Search This Blog

5.1.14

சபரிமலை அழைக்கிறது சாவூருக்கு!
பக்தியால் அறிவு நோய்வாய்ப்படுகிறது என்பது ஒருபுறம்; இன்னொரு புறமோ உடல்  நோய்க்கும் ஆளாகிறது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.
எடுத்துக்காட்டாக சபரிமலையில் நிலவும் சுகாதாரக் கேடு பற்றி பக்தர் ஒருவர் மனம் நொந்து கொட்டியதை. தி இந்து (தமிழ்) ஏடு வெளியிட்டுள்ளது. (20-.12.2013, பக்கம் 2) அந்தப் பேட்டி இதோ:
சிதம்பரத்தைச் சேர்ந்த அய்யப்ப பக்தர் இரா.ரமேஷ்சங்கர் கூறும்போது, 15 ஆண்டுகளாக சபரிமலைக்குச் சென்று வருகிறேன். கடந்த சில ஆண்டுகளாக மலையில் சுகாதாரம் என்பது வேதனையளிக்கும் வகையில் உள்ளது. அய்ப்பசி மாத நடைத் திறப்புக்குச் சென்றபோது, பம்பையில் அதிக நீரோட்டம் இருந்தது. ஆனால், ஆற்றின் படித்துறை எங்கும் பக்தர்கள் விட்டுச் சென்ற ஆடைகள் அகற்றப்படாமல் கிடந்தன. பம்பையில் உள்ள கழிவறைகள் முழுக்க சேறும் சகதியுமாக இருந்தன. துர்நாற்றம் வீசியது. சபரிமலையில் உள்ள நடைப்பந்தலிலும், அதைத் தொடர்ந்து சந்நிதானத்துக்குச் செல்லும் பதினெட்டாம் படி அருகிலும் ஏராளமான காட்டுப் பன்றிகள் சுற்றித் திரிந்தன. முந்தைய ஆண்டுகளில் இதுபோல பார்த்ததில்லை. சபரிமலையைப் பராமரித்து வரும் திருவிதாங்கூர் தேவசம் போர்டும் கேரள அரசும் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார். (தி இந்து)
இது ஒன்றும் புதிதல்ல; இதற்கு முன்பும் கூட சபரிமலையில் நிலவும் சுகாதாரக் கேட்டைப்பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு (24.1.1998) வெளியிட்டு இருந்தது. அதையும் கொஞ்சம் பார்க்கலாம்.
மனிதக் கழிவுகளால் பம்பா நதி பாழ்பட்டது. பட்டனம்திட்டா: ஜன.23,
கேரளாவில் உள்ள சபரிமலைக்கு பக்தர்கள் வரும் யாத்திரைக் காலம் முடிவடைந்துவிட்ட போதும், பம்பா நதி ஏற்கெனவே ஒரு பெரும் அதிர்ச்சி அளிக்கும் அளவுக்கு மாசடைந்து பாழ்பட்டுவிட்டது.
ஜனவரி 19 அன்று சபரிமலை கோவில் நடை சாத்தப்பட்டது முதல், இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த சுகாதார நடவடிக்கைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டன.
பம்பை நதிக்கரையில் தேவஸ்தான போர்டால் தோண்டப்பட்ட கக்கூஸ் குழிகளில் மலம் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது; அவற்றை வெளியேற்ற வேறு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
மனிதக் கழிவுகளை அகற்றும் பணியை ஒப்பந்தக்காரர்கள் நிறுத்திவிட்டு மலைக்கோவிலை விட்டுச் சென்றுவிட்டனர். தேவஸ்தான் அலுவலர்களும் எந்தவித மனச்சாட்சியும் இல்லாமல் கோவிலை விட்டுச் சென்று விட்டனர்.
67 நாட்களாக மனிதக் கழிவுகள் குவிக்கப்பட்டிருந்த சேரியின வட்டத்தில் உள்ள பெரிய குழிகள் இன்னும் மூடப்படாமல் உள்ளன. சபரிமலையில் ஏற்கெனவே பாழ்பட்டிருக்கும் சுற்றுச் சூழலுக்கு இது ஒரு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. அண்மையில் வழங்கப்பட்ட கேரள உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றில் இந்தக் குழிகள் முறையாக மூடவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
சபரிமலையில் தொடங்கும் பம்பா நதியின் கிளை நதியான ஜுநகர் ஒரு மாபெரும் மனிதக் கழிவுத் தொட்டியாகவே மாறிவிட்டது. பண்டிதவளத்தில் இருக்கும் உணவு விடுதிக் கழிவுகளும், கக்கூசுகளில் இருந்து மனிதக் கழிவுகளும் நேரடியாக இந்த ஆற்றில் விடப்படுகிறது.

Pampa Sullied by Human Waste
Pathanamthitta, Jan 23: The current pilgrimage season at Sabrimala in Kerala has come to an end but the already depleted Pampa river is being threatened by an alarming degree of pollution.
Since the closure of the Sabarimala temple on January 19, sanitation works in the area have come to a grinding halt.
Excreta from the latrines of the Devaswom Board still remain in the pits dug on the river banks with no alternative arrangement being made for pumping them out.
The contractors have stopped the pumping work and the Devaswom officials too have left the hill shirine without any compunction.
The large pits at Cheriynavattam where the human wastes were dumped for 67 days remain to be covered posing a grave threat to the fragile eco-system of Sabarimala.
The Kerala High Court in a recent order has insisted on covering them properly.
Njunagar, a tributary of river Pampa, originating at Sabarimala has been turned into a veritable cesspool.
Hotel wastes and excreta from latrines in ‘Pandithavalam’ were being directly let into the feeble rivulet.
Polluted waters of Pampa would seriously affect the 17 drinking water supply schemes downstream solely depending on the river.
Further, the backwaters of Kuttanad also would get affected and the pollution control board also has expressed concern over this.
The Kozhencherry based environmental outfit ‘Pampa Parirakshanasamithy’ has demanded that the state government constitute a high power committee to cope with the pollution of Sabarimala during the pilgrimage season.

----------- கலி.பூங்குன்றன் -----------"உண்மை” ஜனவரி 01-15 - 2014

16 comments:

தமிழ் ஓவியா said...


கழகத்தின் இந்தப் புரட்சிக்கு ஈடு ஏது? பாடையை சுடுகாடு வரை தூக்கிச் சென்று கழகப் பெண்கள் புரட்சி!


திருவாரூர், ஜன.5- சுடுகாடு வரை பாடையைத் தூக்கிச்சென்று கருஞ்சட்டை மகளிர் அணியினர் புரட்சி செய்தனர்.

உலகில் எத்தனையோ சமூக அமைப் புகள், கட்சிகள் தோன்றியிருக்கலாம்; கிடுகிடுக்க வைத்த கம்யூனிஸ்டுக் கட்சி கள் உலகின் பல பாகங்களை அதிர வைத்துள்ளன.

ஆனால், சமுதாய அடித்தளத்தையே புரட்டிப் போடும் பூகம்பக் கரங்களைக் கொண்ட புரட்சி இயக்கமாம் திராவிடர் கழகத்திற்கு இணை ஏது? கருஞ்சட்டைப் பாசறைக்கு ஈடு ஏது?

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்று கேட்ட காலத்தைக் கழுவிலேற்றிய இயக்கம் ஏது?

இருட்டுப் பூச்சிகளாய், ஜன்னல் களையே காணாதவர்களாய், வெளிச்ச மத்தாப்புகளையே காணாதவர்களாக ஆக்கப்பட்ட, வயதுக்கு வந்த பெண்களை நீயும் மானுடத்தின் ஒரு கூறு - கூண்டை விட்டுவெளியே வா பெண்ணே!

என்று குரல் கொடுத்து கல்விக் கண்களைத் திறந்து உத்தியோகப் படிக்கட்டுகளை மிதிக்கச் செய்து கணவன் கையைப் பார்த்து நத்தி வாழவேண்டிய நயவஞ்சக சமூக அமைப்பின் வேரை நசுக்கி எறிந்து, பொருளீட்டும் புதிய பொருளாதாரக் கணக்கையும் திறந்து, ஆணுக்குப் பெண் சமானம் என்ற சரித்திரத்தைச் சமைத்தது தந்தை பெரியாரின் இந்த இயக்கம் அல்லவா!

தொட்டிலை ஆட்டும் கை தொல் லுலகை ஆளும் கை என்று புரட்சிக்கவி ஞரைப் பாட வைத்ததும் இந்தப் பகுத்தறிவு இயக்கம்தான்.

தாலி பெண்களுக்கு வேலி என்பதைக் காலி செய்த கருத்துக் கனலையும் தந்தது இந்த இயக்கம்தான்.

மாவோ செய்யாத மகத்தான புரட்சி களையெல்லாம் செய்துகாட்டி வருகிறோம். விதவைப் பெண்களுக்குப் பூச்சூட்டு விழாவை நடத்திக் காட்டியாயிற்று.

அடக்கம் பெண்களுக்கு அணிகலன் என்று சொன்னது அரும் பண்புக்காக அல்ல - அடங்கிக் கூனிக் கிடக்கும் ஒரு மனப்பான்மையை அவர்களின் ஆழ்மனத் தில் ஊன்றவேதான்.

ஆண் - பெண் வேறுபாடு தெரியாத ஆடையை அணிவீர்; பெயர்களில்கூட பால் வேறுபாடு தேவையில்லை என்று பளிச்சென்று சொன்னவரும் நம் பகுத்தறிவுப் பகலவன் பெரியாரே!

தந்தை செத்தாலும் சரி, தாய் செத்தாலும் சரி, மணாளன் செத்தாலும் சரி, மகன் செத்தாலும் சரி, ஒரு பெண் சுடுகாடுவரை செல்ல முடியுமா?

இந்த இரும்பு வேலிகளையெல்லாம் நொறுக்கிய இலட்சியத் தீபத்தை ஏந்தி நிற்கும் இனமானப் பெரும்படைதான் திராவிடர் கழகம்.

இதோ பாருங்கள், எங்கள் கருஞ் சட்டை மகளிர் அணியினரை.

திருவாரூர், திராவிடர் கழகத் தீரர் களின் கோட்டை ஆயிற்றே! நகர கழகத் துணைத் தலைவர் தியாகத்தீயில் புடம் போட்ட கருப்புத் தங்கம் அறிவுக்கண்ணு அவர்கள் மறைந்தார் - அந்த வட்டாரமே துக்கத்தின் பிடியில் சிக்கி விம்மியது என்றாலும், தவிர்க்க முடியாததை ஏற்கத்தானே வேண்டும்.

அவருடைய இறுதி ஊர்வலம் எப்படிச் சென்றது தெரியுமா? திருவாரூரே தம் கண்களை அகலத் திறந்து உண்மையா? நம்ப முடியவில்லையே? இப்படிக்கூட நடக்குமா? என்று அந்த ஒரு நிமிடம் நிலைகுலைந்தே போனார்கள்.

ஆம், அந்தக் கொள்கை வீரரின் பாடையை, பெண்களே சுடுகாடுவரை தூக்கிச் சென்று, காலம் காலமாய் கட்டிப் போட்டு வந்த அந்த ஆணாதிக்க அடக்கு முறை சமூக அமைப்பின் கட்டை உடைத்து, அதனைச் சுடுகாட்டிலே எரித்துவிட் டார்களே!

இதற்கு முன்பும் திருவரங்கம் பெரியார் பெருந்தொண்டர் கோ.பாலு, மயிலாடு துறை நகர கழகத் தலைவர் ந.தியாகராச னின் அன்னையார் மறைந்தபோது இந்தப் புரட்சியை நடத்திக் காட்டினர்.

பெரியாருக்குப் பின் திராவிடர் கழகம்? கேள்வி கேட்போரே! இந்தச் செயல்களைப் பார்த்த பிறகாவது, கோணல் வாயை மூடிக் கொள்க!

திருவாரூர் கருஞ்சட்டை சகோதரி களே! உங்கள் செயலுக்கு ஒரு வணக்கம் - உங்களால் திருந்தட்டும் பழைமைச் சமூகச் சழக்குகள்!

Read more: http://viduthalai.in/e-paper/73137.html#ixzz2pWwIhQC1

தமிழ் ஓவியா said...


தாழ்த்தப்பட்டோரே, பிற்படுத்தப்பட்டோரே உங்களுக்குத் தகுதி இல்லையாம்!

சமூக நீதிக் கொள்கையில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி சாதாரணமாக விழவில்லை; தந்தை பெரியார் சொல்லுவதுபோல தடுக்கி விழுந்தவன் அரிவாள் மணையில் விழுந்தது போல அல்லவா விழுந்திருக்கிறது!

அக்கட்சியின் அதிகாரபூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். (பக்கம் 4) இடஒதுக்கீட்டுக்கு இன்னல் என்றால் பொறுக்க மாட்டோம் என்று பொங்கு கிறாரே கருணாநிதி? என்று பெட்டிச் செய்தியை வெளியிட்டுள்ளது.

எதற்கெடுத்தாலும் கருணாநிதி கருணாநிதி என்ற காமாலைக் கண்ணனின் (Phobia) பார்வை தானா?

சமூக நீதியைப் பற்றி கலைஞர் பேசக் கூடாதா? அய்ந்து முறை முதல் அமைச்சராக இருந்தவருக்கு இல்லாத அக்கறையா இவர்களுக்கு?

சமூகநீதியில் சரித்திரம் படைத்தவராயிற்றே! இது சூத்திரர்களுக்கான அரசு என்று சட்டப் பேரவை யிலேயே முழங்கிய முத்தமிழ் அறிஞர் ஆயிற்றே! கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை என்றால் வக்கணையாக எழுதுவதால் என்ன பயன்?

கலைஞர் மட்டுமா கண்டித்துள்ளார்? முதல் அறிக்கையை திராவிடர் கழகத் தலைவர் வெளியிட்டார். தொடர்ந்து தமிழ்நாட்டில் கட்சித் தலைவர்கள் எல்லாம் கண்டனம் தெரிவித்துள்ளனரே!

உயிர் காக்கும் மருத்துவத்தில் அதுவும் பல் நோக்கு சிகிச்சை மய்யம் என்ற தலை சிறந்த விஞ் ஞானத் தரமான மருத்துவ சிகிச்சைக்கு இலக் கணம் வகுக்கின்ற ஓர் அமைப்பில் இட ஒதுக்கீட்டு முறை இடையூறாக அமைந்து விடக் கூடாது என்பதை மக்களின் ஆரோக்கியத்தில் அளவில்லா முன்னுரிமை அளித்துவரும் நம் அன்னைத் திருமக ளின் அரசு பரிசீலித்ததை ஏதோ இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தது போல கருணாநிதி இட்டுக் கட்டிய பித்தலாட்டத்தை அரங்கேற்றப் பார்ப்பது அவரது அரசியல் மோசடியையே காட்டுகிறது என்று எழுதுகிறது அதிமுக ஏடு?

இதன் மூலம் என்ன சொல்லப்படுகிறது? தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப் பட்டோருக்கும் இடஒதுக்கீடு அளித்தால் உயிர் காக்கும் மருத்துவம் செத்துப் போய் விடும் என்கிறார்களா?

உயிர்காக்கும் மருத்துவப் பணிகளுக்கு தாழ்த்தப் பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும் லாயக்கு அற்றவர்கள் என்கிறதா அ.இ.அ.தி.மு.க. ஏடு? இதுதான் இந்த ஆட்சியின் நிலைப்பாடா?

இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தால் தகுதி திறமை போய் விடும் என்று பார்ப்பனர்களிடம் இரவல் குரல் வாங்கி அம்மையாருக்காக வக்காலத்து வாங்குகிறதா அண்ணா தி.மு.க.?

இதுதான் அண்ணா கூறிய சமூக நீதியா? அண்ணா திமுக என்று பெயர் வைத்தால் மட்டும் போதுமா? இடஒதுக்கீட்டில் அண்ணாவின் கருத்து என்ன என்று தெரிந்து கொள்ளாதவர்கள் எல்லாம் அண்ணா பெயரைப் பயன்படுத்தலாமா? பெரியார் பெயரைப் பயன்படுத்தலாமா? திராவிட என்ற சித்தாந்தத்தின் குறியீட்டை வைத்துக் கொள்ளலாமா?

தாழ்த்தப்பட்ட மக்களே, பிற்படுத்தப்பட்ட மக்களே! உங்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தால் உயிர் காக்கும் மருத்துவத் தொழில் உருப்படாமல் போகுமாம் - உயிர் களைக் காக்கும் ஆற்றல், சக்தி உங்களுக்குக் கிடையாதாம்.

இதுதான் இன்றைய அ.இ.அ.தி.மு.க. ஆட்சி - புரிந்து கொள்வீர்!

Read more: http://viduthalai.in/e-paper/73140.html#ixzz2pWwTsbeb

தமிழ் ஓவியா said...


மோடி எனும் பேராபத்து! புத்ததேவ் சாடல்


கொல்கத்தா, ஜன.5-மோடி எனும் கொடி யவன் இந்த நாட்டின் முஸ்லிம் மக்களுக்கு மட்டும் எதிரி அல்ல; ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் மிகப் பெரிய ஆபத்து. அவர் அப்படிப்பட்ட ஒரு பேரழிவு கொடியானை திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் மேலும் மேலும் தூண்டிவிட்டு இன்னும் பேரழிவை தீவிரப்படுத்த முயற்சிக் கிறார்கள் என்று மேற்கு வங்க முன்னாள் முதல மைச்சரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான புத்ததேவ் பட்டாச் சார்யா கடுமையான வார்த்தைகளில் விமர்சித் தார்.

கொல்கத்தாவில் வெள்ளியன்று மாலை கணசக்தி நாளேட்டின் சார்பில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சி யில் பங்கேற்று புத்த தேவ் உரையாற்றினார். கணசக்தி என்பது மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வங்கமொழி நாளேடு ஆகும்.

மேற்கு வங்கத்தில் மோடிக்கு இடம் இல்லை

ராஜாராம் மோகன் ராய், மகாகவி ரவீந்திர நாத் தாகூர் முதல் அன்னை தெரசா வரை மக்களை கவர்ந்த சீர் திருத்தவாதிகளும், விடு தலை இயக்க வீரர்களும், தலைசிறந்த சமூக சேவர் களும் வாழ்ந்த மண் மேற்கு வங்கம் என்று குறிப்பிட்ட புத்ததேவ், இத்தகைய பூமியில் மத வெறி பிடித்த நரேந்திர மோடிக்கு ஒருபோதும் அனுமதியில்லை என்பதை மேற்குவங்க மக்கள் உரத்து முழங்கு வார்கள் என்றும் புத்த தேவ் பட்டாச்சார்யா கூறினார்.

எதிர்காலத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க அச்சாரம் போட்டுக் கொண்டிருக் கிறது மம்தாவின் திரி ணாமுல் கட்சி என்று விமர்சித்த புத்ததேவ், 2002ஆம் ஆண்டில் பாஜகவுடன் கைகோத் துக் கொண்டு அதன் தலைமையிலான அர சாங்கத்தில் அமைச்சர் பதவியும் வாங்கிக் கொண்ட கட்சிதான் திரிணாமுல் என்றும் சாடினார்.

இந்தியாவில் மோடியை முன்னிறுத்தியிருக்கும் மதவெறி ஆர்எஸ்எஸ் அமைப்பு, தங்களது கொள்ளை லாபத்தை மேலும் மேலும் அதிகப் படுத்திக் கொள்ள முயற் சிக்கும் பெரும் கார்ப்ப ரேட் கம்பெனிகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு நாட்டின் எதிர்காலத் துக்கு இதுவரை இல் லாத அளவிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்த முனைகிறது என்றும் புத்ததேவ் கூறினார். இது இந்தியாவின் வரலாற் றில் முன்னெப்போதும் இல்லாத ஒன்று என்று சுட்டிக்காட்டினார்.

தனது உரையின் போது மேற்கு வங்க முதலமைச்சர் மம் தாவின் நடவடிக்கைகள் குறித்து கேள்விக்கணை களை புத்ததேவ் எழுப் பினார். இந்தியாவின் நெருங் கிய அண்டைநாடும் மேற்குவங்கத்தோடு ஒட்டியுள்ளநாடுமான, வங்கதேசத்துடன் ஒரு நல்லுறவை பேணுவதில் மம்தா பானர்ஜி மோச மான முறையில் நடந்து கொள்கிறார்;

ஆனால் அதே நேரத்தில் வங்க தேசத்தில் அமைதியை சீர்குலைக்க முயல்கிற பாகிஸ்தானின் சதி களுக்கு துணைபோகும் விதத்தில் இங்குள்ள பாகிஸ்தான் தூதரோடு மம்தா பானர்ஜி சந்திப்பு களை நடத்துகிறார். இது இந்தியாவின் நலன் களுக்கு குறிப்பாக மேற்குவங்கத்தின் நலன்களுக்கு எதிரானது என்று புத்ததேவ் கூறினார்

Read more: http://viduthalai.in/e-paper/73139.html#ixzz2pWwenOaO

தமிழ் ஓவியா said...


புகழும்போது போதை; இடித்துச் சொல்லும்போது எரிச்சலா?


கலைஞருக்குப் பதில் சொல்லுவதாக நினைத்துக் கொண்டு ஜெயலலிதா அம்மை யாருக்கு சமூகநீதி காத்த வீராங்கனை பட்டத்தை வீரமணி கொடுத்தாரே என்று ஏதோ பெரிய குற்றச்சாட்டு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டதாக நினைத்து அ.இ.அ.தி.மு.க.வின் நமது எம்.ஜி.ஆர். ஏடு எகிறுகிறது.

ஆமாம்; மறுக்கவில்லை. 69 சதவிகித இட ஒதுக்கீட்டை காப்பாற்ற திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள், அவருக்கே உரித்தான சட்ட ஞானத்தால் கருத்துரு கொடுத்ததோடு, அதற் கான மாதிரிச் சட்டத்தையும் உருவாக்கிக் கொடுத்து, 69 சதவிகிதத்தைக் காப்பாற்றிட வழி செய்தார்.

அதனை ஏற்றுக்கொண்டு சட்டம் செய்ததால், சமூகநீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை அளித்தார் திராவிடர் கழகத் தலைவர்.

அதனைக் காப்பாற்றிக் கொள்ளாமல், சமூகநீதியின் வேரையே வெட்டி வீழ்த்த ஆவேசம் கொண்டால், கையைக் கட்டிக்கொண்டு வீரமணி அவர்கள் வேடிக்கை பார்க்கவேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. எதிர்பார்க் கிறதா? பட்டம் பெற்றபோது மகிழ்ச்சிப் போதை - தவறைச் சுட்டிக்காட்டி இடித்துச் சொல்லும்போது எரிச்சலா?

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும் (குறள் 448)

என்றார் திருவள்ளுவர்.

நினைவிருக்கட்டும்!

Read more: http://viduthalai.in/page-8/73173.html#ixzz2pWyLz5Rq

தமிழ் ஓவியா said...


சூரியன் பற்றி அறிய ஆதித்யா நான்காண்டுகளில் அனுப்ப திட்டம் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை


திருப்பூர், ஜன.5- சூரி யன் பற்றிய அறிவியல் தகவல்களை கூடுதலாக அறிய, ஆதித்யா செயற் கைக்கோள், நான்கு ஆண்டுகளில் விண் வெளிக்கு அனுப்பப்பட உள்ளது,'' என, இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் மயில்சாமி அண்ணா துரை தெரிவித்தார்.

மங்கள்யான் செயற் கைக்கோள் குறித்த கருத்தரங்கு, திருப்பூரில் நேற்று (4.1.2014) நடந்தது. இதில், பெங்களூரு, இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மய்ய திட்ட இயக்குநர் டாக்டர் மயில் சாமி அண்ணாதுரை பங்கேற்றார்.

அப்போது, செய்தி யாளர்களிடம் கூறிய தாவது: நிலாவைப்பற்றி ஆய்வு செய்ய சந்திரயா னும், செவ்வாயைப் பற்றி ஆராய்ச்சி செய்ய மங்கள்யானும் அனுப் பியதை போல, அடுத்த கட்டமாக, சூரியனை பற்றி ஆய்வு செய்ய ஆதித்யா என்ற செயற் கைக்கோள், விண் வெளிக்கு அனுப்பப்பட உள்ளது. சூரியனுக்கு இது செல்லாது.

பூமிக் கும், சூரியனுக்கும் விசை உள்ளது; இந்த விசை களுக்கு இடைப்பட்ட ஒரு பகுதியில் நிரந்தர மாக ஆதித்யா நிலை நிறுத்தப்பட்டு, பூமி, சூரியன் பற்றிய தகவல் களை அனுப்பும். இன் னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில், ஆதித்யா விண்வெ ளிக்கு அனுப்பப்படும். அதற்கான பணி துவங்கி யுள்ளது.

சூரியனை பற்றிய பல தகவல்களை அறியும் வகையில், இந்த கோள் அனுப்பப்படுகிறது; அறிவியல் ரீதியான பல ஆய்வுகளுக்கு இது, உதவும். மங்கள்யான், நிர்ணயித்தபடி, அதன் பாதையில் சென்று கொண்டிருக்கிறது; தீவிர கண்காணிப்பில் உள்ளது. இதுவரை 9 மில்லியன் கி.மீ., சென் றுள்ளது; இன்னும் 200 மில்லியன் கி.மீ., செல் லும்போது, வரும் செப். 24 ஆம் தேதி, செவ் வாய்க் கோளினை அடையும்.

அமெரிக்கா ஆறு முறையும், ரஷ்யா 10 முறையும் முயற்சித்து தோற்ற நிலையில், இந் தியாவின் முதல் முயற்சி வெற்றி பெற்றால், உல கில் விண்வெளி ஆராய்ச் சியில் செவ்வாய்க் கோளினை அடைந்த பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும்.

அய்ரோப்பா, அமெ ரிக்கா நாடுகளின் தொழில்புரட்சியை தொடர்ந்து மூன்றாவது புரட்சியாக இந்தியா வில், விண்வெளி புரட்சி நடக்கிறது. இதில், நாம் பின்தங்கி விடக்கூடாது என்பதால், சந்தர்ப்பங் களை சரியான முறை யில் பயன்படுத்தி வரு கிறோம். - இவ்வாறு டாக்டர் மயில்சாமி அண்ணா துரை செய்தியாளர்களி டம் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/73174.html#ixzz2pWynR6f7

தமிழ் ஓவியா said...


சனிக்கோளை படமெடுத்த நாசா விஞ்ஞானிகள்


பூமியை விட எட்டு மடங்கு பரப்பளவு கொண்ட சனிக்கோளை மிக நெருக்கமாக நாசா விஞ்ஞானிகள் படம் பிடித்தார்கள். வரலாற்றிலேயே முதன் முறையாக நிகழ்ந்த இந்த சம்பவத்தை ஜெட் ப்ரபல்ஷன் ஆய்வகம் புதன்கிழமை அறிவித்தது. இந்தப் படங்களை நாசா ஏவிய கசினி விண்கலம் எடுத்ததாகவும் நாசா தெரிவித்தது.

2010 டிசம்பர் 5ஆம் தேதி அன்று எப்போதும் சீற்றத்துடன் ஒரு சூறாவளி காணப்பட்டதை கசினி கண்டுபிடித்தது. இது சனியின் வடக்குத் திசையில் ஏறத்தாழ 35 டிகிரி அளவில் காணப்பட்டது. விண்கலம் சனியைச் சுற்றிப் பார்த்ததில் கண்ட பெரிய சீற்றம் இதுதான். நாசா விஞ்ஞானிகள் 1990இல் இதே போன்றதொரு சீற்றத்தைப் படம் எடுத்திருந்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/73231.html#ixzz2pcevDb74

தமிழ் ஓவியா said...

வரவேற்கத்தக்க திமுக மாணவரணியின் ஆர்ப்பாட்டம்

இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராகச் செயல் படும் ஜெயலலிதா அரசைக் கண்டித்து தி.மு.க. மாணவர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஜனவரி 21 அன்று மாநில மாணவர் அணிச் செயலாளர் கடலூர் இள. புகழேந்தி தலைமையில் சென்னையில் நடைபெறுகிறது.

இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக செயல்படும் ஜெயலலிதா அரசைக் கண்டித்து திமுக மாணவர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 21.1.2014 அன்று காலை 10 மணியளவில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகில் நடைபெறுகிறது. கண்டன ஆர்ப்பாட் டத்திற்கு திமுக மாணவர் அணிச் செயலாளர் கடலூர் இள. புகழேந்தி தலைமை வகிக்கிறார்.

தென்சென்னை மாவட்டக் கழக செயலாளர் ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ. மாணவர் அணி துணைச் செயலாளர்கள் கோவி. செழியன் எம்.எல்.ஏ., குத்தாலம் க. அன்பழகன், கோவை கணேஷ்குமார், பூவை சி. ஜெரால்டு, மதுரை க. மகிழன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இடஒதுக்கீட்டை வலியுறுத்தி அ.தி.மு.க. அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்திட நடைபெறும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க கழக மாணவர் அணி நிர்வாகிகளும், மாணவர் அணித் தோழர்களும் திரண்டு வாரீர் வாரீர் என தி.மு.க. மாணவர் அணி சார்பில் அணியின் செயலாளர் இள. புகழேந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/73221.html#ixzz2pcfJhek2

தமிழ் ஓவியா said...


பூரி ஜெகநாதர் கோவில் பூசாரிகள் முறையான வருகைக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு


புவனேஸ்வர், ஜன. 6- பூரி ஜெகநாதர் கோவிலில் பணிபுரிந்துவரும் சுமார் 2,000 பூசாரிகளுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை அறி முகப்படுத்த கோவில் நிருவாகம் முடிவு செய் துள்ளது.

பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 85 பூசாரிகள் கோவிலில் நாள்தோறும் பூஜைகளை நடத்தி வருகின்றனர். இவர்கள் மிகவும் தாமதமாக வருவதால் பூஜைகளை சரிவர நிறைவேற்று வதில்லை என்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதினாலேயே நிருவாகம் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாகத் தெரிய வருகின்றது.

கோவில் நிருவாகம் அளித்த தகவல்களின்படி இங்கு நாள்தோறும் காலை 6 மணியிலிருந்து இரவு வரை 23 விதமான பூஜைகள் நடைபெறு கின்றன. திருவிழாக் காலங்களில் 32 சடங்குகள் நிறைவேற்றப்படுகின்றன. இந்தியாவிலேயே இந்தக் கோவிலில்தான் பல சிக்கலான பூஜை களும் நிறைவேற்றப்படுகின்றன.

எனவே பூசாரிகளின் முறையான வருகை அவசியமாகின்றது. பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்று கோவிலின் தலைமை நிருவாகி யான அரவிந்த்பதி கூறினார். இந்த முறையின் மூலம் காலதாமதம் எற்படுத்து வோருக்கு ஊதிய வெட்டு அறி விக்கப்படும் என்றும், இதன்மூலம் அவர்களைத் தங்களின் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரி வித்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற இந்தக் கோவிலின் தேர்த்திருவிழாவில் போலியான பூசாரிகளால் நடை பெற்ற சம்பவங்களைத் தொடர்ந்து இவர்களுக்கான அடையாள அட் டைகள் வழங்கப்படும் என்று ஒடிசா அரசு சென்ற மாதம் தெரிவித்தது.

வரும் 2015 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நபகலேபார் திருவிழா எனப் படும் தெய்வங்களின் சிலைகளை மாற்றும் நிகழ்ச்சியின்போது இந்த அட்டைகள் அவர்களுக்கு வழங்கப் படும் என்றும் அரசு குறிப்பிட்டுள் ளது. எனவே அதன்பின்னரே அவர் களின் வருகைப்பதிவும் முறைப் படுத்தப்பட முடியும் என்று கோவில் நிர்வாகம் தெரிவிக்கின்றது.

Read more: http://viduthalai.in/page-8/73230.html#ixzz2pcfW4aJi

தமிழ் ஓவியா said...


சமூக நீதிக்கு எதிரான நியமன அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது


சென்னை, ஜன.6- மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை யில் நிரப்பப்பட வேண்டிய பணி யிடங்களான மருத்துவப் பேராசிரி யர்கள், உதவிப் பேராசிரியர்கள், பதிவாளர்கள் போன்ற பணியிடங் களுக்கு ஜனவரி 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என டிசம் பர் 27ஆம் தேதி மருத்துவ நியமனத் துறை குறுகிய காலக்கெடுவை நிர்ண யித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதில் இடஒதுக்கீடு பகிர்வு குறித்த எந்தக் குறிப்பும் காணப்படவில்லை. மருத்துவர்களிடையே பார பட்சம் காட்டும் போக்கும், சமூக நீதிக்கு எதிரான போக்கும் தமிழக அரசின் இந்த அறிவிப்பில் வெளிப்பட்டுள் ளது. சமூகநீதிக்கு முரணான எந்தச் செய லையும் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை பணியாளர்கள் குறித்து வெளியிடப் பட்டுள்ள சமூகநீதிக்கு எதிரான நியமன அறிக்கை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம் என்று மமக தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/73234.html#ixzz2pcfmAefU

தமிழ் ஓவியா said...கோவில் பெருச்சாளிகளுக்கு ஜே! சிதம்பரம் நடராஜன் கோவில் தீட்சிதர் வசம்! உச்சநீதிமன்றம் தீர்ப்பு


புதுடில்லி, ஜன.6-கரை யான் புற்றெடுக்க கரு நாகம் குடிபுகுந்தது போல சிதம்பரம் நட ராஜன் கோவில் மீண்டும் தீட்சிதர்களின் கைகளில் உச்சநீதிமன்றம் ஒப்ப டைத்துள்ளது.

சிதம்பரம் நடராஜன் கோவில் நிர்வாகத்தில் முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்தன. உள் ளூர் தீட்சிதப் பார்ப் பனர்களே புகார் தெரி வித்தனர். இதையடுத்து கோவில் நிருவாகத்தை தமிழக அரசு கையில் எடுத்துக்கொண்டது. அதைத் தொடர்ந்து கோவிலை நிர்வகிப்ப தற்காக செயல் அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமனம் செய்தது.

இந்த நியமனத்தை எதிர்த்து பொது தீட்சி தர்கள் சார்பில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டது. இதை விசா ரித்த நீதிபதிகள் செயல் அதிகாரி நியமிக்கப்பட் டது செல்லும் என்று தீர்ப்பு கூறினார்கள்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து பொது தீட்சி தர்கள் மேல் முறையீடு செய்தனர். நீதிபதிகள் சவுகான், போப்டே ஆகி யோர் முன்னிலையில் இந்த விசாரணை நடந்து வந்தது. பொது தீட்சிதர் கள் தரப்பில் சுப்பிரமணி யசாமி வாதாடினார்.

விசாரணை முடிந்து நீதிபதிகள் இன்று (5.1.2014) தீர்ப்பு கூறி னார்கள். நீதிபதிகள் கூறிய தாவது:

சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வகிக்க செயல் அதிகாரியை நியமித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. கோவி லில் தவறு நடக்கிறது என்று தெரிந்தால் சிறிது காலத்துக்கு மட்டும் அதி காரியை நியமிக்கலாம். அதை தொடர்ந்து நீடிக்க செய்ய முடியாது.

- இவ்வாறு நீதிபதி கள் கூறினார்கள்.

Read more: http://viduthalai.in/page-8/73228.html#ixzz2pcgAxNvB

தமிழ் ஓவியா said...

திருமண வாக்குறுதியளித்து பாலியல் உறவு கொண்டால் வல்லுறவு ஆகாதாம்

புதுடில்லி, ஜன.6-திருமண வாக்குறுதி அளித்த பிறகு வயது வந்த இருவர் பாலியல் உறவு வைத்துக் கொண் டால், அது வல்லுறவு ஆகாது. திருமணத் துக்கு முந்தைய பாலியல் உறவு தீயொழுக்கம் என அனைத்து சமய கோட் பாடுகளும் கூறியுள்ளன என டில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டில்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் இளம் பெண் ஒருவர், பன் னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் தனது காதலன் மீது கடந்த 2011 ஆம் ஆண்டு வல்லுறவுப் புகார் அளித்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த டில்லி நீதி மன்ற நீதிபதி வீரேந்தர் பட் கூறியதாவது:

திருமண வாக்குறுதி மூலம் நடைபெறும் பாலியல் உறவுகள், வல்லுறவு அல்ல என்பது என் கருத்து. வயது முதிர்ச்சி அடைந்த, நன்கு படித்த, அலுவல கத்தில் பணியாற்றும் பெண் தனது நண்பர் அல்லது சக ஊழியர் அளிக்கும் திருமண வாக் குறுதி மூலம் பாலியல் உறவு கொண்டால், அதன் விளைவை அவர் அறிந்தே செய்கிறார்.

அவர் அளிக்கும் வாக் குறுதிக்கு எந்த உத்திர வாதமும் இல்லை என் பதை அந்தப் பெண் புரிந்து கொண் டிருக்க வேண்டும். அந்த இளை ஞர் தனது வாக்குறு தியை நிறைவேற்றா விட்டால் அது வல்லுறவு ஆகாது. ஒரு பெண், ஒரு ஆணிடம் தனது உடலை ஒப்ப டைக்க முடிவு செய்யும் போது, அதன் சாதக பாதகங்களை அவர் எண்ணிப்பார்க்க வேண் டும்.

திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவை, உலகில் எந்த மதமும் அனுமதிப்ப தில்லை. அது அனைத்து மத கோட்பாடுகளுக் கும் எதிரான தீயொ ழுக்கம். திருமண உறுதி அளித்ததற்கான எந்த வொரு பதிவு ஆதாரமும் இல்லை. இ-மெயில் மற்றும் சாட் ஆதாரங் களைப் பார்க்கும் போது, பாலியல் உற வுக்கு அந்த இளை ஞனை, அந்தப் பெண் தான் தூண்டினார் என் பது தெரிகிறது.

இத னால் வல்லுறவு குற்றச் சாட்டில் இருந்து அந்த இளைஞர் விடுவிக்கப்ப டுகிறார்.

- இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/73228.html#ixzz2pcgK6ycM

தமிழ் ஓவியா said...


நிரந்தர விரோதி


நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்கள் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால், நமது நாட்டில் மதமும், மூட நம்பிக்கையும் ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதியாய் இருக்கிறது.

- (குடிஅரசு, 13.4.1930)

Read more: http://viduthalai.in/e-paper/73207-2014-01-06-09-57-59.html#ixzz2pcgyvMkY

தமிழ் ஓவியா said...


இதய நோயைத் தவிர்க்க 3 வழிகள்


இன்றைய அவசர உலகில் மோசமான உணவு பழக்க வழக்கம் மற்றும் உடல் உழைப்பின்மை காரணமாக பலருக்கும் ஏற்படும் நோய்களில் ஒன்றாக இதய நோய் உள்ளது.

உடல் உழைப்பின்மையும், நொறுக்குத் தீனிப் பழக்கமும், உடல் பருமனை ஏற்படுத்துகிறது. இதன் மூலமாக இதயநோய் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக் கிறது. இதனைத் தவிர்க்க மூன்று வழிகளை பின்பற்ற வேண்டும்.

அதாவது, ஆரோக்கியமான உணவு... ஆலிவ் எண்ணெய், தானியங்கள், காய்கறிகள், கடல் உணவுகள் போன்றவற்றை ஆரோக்கியமாக தயாரித்து சுகாதாரமான முறையில் உண்ண வேண்டும். இன்னமும், கிரிக் நாடுகளில் தங்களது பழைமையான உணவுப் பழக்கத்தைக் கையாளும் மக்களுக்கு இதயநோய் ஏற்படுவதில்லை என்று ஆய்வுகள் சான்றளிக்கின்றன.

புகை பிடிக்காதீர்

இதயநோய்களை ஏற்படுத்தும் காரணிகளில் சிகரெட் பிடிப்பது முக்கியக் காரணமாக உள்ளது. இந்த காரணத்தால், அமெரிக்காவில் தற்போது புகைப்போரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந் துள்ளது.

ஆனால், மோசமான செய்தி என்னவென் றால், மக்கள் தொகை அதிகமாக இருக்கும் இந்தியா, சீனாவில் புகைப்போரின் எண்ணிக்கை அதிகரித் துக் கொண்டே வருகிறது. புகைப்பதால் நுரையீரல் புற்று நோய் மட்டுமே ஏற்படும் என்று எண்ணி வந்துள்ளோம். ஆனால், புகைப்பதால் இதய நோய்

ஏற்படும் என்ற விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.

நடையை ஓரம் கட்டாதீர்

பலருக்கும் இப்போது நடப்பதற்கான வாய்ப்பே குறைவாக உள்ளது. எங்கு செல்வதென்றாலும் வாகனத்திலும், ஆட்டோவிலும் செல்கிறோம். முன்பெல்லாம் வசதி இல்லாததால் அதிகம் நடந் தார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியமாகவும் வாழ்ந்தார்கள்.

இதயநோய் ஏற்பட்டு மருத்துவ மனைக்கு நடையாய் நடக்க வேண்டாம் என்று விரும்பினால், இப்போதே ஆரோக்கியமாக நடைப் பயணம் மேற்கொள்வோம்.

Read more: http://viduthalai.in/page-7/73210.html#ixzz2pchOk3qt

தமிழ் ஓவியா said...


முதுமையின் வலிகள்


முதுமைப் பருவம் குழந்தைப் பருவத்துக்கு சமம் என்பார்கள். உடல், மன வேதனைகளை குழந்தை களுக்கு எப்படி சொல்ல தெரியாதோ அதே மாதிரி தான் முதியவர்களுக்கும். 2020 இல் உலகில் ஆயிரம் மில்லியன் முதியவர்கள் இருப்பார்கள். அதில் இந்தியாவில் மட்டுமே 142 மில்லியன் பேர் என்கிறது உலகச் சுகாதார நிறுவனம். வயதானவர்கள் அதிகமாக, ஆக அவர்களின் உடல் நலப்பிரச்சினை களும் அதிகரிக்கவே செய்யும்.

65 வயதிற்குப்பிறகு ஆண்களும், பெண்களும் அதிக வலிகளால் அவதிப்படுகிறார்கள். அவர்களின் வலிகள், மற்றவர்களின் வலிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. அதற்கான அணுகுமுறை, சிகிச்சை எல்லாமே வேறு என்கிறார் வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் குமார். முதுமையில் வரக்கூடிய வலி திசுக்களின் தேய்மானம், பலவீனத்தால் வரக்கூடியது.

ரத்த அழுத்தம், நீரிழிவு, எலும்பு மூட்டுப் பிரச்சினை, மற்ற நோய்களின் விளைவால் வரக்கூடியது. தனிமை, வாழ்க்கையைப்பற்றிய பயம், வருமானம் இல்லை என்கிற வேறு காரணங்களால் உணரப்படுகின்ற வலி, புற்றுநோயால் வரக்கூடிய வலி. இதெல்லாம் வயதானவர்களின் வலிக்கான காரணங்கள். 65 வயதிற்குப் பிறகு புற்றுநோய் தாக்குகின்ற ஆபத்து அவர்களுக்கு அதிகம்.

இவர்களுக்கு சிகிச்சை கொடுப்பது அவ்வளவு எளிதானதல்ல. சிகிச்சைக்கு ஒத்துழைக்க மாட்டார்கள். காது கேட்காதது, கவனமின்மை, மறதி, மனரீதியான பிரச்சினைகள் என்று பல காரணங் களால் சிகிச்சைகளை பற்றிப் புரிந்துகொள்கின்ற சக்தி அவர்களுக்கு இருக்காது. உடற்பயிற்சி, பிசியோதெரபி மாதிரியான விஷயங்களுக்கும் ஒத்துழைக்க மாட்டார்கள். மிகவும் பொறுமையாகத் தான் அவர்களை அணுகவேண்டும் என்கிறார் மருத்துவர் குமார்.

மூட்டு வலி, தோள்பட்டை வலி, முதுகு வலி, கழுத்து வலி, கால் எரிச்சல், புற்றுநோய் வலி ஆகியவையே முதியவர்களிடம் காணப்படுகிற வலிகள் என்கிறார்.

ஏற்கெனவே அவர்களுக்கு ஏதாவது நோய் இருந்தால், வலிகளுக்கான மருந்துகளை கொடுக் கிறபொழுது அதிகபட்ச கவனம் தேவை. எல்லா மருந்துகளும் அவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது. நோயின் தன்மை, அவர்களுடைய உடல் மற்றும் மனநிலையை தெரிந்து கொண்டுத்தான் மருந்துகள் தர வேண்டும். 60 வயதிற்கு மேலானவர்கள் எக்காரணத்தைக் கொண்டும், எந்த வலிக்கும் சுய மருத்துவம் செய்யவே கூடாது.

மருந்து கொடுத்து சரி செய்ய முடியாது என்கிற வலிகளுக்கு கலந்தாய்வும், உளவியல் ரீதியான தெரபிகளும் தேவைப்படலாம். பிசியோதெரபி செய்வது மூலம் வலியோட தீவிரம் அதிகமாவதைத் தவிர்க்கலாம். சில வலிகளுக்கு அறுவை சிகிச்சை தான் தீர்வாக இருக்கும். ஆனால் முதுமை காரணமாக அறுவை சிகிச்சை செய்ய முடியாது, மருந்துகளும் தர முடியாது என்கிற நிலைமையில் உள்ளவர்களுக்கு, வலி நிர்வாக கிளினிக்கை அணுகி, சிறப்பு வலி நிவாரண சிகிச்சைகள் கொடுப்பது பலன் தரும் என்கிறார்.

Read more: http://viduthalai.in/page-7/73211.html#ixzz2pchcqwLD

தமிழ் ஓவியா said...


தூக்கமின்மை நரம்பியல் அழிவிற்கு வழிவகுக்கும்: ஆய்வுத் தகவல்


ஒரு மனிதனின் ஆரோக்கியமான உடல் நலத்திற்கு நல்ல தூக்க மும் ஒரு காரணமாக உள்ளது. தூக்கம் இல்லாமை என்பது மாரடைப்பு, உடற் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் வருவ தற்கு அதிக வாய்ப்புகளை அளிப்பதாகவே நிபுணர்கள் கருது கின்றனர்.

சுவீடன் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வானது தூக்கமின்மை என்பது எவ்வாறு மக்களின் சுகாதாரத்தைப் பாதிக்கின்றது என்பதை தெரிவிப்பதாக உள்ளது. உப்சாலா பல்கலைக்கழகத்தின் ஆய்வுகள் ஒரு இரவின் தூக்கமின்மை என்பது மனிதனின் மூளையில் காணப்படும் மூலக்கூறுகளில் இரத்த அளவு அதிகரிப்பதை நிரூபித்துள்ளது.

இந்தப் பரிசோதனையை மேற்கொண்ட சுய ஆர்வலர்களின் இரத்தத்தில் மூளைத் திசுக்களின் அழிவைக் குறிக்கும் என்எஸ்ஈ மற்றும் எஸ்-100பி போன்ற காரணிகள் அதிகரித்திருந்தது கண் டறியப்பட்டது. ஸ்லீப்' என்ற மருத்துவ இதழில் சாதாரண எடை கொண்ட 15 பேரின் தூக்க நேரத்தின் அளவுகள் கணக்கிடப் பட்டிருந்தன.

இவர்களில் ஒருவர் மட்டும் ஒரு நாள் இரவு தூங்க வில்லை. மற்றவர்கள் அனைவரும் எட்டு மணிநேர தூக்கத்தைப் பெற் றிருந்தார்கள். ஒரு நாள் இரவு தூங்காமல் இருந்த நபரின் இரத்தத்தில் மூளைத் திசுக்களின் அழிவுக் காரணிகளான என்எஸ்ஈ மற்றும் எஸ்-100பி இவற்றின் கலவைகள் அதிகரித்துக் காணப்பட்டன.

இதன்மூலம் தூக்கமின்மை என்பது ஒருவரது நரம்பியல் அழிவிற்கான செயல்முறைகளைத் விரைவுப்படுத்து கின்றது என்று உப்சலா பல்கலைக்கழகத்தின் முன்னணி ஆராய்ச்சி யாளரான கிறிஸ்டியன் பெனடிக்ட் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இத்தகைய ஆய்வுகள் ஒரு நல்ல இரவு தூக்கமானது மனிதனின் மூளையை ஆரோக்கியமாக வைத்திருப் பதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதைத் தெரிவிக்கின்றன.

Read more: http://viduthalai.in/page-7/73209.html#ixzz2pchrsOyM

தமிழ் ஓவியா said...

மார்பகப் புற்றுநோய்: ரத்தப் பரிசோதனைமூலம் கண்டறியலாம்

மார்பகப் புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் உடலில் இருப்பதை ரத்தப் பரிசோதனை மூலமாகக் கண்டறியும் நவீன தொழில்நுட்பம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

எலிகளை வைத்து நடத்தப்பட்ட சோதனையில், மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் உடலில் இருப்பதை ரத்த பரிசோதனையில் கண்டறியும் முறை வெற்றி பெற்றுள்ளதாகவும், தற்போது இது மனிதர்களிடம் சோதனை முறையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த முறை பயன்பாட்டுக்கு வந்தால், மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளித்து பல உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம்.

Read more: http://viduthalai.in/page-7/73209.html#ixzz2pci0oQJb