Search This Blog

29.7.14

மதச் சார்பின்மையையும் சமூக நீதியையும் குழப்பும் ஓம் சக்தியார்!

மதச் சார்பின்மையையும் சமூக நீதியையும் குழப்பும் 'ஓம் சக்தியார்!'!

திருவாளர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களால் நடத்தப்படும் ஓம் சக்தி மாத இதழின் பொறுப்பாசிரியரான எம். சிதம்பரநாதன் செக்யூலரிசம் பற்றிய தவறான புரிதல் என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்றினை தினமணியில் (23.7.2014) தீட்டியுள்ளார்.

1) செக்யூலரிசம் என்பது மதச் சார்பற்றது, சமயச் சார்பற்றது பற்றிய சரியான புரிதல் இல்லாமல் அது மதத்திற்கு எதிரானது என்பதாகவே புரிந்து கொள்ளப்பட்டு விட்டது நமது துரதிர்ஷ்டம். இந்தப் புரிதல் அரசே மதத்திற்கு எதிரானது என எண்ணுமாறு செய்து விட்டது

****
செக்யூலர் அரசு என்பது  மத அக்கறையற்ற அரசல்ல. மதங்களுக்கு எதிரான அரசும் அல்ல. சிறுபான்மை மதத்தாரை அச்சுறுத்தும் அரசும் அல்ல. உண்மையில் செக்யூலரிசத்தை சமயச்சார்பற்ற அரசு என்பதைவிட சமய சமத்துவமுடையது என்றே கூற வேண்டும் என்று கூறியுள்ளார்.

நமது மறுப்பு: செக்யூலரிசம் குறித்து பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தெரிவித்த தெளிவான கருத்து அதன் உண்மைத் தன்மையைப் பளிச்சென்று உணர்த்தும்.

'செக்குலர் - மதச் சார்பற்ற என்ற சொல் லுக்கு என்ன வியாக்கியானம் கூறுகிறார் கள் என்றால் ஒரு பெண் கன்னியாய் இருக்க வேண்டுமென்றால் அதற்குஆண் சம்பந்தமே இருக்கக் கூடாது என்பது பொருள் அல்ல; எல்லா ஆண்களையும் சமமாகக் கருதி, கூப்பிட்டவனிடமெல்லாம் கலவி செய்ய வேண்டும் என்பதுதான் கன்னி என்பதற்குப் பொருள் என்பது போல பொருள் சொல்கிறார்கள். எல்லா மதங்களையும் சமமாகப் பார்க்க வேண்டும் என்கிற கொள்கை மத விஷயத்தில் காலம் காணாததற்கு முன்பு இருந்தே இருந்து வருகிறபோது, அதைப் புதிதாக வலியுறுத்த வேண்டிய அவசியம் ஏன் வரும்?

செக்குலர் என்ற சொல்லை ஆங்கிலச் சொல்லாகத்தான் சட்டத்தில் புகுத்தினார்களே ஒழிய, வேறு மொழிச் சொல்லாகப் புகுத்தவில்லை. ஆங்கிலச் சொல்லுக்கு வியாக்கியானம் அந்தச் சொல்லை உற்பத்தி செய்தவர்கள் சொல் லுவதைப் பொறுத்ததே ஒழிய, அதன் கருத்துக்கு விரோதிகளான பார்ப்பனர் களும், காங்கிரஸ்காரர்களும் சொல்லுவது பொருத்தமாக முடியுமா?' என்றார் தந்தை பெரியார் (உண்மை 14.12.1971 பக்கம் 2)

விளக்கம்: செக்யூலர் என்பதுபற்றி ஆங்கில அகராதி கூறுவது என்ன?

Secular -  (Secularis - latin Word)
(means - ‘worldly’ or ‘temporal’)
- the state of being Separate from religion’
- not being exclusively allied with or against any particular religion.

உலகியல் சார்ந்தது, மதத்திற்கு அப் பாற்பட்டது - எந்த மதத்திற்கும் தொடர் புடையது அல்லது எதிர்ப்புடையது அல்ல;

இதுதான் செக்யூலர் என்ற மூலச் சொல்லின் துல்லியமான பொருள். இதனைப் புறந்தள்ளி செக்யூலரிசத்தை சமயச் சார்பற்ற அரசு என்பதைவிட சமயச் சமத்துவம் உடையது என்று திரிப்பதைப் பார்க்கும் பொழுது தந்தை பெரியார் சொன்ன கன்னிப் பெண் உதாரணம்தான் நினைவிற்கு வருகிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு

செக்யூலரிசம் குறித்து முழுத் தெளிவு கிடைக்க வேண்டும் என்றால் இந்திய உச்சநீதிமன்ற தீர்ப்புக்குத் தான் போக வேண்டும்.

1994 ஆம் ஆண்டிலேயே தெளிவான தீர்ப்பு வந்தாகி விட்டது.

ஒரு மதத்தைப் பற்றியோ அல்லது மதக் கிளைகள் பற்றியோ ஆட்சியின் கண் ணோட்டம் எப்படி இருந்தாலும் அரசின் மதச்சார்பற்ற நடவடிக்கைகளில் மதத்தைக் கலக்கக் கூடாது. அரசுப் பிரச்சினையில் மதத்துக்கு இடம் இல்லை.
எந்த ஒரு மாநில அரசும் மதச்சார் பின்மைக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டிருப்பதோ மதச்சார்பின்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதோ அரசியல் சட்டத்துக்கு எதிரானது. அத்தகைய மாநில ஆட்சிகளை அரசியல் சட்டத்தின் 356ஆவது பிரிவின்கீழ் கலைக்க - குடியரசுத் தலைவருக்கு உரிமை உண்டு.

ஆறு நீதிபதிகள் தனித்தனியே அளித் துள்ள தீர்ப்புகளில் - அரசியலமைப்புச்  சட்டத்தின் பல்வேறு பிரிவுகளை எடுத்துக் காட்டியுள்ளனர்.
ஓர் ஆட்சி - மதச் சகிப்புத்தன்மையை மேற்கொள்வதாலோ - ஒரு குடிமகனுக்கு மதத்தைப் பின்பற்றவோ அல்லது பிரச்சாரம் செய்யவோ அனுமதிப்பதாலோ அந்த அரசு மதச்சார்பு ஆகிவிட முடியாது. அரசின் மதத்தோடு தொடர்பில்லாத மற்றும் மதச்சார்பின்மை தொடர்புடைய எந்த ஒரு செயலிலும் மதத்தின் குறுக்கீட்டுக்கு இடமே கிடையாது என்றும் நீதிபதிகள் திட்டவட்ட மாகக் கூறியுள்ளனர். நீதிபதி பி.பி.ஜீவன் (ரெட்டி) தெரிவித்துள்ள கீழ்க்கண்ட கருத்தை ஏனைய நீதிபதிகளும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அரசியல் கட்சிகள் அரசு அதி காரத்தைக் கைப்பற்றுவதற்கோ அல்லது அதிகாரத்தில் பங்கு கொள்வதற்கோதான் உருவாகின்றன. அதுதான் அக்கட்சிகளின் நோக்கம்.

சில தனி மனிதர்களைக் கொண்ட அமைப்பு மதப் பிரச்சாரத்தில் ஈடுபடலாம். அப்படியானால் அது ஒரு மத அமைப்பு. மற்றொரு அமைப்பு - கலாச்சார மேம் பாட்டுக்குப் பிரச்சாரம் செய்யலாம்.

அப்படியானால் அது ஒரு கலாச்சார அமைப்பு. இந்த அமைப்புகளின் நோக்கம் - அரசின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதல்ல. ஆனால் அரசியல் கட்சிகளின் நோக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான். ஒரு ஜனநாயக ஆட்சி அமைப்பு - அரசியல் கட்சிகள் இல்லாமல் செயல்பட்டுவிட முடியாது.

அரசியல் கட்சிகள் என்பவை அரசியல் சட்டத்தின் அங்கங்கள்; அரசியல் சட்டம் மதச்சார்பின்மையை அடிப்படையாகக் கொண்டிருக்கும்போது அரசியல் கட்சி களுக்கும் அதுவே அடிப்படை அம்சமாகி விடுகிறது.
அரசியல் சட்டம் மதத்தையும் அரசி யலையும் ஒன்றாகக் கலப்பதை அனுமதிக்க வில்லை. இரண்டும் தனித்தனியாக பிரிக்கப்பட வேண்டும். இந்திய அரசியல் சட்டம் இந்த நாட்டை ஆண்டு கொண் டிருக்கும் காலம் வரை - இதை யாரும் மாற்றிவிட முடியாது  - இவ்வாறு ஆறு நீதி பதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு திட்டவட்டமாக, தெளிவாக தீர்ப்பாகவே கூறிவிட்டது. (14.3.1994).

மதத்துக்கும் அரசுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது- கிடையவே கிடையாது என்று உச்சநீதிமன்றத்தின் 6 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு கறாராக சொல்லி விட்டதே!

இதற்குப் பிறகாவது சமய சமத்துவ முடையது அரசு என்ற கிளிப்பிள்ளை கீச் கீச் பேச்சு வேண்டாமே!

முழுக்க முழுக்க கிறித்தவர்களின் பூமியான அமெரிக்காவின் குடியரசு தலைவராக பொறுப்பேற்றபோது ஜான் எஃப் கென்னடி வெளியிட்ட அறிக்கை தான் நினைவிற்கு வருகிறது.

நான் ஆண்டு தோறும் வாட்டிகன் நகருக்குச் சென்று என்மத குரு போப் பாண்டவரை சந்தித்து ஆசி பெற்று வருவேன்.

ஆனால், இப்போது நான் அமெரிக்க நாட்டிலுள்ள அனைத்து மதப் பிரிவின ருக்கும் மத சார்பற்ற பகுத்தறிவாளர்களுக் கும் பொதுவானவனாக இருக்க வேண்டிய மிகப் பெரும் பொறுப்பில் உள்ளேன். எனவே, எவர் மனமும் புண்படக் கூடிய வகையிலோ என்னை நான் ஒரு பிரிவைச் சார்ந்தவனாக யாரும் கருதும் வகையிலோ என் நடவடிக்கைகள் இருக்கக் கூடாது எனக் கருதுகிறேன். ஆகையால் நான் அமெரிக்காவின் அதிபராக இருக்கும் வரை போப்பாண்டவரைச் சந்தித்து வணங்கி வாழ்த்துப் பெற மாட்டேன் என்று குறிப்பிட்டதை நினைவூட்டுகிறோம்.
  ***********************************************************************

2. ஹிந்து மதத்தினர் பெரும்பான்மை யாக இருந்தும், சிறுபான்மையினரைப் போல  சிறப்பாக நடத்தப்படுவதில்லை. உதாரணத்திற்கு ஒரு தொடக்கப் பள்ளி யையோ, உயர்நிலைப் பள்ளியையோ அல்லது தொழில் கல்லூரியையோ ஹிந்து பெயர் கொண்ட ஒருவர் நிறுவினால், அந்தப் பள்ளி அல்லது கல்லூரியில் ஆசிரி யர் பணியிடங்களைச் சுழற்சி முறையில் தான் நிரப்பியாக வேண்டும். அதுவும் அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெறப்படும் பட்டியலிலிருந்து தான் ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இட ஒதுக்கீட்டு முறையில் உள்ள சிறுபான்மையினருக்கு உரிய பணி இடங்களை அவர்களில் தகுதியானவர் கிடைக்கும் வரை வேறு ஜாதியினரை நியமிக்காமல் வைக்க வேண்டும்.

இதுபோன்ற கல்வி நிலையத்தை ஒரு கிறிஸ்தவரோ, முஸ்லீமோ, சீக்கியரோ நிறுவினால் இத்தனை விதிகளும் அவர் களுக்குப் பொருந்தாது. இதுதான் சமயச் சார்பற்ற அரசு நடவடிக்கையாக இங்கே நீடித்து வருகிறது என்று தினமணி கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

நமது பதில்: சமயச்சார்பின்மை யையும், சமூக நீதியையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கிறார் இந்தக் கட்டுரையாளர்.
கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்களைக் கை தூக்கி விட ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இடஒதுக்கீடு என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முகவுரையிலேயே (Preamble) Justice Social, Political and Economical என்று தான் தொடங்குகிறது என்பது பாலபாட மாகும்.
சிறுபான்மையினர்களின் மக்கள் தொகையைச் சொல்லத் தெரிந்த (அதிலும் தவறுகள் மலிந்துள்ளன) கட்டுரையாளர் அவர்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்பு களில் எந்தத் தாழ்தளத்தில் இருக்கின்றனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா!?

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 

15 கோடி இஸ்லாமியர்கள்; 3 கோடி கிறிஸ்தவர்கள்; 2 கோடி சீக்கியர்கள்; 1 கோடி பவுத்தர்கள்; 40 இலட்சம் ஜைனர்கள்.  வேலை வாய்ப்பு மற்றும் கல்வி 2012 வேலை வாய்ப்பு: 3% இஸ்லாமியர்கள்; 2 கிறிஸ்தவர்கள்; 1 சீக்கியர், 1 இதரர்.
கல்வி 2.05% இஸ்லாமியர்; 2% கிறிஸ்தவர்கள்; 3% இதரர்.

23 Aug ‘The Telegraphic Survey

வேலை வாய்ப்பை எடுத்துக் கொண்டால் இஸ்லாமியர்கள் 3 விழுக்காடு, கிறித்தவர்கள் 2 விழுக்காடு தானே!

இந்த நிலையில் உள்ளவர்களுக்குச் சில வாய்ப்புகளை அளிப்பதுதான் சமூக நீதி. இதில் மதத்தைக் கொண்டு  வந்து திணித்து நச்சுப் புகையைக் கிளப்புவானேன்?

இந்தியாவில் மட்டும் தானா? அமெ ரிக்கா போன்ற நாடுகளில்கூட கறுப்பர் களுக்கு இந்த வகையில் இடஒதுக்கீடு (Affirmative Action) உண்டு என்பது தெரியுமா?

அமெரிக்காவில் 11 பேர்களுக்குமேல் பணியாற்றும் எந்த ஒரு நிறுவனமும் ஒவ்வொரு ஆண்டும் தம் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களில் கறுப்பர்கள் எத்தனைப் பேர் என்று அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. எந்தப் பிரிவினராவது தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லையென்றால் வழக்குத் தொடரலாம்.

தென்னாப்பிரிக்காவில் நடத்தும் நிறுவ னங்கள் 25 சதவீதம் அளவுக்கு கறுப்பி னத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை தர வேண்டும்.

நார்வேயில் வேலை வாய்ப்பு 40% பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளித்தாக வேண்டும். பிரேசிலில் பிறந்த குடி மக்கள், கறுப்பர் ஆகிய இனத்தவர்களுக்கு 20%, அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு 20%,  ஊனமுற்றவர்களுக்கு 5% ஒதுக்கீடு செய்யப்படுகின்றனவே.

                                   ----------------------(அவுட்லுக் 29.5.2006)

திறமைக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டிய கிரிக்கெட்டில்கூட தென்னாப் பிரிக்காவில் கறுப்பர்களுக்கு இடஒதுக்கீடு உண்டு என்ற செய்தியையெல்லாம் தெரிந்து கொண்டால் தினமணி கட்டுரை யாளர் பார்ப்பனீய ஆர்.எஸ்.எஸ். கண் கொண்டு பார்த்துக் கதற மாட்டார்.
மற்றொரு தகவல் உண்டு; தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுமையும் கல்வி யும், மருத்துவமும் பரவலாக நிறைந்ததற்குக் கிறித்துவத்தின் பங்களிப்பை தீண்டேன் திரு நீலக்கண்டன் என்பது போலப் பார்க்கக் கூடாது!

***********************************************************************
3. செக்யூலரிசத்தில் போலி அசல் என இரண்டு உண்டு. காங்கிரஸ் கட்சி கடைப்பிடித்தது போலி செக்யூலரிசம். பா.ஜ.க.  கடைப்பிடித்தது மத சமத்துவமான அசல் செக்யூலரிசம். அசல் செக்யூலரிசத் தில் வாக்கு வங்கியில்லை, இடஒதுக்கீடு இல்லை. சலுகை இல்லை. சிறுபான்மை பெரும்பான்மை என்ற வரையறையில்லை - இதுவும் தினமணி கட்டுரையில் கண்டுள்ளதுதான்

நமது பதில்: பா.ஜ.க. கடைப்பிடிப்பது மத சமத்துவமான செக்யூலரிசமா? உண்மை தானா? பிஜேபியின் தேர்தல் அறிக்கை ஒன்று போதுமே - பிஜேபி என்பது இந்து மதவாத நஞ்சை உள்ளே அடக்கிக் கொண்டு இருக்கிறது என்பதற்கு  ராமர் கோயில் கட்டுவோம் - பசுவைப் பாதுகாப்போம், யூனிபார்ம் சிவில் சட் டத்தைக் கொண்டு வருவோம் - காஷ் மீருக்கான 370ஆவது பிரிவைத் தூக்கி எறிவோம் என்பதுதான் பிஜேபி கடைப்பிடித்து வரும் மத சமத்துவமான அசல் செக்யூலரிசமா?

இன்னும் ஒருபடி மேலே போய் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராம ராஜ்ஜியத்தை உண்டாக்குவோம் என்று பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடி வராணாசியில் பேசியதுகூட (பி.டி.அய் 12.12.2013) 22 காரட் அசல் செக்யூலரிசம் தானா?

உண்மைக்கு முற்றிலும் திரையிட்டு கலப்படமற்ற பொய்யுரைகளை ஒருவர் கட்டுரையாக எழுதுவதும் அதற்குத் தினமணி தாராள இடம் கொடுப்பதும் எந்த ரக யோக்கியதாம்சத்தைச் சேர்ந்தது?

ஒன்றே ஒன்று மட்டும் முக்காலும் உண்மை! பிஜேபி செக்யூலரிசத்தில் இடஒதுக்கீடுகள் இருக்காது என்பதன் பொருள் என்ன? எல்லாம் பார்ப்பனர் வயிற்றில் அறுத்து வைக்கப்படும் - பழைய மனுதர்மம் ஓகோ என்று பறக்க விடப்படும் - என்பது மட்டும் கட்டுரையாளரின் எழுத்துகள் காட்டும் முழு உண்மையை ஒப்புக் கொள்கிறோம்.

வாக்கு வங்கி அரசியல் இல்லையாமே! அடேயப்பா - எத்தனைப் பெரிய அண்டப் புளுகு! வாக்காளர்களை இந்து முஸ்லீம் என்று பிரிப்பது வாக்கு வங்கி அரசியல் இல்லையா?

மோடியின் மன சாட்சியான அமித்ஷா உ.பி.யில் என்ன செய்தாராம்? முசாபர் நகர் மதக் கலவரத்தின் சூத்ரதாரி அவர் தானே! தேர்தல் நேரத்தில் எதிரிகளைப் பழி வாங்க வேண்டும் என்று பேசினாரே - யார் அந்த எதிரிகள்? கட்டுரையாளர் தினமணி ஆசிரி யர் திருவாளர் வைத்தியநாதய்யரிடம் கடன் கேட்டு வாங்கியாவது சொல்லட்டுமே பார்க்கலாம்.
 ******************************************************************************
4. வாஜ்பேயியைப் பிரதமராக்கி மக்கள் அவரை வகுப்புவாதியாகப் பார்க்க வில்லை. தேசியவாதியாகத்தான் பார்த் தார்கள். 10 ஆண்டுகளுக்குப் பிறகு நரேந் திர மோடியைப் பிரதமராக்கி இருக்கும் மக்களும் அவரை வகுப்புவாதியாகப் பார்க்கவில்லை, தேசியவாதியாகவே பார்க்கிறார்கள்.
- இப்படிக்கூட துணிந்து எழுத முடிகிறது ஒருவரால்.

குஜராத்தில் ஈராயிரம் சிறுபான்மை மக்களைக் கொன்று குவித்த  ஆட்சியின் முதல் அமைச்சர் - அகதி முகாம்களில் அடைக்கலமான முஸ்லீம் மக்களைப் பார்த்து மக்கள் பெருக்கத்திற்கான ஒரு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று ஆபாச வார்த்தைகளை அள்ளிக் கொட்டிய ஒருவரை மக்கள் தேசியத் தலைவராகப் பார்க்கிறார்கள் என்று கூறும்பொழுது அந்தத் தேசியத்தை உச்சரிக்கக்கூட வெட்கமாகத் தானிருக்கிறது.
சந்தடி சாக்கில் வாஜ்பேயிக்கும் ஒரு பூமாலை! எங்களுக்கு மெஜாரிட்டி கிடைத் தால் பாபர் மசூதியை இடித்த இடத்தில் ராமன் கோயில் கட்டுவோம் என்று அமெ ரிக்கா வரை சென்று ஸ்டேட்டன் தீவில் முழங்கிய பெருமான் ஆயிற்றே அவர்.

அத்திப் பழத்தைப் புட்டால் அத்தனை யும் சொத்தைதான்! யானை போட்ட லத்தியில் முதல் லத்தி என்ன, இரண்டாம் லத்தி என்ன?

காந்தியாருக்கு மணி மண்டபம் கட்டி அங்கு ஆர்.எஸ்.எஸ். பயிற்சிக்கும் வசதி செய்து கொடுக்கும் பொள்ளாச்சியார் குழுமத்திலிருந்து வெளிவரும் ஓம் சக்தியின் பொறுப்பாசிரியரிடமிருந்து சமுதாயப் பொறுப்பை உள்ளடக்கிய கருத்துகளை எதிர்பார்க்க முடியுமா? அப்படி எழுதினால் தினமணி தான் வெளியிடுமா?

------------------- கவிஞர் கலி. பூங்குன்றன்  அவர்கள் 26-07-2014 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
Read more: http://viduthalai.in/page-1/84795.html#ixzz38olZLgRE

36 comments:

தமிழ் ஓவியா said...


குங்குமம் விபூதி பற்றி


பிரபல தோல் நிபுணர் டாக்டர் தம்பையா கூறுகிறார்! நாற்பது வருடத்துக்கு மேல் நான் ப்ராக்டீஸ் பண்றேன். பதினைந்து வருடங்களுக்கு முன்பிருந்துதான் குங்குமம், விபூதி அலர்ஜியாகிற பேஷண்டுகள் வர்றது அதிகரிக்க ஆரம்பிச்சது. நவீன உலகில் குங்குமத்தில் என்னென்ன கெமிக்கல்கள் கலக்கப்படுகின்றன! அவை எப்படி எப்படித் தோலைப் பாதிக்கின்றன என்பது பற்றிப் பெரிய ஆராய்ச் சியே பண்ணி தீஸிஸ் கூட சப்மிட் செஞ்சிருக்காங்க. கலப்பட விபூதி பக்தியும் இதுமாதிரி யாராச்சும் ஸ்டடி பண்ணிக் கண்டுபிடிக்கணும். குங்குமம், விபூதி போன்றவற்றை ஒரு சிலக் குடும்பங்கள் பாரம் பரியமாகத் தயாரித்தன. அதாவது, குடிசைத் தொழில் மாதிரி... இப்ப அது மாறிப் போயிடுச்சு. இந்த மாதிரி குங்குமம், விபூதி போன்றவற்றால் தோலில் பிரச்சினை ஏற் பட்டு என்னை அணுகுபவர்களிடம், முதலில் குங்குமம், விபூதி இடுவதைத் தற்காலிக மாக நிறுத்தச் சொல்லிவிட்டு, பிறகுதான் சிகிச்சையைத் தொடங்குகிறேன்... என்றார். (நன்றி: ஜூனியர் விகடன் 26.10.1997)

Read more: http://viduthalai.in/page4/84802.html#ixzz38op45Q2V

தமிழ் ஓவியா said...


உயிர் உருவாகிறது, படைக்கவில்லை

1. வெள்ளை புழு: ஆம் செம்மறி ஆட்டு புழுக்கை (சாணி) அள்ளி ஓரி டத்தில் (குப்பைக் குழி) தினம் 4, 5 தட்டுக்கூடை அளவுக்கு ஆறுமாதம் வரையில் அதன் மேல் போட்டு வந்து அதன்பின் ஓரளவு மழை அதாவது தண்ணீர் தெளித்து காயாமல் நனைந்து இருக்க வேண்டும். அதன்பின் அதனை மண்வெட்டியால் அள்ளும் போது வெப்பம் அதிகமாக இருக்கும். அதிலே இரண்டு மூன்று அங்குல நெட்டு அரை ஒரு அங்குலம் உள்ள வெள்ளை நிறமுள்ள பூச்சி உயிருடன் இருக்கிறது.

2. எருவில் புழு: மாடுகளை மேய்க்க நிலத்துப்பக்கம் போகும்போது அதன் எருவில் அடுத்த நாள் பார்க்கும்போது சிறு வெள்ளை புழுக்களும் இருக்கிறது அதை காக்கை கொத்தி இரையாக்கிக் கொள்கிறது எல்லா இடங்களிலும் இவ்விதம் ஏற்படுவதில்லை உப்பு நிலம், உவட்டுத்தரை, கந்தகத்தரை, உவர்மண் இப்படி உள்ள இடங்களில் புழுக்கள் தோன்றுவதில்லை.

3. ஈசல்: மழை பொழியும் போதெல்லாம் இல்லை; அய்ப்பசி கார்த்திகை மாத வாக்கில் மழை பொழிந்தால் உடனே ஈசல் என்ற பறக்கும் உயிரினம் மிக அதிகமான அளவில் உருவாகிறது கொஞ்ச நேரத்தில் இறக்கை உதிர்ந்து தரையில் இளைகிறது. உருமாற்றம் ஆகிறது. இது உணவாகவும் பயன்படுகிறது.

4. பனம் மட்டை: பனம் மட்டையை அடர்த்தியாக ஆறுமாத அளவில் அடுக்கி வைத்து அதில் பலமுறை மழை பொழிவு அல்லது பலமுறை தண்ணீர் தெளித்தால் கருப்பு நிறப்பூச்சி, அட்டை மாதிரி உயிருடன் கூடுதலாக உருவாகிறது.

5. தேள்: பழைய பனம் மட்டை, பழங்கூரை, வரகு, வைக்கோல், சாம்பல் இவைகளை ஒரே இடத்தில் போட்டு அதிகம் காயாமல் தண்ணீர் தெளித்து வந்தால் ஆறுமாத அளவில் தேள் உயிரினம் தோன்றுகிறது.

6. சிகப்பு அட்டை: இற்றுப்போன மட்டை, வைக்கோல், கூரை, பழைய வீடுகளில் மழைக்காலங்களில் சிகப்பான அட்டை உயிருடன் உண்டாகிறது.

7. பாசி: தண்ணீர் உள்ள தொட்டி யில் உயிரான பாசம் ஏற்படுகிறது குறைவான தண்ணீர் உள்ள கிணற்றில் கொடி போன்ற பாசி உயிருடன் உண் டாகிறது. இவை எனது கவனிப்பில் தென்பட்டவை: இடத்திற்கு ஏற்பவும் பொருள்கள் மூலமும் தட்ப வெப்ப பருவகாலங்களில் உயிரினம் ஏற்பட்டு அதுவே வளர்ச்சியின் மூலமாக மனிதன் என்ற உயிரினம் உருவாயிருக்க வேண்டும் சார்லஸ் டார்வின் ஆராய்ச்சி சரிதான் கடவுள் என்பது ஒரு பொருள் கூட இல்லையே; அப்படி இருக்க, இல்லாத பொருள் எப்படி எதையும் உருவாக்க முடியும்?

8. விட்டில்: ஆறுமாத அளவில் ஒரே இடத்தில் பல தென்னம் மட்டைகள் காய்ந்து இற்றுப் போய் இருந்தன. மழை பொழியும்போது அந்த மட்டையில் இருந்து விட்டில்கள் பொரி வானம் போல 50 அளவில் பறந்தன. கால நிலைக்கேற்ப உயிரினம் தோன்றும் இந்நிகழ்ச்சியைப் பார்த்தேன்.

கோழி: கோழி முந்தியா? முட்டை முந்தியா? உயிர் இனம் கோழி தான் முந்தியது. ஆம், இவ்விதம் செல்கள் உருவாகி அதற்கேற்ப உயிர் இனம் தோன்றி இருக்கும். இதன் பின்தான் இன சேர்க்கை ஏற்பட்டு உற்பத்தி ஆகிறது ஒவ்வொன்றும் அபிவிருத்தி ஆகி இனப்பெருக்கம் அதிகரிக்கிறது. முதலில் செல் உருவாக வேண்டும் இவை சேர்ந்து உயிர்ப் பொருள் உருவாகி நிறங்கள் வடி வங்கள் ஆண்பால். பெண்பால் அமை வதற்கு செல்களே காரணமாகின்றன. கடல், மழை, இப்படி பல இடங்களில் சூழ்நிலைக்கேற்ப உயிர் இனம் தோன்றி ஆண், பெண் என்பன தோன்று கின்றன. அதன்பின் தான் இனச் சேர்க்கை மூலமாக, முட்டை மூலமாக அல்லது குஞ்சு, குட்டி போன்றவை உருவாகின்றன. இதன்படி பார்த்தால் கோழிதான் முந்தியது.

Read more: http://viduthalai.in/page7/84808.html#ixzz38opvRna6

தமிழ் ஓவியா said...


85 ஆயிரம் கொசுக்களுடன் செயல்படும் அருங்காட்சியகம்

மத்திய அரசு நிறுவனமான மருத்துவப் பூச்சியியல் ஆராய்ச்சி மய்யம், மதுரையில் 85 ஆயிரம் கொசுக்களைக் கொண்ட அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. உலக அளவில் கொசுக்களால் உரு வாகும் பல நோய்களை ஒழிக்க இந்த மய்யம் உதவி வருகிறது.

சர்வதேச அளவில் புகழைத் தேடி தந்து கொண்டிருக்கிறது மதுரையில் உள்ள மருத்துவப் பூச்சியியல் ஆராய்ச்சி மய்யம். மதுரை சின்ன சொக்கி குளத்தில் உள்ள சரோஜினி தெருவில் உள்ள இந்த மய்யத்தின் முக்கியப் பணி கொசுக்கள், உண்ணிகள் போன்ற நோயைப் பரப்பும் கணுக்காலிகளைப் பற்றியும், அவை பரப்பும் நோய்களைப் பற்றியும் முழுமையாக ஆய்வு செய்வது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி மய்யங்களில் ஒன்றான இது, கடந்த 1985-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுபோன்ற மய்யங்கள் இல்லை என்றால், டெங்கு, சிக்குன் குனியா என்பதெல்லாம் கொசுக்கடியால் வருகிற நோய்கள் என்பதுகூட தெரியாமலேயே போயி ருக்கும். இந்தியாவில் எத்தனை வகை கொசுக்கள் உள்ளன, அவற்றின் வசிப்பிடம் எது? அவற்றின் லார்வா (கொசுப்புழு)க்களின் தன்மை என்ன என்பதைப் பற்றியெல்லாம் பல ஆய்வுகளை நடத்தி, பல புத்தகங்களை எழுதியுள்ளனர் இங்குள்ள விஞ்ஞானிகள். இவர்களின் முக்கியமான ஆய்வுகள் எல்லாமே டெங்கு, சிக்குன் குனியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல், யானைக்கால் நோய், மலேரியா போன்றவற்றைப் பரப்பும் கொசு இனங்களைப் பற்றியவைதான். இந்தக் கொசுக்களின் பெருக்கத்தைக் கட்டுப் படுத்துவது, மனிதர்களுக்கு இவற்றால் ஏற்படும் பாதிப்புகளை மட்டுப்படுத் துவது, தடுப்பு மருந்து மற்றும் குணப்படுத்தும் மருந்துகளை அறிவது என பல நூற்றுக்கணக்கான ஆய்வு களை நடத்தியுள்ளது இந்த மய்யம்.


தமிழ் ஓவியா said...

இந்த ஆய்வு முடிவுகளின் அடிப் படையில்தான் மத்திய- மாநில அரசுகள் சில குறிப்பிட்ட நோய்களை ஒழிப்ப தற்கான கொள்கை முடிவுகளை எடுத்து வருகின்றன. உலக சுகாதார மய்யமே இந்த மய்யத்துக்கு நிதியுதவி அளித்து, ஆய்வு முடிவுகளைப் பெற்று வருகிறது.

மதுரையில் 58 வகை கொசு

மதுரையில் எத்தனை வகை கொசுக்கள் உள்ளன என்ற பட்டியலே இவர்களிடம் உள்ளது. மதுரை மாவட்டத்தில் மொத்தம் 58 வகை கொசுக்கள் வசிக்கின்றன. இந்தக் கொசுக்கள் எந்தெந்த பகுதியில் அதிகம் வாழ்கின்றன, உணவுக்காக அவை சார்ந்திருப்பது மனிதர்களையா, மாடு களையா, பன்றிகளையா, தாவரங் களையா என்பன போன்ற விவரங்களும் இந்த மய்யத்தில் உள்ளன. இதற்காக மாங்குரோவ் காடுகள், அடர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகள், குளம், குட்டை, சாக்கடை, நெல்வயல்கள் என்று பல்வேறு பகுதியில் பிடித்த கொசுக்களை இந்த மய்யத்தில் வைத்துள்ளனர்.

கொசு மியூசியம்

இந்தியாவில் மொத்தம் 403 வகை கொசுக்கள் உள்ளன. அதில் 242 வகை கொசுக்கள் இங்கே இருக்கின்றன. சில வகை கொசுக்களை ஆய்வகத்திலேயே இனப்பெருக்கம் செய்ய வைத்து ஆராய்ச்சி செய்கின்றனர் (ஆய்வகத்துக்கு வெளியே கொசுக்கள் இல்லை என்பதால், இந்த அலுவலகத்தில் யாருக்கும் கொசு கடிப்பதில்லை). இங்கே கொசு மியூசியம் ஒன்று இருக்கிறது. அதில் 85 ஆயிரம் கொசுக்களின் மாதிரிகள் (உயிரற்ற உடல்) வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே இதுதான் மிகப்பெரிய கொசு மியூசியம் என்கின்றனர்.

மேலூர் வட்டாரத்தில் டெங்கு காய்ச்சலால், கடந்த 2012-ஆம் ஆண்டு நூற்றுக்கணக்கானோர் இறந்தபோது, டெங்கு பாதிப்பு தமிழகத்தில் இல்லவே இல்லை என்று மறுத்தது சுகாதாரத்துறை. ஆனால், அதற்கு முன்பே டெங்கு பரவுவது குறித்து ஆதாரப்பூர்வ மாக கண்டறிந்து, அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது இந்த மய்யம் என்பது வெளியே தெரியாத முக்கியமான தகவல்.

80 கோடியில் புதிய கட்டடம்

தற்போது வீதியில் ஒரு கட்டடத்தில் செயல்படும் மருத்துவ பூச்சியியல் ஆராய்ச்சி மய்யத்தை, மிகப்பெரிய வளாகத்துக்கு மாற்றும் வகையில் கடந்த 2010-ஆம் ஆண்டு ஜூலை 25ஆ-ம் தேதி வடபழனியில் அடிக்கல் நாட்டப் பட்டது. ஆனால், இதுவரையில் புதிய கட்டடம் கட்டப்படவில்லை. இந்த மய்யம் எப்போது கட்டப்படும் என்று அதன் இயக்குநர் பி.கே.தியாகியிடம் கேட்டபோது, புதிய கட்டடம் கட்டு வதற்காக சுமார் 80 கோடியில் வரைவுத்திட்டம் தயாரித்து அரசின் ஒப்பு தலுக்கு அனுப்பினோம். தற்போதுதான் ஒப்புதல் கிடைத்துள்ளது. இன்னும் சில மாதங்களில் கட்டட பணிகள் தொடங் கும் என்றார்.

Read more: http://viduthalai.in/page8/84811.html#ixzz38oqIYElA

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கோட்புலி நாயனார்

சோழர்களின் படைத் தளபதி கோட்புலியார். சிவாலய அன்னதானத் திற்கான நெல் அளிக்கும் திருப்பணி புரிந்து வந் தார். அதற்காக நெல்லை பெரியதொரு களஞ்சியத் தில் சேமித்து வைத்திருந் தார்.

ஒருமுறை அவர் போருக்குச் சென்றிருந்த போது நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. பசிப் பட்டினியால் வாடிய அவருடைய உறவினர் கள் அந்த நெல்லைப் பயன்படுத்தி விட்டனர். போரிலிருந்து திரும்பிய கோட்புலியார் சிவ கைங்கரியத்திற்காக வைத்திருந்த நெல்லை அபகரித்த அவர்கள் அனைவரையும்வெட்டி வீழ்த்தி தன் சிவபக்தியை மெய்ப்பித்தார்.

இதைப் படிக்கும் பொழுது என்ன தோன்று கிறது? அன்பே சிவம் என்பது இதுதானோ! பக்தி இருக்கும் இடத்தில் கொலை வெறிதான் மிஞ்சும் போலும்!

Read more: http://viduthalai.in/e-paper/84838.html#ixzz38orSoOkC

தமிழ் ஓவியா said...

விதைகளை மலடாக்கும் விபரீதம்!


மத்தியில் இருக்கக் கூடிய பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மதவாத அரசு மட்டுமல்ல - வெகு மக்கள் விரோத அரசு - பாட்டாளி மக்களின் வயிற்றில் அடிக்கும் அரசு - கார்ப்பரேட் நிறுவனங்களின் கைப்பாவை - பொருளாதாரத்தில் அமெரிக்கப் பார்வை கொண்டது என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் நாளும் பெருகிக் கொண்டே போகின்றன. இதன் மூலம் வெகு மக்கள் வெறுப்பை வெகுவாக வரவழைத்துக் கொண்டிருக்கிறது.

மரபணு மாற்றியமைக்கப்பட்ட பயிர்களைப் பரிசோதனை முறையில் சாகுபடிசெய்யலாம் என்று ஜூலை 18ஆம் நாள் மத்திய அரசு அனுமதி அளித் துள்ளது. இது கடும் கண்டனத்துக்கு உரியதாக ஆகி விட்டது.

மோடியின் குஜராத் மாநிலத்திலேயே இதற்கான ஆக்கப்பூர்வ எதிர்ப்பு களைகட்டுகிறது. இன்று முதல் மூன்று நாள்கள் விவசாயிகள் ஒருங்கிணைந்த மாநாடு குஜராத்தில் நடைபெறுகிறது. தெற்காசிய விவசாயம் ஒருங்கிணைந்த மாநாடாக இது உருவாகியுள்ளது. இதன் அவசர நோக்கம் மரபணு மாற்றுப் பயிர்களை கடுமையாக எதிர்ப்பதே!

மரபணு மாற்று விவசாயத்துக்கு உலகெங்கும் கடும் எதிர்ப்பு மேலோங்கி நிற்கிறது. இதன் சூத்ரதாரி அமெரிக்காவாகும். இவர்கள் சொல்லுகிற முறைப்படி மரபணு மாற்று முறையைக் கையாண்டால் விதை நெல்லுக்கு இந்த நிறுவனங்களிடம் கையேந்தித் தான் நிற்க வேண்டும்.

இந்த மரபணு மாற்று முறை விவசாயத்தால் கிடைக்கும் நெற்களை விதை நெல்லாகப் பயன்படுத்த முடியாது. வீரிய கோழி முட்டைகளை (HYBRID) கொண்டு எப்படிக் குஞ்சு பொரிக்க வைக்க முடியாதோ அதே போன்று தான் இதுவும்
ஏதோ பி.ஜே.பி. இப்பொழுது ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்தத் திட்டத்தைக் கைக் கொள்கிறது என்று அவசரப்பட்டு யாரும் முடிவு செய்ய வேண்டாம்.

அடல் பிஹாரி வாஜ்பேயி தலைமையிலான மத்தியில் அமைந்த ஆட்சியின் போதே 1998ஆம் ஆண்டிலேயே இந்த நாசப்படுத்தும் நச்சுக் கொள்கைக்கு நாற்று நடப்பட்டு விட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த மான்சான்டோ என்ற பன்னாட்டு வேளாண் நிறுவனம் தனது தாவர மரபணு ஆய்வுக்கான அணுக்களை (டெர்மினேட்டட் ஜீன்) இந்திய நாட்டின் வயல்களில் சோதனை செய்து பார்க்க அனுமதி வழங்கியது. கருநாடகம் உள்ளிட்ட அய்ந்து மாநிலங்களில் சோதனை செய்து கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டது - பிஜேபி ஆட்சியில். இதில் என்ன கொடுமையென்றால் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இது குறித்த தகவலோ அவர்களின் அனுமதியோ கிடையாது என்பதுதான் அது.

அமெரிக்காவின் மான்சான்டோவுக்கு வழங்கப் பட்டுள்ள இந்த அபாயகரமான அனுமதி குறித்து அந்தக் கால கட்டத்திலேயே பெங்களூரில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக் கழகம் பயிர்களின் மரபுரிமை திருடப்படுவதைக் கண்டித்துக் குரல் கொடுத்ததுண்டு; இந்தத் திட்டத்தால் விளை பொருள்களில் சத்துக்கள் அதிகரிக்கும் என்கிற விளம்பரத்திலும் உண்மையில்லை என்று பெங்களூர் வேளாண் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் அழுத்தந் திருத்தமாக வெளிப்படுத்தினரே!

நிலத்தையும், நீரையும் தெய்வமாக வழிபட வேண்டும் என்ற கருத்தைக் கொண்ட பா.ஜ.க. இப்படி இந்தப் பூமாதேவியை (பூமாதேவி அவர்கள் மொழியில் இப்படித்தானே!) மாசுபடுத்தலாமா?

தமிழ் ஓவியா said...

ஒவ்வொரு முறையும் விவசாயம் செய்து விட்டு, அடுத்த விவசாயத் தொடக்கத்திற்கு அந்த அமெரிக்க நிறுவனங்களின் திசை நோக்கித் தண்டனிட்டுக் கிடக்க வேண்டுமா? அவர்கள் மீண்டும் மீண்டும் கொடுக்கும் மலட்டு விதைகளுக்காக காத்துக் கிடக்க வேண்டும். வேறு வழியில்லை நம்மை அண்டித் தான் இந்தியாவின் விவசாயம் நடந்தாக வேண்டும் என்ற நிலையை உருவாக்கிக் கொண்டு விட்டால், அவர்கள் வைத்தது தானே சட்டம், நிர்ணயித்ததுதானே விலை என்ற சுரண்டல்தானே ஜாம் ஜாமென்று நடக்கும்.

மரபணு மாற்று விதையில் பயிர் செய்யப் படுவனவற்றைத் தொடர்ந்து உண்டால் உடல் நோய்க்கு ஆளாக வேண்டும். கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த முறையில் உற்பத்தி செய்யப்படுபவை பெரும்பாலும் கால்நடைகளுக்குத் தீவனங்களாகத்தான் பயன்படுத்தப்படுகின்றன என்பது ஒரு முக்கிய தகவலாகும்.
மரபணு மாற்றுப் பயிர்களின் திறந்தவெளிப் பரி சோதனை குறித்த முடிவு வெளியிடப்படாமல் இருந்தது. நாடாளுமன்ற வேளாண் நிலைக் குழு ஆய்வு நடத்தியது. அந்தக் குழுவின் அறிக்கை 2013இல் வெளி வந்தது.

இந்த மலட்டு விதை விவசாயத்தின் வாழ்வா தாரத்தையே முற்றிலும் அழிக்கக் கூடியது என்று தெளிவாக தெரிவித்து விட்டதே! இந்த அடிப்படையில் கடந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அந்தத் திட்டத்தைக் கிடப்பில் போட்டு விட்டது.

இப்பொழுது நரேந்திர மோடி தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசோ, பழைய பிஜேபி அரசு (1998) தொடங்கியதைப் புதுப்பித்துக் கொள்ள தோள் தட்டிக் கிளம்பியுள்ளது.

அறுபது நாட்களுக்குள் இவ்வளவு விபரீதங்கள் என்றால் வரும் காலம் இன்னும் என்னென்ன நடக்குமோ என்ற பீதிதான் மக்கள்முன் நிற்கிறது.

இந்துத்துவா கொள்கைப்படி விவசாயம் என்பது பாவத் தொழிலாகும். (மனு தர்மம் அத்தியாயம் 10 சுலோகம் 84) அது எப்படியோ நாசமாக போகட்டும் என்று அவர்கள் நினைத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அவர்கள் நம்பும் அந்த பாவப்பட்ட தொழிலில் தான் இந்தநாட்டில் கோடானு கோடி விவசாயப் பெருங்குடி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் திண்டோள் பொங்கி எழுந்தால் அவற்றை எதிர் கொள்ளும் சக்தி எந்த அரசுக்கும் இருக்கவே முடியாது - எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/page-2/84841.html#ixzz38orhYiwR

தமிழ் ஓவியா said...


தீராதுபார்ப்பனியமும், மத ஆதிக்கமும் ஒழிந் தாலொழிய இந்தியாவில் யோக்கியமான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர் பார்க்க முடியாது. பார்ப்பனிய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.

- (குடிஅரசு, 17.8.1930)

Read more: http://viduthalai.in/page-2/84840.html#ixzz38orrEooA

தமிழ் ஓவியா said...


வாய்ப் புண்ணைக் குணமாக்கும் மணத்தக்காளி கீரை


மேடைப் பேச்சாளர்கள், பாடகர்களுக்கு தொண்டை கட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். இவர்கள் மணத்தக்காளி கீரையை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. இக்கீரை உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. அவற்றைக் குணப்படுத்தியும் விடும். சிறுநீர்க் கோளாறுகளை நீக்கும். இத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்துக் கொடுக்கும்.

சிறிது கசப்புச் சுவையுடையது இக்கீரை. சமைத்து சாப்பிடும்போது கசப்பு குறைவாய் இருக்கும். இக்கீரையைக் கஷாயமாய் அருந்தலாம். பருப்பு சேர்த்து மசியல், பொரியல் செய்து சாப்பிடலாம். கீரையையும், இளந்தண்டுகளையும் சாறாக மாற்றி ஒரு வேளைக்கு ஆறு மில்லி வீதம் அருந்தலாம்.

மேற்கண்ட மூன்று முறைகளுள் ஏதாவது ஒன்றைப் பயன்படுத் தினாலும் நீர்க்கோர்வை நோய் விரைந்து குணமாகும். கீரையைப் போலவே பழமும் சக்திவாய்ந்த மருந்தாகும். காசநோயாளிகள் இப்பழங்களைத் தினமும் சாப்பிடுவது நல்லது. மணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு அளவேதான் இருக்கும். நன்கு பசி எடுத்துச் சாப்பிடவும் இப்பழம் உதவுகிறது.

இதுகுறித்து தருமபுரி அரசு சித்த மருத்துவ பிரிவு செல்வமூர்த்தி கூறியதாவது:

மணத்தக்காளி சிவப்பு, கறுப்பு என இரண்டு வகைப் படும். இலை, காய் இரண்டும் பெரிதும் பயன்படுகிறது. மணத்தக்காளியை மணித்தக்காளி, மிளகுத்தக்காளி, விடைக்கந்தம், உலக மகா என வழக்கத்தில் அழைக்கப் படுகிறது. கபநோயால் உண்டாகும் நாப்புண், நாவேக்காடு, உட்சூடு, நா எரிச்சல், இருமல் சளி மணத்தக்காளி பயன்படுத்தினால் தீரும்.

ஆண்கள் தாதுபலம் பெற இப்பழத்தை சாப்பிடவேண்டும். தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம். உடலில் வலி உள்ள இடங்களிலும் வலி நீக்கும் மருந்து போல இக்கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப் பெறலாம்.

நாள்பட்ட வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்தி வரவேண்டும். மணத்தக்காளி காயை வற்றல் போடலாம்.

வற்றலிலும் மருத்துவக் குணங்கள் சிதையாமல் இருக்கிறது. வாய்ப்புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும். இந்த பிரச்சினைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை. இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/page-7/84817.html#ixzz38otOZdmU

தமிழ் ஓவியா said...


தொண்டை வலிக்குத் தீர்வு


தொண்டை வலி என்பது எல்லா வயதினருக் கும் எந்த நேரத்திலும் வரக்கூடியது. இவ் வாறு தொண்டை வலி ஏற்பட்டால் எச்சில் விழுங்கக்கூட முடியாது. சாப்பிடும் போதும் சிரமம் இருக்கும்.

எனவே இதை விரட்ட சில வழிமுறைகள்...

சுகாதாரமின்மை மற்றும் வைரஸ், பாக்டீரியா தொற்றுதான் தொண்டையில் துவங்கி உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தொண்டையில் புண் இருக்கும்போது தொண்டை கரகரப்பு மற்றும் அரிப்பு இருக்க வாய்ப்புள்ளது. இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் சில நாள்களில் குணமாகி விடும்.

சுகாதார மற்ற தண்ணீரை குடிக்கும்போது வைரஸ் தொற்றும், சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்ளும்போது பாக்டீரியா தொற்றும் உண்டாகிறது. இதன் அடுத்த கட்டமாக தொண்டை வறட்சி, குரல் கரகரப்பு, காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். பாக்டீரியா தொற்றால் ஏற்படும் தொண்டைப் புண் எளிதில் அடுத்தவருக்கும் பரவுகிறது.

இதனால் எச்சில் விழுங்கும்போது வலி ஏற்படும். தொண்டையின் பின் சுவர் சிவந்து வெள்ளைப் புள்ளிகள் உருவாகும். மேலும் குளிர் காய்ச்சல் ஏற்படும். பெரும் பாலும் சளி, எச்சில் வழியாக இந்த நோய் மற்றவருக்கு எளிதில் பரவுகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மசாலா தேநீர் குடித்தால் நல்லது. மசாலா தேநீர் என்பது மிளகு, சீரகம், கிராம்பு, ஏலக்காய் போன்றவற்றை போட்டு, நன்கு கொதிக்க வைத்து, பின் குடிக்கவேண்டும். இவ்வாறு குடித்தால், தொண்டையில் இருக்கும் புண் சரியாகிவிடும்.

இஞ்சி: தொண்டையில் உள்ள புண்ணிற்கு இஞ்சி மிகவும் சிறந்த ஒரு மருத்துவப் பொருளாகும். இஞ்சியை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால், தொண்டையில் உள்ள கரகரப்பு சில நிமிடங்களில் சரியாகி விடுவதோடு, தொண்டை புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

தயிர்: தயிர் உடலுக்கு அதிக குளிர்ச்சியை ஏற்படுத்தும் பொருள் அவற்றை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடாமல், அறை வெப்பத்தில் வைத்து சாப்பிட்டால், தொண்டையில் ஏற்படும் வலி சரியாகிவிடும்.

எலுமிச்சை சாறு, தேன்: சிட்ரஸ் பழங்களில் ஆன்டி வைரஸ் பொருள் அதிகமாக உள்ளது. எனவே அத்தகைய பழங்களில் ஒன்றான எலுமிச்சை சாற்றில், வெது வெதுப்பான தண்ணீர் மற்றும் சிறிது தேன் சேர்த்து குடித்தால், தொண்டையில் வைரசால் ஏற்பட்டிருக்கும் புண் குணமாகிவிடும்.

மிளகு: காரப்பொருட்களில் ஒன்றான மிளகை உணவுடன் சேர்த்தோ அல்லது அதை தூளாக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் தொண்டையில் உள்ள கரகரப்பு மற்றும் புண் விரைவில் சரியாகிவிடும். எனவே இருமல் அல்லது சளி இருக்கும்போது மிளகு சாப்பிடுவது எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படாமல் தடுத்துவிடும்.

தடை: நாவை ஊற வைக்கும் உணவுகளான புளி, ஊறுகாய் மற்றும் சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால் தொண்டையில் அரிப்போடு, வலியும் ஏற்படும். எனவே அத்தகைய உணவுகளை சாப்பிடக்கூடாது. மேலும் வினிகர் கலந்திருக்கும் உணவுகளையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

பால்: தொண்டையில் புண் இருக்கும்போது ஒரு டம்ளர் சூடான பால் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் பாலை இந்த நேரத்தில் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

வறட்சியான உணவுகள்: வறட்சியான உணவுகளை தொண்டையில் புண் இருக்கும்போது சாப்பிடக்கூடாது. இதனால் அத்தகைய பொருட்களை விழுங்குவதற்கு கடினமாக இருப்பதோடு அதிகமான வலியும் ஏற்படும். தொண்டை வலி இருக்கும்போது பிஸ்கட், தானியங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டாம்.

தானியங்களை நீரில் ஊற வைத்தோ அல்லது சமைத்தோ சாப்பிட்டால் விழுங்குவதற்கு எளிதாக இருப்பதோடு, வலி ஏற்படாமலும் இருக்கும்.

Read more: http://viduthalai.in/page-7/84816.html#ixzz38oteWMex

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?

ஆடி மாதம்

ஆடி மாதத்தில் 1,10,19,26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு சுப பலன் உண்டாம். புத்தி சாதுரியமும், வாக்கு வன்மையும் உண்டாம்.

7,16,25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு மாதத் தொடக்கத்தில் பண வரத்து இருக்குமாம்.

ஒரு நாளில் பிறந்தால் போதும், திறமை முக்கி யம் இல்லை; உழைப்பு முக்கியம் இல்லையா? இது ஒரு சோம்பேறித்தன மான நம்பிக்கையை அல்லவா வளர்க்கும்!

Read more: http://viduthalai.in/page1/84723.html#ixzz38ouKCkRt

தமிழ் ஓவியா said...

தமிழ்நாடும் பாலியல் வன்கொடுமையும்


தேசிய ஆவணக் கழகம் (National Crime Records Bureau) என்பது மத்திய அரசின்கீழ் செயல்படும் ஓர்ஆவணக் காப்பகமாகும்.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்ற நடவடிக் கைகளில் தமிழ்நாட்டின் பங்கு 2.41 சதவீதம் என்று அது குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் பெண்கள் அதிகம் பாலியல் தொல்லை களுக்கு அதாவது 4 முதல் 18 வயது வரையிலான பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை 280 என்றும், 18 வயது முதல் 30 வயது வரையிலான பெண்களின் எண்ணிக்கை 395 எனவும், 30 வயதிலிருந்து 50 வயது வரையிலான பெண்களில் பாதிப்புக்குள்ளான வர்கள் 93 பேர். 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 16 பேர் பாலியல் கொடுமைக் குள்ளாகி இருக்கிறார்கள் என்பதெல்லாம் வேதனையை வெளிப்படுத்தும் புள்ளிவிவரங்களாக இருக்கின்றன.

இதிலே இன்னும் கொடுமையென்றால் பாலியல் வன்முறைக்குள்ளான 10 வயதுக்கும் குறைவான பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 61. அத்துடன், 10 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளில் பாலியல் கொடுமைக் குள்ளானவர்கள் 78 பேர்.

அண்மையில்கூட, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக் கோட்டையில் 19 வயது நிரம்பிய கல்லூரி மாணவி 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்முறைக்கு ஆளாகி யுள்ளார்.

2013ஆம் ஆண்டில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 475. 2012ஆம் ஆண்டில் அது 7ஆயிரத்து 192. அது மட்டுமல்ல;

பாலியல் கொடுமைகள் பொறுத்தவரையில் 2013ஆம் ஆண்டு 923. அதே 2012இல் 677.

தமிழ்நாட்டில் இப்படி நடந்திருப்பது அதிர்ச்சியை அளிக்கக் கூடியதாகும். டில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி பேருந்தில் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்ட தற்காக நாடே பொங்கி எழுந்தது. நமது அண்டை மாநிலத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டதற்காகக் கடும் கண்டனப் புயல்கள் வெடித்துக் கிளம்பியுள்ளன.

தமிழ்நாட்டில் இவ்வளவு நடந்திருந்தும் ஒன்றும் நடக்காததுபோல மூடி மறைக்கப்படுவது - ஏன்? தமிழ் நாட்டு ஊடகங்களும் வாய் மூடி மவுனம் சாதிப்பது - ஏன்?

சட்டப் பேரவையில் இதுபற்றி எல்லாம் பேசுவதற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்றால் - மக்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வை எப்படி ஏற்படுத்த முடியும்?

உண்மைகளை நாட்டு மக்கள் மத்தியில் எடுத்துக் கூறுவது என்றாலே அது ஆளுங்கட்சிக்கு எதிரானது என்று ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்?

தமிழ் ஓவியா said...

எதிர்க்கட்சிகள் என்றாலும் சரி, ஊடகங்கள் என்றாலும் சரி நாட்டில் நடைபெறும் உண்மை நிலவரங்களை வெளிப்படுத்தினால் தானே ஆளும் கட்சியும் சரியான திக்கில் பயணிக்க முடியும்? செயல்பாட்டிலும் வேகத்தை முடுக்கி விட முடியும்.

பெண்ணென்றால் ஓர்ஆணுக்குச் சமையல் காரி ஓர்ஆணின் வீட்டுக்கு வேலைக்காரி - ஓர் ஆணின் குடும்பப் பெருக்கிற்குப் பிள்ளை விளைவிக்கும் ஒரு பண்ணை ஓர் ஆணின் கண்ணழகிற்கு ஓர் அழகிய - அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள்? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள் என்கிறார் உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் தந்தை பெரியார்

(குடிஅரசு 21.7.1946).

சமுதாயத்தில் குறிப்பாக ஆண்களிடத்தில் குடி கொண்டிருக்கும் பெண்கள் பற்றிய மனப்பான்மையில் மாற்றங் கொண்டு வரப்பட வேண்டும்.

இத்திசையில் கல்வியில் பெரும் மாற்றம் காணப்பட வேண்டும். பெண் ஏன் அடிமையானாள்? - என்ற தந்தை பெரியார் அவர்களின் நூல் கல்லூரிகள் மட்டத்தில் இடம் பெற்றாக வேண்டும்.

குறிப்பிட்ட வயதுக்கு மேலான மாணவர், மாணவி யர்கள் மத்தியில் பாலியல் கல்விபற்றித் தேவையான அளவில் கற்பிக்கப்பட வேண்டும்.

ஆபாசமாக அருவருப்பாக, அநாகரிகமாக நாட்டு நடப்புகள் இருப்பதைவிட, இந்தப் பாலியல் கல்வி எப்படித் தவறானதாகும்? இதில் போதிய புரிதல் இல்லாமையும் தவறுகள் நடப்பதற்குக் காரணமாக அமைந்து விடுகின்றன என்பதை மறுக்க முடியுமா? போதும் போதாதற்கு நமது ஊடகங்களும், சின்னத் திரைகளும், பெரிய திரைகளும், இணையதளங்களும் இளம் உள்ளங்களைப் பாலியல் வெறி உணர்வுகளுக்குத் தீனி போட்டு வளர்க்கின்றன என்பதை மறுக்க முடியுமா?

வார இதழ்கள் என்று எடுத்துக் கொண்டால் அட்டைப் படங்கள் என்பவை - அரை குறை ஆடையுடன் கூடிய சினிமா நடிகைகளின் படங்கள் என்பது நிரந்தரமாகி விட்டனவே!

நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடக்கின்றன என்று நிகழ்வுகள் நடக்கும் அந்தந்த காலங்களில் மட்டும் கூக்குரல் போடுவதும், சில நாட்களில் மறந்து விடுவது என்பதும் ஒரு தீய வட்டச் சுழற்சியாக அல்லவா இருக்கின்றது.

குற்றங்கள் நடக்கின்றன என்றால் அதற்கான மூலவேர் எங்கு இருக்கிறது என்று கண்டாய்ந்து அதனை வேரும் வேரடி மண்ணோடும் வெட்டி எறிய அரசு போதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாமா?

பெண்கள் என்றால் உடல் வன்மையற்றவர்கள் ஆண்கள் பலசாலிகள் என்ற மரபணுவை மாற்றி அமைத்திட விஞ்ஞான மார்க்கத்தை தேடுவதிலும் குற்ற மில்லை; தற்காப்புப் பயிற்சிகள் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

குறிப்பிட்ட காலத்திற்காவது பெண்களுக்குத் துப்பாக்கிப் பயிற்சி கொடுத்து தற்காப்புக்காக வைத்துக் கொள்ள அவர்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சொன்ன கருத்து கவனிக்கப்பட வேண்டிய கால கட்டம் இது. அரசு சிந்திக்கட்டும் ஊடகங்களும் மனம் விரியட்டும்!

Read more: http://viduthalai.in/page1/84713.html#ixzz38ounIXmT

தமிழ் ஓவியா said...


பாசிசத் தொழிற்சாலையாகிறதா, குஜராத் மாநிலம்?


- குடந்தை கருணா

சென்ற ஜூன் 30-ஆம் தேதி, குஜராத்தில் உள்ள 42000 தொடக்கப்பள்ளி, மற்றும் இடை நிலைப் பள்ளிகளுக்கும், அரசு ஓர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அந்த சுற்றறிக்கையில், தினாநாத் பாத்ரா என்பவரின் ஆறு புத்தகங்களையும், துணைப்பாடமாக, கட்டாயம் கற்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சரி. யார் இந்த தினாநாத் பாத்ரா? சிக்ஷா பச்சாவோ அந்தோலன் என்ற அமைப்பின் தலைவராக இருந்த, பாத்ரா, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்; இவர் தான், அமெரிக்க பேராசிரியர் வென்டி டோங்கியர் எழுதிய இந்துக்கள்; ஓர் மாற்று வரலாறு என்கிற புத்தகம் தடை செய்யப்பட வேண்டும் என வழக்கு தொடர்ந்தவர்.

இந்த பாத்ராவின் புத்தகத்தில் என்னதான் சொல்லப்பட்டுள்ளது? இந்து கலாச்சாரம் பேணப்பட வேண்டும் என்ற போர்வையில் கருத்துகள் இடம் பெற்றிருக்கின்றன. இனி, பிறந்த நாளுக்கு, மெழுகுவர்த்தி அணைத்து, கேக் வெட்டும் பழக்கம் நிறுத்தப்பட வேண்டும். ஏனென் றால், இது மேற்கத்திய பண்பாடு. அதற்குப் பதிலாக, ஓர் விளக்கை ஏற்றி, காயத்திரி மந்திரம் சொல்ல வேண்டும்.

வரலாற்றுப் பாடங்களில், இந்தியாவின் வரைபடம் எப்படி இருக்க வேண்டும் என சொல்லப் பட்டிருக்கிறது. அதன்படி, தற்போதைய, இந்திய வரைப்படம் மாற்றப்பட்டு, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பூடான், திபெத், பர்மா, இலங்கை நாடு களையும் உள்ளடக்கிய வரைபடம் தான் இந்தியா என வரையப்பட வேண்டும். ஏனென்றால், இதுதான், பண்டைய அகண்ட பாரதம், என பிள்ளைகளுக்கு சொல்லப்பட் டுள்ளது.

இது குறித்து, குஜராத் கல்வி அமைச்சர் பூபேந்திர சிங் சவுடா சாமாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இந்த பாடங்கள் அனைத்தும், பள்ளிகளில் கட் டாயப்பாடம் என்று கூறி உள்ளார்.

குஜராத்தில் 2002இல் நடை பெற்ற மதக்கலவரத்தின் மூலமாகத் தான், மோடி அடையாளப்படுத்தப் பட்டார். இந்துக்களிடையே, முஸ்லீம் விரோதப் போக்கை உருவாக்கி, அதன் காரணமாக தொடர்ந்து குஜராத்தில் அவர் பெற்ற அரசியல் வெற்றி, பிரதம ராவதற்கான காரணமாக அமைந்தது.

மோடியிடம் குஜராத்தில் அவரது உத்தரவிற்கு பணிந்து வேலை பார்த்த அதிகாரிகள்தான், தற்போது, பிரதமர் அலுவலகத்தில் அவருக்குத் துணையாக நியமிக்கப் பட்டுள்ளார்கள்.

குஜராத் கலவரம் நடை பெற்றபோது, உள்துறை அமைச்ச ராக இருந்து, பல போலி கொலை குற்றங்கள் செய்த அமீத்ஷாதான் தற்போது பாஜகவின் அகில இந்திய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மகாத்மா என உலகம் முழுவதும் பரப்பப்பட்டுவரும், காந்தி, குஜ ராத்தில் பிறந்திருந்தாலும், காந் தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸைக் கண்டிப்பதுபோல், காப்பாற்றிய, குஜராத்தின் சர்தார் வல்லபாய் படேலுக் குத்தான், மோடி சிலை வைக்க இருக்கிறார். அதற்காக, மத்திய பட்ஜெட்டில் ரூ.200 கோடி ஒதுக்கி உள்ளார்.

தற்போது, பள்ளிக்குழந்தைகள் மனதில், காலத்திற்கும் நிற்கும் வகை யில், பாடத்திட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். உத்தரவின்படி, இந்துத்துவா விஷ விதை விதைக்கப்படுகிறது. பாசிசப் பார்த்தினீயம் உருவாக்கப்படுகிறது.

இவையெல்லாம்தான் நடை பெறும் என்று நாம் படித்து படித்துச் சொன்னோம்; இடித்தும் சொன் னோம். ஆனால், இங்கே உள்ள சில தலைவர்கள், அதெல்லாம் ஒன்றும் இல்லை எனச் சொல்லிச் சொல்லி, மக்களை ஏமாற்றினார்களே; இவர் களெல்லாம் இப்போது என்ன செய்யப் போகிறார்கள்?

Read more: http://viduthalai.in/page1/84716.html#ixzz38ovLY4Iw

தமிழ் ஓவியா said...


சட்டமறுப்பு இயக்கம்

தலைவர்களுக்குள் எங்கும் ராஜிப் பேச்சும் ராஜிக் கோரிக்கையுமே முழங்குகின்றது. ஆனால் சர்க்கார் ராஜிக்கு இடம் இல்லை என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்கள். குறைந்த அளவு ராஜி நிபந்தனையாக, சிறையிலிருப்ப வர்களை விடுதலை செய்தால் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்துவதாக திரு. மாளவியா சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

தேசியப் பத்திரிக்கைகளும் அதை வலியுறுத்தி ராஜி! ராஜி!! என்று கதற ஆரம்பித்து விட்டன. எனவே தோல்வி கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்து விட்டது. ஜோசியப் புரட்டினாலாவது அதாவது திரு. காந்தி நாளைக்கு விடுதலை, நாளன்னைக்கு விடுதலை என்று எழுதி சிறு பிள்ளைகளையும் பாமர மக்களையும் ஏமாற்றி சிறைக்கு அனுப்பிக் கணக்குக் கூட்டி வந்ததும் கூட இப்போது சில ஜோசியர்களுக்கும் 144 போட்டுவிட்டதால் அவர்களும் அடங்கும்படியாகி விட்டது. மற்றபடி ஜவுளிக்கடை, கள்ளுகடை, பள்ளிக்கூட மறியல்களோ வென்றால் தொண்டர்கள் எண்ணிக்கை போதாததால் நிறுத்த வேண்டிதாய் விட்டது.

வேதாரணி யத்திற்கு யாத்திரைக்குப் போகும் ஜனங்கள் பெயர்களைக் கூட பத்திரிக்கைகளுக்கு வெளிப்படுத்த முடியாமல் போய் விட்டது. மற்றும் எது எப்படியானாலும் சட்ட மறுப்பு இயக்கத்தால் ஒரு லாபம் ஏற்பட்டதை நாம் மறுக்க முடிய வில்லை. அதாவது அது சர்க்காரை ஒன்றும் செய்யமுடிய வில்லை யானாலும் பணக்கார வியாபாரிகள் திமிர் சற்று அடங்கிவிட்டது.

அநேக வியாபாரிகள் இயக்கத்தை வைத்துக் கொண்டே தூக்கமில்லாமல் இருக்கின்றார்கள். பணக்கார விவசாயிகள் திமிரும் சமீபத்தில் அடங்கிவிடும். தவசங்கள் (தானியங்கள்) விலை மிகவும் இறங்கிவிட்டதால் வரும்படி குறைந்து திண்டாடுகிறார்கள். ஆனால் ஏழை களுக்குச் சற்று உணவு பொருள்கள் சல்லீசாய் கிடைக்க ஆரம்பித்து விட்டது.

ஆகவே இந்த காரணங்களைக் கொண்டு இந்த கிளர்ச்சி இன்னமும் ஒரு மூன்று மாதத்திற்கு ஆவது நடந்தால் இன்னமும் சற்று ஏழைமக்களுக்கு அனுகூலமாகும் என்றே ஆசைப்படுகின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 20.07.1930

Read more: http://viduthalai.in/page1/84703.html#ixzz38ovmPiLE

தமிழ் ஓவியா said...

சேலம் வன்னியர் குலச்சத்திரியர் மகாநாடு


ஆகையால், சகோதரர்களே! இனி இந்த மாதிரியான சமூக மகாநாடுகளில் இம்மாதிரியான ஜாதி உயர்வு தாழ்வுகளைப் பற்றிய பேச்சே இருக்கக்கூடாது என்றும் மற்ற ஜாதியார் என்பவர்களுடன் நாம் எப்படி கலப்பது? நாம் எவருக்கும் கீழ்ஜாதி அல்ல என்கின்ற தன்மை எப்படி அடைவது? நமக்குக் கீழும் நமது நாட்டில் எந்த ஜாதியும் இல்லை. நாம் எல்லோரும் சமமே என்கின்றதான சமதர்ம நிலையை எப்படி உண்டாக்குவது என்கின்ற காரியத்திற்கே பாடுபடவேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகிறேன்.

சகோதரர்களே! இந்தியா ஒரு நாடு ஆகவேண்டாமா? இந்தியா ஒரு நாடு என்று ஆனால்தானே இந்தியா முழுமையும் பற்றிப்பேச நமக்கு உரிமை உண்டு. இப்போது இந்தியா ஒரு நாடாய் இருக்கின்றதா? நீங்களே யோசித்துப் பாருங்கள். ஜாதிகள் கண்காட்சி சாலையாக, மத கண்காட்சி சாலையாக, பாஷைகள் கண்காட்சி சாலையாக, சாமிகள் கண்காட்சி சாலையாக இருக்கின்றதே ஒழிய வேறு என்னமாயிருக்கின்றது?

இந்த நிலையிலுள்ள இந்தியா விடுதலையோ, முன்னேற்றமோ அடைவது என்பது சாத்தியமான தாகுமா? என்பதை நீங்களே யோசித் துப்பாருங்கள். மற்ற நாட்டார்கள் தங்கள் நாட்டை ஒரு நாடாக்கி, நம்ம நாட்டையும் அதோடு சேர்க்கப் பார்க்கிறார்கள். யார் எந்த நாட்டோடு சேர்த்துக்கொள்ளுவ தென்று போட்டிப் போட்டுக் கொண்டி ருக்கின்றார்கள். அதிசயிக்கத்தக்கபடி முன்னேறுகிறார்கள். ஆச்சரிய மானதும் அற்புதமானதுமான காரியங்களைச் செய்கின் றார்கள்.

நாம் இன்றையதினம் யார் சத்திரியர் என்று பூதக் கண்ணாடி வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக் கின்றோம். சத்திரியன் என்கின்ற வார்த்தைக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? அந்தப் பெயரினால் என்ன லாபம்? அந்தப்பட்டம் வைத்துக் கொண்டால் நம்மிடம் என்ன மாறுதல் ஏற்பட்டுவிட்டது? எந்தத் தேசத்தைப் பிடித் தோம்? எதை ஆளுகிறோம்? யாரிடத்தில் கூறித் தரம் காட்டினோம்? ஏதோ சிலர் பூணூலைப் போட்டுக் கொண்டதைத் தவிர காரியத்தில் 100க்கு 90 பேர்கள் கூலிகளாய் இருப்பதைத் தவிர வேறு ஒன்றையும் காணோமே.

தமிழ் ஓவியா said...

எனது நாடார் நண்பர்கள் அனேகர் இப்போது பூணூலை அறுத்தெறிய ஆரம்பித்து விட்டார்கள். ஆதலால், ஜாதி விஷயத்தை இனி மறந்துவிட்டு உலகப் போக்கில் கலந்துகொள்ள முன்வாருங்கள் என்று கூப்பிடவே இங்கு வந்தேன்.

உலகப்போக்கு இப்போது எப்படி இருக்கிறது. ஆகாயத்தில் மனிதன் மணிக்கு 250 மைல் வேகம் பறக்கிறான். தண்ணீருக்குள் முழுகும் மனிதன் மணிக்கு 50 மைல் வேகம் ஓடுகிறான். நீங்கள் இமயமலையில் ஏறமுடியாமல் அதுதான் கைலாயம், அதுதான் வெள்ளி மலை.

அங்குதான் பரமசிவன் கால்மேல் கால்போட்டுக் கொண்டு, தொடைமேல் பார்வதியை உட்கார வைத்துக் கொண்டு, தலையில் ஒரு பெண்ணை வைத்துக்கொண்டு அதன் மூலம் கங்கை வருகிறது என்று சொல்லிக் கொண்டிருந்த புளுகுக்கதைகள் எல்லாம் இப்போது தவிடுபொடி ஆகும்படியும், வெள்ளைக்காரன் கைலாயத் திற்கு போய் பரமசிவனின் தலையைப் பிடித்து ஆட்டி அங்கு ஒன்றுமில்லை என்பதை ருஜுப்படுத்திவிட்டான்.

ஆணைப் பெண்ணாக்கவும், பெண்ணை ஆணாக்கவும், செத்தவர் களைப் பிழைக்க வைக்கவும் முயற்சிக்கிறான். கிழவனைக் குமரனாக்குகிறான். ஆண்குழந்தை வேண்டுமானால் ஆண்குழந்தையையும், பெண் குழந்தை வேண்டுமானால் பெண் குழந்தையும் பெற்றுக்கொள்ள வழிகண்டு பிடிக்கிறான். செவ்வாய் மண்டலம் போகிறான். தந்தியில் சேதி அனுப்பி, பாட்டு அனுப்பி, இப்போது ஆட்டம் அனுப்புகிறான்.

பொம் மைகள் எல்லாம் கம்பியில்லாத தந்தியில், உருவங்கள் எல்லாம் ஆகாய தந்தியில் வருகின்றது. (நமக்கு யார் சத்திரியர் என்பதும், சத்திரியர் உலகத்தில் இருக்கிறாரா இல்லையா என்பதும் இன்னமும் நமது ஆராய்ச்சியில் முடிவு பெறவில்லை) ஆகவே, அந்தமாதிரி உலகப்போக்கை நீங்களும் தயவு செய்து திரும்பிப்பாருங்கள் என்று வேண்டிக் கொள்ளத்தான் இங்கு வந்தேனே ஒழிய இவ்வளவு காயலாவுடன் உங்கள் மனம் நோகும்படியே நான் இங்கு வரவில்லை.

மற்றபடி, இந்த நாட்டில் இருக்கும் உங்கள் சமுகம் ஒற்றுமையுடன் பாடுபட்டால் நீங்கள் எவ்வளவோ மேன்மைபெற்று இந்த நாட்டுக்கு எவ்வளவோ நன்மை செய்யலாம். சட்டசபை தல தாபனம் இவைகளைக் கைப்பற்றி அதன் மூலம் ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உதவி செய்து நாட்டை உயர்நிலைக்குக் கொண்டுவாருங்கள்.

வெறும் நாமமும், பூணூலுமே ஒன்றையும் அளித்துவிடாது. மூடப்பழக்க வழக்கங்களை விட்டு ஓட்டி அறிவைப் பயன்படுத்தி முன்னேற முயற்சி செய்யுங்கள். சட்டசபை முதலிய தேர்தல்களில் நீங்கள் தைரியமாய் முன்வாருங்கள். கட்சி பேதங்களை விட்டு ஒழியுங்கள்.

முதலில் உங்கள் சமூகம் முழுவதும் ஒன்றானால்தான் மற்ற சமூகங்களுடன் நீங்கள் சரிசமமாக ஒத்து வாழமுடியும் என்பதைத் தெரியப்படுத்திக் கொண்டு நான் இதுவரை சொன்னவைகளை அப்படியே நம்பிவிடாமல் உங்கள் சொந்த அறிவைக்கொண்டு நன்றாய் ஆராய்ந்து பாருங்கள் என்று கேட்டுக்கொண்டு இம்மகாநாட்டை திறந்து வைத்ததாகச் சொல்லி அமர்கின்றேன்.

- குடிஅரசு - சொற்பொழிவு - 01.06.1930

Read more: http://viduthalai.in/page1/84704.html#ixzz38owI5ukO

தமிழ் ஓவியா said...

உதிர்ந்த மலர்கள்

ஆழ்வார்கள் கதைகளும், நாயன்மார்கள் சரித்திரங்களும் பார்ப்பன பிரச்சாரத்திற்கென்றே கற்பிக்கப்பட்டு பார்ப்பன அடிமைகளை கொண்டு பரப்பப்பட்டதாகும்.

புராணக் கதைகளை பார்ப்பன சூழ்ச்சியென்று அறிந்து கொள்ளாமல் அவைகளையெல்லாம் உண்மை யென்று கருதுகின்ற வர்கள் பக்கா மடையர்களாவார்கள்.

வயிறுவளர்க்க வேறு மார்க்கமில்லாத தமிழ்ப் பண்டிதர்கள் என்றைக்கு இருந்தாலும் தங்கள் புத்தியைக் காட்டித்தான் தீருவார்கள். ஏனென்றால், அவர்கள் படித்ததெல்லாம் மதஆபாசமும் புராணக் குப்பையு மேயாகும். ஆகவே, பார்ப்பனர்களைவிட பண்டிதர்கள் நமது இயக்கத்திற்கு பெரும் விரோதிகளாவார்கள்.

- குடிஅரசு - பொன்மொழி - 18.05.1930

Read more: http://viduthalai.in/page1/84703.html#ixzz38ox5SPIp

தமிழ் ஓவியா said...


ஆரியம் தான் சமஸ்கிருதம் - உஷார்! உஷார்!!


சமஸ்கிருதம் ஒரு மொழிதானே?

இதற்குப் போய் முண்டா தட்டுவதா? என்று சிலர் முணுமுணுப்பர் - அவர்கள் விரிக்கும் வலையில் வீழாதீர்!

தமிழை - தமிழர்களைத் தாழ்த்த வந்த தாம்பு அது - தமிழை நான்கு கூறு போட்டதும் அதுதான் - மக்களை நான்கு கூறு போட்டதும் அதுதான்.
கோவிலுக்குள்ளிருந்து தமிழை வெளியேற்றியதும் இதுதான்.

தமிழனைப் பிடரியைப் பிடித்துத் தள்ளியதும் - தள்ளி வருவதும் அதுதான்.

அர்ச்சனை மொழி தமிழ் என்று தமிழ்நாட்டில் குரல் கிளம்பிய நேரத்தில், ஒரு பார்ப்பனர் உயர்நீதிமன்றம் சென்றார். அவர் பெயர் வி.எஸ்.சிறீகுமார்; ஹிந்துக் கோவில் பாதுகாப்புக் கமிட்டியின் தலைவராம். உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் என்ன கூறினார் தெரியுமா?

ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்படும் பழக்கவழக்கங்களை மாற்ற அறநிலையத் துறையின் செயலாளருக்கோ, ஆணையருக்கோ அதிகாரம் கிடையாது.

அர்ச்சகர்களும், குருக்களும் தமிழில் அர்ச்சனை செய்யவேண்டுமென்று அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். கும்பாபிஷேகத்தின்போது வேத மந்திரங்களுக்குப் பதிலாக தமிழில் பாசுரங்களைச் சொல்லுமாறு கூறுகின்றனர். இது சட்ட விரோதமானது.

சமஸ்கிருத மொழி மூலமாக கடவுளிடம் தொடர்புகொள்ள முடியும். இந்நிலையில், தமிழில் அர்ச்சனை செய்யுமாறு கூறுவது ஹிந்துக்களின் நம்பிக்கையைத் தகர்க்கும் என்று மனு தாக்கல் செய்தார் மனுவாதியான பார்ப்பனர்.

தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு, தமிழால் பிழைத்துக் கொண்டு தமிழர்கள் கொடுக்கும் தட்சணையால் வயிறு வளர்த்துக் கொண்டிருக்கும் பார்ப்பனர்கள் தமிழை வெறுக்கின்றனர் - சமஸ்கிருதத்தைத் தூக்கிப் பிடிக்கின்றனர்.

நம் தமிழர்களை வெறுக்கும், நம் தமிழை மறுக்கும் சமஸ்கிருதத்தைத் தூக்கி நிறுத்தத்தான் சமஸ்கிருத வாரம்!

உஷார்! உஷார்!!

தமிழர்களின் தன்மான உணர்வை வெளிப்படுத்த ஆகஸ்டு முதல் தேதி களம் காண்போம் தோழர்களே!

கருஞ்சட்டைச் சேனையே, தயார், தயார் தானா?

Read more: http://viduthalai.in/page1/84698.html#ixzz38oxGNAH4

தமிழ் ஓவியா said...


தங்கம் வென்ற தமிழருக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள்!!

இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து பகுதியில் கிளாஸ் கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி விழாவில், 71 நாடுகள் கலந்துகொண்ட விளையாட்டுப் போட்டியில் சதீஷ்குமார் வேலூரைச் சேர்ந்த தமிழரான விளையாட்டு வீரர் பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வீரவிளையாட் டில் வெற்றி வீரராக சாதனை படைத்துள்ளார்.

அவருக்கு நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக் களைத் தெரிவித்து மகிழ்கிறோம். தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தவர். இவர் மேலும் ஒலிம்பிக் வீரராக வெற்றியின் உச்சத்திற்கே செல்வார் என்று நம்பி வாழ்த்துகிறோம்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்


சென்னை 29.7.2014

Read more: http://viduthalai.in/e-paper/84881.html#ixzz38udSOUw7

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?

ஆடி மாதம்

ஆடி என்பது ஒரு அசுரனின் பெயர். ஒரு முறை பார்வதிதேவி, சிவபெருமானை விட்டு விலகி இருந்தாள். இதை அறிந்த ஆடி என்னும் அசுரன் சிவபெருமானது தனிமையைப் பயன் படுத்திக் கொண்டு பாம்பு உருவம் எடுத்து உள்ளே நுழைந்தான். பிறகு பார்வதி தேவியாக உருமாறினான். சிவபெருமான் அருகில் சென்றான்.

தன்னோடு சேர்ந் திருக்க வந்திருப்பது ஆடி அசுரன் என்பதை சிவ பெருமான் உணர்ந்து கொண்டார். அசுரனுக்கு பாடம் புகட்ட நினைத்த சிவபெருமான் அவனோடு களித்திருப்பது போல் உறவாடி அவனைக் கொன்றார். இந்த நிகழ்வின் நினைவாகவே இந்த மாதம் ஆடி எனப் பெயர் பெற்றது.

கயிலையில் சிவபெரு மானுக்கு அணுக்கத் தொண்ட ராய் இருந்த சுந்தரர் பூவுலகில் நம்பி யாரூரார் என்ற பெயருடன் சிவபெருமானால் தடுத் தாட் கொள்ளப்பட்ட நாள் ஆடி மாத மூல நட்சத்திர நாளில்தான். இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட ஆடி மாதத்தில் தவறாமல் இறை வழிபாடு செய்து பயன் பெறலாமாம்.

இந்துப் புராணம் என்று எடுத்துக் கொண்டால் அசுரன் என்ற பாத்திரம் எப்படியோ வந்து புகுந்து விடும். அசுரன், அரக்கன், ராட்சதன் என்று எங்கு சொல்லபட்டு இருந்தாலும் அவன் வேறு யாருமல்ல- திராவிடன் தான் என்று வரலாற்றுப் பேராசிரியர்கள் கூறியுள்ளனர்.

இந்தக் கதையிலும்கூட அசுரன் கேவலமான தாகத்தான் படைக்கப் பட்டு இருப்பதைக் கவனிக் கத் தவறக் கூடாது; இந்தக் கதையும் சற்றும் அறிவுக் குப் பொருந்துகிறதா என் பதையும் ஆன்மிக சிரோன் மணிகள் சிந்திக்கட்டும்!

Read more: http://viduthalai.in/e-paper/84892.html#ixzz38udceXyF

தமிழ் ஓவியா said...


பிஜேபியின் 60 நாட்கள்


மத்தியில் பி.ஜே.பி. தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நரேந்திர மோடி தலைமையில் பொறுப்பேற்று 60 நாட்கள் பறந்தோடின.

இந்த 60 நாட்களில் இந்த ஆட்சியின் சாதனைகள் என்ன? வேதனைகள் யாவை? என்ற விமர்சனங்கள் நாட்டில் ஆங்காங்கே நடந்து கொண்டு தானிருக் கின்றன.

எடுத்த எடுப்பிலேயே சொல்ல வேண்டும் என்றால் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நகல் என்று பெரு வாரியான மதிப்பீடுகள் கூறுகின்றன.

2014-2015 ஆம் ஆண்டுக்கான நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நிதி நிலை அறிக்கையைப்பற்றிக் கூறும் பொழுது, முந்தைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் குரல் ஒலித்ததாகவும் பரவலாகப் பேசப்பட்டது.

பொருளாதாரக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை இரண்டிலும் காங்கிரசும், பி.ஜே.பி.யும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதும் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டு விட்டது.

எடுத்துக்காட்டாக, ஆயுள் காப்பீட்டுத் துறை, இராணுவத் துறைகளில் அந்நிய முதலீடு 49 சதவிகிதத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டது.

பெட்ரோல், டீசல் விலையை அவற்றின் உரிமையா ளர்கள் கச்சாப் பொருள் விலையின் அடிப்படையில் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டு விட்டது. (பி.ஜே.பி. எதிர்க்கட்சியாக இருந்தபோது எப்படியெல் லாம் இதனை எதிர்த்து எகிறிப் பாய்ந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே)

கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தைவிட விலைவாசி ஏற்றம் வானத்தை எட்டி விட்டது கறுப்புப் பணத்தைக் கொண்டு வரப் போகிறோம் என்று சவடால் விட்டவர்கள் சவுத்துப் போய் விட்டனர். டாலர் மதிப்பு ரூ.50லிருந்து 60 ரூபாயைத் தாண்டி விட்டது.

வெளிநாட்டுக் கொள்கையை எடுத்துக் கொண் டாலும் ஈழத் தமிழர் பிரச்சினையில் மோடி அரசு மேற்கொள்ளும் அணுகுமுறை ஒன்றே போதுமானது.

கச்சத் தீவு தொடர்பான வழக்கில் மேனாள் காங்கிரஸ் அரசு கொடுத்த அதே பிரமாணப் பத்திரத்தில் அரைப் புள்ளி வித்தியாசம் கூட இன்றிச் சமர்ப்பித்ததை நாடே பார்த்து கை கொட்டிச் சிரித்தது.

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்வது, படகுகளைப் பறி முதல் செய்வது என்பது அதிக அளவில் கிட்டத்தட்ட அன்றாடமே நடை பெற்றுக் கொண்டிருக்கிறது; இதிலும் எந்தவித மாற்றமும் இல்லை.

எல்லாவற்றையும் விடக் கொடுமை - அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு, இந்தியாவில் விசாரணை நடத்த அனுமதியில்லை என்று கூறுவது எவ்வளவுப் பெரிய கொடுமை!

அய்.நா.வின் பொதுச் செயலாளர் பான் கீ முன் அவர்களால் நியமிக்கப்பட்ட மூவர் குழுவை அனுமதிக்க மறுத்த ராஜபக்சேவுக்கும், அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தால் நியமிக்கப்பட்ட மூவர் குழுவை அனுமதிக்க மறுக்கும் நரேந்திர மோடிக்கும் அடிப்படையில் என்ன வேறுபாடு?

இலங்கை அதிபருக்கு இந்தியா சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுத்தது என்பதற்காக அன்றைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆர். வெங்கட்ராமன் அவர்களை நோக்கி முதுகெலும்பு இல்லாத மனிதர் என்று நாடாளுமன்றத்தில் முழங்கினார் மதிப்புக்குரிய வைகோ அவர்கள்.

அதே நிலைதானே இன்றும்; வைகோ அவர்கள் வேண்டுமானால் அதே வார்த்தைகளைப் பயன்படுத்த இன்றைக்குத் தயங்கலாம் - ஆனால் அடிப்படை ஒன்றே!

பிஜேபி ஆட்சி மத்தியில் அமைய வேண்டும் என்று ஊசி முனையில் தவமிருந்து ஓங்கி ஒலித்த தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் இன்றைக்கு மக்கள் மத்தியில் தோன்ற முடியாத ஒரு நிலையை உருவாக் கிய சாதனையின் பெருமை மோடி தலைமையிலான இன்றைய மத்திய ஆட்சிக்கு உண்டு.

தேர்தல் அறிக்கையில் பிஜேபி வெளியிட்டிருந்த ஆர்.எஸ்.எஸின் இந்துத்துவா கொள்கை தொடர்பான திட்டங்களைக் கையில் வைத்துக் கொண்டு, ஒவ்வொன்றாக சிவப்பு மையால் கோடு கிழித்துக் கொண்டு செயல்படத் துடித்துக் கொண்டு இருக்கிறது. அதில் ஒன்றுதான் சமஸ்கிருத வாரம் கொண்டாடச் சொல்லுவதாகும்.

இந்தியாவின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு என்பது சமஸ்கிருதத்தை இந்தியாவின் ஆட்சி மொழி ஆக்குவதே என்று ஆர்.எஸ்.எஸின் குரு நாதரான எம்.எஸ். கோல்வாக்கர் ஆர்.எஸ்.எஸின் வேதப் புத்தகமான ஞான கங்கையில் குறிப்பிட்டுள்ளதுதான் அவர்களின் வேத வாக்கு.

இந்தியாவின் பிற பகுதிகளில் இதுபற்றிப் போதிய எதிர் விளைவுகள் ஏற்படாமல் இருக்கலாம். தமிழ்நாட்டில் மட்டும் அது வேகாது; இன்னும் சொல்லப் போனால், தமிழ்நாடு கொடுக்கும் முழக்கம் இதுவரை உணர்ச்சி பெறாத மாநிலங்களில்கூட புத்தெழுச்சியைத் தட்டி எழுப்பும்.

பிஜேபி ஆட்சியைத் தலையில் வைத்துக் கரகாட்டம் ஆடும் ஒரு தனியார்த் தொலைக்காட்சி வெளியிட்ட கருத்துக் கணிப்பில்கூட இன்றைய பிஜேபி அரசுக்கு எதிராக 62 விழுக்காட்டினர் கருத்துத் தெரிவித்துள்ளதாக ஒளிபரப்பியது.

60 நாட்களுக் குள்ளேயே 62 சதவீத எதிர்ப்பு என்றால் சொச்ச காலத்தில்?

Read more: http://viduthalai.in/page-2/84894.html#ixzz38udtq0bS

தமிழ் ஓவியா said...


தொல்லைவரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப்படுபவர்கள் நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பவர்கள்.
(குடிஅரசு, 19.9.1937)

Read more: http://viduthalai.in/page-2/84893.html#ixzz38ue3o7aL

தமிழ் ஓவியா said...

கடலூரில் காலிகளால் தந்தை பெரியாரின்மீது செருப்பு, பாம்பு வீசப்பட்ட நாள்

இந்நாள் :

கடலூரில் காலிகளால் தந்தை பெரியாரின்மீது செருப்பு, பாம்பு வீசப்பட்ட நாள்

13.8.1972இல் கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் தந்தை பெரியார் திருவருவச் சிலை திறப்பு விழா மேலவைத் தலைவர் சி.பி. சிற்றரசு அவர்கள் தலைமையில் நடந்தது. தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் அய்யா சிலையைத் திறந்து வைத்தார்கள். விழாவில் அமைச்சர்கள் ப.உ. சண்முகம், எஸ். இராமச்சந்திரன், பரூக் மரைக்காயர் உள்ளிட்டோரும் அன்பில் தர்மலிங்கம், முன்னாள் எம்.பி.யும் சென்னை மாநில கூட்டுறவு வங்கியின் மேனாள் தலைவருமான ஆர். கனகசபை, எம். செல்வராஜ், (தென்னார்க்காடு மாவட்ட தி.மு.க. செயலாளர்), சிதம்பரம் பிரபல டாக்டர் கே. அரங்கசாமி எம்.பி.பி.எஸ். (முன்னாள் எம்.பி.) வி.வி. சாமிநாதன், ஆர்.கோவிந்தராசன் எம்.எல்.ஏ., ஆர். சுப்பிரமணியம், (கடலூர் நகராட்சி தலைவர்) உள்ளிட்ட ஏராளமான பொது மக்களும் கலந்துகொண்டனர். விழாவில் நான் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினேன்.

தந்தைபெரியார் அவர்களின் சிலை திறப்பு விழா கடலூரில் ஒரு மாபெரும் இன எழுச்சி விழாவாக நடைபெற்றது. சிலை திறந்து வைத்து தமிழக முதல்வர் கலைஞர் அவர்களும் பிற தோழர்களும், அமைச்சர் பெரு மக்களும் ஆற்றிய பாராட்டுரைகள் பகுத்தறிவு முழக்கங்களாக அமைந்தன. முன்னதாகவே கடலூர் நகராட்சி வரவேற்பளித்து மகிழ்ந்தது.

விழாவிற்கு அய்யா அவர்களும் நாங்களும் சிலை அமைப்புக் குழு பொருளாளரும் வழக்குரைஞருமான எஸ். ஜனார்த்தனம் அவர்களின் (பிறகு இவர் மாவட்ட நீதிபதியாகி, உயர்நீதி மன்ற நீதிபதியாகி ஜஸ்டீஸ் எஸ். ஜனார்த்தனம் ஆகி, ஓய்வு பெற்ற பின்பும் மாநில நுகர்வோர் நீதிமன்றத் தலைவர் ஆகவும், பிற்படுத்தப் பட்டோர் நலக் கமிஷனராகவும் நியமிக்கப்பட்டவர்) இல்லத்தில் தங்கி இருந்த அய்யா அவர்களை கழகத் தோழர்களும், பிரமுகர்களும் குடும்பங் குடும்பமாக வருகை தந்து சந்தித்து, தங்கள் வணக்கங்களையும், நன்றியையும் தெரிவித்துச் சென்ற வண்ணமாக இருந் தனர். விழாவையொட்டி நகரமெங்கும் ஆங்காங்கே வரவேற்பு வளைவுகளும் பந்தல்களும் கலை வண்ணம் குலுங்க காட்சி அளித்தன. கழகக் கொடிகள் எங்கு நோக்கினும் காற்றில் அசைந்தாடி அனைவருக்கும் நல்வரவேற்பு அளிப்பதுபோல இருந்தன.

தமிழ் ஓவியா said...

விழா சார்பாக மாலை 6.45 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட முத்துப் பல்லக்கில் திருப்பாதிரிப்புலியூரிலிருந்து இலட்சக் கணக்கான தமிழ் மறவர்கள் சூழ அய்யா அவர்கள், மேளவாத்தியம் கொட்டு முழக்கத்துடன் முடி சூடாமன்னராகப் பவனி வந்தார்கள். சாலையின் இரு மருங்கிலும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கூடி நின்று மலர் மாலைகள் அணிவித்து, அன்பளிப்பாக பழங்களும், ரூபாய் நோட்டுகளும் வழங்கி, தங்களை வாழ வைத்த தானைத் தலைவருக்குத் தன் நன்றிக் காணிக்கையைத் தெரிவித்துக் கொண்டனர்.

பல்லக்கில் துவக்கத்தில் தந்தை பெரியார் அவர்களும் பவனி வந்தார்கள். முதல்வர் கலைஞர் அவர்கள் தந்தை பெரியார் அவர்களுடன் ஊர்வலத்தில் பல்லக்கில் அமர்ந்து வர மிகவும் கூச்சப் பட்டு எங்கேயிருக்கிறார் என்று எவருக் கும் சொல்லாமலேயே தேவனாம் பட்டினம் கடற்கரை அருகில் இருந்த ஈ அய்.டி. பாரி நிறுவன பங்களாவுக்கு சென்று விட்டார். ஊர்வலத்தில் தந்தை யும் தனயர்களும் அமர்ந்து வரும் கண் கொள்ளாக் காட்சியைக் கடலூர் மக்கள், தந்தைபெரியார்மீது செருப்பு வீசியவர் கள், அய்யாவின் கொள்கை வெற்றியைக் கண்டு பூரிக்க வேண்டும் என்று திட்ட மிட்டிருந்தோம்.

அய்யாவை மட்டும் அமர வைத்து திருப்பாதிரிப்புலியூரில் ஊர்வலத்தை துவக்கி வைத்துவிட்டு, காரை எடுக்கச் சொல்லி, கலைஞர் சென்ற தேவனாம் பட்டினம் பங்களாவை அடைந்தேன். முதல்வர் கலைஞருக்கும் அமைச்சர் களுக்கும் இது அதிர்ச்சி! அவர்கள் ஊர்வலத்தில் வந்தே ஆக வேண்டும் என்று உரிமையெடுத்துக் கொண்டு வற்புறுத்தினேன். வேறு வழியின்றி, ஒப்புக் கொண்டு காரை எடுத்துக் கொண்டு ஊர்வலம் நோக்கி முதல்வருடன் நானும் அமைச்சர்களும் வந்தோம்!

உங்களுடன் எப்போது போட்டி யிட்டாலும் வீரமணி வென்று விடுகிறார் என்று அமைச்சர் ப.உ. சண்முகம் உட்பட அனைவரும் வேடிக்கையாகக் கூற, முதல்வர் கலைஞர், அவர் பிடிவாதமாக எதையும் சாதித்தே தீருவார் என்று கூறி ரயில்வே கேட் அருகில் ஊர்வலம் வரும்போது முதல்வரை பல்லக்கில் ஏற்றி அமர வைத்தோம்.

ஜாதியை ஒழிக்க வந்த செம்மல் பெரியார் வாழ்க! இனக்காவலர் பெரியார் வாழ்க! சிந்தனை சிற்பி பெரியார் வாழ்க! என்ற ஒலி முழக்கங்கள் ஊர் வலம் முடிவுவரை கேட்டுக் கொண்டி ருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஊர்வலம் லாரன்ஸ் ரோட்டில் (திருப்பாதிரிபுலியூர் கடைத் தெரு) வந்து கொண்டிருக்கையில் முதல்வர் கலைஞர் அவர்களும், உணவுத்துறை அமைச்சர் ப.உ. சண்முகம் அவர்களும், போக்கு வரத்துத் துறை அமைச்சர் எஸ். இராமச்சந்திரன், அன்பில் தர்மலிங்கம் ஆகியோர் பல்லக்கிற்கு வந்து தந்தை பெரியார் அவர்களுடன் ஊர்வலத்தில் அமர்ந்து கொண்டார்கள். இந்தக் காணற்கரிய காட்சியைக் கண்ட தமிழர் இனம் அப்படியே உணர்ச்சி எல் லையின் உருவமாகி விட்டது! உணர்ச்சி வயப்பட்ட மக்கள் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த இயலாத ஒன்றாகி விட்டது. பெரியார் வாழ்க என்ற ஒலி முழக்கத்துடன், தஞ்சை கலைஞர்களின் அதிர்வேட்டுச் சத்தம் விண்ணையும் பிளக்கச் செய்தது. இந்த இடத்தில் மேலவைத் தலைவர் சிந்தனைச் சிற்பி சி.பி. சிற்றரசு அவர்கள் அய்யா அவர் களுடன் அலங்கார பல்லக்கில் அமர்ந்து கொண்டார்கள். மக்கள் சமுத்திரத்தின் ஒட்டு மொத்த வாழ்த்து முழக்கம் ஒலித்துக் கொண்டே இருந்தது.

அதற்கு முன்பு அங்கே அய்யா அவர்களுக்கும் அமைச்சர் பெரு மக்களுக்கும் எனக்கும் நகராட்சி மன்றத்தின் சார்பாக வரவேற்பு இதழ்கள் படித்தளிக்கப்பட்டன. அய்யா அவர்களும், கலைஞர் அவர்களும் வரவேற்புக்கு நன்றி தெரிவித்து உரை யாற்றினார்கள்.

Read more: http://viduthalai.in/page-2/84895.html#ixzz38ueHYmcB

தமிழ் ஓவியா said...


எப்பொழுதும் தொடரும் சமூகநீதிக் குடும்ப உணர்வு

நீதியரசர் பி.எஸ்.ஏ.சுவாமி ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் சமூகநீதியின் நடைமுறைக்குப் பங்களித்த முக்கியமான தலைவர் ஆவார். சமூகநீதிக்கான உந்துதல் உணர்வினை பெரியார் இயக்கத்திலிருந்தும், இயக்கத்தின் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களிடமிருந்தும் பெறுவதாக அடிக்கடி, கூட்ட மேடைகளில் வெளிப் படுத்தியவர்.

சமூகநீதி சார்ந்த பொது நிகழ்ச்சிகள் அய்தராபாத் நகரில் நடைபெறும் பொழுது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை தமது சொந்த விருந்தினராகக் கருதி அன்பினைப் பொழிந்தவர். தமிழர் தலைவரை விடுதியில் தங்கிட அனுமதிக்கமாட்டார்கள். தமது வீட்டிலேயே தங்க வைத்து, உணவு அளித்து ஒரு குடும்ப உணர்வோடு, கொள்கை உணர்வோடு வாழ்ந்தவர்.

நீதியரசர் மறைந்த பின்னரும், அவர்தம் பெயரால் அமைந்த கல்வி அறக் கட்டளை நிகழ்ச்சிகளில் பங்கேற்றிட தமிழர் தலைவர் அய்தராபாத் நகருக்குச் செல்லும் பொழுதெல்லாம் நீதி யரசரின் குடும்பத்தாரும் அதே வழக்கத்தை - வீட்டிலேயே தங்க வைத்து நிகழ்ச்சியில் பங்கேற்றபின் வழி அனுப்பிடும் வழக்கத்தினை தொடர்ந்து வருகின்றனர்.

தமிழர் தலைவருடன் செல்லும் பிற தோழர்களும், நீதிபதி சுவாமி குடும்பத்தார்களின் விருந்தோம்பில் திளைத்திடுவர். சுவாமி அவர்களின் துணைவியார் ஜெயலட்சுமி அம்மையார், மகள் சவீதாகுமாரி, மருமகன் சுதாகர் மற்றும் பேரப்பிள்ளைகள் அனைவரும் தமிழர் தலைவரின் வருகையை சொந்தக் குடும்பத்தவர் வருகையாகவே கருதிடும் வழக்கம் இந்த முறை சென்றபொழுதும் தொடர்ந்தது.

நீதியரசர் சுவாமி அவர்களின் சமூகநீதிக் கொள்கை உணர்வு, குடும்ப உணர்வாகவே தொடர்வது மிகவும் பாராட்டுதலுக்குரியது; அனைவரும் போற்றத்தக்கது.

Read more: http://viduthalai.in/page-8/84885.html#ixzz38ufxwonY

தமிழ் ஓவியா said...


ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்வதில் காங்கிரஸ் ஆட்சியை விஞ்சிய பி.ஜே.பி. அரசை எதிர்த்து ஒன்றுபட்டுப் போராடுவோம் வாரீர்!


ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்வதில் காங்கிரஸ் ஆட்சியை விஞ்சிய பி.ஜே.பி. அரசை எதிர்த்து

ஒன்றுபட்டுப் போராடுவோம் வாரீர்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அழைப்பு!

சலுகைகள் ஆயிரம் இருந்தும் அரசுப் பள்ளிகளின் செல்வாக்குக் குறைவானேன்? மூடப்படும் நிலை ஏற்பட்டது ஏன்? - கி. வீரமணி

ஈழத் தமிழர் பிரச்சினையில், ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்வதில் காங்கிரசை விஞ்சியதாகச் செயல்படும் இன்றைய பி.ஜே.பி. அரசை எதிர்த்துப் போராட அழைப்புக் கொடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:

இலங்கையில் நடைபெற்ற தமிழ்ப் பத்திரிகையாளர் பயிலரங்கம் - சிங்கள இனவெறியர்களின் அத்துமீறிய செயல்பாட்டால் தடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இலங் கைத் தீவில் கருத்துரிமைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தினை, நெருக்கடியை அமெரிக்கா கண்டித்துள்ளது - இந்தியா வழக்கம்போல் குறட்டை விடுகிறது.

சிங்கப்பூரில் பி.ஜே.பி. பொறுப்பாளர் சேஷாத்திரி சாரியின் கருத்து

சிங்கப்பூரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பி.ஜே.பி. யின் வெளிவிவகாரக் கொள்கையின் தேசிய அமைப் பாளர் சேஷாத்திரி சாரி என்பவர் பேசியுள்ளார்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை தமிழ்நாடு, மேற்குவங்காளம் மாநிலங்களைக் கருதி தீர்மானிக்க முடியாது என்று பேசியிருக்கிறார்.

சு.சாமி வகையறாக்கள்

சுப்பிரமணியசாமி தலைமையில் ஆன குழு இலங்கைக்கு சென்று மகிந்த ராஜபக்சேவை சந்தித்து விட்டுத் திரும்பியது. இலங்கையில் நடந்த பத்திரிகையாளர் குழுவி லேயே இலங்கையில் நடந்தது போர்க்குற்றமல்ல; மேலும் இலங்கையில் வாழும் தமிழர்கள் அவர்கள் சிக்கல் களை அவர்களாகவே பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டும் என் றும் சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அஞ்சத் தேவையில்லை என்றும் சுப்பிரமணியசாமி, பேட்டியளித்திருந்தார். பத்திரிகையாளர்களுக்கு நேற்று (29.7.2014) பேட்டி யளித்த முன்னாள் இணையமைச்சர் (வாஜ்பேயி ஆட்சிக் காலத்தில்) சுரேஸ் பிரபு கூறியதாவது, இலங்கை நமது நட்பு நாடு, வர்த்தகம் மாத்திரமல்ல; நமது பழம்பெரும் கலாச்சார உறவு கொண்ட நாடு, இலங்கையில் நடக்கும் எந்த ஒரு பாதிப்பும் நேரடியாக இந்தியாவையும் பாதிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! இந்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளாக இனவாதக்குழுக்கள் தோன்றி இலங்கையில் பெரிய அளவில் வன்முறையை நிகழ்த்தியுள்ளன.

தற்போது அங்கு அமைதி திரும்பியுள்ளது. அந்த நாட்டின் வர்த்தகம் மற்றும் உள்நாட்டுக்கட்டமைப்பின் வளர்ச்சிக்கு இந்தியா பெரிதும் துணை நிற்கும், அதேவேளையில் தமிழ் நாட்டில் சில அரசியல் அமைப்புகளும் இயக்கங்களும் இனவாதக் குழுக்களுக்கு துணைபோகும் நிலையில் உள்ளது. வாக்கு அரசியலுக்காக இலங்கைப் பிரச்சினையை இன்றளவும் தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் கைகளில் ஏந்திக் கொண்டு தீர்க்கமான முடிவெடுப்பதற்கு தடையாக இருக் கிறது. இதற்கு முன்பு இருந்த அரசு திராவிடக்கட்சிகளின் அழுத்தத்திற்கு ஈடு கொடுத்து மென்மையான நட வடிக்கை எடுத்து வந்தது.

தற்போது நரேந்திரமோடி தலைமையில் ஆன அரசு இலங்கை பிரச்சினையை தீர்ப்பதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். இலங்கையின் எந்த ஒரு நடவடிக்கையும் இந்தி யாவிற்கு நன்மை தருவதாக இருக்கும் பட்சத்தில் முழு மையான ஆதரவு அளிக்கும், இதற்கான உத்திரவாதத்தை நரேந்திரமோடி ஆட்சியேற்ற போது டில்லி வந்த மகிந்த ராஜபக்சேவிடமும், அதனைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் ஆன குழுவிடமும் நாங்கள் உறுதியாகக் கூறியுள்ளோம். தற்போது இலங்கையின் வளர்ச்சிக்காக பல்வேறு நட வடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். முக்கியமாக இந்திய தொழில் முனைவோர்கள் இலங்கையில் சென்று தொழில் தொடங்க முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசியல் கட்சிகளின் ஓட்டு வங்கிக்காக அவர்கள் கொடுக்கும் அழுத்தங்களுக்கு நாங் கள் பலியாக மாட்டோம், எங்களுக்குத் தேவை இலங்கை யில் வளர்ச்சி அதற்குத்தான் முக்கியத்துவம் தருவோம்.

தமிழ் ஓவியா said...


விரைவில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அவர்கள் இலங்கை சென்று பல்வேறு முடிவு களை அறிவிப்பார் என்றும் ராஜபக்சேவின் உடன்பிறவா சகோதரராகப் பேட்டியளித்துள்ளார்.

இதற்கிடையே நேற்று வெளிவந்த ஒரு தகவல்:

ஆகஸ்டு 18 முதல் 20 முடிய மூன்று நாள்கள் இலங்கை யில் நடைபெறவுள்ள இராணுவக் கருத்தரங்கில் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற் பார்களாம்!

இந்தக் கருத்தரங்கின் நோக்கம் இலங்கைக்கு அதன் நட்பு நாடுகள் பாதுகாப்பு ஒத்துழைப்பை எந்த அளவுக்கு வழங்குவது என்பதை முடிவு செய்வதற்காகவாம். அய்.நா. மனித உரிமை ஆணையம் இலங்கையில் நடந்துள்ள போர்க் குற்றங்களை விசாரிக்க ஒரு குழுவை நியமித்து, அது விசாரணையைத் தொடங்கும் இந்தக் காலகட்டத்தில், இலங்கையில் இந்தக் கருத்தரங்கம் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.

இராணுவ அதிகாரிகள் குழுவோடு பி.ஜே.பி. சார்பில் சுப்பிரமணியசாமி, தலைமையில் ஒரு குழுவும் செல்லு கிறதாம். (தொடக்கமுதல் ஈழப் பிரச்சினையில் எவ்வளவுப் பெரிய ஜாதி வெறியராக இவர் நடந்துகொண்டு வந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே!)

ஈழத் தமிழர் படுகொலை தொடர்பாக அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தால் நியமிக்கப்பட்ட மூவர் குழு விசாரணையை இந்தியாவில் நடத்துவதற்கு அனுமதி யில்லை என்று பி.ஜே.பி. அரசு ஏற்கெனவே அறிவித்து விட்டது.

காங்கிரஸ் பரவாயில்லை!

நிலைமைகளைப் பார்க்கும்பொழுது, முந்தைய காங்கிரஸ் ஆட்சி பல மடங்கு மேலானது என்று நினைக்கக் கூடிய வகையில், கொடுங்கோலன் ராஜபக்சேவுக்குத் தங்கக் காப்பு அணிவித்து - மிச்ச சொச்சம் இருக்கும் ஈழத் தமிழர்களையும் கூண்டோடு ஒழித்திட ஆணையிடுங்கள், செய்து முடிக்கிறோம் என்று ராஜபக்சேவிடம் மனு போடும் ஒரு நிலையை பி.ஜே.பி. அரசு எடுத்திருக்கிறதோ என்று கருத ஏராள இடம் இருக்கிறது.

இந்தப் பி.ஜே.பி.தான் மத்தியில் ஆட்சிப் பீடத்தில் அமரவேண்டும்; மோடி வந்தால் ஈழப் பிரச்சினையில் முழு வெற்றி தமிழர்களுக்குக் கிடைக்கும் என்று பீரங்கி முழக்கம் செய்த தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் உப்புக் கண்டம் பறிகொடுத்த பழைய பார்ப்பனத்தியைப் போல விழி பிதுங்கிய நிலையில், விண்ணப்பங்களைப் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் முகத்தில் எப்படி விழிக்கப் போகிறார்கள் என்றும் தெரியவில்லை.

தவறு செய்த அந்தத் தோழர்கள், வெட்கத்தை மறந்து விட்டு, வீதிக்கு வந்து போராட முன்வரவேண்டும். ஒட்டு மொத்த தமிழர்களும் கட்சிக் கோடுகளைத் தாண்டி ஒன்று பட்டு எழுந்தால்தான் இன்றைய பி.ஜே.பி. முரட்டுக் காளையை அடக்க முடியும்!

தமிழா இன உணர்வு கொள்!

தமிழா தமிழனாக இரு!

ஒன்றுபடுவோம் - வென்றுவிடுவோம்!

என்ற முழக்கத்தை மீண்டும் எழுப்புகிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்சென்னை

30.7.2014

Read more: http://viduthalai.in/e-paper/84944.html#ixzz390YZuqy1

தமிழ் ஓவியா said...


குலத் தொழிலுக்குத் தலைமுழுக்கிடுக!எப்பாடு பட்டாவது மக்களைப் படிக்க வைத்து வசதி செய்து கொடுத்துத் தகப்பன் வேலையைவிட்டு, ஜாதி வேலையைவிட்டு, வேறு வேலைக்கு அனுப்பவேண்டும். எந்தத் தலைமுறையும் தன் ஜாதி வேலைக்கே வராமல் செய்வதுதான் முக்கிய கடமையாகும்..

_ (விடுதலை, 9.5.1961)

Read more: http://viduthalai.in/page-2/84950.html#ixzz390Zgm34Y

தமிழ் ஓவியா said...

கோசாலைக்கு 500 கோடி ரூபாயா?கோசாலைக்காக 500 கோடி ரூபாயை மத்திய பி.ஜே.பி. அரசு ஒதுக்கியுள்ளது. தேர்தல் அறிக்கை யிலே பசு பாதுகாப்புப்பற்றிக் கூறப்பட்டு இருந்தது. இந்துத்துவாவின் முக்கியமான கோட்பாட்டில் கோமாதாவுக்கு முக்கிய இடம் உண்டு அல்லவா!

பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் பசுவதைத் தடுப்புச் சட்டம் அமலில் உள்ளது.

காளை மாட்டைக் கொல்லலாம்; உண்ணலாம்; அதேநேரத்தில் பசுக்கறியைச் சாப்பிடக் கூடாது என்று சொல்லுவதற்கு இவர்கள் யார்?

உணவுப் பிரச்சினை என்பது தனி மனிதன் பழக்க வழக்கம் - அதில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது.

உலக முழுவதும் அனுமதிக்கப்பட்டது மாட்டுக்கறி! இன்னும் சொல்லப்போனால், உலகெங்கும் அதிக மக்களால் உணவுக்குப் பயன்படுத்தப்படுவது மாட்டுக் கறியே! உலகில் மலிவான சத்துணவு இதுவே!

இன்னொரு கேள்வியும் உண்டு. இந்துத்துவா கோட்பாட்டின் அடிப்படையில், பசுவைப் பாதுகாக்கப் புறப்பட்டுள்ளார்களே - அவர்களின் முன்னோர்கள் ஆரியர்கள் - பார்ப்பனர்கள் பசு மாமிசம் உண்ணாத வர்களா? எத்தனையோ எடுத்துக்காட்டுகளை அலை அலையாக அள்ளிக் கொட்ட முடியுமே!

இவர்களின் முக்கிய இதிகாசமான மகாபாரதத்தி லேயே இதற்கு ஆதாரம் உண்டே!
துரோணபருவமும் (67-1-2) சாந்தி பருவமும் (27-28) என்ன கூறுகின்றன?

அரசர்களின் மாளிகைகளில் பார்ப்பனர்களுக்கு விருந்து படைப்பதற்கென்றே 2000 சமையற்காரர்கள் இருக்கின்றனர். நாளொன்றுக்கு 2000 பசுக்கள் வீதம் கொல்லப்பட்டன.

பசு மாமிச ருசியில் மந்தை மந்தையாக பார்ப் பனர்கள் வந்ததால் சமாளிக்க முடியாமல் போய் விட்டதால், அவர்களைப் பார்த்து சமையற்காரர்கள் மாமிசம் குறைவாக இருப்பதால், தயவு செய்து சூப்பை அதிகமாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற நிலை ஏற்பட்டதாக மகாபாரதம் கூறுகிறதே!

ஸ்மிருதிகளுள் மிக முக்கியமாகப் பார்ப்பனர்கள் மதிக்கும் மனுதர்ம சாஸ்திரம் என்ன கூறுகிறது?

உலகத்தில் என்னென்ன உள்ளதோ அவை யாவும் பிரஜாபதியால் (உற்பத்திக் கடவுள்) ஜீவன்களுக்கு உணவுக்காகப் படைக்கப்பட்டவையேயாகும்; அவரது கட்டளைக்குட்பட்டதாகும். நடமாடுவனவும், நடமாட் டமல்லாது அசைவற்றிருப்பனவுமான எல்லாமுமே ஜீவப் பிராணிகளுக்கு உணவானவையே!
ஒருவன் ஒரு மிருகத்தை உண்ணும்போது அது தனக்குரிய உணவாகக் கருதுவானாகில் அவன் பாவம் செய்தவன் ஆகான். சில பிராணிகள் உண்பனவாக வும், மற்றவை அவற்றுக்கு உணவாகவும் இருப்பதே படைப்பின் தன்மை என்கிறது மனுதர்மம்.

பிதுர்க்களுக்கு (இறந்துபோன முன்னோர்களுக்கு) சிரார்த்தம் செய்து, பிண்டம் போடுவதற்கான பொருள்களின் தார தம்மிய அம்சங்களைப்பற்றி மனுதர்மம் என்ன கூறுகிறது தெரியுமா?

காலஞ்சென்ற பிதுர்க்கள் ஓராண்டுவரை பசு மாமிசம், பால் இவற்றைக் கொண்டு அல்லது பாற் பொங்கலைக் கொண்டு திருப்தி அடைகின்றார்கள் என்று கூறப்பட்டுள்ளதே!

கோமாதா கோமாதா என்று கூக்குரலிடுகிறார்களே, இந்தப் பாரதப் புண்ணிய பூமியில் தெய்வாம்சமாக நடமாடும்(?) பசுக்கள் கொடுக்கும் பாலின் அளவு என்ன? பசுவைக் கோமாதாவாகப் பூஜிக்காத வெளி நாட்டுப் பசுக்கள் கொடுக்கும் பாலின் அளவு என்ன?

அமெரிக்கா 77.26 கிலோ, கனடா 69 கிலோ, நெதர்லாந்து 63.10 கிலோ, தெ.ஆப்பிரிக்கா 62.79 கிலோ, ஸ்பெயின் 61.82 கிலோ, ஜெர்மனி 67.17 கிலோ, டென்மார்க் 55.18 கிலோ, பிரிட்டன் 52.50 கிலோ, பிரான்சு 52.16 கிலோ, சுவீடன் 49.69 கிலோ, இத்தாலி 49.40 கிலோ, இஸ்ரேல் 44.46 கிலோ; பசு ஒன்று நாள் ஒன்றுக்குக் கொடுக்கிறது; இந்தியப் பசு சராசரியாக கொடுக்கும் பாலின் அளவோ வெறும் 2.29 கிலோதான்.

தமிழ் ஓவியா said...

இந்த இந்துத்துவாவாதிகள் கொண்டாடும் கோமா தாவின் தகுதி இவ்வளவுதான்.

இதில் ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காக வெளிநாடுகளிலிருந்து பொலி காளைகளைக் கொண்டு வந்து, அவற்றின்மூலம் இந்தியக் கோமாதாவின் வயிற்றில் கருத்தரிக்கச் செய்து, அதன்மூலம் அதிக பால் கிடைக்கச் செய்ய சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் ஓரளவுக்கு வெற்றியும் கிடைத்து வருகிறது.

நம் கோமாதாவை மிலேச்ச நாட்டுக் காளைகள் சினையாக்குவதுபற்றி என்ன கருத்து இவர்களுக்கு?

பயன்பாடு என்று எடுத்துக்கொண்டால்கூட, பசுவை விட எருமை அதிக பால் கொடுக்கிறது. இந்து மதத்தவர் களின் கண்களில் எருமை மட்டம் - பசு உசத்தியோ!

விவசாய நிலங்கள் அருகிவரும் காலகட்டத்தில் மாமிச உணவு என்பதுதான் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியதாகவும் இருக்க முடியும் என்பதுதான் தந்தை பெரியார் அவர்களின் கருத்தாகும்.

பார்ப்பனர்கள் சைவம் பேசியதெல்லாம் கவுதமப் புத்தர் பார்ப்பனர்களின் யாகக் கலாச்சாரத்தை எதிர்த்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்த பிறகே - மாற்றத் திற்கு ஆளானார்கள் என்பதுதான் உண்மை வரலாறு.

கோஸவம் - பசு மாடு, காளை மாடு இவைகளைக் கொல்லும் யாகம்,

அஷ்டதச பசுவிதானம் - பதினெட்டுப் பசுக்களைக் கொன்று நடத்தும் யாகம்! ஏன், மனிதர்களைக் கொன்று கூட யாகம் நடத்தியவர்கள் இந்த ஆரியப் பார்ப்பனர் கள் - அந்த யாகத்தின் பெயர்; புருஷ யஜ்ஞ என்பதாகும்.

இத்தகையவர்கள்தான் கோமாதாக்களைக் காப் பாற்றப் போகிறார்களாம்.

Read more: http://viduthalai.in/page-2/84951.html#ixzz390ZvahkD

தமிழ் ஓவியா said...


விவேகானந்தர் பார்வையில் சமஸ்கிருதம்


சுவாமி விவேகானந்தர், மதச் சண்டைகளும், சாதி வேற்றுமைக் கலகங்களும் பல்குதற்கு ஒரு பெருங் கருவியாய் இருந்ததும் - இருப்பதும் சமஸ்கிருத மொழியேயாகும் என்றும், சமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்து போகுமானால், இப் போராட்டங்களும் தொலைந்து போகுமென்று வருந்திக் கூறினார்.

(- மறைமலை அடிகள், தமிழர் மதம் நூலில் - பக்கம் 24)

இந்து மதத்தை அமெரிக்காவரை சென்று பரப்பிய விவேகானந்தரே சமஸ்கிருதம் பற்றி இவ் வாறு கூறியுள்ளார்! ஆகஸ்டு முதல் தேதி ஆர்ப் பாட்டம் ஆவேசமாய் நடக்கட்டும்! நடக்கட்டும்!!

Read more: http://viduthalai.in/e-paper/85011.html#ixzz396JypgpJ

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?

பிரசவம்

இன்று ஆடிப்பூரம் விழாவாம் - அம்பாளுக்கு வளைகாப்பாம்!

ஒரு கேள்வி: வளைகாப்பு நடந்தால் பிரசவம் (டெலிவரி எப்பொழுது என்ற கேள்வி எழாதா?)

Read more: http://viduthalai.in/e-paper/85016.html#ixzz396K7wdXG

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்கள்


நம்நாட்டில் பார்ப்பானுக்கு வேலை கொடுப்பது ஆட்டுப் பட்டிக்கு நரியைக் காவலுக்கு வைப்பதுபோல் தான் ஆகும். குற்றப் பரம்பரையை எப்படி நடத்துகிறோமோ அப்படி நடத்தப் படவே வேண்டியவர் களாவார்கள் இந்தப் பார்ப்பனர்கள்.
(விடுதலை, 12.11.1960)

Read more: http://viduthalai.in/page-2/85017.html#ixzz396KJzJwU

தமிழ் ஓவியா said...


80 வயது கடந்த ஓய்வூதியர்களும் - தமிழ்நாடு அரசின் பாரபட்சமும்


ஆசிரியருக்குக் கடிதம் >>>

80 வயது கடந்த ஓய்வூதியர்களும் - தமிழ்நாடு அரசின் பாரபட்சமும்

தமிழக அரசுப்பணியிலிருந்து 1.6.1988 முதல் 31.12.1995 வரை உள்ள ஏழு ஆண்டுகளில் ஓய்வு பெற்றவர்களுக்கு பாரபட்சமாக ஓய்வூதியம் கணக்கீடு செய்து வழங்கப்பட்டது.

இந்த முரண்பாட்டைக் களைந்து இந்த ஏழாண்டுக்கு முன்னும், பின்னும் ஓய்வு பெற்றவர்கட்கு வழங்கியதைப்போல ஓய்வூதியம் கணக்கீடு செய்து தருமாறு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மேல் முறையீட்டில் உச்சநீதிமன்றத்திலும் பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்கள் மற்றும் ஓய்வூதியச் சங்கங்கள் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டு பல ஆண்டுகள் முடிந்த நிலையில் உச்சநீதிமன்றம் 17.1.2013-இல் ஓய்வூதியர்களின் கோரிக்கை, நியாயத்தின் பால் பட்டதென்றும், தமிழ்நாடு அரசின் நடவடிக்கை அரசமைப்புச் சட்டம் 14 மற்றும் 16ஆவது பிரிவுக்கு விரோதமான தென்றும், ஓய்வூதியர்களுக்குள் பாகுபாடு காட்டக்கூடாதென்றும் தெளிவாக தீர்ப்பு வழங்கிவிட்டது.

தீர்ப்பு கிடைத்து எட்டு மாதங்கள் கழிந்த நிலையில் 23.8.2013இல் அரசு ஆணை 363அய் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அரசாணை நாள் 23.8.2013-இல் ஓய்வூதியர் களில் உயிருடன் இருப்பவர்கட்கு மட்டுமே இந்த அரசாணை பயன்தரும் என குறிக்கப் பட்டதால், ஓய்வூதியர் குடும்பத்தார்க்கு ஓர் பேரிடியாக உணரப்பட்டது. ஏனெனில் ஓய்வூதியர் இறக்கும் நிலையில் அவருக்கு கிடைக்க வேண்டிய பணப்பயன் அவர் குடும்பத்தார்க்கு சேரும் என்பதே பொது விதி.

இது ஒரு புறம் இருக்க ஓய்வுபெற்று 20, 25 ஆண்டுகள் கழிந்த நிலையில் எஞ்சியுள்ள ஓய்வூதியர்கள் அவர்கள் ஓய்வு பெற்ற அலுவலகங்களுக்கு படையெடுத்து தமது பணிப்பேரேடுகளைத்தேடிப்பிடித்து புதிய ஓய்வூதிய பிரேரணைகளை தயாரிக்கச் செய்து மாநில கணக்காயருக்கு மேற்படி அலுவலகம் மூலம் அனுப்பினர். இதிலும் ஒரு துயரச் செய்தி உண்டு. இந்த ஏழாண்டுகள் என்பது அய்ந்தாவது ஊதியக்குழு நடை முறையில் இருந்த காலமாகும். ஆனால் புதிய பிரேரணை தயாரிக்கப்பட்டதோ 31.5.1988 வரை அமலில் இருந்த நான்காவது ஊதியக்குழுவின் பரிந்துரையில் இருந்த குறைந்த சம்பள விகிதத்தில்!

மாநில கணக்காயர் அலுவலகத்தில் பெறப்பட்ட புதிய ஓய்வூதிய பிரேர ணைகள் பரிசீலிக்கப்பட்டு 31.12.1995 இல் ஓய்வூதியர்க்கான புதிய ஓய்வூதியம் எவ்வளவு என்பதை நிர்ணயம் செய்து, அந்த உத்தரவு சம்பந்தப்பட்ட கருவூலங் களுக்கு மாநில கணக்காயரால் அனுப்பப் பட்டு வருகின்றன. அதன் நகலும் ஓய்வூ தியர்களால் பெறப்படுகிறது. ஓய்வு பெறும்போது பெறப்பட்ட ஓய்வூதியத்தை விட புதிய ஓய்வூதியம் 31.12.1995 இல் சற்று கூடுதலாகவே உள்ளது. இதனால் ஓய்வூ தியம் பெறும் தேதியிலிருந்து 31.12.1995 வரை குறைந்த அளவிலேனும் ஓய்வூதிய நிலுவை பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது.

31.12.1995 இல் 5ஆவது ஊதியக்குழு பரிந்துரை முடிவுக்கு வந்து 1.1.1996 முதல் 6ஆவது ஊதியக்குழு பரிந்துரை, சம்பள விகிதம் உயர்த்தப்பட்ட நிலையில் நடைமுறைக்கு வந்தது. அரசாணை எண் 174/21/4/1998 வெளியிடப்பட்டு அதில் 1.1.1996இல் எந்த அடிப்படையில் ஓய்வூதியங்கள் நிர்ண யிக்கப்பட வேண்டும் என்கிற விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப் படையில் 31.12.1995இல் ரூ. 1750 வரை அடிப்படை ஓய்வூதியம் உள்ள ஓய்வூ தியர்கள் 1.1.1996 இல் உள்ள 148 சதவீத அக விலைப்படியை அடிப்படை ஓய்வூதியத் தோடு சேர்த்தும் ரூ.1751-க்கு மேல் அடிப்படை ஓய்வூதியம் பெறுகிறவர்கள் 111 சதவீத அகவிலைப்படியையும் சேர்த் தும் ஓய்வூதியம் பெற வேண்டும். ஆனால் இந்த அரசாணை புறக்கணிக்கப்பட்டு, புதிதாக ஓர் அரசு கடிதம் எண் 61495/4.2.2014 இல் வெளியிடப்பட்டு அகவிலைப் படி இணைப்பதில் குளறுபடி செய்து 1.1.1996 இல் ஏற்கெனவே பெறப்பட்ட ஓய்வூதியத்தைக் காட்டிலும் குறைவாக பெறும்படி செய்துள்ளார்கள். உச்சநீதிமன் றத்தின் தீர்ப்பினை செயலிழக்கச் செய்யும் நிலையில்தான் அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

மக்களாட்சியில் மனிதநேயம் பேணப் பட வேண்டும்! தமிழக முதலமைச்சரின் கவனத்துக்கு இது கொண்டு செல்லப்பட் டிருக்குமா என்ற கருத்து எல்லா ஓய்வூ தியச் சங்க பொறுப்பாளர்கள் முதலமைச் சர் அவர்களை நேரில் சந்தித்துப்பேசி நல்ல முடிவை பெற்றுத்தருவார்கள் என்ற நம்பிக்கை திடமாக இருக்கிறது.

- எம்.கே.கிருஷ்ணமூர்த்தி (கூட்டுறவு சார் பதிவாளர் ஓய்வு) மயிலாடுதுறை

Read more: http://viduthalai.in/page-2/85021.html#ixzz396KSOrNj

தமிழ் ஓவியா said...

செய்குதம்பிப் பாவலர்
தோற்றம்: 31.7.1874- மறைவு: 13.2.1950

மதங்களைக் கடந்தது தமிழ் என நிரூபித்துக் காட்டும் வகையில் வாழ்க் கையை தமிழ்த்தொண்டு சிறக்க வாழ்ந்தவர். பாவலர் என அன்புடன் அனைவ ராலும் அழைக்கப் பெற்றவர் செய்குதம்பிப் பாவலர்.

அக்காலத்து திருவி தாங்கூர் சமஸ்தானமாக வும் இன்றைய நாகர் கோவில் மாவட்டமாகவும் விளங்கக்கூடிய தமிழ கத்தின் தென்கோடிப் பகுதியான கோட்டாறு எனும் ஊரில் இசுலாமிய சமூகத்தில் பிறந்தவர். தந்தை பக்கீர் மீரான் சாகிபு. தாயார் ஆமினா. சிறுவயதில் அரபு மொழி கற்க பள்ளிக்கு அனுப் பப்பட்ட செய்கு தம்பி அங்கிருந்த ஆசிரியர் களைத் தன் இணையற்ற அறிவாற்றலால் வியக்க வைத்தார். திருக்குரானை அவர் கற்ற வேகத்தைக் கண்டு தேர்வில்லாமலேயே அவரை இரண்டாம் வகுப்புக்கு மாற்றினர்.

அதே ஆண்டில் மூன்றாவது வகுப்புக்கும் பின் நான்காம் வகுப்புக்கும் மாற்றப்பட்டார். பின் தமிழின் பால் ஆர்வம் கொண்டு அவ்வூரில் வாழ்ந்த சங்கர நாராயண அண்ணாவி என்பவரிடம் நன்னூல், இலக்கண விளக்கம், வீரசோழியம், தொல் காப்பியம் போன்ற இலக்கண நூல்களைக் கற்றார். தமிழில் தன்னிகரற்ற புலமை பெற்ற பாவலர் சென்னைக்கு வந்தார். கம்பராமாயணம் சீறாப் புராணம் பற்றி அவர் ஆற்றிய சொற் பொழிவுகள் கேட்போர் நெஞ்சில் நெருப்பைப் பற்றவைத்தன.

இச்சமயத்தில்தான் அவர்காலத்தில் வாழ்ந்த அன்பின் திருவுருமான இராமலிங்க அடிகளாரின் பால் ஈர்ப்பு கொண்டு இசுலாமியராக இருந்தும் சைவ நெறி பயின்றார். வரலாற்றுச் சிறப்புமிக்க அருட்பா மருட்பா வழக்கில் வள்ளலாருக்கு ஆதர வாக நீதிமன்றத்தில் தீர்ப்புக் கூறப்பட்ட பின்னும் அறிஞர்கள் சபையில் அந்த வாதம் தொடர்ந்து கொண்டிருந்தது. வள்ளலார் மற்றும் நாவலர் இறந்த பின்பும் இந்த மோதல் தமிழ் அறிஞர்கள் மத்தியில் தொடர்ந்து கொண்டிருந்தது.

திரு.வி.க. மற்றும் கதிரைவேற்பிள்ளை ஆகியோர் ஒரு பொது அரங்கில் அருட்பாவைக் கடுமையாக எதிர்த்து அதில் இலக்கணப் பிழைகள் இருப்பதாகக்கூறி அதனை நிராகரிக்க முற்பட்டப் போது பாவலர் மேடையில் ஏறி தன் நுண்ணிய இலக்கணப் பார்வையைக் கொண்டு ஆய்ந்து அகழ்ந்து வள்ளலார் எழுதியது அருட்பாதான் என விளக்கிக்கூறிய போது அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர்.

அதன் பின்னரே அந்த சர்ச்சை முடிவுக்கு வந்து வள்ளலாரை அனைவரும் ஏற்கத் துவங்கினர். இவர் எழுதிய நூல்களில் சம்சுத்தாசின் கோவை, நபிகள் நாயக மான்மிய மஞ்சரி, கல்லத்து நாயகம். இன்னிசைப் பாமாலை, திருக்கோட்டாற்றுப் பதிற்றுப் பத்தந்தாதி, திருநாகூர் திரிபந்தாதி, நீதிவெண்பா போன்றவை குறிப்பிடத்தக்கவை.

நினைத்த மாத்திரத்தில் தேர்ந்த கவிபுனையும் ஆற்றல் மிக்கவர். சதாவதானம் எனும் அரிய கலையை அவர் பலமேடைகளில் நிகழ்த்திய காரணத்தால் சதாவதானி செய்குதம்பிப் பாவலர் என்றே அழைக்கப்பட்டார்.

Read more: http://viduthalai.in/page-3/85027.html#ixzz396KxwwE6