Search This Blog

13.1.14

சிலப்பதிகாரம் மூடநம்பிக்கைக் களஞ்சியம்


இப்போது நமது இந்த வகை பிரசாரத்தால் பாரத, ராமாயண, மனு தர்ம சாஸ்திரங்களுக்கும் மதிப்பு குறைந்து விட்டதால் மனு தர்மத்தையும், ஆரிய தர்மத்தையும் பெரிதும் கொண்ட சிலப்பதிகாரத்தைத் தலையில் தூக்கிக் கொண்டு ஊரூராய் திரிந்து பிரச்சாரம் செய்ய ஒரு கூட்டம் கிளம்பியிருக் கிறது.

இந்த சிலப்பதிகாரம் எப்படி அமைந்திருக்கிறது என்றால் ஆபாச மூட நம்பிக்கை, ஆரியக் கருத்துகளை உட்கருத்தாகக் கொண்டு நல்ல தமிழ் அமைப்பை உடையாகக் கொண்டு தேவடியாளுக்குச் சமமாக அதாவது தேவடியாள் எப்படி பார்ப்பதற்கு அலங்காரமாக இருப்பாளோ, ஆனால் உள்ளே போய்ப் பார்த்தால் உள்ளமெல்லாம் வஞ்சகம் நிறைந்தும் உடலெல்லாம் நோய் கொண்டும் உடையால், அணியால் மக்களை ஏய்த்துப் பிழைத்துக் காணப்படுவாளோ அது போலதான் இந்த சிலப்பதிகாரமுமாகும். 

பாரத-ராமாயணம் போல் அது நாவல் சித்திரக்கதை. அதுவும் குறிப்பிட்ட கொள்கை இல்லாமல் எழுதின கதை.

ஆரியம் தலை தூக்கி நம் அரசர்கள் ஆரியத்திற்கு அடிமைகளாய்த் தாசர்களாய் இருந்த காலத்தில் பகுத்தறிவும் இன  உணர்ச்சியும் இல்லாமல் சித்தரித்த கதையாகும்.

மூட நம்பிக்கைக் களஞ்சியம்; ஆரியக் கோட்டைக்கு அரண். இப்படிப் பட்டதை, தமிழர் பண்புக்கு என்று பிரசாரம் செய்தால் இது மானமுடைமை ஆகுமா? 

ஆதிமுதல், அந்தம் வரை, பார்ப்பானை பார்ப்பனியத்தைப் புகுத்தி அமல்படுத்த வேண்டும்; எப்படி எப்படி நாம் நடக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது.

நான் ஒன்றும் பயந்து கொண்டு பேசுகிறேன் என்றோ, பொய் பேசுகிறேன் என்றோ நினைக்க வேண்டாம். அந்தக் கதைகளில் உள்ள கருத்தை அப்படியே எடுத்துக் காட்டுகிறேன். ஆகையால் கவனமாகக் கேளுங்கள்.

போன ஜன்மம், வருகிற ஜன்மம் என்று தலைவிதியைக் காட்டி மனிதனை எப்படிப்பட்ட இழிவுக்கும் ஆளாகச் செய்கிறது. பார்ப்பான் சொல்லுகிறபடி, அவன் எது கேட்டாலும் எடைக்கு எடை தங்கம் கொடுக்க வேண்டு மென்று சொல்லுகிறது. ஆரூடம், ஜோதிடம், பில்லி சூனியம் ஆகியவற்றைப் பற்றிச் சொல்லு கிறது.

முட்டாள்தனமாக கற்பையும் பெண் அடிமையையும் பெருமைப்படுத்துகிறது. 

கோவலனை அரசன் தண்டித்த மாதிரி நம் நாட்டு ராஜாக்களுக்கே ரொம்பவும் அவமானம் தருவதாகும். ராஜா வீட்டு சிலம்பு எங்கோ போய் விட்டது. கோவலன் சிலம்பு வைத்திருப்பது ராஜாவினுடையது என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டதன் உண் மையைக் கண்டுபிடிக்க முடியாத அரசன், கோவலனை வெட்டிக் கொல்லச் சொல்லு கிறான். கோவலன் இறந்து போகிறான்.
இதையறிந்த அம்பாள் கண்ணகிக்குப் பெரும்கோபம் வந்து நிரபராதிகளான மதுரை மக்களைச் சுட்டுச் சாம்பலாக்கினாள். 

 இந்த அம்பாளின் கற்பைப் பற்றிச் சொல்லுவதாய் இருந்தால், தேவடியாள் வீட்டிற்குக் கணவன் போனதை அறிந்த கண்ணகி அந்தத் தேவடியாளை ஏதாவது செய்திருக்க வேண்டும். தாசி மாதவி, கோவலன் கண்ணகியின் கணவன் என்று தெரிந்து அவனை அனுபவிக்கிறாள்.

தேவடியாளுக்கு இதுவா தர்மம்? அப்படிப் பட்டவளுக்குக் கண்ணகி பொருள் கொடுத்து வசதி செய்யலாமா? கோவலன் ஒழுக்கமற்றவன்; கண்ணகி புத்தியற்ற மடப்பெண். அகலிகை, சீதை, துரோபதை, தாரை எல்லாம் கற்புக் கரசிகளாய் இருக்கும்போது, கண்ணகி கற்புக்கு மாத்திரம் முட்டாள்தனம் வேண் டுமா? மற்றும் இந்த அம்மாளுக்குக் கோபம் வந்ததும், தன் மார்பைத் திருகி எறிகிறாள்.

இது என்ன புத்தி? மார்பைக் கையில் திருகினால் வந்துவிடுமா? இந்தப்படி நடந்த சங்கதியும், அனுபவமும் சிலப்பதிகாரம் தவிர வேறு எதிலும் எங்கும் காணக் கிடைக்க வில்லை. அந்தப்படி திருகிப் பிடுங்கின மார்பு (முலை) வீசி எறிந்தால் அது நெருப்புப் பற்றிக் கொள்ளுமா? அதில் பாஸ்பரஸ் இருக்குமா? இந்த மூட நம்பிக்கைக் கற்பனையானது என்ன பயனைக் கொடுக்கிறது? 

இதனால் கண்ணகிக்கு வீரம் இருந்ததாகக் காட்ட முடியுமா? அக்கினி பகவானுக்குக் கண்ணகி பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களைச் சுடு என்று கட்டளையிட்டாளாம், மதுரை நகரம் சாம்பலாயிற்றாம்;
இதுதான் கண்ணகி கற்பின் பெருமையா? அக்கினி பகவானுக் கென்ன புத்தி வேண்டாமா? ஒரு பெண் பிள்ளை முட்டாள்தனமாக உளறினால் நிர பராதிகளைச் சுடலாமா? ஒரு பட்டணத்தைக் கொளுத்தலாமா என்கின்ற அறிவு வேண் டாமா? பார்ப்பனர்களை எதற்காக மீதி விடவேண்டும். ஆகவே வர்ணாச் சிரம தர்ம மனுநூல், இராமாயண-பாரதத்திற்கும் இதற் கும் என்ன பேதம்? இராமன் பார்ப்பனன். ஆக சூத்திரனைக் கொன்றான்  என்பது இராமாயணம்.

பார்ப்பானை மட்டும் காப்பாற்ற வேண்டு மென்பது சிலப்பதிகாரம். எவ்வளவு முட்டாள்தனமான கொடுமை செய்தாலும் பார்ப்பனர்களைக் காப்பாற்றினால் அவள் பதிவிரதை ஆகிவிடுவாள் என்பது சிலப்பதி காரம். பாண்டியன் விசாரணை செய்து, அவனுக்குக் கிடைத்த உண்மை மீது கோவலனுக்குத் தண்டனை விதித்தான். ஆனால் கண்ணகி ஒரு விசாரணையும் செய்யாமல் ஒரு குற்றமும் காணாமல் நிர பராதிகளான மக்களை, பெண்களைச் சுட்டு எரித்துக் கொன்றாள். இவள் கற்புக்கரசி, வணங்கத்தக்கவள், தெய்வமானவள். பாண்டியன் குற்றவாளி. இதுதானே சிலப்பதிகாரக் கதை. இதுதான் தமிழர் பண்பாம். இதற்கு மாநாடாம்!

எவ்வளவு முட்டாள்தனம், இந்த மாதிரி யான ஆபாசமும், அநீதியும் நிறைந்து இருக் கும் கதைகளை நாம் வைத்துக் கொண்டு நமக்குச் சொந்தம் என்று சொல்வது?

இவற்றைத்தான் நாம் ஒழிக்க வேண்டு மென்று சொல்லுகிறோம்; சமுதாயத்திற்கு உதவாக்கரை என்று ஒதுக்கி வைக்கிறோம்.
ஆனால் மாநாடு கூட்டும் அன்பர்களோ பார்ப்பானிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு, அவன் பிச்சை என்று இடும் பச்சை நோட்டு களுக்காகப் பிரச்சாரம் செய்கிறார்கள், இந்தப் பச்சோந்திகள்.

மற்றும் இவர்கள், கண்ணகிதான் கற்பு டையவள் என்று கூறுகிறார்கள்; அப்பொழுது மற்றவர்கள் எல்லாம் கற்பில்லாதவர்களா? இது மனிதத் தன்மைக்கே பொருத்தம் இல்லை. ஆனால் அந்த மாதிரி நடந்ததை நாம் பார்த்து இருக்கவும் முடியாது.

இந்தக் கதையைச் சொல்லி நம் பெண் களெல்லாம் கண்ணகிகளாகத் திகழ வேண் டும், அவள்போல் கற்புக்கரசியாக வேண்டும் என்று பிரச்சாரம் செய்கின்றவர்களின் பிள்ளைக் குட்டிகள் முதலாவது இந்த மாதிரி நடந்தால் பொறுப்பார்களா? என்று கேட் கிறோம். இந்தப் பிரசார பிரம்மாக்களின் மாப்பிள்ளைமார்கள் தேவடியாள் வீட்டில் போய் இருந்தால், இவர்கள் பெண்கள் தாசி வீட்டிற்குப் பணம், நகை எல்லாம் அனுப்ப சம் மதிப்பார்களா? இப்படி நடந்தால் ஆண்கள் ஒழுக்கம் உள்ளவர்களாக ஆவார்களா?

இது ஒழுக்கத்தைக் கற்பிக்கும் நூல் ஆகுமா?

ஆகவே, இது போன்ற கதைகள் பெண் களுடைய அடிமைத் தனத்திற்கு அடிகோலுத லாகவும், முட்டாள்தனத்திற்கு மூலாதாரமாக வும், பிற்போக்கிற்கு வழி அமைப்பதாயும், பார்ப்பானுடைய உயர்வைக் காப்பாற்றுவதற் காகவும் செய்யப் பட்ட இலக்கியங்களே தவிர, மனித சமுதாயத்திற்கு எந்த நன்மைக்காகவும் செய்யப்பட்ட இலக்கியங்களாகாது.

ஆகவே, நமக்கு இருக்கிற இலக்கியங் களின் நிலைமை பெரிதும் மோசமானது. உண்மையிலேயே நமக்கு ஏதாவது கடவுள் உண்டா? மதம் உண்டா? சாஸ்தி ரங்கள் உண்டா? அவர்கள் சொல் வத்தானே ஒத்துக் கொண்டு வந்து இருக்கி றோம். ஆகையால் தான் நாம் கீழ் ஜாதி யாகவும், பார்ப்பான் மேல் ஜாதியாகவும் இருப்பதற்கு நிலைமை ஏற்பட்டு விட்டது.

ஆகவேதான் தோழர்களே இதை இப்படியே வளர  விட்டு இருந்தால் எத்தனை ஆயிரம் வருடங்கள் ஆனாலும் நம் மக்கள் பார்ப்பானுக்கு அடிமையாகவும், மனிதத் தன்மை இழந்தவர்களாகவும் இருக்க முடியுமே தவிர முன்னேற்றம் அடையவே முடியாது என்பதை உறுதியாகச் சொல் லுகிறேன்.

தோழர்களே! நான் கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்ய இங்கு வரவில்லை. ஆனால் பொருத்தம் இல்லாததைச் சொல்வதையும், எழுதி வைத்திருப்பதையும் நான் கண்டிக் கிறேன். சொல்லட்டுமே, உலகத்தில் 250 கோடி மக்களில் 20 கோடிகூட நாம் இருக்கமாட்டோம். அப்படி இருக்க நமக்கு மாத்திரம் இப்படிப்பட்ட கடவுள் உண்டு என்றால் என்ன அர்த்தம்? இருக்கிற குழவிக் கல்லுகள் எல்லாம் நமக்குக் கடவுள்களா?

கம்பி இல்லா தந்தியும் அநேக ஆயிர மைல்கள் ஒரு மணி நேரத்தில் பறந்து செல்லும் விமானங்களும் கண்டுபிடிக்கும் நேரத்திலா யாகமும், ஓம குண்டமும் வளர்ப்பதும், குழவிக் கல்லுகளை வைத்துக் கொண்டு கடவுள்கள் என்று சொல்லிக் கும்மாளம் போடுவது? எவ்வளவு மானக்கேடு என்று நினைத்துப் பாருங்கள். ஒரு விமானம் 20 மணி நேரத்தில் லண்டன், 40 மணி நேரத்தில் அமெரிக்கா போய்ச் சேருகிறது.

ஆனால் நமது கடவுள்கள் விமானத்தின் (தேரின்) மேல் உட்கார்ந்து கொண்டு 2,000 பேர் இழுத்தாலும் அந்த விமானம் ஒருமணிக்கு ஒரு ஃபர்லாங் பிரயாணம் செய்கிறது. இதைப் பார்ப்பதற்கு வெட்கமாக இருக்கவில்லையா? இதற் காகவா பத்து ஆயிரம் இருபது ஆயிரம் பேர் போய், பெண்டு பிள்ளைகளைக் கூட்டத்தில் நசுங்க விட்டு வேடிக்கை பார்ப்பது?

சமுதாயம் முன்னேற்றம் அடைந்ததாக சரித்திரம் கூறும் மக்கள், இன்றைய தினம் இவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருப்பதைப் பார்த்துக் கொண்டு யாரால்தான் இருக்க முடியும்? ஒரு யோக்கியனும் சும்மா இருக்கமாட்டான். ஆகவே, இந்த மாதிரியான கேவலமான நடவடிக்கைகளை வைத்துக் கொண்டு நாம் எப்படி முன்னேற முடியும்?

நம் நாட்டு மக்கள் என்ன முட்டாள்களா? இன்றைய தினம் நம் நாட்டில் காட்சியளிக்கும் சிற்பங்களும், சித்திரக்கலைகளும் நாம்தானே செய்தோம், நம்மால் கட்டப் பட்டவைதானே, இந்தப் பாழாய்ப் போன கோவில் கட்டடங்கள் சிற்பங்கள்?  இன்னும் நாட்டிலே அரிய பெரிய வேலைகளை எல்லாம் செய்து வைத்திருக்கும் நம்மை யார்தான் முட்டாள்கள் என்று சொல்ல முடியும்? இன்றைய தினம் நம்மவர்களில் அறிஞர்கள் இல்லையா? இவை எல்லாம் இருந்தும் சில சமயங்களில் நாம் அறிவை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் போகிறோம்.

ஆகையால்தான் காட்டுமிராண்டித்தனம் என்று சொல்வதற்குக் காரணமாக சில காரியங்களில் நாம் கண்மூடித்தனமாக நடந்து கொள்கிறோமே தவிர, மற்ற எந்தத் தொழில் முறையிலேயும் நம்மை மோசமாகச் சொல்ல முடியாது.


மதம் என்று சொல்லி, புராணம் என்று சொல்லி, கடைசியில் சாமியில் கொண்டு புகுத்திவிட்டால், நம் சொந்த புத்தியை இழந்து, அவற்றில் அறிவைச் செலுத்தி விடுகிறோம். அவை எல்லாம் மாற வேண்டும் என்றுதான் சொல்லுகிறேன்.

நான் இப்பொழுது சொன்னதெல்லாம் இன்றைய தினம் நமக்கு இருக்கிற அக்கிரமங் களுக்கு முடிவு கட்ட. நம் அறிவைக் கொண்டு எந்தக் காரியத்தையும் சிந்திக்க வேண்டு மென்றுதான் உங்களிடம் கேட்கிறேன். மனிதனுக்குப் பகுத்தறிவு இருக்கிறது. அதை ஒவ்வொன்றுக்கும் பயன்படுத்த வேண்டு மென்றுதான் சொல்லுகிறேன். இவ்வளவு பரந்த உலகத்தில் எத்தனையோ கோடி மக்கள் இருக்கிறார்கள். நம்மைத் தவிர அவர்களுக் கெல்லாம் கடவுள், மதம், சாஸ்திரம், வேதம் எல்லாம்தான் இருக்கிறது.


ஆனால் இப்படி எங்கும் இல்லை. எனவே தான் தோழர்களே, எல்லோரும் பகுத் தறிவைக் கொண்டு எதையும் சிந்திக்க வேண்டும் என்று திரும்பத் திரும்பச் சொல் லுகிறேன்.

-------------------------------------22.7.1951 இல் சேலம் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு (`விடுதலை, 27.07.1951).

26 comments:

தமிழ் ஓவியா said...


அயல் பற்று


தமிழிசை ஆய்வாளரான மம்முது சொன்ன கருத்து புதிய தலைமுறை இதழில் (16.1.2014) வெளி வந்துள்ளது.

முத்தமிழ் என்று நாம் சொல்கிறோமே தவிர, இதில் இயற்றமிழ் தவிர்த்து இசை, நாடகத் தமிழ் பரவலாக யாருக்கும் தெரிவதில்லை. ஒரு முறை அமெரிக்கா சென் றிருக்கும்போது, அங்குள்ள பல்வேறு நண்பர்களின் வீடு களுக்குச் செல்ல வேண்டி இருந்தது.

அங்கு எல்லா ருடைய வீட்டிலும் ஏதாவது ஓர் இசைக் கருவியை வைத்திருக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒரு இசைக்கருவி வாசிக்கத் தெரிந்திருக்கிறது. அங்கு இசையைக் கொண்டாடுகின் றனர். ஆனால் நம்மிடையே இந்தப் பழக்கம் தலைகீழாக உள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் தமிழிசை அழியும் வாய்ப்புகள் அதிகம்.

தமிழிசையைக் காப் பாற்றுவது நம் ஒவ்வொரு வரின் கையில்தான் உள்ளது. இன்று திருமணங்களில் நாதஸ்வரம், தப்பாட்டம் போன்ற தமிழிசைகள் இடம் பெறுவதில்லை.

வேறு மாநில இசைக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் கூட தமிழிசைக் கலைஞர்களுக்கு தமிழர் களால் வழங்கப்படுவதில்லை. இந்த நிலையை மாற்ற வேண் டும். தமிழிசைக் கலைஞர் களுக்கான பொருளாதார வாய்ப்புகள் உறுதி செய் யப்பட்டாலே தமிழிசையை பெருமளவில் காப்பாற்ற முடியும். கர்நாடக சங்கீத சபாக்கள் போல தமிழிசைக் காக சபாக்கள் உருவாக் கப்பட வேண்டும். அங்கு நடக்கும் தமிழிசை நிகழ்ச்சி களில் தமிழர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

மேலே கண்டுள்ள மம்முது அவர்களின் கருத்தில் பல உட் பொருள்கள் பொதிந்து கிடக்கின்றன.

தமிழர் வீட்டுத் திரும ணங்களில் நாதஸ்வரம், தப்பாட்டம் போன்ற தமிழிசை காணப்படவில்லையே என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி யுள்ளார்.

விவசாயம் போலத்தான் இந்தத் தமிழ் இசைக் கலை களும்; விவசாயம் உடலு ழைப்பைப் பெரிதும் சார்ந்தது என்பதால் அதனைப் பாவத் தொழில் என்று மனுதர்மம் ஒதுக்கி விடவில்லையா? அதன் விளைவை இன்று வரை கூட நம் மக்கள் அனு பவித்துக் கொண்டு தானி ருக்கிறார்கள்.

நாதஸ்வரம், தப்பட்டம் போன்ற கலைகள் உடலு ழைப்பைக் கூடுதலாக உறிஞ் சக் கூடியதாகும். அதனாலே ஆரியம் அதனை ஒதுக்கி விட்டது. தவில் போன்ற கருவிகள் பக்கம்கூட அவர் கள் நெருங்க மாட்டார்களே!

வேறு மாநில இசைக் கலைக்கு வழங்கப்படும் இசை வாய்ப்புகள்கூட தமிழிசைக் கலைஞர்களுக்கு வழங்கப் படுவதில்லை என்று மம்முது அவர்கள் குறிப்பிட்டு இருப் பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.

இப்பொழுது புதிதாக ஒரு வியாதி கிளம்பி இருக்கிறது. தமிழ்நாட்டில். அது கேரளா விலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. செண்டை மேளமாம். இது குறித்துத் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர் களும் இ(அ)டித்துக் கூறி இருக்கிறார்.

தமிழர்கள் தங்களுக் குரிய மதிப்பைவிட அயல் வழக்குகளில் தங்களைப் பறி கொடுப்பது பல வகைகளி லும் நடந்து கொண்டு இருப்பதுதானே தமிழர்களின் இழப்புகளுக்குக் காரணம்.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/73522.html#ixzz2qEj5m5AX

தமிழ் ஓவியா said...

இந்நாள்... இந்நாள்....பகுத்தறிவுச் சிந்தனையாளர் திராவிடர் இயக்கத்தின் தீரர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் மறைவு (2000).

நாவலர் கடைசியாகக் கலந்து கொண்ட நிகழ்ச்சி பெரியார் திடலில் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த புத்தாயிரம் தொடக்க விழாவில்தான் (31.12.1999 நள்ளிரவு).

Read more: http://viduthalai.in/e-paper/73520.html#ixzz2qEjoQalr

தமிழ் ஓவியா said...


முத்தமிழ்ப் பொங்கல்


பொங்கல் விழா! முத்தமிழ்ப் பொங் கல் விழா! முப்பால் பொங்கல் விழா! ஆரியத்தால் புராண மத மூட இதி காசத்தால், முதலாளித்துவத்தின் ஆணவ அடக்கு முறைகளால் தீண்டப் படாத, மங்காத தமிழர் பண்டைத் தனித் தமிழ் வாழ்வின் நந்தாத நறுஞ் சின்னம்! தனித் தமிழ் விழா! தன்மான விழா!

உழவர் விழா! நிலத்தின்மீது காத லற்று, அதனைப் பிறர் உழுவித்துத் தான் தன்மானமற்று, உழையா உழைப்பை உண்ணும் நில முதலாளி அல்லது ஜமீன், மிராசுதாரர் ஆகிய முதலாளித்துவக் கடவுளால் படைக் கப்பட்டு முன்னிருந்த, தானே தன் நிலத்தின் உரிமையாளனாய், தானே அதைத் தனித் தமிழ்க் காதலனாய் உழுது உழைத்துப் பயிரிடுபவனாய், தானே அதன் இன்பமும் பயனும் நுகர்பவனாய், தானே அதன் பண்டம் பரிமாறும் வணிகனாய், தானே ஊராளும் குடியரசன் குடிமொழிக்குரிய குடியாட்சி உரிமையாளனாய், தானே அக்குடியரசன் குடிப்படையின் வீரனாய், தன் குடும்பத்தின் தொழுகைக் கூட மாகிய கோயில் வீடு அல்லது அரங்கில் தானே தன் குடும்பத் தலைவனாய் வழிபாடாற்றும் வழிபாட்டுத் தலை வனாய் வாழ்ந்த பண்டைப் பொது வுடைமைப் பெருந்தமிழன் காலத் திலிருந்து இன்றுவரை பண்பு மாறாது கொண்டாடப்பட்டு வரும் உழவர் விழா! வேளாளர் விழுத் தமிழ் விழா! பொதுவுடைமைப் பண்பாட்டு விழா! தனித் தமிழர் திராவிடப் பெருவிழா!

யானை எருத்தம் பொலியக் குடை நிழற் கீழ் சேனைத் தலைவராய் வள்ளு வப் பெருமகன் தன் திண்டோள்கள் இரண்டும் புடைக்க, மகிழ்ச்சி முகத்தில் பெருக்கெடுத்து இருகண்வழி ஓடி ஒளிவீச, குன்றென நின்று கறங்கும் இரு முரசங்களை யானையின் இருபுறமும் ஞாற்றிக் கால்களால் அவற்றைத் தாங்கிக் கையிலுள்ள குணில்களால் புடைத்து, மன்னன் வளம் பாடி, மழை வளம், புகழ்பாடி, கொண்டல் வண் ணன் மழைவேந்தனுக்கு விழாவயர்வீர் மதுரை மன்னரீர்! என்று முழங்கி விழா வாட்டழைத்த பண்டைத் தமிழர் இந்திர விழா எங்கே! எங்கே! அது பொங்கல் விழாவின் பொங்கலில்தான் புதைந்து எஞ்சியுள்ளது! செஞ்சிலம்பார் சிலப்பதிகாரமும் பொன்மணியார்க்கும், வண்ண மணிமேகலையும் முழங்கும் இந்திர விழாவை நாம் இழந்தோம், இதனிற் கலந்தோம்!

வெள்ளைத் தீவைப் படையெடுத்து அதனில் வெண்கடப்பந் தார்சூடிக் கடம்பமரத் தடியிருந்து மேல்கட லாண்டு அக்கடலில் கலஞ்செலுத்திய மேல் நாட்டு வணிகரைச் சூறையாடிய கடம்பன் என்ற கடற்கொள்ளை இனத்தைத் தவிடுபொடியாக்கிய சேரரின் கடற்காவலனாய் மங்களூரைத் தலைநகராகக் கொண்டு தென் கன்னடத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட வேளிர் கோமான் நன்னன் தன் பெயரிட்டு மதுரையில் நடத்திய திருவோண விழா எங்கே! எங்கே! அத்தமிழர் தமிழ் விழா மறைந் தது! அது இந்தப் பொங்கல் விழா வில்தான் எஞ்சி உறைந்து கிடக்கின் றது.

தமிழகத்தில் மறைந்த திருவோண விழா பண்டைச் செந்தமிழ்ச் சேரல நாடான கேரள நாட்டில் இன்றும் தேசியத் திருவிழாவாக, மலையாள நாட்டுத் திராவிடத் திருநாளாகக் கொண்டாடப்பட்டுத் தான் வருகிறது. இன்றைய தமிழ் நாட்டுத்திராவிட இயக்கத்தார் கண்களுக்கு இன்னும் புலப்படாமல்! அது மாவலி மன்னன் தென்னாடெங்கும் ஒரே சக்கரவர்த் தியாய், ஆரியம் தென்னாட்டில் புகுமுன், ஒரு மொழி வைத்து ஒரு முத்தமிழ் இலக்கியம் கொண்டு ஒரு குல மக்களாய் ஒரு பெருங்கடவுள் போற்றி ஆண்ட காலத்தின் நினைவு நாள். ஆரியம் புகுந்தது குள்ளமான வாமன முனி உருவில், சூழ்ச்சி செய்தது,தானங் கேட்கும் உருவில்!

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்

என்ற வள்ளுவர் பண்பின்படி, வஞ்சனை என்று தெரிந்த வாமனன் சூழ்ச்சியில் தானேசென்று சிக்கி அழிந்தான் ஆனால் அவன் மாவலி. சிரஞ்சீவி, அழியா அறிவுருவினன். அவன் கூறினான், தென்னாட்டவரே! நீவிர் இன்று சீர்குலைகிறீர். ஆனால் பின்னால் சீர்ப்படுவீர். அதுகாறும் என் நினைவாக ஓணவிழாக் கொண்டாடுக. ஒருகாலம் வரும், ஓண விழாத்தோறும் நாடு உலா வரும் யான் ஒரு ஓண நாளில்மீண்டுந் தென்னாட்டை ஆள வருவேன் என்று. அதனைப் பாடி ஆணும் பெண்ணும் ஆரியமின்றி, ஆரிய வினை முறையின்றிக் கொண்டாடி வருகின்றனர் மலையாளத் திராவிடர்.

மாவலியின்பின் அவன் பிள்ளைகள் ஐவர், பாண்டியன், சோழன், சேரன், கருநாடன், ஆந்திரன் போராடி அய்ந்தரசராய் நாளடைவில் ஐந்து மொழி நாடுகளாண்டனர். சாதி சமய மூடம் புகுந்தது.

இத்திராவிடத் திருநாளுக்கும் பொங்கல் நாள் உடன் பிறந்த தங்கை நாள். பொங்குக பால்! பொங்குக தேன்! பொங்குக வருங்காலத் திராவிடப் பொங்கல்!

(திராவிடத் திருநாள் கலைமன்றம் சென்னை-1)

Read more: http://viduthalai.in/page-2/73526.html#ixzz2qEk39uCK

தமிழ் ஓவியா said...


தை தக்கா தை தக்கா!


தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் அறிக்கை வெளியிட்டதற்கு அஇஅதிமுக சார்பில் ஏதாவது பதில் சொல்ல வேண்டுமல்லவா! அதனால்தான் தை தக்கா தை தக்கா! என்று குதிக்கிறது. அக்கட்சியின் அதிகாரபூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். ஒரு பதில் எழுத முயற்சித்துள்ளது. குளிக்கப் போய் சேற்றில் விழுந்த கதை தான் அது.

திமுக தலைவர் கலைஞர் அறிக்கையில் தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதற்கு தமிழ் அறிஞர்களும், தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்களும் கூறிய கருத்துக்களை எடுத்துக் கூறியிருந்தார் (முரசொலி, 11.1.2014).

ஆனால் நமது எம்.ஜி.ஆர். ஏடு எவற்றை ஆதாரமாக எடுத்துக் காட்டியுள்ளது? தேவி பாகவதம், புராணங்கள், இதிகாசங்கள் இவற்றை எடுத்துக் காட்டியுள்ளது (புராணங்கள் வரலாறு அல்ல என்கிற அடிப்படை கூடத் தெரிய வில்லையே, அந்தோ பரிதாபம்!).

பிர்மா, விஷ்ணு என்னும் இந்து மதக் கடவுள் களையும் துணைக்கழைத்துள்ளது. (இதற்குப் பெயர்தான் இந்துத்துவா என்பது)

ஆரிய மாயை பற்றி அறிஞர் அண்ணா எழுதியுள்ளதைப் படித்தால் இந்த ஆரிய மாயையின் அடிப்படை அப்பட்டமாகப் புரியும்.

பூணூலின் மகத்துவத்தைப் பற்றி பிரஸ் தாபிக்கும் அண்ணா திமுக ஏடல்லவா! வேறு எப்படித் தான் எழுதும்?

ஆரியம் ஒரு நடமாடும் நாசம் திராவிடத் தோழா வேண்டாம் அதனிடம் பாசம்

அதனால் வருமே அந்தகக்காசம்!

- அறிஞர் அண்ணா (ஆரிய மாயை நூல்)

Read more: http://viduthalai.in/page-2/73534.html#ixzz2qEkcA9OW

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

வணக்கம் தமிழ் ஓவியா, தங்களுக்கும் தங்களின் அன்பான குடும்பத்தினர், நண்பர்களுக்கும் என் இனிய உழவர் திருநாள் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் - நா.முத்துநிலவன்,

தமிழ் ஓவியா said...


சிறகை விரி - செவ்வானமும் சிறிதாகும்!

நாள்தோறும்
தேதியைக்
கிழிக்கும்
நண்பனே, நண்பனே!

புதிய தேதியில்
புத்தாக்க
ஓவியத்தைத்
தீட்டு!

நேற்றைக்கு
விடுமுறை
இன்றைக்குப்
புதுநடை!

உன் வீட்டில்
பஞ்சாங்கம்
இருக்கிறதா?
போ(க்)கியில் எரி!

புராணப்
புத்தகங்கள்
உண்டா?
பொங்கலுக்கு
விறகைத் தேடாதே!

சாமிப் படங்கள்
உண்டா?
சவரம் செய்யத்
தேவைப்படும்!

மிக மிகப்
பழைமையா?
மிக மிகத் தேவை
திருத்தம் - இது
பெரியார் கொடுத்த
அழுத்தம்!


காகித ஊருக்குக் கரையானா
பேருந்து?

காலத்தை வெல்ல
கடவுளா
படை மருந்து?

சனி சரியில்லை
யென்று
வெள்ளியைத்
தேடினால்
நட்டம் அய்ந்து
நாட்கள்!

செவ்வாய்
தோஷமென்றால்
செவ்வாய்க்கிரகம்
செல்பவன்
சிரிப்பானே!

உன் காலை
உன் கையாலா
கட்டுவது?
உள்ளத்தில்கோழை
குடிகொண்டால்
உன் பகைவன்
நீயேதான்!

செவ்வாயன்று
பொங்கல்!
சிரித்தபடி
பொங்கலிடு!

சிறகைவிரி
செவ்வானமும்
சிறிதாகும்!
பொங்கலோ
பொங்கல்!

- கவிஞர் கலி.பூங்குன்றன்

Read more: http://viduthalai.in/page-1/73563.html#ixzz2qJwYTlx5

தமிழ் ஓவியா said...


சிவத்தம்பி பார்வையில் திராவிடர் இயக்கம்


சமுதாய மாற்றத்தைக் கொண்டுவருவதில் கலைப்படைப்புக்கு முக்கியப் பங்குண்டு என்பதனைத் திராவிட இயக்கத்தினர் நன்கு அறிந்திருந்தனர். எனவே மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளைக் கலையாகவும் இலக்கிய மாகவும் படைக்க விரும்பினர்.

தாங்கள் கொண்ட கொள்கைகளைக் குறிப்பாக மேடைப் பேச்சின் வாயிலாகவே மக்களிடம் சேர்ப்பித்தனர். இருப்பினும் இவர்கள் திரைப்படம், கதை, கட்டுரை, நாடகம் போன்றவற்றின் வழியாகவும் கொண்டு சென்றனர். இவர்கள் மேற்கொண்ட சமூகச் சீர்திருத்தத்திற்கு இலக்கிய வடிவங்கள் பெரிதும் துணை நின்றன.

-கா. சிவத்தம்பி
தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், பக்கம் 83-90

பார்ப்பனர் அல்லாதார் இயக்கம்!

தென்னிந்திய வரலாற்றில் இந்த நூற்றாண்டின் மிகச் சிறப்பான நிகழ்ச்சி, திராவிட இயக்கம் என்று கூறப்படுகின்ற பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தின் எழுச்சியும் அதன் வளர்ச்சியுமாகும். இந்திய வரலாற்றில் முதன் முறையாக மதமோ, இனமோ அன்றிச் சாதியே பெருஞ்சக்தியாக அரசியலுள் நுழைந்தது.

திராவிட இயக்கம் இந்திய வரலாற்றில் ஓர் அண்மைக்கால அத்தியாயமெனினும் இவ்வியக்கத்தின் தொடக்கம் குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. இப்போது இதுஒரு வரலாற்று ஆய்வுப் பொருளாகவே ஆகிவிட்டது.

- ஏ.என். சட்டநாதன்,
தமிழ்நாட்டில் திராவிட இயக்கமும் அதன் பாரம்பரியமும், ப.3

Read more: http://viduthalai.in/page2/73564.html#ixzz2qJwvhiuP

தமிழ் ஓவியா said...


புரட்சிக் கவிஞரின் நகைச்சுவை ஒவியங்கள்


ஒரு சந்தேகம்

சரியாய் இரவு 1 மணி, தூக்கம் வரவில்லை. நமது புரோகிதரிடம் போனாலும் ஏதாகிலும் சந்தேகத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று தோன்றிற்று. மூன்றாவது வீதியிலுள்ள எங்கள் புரோகிதர் வீடு போய்க் கதவைத் தட்டினேன். உள்ளே குறட்டைவிடும் சத்தம் கேட்டதைத் தவிர, ஏன் என்று கேட்கவில்லை. பிறகு, ஐயர் அலறி எழுந்து யார்? யார் என்றார். கதவை இரண்டு உதை விட்டதினால்.

புரோகிதர்: யார் இந்நேரத்தில்?

நான்: நான்தான் கிண்டல்காரன்

புரோ: என்ன அப்பா, நல்ல தூக்கம்! நடுநிசி!

நான்: ஒரு முக்கியமான விஷ யத்தை நாடி வந்திருக்கிறேன். உங் களுக்கு மிக்க கீர்த்திக்குரிய விஷயம். ஐயர் விளக்கேற்றிக் கொண்டு வேஷ் டியைத் திருத்தமாய்க் கட்டிக்கொண்டு என் எதிரில் திண்ணையில் வந்து உட்கார்ந்தார்.

ஐயர்: என்ன விஷயம்? இந்நேரத் தில் வந்ததைப் பார்த்தால் நூதனமான செய்தியாகத்தான் இருக்க வேண்டும். (ஒரு சிட்டிகைப் பொடி போட்டுக் கொண்டு, என்னிடமும் நீட்டி) பொடி போடுகிறீரா? என்ன நூதனம்? அதை முன்னதாகச் சொல்?

நான்: எனக்கேற்பட்டிருக்கும் கவலையில் பொடியும் ஒரு கேடா? ஐயர்: (ஆச்சரியமாய்) அப்படி என்ன?

நான்: விஷயம் அதற்கு... அதற்குச் சொந்த அர்த்தம் இன்னதென்று தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. உங்களிடம் அகராதி இருக்கிறதா?

ஐயர்: நீர் சொல்லுமே! எனக்குத் தெரியாவிட்டால் பிறகு அகராதி கொண்டு வருகின்றேன்.

நான்: அப்படியானால் சரி. விஷயம் என்னவென்றால் புரோகிதர் வீட்டுக்கு வீடு சென்று அரிசி, பருப்பும் மரக்கறி கள் மற்றும் சாமான்கள், சொர்ணப் புஷ்பம், இவைகளெல்லாம் வாங்கிக் கொண்டு வருகிறார்கள். இந்த விஷயம் பகலில் தானே நடக்கிறது?

ஐயர்: ஆம்

நான்: பகலில் நடத்தும் இதற்குப் புரோகிதம் என்றல்லவா பெயர்?

ஐயர்: புரோகிதம் என்று தான் பெயர்

நான்: புரோகிதம் என்ற பெயர் இதற்காகிவிட்டது.பகற் கொள்ளைக்கு என்ன பெயரிடுவது? யோசித்து, காலையிலாவது சொல்லுங்கள், நான் போய் வருகின்றேன்.

- புதுவை முரசு விசேஷ அநுபந்தம்

Read more: http://viduthalai.in/page2/73576.html#ixzz2qJxPoUXZ

தமிழ் ஓவியா said...

ரேகை சாஸ்திரம்ரேகை சாஸ்திரம் பார்த்துக் கொள்ளச் சொல்லி ஐயர் வேலப்பரை வேண்டினார். வேலப்பர், ஐயரை உள்ளே அழைத்துத் தெருக்கதவைச் சாத்திக் கொண்டு கைகழுவிக் கொண்டு வருவதாய் அறைக்குச் சென்று பின் ஐயர் எதிர் உட்கார்ந்திருந்தார்.

ஐயர்: கையை விரித்து நீட்டுங்கள்

வேலப்: நன்றாகப் பார்த்துப் பலன் சொல்லுங்கள் (உள்ளங்கையை வேலப் பர் காட்டினார். அதில் சுயமரியாதைக் காரன் என்று எழுதியிருந்தது)

ஐயர்: (அதைப் பார்த்ததும்) நீர் தெருக்கதவைச் சாத்திய காரணம் என்ன?

வேல்ப்: நான் காரணமில்லாமல் தெருக்கதவைச் சாத்துகிறவன் என்று ரேகை சொல்லுகிறதோ?

கடவுள் ஆவேச சக்தி

தாய்: என் மகளுக்கு வெகு நாளாகியும் பிள்ளை இல்லை.

சாமி: நீ ஒரு பொருளைப் பற்றிக் கேட்கின்றாய். ஒரு நாள் அல்லது ஒரு மாசம் அல்லது ஒரு வருஷத்தில் கிடைக்கும்.

தாய்: (சாமிக்குப் பக்கத்திலிருந்த சிஷ்யையை நோக்கி) இதென்ன! சாமி என்னமோ சொல்லுகிறதே!

சிஷ்யை: உரக்கச் சொல்ல வேண்டும். சாமிக்குக்காது செவிடு.

- புதுவை முரசு விசேஷ அநுபந்தம்

Read more: http://viduthalai.in/page2/73576.html#ixzz2qJxZK0tI

தமிழ் ஓவியா said...

பிள்ளை வளர்க்கும் முறைஆஸ்திகர்: பிள்ளைகளைச் சிறுவய திலேயே ஒழுக்க முறையில் வளர்க்க வேண்டும்.

சுய.மரி: அதோ நிர்வாணமாக நிற் கிறானே. அவன் தான் உங்கள் பிள் ளையோ?

ஆஸ்திகர்: ஆம், பார்த்தீர்களா? பக்கத்திலுள்ள பையன் (தலை சீவி நன்கு உடுத்தி இருந்தவனைக் காட்டி) ஒரு நாளாவது நெற்றியில் நாமம் வைத்துக் கொள்வதில்லை.

ஆயிரம் வருடமாக அடித்துக் கொண்டு போகிறான்

மேல் நாட்டில் பிறந்து வளர்ந்த ஓர் இந்தியர்

(தோட்டியைக் காட்டி) இவர் யார்?

உள்ளூரார்: இவர் வீட்டிலுள்ள அசுத்தங்களை எடுத்துப் போகின்றார்.

மே இந்தி: (வண்ணானைக் காட்டி) இவர் யார்?

உள்: இவர் வீட்டிலுள்ள அழுக்குத் துணிகளையெல்லாம் எடுத்துப் போகிறார்.

மே. இந்: திரும்பவும் சலவை செய்து வந்து கொடுப்பாரா?

உள்: ஆமா!

மே. இந்: (புரோகிதரைக் காட்டி) இவர் யார்?

உள்: இவர் வீட்டிலுள்ள அரிசி, பருப்பு முதலியவைகளை மூட்டை கட்டிக் கொண்டு போகிறார்.

மே. இந்: சமையல் செய்து கொண்டு வந்து கொடுப்பாரா?

உள்: திரும்பிக் கொடுப்பதில்லை.

மே. இந்: அடித்துக் கொண்டா போகின்றான்?

உள்: ஆம்

மே. இந்: அடித்துக்கொண்டு போவ தைப் பார்த்துக் கொண்டா இருப் பார்கள்?

உள்: ஓய்! எத்தனை தரம் சொல் லுவது! அடித்துக் கொண்டு தான் போகின்றான்! 100 வருடமாக இப்படி.

சீக்கிரம் வெளுத்துவிடும்

புரோகிதன்: சென்ற தடவையில் திவசத்துக்கு வந்தேன். நீர் கொடுத்த அரிசி கறுப்பாக இருந்தது. இப்போதும் அதற்கு மேல் இருக்கிறது. என் மந்திர மும் உங்களுக்கு கறுப்பாக முடிந்துவிடும்.

வீட்டுக்காரர்: சீக்கிரம் எல்லாமே வெளுத்துவிடும். போய் வாருங்கள்.

- பாரதிதாசன் கதைகள்

Read more: http://viduthalai.in/page2/73576.html#ixzz2qJy5mLsX

தமிழ் ஓவியா said...

படைத்தது யார்?(ஒரு சிற்பி கோயிலில் வினாயகருக் கெதிரில் நின்று வணங்கிய வண்ணம்) அப்பனே! (ப்ரபூ)! என்னை ரக்ஷிக்க வேண்டும். கை, கால்கள் நோயில்லாமல் இருக்க கிருபை செய்ய வேண்டும். எல் லாவற்றையும் படைத்த கருணாநிதியே!

அண்மையிலிருந்த ஒருவன்: சிற்பியாரே! இந்த வினாயகரை யார் செய்தது? அமைப்பாக இருக்கிறது.

சிற்பி: நான்தான் செய்தேன்!

ஒருவன்: எல்லாவற்றையும் அது படைத்ததாய் சொன்னீர்களே! அதற் காகக் கேட்டேன்.

- பாரதிதாசன் கதைகள்

போலீஸ் காபந்து இல்லாமல் வைகுண்டத்திற்குப் போக வேண்டாம்

ஒருவன் பல கொலைக் குற்றம் செய்து வந்ததின் பயனாய்ச் சர்க்காரால் தூக்கில் இடப்பட்டான். அவன் மகன் வெளியிட்ட கருமாதிப் பத்திரிகையின் படி, அந்தக் கொலைகாரன் வைகுண் டம் போனதாய்த் தெரிகிறது. தக்க போலீஸ் காபந்து இருந்தாலொழிய வைகுண்டத்திற்கு எவரும் போக வேண்டாம்!

- பாரதிதாசன் கதைகள்

Read more: http://viduthalai.in/page2/73576.html#ixzz2qJyEkhgf

தமிழ் ஓவியா said...

வானலோகத்தில் காற்றே இல்லை

வானலோகம் சென்றுவிட்டால், ஊர்வசி, ரம்பை சகிதம் சுகமாய் இருக்க லாம் என்று நாம் சொல்லுகிறோம். அங்கு மூச்சுத் திணறும்படி காற்றே இல்லை என்று ஐரோப்பியர்கள் சொல்லுகிறார்கள்!

குரு பூஜை தான் நடக்கிறது

புத்தர்களை ஒழிக்க கடவுள் சங்கரராக அவதரித்தாராம். சங்கரருக்கு இப்போது, குருபூஜைதான் நடக்கிறது. 40 - 50 கோடி புத்தர்கள் வாழ்கிறார்கள்.

- பாரதிதாசன் கதைகள்

என்ன அர்த்த புஷ்டி

வருந்தி அழைத்தாலும் வாராது வாரா!

பொருந்துவன போமின் என்றாற் போகா

என்ன அர்த்த புஷ்டி! இந்த வரிகளைப் பொன் தகட்டில்

செதுக்குமுன், ஈய எழுத்தால் அச்சடித்து விட்டார்கள்.

- பாரதிதாசன் கதைகள்

மோக்ஷ வழி காட்டுங்கள்

அடிகள்: பணம் கொடுங்கள், இதோ மோக்ஷம்.

குடிகள்:எப்போதும் இது ஓர் கவலையா? வேண்டிய பணம் மொத்த மாய் கொடுக்கிறோம். மோக்ஷத்துக்கு முன்னே போய் வழிகாட்டித் தொலை யுங்கள்.

- சிரிக்கும் சிந்தனைகள்

அவர்கள் நினைப்பது சரி

சர்வ வல்லமையுள்ள கடவுளுக்குப் பரிந்துகொண்டு கோபிக்கும் தொண் டர்கள். அந்தக் கடவுள் பேரால் நடக் கும் அட்டூழியங்களைக் கண்டிப்ப வரைப் பற்றிப் போலீஸின் உதவியை நாடுவதுண்டு. கடவுளைவிடப் போலீஸ் காரன் அதிக வல்லமையுடையவன் என்று அவர்கள் நினைப்பது சரி.

- சிரிக்கும் சிந்தனைகள்

அழிப்பது அரிது தான்

ஒன்றை ஆக்குதல் அரிது, அழித்தல் எளிது என்பது முதுமொழி. இது எல்லா விஷயத்திலும் சரியில்லை. கடவுள் பெயரால் வெகு எளிதாகப் புளுகி வைத் துள்ளார்கள். அவைகளை அழிப்பது மிக அரிதாக முடிகிறது.

- சிரிக்கும் சிந்தனைகள்

ஒற்றுமைக்கு வழியேது

பிற நாட்டினர் இயற்கை முறையில் தமது முகப்பொலிவை உண்டாக்கி, உருவத்திலும் சமூக ஒற்றுமை கொண்டிருக்கின்றனர். நம் நாட்டினர், சரக்குக் கேடாயிருந்தாலும் அதனுடைய டப்பி யை அழகு படுத்துவது போல் வற்றிய முகத்தில் நாமம், விபூதி முதலி யவைகளை எழுதிக் கொண்டு சமூக பேதத்தை வளர்த்துக் கொண்டு போகின்றார்கள்.

- சிரிக்கும் சிந்தனைகள்

Read more: http://viduthalai.in/page2/73576.html#ixzz2qJyNzFhm

தமிழ் ஓவியா said...


தமிழர் திருநாளில் வெளியிடுவோம் புதிய சமத்துவப் புத்தகம்!


- கவிஞர் கண்ணிமை

இலை, தழை

கிழங்கு, காய்கனிகள், நீர்

இவைகளே குமரிக் கண்ட

முதல் மனிதனின் உணவு!

நிலத்தின் கன்னிமை கழிய உழுது

விந்து வியர்வையை விதைத்தான்!

அகர முதல் னகர இறுவாய்

அனைத்தும் பெற்றுக் கொடுத்தது நிலம்!

உணவுப் பழக்கம்

தலைமுறை நமக்குத்

திரட்டிக் கொடுத்த திரு!

பூமிக்குத் தமிழன்

கொடுத்த பரிசு

புட்டும் தோசையும்!

கோடை வெயிலுக்குக்

கொங்கு மண்டலம்

கொடுத்த கொடை

கம்பங் கூழ்!

கிண்டிய கழியும், கீரையும்

ஆன சோறு

உமிழ்நீர்ச்சுரப்பி மகிழ்ந்து

ஊற்றெடுக்கும்!

நோய் நீங்கி ஆயுள் நீளும்!

சிக்கிமுக்கிக் கல்லைக்

கண்டுபிடித்ததே

உணவின் பொற்காலம்!

அறிவுஆழ்ந்த அகன்றபோது

உணவு

அறுசுவையானது!

தமிழ்ச்சித்தன்

உணவே மருந்து என்றான்!

ஈன்றாள்பசி குழந்தைகளின் பசி

மூத்தோர் பசி

இவை போக்கும் மனிதனைக்

கையெடுத்துக் கும்பிடலாம்!

விருந்தோம்புதல் என்ற

சொல்லுக்கு ஈடான வினைச்சொல்

உலகமொழிகளில் இல்லை!

கைகுலுக்குதல் கட்டித் தழுவுதல்

மனிதகுலத்தின்

பண்பாட்டுப் பதிவுகள்!

ஒழுக்கக் கட்டமைத்தபோது

வானுயர் தோற்றம்

வசப்பட்டது!

வழிகிற கண்ணீரைத்

துடைக்கும் விரல்கள் இருந்தால்

அது

வாழக் கிடைத்த கொடை!

கல்லைக் கடவுளாக்க

சிலை வடிக்காதே!

மனிதனை வள்ளலாக்கி

வாழவை!

புகழை நிறுத்திவிட்டுப்

போக வேண்டும் என்றால்

அறம்செய்!

வெடித்துச் சிதறிய

வன்முறைகளால்

மரண வாசலில் கிடக்கிறது

மனிதம்!

அன்பும் பரிவும்

விரவிய சொற்களைக் கொண்டு

தமிழர் திருநாளில்

வெளியிடுவோம்

புதிய சமத்துவப்

புத்தகம்!

Read more: http://viduthalai.in/page3/73565.html#ixzz2qJyfccmY

தமிழ் ஓவியா said...


திருவாரூர் கமலாலயம்


திருவாரூரில் சரண கமலாலயம் என்ற 16 ஏக்கரில் உள்ள குளம் இருக்கிறது. அங்கு முதலில் சமணர்கள்தான் இருந்தார்கள். சமணர்களை அடியோடு வெட்டிக் கொன்றனர். அந்த இடத்தைக் குளமாகவும் ஆக்கினர்.

- கி.வீரமணி
(நூல்: பெரியாரியம் (கடவுள்) பக்கம் 212

Read more: http://viduthalai.in/page4/73569.html#ixzz2qK09yd85

தமிழ் ஓவியா said...

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு

தமிழ் ஆண்டைப் போல சிந்துச் சமவெளி மக்களுக்கு ஆண்டுப் பிறப்பு தை மாதத்திலேயே தொடங் கிற்று. சுமேரியருக்கு இராசிகள் பத்தாயிருக்க. சிந்துச் சமவெளி மக்களுக்கு எட்டேயிருந்தன. இத னால் சிந்துவெளி நாகரிகத்தின் பழைமை கி.மு. 5610 வரை எட்டு வதாக தெரிகிறது.

இது சுமேரிய நாகரி கம் பிறப்பதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட கால மாகும். மனித நாகரிகத்தின் பிறப் பிடமும், வளர்ப்புப் பண்ணையும் எகிப்தோ, பாபிலோனோ அல்ல சிந் துவெளியும் தென்னாடுமே என்பதை, இது அறுதியிட்டுக் காட்டுகிறது

(தென்னாடு கா. அப்பாத்துரை பக்கம் 48)

Read more: http://viduthalai.in/page4/73569.html#ixzz2qK0KfNyI

தமிழ் ஓவியா said...

கல்கி கூறும் மூடநம்பிக்கை

கேள்வி: இந்த வருஷம் தியாகராஜ ஆராதனை விழாவில் தங்களைக் கவர்ந்தது எது?

பதில்: டி.வி. ஒளிபரப்புக்கு சேட்டிலைட் கிடைக்கக் காத்திருந்து ராகு காலத்தில் பஞ்சரத்ன கிருதிகள் பாடியதுதான்; - மூடநம்பிக்கையை விஞ்ஞானம் வென்றது.

(நன்றி: கல்கி)

Read more: http://viduthalai.in/page4/73569.html#ixzz2qK0SF0rS

தமிழ் ஓவியா said...


பொங்குக பொங்கலே!

- வய்.மு. கும்பலிங்கன்

சாதி மதத் தீங்கொழியப் பொங்கட்டும் பொங்கல்!
சதிகாரர் செயல்மாயப் பொங்கட்டும் பொங்கல்!
வீதியிலே தமிழ்மணக்கப் பொங்கட்டும் பொங்கல்!
விடுதலை உணர்வோடு பொங்கட்டும் பொங்கல்!
இதிகாச இருளகலப் பொங்கட்டும் பொங்கல்!
இல்லாமை இல்லென்றே பொங்கட்டும் பொங்கல்!
வேதியக் கூட்டமது விளம்புகிற நூற்கள்
வீணென்றே வீரியமாய்ப் பொங்கட்டும் பொங்கலே!

தன்மான வாழ்வமையப் பொங்கட்டும் பொங்கல்!
தமிழரெலாம் ஒன்றென்றே பொங்கட்டும் பொங்கல்!
உண்மைநெறி சிறந்தோங்கப் பொங்கட்டும் பொங்கல்!
உழவர்உழும் உழவாலே பொங்கட்டும் பொங்கல்!
பெண்டிரெலாம் பண்பாடப் பொங்கட்டும் பொங்கல்!
பானையிலே பகுத்தறிவாயப் பொங்கட்டும் பொங்கல்!
கண்மூடித் தனமெல்லாம் மண்மூடிப் போக
கணக்கிலா வளத்தோடு பொங்குக பொங்கலே!

பெரியாரின் புகழ்விளங்கப் பொங்கட்டும் பொங்கல்!
பைந்தமிழர் வாழ்வெலாம் பொங்கட்டும் பொங்கல்!
நரிக்குணத்தார் நாணிடவே பொங்கட்டும் பொங்கல்!
நம்கொள்கை நாடாளப் பொங்கட்டும் பொங்கல்!
உரிமையுணர் வோடெங்கும் பொங்கட்டும் பொங்கல்!
உழைப்பறியார் உருண்டோடப் பொங்கட்டும் பொங்கல்!
ஆரியரின் கொட்டமதை அடிசாய மாய்த்து
அண்ணாவின் புகழ்விளங்கப் பொங்கட்டும் பொங்கலே!

Read more: http://viduthalai.in/page4/73570.html#ixzz2qK0ecQHm

தமிழ் ஓவியா said...


நரம்பியல் நிபுணர் டாக்டர் ராமமூர்த்தி சொல்கிறார்


எனக்கு ஜோசியத்திலோ கிரகங்களினால் கெடுதல், அல்லது நன்மை ஏற்படுவதாகச் சொல்வதிலோ நம்பிக்கை கிடையாது.

செவ்வாய்தோசம் என்றால் என்ன என்று யாருக் காவது சந்தேகமறத் தெரியுமா?

செவ்வாய்க்கிரகம் எத்தனையோ தொலை தூரத் துக்கு அப்பால் - _ கோடிக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ளது. உயிரினங்கள் வசிக்க இயலாததாகக் கருதப்படும் உஷ்ணமான கோளம் அது.

அவ்வளவு தூரத்தில் உள்ள ஒரு கிரகத்தினால், இங்குள்ள ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்றால் எப்படி நம்ப முடியும்?

இதெல்லாம் சுத்த அபத்தம் மூடநம்பிக்கையை வளர்க்கும் எந்த விஞ்ஞான ஆராய்ச்சியையும் நாம் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

எந்த விஞ்ஞான ஆராய்ச்சியும், ஒரு தடவைக்கு (முதல் முறையாக மற்றவர்களாலும் அந்த கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டு போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அதை முழு மையான ஆராய்ச்சி என்று ஒப்புக் கொள்ள இயலும்.

சில வருடங்களுக்கு முன்பு ஒரே கோட்டில் எட்டுக் கிரகங்கள் ஒன்று சேரப் போவதாகவும், அதனால் உலகில் பல விபரீதங்கள் நடைபெறப் போவதாகவும் அமர்க்களப்பட்டதே கடைசியில் என்ன ஆயிற்று?

ஒன்றுமே நடக்கவில்லை என்பதுதான் நாம் கண் கூடாகப் பார்த்த விஷயம்.

Read more: http://viduthalai.in/page4/73572.html#ixzz2qK17q6Y8

தமிழ் ஓவியா said...


இன்பவீடு


தலைவி:

பொற்கோலப் பானையிலே மஞ்சள் கட்டிப்
பொங்கியநற் சோற்றினிலே நெய்யை யூற்றிக்
கற்கண்டு, தேன் பருப்பு, வெல்லம் இட்டுக்
கலந்துவைத்தேன் அத்தானே! உண்ண வாரீர்!

தலைவன்:

சொற்கரும்பே! என்னன்பே! மக்களைத்தான்
சோறுண்ண அழைத்தனையோ? அவர்க ளெங்கே?

தலைவி:

நற்கரும்பின் சுவைசுவைத்துக் கொண்டிருப்பார்
நானழைத்து வருகின்றேன்! இருங்க ளிங்கே!
(தலைவி மக்களை அழைத்து வந்தாள்)

பெண்:

அப்பா! நம் செந்தமிழில் வளரு கின்ற
ஆரியத்தை மறைமலையார், களையும் செய்கைக்(கு)
ஒப்பாக அண்ணனின்று கரும்பின் தோகை
ஒருவெட்டில் விழவைத்தார். மேலும் அந்தத்
தப்பான ஆரியத்தின் முதுகுத் தோலைத்
தாமுரித்தல் போற்கரும்பின் பட்டை நீக்கிக்
கைப்பகற்றித் தனித் தமிழைத் தருதல் போலே
கரும்புவெட்டித் தந்திடநான் சுவைத்திட்டேனே!

மைந்தன்:

தன்மானக் கொடிகட்டி வீட்டின் உச்சி
தனில்உயர்த்திப் பறக்கவிட்டேன்; வந்துபாரீர்!
என்மானங் காத்ததமிழ்த் தாய்க்கிந் நாளில்
என்படையல், எப்படிநீர் சொல்லும், அப்பா!

தலைவன்:

பொன்மானே! நம்மக்கள் இருவரும்தான்
புவிபுகழும் பாவரசி, வீர னென்று
பின்நாளில் இலங்கிடுவார் என்று காணப்
பெருமகிழ்வால் என்நெஞ்சம் விரிந்த தன்றே!

தலைவி:

தமிழ்ச்சுவையில் திளைத்திருக்கும் அத்தானே! நான்
தரும்பொங்கற் சுவைகாண எழுந்துவாரீர்!
எமதருமை மக்காள்நீவிர் எழுந்துவாரீர்!
இனியவெல்லச் சோறுண்டு மகிழலாமே!
(உணவுண்ணச் சென்றார்)

தலைவன்:

நமதருமைப் பிள்ளைகட்கும் படைத்துச் சற்று
நறுநெய்யும் ஊற்றிவிட்டு நீயும் உட்கார்!
(உண்ணும்போது)

மிகவினிது! மிகவினிது! வெல்லச்சோறு
மேலுமொரு சுரண்டியிட்டுக் கொள்ளுவோமே!
(உணவுண்டுகூடம் சென்றார்)

வாழ்வினியே சுவைதந்தாய்! இன்பந்தந்தாய்!
வடிவழகே! நல்லசுவைப் பொங்கலிட்டாய்!
யாழுடனே தமிழிசையைச் சேர்த்து நல்கின்
அதுதானே பேரின்பம்! தொடங்குவாயே!

தலைவி:

யாழுடனே தமிழிசைக்கும் முன்னர் என்றன்
அகத்தெழுமோர் அய்யத்தைத் தீர்த்துவைப்பீர்!
வாழ்வளிக்கும் பொங்கலினை மறந்துவிட்டு
வண்டமிழர் தீவாளி கொண்ட தேனோ?

தலைவன்:

ஆரியத்தின் சூழ்ச்சியினால் தமிழர் இந்நாள்
அவர்க்கிழிவு தருநாளைத் திருநாள் என்று
பாரினிலே கொண்டாடித் தம்மா னத்தைப்
பறிகொடுத்து பெறவுழைக்கும் இராம சாமிப்
பெரியாரின் தன்மான இயக்கம் இன்று
பேரியக்க மாய்வளர்ந்து செய்யுந்தொண்டு
பெரு நாட்டில் விழிப்பருளும்! பாடுவாயே!

தலைவி, யாழெடுத்துப் பாடினாள்:
பொன்னாய் விளைந்த நெல்லைக் குற்றி
அன்னம் ஆக்கிப் படைக்கும் பொங்கல்
அன்னம் ஆக்கிப் படைக்கும் பொங்கல்
என்னே நல்கிற் றின்பம் இன்பம்!

இன்னா நீக்கிக் கைகள் நிறையப்
பொன்னாய்க் குவிக்கும் பொங்கல், நன்னாள்
பொன்னாய்க் குவிக்கும் பொங்கல் நன்னாள்
என்னே நல்கிற் றின்பம் இன்பம்!

தமிழர் வாழ்வில் மகிழ்வே தோன்ற
அமிழ்தாய் இன்பம் ஆக்கும் பொங்கல்
அமிழ்தாய் இன்பம் ஆக்கும் பொங்கல்
எமக்கே நல்கிற் றின்பம் இன்பம்!

- நாரா. நாச்சியப்பன்
(பொன்னி பொங்கல் மலர் 1948)

Read more: http://viduthalai.in/page4/73573.html#ixzz2qK1YLYLn

தமிழ் ஓவியா said...

செம்மொழித் தமிழில் சிரித்திடும் பொங்கல்!

-பகுத்தறிவுப் பாவலர் தென்மொழி ஞானபண்டிதன்

செங்கதிர் ஒளியில் திகழும் கீழ்த்திசை வங்கக் கடலலை வரிசையாய் வணங்கும்

பொங்கல் திருநாள்! பூமியின் பெருநாள்!

பசும்புல் குளிர்மை பாரெலாம் பரவச்

செம்மொழித் தமிழில் சிரித்திடும் பொங்கல்!

தமிழர் தம்மைத் தலைநிமிர்த் திடும் நாள்!

பெருமைக் குரியதாய்ப் பெரியார் உரைத்த

அமுதப் பொங்கல்! அனைத்துயிர்க் கெல்லாம்

இனியபுத் தாண்டின் இயற்கைப் பொங்கல்!

இன்பந் தரும்இப் பொங்கல் திருநாள்

உழவர் உழைப்பை உலகோர்க் குணர்த்திக்

கழனிச் செந்நெல் கரும்பு மஞ்சள்

விளைவைக் காட்டும் விடியல் பொங்கல்!

அழகுப் பெண்கள் குலவை ஒலிக்க,

பழகும் சிறுவர் முதியோர் பாட,

இளைஞர் வீரம் கவிஞர் வாழ்த்தக்

களைப்பெலாம் போக்கித் திளைத்திட வைத்தே

என்றும் மகிழ்வைத் தருவதால்

நன்றியின் பொங்கலை நாம்வாழ்த் துவமே!

Read more: http://viduthalai.in/page4/73574.html#ixzz2qK2BRjU4

தமிழ் ஓவியா said...


நல்ல பணியை...

மனிதர் செத்துப் போனார் என்றால், சத்துப் போனது என்பதுதான் பொருள். செத்துப் போனவர்-களைப்-பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டு இல்லாமல், அவர் செய்த நல்ல பணியை, வழியை நாமும் மேற்-கொள்ள -வேண்டும் என்பதுதான் முறை.

- (விடுதலை, 23.1.1964)

Read more: http://viduthalai.in/page-2/73611.html#ixzz2qK3OhzLl

தமிழ் ஓவியா said...


பொங்கற் புதுநாளில் உங்கள் தொண்டு என்ன?

பொங்கற் புதுநாள் எங்கள் திருநாள் என்று சொல்லுகின்றான் தி.க. தொண்டன்.

அவ்வாறு சொல்லும் தகுதி அவனுக்குத்தான் உண்டு. மற்றவர்கட்கு இல்லை.

தி.க. தொண்டன் தான் உண்மைத் தமிழன்; அவனிடந்தான் தமிழ்த் தன்மை மிளிர்கின்றது. அவன்தான் கறைபடுத்தப்பட்டு வரும் தமிழ்த் தன்மைகளைக் கறை நீக்கி, நிலைநிறுத்த அல்லும் பகலும் பாடுபட்டு வருகின்றான்.

தமிழ்நாட்டைத் தமிழன் அடைய வேண்டும் என்று எண்ணுகின்றவன் வேறு எவன்? தமிழ்மொழி வாழ வேண்டும். இந்தி தொலைய வேண்டும் என்று உயிரைப் பணயம் வைத்துப் போரில் இறங்க எவன் முன் வருகின்றான்?

சாதி ஒழிய வேண்டும்; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று இறப்பு வரும் நேரத்தும் இன்னா நேரும் நேரத்தும் இயம்புவோன் தி.க. தொண்டனைவிட வேறு எவன் உள்ளான்? எங்கே பார்க்க முடிகின்றது?

பொங்கற் புது நாளைச் சிறப்பிக்க வேண்டிய பொறுப்பு அவன் தலையில் தான் விழுந்துள்ளது.

தமிழர் திருநாளைத் தமிழன் சிறப் பிப்பது என்றால் என்ன? தமிழர் திரு நாளைத் தமிழன் கொண்டாடுவதென் றால் என்ன? தமிழர் எண்ணத்தைத் தமிழர் செயல்களைத் தமிழர் ஆசை களைச் சிறப்புறச் செய்வதே அன்றோ?

இனித் தி.க. தோழர்களை, தி.க.. தலைவர்களை நான் கேட்கின்றேன். பொங்கல் நாளில் என்ன செய்யப் போகின்றீர்கள் என்று.

நேற்றுத் தி.க. கொள்கைகளை ஆய்ந்தீர்கள்; நேற்றுச் சொற் பெருக்காற் றினீர்கள், நேற்றுப் பாடினீர்கள் நாட்டுப் பாட்டு. பொங்கல் புதுநாளில் - உங்கள் திருநாளில் என்ன செய்யப் போகின் றீர்கள் சிறப்பாக?

மாவட்டத் தலைவர்கட்குக் கூறு கின்றேன்; ஒரு மாவட்டத்தில் - எங்கும் ஆயிரம் கழகக் கொடி ஏற்றப்படுதல் வேண்டும்.

ஒரு மாவட்டத்தில் - எங்கும் ஆயி ரம் விடுதலை பரப்பப்படுதல் வேண்டும்.

ஒரு மாவட்டத்தில் - எங்கும் ஆயிரம் கழக நூற்கள் பரப்பப்படுதல் வேண்டும்.

ஒரு மாவட்டத்தில் எங்கும் ஆயிரம் புதிய உறுப்பினர் சேர்க்கப்படுதல் வேண்டும்.
இவ்வாறு செய்க!

சோம்பல் என்னும் பள்ளத்தைத் தூர்க்க, உள்ளத்திற் காண்க தமிழர் திருநாள் தரும் பேரின்பத்தை.

- புரட்சிக் கவிஞர்
(குயில், கிழமை இதழ், 30.12.1958 ப.2)

Read more: http://viduthalai.in/page-2/73615.html#ixzz2qK3ZByWV

தமிழ் ஓவியா said...


பெரியார் உலகம் தருமபுரி மாவட்டம் வழிகாட்டுகிறது!


சிறுகனூரில் அமையவிருக்கும் பெரியார் உலகத்திற்கான நிதி திரட்டுவதில் தருமபுரி மாவட்டம் வழிகாட்டுகிறது.

தந்தை பெரியார் அவர்களால் நேரிடையாகப் பலன் பெற்ற தமிழர் கள் இலட்சக்கணக்கில் உண்டு. அவர்களின் கதவுகளைத் தட்டுங்கள் - நிதி தாராளமாகக் கிட்டும் என்று நமது கழக அமைப்புக் கூட்டங் களில் பேசியதுண்டு.

அதனைச் செயல்படுத்திக் காட்டுவோம் என்ற முனைப்போடு தருமபுரி மாவட்டத் தோழர்கள் களத்தில் இறங்கினர்.

பெரியார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படித்து ஆசிரியர் களாகப் பணிபுரிவோர் தருமபுரி, கிருட்டிணகிரி மாவட்டத்தில் ஏரா ளம் உண்டு. அவர்களை அணுகு வது என்று திட்டமிட்டுக் களத்தில் இறங்கினர் கழகத் தோழர்கள்.

திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ப.சுப்பிரமணியம் அவர்களும் துணை நின்றார்.

தருமபுரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் புலவர் வேட்ராயன் (அவரும் முன்னாள் ஆசிரியர்தானே!) மாவட்டக் கழகச் செயலாளர் வீ.சிவாஜி, மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஊமை செயராமன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கிருட்டிணமூர்த்தி, மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் கரு.பாலன், மாநிலப் பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் அண்ணா சரவணன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கதிர் செந்தில், மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் பீம.தமிழ் பிரபாகரன், பகுத்தறிவாளர் கழக ஒன்றியச் செயலாளர் தீ.சிவாஜி, பென்னாகரம் ஒன்றியக் கழகத் தலைவர் சின்னராசு, த.மணிவேல் ஆகியோர் இணைந்தனர்.

ஏ, அப்பா, இப்படியொரு படை புறப்பட்டால் எதைத்தான் சாதிக்க முடியாது.

41 ஆசிரியர்களின் பட்டியலைத் தேர்வு செய்தனர். அதில் உடனடியாக ஒரு சவரன் தங்கத்துக்கான தொகையான ரூபாய் 25 ஆயிரத்தை மூன்று பேர் அளித்து நன்னம்பிக்கை முனையைக் கொடுத்தனர். தொடர்ந்து அவர்களின் பயணம் - மேலும் 23 பேர் அந்தத் தொகையை அளிக்க ஒப்புதல் அளித்தனர்.

அதன் விவரம் இதோ:

தங்கத்திற்கான ரூ.25 ஆயிரத்தை உடனடியாக வழங்கியவர்:

1. மு.பிரபாகரன், ஆசிரியர், தேக்கல் நாயக்கன்பட்டி

2. கே.எம்.திலகவதி, தலைமை ஆசிரியர், கே.எம்.அருள்மொழி, கூத்தப்பாடி

3. தனசேகரன் - காளியப்பன், ஒகேனக்கல்

தங்கம் வழங்க ஒப்புதல் வழங்கியவர்கள்

1. அண்ணாதுரை, தலைமை ஆசிரியர், சிகரலஹல்லி 2 பவுன்

2. தீ.சிவாஜி, தலைமை ஆசிரியர், சந்தப்பட்டி 1 பவுன்

3. வி.குமார், தலைமை ஆசிரியர், பாப்பாரப்பட்டி 1 பவுன்

4. எஸ்.கே.பாலகிருஷ்ணன், ஆசிரியர், தருமபுரி 1 பவுன்

5. தங்கதுரை, ஆசிரியர், தருமபுரி 1 பவுன்

6. முருகவேல், ஆசிரியர்,கூத்தப்பாடி 1 பவுன்

7. ந.வெங்கடேசன், ஆசிரியர், பி.அக்ரகாரம் 1 பவுன்

8. எஸ்.மோகன்குமார், ஆசிரியர், அய்குந்தம் 1 பவுன்

9. அழகிரி, ஆசிரியர், சந்தப்பட்டி 1 பவுன்

10.புஷ்பராஜ், ஆசிரியர், புதுப்பட்டி 1 பவுன்

11. அருள்முருகன், ஆசிரியர், ரெட்டியூர் 1 பவுன்

12. சா.சிற்றரசு, ஆசிரியர், ராமியம்பட்டி 1 பவுன்

13. எஸ்.கே.சி. அழகிரிசாமி, சந்தப்பட்டி 1 பவுன்

14. ஜெ.சோலைராஜா, ஆசிரியர், ராமியம்பட்டி 1 பவுன்

15. பொன்.சிவகுமார், ஆசிரியர், பாண்டவர் குட்டை 1 பவுன்

16. சே.ஆனந்த், ஆசிரியர், ஊற்றங்கரை 1 பவுன்

17. சங்கர், தலைமை ஆசிரியர், ஓட்டப்பட்டி 1 பவுன்

18. சி.செந்தில்குமார், ஆசிரியர், கவுண்டம்பட்டி 1 பவுன்

19. நீலமேகம், ஆசிரியர், நத்தமேடு 1 பவுன்

20. குமார்-ஜான் பாஷா, ஒகேனக்கல் 1 பவுன்

21. மணிவண்ணன் - மாவு பாஷா, ஒகேனக்கல் 1 பவுன்

22. சுந்தரேசன் - சந்துரு, ஒகேனக்கல் 1 பவுன்

23. தருமபுரி பெரியார் மன்ற வணிக நிறுவனங்கள் 2 பவுன்

மொத்தம் 28 பவுன்

தோழர்களே!

தருமபுரி மாவட்டம் வழிகாட்டுகிறது. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அவர்களால் முடிந்தது, உங்களால் முடியாதா?

முயலுங்கள், முயற்சி திருவினை ஆக்கும்!

Read more: http://viduthalai.in/page-8/73586.html#ixzz2qK4qZvow

தமிழ் ஓவியா said...


இல்லவே இல்லை!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

எல்லா மதக்காரர்களும் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது, ஒரு முடிகூட உதிராது என்று கூறுகிறார்கள். அது வெறும் வேஷம் ஆகும். அவன் அவன் முடியை எடுத்துக்கொள்ள வேண்டு மானால், நாவிதனிடம்தான் போகின்றான்! எனவே, 370 கோடி மக்களில் எவனும் கடவுளிடம் நம்பிக்கை உடையவன் இல்லவே இல்லை.

- (விடுதலை, 26.4.1972)

Read more: http://viduthalai.in/page-2/73642.html#ixzz2qc1YpnBE

தமிழ் ஓவியா said...


சுப்பிரமணிய சுவாமி முகநூல் (பேஸ்புக்) மூலம் விஷமப் பிரச்சாரம்

புதுடில்லி, ஜன. 16- பொய்யான தகவல்களை பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதன் மூலம் பாரதீய ஜனதா கட்சியில் ஐக்கியமாகியுள்ள சுப்பிரமணியசுவாமி பல்வேறுபிரச்சனைகளுக்கிடையே யும் ஒற்றுமையாக இருந்து வரும் இந்து மற்றும் முஸ்லிம் சமுதாய மக்களி டையே வெறுப்பை ஏற்படுத்தி வரு கிறார். சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றை சமூகத்தில் பல்வேறு மாற்றங்களை உருவாக்குவதற்கும், சிலர் திட்டமிட்டு வன்முறைகளை உருவாக்கு வதற்கும் பயன்படுத்தி வருகிறனர். குறிப்பாக இளைஞர்கள் இந்த சமூக வலைத் தளங்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதனை பாஜக முழுமையாக பயன்படுத்தி எப்படியாவது மோடியை பிரதமராக்கிட வேண்டும் என்ற முயற்சி யில் பல்வேறு அவதூறுகளையும், பொய்களையும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. வரலாறுகளையே திரித்துக் கூறி வருகிறது. மேலும் பல அய்டி நிறுவனங்களையே குத்தகைக்கு எடுத்து அதன் வழியாக இது போன்ற இழி செயல்களில் பாஜக ஈடுபட்டு வருவதை சமீபத்தில் கோப்ரா போஸ்ட் இதழ் அம்பலப்படுத்தியது. மோடியின் பொய்ப் பிரச்சாரப்படையில் ஜனதா கட்சியின் தலைவராகவும், தொண்ட ராகவும் இயங்கி வந்த சுப்பிரமணிய சுவாமி தற்போது அய்க்கியமாகியுள்ளார். அவர் தனது பேஸ்புக் கணக்கில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இஸ்லாமி யர்களுக்கு எதிராக இந்துக்களை வன் முறைக்கு தூண்டிவிடும் வகையில் பொய்த் தகவலை வெளியிட்டுள்ளார்.

அவரது பேஸ்புக் கணக்கில் வெளியிடப் பட்டுள்ள புகைப்படம் ஒன்றில், நீண்ட தடிகளுடன் இருக் கும் வாலிபர்கள், மற்றவர்களைத் தாக்குவதுபோல் உள்ளது. இதன் குறிப்பாக, வங்காளதேசத்தில் இந்துக் கள் முஸ்லிம்களால் தாக்கப்படுகின் றனர். தற்போதைய வங்காளதேச மக்கள் தொகை யில் 8 சதவிகிதம் பேர் இந்துக்கள் (இது 1941ல் 28 சதவிகிதமாக இருந்தது) என்று எழுதப்பட்டுள்ளது. இந்தப் பதிவை ஆயிரக்கணக்கான மோடியின் இணையதள பிரச்சாரக் குழுவினர் லைக் தெரிவித்துள் ளதோடு, அதனை விஷமத்தனமாக மற்றவர் களுக்கும் பகிர்ந்து வருகின்றனர். உண்மை யில், இந்தப் புகைப்படம் வங்காளதேசத்தில் பொதுத்தேர்தலின் போது வாக்களிக்கச் சென்றவர்களை எதிர்க்கட்சியின் ஆதர வாளர்கள் தாக்கிய போது எடுத்தபடம். இதனை குஜராத்தின் உண்மை என்ற பேஸ்புக் கணக்கில் நண்பராக இருக்கும் யூனுஸ் என்பவர் கண்டறிந்து, உண் மையை வெளிக் கொண்டு வந்துள்ளார். இதற்கு சான்றாக வாஷிங்டன் போஸ்டில் வெளி யிடப்பட்டிருந்த இந்தப் புகைப் படத்தை அவர் இணைத்துள்ளார். அதில், வங்காளதேசத் தில் நடைபெற்ற பொதுத் தேர்தலை எதிர்க்கட்சியான வங்காள தேச தேசியக் கட்சி புறக்கணித்திருந்த நிலையில், தேர்தலில் வாக்களிக்கச் சென்ற வாக் காளர்களை அக்கட்சியின் ஆதரவாளர் கள் தாக்கியதாகவும், வாக்காளர்கள் வாக் களிப்பதற்காக காவல்துறையினர் போராட்டக்காரர்களை நோக்கி மீண்டும் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வாக்கைப் பெறும் மலிவான அரசியலில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.முன்னதாக, பாஜகவிற்கு தனது ஆதரவைத் தெரி வித்த சர்ச்சை சாமியாரான பாபா ராம்தேவ், தனது பேஸ்புக் கணக்கில், முன்னாள் பிரதமர்களான ஜவஹர் லால் நேரு மற்றும் லால்பகதூர் சாஸ்திரி தொடர்பான படங்களை வெளியிட்டு, போலியான தகவல்களை தெரிவித் திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, இதற்கு எவ்வித வருத்தமும் தெரிவிக்காமல் அப்புகைப் படங்களை தனது பக்கத்திலிருந்து நீக்கி யது குறிப்பிடத்தக்கது. இது போன்று திட்டமிட்டு இந்து முஸ்லீம் மக்களிடையே வன் முறையை உருவாக்கும் சுப்பிரமணிய சுவாமி, சாமியார் ராம்தேவ் உள்ளிட்டவர் கள் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 153 (எ) பிரிவின் படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தள பயன்பாட் டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி: தீக்கதிர் 16.1.2014

Read more: http://viduthalai.in/page-2/73644.html#ixzz2qc23L9o7

தமிழ் ஓவியா said...


இந்து அறநிலையத்துறையின் வேலையா இது?

நீதிக் கட்சியின் ஆட்சியில் இந்து அற நிலையத் துறை உண்டாக்கப்பட்டது - கோயில்களில் அர்ச்சகப் பார்ப்பனர்களின் சுரண்டலைத் தடுப்பதற்காகத்தான்.

கோயில்களைப் பொறுத்தவரை எந்தவித வரவு - செலவு கணக்குகளும் கடைப்பிடிப்பதில்லை. ஏதோ தங்களின் பூர்வீகச் சொத்துகளாகக் கருதி பார்ப்பனர்கள் தானடித்த மூப்பாக அவற்றைப் பயன்படுத்தி வந்தனர்.

இவற்றைக் கட்டுப்படுத்தவும், ஒழுங்குப்படுத்தவும் தான் இத்துறை பனகல் அரசர் காலத்தில் உருவாக்கப்பட்டது.

தி.மு.க. ஆட்சியில் டாக்டர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் இந்து அறநிலையத்துறை அமைச்சர் எனும் தகுதியில், சிதம்பரம் நடராஜன் கோயிலுக்குச் சென்ற பொழுதுகூட, அர்ச்சகர்கள் கொடுத்த பிரசாதத்தை இந்தக் கையில் வாங்கி, அந்தக் கையால் கீழே போட்டார். அதுபற்றி அவரிடம் கேட்கப்பட்ட பொழுது, இந்து அறநிலையத்துறை அமைச்சர் வேலை 4 மரக்கால் அரிசியை பயன் படுத்துவது என்றால் அதன்படி ஒழுங்காக செயல்படுகிறதா என்று சரி பார்ப்பதுதானே தவிர, கோயில் புனஷ்கார நடவடிக்கையில் ஈடுபடுவதல்ல என்று கறாராகக் கூறினார். அதனை வரவேற்று தந்தை பெரியார் அவர்கள் சபாஷ்! சபாஷ்! நெடுஞ்செழியன்! என்று விடுதலையில் முதல் பக்கத்திலேயே கையொப்பமிட்டு பெட்டிச் செய்தியாக வெளியிடச் செய்தார். அந்த இந்து அறநிலையத்துறை இப்பொழுது என்ன செய்துள்ளது தெரியுமா? ஒரு சுற்றறிக் கையைக் கல்வித்துறை மூலம் பள்ளிகளுக்கு அது அனுப்பியுள்ள தகவல் கண்டனத்துக்குரியது. இந்து அறநிலையத்துறை என்பது இந்து மதம் பரப்புத்துறையாக மாறி விட்டதோ என்று நினைக்கத் தோன்றும் ஒரு வேலையைச் செய்துள்ளது.

பள்ளி மாணவ - மாணவிகளுக்குத் திருவாசகம் பற்றி கட்டுரைப் போட்டியும், திருப்பாவை - திருவெம்பாவை பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியும் நடத்த வேண்டும் என்பதுதான் அந்தச் சுற்றறிக்கை.

முதல் பரிசு ரூ.2500, இரண்டாம் பரிசு ரூ.2000, மூன்றாம் பரிசு ரூ.1500 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல பள்ளிகளிலும் இது நடத்தப்பட்டும் உள்ளது.

இது விதிகளின்படி சரியானது தானா? எந்த விதியின் கீழ் இந்து அறநிலையத்துறை இந்த முடிவை எடுத்தது? எந்த விதிமுறைகளுக்கிணங்க கல்வித்துறையும் இந்த வேலையைச் செய்திருக் கிறது?

இதுவரை எந்த கால கட்டத்திலும் இல்லாத நடைமுறை இந்தக் கால கட்டத்தில் அரங்கேற்றப் பட்டது எப்படி? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? அண்ணா பெயரை கட்சியில் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு கட்சிதானே ஆட்சியில் இருந்து கொண்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் எந்தவித வழிபாட்டுச் சின்னங்களும் இருக்கக்கூடாது என்று ஆணை பிறப்பித்தவர் முதல் அமைச்சர் அண்ணா என்பது இந்த முதல்அமைச்சருக்கு தெரியுமா? அண்ணாவைத் திட்டமிட்டு அவமதிப்பதுதான் அண்ணா திமுக ஆட்சியின் திட்டமா?

கருநாடக மாநிலத்தில் முதல் அமைச்சராக வந்த பி.எஸ். எடியூரப்பா முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்றவுடன் முதல் ஆணையாக எல்லா இந்துக் கோயில்களிலும் தனது பெயரில் அர்ச்சனை செய்யப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். அது கடும் பிரச்சினைக்கு உட்படுத்தப்பட்ட நிலை யில், அந்த உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு அரசும் இந்தச் சுற்றறிக்கையை விலக்கிக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்து கிறோம். இந்தச் சுற்றறிக்கை கல்வி நிலையங் களுக்குள் தேவையற்ற மதச் சர்ச்சைகளை உண் டாக்கும்; வெறும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களின் வீட்டுப் பிள்ளைகள் மட்டுமா படிக்கிறார்கள்? மற்ற மற்ற மதக்காரர் வீட்டுப்பிள்ளைகளின் நிலை என்னாவது?

மதச் சார்பற்ற அரசு குறிப்பிட்ட மதக் காரியத்தைச் செயல்படுத்தலாமா? அதுவும் ஆண்டாள் பாடல் என்றால் கொக்கோகம் தோற்றுவிட வேண்டுமே! இதையா பிஞ்சு உள்ளங்களில் விதைப்பது?

எந்தவகையில் பார்த்தாலும் இந்து அறநிலையத் துறையின் செயல்பாடு உகந்ததல்ல! அரசு அதி காரிகள் அரசனை விஞ்சிய விசுவாசிகளாகச் செயல்படுவது ஆபத்து!

எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!

Read more: http://viduthalai.in/page-2/73643.html#ixzz2qc2HQbvv