Search This Blog

1.1.14

வாஞ்சிநாதனுக்கு மணி மண்டபமா? ஊன்றிப் படித்து உண்மையை அறியுங்கள்!!


திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையில் மார்பளவு சிலையுடன் ரூ.50 லட்சம் மதிப்பில், வாஞ்சிநாதன் மணி மண் டபத்தை முதல் அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
இதுபற்றி, தமிழ்நாடு அரசு செய்திக் குறிப்பு தெரிவிப்பதாவது:
திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையில் 1886ஆம் ஆண்டு பிறந்த புரட்சியாளர் வாஞ்சிநாதன், கல்லூரிப் படிப்பு முடிந்து, திருவிதாங்கூர் சமஸ்தானத் தில் வனத்துறையில் பணியாற்றி வந்தார். சுதந்திரப் போராட்ட வீரர்கள் வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா ஆகியோரின் மேடைப் பேச்சுகளால் கவரப்பட்டு விடுதலைப் போராட்டத்தில் அய்க்கியமானார். தமது அரசுப் பணியில் இருந்து விலகிப் புரட்சிப் பாதையில் தீவிரமானார். நீலகண்ட பிரம்மச்சாரியுடன் இணைந்து பாரத மாதா சங்கம் என்ற புரட்சி அமைப்பில் சேர்ந்தார். 1911 ஜூன் மாதம் 17ஆம் நாள் மணியாச்சி புகை வண்டி நிலையத்தில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆங்கிலேய அதிகாரி ஆஷ் துரையைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக் கொண்டு வீர மரணம் அடைந்தார். தமிழக அரசின் சார்பில், நாட்டு விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்த, வாஞ்சிநாதன் நினைவைப் போற்றிடும் வகையில், திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மார்பளவு சிலையுடன் கூடிய மணி மண்டபத்தை, முதல்வர் ஜெயலலிதா, காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிச்சாமி, செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, அமைச்சர் கே.சி. வீரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியைப் படிக்கும் பொழுது, வேதனைதான் விஞ்சுகிறது. ஆஷ் துரையை சுட்டுக் கொன்றது, சுதந்திர போராட்டத்திற்காக என்று சொல்லுவது உண்மைதானா? என்பது முக்கியமான கேள்வியாகும்.
கொலை செய்தவரை வீரர் என்று அரசு குறிப்பும் சொல்லுகிறது! இது ஓர் ஆபத்தான கருத்தே!
1948இல், தூத்துக்குடியில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டில் உரையாற்றிய தந்தை பெரியார், பார்ப்பனர்களின் போக்குக் குறித்து கீழ்க் கண்டவாறு பேசினார்.

திவான்பகதூர் சாஸ்திரியார், எம்.எஸ். சுப்பிரமணிய அய்யர் ஆகியோர் கூடி இனி இரண்டில் ஒன்று பார்த்துக் கொள்ள இருக்கிறார்கள். புல்லேந்திய கை வாளேந்தும். பல முறை வாளேந்திப் பலரைக் கொலை செய்திருக் கிறோம். பலரை அண்டியிருந்து கெடுத்திருக்கிறோம் என்று கூறி மேலும் மார்தட்டிக் கூறுகிறார்கள். சிப்பாய்க் கலகத்தை நடத்தியவர் யார் தெரியுமா? இராணா என்கிற ஒரு பார்ப்பான்தான் - ஞாபகமிருக்கட்டும். இது மட்டுமா திருநெல்வேலியில் ஆஷ் துரையைச் சுட முன் வந்தவன் யார் தெரியுமா? வாஞ்சி என்கிற ஒரு பார்ப்பான்.  இது மட்டுமா உலகமே போற்றிய உத்தம காந்தியாரைக் கொன்றது யார் தெரியுமா? கோட்சே என்கிற ஒரு பார்ப்பான் என்பது ஞாபகமிருக்கட்டும்! துப்பாக்கி எடுக்குமளவுக்குத் துணிந்து நம்மைப் போருக்கழைக்கிறார்கள் - நாம் அஞ்சாமல் எதிர்த்து நிற்போம் - அவர்கள் பேச்சுப்படி முன் வரட்டும் என்று தந்தை பெரியார் தூத்துக்குடி மாநாட்டில் எச்சரித்தார் (விடுதலை 19.5.1948).

இவற்றை  படித்துப் பார்க்கும்பொழுது ஒன்று வெளிப் படையாக புரியும். இந்தப் பார்ப்பனர் எல்லாம் எந்த உணர்வோடு தங்கள் எதிரிகளைத் தீர்த்துக் கட்டினார்கள் என்பது எளிதில் விளங்கும்.
வாஞ்சி நாதனைப் பொறுத்தவரையில், ஆஷ்துரையை ஏன் கொன்றான்? (17.6.1911) என்பதற்குப் பெரிய ஆதாரங்கள் தேவைப்படாது. அவன் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்தான் அல்லவா! அவனுடைய சட்டைப் பையில் அவன் கைப்பட எழுதி வைத்திருந்தான் - அதில் குறிப்பிடப் பட்டிருந்தது என்ன என்பதுதான் மிகவும் முக்கியம்.
ஆங்கிலச் சத்ருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலில் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும், தற்காலத்தில் தேசியச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத் தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குருகோவிந்தா, அர்ஜுனன் முதலியோர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில்  கேவலம் கோ மாமிசம் தின்னக் கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு, பெரு முயற்சி நடந்துவருகிறது. அவன் (George) எங்கள் காலத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நானும் இச்செய்கை செய்தேன். இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்யவேண்டிய கடமை.
இப்படிக்கு
ஆர். வாஞ்சி அய்யர் Rvanchi Ayyar of Shencotta

வாஞ்சி நாதய்யர் எழுதிய இந்தக் கடிதத்துக்கு விளக்கங்கள் தேவைப்படாது. தன்னிலை விளக்கம் கொண்டது.
ஆஷ் துரையைப் படுகொலை செய்தது, சுதந்திரப் போராட்ட உணர்ச்சியால் அல்ல. ஆரிய ஸனாதன தர்மத்தை வெள்ளைக்காரர்கள் அழிக்கிறார்கள், என்ற நோக்கம்தான் படுகொலை செய்ததற்கான காரணம்.
இத்தகைய வரணாசிரம வெறியனை கொலைகாரனை வீரனாக்கிக் காட்டுவதும், மணி மண்டபம் கட்டுவதும், இளை ஞர்களுக்குத் தவறான வழி காட்டுவது ஆகும். அதுவும் ஓர் அரசாங்கமே இதைச் செய்வது ஆபத்தானதும், கண்டிக்கத் தக்கதுமாகும்.

----------------------------------------- "விடுதலை” தலையங்கம் 27-12-2013

42 comments:

தமிழ் ஓவியா said...


தனி மனித தத்துவம் கூடாது...வாழ்க்கை என்பது தனித்தனி மனிதனைப் பொறுத்த தத்துவம் என்பது கூடவே, கூடாது.
(பகுத்தறிவு, 1.11.1938)

Read more: http://viduthalai.in/page-2/72920.html#ixzz2p9d9QxQG

தமிழ் ஓவியா said...

பழையன கழிதலும்...2013 ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. பழையன கழியட்டும்! 2014 ஆம் ஆண்டு பிறந்துவிட்டது. புதியன பூத்து மலரட்டும்! பழைய பஞ்சாங்கங்களைப் புரட்டி, புரட்டுகளை எழுதிக் குவிக்கும் அஞ்ஞானமும் ஒருபுறத்தில் அரங்கேறிக் கொண்டுதானிருக்கிறது.

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் புத்தாண்டு வாழ்த்தில் குறிப்பிட்டுள்ள வாசகக் கருத்துகள் மிக முக்கியமானவை.

மனிதநேயம், சமத்துவம், சம வாய்ப்பு, பகுத்தறிவுச் சிந்தனை வளம் பெருகி, வாழ வைக்கும் புதுஉலகப் புத்தாண்டாக அமையட்டும்! என்பவை மிகமிகச் சிறப்புக்கும், வரவேற்புக்கும் உரியவை.

இந்தச் சொற்களில் அடங்கியுள்ள மகரந்தங்கள் புதிய ஒப்புரவுச் சமனிய சமுதாயத்தை மலர்விக்கும் என்பதில் அய்யமில்லை.

பெற்றோர்களைப் பராமரிக்காவிட்டால், அவர்களுக்குத் தண்டனை என்று ஓர் அருமையான சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது - வரவேற்கத்தக்கதேயானாலும், இப்படியொரு சட்டம் நிறைவேற்றப்பட நேர்ந்தமைக்கு, எல்லோரும் வெட்கப்படவேண்டாமா?

கைநிறைய சம்பாதிக்கிறோம் என்ற அகந்தையில் அதற்குக் காரணமான தங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பி வைக்கின்றனரே - எங்கே போயிற்று மனிதநேயம்?

சமத்துவம், சம வாய்ப்பு என்று தமிழர் தலைவர் கூறியுள்ளதில் சமதர்ம மணம் கமழ்கிறது, இன்னும் மாத வருவாய் ரூ.20 ஈட்டக்கூடியவர்கள் நாட்டில் 70 விழுக்காடு என்றால், வெட்கப்படவேண்டாமா?

நாடு சுதந்திரம் அடைந்தால் தேனாறும், பாலாறும் கரைபுரண்டு ஓடும் என்றார்களே - அதற்கான மறுப்புதான் மேற்கண்ட சென்குப்தா குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள புள்ளி விவரம்.


இந்தியாவில் விவசாயம் என்பது மிக முக்கியமான உயிர்நாடித் தொழில். பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள்தான் ஆண்களும், பெண்களுமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் வயிற்றுக்குச் சோறு போட்டு உயிரை நீட்டித்துக் கொண்டிருக்கும் அந்தத் தொழில் பாவப்பட்ட தொழிலாகத்தானே கருதப்படுகிறது - ஆக்கப்படுகிறது.

இந்திய விவசாயி கடனிலே பிறந்து, கடனிலே வாழ்ந்து,கடனிலே சாகிறான் என்ற வாசகங்களை இன்னும் எவ்வளவுக் காலத்துக்குத்தான் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்கள்?

இந்தியாவில் விவசாயிகள் வளமையாக வாழ்கிறார்கள் எனும் நிலை, நிலை நிறுத்தப்பட்ட நாள்தான் இந்தியா பொருளாதாரத்தில் - சமத்துவத்தில் புன்னகை பூக்கிறது என்பதற்கான அத்தாட்சியாகும்.


இந்தியாவின் பெருங்குடி மக்களான விவசாயிகள் வறுமைக்கோட்டுக்குள் மூச்சுத் திணறிக் கொண்டுள்ள சூழ்நிலையில், அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் அய்.ஏ.எஸ். ஆக முடியும்; உச்சநீதிமன்ற நீதிபதியாக முடியும் என்று கனவுகூடக் காண முடியாதே!

தமிழ் ஓவியா said...

மாநில, மத்திய அரசுகள் வருணாசிரமக் கண் ணோட்டத்தில் பாவப்பட்ட தொழிலாக நசுங்கிப்போன வேளாண் மக்களின் வாழ்வுக்கு வளமைகூட்ட அனைத்து முயற்சிகளையும் முனைந்து, மும்முரமாக செய்யட்டும்! செய்யட்டும்!!

சமவாய்ப்புப்பற்றியும், திராவிடர் கழகத் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய அளவில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்க்குக் கல்வி, வேலை வாய்ப்புகள் உரிய சதவிகிதத்தில் கிடைக்கப் பெறவில்லை.

மண்டல் குழு பரிந்துரைக்காக, திராவிடர் கழகம் 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தியுள்ளது. வேலை வாய்ப்பில் 27 சதவிகிதம் என்று சொல்லப்பட்டாலும், நடைமுறையில் இன்னும் எட்டு சதவிகிதத்தைக் கூடத் தாண்டவில்லை. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான தேசிய ஆணையத்திற்கு, இன்னும் சட்ட வலிமை அளிக்கப்படவில்லை.

கல்வியில் இட ஒதுக்கீடு என்பது வெறும் ஏட்டுச் சர்க்கரையாகவே இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் இந்திய அளவில் பெரும் விழிப்புணர்ச்சி ஊட்டப்படவேண்டும் என்பதைத்தான் இது காட்டுகிறது.

அனைத்துத்துறைகளிலும் விதிவிலக்கின்றி இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும்; குறிப்பாக உடனடியாக நமது கவனம் - தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீடு சட்டப்படி கிடைக்கச் செய்வதே!

இந்தியாவில் ஆயிரம் கார்ப்பரேட் நிறுவனங்களில் 9052 போர்டு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 44.6 சதவிகிதம் பார்ப்பனர்கள். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 3.5 சதவிகிதம்.

சம வாய்ப்புத் தேவை என்று தமிழர் தலைவர் கூறியிருப்பதன் பொருள் இதன்மூலம் வெளிப்படும்.

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது 2014 ஆம் ஆண்டு மிக முக்கியத்துவம் உள்ளதாக அமையும்.
பகுத்தறிவுச் சிந்தனை பெருகவேண்டும் என்றும் கூறியுள்ளார்; மனி

தன் என்பதற்கே அடையாளம் பகுத்தறிவுச் சிந்தனைதானே! மதவாத சக்திகளை மக்கள் மனதிலிருந்து வேரோடு கெல்லி எறிந்திடவும் வேண்டும்.

நம் நாட்டுப் படிப்புக்கும் பகுத்தறிவுக்கும் ஏதாவது தொடர்புண்டா? வயிற்றுப் பிழைப்புக்கு ஒரு லைசென்சாகத்தானே நம் கல்வி உள்ளது.

இந்த நிலையில் பெரியாரியலை உலக மயமாக்கும் பணி - பெரியார் உலகம் பணியை முன்னெடுப்போம்!

வருக புத்தாண்டே, வளமுடன்!

Read more: http://viduthalai.in/page-2/72921.html#ixzz2p9dMwQ4t

தமிழ் ஓவியா said...


கலைஞர் தொலைக்காட்சி


தொலைக்காட்சி என் றாலே, அறிவியல் மனப் பான்மை - பகுத்தறிவு மனப் பான்மை உள்ளவர்களுக்கு ஒரு குமட்டல் உண்டு.

விஞ்ஞான சாதனம் ஒன்றில் அஞ்ஞானத்தைக் கொட்டும் குப்பைத் தொட்டி யாக ஆக்கிவிட்டார்களே என்ற சமுதாயக் கவலை அவர்களுக்குண்டு.

விஞ்ஞான சாதனத்தில், அஞ்ஞானத்தைப் பரப்புவது அறிவு நாணயம்தானா? என்ற வினாவையும் எழுப்பி வருகிறோம்.

பெரும்பாலான மனித நேரத்தை இந்தத் தொலைக் காட்சி என்னும் கரையான் தின்று அழிக்கின்றதே என்ற ஆதங்கம் கண்டிப்பாக உண்டு.

குறிப்பாக சிறுவர்களைச் சீரழித்துக் கொண்டிருக் கிறது. சக்திமான் என்ற ஒரு நபர் ஆபத்துக் காலத்தில் வந்து உதவுவான் என்கிற முறையில் தொலைக்காட்சி யில் ஒளிபரப்பாகிக் கொண் டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, பார்த்துக் கொண்டிருந்த திருவாரூரை அடுத்துள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுவன், வீட்டு மாடியிலி ருந்து சக்தி மான் என்று குரல் கொடுத்துக் கீழே குதித்தவன் பரிதாபகரமாக மரணமடைந்தான்.

அமரிக்காவைச் சேர்ந்த ஸ்டேன் போர்டு பல்கலைக் கழக மருத்துவர் டான் ராபின்சன் குழந்தைகளின் எதிர்காலத்தை தொலைக் காட்சிகள் முடிவு செய்கின் றன என்றார். எட்டு வயது முதல் 18 வயதுக்குள் பத்து வருடங்களுக்குள் இரண்டு இலட்சங்களுக்கு அதிகமான வன்முறைக் காட்சிகளைக் காண்பதாக ஆய்வுகள் கூறு கின்றன.

அந்த ஆய்வாளர் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள் ளார். இரு பள்ளிக்கூடங் களைத் தேர்வு செய்தார்; முதல் பிரிவில் 105 மாண வர்கள், மாணவிகள்; இவர் கள் தொலைக்காட்சிகளைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார் கள். இன்னொரு பிரிவில் 120 இருபால் மாணவர்கள்; இவர் கள் தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்கப்படவில்லை; இதற்காக, ஆறு மாதம் ஒதுக்கப்பட்ட பின் ஆய்வுகள் செய்யப்பட்டன.

தொலைக்காட்சி பக்கம் தலை வைக்காத இருபால் மாணவர்களிடம் இயல்பான போக்குகளும், நாகரிகமான நடவடிக்கைகளும் இருந்த தைக் காண முடிந்தது. எப் பொழுதும் தொலைக்காட்சி யைப் பார்த்தவர்களோ, கேலி செய்வது, தகாத சொற் களைப் பயன்படுத்துவது, வன்முறை என்ற நிலையில் இருந்தனர் என்பதை பெற் றோர் கவனித்துக் கொள்ள வேண்டும்.

மூட நம்பிக்கையை எடுத் துக்கொண்டால், இராமாய ணம், மகாபாரதங்களை ஒளி பரப்பும் வேலை சரியானது தானா?

இன்று கலைஞர் தொலைக் காட்சியில் மக்களைப் பெரிதும் மயக்குவது மூட நம்பிக்கைகளா? திரைப் படங்களா? என்ற அருமை யான பட்டிமன்றம் நடை பெற்றது.

இதற்காகக் கலைஞர் தொலைக்காட்சியைப் பாராட் டுகிறோம். இந்த நிலை தொடரட்டும்! மற்ற மற்ற தொலைக்காட்சிகளும் இத னைப் பின்பற்றுமா? தொலைக்காட்சிகளுக்கு ஒரு நினைவூட்டல்! ஒரு சித்திரம் என்பது ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் என்பதை உணர்ந்து கொண் டால், அவர்களின் பொறுப்பு கத்தி முனையில் நடப்பது என்பதை உணர முடியும்.

2014 புத்தாண்டிலாவது புதிய சிந்தனைகள் பூக் கட்டுமே!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/72917.html#ixzz2p9dUmzAP

தமிழ் ஓவியா said...

2014ஆம் ஆண்டில் நம் முன் உள்ள பணிகள்!


ஜாதிஒழிப்பு,பெண்ணடிமைஒழிப்பு,மூடநம்பிக்கைஒழிப்பு,

அறிவியல்மனப்பான்மைவளர்ப்புஉள்ளிட்டபணிகள்

தமிழர் தலைவர் அறிவிப்பு

பெரியார் உலகம் அமைப்போம் - பெரியார் பணியும் முடிப்போம்!

2014ஆம் ஆண்டுக்கான கழகப் பணிகளைப் பட்டிய லிட்டு அறிக்கை விடுத் துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர் களின் அறிக்கை வருமாறு:

2014 ஆம் ஆண்டில் நமது கழகத்திற்கு மாபெரும் பணிகள் காத்திருக்கின்றன.

பொதுத் தேர்தலுக்குப் பின் மத்தியில் ஒரு வேளை மதவாத சக்திகளோ, மனுநீதி யினை அமலாக்க நினைக்கும் பார்ப்பன மேலாண்மையை வலியுறுத்தி, சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைக்கக்கூடிய பிற்போக்கு சக்திகளோ ஆட்சி அமைக்குமாயின், நமது பணிகள் பெரும் அறைகூவலாக நமக்கும், நாட்டுக்கும், மக்களுக்கும் சோதனைகளாகவும் அமையக் கூடும்.

நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களை தொலைநோக்காளர் (Prophet of the New Age) என்று அய்.நா.வின் துணை அமைப் பான பண்பாட்டைப் பாதுகாக்கும் யுனெஸ்கோ மன்றம் அய்யாவுக்கு வழங்கிய (1970) விருதில் குறிப்பிட்டது மிகவும் பொருத்தமானது.

ஜாதி ஒழிப்பே உயிர் மூச்சு

ஜாதி ஒழிப்பை தமது மூச்சாகக் கொண்டு - பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 1925 இறுதியில் அரசியலிலேயிருந்தே வெளியேறி, அதைத் துறந்து, முழுக்க முழுக்க சமூகப் பணிக்கே - சமூகப் புரட்சிக்கே - மக்களை ஆயத்தப்படுத்தும் மற்ற எவரும் செய்திராத, செய்ய முன் வராத பணிக்கே தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டதோடு, தான் கண்ட திராவிடர் இயக்கமான சுயமரியாதையை, பகுத் தறிவை பரப்புவதையே முக்கிய குறிக்கோளாகக் கொண்ட திராவிடர் கழகத்தை இதற்கே பயன் படுத்தி பெரும் அளவில் வெற்றி பெற்றார்கள்; அவர்தம் ஜாதி ஒழிப்பும், மற்றொரு பிறவி பேதமான பெண்ணடிமை ஒழிப்பும் பெரும் அளவில் அவர் காலத்திலேயே வெற்றி பெற்று வந்தன; என்றாலும் இன்னும் அத்துறையில் நாம் அடைய வேண்டிய இலக்குகள் பல உள்ளன.


தமிழ் ஓவியா said...

அவர்கள் இட்ட பணிகளை, அவர் போட்டுத் தந்த பாதையிலிருந்து சறுக்காமல் செய்ய வேண்டிய தலையாய கடமை நமக்கு - பெரியார் தொண்டர்களுக்கு இருக்கிறது.

இந்தியாவின் முதல் மனித உரிமைப் போராட்டம் வைக்கமே!

எந்த மேடையிலும் ஜாதி ஒழிப்பையே அய்யா அவர்கள் முழங்கினார்; அதற்கே பெரிதும் போராடினார்கள். அதைவிட நம் மக்களின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் வேறு தடையே இல்லை என்று நாள்தோறும் பல்லா யிரக்கணக்கான மக்கள் மத்தியில் முழங் கினார்கள்.

அய்யா அவர்களின் ஜாதி ஒழிப்புப் பணி, அவர்கள் காங்கிரசில் இருந்த போதே சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. அங்கே இருந்து கொண்டே 1924இல் அவர் நடத்தியவை தான் வைக்கம் போராட்டம், சேரன் மாதேவி குருகுலப் போராட்டம் போன்றவை ஆகும். இந்தியாவின் முதல் மனித உரிமைப் போராட் டமான வைக்கம் போராட் டத்தில் ஜாதி தீண்டாமை ஒழிப்பையே மய்யப்படுத்த மற்றொரு மாநிலமான திருவிதாங்கூர் (கேரள மாநிலத்தில்) ராஜ்யத்தில் போராடி, தானும் தன் குடும்பத்தவர்களும் இரு முறை சிறை சென்று, அங்கு கீழ் ஜாதிக்காரர்கள் எனப்பட்டோருக்கு தெருவில் நடக்கும் உரிமையைப் பெற்றுத் தந்தார்கள்!

பார்ப்பன வரலாற்றாசிரியர்கள் அப்புரட்சிக் குத் திட்டமிட்டே போதிய முக்கியத்துவம் தராமல் இருட்டடித்தனர்.

கோயில் கருவறை நுழைவுப் போராட்டம்

ஆனால் அவர்கள் அதுபற்றிக் கவலைப் படாமல் இறுதி மூச்சடங்கும் வரை (1973 டிசம்பர் வரை) இடைவெளியின்றி - ஒவ்வொரு கட்டத் திலும் போராடினார்கள்; அவரது ஜாதி ஒழிப்புப் போராட்டம், நோயின் மூலத்தையே கண்டறிந்து, அதனை ஒழிக்க கடவுள், மதம், சாஸ்திரம், அரசியல் சட்டப் பாதுகாப்பு, பண்டிகைகள், கோயில் கருவறை வரை தொடர்ந்தது.

இப்போது நமது காலத்தில் அதனுடைய இறுதிப்போர், உறுதிப் போராக நடந்து வருகிறது. இதில் சலிப்போ, விரக்தியோ நாம் கொள்ளத் தேவையில்லை. காரணம் ஜாதி நுழைந்து, மக்களின் உள்ளத்தில் ஹிந்து மதமாக, கடவுள் பக்தியாக, சமூகத்திற்குப் பயப்படும் ஜாதிக் கட்டுப்பாடாகி, அரசியல் வாக்கு வங்கிக்கும் இவை ஊன்றுகோலாகப் பயன்படும் அளவுக்கு வந்துவிட்டன; எனவே நம் லட்சிய வெற்றி, ஒரே நூறு ஆண்டில் எளிதில் கிடைத்து விட முடியாது.

தந்தை பெரியார்தம் லட்சியங்களின் வெற்றி உலகளாவிய அறிஞர்களின் கூற்றுக்கள் மூலம் இன்று ஆதாரப்படுத்தப்படுகின்றன.

குன்னர்மிர்டல் கூறியது என்ன?

ஆசியன் டிராமா (Asian Drama) என்ற நூலில் சுவீடன் நாட்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அறிஞர் குன்னர்மிர்டல் அவர்கள் இந்தியாவைப்பற்றி 1972லேயே எழுதும் போது, ஜாதியை ஒழிக்க ஒரு தீவிரமான அறுவை சிகிச்சையை செய்யவேண்டும் என்றார். காந்தியார் ஜாதியைக் காப்பாற்ற முனைந்தவர்; ஜாதியை ஒழித்தால் ஒழிய இந்திய மக்கள் முன்னேற முடியாது; வளர்ச்சிப் பாதையில் உலக நாடுகளோடு போட்டியிட முடியாது என்று எழுதினார் தந்தை பெரியார்.

தமிழ் ஓவியா said...

அண்மையில் நோபல் பரிசாளரான அமர்த்தியாசென் (வாழ்பவர்) என்ற பொருளாதார மேதை இதை வலியுறுத்தி ருஉநசவய ழுடடிசல டிக ஐனேயை என்ற புத்தகத்தில், பெரியார் இயக்கத்தின் பணி - ஜாதி ஒழிப்பு, கல்வி வளர்ச்சி, சமூக நீதிக் காப்பு பற்றி விளக்கி எழுதியுள்ளார்.
இந்தியாவின் ஜாதி பற்றி லீக்வான்யூ

இரண்டு நாள்களுக்குமுன் (எனது மலேசியப் பயணத்தின்போது), சிங்கப்பூர் என்ற சிறிய நாட்டை உலகத்தாரை ஈர்க்கும் வண்ணம் கட்டுப்பாடும், வளர்ச்சியும் முன்னேற்றமும் பெருகிய நவீன சிங்கப்பூராக மாற்றிக் காட்டிய மாபெரும் வாழும் அரசியல் மேதை, ஆட்சித்திறன் கொண்ட அறிஞர் லீக்வான்யூ (Lee Kuvan Yew) ‘One Man’s view of the World’ என்ற தலைப்பில் உலகத்தின் பற்பல நாடுகளின் தற்போதைய வளர்ச்சி - பிரச்சினைகள் - எதிர்காலம் பற்றி தனது கனிந்த அனுபவத்தை அந்தந்த நாட்டைப் பற்றிய கேள்வி - பதில் சுருக்கத்தையும் இணைத்து, சிங்கப்பூர் ஸ்டெயிட் டைம்ஸ் 348 பக்கங்கள் கொண்ட ஓர் ஆங்கில நூலை வெளியிட்டுள்ளது.

அதில் இந்தியா பற்றி 146ஆம் பக்கம் முதல் 157ஆம் பக்கம் வரை - வினா விடை உட்பட எழுதியுள்ளதில்,

இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப் பெரும் முட்டுக்கட்டை ஜாதீய அமைப்பு, போதிய அடிக் கட்டுமான வளர்ச்சி இன்மை, இரண்டும்தான் அந்த நாட்டை வளர விடாமல் தடுக்கின்றன என்பதை அவரது பல அனுபவங்களைக் கூறி தெளிவுபடுத்தி எழுதியுள்ளார்.

அவர் பிரதமராக சிங்கப்பூரில் பதவி வகித்த போது அவரது தனிச் செயலாளர் சங்கரன் என்ற பார்ப்பனர், (அவரது தந்தை சிங்கப்பூரில் குளக்கரைப் பகுதி கோயில் ஒன்றின் அர்ச்சகர்) இந்தியாவுக்குத் தன்னுடன் வந்து - ராஜ்பவனில் தங்கியபோது - அங்கே பணி புரிந்தவர்கள் இவரை பார்ப்பன மேல் ஜாதியாளர் என்பதைப் புரிந்து அவருக்குக் காட்டிய தனி மரியாதையை அக்கறையைக் கண்டு இவர் வியந்திருக்கிறார்!

2) இவர் ஆக்ராவிற்குச் சென்று - தாஜ் மகாலைப் பார்க்க - சென்றபோது வழியில் உடன் வந்த மற்றொரு இந்திய அரசின் பெரிய அதிகாரியை - அவரும் பார்ப்பனர் என்பதைப் புரிந்துகொண்டு ஒரு கேள்வி கேட்டாராம்.

நான் என்னை ஒரு பிராமணன் என்று அழைத்தால் நீங்கள் நம்புவீர்களா? என்பதே அக்கேள்வி.

அதற்கு இந்திய அரசின் அந்த அதிகாரி மற்ற அம்சங்களில் பிராமணனைப்போல உயர் வாக இருந்தால் ஒப்புக் கொள்வேன்; ஆனால் என் மகளை நீங்கள் திருமணம் செய்து கொள்ள முனைந்தால், நான் எளிதில் ஒப்புக் கொள்ள மாட்டேன்; உங்களைப் பற்றிய கடுமையான ஆராய்ச்சி எனக்குத் தேவைப்படும் என்றாராம்.

இதை எழுதி விட்டு இறுதியில், இந்தியா இடையறாத ஜாதியின் பிடியில் சிக்கியுள்ளவரை அது முன்னேற வாய்ப்புகள் குறைவு என்று 2013-இல் எழுதியுள்ளார்.

இதை பல காலம் முன்பே தந்தை பெரியாரும், அவர்தம் இயக்கமும் கூறியுள்ளது என்றாலும் வெளிநாட்டு அரசியல் அறிஞர்களின் - விருப்பு, வெறுப்பற்ற பார்வையில் - இப்பணி எவ்வளவு முக்கியமான, இன்றியமையாத பணி என்பது புரிகிறதல்லவா?

பெரியார் ஒரு தொலைநோக்காளர் என்பது எவ்வளவு பெரிய உண்மை பார்த்தீர்களா?
பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழுகிறதே!

பெரியார் நடத்திய இறுதி மாநாட்டில்..

தந்தை பெரியார் 40 ஆண்டுகளுக்குமுன்பு 1973 டிசம்பர் 8,9 நாள்களில் சென்னையில் நடத்திய தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றிய முக்கிய தீர்மானங் களில் ஒன்று.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது பிரிவில், ((Article 17) தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது; அதனை எந்த வடிவில் கடைப்பிடித் தாலும் சட்டப்படி குற்றம் என்று எழுதப்பட் டுள்ளதை மாற்றி, ஜாதி என்ற சொல்லை தீண்டாமை என்பதற்குப் பதிலாகப் போட்டு அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தொலைநோக்குடன் கூறினார்களே - மனித உரிமை அடிப்படையில் சமத்துவத் தன்மையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை வலியுறுத்திய கலைஞர்அரசால் கடந்த 21.8.2006 அன்று நிறைவேற்றப்பட்டும் அது உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளதே!

2014ஆம் ஆண்டு முழுவதும் நம் பணிகள்!

எனவே மக்களை ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு, பெண்ணுரிமைப் பாதுகாப்பு - மூடநம்பிக்கை ஒழிப்பு, அறிவியல் மனப்பாங்கு வளர்ப்புப் பணிகளுக்கு ஆயத்தப்படுத்தும் பெரும் பணி நமக்கு 2014-ஆம் ஆண்டு முழுவதும், நாம் ஈடுபட வேண்டிய பணியாக உள்ளது!

மண்டல் வெற்றியைப் போல, இதிலும் நாம் வெற்றி பெறுவது உறுதி!

அதற்காக இளைஞர்களை, மகளிரைத் திரட்டும் சிறப்புப் பணிக்கு முன்னுரிமை கொடுத் துத் தொண்டாற்ற பருவம் பாராது உழைக்க முன் வாருங்கள்!

பெரியார் உலகம் அமைக்கும் பணியுடன் பெரியார் பணிகளாம் இந்த லட்சியப் பணிகளும் நம்முன் உள்ள பணிகளே!

வாழ்த்துகள்.

கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்.

முகாம்: சிங்கப்பூர்

01-01-2014

Read more: http://viduthalai.in/e-paper/72918.html#ixzz2p9ek4C32

தமிழ் ஓவியா said...

அண்மையில் நோபல் பரிசாளரான அமர்த்தியாசென் (வாழ்பவர்) என்ற பொருளாதார மேதை இதை வலியுறுத்தி ருஉநசவய ழுடடிசல டிக ஐனேயை என்ற புத்தகத்தில், பெரியார் இயக்கத்தின் பணி - ஜாதி ஒழிப்பு, கல்வி வளர்ச்சி, சமூக நீதிக் காப்பு பற்றி விளக்கி எழுதியுள்ளார்.
இந்தியாவின் ஜாதி பற்றி லீக்வான்யூ

இரண்டு நாள்களுக்குமுன் (எனது மலேசியப் பயணத்தின்போது), சிங்கப்பூர் என்ற சிறிய நாட்டை உலகத்தாரை ஈர்க்கும் வண்ணம் கட்டுப்பாடும், வளர்ச்சியும் முன்னேற்றமும் பெருகிய நவீன சிங்கப்பூராக மாற்றிக் காட்டிய மாபெரும் வாழும் அரசியல் மேதை, ஆட்சித்திறன் கொண்ட அறிஞர் லீக்வான்யூ (Lee Kuvan Yew) ‘One Man’s view of the World’ என்ற தலைப்பில் உலகத்தின் பற்பல நாடுகளின் தற்போதைய வளர்ச்சி - பிரச்சினைகள் - எதிர்காலம் பற்றி தனது கனிந்த அனுபவத்தை அந்தந்த நாட்டைப் பற்றிய கேள்வி - பதில் சுருக்கத்தையும் இணைத்து, சிங்கப்பூர் ஸ்டெயிட் டைம்ஸ் 348 பக்கங்கள் கொண்ட ஓர் ஆங்கில நூலை வெளியிட்டுள்ளது.

அதில் இந்தியா பற்றி 146ஆம் பக்கம் முதல் 157ஆம் பக்கம் வரை - வினா விடை உட்பட எழுதியுள்ளதில்,

இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப் பெரும் முட்டுக்கட்டை ஜாதீய அமைப்பு, போதிய அடிக் கட்டுமான வளர்ச்சி இன்மை, இரண்டும்தான் அந்த நாட்டை வளர விடாமல் தடுக்கின்றன என்பதை அவரது பல அனுபவங்களைக் கூறி தெளிவுபடுத்தி எழுதியுள்ளார்.

அவர் பிரதமராக சிங்கப்பூரில் பதவி வகித்த போது அவரது தனிச் செயலாளர் சங்கரன் என்ற பார்ப்பனர், (அவரது தந்தை சிங்கப்பூரில் குளக்கரைப் பகுதி கோயில் ஒன்றின் அர்ச்சகர்) இந்தியாவுக்குத் தன்னுடன் வந்து - ராஜ்பவனில் தங்கியபோது - அங்கே பணி புரிந்தவர்கள் இவரை பார்ப்பன மேல் ஜாதியாளர் என்பதைப் புரிந்து அவருக்குக் காட்டிய தனி மரியாதையை அக்கறையைக் கண்டு இவர் வியந்திருக்கிறார்!

2) இவர் ஆக்ராவிற்குச் சென்று - தாஜ் மகாலைப் பார்க்க - சென்றபோது வழியில் உடன் வந்த மற்றொரு இந்திய அரசின் பெரிய அதிகாரியை - அவரும் பார்ப்பனர் என்பதைப் புரிந்துகொண்டு ஒரு கேள்வி கேட்டாராம்.

நான் என்னை ஒரு பிராமணன் என்று அழைத்தால் நீங்கள் நம்புவீர்களா? என்பதே அக்கேள்வி.

அதற்கு இந்திய அரசின் அந்த அதிகாரி மற்ற அம்சங்களில் பிராமணனைப்போல உயர் வாக இருந்தால் ஒப்புக் கொள்வேன்; ஆனால் என் மகளை நீங்கள் திருமணம் செய்து கொள்ள முனைந்தால், நான் எளிதில் ஒப்புக் கொள்ள மாட்டேன்; உங்களைப் பற்றிய கடுமையான ஆராய்ச்சி எனக்குத் தேவைப்படும் என்றாராம்.

இதை எழுதி விட்டு இறுதியில், இந்தியா இடையறாத ஜாதியின் பிடியில் சிக்கியுள்ளவரை அது முன்னேற வாய்ப்புகள் குறைவு என்று 2013-இல் எழுதியுள்ளார்.

இதை பல காலம் முன்பே தந்தை பெரியாரும், அவர்தம் இயக்கமும் கூறியுள்ளது என்றாலும் வெளிநாட்டு அரசியல் அறிஞர்களின் - விருப்பு, வெறுப்பற்ற பார்வையில் - இப்பணி எவ்வளவு முக்கியமான, இன்றியமையாத பணி என்பது புரிகிறதல்லவா?

பெரியார் ஒரு தொலைநோக்காளர் என்பது எவ்வளவு பெரிய உண்மை பார்த்தீர்களா?
பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழுகிறதே!

பெரியார் நடத்திய இறுதி மாநாட்டில்..

தந்தை பெரியார் 40 ஆண்டுகளுக்குமுன்பு 1973 டிசம்பர் 8,9 நாள்களில் சென்னையில் நடத்திய தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றிய முக்கிய தீர்மானங் களில் ஒன்று.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது பிரிவில், ((Article 17) தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது; அதனை எந்த வடிவில் கடைப்பிடித் தாலும் சட்டப்படி குற்றம் என்று எழுதப்பட் டுள்ளதை மாற்றி, ஜாதி என்ற சொல்லை தீண்டாமை என்பதற்குப் பதிலாகப் போட்டு அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தொலைநோக்குடன் கூறினார்களே - மனித உரிமை அடிப்படையில் சமத்துவத் தன்மையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை வலியுறுத்திய கலைஞர்அரசால் கடந்த 21.8.2006 அன்று நிறைவேற்றப்பட்டும் அது உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளதே!

2014ஆம் ஆண்டு முழுவதும் நம் பணிகள்!

எனவே மக்களை ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு, பெண்ணுரிமைப் பாதுகாப்பு - மூடநம்பிக்கை ஒழிப்பு, அறிவியல் மனப்பாங்கு வளர்ப்புப் பணிகளுக்கு ஆயத்தப்படுத்தும் பெரும் பணி நமக்கு 2014-ஆம் ஆண்டு முழுவதும், நாம் ஈடுபட வேண்டிய பணியாக உள்ளது!

மண்டல் வெற்றியைப் போல, இதிலும் நாம் வெற்றி பெறுவது உறுதி!

அதற்காக இளைஞர்களை, மகளிரைத் திரட்டும் சிறப்புப் பணிக்கு முன்னுரிமை கொடுத் துத் தொண்டாற்ற பருவம் பாராது உழைக்க முன் வாருங்கள்!

பெரியார் உலகம் அமைக்கும் பணியுடன் பெரியார் பணிகளாம் இந்த லட்சியப் பணிகளும் நம்முன் உள்ள பணிகளே!

வாழ்த்துகள்.

கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்.

முகாம்: சிங்கப்பூர்

01-01-2014

Read more: http://viduthalai.in/e-paper/72918.html#ixzz2p9ek4C32

தமிழ் ஓவியா said...


தமிழக மீனவர்கள் பிரச்சினை: நேரடியாக சந்தித்து முடிவு காண்போம்!


கலைஞரின் வீறுமிக்க அறிக்கை

http://viduthalai.in/images/stories/dailymagazine/2013/dec/26/s29.jpg

சென்னை, ஜன.1- தமிழக மீனவர்கள் பிரச் சினைக்குத் தீர்வு காண்பதில் நேரடியாகச் சந்தித்து முடிவு காண்போம் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக் கையில் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கை வருமாறு:

கடல் ஆதாரத்தை நம்பி வாழும் தமிழக மீனவர்களுக்குச் சோதனைகளுக்கு மேல் சோதனை சிங்கள வெறியர்களாலும், சிங் கள அரசாலும் தொடர்ந்து நடந்து கொண் டிருக்கின்றன. இதற்கோர் முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென்று நாடாளுமன்றக் கழகக் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு அவர் களை பிரதமரைச் சந்தித்து பிரச்சினைகளின் முழு வடிவத்தையும் எடுத்துக் கூறச் செய்தேன். தக்க முடிவெடுக்கப்படும் என்று பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சரும், டி.ஆர்.பாலு அவர்களிடம் உறுதி அளித் திருந்த போதிலும், இந்தப் பிரச்சினையை எடுத்துச் சொல்லும் கட்டத்திலேயே பிரதம ருடைய மற்றும் வெளியுறவுத் துறை அமைச் சருடைய வாக்குறுதிகளுக்கு மாறாக, தமி ழக மீனவர்கள் தாக்கப்படுவதும், அவர்கள் மீது வழக்குகள் தொடர்ந்து இலங்கைச் சிறையிலே அடைக்கப்படுவதும், இலங்கை யிலே உள்ள நீதிமன்றங்களில் அவர்கள் குற்ற வாளிகளாக நிறுத்தப்படுவதும் நின்ற பாடில்லை, தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

காட்டிக்கொள்ளும் மத்திய அரசு

ஒவ்வொரு முறையும் தமிழக மீனவர் களைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காக நமது வேண்டுகோள்களைச் செவிமடுப்பது போல மத்திய அரசு காட்டிக்கொண்டாலுங் கூட, உற்ற பயன் எதுவும் விளையவில்லை. மாறாக இந்தப் பிரச்சினை குறித்து பிரத மரிடத்திலே டி.ஆர். பாலு அவர்கள் முறை யிட்டுக் கொண்டிருக்கும்போதே, மேலும் தமிழக மீனவர்களுடைய படகுகளைக் கவர்ந்து சென்றும், அவர்களுடைய வாழ்வா தாரத்திற்கு உள்ள வழியை அறவே அடைக் கும் விதத்தில் நூற்றுக்கணக்கான மீனவர் களைச் சிறைப்பிடித்து வழக்குகள் தொடர்ந் தும்; அவர்களுடைய விடுதலை என்பது கேள்விக்குறியாக ஆக்கப்படுகிற சூழ்நிலை இலங்கை அரசின் ஆதரவோடு, அங்குள்ள சிங்களக் கடற்படையினரால் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிற கொடு மையை இனியும் தமிழ்நாடு தாங்கிக் கொள்ளத் தயாராக இல்லை. பிரச்சினையின் அவசர, அவசியத்தை மனிதாபிமானக்

கண்கொண்டு பார்க்கத் தவறி பழி வாங்கும் நோக்கத்தோடு இலங்கை அரசின் ஆதரவோடு நடைபெறும் இந்தக் கொடுமையை எவ்வளவு நாளைக்குத்தான் தமிழக மக்கள் தாங்கிக் கொள்ள முடியும்? பிரதமரி டமும், வெளியுறவுத் துறை அமைச் சரிடமும் இந்த உச்சக்கட்டக் கொடு மைகளை நேரடியாக தமிழ்நாட்டு மீனவ மக்களின் பிரதிநிதிகள் டில் லிக்கே சென்று எடுத்துரைத்தும்கூட, எந்தப் பலனும் இல்லை என்ற நிலையில் இதற்கோர் கடுமையான மாற்று என்ன என்பதைத் தெரிந்து, தெளிந்து தமிழக மீனவர்களைத் திட்டமிட்டே கொடுமைப்படுத்தும் சிங்களவர் அட்டூழியத்தை நேரடி யாகச் சந்தித்து முடிவு காண்பதற்குத் தமிழ்நாடு தயாராகி வருகின்றது.

தமிழக மீனவர்களைக் காப்பாற் றும் முயற்சியில் களத்தில் நிற்பதற்கும், அவர்களைக் காப்பாற்ற எத்தகைய இடுக்கண்களை ஏற்பதற்கும் நானும், என் தலைமையிலே உள்ள திராவிட முன்னேற்றக் கழகமும் தயாராக இருப் பதோடு அந்தப் போராட்டத்திற்கான நாளும் விரைவில் குறிக்கப்படும் என் பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் தமது அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/72919.html#ixzz2p9fEVZD8

தமிழ் ஓவியா said...

2013ஆம் ஆண்டில் நடந்த கழக முக்கிய நிகழ்வுகள் வருமாறு:-


ஜனவரி

12.1.13: பெண்கள் வீட்டில் முடங்கிக்கிடக்க வேண்டும் என்று கூறிய ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத்தை கண்டித்து திராவிடர் கழக மகளிர் பாசறை சார்பாக ஆர்ப்பாட்டம்.

19.1.13: கபிஸ்தலத்தில் தமிழ் மக்கள் கலை விழா தந்தை பெரியார் அறிவியல், கலை, பண்பாடு, விளையாட்டு மன்றத் தின் சார்பில் தமிழ் மக்கள் கலை விழா நடைபெற்றது.

25.1.13, 26.1.13, 27.1.13: தேதிகளில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பாக திராவிடர் திருநாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

27.1.13: ஆத்தூரில் (சேலம்) மண்டல மாநாடு

பிப்ரவரி

1.2.13: காந்தியார் நினைவு நாளையொட்டி மதவெறி கண்டன சிறப்புக்கூட்டம்

6.2.13: சென்னைப்பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் வாழ்வியல் சிந்தனைகள் எனும் பொருளில் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரை.

8.2.13: டெசோ சார்பில் ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து கருப்புடை ஆர்ப்பாட்டம்.

9.2.13: துபாயில் நடந்த முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் கலந்து கொண்டு சிறப்புரை
11.2.13: சேலம் இரயில்வே கோட்டம் கேரளாவிற்கு மாற்றும் திட்டத்தை கண்டித்து சேலம் இரயில்வே கோட்டம் முன்பு ஆர்ப்பாட்டம்

தமிழ் ஓவியா said...

15.2.13: பொள்ளாச்சியில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற ஜாதி - தீண்டாமை எதிர்ப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு சிறப்புரை

18.2.13: டெசோ சார்பில் இராமேஸ்வரத்தில் கச்சத்தீவை மீட்க வேண்டி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலை வருடன் தி.மு.க பொருளாளர், தொல்.திருமா, சுப.வீர பாண்டியன் பங்கேற்பு

19.2.13: தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தினர் தொடர்ந்து தாக்கப்படுவதைக் கண்டித்து டெசோ சார்பில் நாகையில் ஆர்ப்பாட்டம்

20.2.13: திராவிடர் வரலாற்று ஆய்வுமய்யத்தின் சார்பில் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற உருமாறும் தமிழ் அடையாளங்கள் எனும் பொருளில் நடந்த சிறப்புக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி பங்கேற்பு

25.2.13: சென்னை பெரியார் திடலில் கொலைகாரன் இராஜபக்சேவுக்கு வரவேற்பு வீரப்பன் தோழர்களுக்கு தூக்கா? எனும் தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி, தொல்.திருமா, சுப.வீரபாண்டியன் பங்கேற்பு

27.2.13: கம்பத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற திராவிடர் கழக மதுரை மண்டல மாநாடு

மார்ச்

5.3.13: டெசோ சார்பில் இலங்கை தூதரகத்தின் முன் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்க தமிழர் தலைவர் கி.வீரமணி 49-ஆவது முறையாக கைது செய்யப் பட்டார்.

7.3.13: டில்லியில் கான்ஸ்டிடியூசன் கிளப்பில் டெசோ சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் நாடாளுமன்ற உறுப் பினர்கள், தமிழ்நாட்டுத் தலைவர்களுடன் பங்கேற்ற தமிழர் தலைவர் கி.வீரமணி பங்கேற்ற உரை நிகழ்வு.

9.3.13, 20.3.13: அன்று மறைந்த உலகத் தமிழர் இளைஞர் பேரவையின் தலைர் டாக்டர் இரா.ஜனார்த்தனன் படத்திறப்பு நிகழ்ச்சி திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது.

10.3.13: அன்னை மணியம்மையாரின் 93-ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்வினையொட்டி திராவிடர் கழகம் நடத்திய பெண்களே பங்கேற்ற கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது.

12.3.13: ஈழத்தமிழர் நல்வாழ்வுக்காக டெசோ சார்பில் தமிழகம், புதுவையில் நடைபெற்ற பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்று சென்னை அண்ணாசாலையில் நடந்த மறியலில் ஈடுபட்டு 50-ஆவது முறையாக தமிழர் தலைவர் கி.வீரமணி கைது செய்யப்பட்டார்.

16.3.13: அன்னை மணியம்மையாரின் 34-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி கழகத்துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையில் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து உறுதிமொழியேற்பு

17.3.13: மன்றல் ஜாதி மறுப்பு இணை தேடல் பெருவிழா சென்னை, திருச்சியை அடுத்து மதுரையில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் பங்கேற்புடன் எழுச்சியுடன் நடைபெற்றது.

18.3.13: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வில் தமிழ் புறக்கணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டு மாவட்டத் தலை நகரங்களில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்
28.3.13: சென்னை பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறையில் திராவிடர் கழகத்தின் சார்பில் நிறுவப்பட்ட தந்தை பெரியார் அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்வில் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு பங்கேற்பு

ஏப்ரல்

1.4.13: ஈழத்தமிழர் பிரச்சினை இன்றைய காலகட்டத்தில் எனும் தலைப்பில் சென்னை பெரியார் திடலில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி, தொல்.திருமாவளவன் பங்கேற்பு

தமிழ் ஓவியா said...

4.4.13: சிறீரங்கம் - திராவிடர் கழக முக்கியப் பொறுப் பாளர்கள் பங்கேற்று சிறப்புடன் நடைபெற்ற திராவிடர் எழுச்சி மாநாடு

5.4.13: டெல்டா பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயப் பெருங்குடி மக்களுக்கு ஆதரவாக தஞ்சையிலும், திருவாரூ ரிலும் திராவிடர் கழகம் சார்பில் எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

13.4.13: கோவையில் திராவிடர் கழக மகளிரணி, திராவிடர் மகளிர் பாசறை சார்பில் நடைபெற்ற புரட்சிப் பெண்கள் மாநாடு தகடூர் தமிழ்ச்செல்வி, கோவை அன்புமதி, பெரியார் செல்வி, இறைவி ஆகியோர் சிறப்பாக உரையாற்றினர்.

18.4.13: சென்னை புத்தகச் சங்கமம் தொடக்க விழா பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனமும் நேசனல் புக் டிரஸ்ட் இந்தியா நிறுவனமும் இணைந்து 19.4.2013 முதல் 27.4.2013 வரை புத்தகக் கண்காட்சியை நடத்தின.

25.4.13: புதுக்கோட்டை விடுதியில் தந்தை பெரியார் சிலை யை தமிழர் தலைவர் கி.வீரமணி திறந்து வைத்தார். திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் பெரியார் கழகக்காப்பணி பயிற்சி 25.4.2013 முதல் 3.5.2013 வரை 9 நாள்கள் நடை பெற்றது.

30.4.13: சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற மருத்துவரணியின் கூட்டத்தில் டாக்டர் மீனாம்பாள் அவர் களைத் தலைவராகவும், டாக்டர் பழ.ஜகன்பாபு, டாக்டர் ஜி.எஸ்.குமார் ஆகியோரை செயலாளர்களாகவும் டாக்டர் சரோஜா பழனியப்பன் அவர்கள் பொருளாளராகவும் கொண்ட பெரியார் மருத்துவரணி உருவாக்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...

மே

2.5.13: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டார திராவிடர் கழக எழுச்சி மாநாடு நடைபெற்றது.

4.5.13: இராஜபாளையத்தில் திராவிட கழக இளைஞரணி மாநாடு நடைபெற்றது. கருத்தரங்கம், பட்டிமன்றம் சிறப்பாக இருந்தது. மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம், மக்கள் வியக்கும் வண்ணம் இருந்தது.

6.5.13: பெரியார் பிஞ்சுகள் பழகு முகாம் 6.5.2013 முதல் 11.5.2013 வரை மணியம்மை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. குழந்தைகள் பழகு முகாமில் கலை, பட்டிமன்றம், சுற்றுலா, விளையாட்டு, அறிவு சார் நிகழ்ச்சிகள் என வளரும் குழந்தைகள் மகிழ்வுடன் கழித்தனர்.

19.5.13: குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை மாவட்ட கழகத்தினரின் முயற்சியால் அகற்றப்பட்டது.

24.5.13: சூதாட்ட கிரிக்கெட் போட்டிகளைத் தடைசெய்யக் கோரி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலை நகரங்களில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் செய்து மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

29.5.13: குற்றாலம் வி.கே.என் மாளிகையில் பெரியாரியல் பயிற்சி முகாம் மே 29, 30, 31 மற்றும் ஜீன் 1 ஆகிய நான்கு நாள்கள் நடைபெற்றது.

ஜூன்

1.6.13: மந்திரமா? தந்திரமா? பயிற்சிப் பட்டறை சென்னை பெரியார் திடலில் இந்தியப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பேரா.நரேந்திரநாயக் பொறுப்பேற்று நடத்தினார். இரண்டாம் நாள் கழகத்தலைவர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
10.6.13: பட்டுக்கோட்டை கழக மாவட்டம் மதுக்கூரில் வட்டார திராவிடர் கழக மாநாடு நடைபெற்றது. மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.

15.6.13: திண்டுக்கல்லில் திராவிடர் கழக பொதுக்குழுக் கூட்டம் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தலைமையில் நடைபெற்றது. பதிமூன்று முக்கிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. பெரியார் வீரவிளையாட்டுப் போட்டி மதுரை மாவட்ட அளவில் அய்யனார் குளத்தில் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

16.6.13: சென்னை, திருச்சி, மதுரையைத் தொடர்ந்து கோவையில் மன்றல் விழா 2013. ஜாதி மறுப்பு இணைதேடல் பெருவிழா கழகப்பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.
19.6.13: தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறையின் இன்ஸ் பெக்டர் ஜெனரல் வழங்கிய தீர்ப்பில் ஜாதி சங்கத்தோடு சேலம் சுயமரியாதை சங்கத்தை இணைத்தது தவறு என்றும் சேலம் சுயமரியாதை சங்கம் தனித்து இயங்கலாம் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டதால் சேலம் சுயமரியாதை சங்கம் சட்டப்படி மீட்கப்பட்டு செயல்படத் தொடங்கியது.

22.6.13: அரக்கோணம், வேலூர், திருவள்ளுர் மாவட்டங் களிலும் காஞ்சி, செய்யாறு செங்கற்பட்டு மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டங்கள் கழகத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையில் நடைபெற்றன. பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், உரத்தநாடு குணசேகரன், திருமகள் இறையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

26.6.13: திருவாரூர் மாவட்டம் மஞ்சக்குடியில் சுயமரியாதை குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் திராவிடர் கழக விவசாய தொழிலாளரணி, மகளிரணித் தோழர்கள் குடும்பத்துடன் பங்கேற்ற நிகழ்ச்சியில் கழகத்தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

27.6.13: அருவிழிமங்கலத்தில் தந்தை பெரியார் சிலையை கழகத் தலைவர் திறந்து வைத்தார். கீழத்தஞ்சை மாவட்ட திராவிடர் விவசாயத் தொழிலாளர் குடும்பங்களின் சங்கமம் சோழங்க நல்லூரில் நடைபெற்றது.

ஜூலை

5.7.13: சென்னை பெரியார் திடலில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான ஆசிரியர் தகுதித் தேர்வு - பணி நியமனம் குறித்த சமூகநீதி பாதுகாப்பு மாநாடு - கருத்தரங்கம் திராவிடர் கழக மாணவரணி சார்பில் நடைபெற்றது.

6.7.13: கும்மிடிப்பூண்டியில் சென்னை மண்டல திராவிடர் கழக மாநாடு நடைபெற்றது.

18.7.13: ஆசிரியர் தகுதித் தேர்வில் சமூகநீதி கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திராவிடர் கழகத்தின் சார்பில் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 25.7.13: சென்னை பெரியார் திடலில், இந்தியாவில் இந்து ராஜ்யத்தை நிறுவுவோம் என மதவாதக்கூட்டம் சூளுரைத்து புறப்பட்டுள்ள வேளையில் முதல் எச்சரிக்கை மணியை கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் இந்துத்துவா நேற்று, இன்று, நாளை என்னும் தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் ஒலித்தார்.

28.7.13: நெல்லையில் ஜாதி மறுப்பு இணை தேடல் மன்றல் நிகழ்ச்சி பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் சார்பில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டோரையும் மன்றல் நிகழ்ச்சி சிறக்க உழைத்தோரையும் பாராட்டி உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...

ஆகஸ்டு

1.8.13: அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை கோரி ஆர்ப்பாட்டங்கள் 9.7.2013 அன்று நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர் மானத்தின் படி தமிழகம், புதுவை மாநிலங்கள் உள்ளிட்ட அனைத்துக் கழக மாவட்டத் தலைநகரங்களிலும் (61 இடங் கள்) நடைபெற்றன. அனைத்து இடங்களிலும் திமுக, விடு தலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்பைச் சேர்ந்தோரும், தமிழினப் பற்றாளர்களும் கழகத்தினரும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

3.8.13: தேனி மாவட்டம் சுருளி அருவி எஸ்.கே.மகாலில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 3, 4.8.2013 ஆகிய இரு நாள்களில் நடைபெற்றது.

17.8.13: திராவிடர் செல்வம் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் 125-ஆம் ஆண்டு பிறந்த நாள் சிலை திறப்பு, திராவிடர் தளபதியும் தந்தை பெரியாரின் அணுக்கத் தோழருமான சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்கள் 125-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, அவரது அய்ம்பொன் சிலை திறப்பு விழா, திருவாரூர் மாவட்டம் வையகளத்தூரில் அய்ம்பெரும் விழாவாக நடைபெற்றது. மைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிலையினைத் திறந்த வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கி விழாப் பேருரை ஆற்றினார். கழகத்தலைவர் கி.வீரமணி விழா மலரினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

25.8.13: திருப்பனந்தாள் வட்டார திராவிடர் கழக மாநாடு, கும்பகோணம் மாவட்டக் கழகம் சார்பில் நடைபெற்றது.

செப்டம்பர்

6.9.13: புனேயில் சுட்டுக் கொல்லப்பட்ட மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி, பகுத்தறிவாளர் டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியினை சென்னை பெரியார் திடலில் பகுத்தறிவாளர் கழகம் நடத்தியது. ப.க. புரவலர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தபோல்கர் படத் தினைத் திறந்து வைத்த நினைவேந்தல் உரையாற்றினார்.

8.9.13: பேராவூரணி - திராவிடர் கழக வட்டார மாநாடு பட்டுக்கோட்டை மாவட்டக் கழகம் சார்பில் நடைபெற்றது.

12.9.13: பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கத்தின் சார்பாக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சிறப்புடன் நடைபெற்ற தந்தை பெரியார் 135-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பங்கேற்பு.

17.9.13: தந்தை பெரியாரின் 135-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் அய்யாவின் நினைவிடத்தில் தமிழர் தலைவர் தலைமையில் மலர் வளையம் வைத்து உறுதிமொழி ஏற்பு. நிகழ்வின் ஒரு பகுதியாக கழகப் புத்தகங்கள் வெளியீடும் நடைபெற்றது.

தமிழ் ஓவியா said...

19.9.13: காவிரியின் குறுக்கே கர்நாடகா புதிய அணைகள் கட்டுவதைத் தடுப்பதற்காகவும், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டிற்கான சட்டத்திருத்தம் உடனே தேவை என்பதை வலியுறுத்தியும் திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமையில் தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கழகத் தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

28.9.13: விருத்தாசலத்தில் திராவிடர் கழக மாணவரணி கடலூர் மண்டல மாநாடு எழுச்சியுடனும், பெருந்திரளாக திரண்ட தொண்டர்களின் பங்கேற்புடன் சிறப்பாக நடை பெற்றது.

அக்டோபர்

4.10.13: தமிழர் தலைவர் மீது காவி வெறிபிடித்த காலிகள் நடத்திய தாக்குதலை கண்டித்து தமிழகமெங்கும் கிளர்ந் தெழுந்த திராவிடர் கழகத்தினரின் கண்டனக் கூட்டங்களில் ஒன்றான சென்னையில் நடைபெற்ற கண்டனப் பொதுக் கூட்டத்தில் தமிழகத் தலைவர்கள் தங்களது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்தனர்.

தமிழ் ஓவியா said...

9.10.13: திராவிடர் கழக வழக்குரைஞரணியின் சார்பாக உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் எனும் தலைப்பில் மதுரையில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழர் தலைவர் தாக்குதல்களுக்கு அஞ்சாத தலைவர் கி.வீரமணி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

12.10.13: பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி சார்பில் நடைபெற்ற பறை இசைப்பயிற்சி பட்டறையை சென் னை பெரியார் திடலில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பங்கேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி 12, 13, 14 ஆகிய நாட்களில் நடைபெற்றது.

15.10.13: ஈழத்தமிழர் உரிமைகள், தமிழக மீனவர்கள் பாதுகாப்பை வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திராவிடர் கழகம் சார்பில் தழிழர் தலைவர் தலைமையில் திராவிடர் கழகத்தினர் கலந்து கொண்ட எழுச்சி மிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

20.10.13: திண்டிவனத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் தந்தை பெரியாருக்கு 95 அடி உயர, வெண்கல பேருருவச் சிலை திருச்சி சிறுகனூரில் அமைக்கப்படும் எனும் சிறப்பு மிக்க தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்கள் கரவொலியுடன் அறிவிக்கப்பட்டது.
22.10.13: இரு பெரும் ஆபத்துகள்! எச்சரிக்கை? எச்சரிக்கை! எனும் தலைப்பில் சிறப்புக் கூட்டம் ஜாதிக் கூட்டணிகளுக்கு எதிராகவும், மதவெறி சக்திகளுக்கு எதிராகவும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழர் தலைவர் சிறப்புரை.

27.10.13: ஒடியா மொழியில் தந்தை பெரியாரின் சிந்தனைகள் புத்தகமாக (பெரியாரங்கா ராச்சனா) ஒடியா தலைநகர் புவனேஸ்வரத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டார்.

தமிழ் ஓவியா said...

நவம்பர்

9.11.13: திராவிடர் கழகப் பொருளாளர்களாகவும் தமிழர் தலைவர் கி.வீரமணியின் உற்ற நண்பராகவும் விளங்கிய கோ.சாமிதுரை அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார்.

9.11.13: திருச்சியில் திராவிடர் எழுச்சி மாநாடு மதவாத - ஜாதிவாத எதிர்ப்பு அடிப்படையில் நடத்தப்பட்டது. இனமானச் சிந்தனை உள்ள தலைவர்களும், பெருமளவில் திராவிடர் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

17.11.13: இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரி நாடாளுமன்றத்தில் தீர்மானம் இயற்ற வேண்டி சென்னையில் தமிழர் தலைவர் கலந்து கொண்ட டெசொ கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.

26.11.13: திராவிடர் கழகத்தின் பொருளாளராக இருந்து மறைந்த கோ.சாமிதுரை அவர்களின் படத்திறப்பு சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. படத்தினை திமுக தலைவர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

26.11.13: தமிழர் தலைவர் கழகத்தலைவர் கி.வீரமணியின் பிறந்த நாளையொட்டி நாடெங்கும் 2000 தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவதென்று தலைமைச் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. புதிய பொருளாளராக டாக்டர் பிறைநுதல் செல்வி தேர்வு செய்யப்பட்டார்.

டிசம்பர்

2.12.13: தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள் சுயமரியாதை நாளாக தஞ்சையில் நாள் முழுவதும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. தந்தை பெரியார் பேருருவச் சிலையமைக்க கழகத் தலைவரிடம் முதல் தவணையாக 1005 சவரன் தங்கத்துக்கான நிதியாக ரூ. 2 கோடியே 51 இலட்சத்து 33 ஆயிரம் திமுக பொருளாளர் ஸ்டாலின் முன்னிலையில் வழங்கினர்.

4.12.13: சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் கையிலா? என்பதை முன்னிறுத்தி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

6.12.13: சென்னை பெரியார் திடலில் மதச்சார்பின்மைக்கு எதிரான அறைகூவல்கள் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர் களும் மணிசங்கர் அய்யர் எம்.பி.யும் கலந்து கொண்டனர்.

10.12.13: நிறவெறி எதிர்ப்புப் போராளி நெல்சன் மண்டேலா நினைவேந்தல் நிகழ்ச்சி திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டது. கழகத்தலைவர் கி.வீரமணி அவர் களுடன் சுப.வீரபாண்டியன் கலந்து கொண்டார்.

14.12.13: தஞ்சை வல்லத்தில் திராவிடர் கழகத்தலைமைச் செயற்குழு நடைபெற்றது. மதக்கலவரத் தடுப்பு சட்டத்தை வரவேற்று தீர்மானம் இயற்றப்பட்டது.

16.12.13: சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் மேலும் பார்ப்பன நீதிபதிகள் நியமனம் செய்யப்படுவதை கண்டித்து கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

21.12.13: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சிறப்பு விருந்தினராய் பங்கேற்ற தேசியப் பேராளர் மாநாடு நடைபெற்றது.

24.12.13: தந்தை பெரியாரின் 40-ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி கழகத்துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் தலைமையில் நடைபெற்றது. கழக முக்கிய பொறுப்பாளர்களும், தோழர்களும் பங்கேற்று உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். மூன்று நாள் பெரியார் பெண்ணியம் பயிற்சி பட்டறை தொடங்கியது.

24.12.13: பாலியல் குற்றவாளி முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திராவிடர் கழக மகளிரணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

31.12.13: கீழத் தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Read more: http://viduthalai.in/page-7/72942.html#ixzz2p9fu19Do

தமிழ் ஓவியா said...


நல்லாட்சியும் - மக்கள் வாக்களிப்பும் கலைஞர் பேட்டி


கேள்வி: நரேந்திர மோடி, நவீன் பட்நாய்க் ஆகியோர் நல்ல நிர்வாகத்தை அளித்து தொடர்ந்து முதல்வர் பதவி யைத் தக்க வைத்து வருகின்ற னர். ஆனால் தமிழகம், உத்தரப் பிரதேசம், கேரளம் போன்ற வற்றில் மாறி மாறித்தானே அரசுகள் அமைந்து வருகின் றன? இதை எப்படிப் பார்க் கிறீர்கள்?

கலைஞர்: நல்ல நிர்வா கத்தை அளித்தால் தொடர்ந்து பதவியைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்பதை என் னால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை. தமிழகம், உத்தரப் பிர தேசம், கேரளம் போன்றவற்றில் மாறி மாறி அரசுகள் அமையக் காரணம் நல்ல நிர்வாகத்தைத் தரத் தவறியதுதான் என்பதை யும் என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது. மக்கள் அவ்வப் போது மாற்றத்தை விரும்புவ தும் ஆட்சி மாற்றத்திற்கு ஒரு காரணம் என்பதை அரசியல் நோக்கர்கள் ஏற்றுக் கொள் வார்கள்.

கேள்வி: டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி திருப்புமுனையை ஏற்படுத்தியுள் ளது. ஆம் ஆத்மி கட்சியின் விஸ் வரூபம் அரசியல் பார்வையா ளர்களை வியக்க வைத்திருக் கிறது. நகர்ப்புற டில்லியில் ஆம் ஆத்மிக்கு அப்படி ஒரு செல் வாக்கு கிடைக்குமா?

கலைஞர்: பொறுத்திருந்து பார்க்கலாம்.

இவ்வாறு திமுக தலைவர் கலைஞர் அவர்கள் பேட்டிய ளித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/72953.html#ixzz2p9gSN2nc

தமிழ் ஓவியா said...


செய்தியும் - சிந்தனையும்மூன்று உக்கள்

இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மூன்று உக்கள் முக்கியம் என்றார் பிரபல இதய மருத்துவ நிபுணர் மருத்துவர் சொக்கலிங்கம்.

உணர்வு, உணவு, உடற்பயிற்சி இவைதான் - அவை!

(இதயத்தின் புறவலிமைக்கு இவை தேவையே - இதயத்திற்குள் நல்லெண்ணங் களும், முற்போக்குச் சிந்தனைகளும் மலருவதற்கு மூன்று அக்கள் தேவை; அறிவு, அன்பு, அரவணைப்பு).

சந்நியாசி

சாமியார் நித்யானந்தாவின் 37ஆம் ஆண்டு பிறந்த நாளில் நித்யானந்தாவிடம் முறைப்படி தீட்சை பெற்று சந்நியாசியானார் நடிகை ரஞ்சிதா.

(பரவாயில்லை, இனி நிரந்தரமாக சாமியாரிடம் தங்கிக் கொள்ளலாம் அல்லவா!)

லட்டான சேதி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டுப் பிரசாதத்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்திலிருந்து நெய் வருவதில் தாமதமாம்!

(இதையெல்லாம்கூட சரி செய்ய முடி யாமலா அங்கு ஒரு குத்துக் கல்லு உட் கார்ந்து கொண்டிருக்கிறது?)

24 மணி

திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க பக் தர்கள் 24 மணி நேரம் காத்திருக்க நேர்ந்ததாம்.
(உலகத்தில் காலத்தைக் கடவுளின் பெயரால் கரியாக்கும் சோம்பேறிகள் இந்தப் புண்ணிய பாரதமின்றி வேறு எங்கேதான் காண முடியும்?)

ஆதிமூலமே!

வனத்துறை நல வாழ்வு முகாமிற்குள் கொம்பன் யானை ஒன்று காட்டுக்குள்ளிருந்து வெளிவந்து முகாம் யானைகளைத் தாக்கியதில் பல யானைகள் படுகாயம் அடைந்தன.

(முதலை ஒன்று யானையின் காலைக் கவ்வியபோது ஆதிமூலமே என்று யானை அலறியபோது, அந்த இடத்திற்குப் பறந்தோடி வந்து சங்கு சக்கரத்தை ஏவி முதலையை சம்ஹாரம் செய்தான் விஷ்ணு என்று கதை எழுதி வைத்துள்ளார்களே - அது போன்று இப்பொழுது அங்கேறாதது ஏனோ? நடந்த தாகக் கூறும் கட்டுக் கதை எல்லாம் இறந்த காலத்தில் தானோ!

சரி அது போகட்டும்; தும்பிக்கை கையன் ஆன விநாயகன்தான் எங்கே போனானாம்?)

இசை மழை

சென்னை மாநகரில் உள்ள சபாக்களில் எல்லாம் இசைக் கச்சேரிகள்.

(ஆனாலும், தப்பித் தவறி தமிழில் பாடுவதை அரிதாகத்தானே கேட்க முடிகிறது; இது தமிழ்நாடாம்!).

Read more: http://viduthalai.in/page1/72742.html#ixzz2pCQFL4gC

தமிழ் ஓவியா said...


விண்வெளித் துறை எட்டாத துறையா?


1975 ஆம் ஆண்டு முதற் கொண்டு இந்திய விண்வெளி ஆய்வு (i s r o) மற்றும் விண்வெளித் துறையும் நாடுமுழுவதிலும் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களை வேலைக்கு எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தது, ஆராய்ச்சி அல்லாத முன்னேற்றப் பணிகளைச் செய்வதற்கான அறிவியல் மற்றும் தொழில் நுட்ப முதல் தர நேரடிப் பணிகளுக்கான இட ஒதுக்கீடு ஆணைகள் பின்பற்றப்படுவதில்லை. 10 ஆண்டு கால நீண்ட போராட்டத்திற்குப் பிறகு டில்லியில் உள்ள தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் விண்வெளித் துறைக்கு ஒரு பரிந்துரையை அனுப்பியது. அதன் அடிப் படையில் 23-06-1975 தேதியிட்ட நிர்வாக சீர்திருத்த துறையின் O.M.No.9.02.1973ESST (SCT) தாழ்த்தப் பட்டோருக்கான இட ஒதுக் கீட்டாணையை நடைமுறைப்படுத்தி அது தொடர்பான அறிக்கையை தேசிய தாழ்த்தப் பட்டோருக்கான ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும், ஆனால் டில்லியில் உள்ள தாழ்த்தப் பட்டவர்களுக்கான தேசிய ஆணையத்திற்கு கீழ்ப்படியாமல் விண்வெளித் துறை புறக் கணிக்கிறது, இந்த அறிக்கை அனுப்பி 60 நாட்கள் கடந்து விட்ட நிலையில், டில்லி தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் ஆணையின் படி விண்வெளித் துறை உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கு மக்கள் எழுச்சியை வெளிப்படுத்த இந்த விவரத்தை அகில இந்திய அளவில் விளம்பரம் கொடுத்து தாழ்த்தப்பட் டோருக்கான இடஒதுக்கீட்டினை அமல் செய்ய ஆவன செய்யவேண்டும் என்ற குரல் எழுந் துள்ளது. திராவிடர் கழகம் தொடர்ந்து விதி விலக்கின்றி அனைத்துத் துறைகளிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது. விதி விலக்கு என்று குறிப்பிட்ட துறைகளை ஒதுக்கி வைத்தால், நாளடைவில் விதி விலக்குப் பட்டியலில் உள்ள துறைகளின் எண்ணிக்கைதான் விரிவடைந்து போகும்.

எந்தத் துறையாக இருந்தாலும் சரி, அதில் குறிப்பிட்ட உயர் ஜாதி வட்டத்தைச் சேர்ந்த வர்கள்தான் இடம் பெற முடியும்என்ற நிலை இருப்பது நியாயமாகாது; தகுதி, திறமை என்ற தந்திர வலையை உருவாக்கி, குறிப்பிட்ட உயர் ஜாதி யினர் மட்டுமே ஏக போகக் குத்தகை தாரர்களாக இருந்து வருவதை இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தான் அனுமதிக்க முடியும்?

மின்னஞ்சலைக் (E-Mail) கண்டுபிடித்த சிவ. அய்யாதுரை என்பவர் திருவில்லிப்புத்தூரை யடுத்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்தான்.

ஆனாலும் இந்தியப் பார்ப்பன ஊடகத்தார் அவரின் அருஞ் சாதனையை மூடி போட்டு மறைத்து விட்டனரே!

மும்பையைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட பார்ப்பன ஆங்கில இதழின் ஆசிரியர் தன்னைப் பற்றி சொன்னதை சென்னை நிகழ்ச்சியில் விஞ்ஞானி சிவா அய்யாதுரை எடுத்துக் கூறிக் குமுறினாரே!

பார்ப்பனர் அல்லாத சிவ அய்யாதுரை எப்படி இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்க முடியும் என்று கூறினாராம். இதுதான் இன்றைக்கும் இருக்கும் பார்ப்பன மனப்பான்மை.
தகுதி திறமை எல்லோருக்கும் பொது என்பதை ஒடுக்கப்பட்ட மக்கள் நிருபித்து வருகிறார்கள். எனவே விண்வெளித்துறை உட்பட அனைத்துத் துறைகளிலும் இடஒதுக் கீடு தேவை - இத்திசையில் திராவிடர் கழகம் தொடர்ந்து போராடும்.

Read more: http://viduthalai.in/page1/72745.html#ixzz2pCQsvU88

தமிழ் ஓவியா said...


பித்தலாட்டம்


மனித சக்திகளுக்கு மேற்பட்ட சக்தி தன்னிடம் இருப்பதாக எவன் கூறினாலும், அவன் எவ்வளவு தான் உயர் நிலையில் இருந்தாலும் சரி - அது பித்தலாட்டம், மோச வார்த்தை என்பதை மனதில் உறுதியாக வைத்துக் கொள்ளுங்கள்.

- (விடுதலை, 20.5.1948)

Read more: http://viduthalai.in/page1/72744.html#ixzz2pCRJ3KqE

தமிழ் ஓவியா said...


கடவுள் சக்தி இவ்வளவுதான்


திருப்பதி சென்று திரும்பிய பக்தர்கள் இருவர் சாவு

சென்னை, டிச.28-திருத்தணி அருகே டேங்கர் லாரி மீது கார் மோதியதில் குழந்தை உள்பட இருவர் இறந்தனர். நால்வர் படுகாய மடைந்தனர்.

சென்னை கீழ்கட்டளை அருள் முருகன் நகர் திருப்பரங்குன்றம் தெருவைச் சேர்ந்தவர் ராமாச்சாரி. இவரது மனைவி மனோரஞ்சிதம். இவர்களது மகன் பாலாஜி (46). இவரது மனைவி நாகமணி (34). இவர்களுக்கு விக்னேஷ் (16), நந்த குமார் (1) என்ற மகன்கள் இருந்தனர்.

கடந்த 25ஆம் தேதி குடும்பத்தினர் அனைவரும் திருப்பதி கோயிலுக்கு சென்றுள்ளனர். அங்கு தரிசனம் முடிந்து, நேற்று முன்தினம் இரவு சென்னை புறப்பட்டனர். காரை, பாலாஜி ஓட்டி வந்தார். திருத்தணி அருகே கார் வந்துகொண்டு இருந் தது. அப்போது ஆந்திராவில் இருந்து புதுச்சேரிக்கு பாமாயில் ஏற்றி சென்ற லாரியின் பின்புறம், கார் மோதியது. காரின் முன்பகுதி நொறுங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே விக் னேஷ், நந்தகுமார் ஆகியோர் பரி தாபமாக உயிரிழந்தனர். மற்றவர்கள் படுகாயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.

தகவலறிந்த திருத்தணி ஆய்வாளர் சிகாமணி, எஸ்அய் அண்ணாதுரை ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந் தனர். உயிருக்கு போராடியவர்களை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப் பினர். அவர்களுக்கு சிகிச்சை அளிக் கப்படுகிறது.

திருத்தணி காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்து, தர்மபுரி மாவட்டம், அரூர், அக்ரஹாரம் தெருவை சேர்ந்த லாரி ஓட்டுநர் குமாரை (36) கைது செய்தனர்.

Read more: http://viduthalai.in/page1/72750.html#ixzz2pCRXfLfh

தமிழ் ஓவியா said...


பகிஷ்காரமும் ஜஸ்டிஸ் கட்சியும்

பகிஷ்காரமும் ஜஸ்டிஸ் கட்சியும்

பகிஷ்காரக் கூட்டத்தில் ஜஸ்டிஸ் கட்சி யாரும் சேர்ந்துகொண்டால் தேவலாம் போல அக்கட்சி பிரமுகர்களுக்குத் தோன்றுவதாய்த் தெரிகின்றது. ஏனெனில் பாமர ஜனங்களிடம் தங்களுக்குச் செல்வாக்கில்லை என்று நினைப்பதுடன் அரசாங்கத் தாரும் தங்களைக் கண்டால் பயப்படுவதில்லை என்றும் நினைப்பதாய்க் காணப்படுகிறது. அவர்கள் அப்படி நினைத்திருப்பது தப்பு என்பது நமது கெட்டியான அபிப்பிராயம், பாமர மக்கள் எப்போதும் பாமர மக்களாகவே இருக்க முடியாது. இப்பொழுது சற்று கண் விழித்துக் கொண்டு வருகின்றார்கள். பாமர மக்களிடம் செல்வாக்குப்பெற்று ஏதாவது நன்மை செய்யவேண்டுமானால் பாமர மக்கள் மகிழும்படியான மாதிரியிலேயே போய்க் கொண்டிருப்பதினால் ஒரு பலனும் ஏற்படாது. அவர்கள் உண்மையை உணர்ந்து நன்மையைக் கடைப்பிடிக்கும்படி செய்யவேண்டும். அதற்காக காத்திருந்தாலும் குற்றமில்லை. இரண்டொரு தடவை தோல்வி ஏற்பட்டாலும் குற்றமில்லை. இல்லாவிட்டால் முக்கியமான சமயத்தில் ஆபத்து வந்துவிடும். பிறகு சுலபமாய் திருத்த முடியாமலும் போய்விடும். ஆதலால் தக்க அஸ்திவாரத்துடனும் நிலை யான கொள்கைகளுடனும் வேலைசெய்ய வேண்டியதுதான் பொறுப்பாகுமே தவிர கூட்டத்தில் கோவிந்தா போடுவது பொறுப்பாகாது என்று நினைக்கிறோம்.

தவிர, சர்க்கார் பயப்படமாட்டார்கள் என்று எண்ணுவது தப்பு என்று நினைக்கின்றோம். சர்க்காரைப் பயப்படுத்துவதாய் நினைப்பதைப் போல முட்டாள் தனமான காரியம் வேறில்லை. வெறும் உத்தியோகம் மாத்திரம் நமது கவலை யானால் சர்க்காரை மிரட்டுவது பயன்படும், அது நமது முக்கிய நோக்கமல்ல. ஒருக்கால் அப்படியே வைத்துக் கொண்டாலும் நாமாக ஒரு காரியம் செய்து அதன் மூலம் சர்க்காரை மிரட்டலாம். அந்த யோக்கியதை வரும் வரை காத்திருக்கலாம். அப்படிக்கில்லாமல் பார்ப்பனர்களோடு சேர்ந்து நாமும் கூப்பாடு போடுவதின் மூலம் சர்க்காரை மிரட்டினால், ஒரு சமயம் சர்க்காரும் பயப்படுவ தனால் அதன் பலன் முன்னின்று சத்தம் போட்ட பார்ப்பனர்களுக்குத்தான் ஏற்படுமே தவிர மற்றவர்களுக்கு ஒன்றும் ஏற்படப்போவதில்லை. பார்ப்பனர்கள் அவ்வளவு பைத்தியக்காரர்களல்ல. மிஞ்சி ஏதாவது கிடைத்தால் அவர்கள் தின்றது போக மீதி எச்சில்தான் கிடைக்கும். ஒரு சமயம் நமக்கு ஏதாவது பெரியபலன் கிடைப்பதாயிருந்தால் அப்போது வேறு வழியை அனுஷ்டிக்க பார்ப்பனர்களுக்குத் தெரியும். தவிரவும் ஒரு பெரிய சமூகத்தின் நிரந்தரமான முன்னேற்றத்திற்கு பாடுபடும் இயக்கம் இம்மாதிரி அடிக்கடி மாறும் கொள்கைகளைப் பார்ப்பன அரசியல்காரருக்கும் வயிற்றுச் சோற்று தேசபக்தர்களுக்கும் பயந்துகொண்டு மாற்றி வந்தார்களா? பார்ப்பனரல்லாதார் என்கின்ற இவ்வளவு பெரிய சமூகத்தின் பேரால் ஏற்பட்ட இயக்கம் தனக்கென ஒரு மனத்துணிவும் நிலையும் இல்லாமல் கூச்சலுக்கும் கும்பலுக்கும் பயந்து கொண்டிருக்கின்றது என்று பிறர்சொல்லும்படி நடந்தார்கள்? சர்க்காரையாவது உதறித்தள்ளிவிட வேண்டும். யோக்கியமான நிலையான கொள்கைகளைக் கட்டிக்கொண்டு சாக வேண்டும்.

அப்பொழுதுதான் நமதுபின் சந்ததிக்காவது பலனுண்டு. இம்மாதிரி மனக்கிலேசங்கள் வரும்போது உண்மைத் தலைவர்களான டாக்டர் நாயர் பெருமானையும் சர்.தியாகராயரையும் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்கள் ஏதாவது அடிக்கடி மாறினார்களா? பாமர மக்களுக்காவது பயந்தார்களா என்பது ஞாபகப்படுத்தும் என்று நினைக்கின்றோம். முடிவாக நாம் சொல்லுவது என்னவென்றால் பார்ப்பனரல்லாத சமூக இயக்கத் தலைவர்கள், தங்களைக் காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்களைப்போல் தாங்கள் தங்கள் பெண்டு பிள்ளை குடும்பங்களுக்கு மாத்திரம் தலைவர்கள் என்று எண்ணாமல், பார்ப்பனர்களாலும் அரசாங்கத்தாராலும் எவ்வளவோ கொடுமைகள் செய்யப்பட்டு வாயில்லாப் பூச்சிகளாய் கிடக்கின்ற பாமர மக்களுக்கும் தொழிலாளிகளுக்கும் தலைவர்கள் பிரதிநிதிகள் என்பதை நினைத்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளுகின்றோம்.

- குடிஅரசு - துணைத் தலையங்கம் - 11.12.1927

Read more: http://viduthalai.in/page1/72762.html#ixzz2pCS5s8YZ

தமிழ் ஓவியா said...

திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதைச் சங்க மகாநாடு

இவ்வாண்டு விழாவுக்கு நான் தலைமை வகிக்க வேண்டுமென்று கட்டளை இட்ட கனவான்கள் எல்லாம் என்னைப்பற்றி அதிகம் கூறினார்கள். அது என்னை மிகுதியும் வெட்கப்படும்படி செய்துவிட்டது. அதனால் நான் என்ன பேசவேண்டு மென்று எண் ணினேனோ, அதை மறக்கச் செய்தது. அவர் களுக்கு என்னிடமும், எனது இயக்கத்திடமும் உள்ள பற்றும், அவர்களின் இயற்கையான பெருந்தன் மையும், அளவுக்கு மீறி என்னைப் புகழச்செய்தது. அப்புகழுரைகளுக்கு நான் சிறிதும் அருகனல்ல, ஆனாலும் (இல்லை இல்லை முழுதும் பொருந்தும் இன்னமும் அதிகமாயும் பொருந்தும் என்கின்ற கூச்சல்) அதற்கு வந்தனம் செலுத்துகின்றேன்.

இயக்கம் ஆரம்பித்த காலத்தில் எதிர்ப்புகள் பலமாய் இருந்தது. இன்னும் யாவரும் ஏகமனதாய் ஆதரிப்பதாகவும் எண்ண இட மில்லை. இன்னும் அதிக எதிர்ப்பு இருக்கிறது. ஆயினும், இத்தகைய மகான்கள் எல்லாம் ஆதரவு அளித்து வருவதைக் கண்டு, மிக தைரியங்கொண்டு, அந்த ஆசையின்மீது அவர்கள் உரையை நான் சகித்துக் கொண்டி ருக்கிறேன். குடிஅரசைப்பற்றி மிக அதிக மாகக் கூறினார்கள். அதில் உள்ள குற்ற மெல்லாம் எனக்குத் தெரியும். அதில் உள்ள மெல்லின, வல்லினம் போன்ற பல இலக் கணப் பிழைகளும் மற்றும் பல பிழைகளும் எனக்குத் தெரியும். இதற்காக நான் இலக் கணம் கற்கப்போவதில்லை. இவ்வாண்டு விழாவுக்கு எனக்குக் கடிதம் அனுப்பா விட் டாலும் எங்கிருந்தாலும் ஓடி வந்துவிடுவேன். இந்த நிலையில் உள்ள என்னையே தலைமை வகிக்க வேண்டுமென்று கூறியது எனது பாக்கியமே யாகும். சிறந்த கல்வியாளர்களும், பெரியார்களும் நிறைந்த இந்த ஜில்லா வாசிகளான நீங்கள் இவ்வியக்கத்துக்கு இவ்வளவு ஆதரவு காட்டி வருவதைக் கண்டு நான் பெருமை அடைவது மட்டுமல்ல, மற்ற ஜில்லாவாசிகளும் உங் களுடன் போட்டியிட்டு தங்கள் சுய மரியாதையை நிலைநிறுத்துவதில் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டு மென்று மீண்டும் அறிவித்துக் கொள்ளு கிறேன்.

தமிழ் ஓவியா said...

சுயமரியாதை

சுயமரியாதை இயக்க மென்றோரியக்கம் தோன்றிய காலத்தில் பலர் பல விதமாகப் பேசியதுண்டு. ஆனால், இப்பொழுதோவெனில், இவ்வியக்கம் பலரால் ஒப்புக் கொள்ளக்கூடிய தாயும், மனிதனுடைய வாழ்விற்கும் உலக முற் போக்குக்கும் இன்றியமையாததென நம்மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள். உணர்ந்தும் வருகிறார்கள். இப்பொழுது எங்கு பார்த்தாலும் சுயமரியாதைப் பேச்சாகத்தானிருக்கிறது. நம் நாடு, வெளிநாடு தேசியவாதிகளும்கூட இச்சுயமரியாதையென்னும் வார்த்தையை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஸ்ரீ காந்தியும் சுயமரியாதை யைப்பற்றி பேசுகிறார். ஒத்துழையாமையே சுயமரியாதைக்காக ஆரம்பித்ததே ஒழிய சுயராஜ்யத்திற்காக அல்ல. இப்பொழுது கொஞ்சகாலமாய் நமது நாட்டில் நடந்துவரும் ராயல் கமிஷன் பகிஷ்காரம் என்கின்ற கூச்சல்கூட சுயமரியாதைக் காகத்தான் என்று சொல்லுகிறார்கள்.

இச்சுயமரியாதைச் சங்கத்தின் கொள் கைகள் என்னவெனிலோ, பிறப்பில் உயர்வு தாழ்வில்லை என்பதும், மேல் கீழ் இல்லை யென்பதும் தானேயல்லாமல் எந்தத் தனி வகுப்பாரையும் இழிவுபடுத்தவில்லை யென் பதையும் உங்களுக்கு நினைப்பூட்டு கின்றேன். ஆனால் நம் நாட்டுப் பார்ப்பனர்கள் தங்களை ஏதோ துவேஷிப்பதாகக் கூறி வருகின்றனர். இது அக்கூட்டத்தாரின் யோசனையின்மை யாலும், பேராசையாலுமே ஏற்படுகிறது. ஆனால் தாழ்த்தப்பட்டவர்களென்று சொல்லிக்கொள்கிறவர்களுக்கும் நமக்கும் சுயமரியாதை தத்துவம் எவ்வளவு பயன்படு கிறதோ அதைவிட அதிகமாக பார்ப்பனர் களுக்கும் பயனுண்டு.

பார்ப்பனரல்லாதாராகிய நாம் எவ்வளவு தூரம் இழிவுபடுத்தி வைக்கப் பட்டிருக்கின் றோமோ, அந்த அளவுக்கு பார்ப்பனர்கள் சுகம் அனுபவித்து வருகிறார்கள். நாம் எவ்வளவுக் கெவ்வளவு கொடுமையுடன் நடத்தப்படு கின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு அவர் களுக்கு நன்மையாகவே இருக்கிறது. இவ்வியக்கத்தின் பயனால் நாம் மாத்திரம் சுகப்படுவதல்லாமல், பார்ப்பனர்களும் இதன் மூலமாய் தங்கள் இழிவைப் போக்கிக் கொள்ளுகிறவர்களாகிறார்கள். உண்மையாக, கடைசியாக இவ்வியக்கத்தால் யாருக்காவது கடுகளவாவது துன்பம் நேரிடுமா என்றால் இல்லவே இல்லை. ஆனால், அரசாங்கத் தாருக்கு மாத்திரம் கொஞ்ச காலத்திற்கு கஷ்டமாகத்தானிருக்கும். ஏனெனில், நாம் எவ்வளவு தூரம் சுயமரியாதையற்றிருக்கின் றோமோ, அவ்வளவு தூரம் நம்மை இழிவுபடுத்தி நம்மிடமிருந்து அவர்கள் கொள்ளையடித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், அவர்களுக்குங் கூட கொஞ்ச நாளைக்குள் புத்தி வந்து விடும். எத்தனை நாளைக்குத்தான் தூங்குகிறவன் தொடையில் கயிறு திரிப்பதென்று சொல்லி விலகி விடுவார்கள். பின்னர் யாரும் சுதந்திரத் துடன் வாழலாம். ஆகையால், வாழ்க்கையின் பரிசுத்தத்திற்கும் சுயமரியாதையே அடிப் படையானது. இதைப்பற்றி எத்தனையோ பெரியார்கள் கூறியிருக்கின்றனர். கவரிமான் ஒரு மயிரிழப்பின் உயிர் வாழாது என்பதுபோல், மனிதனும் மானமிழந்து வாழ விரும்பான். ஆகவே, நம் மானத்தை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், மனிதத் தன்மை யோடிசைந்த வாழ்க்கை நடத்தவேண்டு மென்றால் சுயமரியாதைதான் வேண்டற்பாலது. இப்பொழுது மணி 12 ஆகிவிட்டது. மீண்டும் மாலையில் இம்மகாநாடு கூடவேண்டியிருப்ப தால் இத்துடன் எனது பிரசங்கத்தை முடித்துக் கொள்வதுடன் எனக்கு அன்புடன் இவ்வக் கிராசனப் பதவியை அளித்த அன்பர் களுக்கும் எனது மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்திக் கொள்ளுகிறேன்.
- குடிஅரசு - சொற்பொழிவு - 04.12.1927

Read more: http://viduthalai.in/page1/72762.html#ixzz2pCSFNtjY

தமிழ் ஓவியா said...

இருக்கின்றபல்கலைக்கழகங்களைஊக்கப்படுத்தாமல் புதியபல்கலைக்கழகங்களைதொடங்குவதா?

மத்தியக் கல்வித் துறையில் நடைபெறும் குளறுபடி- குழப்பங்களை நீக்க
பிரதமர் மன்மோகன்சிங், திருமதி. சோனியா காந்தி தலையிடவேண்டும்

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை

இருக்கின்ற பல்கலைக் கழகங்களை ஊக்கப்படுத்தாமல், புதிய பல்கலைக் கழகங்கள் தொடங்குவதற்கான அறிவிப்பா? மத்தியக் கல்வித் துறையில் நடைபெறும் குளறுபடி, குழப்பங்களை நீக்க பிரதமர் மன்மோகன்சிங், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் திருமதி.சோனியா காந்தி ஆகியோர் தலையிட்டு நடவடிக்கை எடுப்பது அவசர - அவசியம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (U.P.A.) ஆட்சியில் மிகவும் குளறுபடிகளுக்கு ஆளான ஒரு துறை இருக்கிறது என்றால் அது, மனித வள மேம்பாட்டுத் துறை என்று அழைக்கப்படும் மத்தியக் கல்வித் துறையாகும். (மாநிலத்தில் அ.தி.மு.க. ஆட்சியின் கல்வித் திட்டங்கள் செயற்பாடுகள் அதற்குச் சற்றும் சளைத்ததல்ல. அது ஒருபுறம் இருக்கட்டும்).

மிகப் பெரிய தவறு

கல்வித்துறையை கபில்சிபல் அவர்களிடம் கொடுத்ததைவிட மிகப் பெரிய தவறு வேறு இல்லை. மக்கள் தொடர்போ, சமூகநீதிக் கொள்கை பற்றிய புரிந்துணர்வோ அறவே இல்லாத மேல்தட்டு வர்க்கத்தவர் அவர்.

அவர் சில கல்வியாளர்கள் என்பவர்களிடம் பல விஷயங்களை விட்டு, அவர்களது விருப்பு வெறுப்புக்கேற்ப தத்தம் இஷ்டத்திற்கு உயர் கல்வித் துறை தொடங்கி, பல வகையிலும் பிரச்சினைகளை உருவாக்கும் நிலவரங்களையும், குழப்பங்களையுமே உருவாக்கி விட்டனர்!

அவருக்கு அடுத்து வந்த திரு. பல்லம்ராஜூ அவர்கள் மேல்தட்டு அறிஞர். அவரது தெலங் கானா பிரிவினை பிரச்சினை காரணமாக அவர் கல்வி அமைச்சராக தொடர்ந்து பணியாற்றி கோப்புகளைப் பார்த்து, அதிகாரிகளிடம் வேலை வாங்குகிறாரா இல்லையா என்பதே நாட்டு மக்களுக்கு புரியாத புதிராக உள்ளது.

மத்தியப் பட்டியலில் ஒன்றான பொதுப் பட்டியல் (Concurrent List) என்பதில் 1976இல் நெருக்கடி காலத்தில் கல்வியை இணைத்ததின் விளைவு, *(மாநிலப் பட்டியலிலிருந்து எடுத்து அதில் இணைப்பு).

குழப்பங்களும், குளறுபடிகளும்!

பல்வேறு குழப்பங்களும், முரண்பாடுகளும், குளறுபடிகளும் மத்திய கல்வித் துறையில் தொடர்ந்து அரங்கேறி தலைவலியை மக்களுக் கும், ஆட்சியாளருக்கும் ஏற்படுத்தவே செய் துள்ளன!

எடுத்துக்காட்டாக, உயர்கல்வி என்பது சீனாவில் 20 விழுக்காடு என்றால், நம் நாட்டில் 6 முதல் 8 விழுக்காடுதான் என்ற பரிதாப நிலை!

ஒருபுறத்தில் பல்கலைக் கழகங்கள் புதிதாக 1500 உருவாக வேண்டும் நம் நாட்டில் என்று அறிவுசார் கமிஷன் (Knowledge Commission)பரிந்துரை,

1500-க்கு மேல் தேவை என்று 11ஆவது அய்ந்தாண்டு திட்டத்தில் மதிப்பீடு - பரிந்துரை,
ஆனால், தேவையற்று வெளிநாட்டில் போணி யாகாத சில பல்கலைக் கழகங்களை இங்கே நுழைப்பது என்ற தன்னிச்சையாக முடிவு செய்து மத்திய மனித வளத்துறை அமைச்சர், வேண்டு மென்றே இங்கே துவக்கப்பட்ட நிகர் நிலைப் பல்கலை கழகங்கள்மீது வீண்பழி தூற்றி, வழக்கு மன்றம் வரை சென்று கடந்த 4 ஆண்டுகளாக அவற்றின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட் டுள்ள வேதனையான நிலையில் இவ்வாண்டு மேலும் 269 புதிய பல்கலைக் கழகங்களைத் தொடங்க அறிவிப்பு!

இதில் உள்ள சுய முரண்பாட்டைக் கவனிக்க வேண்டும்; இருப்பதை - வளருவதை ஊக்கப்படுத் தாமல் மூடி, புதியதைத் துவக்குவார்களாம்! என்னே விசித்திரம்!

கண்டனத்திற்குரியது

இந்த நிலையில் பல்கலைக் கழகங்களோ, கல்லூரிகளோ வெளிநாட்டு, உள்நாட்டுப் பல்கலைக் கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் எது செய்தாலும் மத்திய கல்வித் துறையின் முன் அனுமதி பெற்றாக வேண்டும் என்பதாக 2010 புதிய மசோதாவில் இணைத்து, புதியதாக அறிவிப்புகள் வந்திருப்பது மிகவும் கண்டனத் திற்குரியதாகும்.

பல்கலைக் கழகங்களின் சங்கத் தலைவர் ஏ.ஐ.கூ வேந்தர் திரு. விசுவநாதன் அவர்களும், கல்வி யாளர்களும் இதனைக் கண்டித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்கள். (செய்தி கீழே காண்க)

தான்தோன்றித்தன முடிவை திரும்பப் பெற...

தமிழ் ஓவியா said...

அவர்தம் கருத்து மத்திய கல்வித்துறைக்கு காலத்தால் தரப்பட்ட சரியான அறிவிப்பு ஆகும். கல்வியாளர்கள் எவரையும் கலந்து ஆலோசிக் காமல், தான் தோன்றித்தனமாக எடுத்த முடிவு இது. இது தவறானதாகும். திரும்பப் பெற காரணங்கள் வருமாறு:

1. 2010 விதிகள் பற்றிய வழக்கு நீதிமன்றத் தில் விசாரணையில் உள்ளது.

2. சில பேர் தடையாணையும் வாங்கியுள் ளனர்.

3. பல்கலைக் கழகங்கள் என்றால் அவை தன்னாட்சி (Autonomous) உரிமை படைத் தவை. அதில் தேவையற்ற அரசியல் தலை யீடுகளோ, குறுக்கீடுகளோ இருக்கக் கூடாது.

தவறுகள் நடந்தால் மட்டுமே அரசுகள் குறுக்கிட உரிமையும், அதிகாரமும் உண்டு.

சமூக முன்னேற்றத்திற்கு உதவி

எனவே தேவையில்லாத அடுத்த தேர்தல் இன்னும் சில மாதங்களில் வரவிருக்கும் நிலை யில், இருப்பவைகளை மாற்றி குழப்பங்களை கோலோச்ச செய்யும் முடிவுகளை கைவிட்டு, இயங்கும் பல்கலைக் கழகங்கள் - நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளை வளர்ச்சி யடைய வழி காட்டினால் அது சமூக முன்னேற்றத் திற்கு மத்திய அரசு உதவியதாகும்!

அவசர அவசியம்!

எனவே, மத்திய அரசு, பிரதமர் மன்மோகன் சிங், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் திருமதி. சோனியா காந்தி ஆகியோர் இதில் தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்து, குளறுபடிகளைத் தவிர்ப்பது அவசரம் - அவசியம்.கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

முகாம்: சிங்கப்பூர்

29.12.2013

Read more: http://viduthalai.in/page1/72810.html#ixzz2pCTL8kQX

தமிழ் ஓவியா said...


தமிழ் பிரபாகரனை கைது செய்ததற்கு தமிழர் தலைவர் கண்டனம்ஜூனியர் விகடன் வார ஏட்டின் செய்தியாளர் திரு. தமிழ் பிரபாகரனை இலங்கை அரசு அங்கே அவர் ஏதோ நிழற்படம் எடுத்தார் என்ற சாக்கைக் காட்டி கைது செய்து நடவடிக்கை எடுக்க முனைந்ததை, நாம், வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இதுபற்றி நமது நாடாளுமன்ற உறுப்பினர், வெளியுறவுத் துறை அமைச்சரிடம் பேசி, ஜனநாயக உரிமைப்படி பத்திரிகையாளர் சுதந்திரத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொண்டு அவரை விடுவித்து இருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

ஏற்கெனவே அங்கே பல பத்திரிகையாளர்கள் காணாமற் போனதாக தகவல்கள் உண்டு. அவர்கள் சிங்களவர்கள் ஆன போதிலும்கூட!

பிரபாகரன் என்ற பெயரேகூட அந்த ஆட்சியினருக்கு ஒவ்வாமையைத் தந்திருக்கக் கூடும்!

உடனடியாக இதற்குரியவைகளைச் செய்து அவரைத் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்திருப்பது நமது மத்திய அரசின் முதற் கடமையாகவே கருதுகிறோம்!

பத்திரிகையாளருக்கு, தூதுவரைப் போல சில தனி உரிமைகளும் உண்டு அவர்கள் கடமையாற்றும்போது என்பது விளக்கப்பட வேண்டியதில்லையே!


கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

29.12.2013

Read more: http://viduthalai.in/page1/72811.html#ixzz2pCTtSs6p

தமிழ் ஓவியா said...


எது ஹிந்து மதம்?கேள்வி: ஹிந்து மதத்தின் பலம் என்ன? பலவீனம் என்ன?

பதில்: பெரும் கூட் டத்தைச் சேர்ந்து அதன் மூலம் மதத்தின் பலத்தை வளர்க்க வேண்டும் என்று நினைக்காமல் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னை உயர்த்திக் கொள்ள வழி வகைகளைக் கூற வேண் டும் என்ற நினைப்பில் அமைந்துள்ளது ஹிந்து மதம். ஒவ்வொரு மனித னும் உயர்ந்தால் சமூகம் தானாக உயரும். அது ஹிந்து மதத்தின் வலு. ஆனால் இப்படிச் செய் தால் எந்தவொரு அமைப்போ, எந்தவொரு தலைமையோ இல்லாமல் பல்வேறு உபதேசங்கள் பல்வேறு ஸந்நியாசிகள், பல்வேறு போதகர்கள் எல்லாம் தங்கள் அமைப் புகளை உருவாக்கிக் கொள்ள ஹிந்து மதம் இடம் கொடுக்கிறது. அது அதனுடைய பலவீனம். அதாவது எது பலமோ அது பலவீனமாகவும் திகழ்கிறது. -(துக்ளக் 1.1.2014 பக்கம் 25)

இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார் திருவாளர் சோ ராமசாமி அய்யர்? பலத்தைப் பல வீனமாகவும் பலவீனத் தைப் பலமாகவும் கருது கிறதா ஹிந்துமதம்? அவர் கருத்துப்படியே இதன் மூலம் உணரப் படுவது என்ன?

ஹிந்து மதத்தின் அடிப்படையே தவறானது என்று ஆகி விட்டதா இல்லையா?

தவறு என்று தெரிந்த பிறகும், அதனைத் திருத் துவது தானே? ஏன் அதற்கான முயற்சியில் பார்ப்பனர்கள் - சங்க ராச்சாரியார்கள் ஈடுபட வில்லையாம்? பதில் சொல்லுவாரா திருவாளர் சோ?

அப்படி கை வைத்தால் வைக்கப்பட்ட கை துண் டாகி விடும் என்பதால் தானே?

ஆதி அந்தமில்லா. ஆண்டவன் படைத்த மதமாயிற்றே - அதில் கை வைக்க முடியுமா?

சரி, கடவுளால் கற்பிக் கப்பட்ட வழி என்பதை ஒரு வாதத்துக்காகவே ஒப்புக் கொள்வோம். அப் படி பகவானால் உற்பத்தி செய்யப்பட்ட மதம், பலத் தைப் பலவீனமாகவும், பலவீனத்தைப் பலமாக வும் எப்படி இருக்க முடி யும்? அப்படியானால் ஹிந்து மதத்தைப் படைத்த பக வானையே குறை கூறு கிறாரா திருவாளர் சோ?

உண்மை என்னவென் றால் ஹிந்து மதம் என்ற பெயரில் யார் எதை வேண்டுமானாலும் கூற லாம், உளறலாம். நாத்தி கனும் ஹிந்துவாக இருக் கலாம்; ஆத்திகனும் ஹிந்துவாக இருக்கலாம் என்றால் இதற்குப் பெயர் என்ன? கட்டுக்கோப்பும், கருத்துத் தெளிவும் இல்லாத, தடி எடுத்தவன் எல்லாம் தண்டக்காரன் என்ற புறம்போக்கு மதம் தான் ஹிந்து மதம் என்று விளங்கிடவில்லையா? - மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/72822.html#ixzz2pCVTS6VA

தமிழ் ஓவியா said...


சிந்தித்துப் பார்


நீ கிணற்றுத் தவளையாக இருக்க விரும்புகிறாயா? அல்லது வேடந்தாங்கலில் வந்து இளைப்பாறிப் போகும் வெளிநாட்டுப் பட்சியாக இருக்க விரும்புகிறாயா? மனிதனே சிந்தித்துப் பார். - (விடுதலை, 22.9.1967)

Read more: http://viduthalai.in/page1/72838.html#ixzz2pCW5uqAL

தமிழ் ஓவியா said...

இந்தியச் சமுதாயம் பற்றி ஆப்பிரிக்கப் பாதிரியார்


டெஸ்மாண்ட் டுடு

நோபல் பரிசு பெற்றவரும் தென் ஆப்பிரிக்காவின் நிற வேற்றுமை எதிர்ப்பாளருமான ஆர்ச்பிஷப் டெஸ்மாண்ட் டுடு, தான் அம்பேத்கரைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை என்று இந்து நாளிதழ் நிருபரிடம் கூறியுள்ளார். இந்திய அரசியல் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக அம்பேத்கர் பங்கு பெற்று இருந்தார் என்பதை அறிந்தவுடன் டுடு மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார்.

மகாத்மா காந்திக்குச் செலுத்திய கவனத்தை நிற வேற்றுமைக்கு எதிராகப் போராடும் ஆப்பிரிக்கத் தலைவர்கள், அம்பேத்கர் மீது ஏன் செலுத்தவில்லை என்று டுடு-விடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், நாங்கள் தென் ஆப்பிரிக்காவில் இன அநீதிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும்போது நீங்கள் உங்கள் சக வாழ்வு நிலைமையை மாற்றி அமைப்பதற்கான போராளிகளைத் தேடிக் கொண்டிருந்தீர்கள். ஆகவே, வெளிப்படையாகவே அந்தந்த நாட்டின் செல்வாக்கும் சக்தியும் மிக்கவர்களை நாடிப்போக வேண்டியதாயிற்று என்று கூறினார்.

டுடு, இன வேற்றுமை பாராட்டும் அரசுக்கு எதிராகப் போராடும் ஆப்பிரிக்கர்களுடன் ஜாதி வெறுப்புகளுக்கு எதிராகப் போராடும் தாழ்த்தப்பட்டவர்கள் கூட்டு வைத்துக்கொள்வது இயற்கைதான் என்று குறிப்பிட்டார்.

நாம் எல்லோரும் ஜாதி வேற்றுமையைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். இந்திய சமூகத்தின் மற்றொரு பாதியினருக்கு நாம் ஏன் இந்தக் கொடுமையை அனுமதித்துக் கொண்டிருக்கிறோம் என்று கேள்வி எழுப்பிக்கொண்டு இருக்க வேண்டும், அது எல்லாம் எல்லோருக்கும் என்று எண்ணம் கொண்டு இருந்தால் உங்கள் அரசியல் அமைப்புச் சட்டம் கூறுவதைத்தான் நான் கூறுகிறேன்.

ஆர்ச்பிஷப், தாழ்த்தப்பட்டவர்கள் நிலைமை பற்றி இந்தியச் சமுதாயம் சவாலுக்கு இழுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறார். அதற்குக் காரணம், அது மனிதத் தன்மையைப் பாதிப்பதுதான் என்றும் கூறினார்.

நன்றி: தி இந்து 8.11.13

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


மனைவியை அடித்து, கையை உடைத்த கணவன் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது விசாரணை செய்த நீதிபதி முத்துசாமி அய்யர், மனுதர்மப்படி மனைவியை அடிப்பது குற்றமல்ல என்று தீர்ப்பளித்த வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

எம்மதமும் சம்மதம் இல்லை


நீங்கள் நாத்திகவாதியாக இருப்பதில் மகிழ்ச்சியே... ஆனால் உங்கள் பகுத்தறிவு, மற்ற மதங்களை சாய்ஸில் விட்டுவிட்டு இந்து மதத்தை மட்டும்தான் கேள்வி கேட்குமா?- புகழேந்தி, கள்ளக்குறிச்சி

என்னைப் போன்ற உண்மையான பகுத்தறி வாளனுக்கு எம்மதமும் சம்மதம் இல்லை!

அமாவாசை மூலம் தமிழக அரசியல்வாதிகளுக்கு குறுக்குவழியில் முன்னேறும் உத்தியைக் கற்றுக் கொடுத்தீர்கள். ஆனால், நீங்கள் ஏன் அரசியலில் இறங்கவில்லை? - பாஸ்கரன், திருப்பூர்

எனக்குனு ஒரு சமூகப் பார்வை இருக்கு. இப்ப குறிப்பிட்ட கட்சியில் சேர்ந்துட்டா, அந்தக் கட்சித் தலைமை என்ன சொல்லுதோ, அதுக்கு நான் கட்டுப்படணும். உதாரணத்துக்கு ஓட்டுக் கேட்கப் போகும்போது, பெண்கள் ஆரத்தி எடுத்துப் பொட்டு வைக்க வந்தால், இதெல்லாம் வேண்டாம், நம்பிக்கை இல்லைனு நான் சொல்லமுடியுமா? உங்க கொள்கையை எல்லாம் உங்களோடவே வெச்சுக்குங்க சார்னு கட்சி சொல்லாதா? இது எல்லாத்தையும்விட, நான் சுகவாசி. சினிமா நடிப்புக்காக மட்டும்தான் கஷ்டப்பட்டு இருப்பேன். மற்றபடி தேர்தல் பிரச்சாரத்துக்காக அலையிற மனோபாவம் எனக்கு இல்லை. என் கேரக்டரை நல்லா புரிஞ்சிக் கிட்டதாலதான் நான் அரசியலுக்கு வரலை!

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரித்த உங்களுக்கு, இப்போது இந்திப் படங்களில் நடிக்கும்போது மனநிலை எப்படி இருக்கும்? - சங்கர் குமார், நாசரேத்

நண்பா சங்கர்... அப்போது இருந்து இப்போது வரை, இந்தியை யாரும் எதிர்க்கலை; இந்தித் திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். நான் தமிழன். எனக்குத் தமிழ் தெரியும். கணிப்பொறி, செல்போன்னு நவீன சாதனங்களை இயக்க நான் ஆங்கிலம் கத்துக்குவேன். ஆனா, ஆர்வத்தின் பேரில் நான் கத்துக்க வேண்டிய மூணாவது மொழி எது?னு நான்தான் தீர்மானிக்கணும். ஒருவேளை நான் கேரளாவில் வாழ்க்கையை நடத்த வேண்டி இருந்தா, மலையாளம் கத்துக்குவேன். ஹைதராபாத்ல செட்டில் ஆக வேண்டியிருந்தா தெலுங்கு கத்துக்குவேன். ஆனா, காலம் முழுக்க தமிழ்நாட்ல வாழப் போறவனுக்கு எதுக்கு இந்தி? அதனால் சங்கர், திணிப்புதான் தப்பு; மொழி தப்பு கிடையாது. இந்தப் புரிதல் இருந்ததால்தான், இந்திப் படத்தில் நடிக்கும்போது எனக்கு எந்த மனவருத்தமோ, கூச்சமோ இல்லை!

நன்றி: ஆனந்த விகடன், 18.12.2013

தமிழ் ஓவியா said...

கருத்து


அண்மைக் காலங்களில் கற்பழிப்புக் குற்றவாளிகளுக்கு சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட தண்டனை வழங்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது. கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிகள் ஏற்கெனவே சிறையில் இருந்த காலங்களையே தண்டனையாகக் கருதி அவர்களை விடுவிக்கும் வழக்கம் உயர் நீதிமன்றம் மற்றும் கீழ் நீதிமன்றங்களில் உள்ளது. ஆனால், அவ்வாறு குறைந்த தண்டனை வழங்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் கிடையாது.- பி. சதாசிவம், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிதிருநங்கைகளை, பெற்ற பெற்றோரே மதிக்காத சூழல் இருப்பதால் சமுதாயத்திலும் அவர்களை யாரும் மதிப்பதில்லை. காவல்துறையில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் குடும்பப் பொறுப்பு இருக்கிறது. எங்களுக்குக் குடும்பம் என்ற ஒன்று இல்லை. எனவே, 24 மணி நேரமும் எங்களால் சேவையாற்ற முடியும்.

- அனுசியா சிறீ, திருநங்கை

மருத்துவப் பராமரிப்புக்காக சீன அரசு செலவிடுவதில் நான்கில் ஒரு பங்கையே இந்திய அரசு செலவிடுகிறது. நமது மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜிடிபி) 1.2% நாம் செலவிடுகிறோம். சீன அரசோ கிட்டத்தட்ட 3% செலவிடுகிறது. எனவே, தனியார் துறை சிறப்பாகச் செயல்படும் என்பதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை.

அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியாது என்றே நாம் நம்புகிறோம்; எல்லாவற்றையும் தனியாரிடம் கொடுக்கிறோம்; கூடுதல் பணத்தையும் அவர்களுக்குக் கொடுத்துவிட்டு நம்மாலேயே விடுவிக்க முடியாத கண்ணி ஒன்றை நாமே வைத்துவிட்டு அதில் நாமே அகப்பட்டுக் கொள்கிறோம்.

- அமர்த்தியா சென், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர்

தமிழ் ஓவியா said...

காலத்தை வீணடிக்கும் இந்து மதம்


நல்ல செயல் செய்யக் கூடாத நாட்கள்....

இராகுகாலம் 1 மாதத்திற்கு 1.30 X 30=45
ஒரு ஆண்டிற்கு 540 மணி

எமகண்டம் 1 மாதத்திற்கு 1.30x30=45
ஒரு ஆண்டிற்கு 540 மணி

அஷ்டமி (மாதத்திற்கு 2 நாள்)
ஒரு ஆண்டிற்கு 48x12=576 மணி

நவமி (மாதத்திற்கு 2 நாள்)
ஒரு ஆண்டிற்கு 48x12=576 மணி

மரணயோகம் 1 மாதத்திற்கு 1.30x30=45
ஒரு ஆண்டிற்கு 540 மணி

கரிநாள் (மாதத்தில் 3 நாட்கள்)
ஒரு ஆண்டிற்கு 864 மணி

பிரதமை (பாட்டிமை மாதம் 2 நாட்கள்)
ஒரு ஆண்டிற்கு 48x12=576 மணி

சூரிய கிரகணம் ஒரு ஆண்டிற்கு
ஒரு நாள் 24 மணி

சந்திரகிரகணம் ஒரு ஆண்டிற்கு
ஒரு நாள் 24 மணி

மதம் சார்ந்த பண்டிகை ஆண்டிற்கு
33 நாட்கள் ஒரு ஆண்டிற்கு 33x24=792 மணி

ஆக, மொத்தம் 5052 மணி
(5052/24 மணி = 210 நாட்கள்)

ஆக ஆண்டிற்கு 365 நாட்களில் 210 நாட்கள் வீண்.

இந்து மத நம்பிக்கை என்ற பேரால் விலை மதிக்கமுடியாத நம் நேரம் வீணடிக்கப்படுகிறது. நம் மூளையில் இடப்பட்ட இந்த விலங்கை உடை. சாதனை படை. காலம் பொன் போன்றது,

-கடமை கண் போன்றது.

வேர்ல்டு தமிழ் எம்பசி,
வழி: கோபால் கிருஷ்ணன்

தமிழ் ஓவியா said...

சட்டம் கடமையைச் செய்யட்டும்


உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து, சில காலம் முன்பு ஓய்வு பெற்ற _- மேற்கு வங்கத்தைச் சார்ந்த ஜஸ்டிஸ் ஏ.கே.கங்குலி அவர்கள்பற்றி, பயிற்சி பெண் வழக்குரைஞர் கொடுத்த பாலியல் புகார்பற்றி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் மூவர் (ஒருவர் பெண் நீதிபதி உட்பட) விசாரணை நடத்தி தலைமை நீதிபதியிடம் தங்களது விசாரணை அறிக்கையைத் தந்தனர்.இவர்மீது சொல்லப்பட்ட புகார்களுக்கு முகாந்திரம் உள்ளது என்பதை விசாரணை செய்த மூன்று நீதிபதிகளின் அறிக்கை தெளி வாக்கி விட்டது.

இதனை ஒளிவு மறைவின்றி உண்மைகளை விசாரித்து தக்க தண்டனையை குற்றம் புரிந்தவருக்கு வழங்கி நீதியை நிலைநாட்ட வேண்டியது _- நாட்டின் நிர்வாகத் துறையின் தலையாய கடமையாகும்.

டில்லியில் பாலியல் நீதிக்காக பல நாள் நிர்வாகமே நிலை குலையும் அளவுக்கு மக்கள் திரண்டு கிளர்ச்சிகள் நடந்தன.

வளர் இளம் பிராய வாலிபர்களுக்குக் கூட _ துள்ளித் திரியும் பொறுப்பற்ற வயது என்றால்கூட -_ சட்டம் அவர்களை மன்னிக்கத் தயாராக இல்லை.

குற்றங்கள் நாட்டில் நடைபெறாது தடுக்க வேண்டிய பெருங் கடமை நீதித் துறைக்கே உண்டு; மக்களின் கடைசி நம்பிக்கையே இன்றைய நிலையில் நீதித்துறைதான்!

நீதியரசர்கள், ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்து நீதி வழங்கினால்தான் நாட்டில் பொது ஒழுக்கமும், ஒழுங்கும் காப்பாற்றப்பட முடியும்.

இந்த கங்குலி விவகாரத்தில் இதுவரை மறைத்து வைக்கப்பட்ட பல செய்திகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளன. பல தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியைத் தருவதாக உள்ளன.

தனது பேத்தி வயதுள்ள _- பயிற்சி வழக்குரைஞரை தன்னுடைய அறையில் தங்கும்படி நீதிபதி கங்குலி வற்புறுத்தினார். உரையாடும்போது இரட்டை அர்த்தமுள்ள பேச்சாகவே அவரது பேச்சிருந்தது; தன்னுடன் மது அருந்தவும் அப்பெண்ணை வற்புறுத்தினார் என்றெல்லாம் தொலைக்காட்சி ஊடகங்களில் செய்தி வருவதைக் கேட்கும்போது, வெட்கமும் வேதனையும் படமெடுத்து ஆடுகின்றன!

இந்த ஏ.கே. கங்குலி இப்போது மேற்கு வங்க மாநில மனித உரிமை ஆணையத் தலைவராகவும் உள்ளார். அவரை உடனே பதவி நீக்கம் செய்து, அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் வற்புறுத்தி வருகிறார்.

16.12.2013 அன்று வந்துள்ள பல செய்திகளைக் கண்டு மத்திய சட்ட அமைச்சர் கபில்சிபல் அவர்கள், அவர்மீது உடனே நடவடிக்கையை எடுக்க உச்ச நீதிமன்றம் ஏற்பாடு செய்ய வேண்டுமென்று பேட்டி கொடுத்துள்ளார்!

மகளிர் அமைப்புகள் பலவும் கிளர்ச்சிகளுக்கு முன்னோட்டமாகக் குரல் கொடுக்கத் துவங்கி விட்டன! ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் அவர்மீது பாயாமல் அவர் ராஜநடை போட்டு, நான் பதவி விலக மாட்டேன் என்று பிடிவாதமாகக் கூறுகிறார்!

நீதி பரிபாலனத்தில், நீதியை வழங்கினால் மட்டும் போதாது; நீதி வழங்கப்பட்டுள்ளது என்று மற்றவர்களுக்குத் தெரியும் வகையில் அமைய வேண்டும் என்று கூறுவது உண்டு; (Not only Justice done; it is also important Justice appears to be done) இப்பிரச்சினை மேலும் நாடு தழுவிய கிளர்ச்சியாக, பெருந்தீயாக ஆகுமுன்பே நீதிபதி கங்குலி மீது கிரிமினல் நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பால் இருக்க வேண்டும். அவர் நிரபராதி என்று காட்டி நிரூபித்துப் பிறகு வெளியே வரட்டும். அடிக்கடி நீதிபதிகள் தங்கள் தீர்ப்புரைகளில் எழுதுவார்களே சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்று.

வெறும் சந்தேகத்திற்கே அவ்வளவு முக்கியத்துவம் அச்சொற்றொடரில் இருக்கையில், அதிர்ச்சியூட்டக் கூடிய தகவல்கள் மூன்று நீதிபதிகளின் விசாரணை மூலமே வெளியாகியுள்ள நிலையில், மவுனமாக நீதித்துறையும் உள்துறையும் இருக்கலாமா?

அரசு இடத்தை ஆக்கிரமித்ததாகக் குற்றம் சுமத்தி உச்ச நீதிமன்ற நீதிபதியாக வந்திருக்க வேண்டிய ஒரு தாழ்த்தப்பட்ட (கிறித்துவ) நீதிபதியை அவருடைய தீர்ப்புகள் பலவும் மிகவும் சிறந்தவை என்ற நிலை இருந்தாலும், கட்டுப்பாடான பிரச்சாரத்தின் மூலமே அவரை விரட்டினரே!

இங்கே என்ன அளவுகோல்? இந்தக் குற்றம் புரிந்ததாக குற்றச் செயல்கள் பற்றி பிரஸ்தாபிக்கப்படும் நபர் உயர் ஜாதி என்பதால் அவருக்கு இப்படி ஒரு மென்மையான அணுகுமுறையா?

நாட்டில் மனுதர்ம ஆட்சியா பச்சையாக நடைபெறுகிறது என்று மக்கள் கேட்க மாட்டார்களா?

எனவே நீதியின் மாண்பைக் காப்பாற்ற உடனடியாக சட்ட நடவடிக்கைகளைத் தொடர வேண்டும்; அவரிடமிருந்து பதவி பறிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்மீது நடவடிக்கை சார்பின்றி நடைபெற வாய்ப்பு ஏற்படும்.

உடனே செய்ய வேண்டும்; இதை வற்புறுத்தி திராவிடர் கழக மகளிரணியினர் சென்னையில் தந்தை பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 காலை 11 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை தலைமைச் செயற்குழு உறுப்பினர் மானமிகு க. பார்வதி அவர்களின் தலைமையில் நடத்தியுள்ளனர்.

ஆங்காங்கே தொடர் பிரச்சாரம் நடைபெறும்.

- கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

தமிழ்ப் பல்கலையில் ஜோதிடக் கல்வியா?


தி இந்து தமிழ் நாளிதழில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் விளம்பரம் ஒன்று பார்த்தேன்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் திரு. திருமலை அவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்றாலும் .தந்தை பெரியார் பற்றாளர். அவரிடம் அன்பான வேண்டுகோள்: தயவுசெய்து ஜோதிட பட்டயப் படிப்பை நீக்கி சமுதாயம் சிறக்க உதவுங்கள்.

ஜோதிடவியல் ஓராண்டு பட்டயப் படிப்பு அறிவிப்பு வந்துள்ளது. ஜோதிடவியல் படிப்பை ரத்து செய்ய வேண்டும். ஜோதிடம் என்பது அறிவியல் அன்று, மூடநம்பிக்கை. .அரசு, அறிவியல்பூர்வமான கருத்துகளை மட்டுமே மக்களிடம் கற்பிக்க வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டம் சொல்கின்றது. ஜோதிடம் மதம் சார்ந்தது; மதச் சார்பற்ற அரசு பல்கலைக்கழகம் ஜோதிடத்தைப் பாடமாக _ பட்டயப் படிப்பாக கற்பிப்பது சட்டத்திற்கு முரணானது .

எனவே, அனைத்துப் பல்கலைக்கழகங்களும் ஜோதிடக் கல்வியை ரத்து செய்ய வேண்டும். பித்தலாட்ட ஜோதிடம், கல்வி அன்று. ஜோதிடம் அறிவியல் அன்று.

ஒரு மனிதனின் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதுகின்றனர். பிறந்த நேரமே யாருக்கும் சரியாகத் தெரியாதபோது, ஜோதிடம் எப்படி உண்மையாகும்? பிறந்த சில நிமிடங்கள் கழித்து வந்து செவிலியர் சொல்லும் நேரத்தை பிறந்த நேரம் என்று குறிக்கின்றனர்; பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதுகின்றனர்.

ஜாதகத்தை வைத்து திருமணப் பொருத்தம் பார்க்கின்றனர். எல்லாப் பொருத்தங்களும் உள்ளது என்று சொல்லித் திருமணம் செய்கின்றனர். சில நாட்களில் சண்டை வந்து மணவிலக்குக் கேட்கின்றனர். சிலர் எந்தப் பொருத்தமும், ஜோதிடமும் பார்க்காமல் திருமணம் செய்கின்றனர். பல்லாண்டுகள் சண்டை இன்றி ஒற்றுமையாக வாழ்கின்றனர்.

ஒருவரின் ஜாதகத்தை மூன்று ஜோதிடர்களிடம் கொடுத்து ஜாதக பலன்களைத் தனித்தனியாக எழுதச் சொல்லிப் பாருங்கள். மூன்றும் ஒரே மாதிரி இருக்கவே இருக்காது. மூன்றும் மூன்று மாதிரியாகவே இருக்கும்.

நாளிதழ்களில் வரும் ராசி பலனைப் படித்துப் பாருங்கள். ஒரே ராசிக்கு ஒரே மாதிரிதானே வர வேண்டும் ஒவ்வொரு நாளிதழிலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஜோதிடம் அறிவியல் என்றால் இப்படி வேறுபாடு ஒரே ராசிக்கு ஒரே நாளில் வருமா ? சிந்திக்க வேண்டாமா?

சுனாமி வரும் என்று எந்த ஜோதிடரும் சொல்லவில்லை. சொல்லி இருந்தால் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாமே! ஜோதிடர்களுக்குத் தெரிந்தால்தானே சொல்வார்கள்.

கண்ணன் என்ற ஜோதிடர் 5 கொலைகள் செய்து இப்போது சிறை சென்றுள்ளார். அவர் ஜாதகத்தை அவர் கணித்து இருக்கலாமே. இப்படித்தான் பல சாமியார்கள் ஜோதிடம் சொல்லி பித்தலாட்டம் செய்து வருகின்றனர். ஜோதிடர்கள் தொல்லை சாமியார்கள் தொல்லை தினசரி செய்தியாக வருகின்றது.

ஜோதிட பட்டயப் படிப்பு வேறு படித்துவிட்டால் நாட்டில் பித்தலாட்ட ஜோதிடர்கள் பெருகி விடுவார்கள். நாட்டில் தொல்லை இன்னும் அதிகமாகி விடும் பணத்தாசை காரணமாக.

பல்கலைக்கழகத்தினர் பித்தலாட்ட ஜோதிடத்தைப் பாடமாக கற்பிக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்.

தந்தை பெரியார் சொன்னது போல எதையும் ஏன்? எதற்கு? எப்படி? எதனால் என்று கேட்டுப் பாருங்கள்.

மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சொன்னது:

எனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் ஆயிரம் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள கிரகங்கள் மனித வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் என்பதில் எனக்குத் துளியும் நம்பிக்கை இல்லை.

- இரா.இரவி, மதுரை

தமிழ் ஓவியா said...

மருத்துவ அறிவியலின் வெற்றி துடிக்கிறது.... உலகின் முதல் செயற்கை இதயம்

பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் 75 வயது முதியவருக்கு உலகின் முதல் செயற்கை இதய மாற்று அறுவைச் சிகிச்சையினைச் செய்து பாரிசில் உள்ள ஜார்ஜஸ் போம்பிடௌ மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கார்மட் என்னும் உயிரி மருந்தியல் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்தச் செயற்கை இதயம் டென்மார்க்கைச் சேர்ந்த அய்ரோப்பிய ஏரோநாட்டிக் டிபன்ஸ் அன்ட் ஸ்பேஸ் (EADS) நிறுவனத்தால் மேம்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. லித்தியம் _அயன் பேட்டரியால் இயங்கக்கூடிய செயற்கை இதயத்தின் பேட்டரியினை உடலின் வெளிப்பகுதியில் அணிந்து கொள்ள வேண்டும்.

உயிரிப் பொருள்களுடன் மாட்டின் திசுக்களைச் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளதால் உடல் ஏற்றுக் கொள்ளாமலிருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது. பிளாஸ்டிக் போன்ற செயற்கை இழைகள் பயன்படுத்தப்படாமல் மாட்டின் திசுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் ரத்தம் உறைந்து கட்டியாவதையும் தடுக்கும் சிறப்பம்சத்துடன்கூடிய செயற்கை இதயம் 5 ஆண்டுகள் இயங்கும் செயல்திறன் கொண்டது.

ஆரோக்கியமான மனிதனின் இதயத்தின் எடை (250 கிராம் முதல் 300 கிராம்)யுடன் ஒப்பிடும்போது செயற்கை இதயம் மூன்று மடங்கு அதிகமாகும் (ஒரு கிலோவுக்குக் கொஞ்சம் குறைவு). இதற்கு முன்பு உருவாக்கப்பட்ட செயற்கை இதயங்கள் தற்காலிகப் பயன்பாட்டுக்கு மட்டுமே ஏற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


செய்தியும், சிந்தனையும்!


கோபம் வராதது - ஏன்?

செய்தி: மக்களவைத் தேர்தலில் பிஜேபியோடு மதிமுக நிபந்தனையில்லாக் கூட்டணி - ஈழத் தமிழர்களைக் கொன்ற ராஜபக்சேவுக்கு துணை போன காங்கிரசைத் தோற்கடிக்க வேண்டும். - வைகோ, ம.தி.மு.க. பொதுச் செயலாளர்

சிந்தனை: ஈழத் தமிழர்களைக் கொன்ற ராஜபக்சே மீது ஏற்படும் நியாயமான கோபம், சிறுபான்மை மக்களை பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்த நரேந்திர மோடியின் மீதும் ஏற்படாதது - ஏன்? தம்பிகளே பார்த்து ஓட்டுங்கப்பா!

Read more: http://viduthalai.in/e-paper/72989.html#ixzz2pFU029I8

தமிழ் ஓவியா said...


பெருமைமந்திரிப் பதவி பெரிதல்ல; பணக்காரனாக இருப்பதும் பெரிதல்ல; மனிதனாக வாழ்வதுதான் பெருமை. இழிவற்றவனாக வாழ்வதுதான் பெருமை.
(விடுதலை, 10.10.1973)

Read more: http://viduthalai.in/page-2/72990.html#ixzz2pFUrnz5O

தமிழ் ஓவியா said...

காப்பி அடிக்கப்பட்ட கடவுள் சாபிதா

கிரேக்க ரோம கடவுள்களிட மிருந்து இந்துக் கடவுள்கள் காப்பி அடிக்கப்பட்ட பட்டியல் பாரீர்:

சிவன், இந்திரன் - ஜுபிடர்

பிர்மா - சாட்டர்னஸ்

யமன் - மைனாஸ்

வருணன் - நெப்ட்யூன்

சூரியன் - சோல்

சந்திரன் - லூனஸ்

வாயு - ஈயோவஸ்

விசுவகர்மா - காஸ்டர் போல் வாக்ஸ்

கணேசன் - ஜுனஸ்

விரஜாநதி - ஸ்டிக்ஸ்நதி

குபேரன் - ப்ளூட்டர்ஸ்

கிருஷ்ணன் - அப்பிலோ

நாரதன் - மெர்குரியன்

ராமன் - பச்சுஸ்

கந்தன் - மார்ஸ்

துர்க்கை - ஜுனோ

ரம்பை - வீனஸ்

உஷா - அரேமரா

ஸாகா - வெஸ்டா

பிரிருவி - சைபெல்வி

ஸ்ரீ - சிரஸ்

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/73044-2014-01-03-10-50-35.html#ixzz2pKmsxQf0

தமிழ் ஓவியா said...


நட்சத்திரம் இரவில் தோன்றுவது ஏன்?


சந்திர, சூரிய நட்சத்திரங்களைப் பற்றி உலகம் தழுவிய மூடக்கதைகள் கொடிக்கட்டிப் பறக்கின்றன. நட்சத் திரங்கள் பற்றிக் கூறும் ஒரு ஆசிய மதக் கதை ஒரு ஹாஸ்யமானது.

சூரியனும் சந்திரனும் பெண்களே. நாம் இப்பொழுது காணும் நட்சத் திரங்கள் எல்லாம் சந்திரனின் குழந்தைகள். சூரியனுக்கும் ஒரு காலத்தில் ஏராளமான குழந்தைகள் இருந்தன. சூரியன், சந்திரன் அவற்றின் குழந்தைகள் முதலியவைகளின் ஒளியை மக்கள் தாங்கமாட்டார்கள் எனப் பயந்து, தம் குழந்தைகளைக் கொன்றுவிடுவது என்று சூரியனும் சந்திரனும் தீர்மானித்தன.

ஒப்பந்தப்படி சூரியன் தன் குழந்தைகளை எல்லாம் விழுங்கி விட்டது. சந்திரன் தந்திரசாலி. தன் குழந்தைகளை விழுங்கவில்லை. சூரியன் தன் குழந்தைகளை விழுங்கு மட்டும், சந்திரன் தன் குழந்தைகளை வான மண்டலத்தில் ஒளித்து வைத்து இருந்ததாம்.

சூரியன் தன் குழந்தைகளை எல்லாம் விழுங்கிய பிறகு, சந்திரன் தன் குழந்தைகளை அழைத்ததாம். சந்திரன் குழந்தைகளைக் கண்டதும் சூரிய னுக்கு அடங்காக் கோபம் வந்து, சந்திரனே, உடனே உன் குழந்தை களை கொல்லுகிறாயா இல்லையா? என்று கூச்சல்போட்டுப் பாய்ந்ததாம். சந்திரன் ஓட, சூரியன் விரட்ட இப்படியே வெகுநாள் ஓட்டப்பந்தயம் நடந்ததாம்; இன்னும் நடக்கிறதாம்.

சில சமயங்களில் சூரியன் சந்திரனை நெருங்கி விடுமாம். அப்பொழுதுதான் கிரகணம் உண்டாகிறதாம். சந்திரன் தன் குழந்தைகளான நட்சத்திரங்களை, சூரியன் இல்லாத பொழுதாகிய இரவில் கொண்டு வரும் இரகசியம் இது தானாம்!

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/73044-2014-01-03-10-50-35.html#ixzz2pKmzhPVL