Search This Blog

4.1.14

பூணூல் போடாதவனெல்லாம் என் கட்சியைச் சேர்ந்தவன்-பெரியார்


(குளித்தலை, பசுபதிபாளையம் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் பெரியார் பேசிய பேச்சுகள் வன்முறையைத் தூண்டு கின்றன என்று கூறி தந்தை பெரியார்மீது தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில் நீதிமன்றத்தில் நடந்தவைகளை தந்தை பெரியார் கூறும் சுவையும் சூடும் நிறைந்த பகுதி இது)

என் வழக்கில் முதலில் அவர்களேதான் சொந்த முச்சலிகாவில் நீங்கள் போகலாம் என்றார்கள். பிறகு திடீரென்று 25-ஆம் தேதி முச்சலிக்காவை ரத்து செய்ய வேண்டும். பழையபடி ஊர் ஊராகப் போய் குத்து வெட்டு என்று பேசுகிறான் என்று விண்ணப்பம் போடுகிறான். நினைத் தால் கஷ்டமாகத்தான் உள்ளது. எவ்வளவு ஆதிக்கம் செலுத்து கிறான்? 20-ஆம் தேதி எங்களிடம் கையொப்பம் வாங்கி இருக்கிறான்; 22-ஆம் தேதி மதுரையில் எனக்குச் சம்மன் சார்வு செய்தான்; 22-ஆம் தேதி மாலை வரையில் எங்கும் பேசவில்லை; கூட்டமுமில்லை. நான் வாய் திறக்கவேயில்லை. பழையபடி குத்து வெட்டு என்று பேசுகிறான்' என்று சொல்கிறான். எப்போது பேசினார் என்றால் 17, 18, 19- ஆம் தேதி பேசியிருக்கிறார் என்கிறான். 


என்னிடம் கையொப்பம் வாங்கிக் கொண்டு 20-ஆம் தேதி விட்டிருக் கிறான். அதிலும் பேசக்கூடாது என்ற நிபந்தனை ஒன்றுமில்லை. இருந்தும் பேசாத போதே 22-ஆம் தேதி சம்மன் வருகிறது 'ஏமாற்றி விட்டார்', 'ந ம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்', சாட்சிகளைக் கலைப்பார்', 'சாட்சி களுக்குத் துன்பம் கொடுப் பார் அதாவது காயப்படுத் துவார்' இப்படி ஏதேதோ கேவலமாக எழுதியிருக் கிறான்.

ஜட்ஜே (நீதிபதி) கேட் டாராம். என் காதில் விழ வில்லை. சாட்சியைக் கலைப் பார் என்கிறாயே எல்லா சாட்சியும் போலீஸ்காரர்கள் தானே? அதுவும் ரிக்கார்டு சாட்சிதானே; அதை எப்படி கலைப்பார்? என்று கேட்ட தற்கு அந்த பப்ளிக் பிராசிக் யூட்டர் (அவர் பார்ப்பனர்) போலீஸ்காரர்கள் எல்லாரும் அந்த உணர்ச்சி உள்ள வர்கள்; அதாவது என் கட் சியைச் சேர்ந்தவர்கள்தான் என்று பதில் சொல்கிறார். என்ன அக்கிரமம்? நீதியைக் கெடுத்துவிடுவார் என் கிறான்; நான்தான் எதிர் வியாஜ்ஜியமே (எதிர் வழக்கு) ஆடப்போவதில்லை என்கிற போது நீதி எப்படிக் கெட்டுப்போகும்? அந்த நீதிபதிக்கு, எங்குப் பேசினார்? எந்த தேதியில் பேசினார்? ஆதார மென்ன? என்று கேட்டு 20-ஆம் தேதிக்குப் பிறகு எங்கும் பேசவில்லையே! ஆகையால் இந்த மனுவைக் கேன்சல் (தள்ளுபடி) செய்கிறேன் என்று சொல்லத் தைரியம் வரவில்லையே?
என்னைக் கேட்கிறார் "இனிமேல்" பேசவில்லை என்று எழுதிக்கொடு" என்கிறார்.
என்னய்யா, நான்தான் பேசவே இல்லை என்கிறேன் இனி மேல் பேச வில்லை என்று எழுதிக்கொடு என் கிறீர்களே என்றால், "உனக்கு நான் சொல்வது புரியவில்லை. நீ சொல்வதும் நான் சொல்வதும் ஒன்றுதான் எதை யாவது எழுதிக் கொடு; இப்ப, நீ வாயால் சொல்கிறாயே அதையே எழுதிக் கொடு" என்கிறார். என்னய்யா இது உங்கள் எதிரேயே சொல்கிறான் போலீஸ்காரன் எல்லாம் என் கட்சி என்று; அய்க்கோர்ட் (உயர்நீதிமன்றம்) போனாலும் நீதிபதிகூட என் கட்சியைச் சேர்ந்தவன் என்பான். பூணூல் போடாதவனெல்லாம் என் கட்சியைச் சேர்ந்தவன் என்பான்.

இப்படிப் பித்தலாட்டம் செய்கிறவர்கள் நான் ஏதாவது எழுதிக் கொடுத்தால் "எழுதிக் கொடுத்துவிட்டான்! எழுதிக் கொடுத்துவிட்டான்" என்று பத்திரிகைக் காரன் எல்லாம் பிரச்சாரம் செய்வானே? நான் பொதுவாழ்வில் இருப்பவன் அது பற்றியும் கவலைப்பட வேண்டும். நான் வேண்டுமானால் உடனடி யாக 'வெட்டு' 'குத்து' என்று சொல்லவில்லை என்று எழு தித் தருகிறேன் என்றேன். உடனடி யாக' என்று போட்டி ருக்கிறாயே அந்த வார்த் தையை எடுத்துவிடு என்றார்.

"நான் சில திட்டங்கள் வைத்திருக்கிறேன். அது முடியாவிட்டால் வெட்டு, குத்து என்று சொல்ல வேண் டிய அவசியம் வந்தால் சொல்லுவேன் என்றுதான் இப்போதும் சொல்கிறேன். வேண்டுமானால் உங்கள் விசாரணை முடியும் வரையில் அதுபோலச் சொல்ல வில்லை. அதற்குமேல் என் னைத் தொந்தரவு செய்யா தீர்கள் மன்னிக்க வேண்டும்; நான் மூட்டை முடிச்சோடு வந்துவிட்டேன்; என்னை ஜெயிலுக்கு அனுப்பி விடுங்கள்; நிம்மதியாக இருப்பேன்", என்றேன். பின்னர் ஏதேதோ செய்து எழுதி வாங்கியதாகப் பேர் செய்து கொண்டு, விட்டார்கள்.

நான் 23-ஆம் தேதி இருக்கக் கூடாது என்பது எண்ணம்; அதற்கு ஏதேதோ காரணம் சொல்லி (சிறையின்) உள்ளே பிடித்துப் போடு என்றான். திரும்ப சீரங்கம் கூட்டத்திற்குப் புறப்படும் நேரம் வந்ததும் அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள்.
-------------------------------------28.11.1957-அன்று திருச்சி டவுன்ஹால் மைதானத்தில் ஈ.வெ.ரா பெரியார் சொற்பொழிவு -விடுதலை 30.11.1957


35 comments:

தமிழ் ஓவியா said...

மோடியின் மோகம்!

- மின்சாரம்

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது, உண்மையோ? பொய்யோ, முகமூடி அணிந்து உத்தமப்புத்திரன் என்று நாடகமாடிய நரேந்திர மோடியின் முகமூடி, கட்டடக் கலைப் பொறியாளரான ஒரு பெண் பிரச்சினை மூலம், கழற்றி எறியப்பட்டு விட்டது.

இந்தியாவின் முதல் நிலை மாநிலம் எங்கள் குஜராத் என்று மார் தட்டினார். ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையிலான அறுவர் கொண்ட நிபுணர் குழு, பொருளாதார வளர்ச்சியில் மோடியின் குஜராத் மாநிலம், 12ஆவது இடத்தில் இருப் பதாக, மூக்கை உடைத்துச் சொல்லி விட்டது.

கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு _- அது தொடர்பாக உயிர்ப் பலி, இவற்றை மய்யப்படுத்தி, சிறுபான்மை முசுலிம்களை நரபலி வேட்டையாடிய முத்திரையிலிருந்து, முகத்தை கழுவிக் கொள்ள முடியாத நிலையில், மோடியின் தனி நபர் ஒழுக்கம் சந்தி சிரிக்கிறது.

கட்டடக் கலை பொறியாளரான ஒரு பெண்மணி மான்சியை, மய்யப் படுத்தி மோடியின் மோசமான முழு உருவமும் முச்சந்தியில் நிற்கிறது.
கருநாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அந்தப் பெண்மணி.

குஜராத்தில் உள்ள பூன்சி மாவட் டத்தில், அரசு கட்டடம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பூங்காவை நேர்த்தியாக, அழகுபட உருவாக்கித் தந்தார். அதற்கான பாராட்டு விழாவில், குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி பங்கேற்க வந்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த போது, அந்தப் பெண்மணிமீது முதல் அமைச்சர் மோடிக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அதில் முதற்கட்டமாக தனது இரகசியமான (Personal) கைப்பேசி எண்ணைக் கொடுத் தார். அது தொடக்கம்; ஒரே நாளில் அந்தப் பெண்ணிடம் 18 முறை கைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்; அத்தோடு அவர் மனதில் பாய்ந்த அலைகள் ஓய்ந்திட வில்லை. குறுந் செய்திகளையும் தொடர்ந்து அனுப்பியுள்ளார்.

பூன்ச் மாவட்ட ஆட்சியர் பிரதீப் சர்மாவிடம் அந்தப் பெண்ணை அறிமுகம் செய்து வைத்தவரும் மோடிதான்.

பிரதீப்சர்மாவிடம் மோடியின் தொடர்புகள் பற்றி அந்தப் பெண் கூறியுள்ளார்.
இந்தத் தகவல்களையெல்லாம் மும்பை மிர்ரர் இதழ் விலாவாரியாக வெளியிட்டுள்ளது (17.11.2013).

தமிழ் ஓவியா said...


தனக்குப் போட்டியாக பிரதீப் சர்மா வந்து விட்டாரோ என்ற சந்தேகம், மோடிக்கு வருகிறது. விடுவாரா? அதி காரம் என்ற சிரங்கு கையில் இருக் கிறதே! அரிக்கத்தானே செய்யும்.

மாவட்ட ஆட்சித் தலைவரான பிரதீப் சர்மா வீடு சோதனை செய் யப்படுகிறது -_ கைதும் செயயப் படுகிறார்.

இதுபற்றி பிரதீப் சர்மாவோடு தொடர்பு கொண்டு அய்.பி.என். தொலைக்காட்சி பல திடுக்கிடும் உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

இந்தப் பேட்டி, மோடியின் முகத் திரையை சுத்தமாகக் கிழித்து எறிந்து விடவில்லையா? ஒரு பெண்ணிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி இருக் கிறாரே மோடி- இதன் பொருள் என்ன?

இதற்கெல்லாம் பெருந்துணையாக பாலமாக இருந்தவர் மோடியின் அரசாட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா.

அந்தப் பெண்ணின் நடவடிக்கை களைக் கண்காணிக்குமாறு உளவுத் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அதன் முழுப் பொறுப்பும் மோடியின் நம்பிக்கைமிகு தளபதியான அமித்ஷாவைச் சார்ந்தது.

உளவு என்றால் சாதாரணமா? அந்தப் பெண் குஜராத்தில் மட்டுமல்ல - கருநாடகம் சென்றாலும் விடாது கருப்பு என்பதுபோல தொடர்கிறது.

இது தொடர்பாக உளவுத்துறைக் காவல் அதிகாரிகளுக்கும் அமித்ஷா வுக்கும் இடையே நடைபெற்ற 257 தொலைப்பேசி உரையாடல்களை கோப்ரா போஸ்ட், குலாய்ல் ஆகிய இணைய தளங்கள் வெளியிட்டு விட்டன.

இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் ஜி.எல். சிங்கால், ஏ.கே. சர்மா ஆகியோரிடையே நடைபெற்ற 39 தொலைப்பேசி உரையாடல்களை குலாய்ல் இணையதளம் அம்பலப் படுத்தி விட்டது.

அந்தப் பெண்ணின் உரையாடல் களைப் பதிவு செய்யுமாறு கருநாடக மாநில செல்பேசி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டதிலும் சிக்கல்.

இது இந்திய டெலிகிராப்ட் சட்டம் 419 (ஏ)யின்படி விதிமீறலாகும்.

இதற்கிடையில் மாவட்ட ஆட்சி யரான பிரதீப் சர்மா நரேந்திர மோடிக்கும் மான்சி என்ற அந்தப் பெண்ணுக்கும் இடையிலான தொடர்பு குறித்து உச்சநீதிமன்றம் சி.பி.அய்யிடம் விசாரணைக்கு விட வேண்டும் என்று மனுதாக்கல் செய்துள்ளார்.
ஆதாரங்கள் அடுக்கடுக்காகக் குவிந்துள்ள நிலையில் இதன்மீது விசாரணை நடத்திட மத்திய அமைச் சரவை அனுமதி அளித்துள்ளது.

இந்தச் செய்தி நரேந்திர மோடியின் வயிற்றில் மட்டுமல்ல -_ ஒட்டு மொத்தமான சங்பரிவார்களின் வயிற்றிலும் புளியைக் கரைத்திருக்கும் என்பதில் அய்யமில்லை.
அடுத்தவர்களைப் பார்த்து வக்கணை பேசுவது, ஒய்யாரம் பேசுவது, தடாலடியாக விமர்சனம் செய்வது என்பதைத் தனது புஜ பலமாகக் கருதிக் கொண்டு சண்டமாருதம் செய்யும் திருவாளர் மோடி இந்தப் புதைக் குழியிலிருந்து வெளி வருவது எளிதல்ல. அந்தப் பெண் மற்றும் அவள் பெற்றோர்களைச் சரிக்கட்ட இந்தக் கும்பல் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபடும்.

காலத்தை வீணாக்காமல் தடாலடியாக சி.பி.அய்.யால் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

120 கோடி மக்களின் வாழ்வில் மண்ணை அள்ளிப் போடத் துடிக்கும் இந்த மதவாத சக்திகளின் எண்ணத் தில் மண்ணை வாரிப் போட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

காங்கிரசின் வழக்கமான வழவழா கொழ கொழா அணுமுறை இந்தப் பிரச்சினையில் இல்லாமலிருந்தால் சரி.. எங்கே பார்ப்போம்!

Read more: http://viduthalai.in/page-1/73063.html#ixzz2pOI6XKiP

தமிழ் ஓவியா said...


தி.மு.க. தலைவர் கலைஞரின் சமூக நீதிக்கான அறிக்கை

ஓமந்தூரார் தோட்டத்தில் உருவாக்கப்படும் மருத்துவமனை பணி நியமனத்தில் இடஒதுக்கீடு கிடையாதாம்!

தமிழர் தலைவர் வீரமணி அறிக்கை வரவேற்கத்தக்கது

கழகமும் களம் அமைத்துப் போராடத் தயங்காது!

தி.மு.க. தலைவர் கலைஞரின் சமூக நீதிக்கான அறிக்கை

http://viduthalai.in/images/stories/dailymagazine/2013/dec/26/s29.jpg

சென்னை, சன.3- சென்னை ஓமந்தூரார் இராமசாமி (ரெட்டியார்) தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகத்துக்காகவும், புதிய சட்டமன்றத்துக்காகவும் திமுக ஆட்சியில் உரு வாக்கப்பட்ட கட்டடத்தில் அதிமுக அரசால் உருவாக்கப்பட இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ள பல்நோக்கு உயர் மருத்துவமனைக் கான பேராசிரியர் உள்ளிட்ட பணி நியமனத்தில் இடஒதுக்கீடு கிடையாது என்று தமிழக அரசால் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதனை எதிர்த்துப் போராட தி.மு.க. தயங்காது என்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:


தமிழ் ஓவியா said...

திராவிட இயக்கக் கொள்கைகளையும், சின்னங் களையும் வேரோடும், வேரடி மண்ணோடும் குழி தோண்டிப் புதைக்க வேண்டுமென்ற எண்ணத் தோடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சமூக நீதி எனப்படும் இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் 1921ஆம் ஆண்டு நீதிக் கட்சி ஆட்சியில் தொடங்கிய போர்க்களத்தில் மாறி மாறி வரும் வெற்றி தோல்விகளுக்கிடையே - திராவிட இயக்கத்தின் உயிரோட்ட முழக்கமான சமுதாயத்தில் கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னேறியுள்ளோர் தவிர்த்து ஏனைய பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப் பட்டோர் ஆகியோருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான தீர்ப்புகள் பலவற்றைப் பெற்று மகிழ்ச்சியும் அடைந்திருக்கிறோம்; மனக்கலக் கமும் பெற்றிருக்கிறோம். மாநிலத் திலோ, மத்தியிலோ ஆட்சிப் பொறுப்பை ஏற்போரைப் பொறுத்து இந்தச் சமூக நீதிப் போராட்டத்தில் வெற்றி தோல் விகள் அமைந்திருக்கின்றன. இப்போது ஜெயலலிதா எடுத்துள்ள முடிவினால் சமூக நீதிக் கொள்கைக்கு மீண்டும் ஒரு சோதனை ஏற்பட்டிருக்கிறது. தலைமைச் செயலகத்துக்காகவும், சட்டமன்றத்திற்காகவும் உருவாக்கப்பட்ட கட்டடம்!

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவின்படி ஓமந்தூரார் வளாகத்தை உருவாக்கி, அங்கே மிக எழிலுறக் கட்டி முடிக்கப்பட்டு, அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் திருமதி சோனியா காந்தியும், பிரதமர் மன் மோகன் சிங்கும் நானும் கலந்து கொண்டு திறந்து வைத்தோம் என்ற ஒரே காரணத்திற்காக, புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தையே இரண்டரை ஆண்டுக் காலமாக பூட்டி வைத்த முதலமைச்சர், தற்போது அதே கட்டடத்தில் புதிய மருத்துவ மனையை நடத்தப் போவதாக அறிவித்து, தலைமைச் செயலக அலுவலகத்திற்காகவும், சட்டப் பேரவைக்காகவும் எனத் திட்ட மிட்டு கட்டப்பட்டிருந்த கட்ட டத்தை மருத்துவமனைக்கு உரிய விதத்தில் மாற்றுவதற்காக, பல கோடி ரூபாய், மக்களின் வரிப் பணத்தை வீண் விரயம் செய்து மாற்றியமைத்து, தற்போது அந்த மருத்துவமனை யில் பணியாற்றுவதற்காக டாக்டர்களையும், அலுவலர்களையும் தேர்ந்தெடுக்கும் பணியிலே ஈடுபட்டிருக்கிறார். இந்த அதிகாரிகளையும், டாக்டர்களையும் தேர்ந்தெடுப்பதற்கான அரசாணை தான் 27-12-2013 அன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றே, கழக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டடத்தை மருத் துவமனையாக மாற்றுகின்ற காரணத்தால், தற் போது அங்கே நியமிக்கப்படவுள்ள அதிகாரிகளுக் கும், டாக்டர்களுக்கும் சம்பளத்தையும் மிக அதிக அளவிலே அறிவித்திருக்கிறார்கள். இதைக் கிண்டல் செய்து 2-1-2014 தினமலர் நாளேடு கூட, டாக்டர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள செய்தியில், தனியார் சிறப்பு மருத்துவமனைகளில் உள்ள டாக்டர்களுக்கு தமிழக அரசு சிவப்பு கம்பளம் விரிக்காத குறையாக அழைப்பு விடுத்துள்ளது என்று எழுதியுள்ளது.

எவ்வளவு சம்பளம் தெரியுமா? ஆமாம், இயக்குநர் பதவிக்கான மாதாந்திர சம்பளம் எவ்வளவு தெரியுமா? இரண்டரை இலட்சம் ரூபாய். தலைமைச் செயலாளருக்குக் கூட, ஏன் முதல் அமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் கூட இந்த அளவிற்கு சம்பளம் இருக்குமா என்று தெரியவில்லை! மூத்த மருத்துவ ஆலோசகர் என்று 14 பேரை நியமிக்கப் போகிறார்களாம்; அவர்களுக் கான ஊதியம், தலா ஒன்றரை இலட்சம் ரூபாய். இணை மருத்துவ ஆலோசகர் என்று 13 பேரைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்களாம். என்ன சம்பளம் தெரியுமா? ஒருவருக்கு ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய்! இளநிலை ஆலோசகர்கள் என்று 23 பேரை நியமிக்கப் போகிறார்களாம்; அவர்களுக்கெல்லாம் தலா ஒரு இலட்சம் ரூபாய் ஊதியம். பதிவாளர் என்று 14 பேர், மாதாந்திர ஊதியம் 70 ஆயிரம் ரூபாய். நிலைய மருத்துவர் என்று 19 பேர், மாதம் 50 ஆயிரம் ரூபாய் ஊதியம். மேலும் இந்தப் பதவிகளுக்கெல்லாம் கூநசந ளை டி சநளநசஎயவடி கடிச வாநளந யீடிளவள என்று, அதாவது இந்தப் பதவிகளுக்கு இட ஒதுக்கீடு கிடையாது. ஊதியம் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு என்று குறிப்பிட்டுள்ள அடுத்த வரியிலேயே அந்த உத்தரவில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இடஒதுக்கீடு கிடையாதாம்

மேலும் அரசின் அந்த உத்தரவில், பத்தி 7இல் சி பகுதியில், “Rule of Reservation is not applicable for the posts of Senior Consultants, Associate Consultants, Junior Consultants, Registrar and Residents. However, persons belonging to OBC/BC/MBC/SC/ST and women candidates are encouraged to apply” என்று வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்விலும் அநீதி!

திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் அரசின் இந்த ஆணையைக் கடுமையாக எதிர்த்து அறிக்கை வெளியிட்டதுடன், இதனை அ.தி.மு.க. அரசு திரும்பப் பெறாவிட்டால், தமிழகம் கொந்தளிக்கும் என்றும் தெரிவித் திருக்கிறார்.

தமிழ் ஓவியா said...


அ.தி.மு.க. அரசு சமூக நீதி இலட்சியத்திற்கு எதிராகச் செயல்படுவதென்பது இது முதல் முறையல்ல; 2013, ஆகஸ்ட் மாதம் 17, 18ஆம் தேதிகளில், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

அப்போதே நான் கேள்வி-பதில் பகுதியில், தகுதித் தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 150. தேர்ச்சி பெறுவதற்கு 90 மதிப்பெண்கள் பெற வேண்டும், அதாவது 60 சதவிகிதம். இரண்டு முறை ஏற்கனவே நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததால், அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால், குறைந்த பட்சம் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக் காவது சலுகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப் பட்ட போதிலும், தேர்ச்சி மதிப்பெண்ணில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. தேர்ச்சி பெற அனைத்துப் பிரிவினருமே 90 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று தான் வைக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோர், உயர் வகுப்பினரைப் போலவே 60 சதவிகிதம் மதிப்பெண் பெற வேண்டும் என்பது தமிழகத்திலே நிர்ணயிக் கப்பட்டுள்ளது.

இது தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலுக்கு விரோதமானதாகும். தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி, ஆந்திராவில் முன்னேறிய வகுப்பினருக்கு 60, பிற்படுத்தப்பட்டோருக்கு 50, தாழ்த்தப்பட் டோருக்கு 40 சதவிகிதம் மதிப்பெண்கள் என்றும் - அஸ்ஸாமில் உயர் சாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 55 சதவிகிதம் என்றும் - ஒரிசாவில் உயர்சாதியி னருக்கு 60 சதவிகிதம், மற்றவர்களுக்கு 50 சதவிகிதம் மதிப்பெண்கள் என்றும் தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் ஜெயலலிதாவின் அ.தி.மு.க. அரசு அனைத் துப் பிரிவினருக்கும் 60 சதவிகித மதிப்பெண் என்று கல்வி மற்றும் சமூக நிலைகளில் பிற்படுத்தப் பட்டோரையும், மிகப் பிற்படுத்தப்பட் டோரையும், தாழ்த்தப்பட்டோரையும் முன்னேறிய வகுப்பினரைப் போலவே கருதி, நிர்ணயித்துள்ளது என்பது, தந்தை பெரியார் அவர்களின் சமூக நீதி கொள்கைக்கு எதிரானதும், இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு முற்றிலும் விரோதமானதுமாகும்.

தமிழ் ஓவியா said...


எனவே ஆசிரியர் தகுதித் தேர்வினை ஆகஸ்ட் திங்களில் நடத்தப் போவதாக அறிவித்துள்ள தமிழக அரசு இந்த முறையாவது இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றி வேறு மாநிலங்களில் செய்திருப்பதைப் போல; தேர்வுக்கான மதிப்பெண் களில் மாற்றம் செய்து, பின் தங்கிய சமுதாயத் தினரைக் காப்பாற்ற முன் வர வேண்டும் என்று விரிவாக தெரிவித்திருந்தேன். எனினும் அதிமுக அரசு சார்பில் அதைக் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.

இதையெல்லாம் மீண்டும் ஒரு முறை மெய்ப்பிக்கும் வகையிலே தான் தற்போது இந்த சிறப்பு மருத்துவமனைக்கு அதிகாரிகளையும், அலுவலர்களையும் தேர்ந்தெடுக்கின்ற நேரத்தில், இட ஒதுக்கீடு கிடையாது என்று ஜெயலலிதா மீண்டும் ஒரு முறை சமூக நீதியின் குரல்வளையை நெரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

இளவல் வீரமணியின் போராட்டம் குறித்த அறிக்கை

அ.தி.மு.க. அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின் அபாயத்தை எதிர்த்து அறிக்கை வெளி யிட்ட இளவல் கி. வீரமணி அவர்கள் போராட்டக் களங்களை உருவாக்கப் போவதாக தெரிவித் திருக்கிறார். இட ஒதுக்கீடு என்பது திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கை. அதற்காக நாம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக யார் எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் திராவிட முன்னேற்றக் கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது; தானே களம் அமைத்துப் போராட நேர்ந்தாலும் தயங்காது!

இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார் கலைஞர்.

Read more: http://viduthalai.in/e-paper/73050.html#ixzz2pOIM6JEl

தமிழ் ஓவியா said...


யோக்கியர் எடியூரப்பா பராக்! பராக்!!

பாரதீய ஜனதா கட்சி என்பது, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் கும்பகோணம் மகா மகக் குளம் புண்ணிய முழுக்குப் போன்றது. 12 வருடங்கள் பஞ்சமா பாதகங்கள் செய்தாலும், மகா மகத்தன்று ஒரு முழுக்குப் போட்டு விட்டால், ஒட்டு மொத்தமாக அனைத்துப் பாவங்களும் நீங்கி, புண்ணியம் கிட்டும் என்பது இந்து மதத்தின் அய்தீகம்.

இந்துத்துவாவின் ஏக போகக் குத்தகைக் காரர்கள் அல்லவா இந்தப் பிஜேபியினர்! அதனால் தான் ஊழல் காரணமாக முதல் அமைச்சர் பதவியை இழந்து சிறைச்சாலை வரை சென்று வந்த கருநாடக மாநில பி.எஸ். எடியூரப்பா கடை விரித்தேன். கொள்வாரில்லை - மீண்டும் பழைய காயிலகங் கடை வியாபாரத்தையே தொடங்குகிறேன் என்ற தன்மையில் தன்னால் உருவாக்கப்பட்ட கருநாடக ஜனதா கட்சியின் கழுத்தைத் திருகிக் கொன்று விட்டு, தனது பூர்வீகக் கூடாரமான பிஜேபிக்கே சென்று விட்டார்; ஊழல் ஒழித்த உத்தமப் புத்திரர் களின் புண்ணிய பூமியாகத் தங்கள் முதுகைத் தாங்களே தட்டிக் கொள்ளும் பிஜேபியும் இரு கரம் ஏந்தி - அந்தப் பழம் பெரும் ஊழல் பெருச்சாளியைப் பூர்ண கும்பம் கொடுத்து வரவேற்று விட்டது.

இமாசலப் பிரதேச முதல் அமைச்சர் வீரபத்ரசிங் ஊழல் செய்து விட்டார் என்று கூறி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வீட்டின் முன் மறியல் போராட்டத்தை பி.ஜே.பி.யினர் செய்து கொண்டி ருக்கும் இந்தக் கால கட்டத்தில்தான், ஊழல் குற்றச் சாட்டில் சிறை சென்று வந்த கருநாடக மாநில முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பாவை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றுள்ளனர்.

கருநாடக மாநிலத்தின் முதல் அமைச்சர் பி.எஸ். எடியூரப்பா மற்றும் அம்மாநில உள்துறை அமைச்சர் ஆர். அசோக்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்குத் தொடர அம்மாநில ஆளுநர் எச்.ஆர். பரத்வாஜ் அனுமதியளித்தார்.

ஷிமோகாவைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் சிரஜின் பாஷா மற்றும் கே.என். பால்ராஜ் ஆகியோர் கடந்த 2000 டிசம்பர் 28ஆம் தேதி ஆளுநர் பரத்வாஜைச் சந்தித்து மேற்கண்டவர்கள்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்குத் தொடர அனுமதி கேட்டதன் அடிப்படையில்தான் ஆளுநரால் அனுமதி வழங்கப்பட்டது.
ஊழல் தடுப்புச் சட்டம் 1988 பிரிவு 19(1) மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 பிரிவு 193இன் கீழ் வழக்குத் தொடர அனுமதிக்கப்பட்டது.
உத்தமபுரத்திரர்களாகத் தம்பட்டம் அடிக்கும் பிஜேபி என்ன செய்தது? வழக்கை நேர்மையான முறையில் சந்திக்க மார்பைப் புடைத்துக் காட்டியதா?
இல்லை; நாடு தழுவிய அளவில் பந்த் ஒன்றை அறிவித்து அமைச்சர்களே முழக்கம் போட்டு வந்தனர்.

சட்டம் ஒழுங்கை அமைச்சர்களே சீர்குலைத்தனர். அரசுப் பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன, ஏன், எரிக்கவும் பட்டன!

ஜனதா தளத்தின் (மதச் சார்பற்றது) தலைவர் குமாரசாமி, எடியூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டினை முன் வைத்தார். கோயிலில் சத்தியம் செய்யலாமா என்று பாமரத் தன்மையாக ஒருவருக்கொருவர் சவால் விட்டனர்.

முதல் அமைச்சர் பதவியை முறைகேடாகப் பயன்படுத்தி, விலை உயர்வு வீட்டுமனைகளையும், நிலங்களையும் தனது மகன் மற்றும் குடும்பத் தினர்க்கு ஒதுக்கினார் முதல் அமைச்சர் எடியூரப்பா என்பது குற்றச்சாற்று!

சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு பெல்லாரி மாவட் டத்தையே தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்த ரெட்டி சகோதரர்கள் அமைச்சர்களாக இருந்த தெல்லாம் மிகப் பெரிய ஊழல் கந்தாயமாகும்.

ரெட்டி சகோதரர்களை எதிர்த்துப் பார்த்து, கடைசியில் முதல்வர் எடியூரப்பா அவர்களிடம் சரண் அடைந்ததெல்லாம் கடைந்தெடுத்த நகைச்சுவைத் துணுக்குகள். வெகு தூரம் போக வேண்டாம். எடியூரப் பாவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததுண்டே!

பதவி அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள, மக்களுக்குத் துரோகம் செய்து வருகிறோம்; இதில் நானும் அடக்கம்! மக்கள் மன்னிக்க மாட்டார்கள். மக்களுக்கு நன்மை செய்யாமல் தேவையற்ற வேலைகளைச் செய்து கொண்டிருக் கிறோம். மாநிலத்தில் அதிருப்தி அரசியல் தலை தூக்கிய போதும், பெண் அமைச்சர் ஷோபா வின் ராஜினாமாவை ஏற்றக் கொண்டபோதும் நான் கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட்டது. தொலை நோக்குப் பார்வையில்லாமல் சுய நலத்திற்காக அரசியலில் மூழ்கி உள்ளதால் மக்களின் நலனை முழுமையாக மறந்து வருகிறோம் என்றாரே எடியூரப்பா (தினமலர் 14.12.2009).

இந்த ஒழுக்க சிகாமணியை மக்களவைத் தேர்தலுக்காக கையேந்தி வரவேற்கும் பிஜேபியை யும், அதன் பிரதமருக்கான வேட்பாளரையும் வாக்காளர்கள் அடையாளம் காண்பார்களாக!

Read more: http://viduthalai.in/page-2/73059.html#ixzz2pOIjRkzh

தமிழ் ஓவியா said...

தமிழ்ச் சமுதாயத்தின் சொத்து ம.தி.க.

மக்கள் ஓசையுடன் மதிக தேசியத் தலைவர் பி.எஸ். மணியம் நேர்காணல்

மலேசியத் திராவிடர் கழகத்தின் 67-ஆவது மூவாண்டு பேராளர் மாநாடு நாளை தலைநகர் கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதியில் நடை பெறுகிறது. தொண்டு செய்து பழுத்த பழம்,

தூயதாடி மார்பில் விழும், மண்டைச் சுரப்பை உலகுதொழும்; மனக்குகையில் சிறுத்தை எழும், அவர்தான் பெரியார், என்று புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதி தாசன் பாடியது போன்று, அந்த வெண்தாடி வேந்தனின் கொள் கைகளை மலேசியாவிலும் பரவச் செய்த பெருமைக்குரிய இயக்கம் தான் மலேசியத் திராவிடர் கழகம்.

சுமார் 67 ஆண்டுகளுக்கு முன் னர், திராவிடர் கழகம் மலேசியாவில் தோற்றுவிக்கப்பட்டும், அதற்கு தந்தை பெரியார் மலாயா மண்ணில் தன் காலடியை எடுத்து வைத்த பின்னர், நாட்டில் தோன்றியது சுயமரியாதை கொள்கைகள்.

மனிதர்கள் மனிதர்களாக வாழ வேண்டும். பகுத்தறிவுடன் வாழ வேண்டும். யாருக்கும் யாரும் அடிமை சாசனத்துடன் வாழக் கூடாது என்பதில், தந்தை பெரியார் எடுத்து வைத்த வாதங்கள் மலேசியத் தமிழர்கள் மனதில் பதிந்தன.

தமிழ்ச் சமுதாயம் மானமுள்ள சமுதாயமாகத் திகழ வேண்டும் என்பதில், தந்தை பெரியார் காட்டிய அக்கறையை செயல்படுத்தும் நோக்கில் 1946-ஆம் ஆண்டு மதிக அமைக்கப்பட்டது.

வைக்கம் வீரராக கேரளத்தில், போராட்டம் நடத்திய தந்தை பெரியாரின் போராட்டங்கள் உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் ஒரு பிரளயமே ஏற்படுத்தியதை மறந்துவிட முடியாது.

அந்த பிரளயம் தான் பிற் காலத்தில் மலேசியாவில் படர்ந்து-பரவி தமிழர் இதயங்களில் சுய மரியாதைச் சுடர் கொளுந்து விட்டு எரிந்தது. அதன் காரணமாக, தோற்று விக்கப்பட்ட மதிக இன்று 67ஆம் ஆண்டில் வெற்றிகரமாக பீடு நடை போடுகிறது.

நாளை நடைபெறும் மாநாடும், உண்டியல் ஏந்திய தொண்டர் களுக்கு சிறப்பு செய்வதும், முக்கிய அம்சமாக திகழ்கிறது என்கிறார் கழகத்தின் தேசியத் தலைவர் பி.எஸ்.மணியம். இதன் தொடர்பாக மக்கள் ஓசைக்கு வழங்கிய சிறப்பு நேர் காணல் கழகம் வளர்ந்த காலம் இன்றைய காலம் மனந் திறந்து பேசினார் பி.எஸ்.மணியம்.
அவை வருமாறு:-

கே: மதிகவின் 67-ஆவது ஆண்டு குறித்து விளக்குவீர்களா?

ப: மலேசியத் திராவிடர் கழகத் தின் பணிகள், அது கடந்த வந்த பாதைகள், எதிர்நோக்கிய சவால்கள் எல்லாம் நினைத்துப் பார்த்தால் மலைப்பாக உள்ளது.

அரை நூற்றாண்டைத் தாண்டி, மலேசியத் திராவிடர் கழகம் பீடுநடை போடுகிறது என்றால். நம் மக்கள் அதன் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் காரணமாகும்.

கே: நாட்டில் இயக்கங்கள் தொடங்குவதற்கு முன்னமே, மதிக தான் முதன் முதலாக தோன்றியதாக கூறப்படுகிறது; அது பற்றி?

ப: உண்மைதான், மூத்த இயக் கமாக இன்று வரை கருதப்படும் மதிகவுக்கு தனி மதிப்பும், மரியாதை யும் உண்டு. ஆனாலும் எல்லா இயக் கங்களுடனும் நட்பு பாராட்டும் கொள்கையை கடைப்பிடித்தே வருகின்றோம்.

கே: மதிக கொள்கைகள் எந்தள வுக்கு மக்கள் மத்தியில் வேரூன்றி யிருக்கிறது?

ப: நிச்சயமாக! தந்தை பெரியாரின் கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்பிய பெருமை மதிகவுக்கு உண்டு. தந்தை பெரியாரின் கொள்கைகள் சிலருக்குக் கடுமையாக தெரிந்தாலும், அவர்களும் அதனை வரவேற்கத்தான் செய்கிறார்கள்.

சுமார் 67 ஆண்டுகள் ஆலமரமாய் திகழ்ந்து வரும் ஒரு பேரியக்கத்தின் கொள்கைகள் மக்கள் மனத்தில் பதிந்துள்ளன என்று தைரியமாக கூறலாம்.

தமிழ் ஓவியா said...

கே: தற்போது சமுதாயப் பணி களில் மதிகவின் ஈடுபாடு குறைந்து காணப்படுகிறதே?

ப: நான் மறுக்கவில்லை, இருப் பினும் மதிக சமுதாயப் பிரச்சினை களுக்கு, தொடர்ந்து குரல் கொடுத்து வருவதை நீங்கள் பத்திரிகைகளில் காணலாம். இருப்பினும் எங்களின் சமுதாயப் பணிகள் தொடரவே செய்கின்றன.

கே: கடந்த காலங்களில் மதிகவின் அதிவேகப் பணிகள் போன்று, இன்று தங்கள் தலைமைத்துவத்திலும் தொடர வேண்டும். கழகத் தொண்டர் கள் எதிர்பார்ப்பது பற்றி?

ப: அதையும் நான் உணர்ந்துள் ளேன். மதிக இந்த சமுதாயத்தின் சொத்து என்பதை யாரும் மறந்து விடமுடியாது. மதிகவை பிடிக்காதவர் க

ள் அதற்கு உதவி செய்துள்ளனர் என்பதை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.
மறைந்த முன்னாள் தேசியத் தலைவர் திருச்சுடர் கே.ஆர்.இராம சாமி தலைமைத்துவத்தில்தான் களியன் புதைக்குழி வழக்கு நடந்தது. அப்போது மதிக நடத்திய சமு தாயப்போராட்டத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அந்த வழக்கு மதிகவுக்கு ஒரு திருப்புமுனை மட்டுமல்ல, மாபெரும் வெற்றியாகும் என்பதை மீண்டும் பதிவு செய்ய விரும்பு கிறேன்.

கே: மதிக தொண்டர்களுக்கு இந்த மாநாட்டில் சிறப்பு செய்ய விருப்பதாக கூறப்படுகிறது. அது பற்றி...?

ப: ஆமாம்! மதிக தொண்டர்கள் என்று சொல்வதைக் காட்டிலும் அவர்களை உயிர் மூச்சு என்று சொன்னால் மிகையாகாது. கழகத்தின் சொத்தாக கருதப்படும் கட்டடங் களுக்காக தெருவெங்கும் உண்டியல் ஏந்திய தொண்டர்களுக்கு சிறப்பு செய்யும் முடிவை என் தலைமை யிலான தலைமைத்துவம் முடிவெ டுத்துள்ளது.

அன்று உண்டியல் ஏந்தியவர்கள் இன்று மறைந்து போயிருக்கலாம். அவர்களின் வாரிசுகள்-குடும்பத்தார் ஆகியோருக்கு நாங்கள் சிறப்பு செய்யவிருக்கின்றோம். அவர்கள் யாராவது விடுபட்டிருந்தால் உடனே எங்களோடு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அவர்கள் அன்று ஏந்திய உண் டியல்தான் பிற்காலத்தில் திருச்சுடர் காலத்தில் பல கட்டடங்கள் வாங்கப் பட்டன என்பது வரலாறாகும்.

கே: அந்த கட்டடங்கள் பற்றி...?

ப: நான் கழகத்தின் தேசிய தலைவராக வந்த பின்னர் என்னோடு இருந்து மறைந்த இரா.பாலகிருஷ் ணன், ப.வெற்றிக்குமரன் ஆகியோ ருடன் மலாக்கா கந்தரராஜ், தங்கையா, மு.சு.மணியம், கே.ஆர்.அன்பழகன் உள்ளிட்ட பலர் பல்வேறு போராட் டம் நடத்தி கட்டடத்தை மீட்டுள் ளோம். அதற்கு உதவிய அரசியல்-சமுதாயத் தலைவர்களுக்கு இந்த வேளையில் நன்றி கூற விரும்பு கிறேன்.

கே: இந்த மாநாட்டின் சிறப் பம்சம்?

ப: தமிழகத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வருகை தந்து பேருரையாற்றுகிறார். தந்தை பெரியாருக்கு பிறகு கழகத்தை வழி நடத்தும் தமிழர் தளபதியாக அவர் விளங்கி வருகிறார்.

எனவே, பொதுமக்கள், கழகத் தொண்டர்கள் திரளாக வருகை தந்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள் கிறேன். இவ்வாறு மக்கள் ஓசையு டனான நேர்காணலில் பி.எஸ்.மணி யம் கூறினார்.

தகவல்: வி.சி. வில்வம்
நன்றி: மக்கள் ஓசை 20.1-2.-2013

Read more: http://viduthalai.in/page2/73064.html#ixzz2pOJSBDn9

தமிழ் ஓவியா said...


கடலுக்குள் வழித்தடம்


துருக்கியில்: ஒட்டாமன் சுல்தான் 150 ஆண்டுகளுக்கு முன் ஆசைப்பட்ட கடலினுள் குழாய்த் தடம் அமைக்கும் திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்து சாதனையாகியுள்ளது.

அய்ரோப்பாவையும், ஆசியாவையும் இணைக்கும் வகையில் கடலடி ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. கருங்கடலையும், மார்மரைக்கடலையும் பாஸ்பரஸ் ஜலசந்தி இணைத்துள்ளது. இந்த ஜலசந்திக்குக்கீழே மார்மரைக் குழாய்ப்பாதை செல்கிறது. இந்த பாதை 13.6 கி.மீ. நீளம், இதில் 1.4 கி.மீ. கடலுக்கடியில் 180 அடி ஆழத்தில் செல்கிறது.

ஜப்பானில்: ஜப்பானில் ஹான்ஷூ தீவையும், ஹோக்கைடோ தீவையும் இணைக்கும் கடலுக்குள் ளான பாதை கடல் படுகைக்கு(Seabed) 460 அடிக்கு கீழே உள்ளே அமைந்துள்ளது. இது உலகத்திலேயே அதிகமான ஆழமான பாதை. இது 790 அடி கடல் மட்டத்திற்கு (Sealevel) கீழே உள்ளது.

இங்கிலாந்து - பிரான்ஸ்: பிரிட் டனையும், பிரான்சையும் கடல்கீழ் இணைக்கும் தடம் 250 அடி கடல் மட்டத்துக்கு கீழே செல்கிறது.

செய்தி வழங்குதல்: சோம.வச்சலா

Read more: http://viduthalai.in/page2/73066.html#ixzz2pOJwfzt2

தமிழ் ஓவியா said...


பௌத்த சமயத்தின் சாதி எதிர்ப்பு முதல் நூல்

வஜ்ஜிர சூசி

- ஆசிரியர் பெ.சு. மணி

பிராமணீய மேலாண்மையைக் கொண்ட சாதி அமைப்புகளையும், அவற்றின் வாதங்களையும் ஆன்மிக -_ சமய அடிப்படையில் மறுக்கும் வாதங்களின் வரலாற்றில் பௌத்த சமயத்திற்கு முதலிடம் உள்ளது.

பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திரர் எனும் நால்வருணப் பாகுபாட்டின் உயர்வு -_ தாழ்வு நோக்குகளைப் பௌத்தம் ஏற்க மறுத்தது. கங்கை, யமுனை, அசீரவதி, சரயு, மகி முதலான நதிகள் பெருங்கடலில் கலந்ததும் தம்முடைய பழைய இயற்பெயர்களை இழந்து விடுகின்றன. பெருங்கடல் என்ற பெயர் மட்டுமே எஞ்சுகின்றது.

இவ்வாறே பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்போர் புத்தரின் அருளுரைகளை ஏற்றுக் கடைப்பிடிக் கும்பொழுது, அந்த நால்வகை வருணப் பெயர்கள் மறைகின்றன. புத்தரின் சீடர் கள் என்ற பெயரே நிலை கொள்கிறது இவ்வாறு ஹெர்மன் ஓல்டன் பெர்க் எனும் அறிஞர் தமது புத்தர் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

சுத்த மெய்ஞ்ஞானச் சுடர், சின்மயமானதோர் தேவன் என்று மகாகவி பாரதியாரால் துதிக்கப் பெற்ற புத்த பகவான், நால்வருணப் பாகு பாட்டில் உயர்ந்தவர் _- தாழ்த்தவர் என்பதில்லை என்று வலியுறுத்தியவர். அவருடைய புனிதப் போதனைகளின் தொகுப்பான தம்மபதம் 423 சூத்தி ரங்களைக் கொண்டது. 26 வர்க்கங் களைக் கொண்டது. இறுதி வர்க்கத் தின் பெயர் ப்ராஹ் மணவக்கோ என்று பாலி மொழியில் கூறப்படும் பிராமண வர்க்கமாகும்.

41 சூத்திரங்களைக் கொண்ட பிராமண வர்க்கத்தில், பிராமணன் யார்? என்பது விளக்கப்பட்டுள்ளது. 14வது சூத்திரத்தில் குலப் பிறப் பாலோ, பிராமணத் தாய் வயிற்றில் பிறந்ததாலோ, நான் பிராமணன் என்று கூற மாட்டேன். அவர் செல்வ வாழ்வு உள்ளவராய் இருந்தால் அவரை அய்யன் என்று அழைக்கலாம். (பாலி மொழியில் போ என்ற சொல்லிற்கு அய்யன் என்பது பொருள்). பொருட் பற்றுக்களை விட்டவர் யாரோ, ஆசையை விட்ட வர் யாரோ அவரைப் பிராமணன் என்று அழைக்கிறேன் என்று கூறப் பெற்றுள்ளது.

மெய்யறிவு பெற்று நிருவாணத் தகுதி கொண்டவரே பிராமணன். பூரண ஞானம் பெற்ற முனிவனும், அறியத் தக்க எல்லாவற்றையும் அறிந்தவரையும் நான் பிராமணன் என்பேன் என்று புத்த பகவான் பிராமண வர்க்கப் பண்புகளை முடித்து வைக்கின்றார்.

நால் வருணப் பாகுபாட்டின்மீதான விமர்சனத்தை மட்டும் மையப்படுத்தி அசுவ கோஷா எனும் பௌத்த சமயக் கவிஞர், நாடகாசிரியர் வஜ்ர சூசி எனும் பெயரில் படைத்த நூலே பௌத்த சமயத்தின் முதல் சாதி எதிர்ப்பு நூலா கும். இந்நூல் சம்சுகிருத மொழியில் எழுதப்பட்ட சிறு நூலாகும். அசுவ கோஷா கி.பி. முதல் நூற்றாண்டிற்குரியவர். மகாயானம் எனும் பௌத்த சமயப் பிரிவைச் சார்ந்தவர். புத்தர் சரித்திரம் எனும் அருமையான சம்சுகிருதக் குறுங்காப்பியத்தைப் படைத்த பேரறிஞர்.

108 உபநிடதங்களில் ஒன்றான வஜ்ரஸுசி எனும் மற்றொரு நூலும் உள் ளது. சூசி உபநிடதத்திற்கு உரை எழுதி யுள்ள அமரர் அண்ணா என்., சுப்பிர மணிய அய்யர் (1895_1992) நூற்பெயர்க் காரணத்தைப் பின்வருமாறு கூறியுள் ளார்.

இது ஸாமவேதத்தைச் சார்ந்தது. வஜ்ர ஸூசிகா என்றால் வயிர ஊசி. கடினமான தாதுப் பொருள்களில் துவாரம் செய்து நுழைவது வஜ்ர ஊசி. வஜ்ரஸூசி உபநிடதத்தின் இரண் டாவது மந்திரம், பின்வருவது:

பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று நான்கு வர்ணங்கள். அவற்றுள் பிராமணர் முக்கியமானவர் என்ற வேதத்தின் கருத்தையொட்டி ஸ்மிருதிகளும் கூறும். அதைப் பற்றி ஆராய வேண்டும். பிராமணன் என்றால் யார்? ஜீவனா, தேகமா, ஜாதியா, ஞானமா, கர்மமா, தர்மமா?

மகாகவி பாரதியார் இந்த உபநிட தத்தை விமர்சனம் செய்து பிராமணன் யார்? -_ ஓர் உபநிஷத்தின் கருத்து எனும் கட்டுரை எழுதியுள்ளார். இவ்வுபநிஷதம் பிராமணன் யார்? என்பதைக் குறித்து மிகவும் நேர்த்தியாக விவரித்திருக்கின்றது. நான் பிராமணன், நீ சூத்திரன் என்று சண்டை போடும் குணமுடையவர்களுக் கெல்லாம் இவ்வேத நூல் தக்க மருந்தாகும். நாட்டிலே இவ்விஷயமான விவாதங்களும் போராட்டங்களும் அதிகரிக்கின்றன. இத்தருணத்தில் நமது வேதம் இவ்விவகாரத்தைப் பற்றி என்ன அபிப்பிராயம் கொடுக்கிறது என்பது ஆராயத்தக்க பொருளாகும் என்று பார தியார் கூறி, உபநிஷத்தின் சாராம்சத்தைத் தமிழாக்கம் செய்துள்ளார்.

முற்கூறிய ஆறு நோக்குகளில் பிரா மணன் வரைவிலக்கணம் அமையாது. நற்பண்புகள், மெய்ஞான அறிவு முத லானவை பெறுபவனே பிராமணன் ஆவான் என்பது உபநிடத வஜ்ரஸூசி யின் சாரமாகும். இதில் ஒன்பது மந்திரங்கள் உள்ளன.
அசுவ கோஷாவின் வஜ்ர சூசி, உபநிடதம் வஜ்ர ஸூசியைக் காட்டிலும் விரிவானது.

தமிழ் ஓவியா said...

19ஆம் நூற்றாண்டில் சாதி எதிர்ப் புச் சிந்தனையாளர்கள், போராளிகளை அசுவகோஷாவின் வஜ்ர சூசி கவர்ந் துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் அசுவகோ ஷாவின் நூல் மத்ய கால சில மராட் டிய பக்த கவிகளால் மராட்டிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள் ளது. மராட்டிய மாநிலத்தில் பிரா மணரல்லாத இயக்கத்திற்கு மூல ஒற்றாகத் திகழும் ஜாதி பேத விவேக சாரம் எனும் நூல் அசுவகோஷாவின் நூலின் தாக்கத்தைப் பெற்றுள்ளதாகக் கூறுவர். இந்நூலை எழுதியவர், துகாராம் சத்ய பாட்வல் (1839-_1896) என்பவர், மராட்டிய மாநில பிரா மணரல்லாதார் இயக்கத்தை உருவாக் கிய மகாத்மா பூலே (1827_1890), ஜாதி பேத விவேகசாரம் நூலின் மறுபதிப்பைக் கொண்டு வந்தார். அசுவ கோஷாவின் வஜ்ரசூசியின் மராட்டிய மொழிபெயர்ப்பு வெளியீட்டிற்கும் ஏற்பாடு செய்தார். பௌத்தம், பகுத்தறிவு, தலித் விடுதலை, பிராமணீய மேலாண்மை எதிர்ப்பு ஆகியனவற்றை இணைத்துப் போராடிய முதல் போராளியான பண்டிதர் க. அயோத்திதாசர் (1845-_1914), தமது தமிழன் இதழில் வஜ்ர சூசியைத் தமிழாக்கம் செய்து வெளியிட்டார். அவர் மறைவிற்குப் பிறகு தனி வெளியீடாக வந்தது. இந்நூலின் விளம்பர வரிகளில் ஒன்று, பின்வருவது: இவற்றில் நியாய வாயிலாக ஜாதிகளின் கொடுமையை எடுத்துக்காட்டுவதை இந்நூல் வாசிப்போர் நன்கறிந்து கொள்ளலாம்.

தமிழ் ஓவியா said...

அயோத்தியதாசர் 1898இல் சென்னை இராயப்பேட்டையில் தென் இந்திய சாக்கைய பவுத்த சங்கத்தை நிறுவினார். இந்த அமைப்பின் கோலார் தங்கவயல் கிளை, கோலார் தங்கவயல் சாம்பியன் நீப்ஸ் ஸ்ரீசித் தார்த்த புத்தக சாலை வஜ்ர சூசியின் தமிழாக்கத்தை வெளியிட்டது. 1921_இல் வெளிவந்த மூன்றாம் பதிப்பு எமது பார்வைக்குக் கிடைத்தது. இதன் விலை ஓரணா, வஜ்ர ஊசி அல்லது மாணிக்க ஊசி என்னும் ஜாதி கண்டனம் எனும் பெயரில் வெளி வந்தது. அஸ்வ கோஷா போதிசத்வர் அவர்களால் சமஸ்கிருத பாஷையில் செய்யப்பட்டு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது எனும் குறிப்பும் நூலின் தலைப்பை யொட்டித் தரப் பட்டுள்ளது.
ஓர் தர்மப் பிரியன் என்பவரின் பெயரில் சென்னை 1899 ஜூன் 12ஆம் தேதியில் எழுதப்பட்ட முகவுரை மூன்றாம் பதிப்பில் வெளியிடப்பட்டுள் ளது. இதன் இறுதிப் பகுதி, பின் வருமாறு:

ஆதி காலத்திய பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர ரென்னும் நான்கு ஜாதியார் தற்காலம் நாலா யிரத்துக்கு அதிகமாகப் பிரிந்து ஒற்றுமை, தேசாபிமானம், சகோதர வாஞ்சை இவைகளின்றி, மேல் மகன், கீழ்மகன் என்னும் வைராக்கியத்தை மேற்கொண்டு அறியாமையாகிய அந்தகாரத்தில் மூழ்கிக் கிடப்பதால், நம் பரத கண்டத்திய சகோதரர்கள் யாவரும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்னும் அகங்காரத்தை ஒழித்து மனிதர் சகலரும் ஒரே ஜாதியார் என்று எண்ணி ஞானம், அருள்,கிருபை, பரோபகாரம், ஜீவகாருண்ணியம் சகோதரவாஞ்சை முதலிய சற்குணங்கள் -_ இந்த வஜ்ஜிர சூசியை வாசிப்பவர்கள் இதில் சொல்லியிருக்கும் ஞாயங்களை கவனித்து, உலகிலுள்ள மனிதர்கள் யாவரும் ஒரே ஜாதியரென்று தெளிந்து பேதமையில் மூழ்கியிருக்கும் சகோ தரர்களைத் தாழ்ந்தவர்களென்று இகழாமல் அவர்களுக்கு வேண்டிய ஞான அருளைப் புரிந்து கை கொடுத்துக் கரை சேர்ப்பார்களாக

அஸ்வகோஷாவாகிய நான் மஞ்சு கோஷாவாகிய என் குருவை வணங்கி, சுருதியுக்தி அனுபவத்தோடு கூடிய வஜ்ர சூசி -_ மாணிக்க ஊசி என்று பொருள்படும் நூலை, எழுத ஆரம்பிக் கின்றேன் என்று நூலைத் தொடங்கி யுள்ளார். அசுவகோஷா, மஞ்சுகோஷா புத்தபகவானின் பெயராகும்.

ஓ பிராமணர்களே! என விளித்து இருபத்தாறு விளக்கங்களை வினா - _ விடை உத்தியில் எழுதியுள்ளார். அசுவகோஷா.

முதல் இரு வினாக்கள், பின்வருவன 1) ஓ பிராமணர்காள்! உங்களுடைய வேதங்களும், ஸ்மிருதிகளும் இன்னும் தர்மஅர்த்த காம விஷயங்களைப் பற்றிப் பேசும் நூல்களும், நியாயமான வைகளென்றும், அவைகளைக் கண்டித்துப் பேசுதல் பிசகென்றும், வைத்துக் கொள்வோம். ஆனால், அந்நூல்களைக் கொண்டு பிராமணன் மற்ற ஜாதியாரை விட, உயர்ந்தவ னென்று சாதிக்க முடியாதென்றால் என் செய்வீர்?

தமிழ் ஓவியா said...


2) முதலாவது பிராமணத்துவமென் றால் என்ன? அது ஜீவனா? பிறப்பா? தேகமா? ஜென்மமா? அல்லது வேதத்தின் தேர்ச்சியா?

உபநிடத வஜ்ரஸூசியைப் போலவே பிராமணத்துவம் முற்கூறிய ஐந்து நோக்குகளில் அமைவதில்லை என்று அசுவ கோஷாவின் வஜ்ரசூசியும் விளக்கியுள்ளது. பிறப்பு, ஜீவன், தேகம், ஞானம், ஆசாரம், கர்மம் இவை ஒருவனை பிராமணனாகச் செய்ய முடி யாதென்று நான் தீர்மானிக்கின்றேன் என்றார் அசுவகோஷா. இதில் குறிப் பிடத்தக்கதொரு அம்சம் என்னவென் றால், அசுவ கோஷா வேதவாக்கி யங்கள், வியாசபாரதம், மநு சாஸ்திரம் முதலான பண்டைய சாத்திரங்களில் இருந்து மேற்கோள்களை தமது கொள்கைகளுக்கு ஆதரவாகப் பொருத் திக் காட்டியுள்ளார். சில சான்றுகள் வருவன:

பிராமணத்துவம் பிறப்பால் அதாவது பிராமண தாய், தகப்பன் மார்களிடம் பிறப்பதால், உண்டாவ தென்பீராகில் யாவருக்கும் தெரிந்த ஸ்மிருதி வாக்கியங்களுக்கு விரோத மாகும் (ப.4)

ஜீவன் பிராமணத்துவமாகாதென் பது - -_ மகா
பாரதத்திலிருந்து ஸ்தாபிக்கலாம் (ப.3).

பிராமணத்தனம் நல்லோர்களு டைய ஒழுக்கமே தவிர, ஜாதி குலகோத் திரத்தை அடுத்ததல்ல என்பது பெறப் பட்டது. பக்தியால் அநேக சூத்திரர்கள் பிராமணர்கள் ஆனதாக மனுசாஸ்திரத் தில் சொல்லப்பட்டிருக்கிறது

பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களுக்கு உண்டாயிருக்கும் வித்தியாசங்கள், அவரவர்கள் செய்யும் தொழிலின் பேதங்களாலும் கிரிய பேதங்களாலும் உண்டானதொழிய வேறல்ல. இதற்குச் சாட்சியம் வேண்டு மானால் பாண்டு புத்திரனாகிய யுதிஷ் டிரனுக்கும் வைசம் பாயன முனிவருக் கும் நடந்த சம்பாஷணையைப் பாரும்

நான்கு வருணமென்னும் சித்தாந்தம் சுத்த தப்பு. எல்லா மனிதரும் ஒரே ஜாதியே என்று அசுவ கோஷாவின் வஜ்ர சூசி மேலும் பல்வேறு சான்று களால் சாற்றியுள்ளது.

வஜ்ர சூசி எழுதப்பட்டதற்கான காரணம் பின்வருமாறு இறுதியில் குறிப்பிடப் பெற்றுள்ளது.

ஓ சிநேகிதர்களே! மௌடீகப் பிராமணர்களும் மற்றுமுள்ளோரும் விஷயங்களைத் தெரிந்து சன்மார்க்கத் தில் நடப்பதற்காக இந்த வஜ்ர சூசி எழுதப்பட்டது. இதைக் கவனிப்போர் கவனிக்கட்டும். கவனிக்காதவர்கள் அதன் பயனை அனுபவிக்கட்டும்.

புத்த பகவானின் தம்மபதம், உபநிடத வஜ்ரஸூசி. அசுவகோஷாவின் வஜ்ர சூசிமுதலானவை தனி மனித சமூக நல்லொழுக்கத்தையும் உயர்ந்த ஆன்மிக _ பதிநிர்வாண நிலையையும் வலியுறுத்தும் நோக்கில் நால்வருணப் பாகுபாட்டின் அதன் ஏற்றத் தாழ்வை நிராகரிக்கின்றன.

நால்வருணப் பாகுபாடும், சாதிப் பிரிவுகளும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் வரை வஜ்ரசூசிகளின் எதிர்ப் புக் குரல்கள் ஒலித்துக் கொண்டே யிருக்கும்.

வடிவங்கள் மாறலாம், போர் முறைகள் மாறலாம், போர் முனைகள் மாறலாம், ஆனால் இலக்கு மாறக் கூடாது.

(நன்றி: ஓம் சக்தி ஜூலை 2008)

Read more: http://viduthalai.in/page4/73068.html#ixzz2pOKC2vye

தமிழ் ஓவியா said...


உப்புச் சுரங்கத்தில் உன்னத சுவை (காட்சி)- மு.வி.சோமசுந்தரம்

கொடுமைகளின் முதன்மை வியாபாரியாக, உலக அரசியல் சந் தையில் உலா வந்த ஹிட்லர் பேரா சைப் பேய், நடனம் ஆடிய அரங்கம் ஜெர்மனி நாடாகும். அதற்குக் கிழக்கில் அமைந்த நாடு போலந்து ஹிட்லரின் நாசிச கரியமில வாயு வீசிய நாடு. இந்த போலந்து நாட்டில் உள்ள வியத்தகு, அதிகம் அறிந்திராத அற்புதக் காட்சி அரங்கைப் பற்றிய தகவல் தரப்படுகிறது.

இது ஒரு உப்புச் சுரங்கம் போலந்து நாட்டில் வியலிசிகா என்ற இடத்தில், மத்திய அய்ரோப்பிய நாட்டைத் தவிர்த்து வெளியில் தெரியாத ஒரு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த உப்புப் பாறைச் சுரங்கம் நிலத்துக்கு 200 மீட்டர் கீழே உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் சுரங்க ரயில் நிலை யம் அமைக்கும் பணி பெரியதாக பேசப்படும் ஒன்று. இந்த 200 மீட்டர் ஆழத்தில் சுரங்க வல்லுநர்கள், சிலைகள், சிற்பங்கள், அலங்கார தொங்கு விளக்குகள், அரங்கங்கள் வழிபாட்டு கூடம் அமைத்துள்ளனர். இவை 800 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு பகுதிக்கும் செல்ல கதவுகள் உள்ளன.

இந்த சுரங்கம் உள்ள பகுதி 20 மிலியன் ஆண்டுகளுக்கு முன் கடலாக இருந்து, வெப்ப, நிலவியல் மாற்றத்தால் சோடியம் குளோரைட் உப்புப்பாறைகளாக மாற்றம் பெற்றுள்ளன. உப்புப்பாறைகளைக் கண்டறிந்து உப்பைப் பயன்படுத்தும் முன்னதாக, அப்பகுதியில் இருந்த உப்பு நீருற்றிலிருந்து நீரைக்காய்ச்சி உப்பை எடுத்து வந்தனர். இந்த செயல்முறை கி.மு.3500 துவக்கத்தி லிருந்து வந்தது. உப்பு நீரூற்று வற்றியதால் உப்பைத் தேடி தரையைத் தோண்ட முற்பட்டனர். உப்புப் பாறைகளைக் கண்டனர்

. சுரங்கம் ஏற்பட்டது. சுரங்கங்கள் போலந்து மன்னர்களுக்கு சொந்தமாக இருந்தன.
இந்த சுரங்க அருங்காட்சியகம் 3 கி.மீ. பாதையைக் கொண்டது. போலந்து நாட்டின் விண்வெளி ஆய்வாளர் நிக்கோலஸ் கோப்பர் நிக்கஸ் சிலை, மன்னர் சிலை, குதிரை மூலம் இயக்கப்படும் இயந்திர மாதிரி, 18-ஆம் நூற்றாண்டில், உப்பை கீழிருந்து மேலே கொண்டுவர பயன்படுத்திய மர இயந்திரம், காட் சிப் பொருள் களாக உள்ளன. சுரங்கக்கூரைப் பகுதியில் உப்புப் படிகங்கள் காலி பிளவர் (சிணீறீவீ யீறீஷீஷ்மீக்ஷீ) போன்று கொத்துக் கொத் தாக அமைந் துள்ளதைக்காண புதுமையாக இருக் கும், புனித அந் தோனி கோயில், ஏசு, மேரி சிலை கள், மென்மை யான ஒளி விளக்கில் அமைத்துள்ளனர். புனித சிலுவைக் கோயிலின் வாசலில் தேய்மான மடைந்த முட்டியிட்ட நிலையிலுள்ள இரண்டு துறவிகளின் உப்புச் சிலைகள் உள்ளன. புதின கிங்கா கோயில், அமைப்பிலும், அளவிலும், வியந்து பார்க்கத்தக்க எழில் தோற்றமாக உள்ளது. கோயிலின் கூரையிலிருந்து, தூய உப்புப் படிகங்களினால் அமைந்த தொங்கும் அலங்கார விளக்குகள் கண்கொள்ளாக் காட்சிகள். உப்புப் பாளத்தரை, விவிலியக்கதைக் காட்சிச் சிற்பங்கள் உள்ள சுவர்கள், இப்படியும் ஒரு சிற்பக்கூடமா? நம்ப முடிய வில்லையே! என்று கூறத்தோன்றும். இச்சுரங்கத்தில் அடிக்கடி இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன என்றால், நம்பாமலிருக்க முடிய வில்லை.

சுரங்கத்தினுள், சோடியம், கால்சியம், மெக்னீசியம் குளோரைட் கலந்த காற்றை உட்கொள்ளும் நிலை, நம் உடலுக்கு நலம் பயக்கும் சூழலாக உள்ளது. ஒவ்வாமை வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள், 440 அடி ஆழப்பகுதியில் அமைந் துள்ள கூடத்தில் ஒரு நாள் தங்கி குணமடைந்து செல்வதாகக் கூறப்படுகிறது.

1966-ஆம் ஆண்டு முதல், விலை வீழ்ச்சியின் காரணத்தாலும், நீர்ப்பெருக்கு ஏற்படுவதாலும் உப்பு வெட்டுவது இல்லை. பாதுகாப்பைக் கருதி ஒரு சதவீத சுரங்கப்பகுதிக்கு மட்டில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

உப்பை ஒதுக்க வேண்டியவர்கள் கூட போலந்து உப்பு சுரங்கத்தைப் போய் பார்த்துவர ஆசைப்பட்டால் ஆச்சர்யப்பட இடமில்லை. ஆபத்தும் ஏதுமில்லை. புதிய அனுபவம் கூடுதல் பலன்தானே!

Read more: http://viduthalai.in/page5/73070.html#ixzz2pOKhdHyk

தமிழ் ஓவியா said...


மதத்தின் விளைவு


மதத்தின் விளைவு

ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர் ஜோமோ கென்யாட்டா தான் ஒரு முறை சுவையோடு சொன்னார். பாருங்கள் தலைமுறை தலைமுறை யாக ஆப்பிரிக்க மண் எங்கள் கைகளில் இருந்தது.

கப்பலில் வந்த வெள்ளைக் காரர்கள் தங்கள் கரங்களில் இருந்த பைபிளை எங்கள் கைகளில் தந்து, கண்களை மூடிச் செபம் செய்யச் சொன்னார்கள்; நாங்கள் விழிகளை மூடினோம், தூங்கி விட்டோம்.

காலதாமதமாக விழித்துப் பார்த்த போது வெள்ளையர் கைகளில் எங்கள் நாடு இருந்தது;

ஆனால் எங்கள் கைகளிலோ பைபிள் மட்டுமே மிஞ்சி இருந்தது! என்றார்.
எத்தனை பொருளாழம் நிறைந்த சொற்கள் இவை!

(கவிவேந்தர் கா.வேழவேந்தன் முன்னாள் அமைச்சர் அவர்களின் தெரிய... தெளிய... கட்டுரைத் தொகுதி - முதற் பதிப்பு டிசம்பர் 2000 72-ஆம் பக்கத்தில் இருப்பது).

Read more: http://viduthalai.in/page5/73069.html#ixzz2pOKtOsxW

தமிழ் ஓவியா said...

சமுதாயத் தொண்டு

சமுதாயத் தொண்டு செய்வது லேசான வேலையல்ல; பெருந் தொல்லையான காரியமாகும்.

படிக்குப்படி ஒவ்வொரு கட்டத் திலும் தொல்லைகள் எதிர்நோக்கி நிற்கும், நாம் செய்யும் சமுதாயப் பணியினால் யாருக்கு அனுகூலமு ம் வசதியும் கிடைக்குமோ,
யாருடைய இழிவுகள் ஒழி யுமோ, அந்த மக்களின் ஆதரவு அபிமானம் கூட நமக்கு கிடைக் காது.

(குடிஅரசு தொகுதி 3 -208-ஆம் பக்கம்)

Read more: http://viduthalai.in/page5/73069.html#ixzz2pOL2sDDW

தமிழ் ஓவியா said...

வாக்களிக்க விரும்பாதார்

நடைபெற்ற நான்கு மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாத வர்கள் (நோட்டா).

டில்லி 0.67 சதவீதம்

மத்தியப்பிரதேசம் 1.90 சதவீதம்

ராஜஸ்தான் 1.92 சதவீதம்

சத்தீஸ்கர் 3.07 சதவீதம்

Read more: http://viduthalai.in/page5/73069.html#ixzz2pOLAsUQL

தமிழ் ஓவியா said...


பெண்களும் - சொத்துரிமையும்

ஓரிருவர் எடுத்துக்காட் டாக வழிகாட்டும்போது, அது அவர்தம் தனித் துணிச்சல், பொறுப்பற்ற தன்மை என்று குறைபேசி ஒதுங்குவோர் கூட, அவர் கள் பலராகும்போது, அதுவும் நியாயமே என்று ஏற்க முன்வருவர்.

துணிந்து செயற்படுவோ ருக்குத் துணை நிற்கச் சிலரேனும் முன்வரும் சூழலை உருவாக்கியதே சுயமரியாதை இயக்கத்தின் தொண்டினால் நாடு பெற்ற நற்பயன் எனலாம்.

அப்படிப்பட்ட உரிமை உணர்வு தழைக்கப் பெண்கள் - தம் காலிலே நிற்கும் நிலை, தாமே ஊதியம் பெற்று வாழும் நிலை உருவாக வேண்டும். படித்த பெண்கள் வேலைக்குச் செல்லலாம் என்னும் கருத்து வளர்ந்து வந்தாலும், அதை விரும்பாதாரும், தடுப்பவருங்கூட உள்ளனர்.

கணவனை நம்பித்தான் வாழ்ந்தாக வேண்டும் என்னும் நிலையிலிருந்து, தான் தனது வருவாயிலிருந்தே வாழ முடியும் என்னும் நம்பிக்கை கொள்ளும் நிலையே பெண்ணின் உரிமைக்கு அடிப்படையாகும்.

அதே போன்று, சொத்துரிமை உள்ள சமூகத்தில் அந்த உரிமை ஆண் மக்க ளுக்கு மட்டுமே என்றுள்ள முறையே, பெண்கள் உரிமைக்குத் தகுதியுடையவர் ஆகார் என்னும் எண்ணத்தை உறுதி செய்ய ஏதுவாகிறது.

சொத்து எவ்வளவு? சிறிய அளவின துதானே? அதனாலா பெண்ணுரிமை காக்கப்படும் என்று சிலர் ஐயம் எழுப்புவர். ஆண்களுக்கும் அது பொருந்துமன்றோ? சொத்தின் அளவு பெரிதாகுமிடத்து, அந்த உரிமை பெண் ணையும் அடையு மன்றோ? சிறிதெனி னும் - ஆணுக்கு உள்ள அளவு பெண்ணும் பெறுவாளன்றோ!

பெண்ணின் மனத்தில் அதுவே தாழ்வு மனப்பான் மையைப் போக்க ஏதுவாகும்.

அதனால் தான் 1929-ஆம் ஆண்டில் செங்கற்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் ஆண்களைப் போன்றே பெண்களுக்கும் உடைமை உரிமை வழங்க வேண்டும் என்றும், அதற்குரிய வழியில் அரசு, சட்டத்திருத்தம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த நாட்களில் முதல் அமைச்ச ராக விளங்கிய டாக்டர் பி.சுப்பராயன் அந்த மாநாட்டில் கலந்து கொண்டி ருந்தார். பெரியார் ஈ.வெ.ரா. அவர்களே அப்படிப்பட்ட தீர்மானம் வரத்தூண்டு கோல் ஆனவர்.

ஆயினும், அத்தீர்மானம் அறுபது ஆண்டுகட்குப் பின்னர், கலைஞர் மு.கருணாநிதி முதல்வராக விளங்கிய 1990-ஆம் ஆண்டிலேதான தமிழ்நாடு சட்டப் பேரவையில் சட்டத் திருத்த மாகக் கொண்டு வரப்பட்டு நிறை வேற்றப்பட்டது.

(பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் தமிழர் திருமணமும் இனமானமும் பரிசுப்பதிப்பு நூலில் -_ பக்கம் 264)

-_ க. பழநிசாமி, தெ.புதுப்பட்டி

Read more: http://viduthalai.in/page6/73071.html#ixzz2pOLKr3bJ

தமிழ் ஓவியா said...


கீரைவகைகள்மணத்தக்காளி கீரை இந்த கீரையில் இலை, காய், பழம் இருக்கும். இந்த மூன்றையும் சமைத்து சாப்பிடலாம். இதில் சிறிய அளவில் வெள்ளை பூக்களும் மலரும். மணத் தக்காளி கீரையின் காய்கள் மிக சிறியதாக கொத்து கொத்தாக காய்க் கும். காய் முற்றினால் கத்தரிக்காய் நிறத்தில் இருக்கும். இதில் மற்றொரு வகை உள்ளது. அதில் பழம் இளம் சிவப்பாக இருக்கும்.

மணத்தக்காளி கீரையின் பழம் இனிப்பு புளிப்பு கலந்த சுவையாக இருக்கும். காய், பழத்தை பச்சையாக வும் சாப்பிடலாம். சட்டினி, பச்சடி, கூட்டு, பொரியல், ரசம் வைத்தும் சாப்பிடலாம். காய் மற்றும் பழத்தை புளிக்குழம்பு வைத்து சாப்பிடலாம்.

பலன்கள்: 1. மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந் தால் குடல் புண், மூலம் ஆகிய நோய்கள் குணமாகும். சளி, இருமல், போன்ற கப நோய்களைப் போக்கும் தன்மை கொண்டது. பிள்ளை பெற்ற பெண்களுக்கு மிகவும் நல்லது.

2. கண் பார்வை நன்றாக தெரியும்.

3. விட்டமின் ஏ, பி மற்றும் இரும்பு, சுண்ணாம்பு ஆகிய சத்துக் கள் மணத்தக்காளி கீரையில் அதிகம்.

4. குறைந்த விலையில் கிடைத் தாலும், மணத்தக்காளி கீரையில் போஷாக்கு அதிகம்.

5. குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. மணத்தக்காளி கீரைக் குழம்பு.

வயிற்று புண்ணை குணப்படுத்தும் முளைக்கீரை

கீரையை தினமும் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். முளைக்கீரை அதிக வைட்டமின் சத்துக்கள் நிறைந்த கீரை. இக்கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் கே, வைட்டமின் சி, போலேட் மற்றும் ரிபோப்லாவின் ஆகியவற்றை கொண்டுள்ளது.. நீர்சத்து அதிக முள்ள முளைக்கீரை வயிற்றுப் புண்ணை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

உடலுக்கு பலம் கூட்டும் சக்தியை கொண்டது. சிறுவர்களுக்கு இந்தக் கீரையை தொடர்ந்து கொடுத்தால் நல்ல உடல் வளர்ச்சி அடைவார் கள். முளைக்கீரையில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம், பாஸ்பரஸ், மங்கனீசு போன்ற கனிமங்களைக் கொண்டுள் ளது முளைக்கீரை. கோதுமை, அரிசி, ஓட்ஸ், ஆகியவற்றில் கொண் டுள்ள புரதத்தை விட 30% அதிக புரதத்தை கொண்டுள்ளது. இதய நோய், உயர் ரத்தஅழுத்தம் உள்ள வர்களுக்கு முளைக்கீரை உதவுகிறது.

Read more: http://viduthalai.in/page6/73072.html#ixzz2pOLU2VQb

தமிழ் ஓவியா said...


அம்பேத்கர் பேசுகிறார்


ஜஸ்டிஸ் கட்சி எல்லாம் இந்திய கட்சி ஆக இப்போது நல்ல சமயம்; நல்ல வேலைத் திட்டமும் தீர்மானங்களும் இருப்பதால் துணிந்து தைரிய மாகவும் இந்தியா பூராவும் சுற்றி வேலை செய்யும்படியும் ஆங்காங்கு தமது நண்பர்களுக்கு எழுதியும் தம்மால் ஆன அள வுக்கு ஒத்துழைத்தும் ஆதரவு அளிப்பதாகவும் அம்பேத்கர் சொன்னார் என்பதாகத் தெரிகிறது (69 ஆண்டுகளுக்கு முன்பு)

(குடிஅரசு 30.09.1944 சென்னை தந்தை பெரியாரும் டாக்டர் அம்பேத்காரும் பக்கம் 2)

தந்தை பெரியாருக்கு எதிராக தங்களுக்குத் தாங்களே ஜஸ்டிஸ் கட்சி என்று சொல்லிக் கொண் டிருந்த சிலர் டாக்டர் அம்பேத் காருக்கு விருந்து ஒன்றை கொடுத்தனர். விருந்துக்கு நன்றி தெரிவித்துப் பேசிய டாக்டர் அம்பேத்கர் அவர்கள் பெரியாருக்கு விரோதமாக நடப்பதைக் கண்டித்தார். தலை வரை மதித்துக் கட்டுப்பாடாக நடக்க வேண்டுமென்று அறிவுரை கூறினார். தந்தை பெரியார் அவர்களை டாக்டர் அம்பேத்கர் எப்படி மதித்தார் என்பதற்கு இது ஓர் அரிய எடுத்துக்காட்டு அல் லவா? 30.9.1944 அன்று கடைசியாக திராவிடஸ்தானை யும், பாகிஸ்தானையும் ஒன்றாகக் கருதியது தப்பு என்றும், அதன் தத்துவம் வேறு என்றும், இதன் தத்துவம் வேறு என்றும், அது முஸ்லீம்கள் மெஜாரிட்டி உள்ள இடத்திற்கு மாத்திரம் பொருத்த மானது என்றும், பிராமணீயம் இந்தியா முழுவதும் பொறுத்த விசயமென்றும் திராவிடஸ்தானில் தங்களையும் வேறு மாகாணங் களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னார் என்பதாகத் தெரிகிறது. எனவே இப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் கூறியதுபோல் மதச்சார்பற்ற மாநிலங்களைச் சேர்ந்தவை ஒன்றுபடச்சேர்ந்து தேர்தலைச் சந்திப்பது அவசிய மாகும்.

- அ.இனியன், பத்மநாதன், ஈரோடு

Read more: http://viduthalai.in/page7/73092.html#ixzz2pQtyXKWH

தமிழ் ஓவியா said...


ராமபக்தர்களின் பொது ஒழுக்கம், இது தான்

டில்லி போட்கிளப் மைதானத்தில் பாரதிய ஜனதாவும் - விசுவ இந்து பரிஷத்தும் சேர்ந்து நடத்திய பேரணிக்கு வந்த ராமபக்தர்கள் அனை வரும் புதுடில்லி ரயில் நிலையத்துக்கு வந்தனர். யார் யாரோ ரிசர்வ் செய்த பெட்டிகளில் - தங்கள் பெட்டி படுக்கைகளுடன் ஏறி உட்கார்ந்து கொண்டனர். உட்கார்ந்து கொண்டு முன்கூட்டியே பதிவு செய்தவர்கள் உள்ளே வராதபடி கதவுகளை இழுத்து மூடிக் கொண்டனர்.

முன்பதிவு செய்த ஏராளமான பயணிகள், டிக்கட் இருந்தும், ரயிலில் ஏற முடியவில்லை. உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தைக் கூறலாம். ஒரு குடும்பத்தினர், டில்லியிலிருந்து கோரக்பூர் செல்ல வைஷாலி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்கூட்டியே டிக்கட் பதிவு செய்தனர். பதிவும் உறுதியானது; குடும்பத்துடன் ரயில் நிலையம் வந்தனர். ரயில் நிலையம் முழுவதும் காவி உடை, ராம் ராம் முழக்கங்கள். பதிவு செய்யப்பட்ட பெட்டிக்கு சென்றால் - உள்ளே எல்லா இருக்கைகளிலும் ராமபக்தர்கள் முன் பதிவு செய்த அந்தக் குடும்பத்தினர் ஏற முடியவில்லை. கதவு சாத்தப்பட்டு விட்டது. காவல்துறையிடம் -பல பயணிகள் முறையிட்டனர். அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை; ரயில்வே அதிகாரிகளோ, வெளியே வராமல் பதுங்கியே விட்டனர். அன்று முழுவதும் டில்லியிலிருந்து புறப்பட்ட அத்தனை ரயில்களிலும் இது தான் நிலைமை. இன்று முன்பதிவு எதுவும் கிடையாது எல்லாமே ரத்து செய்யப் பட்டுவிட்டது என்று ராம பக்தர்கள் அனைவரும் உற்சாகமாகக்கூறி மகிழ்ந்து வந்தனர்.
-- டைம்ஸ் ஆப் இந்தியா ஏப்.6 1991

பாரதிய ஜனதா, விசுவ இந்து பரிஷத் அமைப்புகள் தான் ஒழுக்கமானவை; கட்டுப்பாடானவை என்றெல்லாம் பார்ப்பன ஏடுகள் பிரச்சாரம் செய்கின்றன. இவர்களின் பொது ஒழுக்கத்துக்கு. இது ஒரு சிறு உதாரணம்

Read more: http://viduthalai.in/page8/73094.html#ixzz2pQuSS7jU

தமிழ் ஓவியா said...


சிந்திக்கவேண்டும்


சமஸ்கிருதத்தினால் தமிழர்களும், தமிழ்நாடும் இன்று என்ன நிலைமைக்குத் தாழ்ந்து தொல்லையும், மடமையும், இழிவும் அனுபவிக்கிறோம் என்பதைச் சிந்திக்கவேண்டும்.
_ (விடுதலை, 5.8.1963)

Read more: http://viduthalai.in/page-2/73110.html#ixzz2pQvdztel

தமிழ் ஓவியா said...


காரைக்கால் கொடூரம்!

நன்னிலத்தைச் சேர்ந்த இளம்பெண், தன் காதலனைச் சந்திக்க காரைக்கால் வந்தார். உடன் வந்த தோழியை விட்டு விட்டு அவர்கள் திருநள்ளாறு சென்று விட்டனர். வரத் தாமதமானது.

தோழிப் பெண் தனிமையில் இருப்பதைப் பார்த்த மூவர் காவல்துறையினர் என அறிமுகம் செய்து கொண்டு ஒரு வீட்டு மாடிக்கு அழைத்துச் சென்று குளிர் பானத்தில் மயக்க மருந்து கொடுத்து வன்புணர்ச்சி செய்தனர். சத்தம் கேட்டு வந்த 7 பேர் அவர்களை விரட்டிவிட்டு தனியிடத்திற்கு அழைத்துச் சென்று தருமபுரம் சுடுகாட்டுப் பகுதியில் வைத்து பாலியல் வன்முறை செய்தனர். பின்னர் 5 பேரை வரவழைத்து திருநள்ளாறுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்முறை செய்தனர். மறுநாள் காவல் நிலையத்தில் புகார் தந்த போது உதவி ஆய்வாளர் வெங்கடாசலபதி, தலைமைக் காவலர் சபாபதி வழக்கைப் பதிவு செய்யவில்லை. மாவட்ட கண்காணிப்பாளர் மோனிகா பரத்வாஜ் விசாரணை நடத்தி வழக்கைப் பதிவு செய்தார்.

எழிலரசன், பாபுராஜ், இக்பால், காசிம், அமீர் அலி, அக்பர் யூசுப், நாசர், மதன், முமைத் கைது மற்றும் ஜெயகாந்தன், பைசல், ஓட்டுநர் மணி தேடப்படுகின்றனர்.

தனியாக இருந்த இளம் பெண், காரைக்காலில் கயவர்கள் பலரால் சூறையாடப்பட்ட கொடுமை குருதியை உறையச் செய்யக் கூடியதாகும்.

பெண்ணென்றாலே காமப் பதுமை என்று புரையோடிப் போய் விட்டதா சமூகத்தில்?

தனியாக நின்ற பெண்ணை காவல்துறையினர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட மூன்று கயவர்கள் முதலில் சூறையாடினர் என்றும், அதன் பின்னர் எழுவர் சூறையாடினர் என்பதெல்லாம் எழுதவே அருவருப்பாக இருக்கிறது. இந்த எழுவரின் அழைப்பின் பேரில் மேலும் அய்வர் வந்து கொடூரம் செய்தனர் என்பதெல்லாம் வக்கிரத்தின் கடைசி எல்லையாகவே தோன்றுகிறது.

மறு நாள் காவல் நிலையத்தில் வழக்கைப் பதிவு செய்யவில்லை என்பதும், மாவட்டக் கண்காணிப்பாளர் வந்த பிறகே வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்பதும் நமது நாட்டின் நிருவாக முறை, குறிப்பாகக் காவல்துறை எந்த அளவு கடமை உணர்ச்சியற்றது என்பதற்கு எடுத்துக் காட்டாகும்.

இது ஏதோ ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட இழிவு என்று குறுக்கிவிடக் கூடாது; நாகரிக சமுதாயத்துக்கே மானக்கேடும், மாபெரும் சவாலுமாகும்.

காதல், மதம், ஜாதி என்கிற வேறு தளத்திற்கு இழுத்துச் சென்று அரசியல் குளிர்காயாமல், நாளும் நடைபெற்று வரும் இந்தக் கேவலத்தை முடிவுக்குக் கொண்டு வருவது எப்படி என்பதில் கவனம் செலுத்தி யாக வேண்டும்.

இந்தியாவின் தலைநகரான டில்லியில் இந்தக் குற்றத்தைச் செய்த கயவர்களுக்குத் தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்ட பிறகும் இதுபோன்றவை நடக்கிறது என்றால் இதன் பொருள் என்ன?

பெண்கள் நடை உடை பாவனைகள்மீது குற்றப் பத்திரிகை படித்து விட்டு பிரச்சினை என்னும் கோப்பை முடித்து விடக் கூடாது. கட்சிகளைக் கடந்து மதம், ஜாதி என்னும் கோடுகளைக் கடந்து சமூகப் பொறுப்புணர்ச் சியுடன் சிந்திக்க வேண்டும் - செயல்படவும் வேண்டும். கல்வித் திட்டத்தில் தொடங்கி, கலாச்சார வடிவங்கள் வரை மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

பெண் என்றால் அரைகுறை ஆடைகளோடு சித்தரிக்கும் சீக்கு மனப்பான்மையை ஊடகங்கள் கலையுலகச் சித்தர்கள் விட்டொழிக்க வேண்டும். இலட்சக்கணக்கில் விற்பனையாகும் வார இதழ்களில் அட்டைப் படங்கள் எல்லாம் பெரும்பாலும் அரைகுறை ஆடை சினிமா பெண்மணிகள்தாம்.

சின்னத் திரைகளும், பெரிய திரைகளும், இணையதளங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு ஆபாசங்களை நவீனம் என்னும் போர்வையில் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன.

சட்டமன்றம் நடக்கும் போதே மக்கள் பிரதிநிதிகள் கைப்பேசியில் ஆபாசப் படங்களைப் பார்க்கின்றனர் என்றால், நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது?

இணையதளங்களில் ஏமாற்றுக்காரர்கள் பெருகி விட்டனர். எல்லாவற்றையும் விட பெண்களிடம் மிகப் பெரிய அளவில் விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

டில்லியில் கிளர்ந்து எழுந்தது போல காரைக்காலில் மக்கள் சமுத்திரம் ஏன் பொங்கி எழவில்லை?

தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது தொடர் பாக இன்னும் விசாரணையே தொடங்கப்படவில்லையாம்; தூத்துக்குடியில் ஏன் கிளர்ச்சி ஏற்படவில்லை? என்ற கேள்விகள் எழத் தான் செய்கின்றன.
பரீட்சார்த்தமாகப் பெண்களுக்கு தற்காப்புக்காகத் துப்பாக்கிகளை கொடுத்துப் பார்க்கலாமே!

ஆம்பளை (அ)சிங்கங்கள் வாலாட்டிய நான்கு இடத்தில் துப்பாக்கிக் குண்டுகள்தான் வெடிக்கட்டுமே! அப்பொழுதுதான் பிரச்சினைக்கு ஒரு முடிவு ஏற்படும் என்றால் சற்றும் தயங்காமல் பரீட்சித்துப் பார்க்கலாம் தான்.

பாலியல் வன்கொடுமை தொடர்பான பிரச்சினையில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள், காவல்துறையின ருக்கு சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு நிகரான தண்டனை வழங்கப்பட வேண்டும். பெண்களும் வீதிக்கு வந்து போராட முன் வர வேண்டும். இது குறித்துக் கழகமும் உரத்த முறையில் சிந்திக்கும் - செயல்படும்.

Read more: http://viduthalai.in/page-2/73111.html#ixzz2pQvnLRHQ

தமிழ் ஓவியா said...


சிங்கப்பூரில் கற்ற பாடங்கள்! - கி.வீரமணி


சிங்கப்பூரின் வாடகைக் காரோட்டி களும், எவ்வளவு நாணயமும் ஒழுங்கும் உள்ளவர்களாக இருக்கிறார்கள்; அங் குள்ள காவல்துறையினர் பயணிகளிடம் புகார்களை எந்த நேரத்திலும், தொலை பேசியிலேயே வாங்கி பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுத்து, காலந் தாழ்த்தாமல் இழந்தவைகளை, கண்டு பிடித்து உரியவர்களிடம் திருப்பிக் கொடுக் கும் வியத்தகு அணுகுமுறைகளை கையாளுகின்றனர் என்பதை நேற்று (3.1.2014) சிங்கப்பூரில் நேரில் அனுபவத் தில் கண்டு மகிழ்ந்ததை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எத்தனையோ முறை சிங்கப்பூருக்குச் சென்றுள்ளேன் என்றாலும் இதற்கு முன் எப்போதும் நிகழாத எனது கவனக் குறைவு காரணமாக டாக்சியில் - வாடகை உந்தில் நிகழ்ந்தது. அதனால் பல நல்ல உண்மைகளை இதற்கு முன் பலர் மூலம் கேட்டறிந்ததை படித்தறிந் ததை நேரிலேயே நானே பார்த்து உணரும் வாய்ப்பு ஏற்பட்டது.

லிட்டில் இந்தியா செராங்கூன் சாலைப் பகுதி தேக்கா என்றெல்லாம் அழைக்கப்படும் நமது வணிகர்கள் பெரி தும் வாணிபம் புரியும் பகுதியில் உள்ள நண்பர் இலியாஸ் கடைக்கு, நான் எப்போ தும் வழமையாகச் சென்று அவரையும் அவரது வாழ்விணையர், அக்கடையில் பணிபுரியும் (சங்கம் டெக்ஸ்டைல்ஸ்) தோழர்களையும் சந்தித்து, நலம் விசா ரித்து, உரையாடிவிட்யடு, அவர் மூலம் பல பழைய நண்பர்களுடன் உரையாடியும், திரும்புவது உண்டு. நேற்று மாலை சுமார் 6.30 மணி அளவில் சென்று, பேசிக் கொண்டிருந்து விட்டு, கவிதா இல்லத்திற்குத் திரும்ப அங்கிருந்து ஒரு டாக்சி பிடித்துத் திரும்பினோம்- சுமார் மாலை 7.30 மணிக்குத் திரும்பினோம்.

வாடகைக் காருக்குரிய கட்டணத்தை நான் செலுத்த முயன்றதை முந்திக் கொண்டு எனது மகள் கவிதா ஓட்டுநரிடம், வீட்டருகில் இறக்கிவிடும் போது கொடுத்து விட்டார்; நான் எனது முழுக்கால் சட்டை பேண்ட் பையிலிருந்து எனது மணிப் பர்சை வேலட்டை எடுத்து மீண்டும் அதில் வைப்பதாக எண்ணி அதை அந்த டாக்சியில் பின் சீட்டிலேயே தெரியாமல் விட்டு விட்டேன்; அல்லது பையிலிருந்து வழுவி நழுவி இருக்கலாம். இறங்கி வீடு வந்து சேர்ந்து, உடைமாற்றியபோது எனக்கு அதிர்ச்சி...! வேலட்டை காணவில்லை. உடனே நினைவூட்டிப் பார்த்தேன். வீட்டிற்கு இறங்கும்போது கையில் எடுத்ததை நன்கு நினைவூட்டிக் கொண்டு, மகளிடம் கூறினேன்.

உடனே கவிதா, அப்பாஒன்றும் கவலைப்படாதீர்கள். நான் உடனே புகார் செய்கிறேன். பெரிதும் அங்கு கிடைத்தால் நம்மிடம் திருப்பிகொடுத்துவிடுவார்கள் என்று கூறி, தொலைப்பேசியில் காவல் துறையின் அதிகாரியை அழைத்து, விவரங்களைக் கூறி, புகார் பதிவு செய்தார். இது இரவு 8.15 மணியாகும். அவர்கள் உடனடியாக புகாரைப் பதிவு செய்து கொண்டு அதற்குரிய எண்ணைத் தந் தார்கள் - தொலைப்பேசி எண்ணையும் தந்தார்கள். இதில் குறிப்பிட வேண்டிய மற்றொரு பாராட்டத்தக்க அம்சம் என்ன தெரியுமா? உடனே பதிவு செய்து கொண்டு, புகார் என்பதை இந்த தொலைப்பேசியில் நீங்கள் அழைத்து நிலவரத்தை விசாரிக்க லாம் என்று இரண்டு தொலைப்பேசி எண்ணைத் தந்தார்கள் காவல் துறையினர்.

தமிழ் ஓவியா said...


ஒன்று அலுவலக நேர எண். மற் றொன்று அலுவலக நேரத்திற்கு அப்பால் எந்த நேரத்திலும் விசாரிக்க வாய்ப்பாகும் எண். என்னே அற்புதமான காவல்துறை ஏற்பாடு! அவர்கள் விசாரித்தபோது கவிதா, கீழ்க்காணும் தகவல்களை மட்டும் தான் கூறினார்,

1) மஞ்சள் நிற டாக்சி (அதன் எண் தெரியாது)

2) அந்த ஓட்டுநர் பெயர் ஏதோ அப்துல்லாவோ என்னவோ!

3) புறப்பட்ட நேரம், இறங்கிய நேரம்

4) புறப்பட்ட இடம் இறங்கிய வீட்டு முகவரி இவை தான் உள்ளன.

5) வேலட் கறுப்புநிறம் அதில் இருந்த கொஞ்சம் சிங்கப்பூர் பணம், சென்னை முகவரி கார்டுகள்.

சிங்கப்பூரில் தங்கியிருக்கும் முகவரி கார்டு இல்லை.

நாங்கள் வீட்டில் எங்கள் பணிகளை கவனித்துக் கொண்டிருந்தோம். (எங்கே கிடைக்கப் போகிறது நாம் சரியான தகவல்களை டாக்சி எண் - நமது முகவரி எதுவும் இல்லையே என்று நினைத்தேன்)

சரியாக இரவு 9 மணிக்கு (அதாவது புகார் கொடுத்த 30 நிமிடங்களில்) தொலைப்பேசி அழைப்பு உங்கள் வேலட் - மணிப்பர்சு கிடைத்துவிட்டது. அந்த டாக்சி யின் எண் இது. அந்த டாக்சி ஓட்டுநரிடம் உள்ளது. அவர் உங்கள் முகவரிக்கு வந்து கொடுக்க வேண்டுமா? அல்லது நாளை அந்த டாக்சி நிறுவனத்திடம் நீங்கள் நேரில் சென்று பெற்றுக் கொள்ளுகிறீர்களா? என்று கேட்டு, அப்படி அவர் உங்கள் வீட்டுக்கு வந்து கொடுக்க வேண்டுமெனில், அவர் எந்தப்பகுதியிலிருந்து வருகிறாரோ அந்தக்கட்டணம் (மீட்டர்படி) நீங்கள் கொடுக்க இசைந்தால் அவரை வரச் சொல்லுகிறோம் என்று காவல் துறையினர் கேட்டனர்.

வீட்டிற்கே வந்து கொடுக்கச் சொல்லி கட்டணம் தர இசைவுதந்தோம்.

உடனே அந்த ஓட்டுநர் தொலைப்பேசி யில் சற்று நேரம் கழித்து அழைத்து இரவு 10.30 மணிக்கு வந்து பொருளை ஒப்படைப்பதாகக் கூறினார்!

ஆனால் அவர் இரவு 10.15 மணிக்கே எங்கள் இல்லம் அருகில் வந்து ஒப்படைத்து. எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள் என்றார். நானும் மாறனும் சென்று அதனைப் பெற்று, அவருக்கான பயணக் கட்டணத்தைச் செலுத்தியதோடு, ஆழ்ந்த நன்றியை அவருக்குத் தெரிவித்தோம். அதற்கு மேல் 10 சிங்கப்பூர் வெள்ளியை அவருக்குப் பரிசாக அளித்தோம். அவர் பெயர் அமானுல்லாகான் என்று அறிந்தோம்; அவர் சிங்கப்பூர் - மலாய் கார இஸ்லாமியர்.

சிங்கப்பூர் காவல் துறையின் ஒத்து ழைப்பையும், எவ்வளவு சிறப்பான அரசு உள்ளது என்பதையும் அனுபவத்தில் கண்டு உணர்ந்து, வியக்கும் வாய்ப்பும், இந்த எனது கவனக்குறைவு காரணமாக எற்பட்ட நன்மையான அனுபவமும் எனக்குக் கிடைத்தது. அதனால் பெற்ற பாடங்களும் உண்டு.

1) வெளிநாடுகளில் வெளியூர்களில் டாக்சிகளின் அவற்றின் எண்களைக் குறித்து வைத்துக்கொள்ளுதல் அவசியம்.

2) நமது மணிப்பர்சு களில் முகவரி அட்டை கார்டு ஒன்று உள்ளூர் தங்கும் முகவரி, தொலைப்பேசி எண்ணையும் எழுதி அதில் சொருகி வைத்திருப்பதும் அவசியம்.

3) இவற்றிற்கெல்லாம் மேலாக, நம் நாட்டில் இப்படி ஒரு காவல்துறை ஒத் துழைப்பு (தொலைப்பேசியிலேயே புகார் கூறி கூறிய 30 நிமிடங்களில் தொலைந்த பொருள் மீட்டப்பட்டதையும் எளிதில் பார்க்க முடியுமா என்ற வேதனையும், வருத்தமும் மிச்சம்.

(நமது நாட்டிலும் பல நேர்மையான ஓட்டுநர்கள் உண்டு என்றாலும், அங் குள்ள ஏற்பாடு எவ்வளவு விஞ் ஞான பூர்வமாக உள்ளது என்பது அறிய மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதல்லவா?)

4) என்னிடம் இருந்தது ஒன்றும் பெரிய தொகை அல்ல என்றாலும், கவனக் குறைவு எவ்வளவு பேருக்குத் தொந்தர வும் அவசியமற்ற மனஉளைச்சலையும் தந்தது. இனி தவிர்க்கப்படல் வேண்டும்.

புத்தி கொள்முதலுக்கு 30 சிங்கப்பூர் வெள்ளியை விலையாகக் கொடுத்தேன்.

Read more: http://viduthalai.in/page-2/73112.html#ixzz2pQwX6O56

தமிழ் ஓவியா said...

காலித்தனமும் வட்டி சம்பாதிக்கின்றது

சென்னை கடற்கரையில் பார்ப்பனரல்லாதாரால் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் கதர் இலாகா காரியதரிசி ஸ்ரீ எஸ். ராமநாதன் அவர்கள் பகிஷ்காரப் புரட்டைப்பற்றி பேசிக் கொண்டிருக்கையில் காங்கிரசு வீரப்புலிகள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்கள் திருட்டுத்தனமாக கூட்டத்தின் மத்தியில் இரண்டு செருப்புகளை வீசி எறிந்துவிட்டு ஓடிப்போய் விட்டார்கள் என்றும் அந்தச் செருப்புகள் ஏலம்போடப்பட்டனவென்றும் கேள்விப்பட்டோம். ஆனால் அடுத்த சில தினத்தில் அதே கடற்கரையில் பார்ப் பனர்களால் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் பல பார்ப்பனரல் லாதார்களைக் கூலிக்குப் பிடித்துக் கொண்டு போயிருந்துங் கூட கல்லும் செருப்பும் பறந்ததோடு கலகமும் அடிதடியும் காயமும் ஏற்பட்டு விட்டதாம்: காங்கிரசுகாரர்கள் தாங்கள் தான் மிக புத்திசாலிகள் என்பதாக கருதி காலித்தனத்தை ஆரம்பித்து விடுகிறார்கள். இதனால் அந்த சமயம் வெற்றி கிடைத்ததுபோல் காணப்பட்டாலும் வட்டியுடன் திரும்பவும் அனுபவித்து விடுகின்றார்களேயொழிய இதுவரை ஒரு இடத்திலாவது தப்பித்துக் கொண்டதாகச் சொல்வதற்கே இல்லை.

பகிஷ்கார இயக்கப் பிரச்சாரத்திற்கு ஸ்ரீ சத்தியமூர்த்தி தலைவராகி விட்டார், ஸ்ரீ வரதராஜுலு வாலராகிவிட்டார். மற்றபடி ஸ்ரீமான்கள் குழந்தை, ஓ. கந்தசாமி செட்டியார், பஷீர் அகமது முதலியவர்களுக்குள்ளாகவே தேசபக்தி அடங்கிவிட்டது. இவர்கள் போகும் கூட்டங்கள் முழுவதும் இந்தக் கதியையே அடைந்து வருகின்றன. பிரச்சாரத்திற்கு என்று காங்கிரஸ் நாடகத்தில் மீதியான ரூபாயில் 5000, 6000 ரூபாய்களை எடுத்து வீசி எறிகின்றார்கள். இந்த ரூபாய் களுக்காக எப்போதும் கூட்டங்கள் கூடிக் கொண்டே இருக்கின்றன. இது எங்குபோய் முடியும் என்பது மாத்திரம் விளங்கவில்லை.

ஸ்ரீமான் வரதராஜுலு பேச ஆரம்பித்தவுடன் கலகம் ஏற்பட்டதென்றும், அடிதடிகள் நடந்ததென்றும் பொது ஜனங்கள் அவரைப் பேசவிடாமல் உட்காரச் செய்து விட்டார்கள் என்றும் பத்திரிகைகளில் காணப்படுகின்றன. பொது ஜனங்களால் இந்த யோக்கியதை பெற்ற ஸ்ரீ வரதராஜுலு அவர்கள், ராமசாமி நாயக்கர் சர்க்கார் பிரச்சாரம் செய்கின்றார் என்று எழுதுகின்றார், பேசுகின்றார், வாசகர்களைச் சுத்தமுட்டாள்கள் என்றும் எதையும் நம்பிவிடுவார்கள் என்றும் எண்ணிக் கொண்டு இம்மாதிரி தந்திரங்களைச் செய்கின்றார்.

அப்படியே நாயக்கர் சர்க்கார் பிரச்சாரம் செய்வதாக வைத்துக் கொண்டாலும், பார்ப்பனப் பிரச்சாரத்தைவிட சர்க்கார் பிரசாரம் எத்தனையோ மேலான தென்பதை இவரே பலதடவை உணர்ந்திருந்தும் பேசியிருந்தும் இன்று மாத்திரம் ஸ்ரீ வரதராஜுலுக்குப் பார்ப்பனப் பிரசாரம் இவ்வளவு பயனளிக்கக் கூடியதாகி விட்டதின் இரகசியமென்ன?

ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார் தலைமையும், இரங்கசாமி அய்யங்கார் காரியதரிசித் தன்மையும் ஒழிந்த பிறகு ஸ்ரீமான்கள், சத்திய மூர்த்தி அய்யரின் தலைமையும் வரதராஜுலுவின் காரியதரிசித் தன்மையும் இவ்வருஷம் முழுவதும் தாண்டவமாடக்கூடும். இனி, இவர் தலைமையில் அவர் பிரசங்கமும் அவர் தலைமையில் இவர் பிரசங்கமும் மாறி மாறி நடந்ததாக பத்திரிகை கலங்கள் நிறையக் கூடும். ஆனாலும் நம்புவதற்குதான் இனி தமிழ் நாட்டில் ஆட்கள் கிடையாது என்பதும் அவர்களுக்கே தெரிந்துவிட்டது.

ஆனாலும் ஜனங்களின் முட்டாள் தனத்தில் அவர்களுக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கின்றது. பொது ஜனங்கள் சீக்கிரம் இவர்களுக்குப் புத்தி கற்பிப் பார்களாக.
- குடிஅரசு - (துணைத் தலையங்கம் - 05.02.1928)

Read more: http://viduthalai.in/page-7/73120.html#ixzz2pQxtsQ7p

தமிழ் ஓவியா said...

உஷார்! உஷார்! மண்டையிலடியுங்கள்

சென்னையில் பார்ப்பனியத்தைப் பரப்புவதற்கு ஒரு புதிய ஸ்தாபனம் சமீபத்தில் பார்ப்பனர்களால் உண்டாக்கப்பட்டிருக்கின்றது. அதுதான் கிராமப் புணருத்தாரண வேலை ஸ்தாபனம். நண்பர்களே இந்தப் பெயரைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள். கொஞ்ச காலத்திற்கு முன்பு ஸ்ரீமான்கள் நேரு, சீனிவாசய்யங்கார், சீனிவாச சாஸ்திரியார் போன்றவர்கள் ஒன்று சேர்ந்து இந்திய அய்க்கிய ஒற்றுமை சங்கம் என்பதாக ஒன்றை ஸ்தாபித்தார்கள். அதில் வகுப்பு உணர்ச்சி உள்ளவர்களை சேர்ப்பதில்லை என்றும் நிபந்தனை போட்டார்கள். அது நமது தமிழ் நாட்டிற்குள் வராதபடி மண்டையிலடித்து கொல்லப்பட்டுப் போய்விட்டது.

அதுபோலவே இப்போது மறுபடியும் முயற்சி எடுத்து கிராம புனருத்தாரணம் என்னும் பெயரில் சென்னையில் ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கு மெம்பர்கள் ஸ்ரீமான்கள். சர்.சி.பி. ராமசாமி அய்யர், மோதிலால் நேரு, ஏ. ரங்கசாமி அய்யர், கேல்கர், பட்டாபி சீதாராமய்யர், பி. சிவராவ், டாக்டர் பெசண்டு, அருண்டேல், ரங்கநாத முதலியார் போன்றவர்களே. இது பிரம்மஞான சங்கத்தினர் வாலைப்பிடித்து ஆரம்பித்த புதிய சூழ்ச்சியேயாகும்.

தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாதார் நன்மைக்குக் கொடிய எதிரியாக பிரம்மஞான சங்கம் விளங்குகின்றது. அச்சங்கத் தலைவர் ஸ்ரீமதி பெசண் டம்மைக்கு உள்ள பணமும் செல்வாக்கும் அடையாறு பிரம்மஞான சங்கத் தோற்றமும் அநேக பார்ப்பனரல்லாதார்களையும் மூடர்களாகவும் இனத் துரோகி களாகவும் ஆக்கி அச்சங்கத்திற்குப் பலிகொடுத்திருக்கிறது. இதைப்பார்த்து யாரும் ஏமாந்து விடக் கூடாது என்றும், இப்புதிய சூழ்ச்சியில் யாரும் சிக்கி அதற்கு ஆளாகக் கூடாது எனவும் எச்சரிக்கை செய்து பணிவாய் வேண்டிக் கொள்கிறோம்.
- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 25.03.1928

Read more: http://viduthalai.in/page-7/73120.html#ixzz2pQy10y85

தமிழ் ஓவியா said...

ரிவோல்ட் [REVOLT]

ஸ்ரீமான்கள் ராஜகோபாலாச்சாரியும் கே. நடராஜன் போன்றவர்களும் மற்றும் சில சுயநலக்காரர்களும், கூலிகளும் நமது பிரச்சாரத்திற்கு விரோதமாக ஆங்கிலத்தில் பத்திரிகைகள் மூலியமாயும், வியாசங்கள் மூலியமாயும் பிரச்சாரம் செய்கிறபடியாலும், நமது பிரச்சாரமும் பத்திரிகையும் தமிழிலேயே இருப்பதாலும் அது தமிழ்நாட்டை விட்டு வெளியில் போக மார்க்கமில்லாமல் இருப்பதாலும் ஆங்கிலத்தில் ஒரு வாரப் பத்திரிகை குடிஅரசுக் கொள்கையை ஆதாரமாகக் கொண்டு ஆரம்பிக்க வேண்டுமென்பதாக ஒரு யோசனை தோன்றி யிருக்கிறது. அப்பத்திரிகைக்கு ரிவோல்ட் [REVOLT] என பேர் கொடுப்பதென்றும் தீர்மானித்திருக்கிறோம். அப்பத்திரிகைக்குக் கவுரவ ஆசிரியர்களாக இருக்க சில ஆங்கிலங் கற்ற நண்பர்கள் வாக்களித்து இருக்கிறார்கள். பல அறிஞர்கள் அரிய விஷயதானம் செய்யவும் ஒப்புக் கொண்டி ருக்கிறார்கள். அப்பத்திரிகையை தற்கால குடிஅரசு அளவில் 8 (எட்டு) பக்கம் கொண்டதாகவும் வருஷ சந்தா ரூ.3 ஆகவும் வைத்து வெளிப்படுத்தத் தீர்மானித்துள்ளோம். சமீபத்தில் வெளியிட முயற்சித்துக் கொண்டிருக்கிறோமாதலால் அன்பர்கள் சந்தாதாரர் களாய் சேரவும் மற்றும் கூடிய உதவிகள் செய்யவும் முன்வர வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறோம். சந்தாதாரர்களாகச் சேர இஷ்டமுள்ளவர்கள் பதிவு செய்துகொள்ள வேண்டுமாய் விரும்புகிறோம். - குடிஅரசு - அறிவிப்பு - 25.03.1928

Read more: http://viduthalai.in/page-7/73120.html#ixzz2pQy8LRhO

தமிழ் ஓவியா said...


கழகத்தின் இந்தப் புரட்சிக்கு ஈடு ஏது? பாடையை சுடுகாடு வரை தூக்கிச் சென்று கழகப் பெண்கள் புரட்சி!


திருவாரூர், ஜன.5- சுடுகாடு வரை பாடையைத் தூக்கிச்சென்று கருஞ்சட்டை மகளிர் அணியினர் புரட்சி செய்தனர்.

உலகில் எத்தனையோ சமூக அமைப் புகள், கட்சிகள் தோன்றியிருக்கலாம்; கிடுகிடுக்க வைத்த கம்யூனிஸ்டுக் கட்சி கள் உலகின் பல பாகங்களை அதிர வைத்துள்ளன.

ஆனால், சமுதாய அடித்தளத்தையே புரட்டிப் போடும் பூகம்பக் கரங்களைக் கொண்ட புரட்சி இயக்கமாம் திராவிடர் கழகத்திற்கு இணை ஏது? கருஞ்சட்டைப் பாசறைக்கு ஈடு ஏது?

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்று கேட்ட காலத்தைக் கழுவிலேற்றிய இயக்கம் ஏது?

இருட்டுப் பூச்சிகளாய், ஜன்னல் களையே காணாதவர்களாய், வெளிச்ச மத்தாப்புகளையே காணாதவர்களாக ஆக்கப்பட்ட, வயதுக்கு வந்த பெண்களை நீயும் மானுடத்தின் ஒரு கூறு - கூண்டை விட்டுவெளியே வா பெண்ணே!

என்று குரல் கொடுத்து கல்விக் கண்களைத் திறந்து உத்தியோகப் படிக்கட்டுகளை மிதிக்கச் செய்து கணவன் கையைப் பார்த்து நத்தி வாழவேண்டிய நயவஞ்சக சமூக அமைப்பின் வேரை நசுக்கி எறிந்து, பொருளீட்டும் புதிய பொருளாதாரக் கணக்கையும் திறந்து, ஆணுக்குப் பெண் சமானம் என்ற சரித்திரத்தைச் சமைத்தது தந்தை பெரியாரின் இந்த இயக்கம் அல்லவா!

தொட்டிலை ஆட்டும் கை தொல் லுலகை ஆளும் கை என்று புரட்சிக்கவி ஞரைப் பாட வைத்ததும் இந்தப் பகுத்தறிவு இயக்கம்தான்.

தாலி பெண்களுக்கு வேலி என்பதைக் காலி செய்த கருத்துக் கனலையும் தந்தது இந்த இயக்கம்தான்.

மாவோ செய்யாத மகத்தான புரட்சி களையெல்லாம் செய்துகாட்டி வருகிறோம். விதவைப் பெண்களுக்குப் பூச்சூட்டு விழாவை நடத்திக் காட்டியாயிற்று.

அடக்கம் பெண்களுக்கு அணிகலன் என்று சொன்னது அரும் பண்புக்காக அல்ல - அடங்கிக் கூனிக் கிடக்கும் ஒரு மனப்பான்மையை அவர்களின் ஆழ்மனத் தில் ஊன்றவேதான்.

ஆண் - பெண் வேறுபாடு தெரியாத ஆடையை அணிவீர்; பெயர்களில்கூட பால் வேறுபாடு தேவையில்லை என்று பளிச்சென்று சொன்னவரும் நம் பகுத்தறிவுப் பகலவன் பெரியாரே!

தந்தை செத்தாலும் சரி, தாய் செத்தாலும் சரி, மணாளன் செத்தாலும் சரி, மகன் செத்தாலும் சரி, ஒரு பெண் சுடுகாடுவரை செல்ல முடியுமா?

இந்த இரும்பு வேலிகளையெல்லாம் நொறுக்கிய இலட்சியத் தீபத்தை ஏந்தி நிற்கும் இனமானப் பெரும்படைதான் திராவிடர் கழகம்.

இதோ பாருங்கள், எங்கள் கருஞ் சட்டை மகளிர் அணியினரை.

திருவாரூர், திராவிடர் கழகத் தீரர் களின் கோட்டை ஆயிற்றே! நகர கழகத் துணைத் தலைவர் தியாகத்தீயில் புடம் போட்ட கருப்புத் தங்கம் அறிவுக்கண்ணு அவர்கள் மறைந்தார் - அந்த வட்டாரமே துக்கத்தின் பிடியில் சிக்கி விம்மியது என்றாலும், தவிர்க்க முடியாததை ஏற்கத்தானே வேண்டும்.

அவருடைய இறுதி ஊர்வலம் எப்படிச் சென்றது தெரியுமா? திருவாரூரே தம் கண்களை அகலத் திறந்து உண்மையா? நம்ப முடியவில்லையே? இப்படிக்கூட நடக்குமா? என்று அந்த ஒரு நிமிடம் நிலைகுலைந்தே போனார்கள்.

ஆம், அந்தக் கொள்கை வீரரின் பாடையை, பெண்களே சுடுகாடுவரை தூக்கிச் சென்று, காலம் காலமாய் கட்டிப் போட்டு வந்த அந்த ஆணாதிக்க அடக்கு முறை சமூக அமைப்பின் கட்டை உடைத்து, அதனைச் சுடுகாட்டிலே எரித்துவிட் டார்களே!

இதற்கு முன்பும் திருவரங்கம் பெரியார் பெருந்தொண்டர் கோ.பாலு, மயிலாடு துறை நகர கழகத் தலைவர் ந.தியாகராச னின் அன்னையார் மறைந்தபோது இந்தப் புரட்சியை நடத்திக் காட்டினர்.

பெரியாருக்குப் பின் திராவிடர் கழகம்? கேள்வி கேட்போரே! இந்தச் செயல்களைப் பார்த்த பிறகாவது, கோணல் வாயை மூடிக் கொள்க!

திருவாரூர் கருஞ்சட்டை சகோதரி களே! உங்கள் செயலுக்கு ஒரு வணக்கம் - உங்களால் திருந்தட்டும் பழைமைச் சமூகச் சழக்குகள்!

Read more: http://viduthalai.in/e-paper/73137.html#ixzz2pWwIhQC1

தமிழ் ஓவியா said...


தாழ்த்தப்பட்டோரே, பிற்படுத்தப்பட்டோரே உங்களுக்குத் தகுதி இல்லையாம்!

சமூக நீதிக் கொள்கையில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி சாதாரணமாக விழவில்லை; தந்தை பெரியார் சொல்லுவதுபோல தடுக்கி விழுந்தவன் அரிவாள் மணையில் விழுந்தது போல அல்லவா விழுந்திருக்கிறது!

அக்கட்சியின் அதிகாரபூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். (பக்கம் 4) இடஒதுக்கீட்டுக்கு இன்னல் என்றால் பொறுக்க மாட்டோம் என்று பொங்கு கிறாரே கருணாநிதி? என்று பெட்டிச் செய்தியை வெளியிட்டுள்ளது.

எதற்கெடுத்தாலும் கருணாநிதி கருணாநிதி என்ற காமாலைக் கண்ணனின் (Phobia) பார்வை தானா?

சமூக நீதியைப் பற்றி கலைஞர் பேசக் கூடாதா? அய்ந்து முறை முதல் அமைச்சராக இருந்தவருக்கு இல்லாத அக்கறையா இவர்களுக்கு?

சமூகநீதியில் சரித்திரம் படைத்தவராயிற்றே! இது சூத்திரர்களுக்கான அரசு என்று சட்டப் பேரவை யிலேயே முழங்கிய முத்தமிழ் அறிஞர் ஆயிற்றே! கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை என்றால் வக்கணையாக எழுதுவதால் என்ன பயன்?

கலைஞர் மட்டுமா கண்டித்துள்ளார்? முதல் அறிக்கையை திராவிடர் கழகத் தலைவர் வெளியிட்டார். தொடர்ந்து தமிழ்நாட்டில் கட்சித் தலைவர்கள் எல்லாம் கண்டனம் தெரிவித்துள்ளனரே!

உயிர் காக்கும் மருத்துவத்தில் அதுவும் பல் நோக்கு சிகிச்சை மய்யம் என்ற தலை சிறந்த விஞ் ஞானத் தரமான மருத்துவ சிகிச்சைக்கு இலக் கணம் வகுக்கின்ற ஓர் அமைப்பில் இட ஒதுக்கீட்டு முறை இடையூறாக அமைந்து விடக் கூடாது என்பதை மக்களின் ஆரோக்கியத்தில் அளவில்லா முன்னுரிமை அளித்துவரும் நம் அன்னைத் திருமக ளின் அரசு பரிசீலித்ததை ஏதோ இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தது போல கருணாநிதி இட்டுக் கட்டிய பித்தலாட்டத்தை அரங்கேற்றப் பார்ப்பது அவரது அரசியல் மோசடியையே காட்டுகிறது என்று எழுதுகிறது அதிமுக ஏடு?

இதன் மூலம் என்ன சொல்லப்படுகிறது? தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப் பட்டோருக்கும் இடஒதுக்கீடு அளித்தால் உயிர் காக்கும் மருத்துவம் செத்துப் போய் விடும் என்கிறார்களா?

உயிர்காக்கும் மருத்துவப் பணிகளுக்கு தாழ்த்தப் பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும் லாயக்கு அற்றவர்கள் என்கிறதா அ.இ.அ.தி.மு.க. ஏடு? இதுதான் இந்த ஆட்சியின் நிலைப்பாடா?

இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தால் தகுதி திறமை போய் விடும் என்று பார்ப்பனர்களிடம் இரவல் குரல் வாங்கி அம்மையாருக்காக வக்காலத்து வாங்குகிறதா அண்ணா தி.மு.க.?

இதுதான் அண்ணா கூறிய சமூக நீதியா? அண்ணா திமுக என்று பெயர் வைத்தால் மட்டும் போதுமா? இடஒதுக்கீட்டில் அண்ணாவின் கருத்து என்ன என்று தெரிந்து கொள்ளாதவர்கள் எல்லாம் அண்ணா பெயரைப் பயன்படுத்தலாமா? பெரியார் பெயரைப் பயன்படுத்தலாமா? திராவிட என்ற சித்தாந்தத்தின் குறியீட்டை வைத்துக் கொள்ளலாமா?

தாழ்த்தப்பட்ட மக்களே, பிற்படுத்தப்பட்ட மக்களே! உங்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தால் உயிர் காக்கும் மருத்துவத் தொழில் உருப்படாமல் போகுமாம் - உயிர் களைக் காக்கும் ஆற்றல், சக்தி உங்களுக்குக் கிடையாதாம்.

இதுதான் இன்றைய அ.இ.அ.தி.மு.க. ஆட்சி - புரிந்து கொள்வீர்!

Read more: http://viduthalai.in/e-paper/73140.html#ixzz2pWwTsbeb

தமிழ் ஓவியா said...


குரங்கு சாமிக்கு இப்படி ஒரு கொண்டாட்டமா?


ஆஞ்சநேயர் என்ற அனுமாருக்கு ஜெயந்தியாம் - அதாவது பிறந்த நாளாம்!

அனுமாருக்குப் பிறந்த நாள் முன்பெல்லாம் கொண்டாடுவதில்லை; அண்மைக் காலத்தில் பார்ப்பனப் பண்பாட்டின் பரிமாணங்கள் பெருகிய வண்ணமே உள்ளன! இந்து மதப் பிரச்சாரப் புதிய உத்தி!

யாருக்காவது சந்தேகம் வந்தால் நம்ம சன் டிவி போன்ற பல டி.வி.களில் வரும் சீரியல்களையும் மெகா சீரியல்களையும் பார்த்தாலே தெரியும்.

நாட்டில் யாருக்குமே தெரியாத புதிய சடங்குகள், சம்பிரதாயங்கள், வேண்டுதல்கள், சாபங்கள், பேய் வந்து பெண்கள்மீது ஏறிக் கொள்ளுதல் மஹா பாரதம் இப்படி பரிசு பெற வேண்டிய புருடாக்களை பலமாகப் பரப்பி வருகின்றனவே!

புராணக் கதைப்படி அனுமார் எப்படி பிறந்தார் என்றால் வாயு புத்திரன் அவர், அதாவது காற்றுக்குப் பிறந்தவர் - நம்நாட்டில் காற்றுக்குக்கூட பிள்ளைகளைப் பெற்றுத் தரும் விநோதமான சக்தி உண்டு போலும்!

இன்னொரு பக்கத்தில் பீமனோடும் தொடர்புபடுத் திக் கதைவிடல்!

அறிவியல் - பரிணாமத் தத்துவப்படி டார்வின் கூற்றுப் படி, குரங்கிலிருந்து மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்றான் என்பது ஒருபுறமிருக்க, இந்த அனுமான் எப்போது, எப்படி பிறந்தான்? என்பதையெல்லாம் கிராஸ் எக்சாமின் பண்ணினால் அது வாதத்திற்கு நிற்காது!

அந்த அனுமார் கடலைக் கடந்து இலங்கைக்குத் தாவி சீதா பிராட்டியைச் சந்திக்கும் இராம தூதுவனாகச் சென்று, சீதையிடம் அந்தக் குரங்கு பேசியதாம்!

அவள் தயங்கியவுடன், அந்த சந்தேகத்தைப் போக்கிட ஸ்ரீமான் இராமச்சந்திர மூர்த்தியின் அங்க மச்ச அடையாளங்களையெல்லாம் கூட அதுவும் வெகு ரகசியமானவைகளாக சீதை - இராமன் மட்டுமே அறிந்த வைகளைக்கூட அனுமன் புட்டு புட்டு வைக்கிறான்! என்னே கொடுமை!

(சந்தேகமிருந்தால் வால்மீகி இராமாயணம் சுந்தரகாண்டத்தைப் பார்த்து விவரம் தெரிந்து கொள்ளுங்கள்).

நாமக்கல் ஆஞ்சநேயர் கடவுள்! இவருக்கு அங்கே ஜெயராமய்யர்கள் அர்ச்சனை செய்யும் பிரபல ஜோதிடக் கோயிலுக்குத் தான் தேவகவுடா, எம்.ஜி.ஆர்., ஜானகி அம்மாள் முதலிய பலரும் சென்று அர்ச்சனை, வேண்டுதல் நடத்தி பதவியைக் காப்பாற்ற முடியாது ஏமாந்தவர் களானவர்கள் என்றாலும் புத்தி வரவில்லையே பக்தர்களுக்கு!

குரங்கைக் கடவுளாகக் கொண்டு வழிபடும் நாடு இந்தியா என்று கார்ல் மார்க்ஸ் இந்தியாவைப் பற்றிய கட்டுரைகளில் எழுதி யுள்ளார்! அதன் மூலம் கார்ல் மார்க்ஸ் பேனாவையும் நம்ம ஊர் அனுமார் ஒரு பதம் பார்த்து விட்டார்! ஜெய் அனுமான்!

வாழ்க ஜெய் அனுமான்! அவரது ஜெயந்தியில், தஞ்சை, திருச்சி பல கோயில்களில் 10,000 வடை மாலை சாத்தி அதோடு 10,000 லிட்டர் பால், தேன், நெய்யை அந்தக் கல்லின்மீது ஊற்றி பாழ்ப்படுத்தி பக்தி பரவசம் பெற்றுள்ள செய்தியை நமது டி.வி.கள். இந்த சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை விட்டு விடக் கூடாது என்று கருதி படம் பிடித்துக் காட்டி பக்தியைப் பரப்பிட புத்தியை ஒழிக்கவும் ஆயத்தமாகி விட்டார்கள். ஞான பூமியல்லவா நமது பூமி!

பாலுக்கு அழும் பச்சிளம் குழந்தைகள் கோடிக் கணக்கில் ஒருபுறம்!

மறுபுறம் இப்படி கல் சிலை - குரங்குக்கு பாலாபி ஷேகம் என்று கூத்து!

அட வெட்கம் கெட்ட ஜெனமங்களா? செவ்வாய் கிரகம் சென்றாலும் உங்கள் புத்தி மாறாதா? தெளி வடையாதா?

அங்கும் சென்று அனுமாருக்குக் கோயில் கட்டி ஜெயந்தி கொண்டாட வடை சுடாமல் இருந்தால் சரி!

Read more: http://viduthalai.in/e-paper/73141.html#ixzz2pWwraOi9

தமிழ் ஓவியா said...


ஓர் முக்கியத் திருத்தம்

சிங்கப்பூரில் கற்ற பாடங்கள் என்ற தலைப்பில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேற்று எழுதிய வாழ்வியல் சிந்தனை என்ற கட்டுரையில்,

என் மகள் கவிதா தொலைபேசியில் காவல்துறைக்குப் புகார் கூறி, பதிவு செய்தார்கள் என்பதில், காவல்துறை என்பதற்கு பதிலாக அந்த வாடகைக் கார் டாக்சிகள் கம்பெனியின் இழந்தவை - தொலைந்தவை பற்றிய புகார் கூறும் பிரிவிற்கு என்று திருத்தி வாசிக்க வேண்டுகிறோம்.

புகார் கொடுக்கப்பட்டது காவல்துறைக்கு அல்ல; டாக்சி கம்பெனிக்கு என்பதே சரியான தகவலாகும்.

- ஆசிரியர், விடுதலை

Read more: http://viduthalai.in/page-2/73145.html#ixzz2pWxs27ot

தமிழ் ஓவியா said...


நெத்தியடிக்கு ஒரு புத்தி அடி!


அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளேட்டில் (5.1.2014, பக்கம் 6) நெத்தியடி! எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவரை வீண் வம்புக்கு இழுத்துள்ளது.

ஓமாந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிதாகத் தொடங்கப்பட உள்ளதாக அறிவித்த பல்நோக்கு மருத்துவமனையில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றாவிட்டால், தமிழகம் கொந்தளிக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளாராம் - அதைப் படித்துவிட்டு கொந்தளித்துள்ளது டாக்டர் நமது எம்.ஜி.ஆர். ஏடு.

கொந்தளிக்கவேண்டியவர்கள் இட ஒதுக்கீடு - சமூகநீதி மறுக்கப்பட்ட மக்களே! அரும்பாடுபட்டு, போராடி கட்டிக் காக்கப்பட்ட சமூகநீதியை சவக்குழிக்கு அனுப்பிட, அண்ணா பெயரில் உள்ள ஓர் ஆட்சி திட்டமிடுகிறது என்றால், மக்கள் கொந்தளிக்கத்தான் செய்வார்கள் - ஒடுக்கப்பட்ட மக்களின் உன்னதமான இயக்கத்தின் தலைவராம் மானமிகு கி.வீரமணி அவர்கள் கொந்தளிக்கத்தான் செய்வார்.

அதற்காக டாக்டர் நமது எம்.ஜி.ஆர். ஏடு என்ன சமாதானம் சொல்கிறதாம்?

முள்ளிவாய்க்கால் படுகொலையின்போது கருணாநிதிக்கு எதிராக ஏன் புரட்சி செய்யவில்லை வீரமணி என்று கேள்வி கேட்கிறது!
பட்டுக்கோட்டைக்கு வழி என்னவென்றால், கொட்டைப் பாக்கு தூக்கு முக்கால் ரூபாய் என்றானாம் என்று கிராமத்திலே ஒரு பழ மொழியைச் சொல்லுவார்கள் - அதுதான் நினைவிற்கு வருகிறது.

சரி, அதற்கே வருவோம்! ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது அம்மையார் என்ன சொன்னார்?

யுத்தம் என்று ஒன்று வந்தால், அப்பாவி மக்கள் கொல்லப்படத் தான் செய்வார்கள் (இதே நமது எம்.ஜி.ஆர்., 18.1.2009) என்று ராஜபக்சேவின் ஊதுகுழலாக முழங்கியவர் தானே அம்மையார் ஜெயலலிதா? (நமது எம்.ஜி.ஆர். ஏட்டின் எழுத்தாளர் தேவை யில்லாமல் அம்மையாரைச் சிக்கலில் மாட்டி விடுகிறார்!).

யுத்தத்தை நிறுத்தவேண்டும் என்று கருணாநிதி சொல்வது விடுதலைப்புலிகளைக் காப்பாற்றிடத்தான் (இதே நமது எம்.ஜி.ஆர்., 16.10.2008) என்று திருவாய் மலர்ந்தவராயிற்றே அம்மையார்?

வாய்ப் புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ எனும் பாணியில் கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம் டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.

Read more: http://viduthalai.in/page-8/73176.html#ixzz2pWyU8AKY

தமிழ் ஓவியா said...


சூரியன் பற்றி அறிய ஆதித்யா நான்காண்டுகளில் அனுப்ப திட்டம் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை


திருப்பூர், ஜன.5- சூரி யன் பற்றிய அறிவியல் தகவல்களை கூடுதலாக அறிய, ஆதித்யா செயற் கைக்கோள், நான்கு ஆண்டுகளில் விண் வெளிக்கு அனுப்பப்பட உள்ளது,'' என, இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் மயில்சாமி அண்ணா துரை தெரிவித்தார்.

மங்கள்யான் செயற் கைக்கோள் குறித்த கருத்தரங்கு, திருப்பூரில் நேற்று (4.1.2014) நடந்தது. இதில், பெங்களூரு, இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மய்ய திட்ட இயக்குநர் டாக்டர் மயில் சாமி அண்ணாதுரை பங்கேற்றார்.

அப்போது, செய்தி யாளர்களிடம் கூறிய தாவது: நிலாவைப்பற்றி ஆய்வு செய்ய சந்திரயா னும், செவ்வாயைப் பற்றி ஆராய்ச்சி செய்ய மங்கள்யானும் அனுப் பியதை போல, அடுத்த கட்டமாக, சூரியனை பற்றி ஆய்வு செய்ய ஆதித்யா என்ற செயற் கைக்கோள், விண் வெளிக்கு அனுப்பப்பட உள்ளது. சூரியனுக்கு இது செல்லாது.

பூமிக் கும், சூரியனுக்கும் விசை உள்ளது; இந்த விசை களுக்கு இடைப்பட்ட ஒரு பகுதியில் நிரந்தர மாக ஆதித்யா நிலை நிறுத்தப்பட்டு, பூமி, சூரியன் பற்றிய தகவல் களை அனுப்பும். இன் னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில், ஆதித்யா விண்வெ ளிக்கு அனுப்பப்படும். அதற்கான பணி துவங்கி யுள்ளது.

சூரியனை பற்றிய பல தகவல்களை அறியும் வகையில், இந்த கோள் அனுப்பப்படுகிறது; அறிவியல் ரீதியான பல ஆய்வுகளுக்கு இது, உதவும். மங்கள்யான், நிர்ணயித்தபடி, அதன் பாதையில் சென்று கொண்டிருக்கிறது; தீவிர கண்காணிப்பில் உள்ளது. இதுவரை 9 மில்லியன் கி.மீ., சென் றுள்ளது; இன்னும் 200 மில்லியன் கி.மீ., செல் லும்போது, வரும் செப். 24 ஆம் தேதி, செவ் வாய்க் கோளினை அடையும்.

அமெரிக்கா ஆறு முறையும், ரஷ்யா 10 முறையும் முயற்சித்து தோற்ற நிலையில், இந் தியாவின் முதல் முயற்சி வெற்றி பெற்றால், உல கில் விண்வெளி ஆராய்ச் சியில் செவ்வாய்க் கோளினை அடைந்த பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும்.

அய்ரோப்பா, அமெ ரிக்கா நாடுகளின் தொழில்புரட்சியை தொடர்ந்து மூன்றாவது புரட்சியாக இந்தியா வில், விண்வெளி புரட்சி நடக்கிறது. இதில், நாம் பின்தங்கி விடக்கூடாது என்பதால், சந்தர்ப்பங் களை சரியான முறை யில் பயன்படுத்தி வரு கிறோம். - இவ்வாறு டாக்டர் மயில்சாமி அண்ணா துரை செய்தியாளர்களி டம் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/73174.html#ixzz2pWynR6f7