Search This Blog

6.7.14

இதுதான் வால்மீகி இராமாயணம் - 9(இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.)


இதுதான் வால்மீகி இராமாயணம்


இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன?
இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.

பால காண்டம்

ஏழாம் அத்தியாயம் 
திலை நகரத்தின் பக்கத்திலிருந்த அந்தப் பூங்காவனத்தில் பழக்கமற்றுப் பாழாய்க்கிடந்த ஓர் அழகான ஆசிரமத்தைக் கண்டு, இராமன் அதன் வரலாற்றை வினவ விஸ்வாமித்திரன் கூறுவானா யினன்:  இந்த இடம் கவுதம முனிவருடையது:  அம்முனிவன் தன் மனைவியாகிய அகலிகையோடு கூடித் தவம் செய்து கொண்டிருந்தனன்.  ஒரு நாள் இந்திரன் அந்தக் கவுதமனில்லாத தருணம் தெரிந்து கொண்டு, கவுதம வேடம் பூண்டு அகலிகையிடம் வந்து, மிக்க அழகுடையவளே!

உன்னோடு நான் புணர்ச்சி செய்யக் கருத்துக் கொண்டிருக்கிறேன்.  அதைக்கோரி வருகிறவர்கள் ருது காலத்தை எதிர்பார்க்க மாட்டார்கள்; ஆதலால் இப்போதே புணர்ச்சி செய்ய வேண்டும் என மொழிந்தான்.  அப்பெண், முனி வேடத்தோடு வந்திருப்பவன் இந்திரன் என அறிந்து, தனக்குத் தேவேந்திரன் கிடைத்தானென்று மிக மகிழ்ந்து, அறிவு கெட்டவளாகி அவனிடத்தில் விருப்பங்கொண்டாள்.

புணர்ச்சி முடிந்தவுடன், மிகவும் திருப்தியடைந்தவளாகிய அவள் இந்திரனைப் பார்த்து, பிரபு!  எனது கருத்து கைகூடிவிட்டது.  ஒருவருக்குந் தெரியாமல் இவ்விடத்தினின்றும் சீக்கிரமாகப் போய்விடும்.  எல்லாவிதத்தாலும் உம்மையும் காப்பாற்றிக் கொண்டு என்னையும் காப்பாற்றும்' என்று சொன்னாள்.  இந்திரன் புன்னகையோடு அகலிகையைப் பார்த்து, கட்டழகியே!  நான் உன்னைக்கூடி மிகுந்த களிப் பெய்தினேன்.  வந்தபடியே போய் வருகிறேன் என்றனன்.

இவ்வாறு இந்திரன் அகலிகையைப் புணர்ந்துவிட்டுக் கவுதமனிடம் பயந்து பரபரத்து வெளியிற் புறப்பட்டான்.  அப்போது அம் முனிவன் அவனைக் கண்டுகொண்டான்.  இந்திரன் அஞ்சி வாடிய முகமுடையவனாயினான்.  உடனே முனிவன், அறிவு கெட்டவனே!  என்னைப் போல் உருவந்தரித்துச் செய்யத் தகாத இச்செயலைச் செய்தாய்.

ஆதலால், நீ விருஷணமற்றவனாய்விடுக என்று கடுஞ்சொல்லுரைத்தான்.  அச்சொல்லை அவன் சொன்னவுடனே இந்திரனுடைய விருஷணங்கள் (பீசங்கள் - விதைகள்) இரண்டும் அப்பொழுதே பூமியில் விழுந்து விட்டன.  பின் அம்முனிவன் அகலிகையைப் பார்த்து, நீ நெடுங்காலம் உணர்வில்லாமல் காற்றை மட்டும் குடித்துச் சாம்பலில் விழுந்து தவித்து, ஒருவர் கண்ணுக்கும் புலப்படாமல் இங்கே இருப்பாய்.  இராமன் இவ்வனத்திற்கு வரும்போது இச்சாபம் நீங்கும்.

அப்போது என்னோடு சேர்ந்து களிப்பாய் என்று சபித்தான்.  அம்முனி இமயமலையின் சிகரத்தில் தவம் செய்து கொண்டிருந்தான்.  இந்திரன் விதைகளற்றவனானவுடனே, மிக வருந்தித் தேவர்களைப் பார்த்து, உங்களெல்லோரையும் அதிகாரத்தினின்று தள்ளுவதற்காக மகாத்மாவாகிய கவுதம முனிவன் செய்த தவத்திற்கு நான் இடையூறு செய்து கோபத்தையுண்டாக்கி உங்களுக்கு நன்மையைச் செய்தேன்.  அம்முனிவன் கோபங் கொண்டதனால், நான் விருஷண மற்றவனாய்விட்டேன்.

அவ்வகலிகையும் சாபம் பெற்ற வளாய்விட்டாள்.  எங்களிருவருக்கும் அம்முனியைப் பெரிய சாபங் கொடுக்கும்படி நான் செய்து அம்முனியின் தவத்தை யழித்தேன்.  ஆதலால், நீங்கள் என்னை விருஷணமுடை யவனாகச் செய்யுங்களென்றான்.  அதுகேட்ட தேவர்கள், பிதிர் தேவதைகளிடம் வந்து, இப்போது உங்களுக்கு யாகத்தில் கொடுக்கப்படுகிற ஆட்டுக்கடா விருஷணத் தோடு (விதைகளோடு) கூடியிருக்கிறது.  இந்திரனோ விருஷணமில்லாதவனாக இருக்கிறான்.

ஆதலால், ஆட்டுக் கடாக்களின் விதைகளைச் சீக்கிரமாகக் கொண்டுவந்து இந்திரனுக்குக் கொடுங்கள்.  விதையடிக்கப்பெற்ற ஆட்டின் மாமிசம் மிக்க களிப்பை யுண்டாக்கும்.  இனிமேல் மனிதரும் காயடித்த ஆட்டின் மாமிசத்தையே உங்களுக்குக் கொடுப்பார்கள் என்று வேண்டினர். உடனே பிதிர் தேவதைகள் ஒன்று கூடிக் கடாவின் விருஷணங்களை எடுத்து இந்திரனுக்கு உபயோகப்படுத்தி னார்கள்.

அதுமுதல் பிதிர் தேவதைகள் விருஷணமற்ற ஆட்டுக் கடாக்களைப் புசிக்கிறார்கள்.  இந்திரனும் ஆட்டின் விருஷணத்தை யுடையவனாய் விட்டான்.  "இராமா!  நீ இந்த ஆசிரமத்துள்ளே போய் அகலிகையைப் பழையபடி எல்லோருடைய கண்ணுக்கும் புலப்படுபவளாக்க வேண்டும் என்று விசுவாமித்திர முனிவன் கூறினான்.

இராமனைக் கண்டதும் முனிவன் சொல்லின்படி அகலிகை எல்லோருடைய கண்ணுக்கும் புலனாயினாள்.  உடனே இராம இலக்குவர் அவளுடைய பாதங்களைப் பிடித்துக் கொண்டனர்.  அவளும் இவர்களை வணங் கினாள்.  பின் அவள் கவுதம முனிவனை அடைந்தாள்.

அம்முனிவனால் உபசரிக்கப் பெற்ற விசுவாமித்திர முனிவன் அப்பிள்ளைகளை அழைத்துக் கொண்டு மிதிலையை அடைந்து, அங்குள்ள ஜனக மன்னவனுடைய வேள்விச் சாலையை அணுகினான்.  இவ்வரலாற்றை ஆராய்வோம்.  மேலே கண்ட வரலாறு வால்மீகி பாலகாண்டம் 49, 50 ஆம் சருக்கங்கள்.

இவ்வரலாறு மிகவும் வெறுக்கத் தகுந்ததாக உள்ளது.  இது பெண் கொலைபாதகனும் திருடனும் வஞ்சகனுமாகிய இந்திரன், வீட்டுக்கு விலக்கமாக இருந்த ஒரு பெண்ணைப் புணர்ந்ததையே மேலே குறித்தது.  தீண்டத்தகாத ஒரு பெண்ணை, அவள் கணவனில்லாத சமயம் பார்த்து, அவள் கணவனைப் போல் மாறுவேடம் பூண்டு இந்திரன் அகலிகையை யடைந்து தன்னைச் சேர வேண்டுகின்றனன்.

அவள் விலக்கமாக இருந்ததைக் கூற, அது பரவாயில்லை; அவசரத்திற்குக் குற்றமில்லை; சும்மா கூடலாம் என்கிறான் இந்திரன்.  இவ்விழி மகனுடைய இழிந்த அறிவுதானென்னே!  அவளோ தேவேந்திரனோடு தமக்குப் புணர்ச்சி கிடைத்ததே என மிக மகிழ்ந்து தன்னைக் கூடுமாறு அவனை வேண்டுகிறாள்.  உடனே இருவரும் கூடுகின்றனர்.

இந்த வரலாற்றைக் கம்பர் சற்று மாற்றிக் கூறுகிறார்.  அதாவது இந்திரன் அகலிகையைக் கூடி இன்புறுகிறான்.  அப் புணர்ச்சி மத்தியிலேயே அவள் அவனை இன்னாரென அறிகிறாள்.  அறிந்தபின்னும் அச்செய்கை தக்கதென்றென உணராதவளாய் அவனோடு இன்பம் நுகருகிறாள் என்று கம்பர் கூறுகிறார்.

அச்செய்யுள் வருமாறு:-

புக்கவ ளோடும் காமப் புதுமண மதுவின் தேறல்
ஒக்கவுண் டிருத்தலோடு முணர்ந்தனள் உணர்ந்த பின்னும்
தக்கதன் றென்ன ஓராள் தாழ்ந்தன ளிருப்ப
அவள் அப்போது விலக்கமாயிருந்த செய்தியைக் கம்பர் மறைத்தார்.  கவுதம முனிவன் இந்திரனைக் கண்டபோது அவனொரு பூனையைப் போல உருவந் தாங்கிச் சென்றானெனக் கம்பர் ஒரு புதுக் கதை புனைந்தார். இது வால்மீகி கூறாதது, இந்திரன் முனிவுருவுடனிருக்கும்போதே அம்முனி அவனைக் கண்டதாக வால்மீகி கூறுகிறார்.
அகலிகையைக் கல்லாகப் போகும்படி கவுதமன் சபித்தனனென்றும், அவள் அவனை வேண்ட இராமனு டைய கால்பட்டவுடன் கல்லுரு நீங்கி முன்னைய பெண் ணுருவருமென அம்முனி சாப விடை தந்தனனென்றும் கம்பர் கூறுகிறார்.  அதன்படியே இராமனுடைக் கால் பட்டவுடன் கருங்கல்லாக இருந்த அகலிகை, பெண்ணுரு வடைகிறாளென்றும் கம்பர் கூறுகிறார்.
இவ்வரலாறு வால்மீகிக்கு முற்றிலும் மாறுபட்டது.  வால்மீகியோ, அகலிகையை ஒருவர் கண்ணிலும் படாமலிருக்குமாறு முனிவன் சபித்தானென்று கூறுகிறார்.  இராமன் அந்த ஆசிரமத்துள்ளே போனவுடன் அவனைக் கண்டபோது, அகலிகை பிறர் கண்ணிற்படும் தன்மையளாகிறாள்.
வால்மீகி கூறுகிறபடி இந்திரன் விருஷண மற்றவனாகிறான்.  இதன் கருத்து என்னவென்றால், ஆண் தன்மை இழந்தவனாகிறான்.  அதாவது ஆண் தன்மைக்கு முக்கிய காரணமாகவிருக்கிற விருஷணமற்ற காளைகள் (காயடித்த காளைகள்) எவ்வாறு ஆண் தன்மையற்றுப் போகின்றனவோ, அவ்வாறே ஆண் தன்மையற்றுப் போகிறான்.

இந்தச் சாபம் மிகவும் கொடுமையானது.  அகலிகை யென்ற பெண்ணின் சம்மதம் பெற்று அவளும் மிகுந்த விருப்பத்தோடு தழுவக்கூடிய இந்திரனுக்கு, நினைக்கவும் கொடுமையான சாபத்தைக் கவுதமன் தந்தானென்றால், அவன் இழி தன்மைதானென்னே! என் வீட்டுப் பசு பொல்லாதது: உன் வீட்டுக் காளையை அடக்கிக் கொள் என்று ஓர் அறிவீனன் கூறியது போலன்றோ உள்ளது இச்செயல்?  அவன் தன்னுடைய மனைவியைக் கண்டித்திருக்க வேண்டியது அவசியமே.

இல்லையாயினும், அவ்வையார் உபதேசிக்குமாறு, சற்றேனும் ஏறு மாறாக இருப்பா ளேயாமாகில், கூறாமற் சந்நியாசம் கொண்டிருக்க வேண்டும்.  இந்திரனுக்கு இவ்விதக் கடுமையான சாபம் கொடுத்த கவுதமன் தன்னுடைய மனைவிக்குச் சாதாரண மான சாபமே தருகிறான்.  அதாவது அவள் ஒருவர் கண்ணிலும் படாமலிருக்க வேண்டுமென்பது.  இதனால் அவன் அவளைச் சிறிதுகாலம் தள்ளி வைத்திருந்தான் போலக் காணப்படுகிறது.
கடைசியாக இந்திரனால் கற்பழிக்கப்பட்ட அகலிகையைச் சேர்த்துக் கொள்ளவும் செய்கிறான் அம்முனிவன்.  இவ்வாரியர்களுடைய கற்பு நிலைதானென்னே!  தன்னிடத்தில் பிரியமில்லாமலிருக்கிற இம்மங்கையை இவன் ஏன் மணந்தான்?  அதனாலன்றோ அவள் இந்திரனை விரும்புகின்றாள்?  இக்கவுதமன் தன் மனைவி யிடத்திலிருந்த அபிமானத்தினாலேதான் அவளுக்குக் குறைந்த சாபத்தைக் கொடுத்துப் பின் தன்னோடு சேர்த்துக் கொண்டான் போலிருக்கிறது.

இவ்வாறு தன் மனைவி யிடத்தில் தான் வைத்திருந்த அபிமானத்தால் அவள் விபசாரியானமையை நேரில் கண்டு, அவளைத் திரும்பவும் சேர்த்துக் கொண்ட முனிவன் என்ன தவம் செய்து கொண்டிருந்தானோ?  இவனும் ஒரு முனி வனாம்!  இவன் தேவர்களையெல்லாம் அவர்கள் பதவியிலிருந்து விலக்குவதற்காகத்தான் தவம் செய்தானாம்!  இச்செய்தியை இந்திரன் தேவர்களிடம் கூறிய மொழிகளால் அறிந்து கொள்ளலாம்.  தேவர்களைப் பாதுகாப்பதற்காகவே இந்திரன், கவுதமன் மனைவியைப் புணர்ந்து அவனுக்குச் சினமூட்டினானாம்.

ஒருவனுக்குச் சினமூட்டவேண்டுமென்றால், அவன் மனைவியைக் கற்பழிப்பதுதான் அதற்கு வழிபோலும்!  என்னே இப்பாதகனுடைய இழி செயல்!  இவனுக்காக நான்முகன், திருமால் முதலிய தேவர்கள் இரங்கி இவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தனரென்றால், அவர் களுடைய தெய்வத்தன்மைதானென்னே!  இவ்விவரமெல் லாம் முன்னரே கண்டோம்..

எட்டாம் அத்தியாயம்

ருஷணமற்ற இந்திரனுக்குப் பிதிர் தேவதைகள் தாங்கள் தின்னும் ஆட்டுக் கடாக்களின் விருஷணங் களை ஒட்ட வைக்கின்றனர்.  அது முதல் அவர்கள் விருஷணமற்றுக் கொழுத் திருக்கும் ஆட்டுக் கடாக்களை உண்பவராயினராம்.  இவ் வாபாசமான கதையை என்ன வென்பது?
இவற்றை யெல்லாம் எழுத நேர்ந்தது எமது பாவமே எனினும், உண்மை உணராத சாதாரண மக்களெல்லோரும் இவற் றை உத்தமமான கதைகளென்று நம்பிப் பயபக்தியோடு படிக்கின்றனரே என்னும் பரிதாப மே.  இவற்றை விவர மாக எழுதுமாறு எம்மைத் தூண்டிற்று.  இவ்வரலாற்றைக் காய்தல், உவத்தல் இல்லாது சமமான மன நிலையோடு சீர்தூக்கிப் பார்க்கும்படி அறிஞரை வேண்டுகிறோம்.
                                   ------------------------------------தொடரும்...

பால காண்டம்


எட்டாம் அத்தியாயம் தொடர்ச்சி தனைப் படிக்கும் தமிழ் மக்கள் அனைவரும் இவ்வாபாச வரலாறு தம்முடையதன்று என்றும், ஆரிய மக்களுடையதென்றும் எப்போதும் மறவாமல் மனத்திற் கொள்ள வேண்டுகிறோம்.  மேலே கண்ட வரலாற்றில் பிதிர் தேவதைகளுடைய வரலாறும் வருகிறது.  இவ்விழிவான மாமிச உண வினரைப் பிதிர்களென்று ஆரியர் கூறுகின்றனர்.  இவர்களைத் தமிழர் தம்முடைய பிதிர் தேவதை களென்று மயங்கிக் கொள்கின்றனரே!  பரிதாபம்! பரிதாபம்!  இனியாவது தமிழ் மக்கள் உண்மையுணர் வார்களாக!  இத்தேவர்கள், முனிவர்களுடைய வரலாறு களை இராவணேஸ்வரனைப் பற்றி ஆராயுமிடத்து விவரமாக ஆராய்வோம்.
கவுதம முனிவன் இந்திரனுக்குக் கொடுத்ததாக வால்மீகி கூறும் சாப வரலாறு, சான்றோர் செய்யத் தகாததாகவும் மிகவும் கொடுமையாகவும் இருக்கிறது.  இவ்வரலாற்றைக் கம்பர் மிகவும் ஆபாசமானதாக ஆக்கினார்.  இந்திரன் பூனையுருவெடுத்து ஓடியதாகவும், அவனைக் கண்ட கவுதமன் அவனுடைய உடம்பில் ஆயிரம் பெண்குறிகள் உண்டாகவெனச் சபித்தன ரென்றும் கம்பர் கூறுகிறார்.


ஆயிரம் மாதர்க் குள்ள அறிகுறி நினக்குண் டாகென் றேயினன் அவையெல்லாம் வந் தியைந்தன இமைப்பின் முன்னம்
தசரதன் செய்த அஸ்வமேத யாகம் போன்ற ஆபாசமான வரலாறுகளையெல்லாம் மறைத்தோ, மாற்றியோ எழுதிய கவியரசு கம்பருடைய உயர்ந்த அறிவில், இவ்வாபாசக் கதையையும் பாட வேண்டு மென்றும் தோற்றம் எவ்வாறு எழுந்ததோ?  அவர் வாய் எவ்வாறு இவ்விழி வரலாற்றைக் கூறத் துணிந்ததோ?  அவர் கரந்தான் எவ்வாறு எழுதிற்றோ?  என்னென்பது?  ஆயிரம் பெண்குறிகள் ஒருவனுடைய உடலிலே பொருந்துமாறு ஒரு முனிவன் சபித்தானென்று எழுதினாரா கவி வல்லார் கம்பர்?  அல்லது கம்பர் எழுதியதாகப் பிறர் இடைச் செருகலாக வந்ததோ இது?  என்னென்பது!  கம்பர் இராமாயணத்தில் வந்துள்ளபடி தேவர்கள் நான்முகனை முன்னிட்டுக் கொண்டு கவுதம முனிவனையடைந்து வேண்டிக் கொள்ளக் கவுதமன் அவற்றை ஆயிரம் கண்களாகுமாறு சாப விடை தந்தானாம்.  உடனே ஆயிர யோனிகளும் ஆயிரம் கண் களாயினவாம்.  இரண்டு கண்களோடு இந்திரன் இவ் விதமான கெட்ட நடத்தை புரிவானாயின், ஆயிரம் கண்களோடு என்னென்ன கேடு புரிவானோ என்று கவுதமன் ஓர்ந்து பார்த்தானில்லைபோலும்!  அதிலிருந்து ஒன்று ஊகிக்கற்பாலது; என்னவெனில், தீயொழுக்க முடையவனாகிய இந்திரன் தன் நடைக்கேட்டால், உடம்பெல்லாம் வெட்டை என்று சொல்லப்படுகிற கணக்கில்லாத புண் நோயையடைந்தான் போலும்.  அதனால் அவன் உடம்பெல்லாம் கணக்கிறந்த புண்களாயின போலும்.  அதனையே கவி இவ்வாறு கூறுவாராயினர் என்பதே அவ்வூகம்.

கம்பர் கூறும் இவ்வரலாறு வால்மீகியோடு பொருந்து மாறில்லை.  ஏனெனில், அவர் இவ்வரலாறு கூறும்போது, இந்திரனைப் பற்றிக் கூறுமிடங்களில் ஆயிரங் கண்ண னென்கிறார்.  ஆதலின், இவன் அகலிகையைக் கூடும் முன்னரே இவனுக்கு ஆயிரங் கண்கள் இருந்திருக்க வேண்டுமென்பதாகிறது.  எனவே, அவ்வாறு ஆயிரங் கண்கள் இந்திரன் பெறுவதற்கு வேறு காரணம் இருந்திருக்க வேண்டும்.  இவ்விடத்தில் இந்திரனுக்கு வட மொழியில் சகஸ்ரயோனி என ஒரு பெயர் இருப்பது சிந்திக்கற்பாலது.  இனி இவ்வெறுக்கத்தகுந்த வரலாற்றை இவ்வளவோடு விடுத்து மேற்செல்லுதும்.
அறிஞர்களாகிய தமிழ் மக்களுக்கொரு வேண்டு கோள்:  நாம் இதை எச்சமயத்திலேனும் அல்லது எத் தெய்வத்திடத்தேனும் வெறுப்பினால் எழுதுகின்றன மென நினைத்தல் கூடாது.  தமிழ் மக்கள் தம் தெய்வங் களுள் ஒன்றாக எண்ணி வணங்கும் திருமால் வேறு: இவ்வாரியர் தெய்வம் வேறு.  தமிழ் மக்கள் வணங்கும் திருமாலைப் பற்றிச் சமயம் வாய்க்கும்போது விவரமாக எழுதுவோம்.  இவ்வாராய்ச்சியிலும், இராமாயணத்திலும் வரும் திருமால், நான்முகன் முதலியோர் ஆரியருடைய தெய்வங்கள்.  அவ்வாரியத் தேவதைகளின் தன்மைகளை ஆரியர் கூறுமாறு எடுத்துக்காட்டி, அவைகளைத் தம் தெய்வமென வணங்கும் தமிழ் மக்களுக்கு அவற்றின் உண்மையை விளக்கிக் காட்டவே ஈதெழுதுகிறோம்.

விஸ்வாமித்திர முனிவன் வந்திருப்பதை அறிந்த சனக மன்னன், தனது புரோகிதனான சதானந்தனை அழைத்துக் கொண்டு எதிர்கொண்டு வந்து இன்சொற்கூறி வரவேற் றான். சதானந்தன் அகலிகையினுடைய மகன்.  அவளைக் கவுதமன் ஏற்றுக் கொண்டமை தெரிந்து அவன் மகிழ்ச்சியடைந்தான்.  விஸ்வாமித்திரனுடைய வரலாற் றைச் சதானந்தன் இராமனுக்குக் கூறினான்.  அது வருமாறு:


காதி என்பவனுடைய மகன் விஸ்வாமித்திரன்.  அவன் அநேக ஆயிரமாண்டு ஆண்டனன்.  விஸ்வாமித் திரன் ஒரு சமயம் தன் சேனைகள் புடைசூழப் பல தலங்களையும் பார்த்து வருபவன், வசிட்ட முனி வனுடைய ஆசிரமத்தை யடைந்தான்.  விஸ்வாமித்திர னுடைய தகப்பன் காதி: அவன் தந்தை குசநாதன்.  அவன் தந்தை குசன்.  அவன் தந்தை நான்முகன்.  ஆதலின் நான்முகனின் பேரனுக்குப் பேரன் விஸ்வாமித்திரன்.  வசிட்டனோ நான்முகனுடைய மகன்.  தனது ஆசிர மத்தை யடைந்த விஸ்வாமித்திரனுக்கு, வசிட்டன் தனது பசுவாகிய காமதேனுவின் உதவியால் விருந்து செய்தான்.

காமதேனு விஸ்வாமித்திரனுடைய சேனையில் எல்லோருக்கும் அவரவர் விரும்பிய பொருளை யெல்லாம் தந்தது.  விஸ்வாமித்திரன் ஆசை கொண்டு அப்பசுவைத் தனக்குக் கொடுத்துவிடும்படிக் கேட்க வசிட்டன் மறுத்தான்.  உடனே அரசன் அப்பசுவை இழுத்துக் கொண்டு போனான்.  அது வசிட்டனிடம் ஓடிவந்து முறையிட்டது.  வசிட்டன் காமதேனுவை நோக்கி, நான் பலமில்லாதவன்.  அரசனோ மிக வலியுடையான்.  அவனோ எனது விருந்தினனாக இருப்பதோடு, பூமிக்குச் சொந்தக்காரனாகவு மிருக்கிறான்.  சேனா பலமும் அவனுக்கு இருக்கிறது என்று கூறினான்.  பசுவோ, பிராமணனாகிய நீர் க்ஷத்திரியராகிய விஸ்வாமித்திரரைவிடப் பல வகையிலும் பலமுடையீர்!
எனக்கு ஆணை தந்தால், நானே அவனை அழிக்கிறேன் என்றது.  வசிட்டனாணையால், பசு ஒரு முக்கலிட்டது.  அதிலிருந்து பல வீரர் தோன்றினர்.  அவர்களை யெல்லாம் அரசன் அழித்தான்.  பின்னும் அது ஒரு முக்கலிட்டது.  அதன் மடியிலிருந்து பற்பலரும் காம்போ சர்களும் தோன்றினர்.  அதன் யோனியிலிருந்து யவனர் களும், குதத்திலிருந்து சகர்களும், மயிர்க்கால்களிலிருந்து மிலேச்சர் முதலிய வீரர்களும் உண்டாயினர்.  அவர்கள் அரசன் சேனையை அழித்தனர்.  அதுகண்ட அரசன் மக்கள் நூற்றுவரும் வசிட்டனோடு எதிர்த்தனர்.  முனிவன் அவர்களை ஒரு முகூர்த்த காலத்தில் சாம்பலாக்கினான்.  அதுகண்ட விஸ்வாமித்திரன் வருந்தி, சாகாமல் மீந்த ஒரு மகனை அழைத்து அரசை அவனிடம் ஒப்புவித்து, இமயமலையை யடைந்து தவம் புரிந்தான்.  அவனுக்குச் சிவபெருமான் தோன்றிப் பல அம்பு களையும் அருளினார்.  அதனால் அகந்தை கொண்ட விஸ்வாமித்திரன், வசிட்டனோடு கடும் போர் தொடங்கினன்.


அது கண்ட வசிட்டன், உனது க்ஷத்திரிய பலமெங்கே, என் பிராமண பலமெங்கே என்று கூறி, ஒரு தடியோடு போர் செய்தான்.  அத்தடியின் முன் அரசன் அம்புக ளெல்லாம் நாசமாயின.  அதனால், அரசன் தோற்றனன்.  அத்தோல்வியால், மனமிக வருந்தித் தனக்கு வசிட்ட னோடு ஏற்பட்ட வீணான சண்டையை நினைந்து பெருமூச்சு விட்டுத் தனது மனைவியை அழைத்துக் கொண்டு, நான் இனிப் பிராமணத் தன்மையை அடையப் பெருந்தவம் செய்வேன் என்று கூறித் தென்திசையை யடைந்தான்.  இவ்வளவில் இவ்வரலாற்றை ஆராய் வோம்.
நான்முகனுடைய மக்களில் ஒருவனாகிய வசிட்டன் பிராமணனாகவும், மற்றொருவனும் அவன் வழிப்பிள் ளைகளும் அரசனாகிய க்ஷத்திரியராகவும் இருந்தமை காண்கிறோம்.  இதனால், ஒருவனுடைய மக்களில் சிலர் பிராமணராகவும், சிலர் க்ஷத்திரியராகவும், மற்றும் சிலர் மற்றைய குலத்தினராகவும் இருக்கலாமெனத் தெரிகிறது.  

வசிட்டனுக்கும் அவன் உடன் பிறந்தவனாகிய குசன் வழித் தோன்றலுக்கும் நிகழ்ந்த சண்டையே இது. இதனால், க்ஷத்திரியர் முதலிய பல வருணத்தாரினும் பிராமணரே வலியுடையார் என்பதை விளக்குவதற்காக இக்கதை குறிக்கப் பெறுவது என அறியலாம்.  ஆனால், சாதாரணமாகவிருந்த பிராமணரெல்லாம் இவ்வலி யுடையரென இக்கதை விளக்கவில்லை.  வசிட்டனைப் போன்ற முனிவரே பிராமணர்; அவர்களே வலியுடை யோர் என்பதுதான் இக்கதையால் நிலைநாட்டப் பெறுவது.  வசிட்டனோ பெண்டாட்டி பிள்ளைகளோடு வாழ்ந்தான்.  இவனுடைய செயல்களையும் பிராமணப் பெருமையையும் அடுத்த கட்டுரையில் ஆராய்வோம்.  பெண்டாட்டி பிள்ளைகளோடு காட்டிலிருந்த வசிட்டன் ஒரு தடியால் அரசனாகிய விஸ்வாமித்திரனை வென்றா னென்பது விந்தையாகவே உள்ளது.  இவன் காமதேனுவிடம் கூறிய மொழிகளைக் கவனித்தால் மிகவும் பயங்காளியென்பது தெரிகிறது.  இவன் விஸ்வாமித்திரனையும் அவன் சேனைகளையும் வென்றதோடு, விஸ்வாமித்திரன் மக்கள் நூற்றுவரையும் எதிர்த்துவிட்டானாம்.

34 comments:

தமிழ் ஓவியா said...


மதச் சார்பின்மைக் கண்ணோட்டம் தேவை! மோடிக்கு அமர்த்தியாசென் அறிவுரை


லண்டன், ஜூலை.6_இங்கிலாந்தில் லண் டனில் உள்ள ஏசியா ஹவுசில் நோபெல் பரிசு பெற்ற அறிஞரான அமர்த்தியாசென் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டுப் பேசினார்.

அவர் பேசும்போது: மோடி ஆட்சி அமைந் துள்ளதற்கு ஆதரவாகப் பேசவில்லை என்றாலும், இந்தியாவில் அண்மை யில் நடைபெற்றத் தேர் தலில் வெற்றி பெற்றுள் ளார். ஜனநாயகத்தின் அடிப்படையில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆட்சிபுரிவதற்கு முழு உரிமை வழங்கப்பட்டுள் ளது. ஆட்சியும் நன்றாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

அமர்த்தியா சென் தன்னுடைய பேச்சில், இந் தியா ஆசிய நாடுகளான ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண் டும் என்று கூறினார். இந்தியாவுக்கு சவாலாக உள்ள கல்வி, சுகாதாரம் மற்றும் மின் தேவை குறித்துப் பேசினார்.

பின்னர் அவர் கூறும் போது, இந்தத் தேர்தல் முடிவால், பாஜக இந்திய சமூகத்தில் எவ்வித அடிப் படை மாற்றங்களையும் செய்துவிடப் போவ தில்லை. அந்த கட்சி 31 விழுக்காடுதான் வாக்கு களைப் பெற்றுள்ளது. இதுபோன்ற முடிவு தற்போதைய தேர்தல் முறையில் எப்போதுமே நட வாத ஒன்று என்பது கிடை யாது என்று கூறினார்.

அரசுத்துறை அலுவ லர்கள், வங்கியாளர்கள், பிரபலமான பல்வேறு துறைகளைச் சார்ந்த வர்கள் உள்ளிட்டவர்கள் பார்வையாளர்களாக இருந்த அரங்கில் அவர் கூறும்போது, இடது சாரிகள் வன்முறைத் தாக்கத்துக்கு ஆளாகி உள்ளனர் என்றார்.

புதிதாக அமையும் அனைத்து அரசுகளும் மத சார்பின்மையுடன்தான் செயல்பட வேண்டும். இதை பெரிய அளவில் உள்ள மதசார்பற்ற ஊட கங்கள், நீதிமன்றங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கண்காணித்தே வருகின்றன.

மேலும் அமர்த்தியா சென் கூறும்போது, புதிய அரசு அமைந்துள்ளது. திறனையும், நல்லவற்றை யும், வெளிப்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. குஜ ராத்தின் நிர்வாகத்தில் என்ன நடந்துள்ளது? கட்டமைப்புகள், சாலை கள் என்று கூறப்பட்டா லும், மய்யக் கருத்துகளான கல்வி, சுகாதாரம் குறித்து ஆளும் பாஜக குறிப் பிடுவதில்லையே. மோடி அரசுகுறித்து பாஜக தரப் பினர் பெரும் பான்மை மனப்பான்மையுடன் உள்ளனர். அதேநேரத்தில் சிறுபான்மை மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். நாம் ஜனநாயக நாட்டில் இருக்கின்றோம். நாம் மதசார்பற்ற ஜன நாயக நாடு என்று சொல்கிறோம். மக்களுக்கு தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த உரிமை உள்ளது. நாமும் நம் கருத்தை வெளிப்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன் என்று பேசினார்.

ஊழல் முறைகேடுகள் உட்பட பல்வேறு பிரச் சினைகள் குறித்துக் கூறும் போது அது இந்தியாவில் மட்டும் உள்ளதல்ல. கடந்த சில ஆண்டுகளில் அதிகமாகி உள்ளது என்பது உண்மை அல்ல. இது எப்போதுமே பெரிய பிரச்சினைதான் என்று அமர்த்தியா சென் தன் னுடைய பேச்சில் குறிப் பிட்டார்.

மேலும், காங்கிரசு அரசின் முக்கியத் திட்டங் களாக கூறப்படுவது, தகவல் பெறும் உரிமைச் சட்டம். உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வாறு இந்தியாவில்தான் தகவல்களைப் பெறுவதில் அதிகப்படியான உரிமை உள்ளது. அந்த சட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு ஊழல் முறைகேடுகள் எளிதில் பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வரப்படுகிறது. இது எதிரானது அல்ல. மாறாக சாதகமானதாகும் என்று குறிப்பிட்டார்.

அந்தக்கூட்டத்தில் கலந்துகொண்ட இலங் கைத் தூதரக அதிகாரி யான கிரிஸ் நோனிஸ், அமர்த்தியா சென்னிடம், பொருளாதார முன்னேற் றத்துக்காக மோடியை ஆதரிப்பீர்களா? என்று கேட்டதற்கு அமர்த்தியா சென் பதிலளிக்கும் போது, நீங்கள் கூறுவது சரிதான் என்று நினைக் கிறேன். ஆனால், அது போன்று இதுவரை நடக்க வில்லை என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/83512.html#ixzz36k5ljqhG

தமிழ் ஓவியா said...


சோதிடரே!மேட்டூர் மருத்துவ மனையில் கொலை ஒன்று நடந்துள்ளது. கொலை செய்தவர் ஒரு சோதிடர் - அவர் பெயர் இரவிக்குமார். கொலை செய்யப்பட்ட சாமுண்டீஸ்வரியின் வளர்ப்புத் தந்தை.

சாமுண்டீஸ்வரிக்குத் திருமண ஏற்பாடு நடந் துள்ளது. அந்த மண மகனை சோதிடர் இரவிக் குமாருக்குப் பிடிக்க வில்லையாம். (சோதிடம் சரியில்லையோ!) அதனால் வளர்ப்பு மகள் சாமுண் டீஸ்வரியை சோதிடர் குத்திக் கொலை செய்தார் என்பது செய்தி.
அவர் இப்பொழுது கைது செய்யப்பட்டு சிறை யில் இருக்கிறார்.

நினைவு கொள்ளுங் கள் - கொலை செய்தவர் ஒரு சோதிடர்.

மற்றவர்களுக்கு சோதி டம் சொல்லியது எப் படியோ தொலைந்து போகட்டும்; அவரைப் பொறுத்தவரையாவது அவ ரது செயல் ஆபத்தானது - தீங்கிழைக்கக் கூடியது - தூக்குக் கயிற்றில் தொங்க வேண்டிய அளவுக்குக் கொண்டு போய்விடும் என்று சோதிடராகிய அவ ரால் உணர்ந்து கொள்ள முடியவில்லையா?

சோதிடரின் இந்தக் கொலையைப்பற்றி விரி வாக செய்திகளை வெளி யிடும் இந்த ஊடகங்கள், செய்தித்தாள்கள், சோதிட சிறப்பிதழ்களை வெளியிடு கின்றனவே - இதைப்பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?

நாய் விற்ற காசு குரைக் காது என்பதுதான் இந்த ஊடகங்களின் ஊத்தை மனப்பான்மையா?

சோதிடந்தனை இகழ்! என்று அக்ரகாரத்துப் பார தியே பாடினாரே! அறிவி யலுக்குமுன் சோதிடம் நிற்காது என்று நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்கூட தலை நகரமாம் சென்னையில் பேசவில்லையா?

ஏன் ராஜாஜி அவர் களேகூட சோதிடத்தை எள்ளி நகையாடவில் லையா?

தினமணி (19.10.2007) சோதிடரிடம் ஒருவர் விளக் கம் கேட்டார். என் மகளுக்கு 22 வயது. அவள் சாதகத்தைப் பார்த்த ஜோதி டர் செவ்வாய் தோஷம் இருக்கிறது என்றார். வேறு ஒரு சோதிடர் எந்தத் தோஷமும் இல்லை என் றார். இன்னொரு சோதிடர் களத்ர தோஷம் உள்ளது என்று கூறியிருக்கிறார். எது உண்மை என்று கேட்டிருக் கிறார்.

காந்தியாருக்கு 125 வயது ஆயுள் கணித்தார் அன்றைய பிரபல சோதி டர் திருத்தணி கிருஷ்ண மாச்சாரி. கதை கந்தலாகி விட்டதே! காந்தியார் கொல்லப்பட்டது காந்தியா ருக்குப் போதாத காலமா? அல்லது நாதுராம் கோட் சேவுக்கு ஆகாத காலமா?

அஷ்டமி, நவமி பார்த்து நள்ளிரவில் சுதந் திரம் வாங்கி என்ன பயன்? இன்னும் வறுமைக் கோடு தானே இந்தியா கண்ட பலன்?

தட்டிக் கேட்க ஆள் இல்லை என்றால், தம்பி சண்ட பிரசண்டன்தான் என்பார்கள். சோதிடமும் இந்தக் குட்டையில் ஊறி யதுதான்.

வைத்தியரே! முதலில் உங்கள் நோயைக் குணப் படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறுவதுபோல,

சோதிடர்களே, முதலில் உங்கள் சோதிடத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/83699.html#ixzz371RrCkSY

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?காரைக்காலில் மாங்கனித் திருவிழா! அதன் புராண சங்கதி என்ன?

புனிதவதி என்ற சிவபக்தர் - பிச்சை கேட்க வந்த சிவனடியார்க்குத் தன்னிடம் இருந்த மாங்கனிகளில் ஒன்றைக் கொடுத்தார். கணவன் மதிய உணவு அருந்திட வந்தான். ஒரு மாங்கனியைச் சாப்பிட்டான். சுவையாக இருந்ததால், இன்னொரு மாங்கனியையும் கேட்டான். பதற்றமடைந்தார் மனைவி. ஒன்றுதான் சிவனடியார்க்கு அளிக்கப்பட்டு விட்டதே! சிவனை நினைத்து, தன் நிலையை வெளிப்படுத்தினார்.

என்ன ஆச்சரியம்! சிவன் அருளால் மாயா மந்திரம்போல அவள் கைக்கு ஒரு மாங்கனி வந்து சேர்ந்தது. அதைக் கணவனுக்குக் கொடுத்தாள். இந்தக் கனி முந்தையக் கனியைவிட அதிக ருசி. அது எப்படி என்று கணவன் பரமதத்தன் கேட்டான். அதற்குமேல் அவளால் ஒன்றும் சமாளிக்க முடியவில்லை.

நடந்ததைச் சொன்னாள். கணவன் நம்பவில்லை. அப்படியானால் இன்னொரு பழத்தைக் கொண்டு வந்து காட்டு என்கிறான். புனிதவதி சிவனிடம் இரைஞ்சினாள் - ஆம் பழம் ஒன்று வந்து சேர்ந்தது சிவன் அருளால்.

திடுக்கிட்ட கணவன், இவள் தெய்வப் பெண் என்று கருதி, மனைவியின் காலில் விழுந்து வெளியேறினான். வேறு ஊருக்குச் சென்று கல்யாணம் செய்துகொண்டு வாழ்ந்தான்.

தன் கணவன் வருவான், வருவான் என்று காலம் கழித்த புனிதவதி, ஏமாற்றம் அடைந்து சிவனிடம் தன் அழகு அழிந்து பேயுரு வேண்டினாள். அவ்வாறே ஈசன் அளித்தான் - எலும்புரு ஆனாள்.

உடனே கயிலைக்குச் சென்று சிவனை தரிசனம் காண விரும்பினாள். கயிலைக்கு காலால் நடந்து செல்லலாமா? என்ன செய்தாள்? தலையால் நடந்து சென்றாள்.

இவ்வாறு கதை சென்று கொண்டே இருக்கிறது.

இந்த அம்மையாருக்குக் காரைக்காலில் தனிக் கோயிலே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதப் பவுர்ணமி அன்று மாங்கனித் திருவிழா நடை பெறுகிறது. இவ்விழா 4 நாள்கள் நடைபெறுகிறது.

இந்தக் கதையில் கடுகத்தனை அளவுக்காவது பொது அறிவோ, நல்லொழுக்கமோ இருக்கிறதா?

தன் கணவனிடம் முதலிலேயே உண்மையைச் சொல்லியிருந்தால், கணவனைப் பிரிந்திருக்க நேருமா?

ஒரு பெண் தலைகீழாக நடந்து சென்றாள் என்று எழுதி வைத்திருப்பது எத்தகைய வக்கிரப் புத்தி?

மாம்பழத்தை வாரி இறைப்பது புத்திசாலித்தனமா? ஆன்மீகம், அறிவுக்கும், ஒழுக்கத்துக்கும் பொருத்த மற்றது மட்டுமல்ல, விரயத்துக்கும் அல்லவா காரணமாக இருக்கிறது!

Read more: http://viduthalai.in/e-paper/83701.html#ixzz371T6tOkx

தமிழ் ஓவியா said...


சங்கரராமன் கொலை வழக்கு: சங்கராச்சாரியார்கள் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு!


புதுச்சேரி, ஜூலை 9-_ காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு தொடர் பாக மேல்முறையீடு செய்ய துணைநிலை ஆளுநர் கட் டாரியா உத்தரவிட்டுள் ளார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலா ளராக இருந்தவர் சங்கர ராமன். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி கோயில் வளா கத்திலேயே படுகொலை செய்யப்பட்டார்.

இக்கொலை தொடர் பாக காஞ்சிபுரம் சங்கராச் சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர், மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர், விஜயேந்திரர் சகோதரர் ரகு, அப்பு உள்பட 24 பேர் மீது வழக்குப் பதிவு செய் யப்பட்டது.

இவ்வழக்கில் 2004ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி ஆந்திரத்தில் இருந்த ஜெயேந்திரர் கைதானார். பின்னர் அனைவரும் பிணையில் வெளியே வந் தனர். செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடை பெற்று வந்தது.

189 சாட்சிகள்

தமிழகத்தில் இவ் வழக்கு விசாரணை நேர் மையாக நடைபெறாது எனக் கூறி வேறு மாநி லத்துக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி உச்சநீதி மன்றத்தில் ஜெயேந்திரர் மனு தாக்கல் செய்தார். அதன்பேரில் கடந்த 2005 ஆம் ஆண்டு புதுவை அமர்வு நீதிமன்றத்துக்கு சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. கடந்த 2009ஆம் ஆண்டு அரசு வழக்குரைஞராக தேவ தாஸ் நியமிக்கப்பட்டார். 189 சாட்சிகள் விசாரிக்கப் பட்டனர். இதில் 81 பேர் பிறழ் சாட்சியம் அளித்த னர்.

வழக்கில் குற்றம் சாட் டப்பட்ட கதிரவன் இறந் தார். வழக்கு விசாரணை முடிந்து கடந்தாண்டு நவம்பர் 27ஆம் தேதி இவ்வழக்கில் குற்றம் சாட் டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து புதுச்சேரி தலைமை நீதிபதி முருகன் தீர்ப்பளித்தார்.

இத்தீர்ப்பு புதுச்சேரியில் வழங்கப்பட்டதால் மேல் முறையீட்டை புதுவை அரசுதான் செய்யவேண் டும். மேல்முறையீடு செய்ய பல தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

ஆளுநர் கையொப்பம்

இதையடுத்து, புதுவை அரசு மேல்முறையீடு செய்ய முடிவு எடுத்தது. அதற்கான ஒப்புதலுக்காக கோப்புகளை துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட் டாரியாவுக்கு அனுப்பி வைத்தது. தற்போது அக்கோப்பில் ஆளுநர் கையெழுத்திட்டுள்ளார்.

இதுதொடர்பாக அரசு வழக்குரைஞர் தேவதாஸ் கூறியதாவது:

புதுச்சேரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய உத் தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய ஆளுநர் வீரேந்திர கட்டாரியா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் நகல் திங்கள்கிழமை எங்களிடம் தரப்பட்டது.

கொலை வழக்கு விசாரணை முதலில் தமிழகத்தில் நடைபெற்று வந்ததால், ஆளுநர் உத்தரவு தொடர்பான ஆணையை, தமிழக அதிகாரிகள் பெற்றுச் சென்றுள்ளனர். மேல் முறையீடு தொடர்பான அனைத்து ஆவணங்களும் தயார் செய்த பின்பு தலைமை வழக்குரைஞர் முருகேசன் மூலம் சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடரப்படும் என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/83712.html#ixzz371THkrZl

தமிழ் ஓவியா said...

மதம் என்பது ஒரு கட்டுப்பாடு, மதத்தில் ஈடுபட்ட ஒரு மனிதன் அவன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும் அந்தக் கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்கவேண்டும் என்பதைத் தவிர, மற்றபடி அந்த மனிதனுக்கு எந்தவிதமான பயனும் ஏற்படப் போவதில்லை.

_ (குடிஅரசு, 7.5.1949)

Read more: http://viduthalai.in/page-2/83716.html#ixzz371Td2VUj

தமிழ் ஓவியா said...


இந்துமத ஆபாசம்பற்றி அவாள் ஏடு பெருமிதம்


காதல் அதாவது ஆண் - _ பெண் உறவைப் பள்ளியில் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று இப்போது சிலர் சொல்லுகிறார்கள். ஒரிசாவில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஆசிரியர் இல்லாத ஒரு பள்ளிக்கூடத்தை இதற்காகக் கட்டி விட்டார்கள்.

பள்ளியைக் கட்டியவர்கள் கங்க மன்னர்கள், பள்ளியின் பெயர் கொனார்க் காதல் நிலைகளை இங்கு உருவ அமைப்பாலும் இதயங்கவரும் வகையிலும் கல்லிலேயே செதுக்கி வரிசை வரிகையாகத் தூண்களில் பொருள் காட்சியாக அமைத்திருக்கிறார்கள்.

... மாமல்லபுரம் பலரும் சேர்ந்து பார்க்கக் கூடியது; கொனார்க் கணவனும், மனைவியும் சேர்ந்து பிறர் பார்வையில் படாது பார்க்க வேண்டும்.
தினமணி கதிர் பக்.23 (27.8.1971 இதழ்)

காமக்ய கோயில்: அசாமின் சிறப்பு காமக்ய கோயில். அங்கே கோயில் கொண் டுள்ள அம்மனின் சிறுநீர் வெளிவருவது கருவறை (கர்ப்பக்கிரகம்)யில் ஒரு மூலையில் தெரியுமாறு கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

இவ்வாறு யோனி பீடமாக ஒரு கோயில் அமைந்திருப்பது இந்தியாவில் இது மட்டுமே. வெட்டுண் இறைவியின் யோனி. இவ் விடத்தில் விழுமாறு விஷ்ணு வீசியதாகப் புராணக் கதைகள் கூறுகின்றன. அசாமியர்கள் மிகுந்த பயபக்தியுடன் இங்கு வழிபடுகிறார்கள்.

- தினமணி கதிர் பக்.28 (20.8.1971 இதழ்)

Read more: http://viduthalai.in/page2/83495.html#ixzz371WBUTbf

தமிழ் ஓவியா said...


நோன்புக்குத் தடை இங்கல்ல, சீனாவில்சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள சிங்ஜியாங் மாகாணத்தில் உள்ள பள்ளி, அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் ரமலான் புனித மாதம் என்று நோன்பு மேற்கோள்வதைத் தடை செய்து உத்தரவிட்டுள்ளது.

தடை உத்தரவு வலைத்தளத்தின்மூலம் பள்ளிகளுக்கும், அரசு நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. மக்களுக்கான நிர்வாகப் பணியாளர்கள், மாணவர்கள் நோன்பு இருக்கவோ, மதரீதியிலான செயல்களில் ஈடுபடவோ முடியாது என்று டர்ஃபன் நகர் வணிகவியல் விவகாரத் துறை அதன் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக சிங்ஜியாங் அரசு தன்னுடைய அரசுப் பணியாளர்களை நோன்பு இருப்பதால் அவர்களின் உடல் நலத்துக்குக் கெடுதல் ஏற்படும் என்று கூறியுள்ளது.

ரமலான் நோன்பு இருப்பதற்கு யாருக்கும் அனுமதி இல்லை என்று அனைவருக்கும் நினைவூட்டி வருகிறோம் என்று அரசின் சார்பில் இயங்கும் போஷவ் வானொலி மற்றும் பல்கலைக்கழகத்தின் தொலைக்காட்சியின் வலைத்தளத்தில் கூறியுள்ளது. கட்சி உறுப்பினர்கள், ஆசிரியர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் ரமலான் நோன்பு மேற்கொள்வதற்கானத் தடையை கட்டாயமாக நடைமுறைப்படுத்துவோம் என்றும் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி, சிங்ஜியாங் அரசு பெரும் அளவில் கூடுவது , பிரார்த்தனைக்கூட்டங்கள் நடத்துவது ஆகியவற்றை பிரிவினைவாத அச்சத்தால் தடுத்து வருகிறது.

உலக உய்குர் காங்கிரஸ் பேச்சாளர் தில்க்சாட் ரக்சிட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறும்போது, சீனா இதுபோன்ற அதிகார, அளவீடுகள்மூலம் ஊழியர்களின் நம்பிக்கையை முடக்குகிறது. மத சுதந்திரத்தை உறுதிப் படுத்துமாறும், ரமலான்மீது அரசியல் அழுத்தங்களை நிறுத்துமாறும் சீனாவைக் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

-டைம்ஸ் ஆப் இந்தியா, 3-.7.-2014

Read more: http://viduthalai.in/page4/83503.html#ixzz371WxKa19

தமிழ் ஓவியா said...


பிஎஸ்எல்வி ஏவப்பட்டபோது மோடியின் ஆங்கிலப் பேச்சு எதை காட்டுகிறது?


பிஎஸ்எல்வி ஏவப்பட்டபோது மோடியின் ஆங்கிலப் பேச்சு எதை காட்டுகிறது? பிஎஸ்எல்வி ஏவுகணை ஏவப்பட்ட போது பிரதமராக உள்ள மோடி இந்தியில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்தி லும் இஸ்ரோ அறிவியலாளர்களைப் பாராட்டிப் பேசியுள்ளார். இரண்டு மொழிகளில் மோடி பேசியுள்ளதன்மூலம் அவருக்கு சரள மாகப் பேச இயலாமற்போனாலும், ஆங்கிலத்திலும் பேசி உள்ளார். மோடியின் இந்த முடிவு இரு மொழி களிலும் பேசும்படியான நிதானத்தை காட்டுகிறது. அறிவியலாளர்களும், தொழில் நுட்ப வல்லுநர்களும் பார்வையாளர்களாக இருந்ததால் அவர் அவ்வாறு பேச வழி ஏற்பட்டது. அதேநேரத்தில் பார்வையாளர்களில் பெரும்பான்மையர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களாகவும் இருந்துள்ளனர். அதனாலும் அவர் அந்த (ஆங்கிலத்தில் பேசும்) முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.

இந்தியில் மட்டுமே பேசிவந்த அவர் ஆங்கிலத்திலும் பேசுவது அவருக்கு வசதியாக இருப்பதை உறுதி செய் துள்ளது. வெளிநாட்டுத்தலைவர் களிடமும் இதேபோல் இரு மொழி களிலும் நிதானமாகப் பேசும் வாய்ப்பும் அவருக்கு ஏற்பட்டு உள்ளது. மோடி இந்தியில் விரும்பிப் பேசுவதன் நோக்கம் காரணம் என்ன வென்றால், அவருடைய பிற மாநில தாழ்வுணர்ச்சியின் அடையாளமே யாகும். மேலும், நடுத்தர வர்க்கத்தி லிருந்து சமூகத்தின் மாபெரும் தகுதியை எட்டினாலும், மேல்தட்டு மக்களிடமிருந்து வேறுபட்டே காணப் படுகிறார் என்பதால் அவர்களுக்கு வசதியாக இந்தியிலோ, மாநில மொழி களிலோ பேச வேண்டி உள்ளது.

சந்தேகமே இல்லாமல் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தி பேசும் மக்களைக் கவர, அவருக்கு இந்தி பயன்பட்டது. அதன்மூலம் இந்தி பேசுவோர் உள்ள கிராமப்பகுதியி லிருந்து, சிறு நகரங்கள் மற்றும் பெரு நகர மக்களிடையே இணைப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். உண் மையைக்கூறும்போது, இந்தி பேசும் மக்களிடையே ஜனதாக் கட்சி நிலை யான செல்வாக்கைத் தாண்டி இந்தி பேசும் மக்களின் ஆதரவைப் பெற்றார். அவர்களுக்கான ஆளாகவே பலராலும் பார்க்கும் நிலையும் ஏற்பட்டது. மொழி மற்றும் அரசியல் இடையே உள்ள உறவுகள்குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளவரான டில்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் அலோக் ராய் கூறும்போது, ஆங்கிலம் பாதுகாப்பானது என்கிற சமுதாயக் கருத்தியல் உள்ளது. ஆகவே, அவர் கட்யின் கொள்கைமுடிவுகளின்படி, மோடி இந்தியில் பேசினால், அடிப் படையில் சார்க் தலைவர்களிடையே மேல்தட்டு தகுதிக்கான அங்கீகார நிராகரிப்பையே பெறுவார்.

ஆனால், சிறீஹரிகோட்டாவில் இந்தியை முதன்மைப்படுத்த மோடி விரும்பவில்லை. அவர் ஆங்கிலத்துடன் இணக்கமாக இருக்க விரும்புகிறார் என்று தெரிகிறது. தேசத்தின் தலைவரா வதற்கு பொருத்தமானவராக இல் லாமல் இருந்து வந்துள்ளார். அதே போன்று அரசியலைத்தாண்டி, அறிவி யலாளர்களிடம் தொடர்புகொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாக கருதுகிறார் என்பது தெரிகிறது. குடியரசுத்தலைவர் உரைக்கு பதில் அளிக்கும் நீண்ட பிரதமரின் இரண்டு உரைகளும் முழுக்க இந்தியில்தான் இருந்தது. அப்படியும் வருணனைகளின் போது தடுமாற்றம் ஏற்பட்டது.

- டைம்ஸ் ஆப் இந்தியா

Read more: http://viduthalai.in/page4/83500.html#ixzz371X7LHFl

தமிழ் ஓவியா said...


இறைவா! ஒரு சொல் கேளாய்.....
உச்ச வெறி கொண்டு
உயிர் வதம் செய்தான் சொத்தில் தகராறாம் சொந்த தந்தையிடம்......

பத்து வயது சிறுமி தானே பார்த்து பழகிய மனிதர் தானே

பக்கத்து வீடு சென்றாள் ஈனப்பிறவியவன் விளையாட்டில் பித்தானாள் பிஞ்சு குடி குடியை கெடுக்கும் நான்காம் நிலையில் நாற்சக்கரம் ஓட்டினான் எதிரில் வந்தவன் இறைவனடி சேர்ந்தான் .....

கீதையின் நாயகனே.....
ரட்சிப்பின் மீட்பரே ......
நபிகள் நாயகரே.......
கேட்பீரோ இதனை.......?

அழுக்கடைந்த சமூகத்தில் அக ஒளி தேடினேன் மீட்பு எங்கே ஓடினேன் என் பகுத்தறிவு என்னை கேட்டது......
கோவில் சிலை திருட்டு உண்டியல் கொள்ளை முதலில் அந்த கோப்புகளை பார்க்க சொல் இறைவனைஎன்றது......

- செ.கவுதமி தமிழரசன் மேலமெய்ஞானபுரம்.

Read more: http://viduthalai.in/page4/83501.html#ixzz371XM7800

தமிழ் ஓவியா said...


சிலந்திப்பட்டிலிருந்து இராணுவ உடை


சிலந்தியிடமிருந்து பெறப்படும் பட்டு இழைகளைக் கொண்டு நெய்யக்கூடிய குண்டுதுளைக்காத ஆடைகளை எதிர்காலத்தில் இராணுவ வீரர்கள் அணியலாம் என்று ஆய் வாளர்கள் கூறுகின்றனர்.

மரபியல் பொறியியல் ஆய்வாளர் கள் பட்டுப்புழுக்களில் தொடங்கி, தற்போது சிலந்திப்பட்டு தயாரிக்கும் முயற்சியில் ஆய்வு செய்துவரு கின்றனர்.

அமெரிக்காவில் லாங்சிங் பகுதியில் உள்ள க்ரெய்க் பையோகிராப்ட் ஆய்வகத்தின் தலைமைப் பொறுப்பு அதிகாரி கிம் தாம்சன் கூறும்போது, சிலந்தி பட்டு இயற்கையாகவே வேறு எதற்கும் இல்லாத தனித்துவமான குணத்தைக் கொண்டுள்ளதாகும். சிலந்திக் கூட்டைப்பற்றி எண்ணும் போது அதன் வடிவமைப்பு காற்றைத் துளைக்கும் ஏவுகணையைக்கூட தடுக் கும் ஆற்றல் கொண்டதாக இருக்கும். ஈ அல்லது பறக்கும் பூச்சிகளையும் தடுத்துவிடும். பட்டு இயற்கையாகவே இழுவைத்தன்மை அதிகம் உள்ள தாகும். அதில் பிடிபடும் இரையின் சத்துக்களை உறிஞ்சும் ஆற்றல் கொண்டதுமாகும் என்று கிம் தாம்சன் கூறினார். மேலும் அவர் கூறும்போது, கணித முறையில் அணுகும்போது, ஈயின் எடை, அதன் வேகம், அதன் அளவு ஆகியவற்றைத் ஒரேயொரு இழையில் சிக்கிக்கொண்டால்கூட அதன் வலிமையின் விகிதம் அளவிட முடியாதது என்று கிம் தாம்சன் கூறினார். எதிர்காலத்தில் அதுபோன்ற பட்டு பல்வேறு வகைகளிலும் பயன் படுத்தப்படக் கூடியதாக இருக்கும்.

பழைமையான உறுதியான கெவ் லார் ஆடைகளைவிட சிலந்தியிட மிருந்து பெறப்படும் பட்டு புதிய முறை யில் பாதுகாப்பை குறிப்பாக இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும்வகையில் இருக்கும் என்று லைவ் சயின்ஸ் அறிக்கை கூறுகிறது.

ஆய்வாளர் தாம்சன் இந்த ஆய்வுக்காக சுமார் 10 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிந்து வந்துள்ளார். அவர் கூறும்போது, பட்டுப்புழு மரபியல்முறையில் பொறியியல்மூலம் செய்வதுபோலவே சிலந்திபட்டின் மூலமும், அதன் தொடர்ச்சியாக உள்ள தலைமுறைகளிலிருந்தும் அவற்றி லுள்ள குணங்களின் அடிப்படையில் எப்போதுமே இதுபோன்றவற்றை மேற்கொள்ளலாம் என்று கூறினார்.

சிலந்தி, பட்டுப்புழு இவை இல் லாமல் பட்டாடைகளுக்கு அதிக அளவில் பட்டுத் தேவைக்காக, பட்டுக் கான புரோட்டீனைச் செயற்கையாக சேர்த்து செயற்கைப் பட்டு இழைகள் பயன்படுத்தப்பட்டுவருவது குறிப்பிடத் தக்கது.

Read more: http://viduthalai.in/page4/83499.html#ixzz371XUZTTJ

தமிழ் ஓவியா said...


ஆஸ்திரேலியாவின் மனிதாபிமானமற்ற செயல்


ஈழத்தமிழர்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய அரசு சமீபத்தில் கடுமை யான நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது. இதன் தொடர்ச்சியாக ஈழத்தில் இருந்து பாதுகாப்பு வேண்டி ஆஸ்தி ரேலியா நோக்கிச்சென்ற 150-_க்கும் மேற்பட்டவர்களை நடுக்கடலில் வைத்தே இலங்கை கப்பற்படையிடம் ஒப்படைத்தது.

இது தொடர்பாக இலங்கை கப்பற்படை அதிகாரி ஒருவர் சிங்கள பத்திரிகைக்கு கூறியதாவது, இலங்கை யில் இருந்து சட்டவிரோதமாக வேற்று நாடுகளுக்கு செல்வோரின் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது, இவர் களில் பெரும்பாலானோர் வடக்கில் இருக்கும் ஈழத்தமிழர்கள், இவர்களின் கடல் வழிப்பயணம் சட்ட விரோத மாகவும் ஆபத்தான பயணமாகவும் அமைந்துள்ளது. மேலும் இது போன்ற சட்டவிரோத பயணத்தின் மூலம் பல குற்றவாளிகளும் தப்பி ஓடி ஒளிந்து கொள்கின்றனர். இவர்கள் அனைவரும் அகதிகள் என்றபோர்வையில் உலக நாடுகளின் பார்வையில் தங்களை காட்டிக்கொள்கின்றனர். இது போன்ற சட்டவிரோத ஆபத் தான கடற்பயணம் குறித்து ஆஸ்தி ரேலிய அரசும் கவலை தெரிவித் துள்ளது. சமீபத்தில் இலங்கைக் கப்பற்படைத்தளத்திற்கு ஆஸ்திரேலியா ஒரு தகவல் ஒன்றை அனுப்பியது. அதில் கிருஸ்துமஸ் தீவிற்கு அருகில் சுமார் 150-க்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய கப்பல் ஒன்று தென் பட்டதாகவும் அவை அநேகமாக இலங்கையில் இருந்து வந்த கப்பலாக இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் இந்த தகவலை அடுத்து இலங்கை கப்பற்படை கப்பல் ஒன்று அந்த அகதிகள் கப்பலை சோதனையிட பயணம் மேற்கொண்டு கிருஸ்துமஸ் தீவிற்கு அருகில் அந்தக் கப்பலை கண்டுபிடித்தோம். அப்பகுதி இயற்கை சூழல் பேராபத்து நிறைந்த பகுதியாகை யால் மிகவும் சிரமப்பட்டு அனை வரையும் இலங்கை கப்பற்படை கப்பல் ஏற்றினோம் என்று கூறினார். இதனி டையே, ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அந்நாட்டு கிரீன் கட்சி அறிவித்துள்ளது.

கிருஸ்துமஸ் தீவின் கடற்பரப்பில் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் 150_க்கும் மேற்பட்ட மக்களை மீண்டும் இலங்கைக்கே அனுப்பிய இந்த நட வடிக்கை மிகவும் கொடிய மனிதாபி மானமற்ற செயல் என அக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. புகலிடம் கோரிவரும் மக்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைத்த நடவடிக்கை இரக்கமற்ற செயலாகும், குற்றவாளிகளினால் பாதிக்கப்பட்டவர் களை குற்றவாளிகளிடமே ஒப்படைத் தமைக்கு நிகரான காரியத்தை அர சாங்கம் செய்ய முயற்சித்துள்ளனர். இச்செயல் நாட்டின் மனித உரிமை குறித்த நற்பெயருக்கு இந்த நடவடிக்கை களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது புகலிடம் கோரி வருபவர்களை திருப்பி அனுப்பி வைக்கும் நடவடிக்கையானது அய்க்கிய நாடுகள் பிரகடனத்தை மீறும் செய லாகும் என தெரிவித்துள்ளது. இதனிடையே இலங்கைக் கப்பற்படையிடம் ஒப்படைக்கப்பட்ட அனைத்து தமிழர்களும் புதன் (03.07.14) இலங்கையை சென்றடைதிருப்பார்கள் என ஆஸ்திரேலிய செய்தி மய்யம் உறுதி செய்தது. அந்த வகையில் இவர்கள் அனைவரும் கடல் மார்க்கமாகவே நாடுகடத்தப்பட்டுள்ளார்கள். ஆஸ்திரேலியாவின் இந்த மனிதாபிமானமற்ற கொடிய செயல் உலகத் தமிழர்களிடையே பெரிதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா வில் ஆட்சி மாற்றமடையத் துவங்கி யதும், இலங்கை அரசு இந்திய வெளி யுறவுத்துறையின் துணையுடன் அடைக்கலம் கோரி பல்வேறு நாடு களுக்குச் செல்லும் அகதிகளை மீண்டும் தங்கள் நாட்டிற்கு கொண்டுவரும் முயற்சியின் ஆரம்ப கட்டமாகவே இது கருதப்படுகிறது.

_ சரவணா இராஜேந்திரன்

Read more: http://viduthalai.in/page5/83502.html#ixzz371Xz4a6P

தமிழ் ஓவியா said...


யாகம் யாருக்காக?

யாகம் என்பது ஆரிய முறை. இதைச் செய்வதால் கடவுள்கள் திருப்தி அடைந்து வேண்டுவதைத் தருவார்கள் என்ற பொய்யைச் சொல்லிப் பிழைப்புக்கு வழி ஏற்படுத்திக் கொண்டனர் ஆரியப் பார்ப்பனர்கள்.

7000 கோடி ரூபாய் அளவுக்கு பொய்க் கணக்கு எழுதி மோசடி செய்தார் என்ற புகாரில் சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன முதலாளி ராமலிங்க ராஜூ என்பவர் சிறையில் அமைக்கப்பட்டுள் ளார். பிணையில் வெளிவர அனுமதிக்கு மாறு நீதிமன்றத்தில் மனு கொடுத் துள்ளார். மனு - வரும் 16ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட விருக்கிறது.

இந்நிலையில் அவருக்கு ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காக, அவரது துணை நிறுவனம் ஒன்றின் பணியாளர்கள் யாகம் நடத்தியுள்ளன ராம்! குற்றம் செய்தவர்களுக்குக்கூட யாகம் செய்தால் -_ பகவான் அனுக்கிரகம் கிடைக்கும் என்றால், கடவுள் எப்பேர்ப் பட்ட மோசமான ஜென்மமாகப் படைக்கப்பட்டுள்ளது?

சிந்திக்க வேண்டும். சாமியை வேண்டிக் கொண்டு திருடன் திருடப் போகிறான்; சாமியை வேண்டிக் கொண்டு திருடனைப் பிடிக்கக் காவல ரும் போகிறார் என்றால்... கடவுள் யார் பக்கம்? என்று கேட்டார், பெரியார்!

அதே கேள்வியை இப்போதும் கேட்டுப் பார்க்க வேண்டிய நிலை உள் ளதே, இருக்கலாமா? சிந்திப்பீர்!

குறிப்பு: பிணை கொடுக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(Deccan Chronicle 13.1.2009).

Read more: http://viduthalai.in/page5/83556.html#ixzz371Y6Kf5h

தமிழ் ஓவியா said...


அறிஞர் அண்ணாவின் படைப்புகளில் பெண்ணுரிமை இடம் பெறவில்லையா?


அறிஞர் அண்ணாவின் படைப்புகளில் பெண்ணுரிமை இடம் பெறவில்லையா?

கலைமாமணி மறைமலையான் விளக்கம்

சாகித்திய அகாடமி மற்றும் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கியத் துறை சார்பில் விந்தன் நூற்றாண்டை நோக்கி... என்னும் தலைப்பில் 25.6.2014 அன்று நடை பெற்ற கருத்தரங்கில், வ. கீதா என்பவர் காலமெல்லாம் பெண்ணிய உரிமை களுக்காக எழுத்தாலும், பேச்சாலும் போர் முரசு கொட்டிய பேரறிஞர் அண்ணா அவர்களின் படைப்புகளில் பெண்ணுரிமை பற்றி எழுதப்பட வில்லை என்றும், அவரது படைப் புகள் பெண்ணிய மறுமலர்ச்சிக்கு வித்திடவில்லை என்றும் பெருமை வாய்ந்த பல்கலைக் கழகத்தில் பேசி அண்ணாவின் தமிழின வளர்ச்சிப் பணியை இழிவுபடுத்திக் கூறியுள்ள கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும்.

ஈ.வெ.ரா.வின் எழுத்துகளில் பெண் உரிமைகள் பிரதிபலிக்கும். ஆனால், அவரைப் பின்தொடர்ந்த அண்ணா துரை எழுத்துகளில் அதைப் பார்க்க முடியவில்லை என்று அந்தப் பெண் எழுத்தாளர் பேசியுள்ளார்.

ஏதோ, பேரறிஞர் அண்ணா தீட்டிய அத்தனை வகையான இலக்கியப் படைப்புகளையும் ஆழ்ந்து படித்து விட்ட அறிவுக் கொழுந்தாகத் தம்மை நினைத்துக் கொண்டு, பொறுப்பற்ற முறையில் புழுதிவாரித் தூற்றலாமா? இந்த எழுத்தாளி அம்மையார் என்கிற நியாயமான கேள்வியைத் திராவிட இயக்கத்தின் நீண்ட காலத் தொண் டர்கள் எழுப்பவே செய்வர்.

பகுத்தறிவுத் தந்தை பெரியார் அவர்கள், தம்முடைய சொந்தச் சிந் தனையால் என்னென்ன சமுதாயச் சீர்திருத்தப் பகுத்தறிவுக் கொள்கைகளைத் தமிழ்நாட்டின் உரிமை - தமிழ்மொழியின் உரிமை - _ பெண் குலத்தின் உரிமை - தொழிலாளர் உரிமை - வகுப்புவாரிய இடஒதுக்கீடு உரிமை முதலானவற்றுக்காக முழங்கி னாரோ, அத்தனைக்கும், புத்தம் புதிய மறுமலர்ச்சி உரை நடையுடன் - கவிதைச் சாரலுடன் _ தம்முடைய கற் பனை வளம் கொழிக்கும் இலக்கியப் படைப்புகளை உருவாக்கியவர் பேரறிஞர் அண்ணா.

சிறுகதை, நெடுங்கதை, நாடகம், கவிதை என்பதாக எதை எழுதினாலும், பெரியாரின் கொள்கைகளையே கருப்பொருளாக வைத்து மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஊட்டிய அந்தப் படைப்பு இலக்கியப்பகலவன் அண்ணா _ தம்முடைய ஒரே தலைவர். பெரியார் பரப்பிய பெண்ணுரிமைக் கொள்கையை மட்டும் மறப்பாரா? துறப்பாரா?

வேலைக்காரி என்னும் அண்ணா தீட்டிய நாடகத்தை நடிப்பிசைப் புலவர் கே.ஆர். இராமசாமி தஞ்சாவூரில் ஆண்டுக் கணக்கில் நடத்தினாரே? அதுவே பிறகு திரைப்படமாகவும் தமிழ்நாட்டைக் கவர்ந்து பணத்தைக் குவித்ததே! அது ஏழைப் பெண்ணின் உரிமைகளுக்காக எழுதப்பட்ட கலைப்படைப்பு இல்லையா?

சந்திரோதயம், பாவையின் பயணம் போன்ற நாடகங்களிலும் பெண்ணியம் பற்றிப் பேசவில்லையா? கபோதிபுரக் காதல், இரங்கோன்ராதா, பார்வதி பி.ஏ., குமரிக்கோட்டம், தசாவதாரம் -_ இப்படி, எத்தனையோ புதினங்களும், வள்ளித் திருமணம், கோமளத்தின் கோபம், உண்ணாவிரதம் ஒரு தண் டனை - இப்படி எத்தனையோ சிறு கதைகளும், அண்ணாவின் பெண்ணிய உரிமைப் படைப்புகள் இல்லையா?

எப்படி முகத்தில் இரண்டு கண்கள் சரியாக அமைந்து, முகத்திற்கு ஒரு பொலிவை ஏற்படுத்துகிறதோ அது போல், சமூகத்தின் இரண்டு கண்களாக அமைந்த ஆண்களும், பெண்களும் சமமான உரிமை பெற்றால்தான் சமூகம் பொலிவு பெறும். என்று எழுதியுள் ளவர் அண்ணா.

ஆனால், மேலே நாம் தொட்டுக் காட்டியுள்ள படைப்புகளில் சிலவற் றைக்கூடப் படிக்காமல் - அண்ணா துரை எழுத்துகளில் பெண் உரிமை பிரதிபலிக்கவில்லை என்று வ.கீதா அவதூறாகப் பேசலாமா? இப்படிப் பட்ட நுனிப்புல் மேயும் ஆணவக் காரர்கள் இந்திய அரசின் சாகித்திய அகாடமியில் உறுப்பினராக இடம் பெற்று இருப்பது அந்த இலக்கிய அமைப்புக்கே இழுக்கு இல்லையா?

பெண்ணிய உரிமையில் எந்த அளவுக்கு அண்ணா அழுத்தமாக அக்கறை கொண்டிருந்தார் என்பதற்கு - சென்னை, தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டு வரும் அண்ணாவைப் பற்றிய ஆய்வு நூல்களைப் படிக்க வேண்டும் வ.கீதா.

அந்த நிறுவனம் தழைத்து ஓங்குவதற்கு இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூபாய் பத்து லட்சம் வைப்புத் தொகையாக வைத்து அண்ணாவின் பெயரில் ஓர் அறக்கட் டளையை அங்கு ஆரம்பித்து அவ்வறக் கட்டளையின் சார்பில் ஆண்டுதோறும் அண்ணாவின் பன்முக இலக்கியங் களைக் குறித்து இன்றைக்கும், என் றைக்கும் எல்லோரும் தெரிந்து கொள்ளும் வகையில் ஆண்டிற்கு இரண்டு முறை ஆராய்ச்சிப் படைப் புகள் வெளியிடுகிறது. இதை ஆழ்ந்து படிக்க வ.கீதா அவர்கள் முனைந்திடுக! அறிஞர்களைப் பற்றிப் பேசும் முன் தன்னைப்பற்றி அறிந்திடுக!

பேரறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப் பெற்ற அந்த நிறுவனத்தின் நூல்களைப் படித்தாவது தமது எழுத்தாளர் தகுதியை உயர்த்திக் கொள்ள வேண்டும் எனப் பேரறிஞர் அண்ணாவின் பெருவாழ்வு என்னும் அவரது வரலாற்று நூலை 1967லேயே எழுதிய இந்த 82 வயது அ. மறை மலையான், வ. கீதா அவர்களைக் கேட் டுக் கொள்கின்றேன்.

தமிழ் ஓவியா said...


பெண்கள் ஹார்மோன்களில் ஏற்படும் மாறுபாடு இதயத்துக்கு கேடு


பெண்களுக்கான மாதவிலக்கின் போது ஏற்படும் பாலின ஹார்மோன் களின் மாறுபாடுகளால் இதய நோய்க்கு வாய்ப்பு ஏற்படுவதாக ஆய்வுத்தகவல் கூறுகிறது.
பெண்களுக்கு கொழுப்புச் சத்துக் குறையும்போது, ஹார்மோன் அளவுகள் மாறுபாடு அடைந்து, அதிக அளவில் இதய நோய்க்கு ஆளாகும் வாய்ப்பு ஏற்படுவதாக ஆய்வுத்தகவல் கூறுகிறது.

அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் பட்ட தாரிகளுக்கான பொது சுகாதாரப் பள்ளியின் உதவிப் பேராசிரியர் சாமர் ஆர். எல் கவ்தரி கூறும்போது, பெண்கள் மாதவிலக்கிற்கு காரணமாக உள்ள ஈஸ்ட்ராடியோல் என்கிற பெண்களுக்கான உறுதியான ஹார் மோன்களின் அளவு குறைவதைக் கண்டுபிடித்தோம். அந்த ஹார் மோன்கள் குறைந்து, தரம் குறைந்த கொழுப்புக்களுடன் இணைந்து கொள்வதால், இதய நோய்க்கு வாய்ப் பான காரணங்களாக அமைந்து விடுகின்றன என்று கூறினார். கொழுப் புச்சத்து இரத்த ஓட்டத்தில் சிறிய அளவில் சென்று லீப்போ-புரோட்டீன் என்று அல்லது கொழுப்பை கொண்டு செல்பவை என்று அழைக்கப் படுகின்றன.

பழைய முறை இரத்தப் பரிசோ தனைகளில் வெறுமனே கொழுப்பு அளவைக் கண்டறியும்போது லீப்போ-புரோட்டீன் அளவைமட்டும் பொது வாகக் கொள்வார்கள். ஆனால், அதில் HDL,LDL என்று இரு பெரும் பிரிவுகள் உள்ளன. அதிக அடர்த்தி உள்ள லீப்போ-புரோட்டீன் (High-Density Lipoprotein-HDL) இது தமனிகளில் கொழுப்பு சேர்வதை தடுப்பது, குறைந்த அடர்த்தி கொண்ட லீப்போ-புரோட்டீன் (Low-Density Lipoprotein-LDL) இது தமனிகளில் கொழுப்பைச் சேர்வதற்கு முக்கிய காரணமாக அமைந்து தடுப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன.

120 பெண்களிடையே மேற்கொள் ளப்பட்ட ஆய்வின்படி, இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் கண்டறிய அணு காந்த அதிர்வின் மூலம் செயல்படும் ஸ்பெக்ட் ரோஸ்கோபி என்னும் கருவியைப் பயன்படுத்தியுள்ளனர்.

ஆய்வின்படி, ஈஸ்ட்ரோஜன் அளவு குறைந்தால், பெண்கள் கொழுப்பின் அளவு, அடர்த்தி, தரமற்ற கொழுப்பு ஆகிய அனைத்தும் இதய நோய்க்கு அடிகோலும் காரணிகளாக இருப்ப தால், அதிக அளவில் கவனமாக இருக்க வேண்டும்.

எங்கள் ஆய்வு முடிவு பரிந் துரைப்பது என்னவென்றால், நவீனப் பரிசோதனைகள்மூலம் மதிப்பற்ற முடிவுகளைப் பெற முடிகிறது. அனைத்துவிதத்திலும் கொழுப்பைக் கொண்டு செல்பவற்றின் தரத்தை மாதவிலக்கின் தொடக்கத்திலேயே அறியமுடியும். ஆகவே, அந்த முடிவுகளின்படி, உட்கொள்ளக்கூடிய உணவுமுறைகள், பின்பற்ற வேண்டிய வாழ்வியல் நெறி முறைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். என்று எல் கவ்தரி குறிப்பிட்டார். இந்த ஆய்வுத்தகவல் லிபிட் ரிசர்ச் என்கிற ஏட்டில் வெளியாகி உள்ளது.

Read more: http://viduthalai.in/page6/83560.html#ixzz371Z6Qdbb

தமிழ் ஓவியா said...


பழத்தின் நன்மைகள்


எலுமிச்சம்பழம்: அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச் சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து கொடுத் தால் உடனடியாக பேதி நின்று விடும். கடுமை யான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்றை உறிஞ்சி குடித்தால் உடனே களைப்பை போக்கும்

நெஞ்சினில் கபம் கட்டி இருமலால் கஷ்டப் படுகிறவர்கள் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி உடல் நன்கு தேறும்.

ஆரஞ்சுப்பழம்: ஆரஞ்சில் வைட்ட மின் ஏ அதிக மாகவும், வைட்ட மின் சி-யும், பி-யும், பி-2ம் உள்ளன. மேலும் இதில் சுண் ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படு கிறது. பல நாட் களாக நோயால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும். இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும். பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல்-ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் பெறலாம்.

காய்கறிகள்....

பழங்களைப் போலவே காய்கறிகளும் மனிதர் களுக்கு உடல்நலக் கோளாறுகளை தனிக்கும் வகையில்தான் உள்ளது. நோய்களை முழுதுமாக குணப்படுத்துகிறதோ இல்லையோ ஆனால், நோய்வரா மல் தடுக்கும் ஆற்றல் காய், கனிகளுக்கு உண்டு என்பதை மறுக்கமுடியாது. நமது முன்னோர் களும், சித்தர்களும் காய் கனிகளையே பல நாட்கள் உண்டு நீண்ட ஆயுளுடன், திடகாத்திர ஆரோக்கியத் துடன் வாழ்ந்திருந்ததை நமது வரலாறு கூறும். காய்கறிகள் ஒவ்வொன்றிற்குமே ஒவ்வொரு வகை யான மருத்துவ குணம் உண்டு. உடனே நீங்கள் இந்த நோய்க்கு இந்த காயை சாப்பிட்டால் இந்தக் குறிப் பிட்ட நோய் குணமாகிவிடுமா என்று கேள்வி கேட்கக் கூடாது.

பொதுவாக காய்கறிகளில் நார்ச்சத்து நிரம்பியிருப் பதினால் வயிற்றுக்கு கேடு செய்யாமல், நம் உடம்பை ஆரோக்கிய முடன் வைத்திருக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளும், ரத்த அழுத்த நோயாளிகளும் காய் கறிகளை நிறைய உண்பது அவசியம் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் உண்டு. காய்கறிகளில் இருக்கும் பைபர் எனப்படும் நார்ச்சத்து வயிற்றில் நீண்ட நேரம் தங்கி நல்ல ஜீரண சக்தியை கொடுத்து உணவில் இருந்து சத்துக்களை பிரித்து ரத்தத்தில் சேர்ப்பதற்கு உதவி செய்கிறது. இந்த நார்சத்தற்ற உணவுகளை சக்கையாக நாம் உண்ணும் போதுதான் மலச்சிக்கல் மற்றும் குடல் தொல்லைகள் போன்றவற்றிற்கு ஆளாக நேரிடுகிறது. எனவே காய்கறிகள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

Read more: http://viduthalai.in/page7/83561.html#ixzz371ZFs2nD

தமிழ் ஓவியா said...


அது அப்போ! இது இப்போ!


தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி

தமிழ்நாட்டில் கடல்வளம் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை நரேந்திரமோடி பேட்டி

பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாடு கடல் வளத்தை சரியாக பயன்படுத்தவில்லை என குற்றம் சாற்றினார்.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது:

தமிழ்நாடு மிக அதிக அளவு சுற்றுலாப் பகுதிகள் நிறைந்த பகுதி. இங்கு சுற்றுலாத் துறையை மேம்படுத்த கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சுற்றுலா வளர்ச்சி அடைவதன் மூலம் பெரிய தொழில் அதிபர்களுக்கு லாபம் இல்லை. ஆனால், இதன் மூலம் சுற்றுலா வழிகாட்டிகள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் தமிழ்நாடு இந்தியாவிலேயே மிகப் பெரிய கடல் வளம் நிறைந்த மாநிலம் ஆகும்.

குஜராத்தில் கடற்கரை மற்றும் கடல் வளத்தை முழுவதும் பயன்படுத்தி வருவதால் அங்கு நல்ல வளர்ச்சி உள்ளது. தமிழ்நாடு கடல் வளத்தை சரியாக பயன்படுத்தவில்லை. தமிழகம் கடல் வளத்தை முழுமையாக பயன்படுத்தினால் தொழில் வளர்ச்சி பெறுவதுடன் வேலை வாய்ப்பும் பெருகும். தமிழ் நாட்டில் ஏற்கெனவே இருக்கும் துறைமுகங்களை மேம்படுத்தவும், புதிதாக துறைமுகங்களை உருவாக் கவும் நடவடிக்கை எடுப்பதன் மூலம் தொழில் வளர்ச் சியை அதிகரிக்கச் செய்ய முடியும் என்றும் கூறினார்.

ஆட்சிக்கு வந்தபின் என்ன நடக்கிறது?

கச்சத்தீவு: நீதிமன்றத்தில் கச்சத்தீவு முடிந்தபோன ஒன்று, இந்தியாவின் பகுதி அல்ல என்று மத்திய அரசு கூறி உள்ளது.

இந்திய பெயர்ப் பலகை: 5ஆம் திட்டில் இந்திய எல்லைப் பகுதி என்று அறிவிப்புப் பலகை.

இப்படி இருந்தால் கடல் வளம் அதிகமான அளவில் தமிழகத்தில் இருப்பதாகக் கூறிவிட்டு, அந்த வளத்தை அண்டை நாட்டுக்குத் தாரை வார்க்கும் செயலை மத்திய அரசு செய்யலாமா? சேது சமுத்திரத் திட்டத்தில் மத்திய அரசுக்கு என்ன நிலைப்பாடு?

Read more: http://viduthalai.in/page1/83580.html#ixzz371a0hvKw

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?

ஆதிசங்கரர் கடவுளா?

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் ஆதி சங்கரர் சன்னதி உள்ளது காமாட்சியம்மன் உற்சவ மூர்த்தி பவனி வருமுன் ஆதி சங்கரர் சன்னதி முன் நின்று அவருடைய உத்தரவு பெற்றே வலம் வருகிறதாம்.

அப்படியானால் ஆதிசங்கரர் மனிதரா? அல்லது கடவுளே உத் தரவு கேட்டு செயல்படும் பெரிய கடவுளா?

கடவுளுக்கு மேலே பிராமணன் என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கூறியது இந்த அடிப் படையில்தானோ!

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?


ஆதிசங்கரர் கடவுளா?

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் ஆதி சங்கரர் சன்னதி உள்ளது காமாட்சியம்மன் உற்சவ மூர்த்தி பவனி வருமுன் ஆதி சங்கரர் சன்னதி முன் நின்று அவருடைய உத்தரவு பெற்றே வலம் வருகிறதாம்.

அப்படியானால் ஆதிசங்கரர் மனிதரா? அல்லது கடவுளே உத் தரவு கேட்டு செயல்படும் பெரிய கடவுளா?

கடவுளுக்கு மேலே பிராமணன் என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கூறியது இந்த அடிப் படையில்தானோ!

Read more: http://viduthalai.in/page1/83575.html#ixzz371abGBEC

தமிழ் ஓவியா said...


ஆரோக்கியமாக வாழ சில அறிவுரைகள்

ஆரோக்கியமாக வாழ சில அறிவுரைகள்

தூங்கப் போவதற்கு முன், தினமும் கை, கால்கள், முகத்தை கழுவுங்கள்; பற்களையும் சுத்தம் செய்யுங்கள். சிறிது நேரம் வாய்க்குள் தண்ணீரை வைத்து, நன்றாக வாயை கொப்பளியுங்கள்.

* தினமும் நன்றாக தூங்குங்கள். மாதத்தில் ஒரு முறையாவது கண்ணாடி முன் நின்று, உங்கள் உடலை பாருங்கள். அப்படி பார்த்தால், உடலில் ஏற்படும் சுருக்கங்கள், படைகள் போன்றவைகளை கண்டறியலாம்.

* உணவில் பச்சை காய்கறிகளையும், பழ வகை களையும் தேவையான அளவு சேருங்கள்.

* முடிந்த அளவு வாகன பயணங்களை மேற் கொள்ளா தீர்கள்; அதிகமான தூரம் நடந்து செல்ல முயற்சி செய்யுங்கள்.

* தினமும் குறைந்தது, 50 முறை உட்கார்ந்து எழுவது நல்லது. அப்படி செய்தால் இடுப்பு அழகுபடும்; தொந்தியும், வயிறும் குறையும்.

* குளிக்கும்போது எப்போதும் குதிகாலையும், கால் விரல்களையும் தேய்த்து கழுவுங்கள்.

* படுக்கைக்கு அருகிலும், வேலை பார்க்கும் இடத்துக்கு அருகிலும், ஒரு பாட்டிலில் தண்ணீர் எடுத்து வைத்து கொள்ளுங்கள். தேவைப்படும் போதெல்லாம் தண்ணீர் குடியுங்கள்.

* முளைவிட்ட கடலை, சிறுபயறு போன்றவைகளை காலை உணவில் சேர்க்க வேண்டும்.

* கை நகங்களை வெட்டி சுத்தம் செய்வதை, கடமை யாக கொள்ளவும்.

* அதிக சூடு, அதிக குளிர் உணவுகள் பற்களுக்கு கேடு பயக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

* இரவு இனிப்பு பலகாரங்கள் சாப்பிட்டால், மறக்காமல் பற்களை சுத்தப்படுத்தி விடுங்கள்.

* இரவில் அதிக நேரம் விழித்திருப்பதும், பகலில் தூக்கம் போடுவதும் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.

* கொழுப்பு நிறைந்த எண்ணெயை உணவில் சேர்க்காதீர்கள்; அது, உடல் அழகுக்கும், ஆரோக்கியத் திற்கும் கேடு பயக்கும்.

* தினமும் காலையில் தேநீரோ, குளம்பியோ (காபி) குடிப்பதற்கு முன், ஒரு பழம் சாப்பிடுவது நல்லது.

* தினமும் காலையில், 10 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்

Read more: http://viduthalai.in/page1/83607.html#ixzz371cuHnFF

தமிழ் ஓவியா said...

ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் பூண்டு

ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைப்பதில் பூண்டின் பங்கு முதன்மையானது. செரிமானமின்மை, சளி பிடித்தல், காதுவலி, வாயுத்தொல்லை, முகப்பரு, ஊளைச்சதை, ரத்த சுத்தமின்மை, புழுத்தொல்லை, ரத்த அழுத்தம் சம்பந்தமான நோய்கள், மூலநோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் உதவுகிறது.

இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதன பொருளாக பயன்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன. பூண்டின் மணத்திற்குக் காரணம் அதில் உள்ள சல்பரே. இதில் பலவகையான மருத்துவக் குணங்கள் உள்ளன. பூண்டில் அலிசின் என்ற ஆன்டி ஆக்சி டண்ட் உள்ளது. இந்தச் சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Read more: http://viduthalai.in/page1/83607.html#ixzz371dWegRC

தமிழ் ஓவியா said...


இளவரசன் நினைவு ஒரு சிந்தனை!
எழுத்துரு அளவு Larger Font Smaller Fontதருமபுரி மாவட்டம் நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டி கிராமங்கள் எரியூட்டப்பட்டன (7.11.2012) 226 வீடுகள் தீயின் கோரப் பசிக்கு இரையாயின.

உடனடியாக அந்தப் பகுதிக்குச் சென்று உண்மை நிலைகளைத் தெரிந்து கொள்ள கழகத் தோழர்களுடன் நேரில் சென்றார் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் (14.11.2012).

நேரில் கண்ட உண்மைகளின் அடிப்படையில் திராவிடர் கழகத்தின் சார்பில் அறிக்கை காவல்துறைத் தலைமை இயக்குநரிடம் (டிஜிபி) அளிக்கப்பட்டது (27.11.2012).

தருமபுரியில் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. (9.12.2012).

பெரும்பாலான கட்சித் தலைவர்கள் பிரம்மாண்ட மான அந்த மாநாட்டில் பங்கேற்று ஆக்கரீதியான கருத்துக்களைத் தெரிவித்தனர்.

அன்று காலையில் சிறப்பான கருத்தரங்கமும் நடத்தப்பட்டது; இது தொடர்பாக அரசு விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை இதுவரை அளிக்கப்படவில்லை.

பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் நிவாரண உதவிகள் அளிக்கப்பட்டன.

அங்கு நேரில் சென்று விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியூட்டக் கூடியவை.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளவரசன், வன்னிய சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட தனிப்பட்ட பிரச்சினையை சமூகப் பிரச்சினையாக்கிய ஜாதீய வாதம் இதன் பின்னணியில் இருப்பதை அறிய முடிந்தது.

அதே பகுதியில் தாழ்த்தப்பட்டவரும், வன்னிய பிரிவைச் சேர்ந்தவரும் திருமணம் செய்து கொண்டு பல ஆண்டு காலமாக எவ்வித சிக்கலுமின்றி மக்கள் பேற்றுடன் மகிழ்ச்சியாக வாழக் கூடிய பல குடும்பத் தினரையும் காண வாய்ப்புக் கிடைத்தது.

பிரச்சினை நீதிமன்றம் வரை சென்ற நிலையில்கூட சம்பந்தப்பட்ட பெண் தன் காதலில் உறுதியாக இருந்து காதலனுடன் செல்ல விருப்பம் தெரிவித்ததை நாடு அறியும்.

இந்தியாவிலேயே ஜாதி ஒழிப்புக்கு வித்திட்டு மக்கள் மத்தியிலே சமத்துவ சிந்தனை தமிழ் மண்ணில் ஊன்றப்படுவதற்குக் காரணமாக இருந்தவர் தந்தை பெரியாரும், அவர்கள் கண்ட இயக்கமும்தான்.

ஜாதி ஒழிப்புத் திருமணங்களும் அதிகம் நடைபெறும் மண்ணாக தமிழ்நாடு இருந்து வருகிறது. திராவிடர் கழக மாநாடுகளில்கூட ஏராளமான ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெற்றும் வருகின்றன!

இதற்கென்றே சுயமரியாதைத் திருமண நிறுவனமும் பெரியார் திடலில் இயங்கி வருகிறது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் மன்றல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, ஜாதி மறுப்பு, மத மறுப்புத் திருமணங்களுக்கான ஏற்பாடுக ளும் செய்யப்பட்டன.

விதவையர் திருமணம், மணவிலக்குச் செய்யப் பட்டோருக்கான திருமணங்களுக்கும் மன்றல் நிகழ்ச்சிகள் வழி வகுத்தன - இளைஞர்கள் மத்தியிலும் ஆக்கப் பூர்வமான சிந்தனைகள் இவற்றின் மூலம் தட்டி எழுப்பப்பட்டன.

இதற்கிடையே நல்லவிதமாகப் போய் கொண்டிருந்த இளவரசன் வாழ்க்கைப் பயணத்தில் புயல் வீச வழி செய்யப்பட்டது. அதன் விளைவு இளவரசன் தற்கொலை(?) செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளதை யாரும்மறுக்க முடியாது.

அந்த இளைஞன் மறைந்து ஓராண்டு ஓடி விட்டது; இதற்கிடையே தலித் மக்களை சமுதாயத்திலிருந்து தனிமைப்படுத்தும் திட்டம் ஒன்றை உருவாக்க முயற்சிகள் நடைபெறத் தொடங்கின.

இது ஒரு பார்ப்பன ஆதிக்கச் சமுதாயம். அந்த ஆதிக்கத்திலிருந்து அனைத்து வழிகளிலும் பெரும் பாலான பார்ப்பனர் அல்லாத மக்களை விடுதலை பெறச் செய்யவும், இம்மக்களுக்கு உரிய உரிமைகளை ஈட்டவும் தந்தை பெரியார் சமூகப் புரட்சியை நடத்தினார்.

பறையன் பட்டம் போகாமல் சூத்திரப் பட்டம் போகாது என்று சொன்ன தலைவர் தந்தை பெரியார்; அப்படிப்பட்ட நாட்டில், தாழ்த்தப்பட்ட மக்களை ஆதிக்கப் பிரிவினரான பார்ப்பனர்களையும் இணைத் துக் கொண்டு தனிமைப்படுத்தும் முயற்சி என்பது மிகவும் பிற்போக்குத்தனமான ஜாதீய நோக்காகும். எந்த அளவுக்குச் சென்றுள்ளனர் என்றால் வன்கொடுமை தடுப்புச் சட்டமே கூடாது என்று வழக்குத் தொடுத் துள்ளனர். அதனைத் திராவிடர் கழகம் உரிய முறையில் சந்திக்கும்.

இந்த ஜாதீய நோக்கு எடுபடவில்லை என்பது நாடாளுமன்றத் தேர்தலும் நிரூபித்து விட்டது.

இளவரசன் நினைவு நாளில் ஜாதி ஒழிந்த சமுதாயத்தை உருவாக்கும் திசையில் முழு மூச்சாகப் பாடுபட உறுதி எடுப்பதுதான் அந்த ஒடுக்கப்பட்ட சமுதாய இளைஞனுக்கு செலுத்தும் தலை சிறந்த வீர வணக்கமாக இருக்க முடியும்.

Read more: http://viduthalai.in/page1/83582.html#ixzz371dwtOSV

தமிழ் ஓவியா said...


விரட்டியடிப்போம் விளம்பரங்களில் தலைதூக்கும் ஜாதிப்பாம்பை
சந்தடி சாக்கில் கந்தப்பொடி தூவுவது போல், பார்ப்பனர்கள் தங்களுடைய ஜாதி மேலாண்மையையும், ஜாதியத்தை நிலை நிறுத்தும் போக்கையும் செய்து கொண்டே இருப்பார்கள். சமீப காலமாக இரு விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன. முதலாவது, கோத்ரெஜ் நிறுவனம் தயார் செய்யும் சிந்தால் சோப்பிற்கான விளம்பரம் இதில் சுபா அய்யர் என ஒருவர் பேசுவது போல் காண்பித்திருப்பார்கள்.

இரண்டாவது விளம்பரம் ஆர்லிக்ஸ் இதில் ரோஷன் நாயர் எப்படி இதனால் முன்னேற்றமடைந்தார் என்பதைக் காண்பித் திருப்பார்கள். இதில் மூன்று விஷயங்கள் அடங்கியுள்ளன. முதலாவது ஜாதியை நிலை நிறுத்துவது என்றால், இரண்டாது அதில்கூட உயர்ஜாதி என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களின் ஜாதியையே போட்டுக் கொள்வது, மூன்றாவதாக பெண்கள் பெயருக்குப் பின்னால் ஜாதி வாலை இணைப்பது என சேட்டை நீள்கிறது.

மறந்து போய்க்கூட சுபா நாடார் என்றோ ரோஷன் பறையர் என்றோ போட மாட்டார்கள் (எதையுமே போடக்கூடாது என்பதே நமது நிலைப்பாடு!)

எனவே, தலைமைக் கழகத்திலிருந்து இந்த இரு நிறுவனங்களையும் (இவைகள் பார்ப்பன பனியா, உயர் ஜாதியினர் மேலாதிக்கத்திலிருக்கும் பெரு நிறுவ னங்கள் (Corporate Bodies) என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை) கண்டித்து கடிதம் எழுதுவதுடன் மேலும் இது தொடர்ந்தால் இந்த நிறுவனப் பொருட்களை உபயோகிக்கக்கூடாது என மக்களிடையே பிரச்சாரம் செய்வோம் என சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையாக எச்சரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

- பேராசிரியர் தி.ப.பெரியாரடியான் (தூத்துக்குடி)

Read more: http://viduthalai.in/page1/83586.html#ixzz371ePqQ3W

தமிழ் ஓவியா said...


பார்ப்பனரின் பிழைப்புக்கு கட்டப்படும் கோவில்


தங்களுடைய பிழைப்பை நடத்துவதற்காக பார்ப் பனர்கள் மக்களுக்கு தீங்கு செய்வதற்கும் இடையூறு செய்வதற்கும், அஞ்ச மாட்டார்கள் என்பதற்கும், சட்டத்தை மதிக்காமலும், சட் டத்தை மீறியும் காரியங் களை செய்ய தயங்க மாட் டார்கள் என்பது காலம் காலமாக நடந்து வரும் ஒன்றுதான்.

தற்போதுகூட கோவை மாநகராட்சி 51ஆம் வார்டு 100 அடி சாலையிலிருந்து 9ஆவது வீதிக்கு திரும்பும் இடதுபுறத்தில் சாலையை ஆக்கிரமித்து பத்து அடி அகலத்தில் முத்துமாரியம்மனுக்கு ஒரு கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக சாலையை மறித்து, தட்டி மறைப்புகள் வைக்கப்பட்டுள்ள தோடு மேற்கண்ட சட்டவிரோத கோவிலுக்கு நிதி கொடுக்கவேண்டிய மிகப் பெரிய நெகிழ்வு பதாகை வைக்கப்பட்டுள்ளது.

இந்த கோவில் கட்டப்படுவது குறித்து விசாரித்தபோது, பார்ப்பனர் ஒருவர் பிழைப்பில்லாமல் இருப்ப தாகவும் அவருக்கு பிழைப்பை ஏற் படுத்திக் கொள்ள அவர் கொடுத்த ஆலோசனையின்படி இந்த சட்ட விரோதக் கோவில் கட்டப்பட்டு வருவதாகவும் தெரிய வந்தது.

தன்னுடைய பிழைப்புக்குகூட, தன்னுடைய முதலீடு இல்லாமல் பொது மக்களின் பயன்பாட் டிற்குரிய சாலையை ஆக்கிரமித்து கோவில் கட்டி வரும் பார்ப்பனரின் புத்திக் கூர்மை யாருக்கு வரும்.

என்னே பார்ப்பனர்களின் புத்தி.

தகவல்: கண்ணன்

Read more: http://viduthalai.in/page1/83640.html#ixzz371fELcMI

தமிழ் ஓவியா said...


நேரிடும்


நமது அரசியல் வாழ்வு என்பதைப் பொதுவுடைமை வாழ்வாக ஆக்கிக் கொண்டால்தான் மக்கள் சமுதாயம் கவலையற்றுச் சாந்தியும், சமாதான மும் பெற்று வாழ முடியும். இல்லா விட்டால், மக்கள் சித்திரவதைக்கு ஆளாகத்தான் நேரிடும்.
(விடுதலை, 29.5.1973)

Read more: http://viduthalai.in/page1/83643.html#ixzz371fcE3x2

தமிழ் ஓவியா said...

1936இல் எழுதப்பட்டது விடுதலையின் இரண்டாவதுஆண்டுசென்ற ஆண்டு ஜூன் மாதம் முதற்றேதி ஆரம்பிக்கப்பட்ட விடுதலை ஓராண்டு முடிந்து, இன்று இரண்டாவதாண்டு தொடங்குகிறது. பல அசௌகரியங்களுக்கிடையே ஆரம்பிக்கப்பட்ட இப்பத்திரிகை, ஜஸ்டிஸ் கட்சியைப் பின்பற்றுபவர் களின் ஆதரவினாலும், பார்ப்பனரல் லாதார் முன்னேற்றத்தில் நாட்டங் கொண்டவர்களின் கூட்டுறவினாலும், தமிழ் மக்களின் தளரா அன்பினாலும், பத்திரிகை உலகத்தில் தலையெடுத்து, ஓராண்டு காலம் தமிழ் நாட்டிற்குத் தொண்டு செய்து வந்திருக்கிறது. இவ்வோராண்டிற்குள், மக்களுடைய அடிமை வாழ்வின் விடுதலைக்காக நடத்தப்படும் போரில் பெரும் பங் கெடுத்துக் கொண்டிருக்கிற தென் பதைத் தமிழ்நாட்டார் அறிவார்கள். மதம், புரோகிதம், சாத்திரம், ஜோசியம் முதலிய அறிவு வளர்ச்சிக் கும், சமூக முன்னேற்றத்திற்கும் தடையாயுள்ளனவற்றை ஒழிப்பதற்கும் பிறப்பினாலும், பணத்தினாலும் படிப் பினாலும் ஏற்பட்ட உயர்வு தாழ்வு களினால் ஏழை மக்களுக்குண்டாகும் துயரங்களை நீக்குவதற்கும், விடுதலை துணை செய்ய முயன்றிருக்கிறது. தமிழ் நாட்டில் ஜாதி இறுமாப் பையும், அறியாமை இருட்டையும் விரட்டி ஓட்டுவதற்காக, அறிவுரைக் கொத்து, தொல்காப்பிய ஆராய்ச்சி முதலிய கிளர்ச்சிகளை பரப்புவதற்கும், பலப்படுத்துவதற்கும் உதவியளித்திருக் கிறது. சென்னைப் பல்கலைக்கழக வித்துவான தேர்தல் கழகத்தில் ஒரு சிறுக்கூட்டத்தாரின் ஆதிக்கத்தைப் போக்கவும், அண்ணாமலைப் பல் கலைக் கழகத்தில் சுயநலக்குழுவி னரின் சூழ்ச்சிகளை வெளிப்படுத்தவும், ஆகிய சுத்தியியக்கத் தொண்டும் செய்திருக்கிறது.

ஆனால், சென்ற நாளெல்லாம் சிறுவிரல் வைத்தெண்ணலாம், வருங் காலம் தான் நமக்குப் பெருங்காலம் என்ற கொள்கையையுடைய நாம் இனிமேல் நடக்கவேண்டிய வேலை யில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். விடுதலையின் இரண்டாவ தாண்டு ஜஸ்டிஸ் கட்சிக்கும் தமிழ் நாட்டிற்கும் மிகவும் முக்கியமான காலத்தில் வந்திருக்கிறது. புதிய அர சியல் சீர்திருத்தங்கள் வரப்போகின் றன. நாட்டிலே புதியதொரு சகாப்தம் ஆரம்பிக்கிறதென்ற முறையில் மகத்தான மாறுதல்கள் ஏற்படப் போகின்றன. அரசியல் திட்டத்தின் கீழ் வரப்போகும் சட்டசபைகளின் அங்கத்தினர்களைத் தெரிந்தெடுக்கும் உரிமை இலட்சக்கணக்கான மக்க ளுக்கு அதிகமாக அளிக்கப்பட்டி ருக்கிறது. ஜனநாயகப் பொறுப்பாட்சியை நடத்துவதற்கு யோக்கியமும், நேர் மையும், ஒழுங்கும் உள்ள பிரதி நிதிகளைத் தெரிந்தெடுப்பதில், வாக் காளர்கள் ஜாக்கிரதையாயிருத்தல் வேண்டும். மழைகொண்டு வருகி றேன், வரிகளையெல்லாம் எடுத்து விடுகிறேன், கொடி பறக்க விடுகிறேன் என்று மக்களை ஏமாற்றும் கூட் டத்தினரை அவர்கள் விலக்க வேண் டும். அதுதான் முன்னணியில் நிற்கும் வேலையாகும். அதற்காக அறிவியக் கங்களின் தலைவர்களும், தொண் டர்களும், ஒற்றுமையுடனும், உறுதி யுடனனும் இடைவிடா துழைத்தல் வேண்டும். அறியாமையுடன், அஞ் ஞானம், அயோக்கியத்தனம், அதிக் கிரமம் முதலியவை அழிந்தால்தான், நாடு விடுதலையடைந்து மக்கள் சுகமுறுவார்கள், அவ்விடுதலைக்கு இடையூறாய் நிற்பவைகள். அன்னி யராட்சி பார்ப்பனர் ஆதிக்கம், முத லாளிகள் கொடுமை, பெண்களின் அடிமைத்தனம் முதலியனவாகும். அவற்றை ஒழிப்பதற்கு விடுதலை பாடுபடும். தமிழுலகம் அதற்குத் துணை செய்யுமாக!

_ விடுதலை 03.6.1936

Read more: http://viduthalai.in/page1/83645.html#ixzz371fl7n4j

தமிழ் ஓவியா said...


கால்பந்து


உலகக் கால்பந்தாட் டத்தில் ஜெர்மனி பிரே சிலுக்கு இடையிலான போட்டியில் பிரேசில் வெற்றி பெற வேண்டி, ஊடோ மந்திரவாதிகள் (பொம்மைகளை வைத்து எதிரியை மடக்கும் மந்திர மாம்) நான்கு நாட்களாக ஜெர்மனிய வீரர்களின் உருவங்களைச் செய்து அவர்களின் கால்களை கட்டிப்போட்டு மந்திர வித்தைகள் செய்தார்கள்.

இதனால் ஜெர்மனிய வீரர் கள் சரியாக விளையாடா மல் எளிதில் பிரேசில் வெற்றிபெறும் என்று ஊர் முழுவதும் விளம்பரம் செய்தார்களாம், ஆமைகள் மற்றும் நண்டு மந்தி ரங்கள் என பல மந்திர தந்திர வித்தைகள் செய்தும் பிரேசில் படுதோல்வியைச் சந்தித்தது.

இந்தத் தொடரிலேயே 7 கோல்கள் வாங்கிய ஒரே நாடு பிரேசில்தான்.

இது குறித்து பிரேசில் ரசிகர் கூறியபோது மந்திர வாதிகள் தவறுதலாக பிரேசில் வீரர்களின் கால்களை கட்டிப் போட்டு விட்டனராம் ஆகையால் தான் பிரேசில் தோல்வி யடைந்தது என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்ட வில்லை என்பார்களே அது இதுதான் போலும்!

பிரேசிலையும் காப்பாற்ற முடியவில்லை- மந்திர வாதிகளையும் காப்பாற்ற முடியவில்லை- அந்தோ பரிதாபம்!

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்தும் பிரேசில் கபேகா என்ற கடல் ஆமையை களத்தில் இறக்கி விட் டுள்ளது.

ஜூலை 4ஆம் தேதி தொட்டியில் பிரேசில் கொடி கட்டிய மீனை ஆமையார் சாப்பிட்டு சமர்த்தாக ஆருடம் கூறி வருகிறார். காலிறுதிப் போட்டியில் பிரேசிலின் மீனை சாப்பிட்டு அந்த அணி வெல்லும் என்று கணித்துள்ளது.

ஆனால் பாவம் ஆமையார் சோதிடம் பலிக்காமல் போனது; ஆமை தற்போது பொரி யலுக்கு தயாராகிறதாம்.

1994இல் உலகக் கால் பந்து காலிறுதிப் போட்டி சுவீடனுக்கும் ருமேனியா வுக்கும் இடையே நடை பெற்றது.

இரு அணிகளும் ஒவ்வொரு கோல் போட் டன; கூடுதல் நேரத்திலும் தலா இரு கோல்கள் போட் டன. பெனல்டி முறை யிலும் தலா நான்கு கோல்கள் போட்டன.

வேறு வழியின்றி சடன் டெத் முறை கடைப் பிடித்ததில் சுவீடன் வெற்றி பெற்றது. தோல்வி அடைந்த ருமேனியா அணியின் கேப்டன் ஜியார்ஜி ஹாஜி என்ன கூறினார் தெரியுமா?

எங்கள் பிரார்த்தனை பலிக்கவில்லை; கடவுள் சுவீடன் அணி பக்கம் இருந்துவிட்டான் என் றாரே பார்க்கலாம்!

திறமைக்கும், வீரத்துக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டிய இடத்திலும் மூடநம்பிக்கையா? வெட்கக் கேடு!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/83766.html#ixzz374cwGTMW

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?


கால்நடைக் கோவில்

குமரி மாவட்டம் அளப்பன்கோடு எனும் ஊரில் ஈசுவரகால பூதத்தான் கோவில் உள்ளது. அந்த வட்டாரத்தில் மாடுகளோ, ஆடுகளோ கன்று ஈன்றால் அதன் முதல் பாலை இந்த சாமிக்கு அபிஷேகம் செய்வார்கள். இது கால் நடைகளின் நோய் தீர்க்கும் கோவிலாம்.

கால்நடைகளுக்கென்று கோவில் இருக்கும் பொழுது கால்நடை மருத்துவ மனைகள் ஏன்?

சமீபத்தில் தமிழ்நாட்டில் Foot and Mouth என்ற நோய் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான கால்நடைகள் இறந்து போயிற்றே - இந்தக் கடவுள் எங்கே போனாராம்?

Read more: http://viduthalai.in/e-paper/83768.html#ixzz374daJqPz

தமிழ் ஓவியா said...


சங்கராச்சாரியார்மீதான கொலை வழக்கில்மேல் முறையீடு


காஞ்சிபுரம் வரதராச பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் ஒரு பட்டப் பகலில் கோயில் சன்னதி யிலேயே படுகொலை செய்யப்பட்டார் (3.9.2004).

இந்தக் கொலை தொடர்பாக காஞ்சி சங்கராச் சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி, விஜயேந்திர சரஸ்வதி, மடத்தின் மேலாளர் சுந்தரேசய்யர், விஜயேந்திரரின் உடன் பிறப்பு ரகு உட்பட 24 பேர்கள்மீது அதிமுக ஆட்சியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் 2004ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி (தீபாவளியன்று) ஆந்திரத்தில் இருந்த ஜெயேந்திரர் கைதானார். பின்னர் அனைவரும் பிணையில் வெளியே வந்தனர்.

என்றாலும் மூன்று மாதங்கள் சிறையில் இருந்தனர். செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. தமிழகத்தில் இவ் வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறாது எனக் கூறி வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி உச்சநீதி மன்றத்தில் ஜெயேந்திரர் மனு தாக்கல் செய்தார். அதன்பேரில் கடந்த 2005 ஆம் ஆண்டு புதுவை அமர்வு நீதிமன்றத்துக்கு சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. கடந்த 2009ஆம் ஆண்டு அரசு வழக்குரைஞராக தேவதாஸ் நியமிக்கப்பட்டார். 189 சாட்சிகள் விசாரிக்கப் பட்டனர். இதில் 81 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர்.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கதிரவன் இறந்தார். வழக்கு விசாரணை முடிந்து கடந்தாண்டு நவம்பர் 27ஆம் தேதி இவ்வழக்கில் குற்றம் சாட் டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து புதுச்சேரி தலைமை நீதிபதி முருகன் தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பு புதுச்சேரியில் வழங்கப்பட்டதால் மேல் முறையீட்டை புதுவை அரசுதான் செய்யவேண்டும். மேல்முறையீடு செய்ய பல தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, புதுவை அரசு மேல்முறையீடு செய்ய முடிவு எடுத்தது. அதற்கான ஒப்புதலுக்காக கோப்புகளை துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியாவுக்கு அனுப்பி வைத்தது. தற்போது அக்கோப்பில் ஆளுநர் கையொப்ப மிட்டார்.

இந்த வழக்கு மேல் முறையீடு செய்யப்படுமா என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. காலங் கடந்தாவது மேல் முறையீடு செய்யப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.


தமிழ் ஓவியா said...

காரணம் பட்டப் பகலில் ஒரு கோவிலில் நடைபெற்ற படுகொலை! இதில் குற்றஞ் சாட்டப்பட்டவர்களோ பெரும் புள்ளிகள்; பாதிக்கப்பட்டவர்களோ சாமான்யர்கள்.

எந்த வழக்கிலும் கேள்விப்பட்டிராத ஒரு அதிசயம் இந்த வழக்கில் நடந்துள்ளது.

189 சாட்சிகளில் 81 பேர் பிறழ் சாட்சிகள் என்றால் என்ன சாதாரணமா? இவ்வளவுக்கும் இந்த வழக்கில் விசாரணை அதிகாரி நுணுக்கமாக ஒரு வேலையைச் செய்தார்.

பொதுவாக காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் தான் சாட்சியங்கள் பதிவு செய்யப்படும். நீதிமன்றங்களில் அந்தச் சாட்சிகள் காவல்துறையினரின் அச்சுறுத்தலால் தான் அவ்வாறு சொல்ல நேர்ந்தது என்று பிறழ் சாட்சியாக மாறி விடுவார்கள்.

ஆனால், இந்த வழக்கைப் பொறுத்தவரையில் காவல்துறை அதிகாரி பிரேம்குமார் நீதிபதி முன்னதாக சாட்சியங்களைப் பதிவு செய்தார். இந்த நிலையிலே பிறழ் சாட்சி சொன்னவர்கள் மீதான எந்தவித நடவடிக்கையும் இல்லாமற் போனது ஏன்? என்பது முக்கிய கேள்விகளாக மக்கள் மத்தியில் எழுந்து நிற்கின்றன.

உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஏற்பட்ட அனுப வத்தை வைத்து நீதியரசர் திரு கே.என். இராதா கிருஷ் ணன் கூறிய கருத்து மிகவும் முக்கியமானது.

தற்போது முக்கியமான சில வழக்குகளில் சாட்சியம் அளிப்பவர்கள் பிறழ் சாட்சிகளாக மாறி விடும் போக்கு அதிகரித்து வருகிறது. பணம் மற்றும் கவர்ச்சியான சில சலுகைகளுக்கு மயங்கிப் பிறழ் சாட்சியர்களாக மாறி விடுகின்றனர்; இது ஆரோக்கியமானதல்ல. இந்தப் போக்கு அதிகரித்தால் நீதித்துறைமீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை படிப்படியாகக் குறைந்து போய்விடும். இந்த நடைமுறையை அனுமதிக்கக் கூடாது. பிறழ் சாட்சியாக மாறுவோரைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கவும் கூடாது. உண்மையை வெளியே கொண்டு வர அனைத்து முயற்சிகளையும், அந்த வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம்தான் மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி திரு கே.எஸ். இராதாகிருஷ்ணன் கூறிய கருத்து இந்த வழக்கில் செயல்படுத்தப்பட்டதா என்று தெரியவில்லை.

இதில் என்ன கொடுமையென்றால் படுகொலை செய்யப்பட்ட சங்கரராமன் மனைவியும், மகனும்கூட பிறழ்சாட்சியாக மாறினர் என்பதுதான். தாங்கள் அச்சுறுத்தப்பட்டதால் அவ்வாறு சொல்ல நேரிட்டது; இப்பொழுது உண்மையைக் கூறத் தயாராகி விட்டோம்.

மீண்டும் எங்களை விசாரிக்க வேண் டும் என்ற அவர்களின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப் படாதது ஏன் என்பதும் மிக முக்கியமான கேள்வியாகும்.

இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே சங்கரராமன் கொலை வழக்கில் சங்கரமடத்திற்கு அநீதி நடந்துள்ளது என்று, திரு. சோராமசாமி இந்தியா டுடே இதழுக்குப் பேட்டி அளித்தார் (9.2.2005). தீர்ப்பு வழங்கிய பிறகும் துக்ளகில் வரிந்து கட்டிக் கொண்டு எழுதினாரே பார்க்கலாம். (11.12.2013)

வழக்கு நடந்து கொண்டிருந்தபோதே திருவாளர் குருமூர்த்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் தொடர்ந்து நான்கு கட்டுரைகளை அனல் பறக்க எழுதினார் (28.11.2013).

தீர்ப்பு வந்த நிலையில் சங்கராச்சாரியார் வழக்கு - ஒரு மீள் பார்வை! என்று தினமணி சிறப்புக் கட்டுரையில் (28.11.2013) எப்படியெல்லாம் எழுதித் தள்ளியது. ஆனந்த விகடனும் (11.12.2013) தினமணிக்குச் சளைக்கவில்லை.

வேலூர் சிறையில் இருந்த காஞ்சி ஜூனியர் சங்க ராச்சாரியாரை தனது காரில் ஏற்றிக் கொண்டு காஞ்சி மடத்தில் கொண்டு வந்து விட்டவர் இந்து என். ராம்.

சங்கராச்சாரியார் ஒரு மடத்தின் தலைவர், துறவி; எனவே அவரை எல்லோரையும் போல் விசாரிக்கக் கூடாது. அவரைத் தனியாக ஒரு மாளிகையில் வைத்து விசாரிக்க வேண்டும் என்றார் மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி (தி இந்து 18.11.2004).

நிலைமை இப்படி இருக்கும் பொழுது, இவ்வழக்கு மேல் முறையீட்டுக்கு உரியது என்று பெரும்பாலான மக்கள் எதிர்ப்பார்ப்பது நியாயம்தான்; இதனை வரவேற்கிறோம்.

Read more: http://viduthalai.in/page-2/83781.html#ixzz374ecuh4f

தமிழ் ஓவியா said...


மீன் மருந்தா? பிரசாதமா? தெலங்கானாவில் மக்கள் நாத்திக அமைப்பு கோரிக்கை


கரீம்நகர், ஜூலை10_ மக்கள் நாத்திக அமைப்பு தெலங்கானா மாநிலக் குழுமம், கர்நூல், கமலாபூர் மண்டல், கமலாபூர், கரீம் நகரில் மாநிலத் தலைவர் ஜீ.டி.சாரையா செய்தி யாளர்களைச் சந்தித்து தெலங்கானா பகுதியில் பத்தினி சகோதரர்கள் நடத் திவரும் மீன் வைத்தியத்தைத் தடை செய்க! பத்தினி சகோ தரர்களைக் கைது செய்ய கோரி உள்ளார். அறிவியல் முன்னேற்றம் என்பது அதி வேகமாக முன்னேறிக் கொண்டு செல்கையில், மாநிலத் தலைநகரில் நடுப் பகுதியாம் நாம்பள்ளியில் மீன் மருத்துவம், மீன் மருந்து என்ற பெயரில், அப்பாவி மக்களை மோசடி செய்வதோடு நில்லாமல், நவநாகரிக குமுகாயத்தினரையும், மருத்துவ குமுகாயத்தினரையும் தலை கவிழச் செய்யும் விதமாக அரங்கேறும் அவலங்களுக்குப் பஞ்சமில்லை; மீன் மருத்துவம், மீன் மருந்து வாயிலாக ஈளை (ஆஸ்துமா) நோயைப் போக்குகிறோம் என்று பசப்பி, பத்தினி சகோதரர்கள் செய்யும் அறிவியலுக்கு முற்றிலும் முரணான, புறம்பான சிகிச்சைக்கு எதிராக, மக்கள் நாத்திக சமாஜம் போர்க்கொடி உயர்த்துவ தோடு, வன்மையாகக் கண்டிக்கவும் செய்கிறது;
பத்தினி சகோதரர்களின் வீட்டு முன் மீன் மருந்து தரப்படுவதை முந்தைய அரசு வாக்கு சேகரிப்புக் கண் ணோட்டத்தில், பத்தினி சகோதரர் களுக்கு சற்றொப்ப கோடி உருபா மதிப்பிலான 5 ஏக்கர் நிலத்தைத் தாரை வார்த்ததுடன், மிருக சீர அறக் கட்டளை என்பாருக்கு உரிமமும் உவந்து தந்தது; தொலைதூரப் பகுதி மக்களும் ஆயிரக் கணக்கான தொகையையும் அளித்து உடல், உள்ள நலத்தையும் கெடுத்துக் கொள் கிறார்கள்; மீன் மருந்தை விழுங்கிய இலட்சக் கணக்கான மக்களில் ஒருவருக்குக் கூட இளைப்பு (ஆஸ் துமா) நோய் குணமாகவில்லை என்பதும் அறிவியல் ரீதியாக நிரூபிக் கப்பட்டுவிட்டது; மீன் மருத்துவம் என்பது மருத்துவம் பயிலும் மாணாக் கர்களை அவமதிக்கும் செயலே என்பதில் எள்ளவும் அய்யமில்லை.

மீன் மருத்துவம் செய்து கொள்ள வருபவர்களுக்கு தமக்கு என்ன மருந்து கொடுக்கிறார்கள் என்பதே தெரியாது; மருந்து தயாரிப்புச் சட்டத்தின்படி, என்ன மருந்து கொடுக்கப்படுகிறது, அதன் உள்ளடக்கம் என்ன, அதில் கலக்கப்படும் மருந்துகள், மூலப் பொருட்கள் என்னென்ன என்பது தெளிவாக எடுத்துச் சொல்லப்பட வேண்டும். இப்படிப்பட்ட நடவடிக் கைகள் எதுவும் இல்லாத போது, அது சட்ட விதிகளை ஒட்டு மொத்தமாகப் புறக்கணிக்கும் செயலே! நோயாளி எடுத்துக் கொள்ளும் மருந்தில் என்னென்ன உள்ளடக்கங் கள் உள்ளன எனத் தெரிந்து கொள் ளும் உரிமையை சட்டம் வழங்கி யுள்ளது; இது குறித்து பத்தினி சகோதரர்களிடம் வினவியபோது, பிரச்சினையை முற்றிலுமாகத் திசை திருப்பி, சிகிச்சைக்கு வரும் மக்களை 'எடுப்பார் கைப்பிள்ளையாக நடத்துவது மிகவும் கொடுமையாகும்.

தமிழ் ஓவியா said...


நயன்மை மன்ற உத்தரவுகளின்படி, இந்த மீன் மருத்துவம் மருந்து அறிவியல் ஏற்றுக் கொள்ளக் கூடிய மருந்தே அல்ல என்பது அய்யத்துக் கிடமின்றி நிரூபிக்கப்பட்டுவிட்டது; இதனையடுத்து, பத்தினி சகோ தரர்கள், இது மருந்து அல்ல, பிரசாதம் என பிளேட்டைத் திருப்பிப் போட்டுவிட்டனர்; இந்திய அரசியல் சட்டம் 51எ (ஹெச்) பிரிவைக் கேவலப்படுத்தும் செயலே இது; மாநில அரசு இதனை முற்றிலுமாகப் புறந்தள்ளியதோடல்லாமல், ஆண்டு தவறாமல், 5 தொடங்கி 8 டன் வரை மீன்களை மிருக சீர அறக்கட்டளைக் குத் தாரை வார்ப்பது கொடுங் கோன்மை ஆகும். இப்படி நாலா பக்கங்களிலும் தோண்டித் துருவி சலித்து எடுப்பதால், செய்வதால் மீன் இனத்துக்கு ஏற்படும் இழப்பு குறித்து, வல்லுநர்கள் ஏடுகள் வாயிலாக எடுத்துக் கூறியும் பயனில்லை; நாய்க் கடியால் இறப்பவர்களின் எண் ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதைக் கண்டுகொள்ளாமல், அறிவியலுக்கு முற்றிலும் புறம்பான மீன் மருத்துவத்துக் குத் தரும் முதன்மையை நினைத்தால், கும்பி எரிகிறது; மக்கள் மீது இந்த அரசுக்கு எத்துணை அக்கறை(!) என் பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

எனவே, இந்த பத்தினி சகோதரர் களை மருத்துவம் பார்ப்பதற்கு அருகதை அற்ற வர்கள் என அறிவித்து, அவர்கள் மீது சட்டப்படி யான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
கோரிக்கைகள்:

1. மீன் மருந்து சட்டத்துக்குப் புறம் பானதென அறிவிப்பதோடு, மிருக சீர அறக்கட்டளையையும் செல்லா ததென அறிவிக்க வேண்டும்;

2. அறிவியலுக்குப் புறம்பான மருத்துவ முறையைக் கடைப்பிடிக்கும் போலி மருத்துவர்களைக் கைது செய்து, அவர்தம் அமைப்புகளை இழுத்து மூட வேண்டும்;

3. நலத் துறையின் ஊடாக கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள், பாடல்கள், விவாதங்கள் போன்ற நடவடிக்கை களை மாநில அரசு பின்பற்ற வேண் டும்;

4. மிருக சீர அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தை அரசு மீட்டெடுத்துக்கொண்டு, அதனை மக்கள் நலப் பணிகளுக் காகத் திருப்பிவிட வேன்டும்.
ஆகிய கோரிக்கைகள் தெலங் கானா அரசுக்கு மக்கள் நாத்திக சமா ஜம் சார்பில் வைக்கப்பட்டுள்ளது.

இத்தகவல் கரீம்நகரில் செய்தியா ளர்கள் சந்திப்பில் முன்வைக்கப்பட் டுள்ளது.

மக்கள் நாத்திக அமைப்பின் மாநிலத் தலைவர் ஜீடி சாரையா, கரீம் நகர் மாவட்ட அமைப்பாளர் எம். லக்ஷ்மண், மாநிலக் குழு உறுப்பினர் மில்கூரி சங்கர் உள்ளிட்டவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற் றனர்.

குறிப்பு: மீன் சிறந்தஉணவு என் பதில் சந்தேகம் இல்லை. அதே நேரத் தில் பிரசாதம் என்று சொல்லி பித்த லாட்டப் பிரச்சாரம் செய்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

Read more: http://viduthalai.in/page-2/83782.html#ixzz374fFdL8r

தமிழ் ஓவியா said...


வாங்கிடுவீர்! மோடி வாஷிங் பவுடர்


- குடந்தை கருணா

பாஜகவின் தலைவராக அமீத் ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

சற்றே நினைவுபடுத்திக் கொள்வோம். தேர்தலுக்குமுன், 2014 ஏப்ரல் 20ஆம் தேதி, உத்தரபிரதேசம் ஹர்தாய் எனும் ஊரில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டு முழங்கினார். என்னவென்று? நான் பிரதமராக வந்ததும், குற்றப் பின்னணியில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர் களையும், வெளியேற்றுவேன்; பாஜக உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, கூட்டணிக் கட்சி வேட்பாளர்களாக இருந்தாலும் சரி; யாரையும் விட்டு விடப் போவதில்லை என முழங் கினாரே; மக்கள் எல்லாம், ஆகா, ஒரு புதிய அவதாரம் மோடி ரூபத்தில் தோன்றி, எல்லா கெடுதிகளையும் தீர்க்கும் என நினைத்தார்களே.

மோடியும் பிரதமராகிவிட்டார். உத்தரப் பிரதேசத்தில் முசாபர் நகர் கலவரத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட பாஜக சட்ட மன்ற உறுப்பினர், சஞ்சீவ் பல்யான். அவரை, நாடாளுமன்ற உறுப்பினராக்கி, தமது அமைச்சரவையில் விவசாயத் துறை இணை அமைச்சர் பதவியும் தந்து அழகு பார்க்கிறார்.

தற்போது, மோடியின் வலது கரம் என கருதப்படும் அமீத் ஷா, பாஜகவின் தேசிய தலைவராக நியமிக்கப்பட் டுள்ளார். அமீத் ஷாவின் இந்த நியமனம், முற்றிலுமாக, மோடியின் முடிவு என பிறந்த குழந்தைக்குக் கூட தெரியும். யார் இந்த அமீத் ஷா? குஜராத் மாநிலத்தில், மோடியின் அமைச்சர வையில் உள்துறை அமைச்சர் மட்டு மல்ல; சட்டம், நீதித்துறை என 12 துறைகளுக்கு அமைச்சராக, செல் வாக்கோடு இருந்தவர்.

சொகராபுதீன் போலி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமீத் ஷா, உள்துறை அமைச்சர் பதவியை விட்டு விலக நேரிட்டது மட்டுமல்ல, அவர் கைதும் செய்யப்பட்டார். அவர் மீது என்ன குற்றச்சாட்டு தெரியுமா? கொலை, கடத்தல், பணப்பறிப்பு. 2004இ-ல் மும்பையில் இருந்து குஜராத் சென்ற இஷ்ரான் ஜகான் எனும் பெண், அவருடன் மூன்று ஆண்கள் கொலை யிலும் அமீத் ஷாவின் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குஜராத்தில் வேலை பார்த்த பெண் மணியை வேவுபார்க்கும் விஷயத்தில், அமீத்ஷாவின் மீதும் குற்றச்சாட்டு உள்ளது.

நடந்து முடிந்த தேர்தலின் போது, உத்தரபிரதேச தேர்தல் பொறுப்பாள ராக பாஜகவிற்கு அமீத் ஷா நியமிக்கப் பட்டார். உடன் அங்கே முசாபர் நகரில் கலவரம் வெடித்தது. சிறுபான்மை மக்கள் கொல்லப்பட்டனர். எதிரிகள் பழி வாங்கப்பட வேண்டும் என்ற வார்த்தையை உதிர்த்த வரும் இவரே! இத்தகைய, குற்றப்பின்னணி உள்ள வர்தான், தற்போது, மோடியால், பாஜகவின் தேசியத் தலைவராக பரிந்துரைக்கப்பட்டு, நியமிக்கப் பட்டுள்ளார்.

தேர்தலுக்கு முன், குற்றப்பின்னணி உள்ளவர்கள், வெளியேற்றப்படுவார் கள் என மோடி பேசினாரே; இப் போது, அமீத் ஷா, சஞ்சீவ் பல்யான் போன்றோருக்கு பதவி வழங்குகிறாரே என குழம்பத் தேவையில்லை;

இந்தக் குற்றத்தை அழிக்கும், புதிய வாஷிங் பவுடரை, மோடி வைத்துள் ளார். அதனைப் பயன்படுத்தி, அவர்களது குற்றத்தை நீக்கும் ஆற்றல் அந்த வாஷிங் பவுடருக்கு உள்ளது. இனி யாரும், கும்ப மேளாவிற்கோ, கும்பகோணம் மகாமகத்திற்கோ சென்று பாவத்தைக் கழுவ பன்னி ரெண்டு ஆண்டுகள் காத்திருக்கத் தேவையில்லை;

நமது பிரதமர் மோடி வசம், உள்ள வாஷிங் பவுடரை பயன்படுத்தினாலே போதும்; பாவங்கள் எல்லாம் உடன டியாக நீங்கும். பதவி கிடைக்கும்.

வாங்கிடுவீர்; மோடி வாஷிங் பவுடர்.

Read more: http://viduthalai.in/page-2/83784.html#ixzz374frXDss

தமிழ் ஓவியா said...


காந்தியார் கொலை வழக்கு ஆவணம் அழிப்பு? நாடாளுமன்றத்தில் கொந்தளிப்பு


புதுடில்லி, ஜூன் 10_ காந்தியார் கொலை வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அழிக்கப் பட்டதாக கூறப்படும் விவ காரத்தில் பிரதமர் நரேந் திரமோடி விளக்கம் அளிக் கக்கோரி எதிர்க்கட்சிகள் நேற்று டில்லி மாநிலங் களவையில் கடும் அமளி யில் ஈடுபட்டனர்.

பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றவுடன் நீண்ட காலமாக உள் துறை அமைச்சகத்தில் வைக்கப்பட்டு இருந்த பல்வேறு பழைய ஆவ ணங்கள் அழிக்கப்பட் டன. இதில் காந்தியார் படு கொலை செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்க ளும் அழிக்கப்பட்டதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் அய்க்கிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரச்சினை எழுப்பினர்.

மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு உறுப்பினர் பி. ராஜீவ் பேசுகையில், மோடி உத்தரவின்பேரில் உள்துறை அமைச்சகத்தில் 1 லட்சம் ஆவணங்கள் அழிக்கப்பட்டதாகவும், அதில் காந்தியார் கொலை தொடர்பான முக்கிய ஆவணம் காணாமல் போய் உள்ளதாகவும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆவணங்களை அழிக்கும் நடவடிக்கையில் பிரதமர் ஏன் முனைப்பு காட்டு கிறார்? என்று தெரிய வில்லை. நாட்டின் வரலாற்றை மாற்ற இந்த அரசு முயற்சி செய்கிறதோ? என பய மாக இருக்கிறது. காந்தி யார் படுகொலை வழக்கில் தொடர்புடைய மதவாத சக்திகளின் ஆதாரங்களை அரசு அழிக்க நினைக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

இதனை மறுத்த சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்த குற்றச்சாட்டுகளை முழு மையாக மறுக்கிறேன். குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று தெரிவித் தார். ஆனால் அமைச்ச ரின் கருத்தை எதிர்க்கட்சி கள் ஏற்க மறுத்து விட்டன.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுகந்து சேகர் ராய் பேசுகையில், பிரதமர் மீது குற்றச்சாட்டு கூறப்பட் டுள்ளது. எனவே அவர் நேரடியாக வந்து பதில் அளிக்க வேண்டும். குற்றச் சாட்டு பொய்யாக இருந் தால் அதனை வெளியிட் டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மாநிலங்களவை துணை அவைத் தலைவர் பி.ஜெ.குரியன், இது விஷ யத்தில் அமைச்சரின் பதிலை ஏற்றுக்கொள்ள வில்லை என்றால், இது தொடர்பாக சபையில் அறிக்கை வெளியிடலாம் என்று தெரிவித்தார்.

ஆனால் பி.ஜெ.குரிய னின் நடவடிக்கையில் திருப்தி அடையாத எதிர்க்கட்சி உறுப்பினர் கள், தொடர்ந்து அமளி யில் ஈடுபட்டனர். இதனை யடுத்து சபை பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Read more: http://viduthalai.in/page-8/83792.html#ixzz374gQkE3j

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு! கலைஞர் எடுத்துக்காட்டு

சென்னை, ஜூன் 10_ தமிழ் நாட்டில் சட்டம் _ ஒழுங்கு எந்த நிலையில் உள்ளது என் பதை ஏடுகளில் வெளிவந் ததை எடுத்துக்காட்டி கருத்துத் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் கலைஞர் அவர்கள். விவரம் வருமாறு:_

முதல் அமைச்சரின் பொறுப்பிலே உள்ள துறை என்பதால், அதை எப்படி இறுதியாக விவாதிப்பது, முதலிலேயே விவாதிக்கப்பட வேண்டுமென்று நினைத்திருப்பார்கள். பொதுவாக தமிழகத்தில் சட்டம் _ ஒழுங்கு எவ்வாறு இருக்கிறது என்பதைப் பற்றி கடந்த வாரம் பத்திரிகைகளிலேயே செய்திகள் வந்துள்ளன.

3.7.2014 இந்து ஆங்கில நாளிதழ், ‘Month of Murders leaves City Reeling’ என்ற தலைப்பில் பெட்லீ பீட்டர் என்ற செய்தியாளர் சட்டம் _ ஒழுங்கு பற்றி விரிவாகவே எழுதியுள்ளார். அதன் முக்கியப் பகுதிகள் வருமாறு:_

Last month was one of the City’s bloodiest in recent times, with a staggering 16 murders rocking the peace of the City.

These include 3 Murders for Gain with women victims, the brutal hacking of a Hindu Munnani functionary in Ambattur and the hacking of a notorious gangster inside a Government Hospital in the heart of the City.

June recorded 16 Murders, the Highest Monthly Count in 2014.

தமிழகத்தின் தலைநகரிலே சட்டம் ஒழுங்கு எப்படி?

புறநகரில் அதிகரிக்கும் வழிப்பறிக் குற்றங்கள் என்ற தலைப்பில் இந்து தமிழ் நாளேடு ஒரு நீண்ட செய்தி வெளியிட்டுள்ளது.

“More than one child gets raped every day in TN” - என்ற தலைப்பில் _ தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அண் மையில் வெளியிட்ட புள்ளிவிவரப்படி, தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் ஒரு குழந்தைக்கு மேல் கற்பழிக் கப்படுவதாகவும், குழந்தைக் கற்பழிப்பு வழக்குகள் 2012ஆம் ஆண்டு 292 என்றிருந்ததற்கு மாறாக, 2013இல் 419 ஆக உயர்ந்திருப்பதாகவும் _ (சட்டப்படி இங்கே குழந்தை என்று கூறப்படுவது 18 வயதுக்குக் குறைந்தவர்களாகும்) _ கற்பழிக்கப்பட்ட மகளிர் என்ற பட்டியலில் 2012ஆம் ஆண்டு 737 என்றிருந்தது, 2013இல் 923 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது என்றும் செய்தி வெளியிட்டுள்ளது. இதுதான் தமிழகத்தின் சட்டம் _ ஒழுங்கு _ முதல் அமைச்சரின் பொறுப்பிலே உள்ள காவல் துறை.

Read more: http://viduthalai.in/page-8/83795.html#ixzz374gcyPXn