Search This Blog

3.7.14

வாஸ்து பூமி பூஜையை இனியும் நம்பலாமா?பலன் இது தானா?-கி.வீரமணி

11 மாடிக் கட்டடம் - இறந்தவர்களுக்கு இரங்கல்!
வாஸ்து பூமி பூஜையை இனியும் நம்பலாமா?
தமிழர் தலைவர் கேள்வி
சென்னை போரூர் - மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து, சுமார் 59 உயிர்கள் பலி யானதாக இதுவரை வந்த தகவல்கள் கூறுகின்றன; இடிபாடுகளில் சிக்கி புதைந்துள்ள சடலங்கள்பற்றி, பணி முடிவுற்ற பிறகே முழுத் தகவல்கள் வெளி வரக் கூடும்.

நெஞ்சம் பதைபதைக்கும் இந்த வேதனையும் துயரம் மிக்க பேரிடருக்கு யார் மூல காரணம்? எதனால் இப்படி ஒரு பெரும் விபத்து ஏற்பட்டது? நீதி விசாரணை தேவை.

ஆய்வுகள் சரியாக செய்யப்பட்டனவா?

சதுப்பு நிலம், போரூர் ஏரித் தண்ணீர் போன பாதை ஒரு காலத்தில் - காலப் போக்கில் அது தூர்ந்துள்ள நிலையில் அப்படியே வெட்ட வெளியாகி மண் மூடிப் போன இடத்தை வாங்கி, கட்டடம் கட்டுமுன்  சரியான மண் வாகுபற்றிய பரிசோதனை (Soil Testing) செய்தனரா?

அனுமதி அளித்தவர்கள் அரசு ஆணை மூலம் சரியான ஆய்வு செய்தனரா? அப்படி அனுமதி கொடுத்தவர்கள் - அதி காரிகளா? வேறு யார்? எதனால் இப்படி சலுகை காட்டினர்? இது மட்டுமன்று; தமிழ்நாட்டில் பலர் ஏரி குளங்களையெல்லாம் வளைத்து  வீட்டு மனை வியாபாரத் தொழில் செய்வோரின் பேராசையால்  (Real Estate) இப்படிப்பட்ட அவலங்கள் நிகழ் கின்றனவா?

இதனைக் கண்டு பரிதாபப்பட்டால் மட்டும் போதுமா?  இறந்தவர்களுக்காக உதவுவது போன்ற உதவிகள் விரும்பத்தக்கதாயினும் - போதாது.
குதிரை களவு போனபின் லாயத்தை இழுத்துப் பூட்டுவது போல் இப்போது வீராவேச விமர்சனங்கள் அந்தந்த நேரத்தில் எழுந்தால் மட்டும் போதாது.
ஆக்கபூர்வ நிரந்தர பாதுகாப்பு தடுப்பு முறை ஏற்பாட்டு அமைப்பு தேவை.
பேரிடர் மேலாண்மை சிறப்பாக நடைபெறுகிறது.

வாஸ்து சாஸ்திரத்தின் பலன் இது தானா?

மற்றொரு முக்கிய செய்தி.

வாஸ்து சாஸ்திரம் எல்லாம் பார்த்துக் கட்டப்பட்டுள்ளது தான் இந்த இடிந்து விழுந்த 11 மாடிக் கட்டடம். பூமி பூஜை பலமாகப் போடப்பட்ட பிறகே, நாள் நட்சத்திரம், நல்ல நேரம் பார்த்து அடிக்கல் நாட்டப் பட்டது; பின் ஏன் இந்த அவலம் நடந்தது?

இதிலிருந்து வாஸ்து, பூமி பூஜை என்ற மூட நம்பிக்கைகள் மனிதர்களைக் காப்பாற்றாது. புரோகிதர் பிழைக்க, ஜோசியர்கள் பிழைக்க வழிதான் அவை என்பதையாவது புரிந்து கொள்ள வேண்டாமா?

இறந்தவர்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவர்கள் எந்த மாநிலத்தவர் என்பது முக்கியமல்ல; அவர்கள் மனிதர்கள் என்பதால் மனிதநேயத்துடன் அவர்தம் குடும்பங்களுக்கு - பாட்டாளிகளின் சொந்தங்களுக்கு நமது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

----------------------------கி.வீரமணி ,தலைவர், திராவிடர் கழகம் சென்னை 3.7.2014

11 comments:

தமிழ் ஓவியா said...


என்ன படிக்கலாம்?


ஆசிரியருக்குக் கடிதம் >>>

என்ன படிக்கலாம்?

சென்னை சன் தொலைக்காட்சியின் என்ன படிக்கலாம் என்னும் நிகழ்ச்சி 29.6.2014 அன்று ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியினை பல லட்சம் நேயர்கள் கேள்வி கேட்டு உரிய கருத்தினை பகிர்ந்தமையை நானும் நண்பர்களும் பார்த்து மகிழ்ந்தோம்.

பல லட்சம் மாணவர் மாணவியர்கள் கடுமையான உழைப்பின் அடிப்படையில் பள்ளித் தேர்வினை முடித்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உயர்க்கல்வியை நோக்கி பயணிக்கின்ற அரிய நேரத்தில், அதாவது திசை தெரியாமல் புலம் விளங்காது படகில் தப்பி கரை ஏறுபவர்களுக்கு கலங்கரை விளக்கமாய் அமைந்தது என்ன படிக்கலாம் நிகழ்ச்சி.

என்னதான் குடும்ப பின்னணியும் உற்றார் உறவினர்களின் வழிகாட்டல் இருந்தாலும் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இமய வளர்ச்சி காணும் அறிவியல் உலகில் கல்வித்துறையில் ஆய்ந்து தோய்ந்து வழிகாட்டிகள் அமைவது அரிதிலும் அரிதாகும். இந்த வகையில் அனைத்துக் கல்வி சார்ந்த தகவல்களை விரல் நுனியில் வைத்துக்கொண்டு, நேயர்களும் மாணவ, மாணவியர்கள் உயர்கல்வியில் சேர கேட்கின்ற கேள்விகளுக்கு அதற்கான வழிகாட்டலை எவ்வித மனச்சலிப்பும் அலுப்பும் கொள்ளாமல், தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் முனைவர் நல்.இராமச் சந்திரன் அவர்கள் தன்னம்பிக்கையையும், விடா முயற்சியையும் ஊட்டி விடையளித் தமைக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகளை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கின்றேன்.

கடந்த அய்ந்தாயிரம் ஆண்டுகளாய் எந்தவித அறிவியல் முன்னேற்றமும், கல்வி யறிவு அற்ற சமுதாயமாக மிகப்பெரும் பான்மையினர் இருந்த காலம், சமுதாய விடிவெள்ளி தந்தை பெரியார் போன்ற மேதைகளால் மாற்றியமைக்கப்பட்டு மிகச்சாதாரண குடும்ப மாணவ, மாணவியர்களும் கல்வி பயின்று மிக உயர்ந்த பதவிகளிலும், நீதிவேந்தர்களாகவும், மாவட்ட ஆட்சியாளராகவும், அறிவியல் கண்டுபிடிப்பாளர்களாக விளங்குவதை இன்று நாம் காணும்போது மட்டிலா மகிழ்வும் பெரியார் கண்ட சமுதாய பெரும் விளைச்சல் வெற்றி பெற்றுள்ளது.

வாழ்கின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடம் என்கிறார் ஓர் சூரியக்கவிஞர். இதனை மெய்ப்பிக்கும் வகையில் துணை வேந்தர் அவர்கள் வாழ்வில் முன்னேற படிக்க வழி கேட்கும் இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டியாய் அமைந்திருந்த இந்நிகழ்ச்சி பலவாறு பாராட்டப்பட வேண்டும்.

நான் முற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவன். எனது மகனுக்கு குறிப்பிட்டக் கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கவில்லை என்றால் வேறு கல்லூரியை சொல்லுங்கள் என ஒரு பெற்றோர் கேட்கும் கேள்வி, மிகத்தெளிவாக இந்த இடத்தில் இருந்து கொண்டு ஒரு கல்லூரியை மட்டும் கூறுவது நல்லதல்ல. கட்டாயம் உங்களது மகனின் மதிப்பெண் அடிப்படையில் இடம் கிடைக்க வாய்ப்பு கிடைக்கும். எப்போது இரண்டாவதாக ஒரு கல்லூரியை தேர்ந்தெடுக்க முற்பட வேண்டும் என்று நடுநாயகமாக கூறிய கருத்து மிகவும் போற்றப்பட வேண்டியதாகும்.

அறிவாசான் தந்தை பெரியார் அவர் களாலும், இனமானத்தை போற்றிக்காக்கும் தமிழர் தலைவர் அய்யா கி.வீரமணி அவர்களின் சமூக நீதியையும், சமூக முன்னேற்றத்தினை மனதில் கொண்டு மிகப்பெரிய பல்கலைக்கழகத்தினை நிர் வகிக்கும் தங்களையும் காலத்தின் அருமைக்கருதி என்ன படிக்கலாம் எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சன் தொலைக்காட்சியை உளமார பாராட்டி மகிழ்கின்றோம்.

- மு. சானகிராமன் தலைவர்

(கர்நாடக மாநில திராவிடர் கழகம்)

Read more: http://www.viduthalai.in/page-2/83350.html#ixzz36SUK5uvC

தமிழ் ஓவியா said...


சூழ்ச்சியே இது!உண்மையான தகுதியும், திறமையும் கெட்டு ஒருவனை ஒருவன் கீழ்ப்படுத்துவதற்குச் சாதனம் எதுவோ அதுதான் இன்று தகுதி - திறமை ஆக்கப் பட்டு வருகிறது. கீழ்ச்சாதி ஆக்கப்பட்ட மக்களைக் கீழ் நிலையிலேயே நிரந்தரமாக இருத்தி வைக்கும் சூழ்ச்சியே இது. (விடுதலை, 28.10.1967)

Read more: http://www.viduthalai.in/page-2/83340.html#ixzz36SUTFCNN

தமிழ் ஓவியா said...


கச்சத்தீவு: இந்தியா- இலங்கை இடையே ஒப்பந்தமே இல்லையாம்!


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய வெளியுறவு அமைச்சகம் பதில்

கோவை, ஜூலை 3_ கச்சத்தீவில் மீன் பிடிப்பது தொடர்பாக இந்தியா மற்றும் இலங்கை இடை யே எந்த ஒரு ஒப்பந்தமும் இல்லை என்று மத்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவலை மய்யப் படுத்தி போராட்டத்தை தீவிரப்படுத்த மீனவ நல அமைப்புகள் முடிவெடுத் துள்ளன.

கச்சத்தீவை மீட்டு, அங்கு தமிழக மீனவர் களுக்கு மீன் பிடி உரிமை கள் வழங்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரப்பட்டு வருகிறது. தமிழக அரசியல் கட்சி களும் தொடர்ந்து இதை வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக பீட்டர் ராயன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் இந்தியா_இலங்கை இடையிலான 1974ஆ-ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க உரிமை இல்லை என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, கோவை யைச் சேர்ந்த சமூக சேவகர் எம்.சஞ்சய் காந்தி, மத்திய வெளியுறவு அமைச்சகத்தில் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ஒரு பதிலைப் பெற்றுள் ளார். இலங்கைக்கான இந்திய வெளியுறவு அமைச் சக துணைச் செயலாளர் மாயங்க் ஜோஷி கையெழுத் திட்டு அளித்துள்ள அந்த பதிலில், தற்போதைய அரசு ஆவணங்களின்படி, இந்தியா_இலங்கை இடையில் கச்சத்தீவு தொடர்பாக எந்த ஒப்பந்த மும் இல்லை. அதேநேரம் இரு நாடு களுக்கு இடை யிலான கடல் நீர் எல்லை தொடர்பாக மட்டும் ஒப் பந்தம் உள்ளது என்று குறிப்பிடப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோ பரில் இந்த பதில் வெளி யுறவுத் துறை மூலம் அளிக் கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல் மீனவர் கள் மற்றும் கச்சத்தீவு மீட்பு இயக்கத்தினருக்கு அதிர்ச்சி தருவதாக உள்ளது. இதுகுறித்து சமூக சேவகர் சஞ்சய் காந்தி கூறும்போது, கச்சத்தீவு ஒப்பந்தத்தின் நகல் வேண்டும் என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் மத்திய வெளி யுறவுத் துறையிடம் கேட் டேன். அவர்கள் அப்படி ஒரு விண்ணப்பமே இல்லை என்று பதில் அளித்துள்ள னர். எனவே, இல்லாத ஒப்பந்தத்தை இருப்பதாகக் கூறி தமிழக மக்களை ஏமாற்றும் வேலை நடக் கிறது. கடல் நீர் எல்லை தொடர்பான வரையறை யிலும், இரு நாடுகளிடை யே எந்தவிதமான அரசு முத்திரையோ, நாடாளு மன்ற அனுமதியோ, அரசு அதிகாரிகளின் கையெழுத் தோ இல்லை. எனவே, வெறும் வெற்றுத் தாளை ஒப்பந்தம் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ளக் கூடிய தாக இல்லை என்றார்.

சமூக நல அமைப்பு...

கச்சத்தீவு மீட்பு போராட்டங்களை நடத்தி வரும் தூத்துக்குடி வீராங் கனை சமூக நல அமைப் பின் தலைவர் பாத்திமா பாபு, கூறும்போது, மத்திய வெளியுறவுத் துறையின் இந்தத் தகவல் அதிர்ச் சியளிப்பதாக உள்ளது. வெற்றுத்தாளை எப்படி ஒப்பந்தமாக ஏற்க முடி யும். அதுவும் மீன் பிடிப்பது தொடர்பாகவே, தீவு யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாகவோ எந்தவித மான திட்டவட்ட வரைய றையும் இதுவரை இல்லை என்பதே எங்களுக்கு பெரிய ஆவணமாக உள்ளது. எனவே, மத்திய வெளி யுறவுத் துறையின் தகவலை மய்யமாக வைத்து, சட்ட ரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் அனைத்து அமைப்புகளுடன் சேர்ந்து போராட முடிவு செய்துள் ளோம் என்றார்.

மத்திய அரசு வெளி யிட்டுள்ள ஆவணத்தில், 1974-ஆம் ஆண்டு ஜூன் 26 மற்றும் 28ஆ-ம் தேதியில் ஒப்புக்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ள வரையறை பிரிவு அய்ந்தில், கச்சத் தீவுக்கு தமிழக மீனவர்கள் மற்றும் பக்தர் கள் சென்று வரலாம். இதற்கு இலங்கை அரசிடம் விசா போன்ற போக்குவரத்து ஆவணங் கள் எதுவும் பெறத் தேவை யில்லை. ஒவ்வொருவரின் கடல் பகுதியிலும், இரு நாட்டு பாரம்பரிய நீர் வழி கலங்கள் இயங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கச்சத்தீவு மீட்புக்குழு முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீதை யின் மைந்தன் கூறியதாவது:

இரு நாடுகளுக்கிடையே பாரம்பரிய நீர் வழிப் பகுதிகள் குறித்து எல்லை வரையறுத்ததில், நியாய மான முறை பின்பற்றப்பட வில்லை. இந்தியாவுக்கு 18 கி.மீ, வரை நீர் எல்லை வகுத்துவிட்டு, இலங்கைக்கு 22 கி.மீ. வரை வகுத்துள் ளனர். சர்வதேச நீர் எல்லை விதிகளின்படி, இந்தியாவுக்கு 20 கி.மீ. என்று குறிப்பிட்டிருந்தால், கச்சத்தீவு சொந்தமா, இல்லையா என்ற கேள்வி யே எழுந்திருக்காது.

மேலும் பாரம்பரிய நீர் எல்லை வரையறை ஒப்பந் தத்திலும், இரு நாட்டு நீர் வழிக் கலன்கள் (ஊர்திகள்) இயங்கலாம்; நீர் வழி உரிமைகளும் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒப்பந்தப் படியே மீன் பிடிக்கும் உரிமை, வலை காயவைக்கும் உரிமை அனைத்தும் இந்தியாவுக்கு உள்ளது என்றார்.

Read more: http://www.viduthalai.in/page-3/83364.html#ixzz36SUn4J7Y

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?

பிள்ளையார்

இந்தியாவில் மட்டுமல்ல - பிள்ளையார் ஜப்பானிலும் உள்ளார்; கணபதி கங்கிதேன், பினாயக்தேன் என்று அழைக் கப்படுகிறாராம். புத்தனுக்கு விநாயகர் என்று பெயர். இதை உல்டா பண்ணி தமிழ் நாட்டில் புத்தர் சிலைகளை உருமாற்றி விநாயகர் என்று அழைத்த சூழ்ச்சி, ஜப்பானிலும் அரங்கேறியுள்ளது போலும்!

Read more: http://viduthalai.in/e-paper/83397.html#ixzz36YKl8Rf7

தமிழ் ஓவியா said...

நாங்கள் ஒன்றும் காவி அணியவில்லை!

மகாராட்டிர மாநில அரசு, முஸ்லீம்களுக்கு அளித்துள்ள இட ஒதுக்கீடு நன்மை பயக்குமா என்று ஆராய நான் விருப்ப வில்லை. மக்கள் பயன் பெறும் திட்டங்களை வரவேற்போம். இந்த இடஒதுக்கீட்டை எதிர்க்க நாங்கள் என்ன காவி உடை அணிந்தவர்களா? - சரத்பவார் (தலைவர் தேசியவாத காங்கிரஸ்)

Read more: http://viduthalai.in/e-paper/83397.html#ixzz36YL9VRk3

தமிழ் ஓவியா said...

குழந்தை இறப்பை தடுக்க புதிய தடுப்பூசிகள்

புதுடில்லி, ஜூலை 4-_ குழந் தைகள் இறப்பை தடுக்கும் வகையில் 3 புதிய தடுப்பூசிகள் அனைத்து குழந்தை களுக்கும் இலவசமாக அளிக்க உள்ள தாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித் தார். இது குறித்து டில்லியில் பிரதமர் மோடி கூறியதாவது:

சர்வதேச தொற்றுநோய் தடுப்பு திட்டத்தின் கீழ், பிறந்த குழந்தைகளுக்கு பல்வேறு தடுப்பூசிகள் அளிக்கப்படு கின்றன. இந்த புதிய 3 தடுப்பூசிகளையும் சேர்ந்து 13 உயிர் பலியை ஏற்படுத்தும் நோய்களில் இருந்து 2.7 கோடி குழந்தைகளை பாதுகாக்க ஒவ்வொரு ஆண்டும் தடுப்பூசிகள் அளிக்கப்படும்.

சிறு குழந்தைகளை தாக்கும் ரோடாவைரஸ், ருபெல்லா, போலியோ ஆகியவற்றுக்கு தடுப்பூசிகளும், பெரியவர்களை தாக்கும் ஜாப்பனீஸ் என்சபாலிடிஸ் (மூளைக் கொதிப்பு மூலம் மரணத்தை ஏற்படுத்தும் நோய்) நோய்க்கான தடுப்பூசியும் படிப்படியாக அளிக்கப்படும்.

உலகளாவிய போலியோ ஒழிப்பு திட்டத்தின் இலக்கை அடைவதற்கும், குழந்தைகள் இறப்பு விகிதத்தை அடுத்த ஆண்டில் மூன்றில் இரண்டு பங்காக குறைக்கவும் இவை அளிக்கப்படு கின்றன. தற்போது இவை சில மருத் துவமனைகளில் கிடைத்தாலும், அனைத்து மக்களுக்கும் இதன் பலன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு இலவசமாக அளிக்க உள்ளது என்றார் மோடி. ரோடாவைரஸ் கிருமி மூலம் ஏற்படும் வயிற்று போக்கால் ஆண்டுக்கு 80 ஆயிரம் குழந்தைகள் இறக்கின்றன. 10 லட்சம் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெறு கின்றனர். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் 300கோடி கூடுதல் சுமை ஏற்படுகிறது.

ருபெல்லா என்பது பிறவியிலேயே ஏற்படும் பார்வையின்மை, காது கேளாமை, இருதய நோயாகும். ஆண்டுக்கு 2 லட்சம் குழந்தைகள் பிறக்கும்போதே இந்த குறைபாட்டுடன் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக் கின்றன. போலியோவை ஒழிக்க ஏற் கெனவே சொட்டு மருந்து அளிக்கப் படுகிறது. தற்போது அத்துடன் போலியோ தடுப்பூசியும் அளிக்கப்பட உள்ளது. ஜாப்பனீஸ் என்சபாலிடிஸ் தடுப்பூசிகள் 9 மாநிலங்களில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள 179 மாவட்டத்தைச் சேர்ந்த அனைவருக்கும் அளிக்கப்படும்.

Read more: http://viduthalai.in/page-2/83402.html#ixzz36YMFD9xn

தமிழ் ஓவியா said...


இதுதான் பார்ப்பனீயம்!


50 ஆண்டுகளுக்கு முன் என்ற தலைப்பில் இன்றைய இந்து ஏடு (ஏப்.23) வெளியிட்டிருக்கும் செய்தி இது. இந்தச் சம்பவம் நடந்தது 1928ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் தேதியாகும்.

லாலா லஜபதிராய் அவர்களையே பார்ப்பனர்கள் கோயிலுக்குகள் அனுமதிக்க மறுத்த சமுதாயக் கொடுமை பற்றிய செய்தி இது! இந்து ஏட்டில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தி அப்படியே தமிழில் மொழி பெயர்த்து தரப்படுகிறது.

நேற்று இங்கு வந்த லாலா லஜபதிராய், மாலை பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, மலபாரில் நடைபெறும் சமுதாயக் கொடுமைகளை கடுமையாக சாடினார்.

குறிப்பாக நம்பூதிரிகள் சமுதாயத்தில் காணப்படும் மோசமான திருமண சம்பிரதாய அமைப்பையும், அதன் காரணமாக ஏற்படுகிற ஒழுக்கக் கேடுகளையும், முறைகேடான பாலியல் உறவு முறைகளையும் அவர் கடுமையாக எதிர்த்தார்.

இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் தீண்டாமை கொடுமை களையும் சுட்டிக் காட்டி, இவை எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கும் வைதீக பார்ப்பனீய கொள்கைகளை வீசி எறியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

அடுத்த தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் அனைவரும் தீண்டாமையை ஒழித்து சமூக நீதிக்குப் பாடுபட வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

பத்மநாபசாமி கோயிலுக்குள் சென்று பார்வையிட வேண்டும் என விரும்பிய லாலா லஜபதிராய்க்கு கோயில் அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டனர். இவ்வாறு இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.

Read more: http://viduthalai.in/page-7/83405.html#ixzz36YNpjtl0

தமிழ் ஓவியா said...


நாங்கள் நாத்திகர்கள் ஏன்? (இது ஒரு அமெரிக்க நாத்திகர் வெளியீடு)


நாங்கள் நாத்திகர்கள் தான்! ஏனென்றால்,

1. கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதற்கு எங்களுக்கு போதிய ருஜூ இல்லை.

2. ஒரு கடவுள் இருக்க வேண்டுமென்பதற்கு ஒரு அவசியமோ அவரால் ஒரு உபயோகமோ இருப்பதாக நாங்கள் கருதுவது இல்லை.

3. ஒரு நல்ல கடவுள் என்பவர் சர்வசக்தி வாய்ந்தவராய் இல்லாவிட்டால் அவர் பிரயோஜனமற்றவரே யாவார்.

4. ஒரு சக்திவாய்ந்த கடவுள் நல்லவராக இல்லா விட்டால் அவர் வணக்கத்துக்குரியவராகமாட்டார்.

5. சர்வசக்தி வாய்ந்த ஒரு நல்ல கடவுள் இல்லவே இல்லை. அப்படி இருப்பதாக இருந்தால், எல்லாம் தோஷமற்றதாகவும், சம்பூர்ண மாகவுமிருக்கும்.

6. கடவுளால் உண்டாக்கப்பட்ட எல்லா உலகங்களிலும் இந்த உலகம் ஒன்று மட்டும் சிரேஷ்டமான உலகமாயிருக்கின்றதானால், அப்பொழுது மோட்ச உலகத்தைப் பற்றிக் கூறும் கதைகள் எல்லாம் பொய்யானவைகளாகத்தான் இருக்க வேண்டும்.

7. மனிதன் இடைவிடாமல் அடுத்தடுத்து விஞ்ஞான சாஸ் திரத்திலும், சுதந்திரத்திலும், சீர்திருத் தத்திலும் முயற்சி செலுத்திக் கொண்டே வந்திருக்கின்றபடியால், கடவுள் கொள்கை விவகாரத்திற்கு வந்துவிட்டதுடன் கடவுள் உணர்ச் சியும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கிறது.

8. ஆதியில் மனிதர்கள் அறியாமை என்னும் அந்த காரத்தில் மூழ்கி இருந்த போது தனக்குத் தெரியாத விஷயங்களையெல்லாம் கடவுள் தன்மை, கடவுள் செயல் எனக் கூற வேண்டியதாகி ஒரு கடவுளை உண்டாக்கிக் கொண்டு அதை அநுபவத்தில் கொண்டு வந்து விட்டார்கள். ஆதிகால மனிதர்கள் ஒவ்வொன்றையும் தப்பிதமாகவே யூகித்துக் கொண்டு வந்தார்களெனக் கூறிவிட்டு, ஆனால், ஜீவனைப் பற்றி மட்டும் உண்மை யாகவே அவர்கள் அறிந்து வைத்திருப்பார்களெனக் கூறுவதும் பொருத்தமானதல்ல.

9. விஞ்ஞான சாஸ்திரங்களின் உதவியால் கண்டு பிடிக்கப்பட்டவைகள் யாவும், அவை கண்டுபிடிப்பதற்கு முன் அவைகள் ஒவ்வொன்றையும் கடவுளின் செயல்; கடவுளின் அற்புதம் எனக் கூறப்பட்டுக் கொண்டே வரப்பட்டது. ஏதாகிலும் ஒன்று புதிதாக கண்டுபிடிக்கப் பட்டால், அப்பொழுது கடவுளின் தன்மையும், கடவுளின் அற்புதமும் கொஞ்சம் கொஞ்சமாக பின்னடை கின்றன. புதியதாக கண்டுபிடிக்கப் பட்டவைகளில் எதுவும் ஒன்று கூட கடவுளின் தன்மையை வலுப்படுத்த வேயில்லை.

10. கடவுள் தன்மை என்று இதுவரை பகிரங்கப்பட்டு வந்த விஷயங்கள் யாவையும் பரிசோதனை செய்து பார்த்த பிறகு, அவைகள் யாவும் இப்போது மனிதத் தன்மைக்கு அடங்கியவைகள் தான் எனவும், சூதும், மோட்சமும்தான் எனவும் நிரூபிக்கப்பட்ட வருகின்றன.

11. குற்றம் கொடுமை, பொறாமை, பகைமை, அசூயை, காமம், எரிச்சல், தர்மசிந்தையில்லாமை ஆகியவைகள் யாவும், கடவுளின் தன்மைக்கு பொருந்தி இணக்கமாயிருக்கின்றது.

நாஸ்திகம் போதிப்பது யாதெனில்:-

கைலாசத்திலோ அல்லது வைகுண்டத்திலோ அல்லது பரலோகத்திலோ ஒருவிதக் கடவுளும் இல்லை.

தாய் தந்தையற்ற குழந்தைகளையும், திக்கற்றவர் களையும், மனிதர்கள்தான் காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் பாதுகாக்கப்பட மாட்டார்கள். கடவுள் காப்பாற்றுவார் என்பது வீண் வார்த்தை.

நமது பிரார்த்தனைகளுக்கு செவிசாய்க்கக் கூடிய ஒரு கடவுள் இல்லை! இல்லை!! இல்லவே இல்லை!!!

மனிதர்களே மனிதர்களின் அபயக் குரலோசைகளுக்கு செவிசாய்த்து அவர்களுக்கு உதவி புரிய வேண்டும்.

நரகமென்பது கிடையாது. நாம் பயப்படக்கூடிய அல்லது பின்பற்றக்கூடிய பழிக்குப்பழி வாங்க வேண்டுமென்கிற துர் எண்ணங்கொண்ட கடவுளாவது, அல்லது பூதமாவது எங்குமில்லை.

Read more: http://viduthalai.in/page-7/83413.html#ixzz36YO6RRtt

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

இனத்தின் மானத்தைக் காக்க எவ்வகைத் துன்பத்தையும் பொறுத்துக் கொண்டு தொண்டாற்றத் தக்க குடிமகன் இல்லாத இனம் வேர்ப்பற்றில்லாத மரம்போல் - கோடாலிக் கொண்டு வெட்ட வேண்டிய அவசியம் இல்லாத மரம்போல் - தானாகவே விழுந்துவிடும்.

நமக்கு ஓர் அறிவு அதிகமிருந்தும் பயன் என்ன? மிருகங்களுக்கு ஓர் அறிவு குறைவு என்றாலும் ஜாதி இல்லையே? மிருகங் களுக்கு அறிவில்லாததின் பயன் ஜாதி இல்லை. நமக்குள்ள இழிவு ஜாதியால் தானே. இதைச் சிந்திக்க வேண்டாமா?

Read more: http://viduthalai.in/page-7/83413.html#ixzz36YOJkBTn

தமிழ் ஓவியா said...


உண்ணாமுலையாம்! ஞானப்பாலாம்!!


கேள்வி: ஒரு பசு மாடு என்ன போட்டால் கறக்கும்?

பதில்: புல்லு, வைக்கோல், தவிடு, பிண்ணாக்கு, பருத்திக் கொட்டை போட்டால் பால் கறக்கும்!

உண்மை: கறக்காது!...கறக்காது!!... கன்று போட்டால் தான் கறக்கும்! அதாவது கன்றீனாதெதுவும் பால் கறக்காது! இதுவே உண்மை நிலை.
அப்படியானால், உண்ணாமுலைகளைச் சுமந்ததாகக் கூறப்படும் பார்வதியின் முலைகள் மட்டும் எப்படிச் சுரந்தன? -என்ற கேள்வி எழுவது சகஜமே!

பார்வதிக்கு இரு குமாரர்கள் என்பது புராணக்கூற்று. இரண்டும் கர்ப்பத்திலிருந்து பிறவாதவைகள் ஒன்று பார்வதி தம் உடலழுக்கை உருட்டித் திரட்டிப் பிடித்து வைத்ததே பிள்ளையார்! ஆனை முகன்! ஆனை வாய் உண்ணாமுலை! மற்றது பரமசிவனது விந்து தெரித்து - அதாவது பார்வதியின் கர்ப்பத்தில் ஊறாமல் - சரவணப் பொய் கையில் விழுந்து ஆறுமுகங்களுடன் பிறந்தது!

அதற்கும் ஆறு கிருத்திகைக் கன்னியர்கள் தாம் பாலூட்டியதாகப் புராணமேயொழிய பார்வதி பாலூட்டினாள் என்பதாக இல்லை! ஆறுமுகமும் உண்ணாமுலை! ஆக, இங்ஙனம் அவதரித்த இரு குமாரர்களும் உண்ணாத முலைகளையுடைய பார்வதிக்கு உண்ணா முலை என்ற ஒரு பெயரும் வந்தது போலும்!

இவ்விருவருக்கும் ஊட்டக் கிடைக்காத முலைப்பால் பாப்பாரச் சம்பந்தனுக்கு மட்டும் ஞானப் பாலாக ஊட்ட எப்படிச் சுரந்தது? சவுண்டி சம்பந்தன், ஞான சம்பந்தன் ஆனது எங்ஙனம்? தேவாரம் பாடியதும் எங்ஙனம்? ஞானப்பால் உண்டதால் பாடினான் என்றால் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் எப்பால் உண்டு தேவாரங்கள் பாடினார்கள்? என்பன போன்ற பகுத்தறிவுக் கேள்வி களுக்கு என்ன சமாதானம்?

இவைகளைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல், வயிற்றுப் பிழைப்பாகக் காலட்சேபம் செய்யும் பண்டாரங்கள் ஞானப்பால் உண்டால் பக்திப் பாடல் பாடலாம்; புட்டிப் பால் உண்டால் டப்பா பாட்டுத்தான் பாடலாம்;

இக்காலத் தாய்மார்களுக்கு பால் சுரப்பில்லை யென்றும், தாய்க்குலத்திற்கு இழிவையூட்டும் வகையில் உளறித் திரிவதென்றால் எவ்வளவு நெஞ்சுத் திமிர் இருக்கும்? மக்கள் முன்னேற்றத்திற்கு வேண்டிய கருத்துக் களைச் சொன்னால் பயனுள்ளதாகவும், நாடு முன்னேறு வதாகவும் அமையும். பண்டாரங்கள் இனியேனும் அறிவு பெற்றுத் திருந்தட்டும்!

Read more: http://viduthalai.in/page-7/83408.html#ixzz36YOSB18K

தமிழ் ஓவியா said...


பன்னாட்டு மனித நேயத்தலைவர் லெவி பிராகலுக்குப் பாராட்டு விழா


வளர்ந்த நாடுகள் பொருளாதார அளவில்தான் வளர்ந்துள்ளன பகுத்தறிவில் நாம்தான் அவர்களைக் காட்டிலும் வளர்ந்துள்ளோம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் பெருமிதம்

பன்னாட்டு மனிதநேயத்தலைவர் லெவிபிராகல், ஆந்திர நாத்திகர் மய்யத்தின் செயல் இயக்குநர் முனைவர் கோ.விஜயம் ஆகியோருக்கு பகுத்தறிவாளர்கழகத்தின் புரவலர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து நூல்களை வழங்கினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பன்னாட்டு மனிதநேயத்தலைவர் லெவிபிராகல் நினைவுப் பரிசாக நூலை வழங்கினார் (சென்னை, 3.7.2014)

சென்னை, ஜூலை 4_ வளர்ந்த நாடுகள் பொருளா தார அளவில்தான் வளர்ந்துள்ளன. பகுத்தறிவில் நாம்தான் அவர்களைக்காட்டிலும் வளர்ந்துள்ளோம் என சென்னையில் நடைபெற்ற பன்னாட்டு மனிதநேயத்தலைவர் லெவிபிராகல் அவர்களுக்கான பாராட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பெருமிதத்துடன் கூறினார்.

சீரிய பன்னாட்டு மனித நேயத்தலைவரும், பன்னாட்டு மனித நேய,நன்னெறிகள் ஒன்றியம் (IHEU) நார்வே (அய்ரோப்பா) நாட்டின் மேனாள் தலை வருமாகிய லெவி பிராகல் அவர்களுக்கு, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளதையொட்டி, தமிழ் நாட்டுக்கு வருகை தந்துள்ள அவருக்கு சென்னையில் வரவேற்பு, பாராட்டு விழா நடைபெற்றது.

மின்னஞ்சல்மூலம் வாழ்த்தும், பாராட்டும்!

இந்திய பகுத்தறிவாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் இன்னயா, இந்திய பகுத்தறிவாளர் அமைப்பு, கோவா தலைவர் சோமு, கேரள யுக்தி வாகினி என்னும் பகுத்தறிவாளர் அமைப்பின் சார்பில் கே.அனில்குமார், ஈகிள் நிறுவனம் சார்பில் பிரதாப்சிங் உள்ளிட்ட பலரும் மின்னஞ்சல்மூலம் இந்த விழாவுக்கு தங்கள் வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்திருந்தனர்.

பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நேற்று (3.7.2014) சென்னை வேப்பேரி, பெரியார் திடலிலுள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் விழா நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.குமரேசன் பல்வேறு தகவல்களைக் குறிப்பிட்டு, தமிழிலும், ஆங்கிலத்திலும் வரவேற்றுப் பேசினார்.

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில துணைத்தலைவர் எமரால்டு கோ.ஒளிவண்ணன் லெவி பிராகல் ஆற்றிவரும் பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து தமிழிலும், ஆங்கிலத்திலும் அறிமுக உரை ஆற்றினார்.

ஆந்திர நாத்திகர் மய்யத்தின் செயல் இயக்குநர் முனைவர் கோ.விஜயம் தந்தைபெரியார், கோரா ஆகியோரின் வழியில் தமிழர் தலைவர் ஆசிரியர், லெவி பிராகல் உள்ளிட்ட அனைவருமே மனித நேயத்துக் காகவும், சுயமரியாதைக்காகவும், சமூக நீதிக்காகவும் பாடுபட்டுவரும் சமூகத்தொண்டர்கள் என்று ஆங்கிலத்தில் விரிவாகப் பேசினார். மேலும், தந்தை பெரியார் கொள்கைகளைப் பரப்பிவரும் இயக்கம், கல்விப் பணியையும் மேற்கொண்டு மனித நேயத் தொண்டை ஆற்றி வருவதாகத் தமிழர் தலைவர் ஆசிரியரைப் பாராட்டிப் பேசினார்.

தமிழர் தலைவர் சிறப்புரை

சிறப்புரையாக பகுத்தறிவாளர் கழகப் புரவலர், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் உரை ஆற்றினார்.

டாக்டர் பட்டம் பெறவுள்ள பன்னாட்டு மனித நேய முக்கிய தலைவர் லெவி பிராகல் இந்தியாவுக்கு அறிமுகம் என்பது தந்தை பெரியாரால், அவர் கொள்கைகளால், திராவிடர் கழகத்தால்தான் என்றும், இதற்குமுன்பாக 1989ஆம் ஆண்டில் தொடங்கி, 25 முறை இந்தியாவுக்கு வருகை தந்து இயக்கத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

பெரியார் கொள்கைகள் உலகமயமாகி வருவதற்கானத் தேவைகள், விளையாட்டு வீரர்களிடம் உள்ள மூடநம்பிக்கைகள், வளர்ந்த நாடுகள் பொருளாதார அளவில்தான் வளர்ந்துள்ளன. பகுத்தறிவில் நாம்தான் அவர்களைக்காட்டிலும் வளர்ந்துள்ளோம் என்பதையும் சுட்டிக்காட்டி பல்வேறு தகவல்களை சிறப்புரையில் குறிப்பிட்டார். லெவி பிராகல் பாராட்டு பெறுவதற்கான பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

லெவி பிராகல்

லெவி பிராகல் உரையின்போது தமிழர்தலைவருடன் இணைந்து ஆற்றிய பணிகள்குறித்து பல்வேறு நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். இதுபோன்ற பொது நிகழ்வுகளில் பெண்கள் அதிகமாகப் பங்கேற்பதன்மூலம் மனித நேயம் சிறக்கும் என்று கூறினார்.

நிகழ்ச்சியின் நிறைவாக கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் தரப்பில் தொடுக்கப்பட்ட பல்வேறு வினாக்களுக்கு லெவி பிராகல், தமிழர் தலைவர் ஆசிரியர் சளைக்காமல் பதிலளித்தனர்.

Read more: http://viduthalai.in/page-8/83427.html#ixzz36YOycpms