Search This Blog

9.5.09

பிரபாகரன் பேரழிவு சக்தியென்று பீரங்கியாய் முழங்கியவர் பெற்றன்னையாய் மாறி விட்டாரா?


யாருக்கு யார் தாய்?


தந்தை பெரியாரின் தொண்டரென்று பகரும் தோழர்களே,
பெரியாரின் பேரனென்று பெருமை பேசும் கலைவாணர்களே!
இனவுணர்வு என்று இடி முழக்கம் செய்வோரே,
எங்கே போகின்றீர்? யாரைத் தூக்கிச் சுமக்க தாவி நிற்கின்றீர், தடம் மாறித் தவிக்கின்றீர்?

தாயே தயாபரியென்று
யாரிடம் மடிப் பிச்சை?
அருள் தாராய் தேவியென்று
ஆரிடம் பிரார்த்தனை
தோத்திரம் செய்கின்றீர் -
துந்துபி முழங்குகின்றீர்?
ஒருகணம்
ஒரே ஒரு கணம்
சிந்தித்ததுண்டா?
சீர்தூக்கிப் பார்த்ததுண்டா?
பிரபாகரன் பேரழிவு சக்தியென்று
பீரங்கியாய் முழங்கியவர்
பெற்றன்னையாய் மாறி விட்டாரா?
பேரன்பைத்தான் பொழிந்தாரா?
அப்படியென்றால் அன்பர்களே,
பிரபாகரன் எப்படி அண்ணன் ஆவார் உங்களுக்கு?
பெரியாரை தந்தை என்ற வாயால்
தாயென்று யாரை அடையாளம் காட்டுகின்றீர்?
விடுதலைப்புலிகள் இயக்கமா?
கூடாது கூடாது
தடை செய்யப்பட்டே ஆக வேண்டும்
என்று எக்காளமிட்டவர் யார்?
தடை செய்யக் காரணம்
நான் நான்தான்
ஆம் நானேதானென்று
தாண்டிக் குதித்தவர்
தாயாகி விட்டாரா
தங்களுக்கெல்லாம்?
இன எதிரி எப்பொழுது
இன்முக அன்னையானார்?


சந்தர்ப்ப வேடம்கட்டி
சாய்த்திடுவார் சவக்குழிக்குள்
சாய்ந்திடப் போகின்றீரா?
ஆரியத்துக்கு வெற்றியா?
அய்யா பிறந்த பிறகும்?
அய்யகோ வெட்கம், வெட்கம்
ஆழ்மனம் துடிக்கிறதே!
குழந்தைகளுக்குப் பெயர்
சூட்டுகிறார் ஜெயலலிதா
கேளுங்கள் கேளுங்கள்
ஜெயராமன், ஜெயமோகன்
ஜெயலட்சுமி, ஜெகதீசுவரி
தப்பித் தவறித் தமிழுண்டா?
பார்ப்பன மொழியைத்
தேடித் தேடி கண்டுபிடித்து
சூட்டும் மர்மமென்ன - புரியலியா?
அருந்தமிழ் காக்கும்
அங்கயற்கண்ணி ஆகிவிட்டாரா?
ஆரியம்வேறு, திராவிடம் வேறு என்று
அய்யாவும் அண்ணாவும்
போதித்த உணர்வெல்லாம்
படுகுழியில் போயிற்றா!
ஆற்றில் குளிக்கப்போய்
ஆத்தில் குதித்தீரா?
தேளைத் தேனென்று சொல்ல
தீர்மானித்தது எப்பொழுது?
ஈழத்தைப்பற்றி கவலை எப்போது?
தேர்தலுக்கு முதல் நாளா?
அதற்கு முதல் நாள் வரை...
அப்படித்தான் போர் என்றால்
சாவார்கள் - சகஜமாம்
கேலி செய்யவில்லையா?
தமிழனைக் கொல்லுவது
சிங்களவர் நோக்கமல்ல!
கூறியது யார்?
மறந்து விட்டீரோ?
சதிக்குத் துணைபோன லலிதா
சந்திரமதியானது எப்போது?
இதை அறிவதற்கு
பேரறிவு வேண்டாம்!
சிற்றறிவும் போதுமே - ஒரு
சொடுக்கில் அறியலாமே!

சந்தர்ப்பவாதம் தானாம்!
ஆனாலும்
சந்திப் பிழையில்லாமல்
சரணமடையத் தயார்தானாம்!
தமிழன் விழுந்த இடத்திலேயே
விழுந்து கொண்டா இருக்க வேண்டும்?
விடிவுதான் எப்பொழுது?
விபீஷணர்க்கு முடிவேது?
ஆரியம் நடமாடும் நாசம்
வேண்டாமப்பா பாசம்
கெடுத்திடுமே அந்தக் காசம்!
கீர்த்திமிகு அண்ணா
ஆரிய மாயையில் தீட்டிய
தூரிகைச் சித்திரமிது!
மறந்தீரா மறத்தமிழரே?
மயக்கத்தில்தான் வீழ்ந்தீரா?
சிரிப்பிலே சொக்காதே
சிலந்திமொழி அது வென்ற
சொக்கத் தமிழிலே
சொன்னாரே மேலும் அண்ணா!

பகையாளிக்கும் தோழனுக்குமுள்ள
பாகுபாட்டை அறியாத கூழ்முட்டைகளா நீங்கள்?
குடிப்பெயரைக் கெடுக்கலாமா?
வெண்ணெய்க்கும் சுண்ணாம்புக்கும்
வேறுபாட்டை அறியாத விடலைகளா நீங்கள்
பகுத்தறிவுப் பாடம் போதித்த
பகவலன் பெரியார் சகாப்தத்திலும்
சோரம் போக
சோற்றாலடித்த பிண்டமா தமிழன்தான்?
கிளிப்பிள்ளைக்குப் பாடம் போல்
கற்பித்தாரே கறுஞ்சட்டைத் தந்தை
காற்றோடு போய்விட்டதா
கண் மூடிப் போனதேன்?
சிந்திப்புச் சீப்பினை
எங்கே ஒளித்து வைத்தீர்?
இன்னும் ஒரு பெரியார் வந்து இடித்துச் சொல்ல வேண்டுமா?
இன்னும் ஒரு அண்ணா தோன்றி
ஏளனம் செய்ய வேண்டுமா?
இன்னும் ஒரு புரட்சிக்கவி பிறந்து
சூட்டுக்கோல் போட வேண்டுமா?
தமிழன் கண்ட கால்வாயை
ராமன் பெயரைச் சொல்லி
தடுத்த பிறகும்..
தமிழன் தோல்

கடித்துக் கிடக்க வேண்டுமோ!
தீ பரவட்டும் என்றாரே அண்ணா
எதன்மீது?
அந்த ராமன்மீது தானே?
அந்த ராமனைத் தூக்கி வந்து
தமிழன்மீது மொத்தியபிறகும்
சொரணை வரவில்லையா!
தன்மானம் போனதெங்கே?
தமிழருக்கான திட்டத்தினை
ரத்து செய்வேன் என்று
அறிக்கை கொடுத்து
அதே தமிழர்களிடம்
வாக்குக் கேட்டு வரத்
தைரியம் கொடுத்தோர் யார்?
நீங்கள் கொடுத்த தைரியம்
நீட்டி முழங்குகின்றார்
சுக்கரீவர்கள் சிரஞ்சீவிகளா?
அனுமார்கள் ஆயுள் நீடிப்பா?

மோடியை அழைத்து வந்து
மூச்சுமூட்ட விருந்து படைத்தாரே
முகவரியைத் தெரிந்து கொள்ள வேண்டாமா?
மோசம் போவது என்று முடிவா?
பாப்பாத்தி நானென்று
சட்டப் பேரவையிலே
சதுராடிக் காட்டியவர்
தாயாகி விட்டாரா?
தலைப்பெழுத்தே
மாறியதா தமிழனுக்கு?
அதே சட்டப் பேரவையிலே இது சூத்திரர்களின் அரசென்று
பிரகடனம் செய்தாரே - அவர்
உங்கள் அகராதியில் துரோகியா?

மீண்டும் மனுதர்மமா?

நீங்கள் கொடியா, கயிறா?
பழி சுமக்காதீர்கள்
பரிகசிக்கப்படுவீர்கள்
தவறு செய்யாதீர்கள்
தரமிழந்து போவீர்கள்!

பெரியார் வெறும்
உச்சாடனமல்ல!
அது ஒரு நுண்ணாடி!
நுணுகிப் பாருங்கள்
ஆரியக் கிருமிகளின்
அசைவுகள் தெரியும்
படம் எடுக்கும் பாம்புகூட
அழகு அழகுதான்!
பாஷாணம் அதன் பல்லில்!
பகுத்தறிவு இப்போது
பயன்படவில்லையென்றால்
வேறு எப்போது?

ஆட்டம் முடிந்த பிறகா?
அப்போதும்கூட
கருமாதிக்கும் வருவான் -
மீதி மிச்சத்தைச்
சுரண்டிப் போக!
எச்சரிக்கை! எச்சரிக்கை!

--------------- கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் 9-5-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதிய கவிதை

4 comments:

ELIYAVAN said...

very nice.

வெண்காட்டான் said...

mukkiyamaana vidayam. tamillarkaluku varalattru mukkiyathuvam vaaintha election ithu. ithil congress dmk thorkadikkappattal tamilnadu makkalai muttaal aakuvatharku muyarchikka mattarkal.
aakave sario pilaiyoo intha electionla congress thorkadikkapattal thaan tamillarkaluku mariyaathai payam varum.

engaluku veru vali kidayaathu. tamil unnarvaalarkal ellorum 3vathu anii uruvaai irkkukkalam. yaaruku theriyum kalaiger ippadi padu muttalthanamaaka iruppar endru.

karanam karunanithi poondra thoorokikal eniuum varuvarkal. antha ninail tamillarkal oru nalla theervai kuduthaal than manathoodu vala mudiyum. kaveri pirachai eppadi ehthanai pirachanaikalai karunanithi simpllaka congreeskukaka tamilarkalai emaathi iruppar. tamil makkale sinthiyungal.

ennava ennai poruthavari mukkiya vidayam DMK cogesssai illamal olippathu thaan. intha thadavai DMK congres vanthal athu kaalam kaalamaka tamilarkalai alikkum oru thorooka kootai vettri pera vaithathan moolam tamil makkal thangal thalaikalile maan alli poduvathu poondarthu.

ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! said...

கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களின் அற்புதமான தீர்க்க தரிசனம் இது.கருணாநிதியின் கழுத்தறுக்கிறோம் என்று தங்கள் கழுத்துக்களையே அறுத்துக்கொள்ளப் போகின்றார்கள்.ஈழத்தமிழரை அழிவிலிருந்து காப்பாற்றவென எழுந்த இவர்கள் ஈழத்தமிழர் அனைவரும் செத்தொழிந்த பிறகு வரும் தேர்தலில்
அதிகளவு அக்கறையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.எல்லா அரசியல் வாதிகளின் பிரசாரங்களுக்கும்,ஏமாற்றிற்கும் ஈழத்தமிழனின் இழவு வீட்டையே சாதனமாக்கியிருக்கிறார்கள் என்பது வேதனை.
தமிழ்சித்தன்

Unknown said...

The point is simple.Today who has taken what stand?. Who is doing what for whom?. Going by this she is getting the support of those who feel that DMK has betrayed them.Periyar is not the issue here. The inaction and the indifference of those who swear by Periyar is the issue. Is DK just another unit of DMK?.