Search This Blog

18.1.14

சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கமா?


  • சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கமா?
  • மூத்த வழக்குரைஞர் காந்தியின் ரிட் மனு வரவேற்கத்தக்கதே!
தமிழ்நாட்டுத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தூதுக் குழு
சட்ட அமைச்சர், பிரதமர், குடியரசுத் தலைவரை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும்
  • தி.மு.க. எம்.பி.க்களை சமூகநீதிக்கான திராவிடர் இயக்கத் தலைவர் கலைஞர் அவர்கள் அனுப்பி வைக்கக் கோருகிறோம்
ஜனவரி 24ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்! தமிழர் தலைவர் விடுத்துள்ள சமூகநீதிக்கான போர்க் குரல்!
சென்னை உயர்நீதிமன்றத்தில் உயர்ஜாதி பார்ப்பனர்களின் ஆதிக் கம் அதிகரித்து வரும் நிலையை எதிர்த்துச் சமூகநீதியாளர்களை ஒருங்கிணைத்து வரும் 24.1.2014 அன்று அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடை பெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 60 ஆகும். தற்போது 47 நீதிபதிகள்தான் உள்ளனர். காரணம் பலர் ஓய்வு பெற் றுள்ள நிலை; காலியாக இருந்த நீதிபதி பதவிகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளவர்கள் 12 பேர் ஆவார்கள்.  (அடுத்து ஒரு பதவி காலியாக உள்ளது - 13) இவர்கள் மாவட்ட நீதிபதிகளிலிருந்தும், வழக்குரைஞர்களிலிருந்தும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். (From the Bench and the bar).

திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டம்!

இந்தப் பட்டியல், அரசியல் சட்டம் கூறும் சமூக நீதிக்கு எதிரான பட்டியலாக உள்ளது என்பதை நாம் 10.12.2013 தேதி சுட்டிக்காட்டி அறிக்கை விடுத்தோம்;  இந்த சமூக அநீதிப் பட்டியலை மாற்ற வேண்டும் என்று கண்டன ஆர்ப்பாட்டத்தை சென்னையில் 16.12.2013 அன்று மக்களைக் கூட்டி நடத்தினோம்.

இந்தப் பட்டியலில்  தாழ்த்தப்பட்ட சமூக நீதிபதி ஒருவர் பெயர்கூட இடம் பெறவில்லை. தாழ்த்தப்பட் டோரில் குறிப்பாக அருந்ததியர் போன்ற வாய்ப்பு, காலங் காலமாக மறுக்கப்பட்ட பிரிவினருக்கும்கூட இடம் இல்லை. சென்னை உயர்நீதிமன்றத்திலும், மதுரை உயர்நீதிமன்றத் திலும், மாவட்ட நீதிமன்றங்களிலும் அனுபவம் வாய்ந்த வர்கள் இருக்கவே செய்கின்றனர்.
அதுபோலவே மீனவர், சலவையாளர், முடி திருத்து வோர் போன்ற மிகவும் பிற்படுத்தப்பட்டவர் ஜாதிகளின் பிரதிநிதியாக எவரும் இடம் பெறவே இல்லை.

ஏராளமானவர்கள் உள்ள வன்னியர், யாதவர் போன்ற ஜாதியினர் பிரதிநிதித்துவம் வெகுக் குறைவே.

மாறாக, ஏற்கெனவே (மக்கள் தொகையில் 3 சதவிகிதமே உள்ள) பார்ப்பன நீதிபதிகள் இதுவரை இருபாலருமாக ஆறு பேர் உள்ளனர்.

இப்போது இந்த பரிந்துரைக்கப்பட் டுள்ள 12 பேர் பட்டியலில் சரியாக இங்கே வக்கீல் தொழில்கூட நடத்தாத பார்ப்பனர்கள் மூன்று பேர்  இடம் பெற்றுள்ளனர்.

இதைவிட பச்சையான சமூக அநீதி வேறு உண்டா?

மூத்த வழக்குரைஞர் காந்தி அவர்களின் ரிட் மனு

நாம் எடுத்துரைத்த இந்த சமூக அநீதியைக் களைந்து, சமூகநீதியும், போதிய அனுபவமும், திறமையும் உடைய வர்கள் இடம் பெற வேண்டும்; சம வாய்ப்பு, சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற இரண்டு முக்கிய அளவுகோல்கள் புறக்கணிக்கப்பட்ட பட்டியலாகவும் இது உள்ளது என்பதை சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர் திரு. ஆர். காந்தி அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்து, வாதாடினார்.
சென்னை உயர்நீதிமன்ற இரண்டு மூத்த நீதிபதிகள் இம்மனுவை விசாரித்து, இடைக்கால தடையையும் இப்பட்டியல்மீது அளித்தனர்.

பெரியார் மண்ணான தமிழ்நாடு, சமூக நீதிக்கே இந்தியாவிற்கு வழிகாட்டும் மண்ணாகும்.  இங்கே இப்படி ஒரு அநீதி நடக்க அனுமதிக்க முடியாது என்ற உணர்வை வழக்குரைஞர்கள் - கட்சி, ஜாதி, மதம் இவைகளையெல் லாம் ஒதுக்கி விட்டு பெருந்திரளாகக் கூடி, நீதிமன்றப் புறக்கணிப்பு என்ற அமைதி வழியில் - கொந்தளிப்பான மன நிலையிலும்கூட - வாதாடுகிறார்கள்.
இந்த சுவர் எழுத்தை கொதி நிலை உணர்வுகளை மத்திய, மாநில அரசுகள், உச்சநீதிமன்றம் - உயர்நீதி மன்றம் கூர்ந்து கவனித்து, வீம்பு காட்டாமல், இந்தப் பட்டியலைத் திரும்பப் பெற்று - மனு பரிசீலனைக்குட் படுத்தி, புதிய பட்டியலைத் தயாரிக்க முன் வருவதுதானே சரியான முடிவாக இருக்க முடியும்?

நீதியரசர் கர்ணன் அவர்களின் போர்க் கொடி!

இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரே இந்த சமூக அநீதிப் பட்டியல் கண்டு மனங்குமுறி, நானும் இதனை எதிர்த்து தனி மனுச் செய்ய விரும்பு கிறேன் என்று விசாரித்த அமர்வு முன்கூற, அந்த இரு நீதிபதிகளும், தாராளமாக மனு செய்யுங்கள் என்று இந்த நீதிபதிக்கு அனுமதியும் அளித்துள்ளனர். இவர் தலைமை நீதிபதியிடமும் முறையிட்டுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் செயல்பாடு

இதற்கிடையில் திடீரென்று உச்சநீதிமன்றமே தானே முன் வந்து இந்த வழக்கை விசாரிக்க இருப்பதாகவும், வழக்கு முழு விசாரணையும் நடத்தாமலேயே சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் விசாரித்து - ஒரு குறிப்பிட்ட தேதி வரை தடை- வழங்கியதை ரத்து செய்தும், மூத்த வழக்குரைஞர் காந்தி போட்ட வழக்கினை எடுத்துக் கொண்டுள்ளனர்!
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இது மேல் முறையீடாக அமையவில்லை. மாறாக, தாமே அவசர அவசரமாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் எடுத்துக் கொண்டு பட்டியலை மறுபரிசீல னைக்கு உட்படுத்தக் கூடாது என்று கூறுவது சரியான நீதிபரிபாலன முறைதானா என்பது சட்ட அறிஞர்கள் மத்திய சட்ட அமைச்சர், குடிஅரசுத் தலைவர் ஆகியவர் களால் ஆராயத் தக்கதாகும்.

ஏனிந்த அவசரம்?

கொலிஜியம் என்ற முறையை மாற்றி - உயர்நீதி மன்ற - உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்கு வேறு ஒரு புதிய நியமன முறை - நீதிபதிகளை நியமன செய்யும் கமிஷன் (Judicial  Appointment Commission)  மசோதா நிறைவேற்றப்படுவதற்கு முன்பே அதாவது நாடாளுமன்றம் அதுபற்றிய சட்டம் இயற்றுவதற்கு முன்பே இது முடிக்கப்பட்டாக வேண்டும் என்பது போல இந்த அவசர நடவடிக்கைகளின் வேகம் தொனிக்கிறது.
சமூகநீதியை புறந்தள்ளும் இம்முயற்சியை - சமூகநீதிப் போராளிகள், அத்துணை அமைப்புகளும் கடுமையாக எதிர்க்க வேண்டும்.

அவசரமாக தூதுக் குழுவை அனுப்புக!

தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட ஒரு தூதுக் குழுவை அனுப்பி, இந்தப் பட்டியல் நியாயமற்ற பட்டியல் என்பதை மத்திய சட்ட அமைச்சர், பிரதமர், குடியரசுத் தலைவர் முதலியோருக்கு விளக்கிச் சொல்லி, இதனை தடுத்து நிறுத்திட வேண்டும்.
நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் சமூக நீதிக்கான குரல் ஓங்கும் நிலையில், இப்படி ஒரு நிகழ்வு என்றால் அதை யாருக்கோ வந்தது என்று ஜனநாயகத்தில், கட்சித் தலைவர்கள் சும்மா வேடிக்கை பார்க்கலாமா?

தாமதிக்காமல் ஒரு தூதுக் குழுவினை உடனே டெல்லிக்கு அனுப்ப வேண்டும். மற்றவர்கள் நிலை எப்படியானாலும், தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள், அவரது எம்.பி.க்களை அனுப்பி, உடனே இதற்கான பரிகாரத்தைத் தேடிட முன் வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளுகிறோம். சமூகநீதிக்கான முக்கிய திராவிடர் இயக்கத் தலைவர் அவர்.

மூத்த வழக்குரைஞர் திரு. ஆர். காந்தி அவர்களின் நியாயமான கோரிக்கைக்கு கோடானு கோடி ஒடுக்கப் பட்டவர்கள் நிச்சயம் துணை நிற்பார்கள். சுமூகமாக தீர வேண்டிய இப்பிரச்சினை தேவையற்ற சிக்கலுக்கு உள்ளாக்கப்பட்டால், அது நாட்டில் சட்டம், ஒழுங்கு பிரச்சினையைத் தூண்டி விட்டது போல்கூட ஆகக் கூடும்!

24ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!

எனவே, சமூகநீதியில் நம்பிக்கையும், அக்கறையும் உள்ள அனைவரும் ஓர் அணியில் திரண்டு, ஒன்றுபட்டு குரல் கொடுக்க முன் வருவது அவசியம்; அவசரம்.

எல்லா மாவட்டத் தலைநகர்களிலும் இதுகுறித்து ஓர் கண்டன ஆர்ப்பாட்டத்தினை ஒத்தக் கருத்துவர்களையும் இணைத்து வரும் 24ஆம் தேதி வெள்ளியன்று நடத்துவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

------------------------கி.வீரமணி தலைவர்,  திராவிடர் கழகம் சென்னை 17.1.2014

43 comments:

தமிழ் ஓவியா said...


தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டும்?


தமிழ்நாடு அரசு தொடங்கவிருப்பதாக அறிவித்துள்ள பல் நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவத் துறைப் பேராசிரியர்கள் உட்பட 84 பதவிகளுக்காகச் செய்யப்பட்ட விளம்பரத்தில் இடஒதுக்கீடு அறவே கிடையாது என்று குறிப்பிடப் பட்டுள்ளதானது தமிழ்நாட்டில் கட்சி, ஜாதி, மதங்களுக்கு அப்பால் பெரும் கொதி நிலையை ஏற்படுத்தி விட்டது.

அரசு விளம்பரத்திற்கு ஏதோ விளக்கம் கொடுப்பதுபோல் நினைத்துக் கொண்டு, முதல் அமைச்சர் கொடுத்த விளக்கம் மேலும் அரசின் தரப்பைப் பலகீனப்படுத்தி விட்டது.

எய்ம்ஸ் மருத்துவமனைப் பேராசிரியர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் தொட்டுக் காட்டிய இந்திரா சஹானி வழக்கில் நீதிபதிகள் ஆலோசனையாகச் சொன்ன வரிகளைப் பிடித்துக் கொண்டு, அந்த அடிப்படையில்தான் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக் கான விளம்பரத்தில் இடஒதுக்கீடு தவிர்க்கப் பட்டுள்ளது என்ற முதல் அமைச்சரின் சமாதானம் வலிய திணிப்பதாகும்.

அந்தத் தீர்ப்புக்குப் பிறகு மத்திய சுகாதார அமைச்சகம் அதே எய்ம்ஸ் மருத்துவமனை பணி நியமனத்தில் இடஒதுக்கீடு செய்வது தொடரப்பட வேண்டும்; சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் அரசு விண்ணப்பிக்கும் என்று ஆணை பிறப்பித்து அதன் அடிப்படையில் டில்லி மற்றும் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவ மனைகளில் ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமனத்தில் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் தம் அறிக்கையில் எவருக்கும் எளிதாகப் புரியும் வகையில் தெளிவுபடுத்தி விட்டார்.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் நேற்று பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பில் கூட பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை பணி நியமனங்களில் இடஒதுக்கீட்டைப் பின்பற்றுவதா கூடாதா என்பதை மத்திய அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று தெளிவுபடுத்தியாகி விட்டது.

தமிழ்நாடு அரசுக்கு முன்னுள்ள ஒரே செயல் சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் தொடங்கப்பட உள்ள பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கான பணி நியமனம் குறித்து ஏற்கெனவே வெளியிட்ட அறிக்கையைப் பின்வாங்கி 69 சதவீத அடிப்படையில் இடஒதுக்கீடு என்பதைத் தெளிவுபடுத்தி புதிய விளம்பரத்தை வெளியிடுவது என்பதேயாகும்.

நீதிமன்றத்தில் கூறப்பட்ட ஆலோசனை வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு, தான் எடுத்த நடவடிக்கையை நியாயப்படுத்த அதிமுக அரசு முயற்சி செய்யக் கூடாது.

சமூக நீதியில் அக்கறை இருக்கும் பட்சத்தில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வாய்ப்பு சிறிது கிடைத்தாலும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் எண்ணமும் செயலும்தான் முன்னால் வந்து நிற்கும்.

இடஒதுக்கீடு பிரச்சினை என்று வருகிறபோது தமிழ்நாட்டில் அசைக்கவே முடியாத 69 சதவீதத்தை உறுதிப்படுத்தும் சட்டம் இருக்கிறது. கண்களை மூடிக் கொண்டு அதன் அடிப்படையில் செயல்பட்டால் நீதிமன்றமும் குறுக்கிடாது; மக்கள் மன்றமோ இரு கரம் இணைத்து கரஒலி எழுப்பி மாலை சூட்டி வரவேற்கும்.

முதல் அமைச்சர் என்ன செய்யப் போகிறார் என்பதை வெகு மக்கள் வெகுவாகவே எதிர்ப்பார்க்கிறார்கள்.

Read more: http://viduthalai.in/page-2/73675.html#ixzz2qhqh4bOS

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவு



பகுத்தறிவில்லாத எந்தச் சீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துவதில்லை, தன் இனத்தின் உழைப்பாலேயே வாழ்வதில்லை. தன் இனத்தின்மீது சவாரி செய்வதில்லை.

- (குடிஅரசு, 26.5.1935)

Read more: http://viduthalai.in/page-2/73674.html#ixzz2qhr3ZRcS

தமிழ் ஓவியா said...


சமூகநீதி, தேர்தலுக்காக எடுத்துக் கொள்ளும் பிரச்சினையல்ல!


சமூகநீதி, தேர்தலுக்காக எடுத்துக் கொள்ளும் பிரச்சினையல்ல! திராவிடர் கழகத்திற்குத் தேர்தல் கண்ணோட்டம் கிடையாதே!

சமூக நீதிக்காக நாம் நடத்த இருக்கும் போராட்டத்திற்கு உங்களையெல்லாம் அழைக்கிறேன் சமூகநீதி பாதுகாப்பு சிறப்புக் கூட்டத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் சங்கநாதம்

சென்னை, ஜன.17- சமூகநீதிக்காக நம் இயக் கங்கள் எல்லாம் நடத்த விருக்கும் மாபெரும் போராட்டத்திற்கு அனைவரையும் அழைக்கிறோம் என்றார் தி.மு.க தலைவர் கலைஞர் அவர்கள்.

சென்னை பெரியார் திடலில் 13.1.2014 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற சமூக நீதிப் பாதுகாப்பு சிறப்பு பொதுக்கூட்டத்தில் உரை யாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:-

இட ஒதுக்கீடு பிரச்சினையில் ஆழம் தெரியாமல் நான் காலை விட்டு விட்டதாக ஜெயலலிதா கூறுகிறார். இந்தியாவிலேயே முதல் முறையாக பிற்படுத்தப் பட்டோர் நலனுக்கான பரிந்துரைகளைப் பெறுவதற் காக திரு. ஏ.என். சட்டநாதன் தலைமையில் ஒரு குழு நான் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் தான் 13-11-1969 அன்று அமைக்கப்பட்டது. மண்டல் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்றிட மத்திய அரசு முன்வர வேண்டுமென்று ஒரு சிறப்புத் தீர் மானத்தை 12-5-1989 அன்று தமிழகச் சட்டப் பேர வையில் முன் மொழிந்தவனே நான் தான். அப்போது ஜெயலலிதாவுக்கு இதெல்லாம் தெரிய எந்தவிதமான முகாந்திரமும் இல்லை. 5-2-1990 அன்று நான் டெல்லி சென்றிருந்த போது, துணைப் பிரதமராக இருந்த தேவிலால் அவர்களைச் சந்தித்து மண்டல் கமிஷன் பரிந் துரைகளை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டு மென்று கேட்டுக் கொண்டவனும் நான் தான். 12-6-1990 அன்று பிரதமர் வி.பி. சிங் அவர்கள் அனைத்து மாநில முதல் அமைச்சர்களுக்கும் மண்டல் கமிஷன் பரிந் துரைகள் பற்றி கருத்துக்களைக் கேட்டு, அந்த மாத இறுதியிலேயே அதற்கு நான் பதில் எழுதி - அதைப்பற்றி பின்னர் பிரதமர் வி.பி. சிங் கூறும்போது, மத்திய அரசின் சார்பில் எழுதப்பட்ட கடிதத்திற்கு உடனடியாக பதில் எழுதிய மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான் என்று வி.பி. சிங் அப்போது பாராட்டினார். 26-5-1990 அன்று தஞ்சை மாநகரில் சமூக நீதி மாநாடு ஒன்றே நடை பெற்றது. அதிலே இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் ஜெயில்சிங் அவர்களும், நம்முடைய தமிழர் தலைவர் வீரமணி அவர்களும் கலந்து கொண்டார்கள். ஜெயில் சிங் அவர்கள் பேசும்போது சொன்னார் - இப்போது கலைஞரிடம் நான் ஒரு விண்ணப்பத்தை வைக்கின்றேன். இந்த நேரத்தில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அதை சட்டமாக ஏற்படுத்துவதற்கு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் தேசிய முன்னணியின் அங்கம் மட்டும் அல்ல. நீங்கள் இல்லாவிட்டால் தேசிய முன்னணியே இல்லை. எனவே தேசிய முன்னணியை உருவாக்கியவர் என்ற முறையில் விண்ணப்பிக்கிறேன். மண்டல் கமிஷன் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப் பட்டு முறையாக அறிவிக்கப்படும் நாளை நாடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது என்றெல்லாம் குறிப்பிட்டது இன்றைக்கும் ஏடுகளிலே அப்படியே உள்ளது. என்னை அன்றைக்குப் பாராட்டிய ஜெயில் சிங் எங்கே? வி.பி. சிங் எங்கே? ஆனால் இன்று என்னை அதற்காகத் தூற்றுவது யார்?

சமூக நீதி பிரச்சினை தேர்தலுக்காக அல்ல!


தமிழ் ஓவியா said...

மேலும் ஜெயலலிதா தன் அறிக்கையில்,

எந்தப் பிரச்சினையையும் தேர்தல் கண்ணோட்டத் துடன் அணுகும் கருணாநிதி தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில், தான் கையில் எடுத்த ஈழத் தமிழர் பிரச்சினை தோல்வி அடைந்த நிலையில், சமூக நீதியை கையில் எடுத்துக் கொண்டு அறிக்கை விடுத்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.

தேர்தலுக்காக எடுத்துக் கொள்ளப்படுவதல்ல சமூக நீதிப் பிரச்சினை.

திராவிட இயக்கத்தோடு பின்னிப் பிணைந்துள்ள பிரச்சினை இது.

ஈழத் தமிழர் பிரச்சினை தோல்வி அடைந்து விட்டதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார். அதுவும் முழுக்க முழுக்க தவறானது. ஈழத் தமிழர் பிரச்சினை தோல்வி அடையவும் இல்லை. தோல்வி அடையவும் அடையாது. (கைதட்டல்) ஜெயலலிதாவின் இந்தக் கூற்றினை உலகெங்கி லுமுள்ள ஈழத் தமிழர்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஜெயலலிதாவுக்கு வேண்டு மானால், தோல்வி அடைந்ததாகத் தெரியலாம். ஏனென்றால் ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில் ஈழத் தமிழர் பிரச்சினையிலே எப்படியெல்லாம் இரட்டை வேடம் போட்டார் என்பது உங்களுக் கெல்லாம் மிக நன்றாகத் தெரியும். பிரபாகரனைக் கைது செய்து தமிழகத்திற்குக் கொண்டு வர வேண்டும், அந்த இயக்கத்திற்கே தடை போட வேண்டும், அந்த இயக்கம் தமிழ்நாட்டிலே காலூன்றக் கூடாது என்றெல்லாம் அறிக்கை விட்டது மாத்திரமல்ல, சட்டமன்றத்திலேயே அந்தக் கட்சியின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றியவர் தான் ஜெயலலிதா. தேர்தல் கண்ணோட்டத்தோடு சமூக நீதியை நான் கையிலே எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார் ஜெயலலிதா. இந்தப் பிரச்சினையைக் கூட நான் முதலிலே கையிலே எடுக்கவில்லை.

திராவிடர் கழகம் தேர்தல் கண்ணோட்டத்தோடு நடக்கிற இயக்கமல்ல

31-12-2013 அன்று திராவிடர் கழகத் தலைவர் இளவல் கி. வீரமணி விடுத்த அறிக்கையில்தான், தமிழக அரசின் அறிவிக்கை, சமூக நீதிக்குச் சவக்குழி தோண்டுவது என்றும், அதனை தமிழ்நாடு ஒரு போதும் ஏற்காது என்றும் தெரிவித்தார்.

திராவிடர் கழகம் தேர்தல் கண்ணோட்டத்தோடு நடக்கின்ற இயக்கமல்ல. 4-1-2014 அன்று நான் விடுத்த அறிக்கையிலேதான் இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் தி.மு. கழகம் தானே போராட நேர்ந்தாலும் தயங்காது என்று நான் உறுதிபடத் தெரிவித்தேன்.

அதே 4-1-2014 அன்று தொல். திருமாவளவன் - டாக்டர் ராமதாஸ் - வைகோ போன்றவர்கள் இதே பிரச்சினைக்காக அறிக்கை விடுத்தார்கள்.

தமிழ் ஓவியா said...

ஆனால் ஜெயலலிதா இத்தனை பேரையும் விட்டு விட்டு எனக்குப் பதில் கூறி அல்ல - வழக்கம் போல என்னைச் சாடி அறிக்கை விடுத்திருக்கிறார். அரசிய லிலே ஒரு கட்சியினர், மாற்றுக் கட்சிக்காரர்களைத் தாக்கி அறிக்கை விடுவது தவறல்ல. ஆனால் அதிலே ஒரு நாகரிகம் இருக்க வேண்டும். நாகரிகம் என்றால் என்ன பொருள் என்று கேட்பவர் நம்முடைய முதலமைச்சர் ஜெயலலிதா. அதைத் தான் தமிழக மீனவர் பிரச்சினை குறித்து நான் விடுத்த அறிக்கை யிலேயே கூறியிருந்தேன். ஜெயலலிதா தற்போது தமிழக முதலமைச்சராக இருக்கிறார். அவர் இனியாவது இந்தக் கபட நாடகம், இரட்டை வேடம், பச் சோந்தித்தனம், ஆழம் அறியாமல் காலை விடு கிறான், அத்திப் பழத்தை பிட்டுப் பார்த்தால் அத் தனையும் புழு என்றெல் லாம் அநாகரிகமாக, வார்த் தைகளைத் திரும்பத் திரும் பப் பயன்படுத்துவதைக் கை விட்டுவிட்டு, நாகரிக மாக அறிக்கை விட ஜெய லலிதா முயற்சிப்பார் என்று நம்புகிறேன் என்று எழுதி யிருந்தேன். ஆனால் ஜெய லலிதா என்னை உங்களால் திருத்த முடியுமா? என் பதைப் போல (சிரிப்பு) இன்றைக்கே அறிக்கை விடுத்திருக்கிறார்.

எனவே தேர்தல் கண்ணோட்டத்தோடோ - ஈழத் தமிழர் பிரச்சினை தோல்வி என்று ஜெயலலிதா நினைப்பதைப் போலவோ - கருதி இந்தப் பிரச்சினை எடுத்துக் கொள்ளப்படவில்லை.

தி.மு. கழக ஆட்சியில் 2006ஆம் ஆண்டு முதல் 2011வரை 540 பேர் மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படை யில் நியமிக்கப்பட்ட போது, இட ஒதுக்கீடு பின்பற்றப் படவில்லை என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். அவர்களில் பலர் மாற்றுப் பணி மூலம் நியமிக்கப் பட்டவர்கள். மாற்றுப் பணி மூலம் நியமிக்கப்படுபவர் களுக்கு இட ஒதுக்கீடு பொருந்தாது என்றும், ஏனெனில் இட ஒதுக்கீட்டின் அடிப்படை யில் தான் அவர்கள் முதன் முதலில் அரசு மருத்துவர்களாக நியமிக்கப் பட்டார்கள் என்றும் ஜெயலலிதாவே தனது அறிக் கையில் தெரிவித்திருக்கிறார். எனவே அந்த 540 பேரில் மாற்றுப் பணி மூலம் நியமிக்கப்பட்டவர்களுக்கு அப்போது இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படவில்லை. தற்போது தேர்ந்தெடுக்கப்படவுள்ள மருத்துவர் களுக்கு அதிக ஊதியம் நிர்ணயிக்கப்பட்டிருப்பது பற்றி நான் எழுதியதற்கும் ஜெயலலிதா பதில் அளித்திருக்கிறார். பதில் அளிக்கவில்லை; நான் சொன்னதை ஏற்றுக் கொண்டு, சிறந்த மருத்துவர்களை இந்த மருத்துவ மனைக்குக் கொண்டு வர வேண்டுமென்பதற்காகத் தான் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது என்று ஜெய லலிதாவே குறிப்பிட்டிருக்கிறார்.

ஆசிரியர் பணி நியமனம் பற்றி ஜெயலலிதா

அடுத்து ஜெயலலிதா ஆசிரியர்கள் பணி நியமனம் பற்றி குறிப்பிட்டு, அதிலே இட ஒதுக்கீடு பின் பற்றப் பட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.

நான் என்ன எழுதினேன் என்பதை சரியாகப் படிக் காமலேயே ஜெயலலிதா பதில் கூறியிருக்கிறார். நான் கூறியதெல்லாம், ஆசிரியர்களை நியமிக்கும் போது, இட ஒதுக்கீட்டின் கீழ் வருகின்றவர்களுக்கு, தகுதி மதிப் பெண்களை நிர்ணயிக்கும் போது, மற்ற மாநிலங்களில் குறைத்து நிர்ணயித்திருப்பதைப் போல தமிழகத்திலும் குறைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதை நினைவுபடுத்தினேன். அதைச் சரியாகப் புரிந்து கொள் ளாமல் ஜெயலலிதா பதில் கூறியிருக்கிறார்.

தமிழ் ஓவியா said...

அதனால்தான் ஜெயலலிதா அறிக்கையை முடிக் கும் போது, என்னுடைய அறிக்கையைப் படித்துப் பார்த் தால் அத்திப் பழத்தைப் பிட்டுப் பார்த்தால் அத்த னையும் புழு என்பதைப் போல அத்தனையும் புளுகு என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். ஒழுங்காக என்னுடைய அறிக்கையைப் படித்திருந்தால், அவருக்கு உண்மை தெரிந்திருக்கும். அரைகுறையாகப் படித்தால், புளுகாகத்தான் தெரியும்.
உச்ச நீதிமன்றம் 18-7-2013 அன்று அளித்த தீர்ப்பின் படிதான் இட ஒதுக்கீட்டினைப் பின்பற்றவில்லை என்றும், அந்த உச்ச நீதி மன்றத்தின் உத்தரவை மாற்ற ஒன்பதரை ஆண்டுக் காலம் காங்கிரஸ் தலைமையிலே இருந்த தி.மு.க., இட ஒதுக்கீட்டிற்காக ஏன் மேலி டத்தை அணுகவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டினை ஜெய லலிதா என் மீது சுமத்தியிருக்கிறார். தற்போதுள்ள மத்திய அரசு, இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வகையில், மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் சூழ்நிலையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் நிச்சயமாக உரிய திருத்தங்களைக் கொண்டு வராது என்றும் ஜெயலலிதா சொல்லியிருக்கிறார்.
தி.மு.க.வின் நிலைப்பாடு

மத்திய அரசு மீதும் பழி சொல்லுகிறார், தி.மு. கழகத்தின் மீதும் குறை சொல்லியிருக்கிறார். ஆனால் மத்திய அரசும், தி.மு.க. வும் இந்தப் பிரச்சினையிலே ஒன்றும் செய்யவில்லையா?

உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது - 18-7-2013 அன்று தான். ஆனால் அதற்கு முன்பே இலங்கை பிரச்சினைக் காக தி.மு. கழகம் மத்திய அமைச்சரவை யிலே இருந்து வெளியே வந்து விட்டது. அதையே ஜெயலலிதா வசதியாக மறந்து விட்டார்.

அமைச்சரவையிலிருந்து தி.மு. கழகம் வெளியே வந்து விட்டாலும், அது பற்றிய விவாதம் நாடாளுமன்றத்திலே நடைபெற்ற போது, தி.மு. கழகம் இட ஒதுக்கீட்டிற்காக அப்போது மிக வேகமாகக் குரல் கொடுத்தது என்பது தான் உண்மை.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியானவுடன் நாடாளு மன்றத்திலே இது பற்றி மிகப் பெரிய விவாதமே 13-8-2013 அன்று நடைபெற்றிருக்கிறது. அப்போது மத்திய அரசின் சார்பில் உடனடியாக இந்தத் தீர்ப்பினை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று சட்டத் துறை அமைச்சர் திரு. கபில்சிபல் அவர்கள் அவையிலே உறுதி அளித்ததோடு, தேவைப்பட்டால் அரசியல் சட்டத் திருத்தமே கொண்டு வரப் படும் என்று கூறியிருக்கிறார். ஆனால் ஜெயலலிதா மத்திய அரசு எதுவுமே செய்ய வில்லை என்று குறைபட்டிருக் கிறார்.

மேலும் அந்த விவாதத்தின் போது நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் தம்பி டி.ஆர். பாலு கழக உறுப் பினர்களோடு அவையின் மையப்பகுதிக்கே சென்று இட ஒதுக்கீட்டிற்காக குரல் எழுப்பியிருக்கிறார். இவைகள் எல்லாம் 14-8-2013 அன்று ஏடுகளில் செய்தியாக வெளிவந்துள்ளது. இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக நாடாளுமன்றத்திலே உள்ள பல்வேறு கட்சி களும் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

மத்திய அரசும் உச்சநீதிமன்றத் தீர்ப்பினை அப்படி யே ஏற்றுக்கொண்டு விடவில்லை.

குடிடடடிறபே ய ரயீசடியச ஞயசடயைஅநவே வாந சநஉநவே ளநளளடி, வாந ழநயடவா ஆளைவசல யள யளமநன ஹஐஐஆளு வடி உடிவேரேந றவை சுநளநசஎயவடி யயீயீடிவேஅநவேள வடி கயஉரடவல யீடிளவள, உடிவேசயசல வடி ய யயீநஒ உடிரசவ துரனபநஅநவே. இது டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் 12-9-2013 அன்று வெளி வந்துள்ளது. இதிலிருந்து மத்திய அரசு உச்ச நீதி மன்றத் தீர்ப்பினையொட்டி இட ஒதுக்கீட்டில் கை வைத்து விடவில்லை என்பதும், ஜெயலலிதா தான் உச்ச நீதி மன்றத் தீர்ப்பினை, தனக்கு கவசமாக வைத்துக் கொண்டு, சமூக நீதிக் கொள்கைக்கு எதிராகச் செயல் பட்டிருக்கிறார் என்பதும் தெளிவாகிறது அல்லவா?

தமிழ் ஓவியா said...

அன்று தம்பித்துரை என்ன பேசினார்?

உண்மையிலே சொல்லப் போனால், நாடாளு மன்றத்தில் இந்த விவாதம் நடை பெற்ற போது, அ.தி.மு.க. உறுப்பினர் தம்பிதுரையே உச்ச நீதி மன்றத் தீர்ப்பு தவறு என்று பேசியிருக்கிறார். ஆனால் தற்போது ஜெயலலிதா அந்தத் தவறான உச்ச நீதி மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் புறக்கணிப்பதாகக் கூறுவது எந்த வகையில் நியாயம்? இட ஒதுக்கீட்டில் ஜெயலலிதா எப்படிப்பட்டவர்?
இட ஒதுக்கீட்டில் ஜெயலலிதா எப்படிப்பட்டவர் என்பதற்கு ஒரு உதாரணம் - 8-7-1994 அன்று தினமணி தலையங்கம் :-

தமிழ் ஓவியா said...

இட ஒதுக்கீட்டை 69 சதவிகித அளவில் தொடர வேண்டும் என்பதில் தனக்கு ஆத்மார்த்த ஈடுபாடு உண்டு; இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணாமல் ஓய மாட்டேன், என்று முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்திருக்கிறார். முன்பு கச்சத்தீவை மீட்பேன் எனச் செய்த சபதத்தைப் போல இதுவும் வெறும் வாய்ச்சொல் வீரமாகப் போய் விடாமல், இந்த வாக்கை நிறைவேற்றிக் காட்டுவார் என்று நம்புகிறோம். (இவ்வாறு எழுதியது தினமணி, நானல்ல) அதே சமயம் மனத்தில் சில கேள்விகள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. 69 சத இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்று ஆத்மார்த்தமாக விரும்புகிற ஒருவரின் தலைமையில் இயங்கும் அரசு, 69 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தமாட்டோம், 50 சதவிகிதத்தை அமல் படுத்துவோம் என்று உச்ச நீதி மன்றத்தில் ஒரு உறுதி மொழியை எழுத்து மூலமாகக் கொடுத்தது எப்படி? (ஜெயலலிதா உறுதி மொழி கொடுத்தாரா இல்லையா?)... முன்னாள் முதல்வர் கருணாநிதி அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத் திற்குக் கிடைத் திருக்கும் பதில்கள் அந்தக் கட்சிகள் இடமிருந்து ஆதரவைப் பெற முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருக்கின்றன. கருணாநிதி எடுத்த முயற்சி தானே என்று அலட்சிய மாகவோ, அல்லது அரசியல் போட்டி மனப்பான்மை காரணமாகவோ முதல்வர் இந்த வாய்ப்பை ஒதுக்கித் தள்ளி விடாமல் ஆக்க பூர்வமாகப் பயன்படுத்திக் கொள்ள முன் வர வேண்டும். கருணாநிதி புகழ் பெற்று விடுவாரோ என்று எண்ணித் தயங்குவதை விட, தமிழக மக்கள் நலம் பெற வேண்டும் என நினைத்துச் செயல் படுவது ஆரோக்கியமான முன் உதாரணமாக இருக்கும். கருணாநிதியின் முயற்சியைத் தொடர்ந்து அவரோடு இணைந்து ஜெயலலிதா களத்தில் இறங்கட்டும்.

இந்தத் தலையங்கம் தினமணியில் வெளி வந்ததாகும். இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் அம்மாவின் லட்சணம் இப்போதாவது புரிகிறதா?

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடா?

சமூக நீதி குறித்து நான் அறிக்கை விடுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என்றும், தான் அதிலே கரை கண்டவர் என்பது போலவும் ஜெயலலலிதா அறிக்கையிலே சொல்லியிருக்கிறார். 22-11-1993 அன்று உச்ச நீதி மன்றத்தில் ஜெயலலிதா அரசின் சார்பாக 69 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல் படுத்த மாட்டோம், 50 சதவிகிதத்தையே அமல்படுத்து கிறோம் என்று ஜெயலலிதா சார்பாக உறுதிமொழி கொடுக்கப்பட்டதா இல்லையா? இட ஒதுக்கீட்டில் சாதி அடிப்படை கூடாது என்றும், பொருளாதார அளவுகோலே வேண்டும் என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டிற்கு ஜெயலலிதா பேட்டி கொடுத்தது உண்டா இல்லையா? இதுவரையிலே இங்கே நடைபெற்ற இந்தக் கருத் துரைகளுக்கெல்லாம் இப்போது காரணம் புரிகிற தல்லவா?

தமிழ் ஓவியா said...

நாளைக்கு அந்த அம்மையார் பதில் சொல் லட்டும், இல்லை என்று சொல்லட்டும். தவறு என்றால் எக்ஸ்பிரஸ் மீது வழக்கு போடட்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பத்திரிகை மீது வழக்கு போடுபவருக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை மீது வழக்கு போடு வதா, அவ்வளவு பெரிய கஷ்டமாக ஆகி விடும்? அந்தப் பேட்டியில், பிற்படுத்தப்பட்ட வகுப்புகளிலும் சிலர், நல்ல நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் இடஒதுக்கீட்டுச் சலுகையைப் பெறுவது என்பது இடஒதுக்கீட்டுக் கொள்கையையே கேலிக் கூத்தாக்கி விடும். (சொல்வது யார்? இட ஒதுக்கீட்டிற்காகப் பரிந்து பேசிக்கொண் டிருக்கின்ற ஜெயலலிதா தான் அன்றைக்கு இதைச் சொல்லியிருக்கிறார்) எனவே பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்குச் சலுகைகள் கிடைக்குமாறு செய்ய வேண்டும். அப்போதுதான் அதைச் சமூக நீதி என்று கூறலாம். பிற்படுத்தப்பட்டவர் களுக்கு 27 சதவிகிதம் என மத்திய அரசு முடி வெடுத்துள்ள நிலையில் முன்னேறிய வகுப்பினரில் கூட பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு 5 அல்லது 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்வது தவறில்லை என்று ஜெயலலிதா சமூக நீதியின் அடிப்படையையே தகர்த் திடும் வகையில் கூறியது உண்டா? இல்லையா?

இதையெல்லாம் மறைத்து விட நினைத்துத் தான் ஜெயலலிதா அறிக்கை விட்டுள்ளார் என்பதை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, இட ஒதுக்கீடு பிரச்சினையையும், தி.மு. கழகத்தையும், திராவிட இயக்கத்தையும் யாரா லும் பிரிக்க முடியாது என்பதை மாத்திரம் நான் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். சட்டசபையில் எனக்கு இடஒதுக்கீடு உண்டா?

இட ஒதுக்கீடு குறித்து பேச வர வேண்டும் என்று, என்னை நம்முடைய இளவல் வீரமணி அவர்கள் அழைத்தார்கள். தொல் திருமாவளவன் அவர்களும் வரவேண்டும் என்று சொன்னார்கள். நானே இப் பொழுது தமிழக சட்டமன்றத்தில் இட ஒதுக்கீடு எனக்கு உண்டா? இல்லையா? என்ற அந்த கேள்விக்கு ஆட் பட்டிருக்கிறேன். (பலத்த கைதட்டல், சிரிப்பு)

ஏனென்றால், நடந்து செல்ல முடியாதவர்கள், நின்று பேச இயலாதவர்கள், இதுபோன்ற இரு சக்கர அல்லது மூன்று சக்கர வண்டிகளில் சட்டமன்றத் திற்குச் சென்று பேசுவது, டெல்லி போன்ற இடங்களிலே, மும்பை போன்ற இடங்களிலே கடைப்பிடிக்கப்படுகின்ற ஒன்றாக இருக்கிறது.

தமிழ் ஓவியா said...

ஆனால், இதுவரையிலே பாவம்; கருணாநிதி, உட்கார கூட முடியாமல், அந்த இடஒதுக்கீடு கூட கிடைக்காமல் இருக்கிறானே என்ற அந்த கவலை இந்த அம்மையாருக்கு இதுவரையில் ஏற்பட்டது உண்டா.

ஒருநாள் வேண்டுமென்றே என்னை ஆழம் பார்ப் பதற்காகவாவது கருணாநிதி அமர்வதற்கு இடம் ஒதுக்கப்படும் என்று சொல்லிப் பார்க்கட்டும், நான் வருகிறேனா இல்லையா? (பலத்த கைதட்டல்)

ஆக, சாதாரண ஒரு உறுப்பினருக்கு, முன்னாள் முதலமைச்சராக இருந்தவருக்கு, அய்ந்து முறை தமிழகத்தை பரிபாலனம் செய்தவருக்கு சட்டப் பேரவையிலே இடம் இல்லை. நீங்கள் கேட்கலாம்; நீ போய்தான் என்ன செய்யப் போகிறாய், வெளியேற்றப் படுவதில் நீயும் ஒரு ஆளாக இருக்கப் போகிறாய் என்று நினைக்கலாம்! அது வேறு விஷயம். அது சட்ட மன்றம், ஜனநாயக ரீதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கு அடையாளம். நான் அதைப்பற்றி அந்த விவாதத்திற்குள் நுழைய விரும்பவில்லை. ஆனால், ஒரு மனிதாபிமானம், ஒரு முறை, ஒரு நாகரிகம் இருக்க வேண்டாமா?

காமராஜர் முதலமைச்சராக இருக்கிற காலத்திலே அப்பொழுது எதிர்க்கட்சியாக இருந்த எங்களை யெல்லாம் எப்படி நடத்தினார்?. ஏன் பக்தவச்சலம் கூட எங்களை எப்படி நடத்தினார்?. அவ்வளவு ஏன் எனது அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்ச ராக இருந்தபொழுது கூட எப்படி நடத்தினார்? ஆனால் இன்றைக்கு, நாங்கள் எப்படி தமிழகச் சட்டமன்றத்திலே மதிக்கப்படுகிறோம். எதற்கெடுத்தாலும் 110 ! அதைப் படித்துவிட்டால் யாராலும் பேச முடியாது. யாராலும் கேள்வி கேட்க முடியாது. என்ன காரணம்? பேசினால் அதற்கு பதில் சொல்ல அம்மையாரால் முடியாது; தெரியாது. செயலாளர்கள் குறிப்புகள் தருவதில்லை. இருந்தால் தானே படிப்பதற்கு. அதனால்தான் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களாக இருந்தாலும், வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களாக இருந்தாலும், அவர்கள் எந்தக் கேள்வி கேட்டாலும், மக்கள் பிரச்சினை பற்றிய கேள்விகளாக இருந்தாலும் அதற்கு பதில் சொல்ல முடியாத, தயாராக இல்லாத, ஒரு முதலமைச்சரின் தலைமையிலே நடைபெறுகிற ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கிறது. அவர் எதையும் பேசுவார்; என்னை அவர் அர்ச்சித்திருக்கிற வார்த்தை கள், பெரியார் உயிரோடு இருந்தால் எந்த அளவிற்கு அவருக்கு மனம் பாதித்திருக்கும் என்பது எனக்குத் தெரியும். அண்ணா இருந்தால் எந்த அளவுக்கு பாதித்திருக்கும் என்பது எனக்குத் தெரியும். ஏன் எம்.ஜி.ஆரே கூட இருந்தால் எந்த அளவிற்கு அந்த வார்த்தைகளைப் பற்றி கவலைப்பட்டிருப்பார் என்பது எனக்குத் தெரியும்.

அன்று எம்.ஜி.ஆர் எப்படி நடந்து கொண்டார்

ஏனென்றால் அவர் கட்சியிலிருந்து பிரிந்து போன பிறகு, அப்பொழுது மவுண்ட் ரோடு, இன்றைக்கு அண்ணா சாலை, அந்த மவுண்ட் ரோட்டில் அவர் காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது, காரில் முன் பகுதியில் அமர்ந்திருந்த ஜேப்பியார் என்ற நண்பர் ஏதோ ஒரு வார்த்தைக்காக, கருணாநிதி என்று என் பெயரைச் சொல்லப்போய், உடனே டிரைவர் தோளில் தட்டி, காரை நிறுத்து என்று எம்.ஜி.ஆர். சொல்லி, கார் நிறுத்தப்பட்டு ஜேப்பியாரை எம்.ஜி.ஆர். கூப்பிட்டு கீழே இறங்கு என்று சொல்லியிருக்கிறார் ஏன் அண்ணா என்னை இறங்கச் சொல்லுகிறீர்கள் என்று அவர் கவலைப்பட்டுக் கேட்க, கருணாநிதி என்று நானே சொன்னது கிடையாது. கருணாநிதி என்ற வார்த்தையை நம்முடைய அலுவலகத்திலேயோ அல்லது வீட்டி லேயோ எதிலும் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியது கிடையாது. உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தால் அவருடைய பெயரை எனக்கு நேராகவே சொல்ற என்று சொல்லி இறக்கிவிட்ட எம்.ஜி.ஆர். அந்த எம்.ஜி.ஆரைத் தலைவராகக் கொண்ட அந்த கட்சியில் இந்த அம்மை யார் இன்றைக்கு கருணாநிதி, கருணாநிதி, கருணாநிதி என்று சொல்ல தவறுவதே இல்லை. சாத்தான்; குட்டிச் சாத்தான் என்று இப்படியே அர்ச்சனைப் புராணங்கள் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. இவரிடத்திலே எதை எதிர்பார்ப்பது?

வீரமணி அவர்கள் பேசியதற்குப் பதில் உண்டா?

நம்முடைய தளபதி வீரமணி அவர்கள் இங்கே விளக்கமாக பேசினார்களே, இந்த விளக்கங்களை யெல்லாம் அந்த அம்மாவிடம் எதிர்பார்க்க முடியுமா? இதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்வார்களா? அல்லது புரிந்து கொள்வார்கள் என்று கருத முடியுமா?

ஒரே வார்த்தையிலே நாளைக்கு, என்னை பேசிய மாதிரி அவரையும் பேசுவார். அதில் அவருக்கு ஒரு மகிழ்ச்சி. என்னைப் பற்றி பேசும் பொழுது நான் தருகிற பதில் நாகரிகமாக இருக்கும். ஆனால் வீரமணியைப் பற்றி பேசும் பொழுது, அவர் தருகிற பதில் அவமானத்தில் மூழ்கிப் போகிற பதிலாக இருக்கும். அந்த பதிலை அவர் வாங்கிக் கட்டிக்கொள்ள தயாராக இருக்கிறாரா என்று எனக்குத் தெரியவில்லை. நாடு நாடாக இல்லை காடாக மாறி கொண்டிருக்கிறது என்று கூறிய கலைஞர் அவர்கள் இந்த இயக்கங்கள் எல்லாம் சேர்ந்து நடத்த இருக்கிற மாபெரும் போராட்டத்திற்கு உங்களையெல்லாம் அழைக்க விரும்புகிறேன் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/page-3/73682.html#ixzz2qhrqhC00

தமிழ் ஓவியா said...

பாசிச மனப்போக்கு

இராமாயணக் கதையில், சீதாப்பிராட்டியைத் தேடி வந்த ராமதூதன் அனுமான் இலங்கையை எரித்தது பயங்கரவாதச் செயலா அல்லது வெறும் தற்காப்புச் செயலா என்ற கேள்வியை டில்லியைச் சேர்ந்த ஹன்ஸ் என்ற இந்தி பத்திரிகை தனது தலையங்கத்தில் எழுப்பியிருக்கிறது. இலங்கையை எரித்த அனுமானை ஒரு பயங்கரவாதியாகத்தான் கருத வேண்டும் என்று அந்தப் பத்திரிகை முடிவு கட்டுகிறது.

புராண, இதிகாசங்களை விஞ்ஞான முறையில் அணுகினால், இந்த முடிவு சரிதான் என்று அந்தப்பத்திரிகையின் ஆசிரியர் ராஜேந்திர யாதவ் எழுதியிருப்பது, இந்து தெய்வங்களைத் தாழ்த்துவதாக விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள் ஆகியவைகளிடமிருந்து கடும் எரிச்சல் மிகுந்த கண்டனத்தைக் கிளப்பியுள்ளது. பிரபல இந்தி எழுத்தாளர் பிரேம் சந்த் அவர்களால் 1930இல் துவங்கப்பட்ட இந்த ஹன்ஸ் பத்திரிகை முற்போக்கு இந்தி எழுத்தாளர்களின் இலக்கிய படைப்புகளுக்கும், பகுத்தறிவு ஆராய்ச்சிகளுக்கும் புகலிடம் தருகிறது.

எழுந்துள்ள கூக்குரலுக்குப் பதில் சொல்லும் வகையில், மதத் தலைவர்களின் முதன்மையை எதிர்த்து ஏதாவது சொன்னால், அதையே ஒரு வன்முறை என்று கூறி அடக்க வந்து விடுகிறார்கள் என்று ஆசிரியர் யாதவ் சொல்கிறார்

(டில்லி இந்தியன் எக்ஸ்பிரஸ் 17.1.2002)

Read more: http://viduthalai.in/page-7/73686.html#ixzz2qht2sJCv

தமிழ் ஓவியா said...


17 ஆம் தேதி பிறந்த பெரியாருக்கு, 17 பவுன் நிதி வழங்குவேன்! பொறியாளர் நெடுமாறன் பெருமிதம்!


சென்னை, ஜன.17- பெரியார் பெருந்தொண்டர் வந்தவாசி வேல்.சோமசுந்தரம் அவர்களின் மகன் பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன் அவர்கள், பொங்கல் விழாவிற்கு தமிழர் தலை வரை தனது இல்லத்திற்கு வருகை தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டதற் கிணங்க, 15.1.2014 அன்று மாலை அவருடைய இல்லத்திற்கு தமிழர் தலைவர் அவர்கள் சென்றார். அவர் இல்ல நுழைவு வாயிலில் தந்தை பெரியாரின் 135 அடி உயர சிலையின் தோற்றம் பிளக்ஸ் பேனரில் வைக்கப்பட்டி ருந்தது. தமிழர் தலைவர் அவர்கள் அதனைப் பார்த்து மகிழ்ந்து, வெகுவாகப் பாராட்டினார். இல்லத்திற்குச் சென்ற தமிழர் தலைவர் அவர்களை வேல்.சோ.நெடுமாறனின் இணையர் டாக்டர் விஜயலட்சுமி, மகன் டாக்டர் பரத்குரு, மருமகள் டாக்டர் பாரதி மற்றும் உற்றார், உறவினர்கள் அகமகிழ்வோடு வரவேற்றனர்.

அங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன் அவர்கள் மிகுந்த உணர்வுவயப்பட்டு கூறியதாவது:

தந்தை பெரியாருக்கு 135 அடி சிலை அமைப் பதற்குத் தமிழர் தலைவர் அவர்கள் அறிவித்தவுடன், இந்தத் திட்டத் திற்கு நான் அதிக மாக நிதி வழங்க வேண்டும் என எண்ணிக்கொண்டே இருந்தேன். சுமார் 40 கோடி செலவில் உருவாகும் இத்திட் டம் மிகுந்த சிறப்பான ஒன்றாகும்.

இத்திட்டத்திற்கு முதற்கட்டமாக கழகத் தோழர்கள் இரண்டரை கோடி ரூபாயினை திரட்டித் தந்திருக்கிறார்கள். அந்த வகையில், எனது நண்பர்கள் இந்தத் திட்டத்திற்கு ஒத்து ழைக்கவேண்டும் என நினைத்து, இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்தேன்.

நான் எவ்வளவு நிதி கொடுக்கலாம் என யோசித்துப் பார்த்து, 135 கிராம் கொடுக்கலாம் என முடிவெடுத்து, ஒரு கிராம் சேர்த்து, 136 கிராம் கொடுத்தால், 17 பவுன் ஆகும்.

17 ஆம் தேதி பிறந்த தந்தை பெரியாருக்கு, 17 பவுன் (136 கிராம்) வழங்குவதாக நினைத்து, யாரும் வழங்காத அளவிற்குப் பெரிய அளவில் நான் வழங்கவேண்டும் என நினைத்தேன். அதன் முயற்சியாக, முதல் தவணையாக 5 பவுனுக்கான தொகை ரூ.1,25,000-த்தினை வழங்குகிறேன்.

தந்தை பெரியார் சிலை மூன்று ஆண்டு களுக்குள் அமைந்துவிடும் என தமிழர் தலைவர் கூறியதால், மூன்று மாதத்திற்கு ஒருமுறை ரூ.25 ஆயிரம் என வழங்கி, மூன்று ஆண்டுகளுக்குள் நான் 17 பவுனுக்கான தொகையை வழங்கி விடுவேன் என தெரிவித்தார்.

இதனை செவிமடுத்த தமிழர் தலைவர் அவர்கள், பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன் அவர்களின் தொண்டுள்ளத்தைப் பாராட்டியும், கடந்த காலங்களில் வேல்.சோமசுந்தரம் அவர் களின் இல்லத்தில் சென்று தங்கி கழகப் பிரச் சாரத்தில் ஈடுபட்ட பழைய நினைவுகளை எடுத்துக் கூறி, இது எனது குடும்பம் என உரிமையோடும், மகிழ்வோடும் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-8/73705.html#ixzz2qhu6RaIP

தமிழ் ஓவியா said...

மேலே பட்டியலில் கூறப்பட்டவை முழுமை பெற்றதும் இல்லை, துல்லியமானதுமல்ல, ஏனென்றால் 21-ஆம் நூற்றாண்டின் இந்தியாவில் இந்து என்றால் பொருள் என்ன என்பதை, அறிவு பூர்வமாக நாம் விவாதிப்பதில்லை, சரியான விவாதத் திற்குப் பிறகு தான் முழுமையான பட்டியலிட முடியும். நம்முடைய சமூகத்தில், மதத்தினால் ஏற்படும் நடைமுறை பிரச்சினைகளை அறிய இத்தகைய பட்டியல் ஒன்று உதவியாக இருக்கும்.

இந்த பட்டியல் தயாரிப்பதில் ஒன்றை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மதம் எதையெல்லாம் குறிப்பிட்டுள்ளது என்பதோடல்லா மல், ஒட்டு மொத்த நாட்டுக்குத் தேவைப்படும் முன்னேற்றத்தையும், எதிர்பார்ப்பையும் தொடர்பு கொண்டதாகவும் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, 16-ஆம் நூற் றாண்டைச் சேர்ந்த பழமை சார் இந்தூயிசத்தை நோக்கிச் சென்றால், உலகளாவிய இன்றைய வாழ்க்கை முறைக்கு நம்மை அய்க்கியப்படுத்திக் கொள்வது இயலாது போகும்.

இதைப் போன்றே, ஏனைய மதங்களைப் பற்றிய விவாதமும், மதிப்பீட்டுப் பட்டியலும் தேவை, குறிப்பாக இந்தியாவின் முக்கிய அடுத்த மதமான இஸ்லாம் மதத்தைப் பற்றியதாக இருக்க வேண்டும்.

உலகில் ஏறத்தாழ 50 நாடுகளுக்கு மேல் முஸ்லீம் மக்கள் பெரும் பான்மையானவர்களாக உள்ளனர். ஆனால், இஸ்லாமுக்கு ஒரு பொருள் விளக்கம் கூற முடியாத நிலை உள்ளது, எடுத்துக்காட்டாக, சவுதி அரேபியாவில் உள்ளவர்களில் 97 சதவிகிதம் முஸ்லீம் மக்கள்; சவூதி அரேபியாவின் சட்ட திட்டம், தனியான அரசியல் அமைப்பில் அமைந்ததில்லை மாறாக மத அடிப்படையிலான ஷாரியா என்ற பழமை தோய்ந்த சட்ட அடைப் படையில் அமைந்துள்ளது. சவுதிப் பெண்கள் முழுவதும் உடலை மூடி பொது இடங்களில் காணப்பட வேண்டும் என்பது சட்டம் சட்டத்தை மீறியவர்களுக்கு அங்கு கொடுக்கப்படும் தண்டனைகளாவன! தலையை வெட்டுதல், சாட்டையடி, கல்லால் அடித்தல், தண்டனைகள் உறுதியுடன் நிறைவேற்றப்படும்.

சவுதி அரேபியப் பள்ளி ஒன்றில் தீப் பிடித்துவிட்டது. தீயணைப்புப் படையினர், பள்ளியில் இருந்த பெண்களை வெளியில் வர அனு மதிக்கவில்லை. காரணம் அவர்கள் உடலை முழுவதுமாக மூடவில்லை. பெண்கள் அனைவரும் மடிந்தனர். பலர் சவுதி திட்டத்தைக் குறை கூறினாலும், குற்றங்கள் குறைய காரணமாக உள்ளது என்று வரவேற்கவும் செய்கின்றனர்.

தமிழ் ஓவியா said...


மதிப்பெண்கள் மாணவர்களின் திறமையின் அளவுகோல் அல்ல!

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தன் சிந் தனையில் ஏற்பட்ட கருத்தை அச்சம், தயை, தாட்சண்ய மின்றி எடுத்துக்கூறும் இயல்பு படைத்தவர். மாண வர்கள் தேர்வில் பெறும் மதிப்பெண்களைப் பற்றி பின் வருமாறு கூறுகிறார். மார்க் தான் (மதிப்பெண்) தகுதி, திறமைக்கு அறிகுறி என்பது அக்கிரமம் மாத்திரமல்ல; மகா மகா அயோக்கியத்தனம் அல்லது மடத்தனம் என்பேன்.

தந்தை பெரியாரின் கருத்தை மெய்ப்பிப்பது போல் தினமணி (9.12.2013 பக்கம் 4) இதழில் பின் வரும் செய்தி வெளிவந்துள்ளது.

பிளஸ் 2 மற்றும் 10-ஆம் வகுப்பு விடைத்தாள் களைத் திருத்துவதில் கவனக்குறைவாக இருந்த 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பள்ளி க்கல்வித்துறை விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பி உள்ளது. விடைத்தாள் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த 5600 மாணவர்களில் 4000 மாணவர் களின் மதிப்பெண் மாறியது!. ஒரு மாணவனின் விடைத்தாள் முழுமை யாக மதிப்பெண் மதிப்பீடு செய்யாமல் மதிப்பெண் வழங்கப்பட்டிருந்தது. மறு மதிப்பீட்டில் அவரது மதிப்பெண் 200 ஆக அதிகரித்தது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் விசுவநாதன் பின் வருமாறு பேசியுள்ளார். 18 மதிப்பெண்ணுக்கு மதிப்பீடு செய்த ஒரு விடைத்தாளை மறுமதிப்பீடு செய்தபோது 78 மதிப்பெண் வந்தது. எனவே இனிமேல் நல்ல முறையில் விடைத்தாள் மதிப்பீடு செய்ய ஏற்பாடு செய்யப்படும். (விடுதலை நாளிதழ் 19.7.2005)

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வு செய்தபோது பல மாணவ - மாணவிகளின் மதிப்பெண் பட்டியலில் குளறுபடிகள் நடந்திருப்பது தெரியவந்தது. இந்த மோசடியின் உச்சகட்டமாக பட்டப்படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டுச் சென்ற 2 மாணவர்கள், ஒரு மாணவர் தேர்வுக்கு விண்ணப்பிக்காமலும், தேர்வுக்குரிய கட்டணம் செலுத்தாமலும் தேர்வே எழுதாமலும் ஆனால் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டு மெகா மோசடி நடந்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. (விடுதலை நாளிதழ் 19.2.2012 பக்கம் 7)

முன்னாள் துணை வேந்தர் அறிஞர் க.ப.அறவாணன் அவர்கள் நம் மதிப்பெண் முறையையும், மதிப்பீட்டு முறையையும் முற்றாக மாற்றி அமைத்தல் வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

தற்போதுள்ள தேர்வு முறையினால் பல்லாயிரக்கணக்கான பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் வாழ்க்கையே பாழடிக்கப்படுகிறது. அமெரிக்க நாட்டுப் பகுத்தறிவு மேதை இங்கர்சால் கல்லூரிகள் வைரங்களை ஒளியிழக்கச் செய்கின்றன கூழாங்கற்களை பளபளப்பாக்குகின்றன என்று கூறியது முற்றிலும் உண்மையே.

கல்வித்துறைச் சான்றோர்கள் மாணவர்களின் தகுதி, திறமையை மதிப்பிடுவதற்கு காலத்திற்கேற்ற சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும்.

- செய்யாறு இர.செங்கல்வராயன் (முன்னாள் துணைத் தலைவர், ப.க செய்யாறு, திருவண்ணாமலை

Read more: http://viduthalai.in/page3/73728.html#ixzz2qtb2x1nz

தமிழ் ஓவியா said...


86 வயது இளைஞர் புலிவலம் அகமது


இசுலாம் மார்க்கத்து குடும்பங்களில் பல பேர் திராவிடர் கழகத்தில் பணியாற்றிய வரலாறு உண்டு. இன்றும் உள்ளனர். அவர்களில் 81-ஆம் அகவையில் தமிழர் தலைவரின் மனதில் இடம் பெற்ற பழம்பெரும் கழகத் தொண்டர் திருவாரூர் - புலிவலம் வாழ் மானமிகு பி.எஸ்.அகமது; 86 வயதான சுறுசுறுப்பான இளைஞர்

இவர் பிறந்து வளர்ந்த ஊர் சன்னாநல்லூர் ஆகும். 1943-ஆம் ஆண்டு முதல் கழகத்தில் ஈடுபாடு கொண்டவர். இந்த ஊரில் ஒரு மளிகைக் கடையில் (அவரும் ஒரு முஸ்லீம்) நான் வேலை பார்த்தேன். அந்த கடைக்காரர் குடியரசு பத்திரிகை வாங்கிப் படிப்பார். நானும் மற்றவர்களும் ஓய்வு நேரங்களில் அதைப் படிக்கப் பழகினோம்.

நீடாமங்கலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாடுதான் நான் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி. பிறகு தந்தை பெரியார் பூந்தோட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்தபோது திருவாரூர் தோழர் யாகூப் அவர்கள் அய்யாவிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். அக்காலந்தொட்டு இன்றுவரை நான் திராவிடர் கழகத்தில் உறுப்பினராக இருந்து வருகிறேன் என்று கூறிய இவரிடம் உங்கள் வாழ்வில் நெகிழ்ச்சி அடைந்த சம்பவம் என்று எதைக் கூறுவீர்கள்? என்று கேட்ட தற்கு சில ஆண்டுகளுக்கு முன் பூந்தோட்டத்தில் ஒரு திரையுலக இயக்குநர், கழக இளைஞர் ஒருவரின் திருமணத்தை தமிழர் தலைவர் அய்யா வீரமணி அவர்கள் நடத்தி வைத்தபோது அவரது பழைய நினைவுகளை வெளிப்படுத்தி பேசும்போது இந்த ஊரில் கழகக் கூட்டத்தில் பேச வந்த என்னை கூட்டம் முடிந்ததும் அகமது என்ற கழகத்தொண்டர் மிதிவண்டியில் அழைத்துச் சென்று பேரளத்தில் புகைவண்டியில் அனுப்பி வைத்ததை நான் மறக்க மாட்டேன் என்று பெருமைப்பட பேசியதாக திருவாரூர் கழகத் தோழர்கள் வந்து சொன்னபோது, நெகிழ்ந்து மகிழ்ந்து போனேன் என்றார்.

திருவாரூர் புலிவலத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் குடியேறிய நான், மாவட்ட தலைவர் காலஞ் சென்ற சுயமரியாதைச் சுடரொளி எஸ்.எஸ்.மணியம் அவர்கள் இல்லத்தில் காவலராகப் பணியாற்றினேன். அவருடன் கழகப்பணிகளில் ஈடுபட்டேன் என்று கூறும் இவர் என் பயணம் கழகப்பணிகளில் தொடர்வது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று உணர்ச்சி ததும்பக் கூறினார்.

மேலும் திருவாரூரில் பெரியார் புத்தக விற்பனை நிலையத்தில் விற்பனையாளராக இருக்கும் இவர், இன்றும் மிதிவண்டியில் தான் இளைஞராக பயணிக் கிறார். இவரை ஊக்குவித்தல் நம் கடமையல்லவா!


- பேட்டி கண்டவர்: க.முனியாண்டி, திருவாரூர் மாவட்ட ப.க தலைவர்

Read more: http://viduthalai.in/page4/73729.html#ixzz2qtbFMUe8

தமிழ் ஓவியா said...


இப்படியும் மூடநம்பிக்கைகள்


பசுமாட்டின் 5வது காலைத்தொட்டு கும்பிட்டால் ஆண் குழந்தை உறுதியாம்!

இந்தியாவில் உள்ள சட்டீஸ்கார் என்ற மாநிலத்தின் தலைநகர் ராஜ்பூரில் மூன்று வருடங்களுக்கு முன் பிறந்த ஒரு பசுமாட்டிற்கு ஐந்து கால்கள் உள்ளது. தலைப் பகுதியின் அருகில் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த ஐந்தாவது காலை கருவுற்ற பெண்கள் தொட்டுக்கும்பிட்டால் ஆண் குழந்தை பிறக்கும் என நம்பப்பட்டு வருகிறது

ராஜ்பூர் நகரில் ராஜ் பிரதாப் என்ற இளைஞர் வளர்த்து வரும் பசுமாடு ஒன்றிற்கு ஐந்து கால்கள் உள்ளன. ஐந்து மில்லியன் கால் நடைகளுக்கு ஒன்று இதுபோன்று ஐந்து கால்களுடன் பிறக்கும் என்று கால்நடை மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் இந்த 5ஆவது காலை வைத்து ஏதாவது வித்தியாசமாக செய்யலாமா? என்று இந்த இளைஞர் யோசித்து வந்த வேளையில், ஒரு கருவுற்ற பெண் பசுமாட்டின் ஐந்தாவது காலைத் தொட்டுக்கும்பிட அனுமதி கேட்டுள்ளார். பின்னர் தொட்டுக் கும்பிட்டவுடன் வீட்டுக்கு சென்ற அவருக்கு பிரசவ வலி ஏற்பட் டுள்ளது. அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. பசுமாட்டின் 5ஆவது காலைத் தொட்டுக்கும்பிட்டதால்தான் தனக்கு ஆண் குழந்தை பிறந்தது என்று அந்தப் பெண் நம்பியதாகக் கூறப்படுகிறது.

இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியதால் பக்கத்து ஊர்களில் இருந்தும் கருவுற்ற பெண்கள் தங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கவேண்டும் என எண்ணி, அந்த வித்தியாசமான பசுமாட்டை தொட்டுக்கும்பிட வருகை தருகின்றனர். இதற்காக ராஜ் பிரதாப் ஒவ்வொரு பெண்ணிடமும் ரூ.500 வரை பணம் வாங்குகிறார்.

Read more: http://viduthalai.in/page4/73730.html#ixzz2qtbmyCQE

தமிழ் ஓவியா said...


ஒரு கேள்வி? பதில்!



கேள்வி: நீங்கள் 1.10.2013 அன்று கலைஞர் தொலைக் காட்சியில் பேசினீர்களாமே?
பதில்: ஆமாம் சென்னையிலுள்ள எல்லா தொ.கா. களிலும் பேசியிருக்கிறேனே! அவர்களாக அழைத்துப் போனதுதான்!

கலைஞர் தொ.கா.யிலிருந்து உங்களை நேர்காண வேண்டும் வருகிறீர்களா? என்றார்கள், சென்றேன். என் பெயர்த்தியைப் போன்ற ஒரு பெண்மணி கேட்ட வினாக்களுக்கெல்லாம் உதிரிப்பூக்களால் மாலை தொடுப்பது போல தொடுத்தேன்.

அய்யாவைப்பற்றி, அண்ணாவைப்பற்றி, கலை ஞரைப்பற்றி, தமிழைப்பற்றி, தமிழ் அறிஞர்களைப்பற்றி, திரைப்படங்களில், தொலைக்காட்சிகளில் வரும் பண்பாட்டுச் சீரழிவுகளைப் பற்றியும், அவற்றைப் போக்கும் வழிமுறைகளைப் பற்றியும் 35 மணித்துளிகளில் கடுகைத்துளைத்து ஏழு கடல்களைப் புகுத்தியதுபோல் சொல்லி முடித்துவிட்டு விடை பெறும்போது, நேர் காணல் செய்த பெண்மணியிடம், அம்மா, உங்களைப் போல் பல பெண்மணிகள் எல்லாத்துறையிலும் முன்னேறி இருப்பதற்குக் காரணம், தந்தை பெரியார் தான்! அவருடைய நூல்களில் பெண் ஏன் அடிமை யானாள்? இனிவரும் உலகம் என்னும் சிறு சிறு நூல் களையாவது படியுங்கள். அவை மிகக்குறைந்த விலையில் சென்னை - பெரியார் திடலில் கிடைக்கும் என்று என் முத்திரையைப் பதித்துவிட்டு விடைபெற்றேன்!

நூல்: முகம்
தொகுப்பு: சி.சுவாமிநாதன், ஊற்றங்கரை.

Read more: http://viduthalai.in/page4/73732.html#ixzz2qtbvLZiy

தமிழ் ஓவியா said...


பிறப்பில் தீண்டாமை கருதலாமா?


தீண்டாதாரிடை ஒழுக்கமில்லை என்று சிலர் சொல்கிறார்கள். மற்றவரெல்லாரும் ஒழுக்க முடையவரா? என்று அச்சகோதரரைக் கேட் கிறேன். தீண்டாதார் என்று சொல்லப்படு வோரும் எத்தனையோ பேர் ஒழுக்க சீலரா யிருக்கிறார்கள். உயர் வகுப்பாரென்று சொல்லப் படுவோருள், எத்தனையோ பேர் ஒழுக்க ஈனராயிருக்கிறார்கள்.

அவரைப் பார்ப்பனரென்றும் இவரைத் தீண்டாதாரென்றும் ஏன் கொள்ளுதல் கூடாது? பிறப்பில் தீண்டாமை கருதுவது கொடுமை! வன்கண்; அநாகரிகம். பிறப்பில் தீண்டாமை கருதப்படுமிடத்தில் தேசபக்தி எங்ஙனம் இடம் பெறும்?

- திரு.வி.க.
(சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து பக்கம் -79)

Read more: http://viduthalai.in/page4/73731.html#ixzz2qtc4KRvq

தமிழ் ஓவியா said...


அங்கும் இங்கும்


மனிதாபிமானம்: மகன் பிறந்த நாளில் பயணிகளுக்கு காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை இலவசமாக ஆட்டோ இயக்கினார், தச்ச நல்லூர் சீனய்யா தெருவைச் சார்ந்த என். பாலசுப்பிரமணியன் (40).

வீண் செலவு: ஜனவரி 1ஆம் தேதி ஆஞ்சநேயர் பிறந்த நாளை முன்னிட்டு ஆஞ்ச நேயருக்கு அபிசேகம் -சந்தனம், பன்னீர், தயிர், பால் மட்டும் 15,000 லிட்டர். நடந்தது குமரி மாவட்டம் சுசீந்திரத்தில்.

- எஸ். நல்லபெருமாள், வடசேரி

Read more: http://viduthalai.in/page5/73734.html#ixzz2qtcpTVLZ

தமிழ் ஓவியா said...


இதுதான் மதச் சார்பின்மையா? இந்துக் கடவுள் உருவம் பொறித்த புதிய நாணயங்களால் சர்ச்சை

புதுடில்லி, ஜன. 19- மாதா வைஷ் ணவ தேவி கோவில் வாரியத்தின் வெள்ளி விழாவைக் குறிக்கும் வகை யில் இந்திய ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ள புதிய 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்களில் வைஷ்ணவி தேவி உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இது தங்களது மத உணர்வை புண் படுத்துவதாகவும், மதச்சார்பின் மைக்கு இது எதிராக இருப்பதாகவும் முஸ்லிம் மத குருமார்கள் குறிப்பிட் டுள்ளனர்.

இந்திய நாணயத்தில் ஒரு இந்துமதக் கடவுளின் உருவம் வரும் போது தங்களின் பிறைச்சந்திரனும் நாணயங்களில் கொண்டுவரப்பட லாம் என்று இவர்கள் கூறுகின்றனர்.

நேற்று பழைய டில்லியில் உள்ள முஸ்லிம் வர்த்தகப் பகுதியில் உள்ள ஒரு கடைக்காரரான முகமது அப்சல்கான் 500 ரூபாய்க்கு 5 ரூபாய் நாணயங்களைப் பெற்றுள்ளார். அவற்றில் கடவுளின் உருவத்தைக் கண்டதும் முதலில் இவை போலி யானவை என்று நினைத்துள்ளார்.

அதன்பின்னரே அவருக்கு அரசு அச்சடித்துள்ள புதிய நாணயங்கள் இவை என்று தெரியவந்துள்ளது. தான் எந்த மதத்திற்கும் ஆதரவு அளிப்பவர் அல்ல என்றபோதிலும் இவ்வாறான நாணயங்களை அரசு வெளியிடுவது வித்தியாசத்தைத் தோற்றுவிக்கும் என்று கான் குறிப்பிட்டார்.

இத்தகைய நாணயங்கள் மனதைப் புண்படுத்துவதாக உள்ளதால் அவற் றைப் பயன்படுத்துவது தவிர்க்கப் படவேண்டும். இத்தகைய நாணயங் கள் பிரச்சினைகளைத் தூண்டும் விதத்தில் பயன்படுத்தப்பட முடியும். தேச நலனுக்காக அரசு இவற்றைத் திரும்பப் பெறவேண்டும் என்று பதேபூர் மசூதியின் இமாமான முப்டி முகமது முகரம் அகமது கூறியுள்ளார்.

இதுபோன்ற நினைவு நாணயங்கள் வெளியிடப்படுவது சாதாரண நடைமுறை என்று குறிப்பிட்ட ரிசர்வ் வங்கியின் தகவல் தொடர்பாளர் அல்பனா கிள்ளவலா, மத்திய அரசின் வெளியீட்டை தாங்கள் விநியோகம் மட்டுமே செய்வதாகக் குறிப்பிட்டார்.

ஹோமிபாபா, செயின்ட் அல் போன்சோ, கதர் கிராமத் தொழில், இந்தியன் ஸ்டேட் வங்கி, ஓஎன்ஜிசி, லால்பகதூர் சாஸ்திரி, தண்டி யாத் திரை, சுவாமி விவேகானந்தா, மோதி லால் நேரு, மதன் மோகன் மாளவியா, மத்திய தலைமை கணக்கு தணிக்கை மற்றும் கு.க இயக்கம் போன்ற நினைவு நாணயங்கள் இந்தியாவில் வெளி யிடப்பட்டுள்ளன.

ஆயினும், வைஷ் ணவி தேவியின் உருவம் இந்து மதத்தை மட்டுமே குறிப்பிடுவதால் அரசு இதுபோன்ற முடிவுகளில் கவன மாக இருக்க வேண்டும் என்று வர்த்த வணிகரான கான் குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/page-2/73769.html#ixzz2qtgHFrIr

தமிழ் ஓவியா said...


கடவுள் நம்பிக்கை இன்னமும் தேவையா?


மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற சையதினா முகமது புர்ஹானுதீனின் (உள்படம்) இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற தாவூதி போரா சமூகத்தினர் - நெரிசலில் 18 பேர் பலி!

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

எல்லாம் கடவுள் செயல்; அவனின்றி ஓரணுவும் அசையாது

கடவுள் கருணையே வடிவானவன்; சர்வதயாபரன்

கடவுள் ஆபத்பாந்தவன் அகிலத்தையும் அறிந்தவன்

அவனே வழி நடத்துபவன்; அவனே ஆட்டி வைப்பவன்!

- இப்படியெல்லாம் நாளும் மதப் பிரசங்கிகளும், மதத் தலைவர்களும், அர்ச்சகர்களும், மதத்தின் மூலம் பக்தி வியாபாரம் செய்யும் கடவுள் தரகர்களும் கூறி, காலங் காலமாக பக்தி வியாபாரத்தைச் செழுமையுடன் நடத்தி, உழைப்பின்றி உண்டு கொழிக்கின்றனர்.

ஆனால், உண்மையாக நடக்கும் நடப்புகள் இக்கூற்றுகளைப் பொய்யாக்கவல்லோ செய்கின்றன!

எடுத்துக்காட்டாக இன்று வெளிவந்துள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் 9ஆம் பக்கத்தில் ஒரு செய்தி கடவுள் காப்பாற்றினாரா? பாதுகாத்தாரா?

கூடிய திருவிழாக் கூட்ட காலத்தில் ஆண்டுவாரி யாக எவ்வளவு பக்த கோடிகள் விபத்தில் நெரிசலில் சிக்கி உயிர் விட்டுள்ளனர் என்ற கோரச் செய்தியைப் பாருங்கள். கடவுள் காப்பாற்றி உதவினாரா இல்லையே!

1. 2003 ஆகஸ்ட் 27 நாசிக் (மகராஷ்டிர மாநிலம்): அருகில் நடந்த கும்பமேளாவில் கோதாவரி ஆற்றுக்கு அருகில் ஏற்பட்ட நெரிசலால் உயிரிழந்த வர்கள் சுமார் 40 பேர்.

2. 2005 ஜனவரி 25 (ராஜஸ்தான்): மந்தார் தேவிகோயில் திருவிழா நெரிசலில் சிக்கி உயிர் இழந்தவர்கள் சுமார் 300 பேர்.

3. 2008 மார்ச் 27 (மத்திய பிரதேசம்): கரில்லா கிராம திருவிழாவில் நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை எட்டு (8) பேர்.

4. 2008 ஆகஸ்ட் 3 (இமாச்சல் பிரதேசம்): மழைக்காகப் போட்டிருந்த பாதுகாப்புக் கூரை உடைந்து திருவிழாவுக்கு வந்தவர்கள் - நைனாதேவி கோயில் திருவிழா - இறந்தோர் எண்ணிக்கை குறைந்தபட்சம் 140 பேர் ஆகும்!

5. 2008, செப்டம்பர் 30 (ராஜஸ்தான்): ஜோத்பூர் சாமுண்டிதேவி இந்து கோயில் திருவிழா நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை - கோயிலுள்ளே! (ஜோத்பூர் மேரங்கங்கார் கோட்டை அருகில்).

6. 2010 மார்ச் 4 (உத்தரப்பிரதேசம்): ராம் ஜானகி கோயில் திருவிழாவில் கட்டி முடிக்கப்படாத மேல் கூரைக் கட்டடம் விழுந்து 63 பேர் செத்தனர்!

7. 2011 ஜனவரி 14 (கேரளா): சபரிமலை அய்யப்ப பக்தர்கள் விழா முடிந்து திரும்பிடும் நிலையில் ஏற்பட்ட விபத்தில் இறந்தோர் 100 பேர்களுக்கு மேல் அய்யப்பப் பக்தர்கள்!

8. 2011 - நவம்பர் 8 (உ.பி.): ஹரித்துவார் அருகில் கங்கை ஆற்றில் 22 பேர் படகு கவிழ்ந்து இறந்தனர்.

9. 2012 பிப்ரவரி 19 (குஜராத் மாநிலம்): ஜுனாகாத் பவ்நாத் கோயில் மஹா சிவராத்திரி திருவிழா நெரிசலின்போது இரவு 6 பேர் உயிரிழந்தனர்!

10. 2013 அக்டோபர் 13ஆம் தேதி (மத்தியப் பிரதேசம்): தத்தியா மாவட்டம் அருகே உள்ள கோயில் திருவிழாவுக்கு ஒரு பாலம் வழியே செல்லும்போது பாலம் முறிந்து இறந்தவர் எண்ணிக்கை 89 பேர்.

மேலே காட்டிய வெறும் நெரிசலால் உயிர் இழந்த பக்த கோடிகள் மட்டுமே!

உத்திரகாண்ட் வெள்ளத்தில் பல்லாயிரக்கணக்கில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை இதில் காட்டவில்லை!

கோயில்களுக்குச் சென்று திரும்பும் போது ஏற்பட்ட விபத்துக்களால் மறைந்த உயிர்களை இதில் குறிப்பிட வில்லை. நடுநிலையோடு, இப்போது சொல்லுங்கள் கடவுள் (கற்பனை) கருணை உள்ளது தானா?

போதைப் பொருளில் மூழ்கியவன் அதை மீண்டும் மீண்டும் எப்படித் தேடுவானோ அப்படி கடவுள் கடவுள் என்று கதறி கைப் பொருளையும், மானத்தையும், இழந்து கொண்டே இருக்கிறார்கள்! என்னே கொடுமை!!

சிந்தியுங்கள் பக்தர்களே!

கடவுளை மற; மனிதனை நினை என்ற தந்தை பெரியாரின் அறிவுமொழியினைப் பின்பற்றி மாமனித ராகா விட்டாலும்கூட குறைந்தபட்சம் ஆறறிவு மனிதர் ஆகுங்கள். மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற சையதினா முகமது புர்ஹானுதீனின் (உள்படம்) இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற தாவூதி போரா சமூகத்தினர் - நெரிசலில் 18 பேர் பலி!

Read more: http://viduthalai.in/e-paper/73767.html#ixzz2qtgjTC4i

தமிழ் ஓவியா said...


பிழிவுகள்... பிழிவுகள்...

ஒத்தி வைப்பு

சென்னையில் நாளை (20.1.2014) நடைபெற விருந்த தமிழ்நாடு - இலங்கை மீனவர் பேச்சு வார்த்தை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. (ஒத்தி வைக்கப்பட்டாலும் தேவை - நிரந்தரத் தேர்வு!). வழக்கமானது தான்

சென்னை - நந்தம்பாக்கம் தொழிலதிபர் வீட்டில் 100 சவரன் நகை, 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள், மூன்றரை லட்சம் ரூபாய் கொள்ளை யடிக்கப்பட்டது. (வானிலை அறிக்கைபோல இது தமிழ்நாட்டின் அன்றாட செய்தி தானே!)

கோயிலுக்கு

திண்டிவனம் - தீர்த்தக்குளம் பூந்தோட்டத்தைச் சேர்ந்த செல்வராசு என்பவரின் மனைவி கிருட்டின வேணி கட்டி வைத்திருந்த கோயிலிலேயே அந்தப் பெண் படுகொலை செய்யப்பட்டார்.

(காத்தல் தொழில் கடவுள் எங்கே போனதாம்?)

நீதிபதி கேட்கிறார்

சென்னையில் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு தி இந்து (தமிழ்) ஏட்டில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். நீலாங்கரையில் உள்ள சக்தி மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் மீன் சந்தை அமைப்பதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித் துள்ளது.

இதுகுறித்து முன்னாள் நீதிபதி என்ன எழுது கிறார்? சைவ மதத்தில் கண்ணப்ப நாயனாருக்கும் (பன்றிக் கறி படைத்தவர்) சிறுத் தொண்டர் நாயனா ருக்கும் (பிள்ளைக் கறி படைத்தவர்) சிறப்பான இடத்தைக் கொடுத்து விட்டு, கடவுளை சைவமாக்க முயற்சிப்பது எவ்விதத்தில் சரி என்ற வினாவை தம் கட்டுரையில் எழுப்பியுள்ளார் முன்னாள் நீதிபதி சந்துரு. (கடவுளேகூட மீன் அவதாரம் (மச்ச அவதாரம்) எடுத்தவர்தானே?)

பதற்றம்

மோடி பிரதமரானால் இந்திய அமெரிக்க உறவில் பதற்றம் அதிகரிக்கும் என்று டைம்ஸ் பத்திரிகை கருத்துத் தெரிவித்துள்ளது. (இந்தியாவுக்குள்ளேயே நாளும் பதற்றம் வெடித்துக் கொண்டே இருக்குமே - முதலில் அதைப்பற்றித் தானே கவலைப்பட வேண்டும்)

ஒத்தி வைப்பு

பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளின் முயற்சியை இந்தியா முறியடித்தது.
(இது என்ன ஓடி விளையாடு பாப்பா என்ற கதையாக அல்லவா அடிக்கடி நிகழ்கிறது!)

Read more: http://viduthalai.in/e-paper/73768.html#ixzz2qtgxmLqf

தமிழ் ஓவியா said...

உச்சநீதிமன்றத்தின் தேவையற்ற வாசகங்களைப் புறந்தள்ளி இடஒதுக்கீட்டை அரசுகள் செயல்படுத்த முன்வர வேண்டும்

சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கமா?

தமிழர் தலைவரின் சமூகநீதிப் பாதுகாப்பு அறிக்கை நீதிமன்றங்கள் தம் கருத்தாகச் சொல்லும் சொற் களைப் பற்றிக் கவலைப்படாமல் சமூகநீதியைச் செயல்படுத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

ஏற்கெனவே சுப்ரீம்கோர்ட்டால் கொடுக்கப்பட்ட டில்லி AIIMS FACULTY -பேராசிரியர்கள் போட்ட வழக்கில் 18.7.2013 தீர்ப்பில் - மண்டல்கமிஷன் வழக்காகிய இந்திரா சஹானி வழக்கு என்ற வழக்கில் வெறும் கருத்துரையாக,OBSERVATION- (OBITER-DICTA) சொல்லப்பட்ட ஒன்றை நீதிமன்றம் சுட்டிக் காட்டியது. உயர் சிறப்பு மருத்துவத் துறைப் படிப்பு (Super Speciality) மருத்துவத்துறையில் இட ஒதுக்கீடு கொடுப்பது விரும்பத்தக்கதல்ல என்றும் கருதலாம் என்பதாகக் குறிப்பிட்ட அந்தப் பெரும்பான்மை தீர்ப்பில் பாரா 861இல்

“..... Be that as it may, we are of the opinion that in certain services and in respect of certain posts, application of the rule of reservation may not be advisable for the reason indicated hereinbefore
என்று குறிப்பிட்டுள்ளது.

இதன் தமிழாக்கம்: முக்கியமான உயர்நிலை பதவிகளில் சேருவதற்கான விதிமுறைகளை பின்பற்றி பணிக்கான நபர்களைத் தேர்ந்தெடுக்கும் போது இடஒதுக்கீட்டுக்கான சட்டதிட்டங்கள் கடைப்பிடிக்கப் படுவது உகந்ததாக இருக்காது என்று கூறப்பட்டது. இது தீர்ப்புரை அல்ல; வெறும் கருத்துரை - பொதுவாகச் சொல்லப்பட்ட கருத்து.

இதன்படி இது சட்டக்கட்டாயத்தன்மை (MANDATORY LAW) அல்ல. நீதிபதியின் ஆலோசனை போன்ற ஒரு கருத்து.

அரசமைப்புச் சட்டம் 16 ஆவது பிரிவு கூறுவது என்ன?

தமிழ் ஓவியா said...

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தருவது பற்றிய 16 ஆவது பிரிவில், போதிய அளவு பிற்படுத் தப்பட்டவருக்குத் தருவது என்பதும், பிற்படுத்தப்பட்டவரை அடையாளம் கண்டறிந்து பட்டியலில் சேர்ப்பது என்பது பற்றியுமான உரிமையை அரசுக்குத்தான் அளித்துள்ளதே தவிர, நீதிமன்றங்களுக்கு அல்ல. In the opinion of the State என்றுதான் குறிப்பிடுகிறது.

நீதிமன்றங்கள் கருத்துக்கள் கூட கூற இயலாது என்பது இதன் மூலம் திட்டவட்டம்!

இந்திரா சஹானி (மண்டல்) வழக்கில் மேலே குறிப்பிட்ட பத்தியிலேயே இக்கருத்து முடிக்கப்பட்டு, வலியுறுத்தப்பட்டுள்ளது. “It is the Government of India to consider and specify the service and posts to which the rule of reservation shall not apply (but on that account the implementation in the impugned office Memorandum dated 13th August 1990 can not be stayed or with held)”

இதன் தமிழாக்கம்: இட ஒதுக்கீட்டிற்குப் பொருந்தாத சேவைகள் மற்றும் பணியிடங்கள் எவை என்பதை இந்திய அரசுதான் குறிப்பிட வேண்டும். (ஆனால் இந்த காரணங்களுக்காகவே குறிப்பிடப்பட்ட ஆகஸ்டு 13, 1990 நாளிட்ட அலுவலக குறிப்பினை நடைமுறைக்கு தடை விதிக்கவோ, நிறுத்தி வைக்கவோ முடியாது).

இதன்படி, - அண்மையில் அய்ந்து நீதிபதிகள் மறு சீராய்வில் குறிப்பிட்டபடி, பந்து மத்திய அரசின் கோர்ட்டுக்குள்ளே தான் இருக்கிறது. அதாவது டில்லி மத்திய அரசுக்குத்தான் எவை எவை தெளிவாக இடஒதுக்கீட்டில் சேர்க்கப்படலாம் என்று கூறவேண்டிய பொறுப்பு என்று கூறிவிட்டு கடைசியில் தேவையற்ற ஒரு கருத்துரையைப் போட்டு ஒரு புதுக் குழப்பத்தை தீர்ப்பின் மூலம் எடுத்துக்காட்ட முயன்றுள்ளார்கள்.

தேவையற்ற கருத்து

அரசியல் சட்டத்திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று கூறிய கருத்தே அது!

மத்திய அரசு குறிப்பிட்டுச் சொன்னாலே போதுமானது. அரசியல் சட்டத் திருத்தம் என்பது தேவையற்ற ஒன்று- இந்திரா சஹானி வழக்கின் பாரா 861 வாக்கியங்கள் அதை தெளிவாக்குகின்றன.

டில்லி எய்ம்ஸ் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் 18.7.2013 அன்று அளித்த தீர்ப்புரைக்குப்பிறகு, மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத், நாடாளுமன்றத்தில் தெளிவாகவே குறிப்பிட்டார்: We are ignoring the Judgement என்று கூறினார். அதனைத் தொடர்ந்து சீராய்வு மனுவை நீதிமன்றத்தில் தொடருவோம் - நீங்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனங்களைச் செய்யலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம், எய்ம்ஸ் நிறுவனத்துக்கு தாக்கீது பிறப்பித்தது. அதன் அடிப் படையில் ரிஷிகேஷ் எய்ம்ஸ் நிறுவனம் ஒப்பந்த அடிப் படையில் பணி நியமனம் செய்யும் ஒரு விளம்பரத்தில் இட ஒதுக்கீடு உண்டு என்று தெளிவாகவே தெரிவித்திருந்தது. துவக்கத்திலிருந்தே இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றங்கள் முட்டுக்கட்டை போடுவதும், அதன்பிறகு புதிய சட்டத்திருத்தம், ஆணைகளை, அரசுகளும் சட்டமன்றங்களும், நாடாளுமன்றமும், ஆட்சி மன்றமும் கொண்டு வந்து செயல்படுத்துவதும் நமது சமூகநீதிப் போராட்டத்தில் பல்வேறு மைல்கற்கள் அல்லவா?

வேகத்தடையும்- சமூகநீதிப் பயணமும்

எனவேதான் இந்த வேகத்தடைகளைப் பொருட்படுத் தாது சமூகநீதிப் பயணம் தடையின்றித் தொடரவேண்டும்.

தவறான வியாக்கியானங்களைப் புறந்தள்ளி ஆட்சிகள் செயல்படுவதுதான் நமது ஜனநாயகத்தில் சமூகநீதியை கடைக்கோடி மகனுக்கும், மகளுக்கும் கொண்டு போய்ச் சேர்ப்பதாகும்.



கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை 18.1.2014

Read more: http://viduthalai.in/page1/73739.html#ixzz2qthmCL86

தமிழ் ஓவியா said...


அடைய முடியும்


மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டுவிட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்க வேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போதுதான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும்.
(விடுதலை, 13.8.1961)

Read more: http://viduthalai.in/page1/73742.html#ixzz2qtiT0O1E

தமிழ் ஓவியா said...


வேடிக்கை சம்பாஷணை - சித்திரபுத்திரன் -


குடித்தனக்காரன் : அய்யா ஆ ஆ! எங்க வீதியில் நெருப்புப் பிடித்து 10, 20 வீடு வேகுதய்யா! எவ்வளவு தண் ணீர் ஊற்றியும் அவிய மாட்டேன் என் கிறது. எல்லோரும் வந்து கொஞ்சம் உதவி செய்யுங்கள். உங்கள் பிள்ளைக் குட்டி களுக்குப் புண்ணியமாகும்.

சித்திரபுத்திரன் : அய்யய்யோ! ஏனப்பா நெருப்புப் பிடித்தது?

குடித்தனக்காரன்: ஒருத்தருக்கும் தெரியவில்லை அய்யா.

சித்திரபுத்திரன்: அப்படியானால் உங்கள் வீதியில் பிராமணாள் இருக் கின்றார்களா?

குடித்தனக்காரன் : ஆம் 4, 5 வீட்டுக் காரர்கள் இருக்கின்றார்கள்.

சித்திரபுத்திரன் : அவர்கள் ஏதாவது உங்கள் வீதிப்பக்கம் வந்தார்களா?

குடித்தனக்காரன் : ஆம் அய்யா, காலையில் ஒரு பிராமணர் ஆத்துக்கு போய் குளித்துவிட்டு மொணா மொணா என்று சொல்லிக்கொண்டு இந்த வீதியில் தான் போனார்.
சித்திரபுத்திரன் : சரி, சரி, உங்கள் வீதி வீடுகள் வெந்துபோனதற்குக் காரணம் தெரிந்து போயிற்று.

குடித்தனக்காரன் : என்ன அய்யா எனக்குத் தெரியவில்லையே!

சித்திரபுத்திரன் : இது தெரியாதா உனக்குப் பிராமணாள் கையில் நெருப்பு இருக்கிறதே; நீ கேட்டதில்லையா?

குடித்தனக்காரன்: நான் கேட்ட தில்லையே!

சித்திரபுத்திரன் : அட பைத்தியமே, பிராமணாள் நாம் கும்பிட்டால் அவர்கள் இடது கையை மோந்து பார்ப்பது போல் மூக்குக்குப் பக்கத்தில் தூக்குகிறார்களே அது ஏன்? வலது கையில் அக்கினி இருப்பதால் அது தூக்கினால் எரிந்து போய் விடுவோம் என்று இடது கையை மோந்து பார்ப்பது.

குடித்தனக்காரன் : அப்படியா! அது எனக்குத் தெரிந்திருந்தால் நான் அவர் களை அந்த வீதியிலேயே நடக்கவிட்டு இருக்க மாட்டேனே. ஏமாந்து போய் விட்டேன்.

சித்திரபுத்திரன் : அது மாத்திரமா, பிராமணாள் வாயிலும், நெருப்பு, வயிற் றிலும் நெருப்பு; இது உனக்குத் தெரியாதா?

குடித்தனக்காரன்: தெரியவில்லையே! சற்றுத் தெரியும்படியாய் சொல்லுங்களேன்.

சித்திரபுத்திரன் : பிராமணாள், எங்கள் வாயில் விழுந்தால் பஸ்பமாய் போய் விடுவாய் என்று சொல்லு கிறார்களே அது என்ன? வாயில் நெருப்பு இருப்ப தால்தானே அவர்கள் அப்படிச் சொல்வது. தவிரவும், பிராமணாள், நம்மைப் பற்றி ஏதாவது நினைத்தால் நாம் பஸ்பமாய் விடுவோம் என்று சொல்லுகின்றார்களே அதன் அர்த்தம் என்ன? நினைத்தால் பஸ்பமாய் விடுவதாய் இருந்தால் வயிற்றில் நெருப்பு இல்லா விட்டால் முடியுமா?

குடித்தனக்காரன் : இதென்ன இந்த இழவு பார்ப்பனர்கள் சங்கதி. கையில் நெருப்பு, வாயில் நெருப்பு, வயிற்றில் நெருப்பு இப்படி வைத்திருந்தால் நாம் எப்படி அவர்களோடு வாழ்வது? இப்படி தினம் ஒரு வீதி வெந்து சாம்பலாவ தானால் இந்த நாலு பிராமணர்களாலேயே இந்த ஊரே சீக்கிரம் சாம்பலாய் விடும் போலிருக் கிறதே.

சித்திரபுத்திரன் : பின்னை தெரியா மலா நம்முடைய பெரியவாள் பிராமணர் களை கிட்ட சேர்க்க வேண்டாம் என்று சொல்லுகின்றார்கள்.

குடித்தனக்காரன்: ஓ! ஹோ!! இதற் காகத்தான் அவர்கள் அப்படி சொல் கின் றார்களா! சரி, இனி புத்தியாய் பிழைத்துக் கொள்கிறேன். இந்த நெருப்பை எப்படி யாவது அணைத்து விடுங்களய்யா?

- குடிஅரசு -கற்பனை உரையாடல்- 18.03.1928

Read more: http://viduthalai.in/page1/73748.html#ixzz2qtjOohab

தமிழ் ஓவியா said...

துருக்கியில் மாறுதல்

துருக்கி ராஜாங்கத்தில் அரசாங்க விஷயத்தில் மதசம்பந்தமே இருக்கக் கூடாது என்று பலமான மாறுதல்கள் ஏற்படக்கூடும் என்பதாக பத்திரிகைகளில் காணப்படுகின்றன. இதை நாம் மனமார வரவேற்பதுடன் இது உலக விடுதலைக்கு ஒரு பெரிய அறிகுறியென்றே சொல்லுவோம். துருக்கி ராஜாங்கம் மதத்திற் காகவே இருப்பதாக சொல்லப்படுவது. கிலாபத்து இயக்கமும் அதற்காகவே ஏற்பட்டது. அப்படிப்பட்ட அரசாங்கம் மத சம்பந்தத்தை நீக்க - மனித தர்மத்தை ஆதாரமாக வைத்து - அரசாட்சி புரிய ஏற்பட்டால் இன்றைய தினமே நாம் துருக்கிப் பிரஜையாக இருக்க பதிவு செய்து கொள்ளத் தயாராகயிருக்கிறோம்.
- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 08.04.1928

Read more: http://viduthalai.in/page1/73748.html#ixzz2qtjdjYZc

தமிழ் ஓவியா said...


தீர்த்தம்!


குடும்பத்துடன் புனித நீராட ராமேஸ்வரம் சென்றிருந்தேன். முதலில் சூரியனை வணங்கிக் கடவுளைக் கும்பிட்டு, ஈர உடையுடன் டோக்கன் வாங்கி, 22 தீர்த்தங்களி லும் குளிக்கச் சென் றோம். எங்களுக்கு முன்பாக மூன்று மாதக் குழந்தையுடன் இளம் தம்பதியர் ஒவ்வொரு தீர்த்தத்திலும் தங்களது குழந்தைகளையும் குளிக்க வைத்தனர்.

முதல் நான்கைந்து தீர்த் தத்தில் குளிப்பதற்குள் அந்த மூன்று மாதக் குழந்தை குளிரில் நடுங் கிப் போய் விட்டது. கூடவே அந்தக் குழந்தை யின் கதறல் வேறு; நாங்கள் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் 22 தீர்த்தத்திலும் அக் குழந் தையைக் குளிப்பாட்டிக் கொண்டே இருந்தனர். குளிர்ந்த நீரில் குழந்தை அழுது கொண்டே மிக வும் சோர்வடைந்து விட் டது. பெற்றோர்களே.. பக்தி என்ற பெயரில் கைக் குழந்தையையும் கஷ்டப் படுத்த வேண்டுமா?

- வே. செந்தில்குமார் கொங்கணாபுரம்

- இப்படி ஒரு பக்த ரின் கடிதம் தினகரன் வசந்தம் (19.1.2014) இதழ் பக்கம் 17இல் வெளி வந் துள்ளது.

இதைப் படித்தால் கல் மனம் கொண்டவனும் கூடக் கலங்கவே செய் வான். பெத்தமனம் பித்து என்பார்கள். பக்தி விட யத்தில் அதுகூட செல்லு படியாகவில்லையே!

பச்சை மண்ணென்று சொல்வார்கள் - பச்சிளம் குழந்தையை அதன் உடல் தன்மை என்ன? தாங்கும் சக்தி என்ன? என்ற சிற்றறிவுகூட இல் லாமல் மூன்று மாத சிசு வைக்கூட தீர்த்தத்தில் முழுக்காட்டுவது என் றால், நினைத்துப் பார்க் கவே ஈரக்குலை நடுங் குகிறதே! பக்தி என்று வந்து விட்டால் புத்தி மட்டும் போவதில்லை ஈவு இரக்கம், மனிதநேயம், பொது அறிவுகூட பஞ் சாகப் பறக்கிறதே என் சொல்ல!

இப்படியெல்லாம் செய் தால்தான் புண்ணியத் தைக் கடவுள் கொடுப்பார் என்றால், அந்தக் கட வுளை விட ஈவு இரக்க மற்ற கல் நெஞ்சுக்காரன் வேறு யாராகத்தான் இருக்க முடியும்?

சரி... அவர்கள் பக் திக்கே வருவோம். தீர்த்த மாடுவது சிறந்த பக்தி தானா?

ஸ்கந்தபுராணம் - ஞானயோக காண்டம் என்ன கூறுகிறது?

தீரத்தே தாதையக்ஞே

காஷ்டே பாஷாண கேபதா

சிவம் பஸ்யதி

மூடாத் மாசி லோதே

ஹெபர் திஷ்டித

இதன் பொருள்: மூடாத்மாக்கள் தீர்த்தத் தினும், தானத்திலும், தபசி லும் யக் ஞத்திலும், கட்டை யிலும், கல்லிலும் சிவம் இருப்பதாக நினைக் கிறார்கள் என்று சொல் லப்படுகிறதே - இதற்குப் பதில் என்ன?

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/73827.html#ixzz2qzbWaNKe

தமிழ் ஓவியா said...


கவனிக்கவேண்டும்


மதத்தைக் காப்பாற்றவே கோயில்களும், சொத்துகளும் அவற்றைக் காக்க மடங்களும், மடாதிபதிகளும் ஏற்பட்டனர். இவை மக்கள் வாழ்க்கைக்கு அவசியமா? அதனால் மக்கள் கஷ்டம் நீங்குமா, நீங்காதா என்பதைத்தான் கவனிக்கவேண்டும்.

- (விடுதலை,3.12.1962)

Read more: http://viduthalai.in/page-2/73825.html#ixzz2qzcACUgj

தமிழ் ஓவியா said...

பணம் பறிக்க நவீன வசதி ஏழுமலையானுக்கு செல்பேசியில் காணிக்கையாம்

திருப்பதி, ஜன.20- உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலை யானுக்கு செல்பேசி யில் காணிக்கை செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், நகை உள்ளிட்டவற்றை உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். அதன்படி ஆண்டுக்கு காணிக்கை மூலம் மட்டும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.500 கோடி முதல் ரூ.600 கோடி வரை வருமானம் கிடைத்து வருகிறது.

நேரடியாக வரும் பக்தர்கள் மட்டுமே கோவில் பிரகாரத்தில் உள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தி வந்தனர். ஆனால் நேரடியாக கோவிலுக்கு வரமுடியாத பக்தர்களும் காணிக்கை செலுத்தும் வகையில் தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பக்தர்கள் இ-உண்டி திட்டம் மூலம் தங்களது செல்பேசி மூலமாக திருப்பதி ஏழு மலையானுக்கு காணிக்கை செலுத்தலாம். இதற்காக கடந்த சில நாட் களுக்கு முன்னர் ஆந்திரா வங்கி இந்த சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. மொபைல் பேங்கிங் மூலம் (அய்.எம்.பி.எஸ்) இந்த சேவையை பக்தர்கள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

Read more: http://viduthalai.in/page-2/73824.html#ixzz2qzcTZTmh

தமிழ் ஓவியா said...


திராவிடர் திருநாள் விழாவில் (19.1.2014) பெரியார் விருது பெற்றவர்களின் விவரக் குறிப்புகள்


பேராசிரியர் அ.மார்க்ஸ்

தலைசிறந்த பெரியாரியவாதியாக இருந்துகொண்டு ஜாதி-மத எதிர்ப்புப் பிரச்சாரங்களை செய்து வருபவர். இவரது தந்தை அந்தோணிசாமி, கூலித் தொழிலாளி யாக மலேசியா சென்று, அங்கே பொதுவுடைமைக் கட்சியை நிறுவியவர்களில் ஒருவர். இவருடைய தலைக்கு விலை கூறப்பட்டுத் தப்பி வந்தபின் நாடு கடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டவர்.

ராமதாஸ் என பொதுவுடமை இயக்கத்தில் அறியப்பட்ட அவர் இறுதி வரை ஒரு எளிய கம்யூனிஸ்டாக இருந்து மறைந்தவர். போராட்டக்காரரின் மகனாகப் பிறந்த அ.மார்க்ஸ் அவர்கள் நான்காம் வகுப்புவரை பள்ளி சென்று படித்ததில்லை. அதன்பின் அரசு பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பயின்றவர். மார்க்ஸ் அவர்கள் 37 ஆண்டுகள் அரசு கல்லூரி களில் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்ற வர். கடைசியாகப் பணியாற்றியது சென்னை மாநிலக் கல்லூரி.

ஆசிரியர் இயக்கங்களில் பல்வேறு மட்டங்களிலும் பொறுப்புகளில் இருந்து செயல்பட்டவர். நிறப்பிரிகை ஆசிரியர் குழுவில் ஒருவராகப் பங்கு பெற்றவர். இலக்கியம், அரசியல் மற்றும் மனித உரிமைக் களங்களில் கடந்த 35 ஆண்டுகளாகத் தொடர்ந்து செயல்பட்டு வருபவர். நாட்டில் கலவரங்கள் மனித உரிமை மீறல்கள் எங்கு நடந்தாலும் நேரடியாக களத்திற்கே சென்று உண்மைகளை கண்டறிந்து வெளிக்கொணர் வதில் இவருடைய செயல்பாடுகள் அனைவரையும் வியக்க வைக்கும்.

அறிவாற்றல் மிகுந்த பேராசிரியர் அ.மார்க்ஸ் 77 பெரிய நூல்களையும் 27குறு நூல்களையும் 25க்கு மேற் பட்ட சிறு வெளியீடுகளையும் எழுதியுள்ளார். பல்வேறு ஏடுகளில் பல்லாயிரக்கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இவரது கருத்துக்கள் கடும் விவாதங்களுக்கு உரியதாய் இருந்து வந்துள்ளன; இருந்து வருகின்றன. இருந்தபோதிலும், ஏற்றதொரு கருத்தை மனதிற்குப் பட்டதைப் பேசியும் எழுதியும் வருகிறார். இன்று ஒரு முழுநேர எழுத்து மற்றும் மனித உரிமைப் பணியாளர்.

அவரது குறிப்பிடத்தக்க சில நூல்கள்:

1. நமது கல்விப் பிரச்சனைகள் 2. குணா -பாசிசத்தின் தமிழ் அடையாளம் 3. இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு (3 தொகுதிகள்)

4. பெரியார் யார்?

5. ஆட்சியில் இந்துத்துவம் 6. குஜராத் 2002 : அர்த்தங்களும் உள்ளர்த்தங்களும் 7. பெரியார் - தலித்கள் - முஸ்லிம்கள் 8. ஆரியக் கூத்து

9. பெரியாரின் கல்விச் சிந்தனைகள் 10. பார்ப்பனர்களின் இராமர் பால அரசியல் 11. இலக்கியத்தில் இந்துத்துவம் - காலச் சுவடு ஓர் ஆள்காட்டி அரசியல் 12. இந்துத்துவத்தின் பாசிசத் தொடர்புகள் போன்ற ஆய்வுத்தர நூல்களைப் படைத்த தலைசிறந்த சிந்தனை யாளர்களில் ஒருவரான மனித உரிமைப் போராளி அ.மார்க்ஸ் அவர்களுக்கு பெரியார் விருது வழங்குவதில் பெருமகிழ்வு கொள்கிறோம்.

Read more: http://viduthalai.in/page-4/73815.html#ixzz2qzdBHzft

தமிழ் ஓவியா said...

திரைப்பட நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு தொலைக் காட்சியில் நகைச்சுவைத்தொடராக வந்த சின்னபாப்பா பெரியபாப்பா என்ற தொடரில் காதின் மீது கைவைத்த படியே அச்சு அசலாக பாப்பார பாஷையில் பேசி அல்லல் படும் பட்டாபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தொலைக்காட்சி ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டு தலைப்பெற்ற எம்.எஸ் பாஸ்கர் என்று அழைக்கப்படும் மு.சோ.பாஸ்கர்.

தன்னிகரற்ற கலைஞர்களைத்தந்த தஞ்சை மாவட்டமே இவரையும் திரை உலகிற்கு தந்துள்ளது. முத்துப்பேட்டை சோமு என்பவரின் மகனாகிய மு.சோ. பாஸ்கர் அவர்களின் நடிப்பாற்றலைக்கண்ட சினிமாத் திரை சின்னத்திரையிடமிருந்து சுவீகரித்துக் கொண்டது.

பச்சையப்பர் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை பட்டம் பெற்ற இவர் சுமார் 1000 படங்களுக்கு மேல் பல நடிகர்களுக்கு பின்னணி பேசியவர்.

தமிழ் நடிகர்களுக்கு மட்டுமல்ல ஹாலிவுட் நடிகர் களுக்கும் தமிழில் பின்னணி பேசியுள்ளார். பின்னணி பேசியதில் சிறப்பாக, குறிப்பாக கர்மவீரர் காமராஜ் படத்தில் காமராஜராக நடித்தவருக்கு பின்னணி பேசிய தைக் குறிப்பிடலாம். பெரியார் திரைப்படத்தின் தொடக்க காட்சிலும், பெரியார் பற்றி கருத்துருவை சிறப்பாக தனது குரலில் வழங்கியுள்ளார்.

என்னதான் நடிப்பைக் கற்றுக்கொடுத்தாலும் அது எல்லோருக்கும் வருவதில்லை. அதிலும் குணசித்திர வேடங்களில் நடிப்பவர்களும் நகைச்சுவைப் பாத்திரங் களை ஏற்று நடிப்பவர்களும், அந்த நடிப்பிலிருந்து வேறுபட்ட நடிப்பை வழங்குவதென்பது அவ்வளவு எளிதில் வந்துவிடாது.

ஒரு சிலர் மட்டுமே அதில் மேன்மை பெற்றவர்கள். அந்த ஒருசிலரில் மிக முக்கியமானவர் இன்று விருது பெற வீற்றிருக்கும் பாஸ்கர். இவருடைய நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டாக வெள்ளித்திரை, இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம், தர்மபுரி, சிவகாசி, திருப்பாச்சி மாசிலாமணி, அழகியதீயே, சாது மிரண்டால், இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களைச் சொல்லலாம்.

எங்கள் அண்ணா படத்தையும், குரு என் ஆளு படத்தையும் பார்த்தவர்கள் இவருடைய நகைச்சுவை நடிப்பைப் பார்த்து இன்றும் கூட மனதில் நினைத்தால் சிரிக்காமல் இருக்கமாட்டார்கள். இவருடைய குணசித்திர நடிப்புக்கான படங்களாக மொழி, பயணம், அஞ்சாதே, சூது கவ்வும் போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.

அதிலும் குறிப்பாக 2007-இல் வெளிவந்த மொழி என்ற திரைப்படம் இவருக்கு தமிழக அரசின் சிறந்த துணை நடிகர் விருதைப் பெற்றுத்தந்தது. இந்த விருதைப்பெற்ற இவரை கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் நேரில் அழைத்துப் பாராட்டினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பல மொழிகளை அறிந்தவர்.

இவ்வளவு பெருமைகள் பெற்ற திராவிட இனத்தைச் சேர்ந்த மண்ணின் மைந்தரான மு.சோ.பாஸ்கர் அவர் களுக்கு பெரியார் விருது வழங்குவதில் பெருமகிழ்வு கொள்கிறோம்.

Read more: http://viduthalai.in/page-4/73815.html#ixzz2qzdLxV2X

தமிழ் ஓவியா said...


தியாகம் என்பது...


தியாகம் என்பது சுயநலத்துக் கான பயன் எதிர்பாராது, பொது நலத்துக்காகப் பாடுபடுவதும்; எவ்வித மான அவமானங்களையும் இலட்சியம் செய்யாமல் பல இன்னல்களுக்கும் தயாராகித் தொண்டாற்றுவதாகும்.

(விடுதலை, 11.1.1966

Read more: http://viduthalai.in/page-2/73848.html#ixzz2r592n6Qr

தமிழ் ஓவியா said...

அய்யா இல்லாத வெற்றிடம்...!


- கவிஞர் விக்ரமாதித்யன்

அன்று ஞாயிற்றுக்கிழமை; காலை டூட்டி முடிந்து, பஜார் பக்கமுள்ள அடைத்த கடை வாசலில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்; எதிரே, சுவரொட்டியில், தந்தை பெரியார் பேசுகிறார் என்றிருந்தது; சின்ன நோட்டீஸ்தான்; படம் கூட இல்லை.

சென்னையில், 62 தேர்தலின்போதும் அதற்கு முன்பும் அண்ணா, நாவலர், கே.ஆர்.ராமசாமியிலிருந்து எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர். வரையிலும் எல்லோருடைய மேடைப் பேச்சையும் கேட்டிருக்கிறேன்; அய்யா பெரியார் பேச்சுக் கேட்க வாய்ப்புக் கிடைக்கவில்லை; சாயுங்கால டூட்டி முடிந்ததும் போய்விட வேண்டியதுதான்.

திரளான கூட்டம்; கருப்புச் சட்டையுடன் திராவிடர் கழகத் தொண்டர்கள்; பொதுமக்கள்; பெரியார் பேச ஆரம்பித்ததுமே நிசப்தமாகிவிட்டது சூழல்; பாமரனும் புரிந்து கொள்ளக்கூடிய எளிமை; எதிரில் இருப்பவர்களுடன் உரையாடுவது போன்ற எதார்த்தம்; சுயமரியாதை என்ற சொல்லையே முதன்முதலாகக் கேள்விப்படுகிறேன்; வர்ணாஸ்ரமம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் அப்போதுதான் தெரியும்; சரளமான பேச்சு.

எண்பதுகளின் தொடக்க ஆண்டொன்றில் நானும் நண்பர் துரையும் சேர்ந்து, ஒரு பத்திரிகைக்கு நேர்காணல்கள், மேட்டர்கள் செய்து கொடுத்துக் கொண்டிருந்தோம்; மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், வித்துவான் மே.வீ.வேணுகோபால பிள்ளை, பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் ஆகியோரைப் பேட்டி எடுத்துத் தந்திருந்தோம்; ஆனால் வெளியிடப்படவில்லை; தகவலாக இருக்கிறது, பத்திரிகை சுவாரஸ்யம் இல்லை என்பதனாலோ என்னவோ தெரியாது (பாவாணர் மறைவையொட்டி, பாவாணர் என்ற பெயர் எப்படி வந்தது என்ற செய்தியை மட்டும் துணுக்காகப் போட்டிருந்தார்கள்.)

கா.அப்பாதுரையாரிடம் கேட்ட ஒரு கேள்வி:

நாகர்கோவில் பக்கம் ஹிந்தி பண்டிட்டாக இருந்த நீங்க எப்படிச் சென்னை வந்தீர்கள்?

பதில்: பெரியார், ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்குவதற்கு முன் ஹிந்தி பற்றித் தெரிந்துகொள்ள விரும்பினார்; தெரியாமல் எதிர்க்கக் கூடாதென்று எண்ணினார்; இதற்காகவே என்னை அழைத்து வந்தார்.

காமராஜர் ஆட்சியை பெரியார் ஆதரித்ததும், பச்சைத்தமிழன் என்று புகழ்ந்ததும் ஏன் என்பது தெரிந்தவர்களுக்கே தெரியும்.

யாராவது கூற முடியுமா, தமிழ், காட்டுமிராண்டி பாஷை என்று.

அய்யா பெரியார் அவர்களுக்கு இனம்தான் முதல்; பிறகுதான் மொழி.

திராவிடர் கழகத்தை ஏன் அரசியல் கட்சியாக இல்லாமல், சமூக இயக்கமாக வைத்திருந்தார் அவர்?

தமிழ்க் கவிதையைப் பெரிதாகப் பொருட்படுத்தாத அந்த உள்ளத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியுமா, என்ன.

சினிமாவைக் கடுமையாகக் கண்டனம் செய்து வந்ததை எவ்விதம் விளங்கிக் கொள்வீர்கள்?

மகத்தான ஆளுமைகளைச் சுலபத்தில் புரிந்து கொள்ள முடியாது; அதனால்தான் காலம் முழுக்க விமர்சனங்களும் விவாதங்களும்.

செயல்கள், அவற்றின் விளைவுகள் _ இவைதான் ஆக்கம்; எதிர்வினைகள் என்னவாகும்.

தமிழினம் கிடந்த கிடையிலிருந்து உசுப்பி எழவைத்த தலைவர் அவர்; வணக்கத்துக்குரிய வன்றொண்டர்.

நான் அறிவு ஜீவியல்லன்; உணர்வு வழிப்பட்ட கவிஞன்; என்னதான் ஆன்மிகமாக இருக்க முயன்றாலும் ஜோதிடமெல்லாம் கற்றுத் தேர்ந்தாலும் இன்னமும் உள்ளம் விரும்புவதையே கையில் எடுத்துக் கொள்கிறேன்; பெரியார் மீதான பிரியமும் இந்த விதம் வந்ததுதான்.

இன்றைய தமிழ்ச் சமூகத்தில் அய்யா அவர்கள் இல்லாத வெற்றிடம் வெளியரங்கமாகவே புலப்படுகிறது; அந்த நேர்மை, அந்த உண்மை, அந்த ரௌத்ரம், அந்த கலகக்குணம் கொண்ட தலைமை இப்பொழுது இந்த இனத்துக்கு வெகுவாக வேண்டியிருக்கிறது; இல்லையென்றால் உய்வடைவது தள்ளிப் போவதைக் காலம் கவனித்துக் கொண்டுதான் இருக்கும்; வேறென்ன சொல்ல.

நன்றி: குமுதம் தீராநதி டிசம்பர் 2013

தமிழ் ஓவியா said...

உழவர் திருநாள்

உழவேதலை என்றுணர்ந்த தமிழர்
விழாவே இப்பொங்கல் விழாவாகும்! காணீர்
முழவு முழங்கிற்று புதுநெல் அறுத்து
வழங்கும் உழவர்தோள் வாழ்த்துகின்றாரே!

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்என்ற சொல்லிற்
பழுதுண்டோ? காணீர் பழந்தமிழர் நாங்கள்
உழவரே என்றுவிழா ஒப்பி மகிழ்ந்தாரே

உய்யோமோ செங்கதிரே நீடுபனி ஓட்டிவந்த
தையே முதற்றிங்கள் தைம்முதலே ஆண்டுமுதல்
கையே துணையாகும் கைத்தொழிலே ஆக்கமென்று
செய்யே தரும்செந்நெல் சேயிழையார் குற்றினரே

தேரிழுப்பும், செம்பெடுப்பும் அல்லவிழா! அன்னவெல்லாம்
ஓரிழுப்புநோய்! - பொதுவின் உள்ளவிழைவே விழா!
ஏரெழுப்பும் புத்தம் புதுச்செல்வம் இட்ட பால்
பாரழைக்கப் பொங்கற் பயன்மணக்க வைத்தனரே!

அழகின் பரிதி உயிர்; அவ்உயிரை
முழுதும் நிறுத்தும் அமிழ்துதான் முத்து
மழை! உலகு தாய்! வளர்ப்புப் பாலே பயன்!நெய்
ஒழுக உண்டார் பொங்கல் எல்லாரும் ஒன்றியே!

ஆடைஎல்லாம் அந்நாள் மடிப்பு விரித்தவைகள்!
ஓடைஎனப் பாலும், உயர்குன் றரிசியும்
வாடைநெய்யும் பொங்கி வழியவே பொங்கலிட்ட
நாடுதான் கொண்ட நனிமகிழ்ச்சி செப்பரிதே!

இகழ்ச்சி அணுகா திலையில் அமிழ்தைப்
புகழ்ச்சி சொல்லிப் புத்துருக்கு நெய்யொழுக உண்ட
மகிழ்ச்சியே இந்நாள் போல் எந்நாளும் மல்க
மிகச்சீ ரியதமிழும் மேன்மையுற்று வாழியவே!





- புரட்சிக்கவிஞர்
பாரதிதாசன்

தமிழ் ஓவியா said...

ஊழ்

--------------கலைஞர்
புயலும் மழையும் ஓய்ந்து ஊர்மக்கள் வெளியில் தலைகாட்டத் தொடங்கினார்கள். ஆங்காங்கே பெருமரங்கள் அடியற்றுக் கிளைகளுடன் வீழ்ந்து கிடந்தன. காற்றுக்கு வளைந்து கொடுத்துத் தப்பித்துக் கொள்ளும் நாணலும், படுகை மண்ணோடு தூக்கியெறியப்பட்டுத் தலைகுப்புறச் சாய்ந்து கிடந்தது. ஊர்க் கோவிலின் கோபுரத்துக் கலசம், ஒரு கல் தொலைவுக்கப்பால் உருண்டு கிடந்தது. கால்நடைகள் ஒன்றிரண்டு தெருக்களில் மூச்சற்றுக் கிடந்தன. கிழங்கள் நடுங்கும் மேனியைப் போர்த்துக்கொண்டு தங்கள் இல்லத்துத் திண்ணைகளில் படுத்திருந்தன. வீதிகளில் தேங்கியிருந்த மழைநீர்க்குட்டைகளில் குறும்பு செய்யும் இளைஞர் கூட்டம் குதித்து விளையாடிக் கொண்டிருந்தது. கழனிகளில் தலைசாய்ந்து மிதந்த வண்ணமிருந்த நெற்கதிர்களை உழவர்கள் பெருமூச்சுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். புயலுக்குப்பின் ஏற்பட்ட அந்த அமைதியில் பெரும்பாலும் சோகத்தின் பின்னணியே ஒலித்துக் கொண்டிருந்தது. ஊரின் நடுவே தலையில் வகுத்த நேர்வகிடு போல் அமைந்திருந்த ஆறு; நிம்மதியிழந்து வெறி பிடித்தது போல் ஓடிக்கொண்டிருந்தது. கடுமழையும் புயலும்தான் ஆற்றின் ஆவேசத்துக்குக் காரணம்! இலைதழைகள், கிளைகள், ஆட்டுக்குட்டி, கன்றுக்குட்டிகளின் சவங்கள் ஆற்றின் தோள்மீது சவாரி செய்து கொண்டிருந்தன.

ஊர் நாட்டாண்மைக்காரரும், அவருடைய உதவியாளரும் ஆற்றின் வேகத்தைக் கண்டவாறு ஆற்றங்கரை மீது நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்க்கரையில் ஒரு கட்டுடல் படைத்த வாலிபன் ஆற்றையே உற்றுப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். அவன் பரபரப்பு அடைந்திருந்தான். அவனை நாட்டாண்மைக்காரர் பார்த்துவிட்டு, உதவியாளரிடம் கேட்டுச் சந்தேகத்தைப் போக்கிக் கொண்டார்.

ஏய்! எதிர்க்கரையில் நிற்பவன் நம்ம ஊர் சிங்கன்தானே?

ஆமாங்க! அவனே தான்! உங்க பரம விரோதி சிங்கனேதான்!

என்ன அப்படி, ஆற்றையே பார்க்கிறான் வைத்த விழி வாங்காமல்?

சாமி! சாமி! அடடே! ஒரு மான்குட்டி உயிருக்குத் தவிக்குதுங்க! அதோ பாருங்க ஆற்று நடுவினிலே!

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, எதிர்க்கரையில் நின்ற சிங்கன், மான்குட்டியைக் காப்பாற்ற ஆற்றில் குதித்துவிட்டான். குதித்தவனைச் சிறிது நேரம் காணவில்லை. நாட்டாண்மைக்காரருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.
பாரடா! பார்! என் பகைவன் ஆற்றோடு போய்விட்டான் அமிழ்ந்து! என்று அவர் கூச்சல் போட்டார்!

இருங்க சாமி! அவசரப்படாதீங்க! அவனுக்கு நீச்சல் தெரியும் என்றார் உதவியாளர்.
அவர் சொன்னபடியே சிங்கன் நீச்சலடித்துக் கொண்டு மான்குட்டியைக் காப்பாற்ற முன்னேறிக் கொண்டிருந்தான். ஆற்றின் கடுமையான வேகத்தைச் சமாளிக்க முடியாமல் அவன் தத்தளித்தான்.

நாட்டாண்மைக்காரர், தன் உதவியாளரிடம் சொன்னார்:

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்

என்று வள்ளுவர் சொன்ன வாக்குப் பொய்யாகப் போகாது பார்! ஊழைவிட மிக்க வலிமையுள்ளது எதுவுமில்லை! அதை விலக்குவதற்காக மற்றொரு வழியைப் பின்பற்றினாலும் அங்கேயும் ஊழ்தான் முன்வந்து நிற்கும். எனவே, இப்போது சிங்கனைவிட ஊழ் வலிமையாக நிற்கிறது! அதோ, அவன் திண்டாடுகிறான் பார்! அவன் கைகள் ஓய்ந்துவிட்டன பார்! மான்குட்டியை வேறு தோளிலே போட்டுக் கொண்டு நீந்துவது எளிதா? தொலைந்தான் சிங்கன்!

இவ்வாறு நாட்டாண்மைக்காரர் துள்ளிக் குதித்தார். உதவியாளர் விளக்கினார்:

சாமி! ஊழை வெல்ல முடியாது என்பது சரிதான். ஒன்று நம்மை வெல்லும்போது ஊழ் வென்றுவிட்டது என்கிறோம்! மாறாக, நாம் வெற்றி பெறும்போது ஊழ்தான் அந்த வெற்றியை நமக்குத் தந்தது என்கிறோம். எனவே, ஏற்படுகிற ஒரு விளைவுக்கு நாம் கற்பிக்கிற காரணம்தான் ஊழ் என்பதாகும். அதைத்தான் வள்ளுவர் கூறுகிறார்.

உதவியாளரின் விளக்கத்தைக் கேட்டு நாட்டாண்மைக்காரர் வியந்து போனார். அதற்குள் சிங்கனும் ஆற்றுச்சுழல்களை எதிர்த்து வெற்றி கண்டு மான் குட்டியுடன் கரையை வந்து அடைந்தான். நாட்டாண்மைக்காரருக்கு மேலும் வியப்பு! சிங்கன்மீது கொண்டிருந்த பகையைக்கூட மறந்துவிட்டு அவன் வீரத்தையும், மன உறுதியையும், இரக்கமுள்ள இதயத்தையும் பாராட்டி, ஓடிப்போய் அவனைத் தழுவிக் கொண்டார்.

எப்படியப்பா உன்னால் இந்தப் பயங்கர வெள்ளத்தைக் கடக்க முடிந்தது? என்று அவர் முகமலர்ச்சியுடன் கேட்ட கேள்விக்குச் சிங்கன் அளித்த பதிலும் ஒரு திருக்குறள்தான்.

அய்யா! சோர்வின்றி உறுதியுடன் முயற்சியில் ஈடுபடுகின்றவர்கள் ஊழையும் தோல்வி காணச் செய்து விடுவார்கள்! இதோ அதற்குக் குறள்! என்று உரக்கப் பாடினான் சிங்கன்.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்

நன்றி : கலைஞரின் குறளோவியம்

தமிழ் ஓவியா said...

கருப்பு என்பது வெறும் நிறமல்ல!


கலை என்பது சமுதாயத்தின் கண்ணாடி. சமூக அவலங்களுக்கு எதிரான ஆயுதம். மனிதர்களிடையே நல்லுறவை வளர்க்கும் உணர்வு. இந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பதுதான், கருப்பு கலைக் குழுமம் (Karuppu Art Collective).

கருப்பு என்பது வெறும் நிறமல்ல. அது வெளிச்சத்திற்கு முந்தைய புள்ளி. உணர்வை வெளிப்படுத்தும் வண்ணம். மனிதத் தோலின் நிறத்தை நிர்ணயிக்கும் மெலனின் தன்மை. தாயின் வயிற்றில் உள்ள கரு. எல்லாவற்றுக்கும் மேலாக ஜனநாயகம் தந்துள்ள உரிமையின் அடிப்படையில் வெளிப்படுத்தும் எதிர்ப்பின் அடையாளம். இவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் கருப்பு கலைக் குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை கவின் கலைக் கல்லூரியின் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த 9 பேர் இணைந்து இந்தக் குழுமத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஓவியக் காட்சியுடன் இதன் தொடக்க விழா 2013 டிசம்பர் 15ஆம் தேதி சென்னை ஈஞ்சம்பாக்கம் சோழமண்டலம் கலைஞர்கள் கிராமத்தில் உள்ள பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் -_ அனிதா இல்லத்தில் நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட கலைஞர்களும் கலை ஆர்வலர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்தியாவை மதவாதம் ஆளத்துடிக்கும் நிலையில் அதற்கெதிரான ஆயுதமாக கலைவடிவங்கள் இருக்க வேண்டும். தான் விரும்புவது மட்டுமே இருக்க வேண்டும் என்பதே பாசிசம். தான் விரும்புகிற கலையும் கலாச்சாரமும் மட்டுமே இருக்க வேண்டும் என நினைக்கும் இந்துத்வாவும் பாசிசம்தான். அதற்கு எதிரான குரலாக கலைஞர்கள் செயல்பட வேண்டும். வளர்ந்து உலகச் சூழலில் கலைஞர்களுக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதும், புதிய கலைஞர்களை ஊக்குவிப்பதும் இந்த அமைப்பின் நோக்கமாகும் என்றார் ஏ.எஸ்.பன்னீர்செல்வன்.

கவின்கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வரான ஓவியர் சந்துரு, கலை விமர்சகர் சதானந்த் மேனன், லலித்கலா அகாடமியின் மண்டலச் செயலாளர் இராம.பழனியப்பன் ஆகியோர் சென்னைக்குரிய கலை பாரம்பரியத்தையும் அவை ஏற்படுத்திய தாக்கங்களையும்

இன்று ஏற்பட்டுள்ள தொய்வினையும் சுட்டிக்காட்டி அதனை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். வரைதல், செதுக்குதல், உருவாக்குதல் மட்டுமல்லாமல், எங்கள் படைப்புகளையே திரும்பத் திரும்பச் செய்யும் இயந்திரத்தனத்தில் விழுந்துவிடாமல் இருக்கும் சவால்களைக் குறித்தும்

நாங்கள் விவாதிப்போம். 20-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் கொள்கை விளக்கங்களோடு வெளிப்பட்ட எங்கள் முன்னோர்கள் எதிர்கொண்டு விழுந்த குழிகளை நாங்கள் அறிந்தே இருக்கிறோம். அதே வேளை அரசியல், பண்பாடு, பொருளாதாரம், பாலியல் சமன்பாடு, சூழலியல் மற்றும் தத்துவம் போன்றவை குறித்த அக்கறையும் அது சார்ந்த படைப்புகளை உருவாக்கும் கடமையும் எங்களுக்கு இருக்கிறது, பத்தாண்டுகளில் எங்கள் வெளிப்பாடு கொள்கை விளக்கமாகக் கூட இருக்கும் என்று கூறும் கருப்பு குழுவினர் செயலிலும் அதைத் தொடங்கியுள்ளனர்.

கல்வி, எழுத்து, ஆய்வுப் புலம், கலை, ஊடகம் போன்றவற்றின் நிகழ்கால நிலை குறித்து பேராசிரியர் வீ.அரசு, எழுத்தாளர் இமையம், நிகழ்த்து கலைஞர் ப்ரீத்தி ஆத்ரேயா, இயக்குநர் ரமணி ஆகியோர் பங்கேற்ற கருத்துப் பகிர்வோடு டிசம்பர் 28-ஆம் தேதி நிறைவுற்றது கருப்பு கண்காட்சி.

அபராஜிதன் ஆதிமூலம், சந்துரு, எபினேசர் சுந்தர் சிங், கிருஷ்ணப் பிரியா, மரிய அந்தோணி ராஜ், மைக்கேல் இருதயராஜ், நடேஷ் முத்துசுவாமி, நரேந்திரன், ஷர்மிளா மோகன் தாஸ் ஆகியோர் படைப்புகளில் கருப்பின் நோக்கத்தை நாம் புரிந்துகொள்ள முடிந்தது. ஆண்டுதோறும் நடைபெறும் சென்னைக் கலைக்காட்சியில் ஒரு பகுதியாக கருப்பும் இவ்வாண்டு பங்கேற்கிறது என்று தெரிவித்தார் இதன் ஒருங்கிணைப்பில் ஈடுபட்டிருந்த அனிதா. கருப்பு புரட்சியின் நிறம்; புதுமையின் நிறம். மக்கள் பிரச்சினைகளிலிருந்து விட்டுக் கலை விலகியிருக்கிறதோ என்ற எண்ணத்தை அகற்றும் இந்தக் கருப்பு கலைக் குழுமம், இருளில் ஏற்றப்பட்ட விளக்காக ஒளிர்கிறது.

- ஓவியம்

தமிழ் ஓவியா said...

காததூரம் ஓடும் விபூதி பூதங்கள்....


நரையாய் பூமுகத்தில் - புன்னகை
நரம்பின் நார்களா
இடிமின்னலைப் புடம்போட்ட - இல்லை
எரிமலையின் வேர்களா

மூடத்தனக் காய்கள் - உச்சி
மலையேற எத்தனிக்க
ஒற்றுதலின்றிக் கருவறுத்த - நீ
ஒற்றைத்தாயம் நாயகரே

கைபர் போலன் - சிறு
கணவாய் வழிபுகுந்த
ஆரிய முகத்திரையை - கிழித்தீர்
அறிவொளிப் பெரியோனே

நாத்திக பூமியை - உன்
நெற்றிக்கண்ணில் சுழலவிட்டு
ஆத்திகக் குடுமியவிழ - அவா
ஆத்திரத்தில் தீயிட்டாய்

தூபக்கால் தீபக்கால் - கண்டு
தொப்பென்று விழுந்தவனுக்கு
யானைக்கால் பயணமிட்டீர் - எழுப்பி
ஞானப்பால் புகட்டத்தான்

ஆலிங்கன லீலைகளால் - இங்கே
ஆகுதி புகையெரிக்கும்
விபூதி பூதங்களுக்கு - அதன்
விலாவொடிய உடுக்கடித்தீர்

நெய்யிலும் நீரிலும் - பேதமா?
நியாய வாதமிட்டு
பொய்யின் புரவலருக்கு - நூல்
பெய்யும் புலவரானீர்

கையிருந்தும் களவா - உயர்
கற்பிதம் சொல்லி
மெய்யது உள்ளவரை - உயிர்
மெய்யாய் வாழ்ந்தீர்

சமத்துப் பேச்சில் - உனது
சமத்துவ வீச்சிருக்க
கரையேறும் கலப்புமணம் - நீதான்
கலங்கரை விளக்கிருக்க

பாட்டாளி மகனுனக்கு - தைப்
புத்தாண்டு பொங்கலா
பட்டுடுத்த தொகையில்ல - பொருமுறேன்
புதுப்பானை கலங்கலா

கல்லைத் தொழுதே - ஒரு
கல்லாமைப் பிண்டமா
மண்டூகமா நிற்பதென்ன - இன்னும்
மண்டியிட்ட முண்டமா

மந்திர எந்திரங்கள் - அட
மாந்திரிக அனுசரணையா
விஞ்ஞான யுகாந்திரத்தில் - சூன்யத்துக்கு
வெஞ்சாமர உபசரணையா

வயற்காட்டு மகசூல் - நூறு
விழுக்காடாம் போடா
தன்னலமென்ற ஊழலிருக்க - ஆகாது
தன்னிறைவு நாடா

தொடுத்தாரே கேள்விகளை - ஏதும்
தோனலையா காரணமா
எழாத பிணத்துக்கு - அடே
ஏழடுக்குத் தோரணமா

எருதுபூட்ட உழுமோ - கேளீர்
எங்கேனும் நுகத்தடி
பார்ப்பனியத்தைக் களையெடுக்க - நின்
போர்வாளே கைத்தடி

வீதியில்லா ஊரும் - உந்தன்
விதிநின்று பாடும்
காதில்லாப் புராணம் - அன்று
காததூரம் ஓடும்.

- சேரங்குலத்தான்

தமிழ் ஓவியா said...

சிந்தனை


மனித மூளை சிந்திக்கும் ஆற்றல் வாய்ந்தது, இச்சிந்தனை சக்தி மூலம் கடவுள் என்று அவனே உருவாக்கிக் கொண்டான். அது அவன் மூளைத்திறனை வலுவிழக்கச் செய்துவிட்டது.

நமது சிந்தனையைச் செயலாக்க முயலுவோம். இதற்குத் தடையாக இருப்பது மனிதனே உருவாக்கிய கடவுள் கொள்கைகள் தான்.

மனிதன் பறக்கவேண்டுமென்றால் இறக்கையுடன் படைத்திருப்பான் என்பது மதவாதிகளின் மடத்தனமான விவாதம்.

சிந்தனையைச் செயல்படுத்தத் தொடங்கினால் மனிதன் வானத்தின் எல்லைகளையும் மீறி பறந்துவிடுவான்...

- லியானர்டோ டா வின்சி

தமிழ் ஓவியா said...

தமிழனா-தெலுங்கனா? தமிழனா-உருது இஸ்லாமியனா?


தமிழ் மண்ணில் வெள்ளையனை எதிர்த்து வீரப் போர் புரிந்ததினால் தூக்கிலிடப்பட்டான் கட்டபொம்மன். அந்த வீரனின் பிறந்த நாள் ஜனவரி 3 என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அவர் தமிழரல்ல, தெலுங்கர் என்கிறார்கள், பச்சைத் தமிழர்கள்.

கட்டபொம்மனை வெள்ளையனுக்குக் காட்டிக் கொடுத்த புதுக்கோட்டை மன்னன் ராஜாதி ராஜா ராஜகுல விஜயரகுநாத தொண்டைமான், பச்சைத் தமிழன்தான்.

கட்டபொம்மன் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டார் என்பதற்காக அவர் தியாகத்தைத் தள்ளி வைப்பதும், தமிழன் என்பதற்காக புதுக்கோட்டை மகாராஜாவின் துரோகத்தைக் கொண்டாடவும் முடியுமா?

தமிழர்களான மருது சகோதரர்கள், தெலுங்கு பேசுகிறவர் என்பதற்காக கட்டபொம்மனைக் காட்டிக் கொடுக்கவில்லை. மாறாக ஊமைத்துரை, கட்டபொம்மன் சகோதரர்களுக்காக தன் ராஜ்ஜியத்தையும் தன் உயிரையுமே தியாகம் செய்தார்கள்; சின்ன மருது பெரிய மருது என்கிற அந்த வீர சகோதரர்கள்.
தன்னைப்போலவே தெலுங்கு பாளையக்கார மன்னன் என்பதற்காக கட்டபொம்மனை ஆதரிக்கவில்லை எட்டப்பன். வெள்ளையனிடம் கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்தான்.

தூக்கு மேடை ஏறும்போது தன் இனத்தைச் சேர்ந்த எட்டப்பன் முகத்தில் காறி உமிழ்ந்தான் மாவீரன் கட்டபொம்மன்.

தமிழன் புதுக்கோட்டை மகாராஜாவும் தெலுங்கன் எட்டப்பனும் ஓர் இனம்.

தமிழன் மருது சகோதரர்களும் தெலுங்கன் கட்டபொம்மனும் ஓர் இனம்.

துரோகிகள் எப்போதும் இனம் மொழி பார்ப்பதில்லை. தியாகிகளும் அப்படித்தான்.

வெள்ளையனை எதிர்த்து தன்னையும் தன் குடும்பத்தையுமே தியாகம் செய்து மதத்தைத் தாண்டி மாவீரனாக நின்றான் திப்புசுல்தான். அவன்தான் நமது முன்னோர். அவன் காலத்திலே வெள்ளையனுக்குக் காட்டிக் கொடுத்தார்கள் ஆற்காடு நவாப்பும், ஹைதராபாத் நிஜாமும்.

எந்த மொழி பேசினாலும் தியாகிகளே நமது முன்னோர்கள். சொந்த மொழி பேசினாலும் துரோகிகளே நமது எதிரிகள்.

- முகநூலில் வே. மதிமாறன்

தமிழ் ஓவியா said...

திராவிடத்தால் வளர்ந்தோம்

திராவிடத்தால் வாழ்ந்து, திராவிடத்தால் கல்வி கற்று, இப்போது முழுப் பலனையும் அனுபவித்துக் கொண்டு, திராவிடக் கட்சியால் சீரழிந்தோம், திராவிட மாயையை அகற்ற வேண்டும் என ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பது போல் உளறிக்கொண்டு இருக்கும் அரைவேக்காடுகளுக்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு.

1911_வாக்கில் நடந்த வர்ணாசிரம (குலக்கல்வி) பள்ளிப் பாடம்:

1. இவன் தச்சன்_மரவேலை செய்கிறான்
2. இவன் குயவன்_மண்பாண்டம் செய்கிறான்
3. இவன் கொல்லன்_இரும்புவேலை செய்கிறான்
4. இவன் அம்பட்டன்_முகச்சவரம் செய்கிறான்
5. இவன் வண்ணான்_துணி வெளுக்கிறான்
6. இவன் வாணியன்_எண்ணெய் ஆட்டுகிறான்
7. இவன் சேனியன்_துணி நெய்கிறான்
8. இவன் பறையன்_தப்படிக்கிறான்
9. இவன் சக்கிலியன் _ செருப்புத் தைக்கிறான்
10. இவர் அய்யர்_வேதம் ஓதுகிறார்!

2010 முதல் தமிழகப் பள்ளிகளில் நடத்தப்படும் பாடங்கள் பின்வருமாறு:

1. உழவர் _ பயிர்களை வளர்ப்பவர்
2. ஆசிரியர் _ பாடம் கற்பிப்பவர்
3. மீனவர் _ கடலில் மீன்பிடிப்பவர்
4. வணிகர் _ பொருள்களை வாங்கி விற்பவர்.
5. மருத்துவர் _ நோயிலிருந்து காப்பவர்
6. தூய்மைப் பணியாளர் _ துப்புரவு செய்பவர்
7. சலவைக்காரர்_துணிகளைச் சலவை செய்பவர்
8. நெசவாளர் _ துணிகளை நெய்து தருபவர்
9. காவலர் _ சட்டம் ஒழுங்கைக் காப்பவர்
10. கட்டடக் கலைஞர் _ வீடு கட்டித் தருபவர்

ஆதாரம்: (வளரும் இளமை, 4ஆம் வகுப்பு 2ஆவது பாடம் _ பக்கம் 6)

இந்திய மக்கள் அறிவில்லாமல் இருப்பதற்குப் பார்ப்பனர்களே காரணம் என்று இந்தியத் தாய் புத்தகத்தில் மிஸ் மேயோ எழுதியதையும் நினைவில் கொள்ள வேண்டும். - பொன்.வெங்கடேசன், இராணிப்பேட்டை

தமிழ் ஓவியா said...

பாவேந்தர்


இதழுலகில் பாவேந்தர்

பாரதிதாசன் அவர்கள் தாமே உரிமையாளராகவும் ஆசிரியராகவும் இருந்து நடத்திய ஏடுகள் 3. இதில் குயில் ஏடு மட்டும் 6 முறை வெவ்வேறு வடிவில் வெளியானது.

அதாவது 1946 முதல் 1962 வரை புத்தகமாக, மாத இதழாக, மாதமிருமுறை இதழாக, வார இதழாக, நாளிதழாக வெளியானது. இதற்கு முன் புதுவை முரசு(1930) மற்றும் ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம்(1935) ஆகிய இதழ்கள் வெளிவந்தன.


திரையுலகில் பாவேந்தர்

பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் 9 திரைப்படங்களுக்கு திரைக்கதை உரையாடல் எழுதியுள்ளார். இவற்றில் ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி(1947) என்ற படத்திற்கு அவர் எழுதியது பலருக்கும் தெரிந்திருக்கும். பாலாமணி(எ)பக்காத் திருடன் (1937), இராமானுஜர் (1938), கவிகாளமேகம் (1940), சுலோசனா (1944), பொன்முடி(1949), வளையாபதி(1952)ஆகிய படங்களும் பாவேந்தர் எழுத்தில் வெளிவந்தவை. சிவாஜி நடிக்க தயாரிப்பதாக இருந்த பாண்டியன் பரிசு மற்றும் மகாகவி பாரதியார் ஆகிய படங்கள் தயாரிக்கப்படவில்லை.

1937 தொடங்கி 1960 வரை 22 திரைப்படங்களில் பாவேந்தர் பாடல்கள் எழுதியுள்ளார். அவரது மறைவுக்குப் பின் ஏறத்தாழ 25 படங்களில் பாவேந்தர் எழுதிய கவிதைகள் பாடல்களாக இசைவடிவம் பெற்றுள்ளன.



பாவேந்தரின் குறள் உரை

பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் 85 குறட்பாக்களுக்கு உரை எழுதியிருக்கிறார். இவற்றில் கடவுள் வாழ்த்து அதிகாரமும் ஒன்று. ஆனால், இதற்கு உலகின் தோற்றம் எனத் தலைப்பிட்டுள்ளார்.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 13 பள்ளிகளில் 1907 முதல் 1944 வரை பாவேந்தர் பாரதிதாசன் தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்


தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுகாவில் உள்ள இளங்காடு கிராமத்தில் பிறந்தவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விவசாயத்துறையில் இளங்கலைப் பட்டம் படித்து, கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி மய்யத்தில் மேலாளர் பணியில் 1965ஆம் ஆண்டு சேர்ந்து, பசுமைப் புரட்சித் திட்டத்தினை அமல்படுத்தியவர். அரசு வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் செய்யப்படும் ஆராய்ச்சிகள் அனைத்தும் பயன் தராதவை என்று கூறி பணியிலிருந்து விலகுவதாக அறிவித்தவர்.

இயற்கை வேளாண் முறையினை வலியுறுத்தி, போராட்டம், ஆர்ப்பாட்டம், கருத்தரங்கம், பேரணிகளை நடத்தியதுடன் வானகம் என்ற இயற்கை விவசாயப் பண்ணையினை உருவாக்கி விவசாயிகளிடம் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொண்டவர். அண்மையில், மத்திய அரசின் காவிரிப் படுகையின் மீத்தேன் எரிவாயுத் திட்டத்தினால் நிலத்தடி நீர்மட்டம் குறையும், விவசாயம் பாதிக்கும் என்று எதிர்ப்புக் குரல் எழுப்பிப் போராடி வந்த நம்மாழ்வார் உடல் நலக் குறைவு காரணமாக டிசம்பர் 30 அன்று இயற்கை எய்தினார்.