Search This Blog

19.7.14

இதுதான் வால்மீகி இராமாயணம் - 13


(இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.)பால காண்டம்

முபதினொன்றாம் அத்தியாயம் தொடர்ச்சி தலில் சனகன் வில் வரலாறு கூறுகிறான்.  அதாவது தக்கன் வேள்வியைத் தகர்த்ததற்காக இவ்வில்லைச் சிவபெருமான் வளைத்ததாகவும், தேவர் பணியச் சீற்றம் தணிந்து அவ்வில்லை வானவரிடம் தந்ததாகவும் வானவர் அதைச் சனகன் முன்னோனான தேவராதனிடம் தந்ததாகவுமாம்.  வால்மீகி தக்கன் வேள்வி தகர்த்தற்குக் காரணம் சிவபெருமானுக்கு அவிர்ப்பாகம் தராததென்பர்.  கம்பரோ,

இமையவில் வாங்கிய வீசன் பங்குறை
உமையினை இகழ்ந்தன னென்ன ஓங்கிய
கமையறு சினத்தனிக் கார்மு கங் கொளாச்
சமையுறு தக்கனார் வேள்வி சாரவே
என்று உமையைத் தக்கன் இகழ்ந்ததே காரணம் என்பர்.

தேவர்கள் யாதொரு இடையூறு மடையாமல் பணிந்தவுடன் சிவபெருமான் சீற்றம் தணிந்தனர் என்பர் வால்மீகி.  கம்பரோ, தேவர்களுடைய பல்லும் கரங்களும் உடைந்தன; அதனால் அவர்கள் புகாத இடங்களி லெல்லாம் ஓடி ஒளிந்தனர்; தக்கன் வேள்வி சிதைந்த வுடன் சிவபெருமான் முனிவு மாறிற்று என்று கூறுவர்.  வால்மீகி அவ்வில்லை ஈசன் தேவர்களிடம் தர அவர்கள் தேவராதனிடம் தந்தனரென்பர்.  கம்பரோ, ஈசனே நேரில் தேவராதனிடம் தந்ததாகக் கூறுகிறார்.
இவ் வில் வரலாறு, வால்மீகி பாலகாண்டம் அறுபத் தாறாவது சருக்கத்தில் கூறப் பெறுவது.  இவ்வரலாற்றுக்கு முற்றிலும் மாறுபட்ட வரலாறு எழுபத்தைந்தாவது சருக்கத்தில் கூறப்படுகிறது.  அதாவது இராமன் முன் தோன்றிய பரசுராமன் அவனை நோக்கி, விஸ்வகர்மா இரண்டு வில்களைச் செய்தான்.  அவற்றில் ஒன்றைச் சிவபெருமானும் மற்றொன்றைத் திருமாலும் கொண் டனர்.  தேவர்கள் சிவ விஷ்ணுக்களின் பலா பலத்தை அறிய எண்ணி, நான்முகனைக் கொண்டு அவ்விரு வருக்கும் போர் மூட்டி விட்டனர்.  அதன்படியே இருவரும் சண்டை செய்யச் சிவபெருமான் வில் முறித்து, திருமால் ஒரு சத்தமிட அதைக் கேட்டுச் சிவன் அடங்கி நின்று விட்டார்.  அப்போது தேவர்கள் வேண்டுதலாலே  சண்டை நின்றது.  தமது முறிந்த வில்லைச் சிவபெருமான் தேவராதனிடம் தந்தனர்.  திருமால் தமது வில்லை எனது பாட்டனாராகிய ருசிகனிடம் தந்தனர்.  அம்முனி தன் மகனாகிய என் தந்தை ஜமதக்கினியிடம் தந்தனன் என்று கூறினதாக வருகிறது.  இவ்விரண்டு வரலாறுகளும் தம்முள் மாறுபடுகின்றன.  இப்பின்னைய வரலாற்றையும் கம்பர் பரசுராமப் படலத்தில் கூறுகின்றார்.  அதிலும் சில மாறுபாடுகள் காணப்பெறுவன.  நான்முகனிடம் தேவர்கள் அவ்விரு வில்களில் வலியதெதுவென வினவ, அவ்வில்களைக் காரணமாக ஏற்றி ஈசனுக்கும் திருமாலுக்கும் சண்டை மூட்டி விட்டானெனக் கம்பர் கூறுகிறார்.  தமது வில் முறிந்தபின் திருமாலுடைய சத்தத்தைக் கேட்டுச் சிவன் அடங்கி நின்றார் என்ற வால்மீகி கூற்றுக்கு மாறாகக் கம்பர், திரும்பவும் சிவனார் சண்டை தொடங்கினரெனக் கூறுகிறார்.  மேலும் கம்பரோ, சிவனார் தமது வில்லைத் தேவேந்திரன் கையிற் கொடுத்தனரெனக் கூறுகின்றார்.  இவ்வாறு பல வகையிலும் கம்பர் மாறுகின்றார்.  நிற்க.

தக்கன் வேள்வியைத் தகர்த்தவுடன் சிவனார் தமது வில்லை தேவர்களிடம் கொடுத்தனரென்பது உண் மையா?  மேலும், தேவராதனிடம் தேவர்கள் வில்லைக் கொடுத்தனரென்பது உண்மையா?  பின்னருள்ள கதை வைணவப் பற்று மிகவுடையோரால் கட்டப்பட்டது போலக் காணப்படுகிறது; சீதையின் பிறப்பைப் பற்றிப் பின்னர் ஆராய்வோம்.

சீதை பிறந்து பெண்ணாகி அவளுடைய அழகில் பல மன்னர் ஈடுபட்டு அவளை மணக்கவந்து அவமானப் பட்டுச் சனகனுடன் சண்டையிட்டு முதலில் வென்று பின் பலகாலம் ஒருவரும் வராமல் சனகன் தன் மகளுக்கு மணாளன் வாய்ப்பானோ என ஏங்கியிருக்கிற காலம் இராமன் பதினாறு வயது வாலிபனாகி வில்லை வளைத்த காலம்.  ஆதலின் எவ்வாற்றானும், இராமன் சீதைக்கு இளையவனாகவே காணப்படுகிறான்.  ஆகையினாலே, இராமன் தனக்குச் சில ஆண்டுகளேனும் ஏன்; பல ஆண்டுகள் வயதில் மூத்தவளாகிய சீதையையே மணந்து கொள்ளுகிறான்.  சீதையை மணக்க இரா மனுக்கு முன்னர் பல தேவர், அசுரர் முதலியோரும் முயன்றிருப்பதாகத் தெரிய வருகிறது.

கம்பர் கூறும் எழுச்சிப்படலம், வரைக்காட்சிப் படலம், பூக்கொய்ப் படலம், நீர் விளையாட்டுப் படலம், உண் டாட்டுப் படலம், எதிர்கோட்படலம் முதலியன அவரு டைய கற்பனைகளே - வால்மீகியார் சுருக்கமாக 5 ஆம் நாள் தசரதன் மிதிலையை அடைந்தானென்பதையே கம்பர் பல நூறு கவிகளால் கற்பித்துப் பாடுகிறார்.

தசரதனை ஜனகனும் இராமன் முதலியோரும் எதிர்கொண்டனரெனக் கம்பர் கூறுவது, வால்மீகி கூற்றுக்கு மாறுபட்டது.  உலாவியற் படலமும் கம்பர் கற்பனையே.  தசரதனே தன் மக்களிருக்குமிடம் சென்று, அவர்களைக் கண்டு மகிழ்கின்றான் என்பர் வால்மீகி.

தசரதன் வேண்டுதலினாலே குலமுறையை வசிட்ட முனிவன் கிளத்துகின்றனனென அதன் விவரமெல்லாம் வசிட்டன் வாயாலேயே வால்மீகி கூறுகிறார்.  திருமணத்தின்முன் இவ்வாறு குலமுறை கிளத்துவது மரபு என்றும் அவர் வரைந்துளார்.  இதற்கு மாறாக, வில்லை இராமன் முறிப்பதன் முன்னரே குலமுறை கிளத்துப் படலமென்றொரு படலத்திலே, இராமனுடைய குல வரலாற்றை விஸ்வாமித்திரன் கூறியதாகக் கம்பர் கூறுகிறார்.  அவ்வரலாற்றில் சில மன்னரே கூறப் பெறுவர்.  ஆனால், அவர்கள் செய்த செயல்களை (வால்மீகி ஒன்றும் கூறாதிருக்க) கம்பர் கூறுகிறார்.  ஜனகன் கூறிய குல முறையைக் கம்பர் கூறவேயில்லை.

குலமுறை கிளத்துப் படலத்தில் கம்பர் இராமன் பிறந்த வரலாற்றை விரித்துக் கூறுகிறார்.  அது இவ்விடத்துக்கு வேண்டாததே.  அவ்வாறு கூறுமிடத்துக் கம்பர் பின்வரும் பாடலொன்று கூறுகிறார்.

சிலைக்கோட்டு நுதற்குதலைச் செங்கனிவாய்க் கருநெடுங்கண்
விலைக்கோட்டும் பேரல்குல் மின்னுடங்கு மிடையாரை
முலைக்கோட்டு விலங்கென்றங் குடனணுகி முன்னின்ற
கலைக்கோட்டுப் பெயர்முனியாற் றுயர்நீங்கக் கருதினான்.
இப்பாடலில் தாசிப் பெண்களைக் கலைக்கோட்டு முனிவன் தனங்களாகிய இரண்டு கொம்புகளுடைய மிருகங்களென்று நினைத்தானெனக் கூறுகிறார்.  இதனால் கலைக்கோட்டு முனிவனுடைய கல்வியும் அறிவும் எவ்வளவு சிறந்தனவென அறியலாம்.  இனி மேற் செல்லுதும்.
பன்னிரெண்டாம் அத்தியாயம் திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில், கேகய மன்னன் மகனும் பரதனுக்குத் தாய்மாமனுமான யுதாசித் தென்பான் வந்து சேர்ந்தனன்.  அவன் பரதனை அழைத்துப் போக அயோத்திக்கு வந்து, திருமணச் செய்தியறிந்து மிதிலைக்கு வந்ததாகக் கூறினான்.

எல்லோரும் கலியாண மண்டபத்துக்கு வந்து சேர்ந்தனர்.  சனகன் தனது பெண்களை உரியவர் களுக்குக் கை பிடித்துத் தந்து தாரை வார்த்துக் கொடுத் தான்.  மாப்பிள்ளைகள் நால்வரும் தங்கள் தங்கள் மனைவியரைக் கைப்பற்றிக் கொண்டு மூன்று முறை தீயை வலம் வந்தனர்.  இவ்வரலாற்றை ஆராய்வோம்.


சீதையும் இராமனும் திருமண மண்டபத்திலேதான் முதன் முறை சந்தித்ததாக வால்மீகி கூறுகிறார்.  வில்லை எவன் வளைப்பானோ அவனுக்கே தன் மகளை மணமுடிப்பதாகச் சனகன் கூறியுள்ளான்.  அதன்படி வில்லை வளைத்த இராமனைச் சீதை மணக்கிறாள்.  இவ்வாறு நடக்கும் திருமணத்தில் மாப்பிள்ளை பதினாறு வயதுடையவனாகவும், பெண் முப்பது வயதுடைய வளாகவும் அமையலாம்.  அன்றி மாப்பிள்ளை எழுபது வயதுடையவனாகவும் பெண் பதினாறு வயதுடைய வளாகவும் அமையவும் கூடும்.  60,000 வயதின் மேலவனான தசரதன் வளைத்திருந்தால், அந்தச் சிறு பெண் அவனுக்கே மனைவியாக நேருமன்றோ?  இக்கதை இவ்வாறுளதென்றால், வயதில் மூத்தவளாகிய சீதை இளையவனான இராமனுக்கு மனைவியாக வாய்க்கிறாள் என்றே உளது.  இவ்வாறு மணவினையுள் அன்பு எவ்வாறு நிகழும்?  இவ்வாறுள்ளது வால்மீகி கூறும் மணவினை நிகழ்ச்சி.  கம்பர் இக்கதையை எவ்வாறு கூறுகிறாரெனப் பார்ப்போம்.

கம்பர் கூறுவது வால்மீகி வரலாற்றுக்கு முற்றிலும் மாறுபட்டதே.  இவர் இராமனும் சீதையும் முதன் முதல் இராமன் மிதிலையில் நுழையும்போதே சந்தித்தனர் என்று கூறுகிறார்.  அவர்கள் சந்தித்த போது, அவர்கள் ஒருவர் மீதொருவர் மெய்க்காதல் கொள்கின்றனர் என்றார்.  அப்பாடல் வருமாறு:-

எண்ணரு நலத்தினா ளிளையள் நின்றுழி
கண்ணொடு கண்ணினைக் கவ்வி யொன்றையொன்
றுண்ணவும் நிலைபெறா துணர்வு மொன்றிட
அண்ணலு நோக்கினா னவளும் நோக்கினாள்
வரிசிலை யண்ணலும் வாட்க ணங்கையும்
இருவரும் மாறிப்புக் கிதய மெய்தினார்

இவ்வாறு கூறிய கம்பர், மேலும் இவ்வன்பின் செயல்களை விவரிக்கின்றார்.  இராமன் பிரிந்தவுடன் சீதை அவனை நினைந்து வருந்துவதும், அந்தி மாலையும் சந்திரோபாலம்பனமும் கம்பர் கூறுகிறார்.  இராமனும் தனியிடமடைந்து சீதையை நினைந்து நினைந்து ஏங்குவதாகவும் கூறுகிறார்.
பின்னர் இராமன் வில்லை முறிக்கின்றனன்.  அச் செய்தியை ஒரு தோழி கூறக் கேட்டுச் சீதை, அவ்வாறு வில்லை முறித்தவன் இராமனாகத்தான் இருக்க வேண்டுமென்று குறிப்பில் உணர்ந்தனளேனும், சற்று அய்யமும் கொண்டாள்.  அதனால், தன் உள்ளம் கவர்ந்த காதலன் அல்லாமல் வேறொருவன் வில்லை வளைத் திருந்தால், அவனை மணக்காது உயிர்விடுவதெனத் தீர்மானிக்கிறாள்.

சொல்லிய குறியினத் தோன்ற லேயவன்
அல்லனே லிறப்பனென் றகத்து ளுன்னுவாள்
இது கம்பர் கூற்று.

இனி கம்பர் இத்தோடு அமையாது, திருமணத்தின் முக்கிய நாளில் இராஜ சபையிலே இராமனும் சீதையும் சந்திக்குமாறு முனிவன் செய்தனரென்றும் கூறுகிறார்.  இராமன் சீதையைக் கண்டு மகிழ்கிறான்.  சீதையும் தன் கைவளையைத் திருத்துபவள் போலக் கடைக் கண்ணால் இராமனை நோக்கித் தன் மனத்திலிருந்த அய்யம் நீங்கி மகிழ்ச்சியடைகிறாள்.  பின் மறுநாள் திருமணம் நடை பெறுகிறது. இவ்வரலாறெல்லாம் கம்பர் கதையை மாற்றி இம்மண நிகழ்ச்சியைத் தமிழ்நாட்டு மணமாகக் காட்டுகிறார்.  இது பாராட்டத் தகுந்ததேனும், அந்நிய நாட்டுக் கதையை மாற்றி மயக்கிவிடுதலாலே கம்பர் செயல் வெறுக்கத் தகுந்ததே!  ஏனெனில் இவ்வா றெல்லாம் இவர் மாற்றி மயக்காதிருப்பரேல், தமிழ் மக்கள் தம் தமிழ் நாட்டுக் கதைகளையே பாராட்டிப் பார்த்து மகிழ்வார்.  இவ்வுண்மைத் தன்மையையும் உணர்ந்து இராமா யணத்தின் உண்மைத் தன்மையையு முணர்ந்து அதைப் பாராட்டாதிருப்பார்.

                    --------------------”விடுதலை” 18-07-2014

28 comments:

தமிழ் ஓவியா said...


கிடைக்காது!


உலகில் எந்தத் தொண்டு செய்கிற வர்களுக்கும் மரியாதை கிடைக்கும். ஆனால், சமுதாயத் தொண்டுக் காரர்களுக்கு மட்டும் மரியாதை கிடைக்காது. - (விடுதலை, 26.12.1964)

Read more: http://viduthalai.in/page-2/84269.html#ixzz37sEYKFHP

தமிழ் ஓவியா said...

பிஜேபியின் கோட்பாடும் - சிந்தனையும்

விசுவ ஹிந்து பரிஷத்தின் தலைவர் அசோக் சிங்கால் - 88 வயது நிறைந்த முதியவர். புதுடில்லியில் அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி ஏடுகளில் இடம் பெற்றுள்ளது. அன்னிய சக்திகளும் பிளவு சக்திகளும் நமது அடையாளத்தை அழிப்பதற்காக முஸ்லிம் அரசியலை பயன்படுத்தினர். ஆனால் இந்தத் தேர்தலில் முஸ்லிம் அரசியலுக்குப் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது.

பா.ஜ.க. ஆட்சியில் முஸ்லிம்கள் பொது பிரஜைகளாக நடத்தப்படுவார்கள் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. மேலும் முஸ்லிம்கள் இந்துமத உணர்வுகளை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

முஸ்லிம்கள் இந்துக்களைத் தொடர்ந்து எதிர்த்து வந்தால் எவ்வளவு காலம் அவர்களால் இங்கு வாழ முடியும்?முஸ்லிம்கள் அயோத்தி கோவில் மற்றும் காசி, மதுரா கோவில்கள் ஆகியவற்றின் மீதான உரிமை கோரலை கைவிட வேண்டும். மேலும் முஸ்லிம்கள் பொது சிவில் சட்டத்தையும் ஏற்க வேண்டும். நாங்கள் முஸ்லிம்களுடன் அன்பாக நடந்து கொள்வோம், மேலும் மற்ற எந்த ஒரு மசூதி வளாகத்தின் மீதும் (ஆயிரக்கணக்கான மசூதிகள் பழைய கோவில் களின் இடிபாடுகளின் மேல் கட்டப்பட்டிருந்தாலும்) நாங்கள் உரிமை கோர மாட்டோம். ஆனால், முஸ்லிம்கள் இதனை ஒத்துக் கொள்ளா விட்டால், மேலும் ஏற்படவுள்ள இந்து ஒருமைப்பாட்டை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

தற்போது இது மத்திய அரசில் நிகழ்ந்துள்ளது. மற்ற மாநிலங்களிலும் இது நிகழும். தற்போதைய பா.ஜ.க. அரசு பின்வாங்காது. மேலும் பின்வாங்கவும் தேவையில்லை. ஏனெனில் மக்களவையில் பா.ஜ.க.வுக் குப் பெரும்பான்மை உள்ளது. மேலும் நாங்கள் எதை செய்ய வேண்டுமென்று விரும்புகிறோமோ அதனை அரசியல் சட்ட ரீதியாக செய்யவே விரும்புகிறோம்.

ராமர் கோவில் மற்றும் கோத்ரா விவகாரங்கள், தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறுவதை சாத்தியமாக்கின. பா.ஜ.க.வின் வெற்றிக்கு இந்த விவகாரங்கள் அடித்தளமாக இருந்தன. அத்துடன் வளர்ச்சி, நிர்வாகம் போன்ற விஷயங்களும் இளைஞர்களைக் கவர்ந்தன - இவ்வாறு சிங்கால் கூறியுள்ளார்.

இதுதான் சங்பரிவார்களின் - அதன் அரசியல் வடிவமான பிஜேபியின் கோட்பாடும் - சிந்தனையும் ஆகும். இந்த விசுவ ஹிந்து பரிஷத்துதான் பொது மக்கள் மத்தியில் திரிசூலங்களை வழங்கி வருபவர்கள்! திரிசூலத்தில் ஒரு முனை முஸ்லீம்களையும், ஒரு சூலம் கிறித்தவர்களையும், இன்னொரு சூலம் மதச் சார்பின்மைப்பேசுபவர்களையும் குத்திக் கிழிக்கும் என்று வெளிப்படையாகப் பேசி வந்தவர்கள் தான்.

இந்தக் காரணத்தால்தான் பிகாருக்கு வி.எச்.பி.யின் பொதுச் செயலாளரான தொகாடியா வரக் கூடாது என்று திருப்பி அனுப்பப்பட்டார்.

ஆர்.எஸ்.எஸின் குருநாதரான எம்.எஸ். கோல்வாக்கரால் எழுதப்பட்ட வரையறுக்கப்பட்ட நமது தேசியம் (We or our Nation hood Defined) என்ற நூல் என்ன சொல்லுகிறது தெரியுமா?

இந்துஸ்தானில் உள்ள இந்து அல்லாதவர்கள் அன்பு, தியாகம் போன்றவைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் தங்களை அயல்நாட்டினராகக் கருதக் கூடாது. அல்லது இந்தத் தேசத்தை முழுவதும் ஆதரிக்க வேண்டும். எதையும் கேட்காமல், எந்தச் சலுகைகளையும் பெறாமல் எதற்கும் முன்னுரிமை பெறாமல் குடி மக்களின் உரிமையும் இன்றி இருத்தல் வேண்டும் என்று அந்நூலில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனப்பான்மை தானே அசோக் சிங்கால் களுக்கு இருக்க முடியும். இதே அடிப்படையில் ஆர்.எஸ்.எஸின் முன்னாள் தலைவரான மறைந்து குப்பஹள்ளி சீத்தாராமய்யா சுதர்ஸன் (கே.எஸ். சுதர்ஸன்) என்ன சொன்னார்?

கிருத்தவர்கள் கிருஷ்ணனை வணங்க வேண்டும்; முஸ்லீம்கள் ராமனைத் தொழ வேண்டும் என்றெல்லாம் சொன்ன துண்டு.

இப்படி ஒரு பாசிச அமைப்பு இந்தியாவில் இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து விட்டது. இந்த நிலையில் இந்தப் பாசிசக் கும்பல் பந்தயக் குதிரை வேகத்தில்தான் நடந்து கொள்ளும் என்று எதிர்ப்பார்க்கத்தான் வேண்டும்.

இந்துத்துவ சக்திகள் ஆட்சியில் வந்தால் இந்து முஸ்லீம் ஒற்றுமை சீர்குலையும் என்று அரக்கோணம் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் (14.3.2014) கூறியதை நினைவு கொள்ள வேண்டும். மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தினாலொழிய இதற்கு வேறு மார்க்கம் கிடையாது.

குறிப்பாக தந்தை பெரியார் அவர்களின் தத்துவங்கள் சிந்தனைகள் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

மக்கள் சிந்தனை முன்னெடுத்துச் செல்லப்பட்டால் நொண்டி அடித்துக் கொண்டாவது அரசு பின்னால் வந்து சேரும் என்பதை இந்த இடத்தில் எண்ணிப் பார்ப்பது நல்லது.

அரசியல் கட்சிகள் - அவற்றின் தலைவர்கள் சங்பரிவாரை (பிஜேபி உட்பட) எவரும் அரசியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் அதைவிட - மிகப் பெரிய தவறு வேறு ஒன்றும் இருக்கவே முடியாது.

தெரிந்தோ தெரியாமலோ நம் நாட்டு சில அரசியல் கட்சிகள் இந்தத் தவறைச் செய்து கொண்டுதான் இருக்கின்றன என்பது வெட்கப்படத்தக்க பிற்போக் கான நிலையாகும்.
அசோக் சிங்கால் பேட்டியைப் படித்த பிறகாவது திருந்துவார்களா?

தமிழ் ஓவியா said...


வரலாற்றில் ஒரு பொன்னாள்தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு பெயர் மாற்றம் பெற்ற நாள்


"மெட்ராஸ் ஸ்டேட்" (சென்னை ராஜ்ஜியம்) என்ற பெயரை அடியோடு ஒழித்து, "தமிழ் நாடு" என்று பெயர் சூட்ட வகை செய்யும் தீர்மானம், தமிழ் நாடு சட்டசபையில் நிறைவேறியது. காங்கிரஸ் ஆட்சியின்போது, தமிழில் மட்டும் "தமிழ் நாடு" என்று அழைக்கப்பட்டாலும், ஆங்கிலத்தில் "மெட்ராஸ் ஸ்டேட்" என்றே குறிப்பிடப்பட்டது.
"மெட்ராஸ் ஸ்டேட்" என்ற பெயரை அடியோடு ஒழித்து, "தமிழ் நாடு" என்று பெயரைச் சூட்ட வேண்டும் என்று தி.மு.க. அரசு முடிவு செய்தது. இதற்காக அரசியல் சட்டத்தை திருத்தவேண்டும் என்ற தீர்மானத்தை, தமிழக சட்டசபையில் 18-7-1967 அன்று முதல் அமைச்சர் அண்ணா கொண்டு வந்தார்.

கூட்டத்துக்கு சபாநாயகர் சி.பா. ஆதித்தனார் தலைமை தாங்கினார். "தமிழ் நாடு" என்று பெயர் சூட்ட அனைத்துக் கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர். பாலசுப்பிரமணியம் (இ.கம்.) பேசுகையில், "இனி நாம் எங்கு சென்றாலும் மற்றவர்கள் நம்மை `தமிழன்' என்று அழைக்க வேண்டும். `மதராசி' என்று அழைக்கக் கூடாது" என்று கூறினார்.

ஆதி மூலம் (சுதந்திரா) பேசுகையில், "தமிழ் நாடு" பெயர் மாற்றக் கோரிக் கைக்காக முன்பு சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்தார். காங்கிரசின் அலட்சியத்தால் அவர் உயிர் இழந்தார்" என்று குறிப்பிட்டார். தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சிவஞானம் பேசுகையில் கூறியதாவது:

"இந்த தீர்மானத்தை உணர்ச்சி பூர்வ மாக உயிர்ப்பூர்வமாக ஆதரிக்கிறேன். தி.மு.கழக ஆட்சியில்தான் இப்படி தீர்மானம் வரவேண்டும் என்பது கடவுள் செயலாக இருக்கலாம். காங்கிரஸ் கட்சியினர் 10 ஆண்டுகளுக்கு முன்பே ஆதரித்திருந்தால் காங்கிரசின் நிலையே வேறாக இருந்திருக்கும். என்றார். விவாதத்துக்கு பதில் அளித்துப் பேசுகையில் அண்ணா கூறியதாவது:

"இந்த நாள் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் வாழ்விலும், எழுச்சியும், மகிழ்ச்சியும் கொள்ள வேண்டிய நாள். நீண்ட நாட்களுக்கு முன்பே வந்து இருக்க வேண்டிய இந்த தீர்மானம், காலந்தாழ்த்தி வந்தாலும் இங்குள்ள அனைவரின் பேராதரவுடனும் வருகிறது.
இதை இந்த சபையில் நிறைவேற்றி, இந்திய பேரரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதுபற்றி நான் மத்திய மந்திரிகள் சிலருடன் பேசிக்கொண்டு இருந்தபோது, "தமிழ் நாடு" என்ற பெயரை சட்டமன்றத்தில் நிறைவேற்றி இந்திய பேரரசுக்கு அனுப்பி வைத்தால், அதற்கு ஏற்ப இந்திய அரசியல் சட்டத்தை திருத்துவதில் தடை எதும் இல்லை" என்று கூறினார்கள்.

10 நாட்களுக்கு முன்னர் பாராளு மன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர் சவான், இதுவரை "மெட்ராஸ் ஸ்டேட்" என்றே பேசியவர், மிகவும் கவனத் துடனும், சிரமத்துடனும் "டமில் நாட்" (தமிழ் நாடு) என்று பேசினார். ஆகவே அரசியல் சட்டத்தை திருத்த நல்ல வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இந்த தீர்மானம் எதிர்ப்பு ஏதுமின்றி நிறைவேறி னால் அந்த வெற்றி ஒரு கட்சியின் வெற்றி அல்ல.

தமிழின் வெற்றி. தமிழரின் வெற்றி. தமிழர் வரலாற்றின் வெற்றி. தமிழ் நாட்டு வெற்றி. இந்த வெற்றியில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும். மேலும் நாம் பெயர் மாற்றம் செய்வதாலேயே தனி நாடு ஆகவில்லை. இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாகவே நம் மாநிலம் இருக்கும்.

அதனால் சர்வதேச சிக்கல்கள் எழாது. சங்கரலிங்கனாருக்கு நினைவுச்சின்னம் ஏற்படுத்தவேண்டும் என்றும் கூறப் பட்டது. அவரது எண்ணங்கள் ஈடேறும் நிலை இன்று ஏற்பட்டு இருப்பது, நம் வாழ்நாள் முழுவதும் பெருமை தருவது ஆகும்.

நாம் இப்படி பெயர் மாற்றத்துக்குப் பேராதரவு அளித்ததற்காக எதிர்கால சந்ததியினர் நம்மை வாழ்த்துவார்கள். அந்த நல்ல நிலையை எண்ணிப் பார்த் தால் எதிர்க்கட்சித் தலைவர் ஆலோ சனை சொல்லாமல் இதற்கு பேராதரவு அளிப்பார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அண்ணா கூறினார்.

பிறகு தீர்மானம் ஓட்டுக்கு விடப் பட்டது. தீர்மானம் ஒருமனதாக நிறை வேறியது. தீர்மானம் ஒருமனதாக நிறை வேறியதாக சபாநாயகர் ஆதித்தனார் அறிவித்ததும், மண்டபமே அதிரும் வண்ணம் உறுப்பினர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

பின் அண்ணா எழுந்து, "தமிழ் நாடு" என்ற பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேறிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நன்னாளில், தமிழ் நாடு வாழ்க என்று நாம் வாழ்த்துவோம்" என்று கூறி, "தமிழ்நாடு" என்று 3 முறை குரல் எழுப்பினார்.

எல்லா உறுப்பினர்களும் "வாழ்க" என்று குரல் எழுப்பினார்கள்.

சபை முழுவதிலும் உணர்ச்சிமயமாக காட்சி அளித்தது.

Read more: http://viduthalai.in/page-2/84271.html#ixzz37sEwKVqN

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவின் சிகரம்


பெரியார் ஈ.வெ.ரா. பிராமணத் துவேஷி - பிராமணர்கள் அவருக்குப் பிடிக்காது என்று பெருவாரியான பிராமணர்கள் நினைப்பதோடு பிரச்சாரமும் செய்து வருகின்றார்கள். இந்தக் கருத்து முற்றிலும் தவறு. இது பெரியாரைப் பற்றிய அவதூறுப் பிரச்சாரமாகும். பெரியார் அவர்களே பல கூட்டங் களிலும் நேரடியாக பலர் அவருடன் உரையாடிய காலத்திலும் பிராமணர் களையல்ல.

பிராமணீயத்தை யேதான் நான் எதிர்க்கிறேன் என்று கூறியுள்ளார். அவர் பிராமணீயத்தை எதிர்த்தது நாத்திக கண்ணோட்டத்தால் என்பதில் சிறிதும் அய்ய மில்லை. இந்தத் தத்துவமும், சமயமும் வருணாசிரம தருமம் என்ற அடித்தளத்தின் மீது எழுப்பப்பட்ட கட்டடங்கள் என்பது எவரும் மறுக்கமுடியாத உண்மையாகும்.

பிராமணீயம் வருணாசிரம தர்மத்தின் அடிப்படை யாகும் - வருணாசிரம தர்மம் ஜாதிப் பிரிவினை யையும், அவரவர் ஜாதிக்குரிய வேலையைச் செய்வதும் தான் அவரவர்க்கு ஈசன் விதித்த கட்டளை என்று கூறுவதையும், ஜாதிக் கொடுமைகள் சமுதாய ஏற்றத் தாழ்வுகள், தீண்டாமை போன்ற பல சீர்கேடுகளையும் நியாயப் படுத்துகின்றது.

இத்தீமைகளையே பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் கடுமையாக, வன்மையாக எதிர்த்துச் சாடி வந்தார். இந்த தத்துவ சாத்திரம் பிராமணீயத்தை தூக்கிப் பிடித்து தாங்கி நிற்கின்றது.

ஆகவே இவை எல்லா வற்றையும் எதிர்ப்ப தென்றால் கண்டதற்கெல்லாம் கடவுள் என்ற கற்பனைப் பொருளை முன் கொண்டு வந்து நிறுத் துவதை எதிர்ப்பதா கும் சுருங்கக் கூறின், கடவுள் நம்பிக்கை மூடப்பழக்க வழக்கங் கள் முதலியவற்றை எதிர்ப்பதென்றால் அது நாத்திகம் தான். நாத்திகத்தின் அடுத்த உயர்நிலைப்படி தர்க்க இயல்பொருள் முதல் வாதமாகும்.

இவற்றின் அடிப்படை விஞ்ஞானம் தழுவிய பகுத்தறிவேயாகும். பெரியார் ஈ.வெ.ரா.அவர்கள் பகுத்தறிவின் சிகரமாக விளங்கி வந்தார். புகழ்பெற்ற பொதுவுடமை இயக்கத் தலைவர்களில் ஒருவரான ஏ.எஸ்.கே.அய்யங்கார் (பார்ப்பனர்) பகுத்தறிவின் சிகரம் ஈ.வெ.ரா. என ஒரு நூல் எழுதியுள்ளார். பெரியாரைப் பற்றிய நூல் எழுதுவதற்கு காரணமாக இதை குறிப்பிட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-7/84259.html#ixzz37sFofTuL

தமிழ் ஓவியா said...


மாணவர்களுக்கு அண்ணா அறிவுரை


நமது கலாச்சாரமும் நாகரிகமும் முதிர்ந்ததுதான் ஆனால் அவற்றின்மீது வடுக்களும், சுருக்கங்களும் ஏற்பட்டு உருக்குலைந்து போயிருக்கின்றன.

ஆகவே, நமது கலாச்சாரம், நாகரிகம் ஆகியவற்றில் உயர்ந்த அம்சங்களை ஆராய்ந்து கண்டுபிடித்து, பிறநாடுகளின் சாதனைகளில் நமக்குத் தேவையான வற்றைத் தாராளமாகப் பின்பற்றி முன் னேற்ற வேண்டும்.

இப்படிச் செய்யாமல் நாம் வடுக்களையும், சுருக்கங்களையும் அழுகிப்போன பகுதிகளையும் நீண்ட காலத்துக்கு மூடி மறைத்து வைத்திருந்தோம். புதிய எண்ணம் கொண்ட பெரியார் போன்றவர்களையும் கண்டித்து வந்தோம்.

பட்டம் பெற்றுவிட்ட நீங்கள் சமுதாயத்தை மாற்றி அமைப்பதிலும் சமுதாயத்தில் தாழ்ந்து கிடப்பவர்களுக்கு நம்பிக்கை ஒளி உண்டாக்கு வதிலும் அனைவருக்கும் புதுவாழ்வு மலரச் செய்வதிலும் பாடுபட வேண்டும்.

- 18.11.1967ஆம் நாள் அன்று
அண்ணாமலை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் அண்ணா

Read more: http://viduthalai.in/page-7/84262.html#ixzz37sFzjh30

தமிழ் ஓவியா said...

சென்னையில் கோயில்கள்

இன்று சென்னையிலி ருக்கும் கோயில்கள், ஒரு லட்சம் அல்ல. மேலும் பலரை குடியிருக்க ஏற்றுக்கொள்ளும் அமைப்பில்தான் இருக்கின் றன. ஒதுக்குப்புறங்களிலும் தெருக்களிலும் தங்கி இருப்ப வர்கள் நாஸ்திகர்களும் அல்ல. அவர்கள் அனைவரும் ஆண் டவன் குழந்தைகள்.

சிலருக்கு விரிந்த மனமும், அதிகாரத்திலிருப்பவர்களுக்குக் கொஞ்சம் துணிவும் இருந்தால் ஏழைகள் குடியிருப்புக் கஷ்டத்துக்கும் ஒரே நிமிடத்தில் நல்லதோர் முடிவு காணலாம்.

-21.12.1947 திராவிட நாடு தலையங்கத்தில் அண்ணா

Read more: http://viduthalai.in/page-7/84262.html#ixzz37sG85COM

தமிழ் ஓவியா said...


இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் உரிமையில்லையாம்அசோக் சிங்காலின் அப்பட்டமான பாசிசக் குரல்!

புதுடில்லி ஜூலை -18 இந்தியாவில் இஸ்லாமிய மக்களின் ஓட்டுரிமை செல்லாக்காசாகிவிட்டது. இங்கு இந்து ஆட்சி மலர்ந்துள்ளது. ஆகை யால் இஸ்லாமியர்கள் தங்களது நடவடிக்கை களை குறைத்துக்கொண்டு இந்துக்களின் மதநீதிகளை மதித்து நடக்கவேண்டும் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் என்ற ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த விஷ்வ இந்துப் பரிசத்தின் தலைவர் அசோக் சிங்கால் கூறினார்

இதன் விவரம் வருமாறு இந்தியாவில் இதுவரை இஸ்லாமியர்களின் ஓட்டுக் களைப் பெற்று ஆட்சிக்கு வந்த சகாப்தம் முடிந்து விட்டது. இனி இந்து ராஜ்ஜியம் மலர்ந்து விட்டது. இனி இஸ்லாமி யர்களின் ஓட்டிற்கு வேலையில்லை. இஸ்லாமி யர்அனைவரும் சிறப்பான மக்கள் அல்ல அவர்கள் சாதாரண குடிமகன் தான், அவர்களுக்கு என்று சிறப்பு சலுகைகளோ அல்லது வேறு வகையான சிறப்பு வசதிகளோ செய்து கொடுக்கக்கூடாது.

இங் குள்ள கோடானு கோடி இந்துக்களுக்கு உள்ள அதே உரிமை இஸ்லாமி யர்களுக்கு கொடுக்கப்பட் டுள்ளது. ஆகவே இஸ்லா மியர்கள் இந்துக்களின் மதநம்பிக்கையை மதிக்கவேண்டும். அரசியல் கட்சிகள் முஸ்லீம் ஓட்டிற்காக அலையத்தேவையில்லை, இஸ்லாமியர்களின் ஓட் டுக்கள் இல்லாமலேயே ஒரு இந்து அரசு அமைந்து விட்டது. இனி இஸ்லாமிய ஓட்டின் முக்கியத்துவம் காணாமல் போய்விட்டது. நரேந்திரமோடி உண்மையான இந்துத்துவப்போராளி

அசோக் சிங்கால் பிரதமர் நரேந்திரமோடி பற்றிக்கூறும் போது மோடி அவர்கள் உண்மை யான இந்துத்துவாதி, தீவிரமான இந்துமதப் பற்றாளர், சங்கப்பரிவாரங் களின் காப்பாளர், முந் தைய அரசின் ஆட்சி முறையில் இருந்து முற்றி லும் விலகி தனித்துவமான ஆட்சியைத் தரவல்லவர்.இராமனும் பரதனும் தந்த ஆட்சியை மோடி தருவார் என்பதில் அய்யமில்லை. மேலும் வாஜ்பாய் அரசு செய்யத்துணியாத பல மாற்றங்களை மோடி செய்வார்.

இதற்காகத்தான் இந்துக்கள் அனைவரும் இணைந்து மோடியை தேர்ந்தெடுத்திருக்கின்றனர். காசி அயோத்தியா மதுரா போன்ற பகுதி களில் பழமையான இந் துக்கோவில்கள் தான் மசூதிகளாக மாற்றப்பட் டுள்ளன. நீண்டநாட் களாக தவறான செய்திகள் மற்றும் தகவலின் காரண மாக அவற்றை உரிமை கொண்டாடி வருகின்ற னர். இனி இஸ்லாமியர்கள் இந்த இடங்களுக்கு உரிமைக் கொண்டாடக் கூடாது. இங்குள்ள ஆயி ரக்கணக்கான மசூதிகள் இந்துக்கோவில்களை இடித்துக் கட்டப்பட்டவை தான். விரைவில் ஆதாரங் களை முன்வைப்போம். இஸ்லாமியர்கள் எங்களது நடவடிக்கைகளில் தலை யிடக்கூடாது. இனி இந் துக்களுக்கு எதிராகவோ இந்துமதத்திற்கு எதிரா கவோ எந்த ஒரு நடவடிக் கையும் எடுக்கும் முன்பு சிந்திக்கவேண்டும். யாரு டைய ஆட்சி என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்.

காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

அசோக் சிங்காலின் இந்த மக்கள் விரோத பேச்சிற்கு காங்கிரஸ் கடும் கண்டனத்தை தெரிவித் துள்ளது. காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் மனீஷ் தீவாரி கூறியபோது அசோக் சிங்காலின் இந்த பேச்சை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது, அவர் நரேந்திர மோடியின் பெயரை முன்மொழிந்து இதுபோன்ற நச்சுகலந்த பேட்டியைக் கொடுத் துள்ளார். சுதந்திரம் அடைந்த பிறகு இந்து-முஸ்லீம்கள் ஒன்று கூடி அமைதியாக வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர்.

இந்த நேரத்தில் இது போன்ற விவாதத்திற்கு உரிய அறிக்கையை கூறுவதால் சமூகத்தில் ஒற்றுமை குலைந்து அமைதி கொட் டுப்போக வாய்ப்புள்ளது. நாட்டை வளமான பாதைக்குக் கொண்டு செல்வேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி இது குறித்து என்ன சொல்லப்போகி றார் என்று தெரியவில்லை. அசோக் சிங்கால் இத் தனை காலமாக கூறிவந்த தற்கும் இன்று கூறியதற் கும் பெரிய வேறுபாடு உண்டு என்று கூறினார். அசோக் சிங்கால் மீது காவல்த்துறையில் புகார் - பிருந்தாகாரத்
சிறிமி(வி) கட்சியின் பொலிட் பீரோ உறுப் பினர் பிருந்தா காரத் ராஞ் சியில் பத்திரிகையாளர் களிடம் பேட்டியளித்தார்.

அப்போது அசோக் சிங்கால் விவகாரம் குறித்து பேசியபோது நாட்டில் அமைதியை குலைக்கும் விதத்தில் இவ்வாறு விவாதத்திற்கு உரிய பேச்சை பேசியிருப்பது கண்டனத்திற்கு உரியது. பத்திரிகைச் செய்தி கையில் கிடைத்த பிறகு நாங்கள் இது குறித்து காவல் துறையில் புகார் செய் வோம். காவல் துறை நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றம் செல்லவும் தயங்கமாட் டோம். சமூக அமைதியைக் குலைக்கும் வகையில் இதுபோன்றவர்களின் பேச்சை இனிமேலும் மற்ற மதத்தலைவர்கள் தொட ராமல் இருக்கவேண்டும் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/84265.html#ixzz37sGe0BtU

தமிழ் ஓவியா said...

அப்போது அசோக் சிங்கால் விவகாரம் குறித்து பேசியபோது நாட்டில் அமைதியை குலைக்கும் விதத்தில் இவ்வாறு விவாதத்திற்கு உரிய பேச்சை பேசியிருப்பது கண்டனத்திற்கு உரியது. பத்திரிகைச் செய்தி கையில் கிடைத்த பிறகு நாங்கள் இது குறித்து காவல் துறையில் புகார் செய் வோம். காவல் துறை நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றம் செல்லவும் தயங்கமாட் டோம். சமூக அமைதியைக் குலைக்கும் வகையில் இதுபோன்றவர்களின் பேச்சை இனிமேலும் மற்ற மதத்தலைவர்கள் தொட ராமல் இருக்கவேண்டும் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/84265.html#ixzz37sGnglzG

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?

திருமணம்

பெற்றோர்கள், பிள்ளை களுக்கு திருமணம் பேசத் தொடங்கும்பொழுது காலா காலத்தில் கல்யா ணம் செய்ய வேண்டு மென்று சொல்வார்கள். வந்த வரன்கள் எல்லாம் வாயிலோடு திரும்பிச் சென்று விடுகிறதே என்று சிலர் அங்கலாய்ப்பர். சிலர் கை நிறையச் சம்பளம் வாங்கிய பிறகுதான் திரு மணம் செய்ய வேண்டு மென்று நினைப்பர். எவர், எப்படி நினைத்தாலும் ஜாதகம் சாதகமாகச் செயல்படும் பொழுதுதான் திருமணம் நடைபெறும். இல்லையென்றால் தள்ளிக் கொண்டே போகும். மனைவி அமைவதெல் லாம் இறைவன் கொடுத்த வரம், கணவர் அமைவ தெல்லாம் கடவுள் கொடுத்த வரம் என்று நினைக்க வேண்டும். ஒரு பெண் ணின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானாதிபதி 6,8 ஆகிய இடங்களில் இருந்தால் திருமணத்தில் தடைகள் ஏற்படும்.

குடும்ப ஸ்தானத்தில் கேது நின்றாலும், செவ் வாய், சனி களத்திர ஸ்தா னத்தில் சேர்க்கை பெற்று பலம் பெற்றாலும் அந்தப் பெண்ணிற்கு திருமணம் எளிதில் நடைபெறாது. தகுந்த பரிகாரங்கள் செய் தால் மனதிற்கினிய மண மகள் அமைவாளாம்.

இந்தியாவில் உள்ள மாப்பிள்ளை அமெரிக் காவில் சென்று கை நிறைய சம்பாதிக்கும் வேளையில் அங்குள்ள இன்னொரு மதப் பெண்ணையும் திரு மணம் செய்து கொண்டு ஜாம் ஜாமென்று வாழ்கிறார் களே! அவர்களின் ஜாதகத் தில் களத்திர ஸ்தானாபதி பதி 6,8 இடங்களில் இருப் பது தானோ?

Read more: http://viduthalai.in/e-paper/84321.html#ixzz37uqA4o7J

தமிழ் ஓவியா said...


காக்கிக்குப் பதில் காவி அணியலாமே!

சென்னை, ஜூலை 19: குற்றத்தை தடுக்க தனிப் பிரிவு, சைபர் கிரைம் மற்றும் வழக்கமான ரோந்து பணிகளையும், நேர்மையான முறையில் விசாரணை நடத்தினாலே குற்றத்தை பெரும்பாலும் காவலர் குறைத்துவிடலாம். ஆனால், காஞ்சி தாலுகா காவலர் என்ன நினைத் தார்களோ தெரியவில்லை, அதிகளவு குற்றங்கள் நடைபெறக் கூடாது என்பதற்காக கண் திருஷ்டி விநாயகர் படத்தை காவல் நிலையம் முன்பு வைத் துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட் டத்திலேயே மிகப்பெரிய எல்லை கொண்ட காவல் நிலையங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையம் உள்ளது. மாவட் டத்திலேயே காஞ்சி தாலுகா காவல் நிலையத் தில்தான் அதிக எண்ணிக் கையில் புகார்கள் வரு கின்றன.

இங்கு, காவலர் பற் றாக்குறை காரணமாக புகார்கள் மீது உடனடி நட வடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அருகில் உள்ள சிவகாஞ்சி மற்றும் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் இங்கு வந்து சில முக்கிய வழக்குகளை முடித்து தந்துவிட்டு செல்கின்றனர்.

இதனால், தாலுகா காவல் நிலைய ஆய்வாள ராக நியமிக்கப்படுபவர்கள், இங்குள்ள பணிச் சுமை யின் காரணமாக வந்த வேகத்திலேயே வேறு இடத்துக்கு மாறுதல் பெற்றுச் சென்று விடுகின் றனர். திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்ட எல்லைகள் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத் துக்கு உட்பட்டதாக அமைந்துள்ளது. சென்னை மற்றும் வெளி மாவட் டங்களில் கொலை செய் யப்பட்டு உடல்களை இர வோடு இரவாக பாலாறு, சென்னை-_பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளில் வீசிவிட்டு செல்கின்றனர். மேலும், அடிக்கடி விபத்து நடக்கிற இடமாகவும் இருக்கிறது.

இந்நிலையில், கம்ப்யூட்டர், மொபைல் போன் என தகவல் தொழில்நுட்பம் செழித் துள்ள இக் காலத்தில், பில்லி, சூன்யம், கண் திருஷ்டி பொம்மைகள், காத்து கருப்பு போன்ற பழைய பழக்க வழக்கங் களை காஞ்சி தாலுகா காவலர் இன்னும் நம்பி வருகின்றனர். காவல் நிலைய எல்லையில் குற் றங்கள் குறைய வேண்டும் என்பதற்காக தாலுகா காவல் நிலையம் முன்பாக கண் திருஷ்டி விநாயகரை காவலர் பொருத்தி இருக் கின்றனர் என்கின்றனர் சக காவலர் மற்றும் பொது மக்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/84324.html#ixzz37uqKq741

தமிழ் ஓவியா said...


வாரணாசி தொகுதியில் மோடி வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு


பிரச்சாரத்துக்கு கோடிக்கணக்கான பணம் செலவிடப்பட்டுள்ளது

மனைவியின் வருமான விவரம் குறிப்பிடவில்லை மோடிக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் தாக்கீது.

அலகாபாத், ஜூலை 19- வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதை எதிர்த்து, தோல்வி அடைந்த காங்கிரஸ் வேட்பாளர் தொடர்ந்த வழக்கில், மோடிக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் தாக்கீது அனுப்பியது.


பிரதமர் பதவி வகிக் கும் நரேந்திர மோடி, நாடாளுமன்ற தேர்தலில் குஜராத் மாநிலம் வதோ தரா, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அவர் வதோதரா தொகுதி உறுப்பினர் பதவியிலி ருந்து விலகினார்.

வாரணாசி தொகுதி யில் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை விட 3 லட்சத்து 71 ஆயிரம் வாக் குகள் அதிகம் பெற்றார். அந்த தொகுதியில் காங் கிரஸ் சார்பில் போட்டி யிட்ட அஜய் ராய்க்கு 3ஆ-வது இடமே கிடைத் தது. இவர் உத்தரபிரதேச மாநிலம் பிண்ட்ரா தொகு தியின் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.

வாரணாசி நாடாளு மன்ற தொகுதியில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதை எதிர்த்து, அலகாபாத் உயர்நீதிமன் றத்தில் அஜய் ராய் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

வாரணாசி தொகுதி யில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த வேட்பு மனுவில் நரேந்திர மோடி தனது மனைவி யசோதா பென்னின் வருமானம் குறித்தும், அவரது பான் கார்டு (வருமான வரி கணக்கு எண் அட்டை) பற்றிய விவரங்களையும் குறிப்பிடவில்லை. இது உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானது ஆகும்.

நாடாளுமன்ற தேர் தலில் போட்டியிடும் வேட்பாளர் பிரச்சாரத் துக்காக ரூ.70 லட்சத்துக்கு மேல் செலவிடக்கூடாது என்று தேர்தல் ஆணை யம் விதிமுறை உள்ளது. ஆனால், வாரணாசி தொகுதியில் மோடியின் பிரச்சாரத்துக்காக கோடிக்கணக்கான பணம் செலவிடப்பட்டுள்ளது. மோடியின் பெயர் மற்றும் உருவம் பொறிக்கப்பட்ட பனியன்கள் மற்றும் தொப்பிகள் மக்களுக்கு ஏராளமாக வழங்கப் பட்டன.

இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முரணா னது ஆகும். எனவே, வாரணாசி தொகுதியில் மோடி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தனது மனுவில் கூறி உள்ளார்.

நீதிபதி வி.கே.சுக்லா முன்பு நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், இந்த வழக்கு தொடர்பாக பிரத மர் நரேந்திர மோடிக்கு தாக்கீது அனுப்புமாறு உத்தரவிட்டார்.

அத்துடன், வழக்கு விசாரணையை வருகிற செப்டம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/84318.html#ixzz37uqVeWIp

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டில் சமஸ்கிருத வார விழாவை ஏற்க முடியாது பிரதமருக்கு முதல்வர் கடிதம்


சென்னை, ஜூலை. 19 பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல் அமைச்சர் ஜெயலலிதா இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத் தின் கீழ் உள்ள பள்ளி கல்வித் துறை செயலாளர், அனைத்து மாநில செய லாளர்களுக்கும் ஒரு கடி தம் அனுப்பி உள்ளார். அதில் அவர், ஆகஸ்டு மாதம் 7ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சமஸ் கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்று கேட் டுக் கொண்டிருப்பதாக அறிகிறேன்.

ஒவ்வொரு மாநிலங் களிலும் உள்ள மத்திய கல்வி கழகம் (சி.பி.எஸ்.சி.), கேந்திரிய வித்யாலயா (கே.வி.) மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சிக் கழகம் ஆகியவை இந்த சமஸ்கிருத வாரத்தை கொண்டாடும் என்று அந்த கடிதத்தில் கூறப் பட்டு இருப்பதாக தெரி கிறது. மேலும் மாநில அரசுகளும் அத்தகைய சமஸ்கிருத வாரத்தை மாநில, மாவட்ட, மற்றும் கீழ்மட்ட அளவில் கொண் டாட அந்த கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தமிழ்நாட்டில், பழமை யான தமிழ் மொழியா னது வளமான கலாச்சார சிறப்புக் கொண்டது என்பதை தாங்கள் அறி வீர்கள். அது போல தமிழ்நாட்டில் வலுவான சமூக நீதி மற்றும் மொழி இயக்கம் இருப்பதையும் தாங்கள் அறிவீர்கள்.

எனவே தமிழ்நாட்டில் சமஸ்கிருத வாரம் கொண் டாடப்படுவது மிகவும் பொருத்தம் இல்லாதது. அதை ஏற்க இயலாது.

ஒவ்வொரு மாநிலத் துக்கும் ஏற்ப, அந்த மாநில செம்மொழி கொண் டாட்டத்துக்கு ஏற்பாடு செய்வதே மிக, மிக பொருத்தமானதாக இருக் கும்.அந்தந்த மாநில மொழி மற்றும் கலாச் சாரத்துக்கு ஏற்ப கொண் டாட்டம் நடத்த கடிதத் தில் தேவையான மாற்றங் கள் செய்ய மத்திய அரசு அதிகாரிகளுக்கு அறிவு றுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். அந்தந்த மாநில மொழி, கலாச்சார கொண்டாட்டமானது, அந்த மாநிலத்தில் உள்ள சி.பி.எஸ்.சி. பள்ளிகள் உள்ளடக்கிய அனைத்து கல்விக் கூடங்களிலும் நடைபெற வேண்டும்.

இதுதான் நம்மை போன்ற மாறுபட்ட கலாச் சாரம், மொழித் தொன்மை கொண்ட நாட்டுக்கு பொருத்தமானதாக அமையும். இவ்வாறு முதல் அமைச்சர் ஜெய லலிதா அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/84323.html#ixzz37uqdsRja

தமிழ் ஓவியா said...


சிவசேனாவை விமர்சித்த விவகாரம்


சிவசேனாவை விமர்சித்த விவகாரம் : கைது செய்யப்பட்ட மாணவிகளுக்கு ரூ. 50 ஆயிரம் நஷ்டஈடு மனித உரிமை ஆணையம் உத்தரவு

மும்பை, ஜூலை 19- -மும்பையில் சிவசேனா தலைவர் பால்தாக்ரே இறந்ததை தொடர்ந்து நடைபெற்ற சம்பவம் குறித்து பேஸ் புக்கில் விமர்சனம் செய்திருந்த இரு மாணவி களை மகாராஷ்டிரா காவல்துறை கைது செய்தது. இது குறித்து விசாரணை நடத்திய தேசிய மனித உரிமை ஆணையம், இது கருத்து சுதந் திரத்திற்கு எதிரானது. எனவே மாணவிகளை கைது செய்தமைக்காக அவர்களுக்கு நஷ்ட ஈடாக இரு வருக்கும் தலா ரூ. 50 ஆயிரம் வழங்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

சிவசேனாவின் தலைவராக இருந்த பால்தாக்ரே இறந்தபோது, மகாராஷ் டிராவின் பல பகுதிகளில் அக்கட்சி யினர் வன்முறையில் ஈடுபட்டு கடை களை அடைக்க செய்தனர். போக்கு வரத்தை அராஜகத்தின் மூலம் தடுத்து நிறுத்தினர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இது மும்பையில் வாழும் பலதரப்பு மக்கள் மத்தியில் கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. இது குறித்து இரு மாணவிகள் தங்களுக்குள் சமூக வலைத்தளமான பேஸ்புக்மூலம் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

அதில் மறைந்த தலைவர் மீதான மரியாதையை காண்பிக்க பந்த் நடத் துவது சரியான வழிமுறை கிடையாது. தாக்ரே மீதான மரியாதை காரணமாக கடைகள் மூடப்படவில்லை. பயத்தின் காரணமாகவே கடைகள் மூடப்பட் டுள்ளன என ஒரு மாணவி தெரிவித்தி ருந்தார். இதற்கு அவரது தோழி ஒருவர் அந்த கருத்தை ஆமோதித்து லைக் தெரிவித்திருந்தார். இதனைக்கூட சகித்துக்கொள்ள முடியாத சிவசேனா கட்சியினர் இது குறித்து காவல் துறையில் புகார் செய்து, சம்மந்தப்பட்ட மாணவிகளை கைது செய்து சிறையில் அடைக்க கோரினர். ஆனால் மும்பை காவல்துறையினர் எந்த வித சட்ட விதிமுறைகளையும் பின்பற்றாமல் சிவசேனாவிற்கு ஆதரவாக இரு மாணவிகளையும் கைது செய்தனர். இது இந்திய அளவில் பெரும் சர்ச் சையை உருவாக்கியது. பலதரப்பினரிட மிருந்தும் கடும் கண்டனம் எழுந்தது. இதனை தொடர்ந்து மகாராஷ்டிரா அரசு இந்த வழக்கை முடித்துக் கொண்டது. இருந்த போதிலும் தேசிய மனித உரிமை ஆணையம் இந்த விவ காரத்தை தானாகவே முன்வந்து கையி லெடுத்து விசாரணை நடத்திவந்தது. விசாரணையின்போது மாணவிகள், மத, இன உணர்வுகளுக்கு எதிராக கருத்து பதிவு செய்யவில்லை என்பது உறுதிபடுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் மகா ராஷ்டிரா அரசிற்கு ஓர் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதில் கூறியி ருப்பதாவது : மாணவிகளை எவ்வித விசாரணையும் இன்றி அவசர கதி யில் மகாராஷ்டிரா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு அம்மாநில அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இந்த நடவடிக்கை என்பது அரசமைப்பு சட்டம் பொது மக்களுக்கு வழங்கியுள்ள கருத்து சுதந் திரத்திற்கு எதிரானது.பாதிக்கப்பட்ட மாணவிகள் இருவருக்கும் தலா ரூ.50 ஆயிரத்தை அபராதமாக மகா ராஷ்டிர அரசு வழங்க வேண்டும். அல்லது, 1993ஆம் ஆண்டு மனித உரிமைகள் சட்டத்தின் 13ஆவது பிரிவின்கீழ் விளைவுகளை அந்த அரசு சந்திக்க வேண்டிவரும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது

Read more: http://viduthalai.in/page-2/84331.html#ixzz37urWgzHf

தமிழ் ஓவியா said...


துண்டறிக்கைப் பிரச்சாரம் பாரீர்


வேலூர் மாவட்ட கழக அமைப்பாளர் கருப்புச்சட்டை மா.சீ.பாலன் அவர்களின் துண்டறிக்கைப் பிரச்சாரம் பாரீர்

நன்றி சொல்வீர்...

பல ஆயிரம் ஆண்டு காலமாக நம் முன்னோர்கள் சொன்ன வார்த்தை.
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு?

பொட்டப்புள்ள படிச்சு என்ன செய்யப் போகிறாள்? என்று பெண்களை ஏளனமாகவும், அலட்சியமாகவும் பேசி அவர்களை கல்வி கற்கவிடாமல் வீட்டிற்குள்ளேயே முடக்கி வைத்தனர் நமது முன்னோர்கள்.

இக்கொடுமையினை கண்டு எரிமலையாய் கொதித்தெழுந்த பகுத்தறிவு தந்தை பெரியார், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு கல்வி கற்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்று இரவு, பகல் பாராமல் இடைவிடாது தமிழ்நாடு முழுவதும் தீவிரப் பிரச்சாரம் செய்தார்.
அதன் பயனாய் அறியாமையிலும், பழமையிலும், மூடநம்பிக்கையிலும் மூழ்கிக்கிடந்த நமது இன மக்கள் மெல்ல, மெல்ல விழிப்புணர்வு பெற்று தங்கள் வீட்டுப்பெண் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்கவைக்க ஆர்வமுடன் முன்வந்தனர். இதைக் கண்ட பெரியார் மத்திய, மாநில அரசுகளுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 50 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டு வந்து சட்டம் இயற்ற வேண்டும் என்றார்.

பெண் மக்களே, நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் அறிவின் சுதந்திர ஊற்று எங்கிருந்து கிடைத்தது தெரியுமா-? பெரியார் 95 வயது வரை வாழ்ந்து அரசுகளை சிந்திக்க வைத்து தங்களுக்காகவே வாழ்ந்த அறிவு ஆசான். அவரின் சிலை, படம் தாங்கள் காணும்போது நன்றி அய்யா என்று உங்கள் மனதில் பதிவு செய்யுங்கள். பெண்களுக்கு பலப்பல புதிய சட்டங்கள் இயற்ற செய்த வரலாற்றுக்குரிய இடம் தான் பெரியார் திடல். 84/1, (50) சென்னை-_600007. உங்கள் குழந்தைகளுக்கு பெரியார் பிஞ்சு மாதஇதழ் வாங்கிக் கொடுப்பீர்! ஆண்டு சந்தா ரூ. 100.00 மட்டுமே. மாதா மாதம் உங்கள் இல்லம்தேடி வரும்.

வணக்கம் செய்வீர்...

தன் மகன் படித்து கலெக்டராகவோ போகிறான் அவன் தலையெழுத்து. இந்த ஆடு, மாடு மேய்த்தால் போதும், என்று இருந்த காலத்தில், பிரிட்டிஷ் ஆட்சியில் வாட்ச்மேனாக, பியூனாக, அமினாவாக, டபேதாரராக, பங்கா இழுப்பவராக வேலைப் பார்த்த தமிழர்களை கண்டு, எழுத்தறிவு தெரிந்துகொள்ள பெரியார் பிரச்சாரம் செய்து 1954ஆம் ஆண்டு, தமிழ்நாடு முதல்வர் கு.காமராசர் அவர்களைச் சந்தித்து கிராமந்தோறும் பள்ளிக்கூடங்களை திறக்க தாங்கள் உத்திரவிட வேண்டும். நம்மக்கள் கல்வியறிவு பெறவேண்டும் என்றார். முதல்வர் அவர்களும் நாடெங்கும் பள்ளிகள் திறக்க செய்தார்.
நம் மக்களும் படித்து கலெக்டராக என்ஜினியராக, டாக்டராக, மந்திரியாக இஸ்ரோ விஞ்ஞானியாக உலகுக்கு வழிகாட்டிகளாக இன்று வருகின்றவர்களே. இந்த ஆராய்ச்சி அறிவு யாரால் கிடைத்தது? சற்று சிந்தியுங்கள். அவர்கள் உருவம் தெரியுமிடமெல்லாம் கையெடுத்து வணக்கம் செய்யுங்கள். அப்போதுதான் நீங்கள் தமிழர்கள் (மனிதர்கள்) நன்றியுள்ளவர்கள்.

Read more: http://viduthalai.in/page-4/84349.html#ixzz37usHmrFt

தமிழ் ஓவியா said...


சைமன் கமிசன் யாதாஸ்து


சைமன் கமிசன் யாதாஸ்த்தின் முதல் பாகம் வெளியிடப்பட்டு விட்டது. அதைப்பற்றி நாம் இப்போது எவ்வித அபிப்பிராயமும் கூற முற்படவில்லை.

அன்றியும், அதிலிருந்து இந்தியர்களுக்கு எம்மாதிரியான அரசியல் உரிமை கிடைக்கப் போகின்றது என்பதைப் பற்றியும் நாம் சிறிதும் கவலைப்பட வில்லை. ஏனெனில், அதெல்லாம் உத்தியோகமும், பதவியும் அனுபவிக்கக் கருதி, அதற்காகவே பல ஸ்தாபனங்களை ஏற்படுத்திக் கொண்டு காத்திருப்பவர்களுக்கே விட்டு விடுகின்றோம்.

நம்மைப் பொறுத்தவரை சைமன் கமிசன் முடிவான யாதாஸ்த்தில் தீண்டப்படாதவர்கள், பெண்கள், ஜாதி வித்தியாசத்தினால் இழிவு படுத்தப்பட்டவர்கள் ஆகிய வர்கள் விடுதலை விஷயத்திலும், முகமதியர்களும், கிறிஸ்தவர்களும் இந்துக்களிடம் அவநம்பிக்கை கொண்டு எதிரிகளாயில்லாமல் ஒற்றுமையாய் வாழவும், பொதுவாக எல்லோருக்குமே சமமாக கல்வி கிடைக்கும்படி செய்யவும் என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன?

என்பதைப் பற்றியும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ விஷயத்தில் தீண்டாதவர்கள் பெண்கள், கிறிஸ்தவர்கள், மகமதியர்கள் ஆகியவர்களுக்கு எவ்விதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருக்கின்றது என்கின்ற விஷயத்திலுமேதான் கமிசனின் சிபாரிசை அறிந்து அதன் மேல் அது மக்களின் சமத்து வத்திற்கும், விடுதலைக்கும், முன்னேற்றத்திற்கும் ஏற்றதா, அல்லவா என்பதைப் பற்றி யோசிக்கக்கூடும்.

அன்றியும், இந்தியாவில் உள்ள சகல அரசியல் ஸ்தாபனங்களும் சைமன் கமிசனை எதிர்த்தும், நாம் மாத்திரமே ஆரம்பத்தில் இருந்தே அவ்வெதிர்ப்புகளை எதிர்த்து கமிசனை வரவேற்றதுடன் மற்ற மக்களையும் வரவேற்றுத் தங்கள் குறைகளைத் தெரியப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டது இக்கருத்தைக் கொண்டேயாகும். ஆதலால் முடிவு யாதாஸ்த்தை எதிர்பார்க்கிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 22.06.1930

Read more: http://viduthalai.in/page-7/84304.html#ixzz37usy4aHw

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

ஜாதி ஒழிப்பது என்பது இன்று சட்டத்தின் மூலம் முடியாது என்று ஆகிவிட்டது. கிளர்ச்சி மூலம்தான் முடியும். வெள்ளைக்காரனிடமிருந்து பார்ப்பான் கைக்கு அதிகாரம் வந்ததும் முதலில் அரசியல் சட்டத்தில் மூலாதார உரிமையாக மதத்தையும் ஜாதியையும் காப்பாற்றுவது என்று போட்டு விட்டான்.

எப்போது உங்கள் மனச்சாட்சியும், பகுத்தறிவும் இடங்கொடுத்து, நீங்கள் கழகத்தில் அங்கத்தினர்களாகச் சேர்ந்து விட்டீர்களோ அப்போதிலிருந்து உங்கள் பகுத்தறிவையும், மனச் சாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு கழகக் கோட்பாடுகளைக் கண்மூடிப் பின்பற்றி நடக்க வேண்டியது தான் முறை.

Read more: http://viduthalai.in/page-7/84304.html#ixzz37ut82Jj1

தமிழ் ஓவியா said...


சுசீந்திரத்தில் சுயமரியாதை போர்

சுசீந்திரம் என்பது திருவாங்கூர் ராஜியத்தைச் சேர்ந்த ஒரு சேத்திர தலமாகும். அது திருநெல்வேலிக்கு 40ஆவது மைலில் உள்ள நாகர்கோவிலுக்கு 2, 3, மைல் தூரத்தில் உள்ள கிராமம். நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரிக்குப் போகின்ற வழியில் இருக்கின்றது. அந்த ஊரில் உள்ள ஒரு கோவிலைச் சுற்றியுள்ள ரோடுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்கள் செல்லக்கூடாது என்ற நிர்ப்பந்தம் இப்பொழுதும் இருந்து வருகின்றது.

அந்த ரோடுகள் திருவாங்கூர் சர்க்காரால் பொதுஜனங்களின் வரிப்பணத் திலிருந்து பாதுகாக்கப்பட்டு வருவதாகும். அந்த ரோடுகளுள்ள திருவாங்கூர் ராஜியமானது, ஒரு இந்து அரசரால் அதுவும் ஒரு இந்து கடவு ளாகிய பத்மநாபவாமி என்பதின் (தாசரால்) பிரதிநிதியால் அரசாட்சி செய்யப்பட்டு வருகின்றது. அந்த ரோடில் நடக்கக் கூடாது என்று சொல்லப்படும் ஜனங்கள் யாரென் றால் இந்துக்கள் என்று சொல்லப் படுபவர்களும், அந்த பத்மநாப சாமியின் பக்தர்களுமே யாவார்கள்.

மற்றபடி, அந்த சாமியின் பக்தர் களல்லாதவர்களும், இந்துக்கள் அல்லாதவர்களுமான கிருத்தவருக் கோ, மகமதியர்களுக்கோ, அவ் வழியில் நடப்பதற்கு யாதொரு ஆட்சேபணையும், தடங்கலும் சிறிதுகூட கிடையாது. இதுதவிர, மேற்கண்டபடி இந்துக்கள் என்பவர்களில் பெரும் பான்மையான மக்களாகிய சில சமூகத்தரைத்தவிர, மற்றபடி மனிதர்கள் அல்லாத எந்த ஜந்தும், மலம் முதலிய எந்த வதுவும் அந்த தெருவில் மேள வாத்தியங்களுடனும் பல்லக்குச் சவாரியுடனும் கூடப்போகலாம்.

அப்படிப் போவதில் யாருக்கும் ஆட்சேபணையும் கிடையாது. ஆனால் அந்த சுவாமியின் பக்தர்களான சில மனிதர்களுக்கு மாத்திரம்தான், அதுவும் இந்து என்று சொல்லிக் கொள்பவனுக்கு மாத்திரம்தான் ஒரு இந்து ராஜா ஆளும் ராஜ்யத்தில் உள்ள ஒரு தெருவில் நடப்பது மதவிரோதம் என்று இந்த 20ஆவது நூற்றாண்டில் மறுக்கப்பட்டு வருகின்றது.

இந்தக் காரியத்திற்காகவே, அதாவது அது போன்ற ஒரு தெரு வழி நடை பாத்தியத்திற்காகவே சென்ற 1923ஆம் வருஷத்தில் அதே திருவாங்கூர் ராஜியத்தைச் சேர்ந்த வைக்கம் என்னும் ஊரில் ஒரு தடவை சத்தியாக்கிரகம் செய்யவேண்டி ஏற்பட்டது வாசகர்களுக்கு ஞாபகமிருக் கலாம்.

அந்தச் சத்தியாக்கிரகம் சுமார் 5, 6 மாத காலம் நடைபெற்று பலர் பல தடவை சிறை சென்றும் வேறு பல கஷ்டங்களும் அனுபவித்த பிறகு அந்த வழி நடைப் பாதை எல்லோருக்கும் பொது உரிமையுடைய தாக ஆக்கப்பட்டது. இப்போதும் அதுபோலவே இந்தச் சுசீந்திரம் வழிநடைப் பாதையும் வைக்கத்தைப் போலவே சத்தியாக்கிரகம் செய்ய வேண்டியதாகி ஏற்பட்டு இப்போது சிறிது நாளாக சத்தியாக்கிரகமும் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த சத்தியாக்கிரகத்தின் பயனால் இதுவரை சுமார் 10, 15 பேர்கள் வரை சிறை சென்று இருப்ப தாகவும், இனியும் 10, 12 பேர்கள் மீது கேசு நடப்பதாகவும் சர்க்கார் மிகவும் கடுமையான அடக்கு முறையைக் கொண்டு சத்தியாக்கிரகத்தை அடக்கி விடத் தீர்மானித்திருப்பதாகவும் தெரியவருகின்றது.

அதற்கேற்றாப் போல் அந்த ராஜ்ஜியம் இதுசமயம் ஒரு வருணாசிரம பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்கத்தில் வெறிபிடித்த வருமான ஒரு திவானின் ஆட்சி யிலும் அந்தக் குறிப்பிட்ட இடமானது ஒரு பார்ப்பன ஜில்லா மேஜிட்ரேட் ஆட்சியிலும், ஒரு பார்ப்பன ஜில்லா போலிசு சூப்ரண்டு ஆட்சியிலும் இருந்து வருகின்றது.

இந்த பார்ப்பன போலீசு சூப்பிரண்டு யார் என்றால் வைக்கம் சத்தியாக்கிரகத்தின் போது அரசாங்கம் திகைத்த காலத்தில் தனக்குப் பூரண அதிகாரம் கொடுத்தால் 5 நிமிஷத்தில் வைக்கம் சத்தியாக்கிரகத்தை அடக்கிவிடு வதாகச் சொல்லி அரசாங்கத்தினிடம் பூரா அதிகாரம் பெற்று வந்து ஆட்சி செய்தவர்.

இவர் காலத்தில்தான் தொண்டர் களை அடித்தல், குத்துதல், கண்ணில் சுண்ணாம்பு பூசுதல், இராட்டினங்களையெல்லாம் ஒடித்து நொறுக்குதல், காலிகளை ஏவிவிட்டு சத்தியாக்கிரகிகளுடன் கலகம் செய்வித்தல், சத்தியாக்கிரகம் செய்யும் பெண்களிடம் மிக்க நீசத்தனமாக நடந்து கொள்ளுதல், எதிர்பிரசாரம், எதிர் பத்திரிகைகள் முதலியவைகள் செய்தல் முதலாகிய காரியங்கள் எல்லாம் நடைபெற்றதோடு திருவிதாங்கூர் ராஜ்யத்தின் இந்த மாதிரியான பெருமையை உலகத்திற் கெல்லாம் வெளிப்படுத்தினவர்.

அந்த அனுபவத்தைக் கொண்டுதான் இப்போதும் திருவிதாங்கூர் அரசாங்கத்தார், அவரையே சுசீந்திரம் சத்தியாக்கிரகத்திற்கும் போட்டு இருப்பதாய் தெரிகின்றது. திருவிதாங்கூர் ராஜ்யத்தின் பெருமை மற்றொருதரம் உலகமறிய ஒரு சந்தர்ப்பம் இந்த மகானாலேயே ஏற்பட நேர்ந்தது பற்றி நமக்கு மிக்க மகிழ்ச்சியேயாகும்.

Read more: http://viduthalai.in/page-7/84306.html#ixzz37utGuGSm

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

ஜாதிக்கென்று தொழில் செய் வதால்தானே, ஈன ஜாதி, இழிஜாதி என்று சொல்ல வாய்ப்பேற்படுகிறது. அந்த மாதிரி ஈன ஜாதி, இழி ஜாதி என்று சொல்வதற்கான வேலையை நீ செய் யாதே! நீ செய்து தொலைத்தாலும் உன் மக்களைச் செய்ய விடாதே. எல்லாத் தொழிலையும் எல்லோரும் செய்ய வேண்டிய நிலை ஏற்படட்டும்

Read more: http://viduthalai.in/page-7/84306.html#ixzz37utPqFUZ

தமிழ் ஓவியா said...

பொருளாதாரத்தில் சரி பண்ணிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று பேசு கிறார்களே, பொருளாதாரத் தில் எவ்வளவு தான் உயர்ந்த வர்களாக ஆனாலும் கூடச் சூத்திரன் சூத்திரன் தானே! பறையன் பறையன்தானே!

Read more: http://viduthalai.in/page-7/84305.html#ixzz37uti3U49

தமிழ் ஓவியா said...


சென்னை விவேகானந்தா கல்லூரியில் 100க்கு 3 பேராக உள்ள பார்ப்பனர் ஆதிக்கம்

சென்னை விவேகானந்தா கல் லூரியை நடத்தும் பொறுப்புகீழ் சாதியி னருக்கு தொண்டு செய்வதற்கென்றே உருவாக்கப்பட்ட ராமகிருஷ்ணா மிஷனிடம் ஒப்படைக்கப்பட்டது. 1921இல் பார்ப்பனரல்லாத நாட்டுக் கோட்டை நகரத்தாரால் மாணவர் இல்லத்திற்கு என கட்டித் தரப்பட்ட நாட்டுக்கோட்டை நகரத்தார் வித்தியா சாலை என்ற பள்ளிக்கட்டடம் கல் லூரிக்கு என ஒதுக்கப்பட்டது. பின்னர் சென்னை மாகாண அரசினால் சிட்டி இம்ப்ரூவ்மெண்ட் டிரஸ்டிடயிருந்து சி.அய்.டி. காலனி பகுதியில் பெரும் நிலம் (மனைகள்) கல்லூரி மைதானத் திற்காகவும், கல்லூரி விடுதிக்கும் மிக மிகச் சொற்ப விலையில் (அதிலும் பெரும்பகுதியை அரசே தந்து விட்டது) தரப்பட்டது.

பல்கலைக் கழக மானியக்குழு தந்த நிதியைப் பயன்படுத்தி (Matching Grant)கல்லூரி மாணவர் விடுதியின் ஒரு கட்டடமும் மக்கள் வரிப் பணத்தில் இயங்கும் மாநில, மத்திய அரசுகளிட மிருந்து நிதிக் கொடைகளை இவ்வாறு பெற்றதுடன் மாநில அரசிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை மாதந்தோறும் ஊதிய மானியமாகவும் பெற்று வரும் விவேகானந்தா கல்லூரி எப்படி ஒரு பார்ப்பனக் கல்லூரியாக இயங்க முடியும்?

கல்லூரி தொடங்கப்பட்ட 1946ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை கல்லூரி நிருவாகக் குழுத் தலைவர்களாக 5 பேர் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பார்ப்பனர்களே! இதைப் போன்று இந்த 67ஆண்டுகளில் கல்லூரிச் செயலாளர் களாக 9 பேர் இருந்துள்ளனர். இவர் களில் சுவாமி நிஷ்கமானந்தா 1970-1976)வைத் தவிர அனைவரும் பார்ப் பனர்களே!

பொது நிதியில் அரசு மானியத்தில் இயங்கும் இக்கல்லூரியில் 1946 முதல் இன்று வரை 14 பேர் முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 1.7.2013 முதல் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள பேரா சிரியர் கே. சீனிவாசன் 15வது முதல்வர். 15 முதல்வர்களும் பார்ப்பனர்களே!

சூத்திரர் யுகம் என்ற விவேகானந் தரின் கனவு என்னவாயிற்று? காயஸ் தராகப் பிறந்த அந்த துறவியின் கனவு என்றும் கனவாகவே நீடிக்க வேண்டும் என்பதுதான் அவரது துறவுப் பரம்பரை யினரின் சாதி வர்ண வேட்கையா? இனமானத் தமிழர்களே! சிந்திப்பீர். செயல்படுவீர்!

நன்றி: விடுதலை நாளிதழ் 2.7.2013

வெளியீடு: நகர திராவிடர் கழகம், செய்யாறு

Read more: http://viduthalai.in/page4/84366.html#ixzz37uuxmvhu

தமிழ் ஓவியா said...

விவசாயிகள் அதிகம்: மொத்த உறுப்பினர்களில் 27 சதவிகிதம் பேர், விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். 20 சதவிகிதம் பேர் தொழிலதிபர்கள்.

Read more: http://viduthalai.in/page6/84371.html#ixzz37uvenrwf

தமிழ் ஓவியா said...


குருபெயர்ச்சியா? ஜாதிப் பயிற்சியா?

ஜூன் 13 2014 (தி.ஆ.2045 விடை -_ 30) வைகாசி 30ஆம் தேதி என்னும், ஜூபிடர் என்னும் குருப்பெயர்ச்சி மிதுன இராசியில் இருந்து கடக இராசிக்கு மாறுகிறது. இது வாக்கியப் பஞ்சாவ்கம் தரும் தகவல் ஜூன் 19 - _ 2014 (தி.ஆ. 2045 ஆடவை - _5) ஆனி 5ஆம் நாள் வியாழன் என்னும், ஜூவிடர் என்னும், குருப்பெயர்ச்சி மிதுன இராசியில் இருந்து கடக இராசிக்கு மாறுகிறதாம் - இது திருக்கணித பஞ்சாங்கம் தரும் தகவல்.

பஞ்சாங்கத்துக்கு பஞ்சாங்கம் முரண்பாடு, ஆனால் அறிவியலில் இல்லை முரண்பாடு. அறிவியலில் எல்லாமே சமன்பாடுதான்.

வியாழன் கோள் சூரியனைச் சுற்றி வர, பூமியின் கணக்கில் ஏறத்தாழ 12 ஆண்டுகள்ஆகின்றன. நமது பூமி சூரியனைச் சுற்றிவர ஒரே ஆண்டு ஆகிறது. உண்மையில் வியாழனுக்குப் பின்னால் தெரியக் கூடிய விண்மீன் மண்டலக் காட்சியானது பூமியின் பெயர்ச்சியாலேயே மாறித் தெரிகிறது. பூமியில் நாம் பார்க்கும் எல்லா காட்சி மாற்றத்திற்கும் பூமியின் சுழற்சியும், பெயர்ச்சியுமே உண்மையான காரணம். அதுவும் மற்ற கோள்களின் பின்புலம் (இராசி) மாறுவதற்கும் பூமியின் பெயர்ச்சியே காரணம். அப்படியிருக்கும்போது குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி என பத்திரிகைகள் பொய்ச் செய்திகளை ஆராயாமல் வெளியிடுவது, கோவில் குருக்களின் வயிற்றை நிரப்பவே! அதற்குத்தான் குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜையும், கட்டணமும்.

எல்லாக் கோள்களும் தன்னைத்தானே சுற்றிக் கொண்டுதான் சூரியனைச் சுற்றி வருகின்றன. அப்படி இருக்க சனிப் பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி எனக் கூறும் ஆன்மிகம், சனி சுழற்சி, குரு சுழற்சி பற்றி சொல்வதில்லையே. அதிலும் நவக்கிரகம் என்று கூறும் (இப்போது 8 கோள்களின்) ஆன்மிகம், புதன் பெயர்ச்சி வெள்ளிப் பெயர்ச்சி பூமிப் பெயர்ச்சி, செவ்வாய்ப் பெயர்ச்சி, வின்மம் (யுரேனஸ்) பெயர்ச்சி, சேண்மம் (நெப்டியூன்) பெயர்ச்சி பற்றி சொல்வதே இல்லையே... ஏன்? ஏன் எனில் கிரகத்தில்கூட உயர் ஜாதி கிரக மாம் இதோ மாலை முரசு தரும் தகவல்.
குரு சில தகவல்கள் கிழமை வியாழன்
நட்சத்திரம் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
ராசி தனுசு, மீனம்
பால் ஆண்
நட்பு சந்திரன், செவ்வாய், சூரியன்
பகை புதன், சுக்கிரன்
சமம் சனி, ராகு, கேது
கோத்திரம் ஆங்கிரசு
அதிதேவதை இந்திரன்
பிரத்யதி தேவதை பிரம்மா
குணம் சாத்விகம்
திசை வடக்கு
மொழி வடமொழி
சாதி பிராமண சாதி
ஆடை தங்க மஞ்சள்
மனைவியர் தாராதேவி, சங்கினி
புதல்வர்கள் எமகண்டன், கசன், பரத்வாஜன்
ஊர்தி யானை
தசை 16 ஆண்டு
மலர் முல்லை
தானியம் கடலை
உணவு தயிர்ச் சோறு
உலோகம் பொன்

Read more: http://viduthalai.in/page8/84373.html#ixzz37uwDlRjj

தமிழ் ஓவியா said...


பராமரிப்பின்றி புத்தர் சிலைகள்தஞ்சாவூர், திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த, அய்யம்பேட்டை, ஆயிரவேலி அயிலூர், உள்ளிக்கோட்டை, ஒதுளூர், கரூர், கிள்ளியூர், பட்டீஸ்வரம், பரவாய், புஷ்பவனம், புத்த மங்கலம், புதூர், பெரண்டாக்கோட்டை, பெருஞ்சேரி, மங்கலம், மன்னார்குடி, மானம்பாடி, விக்கிர மங்கலம், விக்ரமம், வெள்ளலூர் உள்ளிட்ட பல இடங்களில், இப்போதும் மகாபுத்தர் வழிபாடு நடைமுறையில் உள்ளது. அய்யம்பேட்டையில், முனீஸ்வரன் என்றும், பெருஞ்சேரியில் ரிஷி, என்றும், புத்தரை வழிபடுகின்றனர். பல நூற்றாண்டுகளுக்கு முன், பவுத்த மதம் தமிழகத்தில் பரவியபோது, சோழ நாட்டில், அதன் தாக்கம் அதிகளவில் இருந்தது. அதனால், அப்பகுதி முழுவதும், புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டன. பிற்காலங்களில், சிலைகள் பராமரிக்கப்படாமல் அப்படியே விடப்பட்டன. தமிழக தொல்லியல் துறை, இருபது ஆண்டுகளுக்கு முன், காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள புத்தர் சிலைகளை கணக்கெடுத்து, அதில், 70 புத்தர் சிலைகள் இருப்பது தெரிய வந்தது. அவற்றில் 20 சிலைகளை உள்ளூர் மக்கள் வழிபட்டு வந்தனர். எனவே, அச்சிலைகளை அவர்களின் பொறுப்பிலேயே தொல்லியல் துறை விட்டது. மீதமுள்ள, 50 புத்தர் சிலைகள், போதிய பராமரிப்பின்றி அழியும் நிலையில் இருப்பதாக தொல்லியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே, புத்தர் சிலைகளைப் பராமரிக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/page8/84374.html#ixzz37uwQIcvs

தமிழ் ஓவியா said...

பகத்சிங் தூக்கில் இடப்பட்டபோது

ஆங்கில அரசின் அடக்குமுறைகளுக்கு அஞ்சி

அன்றைய "தேசபக்தர்கள்" வாய்மூடி, மௌனியாக இருந்தபோது,

பகத்சிங்கின் செயலை ஆதரித்து

1931 ல் கட்டுரை தீட்டியவர் தந்தை பெரியார் என்பது

இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...


திண்டிவனம்
விடுதலை சந்தா சேர்ப்பு இயக்கத்தில் கழகத் தோழர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். உலகிலேயே 80 ஆண்டு களாக நடைபெறும் ஒரே நாத்திக நாளேடு விடுதலை விடுதலை விடுதலையே! அதில் 52 ஆண்டுகள் ஆசிரியராகத் தொடர்ந்து, பணியாற்றி கின்னஸ் சாதனை பொறித்தவரும் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களே!

இன்றைக்குத் தமிழ் நாட்டில் ஆசிரியர் என்று சொன்னாலே அது விடுதலை ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களை மட்டுமே குறிக்கிறது என் றால் அதன் வீரியத்துக் குள்ளிருக்கும் வித்து மிக வும் முக்கியமானது!

விடுதலை தான் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் புரட்சிகரமான சிந்தனை களை, மனிதநேயத் தத்து வங்களை ஆசிரியராக இருந்து தமிழ்நாட்டு மக் களுக்கு அறிவு கொளுத்தி வருகிறது. அந்த வகையில் விடுதலையின் ஆசிரி யரை ஆசிரியர் என்று விளிப்பதற்கு நியாயமான காரணங்கள் இருக்கவே செய்கின்றன.

சமுதாயத்தைப் புரட் டிப் போட்ட பணியிலும், சமூக நீதிக் கொடியைப் பட்டொளி வீசிப் பறக்கச் செய்வதிலும் விடுதலைக்கு நிகர் விடுதலையே

ஆசிரியர் அவர்களின் 50 ஆண்டு விடுதலை பணியையொட்டி 50 ஆயி ரம் விடுதலை சந்தாக் களைத் திரட்டித் தந்து சாதனை படைத்த கருஞ்சட்டைத் தோழர்கள், இப்பொழுது 12 ஆயிரம் சந்தாக்கள் திரட்டும் பணி யில் சளைக்காது ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகத்தின் சார் பில் நடத்தப்படும் களப் பணி பட்டறைகளில் இது. முக்கிய கருத்தாக எடுத் துக் கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று (19.7.2014) திண்டிவனத்தில் நடை பெற்ற களப் பணிப்பட்ட றையில் திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறை நுதல் செல்வி அவர்கள் ஒரு கருத்தை முன் மொழிந்தார்.

கழகப் பொறுப்பாளர் கள் ஒவ்வொருவரும் ஆண்டு ஒன்றுக்கு நான்கு சந்தாக்களைச் சேர்த்துக் கொடுக்கும் யோச னையை முன் வைத்தார்.

எதிலும் முன் குரல் கொடுக்கும் திண்டிவனம் மாவட்டக் கழகத் தலைவர் மானமிகு க.மு. தாஸ் அவர்கள் அடுத்த கணமே தங்கள் குடும்பத்தின் சார் பில் இதோ நான்கு ஆண்டு சந்தா என்று கூறி அதற்கான தொகை ரூ.4,800அய் கழகப் பொருளாளரிடம் அளித் துப் பலத்த கரவொலியை ஒருங்கே பெற்றார்.

திண்டிவனம் முன் மொழிந்து விட்டது; திரா விடர் கழகத் தோழர்களே, இதனை தமிழ்நாடு முழு வதும் செயல்படுத்தலாம் அல்லவா!
வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/84383.html#ixzz383nX7CIC

தமிழ் ஓவியா said...

சமஸ்கிருத வாரத்தை எதிர்த்து தமிழ்நாடு முதல் அமைச்சரும், கலைஞரும், தமிழக அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்புக் குரல்! முழு மனதுடன் திராவிடர் கழகம் வரவேற்கிறது


சமஸ்கிருத வாரத்தை எதிர்த்து தமிழ்நாடு முதல் அமைச்சரும், கலைஞரும், தமிழக அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்புக் குரல்!
முழு மனதுடன் திராவிடர் கழகம் வரவேற்கிறது

சென்னை, திருச்சி, மதுரை, கோவை மாநகரங்களில் நடைபெறும் தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

இந்தி வாரம் கொண்டாடப்பட வேண்டும் என்று மத்திய பி.ஜே.பி. அரசின் ஆணையை எதிர்த்து ஆகஸ்டு முதல் தேதியன்று மத்திய அரசு அலுவல கங்கள் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஆகஸ்டு 7 முதல் 13 முடிய இந்தியா முழுமையும் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் என்ற ஒன்றைக் கொண்டாட வேண்டுமென்று மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

சமஸ்கிருதத்துக்கு மட்டும் முக்கியம் ஏன்?

இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் 8ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுள் சமஸ்கிருதமும் ஒன்று. 22 மொழிகளில் மிக மிகக் குறைவானவர் பேசுவதாக ஒரு புள்ளி விவரம் உள்ள செத்த மொழி இது. இந்தப் பட்டியலில் இடம் பெறாத நூற்றுக்கணக்கான மொழிகளும் இந்தியத் துணைக் கண்டத்தில் உண்டு.

இந்த நிலையில் கிடந்தது கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மணையில் வை என்ற பழமொழிக்கேற்ப செத்து ஒழிந்து சுண்ணாம்பாகிப் போன - மக்களால் பேசப்படாத சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஊக்குவிக்கும் வேண்டாத ஒரு வேலையில் மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி ஈடுபட்டு வருகிறது.

கலாச்சாரத் திணிப்பே!

சமஸ்கிருதம் என்பது ஒரு மொழி மட்டுமல்ல. அது ஒரு ஆரிய - பார்ப்பனீயக் கலாச்சாரத்தின் குறியீடாகும். ஆர்.எஸ்.எஸின் குருநாதரான எம்.எஸ். கோல்வாக்கர் ஆர்.எஸ்.எஸ். வேத நூல் என்று கருதப்படுகிற Bunch of Thoughts எனும் நூலில் மிக வெளிப்படையாகவே குறிப்பிடுகிறார். இந்தியாவின் மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு சமஸ்கிருதம்தான் என்று குறிப்பிட்டுள்ளார். 1937இல் சென்னை மாநிலத்தில் பிரதம அமைச்சராகவிருந்த சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) அவர்கள் சென்னை லயோலா கல்லூரியில் உரையாற்றும் பொழுதும் சமஸ்கிருதத்தைப் படிப்படியாகப் புகுத்தவே இந்தியைக் கொண்டு வந்துள்ளேன் என்று அதன் இரகசியத்தைக் கக்கி விட்டார்! அதே போல், சத்தியமூர்த்தி அய்யரும் சமஸ் கிருதம் கற்கவே, இந்தியை முதல் கட்டமாகப் படிக்க வேண்டும் என்றார்.

ஓராண்டு முழுவதும் சமஸ்கிருதம் - நினைவிருக்கிறதா?

அடல் பிஹாரி வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராகவிருந்த முரளி மனோகர் ஜோஷி இந்தியா முழுமையும் ஓராண்டு முழுவதும் சமஸ்கிருத ஆண்டு என்று அறிவித்து, அதற்கு ஏராளமான அரசு நிதியை ஒதுக்கினார்.

மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திட சமஸ்கிருதம்

இன்னும் சொல்லப் போனால் மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஒரு கால கட்டத்தில் வைத்திருந்தனர் என்றால் அவர்களின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளலாம்.

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் தலையிட, அன்றைய நீதிக் கட்சி ஆட்சியில் பிரதமராகவிருந்த பனகல் அரசர் அந்த நிபந்தனையை ஒழித்துக் கட்டினார். அந்த நிபந்தனை மட்டும் தொடர்ந்திருந்தால் பார்ப்பனர் அல்லாதவர்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்கள் மருத்துவர்களாக ஆகி இருக்க முடியுமா என்பதை நன்றியுணர்வுடன் எண்ணிப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளனர். இந்தப் பின்னணியையெல்லாம் புரிந்து கொண்டால் தான் இப்பொழுது மத்தியில் உள்ள பிஜேபி அரசு இந்தி வாரம் கொண்டாடக் கட்டளையிட்டதன் சூழ்ச்சியும், மர்மமும், நோக்கமும் எத்தகையவை என்பது விளங்கி விடும்.

முதல் அமைச்சரின் எதிர்ப்பு -வரவேற்கத்தக்கது

தமிழக முதல் அமைச்சரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். பன்முகத் தன்மை கொண்ட நமது நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் அதன் மொழி சார்ந்த கலாச்சாரத்தின் அடிப்படையில் மொழி வாரம் கொண்டாடப்பட வேண்டும் என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாகும். பாராட்டத்தக்கதும் ஆகும்.

திமுகவின் தலைவர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களும் தொடக்கத்திலேயே எதிர்ப்பினை வெளிப்படுத்தினார். ஆர்.எஸ்.எஸின் அரசியல் வடிவமான பிஜேபியைத் தவிர தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசின் முடிவினை எதிர்த்துள்ளனர்; கண்டனங் களையும் வெளிப்படுத்தினர்.

தமிழ்நாட்டில் எதிர்ப்பு ஏன்?

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் இந்தவுணர்வு வெடித்துக் கிளம்பியிருப்பதற்குக் காரணம் - இது தந்தை பெரியாரால் உழுது பயிரிட்டுப் பக்குவப்படுத்தப்பட்ட மண் - திராவிடர் இயக்கம் வீறு நடைபோட்ட பூமி! அதுதான் இதற்கு முக்கியக் காரணமாகும்.

ஆகஸ்டு ஒன்றில் கண்டன ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசு தன் முடிவைக் கைவிடாவிட்டால் வரும் ஆகஸ்டு முதல் தேதியன்று காலை 11 மணிக்கு மத்திய அரசு அலுவலகத்தின்முன் கண்டன ஆர்ப்பாட்டம்! கண்டன ஆர்ப்பாட்டம்!! நடத்தப்படும். சென்னை, திருச்சிராப்பள்ளி, கோவை, மதுரை ஆகிய பெரு நகரங்களில் ஒரு மத்திய அரசு அலுவலக முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

சென்னையில் சாஸ்திரி பவனில் ஆர்ப்பாட்டம்!

சென்னையில் சாஸ்திரிபவன் முன்னிலையில் நடை பெறும் ஆர்ப்பாட்டத்திற்கு நானே தலைமையேற்பேன்.

திருச்சியில் செயலவைத் தலைவர் மானமிகு சு. அறிவுக்கரசு, மதுரையில் அமைப்புச் செயலாளர் வே. செல்வம், கோவையில் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்களும் ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகிப்பர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட தன்மையில் இனமான, மொழி மான உணர்வுடன் கட்சி களும், அன்பர்களும் கலந்து கொள்ள வேண்டுமென்றும் அன்புடன் அழைக்கின்றோம்.

தோழர்களே முனைவீர்!

தோழர்களே, இந்தப் போராட்டத்தை உடனே நல்ல அளவு விளம்பரம் செய்யுங்கள்; ஆர்.எஸ்.எஸின் அஜண் டாவில் உள்ள ஒவ்வொன்றையும் செயல்படுத்தமுனையும் மத்திய பிஜேபி அரசின் போக்கை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தவும் இதனை ஒரு வாய்ப்பாக கருதுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்சென்னை
20.7.2014

Read more: http://viduthalai.in/e-paper/84384.html#ixzz383no8WRG

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?


சிவபெருமான்

சிவபெருமான் சந்தி ரனை முடியில் தரித்த புனைக் கதையை இன் றைய தினமணி ஏடு வர லாறு என்று எழுதி யுள்ளது.

சரி இருக்கட்டும். சந்திரன் தன் குருவான வியாழ பகவானின் மனைவி தாரையைக் கற்பழித்த தால் முனிவரின் சாபத்தால் கலை குறைந்தது (கிரகணம்) என்பதைத் தினமணி மறைத்தது ஏனோ!

Read more: http://www.viduthalai.in/e-paper/84385.html#ixzz383oYXMUj