Search This Blog

12.1.14

ஏகாதசி விரதம் இருந்தால் தீர்ந்தது கதை!

இதனால் சகலருக்கும் அறிவிப்பது...
இதனால் சகலருக்கும் அறிவிப்பது என்ன வென்றால், ஏகாதசி விரதம் (பட்டினி) இருந்தவர் களுக்கு இன்று சனி விடியற்காலை மகாவிஷ்ணு பரமபத வாசலைத் திறந்து வைத்து (வாட்ச்மேன்) காத்துக்கொண்டிருந்தார்.

இரவு முழுவதும் கண் விழித்து (பெண்கள் பாராயணம் செய்வார்கள் - ஆண்கள் சீட்டு ஆடிக் கொண்டிருப்பார்கள் - இரவு கழியவேண்டும் அல்லவா!).

இப்படியெல்லாம் அட்சரம் பிறழாமல் நடந்து கொண்டால் அவர்களுக்குச் செல்வம் கொழிக்குமாம்.

ரொம்ப சரி; நாடு பொருளாதார வளர்ச்சியில் தள்ளாடிக் கொண்டு இருக்கிறது.
77 சதவிகித மக்கள் நாள் ஒன்றுக்கு 20 ரூபாய் வருமானக் காரர்கள் என்று சென்குப்தா அறிக்கை கூறுகிறது.

சமையல் எரிவாயு விலை குடும்பத் தலைவிகளின் மண்டையைக் குடைந்துகொண்டு இருக்கிறது.

இந்தியாவில் 53 சதவிகித மக்களுக்கு (சுமார் 69 கோடி) கழிப்பறை வசதியில்லை.

அய்.நா.மன்றம் யுனிசெப் ஆய்வறிக்கையின்படி ஊட்டச்சத்துக் குறைவால் உருக்குலைந்து போயிருக்கும் குழந்தைகள் 48 விழுக்காடு (உலகளவில்) என்றால், இந்தியாவில் மட்டும் 30 விழுக்காடு.

15 வயது முதல் 49 வயதுவரை உள்ள பெண்களில் 56.2 விழுக்காடு பெண்கள் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

அந்நிய செலாவணி கையிருப்பு கவலையளிப்பதாக இருக்கிறது.
வாராக்கடன் இன்னொரு பக்கம் எகிறி நிற்கிறது. விவசாயம் பாழ்பட்டு அம்மக்கள் தற்கொலையின் விளிம்பில் அல்லாடிக் கொண்டு கிடக்கிறார்கள். கடனைக் கட்ட முடியாமல் அரசிடம் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
பயிர்களை மஞ்சள் நோய் வாட்டுகிறது. கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் பாயவில்லை.

இவைகளுக்கெல்லாம் ஒரே பரிகாரம் - ஏகாதசி யன்று முழு நாள் பட்டினி கிடந்து விடியற்காலை வைணவக் கோவிலில் திறந்து வைக்கப்பட்டு இருக்கும் பரமபத வாசல் (கேட்) வழியாகச் சென்றால், பலன் கிடைக்கும் என்று பாகவதர்களும், பார்ப்பன சிரோன்மணிகளும், ஜீயர்களும், ஊடகங்களும் ஒரே குரலில் பேசும்போது அய்க்கிய முற்போக்குக் கூட்டணி எதற்காக விசனப்படவேண்டும்?

பொருளாதார மேதை நமது பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங்கோ, திட்டக்குழுவின் துணைத் தலைவர் பொருளாதாரச் சிங்கம் மாண்டேக் சிங் அலுவாலியாவோ எதற்காக மூளையைக் கசக்கிக் கொண்டு இருக்கவேண்டும்?

ஏகாதசி விரதம் இருந்தால் தீர்ந்தது கதை!

எவ்வளவுப் பெரிய பலூனையும் ஏகாதசி விரதம் என்ற குண்டூசியால் உடைத்துவிடலாம் என்கிறபோது ஏன் தேவையற்ற கிலேசம்?

கடைசியாக ஒரே ஒரு சந்தேகம்.

திருப்பதி ஏழுமலையான், ஸ்ரீமான் மகாவிஷ்ணு வின் இன்னொரு வடிவம்தானே! அங்கும் சொர்க்க வாசல் திறந்திருக்கிறது அல்லவா!
அவரே தனது கல்யாணத்துக்குக் குபேரனிடம் வாங்கிய கடனை இன்றுவரை அடைக்க முடியாததால், இன்னும் உண்டியல் வைத்து பக்தர்களிடம் வசூல் செய்துகொண்டிருக்கிறார் என்று திருப்பதி ஸ்தல புராணமே கூறுகிறது.
அவரே கடனாளி - கடனைத் தீர்க்க முடியாத நிலையில் (வைத்தியரே, முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள் ளுங்கள்!) இருக்கும்பொழுது, அவருக்காக விரதம் இருந்து, அவர் கோவிலில் உள்ள வாசல் வழியாக நுழைந்தால், எப்படி கடன் தீரும்?

எங்கிருந்து செல்வம் கொழிக்கும்?

எதற்கும் ஜீயரைக் கேட்டுச் சொல்லுங்கள்!

---------------------- கருஞ்சட்டை  11-1-2014 "விடுதலை” யில் எழுதிய கட்டுரை

34 comments:

தமிழ் ஓவியா said...


செய்தியும் - சிந்தனையும்!

வெளியேறியது - ஏன்?

செய்தி: மக்கள் நலனைப் பாதுகாக்கவே பா.ஜ.க.வில் இணைந்தேன்.
- எடியூரப்பா

சிந்தனை: அப்படியா னால் மக்கள் நலனைக் குலைப்பதற்காகவா பிஜேபியை விட்டு வெளி யேறினார்?

நம்புங்கள்

செய்தி: ஆர்.எஸ்.எஸ். தலைவருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்தச் சந்திப்பு முக்கியமானது.

- தினமணி செய்தி

சிந்தனை: ஆமாம் நம்புங்கள்! தேர்தல் அரசி யல் மற்றும் பி.ஜே.பி. உள் விவகாரத்தில் ஆர்.எஸ். எஸ். தலையிடுவதே கிடை யாது.

கடவுளை மற!

செய்தி: அய்யப்பப் பக்தர்களுக்காக பம்பையில் 6 இடங்களில் மருத்துவ முகாம்கள்.

சிந்தனை: அய்யப்பன் சக்திமீது நம்பிக்கை இல் லையோ? கடவுளை மற - மனிதனை நினை! - என்றார் தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/e-paper/73466.html#ixzz2q8gjMeSk

தமிழ் ஓவியா said...


திருப்பதி தேவஸ்தானத்தில் உடலுறவுக் கேவலம்!
எழுத்துரு அளவு Larger Font

திருப்பதி, ஜன.11 திருமலையில், தேவஸ் தான அலுவலகம் ஒன் றில், பாலியல் உறவில் ஈடுபட்ட ஊழியர்கள் இருவர், பணி நீக்கம் செய்யப்பட்டனர். திருமலையில் மது, மாமிசம், பீடி, சிகரெட், சீட்டு விளையாட்டு, விப சாரம், பிற மத பிரசாரம் போன்றவை, தடை செய்யப்பட்டுள்ளன.

திருமலை, சங்குமிட்டா துணை விசாரணை அலு வலகத்தில், குமாஸ்தா வாக பணிபுரியும் கோபி நாத், தன் பணி நேரத் தில், கடை நிலை ஊழிய ராகப் பணிபுரியும் பெண் ஒருவருடன், ஓராண் டாக, பாலியல் உறவில் ஈடுபட்டு வந்து உள்ளார்.

அலுவலக அறையில், அவர்கள் இருவரையும், கையும் களவுமாக, விஜிலென்ஸ் அதிகாரி கள் பிடித்து, காவல் துறையில் ஒப்படைத் தனர். இதையடுத்து, இருவரும் நேற்று, பணி யில் இருந்து நீக்கப்பட் டனர்.

இத்தகைய குற்றத்திற் காக, தேவஸ்தான ஊழி யர் பணி நீக்கம் செய்யப் பட்டது, இதுவே முதல் முறை என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/73464.html#ixzz2q8h6DmZX

தமிழ் ஓவியா said...


பாராட்டத்தக்க வழிகாட்டும் அறிவிப்பு


மும்பையில் பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில் மகாராட்டிர மாநில அமைச்சர் ஜகன்புஜ்பல் அவர்களுக்கு இன்று வழங்கப்பட்ட சமூக நீதிக்கான வீரமணி விருது வழங்கு விழாவில் அமைச்சர் புஜ்பால் பெரியார் உலகத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் நன்கொடையாக வழங்கினார். நன்றி.

Read more: http://viduthalai.in/e-paper/73468.html#ixzz2q8hO1Cts

தமிழ் ஓவியா said...


டாக்டர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு புறக்கணிப்பா? எதிர் வழக்கை ஏற்றது உயர்நீதிமன்றம்


மதுரை, ஜன.11- சென்னை அரசு சிறப்பு மருத்துவமனை டாக் டர்கள் நியமனத்தில், இட ஒதுக்கீடு முறையை புறக்கணித்துள்ளதால், அறிவிப்பை ரத்து செய்ய தாக்கலான வழக்கில், தமிழக அரசுக்கு தாக் கீது அனுப்ப, மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்ட தி.மு.க., துணைச் செய லாளர் மணிமுத்து தாக் கல் செய்த பொது நல மனு: தமிழ்நாடு மருத்து வப் பணியாளர்கள் தேர்வு வாரியம் 2013 டிச., 27 ல் அறிவிப்பு வெளி யிட்டது. அதில், 'சென்னை அரசு சிறப்பு மருத்துவ மனைக்கு (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இயக்குநர், டாக்டர்கள், இதர பணிக்கு 84 பேர் தேர்வு செய்யப்படுவர். பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், ஆதிதிரா விடர், பழங்குடியினர், இதர பிற்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.

இந்நியமனத்திற்கு, இட ஒதுக்கீட்டு விதிமுறை கள் பொருந்தாது' என உள்ளது. மருத்துவ பணி யாளர்களுக்கு மக்களின் வரிப் பணத்திலிருந்து, அரசு சம்பளம் வழங்கு கிறது. நியமனத்தில் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றாதது, அரசிய லமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. பணி நியமன அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஆர்.சுதா கர், வி.எம்.வேலுமணி பெஞ்ச் முன், மனு விசா ரணைக்கு வந்தது. மனு தாரர் தரப்பில் வழக்குரை ஞர் கே.சஞ்சய்காந்தி ஆஜரானார். தமிழக சுகாதாரத்துறை செயலர், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலருக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், ஜன., 27 க்கு ஒத்தி வைத்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/73465.html#ixzz2q8hZ8x9C

தமிழ் ஓவியா said...


சிறிதும் இராது


பார்ப்பனருக்கு நோக்கமெல்லாம் பதவி, உத்தியோகம் ஆகியவற்றில் தங்களுக்கு ஏகபோகம் இருக்கவேண்டும் என்பதுதானே ஒழிய, மற்றபடி நாணயம், நீதி, நேர்மைபற்றியோ பார்ப்பனர் தவிர்த்த மற்றவர்பற்றியோ கவலை சிறிதும் இராது.

- (விடுதலை, 10.6.1968)

Read more: http://viduthalai.in/page-2/73469.html#ixzz2q8hq97uu

தமிழ் ஓவியா said...


தமிழ்நாடு அரசு சிந்திக்குமா?செயல்படுமா?


சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் தமிழ்நாடு அரசு தொடங்கவிருக்கும் பல்நோக்கு சிறப்பு உயர் மருத்துவமனைக்கான மருத்துவ பேராசிரியர்கள் தொடர்பான பணி நியமனத்தில் இடஒதுக்கீட்டை அறவே புறக்கணித்ததன் மூலம் அடிப்படைத் தவறினைச் செய்துவிட்டது; அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும் தமிழ் நாடு அரசின் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கான சட்டத்திற்கு முரணாகவும் நடந்து கொண்டு இருக்கிறது.

இதுபற்றிக் கடுமையான விமர்சனங்கள், எதிர்ப்புகள் கிளர்ந்து எழுந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு தரப்பில் எந்தவித விளக்கமும் சொல்லப்படாததிலிருந்தே ஒன்று தெளிவாகவே தெரிகிறது. தமது தரப்பில் தவறு நடந்திருக் கிறது என்று அரசுக்கு நன்கு தெரிந்து விட்டது என்பதை அறிய முடிகிறது. இல்லாவிட்டால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிற முறையில் எதையாவது தெரிவித்திருப்பார்கள்.

சரி, தவறு நடந்து விட்டது என்று அறிந்த மாத்திரத்தில் விளம்பரத்தை மாற்றி வெளியிட வேண்டியதுதானே, அதில் என்ன தயக்கம்?

எந்த இடத்தில் இந்தத் தவறு நடந்திருக் கிறது என்று துறை ரீதியான விசாரணைகள் ஒரு பக்கம் நடத்தப்படட்டும், மற்றொரு பக்கம் சட்ட ரீதியாக இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனத்துக்கான அறிவிக்கையை விளம்பரமாகக் கொடுப்பதில் ஏன் தாமதம்?

நீதிமன்றம் சென்று அது தலையில் குட்டியதற்குப் பிறகுதான் திரு(ந்)துவது என்ற நிலைப்பாடு ஒரு நல்லரசுக்கு உகந்ததாக இருக்க முடியாது.

மெடிக்கல் சர்வீசஸ் ரெக்ரூட்மென்ட் போர்டு (MRB) சார்பில்தான் விளம்பரம் வெளியிடப் பட்டது. அதன் சட்ட விதிகளிலேயே நான்காம் பகுதியிலேயே (Chapter- 4) கீழ்க்கண்டவாறு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Number of posts reserved for scheduled castes, scheduled tribes and other backward classes in a cadre having morethan 13 posts shall be determined by multiplying the cadre strength by the percentage of reservation prescriped for the respective categories while during so fraction if any shall be ignored” என்று தெளிவாகவே கூறப்பட்டுள்ளதே.

13 இடங்கள் காலியாக உள்ள எந்த ஒரு பணியிடத்துக்கும் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதன்படி பார்க்கப் போனால் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசின் விளம்பர அறிக்கையில் மூத்த ஆலோசகர்கள் (Senior Consultants) 14 இடங்கள், இணை ஆலோச கர்கள் 13 இடங்கள், இளநிலை ஆலோசகர்கள் 23, நிலைய மருத்துவர்கள், 19 பதிவாளர்கள் 14 இடங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லாம் 13 இடங்களுக்கு மேற்பட்டது என்பதால் விதிமுறைகளின்படி கண்டிப்பாக இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டே ஆக வேண்டும்.

கட்சிகளைக் கடந்து திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னையில் கூட்டப்பட்ட சமூகப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அத்தனைப் பேரும், ஒருமித்த எண்ணத்தோடு இடஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளனர்.

அந்த வகையில் தீர்மானமும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பல்வேறு கட்சிகள் சமூக நீதி அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்கும் சிறப்புப் பொதுக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் வரும் 13ஆம் தேதி மாலை ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.

இந்தப் பிரச்சினையில் தந்தை பெரியார் அவர்களால் பக்குவப்படுத்தப்பட்ட தமிழ்நாட்டு மக்கள் சமூக நீதியின் பக்கம் பெரும் அளவில் திரண்டு நிற்பர் என்பதில் அய்யமில்லை.

காலம் கடந்துவிடவில்லை - தமிழ்நாடு அரசு சமூக நீதித் திசையில் சிந்திக்குமா? செயல் படுமா? எங்கே பார்ப்போம்!

Read more: http://viduthalai.in/page-2/73470.html#ixzz2q8hzn8Wn

தமிழ் ஓவியா said...


சங்கீதமும் பார்ப்பனியமும்

சென்னை சங்கீத மகாநாட்டில் பார்ப்பன ரல்லாத சங்கீத வித்வான் ஸ்ரீமான் காஞ்சிபுரம் சி. சுப்பிரமணியப்பிள்ளை அவர்கள் விஷயத் தில் பார்ப்பனர்கள் எவ்வளவு நாணயக் குறை வாயும் குற்றமாயும் நடந்து கொண்டிருக் கின்றார்கள் என்பதை மற்றொரு பக்கத்தில் பிரசுரித்திருக்கும் நிரூபத்தால் அறியலாம். இவற்றை நமது பார்ப்பனரல்லாத பிரபுக்கள் சற்றும் லட்சியம் செய்யாமல் பார்ப்பனரல்லாத வித்வான்கள் எவ்வளவு பாண்டித்திய முடைய வர்களாயிருந்தாலும் அதை லட்சியம் செய்யா மல் பார்ப்பனர்கள் என்கின்றதற்காகவே அவர்களை ஆதரிக்க முற்படுகிறார்கள்.

நமது நாட்டுப்பிரபுக்களின் முட்டாள் தனத்திற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டியதில்லை என்பதே நமது அபிப்பிராயம். அன்றியும், பார்ப்பனரல்லாத வித்வான்களும் தங்கள் சுயமரியாதையைப் பற்றி ஒரு சிறிதும் கவலையில்லாமல் பார்ப்பன வித்வான்கள் என்பவர்கள் எவ்வளவு குறைவுபடுத்தினாலும் லட்சியம் செய்யாமல் சுவாமிகளே என்று வாயைப் பொத்தி முதுகை வளைத்துக் காட்டிக் கொண்டு அவர்கள் பின் தொடருகின்றார்களே யொழிய, மானத்துடன் வாழ ஒருப்படுவது அருமையாய் இருக்கின்றது. இவைகளை அனு சரித்தே ஒவ்வொரு ஊரிலும்.

பார்ப்பனரல்லாத சங்கீத சமாஜம் ஏற்படவேண்டும் என்றும், அங்கெல்லாம் பார்ப்பனரல்லாத வித்வான்களை ஆதரிக்க வேண்டுமென்றும் பல தடவைகள் சொல்லியும், எழுதியும் வந்திருக்கின்றோம். பெரும்பாலும் இதை உத்தேசித்தே கோவை யிலும் முதல் முதலாக ஒரு சங்கீத சபை ஏற்படுத்தியும் இருக்கின்றார்கள். மற்ற இடங்களும் இதைக் கவனித்து நடக்குமா?

சுழ்ச்சியும் ஏமாற்றமும்

திருவண்ணாமலை கோயில் வழக்கு ஆர்கியுமெண்டிற்காக ஸ்ரீமான் ஏ. ராமசாமி முதலியார் வரப்போகிறார் என்று திருவண்ணா மலை பொது ஜனங்களும் முனிசிபாலிட்டியாரும் ஸ்ரீமுதலியாருக்குப் பல வரவேற்புகளும் மீட்டிங்குகளும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இதைப் பொறுக்காத பார்ப்பனர்கள் இந்த பொதுஜனங்கள் ஏமாற்றமடையட்டும் என்கின்ற எண்ணத்தின் பேரிலும் ஸ்ரீமுதலியாருக்கு இவ்வளவு வரவேற்பா என்கின்ற பொறாமையின் பேரிலும் ஸ்ரீ முதலியார் அன்று திருவண்ணா மலைக்கு வராமல் இருக்கும்படி செய்ய வேண்டு மெனக் கருதி, டிப்டி கலெக்டர் கச்சேரியில் கோயில் கேசை திருவண்ணாமலை மெஜிஸ்ட் ரேட்டிடமிருந்து மாற்றவேண்டுமென்பதாக ஒரு விண்ணப்பம் போட்டு கேஸ் விசாரணையை நிறுத்தும்படி உத்திரவு வாங்கி விட்டார்கள்.

நல்ல வேளையாய் இந்த உத்திரவு போய்ச் சேருவதற்கு முன்பாகவே ஸ்ரீமான்கள் ராமசாமி முதலியாரும், கண்ணப்பரும் புறப்பட்டு விட்டதால் இப்படி எல்லா வரவேற்புகளும் மீட்டிங்குகளும் வெகு ஆடம்பரமாகவே நடந்து விட்டன.

பார்ப்பனர்கள் தங்கள் சூழ்ச்சியின் பயனாய் எதிர்பார்த்த காரியம் ஏமாற்ற மடைந்து விட்டதால் பிறகு மாற்று விண்ணப்பத்தைப் பற்றி கவலை எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் மாற்றுவதற்குப் போதுமான காரணம் இல்லை யென்று தெரிந்தே விஷமஞ் செய்யக் கருதி டிப்டி கலெக்டர் பார்ப்பனராயிருப்பதால் உத்திரவு கிடைத்துவிடுமென்று நினைத்து போட்டார்களானதால் உத்திரவு கிடைத்தும் உத்தேசித்த காரியம் நிறைவேறாமற் போய் விட்டது.

மற்றபடி கேசின் ஆர்க்யுமெண்டு திருவண் ணாமலையிலேயே நடக்கும். ஸ்ரீமான் முதலி யாரும் போவார் என்றே தெரிகின்றது.

அருப்புக் கோட்டையில் பார்ப்பனத் தொல்லை

அருப்புக் கோட்டையில் சில பார்ப்பனர்கள் தொல்லை விளைவித்து வருவதாகத் தெரி கின்றது. 98 பார்ப்பனரல்லாத வாலிபர்கள்மீது போலீசார் நடவடிக்கை எடுத்துக் கொண்ட தாகவும் அரஸ்ட் செய்து ஜெயிலில் வைத்து ஜாமீனில் விட்டிருப்பதாகவும் தெரிய வரு கின்றது. திருவண்ணாமலைக் கேசுபோலவே இந்தக் கேசும் பார்ப்பனர்களிடம் நடக்கக் கூடாது என்று விண்ணப்பம் போட வேண்டிய நிலைக்கு வரும்போல் தெரிகின்றது.

அந்த ஊரில் பார்ப்பனரல்லாத வக்கீல்கள் இல்லை யாதலால் மதுரையிலிருந்து யாராவது பார்ப்ப னரல்லாத வக்கீல் போகவேண்டி யிருப்பதையும் தெரிவித்துக் கொள்வதோடு இந்தத் திருவண் ணாமலை கேசு செலவுக்குப் பொதுஜனங்கள் உதவியது போலவே உதவவேண்டும் என்று அப்பீல் செய்து கொள்ளுகிறோம்.

- குடிஅரசு - கட்டுரை - 19.02.1928

Read more: http://viduthalai.in/page-7/73484.html#ixzz2q8ilWxS2

தமிழ் ஓவியா said...


யார் வார்த்தைகள் கடினம்?


பார்ப்பனர்களுக்கு அனுகூலமில்லாத மந்திரிகளைக் கண்டிப்பதற்கு என்று பார்ப்பனர்கள் காங்கிரசின் பேரால் கோகலே ஹாலில் ஸ்ரீ பெசண்டம்மையின் தலைமையில் ஒரு கூட்டம் கூடியபோது ஒருவர் பேசுகையில் மந்திரிகள் தங்கள் பெண் ஜாதிகளை விட்டுக்கொடுத்து மந்திரி வேலைகளைச் சம்பாதிப் பார்கள் என்று சொன்னாராம்.

இது யோக்கியமான வார்த்தையா என்று கேட்கின்றோம். இவ்வார்த்தைகளை எந்த யோக்கியர் களாவது கண்டித்தார்களா என்று கேட் கின்றோம். ஸ்ரீ வரதராஜுலுவாவது அவரது பத்திரிகையாவது தமது தலைவர் களுடைய இம் மாதிரி வார்த்தைகளை கண்டித்தாரா என்று கேட்கின் றோம்.

ஸ்ரீமான் குழந்தை கடற்கரையில் மந்திரிகளைக் கொடும்பாவி கொளுத் தியதற்கு கோபித்துக்கொண்டதாக வேஷம் போட்ட ஸ்ரீவரதராஜுலுவுக்கும் தமிழ்நாடுக்கும் பெண்ஜாதிகளை விட்டுக் கொடுப்பார்கள் என்று சொன்ன வார்த்தை அவ்வளவு கடினமானதாக தோன்றவில்லைபோல் இருக்கின்றது. இதனால் அக்கோஷ்டியின் அற்பத்தனமும் காலித்தனமும் எவ்வளவு என்பது விளங்க வில்லையா?

சாதாரணமாக ஹைகோர்ட் ஜட்ஜுகளில் யாருக்காவது மேகவியாதி இருக்குமானால் அது மைலாப்பூர் காங்கிரஸ்வாதிகள் தேசியவாதிகள் உபயமேயாகும். இம்மாதிரி யோக்கியர்கள் மிகுதியும் நிறைந்த சென்னை காங்கிரஸ் வாதிகள் தங்கள் யோக்கியதைகளை மறைத்துக் கொண்டு இம்மாதிரிப் பேச அயோக்கியர்களைத் தூண்டிவிடுவதும், அதை கண்டிக்காமல் இருக்கச் செய்வதும் ஒரு ஆச்சரியமல்ல.

தவிர, வேறு ஒரு காங்கிரஸ் தலைவராகிய ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்களும், அவரது ஆயுளில் இம்மாதிரியாக அநேக தடவை களில் அதிகப்பிரசங்கித் தனமாய்ப் பேசிவிட்டு மன்னிப்பு கேட்டுக் கொண்ட தானது ஸ்ரீவரதராஜுலு மன்னிப்பு கேட்டுக் கொண்டதைவிட நூறு பங்கு அதிகமாகவே இருக்கும்.

ஆகவே யாரு டைய வார்த்தைகள் கடினமானதென்பதும் முழுவதும் அக்கிரமமானதும், பொய்யா னதும் என்பதும் இழிவானது என்பதும் இதிலிருந்தாவது பொது ஜனங்கள் உணர வேண்டுமாய் எதிர்பார்க்கின்றோம்.

அன்றியும் பார்ப்பனர்களுக்கு அனு கூலமான, உத்தியோகங்கள் என்ன வேலை செய்து யார் பெற்றாலும் பத்திரி கைகள் என்ன வேலை செய்து யார் நடத்தி னாலும் அவைகள் எல்லாம் யோக்கியமான தேசியமென்பதும் பார்ப்பனர்களுக்கு அனுகூலமில்லையானால் அவைகளைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதுமே தேசியமாகவும் காங்கிரஸ் சட்டமாகவும் இருக்கின்றது என்பதையும் உணரவேண்டுமாய் விரும்புகின்றோம்.

- குடியரசு - கட்டுரை - 25.03.1928

Read more: http://viduthalai.in/page-7/73485.html#ixzz2q8iwV2DX

தமிழ் ஓவியா said...


அயல் பற்று


தமிழிசை ஆய்வாளரான மம்முது சொன்ன கருத்து புதிய தலைமுறை இதழில் (16.1.2014) வெளி வந்துள்ளது.

முத்தமிழ் என்று நாம் சொல்கிறோமே தவிர, இதில் இயற்றமிழ் தவிர்த்து இசை, நாடகத் தமிழ் பரவலாக யாருக்கும் தெரிவதில்லை. ஒரு முறை அமெரிக்கா சென் றிருக்கும்போது, அங்குள்ள பல்வேறு நண்பர்களின் வீடு களுக்குச் செல்ல வேண்டி இருந்தது.

அங்கு எல்லா ருடைய வீட்டிலும் ஏதாவது ஓர் இசைக் கருவியை வைத்திருக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒரு இசைக்கருவி வாசிக்கத் தெரிந்திருக்கிறது. அங்கு இசையைக் கொண்டாடுகின் றனர். ஆனால் நம்மிடையே இந்தப் பழக்கம் தலைகீழாக உள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் தமிழிசை அழியும் வாய்ப்புகள் அதிகம்.

தமிழிசையைக் காப் பாற்றுவது நம் ஒவ்வொரு வரின் கையில்தான் உள்ளது. இன்று திருமணங்களில் நாதஸ்வரம், தப்பாட்டம் போன்ற தமிழிசைகள் இடம் பெறுவதில்லை.

வேறு மாநில இசைக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் கூட தமிழிசைக் கலைஞர்களுக்கு தமிழர் களால் வழங்கப்படுவதில்லை. இந்த நிலையை மாற்ற வேண் டும். தமிழிசைக் கலைஞர் களுக்கான பொருளாதார வாய்ப்புகள் உறுதி செய் யப்பட்டாலே தமிழிசையை பெருமளவில் காப்பாற்ற முடியும். கர்நாடக சங்கீத சபாக்கள் போல தமிழிசைக் காக சபாக்கள் உருவாக் கப்பட வேண்டும். அங்கு நடக்கும் தமிழிசை நிகழ்ச்சி களில் தமிழர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

மேலே கண்டுள்ள மம்முது அவர்களின் கருத்தில் பல உட் பொருள்கள் பொதிந்து கிடக்கின்றன.

தமிழர் வீட்டுத் திரும ணங்களில் நாதஸ்வரம், தப்பாட்டம் போன்ற தமிழிசை காணப்படவில்லையே என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி யுள்ளார்.

விவசாயம் போலத்தான் இந்தத் தமிழ் இசைக் கலை களும்; விவசாயம் உடலு ழைப்பைப் பெரிதும் சார்ந்தது என்பதால் அதனைப் பாவத் தொழில் என்று மனுதர்மம் ஒதுக்கி விடவில்லையா? அதன் விளைவை இன்று வரை கூட நம் மக்கள் அனு பவித்துக் கொண்டு தானி ருக்கிறார்கள்.

நாதஸ்வரம், தப்பட்டம் போன்ற கலைகள் உடலு ழைப்பைக் கூடுதலாக உறிஞ் சக் கூடியதாகும். அதனாலே ஆரியம் அதனை ஒதுக்கி விட்டது. தவில் போன்ற கருவிகள் பக்கம்கூட அவர் கள் நெருங்க மாட்டார்களே!

வேறு மாநில இசைக் கலைக்கு வழங்கப்படும் இசை வாய்ப்புகள்கூட தமிழிசைக் கலைஞர்களுக்கு வழங்கப் படுவதில்லை என்று மம்முது அவர்கள் குறிப்பிட்டு இருப் பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.

இப்பொழுது புதிதாக ஒரு வியாதி கிளம்பி இருக்கிறது. தமிழ்நாட்டில். அது கேரளா விலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. செண்டை மேளமாம். இது குறித்துத் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர் களும் இ(அ)டித்துக் கூறி இருக்கிறார்.

தமிழர்கள் தங்களுக் குரிய மதிப்பைவிட அயல் வழக்குகளில் தங்களைப் பறி கொடுப்பது பல வகைகளி லும் நடந்து கொண்டு இருப்பதுதானே தமிழர்களின் இழப்புகளுக்குக் காரணம்.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/73522.html#ixzz2qEj5m5AX

தமிழ் ஓவியா said...

நமதுஎதிரிகளின்எதிர்ப்புகள்இன்றும்தொடர்ந்துகொண்டுதான்இருக்கின்றன

இவற்றைஎதிர்கொள்ளபெரியார்நமக்குமிகவும்தேவைப்படுகிறார்!

சமூக நீதிக்கான வீரமணி விருது பெற்ற மராட்டிய மாநில அமைச்சர் ஜகன்புஜ்பல் முழக்கம்!

சமூக நீதிக்கான வீரமணி விருதினை மராட்டிய மாநில பொதுப் பணி மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜகன்புஜ்பல் அவர்களுக்கு, தமிழர் தலைவர் முன்னிலையில் மராட்டிய மாநில ஆளுநர் கே. சங்கரநாராயணன் வழங்கினார். உடன் பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம இளங்கோவன், அய்.ஏ.எஸ். அதிகாரி அன்பழகன், சு. குமணராசன், ரவிச்சந்திரன், வீ.குமரேசன், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் (மும்பை - 11.1.2014).

மும்பை, ஜன.12- நமது எதிரிகளின் வேலைகள் முடிந்து போய்விடவில்லை. அவற்றை நாம் எதிர் கொள்ள பெரியார் போன்றவர்கள் நமக்குத் தேவைப்படு கிறார்கள் என்றார் மராட்டிய மாநில அமைச்சர் ஜகன் புஜ்பல்.

சமூக நீதிக்கான வீரமணி விருது வழங் கும் விழா மும்பையில் நேற்று (11.1.2014) நடைபெற்றது. அந்த விருதைப் பெற்றுக் கொண்ட மராட்டிய மாநில பொதுப் பணித் துறை மற்றும் சுற்று லாத் துறை அமைச்சர் ஜகன்புஜ்பல் ஆற்றிய உரை வருமாறு:

தமிழ் ஓவியா said...


மராட்டியத்தின் ஆளுநர் சங்கரநாராய ணன் திராவிடர் கழகத் தின் தலைவர் மற்றும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் கி.வீரமணி, பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் எஸ். இளங் கோவன், மற்றும் விழாக் குழு தலைவர் லட்சுமணன் மற்றும் இங்கு விழாவிற்கு வருகை புரிந்துள்ள எனது நண் பர்கள் மற்றும் பெரி யோர்கள் தாய்மார்கள் பத்திரிக்கையாளர்கள் நண்பர்கள் அனைவருக் கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள் கிறேன், விருது வழங்கிய பிறகு என்னைப் பேச அழைத்தனர்.

மராட்டியத்தில் முதல் முதலாக இந்த விருதை வாங்குபவன் என்ற பெருமை எனக்கு கிடைத்திருக்கிறது, இது எனக்கான பெருமை யல்ல இந்தியாவில் சமுக நீதிக்கான போராட் டத்தை ஆரம்பித்த மஹாத்மா புலே மற்றும் டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கர், சாஹூ மஹராஜ் போன்றோரின் போராட்டத்திற்கான பெருமையாகும், பெரி யாரின் கொள்கைகளை பரப்பும் திராவிடர் கழ கம் அதன் வழிகாட்டுத லின் பேரில் அவரது கொள்கைகளை உலகம் எங்கும் பரப்பும் பெரி யார் இண்டர்நேசனல் மய்யம் மற்றும் அதன் தலைவர்கள் இந்த விருதை வழங்க என்னை தேர்ந்தெடுத்ததற்கு முதற் கண் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியார் தென்னகத்தில் சமுக நீதிக்கான புரட்சி விதையை தூவியவர், மராட்டியத்தில் சமுக நீதியை நிலைநாட்ட பாடுபட்டவர்களான மஹாத்மா ஜோதிபா புலே, சாவித்திரிபாய் புலே, பாபாசாகிப் அம் பேத்கர் போன்றவர் களின் பாதையில் அவர் கள் நமக்கு விட்டுச் சென்ற ஒளியின் பாதை யில் நாம் பயணிக் கிறோம்.

சாதாரண பாதையல்ல

பெரியார் மற்றும் நமது மராட்டிய சமுக நீதிக் காவலர்கள் அனை வரும் மனிதப் பாகு பாட்டை நீக்கப் பாடு பட்டனர். இது சாதா ரண பாதையல்ல அவர் கள் எதிர்கொண்ட எதிர்ப்புகள் மிகவும் அதிகம். அவற்றைத் துச்சமாக மதித்து தனி மனிதர்களாக எதிர் கொண்டு இன்று வரை அவர்களின் அளப்பரிய பணிகளின் பயனை நமக்குத் தந்துள்ளனர். இதை நாம் முன்னெடுத் துக் கொண்டு சென்று கொண்டிருக்கிறோம், இந்த சமூகத்திற்கு சம மாக உரிமைகள் கிடைக்க இன்றும் நாம் பாடுபட்டுக்கொண்டு இருக்கிறோம்.

இந்த பயணம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இது பெரியார் அம்பேத் கர் வகுத்துக்கொடுத்த பாதை. எனக்கு சமூக நீதிக்கான வீரமணி விருது கொடுத்த திராவிடர் கழகம் பெரியார் சர்வதேச மையத்திற்கு எனது நன்றி! இந்த விருதை நான் பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த விருதிற்கு நான் தகுதியுள்ளவன் என்ற நிலைக்கு இன்றுவரை நான் வரவில்லை. இந்த விருதை பெற்றபிறகு எனது பணிகள் இன்னும் சிறப்பு மிக்கதாய் அமைய எனக்குள் ஒரு உத்வேகம் பிறந்திருக்கிறது. இந்த எனக்குக் கிடைத்த இந்த விருதை நான் தலித், ஆதிவாசி மற்றும் பெண்களுக் காக அர்ப்பணிக்கிறேன், இவர்களுக் காகத்தான் நான் இந்த விருதைப் பெற ஒப்புதல் அளித்தேன், ஆகையால் நான் அவர்களுக்கு இந்த விருதை அர்ப் பணிக்கிறேன்.

மகாத்மாபுலே மற் றும் பாபாசாகிப் அம்பேத்கர் ஏற்றி வைத்த புரட்சித்தீயை இன்று நாம் கொண்டு செல்லும் நிலையில் இருக்கிறோம். அதற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற் படாதவாறு நாம் அதை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும், இதை நாம் செய்தே ஆகவேண்டும். 1992ஆம் ஆண்டு நாசிக்கில் என்னுடைய ஆத்மார்த்த குரு மஹாத்மா பூலே இயக்கத்தை ஆரம்பித்தேன். பாண்டுரங்க் காயக் வாட், நாசிக்கின் சிறந்த சமூக சேவகர், மூத்த பத்திரிக்கையாளர் , மற்றும் டிடி சவான் ஆதிவாசி மற்றும் பெண் களுக்கான உரிமைகளுக்காக பாடு பட்டவர்கள், இவர்களின் வழிகாட்டு தலின் பேரில் இந்த இயக்கத்தை ஆரம் பித்தேன்.

எத்தனையோ இடர்ப்பாடுகள்!

இந்த இயக்கம் துவங்கியதும் பல இன்னல்கள் வந்தன. அப்போது இதன் காரணமாக நான் முன்பிருந்த கட் சியை விட்டு விலகவேண்டியிருந்தது, சமூக நீதிக்கான போராட்டம் என்பது இன்றும் எவ்வளவு கொடுமையான எதிர்ப்புகளைச் சந்திக்கிறது; எதிர் கால அரசியல் வாழ்க்கையையே சீர ழிக்கும் வகையில் எதிர்ப்புகள் தோன் றியது என்றால் அன்றைய சூழலில் எப்படியான எதிர்ப்புகளை பாபா சாகிப் அம்பேதகர் அவரது அரசியல் களத்தில் சந்தித்திருப்பார்/ அந்த நேரத்தில் எமது இயக்கம் நடத்திய ஒரு நிகழ்ச்சிக்கு முன்னாள் பிரதரமர் மறைந்த பி.வி. நரசிம்மாராவ் வருகை தந்து கலந்து கொண்டு சிறப்பு செய்தார்.

தமிழ் ஓவியா said...

சோர்ந்திருந்த எனது உள்ளத்திற்கு அது மிகப்பெரிய உற்சாகத்தை தந்தது, அதன் பிறகு எனது இயக்கம் புதிய உற்சாகத்தோடு சமூக நீதிப் பாதையில் பயணித்து இன்று பெரியார் துவங்கிய ஒரு இயக்கம் எனக்கு விருது கொடுக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது என்றால் எனது சமூக நீதிப்பாதை சரியான பாதையில் தான் சென்றுகொண்டு இருக்கிறது, இன்னும் நான் நிறைய பணிகள் செய்யவேண்டி இருக்கின்றன. இதற் கான உறசாகம் மூட்டும் ஒரு விதமாகத் தான் இந்த விருது எனக்கு வழங்கப் பட்டுள்ளது, தெற்கில் பெரியார் கொண்டு வந்த மாற்றம் என்பது சாமானியர்களின் வெற்றி -அதை பெரியார் நிகழ்த்திக்காட்டினார்.

2000 வருட சமூகப் பேதம்

இந்த நாட்டில் பல பெரியவர்கள் தோன்றியிருக்கிறார்கள் என்னவோ எழுதியிருக்கின்றார்கள், ஆனால் அவர்கள் எல்லாம் சமூகத்திற்கு என்ன செய்தார்கள் என்ற கேள்வி எழும் முன் ஏன் 2000 வருடமாக இங்கே மனித பேதம் இருந்தது என்ற கேள்வி யும் எழும்; அதற்கான பதில் அந்த மகான்கள் என்று சொல்லப்பட்ட வர்கள் சமூகநீதிக்கான பணியை செய்ய முன்வரவில்லை, அவர்கள் முன்வந்திருந்தால் மஹாத்மா புலே, டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கர் போன்றோர் தங்களுடைய வாழ் நாளில் இவ்வளவு சிரமப்பட்டு நமக்கு சமூக விடுதலை வாங்கித்தர அவசிய மிருக்காது.

நாம் தற்போது எடுத்துச் செல்ல வேண்டிய பணி டாக்டர் அம்பேத்கர், மஹாத்மா புலே பெரியார் அவர் களின் பணிகளைத்தானே தவிர வேறு ஒன்றுமில்லை, இன்று அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன், அதற் கான மிகப்பெரிய சன்மானமாக இந்த விருது கிடைத்துள்ளது எனக்கு, (கைதட்டல்) பாபாசாகிப் அம்பேத் கர், மஹாத்மா புலே போன்றோர் பணிகளின் காரணமாக இன்று நாம் இங்கு கூடி இருக்கிறோம். இதே வேளையில் நூற்றாண்டுகளுக்கு முன்பு நம்மை இந்த சமூகம் அங்கீக ரித்திருக்குமா, அல்லது இது போன்று ஒரு பொது நிகழ்ச்சியில் நாம் ஒன்று கூட முடியுமா? கூடத்தான் விடுவார் களா? அப்படிக்கூடினால் அது அவர் களுக்கான இழுக்கு என்று தானே நினைத்து அதை அடக்கி விடுவார்கள்.

இவர்களின் பணிகளுக்கு ஆரம்ப காலத்தில் யாரும் துணையிருக்க வில்லை, அவர்கள் தனிமனிதர்களாக பாடுபட்டார்கள், சூத்திரன், தீண்டத் தகாதவன் என்று விரட்டினார்கள் கல்வியைச் சிதைத்தார்கள். கல்வி கற்பதே சமூகத்திற்குத் தீங்கு என்று கூறினார்கள், பார்ப்பனர் களின் கொடுமை கொஞ்சமாகவா இருந்தது! இன்று அது முடிந்து விட்டது என்று நினைக்கவேண்டாம். அது இன்றும் தொடர்கிறது. பெரி யார் போன்றவர்கள் நமக்குத் தேவைப் படுகின்றனர்.

ஆனால் இன்று என்ன நிலை என்று நினைத்துப் பாருங்கள்; எத்தனை விதமாக மனிதர்களைப் பிரித்துவைத்தார்கள், இப்படி பிரித்து வைத்ததால் அவர்களின் திட்டத்தை ஒடுக்கப்பட்ட மக்களே எடுத்தாளும் கெட்டவாய்ப்பான சூழல் இன்று நடந்து கொண்டு இருக்கிறது, அன்று சூத்திரன் என்று ஒதுக்கப்பட்ட மக்கள் இன்று மராட்டியத்தில் பல சாதிகளாக பிரிந்து கிடக்கின்றனர். இந்த சாதிகள் தங்களுக்குள்ளேயே அநீதி இழைத்துக்கொண்டு இருக் கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

நமக்குள்ளாகவே பேதங்கள்

மராட்டியன் அவனுக்கு கீழ் உள்ள வனுக்கு அநீதி செய்கிறான். இப்படி இவர்கள் தங்களுக்கான அநீதியை தங்களுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இழைக்கிறார்கள் இங்கே பார்ப் பனியம் நேரிடையாக தாக்கவில்லை; ஆனால் அவர்களின் வேலையை இவர்கள் எடுத்துச்செய்கிறார்கள், மேலும் இவர்கள் தான் புலே, சாகு ,அம்பேத்கர் ஆகியோர் எந்த காரியத் திற்காக பாடு பட்டார்களோ அதை தவறாகப் பயன்படுத்தும் நிலை ஒன்று உருவாகிக்கொண்டு இருக்கிறது, இதை நாம் நீக்கவேண்டும்; இந்த நிலையை மாற்றுவதே நமது பணி யாகும், நமது பணி எளிதானதல்ல;

மிகவும் கடினமானது ஆகும், நாம் தொடர்ந்து ஓய்வின்றி செய்து கொண்டு இருக்கவேண்டும் நாம் ஓய்வெடுக்கும் காலத்தை பயன்படுத்த எதிரி காத்துக்கொண்டு இருக்கிறான்.

உற்சாகப்படுத்துகிறார் வீரமணி

நமது பணிகளுக்கு உற்சாகமளிக் கும் செயலில் தென்னகத்தில் பெரியா ரின் பணியை மேற்கொண்டு வரும் திரு கி.வீரமணி அவர்கள் இந்த விருதை கொடுத்து என்னை மேலும் உற்சாகப் படுத்தி இருக்கிறார்கள்.

இதன் மூலம் மீண்டும் என்னுடைய பணியை புதிய உற்சாகத்துடன் செய்வேன். நாம் அனைவரும் இணைந்து செய்ய வேண்டும். அனைவருக்கும் நன்றி யைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அனைத்து சுகங்களையும் துறந்து பெரியார் பணியைச் செய்யும் வீரமணி

தந்தைபெரியாரின் மறைவிற்குப் பிறகு திரு வீரமணி அவர்கள் சமூகநீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்துச்சென்று கொண்டு இருக்கிறார். வீரமணி அவர்கள் தனது அனைத்து சுக துக்கங்களையும் மறந்துவிட்டார். பெரியார் கொள்கைகளைப் பரப்புவதே தன்னுடைய வாழ்நாள் பணியாக எடுத்துக்கொண்டு முன்னின்று நடத்தி வருகிறார். எப்போதும் போல் சமூக நீதி என்பது ஒரு சாராரின் சுகபோக வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடும்; அதற்காக சமூக நீதிக்கான போராட்டத்தை தடுக்க எப்போதும் முனைந்து கொண்டே இருப்பார்கள், அவர்களின் எதிர்ப்பை பெரியார், அம்பேத்கர் மஹாத்மா புலே ஆகியோர் சந்தித்தனர், துணிச்சலுடன் அதை எதிர்கொண்டனர்.

திரு வீரமணி அவர்களும் அதே மாதிரி எதிர்ப்பை சந்தித்தார். அவர் மீது இதுவரை 4 முறை தாக்குதல் நடத்தப்பட்டது, சமீபத்திலும் சமூக நீதிக்கு எதிரானவர்கள் அவர்களை தாக்க முயன்றுள்ளனர்.

இவற்றை எல்லாம் கண்டு பயப்படவில்லை, 48 பெரிய கல்வி நிலையங்களைத் திறந்தார். பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் பயன்படும் வகையில் இந்த கல்வி நிலையங்களில் அனைவருக்கும் சமமான கல்வி வழங்கினார்.

இவரின் இந்தபணியின் முன்பு நாம் எல்லாம் சாதாரணமானவர்கள் தான், எந்த ஒரு இயக்கத்திலும் ஏதாவது ஒருவகையில் சிலர் பயனடை வார்கள், ஆனால் கி.வீரமணி அவர்கள் பெரியாரின் இயக்கத்தில் தன்னுடையை 9 வயதில் இணைத்துக் கொண்டவர். இதனால் பயன்பட்டவர்கள் அனைவரும் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் பெண்கள்;

இவர்களுக்காக துவங்கிய இந்த இயக்கம் இன்று உலகம் முழுவதும் பெரியாரின் கொள்கைகளைப் பரப்பிக்கொண்டு இருக்கிறது, சமூக நீதிக்கான காவலர்கள் மிகவும் பொறுமைசாலிகள் என்பதற்கு கி.வீரமணி அவர்கள் நமக்கு முன்பு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார். இவர் முன்பு நான் நிற்பதற்கே பெருமைப்படுகிறேன், விருதிற்கான நன்றிகள் எல்லாம் மிகவும் உயர்ந்தவை; அது சொற்களில் அடங்காது. (கைதட்டல்).

மும்பையில் அமைச்சர் ஜகன்புஜ்பல் 11.1.2014

Read more: http://viduthalai.in/e-paper/73545.html#ixzz2qEjMrtD1

தமிழ் ஓவியா said...

இந்நாள்... இந்நாள்....



பகுத்தறிவுச் சிந்தனையாளர் திராவிடர் இயக்கத்தின் தீரர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் மறைவு (2000).

நாவலர் கடைசியாகக் கலந்து கொண்ட நிகழ்ச்சி பெரியார் திடலில் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த புத்தாயிரம் தொடக்க விழாவில்தான் (31.12.1999 நள்ளிரவு).

Read more: http://viduthalai.in/e-paper/73520.html#ixzz2qEjoQalr

தமிழ் ஓவியா said...


முத்தமிழ்ப் பொங்கல்


பொங்கல் விழா! முத்தமிழ்ப் பொங் கல் விழா! முப்பால் பொங்கல் விழா! ஆரியத்தால் புராண மத மூட இதி காசத்தால், முதலாளித்துவத்தின் ஆணவ அடக்கு முறைகளால் தீண்டப் படாத, மங்காத தமிழர் பண்டைத் தனித் தமிழ் வாழ்வின் நந்தாத நறுஞ் சின்னம்! தனித் தமிழ் விழா! தன்மான விழா!

உழவர் விழா! நிலத்தின்மீது காத லற்று, அதனைப் பிறர் உழுவித்துத் தான் தன்மானமற்று, உழையா உழைப்பை உண்ணும் நில முதலாளி அல்லது ஜமீன், மிராசுதாரர் ஆகிய முதலாளித்துவக் கடவுளால் படைக் கப்பட்டு முன்னிருந்த, தானே தன் நிலத்தின் உரிமையாளனாய், தானே அதைத் தனித் தமிழ்க் காதலனாய் உழுது உழைத்துப் பயிரிடுபவனாய், தானே அதன் இன்பமும் பயனும் நுகர்பவனாய், தானே அதன் பண்டம் பரிமாறும் வணிகனாய், தானே ஊராளும் குடியரசன் குடிமொழிக்குரிய குடியாட்சி உரிமையாளனாய், தானே அக்குடியரசன் குடிப்படையின் வீரனாய், தன் குடும்பத்தின் தொழுகைக் கூட மாகிய கோயில் வீடு அல்லது அரங்கில் தானே தன் குடும்பத் தலைவனாய் வழிபாடாற்றும் வழிபாட்டுத் தலை வனாய் வாழ்ந்த பண்டைப் பொது வுடைமைப் பெருந்தமிழன் காலத் திலிருந்து இன்றுவரை பண்பு மாறாது கொண்டாடப்பட்டு வரும் உழவர் விழா! வேளாளர் விழுத் தமிழ் விழா! பொதுவுடைமைப் பண்பாட்டு விழா! தனித் தமிழர் திராவிடப் பெருவிழா!

யானை எருத்தம் பொலியக் குடை நிழற் கீழ் சேனைத் தலைவராய் வள்ளு வப் பெருமகன் தன் திண்டோள்கள் இரண்டும் புடைக்க, மகிழ்ச்சி முகத்தில் பெருக்கெடுத்து இருகண்வழி ஓடி ஒளிவீச, குன்றென நின்று கறங்கும் இரு முரசங்களை யானையின் இருபுறமும் ஞாற்றிக் கால்களால் அவற்றைத் தாங்கிக் கையிலுள்ள குணில்களால் புடைத்து, மன்னன் வளம் பாடி, மழை வளம், புகழ்பாடி, கொண்டல் வண் ணன் மழைவேந்தனுக்கு விழாவயர்வீர் மதுரை மன்னரீர்! என்று முழங்கி விழா வாட்டழைத்த பண்டைத் தமிழர் இந்திர விழா எங்கே! எங்கே! அது பொங்கல் விழாவின் பொங்கலில்தான் புதைந்து எஞ்சியுள்ளது! செஞ்சிலம்பார் சிலப்பதிகாரமும் பொன்மணியார்க்கும், வண்ண மணிமேகலையும் முழங்கும் இந்திர விழாவை நாம் இழந்தோம், இதனிற் கலந்தோம்!

வெள்ளைத் தீவைப் படையெடுத்து அதனில் வெண்கடப்பந் தார்சூடிக் கடம்பமரத் தடியிருந்து மேல்கட லாண்டு அக்கடலில் கலஞ்செலுத்திய மேல் நாட்டு வணிகரைச் சூறையாடிய கடம்பன் என்ற கடற்கொள்ளை இனத்தைத் தவிடுபொடியாக்கிய சேரரின் கடற்காவலனாய் மங்களூரைத் தலைநகராகக் கொண்டு தென் கன்னடத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட வேளிர் கோமான் நன்னன் தன் பெயரிட்டு மதுரையில் நடத்திய திருவோண விழா எங்கே! எங்கே! அத்தமிழர் தமிழ் விழா மறைந் தது! அது இந்தப் பொங்கல் விழா வில்தான் எஞ்சி உறைந்து கிடக்கின் றது.

தமிழகத்தில் மறைந்த திருவோண விழா பண்டைச் செந்தமிழ்ச் சேரல நாடான கேரள நாட்டில் இன்றும் தேசியத் திருவிழாவாக, மலையாள நாட்டுத் திராவிடத் திருநாளாகக் கொண்டாடப்பட்டுத் தான் வருகிறது. இன்றைய தமிழ் நாட்டுத்திராவிட இயக்கத்தார் கண்களுக்கு இன்னும் புலப்படாமல்! அது மாவலி மன்னன் தென்னாடெங்கும் ஒரே சக்கரவர்த் தியாய், ஆரியம் தென்னாட்டில் புகுமுன், ஒரு மொழி வைத்து ஒரு முத்தமிழ் இலக்கியம் கொண்டு ஒரு குல மக்களாய் ஒரு பெருங்கடவுள் போற்றி ஆண்ட காலத்தின் நினைவு நாள். ஆரியம் புகுந்தது குள்ளமான வாமன முனி உருவில், சூழ்ச்சி செய்தது,தானங் கேட்கும் உருவில்!

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்

என்ற வள்ளுவர் பண்பின்படி, வஞ்சனை என்று தெரிந்த வாமனன் சூழ்ச்சியில் தானேசென்று சிக்கி அழிந்தான் ஆனால் அவன் மாவலி. சிரஞ்சீவி, அழியா அறிவுருவினன். அவன் கூறினான், தென்னாட்டவரே! நீவிர் இன்று சீர்குலைகிறீர். ஆனால் பின்னால் சீர்ப்படுவீர். அதுகாறும் என் நினைவாக ஓணவிழாக் கொண்டாடுக. ஒருகாலம் வரும், ஓண விழாத்தோறும் நாடு உலா வரும் யான் ஒரு ஓண நாளில்மீண்டுந் தென்னாட்டை ஆள வருவேன் என்று. அதனைப் பாடி ஆணும் பெண்ணும் ஆரியமின்றி, ஆரிய வினை முறையின்றிக் கொண்டாடி வருகின்றனர் மலையாளத் திராவிடர்.

மாவலியின்பின் அவன் பிள்ளைகள் ஐவர், பாண்டியன், சோழன், சேரன், கருநாடன், ஆந்திரன் போராடி அய்ந்தரசராய் நாளடைவில் ஐந்து மொழி நாடுகளாண்டனர். சாதி சமய மூடம் புகுந்தது.

இத்திராவிடத் திருநாளுக்கும் பொங்கல் நாள் உடன் பிறந்த தங்கை நாள். பொங்குக பால்! பொங்குக தேன்! பொங்குக வருங்காலத் திராவிடப் பொங்கல்!

(திராவிடத் திருநாள் கலைமன்றம் சென்னை-1)

Read more: http://viduthalai.in/page-2/73526.html#ixzz2qEk39uCK

தமிழ் ஓவியா said...


தை தக்கா தை தக்கா!


தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் அறிக்கை வெளியிட்டதற்கு அஇஅதிமுக சார்பில் ஏதாவது பதில் சொல்ல வேண்டுமல்லவா! அதனால்தான் தை தக்கா தை தக்கா! என்று குதிக்கிறது. அக்கட்சியின் அதிகாரபூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். ஒரு பதில் எழுத முயற்சித்துள்ளது. குளிக்கப் போய் சேற்றில் விழுந்த கதை தான் அது.

திமுக தலைவர் கலைஞர் அறிக்கையில் தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதற்கு தமிழ் அறிஞர்களும், தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்களும் கூறிய கருத்துக்களை எடுத்துக் கூறியிருந்தார் (முரசொலி, 11.1.2014).

ஆனால் நமது எம்.ஜி.ஆர். ஏடு எவற்றை ஆதாரமாக எடுத்துக் காட்டியுள்ளது? தேவி பாகவதம், புராணங்கள், இதிகாசங்கள் இவற்றை எடுத்துக் காட்டியுள்ளது (புராணங்கள் வரலாறு அல்ல என்கிற அடிப்படை கூடத் தெரிய வில்லையே, அந்தோ பரிதாபம்!).

பிர்மா, விஷ்ணு என்னும் இந்து மதக் கடவுள் களையும் துணைக்கழைத்துள்ளது. (இதற்குப் பெயர்தான் இந்துத்துவா என்பது)

ஆரிய மாயை பற்றி அறிஞர் அண்ணா எழுதியுள்ளதைப் படித்தால் இந்த ஆரிய மாயையின் அடிப்படை அப்பட்டமாகப் புரியும்.

பூணூலின் மகத்துவத்தைப் பற்றி பிரஸ் தாபிக்கும் அண்ணா திமுக ஏடல்லவா! வேறு எப்படித் தான் எழுதும்?

ஆரியம் ஒரு நடமாடும் நாசம் திராவிடத் தோழா வேண்டாம் அதனிடம் பாசம்

அதனால் வருமே அந்தகக்காசம்!

- அறிஞர் அண்ணா (ஆரிய மாயை நூல்)

Read more: http://viduthalai.in/page-2/73534.html#ixzz2qEkcA9OW

தமிழ் ஓவியா said...

சுய விருப்பத்துடன் மதம் மாற உரிமை உண்டு! பெண் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு!!

மதுரை, ஜன. 12- தூத்துக்குடி மாவட்டம், காயல் பட்டினம் பகுதியைச் சேர்ந்த கீதா என்பவர் தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவு பிறப்பித்தது.

கீதா தனது மனுவில், எனது மகள் பவித்ராவை (வயது 19), தபிவீத் என்பவர் கடத்திச் சென்று கட்டாயப் படுத்தி இஸ்லாமிய மதத்துக்கு மாற்றம் செய்து திரு மணம் செய்து கொண்டார். மகளை மீட்க காயல் பட்டினம் காவல்துறையினருக்கு உத்தரவிட வேண் டும் எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இம்மனு விசாரணைக்கு வந்த போது காவல்துறை யினர் பவித்ராவை ஆஜர்படுத்தினர். அவரிடம் விசா ரித்த பிறகு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு. மனு தாரரின் மகள் பவித்ராவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் சட்ட விரோதமாக தங்கவைக் கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும் தனது விருப்பத்தின் பேரிலேயே இஸ்லாம் மதத்துக்கு மாறி திருமணம் செய்து கொண்டுள்ளார். இஸ்லாம் மதத்துக்கு மாற யாரும் கட்டாயப்படுத்த வில்லை என்றும் தெரிவித்துள்ளார். இது தனது பெற் றோருக்கும் தெரியும் என தெரிவித்துள்ளார்.

பவித்ரா திருமண வயதை அடைந்தவர் என்பதால் அவர் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ள உரிமை உள்ளது. மேலும் ஒருவர், தான் விரும்பும் மதத்துக்கு மாறுவது என்பதும் சட்டப்பூர்வ உரிமை யாகும். எனவே திருமணம் மற்றும் மதமாற்றம் ஆகிய விஷயங்களில் தவறு காண அடிப்படைக் காரணம் ஏதுமில்லாததால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

- இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது

Read more: http://viduthalai.in/page-5/73527.html#ixzz2qElHot2d

தமிழ் ஓவியா said...


சிறகை விரி - செவ்வானமும் சிறிதாகும்!

நாள்தோறும்
தேதியைக்
கிழிக்கும்
நண்பனே, நண்பனே!

புதிய தேதியில்
புத்தாக்க
ஓவியத்தைத்
தீட்டு!

நேற்றைக்கு
விடுமுறை
இன்றைக்குப்
புதுநடை!

உன் வீட்டில்
பஞ்சாங்கம்
இருக்கிறதா?
போ(க்)கியில் எரி!

புராணப்
புத்தகங்கள்
உண்டா?
பொங்கலுக்கு
விறகைத் தேடாதே!

சாமிப் படங்கள்
உண்டா?
சவரம் செய்யத்
தேவைப்படும்!

மிக மிகப்
பழைமையா?
மிக மிகத் தேவை
திருத்தம் - இது
பெரியார் கொடுத்த
அழுத்தம்!


காகித ஊருக்குக் கரையானா
பேருந்து?

காலத்தை வெல்ல
கடவுளா
படை மருந்து?

சனி சரியில்லை
யென்று
வெள்ளியைத்
தேடினால்
நட்டம் அய்ந்து
நாட்கள்!

செவ்வாய்
தோஷமென்றால்
செவ்வாய்க்கிரகம்
செல்பவன்
சிரிப்பானே!

உன் காலை
உன் கையாலா
கட்டுவது?
உள்ளத்தில்கோழை
குடிகொண்டால்
உன் பகைவன்
நீயேதான்!

செவ்வாயன்று
பொங்கல்!
சிரித்தபடி
பொங்கலிடு!

சிறகைவிரி
செவ்வானமும்
சிறிதாகும்!
பொங்கலோ
பொங்கல்!

- கவிஞர் கலி.பூங்குன்றன்

Read more: http://viduthalai.in/page-1/73563.html#ixzz2qJwYTlx5

தமிழ் ஓவியா said...


சிவத்தம்பி பார்வையில் திராவிடர் இயக்கம்


சமுதாய மாற்றத்தைக் கொண்டுவருவதில் கலைப்படைப்புக்கு முக்கியப் பங்குண்டு என்பதனைத் திராவிட இயக்கத்தினர் நன்கு அறிந்திருந்தனர். எனவே மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளைக் கலையாகவும் இலக்கிய மாகவும் படைக்க விரும்பினர்.

தாங்கள் கொண்ட கொள்கைகளைக் குறிப்பாக மேடைப் பேச்சின் வாயிலாகவே மக்களிடம் சேர்ப்பித்தனர். இருப்பினும் இவர்கள் திரைப்படம், கதை, கட்டுரை, நாடகம் போன்றவற்றின் வழியாகவும் கொண்டு சென்றனர். இவர்கள் மேற்கொண்ட சமூகச் சீர்திருத்தத்திற்கு இலக்கிய வடிவங்கள் பெரிதும் துணை நின்றன.

-கா. சிவத்தம்பி
தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், பக்கம் 83-90

பார்ப்பனர் அல்லாதார் இயக்கம்!

தென்னிந்திய வரலாற்றில் இந்த நூற்றாண்டின் மிகச் சிறப்பான நிகழ்ச்சி, திராவிட இயக்கம் என்று கூறப்படுகின்ற பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தின் எழுச்சியும் அதன் வளர்ச்சியுமாகும். இந்திய வரலாற்றில் முதன் முறையாக மதமோ, இனமோ அன்றிச் சாதியே பெருஞ்சக்தியாக அரசியலுள் நுழைந்தது.

திராவிட இயக்கம் இந்திய வரலாற்றில் ஓர் அண்மைக்கால அத்தியாயமெனினும் இவ்வியக்கத்தின் தொடக்கம் குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. இப்போது இதுஒரு வரலாற்று ஆய்வுப் பொருளாகவே ஆகிவிட்டது.

- ஏ.என். சட்டநாதன்,
தமிழ்நாட்டில் திராவிட இயக்கமும் அதன் பாரம்பரியமும், ப.3

Read more: http://viduthalai.in/page2/73564.html#ixzz2qJwvhiuP

தமிழ் ஓவியா said...

ரேகை சாஸ்திரம்



ரேகை சாஸ்திரம் பார்த்துக் கொள்ளச் சொல்லி ஐயர் வேலப்பரை வேண்டினார். வேலப்பர், ஐயரை உள்ளே அழைத்துத் தெருக்கதவைச் சாத்திக் கொண்டு கைகழுவிக் கொண்டு வருவதாய் அறைக்குச் சென்று பின் ஐயர் எதிர் உட்கார்ந்திருந்தார்.

ஐயர்: கையை விரித்து நீட்டுங்கள்

வேலப்: நன்றாகப் பார்த்துப் பலன் சொல்லுங்கள் (உள்ளங்கையை வேலப் பர் காட்டினார். அதில் சுயமரியாதைக் காரன் என்று எழுதியிருந்தது)

ஐயர்: (அதைப் பார்த்ததும்) நீர் தெருக்கதவைச் சாத்திய காரணம் என்ன?

வேல்ப்: நான் காரணமில்லாமல் தெருக்கதவைச் சாத்துகிறவன் என்று ரேகை சொல்லுகிறதோ?

கடவுள் ஆவேச சக்தி

தாய்: என் மகளுக்கு வெகு நாளாகியும் பிள்ளை இல்லை.

சாமி: நீ ஒரு பொருளைப் பற்றிக் கேட்கின்றாய். ஒரு நாள் அல்லது ஒரு மாசம் அல்லது ஒரு வருஷத்தில் கிடைக்கும்.

தாய்: (சாமிக்குப் பக்கத்திலிருந்த சிஷ்யையை நோக்கி) இதென்ன! சாமி என்னமோ சொல்லுகிறதே!

சிஷ்யை: உரக்கச் சொல்ல வேண்டும். சாமிக்குக்காது செவிடு.

- புதுவை முரசு விசேஷ அநுபந்தம்

Read more: http://viduthalai.in/page2/73576.html#ixzz2qJxZK0tI

தமிழ் ஓவியா said...

ரேகை சாஸ்திரம்



ரேகை சாஸ்திரம் பார்த்துக் கொள்ளச் சொல்லி ஐயர் வேலப்பரை வேண்டினார். வேலப்பர், ஐயரை உள்ளே அழைத்துத் தெருக்கதவைச் சாத்திக் கொண்டு கைகழுவிக் கொண்டு வருவதாய் அறைக்குச் சென்று பின் ஐயர் எதிர் உட்கார்ந்திருந்தார்.

ஐயர்: கையை விரித்து நீட்டுங்கள்

வேலப்: நன்றாகப் பார்த்துப் பலன் சொல்லுங்கள் (உள்ளங்கையை வேலப் பர் காட்டினார். அதில் சுயமரியாதைக் காரன் என்று எழுதியிருந்தது)

ஐயர்: (அதைப் பார்த்ததும்) நீர் தெருக்கதவைச் சாத்திய காரணம் என்ன?

வேல்ப்: நான் காரணமில்லாமல் தெருக்கதவைச் சாத்துகிறவன் என்று ரேகை சொல்லுகிறதோ?

கடவுள் ஆவேச சக்தி

தாய்: என் மகளுக்கு வெகு நாளாகியும் பிள்ளை இல்லை.

சாமி: நீ ஒரு பொருளைப் பற்றிக் கேட்கின்றாய். ஒரு நாள் அல்லது ஒரு மாசம் அல்லது ஒரு வருஷத்தில் கிடைக்கும்.

தாய்: (சாமிக்குப் பக்கத்திலிருந்த சிஷ்யையை நோக்கி) இதென்ன! சாமி என்னமோ சொல்லுகிறதே!

சிஷ்யை: உரக்கச் சொல்ல வேண்டும். சாமிக்குக்காது செவிடு.

- புதுவை முரசு விசேஷ அநுபந்தம்

Read more: http://viduthalai.in/page2/73576.html#ixzz2qJxZK0tI

தமிழ் ஓவியா said...

வானலோகத்தில் காற்றே இல்லை

வானலோகம் சென்றுவிட்டால், ஊர்வசி, ரம்பை சகிதம் சுகமாய் இருக்க லாம் என்று நாம் சொல்லுகிறோம். அங்கு மூச்சுத் திணறும்படி காற்றே இல்லை என்று ஐரோப்பியர்கள் சொல்லுகிறார்கள்!

குரு பூஜை தான் நடக்கிறது

புத்தர்களை ஒழிக்க கடவுள் சங்கரராக அவதரித்தாராம். சங்கரருக்கு இப்போது, குருபூஜைதான் நடக்கிறது. 40 - 50 கோடி புத்தர்கள் வாழ்கிறார்கள்.

- பாரதிதாசன் கதைகள்

என்ன அர்த்த புஷ்டி

வருந்தி அழைத்தாலும் வாராது வாரா!

பொருந்துவன போமின் என்றாற் போகா

என்ன அர்த்த புஷ்டி! இந்த வரிகளைப் பொன் தகட்டில்

செதுக்குமுன், ஈய எழுத்தால் அச்சடித்து விட்டார்கள்.

- பாரதிதாசன் கதைகள்

மோக்ஷ வழி காட்டுங்கள்

அடிகள்: பணம் கொடுங்கள், இதோ மோக்ஷம்.

குடிகள்:எப்போதும் இது ஓர் கவலையா? வேண்டிய பணம் மொத்த மாய் கொடுக்கிறோம். மோக்ஷத்துக்கு முன்னே போய் வழிகாட்டித் தொலை யுங்கள்.

- சிரிக்கும் சிந்தனைகள்

அவர்கள் நினைப்பது சரி

சர்வ வல்லமையுள்ள கடவுளுக்குப் பரிந்துகொண்டு கோபிக்கும் தொண் டர்கள். அந்தக் கடவுள் பேரால் நடக் கும் அட்டூழியங்களைக் கண்டிப்ப வரைப் பற்றிப் போலீஸின் உதவியை நாடுவதுண்டு. கடவுளைவிடப் போலீஸ் காரன் அதிக வல்லமையுடையவன் என்று அவர்கள் நினைப்பது சரி.

- சிரிக்கும் சிந்தனைகள்

அழிப்பது அரிது தான்

ஒன்றை ஆக்குதல் அரிது, அழித்தல் எளிது என்பது முதுமொழி. இது எல்லா விஷயத்திலும் சரியில்லை. கடவுள் பெயரால் வெகு எளிதாகப் புளுகி வைத் துள்ளார்கள். அவைகளை அழிப்பது மிக அரிதாக முடிகிறது.

- சிரிக்கும் சிந்தனைகள்

ஒற்றுமைக்கு வழியேது

பிற நாட்டினர் இயற்கை முறையில் தமது முகப்பொலிவை உண்டாக்கி, உருவத்திலும் சமூக ஒற்றுமை கொண்டிருக்கின்றனர். நம் நாட்டினர், சரக்குக் கேடாயிருந்தாலும் அதனுடைய டப்பி யை அழகு படுத்துவது போல் வற்றிய முகத்தில் நாமம், விபூதி முதலி யவைகளை எழுதிக் கொண்டு சமூக பேதத்தை வளர்த்துக் கொண்டு போகின்றார்கள்.

- சிரிக்கும் சிந்தனைகள்

Read more: http://viduthalai.in/page2/73576.html#ixzz2qJyNzFhm

தமிழ் ஓவியா said...


தமிழர் திருநாளில் வெளியிடுவோம் புதிய சமத்துவப் புத்தகம்!


- கவிஞர் கண்ணிமை

இலை, தழை

கிழங்கு, காய்கனிகள், நீர்

இவைகளே குமரிக் கண்ட

முதல் மனிதனின் உணவு!

நிலத்தின் கன்னிமை கழிய உழுது

விந்து வியர்வையை விதைத்தான்!

அகர முதல் னகர இறுவாய்

அனைத்தும் பெற்றுக் கொடுத்தது நிலம்!

உணவுப் பழக்கம்

தலைமுறை நமக்குத்

திரட்டிக் கொடுத்த திரு!

பூமிக்குத் தமிழன்

கொடுத்த பரிசு

புட்டும் தோசையும்!

கோடை வெயிலுக்குக்

கொங்கு மண்டலம்

கொடுத்த கொடை

கம்பங் கூழ்!

கிண்டிய கழியும், கீரையும்

ஆன சோறு

உமிழ்நீர்ச்சுரப்பி மகிழ்ந்து

ஊற்றெடுக்கும்!

நோய் நீங்கி ஆயுள் நீளும்!

சிக்கிமுக்கிக் கல்லைக்

கண்டுபிடித்ததே

உணவின் பொற்காலம்!

அறிவுஆழ்ந்த அகன்றபோது

உணவு

அறுசுவையானது!

தமிழ்ச்சித்தன்

உணவே மருந்து என்றான்!

ஈன்றாள்பசி குழந்தைகளின் பசி

மூத்தோர் பசி

இவை போக்கும் மனிதனைக்

கையெடுத்துக் கும்பிடலாம்!

விருந்தோம்புதல் என்ற

சொல்லுக்கு ஈடான வினைச்சொல்

உலகமொழிகளில் இல்லை!

கைகுலுக்குதல் கட்டித் தழுவுதல்

மனிதகுலத்தின்

பண்பாட்டுப் பதிவுகள்!

ஒழுக்கக் கட்டமைத்தபோது

வானுயர் தோற்றம்

வசப்பட்டது!

வழிகிற கண்ணீரைத்

துடைக்கும் விரல்கள் இருந்தால்

அது

வாழக் கிடைத்த கொடை!

கல்லைக் கடவுளாக்க

சிலை வடிக்காதே!

மனிதனை வள்ளலாக்கி

வாழவை!

புகழை நிறுத்திவிட்டுப்

போக வேண்டும் என்றால்

அறம்செய்!

வெடித்துச் சிதறிய

வன்முறைகளால்

மரண வாசலில் கிடக்கிறது

மனிதம்!

அன்பும் பரிவும்

விரவிய சொற்களைக் கொண்டு

தமிழர் திருநாளில்

வெளியிடுவோம்

புதிய சமத்துவப்

புத்தகம்!

Read more: http://viduthalai.in/page3/73565.html#ixzz2qJyfccmY

தமிழ் ஓவியா said...


தமிழ்ப் புத்தாண்டு முதல் நாள்


தை முதல் நாள் பொங்கல் என்று

கட்டியம் கூறுதற்கு ஆங்கிலப் புத்தாண்டு

கொட்டிய முழக்குடன் வரும் நாள் இன்று!

நன்முறைகள் நாளும் மேற்கொண்டு

வன்முறையை வெற்றி கொள்ளும் நாளாக,

பன்மொழி மாந்தர்க்கும் இந்நாள் அமையட்டும்!

எம்மொழி இனிதென்றும் அது எமக்கு உயிர் என்றும்,

எல்லோர்க்கும் பெருமை கொள்ள உரிமை உண்டு

வல்லோராயிருப்பதாலே பிற மொழி தாழ்த்தல் தீது!

ஆண்டவன் படைப்பிலே அனைவரும் சமமென்றுரைத்து

அறியாத மக்களை அடிமை கொள நினைத்தல் அதனினும் தீது!

கொள்கையொன்று உரைத்து, கொடியும் உயர்த்தி

கோடிப் பணம் எதிரே கண்டவுடன்

நாடி ஓடி நமஸ்கரித்து நல்ல விலைக்குத் தன்னை விற்று

நாளைக்கு ஒரு வேடமெனப் புனைந்தாடினால்

மனிதனே, அது உன் மானத்தை விற்பதற்குச் சமமான தீதாம்!

- முத்தமிழ் அறிஞர் கலைஞர் 1.1.2009
(குறிப்பு தமிழ்ப் புத்தாண்டு பிறக்குமுன் வரும் ஆங்கிலப் புத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டு வருகைக்குக் கட்டியம் கூறுகிறதாம்!)

Read more: http://viduthalai.in/page4/73566.html#ixzz2qJzKlVS6

தமிழ் ஓவியா said...

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு

தமிழ் ஆண்டைப் போல சிந்துச் சமவெளி மக்களுக்கு ஆண்டுப் பிறப்பு தை மாதத்திலேயே தொடங் கிற்று. சுமேரியருக்கு இராசிகள் பத்தாயிருக்க. சிந்துச் சமவெளி மக்களுக்கு எட்டேயிருந்தன. இத னால் சிந்துவெளி நாகரிகத்தின் பழைமை கி.மு. 5610 வரை எட்டு வதாக தெரிகிறது.

இது சுமேரிய நாகரி கம் பிறப்பதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட கால மாகும். மனித நாகரிகத்தின் பிறப் பிடமும், வளர்ப்புப் பண்ணையும் எகிப்தோ, பாபிலோனோ அல்ல சிந் துவெளியும் தென்னாடுமே என்பதை, இது அறுதியிட்டுக் காட்டுகிறது

(தென்னாடு கா. அப்பாத்துரை பக்கம் 48)

Read more: http://viduthalai.in/page4/73569.html#ixzz2qK0KfNyI

தமிழ் ஓவியா said...

கல்கி கூறும் மூடநம்பிக்கை

கேள்வி: இந்த வருஷம் தியாகராஜ ஆராதனை விழாவில் தங்களைக் கவர்ந்தது எது?

பதில்: டி.வி. ஒளிபரப்புக்கு சேட்டிலைட் கிடைக்கக் காத்திருந்து ராகு காலத்தில் பஞ்சரத்ன கிருதிகள் பாடியதுதான்; - மூடநம்பிக்கையை விஞ்ஞானம் வென்றது.

(நன்றி: கல்கி)

Read more: http://viduthalai.in/page4/73569.html#ixzz2qK0SF0rS

தமிழ் ஓவியா said...

கம்பன் தொண்டு

பொன்னும் மாமணியும் புனை சாந்தமும்

கன்னி மாரொடு காசினி ஈட்டமும்

இன்ன யாவையும் ஈந்தனள் அந்தணர்க்கு

அன்னமும் தளிர் ஆடையும் நல்கினாள்.

தன் மகன் இராமனுக்கு முடிசூட்டப் போவதைக் கேட்டுக் கோயிலுக்குப் போய்ப் பார்ப் பனர்க்குத் தானமாகப் பொன் னையும் பெருமை பெற்ற மணிகளையும், பூசுதற்குரிய சந்தனத்தையும், இளம் பெண் களையும், பல ஊர்களையும் இவை போன்றவைகளையும், சோற்றையும் ஆடை களையும் அளிக்கின்றாள்.

இராமாயணத்தைத் தமிழாக்கிய கம்பன், தமிழ்ப் பண்பாடு கெடாமல் - தக்கவாறு மாற்றியமைந்துள் ளான் என்கின்றனர்.

எங்கே மாற்றியமைத்தான்? - பார்ப்பானுக்கு இளம் பெண்களையும் கொடுப்பதென்பது தமிழர் பண்பாடா? - அந்த இழி செயல் ஆரியர்க்கு ஏற்கும். அதை அப்படியே தமிழர் முன்வைக்கும் கம்பனின் செயல் எத்தகையது? எண்ணுக!

- புரட்சிக் கவிஞர் - (குயில் 28.10.1958)

Read more: http://viduthalai.in/page4/73572.html#ixzz2qK1JU2qH

தமிழ் ஓவியா said...


இன்பவீடு


தலைவி:

பொற்கோலப் பானையிலே மஞ்சள் கட்டிப்
பொங்கியநற் சோற்றினிலே நெய்யை யூற்றிக்
கற்கண்டு, தேன் பருப்பு, வெல்லம் இட்டுக்
கலந்துவைத்தேன் அத்தானே! உண்ண வாரீர்!

தலைவன்:

சொற்கரும்பே! என்னன்பே! மக்களைத்தான்
சோறுண்ண அழைத்தனையோ? அவர்க ளெங்கே?

தலைவி:

நற்கரும்பின் சுவைசுவைத்துக் கொண்டிருப்பார்
நானழைத்து வருகின்றேன்! இருங்க ளிங்கே!
(தலைவி மக்களை அழைத்து வந்தாள்)

பெண்:

அப்பா! நம் செந்தமிழில் வளரு கின்ற
ஆரியத்தை மறைமலையார், களையும் செய்கைக்(கு)
ஒப்பாக அண்ணனின்று கரும்பின் தோகை
ஒருவெட்டில் விழவைத்தார். மேலும் அந்தத்
தப்பான ஆரியத்தின் முதுகுத் தோலைத்
தாமுரித்தல் போற்கரும்பின் பட்டை நீக்கிக்
கைப்பகற்றித் தனித் தமிழைத் தருதல் போலே
கரும்புவெட்டித் தந்திடநான் சுவைத்திட்டேனே!

மைந்தன்:

தன்மானக் கொடிகட்டி வீட்டின் உச்சி
தனில்உயர்த்திப் பறக்கவிட்டேன்; வந்துபாரீர்!
என்மானங் காத்ததமிழ்த் தாய்க்கிந் நாளில்
என்படையல், எப்படிநீர் சொல்லும், அப்பா!

தலைவன்:

பொன்மானே! நம்மக்கள் இருவரும்தான்
புவிபுகழும் பாவரசி, வீர னென்று
பின்நாளில் இலங்கிடுவார் என்று காணப்
பெருமகிழ்வால் என்நெஞ்சம் விரிந்த தன்றே!

தலைவி:

தமிழ்ச்சுவையில் திளைத்திருக்கும் அத்தானே! நான்
தரும்பொங்கற் சுவைகாண எழுந்துவாரீர்!
எமதருமை மக்காள்நீவிர் எழுந்துவாரீர்!
இனியவெல்லச் சோறுண்டு மகிழலாமே!
(உணவுண்ணச் சென்றார்)

தலைவன்:

நமதருமைப் பிள்ளைகட்கும் படைத்துச் சற்று
நறுநெய்யும் ஊற்றிவிட்டு நீயும் உட்கார்!
(உண்ணும்போது)

மிகவினிது! மிகவினிது! வெல்லச்சோறு
மேலுமொரு சுரண்டியிட்டுக் கொள்ளுவோமே!
(உணவுண்டுகூடம் சென்றார்)

வாழ்வினியே சுவைதந்தாய்! இன்பந்தந்தாய்!
வடிவழகே! நல்லசுவைப் பொங்கலிட்டாய்!
யாழுடனே தமிழிசையைச் சேர்த்து நல்கின்
அதுதானே பேரின்பம்! தொடங்குவாயே!

தலைவி:

யாழுடனே தமிழிசைக்கும் முன்னர் என்றன்
அகத்தெழுமோர் அய்யத்தைத் தீர்த்துவைப்பீர்!
வாழ்வளிக்கும் பொங்கலினை மறந்துவிட்டு
வண்டமிழர் தீவாளி கொண்ட தேனோ?

தலைவன்:

ஆரியத்தின் சூழ்ச்சியினால் தமிழர் இந்நாள்
அவர்க்கிழிவு தருநாளைத் திருநாள் என்று
பாரினிலே கொண்டாடித் தம்மா னத்தைப்
பறிகொடுத்து பெறவுழைக்கும் இராம சாமிப்
பெரியாரின் தன்மான இயக்கம் இன்று
பேரியக்க மாய்வளர்ந்து செய்யுந்தொண்டு
பெரு நாட்டில் விழிப்பருளும்! பாடுவாயே!

தலைவி, யாழெடுத்துப் பாடினாள்:
பொன்னாய் விளைந்த நெல்லைக் குற்றி
அன்னம் ஆக்கிப் படைக்கும் பொங்கல்
அன்னம் ஆக்கிப் படைக்கும் பொங்கல்
என்னே நல்கிற் றின்பம் இன்பம்!

இன்னா நீக்கிக் கைகள் நிறையப்
பொன்னாய்க் குவிக்கும் பொங்கல், நன்னாள்
பொன்னாய்க் குவிக்கும் பொங்கல் நன்னாள்
என்னே நல்கிற் றின்பம் இன்பம்!

தமிழர் வாழ்வில் மகிழ்வே தோன்ற
அமிழ்தாய் இன்பம் ஆக்கும் பொங்கல்
அமிழ்தாய் இன்பம் ஆக்கும் பொங்கல்
எமக்கே நல்கிற் றின்பம் இன்பம்!

- நாரா. நாச்சியப்பன்
(பொன்னி பொங்கல் மலர் 1948)

Read more: http://viduthalai.in/page4/73573.html#ixzz2qK1YLYLn

தமிழ் ஓவியா said...


கும்பகோணம் மகாமகம் ஓர் எச்சரிக்கை


கும்பகோணத்தில் சுற்று வட்டாரத்தில் உள்ள கேடிகள், பிக்பாக்கெட்டுகள் ஒரு மாதத்துக்கு முன்னரே கை அரிக்குதம்மா என்று பேசிக் கொள்வார்களாம். லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடங்களில் இவர்கள் கை வரிசையைக் காட்டுவது சுலபமாயிற்றே...

மற்றும் கூட்டத்தைக் சாக்காக வைத்து பெண்களிடம் சில்விஷமம் செய்யும் இடி ராஜாக்கள்.

நன்றி: கல்கி 9.2.1992

Read more: http://viduthalai.in/page4/73574.html#ixzz2qK20YMeN

தமிழ் ஓவியா said...

செம்மொழித் தமிழில் சிரித்திடும் பொங்கல்!

-பகுத்தறிவுப் பாவலர் தென்மொழி ஞானபண்டிதன்

செங்கதிர் ஒளியில் திகழும் கீழ்த்திசை வங்கக் கடலலை வரிசையாய் வணங்கும்

பொங்கல் திருநாள்! பூமியின் பெருநாள்!

பசும்புல் குளிர்மை பாரெலாம் பரவச்

செம்மொழித் தமிழில் சிரித்திடும் பொங்கல்!

தமிழர் தம்மைத் தலைநிமிர்த் திடும் நாள்!

பெருமைக் குரியதாய்ப் பெரியார் உரைத்த

அமுதப் பொங்கல்! அனைத்துயிர்க் கெல்லாம்

இனியபுத் தாண்டின் இயற்கைப் பொங்கல்!

இன்பந் தரும்இப் பொங்கல் திருநாள்

உழவர் உழைப்பை உலகோர்க் குணர்த்திக்

கழனிச் செந்நெல் கரும்பு மஞ்சள்

விளைவைக் காட்டும் விடியல் பொங்கல்!

அழகுப் பெண்கள் குலவை ஒலிக்க,

பழகும் சிறுவர் முதியோர் பாட,

இளைஞர் வீரம் கவிஞர் வாழ்த்தக்

களைப்பெலாம் போக்கித் திளைத்திட வைத்தே

என்றும் மகிழ்வைத் தருவதால்

நன்றியின் பொங்கலை நாம்வாழ்த் துவமே!

Read more: http://viduthalai.in/page4/73574.html#ixzz2qK2BRjU4

தமிழ் ஓவியா said...


முட்டை


பி.ஜே.பி. ஆளும் மத்திய பிரதேசத்தில் ஒரு சர்ச்சை என்ன தெரி யுமா? முட்டை சைவமா? அசைவமா? என்பதுதான் அந்தப் பிரச்சினை.

பால் சைவமா? அசை வமா? என்பதை முதலில் முடிவு கட்டிக் கொண்டு, இது பற்றிய சர்ச்சையில் குதிக்கலாமே?

மதிய உணவுத் திட்டம் என்று வந்தால் அதற்குத் தமிழ்நாடே வழிகாட்டி; வெள்ளுடை வேந்தர் பிட்டி. தியாகராயர் சென்னை மேயராக இருந்த காலத்தில்தான் முதன் முதலாக பள்ளி களில் மதிய உணவுத் திட் டம் அறிமுகப்படுத்தப்பட் டது.

அதற்குப்பின் பச்சைத் தமிழர் காமராசர் அதற்கு மேலும் ஒளி கூட்டினார். திராவிட இயக்க ஆட்சிக் கால கட்டங்களில் அர்த் தமுள்ள சத்துணவுத் திட் டமாக மாற்றப்பட்டுள்ளது.

பி.ஜே.பி. ஆளும் மத்திய பிரதேசத்திலும் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தியிருந் தாலும், சத்துணவாக அது இல்லை என்ற நிலையில் நாள் ஒன் றுக்கு ஒரு முட்டை வழங் கலாம் என்று விவசாயத் துறை அரசுக்குப் பரிந் துரை செய்தது; சரி என்று முடிவு எடுக்கப்பட்ட நிலை யில், திடீரென்று தடங்கல் ஏற்பட்டுள்ளது.

அதற்காகச் சொல்லப் படும் காரணம்தான் விசித்திரமானது. கிராமப் புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் கோபால் பார்கவா என்ன கூறு கிறார்?

மாநிலத்தில் பெரும் பாலான மக்கள் சைவர்களாக இருப்பதால் அவர்களின் குழந்தைகளுக்கு முட்டை வழங்கினால், அது சமூகத்தில் பெரும் பிரச்சினையை ஏற்படுத் தும்; அதனால் இந்தத் திட்டம் வாபஸ் வாங்கிக் கொள்ளப்பட்டு விட்டது - என்று கதைத்துள்ளார்.

இதுவும் உண்மையல்ல; 35 விழுக்காட் டினரே அங்கு சைவ உணவு சாப்பிடுபவர்கள் என்ற புள்ளி விவரத்தை தினமலரே ஒப்புக் கொள் கிறது.

பாரத புண்ணிய பூமியில் சாப்பாட்டிலும் மதம்தானா? முட் டையைப் பொறுத்தவரையில் அது சைவ உணவுப் பட்டியலில் இடம் பெற்று நீண்ட காலமாகி விட்டது.

இன்றைக்கு முட்டைக் கோழிகள் என்றால் ‘Hi Breed’ வகையைச் சேர்ந் தவை. இந்த முட்டை களைக் குஞ்சு பொரிக்கப் பயன்படுத்த முடியாது. இந்நிலையில் சைவ உணவுக்காரர்கள் குறிப் பாகப் பார்ப்பனர்களே முழு முட்டையை லபக் கென்று விழுங்கிக் கொண்டுள்ளனர்.

பி.ஜே.பி. என்றாலே உயர் ஜாதிப் புத்தி என் பதற்கு அடையாளம்தான் மத்திய பிரதேச அரசின் இந்த முடிவாகும்.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/73590.html#ixzz2qK2R9Jcx

தமிழ் ஓவியா said...


பொங்கற் புதுநாளில் உங்கள் தொண்டு என்ன?

பொங்கற் புதுநாள் எங்கள் திருநாள் என்று சொல்லுகின்றான் தி.க. தொண்டன்.

அவ்வாறு சொல்லும் தகுதி அவனுக்குத்தான் உண்டு. மற்றவர்கட்கு இல்லை.

தி.க. தொண்டன் தான் உண்மைத் தமிழன்; அவனிடந்தான் தமிழ்த் தன்மை மிளிர்கின்றது. அவன்தான் கறைபடுத்தப்பட்டு வரும் தமிழ்த் தன்மைகளைக் கறை நீக்கி, நிலைநிறுத்த அல்லும் பகலும் பாடுபட்டு வருகின்றான்.

தமிழ்நாட்டைத் தமிழன் அடைய வேண்டும் என்று எண்ணுகின்றவன் வேறு எவன்? தமிழ்மொழி வாழ வேண்டும். இந்தி தொலைய வேண்டும் என்று உயிரைப் பணயம் வைத்துப் போரில் இறங்க எவன் முன் வருகின்றான்?

சாதி ஒழிய வேண்டும்; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று இறப்பு வரும் நேரத்தும் இன்னா நேரும் நேரத்தும் இயம்புவோன் தி.க. தொண்டனைவிட வேறு எவன் உள்ளான்? எங்கே பார்க்க முடிகின்றது?

பொங்கற் புது நாளைச் சிறப்பிக்க வேண்டிய பொறுப்பு அவன் தலையில் தான் விழுந்துள்ளது.

தமிழர் திருநாளைத் தமிழன் சிறப் பிப்பது என்றால் என்ன? தமிழர் திரு நாளைத் தமிழன் கொண்டாடுவதென் றால் என்ன? தமிழர் எண்ணத்தைத் தமிழர் செயல்களைத் தமிழர் ஆசை களைச் சிறப்புறச் செய்வதே அன்றோ?

இனித் தி.க. தோழர்களை, தி.க.. தலைவர்களை நான் கேட்கின்றேன். பொங்கல் நாளில் என்ன செய்யப் போகின்றீர்கள் என்று.

நேற்றுத் தி.க. கொள்கைகளை ஆய்ந்தீர்கள்; நேற்றுச் சொற் பெருக்காற் றினீர்கள், நேற்றுப் பாடினீர்கள் நாட்டுப் பாட்டு. பொங்கல் புதுநாளில் - உங்கள் திருநாளில் என்ன செய்யப் போகின் றீர்கள் சிறப்பாக?

மாவட்டத் தலைவர்கட்குக் கூறு கின்றேன்; ஒரு மாவட்டத்தில் - எங்கும் ஆயிரம் கழகக் கொடி ஏற்றப்படுதல் வேண்டும்.

ஒரு மாவட்டத்தில் - எங்கும் ஆயி ரம் விடுதலை பரப்பப்படுதல் வேண்டும்.

ஒரு மாவட்டத்தில் - எங்கும் ஆயிரம் கழக நூற்கள் பரப்பப்படுதல் வேண்டும்.

ஒரு மாவட்டத்தில் எங்கும் ஆயிரம் புதிய உறுப்பினர் சேர்க்கப்படுதல் வேண்டும்.
இவ்வாறு செய்க!

சோம்பல் என்னும் பள்ளத்தைத் தூர்க்க, உள்ளத்திற் காண்க தமிழர் திருநாள் தரும் பேரின்பத்தை.

- புரட்சிக் கவிஞர்
(குயில், கிழமை இதழ், 30.12.1958 ப.2)

Read more: http://viduthalai.in/page-2/73615.html#ixzz2qK3ZByWV

தமிழ் ஓவியா said...


பாலியல் தொழில்


பண்டையக் கால அரசர்கள், மகாராஜாக்களின் காலங்களில் அரசின் குருமார்களாக விளங்கிய உயர்ஜாதி எனப்படுபவர்களால் அமல்படுத்தப்பட்டு வந்த, ஏழைப் பெண்களை கோவில்களில் பணிபுரியும் பொருட்டு நியமித்து அவர்களை தேவனுக்கு அடியாள்கள் என்றும் தேவதாசிகள் என்று பட்டம் கட்டி கொத்தடிமைப் பணியாளர்களாக்கினர்.

இந்த நடைமுறையினை எதிர்த்து நீதிக்கட்சியினரும், சுயமரியாதை இயக் கத்தவர்களும் போராடினர். நீதிக்கட்சி அமைச்சரவையால் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது.

மேலும் பெண்கள் பாலியல் தொழி லாளர் முழுமையாக விடுதலை பெறவும் சுயமாகத் தொழில் தொடங்கி வாழ்க் கைக்கு வழிவகை கண்டிட நபர் ஒருவ ருக்கு மாதம் ஒன்றுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ.1000/- வழங்க வேண்டும்.

தனி வட்டாட்சியர் மூலம் தேவதாசி முறை இங்கு ஒழிக்கப்பட்டுள்ளது என கோவில் வாயில்களில் எழுதி பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.

எதிர்வரும் அரசு நிதி நிலையில் (பட்ஜெட்) கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்தும், அனைவருக்கும் குடியிருப்புகள் கட்டித் தரப்பட வேண்டும். அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு கால் நடைகள் வளர்ப்புத் தொழில் செய்திட வங்கிகளும் அரசும் தாராளமாய் உதவித் தொகையுடன் கூடிய கடன் வசதி செய்து தர வேண்டுமென கருநாடகத் திராவிடர் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப் படுகிறது.

- மு. சானகிராமன், பெங்களூர்

Read more: http://viduthalai.in/page-2/73618.html#ixzz2qK41DJMb

தமிழ் ஓவியா said...


ஊழல், வறுமையைவிட வகுப்புவாதம் கொடுமையானது-தேசத்துக்கு ஆபத்தானது! செய்தியாளர்களிடையே தொல்.திருமாவளவன்

சென்னை, ஜன.13- ஊழல், வறுமையைவிட வகுப்புவாதம் கொடுமை யானது, தேசத்திற்கே ஆபத்தானது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.

விடுதலைச் சிறுத்தை கள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சென்னையில் நேற்று (12.1.2014) செய்தியாளர் களுக்கு பேட்டியளித் தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதலில் தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கு எனது பொங்கல் நல் வாழ்த்துக்களைத் தெரி வித்துக் கொள்கிறேன். இந்தப் பொங்கல் திரு நாளில் தமிழக மக்கள் யாவரும் ஓர் உறுதி மொழியை ஏற்க வேண் டும். அதாவது, நடை பெற உள்ள நாடாளு மன்ற தேர்தலில் சாதிய வாத சக்திகளை, மதவாத சக்திகளைப் புறக்கணிப் போம் என்ற உறுதி மொழியை ஏற்க வேண் டும்.

ஊழல், வறுமையை விட வகுப்புவாதம் கொடுமையானது. தேசத் திற்கே ஆபத்தானது. இதையே நேற்று தே.மு. தி.க. தலைவர் விஜய காந்தை சந்தித்து வேண் டுகோள் விடுத்தேன். ஏற் கெனவே, தி.மு.க.வுக்கு இதே வேண்டுகோளை வைத்தேன். மேலும், ம.தி. மு.க.வும் தனது முடிவை பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள் கிறேன்.

பாதுகாப்பு இருக்காது

நரேந்திரமோடி பிரத மரானால், அரசியல் அமைப்பு சட்டத்தையே அடியோடு மாற்றி விடு வார்கள். சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைத்து விடுவார்கள். சிறுபான் மையினருக்கும், பின்தங் கிய மக்களுக்கும் பாது காப்பு இருக்காது. ஆகவே, இந்தக் கோரிக் கையை விடுதலைச் சிறுத் தைகள் கட்சி முன்வைக் கிறது.

தமிழகத்தில் பிப்ர வரி 20 ஆம் தேதி சிங் கள மீனவர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடைபெற உள்ளதாக கூறுகி றார்கள். சிங்கள அர சுக்கும், இந்திய அரசுக் கும் இடையே நடை பெற வேண்டிய பேச்சு வார்த்தையை மீனவ பிரதிநிதிகளை வைத்து நடத்துவது எந்த பய னும் தராது. மீனவ பிர திநிதிகளுக்கு வேண்டு கோள் ஒன்றை வைக்கிறேன்.

மீனவர்கள் இடையே முரண் பாட்டை உருவாக்க இரு நாட்டு ஆட்சியா ளர்களும் திட்டமிட் டுள்ளனர். எனவே, மீன வர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மார்ச் 7 ஆம் தேதி ஜெனிவாவில் அய்.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டம் கூடு கிறது. அதில், அமெ ரிக்கா சிங்கள அரசுக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிய இருக் கிறது. போர்க் குற்றம் குறித்தும் விவாதிக்க இருக்கிறது. இந்த நிலை யில், இந்திய அரசு சிங் கள அரசுக்கு எதிராக போர் குற்ற விசார ணையை நடத்த மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் முன் மொழிய வேண்டும்.

- இவ்வாறு தொல். திருமாவளவன் கூறி னார்.

Read more: http://viduthalai.in/page-5/73591.html#ixzz2qK4Pc4SE