Search This Blog

19.7.14

பார்ப்பனர்கள் என்று சொல்லுவதற்கு அவ்வளவுப் பயமா?

'பாவத்துக்கு'க் 'கழுவாய்!'


  • அயோத்தியில் ராமன் கோயில்
  • அரசியல் நிர்ணய சட்டத்தில் 370ஆவது பிரிவு நீக்கம்
  • யுனிஃபார்ம் சிவில் கோடு சட்டம் இயற்றப்படும்
  • பசு பாதுகாப்புப் பேணப்படும்.
என்று பிஜேபியின் தேர்தல் அறிக்கை யிலே இடம் பெற்றிருந்தன.
இத்தோடு நின்றாலும் பரவாயில்லை. தேர்தல் அறிக்கையைத் தயார் செய்த முரளி மனோகர் ஜோஷி ஆர்.எஸ்.எஸின் அறிவுரையைக் கேட்டுதான் தேர்தல் அறிக்கையைத் தயாரித்தேன் என்று ஒப்புக் கொண்டுள்ளார். (தினமலர் 13.4.2014)


இவற்றிற்குப் பிறகும்கூட மதிமுகவும் பா.ம.க.வும்; தேமுதிகவும் பிஜேபியைத் தேர்தலில் விழுந்து விழுந்து ஆதரித்தன.


பிஜேபி தலைமையிலான ஒரு கூட்டணியை உருவாக்க திருவாளர் தமிழருவிமணியன் தண்ணீர் குடிக்கக்கூட நேரமில்லாமல் ஓயாது உழைத்தார்.


அப்பொழுதே திராவிடர் கழகம் இந்தக் கேள்வியை எழுப்பியதுண்டு; தேர்தல் அறிக்கையிலேயே ஆர்.எஸ்.எஸின் இந்துத்துவாவாதிகளின் அடிப்படை வாதம் தூள் கிளப்புகிறதே - இதனை ஆதரிக்க லாமா என்ற அடிப்படை வினாவை எழுப்பினோம் - எழுதினோம். (உண்மை 1-4-2014)


அவற்றையெல்லாம் கிஞ்சிற்றும் பொருட்படுத்தாமல்  பிஜேபி வெற்றிக்காக வெள்ளிச் சிலம்பெடுத்து விளையாடி னார்கள் - இந்தப் பிரமுகர்கள்.
தேர்தலும் முடிந்து விட்டது - அவர்கள் ஆசைப்படி நரேந்திர மோடியும் பிரதமர் ஆகி விட்டார்.


இந்த நாற்பது நாட்களில் என்னவெல் லாம் நடந்து கொண்டு இருக்கின்றன!


1) தமிழக மீனவர் பிரச்சினையில் எப்படி நடந்து கொண்டுள்ளது இவ்வாட்சி.


கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தமான தல்ல - என்று உச்சநீதிமன்றத்திலே பிஜேபி ஆட்சி பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தது. கேட்டால் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் முடிவு - அதனைத் தான் நாங் களும் செய்து இருக்கிறோம் என்கிறார்கள்.


காங்கிரஸ் ஆட்சி செய்தது தவறு - குற்றம் என்பதால் தானே உங்களை ஆட்சியில் அமர்த்தினோம் - அப்படியி ருக்கும்போது நீங்களும் காங்கிரஸ் ஆட்சி செய்ததையே செய்ததாக சொல்லு கிறீர்களே - அப்படிச் சொல்லுவதற்கு உங்களுக்கு வெட்கமில்லையா என்ற கேள்விகூட ஒருபுறம் இருக்கட்டும்.
பிஜேபி.யை விழுந்து விழுந்து ஆதரித்த மேற்கண்ட கட்சிகளின் இன்றைய நிலைப்பாடு என்ன?


2) ஈழத் தமிழர் பிரச்சினையில்தான் என்ன வாழ்கிறது?


அண்மையில் இலங்கையின் வெளி யுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பிரிஸ் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச் சர் சுஷ்மா சுவராஜ் இருவருக்கிடையே நடத்த பேச்சு வார்த்தை (11.7.2014) பற்றி  இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளர் சையத் அக்பருதீன் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில் போட்டு உடைத்து  விட்டாரே!


இலங்கையில் அய்.நா. உரிமைகள் பேரவையின் விசாரணைக் குழு மேற் கொள்ளவுள்ள நடவடிக்கை குறித்தும் இந்தச் சந்திப்பின்போது ஆராயப்பட்டதா என்ற செய்தியாளரின் வினாவுக்கு அவர் அளித்த பதில் முக்கியமானது.


அய்.நா. மனித உரிமைகள் விசார ணைக் குழுவை அமைக்கும் விவகாரத் தில் இந்தியா ஏற்கெனவே தனது கடுமை யான எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறது. குறிப் பிட்ட அந்தப் பிரிவை எதிர்த்து வாக் களித்தது. அந்த நிலைப்பாட்டை இந்திய அரசு மாற்றவில்லை. அதே நிலைப்பாடே தொடர்கிறது என்று மட்டை ஒன்று கீற்று இரண்டாகக் கிழித்துத் தள்ளி விட்டாரே!


இதற்கு இவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? என்பது மிகவும் முக்கியமான கேள்வி.


இதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற் கில்லை. பிஜேபி மத்தியில் ஆட்சியில் இருந்தபோதும் ஈழத் தமிழர்ப் பிரச் சினையில் இதே நிலைதான்.
ஈழத்தை ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று வைகோ அவர்களின் அபிமானத்துக்குரிய பிரதமர் வாஜ்பேயி (8.5.2000) சொன்னதுண்டே! சுகன்யா எனும் ஆழ்கடல் ரோந்துக் கப்பலை இலங்கைக்கு வழங்கியது வாஜ்பேயி அரசு அல்லவா!


3) இந்தியை மத்திய அரசின் அலுவல கங்களில் திணிக்கும் வேலையிலும் அவசர அவசரமாக இறங்கி விட்டதே பிஜேபி ஆட்சி.


சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கடைப்பிடிக்கப்படும் என்று (2014 ஆகஸ்டு 7 முதல் 13 வரை) நாடாளுமன்றத் திலேயே உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்  அறிவித்து விட்டாரே (15.7.2014).


இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்களும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களும் வெளி யிட்ட அறிக்கை என்ன சொல்லுகிறது?


ஒரு குறிப்பிட்ட ஒரு சாராரின் மொழி என்றும், கலாச்சாரத்தின் அடையாளம் அவர்களுக்காக மட்டுமே பயன்படக் கூடியது என்றும் தானே சொல்லுகின்றனர்.


அந்தக் குறிப்பிட்டவர் யாராம்? அதில் என்ன மர்ம முடிச்சு? பார்ப்பனர்கள் என்று சொல்லுவதற்கு அவ்வளவுப் பயமா?

(பார்ப்பனர்களை எங்கள் கட்சியில் சேர்ப்பதில்லை என்று கூறும் மருத்துவர்  அந்தப் பெயரை உச்சரிக்கக் கூடப் பதுங்கு குழியைத் தேடுவது ஏன்? ஓ, பார்ப்பனர் களையும் இணைத்து சமூகக் கூட்டணி ஏற்படுத்தியவராயிற்றே!)

சென்னை பெரியார் திடலில் மதிமுக வின் போர்வாள் இதழ் வெளியிட்டபோது, அன்று தினமணி ஆசிரியராக இருந்த சுதாங்கன் ஆரியர்  திராவிடர் என்ற துருப்பிடித்த ஆயுதத்தை இன்னும் எத்தனை நாளைக்குப் பயன்படுத்தப் போகிறீர்கள் என்று பேசிய போது மன்றமே எதிர்க் குரல் கொடுக்க, மதிமுக பொதுச் செயலாளர் மானமிகு வைகோ அவர்கள் அக்னித் தாண்டவமே ஆடவில்லையா? எங்களோடு உரசிப் பார்க்க ஆசைப்பட வேண்டாம் என்று எரிமலைக் குழம்பைக் கக்கினாரே -  பீறிடச் செய்தாரே - அந்த  வீறு கொண்ட வேழம் இன்று வீழ்ச்சி யுற்றதேன்?

கேள்வி எழாதா?


4) வரலாற்று ஆய்வுக் குழுவுக்கு (ICHR) மத்திய பிஜேபி ஆட்சி யாரை நியமித்துள்ளது? எல்லப்ரக தாசுதர்சர்ராவ் என்னும் ஆர்.எஸ்.எஸ்.காரர் நியமிக்கப் பட்டு விட்டாரே!

இவர் கலியுகத்தை ஆய்வு செய்யப் போகிறாராம். மகாபாரத சண்டை எந்தத் தேதியில் நடந்தது என்று கணிக்கப் போகிறாராம். (எப்படி இருக்கிறது?)
நாங்கள் விரும்பிய ஆட்சி வந்து விட்டது. இந்துத்துவா கல்வி முறையைப் புகுத்துவோம்!


என்று ஆர்.எஸ்.எஸைச் சார்ந்த கல்வி எழுச்சி மய்யத்தின் ஒருங் கிணைப்பாளரான தீணாநாத் பத்ரா கூறி யுள்ளாரே (தி டைம்ஸ் ஆப் இந்தியா (25.5.2014).


இப்படிப்பட்டவர்களையெல்லாம் கொண்டு வரத்தான் திராவிடர் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதா? தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் இதற்காகத் தான் குரல் கொடுத்தனரா? பெரியார் அண்ணா உதட்டின் உச்சரிப்பு மட்டும்தானா?


ஒரே ஒரு கணம் தனிமையில் மனச் சான்றைத் தட்டி எழுப்பிச் சிந்திக்கட்டும்!
சிறுபான்மையோர் நம்பிக்கையை முழுமையாகப் பெற வேண்டும் என்றால் மோடியும், பா.ஜ.க.வும் தங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். அயோத்தியைக் குறி வைத்து அரசியல் செய்யக் கூடாது. பாபர் மசூதியைப் பொறுத்தவரை உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட வேண்டும். அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் என்ற கோஷத் தைக் கைவிடச் செய்தும், காஷ்மீருக்கு விசேஷ சலுகைகளை அளிக்கும் அரசியல் சட்டம் 370 பிரிவின்மீது கை வைக்கக் கூடாது. இது போன்ற சிறுபான்மையோரின் உணர்வை மதித்து நடந்தால் காங்கிரஸ் போலி மதச் சார்பின்மை கோஷம் எடு படாது. ஆனால் இப்படி நடக்க ஆர். எஸ்.எஸ். விட்டு வைக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. (கல்கி 29.9.2013 பக்.6). ஆகா இப்படி தொலைநோக்கோடு தான் சொல்லியிருக்கிறார் தமிழருவிமணி யன் என்று தம் முதுகைத் தாங்களே தட்டிக் கொள்ளப் போகிறார்களா என்பதுகூட மில்லியன் டாலர் கேள்விதான்.


ஆர்.எஸ்.எஸ். பிஜேபியை விட்டு வைக்காது என்று தெரிந்திருந்தும் மணி யன்கள் பிஜேபி தலைமையில் ஒரு கூட்டணியை உண்டாக்கி, 125 கோடி இந்திய மக்களை ஆட்சி புரியும் ஆசனத்தில் அசல் இந்துத்துவாவாதியான நரேந்திர மோடியை உட்கார வைக்க ஆசைப்பட்டனர் என்றால் இவர்கள் எத்தகைய விபரீதமானவர்கள் என்ற எண்ணம் நல்லெண்ணம் உள்ளவர்கள் மத்தியில் ஏற்படாதா?


சரி நடந்து விட்டது; இவர்கள் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? தங்கள் செயலுக்காக பகிரங்கமாக வருத்தம் (மன்னிப்புக் கூடத் தேவையில்லை) தெரிவிக்கலாம். அதைக்கூட விட்டுத் தள்ளுங்கள்; செய்த இந்தப் பாவங் களுக்குப் பிராயச்சித்தமாக இந்த இந்துத்துவா சக்திகளை வீதியில் இறங்கி வந்து இறக்கியே தீருவது என்று மல்லுக் கட்டலாம். தோள் தட்டலாமே! இதை நல்லெண்ணத்துடன்தான் சொல்லுகிறோம். எங்கே பார்ப்போம்!பெரியார் பிறந்த மண்ணில் மதவெறிக் கூட்டமா? : வைகோ கேள்வி


கே: பெரியார் பூமியான தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க மதவெறிக் கூட்டம் படிப்படியாக வளர்ந்து வருவதாகக் கூறப்படுகிறதே?


வைகோ: வேதங்களையும், மனுஸ்மிருதிகளையும் மதம் என்ற போர்வையில் தமிழகத்தில் திணிக்க முற்படும் சங் பரிவாரங்களை தமிழகத்தில் காலூன்ற அனுமதிக்க மாட்டோம். ஆனால் பெரியார் கொள்கைகளையும் காலத்திற்கேற்ப செயல்படுத்த வேண்டியுள்ளது.
சீனத்தில்  மாவோ இன்றும் மிகப்பெரிய தலைவராக மதிக்கப்படுகிறார். 

ஆனால் அதே நேரத்தில் சீனா காலத்திற்கேற்ற வகையில் தனது பொதுவுடைமைக் கொள்கையை புதுப்பித்துக் கொள்கிறது. அதேபோல் பெரியாரின் நாத்திகக் கொள்கையையும் காலத் திற்கேற்ப செயல்படுத்த வேண்டும். தோழர் ஜோதிபாசுவுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரது தலைமையிலான அரசு துர்கா பூஜைக்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்கிறது. அந்த மக்கள் துர்க்கையை மதிப்பதால் நாங்கள் அந்த மக்களின் உணர்வுகளை மதிக்கிறோம் என்று கூறுகிறார். தமிழகத்தில்  ஏற்கெனவே  உள்ள வழிபாட்டு முறைகள் மதிக்கப்பட வேண்டும். வழிபாட்டு முறைகளில் தலையிட நாத்திகர்களுக்கு உரிமையில்லை என்று கூறி மதத்தை கைப்பற்ற நினைக்கிற பா.ஜ.க - ஆர். எஸ்.எஸ் பரிவாரத்தின் முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
அவர்கள் வேதபாடசாலைகள் மூலம் சமஸ்கிருதத்தையும், மனுதர்மத்தையும் புகுத்த நினைக்கிறார்கள். சில மடாதிபதிகளையும் துணைக்கு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். முற்போக்குக் கருத்துடைய இயக்கங்கள் இணைந்து இதை முறியடிக்க வேண்டும்.


ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வரும் வழிபாட்டு முறைகள் அப்படியே இருக்கட்டும். அதற்கு குந்தகம் வரக்கூடாது. ஆனால் கலாச்சார தேசியம் என்ற பெயரில் இவர்கள் புகுத்த நினைக்கும் கொள்கை மிகவும் ஆபத்தானது. இது கோல்வால்கர் பயன்படுத்திய வார்த்தை. இது இந்துத்துவாவின் கொள்கை. அத்வானி உட்பட இந்து தர்மம் கலாச்சார தேசியம் என்று பேசி உலகத்தை ஏமாற்ற முயல்கிறார்கள்.  இந்த கலாச்சார பண்பாட்டு படையெடுப்பை முறியடிக்க வேண்டும்.  இதற்கு முற்போக்கு இயக்கங்கள் அனைத்தும் இணைந்து  பாடுபட வேண்டும். இதன் மூலம்தான் பெரியார், அண்ணா பிறந்த இந்த மண்ணில்  மதவெறிக் கருத்துகள் காலூன்ற முடியாமல் தடுக்க முடியும்.


                           -----------------------(நன்றி: தீக்கதிர் 12.4.2004)
(தீக்கதிர் இதழுக்கு வைகோ அவர்கள் அளித்த பேட்டி இது)
(2014 வைகோவுக்கு 2004 வைகோவின் பதில் இது)

-------------------- மின்சாரம்  அவர்கள் 19-07-2014 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

30 comments:

தமிழ் ஓவியா said...


காக்கிக்குப் பதில் காவி அணியலாமே!

சென்னை, ஜூலை 19: குற்றத்தை தடுக்க தனிப் பிரிவு, சைபர் கிரைம் மற்றும் வழக்கமான ரோந்து பணிகளையும், நேர்மையான முறையில் விசாரணை நடத்தினாலே குற்றத்தை பெரும்பாலும் காவலர் குறைத்துவிடலாம். ஆனால், காஞ்சி தாலுகா காவலர் என்ன நினைத் தார்களோ தெரியவில்லை, அதிகளவு குற்றங்கள் நடைபெறக் கூடாது என்பதற்காக கண் திருஷ்டி விநாயகர் படத்தை காவல் நிலையம் முன்பு வைத் துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட் டத்திலேயே மிகப்பெரிய எல்லை கொண்ட காவல் நிலையங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையம் உள்ளது. மாவட் டத்திலேயே காஞ்சி தாலுகா காவல் நிலையத் தில்தான் அதிக எண்ணிக் கையில் புகார்கள் வரு கின்றன.

இங்கு, காவலர் பற் றாக்குறை காரணமாக புகார்கள் மீது உடனடி நட வடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அருகில் உள்ள சிவகாஞ்சி மற்றும் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் இங்கு வந்து சில முக்கிய வழக்குகளை முடித்து தந்துவிட்டு செல்கின்றனர்.

இதனால், தாலுகா காவல் நிலைய ஆய்வாள ராக நியமிக்கப்படுபவர்கள், இங்குள்ள பணிச் சுமை யின் காரணமாக வந்த வேகத்திலேயே வேறு இடத்துக்கு மாறுதல் பெற்றுச் சென்று விடுகின் றனர். திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்ட எல்லைகள் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத் துக்கு உட்பட்டதாக அமைந்துள்ளது. சென்னை மற்றும் வெளி மாவட் டங்களில் கொலை செய் யப்பட்டு உடல்களை இர வோடு இரவாக பாலாறு, சென்னை-_பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளில் வீசிவிட்டு செல்கின்றனர். மேலும், அடிக்கடி விபத்து நடக்கிற இடமாகவும் இருக்கிறது.

இந்நிலையில், கம்ப்யூட்டர், மொபைல் போன் என தகவல் தொழில்நுட்பம் செழித் துள்ள இக் காலத்தில், பில்லி, சூன்யம், கண் திருஷ்டி பொம்மைகள், காத்து கருப்பு போன்ற பழைய பழக்க வழக்கங் களை காஞ்சி தாலுகா காவலர் இன்னும் நம்பி வருகின்றனர். காவல் நிலைய எல்லையில் குற் றங்கள் குறைய வேண்டும் என்பதற்காக தாலுகா காவல் நிலையம் முன்பாக கண் திருஷ்டி விநாயகரை காவலர் பொருத்தி இருக் கின்றனர் என்கின்றனர் சக காவலர் மற்றும் பொது மக்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/84324.html#ixzz37uqKq741

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டில் சமஸ்கிருத வார விழாவை ஏற்க முடியாது பிரதமருக்கு முதல்வர் கடிதம்


சென்னை, ஜூலை. 19 பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல் அமைச்சர் ஜெயலலிதா இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத் தின் கீழ் உள்ள பள்ளி கல்வித் துறை செயலாளர், அனைத்து மாநில செய லாளர்களுக்கும் ஒரு கடி தம் அனுப்பி உள்ளார். அதில் அவர், ஆகஸ்டு மாதம் 7ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சமஸ் கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்று கேட் டுக் கொண்டிருப்பதாக அறிகிறேன்.

ஒவ்வொரு மாநிலங் களிலும் உள்ள மத்திய கல்வி கழகம் (சி.பி.எஸ்.சி.), கேந்திரிய வித்யாலயா (கே.வி.) மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சிக் கழகம் ஆகியவை இந்த சமஸ்கிருத வாரத்தை கொண்டாடும் என்று அந்த கடிதத்தில் கூறப் பட்டு இருப்பதாக தெரி கிறது. மேலும் மாநில அரசுகளும் அத்தகைய சமஸ்கிருத வாரத்தை மாநில, மாவட்ட, மற்றும் கீழ்மட்ட அளவில் கொண் டாட அந்த கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தமிழ்நாட்டில், பழமை யான தமிழ் மொழியா னது வளமான கலாச்சார சிறப்புக் கொண்டது என்பதை தாங்கள் அறி வீர்கள். அது போல தமிழ்நாட்டில் வலுவான சமூக நீதி மற்றும் மொழி இயக்கம் இருப்பதையும் தாங்கள் அறிவீர்கள்.

எனவே தமிழ்நாட்டில் சமஸ்கிருத வாரம் கொண் டாடப்படுவது மிகவும் பொருத்தம் இல்லாதது. அதை ஏற்க இயலாது.

ஒவ்வொரு மாநிலத் துக்கும் ஏற்ப, அந்த மாநில செம்மொழி கொண் டாட்டத்துக்கு ஏற்பாடு செய்வதே மிக, மிக பொருத்தமானதாக இருக் கும்.அந்தந்த மாநில மொழி மற்றும் கலாச் சாரத்துக்கு ஏற்ப கொண் டாட்டம் நடத்த கடிதத் தில் தேவையான மாற்றங் கள் செய்ய மத்திய அரசு அதிகாரிகளுக்கு அறிவு றுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். அந்தந்த மாநில மொழி, கலாச்சார கொண்டாட்டமானது, அந்த மாநிலத்தில் உள்ள சி.பி.எஸ்.சி. பள்ளிகள் உள்ளடக்கிய அனைத்து கல்விக் கூடங்களிலும் நடைபெற வேண்டும்.

இதுதான் நம்மை போன்ற மாறுபட்ட கலாச் சாரம், மொழித் தொன்மை கொண்ட நாட்டுக்கு பொருத்தமானதாக அமையும். இவ்வாறு முதல் அமைச்சர் ஜெய லலிதா அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/84323.html#ixzz37uqdsRja

தமிழ் ஓவியா said...


சிவசேனாவை விமர்சித்த விவகாரம்


சிவசேனாவை விமர்சித்த விவகாரம் : கைது செய்யப்பட்ட மாணவிகளுக்கு ரூ. 50 ஆயிரம் நஷ்டஈடு மனித உரிமை ஆணையம் உத்தரவு

மும்பை, ஜூலை 19- -மும்பையில் சிவசேனா தலைவர் பால்தாக்ரே இறந்ததை தொடர்ந்து நடைபெற்ற சம்பவம் குறித்து பேஸ் புக்கில் விமர்சனம் செய்திருந்த இரு மாணவி களை மகாராஷ்டிரா காவல்துறை கைது செய்தது. இது குறித்து விசாரணை நடத்திய தேசிய மனித உரிமை ஆணையம், இது கருத்து சுதந் திரத்திற்கு எதிரானது. எனவே மாணவிகளை கைது செய்தமைக்காக அவர்களுக்கு நஷ்ட ஈடாக இரு வருக்கும் தலா ரூ. 50 ஆயிரம் வழங்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

சிவசேனாவின் தலைவராக இருந்த பால்தாக்ரே இறந்தபோது, மகாராஷ் டிராவின் பல பகுதிகளில் அக்கட்சி யினர் வன்முறையில் ஈடுபட்டு கடை களை அடைக்க செய்தனர். போக்கு வரத்தை அராஜகத்தின் மூலம் தடுத்து நிறுத்தினர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இது மும்பையில் வாழும் பலதரப்பு மக்கள் மத்தியில் கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. இது குறித்து இரு மாணவிகள் தங்களுக்குள் சமூக வலைத்தளமான பேஸ்புக்மூலம் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

அதில் மறைந்த தலைவர் மீதான மரியாதையை காண்பிக்க பந்த் நடத் துவது சரியான வழிமுறை கிடையாது. தாக்ரே மீதான மரியாதை காரணமாக கடைகள் மூடப்படவில்லை. பயத்தின் காரணமாகவே கடைகள் மூடப்பட் டுள்ளன என ஒரு மாணவி தெரிவித்தி ருந்தார். இதற்கு அவரது தோழி ஒருவர் அந்த கருத்தை ஆமோதித்து லைக் தெரிவித்திருந்தார். இதனைக்கூட சகித்துக்கொள்ள முடியாத சிவசேனா கட்சியினர் இது குறித்து காவல் துறையில் புகார் செய்து, சம்மந்தப்பட்ட மாணவிகளை கைது செய்து சிறையில் அடைக்க கோரினர். ஆனால் மும்பை காவல்துறையினர் எந்த வித சட்ட விதிமுறைகளையும் பின்பற்றாமல் சிவசேனாவிற்கு ஆதரவாக இரு மாணவிகளையும் கைது செய்தனர். இது இந்திய அளவில் பெரும் சர்ச் சையை உருவாக்கியது. பலதரப்பினரிட மிருந்தும் கடும் கண்டனம் எழுந்தது. இதனை தொடர்ந்து மகாராஷ்டிரா அரசு இந்த வழக்கை முடித்துக் கொண்டது. இருந்த போதிலும் தேசிய மனித உரிமை ஆணையம் இந்த விவ காரத்தை தானாகவே முன்வந்து கையி லெடுத்து விசாரணை நடத்திவந்தது. விசாரணையின்போது மாணவிகள், மத, இன உணர்வுகளுக்கு எதிராக கருத்து பதிவு செய்யவில்லை என்பது உறுதிபடுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் மகா ராஷ்டிரா அரசிற்கு ஓர் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதில் கூறியி ருப்பதாவது : மாணவிகளை எவ்வித விசாரணையும் இன்றி அவசர கதி யில் மகாராஷ்டிரா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு அம்மாநில அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இந்த நடவடிக்கை என்பது அரசமைப்பு சட்டம் பொது மக்களுக்கு வழங்கியுள்ள கருத்து சுதந் திரத்திற்கு எதிரானது.பாதிக்கப்பட்ட மாணவிகள் இருவருக்கும் தலா ரூ.50 ஆயிரத்தை அபராதமாக மகா ராஷ்டிர அரசு வழங்க வேண்டும். அல்லது, 1993ஆம் ஆண்டு மனித உரிமைகள் சட்டத்தின் 13ஆவது பிரிவின்கீழ் விளைவுகளை அந்த அரசு சந்திக்க வேண்டிவரும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது

Read more: http://viduthalai.in/page-2/84331.html#ixzz37urWgzHf

தமிழ் ஓவியா said...


நோக்கம்


சிறு கூட்டத்தாரால் நசுக்கப்பட்டும், வெறுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் செல்வமும், செல்வாக்கும் அற்ற பெரும்பான்மைக் கூட்டத்தார், சமுதாயத் துறைகளில் தங்களுக்குள்ள தடைகளை அரசியல்மூலம் நீக்கிக்கொண்டு முன்னேற்றமடையு மாறு செய்வதே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் நோக்கமாகும். - (விடுதலை, 21.7.1950)

Read more: http://viduthalai.in/page-2/84327.html#ixzz37ured8AO

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க. (மத்திய) அரசு இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு ஆதரவு தருவதா?


பிற ஏடுகளிலிருந்து...

பா.ஜ.க. (மத்திய) அரசு

இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு ஆதரவு தருவதா?

நாம் இதனை அச்சுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில், பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேலிய அரசாங்கத் தின் ஆயுதத் தாக்குதல்கள் தொடர்பாக குறுகிய கால விவாதம் தொடர்பான பிரச்சனை காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் சீர்குலைக்கப்பட்டன. 2014 ஜூலை 16 மாநிலங்களவைக் கான திருத்தப்பட்ட அலுவல் பட்டியல், அன்றைய தினத்தன்று நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பு அனைத்து உறுப்பினர்களுக்கும் சுற்றுக்கு விடப்பட்டது. அச்சிடப்பட்ட இத்தகைய அலுவல் பட்டியல் அனைவருக்கும் சுற்றுக்கு விடுவது என்பது எப்போதும் மேற்கொள்ளப்படும் வழக்கமான ஒரு நடவடிக்கையாகும். அன்றையதினம் 12 மணியளவில் கேள்வி நேரம் முடிந்த வுடனேயே இக்குறுகிய கால விவாதம் எடுத்துக்கொள்ளப்படும் என்று அதில் பட்டியலிடப்பட்டிருந்தது.

இவ்வாறு சுற்றுக்குவிடப்படும் அலு வல் பட்டியல் எந்தக்காலத்திலும் அரசின் முன் அனுமதியுடன் நாடாளுமன்ற விவ காரங்கள் துறை அமைச்சர் மூலமாகத் தான் வெளியிடப்படும். ஆயினும், அன்றைய தினம், அயல்துறை அமைச்சர் மற்றும் சில மூத்த அமைச்சர்களின் மூலமாக அரசாங்கம் இதன் மீதான விவாதத்தை ஒத்தி வைத்திடவும், மாறாக, ரயில்வே பட்ஜெட் மீது விவாதத்தைத் தொடங்கிடவும் கோரியது. இவ்வாறு இதற்குமுன் எப்போதும் நடந்ததில்லை. அலுவல் பட்டியல் சுற்றுக்கு விடப்பட்டு விட்டால், அது அவையின் சொத்தாகி விடுகிறது. அதனை பின்னர் அரசாங்கம் உட்பட எவரும் மாற்ற முடியாது. ஆண்டாண்டு காலமாய் இருந்துவரும் இந்தநடைமுறை மற்றும் பழக்கத்தை மீறிட,பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் மேற்கொண்டுள்ள பிடிவாதமான நட வடிக்கை, இயற்கையாகவே அனைத்து எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் வலுவாக எதிர்கொண்டது. திருத்தப்பட்ட அலுவல் பட்டியல் சுற்றுக்கு விடப்பட்ட பின்னர் பாஜக அரசாங்கம் தன் மனதை மாற்றிக் கொண்டுவிட்டது என்பது தெளிவு. இது தொடர்பாக, ஊடகங்களில் வந்துள்ள செய்திகளின்படி, நாடாளுமன்ற விவகா ரங்களுக்கான அமைச்சர், காஸா பகுதியில் இஸ்ரேலிய ராணுவத்தின் தாக்குதல்களைக் கண்டிக்கும் விதத்தில் தீர்மானம் எதுவும் கொண்டுவரத் தயாரில்லை என தெரிவித்துவிட்டார்.


தமிழ் ஓவியா said...

உள்நாட்டு அரசியல் நம்முடைய அயல்துறைக் கொள்கையைப் பாதித் திடக் கூடாது, என்று அவர் கூறியிருக் கிறார். அவர் மேலும், இந்த விஷயம் மிகவும் உணர்வுப்பூர்வமானது (“highly sensitive”) என்றும் அரசாங்கம் மேற் கொள்ளும் எவ்வித மான நடவடிக்கை யும் எவ்விதமான பாதிப்புகளுக்கும் (“implications”) இடமளிப்பதாக இருக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். இது அவையில் உறுப்பினர்கள் மத்தியில் ஆவேசத்தை எழுப்பியது. அமைச்சர் என்னவிதமான பாதிப்புகள் குறித்துப் பேசுகிறார் என்று கேட்டார்கள்.

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுடனும் இந்தியா நல்ல உறவுகள் கொண்டிருப்பதால், நாடாளு மன்றம் இதனை விவாதிக்கக் கூடாது என்ற விதத்திலும் பாஜக சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு வாதமாகும். இந்தியா, இலங்கையுடன் அதிகாரப்பூர்வமான முறையில் நல்ல உறவுகளைக் கொண்டிருக்கிறதுதான். ஆனாலும், இந்திய மீனவர்கள் இலங் கையால் இக்கட்டான நிலைக்கு அவ்வப் போது ஆளாகும்போது அதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடப்பது தடுக்கப்படவில்லை. இந்தியா, வங்கதேசத் துடன் தூதரக உறவு கொண்டிருக்கிறது தான். ஆயினும், வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வந்திருப் பவர்கள் பிரச்சனையை இந்த நாடாளு மன்றத்தில் எழுப்பிட பாஜகவையோ அல்லது பிரதமரையோ எதுவும் தடுத் திடவில்லை. இந்தியாவும், பாகிஸ்தானும் தூதரக உறவுகள் கொண்டிருப்பதும், பல்வேறு பிரச்சனைகள் குறித்து அவ்வப்போது பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருப்பதும் அனைவரும் அறிந்த உண்மை. ஆனாலும் அந்த நாடு நம்முடைய பாதுகாப்புக்கும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கும் அச்சுறுத் தல்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்று திரும்பத் திரும்ப விவாதிக்கப்பட்டி ருக்கிறது.

தமிழ் ஓவியா said...


குறிப்பாக, மும்பையில் 26/11 பயங் கரவாதிகளின் தாக்குதல்களுக்குப்பின் இத்தகைய விவாதங்கள், அதிகமானது. மேலும், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் உள்நாட்டு அரசியல் சம்பந்தமாக அளித்துள்ள அறிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று. ஏனெனில், எந்தவொரு நாட்டின் அயல் துறைக் கொள்கையும் அந்த நாட்டின் உள்நாட்டுக் கொள்கையின் ஒரு விரிவாக் கமாக இருப்பதை இயல்பாகப் பார்க்க முடியும். அதனால்தான், பாஜக, பாலஸ் தீனத்திற்கு எதிராக வலுச்சண்டையில் ஈடுபட்டிருப்பதற்கு ஆதரவானநிலை எடுத்திருப்பதையும், பாலஸ்தீனியர் களுக்கு எதிராக இஸ்ரேல் மேற் கொண் டிருக்கும் வலுச்சண்டை கொள்கை களுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதை யும் மாநிலங்களவை உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களால் மிகவும் சரியாகவே பார்க்கப்படுகிறது.

பாஜக அரசின் இந்த நடைமுறை நமது நாடு இதுவரை கடைப்பிடித்து வந்த அணுகுமுறைக்கு முற்றிலும் முரணான தாகும். நமது நாடு சுதந்திரம் அடைவதற்கு முற்பட்ட காலத்திலிருந்தே, நம்முடைய விடுதலைப் போராட்ட காலத்திலிருந்தே, பாலஸ்தீனப் பிரச்சனையில் பாலஸ்தீனத் திற்கு ஆதரவாக இந்தியா தன் ஒருமைப்பாட்டைக் காட்டி வந்துள்ளது. ஆட்சியில் எந்தக்கட்சி கோலோச்சினா லும், நம் நாட்டில் பாரம்பரியமாக இந்த அணுகுமுறைதான் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. இதற்கு முற்றிலும் முரணாக இப்போது பாஜக நிலை எடுத்திருக்கிறது. மகாத்மா காந்தி ஒரு தடவை, பிரெஞ்சுக்காரர்கள் பிரான் ஸைப் பெற்றிருக்க முடியும் என்றால், ஆங்கிலேயர்கள் இங்கிலாந்தைப் பெற்றிருக்க முடியும் என்றால், பாலஸ் தீனியர்கள் பாலஸ்தீனத்தைப் பெற்றிட வேண்டும், என்று கூறினார். அவர் அவ்வாறு கூறி எழுபதாண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. பாலஸ்தீனியர்களுக்கு இப்போதும் தங்கள் தாய்நாட்டுக்கான உரிமை மறுக்கப்படுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்றளவும் அவர்கள் மனிதாபிமானமற்றமுறையில் அடக்கு முறைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...


தற்போதைய பாஜக அரசாங்கம் இந்தியா இதுநாள்வரை கடைப்பிடித்து வந்த பாரம்பரியமான புரிதலிலிருந்து தடம்புரண்டு செல்லத் தொடங்கி விட்ட தாகவேத் தெரிகிறது. அதன் பித்தலாட்டம் ஜூலை 10 அன்று அயல்துறை அமைச்ச கத்தின் செய்தித்தொடர்பாளர் வெளி யிட்ட அறிக்கையிலேயே தெரிந்தது. அந்த அறிக்கையில், அவர், இஸ்ரேலுக் கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே அதி கரித்து வரும் வன்முறை இந்தியாவிற்கு ஆழ்ந்த கவலையை அளிக்கிறது. குறிப்பாக, காஸாவில் அதிக அளவில் வான்வழித் தாக்குதல்கள் நடைபெற்று அப்பாவி மக்கள் துயரார்ந்த முறையில் கொல்லப்பட்டு வருகின்றனர், ஏராளமான சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளன. அதே சமயத்தில், இஸ்ரேலின் சில பகுதிகளிலும் ராக்கெட் தாக்குதல்கள் மூலம் எல்லை தாண்டிய தூண்டுதல் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டி ருப்பதற்கு இந்தியா தன் கவலையைத் தெரிவித்துக்கொள்கிறது, என்று கூறியி ருந்தார். அந்த அறிக்கையில் மேலும், பாலஸ்தீனப் பிரச்சனைகளுக்குஅமைதி வழியில் தீர்வு காண இருதரப்பினரும் நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்று நாங்கள் இரு தரப் பினரையும் கேட்டுக்கொள்கிறோம், என்றும் கூறப்பட்டிருந்தது.

தமிழ் ஓவியா said...

பாஜக அரசாங்கம் இதையே நாடாளு மன்றத்திலும் வலியுறுத்திக் கூறியிருக்க முடியும். அந்த சமயத்தில் இஸ்ரேல், காஸா பகுதியில் மிகவும் காட்டுமிராண் டித்தனமான முறையில் ராணுவத் தலையீடு மேற்கொள்ளப்பட்டிருப்பதற்கு எதிர்க்கட்சிகள், குறிப்பாக இடதுசாரிகள், தங்கள் கண்டனத்தை எழுப்பியிருக்க முடியும். ஆயினும், பாஜக அரசாங்கம் மத்தியக் கிழக்கு நாடுகளில் அமெரிக் காவின் அடிவருடியாக விளங்கும் ஒரு நாட்டினைக் குஷிப்படுத்தும் விதத் திலேயே நடந்து கொள்ள வேண்டும் என் பதற்காக, வலியச் சண்டை செய்பவனை யும் அவனால் அடிவாங்கிக் கொண்டி ருப்பவனையும் சமமாகப் பார்க்கும் விதத்தில் அறிக்கை விட்டிருப்பதிலிருந்து, இந்தியா ஒரு நடுநிலைப் பார்வையாளர் என்ற முறையிலேயே தன் பங்களிப் பினைச் செலுத்திட முன்வந்திருப்பது போல் தோன்றுகிறது. இது, இஸ்ரேலின் அரக்கத்தனமான ஆக்கிரமிப்பு நடை முறைகளுடன் பாஜகவின் அரசியல் நடைமுறைகளும் ஒத்துப்போவதன் பிரதிபலிப்பேயாகும். பாலஸ்தீனப் பிரச்சனையின் மிக முக்கிய அம்சமே பாலஸ்தீனப் பகுதி களை இஸ்ரேல் சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமித்திருப்பதேயாகும். தற்போது காஸா பகுதியில் நடை பெற்றுவரும் வான்வழித் தாக்குதல்கள் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான 66 ஆண்டுகால வன்முறை வரலாற்றின் தொடர்ச்சியாகும். 1967 ஜூன் மாதத்தில் ஆறு நாட்கள் யுத்தம் நடைபெற்று, இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் வெஸ்ட் பேங்க், கிழக்கு ஜெருசலம், காஸா, சிரியாஸ் கோலன் ஹைட்ஸ் மற்றும் பல பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து சுமார் அரை நூற்றாண்டு கழிந்துவிட்டது. காஸா பகுதியில் இருக் கின்ற சுகாதார அமைச்சகத்தின் ஓர் அறிக்கையின்படி, தற்போதைய இஸ் ரேலின் அரக்கத்தனமான சண்டையில் குறைந்தது 196 பாலஸ்தீனியர்கள் கொல் லப்பட்டுள்ளார்கள், 1,486 பேர் காய மடைந்துள்ளார்கள், 250க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேல் பிரதமர் நேடான்யாஹூ, `இஸ்ரேல் எவ்விதமான சர்வதேச `நிர்ப்பந்தத்தையும் பொருட்படுத்தாது என்று தடித்தனமாக கூறியிருப்பதிலிருந்து, இஸ்ரேல் காஸா பகுதிக்குள் தரைவழி மார்க்கமாக தாக்குதலைத் தொடுப்பதற் கும் தயாராகிக் கொண்டிருக்கிறது என்பது நன்கு தெரிகிறது. நாம்இதனை அச்சுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கக்கூடிய சமயத்தில், போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஆதரவு எகிப்திய முன் மொழிவை பாலஸ்தீனியர்கள் நிராகரித் துள்ளதால், வான்வழித்தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. எகிப்திய முன்மொழிவு என்பது அரபு நாடுகளால் இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் சரி என்று ஏற்றுக்கொள்ளும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. தங்கள் தாய்நாட்டிற்கான பாலஸ் தீனியர்களின் உரிமைகளுக்காக ஒருமைப் பாட்டைத் தெரிவிக்கும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து இந்தியா வும் குரல் எழுப்புவதற்கு பதிலாக, இப்போதைய பாஜக அரசாங்கம் இஸ் ரேலையும் அதன் புரவலரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் குஷிப்படுத்திடும் வகையில் வளைந்து கொடுப்பதாகவே தோன்றுகிறது. இச்செயல் பாலஸ் தீனியர்களின் உரிமைக்கான போராட்டத் திற்கு இந்தியா இதுநாள்வரை அளித்து வந்த ஆதரவிற்கும் ஒருமைப்பாட்டிற்கும் நம்பிக்கை துரோகம் இழைப்பதுபோல் நடந்துகொள்வது மட்டுமல்ல, நமதுநாடு இதுநாள்வரை மிகவும் உறுதியான முறையில் கடைப்பிடித்து வந்த அயல் துறைக் கொள்கை நிலைப்பாட்டிற்கும் முற்றிலும் தலைகீழானதாகும்.

சர்வதேச சட்டங்கள் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறி செயல்பட்டுக்கொண்டிருக்கும் இஸ்ரே லுக்கு ஆதரவான முறையில் கைகட்டி வாய் பொத்தி இயங்க முன்வந்திருக்கும் பாஜக அரசாங்கத்தின் நிலைப்பாடும் அதன் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியத் தின் அடிவருடியாக மாறியிருப்பதும் நம் நாட்டு மக்களின் நலன்களுக்கு நல்லதல்ல என்பதோடு, இதுநாள்வரை ஒடுக்கப்பட்ட நாடுகள் மற்றும் மக்களின் உரிமை களுக்காகப் போராடும் சுதந்திரமான நாடு இந்தியா என்று உலக நாடுகளின் மத்தி யில் நிலவிவந்த இந்தியாவின் நற்பெய ருக்கும் தீங்கு பயக்கக்கூடியதாகும். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்காக இவ் வாறு கைகட்டி நிற்பது என்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல. நாட்டு மக்கள் சார்பாக உலகிற்கு உறுதியானமுறையில் தன் கருத்தினை வெளிப்படுத்தி இந்திய நாடாளு மன்றம் தன் இறையாண்மையை நிலை நிறுத்திட வேண்டும்.

தமிழில்: ச.வீரமணி

நன்றி: தீக்கதிர் 19.7.2014

Read more: http://viduthalai.in/page-2/84330.html#ixzz37urqnthW

தமிழ் ஓவியா said...


துண்டறிக்கைப் பிரச்சாரம் பாரீர்


வேலூர் மாவட்ட கழக அமைப்பாளர் கருப்புச்சட்டை மா.சீ.பாலன் அவர்களின் துண்டறிக்கைப் பிரச்சாரம் பாரீர்

நன்றி சொல்வீர்...

பல ஆயிரம் ஆண்டு காலமாக நம் முன்னோர்கள் சொன்ன வார்த்தை.
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு?

பொட்டப்புள்ள படிச்சு என்ன செய்யப் போகிறாள்? என்று பெண்களை ஏளனமாகவும், அலட்சியமாகவும் பேசி அவர்களை கல்வி கற்கவிடாமல் வீட்டிற்குள்ளேயே முடக்கி வைத்தனர் நமது முன்னோர்கள்.

இக்கொடுமையினை கண்டு எரிமலையாய் கொதித்தெழுந்த பகுத்தறிவு தந்தை பெரியார், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு கல்வி கற்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்று இரவு, பகல் பாராமல் இடைவிடாது தமிழ்நாடு முழுவதும் தீவிரப் பிரச்சாரம் செய்தார்.
அதன் பயனாய் அறியாமையிலும், பழமையிலும், மூடநம்பிக்கையிலும் மூழ்கிக்கிடந்த நமது இன மக்கள் மெல்ல, மெல்ல விழிப்புணர்வு பெற்று தங்கள் வீட்டுப்பெண் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்கவைக்க ஆர்வமுடன் முன்வந்தனர். இதைக் கண்ட பெரியார் மத்திய, மாநில அரசுகளுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 50 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டு வந்து சட்டம் இயற்ற வேண்டும் என்றார்.

பெண் மக்களே, நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் அறிவின் சுதந்திர ஊற்று எங்கிருந்து கிடைத்தது தெரியுமா-? பெரியார் 95 வயது வரை வாழ்ந்து அரசுகளை சிந்திக்க வைத்து தங்களுக்காகவே வாழ்ந்த அறிவு ஆசான். அவரின் சிலை, படம் தாங்கள் காணும்போது நன்றி அய்யா என்று உங்கள் மனதில் பதிவு செய்யுங்கள். பெண்களுக்கு பலப்பல புதிய சட்டங்கள் இயற்ற செய்த வரலாற்றுக்குரிய இடம் தான் பெரியார் திடல். 84/1, (50) சென்னை-_600007. உங்கள் குழந்தைகளுக்கு பெரியார் பிஞ்சு மாதஇதழ் வாங்கிக் கொடுப்பீர்! ஆண்டு சந்தா ரூ. 100.00 மட்டுமே. மாதா மாதம் உங்கள் இல்லம்தேடி வரும்.

வணக்கம் செய்வீர்...

தன் மகன் படித்து கலெக்டராகவோ போகிறான் அவன் தலையெழுத்து. இந்த ஆடு, மாடு மேய்த்தால் போதும், என்று இருந்த காலத்தில், பிரிட்டிஷ் ஆட்சியில் வாட்ச்மேனாக, பியூனாக, அமினாவாக, டபேதாரராக, பங்கா இழுப்பவராக வேலைப் பார்த்த தமிழர்களை கண்டு, எழுத்தறிவு தெரிந்துகொள்ள பெரியார் பிரச்சாரம் செய்து 1954ஆம் ஆண்டு, தமிழ்நாடு முதல்வர் கு.காமராசர் அவர்களைச் சந்தித்து கிராமந்தோறும் பள்ளிக்கூடங்களை திறக்க தாங்கள் உத்திரவிட வேண்டும். நம்மக்கள் கல்வியறிவு பெறவேண்டும் என்றார். முதல்வர் அவர்களும் நாடெங்கும் பள்ளிகள் திறக்க செய்தார்.
நம் மக்களும் படித்து கலெக்டராக என்ஜினியராக, டாக்டராக, மந்திரியாக இஸ்ரோ விஞ்ஞானியாக உலகுக்கு வழிகாட்டிகளாக இன்று வருகின்றவர்களே. இந்த ஆராய்ச்சி அறிவு யாரால் கிடைத்தது? சற்று சிந்தியுங்கள். அவர்கள் உருவம் தெரியுமிடமெல்லாம் கையெடுத்து வணக்கம் செய்யுங்கள். அப்போதுதான் நீங்கள் தமிழர்கள் (மனிதர்கள்) நன்றியுள்ளவர்கள்.

Read more: http://viduthalai.in/page-4/84349.html#ixzz37usHmrFt

தமிழ் ஓவியா said...


சைமன் கமிசன் யாதாஸ்து


சைமன் கமிசன் யாதாஸ்த்தின் முதல் பாகம் வெளியிடப்பட்டு விட்டது. அதைப்பற்றி நாம் இப்போது எவ்வித அபிப்பிராயமும் கூற முற்படவில்லை.

அன்றியும், அதிலிருந்து இந்தியர்களுக்கு எம்மாதிரியான அரசியல் உரிமை கிடைக்கப் போகின்றது என்பதைப் பற்றியும் நாம் சிறிதும் கவலைப்பட வில்லை. ஏனெனில், அதெல்லாம் உத்தியோகமும், பதவியும் அனுபவிக்கக் கருதி, அதற்காகவே பல ஸ்தாபனங்களை ஏற்படுத்திக் கொண்டு காத்திருப்பவர்களுக்கே விட்டு விடுகின்றோம்.

நம்மைப் பொறுத்தவரை சைமன் கமிசன் முடிவான யாதாஸ்த்தில் தீண்டப்படாதவர்கள், பெண்கள், ஜாதி வித்தியாசத்தினால் இழிவு படுத்தப்பட்டவர்கள் ஆகிய வர்கள் விடுதலை விஷயத்திலும், முகமதியர்களும், கிறிஸ்தவர்களும் இந்துக்களிடம் அவநம்பிக்கை கொண்டு எதிரிகளாயில்லாமல் ஒற்றுமையாய் வாழவும், பொதுவாக எல்லோருக்குமே சமமாக கல்வி கிடைக்கும்படி செய்யவும் என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன?

என்பதைப் பற்றியும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ விஷயத்தில் தீண்டாதவர்கள் பெண்கள், கிறிஸ்தவர்கள், மகமதியர்கள் ஆகியவர்களுக்கு எவ்விதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருக்கின்றது என்கின்ற விஷயத்திலுமேதான் கமிசனின் சிபாரிசை அறிந்து அதன் மேல் அது மக்களின் சமத்து வத்திற்கும், விடுதலைக்கும், முன்னேற்றத்திற்கும் ஏற்றதா, அல்லவா என்பதைப் பற்றி யோசிக்கக்கூடும்.

அன்றியும், இந்தியாவில் உள்ள சகல அரசியல் ஸ்தாபனங்களும் சைமன் கமிசனை எதிர்த்தும், நாம் மாத்திரமே ஆரம்பத்தில் இருந்தே அவ்வெதிர்ப்புகளை எதிர்த்து கமிசனை வரவேற்றதுடன் மற்ற மக்களையும் வரவேற்றுத் தங்கள் குறைகளைத் தெரியப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டது இக்கருத்தைக் கொண்டேயாகும். ஆதலால் முடிவு யாதாஸ்த்தை எதிர்பார்க்கிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 22.06.1930

Read more: http://viduthalai.in/page-7/84304.html#ixzz37usy4aHw

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

ஜாதி ஒழிப்பது என்பது இன்று சட்டத்தின் மூலம் முடியாது என்று ஆகிவிட்டது. கிளர்ச்சி மூலம்தான் முடியும். வெள்ளைக்காரனிடமிருந்து பார்ப்பான் கைக்கு அதிகாரம் வந்ததும் முதலில் அரசியல் சட்டத்தில் மூலாதார உரிமையாக மதத்தையும் ஜாதியையும் காப்பாற்றுவது என்று போட்டு விட்டான்.

எப்போது உங்கள் மனச்சாட்சியும், பகுத்தறிவும் இடங்கொடுத்து, நீங்கள் கழகத்தில் அங்கத்தினர்களாகச் சேர்ந்து விட்டீர்களோ அப்போதிலிருந்து உங்கள் பகுத்தறிவையும், மனச் சாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு கழகக் கோட்பாடுகளைக் கண்மூடிப் பின்பற்றி நடக்க வேண்டியது தான் முறை.

Read more: http://viduthalai.in/page-7/84304.html#ixzz37ut82Jj1

தமிழ் ஓவியா said...


சுசீந்திரத்தில் சுயமரியாதை போர்

சுசீந்திரம் என்பது திருவாங்கூர் ராஜியத்தைச் சேர்ந்த ஒரு சேத்திர தலமாகும். அது திருநெல்வேலிக்கு 40ஆவது மைலில் உள்ள நாகர்கோவிலுக்கு 2, 3, மைல் தூரத்தில் உள்ள கிராமம். நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரிக்குப் போகின்ற வழியில் இருக்கின்றது. அந்த ஊரில் உள்ள ஒரு கோவிலைச் சுற்றியுள்ள ரோடுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்கள் செல்லக்கூடாது என்ற நிர்ப்பந்தம் இப்பொழுதும் இருந்து வருகின்றது.

அந்த ரோடுகள் திருவாங்கூர் சர்க்காரால் பொதுஜனங்களின் வரிப்பணத் திலிருந்து பாதுகாக்கப்பட்டு வருவதாகும். அந்த ரோடுகளுள்ள திருவாங்கூர் ராஜியமானது, ஒரு இந்து அரசரால் அதுவும் ஒரு இந்து கடவு ளாகிய பத்மநாபவாமி என்பதின் (தாசரால்) பிரதிநிதியால் அரசாட்சி செய்யப்பட்டு வருகின்றது. அந்த ரோடில் நடக்கக் கூடாது என்று சொல்லப்படும் ஜனங்கள் யாரென் றால் இந்துக்கள் என்று சொல்லப் படுபவர்களும், அந்த பத்மநாப சாமியின் பக்தர்களுமே யாவார்கள்.

மற்றபடி, அந்த சாமியின் பக்தர் களல்லாதவர்களும், இந்துக்கள் அல்லாதவர்களுமான கிருத்தவருக் கோ, மகமதியர்களுக்கோ, அவ் வழியில் நடப்பதற்கு யாதொரு ஆட்சேபணையும், தடங்கலும் சிறிதுகூட கிடையாது. இதுதவிர, மேற்கண்டபடி இந்துக்கள் என்பவர்களில் பெரும் பான்மையான மக்களாகிய சில சமூகத்தரைத்தவிர, மற்றபடி மனிதர்கள் அல்லாத எந்த ஜந்தும், மலம் முதலிய எந்த வதுவும் அந்த தெருவில் மேள வாத்தியங்களுடனும் பல்லக்குச் சவாரியுடனும் கூடப்போகலாம்.

அப்படிப் போவதில் யாருக்கும் ஆட்சேபணையும் கிடையாது. ஆனால் அந்த சுவாமியின் பக்தர்களான சில மனிதர்களுக்கு மாத்திரம்தான், அதுவும் இந்து என்று சொல்லிக் கொள்பவனுக்கு மாத்திரம்தான் ஒரு இந்து ராஜா ஆளும் ராஜ்யத்தில் உள்ள ஒரு தெருவில் நடப்பது மதவிரோதம் என்று இந்த 20ஆவது நூற்றாண்டில் மறுக்கப்பட்டு வருகின்றது.

இந்தக் காரியத்திற்காகவே, அதாவது அது போன்ற ஒரு தெரு வழி நடை பாத்தியத்திற்காகவே சென்ற 1923ஆம் வருஷத்தில் அதே திருவாங்கூர் ராஜியத்தைச் சேர்ந்த வைக்கம் என்னும் ஊரில் ஒரு தடவை சத்தியாக்கிரகம் செய்யவேண்டி ஏற்பட்டது வாசகர்களுக்கு ஞாபகமிருக் கலாம்.

அந்தச் சத்தியாக்கிரகம் சுமார் 5, 6 மாத காலம் நடைபெற்று பலர் பல தடவை சிறை சென்றும் வேறு பல கஷ்டங்களும் அனுபவித்த பிறகு அந்த வழி நடைப் பாதை எல்லோருக்கும் பொது உரிமையுடைய தாக ஆக்கப்பட்டது. இப்போதும் அதுபோலவே இந்தச் சுசீந்திரம் வழிநடைப் பாதையும் வைக்கத்தைப் போலவே சத்தியாக்கிரகம் செய்ய வேண்டியதாகி ஏற்பட்டு இப்போது சிறிது நாளாக சத்தியாக்கிரகமும் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த சத்தியாக்கிரகத்தின் பயனால் இதுவரை சுமார் 10, 15 பேர்கள் வரை சிறை சென்று இருப்ப தாகவும், இனியும் 10, 12 பேர்கள் மீது கேசு நடப்பதாகவும் சர்க்கார் மிகவும் கடுமையான அடக்கு முறையைக் கொண்டு சத்தியாக்கிரகத்தை அடக்கி விடத் தீர்மானித்திருப்பதாகவும் தெரியவருகின்றது.

அதற்கேற்றாப் போல் அந்த ராஜ்ஜியம் இதுசமயம் ஒரு வருணாசிரம பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்கத்தில் வெறிபிடித்த வருமான ஒரு திவானின் ஆட்சி யிலும் அந்தக் குறிப்பிட்ட இடமானது ஒரு பார்ப்பன ஜில்லா மேஜிட்ரேட் ஆட்சியிலும், ஒரு பார்ப்பன ஜில்லா போலிசு சூப்ரண்டு ஆட்சியிலும் இருந்து வருகின்றது.

இந்த பார்ப்பன போலீசு சூப்பிரண்டு யார் என்றால் வைக்கம் சத்தியாக்கிரகத்தின் போது அரசாங்கம் திகைத்த காலத்தில் தனக்குப் பூரண அதிகாரம் கொடுத்தால் 5 நிமிஷத்தில் வைக்கம் சத்தியாக்கிரகத்தை அடக்கிவிடு வதாகச் சொல்லி அரசாங்கத்தினிடம் பூரா அதிகாரம் பெற்று வந்து ஆட்சி செய்தவர்.

இவர் காலத்தில்தான் தொண்டர் களை அடித்தல், குத்துதல், கண்ணில் சுண்ணாம்பு பூசுதல், இராட்டினங்களையெல்லாம் ஒடித்து நொறுக்குதல், காலிகளை ஏவிவிட்டு சத்தியாக்கிரகிகளுடன் கலகம் செய்வித்தல், சத்தியாக்கிரகம் செய்யும் பெண்களிடம் மிக்க நீசத்தனமாக நடந்து கொள்ளுதல், எதிர்பிரசாரம், எதிர் பத்திரிகைகள் முதலியவைகள் செய்தல் முதலாகிய காரியங்கள் எல்லாம் நடைபெற்றதோடு திருவிதாங்கூர் ராஜ்யத்தின் இந்த மாதிரியான பெருமையை உலகத்திற் கெல்லாம் வெளிப்படுத்தினவர்.

அந்த அனுபவத்தைக் கொண்டுதான் இப்போதும் திருவிதாங்கூர் அரசாங்கத்தார், அவரையே சுசீந்திரம் சத்தியாக்கிரகத்திற்கும் போட்டு இருப்பதாய் தெரிகின்றது. திருவிதாங்கூர் ராஜ்யத்தின் பெருமை மற்றொருதரம் உலகமறிய ஒரு சந்தர்ப்பம் இந்த மகானாலேயே ஏற்பட நேர்ந்தது பற்றி நமக்கு மிக்க மகிழ்ச்சியேயாகும்.

Read more: http://viduthalai.in/page-7/84306.html#ixzz37utGuGSm

தமிழ் ஓவியா said...

புற்றுநோயைத் தடுக்கும் முட்டைக்கோஸ்


முட்டைக்கோசு, காலிபிளவரைப் போலவே கந்தகம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச்சத்தும் உடையது.

கோசில் அதிகமான தாதுப் பொருள்கள், வைட்டமின், முக்கியமாக சி உள்ளது. இது காரத்தன்மை (கிறீளீணீறீவீ) வாய்ந்தது. இக்காய்கறியைப் பச்சையாக உண்ணும்பொழுது அதிக பலன் கிடைக் கும். அதிகமாக வேகவைப்பதே செரி மானமாகாது. வயிற்றுக்குத் தொந்தரவு கொடுக்கும். மேலும் வேகவைத்தால் அதிலுள்ள தாது உப்பு மற்றும் வைட்ட மின்கள் வீணாகின்றன. ஆகவே உண்ணுவதற்குக் குறைந்த அளவு வேகவைப்பதே சிறந்தது. பலருக்கு இதில் உள்ள கந்தகத்தினால் இதன் வாசனை பிடிப்பதில்லை. இதனைப் போக்க வேகவைத்த நீரை நீக்கிவிட்டால் போதுமானது. மேலும் கோசை வெட்டிய பிறகு கழுவி உடன் சமைக்க வேண்டும். இதைக் கிச்சடியாகப் (ஷிணீறீணீபீ) பயன்படுத்தச் சிறந்தது. அப்பொழுது எலுமிச்சை மற்றும் புளித்த காடி (க்ஷிவீஸீமீரீணீக்ஷீ) சேர்த்துக் கொள்ளலாம். தசையை வலுவாக்கவும் மற்றும் பல் ஈறுகளுக்குப் பலனளிக்கவும் கோசு உதவும். இதில் சுண்ணாம்புச் சத்து இருப்பதால், எலும்பு முறிந்தவர்களுக்கும் மூட்டுவலி நோயாளிகளுக்கும் இதை உண்பதற்குக் கொடுக்க வேண்டும். ஆனால் சிறுநீரகக் கல் உண்டாக வாய்ப்புள்ளவர்கள் இதை உண்ணுதல் கூடாது.

கோசில் உள்ள பொருள்கள் 90% நீர், 2-4% புரதம், 5-10% மாவுப்பொருள், 5-1.5% நார்பொருள், 5-25% தாது உப்புநீர்.

தமிழ் ஓவியா said...

உண்மையாகவே, இயற்கையின் மருத்துவக்கிடங்கில் புதிய மருந்து ஏதாவது கிடைக்குமா என ஆராயும் போது, உலகத்திலேயே மிகவும் மோச மான நோயான புற்றிற்கு மருந்தினை வெளிச்சத்திற்குக் கொண்டுவர எண் ணினால், உங்களால் முட்டைக்கோசை ஒதுக்கிவிட முடியாது. மற்றும் புரோ கோலை, ஸ்பரவுட்ஸ் காலிபிளவர் அத்துடன் சம்பந்தப்பட்ட காய்கறிகளை மறக்க முடியாது! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவ்வகைப் பல்வேறு தாவரங் களை, அதிகார பூர்வமாகப் பிரேசிக்கா எனப் பெயரிட்டுள்ளனர். ஆனாலும் இதனைக் குருசிபெரஸ் என்றும் அழைக்கலாம்.

25 ஆண்டுகளுக்கு முன்பு, புற்றினை எந்த வழியிலாவது, குறிப்பாக உண வினால் தடுக்க முடியுமா என எண் ணத்தொடங்கினர். இதன் விளைவாக உணவில் உள்ள பொருள்களின் மூலக்கூறானது வாழ்விற்கும், சாவிற்கும் இடையே நடைபெறும் செல்களின் யுத்தத்தில் சக்தி வாய்ந்த பங்காற்றுகிறது எனத்தற்போது அறிவியலறிஞர்கள் நம்பத்தொடங்கி உள்ளனர். இவை தனியே சுற்றிக் கொண்டிருக்கும் தனி அணுவாகிய ஆக்சிஜன் மூலக்கூற்றி னைப் பிடித்து அழிப்பதன் மூலம், செல்களுக்குத் தீங்கு விளைவிக்கும் செயல்களைத் தடுத்துப் புற்றும் வராமல் பாதுக்காக்கிறது. மேலும் புற்றுநோய் உண்டாக்கும் காரணிகளைத் தூண்டி விடும் பொருள்களையும் சமப்படுத்து கிறது. மற்றும் உடலிலுள்ள நொதி களை தூண்டிவிட்டு ஒரு பெரிய இயக் கத்தை உண்டாக்கி புற்று உண்டாக்கும் காரணிகளை உடலிலிருந்து வெளி யேற்றுகிறது. மேலும் அவை செய்திக் கடத்திகளைத் தடுத்து நிறுத்துவதன் மூலம் செல் உள்கருவில் உள்ள ஆக்சி ஜனைத் தூண்டி புற்று உண்டாவதைத் தடுக்கிறது.

தமிழ் ஓவியா said...

புற்றுநோயை உணவுப்பொருள்கள் ஒவ்வொரு நிலையிலும் எதிர்த்துப் போரிடும் என்று விஞ்ஞானிகள் இப்போது நம்புகின்றனர். அதாவது புற்றுக்காரணியால் முதன் முதலில் செல்லில் தொடங்கும் புற்று பத்து ஆண்டுக்காலம் வளர்ந்து கட்டியாகும் வரை உண்மையில் சில உணவுகளை அதில் உள்ள தனிப்பட்ட பொருள்கள் குறிப்பிட்ட இடத்தில் மருந்துகள் போல தாக்கும். இம்மாதிரி உணவு களால் குறிப்பிட்ட சில உறுப்புகளைப் புற்று நோயிலிருந்து பாதுக்காக்க முடிகிறது.

பல்வேறு துறைகளிலும் புற்று நோயினை விஞ்ஞானிகள் மிகவும் கொடியதாக எண்ணுகிறார்கள். இத னால் உங்களது மரபணு எந்த வகைப் புற்றால் பாதிக்கும் வாய்ப்பு உண்டு என அறிந்து அதன்படி புற்று எதிர்ப்பு உணவினாலும் மற்றும் பல்வேறு வகைகளிலும் புற்று வராமல் பாதுகாக்க தனித்தனியே பரிந்துரைக்கும் நாள் வரப்போவதை விஞ்ஞானிகள் எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

புற்றுக்கு எதிராக ஒரு வலிமைமிக்க உயிரியல் கோட்டையைக் கட்ட வேண்டும் என்பது விதி. 20ஆம் நூற்றாண்டில், புற்றுநோயைக் குறித்த எண்ணம், பல வேதனையான அனுபவங் களான அறியாமை, கவனக்குறைவு மற்றும் மரபணு என்பதை எல்லாம் மீறி வந்ததாகும். காற்று, நிலம், உணவு, நீர் மற்றும் நமது உடலில் நடைபெறும் வேதி விளைவுகள், நமது உயிருள்ள செல்களை ஒரு புற்றுக் கட்டியாக மாற்றுவதைத் தடுக்க சில சிக்கலான வேதி மாற்றங்கள் உணவினால் உண் டாகும் போது கொஞ்சம் நம்பிக்கை வருகிறது. இப்போது நாம் புற்றுக் காரணிகளால் அனைத்துத் திசையி லிருந்தும் தாக்கப்படுகிறோம். நாம் ஏன் புற்று எதிர்ப்பிகளை உடலில் ஏற்றிக் கொள்ளக்கூடாது? அதாவது திருடனை எதிர்க்கக் காவலர் பாதுகாப்பு போலச் செல்களில் மாற்ற முடியாத அழிவை உண்டாக்கும் முன், பயங்கரமான வேதிப்பொருள்களை வெளியேற்ற புற்றுச் செல்களை அழிக்கப்பயன்படும் மாதிரி வேதிப்பாதுகாப்பு - அதாவது சிறந்த உணவை அளவோடும், கட்டுப் பாட்டுடனும் பயன்படுத்தினால் அது நம்மைச்சுற்றியுள்ள புற்றுக்காரணி நச்சுகளைத் தடுத்து நிறுத்து முன்பே உதவுமானால் எவ்வளவு நல்லது?

இது ஒரு வியக்க வைக்கும் எண்ணம். மருவாட்டன்பர்க் ஒரு நோயியல் பேராசிரியர். மின் சோட்டா மருத்துவப் பள்ளிப் பல்கலைக்கழகத்தில் பணிபுரி பவர். நம்மைப்புற்று நோயிலிருந்து மீள வைக்கும் இந்த எண்ணத்தை ஆரம்ப காலத்தில் கூறியவர். இதில் பல அவரே சோதித்ததாகும். 1960 முதல் தற்காலம் வரை இவர் பல்வேறு சோதனைகளை நடத்தி, சாதாரண உணவாகிய முட்டைகோஸ், புரோகோலையில் உள்ள வேதிப் பொருள் எந்தவிதத்தில் உயிருள்ள செல்களில் வேலை செய்து புற்றினைத் தடுக்கிறது என்பதைக்குறித்த கருத்து கூறியவர்.

காய்கறி அதிகம் உண்பவர்களுக் குப் புற்று நோய் அரிது:

மத்தியில் மரு.கிரகாமும், அவருடைய உதவி ஆய்வாளர்களும் ரோஸ்வெல் பார்க் நினைவுப் பயிற்சி நிறுவனத்தில் உள்ள பெருங்குடல் புற்றினால் பாதிக்கப்பட்ட 256 வெள்ளைக்கார ஆண் நோயாளிகளைப் பேட்டி கண்டனர். இதனை ஒத்துப்பார்க்க 783 பேர் அதே வயதில் பெருங்குடல் புற்றினால் பாதிக்கப்படாதவர்களையும் பேட்டி கண்டார். இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் எத்துணை முறை தக்காளி, முட்டைகோஸ், லெட்யூஸ், வெள்ளரிக்காய், காரட், புருசல்ஸ் ஸ்பர்ட்ஸ், புரோக்கோலை, டர்னிப் மற்றும் காலிபிளவர் ஆகிய காய்கறி களை உணவுடன் சேர்த்துக் கொண்டனர் என அறிந்தனர்.

இதன் பயனாக, ஆண்களில் யார் அதிகமாக இவ்வகைக் காய்கனிகளை உண்டார்களோ, அவர்களுக்குப் பெருங்குடல் புற்று வரும் வாய்ப்பு குறை வாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உண்மையில் புற்று வரும் வாய்ப்பு அதிகமான காய்கறிகள் உண்பவர்களி டையே மிகவும் குறைவாகக்காணப்பட் டது. மாதம் 20 தடவை காய்கறி உண் பவர் மற்றும் காய்கறிகளே உண்ணாத வர்களுடன், தினமும் இரண்டு, மூன்று முறை காய்கறிகளை உண்பவர்களிடம் நடந்த ஆய்வில் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு பாதியாகக்குறைந்து காணப்பட் டது. புற்றிலிருந்து பாதுகாப்பு என்பது காய்கனிகள் அளவைப் பொறுத்தது என்பது ஆச்சரியமான ஒன்றுதான்.

Read more: http://viduthalai.in/page3/84365.html#ixzz37uuPeThi

தமிழ் ஓவியா said...


நாராயண குருவைக் கவர்ந்த சாது சட்டாம்பி சாமி! பிரேமா நந்தகுமார்


இந்தியாவில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வழிநடத்த பல மாபெரும் தலைவர்களும் ஆன்மீகவாதிகளும் உருவான புகழ் பெற்ற முக்கியமான காலகட்டமாக 19 ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கு விளங்கியது. தீண்டாமை மற்றும் மதத்தின் அடிப்படையில் பாகு பாடு காட்டப்படுவது போன்ற கேடு களை ஒழிப்பதற்கான சீர்திருத்த இயக் கத்திற்கு கடைக்கால் நாட்டிய கேர ளாவைச் சேர்ந்த சித்தரான சட் டாம்பி சாமி (1853_1924)யும் அவர்களில் ஒருவர்.

அனைவராலும் அன்புடன் குஞ்சன் என்று அழைக்கப்பட்ட அவரது இளம் வயதிலேயே தனது தாயாரையும், தனது உடன் பிறப்புகளையும் பராமரிக்கும் சுமையை ஏற்க வேண்டியவரானார் அவர். என்றாலும், வறுமை மற்றும் சூத்திரனாகப் பிறந்தது போன்ற பல பாதகங்களைக் கொண்டிருந்தபோதி லும், பலமான கல்வி அறிவினை அவர் பாடுபட்டுப் பெற்றார், பேட்டையில் ராமன் குருகுலத்தில் அவர் கல்வி கற்று வந்தபோது, குஞ்சன் சட்டாம்பிள்ளை யாக்கப்பட்டார். அந்தப் பெயரே அவர் வாழ்நாள் முழுவதும் அவருக்கு நிலைத்துவிட்டது.


தமிழ் ஓவியா said...

உருவ வழிபாட்டில் அவர் இயல் பாகக் கொண்டிருந்த பெருவிருப்பம் அவரை ஆன்மிகத்துறைக்கு அழைத்துச் சென்றது. ஜாதிபாகுபாட்டின் காரண மாக காட்டப்பட்ட அகம்பாவம், வெறுப்பு, அலட்சியம் ஆகியவை நிறைந்த ஒரு நீண்ட பயணம் அது. சுபா ஜடா வல்லபர் என்ற பார்ப்பன குரு அவர்களை ஆசானாகப் பெற்றிந்தது. மனோன்மணியம் சுந்தரனார் போன்ற பெரும் கல்வியாளர்களின் நட்பைப் பெற்றிருந்தது போன்ற ஆறுதலான செய் திகளும் அவர் வாழ்வில் அமைந்தன.

இக்கால கட்டத்தில், இந்திய கலாச்சாரத்தைப் பற்றிய ஓர் ஒட்டு மொத்த கண்ணோட்டத்தைப் பெற வேண்டுமெனில், சமஸ்கிருத மொழியைப் போன்றே தமிழ் மொழி பாரம்பரியமும் மிகவும் முக்கியமானது என்பது அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது. இந்திய நாட்டின் பாமர மக்களின் நாடித்துடிப்பை அறிவதற்காக இந்தியா முழுவதிலும் ஒரு நடோடி யைப் போன்று அவர் சுற்றித்திரிந்தார். இதன் மூலம் பலப்பல துணைக் கலாச்சாரங்களையும், பல்வேறுபட்ட மதங்களில் வாழ்க்கை மற்றும் வழி பாட்டு முறைகளையும் அவர் கண்டறிந்து கொள்ள முடிந்தது. ஒரு கிறித்தவ தேவாலயத்திலும் கூட அவர் ஒரு சில மாதங்கள் தங்கியிருந்து, ஒரு பாதிரியாரிடம் இருந்து கிறித்துவ மதத்தத்துவத்தைக் கற்றறிந்தார். மலைக் குகைகளின் தனிமையில் தியானம் செய்வது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக ஆனது. இக்காலகட்டத்தில் தான் அதுவரை பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட கோவில்களும் இருக்கின்றன என்பதை அவர் அறிந்தார்.

தமிழ் ஓவியா said...

சட்டாம்பி உயிர்வாழ்ந்திருந்த போது வெளியிடப்பட்ட ஒரு சமஸ்கிருத நூல் உள்ளிட்ட அவரது வாழ்க்கை வரலாறுகளை வைத்துப் பார்க்கும்போது, தனக்கென ஒரு வீடுகூட இல்லாத ஒரு சாது சென்ற இடங்களில் எல்லாம் அவர் மக்களால் அன்புடன் வரவேற்கப்பட்டதுடன், அவர் பல அற்புதங்களை நிகழ்த்தினார் என்பது போன்ற தோற்றத்தை அந்த ஆசிரியர்கள் அளிக்கின்றனர். ஜாதி, மத பாகுபாடுகளைக் கடந்தது மட்டுமல் லாமல், விலங்குகள் உள்ளிட்ட அனைத்து படைப்புகள் மீதும் அவர் அளவின்றி செலுத்திய அன்பு மட்டும் தான் அவர் செய்த அற்புதங்களிலேயே மிகச் சிறந்ததாகும். அன்பே கடவுள் என்ற உலகளாவிய உண்மையை உணர்ந்தவர் என்பது மென்மையான சொற்களில் அவர் எழுதிய கடிதங்களே காட்டுகின்றன. சட்டாம்பி வாழ்ந்த காலம் அண்மைக்காலமாக இருந்த போதிலும், அவரது உண்மையான வாழ்க்கையே கதை போன்று விளங் குவதாகும். இரண்டையும் அவ்வளவு எளிதாகப் பிரித்தறிய முடியாது. அவர் வாழ்ந்த காலத்திலேயே அவர் ஒரு மகானாகப் போற்றப்பட்டதே இதன் காரணம். அனைவரையும் சமமாகக் கருதி நடத்தும் நற்பண்பையும், கூர்மையான நினைவாற்றலையும் அவர் பெற்றிருந்தார்.

தமிழ் ஓவியா said...

அவர் காலத்தில் கிடைத்த அனைத்து தகவல்களையும் திரட்டி அவரது வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைகளை கட்டுக்கதைகளில் இருந்து வடிகட்டி வரலாற்றாசிரியர்கள் அளித்துள்ளனர். நாராயண குருவுக்கும் சட்டாம்பிக்கும் இடையே நிலவிய குரு_சிஷ்ய உறவு பற்றி நிலவிய முரண்பாடுகளையும் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தீர்த்து வைத்தனர். ஒரு மாபெரும் சமூகப் புரட்சியை நாராயண குருவால் மேற்கொள்ள இயன்றது என்றால், அதற்குக்ககாரணம் தாழ்த்தப் பட்ட மக்கள் வாழும் பகுதிகளிலும் கோவில்களை ஏற்படுத்திய சட்டாம்பி சாமிகளின் செயலால் அவர் கவரப் பட்டதே ஆகும் என்பது தெளிவாகத் தெரிகிறது. சாமி அவர்கள் ஒரு முழுமையான ஆசிரியர் ஆவார். மல் யுத்தப் பயிற்சியையும் கூட அவரால் அளிக்க முடியும். மூலிகைகளைப் பற்றி ஆழ்ந்த அறிவு பெற்றிருந்த அவர் ஒரு சிறந்த மருத்துவராகவும் விளங்கினார்.

அவரது இந்த வாழ்க்கை வர லாற்றை எழுதுவதற்கு ராமன் நாயரும், சுலோச்சனா தேவியும் கடினமாக உழைத்திருக்கின்றனர் என்பது நன்றா கத் தெரிகிறது. சாமி அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்த எண்ணற்ற மக்களைப் பற்றிய அதிக அளவிலாள செய்திகளை அது கொண்டிருக்கிறது. அவர்கள் ஒவ்வொருவரும் அவரது வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் ஒளியேற்றியவர்களாக விளங்கினர். சாமிகள் இயற்றிய நூல்களும், அவற்றைத் தொடர்ந்து எழுந்த கருத்து வேறுபாடுகளும் 19ஆம் நூற்றாண்டின் கலாச்சார வரலாறு பற்றிய ஓர் ஆழ்ந்த தோற்றத்தை நமக்கு அளிக்கின்றன.

தகவல்களை சேகரிப்பதில் நூலா சிரியர்கள் பாராட்டத்தக்க அளவுக்குப் பொறுமையைக் கடைப்பிடித்துள்ளனர். அவர்கள் திரட்டியுள்ள ஒளிப்படங் களின் தொகுப்பும் நம்மை சாமியின் காலத்துக்கே அழைத்துச் செல்கின்றன. இந்த நூல் முறையாக வகைப்படுத் தப்படாதது வருந்தத்தக்கது. சில செய்திகள் திரும்பத்திரும்பக் கூறப்பட்டி ருப்பதும், பெரிய அளவில் நிலவும் அச்சுப் பிழைகளும் தவிர்க்கப்பட்டிருக்கலாம். மேலும் வள்ளலார் ராமலிங்கசாமிகள் மற்றும் அண்ணாமலை ரெட்டியார் ஆகியோரின் பாடல்கள் அவர்கள் சட்டாம்பி சாமியின் பாடல்கள் என்று தவறாகக் கூறியுள்ளனர். இனிவரும் பதிப்புகளில் இக்குறைகள் சரி செய் யப்படும் என்று நம்புகிறோம். அப்படி செய்தால், இந்த நூல் இந்திய மறு மலர்ச்சி காலத்தைப் பற்றி ஆய்வு செய்வதற்கான சரியான நூலாக விளங்கும்.

(நன்றி: தி இந்து: 25.10.2011, தமிழில்: த.க.பாலகிருட்டினன்)

Read more: http://viduthalai.in/page4/84367.html#ixzz37uuiN6bC

தமிழ் ஓவியா said...


சென்னை விவேகானந்தா கல்லூரியில் 100க்கு 3 பேராக உள்ள பார்ப்பனர் ஆதிக்கம்

சென்னை விவேகானந்தா கல் லூரியை நடத்தும் பொறுப்புகீழ் சாதியி னருக்கு தொண்டு செய்வதற்கென்றே உருவாக்கப்பட்ட ராமகிருஷ்ணா மிஷனிடம் ஒப்படைக்கப்பட்டது. 1921இல் பார்ப்பனரல்லாத நாட்டுக் கோட்டை நகரத்தாரால் மாணவர் இல்லத்திற்கு என கட்டித் தரப்பட்ட நாட்டுக்கோட்டை நகரத்தார் வித்தியா சாலை என்ற பள்ளிக்கட்டடம் கல் லூரிக்கு என ஒதுக்கப்பட்டது. பின்னர் சென்னை மாகாண அரசினால் சிட்டி இம்ப்ரூவ்மெண்ட் டிரஸ்டிடயிருந்து சி.அய்.டி. காலனி பகுதியில் பெரும் நிலம் (மனைகள்) கல்லூரி மைதானத் திற்காகவும், கல்லூரி விடுதிக்கும் மிக மிகச் சொற்ப விலையில் (அதிலும் பெரும்பகுதியை அரசே தந்து விட்டது) தரப்பட்டது.

பல்கலைக் கழக மானியக்குழு தந்த நிதியைப் பயன்படுத்தி (Matching Grant)கல்லூரி மாணவர் விடுதியின் ஒரு கட்டடமும் மக்கள் வரிப் பணத்தில் இயங்கும் மாநில, மத்திய அரசுகளிட மிருந்து நிதிக் கொடைகளை இவ்வாறு பெற்றதுடன் மாநில அரசிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை மாதந்தோறும் ஊதிய மானியமாகவும் பெற்று வரும் விவேகானந்தா கல்லூரி எப்படி ஒரு பார்ப்பனக் கல்லூரியாக இயங்க முடியும்?

கல்லூரி தொடங்கப்பட்ட 1946ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை கல்லூரி நிருவாகக் குழுத் தலைவர்களாக 5 பேர் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பார்ப்பனர்களே! இதைப் போன்று இந்த 67ஆண்டுகளில் கல்லூரிச் செயலாளர் களாக 9 பேர் இருந்துள்ளனர். இவர் களில் சுவாமி நிஷ்கமானந்தா 1970-1976)வைத் தவிர அனைவரும் பார்ப் பனர்களே!

பொது நிதியில் அரசு மானியத்தில் இயங்கும் இக்கல்லூரியில் 1946 முதல் இன்று வரை 14 பேர் முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 1.7.2013 முதல் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள பேரா சிரியர் கே. சீனிவாசன் 15வது முதல்வர். 15 முதல்வர்களும் பார்ப்பனர்களே!

சூத்திரர் யுகம் என்ற விவேகானந் தரின் கனவு என்னவாயிற்று? காயஸ் தராகப் பிறந்த அந்த துறவியின் கனவு என்றும் கனவாகவே நீடிக்க வேண்டும் என்பதுதான் அவரது துறவுப் பரம்பரை யினரின் சாதி வர்ண வேட்கையா? இனமானத் தமிழர்களே! சிந்திப்பீர். செயல்படுவீர்!

நன்றி: விடுதலை நாளிதழ் 2.7.2013

வெளியீடு: நகர திராவிடர் கழகம், செய்யாறு

Read more: http://viduthalai.in/page4/84366.html#ixzz37uuxmvhu

தமிழ் ஓவியா said...


தொடரும் மத வியாபாரிகளின் மரண வியாபாரம்: கேதார்நாத்

ஒரு சில தனி மனித பேராசையால் உத்தராகண்ட் மாநிலத்தின் பள்ளத்தாக் குகள் கேளிக்கை விடுதிகளாகவும், மூலிகைவனங்களாகவும், கனிமவளம் சுரண்டப்படும் சுரங்கங்களாகவும் மாற்றப்பட்டன. இது இன்றல்ல நேற்றல்ல சுமார் 30 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது, முக்கியமாக உத்தராகண்ட் மலைப்பகுதியில் வெடிவைத்து தகர்த்து கற்கள் எடுக்கப்படுவதைக் கண்டித்து உண்ணாவிரதமிருந்து நிகாமானந்தா என்ற சாமியார் செத்துப்போனார்.

அவர் உண்ணாவிரதமிருக்கும் போது ஒரு பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியில் இன்னும் 10 ஆண்டுகளில் உத்தராகண்ட் மாநிலம் நதிவெள்ளத்தின் காரணமாக பெருத்த சேதத்தைச் சந்திக்கும். இந்த சேதத்தில் முதலாளிகள் பணக்காரர்கள் சாகமாட்டார்கள். அப்பாவி மக்களும் அழகை ரசிக்கவரும் சுற்றுலாப் பயணி களும் தான் சாவார்கள் என்றார். 2011ஆம் ஆண்டு அவர் கூறிய வார்த்தை 2013 ஜூனில் பலித்துப் போனது, கடந்த ஆண்டு கேதார்நாத கவுரிகுண்ட் ஆம் கேதார்நாத் பேர ழிவை ஆய்வு செய்த வாடியா நிலவியல் பொறியியல் கல்லூரி ஒரு ஆய்வறிக் கையைத் தந்தது.


தமிழ் ஓவியா said...

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

1. கேதார்நாத் பள்ளத்தாக்கு கடந்த 400 ஆண்டுகளாக இயற்கைவனங்களால் சூழப்பட்டு நிலங்கள் உறுதியான தன்மையுடன் இருந்தன. 1907. 1922,1960 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளில் இதே போன்ற பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அப்போது நிலம் உறுதியாக இருந்தமையாலும் வனங்கள் அடர்த்தி யாக இருந்தமையாலும் நீரோட்டத்தின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆற்று நீரின் பாதையிலும் எந்த ஒருமாற்றமும் இல்லை, அதே நேரத்தில் நிலச்சரிவுகளும் ஏற்பட வில்லை. 2. 1990-களுக்குப் பிறகு பேராசை காரணமாக சுற்றுலா நிறுவன முதலாளி கள் அதிக அளவில் விளம்பரம் செய்து மக்களை கேதார்நாத் பகுதிக்கு குவிக்கும் பேராபத்தான பணியைச்செய்தனர். 1900-களில் இருந்து 1960 வரை 60 ஆண்டுகள் கேதார்நாத் பள்ளத்தாக்கிற்கு ஆன்மிகச் சுற்றுலா என்ற பெயரில் வந்த மக்கள் எண்ணிக்கையை விட 1990 மற்றும் 2010இல் வந்த மக்கள் எண்ணிக்கை பலமடங்காகப்பெருகிற்று. விளைவு சட்டவிரோதமாக வனங்களை அழித்தல், உறுதியான மலைச்சரிவுகளை சிதைத்து அரசு மற்றும் சுற்றுப்புறச்சூழல் அமைச் சகத்தின் அனுமதியில்லாமல் தனியார்கள் சாலை அமைத்தல், ஆங் காங்கே தங்கும் விடுதி என்ற பெயரில் ஏக்கர் கணக்கில் வனங்கள் அழிக்கப்பட்டு வெற்றிடமாக்கு தல் போன்றவை தொடர்ந்து நடந்து வந்தன. 3. மாசுபடுத்துதல் கையோடு கொண்டு வரும் நெகிழிப் பொருட்களை ஆங் காங்கே வீசி எறிதல் தாங்களாகவே சிறிது சிறிதாக வனங்களை அழித்து கூடாரம் அமைத்தல் மற்றும் சிறுவியாபார நிறுவனங்கள் அமைத்தல் போன்ற காரியங்களை ஆன்மீகம் என்ற பெயரில் வரும் மக்கள் எந்த ஒரு அக்கறையுமின்றி செய்துவந்தனர். 4. கேதார்நாத்திற்கு மேலே உள்ள சோராபரி கிளேசியர்(பனிக்குன்று) பொதுவாக பனிச்சிகரங்களுக்கு சில கிலோமீட்டர்களுக்கு அப்பால் கூட மனிதநடமாட்டம் இருக்கக்கூடாது, காரணம் இமயமலைப் பனிச்சிகரங்கள் உள்ளுக்குள் நீர்ம நிலையிலும் வெளியே திடமானபனிக்கட்டியாகவும் இருக்கும் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க மேற்புறம் வலுவிழக்கும் போது பெரிய அணையு டைந்து வரும் வெள்ளம் போல் நீர்வெளியேறிவிடும். 5. கேதார்நாத்திற்கு மிகவும் அருகில் உள்ளது சோராபாரி கிளேசியர். ஏற்கெனவே அடிக்கடி ஏற்படும் பருவநிலைமாற்றத்தால் பெரிய அளவில் சோராபரி பனிச்சிகரத்தில் மேற்புறம் மிகவும் பலவீனமாகிவிட்டது.

தமிழ் ஓவியா said...

இதில் அதிக அளவு மனித நடமாட்டம் மேலும் நிலமையைக் கெடுத்துவிட்டது. 6. சுமார் 7,00,000 மக்கள்த்தொகை கொண்ட உத்தராகண்டில் கடந்த ஆண் டில் ஏற்பட்ட பேரழிவின் காரணமாக 1லட்சத்து 50,000 பேர் பாதிக்கப்பட்டனர். சுமார் 25ஆயிரம் பேர் மரணம் என்று அரசே அறிக்கை விட்டது. அப்படி என்றால் உண்மையில் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். சரி இவ்வளவு நடந்த பிறகாவது அரசு விழித்துக்கொண்டதா? அதுதான் இல்லை

பேரழிவு நடந்த அன்றே இந்துத்துவ அமைப்புகள் கூறிவிட்டன. விரைவில் கேதார்நாத் கோவில் புனரமைக்கப்பட்டு மீண்டும் பூசைகள் செய்யப்படும் என்று பிணக்குவியல் தோண்டிக்கொண்டு இருக்கும் போதே அறிக்கைகள் பறந்தன. அதே நேரத்தில் மேலிடத்தில் இருந்து மிகப்பெரிய அளவில் அழுத்தம் வந்துகொண்டு இருந்ததாம் இதன் விளைவாக அரைகுறையாக பிணங்கள் தேடுதல் வேலை நிறுத்திவைக்கப்பட்டது. இதன் விளைவாக இன்றும் எலும்புக் கூடுகள் கைப்பற்றப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. இதில் மிகவும் கோரமான நிகழ்வு தலை எலும்புக்கூடு மட்டும் வெளியே தெரிந்த நிலையில் கேதார்நாத் கோவிலுக்கு அருகிலேயே ஒரு எலும்புக்கூடு கிடைத்ததுதான் எந்த அளவிற்கு இவர்கள் தேடுதல்வேலையை நட்த்தினார்கள் என்று இதில் இருந்தே தெரிந்துகொள்ளலாம்.

தமிழ் ஓவியா said...

ஆனால் அதே இயற்கைப் பேரழிவு நின்றுவிட்டதா என்றால் அதுதானில்லை, சமீபத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நிகழ்ச்சியும் மனித தவறுகளினால் நடந்த ஒன்று தான் ஆந்திர மாநில மாணவர்கள் விவகாரம் என்பதற்காக அது பத்திரிகைகளில் வந்தது. அதுவும் மிகவும் விரைவில் பத்திரிகைகளில் இருந்து போன மாயம் தெரியவில்லை, மறைக்கப்பட்ட பேரழிவு

தைனிக் ஜாகரன் என்ற இந்திப் பத்திரிகை வியாழன் (3 ஜூலை 2014) அன்று ஒரு சிறிய செய்தியை வெளியிட் டிருந்தது பத்திரிநாத் பகுதியில் மீண்டும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆனால் இதனால் ஏற்பட்ட உயிரிழப்பு, மற்றும் சேதாரம் குறித்து எந்த ஒரு செய்தியும் கிடையாது. அதன் முழு விவரமும் கீழே:

பத்திரிநாத் பகுதியில் கனமழை மற்றும் கடுமையான வெள்ளத்தின் காரணமாக சாலை அடித்துச் செல்லப் பட்டது. புதன்கிழமை (2 ஜுலை) பத்திரிநாத் பகுதியில் ஏற்பட்ட கடுமையான மழைவெள்ளம் காரணமாக பெரிய அளவில் நிலச்சரிவும் ஏற்பட்டது, இதில் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவு சாலைகள் நிலச்சரிவில் சிக்கி சின்னா பின்னமாகிப் போனது, மேலும் 1 கிலோ மீட்டர் அளவுள்ள தேசிய நெடுஞ் சாலையும் பெருத்த சேதமடைந்தது.

இதன் காரணமாக பெருமளவில் சார்தாம் ஆன்மீக யாத்திரை மேற் கொண்ட பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை நூற்றுக்கணக்கான பயணிகள் ராணுவம் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவினரால் மீட்கப்பட்டனர். உயிரி ழப்பு குறித்து இதுவரை சரியான தகவல் எதுவுமில்லை. சமேலி சரக காவல்துறை சுனில் குமார் மீனா கூறும் போது திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளப் பெருக்கின் காரணமாக பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு விட்டார். அவரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது, சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் தற்காலிக முகாம்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். உயிரிழப்புகள் மற்றும் பொருள் சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை, மேலதிக விபரங்கள் குறித்து அறிக்கை தரப்படும் என்று மொட் டையாக கூறி பிரச்சினையை மேலும் வளரவிடாமல் பார்த்துக்கொண்டார். இந்த செய்தி குறித்து எந்த ஒரு ஆங்கிலப்பத்திரிகை மற்றும் தேசியப் பத்திரிகை செய்திவெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, அதாவது பல கிலோ மீட்டர்தூரம் கொண்ட சாலை அடித்துச் செல்லப் பட்டுள்ளது. ஜூன் ஜூலை என்பது சுற்றுலாப்பயணிகள் அதிகம் வரும் காலம் ஆனால் உயிரிழப்பு பொருட் சேதம் குறித்து காவல்துறை அதி காரிக்குத் தெரியாதாம். கடந்த ஆண்டு மன்மோகன் சிங் அரசு அப்போது ஏற்பட்ட பேரழிவை உலகம் எங்கும் கொண்டு சென்ற ஊடகத்துறையினர் அதே போன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. பத்திச் செய்திக்கூட வெளியிடவில்லை.

காரணம் உத்தராகண்ட் பகுதியில் மலைவளங்களை அழித்து பணம் கொழிக்கும் கூட்டத்திற்கு ஆபத்து வந்துவிடுமே என்ற காரணத்தாலும், மோடிஅரசின் மீது ஏதாவது கறை ஒட்டிக்கொள்ளுமே என்ற ஒரு அச்சத்திலும் ஊடகமும் இதர அரசு ஊழியர்களும் உண்மைகளை உலகின் கண்களில் இருந்து மறைக்கின்றனர். ஆனாலும் எப்போதும் போல் இயற்கை அழிப்பு வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதோ சமீபத்தில் வெளிவந்த கேதார்நாத் விளம்பரமே இதற்கு சான்று.

Read more: http://viduthalai.in/page5/84369.html#ixzz37uvAqyED

தமிழ் ஓவியா said...


குருபெயர்ச்சியா? ஜாதிப் பயிற்சியா?

ஜூன் 13 2014 (தி.ஆ.2045 விடை -_ 30) வைகாசி 30ஆம் தேதி என்னும், ஜூபிடர் என்னும் குருப்பெயர்ச்சி மிதுன இராசியில் இருந்து கடக இராசிக்கு மாறுகிறது. இது வாக்கியப் பஞ்சாவ்கம் தரும் தகவல் ஜூன் 19 - _ 2014 (தி.ஆ. 2045 ஆடவை - _5) ஆனி 5ஆம் நாள் வியாழன் என்னும், ஜூவிடர் என்னும், குருப்பெயர்ச்சி மிதுன இராசியில் இருந்து கடக இராசிக்கு மாறுகிறதாம் - இது திருக்கணித பஞ்சாங்கம் தரும் தகவல்.

பஞ்சாங்கத்துக்கு பஞ்சாங்கம் முரண்பாடு, ஆனால் அறிவியலில் இல்லை முரண்பாடு. அறிவியலில் எல்லாமே சமன்பாடுதான்.

வியாழன் கோள் சூரியனைச் சுற்றி வர, பூமியின் கணக்கில் ஏறத்தாழ 12 ஆண்டுகள்ஆகின்றன. நமது பூமி சூரியனைச் சுற்றிவர ஒரே ஆண்டு ஆகிறது. உண்மையில் வியாழனுக்குப் பின்னால் தெரியக் கூடிய விண்மீன் மண்டலக் காட்சியானது பூமியின் பெயர்ச்சியாலேயே மாறித் தெரிகிறது. பூமியில் நாம் பார்க்கும் எல்லா காட்சி மாற்றத்திற்கும் பூமியின் சுழற்சியும், பெயர்ச்சியுமே உண்மையான காரணம். அதுவும் மற்ற கோள்களின் பின்புலம் (இராசி) மாறுவதற்கும் பூமியின் பெயர்ச்சியே காரணம். அப்படியிருக்கும்போது குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி என பத்திரிகைகள் பொய்ச் செய்திகளை ஆராயாமல் வெளியிடுவது, கோவில் குருக்களின் வயிற்றை நிரப்பவே! அதற்குத்தான் குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜையும், கட்டணமும்.

எல்லாக் கோள்களும் தன்னைத்தானே சுற்றிக் கொண்டுதான் சூரியனைச் சுற்றி வருகின்றன. அப்படி இருக்க சனிப் பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி எனக் கூறும் ஆன்மிகம், சனி சுழற்சி, குரு சுழற்சி பற்றி சொல்வதில்லையே. அதிலும் நவக்கிரகம் என்று கூறும் (இப்போது 8 கோள்களின்) ஆன்மிகம், புதன் பெயர்ச்சி வெள்ளிப் பெயர்ச்சி பூமிப் பெயர்ச்சி, செவ்வாய்ப் பெயர்ச்சி, வின்மம் (யுரேனஸ்) பெயர்ச்சி, சேண்மம் (நெப்டியூன்) பெயர்ச்சி பற்றி சொல்வதே இல்லையே... ஏன்? ஏன் எனில் கிரகத்தில்கூட உயர் ஜாதி கிரக மாம் இதோ மாலை முரசு தரும் தகவல்.
குரு சில தகவல்கள் கிழமை வியாழன்
நட்சத்திரம் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
ராசி தனுசு, மீனம்
பால் ஆண்
நட்பு சந்திரன், செவ்வாய், சூரியன்
பகை புதன், சுக்கிரன்
சமம் சனி, ராகு, கேது
கோத்திரம் ஆங்கிரசு
அதிதேவதை இந்திரன்
பிரத்யதி தேவதை பிரம்மா
குணம் சாத்விகம்
திசை வடக்கு
மொழி வடமொழி
சாதி பிராமண சாதி
ஆடை தங்க மஞ்சள்
மனைவியர் தாராதேவி, சங்கினி
புதல்வர்கள் எமகண்டன், கசன், பரத்வாஜன்
ஊர்தி யானை
தசை 16 ஆண்டு
மலர் முல்லை
தானியம் கடலை
உணவு தயிர்ச் சோறு
உலோகம் பொன்

Read more: http://viduthalai.in/page8/84373.html#ixzz37uwDlRjj

தமிழ் ஓவியா said...


பராமரிப்பின்றி புத்தர் சிலைகள்தஞ்சாவூர், திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த, அய்யம்பேட்டை, ஆயிரவேலி அயிலூர், உள்ளிக்கோட்டை, ஒதுளூர், கரூர், கிள்ளியூர், பட்டீஸ்வரம், பரவாய், புஷ்பவனம், புத்த மங்கலம், புதூர், பெரண்டாக்கோட்டை, பெருஞ்சேரி, மங்கலம், மன்னார்குடி, மானம்பாடி, விக்கிர மங்கலம், விக்ரமம், வெள்ளலூர் உள்ளிட்ட பல இடங்களில், இப்போதும் மகாபுத்தர் வழிபாடு நடைமுறையில் உள்ளது. அய்யம்பேட்டையில், முனீஸ்வரன் என்றும், பெருஞ்சேரியில் ரிஷி, என்றும், புத்தரை வழிபடுகின்றனர். பல நூற்றாண்டுகளுக்கு முன், பவுத்த மதம் தமிழகத்தில் பரவியபோது, சோழ நாட்டில், அதன் தாக்கம் அதிகளவில் இருந்தது. அதனால், அப்பகுதி முழுவதும், புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டன. பிற்காலங்களில், சிலைகள் பராமரிக்கப்படாமல் அப்படியே விடப்பட்டன. தமிழக தொல்லியல் துறை, இருபது ஆண்டுகளுக்கு முன், காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள புத்தர் சிலைகளை கணக்கெடுத்து, அதில், 70 புத்தர் சிலைகள் இருப்பது தெரிய வந்தது. அவற்றில் 20 சிலைகளை உள்ளூர் மக்கள் வழிபட்டு வந்தனர். எனவே, அச்சிலைகளை அவர்களின் பொறுப்பிலேயே தொல்லியல் துறை விட்டது. மீதமுள்ள, 50 புத்தர் சிலைகள், போதிய பராமரிப்பின்றி அழியும் நிலையில் இருப்பதாக தொல்லியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே, புத்தர் சிலைகளைப் பராமரிக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/page8/84374.html#ixzz37uwQIcvs

தமிழ் ஓவியா said...

பகத்சிங் தூக்கில் இடப்பட்டபோது

ஆங்கில அரசின் அடக்குமுறைகளுக்கு அஞ்சி

அன்றைய "தேசபக்தர்கள்" வாய்மூடி, மௌனியாக இருந்தபோது,

பகத்சிங்கின் செயலை ஆதரித்து

1931 ல் கட்டுரை தீட்டியவர் தந்தை பெரியார் என்பது

இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...


திண்டிவனம்
விடுதலை சந்தா சேர்ப்பு இயக்கத்தில் கழகத் தோழர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். உலகிலேயே 80 ஆண்டு களாக நடைபெறும் ஒரே நாத்திக நாளேடு விடுதலை விடுதலை விடுதலையே! அதில் 52 ஆண்டுகள் ஆசிரியராகத் தொடர்ந்து, பணியாற்றி கின்னஸ் சாதனை பொறித்தவரும் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களே!

இன்றைக்குத் தமிழ் நாட்டில் ஆசிரியர் என்று சொன்னாலே அது விடுதலை ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களை மட்டுமே குறிக்கிறது என் றால் அதன் வீரியத்துக் குள்ளிருக்கும் வித்து மிக வும் முக்கியமானது!

விடுதலை தான் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் புரட்சிகரமான சிந்தனை களை, மனிதநேயத் தத்து வங்களை ஆசிரியராக இருந்து தமிழ்நாட்டு மக் களுக்கு அறிவு கொளுத்தி வருகிறது. அந்த வகையில் விடுதலையின் ஆசிரி யரை ஆசிரியர் என்று விளிப்பதற்கு நியாயமான காரணங்கள் இருக்கவே செய்கின்றன.

சமுதாயத்தைப் புரட் டிப் போட்ட பணியிலும், சமூக நீதிக் கொடியைப் பட்டொளி வீசிப் பறக்கச் செய்வதிலும் விடுதலைக்கு நிகர் விடுதலையே

ஆசிரியர் அவர்களின் 50 ஆண்டு விடுதலை பணியையொட்டி 50 ஆயி ரம் விடுதலை சந்தாக் களைத் திரட்டித் தந்து சாதனை படைத்த கருஞ்சட்டைத் தோழர்கள், இப்பொழுது 12 ஆயிரம் சந்தாக்கள் திரட்டும் பணி யில் சளைக்காது ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகத்தின் சார் பில் நடத்தப்படும் களப் பணி பட்டறைகளில் இது. முக்கிய கருத்தாக எடுத் துக் கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று (19.7.2014) திண்டிவனத்தில் நடை பெற்ற களப் பணிப்பட்ட றையில் திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறை நுதல் செல்வி அவர்கள் ஒரு கருத்தை முன் மொழிந்தார்.

கழகப் பொறுப்பாளர் கள் ஒவ்வொருவரும் ஆண்டு ஒன்றுக்கு நான்கு சந்தாக்களைச் சேர்த்துக் கொடுக்கும் யோச னையை முன் வைத்தார்.

எதிலும் முன் குரல் கொடுக்கும் திண்டிவனம் மாவட்டக் கழகத் தலைவர் மானமிகு க.மு. தாஸ் அவர்கள் அடுத்த கணமே தங்கள் குடும்பத்தின் சார் பில் இதோ நான்கு ஆண்டு சந்தா என்று கூறி அதற்கான தொகை ரூ.4,800அய் கழகப் பொருளாளரிடம் அளித் துப் பலத்த கரவொலியை ஒருங்கே பெற்றார்.

திண்டிவனம் முன் மொழிந்து விட்டது; திரா விடர் கழகத் தோழர்களே, இதனை தமிழ்நாடு முழு வதும் செயல்படுத்தலாம் அல்லவா!
வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/84383.html#ixzz383nX7CIC

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?


சிவபெருமான்

சிவபெருமான் சந்தி ரனை முடியில் தரித்த புனைக் கதையை இன் றைய தினமணி ஏடு வர லாறு என்று எழுதி யுள்ளது.

சரி இருக்கட்டும். சந்திரன் தன் குருவான வியாழ பகவானின் மனைவி தாரையைக் கற்பழித்த தால் முனிவரின் சாபத்தால் கலை குறைந்தது (கிரகணம்) என்பதைத் தினமணி மறைத்தது ஏனோ!

Read more: http://www.viduthalai.in/e-paper/84385.html#ixzz383oYXMUj