Search This Blog

6.7.14

உலகெங்கும் பெரியார் கொள்கை மயம்!பன்னாட்டு மனிதநேய நன்னெறி ஒன்றியத்தின் (IHEU) மேனாள் தலைவர் லெவிபிராகல் (நார்வே நாட்டைச் சேர்ந்தவர்) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி, விஜயவாடா கோரா நாத்திக மய்யத்தின் செயல் இயக்குநர் முனைவர் விஜயம் ஆகியோர் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சி சென்னை பெரியார் திடலில், பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் நடைபெற்றது. (3.7.2014).

தந்தை பெரியார் கொள்கை உலகமயமாக்கல் எனும் தலைப்பில் கருத்துக்களை எடுத்து வைத்தனர்.

உலகின் பல நாடுகளும் பொருளாதாரத்தில் வளர்ந்த அளவுக்குப் பகுத்தறிவுச் சிந்தனையில் வளர்ச்சி பெறவில்லை; அதே நேரத்தில் பொருளாதார வளர்ச்சி பெறாத நம் நாடு குறிப்பாக தந்தை பெரியார் பிறந்த திராவிடர் இயக்கம் பாடுபட்ட தமிழ்நாடு என்பது பகுத்தறிவுச் சிந்தனையில் வளர்ச்சி பெற்றுள்ளதை எடுத்துரைத்தனர்.

குறிப்பாக அமெரிக்காவின் கரன்சி நோட்டில்கூட கடவுள் நம்பிக்கை (Trust in God) என்பது அச்சிடப் பட்டுள்ளதை திராவிடர் கழகத் தலைவர் எடுத் துரைத்தார்.

சோவியத்து ருசியாவின் வீழ்ச்சிக்குப் பிறகு மத நம்பிக்கை அங்கே தலை தூக்கியுள்ளது. சீனாவிலும் சர்ச்சுகள் இயங்க ஆரம்பித்து விட்டன.
என்றாலும் பகுத்தறிவுச் சிந்தனை வேர்ப் பிடித்துத்தான் வருகிறது என்பது மகிழ்ச்சியை அளிக்கக் கூடியதே.

நார்வே நாட்டின் மக்கள் தொகையை எடுத்துக் கொண்டால் அய்ந்தரை லட்சம்தான். ஆனால் ஆங்கே கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரம் என்று லெவிபிராகல் அவர்கள் குறிப்பிட்டது சிறப்புக்குரியதாகும். விரைவில் ஒரு லட்சத்தை எட்டும் என்றும் தெரிவித்தார்.

மதவாதியாக இருக்கக் கூடிய ஒருவர் தன்னை கிருஸ்துவன் என்றும், ஒருவர் முஸ்லீம் என்றும், இன்னொருவர் இந்து என்றும்  வெளிப்படையாக தெரிவிக்கின்றனர் - அப்படிக் கூறுவதில் அவர்கள் சிறிதும் தயக்கம் காட்டுவதில்லை. அதே போல பகுத்தறிவுச் சிந்தனை உடைய நாம். நம்மை நாத்திகர் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளச் சற்றும் தயங்கக் கூடாது என்று லெவி பிராகல் கூறியது நல்லதோர் கருத்தே.

இவ்வளவுக்கும் இவர் யாரென்றால் ஒரு பாதிரியாரின் மகனாவார். தன் மகனையும் பாதிரியாராக்க வேண்டும் என்று அவரின் தந்தை முயற்சி செய்து பார்த்தும் அதில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. மாறாக உலக நாத்திக அமைப்பின் தலைவர் ஆகும் அளவுக்கு அவரின் சிந்தனை  உயர்வு படைத்ததாக வும், வலிமை நிறைந்ததாகவும் வளர்ச்சி பெற்றது.

முன்னோர் சொன்னார்கள், மத நூல் சொல்லுகிறது என்கிற செக்கு மாட்டுச் சிந்தனையில் மனிதன் சிறைப் பட்டால் அவனிடம் சிந்தனை வளர்ச்சி எங்கிருந்து கிடைக்கப் போகிறது? தன்னம்பிக்கை எப்படி தழைக்கப் போகிறது.

இந்த இரண்டும் இல்லாதவன் எது பெற்றிருந்தாலும் என்ன பயன்? மனித சமூக வளர்ச்சி என்பது அறிவியல் வளர்ச்சியால் கிடைத்த பயனே அன்றி, கடவுளின் மீது துதி பாடியதாலோ காணிக்கைகளை அளித்ததாலோ கிடைக்கப் பெற்றதில்லை.

மேலும் கடவுள் நம்பிக்கையும், மதச் சிறைச்சாலை வாழ்வும், மனிதனின் அறிவை நாசப்படுத்துவதோடு அல்லாமல் காலத்தைக் கரியாக்குகிறது சடங்குகள், பண்டிகைகள் நேர்த்திக் கடன்கள் என்று சொல்லி அரும்பாடுபட்டுச் சம்பாதித்த பொருளை, இழக்கும் அவல நிலையை ஒரே ஒரு கணம் எண்ணிப் பார்த்தால் போதுமே!

மதவாதிகள் கூற்றுப்படியே பார்த்தாலும் கடவுள் தான் சர்வ சக்தி வாய்ந்தவராயிற்றே. அவருக்கு ஏன் படையல்? அவருக்கு ஏன் காணிக்கைகள்? கருணை நிறைந்ததாகக் கூறப்படும் கடவுள் எந்த ஏழையின் அரும் பசியைப் போக்கினான்? கோடானு கோடி மக்கள், குந்தக் குடிசையின்றி நடைபாதை களையே வீடுகளாக்கி, வெய்யிலிலும், மழையிலும் கிடந்து உழலுகிறார்களே அவர்களுக்கு எந்த ஏற்பாட்டை இந்தக் கருணைக் கடவுள் செய்துள்ளான்?

ஊனமோடு பிறக்கிறார்களே - இதற்கு சர்வ சக்தி வாய்ந்தவன் - (அவனன்றிதான் ஓரணுவும் அசையாதே!) பொறுப்பில்லையா?
ஆய்வுக் கண்ணோட்டத்தில் கடவுள் என்பது கற்பனையே அதனை நம்புவதால் மனிதவளம் குன்றிப் போய் விடுகிறதே!

மேலும் உலகம் முழுவதும் மதக் கலவரங்கள் அன்றாடம் மனித உயிர்களைக் காவு கொண்டு வருகின்றன. இந்த நிலையில் கலவரமற்ற மனிதநேயத் தென்றல் உலகம் உருவாக தந்தை பெரியார்  அவர் களின் பகுத்தறிவு சமதர்ம - சமத்துவ சுயமரியாதைக் கொடி உலகெங்கும் பறக்க வேண்டும் - பறப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

                    -----------------------"விடுதலை” தலையங்கம் 5-7-2014

57 comments:

தமிழ் ஓவியா said...


செத்தான்நாம் ஒரு சிறிதாவது அறிவு பெற்ற பகுத்தறிவுவாதிகள் ஆகிவிட்டோ மானால், கொல்லுவாரின்றியே பார்ப்பனன் செத்தான்.
(விடுதலை, 14.3.1970)

Read more: http://viduthalai.in/page-2/83481.html#ixzz36eF8Xu1y

தமிழ் ஓவியா said...


சாயிபாபாவின் சிலைகளை உடைப்போம் சங்கராச்சாரியாரின் சண்டியர்த்தனம்!

சாயிபாபா பற்றி இந்து மதத்தின் நான்கு பீடங் களுள் ஒன்றான துவா ரகா பீடத்தின் சங்கராச் சாரியார் சுவரூபானந்தா சமீபத்தில் சர்ச்சைக்குரிய அறிக்கை ஒன்றை வெளி யிட்டார். அதாவது சாயி பாபா இந்து கிடையாது அவர் ஒரு முஸ்லீம் பாபா(பகீர் எனப்படும் பண்டாரம்) அவர் இந்து அல்ல. அவரைக் கும்பிடு பவர்கள் முட்டாள்கள் என்று குறிப்பிட்டிருந் தார். இந்த விவாதம் தற் போது மீண்டும் சூடு பிடிக்கத்துவங்கியுள்ளது. சாயி பக்தர்கள் இந்துக் களாக இருக்கும் பட்சத் தில் வீட்டில் உள்ள சாயி படங்கள் மற்றும் சிலை களை வீசிவிடவேண்டும் படங்களை எரித்து விட வேண்டும் என்று கூறி யுள்ளார். மேலும் சீர டிக்கு செல்லும் இந்து மதத்தவர்கள் தங்களின் மதத்திற்குக் களங்கம் விளைவிக்கிறீர்கள் என் பதை நினைவில் கொள் ளுங்கள் என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புனே நகரில் போராட்டம் நடத்திய சாயிபக்தர்களால் சங்கராச்சாரியார் மிகவும் கோபமடைந்து விட்டார். வியாழன் இரவு செய்தியாளர்களிடம் பேசிய சங்கராச்சாரியார் இந்துமததிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சாயிபக்தர்கள் ஈடுபடுகி றார்கள். இது தொடரு மானால் சாயிபாபாவின் சிலைகள் உடைக்கப்படும் என்று அறிவித்தார்.

களத்தில் இறங்கும் அம்மணச் சாமியார்கள் அயோத்தியில் உள்ள ஜூனா அகாடா என்ற மடத்தின் அம்மண சாமி யார்களின் தலைவர் நரேந்திர கிரி கூறியதா வது, சங்கராச்சாரியார்கள் இந்துமத பாதுகாவலர்கள், அவர்களின் வாக்கு வேத வாக்கு! சீரிடி சாயிபாபா ஒரு முஸ்லீம் பண்டாரம், சிலர் குழுக்களாக சேர்ந்து தங்களதுபிழைப்பிற்காக அவரைக் கடவுளாக்கிக் கும்பிட்டு வருகின்றனர். மேலும் முஸ்லீம் சாமி யாரை இந்துக்கடவுளுக்கு சமமாக வைத்து வழிபடு கின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்க செயலா கும். நாங்கள் சங்கராச் சாரியாவின் ஆணைக்காக காத்து இருக்கிறோம், சங்கராச்சாரியார் கூறியது போல் சாயிபாபா வழி பாட்டை இந்துமக்கள் கைவிடவேண்டும், மேலும் சாயிபாபாவின் படங்கள் மற்றும் சிலைகளை இந் துக்கள் தங்கள் வீட்டில் இருந்தும் கோவிலில் இருந்தும் அகற்றவேண் டும். சங்கராச்சாரியாரின் இந்தக் கட்டளையை கண்டுகொள்ளாமல் இருக்கும் பட்சத்தில் நாங்கள் நடவடிக்கையில் இறங்கவேண்டிவரும்.

கறி தின்பவராம் சாயிபாபா

இது குறித்து மடத் தலைவர் கியான் மகந்த் கூறும் போதுசாயிபாபா முஸ்லீம் அவர் (மாட்டுக்) கறி உண்பவர், அவருக்கும் இந்துமத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது, அவரது வழிபாட்டை இந்துமக்கள் கைவிட வேண்டும். இஸ்லாமியர்கள் கூட சாயிபாபாவை வழிபடு வது கிடையாது, அப்படி இருக்க இந்துக்கள் ஏன் அவரை வழிபடவேண் டும் என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/83472.html#ixzz36eFXNFmJ

தமிழ் ஓவியா said...


பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா


மனிதநேயம் என்பது மதக் கொள்கைக்கு எதிரானது

இந்த நூற்றாண்டிலேயே மதங்கள் மறைந்து விடும் பன்னாட்டு மனிதநேய போராளி லெவி பிராகல் பட்டமளிப்பு பேருரை

வல்லம், ஜூலை 5-_ மனிதநேயம் என்பது மதக் கொள்கைக்கு எதி ரானதுதான், கிருத்துவ மத மாற்றங்கள் படிப் பறிவு இல்லாத ஏழ்மை யில் உள்ள சில நாடுகளில் மாத்திரமே நடத்தப்படுகின்றன. இந்த நூற்றாண்டிலேயே மதங்கள் மறைந்துவிடும் என பன்னாட்டு மனித நேய போராளி லெவி பிராகல் அவர்கள் தஞ்சை வல்லம் பெரியார் மணி யம்மை பல்கலைக் கழகத் தில் நடைபெற்ற பட்ட மளிப்பு விழாவில் பங் கேற்று பட்டமளிப்பு பேருரை நிகழ்த்துகையில் இவ்வாறு தெரிவித்தார்.

லெவி பிராகல் அவர்களின் பட்டமளிப்பு பேருரை

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களே, இணைவேந் தர் டாக்டர் வீகேயென் கண்ணப்பன் அவர்களே, துணைவேந்தர் டாக்டர் நல்.இராமச்சந்திரன் அவர் களே, இணை துணை வேந்தர் டாக்டர் எம்.தவ மணி அவர்களே, நிர் வாகக் குழு உறுப்பினர் களே, ஆசிரியர் பெருமக் களே, என் அன்பிற்குரிய பட்டதாரிகளே இந்த 21ஆவது பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தும் வாய்ப்பு மிக அரிதான ஒன்று. பெரியார் மணி யம்மை பல்கலைக்கழக பட்டம் பெறும் மாணவர் களாகிய உங்களை பாராட் டுகிறேன். வாழ்த்துகிறேன். இது உண்மையிலே இது ஒரு பெரிய சாதனைதான். நீங்கள் ஒவ்வொரு வரும் மகிழ்ச்சியோடு இந்த தொழில்நுட்ப பட்டங்களை 20-ஆம் நூற்றாண்டின் மிக பெரிய சமுதாய சிந்தனையாளர் பெரியார் அவர்களின் பெயரால் அமைந்த இப்பல்கலைக்கழகத்தில் நீங்கள் பட்டம் பெறுவது மிகச் சிறப்பான ஒன்றா கும். உங்களுடைய பெற் றோர்களுக்கும், ஆசிரியர் களுக்கும், உங்களுடைய முன்னேற்றத்திற்காகவும், சாதனைகளுக்காகவும் நீங்கள் அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும். அனைத்து உலக மனித நேயப் பேரவை

உலகளாவிய பன்னாட்டு மனித நேய நன்னெறிக் கழகம் 1952இல் துவக்கப் பட்டது. இது இன்று 40 நாடுகளில் 100 குழுக் களோடு இயங்கி வருகின் றது. இதில் 10 லட்சத் திற்கு மேற்பட்ட உறுப்பி னர்கள் உள்ளனர். நான் இந்த அமைப் போடு கடந்த 30 ஆண்டு களாக இணைந்து பணி யாற்றி வருகின்றேன். ஒன்றை மட்டும் அடிக் கோடிட்டு என்னுடைய முன்னுரையில் குறிப்பிட விரும்புகிறேன்.

இந்தியா வில் தான் என்னுடைய பணி இருக்கிறது என்பதே அனைத்துலக மனித நேயம். அதற்கும் இதர மதங்களுக்கும் உள்ள எல்லைகளை உணர்ச்சி குமுறல்களையும் மதங் களுக்கும் மனித நேயத் திற்குமுள்ள வேற்று மையை உங்கள் முன் சொல்வது என்பதுதான். மனித நேயம் என்ற வார்த்தை கலைக் களஞ் சியங்களிலும். சொல் அகராதிகளிலும், பலவேறு விதமான விளகங்களை கூறுகிறது. அதை பற்றி எல்லாம் நான் இங்கே குறிப்பிட போவதில்லை . என்னு டைய மானுட வாழ்க்கை சார்ந்த நவீன மனித நேயம் என்பதே. இதை சில நாடுகளில் மத சார்பு இல்லாத மனித நேயம் என்று அழைக்கின்றனர். அனைத்துலக அகராதி களில் காணப்படும் மனித நேயம் என்பது மதக் கொள்கைக்கு எதிரானது. இதோ சில உதாரணங் கள். காலின்ஸ் அகராதி மதத்தை புறக்கணித்து சமூகத்தை மேம்பாடு அடையச் செய்வது மனித நேயம் என்கிறது. லிட்டில் ஆக்ஸ்போர்டு அகராதி மதம் சாராத தத்துவத் தையுடைய எளிமையான மனித மேம்பாட்டு மதிப் பீடுகள் என்று கூறுகிறது.

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் 21ஆவது பட்டமளிப்பு விழாவில் பல்கலைக் கழக மாணவ - மாணவிகளுக்கு வேந்தர் கி. வீரமணி அவர்கள் பட்டம் வழங்கினர். (வல்லம் - 4.7.2014)

சேம்பர்ஸ் அகராதி யின்படி மனித வளர்ச் சியை உயர்த்தி மனிதசக்தி அப்பாற்பட்ட நம்பிக்கை யோடு கடவுள் ஆகியவற் றுக்கு எதிரானது என்ப தாகும். இதே அடிப் படையில் மனித நேய நன்னெறிக்கழகம் நிறுவப் பட்டு செயல்பட்டு வரு கிறது. இதில் மதம் சாராத, மதத்திற்குற்கு எதிரான, சுய சிந்தனை யாளர்கள், பகுத்தறிவா ளர்கள், மதங்களை பற்றி கவலைப்படாதவர்கள், உருவ வழிபாட்டை மறுப்பவர்கள், கடவுள் நம்பிக்கையே இல்லாத வர்கள் ஆகியோர் எங்கள் அமைப்பில் உள்ளனர். இந்தியாவிலும் இது போன்ற அமைப்புகளும் குழுக்களும் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். 1895 ஆம் ஆண்டு முதல் இந்திய மதசார்ப்பற்ற சமூக அமைப்பு, பகுத் தறிவு மன்றங்கள், கடவுள் மறுப்பு மய்யங்கள் ஆகி யவை இருக்கின்றன என் பதை நீங்கள் அறிவீர்கள். இவைகள் எல்லாம் அனைத்துலக மனித நேய நன்னெறிக்கழக கிளைகள் மற்றும் வேர்கள் என்று நான் சொல்லுகிறேன். இவை அனைத்தும். எத னுக்கும் மேற்பட்ட சக்தி ஒன்று இருப்பதை மறுக் கின்றன. இவைகள் மதங் களோடு தொடர்பு இல் லாதவை மற்றும் மதங் களை விமர்சிப்பவை. தந்தை பெரியார் அவர் கள் சொல்லியதை நான் குறிப்பிட விரும்புகிறேன். கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை

கடவுளை கற்பித்தவன் முட்டாள்

கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி இந்த வாசகங்கள் தவிர மனிதநேய சிந் தனைக்கு வேறு என்ன வேண்டும். 25 ஆண்டு களுக்கு முன்பு நான் சென்னைக்கு வந்தபோது மிக சிறப்பாக சுய சிந்தனையாளர்கள் குழுக்கள் மற்றும்

தமிழ் ஓவியா said...

சுயமரியாதை இயக்கம் தந்தை பெயரால் நிறுவப்பட்டு டாக்டர் கி.வீரமணி அவர்களை தலைவராகக் கொண்டு இயங்குவதைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைந்தேன். பெரியார் அவர்களின் முழு உருவச்சிலையின் கீழே நான் இப்போது மேற் கூறிய வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இதுபோன்ற வாசகங்கள் அடங்கிய சிலை ஒரு நாள் கூட இருக்காது, இந்தியா முரண்பாடுகளை உள்ள டக்கிய நாடு. வி.எஸ்.நைபால் என்ற எழுத்தாளர் எழுதிய புத்தகத்தில் “India – A Million Mutinies now” 70 பக்கங்கள் பெரியாரை பற்றியும் அவர்கள் தொண்டர்களைப் பற்றியும் சிறந்த மனித நேய அம்சங்களையும் விரிவாக எடுத்துரைத்தார்கள்.

இன்றைக்கு உலகம் சார்ந்த பார்வையில் என்னை நீங்கள் ஒரு கேள்வி கேட்கலாம். ஏழு பில்லியன் ஜனத்தொகை உள்ள இவ்வுலகில் சில லட்சங்கள் உள்ள மனித நேய ஆர்வலர்கள் என்ன செய்ய முடியும்? என்று கேட்கலாம். இதில் எத்தனை விகிதம் மத நம்பிக்கை உள்ளவர்களாக இருக்க முடியும். 33% கிருஸ்தவர்கள், 11 % இந்துக்கள், 21 % முஸ்லீம்கள், 21% மற்ற மதங்களை சார்ந்தவர்கள், 14% எந்த மதத்தையும் சாராதவர்கள் என்று டேவிட் பாராட் தன்னுடைய கிருஸ்தவர் கலைக்களஞ்சியத்தில் குறிப்பிடுகிறார். இந்த 86% நாம் எங்கு இருக்கிறோம் என்பதே நம்முன் உள்ள சிந்தனை. நாம் எங்கு இருக்கிறோம் என்பதை விட எங்கு செல்லுகிறோம் என்பது முக்கியம். உலக மக்கள் தொகையில் மதங்களில் நம்பிக்கை யுடையவர்கள் என்ன செய்கிறார்கள்? எங்கு போகிறார்கள், புவியியல் மாற்றத்தில் அதன் விளைவுகள் என்ன? இந்தியாவை சேர்ந்த கோரா என்ற சிந்தனையாளர் தன்னுடைய கடவுள் பற்றி மறுப்பு சொல்லுவது சரியன்றே எனக்குப்படுகிறது. மேலும் மேலும் மதம் நம்பிக்கை அற்றவர்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறார் கள். இதை பள்ளிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் நூலகங்களிலும், இணைய தளங்களிலும் அறிய முடிவதில்லை. பாரம்பரிய மதங்களில் நம்பிக்கை உரியவர்கள் பலர் இருக்கிறார்கள்.

கடவுள் மறுப்பாளன் என்ற முறையில் அவர்களை நான் மதிக்கிறேன். அவர்களும் என்னுடைய நண்பர்களே. ஆனால், சில ஆண்டு களில் கல்வியினாலும், நம்பிக்கைகளி னாலும் இந்த நூற்றாண்டிலேயே மதங்கள் மறைந்துவிடும், சுருங்கிவிடும். இதை நீங்கள் இந்திய நகர்ப் புறங்களில் காணலாம். மேற்கத்திய நாடுகளில் பாதிரியார்கள் கூட தங்கள் நம்பிக்கையை இழந்துள்ளார்கள். தேவாலயங்கள் மூடப்பட்டு அவைகள் வர்த்தக நிறுவனங்களாக மாற்றப்பட்டுள்ளன. என்னுடைய நார்வே நாட்டில் உள்ள மக்களில் பாதிப்பேர் கடவுள் நம்பிக்கை உள்ள வர்கள். அவர்கள் மத அமைப்புகளில் இருப்பது பண்பாட்டு காரணங்களுக் காகவே. பல அய்ரோப்பிய நாடுகளில், ஆசிரியர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், தலைவர்கள் மற்றும் கலைஞர்கள் ஆகியோர் தங்களை கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் என்று சொல்லத் தயங்குவதில்லை. என்னு டைய இளமைக் காலத்தில் நான் அப்படி யாரையும் பார்க்கவில்லை.

தமிழ் ஓவியா said...

கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் கிராமத்தின் ஓரத்தில் இருப்பார்கள். அவர்கள் முன்னால் நான் போனது கூட கிடையாது. இன்று அனைத்துலக வளர்ச்சியை மதத்தின் பிடியிலிருந்து மீட்டு மதசார்பின்மைக்கு நாம் வந்திருக்கிறோம். ஒருபுறம் மதம் சாராத புதிய சிந்தனை ஓட்டம் மற்றொரு புறம் புத்தாக்க சிந்தனை உள்ள மாறுபட்ட நிறுவனங்கள். இப்புதிய வேகம் சமூக அமைப்பு களையோ, கலைஞர்களையோ சட்டம் சார்ந்தவைகளாகவோ இல்லை. இது ஒரு அங்கீகரிக்கப்படாத அமைப்பு களில் உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் அறிமுகம் இல்லாதவர்களாக உள்ளனர். இந்த கடவுள் மறுப்பு சிந்தனையாளரிடம் மனித நேயங்கள் உள்ளனவா? அவை மனிதனை சார்ந்திருக்கிறவை. உண்மையில், மனிதனைப்பற்றி சிந்திக்கிறார்கள். உங்கள் மாவட்டத்திலுள்ள கடவுள் மறுப்பாளர்கள் சிலரை பாருங்கள். அவர்கள் பொறுப்புணர்வு உள்ள வர்களாகவும், குடும்ப அமைப்பில் அக்கறையுள்ளவர்களாகவும், சமுதாய தேவைகளை உணர்ந்தவர்களாகவும், சமூக சட்டங்களை மதிப்பவர்களாக வும் உள்ளனர். எனவே, பகுத்தறிவு இல்லாதவர்கள் மட்டுமே மதத்தை யும், பழக்க வழக்கங்களையும், பாராம்பரிய நம்பிக்கைகளையும் வளர்க்கிறார்கள். ஒரு மிருகத்தை வழிபாட்டு தலத்தில் பலியிடுவதை போன்ற செயல்களை செய்யாமல் நல்ல காரியங்களை கடவுள் மறுப்பாளர்கள் செய்கிறார்கள்.

அவர்கள் எல்லாம் மனித நேயம் உள்ளவர்கள் என்று அழைக்கலாம். மனித நேயம் இல் லாமல் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவி லும் மத மாற்றங்கள் செய்வதனால் என்ன பயன்? அமெரிக்காவை சார்ந்த மதபிரச்சாரகர் பென்னிஹென் பெங்களூருவில் 2005ஆம் ஆண்டு தாம் செய்யும் அற்புதத்தை பற்றி இவ்வாறு சொன்னார். இங்கு கூடியிருக்கின்ற இந்த ஏழு லட்சம் மக்கள் கூட்டத்தின் முன்னாள் பிரதமர் மற்றும் முக்கிய நபர்கள் பலரும் கூடியிருக்கிறார்கள். நான் கிருத்துவின் ஊழியன் அவருடைய அற்புதங்களை நான் உங்களுக்கு சொல்ல வந்திருக்கிறேன் என்று கூறினார். இவர் மத அற்புதங்களை செய்து, எதற்காக மத மாற்றம் செய்யவேண்டும். இவைகள் எல்லாம் அற்புதங்கள் இல்லை. நானும், இந்திய மனித நேயர் பாபுகோகினேன்னி நார்வே நாட்டை சேர்ந்த அரில் எட்வர்ட்சன் என்பவரின் முயற்சியை 2004இல் அய்தராபாத்தில் தோற்கடித் தோம். கிருத்துவ மத மாற்றங்கள் படிப்பு அறிவு இல்லாத ஏழ்மையில் உள்ள சில நாடுகளில் மாத்திரமே நடத்தப்படுகின்றன. நான் உங்கள் நாட்டில் புட்டப்பர்த்தி சாய்பாபா போன்ற நபர்களையும் குரு என்று சொல்லி கொள்கிறவர்களை பார்த்து நான் கேட்பது எல்லாம் ஒன்றே. இது எல்லாம் ஏமாற்று வேலை என்ப தாகும். நான் இந்தியாவில் பார்த்ததும் கற்றதும் ஏராளம் இதை என்னுடைய முன்னுரையில் சொல்லியிருக்கிறேன் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

முன்னதாக, பல்கலைக் கழக துணைவேந்தர் நல். இராமச்சந்திரன் வரவேற்புரையாற்றினார். இணை துணைவேந்தர் பேரா. மு. தவமணி, பதிவாளர் அசோக்குமார், மேலாண் குழு உறுப்பினர்கள் எஸ். ராஜரத் தினம், வீ. அன்புராஜ், ஜெயக்குமார், மற்றும் முதன்மையர்கள், இயக்குநர் கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு இவ் விழாவைச் சிறப்பித்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/83480.html#ixzz36eFn9PkE

தமிழ் ஓவியா said...


இந்தியக் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாம் மதுபானம் சொல்கிறார் கோவா பா.ஜ.க., - எம்.எல்.ஏபனாஜி, ஜூலை 5_ கோவாவில், பெண்கள் மதுபானக் கூடத்திற்கு செல்லும் கலாசாரம் குறித்து, மாநில அமைச்சர் ஒருவர் கடுமையாக விமர்சித்த நிலையில், 'மதுபானக் கூடமும், மதுவும், இந்திய கலாச் சாரத்தின் ஒரு அங்கம்' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோவா சட்டசபை எம்.எல்.ஏ.,வான விஷ்ணு வாகா, இது தொடர்பாக கூறியதாவது: கோவா சட்டசபை கூட்டத் தொடர், வரும், 22ஆம் தேதி துவங்குகிறது. அப்போது, சட்ட சபைக்கு வேட்டி அணிந்து செல்வேன். 'கோவா கடற்கரைக்கு, பெண்கள் அரைகுறை ஆடை அணிந்து செல் வதும், மதுபானக் கூடங் களுக்கு செல்வதும், இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது' என, தெரி வித்த, அமைச்சர் சுதின் தவாலிகருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இவ்வாறு செய்வேன். 'குட்டையான உடைகள் அணிந்து, மதுபானக் கூடங்களுக்கு பெண்கள் செல்வதை தடை செய்ய வேண்டும்' என, அமைச் சர் தவாலிகர் தெரிவித்தது ஏற்றுக் கொள்ள முடியா தது. தவாலிகரின் மூதா தையர்கள் எல்லாம், வேட்டி தான் அணிந்தனர். அதனால், அவரும் வேட்டி அணிந்து சட்ட சபைக்கு வர வேண்டும். இந்திய கலாச்சாரத்தின் மீது, அவருக்கு உண்மை யிலேயே அக்கறை இருந் தால், இதைச் செய்ய வேண்டும். பண்டைக் காலங் களில், கடவுளுக்கு மது பானத்தை படைத்து வழிபாடும் நடத்தி உள்ள னர். எனவே, மதுபானக் கூடங்களுக்கு செல்வதை யும், மது அருந்துவதையும், மதம் மற்றும் கலாச்சாரத் தின் பெயரில் எதிர்ப்பது சரியல்ல. இவ்வாறு, அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/83474.html#ixzz36eG1Phsq

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டுக்குத்தான் சொந்தம் கச்சத்தீவு கலைஞர் அழுத்தமான கருத்து


சென்னை, ஜூலை 5_ கச்சத் தீவு தமிழ்நாட்டுக்கு மட்டுமே சொந்தமானது என்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் (4.7.2014) வெளியிட்ட அறிக்கை வருமாறு:_
கேள்வி :- இந்திய மீனவர்கள் கச்சத் தீவு கடல் பகுதியில் மீன் பிடிப்பதற்கு உரிமை இல்லை என்று இந்தியா _இலங்கை இடையிலான ஒப்பந்தத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்திருக்கிறதே?

கலைஞர்:- தமிழ்நாட்டு மக்களைப் பெரிதும் அதிர்ச்சிக்கும், வருத்தத்திற்கும் ஆட்படுத்தக் கூடிய செய்திதான் இது. இதுபற்றி தமிழக முதலமைச்சர் இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

தமிழகத்திலே உள்ள பல கட்சிகளின் தலைவர்களும் தங்களது கண்ட னத்தை மத்திய அரசுக்குத்தெரிவித்திருக் கிறார்கள். இந்தப் பிரச்சினைக்காகத்தான், இந்தியா_- இலங்கை இடையிலான ஒப்பந்தம்ஏற்பட்ட காலத்தி லிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்த போதும் சரி, இல்லாத போதும் சரிதன்னால் இயன்ற அளவுக்கு போராடி வருகிறது.

ஏன் தற்போது ஆட்சியிலே இல்லாத நேரத்திலே கூட கடந்த 15.-4.-2013 அன்று நடைபெற்ற நமது டெசோ அமைப்பின் கூட்டத்தில், கச்சத் தீவு இந்தியாவின் ஒரு பகுதியாகும். அது 1974ஆம் ஆண்டுஒப்பந்தத்தின்படி இலங்கை அரசுக்கு இந்திய அரசால், சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் நாம்தெரிவித்த எதிர்ப்புகளை யெல்லாம் மீறி விட்டுக் கொடுக்கப்பட்டது. இந்தியாவின் எந்தவொருபகுதியையும் வேறு ஒரு நாட்டிற்கு விட்டுக் கொடுப்பதென்றால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 368ஆவது பிரிவின்படி நாடாளு மன்றத்தின் பரிசீலனைக்கு வைத்து சட்டம் இயற்றப்பட வேண்டும்.

கச்சத் தீவைப் பொறுத்த வரை அப்படி எந்தவொரு சட்டமும் இதுவரை நிறைவேற்றப்படாததால், கச்சத் தீவை இலங்கைக்கு ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக் கொடுத்தது அரசியல் சட்ட ரீதியாகச் செல்லுபடி ஆகாதுஎன்பதுதான் உண்மை. எனவே 1974ஆம் ஆண்டு ஒப்பந் தத்தை ரத்து செய்யவும், கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதைப் பிரகடனப்படுத்தவும், டெசோ அமைப்பின் மூலம் உச்சநீதிமன்றத்தை அணுகுவதென இந்தக் கூட்டம் தீர்மானிக்கின்றது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படிதான்; 2013ஆம் ஆண்டு மே 10ஆம் தேதியன்று கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தேன்.அந்த மனுவில் கச்சத்தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீன் பிடிப்பது தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமை என அறிவிப்பது மட்டுமன்றி, அங்கு மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு கடற்படைபாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தேன். கச்சத்தீவில் புனித அந்தோணியார் கத்தோலிக்க தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு வாரத் திருவிழாவிற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களே அதிகம் செல்வர்.

இலங்கை மீனவர்களும் கலந்து கொள்வர். தொன்றுதொட்டு தமிழக மீனவர்களும் இலங்கை மீனவர்களும்இப்பகுதியில் மீன் பிடித்து வருகின்றனர். அதன் தொடர்பான, வலைகளை உலர்த்துதல், களைப்பாறுதல் போன்றவற்றிற்கும் இத்தீவினைப்

தமிழ் ஓவியா said...

பயன்படுத்துவர்.

இத்தீவானது பன்னெடுங்காலமாக ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகையில் இருந்தது. இலங்கையைஆட்சி செய்த டச்சுக் கம்பெனி அந்தத் தீவை 1660இல் குத்தகைக்குப் பெற்றிருந்தது. பின்னர் 1870-_73, 1875, 1880, 1889 ஆகிய ஆண்டுகளிலும் ராமநாதபுரம் அரசர் இந்தத் தீவிற்கு அருகில் உள்ள சங்குப்படுகையை குத்தகைக்கு விட்டிருந்தார் என்பதும், இலங்கை கவர்னரின் 1757_-1962 நினைவு ஏடுகளில் குறிப்பிடப்பட்டிருப்பதும், 1766இல் கண்டி அரசரால் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமும், 1845ஆம் ஆண்டில் இலங்கை லெப்டினன்ட் கவர்னர் எழுதிய கடிதமும், இத்தீவு ராமநாதபுரம் அரசரின் ஆளுகையிலும்,கட்டுப்பாட்டிலும் இருந்தது என்பதற்கான ஆதாரங்களாகும். இந்தக் கால கட்டத்தில் ராமநாதபுரம்அரசர் ஆங்கிலேய அரசுக்குக் கட்டுப்பட்ட குறுநில மன்னராக இருந்தார். இந்தியா விடுதலை பெற்ற பின்இத்தீவு தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1250 சர்வே எண்ணில் கட்டுப்பட்டிருந்தது. தமிழ்நாடுஅரசு வெளியிட்ட ராமநாதபுரம் மாவட்ட ஆவணத் தொகுப்பேட்டிலும் (கெஜட்டிலும்) இவ்விவரம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

1974ஆம் ஆண்டு இந்திய அரசு இலங்கை அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட கால கட்டத்திலேயே,மத்திய அரசு அந்த ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்று, 21.-8.-1974 அன்று திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், நான் முதலமைச்சராக இருந்தபோதே தமிழகச் சட்டப் பேரவையில் ஒரு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

1974ஆம் ஆண்டு இந்தியா இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட போது நாடாளுமன்றத்தில் அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 23-.7.-1974 அன்று அந்த ஒப்பந்தத்தின் நகலை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுவரண்சிங் தாக்கல் செய்த போது, தமிழகத் துக்குச் சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று தி.மு.கழகத்தின் சார்பில் இரா.செழியன் நாடாளுமன்றத்தில் கூறினார். பார்வர்டு பிளாக் கட்சியின் உறுப்பினராக இருந்த அருமை நண்பர் மூக்கையா தேவர், எனது இராமநாத புரம் தொகுதிக்குள் அடங்கியுள்ள இத்தீவை இலங்கைக்கு வழங்கியது அரசியல் சட்டத்துக்கு முரணானது என்றார். இலங்கையின் நட்பை பெறுவதற்காகவே ரகசியபேரம் நடத்தி கச்சத்தீவைத் தானமாக வழங்கியுள்ளது என்று வாஜ்பாய் பேசினார். இப்படிப்பட்ட கருத்துக்களை மாநிலங்களவையில் கழகத்தின் சார்பில் எஸ்.எஸ். மாரிசாமி, சோஷலிஸ்ட் கட்சி சார்பில் ராஜ் நாராயண், முஸ்லீம் லீக் சார்பில் நண்பர் அப்துல் சமது ஆகியோர் தெரிவித்தனர்.

இதையெல்லாம் முற்றிலும் மறந்து விட்டு அல்லது மறைத்து விட்டு, மத்திய அரசு தற்போது தாக்கல் செய்துள்ள பிரமாணத்தில் உண்மைக்கு மாறான தகவல்களைத் தெரிவித்துள்ளது. கச்சத்தீவு, இராமநாத புரம் சேதுபதி அரசருக்குச் சொந்தமானது. இந்தத் தீவை வணிகர்களான ஜனாப் முகமது காதர்மரக்காயருக்கும், முத்துசாமி பிள்ளைக்கும் அரசர் சேதுபதி அய்ந்தாண்டு களுக்குக் குத்தகைக்கு வழங்கியிருந்தார். இதற்கான ஆவணம், இராமநாதபுரம், துணை பதிவாளர் அலுவலக ஆவண எண்.510/570, தேதி 2.-7.-1980, 1947இல் ஜமீன் ஒழிப்புச் சட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு சொந்த மானது. கச்சத் தீவு இந்தியாவிற்குச் சொந்தம் என்பதற்கு பல ஆவணங்கள் உள்ளன.இந்த ஆவணங்களையும், அடிப்படை ஆதாரங்களையும் இந்திய அரசியல் சட்ட நெறிமுறைகளையும் ஆழமாகப் பரிசீலனை செய்து உயர் நீதி மன்றம் நல்ல தீர்ப்பு வழங்கிடும் என்று நாம் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், கச்சத்தீவு இலங்கை வரம்புக்குள் உள்ளது என்று மத்திய அரசு பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்திருப்பது, தமிழகத்திற்குப் பேரிடர் போன்றது; இந்தப் பிரச்சினையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்திடக்கூடியது. மத்திய அரசின் இந்த முடிவு கடும் கண்டனத்திற்குரியதாகும் என்று கலைஞர் எழுதியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-3/83489.html#ixzz36eGGTiu7

தமிழ் ஓவியா said...


கடைசிப் போரின் முதல் பலன்


திரு. காந்தியார் ஆரம்பித்திருக்கும் கடைசிப் போரினால் இந்தியாவுக்கு அரசியல் துறையிலும் சமுதாயத் துறையிலும் பல கெடுதல்கள் ஏற்பட்டு நமது நாட்டின் முன்னேற்றம் தடைப்பட்டுப் போகும் என்று நாம் எழுதியும் பேசியும் வருவது நேயர்களுக்கு நன்றாய் தெரிந்திருக்கும். அதற்கு இப்போதே ஒரு தக்க ருஜுவு ஏற்பட்டுவிட்டது.

அதாவது சாரதா சட்டம் சிறிது ஆட்டம் கொடுத்து விட்டதேயாகும். பார்ப்பனர்கள் பெரும்பாலும் திரு. காந்திக்கு உதவியாயிருப்பதாகவும் காந்தி இப்போரில் மிக்க அக்கறை இருப்பதாகவும் இது சமயம் காட்டிக் கொண்டிருப்பதின் பல இரகசியங்களில் முக்கியமானது இந்த சாரதா ஆக்டை ஆடச் செய்வதற்காகவேயாகும்.

உப்பு சத்தியாக்கிரகத்திற்குப் பயந்து கொண்டுதான் சர்க்கார் சாரதா சட்டத்தில் பின்வாங்கக் கூடுமே ஒழிய மற்றபடி சாரதா சட்டம் தப்பு என்றோ சர்க்காரார் தாங்கள் செய்தது பிசகு என்றோ கருதி அல்ல.

உப்பு சத்தியாக்கிரகம் முடிவு பெறுவதற்குள் வைதிகர்கள் இதுபோல் அநேக காரியங்கள் சாதித்துக் கொள்ளப் போகின்றார்கள் என்பது நமக்குத் தெரியும். இவ்விதக் கெடுதியை திரு. காந்தியைப் போன்ற தலைவர்களைக் கொண்ட இந்திய மக்கள் அடைவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

எப்படி இருந்தாலும் நமது நாட்டில் அரசாங்கத்தார் சீர்திருத்தம் செய்ய இசைந்தாலும்கூட அதை நடைபெற வொட்டாமல் தடுப்பவர்கள் இந்தியர்கள் தானா அல்லவா? பொது மக்கள் பிரத்தியட்சத்தில் அறிந்து கொள்ள இதனாலாவது ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டதைக் குறித்து ஒரு விதத்தில் நமக்கு மகிழ்ச்சியேயாகும்.

ஏனெனில் நமது நாட்டில் சில போலி தேசிய வீரர்கள் சமுதாய முன்னேற்றத்திற்கு சர்க்காரே காரணம் என்று பேசி மக்களை ஏய்ப்பதற்குச் சரியான பதிலாகும். ஆனாலும், இது விஷயத்தில் இது உண்மையா யிருக்குமானால் சர்க்காருடைய நடவடிக்கையை நாம் அழுத்தமாகக் கண்டிக்கின்றோம்.

கண்டிக்கின்றோமென்பது போலி தேசிய வீரர்களைப் போல் வாயினாலும் எழுத்தினாலும் மாத்திரம் அல்ல என்றும் அதற்கு அறிகுறி காரியத்திலேயே காட்டப் போகின்றோமென்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

உணராமல் சாரதாச் சட்டத்தை சர்க்கார் திருத்து வார்களேயானால், வைதிகக் கூச்சலுக்குப் பயப்படுவார் களேயானால் அது கடைசிப்போரின் முதல் பலனாகுமே ஒழிய வைதிகர்களின் வெற்றி என்பதாக நாம் ஒரு காலமும் ஒப்புக்கொள்ள மாட்டோம். இது மாத்திரமல்லாமல் கடைசிப்போர் முடிவு பெறுவதற்குள் இதுபோல் இன்னும் அநேகக் கெடுதிகள் ஏற்படப்போவதையும் எதிர்ப் பார்த்துதான் ஆகவேண்டும்.

- குடிஅரசு - கட்டுரை - 13.04.1930

Read more: http://viduthalai.in/page-7/83445.html#ixzz36eHvBqDD

தமிழ் ஓவியா said...

அன்று ஹீரோ... இன்று வில்லன்!

அய்யர் நடத்தும் அக்சயா ரகசியங்கள் அம்பலம்


2010ஆம் ஆண்டு யூடியூப், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் சிஎன்என் ஹீரோ (CNN Heroes) போட்டிக்கு நமது இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவளியுங்கள் என்று விளம்பரம் வந்தது. உலக அதிசயமாக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஓட்டுப் போடுங்கள் என்றாலும் என்ன அதிசயம் என்றும் கேட்காமல் ஓட்டுக் குத்தும் நம்மவர்கள் இந்தியரை ஆதரிப்போம் என்று கிளம்பினார்கள். அவர் பெயர் நாராயணன் கிருஷ்ணன். இளைஞர். அய்ந்து நட்சத்திர விடுதிகளில் சமையலராகப் பணியாற்றியவர். ஆதரவற்றோர் பலர் உண்ண உணவின்றி தவிப்பதையும், ஒரு பெரியவர் தன் கழிவையே உண்ண முயற்சித்ததையும் கண்டு இந்தப் பணியைத் தொடங்கினேன். தேடித் தேடி உணவற்றோருக்கு உணவிடுவதைத் தொண்டாகச் செய்கிறோம் என்று வீடியோவில் பேசினார். ஆதரவற்றோர் காலில் விழுந்து கும்பிடுவதையும் அவர்களை அணைத்து குளிப்பாட்டுவது முதல் சேவை செய்வதையும் வீடியோவில் காட்டியதும் சிந்திய கண்ணீரோடு ஓட்டுக்குத்தி அவரை சிஎன்என் ஹீரோவாக்கி விட்டுத்தான் ஓய்ந்தார்கள். இப்போது அவரது தொண்டு நிறுவனமான அக்சயா, அமெரிக்கா வரை கிளை பரப்பியுள்ளது. அந்த நாராயணன் கிருஷ்ணன் இப்போது கிருஷ்ணன் அய்யர்.

அன்று சிஎன்என் ஹீரோ விருது வாங்கி உலகப் புகழ் பெற்ற அக்சயா நிறுவனமும், கிருஷ்ண அய்யரும் இன்று வில்லன் படத்தின் கிட்னி திருடும் வில்லன் போல குற்றச்சாட்டுக்கு ஆளாகி நிற்கின்றனர்.

சில நாட்களுக்கு முன் அக்சயா தொண்டு நிறுவனத்தின் சுற்றுச் சுவற்றில் நிர்வாணத்துடன் ஏறிக் குதித்து, வெளியில் வேலை செய்த பெண்களிடம், தன்னைக் காப்பாற்றும்படி கூக்குரலிட்டு ஓடிவந்துள்ளார் ஆயிஷா என்ற இளம்பெண். உடுத்த உடை கொடுத்து, சாப்பாடு கொடுத்து கிராம நல அலுவலரின் உதவியுடன் அருகில் வேலை செய்த கொடிமங்கலம் என்ற ஊரைச் சேர்ந்த பெண்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அக்சயா ஆசிரமத்தில் சேவையோ தொண்டோ நடைபெறவில்லை. அனாதைகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் உடல் உறுப்புகளை விற்பனை செய்கிறார்கள். சுயமாகச் சிந்திக்க விடாமல் தினமும் மூன்று முறை போதை ஊசி போடுகிறார்கள். பாதி சாமத்தில் பெண்கள் அலறும்போது, ஜன்னல் வழியாகப் பார்த்தால் அடுத்த அறையில் ஆபாசப் படம் வீடியோ எடுப்பதையோ நிர்வாணமா ஆடவைத்துப் படம் எடுப்பதையோ பார்க்கலாம். ஆடைகளைக் கலைய மறுக்கும் பெண்களை அடிப்பார்கள். வாரம் ஒருமுறை யாராவது வெளிநாட்டுக்காரர்களைக் கூட்டிவந்து எங்களை வரிசையா நிக்க வச்சுப் பார்ப்பார்கள். அடுத்த 2 நாளில் அவங்க காட்டுனவங்க பிணமாகிடுவாங்க. சாகிறவங்க எல்லோரும் நைட்லதான் சாவாங்க. அதுவும் மயக்க மருந்துகூட கொடுக்காமல் உறுப்புகளை அறுத்தெடுக்கும் கொலை. ராத்திரியோட ராத்திரியா எரிச்சுடுவாங்க அல்லது புதைச்சிடுவாங்க. ஜூன் 4ஆம் தேதி வந்த வெள்ளைக்காரன் என்னை அடையாளம் காட்டிட்டுப் போனதிலிருந்து எனக்குப் பயம் வந்திடுச்சு. கூட இருந்த பொண்ணுங்க ஆயிஷா, உனக்கு அய்ந்தாம் நைட் ஆபரேஷனாம்னு சொல்லி அழுதாங்க. குளிக்கிறதாச் சொல்லிட்டு யூனிபார்மைக் கழட்டிப் போட்டுட்டு ஓடிவந்து இவர்களிடம் அடைக்கலம் புகுந்தேன் என்று கூறியுள்ளார்.

ஆயிஷா சொன்ன தகவல்கள் குறித்து, கொடிமங்கலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் கேட்டபோது,

அக்சயா ஆசிரமத்தில் நிறைய தப்புகள் நடப்பது உண்மை. மதுரை பெரியாஸ்பத்திரியில்கூட இவ்வளவு பேர் சாவதில்லை. மாதத்துக்கு 20, 25 பிணங்களை நாகமலை சுடுகாட்டுல எரிக்கவோ புதைக்கவோ செய்றாங்க என்று கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

மேலும், ஆயிஷாவுக்கு ஆடை கொடுத்து உதவிய பெண் கூறும்போது, அந்த ஆசிரமத்தில பொண்ணுங்க அலறுகிற சத்தம் நல்லா கேட்கும். நாம யாரும் அதுக்குள்ள போக முடியாது. இப்பக்கூட போலீசு ஆபீசர்களைக்கூட உள்ள விடமாட்றாங்க. அந்த ஆசிரமக்காரங்களைப் பார்த்து போலீசே பயப்படுதே என்று கூறியுள்ளனர்.

பழைய வி.ஏ.ஓ.வும் உதவியாளரும்கூட இதைப் பத்தி என்கிட்ட சொல்லி இருக்காங்க. கடந்த 6 மாதத்திற்குள் 50_க்கும் அதிகமான சாவுகள் நடந்திருக்கின்றன என்று சொன்னார்கள். ரொம்ப டவுட்டாதான் இருக்கு. போலீஸ்தான் விசாரித்து நடவடிக்கை எடுக்கணும். பணத்தால் எதையும் சரிக்கட்டிவிட முடியும்னு அந்த நிர்வாகம் எண்ணிக் கொண்டிருப்பதாகவும் கேள்விப்பட்டேன் என்று பொறுப்பு வி.ஏ.ஓ.வாக இருக்கும் திரவியம் கூறியுள்ளார்.
உடற்கூறு பரிசோதனை இன்றி, ஊர் அலுவலருக்குத் தகவலும் இன்றி எரிக்கப்பட்ட உயிர்கள் பற்றியும், உடலுறுப்புகள் திருடப்பட்டனவா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் விசாரித்து அறிக்கை தரவேண்டுமென்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஊடகங்கள் உருவாக்கும் ஹீரோக்களின் மீதான பிம்பமும் நிஜத்திலும் உடையும் காலமிது! கிருஷ்ணன் அய்யர் மீது உருவாக்கப்பட்ட பிம்பம் உடைந்து கோரமுகம் வெளிப்படத் தொடங்கியுள்ளது.

தமிழ் ஓவியா said...

ஆப் கி ரெட்டை நாக்கு சர்க்கார்!.2012ல் ரயில் கட்டணத்தை உயர்த்திய போது அப்போதைய பிரதமருக்கு நரேந்திரமோடி கடிதம் எழுதி கட்டண உயர்வை வாபஸ் பெறக்கேட்டார். அதில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்பாக, ரயில் கட்டணத்தை உயர்த்தி இந்த அரசு நாடாளுமன்றத்தை புறக் கணித்துவிட்டது என்றும் மோடி குற்றம் சாட்டியிருந்தார்.

இப்போது மோடி அரசு, பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பு ரயில் கட்ட ணத்தை உயர்த்தியுள்ளது. எனவே இதை ஆப் கி பார் டபுள் ஸ்பீக் சர்க்கார் என்று அழைக்கலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரசின் திக் விஜய் சிங்.

தமிழ் ஓவியா said...

கர்ப்ப காலத்தில் உறவு - இந்திரன் தந்த வரமா?


பிரம்மஹத்யம் அஞசலைன
ஜகரஹ யத் அபிஸ்வராஹ
சாமவதசரந்தோ தத அக்ஹம் புதா(ஹ)னம்
ப்ஹுமய் அம்பு(ஹ) துர்ம யொஸித்பயாஸ்
சதுரத வயப்ஹஜத த(ஹ)ரிய(ஹ) - பகவத் கீதை

மேலுள்ள வேதமொழிச் செய்யுளின் விளக்கம் இதுதான்.

இந்திரன் தெரியாத்தனமாக ஒரு பார்ப்பனனைக் கொலை செய்துவிட்டானாம். அவனுக்கு மிகவும் கொடுமையான பிரம்மஹஸ்தி தோசம் பிடித்துவிட்டதாம். அதற்காக கவலைப்படத் தேவையில்லை. அதைப் பங்கிட்டுக் கொடுக்க பார்ப்பனர்களுக்கு மாத்திரம் அனுமதியுள்ளது. தன்னுடைய தோசத்தைப் பெண்களுக்குப் பகிர்ந்து கொடுத்துவிட்டானாம். அதற்குப் பரிகாரமாக பெண்கள் என்ன வரம் கேட்டார்கள் தெரியுமா? அதாவது தனது கர்ப்பகாலத்திலும் ஆண்களுடன் உறவு கொள்ளும் வரத்தை இந்திரனிடம் கேட்டு, கர்ப்பகாலத்திலும் உறவு கொள்ளலாம் என்ற வரத்தைப் பெற்றார்களாம். பெண்களுக்கு வரம் கேட்பதற்கு வேறு விசயமே இல்லை பாருங்க! எதிலும் இதே சிந்தனைதான்.- சரவணா இராஜேந்திரன்

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் பெண்கள், சிறுமியர் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. அதேபோல், குழந்தைகளைப் புறக்கணிக்கும் நடைமுறையும் அதிகமாக உள்ளது.

பாதிக்கப்படும் பெண்கள் புகார் கொடுக்க முன்வருவதில்லை. அவர்களுக்கு ஆதரவாக சமுதாயத்தினர் இருப்பதில்லை. இந்நிலை, சமீபகாலமாக உச்சத்தை அடைந்துள்ளது. பெண்கள், குழந்தைகளைப் பாதுகாக்கும் உயரிய பொறுப்பிலிருந்து இந்திய அரசு தவறிவிட்டது.

பொதுவான சட்டங்கள் இருந்தபோதிலும் அவை சரியானபடி நிறைவேற்றப்படுவதில்லை. இந்நிலை மாற வேண்டும்.

- பென்யாம் மெஜ்முர்,
அய்.நா. குழந்தைகள் உரிமைக் குழுத் துணைத் தலைவர்.

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் பாலியல் வன்கொடுமை அதிர்ச்சி தரும் விவரம்


இந்தியாவில் ஜாதியின்பேரால் இயல்பாகக் கருதப்பட்டு நடந்துவந்த பாலியல் வன்கொடுமை ஆங்கிலேயரின் வருகைக்குப்பின்தான் வெளிஉலகத்திற்குத் தெரிய வந்தது. 1872-ஆம் ஆண்டில் டில்லிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த பாலியல் வன்கொடுமைபற்றி பஞ்சாபின் லெப்டினென்ட் கவர்னராக இருந்த சர் ஹென்றி டேவிஸ் என்பவர் தனது நாள்குறிப்பில் பின்வருமாறு எழுதியுள்ளார். கோதுமை வயல்வெளியில் 12 வயதுப் பெண்ணை சிலர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகவும் அந்தப் பெண் அந்த இடத்திலேயே மரணமடைந்து விட்டதாகவும், செய்தி கிடைத்தது.

அது சில உயர்ஜாதிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமம். ஆகையால் யாரும் பயந்து கொண்டு புகார் செய்யவில்லை. இந்த நிலையில் கிராமத்தினரே இச்செயலுக்குத் தீர்ப்புக் கூறுகின்றனர். சுமார் 8 பேர் சேர்ந்து செய்த இச்செயலை நாங்கள் கண்டிக்கிறோம், அதே நேரத்தில் அந்தப்பெண் ஏன் தனியாகச் சென்றாள். அந்தப் பெண்ணைத் தனியாகச் செல்ல அனுமதியளித்த அவரின் அம்மாதான் இதற்கு முக்கியக் காரணம். ஆகவே, செத்துப்போன அந்தப் பெண்ணின் அம்மா ஊருக்குப் பொதுவான கோதுமை வயலுக்கு இரண்டு வண்டி உரம் கொடுக்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் அனைவரும் ஊர்வயலுக்கு எந்தக்கூலியும் வாங்காமல் வேலை செய்ய வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியதாக எழுதியுள்ளார். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த இந்தக் கொடுமையை ஆங்கில அதிகாரியின் நாள்குறிப்பு மூலம் அறிகிறோம்; இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகு ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? இன்றுவரை தொடர்கிறதே! சமீபத்தில் மேற்கு வங்கத்தில் பாலியல் கொடுமை செய்த நபர்கள் பஞ்சாயத்திற்கு சாராயம் தண்டமாகத் தரவேண்டும் என்று தீர்ப்புக் கூறியிருக்கிறார்கள். சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டில் ஊடகங்களின் வளர்ச்சி இந்தியாவில் நடந்த பாலியல் கொடுமைகளின் கோரத்தை வெளிக்கொண்டு வந்தது. இந்தியா சுதந்திரமடைந்த பின்பும் அதற்கு முன்பும் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்ட பெண்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பெண்களுமே ஆவர். இவர்கள் மீது வன்கொடுமை திணிக்கப்படும் போது யாரும் தட்டிக்கேட்க வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் அண்மையில் நடந்த உத்தரப்பிரதேசப் படுகொலைகள். இங்கு சட்டம் ஒழுங்கு என்ற பார்வையில் பார்த்தாலும் மதம் மற்றும் ஜாதிப்போர்வையில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

தமிழ் ஓவியா said...

தில்லியில் மருத்துவ மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு நாடு முழுவதும் பெரிய அதிர்ச்சியலை எழும்பி புதிய சட்டங்கள் பற்றிய குரல் ஓங்கி ஒலித்தது. ஆனால் அந்தச் சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த அதிர்வலைகள் ஓய்வதற்குள் நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு அருகே வீட்டில் தனியாக இருந்த 4-ஆம் வகுப்புப் படிக்கும் சிறுமி பாலியல் வன்முறைக்குள்ளான கொடுமை நடந்துள்ளது.
இவை மட்டுமல்ல, தமிழகத்தில் அண்மைக்காலமாக தொடர்ந்து பதிவான பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய புள்ளி விவரங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இந்திய அரசின் குழந்தைகள் நலத்துறையானது குழந்தைகள் மீதான பல்வேறு வன்முறை குறித்து விரிவான கருத்துக் கணிப்பை மேற்கொண்டது. அதில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பதின்மூன்று மாநிலங்களில் 12,447 குழந்தைகளிடம் மேற்கொண்ட ஆய்வில் 53விழுக்காடு குழந்தைகள் ஏதோ ஒரு பாலியல் வன்முறைக்கு ஆளானதாகவும், 21.9சதவீத குழந்தைகள் மோசமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சுமார் 7 லட்சம் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றார்கள். விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்களில் 15 விழுக்காட்டினர் பதினைந்து வயதுக்குட்பட்டவராவர். 2006இல் துளிர் எனும் அமைப்பு 2211 சென்னைக் குழந்தைகளிடம் ஆய்வு செய்ததில் 42 விழுக்காட்டினர் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. தில்லியில் சாக்ஷி எனும் தொண்டு நிறுவனம் செய்த ஆய்வில் 350 குழந்தைகளில் 63 விழுக்காட்டினர் குடும்ப உறுப்பினர்களால் பாலியல் வன்முறைக்குப் பலியானது தெரிய வந்தது.

தமிழகத்திலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்குக் குறைவில்லை. பெண்களுக்கு எதிராக கடந்த 2008-இல் 573 பாலியல் குற்றங்களும், 1160 கடத்தலும், 1548 குடும்ப வன்கொடுமைகளும் பதிவாகியுள்ளன. 2009-இல் 596 பாலியல் குற்றங்களும், 2010-இல் 686 பாலியல் வன்கொடுமைக் குற்றங்களும் பதிவாகியுள்ளன. இந்த ஜூன் மாதம் மாத்திரம் தக்கலையில் 13 வயது சிறுமி, பொள்ளாச்சியில் ஆதரவற்றோர் விடுதியில் தங்கிப் படித்த இரண்டு சிறுமிகள், மற்றும் கரூர், மதுரை, சாத்தூர் சென்னை என 12 பாலியல் வன்கொடுமைகள் பதிவாகியுள்ளன. இதில் 8 வழக்குகள் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளாகும். 2011-ஆம் ஆண்டு 677 பாலியல் வன்கொடுமைக் குற்றங்களும், 2012ஆ-ம் ஆண்டு 528 குற்றங்களும் 2013-இல் 1019 பாலியல் வன்கொடுமைக் குற்றங்களும் பதிவாகியுள்ளதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கடந்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளதாக தேசிய குற்றப்பிரிவு புலனாய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.

தேசிய செய்திப் பத்திரிகைகளில் வெளியான பாலியல் வன்முறைச் செய்திகளில் கடந்த மாதம் மட்டும் உத்திரப்பிரதேசத்தில் 4, மத்தியபிரதேசத்தில் 5, ராஜஸ்தானில் 5, டில்லியில் 3, பிகாரில் 2, தமிழகத்தில் 7, மேற்குவங்கத்தில் 5, ஹரியானாவில் 2, மராட்டியத்தில் 1 என பதிவாகியுள்ளது. அந்த அந்த மாநில மாவட்டச் செய்திகளை எடுத்துக்கொண்டால் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் இப்படியாக நாடு முழுவதும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் நடக்கும் சம்பவத்தை மாத்திரம் முன்னிறுத்தி மற்றபகுதிகளில் நடக்கும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை மறைப்பதை சமூகவிரோதிகள் சாதகமாகவே எடுத்துக்கொள்வார்கள். ஊடக மறைப்பு அவர்களுக்கு மேலும் துணிச்சலைஊட்டி அதிகமாக பாலியல் வன்கொடுமைகள் நடக்குமே தவிர இதற்குத் தீர்வு ஒன்றும் இராது.... டில்லி நிர்பயாவுக்கு மட்டுமல்ல... பொள்ளாச்சி சிறுமிகளுக்கும் சேர்த்து ஊடகங்கள் பேசும்போதுதான், போராட்டங்கள் நடக்கும்போதுதான் தீர்வை நோக்கிய திக்கில் நாம் நடக்கிறோம் என்று பொருள்

தமிழ் ஓவியா said...

சிவப்புதான் அழகா? விளம்பர வாய்ப்பை மறுத்த நடிகை


சிவப்பழகு கிரீம்கள் என்று நடிகர் நடிகையரெல்லாம் கோடிகளைப் பெற்றுக்கொண்டு மக்களிடம் தாழ்வு மனப்பான்மையை விதைத்துக்கொண்டிருக்க நடிகை கங்கணா ரனாவத் 2 கோடி ரூபாய் விளம்பர வாய்ப்பை மறுத்துள்ளார்.

அதோடு அவர் எழுப்பியுள்ள மனிதத் தன்மையுள்ள கேள்வி சிந்திக்கத்தக்கது. அழகு பற்றி இங்கு நிலவும் கண்ணோட்டம் குறித்து என் குழந்தைப் பருவத்திலிருந்தே புரிந்துகொள்ள முடிந்ததில்லை.

அப்படி இருக்கும் நிலையில், பிரபலமாகக் கருதப்படும் நான் இளைஞர்களிடம் என்ன மாதிரியான முன்னுதாரணத்தை உருவாக்கப் போகிறேன்.

அழகு கிரீம் விளம்பர வாய்ப்பை (ரூ.2 கோடி) மறுத்ததற்கு எந்தவிதக் கவலையும் இல்லை. ஒரு பொது மனுஷியாக எனக்குப் பொறுப்புகள் உள்ளன. என் சகோதரி மாநிறம் கொண்டவள். ஆனாலும் அழகானவள்.

இந்த விளம்பரப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நான் என் சகோதரியை அவமதிப்பதாக ஆகிவிடும். என் சகோதரிக்குச் செய்ய விரும்பாததை இந்த நாட்டுக்கு எப்படி நான் செய்ய முடியும்? என்கிறார் கங்கணா. மற்ற நடிகர்கள் சிந்திப்பார்களா?

தமிழ் ஓவியா said...

ஜாதிகள் ஒழிந்தால் நாடு முன்னேறும்


மைசூர் அருகே சாமுண்டி மலையடிவாரத்தில் உள்ள சுத்தூர் மடத்தில் நடைபெற்ற ஜெகத்ஜோதி பசவண்ணர் ஜெயந்தி விழா(பசவ ஜெயந்தி விழா)வில் கலந்து கொண்டார் கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா.

விழாவில் பேசியபோது, நமது நாட்டில் இன்னும் ஜாதிகள் ஒழியவில்லை. கடந்த 850 ஆண்டுகளுக்கு முன்னே ஜாதிகளை ஒழிக்கப் பாடுபட்டவர் பசவண்ணர். ஜாதிகளை ஒழிக்க நீண்ட காலமாகப் போராட்டம் நடத்தியதுடன் தாழ்த்தப்பட்ட மக்களை ஒன்றாகச் சேர்த்து, மனித ஜாதி ஒன்றே, வேறு எந்த ஜாதியும் இல்லை என உலகத்திற்கு அறிவித்தவர். ஜாதிகளை ஒழிக்க மகாமனே மற்றும் அனுபவ மண்டபங்களை உருவாக்கி அனைத்து மக்களும் சரிசமமாக வாழ நடவடிக்கை மேற்கொண்டவர்.

இன்றுவரை ஜாதிகள் ஒழியவில்லை. ஒவ்வொரு இனத்தினருக்கும் ஒரு ஜாதி உள்ளது. அந்த ஜாதிகளை ஒழிக்க நாம் ஒவ்வொருவரும் பாடுபட்டால்தான் நம் நாடு முன்னேறும். மனிதர்கள் அனைவரும் மனிதாபிமானத்துடன் வாழ வேண்டும். இன்றைய இளைஞர்கள் ஜாதி வெறியைத் தூக்கி எறிய வேண்டும் என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...

ஜெர்மனியில் ஒலித்த பெரியார் குரல்!


ஜெர்மனியின் மிகப் பழைமை வாய்ந்த பல்கலைக் கழகம் கொலோன் பல்கலைக் கழகம். இது 14ஆம் நூற்றாண்டு (1340 ஆண்டு) துவக்கப்பட்ட ஒன்று; இடையில் பிரெஞ்சுப் படையெடுப்பினால் இது நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் துவங்கி நடைபெறும் வரலாற்றைக் கொண்ட பல்கலைக் கழகம். இதனுடன் நமது பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் _ போட்டுள்ளது.இதன் தென் கிழக்காசிய, தென் ஆசிய நாடுகளின் பாடங்கள் தமிழ், மற்றொரு மொழியாராய்ச்சித் துறையின் தலைவராக உள்ள பேராசிரியர் திருமதி யுல்ரிக் நிக்லஸ் அவர்களது அழைப்பினை ஏற்று (வேந்தர் என்ற முறையிலும் திராவிடர் கழகத்தின் தலைவர் என்ற முறையிலும்) ஜெர்மனி நாட்டின் மூத்த பல்கலைக் கழகமான கொலோன் பல்கலைக் கழக விருந்தினராகச் சென்றேன்; என்னுடன் பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் நல். இராமச்சந்திரன் அவர்களும், அவர்தம் அழைப்பினை ஏற்று உடன் வந்திருந்தார்.

ஜூன் 2 பிராங்க்ஃபர்ட் (Frank Furt) அடைந்தபோது, விமான நிலையத்திற்கே வந்து பேராசிரியர் யுல்ரிக் நிக்லஸ் அவர்களும் அவரது துறையில் பணியாற்றும் திரு. சுவன் அவர்களும் வந்து வரவேற்று, எங்களை ரயில் மூலம் கொலோன் நகரத்திற்கு அழைத்துச் சென்று, ஹோட்டல் ஈபீஸில் (Hotel Ibis) தங்க வைத்தனர். அத்துறையின் தலைவரான பேராசிரியர் நிக்லஸ் அம்மையார் அவர்களும் அத்துறையில் பணியாற்றும் தமிழ் கற்கும் ஆர்வலர்களான சுவன் அவர்களது டாக்டர் கிளாடியா அம்மையாரும் எங்களை கவனித்துக் கொள்ள வசதியாகவும், எங்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் மூன்று அறைகளை எடுத்து, அதே ஓட்டலில் எங்களுடன் தங்கி மிகுந்த அன்புடனும், பாசத்துடனும் உபசரித்தனர்!

3ஆம் தேதியில் டிராம் மூலம் (அங்கு நகரங்களில் மிக வசதியான போக்குவரத்து சாதனம் டிராம்) கொலோன் பல்கலைக் கழக வளாகத்திற்கு _- பரந்து விரிந்த பகுதி -_ அதன் பெயர் அதிகார (Albertus Magnus plat) ஆல் பர்ட்டஸ் மேக்னஸ் என்பவர் ஜெர்மன் தத்துவஞானி.

அங்கு பல துறைகளைச் சுற்றிக் காண்பித்தனர். அவரது துறைக்கும் நடந்தே சென்று பார்த்து, பல்கலைக் கழகத்தின் டீன் பேராசிரியர் டாக்டர் ஸ்டீபென் குரோகி அவர்களைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி அவரை பகல் ஒரு மணிக்குச் சந்தித்து நமது பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் பற்றியும் சுருக்கமாக விளக்க, அவரிடம் நமது ஆங்கில நூல்களை பல்கலைக் கழகத்திற்கு அன்பளிப்பாக வழங்கி, அவரும் அன்புடன் வரவேற்று, இரு பல்கலைக் கழகங்களும் விரிவான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதை விளக்கினார். நன்றி தெரிவித்து விட்டு விடுதிக்குத் திரும்பினோம்.

மதிய உணவு, சிறிய ஓய்வுக்குப் பின், மாலை 5 மணி அளவில் கிளம்பி, ஜெர்மனி இந்திய நட்புறவு வாரத்தையொட்டி, கொலோன் பல்கலைக் கழகத்துறையும் இணைந்து பிரபல கொலோன் அருங்காட்சியகம் (மியூசியத்தை) ஒட்டிய பெரிய மண்டபத்தில், திராவிடர் இயக்கமும் - தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளும் என்ற தலைப்பில் ஜெர்மனியின் மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துக் கூடிய ஒரு சிறப்புக் கூட்டத்தில் எனது முதல் சொற்பொழிவு (3.6.2014) நடைபெற்றது. (நிகழ்வுகள் எல்லாம் ஜெர்மனியிலும், ஆங்கிலத்திலும்) மாலை 7.30 மணிக்குத் துவங்கி 9.30 மணிக்கு நிகழ்ச்சி முடிந்தது).

முதலில் ஜெர்மன் இந்திய நட்புறவு கழகச் செயலாளர் ருத்இ.ஹீப் அம்மையார் வரவேற்புரை நிகழ்த்தினார். அடுத்து, பேராசிரியர் நிக்லஸ் அம்மையார் வந்துள்ள விருந்தினர் - பேச்சாளர்களைப்பற்றி அறிமுக உரையாற்றினார்.

அடுத்து, பெரியார் _- மணியம்மைப் பல்கலைக் கழகம் பற்றியும் குறிப்பாக பெரியார் புரா திட்டம் மற்றும் ஆய்வுத் துறைகளைப் பற்றியும் Power Point மூலம் சுமார் 15 நிமிடங்கள் உரையாற்றினேன். அதன்பிறகு Power Point மூலம் மேற்காட்டிய தலைப்பில் தந்தை பெரியார் பற்றிய வரலாறு, தொண்டு, கொள்கை லட்சியங்கள், சிந்தனைகள், மனிதநேயம் தொண்டு, பெரியார் பட்டம் பெண்கள் மாநாட்டில் வழங் கியது; சுயமரியாதை தத்துவம், அறிவியல் தத்துவம் இவைகளைப்பற்றி Power Point முடிந்து, அதன் மேல் தனி விளக்கங்கள் மூலம் சுமார் 45 நிமிடங்கள் உரையாற்றினேன்.

தமிழ் ஓவியா said...

பிறகு கேள்விகளைக் கேட்டவர்க்கு விடையளித்தேன். அது 30 நிமிடங்களுக்கு மேலாக மிக அருமையாக உண்மையாகவே உரையில் ஏற்பட்ட சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் வகையில் அமைந்தது. அனைவரும் வரவேற்று தங்களது மகிழ்ச்சியை முடிவில் எங்களுக்குத் தெரிவித்தனர். கூட்ட முடிவில் அந்த செயலாளர் ருத்இ.ஹீப் அம்மையார் (ஜெர்மனியர்) இவ்வளவு செய்திகள் இந்திய சமூகம்பற்றி எங்களுக்கு இதுவரை தெரியாது. மிகவும் அரிய தகவல்களை நாங்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த சொற்பொழிவு அமைந்திருந்தது என்று தெரிவித்தனர். (புத்தகங்களையும் வாங்கிச் சென்றனர்).

அடுத்த நாள் 4ஆம் தேதி ஜூன் காலை 11 மணியளவில் கொலோன் பல்கலைக் கழக துறையின் கட்டடத்திற்குள் இலங்கை முல்லைத் தீவினைச் சேர்ந்த ராகுலன் சிவநாயகம் அவர்களுக்கும், முல்லைத் தீவைச் சேர்ந்த ஒலிவியா அவர்களுக்கும் சுயமரியாதைத் திருமணம் _- தாலி, வேறு எந்த சடங்கும், சம்பிரதாயம் இன்றி மாலை மாற்றுவதுடன் நடந்தது! முதலில் பேராசிரியர் யுல்ரிக் நிக்லஸ் அம்மையார் அனைவரையும் வரவேற்றார். ஜெர்மானிய மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் ஈழத் தமிழர்களான இருபாலர், பெற்றோர் என சுமார் 40 பேர் வந்திருந்தனர். மணமகள் ஒலிவியா, இத்துறையின் மாணவி. மணமகன் ராகுலன் (இளையர் இயக்கத்தில் தொண்டாற்றியவர்; ஒளிப்பட நிபுணர்).

சுயமரியாதைத் திருமணத்தின் தத்துவத்தையும் விளக்கி தந்தை பெரியார் எப்படித் துவக்கி, இது இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது என்பதை சுமார் 35 நிமிடங்கள் தமிழிலும் சுருக்கி 50 நிமிடங்கள் ஆங்கிலத்திலும் உரையாற்றி, மணமக்கள் உறுதி மொழி கூறி நடத்தி வைத்தேன். மணமக்களது பெற்றோர்களும், உறவினர்களும் வந்திருந்தனர். எல்லோருக்கும் மகிழ்ச்சி. இந்த சுயமரியாதை முறைத் திருமணத்தை முதல் முறையாக பார்த்து, கேட்ட தாய்மார்கள் உட்பட பலரும் பாராட்டினர் - இரண்டு பார்ப்பன நண்பர்களும் வந்து என்னிடம் பாராட்டிப் பேசி விட்டுச் சென்றனர். அன்று (4.6.2014) மாலை 4 மணியளவில் மீண்டும் அதே துறைக்கான வகுப்பறையில் சுமார் 30 பேருக்கு மேல் (பிற பல்கலைக் கழக ஆய்வாளர்கள், பேராசிரியர் சிலர் உட்பட) கலந்து கொண்டனர்.

தமிழ் ஓவியா said...

இந்தி எதிர்ப்பு இயக்கம் அதன் தாக்கங்கள் பற்றிய சொற்பொழிவு சுமார் 40 நிமிடங்கள் Power Point Presentation விளக்கவுரையுடன் நிகழ்த்தினேன் பலரும் கேட்டனர்; குறிப்பெடுத்துக் கொண்டனர். பிறகு 35 நிமிடங்கள் கேள்வி _ பதில்கள் நேரத்தில் பலரது சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தேன். பிறகு நிகழ்ச்சி 5.45 மணி அளவில் முடிந்தது.

அடுத்த நாள் (5.6.2014) ஜெர்மனியின் மற்றொரு பெரிய பல்கலைக் கழகமான ஆகென் (‘Rwth Aachan’ University) அழைப்பை ஏற்று நாங்கள் (துணைவேந்தர், பேராசிரியர் நிக்லஸ், ஜெர்மெனி கொலோன் பல்கலை சுவான், நான் ஆகிய நால்வரும்) ஆகேன் நகருக்கு ரயில் மூலம் சென்றும் அந்த பல்கலைக்கழக முகப்பில் பேராசிரியர் சார்ட்ஜி பன்னாட்டுத் தொடர்பாளர் ஆண்ட்சன் ஆகியோர் எங்களை வரவேற்று, அழைத்துச் சென்றனர். இரு நாட்டுக் கொடிகள் பறந்தன.

அப்பல்கலைக் கழகத்தின் மாணவர் - வளர்ச்சிகல்வித் துறை _- மற்றவைகள்பற்றி விளக்கி, மதியம் எங்களுக்கு விருந்தளித்து, மகிழ்வித்தனர்.

அப்பல்கலைக்கழக அடையாள வெள்ளி சாவிகளை தந்தனர். மிகப் பெரிய திட்டமான 2000 கோடி யூரோ திட்டம் மெலட்டன் என்ற இடத்தில் எல்லாத் துறைகளையும் ஒரே பகுதியில் அமைத்திட திட்டமிட்டு 2003இல் துவங்கி, 2023இல் முடிக்க விருப்பதை விளக்கினர். மாலை 5 மணி அளவில் கொலோன் துறைத்தலைவர்களுடன் விடைபெற்று கொலோன் நகரத்திற்குத் திரும்பினோம்.

மறுநாள் 6.6.2014 அன்று கொலோன் பல்கலைக் கழக தமிழ்மொழி ஆராய்ச்சித் துறையில் _- பேராசிரியர் நிக்லஸ் அவர்கள் முன்னிலையில் _- திராவிடர் இயக்கம் இந்தி எதிர்ப்பு -_ மற்றும் உரையாற்றிய பலவற்றைப் பற்றிய கலந்துரையாடல் ஒன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. நான் தந்தை பெரியார் வாழ்க்கை, லட்சியங்கள், சாதனைகள் பற்றி முதலில் ஒரு சிறு அறிமுக உரை நிகழ்த்திய பின், முழு நேர கேள்வி பதில் அடங்கிய ஒரு கலந்துரையாடல் நிகழ்வு துவங்கி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்தது!

பல்வேறு சந்தேகங்களைக் கேட்டனர், அத்துறை மாண வர்கள் மட்டுமின்றி, வேறு துறைகள், வேறு பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர்களும் வந்து கலந்து கொண்டு நல்ல ஆய்வு அரங்கமாக அதனை பயன்படுத்திக் கொண்டனர். வெளிநாட்டுப் பல்கலைக் கழகத் துறைகள் பெரியார் பாடங்களைத் தேடுகின்ற நிலை!

நம் தந்தை 1932இல் ஜெர்மனி நாட்டிற்குச் சென்ற அதே ஜூன் திங்களில் அவரது தொண்டனும் வாழ்நாள் மாணவனும் ஆகிய எனக்குக் கிடைத்த வாய்ப்பு அவர்தம் வாழ்வும் வாக்கும் சாதனையும்பற்றி விளக்கி அவர்களில் பலரைச் சிந்திக்க வைத்த வாய்ப்பு, நாம் -_ நமது இயக்கம் _- பெற்ற பெரு வாய்ப்பு -_ பேறு அல்லவா?

1. வெளிநாட்டுப் பல்கலைக் கழகத் துறைகள் பெரியார் பாடங்களைத் தேடுகின்ற நிலை!

2. அங்கே நடந்த சுயமரியாதைத் திருமணம் (தாலி, சடங்குகள், ஜாதி, மத மறுப்புக் கொள்கை வெற்றிச் சின்னம் அல்லவா?)

3. எந்த ஜெர்மனி ஆரிய வடமொழிக்கு முதலில் பெருமை சேர்த்ததோ, அதே ஜெர்மனியில் இப்போது திராவிடப் பண்பாடு மொழியின் சிறப்பு பெரியார் இயக்கம் பற்றி பரப்புரை செய்யப்பட்டு அமைதிப் புரட்சி.

4. உடனடியாக பெரியார் பன்னாட்டு மய்யம் அமைப்பு அங்கு முகிழ்த்துக் கிளம்பிய நல்விளைவு.

5. பெரியாரியல் பாடங்கள் -_ பட்டயம், சான்றிதழ் படிப்புகளை ஜெர்மனி கொலோன் பல்கலைக் கழகம் ஏற்றுச் செயல்படத் தயார் என்ற ஜெர்மனி பேராசிரியர் அம்மையாரின் விழைவு நம்மை மெய் சிலிர்க்க வைத்தது!

இதைவிட நமக்கு வேறு என்ன பேறு - மகிழ்ச்சி வேண்டும்!

கி.வீரமணி
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள்


தமிழகத்தில் 6 வயது முதல் 14 வயது வரை பள்ளிக்குச் செல்லாமல் 27,400 குழந்தைகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் 2,794 குழந்தைகளுடன் முதல் இடத்திலும் காஞ்சிபுரம் மாவட்டம் 2,225 குழந்தைகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது. நீலகிரி மாவட்டம் 153 குழந்தைகளுடன் இறுதி இடத்தில் உள்ளது.

இந்தக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தாலும், சில காரணங்களால் குழந்தைகள் இடையிலேயே கல்வியை விடும் நிலை ஏற்படுகிறது. எனவே, இதனையும் கண்காணித்து தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர், பெற்றோரிடம் பேசி மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று கணக்கெடுப்பினை மேற்கொண்ட பள்ளி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர், பஞ்சாயத்து நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

2013ஆம் ஆண்டு 10,800 குழந்தைகள் என்ற நிலையில் இருந்தது தற்போது 27,400 என உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

பிராமணாள் கபே!ஜாதிப் பெயரில் பல நிறுவனங்கள் செயல்படுகின்றன. அப்படி தங்கள் ஜாதிப் பெயரை வெளிப்படுத்துவதைப் பெருமையாகக் கருதுகின்றனர். ஆனால் பிராமணர்கள் பயன்படுத்தக்கூடாதா? பிராமணர்கள் மற்றும் பிராமணியத்திற்கு எதிராக திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் பேசுவதற்குத் தடைவிதிக்க வேண்டும் என சிவகாசிப் பார்ப்பனர் ஒருவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள செய்தியை நாளிதழ்கள் வெளியிட்டுள்ளன.

எந்த ஜாதிப் பெயரையும் பொது இடங்களில் பயன்படுத்தக்கூடாது என திராவிடர் இயக்கம் வலியுறுத்தி வந்ததால்தான், கடந்த திராவிட இயக்க ஆட்சிக் காலங்களில் பெரும்பாலான தெருக்களின் பெயர்களில் ஒட்டி இருந்த ஜாதி வால் நறுக்கப்பட்டது. தற்போதும் இந்த நிலை தனியார் நிறுவனங்களில் தொடர்வது விரும்பத்தக்கதல்ல என்பதோடு அகற்றப்பட வேண்டியவை என்பதிலும் இருவேறு கருத்துக்கு இடமில்லை. ஆனால் நாடார் மெஸ்சும், தேவர்ஸ் பிரியாணி கடையும், பிராமணாள் கபேயும் ஒன்றா?

தேவரும், நாடாரும், அய்யரும், அய்யங்காரும் ஜாதிப்பெயர்கள். பிராமணாள் என்பது ஜாதிப்பெயரா? வர்ணாசிரம தர்மப்படி இந்துக்கள் பிராமணன், வைசியன், சத்திரியன், சூத்திரன் என நான்கு வருணங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. காலப்போக்கில் வைசியனும், சத்திரியனும், மறைந்து பிராமணன், சூத்திரன் என்கிற இரண்டு வர்ணங்கள் மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது. சூத்திரன் என்பவன் அடிமைப் போரில் புறமுதுகிட்டு ஓடியவன். பிராமணர்களுக்கு சேவகம் செய்யக்கூடியவன். பிராமணர்களின் வைப்பாட்டி (தேவடியாள்) மக்கள் என்று மனுதர்மத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

எனவே, ஒருவன் தன்னைப் பிராமணன் என்று சொல்லிக் கொள்வானானால் மற்றவர்கள் சூத்திரர்கள் எனப் பொருள்பட்டுவிடும் என்பதாலேயே பிராமணாள் என்கிற சொல்லை எதிர்க்கிறோம்.

கடந்த அறுபது ஆண்டுகளுக்கு முன்னரே தந்தை பெரியார் அவர்கள் பிராமணாள் கபே பெயர்ப் பலகை அழிப்புப் போராட்டத்தை அறிவித்தார்கள். சென்னையில் இயங்கி வந்த பிராமணாள்(முரளி)கபே முன்பு நடைபெற்ற தொடர் போராட்டத்தில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திராவிடர் கழகத் தோழர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்னை நோக்கித் திரண்டனர். எங்கள் ஊர் மயிலாடுதுறை தோழர்களும் பலர் அதில் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் சென்னையில் தங்கவைக்கப்பட்டு தினசரி அய்ம்பது தோழர்கள் புறப்பட்டு முரளி கபே வாயிலில் நின்று வாடிக்கையாளர்களிடம் தமிழர்களை இழிவுபடுத்தும் கடைக்குச் செல்லவேண்டாம் எனக் கேட்டு மறியலில் ஈடுபட்டனர்.

கடைத் தொழிலாளர்கள் மூலம் கழகத் தோழர்களைத் தாக்கிய வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்றது. போராட்டம் தொடர்ந்தது. தொடர்ந்து கடையை நடத்த இயலாத நிலையில் கடை உரிமையாளர் தந்தை பெரியார் அவர்களிடம் நேரில் வருத்தம் தெரிவித்து கடையின் பெயர்ப் பலகையை மாற்றினார். அதனைத் தொடர்ந்து அங்கங்கிருந்த ஒன்றிரண்டு பிராமணாள் பெயர்ப் பலகைகளும் காலப்போக்கில் மறைந்து போயின.

தற்போது 60 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆரியம் கோலோச்சுகின்ற நிலையில் பார்ப்பனியம் படமெடுத்தாடத் தொடங்கியிருக்கிறது. ஆரிய பவன்களும், உடுப்பி ஹோட்டல்களும்கூட நம் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றன. தேவைப்படும்பொழுது அவற்றை எதிர்த்தும் கிளர்ச்சிகள் நடைபெறுவது உண்டு. அது வேறு, பிராமணாள் கபே அழிப்பு என்பது இன இழிவு ஒழிப்பு!. மான உணர்வுள்ள, சுயமரியாதை உள்ளம் கொண்ட எவனும் இதைச் சகித்துக்கொண்டிருக்க முடியாது. எதிர்த்துப் போராடவே செய்வான். கொசுறுச் செய்தி: சிவகாசிப் பார்ப்பனர் தொடுத்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்துவிட்டனர்.

- கி.தளபதிராஜ்

தமிழ் ஓவியா said...

பிரேசிலின் “சேம் சைடு கோல்’’


ஜூன் 21, 2014 பிரேசில் நாட்டின் மினெஸ்ரோ (Mineirao) நகரில் கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டிருக்கும் கால்பந்து விளையாட்டரங்கம் ஆர்ப்பரிக்கிறது. உலகெங்கிலும் இருந்து பல கோடி ரூபாய்கள் செலவழித்து மில்லியனர்கள் பலர் அங்கே முகாம் இட்டிருக்கிறார்கள். வண்ண விளக்குகளும், தோரணங்களும் நிரம்பிய அந்த விளையாட்டரங்கில் அர்ஜென்ட்டினாவும் ஈரானும் கடுமையாக மோதிக் கொண்டிருக்கின்றன.

கால்பந்து விளையாட்டின் அரசன் என்று அழைக்கப்படும் அர்ஜென்ட்டினாவின் கனவை முடக்கி ஆசியாவின் ஒரே அணியாக அங்கே களத்தில் இருக்கும் ஈரான் போராடிக் கொண்டிருக்கிறது. போட்டி ஏறத்தாழ முடிந்து விட்டது என்று ரசிகர்கள் எழுந்து செல்லத் தயாராகிக் கொண்டிருந்த அந்தக் கடைசி நிமிடத்தில் ஈரானின் வீரர்கள் அனைவரையும் தாண்டி நிலைகுலைய வைத்து விட்டு உலகக் கால்பந்து ரசிகர்களின் கனவு நாயகன் லியோனல் மெஸ்ஸி தனது அணியின் வெற்றிக்கான கோலைப் போடுகிறார். அரங்கம் மீண்டும் ஆர்ப்பரிக்கிறது.

மேற்கண்ட காட்சி நீங்களும், நானும் செய்மதித் தொலைக்காட்சியின் உதவியோடு கண்டு களித்த காட்சி. ஆனால், அதே நாளில் அதே அரங்கத்தில் நிகழ்ந்த இன்னொரு காட்சியையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். க்லெய்ட்டொன் சோயர்ஸ் என்கிற 23 வயது இளைஞன் அந்த அரங்கின் வாயிலைக் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறான். அவன் ஒரு ராணுவ வீரன், தீவிரக் கால்பந்து ரசிகன். இந்த அரங்கின் உள்ளே நடக்கிற போட்டிக்கும் தனக்கும் தொடர்பே இல்லை என்பதைப் போல சக ராணுவ வீரனோடு ரியோடி ஜெனிரோ நகரத்துக்கு வெளியே கால்பந்து விளையாடும் பெயர் தெரியாத ஒரு அணியைக் குறித்து அவன் உரையாடிக் கொண்டிருக்கிறான்.

மக்கள் கோப்பை என்ற பெயரில் “FIFA 2014” உலகக் கோப்பையை எதிர்த்து தனியாக ஒரு கோப்பையை அறிவித்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் கால்பந்தை தங்கள் உயிருக்கு உயிராக நேசிக்கும் பிரேசில் நாட்டு மக்கள். க்லெய்ட்டொன் சோயர்ஸ் மட்டுமில்லை, பிரேசில் நாட்டின் உழைக்கும் எளிய மக்கள் யாரும் இந்த “FIFA 2014” உலகக் கோப்பையை அத்தனை ஆர்வமாக ரசிக்கவில்லை. க்லெய்ட்டொன் சோயர்சின் தந்தை ஒரு நடைபாதை வணிகர். மினெஸ்ரோ விளையாட்டரங்கில் இருந்து ஏறத்தாழ மூன்று கிலோமீட்டர் தொலைவில் வசிக்கும் இவரையும், குடும்பத்தினரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றி இருக்கிறது பிரேசில் அரசு. அவரைப் போலவே உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் நடக்கும் அரங்கத்தின் அருகிலிருந்த பல ஏழைக் குடும்பங்களும், சிறு வணிகர்களும் விரட்டி அடிக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் இவர்கள் அனைவரும் பிரேசில் அணியை உயிருக்கு உயிராக நேசிப்பவர்கள், தங்கள் நாட்டின் தேசிய கால்பந்து அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று வழிபாடு செய்பவர்கள். உலகின் மிகப்பெரும் திருவிழாவான உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியை நடத்தும் பிரேசில் நாட்டின் ஓர் எளிய உழைக்கும் மனிதன் இந்த அரங்குகளுக்குள் நுழைய இயலாதபடி பெரும்பணக்கார முதலாளிகளும், நிறுவனங்களும் நுழைவுச் சீட்டுகளை முடக்கிக் கொண்டார்கள்.

தங்களுக்கு மிக அருகில் உலகக் கோப்பையை விளையாடும் கனவு நாயகர்களை பிரேசில் நாட்டின் மாணவர்களும், இளைஞர்களும் நேரில் கண்டு ரசிக்க முடியாது,

தமிழ் ஓவியா said...


ஒரு மாதம் முழுக்க அவர்கள் உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டும் அந்த அரங்கங்களுக்குள் நுழைய இயலாதபடி பணக்கார விளையாட்டாய் மாறிப் போன அந்த வலியையும், துயரத்தையும் அவர்கள் போராட்டங்களின் மூலமாகவும், மக்கள் கோப்பை என்கிற மாற்று விளையாட்டை நிகழ்த்துவதன் மூலமும் கோபமாய் வெளிக்காட்டினார்கள். இன்றைக்கு கால்பந்தாட்ட அரங்குகளில் நாம் காணும் மஞ்சள் வண்ண உடையணிந்து பன்னாட்டுக் குளிர் பானங்களைக் கையிலேந்தியபடி ஆடும் கொளுத்த பிரேசில் இளைஞர்களைக் கடந்து இன்னொரு பிரேசில் இருக்கிறது. முக்கிய நகரங்களைச் சுற்றி இருக்கும் பவேலாக்கள் (Favela) பிரேசில் நாட்டின் வறுமையை வெளிச்சம் போடுகிற கொடுஞ்சிறைக் கூடங்கள். இங்கிருக்கும் வீடுகள் பெரும்பாலும் குப்பைகளால் கட்டப்பட்டவை.

இந்தக் குடிசைப் பகுதியில் வாழும் மக்கள் உலகின் ஏழ்மைக்கு எல்லா வகையிலும் எடுத்துக்காட்டானவர்கள். பிரேசில் அரசின் பள்ளிக்கூடங்கள் எதுவும் இங்கே இல்லை; தூய்மைப்படுத்தப்பட்ட குடிநீர் இல்லை; அரசு வழங்கும் மின்சாரம் இல்லை; பெரும்பணக்காரர்களின் குடியிருப்புகளுக்குச் செல்லும் மின்னிணைப்பைத் திருடியே இங்கிருக்கும் மக்கள் நெடுங்காலமாக வாழ்கிறார்கள்.

போதை மருந்துகளும் ஆயுதங்களும் குழந்தைகளுக்குக் கூடக் கிடைக்கும் அளவுக்கு இங்கே சட்டமும் ஒழுங்கும் சீரழிந்து கிடக்கிறது, உலகின் மிகக் கவர்ச்சிகரமான பெண்கள் பிரேசிலில் இருக்கிறார்கள் என்று அவ்வப்போது உலகம் குறித்த கவலையோடு எழுதிக் குவிக்கும் ஊடகங்கள் இந்த பவேலாக்களுக்குள் ஒருபோதும் நுழைவதில்லை. அங்கிருக்கும் ஏழைக் குழந்தைகளின் ஒட்டிய கன்னங்களை ஒருபோதும் அவை தங்கள் அட்டைப்படங்களாக வெளியிடுவதில்லை. ரியோடி ஜெனிரோ மற்றும் சா பாவ்லா நகரங்களைச் சுற்றி அரச அமைப்பால் நெடுங்காலமாகக் கண்டு கொள்ளப்படாமல் இருக்கிற இந்த அவலமான மக்கள் திரளுக்கும், உலகின் மிக அழகிய ரியோடி ஜெனிரோ கடற்கரையில் கவலைகளை மறந்து ஆடிக் களிக்கிற உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருக்கும் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கும் அதே உலகம் தான் சுற்றிக் கொண்டிருக்கிறது. பிரேசிலின் அதிகார அமைப்புகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று ஒரு கூட்டம் எப்போதும் இந்த பவேலாக்களில் தங்கள் சட்டப்புறம்பான ஒரு உலகை நடத்தியபடி இருக்கின்றன. நேர்மையான, பிரேசில் மக்களின் மீது உண்மையான அக்கறை கொண்ட அரசியல்வாதிகளையும் இங்கே நுழைய விடுவதில்லை. நீதியின் பால் நின்று தட்டிக் கேட்கிற பல இளைஞர்கள் பவேலாக்களில் விரட்டி விரட்டி சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

பிரேசில் என்றில்லை, கால்பந்து என்றில்லை உலகின் பல்வேறு நிலைகளில் எளிய உழைக்கும் மக்களின் வாழ்நிலை இப்படித்தான் எந்த வேர்களும் இல்லாமல் முதலாளிகளின் கைகளுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் பல நகரங்களில் வளர்ச்சி, முன்னேற்றம் என்று கூக்குரலிடும் முதலாளித்துவ ஊடகங்கள் எப்படி சோப்டாக்களைக் கண்டு கொள்வதில்லையோ அதைப் போலவே இன்றைக்கு பிரேசில் பாவேலாக்கள் புறக்கணிக்கப்பட்டு சமூக விரோதக் கூடங்களாகக் காட்சி தருகின்றன. ஏறத்தாழ 20/20 கிரிக்கெட் போட்டியை ஒரு திருவிழாவைப் போலக் கொண்டாடும் இந்திய தேசத்துக்கும், பிரேசிலுக்கும் பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லை. வறுமையில் வாடும் உழைக்கும் மக்கள் அனைவரும் நாடு, மொழி, இனம், மதம் என்று எல்லாம் கடந்து ஒரே வரிசையில் உபரி மனிதர்களாய் நிறுத்தப்படுவார்கள். இனி ஒரு உலகக் கோப்பைப் போட்டியை நீங்கள் பார்த்து மகிழ்கிற போது பாவேலாக்களில் இருந்து மீள முடியாத ஒரு ஏழைக் குழந்தையின் அழுகுரல் பின்னணி இசையாய் உங்கள் செவிப்பறையை அடையக் கூடும். ஊடகங்களில் நாம் காணும் உலகுக்கு அப்பால் எப்போதும் ஒரு இருண்ட துயரம் நிரம்பிய ஏழ்மையின் உலகம் நிழலாடிக் கொண்டே இருக்கிறது என்கிற உண்மையை நாம் விழுங்கிச் செரிக்கத்தான் வேண்டும்.

இவ்வளவு செலவா...

கால்பந்தாட்டதிற்கு இவ்வளவு பெரிய தொகையினைச் செலவு செய்வதற்குப் பதிலாக, நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தலாமே என்று பல்வேறு போராட்டங்களை அந்நாட்டு மக்கள் நடத்துகிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால், மக்களின் போராட்டத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக 5 ஆயிரம் கோடி ரூபாயினைச் செலவு செய்துள்ளதுதான்.

- கை.அறிவழகன்

தமிழ் ஓவியா said...

பெரியாரைப் படிப்போம்


கழிவுகளைக் கையால் அள்ளும் தொழிலுக்கு முழுமையாகத் தடை கொண்டுவர வேண்டுமானால் முதலில் ஜாதியற்ற சமூகம் உருவாக்கப்பட வேண்டும். ஜாதிப் பாகுபாடே இந்தத் தொழில் தொடர்வதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது.

இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால் சட்டமேதை அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு என்ற நூலும் தந்தை பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் என்ற நூலும் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். மேலும் பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் கல்வித்துறை, புத்தர் கல்வித்துறை என்ற 2 புதிய துறைகள் உருவாக்கப்பட வேண்டும்.- ரவீந்திரன்,
இதழியல் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம்

தமிழ் ஓவியா said...

மூடநம்பிக்கைகளைப் படம்பிடித்த முண்டாசுப்பட்டி


அண்மைக் காலமாக தமிழ் சினிமா ஒரு புதிய தடத்தை நோக்கிப் பயணிக்கிறது என்பது அதன் முழு வடிவம் புரிந்தவர்களுக்கு நன்கு தெரியும். அந்த வகையில் கிராமங்களில் நிலவும் பல வகையான மூட நம்பிக்கைகளுக்கு ஒரு கிராமமாக ஒட்டு மொத்த அடிமையாக இருக்கும் சூழலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்தான் முண்டாசுப்பட்டி. அதென்ன முண்டாசுப்பட்டி? அந்த ஊரில் எல்லோரும் எப்போதும் தலையில் முண்டாசு கட்டிய படியே உள்ளனர். எனவே அது முண்டாசுப்பட்டி அவ்வளவுதான். மற்றபடி அதற்க்கு ஒரு பெரிய விளக்கம் இல்லை.1947இல் இந்திய நாடு விடுதலை அடைவதற்கு முன் அந்த கிராமத்திற்கு வரும் ஒரு வெள்ளைக்கார அதிகாரி அங்கு உள்ள கலாச்சாரங்களை தனது புகைப்பட கருவியில் (போட்டோ கேமரா) பதிவு செய்கிறார்.

அப்போது ஒரு வயதான மூதாட்டியைப் படம் பிடிக்கும்போது தன்னியல்பாக அவர் இறந்து போகிறார். மேலும், அந்தக் கிராமத்தில் ஒரு விதமான நோய் பரவி பலர் இறக்கின்றனர். அதைக் கண்டு அச்சப்படும் மக்களிடயே மேலும் ஒரு பிரச்சினையாக கொள்ளைக்காரர்கள் கூட்டமாக வந்து கொள்ளையடிக்கின்றனர். அப்போது அந்த கிராம மக்கள் கடவுளை நோக்கி எங்களைக் காப்பாற்று என்று வேண்டும்போது வானியல் அதிசய நிகழ்வாக விண்கல் ஒன்று வேகமாகப் பயணித்து அந்த முண்டாசுப்பட்டி கிராமத்திலேயே அதுவும் அந்த கொள்ளைக்காரர்கள் மீதே வந்து விழுந்து விட, அந்தக் கல்லையே கடவுளாக வழிபடத் தொடங்கி விடுகின்றனர். அதன் பிறகு அந்தக் கிராமத்தில் யாரும் போட்டோ எடுக்கக் கூடாது மீறி எடுத்தால் இறந்து விடுவோம் என்ற மூட நம்பிக்கை பரவுகிறது. அடுத்து கதைக்களம் 1982ஆம் ஆண்டில் பயணிக்கிறது. இது போக மேலும் பல சின்னச் சின்ன மூட நம்பிக்கைகள் அந்த மக்களிடையே நிலவுகிறது. பக்கத்து ஊரில் போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் கதாநாயகன், அவனது உதவியாளர், முண்டாசுப்பட்டி கிராமத்தின் தலைவரின் மகள் கதாநாயகி, நகைச்சுவை நடிகராக பாத்திரமேற்றிருக்கும் முனீஸ்காந்த், என இந்த நால்வரைச் சுற்றியே கதை நகருகிறது. முன்பு போட்டோ எடுத்த அந்த வெள்ளைகார அதிகாரி அந்த ஊரில் விழுந்த விண்கல்லின் துகள்களை ஆய்வு செய்து அது விலை மதிக்க முடியாத கனிமம் என்று கோமளப்பட்டி ஜமீன்தாரிடம் சொல்ல அவரும் அந்தக் கல்லைத் (வானமுனி இது அந்த விண்கல்லுக்கு கிராமத்தினர் வைத்த பெயர்) திருட முயற்சிக்கும் வேலை ஒரு பக்கம் என்று படம் மிகச் சிறப்பாக நகர்கிறது. ஒருவரிக் கதையை வைத்துக் கொண்டு கொஞ்சமும் சலிப்பில்லாமல் அதே நேரத்தில் இப்படித்தான் சினிமா என்பதை உடைத்து சாதாரணமாகப் பதிவு செய்த இயக்குனரைப் பாராட்டியே ஆக வேண்டும். இது போக அந்த ஊரில் ஒரு சாமியார். அவரிடம் குறி கேட்டுத்தான் அந்தக் கிராமமே இயங்குகிறது. ஆனால் அவரின் பின்புலம் என்ன என்று பார்த்தால் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு சிறைத் தண்டனை அனுபவித்து விடுதலை ஆகி வந்தவர். வெளியில் வந்து முண்டாசுப்பட்டி கிராமத்தின் கோவிலில் ஓர் இரவு படுத்து மறுநாள் காலை எழுந்து பார்த்தால் கிராம மக்கள் அவர் முன் கூடி சாமி! நீங்கதான் எங்க கிராமத்தைக் காப்பாத்தணும் என்று சொல்ல, அவரும் நமக்கு ஒரு சரியான இடம் கிடைத்து விட்டது என்று அந்த ஊரிலேயே தங்கி தனது வாழ்க்கையை நடத்துகிறார்.

(இப்படி பல ஊர்களில் சாமியார்கள் உண்டு என்பதை அனைவரும் அறிவோமல்லவா?). அந்தக் கிராமத்தில் உள்ள வானமுனியைக் கடத்திப் போக அதை மீட்டு வந்து தந்து கதாநாயகன், தன் காதலியான அந்த ஊரின் தலைவர் மகளைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார். இறுதியில் கதாநாயகன் திட்டப்படிதான் வானமுனி காணாமல் போனது என்று தெரியவர, கல்யாணம் நடத்தி முடித்த கையோடு ஊரை விட்டு ஓடிப்போகும் போது அந்த ஊர் மக்கள் அவர்களைப் பிடிக்க விரட்டுகிறார்கள். அப்போது வேறு வழியே இல்லாமல் அவர்களிடம் இருந்து தப்பிக்க, திரும்பி கேமராவை எடுத்துக் காட்ட கிராம மக்கள் பயந்துகொண்டு திரும்ப ஓடுகிறார்கள்.படம் முழுக்க சின்னச் சின்ன விசயங்களை மிக அழகாக, நேர்த்தியாக இணைத்து மக்கள் மத்தியில் மண்டக் கிடக்கும் மூடநம்பிக்கைகளை எடுத்துச் சொல்லியுள்ள இயக்குனர் வசனங்களிலும் சரியாகக் கவனம் செலுத்தியுள்ளார்.

மற்றபடி ஒளிப்பதிவு, பின்னணி இசைப் பாடல்கள்,என அனைத்தும் வித்தியாசமாக செய்திருக்கிறார்கள். படக்குழுவினர் படம் தொடங்கியதிலிருந்து, முடியும் வரை முழு நீள நகைச்சுவைப் படமாக நகர்கிறது. கதை நாயகன், நாயகி தவிர மற்ற நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் புதியவர்கள். மிக சாதாரண மனிதர்களிடம் உள்ள திறமைகள் கண்டிப்பாய் மதிக்கப்பட வேண்டும். அதைச் சரியாக இனங்கண்டு பயன்படுததியிருக்கிறார்கள். எள்ளி நகையாடப்படவேண்டிய மூடநம்பிக்கைகளை அதே சுவையில் சொல்லி அனைவரையும் கவர்ந்திருக்கும் மூடநம்பிக்கைப்பட்டி மன்னிக்கவும் முன்டாசுப்பட்டி நல்ல செய்தியுடன் கூடிய பொழுதுபோக்குப் படம்.

- தம்பியப்பா

தமிழ் ஓவியா said...

ராஜகோபாலாச்சாரி ஆகிறார் ரங்கசாமி

புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ & இந்தித் திணிப்பு

தமிழ்நாட்டில் எண்ணற்ற தனியார் பள்ளிகள் சமச்சீர் பாடத்திட்டத்திலிருந்து, சி.பி.எஸ்.இ முறைக்கு மாறிக் கொண்டிருப்பதால் தமிழக பள்ளிக் கல்வித் துறையே மாநில அரசின் கைகளிலிருந்து நழுவிப் போகிறது என்பதைக் கடந்த இதழில் விரிவாகப் பதிவு செய்திருந்தோம். இந்நிலையில் புதுவையின் அறிவிப்பு கல்வித் துறையைப் பொறுத்த அளவில் அபாய அறிவிப்பாக அமைந்துள்ளது.

புதுச்சேரியில் இதுவரை நடைமுறையில் இருந்த தமிழ்நாடு அரசின் சமச்சீர் கல்வித் திட்டம் மாற்றப்பட்டு, நடப்புக் கல்வி ஆண்டு முதல், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரும் புதுவையின் முதல்வருமான ரங்கசாமி அறிவித்துள்ளார். சி.பி.எஸ்.இ கல்வி முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் நாள்தோறும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தால், மாணவர்களிடத்தில் இந்தி கட்டாயமாகத் திணிக்கப்படுவதோடு, தமிழே இனி பாடத்திட்டத்தில் இருக்காது என்ற நிலையை உருவாக்கியுள்ளதாக அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்தித் திணிப்பு என்பது தமிழகக் கல்வி வரலாற்றில் புதிதல்ல. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கல்வியில் மீண்டும் இந்தி புகுத்தப்படுவதும், அதற்கு மாநிலத்தை ஆளும் தமிழரே துணைபோவதும் தான் வேடிக்கையாக இருக்கிறது. புதுச்சேரியை ஆளும் ரங்கசாமி ராஜகோபாலாச்சாரி போல் செயல்படுகிறார் என புதுச்சேரி மக்கள் குற்றம் சாற்றுகின்றனர். புதுச்சேரியில் உள்ள 572 அரசுப் பள்ளிகளில் நடப்புக் கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட குழுவில் புதுச்சேரியைச் சேர்ந்த 2 உறுப்பினர்களும், மத்திய அரசு சார்பில் 3 உறுப்பினர்களுமாக மொத்தம் அய்ந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்குழுவானது, தமிழ் வழி மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து அம்மாணவர்கள் அடுத்தடுத்த வகுப்புகளுக்குச் செல்லும்போது இக்கல்வி முறையை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதேபோல், ஆங்கில வழிப் பள்ளிகளில் இவ்வாண்டே 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை இக்கல்விமுறையை நடைமுறைப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது. ஆக, இந்த 572 பள்ளிகளிலும் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்கள் தமிழ் வழியில் நடத்தப்படாமல் ஆங்கிலத்திலேயே நடத்தப்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆங்கிலத்தைக் கட்டாயமாகவும், இந்தி அல்லது தமிழ் உள்பட ஏதேனும் ஒரு பிராந்திய மொழியை விருப்பப் பாடமாகவும் படிக்கலாம். அதேநேரத்தில் 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என அறிவித்துள் ளது. இவ்வாறு மேல்வகுப்புகளில் இந்தி கட்டாயமாக்கப்படுவதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு 1 ஆம் வகுப்பு முதலே இந்தியையே விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுப்பார்கள். இதன் மூலம் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் தொடக்கக் கல்வி முதல் தமிழைப் படிக்காமலேயே உயர்கல்விக்குச் செல்லும் அவலம் ஏற்படும். எனவேதான் இக்கல்வி முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. ஆனால், முதல்வர் ரங்கசாமியோ இக்கல்விமுறையை பெற்றோர்கள் விரும்புவதாகப் பேசி வருகிறார்.

தமிழ் ஓவியா said...

இந்நிலையில், சி.பி.எஸ்.இ பாடத்தில் சேர அரசுப் பள்ளிகளுக்குச் சுதந்திரம் வழங்கினால் இப்பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும் என புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் எ.மு.ராஜன் கூறுகிறார். இதுகுறித்து அரசுக்கு அவர் வழங்கியுள்ள ஆலோசனையில், தில்லியில் மூன்று கல்வி வாரியங்கள் உள்ளன. அதில் எதில் வேண்டுமானாலும் அரசுப் பள்ளிகள் உட்பட எந்தப் பள்ளியும் இணைப்பு பெறச் சுதந்திரம் உண்டு. புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளிகளுக்குத் தற்போது அந்தச் சுதந்திரம் உண்டு. ஆனால் அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் சி.பி.எஸ்.இ. கட்டாயம் என்பது எந்த வகையில் நியாயம்? எனவே, அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் கட்டாயம் என்கிற பகுதியை மட்டும் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் இத்திட்டத்தில் சேர முடிவு எடுக்கும் பொறுப்பை விட்டுவிட்டால் எல்லாக் குழப்பங்களும் தானாகத் தீர்ந்துவிடும்.

அரசு பள்ளிகளும் இத்திட்டத்தில் சேர சுதந்திரம் கொடுக்கலாம். புதுவை மாநிலத்தில் 572 அரசுப் பள்ளிகளில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக முதல்வர் அறிவித்துள்ளார். அதற்குப் பதிலாக புதுச்சேரி பகுதியில் 5 வட்டங்கள் காரைக்கால், மாஹ, ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளை ஒரு ரோஸ்டர் மூலமாக 2 பள்ளிகளுக்கு 1 பள்ளி எனும் அடிப்படையில் இத்திட்டத்தை அறிமுகம் செய்யலாம். அப்போது 286 பள்ளிகளில் சி.பி.எஸ்.இ திட்டமும், 286 பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டமும் செயல்படும். இப்பள்ளிகள் அடுத்தடுத்து உள்ளதால், எந்தப் பாதிப்பும் இல்லாமல் விரும்பும் பாடத்திட்டத்தில் சேர விரும்பும் பள்ளியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

சி.பி.எஸ்.இ நடைமுறையில் உள்ள 286 பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ எதிர்பார்க்கும் உள்கட்டமைப்பு வசதிகளை எளிதாச் செய்து கொள்ளலாம். தற்போதுள்ள ஆசிரியர்களில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களை அப்பள்ளிகளுக்கு மாற்றம் செய்யலாம். அவற்றைக் கண்காணிக்கும் வேலையும் எளிதாகி விடும். சி.பி.எஸ்.இ திட்டம் சிறப்பாகச் செயல்படும் பட்சத்தில் படிப்படியாக அனைத்துப் பள்ளிகளையும் அதன் கீழ் கொண்டு வரலாம். கல்விச் சுதந்திரம் வழங்கப்பட்டதாக பெற்றோர்களும், ஆசிரியர்களும் நினைப்பார்கள். மகிழ்ச்சியோடு இத்திட்டத்தை வரவேற்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...

அதே நேரத்தில் சி.பி.எஸ்.இ முறைக்கு ஆசிரியர்களைத் தயார்படுத்துவதற்கென்று ஒரு குழுவை புதுவை அரசு அமைத்துள்ளது. அக்குழுவினர் வேறு ஒரு பிரச்சினையை கவனத்துக்குக் கொண்டு வருகின்றனர். புதுவைக்கென்று சில சிக்கல்கள் இருக்கின்றன. அதைச் சரிசெய்யும் முயற்சியாகவே சி.பி.எஸ்.இ. கல்வி முறையை அரசு கொண்டுவர முனைகிறது. புதுவை மாநிலத்தில் உள்ள புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் தமிழ்நாட்டையொட்டியுள்ளவை.

தமிழ்நாட்டின் பண்பாட்டோடு இணைந்தவை. அதேநேரம் மாஹி மலையாள மொழி பேசும் மக்களையும், ஏனாம் தெலுங்கு மொழி பேசும் மக்களையும் கொண்டது. எனவே அவை முறையே தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா பாடத் திட்டத்தைப் பின்பற்றுகின்றன. ஆனால் மேல்படிப்புகளுக்குச் செல்லும்போது, அனைத்து மதிப்பெண்களையும் சரி செய்து போடுவதிலும், அவற்றுக்குள் விகிதாச்சாரம் பேணுவதிலும் ஏற்படும் நடைமுறைச் சிக்கலைத் தவிர்க்கவும், புதுவை மாநிலம் முழுக்க ஒரே சீரான கல்வித் திட்டத்தை அமல்படுத்தவுமே முதல்வர் இத்தகைய முயற்சியை மேற்கொண்டுள்ளார். இதைவிட வேறு வழி இல்லை. இதில் புதுவை, காரைக்கால் பகுதிகளுக்குத் தமிழைக் கட்டாயப் பாடமாக அறிவிப்பதாக முதல்வரும் உறுதியளித்துள்ளார். எனவே தாய்மொழி படிக்காமல் போய்விடுவார்கள் என்ற கவலை அவசியமில்லை என்கிறார்கள்.

ஆனால், பிரச்சினை தாய்மொழி படிப்பதில் மட்டுமில்லை. ஒரு வேளை சி.பி.எஸ்.இ.யில் சிறப்பு அனுமதி பெற்று அவரவர் தாய்மொழியைக் கட்டாயம் என்று ஆக்கினாலும், தாய்மொழிவழிக்கல்வி (மீடியம்) பயிலும் வாய்ப்பையே இத்திட்டம் அடியோடு மறுக்கிறது. ஆறாம் வகுப்புக்கு மேல் இந்தி கட்டாயம் என்றால் பெற்றோர் தொடக்கம் முதலே இந்தியைத்தான் விரும்புவார்கள். ஆங்கிலப்பாடமாகவே இருந்தாலும், அதில் பண்பாட்டு அடையாளங்களையும், கருத்துகளையும், பகுதிகளையும் கொண்ட மாநிலப் பாடத்திட்டங்களிலிருந்து வட நாட்டுப் பண்பாட்டையும், பெயர்களையுமே கொண்ட பாடத்திட்டம் மாணவர்களிட மிருந்து அந்நியப்பட்டு நிற்கும். சமச்சீர் கல்வித் திட்டத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பாடல்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு பாடமாக இடம்பெற்றது. வரலாற்றுப் பாடத்தில் அப்பகுதி மக்களின் வரலாறு குறைந்தளவு கூட இருக்காது. இதற்கெல்லாம் என்ன தீர்வு, மறுமொழி வைத்திருக்கிறது புதுவை அரசு. எந்தப் பதிலும் இல்லை என்பதுதான் நாம் அணுகியவரை தெரிந்த செய்தி.

பல்வேறு பாடத்திட்டங்கள் கொண்ட நம் நாட்டில், அனைத்துப் பாடத்திட்டங்களின் மதிப்பெண்ணுக்கும் விகிதம் நிர்ணயித்துத் தான் தேசிய அளவிலான கல்லூரி இடங்கள் நிரப்பப்படுகின்றன. மாநிலத்தின் கட்டுப் பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களும், மற்ற மாநில மாணவர்களுக்கு இடம் ஒதுக்கும் போது கணக்கீடுகள் வைத்துத்தான் ஒதுக்குகின்றன. அது ஒரு பெரிய சிக்கலாக இருக்க முடியாது. ஆனால், அதைச் சாக்காக வைத்துக் கொண்டு ஒட்டுமொத்தக் கல்வியையும் மத்திய அரசிடம் கொண்டுபோய் அடகு வைப்பதும், அதன் மூலம் இந்தி நுழைய அகலக் கால்வாய் வெட்டுவதும், மாநில உரிமையைப் பலிகொடுப்பதும் சரியா என்னும் கேள்வியைத் தான் அறிவோர் எழுப்புகின்றனர். புதுவையை வைத்துப் பார்த்தால் குறைந்தபட்சம் தங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் பறிக்கப்பட்ட நிலைதான் பெற்றோருக்கும், மாணவர்களுக்கும், பள்ளிகளுக்கும்!

தாய்மொழி வழிக் கல்விதான் சிறந்தது என்பதையும், சமச்சீர் கல்வி, அருகமைப் பள்ளி, பொதுப் பள்ளி போன்றவைதான் சரியான, முறையான, நேர்மையான கல்வியை மக்களுக்கு வழங்கமுடியும் என்பதையும் உலகளவிலான கல்வியாளர்கள் முதல் இந்திய, தமிழகக் கல்வியாளர்கள், துணைவேந்தர்கள் வரை அனைவரும் சொல்லிக் கொண்டிருக்க அதற்கு முற்றிலும் மாறான திசையில் அரசுகளும், பெற்றோரும், கல்வி நிறுவனங்களும் பயணிப்பதை எப்படிப் பார்ப்பது? -

- இளந்திரையன்

தமிழ் ஓவியா said...


மதச் சார்பின்மைக் கண்ணோட்டம் தேவை! மோடிக்கு அமர்த்தியாசென் அறிவுரை


லண்டன், ஜூலை.6_இங்கிலாந்தில் லண் டனில் உள்ள ஏசியா ஹவுசில் நோபெல் பரிசு பெற்ற அறிஞரான அமர்த்தியாசென் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டுப் பேசினார்.

அவர் பேசும்போது: மோடி ஆட்சி அமைந் துள்ளதற்கு ஆதரவாகப் பேசவில்லை என்றாலும், இந்தியாவில் அண்மை யில் நடைபெற்றத் தேர் தலில் வெற்றி பெற்றுள் ளார். ஜனநாயகத்தின் அடிப்படையில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆட்சிபுரிவதற்கு முழு உரிமை வழங்கப்பட்டுள் ளது. ஆட்சியும் நன்றாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

அமர்த்தியா சென் தன்னுடைய பேச்சில், இந் தியா ஆசிய நாடுகளான ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண் டும் என்று கூறினார். இந்தியாவுக்கு சவாலாக உள்ள கல்வி, சுகாதாரம் மற்றும் மின் தேவை குறித்துப் பேசினார்.

பின்னர் அவர் கூறும் போது, இந்தத் தேர்தல் முடிவால், பாஜக இந்திய சமூகத்தில் எவ்வித அடிப் படை மாற்றங்களையும் செய்துவிடப் போவ தில்லை. அந்த கட்சி 31 விழுக்காடுதான் வாக்கு களைப் பெற்றுள்ளது. இதுபோன்ற முடிவு தற்போதைய தேர்தல் முறையில் எப்போதுமே நட வாத ஒன்று என்பது கிடை யாது என்று கூறினார்.

அரசுத்துறை அலுவ லர்கள், வங்கியாளர்கள், பிரபலமான பல்வேறு துறைகளைச் சார்ந்த வர்கள் உள்ளிட்டவர்கள் பார்வையாளர்களாக இருந்த அரங்கில் அவர் கூறும்போது, இடது சாரிகள் வன்முறைத் தாக்கத்துக்கு ஆளாகி உள்ளனர் என்றார்.

புதிதாக அமையும் அனைத்து அரசுகளும் மத சார்பின்மையுடன்தான் செயல்பட வேண்டும். இதை பெரிய அளவில் உள்ள மதசார்பற்ற ஊட கங்கள், நீதிமன்றங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கண்காணித்தே வருகின்றன.

மேலும் அமர்த்தியா சென் கூறும்போது, புதிய அரசு அமைந்துள்ளது. திறனையும், நல்லவற்றை யும், வெளிப்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. குஜ ராத்தின் நிர்வாகத்தில் என்ன நடந்துள்ளது? கட்டமைப்புகள், சாலை கள் என்று கூறப்பட்டா லும், மய்யக் கருத்துகளான கல்வி, சுகாதாரம் குறித்து ஆளும் பாஜக குறிப் பிடுவதில்லையே. மோடி அரசுகுறித்து பாஜக தரப் பினர் பெரும் பான்மை மனப்பான்மையுடன் உள்ளனர். அதேநேரத்தில் சிறுபான்மை மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். நாம் ஜனநாயக நாட்டில் இருக்கின்றோம். நாம் மதசார்பற்ற ஜன நாயக நாடு என்று சொல்கிறோம். மக்களுக்கு தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த உரிமை உள்ளது. நாமும் நம் கருத்தை வெளிப்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன் என்று பேசினார்.

ஊழல் முறைகேடுகள் உட்பட பல்வேறு பிரச் சினைகள் குறித்துக் கூறும் போது அது இந்தியாவில் மட்டும் உள்ளதல்ல. கடந்த சில ஆண்டுகளில் அதிகமாகி உள்ளது என்பது உண்மை அல்ல. இது எப்போதுமே பெரிய பிரச்சினைதான் என்று அமர்த்தியா சென் தன் னுடைய பேச்சில் குறிப் பிட்டார்.

மேலும், காங்கிரசு அரசின் முக்கியத் திட்டங் களாக கூறப்படுவது, தகவல் பெறும் உரிமைச் சட்டம். உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வாறு இந்தியாவில்தான் தகவல்களைப் பெறுவதில் அதிகப்படியான உரிமை உள்ளது. அந்த சட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு ஊழல் முறைகேடுகள் எளிதில் பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வரப்படுகிறது. இது எதிரானது அல்ல. மாறாக சாதகமானதாகும் என்று குறிப்பிட்டார்.

அந்தக்கூட்டத்தில் கலந்துகொண்ட இலங் கைத் தூதரக அதிகாரி யான கிரிஸ் நோனிஸ், அமர்த்தியா சென்னிடம், பொருளாதார முன்னேற் றத்துக்காக மோடியை ஆதரிப்பீர்களா? என்று கேட்டதற்கு அமர்த்தியா சென் பதிலளிக்கும் போது, நீங்கள் கூறுவது சரிதான் என்று நினைக் கிறேன். ஆனால், அது போன்று இதுவரை நடக்க வில்லை என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/83512.html#ixzz36k5ljqhG

தமிழ் ஓவியா said...


கடவுள் சக்தி இவ்வளவுதான்!


கடவுள் சக்தி இவ்வளவுதான்!

கோவிலின் பூட்டை உடைத்து அம்மன் நகைகள் திருட்டு

நெகமம், ஜூலை 6_ கோவை அருகேயுள்ள நெகமம் தாசநாயக்கன் பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூஜாரி சதாசிவம் (வயது 55). இவர் தினமும் காலை 5 மணிக்கு கோவிலை திறந்து மாலை பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு செல்வதை வழக்கமாக கொண்டு இருந்தார்.

சம்பவத்தன்று மாலை கோவிலில் பூஜை முடிந்ததும் சதாசிவம் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை கோவிலை திறக்க வந்தபோது கோவிலின் பின்புற பூட்டு உடைக் கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

கோவிலுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதற்குள் வைத்திருந்த தங்க கண் மலர் மற்றும் வெள்ளியாலான ஒட்டியாணம், கை, குடை ஆகியவை திருட்டு போயிருந்தது. இதன் மதிப்பு ரூ.18 ஆயிரம் ஆகும். இதுகுறித்து சதாசிவம் நெகமம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

இதேபோல் தாசநாயக்கன் பாளையத்துக்கு பக்கத்தில் உள்ள மெட்டுவாவி அரிஜன காலனியில் வீரமாச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக முருகன் (66) உள்ளார். இவர் சம்பவத்தன்று கோவிலை திறக்க சென்ற போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு தாலிக்கொலுசு 10, தாலி காசு 6, பித்தளை குத்து விளக்கு 2 உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போயிருந்தன. இதுகுறித்து முருகன் நெகமம் காவல் நிலை யத்தில் புகார் செய்தார். காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆத்தூரில் பேருந்து மோதி அர்ச்சகர் சாவு

ஆத்தூர், ஜூலை 6_ ஆத்தூர், உடையார் பாளையத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 57). இவர் அதே பகுதியில் உள்ள கோவில்களில் அர்ச்சக ராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் ஆத் தூருக்கு மிதி வண்டியில் சென்று கொண்டிருந்தார். அவர் ஆத்தூர் பேருந்து நிலையம், எம்.ஜி.ஆர் சிலை அருகில் சென்றபோது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து அவரது மிதிவண்டி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் ஜெயக்குமார் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஆத்தூர் காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவில் கும்பாபிஷேகத்தில் பெண் பக்தர்களிடம் 20 பவுன் நகை பறிப்பு

தாம்பரம், ஜூலை. 6_ குரோம்பேட்டை பாரதிபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் கும்பா பிஷேகம் இன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட பெண் பக்தர்களிடம் சுமார் 20 பவுன் நகைகளை திருடர்கள் பறித்து சென்று விட்டனர். குரோம்பேட்டை காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/83517.html#ixzz36k5zdis2

தமிழ் ஓவியா said...


சோதிடரே!மேட்டூர் மருத்துவ மனையில் கொலை ஒன்று நடந்துள்ளது. கொலை செய்தவர் ஒரு சோதிடர் - அவர் பெயர் இரவிக்குமார். கொலை செய்யப்பட்ட சாமுண்டீஸ்வரியின் வளர்ப்புத் தந்தை.

சாமுண்டீஸ்வரிக்குத் திருமண ஏற்பாடு நடந் துள்ளது. அந்த மண மகனை சோதிடர் இரவிக் குமாருக்குப் பிடிக்க வில்லையாம். (சோதிடம் சரியில்லையோ!) அதனால் வளர்ப்பு மகள் சாமுண் டீஸ்வரியை சோதிடர் குத்திக் கொலை செய்தார் என்பது செய்தி.
அவர் இப்பொழுது கைது செய்யப்பட்டு சிறை யில் இருக்கிறார்.

நினைவு கொள்ளுங் கள் - கொலை செய்தவர் ஒரு சோதிடர்.

மற்றவர்களுக்கு சோதி டம் சொல்லியது எப் படியோ தொலைந்து போகட்டும்; அவரைப் பொறுத்தவரையாவது அவ ரது செயல் ஆபத்தானது - தீங்கிழைக்கக் கூடியது - தூக்குக் கயிற்றில் தொங்க வேண்டிய அளவுக்குக் கொண்டு போய்விடும் என்று சோதிடராகிய அவ ரால் உணர்ந்து கொள்ள முடியவில்லையா?

சோதிடரின் இந்தக் கொலையைப்பற்றி விரி வாக செய்திகளை வெளி யிடும் இந்த ஊடகங்கள், செய்தித்தாள்கள், சோதிட சிறப்பிதழ்களை வெளியிடு கின்றனவே - இதைப்பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?

நாய் விற்ற காசு குரைக் காது என்பதுதான் இந்த ஊடகங்களின் ஊத்தை மனப்பான்மையா?

சோதிடந்தனை இகழ்! என்று அக்ரகாரத்துப் பார தியே பாடினாரே! அறிவி யலுக்குமுன் சோதிடம் நிற்காது என்று நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்கூட தலை நகரமாம் சென்னையில் பேசவில்லையா?

ஏன் ராஜாஜி அவர் களேகூட சோதிடத்தை எள்ளி நகையாடவில் லையா?

தினமணி (19.10.2007) சோதிடரிடம் ஒருவர் விளக் கம் கேட்டார். என் மகளுக்கு 22 வயது. அவள் சாதகத்தைப் பார்த்த ஜோதி டர் செவ்வாய் தோஷம் இருக்கிறது என்றார். வேறு ஒரு சோதிடர் எந்தத் தோஷமும் இல்லை என் றார். இன்னொரு சோதிடர் களத்ர தோஷம் உள்ளது என்று கூறியிருக்கிறார். எது உண்மை என்று கேட்டிருக் கிறார்.

காந்தியாருக்கு 125 வயது ஆயுள் கணித்தார் அன்றைய பிரபல சோதி டர் திருத்தணி கிருஷ்ண மாச்சாரி. கதை கந்தலாகி விட்டதே! காந்தியார் கொல்லப்பட்டது காந்தியா ருக்குப் போதாத காலமா? அல்லது நாதுராம் கோட் சேவுக்கு ஆகாத காலமா?

அஷ்டமி, நவமி பார்த்து நள்ளிரவில் சுதந் திரம் வாங்கி என்ன பயன்? இன்னும் வறுமைக் கோடு தானே இந்தியா கண்ட பலன்?

தட்டிக் கேட்க ஆள் இல்லை என்றால், தம்பி சண்ட பிரசண்டன்தான் என்பார்கள். சோதிடமும் இந்தக் குட்டையில் ஊறி யதுதான்.

வைத்தியரே! முதலில் உங்கள் நோயைக் குணப் படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறுவதுபோல,

சோதிடர்களே, முதலில் உங்கள் சோதிடத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/83699.html#ixzz371RrCkSY

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?காரைக்காலில் மாங்கனித் திருவிழா! அதன் புராண சங்கதி என்ன?

புனிதவதி என்ற சிவபக்தர் - பிச்சை கேட்க வந்த சிவனடியார்க்குத் தன்னிடம் இருந்த மாங்கனிகளில் ஒன்றைக் கொடுத்தார். கணவன் மதிய உணவு அருந்திட வந்தான். ஒரு மாங்கனியைச் சாப்பிட்டான். சுவையாக இருந்ததால், இன்னொரு மாங்கனியையும் கேட்டான். பதற்றமடைந்தார் மனைவி. ஒன்றுதான் சிவனடியார்க்கு அளிக்கப்பட்டு விட்டதே! சிவனை நினைத்து, தன் நிலையை வெளிப்படுத்தினார்.

என்ன ஆச்சரியம்! சிவன் அருளால் மாயா மந்திரம்போல அவள் கைக்கு ஒரு மாங்கனி வந்து சேர்ந்தது. அதைக் கணவனுக்குக் கொடுத்தாள். இந்தக் கனி முந்தையக் கனியைவிட அதிக ருசி. அது எப்படி என்று கணவன் பரமதத்தன் கேட்டான். அதற்குமேல் அவளால் ஒன்றும் சமாளிக்க முடியவில்லை.

நடந்ததைச் சொன்னாள். கணவன் நம்பவில்லை. அப்படியானால் இன்னொரு பழத்தைக் கொண்டு வந்து காட்டு என்கிறான். புனிதவதி சிவனிடம் இரைஞ்சினாள் - ஆம் பழம் ஒன்று வந்து சேர்ந்தது சிவன் அருளால்.

திடுக்கிட்ட கணவன், இவள் தெய்வப் பெண் என்று கருதி, மனைவியின் காலில் விழுந்து வெளியேறினான். வேறு ஊருக்குச் சென்று கல்யாணம் செய்துகொண்டு வாழ்ந்தான்.

தன் கணவன் வருவான், வருவான் என்று காலம் கழித்த புனிதவதி, ஏமாற்றம் அடைந்து சிவனிடம் தன் அழகு அழிந்து பேயுரு வேண்டினாள். அவ்வாறே ஈசன் அளித்தான் - எலும்புரு ஆனாள்.

உடனே கயிலைக்குச் சென்று சிவனை தரிசனம் காண விரும்பினாள். கயிலைக்கு காலால் நடந்து செல்லலாமா? என்ன செய்தாள்? தலையால் நடந்து சென்றாள்.

இவ்வாறு கதை சென்று கொண்டே இருக்கிறது.

இந்த அம்மையாருக்குக் காரைக்காலில் தனிக் கோயிலே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதப் பவுர்ணமி அன்று மாங்கனித் திருவிழா நடை பெறுகிறது. இவ்விழா 4 நாள்கள் நடைபெறுகிறது.

இந்தக் கதையில் கடுகத்தனை அளவுக்காவது பொது அறிவோ, நல்லொழுக்கமோ இருக்கிறதா?

தன் கணவனிடம் முதலிலேயே உண்மையைச் சொல்லியிருந்தால், கணவனைப் பிரிந்திருக்க நேருமா?

ஒரு பெண் தலைகீழாக நடந்து சென்றாள் என்று எழுதி வைத்திருப்பது எத்தகைய வக்கிரப் புத்தி?

மாம்பழத்தை வாரி இறைப்பது புத்திசாலித்தனமா? ஆன்மீகம், அறிவுக்கும், ஒழுக்கத்துக்கும் பொருத்த மற்றது மட்டுமல்ல, விரயத்துக்கும் அல்லவா காரணமாக இருக்கிறது!

Read more: http://viduthalai.in/e-paper/83701.html#ixzz371T6tOkx

தமிழ் ஓவியா said...

மதம் என்பது ஒரு கட்டுப்பாடு, மதத்தில் ஈடுபட்ட ஒரு மனிதன் அவன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும் அந்தக் கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்கவேண்டும் என்பதைத் தவிர, மற்றபடி அந்த மனிதனுக்கு எந்தவிதமான பயனும் ஏற்படப் போவதில்லை.

_ (குடிஅரசு, 7.5.1949)

Read more: http://viduthalai.in/page-2/83716.html#ixzz371Td2VUj

தமிழ் ஓவியா said...


பனகல் அரசர் பிறந்த நாள்


பனகல் அரசர் பிறந்த நாள்
தோற்றம்: 09.07.1866 மறைவு: 16.12.1928

பனகல் அரசரின் உண்மையான பெயர் பி.ராமராய நிங்கார். இவரின் பூர்வீகம் ஆந்திரப்பிரதேசம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள பனகல்லு என்னும் ஊராகும். இருந்தாலும் இவருடைய பெயர் ராஜா ஆஃப் பனகல். இவர் 1866 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் நாள் காளஹஸ்தியில் பிறந்தார். இவர் 1892ஆம் ஆண்டு மாநில கல்லூரியில் பி.ஏ., (வேதியல்) பட்டம் பெற்றார். பின்னர் சட்டம் மற்றும் தெலுங்கில் எம்.ஏ., பட்டம் பெற்றார்.

பம்மல் சம்பந்த முதலியார் இவரது நெருங்கிய நண்பர் ஆவார். இவர் நல்ல படிப்பாளி, அறிவாளி, வசதி நிறைந்த ஜமீன்தார், செல்வாக்கு நிறைந்தவர், ஜஸ்டீஸ் பிரமுகர்களில் ஒருவர். இவர் கல்வி, பொதுப்பணித்துறை ஆகியவற்றில் அநேக சீரமைப்புகளைச் செய்தார். டிசம்பர் 1920 முதல் ஜூலை 1921 வரை மதராஸ் மாகாணத்தில் நீதிக்கட்சியின் சார்பாக அமைச்சராக இருந்தார். ஜூலை 1921 முதல் செப்டம்பர் 1921 வரை பனகல் அரசர் மதராஸ் மாகாணத்தின் முதல்வராக இருந்தார்.

இவர் ஆட்சியில் அமலுக்கு வந்த முக்கியமான சட்டத்திற்கு ஹிந்து ரிலீஜியஸ் எண்டோன்மெண்ட் ஆக்ட் என்று பெயர். இவர் கீழ்ப்பாக்கத்தில் காலேஜ் ஆஃப் இந்தியன் மெடிசன் என்ற வைத்தியமுறைக் கல்லூரி அமைக்க உறுதுணையாக இருந்தார். இவர் நாட்டுக்குச் செய்த பணிகளைக் கவுரவிக்கும் முறையில் பிரிட்டிஷ் அரசு இவருக்கு கே.ஸி.அய்.இ. (ரி.சி.மி.ணி) நைட் கம்பானியன் ஆஃப் இண்டியன் எம்ஃபயர் என்ற விருதை அளித்தது. இவர் டிசம்பர் 16, 1928 இல் இயற்கை எய்தினார்.

Read more: http://viduthalai.in/page-2/83723.html#ixzz371TrqzkB

தமிழ் ஓவியா said...


இந்துமத ஆபாசம்பற்றி அவாள் ஏடு பெருமிதம்


காதல் அதாவது ஆண் - _ பெண் உறவைப் பள்ளியில் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று இப்போது சிலர் சொல்லுகிறார்கள். ஒரிசாவில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஆசிரியர் இல்லாத ஒரு பள்ளிக்கூடத்தை இதற்காகக் கட்டி விட்டார்கள்.

பள்ளியைக் கட்டியவர்கள் கங்க மன்னர்கள், பள்ளியின் பெயர் கொனார்க் காதல் நிலைகளை இங்கு உருவ அமைப்பாலும் இதயங்கவரும் வகையிலும் கல்லிலேயே செதுக்கி வரிசை வரிகையாகத் தூண்களில் பொருள் காட்சியாக அமைத்திருக்கிறார்கள்.

... மாமல்லபுரம் பலரும் சேர்ந்து பார்க்கக் கூடியது; கொனார்க் கணவனும், மனைவியும் சேர்ந்து பிறர் பார்வையில் படாது பார்க்க வேண்டும்.
தினமணி கதிர் பக்.23 (27.8.1971 இதழ்)

காமக்ய கோயில்: அசாமின் சிறப்பு காமக்ய கோயில். அங்கே கோயில் கொண் டுள்ள அம்மனின் சிறுநீர் வெளிவருவது கருவறை (கர்ப்பக்கிரகம்)யில் ஒரு மூலையில் தெரியுமாறு கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

இவ்வாறு யோனி பீடமாக ஒரு கோயில் அமைந்திருப்பது இந்தியாவில் இது மட்டுமே. வெட்டுண் இறைவியின் யோனி. இவ் விடத்தில் விழுமாறு விஷ்ணு வீசியதாகப் புராணக் கதைகள் கூறுகின்றன. அசாமியர்கள் மிகுந்த பயபக்தியுடன் இங்கு வழிபடுகிறார்கள்.

- தினமணி கதிர் பக்.28 (20.8.1971 இதழ்)

Read more: http://viduthalai.in/page2/83495.html#ixzz371WBUTbf

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார் அன்றே சொன்னார்!யாரோ சில பிராமணர்கள், பெரியார் ராமசாமி நாயக்கர், இந்த நாட்டில் வாழவே கூடாது என்று கூறி வருகிறார். இவரை நீங்கள் எப்படி இங்கே கூப்பிட்டீர்கள் என்பதாகக் கேட்டார்கள் என்று ஒருவர் இங்கு சொன்னார். பிராமணர்கள் இந்த நாட்டில் வாழக்கூடாது என்றோ, இருக்கக்கூடாது என்றோ திராவிடர் கழகம் வேலை செய்யவில்லை _- திராவிடர் கழகத்தின் திட்டமும் அதுவல்ல- _ திராவிடர் கழகத்தினுடைய திட்டமெல்லாம் _ திராவிடர் கழகமும் நானும் சொல்வதெல்லாம், விரும்புவ தெல்லாம் _ நாங்களும் கொஞ்சம் வாழ வேண்டும் என்பதுதான். இந்த நாட்டிலே நாங்களும் கொஞ்சம் மனிதத் தன்மையோடு சமத்துவமாக இருக்க வேண்டும் என்பதுதான்.

இது பிராமணர்கள் இங்கு வாழக் கூடாது என்று சொன்னதாகவோ, இந்த நாட்டைவிட்டு அவர்கள் போய்விட வேண்டும் என்று சொன்னதாகவோ அர்த்தம் ஆகாது.அவர்களைப் போகச் சொல்லவேண்டிய அவசியமும் இல்லை.அது ஆகிற காரியம் என்று நான் கருதவுமில்லை. தவிரவும், பிராமணர்களுக்கும் நமக்கும் பிரதான பேதம் ஒன்றுமே இல்லை. அவர்கள் அனுசரிக்கின்ற சில பழக்க வழக்கங் களையும், முறைகளையும்தான் நாங்கள் எதிர்க்கின்றோம். இது, அவர்கள் மனம் வைத்தால் மாற்றிக்கொள்வது பிரமாதமான காரியம் இல்லை.

நமக்கும், அவர்களுக்கும் என்ன பேதம்? இப்போது அவர்களும், நாமும் ஒரு குழாயிலே தண்ணீர் பிடிக்கின் றோம்.ஒரு தெருவிலே நடக்கின்றோம். ஒரு தொழிலையே இருவரும் செய்கி றோம். காலமும் பெருத்த மாறுதல் அடைந்துவிட்டது. இந்த நிலைமையில் நமக்குள் மனித தர்மத்தில் பேதம் இருப்பானேன்? ஆகவே, உள்ள பேதங்கள் மாறி, நாம் ஒருவருக் கொருவர் சமமாகவும், சகோதர உரிமை யுடனும் இருக்க வேண்டும் என்பதற் காகத்தான் நான் பாடுபடுகின்றேன். நம்மிடையில் பேத உணர்ச்சி வளரக் கூடாது என்பதில் எனக்குக் கவலை உண்டு. எனவே, முயற்சியில் பலாத் காரம் இருக்கக் கூடாது என்பதிலும் எனக்குக் கவலை உண்டு.

எப்போதுமே காலம் ஒன்றுபோல் இருக்க முடியாது. நம்மில் இரு தரப்பிலும் பல அறிஞர்களும், பொறு மைசாலிகளும் இருப்பதனாலேயே நிலைமை கசப்புக்கு இடமில்லாமல் இருந்து வருகின்றது. இப்படியே என்றும் இருக்கும் என்று நினைக்க முடியாது. திராவிடர் கழக பின் சந்ததிகளும், பிராமணர்களின் பின் சந்ததிகளும் இந்தப்படியே நடந்து கொள்வார்கள் என்றும் கூறமுடியாது. ஆதலால், அதிருப்திகளுக்குக் காரண மானவைகளை மாற்றிக்கொள்வது இருவருக்கும் நலம். அதை நண்பர் சிறீனிவாச ராகவன் அவர்களும் நன்றாய் விளக்கி இருக்கிறார். அதாவது, பிராமணர்களும் காலதேச வர்த்த மானத்துக்குத் தக்கபடி தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதுதான் இப்போது இரு தரப்பினரும் கவனிக்க வேண்டியது. சென்னை ராயப்பேட்டை பார்ப்பனர்களின் அமைப்பான லட்சுமிபுரம் யுவர் சங்கத்தில் -_ -தந்தை பெரியார் 5.1.1953

புல்லேந்தியவர்கள், வாளேந்தினால்- வாளேந்தியவர்கள் என்ன ஏந்து வார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்! விரல் உரல் ஆனால், உரல் என்னவாகும்? அப்புறம் உங்கள் கதி என்னவாகும்? என்பதையும் நினைத்துப் பாருங்கள். அனுதினமும், பார்ப்பனர் தாம் திராவிடர்களுக்குத் தொல்லை கொடுத்து வருவது என்பதை எல்லா மக்களும் உணர்ந்து கொள்ள வேண் டும். பார்ப்பனர்கள் வாழை இலைகள்! திராவிடர்கள் முட்செடிகள். வாழை இலை முள்ளின்மீது மோதினாலும், முள் வாழை இலைமீது மோதினாலும் வாழை இலைதான் அழிந்துவிடும். அதுபோல், பார்ப்பனர்கள் திராவிடர் கள்மீது மோதினால் அவர்கள்தான் அழி வார்கள். திராவிடர்கள் பார்ப்பனர் களை மோத ஆரம்பித்தார்களோ- _ அப்புறம் பார்ப்பனப் பூண்டே இந் நாட்டில் இருக்காது. இதைப் பார்ப் பனர்கள்உணரவேண்டும். பார்ப்பனத் தோழர்களே! எங்களை முட்டாள் களென்று கூறி உங்களைப் புத்திசாலி கள் என்று பெருமையடித்துக் கொள் ளாதீர்கள்.ஆணவப்பட்டு அழிந்து போகாதீர்கள். புத்திசாலிகளானால், புத்திசாலிகளாகவே பிழைத்துக் கொள்ளுங்கள்.

_ -தந்தை பெரியார்: 1948இல்

Read more: http://viduthalai.in/page3/83497.html#ixzz371WNWWA9

தமிழ் ஓவியா said...


நோன்புக்குத் தடை இங்கல்ல, சீனாவில்சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள சிங்ஜியாங் மாகாணத்தில் உள்ள பள்ளி, அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் ரமலான் புனித மாதம் என்று நோன்பு மேற்கோள்வதைத் தடை செய்து உத்தரவிட்டுள்ளது.

தடை உத்தரவு வலைத்தளத்தின்மூலம் பள்ளிகளுக்கும், அரசு நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. மக்களுக்கான நிர்வாகப் பணியாளர்கள், மாணவர்கள் நோன்பு இருக்கவோ, மதரீதியிலான செயல்களில் ஈடுபடவோ முடியாது என்று டர்ஃபன் நகர் வணிகவியல் விவகாரத் துறை அதன் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக சிங்ஜியாங் அரசு தன்னுடைய அரசுப் பணியாளர்களை நோன்பு இருப்பதால் அவர்களின் உடல் நலத்துக்குக் கெடுதல் ஏற்படும் என்று கூறியுள்ளது.

ரமலான் நோன்பு இருப்பதற்கு யாருக்கும் அனுமதி இல்லை என்று அனைவருக்கும் நினைவூட்டி வருகிறோம் என்று அரசின் சார்பில் இயங்கும் போஷவ் வானொலி மற்றும் பல்கலைக்கழகத்தின் தொலைக்காட்சியின் வலைத்தளத்தில் கூறியுள்ளது. கட்சி உறுப்பினர்கள், ஆசிரியர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் ரமலான் நோன்பு மேற்கொள்வதற்கானத் தடையை கட்டாயமாக நடைமுறைப்படுத்துவோம் என்றும் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி, சிங்ஜியாங் அரசு பெரும் அளவில் கூடுவது , பிரார்த்தனைக்கூட்டங்கள் நடத்துவது ஆகியவற்றை பிரிவினைவாத அச்சத்தால் தடுத்து வருகிறது.

உலக உய்குர் காங்கிரஸ் பேச்சாளர் தில்க்சாட் ரக்சிட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறும்போது, சீனா இதுபோன்ற அதிகார, அளவீடுகள்மூலம் ஊழியர்களின் நம்பிக்கையை முடக்குகிறது. மத சுதந்திரத்தை உறுதிப் படுத்துமாறும், ரமலான்மீது அரசியல் அழுத்தங்களை நிறுத்துமாறும் சீனாவைக் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

-டைம்ஸ் ஆப் இந்தியா, 3-.7.-2014

Read more: http://viduthalai.in/page4/83503.html#ixzz371WxKa19

தமிழ் ஓவியா said...


பிஎஸ்எல்வி ஏவப்பட்டபோது மோடியின் ஆங்கிலப் பேச்சு எதை காட்டுகிறது?


பிஎஸ்எல்வி ஏவப்பட்டபோது மோடியின் ஆங்கிலப் பேச்சு எதை காட்டுகிறது? பிஎஸ்எல்வி ஏவுகணை ஏவப்பட்ட போது பிரதமராக உள்ள மோடி இந்தியில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்தி லும் இஸ்ரோ அறிவியலாளர்களைப் பாராட்டிப் பேசியுள்ளார். இரண்டு மொழிகளில் மோடி பேசியுள்ளதன்மூலம் அவருக்கு சரள மாகப் பேச இயலாமற்போனாலும், ஆங்கிலத்திலும் பேசி உள்ளார். மோடியின் இந்த முடிவு இரு மொழி களிலும் பேசும்படியான நிதானத்தை காட்டுகிறது. அறிவியலாளர்களும், தொழில் நுட்ப வல்லுநர்களும் பார்வையாளர்களாக இருந்ததால் அவர் அவ்வாறு பேச வழி ஏற்பட்டது. அதேநேரத்தில் பார்வையாளர்களில் பெரும்பான்மையர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களாகவும் இருந்துள்ளனர். அதனாலும் அவர் அந்த (ஆங்கிலத்தில் பேசும்) முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.

இந்தியில் மட்டுமே பேசிவந்த அவர் ஆங்கிலத்திலும் பேசுவது அவருக்கு வசதியாக இருப்பதை உறுதி செய் துள்ளது. வெளிநாட்டுத்தலைவர் களிடமும் இதேபோல் இரு மொழி களிலும் நிதானமாகப் பேசும் வாய்ப்பும் அவருக்கு ஏற்பட்டு உள்ளது. மோடி இந்தியில் விரும்பிப் பேசுவதன் நோக்கம் காரணம் என்ன வென்றால், அவருடைய பிற மாநில தாழ்வுணர்ச்சியின் அடையாளமே யாகும். மேலும், நடுத்தர வர்க்கத்தி லிருந்து சமூகத்தின் மாபெரும் தகுதியை எட்டினாலும், மேல்தட்டு மக்களிடமிருந்து வேறுபட்டே காணப் படுகிறார் என்பதால் அவர்களுக்கு வசதியாக இந்தியிலோ, மாநில மொழி களிலோ பேச வேண்டி உள்ளது.

சந்தேகமே இல்லாமல் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தி பேசும் மக்களைக் கவர, அவருக்கு இந்தி பயன்பட்டது. அதன்மூலம் இந்தி பேசுவோர் உள்ள கிராமப்பகுதியி லிருந்து, சிறு நகரங்கள் மற்றும் பெரு நகர மக்களிடையே இணைப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். உண் மையைக்கூறும்போது, இந்தி பேசும் மக்களிடையே ஜனதாக் கட்சி நிலை யான செல்வாக்கைத் தாண்டி இந்தி பேசும் மக்களின் ஆதரவைப் பெற்றார். அவர்களுக்கான ஆளாகவே பலராலும் பார்க்கும் நிலையும் ஏற்பட்டது. மொழி மற்றும் அரசியல் இடையே உள்ள உறவுகள்குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளவரான டில்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் அலோக் ராய் கூறும்போது, ஆங்கிலம் பாதுகாப்பானது என்கிற சமுதாயக் கருத்தியல் உள்ளது. ஆகவே, அவர் கட்யின் கொள்கைமுடிவுகளின்படி, மோடி இந்தியில் பேசினால், அடிப் படையில் சார்க் தலைவர்களிடையே மேல்தட்டு தகுதிக்கான அங்கீகார நிராகரிப்பையே பெறுவார்.

ஆனால், சிறீஹரிகோட்டாவில் இந்தியை முதன்மைப்படுத்த மோடி விரும்பவில்லை. அவர் ஆங்கிலத்துடன் இணக்கமாக இருக்க விரும்புகிறார் என்று தெரிகிறது. தேசத்தின் தலைவரா வதற்கு பொருத்தமானவராக இல் லாமல் இருந்து வந்துள்ளார். அதே போன்று அரசியலைத்தாண்டி, அறிவி யலாளர்களிடம் தொடர்புகொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாக கருதுகிறார் என்பது தெரிகிறது. குடியரசுத்தலைவர் உரைக்கு பதில் அளிக்கும் நீண்ட பிரதமரின் இரண்டு உரைகளும் முழுக்க இந்தியில்தான் இருந்தது. அப்படியும் வருணனைகளின் போது தடுமாற்றம் ஏற்பட்டது.

- டைம்ஸ் ஆப் இந்தியா

Read more: http://viduthalai.in/page4/83500.html#ixzz371X7LHFl

தமிழ் ஓவியா said...


இறைவா! ஒரு சொல் கேளாய்.....
உச்ச வெறி கொண்டு
உயிர் வதம் செய்தான் சொத்தில் தகராறாம் சொந்த தந்தையிடம்......

பத்து வயது சிறுமி தானே பார்த்து பழகிய மனிதர் தானே

பக்கத்து வீடு சென்றாள் ஈனப்பிறவியவன் விளையாட்டில் பித்தானாள் பிஞ்சு குடி குடியை கெடுக்கும் நான்காம் நிலையில் நாற்சக்கரம் ஓட்டினான் எதிரில் வந்தவன் இறைவனடி சேர்ந்தான் .....

கீதையின் நாயகனே.....
ரட்சிப்பின் மீட்பரே ......
நபிகள் நாயகரே.......
கேட்பீரோ இதனை.......?

அழுக்கடைந்த சமூகத்தில் அக ஒளி தேடினேன் மீட்பு எங்கே ஓடினேன் என் பகுத்தறிவு என்னை கேட்டது......
கோவில் சிலை திருட்டு உண்டியல் கொள்ளை முதலில் அந்த கோப்புகளை பார்க்க சொல் இறைவனைஎன்றது......

- செ.கவுதமி தமிழரசன் மேலமெய்ஞானபுரம்.

Read more: http://viduthalai.in/page4/83501.html#ixzz371XM7800

தமிழ் ஓவியா said...


சிலந்திப்பட்டிலிருந்து இராணுவ உடை


சிலந்தியிடமிருந்து பெறப்படும் பட்டு இழைகளைக் கொண்டு நெய்யக்கூடிய குண்டுதுளைக்காத ஆடைகளை எதிர்காலத்தில் இராணுவ வீரர்கள் அணியலாம் என்று ஆய் வாளர்கள் கூறுகின்றனர்.

மரபியல் பொறியியல் ஆய்வாளர் கள் பட்டுப்புழுக்களில் தொடங்கி, தற்போது சிலந்திப்பட்டு தயாரிக்கும் முயற்சியில் ஆய்வு செய்துவரு கின்றனர்.

அமெரிக்காவில் லாங்சிங் பகுதியில் உள்ள க்ரெய்க் பையோகிராப்ட் ஆய்வகத்தின் தலைமைப் பொறுப்பு அதிகாரி கிம் தாம்சன் கூறும்போது, சிலந்தி பட்டு இயற்கையாகவே வேறு எதற்கும் இல்லாத தனித்துவமான குணத்தைக் கொண்டுள்ளதாகும். சிலந்திக் கூட்டைப்பற்றி எண்ணும் போது அதன் வடிவமைப்பு காற்றைத் துளைக்கும் ஏவுகணையைக்கூட தடுக் கும் ஆற்றல் கொண்டதாக இருக்கும். ஈ அல்லது பறக்கும் பூச்சிகளையும் தடுத்துவிடும். பட்டு இயற்கையாகவே இழுவைத்தன்மை அதிகம் உள்ள தாகும். அதில் பிடிபடும் இரையின் சத்துக்களை உறிஞ்சும் ஆற்றல் கொண்டதுமாகும் என்று கிம் தாம்சன் கூறினார். மேலும் அவர் கூறும்போது, கணித முறையில் அணுகும்போது, ஈயின் எடை, அதன் வேகம், அதன் அளவு ஆகியவற்றைத் ஒரேயொரு இழையில் சிக்கிக்கொண்டால்கூட அதன் வலிமையின் விகிதம் அளவிட முடியாதது என்று கிம் தாம்சன் கூறினார். எதிர்காலத்தில் அதுபோன்ற பட்டு பல்வேறு வகைகளிலும் பயன் படுத்தப்படக் கூடியதாக இருக்கும்.

பழைமையான உறுதியான கெவ் லார் ஆடைகளைவிட சிலந்தியிட மிருந்து பெறப்படும் பட்டு புதிய முறை யில் பாதுகாப்பை குறிப்பாக இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும்வகையில் இருக்கும் என்று லைவ் சயின்ஸ் அறிக்கை கூறுகிறது.

ஆய்வாளர் தாம்சன் இந்த ஆய்வுக்காக சுமார் 10 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிந்து வந்துள்ளார். அவர் கூறும்போது, பட்டுப்புழு மரபியல்முறையில் பொறியியல்மூலம் செய்வதுபோலவே சிலந்திபட்டின் மூலமும், அதன் தொடர்ச்சியாக உள்ள தலைமுறைகளிலிருந்தும் அவற்றி லுள்ள குணங்களின் அடிப்படையில் எப்போதுமே இதுபோன்றவற்றை மேற்கொள்ளலாம் என்று கூறினார்.

சிலந்தி, பட்டுப்புழு இவை இல் லாமல் பட்டாடைகளுக்கு அதிக அளவில் பட்டுத் தேவைக்காக, பட்டுக் கான புரோட்டீனைச் செயற்கையாக சேர்த்து செயற்கைப் பட்டு இழைகள் பயன்படுத்தப்பட்டுவருவது குறிப்பிடத் தக்கது.

Read more: http://viduthalai.in/page4/83499.html#ixzz371XUZTTJ

தமிழ் ஓவியா said...


இங்கர்சாலின் பொன்மொழிகள்


போப் ஆண்டவர்களை விட - குருமார்களைவிட - புரோகிதர்களைவிட - பாதிரியார்களைவிட - அர்ச்சகர்களைவிட - ஆண்டவனின் அடியவர்களைவிட குண்டூசியைக் கண்டுபிடித்தவன் ஓராயிரம் மடங்கு மக்களுக்கு நன்மை புரிந்திருக்கிறான்.

#####

இன்று நாம் உணர்கிறோம் உலகம் உருண்டை என்பதை! ஆனால், இதைக் கண்டுபிடித்தவர் யார்? போப் ஆண்டவரா? புனித மதக் குருக்களா? புரோகிதர் கூட்டமா? ஆண்டவன் தூதரா? கிறித்துவப் பெருமானா? கடவுள்களால் அனுப்பப்பட்ட அவதாரங்களில் ஒன்றா? அல்ல, நிச்சயமாக அல்ல! ஆனால், சாதாரண ஒரு மனிதன், அதிலும் ஒரு மாலுமி!

Read more: http://viduthalai.in/page3/83498.html#ixzz371Xn6RpI

தமிழ் ஓவியா said...


ஆஸ்திரேலியாவின் மனிதாபிமானமற்ற செயல்


ஈழத்தமிழர்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய அரசு சமீபத்தில் கடுமை யான நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது. இதன் தொடர்ச்சியாக ஈழத்தில் இருந்து பாதுகாப்பு வேண்டி ஆஸ்தி ரேலியா நோக்கிச்சென்ற 150-_க்கும் மேற்பட்டவர்களை நடுக்கடலில் வைத்தே இலங்கை கப்பற்படையிடம் ஒப்படைத்தது.

இது தொடர்பாக இலங்கை கப்பற்படை அதிகாரி ஒருவர் சிங்கள பத்திரிகைக்கு கூறியதாவது, இலங்கை யில் இருந்து சட்டவிரோதமாக வேற்று நாடுகளுக்கு செல்வோரின் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது, இவர் களில் பெரும்பாலானோர் வடக்கில் இருக்கும் ஈழத்தமிழர்கள், இவர்களின் கடல் வழிப்பயணம் சட்ட விரோத மாகவும் ஆபத்தான பயணமாகவும் அமைந்துள்ளது. மேலும் இது போன்ற சட்டவிரோத பயணத்தின் மூலம் பல குற்றவாளிகளும் தப்பி ஓடி ஒளிந்து கொள்கின்றனர். இவர்கள் அனைவரும் அகதிகள் என்றபோர்வையில் உலக நாடுகளின் பார்வையில் தங்களை காட்டிக்கொள்கின்றனர். இது போன்ற சட்டவிரோத ஆபத் தான கடற்பயணம் குறித்து ஆஸ்தி ரேலிய அரசும் கவலை தெரிவித் துள்ளது. சமீபத்தில் இலங்கைக் கப்பற்படைத்தளத்திற்கு ஆஸ்திரேலியா ஒரு தகவல் ஒன்றை அனுப்பியது. அதில் கிருஸ்துமஸ் தீவிற்கு அருகில் சுமார் 150-க்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய கப்பல் ஒன்று தென் பட்டதாகவும் அவை அநேகமாக இலங்கையில் இருந்து வந்த கப்பலாக இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் இந்த தகவலை அடுத்து இலங்கை கப்பற்படை கப்பல் ஒன்று அந்த அகதிகள் கப்பலை சோதனையிட பயணம் மேற்கொண்டு கிருஸ்துமஸ் தீவிற்கு அருகில் அந்தக் கப்பலை கண்டுபிடித்தோம். அப்பகுதி இயற்கை சூழல் பேராபத்து நிறைந்த பகுதியாகை யால் மிகவும் சிரமப்பட்டு அனை வரையும் இலங்கை கப்பற்படை கப்பல் ஏற்றினோம் என்று கூறினார். இதனி டையே, ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அந்நாட்டு கிரீன் கட்சி அறிவித்துள்ளது.

கிருஸ்துமஸ் தீவின் கடற்பரப்பில் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் 150_க்கும் மேற்பட்ட மக்களை மீண்டும் இலங்கைக்கே அனுப்பிய இந்த நட வடிக்கை மிகவும் கொடிய மனிதாபி மானமற்ற செயல் என அக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. புகலிடம் கோரிவரும் மக்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைத்த நடவடிக்கை இரக்கமற்ற செயலாகும், குற்றவாளிகளினால் பாதிக்கப்பட்டவர் களை குற்றவாளிகளிடமே ஒப்படைத் தமைக்கு நிகரான காரியத்தை அர சாங்கம் செய்ய முயற்சித்துள்ளனர். இச்செயல் நாட்டின் மனித உரிமை குறித்த நற்பெயருக்கு இந்த நடவடிக்கை களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது புகலிடம் கோரி வருபவர்களை திருப்பி அனுப்பி வைக்கும் நடவடிக்கையானது அய்க்கிய நாடுகள் பிரகடனத்தை மீறும் செய லாகும் என தெரிவித்துள்ளது. இதனிடையே இலங்கைக் கப்பற்படையிடம் ஒப்படைக்கப்பட்ட அனைத்து தமிழர்களும் புதன் (03.07.14) இலங்கையை சென்றடைதிருப்பார்கள் என ஆஸ்திரேலிய செய்தி மய்யம் உறுதி செய்தது. அந்த வகையில் இவர்கள் அனைவரும் கடல் மார்க்கமாகவே நாடுகடத்தப்பட்டுள்ளார்கள். ஆஸ்திரேலியாவின் இந்த மனிதாபிமானமற்ற கொடிய செயல் உலகத் தமிழர்களிடையே பெரிதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா வில் ஆட்சி மாற்றமடையத் துவங்கி யதும், இலங்கை அரசு இந்திய வெளி யுறவுத்துறையின் துணையுடன் அடைக்கலம் கோரி பல்வேறு நாடு களுக்குச் செல்லும் அகதிகளை மீண்டும் தங்கள் நாட்டிற்கு கொண்டுவரும் முயற்சியின் ஆரம்ப கட்டமாகவே இது கருதப்படுகிறது.

_ சரவணா இராஜேந்திரன்

Read more: http://viduthalai.in/page5/83502.html#ixzz371Xz4a6P

தமிழ் ஓவியா said...


யாகம் யாருக்காக?

யாகம் என்பது ஆரிய முறை. இதைச் செய்வதால் கடவுள்கள் திருப்தி அடைந்து வேண்டுவதைத் தருவார்கள் என்ற பொய்யைச் சொல்லிப் பிழைப்புக்கு வழி ஏற்படுத்திக் கொண்டனர் ஆரியப் பார்ப்பனர்கள்.

7000 கோடி ரூபாய் அளவுக்கு பொய்க் கணக்கு எழுதி மோசடி செய்தார் என்ற புகாரில் சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன முதலாளி ராமலிங்க ராஜூ என்பவர் சிறையில் அமைக்கப்பட்டுள் ளார். பிணையில் வெளிவர அனுமதிக்கு மாறு நீதிமன்றத்தில் மனு கொடுத் துள்ளார். மனு - வரும் 16ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட விருக்கிறது.

இந்நிலையில் அவருக்கு ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காக, அவரது துணை நிறுவனம் ஒன்றின் பணியாளர்கள் யாகம் நடத்தியுள்ளன ராம்! குற்றம் செய்தவர்களுக்குக்கூட யாகம் செய்தால் -_ பகவான் அனுக்கிரகம் கிடைக்கும் என்றால், கடவுள் எப்பேர்ப் பட்ட மோசமான ஜென்மமாகப் படைக்கப்பட்டுள்ளது?

சிந்திக்க வேண்டும். சாமியை வேண்டிக் கொண்டு திருடன் திருடப் போகிறான்; சாமியை வேண்டிக் கொண்டு திருடனைப் பிடிக்கக் காவல ரும் போகிறார் என்றால்... கடவுள் யார் பக்கம்? என்று கேட்டார், பெரியார்!

அதே கேள்வியை இப்போதும் கேட்டுப் பார்க்க வேண்டிய நிலை உள் ளதே, இருக்கலாமா? சிந்திப்பீர்!

குறிப்பு: பிணை கொடுக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(Deccan Chronicle 13.1.2009).

Read more: http://viduthalai.in/page5/83556.html#ixzz371Y6Kf5h

தமிழ் ஓவியா said...


அறிஞர் அண்ணாவின் படைப்புகளில் பெண்ணுரிமை இடம் பெறவில்லையா?


அறிஞர் அண்ணாவின் படைப்புகளில் பெண்ணுரிமை இடம் பெறவில்லையா?

கலைமாமணி மறைமலையான் விளக்கம்

சாகித்திய அகாடமி மற்றும் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கியத் துறை சார்பில் விந்தன் நூற்றாண்டை நோக்கி... என்னும் தலைப்பில் 25.6.2014 அன்று நடை பெற்ற கருத்தரங்கில், வ. கீதா என்பவர் காலமெல்லாம் பெண்ணிய உரிமை களுக்காக எழுத்தாலும், பேச்சாலும் போர் முரசு கொட்டிய பேரறிஞர் அண்ணா அவர்களின் படைப்புகளில் பெண்ணுரிமை பற்றி எழுதப்பட வில்லை என்றும், அவரது படைப் புகள் பெண்ணிய மறுமலர்ச்சிக்கு வித்திடவில்லை என்றும் பெருமை வாய்ந்த பல்கலைக் கழகத்தில் பேசி அண்ணாவின் தமிழின வளர்ச்சிப் பணியை இழிவுபடுத்திக் கூறியுள்ள கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும்.

ஈ.வெ.ரா.வின் எழுத்துகளில் பெண் உரிமைகள் பிரதிபலிக்கும். ஆனால், அவரைப் பின்தொடர்ந்த அண்ணா துரை எழுத்துகளில் அதைப் பார்க்க முடியவில்லை என்று அந்தப் பெண் எழுத்தாளர் பேசியுள்ளார்.

ஏதோ, பேரறிஞர் அண்ணா தீட்டிய அத்தனை வகையான இலக்கியப் படைப்புகளையும் ஆழ்ந்து படித்து விட்ட அறிவுக் கொழுந்தாகத் தம்மை நினைத்துக் கொண்டு, பொறுப்பற்ற முறையில் புழுதிவாரித் தூற்றலாமா? இந்த எழுத்தாளி அம்மையார் என்கிற நியாயமான கேள்வியைத் திராவிட இயக்கத்தின் நீண்ட காலத் தொண் டர்கள் எழுப்பவே செய்வர்.

பகுத்தறிவுத் தந்தை பெரியார் அவர்கள், தம்முடைய சொந்தச் சிந் தனையால் என்னென்ன சமுதாயச் சீர்திருத்தப் பகுத்தறிவுக் கொள்கைகளைத் தமிழ்நாட்டின் உரிமை - தமிழ்மொழியின் உரிமை - _ பெண் குலத்தின் உரிமை - தொழிலாளர் உரிமை - வகுப்புவாரிய இடஒதுக்கீடு உரிமை முதலானவற்றுக்காக முழங்கி னாரோ, அத்தனைக்கும், புத்தம் புதிய மறுமலர்ச்சி உரை நடையுடன் - கவிதைச் சாரலுடன் _ தம்முடைய கற் பனை வளம் கொழிக்கும் இலக்கியப் படைப்புகளை உருவாக்கியவர் பேரறிஞர் அண்ணா.

சிறுகதை, நெடுங்கதை, நாடகம், கவிதை என்பதாக எதை எழுதினாலும், பெரியாரின் கொள்கைகளையே கருப்பொருளாக வைத்து மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஊட்டிய அந்தப் படைப்பு இலக்கியப்பகலவன் அண்ணா _ தம்முடைய ஒரே தலைவர். பெரியார் பரப்பிய பெண்ணுரிமைக் கொள்கையை மட்டும் மறப்பாரா? துறப்பாரா?

வேலைக்காரி என்னும் அண்ணா தீட்டிய நாடகத்தை நடிப்பிசைப் புலவர் கே.ஆர். இராமசாமி தஞ்சாவூரில் ஆண்டுக் கணக்கில் நடத்தினாரே? அதுவே பிறகு திரைப்படமாகவும் தமிழ்நாட்டைக் கவர்ந்து பணத்தைக் குவித்ததே! அது ஏழைப் பெண்ணின் உரிமைகளுக்காக எழுதப்பட்ட கலைப்படைப்பு இல்லையா?

சந்திரோதயம், பாவையின் பயணம் போன்ற நாடகங்களிலும் பெண்ணியம் பற்றிப் பேசவில்லையா? கபோதிபுரக் காதல், இரங்கோன்ராதா, பார்வதி பி.ஏ., குமரிக்கோட்டம், தசாவதாரம் -_ இப்படி, எத்தனையோ புதினங்களும், வள்ளித் திருமணம், கோமளத்தின் கோபம், உண்ணாவிரதம் ஒரு தண் டனை - இப்படி எத்தனையோ சிறு கதைகளும், அண்ணாவின் பெண்ணிய உரிமைப் படைப்புகள் இல்லையா?

எப்படி முகத்தில் இரண்டு கண்கள் சரியாக அமைந்து, முகத்திற்கு ஒரு பொலிவை ஏற்படுத்துகிறதோ அது போல், சமூகத்தின் இரண்டு கண்களாக அமைந்த ஆண்களும், பெண்களும் சமமான உரிமை பெற்றால்தான் சமூகம் பொலிவு பெறும். என்று எழுதியுள் ளவர் அண்ணா.

ஆனால், மேலே நாம் தொட்டுக் காட்டியுள்ள படைப்புகளில் சிலவற் றைக்கூடப் படிக்காமல் - அண்ணா துரை எழுத்துகளில் பெண் உரிமை பிரதிபலிக்கவில்லை என்று வ.கீதா அவதூறாகப் பேசலாமா? இப்படிப் பட்ட நுனிப்புல் மேயும் ஆணவக் காரர்கள் இந்திய அரசின் சாகித்திய அகாடமியில் உறுப்பினராக இடம் பெற்று இருப்பது அந்த இலக்கிய அமைப்புக்கே இழுக்கு இல்லையா?

பெண்ணிய உரிமையில் எந்த அளவுக்கு அண்ணா அழுத்தமாக அக்கறை கொண்டிருந்தார் என்பதற்கு - சென்னை, தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டு வரும் அண்ணாவைப் பற்றிய ஆய்வு நூல்களைப் படிக்க வேண்டும் வ.கீதா.

அந்த நிறுவனம் தழைத்து ஓங்குவதற்கு இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூபாய் பத்து லட்சம் வைப்புத் தொகையாக வைத்து அண்ணாவின் பெயரில் ஓர் அறக்கட் டளையை அங்கு ஆரம்பித்து அவ்வறக் கட்டளையின் சார்பில் ஆண்டுதோறும் அண்ணாவின் பன்முக இலக்கியங் களைக் குறித்து இன்றைக்கும், என் றைக்கும் எல்லோரும் தெரிந்து கொள்ளும் வகையில் ஆண்டிற்கு இரண்டு முறை ஆராய்ச்சிப் படைப் புகள் வெளியிடுகிறது. இதை ஆழ்ந்து படிக்க வ.கீதா அவர்கள் முனைந்திடுக! அறிஞர்களைப் பற்றிப் பேசும் முன் தன்னைப்பற்றி அறிந்திடுக!

பேரறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப் பெற்ற அந்த நிறுவனத்தின் நூல்களைப் படித்தாவது தமது எழுத்தாளர் தகுதியை உயர்த்திக் கொள்ள வேண்டும் எனப் பேரறிஞர் அண்ணாவின் பெருவாழ்வு என்னும் அவரது வரலாற்று நூலை 1967லேயே எழுதிய இந்த 82 வயது அ. மறை மலையான், வ. கீதா அவர்களைக் கேட் டுக் கொள்கின்றேன்.

தமிழ் ஓவியா said...


பழத்தின் நன்மைகள்


எலுமிச்சம்பழம்: அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச் சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து கொடுத் தால் உடனடியாக பேதி நின்று விடும். கடுமை யான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்றை உறிஞ்சி குடித்தால் உடனே களைப்பை போக்கும்

நெஞ்சினில் கபம் கட்டி இருமலால் கஷ்டப் படுகிறவர்கள் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி உடல் நன்கு தேறும்.

ஆரஞ்சுப்பழம்: ஆரஞ்சில் வைட்ட மின் ஏ அதிக மாகவும், வைட்ட மின் சி-யும், பி-யும், பி-2ம் உள்ளன. மேலும் இதில் சுண் ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படு கிறது. பல நாட் களாக நோயால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும். இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும். பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல்-ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் பெறலாம்.

காய்கறிகள்....

பழங்களைப் போலவே காய்கறிகளும் மனிதர் களுக்கு உடல்நலக் கோளாறுகளை தனிக்கும் வகையில்தான் உள்ளது. நோய்களை முழுதுமாக குணப்படுத்துகிறதோ இல்லையோ ஆனால், நோய்வரா மல் தடுக்கும் ஆற்றல் காய், கனிகளுக்கு உண்டு என்பதை மறுக்கமுடியாது. நமது முன்னோர் களும், சித்தர்களும் காய் கனிகளையே பல நாட்கள் உண்டு நீண்ட ஆயுளுடன், திடகாத்திர ஆரோக்கியத் துடன் வாழ்ந்திருந்ததை நமது வரலாறு கூறும். காய்கறிகள் ஒவ்வொன்றிற்குமே ஒவ்வொரு வகை யான மருத்துவ குணம் உண்டு. உடனே நீங்கள் இந்த நோய்க்கு இந்த காயை சாப்பிட்டால் இந்தக் குறிப் பிட்ட நோய் குணமாகிவிடுமா என்று கேள்வி கேட்கக் கூடாது.

பொதுவாக காய்கறிகளில் நார்ச்சத்து நிரம்பியிருப் பதினால் வயிற்றுக்கு கேடு செய்யாமல், நம் உடம்பை ஆரோக்கிய முடன் வைத்திருக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளும், ரத்த அழுத்த நோயாளிகளும் காய் கறிகளை நிறைய உண்பது அவசியம் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் உண்டு. காய்கறிகளில் இருக்கும் பைபர் எனப்படும் நார்ச்சத்து வயிற்றில் நீண்ட நேரம் தங்கி நல்ல ஜீரண சக்தியை கொடுத்து உணவில் இருந்து சத்துக்களை பிரித்து ரத்தத்தில் சேர்ப்பதற்கு உதவி செய்கிறது. இந்த நார்சத்தற்ற உணவுகளை சக்கையாக நாம் உண்ணும் போதுதான் மலச்சிக்கல் மற்றும் குடல் தொல்லைகள் போன்றவற்றிற்கு ஆளாக நேரிடுகிறது. எனவே காய்கறிகள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

Read more: http://viduthalai.in/page7/83561.html#ixzz371ZFs2nD

தமிழ் ஓவியா said...


அது அப்போ! இது இப்போ!


தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி

தமிழ்நாட்டில் கடல்வளம் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை நரேந்திரமோடி பேட்டி

பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாடு கடல் வளத்தை சரியாக பயன்படுத்தவில்லை என குற்றம் சாற்றினார்.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது:

தமிழ்நாடு மிக அதிக அளவு சுற்றுலாப் பகுதிகள் நிறைந்த பகுதி. இங்கு சுற்றுலாத் துறையை மேம்படுத்த கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சுற்றுலா வளர்ச்சி அடைவதன் மூலம் பெரிய தொழில் அதிபர்களுக்கு லாபம் இல்லை. ஆனால், இதன் மூலம் சுற்றுலா வழிகாட்டிகள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் தமிழ்நாடு இந்தியாவிலேயே மிகப் பெரிய கடல் வளம் நிறைந்த மாநிலம் ஆகும்.

குஜராத்தில் கடற்கரை மற்றும் கடல் வளத்தை முழுவதும் பயன்படுத்தி வருவதால் அங்கு நல்ல வளர்ச்சி உள்ளது. தமிழ்நாடு கடல் வளத்தை சரியாக பயன்படுத்தவில்லை. தமிழகம் கடல் வளத்தை முழுமையாக பயன்படுத்தினால் தொழில் வளர்ச்சி பெறுவதுடன் வேலை வாய்ப்பும் பெருகும். தமிழ் நாட்டில் ஏற்கெனவே இருக்கும் துறைமுகங்களை மேம்படுத்தவும், புதிதாக துறைமுகங்களை உருவாக் கவும் நடவடிக்கை எடுப்பதன் மூலம் தொழில் வளர்ச் சியை அதிகரிக்கச் செய்ய முடியும் என்றும் கூறினார்.

ஆட்சிக்கு வந்தபின் என்ன நடக்கிறது?

கச்சத்தீவு: நீதிமன்றத்தில் கச்சத்தீவு முடிந்தபோன ஒன்று, இந்தியாவின் பகுதி அல்ல என்று மத்திய அரசு கூறி உள்ளது.

இந்திய பெயர்ப் பலகை: 5ஆம் திட்டில் இந்திய எல்லைப் பகுதி என்று அறிவிப்புப் பலகை.

இப்படி இருந்தால் கடல் வளம் அதிகமான அளவில் தமிழகத்தில் இருப்பதாகக் கூறிவிட்டு, அந்த வளத்தை அண்டை நாட்டுக்குத் தாரை வார்க்கும் செயலை மத்திய அரசு செய்யலாமா? சேது சமுத்திரத் திட்டத்தில் மத்திய அரசுக்கு என்ன நிலைப்பாடு?

Read more: http://viduthalai.in/page1/83580.html#ixzz371a0hvKw

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?

ஆதிசங்கரர் கடவுளா?

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் ஆதி சங்கரர் சன்னதி உள்ளது காமாட்சியம்மன் உற்சவ மூர்த்தி பவனி வருமுன் ஆதி சங்கரர் சன்னதி முன் நின்று அவருடைய உத்தரவு பெற்றே வலம் வருகிறதாம்.

அப்படியானால் ஆதிசங்கரர் மனிதரா? அல்லது கடவுளே உத் தரவு கேட்டு செயல்படும் பெரிய கடவுளா?

கடவுளுக்கு மேலே பிராமணன் என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கூறியது இந்த அடிப் படையில்தானோ!

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?


ஆதிசங்கரர் கடவுளா?

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் ஆதி சங்கரர் சன்னதி உள்ளது காமாட்சியம்மன் உற்சவ மூர்த்தி பவனி வருமுன் ஆதி சங்கரர் சன்னதி முன் நின்று அவருடைய உத்தரவு பெற்றே வலம் வருகிறதாம்.

அப்படியானால் ஆதிசங்கரர் மனிதரா? அல்லது கடவுளே உத் தரவு கேட்டு செயல்படும் பெரிய கடவுளா?

கடவுளுக்கு மேலே பிராமணன் என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கூறியது இந்த அடிப் படையில்தானோ!

Read more: http://viduthalai.in/page1/83575.html#ixzz371abGBEC

தமிழ் ஓவியா said...

சளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்

மிளகையும், வெல்லத்தையும் வெறும் வயிற்றில் உட்கொண்டால் இருமல் நீர்க்கோவை ஆகி யவை குணமாகும். சீரகத்தையும், கற்கண்டையும் மென்று தின்றால் இருமல் குணமாகும். நான்கு மிளகையும், இரு கிராம்பையும் நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு வெற்றிலையில் மடித்து மென்று விழுங்கினால் இருமல் குணமாகும். நான்கு வால் மிளகைச் சிறிதளவு புழுங்கலரிசியுடன் வாயில் போட்டு மென்று அதன் ரசத்தை பருகினால் இருமல் குணமாகும்.

ணீ தூய்மையான அருகம்புல்லை எடுத்து நன்றாக மென்று பற்களில் வலியுள்ள பகுதியில் ஒதுக்கினால் பல்வலி உடனே குணமாகும். பல் துலக்கி பின் தேனை ஈறு முழுவதும் தடவவேண்டும். சிறிது நேரம் கழித்து வாய்க் கொப்பளித்தால் பற்களில் உள்ள கிருமிகள் அழியும். தேங்காய் எண்ணெயை நாள்தோறும் பலமுறை உதட்டில் தடவினால் உதடு வெடிப்பு உதட்டு புண், தோல் உரிதல் ஆகியன குணமாகும்.

ணீஅரிசியையும், திப்பிலியையும் சிறிதளவு எடுத்து தேனில் பத்து நாள்கள் ஊறவைத்து தினம் ஒரு திப்பிலியை வாயில் போட்டு அடக்கிக்கொண்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும். மழைக்காலத்தில் ஒரு தம்ளர் பாலில் சிறிதளவு சுக்கு பொடி கலந்து இரவு குடித்து வந்தால் காலையில் புத்துணர்வு பெறலாம். துளசி இலையை நன்றாக வெயிலில் காய வைத்து பொடி செய்து டீத்தூளில் சேர்த்து டீ தயாரித்து குடித்து வந்தால் நன்கு பசி எடுக்கும். குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சளி, கபம் நீங்கும்.

ணீ அரிசிப் பொரியைத் தண்ணீரில் வேகவைத்து சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பினால் வரக்கூடிய தலை சுற்றல் குணமாகும். தலை சுற்றலுடன் வாந்தி ஏற்பட்டால் வெங்காயத்தினை சாறெடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடலாம். துளசி இலைச்சாறு, 150 மி.லி. கற்கண்டு இவை இரண்டையும் கலந்து சர்ப்பத்தாகக் காய்ச்ச வேண்டும். அதில் வேளைக்கு ஒரு டீஸ்பூன் அளவு தினசரி இருவேளை உட்கொண்ட பின் பசும்பால் அருந்தலாம்.

ணீ சித்தரத்தையைச் சிறிதளவு எடுத்துப்பொடித்து, பசும்பாலில் கலந்து உட்கொண்டால் தும்மல், மூக்கில் நீர்வடிதல் குணமாகும். பூண்டுத் தோல், மிளகு, ஓமம், ஆகியவற்றை இடித்து நெருப்பு அனலில் இட்டுப் புகையைப் பிடித்தால் மூக்கடைப்பு மூக்கில் நீர்வடிதல் முதலிய நோய்கள் குணமாகும்.

Read more: http://viduthalai.in/page1/83607.html#ixzz371ddKFA2

தமிழ் ஓவியா said...


இளவரசன் நினைவு ஒரு சிந்தனை!
எழுத்துரு அளவு Larger Font Smaller Fontதருமபுரி மாவட்டம் நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டி கிராமங்கள் எரியூட்டப்பட்டன (7.11.2012) 226 வீடுகள் தீயின் கோரப் பசிக்கு இரையாயின.

உடனடியாக அந்தப் பகுதிக்குச் சென்று உண்மை நிலைகளைத் தெரிந்து கொள்ள கழகத் தோழர்களுடன் நேரில் சென்றார் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் (14.11.2012).

நேரில் கண்ட உண்மைகளின் அடிப்படையில் திராவிடர் கழகத்தின் சார்பில் அறிக்கை காவல்துறைத் தலைமை இயக்குநரிடம் (டிஜிபி) அளிக்கப்பட்டது (27.11.2012).

தருமபுரியில் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. (9.12.2012).

பெரும்பாலான கட்சித் தலைவர்கள் பிரம்மாண்ட மான அந்த மாநாட்டில் பங்கேற்று ஆக்கரீதியான கருத்துக்களைத் தெரிவித்தனர்.

அன்று காலையில் சிறப்பான கருத்தரங்கமும் நடத்தப்பட்டது; இது தொடர்பாக அரசு விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை இதுவரை அளிக்கப்படவில்லை.

பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் நிவாரண உதவிகள் அளிக்கப்பட்டன.

அங்கு நேரில் சென்று விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியூட்டக் கூடியவை.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளவரசன், வன்னிய சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட தனிப்பட்ட பிரச்சினையை சமூகப் பிரச்சினையாக்கிய ஜாதீய வாதம் இதன் பின்னணியில் இருப்பதை அறிய முடிந்தது.

அதே பகுதியில் தாழ்த்தப்பட்டவரும், வன்னிய பிரிவைச் சேர்ந்தவரும் திருமணம் செய்து கொண்டு பல ஆண்டு காலமாக எவ்வித சிக்கலுமின்றி மக்கள் பேற்றுடன் மகிழ்ச்சியாக வாழக் கூடிய பல குடும்பத் தினரையும் காண வாய்ப்புக் கிடைத்தது.

பிரச்சினை நீதிமன்றம் வரை சென்ற நிலையில்கூட சம்பந்தப்பட்ட பெண் தன் காதலில் உறுதியாக இருந்து காதலனுடன் செல்ல விருப்பம் தெரிவித்ததை நாடு அறியும்.

இந்தியாவிலேயே ஜாதி ஒழிப்புக்கு வித்திட்டு மக்கள் மத்தியிலே சமத்துவ சிந்தனை தமிழ் மண்ணில் ஊன்றப்படுவதற்குக் காரணமாக இருந்தவர் தந்தை பெரியாரும், அவர்கள் கண்ட இயக்கமும்தான்.

ஜாதி ஒழிப்புத் திருமணங்களும் அதிகம் நடைபெறும் மண்ணாக தமிழ்நாடு இருந்து வருகிறது. திராவிடர் கழக மாநாடுகளில்கூட ஏராளமான ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெற்றும் வருகின்றன!

இதற்கென்றே சுயமரியாதைத் திருமண நிறுவனமும் பெரியார் திடலில் இயங்கி வருகிறது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் மன்றல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, ஜாதி மறுப்பு, மத மறுப்புத் திருமணங்களுக்கான ஏற்பாடுக ளும் செய்யப்பட்டன.

விதவையர் திருமணம், மணவிலக்குச் செய்யப் பட்டோருக்கான திருமணங்களுக்கும் மன்றல் நிகழ்ச்சிகள் வழி வகுத்தன - இளைஞர்கள் மத்தியிலும் ஆக்கப் பூர்வமான சிந்தனைகள் இவற்றின் மூலம் தட்டி எழுப்பப்பட்டன.

இதற்கிடையே நல்லவிதமாகப் போய் கொண்டிருந்த இளவரசன் வாழ்க்கைப் பயணத்தில் புயல் வீச வழி செய்யப்பட்டது. அதன் விளைவு இளவரசன் தற்கொலை(?) செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளதை யாரும்மறுக்க முடியாது.

அந்த இளைஞன் மறைந்து ஓராண்டு ஓடி விட்டது; இதற்கிடையே தலித் மக்களை சமுதாயத்திலிருந்து தனிமைப்படுத்தும் திட்டம் ஒன்றை உருவாக்க முயற்சிகள் நடைபெறத் தொடங்கின.

இது ஒரு பார்ப்பன ஆதிக்கச் சமுதாயம். அந்த ஆதிக்கத்திலிருந்து அனைத்து வழிகளிலும் பெரும் பாலான பார்ப்பனர் அல்லாத மக்களை விடுதலை பெறச் செய்யவும், இம்மக்களுக்கு உரிய உரிமைகளை ஈட்டவும் தந்தை பெரியார் சமூகப் புரட்சியை நடத்தினார்.

பறையன் பட்டம் போகாமல் சூத்திரப் பட்டம் போகாது என்று சொன்ன தலைவர் தந்தை பெரியார்; அப்படிப்பட்ட நாட்டில், தாழ்த்தப்பட்ட மக்களை ஆதிக்கப் பிரிவினரான பார்ப்பனர்களையும் இணைத் துக் கொண்டு தனிமைப்படுத்தும் முயற்சி என்பது மிகவும் பிற்போக்குத்தனமான ஜாதீய நோக்காகும். எந்த அளவுக்குச் சென்றுள்ளனர் என்றால் வன்கொடுமை தடுப்புச் சட்டமே கூடாது என்று வழக்குத் தொடுத் துள்ளனர். அதனைத் திராவிடர் கழகம் உரிய முறையில் சந்திக்கும்.

இந்த ஜாதீய நோக்கு எடுபடவில்லை என்பது நாடாளுமன்றத் தேர்தலும் நிரூபித்து விட்டது.

இளவரசன் நினைவு நாளில் ஜாதி ஒழிந்த சமுதாயத்தை உருவாக்கும் திசையில் முழு மூச்சாகப் பாடுபட உறுதி எடுப்பதுதான் அந்த ஒடுக்கப்பட்ட சமுதாய இளைஞனுக்கு செலுத்தும் தலை சிறந்த வீர வணக்கமாக இருக்க முடியும்.

Read more: http://viduthalai.in/page1/83582.html#ixzz371dwtOSV

தமிழ் ஓவியா said...


சத்தீஸ்கரில் இந்துமத ஆட்சியா?

சத்தீஸ்கரில் இந்துமத ஆட்சியா?

பிற மதத்தவர்கள் உள்ளே நுழையக் கூடாதாம்!

சிரிஸ்குடா (சத்தீஸ்கர்), ஜூலை 8_ - சங் பரிவாரத்தின் மதப் பிரிவான விஸ்வ இந்து பரீசத் அமைப்பு நடத்தி வந்த ஆவேசமான மத வெறி பிரச்சாரத்தின் விளைவாக சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்டர் மாவட்டத்தின் 50_க்கு மேற்பட்ட கிராமங்களில் இந்துமதம் தவிர மற்ற மதங்களைச் சேர்ந்த வர்கள், குறிப்பாக கிறிஸ் தவர்கள், நுழைவதற்கும், மதப்பிரச்சாரம் செய்வ தற்கும் அந்த கிராமங் களின் பஞ்சாயத்துகள் தடை விதித்துள்ளன. இந்தத் தடை கடந்த ஆறுமாதங்களாக நடை முறையில் இருந்து வருகிறது.

சத்தீஸ்கர் பஞ்சாயத் துராஜ் சட்டத்தின் 129 ஜி பிரிவின் படி கிராமங் களில் இந்து மதம் அல் லாத மதப்பிரச்சாரம், வழிபாடுகள் மற்றும் விளக்கவுரைகளுக்குத் தடை விதித்து 50_க்கு மேற்பட்ட பஞ்சாயத்துகள் உத்தரவுகளைப் பிறப்பித் துள்ளன என்று பஸ்டர் மாவட்ட விஎச்பி தலைவர் சுரேஷ்யாதவ் கூறுகிறார். பஸ்டர் மாவட்டத்தின் டோகாபால் வட்டத்தில் உள்ள சிரிஸ்குடா கிராமப் பஞ்சாயத்து மே 10 அன்று நடத்தப்பட்ட சிறப்பு கிராம சபைக்கூட்டத்தில் இந்த உத்தரவைப் பிறப் பித்தது.

பிற மதப்பிரச்சாரகர் களின் கட்டாய மதமாற் றத்தைத் தடை செய்யவும், இந்து தெய்வங்களுக்கும், சடங்குகளுக்கும் எதிராக அவர்கள் கீழ்த்தரமான சொற்களைப் பயன்படுத் துவதைத் தடுக்கவும், இந்து மதம் தவிர்த்த பிறமதங் களின் பிரார்த்தனைகள், கூட்டங்கள், பிரச்சாரங் கள் உள்ளிட்ட மதநட வடிக்கைகளை சிரிஸ்குடா கிராம சபை தடை செய் கிறது என்று கூறப்பட் டுள்ளதாக இந்து நாளிதழ் கூறுகிறது. இந்தத் தடை உத்தரவின் நகல் ஒன்றும் அதனிடம் உள்ளது.

இந்து மதத் திரு விழாவுக்கு கிறிஸ்தவ குடும்பங்கள் நன்கொடை அளிக்கமறுத்ததைத் தொடர்ந்து இந்த பிரச்சினை சிரிஸ்குடாவில் தொடங்கியது. அவர்கள் நன்கொடை தர மறுத்து விட்டனர். அண்மையில் இக்கிராமத்தில் சில கிறிஸ் தவர்கள் தாக்கப்பட்டனர் என்று குற்றம் சாட்டப் பட்டது. அவர்களுக்கு கிராமப்பஞ்சாயத்து உத்தர வின்படி ரேசன் பொருட் கள் மறுக்கப்பட்டன. இரண்டு மாதங்களுக்கு மேலாக கிராமத்தில் ரேசன் பொருட்கள் எங் களுக்கு மறுக்கப்பட்டு வருகிறது. ரேசன் பொருட் களை வாங்கச் சென்ற பத்து கிறிஸ்துவர்கள் தாக்கப்பட்டனர் என்று 2002ஆம் ஆண்டில் கிறிஸ் தவ மதத்துக்கு மாறிய குடும்பத்தைச் சேர்ந்த சோனுரு மாண்டவி குற்றம் சாட்டுகிறார். கிராமத்தினர் தங்கள் பிரச்சினைகளை எங்களி டம் கொண்டு வந்தனர். விஎச்பி சட்டம் பற்றி கூறியது. இப்போது கிரா மப் பஞ்சாயத்துகள் உத் தரவுகளைப் பிறப்பித்துள் ளன. இப்போது இந்த உத்தரவை நிறைவேற் றுவது மாவட்ட நிர்வா கத்தின் பொறுப்பாகும். இல்லாவிடில் நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்போம்.

தடையுத்தரவை நிறை வேற்ற உத்தரவிடும்படி நாங்கள் ஆளுநரையும், முதல்வரையும் அணுகு வோம் என்று சுரேஷ் யாதவ் கூறுகிறார். இந்தத் தடை சட்டவிரோதமா னது என்றும், அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று சத்தீஸ்கர் கிறிஸ்தவ அமைப்பினர் இதற்கு எதிர்ப்புதெரிவித்துள்ளனர். கட்டப்பஞ்சாயத்துகளில் நடப்பது போல் இங்கும் நடந்துள்ளது. ஒரு பஞ்சாயத்து சட்டத்தின் அடிப்படையில் எங்களு டைய மத நடவடிக்கை களை தடுக்கவேண்டும் என்று நீங்கள் எப்படி கேட்க முடியும் என்று இந்த அமைப்பின் தலை வர் அருண் பன்னாலால் கேள்வி எழுப்புகிறார்.

அரசியல் சட்டம் அனைவருக்கும் மதச்சுதந் திரம் அளித்துள்ளது என்று அவர் கூறினார். பஸ்டரில் மதமாற்றம் ஒரு பெரிய விஷயமில்லை . கிராமத்தினர் அனைவருக் கும் இடையூறின்றி ரேசன் பொருட்கள் கிடைப்பதை நாங்கள் உறுதிப்படுத்து வோம் என்று மாவட்ட ஆட்சியர் அங்கிட் ஆனந்த் கூறினார்.

Read more: http://viduthalai.in/page1/83636.html#ixzz371euGqvV

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?


சண்டை

ஈசனுக்கு தன் கண்ணை கொடுத்த கண்ணப்பநாயனாரின் பக்தி பலருக்கும் தெரியும். திருமால் தனது கண்ணை தந்த கதை தெரியுமா?

திருமாலுக்கும், திதீசி எனும் சிவபக்தருக்கும் பகை ஏற்பட்டதாம். இரு வருக்குமான சண்டை யில், திருமாலின் அனைத்து பாணங்களும் வீணாகின. ததீசியை அவரது சிவபக்தி காத்தருளியது.

இறுதியாக, சக்கரா யுதத்தைப் பிரயோகித் தார் திருமால். அதில் இருந்தும் ததீசி தப்பினார். பிறகு திருமால், சிவ பூஜையில் ஈடுபட்டார். தினமும் ஆயிரம் மலர் களால் வழிபட எண்ணி னார்.

ஒரு நாள்... பூ ஒன்று குறைந்து போக, தனது கண்ணை பெயர்த்த ஆயிரமாவது பூவாக சிவனாருக்குச் சமர்ப்பித் தார். அந்த நிமிடமே சிவனார் திருக்காட்சி தந்தார். இழந்த கண்ணை யும் தந்து, சுதர்சன கண்ணன் என்றும் பெயர் சூட்டி அருள்புரிந்தார் என்கிறது தல புராணம்.
இந்தத் தல புரா ணத்தை வைணவர்களி டம் சொல்லிப் பாருங்கள் - ஒரு மொத்து மொத் துவார்கள். விஷ்ணுவை விட சிவன் பெரிய ஆள் என்பதற்காகக் கட்டி விட்ட கதை என்று கூடச் சொல்லுவார்கள்.

இந்துமதக்காரர்கள் முதலில் இந்தச் சண்டை யிலிருந்து வெளிவரட் டும் பார்க்கலாம்.

Read more: http://viduthalai.in/page1/83635.html#ixzz371f5F4ew

தமிழ் ஓவியா said...


பார்ப்பனரின் பிழைப்புக்கு கட்டப்படும் கோவில்


தங்களுடைய பிழைப்பை நடத்துவதற்காக பார்ப் பனர்கள் மக்களுக்கு தீங்கு செய்வதற்கும் இடையூறு செய்வதற்கும், அஞ்ச மாட்டார்கள் என்பதற்கும், சட்டத்தை மதிக்காமலும், சட் டத்தை மீறியும் காரியங் களை செய்ய தயங்க மாட் டார்கள் என்பது காலம் காலமாக நடந்து வரும் ஒன்றுதான்.

தற்போதுகூட கோவை மாநகராட்சி 51ஆம் வார்டு 100 அடி சாலையிலிருந்து 9ஆவது வீதிக்கு திரும்பும் இடதுபுறத்தில் சாலையை ஆக்கிரமித்து பத்து அடி அகலத்தில் முத்துமாரியம்மனுக்கு ஒரு கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக சாலையை மறித்து, தட்டி மறைப்புகள் வைக்கப்பட்டுள்ள தோடு மேற்கண்ட சட்டவிரோத கோவிலுக்கு நிதி கொடுக்கவேண்டிய மிகப் பெரிய நெகிழ்வு பதாகை வைக்கப்பட்டுள்ளது.

இந்த கோவில் கட்டப்படுவது குறித்து விசாரித்தபோது, பார்ப்பனர் ஒருவர் பிழைப்பில்லாமல் இருப்ப தாகவும் அவருக்கு பிழைப்பை ஏற் படுத்திக் கொள்ள அவர் கொடுத்த ஆலோசனையின்படி இந்த சட்ட விரோதக் கோவில் கட்டப்பட்டு வருவதாகவும் தெரிய வந்தது.

தன்னுடைய பிழைப்புக்குகூட, தன்னுடைய முதலீடு இல்லாமல் பொது மக்களின் பயன்பாட் டிற்குரிய சாலையை ஆக்கிரமித்து கோவில் கட்டி வரும் பார்ப்பனரின் புத்திக் கூர்மை யாருக்கு வரும்.

என்னே பார்ப்பனர்களின் புத்தி.

தகவல்: கண்ணன்

Read more: http://viduthalai.in/page1/83640.html#ixzz371fELcMI

தமிழ் ஓவியா said...


இனி ஒரே இனம் தான் இலங்கையில்!


இலங்கைத் தீவில் இரண்டு இனங்கள் என்பது எல்லாம் கிடையாது, ஒரே இனம்தான் உண்டு - அது சிங்கள இனம்தான் என்பதை நிலைப்படுத்தும் நோக்கத்தோடுதான், ஆங்கே சிங்கள இனவெறி ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

அதன் அடிப்படையில்தான் தமிழ்ப் பகுதிகள் எல்லாம் சிங்களர் மயமாக்கப்பட்டு வருகிறது; அநேக மாக முழுப் பணிகள் இந்தத் திசையில் முடிந்து விட்டதாகவே கருதப்படுகிறது.

இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேயும் கையொப்பமிட்ட ஒப்பந் தப்படி தமிழர்களின் வடக்கு- கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு ஒரே மாகாணமாக ஆக்கப்பட்டிருக்க வேண்டும்.

என்ன நடந்தது அங்கே? சிங்கள இனவெறி அமைப்பான ஜெவிபியைக் கைக்குள் போட்டுக் கொண்டு, இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கொன் றைத் தாக்கல் செய்யச் சொல்லி, இரு மாநில இணைப்பு கிடையாது என்ற ஒரு தீர்ப்பைப் பெற்றுக் கொண்டாகி விட்டது.

2009 முள்ளி வாய்க்கால் கொடும் போரின் விளைவாக மாண்டு மடிந்தனர் பல்லாயிரக்கணக்கான தமிழீழ மக்கள்; சொந்த வீடுகளை, ஊர்களை விட்டு வெளியேறியோர் ஏராளம்! அப்படி வெளியேறிய மக்கள் அய்ந்தாண்டுகள் கழிந்த நிலையிலும் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாத ஒரு சூழ் நிலையை இலங்கை சிங்கள அரசு உருவாக்கி விட்டது.

தமிழர் பகுதிஎல்லாம் இராணுவ ஆக்கிரமிப்பு - சிங்களவர் குடியேற்றம்! 2013 டிசம்பரில் அய்.நா.வின் உத்தரவுப்படி யாழ்ப் பாணம் முல்லைத் தீவு, கிளிநொச்சி பகுதிகளுக்குச் சென்ற சிறப்புப் பிரதிநிதி சலோகா பியானி ஆய்வு அறிக்கையினை அளித்துள்ளார். 29 பக்கங்களைக் கொண்ட அறிக்கை மனித உரிமை சபைக்கு அளிக்கப் பட்டது (20.6.2014).
இடம் பெயர்ந்துள்ள மக்கள் தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாதபடி இலங்கையின் இராணுவத்தின் ஆக்கிரமிப்பு நடந்துள்ளது. நில அபகரிப்பு மிகப் பெரிய அளவில் நடந்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டம், நிலை கொண்டுள்ள இராணுவத்தின்பிடி இவற்றின் காரணமாக தங்களின் அவல நிலையைத் துணிந்து வெளிப்படுத்தும் நிலையில் ஈழத் தமிழர்கள் இல்லை.

மேலும் தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் தமிழர் களின் நிலப் பகுதிகள் இராணுவத் தேவைகளுக்காக என்று கூறிக் கையகப்படுத்தப்பட்டுள்ளன. 32 முக்கியமான இராணுவ முகாம்கள் அங்கு நிலை கொண்டுள்ளன.

தமிழ் மக்களின் நிலங்களில் புத்தர் சிலைகள் நிறுவப் படுகின்றன. (எத்தகைய மனிதகுல நேயத்திற்காக உயர் தத்துவங்களை வழங்கிய மாபெரும் அறக்கோட்பாட்டுச் சிந்தனையாளர் கவுதம புத்தர் எந்தக் காரியத்துக்காகப் பயன்படுத்தப்படுகிறார் என்பதை எண்ணும் பொழுது ரத்தக் குழாய்கள் வெடிக்கும் என்ற நிலைதான்!)

சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாதவர்கள் பெண்களும், சிறுவர்களும் பெரும் சவால்களை எதிர் நோக்க வேண்டியுள்ளது. பெரும்பாலும் இராணுவத்தின ரால் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த விவரங்களை எல்லாம் இடம் பெயர்ந்த மக்களின் மனித உரிமைகளை மய்யமாக கொண்ட பிரதிநிதி சலோகா பியானி தமது அறிக்கையில் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்.
இப்பொழுது இன்னொரு பயங்கர வேலையில் அதிபர் ராஜபக்சே இறங்கியுள்ளார்.

சம்புர் பகுதி என்பது ஈழத் தமிழர்கள் தொன்று தொட்டு வாழ்ந்த நிலப்பகுதி. விவசாயம் கொழிக்கும் செல்வப் பூமி இது.

ராஜபக்சேயின் கண்கள் உறுத்தாதா? ஒரே கல்லால் இரண்டு காய்களை வீழ்த்தத் திட்டம் தீட்டி விட்டார்.

அங்கு ஒரு அனல் மின் நிலையத்தை இந்திய அரசின் துணையுடன் நிறுவும் வேலையில் இறங்கியுள் ளார். அதற்காக 1700 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது.

இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்வதன் மூலம் தமிழர்களின் நிலங்கள் தமிழர்களுக்கு ஆகாமல் இருக்க நம் கை விரல்களைக் கொண்டே நம் கண்களைக் குத்தும் நயவஞ்சக வேலையில் இறங்கி விட்டனர். (இதெல்லாம் இந்திய அறிவு ஜீவிகளுக்கு எங்கே இருந்து தெரியப் போகிறது? அப்படியே தெரிந்தாலும் கேவலம் ஈழத் தமிழர்கள் தானே என்ற நினைப்பு எப்பொழுதும் உண்டே!)

அனல் மின் நிலையம் என்று வந்து விட்டால் பாதுகாக்கப்பட்ட பகுதி என்று அறிவித்து, முழுக்க முழுக்க இராணுவ கட்டுப்பாட்டின்கீழ் பூர்வீகத் தமிழ் மண் வந்து சேர்ந்து விடுமே!
தங்கள் செல்வச் செழிப்பான மண் பறிபோவது பற்றி இலங்கை உயர்நீதிமன்றத்தில் அம்மக்கள் வழக்கு ஒன்றையும் போட்டுப் பார்த்தார்கள். ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்கிற பாணியில், மின் நிலையம் அமைப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த மக்களை வேறு இடத்தில் குடியேற்றும்படி உயர்நீதி மன்றம் தீர்ப்பு அளித்து விட்டது! (தெரிந்ததுதானே - எதிர்ப்பார்க்கப்பட வேண்டியது தானே!)

இந்தப் போக்குத் தொடர்ந்தால் சிங்கள இனம் மட்டும்தான் இலங்கையில் என்ற அந்த ஒற்றைத் திட்டம் நம் கண் முன்னாலேயே நிறைவேறிவிடும் என்பதில் அய்யமில்லை.

Read more: http://viduthalai.in/page1/83644.html#ixzz371fTTW9x

தமிழ் ஓவியா said...


புரோகிதர் மீதும் நடவடிக்கை!


- கி. தளபதிராஜ்சென்னை அடுக்குமாடி கட்டட இடிபாட்டில் சிக்கி உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை நாளும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ் வொரு நாளும் வரும் செய்திகள் நெஞ்சை உலுக்குவதாக இருக்கின்றன. கட்டடம் இடிந்தது தொடர்பாக தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ரெகுபதி தலைமையில் விசாரணை ஆணையர் அமைத்துள்ளது. பல்வேறு நோக்கில் அந்த குழு விசாரணையைத் தொடரலாம். அதே சமயம் அந்த கட்டடத்திற்கு போடப்பட்ட பூமி பூஜை பற்றியும் விசாரணை மேற் கொள்ள வேண்டும். கட்டடம் நேர்த்தியாக அமையவேண்டும் என்பதில் இப்ப டிப்பட்ட பூமி பூஜைகள் கட்டடப் பொறியாளர் முதல் உரிமையாளர் வரைக்கும் மனதளவில் முக்கிய பங்கு வகிக்கிறது. பூஜையை அதிக செல வில் சிறப்பாக செய்துவிட்டோம் என்கிற அசாத்திய துணிச்சலில் கட்டுமானப்பணியில் உரியவர்கள் கோட்டை விட்டிருக்கலாம். அப்படி யிருக்கும் பட்சத்தில் அவர்களை ஏமாற்றிய மேற்படி கடவுளர்மீது நம்பிக்கைத் துரோக வழக்கு தொடர வேண்டும். அதற்கு காரணமான புரோகிதர் மீதும் சட்டம் பாய வேண்டும்.

மறைந்த நாவலர் சோம சுந்தர பாரதியார் ஒருநாள் ஒரு புரோகிதத் திருமணத்திற்கு சென்றிருந்தார். திருமண நிகழ்வு நடைபெற்று கொண்டிருந்தது. தாலிகட்டும் நேரம் நெருங்குகையில் திருமணத்தை நடத்தி கொண்டிருந்த புரோகிதர் சொல்லும் மந்திரம் நாவலர் காதில் விழ குருக்களை நெருங்கி மீண்டும் அந்தமந்திரத்தை சொல்லுமாறு வேண்டினார் நாவலர். இரண்டு ஸ்லோகங்கள் சொன்னதுதான் தாமதம். நிறுத்து நிறுத்து என்று சப்தமிட்டார். காரணம் புரோகிதர் சொன்னது கருமாதி வீட்டில் சொல்லப்படும் மந்திரம். நாவலர் தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலுமே புலமை பெற்றவர் என்பதால் அவர் மந்திரத்தின் பொருளை உணர்ந்து நிறுத்தச் சொன்னார். இந்தத் தகவலை பலரும் சொல்ல கேட்டி ருக்கிறோம்.

இதை சொல்வதற்கு காரணம் மேற்கண்ட கட்டடத்திற்கு பூமி பூஜை போடப்பட்டபோது மந்தி ரங்கள் தவறாக உச்சரிக்கப்பட்டிருக்க லாம். எனவே அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்கள் ஏதேனும் இருப்பின் மந்திரங்கள் சரியாக சொல்லப்பட்டிருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். தேவைப்பட்டால் சங்கராச்சாரி போன்றவர்கள் தலைமையில் கூட ஒரு குழு போடலாம். மந்திரங்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட புரோகிதருக்கு சரியான தண்டனை வழங்க வேண் டும். மந்திரங்கள் சரியாக இருந்தால் கடவுளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கலாம் என்றாலும் அதற்கான வாய்ப்பு இல்லையே!

Read more: http://viduthalai.in/page1/83649.html#ixzz371g0iZjh