Search This Blog

1.7.14

புரிந்து கொள்ளுங்கள் சூத்திர அறிவு ஜீவிகளே!


 

மறைந்த காஞ்சி சந்திரசேகரேந்திரர், விழுப்புரத்தி லிருந்த பழைய திருவாளர் சாமிநாதய்யர் அவர்கள் ஆவார்! திண்டிவனம் கிறித்துவப் பள்ளியான ஆல்காட் மிஷன் பள்ளியில் படித்தவர். பிறகு சங்கராச்சாரியாராக அவர் சென்றபோது சந்திரசேகரேந்திர சாமிகள் ஆனார்!


கல்கி வார ஏடு தனது இன உணர்வை மறக்காமல் பார்ப்பன குலத் தலைவரான அச்சங்கராச்சாரியின் அறிவுரை என்ற பெயரால் ஒரு பக்கத்தை வாரா வாரம் தவறாமல், தலையங்கத்திற்கு முன்பே போட்டு பய பக்தியோடு, ஹிந்து மத (ஆர்.எஸ்.எஸ்.) பிரச்சாரத்தை சற்று சர்க்கரைப் பூச்சுப் பூசி தருகின்ற அரும்பணியை (திருகுதாள) செய்து வருகிறது. (நன்றி கெட்ட தமிழர் ஏடுகள் பெரியார்பற்றி அவர் பிறந்த நாளில்கூட செய்தி வெளியிடுவது கிடையாது)

இவ்வாரம் வந்த கல்கி  (6.7.2014) இதழில் தவறான நாகரிகப் பிரிவினை என்ற தலைப்பில் சந்திரசேகரேந் திரரின் கருத்துக்களை எடுத்துப் போட்டுள்ளார்கள்.
அதன் துவக்கம் இது.

இந்தக் காலத்தில் தமிழ்ப் பண்பாடு வேறே, வைதிக நாகரீகம் வேறே என்று தப்பாக அபிப்ராயப்பட்டுக் கொண்டு முடிந்த மட்டில் தமிழ் தேசத்தில், முன் காலத்தில் உசந்ததாக எந்த விஷயம் இருந்தாலும், அல்லது எந்த விஷயங்கள் இருந்தாலும், அந்த விஷயம் அல்லது மநுஷ்யம் வைதிக நாகரிகத்தில் வராமல், தமிழினம் என்று ஏதோ ஒன்றை இவர்கள் பிரித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே, அதில் வந்ததாகவே ஜோடனை பண்ணிக் காட்டுவதாக ஏற்பட்டிருக்கிறது.


நல்ல அறிவும் ஆராய்ச்சித் திறமையும் உள்ளவர்கள், நாவல் எழுதுகிறவர்கள் எல்லோருமே இப்படித்தான் தமிழ் நாகரிகமென்று ஏதோ ஒன்று தனியாக இந்தத் திராவிட தேசத்தில் வைதிகத்துக்கு வித்யாஸமாக, அதை அமுக்கிக் கொண்டு, பிரகாசமாக இருந்ததாக ஜோடித்து எழுதுகிறார்கள். ஆனால் அந்த அந்தக் காலத்துக் கல்வெட்டுகளைப் பார்த்தாலும் சரி, கவிகளும் புலவர்களும் பாடி விட்டுப் போயிருக்கும் தமிழ் நூல் களைப் பார்த்தாலும் சரி, இந்தப் புது அபிப்பிராயத்துக்கு ஒரு ஆதாரமும் இல்லை.

இதிலே ஒரு பக்கம் வேடிக்கையாகவும் இருக்கிறது. (வேடிக்கைக் கஷ்டம்).

                                                              ---------------------------(கல்கி 6.7.2014)

முழுப் பூசணியை சோற்றில் மறைப்பது என்பதைவிட மிக மோசமான புரட்டு - வாதம் அல்லவா இது?


தமிழ்ப் பண்பாடும், வைதிக நெறியும் எண்ணெயும் நீரும்போல ஒன்றுக்கு ஒன்று வேறானது. வெண்ணெயும் சுண்ணாம்பும் போல எதிரும் புதிருமானது நேர் மறையும் எதிர்மறையும் போன்ற வேறுபட்டவைகள்.

எடுத்துக்காட்டாக, தமிழ்ப் பண்பாடு என்று கூப்பாடு போடுகிறார்களே, அப்படி ஒரு பண்பாடு உண்டா என்று ஆசிரியர் வீரமணி அவர்களிடம் குமுதம்  மூலம் பால்யூ ஏற்பாடு செய்த பேட்டியில் எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் கேள்வி கேட்டார்.

பெற்ற தாயையும் மகளையும், தங்கை, தமக்கையையும் வாடி, போடி என்று கேவலமாக அழைக்கத் தெரியாத பண்பாட்டுக்குப் பெயர்தான் தமிழ்ப் பண்பாடு என்று பதில் சொன்னவுடன் அவர் வேறு கேள்விக்குச் சென்று விட்டார்!

சங்கராச்சாரி முதல் சிவசங்கரி, கல்கி வரை ஓர் நேர்கோட்டுச் சிந்தனை எப்படி என்பது நம்மண்டூகங் களுக்குப் புரிந்தால் நல்லது.

இரண்டும் இரு துருவங்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக எத்தனையோ ஆதாரங்களை இலக் கியம், புராணம், வரலாறு என்ற மும்முனைகளிலும் எடுத்துக்காட் டலாமே!

1) யாதும் ஊரே, யாவரும் கேளிர் இது தமிழ்ப் பண்பாடு,
நாடோடிகளாக வந்து குடியேறிய ஆரியர், வர்ணதர்மத்தையும், ஜாதி படிக்கட்டு பேதத்தையும் (Graded
Inequality) உருவாக்கி நிலை நாட்டி யது வைதிக நாகரிகம்!


2) சந்தியாவந்தனம், ஜபதம் செய்துவிட்ட பிறகு நீச்சபாஷை  தமிழில் பேச மாட்டார் இதே சங்கராச்சாரியார். சங்கராச்சாரியாரின் ஆப்த நண்பர், வித்துவான் சீடர் பலராமய்யரிடம்கூட காரைக்குடியில் உரையாட சங்கராச் சாரியார் தயாராகயில்லாததால் சந்திக்காமல் வெளி யேறியதை வித்துவான் பலராமன் அவர்களின் மகன் வரலாற்றுப் பேராசிரியர் ந. சுப்பிரமணியம் (மதுரைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறை முன்னாள் பேராசிரியர்) தன் வரலாறு எனும் நூலில் எழுதியுள்ளாரே! தமிழ்ப் பண்பாடு சமஸ்கிருதத்தை சகித்து மந்திர மொழி, கல்யாணம், கருமாதி,  பிரார்த்தனை, அர்ச்சனை என் றெல்லாம் ஏற்றதே - அதுபோல ஏன் வைதிகம் தமிழை ஏற்கவில்லை? வேறு வேறு என்பது தானே!


3) வேளாண்மைக்கு முன்னுரிமை, முதலிடம் தருவது தமிழ்ப்பண்பாடு.
உழுவோர் உலகத்தோர்க்கு அச்சாணி..

ஆனால், விவசாயம் பாபகரமான தொழில் ஏர் பிடிப்பது மகாபாவம் என்று கூறுவது வேத வைதீக நாகரிகம் அல்லவா?

மறுக்க முடியுமா?


4) பிராயச்சித்தம் வேத நாகரீகம் குற்றத்திற்கு தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என்பது தமிழ்ப் பண்பு.

எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று               குறள் (655)

5. ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் இது தமிழ்ப் பண்பு தாயைப் புணர்ந்து, தட்டிக் கேட்ட தந்தையாரைக் கொன்ற பார்ப்பனப் பிள்ளைக்கும் பாவ மன்னிப்பு வழங்குவது வைதிக நெறி (திருவிளையாடற் புராணம் மாபாதகம் தீர்த்த படலம்) இப்படி உள்ளதை விதி விலக்காத சில பார்ப்பனர்கள் - தமிழ் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், வரலாற்றாளர்கள் ஆனபடியோர் கூறுவதைக் கண்டு அப்போதே வெகுண்டெழுந்தார் இந்த சங்கராச்சாரியார்.

(இவை நல்லவை என்று கூறிடும் நம்மவர்களும் உள்ள பரிதாபத்தை என் செய்வது கீழே படியுங்கள்).

என்னவென்றால், வைதிகம் வேறே, த்ராவிடம் வேறே என்ற தப்பான அபிப்ராயம் பொது ஜனங்கள் மனஸில் அசைக்க முடியா மல் வேரோடி விட்டதாக நினைத்துக் கொண்டு, அவர்களுடைய ஆதர வைத் தாங்கள் ஸம்பாதிக்க வேண்டுமென்று பிராம்மணர்களி டையே அறிவாளிகளாக இருக்கப் பட்ட சில பேர் இந்த பேதத்துக்கு பலம் கொடுத்து எழுதியும் பேசியும் வருகிறார்கள்.


தமிழ் தேசத்தில் பூர்வத்தில் ஆட்சி  செலுத்தி வந்த மூவேந்தர்களும் ஸரி, பல்லவர்களும் ஸரி, வேத வித்யைகளுக்கும் வேத கர்மாக்களுக்கும் வேத ப்ராம்மணர்களுக்கும் பண்ணியிருக்கும் பெரிய தொண்டுகளை அடியோடு மறைத்துவிட்டு, அவர்கள் தமிழ் நாகரிகம் என்ற ஏதோ தனியாக இருந்த ஒன்றைப் போதித்த மாதிரியே எழுதுகிறார்கள். பேசுகிறார்கள்.

வரலாற்று ஆய்வாளர்களாக உண்மைகளைக் கூறும் பார்ப்பனர்கள் (விதி விலக்காகக்) கூறினாலும் எவ்வளவு ஆத்திரப்படுகிறார் பார்த்தீர்களா?

இந்த சங்கரமடம் ஏன்? எதற்காக? சங்கராச்சாரிகளின் பணி ஆன்மீகம் பரப்புவதா?


திராவிட இனவுணர்வை, அழிப்பதற்காகவா?

தமிழ்ப் பண்பாட்டைபற்றி உண்மைகளைக் கூறினால் அதைத் தடுப்பதுதான் எங்கள் வேலை என்பதுதானே!

கல்கியார் திரு(குதாள)ப்பணி இன்றும் தொடரு கிறதே ஏன்? புரிந்து கொள்ளுங்கள் சூத்திர அறிவு  ஜீவிகளே!

                     -------------------------ஊசிமிளகாய்  ----”விடுதலை” 30-06-2014
Read more: http://viduthalai.in/e-paper/83190.html#ixzz36AexQs4A

22 comments:

தமிழ் ஓவியா said...

ஆவியோ - ஆவி!


விழுப்புரம் ரயில்வே காவலதுறையினர் இப்பொழுது ரயில் நிலையத்திற்குள் தங்குவதில்லையாம்; படபடத்துப் போயிருக் கிறார்களாம். பயத்தால் ரத்தம் உறைந்து போய்க் கிடக்கிறார்களாம்.

அப்படி என்ன நடந்து விட்டதாம்? ரயில்வே போலீசார் புத்தக வியா பாரி ஜெயவேல் என்பவர் மரணம் தொடர்பாக போலீசார் விசார ணையை மேற்கொண் டனர். இரவு நேரத்தில் ஜெயவேலுவின் ஆவி மிரட்டுவதாகச் சிலர் பீதியைக் கிளப்பி விட்ட னராம். இதன் காரணமாக போலீசார் யாரும் காவல் நிலையத்துக்குள் தங்கு வதில்லையாம்.

இதற்கு ஏதாவது பரிகாரம் வேண்டாமா? இப்படியெல்லாம் சொல் லுவதற்கென்றே சில ஆசாமிகள் இருப்பார்கள் அல்லவா! ஆவியை விரட்ட சில சடங்கு களைச் செய்ய வேண் டும்; சுத்திகரிக்க வேண் டும் என்று சொல்லவே, அச்சத்தின் பிடியில் கிடந்த போலீசார் அதற் கான ஆட்களை அழைத்து கணபதி பூஜை நடத்தப் பட்டு, பூஜை புனஷ் காரங்களும் சாங்கோ பாங்கமாக நடத்தப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டதாம்!

சரி. இந்த முட்டாள் தனத்தோடாவது ஆவி பயம் தொலைந்திருக்க வேண்டும் அல்லவா!

அதுதான் இல்லை மறைந்த ஜெயவேலின் ஆவிக்குப் பயந்து இன் னும் காவல் நிலையத்திற் குள் தங்கிட அஞ்சி, வெளியில் காற்றாட இரவுப் பணியாளர்கள் படுத்து கிடக்கிறார்களாம்.

எப்படி இருக்கிறது? காவல்துறையினருக்கு உடல் பயிற்சிகள் எல் லாம் அவ்வப்போது கொடுக்கப்பட்டுதான் வருகின்றன. உடல் பலமாக இருந்து என்ன பயன்?

மனபலம், அறிவுப் பலம் இல்லையே! ஆவி என்றால் என்ன? மனிதன் இறந்து விட்டான் அதற்கு மேல் என்ன இருக்கிறது? ஆவி என்றோ, உயிர் என்றோ தனியாக இருக் கிறதா! மனிதர் சத்துப் போய் செத்துப் போய் விட்டான் என்றால் அவ்வளவுதான்!

ஆத்மா, மோட்சம், நரகம், பிதுர்லோகம், மறுபிறப்பு ஆகியவற் றைக் கற்பித்தவன் அயோக் கியன் நம்புகிறவன் மூடன்; இவற்றால் பலன் அனுபவிப்பவன் மகா மகா அயோக்கியன் என்று தந்தை பெரியார் சொன்னது எத்தகைய உண்மை என்பது இதன் மூலம் தெற்றென விளங்க வில்லையா?

உண்மையான ஆவி யிலிருந்து இட்லியாவது சுடலாம். இதுபோன்ற முட்டாள்தனமான ஆவி யிலிருந்து மனிதனின் அறிவைச் சுட்டுப் பொசுக்கலாம்.

வெறும் உடற்பயிற் சியைவிட, பகுத்தறிவுப் பயிற்சி தான் அவசியம் என்பது இப்பொழுது விளங்கவில்லையா?

காவல்துறைக்குப் பெரியார் நூல்களைக் கொடுத்துப் படிக்க வைத்து அதில் தேர்ச்சி பெறுகிறவர்களை மட்டும் வேலையில் அமர்த்துக! - மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/83186.html#ixzz36AhS9Uwp

தமிழ் ஓவியா said...

ஆகஸ்டு ஒன்று - நினைவிருக்கட்டும்!


பி.ஜே.பி.யின் தமிழகப் பிரமுகர் திரு இல. கணேசன் அவர்கள் இந்தியைப் புகுத்த போராட்டம் நடத்துவோம் என்று தமிழ்நாட்டில் பேசி இருக்கிறார்.

இத்தகையவர்கள் இதுபோன்ற வகையில் பேசுவதைக்கூட ஒரு வகையில் வரவேற்கலாம் என்று தோன்றுகிறது. இத்தகைய வெளிப்படையான சாட்சியங்கள்தான் பிஜேபி என்பது என்ன? அதன் உள்ளுறைப் பொருள் என்ன? என்பதை நம் மக்கள் தெரிந்து கொள்ளக் கூடிய அரிய வாய்ப்புகள் ஆகும்.

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைச் சீண்டிப் பார்க்க ஆசைப்பட்டால் அதன் விளைவு என்ன என்பதற்கு இதற்கு முன் ஏராளமான எடுத்துக்காட்டுகள் தமிழ்நாட்டில் உண்டு.

1937இல் சென்னை மாகாணத்தில் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த ஆச்சாரியார் (ராஜாஜி) இந்தியைப் புகுத்தினார்; தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடே பொங்கி எழுந்தது. ஆயிரக்கணக்கானோர் சிறை ஏகினர்; பெண்கள் கைக் குழந்தைகளுடன் சிறைக்குச் சென்றனர்.

இந்தி எதிர்ப்புப் பிரச்சார வழி நடைப்படையை கால்நடைகள் (விலங்குகள்) என்றும், கூலிக்கு குழந்தைகளை வாங்கிக் கொண்டு பெண்கள் சிறை சென்றார்கள் என்றும் தினமணி அன்று எழுதியது.

சிறைச்சாலையில் நடராசன் என்ற தாழ்த்தப்பட்ட தோழர் முதல் களப்பலியானபோது படிப்பறிவில்லாத ஹரிஜனன் என்று மரணம் அடைந்த நிலையிலும்கூட அந்தத் தோழரை சட்டசபையிலேயே எள்ளி நகையாடினார். பிரதமராக இருந்த சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்.

இந்தியை இரண்டு பேர்தான் எதிர்க்கிறார்கள். ஒருவர் ராமசாமி நாயக்கர், இன்னொருவர் புலவர் (நாவலர் சோமசுந்தர பாரதியார்) என்றார் பிரதமரான ராஜாஜி. அதற்குச் சட்டசபையிலேயே பதிலடி கொடுத்தார் சர். ஏ.டி. பன்னீர்செல்வம் பார்-அட்-லா!

ஆமாம் - இந்தியை எதிர்ப்பவர்கள் இருவர் - ஆதரிப்பவரோ நீங்கள் ஒரே ஒருவர்தானே? என்று பளிச்சென்று அறைந்தார்.

இறுதி வெற்றி யாருக்கு? இந்தி எதிர்ப்பவர்களுக்கு தான். அந்த இந்தித் திணிப்பு தான் கட்சிகளை, ஜாதிகளை மதங்களை, ஆத்திகம் - நாத்திகம் என்பவற்றையெல்லாம் கடந்து தமிழர்களை ஓரினம் என்ற உணர்வில் ஒன்று சேர வைத்தது! இந்தித் திணிப்பு தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது.

தமிழ் ஓவியா said...

இந்தித் திணிப்பு தான் தமிழ்நாட்டிலிருந்து காங்கிரசை விரட்டியது. இந்த வரலாறு எல்லாம் புரியாமல் இல. கணேசன்கள் பூணூல்களை முறுக்கிக் காட்ட வேண்டாம்; காட்டினால் புலியை இடறிய கதையாகத்தான் முடியும்.

இந்திக்காக வக்காலத்து வாங்கும் இந்த பிஜேபி வகையறாக்கள் தமிழ்நாட்டில் தமிழே படிக்காமல் பட்டம் பெறலாம் என்ற நிலை இருக்கிறதே -தமிழ்நாட்டில் நடைபெறும் சி.பி.எஸ்.இ பள்ளிகளிலும் கேந்திரா வித்யாலயங்களிலும் தமிழ் அறவே கற்றுக் கொடுப்பதில்லையே அதுபற்றிக் குரல் கொடுத்தது உண்டா?

தமிழை வெறுக்கும் ஒரு கூட்டம் இந்த நாட்டில் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. அத்தகையவர்கள் எப்பொழுதும் இந்திக்காக நலுங்கு வைப்பவர்களாகவே இருந்து வருகின்றனர்.

அண்மையில் மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி, கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை என்பதுபோல சமூக வலைத் தளங்களில் இந்தியை பயன்படுத்த வேண்டும் என்றது.

இந்தி பேசாத பகுதிகளிலும் இந்தியை மறைமுக மாகப் புகுத்தும் வேலையில் இறங்கியுள்ளது பிஜேபி அரசு.

இதனைக் கண்டித்து தமிழ்நாட்டில் முக்கிய தலைவர்கள் எல்லாம் அறிக்கை வெளியிட்டுள்ளனர். 27.6.2014 தென்காசியை அடுத்த கீழப்பாவூரில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள், மத்திய அரசு இந்த முடிவைக் கைவிடா விட்டால் தந்தை பெரியார் வழக்கமாக போராட்டம் அறிவிக்கும் நாளான ஆகஸ்டு முதல் தேதியன்று (1.8.2014) இரயில்வே நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தில் திராவிடர் கழகம் குதிக்கும் என்று அறிவித்துள்ளார்.

பி.ஜே.பி.யின் கொள்கை - ஆர்.எஸ்.எஸின் கொள்கை என்பது சமஸ்கிருதத்தை இந்தியாவின் ஒரே ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்பதே. ஆர்.எஸ்.எஸின் குருநாதரான கோல்வால்கர் இதனைத் திட்டவட்டமாகவே தெரிவித்துள்ளார்.

இந்தியை பள்ளிகளில் நான் புகுத்துவதன் நோக்கம் படிப்படியாக சமஸ்கிருதத்தைக் கொண்டு வருவதற்கே என்று சென்னை இலயோலா கல்லூரியில் பிரதமர் ராஜாஜி அவர்கள் பேசியதை (24.7.1937) இங்குப் பொருத்தமாக நினைவு கூரலாம்.

மத்திய அமைச்சராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் சமஸ் கிருதத்திலேயே உறுதிமொழி எடுத்துக் கொண்டதை யும் இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.

இவ்வளவுக்கும் 127 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் சமஸ்கிருதம் பேசும் மக்களின் எண்ணிக்கை வெறும் 14135 தான். சதவீத கணக்கில்கூட கூற முடியாத எண்ணிக்கை இது.

செத்த மொழியைச் சிங்காரிக்க இந்தியை முன் னோட்டமாக விட்டுப் பார்க்கிறார்கள்!

தமிழ்நாடு இதனை அனுமதியாது - இந்தி பேசாத அனைத்து மக்களின் உரிமைக் குரலாகத் தமிழகம் பொங்கி எழும்!

தந்தை பெரியார் கொடுத்துச் சென்ற தார் சட்டியும் புருசும் தயாராகவே உள்ளது - எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/page-2/83192.html#ixzz36AhjEYVN

தமிழ் ஓவியா said...

இந்தித் திணிப்பின் அடுத்த கட்டம் இந்தி மொழி பயிற்சிக்கு செல்லாத, தேர்வு எழுதாத 11 பேருக்கு தண்டனையா?


சென்னை, ஜூன் 30-_ தமிழகத்தில் 1.40 லட்சம் பேர் பணியாற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் புதிதாக அமைந்துள்ள மத்திய அரசு, இந்தியை கட்டயமாக்க முயன்று வருகிறது. ஏற்கெனவே செயல்படாமல் இருந்த இந்தி மொழி மய்யத்தை மீண்டும் செயல்படுத்த உத்தர விட்டுள்ளது.

மத்திய அரசு அலுவலகங் களில் வருகைப் பதிவேடு அரசு ஆணைகள் இந்தி மயமாகியுள்ளது. இந்தி பயிற்சிக்கு செல்லாத மற்றும் தேர்வு எழுதாத!! ஊழியர்களுக்கு காரணம் கேட்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசு ஊழியர் களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசுத் துறை களில் பணியாற்றுவோர் சமூக வலைத் தளங்களில் ஆங்கிலத்தில் மட்டும் எழுதுவதை தடை செய்து, கட்டாயம் இந்தியில் எழுத வேண்டும், விரும்பினால் இந்தியுடன் ஆங்கிலத் திலும் எழுதிக் கொள்ள லாம் என்று மே 27-ஆம் தேதி உள்துறை அமைச்ச கம் உத்தர விட்டிருந்தது. இதற்கு தமிழகம் உள்பட பல மாநிலங்கள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், தென் மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங் களின் ஊழியர்களுக்கு இந்தி மொழி பயிற்சி மற்றும் இந்தி தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சிகள் கட்டாயமாக்கப்பட்டுள் ளன. இதனால், மத்திய அரசு ஊழியர்கள் கலக்கத் தில் உள்ளனர். இந்தி மொழி பயிற்சிக்கு செல் லாத அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள பல்வேறு மத்திய அரசு அலுவலகங்களில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 11 பேருக்கு மெமோ கொடுக் கப்பட்டுள்ளது. சம்பந்தப் பட்ட அலுவலர்கள் மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பித்த பிறகே, பணிக்கு அனுமதிக்கப்பட்டுள் ளனர்.

அலுவலக வருகைப் பதிவேட்டில் ஏற்கெனவே ஆங்கிலத்தில் மட்டுமே கையெப்பமிடும் முறை இருந்து வருகிறது. இப் போது புதிதாக இந்தியில் கையொப்பமிட தனி காலம் உருவாக்கப்பட்டுள் ளது.

மேலும் அலுவலக கடிதங்கள், பதவி உயர்வு ஆணைகள், பணி மாற்று ஆணைகள் உள்பட அனைத்து நிர்வாக ஆவணங்களும் ஆங்கிலத் துடன் தற்போது இந்தியி லும் அச்சிடப்பட்டு வழங் கப்படுகின்றன.

இதுதொடர்பாக மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் எம்.துரை பாண்டியனிடம் கேட்ட போது, அவர் கூறிய தாவது:

தென்னிந்தியாவில் மட்டும் சுமார் 6 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பல்வேறு அலுவலகங் களில் பணியாற்றி வருகின் றனர். தமிழகத்தில் 1.40 லட்சம் பேர் பணியாற் றுகின்றனர். மத்தியில் புதிதாக அமைந்துள்ள அரசு, இந்தியை கட்டாய மாக்க முயன்று வருகிறது. மத்திய அரசு அலுவலகங் களில் ஏற்கெனவே செயல் படாமல் இருந்த இந்தி மொழி மய்யத்தை மீண் டும் செயல் படுத்த உத்தர விட்டுள்ளது.

சென்னையில், இந்தி பயிற்சி வகுப்பு மற்றும் இந்தி தேர்வு எழுதாத 11 மத்திய அரசு ஊழியர் களுக்கு கடந்த 2 வாரங் களில் மெமோ கொடுக்கப் பட்டுள்ளது. இதுதொடர் பான புகார்கள் எங்களுக்கு வந்துள்ளன. தென்மா நிலங்களில் இந்தி மொழி தேவையில்லாதது. எங் களுக்கான ஆவணங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் வருகின்றன. அதை சரி பார்த்து ஆங்கிலத்தில் அரசுக்கு விளக்கம் அளிக் கிறோம்.

எனவே, ஊழியர்கள் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும், இந்தி தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து கற்று கொள்ள வேண்டும் என்ற உத்தரவை நீக்க வேண்டும். விருப்பமுள்ள வர்கள் படிக்கலாமே தவிர, இந்தி மொழி கட்டாயம் என்பது கூடாது. இந்த விவகாரத்தை மத்திய அரசு ஊழியர்ளுக்கான தேசிய கூட்டு ஆலேசனைக் குழு விடம் முன்வைக்க உள்ளேம்.

இவ்வாறு துரை பாண்டியன் கூறினார்.

வழக்கமான நடவடிக்கைதானாம்!

இதுதொடர்பாக மத்திய கணக்கு தணிக்கை அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபேது, மத்திய அரசுத் துறைகளில் பணி யாற்றும் இந்தி மொழி தெரியாத பணியாளர் களுக்கு பயிற்சி கொடுத்து தேர்வு நடத்துவது வழக் கமான ஒன்று தான்.

தேர்வில் கலந்து கொள் ளாதவர்களுக்கு மெமோ வும் வழங்கப்பட்டு வரு கிறது. இது வழக்கமான நடவடிக்கைதான். இப் போது, இந்தி மொழி பற்றி பிரச்சினை எழுந்துள்ள தால், இதை சிலர் பெரிது படுத்துகின்றனர் என்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/83189.html#ixzz36AiKcslQ

தமிழ் ஓவியா said...

செத்தான்


நாம் ஒரு சிறிதாவது அறிவு பெற்ற பகுத்தறிவுவாதிகள் ஆகிவிட்டோ மானால், கொல்லுவாரின்றியே பார்ப்பனன் செத்தான்.

(விடுதலை, 14.3.1970)

Read more: http://viduthalai.in/page-2/83197.html#ixzz36AiWzAK4

தமிழ் ஓவியா said...

ஜூன் 30: வகுப்புரிமை நாள்


ஒடுக்கப்பட்ட, வாய்ப்பு மறுக்கப் பட்ட அனைவரும் இன்று நன்றியோடு நினைத்துப் பார்க்கவேண்டிய,நினைவு கூர வேண்டிய நாள் (30 ஜுன்). சென்னை மாகாணத்தில் வகுப்புரிமை ஆணையை நடைமுறைப்படுத்திய முத்தையா(முதலியார்) அவர்கள் மறைவுற்ற நாள்.

பானகல் அரசர் சென்னை மாகாண முதலைமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டவுடன் 1921 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் நாள் எல்லாச் சமூகத்தினர்க்கும் அரசுப் பணிகளில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற அரசாணையப் பிறப்பித்தார்.

இதற்குப்பலத்த எதிர்ப்பு சட்டமன்றத்தில் எழுந்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை பிறப்பிக்கப் பட்டது. ஆனாலும் அதன்பிறகு அவ் ஆணையை நடைமுறைப்படுத்தாமல் அதிகாரிகள் கிடப்பில் போட்டனர்.

1926 தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் கட்சியின் மறைமுக ஆதரவோடு அமைக்கப்பட்ட டாக்டர் சுப்ப ராயனைத் தவிர மற்ற மந்திரிகள் ராஜினாமா செய்து விடவே சுயேச் சைக் கட்சியினராக இருந்த திரு. முத்தையா (முதலியார்) அவர்கள் இரண்டாவது அமைச்சராகவும், திரு.சேதுரத்தினமய்யர் மூன்றாவது அமைச்சராகவும் பொறுப்பேற்றனர்.

திரு.முத்தையா (முதலியார்) அவர்கள் அமைச்சரவையில் இடம் பெற்ற பின்னர்தான் நீதிக்கட்சியின் சமூக லட்சியமான, பார்ப்பனரல்லா தாரின் உரிமைச் சாசனமான வகுப் புரிமை எளிதில் நிறைவேறிய 'கம் யூனல் ஜி.ஓ' ஆக சட்டப்படி மலர்ந்தது. அமைச்சர் முத்தையா (முதலியார்) அவர்களின் மதிநுட்பம்,சமூக நீதி

உணர்வு ,இவைகளால் தான் வகுப் புரிமை ஆணை நடைமுறைக்கு வந்தது( என்கிறார்தமிழர் தலைவர்)
1928 முதல் அப்பயன் அனை வருக்கும் கிடைத்தது.அந்த இட ஒதுக் கீட்டை செயல்படுத்திய முறை. அரசாங்க நியமனம் செய்ய 12 இடங்கள் உள்ளன என்றால் அவற்றை

இந்து - பார்ப்பனரல்லாதவர்களுக்கு 5

பார்ப்பனர்களுக்கு 2

இஸ்லாமியர்களுக்கு 2

கிருத்துவர்களுக்கு 2

ஆதி திராவிடர் 1

மொத்தம் 12

திரு. முத்தையா (முதலியார்) அவர்களால் தான் வகுப்புரிமை ஆணை நடைமுறைக்கு வந்தது, அதன் தொடர்ச்சி- மீட்சி தான் இன்று தமிழர் தலைவரால் சட்டம் உருவாக்கி அதனை மாநில,மத்திய அரசுகள் ஏற்று 9 ஆவது அட்டவனையில் பாதுகாப்பாக இருக்கும் 69/ சதவிகித இடஒதுக்கீடு. இவற்றால் பயன்பெற்ற அனைவரும் இதற்கு அடித் தளமிட்ட திரு.முத்தையா அவர்களின் நினைவு நாளான ஜுன் 30 நன்றியோடு நினைவு(வகுப்புரிமை நாள்) கூர்வோம்.

இதை 'வகுப்பு வாதம்' என்று பார்ப்பனர்கள் கூறி விசமப் பிரச்சாரம் செய்தபோது,தந்தை பெரியார் அவர்கள் 'அத்துனை எதிர்ப்புகளையும் அடித்து வீழ்த்தி முறியடித்து, முத்தையா (முதலி யார்) வாழ்க .என்று வாழ்த்தினார்.

ஈரோடு. த. சண்முகம்

Read more: http://viduthalai.in/page-2/83194.html#ixzz36AikitqP

தமிழ் ஓவியா said...

அதிகத் தண்ணீர் குடித்தால் உடல் பருமனை தடுக்கலாம்

அதிக தண்ணீர் குடித்தால் உடல் பருமனை தடுக்கலாம் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உடல்பருமன் நோய் சர்வதேச மக்களிடம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. ஏனெனில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உருவாகிறது.

எனவே, உடல் எடையை குறைக்க பகீரத முயற்சி மேற்கொள்கின்றனர். உடற்பயிற்சி, பட்டினி போன்றவை மூலம் உடலை வருத்திக் கொள்கின்றனர்.

ஆனால், உடல் பருமனை தடுக்க இதுபோன்று கஷ்டப்பட தேவையில்லை என நிபுணர்கள் தெரிவித் துள்ளனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் உணவு கட்டுப்பாடு மற்றும் சுகாதார துறை பேராசிரியர் சூசன் செப் தலைமையிலான நிபுணர்கள் உடல் பருமனை தடுப்பது குறித்து பலவித ஆய்வுகள் மேற்கொண்டனர்.

அதன்படி பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் ஜூஸ்கள் மற்றும் நுரை ததும்பும் மது உள்ளிட்ட பானங்கள் அருந்துவதை தடுக்க வேண்டும். மாறாக அவர்களுக்கு அதிக அளவில் குடிநீர் வழங்க வேண்டும்.

இதன் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல்பருமன் ஆவதை தடுக்க முடியும். ஏனெனில் ஜூஸ்கள் மற்றும் பானங்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது. அதுவே உடல்பருமன், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஏற்பட காரணமாகிறது.

சர்க்கரை அளவை குறைப்பதன் மூலம் அது போன்ற நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது என்று பேராசிரியர் சூசன் செப் தெரிவித்துள்ளார். இந்த மிகவும் எளிமையான அறிவுரையை குழந்தை களுக்கு பெற்றோர் தெரிவிக்கலாம்.

இதன் மூலம் உடல் பருமன் ஏற்படுவதை குழந்தை பருவத்தில் இருந்தே தடுக்க முடியும். வளரும் குழந்தைகள் தினமும் ஒன்று அல்லது இரண்டு கொய்யாப் பழங் களை சாப்பிடுவது நல்லது.

சிலர் கொய்யா சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று நினைக்கிறார்கள். இது தவறு. உண்மையில் கொய்யாப்பழம் சளி தொந்தரவை விரட்டும் மருந்து.

Read more: http://viduthalai.in/page-7/83152.html#ixzz36AjJqbo9

தமிழ் ஓவியா said...

தூக்கம் இல்லா துக்கம் வேண்டாம்!


தூக்கம் படுத்ததும் வருகிற தூக்கம் ஒருவிதமான பழக்கம். அந்த பழக்கம் அரிதினும், அரிதாக வெகு சிலருக்கு மட்டுமே வாய்க்கும். தூக்கம் தொலைத்த இரவுகளின் இறுக்கத்தை விடிய லுக்குப் பிறகு உணரலாம். தூக்கமின்றித் தவிப்பதற்கும், தூக்கத்தையே தவிர்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

வேண்டுமென்றே தூக்கத்தை தவிர்ப்பவர்கள் ஒரு ரகம் என்றால், தூங்க நினைத்தும் தூக்க மில்லாமல் தவிப்ப வர்கள் இன்னொரு ரகம். மெத்தை வாங்கினேன், தூக் கத்தை வாங்கலை என சோக கீதம் இசைத்துக் கொண்டு வாழ்நாளைக் கடத்தும் இவர்களுக்கு பிரச்சினைகள் காத்திருக்கின்றன.

தொடர்ந்து ஒரு வாரம் வயிற்றுவலி இருந்தாலோ, உடம்புவலி இருந்தாலோ ஏதோ பிரச்சினை என மருத்துவரைப் பார்க்கிறோம். ஆனால், தொடர்ந்து தூக்கம் இல்லாமல் போனாலோ, அலட்சியம் செய்கிறோம்.

தூக்கமின்மை என்பது அலட்சியப்படுத்தக்கூடிய சாதாரண விஷயமல்ல. அது பல பயங்கரப் பிரச்சினை களுக்கான அபாய மணி. தூக்கப் பிரச்சினைகளில் இரண்டு முக்கிய ரகங்கள் உண்டு. ஒன்று பலருக்கும் பொதுவாகத் தெரிந்த தூக்கமின்மை நோய், இன்னொன்று சமீபகாலமாக அதிக பீதியை ஏற்படுத்தி இருக்கும் தூக்கத்தில் மூச்சு நிற்கும் தொல்லை.

1910ஆம் ஆண்டு, மனிதனின் தினசரி சராசரி தூக்கம் 9 மணி நேரமாக இருந்தது. இப்போது அது 6 மணி நேரமாகக் குறைந்திருக்கிறது. தூங்கும் நேரத்தை நாமாகத்தான் இப்படிக் குறைத்துக் கொண்டிருக்கிறோம். காரணம், மாறிப்போன வாழ்க்கை முறை.முன்பைவிட இப்போது நமக்கு வேலை நேரம் அதிகம்.

அலுவலகத்தில் பார்த்தது போக, வீட்டுக்கும் வேலையைச் சுமந்து கொண்டு வருகிறோம். எந்நேரமும் தொடர்புகொள்ள எல்லாரிடமும் செல்பேசி இருக்கிறது. மன உளைச்சலும் டென்ஷனும் அதிகரிக்கிறது. எதை விட்டுக் கொடுப்பது என்கிற கேள்வி வரும்போது, தயங்காமல் தூக்கத்தைத் தூக்கி எறிகிறோம்.

தூக்கமின்மை பிரச்சினை பெரியவர்களை மட்டும் பாதிப்பதில்லை. பிள்ளைகளுக்கும் இந்த பாதிப்பு உண்டு. இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு நல்ல தூக்கம் என்பது சாத்தியப்படுவதே இல்லை.

தேர்வு பயம், பெற்றோரின் கெடுபிடி, போட்டிகளை சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் என எல்லாம் சேர்ந்துகொண்டு, அதிக நேரத்தைப் படிப்புக்காக செலவழிக்கிறார்கள். தொடர்ந்து சில மணி நேரம் தூங்காமல், இடையிடையே கிடைக்கிற நேரத்தில் குட்டித்தூக்கம் போட்டு விழிக்கிறார்கள்.

குட்டிக் குட்டியாக போடுகிற தூக்கம், தொடர்ந்து தூங்கிய தூக்கத்துக்கு இணையாகாது. இதனால் அதிகம் உழைத்தும், படிப்பில் பெரிய அளவில் சாதிக்க முடியாமல் போகக்கூடும்.

சரியான தூக்கம் இல்லாவிட்டால் என்னவாகும்?

படபடப்பு, மனஉளைச்சல், டென்ஷன் எல்லாம் அதிகமாகும். அதன் விளைவாக ரத்தக்கொதிப்பு, இதயக் கோளாறுகள், பக்கவாதம் போன்றவை வரலாம். முந்தைய நாள் இரவு சரியாகத் தூங்காததால், அடுத்த நாள் வேலைக்குப் போகும்போது தூக்கம் வரும்.

புத்துணர்வே இல்லாமல் மந்தமான மனநிலை இருக்கும். எதிலும் முழுக்கவனம் செலுத்த முடியாமல், ஒட்டு மொத்த வேலையும் பாதிக்கப்படும். மற்றவர்கள் முன்னிலையில் எப்போதும் கொட்டாவி விட்டுக்கொண்டும், தூங்கி விழுந்துகொண்டும் இருப்பது நம்மீதான மதிப்பைக் குறைக்கும். வேலையிடத்திலும் சாலையிலும் விபத்துகள் நடக்கும் அபாயமும் இதனால் உண்டு.


தமிழ் ஓவியா said...

எத்தனை மணி நேரம் தூங்கலாம்?

ஒவ்வொருவருக்கும் இத்தனை மணி நேரத்தூக்கம் அவசியம் என்பதற்கான எந்த வரை முறையும் கிடையாது. பிறந்த குழந்தை தினசரி 18 முதல் 20 மணி நேரம் தூங்கும்.

போகப் போக அந்த நேரம் குறைந்துகொண்டே வரும். வயதானவர்களுக்கு தூக்க நேரம் அதிகமாகும். சராசரி மனிதனுக்கு 6 முதல் 8 மணி நேரத்தூக்கம் போதுமானது. சிலருக்கு 5 மணி நேரத் தூக்கமே போதுமானதாக இருக்கலாம். எப்படியிருந்தாலும், முதல் நாள் பறிபோன தூக்கத்தின் விளைவாக அடுத்த நாள் தூங்கி வழியாமல், சுறுசுறுப்பாக இருந்தால் ஓ.கே.

எப்போது பிரச்சினை?

தொடர்ந்து 2 வாரங்களுக்கும் மேலாக தூக்கம் இல்லாமல் தவிப்பவர்கள், மேலும் தாமதிக்காமல் மருத்து வரைப் பார்ப்பது நல்லது. தூக்கமில்லாதபோது அதை வரவழைக்க மாத்திரைகள் சாப்பிடுவது ஆபத்தானது.

மாத்திரைகளின் உதவியோடு தூங்கிப் பழகியவர்களுக்கு ஒரு கட்டத்தில் அது இல்லாமல் தூக்கம் வராது. இன்னும் கொஞ்ச நாட்கள் போனதும், ஒரு மாத்திரை எடுத்துக் கொள்ளும் இடத்தில், 2 மாத்திரை போட்டால்தான் தூக்கமே வரும்.

போகப் போக மாத்திரைகளுக்கும் பெப்பே காட்டும் தூக்கம்! தூக்க மாத்திரை பழக்கமுள்ளவர்கள், ஒரே இரவில் அதை நிறுத்த முடியாது. மருத்துவரை அணு கினால், அவரது உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாக மாத்திரையின் பிடியிலிருந்து மீளலாம்.

தினமும், உணவுக்குப் பிறகு இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் எலும்புகள் வலுப்பெறும். சப்போட்டா பழம், ரத்த ஒட்டத்தை சீராக்கி, கொழுப்பை நீக்குகிறது. உடம்பு சூட்டை தணித்து, குளிர்ச்சி தருகிறது.

Read more: http://viduthalai.in/page-7/83154.html#ixzz36AjXax3y

தமிழ் ஓவியா said...

திக்குவாயை குணப்படுத்தும் வல்லாரை


வல்லாரை தரையில் படர்ந்து வளரும் இயல் புடையது. இதன் சிறுநீரக வடிவ இலைகள் கீரையாக பயன்படுகிறது. இதில் வைட்டமின் சி, ஓலிகோசேக்ரைட், லெப்ரெசி நோயை குணப்படுத்தும் மருந்தான அசியாடிகோசைட் உள்ளிட்டவை உள்ளன.

வல்லாரை மூளைக்கான உணவு என அழைக்கப்படுகிறது. இது நினைவாற்றலை அதிகரிக்கும். பாக்டீரியாக்களை அழிக்கும், காயங்களை குணப்படுத்தும். பெங்கால் புலிகளுக்கு ஒரு பழக்கம் உள்ளது.

அவை காயமடைந்தால் வல்லாரை வளர்ந்திருக்கும் பகுதிக்குச் சென்று வல்லாரை இலைகளை கடித்து விட்டு நாக்கால் காயத்தின் மீது நக்குமாம். அப்போது அதன் காயம் விரைவில் குணமடைந்து விடுமாம். இதனால் வல்லாரைக்கு புலிப்புல் என்ற பெயரும் உண்டு. லெப்ரசி, யானைக்கால் நோய் போன்றவற்றை குணப்படுத்தும் ஆயின்மெண்ட்களிலும் வல்லாரை பயன்படுத்தப்படுகிறது.

காய்ச்சலுக்கு: வல்லாரை கீரை ஒருபிடி, துளசி இலைகள் ஒரு பிடி எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாக வற்றும் வரை காய்ச்ச வேண்டும். இதை அரை கப் வீதம் தினமும் 3 வேளை குடித்தால் காய்ச்சல் குணமாகும். இதனுடன் நல்லமிளகும் சேர்க்கலாம்.

சிறுநீர் பெருக்கி: சிறுநீர் பையில் புண்கள், சிறுநீர் செல்லும் போது வலி உள்ளவர்கள் வல்லாரையை சாறு பிழிந்து 3 ஸ்பூன் சாறுடன், தேன் கலந்து தினமும் 3 நேரம் அருந்தலாம். இது சிறுநீர் பெருக்கியாகவும் செயல் படுகிறது. ஒரு வாரம் இது போல் அருந்தினால் நிவாரணம் கிடைக்கும்.

நினைவாற்றல் பெருக: பாலில் வல்லாரையை நசுக்கி போட்டு காய்ச்சி தினமும் இரவு தூங்கும் முன்பு பருக வேண்டும். இது போன்று 3 வாரங்கள் செய்ய வேண்டும். அல்லது 5 கிராம் வல்லாரை பொடியை பாலில் கலந்து தினமும் இரண்டு நேரம் குடித்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

பல், ஈறு பாதுகாப்புக்கு: வல்லாரை இலைகள், மா இலைகள், கொய்யா இலைகள், கிராம்பு, நல்லமிளகு, உப்பு சேர்த்து செய்யப்படும் பற்பொடி பல், ஈறுகளை பாதுகாக்கும்.

திக்குவாய் குணமாக: தினமும் 5 வல்லாரை இலைகளை மென்று தின்று தண்ணீர் குடித்து வந்தால் குழந்தைகளுக்கு பேச்சு திருந்தும். திக்குவாய் குணமாகும்.

Read more: http://viduthalai.in/page-7/83155.html#ixzz36Ajh13Ix

தமிழ் ஓவியா said...

கருப்புப் பண விவகாரம் சுவிஸ் வங்கிக்கு இந்தியா கடிதம்


புதுடில்லி, ஜூன் 30- கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்போரின் விவரங் களை தருமாறு மத்திய நிதி அமைச்சகம், சுவிஸ் வங்கிக்கு அதிகாரப்பூர்வமான புதிய கடிதத்தை எழுதியுள்ளது.

வெளிநாடுகளில் இந்தியர் கள் பதுக்கி வைக்கப்பட்டி ருக்கும் கருப்புப் பணத்தை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்த விவகாரத்தில் கருப்புப் பணம் வைத்திருப்போர் என சந்தேகப்படுபவர்களின் பட்டி யலை, எந்த வித நிபந்தனை யும் இன்றி மத்திய அரசுக்கு அளிக்க தயார் என்று, சுவிஸ் அரசு சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து சுவிஸ் வங் கிக்கு மத்திய நிதி அமைச்சகம் புதிய கடிதத்தை எழுதியுள் ளது.

இது குறித்து நிதித்துறை யின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், கருப்புப் பணம் வைத் திருப்போர் பட்டியலை அளிக்குமாறு சுவிஸ் வங்கி அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

சுவிஸ் வங்கி நமக்கு இந்த தகவலை அளிப் பதற்கு, இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் மற்றும் சர்வதேச அளவில் உள்ள ராஜ ரீதியிலான ஒழுங்குமுறை ஆகியவை பயன்படுத்தப்படும். கருப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக் கைகள் தொடரும் என நிதி அமைச்சர் அருண்ஜெட்லி உறுதி அளித்துள்ளார் என்று கூறினார்.

கருப்புப் பண விவ காரத்தில் புதிதாக அமைந் துள்ள மத்திய அரசுடன் இணைந்து, ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுப் போம் என சுவிஸ் அரசின் சர்வதேச நிதி விவகாரத்துறை தெரிவித்துள்ளது.

Read more: http://viduthalai.in/page-8/83161.html#ixzz36AjwXU14

தமிழ் ஓவியா said...


யாத்ரீக நிவாஸ்


தமிழக முதல் அமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் தனது சட்டப் பேரவைத் தொகுதியான சிறீரங்கத்தில் பக்தர்கள் வந்து தங்குவதற்காக, தங்கும் விடுதியைத் திறந்து வைத்துள்ளார். அப்படி அவரால் திறந்து வைக்கப்பட்ட கட்டடத் துக்கு அவர் சூட்டியுள்ள பெயர் என்ன தெரியுமா?

யாத்ரீக நிவாஸ் என்று பெயர் சூட்டியுள் ளார். தமிழைத் தாய் மொழியாக கொண்ட தமிழ்நாட்டில் ஒரு முதல் அமைச்சருக்குத் தமிழில் பெயர் கிடைக்கவில்லை.

தேடித் தேடி ஆய்வு செய்து இப்படி ஒரு பெயரை தேர்வு செய்து அறிவித்துள்ளார். தமிழ் மண்ணில் தமிழில் மறு மலர்ச்சியை உண்டாக்கி யதில் திராவிடர் இயக்கத் துக்கு மிகப் பெரிய இடம் உண்டு.

நமஸ்காரம் - வணக் கம் ஆனது தொடங்கி, வந்தனோப சாரம் நன்றி யாக மலர்ந்தது வரை எத்தனை எத்தனையோ எடுத்துக்காட்டுகள் உண்டு.

ஆனால், அண்ணா பெயரிலும் திராவிட என்ற இனப் பண்பாட் டின் அடையாளப் பெயரிலும் அண்ணா திமுக என்ற கட்சியை வழி நடத்தும் ஒரு முதல் வரின் சிந்தனையோ எதிர்த் திசையில் அல் லவா சுழன்றடிக்கிறது!

இப்பொழுது மட்டு மல்ல, குழந்தைகளுக்குப் பெயர் சூட்டினால் கூட ஜெயசீலன், ஜெயக் குமார், ஜெயராமன் என்று தான் முதல் அமைச்சர் வாயிலிருந்து வெளி வரும்.

உயிரியல் பூங்காவுக் குச் சென்று அங்குள்ள புலிகளுக்கோ, யானை களுக்கோ பெயர் சூட்டி னாலும் சமஸ்கிருதப் பெயர்கள்தான் சரமாரி யாக உதிரும்.

கடந்த ஆண்டு மார்ச்சு 15இல் புலிக் குட்டிகளுக்கு முதல் அமைச்சர் சூட்டிய பெயர்கள் அர்ஜுனா, ஆத்ரேயா, அனு, நம்ரதா, உத்ரா, ஆர்த்தி; 2014 மே 11இல் புலிக் குட்டிகளுக்கு முதல் அமைச்சர் எப்படிப் பெயர் சூட்டினார்?

கர்னாபீமா, தாரா, மீரா, வித்யா... யானை களுக்கும் கிரி, உரிகம் என்றுதான் பெயர் சூட்டு வார்.

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் செய்யப்பட்டதை மாற்றி, பிரபவ, யுவ என்னும் சமஸ்கிருதப் பெயர்களை மட்டும் கொண்ட - புராண ஆபாசக் கதைகளை உள்ளடக்கிய சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று மாற்றி யமைத்தவராயிற்றே நம் முதல் அமைச்சர் - அவரிடம் இதைத்தானே எதிர்பார்க்க முடியும்?

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/83245.html#ixzz36GXhJH5k

தமிழ் ஓவியா said...

மனைவியை மறைத்த மோடி குற்றவாளியே! நீதிமன்றம் தீர்ப்பு

அகமதாபாத், ஜூலை 1: வேட்புமனுவில் தனது திருமண விவரத்தை நரேந்திர மோடி மறைத் தது குற்றம்தான். ஆனா லும், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட முடியாது என அகமதாபாத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான நிஷந்த் வர்மா, கடந்த ஏப்ரல் மாதம் அகமதா பாத் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 2012 சட்டமன்ற தேர்தலில் மோடி தனது வேட்புமனுவில் திருமண விவரத்தை மறைத்ததாக வும், அவர் மீது காவல் துறையினரும் தேர்தல் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எம்.எம்.ஷேக் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எம்.ஷேக், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 125(ஏ)(3)இன்படி மோடி தனது வேட்புமனுவில் தகவலை மறைத்தது குற்றமே.

இக்குற்றத்துக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்க முடியும். ஆனால், மக்கள் பிரதி நிதித்துவ சட்டப்பிரிவு 125(ஏ)(3)இன் கீழ் வரும் வழக்குகள், சம்பவம் நிகழ்ந்து ஓராண்டுக்குள் தொடர வேண்டும். மனுதாரர், ஓராண்டு 4 மாதங்களுக்கு பிறகு மனு செய்துள்ளார். எனவே, பிரதமர் மோடி மீது வழக்கு பதிய உத்தரவிட முடியாது எனக் கூறினார்.

இது குறித்து வர்மா கூறுகையில், மோடி குற்றம் செய்திருக்கிறார் என நீதிமன்றமே கூறிவிட்டது. இதனால், நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம் என கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/83247.html#ixzz36GYA5sCA

தமிழ் ஓவியா said...

இந்தித் திணிப்பு - முல்லைப் பெரியாறு தி.மு.க. தலைவர் கலைஞர் கருத்து

சென்னை, ஜூலை 1_ இந்தித் திணிப்புக் குறித்தும், முல்லைப் பெரியாறு குறித்தும் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் இன்றைய முரசொலியில் கூறியிருப்பதாவது:_

கேள்வி :- தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழி கட்டாயமாகி வருவதாக தி இந்து தமிழ் நாளிதழ் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளதே?

கலைஞர் :- 17-.6-.2014 அன்று தி எகானமிக் டைம்ஸ் ஆங்கில நாளிதழ் ஒன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முன்னுரிமைப்படி வெளியிடப்படும் ஆணை,- சமூக வலைத் தளங்களில் அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் உள்துறை கேட்டுக் கொள்கிறது என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரை வெளியானதும், நான் உடனடியாக அதுபற்றி அறிக்கை ஒன்றினை வெளியிட்டு, பிரதமர் அவர்கள் உடனடியாக அதுபற்றி கவனம் செலுத்த வேண்டுமென்பதே நாட்டின் நலன் நாடுவோர் அனைவரது விருப்பமும் வேண்டுகோளுமாகும் என்று தெரிவித்திருந்தேன்.

இந்த அறிக்கைக்குப் பிறகு பிரதமர் அலுவலகம், சமூக வலைத் தளங்களில் இந்தி மொழி தொடர்பு மொழியாக, இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், இந்தி பேசாத மாநிலங் களில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் தெரிவித் திருந்தது.

மேலும் தமிழ்நாட்டிற்கு வந்திருந்த மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு அவர்களும் செய்தியாளர் களிடம் கூறும்போது, எந்த மக்கள் மீதும் மொழியைத் திணிக்க முடியாது, பா.ஜ.க.வைப் பொறுத்தவரை சமூக வலைத் தளங்களில் அலுவலக மொழியாக இந்தியைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது, அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் தாய்மொழிக்கான உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதே பா.ஜ.க. வின் நிலைப்பாடு! என்று தெரிவித்தார்.

இந்தச் செய்திக்குப் பிறகுதான் தற்போது தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழி கட்டாயமாகி வருகிறது என்றும், இந்தி பயிற்சிக்குச் செல்லாத மற்றும் தேர்வு எழுதாத 11 ஊழியர்களுக்கு மெமோ கொடுக்கப் பட்டுள்ளது என்றும், வருகைப் பதிவேடு, அரசு ஆணைகளிலும் இந்தி புகுந்திருப்பது மத்திய அரசு அலுவலர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் இன்று (30.6.2014) செய்தி வந்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் திரு. எம். துரைபாண்டியன் இது பற்றிக் கூறும்போது, மத்தியில் புதிதாக அமைந்துள்ள அரசு, இந்தியைக் கட்டாயமாக்க முயன்று வருகிறது. மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்கெனவே செயல்படாமல் இருந்த இந்தி மொழி மய்யத்தை மீண்டும் செயல்படுத்த உத்தர விட்டுள்ளது.

இந்த விவகாரத்தை மத்திய அரசு ஊழியர்களுக்கான தேசிய கூட்டு ஆலோசனைக் குழுவிடம் முன்வைக்க உள்ளோம் என்று தெரிவித்திருக்கிறார். எனவே மத்திய அரசும், பிரதமர் அவர்களும் இந்தப் பிரச்சினையில் மீண்டும் கவனம் செலுத்தி, இந்தி பேசாத மக்களிடம் எழுந்துள்ள கலக்கத்தைப் போக்க முன் வரவேண்டு மென்று எதிர்பார்க்கிறேன்.

கேள்வி :- முல்லைப் பெரியாறு, பரம்பிக் குளம், பெருவாரிப்பள்ளம், துணக்கடவு ஆகிய நான்கு அணைகளும் கேரளாவுக்கே சொந்தம் என்று மீண்டும் கேரள முதலமைச்சர் தெரிவித் திருக்கிறாரே?

தமிழ் ஓவியா said...

கலைஞர் :- இதைத்தான் நான் 27-.6-.2014 அன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந் தேன். கேரள சட்டப்பேரவையில் முதலமைச்சர் உம்மன் சாண்டி, முல்லைப்பெரியாறு உட்பட நான்கு அணைகளும் இப்போது கேரளாவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன அந்த அணைகள் முழுக்க முழுக்க கேரளாவுக்குச் சொந்தமானவை.

2009 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் உள்ள பெரிய அணைகளின் பட்டியலில் இந்த நான்கு அணைகளும், தமிழ்நாட் டுக்குச் சொந்தமானவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கேரளா அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு அந்த நான்கு அணைகளும் கேரளாவுக்குச் சொந்தம் என்று மாற்றப்பட்டது என்று தெரிவித்திருந்தார்.

இதைத்தான் நான் குறிப்பிட்டு, கேரள முதலமைச்சர் இவ்வாறு கேரள சட்டசபையில் கூறியிருக்கிறாரே என்று கேட்டதற்கு, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கேரள முதலமைச் சருக்குப் பதில் சொல்லாமல், அவர் இப்படி சொல்லியிருக்கிறாரே என்று கேட்ட என்னை எந்த அளவுக்கு அநாகரிகமாக விமர்சிக்க முடியுமோ அந்த அளவுக்கு விமர்சித்து, பின் குறிப்பில் இந்த நான்கு அணைகளும் தமிழ்நாட்டால் இயக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன என்ற வார்த்தைகள் உள்ளன என்று தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றார்.

ஆனால் நேற்றையதினம் (29.-6.-2014) கேரள முதலமைச்சர் திரு. உம்மன் சாண்டி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது, 4 அணைகளும் தங்களுக்கே சொந்தமானவை என்று தமிழ்நாடு உரிமை கொண்டாடுவது தவறானது. அந்த அணைகள் தமிழ்நாட்டால் இயக்கி, பராமரிக்கப்பட்டு வந்தாலும், அவற்றுக்கு தமிழ்நாடு சொந்தம் கொண்டாட முடியாது.

இரு மாநிலங்களுக்கு இடையே செய்து கொண்ட உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ள விதிமுறைப்படி, முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், துணக்கடவு அணைகளை தமிழ்நாடு பராமரித்தும், பரிபாலனை செய்தும் வருகிறது. அண்டை மாநிலமான தமிழ்நாட்டுடன் கேரளா நல்லுறவைப் பராமரிக்க விரும்புகிறது.

இந்த விவகாரத்தில் கேரளா தேவையற்ற சர்ச்சையில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டவில்லை. இந்தப் பிரச்சினையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. தேசிய பேரணைகள் பதிவேட்டில் நான்கு அணைகளும் கேரளாவுக்குச் சொந்தமானவை என்றே பதிவாகி உள்ளது என்று பதில் கூறியதாக தினத்தந்தி, தினமணி போன்ற நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள் ளன.

எனவே ஜெயலலிதா பதில் கூற வேண்டியது கேரள முதல் அமைச்சருக்குத் தானே தவிர, என்னிடம் கோபப்பட்டு ஆத்திரத்தைக் காட்டவேண்டிய அவசியமில்லை. கேரள முதல்வரின் இன்றைய பதிலுக் குப் பிறகாவது தமிழக முதலமைச்சர் அரைவேக்காடு அவர்தான் என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டி ருப்பார் என்று நம்புகிறேன்.

(முரசொலி, 1.7.2014

Read more: http://viduthalai.in/page-3/83220.html#ixzz36GZ0pXnB

தமிழ் ஓவியா said...


அகில இந்திய அளவில் தனியார் துறைகளில் முழுமையாக இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் திராவிடர் கழகம் போராட்டம் நடத்தும்


தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பேட்டி

குற்றாலம், ஜூன் 29- அகில இந்திய அளவில் தனியார் துறை நிறுவனங்களில், இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்தக்கோரி திராவிடர் கழகம் விரைவில் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தும் என தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தெரிவித் துள்ளார். குற்றாலத்தில் இன்று (29.6.2014) செய்தியாளர் களைச் சந்தித்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:-

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வேலை வாய்ப்புகள் அளிக்க வேண்டும்

ஒரு பக்கம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் கல்வி நிலையங்களில், அரசு மற்றும் அரசு சார்ந்த அமைப்புகளில் வேலை வாய்ப்பு என ஓரளவு இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தாலும், இன்றைய மாறி வரும் பொருளாதாரச் சூழல் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆட்சி அதிகாரத்திற்கு முழுமையாக வரும் சூழலை உருவாக்கவில்லை.

தனியார் மயமாக்கல் எனும் அரசுக் கொள்கை மூலம், அரசு வேலை வாய்ப்புகள் குறைந்து கொண்டு வருகின்றன. அரசின் பணத்தில், ஆதரவில் துவக்கப்படும் தனியார் நிறுவனங்களில் பன்னாட்டு நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபின, பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீடு கோரும் அடுத்த கட்ட சமூக நீதிப் பயணத்தைத் திராவிடர் கழகம் முன்னெடுக்கும்.

தனியார் துறைகளில் இடஒதுக்கீடு

மத்திய அரசின் கவனத்தை ஈர்த்து அகில இந்திய அளவில் தனியார் துறை நிறுவனங்களிலும் முழுமையான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த அனைத்து விதப் போராட்ட முறைகளையும் திராவிடர் கழகம் கடைப் பிடிக்கும். சமூக நீதிப் பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் துவக்குவோம்!

அதற்காக திராவிடர் கழகம் முன்னெடுக்கும் இப்புதிய பயணம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மற்றுமொரு விடியலாக அமையும் என்பது உறுதி.

தமிழகத்தில் அரசு போக்குவரத்து தனியார்மயமாவதை கண்டிப்போம்

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகம் தனியார் மயமாக்கப்படுவதை திராவிடர் கழகம் கண்டிப்பாக எதிர்க்கும்.

தமிழகத்தில் இந்தி திணிக்கப்பட்டால் இந்தி எழுத்து அழிப்பு போராட்டம்

தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்டால் தந்தை பெரியார் வழிகாட்டியிருந்தபடி ஆகஸ்டு முதல் தேதி ரயில் நிலை யங்களில் இந்தி எழுத்துகள் அழிப்புப் போராட்டத்தைத் திராவிடர் கழகம் நடத்தும்.

மோடி ஆட்சி பழைய கள் புதிய மொந்தை

கடந்த ஒரு மாத பாரதீய ஜனதா கட்சியின் மத்திய அரசின் மோடி ஆட்சி, பழைய கள் புதிய மொந்தை என்ற நிலையில் தான் உள்ளது. ஈழத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்கள் பிரச்சினைகளில் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை, பழைய நிலையைவிட மோசமான நிலையில் இருக்கிறது. விலைவாசியை பொறுத்தளவில் கடந்த ஆட்சியை விட தற்போதைய பி.ஜே.பி. ஆட்சியில் அதிக அளவில் விலையேற்றம் அதிகரித்துள்ளது.

ரயில்வே கட்டணங்கள் உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும்

ரயில்வே கட்டணங்கள் உயர்வு ஏழை - எளிய நடுத்தர வகுப்பு மக்களை மிகவும் பாதித்துள்ளது. குறிப்பாக ரயில்வே சரக்கு கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள் ளது. மத்திய அரசின் நிதி நிலை அறிக்கைக்கு முன்பே இவ்வளவு உயர்வு என்றால், பின்னர் வரி விதிப்புகள் மூலம் மக்களை கடுமையாக பாதிக்கும் அளவிற்கு மோடி ஆட்சி நடைபெற்று வருகிறது. இவை எதிர் விளைவுகளை உண்டாக்கும் என தமிழர் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/headline/83140-at-a-national-level-in-the-private-sector-should-be-implemented-fully-castes-reservation-league-struggle.html#ixzz36GcBHKWa

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?


பாண்டிய மன்னன் குதிரை வாங்கக் கொடுத்த பொன்னைக் கொண்டு கோவில் கட் டினான் அமைச்சனான மாணிக்கவாசகன். மன் னன் சிறைப்படுத்திய தால், தன் பக்தன் மாணிக்க வாசகனின் அல்லலைப் போக்க நரிகளைப் பரி களாக்கி (குதிரைகளாக்கி) தன் சீடனைக் காப்பாற்றி னான் சிவன்; மறுபடியும் அந்தப் பரிகள், நரிகளாகி ஓலமிட்டதால், மன்னன் மாணிக்கவாசகனைத் தண்டித்தான் என்கிற ஆன்மீகம் மெச்சத் தகுந் ததுதானா? மன்னன் கட் டளையை மீறி குதிரை வாங்காமல் கோவில் கட்டியது, கடமை தவறி யது ஆகாதா? கடமை தவறியவனை சிவனாகிய கடவுள் காப்பாற்றியது எந்த வகையில் நல் லொழுக்கம்?

தன்மீது பக்தி கொண் டால் எந்தக் கயமையை யும் முட்டுக்கொடுத்துக் காப்பாற்றுபவர்தான் கடவுளா?

இதனால் நாட்டில் ஒழுக்கம் வளருமா?

Read more: http://viduthalai.in/e-paper/83265.html#ixzz36Md5gIZz

தமிழ் ஓவியா said...


கீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் மட்டுமே தீர்ப்பு!

கீழ் நீதிமன்றங்களில்
இனி தமிழில் மட்டுமே தீர்ப்பு!

உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

மதுரை, ஜூலை 2_ சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் கடந்த 1994 ஆம் ஆண்டு ஓர் சுற்றறிக்கை வெளியிட்டார். தமிழகத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் தமிழ் மட்டுமின்றி ஆங்கிலத்தி லும் தீர்ப்புகள் எழுதலாம் என அதில் கூறப்பட்டிருந் தது. பதிவாளர் ஜெனரலின் இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் சோலை சுப்ரமணியம் உயர்நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந் தார். இந்த மனுவை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை ரத்து செய்து, கீழமை நீதிமன் றங்களில் தமிழில் மட்டுமே தீர்ப்புகள் எழுத உத்தரவிட வேண்டும் எனக் கோரி வழக்குரைஞர் ரத்தினம் என்பவர் சீராய்வு மனு ஒன்றை உயர்நீதிமன்றத் தில் தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. மனுமீதான விசாரணை நேற்று மீண்டும் நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலு மணி ஆகி யோர் முன் வந்தது.

இருதரப்பு வாதம் முடிந்த நிலையில் நீதிபதி கள் பிறப்பித்த உத்தரவு:

தமிழ் ஆட்சி மொழி சட்டத்தில் 1976 ஆம் ஆண்டு இரு முக்கிய திருத்தங்கள் மேற்கொள் ளப்பட்டது. பிரிவு 4 ஏவில் உயர்நீதிமன்றத்தின் எல் லைக்கு உட்பட்ட அனைத்து உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதி மன்றங்களிலும் சாட்சி விசாரணை தமிழில்தான் நடத்தப்பட வேண்டும். தீர்ப்புகளும் தமிழில்தான் இருக்கவேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

ஆட்சி மொழி சட்டத் திருத்தத்திற்கு எதிரானது

இது அரசியல் நிர்ணய சட்டத்திற்கு எதிரானது என வழக்குரைஞர் ரங்கா என்பவர் உயர்நீதிமன்றத் தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடியானது. இதன் பின் தமிழை தாய்மொழி யாக கொண்டிராத நீதி பதிகள் தங்களுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் மூத்த நீதிபதிகள் குழு கூடி ஆங்கிலத்திலும் தீர்ப்பு எழுதலாம் என கூறியது. இது சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. இது ஆட்சி மொழி சட்டத் திருத்தத்திற்கு எதிரானது.

இதுபோன்ற சூழ்நிலை யில் சில குறிப்பிட்ட காலத்திற்கு நீதிபதிகளுக்கு விலக்கு அளிக்கலாம். இது நிரந்தரமாக இருக்கமுடி யாது. ஆனால் ஆங்கிலத் திலும் தீர்ப்பளிக்கலாம் என்ற உயர்நீதிமன்ற பதி வாளரின் உத்தரவு நிரந்தர மான ஒன்றாக உள்ளது. எனவே இதுகுறித்த பதி வாளரின் சுற்றறிக்கை ரத்து செய்யப்படுகிறது. தமிழ் மொழி தெரியாதவர்களை பொறுத்தமட்டில், தமிழ் நாடு சார்நிலை பணியாளர் நியமன விதிப்படி குறிப் பிட்ட காலத்திற்குள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் தமிழ்மொழி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பையடுத்து இனிமேல் கீழ் நீதிமன்றங்களில் தமி ழில் மட்டுமே தீர்ப்பு வழங் கப்படும் நிலை உருவாகி யுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/83266.html#ixzz36MdIKITs

தமிழ் ஓவியா said...


ஒப்பற்ற ஆயுதம்உங்கள் தனிப்பட்ட நலனை அலட்சியம் செய்வது என்கின்ற அந்த ஓர் ஒப்பற்ற ஆயுதம் அணுகுண்டையும் வெடிக்காமல் செய்துவிடும்.
_ (குடிஅரசு, 9.3.1946)

Read more: http://viduthalai.in/page-2/83287.html#ixzz36MdWR311

தமிழ் ஓவியா said...


சூரத்தில் தமிழர்கள் தாக்கப்படும் கொடுமை!


குஜராத் மாநிலம் சூரத்தில் நெல்லை, தூத்துக்குடி, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த தமிழர்கள் பத்து ஆண்டுகளுக்குமுன் பிழைக்கப் போனார்கள். அங்கு நடைப் பாதைகளில் தள்ளுவண்டி இட்லிக் கடை களும், தேநீர்க் கடைகளும் வைத்துப் பிழைப்பை நடத்தி வருகின்றனர்.

அந்தப் பகுதியில் உள்ள பிரபல தாதா பூபேந்திர பாய் என்பவன் (பி.ஜே.பி.க்காரர்) நாள்தோறும் வந்து நடைப்பாதைகளில் கடை வைத்துள்ளவர்களிடம் மாமூல் வசூல் செய்வது வழக்கம். அவன் கேட்கும் பணத்தைக் கொடுத்தே தீரவேண்டும்; இல்லா விட்டால், அவன் வசம் உள்ள அடியாட்கள் வன்முறைகளில் இறங்கி விடுவார்கள். அதற்குப் பயந்து கேட்டதைக் கொடுத்து விடுவார்கள். (இதுதான் குஜராத் மாடல் போலும்!).

ஒரு நாள் நடைப்பாதைக் கடை வைத்துள்ளவர் களிடையே சிறு சச்சரவு. அப்பொழுது அங்கு வந்த அந்தப் பூபந்திரபாய் அதில் தலையிட்டான்.

எங்கள் பிரச்சினையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீ ஒன்றும் தலையிடவேண்டாம் என்று சொன்னதற்காக அந்தத் தமிழர்களை தனது ஆட்களை ஏவி கடுமையாகத் தாக்கி இருக்கிறான். தள்ளுவண்டிகளையும் தள்ளிக் கொண்டு போயிருக் கிறான்.

தங்கள் பொருள்களைக் கேட்கச் சென்ற தமிழர்களை மீண்டும் தாக்கி இருக்கின்றனர். இந்த நிகழ்வு நடந்த மறுநாள் அந்த பூபேந்திரபாய் கொல்லப்பட்டான். சூரத் நகர மேயர் அந்த ரவுடிக்குச் சொந்தக்காரர்.

இந்த நிலையில் தமிழர்கள்தான், பூபேந்திரபாய் என்ற அந்தப் பி.ஜே.பி.க்காரரைக் கொன்றதாகக் கிளப்பி விட்டார்கள்; விளைவு எங்கெங்கு தமிழர்கள் வாழ்ந்தார்களோ, அவர்களை எல்லாம் கடுமையாகத் தாக்க ஆரம்பித்தனர். உயிருக்குப் பயந்து பொருள்களைக்கூட விட்டுவிட்டு ஓடி விட்டார்கள்.

இந்த நிலையில், குருசாமி, ஆறுமுகச்செல்வன், ராஜா ஆகிய மூன்று தமிழர்கள் சேலம் நீதி மன்றத்தில் சரணடைந்துள்ளனர் (23.6.2014).

சூரத்தில் வாழும் தமிழர்களின் நலன் கருதி வழக்குரைஞர்களின் அறிவுரைப்படி சரணடைந் ததாக இம்மூவரும் தெரிவித்துள்ளனர். சூரத் பகுதியில் வாழும் தமிழர்கள் இன்னும் அச்சத்தின் பிடியிலிருந்து விலக முடியாத சூழல்!

வடமாநிலத்துக்காரர்கள், தமிழ்நாட்டில் ஏராளம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள். சென்னை மற்றும் அதனைச் சுற்றிலும் வடநாட்டுக்காரர்கள் ஏராளம் பேர் வேலை பார்த்து வருகின்றனர். உணவு விடுதி களில் எல்லாம் பரவலாகக் காணப்படுகிறார்கள்!

வங்கிக் கொள்ளை, பாலியல் வன்முறை உள்பட பல்வேறு குற்றங்களில் அவர்களில் சிலர் ஈடு பட்டார்கள் என்பதற்காக வடநாட்டுக்காரர்களைத் தமிழ்நாட்டுக்காரர்கள் சென்று தாக்குவதில்லை. வட இந்தியர்களுக்கு எதிராக வன்முறைகளிலும் ஈடுபட்டதில்லை.

தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் பெருந்தொழில்களில் மார்வாடிகள், குஜராத்திகள்தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அவர்கள் குடி யிருக்கும் பல அடுக்கு மாடிகளில் மற்றவர்களுக்கு இடம் கொடுப்பதும் கிடையாது.

எழும்பூர் போன்ற பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினரைத் தேர்வு செய்வதில் அவர்கள் எண்ணிக்கைதான் முக்கியமானதாக இருக்கிறது. என்றாலும், எந்தப் பிரச்சினையும் இன்றி, அமைதி யான சூழல்தான் இங்கு நிலவி வருகிறது.

அதேநேரத்தில், ஒரு பேட்டை ரவுடி கொல்லப் பட்டான் என்பதற்காக, தமிழர்கள் அடித்து நொறுக் கப்படுகிறார்கள் - விரட்டப்படுகிறார்கள் என்றால், அதன் விளைவு வேறு வகையாக திரும்பிவிடாதா?

அந்த ரவுடி பி.ஜே.பி.யைச் சார்ந்தவன் என்பதற்காக அரசும், காவல்துறையும் அதீதமாக நடந்துகொள்வதாகத் தெரிகிறது. இந்த நிலை தொடரக்கூடாது.
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டனையை அனுபவிக்கட்டும். அதில் ஒன்றும் அட்டியில்லை. அதற்காக ஒட்டுமொத்த தமிழர் களையே அடித்து விரட்டுவது என்றால், அதைக் கேட்டு வாளாயிருந்து விடவும் முடியாது.

தமிழ்நாடு அரசும் இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்தி, குஜராத் அரசுடன் தொடர்புகொண்டு, குஜராத்தில், குறிப்பாக சூரத்தில் வாழும் தமிழர் களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திட வழி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டு மக்கள் மற்ற பகுதிகளில் தாக்கப்படுகிறார்கள் என்பது வேதனைக்குரியதாகும். இந்த நிலை தொடரக்கூடாது. தேசியம்பற்றிப் பேசும் அரசியல் கட்சிகளும் இதில் கவனம் செலுத்தட்டும்!

Read more: http://viduthalai.in/page-2/83289.html#ixzz36MdeNjKW

தமிழ் ஓவியா said...


குற்றாலம் பெரியாரியல் பயிற்சி முகாமில் சா.கணேசன் அவர்களின் மலரும் நினைவுகள்


குற்றாலம் பெரியாரியல் பயிற்சி முகாம் நான்கு நாட்கள் நடைபெற்றது முதல் நாள் நிகழ்ச்சியில் (26.6.2014) கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகி யோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் சா.கணேசன் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு: இந்த அரிய நிகழ்ச்சியில் பேசுகின்ற வாய்ப்பை பெற்றமைக்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கே இந்த அரங்கத்தில் இளைஞர்களை, மாணவர்களைப் பார்க்கின்றேன். பெரியாரியல் அறிந்து, ஏற்று இந்தத் தமிழ்ச் சமுதாயத்துக்குத் தொண்டாற்ற முனைகின்ற உங்களுக்கு எனது பாராட்டையும், வாழ்த்தையும் தெரி வித்துக்கொள்கிறேன்.

மூடநம்பிக்கை ஒழிப்பும், பகுத் தறிவுப் பரப்பலும் அறிவியலை நோக்கி, தந்தை பெரியாரின் இலட்சி யத்தை முன்னெடுத்துச் செல்லுகின்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஏனெனில் 37 ஆண்டுகளாக இப் பயிற்சி முகாமினைத்தொடர்ந்து தொய்வில்லாமல் ஆண்டு தோறும் நடத்தி வரும் அரும் பெருமையை, கடமையை எண்ணி இலட்சக்கணக் கான தமிழர்கள் தமிழர் தலைவரைப் பாராட்டுவதை எண்ணிப் பார்க்கிறேன். பரவசம் அடைகிறேன். ஏனெனில் அரசியல் பதவியோ அதன் மூலமாக பொருளீட்டலும் உள்ள தமிழகக் களத்தில் எந்தப் பயனையும் எதிர்பார்க் காமல் நாள் தோறும் நாடெங்கும் சுற்றிச் சுழன்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் கருத்தை மேடை தோறும் முழங்கிவருவதும் விடுதலை நாளேட்டின் மூலம் எழுதி பரப்பி வருவது தமிழர் தலைவரின் தன்னலங் கருதாத் தொண்டாகும்.
தமிழகத்தில் பகுத்தறிவுப் பார்வையில் விடுதலை நாளேட்டை மக்களுக்குத் தேவையான நல்ல செய்திகளையும் குறிப்பாக வாழ்வியல் சிந்தனையும் அனைத்து மக்களும் ஏற்கின்ற வகையில், பொது நாளேடாக பல வண்ணங்களில் தமிழர்களின் கைகளில் தவழ்ந்து வருவதை பார்க்க வியப்பாக உள்ளது. பெருமகிழ்ச்சியாக உள்ளது. நானும் விடுதலை ஏட்டினைத் தொடர்ந்து படித்துவருபவர்களில் ஒருவனாவேன். மாணவர்களாகிய, இளைஞர்களாகிய உங்களைப் பார்க்கின்றபோது எனது இளமைக்கால நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன.

காலத்தின் அருமை கருதி ஒரு சம்பவத்தை மட்டும் இங்கே எடுத்துக் கூற விரும்புகிறேன்.

1948 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தமிழக அரசு கட்டாய இந்தியைப் புகுத் தியது. பள்ளிகளில் மாணவர்கள் இந்தி யைக் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்று ஆணை.

அரசின் ஆணை தமிழகத்தில் அதிர்வை ஏற்படுத்தியது. தமிழறிஞர் கள் ஒன்று கூடினர். தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் தலைமையில் தமிழ்த் தென்றல் திருவிக, நாவலர், சோமசுந்தர பாரதியார், பேராசிரியர் இலக்குவனார் போன்றோர் ஒன்று கூடினர் இந்தியை எதிர்த்து போராட் டம் நடத்த முடிவு செய்தனர்.

தந்தை பெரியார் விடுதலை ஏட் டின் மூலம் கட்டாய இந்தியை திரும் பப்பெற வேண்டும் என்று அறிக்கை விடுத்தார். பள்ளிகளின் முன்பு இந் தியை ஒழிக்கும் மறியல் நடத்தப்படும் என்றும் அறிஞர் அண்ணா அவர்கள் இந்தப்போராட்டத்திற்கு முதல் சர்வாதிகாரியாக செயல்படுவார் என்று அறிவித்துப்போராட்டத்தை தொடங் கினார்.

சென்னையில் தொண்டை மண்டல துளுவ வேளாளர் பள்ளி இந்து தியாலாஜிகல் பள்ளி, முத்தி யாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளின் முன்பு மறியல் தொடங்கியது.

தங்க சாலையிலுள்ள தொமதுவே பள்ளியில் படித்த நானும், த.கு.முரு கேசன், து.இராமலிங்கம், விசு கிருஷ்ண மூர்த்தி மற்றும் சில மாணவர்கள் முன்னின்று மறியல் போராட்டக்காரர் களை வரவேற்று மாலையிட்டு நாங்களும் மறியலில் பங்கு பெற்றோம்.

எல்லாப் பள்ளிகளிலும் மறியல் தொடர்ந்தது. தமிழகமே கொந் தளித்தது. சென்னை சிவஞானம் பூங் காவில் அண்ணா அவர்கள் உரை யாற்றி மறியலில் கலந்து கொள்ளும் தொண்டர்களை ஊக்கப்படுத்துவார். அவரது உரை தொண்டர்களை வீறு கொள்ளச்செய்தது. என்.வி.நடராசன் அவர்களும் உடன் இருப்பார்.

தந்தை பெரியாரின் பேச்சும், எழுத் தும் தமிழர்களைத் தட்டி எழுப்பியது. தமிழகமே இந்தி மொழிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தது. நாடு முழுவதும் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல மறுத் தனர். மக்களும், அரசின் மொழிக் கொள்கையை கடுமையாக எதிர்த் தனர்.

தந்தை பெரியாரின் தலைமையில் மக்கள் போராட்டத்தில் இறங்கியதால் தமிழக அரசு பணிந்தது.

கட்டாய இந்தி திரும்பப்பெறப்பட் டது. தந்தை பெரியார் இந்தியை எதிர்த்து நடத்திய இரண்டாவது போரிலும் வெற்றி பெற்றார். மாணவர் களும் மக்களும் பெரியாரின் தலைமை யால் வெற்றி பெற்றதை உணர்ந்தனர். அவரைப் பாராட்டினர். அவர் வழி நடக்க மேலும் ஆயிரக்கணக்கில் மக்கள், திராவிடர் கழகத்தில் இணைந் தனர்.

மேலும் சம்பவங்களைக் கூற நேர மில்லாத காரணத்தால் எனது உரையை நிறைவு செய்கிறேன் வணக்கம் என்று கூறி முடித்தார்.

Read more: http://viduthalai.in/page-2/83294.html#ixzz36MeCwLhS

தமிழ் ஓவியா said...


அட, காட்டு விலங்காண்டிகளே! காளி கோவிலுக்குள் இளம் பெண் பலி!


திந்தோரி (மபி) ஜூலை 2_ மத்தியபிரதேசம் திந்தோரி மாவட்டம் குர்னா கிராமத் தில் உள்ள காளி கோவில் பூசாரி இளம்பெண்ணைக் கொலை செய்து காளி கோவில் நகை மற்றும் பணத்தைக் கொள்ளைய டித்து தப்பி ஓட்டம் மத் தியப்பிரதேசம் திந்தோரி மாவட்டத்தில் உள்ளது குர்னா கிராமம்.

இந்த கிரா மத்தில் மிகவும் பழமை வாய்ந்த காளி(ப்ஹகுல முகி) கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு இமயமலையில் இருந்து தவமிருந்து கடவுள் அருள் பெற்று வந்ததாகக் கூறி ஒரு சாமியார் ஒருவர் வருகை புரிந்தார். தனது பெயரை சத்யானந்தா என் கூறிக்கொண்டு சுற்றிலும் உள்ள ஊர்களுக்கு சென்று அங்குள்ள கோவில்களில் பூசை செய்வார்.

பிறகு இதே கோவிலுக்கு வந்து தங்கிவிடுவார். ஊர்க் காரர்களும் சாமியாருக்கு சகலவசதிகளையும் செய்து அங்கேயே தங்குவதற்கு உறைவிடமும் கட்டித்தந் தனர். தோசம் கழிப்பது, செய் வினை எடுப்பது, மந்திரம் செய்வது என பல்வேறு வித தந்திரவித்தைகளால் மக்களை ஏமாற்றி தன் வசப்படித்தினார்.

பழமை வாய்ந்த கோவிலாகையால் பலர் கோவிலுக்கு காணிக் கையாக தங்க நகைகளை வழங்கினர். இந்த நிலை யில் கோவிலுக்கு குட முழுக்கு செய்யவேண்டும் எனக்கூறி மக்களிடம் பண மாக சேகரிக்கத்துவங் கினார். தான் தனிமையில் கோவில் பணிசெய்ய சிர மப்படுவதாகவும் தனக்குத் துணையாக ஒரு பெண் சீடர் ஒருவர் தேவை என்று கூறினார்.

இதனை அடுத்து அந்த கிராமத்தில் வாழ்ந்த பழங்குடியினப் பெண்ணான மஞ்சு சியாம் வயது (24) என்பவரை அந்த சாமியாருக்கு சீஷ்யாக பணிபுரிய ஊரார் வற்புறுத் தினர். மஞ்சு சிங்கின் குடும்பம் மிகவும் வறுமையில் இருந் ததால் அந்தப்பெண்ணின் பெற்றோரும் இதற்கு ஒப் புக்கொண்டனர். கடந்த ஜனவரிமாதம் மஞ்சு சிங் சாமியாரிடம் தீட்சிதை பெற்று சாமியாரினியாகி விட்டார். இந்த நிலையில் மஞ்சு சிங்கிற்காக சேர்த்து வைத்த நகையையும் அவ ரிடமே அவரது பெற்றோர் சமீபத்தில் கொடுத்துவிட் டனர்.

சில நாட்களுக்கு முன்பு குடமுழுக்குக்கு செய்வதற்காக முன்பணம் தரவேண்டும் பூசைச் சாமான்கள் எல்லாம் வாங்கவேண்டும் என்று கூறி மக்கள் கொடுத்த பணம் அத்தனையும் வங் கியில் இருந்து சத்யானந் தன் எடுத்துக்கொண்டார். கடந்த சனிக்கிழமை தனது மகளைப்பார்க்க கோவிலுக்கு சென்ற மஞ்சுவின் தந்தை கோவில் வெளிவரை ரத்தம் வழிந் திருப்பதை கண்டு திடுக் கிட்டார்.

இதனை அடுத்து ஊராரை அழைத்துக் கொண்டு கோவிலுக்குள் சென்ற போது அந்தப் பெண்ணின் தலை தனியாக துண்டிக்கப்பட்டு காளிதேவியின் காலடியில் கிடந்தது காளிதேவி சிலை யின் முன்பு உடல் கயிரால் கட்டப்பட்ட நிலையில் கிடந்தது. இளம்பெண் கொலை செய்யப்பட்ட தக வல் கிடைத்ததும் திந்தோரி மாவட்ட ஆணையர் அஸ்ரய் சவுபே நேரில் சென்று சம்பவத்தை பார் வையிட்டார். பிறகு இந்தக் கொலை குறித்து பத்திரிகை யாளர்களிடம் பேசும் போது பெண் கட்டி வைத்து கொல்லப்பட்டு உள்ளார்.

உடலிலும் பல பாகங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்தது, போஸ்ட்மார்டம் ரிப் போர்ட் வந்த பிறகு மேலும் பல தகவல்கள் கிடைக்கும். கொலை வெள்ளி இரவு நடந்து இருக்கலாம் என்று தெரி கிறது, காரணம் வெள்ளிக் கிழமை பலர் கோவிலுக்கு வந்து சென்றிருக்கின்றனர். மேலும் கோவிலில் உள்ள நகை பணம் எது வும் காணவில்லை, அதே போல் சமீபத்தில் தான் பெண்ணின் தந்தையும் பெண்ணிற்கான நகை களை கொலைகாரனிடம் ஒப்படைத்து உள்ளார்.

கொலை நோக்கம் நகைகள் மற்றும் பணத்தைக் கொள் ளையடிப்பதற்காக இருக் கலாம். சாமியார் குறித்த விவரங்களை நாங்கள் சேகரித்துகொண்டு இருக் கிறோம், கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயு தம் இங்கு தான் எங்காவது புதைத்து வைத்திருக்கக் கூடும் என்று தெரிகிறது. விரைவில் கொலைகா ரனை கண்டுபிடித்து கைது செய்வோம் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/83305.html#ixzz36MetWQoF