Search This Blog

1.2.14

காந்தியார் கொலை - பெரியாரின் தொலைநோக்கு

எந்த நூலைப் படிப்பது? 


எந்த நூலைப் படிக்கவேண்டும்? என்பது குறித்து தந்தை பெரியார் கருத்துத் தெரிவித் துள்ளார்.

நீங்கள் எந்தப் புத்தகத்தைப் படித்தால்தான் என்ன பயன்? படிப்பது என்பது அறிவு உண்டா வதற்கு. ஆனால், நீங்கள் படிக்கும் புத்தகம் எல்லாம் மடமை வளர்ச்சிக்கும், மூட நம்பிக்கை ஏற்படவும் பயன்படுகிறது. அதனால்தான் இன்றும் நம் மக்கள் (1962 இல் எழுதியது) பகுத்தறிவற்றிருக்கிறார்கள்.

நீங்கள் குடிஅரசு, பகுத்தறிவு பதிப்பக புத்தகம் வாங்கிப் படித்தால் கட்டாயம் பகுத்தறிவுவாதியா வீர்கள். இந்த புத்தகங்கள் மதம், ஜாதி, நம் அரசியல் முதலிய துறைகளில் அவற்றில் உள்ள புரட்டுகளை விளக்கி உங்களை பகுத்தறிவுவாதிகளாக்கும்.

விலை மிக மிக மலிவுக்குப் பொதுநலத்தை முன்னிட்டே நட்டத்திற்குப் பதிக்கப்படுகிறது.

                       ----------------------------------------------- ஈ.வெ.ரா. (1962 இல்) எழுதியது.

இந்த வகையில் நாம் படிக்கவேண்டிய ஒரு நூல் காந்தியார் கொலை - அதிர்ச்சியூட்டும் தகவல்கள்! என்ற திராவிடர் கழக வெளியீடாகும்.

நேற்று (30.1.2014) சென்னைப் பெரியார் திடலில் மாணவர் இந்தியா சார்பில் நடைபெற்ற சிறப்புப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத்தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் இந்நூலிலிருந்து பல அரிய எடுத்துக்காட்டுகளைச் சொன்னபோது, மன்றம் நிரம்பி வழிந்த பார்வையாளர்கள் மத்தியில் அந்நூல் பெரும் ஈர்ப்பைப் பெற்றது.

கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கூறியதுபோல தலைவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவது ஒருபுறம் இருந்தாலும், காந்தியாரைப் பொறுத்தவரை, அவர் படுகொலை செய்யப்பட்ட அந்த நினைவு நாள் பல்வேறு முக்கிய சிந்தனை அலைகளைத் தட்டி எழுப்பக் கூடியதாகும்.

காந்தியார் படுகொலைபற்றி எத்தனையோ நூல்கள் வெளிவந்திருந்தாலும் இந்நூலுக்கு இணையானது வேறு ஒன்றும் இருக்க முடியாது. 208 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் நன்கொடை ரூ.100 மட்டும்தான்.

(இத்தனைப் பக்கங்கள் கொண்ட நூல் நூறு ரூபாய்க்கு வேறு எந்தப் பதிப்பகத்திலும் வாங்கப்படவே முடியாது).

14 தலைப்புகளும், பின் இணைப்புகளும் கொண்டது.

1. காந்தியார் மறைவு - பெரியார் செய்தி

(2) காந்தியார் மறைவு - பெரியார் உரை

(3) காந்தியார் முடிவு

(4) காந்தியாரைக் கொன்றவன் பெரிய ஜாதிப் பார்ப்பான்

(5) காந்தி இடத்தை நிறைவு செய்ய இந்த நாட்டில் எவரும் இல்லை.

(6) தனிப்பட்ட வெறியனின் செயல் அல்ல

(7) காந்தியார் முடிவுக்குப்பின்...

(8) காந்தியார் கொலை - பெரியாரின் தொலைநோக்கு

(9) இறந்த காந்திக்கு இரங்கல் - புரட்சிக்கவிஞர் பாரதி தாசன்

(10) காந்திக்கு ஞாபகச் சின்னம்

(11) பார்ப் பனர்களே கனவு பலியாது

(12) காந்தியார் மறைவுக்கு அனுதாபக் கூட்டம்

(13) காந்தியாரின் மறைவு குடிஅரசு ஆபீஸ் அனுதாபவிடுமுறை

(14) காந்தியார் மறைவும், இழப்பும்!

(15) இணைப்புகள் என்று பல அரிய தகவல்கள், ஆவணங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

காந்தியாரின் கொள்ளுப் பெயரனான துசார் ஏ.காந்தி எழுதிய டுநவ ரள முடைட ழுயனோ எனும் நூலில் சில பகுதிகள் மொழியாக்கம் செய்யப்பட்டு, பின் இணைப்பாக இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.

பார்ப்பனர்கள்தான் காந்தியாரைத் திட்டமிட்டுக் கொன்றனர் என்று தந்தை பெரியார் அவர்களின் அசைக்க முடியாத அந்தக் கருத்தை காந்தியாரின் கொள்ளுப் பெயரனே ஆதாரத்தோடு அடித்துச் சொல்லுகிறார் என்றால், அது என்ன சாதாரண மானதா? இந்தப் பகுதியை நேற்று மாலை மாணவர் இந்தியா அமைப்பின் சார்பில் சென்னைப் பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் எடுத்துக்காட்டினார். ஊசி விழுந்தால் ஊசி சத்தம் கேட்கும் அளவுக்கு அவ்வளவு அமைதியாக, ஆக்கபூர்வமாக அவற்றையெல்லாம் செவி மடுத்தனர். அந்த நூல் ஏராளமான அளவிற்குப் பார்வையாளர்களால் வாங்கவும் பட்டது.

காந்தியாரைப் படுகொலை செய்த கூட்டம் மீண்டும் பல வடிவங்களில் வலம் வருகிறது - ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க பல்வேறு தந்திரங்களைப் பின்னிக் கொண்டும் இருக்கிறது.

நூல்களின் ஆதிக்கத்தை வேரறுக்க திராவிடர் கழக வெளியீடுகள் - நூல்கள் பெரிதும் பயன்படும் - அவை போர் ஆயுதங்கள்!

இவ்வாண்டு சென்னையில் நடைபெற்ற புத்தகச் சந்தையில்கூட ரூபாய் 4 லட்சத்திற்கும் அதிகமாக விற்பனையானதானது - நன்னம்பிக்கையை ஏற்படுத்து கிறது. இளைஞர்கள் மத்தியில் நம்வெளியீடுகளைக் கொண்டு சேர்ப்பதை ஓர் இயக்கமாகக்கூட நடத்தலாம், வாழ்க பெரியார்!

---------------------------------------”விடுதலை” தலையங்கம் 31-1-2014

14 comments:

தமிழ் ஓவியா said...


சர்வாதிகாரமே சாதனைக்கேற்றது


பிரதிநிதித்துவத்தாலும், ஓட்டுகளாலும் எல்லாச் சீர்திருத்தமும் செய்துவிடலாம் என்று நினைப்பது முடியாத காரியமாகும். சில சீர்திருத்தங்கள் எதேச்சாதிகாரத் தினாலேயே செய்தாகவேண்டும்.

- (குடிஅரசு, 3.11.1929)

Read more: http://viduthalai.in/page-2/74455.html#ixzz2s1eQMTv1

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவுக் கவிஞர் தஞ்சை வாணன் மறைந்தாரே!


பகுத்தறிவுக் கவிஞர் அருமைத் தோழர் தஞ்சை வாணன் மறை வுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம். இளம் வயது தொட்டே தந்தை பெரியார் அவர்கள் மீதும் அவர்தம் கொள் கையின் மீதும் மதிப்பும், ஈர்ப்பும் கொண்டவர். அவர் அண்ணன் மானமிகு பாஷ்யம் உள்ளிட்டோர் பகுத்தறிவு - சுயமரியாதைக் கொள்கைகளில் மிகவும் ஈடுபாடு கொண்டவர்கள்.

கவியரங்கில் எங்கு பங்கு கொண்டாலும் தந்தை பெரியார் அவர்களை முன்னிறுத்தியே பாடக் கூடியவர். தந்தை பெரியார் பற்றி அவர் எழுதிய பாடல்களை கழகம் ஒலிநாடாவாக வெளியிட்ட துண்டு.

வானொலி, தொலைக்காட்சிகளில் பணியாற்றி தம் முத்திரைகளைப் பொறித்தவர். இவர் எழுதிய நாடகங்கள் பல. சிவாஜிகணேசன் இவர் எழுதிய நாடகங்களில் தமிழ்நாட்டின் பல இடங்களிலும் நடித்துள்ளார். பகுத்தறிவுக் கவிஞரை இழந்து வாடும் குடும் பத்தினருக்கு கழகத்தின் சார்பில் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாழ்க கவிஞர் தஞ்சை வாணன்!

சென்னை
31.1.2014

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் மறைந்த கவிஞரின் உடலுக்கு மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.

கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், மு.சென்னியப்பன் விடுதலை ராதா மற்றும் கழகத் தோழர்கள் உடன் சென்று இறுதி மரி யாதை செலுத்தினர். கவிஞரின் குடும்பத்தினருக்குக் கழகத் தலைவர் ஆறுதல் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/74423.html#ixzz2s1faSe2o

தமிழ் ஓவியா said...


தமிழக மீனவர்கள்மீது இலங்கை இராணுவம் தொடர் தாக்குதல் முதல் தேதி நடக்கும் டெசோ முடிவு செய்யும் கலைஞர் அளித்த பேட்டி


சென்னை, ஜன. 31- பேச்சு வார்த்தை இரு நாடுகளுக்கி டையே நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போதே இலங்கை இராவணும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதலைத் தொடுப்பது பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, பிப்ரவரி முதல் தேதி சென்னையில் கூடவிருக்கும் டெசோ கூட்டம் முடிவு செய்யும் என்றார் திமுக தலைவர் கலைஞர். பேட்டி வருமாறு:

செய்தியாளர் :- இன்றைய தினம் படிக்கப் பட்ட ஆளுநர் உரை திருப்திகரமாக இருந்ததா? மக்கள் பிரச்சினைக்காக எதுவு மில்லை என்று சொல்லப்படு கிறதே? சில கட்சிகள் வெளி நடப் பும் செய்திருக்கிறார்களே? உங்கள் கருத்து என்ன?

கலைஞர் :- வெளி நடப்புச் செய்த கட்சிகள் சார்பிலே சொல் லப்பட்ட கருத்துகள்தான் என் னுடைய கருத்தும், திராவிட முன் னேற்றக் கழகத்தின் கருத்தும்.

ஆளுநர் உரை எப்படி?

செய்தியாளர் :- இந்த ஆளு நர் உரையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

கலைஞர் :- அதிலே விவாதிப் பதற்கு ஒன்றும் இல்லை. விவா திப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதால் தான் ஆளுநர் உரை மீதான விவாதத்தையே மூன்று நாள்களுக்கு மட்டும் நடத்த விருக்கிறார்கள்.

செய்தியாளர் :- ஜெயலலிதா மீதான டான்சி வழக்கில் அவர் கடுமையாகக் குற்றஞ் சாட்டப் பட்டார். அதைப்போலவே இன் றைய தினம் உச்ச நீதிமன்றத்தில் வருமான வரித் துறை சார் பிலான வழக்கில் உச்சநீதிமன்றம் ஜெய லலிதாவின் மனுவைத் தள்ளுபடி செய்ததோடு, அந்த வழக்கினை கீழ்க் கோர்ட் 4 மாதங் களுக்குள் விசாரித்துத் தீர்ப்ப ளிக்க வேண்டுமென்றும் சொல் லியிருக்கிறதே?

கலைஞர் :- இந்தப் பிரச் சினை உச்ச நீதி மன்றத்திற்கும், முதலமைச்சர் ஜெயலலிதாவுக் கும் இடையே நடக்கின்ற நீதி குறித்த போராட்டம். அதிலே முடிவெடுக்க வேண்டியது ஜெய லலிதா தான். நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.

செய்தியாளர் :- ஜெயலலிதா மீது இவ்வளவு வழக்குகள் இருக் கும்போது அவர் பிரதமராக வரவேண்டுமென்று சிலர் சொல் கிறார்கள், சிலர் அது கனவுதான் என்கிறார்கள், உங்கள் கருத்து என்ன?


தமிழ் ஓவியா said...

கனவா? நனவா?

கலைஞர் :- அது கனவா, நனவா என்று எனக்குத் தெரி யாது. பிரதமர் ஆவதற்கு இப்ப டிப்பட்ட வழக்குகள் இடை யூறாக இருக்குமா என்றும் எனக்கு அதைப் பற்றிய சட்ட நுணுக்கங்கள் தெரியாது.

செய்தியாளர் :- இந்திய, இலங்கை மீனவர்களின் பிரதி நிதிகள் சந்தித்துப் பேசி சுமுக மாக முடிவெடுத்த பிறகும், இன் றைய தினம் இந்திய மீனவர்களை இலங்கை ராணுவம் கைது செய்திருக்கிறதே?

கலைஞர் :- அதுதான் இலங்கை ராணுவம்.

டெசோ முடிவு செய்யும்

செய்தியாளர் :- பேச்சுவார்த் தைக்குப் பிறகும் இவ்வாறு கைது செய்வதால், அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையை வஞ்சகம் என்று சொல்லலாமா?

கலைஞர் :- பெப்ரவரி 1ஆம் தேதியன்று டெசோ கூட்டம் நடைபெறவிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் இதைப் பற்றி விரிவா கப் பேசி முடிவு செய்வோம்.

செய்தியாளர் :- தி.மு.க., தே.மு.தி.க. இடையிலான கூட்ட ணிப் பேச்சுவார்த்தை எந்த நிலையிலே இருக்கிறது?

கலைஞர் :- எனக்குத் தெரிய து.

செய்தியாளர் :- தே.மு.தி.க. சார்பில் பிரேமலதா கூறும் போது, அழகிரி பிரச்சினை என் பது குடும்பத்திற்குள் நடக்கும் நாடகம் என்றெல்லாம் விமர் சித்திருக்கிறாரே?

கலைஞர் :- அவருக்குத் தெரிந்த அளவிற்கு நாடகம் பற்றி எனக்குத் தெரியாது.

மு.க. அழகிரி பற்றி

செய்தியாளர் :- மு.க. அழகிரி இன்று கொடுத்துள்ள பேட்டி யில் நடவடிக்கை எடுக்கப்பட்ட வர்கள் மீதான குற்றச்சாட்டு களை திரும்பப் பெற்றால்தான் சமாதானத் திற்கு வாய்ப்பு வரும் என்று சொல்லியிருக் கிறாரே?

கலைஞர் :- தி.மு. கழகத்தில் உள்ளவர்கள், தி.மு. கழக மாவட் டச் செயலாளர் மற்றும் செயற் குழு உறுப்பினர்கள் போன்றவர் களைப் பற்றி அபாண்டமாக பி.சி.ஆர். குற்றச்சாட்டை காவல் துறையினரிடம் சொல்லி, காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்த பிறகு, கட்சி அதை வேடிக்கை பார்த்துக் கொண் டிருக்க முடியாது.

இவ்வாறு திமுக தலைவர் கலைஞர் அவர்கள் பேட்டியளித் தார்.

Read more: http://viduthalai.in/page-8/74424.html#ixzz2s1fzs4u5

தமிழ் ஓவியா said...


கணவர் வருமானத்தை விட மனைவிக்கு அதிக வருவாய் இருப்பதால் ஜீவனாம்சம் தேவையில்லை: கருநாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு


பெங்களூரு, ஜன.31- கருநாடகாவில் மைசூர் மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் ராகவேந்திராவுக்கும், தென்கனரா மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் ரஷ்மிக்கும் 2003இல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளார். சில ஆண்டு களுக்கு பிறகு கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

மனைவியிடம் இருந்து மணவிலக்கு கோரி மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் ராகவேந்திரா கொடுத்த மனு நிராகரிக் கப்பட்டதை தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் திருமணம் முடிந்த பின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள எனது பெற்றொர் வீட்டில் வசித்தோம்.

எனது மனைவி மேல்படிப்பு படிப்பதற்காக தாவணகெரெ சென்றார். நான் மைசூரில் தனியாக மருத்துவமனை தொடங்கி நடத்தியதுடன், அங்கு வீடும் வாடகை எடுத்து வசித்து வருகிறேன்.

கடந்த 2006ஆம் ஆண்டு குழந்தைப் பேறுக்காக தாய் வீட்டிற்கு சென்ற எனது மனைவி மீண்டும் வீடு திரும்பவில்லை. பலமுறை வீட்டிற்கு வந்து குடும்பம் நடத்தும்படி வலியுறுத்தியும் கேட்கவில்லை. இதனிடையில் வரதட்சணை கேட்டு நானும், எனது பெற்றொரும் துன்புறுத்துவதாக எங்கள் மீது காவல் நிலையத்தில் பொய் வழக்கு கொடுத்தார்.

இவ்வளவு தொல்லை கொடுத்த வருடன் வாழ் விரும்பவில்லை என்று கூயிருந்தார். கணவர் ராகவேந்திராவின் புகாருக்கு பதில் மனுதாக்கல் செய்த ரஷ்மி, தனது கணவர் மற்றும் அவரது பெற்றோர் ரூ.20 லட்சம் வரதட்சணை கொண்டு வரும்படி தொல்லை கொடுத்தனர்.

கணவருடன் நான் வாழ மாமனார், மாமியார் வாய்ப்பு கொடுக்காமல் தடுத்தனர். என்னை சரியாக கவனித்து கொள்ளவில்லை என்று தெரிவித் திருந்தார்.

இவ்வழக்கை விசாரணை நடத்திய நீதிமன்றம், இருவரும் பிரியாமல் சேர்ந்து வாழ முயற்சிக்கும்படி ஆலோசனை வழங்கியது. அப்போது எனது பெற்றோருடன் வாழ பிடிக்கவில்லை என்றால், மைசூரில் நான் வாடகைக்கு எடுத்து வசித்து வரும் வீட்டிற்கு வரும்படி ராகவேந்திரா கேட்டார்.

அதற்கு ஒப்புகொள்ளாத ரஷ்மி, பெங்களூரில் வீடு வாடகை எடுத்தால் வசிப்பதாக கூறினார். ஆனால் அதை ராகவேந்திரா ஏற்றுகொள்ளவில்லை. எங்கு வசிப்பது என்ற விஷயத்தில் கணவன் மனைவி இடையில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இறுதியாக ராகவேந்திரா மணவிலக்கில் உறுதியானார். ரஷ்மி ஜீவனாம்சம் கேட்பதில் உறுதியாக இருந்தார்.

இந்த விவாகரத்து வழக்கு விசாரணை முடிந்து நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், வழக்கில் தொடர் புடைய கணவர், மனைவி இருவரும் சமூகத்தில் மருத்துவம் படித்த பட்டதாரியாக உயர்ந்த நிலையில் உள்ளனர். அவர்கள் இருவரில் ஏற்பட்ட மனக்கசப்பை போக்கி சுமுக வாழ்வுக்கு நீதிமன்றம் பல வாய்ப்புகள் கொடுத்தும் இருவரும் பயன்படுத்தி கொள்ள வில்லை. அவர்கள் சேர்ந்து வாழ நீதிமன்றம் எடுத்த முயற்சி அனைத்தும் தோல்வியில் முடிந்தது.

மேலும், மணவிலக்கு பெற்றுள்ள ரஷ்மி, தனது கணவரிடம் ஜீவனாம்சம் கேட்டுள்ளார். ரஷ்மியின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், கணவர் ராகவேந்திராவை விட கூடுதல் வருமானம் (மாதம் ரூ.1.30 லட்சம்) இருப்பதால், கணவர் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

அதே சமயத்தில் மகனுக்கு 7 வயது நிரம்பியுள்ளதால், தாயின் அரவணைப்பில் வசிப்பது அவசியம். குழந்தைக்கு தரமான கல்வி, உணவு, ஆடை உள்பட அவர் தேவைக்கான செலவுகளை ராகவேந்திரா வழங்க வேண்டும் என்று கூறி மணவிலக்கு வழங்கி தீர்ப்பளித்தார்.

Read more: http://viduthalai.in/page-7/74410.html#ixzz2s1gCMzpv

தமிழ் ஓவியா said...


குடிஅரசு கருவூலத்திலிருந்து திராவிட மாணவர் மாகாண மாநாடு


திராவிட மாணவர் மாகாண மாநாடு இதுவே முதல் மாநாடு எனலாம்.

மாநாட்டுக்கு தமிழ் நாட்டின் பல்வேறு பக்கங்களில் இருந்தும் வந்திருந்த மக்கள்சுமார் 5000 பேர்களுக்கு மேலிருந்தாலும் காலேஜ் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மாணவர்கள் தொகை 2000 பேர்களுக்குக் குறையாது என்றே சொல்லலாம்.

மொத்தத்தில் கருப்புச் சட்டையுடன் வந்தவர்கள் எண்ணிக்கை 1500 இளைஞர்களுக்கு மேலேயே இருக்கும்.

இதில் மாணவிகளும் வந்து கலந்து கொண்டி ருந்தது குறிப்பிடத் தகுந்ததாகும்.

மாநாடு, சேலம் காலேஜ் பிரின்சிபால் அறிஞர் எ. இராமசாமி கவுண்டர் அவர்கள் தலைமையில் நடந்தது என்பதோடு மற்றும் பல ஆசிரியர்களும் வந்து கலந்து கொண்டதானது மாநாட்டுக்கு மிகவும் பெருமையும், உற்சாகமும் ஊக்கமும் அளித்தது.

இரண்டு நாளும் மாநாடு ஒரு மாபெரும் கொண்டாட்டமாக இருந்தது.

மாநாட்டில் கலந்து கொண்ட மாணவர்களில் பெரும்பாலோர் நம் நாடும் இனமும், இன்று இருக்கும் நிலையில், நாம் நம் வாழ்நாளில் நல்ல நாட்களை பயனற்ற பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கழித்து அடிமைத்தனம் கற்றுக் கொண்டு இருப்பது பெரியதொரு நாட்டுத் துரோகமும், இனத் துரோகமுமான செய்கை என்று கருதித் துயருற்ற வண்ணம் காணப்பட்டதானது மிகவும் குறிப்பிட வேண்டிய காரியமாகும்.
அடுத்தாற் போல் அங்கு தாண்டவமாடிய உணர்ச்சி என்னவென்றால் இந்த மாநாடு முடிந்த வுடனே தங்களுக்கு ஏதாவது ஒரு பணி ஆற்றத் தலைவர் அனுமதி அளிக்க மாட்டாரா? என்கின்ற ஆர்வமும் எழுச்சியும் பொங்கி வழிந்ததேயாகும்.
(குடிஅரசு தொகுதி 34 பக்கம் 79)


தமிழ் ஓவியா said...

மத விடுமுறை மதமில்லாத சர்க்காரிலா?

மதமில்லாத சர்க்கார் என்று சொல்லிக் கொள்ளும் இந்திய யூனியன் சர்க்கார் மத சம்பந்தமான நாட்களுக்காக விடுமுறை விடுவதானது முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறபடியால், மத சம்பந்தமான நாட்களுக்கு விடுமுறை விடுவதை நிறுத்த வேண்டுமாய் இம்மாநாடு சர்க்காரைக் கேட்டுக் கொள்கிறது.

இராமாயண எதிர்ப்பைத் தீவிரமாகச் செய்!

இராமாயணம் திராவிட மக்களை இழிவுபடுத்தும் புராணம். ஆதலாலும், மதத்தின் பேரால் மக்களிடையே புகுத்தப்பட்டு மக்களின் அறிவு வளர்ச்சிக்கு பல விதங்களிலும் தடையேற்படுத் தியதோடு, மூடப் பழக்கங்கள் மக்களிடையே வளருவதற்கு இராமாயணமே காரணமாயிருப்பதனால் இராமாயண எதிர்ப்புப் பிரச்சாரத்தை நாட்டில் தீவிரமாக நடத்த வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது. - (குடிஅரசு தொகுதி 40 131ஆம் பக்கம்)

பகுத்தறிவும், சுயமரியாதையும்!

திராவிடர் கழகம் மற்ற காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எவ்விதத்திலும் விரோதமானதல்ல. அவைகளைவிட தீவிரமான கருத்துக்களையும், திட்டங்களையும் கொண்டதுதான் எங்கள் கழகம் என்று எங்கு வேண்டுமானாலும் சொல்வோம்.

சொல்லுவது மட்டுமல்ல, மெய்ப்பித்தும் காட்டுவோம்.

காங்கிரஸ்காரனோ, கம்யூனிஸ்டோ நெருங்கக்கூட பயப்படும் ஆத்மார்த்தத்த் துறையில் நாங்கள் அஞ்சாது குதிக்கிறோம்.

ஆத்மார்த்தக்காரர்கள் நம்மைக் கண்டு அஞ்சும் அளவுக்கு மக்களுக்குப் பகுத்தறிவு ஊட்டி வருகிறோம்.

புராணக்காரனுக்கு மேலாக தத்துவார்த்தம் பேசுகிறோம்.

அவன் தத்துவார்த்தம் பேசினால் அவனுக்கும் மேலாக வேதாந்தம் பேசுவோம்.

அவன் வேதாந்தத்தை விட்டு ராமகிருஷ்ணரின் சிஷ்யன் என்றால், நாங்கள் அவருக்கும் மேலான இராமலிங்கரின் சிஷ்யர்கள் என்போம்.

அவன் மோட்சத்தைப்பற்றிப் பேசினால், அதற்கும் நாங்கள் குறுக்குவழி காட்டியனுப்புவோம்.

சமுதாயத்தில் உண்மையான சமத்துவம் நிலவ வேண்டுமே என்பது தான் எங்கள் ஆசை. சமத்துவம் என்றால் சமுதாய இயல், பொருளா தார இயல், அரசியல், மொழியியல் ஆகிய எல்லாத் துறைகளிலும் சமத் துவ சுதந்திரம் வேண்டுமென்பதுதான் எங்கள் கோரிக்கை.

ஆகவே, எங்களைச் சற்று தீவிரவாதிகள் என்று யாராவது கூறலாமே தவிர, எங்களைப் பிற்போக்கானவர்கள் என்றோ, மத துவேஷி என்றோ கூற இயலாது.
குடிஅரசு தொகுதி 39 207ஆம் பக்கத்தில் இருப்பது

புண்ணிய ஸ்தலங்கள்

இதிகாசங்களைப் பற்றியும், புராணங்களைப் பற்றியும், கடவுள்களைப் பற்றியும் தனித்தனி மகுடமிட்டு குடிஅரசில் எழுதிக் கொண்டு வருவதை வாசகர்கள் கூர்ந்து கவனித்து வாசித்து வருகின்றார்கள் என்றே எண்ணுகின்றேன்.

அவற்றை எழுதி வருவதன் நோக்கமெல்லாம், ஒரு சில சயநலக்காரர்கள் தங்கள் நன்மையின் பொருட்டு எவ்வளவு ஆபாசமானவைகளையும், அசம்பாவிதமானவைகளையும் எழுதி வைத்துக் கொண்டு பிரமாதப்படுத்தி,

அவற்றையே மதம் என்றும், பக்தி என்றும், மோட்சத்திற்கு மார்க்கம் என்றும் பாமர மக்களை நம்பும்படியாகச் செய்து, மக்கள் அறிவையும், சுதந் திரத்தையும், சுயமரியாதையையும், ஒற்றுமையையும் கெடுத்து வருகின்றார்கள் என்பதை உலகத்திற்கு எடுத்துக்காட்டி, மக்கள் யாவரும் சமம் என்பதை யுணர்ந்து சுயமரியாதையோடு வாழ வேண்டு மென்பதுதான்.

மேற்படி சுயநலக்காரர்கள் சிற்சில இடங்களைப் பெரிய புண்ணிய ஸ்தலம் என்பதாக பெயர் கொடுத்து, அவற்றிற்கு ஏராளமான யோக்கிய தைகளைக் கற்பித்திருப்பதை, பகுத்தறிவற்ற மூட ஜனங்கள் புண்ணிய ஸ்தல யாத்திரை என்பதாகக் கருதி வெகு பணங்களைச் செலவு செய்து கொண்டு வருகின்றனர்.
தொகுப்பு: க. பழநிசாமி, தெ.புதுப்பட்டி

Read more: http://viduthalai.in/page2/74468.html#ixzz2s7XOs1nK

தமிழ் ஓவியா said...


வீதியில் நீதி தேவதை!



பார்ப்பான்
சூத்திரனைக் கொன்றால்
சிகைச்சேதம்!
பார்ப்பானை
சூத்திரன் கொன்றால்
சிரச்சேதம்!
பார்ப்பானை
பார்ப்பானே கொன்றால்?
மனுதர்மம்
என்ன சொல்லுவதோ!
நம் நீதிமன்றம்
சொன்ன தீர்ப்பால்...
கையிலிருந்த நியாயத் தராசு
களவாடப்பட்டு...
கருப்புத் துணியால்
கண்கள் கட்டப்பட்டு...
நினைவிழந்து
நிர்வாணமாய்...
வீதியில்
நீதி தேவதை!

- சீர்காழி கு.நா. இராமண்ணா

Read more: http://viduthalai.in/page3/74470.html#ixzz2s7Y9LnfY

தமிழ் ஓவியா said...


அய்.நா., பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம் அவசியம் இந்தியா வலியுறுத்தல்


அய்.நா.பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினராக ஆப்பிரிக்க கண்டம் இடம் பெறாதது அய்.நாவின் நம்பகத் தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளதாகவும் வரலாற்று அநீதிகளை ஒழிக்க அந்த சபையில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. அய்.நா.வில் நடைபெறும் பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் அடங்கிய குழு நியூயார்க் சென்றுள்ளது. இக்குழுவில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பிரினீத் கவுரும் இடம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் அய்.நா., பொதுச் சபையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆப்பிரிக்க வளர்ச்சிக்கான புதிய தோழமை என்ற விவாதத்தில் கலந்து கொண்டு பிரினீத் கவுர் பேசினார். அப்போது 75 சதவீத பணிகள் ஆப்பிரிக்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஒட்டு மொத்த ஆப்பிரிக்க நாடுகளும் அய்.நா.பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக இல்லாதது இந்த அவையின் நம்பகத் தன்மையில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்றார். மேலும் அவர் பேசியதாவது: உலக மயமாக்கல் நடைமுறையை வலுப்படுத்தவும் பல்வேறு நிலைகளில் ஜனநாயக வழிமுறைகளை நடைமுறைப்படுத்தவும் ஆப்பிரிக்காவுடன் இந்தியா கூட்டு வைத்துள்ளது. தற்கால நடைமுறைகளுக்கு ஏற்ற பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் அய்.நா.பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று ஆப்பிரிக்காவுடன் இணைந்து இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும். 2015-இல் அய்.நா பாதுகாப்பு சபையின் 70-ஆவது ஆண்டு தினம் கொண்டாடப்படவுள்ளது. இதில் 2005-இல் நடைபெற்ற உலக உச்சி மாநாட்டின் போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்படி பத்து ஆண்டுகளில் எந்தெந்த நாடுகள் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன என்பதை காணலாம். இது உலக நாடுகள் தங்களது சாதனைகளை எடுத்துரைக்க நல்லதொரு வாய்ப்பாக அமையும். ஆப்பிரிக்காவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையிலும் அது ஒட்டு மொத்த வளர்ச்சியும், செழிப்பும் அடைய ஏராளமான சவால்களை எதிர்கொள்ள வேண்டியது இருக்கிறது. கடும் வறட்சி, பசி, -பட்டினி ஊட்டச்சத்து பற்றாக்குறை, மோதல் போன்றவையே ஆப்பிரிக்காவின் வளர்ச்சிக்கு தடையாக இருந்து வருவதாகவும் பிரினீத் கவுர் தெரிவித்தார்.

- சட்டக்கதிர் - ஜனவரி 2014 - பக்கம் 62

Read more: http://viduthalai.in/page6/74480.html#ixzz2s7ZJlzB0

தமிழ் ஓவியா said...


கோயில்களில் நடக்கும் கொள்ளைகள்


வைஷ்ணவ தேவி கோவில் காணிக்கையில் 43 கிலோ போலி தங்கம்

ஜம்மு, பிப்.1- வைஷ் ணவ தேவி கோவிலுக்கு பக்தர்கள் அளித்த காணிக்கைகளில், 43 கிலோ தங்கமும், 57 கிலோ வெள்ளியும் போலி யானது என்ற தகவல் வெளியாகி உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து, 5,300 அடி உயரத்தில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத் தில், வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள் ளது. இந்த கோவிலில், கடந்த ஆண்டு, ஒரு கோடி பக்தர்கள், தரி சனம் மேற்கொண்டுள்ள னர். அவ்வாறு வரும் பக்தர்கள், கோவிலுக்கு, தங்கம், வெள்ளி மற்றும் பணத்தை காணிக்கை யாக அளிப்பர். இது குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்யப் பட்டது. அந்த மனு வுக்கு, கோவில் வாரிய நிர்வாக அதிகாரி அளித்த பதிலில் கூறியிருப்பதா வது: கடந்த, அய்ந்தாண் டுகளில், 193 கிலோ தங்கம் மற்றும் 81 ஆயிரம் கிலோ வெள்ளியும் காணிக்கையாக கிடைத் துள்ளது. இதில், 43 கிலோ தங்கம், 57 கிலோ வெள்ளி போலியானது என்பது தெரிய வந்துள் ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.போலி தங்கத்தை, உண்மை யான தங்கம் என, பக் தர்கள் நினைத்து கோவி லில் காணிக்கையாக அளித்தார்களா... என்ற விவரம் தெரிவிக்கப்பட வில்லை.

பூசாரிகள் குற்றச்சாட்டு சிவகங்கை, பிப்.1- தமிழகத்திலுள்ள இந்து கோயில்கள் உண்டியல் மூலம் ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வருவாயில், ரூ.41 கோடியை மட் டுமே அரசு கணக்கு காட்டுவதாக , கிராமக் கோவில் பூஜாரிகள் சங்க மாநில இணைச் செயலாளர் சோமசுந் தரம் குற்றம் சாட்டியுள் ளார்.

சமீபத்தில், சென்னை யில் கிராம கோயில்கள் பூஜாரிகள் சங்க நிறு வனர் வேதாந்தம் மீது சில சமூக விரோத கும் பல் தாக்குதல் நடத் தியது. இதனை கண்டித் தும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத் தியும், சிவகங்கையில் நேற்று, கிராம கோயில் பூஜாரி சங்கம், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கிராம கோயில் பூஜாரி கள் சங்க மாநில இணைச் செயலாளர் சோமசுந்த ரம் பேசியதாவது: தமி ழக இந்துக் கோவில் களில் இருந்து ஆண் டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வருமானம் கிடைக் கிறது. ஆனால், அரசு ரூ.41 கோடியை மட் டுமே கணக்கு காட்டு கிறது. இதில், 36 கோடி கோயில் சார்ந்த அதி காரி, ஊழியர்களுக்கு ஊதியமாக வழங்கப்படு கிறது என்ற புள்ளி விவ ரங்களை நம்ப முடிய வில்லை.

தமிழகம் முழுவதும் இந்துக் கோயில்களுக்கென நாலரை லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இவை அனைத்தும் தற் போது, சில அரசியல் வாதி மற்றும் அவர் களது பினாமிகளின் கைவசம் உள்ளன. ஏக் கருக்கு ஆண்டுக்கு ரூ.100 அல்லது ரூ.200க்கான வாடகை ரசீதை மட்டும் செலுத்தி விட்டு, கோடிக்கணக்கில் சம்பா தித்து, அரசை ஏமாற்று கின்றனர். கோயில் நிலங் கள் மீட்கப்பட வேண் டும். கோயில்கள் மூலம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான வரு வாய் கிடைக்கும் நிலை யில், கிராமப்புறத்தில் பெரும்பாலான இந்துக் கோயில்களில் ஒரு கால பூஜை, விளக்கு போடுவ தற்கு கூட, வழியின்றி, கிராமக்கோயில் பூஜாரி கள் சொந்த செலவில் பூஜை செய்கின்றனர். இது போன்ற நிலை மாற வேண்டும், என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/74490.html#ixzz2s7a0mzlY

தமிழ் ஓவியா said...


பரிதாபமே!



இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேஷம் காரணமல்ல; மக்கள்மீது உள்ள பரிதாபமே காரணம். - (குடிஅரசு, 8.9.1940)

தமிழ் ஓவியா said...


கண்ணோட்டம்: வைகோவின் வாயை அடைத்த மோடி அலை!


கருவாட்டுப் பானையை சுற்றி வரும் கபட பூனையைப் போல தமிழகத்திற்கு அடிக்கடி வருகிறார் நரேந்திர மோடி. ஏற்கெனவே திருச்சிக்கு வந்து கூட்டிவரப்பட்ட கூட்டத்தில் முழங்கிவிட்டுப் போனார். வேதாரண்யத்திற்கு வ.உ.சி. உப்பு காய்ச்சப்போனார் என்பன உள்ளிட்ட தவறான தகவல்களை கூறி பல ருக்கும் பீதி யூட்டினார். பின்பு அருண்ஷோரி எழுதிய புத்தகத்தை வெளியிடுவதற்காக சென்னை வந்தார். இப்போது மீண்டும் சென்னை வர இருக்கிறாராம். அவரை வரவேற்க வரவேற்புக்குழு ஒன்றை புரட்சி புயல் வைகோ அமைத்துள்ளாராம். பாஜக கூட இப்படியொரு வரவேற்புக் குழுவை அமைத்ததாக தகவல் இல்லை. ஆனால் இன்னமும் எத் தனை இடம் என்று கூட முடிவாகாத நிலையில் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படும் வைகோ வர வேற்புக் குழுவை அமைத்திருக்கிறார்.

விட்டால் இவரே கூட அன்றைக்கு புலி வேசம் போட்டு ஆடுவார் போலி ருக்கிறது. பாஜக விரித்த வலையில் தமிழ கத்தை பொறுத்தவரையில் மதிமுகவை தவிர வேறு எந்தக் கட்சியும் இதுவரை சிக்கவில்லை. தாயகத்தில் ஒருமுறை, கமலாலயத்தில் ஒருமுறை என்று இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கிறது. எனினும் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இந்த பேச்சுவார்த்தைகளில் காந்திய மக்கள் இயக்க தலைவர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் தமிழருவி மணியனும் பங்கேற்றாராம், திருமண தரகு வேலை பார்ப்பவர்கள் கூட ஜாதக பரிமாற்றத்தோடு நின்று விடுவார்கள். ஆனால் இவரோ கல்யாண வீட்டில் இலை எடுப்பது வரை இருப்பது போல பாஜகவுக்கு சேவை செய்து வருகிறார். அந்தளவுக்கு மோடியின் மீது `பாசம் பொங்கி வழிகிறது. நான் சென்னையில் கூட்டிய கூட்டத்தில்தான் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வாஜ்பாய் உறுதியளித்தார். என்னைத் தவிர இந்த திட்டத்திற்கு வேறு யாரும் உரிமை கோர முடியாது என்று முழங்குவார் வைகோ. ஆனால் பாஜக பக்கம் இவருடைய பாசப்பார்வை திரும்பிய வுடனேயே சேது சமுத்திரத் திட்டத்தில் சுற்றுச்சூழல் பிரச்சினை இருப்பதாக பேசத் தொடங்கிவிட்டார். இப்போதுதான் கடலுக்கு அடியில் பவளப்பாறைகளும் பாசிகளும் இருப்பது இவருக்கு தெரிய வந்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் ஆழமாக மூழ்கினால் ராமர் கட்டிய பாலமும் கூட அவருக்கு தெரியக்கூடும். அண்மைக் காலமாக மோடியை நினைக்கும் பொழுதெல்லாம் வைகோவுக்கு, ஆவேசம் அதிகமாகி வியர்த்துக் கொட்டத் தொடங்கி விடு கிறது. நாடெங்கும் மோடி அலை, வீடெங்கும் மோடி அலை, டீக் கடை கள், காடுகள், கழனிகள், எங்கெங்கும் மோடி அலை வீசுகிறது என்று புல் லரித்து, போர்வையை எடுத்து போர்த்திக் கொள்கிறார். தேர்தல் வர இன்னும் சில மாதங்கள் உள்ளன. அதற்குள் இவ் வளவு புல்லரிப்பு என்றால் இன்னும் போகப்போக என்னாகுமோ தெரிய வில்லை. டீக்கடை பாய்லரில் அடிக்கும் ஆவி கூட இவருக்கு மோடி அலை யாகத் தெரிகிறது.

பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா என்பவர் தந்தை பெரியாரை மிகமிக இழிவாகப் பேசியிருக்கிறார். பெரியார் வழி வந்ததாக கூறிக் கொள்ளும் வைகோ இதுகுறித்து இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை. உலகத்தில் எந்த மூலையில் என்ன நடந்தாலும் அதற்காக கண்டனம் முழங்கும் வைகோ பெரியாரைப் பழித்ததை, இழித்துரைத்ததை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏனோ? நாகரிகமான அரசியலுக்காகவே பாஜகவுக்கு பல்லக்கு தூக்குவதாக கூறிக்கொள்ளும் தமிழருவியும் இதைக் கண்டு கொள்ளவில்லை. இப்போதைக்கு இவர்களுக்கு பெரி யாரால் ஆகப் போவது ஒன்றுமில்லை. அதிகாலை வேளையில் மோடி பஜனை பாடிக்கொண்டு யாராவது வந்தால் அவர்களை உற்றுப் பாருங் கள். ஒரு வேளை அவர்கள் வைகோ, தமிழருவியாக கூட இருக்கக்கூடும்.

- மதுரை சொக்கன்
(நன்றி: தீக்கதிர் 29.1.2014

Read more: http://viduthalai.in/page-2/74497.html#ixzz2s7bQ1HJr

தமிழ் ஓவியா said...

தர்மத்தின் நிலை

நாட்டுக்கோட்டை நகரத்தாருள் முக்கியஸ்தரான ஸ்ரீமான் சர். அண்ணாமலை செட்டியார் அவர்கள் 20 லட்சம் ரூபாய் கல்விக் காக தர்மம் செய்திருப்பதாக அறிகின்றோம். ஆனால் அத்தருமம் எவ்வளவு தூரம் நாட்டிற்கோ அல்லது பார்ப்பனரல்லாத மக்களுக்கோ உபயோகப்படும் என்பது அறியக் கூடாததாகவே இருக்கின்றது. தவிர பார்ப்பனர் எந்த ஒரு சிறிய தர்மம் செய்தாலும் அது தங்கள் இனத் தாரைத் தவிர வேறு யாருக்கும் உபயோகப் படாதபடியே செய்வது வழக்கம். ஆனால் பார்ப்பனரல்லாதாரில் பெரிதும் குறிப்பாய் நாட்டுக் கோட்டை நகரத்தார் செய்யும் தருமங்கள் ஒவ்வொன்றும் பார்ப்பனரைப் போல் தமது சமுகத்தாராகிய பார்ப்பனரல் லாதாருக்கே உபயோகப்படும்படி செய்யா விட்டாலும் முழுதும் பார்ப்பனர் களுக்கே உபயோகப்படும்படி செய்வதே வழக்கமாகி வருகிறது. கோவில்கள், வேதபாட சாலைகள், சத்திரங்கள், அறுபதாம் கல்யாணங்கள் முதலி யவைகளில் செலவிடும் பணங்கள் போகும் வழிகளை அறிந்தவர்கள் தான் உண்மையை உணரலாம். அதோடு கூடவே, இப்படிப் பார்ப்பனருக்கே பெரிதும் தருமஞ் செய்த பல நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் கோடீஸ்வரர் களாயிருந்து பாப்பராகிவிட்டதையும் அறியலாம். இப்படி இவர்கள் பாப்பர்களாவதில் யாரும் வருத்தப்பட நியாய மிருப்பதாகவும் தெரியவில்லை. ஏனெனில் இவர்கள் எந்த சமுகத்தாரிடம் இருந்து நல்வழியிலேயோ, கெட்ட வழி யிலேயோ இப்படி கோடிக்கணக்கான பணம் சம்பாதித்தார் களோ அந்த சமுகத்தாருக்குத் துரோகம் செய்து பார்ப்ப னரல்லாத மக்களை வஞ்சித்துப் பிழைக்கும் ஒரு சமுகத் தாருக்கே அதைச் செலவு செய்வதானால் அப்படியவர்கள் தண்டனை அடைய வேண்டியது கிரமமா அல்லவா! ஆதலால் நமது சர். அண்ணாமலை செட்டியார் செய்திருக்கும் இந்த 20 லட்ச ரூபாய் தர்மமானது மேல்கண்ட குற்றத்திற்கு ஆளாகாமல் இருக்கத்தக்க மாதிரியில் தமது தர்மப் பணங்கள் முழுதும் உபயோகப்படும்படியாக தக்க ஏற்பாடும் செய்ய வேண்டும் என்று சர். அண்ணாமலை செட்டியார் நன்மையையும் பார்ப்பனரல்லாதார் நன்மையையும் நமது நாட்டின் நன்மையையும் உத்தேசித்து வேண்டிக் கொள்ளுகிறோம்.
- குடிஅரசு துணைத்தலையங்கம், 08.04.1928

Read more: http://viduthalai.in/page-7/74522.html#ixzz2s7cGncE4

தமிழ் ஓவியா said...

ரிவோல்ட்

ரிவோல்ட் என்னும் ஆங்கில வாரப் பத்திரிகை யின் பதிப்பாளராகவும், வெளியிடுவோராகவும் மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் பதிவு செய்து கொள்ள ஸ்ரீமதி நாகம்மாள் 19.04.1928இல் மறுபடியும் கோர்ட்டுக்குப் போனதில், மேஜிஸ்ட்ரேட் தான் இது விஷயமாய் போலீசாரை ரிப்போர்ட்டு கேட்டு விட்டிருப்பதாகவும் அது வந்த மேல்தான் பதிவு செய்துகொள்ள முடியும் என்றும் சொல்லி பதிவு செய்துகொள்ள மறுத்துவிட்டார்.

பிறகு போலீசார் ரிவோல்ட் என்னும் பத்திரிகையின் கொள்கை என்ன என்பது பற்றியும் மற்றும் பல விஷயங் களைப் பற்றியும் இரகசியமாகவும் வெளிப்படையாகவும் வேவு விசாரித்து வருவ தாகத் தெரிகிறது. ஸ்ரீமதி நாகம்மாள் அவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் கேட்ட கேள்விகளுக்கு அடியிற்கண்ட ஸ்டேட்மெண்டு எழுதிக் கொடுக் கப்பட்டிருக்கின்றது.

ஈரோடு டவுன் கச்சேரி வீதியிலிருக்கும் உண்மை விளக்கம் பிரஸ் புரோப்ரைட்ரெஸ் ஸ்ரீமதி நாகம்மாள் எழுதிக் கொடுத்த ஸ்டேட்மெண்ட்:- இப்பவும் மேற்படி பிரசில் ரிவோல்ட் என்கின்ற ஆங்கில வாரப்பத்திரிகை நடத்துவதன் கருத்து, இப்போது நான் பதிப்பாளராயிருந்து நடத்தும் குடிஅரசு என்னும் தமிழ் வாரப்பத்திரிகையின் கொள்கைகளையே முக்கியமாய்க் கொண்டு நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சுநஎடிடவ என்கிற வார்த்தைக்கு நான் எடுத்துக் கொண்ட அர்த்தம் கட்டுப்பாட்டை உடைத்தல் என்பது. அதாவது மனித தர்மத்துக்கும் மனித இயற்கைக்கும் விரோதமாக அரசியலிலானாலும் சரி, மத இயலிலானாலும் சரி, அதிகார இயலி லானாலும் சரி, முதலாளி இயலிலானா லும் சரி, ஆண் இயலிலானாலும் சரி மற்றும் எவைகளி லானாலும் சரி அவைகளினால் ஏற்படும் இயற் கைக்கும் அறி வுக்கும் மாறுபட்ட கட்டுப்பாடுகளை உடைத்து உலகமும் அதன் இன்பமும் எல் லோருக்கும் பொது என்பதும் மக்கள் யாவரும் சமம் என்பதுமான கொள்கையை மனச்சாட்சிப்படி சாத்தியமான வழிகளில் பிரச்சாரம் செய்வதே அதன் நோக்கம். இதற்கு பத்திராதிபராக எனது கணவர் ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் இருப்பார். இதன்மேல் போலீசாரின் அறிக்கை இன்னது என்றும் மாஜிஸ்ட்ரேட் எப்பொழுது பதிவு செய்து கொள்வார் என்பதும் குறிப்பாய்த் தெரிய வில்லை.

- குடிஅரசு - துணைத் தலையங்கம் - 22.04.1928

Read more: http://viduthalai.in/page-7/74522.html#ixzz2s7cPz0M5