Search This Blog

5.1.14

பெரியாரின் மேடைப் பேச்சு! - தாலியைக் கழற்றி வீசிய மணமகள் !!

பெரியாரின் மேடைப் பேச்சு!

தமிழ்நாட்டின் பொதுவாழ்வில் மேடைப்பேச்சை ஒரு கலையாகவே மாற்றிய பெருமை தந்தை பெரியாரையே சாரும்.

மேடைப் பேச்சுக்குப் பெரியார் கூறும் இலக்கணம் முக்கியமானது. கோடைக் காலங்களில் தந்தை பெரியார் ஈரோட்டில் மாணவர்களுக்குப் பேச்சுப் பயிற்சி அளிக்கும் பயிற்சி முகாம்களை நடத்துவார். அதில் பயிற்சி பெற்றவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் பிற்காலத்தில் தலைசிறந்த சொற்பொழிவாளர்கள் என்று பெயர் எடுத்தவர்கள்.

அப்படி பயிற்சி அளிக்கப்பட்டவர்களை பிரச்சாரத் துக்கும் அனுப்பி வைப்பார். பேச்சு எப்படி இருக்க வேண்டும்? பெரியார் கூறுகிறார்:

அடுக்கடுக்காகப் பேச வேண்டுமென்றும், அலங்காரமாகப் பேச வேண்டுமென்றும், மோனை எதுகையாகப் பேச வேண்டுமென்றும் சிலர் இன்னும் ஆசைப்படுகிறார்கள். இதற்காக பல கருத்துக்களையும் பல பயனற்ற சொற்களையும் கொண்டு வந்து குவித்தும் எடுத்துக்கொண்ட பொருளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் செய்து பாழாக்குகின்றனர்.

இந்த நோய் இன்று மாணவருக்கு அதிகம் உண்டு. என்றாலும் இது பேச்சுக்கு வந்த பெருநோய் என்றே நான் சொல்லுவேன் என்று சேலம் செவ்வாய்ப் பேட்டையில் சொற்பொழிவுப் பயிற்சிக் கழகத் துவக்க விழாவிற்குத் தலைமையேற்று உரையாற்றுகையில் குறிப்பிட்டதாகும் 1949இல். (23.10.1949 - விடுதலை 6.11.1949)

பேச்சுப் பயன், கேட்பவர்களுக்கு பலன் ஏற்படுத்துவ தாக இருக்க வேண்டும் என்பார் தந்தை பெரியார்.

தந்தை பெரியாரின் மேடைப் பேச்சில் எதுகை மோனைகளைக் காண முடியாது. ஆனால் அது மக்களுக்குப் புரியும் அவர்களின் மொழியாகவே இருக்கும். இதுபற்றி முன்னால் முதல் அமைச்சரும், தந்தை பெரியார் அவர்களிடத்தில் பலவகைகளில் பயிற்சி பெற்றவருமான கலைஞர் அவர்கள் குறிப்பிட் டுள்ளார், எங்களுடைய அழகு தமிழைவிட தந்தை பெரியாரின் கொச்சைத் தமிழ்தான் வென்றது என்று குறிப்பிட்டுள்ளதும் இங்கு எடுத்துக்காட்டத் தகுந்த தாகும்.

மயிலாடுதுறைப் பொதுக்கூட்டம் (8.9.1956) ஒன்றில் பெரியார் நான்கரை மணி நேரம் பேசினார் என்றால் நம்ப முடிகிறதா?

அவ்வளவு நேரம் பேசினாலும் மக்கள் கேட்டார்கள் என்றால், அந்தப் பேச்சில் இயல்பு இருந்தது; செயற்கை இல்லை; மக்களுக்குத் தேவையானவையும் இருந்தன என்பதுதான் இதற்குக் காரணம்.

சுயமரியாதைத் திருமண மேடையை தந்தை பெரியார் பயன்படுத்திய விதமே அலாதி. ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி அது என்றாலும் அந்த மேடையை மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை, பண்பாட்டுப் படையெடுப்பு, சிக்கனம், மக்கள் பேறு உள்ளடக்கிய ஒட்டுமொத்த சமுதாயத் துக்கே தேவையான - சமுதாய மாற்றத்துக்கு அவசிய மான பல்பொருள் கொள்கலனாகவே இருந்தது.

அந்த மேடையை பெரியார் ஏன் அப்படி பயன் படுத்தினார்? அதற்கு அவரே காரணமும் கூறுகிறார்:

நான் பொதுக்கூட்டம் போட்டால் வராதவர்கள், நான் மாநாடு போட்டால் கேட்க விரும்பாதவர்கள் இந்தத் திருமணத்திற்கு உற்றார் உறவினர்கள் என்கிற முறையில் வந்துள்ளீர்கள். இந்தச் சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனமாகும் என்று குறிப்பிட்டு பல மணிநேரம் சிந்தனையும் சிரிப்பும் சேர்ந்து குதூகலிக்கும் உரையை நிகழ்த்துவார் பெரியார்.

செய்யாறுக்குப் பக்கத்தில் வாழ்குடை என்னும் ஊரில் பெரியார் தொண்டர் வி.எஸ்.கிருஷ்ணசாமி என்பவர் போலீஸ்காரர். அவர் திருமணம் பெரியார் தலைமையில் நடந்தது. மணமகன் தாலியும் கட்டினார். பெரியாரே தாலியையும் எடுத்துக் கொடுத்தார்.

அதற்குப் பின் தாலி என்பது அடிமையின் சின்னம்; ஓர் ஆணின் உடைமை என்பதற்கு அடையாளம். பெண்ணுக் குத் திருமணம் ஆகிவிட்டது என்பதற்கு அடையாளம்தான் தாலி என்று காரணம் சொல்லப்படுமேயானால், அதே கேள்வி ஆண்கள் மீதும் இருக்க வேண்டாமா என்று வினா எழுப்பினார்.

இதைக் கேட்ட மணமகள் கழுத்தில் கட்டப்பட்ட தாலியைக் கழற்றி மேடை மீது வீசினார். எல்லோருக்கும் அதிர்ச்சி! ஆனாலும் அது நடந்தது. ஒரு பேச்சுக்கு என்ன வலிமை என்பது தந்தை பெரியார் அவர்களின் சொற்பொழிவு மூலம் அறியலாம்.

1929ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி. மறைந்த முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் கூறிய சுவையான தகவல் ஒன்றுண்டு. இதோ கி.ஆ.பெ. பேசுகிறார்:

1929இல் நானும் பெரியாரும் திருநெல்வேலியில் ஒரு சொற்பொழிவுக்காகச் சென்றிருந்தோம்.

எங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த இல்லத்தை நாங்கள் அடைந்ததும், எதிர்ப்பாளர்கள் அன்றைய கூட்டத்தை நடக்கவிடாமல் செய்வதற்காக அச்சடித்து இருந்த எதிர்ப்பு நோட்டீசுகள் சிலவற்றைக் கண்டோம். அதில் பெரியார் புராணங்களையெல்லாம் பொய் என்று சொன்னவர். நாத்திகர்-பெரியார். அவரை நெல்லையில் பேசவிடக் கூடாது என்றிருந்தது.
கூட்டம் மாலை 6 மணிக்கு என்பது எங்களுக்குத் தெரியும். மணி 6 ஆகி 6.30-ம் ஆயிற்று. எங்களை அழைத் தவர்களும் அங்கே வரவில்லை. ஆகவே நான் பெரியாரிடம், நாம் பேசாமல் திரும்பிப் போய்விடுவது நல்லது என்றேன். அவரும் சரி என்று ரயில் நிலையத்திற்குப் போக ஏற்பாடு செய்யும்படி சொன்னார். நான் போய் எட்டணாவுக்குப் பேசி ஒரு குதிரை வண்டியைக் கூட்டி வந்தேன்.

வண்டியில் முதலில் என்னை ஏறச் சொல்லிவிட்டு, வண்டியில் பின் ஏறி அமர்ந்து பெரியார் வண்டிக்காரரிடம் கூட்டம் நடக்கும் இடத்தின் வழியாக ரயிலடிக்குப் போகும் படிச் சொன்னார். அந்த இடம் வந்ததும் பெரியார் பார்த் தார். சுமார் அய்நூறு, அறுநூறு பேர்கள் அங்கு எங்கள் பேச்சைக் கேட்கக் கூடியிருந்தனர். மேடையில் மேசை, நாற்காலிகள் எல்லாம் இல்லை. எங்களை வரவழைத்த ஆட்களும் இல்லை.

உடனே பெரியார் வண்டியை நிறுத்தும்படி சொல்லிக் கீழே இறங்கினார். தனியாகவே போய் மேடையில் ஏறினார். பொதுமக்களே! நான் உங்கள்முன் இப்போது பேச வரவில்லை. ஒரு உண்மையைச் சொல்லிப் போகவே வந்தேன். புராணங்களை பொய் என்று சொன்னதாக என்னை எதிர்த்து நோட்டீசு போட்டிருக்கிறார்கள். அது நான் சொல்லவில்லை.

சைவப் புராணங்களை எல்லாம் பொய் என்று கண்டுபிடித்துச் சொன்னவர்கள் வைணவப் பண்டிதர்கள். வைணவப் புராணங்களை யெல்லாம் பொய் என்று கண்டுபிடித்துச் சொன்னவர்கள் சைவப் பண்டிதர்கள். இந்த இரண்டு புராணங்களுமே பொய்யாக இருக்குமோ என்று நான் எண்ணியதுண்டு.
அந்தப் புராணங்களைப் பொய் என்று சொன்னவர்கள் சைவ-வைணவப் பண்டிதர் கள்தான். இதைச் சொல்லிப் போகத்தான் வந்தேன். என் மேல் பழி போடாதீர்கள் என்று சொன்னதும் ஓயாமல் கைதட்டி மக்கள் ஆரவாரம் செய்தார்கள். தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் பேசிக் கொண்டே இருந்தார். அனைவரும் அமைதியாக இருந்து கேட்டார்கள்.

அந்தக் காலத்தில், பெரியாரும் நானும் சேர்ந்து பிரச்சாரப் பணியில் ஈடுபட்டதில் நடந்த இம்மாதிரி நிகழ்ச்சிகள் பல என் நினைவை விட்டு அகலவில்லை என்று கி.ஆ.பெ. கூறுகிறார்: எதிர்ப்பான ஒரு சூழலிலும் கூட பெரியாரின் மேடைப் பேச்சு எத்தகைய இலாவகமாக இருந்து மக்களை ஈர்த்தது என்பதைக் கவனிக்க வேண்டும்.

தீண்டாமையைப் பற்றி பேசவந்த தந்தை பெரியார் அதனை எப்படி விமர்சிக்கிறார்?

மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது; கண்ணில் படக்கூடாது; தெருவில் நடக்கக் கூடாது; கோயிலுக்குள் போகக் கூடாது; குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது என்கின்றவை போன்ற கொள்கை தாண்டவமாடும் ஒரு நாட்டை, பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக் குழம்பால் எரிக்காமலோ, சமுத்திரம் பொங்கி மூழ்கச் செய்யாமலோ, பூமிப் பிளவில் அமிழச் செய் யாமலோ, சண்டமாருதத்தால் துகளாக்காமலோ விட்டி ருப்பதைப் பார்த்த பிறகும்கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும் அவர் நீதிமான் என்றும் சர்வ தயாபரர் என்றும் யாராவது சொல்ல வந்தால், அவர்களை என்னவென்று நினைப்பது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இம்மாதிரி கொடுமைப்படுத்தி, தாழ்த்தப்பட்ட ஒரு மாபெரும் மக்கள் சமூகம் இன்னும் எத்தனை நாளைக் குத்தான் பொறுமையோடும் சாந்தத்தோடும் அஹிம்சா தர்மத்தோடும் இருக்க வேண்டும் என்று விரும்புகின் றீர்கள்? இம்மாதிரியான மக்கள் இன்னும் ஒரு நாட்டில் இருந்துகொண்டு உயிர்வாழ்வதை விட, அவர்கள் இம் முயற் சியில் உயிர் துறப்பதை உண்மையிலேயே தப்பு என்று யாராவது நினைக்கின்றீர்களா? என்று பேசினார்.
(நூல்: தமிழர் தலைவர்)

கோபம் கொப்பளித்தாலும் கேட்பவர்கள் மத்தியில் நியாய உணர்வைத் தூண்டுகிறார்  இல்லையா?

தஞ்சாவூரில் தந்தை பெரியார் பிறந்த நாளில் வயதைக் கணக்கிட்டு பல்வேறு பொருள்களை அன்பளிப்பாக அளித்தனர்.

அவற்றைப் பெற்றுக் கொண்டு தந்தை பெரியார் பேசுகிறார்.
நான் இந்த ஊருக்கு காங்கிரஸ்காரனாக வந்து பேசியிருக்கிறேன்; சுயமரியாதை இயக்கத் தலைவராக வந்து பேசி இருக்கிறேன்.
நீதிக்கட்சித் தலைவராக வந்து பேசி இருக்கிறேன்.

என்னுடைய கூட்டத்தில் பாம்பை விடுவார்கள் - பன்றியை விடுவார்கள் - கலாட்டா செய்வார்கள்.

இப்பொழுது அதே ஊரில் அதே இடத்தில் அதே ராமசாமியாகிய நான்தான் பேசுகிறேன். ஏராளமான பரிசுப் பொருள்களையும் கொடுத்துள்ளீர்கள். எனக்கு ஒரு சந்தேகம்.

நான் ஏதாவது கொள்கையில் பல்டி அடித்திருக் கிறேனா? அல்லது உங்களுக்குப் புத்தி வந்தது என்று காட்டிக் கொள்கிறீர்களா?
என்று கேட்டாரே பார்க்கலாம். அடுத்துச் சொன்னதுதான் முக்கியம். 

என்னைப் பொறுத்தவரை நான் கொள்கையில் தீவிரமாகத்தான் இருந்து வந்திருக்கிறேன். அதில் மாற்றமில்லை. அப்படியென்றால் உங்களுக்குப் புத்தி வந்திருக்கிறது என்று காட்டிக் கொள்ளத்தான் இந்தப் பரிசுகளைக் கொடுத்துள்ளீர்கள் என்று பேசினார்.

இப்படிப் பேசக்கூடிய தலைவரை உலகம் கண்டதில்லை. பரிசு கொடுத்தவர்களையே புதிய கோணத்தில் சிந்திக்க வைக்கும் திறனல்லவா இது!

குடிஅரசு இதழை 1925இல் தொடங்கியபோது அதன் முதல் தலையங்கத்தில் குறிப்பிட்டார். (2.5.1925).

நண்பரே யாயினும் ஆகுக! அவர்தம் சொல்லும், செயலும் தேச விடுதலைக்குக் கேடு சூழ்வதாயின் அஞ்சாது  கண்டித்து ஒதுக்கப்படும் என்றாரே - அதுதான் தந்தை பெரியார் அவர்களுக்கே உரித்தான தனித்தன்மை.


தந்தை பெரியார் அவர்களின் இத்தகைய பேச்சாற் றலை, அவரின் இனிய நண்பரான தமிழ்த்தென்றல் திரு.வி.க. கூறுகிறார்.

நாயக்கர் பேச்சில் கருத்துச் செலுத்தாத காலமுண்டு. அவர் பேச்சில் கருத்துச் செலுத்திய பின்னர், தமிழ்நாட்டுக் காளமேகமானார். நாயக்கர் பேச்சு மழையாகும், கன மழையாகும்; கல் மழையாகும். மழை மூன்று மணி நேரம் - நான்கு மணி நேரம் பொழியும் என்றார் தமிழ்த்தென்றல் திரு.வி.க.

பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களே தந்தை பெரியார் சொற்பொழிவு பற்றி ஆனந்த விகடனில் ஒருமுறை எழுதினார்.
சாதாரணமாக இவருடைய பிரசங்கங்கள் மூன்று மணி நேரத்திற்குக் குறைவது கிடையாது. இந்த அம்சத்தில் தென்னாட்டு ராமசாமியார் வடநாட்டுப் பண்டித மாளவியாவை ஒத்தவர் ஆவார். ஆனால் இருவருக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு.

பண்டிதரின் பிரசங்கத்தை அரைமணி நேரத்திற்கு மேல் என்னால் உட்கார்ந்து கேட்க முடியாது.

ஆனால் ராமசாமியார் எவ்வளவுதான் நீட்டினாலும் அவருடைய பேச்சில் அலுப்புத் தோன்றுவது கிடையாது. தமிழ்நாட்டில் ராமசாமியாரின் பிரசங்கம் ஒன்றை மட்டும்தான் என்னால் மூன்று மணிநேரம் உட்கார்ந்து கேட்க முடியும் என்று தயங்காமல் கூறுவேன். அவர் உலக அனுபவம் என்னும் கலாசாலையில் முற்று முணர்ந்த பேராசிரியர் என்பதில் சந்தேகமில்லை.

எங்கி ருந்துதான் உவமானங்களும், கதைகளும், கற்பனை களும் கிடைக்கின்றனவோ நான் அறியேன் என்று கல்கி குறிப்பிட்டதையும் எடுத்துக் காட்டுவது பொருத்த மானது. அதனால்தான் அறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் தந்தை பெரியார் என்று குறிப்பிட்டார்.

இந்தப் பேராசிரியரின் வகுப்புகள் மாலை நேரம் தொடங்கும் என்றார். பேச்சு - பயன் உள்ளதாகவும் இருக்கும்; பலனை விளைவிப்பதாகவும் இருக்கும் என்பதற்குத் தந்தை பெரியாரின் மேடைப் பேச்சே இலக்கணமும் இலக்கியமும் ஆகும்.

வாழ்க பெரியார்!   வளர்க பகுத்தறிவு!!

--------------------------தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி 24.12.2013 அன்று மாலை கலி. பூங்குன்றன்,துணைத் தலைவர், திராவிடர் கழகம் அவர்களால் வானொலியில் நிகழ்த்தப்பட்ட உரை

21 comments:

தமிழ் ஓவியா said...


கழகத்தின் இந்தப் புரட்சிக்கு ஈடு ஏது? பாடையை சுடுகாடு வரை தூக்கிச் சென்று கழகப் பெண்கள் புரட்சி!


திருவாரூர், ஜன.5- சுடுகாடு வரை பாடையைத் தூக்கிச்சென்று கருஞ்சட்டை மகளிர் அணியினர் புரட்சி செய்தனர்.

உலகில் எத்தனையோ சமூக அமைப் புகள், கட்சிகள் தோன்றியிருக்கலாம்; கிடுகிடுக்க வைத்த கம்யூனிஸ்டுக் கட்சி கள் உலகின் பல பாகங்களை அதிர வைத்துள்ளன.

ஆனால், சமுதாய அடித்தளத்தையே புரட்டிப் போடும் பூகம்பக் கரங்களைக் கொண்ட புரட்சி இயக்கமாம் திராவிடர் கழகத்திற்கு இணை ஏது? கருஞ்சட்டைப் பாசறைக்கு ஈடு ஏது?

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்று கேட்ட காலத்தைக் கழுவிலேற்றிய இயக்கம் ஏது?

இருட்டுப் பூச்சிகளாய், ஜன்னல் களையே காணாதவர்களாய், வெளிச்ச மத்தாப்புகளையே காணாதவர்களாக ஆக்கப்பட்ட, வயதுக்கு வந்த பெண்களை நீயும் மானுடத்தின் ஒரு கூறு - கூண்டை விட்டுவெளியே வா பெண்ணே!

என்று குரல் கொடுத்து கல்விக் கண்களைத் திறந்து உத்தியோகப் படிக்கட்டுகளை மிதிக்கச் செய்து கணவன் கையைப் பார்த்து நத்தி வாழவேண்டிய நயவஞ்சக சமூக அமைப்பின் வேரை நசுக்கி எறிந்து, பொருளீட்டும் புதிய பொருளாதாரக் கணக்கையும் திறந்து, ஆணுக்குப் பெண் சமானம் என்ற சரித்திரத்தைச் சமைத்தது தந்தை பெரியாரின் இந்த இயக்கம் அல்லவா!

தொட்டிலை ஆட்டும் கை தொல் லுலகை ஆளும் கை என்று புரட்சிக்கவி ஞரைப் பாட வைத்ததும் இந்தப் பகுத்தறிவு இயக்கம்தான்.

தாலி பெண்களுக்கு வேலி என்பதைக் காலி செய்த கருத்துக் கனலையும் தந்தது இந்த இயக்கம்தான்.

மாவோ செய்யாத மகத்தான புரட்சி களையெல்லாம் செய்துகாட்டி வருகிறோம். விதவைப் பெண்களுக்குப் பூச்சூட்டு விழாவை நடத்திக் காட்டியாயிற்று.

அடக்கம் பெண்களுக்கு அணிகலன் என்று சொன்னது அரும் பண்புக்காக அல்ல - அடங்கிக் கூனிக் கிடக்கும் ஒரு மனப்பான்மையை அவர்களின் ஆழ்மனத் தில் ஊன்றவேதான்.

ஆண் - பெண் வேறுபாடு தெரியாத ஆடையை அணிவீர்; பெயர்களில்கூட பால் வேறுபாடு தேவையில்லை என்று பளிச்சென்று சொன்னவரும் நம் பகுத்தறிவுப் பகலவன் பெரியாரே!

தந்தை செத்தாலும் சரி, தாய் செத்தாலும் சரி, மணாளன் செத்தாலும் சரி, மகன் செத்தாலும் சரி, ஒரு பெண் சுடுகாடுவரை செல்ல முடியுமா?

இந்த இரும்பு வேலிகளையெல்லாம் நொறுக்கிய இலட்சியத் தீபத்தை ஏந்தி நிற்கும் இனமானப் பெரும்படைதான் திராவிடர் கழகம்.

இதோ பாருங்கள், எங்கள் கருஞ் சட்டை மகளிர் அணியினரை.

திருவாரூர், திராவிடர் கழகத் தீரர் களின் கோட்டை ஆயிற்றே! நகர கழகத் துணைத் தலைவர் தியாகத்தீயில் புடம் போட்ட கருப்புத் தங்கம் அறிவுக்கண்ணு அவர்கள் மறைந்தார் - அந்த வட்டாரமே துக்கத்தின் பிடியில் சிக்கி விம்மியது என்றாலும், தவிர்க்க முடியாததை ஏற்கத்தானே வேண்டும்.

அவருடைய இறுதி ஊர்வலம் எப்படிச் சென்றது தெரியுமா? திருவாரூரே தம் கண்களை அகலத் திறந்து உண்மையா? நம்ப முடியவில்லையே? இப்படிக்கூட நடக்குமா? என்று அந்த ஒரு நிமிடம் நிலைகுலைந்தே போனார்கள்.

ஆம், அந்தக் கொள்கை வீரரின் பாடையை, பெண்களே சுடுகாடுவரை தூக்கிச் சென்று, காலம் காலமாய் கட்டிப் போட்டு வந்த அந்த ஆணாதிக்க அடக்கு முறை சமூக அமைப்பின் கட்டை உடைத்து, அதனைச் சுடுகாட்டிலே எரித்துவிட் டார்களே!

இதற்கு முன்பும் திருவரங்கம் பெரியார் பெருந்தொண்டர் கோ.பாலு, மயிலாடு துறை நகர கழகத் தலைவர் ந.தியாகராச னின் அன்னையார் மறைந்தபோது இந்தப் புரட்சியை நடத்திக் காட்டினர்.

பெரியாருக்குப் பின் திராவிடர் கழகம்? கேள்வி கேட்போரே! இந்தச் செயல்களைப் பார்த்த பிறகாவது, கோணல் வாயை மூடிக் கொள்க!

திருவாரூர் கருஞ்சட்டை சகோதரி களே! உங்கள் செயலுக்கு ஒரு வணக்கம் - உங்களால் திருந்தட்டும் பழைமைச் சமூகச் சழக்குகள்!

Read more: http://viduthalai.in/e-paper/73137.html#ixzz2pWwIhQC1

தமிழ் ஓவியா said...


தாழ்த்தப்பட்டோரே, பிற்படுத்தப்பட்டோரே உங்களுக்குத் தகுதி இல்லையாம்!

சமூக நீதிக் கொள்கையில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி சாதாரணமாக விழவில்லை; தந்தை பெரியார் சொல்லுவதுபோல தடுக்கி விழுந்தவன் அரிவாள் மணையில் விழுந்தது போல அல்லவா விழுந்திருக்கிறது!

அக்கட்சியின் அதிகாரபூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். (பக்கம் 4) இடஒதுக்கீட்டுக்கு இன்னல் என்றால் பொறுக்க மாட்டோம் என்று பொங்கு கிறாரே கருணாநிதி? என்று பெட்டிச் செய்தியை வெளியிட்டுள்ளது.

எதற்கெடுத்தாலும் கருணாநிதி கருணாநிதி என்ற காமாலைக் கண்ணனின் (Phobia) பார்வை தானா?

சமூக நீதியைப் பற்றி கலைஞர் பேசக் கூடாதா? அய்ந்து முறை முதல் அமைச்சராக இருந்தவருக்கு இல்லாத அக்கறையா இவர்களுக்கு?

சமூகநீதியில் சரித்திரம் படைத்தவராயிற்றே! இது சூத்திரர்களுக்கான அரசு என்று சட்டப் பேரவை யிலேயே முழங்கிய முத்தமிழ் அறிஞர் ஆயிற்றே! கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை என்றால் வக்கணையாக எழுதுவதால் என்ன பயன்?

கலைஞர் மட்டுமா கண்டித்துள்ளார்? முதல் அறிக்கையை திராவிடர் கழகத் தலைவர் வெளியிட்டார். தொடர்ந்து தமிழ்நாட்டில் கட்சித் தலைவர்கள் எல்லாம் கண்டனம் தெரிவித்துள்ளனரே!

உயிர் காக்கும் மருத்துவத்தில் அதுவும் பல் நோக்கு சிகிச்சை மய்யம் என்ற தலை சிறந்த விஞ் ஞானத் தரமான மருத்துவ சிகிச்சைக்கு இலக் கணம் வகுக்கின்ற ஓர் அமைப்பில் இட ஒதுக்கீட்டு முறை இடையூறாக அமைந்து விடக் கூடாது என்பதை மக்களின் ஆரோக்கியத்தில் அளவில்லா முன்னுரிமை அளித்துவரும் நம் அன்னைத் திருமக ளின் அரசு பரிசீலித்ததை ஏதோ இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தது போல கருணாநிதி இட்டுக் கட்டிய பித்தலாட்டத்தை அரங்கேற்றப் பார்ப்பது அவரது அரசியல் மோசடியையே காட்டுகிறது என்று எழுதுகிறது அதிமுக ஏடு?

இதன் மூலம் என்ன சொல்லப்படுகிறது? தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப் பட்டோருக்கும் இடஒதுக்கீடு அளித்தால் உயிர் காக்கும் மருத்துவம் செத்துப் போய் விடும் என்கிறார்களா?

உயிர்காக்கும் மருத்துவப் பணிகளுக்கு தாழ்த்தப் பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும் லாயக்கு அற்றவர்கள் என்கிறதா அ.இ.அ.தி.மு.க. ஏடு? இதுதான் இந்த ஆட்சியின் நிலைப்பாடா?

இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தால் தகுதி திறமை போய் விடும் என்று பார்ப்பனர்களிடம் இரவல் குரல் வாங்கி அம்மையாருக்காக வக்காலத்து வாங்குகிறதா அண்ணா தி.மு.க.?

இதுதான் அண்ணா கூறிய சமூக நீதியா? அண்ணா திமுக என்று பெயர் வைத்தால் மட்டும் போதுமா? இடஒதுக்கீட்டில் அண்ணாவின் கருத்து என்ன என்று தெரிந்து கொள்ளாதவர்கள் எல்லாம் அண்ணா பெயரைப் பயன்படுத்தலாமா? பெரியார் பெயரைப் பயன்படுத்தலாமா? திராவிட என்ற சித்தாந்தத்தின் குறியீட்டை வைத்துக் கொள்ளலாமா?

தாழ்த்தப்பட்ட மக்களே, பிற்படுத்தப்பட்ட மக்களே! உங்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தால் உயிர் காக்கும் மருத்துவத் தொழில் உருப்படாமல் போகுமாம் - உயிர் களைக் காக்கும் ஆற்றல், சக்தி உங்களுக்குக் கிடையாதாம்.

இதுதான் இன்றைய அ.இ.அ.தி.மு.க. ஆட்சி - புரிந்து கொள்வீர்!

Read more: http://viduthalai.in/e-paper/73140.html#ixzz2pWwTsbeb

தமிழ் ஓவியா said...


மோடி எனும் பேராபத்து! புத்ததேவ் சாடல்


கொல்கத்தா, ஜன.5-மோடி எனும் கொடி யவன் இந்த நாட்டின் முஸ்லிம் மக்களுக்கு மட்டும் எதிரி அல்ல; ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் மிகப் பெரிய ஆபத்து. அவர் அப்படிப்பட்ட ஒரு பேரழிவு கொடியானை திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் மேலும் மேலும் தூண்டிவிட்டு இன்னும் பேரழிவை தீவிரப்படுத்த முயற்சிக் கிறார்கள் என்று மேற்கு வங்க முன்னாள் முதல மைச்சரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான புத்ததேவ் பட்டாச் சார்யா கடுமையான வார்த்தைகளில் விமர்சித் தார்.

கொல்கத்தாவில் வெள்ளியன்று மாலை கணசக்தி நாளேட்டின் சார்பில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சி யில் பங்கேற்று புத்த தேவ் உரையாற்றினார். கணசக்தி என்பது மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வங்கமொழி நாளேடு ஆகும்.

மேற்கு வங்கத்தில் மோடிக்கு இடம் இல்லை

ராஜாராம் மோகன் ராய், மகாகவி ரவீந்திர நாத் தாகூர் முதல் அன்னை தெரசா வரை மக்களை கவர்ந்த சீர் திருத்தவாதிகளும், விடு தலை இயக்க வீரர்களும், தலைசிறந்த சமூக சேவர் களும் வாழ்ந்த மண் மேற்கு வங்கம் என்று குறிப்பிட்ட புத்ததேவ், இத்தகைய பூமியில் மத வெறி பிடித்த நரேந்திர மோடிக்கு ஒருபோதும் அனுமதியில்லை என்பதை மேற்குவங்க மக்கள் உரத்து முழங்கு வார்கள் என்றும் புத்த தேவ் பட்டாச்சார்யா கூறினார்.

எதிர்காலத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க அச்சாரம் போட்டுக் கொண்டிருக் கிறது மம்தாவின் திரி ணாமுல் கட்சி என்று விமர்சித்த புத்ததேவ், 2002ஆம் ஆண்டில் பாஜகவுடன் கைகோத் துக் கொண்டு அதன் தலைமையிலான அர சாங்கத்தில் அமைச்சர் பதவியும் வாங்கிக் கொண்ட கட்சிதான் திரிணாமுல் என்றும் சாடினார்.

இந்தியாவில் மோடியை முன்னிறுத்தியிருக்கும் மதவெறி ஆர்எஸ்எஸ் அமைப்பு, தங்களது கொள்ளை லாபத்தை மேலும் மேலும் அதிகப் படுத்திக் கொள்ள முயற் சிக்கும் பெரும் கார்ப்ப ரேட் கம்பெனிகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு நாட்டின் எதிர்காலத் துக்கு இதுவரை இல் லாத அளவிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்த முனைகிறது என்றும் புத்ததேவ் கூறினார். இது இந்தியாவின் வரலாற் றில் முன்னெப்போதும் இல்லாத ஒன்று என்று சுட்டிக்காட்டினார்.

தனது உரையின் போது மேற்கு வங்க முதலமைச்சர் மம் தாவின் நடவடிக்கைகள் குறித்து கேள்விக்கணை களை புத்ததேவ் எழுப் பினார். இந்தியாவின் நெருங் கிய அண்டைநாடும் மேற்குவங்கத்தோடு ஒட்டியுள்ளநாடுமான, வங்கதேசத்துடன் ஒரு நல்லுறவை பேணுவதில் மம்தா பானர்ஜி மோச மான முறையில் நடந்து கொள்கிறார்;

ஆனால் அதே நேரத்தில் வங்க தேசத்தில் அமைதியை சீர்குலைக்க முயல்கிற பாகிஸ்தானின் சதி களுக்கு துணைபோகும் விதத்தில் இங்குள்ள பாகிஸ்தான் தூதரோடு மம்தா பானர்ஜி சந்திப்பு களை நடத்துகிறார். இது இந்தியாவின் நலன் களுக்கு குறிப்பாக மேற்குவங்கத்தின் நலன்களுக்கு எதிரானது என்று புத்ததேவ் கூறினார்

Read more: http://viduthalai.in/e-paper/73139.html#ixzz2pWwenOaO

தமிழ் ஓவியா said...


குரங்கு சாமிக்கு இப்படி ஒரு கொண்டாட்டமா?


ஆஞ்சநேயர் என்ற அனுமாருக்கு ஜெயந்தியாம் - அதாவது பிறந்த நாளாம்!

அனுமாருக்குப் பிறந்த நாள் முன்பெல்லாம் கொண்டாடுவதில்லை; அண்மைக் காலத்தில் பார்ப்பனப் பண்பாட்டின் பரிமாணங்கள் பெருகிய வண்ணமே உள்ளன! இந்து மதப் பிரச்சாரப் புதிய உத்தி!

யாருக்காவது சந்தேகம் வந்தால் நம்ம சன் டிவி போன்ற பல டி.வி.களில் வரும் சீரியல்களையும் மெகா சீரியல்களையும் பார்த்தாலே தெரியும்.

நாட்டில் யாருக்குமே தெரியாத புதிய சடங்குகள், சம்பிரதாயங்கள், வேண்டுதல்கள், சாபங்கள், பேய் வந்து பெண்கள்மீது ஏறிக் கொள்ளுதல் மஹா பாரதம் இப்படி பரிசு பெற வேண்டிய புருடாக்களை பலமாகப் பரப்பி வருகின்றனவே!

புராணக் கதைப்படி அனுமார் எப்படி பிறந்தார் என்றால் வாயு புத்திரன் அவர், அதாவது காற்றுக்குப் பிறந்தவர் - நம்நாட்டில் காற்றுக்குக்கூட பிள்ளைகளைப் பெற்றுத் தரும் விநோதமான சக்தி உண்டு போலும்!

இன்னொரு பக்கத்தில் பீமனோடும் தொடர்புபடுத் திக் கதைவிடல்!

அறிவியல் - பரிணாமத் தத்துவப்படி டார்வின் கூற்றுப் படி, குரங்கிலிருந்து மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்றான் என்பது ஒருபுறமிருக்க, இந்த அனுமான் எப்போது, எப்படி பிறந்தான்? என்பதையெல்லாம் கிராஸ் எக்சாமின் பண்ணினால் அது வாதத்திற்கு நிற்காது!

அந்த அனுமார் கடலைக் கடந்து இலங்கைக்குத் தாவி சீதா பிராட்டியைச் சந்திக்கும் இராம தூதுவனாகச் சென்று, சீதையிடம் அந்தக் குரங்கு பேசியதாம்!

அவள் தயங்கியவுடன், அந்த சந்தேகத்தைப் போக்கிட ஸ்ரீமான் இராமச்சந்திர மூர்த்தியின் அங்க மச்ச அடையாளங்களையெல்லாம் கூட அதுவும் வெகு ரகசியமானவைகளாக சீதை - இராமன் மட்டுமே அறிந்த வைகளைக்கூட அனுமன் புட்டு புட்டு வைக்கிறான்! என்னே கொடுமை!

(சந்தேகமிருந்தால் வால்மீகி இராமாயணம் சுந்தரகாண்டத்தைப் பார்த்து விவரம் தெரிந்து கொள்ளுங்கள்).

நாமக்கல் ஆஞ்சநேயர் கடவுள்! இவருக்கு அங்கே ஜெயராமய்யர்கள் அர்ச்சனை செய்யும் பிரபல ஜோதிடக் கோயிலுக்குத் தான் தேவகவுடா, எம்.ஜி.ஆர்., ஜானகி அம்மாள் முதலிய பலரும் சென்று அர்ச்சனை, வேண்டுதல் நடத்தி பதவியைக் காப்பாற்ற முடியாது ஏமாந்தவர் களானவர்கள் என்றாலும் புத்தி வரவில்லையே பக்தர்களுக்கு!

குரங்கைக் கடவுளாகக் கொண்டு வழிபடும் நாடு இந்தியா என்று கார்ல் மார்க்ஸ் இந்தியாவைப் பற்றிய கட்டுரைகளில் எழுதி யுள்ளார்! அதன் மூலம் கார்ல் மார்க்ஸ் பேனாவையும் நம்ம ஊர் அனுமார் ஒரு பதம் பார்த்து விட்டார்! ஜெய் அனுமான்!

வாழ்க ஜெய் அனுமான்! அவரது ஜெயந்தியில், தஞ்சை, திருச்சி பல கோயில்களில் 10,000 வடை மாலை சாத்தி அதோடு 10,000 லிட்டர் பால், தேன், நெய்யை அந்தக் கல்லின்மீது ஊற்றி பாழ்ப்படுத்தி பக்தி பரவசம் பெற்றுள்ள செய்தியை நமது டி.வி.கள். இந்த சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை விட்டு விடக் கூடாது என்று கருதி படம் பிடித்துக் காட்டி பக்தியைப் பரப்பிட புத்தியை ஒழிக்கவும் ஆயத்தமாகி விட்டார்கள். ஞான பூமியல்லவா நமது பூமி!

பாலுக்கு அழும் பச்சிளம் குழந்தைகள் கோடிக் கணக்கில் ஒருபுறம்!

மறுபுறம் இப்படி கல் சிலை - குரங்குக்கு பாலாபி ஷேகம் என்று கூத்து!

அட வெட்கம் கெட்ட ஜெனமங்களா? செவ்வாய் கிரகம் சென்றாலும் உங்கள் புத்தி மாறாதா? தெளி வடையாதா?

அங்கும் சென்று அனுமாருக்குக் கோயில் கட்டி ஜெயந்தி கொண்டாட வடை சுடாமல் இருந்தால் சரி!

Read more: http://viduthalai.in/e-paper/73141.html#ixzz2pWwraOi9

தமிழ் ஓவியா said...


புகழும்போது போதை; இடித்துச் சொல்லும்போது எரிச்சலா?


கலைஞருக்குப் பதில் சொல்லுவதாக நினைத்துக் கொண்டு ஜெயலலிதா அம்மை யாருக்கு சமூகநீதி காத்த வீராங்கனை பட்டத்தை வீரமணி கொடுத்தாரே என்று ஏதோ பெரிய குற்றச்சாட்டு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டதாக நினைத்து அ.இ.அ.தி.மு.க.வின் நமது எம்.ஜி.ஆர். ஏடு எகிறுகிறது.

ஆமாம்; மறுக்கவில்லை. 69 சதவிகித இட ஒதுக்கீட்டை காப்பாற்ற திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள், அவருக்கே உரித்தான சட்ட ஞானத்தால் கருத்துரு கொடுத்ததோடு, அதற் கான மாதிரிச் சட்டத்தையும் உருவாக்கிக் கொடுத்து, 69 சதவிகிதத்தைக் காப்பாற்றிட வழி செய்தார்.

அதனை ஏற்றுக்கொண்டு சட்டம் செய்ததால், சமூகநீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை அளித்தார் திராவிடர் கழகத் தலைவர்.

அதனைக் காப்பாற்றிக் கொள்ளாமல், சமூகநீதியின் வேரையே வெட்டி வீழ்த்த ஆவேசம் கொண்டால், கையைக் கட்டிக்கொண்டு வீரமணி அவர்கள் வேடிக்கை பார்க்கவேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. எதிர்பார்க் கிறதா? பட்டம் பெற்றபோது மகிழ்ச்சிப் போதை - தவறைச் சுட்டிக்காட்டி இடித்துச் சொல்லும்போது எரிச்சலா?

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும் (குறள் 448)

என்றார் திருவள்ளுவர்.

நினைவிருக்கட்டும்!

Read more: http://viduthalai.in/page-8/73173.html#ixzz2pWyLz5Rq

தமிழ் ஓவியா said...


நெத்தியடிக்கு ஒரு புத்தி அடி!


அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளேட்டில் (5.1.2014, பக்கம் 6) நெத்தியடி! எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவரை வீண் வம்புக்கு இழுத்துள்ளது.

ஓமாந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிதாகத் தொடங்கப்பட உள்ளதாக அறிவித்த பல்நோக்கு மருத்துவமனையில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றாவிட்டால், தமிழகம் கொந்தளிக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளாராம் - அதைப் படித்துவிட்டு கொந்தளித்துள்ளது டாக்டர் நமது எம்.ஜி.ஆர். ஏடு.

கொந்தளிக்கவேண்டியவர்கள் இட ஒதுக்கீடு - சமூகநீதி மறுக்கப்பட்ட மக்களே! அரும்பாடுபட்டு, போராடி கட்டிக் காக்கப்பட்ட சமூகநீதியை சவக்குழிக்கு அனுப்பிட, அண்ணா பெயரில் உள்ள ஓர் ஆட்சி திட்டமிடுகிறது என்றால், மக்கள் கொந்தளிக்கத்தான் செய்வார்கள் - ஒடுக்கப்பட்ட மக்களின் உன்னதமான இயக்கத்தின் தலைவராம் மானமிகு கி.வீரமணி அவர்கள் கொந்தளிக்கத்தான் செய்வார்.

அதற்காக டாக்டர் நமது எம்.ஜி.ஆர். ஏடு என்ன சமாதானம் சொல்கிறதாம்?

முள்ளிவாய்க்கால் படுகொலையின்போது கருணாநிதிக்கு எதிராக ஏன் புரட்சி செய்யவில்லை வீரமணி என்று கேள்வி கேட்கிறது!
பட்டுக்கோட்டைக்கு வழி என்னவென்றால், கொட்டைப் பாக்கு தூக்கு முக்கால் ரூபாய் என்றானாம் என்று கிராமத்திலே ஒரு பழ மொழியைச் சொல்லுவார்கள் - அதுதான் நினைவிற்கு வருகிறது.

சரி, அதற்கே வருவோம்! ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது அம்மையார் என்ன சொன்னார்?

யுத்தம் என்று ஒன்று வந்தால், அப்பாவி மக்கள் கொல்லப்படத் தான் செய்வார்கள் (இதே நமது எம்.ஜி.ஆர்., 18.1.2009) என்று ராஜபக்சேவின் ஊதுகுழலாக முழங்கியவர் தானே அம்மையார் ஜெயலலிதா? (நமது எம்.ஜி.ஆர். ஏட்டின் எழுத்தாளர் தேவை யில்லாமல் அம்மையாரைச் சிக்கலில் மாட்டி விடுகிறார்!).

யுத்தத்தை நிறுத்தவேண்டும் என்று கருணாநிதி சொல்வது விடுதலைப்புலிகளைக் காப்பாற்றிடத்தான் (இதே நமது எம்.ஜி.ஆர்., 16.10.2008) என்று திருவாய் மலர்ந்தவராயிற்றே அம்மையார்?

வாய்ப் புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ எனும் பாணியில் கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம் டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.

Read more: http://viduthalai.in/page-8/73176.html#ixzz2pWyU8AKY

தமிழ் ஓவியா said...


சூரியன் பற்றி அறிய ஆதித்யா நான்காண்டுகளில் அனுப்ப திட்டம் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை


திருப்பூர், ஜன.5- சூரி யன் பற்றிய அறிவியல் தகவல்களை கூடுதலாக அறிய, ஆதித்யா செயற் கைக்கோள், நான்கு ஆண்டுகளில் விண் வெளிக்கு அனுப்பப்பட உள்ளது,'' என, இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் மயில்சாமி அண்ணா துரை தெரிவித்தார்.

மங்கள்யான் செயற் கைக்கோள் குறித்த கருத்தரங்கு, திருப்பூரில் நேற்று (4.1.2014) நடந்தது. இதில், பெங்களூரு, இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மய்ய திட்ட இயக்குநர் டாக்டர் மயில் சாமி அண்ணாதுரை பங்கேற்றார்.

அப்போது, செய்தி யாளர்களிடம் கூறிய தாவது: நிலாவைப்பற்றி ஆய்வு செய்ய சந்திரயா னும், செவ்வாயைப் பற்றி ஆராய்ச்சி செய்ய மங்கள்யானும் அனுப் பியதை போல, அடுத்த கட்டமாக, சூரியனை பற்றி ஆய்வு செய்ய ஆதித்யா என்ற செயற் கைக்கோள், விண் வெளிக்கு அனுப்பப்பட உள்ளது. சூரியனுக்கு இது செல்லாது.

பூமிக் கும், சூரியனுக்கும் விசை உள்ளது; இந்த விசை களுக்கு இடைப்பட்ட ஒரு பகுதியில் நிரந்தர மாக ஆதித்யா நிலை நிறுத்தப்பட்டு, பூமி, சூரியன் பற்றிய தகவல் களை அனுப்பும். இன் னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில், ஆதித்யா விண்வெ ளிக்கு அனுப்பப்படும். அதற்கான பணி துவங்கி யுள்ளது.

சூரியனை பற்றிய பல தகவல்களை அறியும் வகையில், இந்த கோள் அனுப்பப்படுகிறது; அறிவியல் ரீதியான பல ஆய்வுகளுக்கு இது, உதவும். மங்கள்யான், நிர்ணயித்தபடி, அதன் பாதையில் சென்று கொண்டிருக்கிறது; தீவிர கண்காணிப்பில் உள்ளது. இதுவரை 9 மில்லியன் கி.மீ., சென் றுள்ளது; இன்னும் 200 மில்லியன் கி.மீ., செல் லும்போது, வரும் செப். 24 ஆம் தேதி, செவ் வாய்க் கோளினை அடையும்.

அமெரிக்கா ஆறு முறையும், ரஷ்யா 10 முறையும் முயற்சித்து தோற்ற நிலையில், இந் தியாவின் முதல் முயற்சி வெற்றி பெற்றால், உல கில் விண்வெளி ஆராய்ச் சியில் செவ்வாய்க் கோளினை அடைந்த பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும்.

அய்ரோப்பா, அமெ ரிக்கா நாடுகளின் தொழில்புரட்சியை தொடர்ந்து மூன்றாவது புரட்சியாக இந்தியா வில், விண்வெளி புரட்சி நடக்கிறது. இதில், நாம் பின்தங்கி விடக்கூடாது என்பதால், சந்தர்ப்பங் களை சரியான முறை யில் பயன்படுத்தி வரு கிறோம். - இவ்வாறு டாக்டர் மயில்சாமி அண்ணா துரை செய்தியாளர்களி டம் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/73174.html#ixzz2pWynR6f7

தமிழ் ஓவியா said...


முருகன் காப்பாற்றவில்லையே! வாகனம் மோதி முருக பக்தர்கள் பலிதூத்துக்குடி, ஜன.6 தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரை பகுதியில் திருச்செந்தூருக்குப் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பக்தர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இவர்கள் அனைவரும் விருதுநகர் மாவட்டம் முடியனூரைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இவர்களில் ராஜா(23), சீனி(45), மகாலிங்கம் (35) ஆகிய 3 பேரும் உயிரிழந்துள்ளனர். சின்னகிச்சான்(29) என்பவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/73227.html#ixzz2pcempsj0

தமிழ் ஓவியா said...


சனிக்கோளை படமெடுத்த நாசா விஞ்ஞானிகள்


பூமியை விட எட்டு மடங்கு பரப்பளவு கொண்ட சனிக்கோளை மிக நெருக்கமாக நாசா விஞ்ஞானிகள் படம் பிடித்தார்கள். வரலாற்றிலேயே முதன் முறையாக நிகழ்ந்த இந்த சம்பவத்தை ஜெட் ப்ரபல்ஷன் ஆய்வகம் புதன்கிழமை அறிவித்தது. இந்தப் படங்களை நாசா ஏவிய கசினி விண்கலம் எடுத்ததாகவும் நாசா தெரிவித்தது.

2010 டிசம்பர் 5ஆம் தேதி அன்று எப்போதும் சீற்றத்துடன் ஒரு சூறாவளி காணப்பட்டதை கசினி கண்டுபிடித்தது. இது சனியின் வடக்குத் திசையில் ஏறத்தாழ 35 டிகிரி அளவில் காணப்பட்டது. விண்கலம் சனியைச் சுற்றிப் பார்த்ததில் கண்ட பெரிய சீற்றம் இதுதான். நாசா விஞ்ஞானிகள் 1990இல் இதே போன்றதொரு சீற்றத்தைப் படம் எடுத்திருந்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/73231.html#ixzz2pcevDb74

தமிழ் ஓவியா said...


வரும் 9ஆம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சி மற்றும் சமூகநீதி ஆதரவாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் தமிழர் தலைவர் அழைப்பு - அறிவிப்பு!


தமிழ்நாடு அரசின் பல் நோக்கு மருத்துவமனையில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான போக்கு

வரும் 9ஆம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சி மற்றும் சமூகநீதி ஆதரவாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்

தமிழர் தலைவர் அழைப்பு - அறிவிப்பு!

சென்னை, ஜன.6- சென்னையில் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட உள்ள பல்நோக்கு மருத்துவமனையில் பணி நியமனங்களில் இடஒதுக் கீடு கிடையாது என்று மிகவும் வெளிப்படையாக அரசு சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதனை எதிர்க்கும் வகையிலும், தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்துவரும் 69 சதவீத இடஒதுக்கீட்டைச் செயல்படுத்த வைக்கும் நோக்கத்திலும், சமூக நீதிக் கொள்கையில் அக்கறை உள்ள கட்சிகள் மற்றும் சமூக நீதி ஆதரவாளர்கள், அமைப்புகள் ஆகியவற்றின் கலந்துரையாடல் கூட்டம் வரும் 9ஆம் தேதி காலை சென்னை பெரியார் திடலில் நடைபெற உள்ளது இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தலைவர்களுக்கு இன்று கடிதம் எழுதப்பட் டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

சமூகநீதியைக் காப்பாற்றுவதற்கான ஆலோசனைக் கூட்ட அழைப்பு

பேரன்புடையீர், வணக்கம். ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட உள்ள பல்நோக்கு உயர் மருத்துவமனையில் பேராசிரியர்கள், இயக் குநர்கள், பதிவாளர்கள் போன்ற பதவிகளுக்கான பணி நியமனத்தில் இடஒதுக்கீடு அரசால் பின் பற்றப்படாது என்று அறிவிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சிக்கு உரியது.

1928 முதல் தமிழ்நாட்டில் செயல்பாட்டில் உள்ள இடஒதுக்கீட்டை குழி தோண்டிப்புதைக்கும் சமூக அநீதியான செயல்பாடாகும் இது.

இதனைத் தடுத்து நிறுத்தி, தமிழ்நாட்டில் நடை முறையில் இருக்கும் 69 சதவீத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசைச் செயல்பட வைக்க தேவையான முடிவுகளை எடுக்க வரும் 9.1.2014 வியாழன் காலை 10.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடைபெறும், ஆலோசனைக் கூட்டத்திற்கு தங்கள் அமைப்பின் சார்பில் தாங்களோ அல்லது தங்கள் பிரதிநிதி ஒருவரையோ அனுப்பி வைக்குமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி. தங்கள் அன்புள்ள,

- கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

குறிப்பு: வர வாய்ப்பு இல்லாதவர்கள் தங்கள் கருத் தினை எழுதி அனுப்புமாறும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/73221.html#ixzz2pcf8ZcPp

தமிழ் ஓவியா said...

வரவேற்கத்தக்க திமுக மாணவரணியின் ஆர்ப்பாட்டம்

இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராகச் செயல் படும் ஜெயலலிதா அரசைக் கண்டித்து தி.மு.க. மாணவர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஜனவரி 21 அன்று மாநில மாணவர் அணிச் செயலாளர் கடலூர் இள. புகழேந்தி தலைமையில் சென்னையில் நடைபெறுகிறது.

இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக செயல்படும் ஜெயலலிதா அரசைக் கண்டித்து திமுக மாணவர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 21.1.2014 அன்று காலை 10 மணியளவில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகில் நடைபெறுகிறது. கண்டன ஆர்ப்பாட் டத்திற்கு திமுக மாணவர் அணிச் செயலாளர் கடலூர் இள. புகழேந்தி தலைமை வகிக்கிறார்.

தென்சென்னை மாவட்டக் கழக செயலாளர் ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ. மாணவர் அணி துணைச் செயலாளர்கள் கோவி. செழியன் எம்.எல்.ஏ., குத்தாலம் க. அன்பழகன், கோவை கணேஷ்குமார், பூவை சி. ஜெரால்டு, மதுரை க. மகிழன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இடஒதுக்கீட்டை வலியுறுத்தி அ.தி.மு.க. அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்திட நடைபெறும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க கழக மாணவர் அணி நிர்வாகிகளும், மாணவர் அணித் தோழர்களும் திரண்டு வாரீர் வாரீர் என தி.மு.க. மாணவர் அணி சார்பில் அணியின் செயலாளர் இள. புகழேந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/73221.html#ixzz2pcfJhek2

தமிழ் ஓவியா said...


பூரி ஜெகநாதர் கோவில் பூசாரிகள் முறையான வருகைக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு


புவனேஸ்வர், ஜன. 6- பூரி ஜெகநாதர் கோவிலில் பணிபுரிந்துவரும் சுமார் 2,000 பூசாரிகளுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை அறி முகப்படுத்த கோவில் நிருவாகம் முடிவு செய் துள்ளது.

பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 85 பூசாரிகள் கோவிலில் நாள்தோறும் பூஜைகளை நடத்தி வருகின்றனர். இவர்கள் மிகவும் தாமதமாக வருவதால் பூஜைகளை சரிவர நிறைவேற்று வதில்லை என்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதினாலேயே நிருவாகம் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாகத் தெரிய வருகின்றது.

கோவில் நிருவாகம் அளித்த தகவல்களின்படி இங்கு நாள்தோறும் காலை 6 மணியிலிருந்து இரவு வரை 23 விதமான பூஜைகள் நடைபெறு கின்றன. திருவிழாக் காலங்களில் 32 சடங்குகள் நிறைவேற்றப்படுகின்றன. இந்தியாவிலேயே இந்தக் கோவிலில்தான் பல சிக்கலான பூஜை களும் நிறைவேற்றப்படுகின்றன.

எனவே பூசாரிகளின் முறையான வருகை அவசியமாகின்றது. பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்று கோவிலின் தலைமை நிருவாகி யான அரவிந்த்பதி கூறினார். இந்த முறையின் மூலம் காலதாமதம் எற்படுத்து வோருக்கு ஊதிய வெட்டு அறி விக்கப்படும் என்றும், இதன்மூலம் அவர்களைத் தங்களின் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரி வித்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற இந்தக் கோவிலின் தேர்த்திருவிழாவில் போலியான பூசாரிகளால் நடை பெற்ற சம்பவங்களைத் தொடர்ந்து இவர்களுக்கான அடையாள அட் டைகள் வழங்கப்படும் என்று ஒடிசா அரசு சென்ற மாதம் தெரிவித்தது.

வரும் 2015 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நபகலேபார் திருவிழா எனப் படும் தெய்வங்களின் சிலைகளை மாற்றும் நிகழ்ச்சியின்போது இந்த அட்டைகள் அவர்களுக்கு வழங்கப் படும் என்றும் அரசு குறிப்பிட்டுள் ளது. எனவே அதன்பின்னரே அவர் களின் வருகைப்பதிவும் முறைப் படுத்தப்பட முடியும் என்று கோவில் நிர்வாகம் தெரிவிக்கின்றது.

Read more: http://viduthalai.in/page-8/73230.html#ixzz2pcfW4aJi

தமிழ் ஓவியா said...


சமூக நீதிக்கு எதிரான நியமன அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது


சென்னை, ஜன.6- மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை யில் நிரப்பப்பட வேண்டிய பணி யிடங்களான மருத்துவப் பேராசிரி யர்கள், உதவிப் பேராசிரியர்கள், பதிவாளர்கள் போன்ற பணியிடங் களுக்கு ஜனவரி 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என டிசம் பர் 27ஆம் தேதி மருத்துவ நியமனத் துறை குறுகிய காலக்கெடுவை நிர்ண யித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதில் இடஒதுக்கீடு பகிர்வு குறித்த எந்தக் குறிப்பும் காணப்படவில்லை. மருத்துவர்களிடையே பார பட்சம் காட்டும் போக்கும், சமூக நீதிக்கு எதிரான போக்கும் தமிழக அரசின் இந்த அறிவிப்பில் வெளிப்பட்டுள் ளது. சமூகநீதிக்கு முரணான எந்தச் செய லையும் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை பணியாளர்கள் குறித்து வெளியிடப் பட்டுள்ள சமூகநீதிக்கு எதிரான நியமன அறிக்கை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம் என்று மமக தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/73234.html#ixzz2pcfmAefU

தமிழ் ஓவியா said...கோவில் பெருச்சாளிகளுக்கு ஜே! சிதம்பரம் நடராஜன் கோவில் தீட்சிதர் வசம்! உச்சநீதிமன்றம் தீர்ப்பு


புதுடில்லி, ஜன.6-கரை யான் புற்றெடுக்க கரு நாகம் குடிபுகுந்தது போல சிதம்பரம் நட ராஜன் கோவில் மீண்டும் தீட்சிதர்களின் கைகளில் உச்சநீதிமன்றம் ஒப்ப டைத்துள்ளது.

சிதம்பரம் நடராஜன் கோவில் நிர்வாகத்தில் முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்தன. உள் ளூர் தீட்சிதப் பார்ப் பனர்களே புகார் தெரி வித்தனர். இதையடுத்து கோவில் நிருவாகத்தை தமிழக அரசு கையில் எடுத்துக்கொண்டது. அதைத் தொடர்ந்து கோவிலை நிர்வகிப்ப தற்காக செயல் அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமனம் செய்தது.

இந்த நியமனத்தை எதிர்த்து பொது தீட்சி தர்கள் சார்பில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டது. இதை விசா ரித்த நீதிபதிகள் செயல் அதிகாரி நியமிக்கப்பட் டது செல்லும் என்று தீர்ப்பு கூறினார்கள்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து பொது தீட்சி தர்கள் மேல் முறையீடு செய்தனர். நீதிபதிகள் சவுகான், போப்டே ஆகி யோர் முன்னிலையில் இந்த விசாரணை நடந்து வந்தது. பொது தீட்சிதர் கள் தரப்பில் சுப்பிரமணி யசாமி வாதாடினார்.

விசாரணை முடிந்து நீதிபதிகள் இன்று (5.1.2014) தீர்ப்பு கூறி னார்கள். நீதிபதிகள் கூறிய தாவது:

சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வகிக்க செயல் அதிகாரியை நியமித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. கோவி லில் தவறு நடக்கிறது என்று தெரிந்தால் சிறிது காலத்துக்கு மட்டும் அதி காரியை நியமிக்கலாம். அதை தொடர்ந்து நீடிக்க செய்ய முடியாது.

- இவ்வாறு நீதிபதி கள் கூறினார்கள்.

Read more: http://viduthalai.in/page-8/73228.html#ixzz2pcgAxNvB

தமிழ் ஓவியா said...

திருமண வாக்குறுதியளித்து பாலியல் உறவு கொண்டால் வல்லுறவு ஆகாதாம்

புதுடில்லி, ஜன.6-திருமண வாக்குறுதி அளித்த பிறகு வயது வந்த இருவர் பாலியல் உறவு வைத்துக் கொண் டால், அது வல்லுறவு ஆகாது. திருமணத் துக்கு முந்தைய பாலியல் உறவு தீயொழுக்கம் என அனைத்து சமய கோட் பாடுகளும் கூறியுள்ளன என டில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டில்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் இளம் பெண் ஒருவர், பன் னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் தனது காதலன் மீது கடந்த 2011 ஆம் ஆண்டு வல்லுறவுப் புகார் அளித்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த டில்லி நீதி மன்ற நீதிபதி வீரேந்தர் பட் கூறியதாவது:

திருமண வாக்குறுதி மூலம் நடைபெறும் பாலியல் உறவுகள், வல்லுறவு அல்ல என்பது என் கருத்து. வயது முதிர்ச்சி அடைந்த, நன்கு படித்த, அலுவல கத்தில் பணியாற்றும் பெண் தனது நண்பர் அல்லது சக ஊழியர் அளிக்கும் திருமண வாக் குறுதி மூலம் பாலியல் உறவு கொண்டால், அதன் விளைவை அவர் அறிந்தே செய்கிறார்.

அவர் அளிக்கும் வாக் குறுதிக்கு எந்த உத்திர வாதமும் இல்லை என் பதை அந்தப் பெண் புரிந்து கொண் டிருக்க வேண்டும். அந்த இளை ஞர் தனது வாக்குறு தியை நிறைவேற்றா விட்டால் அது வல்லுறவு ஆகாது. ஒரு பெண், ஒரு ஆணிடம் தனது உடலை ஒப்ப டைக்க முடிவு செய்யும் போது, அதன் சாதக பாதகங்களை அவர் எண்ணிப்பார்க்க வேண் டும்.

திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவை, உலகில் எந்த மதமும் அனுமதிப்ப தில்லை. அது அனைத்து மத கோட்பாடுகளுக் கும் எதிரான தீயொ ழுக்கம். திருமண உறுதி அளித்ததற்கான எந்த வொரு பதிவு ஆதாரமும் இல்லை. இ-மெயில் மற்றும் சாட் ஆதாரங் களைப் பார்க்கும் போது, பாலியல் உற வுக்கு அந்த இளை ஞனை, அந்தப் பெண் தான் தூண்டினார் என் பது தெரிகிறது.

இத னால் வல்லுறவு குற்றச் சாட்டில் இருந்து அந்த இளைஞர் விடுவிக்கப்ப டுகிறார்.

- இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/73228.html#ixzz2pcgK6ycM

தமிழ் ஓவியா said...


கொட்டைப் பருப்புகள் - என்றும் நம் பாதுகாவலர்கள்!
---veramani

ஓவ்வொரு நாளும் கைநிறைய கொஞ்சம் பருப்புக் கொட்டைகளை (Nuts) எடுத்து தின்று கொண்டு வரும் பழக்கத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்; அது உங்களை நல்ல உடல் நலத்தோடு இருக்கச் செய்வதோடு, நீண்ட ஆயுளையும் தரும் - ஆயுள் நீட்டியாகவும் பயன்படக் கூடும்.

வாதுமை - வால்நட்ஸ் - WalNuts பாதாம் பருப்புக் கொட் டைகள், பிஸ்தா பருப்புகள், முந்திரி பருப்பு (அளவோடு) இவற்றுடன் உலர்ந்த திராட்சை போன்றவை களையும் கலந்து ஒரு வாய் கொள்ளும் சிறு அளவு எடுத்து நாள்தோறும் சாப்பிட்டால், மிகுந்த உடல் நலப் பாதுகாப்பு கிடைக்கும்.

இவைகளில் உள்ள நார்ச்சத்துக் கள் பெரிதும் செரிமானத்திற்கு உதவுபவை மட்டுமல்ல, சர்க்கரை வியாதியையும் கட்டுப்படுத்த உதவும். இதய நோய்த் தடுப்புக்கும் உதவி புரியக் கூடும்.

இப்படி நியூ இங்கிலாந்து ஜெர் னல் ஆஃமெடிசன் என்ற மருத்துவக் குறிப்பு ஆய்வு ஏடு தெளிவாகக் கூறுகிறது.

போதிய ஆய்வுகள் நடத்திய பிறகே இம்முடிவுகளை அந்த மருத்துவ ஆய்வு ஏடு வெளியிட்டுள்ளது!

76,464 பெண்கள், 42,498 ஆண்கள் ஆகியவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட 30 ஆண்டுகால ஆய்வின் மூலம் அவர்கள் இப்படி ஒரு முடிவை அறிவித்துள்ளனர்! மரணத்தைக் குறைக்க இந்தக் கொட் டைகளை உண்ணும் பழக்கம் உதவுகிறது.

ஒரு அவுன்ஸ் பருப்புக்கொட்டை களை தினசரி சாப்பிட்டு வருபவர் களுக்கு 20 விழுக்காடு அளவில் மரண வாய்ப்புகள் வெகுவாகத் தள்ளிப் போட உதவுகின்றது!

இப்படிப்பட்ட பழக்கம் இல்லாத வர்களை ஒப்பிடும்போது - அவர்களது மரண விகிதத்துடன் சேர்த்து எண்ணும்போது, அத்தகையவர்கள் ஆயுள் குறுகி விடுகிறதாம்!

ஒரு வாரத்திற்கு ஒரு முறை இப்படி பருப்புக் கொட்டைகளைச் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பின் 11 சதவிகித ரிஸ்க் இதனால் குறைய வாய்ப்புண்டாம்!

அது மட்டுமல்ல, இப்படி பருப்புக் கொட்டைகளை தவறாமல் உண்ணும் பழக்கமுடையவர்களுக்கு புற்றுநோய், நுரையீரல் வியாதிகளான ‘OPD’ என்ற Obstructive Pulmonary Disease) போன்ற நோய்களிலிருந்தும்கூட பாது காப்புக் கிடைக்கக் கூடுமாம்!

கொட்டைப் பருப்புகள், மிகவும் அருமையான சத்துணவும் ஆகும். வைட்டமின்கள், தேவையான உணவு செரிமானத்திற்கு உதவும் (unsaturated Fatty acids) தாதுச் சத்துக்கள், நார்ச்சத்துக்கள் முதலிய பல்வேறு ஊட்டச் சத்துக்கள் இதயப் பாதுகாப்பு (Cardio Protective, anti carcinogenic, anti - inflammatory and anti - oxidents properties) மற்றும் பல்வேறு வகை நோய்த் தடுப்பான்களாகவும் இவை பயன்படுகின்றன என்பதை New England Medical Journal கூறுகிறது.

ஏராளமான எண்ணெய்ப் பலகாரங் களைத் தின்று வயிற்றை அடைப்பதும், அதனால் சர்க்கரை, கொழுப்புச் சத்துக்கள் உடலில் வளர்ந்து பெருகி பல்வேறு நோய்களையும் உருவாக் கிடாமல் இருக்க, இந்தக் கொட்டைப் பருப்புகளை நாள்தோறும் கொஞ்சம் உண்ணும் பழக்கம் நம்மை நல்ல உடல் நலத்துடன் வளரச் செய்யும்.

இவை விலை உயர்வு என்று கருதி னால் எளிய வருமானம் உள்ளவர்கள் - வெறும் கடலைக் கொட்டைகளை - வேர்க்கடலையைக் கொஞ்சம் வாங்கி அவித்துச் சாப்பிட்டால் நல்ல பயன் தருமே!

அதேபோல நாளும் தயிர் சாப் பிடுங்கள். அதுவும் சிறந்த ஊட்டத் தையும், பாதுகாப்பையும் தரும் என்பதும் அனுபவ மருத்துவமாகும்.

Read more: http://viduthalai.in/e-paper/73213.html#ixzz2pcglrDCQ

தமிழ் ஓவியா said...


இதய நோயைத் தவிர்க்க 3 வழிகள்


இன்றைய அவசர உலகில் மோசமான உணவு பழக்க வழக்கம் மற்றும் உடல் உழைப்பின்மை காரணமாக பலருக்கும் ஏற்படும் நோய்களில் ஒன்றாக இதய நோய் உள்ளது.

உடல் உழைப்பின்மையும், நொறுக்குத் தீனிப் பழக்கமும், உடல் பருமனை ஏற்படுத்துகிறது. இதன் மூலமாக இதயநோய் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக் கிறது. இதனைத் தவிர்க்க மூன்று வழிகளை பின்பற்ற வேண்டும்.

அதாவது, ஆரோக்கியமான உணவு... ஆலிவ் எண்ணெய், தானியங்கள், காய்கறிகள், கடல் உணவுகள் போன்றவற்றை ஆரோக்கியமாக தயாரித்து சுகாதாரமான முறையில் உண்ண வேண்டும். இன்னமும், கிரிக் நாடுகளில் தங்களது பழைமையான உணவுப் பழக்கத்தைக் கையாளும் மக்களுக்கு இதயநோய் ஏற்படுவதில்லை என்று ஆய்வுகள் சான்றளிக்கின்றன.

புகை பிடிக்காதீர்

இதயநோய்களை ஏற்படுத்தும் காரணிகளில் சிகரெட் பிடிப்பது முக்கியக் காரணமாக உள்ளது. இந்த காரணத்தால், அமெரிக்காவில் தற்போது புகைப்போரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந் துள்ளது.

ஆனால், மோசமான செய்தி என்னவென் றால், மக்கள் தொகை அதிகமாக இருக்கும் இந்தியா, சீனாவில் புகைப்போரின் எண்ணிக்கை அதிகரித் துக் கொண்டே வருகிறது. புகைப்பதால் நுரையீரல் புற்று நோய் மட்டுமே ஏற்படும் என்று எண்ணி வந்துள்ளோம். ஆனால், புகைப்பதால் இதய நோய்

ஏற்படும் என்ற விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.

நடையை ஓரம் கட்டாதீர்

பலருக்கும் இப்போது நடப்பதற்கான வாய்ப்பே குறைவாக உள்ளது. எங்கு செல்வதென்றாலும் வாகனத்திலும், ஆட்டோவிலும் செல்கிறோம். முன்பெல்லாம் வசதி இல்லாததால் அதிகம் நடந் தார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியமாகவும் வாழ்ந்தார்கள்.

இதயநோய் ஏற்பட்டு மருத்துவ மனைக்கு நடையாய் நடக்க வேண்டாம் என்று விரும்பினால், இப்போதே ஆரோக்கியமாக நடைப் பயணம் மேற்கொள்வோம்.

Read more: http://viduthalai.in/page-7/73210.html#ixzz2pchOk3qt

தமிழ் ஓவியா said...


தூக்கமின்மை நரம்பியல் அழிவிற்கு வழிவகுக்கும்: ஆய்வுத் தகவல்


ஒரு மனிதனின் ஆரோக்கியமான உடல் நலத்திற்கு நல்ல தூக்க மும் ஒரு காரணமாக உள்ளது. தூக்கம் இல்லாமை என்பது மாரடைப்பு, உடற் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் வருவ தற்கு அதிக வாய்ப்புகளை அளிப்பதாகவே நிபுணர்கள் கருது கின்றனர்.

சுவீடன் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வானது தூக்கமின்மை என்பது எவ்வாறு மக்களின் சுகாதாரத்தைப் பாதிக்கின்றது என்பதை தெரிவிப்பதாக உள்ளது. உப்சாலா பல்கலைக்கழகத்தின் ஆய்வுகள் ஒரு இரவின் தூக்கமின்மை என்பது மனிதனின் மூளையில் காணப்படும் மூலக்கூறுகளில் இரத்த அளவு அதிகரிப்பதை நிரூபித்துள்ளது.

இந்தப் பரிசோதனையை மேற்கொண்ட சுய ஆர்வலர்களின் இரத்தத்தில் மூளைத் திசுக்களின் அழிவைக் குறிக்கும் என்எஸ்ஈ மற்றும் எஸ்-100பி போன்ற காரணிகள் அதிகரித்திருந்தது கண் டறியப்பட்டது. ஸ்லீப்' என்ற மருத்துவ இதழில் சாதாரண எடை கொண்ட 15 பேரின் தூக்க நேரத்தின் அளவுகள் கணக்கிடப் பட்டிருந்தன.

இவர்களில் ஒருவர் மட்டும் ஒரு நாள் இரவு தூங்க வில்லை. மற்றவர்கள் அனைவரும் எட்டு மணிநேர தூக்கத்தைப் பெற் றிருந்தார்கள். ஒரு நாள் இரவு தூங்காமல் இருந்த நபரின் இரத்தத்தில் மூளைத் திசுக்களின் அழிவுக் காரணிகளான என்எஸ்ஈ மற்றும் எஸ்-100பி இவற்றின் கலவைகள் அதிகரித்துக் காணப்பட்டன.

இதன்மூலம் தூக்கமின்மை என்பது ஒருவரது நரம்பியல் அழிவிற்கான செயல்முறைகளைத் விரைவுப்படுத்து கின்றது என்று உப்சலா பல்கலைக்கழகத்தின் முன்னணி ஆராய்ச்சி யாளரான கிறிஸ்டியன் பெனடிக்ட் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இத்தகைய ஆய்வுகள் ஒரு நல்ல இரவு தூக்கமானது மனிதனின் மூளையை ஆரோக்கியமாக வைத்திருப் பதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதைத் தெரிவிக்கின்றன.

Read more: http://viduthalai.in/page-7/73209.html#ixzz2pchrsOyM

தமிழ் ஓவியா said...


நீதிபதிகளை மை லார்ட்' என அழைக்க வேண்டியது கட்டாயமல்ல: உச்சநீதிமன்றம்


புதுடில்லி, ஜன.7- நீதிமன்றங் களில் நீதிபதிகளை மை லார்ட், யுவர் ஆனர், யுவர் லார்ட்ஷிப் என அழைக்க வேண்டிய கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்.எல். தத்து மற்றும் எஸ்.ஏ.பாப்டே ஆகி யோர் அடங்கிய அமர்வு திங்கள் கிழமை கூறியதாவது:

மை லார்டு என்றுதான் அழைக்க வேண்டியது கட்டாயம் என நாங்கள் எப்போது கூறினோம்? நீதிபதிகளை "ஸார்' என்று அழைக்கலாம். "யுவர் ஆனர்', "லார்டுஷிப்' என்று அழைத் தாலும் ஏற்றுக் கொள்கிறோம்.

எனினும், இதுபோன்ற வார்த்தை களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யுமாறும், நீதிபதிகளை இது போன்ற பாரம்பரிய முறைப்படி அழைக்கக் கூடாது என்றும் மனு தாரர் கோருவதை ஏற்க முடியாது.

நீதிபதிகளை எவ்வாறு அழைக்க வேண்டும் என்று நாங்கள் உத்தரவிட முடியாது. அது வழக்குரைஞரின் விருப்பம் என்று நீதிபதிகள் தெரி வித்தனர்.

சிவசாகர் திவாரி என்ற 75 வயது வழக்குரைஞர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த பொது நல வழக்கில் "நீதிமன்றங்களில் நீதிபதிகளை மைலார்டு, கனம் கோர்ட்டார் அவர் களே என்று அழைப்பது காலனி ஆதிக்க சகாப்தத்தின் அடையாள மாகும். எனவே இவ்வாறு அழைப்ப தற்குத் தடை விதிக்க வேண்டும்' என்று கோரியிருந்தார். அவரது மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்து, நீதிபதி கள் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்

Read more: http://viduthalai.in/page-2/73281.html#ixzz2plAsyRUg

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


தமிழர்கள் தானே!

செய்தி: தமிழக மீனவர்கள் 125 பேரின் காவலை ஜனவரி 20ஆம் தேதி வரை நீட்டித்து இலங்கை நீதிமன்றங்கள் உத்தரவிட்டன. சிந்தனை: அன்றாட வானிலை அறிவிப்புப் போல வரும் செய்திதான் இது. தமிழர்கள் என்ன மலை யாளிகளா? இரு கேரள மீனவர்களை இத்தாலியைச் சேர்ந்த கப்பல் படையினர் சுட்டுக் கொன்றபோது எப்படியெல்லாம் மத்திய அரசு துள்ளிக் குதித்தது - நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டும் இருக்கிறது என்பதைக் கவனித்தால் இந்திய அரசின் மாற்றாந்தாய் மனப்போக்குப் பளிச் சென்று புரியுமே!

சமுதாயக் கூட்டணி அம்போவா?

செய்தி: பெஸ்ட் ராமசாமி தலைமையிலான கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்துக்கு (கொ.மு.க.) மாநில மற்றும் முக்கிய நிர்வாகிகள் அடங்கிய 51 பேர் கொண்ட உயர்நிலை தேர்தல் நிர்வாகக் குழு அமைக்கப் பட்டுள்ளது.

சிந்தனை: ஏன் 50 கட்சி சமுதாய (ஜாதி) கூட்டணி என்னவாயிற்றாம்?

படிப்பும் - பகுத்தறிவும்

செய்தி: ஜி.எஸ்.எல்.வி. டி5 ராக்கெட் வெற்றிகர மாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக நன்றி தெரிவித்துக் கொள்ள இஸ்ரேல் தலைவர் ராதா கிருஷ்ணன் திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்தார்.

சிந்தனை: ஒரே ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதற்கு முன்பெல்லாம் ராக்கெட்டை ஏவுவதற்கு முன், அது குறித்த மாதிரியைக் கொண்டு போய் ஏமுமலை யானின் பாதங்களிலும், காளகஸ்தி கோயிலிலும் வைத்து வழிபடுவார்.

அதுகுறித்து கடும் விமர்சனங்கள் வந்த நிலையில், இப்பொழுது ராக்கெட்டை விண்ணில் செலுத்திய பிறகு இந்தத் தரிசனங்கள் நடந்துள்ளன.

ஒரு கேள்வி: ராக்கெட் விண்ணில் பறந்தது - விஞ்ஞான சாதனையா? குழவிக்கல்லு ஏழுமலையான் சாதனையா? (நம் நாட்டுப் படிப்புக்கும் பகுத் தறிவுக்கும் சம்பந்தமில்லை - தந்தை பெரியார்)

ஓம் முருகா!

செய்தி: திருச்செந்தூர் பாத யாத்திரை பக்தர்கள் 3 பேர் விபத்தில் பலி! சிந்தனை: ஒம் முருகா ஓம் முருகா, வேல்! வேல்!! என்று பக்தர்கள் கத்துவதன் பலா பலன் இதுதானோ!
அர்ச்சகப் பார்ப்பனர்கள் தன்னை (சிலையை) சுரண்டுவதையே தடுக்க முடியாத முருகனா பக்தர்களைக் காப்பாற்றப் போகிறான்?

ஓவர் ஜனநாயகம்!

செய்தி: காஷ்மீரில் இராணுவம் நீடிப்பது தொடர்பாக ஆம்ஆத்மி கட்சியின் பிரசாந்த் பூஷன் மக்கள் கருத்தை அறிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கருத்துக்கு அக்கட்சியின் அகில இந்திய அமைப்பாளரும், டில்லி மாநில முதல் அமைச்சருமான அர்விந்த் கெஜ்ரிவால் மறுப்புத் தெரிவித்தார். சிந்தனை: எந்தப் பிரச்சினைக்கும் மக்கள் கருத்தைக் கேட்பது என்ற நிலைப்பாட்டை உண்டாக் கியதே கெஜ்ரிவால் தானே! இன்னும் என்னென்ன கூத்து நடக்கப் போகிறதோ!

சுறுசுறுப்பு தான்!

செய்தி: இளம் பெண்ணை வேவு பார்த்த விவகாரத்தில் மோடியின்மீது விசாரணை ஆணையம் அமைப்பதில் - நீதிபதிகள் நியமனத்தால் தாமதம். சிந்தனை: அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எந்த விடயத்தில் துரித கதியில் செயல்பட்டு இருக்கிறது - பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தைத் தவிர?

பேராசையே போற்றி!

செய்தி: அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு நிதி நிறுவனங்களிடம் ஏமாறாதீர்கள் - செபி (பங்கு பரிவர்த்தனை வாரியம்) எச்சரிக்கை! சிந்தனை: மோசடி நிறுவனங்கள் பற்றி ஏராளமான செய்திகள் வந்த வண்ணம் இருந்தாலும் பேராசை யாரை விட்டது?

(கடவுள் நம்பிக்கையிலிருந்து பணப் பிரச்சினை வரை எல்லாம் பேராசைதான்!)

Read more: http://viduthalai.in/e-paper/73273.html#ixzz2plBIwTA7

தமிழ் ஓவியா said...


கடவுள் சக்தி இவ்வளவுதான்!


லாரி மோதி அய்யப்பப் பக்தர் பலி

நெல்லை, ஜன.7- நெல்லை அருகே சபரி மலைக்கு பயணம் சென்ற அய்யப்ப பக்தர்களில் ஒருவர் லாரி மோதி பலியாகினார். விருதுநகர் மாவட்டம் முகவூரைச் சேர்ந்த ராமன் மகன் ராகவன் (41), பக்தர்கள் சிலருடன் சபரிமலைக்கு பாதயாத்திரை சென்றுள்ளார். இவர்கள் தென்காசி சாலையில் உள்ள திரிகூடபுரம் அருகே வந்த போது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் ராகவன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் முக வூரைச் சேர்ந்த பாண்டி கனகராஜ் என்பவர் படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

அய்யப்பப் பக்தர்கள் ஆறு பேர் காயம்

உடுமலை, ஜன.7 அய்யப்ப பக்தர்கள் பயணம் செய்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில், ஆறு பேர் காயமடைந்தனர். மதுரை கொச்சைக்காலான் தெருவைச் சேர்ந்தவர் குழந்தைவேலு,33; வேன் ஓட்டுநர். இவர் நேற்றுமுன்தினம் இரவு மதுரையில் இருந்து, தனது சுற்றுலா வேனில், அய்யப்ப பக்தர்கள் 12 பேருடன் சபரிமலைக்கு புறப்பட்டார். நேற்று காலை 6.30 மணிக்கு, உடுமலை- பழநி ரோடு அண்ணா குடியிருப்பு அருகே சென்று கொண்டி ருந்தபோது, மொபட் வாகனத்தில் ஒரு சிறுவன் ரோட்டை கடக்க முயன்றான். மோதுவதை தவிர்க் கும் முயற்சியில் வேன் சாலையோர சிறு பள்ளத்தில் கவிழ்ந்தது. மொபட்டில் வந்த பள்ளி மாணவன் கீழே விழுந்து காயமடைந்தான். இவ்விபத்தில் வேன் ஓட்டுநர் குழந்தைவேலு உள்பட ஆறு பேர் காய மடைந்தனர். உடுமலை காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/73266.html#ixzz2plBXcLTI