Search This Blog

3.1.14

ஆம் ஆத்மி அமைச்சர்கள் பெயருக்கு பின்னால் உள்ள ஜாதி எப்போது தொலையும்?


பெரிய புரட்சியெல்லாம் பேசுகிறார்கள்; ஊழலை ஒழித்து ஒப்பரிய சமூகத்தைப் படைப்பது தான் எங்களின் முதற் பணி முழு முதல் நோக் கம் என்று அண்டத்தையே குலுக்கி ஆகாயத்தையே வளைத்து வக்கணைப் பேசும் இந்த டில்லி வீராதி வீரர்கள் முதலில் ஊழலிலேயே பிறவி ஊழலான ஜாதியை விடத் தயாராக இல்லையே!

முதல் அமைச்சர் யார்? அர்விந்த் கெஜ்ரிவால்; இந்த கெஜ்ரிவால் என்பது அவர் பெற்ற பட்டமா? அல்ல, பனியா சமூகத்தின் ஜாதிப் பெயர்; இவரின் அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் யார்? யார்? மனீஷ்சிசோடியா இதில் சி சோடியா என்பது வட இந்திய ராஜபுத்திரர்கள் என்று சொல்லக் கூடிய உயர் தட்டு மக்களின் ஜாதிப் பெயர். ராக்சி பிர்லா என்ற அமைச்சரின் பெயரில் உள்ள பிர்லா என்பது மார்வாரி, மகேசுவரி என்றழைக்கப்படும் உயர் ஜாதி  பனியாக்களின் ஜாதிப் பெயர். சவுரவ் பரத்வாஜ் என்ற அமைச் சரின் பெயரில் உள்ள பரத்வாஜ் வட இந்திய குடுமிகளின் ஜாதிப் பெயர்; இன்னொரு அமைச்சர் சத்தேந்திர ஜெயின் - இதில் ஜெயின் என்பதும் குஜராத்தில் இஸ்லாமியர்களை வேட் டையாடிய வைர வியாபாரிகளின் ஜாதிப் பெயர்.

இந்த உயர்தட்டு மேட்டுக் குடி மக்களின் கைகளில்தான் டில்லி மாநில ஆட்சி சிக்கியி ருக்கிறது.

பிறப்பிலேயே உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்கிற இந்த ஆணிவேர் பேதத்திலிருந்து வெளி வர முடியாதவர்கள் பொருளாதார ஊழலைப் பற்றிப் பேசுகிறார்கள் - இதுதானே எளிதானது!

இதுவரை ஆம் ஆத்மி அமைப்பைச் சேர்ந்தவர்கள் வாயில் தீண் டாமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு, இடஒதுக்கீடு என் பது தொடர்பான ஒரே ஒரு சொல்கூட தவறி வந்ததுண்டா?

சமூகப் பார்வையில்லாதவர்கள் கையில் ஆட்சி இருப்பதால் என்ன பயன்? அப்படியே இருந்தால் அது இந்தியாவில் உள்ள பத்தோடு பதி னொன்றாவது கட்சி - ஆட்சியாக இருக்குமே தவிர - சமத்துவத்திற்கான ஆட்சியாக இருக்க முடியாது.
அதுவும், தன் பெயருக்குப் பின்னால் இருக்கும் ஜாதி வாலைக்கூட நறுக்கித் தொலைக்க மனம் இல்லாதவர்கள் நாட்டில் எந்த மாற்றத்தைக் கொண்டு வரப் போகிறார்கள்?
பதவி ஏற்பு விழா விற்கு ராம்லீலா மைதானத்தை அல்லவா தேர்வு செய்துள்ளனர்!
மாற்று என்று சொல்லிக் கொண்டு வருபவர்களும் 
ஏமாற்றுக்காரர்களாகத் தான் இருப் பார்கள் போலும்!
-------------------------------- மயிலாடன் அவர்கள் 28-12-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை


32 comments:

தமிழ் ஓவியா said...

சிந்தனைத் துணுக்குகள்!

எப்படி தெரிந்ததோ?

கேள்வி: கடவுள் கருணாநிதி அல்லவா?

பதில்: கடவுளே நமது மனத்துக்கும் காயத்துக்கும் எட்டாதவராய் இருக்கும் போது, அவர் கருணாநிதி என்பது எப்படித் தெரிந்தது?

- சித்திரபுத்திரன்

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/73049-2014-01-03-10-57-14.html#ixzz2pKmXWK7x

தமிழ் ஓவியா said...

எலி பாவம்பாப்பா: அம்மா... அம்மா ஓடியாங்க, ஓடியாங்க. (அம்மா ஓடி வருகின்றாள்) என்னா கண்ணு என்னா?

பாப்பா: அந்த எலியைப் பாரும்மா... பாவம்.. அது மேல என்னமோ ஒன்று உட்கார்ந்து கிட்டு அழுத்துது... (அம்மா ஒரேயடியாகச் சிரிக்கிறாள்)

பாப்பா: ஏம்மா சிரிக்கிறே?

அம்மா: அது புள்ளையாரு சாமி... எலிதான் அதுக்கு வாகனம்.

பாப்பா: சாமிக்கு கொஞ்சம் கூட இரக்கமே இல்லம்மா!

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/73049-2014-01-03-10-57-14.html#ixzz2pKmdCjvD

தமிழ் ஓவியா said...


சிங்காரவேலர் சிந்தனைகள்

விஷயம் நிகழும் சந்தர்ப்பங்களை எல்லாம் தெரிந்த பிறகு, அவைகளின் காரணங்களைக் குறிப்பதுதான் விஞ்ஞான முறைக்குப் பொருத்தம்.

@@@@@@@@@@@@@@

பார்த்தல், பரீட்சித்தல் என்னும் இரண்டு கருவிகளை உபயோகிக்காததால் கடவுளாலும், மந்திரங்களாலும், பொய் பித்தலாட்டங்களாலும் உலகை நிரப்பி வைத்திருக்கின்றனர்.

@@@@@@@@@@@@@@

சம்பவங்களின் காரணங்களை அறிய சிரத்தை எடுத்துக் கொள்ளாமல், வீண் கேள்விகளைப் பன்னி பன்னிக் கேட்பதும், அவைகளில் மூடநம்பிக்கை வைத்திருப்பதும் மனச்சோம்பல் என அறிக.

@@@@@@@@@@@@@@

சாதாரண சொற்கள், ஜீவன உபாயத்திற்காகவே மறைத்து வைக்கப்பட்டு, மந்திரங்களாகப் பாவிக்கப் படுகின்றன.

@@@@@@@@@@@@@@

மதக்குருக்களும், மதவாதிகளும் பிழைக்கவே கடவுளையும், அம்மன் பிடாரிகளையும் சிருஷ்டித்துக் கொண்டார்கள். சோதிடர் பிழைக்க நட்சத்திர வசியத்தையும், மரண யோகத்தையம் கற்பித்துக் கொண்டார்கள்.

@@@@@@@@@@@@@@

நமது அருகாமையில் உள்ள மலைகளால் நமது நடவடிக்கை பாதிக்கப்படுகிறதா? அல்லது குன்று களால் பாதிக்கப்படுகிறோமா? கடல் வனாந்திரங் களால், ஆலமரம் அரசமரங்களால் பந்தப்படுகின் றோமா? இவைகளின் நிழலில் நிற்கும் நமக்கும், இவைகளுக்கும், நமது நடவடிக்கை களுக்கும், யாதொரு சம்பந்தமும் இல்லை எனில், கல்லும் மண்ணும் சாம்பலும் நிறைந்துள்ள புதன், சுக்கிரன் முதலிய நட்சத்திரங்களால் நமது நட வடிக்கை எவ்விதம் பாதிக்கப்படும்?

@@@@@@@@@@@@@@

இன்று காலத்தையும் இடத்தையம் கடந்து, மனிதன் நிலத்தின் பேரிலும், ஆகாயத்தின் பேரிலும் விரைவாகச் செல்வது மூடப்பக்தியால் அல்ல - பேய் பிசாசுகளால் அல்ல - மந்திர தந்திரங்களால் அல்ல - அறிவு ஆராய்ச்சியோடு முயன்று வந்ததன் பலனே.

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/73049-2014-01-03-10-57-14.html#ixzz2pKmkCr5c

தமிழ் ஓவியா said...

காப்பி அடிக்கப்பட்ட கடவுள் சாபிதா

கிரேக்க ரோம கடவுள்களிட மிருந்து இந்துக் கடவுள்கள் காப்பி அடிக்கப்பட்ட பட்டியல் பாரீர்:

சிவன், இந்திரன் - ஜுபிடர்

பிர்மா - சாட்டர்னஸ்

யமன் - மைனாஸ்

வருணன் - நெப்ட்யூன்

சூரியன் - சோல்

சந்திரன் - லூனஸ்

வாயு - ஈயோவஸ்

விசுவகர்மா - காஸ்டர் போல் வாக்ஸ்

கணேசன் - ஜுனஸ்

விரஜாநதி - ஸ்டிக்ஸ்நதி

குபேரன் - ப்ளூட்டர்ஸ்

கிருஷ்ணன் - அப்பிலோ

நாரதன் - மெர்குரியன்

ராமன் - பச்சுஸ்

கந்தன் - மார்ஸ்

துர்க்கை - ஜுனோ

ரம்பை - வீனஸ்

உஷா - அரேமரா

ஸாகா - வெஸ்டா

பிரிருவி - சைபெல்வி

ஸ்ரீ - சிரஸ்

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/73044-2014-01-03-10-50-35.html#ixzz2pKmsxQf0

தமிழ் ஓவியா said...


நட்சத்திரம் இரவில் தோன்றுவது ஏன்?


சந்திர, சூரிய நட்சத்திரங்களைப் பற்றி உலகம் தழுவிய மூடக்கதைகள் கொடிக்கட்டிப் பறக்கின்றன. நட்சத் திரங்கள் பற்றிக் கூறும் ஒரு ஆசிய மதக் கதை ஒரு ஹாஸ்யமானது.

சூரியனும் சந்திரனும் பெண்களே. நாம் இப்பொழுது காணும் நட்சத் திரங்கள் எல்லாம் சந்திரனின் குழந்தைகள். சூரியனுக்கும் ஒரு காலத்தில் ஏராளமான குழந்தைகள் இருந்தன. சூரியன், சந்திரன் அவற்றின் குழந்தைகள் முதலியவைகளின் ஒளியை மக்கள் தாங்கமாட்டார்கள் எனப் பயந்து, தம் குழந்தைகளைக் கொன்றுவிடுவது என்று சூரியனும் சந்திரனும் தீர்மானித்தன.

ஒப்பந்தப்படி சூரியன் தன் குழந்தைகளை எல்லாம் விழுங்கி விட்டது. சந்திரன் தந்திரசாலி. தன் குழந்தைகளை விழுங்கவில்லை. சூரியன் தன் குழந்தைகளை விழுங்கு மட்டும், சந்திரன் தன் குழந்தைகளை வான மண்டலத்தில் ஒளித்து வைத்து இருந்ததாம்.

சூரியன் தன் குழந்தைகளை எல்லாம் விழுங்கிய பிறகு, சந்திரன் தன் குழந்தைகளை அழைத்ததாம். சந்திரன் குழந்தைகளைக் கண்டதும் சூரிய னுக்கு அடங்காக் கோபம் வந்து, சந்திரனே, உடனே உன் குழந்தை களை கொல்லுகிறாயா இல்லையா? என்று கூச்சல்போட்டுப் பாய்ந்ததாம். சந்திரன் ஓட, சூரியன் விரட்ட இப்படியே வெகுநாள் ஓட்டப்பந்தயம் நடந்ததாம்; இன்னும் நடக்கிறதாம்.

சில சமயங்களில் சூரியன் சந்திரனை நெருங்கி விடுமாம். அப்பொழுதுதான் கிரகணம் உண்டாகிறதாம். சந்திரன் தன் குழந்தைகளான நட்சத்திரங்களை, சூரியன் இல்லாத பொழுதாகிய இரவில் கொண்டு வரும் இரகசியம் இது தானாம்!

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/73044-2014-01-03-10-50-35.html#ixzz2pKmzhPVL

தமிழ் ஓவியா said...


பணமா? பக்தியா?


பக்தியா? பணமா? என்று ஒரு பட்டிமன்றம் நடத்தினால் பணத்திற்குத் தான் வெற்றிகிட்டும்.

ஆங்கிலப் புத்தாண்டுத் தினத்தன்று இந்து மதக் கோயில்களை இரவில் திறந்து வைக்கக் கூடா தென்று சங்கராச்சாரியார் சொல்லிப் பார்த்தார்; ராம. கோபாலன் வகையறாக்கள் அலறிப் பார்த்தன.

ஆனால் அதனை யாரா வது சட்டை செய்தார்களா? பக்கம் பக்கமாக படங்களு டன் செய்திகளைப் பார்ப் பன ஏடுகளே வெளியிட் டுள்ளன! மயிலாப்பூர் கபா லீஸ்வரன் கோயிலில் நள் ளிரவில் பக்தர்கள் திரண்ட காட்சியை சாங்கோ பாங்க மாக வண்ண வண்ணப் படங்களுடன் வெளியிட் டுள்ளது மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவான இந்து ஏடே! திருப்பதி ஏழுமலை யான் கோயிலும் இதற்கு விலக்கல்ல.


பக்தர்கள் மூலம் பணம் வந்து குவியுமேயானால் பார்ப்பன அர்ச்சகர்களுக் குப் படா குஷிதானே?

அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் உரிமை என்று கூறினால் ஆகமங்களைத் தூக்கிக் கொண்டு டில்லி உச்சநீதி மன்றத்துக்கு வியர்த்து விறுவிறுக்க ஓடுவார்கள்.

அவாள் பாஷையில் மிலேச்சர்களாகிய ஆங்கி லேயர்களின் புத்தாண்டில் நள்ளிரவில் இந்துக் கோயில்களைத் திறந்து வைக்க எந்த ஆகமத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது?

இன்னொரு சேதி, திருப்பதியில் பக்தர்கள் ஆர்ப்பாட்டம் என்பது தலைப்பு; எதற்காகவாம்?
சனவரி முதல் தேதி நள்ளிரவில் ஏழுமலையான் கோயிலுக்கு அருகில் உள்ள நாதநீராஜன மண்ட பம் வரை மட்டுமே பக் தர்கள் அனுமதிக்கப்பட்ட தால், பக்தர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். மேலும் - அப்பகுதியில் வி.அய். பி.கள் வருகைக்காக சிவப் புக் கம்பளங்கள் விரிக்கப் பட்டு இருந்தன.

பக்தர்களுக்கோ படு கோபம்; பணம் படைத்த வர்கள் என்றால், பதவிக் காரர்கள் என்றால் பகவான் சன்னிதியில்கூட முன்னு ரிமையா? மணிக்கணக் காக பகவானைத் தரிசிக்கக் காத்துக் கிடக்கும் உண் மையான பக்தர்களான எங்களைக் கோவில் முன் வரைகூட செல்ல அனும திக்க மறுப்பது என்ன நியாயம்? என்று கூச்சல் போட்டனர்.

கையில் காசில்லாத வன் கடவுளேயானாலும் கதவைச் சாத்தடி! என்ற ஒரு பாடல் உண்டு. கையில் காசு இருந்தால் மட்டும் பகவான் கதவைத் திறந்து விடடி என்பது புதிய பாடல்.

பக்தி ஒரு பிசினஸ், அது வர்த்தகமாகி விட்டது என்று (சங்கராச்சாரியா ரும், கிருபானந்தவாரியா ரும்கூடக் கூறியதுண்டு) நாம் சொன்னால் மூக்குப் புடைக்கும் கோபத்துக்கு மட்டும் குறைச்சல் இல்லை. - மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/73051.html#ixzz2pOHq0aeP

தமிழ் ஓவியா said...


பணமா? பக்தியா?


பக்தியா? பணமா? என்று ஒரு பட்டிமன்றம் நடத்தினால் பணத்திற்குத் தான் வெற்றிகிட்டும்.

ஆங்கிலப் புத்தாண்டுத் தினத்தன்று இந்து மதக் கோயில்களை இரவில் திறந்து வைக்கக் கூடா தென்று சங்கராச்சாரியார் சொல்லிப் பார்த்தார்; ராம. கோபாலன் வகையறாக்கள் அலறிப் பார்த்தன.

ஆனால் அதனை யாரா வது சட்டை செய்தார்களா? பக்கம் பக்கமாக படங்களு டன் செய்திகளைப் பார்ப் பன ஏடுகளே வெளியிட் டுள்ளன! மயிலாப்பூர் கபா லீஸ்வரன் கோயிலில் நள் ளிரவில் பக்தர்கள் திரண்ட காட்சியை சாங்கோ பாங்க மாக வண்ண வண்ணப் படங்களுடன் வெளியிட் டுள்ளது மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவான இந்து ஏடே! திருப்பதி ஏழுமலை யான் கோயிலும் இதற்கு விலக்கல்ல.


பக்தர்கள் மூலம் பணம் வந்து குவியுமேயானால் பார்ப்பன அர்ச்சகர்களுக் குப் படா குஷிதானே?

அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் உரிமை என்று கூறினால் ஆகமங்களைத் தூக்கிக் கொண்டு டில்லி உச்சநீதி மன்றத்துக்கு வியர்த்து விறுவிறுக்க ஓடுவார்கள்.

அவாள் பாஷையில் மிலேச்சர்களாகிய ஆங்கி லேயர்களின் புத்தாண்டில் நள்ளிரவில் இந்துக் கோயில்களைத் திறந்து வைக்க எந்த ஆகமத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது?

இன்னொரு சேதி, திருப்பதியில் பக்தர்கள் ஆர்ப்பாட்டம் என்பது தலைப்பு; எதற்காகவாம்?
சனவரி முதல் தேதி நள்ளிரவில் ஏழுமலையான் கோயிலுக்கு அருகில் உள்ள நாதநீராஜன மண்ட பம் வரை மட்டுமே பக் தர்கள் அனுமதிக்கப்பட்ட தால், பக்தர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். மேலும் - அப்பகுதியில் வி.அய். பி.கள் வருகைக்காக சிவப் புக் கம்பளங்கள் விரிக்கப் பட்டு இருந்தன.

பக்தர்களுக்கோ படு கோபம்; பணம் படைத்த வர்கள் என்றால், பதவிக் காரர்கள் என்றால் பகவான் சன்னிதியில்கூட முன்னு ரிமையா? மணிக்கணக் காக பகவானைத் தரிசிக்கக் காத்துக் கிடக்கும் உண் மையான பக்தர்களான எங்களைக் கோவில் முன் வரைகூட செல்ல அனும திக்க மறுப்பது என்ன நியாயம்? என்று கூச்சல் போட்டனர்.

கையில் காசில்லாத வன் கடவுளேயானாலும் கதவைச் சாத்தடி! என்ற ஒரு பாடல் உண்டு. கையில் காசு இருந்தால் மட்டும் பகவான் கதவைத் திறந்து விடடி என்பது புதிய பாடல்.

பக்தி ஒரு பிசினஸ், அது வர்த்தகமாகி விட்டது என்று (சங்கராச்சாரியா ரும், கிருபானந்தவாரியா ரும்கூடக் கூறியதுண்டு) நாம் சொன்னால் மூக்குப் புடைக்கும் கோபத்துக்கு மட்டும் குறைச்சல் இல்லை. - மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/73051.html#ixzz2pOHq0aeP

தமிழ் ஓவியா said...


யோக்கியர் எடியூரப்பா பராக்! பராக்!!

பாரதீய ஜனதா கட்சி என்பது, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் கும்பகோணம் மகா மகக் குளம் புண்ணிய முழுக்குப் போன்றது. 12 வருடங்கள் பஞ்சமா பாதகங்கள் செய்தாலும், மகா மகத்தன்று ஒரு முழுக்குப் போட்டு விட்டால், ஒட்டு மொத்தமாக அனைத்துப் பாவங்களும் நீங்கி, புண்ணியம் கிட்டும் என்பது இந்து மதத்தின் அய்தீகம்.

இந்துத்துவாவின் ஏக போகக் குத்தகைக் காரர்கள் அல்லவா இந்தப் பிஜேபியினர்! அதனால் தான் ஊழல் காரணமாக முதல் அமைச்சர் பதவியை இழந்து சிறைச்சாலை வரை சென்று வந்த கருநாடக மாநில பி.எஸ். எடியூரப்பா கடை விரித்தேன். கொள்வாரில்லை - மீண்டும் பழைய காயிலகங் கடை வியாபாரத்தையே தொடங்குகிறேன் என்ற தன்மையில் தன்னால் உருவாக்கப்பட்ட கருநாடக ஜனதா கட்சியின் கழுத்தைத் திருகிக் கொன்று விட்டு, தனது பூர்வீகக் கூடாரமான பிஜேபிக்கே சென்று விட்டார்; ஊழல் ஒழித்த உத்தமப் புத்திரர் களின் புண்ணிய பூமியாகத் தங்கள் முதுகைத் தாங்களே தட்டிக் கொள்ளும் பிஜேபியும் இரு கரம் ஏந்தி - அந்தப் பழம் பெரும் ஊழல் பெருச்சாளியைப் பூர்ண கும்பம் கொடுத்து வரவேற்று விட்டது.

இமாசலப் பிரதேச முதல் அமைச்சர் வீரபத்ரசிங் ஊழல் செய்து விட்டார் என்று கூறி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வீட்டின் முன் மறியல் போராட்டத்தை பி.ஜே.பி.யினர் செய்து கொண்டி ருக்கும் இந்தக் கால கட்டத்தில்தான், ஊழல் குற்றச் சாட்டில் சிறை சென்று வந்த கருநாடக மாநில முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பாவை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றுள்ளனர்.

கருநாடக மாநிலத்தின் முதல் அமைச்சர் பி.எஸ். எடியூரப்பா மற்றும் அம்மாநில உள்துறை அமைச்சர் ஆர். அசோக்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்குத் தொடர அம்மாநில ஆளுநர் எச்.ஆர். பரத்வாஜ் அனுமதியளித்தார்.

ஷிமோகாவைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் சிரஜின் பாஷா மற்றும் கே.என். பால்ராஜ் ஆகியோர் கடந்த 2000 டிசம்பர் 28ஆம் தேதி ஆளுநர் பரத்வாஜைச் சந்தித்து மேற்கண்டவர்கள்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்குத் தொடர அனுமதி கேட்டதன் அடிப்படையில்தான் ஆளுநரால் அனுமதி வழங்கப்பட்டது.
ஊழல் தடுப்புச் சட்டம் 1988 பிரிவு 19(1) மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 பிரிவு 193இன் கீழ் வழக்குத் தொடர அனுமதிக்கப்பட்டது.
உத்தமபுரத்திரர்களாகத் தம்பட்டம் அடிக்கும் பிஜேபி என்ன செய்தது? வழக்கை நேர்மையான முறையில் சந்திக்க மார்பைப் புடைத்துக் காட்டியதா?
இல்லை; நாடு தழுவிய அளவில் பந்த் ஒன்றை அறிவித்து அமைச்சர்களே முழக்கம் போட்டு வந்தனர்.

சட்டம் ஒழுங்கை அமைச்சர்களே சீர்குலைத்தனர். அரசுப் பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன, ஏன், எரிக்கவும் பட்டன!

ஜனதா தளத்தின் (மதச் சார்பற்றது) தலைவர் குமாரசாமி, எடியூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டினை முன் வைத்தார். கோயிலில் சத்தியம் செய்யலாமா என்று பாமரத் தன்மையாக ஒருவருக்கொருவர் சவால் விட்டனர்.

முதல் அமைச்சர் பதவியை முறைகேடாகப் பயன்படுத்தி, விலை உயர்வு வீட்டுமனைகளையும், நிலங்களையும் தனது மகன் மற்றும் குடும்பத் தினர்க்கு ஒதுக்கினார் முதல் அமைச்சர் எடியூரப்பா என்பது குற்றச்சாற்று!

சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு பெல்லாரி மாவட் டத்தையே தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்த ரெட்டி சகோதரர்கள் அமைச்சர்களாக இருந்த தெல்லாம் மிகப் பெரிய ஊழல் கந்தாயமாகும்.

ரெட்டி சகோதரர்களை எதிர்த்துப் பார்த்து, கடைசியில் முதல்வர் எடியூரப்பா அவர்களிடம் சரண் அடைந்ததெல்லாம் கடைந்தெடுத்த நகைச்சுவைத் துணுக்குகள். வெகு தூரம் போக வேண்டாம். எடியூரப் பாவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததுண்டே!

பதவி அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள, மக்களுக்குத் துரோகம் செய்து வருகிறோம்; இதில் நானும் அடக்கம்! மக்கள் மன்னிக்க மாட்டார்கள். மக்களுக்கு நன்மை செய்யாமல் தேவையற்ற வேலைகளைச் செய்து கொண்டிருக் கிறோம். மாநிலத்தில் அதிருப்தி அரசியல் தலை தூக்கிய போதும், பெண் அமைச்சர் ஷோபா வின் ராஜினாமாவை ஏற்றக் கொண்டபோதும் நான் கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட்டது. தொலை நோக்குப் பார்வையில்லாமல் சுய நலத்திற்காக அரசியலில் மூழ்கி உள்ளதால் மக்களின் நலனை முழுமையாக மறந்து வருகிறோம் என்றாரே எடியூரப்பா (தினமலர் 14.12.2009).

இந்த ஒழுக்க சிகாமணியை மக்களவைத் தேர்தலுக்காக கையேந்தி வரவேற்கும் பிஜேபியை யும், அதன் பிரதமருக்கான வேட்பாளரையும் வாக்காளர்கள் அடையாளம் காண்பார்களாக!

Read more: http://viduthalai.in/page-2/73059.html#ixzz2pOIjRkzh

தமிழ் ஓவியா said...


உப்புச் சுரங்கத்தில் உன்னத சுவை (காட்சி)

- மு.வி.சோமசுந்தரம்

கொடுமைகளின் முதன்மை வியாபாரியாக, உலக அரசியல் சந் தையில் உலா வந்த ஹிட்லர் பேரா சைப் பேய், நடனம் ஆடிய அரங்கம் ஜெர்மனி நாடாகும். அதற்குக் கிழக்கில் அமைந்த நாடு போலந்து ஹிட்லரின் நாசிச கரியமில வாயு வீசிய நாடு. இந்த போலந்து நாட்டில் உள்ள வியத்தகு, அதிகம் அறிந்திராத அற்புதக் காட்சி அரங்கைப் பற்றிய தகவல் தரப்படுகிறது.

இது ஒரு உப்புச் சுரங்கம் போலந்து நாட்டில் வியலிசிகா என்ற இடத்தில், மத்திய அய்ரோப்பிய நாட்டைத் தவிர்த்து வெளியில் தெரியாத ஒரு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த உப்புப் பாறைச் சுரங்கம் நிலத்துக்கு 200 மீட்டர் கீழே உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் சுரங்க ரயில் நிலை யம் அமைக்கும் பணி பெரியதாக பேசப்படும் ஒன்று. இந்த 200 மீட்டர் ஆழத்தில் சுரங்க வல்லுநர்கள், சிலைகள், சிற்பங்கள், அலங்கார தொங்கு விளக்குகள், அரங்கங்கள் வழிபாட்டு கூடம் அமைத்துள்ளனர். இவை 800 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு பகுதிக்கும் செல்ல கதவுகள் உள்ளன.

இந்த சுரங்கம் உள்ள பகுதி 20 மிலியன் ஆண்டுகளுக்கு முன் கடலாக இருந்து, வெப்ப, நிலவியல் மாற்றத்தால் சோடியம் குளோரைட் உப்புப்பாறைகளாக மாற்றம் பெற்றுள்ளன. உப்புப்பாறைகளைக் கண்டறிந்து உப்பைப் பயன்படுத்தும் முன்னதாக, அப்பகுதியில் இருந்த உப்பு நீருற்றிலிருந்து நீரைக்காய்ச்சி உப்பை எடுத்து வந்தனர். இந்த செயல்முறை கி.மு.3500 துவக்கத்தி லிருந்து வந்தது. உப்பு நீரூற்று வற்றியதால் உப்பைத் தேடி தரையைத் தோண்ட முற்பட்டனர். உப்புப் பாறைகளைக் கண்டனர்

. சுரங்கம் ஏற்பட்டது. சுரங்கங்கள் போலந்து மன்னர்களுக்கு சொந்தமாக இருந்தன.
இந்த சுரங்க அருங்காட்சியகம் 3 கி.மீ. பாதையைக் கொண்டது. போலந்து நாட்டின் விண்வெளி ஆய்வாளர் நிக்கோலஸ் கோப்பர் நிக்கஸ் சிலை, மன்னர் சிலை, குதிரை மூலம் இயக்கப்படும் இயந்திர மாதிரி, 18-ஆம் நூற்றாண்டில், உப்பை கீழிருந்து மேலே கொண்டுவர பயன்படுத்திய மர இயந்திரம், காட் சிப் பொருள் களாக உள்ளன. சுரங்கக்கூரைப் பகுதியில் உப்புப் படிகங்கள் காலி பிளவர் (சிணீறீவீ யீறீஷீஷ்மீக்ஷீ) போன்று கொத்துக் கொத் தாக அமைந் துள்ளதைக்காண புதுமையாக இருக் கும், புனித அந் தோனி கோயில், ஏசு, மேரி சிலை கள், மென்மை யான ஒளி விளக்கில் அமைத்துள்ளனர். புனித சிலுவைக் கோயிலின் வாசலில் தேய்மான மடைந்த முட்டியிட்ட நிலையிலுள்ள இரண்டு துறவிகளின் உப்புச் சிலைகள் உள்ளன. புதின கிங்கா கோயில், அமைப்பிலும், அளவிலும், வியந்து பார்க்கத்தக்க எழில் தோற்றமாக உள்ளது. கோயிலின் கூரையிலிருந்து, தூய உப்புப் படிகங்களினால் அமைந்த தொங்கும் அலங்கார விளக்குகள் கண்கொள்ளாக் காட்சிகள். உப்புப் பாளத்தரை, விவிலியக்கதைக் காட்சிச் சிற்பங்கள் உள்ள சுவர்கள், இப்படியும் ஒரு சிற்பக்கூடமா? நம்ப முடிய வில்லையே! என்று கூறத்தோன்றும். இச்சுரங்கத்தில் அடிக்கடி இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன என்றால், நம்பாமலிருக்க முடிய வில்லை.

சுரங்கத்தினுள், சோடியம், கால்சியம், மெக்னீசியம் குளோரைட் கலந்த காற்றை உட்கொள்ளும் நிலை, நம் உடலுக்கு நலம் பயக்கும் சூழலாக உள்ளது. ஒவ்வாமை வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள், 440 அடி ஆழப்பகுதியில் அமைந் துள்ள கூடத்தில் ஒரு நாள் தங்கி குணமடைந்து செல்வதாகக் கூறப்படுகிறது.

1966-ஆம் ஆண்டு முதல், விலை வீழ்ச்சியின் காரணத்தாலும், நீர்ப்பெருக்கு ஏற்படுவதாலும் உப்பு வெட்டுவது இல்லை. பாதுகாப்பைக் கருதி ஒரு சதவீத சுரங்கப்பகுதிக்கு மட்டில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

உப்பை ஒதுக்க வேண்டியவர்கள் கூட போலந்து உப்பு சுரங்கத்தைப் போய் பார்த்துவர ஆசைப்பட்டால் ஆச்சர்யப்பட இடமில்லை. ஆபத்தும் ஏதுமில்லை. புதிய அனுபவம் கூடுதல் பலன்தானே!

Read more: http://viduthalai.in/page5/73070.html#ixzz2pOKhdHyk

தமிழ் ஓவியா said...


மதத்தின் விளைவு


மதத்தின் விளைவு

ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர் ஜோமோ கென்யாட்டா தான் ஒரு முறை சுவையோடு சொன்னார். பாருங்கள் தலைமுறை தலைமுறை யாக ஆப்பிரிக்க மண் எங்கள் கைகளில் இருந்தது.

கப்பலில் வந்த வெள்ளைக் காரர்கள் தங்கள் கரங்களில் இருந்த பைபிளை எங்கள் கைகளில் தந்து, கண்களை மூடிச் செபம் செய்யச் சொன்னார்கள்; நாங்கள் விழிகளை மூடினோம், தூங்கி விட்டோம்.

காலதாமதமாக விழித்துப் பார்த்த போது வெள்ளையர் கைகளில் எங்கள் நாடு இருந்தது;

ஆனால் எங்கள் கைகளிலோ பைபிள் மட்டுமே மிஞ்சி இருந்தது! என்றார்.
எத்தனை பொருளாழம் நிறைந்த சொற்கள் இவை!

(கவிவேந்தர் கா.வேழவேந்தன் முன்னாள் அமைச்சர் அவர்களின் தெரிய... தெளிய... கட்டுரைத் தொகுதி - முதற் பதிப்பு டிசம்பர் 2000 72-ஆம் பக்கத்தில் இருப்பது).

Read more: http://viduthalai.in/page5/73069.html#ixzz2pOKtOsxW

தமிழ் ஓவியா said...

சமுதாயத் தொண்டு

சமுதாயத் தொண்டு செய்வது லேசான வேலையல்ல; பெருந் தொல்லையான காரியமாகும்.

படிக்குப்படி ஒவ்வொரு கட்டத் திலும் தொல்லைகள் எதிர்நோக்கி நிற்கும், நாம் செய்யும் சமுதாயப் பணியினால் யாருக்கு அனுகூலமு ம் வசதியும் கிடைக்குமோ,
யாருடைய இழிவுகள் ஒழி யுமோ, அந்த மக்களின் ஆதரவு அபிமானம் கூட நமக்கு கிடைக் காது.

(குடிஅரசு தொகுதி 3 -208-ஆம் பக்கம்)

Read more: http://viduthalai.in/page5/73069.html#ixzz2pOL2sDDW

தமிழ் ஓவியா said...

வாக்களிக்க விரும்பாதார்

நடைபெற்ற நான்கு மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாத வர்கள் (நோட்டா).

டில்லி 0.67 சதவீதம்

மத்தியப்பிரதேசம் 1.90 சதவீதம்

ராஜஸ்தான் 1.92 சதவீதம்

சத்தீஸ்கர் 3.07 சதவீதம்

Read more: http://viduthalai.in/page5/73069.html#ixzz2pOLAsUQL

தமிழ் ஓவியா said...


பெண்களும் - சொத்துரிமையும்

ஓரிருவர் எடுத்துக்காட் டாக வழிகாட்டும்போது, அது அவர்தம் தனித் துணிச்சல், பொறுப்பற்ற தன்மை என்று குறைபேசி ஒதுங்குவோர் கூட, அவர் கள் பலராகும்போது, அதுவும் நியாயமே என்று ஏற்க முன்வருவர்.

துணிந்து செயற்படுவோ ருக்குத் துணை நிற்கச் சிலரேனும் முன்வரும் சூழலை உருவாக்கியதே சுயமரியாதை இயக்கத்தின் தொண்டினால் நாடு பெற்ற நற்பயன் எனலாம்.

அப்படிப்பட்ட உரிமை உணர்வு தழைக்கப் பெண்கள் - தம் காலிலே நிற்கும் நிலை, தாமே ஊதியம் பெற்று வாழும் நிலை உருவாக வேண்டும். படித்த பெண்கள் வேலைக்குச் செல்லலாம் என்னும் கருத்து வளர்ந்து வந்தாலும், அதை விரும்பாதாரும், தடுப்பவருங்கூட உள்ளனர்.

கணவனை நம்பித்தான் வாழ்ந்தாக வேண்டும் என்னும் நிலையிலிருந்து, தான் தனது வருவாயிலிருந்தே வாழ முடியும் என்னும் நம்பிக்கை கொள்ளும் நிலையே பெண்ணின் உரிமைக்கு அடிப்படையாகும்.

அதே போன்று, சொத்துரிமை உள்ள சமூகத்தில் அந்த உரிமை ஆண் மக்க ளுக்கு மட்டுமே என்றுள்ள முறையே, பெண்கள் உரிமைக்குத் தகுதியுடையவர் ஆகார் என்னும் எண்ணத்தை உறுதி செய்ய ஏதுவாகிறது.

சொத்து எவ்வளவு? சிறிய அளவின துதானே? அதனாலா பெண்ணுரிமை காக்கப்படும் என்று சிலர் ஐயம் எழுப்புவர். ஆண்களுக்கும் அது பொருந்துமன்றோ? சொத்தின் அளவு பெரிதாகுமிடத்து, அந்த உரிமை பெண் ணையும் அடையு மன்றோ? சிறிதெனி னும் - ஆணுக்கு உள்ள அளவு பெண்ணும் பெறுவாளன்றோ!

பெண்ணின் மனத்தில் அதுவே தாழ்வு மனப்பான் மையைப் போக்க ஏதுவாகும்.

அதனால் தான் 1929-ஆம் ஆண்டில் செங்கற்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் ஆண்களைப் போன்றே பெண்களுக்கும் உடைமை உரிமை வழங்க வேண்டும் என்றும், அதற்குரிய வழியில் அரசு, சட்டத்திருத்தம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த நாட்களில் முதல் அமைச்ச ராக விளங்கிய டாக்டர் பி.சுப்பராயன் அந்த மாநாட்டில் கலந்து கொண்டி ருந்தார். பெரியார் ஈ.வெ.ரா. அவர்களே அப்படிப்பட்ட தீர்மானம் வரத்தூண்டு கோல் ஆனவர்.

ஆயினும், அத்தீர்மானம் அறுபது ஆண்டுகட்குப் பின்னர், கலைஞர் மு.கருணாநிதி முதல்வராக விளங்கிய 1990-ஆம் ஆண்டிலேதான தமிழ்நாடு சட்டப் பேரவையில் சட்டத் திருத்த மாகக் கொண்டு வரப்பட்டு நிறை வேற்றப்பட்டது.

(பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் தமிழர் திருமணமும் இனமானமும் பரிசுப்பதிப்பு நூலில் -_ பக்கம் 264)

-_ க. பழநிசாமி, தெ.புதுப்பட்டி

Read more: http://viduthalai.in/page6/73071.html#ixzz2pOLKr3bJ

தமிழ் ஓவியா said...


சோதிடம் - அறிவியலல்ல!


விண்வெளிக் களங்களைப் பற்றி என்னிடம் பல நண்பர்கள் கேள்விகள் கேட்ட போது, அவர்கள் சில நேரங்களில் ஜோதிடம் பற்றியும் கூட கேள்விகள் கேட் டனர். நமது சூரிய மண்டலத்தில் நம்மை விட்டு வெகு தொலைவில் உள்ள கோள்களுக்கு நமது மக்கள் இந்த அளவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்ததன் பின்னணியில் உள்ள காரணத்தை உண்மையில் என்னால் எப்போதுமே புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.

ஜோதிடம் ஒரு கலை என்பதற்கு எதிராக நான் எந்தக் கருத்தையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் அது அறிவியல் என்ற போர்வையில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு நான் வருந்தவே செய்கிறேன். இந்த கோள்கள், நட்சத்திரக் கூட்டங்கள், செயற்கைக் கோள்கள் ஆகியவை மனித உயிர்கள் மீது ஆற்றல் செலுத்த இயலுமென்ற கட்டுக் கதைகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன?

என்பதை நானறியேன். விண்வெளியில் உள்ள இவற்றின் சரியான இயக்கத்தைச் சுற்றி, குழப்பம் மிகுந்த கணக்குகளை கற்பனையில் உருவாக்கி அவற்றிலிருந்து மக்களின் வாழ்க்கை நடைமுறைகள் பற்றி முடிவுகளைப் பெறுவது என்பது சரியானதென எனக்குத் தோன்றவில்லை.

நான் காணும் வரை, பூமி ஒன்றே ஆற்றல் மிகுந்த, சுறுசுறுப்புடன் இயங்கும் ஒரு கோளாகும். தனது இழந்த சொர்க்கம் (8ஆம் புத்தகத்தில்) ஜான்மில்டன் அழகாக கூறியபடி, பூமிக்கும் மற்ற நட்சத்திரங்களுக்கும் சூரியன் மய்யமானதாக இருந்தால் என்ன?

மூன்று வேறுபட்ட வழிகளில் பூமி அறிவற்றபடி இயங்குவதாக தோன்றினாலும், பூமி என்னும் இக்கோள் எவ்வளவு உறுதியாகச் செயல்படுகிறது!

நெருப்பு இறக்கைகள் என்ற தனது சுயசரிதையில் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியும், இந்திய அரசின் அறிவியல் ஆலோசகருமான ஏ.பி.ஜே.அப்துல்கலாம்.

Read more: http://viduthalai.in/page6/73073.html#ixzz2pOLzzPMW

தமிழ் ஓவியா said...


உழவனின் நண்பன் நுண்ணுயிர்கள்!

(தம் வாழ்நாளை இயற்கை விஞ்ஞானத்துக்காகவே அர்ப் பணித்த டாக்டர் கோ. நம்மாழ்வார் நினைவாக இக்கட்டுரை).

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்(து)

இயற்கை யறிந்து செயல் (637) _- குறள்

ஆஸ்திரேலியப் பேராசன் பில் மொல்லிசன் ஒரு முறை, மலைவாழ் மக்கள் தலைவனிடம், சமவெளிப் பகுதியில், டிராக்டர் வைத்து, ரசாயன உரங்களைக் கொட்டி, ஆழ்குழாய் கிணறு மூலம் நீர் எடுத்து, பூச்சிக்கொல்லி தெளித்து விவசாயம் செய்யும் பண்ணையாருக்கும், மழை நேரத்தில் கோலால் துளையிட்டு, அதில் விதை போட்டு பெரு விரலால் மூடும்உனக்கும் என்ன வேறுபாடு? என்று கேட்டார்.

அதற்கு, நாங்கள் இயற்கைத் தாயிடம் இருந்து பாலை மட்டும் குடிக்கிறோம். பண்ணையார், இயற்கை தாயின் முலையையே அறுத்து ரத்தம் குடிக்கிறார்! என்று பதில் சொன்னான் மலைவாழ் மக்களின் தலைவன்.

இயற்கையைத் தாயாகப் பாவிப்பதும், தாயைப் பேணிப் பாதுகாத்து, தாய் மடியில் குழந்தையாகப் படுத்துக் கிடந்து இன்பம் அனுபவிப்பதும் காட்டு மிராண்டித்தனமாம். ஆனால், இயற்கையை சின்னாபின்னமாக்கி, உணவை நஞ்சாக்கி அதை உண்டு வாழும் மக்களை நோயாளியாக்கி, அவர்களுக்காக வானுயரத்தில் மருத்துவமனைகளைக் கட்டி லாபம் சம்பாதிப்பது நாகரிக வளர்ச்சியாம்.

அய்ந்து சென்ட் நிலத்தில் விளைந்ததை இருபதால் பெருக்கி அதை இரண்டரையால் வகுத்து, ஒரு ஹெக்டர் நிலத்தில் இவ்வளவு விளைந்திருக்கிறது என்று விளம்பரம் செய்து விழா நடத்தும் ஆடம்பர மெல்லாம்.. இனி உலகுக்கு உணவளிக்க முடியாது என்று அனைவரும் உணர்ந்து விட்டனர். மனித சமுதாயம் தன்னை அழிவில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், நீடித்து நிலைத்த உணவு உற்பத்தி தேவை. நீரும் நிலமும் உணவு உற்பத்திக்கு அடிப் படை. எப்படிப்பட்ட நிலம் இருந்தால் உற்பத்தி தொடரும்?

நாஞ்சில் நாட்டைப் பற்றிப் பாடியிருக்கும் மனோன்மணீயம் ஆசிரியர் பேரா.பெ. சுந்தரம்பிள்ளை. சிறகு கொண்டு குழந்தை உடலில் தடவும்போது, குழந்தை சிலிர்த்துக் குதூகலிப்பதுபோல, நாஞ்சில் நாட்டு உழவர்கள் கலப்பை என்ற சிறகைக் கொண்டு நில மகளுக்குக் கிச்சுகிச்சு மூட்டும்போது அவள் மெய் சிலிர்த்து பெரு விளைச்சலைத் தருகிறாள் என்றி ருக்கிறார். அப்படி ஓர் உயிரோட்ட முள்ள நிலம் இருந்தால், உற்பத்தி தொடரும்.

மசானபு ஃபுகோகாவின் ஒற்றை வைக்கோல் புரட்சி என்ற புத்தகத்தை நமது உழவர்கள் வாங்கி திரும்பத் திரும்பப் படிக்க வேண்டும். பச்சைப் புரட்சியால் தீமை என்று தெரிந்ததுமே, தனது பணியைத் துறந்து, தந்தையின் நிலத்தில் ஆராய்ச்சியைத் தொடங் கினார். குறுகிய காலப் பயிரான குள்ள ரக நெல்லைத் தூக்கி தூரப் போட்டு, நீண்ட நாள் பயிரான பாரம்பரிய விதையைக் கையில் எடுத்தார். அது உயரமாக வளரும்போது களை கட்டுப்படுகிறது. அதற்கு ரசாயன உரம் தேவை இல்லை. உரம் இடாத நிலத் துக்கு நீரைத் தேக்க வேண்டியதில்லை. நீர் தேங்காத நிலத்தில் நுண்ணுயிர்கள் (பாக்டீரியா, பூஞ்சை, காளான்) பெருகு கின்றன. மண்புழுக்கள் ஓய்வு ஒழிச்சல் இல்லாது நிலத்தை உழுகின்றன என்பதைப் பார்த்த ஃபுகோகா, அவரது நிலத்தில் ஒரு தேக்கரண்டி மண்ணில், பத்து லட்சம் நுண்ணுயிர்கள் இருப்பதையும் கண்டுபிடித்தார்.

அந்த நுண்ணுயிர்கள் தான், வைக்கோலை எருவாக மாற்றுகின்றன. மண்ணிலும், நீரிலும் உள்ள சத்துகளைத் தாவரங்கள் எடுத்துக் கொள்ளும் வகை யில் மாற்றித் தருகின்றன. நிலத்தில் நுண்ணுயிர்கள் பெருகினால்தான், பூமி யானது மீண்டும் மீண்டும் உற்பத்தியைப் பெருக்கும் சக்தியைப் பெறும்.


ஜீவன் என்ற ஃபிரெஞ் சுக்காரர், உழவர், தனக்கும் மண்ணுக்கும் உணவு உற்பத்தி செய்ய வேண்டும். நிலத்துக்குக் கரிமப் பொருள்தான் உணவு என்று சொல்லி இருக்கி றார். செடி, மண்ணில் இருந்து உணவை எடுப்ப தில்லை; பச்சை இலைகள், சூரிய ஒளியின் மூலம் ஸ்டார்ச் தயாரிப்பது தான் ஒளிச்சேர்க்கை என்று நாம் மூன்றாம் வகுப்பிலேயே படித்து விடுகிறோம். ஒளிச்சேர்க்கைக்குக் காற்றும் தேவை. நிலம் நன்கு விளைய கரிமப் பொருட்களும் நிறைய தேவை. ஆத லால், பயிர்ச் சுழற்சியில் அதிகம் வைக் கோல் தட்டை தரக்கூடிய ஒரு பயிர் கட்டாயம் இருக்க வேண்டும்.

மசானபு ஃபுகோகா வைக்கோலையே (பழைய ரகம்) நிலத்துக்கு அளித்தார். தமிழக உழவர்கள் வைக்கோலை மாட்டுக்கு அளித்து மாட்டு எருவை நிலத்தில் இட்டார்கள். நிலம் தொடர்ந்து விளைய நிறைய வைக்கோல் தேவை. வைக்கோல் போர் உயர, நீண்ட நாள் விளையும் பாரம்பரிய விதைகள் தேவை.

நன்றி: எந்நாடைய இயற்கையே போற்றி

-- இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்
ஆனந்தவிகடன் வெளியீடு

Read more: http://viduthalai.in/page2/73087.html#ixzz2pQsp5K00

தமிழ் ஓவியா said...


முப்புரி தரிக்க முடியுமோ? மோடியால்!


மோடியால் எல்லாம் முடியுமாம்!

மூச்சுக்கு முந்நூறு முறை முழங்கி நின்றிடும் முப்புரி கூட்டம் . பாலாறும் தேனாறும் பண ஆறும்
ஓடுமாம் இந்தியாவில், என பார்ப்பன கூட்டங்கள் உளறுகின்றன
அதையே ஊடக ஒலிபேசிகள்
ஓயாமல் அலறுகின்றன இஸ்லாமியர் இரத்த ஆறும் என்பதை ஏனோ மறந்தனர்! மறுக்கின்றனர்!

நரேந்திர மோடியின் நல்லாட்சியில்
பன்னாட்டு மூலதனங்கள் பயமின்றி நுழையுமாம்!
பண மழையும் கொட்டுமாம்!
கூவித் திரிகின்றன! கோயபல்சு கூட்டங்கள்!

அன்னியர் நுழைவது இருக்கட்டும் ஒருபுறம்!
இந்திய நாட்டில் எங்கேனும் ஓரிடம்,
ஆகம கோயில் கருவறைக்குள்ளே
நுழைய முடியுமோ நரேந்திர மோடியால்!
சூப்பர் மேனாக உடை அணிந்தாலும்,
அவாளுக்கு, தொங்கு சதை தானே!

அடுத்த பிரதமராய்- மோடியை ஆக்கியே தீர்வதென ஆர்ப்பரிக்கும் ஆரியகூட்டமே!
மோடிக்கு முப்புரி தரித்து,
சங்கராச்சாரியாரின் வாரிசு -என அறிவிக்க முடியுமோ?
மதவெறி பிடித்த பாஜகவுக்கு தேவை ஒரு நரேந்திர மோடி!
இந்திய ஹிட்லர் மோடிக்கு,
தேவை ஒரு பாஜக!
ஜாடிக்கேற்ற மூடிகள்!

ஈழத் தமிழனின் இரத்தம் குடித்த
மகிழ்ந்த ராஜபக்சே சர்வதேச குற்றவாளி!
இசுலாமியத் தோழனின் இரத்தம் குடித்த நரேந்திர மோடியோ நாளைய பிரதமர்!
இதுதான் இன்றைய
அரசியல் கூட்டணிகளின் அவலத் தத்துவம்!
அனைத்திலும் பின்னூடாய் ஆரியத் தந்திரம்!
பார்ப்பனியமே! உன் மறு பெயர் தான் வன்முறையோ!

- தகடூர் தமிழ்ச்செல்வி

Read more: http://viduthalai.in/page5/73090.html#ixzz2pQtjBgx9

தமிழ் ஓவியா said...


அம்பேத்கர் பேசுகிறார்


ஜஸ்டிஸ் கட்சி எல்லாம் இந்திய கட்சி ஆக இப்போது நல்ல சமயம்; நல்ல வேலைத் திட்டமும் தீர்மானங்களும் இருப்பதால் துணிந்து தைரிய மாகவும் இந்தியா பூராவும் சுற்றி வேலை செய்யும்படியும் ஆங்காங்கு தமது நண்பர்களுக்கு எழுதியும் தம்மால் ஆன அள வுக்கு ஒத்துழைத்தும் ஆதரவு அளிப்பதாகவும் அம்பேத்கர் சொன்னார் என்பதாகத் தெரிகிறது (69 ஆண்டுகளுக்கு முன்பு)

(குடிஅரசு 30.09.1944 சென்னை தந்தை பெரியாரும் டாக்டர் அம்பேத்காரும் பக்கம் 2)

தந்தை பெரியாருக்கு எதிராக தங்களுக்குத் தாங்களே ஜஸ்டிஸ் கட்சி என்று சொல்லிக் கொண் டிருந்த சிலர் டாக்டர் அம்பேத் காருக்கு விருந்து ஒன்றை கொடுத்தனர். விருந்துக்கு நன்றி தெரிவித்துப் பேசிய டாக்டர் அம்பேத்கர் அவர்கள் பெரியாருக்கு விரோதமாக நடப்பதைக் கண்டித்தார். தலை வரை மதித்துக் கட்டுப்பாடாக நடக்க வேண்டுமென்று அறிவுரை கூறினார். தந்தை பெரியார் அவர்களை டாக்டர் அம்பேத்கர் எப்படி மதித்தார் என்பதற்கு இது ஓர் அரிய எடுத்துக்காட்டு அல் லவா? 30.9.1944 அன்று கடைசியாக திராவிடஸ்தானை யும், பாகிஸ்தானையும் ஒன்றாகக் கருதியது தப்பு என்றும், அதன் தத்துவம் வேறு என்றும், இதன் தத்துவம் வேறு என்றும், அது முஸ்லீம்கள் மெஜாரிட்டி உள்ள இடத்திற்கு மாத்திரம் பொருத்த மானது என்றும், பிராமணீயம் இந்தியா முழுவதும் பொறுத்த விசயமென்றும் திராவிடஸ்தானில் தங்களையும் வேறு மாகாணங் களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னார் என்பதாகத் தெரிகிறது. எனவே இப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் கூறியதுபோல் மதச்சார்பற்ற மாநிலங்களைச் சேர்ந்தவை ஒன்றுபடச்சேர்ந்து தேர்தலைச் சந்திப்பது அவசிய மாகும்.

- அ.இனியன், பத்மநாதன், ஈரோடு

Read more: http://viduthalai.in/page7/73092.html#ixzz2pQtyXKWH

தமிழ் ஓவியா said...


ராமபக்தர்களின் பொது ஒழுக்கம், இது தான்

டில்லி போட்கிளப் மைதானத்தில் பாரதிய ஜனதாவும் - விசுவ இந்து பரிஷத்தும் சேர்ந்து நடத்திய பேரணிக்கு வந்த ராமபக்தர்கள் அனை வரும் புதுடில்லி ரயில் நிலையத்துக்கு வந்தனர். யார் யாரோ ரிசர்வ் செய்த பெட்டிகளில் - தங்கள் பெட்டி படுக்கைகளுடன் ஏறி உட்கார்ந்து கொண்டனர். உட்கார்ந்து கொண்டு முன்கூட்டியே பதிவு செய்தவர்கள் உள்ளே வராதபடி கதவுகளை இழுத்து மூடிக் கொண்டனர்.

முன்பதிவு செய்த ஏராளமான பயணிகள், டிக்கட் இருந்தும், ரயிலில் ஏற முடியவில்லை. உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தைக் கூறலாம். ஒரு குடும்பத்தினர், டில்லியிலிருந்து கோரக்பூர் செல்ல வைஷாலி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்கூட்டியே டிக்கட் பதிவு செய்தனர். பதிவும் உறுதியானது; குடும்பத்துடன் ரயில் நிலையம் வந்தனர். ரயில் நிலையம் முழுவதும் காவி உடை, ராம் ராம் முழக்கங்கள். பதிவு செய்யப்பட்ட பெட்டிக்கு சென்றால் - உள்ளே எல்லா இருக்கைகளிலும் ராமபக்தர்கள் முன் பதிவு செய்த அந்தக் குடும்பத்தினர் ஏற முடியவில்லை. கதவு சாத்தப்பட்டு விட்டது. காவல்துறையிடம் -பல பயணிகள் முறையிட்டனர். அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை; ரயில்வே அதிகாரிகளோ, வெளியே வராமல் பதுங்கியே விட்டனர். அன்று முழுவதும் டில்லியிலிருந்து புறப்பட்ட அத்தனை ரயில்களிலும் இது தான் நிலைமை. இன்று முன்பதிவு எதுவும் கிடையாது எல்லாமே ரத்து செய்யப் பட்டுவிட்டது என்று ராம பக்தர்கள் அனைவரும் உற்சாகமாகக்கூறி மகிழ்ந்து வந்தனர்.
-- டைம்ஸ் ஆப் இந்தியா ஏப்.6 1991

பாரதிய ஜனதா, விசுவ இந்து பரிஷத் அமைப்புகள் தான் ஒழுக்கமானவை; கட்டுப்பாடானவை என்றெல்லாம் பார்ப்பன ஏடுகள் பிரச்சாரம் செய்கின்றன. இவர்களின் பொது ஒழுக்கத்துக்கு. இது ஒரு சிறு உதாரணம்

Read more: http://viduthalai.in/page8/73094.html#ixzz2pQuSS7jU

தமிழ் ஓவியா said...


திண்டிவனத்தில் உணவு விடுதியில் பிராமணாள் பெயர் ஒழிந்தது! மாவட்டக் கழகம் எடுத்த முயற்சிக்கு வெற்றி!


திண்டிவனம் ஜன.4- திண்டிவனத்தில் உணவு விடுதி ஒன்றில் பிராமணாள் கபே என்று விளம்பரப் பலகை இடம் பெற்றி ருந்தது. திராவிடர் கழக மாவட்டப் பொறுப்பாளர்களும் கழகத் தோழர்களும் மேற்கொண்ட உடனடி முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. பிராமணாள் கபே என்ற பெயரை நீக்கி விட்டார்.

இதன் விவரம் வருமாறு:

திண்டிவனம் விழுப்புரம் நெருஞ்சாலையில் பேரணி கூட்டுப் பாதையில் பிராமணாள் ஓட்டல் கபே என்று விளம்பர பலகை வைத்து உணவு விடுதி நடத்தப்பட்டு வந்ததை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் பேருந்தில் வரும்போது பார்த்துவிட்டு வந்து மாவட்ட செயலாளர் நவா. ஏழுமலை அவர்களிடம் கூறினார். இதைக் கேள்விப்பட்டதும் மயிலம் ஒன்றிய செயலாளர் க. அன்புக்கரசனிடம் தொடர்பு கொண்டு பேரணி கூட்டுச் சாலையில் பிராமணாள் ஓட்டல் கபே விளம்பர பலகை வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வந்து உள்ளது. உடனே சென்று பார்க்கவும் என்று கூறியதும் ஒன்றிய செயலாளர் அன்புக்கரசன் அங்கு சென்று பார்வையிட்டு அந்த விளம்பர பலகையை நிழற்படம் எடுத்துக் கொண்டு வந்து காண்பித்தார். உடனே மாவட்ட செயலாளர் நவா ஏழுமலை தலைமை நிலையத்தோடு தொடர்பு கொண்டு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களிடம் தகவல் கூறப் பட்டதும் உடனடியாக நிறைய கழகத் தோழர்களோடு அங்கு சென்று உணவு விடுதி மேலாளரிடம் சென்று நம்முடைய கருத்தைக் கூறுங்கள் என்று கூறினார்.

உணவு விடுதி மேலாளர்

மாவட்டத் தலைவர் க.மு. தாஸ், மாவட்ட செயலாளர் நவா. ஏழுமலை, மாவட்ட ப.க. தலைவர் மு. கந்தசாமி, மாவட்ட இ.அணி தலைவர் மா. பன்னீர்செல்வம், மாவட்ட இ.அணி அமைப்பாளர் மு. ரமேஷ், நகர செயலாளர் சு. பன்னீர்செல்வம், மண்டல மாணவரணி தலைவர் தா. தம்பி பிரபாகரன் நகர துணைச் செயலாளர் ச. சனார்த்தனன், ஒன்றிய செயலாளர் உ. பச்சையப்பன், மயிலம் ஒன்றிய செயலாளர் க. அன்புக்கரசன், நகர ப.க. தலைவர் ஏ.ஆர். ஜெயமூர்த்தி ஆகியோர் ஒரு காரில் சென்று உணவு விடுதி மேளலாளரைச் சந்தித்து திராவிடர் கழக மாவட்டப் பொறுப் பாளர்கள் நாங்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு உங்கள் உணவு விடுதிக்கு பிராமணாள் ஓட்டல் கபே என்று விளம்பரப் பலகை வைத்துள்ளீர்கள் இது தமிழர்களை இழிவுபடுத்துவதாக உள்ளது. பெரியார் காலத் திலிருந்து பிரமணாள் என்ற வார்த்தையை உணவு விடுதிகளுக்கு வைக்கக் கூடாது என்று பல முறை போராட்டங்கள் நடத்தி வெற்றி பெற்றுள்ளோம். தமிழ்நாட்டில் எங்குமே இந்த பெயர் வைப்பது தடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கூட சிறீரங்கத்தில் ஒரு பார்ப்பனர் பிராமணாள் உணவு விடுதி என்று வைத்தார். உடனடியாக தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலையிட்டு ஒரு பொதுக் கூட்டம் நடத்தியதுமே உணவு விடுதியை மூடி விட்டு ஓடி விட்டார் என்று எடுத்துக் கூறினார்.

முயற்சிக்குக் கைமேல் வெற்றி

உணவு விடுதி மேலாளர் இந்த ஓட்டல் முதலாளி வெளி நாட்டில் உள்ளார் அவரிடம் தகவல் சொல்லி விட்டு இந்த விளம்பரப் பலகையை மாற்றி விடுவதாக உறுதி அளித்தார். அதோடு இந்த பலகையை வைத்ததற்கு காரணம் இந்த ஓட்டலுக்கு ஒரு பார்ப்பன சமையல்காரர் (மாஸ்டர்) வந்து வேலை செய்தார். அவர்தான் என்னுடைய முதலாளியிடம் பிராமணாள் ஓட்டல் கபே என்று பலகை வைத்தால் வியாபாரம் நன்றாக நடைபெறும் என்று கூறினார். அதன் அடிப் படையில்தான் இந்த விளம்பர பலகையை வைத்ததாகவும் மற்றபடி எங்களுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை என்றும் எங்களுடைய முதலாளி நாயுடு இனத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறினார். அதோடு உடனடியாக விளம்பர பலகை மாற்றி விடுவதாகவும் கூறியதை அடுத்து நாங்கள் வீடு திரும்பினோம். அந்த ஓட்டல் கும்பகோணம் டிகிரி காபி என்று பெயர் மாற்றம் செய்து விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது; உடனடியாக கழகம் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிட்டியது.

Read more: http://viduthalai.in/e-paper/73104.html#ixzz2pQuqFo9y

தமிழ் ஓவியா said...


அரசின் புது மருத்துவனையில் மருத்துவர் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு புறக்கணிப்பா? - தொல்.திருமாவளவன் போர்க் கொடி!


சென்னை, சன.4- சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் தொடங் கப்பட உள்ள தமிழ் நாடு அரசின் உயர் நிலை மருத்துவமனைக் குப் பேராசிரியர் உள் ளிட்ட பொறுப்புக ளுக்கு பணி நியமனத் தில் இடஒதுக்கீடு கிடையாது என்ற அதிமுக அரசின் செயல்பாட்டைக் கண்டித்துப் போர்க் கொடி உயர்த்தியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமா வளவன். அரசினர் தோட்ட வளா கத்தில் தலைமைச் செயலகத் திற்கென எழுப்பப்பட்ட கட்ட டத்தில் தற்போது அரசு பொது மருத்துவமனை இயங்கவிருப்பது அனைவரும் அறிந்ததே. அம் மருத்துவமனையில் பணியாற் றுவதற்குரிய மருத்துவர்களைத் தேர்வு செய்ய தமிழக அரசு அறிவிப்புச் செய்துள்ளது. அப் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாது எனவும் அரசு அறிவித்திருப்பது பெரும் அதிர்ச் சியாகவுள்ளது.

பெரியார், அண்ணா வழியில் வந்த அதிமுக தலை மையிலான அரசு சமூகநீதிக்கு எதிரான முடிவை எடுத்திருப்பது வியப்பை யும் வேதனையையும் அளிக் கிறது. தாழ்த்தப் பட்டோர், பழங் குடியினர், பிற்படுத்தப் பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப் பட்டோர் ஆகிய ஏழை எளியவர் களுக்குக் காலம் காலமாய் மறுக்கப் பட்ட நீதியை வழங் கிட உருவாக்கப்பட் டுள்ள ஒரு வாய்ப் புத்தான் இடஒதுக்கீடு என்னும் நடைமுறையாகும். மகாத்மா ஃபூலே, புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற மாமனிதர்களின் பங் களிப்பால் வென்றெடுக்கப்பட்ட சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் சதி முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதனை எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது. தமிழக அரசு உட னடியாக இந்த முடிவைக் கைவிட வேண்டுமென விடுதலைச் சிறுத் தைகள் கேட்டுக்கொள்கிறது.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பொருளாதார அடிப்படையில் பின்தங்கியோருக்கும் இட ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பித்தபோது தமிழக மக்கள் அதனை ஏற்கவில்லை. அப்போது நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக வாக்களித்து தமது கடுமையான எதிர்ப்பை வெளிப் படுத்தினர் என்பது வரலாறாகும். இதனை இன்றைய அதிமுக அரசிற்கு நினைவூட்டுவது விடு தலைச் சிறுத்தைகளின் கடமை யெனக் கருதுகிறோம். தமிழகத் தில் சமூகநீதியை நிலைநாட்ட, மருத்துவர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்த, அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து தமிழக அரசை வற்புறுத்திட முன்வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமது அறிக்கையில் பெரி யாரும், அண்ணாவும் உலவிய மண்ணில், சமுதாய ஆதிக்க மனப் பான்மையுடன் முதல் அமைச்சர் நடந்து கொள்வதைக் கண்டித் துள்ளார்.

மருத்துவர் ச. இராமதாசு

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசும் அ.இ.அ.தி.மு.க. கட்சியின் சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கையை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார். வழக்கமான நடைமுறையைக் கடைப்பிடிக்காவிட்டால் பா.ம.க. போராட்டம் நடத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/73107.html#ixzz2pQuzdEnz

தமிழ் ஓவியா said...


சிந்திக்கவேண்டும்


சமஸ்கிருதத்தினால் தமிழர்களும், தமிழ்நாடும் இன்று என்ன நிலைமைக்குத் தாழ்ந்து தொல்லையும், மடமையும், இழிவும் அனுபவிக்கிறோம் என்பதைச் சிந்திக்கவேண்டும்.
_ (விடுதலை, 5.8.1963)

Read more: http://viduthalai.in/page-2/73110.html#ixzz2pQvdztel

தமிழ் ஓவியா said...


சிங்கப்பூரில் கற்ற பாடங்கள்! - கி.வீரமணி


சிங்கப்பூரின் வாடகைக் காரோட்டி களும், எவ்வளவு நாணயமும் ஒழுங்கும் உள்ளவர்களாக இருக்கிறார்கள்; அங் குள்ள காவல்துறையினர் பயணிகளிடம் புகார்களை எந்த நேரத்திலும், தொலை பேசியிலேயே வாங்கி பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுத்து, காலந் தாழ்த்தாமல் இழந்தவைகளை, கண்டு பிடித்து உரியவர்களிடம் திருப்பிக் கொடுக் கும் வியத்தகு அணுகுமுறைகளை கையாளுகின்றனர் என்பதை நேற்று (3.1.2014) சிங்கப்பூரில் நேரில் அனுபவத் தில் கண்டு மகிழ்ந்ததை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எத்தனையோ முறை சிங்கப்பூருக்குச் சென்றுள்ளேன் என்றாலும் இதற்கு முன் எப்போதும் நிகழாத எனது கவனக் குறைவு காரணமாக டாக்சியில் - வாடகை உந்தில் நிகழ்ந்தது. அதனால் பல நல்ல உண்மைகளை இதற்கு முன் பலர் மூலம் கேட்டறிந்ததை படித்தறிந் ததை நேரிலேயே நானே பார்த்து உணரும் வாய்ப்பு ஏற்பட்டது.

லிட்டில் இந்தியா செராங்கூன் சாலைப் பகுதி தேக்கா என்றெல்லாம் அழைக்கப்படும் நமது வணிகர்கள் பெரி தும் வாணிபம் புரியும் பகுதியில் உள்ள நண்பர் இலியாஸ் கடைக்கு, நான் எப்போ தும் வழமையாகச் சென்று அவரையும் அவரது வாழ்விணையர், அக்கடையில் பணிபுரியும் (சங்கம் டெக்ஸ்டைல்ஸ்) தோழர்களையும் சந்தித்து, நலம் விசா ரித்து, உரையாடிவிட்யடு, அவர் மூலம் பல பழைய நண்பர்களுடன் உரையாடியும், திரும்புவது உண்டு. நேற்று மாலை சுமார் 6.30 மணி அளவில் சென்று, பேசிக் கொண்டிருந்து விட்டு, கவிதா இல்லத்திற்குத் திரும்ப அங்கிருந்து ஒரு டாக்சி பிடித்துத் திரும்பினோம்- சுமார் மாலை 7.30 மணிக்குத் திரும்பினோம்.

வாடகைக் காருக்குரிய கட்டணத்தை நான் செலுத்த முயன்றதை முந்திக் கொண்டு எனது மகள் கவிதா ஓட்டுநரிடம், வீட்டருகில் இறக்கிவிடும் போது கொடுத்து விட்டார்; நான் எனது முழுக்கால் சட்டை பேண்ட் பையிலிருந்து எனது மணிப் பர்சை வேலட்டை எடுத்து மீண்டும் அதில் வைப்பதாக எண்ணி அதை அந்த டாக்சியில் பின் சீட்டிலேயே தெரியாமல் விட்டு விட்டேன்; அல்லது பையிலிருந்து வழுவி நழுவி இருக்கலாம். இறங்கி வீடு வந்து சேர்ந்து, உடைமாற்றியபோது எனக்கு அதிர்ச்சி...! வேலட்டை காணவில்லை. உடனே நினைவூட்டிப் பார்த்தேன். வீட்டிற்கு இறங்கும்போது கையில் எடுத்ததை நன்கு நினைவூட்டிக் கொண்டு, மகளிடம் கூறினேன்.

உடனே கவிதா, அப்பாஒன்றும் கவலைப்படாதீர்கள். நான் உடனே புகார் செய்கிறேன். பெரிதும் அங்கு கிடைத்தால் நம்மிடம் திருப்பிகொடுத்துவிடுவார்கள் என்று கூறி, தொலைப்பேசியில் காவல் துறையின் அதிகாரியை அழைத்து, விவரங்களைக் கூறி, புகார் பதிவு செய்தார். இது இரவு 8.15 மணியாகும். அவர்கள் உடனடியாக புகாரைப் பதிவு செய்து கொண்டு அதற்குரிய எண்ணைத் தந் தார்கள் - தொலைப்பேசி எண்ணையும் தந்தார்கள். இதில் குறிப்பிட வேண்டிய மற்றொரு பாராட்டத்தக்க அம்சம் என்ன தெரியுமா? உடனே பதிவு செய்து கொண்டு, புகார் என்பதை இந்த தொலைப்பேசியில் நீங்கள் அழைத்து நிலவரத்தை விசாரிக்க லாம் என்று இரண்டு தொலைப்பேசி எண்ணைத் தந்தார்கள் காவல் துறையினர்.

ஒன்று அலுவலக நேர எண். மற் றொன்று அலுவலக நேரத்திற்கு அப்பால் எந்த நேரத்திலும் விசாரிக்க வாய்ப்பாகும் எண். என்னே அற்புதமான காவல்துறை ஏற்பாடு! அவர்கள் விசாரித்தபோது கவிதா, கீழ்க்காணும் தகவல்களை மட்டும் தான் கூறினார்,

தமிழ் ஓவியா said...


1) மஞ்சள் நிற டாக்சி (அதன் எண் தெரியாது)

2) அந்த ஓட்டுநர் பெயர் ஏதோ அப்துல்லாவோ என்னவோ!

3) புறப்பட்ட நேரம், இறங்கிய நேரம்

4) புறப்பட்ட இடம் இறங்கிய வீட்டு முகவரி இவை தான் உள்ளன.

5) வேலட் கறுப்புநிறம் அதில் இருந்த கொஞ்சம் சிங்கப்பூர் பணம், சென்னை முகவரி கார்டுகள்.

சிங்கப்பூரில் தங்கியிருக்கும் முகவரி கார்டு இல்லை.

நாங்கள் வீட்டில் எங்கள் பணிகளை கவனித்துக் கொண்டிருந்தோம். (எங்கே கிடைக்கப் போகிறது நாம் சரியான தகவல்களை டாக்சி எண் - நமது முகவரி எதுவும் இல்லையே என்று நினைத்தேன்)

சரியாக இரவு 9 மணிக்கு (அதாவது புகார் கொடுத்த 30 நிமிடங்களில்) தொலைப்பேசி அழைப்பு உங்கள் வேலட் - மணிப்பர்சு கிடைத்துவிட்டது. அந்த டாக்சி யின் எண் இது. அந்த டாக்சி ஓட்டுநரிடம் உள்ளது. அவர் உங்கள் முகவரிக்கு வந்து கொடுக்க வேண்டுமா? அல்லது நாளை அந்த டாக்சி நிறுவனத்திடம் நீங்கள் நேரில் சென்று பெற்றுக் கொள்ளுகிறீர்களா? என்று கேட்டு, அப்படி அவர் உங்கள் வீட்டுக்கு வந்து கொடுக்க வேண்டுமெனில், அவர் எந்தப்பகுதியிலிருந்து வருகிறாரோ அந்தக்கட்டணம் (மீட்டர்படி) நீங்கள் கொடுக்க இசைந்தால் அவரை வரச் சொல்லுகிறோம் என்று காவல் துறையினர் கேட்டனர்.

வீட்டிற்கே வந்து கொடுக்கச் சொல்லி கட்டணம் தர இசைவுதந்தோம்.

உடனே அந்த ஓட்டுநர் தொலைப்பேசி யில் சற்று நேரம் கழித்து அழைத்து இரவு 10.30 மணிக்கு வந்து பொருளை ஒப்படைப்பதாகக் கூறினார்!

ஆனால் அவர் இரவு 10.15 மணிக்கே எங்கள் இல்லம் அருகில் வந்து ஒப்படைத்து. எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள் என்றார். நானும் மாறனும் சென்று அதனைப் பெற்று, அவருக்கான பயணக் கட்டணத்தைச் செலுத்தியதோடு, ஆழ்ந்த நன்றியை அவருக்குத் தெரிவித்தோம். அதற்கு மேல் 10 சிங்கப்பூர் வெள்ளியை அவருக்குப் பரிசாக அளித்தோம். அவர் பெயர் அமானுல்லாகான் என்று அறிந்தோம்; அவர் சிங்கப்பூர் - மலாய் கார இஸ்லாமியர்.

சிங்கப்பூர் காவல் துறையின் ஒத்து ழைப்பையும், எவ்வளவு சிறப்பான அரசு உள்ளது என்பதையும் அனுபவத்தில் கண்டு உணர்ந்து, வியக்கும் வாய்ப்பும், இந்த எனது கவனக்குறைவு காரணமாக எற்பட்ட நன்மையான அனுபவமும் எனக்குக் கிடைத்தது. அதனால் பெற்ற பாடங்களும் உண்டு.

1) வெளிநாடுகளில் வெளியூர்களில் டாக்சிகளின் அவற்றின் எண்களைக் குறித்து வைத்துக்கொள்ளுதல் அவசியம்.

2) நமது மணிப்பர்சு களில் முகவரி அட்டை கார்டு ஒன்று உள்ளூர் தங்கும் முகவரி, தொலைப்பேசி எண்ணையும் எழுதி அதில் சொருகி வைத்திருப்பதும் அவசியம்.

3) இவற்றிற்கெல்லாம் மேலாக, நம் நாட்டில் இப்படி ஒரு காவல்துறை ஒத் துழைப்பு (தொலைப்பேசியிலேயே புகார் கூறி கூறிய 30 நிமிடங்களில் தொலைந்த பொருள் மீட்டப்பட்டதையும் எளிதில் பார்க்க முடியுமா என்ற வேதனையும், வருத்தமும் மிச்சம்.

(நமது நாட்டிலும் பல நேர்மையான ஓட்டுநர்கள் உண்டு என்றாலும், அங் குள்ள ஏற்பாடு எவ்வளவு விஞ் ஞான பூர்வமாக உள்ளது என்பது அறிய மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதல்லவா?)

4) என்னிடம் இருந்தது ஒன்றும் பெரிய தொகை அல்ல என்றாலும், கவனக் குறைவு எவ்வளவு பேருக்குத் தொந்தர வும் அவசியமற்ற மனஉளைச்சலையும் தந்தது. இனி தவிர்க்கப்படல் வேண்டும்.

புத்தி கொள்முதலுக்கு 30 சிங்கப்பூர் வெள்ளியை விலையாகக் கொடுத்தேன்.

Read more: http://viduthalai.in/page-2/73112.html#ixzz2pQwX6O56

தமிழ் ஓவியா said...

காலித்தனமும் வட்டி சம்பாதிக்கின்றது

சென்னை கடற்கரையில் பார்ப்பனரல்லாதாரால் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் கதர் இலாகா காரியதரிசி ஸ்ரீ எஸ். ராமநாதன் அவர்கள் பகிஷ்காரப் புரட்டைப்பற்றி பேசிக் கொண்டிருக்கையில் காங்கிரசு வீரப்புலிகள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்கள் திருட்டுத்தனமாக கூட்டத்தின் மத்தியில் இரண்டு செருப்புகளை வீசி எறிந்துவிட்டு ஓடிப்போய் விட்டார்கள் என்றும் அந்தச் செருப்புகள் ஏலம்போடப்பட்டனவென்றும் கேள்விப்பட்டோம். ஆனால் அடுத்த சில தினத்தில் அதே கடற்கரையில் பார்ப் பனர்களால் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் பல பார்ப்பனரல் லாதார்களைக் கூலிக்குப் பிடித்துக் கொண்டு போயிருந்துங் கூட கல்லும் செருப்பும் பறந்ததோடு கலகமும் அடிதடியும் காயமும் ஏற்பட்டு விட்டதாம்: காங்கிரசுகாரர்கள் தாங்கள் தான் மிக புத்திசாலிகள் என்பதாக கருதி காலித்தனத்தை ஆரம்பித்து விடுகிறார்கள். இதனால் அந்த சமயம் வெற்றி கிடைத்ததுபோல் காணப்பட்டாலும் வட்டியுடன் திரும்பவும் அனுபவித்து விடுகின்றார்களேயொழிய இதுவரை ஒரு இடத்திலாவது தப்பித்துக் கொண்டதாகச் சொல்வதற்கே இல்லை.

பகிஷ்கார இயக்கப் பிரச்சாரத்திற்கு ஸ்ரீ சத்தியமூர்த்தி தலைவராகி விட்டார், ஸ்ரீ வரதராஜுலு வாலராகிவிட்டார். மற்றபடி ஸ்ரீமான்கள் குழந்தை, ஓ. கந்தசாமி செட்டியார், பஷீர் அகமது முதலியவர்களுக்குள்ளாகவே தேசபக்தி அடங்கிவிட்டது. இவர்கள் போகும் கூட்டங்கள் முழுவதும் இந்தக் கதியையே அடைந்து வருகின்றன. பிரச்சாரத்திற்கு என்று காங்கிரஸ் நாடகத்தில் மீதியான ரூபாயில் 5000, 6000 ரூபாய்களை எடுத்து வீசி எறிகின்றார்கள். இந்த ரூபாய் களுக்காக எப்போதும் கூட்டங்கள் கூடிக் கொண்டே இருக்கின்றன. இது எங்குபோய் முடியும் என்பது மாத்திரம் விளங்கவில்லை.

ஸ்ரீமான் வரதராஜுலு பேச ஆரம்பித்தவுடன் கலகம் ஏற்பட்டதென்றும், அடிதடிகள் நடந்ததென்றும் பொது ஜனங்கள் அவரைப் பேசவிடாமல் உட்காரச் செய்து விட்டார்கள் என்றும் பத்திரிகைகளில் காணப்படுகின்றன. பொது ஜனங்களால் இந்த யோக்கியதை பெற்ற ஸ்ரீ வரதராஜுலு அவர்கள், ராமசாமி நாயக்கர் சர்க்கார் பிரச்சாரம் செய்கின்றார் என்று எழுதுகின்றார், பேசுகின்றார், வாசகர்களைச் சுத்தமுட்டாள்கள் என்றும் எதையும் நம்பிவிடுவார்கள் என்றும் எண்ணிக் கொண்டு இம்மாதிரி தந்திரங்களைச் செய்கின்றார்.

அப்படியே நாயக்கர் சர்க்கார் பிரச்சாரம் செய்வதாக வைத்துக் கொண்டாலும், பார்ப்பனப் பிரச்சாரத்தைவிட சர்க்கார் பிரசாரம் எத்தனையோ மேலான தென்பதை இவரே பலதடவை உணர்ந்திருந்தும் பேசியிருந்தும் இன்று மாத்திரம் ஸ்ரீ வரதராஜுலுக்குப் பார்ப்பனப் பிரசாரம் இவ்வளவு பயனளிக்கக் கூடியதாகி விட்டதின் இரகசியமென்ன?

ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார் தலைமையும், இரங்கசாமி அய்யங்கார் காரியதரிசித் தன்மையும் ஒழிந்த பிறகு ஸ்ரீமான்கள், சத்திய மூர்த்தி அய்யரின் தலைமையும் வரதராஜுலுவின் காரியதரிசித் தன்மையும் இவ்வருஷம் முழுவதும் தாண்டவமாடக்கூடும். இனி, இவர் தலைமையில் அவர் பிரசங்கமும் அவர் தலைமையில் இவர் பிரசங்கமும் மாறி மாறி நடந்ததாக பத்திரிகை கலங்கள் நிறையக் கூடும். ஆனாலும் நம்புவதற்குதான் இனி தமிழ் நாட்டில் ஆட்கள் கிடையாது என்பதும் அவர்களுக்கே தெரிந்துவிட்டது.

ஆனாலும் ஜனங்களின் முட்டாள் தனத்தில் அவர்களுக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கின்றது. பொது ஜனங்கள் சீக்கிரம் இவர்களுக்குப் புத்தி கற்பிப் பார்களாக.
- குடிஅரசு - (துணைத் தலையங்கம் - 05.02.1928)

Read more: http://viduthalai.in/page-7/73120.html#ixzz2pQxtsQ7p

தமிழ் ஓவியா said...

உஷார்! உஷார்! மண்டையிலடியுங்கள்

சென்னையில் பார்ப்பனியத்தைப் பரப்புவதற்கு ஒரு புதிய ஸ்தாபனம் சமீபத்தில் பார்ப்பனர்களால் உண்டாக்கப்பட்டிருக்கின்றது. அதுதான் கிராமப் புணருத்தாரண வேலை ஸ்தாபனம். நண்பர்களே இந்தப் பெயரைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள். கொஞ்ச காலத்திற்கு முன்பு ஸ்ரீமான்கள் நேரு, சீனிவாசய்யங்கார், சீனிவாச சாஸ்திரியார் போன்றவர்கள் ஒன்று சேர்ந்து இந்திய அய்க்கிய ஒற்றுமை சங்கம் என்பதாக ஒன்றை ஸ்தாபித்தார்கள். அதில் வகுப்பு உணர்ச்சி உள்ளவர்களை சேர்ப்பதில்லை என்றும் நிபந்தனை போட்டார்கள். அது நமது தமிழ் நாட்டிற்குள் வராதபடி மண்டையிலடித்து கொல்லப்பட்டுப் போய்விட்டது.

அதுபோலவே இப்போது மறுபடியும் முயற்சி எடுத்து கிராம புனருத்தாரணம் என்னும் பெயரில் சென்னையில் ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கு மெம்பர்கள் ஸ்ரீமான்கள். சர்.சி.பி. ராமசாமி அய்யர், மோதிலால் நேரு, ஏ. ரங்கசாமி அய்யர், கேல்கர், பட்டாபி சீதாராமய்யர், பி. சிவராவ், டாக்டர் பெசண்டு, அருண்டேல், ரங்கநாத முதலியார் போன்றவர்களே. இது பிரம்மஞான சங்கத்தினர் வாலைப்பிடித்து ஆரம்பித்த புதிய சூழ்ச்சியேயாகும்.

தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாதார் நன்மைக்குக் கொடிய எதிரியாக பிரம்மஞான சங்கம் விளங்குகின்றது. அச்சங்கத் தலைவர் ஸ்ரீமதி பெசண் டம்மைக்கு உள்ள பணமும் செல்வாக்கும் அடையாறு பிரம்மஞான சங்கத் தோற்றமும் அநேக பார்ப்பனரல்லாதார்களையும் மூடர்களாகவும் இனத் துரோகி களாகவும் ஆக்கி அச்சங்கத்திற்குப் பலிகொடுத்திருக்கிறது. இதைப்பார்த்து யாரும் ஏமாந்து விடக் கூடாது என்றும், இப்புதிய சூழ்ச்சியில் யாரும் சிக்கி அதற்கு ஆளாகக் கூடாது எனவும் எச்சரிக்கை செய்து பணிவாய் வேண்டிக் கொள்கிறோம்.
- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 25.03.1928

Read more: http://viduthalai.in/page-7/73120.html#ixzz2pQy10y85

தமிழ் ஓவியா said...


கேப்டன் தொலைக்காட்சியில் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன்


கேப்டன் தொலைக்காட்சியில் மக்கள்கேள்வி என்ற பகுதியில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பங்குகொள்ளும் நிகழ்வு இன்று (4.1.2014) பிற்பகல் 1.30 மணியளவில் ஒளிபரப்பாகியது. மறு ஒளிபரப்பு இன்று இரவு 7 மணியளவில் ஒளிபரப்பாகும்.

இதன் தொடர்ச்சியாக நாளை (5.1.2014) பிற்பகல் 1.30 மணிக்கும், அதன் மறு ஒளிபரப்பு இரவு 7 மணிக்கும் ஒளிபரப்பாகும்.

Read more: http://viduthalai.in/page-8/73126.html#ixzz2pQyhEFiP

தமிழ் ஓவியா said...


கழகத்தின் இந்தப் புரட்சிக்கு ஈடு ஏது? பாடையை சுடுகாடு வரை தூக்கிச் சென்று கழகப் பெண்கள் புரட்சி!


திருவாரூர், ஜன.5- சுடுகாடு வரை பாடையைத் தூக்கிச்சென்று கருஞ்சட்டை மகளிர் அணியினர் புரட்சி செய்தனர்.

உலகில் எத்தனையோ சமூக அமைப் புகள், கட்சிகள் தோன்றியிருக்கலாம்; கிடுகிடுக்க வைத்த கம்யூனிஸ்டுக் கட்சி கள் உலகின் பல பாகங்களை அதிர வைத்துள்ளன.

ஆனால், சமுதாய அடித்தளத்தையே புரட்டிப் போடும் பூகம்பக் கரங்களைக் கொண்ட புரட்சி இயக்கமாம் திராவிடர் கழகத்திற்கு இணை ஏது? கருஞ்சட்டைப் பாசறைக்கு ஈடு ஏது?

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்று கேட்ட காலத்தைக் கழுவிலேற்றிய இயக்கம் ஏது?

இருட்டுப் பூச்சிகளாய், ஜன்னல் களையே காணாதவர்களாய், வெளிச்ச மத்தாப்புகளையே காணாதவர்களாக ஆக்கப்பட்ட, வயதுக்கு வந்த பெண்களை நீயும் மானுடத்தின் ஒரு கூறு - கூண்டை விட்டுவெளியே வா பெண்ணே!

என்று குரல் கொடுத்து கல்விக் கண்களைத் திறந்து உத்தியோகப் படிக்கட்டுகளை மிதிக்கச் செய்து கணவன் கையைப் பார்த்து நத்தி வாழவேண்டிய நயவஞ்சக சமூக அமைப்பின் வேரை நசுக்கி எறிந்து, பொருளீட்டும் புதிய பொருளாதாரக் கணக்கையும் திறந்து, ஆணுக்குப் பெண் சமானம் என்ற சரித்திரத்தைச் சமைத்தது தந்தை பெரியாரின் இந்த இயக்கம் அல்லவா!

தொட்டிலை ஆட்டும் கை தொல் லுலகை ஆளும் கை என்று புரட்சிக்கவி ஞரைப் பாட வைத்ததும் இந்தப் பகுத்தறிவு இயக்கம்தான்.

தாலி பெண்களுக்கு வேலி என்பதைக் காலி செய்த கருத்துக் கனலையும் தந்தது இந்த இயக்கம்தான்.

மாவோ செய்யாத மகத்தான புரட்சி களையெல்லாம் செய்துகாட்டி வருகிறோம். விதவைப் பெண்களுக்குப் பூச்சூட்டு விழாவை நடத்திக் காட்டியாயிற்று.

அடக்கம் பெண்களுக்கு அணிகலன் என்று சொன்னது அரும் பண்புக்காக அல்ல - அடங்கிக் கூனிக் கிடக்கும் ஒரு மனப்பான்மையை அவர்களின் ஆழ்மனத் தில் ஊன்றவேதான்.

ஆண் - பெண் வேறுபாடு தெரியாத ஆடையை அணிவீர்; பெயர்களில்கூட பால் வேறுபாடு தேவையில்லை என்று பளிச்சென்று சொன்னவரும் நம் பகுத்தறிவுப் பகலவன் பெரியாரே!

தந்தை செத்தாலும் சரி, தாய் செத்தாலும் சரி, மணாளன் செத்தாலும் சரி, மகன் செத்தாலும் சரி, ஒரு பெண் சுடுகாடுவரை செல்ல முடியுமா?

இந்த இரும்பு வேலிகளையெல்லாம் நொறுக்கிய இலட்சியத் தீபத்தை ஏந்தி நிற்கும் இனமானப் பெரும்படைதான் திராவிடர் கழகம்.

இதோ பாருங்கள், எங்கள் கருஞ் சட்டை மகளிர் அணியினரை.

திருவாரூர், திராவிடர் கழகத் தீரர் களின் கோட்டை ஆயிற்றே! நகர கழகத் துணைத் தலைவர் தியாகத்தீயில் புடம் போட்ட கருப்புத் தங்கம் அறிவுக்கண்ணு அவர்கள் மறைந்தார் - அந்த வட்டாரமே துக்கத்தின் பிடியில் சிக்கி விம்மியது என்றாலும், தவிர்க்க முடியாததை ஏற்கத்தானே வேண்டும்.

அவருடைய இறுதி ஊர்வலம் எப்படிச் சென்றது தெரியுமா? திருவாரூரே தம் கண்களை அகலத் திறந்து உண்மையா? நம்ப முடியவில்லையே? இப்படிக்கூட நடக்குமா? என்று அந்த ஒரு நிமிடம் நிலைகுலைந்தே போனார்கள்.

ஆம், அந்தக் கொள்கை வீரரின் பாடையை, பெண்களே சுடுகாடுவரை தூக்கிச் சென்று, காலம் காலமாய் கட்டிப் போட்டு வந்த அந்த ஆணாதிக்க அடக்கு முறை சமூக அமைப்பின் கட்டை உடைத்து, அதனைச் சுடுகாட்டிலே எரித்துவிட் டார்களே!

இதற்கு முன்பும் திருவரங்கம் பெரியார் பெருந்தொண்டர் கோ.பாலு, மயிலாடு துறை நகர கழகத் தலைவர் ந.தியாகராச னின் அன்னையார் மறைந்தபோது இந்தப் புரட்சியை நடத்திக் காட்டினர்.

பெரியாருக்குப் பின் திராவிடர் கழகம்? கேள்வி கேட்போரே! இந்தச் செயல்களைப் பார்த்த பிறகாவது, கோணல் வாயை மூடிக் கொள்க!

திருவாரூர் கருஞ்சட்டை சகோதரி களே! உங்கள் செயலுக்கு ஒரு வணக்கம் - உங்களால் திருந்தட்டும் பழைமைச் சமூகச் சழக்குகள்!

Read more: http://viduthalai.in/e-paper/73137.html#ixzz2pWwIhQC1

தமிழ் ஓவியா said...


தாழ்த்தப்பட்டோரே, பிற்படுத்தப்பட்டோரே உங்களுக்குத் தகுதி இல்லையாம்!

சமூக நீதிக் கொள்கையில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி சாதாரணமாக விழவில்லை; தந்தை பெரியார் சொல்லுவதுபோல தடுக்கி விழுந்தவன் அரிவாள் மணையில் விழுந்தது போல அல்லவா விழுந்திருக்கிறது!

அக்கட்சியின் அதிகாரபூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். (பக்கம் 4) இடஒதுக்கீட்டுக்கு இன்னல் என்றால் பொறுக்க மாட்டோம் என்று பொங்கு கிறாரே கருணாநிதி? என்று பெட்டிச் செய்தியை வெளியிட்டுள்ளது.

எதற்கெடுத்தாலும் கருணாநிதி கருணாநிதி என்ற காமாலைக் கண்ணனின் (Phobia) பார்வை தானா?

சமூக நீதியைப் பற்றி கலைஞர் பேசக் கூடாதா? அய்ந்து முறை முதல் அமைச்சராக இருந்தவருக்கு இல்லாத அக்கறையா இவர்களுக்கு?

சமூகநீதியில் சரித்திரம் படைத்தவராயிற்றே! இது சூத்திரர்களுக்கான அரசு என்று சட்டப் பேரவை யிலேயே முழங்கிய முத்தமிழ் அறிஞர் ஆயிற்றே! கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை என்றால் வக்கணையாக எழுதுவதால் என்ன பயன்?

கலைஞர் மட்டுமா கண்டித்துள்ளார்? முதல் அறிக்கையை திராவிடர் கழகத் தலைவர் வெளியிட்டார். தொடர்ந்து தமிழ்நாட்டில் கட்சித் தலைவர்கள் எல்லாம் கண்டனம் தெரிவித்துள்ளனரே!

உயிர் காக்கும் மருத்துவத்தில் அதுவும் பல் நோக்கு சிகிச்சை மய்யம் என்ற தலை சிறந்த விஞ் ஞானத் தரமான மருத்துவ சிகிச்சைக்கு இலக் கணம் வகுக்கின்ற ஓர் அமைப்பில் இட ஒதுக்கீட்டு முறை இடையூறாக அமைந்து விடக் கூடாது என்பதை மக்களின் ஆரோக்கியத்தில் அளவில்லா முன்னுரிமை அளித்துவரும் நம் அன்னைத் திருமக ளின் அரசு பரிசீலித்ததை ஏதோ இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தது போல கருணாநிதி இட்டுக் கட்டிய பித்தலாட்டத்தை அரங்கேற்றப் பார்ப்பது அவரது அரசியல் மோசடியையே காட்டுகிறது என்று எழுதுகிறது அதிமுக ஏடு?

இதன் மூலம் என்ன சொல்லப்படுகிறது? தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப் பட்டோருக்கும் இடஒதுக்கீடு அளித்தால் உயிர் காக்கும் மருத்துவம் செத்துப் போய் விடும் என்கிறார்களா?

உயிர்காக்கும் மருத்துவப் பணிகளுக்கு தாழ்த்தப் பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும் லாயக்கு அற்றவர்கள் என்கிறதா அ.இ.அ.தி.மு.க. ஏடு? இதுதான் இந்த ஆட்சியின் நிலைப்பாடா?

இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தால் தகுதி திறமை போய் விடும் என்று பார்ப்பனர்களிடம் இரவல் குரல் வாங்கி அம்மையாருக்காக வக்காலத்து வாங்குகிறதா அண்ணா தி.மு.க.?

இதுதான் அண்ணா கூறிய சமூக நீதியா? அண்ணா திமுக என்று பெயர் வைத்தால் மட்டும் போதுமா? இடஒதுக்கீட்டில் அண்ணாவின் கருத்து என்ன என்று தெரிந்து கொள்ளாதவர்கள் எல்லாம் அண்ணா பெயரைப் பயன்படுத்தலாமா? பெரியார் பெயரைப் பயன்படுத்தலாமா? திராவிட என்ற சித்தாந்தத்தின் குறியீட்டை வைத்துக் கொள்ளலாமா?

தாழ்த்தப்பட்ட மக்களே, பிற்படுத்தப்பட்ட மக்களே! உங்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தால் உயிர் காக்கும் மருத்துவத் தொழில் உருப்படாமல் போகுமாம் - உயிர் களைக் காக்கும் ஆற்றல், சக்தி உங்களுக்குக் கிடையாதாம்.

இதுதான் இன்றைய அ.இ.அ.தி.மு.க. ஆட்சி - புரிந்து கொள்வீர்!

Read more: http://viduthalai.in/e-paper/73140.html#ixzz2pWwTsbeb

தமிழ் ஓவியா said...


மோடி எனும் பேராபத்து! புத்ததேவ் சாடல்


கொல்கத்தா, ஜன.5-மோடி எனும் கொடி யவன் இந்த நாட்டின் முஸ்லிம் மக்களுக்கு மட்டும் எதிரி அல்ல; ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் மிகப் பெரிய ஆபத்து. அவர் அப்படிப்பட்ட ஒரு பேரழிவு கொடியானை திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் மேலும் மேலும் தூண்டிவிட்டு இன்னும் பேரழிவை தீவிரப்படுத்த முயற்சிக் கிறார்கள் என்று மேற்கு வங்க முன்னாள் முதல மைச்சரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான புத்ததேவ் பட்டாச் சார்யா கடுமையான வார்த்தைகளில் விமர்சித் தார்.

கொல்கத்தாவில் வெள்ளியன்று மாலை கணசக்தி நாளேட்டின் சார்பில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சி யில் பங்கேற்று புத்த தேவ் உரையாற்றினார். கணசக்தி என்பது மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வங்கமொழி நாளேடு ஆகும்.

மேற்கு வங்கத்தில் மோடிக்கு இடம் இல்லை

ராஜாராம் மோகன் ராய், மகாகவி ரவீந்திர நாத் தாகூர் முதல் அன்னை தெரசா வரை மக்களை கவர்ந்த சீர் திருத்தவாதிகளும், விடு தலை இயக்க வீரர்களும், தலைசிறந்த சமூக சேவர் களும் வாழ்ந்த மண் மேற்கு வங்கம் என்று குறிப்பிட்ட புத்ததேவ், இத்தகைய பூமியில் மத வெறி பிடித்த நரேந்திர மோடிக்கு ஒருபோதும் அனுமதியில்லை என்பதை மேற்குவங்க மக்கள் உரத்து முழங்கு வார்கள் என்றும் புத்த தேவ் பட்டாச்சார்யா கூறினார்.

எதிர்காலத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க அச்சாரம் போட்டுக் கொண்டிருக் கிறது மம்தாவின் திரி ணாமுல் கட்சி என்று விமர்சித்த புத்ததேவ், 2002ஆம் ஆண்டில் பாஜகவுடன் கைகோத் துக் கொண்டு அதன் தலைமையிலான அர சாங்கத்தில் அமைச்சர் பதவியும் வாங்கிக் கொண்ட கட்சிதான் திரிணாமுல் என்றும் சாடினார்.

இந்தியாவில் மோடியை முன்னிறுத்தியிருக்கும் மதவெறி ஆர்எஸ்எஸ் அமைப்பு, தங்களது கொள்ளை லாபத்தை மேலும் மேலும் அதிகப் படுத்திக் கொள்ள முயற் சிக்கும் பெரும் கார்ப்ப ரேட் கம்பெனிகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு நாட்டின் எதிர்காலத் துக்கு இதுவரை இல் லாத அளவிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்த முனைகிறது என்றும் புத்ததேவ் கூறினார். இது இந்தியாவின் வரலாற் றில் முன்னெப்போதும் இல்லாத ஒன்று என்று சுட்டிக்காட்டினார்.

தனது உரையின் போது மேற்கு வங்க முதலமைச்சர் மம் தாவின் நடவடிக்கைகள் குறித்து கேள்விக்கணை களை புத்ததேவ் எழுப் பினார். இந்தியாவின் நெருங் கிய அண்டைநாடும் மேற்குவங்கத்தோடு ஒட்டியுள்ளநாடுமான, வங்கதேசத்துடன் ஒரு நல்லுறவை பேணுவதில் மம்தா பானர்ஜி மோச மான முறையில் நடந்து கொள்கிறார்;

ஆனால் அதே நேரத்தில் வங்க தேசத்தில் அமைதியை சீர்குலைக்க முயல்கிற பாகிஸ்தானின் சதி களுக்கு துணைபோகும் விதத்தில் இங்குள்ள பாகிஸ்தான் தூதரோடு மம்தா பானர்ஜி சந்திப்பு களை நடத்துகிறார். இது இந்தியாவின் நலன் களுக்கு குறிப்பாக மேற்குவங்கத்தின் நலன்களுக்கு எதிரானது என்று புத்ததேவ் கூறினார்

Read more: http://viduthalai.in/e-paper/73139.html#ixzz2pWwenOaO

தமிழ் ஓவியா said...


ஓர் முக்கியத் திருத்தம்

சிங்கப்பூரில் கற்ற பாடங்கள் என்ற தலைப்பில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேற்று எழுதிய வாழ்வியல் சிந்தனை என்ற கட்டுரையில்,

என் மகள் கவிதா தொலைபேசியில் காவல்துறைக்குப் புகார் கூறி, பதிவு செய்தார்கள் என்பதில், காவல்துறை என்பதற்கு பதிலாக அந்த வாடகைக் கார் டாக்சிகள் கம்பெனியின் இழந்தவை - தொலைந்தவை பற்றிய புகார் கூறும் பிரிவிற்கு என்று திருத்தி வாசிக்க வேண்டுகிறோம்.

புகார் கொடுக்கப்பட்டது காவல்துறைக்கு அல்ல; டாக்சி கம்பெனிக்கு என்பதே சரியான தகவலாகும்.

- ஆசிரியர், விடுதலை

Read more: http://viduthalai.in/page-2/73145.html#ixzz2pWxs27ot

தமிழ் ஓவியா said...


புகழும்போது போதை; இடித்துச் சொல்லும்போது எரிச்சலா?


கலைஞருக்குப் பதில் சொல்லுவதாக நினைத்துக் கொண்டு ஜெயலலிதா அம்மை யாருக்கு சமூகநீதி காத்த வீராங்கனை பட்டத்தை வீரமணி கொடுத்தாரே என்று ஏதோ பெரிய குற்றச்சாட்டு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டதாக நினைத்து அ.இ.அ.தி.மு.க.வின் நமது எம்.ஜி.ஆர். ஏடு எகிறுகிறது.

ஆமாம்; மறுக்கவில்லை. 69 சதவிகித இட ஒதுக்கீட்டை காப்பாற்ற திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள், அவருக்கே உரித்தான சட்ட ஞானத்தால் கருத்துரு கொடுத்ததோடு, அதற் கான மாதிரிச் சட்டத்தையும் உருவாக்கிக் கொடுத்து, 69 சதவிகிதத்தைக் காப்பாற்றிட வழி செய்தார்.

அதனை ஏற்றுக்கொண்டு சட்டம் செய்ததால், சமூகநீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை அளித்தார் திராவிடர் கழகத் தலைவர்.

அதனைக் காப்பாற்றிக் கொள்ளாமல், சமூகநீதியின் வேரையே வெட்டி வீழ்த்த ஆவேசம் கொண்டால், கையைக் கட்டிக்கொண்டு வீரமணி அவர்கள் வேடிக்கை பார்க்கவேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. எதிர்பார்க் கிறதா? பட்டம் பெற்றபோது மகிழ்ச்சிப் போதை - தவறைச் சுட்டிக்காட்டி இடித்துச் சொல்லும்போது எரிச்சலா?

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும் (குறள் 448)

என்றார் திருவள்ளுவர்.

நினைவிருக்கட்டும்!

Read more: http://viduthalai.in/page-8/73173.html#ixzz2pWyLz5Rq

தமிழ் ஓவியா said...


சூரியன் பற்றி அறிய ஆதித்யா நான்காண்டுகளில் அனுப்ப திட்டம் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை


திருப்பூர், ஜன.5- சூரி யன் பற்றிய அறிவியல் தகவல்களை கூடுதலாக அறிய, ஆதித்யா செயற் கைக்கோள், நான்கு ஆண்டுகளில் விண் வெளிக்கு அனுப்பப்பட உள்ளது,'' என, இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் மயில்சாமி அண்ணா துரை தெரிவித்தார்.

மங்கள்யான் செயற் கைக்கோள் குறித்த கருத்தரங்கு, திருப்பூரில் நேற்று (4.1.2014) நடந்தது. இதில், பெங்களூரு, இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மய்ய திட்ட இயக்குநர் டாக்டர் மயில் சாமி அண்ணாதுரை பங்கேற்றார்.

அப்போது, செய்தி யாளர்களிடம் கூறிய தாவது: நிலாவைப்பற்றி ஆய்வு செய்ய சந்திரயா னும், செவ்வாயைப் பற்றி ஆராய்ச்சி செய்ய மங்கள்யானும் அனுப் பியதை போல, அடுத்த கட்டமாக, சூரியனை பற்றி ஆய்வு செய்ய ஆதித்யா என்ற செயற் கைக்கோள், விண் வெளிக்கு அனுப்பப்பட உள்ளது. சூரியனுக்கு இது செல்லாது.

பூமிக் கும், சூரியனுக்கும் விசை உள்ளது; இந்த விசை களுக்கு இடைப்பட்ட ஒரு பகுதியில் நிரந்தர மாக ஆதித்யா நிலை நிறுத்தப்பட்டு, பூமி, சூரியன் பற்றிய தகவல் களை அனுப்பும். இன் னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில், ஆதித்யா விண்வெ ளிக்கு அனுப்பப்படும். அதற்கான பணி துவங்கி யுள்ளது.

சூரியனை பற்றிய பல தகவல்களை அறியும் வகையில், இந்த கோள் அனுப்பப்படுகிறது; அறிவியல் ரீதியான பல ஆய்வுகளுக்கு இது, உதவும். மங்கள்யான், நிர்ணயித்தபடி, அதன் பாதையில் சென்று கொண்டிருக்கிறது; தீவிர கண்காணிப்பில் உள்ளது. இதுவரை 9 மில்லியன் கி.மீ., சென் றுள்ளது; இன்னும் 200 மில்லியன் கி.மீ., செல் லும்போது, வரும் செப். 24 ஆம் தேதி, செவ் வாய்க் கோளினை அடையும்.

அமெரிக்கா ஆறு முறையும், ரஷ்யா 10 முறையும் முயற்சித்து தோற்ற நிலையில், இந் தியாவின் முதல் முயற்சி வெற்றி பெற்றால், உல கில் விண்வெளி ஆராய்ச் சியில் செவ்வாய்க் கோளினை அடைந்த பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும்.

அய்ரோப்பா, அமெ ரிக்கா நாடுகளின் தொழில்புரட்சியை தொடர்ந்து மூன்றாவது புரட்சியாக இந்தியா வில், விண்வெளி புரட்சி நடக்கிறது. இதில், நாம் பின்தங்கி விடக்கூடாது என்பதால், சந்தர்ப்பங் களை சரியான முறை யில் பயன்படுத்தி வரு கிறோம். - இவ்வாறு டாக்டர் மயில்சாமி அண்ணா துரை செய்தியாளர்களி டம் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/73174.html#ixzz2pWynR6f7