருக்கு அதில் உரிமை உள்ளது என்பதை தெளிவுப்படுத்திக் கொள்வது நல்லது என்கின்றனர், கட்டுமான வல்லுநர்கள்.

- குடிமக்கள், ஆனி/ஜூன் 2014

Read more: http://viduthalai.in/page3/83885.html#ixzz37JQmYImw

தமிழ் ஓவியா said...


விஞ்ஞானம் - அஞ்ஞானம்


விஞ்ஞானம்: கிருஷ்ணகிரி சுண்டே குப்பம் பகுதியைச் சார்ந்த வேலப்பன் மகன் மதியழகன் (28) ஆப்கானிஸ்தானில், அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்குமிடத்தில் படுக்கைகளை சரி செய்யும் பணியில் பணியாற்றி வருகிறார். அவர் ஊருக்கு வரும்போது பழுதான செயற்கைகோள் செல்பேசியைக் கொண்டு வந்தார். ஊரில் பழுதை நீக்கி செயல்பட வைத்தார். இந்நிலையில் சென்னையில் உள்ள கியூ பிரிவு காவலருக்கு கிருஷ்ணகிரி அருகேயுள்ள கிராமத்தில் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட செயற்கைகோள் செல்பேசி பயன் படுத்துவது குறித்து ஜி.பி.ஆர்.எல் கருவி மூலம் தெரியவந்தது அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அஞ்ஞானம்: நாகர்கோவில் வடிவீசுவரம், அழகம்மன் கோவிலில் 29.6.2014 அன்று பலகோடி ரூபாய் செலவு செய்து மகாகும்பாபிஷேகம், யாரும் நடத்தாத முறையில் அதிக விளம்பரத்துடன் காலை 8.30 மணியளவில் நடந்தது. வடசேரியைச் சார்ந்த சி.இரத்தினம்மாள் பயபக்தியுடன் சாமி கும்பிடும்போது கழுத்தில் உள்ள நாலேகால் பவுன் தங்க செயின் தாலியுடன் கூடியது. பெண் திருடர்கள் வெட்டி எடுத்து சென்றுள்ளார்கள். அழகம்மாள் இன்று வரை திருடர்களை பிடிக்கவில்லை, செயினும் கிடைக்க வில்லை. என்ன மகிமை! - எஸ்.நல்லபெருமால் (வடசேரி)

Read more: http://viduthalai.in/page3/83889.html#ixzz37JRTVzFD

தமிழ் ஓவியா said...


இனி இம்மண்ணை ஆள்வது அரசப் பயங்கரவாதமே!


அடிப்படைக்கே அல்லாடும் கோடானு கோடி
மக்கள் வதியும் மண்ணில்மத
அடிப்படை வாதிகள் கையில் ஆட்சி;
மீண்டும் வேதகாலம் திரும்பும்
மக்கள் நாயகத்தின் பேரால் மதப்பயங்
கரவாதி பிடியில் இந்தியம்
சிக்கலைத் தீர்க்காமல் சீர்குலைவு செய்யும்
புஷ்யமித்திர சுங்கன் கூட்டம்!

பேராயக் கட்சியின் பித்தலாட்ட ஆட்சியைத்
துடைத்தெறிய எண்ணிய மக்கள்
ஆராய்ந்து பார்க்காமல் அவசரக் கோலத்தில்
அளித்த தீர்ப்பின் வெளிப்பாடு!
குரங்கு கையில் பூமாலை குரங்குப்
படைகளுக்குச் சொல்லவும் வேண்டுமா?
அரத்தக் களரியால் நாட்டை அமளிக்
காடாக்கத் துடிக்கிறது ஆரியம்!

இந்நாட்டுத் தேசியம் இந்து இந்தியை
உருஉள் ளடக்கமாய்க் கொண்டது
இந்நாட்டில் தேசிய இனங்களை ஒடுக்கியது
பார்ப்பன டில்லி வாலாக்கள்
மாநில அரசுகளின் உரிமையைப் பறித்துவந்த
மய்யஅரசை மக்கள் நிராகரிக்க
மாநில அரசுகளின் தயவில் கடந்த
முப்பது ஆண்டுகளாய் மய்யஅரசு!

மண்டல் குழுப் பரிந்துரையை வி.பி.சிங் மய்யஅரசில்
ஏற்றதால் ஆட்சியைக் கவிழ்த்தனர்
மண்டலுக் கெதிராய்க் கமண்டலம் தூக்கியோர்
பரிந்துரையை ஏற்றிட வைத்தது
தமிழரின் கனவுத் திட்டமாம் தமிழன்
கால்வாய்த் திட்டம் செயலாக்கம்
செம்மொழியாய்த் தமிழும் இன்னபிற மொழிகளும்
ஆனது மாநிலப் பங்கேற்பால்!

பார்ப்பன சனதாவின் எதிர்பாரா வெற்றியால்
பார்ப்பனர் உள்ளங் குளிர்ந்தது!
பார்ப்பனர் பண்ணையம் ஏற்கெனவே கேட்பா
ரில்லை; ஆட்சி அதிகாரம்
ஆர்.எஸ்.எஸ். கட்டுக்குள்! இவ்வாட்சி எந்தத்
திசையில் பதவியேற்பில் ராசபக்ஷே!
பார்ப்பனர்க்குக் கொண்டாட்டம் திண்டாட்டம்
பார்ப்பன ரல்லாத மக்கட்கே!

மக்கள் நலத் திட்டத்தை மாநிலத்தை யாளும்
செயா, ராமன்பேரால் முடக்கினார்
மக்கள் நலனைவிட மக்கள் விரோத
இந்துவியத் திட்டம் செயலாக்கம்
மய்ய மாநில அரசுகளின் தலைவர்கள்
மதவெறிச் சிந்தனையில ஊறியவர்
அய்ந்தாண்டுக் காலம் இம்மண்ணை ஆள்வது
இனி அரசப் பயங்கர வாதமே!

- கவிஞர் இனியன், திருச்சி-13

Read more: http://viduthalai.in/page3/83887.html#ixzz37JRcPwhi

தமிழ் ஓவியா said...


அய்யப்பன் கோயில் தீர்த்தம் எத்தகையது?


பம்பை நதியில் சேரும் அசுத்தங்களால் நீரில் நோய்க் கிருமிகள் அபாய நிலையைவிட மிக அதிக அளவில் உள்ளன என கேரள மாநில சுற்றுச்சூழல் துறையினர் எச்சரித்துள்ளனர். சாதாரணமாக 100 மி.லிட்டர் நீரில் 500 கோலிபாம் கிருமிகள் வரை, இருக்கலாம் இதுவே சற்று கடுமையான நோய்களை உண்டாக்கும் அளவாகும். சில தினங்களுக்கு முன்னர் பம்பை நதியில் 100 மி.லி. நீரில் 3000 அளவு கோலிபாம்கள் இருந்தன.

தற்போது பம்பை நதியில் குறைந்த அளவு நீர்வரத்து இருப்பதால் பக்தர்கள் குளிப்பதற்காக வலியானை வட்டம் அருகே உள்ள நிரந்தர தடுப்பணை மதகுகளை அடைத்து வைத்துள்ளனர். பம்பை திரிவேணி சங்கமத்துக்கு மேலே மண் மூட்டைகள் அடுக்கப்பட்டு தண்ணீர் தேக்கப்படுகிறது. பக்தர்கள் பாதுகாக்கப்பட்ட இப்பகுதிக்கு மேலே சென்று அறுசெழிக்குழி ஆற்றில் குளித்தும், துணிகளைத் துவைத்தும் அசுத்தப்படுத்துகின்றனர்.

ஹக்கி ஆற்றின் கரையில் பேருந்து நிலையம் அருகே வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளது. இங்கு வரும் பக் தர்கள் கழிவறைகளைப் பயன்படுத்தாமல் ஆற்றங்கரைகளை அசுத்தப்படுத்துகின்றனர். மேலும், சிறியான வட்டம் அருகே நுனுஞான் ஆற்றங்கரையில் உள்ள விரிகளில் தங்கியுள்ள பக்தர்கள் இந்த ஆற்றைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துகின் றனர். பலர் சமையல் செய்து சாப்பிட்டபின் எச்சில் இலை மற்றும் கழிவுகளை ஆற்றில் போடுகின்றனர்.

செழிக்குழி, ஹக்கி நுனஞான் ஆறுகளில் வரும் சிறிய அளவிலான நீர் பம்பையில் சேருகிறது. மொத்த நீரும் தேக்கி வைக்கப்பட்டு தடுப்பணைக்கு மேலே வழிந்தோடுகிறது.
பக்தர்கள் குளிக்கும் இடங்களில் சுற்றுச்சூழல் துறையினர் செவ்வாய்க்கிழமை நீரை ஆய்வு செய்தனர். அப்போது 100 மி.லிட்டர் நீரில் 5000 கோலிபாம் கிருமிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுச்சூழல் துறை யினர், குடிநீர் எடுக்கும் பகுதி மற்றும் அசுத்தமாக்கப்படும் பகுதிகளில் அசுத்த மாக்கப்படுவதைத் தடுக்கவும், பம்பை நீரை சுத்தம் செய்யவும் கோரியுள்ளனர்.

நன்றி: தினமணி நாளிதழ் நாள்: 7.1.1999

Read more: http://viduthalai.in/page3/83891.html#ixzz37JRqODDV

தமிழ் ஓவியா said...


கேபினட்டில் உயர் சாதியினர்...


மோடி உள்ளிட்ட 23 கேபினட் உறுப்பினர்களில் மொத்தம் 12 பேர் உயர் சாதியினர். என்னென்ன சாதியினர்? பிராமணர்கள், ராஜ்புத்திரர்கள், கயஸ்தாஸ், வைசியர்கள் இவர்கள்தான் வட இந்தியாவில் உயர் ஜாதியினர். அதேபோல் லிங்காயத்துகள், ஒக்கலிகா மற்றும் மராத்தாஸூம் கேபினட்டில் இடம் பெற்றுள்ளனர். எஞ்சிய 11 பேரில் 5 பேர் இதர பிற்படுத்தப்பட்டோர் இருவர் தலித்துகள், ஒருவர் பழங்குடி இனத்தவர்.

தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் 10: தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களில் 5 பேர் உயர் சாதியினர், 4 பேர் இதர பிற்படுத்தப்பட்டோர், பழங்குடி இனத்தவர் ஒருவர். 12 இணை அமைச்சர்கள்: இணை அமைச்சர்கள் 12 பேரில் 4 பேர் பழங்குடி இனத்தவர், 4 பேர் இதர பிற்படுத்தப்பட்டோர், 3 பேர் உயர்சாதியைச் சேர்ந்தவர்கள். பிற்படுத்தப்பட்டோரில் கூட வலிமை வாய்ந்த ஜாட், குஜ்ஜார்கள், யாதவர்கள், கம்மாஸ் ஜாதியினருக்கே பிரதிநிதித்துவம் வழங்கப் பட்டுள்ளது. மிகப் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த குஸ்வாஹாவுக்கு ஒரு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page3/83892.html#ixzz37JS1Tnxl

தமிழ் ஓவியா said...


பேரீச்சம்பழம்


தினமும் இரவில் படுக்கச் செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீட்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும். புதிய ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழவழப்பாகவும் இருக்கும். கண் சம்பந்தமான கோளாறுகளும், நரம்பு சம்பந்தமான கோளாறுகளும் நீங்கும்.

Read more: http://viduthalai.in/page8/83899.html#ixzz37JSrHheu