Search This Blog

16.7.14

வேட்டி கட்டிய தமிழர்களை உள்ளே விட மறுத்தது தவறா?


வேட்டி கட்டிய தமிழர்களை உள்ளே விட மறுத்தது தவறுதான்
தமிழன் கட்டிய கோவில்களில் கருவறைக்குள்
தமிழர்கள் தடுக்கப்படுகிறார்களே, மானம், வெட்கம் வேண்டாமா?
சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவரின் தன்மானவுரை
சென்னை,ஜூலை15- சென்னையில் உள்ள சில கிளப்புகளில் வேட்டி கட்டிச் சென்றால் அனுமதி கிடையாது என்று கூறுவது தவறுதான், கண்டிக்கப்பட வேண்டியதுதான். அதே நேரத்தில் தமிழன் கட்டிய கோவிலுக்குள் - கருவறைக்குள் பார்ப்பானைத் தவிர தமிழர்கள் உள்ளே செல்ல முடியவில்லையே, இதுபற்றி மானம், வெட்கம், சொரணை தமிழர்களுக்கு வெடித்துக் கிளம்ப வேண்டாமா? என்று அறிவார்ந்த தன்மான வினாவை எழுப்பினார் தமிழர் தலைவர் பலத்த கரவொலி எழுந்தது.

சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 14-7-2014 அன்று மாலை இந்தியை நாம் எதிர்ப்பது ஏன்? என்கிற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில்  பல்வேறு அரிய தகவல்களுடன் திராவிடர்கழகத்தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  சிறப்புரை ஆற்றினார்கள். கூட்டத்தின் நோக்கங்கள், கூட்டத்தின் அவசியம் மற்றும் இந்தி எதிர்ப்போரின் வரலாற்றை சுருக்க உரையாக திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்க உரையாற்றினார்.

இந்தி போர் முரசு

கூட்டத்தின் சிறப்பு நிகழ்வாக இந்தி போர் முரசு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியரிடமிருந்து  நூல்களை நீதியரசர் பரஞ்சோதி,  திராவிடப் புரட்சி, சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் திருமகள் இறையன், ஆவடி பா.தென்னரசு, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன புத்தக நிலைய மேலாளர் டி.கே.நடராசன், வழக்குரைஞர் குமாரதேவன், கொடுங்கையூர் தங்க.தனலட்சுமி, தென்சென்னை மாவட்டத் தலைவர் வில்வநாதன், தென் சென்னை இளைஞரணி கு.செல்வேந்திரன், தாம்பரம் கழக மாவட்டத் தலைவர் முத்தய்யன், புதுமை இலக்கியத் தென்றல் க.முருகையன், சி.முருகையன், பொழிசை கண்ணன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இந்தியை நாம் எதிர்ப்பது ஏன்? சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆற்றிய சுருக்க உரை வருமாறு:

இந்தி எதிர்க்கும் அவசியத்தை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு பொறுப்பேற்ற 30 நாட்களில் பல்வேறு தலைபோகும் பிரச்சினைகள், விலைவாசி உயர்வு எல்லாவற்றையும் விட்டுவிட்டு வலைத்தளங்களில் இந்தியைப் புகுத்த அறிவிப்பு வந்தது.
 

திராவிடர் இயக்கங்கள், திமுக தலைவர் கலைஞர் அவர்கள் மட்டுமில்லாது கம்யூனிஸ்ட்டு கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்தனர். புற்றிலிருந்த வெளிவரும் அரவம் தலையை உள்ளே இழுத்துக்கொண்டதுபோல் விளக்கம் அளித்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாய இந்திப் பயிற்சி, அதில் பங்கேற்காதவர்களுக்கு தண்டனை என்று தொடர்ந்து இந்தியைப்  புகுத்தும் நிலை உள்ளது. நாம் விழிப்பாக இருக்க வேண்டும். இந்தியை எதிர்ப்பதா என்று கேட்பவர்கள் வரலாற்றை அறியாதவர்கள், பண்பாட்டுப் படையெடுப்பை உணராதவர்கள். மக்கள் மறதியை வைத்துத்தான் அரசியல்வாதிகள் பலர் அரசியல் நடத்தி வருகின்றனர்.

ஜெர்மன் கொலோன் பல்கலைக் கழகத்தில் 5 நாட்கள் பல்வேறு தலைப்புகளில் பேச அழைக்கப்பட்டேன். பெரியார் இயக்கம், அதன் தாக்கம், இந்தி எதிர்ப்பு இயக்கம் ஆகியவைகளைக் குறித்துப் பேசினேன். தென்கிழக்கு ஆசியாவைப்பற்றிய படிப்பு, தென் ஆசியாவைப்பற்றி ஆய்வு செய்யும் மாணவர்களுக்காகப் பேச அழைக்கப் பட்டேன். அதில் மற்ற பல்கலைக்கழக மாணவர்களும், மற்றவர்களும் கலந்துகொண்டனர்.


இந்தி எதிர்ப்பு ஏன்?

காலஞ்சென்ற சீதாராம் கேசரி காங்கிரசுக் கட்சியின் தலைவராக இருந்தவர்.
சோனியா காந்தி அவர்கள்  அவருக்குப் பிறகுதான் அந்த பொறுப்பை ஏற்றார். சீதாராம் கேசரி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். அவருக்கு தந்தைபெரியாரின் ஆங்கில மொழியாக்க நூல்களை அளித்திருந்தோம். தேர்வுக்குப் படிப்பவர்கள்போல் தன்னுடைய தலைக்கு அருகிலேயே வைத்துக்கொண்டு படித்துவருவார். சந்தேகங்கள் இருந்தால் உடனடியாக தொலைபேசி வாயிலாகவே கேட்பார். அந்த அளவுக்கு தந்தை பெரியார் கருத்துக்களில் ஈடுபாடு கொண்டவராக இருந்தவர். ஒப்பற்ற பகுத்தறிவாளரான தந்தைபெரியார் அவருக்கு என்று ஆசாபாசம் ஏதும் கிடையாது. பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில் இந்தியை எதிர்ப்பது வெறும் மொழிமீதான எதிர்ப்பாகத் தோன்றவில்லையே என்று அய்யமாகக் கேட்டார். உண்மைதான் மொழி என்பதால் அல்ல. இந்தியைப் புகுத்துவதன்மூலம் சமஸ் கிருதமயமாக்கி, சமஸ்கிருதக் கலாச்சாரத்தைப் புகுத்த மற்றவர்களின் பண்பாட்டு நாகரிகத்தை சிதைக்க வாய்ப் பானது சமஸ்கிருதம்தான் என்று இந்தியைப் புகுத்தினார் கள். மொழித்திணிப்பு என்பதைவிட பண்பாட்டுப் படை யெடுப்புதான் காரணமாக உள்ளது என்றதும், இந்தியை பெரியார் எதிர்ப்பது நியாயமானது. அவர் கண்ணோட்ட த்தில் சரியானது என்று சீதாராம் கேசரி ஒப்புக் கொண்டார். இந்தியைத் திணிப்பவர்களுக்கு உள்நோக்கம் உண்டு. அதேபோல், அதை எதிர்ப்பவர்கள் அதைப்புரிந்து கொண்டு தான் எதிர்க்கிறோம்.

பவர் பாயிண்ட் முறையில்

இங்கே எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் பவர் பாயிண்ட் என்கிற மின்னொளிமூலம் காட்சி விளக்கங்கள் அளிக்கப்படுகிறது.

22 மொழிகளுள் இந்தியும் ஒன்று அவ்வளவே!

இந்தியா வரைபடத்தில் பல்வேறு மாநிலங்கள் இருக்கின்றன. 1652 மொழிகள் உள்ளன. 22 மொழிகள் முக்கியமானவையாக உள்ளன. இந்திய அரசின் அரசியல் சட்டத்தை உருவாக்கிய பிற்பாடு அந்த வரைவுத் திட்டம் குறித்து நீண்ட விவாதம் செய்தனர். இந்திய அரசியல மைப்புச் சட்டத்தில் தேசிய மொழி இந்தி என்று எந்த இடத்திலும் இல்லை. இது உணர்ச்சி பூர்வமான உரை அல்ல. அறிவுபூர்வ மானது. அரசியல் சட்டத்தின் 17ஆவது பிரிவில் எட்டாம் அட்டவணையில் மொழிகள் என்றுதான் தலைப்பு. 22 மொழிகள் உள்ளன. அவற்றில் இந்தியும் ஒன்று. மொழி இருபெரும் பிரிவுகளாக உள்ளது. ஆரியக் குடும்பம், திராவிடக் குடும்பம் என்று பண்பாட்டு அடிப்படையில் கோடு போடப்பட்டுள்ளது. 13 மொழிகள் மட்டுமே அரசியல் சட்ட வரைவின்போது இருந்தது. மற்றவை கிளர்ச்சிகளுக் குப் பிறகு 14 என்று ஆகி, 18 ஆகி இப்போது 22 ஆக இருக்கிறது. தேசிய மொழி என்றோ மற்றவகையிலோ இல்லாமல் தலைப்பு மொழிகள் என்றுதான் இருக்கிறது.

நாடு முழுவதும் 42 விழுக்காடு மட்டுமே (வடநாட்டு மொழிகளில் எல்லா மொழிகளும் சேர்ந்து) இந்தி பேசப்படுகிறது. 52 விழுக்காட்டினர் இந்தி சாராத மொழியைப் பேசுபவர்களாக உள்ளனர். நாவலர் எழுதிய திராவிடர் இயக்க வரலாறு என்கிற நூலில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்து எழுதி இருக்கிறார். 5 குழுவாக, 19 மொழிப்பிரிவு உள்ளது. இந்தி பெரும்பாலான மக்கள் பேசும் மொழியாக இல்லை.  சென்னைப் பல்கலைக் கழகத்தில் இந்தி பேராசிரியராக இருந்த டாக்டர் சங்கரராஜூ நாயுடு ஆராய்ச்சிக் கட்டுரையில் 1965ஆம் ஆண்டில் இந்தி பேசுபவர்குறித்து எழுதி உள்ளார். இந்தியாவின் கிழக்குப் பகுதியில் இந்தி கிடையாது. ஆங்கிலம் உண்டு. கிருத்துவத்தைத் தழுவியவர்கள் என்கிற முறையில் ஆங்கிலம் உள்ளது. 

ஒற்றுமைப்படுத்துவதற்கு என்று கூறி, கலாச்சாரப் பண்பாட்டு ஆதிக்கக் கருவியாகத்தான் இந்தியை புகுத்து கிறார்கள்.

பெரியார் இந்தியை காங்கிரசில் இருந்தபோதே எதிர்த்துள்ளார். திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டிலேயே எதிர்த்து இருக்கிறார்.  இந்தியில் உள்ள துளசிதாஸ் ராமாயணத்தைக் கடுமையாக எதிர்த்துள்ளார். துளசிதாஸ் ராமாயணத்தில் சிவனையோ, விஷ்ணுவையோ கடவுளா கக் கும்பிடாமல் ராமன் பார்ப்பனர்களைத்தான் வணங் கினான் என்று கூறப்பட்டுள்ளது. கம்ப ராமாயணத்திலும் கடவுளைவிட பார்ப்பனர்களை வணங்குவதாக இருக்கிறது. அப்போதே குடியரசில் பெரியார் எழுதி இருக்கிறார். இலயோலாக் கல்லூரியில் அப்போதைய சென்னை மாகாணப் பிரதமராக இருந்த ராஜாஜி வெளிப்படை யாகவே பேசினார். இந்தியைப் புகுத்துவது என்பது படிப் படியாக சமஸ்கிருதத்தைப் புகுத்துவதற்கே என்று கூறினார்.

தேவநகரி எழுத்து

தேவநகரி எழுத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தியையே வலியுறுத்தினார்கள். தேவநகரி என்பது கடவுள் எழுத்து என்ற சமஸ்கிருத்தை அடிப்படையாகக் கொண்டது. வடபுலத்திலும் போராட்டம் நடைபெற் றுள்ளது. இந்திக்கும், உருதுக்கும் இடையே நடைபெற்ற போராட்டமாகும்.
அரபிய, பாரசீகத்தை அடிப்படையாகக் கொண்டது உருது. இந்து என்கிற சொல்லே பாரசீக வெறுப்பு சொல்லாகும். இந்துஸ்தானி உருது பாசறை மொழியாகும். ஏ.கே.மஜூம்தார் எழுதிய ப்ராப்ளம் ஆப் இந்தி (றிக்ஷீஷீதீறீமீனீ ஷீயீ பிவீஸீபீவீ) நூலில் பல தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார். 1924-26களில் குடியரசில் பெரியார் இந்தியின் ரகசியம் பற்றி எழுதி உள்ளார். சமஸ்கிருதம் படிக்கும் மொழியாக இல்லை. மற்றவர்களைப் படிக்கக்கூடாது என்ற மொழி. காந்தி கூறும்போது இந்துஸ்தானி என்றுதான் கூறுவார்.  பார்ப்பனர்கள் சமஸ்கிருத அடிப்படையை வலியுறுத்தி இந்திதான் என்பார்கள். 28-8-1869 ஆம் ஆண்டில் நியானி டால் இன்ஸ்டிடியூட் இந்தியை பொதுமொழியாக்க வேண்டும் என்று கூறியதால் பிரச்சினை ஏற்பட்டது. ஆரிய சமாஜத்தை நிறுவிய தயானந்த சரசுவதி, சமஸ்கிருதம் தெரியாத வங்காளியான கேசவ் சந்திர சென் ஆகியோர் இணைந்து சமஸ்கிருதத்துக்கு மாற்றாக இந்தியை ஆரியபாஷா என்று பரப்பினார்கள்.

மெயில் ஏடே கண்டிக்கவில்லையா?

1906ஆம் ஆண்டிலேயே தென்னகத்திலிருந்து வெளிவந்த மெயில் ஏட்டில் இந்தியைக் கண்டித்து தலையங்கம் தீட்டியது. இந்தி அல்லது இந்துஸ்தானிதான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று ஒருவர் பேசியதை மெயில் பத்திரிகைக் கண்டித்தது. ஆங்கிலம் போல் இந்தியும் அயல்மொழி என்று எழுதியது. காங்கிரசில் இந்துக்கள் அதிகம் இருந்ததால் இந்தியாவில் இந்தியைப் பொது மொழியாக்க வலியுறுத்தினர். மஜூம்தாரின் நூலில் இந்தியைப்புகுத்துவது வகுப்புவாதக் கண்ணோட்டத்தில் தான் என்று உள்ளது. 1918ஆம் ஆண்டில் தாகூரிடம் காந்தி இந்திகுறித்து கடிதம் எழுதிக் கருத்தைக் கேட்டார்.

தாகூர் திராவிட மக்களுக்கு ஆங்கிலம் போல் இந்தியும் அயல் மொழிதான் என்று கூறினார். திருவண்ணாமலையில் காங்கிரசு மாநாட்டுக்குத் தலைமை வகித்த தந்தை பெரியார் இந்தியை எதிர்த்துள்ளார். காந்தி தன்னுடைய சுயசரிதையிலே கூறும்போது, மார்வாடிகள் இந்திக்கு ஆதரவாக உள்ளனர். பசு வதைக்கு எதிராக உள்ளனர் என்று எழுதி உள்ளார். முசுலிம்கள் உருது மொழியை வலியுறுத்தினர். மாட்டுக் கறியை உண்பவர். இந்தி மொழி என்கிற பெயரால் ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்,  ஒரே சமயம் என்று கூறுகின்றார் கள். இது மொழியின் மூலமாக வரும் பண்பாட்டுபடை யெடுப்பாகும்.

ஆச்சாரியாரே மாறினாரே

ஆர்.எஸ்.எஸ் வார ஏட்டில் ஒருவர் 1965ஆம் ஆண்டில் இந்தி எதிர்ப்புகுறித்து தவறான கருத்தைக் கூறியிருக்கிறார். இந்தி படித்தால் வேலை வாய்ப்பு ஏற்படும் என்றால் இப்போது படித்தவர்கள் வளைகுடாவுக்குத்தானே செல்கிறார்கள். அரபி படித்தால் வேலை என்று கட்டாயமாக்குவார்களா?
மொழி ஒரு பிரச்சினை அல்ல. நம்முடைய இயக்க புத்தகங்ளே பிற மொழிகளில் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராட்டிய, ஒடிசா மொழிகளில் உள்ளனவே.திணிப்புக்கு உள்நோக்கம் என்ன? அதைத்தான் கவனிக்க வேண்டும்.

மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஈழத்தமிழர்கள், தமிழக மீனவர்கள், விலைவாசி என்று எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும்போது, இந்தியைத் திணிப்பதா? பழைய கள், பழைய கறுப்பனாகத்தான் அனைத்துப் பிரச்சினைகளிலும் மத்திய பாஜக அரசு உள்ளது. இணைய இளைஞர்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பழைய வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும. இந்தியை புகுத்த முயன்ற ராஜாஜியே தந்தைபெரியார் போராட்டத்துக்குப் பிறகு Hindi Never; English Ever என்று கூறிவிட்டாரே.   இந்தித் திணிப்பதற்கான நோக்கங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியை நாம் எதிர்ப்பது ஏன் என்று அனைத்து தரப்பினரும் அறிய வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக்கூட்டம். இணையத்திலும் இது வெளிவரும்.

-இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேசினார்.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் விவரம்:

திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு, புலவர் வெற்றியழகன், தஞ்சை கூத்தரசன், திராவிடர் கழக மாநில மாணவரணி செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தமிழ்சாக்ரடீஸ்,  பொதுக்குழு உறுப்பினர் எம்.பி.பாலு, தென் சென்னை மாவட்டத் துணைத் தலைவர் செங்குட்டுவன், மயிலை சேதுராமன், லெமுரியா தர்மராசன், புதுமை இலக்கியத் தென்றல் பொறுப்பாளர் சைதை தென்றல், பெரியார் நூலக வாசகர் வட்டப் பொருளாளர் மனோகரன், செயலாளர் சுப்பிரமணியன், தொழிலாளர் கழகப் பொறுப்பாளர் செல்வராசு, பெரியார் களம் இறைவி, கெடார் மூர்த்தி, திராவிட இயக்க தமிழர் பேரவை வடக்கு மண்டலச் செயலாளர் மாறன் உட்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் திராவிடர் கழகத் தோழர்கள் மட்டுமன்றி ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். (முழு உரை பின்னர் வெளிவரும்).

                                  ---------------------"விடுதலை” 15-07-2014

30 comments:

தமிழ் ஓவியா said...


சாமி சாகுமா?


இன்றைய ஆன்மிகம்?

சாமி சாகுமா?

குஜராத் மாநிலம் துவார கையில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் கொடி மரம் (துவஜஸ்தம்பம்) இல்லை. இந்தக் கோயில் கருவறை யில் கண்ணபிரான கரிய நிறத்துடன், நான்கு கரங்க ளோடு, வெள்ளி மஞ்சத்தின் மீது நின்ற கோலத்தில் மேற்குமுகமாக அருள் புரிகிறார். இங்கு கிருஷ்னை கருவறைக்குள் சென்று துளசி இலைகளை வைத்து வழி படலாமாம்.

சரி, தலைக்கொரு சீயக் காய் தாடிக்கொரு சீயக் காயா? மற்ற இந்துக் கோயில் களில் பக்தர்கள் கருவறைக் குள் சென்று வழிபடத் தடை ஏன்? அப்படி என்றால் தீட்டுப்பட்டு விடும் சாமி செத்துவிடும் என்பானேன்?

Read more: http://viduthalai.in/e-paper/84079.html#ixzz37aiAVIOn

தமிழ் ஓவியா said...


காமராசருக்குச் செய்யும் உண்மையான மரியாதை எது? எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் கருத்து


சென்னை, ஜூன் 15_ அனைவருக்கும் உணவு; அனைவருக்கும் கல்வி என்னும் புரட்சிகரமான கொள்கையின் அடிப் படையில் தமிழகத்தில் நல்லாட்சி வழங்கிய பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளில், அவருக்கு விடு தலைச் சிறுத்தைகள் தமது செம்மாந்த வீர வணக்கத்தைச் செலுத்து கிறது.

பெருந்தலைவரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசு கடைப்பிடித்து வரு கிறது. அதேவேளையில் கல்வி தனியார்மயமாகவும் வணிகமயமாகவும் மாறி, ஏழை எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகி வரு கிறது. கல்வியே சிறந்த செல்வம், கல்வியே மீட் சிக்கு வழி என்னும் உண்மையை அறிந்த நிலையிலும், எளிய மக்கள் எளிதில் பெற முடியாத அளவுக்கு கல்வியை மிகப் பெரும் விலைகொண்ட பொருளாக மாற்றி வரு வது பெரும் கவலையளிப் பதாக உள்ளது.

மழலை யர் வகுப்புகளிலிருந்தே பல்லாயிரக் கணக்கில், இலட்சக் கணக்கில் கட் டணம் செலுத்தி கல்வி பெற வேண்டிய அவலம் பெருகியுள்ளது. அரசு பள்ளிகள் மற்றும் கல் லூரிகள் தனியார் கல்வி நிறுவனங்களோடு போட்டி போட இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த முரண்பாடுகள் புதிய தலைமுறையின ரிடையே மிகப்பெரும் முரண்பாடுகளையும் இடைவெளிகளையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், மழலை யர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி அளிக்க முடியாது என்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் வெளிப் படையாக சவால் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய போக்குகள் தமிழகத்தின் எதிர்காலத் தைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

எனவே, தமிழக அரசு கல்வித் தளத்தில் ஏற் பட்டுள்ள தனியார்மயம் மற்றும் வணிகமயத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் நெறிப்படுத்துவதற்கும் முன்வர வேண்டும். தனி யார் கல்வி நிறுவனங் களை அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும். ஆசிரியர்கள், பேராசிரி யர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு அரசே ஊதியம் வழங்கவேண் டும்.

கல்விக் கட்டணத் தையும் அரசே நிர்ணயிக்க வேண்டும். இத்தகைய சீர் திருத்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதன் மூலம் ஏழை எளிய மக் களும் எளிதில் கல்வி பெற வாய்ப்புகள் உருவா கும். அத்துடன், தமிழக அரசின் இலவசத் திட்டங் கள் அனைத்தையும் விலக்கிக்கொண்டு கல் வியை முழுமையாக கட் டணமில்லாமல் வழங்கு வதற்கு முன்வரவேண்டும்.

இதுவே பெருந்தலைவர் காமராஜருக்கு செலுத்தும் உண்மையான மரியாதை யாக அமையும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

- இவ்வாறு எழுச்சித் தமிழர் தொல்.திருமாவள வன் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-5/84078.html#ixzz37aoyjPEX

தமிழ் ஓவியா said...


அன்னை மீனாம்பாள்


தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பெண்களுக்காகப் போராடிய ஓய்வில்லா உழைப்பாளி இவர்! அம்பேத்கர், மீனாம்பாளின் பணியைப் பாராட்டி, என் அன்பு சகோதரி என்று மகிழ்ந்து கூறினார்.

1904 டிசம்பர் 26 அன்று ரங்கூனில் பிறந்தார் மீனாம்பாள். அவரது தந்தை வாசுதேவபிள்ளை மிகப்பெரிய வர்த்தகர்... செல்வந்தர். அம்மா மீனாட்சி. ரங்கூனில் கல்லூரிப் படிப்பை முடித்தார் மீனாம்பாள். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளை நன்கு கற்றார். அவரது தந்தை ஆதி திராவிடர் இயக்கத் தலைவராக இருந்ததால், இயல்பிலேயே அரசியலில் மீனாம்பாளுக்கு ஆர்வம் இருந்தது.

அம்பேத்கரின் கருத்துகள் மீதும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். 16 வயதில் சென்னை வந்தவர், தலித் தலைவர் சிவராஜை திருமணம் செய்து கொண்டார். எழும்பூர் நீதிமன்றத்தில் 16 ஆண்டுகள் கவுரவ நீதிபதியாகப் பணியாற்றினார்.

அக்காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கையையும் பிரச்சினைகளையும் ஆழமாக அறிந்து கொண்டார். சைமன் குழு வருகையை ஆதரித்து குரல் எழுப்பி, பொது வாழ்க்கைக்குள் நுழைந்தார்.

தலித் உரிமைப் போராட்டங்கள், சுயமரியாதைக் கூட்டங்கள், இந்தி எதிர்ப்புப் போராட்டம், பெண்ணுரிமைப் போராட்டம் என்று தமிழ்நாட்டில் நிகழ்ந்த அத்தனை முக்கிய நிகழ்வுகளிலும் துணிச்சலுடன் பங்கேற்றார். திராவிட இயக்கத் தலைவர் ஈ.வெ.ராமசாமிக்கு பெரியார் என்ற பட்டத்தைச் சூட்டியவர் மீனாம்பாள்தான்!

அம்பேத்கரின் கருத்துகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் பெரும் பணியையும் மேற்கொண்டார். மும்பையில் ஒரு முறை மீனாம்பாளின் வீட்டுக்கு வந்த அம்பேத்கர், அவரின் பணியைப் பாராட்டி, என் அன்பு சகோதரி என்று மகிழ்ந்து கூறினார்.

சென்னை மாநகராட்சியின் முதல் தலித் பெண் துணை மேயராகப் பொறுப்பேற்றார். திரைப்படத் தணிக்கைக்குழு உறுப்பினர், சென்னைப் பல்கலைக்கழக செனட் உறுப்பினர், நெல்லிக்குப்பம் பாரி நிறுவனத்தின் தொழிலாளர் தலைவர், தாழ்த்தப்பட்டோர் கூட்டுறவு வங்கி இயக்குநர், மகளிர் தொழிற் கூட்டுறவு குழுத் தலைவர், லேடி வெலிங்டன் கல்லூரி தேர்வுக்குழுத் தலைவர் என்று இன்னும் இன்னும் பல பொறுப்புகளை ஏற்று, சிறப்பாகச் செயல்பட்ட மீனாம்பாள், 1992 நவம்பர் 30 அன்று காலமானார்.

Read more: http://viduthalai.in/page-7/84097.html#ixzz37apIcXoK

தமிழ் ஓவியா said...


பிராணி வதை தடுப்புச் சங்கத்தின் கவனத்திற்கு...


அறிவியல் விஞ்ஞானம் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் ஊருக்கு ஊர் கொள்ளை சம்பவங்களும், சங்கிலிப் பறிப்பு சம்பவங்களும் நடந்து வருகின்றன.

காவல்துறையினரும் வலைவீசி தேடிப் பிடித்து களவுபோன பொருள்களை மீட்கின்றனர். களவுபோன பொருளை மீட்க காவல்துறையை நாடினாலும், காவல்துறையினரைக் காட்டிலும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள கொல்லாபுரியம்மனைத்தான் பலரும் நம்புகின்றனராம்.

ஆம்! தருமபுரியில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் செல்லும் வழியில் 18 கி.மீ. தொலைவில் உள்ள கொல்லாபுரியம்மன் சாமியிடம்தான் தங்கள் வீட்டில் திருடுபோன பொருள் கிடைக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு உயிருடன் ஒரு கோழியை கோயில் அருகே உள்ள ஒரு மரத்தில் சாகும் வரை தூக்கில் போட்டுவிட்டுச் சென்றால், திருடுபோன பொருள் மற்றும் திருடனும் கிடைத்துவிடுவான் என்பது ஆன்மிக நம்பிக்கையாக இருந்து வருகின்றதாம்.

இந்த நம்பிக்கையின்படி சென்னை, பெங்களூரு, சேலம், மதுரை ஆகிய பகுதிகளில் இருந்துகூட கொல்லாபுரியம்மனை தேடி வந்து கோழியைத் தூக்கிலிடுகின்றனராம்.

அதேபோல திருடுபோன பொருள் கிடைத்துவிட்டால் மீண்டும் கோயிலுக்கு வந்து, பூஜை செய்து கொல்லாபுரியம்மனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்பது ஆன்மீக நம்பிக்கையாக உள்ளது.

இந்த ஆன்மிக நம்பிக்கை கொல்லாபுரியம்மனின் புகழ் லாரி ஓட்டுநர்கள் மூலம் வெளி மாவட்டம், வெளி மாநிலங்கள் வரை பரவியுள்ளதால் நாள்தோறும் திருடுபோன பொருள்கள் கிடைக்கவேண்டும் என்று கோழிகளை தூக்குபோடுவது ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறதாம்.

இதனால் கோழிகள் தூக்குபோடும் பகுதி சுகாதாரம் கெட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு நோய்கள் பரவி வருவதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.

Read more: http://viduthalai.in/page-8/84086.html#ixzz37apnJrCx

தமிழ் ஓவியா said...


நுழையாதே!


திருநெல்வேலி மாவட் டம் களக்காடுப் பகுதியில் சுப்பிரமணியபுரம் என்ற ஊர் - அங்கொரு கரும் பலகையில்,

பொது அறிவிப்பு!

இந்துக்கள் தவிர பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் பிரச்சாரம் மற்றும் மத மாற்றம் செய்யவோ இந்த ஊரில் அனுமதி இல்லை!

- இந்து சமுதாயம்

என்று எழுதி வைக்கப்பட் டுள்ளது.

சட்டப்படி இந்த விளம் பரப்பலகை சரியானது தானா? மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி வந்தவுடன் தமிழ் நாட்டில்கூட இப்படியொரு விளம்பரப் பலகையை வைக்கலாம் என்ற துணிவு வந்துவிட்டதா?

தமிழ்நாட்டில் நடை பெறுவதும் ஒரு வகை யான (Soft) இந்துத்துவா ஆட்சிதானே - கண்டு கொள்ளமாட்டார்கள் என்ற நினைப்பா? (மத மாற்றத் தடை சட்டம் கொண்டு வந்தவர் அல்லவா செல்வி ஜெயலலிதா!).

ராமன் கோவிலை இந்தியாவில் கட்டாமல் வேறு எங்கு கட்டுவது? என்று கேள்வி கேட்டவரு மாயிற்றே! அந்தத் தைரியத் தில் இப்படிச் செய்ய ஆரம் பித்துவிட்டார்களா?

தந்தை பெரியார் பிறந்து பக்குவப்படுத்தப் பட்ட மண்ணில், மதமாச் சரிய எரிமலைக் குழம்புகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்துவிட்டனர் - ஆரம்பத்திலேயே இந்த முளையைக் கிள்ளி எறியா விட்டால், ஆட்சியே கூடக் கடுமையான விலையைக் கொடுக்க நேரிடும் என்று எச்சரிப்பது மனிதநேயப் பகுத்தறிவு இயக்கமான திராவிடர் கழகத்தின் முக்கிய கடமையாகும்.

மோடி அரசாண்ட குஜராத் மண்ணிலே இப்படித் தான் ஒரு கிராமத்தின் நுழைவு வாயிலில் ஒரு விளம்பரப் பலகை இருந்தது.

நீங்கள் இந்து ராஷ்டி ரத்தில் நுழைகிறீர்கள்! என்பதுதான் அந்தப் பலகை.

இன்னொரு கிராமம்; குஜராத் தலைநகரமான அகமதாபாத்திலிருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள தனவாதா என்பது அதன் பெயர். அங்கு ஒரு தண்ணீர்த் தொட்டி - அதில் எழுதப்பட்டுள்ள திருவாசகங்கள் என்ன தெரியுமா?

காலை 9 மணிமுதல் 10 மணிவரை பிராமணர் மற்றும் உயர்ஜாதி படேல் இனத்தவருக்கு மட்டும்;

10 மணிமுதல் மதியம் 12 மணிவரை பர்வாதா வங்கிரீஸ் மற்றும் கும்பார் 12 மணிமுதல் ஒரு மணி வரை தலித் இனத்தவருக் காம் (ஆகா, எப்படிப்பட்ட மோடி ஆட்சி).

மறுபடியும் களக் காடுக்கு வருவோம் - இந்த ஊரில் படித்தவர்கள் பெரிய அரசுப் பணிகளில் உள்ள வர்கள் ஏராளம். இவர்கள் எல்லாம் எங்கே படித்தார்களாம்? கிறித்தவப் பள்ளிகளில்தான்! பாளையங்கோட்டை தூயயோவான் மற்றும் புனித சவேரியார் கல்லூரியில்தான். 40 ஆண்டுகளுக்குமுன் இத்தகைய கரும் பலகையை வைத்தி ருந்தால், இந்தக் கிராமத் தின் நிலை என்ன?

நீ, சூத்திரன் - உனக்கு ஏது, ஏன் படிப்பு? என்றது இந்து மதம். நீயும் படிக்கலாம் என்பதோடு, ஏற்பாடும் செய்தது கிறித்துவம் - தெரிந்து கொள்வீர்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/84136.html#ixzz37eK7hOqI

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்? .......


திருநின்றவூரில் ஒரு கோவில் - பெயர் இருத யாலீஸ்வரர். இக்கோவி லின் கர்ப்பக்கிரகத்தின் மேல் இருதய வடிவில் விதானம் நான்கு பிரிவு களுடன் அமைந்துள்ளது. நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி மரகதாம்பாள் அருள்பாலிக்கிறாளாம். இக்கோவிலில் நெய்தீபம் ஏற்றி அர்ச்சித்தால் இதயம் சம்பந்தமான நோய்கள் குணமடையுமாம்.

ஓகோ! டாக்டர்களில் ஈ.என்.டி., நியூராலஜி என்று நிபுணர்கள் இருப் பதுபோல, கடவுள்களி லும் தனித்தனி நிபுணர் களோ! அந்த வகையில் இவர் என்ன கார்டியாலஜி ஸ்பெஷலிஸ்டோ! இந்தக் கோவில் இருக்கும்போது எதற்கு தேவையில்லா மல் நாட்டில் இந்த மருத்துவமனைகள்?

Read more: http://viduthalai.in/e-paper/84140.html#ixzz37eKQD5x3

தமிழ் ஓவியா said...


சிபிஎஸ்சி பள்ளிகளில் செத்த மொழியான சமஸ்கிருத வார விழாவாம்!


புதுடில்லி, ஜூலை16- சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இணைந்துவரும் 15 ஆயிரம் பள்ளிகளில் சமஸ்கிருத வார விழா ஆகஸ்டில் கொண்டாடப்பட உள்ளது. இதன் மூலம் சமஸ்கிருதத்தை இளைஞர்களிடம் வளர்க்கலாம் என்பதுதான் இதன் பின்னணி.

30.6.2014 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், சமஸ்கிருதம் இல்லாத இடங்களிலும், வெளிநாடுகளிலும் சமஸ்கிருத விழா கொண்டாடப்பட உள்ளது.

சிபிஎஸ்சி இயக்குநரகம் சார்பில் கூறும்போது, எந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும், சமஸ்கிருதம், கற்பிப்பதை வளர்க்கவும், கற்பதை ஊக்குவிக்கும் வகை யிலும் சிபிஎஸ்சி ஈடுபட்டுள்ளது. சமஸ்கிருதம், இந்தியக் கலாச்சாரம் இரண்டும் பிரிக்க முடியாதவையாக உள்ளன வாகும். பூர்வீகத்தைக்குறித்து அறியக்கூடிய வாய்ப்பு உள்ள மொழி சமஸ்கிருதமாகும்

முன்னெப்போதும் இல்லாதவாறு இப்போதுதான் சிபி எஸ்சி முதன்முறையாக இந்த அறிவிப்பை வெளியிட் டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/84144.html#ixzz37eKYjaGR

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டிலும் நரபலியா?சேலம், ஜூலை 16_ சேலம் அருகே புதையல் எடுப்ப தற்காக பள்ளிக் குழந்தை களை கடத்தி நரபலி கொடுக்க சிலர் முயற்சி செய்வதாக கிராம மக்கள் மாவட்ட காவல் துறை கண் காணிப்பாளர் அலுவலகத் திற்குத் திரண்டு வந்து புகார் அளித்தனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பெரிய கவுண்டாபுரம் கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் என 50-_க்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குத் திரண்டு வந்து ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனு வில் கூறியிருப்பதாவது:-

பெரிய கவுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ-_ மாணவியர் மந் தைமேடு என்ற இடத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள். எங்கள் பகு தியில் புதையல் எடுப்பதா கக் கூறி வெளியூர்களைச் சேர்ந்த சில நபர்கள் வந்து தங்கி உள்ளனர். அங்குள்ள ஒருவரின் வீட்டில் தங்கி இதற்காக யாகம் நடத்தி வருவதாகத் தெரிகிறது.

யாகம் முடிந்தவுடன் நரபலி கொடுக்கவும் திட்ட மிட்டிருப்பதாகக் கூறப்படு கிறது. இதற்காக எங்கள் பகுதியில் இருந்து பள்ளிக் கூடத்திற்கு சென்ற தாம ரைச்செல்வி, மகேஷ், சந் தோஷ், சக்திவேல் ஆகிய மாணவ_ மாணவிகளிடம் நைசாக பேசியுள்ளனர். அப் போது சாக்லேட், பிஸ்கட் தருகிறோம், எங்களுடன் வாருங்கள் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனால் பயந்து போன சிறு வர்,-சிறுமியர் பள்ளிக்கூடத் திற்கு வேகமாக சென்ற போது அவர்களை துரத் திச் சென்று பிடிக்க முயற்சி செய்துள் ளனர்.

எங்கள் பகுதியில் தங்கி யாகம் நடத்துபவர்கள் சில குறிப்பிட்ட பதிவு எண் கொண்ட வாகனங்களில் அவ்வப்போது சென்று வருகிறார்கள். அந்த நபர் களின் செயல்பாடு பள்ளி செல்லும் குழந்தைகள் மற் றும் பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற் படுத்தியுள்ளது. எனவே, தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் குழந்தைகளின் உயி ரைக் காப்பாற்றவேண்டும். இவ்வாறு அந்தப் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்

Read more: http://viduthalai.in/e-paper/84141.html#ixzz37eKiGhef

தமிழ் ஓவியா said...


கர்மா - விதியை நம்பினால்...


கர்மாவை நம்பினவன் கடைத்தேற மாட்டான். விதியை நம்பினவன் மதியை இழப்பான்.
_ (குடிஅரசு, 12.4.1931)

Read more: http://viduthalai.in/page-2/84145.html#ixzz37eL5l3lV

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


முதல் குழந்தையைக் கங்கை ஆற்றில் தூக்கி வீசி சாகடிக்கும் கங்காப் பிரவாக் பாதனம் என்ற பார்ப்பனப் புரோகிதக் கொடுமையை 1835ஆம் ஆண்டு அரசாங்கம் ஆணை போட்டு நிறுத்தியது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

புற்றுநோயை உண்டாக்கும் கங்கை நீர்


இந்துக்களின் புனித நதியாகக் கருதப்படும் கங்கையில், பக்தர்கள் பூஜைக்காக சேகரித்த நீரில் குரோமியம் 6 கலந்திருந்ததாக ஹைதராபாத்தில் உள்ள அணுசக்தி தேசிய மய்யத்தின் பொருள்கள் இயைபு குணநலப்படுத்துதல் மய்ய அறிக்கை தெரிவித்துள்ளது.

நச்சுத்தன்மை நிறைந்த குரோமிய கங்கை நீரில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் 50 மடங்கு அதிகமாக இருந்ததாக என்சிசிஎம் தலைவர் டாக்டர் சுனில் ஜெய்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், இதில் காணப்படும் நச்சுத் தன்மையானது புற்றுநோய் உள்பட பல உடல்நலக் கேடுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்றும் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

மோடி அரசின் ரயில்வே நிதிநிலை அறிக்கை: ஒரு கானல்நீர்தான்!

புதிதாக அமைந்துள்ள பா.ஜ.க. தலைமையிலான பிரதமர் மோடி அரசின், ரயில்வே துறை அமைச்சர் திரு.சதானந்த கவுடா தனது முதல் ரயில்வே நிதிநிலை அறிக்கையை 8.7.2014 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

ரயில்வே நிதிநிலை அறிக்கைக்கு முன்பாகவே, 14.2 சதவிகித பயணிகள் கட்டண உயர்வும், 6.2 சதவிகித சரக்குக் கட்டண உயர்வும் இந்த அரசால் அறிவிக்கப்பட்டு, உடனடியாக நடைமுறைக்கு வந்ததின்மூலம், 8000 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.

இந்த ரயில்வே நிதிநிலை அறிக்கையில் அறிவிப்புகள்: சில புல்லட் ரயில் அறிவிப்பு, ரயில்வே பல்கலைக்கழகம் போன்ற வாணவேடிக்கை அறிவிப்புகளும், வழக்கமான முந்தைய அரசின்மீது புகார் பட்டியலும் இடம்பெற்றுள்ளன.

வருமானத்தில் ஒரு ரூபாயில் 94 காசுகள் செலவுள்ள நிலையில், (எஞ்சியது 6 காசுகளே) என்கிற நிலையில், இத்தகைய வினோத வித்தைகள் தேவைதானா என்ற கேள்வி நியாயமானதுதான்.

இந்த ரயில்வே பட்ஜெட்டின்மூலம் அந்நிய முதலீடு - வெளிநாட்டவர் உள்ளே நுழைதல், ஒட்டகம் கூடாரத்திற்குள் நுழைவதாகவும், துப்புரவுப் பணிகள் உள்பட பல பணிகளை தனியாரிடம் ஒப்பந்தங்களுக்கு (காண்ட்ராக்ட்) விடுவதன்மூலம், ரயில்வே துறை இனிவரும் 5 ஆண்டுகாலத்திற்குள், வெளியார் கம்பெனியாகவும், தனி முதலாளிகளின் வசமாகவும் ஆவதற்கான முன்னுரை எழுதப்பட்டுள்ளது என்பது மிகவும் வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியதாகும்.

இது பெரிதும் ஏமாற்றத்தைத் தருகிறது என்று சொன்னாலும், பா.ஜ.க.வின் கொள்கை, முந்தைய காங்கிரசின் (மன்மோகன்சிங் தலைமையின்) உலகமயம், தாராளமயம், தனியார்மயக் கொள்கையிலிருந்து மாறுபடாதது என்பதால், இத்தகைய நிலைப்பாட்டை மக்கள் எதிர்பார்க்க வேண்டியவர்களே ஆவர். அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி (UPA) கடந்த ஆண்டு தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் ரயில் பெட்டிகளில் தீப்பிடித்தால், விபத்துகள் ஏற்பட்டால், அதிலிருந்து தப்பிக்கத் தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

தங்களுக்குச் சாதகமாக இருக்கும்பொழுது, கடந்த காங்கிரஸ் ஆட்சி செய்ததைத்தான் நாங்களும் செய்துவருகிறோம் என்று கூறும் இன்றைய பி.ஜே.பி. ஆட்சி, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அறிவித்த இந்த மிக முக்கியமான அறிவிப்பைச் செயல்படுத்த முன்வராதது ஏன்? இன்னும் சொல்லப்போனால், இந்த அதிமுக்கியமான பயணிகளின் உயிர்காக்கும் பிரச்சினையைக் கண்டுகொள்ளாதது கண்டிக்கத்தக்கதாகும்.

இந்தப் பட்ஜெட்டில் சன்னமாக நுழைந்துள்ள ஒரு திட்டம் திடுக்கிட வைக்கக்கூடியது _- மக்கள் தலையில் இடியை இறக்குவதாகும்.

டீசல், பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு ஏற்ப ரயில்வே கட்டணத்தை உயர்த்துவார்களாம். இதன் பொருள் என்ன? வாரா வாரம், மாதாமாதம் கட்டணத்தை உயர்த்துவார்கள் என்பதுதானே! இது குழப்பமானது _- நடைமுறைக்குச் சாத்தியமில்லாதது. ஆண்டுக்கொருமுறை கட்டணத்தை ஏற்றும்போதே எதிர்ப்புகள் வெடிக்கும் நிலையில், இப்படி டீசல், பெட்ரோல் விலை ஏறும்பொழுதெல்லாம் பயணக் கட்டணத்தை ஏற்றுவது என்பது கோமாளித்தனமானதாகும்.

இதுதான் இந்த ஆட்சியின் நிர்வாகத் திறமைக்கான எடுத்துக்காட்டுபோலும்! வாரா வாரம் ஏலம் போடும் இந்த விசித்திரத்தை என்னவென்று சொல்வது!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் _- நிறைவேற்றப்பட சுமார் 1800 கோடி ரூபாய் தேவைப்படக்கூடிய நிலையில், யானைப் பசிக்குச் சோளப்பொரி என்பதுபோல, வெறும் 700 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. நமது தமிழ்நாட்டு எம்.பி.,க்கள் என்ன செய்யப் போகிறார்கள்? அழுத பிள்ளைதானே பால் குடிக்கும்? ஓங்கிக் குரல் எழுப்பிட வேண்டாமா? தமிழ்நாட்டின் முதலமைச்சர் இப்போது மோடி அரசை மிகவும் ஆதரிக்க வேண்டிய நிலையில் உள்ளார் என்பதை அவரது கருத்து (ஸிமீணீநீவீஷீஸீ) தெளிவாக்குகிறது.

முந்தைய அரசு கட்டணத்தை உயர்த்தியபோதும், பல வசதிகள் அறிவித்தபோதும் இப்படிப்பட்ட மென்மையான, வரவேற்புப் பத்திரம் அவர் படித்ததில்லை. அது ஒருபுறம் இருக்கட்டும்; 5 ரயில்கள் வாரத்தில் சில நாள்கள் மட்டுமே ஓடும்! மற்றபடி தமிழ்நாடு பெரிதும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இந்திய நாடு பல மாநிலங்களின் கூட்டமைப்பு என்கிற நிலையில், ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சி, தேவை என்பதை அவரவர்கள் கருத்துக் கேட்டு, கருத்திணக்கத்தை (Consensual Approach) முன்பே செய்தால், பல மாநிலங்களும் வளர வாய்ப்பு ஏற்படும். அந்த நிலை இல்லையே!

30 நாள்தானே என்ற சமாதானம் எவ்வளவு நாளைக்கு ஓடும்? முந்தைய அரசின்மீது பழி போடுவதும் எடுபடாது. எனவே, ரயில்வே பட்ஜெட் ஒரு கானல் நீர்தான்!

கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

கருத்து


குறைந்த நிலப்பரப்பில் குறைவான தொழிலாளர்களுடன் அதிக உற்பத்தி கிடைக்கும் வகையில் கண்டுபிடிப்புகள் தேவை. எண்ணெய் மற்றும் எரிவாயு சிக்கனம், கழிவுநீர்க் கால்வாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்குவது போன்றவற்றிலும் புதிய கண்டுபிடிப்புகள் தேவை.
இப்போது இருக்கும் கண்டு பிடிப்புகளைப் பயன்படுத்துவதில் சிக்கல் உள்ளது. உதாரணமாக தங்க நாற்கர சாலைத் திட்டத்தில் ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டன. மரங்களைப் பெயர்த்து வேறு இடங்களில் நடும் தொழில்நுட்பம் இருந்தும் அதனைப் பயன்படுத்த முடியவில்லை. இந்த இடைவெளியைக் களையவேண்டும்.

- பொன்ராஜ் வெள்ளைச்சாமி, அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர்.

தங்களது குழந்தைகளுக்கு தாய்மொழியான தமிழைக் கற்றுத்தர வேண்டும் என்ற எண்ணம் பெற்றோரிடம் உருவாக வேண்டும். அவ்வாறு தமிழர்களிடையே முதலில் தமிழ்ப்பற்று வளர்ந்தால்தான் பிறமொழிகளின் திணிப்பை எதிர்கொள்ள முடியும். -கவிப்பேரரசு வைரமுத்து

செல்பேசி, மின்-அஞ்சல், முகநூல் ஆகியவற்றை அதிகமாகப் பயன்படுத்துவோர் அடையாளம் தெரியாத பெயர்களில் தங்களுக்கு வரும் தகவல்களைக் காண ஆர்வம் காட்டக்கூடாது. தகவல் தொழில்நுட்பத்தை நல்ல நோக்கத்துக்காக மட்டும் பயன்படுத்தினால் சைபர் குற்றங்கள் குறையும். முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் மாணவர்களை பெற்றோர்கள் கண்காணிப்பதுடன் இணையதளத்தில் உள்ள நன்மை தீமைகளை அவர்களுக்கு விளக்கிக் கூற வேண்டும்.

- லத்திகா சரண், முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர்

வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதிகள் விலக நேரிடும்போது அதற்கான காரணங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற சூழலில் நீதிபதிகளிடமிருந்து உண்மையான காரணத்தைக் கொண்டு வருவதற்காக ஊடகங்கள் பல்வேறு யூகங்களை வெளியிடுகின்றன. பின்னர் அந்த யூகங்களுக்கு நீதிபதிகள் மறுப்புத் தெரிவிக்கிறார்கள். எனவே, வழக்கிலிருந்து நீதிபதிகள் விலகும்போது இந்தக் காரணங்களால் விலகுகிறேன் என்று கூறுவது நல்லது.

- பாலி நாரிமன், மூத்த வழக்குரைஞர், உச்ச நீதிமன்றம்

தமிழ் ஓவியா said...

உடல்நலனை பாதிக்கும் சாண எரிபொருள்

உலக அளவில் இந்தியா, சீனா மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் சுத்தமான எரிபொருளைப் பயன்படுத்துவதில் பின்தங்கியுள்ளதாகவும் அதில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகவும் அய்.நா. கூறியுள்ளது.

இந்தியாவில் சுத்தமான எரிபொருள் அனைவரும் வாங்கும் குறைவான விலையில் கிடைப்பதில்லை. 85 விழுக்காடு கிராமப்புற வீடுகளில் சாண எரிபொருளையே (பயோமாஸ்) பயன்படுத்துகின்றனர். 45 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மக்களுக்கு இன்னும் மின்சாரம் கிடைக்கவில்லை. சாணத்தைத் தட்டி அதனை அப்படியே எரிபொருளாகப் பயன்படுத்துவதால் அதிலிருந்து காற்றைக் கடுமையாக மாசுபடுத்தும் அளவு புகை வெளியாகிறது. இதனால் வளிமண்டலத்தில் ஒரு கியூபிக் மீட்டருக்கு 300லிருந்து 3000 மைக்ரோ கிராம் அளவிற்கு காற்று மாசு அடைவதுடன், உடல் நலத்தையும் பாதிக்கிறது. எனவே ஸ்டவ்களை அதிகம் பயன்படுத்தச் செய்வது புகையின் அளவைக் கட்டுப்படுத்தும் என்று அய்.நா. தெரிவித்துள்ளது.

தமிழ் ஓவியா said...

பக்கவாதத்தை வென்ற மருத்துவப் புரட்சிபக்கவாதம் என்றாலே இன்னும் கிராமப் புறங்களில் செய்வினை, மந்திரம் செய்து கை கால்களை யாரோ முடங்கச் செய்துவிட்டார்கள் என்ற மூடநம்பிக்கை நிலவி வருகிறது. இந்த மூடநம்பிக்கையைத் தகர்த்தெறிந்துள்ளது மருத்துவ அறிவியல்.

மத்திய மேற்கு அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தின் தலைநகர் கொலம்பசைச் சேர்ந்த லான் புர்கர்ட் என்பவர் நண்பர்களுடன் கடலுக்குக் குளிக்கச் சென்றுள்ளார். கடல் நீரினுள் தாவிப் பாய்ந்து குதித்தபோது அலையின் சுழலில் சிக்கி மண் குதிருக்குள் மாட்டிக் கொண்டார். நண்பர்களின் உதவியால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிறு மூளையின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டு கை கால்களை அசைக்க முடியாத நிலைக்கு ஆளானார். 19 வயதில் இந்த நிலைக்கு வந்த லான் புர்கர்ட்டிற்கு தற்போது 23 வயது ஆகிறது.

அவரது மண்டை ஓட்டில் சிறிய துளையிட்டு 0.15 அங்குல அகலம் கொண்ட ஒரு சிப் மூளைக்குள் பொருத்தப் பட்டது. 96 எலெக்ரோட்கள் கொண்ட அந்த சிப் லான் புர்கர்ட் நினைப்பதை _ எண்ண ஓட்டத்தை ஒரு கணினியின் மூலம் மொழிபெயர்க்கும் தன்மையுடையது.

எண்ண ஓட்டத்தை ஒருமுகப்படுத்தி ஆற்றலைத் தூண்டுவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

பின்னர் மூளைக்குள் பொருத்திய சிப்பின் மொழிபெயர்ப்பைப் புரிந்துகொள்ளும் கணினியிலிருந்து கட்டளைகளைப் பெற்றுச் செயலாற்றக்கூடிய ஒரு தூண்டி (ட்ரிகர்) அவரது வலதுகரத்தில் பொருத்தப்பட்டது. கணினியுடன் இணைக்கப்பட்ட தூண்டியின் மூலம் அவரது கையின் தசைகளைச் செறிவுடன் தூண்டக் கூடிய சமிக்ஞைகளை (சிக்னல்) உள்வாங்கி, அந்தக் கட்டளைகளின்படிச் செயலாற்றும் ஒயர் இணைப்புகள் கொண்ட ஒரு பட்டை அவரது வலது கையில் கட்டப்பட்டது.
இந்த நவீன சிகிச்சையின் மூலம் கையின் ஒரு விரலையாவது அசைக்க முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால், எண்ணத்தை ஒருமுகப்படுத்தும் ஆற்றலைச் செயல்படுத்த முயன்றபோது, திறந்திருந்த வலது கையினை முழுமையாக மூடி முஷ்டியாக்கவும், மூடிய கையினை மீண்டும் திறந்து வெறுங்கையாக்கவும் செய்ததுடன், விரல்களை அசைத்து ஒரு கரண்டியையும் எடுத்து மருத்துவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

மூளை பாதிப்படைந்து உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையிலிருக்கும் பக்கவாத நோயாளிகளை மீண்டும் செயல்பட வைக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியதுடன் திருப்புமுனையான மருத்துவப் புரட்சியையும் ஒஹியோ மாநில மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சிக்கூட மருத்துவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

திரைப்பார்வை : சைவம்

கி.தளபதிராஜ்

இயக்குனர் விஜய்யின் சைவம் திரைப்படம் பார்த்தேன். படத்தின் மூலக்கதை அசைவத்திலிருந்து சைவத்திற்கு மாறியிருப்பதைத் தவிர்த்து அனைத்தையும் ரசிக்கலாம். சாமிக்கு நேர்ந்துவிட்ட சேவலைத் திருவிழாவில் பலி கொடுக்க முடிவு செய்கிறார்கள். அது குழந்தை தமிழ், ஆசையாக வளர்த்துவரும் சேவல். தன் சேவல் பலி கொடுக்கப்பட்டுவிடுமோ என்கிற பயத்தில் தமிழ் தன் அம்மாவிடம் வைக்கும் கேள்விகள் பகுத்தறிவுச் சாட்டை.

சாமிக்கு ஏம்மா நம்ம சேவலைப் பலி கொடுக்கணும்?
சாமி நம்மையெல்லாம் காப்பாத்துறாருல்ல?
சாமி அப்படிக் கேட்டுச்சாம்மா?
சாமி கேட்காது. சாமி நம்மையெல்லாம் காப்பாத்துறதால நாமதான் சாமிக்கு சேவலைப் படைக்கணும்.

சாமி தானம்மா நம்ம சேவலையும் படைச்சுது. அதையும் அவர்தானே காப்பாத்தணும்?
..........????

வெற்றிலையில் மை தடவி சேவலைக் கண்டுபிடிப்பதாக சொல்லும் சாமியாரின் பித்தலாட்டக் காட்சி வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

செட்டிநாட்டின் அழகு மிக அருமையாக காட்டப்பட்டுள்ளது. நேர்த்தியான இசை. கிராமப்புற மாணவர்கள் எந்தவிதத்திலும் மற்றவர்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்பதுபோல் தமிழ் ஆங்கிலம் பேசும் காட்சி நெத்தியடி.

நாசரின் துணைவியாக நடித்திருப்பவர் நல்ல தேர்வு. அமெரிக்கச் சிறுவன் வரும் காட்சிகளும், அவன் நடிப்பும் அருமை. படத்தில் வரும் அனைத்துப் பாத்திரங்களையுமே துல்லியமாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் விஜய்.

நாசரைப்பற்றி சொல்ல வேண்டியதில்லை. வழக்கம்போல் விளையாடியிருக்கிறார்.

அசைவம் என்பது அன்புக்கு எதிரானது; மரக்கறி உணவே (சைவம்) மனிதத்தன்மை என்றெல்லாம் பிரச்சாரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் இப்படத்தையும் நாம் கணக்கில் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. யாகங்கள் எனும் பெயரால் எண்ணற்ற உயிர்களைப் பலிகொடுத்த பார்ப்பனியம் இன்று சைவப் போர்வை போர்த்தி நிற்கிறது.

உலகின் கோடிக்கணக்கான எளிய மக்களின் புலால் உணவுப் பழக்கத்தைக் கிண்டல் செய்யும், பொய் விளக்கம் தரும் பிரச்சாரங்களின் மத்தியில் கடவுளின் பெயரால் உயிர்களைக் கொல்லாமை என்ற கருத்தை முன்வைக்கிறது இந்த சைவம். ஹிட்லரும், மோடியும் சைவ உணவுப் பிரியர்களே என்பதையும் கருத்தில் கொண்டு பார்த்தால் அசைவம் அன்புக்கு எதிரானது என்பது புரட்டு என்றும், மனிதத் தன்மைக்கும் உணவுப் பழக்கத்துக்குமான தொடர்பின்மையும் புலப்படும்.

சைவம் பார்க்க! அசைவம் சாப்பிட!!

தமிழ் ஓவியா said...

ஆரம்பக் கல்வி பெறாத 10 லட்சம் இந்தியக் குழந்தைகள்உலக அளவில் 6 வயதிலிருந்து 10 வயதுவரை உள்ள குழந்தைகளில் ஆரம்பக் கல்வியை 58 மில்லியன் குழந்தைகள் இன்னும் பெறவில்லை. இந்தியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் சுமார் 10 லட்சம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெறாத நிலையில் இருப்பதாக அய்.நா. ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2000ஆம் ஆண்டில் புருண்டி, ஏமன், காரை, நேபாளம், ருவாண்டா, இந்தியா, ஈரான், வியட்நாம் உள்ளிட்ட 17 நாடுகளில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் உலக எண்ணிக்கையில் கால் பங்கினைக் கொண்டிருந்தனர். பத்து ஆண்டுகளுக்குள் 86 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது.

எனினும், கல்வி உதவித்தொகை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதில் முன்னேற்றம் இல்லாமை போன்ற பிரச்சினைகள், 2015ஆம் ஆண்டிற்குள் இந்த நாடுகள் உலகளாவிய ஆரம்பக் கல்வி சாதனையை எட்டுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக யுனெஸ்கோவின் பொது இயக்குநர் இரினா போகொவா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

2012ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ஆரம்பக் கல்வி பெறாதவர்களின் எண்ணிக்கை 5.4 மில்லியனாகவும், இந்தோனேஷியாவில் 1.3 மில்லியனாகவும் இருந்துள்ளது. இதே நிலை நீடித்தால் 15 மில்லியன் சிறுமிகளும் 10 மில்லியன் சிறுவர்களும் சேர்ந்து 25 விழுக்காட்டினர் ஆரம்பக் கல்வியைப் பெறாத நிலையிலேயே இருப்பர் என யுனெஸ்கோவின் புள்ளிவிவரம் எச்சரித்துள்ளது.

இந்த நிலை மாற வேண்டுமென்றால், கல்வி கற்பது ஒவ்வொரு குழந்தையின் உரிமை என்பதை அரசுகள் மதிக்கும்படியான செயல்பாட்டைக் கொண்டுவரும் எச்சரிக்கை ஒலியினை ஏற்படுத்த வேண்டும் என்று இரினா போகொவா அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

தமிழால் முடியும்! சாதித்துக் காட்டிய ஜெயசீலன் இ.ஆ.ப.தமிழ் வழிக் கல்வி படிப்போரை ஏளனமாகப் பார்க்கும் காலத்தில் தமிழில் இந்திய ஆட்சிப் பணியாளர் (அய்.ஏ.எஸ்.) தேர்வு எழுதி வெற்றி பெற்று தமிழுக்கும் தனக்கும் பெருமை சேர்த்துள்ளார் ஜெயசீலன்.

ஆங்கிலப் புலமை பெற்றிருந்தும் தமிழில் தேர்வு எழுதிச் சாதித்துள்ள இவர், கொடைக்கானல் மலையடி வாரத்தில் உள்ள கொங்குவார்பட்டி கல்லுப்பட்டி என்னும் சிறிய கிராமத்தில் பத்தாம் வகுப்பு வரை தமிழிலேயே படித்துள்ளார். மேல்நிலைக் கல்வியை அருகில் உள்ள கிராமத்திலும், விவசாயத்தில் பட்டப் படிப்பை, மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்திலும் முடித்துள்ளார். ஆங்கிலத்தில் வெளிவந்த சிறந்த விவசாய அறிவியல் கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். முதுகலைப் பட்டத்தைத் தமிழில் முடித்து முனைவர் பட்ட ஆய்வினையும் தமிழ்ப் பாடப் பிரிவில் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் இந்திய ஆட்சிப் பணியாளர் (அய்.ஏ.எஸ்.) தேர்வு எழுதுவது என்பது எல்லோரும் நினைப்பதுபோல சுலபலமானது அல்ல என்று ஜெயசீலன் கூறியுள்ளார். மேலும், தமிழ்மொழியில் படிக்க தனியான பயிற்சி மய்யங்கள் இல்லை. தமிழில் விடைகளை எழுதும் வாய்ப்பு இருந்தும் சில கலைச்சொற்களுக்கு ஆங்கிலப் பெயரை அடைப்புக் குறிக்குள் கொடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது. தமிழில் படிப்பது என்பது அதிக உழைப்பைக் கோருவது என்று கூறியுள்ளார்.

இந்த ஆண்டு மேலும் மூவர் தமிழில் படித்துத் தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இன்னும் நிறையப் பேர் தேர்வு எழுத வேண்டுமெனில் அதற்கான தரவுகளை அதிகம் கொண்டுவர வேண்டியது அரசு மற்றும் தமிழ் உணர்வாளர்களின் கடமையாகும்.

தமிழ் ஓவியா said...

தமிழிலேயே தீர்ப்பு!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் தமிழ் மொழியில் மட்டும் தீர்ப்புகள் எழுதப்பட வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை ஆணையிட்டுள்ளது.

தமிழில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் தீர்ப்பு எழுதலாம் என்று 5.1.1994 அன்று உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார். இந்த அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அந்தச் சுற்றறிக்கை தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்திற்கு எதிரானது என்பதால் அதனை ரத்து செய்துவிட்டு மாவட்ட நீதிமன்றங்களில் தமிழில் மட்டுமே தீர்ப்புகள் எழுதப்பட வேண்டும் என ஆணையிடக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவினை விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர்,

தமிழகத்தில் 1956ஆ-ம் ஆண்டு ஆட்சி மொழிச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியானது. ஆனால், நீதிமன்றங்களில் தமிழ் ஆட்சி மொழியாக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து 1976ஆ-ம் ஆண்டு தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதாவது, மாவட்ட நீதிமன்றங்களில் சாட்சி விசாரணை தமிழில் தான் நடக்க வேண்டும். தீர்ப்புகள் தமிழில் தான் எழுதப்பட வேண்டும் என்பது தான் அந்தத் திருத்தம் ஆகும். இந்த சட்டத்திருத்தம், அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும், எனவே, அந்த சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வழக்குரைஞர் ரெங்கா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்பின்பு, தமிழைத் தாய் மொழியாக கொண்டிராத மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் தங்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில், உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு எடுத்த முடிவின்படி உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் மாவட்ட நீதிமன்றங்களில் தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் தீர்ப்பு எழுதலாம் என்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தில், தமிழ் தெரியாத நீதிபதிகளுக்கு தமிழில் தீர்ப்புகளை எழுத குறிப்பிட்ட காலம் வரை அவகாசம் அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், பதிவாளர் ஜெனரல் பிறப்பித்த உத்தரவு நிரந்தரமான ஒன்றாக உள்ளது. இந்த உத்தரவு, தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்துக்கு எதிரானதாகும். எனவே, பதிவாளர் ஜெனரல் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தமிழைத் தாய்மொழியாக கொண்டிராதவர்கள் தமிழகத்தில் பணியாற்றும் போது தமிழ்நாடு சார்நிலைப் பணியாளர் பொதுவிதிகள்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழ் மொழித் தேர்வில் குறிப்பிட்ட காலத்துக்குள் தேர்ச்சி பெற வேண்டும். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத நீதிபதிகள், இந்த விதிப்படி குறிப்பிட்ட காலத்துக்குள் தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

இதேபோல, தமிழே சென்னை உயர்நீதிமன்ற மொழியாகவும் மாறும் நாள் எந்நாளோ?

தமிழ் ஓவியா said...

உடம்புக்கு நல்லது மாற்று வழிகளல்ல மனவலிமையே முக்கியம்


உடம்புக்கு நல்லது

மாற்று வழிகளல்ல
மனவலிமையே முக்கியம்

புண்பட்ட மனதை புகையை விட்டு ஆற்றலாம் என்று விளையாட்டாக சொல்லி நம்மவர்கள் சிகரெட் பிடிப்பதுண்டு. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரைக்கும் புகை போதைக்கு அடிமையாகியிருக்கிறார்கள்.

பல இடங்களில் பள்ளிச் சிறுவர்கள் புகைக்கும் கொடுமையையும் காண முடிகிறது. இச்சிகரெட்டில் உள்ள நச்சுத்தன்மை கொண்ட வேதிப் பொருட்களினால் புற்றுநோய் போன்ற நோய்கள் உருவாகி உயிர் இழப்பு ஏற்படும் என்பது எல்லோரும் அறிந்ததே. உயிர்க்கு ஆபத்து விளைவிக்கும் என்று தெரிந்தும் பலர் புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஏனோ விடுவதில்லை.

சிகரெட் பழக்கத்தை விடப் போகிறேன் என்று சொல்லும் சிலரும் புகையிலை சிகரெட்டுக்கு பதிலாக தேர்ந்தெடுத்திருக்கும் ஒரு மாற்று வழிதான் ஈ-_சிகரெட்.

ஆனால் ஈ_-சிகரெட் புகைப்பழக்கத்தை விடுவதற்கான வழி கிடையாது. அதை பயன்படுத்தி புகைக்கும் பழக்கத்திலுருந்து மீள முயற்சி செய்து தோற்றுப்போனவர்கள் நாங்கள் உள்பட பலர் என்கிறார்கள் பல முறை புகையை விட்டவர்கள்.

இந்த ஈ_-சிகரெட் ஒரு சரியான ஃபோர்ஜரி, நூறில் இரண்டு பேர்தான் இதை பயன்படுத்தி புகைப்பழக்கத்திலிருந்து மீள முடியும். இதனை முயற்சித்தால் அதிகபட்சம் ஒருமாதம் வரை கட்டுப்பாடாக இருக்கமுடியும். ஆனால் அதற்கு பிறகு மீண்டும் உங்கள் கைகளில் பழையபடி சிகரெட் புகைய ஆரம்பித்துவிடும். காரணம் உங்கள் உடலில் மூளையில் நிகோடின் படிமங்கள் இருக்கும் வரை உங்களால் ஒருநாளும் அதிலிருந்து மீளவே முடியாது. சாதாரண சிகரெட்டுகளால் புகைவழியாக உடலுக்கு கிடைத்துக்கொண்டிருந்த நிகோடினை இந்த ஈ-_சிகரெட் திரவ வடிவத்தில் புகையின்றி கொடுக்கிறது. இதனால் உடலிலிருக்கிற நிகோடின் அளவு குறைவது இல்லை. ஈ_சிகரெட்டை எங்கும் பயன்படுத்தமுடியும் என்பதால் முன்பைவிட அதிகம் பயன்படுத்தும் ஆவல் வரும். இதனால் ஏற்கனவே இருக்கிற நிகோடின் தேவையை இன்னும் அதிகமாக்கிவிடும். அதனாலேயே புகைபிடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் தான் அதிகமாகும்.

எனவே புகைப்பழக்கத்தை விடவேண்டும் என்று நினைப்பவர்கள், அதை அப்படியே முற்றிலுமாக விட்டுவிடுவதுதான் சிறந்தது. சிகரட்டுக்கு பதிலாக எந்த மாற்று போதை வஸ்துகளையும் அணுகாமல் அதற்கு பதிலாக ஆரோக்கியமான பழக்கங்களுக்கு நம்மை மாற்றிக்கொள்ளலாம். அது மிகச்சிறந்த பலனை அளிக்கும். சிகரட் பழக்கத்தை விட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தேவை -சிகரெட் அல்ல, மன வலிமையும் தன்னம்பிக்கையும்தான்! என்கிறார் ஒரு முன்னாள் புகைஞர்.

புகையை நிறுத்த முயலுவோருக்கு ஊக்கம் அளிப்பதற்கென்றே முகநூலில் https://www.facebook.com/groups/whyquit/ என்ற குழுவில் குவிகிறார்கள் புகையை வென்றவர்கள்.

- தளபதி பாண்டியன்

தமிழ் ஓவியா said...

நினைவிருக்கிறதா?


பார்ப்பனர் நடத்திய நாடகமும் சங்கராச்சாரியார் எதிர்ப்பும்

1985 செப்டம்பரில் சென்னையில் ஒரு நாடகம்; நடத்தியவர் வெங்கட் என்ற பார்ப்பனர். நாடகத்தின் பெயர் உயிரில் கலந்த உறவே என்பதாகும்.

அதில் பார்ப்பனச் சமூகத்தின் அவலங்கள் தண்ணீர் அடிப்பது முதல் மட்டன் வெட்டுவது வரை சிலாகிக்கப்பட்டது. அந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பார்ப்பனர் சங்கத் தலைவர் என். காசிராமன் உள்பட பார்ப்பனர்கள் பெரும் ரகளையில் ஈடுபட்டனர். நாற்காலிகள் உடைக்கப்பட்டன. நாடகம் பாதியிலே நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து கல்கி இதழில் (29.9.1985) காசிராமனின் பேட்டிகூட வெளிவந்தது.

பாலசந்தர், பாரதிராஜா பிராமண சமுதாயத்தைத் தாக்கிப் படம் எடுத்திருக்கலாம்; இனிமேல் எவரும் அதுபோல் எடுக்க முடியாது. அவர்கள் படம் எடுத்த காலங்களில் பிராமணர்களுக்கென்று சங்கம் இல்லை. இனி அது நடக்காது என்றெல்லாம் திருவாளர் காசிராமன் கொடுத்த பேட்டி கல்கி இதழில் வெளிவந்தது.
18 ஆண்டுகளுக்குப் பிறகு அதே கல்கியில் (9.11.2003) ஜெயேந்திரர் போட்ட தடை என்ற ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது. அது இதோ!

ஞானபீடம் என்ற ஒரு நாடகம்

வெகுநாட்களுக்குப் பிறகு கொஞ்சம் சீரியஸான மேடை நாடகம் பார்த்த மகிழ்ச்சி, ஞானபீடம் பார்த்தபோது!

ஜாதிக் கொடுமைக்கு ஆளாகும் நந்தன். இவரது மனைவிக்குப் பிரசவமாகிறது. அதே நேரத்தில் கொடுமைக்கார மிராசுதாருக்கும் குழந்தை பிறக்கிறது. மருத்துவமனையில் குழந்தைகளை மாற்றி விடுகிறார் நந்தன்!

மாறுபட்ட சூழ்நிலையில் வளர்ந்து, நந்தனின் உண்மையான பிள்ளை வேதவித்தான சங்கரனாகவும், மிராசுதாரின் உண்மையான பிள்ளை ராஜா அய்.ஏ.எஸ். அதிகாரியாகவும் ஆகிவிடுகின்றனர். ராஜா, தான் காதலிக்கும் கிறிஸ்தவ மேலதிகாரியின் பெண்ணை மணப்பதற்காக, மதம் மாறக் கூடத் தயங்குவதில்லை. இந்தப் பின்னணியில் கிராமத்துக்கு விஜயம் செய்கிற ஒரு மடத்தின் தலைவர், வேதம், சாத்திரம் எல்லாம் படித்து ஞானப்பழமாக இருக்கிற சங்கரனைத் தம் மடத்தின் அடுத்த வாரிசாக எடுத்துக் கொள்ள விருப்பம் தெரிவிக்கிறார். நந்தன் இதைக் கேள்விப்பட்டு, சுவாமிகளிடம் உண்மையைச் சொல்லிவிடுகிறார். பிறப்பால் மட்டுமே ஒருவர் அந்தணன் ஆகிவிடுவதில்லை. அவரவர்க்குரிய அனுஷ் டானங்களை அனுசரித்தே ஆகிறார் என்று சொல்லி, தமது முடிவில் மாற்றமில்லை என்கிறார் சுவாமிகள்.

இதுதான் கல்கி கூறும் தகவல்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த பையனாக இருந்தாலும் வேதம் சாத்திரம் எல்லாம் படித்து ஞானப் பழமாக இருக்கிறான் சங்கரன். அவனை மடத்தின் அடுத்த வாரிசாக நியமித்தது உள்ளபடியே புரட்சிதான், வரவேற்கத்தக்கதுதான், நாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டும் இருப்பதுதான்! சங்கர மடத்தில் அடுத்த வாரிசாக ஒரு தாழ்த்தப்பட்டவர் வரவேண்டும் என்று அழுத்தமாகக் குரல் கொடுத்துக் கொண்டு வருகிறோம். ஜாதிப் பிரச்சினைபற்றி எங்கு சர்ச்சைகள் வெடித்துக் கிளம்பினாலும் இந்தக் கருத்தும் வெடித்துக் கிளம்புவதும் சர்வ சாதாரணமாகிவிட்டது! அதனுடைய தாக்கமாகக்கூட இருக்கலாம். ஞானபீடம் நாடகம்.

இப்பொழுதுதான் உச்சக் கட்டமான முக்கியக் காட்சி. இந்த நாடகத்தை நடத்தக் கூடாது என்று தடை விதித்துள்ளாராம் காஞ்சி சங்கராச்சாரியார் திருவாளர் ஜெயேந்திர சரஸ்வதி.

நாடக உலகில் பழுத்த அனுபவம் வாய்ந்த நாடக ஆசிரியர் -_ இயக்குநர் மாலியும் அவரது குழுவினரும் ஜெயேந்திரரைச் சந்தித்து மன்றாடி உள்ளனர்.

பத்தொன்பது தேதிகள் வாங்கிவிட்டேன்! இனிமேல்தான் செலவழித்த பணத்தை எல்லாம் சம்பாதிக்க வேண்டும். சபாக்களிடம் நான் எதைச் சொல்லி கான்சல் பண்ண முடியும் என்றெல்லாம் கெஞ்சி இருக்கிறார் மாலி.

நீங்கள் தொடர்ந்து நாடகத்தை நடத்துவோம் என்று முடிவு எடுத்தால் யாராவது ஸ்டே வாங்க வேண்டி வரும் என்றாராம் ஜெயேந்திரர். கல்கிதான் இதை எல்லாம் சொல்லுகிறது.

சங்கர மடத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு இதைவிட வேறு சாட்சியம் தேவையே இல்லை.

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


கமுக்கமா வச்சிருககாங்க்....ஹீரோ சான்ஸ் போச்சே!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி வெற்றிபெற்ற செய்தி வந்து பதவியேற்பு நடைபெறும் முன்னர், மே 23-ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டது. அன்றே அது முறியடிக்கவும்பட்டது என்பது செய்தி. இதெல்லாம் முடிந்து ஒரு வாரத்தில் ஒரு தகவல் அனைவருக்கும் பரப்பப்பட்டது.

மோடி ஆப்கானில் இருந்த இந்திய வீரர்களிடம் போனில் பேசி கட்டளைகளைப் பிறப்பித்தார். இன்றே இவர்களைப் போட்டுத் தள்ளிவிட்டு வாருங்கள். நான் உங்களுடன் இன்றிரவு விருந்துண்ண வருகிறேன் என்று உற்சாகமூட்டினார் என்பதாக தகவல்கள் வெளிவந்தன. பதவியேற்காத நிலையில் இப்படி ஒருவர் பேசமுடியுமா? இது உறுதிப்படுத்தப்பட்ட தகவலா என்றெல்லாம் தெரியாமல் இப்புரளி பரப்பப்பட்டுக் கொண்டிருக்க, தேர்தலெல்லாம் முடிஞ்சு போச்சு, இன்னும் உங்க ரீலை முடிக்கலையா நீங்க? என்று மோடியின் விளம்பரக் குழுவுக்கு நினைவூட்ட வேண்டியிருந்தது.

அந்த அளவுக்கு தேர்தல் பிரச்சார புரளிகளைப் போல, அதன் பிறகும் கொடுத்த காசுக்கு மேல கூவிக் கொண்டிருந்தது அவரது டீம். மோடி வந்ததும் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக சிங்களக் கடற்படையைத் துவம்சம் செய்வார் என்று சொன்னவர்கள், மோடியின் ஆட்சியில் தொடர்ந்து மீனவர்கள் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆப்கானில் கடத்தப்பட்ட தமிழகப் பாதிரியார் இன்னும் மீட்கப்படாமலேயே இருக்கிறார். இந்நிலையில்தான் செவிலியர்கள் கடத்தப்பட்ட விவகாரம் வெளிவந்தது. உலகளவில் கவனம் பெறப்போகும் இந்த விவகாரத்தில் மோடியின் ஹீரோயிச இமேஜை உயர்த்துவது எப்படி, மோடியை சர்வதேச இராஜதந்திரியாகக் காட்டுவது எப்படி என்றெல்லாம் அதுக்குன்னு இருக்கும் 11 பேர் கொண்ட குழு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தது. ஆனால், அய்.எஸ்.அய்.எஸ். போராளிகளால் செவிலியர்கள் மரியாதையாக நடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட செய்திகள் வெளிவந்ததும் சான்ஸ் போச்சே என்று புலம்புகின்றனராம் மோடியும், அவருக்கு திரைக்கதை, வசனம் எழுதும் கும்பலும்.

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க.வைத் தூக்கிப் பிடித்தவர்களுக்கு பட்டை நாமம்!


இந்திய அரசு நமக்கு ஆதரவாக இருக்கிறது! - இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜியெல் பிரீஸ்

காங்கிரஸ் ஆட்சியின் நிலைப்பாடே தொடரும்! - இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் சையத் அக்பருதீன் பேட்டி

பா.ஜ.க.வைத் தூக்கிப் பிடித்தவர்களுக்கு பட்டை நாமம்!

புதுடில்லி, ஜூலை 17_ இந்திய அரசு நமக்கு ஆதரவாக இருக்கிறது என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜியெல் பிரீஸ், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேசிய பின் தெரிவித்துள்ளார். இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளர் சையத் அக்பருதீன் செய்தியாளர் களிடம் பேசும்போது இந்தக் கருத்தை வழி மொழிந் தார். முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதுமில்லை என்று தெரிவித்தார்.

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு நல்ல முறையில் தீர்வு கிடைக் கும் என்று தமிழ்நாட்டில் துள்ளிக் குதித்தவர்களின் நெற்றியை இழுத்துப் பட்டை நாமத்தைச் சாத்தி விட்டது பி.ஜே.பி. ஆட்சி.


தமிழ் ஓவியா said...

இந்தியப்பிரதமர் எங்களின் நிலையை நன்கு அறிந் திருக்கிறார். அவரது அனைத்து நடவடிக்கைகளும் எங்களுக்கு ஆதரவாக அமையும்.

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பிரீஸ் கூறுகிறார்

இலங்கைத் தொடர்பான நிலைப்பாட்டில் நமக்கு ஆதரவான நிலையை இந்திய அரசு எடுத்து வருகிறது என சமீபத்தில் டில்லி வந்து சுஷ்மா சுவராஜை சந்தித்துவிட்டுச் சென்ற இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பிரீஸ் தெரிவித்தார். இது தொடர் பாக அவர் லங்கவேப் என்ற அரசு இணையதளப் பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியின் விரிவு இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் குறித்து நமது அதிபர் அனைவரிடம் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

கடந்த மாதம் இந்தியா மற்றும் இலங்கையுடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக பல சந்திப்புகளை நிகழ்த்தும் திட்டம் வடிவமைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் நான் டில்லி சென்று சுஷ்மா சுவராஜ் அவர் களைச் சந்தித்தேன். சுஷ்மா சுவராஜ் இலங்கையுடனான நட்புறவு மேலும் வலுப்பெறும் விதமாக நம்பிக்கையான பல உறுதிமொழிகளைக் கூறினார். முக்கியமாக மேற்குலக நாடுகள் இலங்கை அரசு மீது போர்க்குற்றச்சாட்டு என்ற அச்சுறுத்தலை தொடர்ந்து வைத்து வரும் வேளையில் சுஷ்மா சுவராஜ் அவர்களின் பேச்சு நமக்கு மிகுந்த ஆறுதலைத் தந்துள்ளது.

நீண்ட காலமாக இலங்கையில் நடந்து வந்த தீவிரவாதச் செயல்களை நமது அதிபர் தலைமையில் அடக்கி வைத்தோம். உலகெங்கும் சிதறியுள்ள தீவிரவாதிகளின் ஆதவாளர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை நம் மீது வைக்கின்றனர். மேலும் பொய்யான தகவலை மேற் குலகிற்கு வழங்கி நம்மீது அழுத்தம் கொடுக்க முயல் கின்றனர். சில மேற்குலக நாடுகளுக்கு அவர்களின் சொந்த லாபம் கருதி இலங்கை மீது பெரிய அச்சுறுத்தல்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் பொய்ப் பிரச்சாரங்களை நாம் ஒன்று கூடி தடுத்து வருகிறோம். இந்த நிலையில் நரேந்திர மோடி அரசின் பதவியேற்பு நமக்கு மிகவும் சாதக மானதாகும். இதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆசியப் பிராந்தியத்தில் இந்தியா நமக்கு ஆதரவாக இருக்கும் வரை மேற்குலக நாடுகள் நம்மை எதுவும் செய்ய முடியாது, நமது முடிவில் என்றும் உறுதியாக இருப்போம்.

மோடி அரசின் ஆதரவு

முக்கியமாக இந்தியாவும் தீவிரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு ஆகும். ஆகையால் தான் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒன்றிணைந்து உலக அரங்கில் தங்களது ஒன்றுபட்ட செயல்பாட்டை காட்டவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

அதே நேரத்தில், மோடி அரசும் நமக்கு ஆதரவான நிலையை எடுத்துள்ளது. இதை இந்திய வெளி யுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிபடக் கூறினார். சுமார் இரண்டு மணிநேரம் நீடித்த இந்த சந்திப்பில், இந்திய மீனவர்கள் விவகாரம், இலங்கை உள்நாட்டுப் போரில் பாதிப்படைந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் மற்றும் இருநாட்டு வர்த்தக உறவுகள் உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது

தமிழ் ஓவியா said...

'உள்நாட்டுப் போருக்கு பிறகு எமது அரசாங்கம் மேற்கொண்டுவரும் சமாதான முயற்சிகள், வாழ் வாதாரத்திற்கு உத்தரவாதம் அளித்தல் போன்ற விவகாரங்கள் குறித்தும் பேசப்பட்டது. இலங்கை மீதான மேற்குலக நாடுகள் கொடுக்கும் அழுத்தம் குறித்து கருத்து தெரிவித்த சுஷ்மா சுவராஜ், இலங்கை எமது நட்பு நாடு மாத்திரமல்ல; கலாச்சார ஒற்றுமை கொண்ட நாடும்கூட; அய்நா விசாரணைக் குழு அமைக்கும் விவகாரத்தில் ஏற்கெனவே முன்னாள் அரசின் நிலைப்பாட்டையே நாங்களும் கையாள் வோம் என்று உறுதிபடக்கூறினார்.

மேலும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுடனும் சிறப்புக் கலந்தாய்வு நடைபெற்றது. என்று அந்த இணைய தளத்திற்கு ஜி.எல்.பிரீஸ் பேட்டியளித்தார்;

முந்தைய காங்கிரஸ் நிலைப்பாடே தொடர்கிறது!:சையத் அக்பருதீன்

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சையத் அக்பருதீன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சுஷ்மா _ ஜி.எல்.பிரீஸ் சந்திப்பின்போது இந்திய அரசு இலங்கையில் செயல்படுத்திவரும் சிறப்புத் திட் டங்கள் குறித்தும் விரிவாகப் பேசப்பட்டன. இந்த ஆண்டில் மூன்றாவது தடவையாக இலங்கை வெளி யுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வந்துள்ளமை இருநாட்டுக்கும் இடையேயான உறவுகள் வலிமை பெற்று வருவதைக் காட்டுகிறது. இலங்கையில் அய்.நா. மனித உரிமைகள் பேரவை யின் விசாரணைக் குழு மேற்கொள்ளவுள்ள நட வடிக்கை குறித்தும் இந்த சந்திப்பின்போது ஆராயப் பட்டதா என்றும் இந்த விவகாரத்தில் இந்திய அரசின் தரப்பின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அய்.நா. மனித உரிமைகள் விசாரணைக் குழுவை அமைக்கும் விவகாரத்தில் இந்தியா ஏற்கெனவே தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறது. குறிப்பிட்ட அந்த பிரிவை எதிர்த்து வாக்களித்தது. அந்த நிலைப்பாட்டை இந்திய அரசு மாற்றவில்லை. அதே நிலைப்பாடே தொடர்கிறது என்று பதி லளித்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் சையத் அக்பருதீன்.

இலங்கை இராணுவ செய்தி இணையதளம்

இலங்கையில் நடந்தது தண்டனைக்குரிய குற்ற மல்ல, இலங்கையின் அனைத்து முயற்சிக்கு நாங்கள் ஒத்துழைப்பு நல்குவோம்! என்று இந்திய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உத்திரவாதம் அளித்துள்ளதாக இலங்கை இராணுவச் செய்தி இணையதளம் (http://www.defence.lk/) செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை மீது மீண்டும் போர்க் குற்றவிசாரணை என்ற பெயரில் தீர்மானம் கொண்டுவந்தால் இலங் கைக்கு ஆதரவான நிலையை நாங்கள் எடுப்போம் என்றும், மேலும் இலங்கையில் மனித உரிமைமீறல்கள் நடைபெறவில்லை, அங்கு நடந்தவை அனைத்தும் தீவிரவாத்திற்கு எதிரான நடவடிக்கைகளே என்றும் இந்திய அரசாங்கம் கூறியதாம்.

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ஈழத் தமி ழர்ப் பிரச்சினையில் நல்லதோர் தீர்வு கிடைக்கும் என்று துள்ளிக் குதித்து தமிழ்நாட்டு மக்களிடம் உத் தரவாதம் கொடுத்த கட்சிகள், தலைவர்கள் இந்த நிலைக்குப் பொறுப்பு ஏற்கவேண்டிய குற்றவாளி களாகவே கருதப்படுவார்கள் என்பதில் அய்யமில்லை.

Read more: http://viduthalai.in/e-paper/84194.html#ixzz37mKFzwtm

தமிழ் ஓவியா said...

வழிக்கு வந்தது கிரிக்கெட் கிளப்!

வேட்டி அணிவது தொடர் பாக தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்புக் காரணமாகவும், தமிழ்நாடு சட்டப்பேரவை யில் முதலமைச்சரின் அறி விப்புக் காரணமாகவும் கிரிக் கெட் கிளப்பின் விதிமுறை களை மாற்றத் தயாராக இருப்பதாக கிளப்பின் தலை வர் சீனிவாசன் தெரிவித் துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/84188.html#ixzz37mLEiaiP

தமிழ் ஓவியா said...


கோபமும், உப்பும்! ஓர் ஒப்பீடு!


பொதுவாக கோபப்படுதல் உடலுக் கும் நல்லதல்ல; நம் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும்கூட விரும்பத் தக்கதல்ல. சில பிள்ளைகளைத் தொட் டால் சிணுங்கிகளாக எதற்கெடுத்தா லும் கோபப்படுவது மாதிரி, குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்த்து விடு கிறார்கள்.

அதற்காக கோபமே வராதவர் களாகவே மனிதர்கள் எல்லாம் மாற வேண்டும் என்று கூறுவது வாழ்வியல் நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று என்பதை நாம் எவரும் மறந்துவிடக் கூடாது.

சினம் (கோபம்) என்பது சேர்ந் தாரைக் கொல்லிதான் - உண்மைதான்.

அடக்கமாக எதிர்கொள்ளவேண் டிய பலவற்றை, உரத்து ஓங்கிய குரலில் பேசி இருப்பதையும், இனி வர வேண் டிய பல உயர்வுகளையும் கூட இழந்த வர்கள் பல ஆயிரக்கணக்கில் உண்டு.

நமது உளப்பாங்கு, உடல்நிலை எல்லாவற்றையுமே அதிக கோபம் பெரிதும் கெடுத்துவிடுகிறது!

ரத்தக் கொதிப்பு (பிளட் பிரஷர்) பலருக்கு ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணம், அடிக்கடி சிலர் எல்லை மீறிய கோபத்தை அவர்கள் வெடித்த எரிமலை போல் கொட்டித் தீர்ப்பதேயாகும் என்பது மருத்துவர்களின் கணிப்புகளில் ஒன்று.

அதோடு, ரத்தக் கொதிப்பு (பிளட் பிரஷர்) உடைய பலருக்கு, திடீர் திடீ ரென்று கோபம் கொப்பளித்துக் கொண்டு வருவதும் தவிர்க்க இயலா தவை என்பது விசித்திரமான ஒன்றுதான்!

எல்லை மீறிய கோபம் வரும்போது அதை அடக்குவதைவிட, உடலுக்கு, உயிருக்கு மிகப்பெரிய ஆபத்து, கேடு வேறில்லை. வெடித்து வெளியே கொட் டப்பட்டு, கோபம் தாங்காமல் வெளி யேறி விடுவதனால், இயல்பு நிலைக்கு மனிதர்கள் திரும்பும் வாய்ப்புள்ளது.

அதிகக் கோபம் வரும்போது உடன் அந்த இடத்தை விட்டு எழுந்து, வேறு பகுதிக்குச் சென்று அமர்ந்தோ, நடந்தோ இருப்பது நாம் அதிலிருந்து விடுபட உதவி செய்வதாகும்!
எப்போதும் கோபமே வராதவர் இவர் என்று யாரையாவது நண்பர்கள் உங்களுக்கு அறிமுகம் செய்தால், அவரை எளிதில் நம்பி விடாதீர்கள்!

மனிதர்கள் அழவேண்டிய நேரத்தில் அழவேண்டும்; சிரிக்கவேண்டிய நேரத் தில் சிரிக்கவேண்டும் - கலகலப்பாக. வெட்கப்படவேண்டிய நேரத்தில் வெட்கப்படவேண்டும். அதுதான் இயல்பு நிலை. அதை விடுத்து, கோபம் வர வேண்டிய நேரத்தில்கூட அவர்கள் கொஞ்சுவதுபோலவோ அல்லது மிக சாந்தமாக அதனை சகித்துக் கொள் வதோ, சமாளித்துக் கொண்டதாகக் காட்டுவதோ, அவர் உண்மை மனிதர் அல்ல; ஒப்பனை மனிதர் என்பதற்கான அடையாளம் ஆகும். அவர் நம்மிட மிருந்தோ அல்லது அவரது தலைமை - எஜமானர் - மேலாளர் இவர்களில் எவரிடமிருந்தோ, எதையோ பெற, திட்டமிட்டு நாடகமாடுகிறார், நடிக்கிறார் என்று புரிந்துகொள்ளவேண்டிய முக்கிய அம்சமாகும்.

உடம்புக்கு உப்புச் சேர்க்கை போன் றதே, வாழ்க்கையில் கோபம் வருவதும், கொள்வதும்!
உணவில் உப்பு தேவைதான். அது கொஞ்சம் கூடி விட்டால், நன்கு சமைத்த உணவு உண்ணுவதற்கு ஏற்ற தாகாமல், குப்பையில் எறியவேண்டிய தாகி விடுகிறதல்லவா, அதுபோல!

ஆனால், அதேநேரத்தில் போதிய அடிப்படை உப்பு சத்து உடல்நலம் கெடாமல் இருப்பதற்கு மிகவும் இன்றி யமையாததல்லவா?

உடம்பில் உப்புச் சத்து கூடுதலில் சிறுநீரகம் கெடுகிறது; மிகவும் குறைந் தால் மற்ற முக்கிய உறுப்புகள் செயல் இழக்கும் அபாயம் - உயிர்க்கொல்லி யாகவும் ஆகிவிடுகிறது!

கூடினாலோ, இருதயம் திடீரென்று நின்று விடுகிறது - மாரடைப்புமூலம். எனவே, அளவான கோபம், நியாயமான கோபம் - அளவான உப்பு போன்றே தேவை! தேவை!!

அக்கிரமம், அநீதி இவற்றை சகிக் காத கோபம் தேவையல்லவா?- கி.வீரமணி - வாழ்வியல் சிந்தனைகள்

Read more: http://viduthalai.in/page-2/84210.html#ixzz37mLQXkZC

தமிழ் ஓவியா said...


மனித எலும்புகள் பற்றி அறிவோம்


* மனிதனின் மண்டை ஓட்டில் 22 எலும்புகள் உள்ளன.

* மண்டை ஓட்டின் முக்கிய பகுதியான கிரேனியம் அல்லது கபாலம் என்ற எலும்புப் பேழைக்குள் தான் மூளை பாதுகாக்கப்படுகிறது.

* முகத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 14

* மண்டை ஓட்டில் உள்ள எலும்பு களில் அசையும் தன்மையுள்ள ஒரே ஒரு எலும்புப்பகுதி மாண்டிபிள் என்ற தாடை எலும்பு மட்டும்தான்.

* எலும்புகளுக்கு சக்தியையும் உறுதியையும் கொடுப்பது கால்சியம் பாஸ்பேட்

* கால்சியம் பாஸ்பேட் மற்றும் கால்சியம் கார்பனேட்டுகளின் கலவை தான் எலும்புகள்.

* எலும்புகளில் 85 விழுக்காடு கால்சியம் பாஸ்பேட் அடங்கி உள்ளது.

* பற்களில் அடங்கியுள்ள வேதிப் பொருள் கால்சியம் பாஸ்பேட்

* மனித உடலில் மிகவும் வலிமை வாய்ந்த பகுதி பற்களில் உள்ள எனாமல் பகுதி.

* மனித உடலில் உள்ள அனைத்து எலும்புகளின் எடை சுமார் 9 கிலோ கிராம்.

* மனித உடல்களிலுள்ள எலும்பு களின் எண்ணிக்கை 206

* பிறக்கும் குழந்தைகளுக்கு 300 எலும்புகள் காணப்படும். வளர வளர பல எலும்புகள் இணைந்து 270 - ஆக மாறும்.

* மனித உடலில் மிகப்பெரிய எலும்பு தொண்டை எலும்பு

* தைபோன் எனப்படும் தொடை எலும்புதான் மிக நீளமானதும் பெரியதும் ஆகும். இதனை விஞ் ஞானிகள் பீமர் என்று அழைக் கின்றனர்.

* எலும்புகள் பற்றிய படிப்பின் பெயர் ஆஸ்டியாலஜி

* ஆர்த்ரைட்டிஸ் என்பது எலும்பு மூட்டுகளை பாதிக்கும் நோயின் பெயராகும்.

* கால்களில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 30

* கால் பாதங்களிலுள்ள எலும்பு களின் பெயர் டிபியா, ஃபிபுலா.

* கைகளின் உள்ள முக்கியமான எலும்புகள் ரேடியஸ், அல்னா.

* மூளை மற்றும் மண்டை ஓட்டைப்பற்றி படிக்கும் படிப்பின் பெயர் பிரினாலஜி

Read more: http://viduthalai.in/page-7/84202.html#ixzz37mMCGu36

தமிழ் ஓவியா said...


பெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தை விட வேகமாக துடிக்கிறது

பெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தை விட வேகமாக துடிக்கிறது ஆய்வில் தகவல் இதயத்துடிப்பின் வேகம் உடம்பின் அளவைப் பொறுத்து அமையும். பெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தை விட வேகமாக துடிக்கிறது.

சுண்டெலி, மூஞ்சுறு போன்றவை மிகச் சிறிய பிராணிகள். அவற்றின் இதயம் நிமிடத்துக்கு ஆயிரம் தடவை துடிக்கிறது. திமிங்கலம் மிகப் பெரிய விலங்கு. அதன் இதயம் நிமிடத்துக்கு 5 முறைதான் துடிக்கிறது. வயது வந்த ஒரு ஆணின் இதயத்தின் எடை 284 கிராமில் இருந்து 430 கிராம் வரை இருக்கும். வயதுக்கு வந்த பெண்ணின் இதயம் 227 கிராமில் இருந்து 340 கிராம் வரை இருக்கும்.

குளிர் காலத்தை விட கோடை காலத்தில் இதயத்துடிப்பு அதிகம் காணப்படும். ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனில் 70 சதவிகிதத்தைத் தான் உபயோகத்துக்கு இதயம் எடுத்துக் கொள்கிறது. இதயம் துடிப்பதற்கு இவ்வளவு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. பொதுவாகவே ஆண்களின் இதயத்தை விட பெண்களின் இதயம் வேகமாக துடிக்கிறது.

சாதாரண மனிதனின் இதயம் நிமிடத்துக்கு 72 முறை துடிக் கிறது. ஒரு மணி நேரத்துக்கு 1,03,680 தடவை துடிக்கிறது. இதுவே ஒரு ஆண்டு என்று எடுத்துக் கொண்டால் 37 கோடியே 83 லட்சத்து 120 தடவை துடிக்கும்.

இதயத் துடிப்பு சாதாரணமாக காலையில் குறைவாக இருக்கும். பிற்பகலில் அதிகரிக்கும்.

100 மில்லி ரத்தத்தில் 20 முதல் 45 மில்லி கிராம் புரதமும், 50 முதல் 80 கிராம் வரை குளுகோசும், 700 முதல் 750 மில்லி கிராம் வரை குளோரைடுகளும் உள்ளன. ஒரு ஆணின் ரத்தம் ஒரு கன மில்லி மீட்டரில் 4.5 6.5 மில்லியன் சிவப்பு அணுக்கள் கொண்டதாக உள்ளது. அதே அளவு கொண்ட பெண்ணின் ரத்தத்தில் 4.05.5 மில்லியன் சிவப்பு அணுக்களே இருக்கின்றன.

ஹீமோகுளோபினை எடுத்துக் கொண்டால் ஆணின் ரத்தத்தில் 13.5 முதல் 18.0 வரை உள்ளது.

பெண்ணின் ரத்தத்தில் 11.5 முதல் 16.5 வரையே உள்ளது. பொதுவாக மனித ரத்தத்தில் 100 மில்லியன் லிட்டர் அளவில் 125300 மில்லி கிராம் கொழுப்பு உள்ளது. 1740 மில்லி கிராம் யூரியா உள்ளது. 14.5 மில்லி கிராம் யூரிக் அமிலம் உள்ளது.

Read more: http://viduthalai.in/page-7/84201.html#ixzz37mMNEPr4

தமிழ் ஓவியா said...


நட்புக்கு காரணம் மரபணுக்களா?


நல்ல நண்பர்களாக இருப்பவர்களின் மரபணுக்கள், அவர்களுக்கு அறி முகம் இல்லாத வேற்று ஆட்களின் மரபணுக் களைவிட, கூடுதலாக ஒரே மாதிரி இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கும் ஆய்வின் முடிவு மரபணுத்துறையில் இன்று மிகப் பெரிய விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.

நல்ல நண்பர்களாக இருப்பவர்களின் மரபணுக்கள், அவர்களுக்கு அறிமுகம் இல்லாத வேற்று ஆட்களின் மரபணுக் களைவிட, கூடுதலாக ஒரே மாதிரி இருப் பதாக அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கும் ஆய்வின் முடிவு மரபணுத்துறையில் இன்று மிகப்பெரிய விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.

அமெரிக்காவின் கலிபோர்னிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் பவுலர் மற்றும் யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் நிக்கோலஸ் கிறிஸ்டாகிஸ் ஆகிய இருவரும் சேர்ந்து செய்த ஆய்வின் முடிவுகளை அவர்கள் தற்போது வெளி யிட்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவின் சிறு நகரம் ஒன்றில் இவர்கள் மனித இதயம் தொடர்பிலான ஆய்வுக்காக தேர்வு செய்யப்பட்ட சுமார் 2000 பேரிடம், இவர்கள் தமது மரபணு தொடர்பான இந்த குறிப்பிட்ட ஆய்வையும் மேற்கொண்டனர். அதன் படி நண்பர்கள் மத்தியில் மரபணுக்கள் எந்த அளவு ஒத்துப் போகின்றன என்று இவர்கள் ஆராய்ந்தனர்.

அதன் முடிவில் நல்ல நண்பர்களாக இருப்பவர்களுக்கு இடையில், மற்றவர்களை விட குறைந்தபட்சம் 0.1 சதவீத மரபணுக்கள் அதிகமாக ஒரே மாதிரி இருப்பதை தாங்கள் கண்டறிந்திருப்பதாக இவர்கள் கூறுகிறார்கள்.

அதாவது முன் பின் அறிமுகம் இல்லாத வர்களை விட நல்ல நண்பர்களுக்கு மத்தியில் மரபணுக்கள் கூடுதலாக ஒரே மாதிரி இருப்பதாக இவர்கள் தெரிவிக்கிறார்கள். வழக்கமாக இப்படியான மரபணு ஒற்றுமை என்பது ஒன்றுவிட்ட சகோதரன் அல்லது சகோதரிகள் மத்தியில் மட்டுமே காணப்படும்.

அதுவும் கூட தலைமுறைகள் கடந்து செல்லச் செல்ல, இந்த மரபணு ஒத்துப்போகும் தன்மையும் படிப்படியாக குறையத் தொடங்கும். அப்படி பார்க்கும்போது, ஒருவரின் நான்கு தலைமுறைகள் கடந்த கொள்ளுத்தாத்தா-பாட்டிக்குப் பிறந்த இன்றைய நான்காம் தலைமுறையைச் சேர்ந்த வாரிசுகளுக்கு மத்தியில் என்ன மாதிரியான மரபணு ஒற்றுமைகள் காணப்படுமோ அதே மாதிரியான ஒற்றுமைகள் நல்ல நண்பர்கள் மத்தியிலும் காணப்படுவதாக இந்த இரண்டு அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்திருக் கிறார்கள்.

எந்த ஒரு குறிப்பிட்ட மரபணு அல்லது மரபணுவின் மூலக்கூற்றையும் தாங்கள் இங்கே குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்று கூறும் இந்த ஆய்வாளர்கள், நண்பர்களுக்கு மத்தியில் மரபணுக்கள் ஒத்துப்போகும் போக்கு, அளவு என்பது எண்ணிக்கை அடிப் படையில் அதிகமாகவும், ஒரே மாதிரி தொடர்ந்தும் இருக்கிறது என்பது மட்டுமே தங்களின் கண்டுபிடிப்பு என்றும் இவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

சக விஞ்ஞானிகள் உடன்படவில்லை

ஆனால் இவர்களின் இந்த கண்டு பிடிப்பை சகவிஞ்ஞானிகள் அப்படியே ஏற்க முடியாது என்று நிராகரித்திருக்கிறார்கள். இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் எல்லோரும் ஒரு சிறு நகரில் இருப்பவர்கள் என்பதை சுட்டிக்காட்டும் டியூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசியர் இவான் சார்னி, இவர்கள் எடுத்த மாதிரிகளில் பெரும்பான்மையான வர்கள் ஒரே இனக்குழுமத்தைச் சேர்ந்த வர்களாக இருந்திருக்கலாம் என்றும் அதனாலேயே கூட இந்த ஆய்வின் முடிவுகள் இப்படி வந்திருக்கலாம் என்றும் வாதாடுகிறார்.

மேலும் இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் யாரும் யாருக்கும் உறவு முறையானவர்கள் அல்ல என்பதையும் இந்த ஆய்வாளர்களால் உறுதி செய்ய முடியாத நிலையில், இப்படி நண்பர்களுக்கு மத்தியில் மரபணுக்கள் ஒத்துப்போவதாக பொத்தாம் பொதுவில் சொல்வது சரியான அறிவியல் அணுகு முறையல்ல என்றும் அவர் கூறுகிறார்.

Read more: http://viduthalai.in/page-7/84204.html#ixzz37mMa8OGz