Search This Blog

3.1.14

ஜனாப் ஆசப் அலி,லார்ட் வேவல் இந்துவாக விரும்பினால் அய்யர்களாக மாற்றப்படுவார்களா? அல்லது அய்யங்கார்களாகவா? அல்லது ஆதி திராவிடர்களாகவா?

பஞ்சகவ்யம் கங்காஜலம்
   சிலர் கடுதாசி எழுதும்போது கடவுள் துணை என்றுதான் எழுதுவது வழக்கம். கடவுளே துணை என்று ஏன் எழுதுவதில்லை தெரியுமா? கடுதாசி போய்ச் சேருவதற்கு ஸ்டாம்பு துணை, சரியான விலாசம் துணை, தபாற்காரரின் நாணயமும் துணை என்றாலும், கடவுளும் துணையாயிருக்கட்டுமே என்பது அதன் பொருள்! ஆனால் பெரியவர்கள் முதல் பெரியவர்கள் அல்லாதவர்கள் வரையில், இப்போது கடவுளே துணை என்று கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.


வங்காளத்தில் நான் எவ்வளவு நாள் தங்கியிருப்பேன் என்பது எனக்குத் தெரியாது. அடுத்தபடியாக நான் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கடவுளே எனக்குச் சுட்டிக் காட்ட வேண்டும் என்கிறார் காந்தியார்.

இதுதான்  நல்ல பேச்சு! அடுத்தபடி இவர் தப்பாக நடந்து கொண்டாலும், கடவுள் தப்பு வழியில் அழைத்துப் போய்விட்டார் என்று கூறித் தப்பித்துக் கொள்ளலாம். ஒருவேளை நல்ல காரியமாக ஏதேனும் நடந்து விட்டாலும், கடவுளே காந்தியாருக்கு எப்போதுமே துணையாக நிற்கிறார்; அதனால் தானே மகாத்மா என்ற பட்டம் பெற்றார் என்பார்கள் பாமரமக்கள். அதாவது பத்திரிகை படிப்பவர்கள்!

ஆனால், இவருக்குச் சுட்டிக்காட்ட வேண்டிய கடவுள் இந்துக் கடவுளா, முஸ்லிம் கடவுளா என்பதுதான் தெரிய வேண்டும்! ஏனெனில், வங்காளத்தில் கடவுள் ஒருவர் என்பதை நம்புகிறவர்கள் மிகக் குறைவாகவே இருப்பதாகத் தெரிகிறது. கடவுளும் கல்கத்தா காளிக்கு இரத்த அபிஷேகம் செய்து வேடிக்கைப் பார்க்கிறாரே தவிர, பிரிட்டிஷ் இராணுவத்தின் உதவியை நாடாமல், காந்தியாரின் அந்தராத்மா மூலமாக இந்து _ முஸ்லிம் ஒற்றுமையை உண்டாக்குவதாகக் காணோம்!

காந்தியார்தான் இப்படிக் கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டார் எனக் கருத வேண்டியதில்லை. மந்திரி ராகவமேனன் திருச்செங்கோட்டில் பேசுகையில், பஞ்சத்தினால் ஒருவரும் உயிர்விடக் கூடாது என்று கடவுளைப் பிரார்த்திக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

கவலையொழிந்தது மந்திரியாரே! பசி! பசி என்று இனிமேல் யாராவது கதறினால், நீர் சஞ்சலப்பட வேண்டியதே இல்லை. கடவுள் இருக்கிறார்! நீங்கள் சாக மாட்டீர்கள்! என்று ஒரே வார்த்தையில் கூறி விடலாம்! அப்படியே செத்தால்தான் என்ன மோசம்! கடவுளே இவ்வாறு கட்டளையிட்டார் என்று சொல்லி விட்டால் போகிறது!

சரி, கடவுளரே! நீர் இனிமேல் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். பெரியவர்கள் மட்டுமல்ல; சந்தேகப்படக் கூடிய ஆசாமிகள்கூட உங்கள் பெயரைத்தான் சொல்கிறார்கள்! கடவுள் சாட்சியாக நான் திருடவில்லை என்கிறான் மூர்மார்க்கெட்டில் முடிச்சவிழ்த்த முனுசாமி! ஆனால், நீர் மட்டும் மாஜிஸ்ட்ரேட்டுக்கு முன்பு வந்து ஒரு நாளாவது சாட்சிக் கூண்டில் ஏறியிருப்பீரா? என்ன இரக்கமற்ற நெஞ்சு ஸார், உங்களுக்கு!

இப்படி ஆபாசமாகக் கூறுகிறேனே என்று வாசகர்கள் கோபிக்கக் கூடாது.

சரியாகச் சொல்ல வேண்டுமானால், சாணி, மூத்திரம், பால், தயிர், நெய் ஆகிய அய்ந்தையும் சாப்பிடுங்கள் என்றுதான் கூற வேண்டும்! இந்து மத பத்கர்கள் என்மீது ஆத்திரப்படுவதானால், சமஸ்கிருதத்தில் சொல்லி விடுகிறேன். பஞ்சகவ்யம் சாப்பிடுங்கள்! ஆனால் நான் சொன்னால் கோபிப்பவர்கள், அய்யர் சொன்னதும் உடனே டபக் என்று ஊற்றி விழுங்குகிறீர்களே! (பக்தர்களைத்தான் கேட்கிறேன்).

கிழக்கு வங்காளத்தில் பலாத்காரமாக முஸ்லிம்களாக்கப்பட்ட இந்துக்களை மீண்டும் இந்துக்களாக்குவதற்கு மதத் தலைவர்கள் சில முறைகளைக் கூறியிருக்கின்றனர். அவைகளில் பஞ்சகவ்யம் சாப்பிடுவதும் ஒன்று! அதைத் தான் சொன்னேனே தவிர, பாலைக் கறந்து பார்ப்பான் வாயிலும், கல்லின் தலையிலும் ஊற்றிவிட்டு, நீங்கள் பசுஞ்சாணியையும், அதன் சிறுநீரையும் சாப்பிட்டுச் சந்தியில் நில்லுங்கள் என்று சொல்வதற்கு நான் என்ன முட்டாளா? அல்லது அயோக்கியனா?

கங்கா ஜலத்தைப் புரோட்சித்தல் இன்னொரு முறையாகக் கூறப்படுகிறது! இவ்வளவு சுளுவாக இந்துவாக மாறுவது நல்லது தான்! சிவாஜியை க்ஷத்திரியனாக்குவதற்காகக் கேட்டது போல், லட்சக்கணக்கான ரூபாய், பார்ப்பனருக்குத் தட்சணையாகக் கொடுத்தால்தான் இந்துவாகலாம் என்று சொல்லாமல், இவ்வளவு மலிவான முறையையாவது கூறினார்களே, புண்ணியவான்கள்! காலத்திற்குத் தகுந்தபடி முறையையும் மாற்றிக் கொள்ள வேண்டியதுதானே! சிம்லாவில் ஸ்டாக்கிங்ஸ், பூட்ஸ் சகிதமாகப் பார்ப்பனப் புரோகிதர் திதி செய்து வைக்கிறார்களே, அதைப்போல!

சரி, மீண்டும் இந்துவான பிறகு, பார்ப்பானுக்கு அடிமையாகத்தானே இருக்க வேண்டும்! அதைச் சொல்லக் காணோமே!

இந்துவாக இருந்து மதம் மாறியவர்கள் எல்லோரையுமே இந்தப் பஞ்சகவ்யம், கங்காஜலம் - இரண்டையும் கொண்டே இந்துக்களாக்கிவிட முடியுமா? என்பது ஒரு கேள்வி. இந்துக்கள் என்றால் எந்த ஜாதியாராக ஆக்க முடியும்? என்பது மற்றொரு கேள்வி. உதாரணமாக, லார்ட் வேவல் இந்துவாக விரும்பினால், அல்லது ஜனாப் ஆசப் அலி இந்துவாக விரும்பினால் (நல்ல மனிதர்கள், பாவம்!) அய்யர்களாக மாற்றப்படுவார்களா? அல்லது அய்யங்கார்களாகவா? அல்லது ஆதி திராவிடர்களாகவா?  அய்யராக மாற வேண்டுமானால், ஒரு கைக்குப் பதிலாக, ஒரு செம்பு பஞ்சகவ்யம் சாப்பிட்டால் போதுமா?

தோழர்கள் அம்பேத்கர், சிவ ஷண்முகம், சிவராஜ் இவர்கள் தலையிலும் கங்கைத் தண்ணீரைத் தெளித்து (வேண்டுமானால் கங்கையிலேயே முழுக்கி எடுத்தாலும் சரி) அய்யர் அல்லது அய்யங்காராக்கி, கோவில் சிலையைத் தொடுமாறு செய்ய முடியுமா? பார்ப்பனரோடு திருமண சம்பந்தம் வைத்துக் கொள்ளுமாறு செய்ய முடியுமா?

சங்கராச்சாரியார், சனாதன தர்மத் தலைவர்கள், பிராமணோத்தமர்கள் _- ஆகியோர் என் கேள்விகளுக்குப் பதில் சொன்ன பிறகு, பஞ்சகவ்யமும், கங்கா ஜலமும் குடம் குடமாகத் தயார் செய்ய ஆயத்தமாயிருக்கிறேன்!

          -------------------------------2.11.1946 "குடிஅரசு" வில் தந்தை பெரியார் அவர்கள் காலி மணிபர்ஸ் என்ற புனைப் பெயரில் எழுதிய கட்டுரை

26 comments:

Unknown said...

பகுத்தறிவு பகலவனின் சாட்டையடி கேள்விகளை, பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

தமிழ் ஓவியா said...

எலி பாவம்பாப்பா: அம்மா... அம்மா ஓடியாங்க, ஓடியாங்க. (அம்மா ஓடி வருகின்றாள்) என்னா கண்ணு என்னா?

பாப்பா: அந்த எலியைப் பாரும்மா... பாவம்.. அது மேல என்னமோ ஒன்று உட்கார்ந்து கிட்டு அழுத்துது... (அம்மா ஒரேயடியாகச் சிரிக்கிறாள்)

பாப்பா: ஏம்மா சிரிக்கிறே?

அம்மா: அது புள்ளையாரு சாமி... எலிதான் அதுக்கு வாகனம்.

பாப்பா: சாமிக்கு கொஞ்சம் கூட இரக்கமே இல்லம்மா!

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/73049-2014-01-03-10-57-14.html#ixzz2pKmdCjvD

தமிழ் ஓவியா said...


சிங்காரவேலர் சிந்தனைகள்

விஷயம் நிகழும் சந்தர்ப்பங்களை எல்லாம் தெரிந்த பிறகு, அவைகளின் காரணங்களைக் குறிப்பதுதான் விஞ்ஞான முறைக்குப் பொருத்தம்.

@@@@@@@@@@@@@@

பார்த்தல், பரீட்சித்தல் என்னும் இரண்டு கருவிகளை உபயோகிக்காததால் கடவுளாலும், மந்திரங்களாலும், பொய் பித்தலாட்டங்களாலும் உலகை நிரப்பி வைத்திருக்கின்றனர்.

@@@@@@@@@@@@@@

சம்பவங்களின் காரணங்களை அறிய சிரத்தை எடுத்துக் கொள்ளாமல், வீண் கேள்விகளைப் பன்னி பன்னிக் கேட்பதும், அவைகளில் மூடநம்பிக்கை வைத்திருப்பதும் மனச்சோம்பல் என அறிக.

@@@@@@@@@@@@@@

சாதாரண சொற்கள், ஜீவன உபாயத்திற்காகவே மறைத்து வைக்கப்பட்டு, மந்திரங்களாகப் பாவிக்கப் படுகின்றன.

@@@@@@@@@@@@@@

மதக்குருக்களும், மதவாதிகளும் பிழைக்கவே கடவுளையும், அம்மன் பிடாரிகளையும் சிருஷ்டித்துக் கொண்டார்கள். சோதிடர் பிழைக்க நட்சத்திர வசியத்தையும், மரண யோகத்தையம் கற்பித்துக் கொண்டார்கள்.

@@@@@@@@@@@@@@

நமது அருகாமையில் உள்ள மலைகளால் நமது நடவடிக்கை பாதிக்கப்படுகிறதா? அல்லது குன்று களால் பாதிக்கப்படுகிறோமா? கடல் வனாந்திரங் களால், ஆலமரம் அரசமரங்களால் பந்தப்படுகின் றோமா? இவைகளின் நிழலில் நிற்கும் நமக்கும், இவைகளுக்கும், நமது நடவடிக்கை களுக்கும், யாதொரு சம்பந்தமும் இல்லை எனில், கல்லும் மண்ணும் சாம்பலும் நிறைந்துள்ள புதன், சுக்கிரன் முதலிய நட்சத்திரங்களால் நமது நட வடிக்கை எவ்விதம் பாதிக்கப்படும்?

@@@@@@@@@@@@@@

இன்று காலத்தையும் இடத்தையம் கடந்து, மனிதன் நிலத்தின் பேரிலும், ஆகாயத்தின் பேரிலும் விரைவாகச் செல்வது மூடப்பக்தியால் அல்ல - பேய் பிசாசுகளால் அல்ல - மந்திர தந்திரங்களால் அல்ல - அறிவு ஆராய்ச்சியோடு முயன்று வந்ததன் பலனே.

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/73049-2014-01-03-10-57-14.html#ixzz2pKmkCr5c

தமிழ் ஓவியா said...

காப்பி அடிக்கப்பட்ட கடவுள் சாபிதா

கிரேக்க ரோம கடவுள்களிட மிருந்து இந்துக் கடவுள்கள் காப்பி அடிக்கப்பட்ட பட்டியல் பாரீர்:

சிவன், இந்திரன் - ஜுபிடர்

பிர்மா - சாட்டர்னஸ்

யமன் - மைனாஸ்

வருணன் - நெப்ட்யூன்

சூரியன் - சோல்

சந்திரன் - லூனஸ்

வாயு - ஈயோவஸ்

விசுவகர்மா - காஸ்டர் போல் வாக்ஸ்

கணேசன் - ஜுனஸ்

விரஜாநதி - ஸ்டிக்ஸ்நதி

குபேரன் - ப்ளூட்டர்ஸ்

கிருஷ்ணன் - அப்பிலோ

நாரதன் - மெர்குரியன்

ராமன் - பச்சுஸ்

கந்தன் - மார்ஸ்

துர்க்கை - ஜுனோ

ரம்பை - வீனஸ்

உஷா - அரேமரா

ஸாகா - வெஸ்டா

பிரிருவி - சைபெல்வி

ஸ்ரீ - சிரஸ்

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/73044-2014-01-03-10-50-35.html#ixzz2pKmsxQf0

தமிழ் ஓவியா said...


நட்சத்திரம் இரவில் தோன்றுவது ஏன்?


சந்திர, சூரிய நட்சத்திரங்களைப் பற்றி உலகம் தழுவிய மூடக்கதைகள் கொடிக்கட்டிப் பறக்கின்றன. நட்சத் திரங்கள் பற்றிக் கூறும் ஒரு ஆசிய மதக் கதை ஒரு ஹாஸ்யமானது.

சூரியனும் சந்திரனும் பெண்களே. நாம் இப்பொழுது காணும் நட்சத் திரங்கள் எல்லாம் சந்திரனின் குழந்தைகள். சூரியனுக்கும் ஒரு காலத்தில் ஏராளமான குழந்தைகள் இருந்தன. சூரியன், சந்திரன் அவற்றின் குழந்தைகள் முதலியவைகளின் ஒளியை மக்கள் தாங்கமாட்டார்கள் எனப் பயந்து, தம் குழந்தைகளைக் கொன்றுவிடுவது என்று சூரியனும் சந்திரனும் தீர்மானித்தன.

ஒப்பந்தப்படி சூரியன் தன் குழந்தைகளை எல்லாம் விழுங்கி விட்டது. சந்திரன் தந்திரசாலி. தன் குழந்தைகளை விழுங்கவில்லை. சூரியன் தன் குழந்தைகளை விழுங்கு மட்டும், சந்திரன் தன் குழந்தைகளை வான மண்டலத்தில் ஒளித்து வைத்து இருந்ததாம்.

சூரியன் தன் குழந்தைகளை எல்லாம் விழுங்கிய பிறகு, சந்திரன் தன் குழந்தைகளை அழைத்ததாம். சந்திரன் குழந்தைகளைக் கண்டதும் சூரிய னுக்கு அடங்காக் கோபம் வந்து, சந்திரனே, உடனே உன் குழந்தை களை கொல்லுகிறாயா இல்லையா? என்று கூச்சல்போட்டுப் பாய்ந்ததாம். சந்திரன் ஓட, சூரியன் விரட்ட இப்படியே வெகுநாள் ஓட்டப்பந்தயம் நடந்ததாம்; இன்னும் நடக்கிறதாம்.

சில சமயங்களில் சூரியன் சந்திரனை நெருங்கி விடுமாம். அப்பொழுதுதான் கிரகணம் உண்டாகிறதாம். சந்திரன் தன் குழந்தைகளான நட்சத்திரங்களை, சூரியன் இல்லாத பொழுதாகிய இரவில் கொண்டு வரும் இரகசியம் இது தானாம்!

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/73044-2014-01-03-10-50-35.html#ixzz2pKmzhPVL

தமிழ் ஓவியா said...


யோக்கியர் எடியூரப்பா பராக்! பராக்!!

பாரதீய ஜனதா கட்சி என்பது, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் கும்பகோணம் மகா மகக் குளம் புண்ணிய முழுக்குப் போன்றது. 12 வருடங்கள் பஞ்சமா பாதகங்கள் செய்தாலும், மகா மகத்தன்று ஒரு முழுக்குப் போட்டு விட்டால், ஒட்டு மொத்தமாக அனைத்துப் பாவங்களும் நீங்கி, புண்ணியம் கிட்டும் என்பது இந்து மதத்தின் அய்தீகம்.

இந்துத்துவாவின் ஏக போகக் குத்தகைக் காரர்கள் அல்லவா இந்தப் பிஜேபியினர்! அதனால் தான் ஊழல் காரணமாக முதல் அமைச்சர் பதவியை இழந்து சிறைச்சாலை வரை சென்று வந்த கருநாடக மாநில பி.எஸ். எடியூரப்பா கடை விரித்தேன். கொள்வாரில்லை - மீண்டும் பழைய காயிலகங் கடை வியாபாரத்தையே தொடங்குகிறேன் என்ற தன்மையில் தன்னால் உருவாக்கப்பட்ட கருநாடக ஜனதா கட்சியின் கழுத்தைத் திருகிக் கொன்று விட்டு, தனது பூர்வீகக் கூடாரமான பிஜேபிக்கே சென்று விட்டார்; ஊழல் ஒழித்த உத்தமப் புத்திரர் களின் புண்ணிய பூமியாகத் தங்கள் முதுகைத் தாங்களே தட்டிக் கொள்ளும் பிஜேபியும் இரு கரம் ஏந்தி - அந்தப் பழம் பெரும் ஊழல் பெருச்சாளியைப் பூர்ண கும்பம் கொடுத்து வரவேற்று விட்டது.

இமாசலப் பிரதேச முதல் அமைச்சர் வீரபத்ரசிங் ஊழல் செய்து விட்டார் என்று கூறி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வீட்டின் முன் மறியல் போராட்டத்தை பி.ஜே.பி.யினர் செய்து கொண்டி ருக்கும் இந்தக் கால கட்டத்தில்தான், ஊழல் குற்றச் சாட்டில் சிறை சென்று வந்த கருநாடக மாநில முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பாவை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றுள்ளனர்.

கருநாடக மாநிலத்தின் முதல் அமைச்சர் பி.எஸ். எடியூரப்பா மற்றும் அம்மாநில உள்துறை அமைச்சர் ஆர். அசோக்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்குத் தொடர அம்மாநில ஆளுநர் எச்.ஆர். பரத்வாஜ் அனுமதியளித்தார்.

ஷிமோகாவைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் சிரஜின் பாஷா மற்றும் கே.என். பால்ராஜ் ஆகியோர் கடந்த 2000 டிசம்பர் 28ஆம் தேதி ஆளுநர் பரத்வாஜைச் சந்தித்து மேற்கண்டவர்கள்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்குத் தொடர அனுமதி கேட்டதன் அடிப்படையில்தான் ஆளுநரால் அனுமதி வழங்கப்பட்டது.
ஊழல் தடுப்புச் சட்டம் 1988 பிரிவு 19(1) மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 பிரிவு 193இன் கீழ் வழக்குத் தொடர அனுமதிக்கப்பட்டது.
உத்தமபுரத்திரர்களாகத் தம்பட்டம் அடிக்கும் பிஜேபி என்ன செய்தது? வழக்கை நேர்மையான முறையில் சந்திக்க மார்பைப் புடைத்துக் காட்டியதா?
இல்லை; நாடு தழுவிய அளவில் பந்த் ஒன்றை அறிவித்து அமைச்சர்களே முழக்கம் போட்டு வந்தனர்.

சட்டம் ஒழுங்கை அமைச்சர்களே சீர்குலைத்தனர். அரசுப் பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன, ஏன், எரிக்கவும் பட்டன!

ஜனதா தளத்தின் (மதச் சார்பற்றது) தலைவர் குமாரசாமி, எடியூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டினை முன் வைத்தார். கோயிலில் சத்தியம் செய்யலாமா என்று பாமரத் தன்மையாக ஒருவருக்கொருவர் சவால் விட்டனர்.

முதல் அமைச்சர் பதவியை முறைகேடாகப் பயன்படுத்தி, விலை உயர்வு வீட்டுமனைகளையும், நிலங்களையும் தனது மகன் மற்றும் குடும்பத் தினர்க்கு ஒதுக்கினார் முதல் அமைச்சர் எடியூரப்பா என்பது குற்றச்சாற்று!

சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு பெல்லாரி மாவட் டத்தையே தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்த ரெட்டி சகோதரர்கள் அமைச்சர்களாக இருந்த தெல்லாம் மிகப் பெரிய ஊழல் கந்தாயமாகும்.

ரெட்டி சகோதரர்களை எதிர்த்துப் பார்த்து, கடைசியில் முதல்வர் எடியூரப்பா அவர்களிடம் சரண் அடைந்ததெல்லாம் கடைந்தெடுத்த நகைச்சுவைத் துணுக்குகள். வெகு தூரம் போக வேண்டாம். எடியூரப் பாவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததுண்டே!

பதவி அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள, மக்களுக்குத் துரோகம் செய்து வருகிறோம்; இதில் நானும் அடக்கம்! மக்கள் மன்னிக்க மாட்டார்கள். மக்களுக்கு நன்மை செய்யாமல் தேவையற்ற வேலைகளைச் செய்து கொண்டிருக் கிறோம். மாநிலத்தில் அதிருப்தி அரசியல் தலை தூக்கிய போதும், பெண் அமைச்சர் ஷோபா வின் ராஜினாமாவை ஏற்றக் கொண்டபோதும் நான் கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட்டது. தொலை நோக்குப் பார்வையில்லாமல் சுய நலத்திற்காக அரசியலில் மூழ்கி உள்ளதால் மக்களின் நலனை முழுமையாக மறந்து வருகிறோம் என்றாரே எடியூரப்பா (தினமலர் 14.12.2009).

இந்த ஒழுக்க சிகாமணியை மக்களவைத் தேர்தலுக்காக கையேந்தி வரவேற்கும் பிஜேபியை யும், அதன் பிரதமருக்கான வேட்பாளரையும் வாக்காளர்கள் அடையாளம் காண்பார்களாக!

Read more: http://viduthalai.in/page-2/73059.html#ixzz2pOIjRkzh

தமிழ் ஓவியா said...


பொருளல்ல...


மனக் குறையில்லாமல் வாழ வேண்டுமென்றால், வசதி தேடிக் கொள்ள வேண்டுமென்பது பொரு ளல்ல; இருப்பதைக் கொண்டு குறையில்லாமல் வாழவேண்டும்.

(விடுதலை, 10.6.1970)

Read more: http://viduthalai.in/page-2/73058.html#ixzz2pOJ0bVYE

தமிழ் ஓவியா said...


கடலுக்குள் வழித்தடம்


துருக்கியில்: ஒட்டாமன் சுல்தான் 150 ஆண்டுகளுக்கு முன் ஆசைப்பட்ட கடலினுள் குழாய்த் தடம் அமைக்கும் திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்து சாதனையாகியுள்ளது.

அய்ரோப்பாவையும், ஆசியாவையும் இணைக்கும் வகையில் கடலடி ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. கருங்கடலையும், மார்மரைக்கடலையும் பாஸ்பரஸ் ஜலசந்தி இணைத்துள்ளது. இந்த ஜலசந்திக்குக்கீழே மார்மரைக் குழாய்ப்பாதை செல்கிறது. இந்த பாதை 13.6 கி.மீ. நீளம், இதில் 1.4 கி.மீ. கடலுக்கடியில் 180 அடி ஆழத்தில் செல்கிறது.

ஜப்பானில்: ஜப்பானில் ஹான்ஷூ தீவையும், ஹோக்கைடோ தீவையும் இணைக்கும் கடலுக்குள் ளான பாதை கடல் படுகைக்கு(Seabed) 460 அடிக்கு கீழே உள்ளே அமைந்துள்ளது. இது உலகத்திலேயே அதிகமான ஆழமான பாதை. இது 790 அடி கடல் மட்டத்திற்கு (Sealevel) கீழே உள்ளது.

இங்கிலாந்து - பிரான்ஸ்: பிரிட் டனையும், பிரான்சையும் கடல்கீழ் இணைக்கும் தடம் 250 அடி கடல் மட்டத்துக்கு கீழே செல்கிறது.

செய்தி வழங்குதல்: சோம.வச்சலா

Read more: http://viduthalai.in/page2/73066.html#ixzz2pOJwfzt2

தமிழ் ஓவியா said...


உப்புச் சுரங்கத்தில் உன்னத சுவை (காட்சி)

- மு.வி.சோமசுந்தரம்

கொடுமைகளின் முதன்மை வியாபாரியாக, உலக அரசியல் சந் தையில் உலா வந்த ஹிட்லர் பேரா சைப் பேய், நடனம் ஆடிய அரங்கம் ஜெர்மனி நாடாகும். அதற்குக் கிழக்கில் அமைந்த நாடு போலந்து ஹிட்லரின் நாசிச கரியமில வாயு வீசிய நாடு. இந்த போலந்து நாட்டில் உள்ள வியத்தகு, அதிகம் அறிந்திராத அற்புதக் காட்சி அரங்கைப் பற்றிய தகவல் தரப்படுகிறது.

இது ஒரு உப்புச் சுரங்கம் போலந்து நாட்டில் வியலிசிகா என்ற இடத்தில், மத்திய அய்ரோப்பிய நாட்டைத் தவிர்த்து வெளியில் தெரியாத ஒரு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த உப்புப் பாறைச் சுரங்கம் நிலத்துக்கு 200 மீட்டர் கீழே உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் சுரங்க ரயில் நிலை யம் அமைக்கும் பணி பெரியதாக பேசப்படும் ஒன்று. இந்த 200 மீட்டர் ஆழத்தில் சுரங்க வல்லுநர்கள், சிலைகள், சிற்பங்கள், அலங்கார தொங்கு விளக்குகள், அரங்கங்கள் வழிபாட்டு கூடம் அமைத்துள்ளனர். இவை 800 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு பகுதிக்கும் செல்ல கதவுகள் உள்ளன.

இந்த சுரங்கம் உள்ள பகுதி 20 மிலியன் ஆண்டுகளுக்கு முன் கடலாக இருந்து, வெப்ப, நிலவியல் மாற்றத்தால் சோடியம் குளோரைட் உப்புப்பாறைகளாக மாற்றம் பெற்றுள்ளன. உப்புப்பாறைகளைக் கண்டறிந்து உப்பைப் பயன்படுத்தும் முன்னதாக, அப்பகுதியில் இருந்த உப்பு நீருற்றிலிருந்து நீரைக்காய்ச்சி உப்பை எடுத்து வந்தனர். இந்த செயல்முறை கி.மு.3500 துவக்கத்தி லிருந்து வந்தது. உப்பு நீரூற்று வற்றியதால் உப்பைத் தேடி தரையைத் தோண்ட முற்பட்டனர். உப்புப் பாறைகளைக் கண்டனர்

. சுரங்கம் ஏற்பட்டது. சுரங்கங்கள் போலந்து மன்னர்களுக்கு சொந்தமாக இருந்தன.
இந்த சுரங்க அருங்காட்சியகம் 3 கி.மீ. பாதையைக் கொண்டது. போலந்து நாட்டின் விண்வெளி ஆய்வாளர் நிக்கோலஸ் கோப்பர் நிக்கஸ் சிலை, மன்னர் சிலை, குதிரை மூலம் இயக்கப்படும் இயந்திர மாதிரி, 18-ஆம் நூற்றாண்டில், உப்பை கீழிருந்து மேலே கொண்டுவர பயன்படுத்திய மர இயந்திரம், காட் சிப் பொருள் களாக உள்ளன. சுரங்கக்கூரைப் பகுதியில் உப்புப் படிகங்கள் காலி பிளவர் (சிணீறீவீ யீறீஷீஷ்மீக்ஷீ) போன்று கொத்துக் கொத் தாக அமைந் துள்ளதைக்காண புதுமையாக இருக் கும், புனித அந் தோனி கோயில், ஏசு, மேரி சிலை கள், மென்மை யான ஒளி விளக்கில் அமைத்துள்ளனர். புனித சிலுவைக் கோயிலின் வாசலில் தேய்மான மடைந்த முட்டியிட்ட நிலையிலுள்ள இரண்டு துறவிகளின் உப்புச் சிலைகள் உள்ளன. புதின கிங்கா கோயில், அமைப்பிலும், அளவிலும், வியந்து பார்க்கத்தக்க எழில் தோற்றமாக உள்ளது. கோயிலின் கூரையிலிருந்து, தூய உப்புப் படிகங்களினால் அமைந்த தொங்கும் அலங்கார விளக்குகள் கண்கொள்ளாக் காட்சிகள். உப்புப் பாளத்தரை, விவிலியக்கதைக் காட்சிச் சிற்பங்கள் உள்ள சுவர்கள், இப்படியும் ஒரு சிற்பக்கூடமா? நம்ப முடிய வில்லையே! என்று கூறத்தோன்றும். இச்சுரங்கத்தில் அடிக்கடி இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன என்றால், நம்பாமலிருக்க முடிய வில்லை.

சுரங்கத்தினுள், சோடியம், கால்சியம், மெக்னீசியம் குளோரைட் கலந்த காற்றை உட்கொள்ளும் நிலை, நம் உடலுக்கு நலம் பயக்கும் சூழலாக உள்ளது. ஒவ்வாமை வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள், 440 அடி ஆழப்பகுதியில் அமைந் துள்ள கூடத்தில் ஒரு நாள் தங்கி குணமடைந்து செல்வதாகக் கூறப்படுகிறது.

1966-ஆம் ஆண்டு முதல், விலை வீழ்ச்சியின் காரணத்தாலும், நீர்ப்பெருக்கு ஏற்படுவதாலும் உப்பு வெட்டுவது இல்லை. பாதுகாப்பைக் கருதி ஒரு சதவீத சுரங்கப்பகுதிக்கு மட்டில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

உப்பை ஒதுக்க வேண்டியவர்கள் கூட போலந்து உப்பு சுரங்கத்தைப் போய் பார்த்துவர ஆசைப்பட்டால் ஆச்சர்யப்பட இடமில்லை. ஆபத்தும் ஏதுமில்லை. புதிய அனுபவம் கூடுதல் பலன்தானே!

Read more: http://viduthalai.in/page5/73070.html#ixzz2pOKhdHyk

தமிழ் ஓவியா said...


மதத்தின் விளைவு


மதத்தின் விளைவு

ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர் ஜோமோ கென்யாட்டா தான் ஒரு முறை சுவையோடு சொன்னார். பாருங்கள் தலைமுறை தலைமுறை யாக ஆப்பிரிக்க மண் எங்கள் கைகளில் இருந்தது.

கப்பலில் வந்த வெள்ளைக் காரர்கள் தங்கள் கரங்களில் இருந்த பைபிளை எங்கள் கைகளில் தந்து, கண்களை மூடிச் செபம் செய்யச் சொன்னார்கள்; நாங்கள் விழிகளை மூடினோம், தூங்கி விட்டோம்.

காலதாமதமாக விழித்துப் பார்த்த போது வெள்ளையர் கைகளில் எங்கள் நாடு இருந்தது;

ஆனால் எங்கள் கைகளிலோ பைபிள் மட்டுமே மிஞ்சி இருந்தது! என்றார்.
எத்தனை பொருளாழம் நிறைந்த சொற்கள் இவை!

(கவிவேந்தர் கா.வேழவேந்தன் முன்னாள் அமைச்சர் அவர்களின் தெரிய... தெளிய... கட்டுரைத் தொகுதி - முதற் பதிப்பு டிசம்பர் 2000 72-ஆம் பக்கத்தில் இருப்பது).

Read more: http://viduthalai.in/page5/73069.html#ixzz2pOKtOsxW

தமிழ் ஓவியா said...

சமுதாயத் தொண்டு

சமுதாயத் தொண்டு செய்வது லேசான வேலையல்ல; பெருந் தொல்லையான காரியமாகும்.

படிக்குப்படி ஒவ்வொரு கட்டத் திலும் தொல்லைகள் எதிர்நோக்கி நிற்கும், நாம் செய்யும் சமுதாயப் பணியினால் யாருக்கு அனுகூலமு ம் வசதியும் கிடைக்குமோ,
யாருடைய இழிவுகள் ஒழி யுமோ, அந்த மக்களின் ஆதரவு அபிமானம் கூட நமக்கு கிடைக் காது.

(குடிஅரசு தொகுதி 3 -208-ஆம் பக்கம்)

Read more: http://viduthalai.in/page5/73069.html#ixzz2pOL2sDDW

தமிழ் ஓவியா said...

வாக்களிக்க விரும்பாதார்

நடைபெற்ற நான்கு மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாத வர்கள் (நோட்டா).

டில்லி 0.67 சதவீதம்

மத்தியப்பிரதேசம் 1.90 சதவீதம்

ராஜஸ்தான் 1.92 சதவீதம்

சத்தீஸ்கர் 3.07 சதவீதம்

Read more: http://viduthalai.in/page5/73069.html#ixzz2pOLAsUQL

தமிழ் ஓவியா said...


பெண்களும் - சொத்துரிமையும்

ஓரிருவர் எடுத்துக்காட் டாக வழிகாட்டும்போது, அது அவர்தம் தனித் துணிச்சல், பொறுப்பற்ற தன்மை என்று குறைபேசி ஒதுங்குவோர் கூட, அவர் கள் பலராகும்போது, அதுவும் நியாயமே என்று ஏற்க முன்வருவர்.

துணிந்து செயற்படுவோ ருக்குத் துணை நிற்கச் சிலரேனும் முன்வரும் சூழலை உருவாக்கியதே சுயமரியாதை இயக்கத்தின் தொண்டினால் நாடு பெற்ற நற்பயன் எனலாம்.

அப்படிப்பட்ட உரிமை உணர்வு தழைக்கப் பெண்கள் - தம் காலிலே நிற்கும் நிலை, தாமே ஊதியம் பெற்று வாழும் நிலை உருவாக வேண்டும். படித்த பெண்கள் வேலைக்குச் செல்லலாம் என்னும் கருத்து வளர்ந்து வந்தாலும், அதை விரும்பாதாரும், தடுப்பவருங்கூட உள்ளனர்.

கணவனை நம்பித்தான் வாழ்ந்தாக வேண்டும் என்னும் நிலையிலிருந்து, தான் தனது வருவாயிலிருந்தே வாழ முடியும் என்னும் நம்பிக்கை கொள்ளும் நிலையே பெண்ணின் உரிமைக்கு அடிப்படையாகும்.

அதே போன்று, சொத்துரிமை உள்ள சமூகத்தில் அந்த உரிமை ஆண் மக்க ளுக்கு மட்டுமே என்றுள்ள முறையே, பெண்கள் உரிமைக்குத் தகுதியுடையவர் ஆகார் என்னும் எண்ணத்தை உறுதி செய்ய ஏதுவாகிறது.

சொத்து எவ்வளவு? சிறிய அளவின துதானே? அதனாலா பெண்ணுரிமை காக்கப்படும் என்று சிலர் ஐயம் எழுப்புவர். ஆண்களுக்கும் அது பொருந்துமன்றோ? சொத்தின் அளவு பெரிதாகுமிடத்து, அந்த உரிமை பெண் ணையும் அடையு மன்றோ? சிறிதெனி னும் - ஆணுக்கு உள்ள அளவு பெண்ணும் பெறுவாளன்றோ!

பெண்ணின் மனத்தில் அதுவே தாழ்வு மனப்பான் மையைப் போக்க ஏதுவாகும்.

அதனால் தான் 1929-ஆம் ஆண்டில் செங்கற்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் ஆண்களைப் போன்றே பெண்களுக்கும் உடைமை உரிமை வழங்க வேண்டும் என்றும், அதற்குரிய வழியில் அரசு, சட்டத்திருத்தம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த நாட்களில் முதல் அமைச்ச ராக விளங்கிய டாக்டர் பி.சுப்பராயன் அந்த மாநாட்டில் கலந்து கொண்டி ருந்தார். பெரியார் ஈ.வெ.ரா. அவர்களே அப்படிப்பட்ட தீர்மானம் வரத்தூண்டு கோல் ஆனவர்.

ஆயினும், அத்தீர்மானம் அறுபது ஆண்டுகட்குப் பின்னர், கலைஞர் மு.கருணாநிதி முதல்வராக விளங்கிய 1990-ஆம் ஆண்டிலேதான தமிழ்நாடு சட்டப் பேரவையில் சட்டத் திருத்த மாகக் கொண்டு வரப்பட்டு நிறை வேற்றப்பட்டது.

(பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் தமிழர் திருமணமும் இனமானமும் பரிசுப்பதிப்பு நூலில் -_ பக்கம் 264)

-_ க. பழநிசாமி, தெ.புதுப்பட்டி

Read more: http://viduthalai.in/page6/73071.html#ixzz2pOLKr3bJ

தமிழ் ஓவியா said...


கீரைவகைகள்மணத்தக்காளி கீரை இந்த கீரையில் இலை, காய், பழம் இருக்கும். இந்த மூன்றையும் சமைத்து சாப்பிடலாம். இதில் சிறிய அளவில் வெள்ளை பூக்களும் மலரும். மணத் தக்காளி கீரையின் காய்கள் மிக சிறியதாக கொத்து கொத்தாக காய்க் கும். காய் முற்றினால் கத்தரிக்காய் நிறத்தில் இருக்கும். இதில் மற்றொரு வகை உள்ளது. அதில் பழம் இளம் சிவப்பாக இருக்கும்.

மணத்தக்காளி கீரையின் பழம் இனிப்பு புளிப்பு கலந்த சுவையாக இருக்கும். காய், பழத்தை பச்சையாக வும் சாப்பிடலாம். சட்டினி, பச்சடி, கூட்டு, பொரியல், ரசம் வைத்தும் சாப்பிடலாம். காய் மற்றும் பழத்தை புளிக்குழம்பு வைத்து சாப்பிடலாம்.

பலன்கள்: 1. மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந் தால் குடல் புண், மூலம் ஆகிய நோய்கள் குணமாகும். சளி, இருமல், போன்ற கப நோய்களைப் போக்கும் தன்மை கொண்டது. பிள்ளை பெற்ற பெண்களுக்கு மிகவும் நல்லது.

2. கண் பார்வை நன்றாக தெரியும்.

3. விட்டமின் ஏ, பி மற்றும் இரும்பு, சுண்ணாம்பு ஆகிய சத்துக் கள் மணத்தக்காளி கீரையில் அதிகம்.

4. குறைந்த விலையில் கிடைத் தாலும், மணத்தக்காளி கீரையில் போஷாக்கு அதிகம்.

5. குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. மணத்தக்காளி கீரைக் குழம்பு.

வயிற்று புண்ணை குணப்படுத்தும் முளைக்கீரை

கீரையை தினமும் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். முளைக்கீரை அதிக வைட்டமின் சத்துக்கள் நிறைந்த கீரை. இக்கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் கே, வைட்டமின் சி, போலேட் மற்றும் ரிபோப்லாவின் ஆகியவற்றை கொண்டுள்ளது.. நீர்சத்து அதிக முள்ள முளைக்கீரை வயிற்றுப் புண்ணை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

உடலுக்கு பலம் கூட்டும் சக்தியை கொண்டது. சிறுவர்களுக்கு இந்தக் கீரையை தொடர்ந்து கொடுத்தால் நல்ல உடல் வளர்ச்சி அடைவார் கள். முளைக்கீரையில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம், பாஸ்பரஸ், மங்கனீசு போன்ற கனிமங்களைக் கொண்டுள் ளது முளைக்கீரை. கோதுமை, அரிசி, ஓட்ஸ், ஆகியவற்றில் கொண் டுள்ள புரதத்தை விட 30% அதிக புரதத்தை கொண்டுள்ளது. இதய நோய், உயர் ரத்தஅழுத்தம் உள்ள வர்களுக்கு முளைக்கீரை உதவுகிறது.

Read more: http://viduthalai.in/page6/73072.html#ixzz2pOLU2VQb

தமிழ் ஓவியா said...


சோதிடம் - அறிவியலல்ல!


விண்வெளிக் களங்களைப் பற்றி என்னிடம் பல நண்பர்கள் கேள்விகள் கேட்ட போது, அவர்கள் சில நேரங்களில் ஜோதிடம் பற்றியும் கூட கேள்விகள் கேட் டனர். நமது சூரிய மண்டலத்தில் நம்மை விட்டு வெகு தொலைவில் உள்ள கோள்களுக்கு நமது மக்கள் இந்த அளவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்ததன் பின்னணியில் உள்ள காரணத்தை உண்மையில் என்னால் எப்போதுமே புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.

ஜோதிடம் ஒரு கலை என்பதற்கு எதிராக நான் எந்தக் கருத்தையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் அது அறிவியல் என்ற போர்வையில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு நான் வருந்தவே செய்கிறேன். இந்த கோள்கள், நட்சத்திரக் கூட்டங்கள், செயற்கைக் கோள்கள் ஆகியவை மனித உயிர்கள் மீது ஆற்றல் செலுத்த இயலுமென்ற கட்டுக் கதைகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன?

என்பதை நானறியேன். விண்வெளியில் உள்ள இவற்றின் சரியான இயக்கத்தைச் சுற்றி, குழப்பம் மிகுந்த கணக்குகளை கற்பனையில் உருவாக்கி அவற்றிலிருந்து மக்களின் வாழ்க்கை நடைமுறைகள் பற்றி முடிவுகளைப் பெறுவது என்பது சரியானதென எனக்குத் தோன்றவில்லை.

நான் காணும் வரை, பூமி ஒன்றே ஆற்றல் மிகுந்த, சுறுசுறுப்புடன் இயங்கும் ஒரு கோளாகும். தனது இழந்த சொர்க்கம் (8ஆம் புத்தகத்தில்) ஜான்மில்டன் அழகாக கூறியபடி, பூமிக்கும் மற்ற நட்சத்திரங்களுக்கும் சூரியன் மய்யமானதாக இருந்தால் என்ன?

மூன்று வேறுபட்ட வழிகளில் பூமி அறிவற்றபடி இயங்குவதாக தோன்றினாலும், பூமி என்னும் இக்கோள் எவ்வளவு உறுதியாகச் செயல்படுகிறது!

நெருப்பு இறக்கைகள் என்ற தனது சுயசரிதையில் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியும், இந்திய அரசின் அறிவியல் ஆலோசகருமான ஏ.பி.ஜே.அப்துல்கலாம்.

Read more: http://viduthalai.in/page6/73073.html#ixzz2pOLzzPMW

தமிழ் ஓவியா said...


ஏழை நாடாம்...


திருப்பதி நாமக் கடவுளான ஏழுமலையா னுக்கு 2013இல் மட்டும் பக்தக் கோடிகள் அளித்த பணம் ரூ.723 கோடி; தங்கம் 1200 கிலோ!

தீர்க்க முடியவில்லை

செய்தி: கடந்த ஆண்டைவிட 2013இல் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை 50 லட்சம் குறைவாம் - காரணம் தெலுங்கானா பிரச்சினை காரணமாக போக்குவரத்துப் பாதிப்பாம்.

சிந்தனை: இதைக்கூட தீர்த்து வைக்க முடியாத ஏழுமலையானை நோக்கிதான் தீர்த்த யாத்திரையோ?

Read more: http://viduthalai.in/page2/73086.html#ixzz2pQsXETiO

தமிழ் ஓவியா said...


முப்புரி தரிக்க முடியுமோ? மோடியால்!


மோடியால் எல்லாம் முடியுமாம்!

மூச்சுக்கு முந்நூறு முறை முழங்கி நின்றிடும் முப்புரி கூட்டம் . பாலாறும் தேனாறும் பண ஆறும்
ஓடுமாம் இந்தியாவில், என பார்ப்பன கூட்டங்கள் உளறுகின்றன
அதையே ஊடக ஒலிபேசிகள்
ஓயாமல் அலறுகின்றன இஸ்லாமியர் இரத்த ஆறும் என்பதை ஏனோ மறந்தனர்! மறுக்கின்றனர்!

நரேந்திர மோடியின் நல்லாட்சியில்
பன்னாட்டு மூலதனங்கள் பயமின்றி நுழையுமாம்!
பண மழையும் கொட்டுமாம்!
கூவித் திரிகின்றன! கோயபல்சு கூட்டங்கள்!

அன்னியர் நுழைவது இருக்கட்டும் ஒருபுறம்!
இந்திய நாட்டில் எங்கேனும் ஓரிடம்,
ஆகம கோயில் கருவறைக்குள்ளே
நுழைய முடியுமோ நரேந்திர மோடியால்!
சூப்பர் மேனாக உடை அணிந்தாலும்,
அவாளுக்கு, தொங்கு சதை தானே!

அடுத்த பிரதமராய்- மோடியை ஆக்கியே தீர்வதென ஆர்ப்பரிக்கும் ஆரியகூட்டமே!
மோடிக்கு முப்புரி தரித்து,
சங்கராச்சாரியாரின் வாரிசு -என அறிவிக்க முடியுமோ?
மதவெறி பிடித்த பாஜகவுக்கு தேவை ஒரு நரேந்திர மோடி!
இந்திய ஹிட்லர் மோடிக்கு,
தேவை ஒரு பாஜக!
ஜாடிக்கேற்ற மூடிகள்!

ஈழத் தமிழனின் இரத்தம் குடித்த
மகிழ்ந்த ராஜபக்சே சர்வதேச குற்றவாளி!
இசுலாமியத் தோழனின் இரத்தம் குடித்த நரேந்திர மோடியோ நாளைய பிரதமர்!
இதுதான் இன்றைய
அரசியல் கூட்டணிகளின் அவலத் தத்துவம்!
அனைத்திலும் பின்னூடாய் ஆரியத் தந்திரம்!
பார்ப்பனியமே! உன் மறு பெயர் தான் வன்முறையோ!

- தகடூர் தமிழ்ச்செல்வி

Read more: http://viduthalai.in/page5/73090.html#ixzz2pQtjBgx9

தமிழ் ஓவியா said...


அம்பேத்கர் பேசுகிறார்


ஜஸ்டிஸ் கட்சி எல்லாம் இந்திய கட்சி ஆக இப்போது நல்ல சமயம்; நல்ல வேலைத் திட்டமும் தீர்மானங்களும் இருப்பதால் துணிந்து தைரிய மாகவும் இந்தியா பூராவும் சுற்றி வேலை செய்யும்படியும் ஆங்காங்கு தமது நண்பர்களுக்கு எழுதியும் தம்மால் ஆன அள வுக்கு ஒத்துழைத்தும் ஆதரவு அளிப்பதாகவும் அம்பேத்கர் சொன்னார் என்பதாகத் தெரிகிறது (69 ஆண்டுகளுக்கு முன்பு)

(குடிஅரசு 30.09.1944 சென்னை தந்தை பெரியாரும் டாக்டர் அம்பேத்காரும் பக்கம் 2)

தந்தை பெரியாருக்கு எதிராக தங்களுக்குத் தாங்களே ஜஸ்டிஸ் கட்சி என்று சொல்லிக் கொண் டிருந்த சிலர் டாக்டர் அம்பேத் காருக்கு விருந்து ஒன்றை கொடுத்தனர். விருந்துக்கு நன்றி தெரிவித்துப் பேசிய டாக்டர் அம்பேத்கர் அவர்கள் பெரியாருக்கு விரோதமாக நடப்பதைக் கண்டித்தார். தலை வரை மதித்துக் கட்டுப்பாடாக நடக்க வேண்டுமென்று அறிவுரை கூறினார். தந்தை பெரியார் அவர்களை டாக்டர் அம்பேத்கர் எப்படி மதித்தார் என்பதற்கு இது ஓர் அரிய எடுத்துக்காட்டு அல் லவா? 30.9.1944 அன்று கடைசியாக திராவிடஸ்தானை யும், பாகிஸ்தானையும் ஒன்றாகக் கருதியது தப்பு என்றும், அதன் தத்துவம் வேறு என்றும், இதன் தத்துவம் வேறு என்றும், அது முஸ்லீம்கள் மெஜாரிட்டி உள்ள இடத்திற்கு மாத்திரம் பொருத்த மானது என்றும், பிராமணீயம் இந்தியா முழுவதும் பொறுத்த விசயமென்றும் திராவிடஸ்தானில் தங்களையும் வேறு மாகாணங் களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னார் என்பதாகத் தெரிகிறது. எனவே இப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் கூறியதுபோல் மதச்சார்பற்ற மாநிலங்களைச் சேர்ந்தவை ஒன்றுபடச்சேர்ந்து தேர்தலைச் சந்திப்பது அவசிய மாகும்.

- அ.இனியன், பத்மநாதன், ஈரோடு

Read more: http://viduthalai.in/page7/73092.html#ixzz2pQtyXKWH

தமிழ் ஓவியா said...


ராமபக்தர்களின் பொது ஒழுக்கம், இது தான்

டில்லி போட்கிளப் மைதானத்தில் பாரதிய ஜனதாவும் - விசுவ இந்து பரிஷத்தும் சேர்ந்து நடத்திய பேரணிக்கு வந்த ராமபக்தர்கள் அனை வரும் புதுடில்லி ரயில் நிலையத்துக்கு வந்தனர். யார் யாரோ ரிசர்வ் செய்த பெட்டிகளில் - தங்கள் பெட்டி படுக்கைகளுடன் ஏறி உட்கார்ந்து கொண்டனர். உட்கார்ந்து கொண்டு முன்கூட்டியே பதிவு செய்தவர்கள் உள்ளே வராதபடி கதவுகளை இழுத்து மூடிக் கொண்டனர்.

முன்பதிவு செய்த ஏராளமான பயணிகள், டிக்கட் இருந்தும், ரயிலில் ஏற முடியவில்லை. உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தைக் கூறலாம். ஒரு குடும்பத்தினர், டில்லியிலிருந்து கோரக்பூர் செல்ல வைஷாலி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்கூட்டியே டிக்கட் பதிவு செய்தனர். பதிவும் உறுதியானது; குடும்பத்துடன் ரயில் நிலையம் வந்தனர். ரயில் நிலையம் முழுவதும் காவி உடை, ராம் ராம் முழக்கங்கள். பதிவு செய்யப்பட்ட பெட்டிக்கு சென்றால் - உள்ளே எல்லா இருக்கைகளிலும் ராமபக்தர்கள் முன் பதிவு செய்த அந்தக் குடும்பத்தினர் ஏற முடியவில்லை. கதவு சாத்தப்பட்டு விட்டது. காவல்துறையிடம் -பல பயணிகள் முறையிட்டனர். அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை; ரயில்வே அதிகாரிகளோ, வெளியே வராமல் பதுங்கியே விட்டனர். அன்று முழுவதும் டில்லியிலிருந்து புறப்பட்ட அத்தனை ரயில்களிலும் இது தான் நிலைமை. இன்று முன்பதிவு எதுவும் கிடையாது எல்லாமே ரத்து செய்யப் பட்டுவிட்டது என்று ராம பக்தர்கள் அனைவரும் உற்சாகமாகக்கூறி மகிழ்ந்து வந்தனர்.
-- டைம்ஸ் ஆப் இந்தியா ஏப்.6 1991

பாரதிய ஜனதா, விசுவ இந்து பரிஷத் அமைப்புகள் தான் ஒழுக்கமானவை; கட்டுப்பாடானவை என்றெல்லாம் பார்ப்பன ஏடுகள் பிரச்சாரம் செய்கின்றன. இவர்களின் பொது ஒழுக்கத்துக்கு. இது ஒரு சிறு உதாரணம்

Read more: http://viduthalai.in/page8/73094.html#ixzz2pQuSS7jU

தமிழ் ஓவியா said...


சிந்திக்கவேண்டும்


சமஸ்கிருதத்தினால் தமிழர்களும், தமிழ்நாடும் இன்று என்ன நிலைமைக்குத் தாழ்ந்து தொல்லையும், மடமையும், இழிவும் அனுபவிக்கிறோம் என்பதைச் சிந்திக்கவேண்டும்.
_ (விடுதலை, 5.8.1963)

Read more: http://viduthalai.in/page-2/73110.html#ixzz2pQvdztel

தமிழ் ஓவியா said...


காரைக்கால் கொடூரம்!

நன்னிலத்தைச் சேர்ந்த இளம்பெண், தன் காதலனைச் சந்திக்க காரைக்கால் வந்தார். உடன் வந்த தோழியை விட்டு விட்டு அவர்கள் திருநள்ளாறு சென்று விட்டனர். வரத் தாமதமானது.

தோழிப் பெண் தனிமையில் இருப்பதைப் பார்த்த மூவர் காவல்துறையினர் என அறிமுகம் செய்து கொண்டு ஒரு வீட்டு மாடிக்கு அழைத்துச் சென்று குளிர் பானத்தில் மயக்க மருந்து கொடுத்து வன்புணர்ச்சி செய்தனர். சத்தம் கேட்டு வந்த 7 பேர் அவர்களை விரட்டிவிட்டு தனியிடத்திற்கு அழைத்துச் சென்று தருமபுரம் சுடுகாட்டுப் பகுதியில் வைத்து பாலியல் வன்முறை செய்தனர். பின்னர் 5 பேரை வரவழைத்து திருநள்ளாறுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்முறை செய்தனர். மறுநாள் காவல் நிலையத்தில் புகார் தந்த போது உதவி ஆய்வாளர் வெங்கடாசலபதி, தலைமைக் காவலர் சபாபதி வழக்கைப் பதிவு செய்யவில்லை. மாவட்ட கண்காணிப்பாளர் மோனிகா பரத்வாஜ் விசாரணை நடத்தி வழக்கைப் பதிவு செய்தார்.

எழிலரசன், பாபுராஜ், இக்பால், காசிம், அமீர் அலி, அக்பர் யூசுப், நாசர், மதன், முமைத் கைது மற்றும் ஜெயகாந்தன், பைசல், ஓட்டுநர் மணி தேடப்படுகின்றனர்.

தனியாக இருந்த இளம் பெண், காரைக்காலில் கயவர்கள் பலரால் சூறையாடப்பட்ட கொடுமை குருதியை உறையச் செய்யக் கூடியதாகும்.

பெண்ணென்றாலே காமப் பதுமை என்று புரையோடிப் போய் விட்டதா சமூகத்தில்?

தனியாக நின்ற பெண்ணை காவல்துறையினர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட மூன்று கயவர்கள் முதலில் சூறையாடினர் என்றும், அதன் பின்னர் எழுவர் சூறையாடினர் என்பதெல்லாம் எழுதவே அருவருப்பாக இருக்கிறது. இந்த எழுவரின் அழைப்பின் பேரில் மேலும் அய்வர் வந்து கொடூரம் செய்தனர் என்பதெல்லாம் வக்கிரத்தின் கடைசி எல்லையாகவே தோன்றுகிறது.

மறு நாள் காவல் நிலையத்தில் வழக்கைப் பதிவு செய்யவில்லை என்பதும், மாவட்டக் கண்காணிப்பாளர் வந்த பிறகே வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்பதும் நமது நாட்டின் நிருவாக முறை, குறிப்பாகக் காவல்துறை எந்த அளவு கடமை உணர்ச்சியற்றது என்பதற்கு எடுத்துக் காட்டாகும்.

இது ஏதோ ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட இழிவு என்று குறுக்கிவிடக் கூடாது; நாகரிக சமுதாயத்துக்கே மானக்கேடும், மாபெரும் சவாலுமாகும்.

காதல், மதம், ஜாதி என்கிற வேறு தளத்திற்கு இழுத்துச் சென்று அரசியல் குளிர்காயாமல், நாளும் நடைபெற்று வரும் இந்தக் கேவலத்தை முடிவுக்குக் கொண்டு வருவது எப்படி என்பதில் கவனம் செலுத்தி யாக வேண்டும்.

இந்தியாவின் தலைநகரான டில்லியில் இந்தக் குற்றத்தைச் செய்த கயவர்களுக்குத் தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்ட பிறகும் இதுபோன்றவை நடக்கிறது என்றால் இதன் பொருள் என்ன?

பெண்கள் நடை உடை பாவனைகள்மீது குற்றப் பத்திரிகை படித்து விட்டு பிரச்சினை என்னும் கோப்பை முடித்து விடக் கூடாது. கட்சிகளைக் கடந்து மதம், ஜாதி என்னும் கோடுகளைக் கடந்து சமூகப் பொறுப்புணர்ச் சியுடன் சிந்திக்க வேண்டும் - செயல்படவும் வேண்டும். கல்வித் திட்டத்தில் தொடங்கி, கலாச்சார வடிவங்கள் வரை மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

பெண் என்றால் அரைகுறை ஆடைகளோடு சித்தரிக்கும் சீக்கு மனப்பான்மையை ஊடகங்கள் கலையுலகச் சித்தர்கள் விட்டொழிக்க வேண்டும். இலட்சக்கணக்கில் விற்பனையாகும் வார இதழ்களில் அட்டைப் படங்கள் எல்லாம் பெரும்பாலும் அரைகுறை ஆடை சினிமா பெண்மணிகள்தாம்.

சின்னத் திரைகளும், பெரிய திரைகளும், இணையதளங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு ஆபாசங்களை நவீனம் என்னும் போர்வையில் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன.

சட்டமன்றம் நடக்கும் போதே மக்கள் பிரதிநிதிகள் கைப்பேசியில் ஆபாசப் படங்களைப் பார்க்கின்றனர் என்றால், நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது?

இணையதளங்களில் ஏமாற்றுக்காரர்கள் பெருகி விட்டனர். எல்லாவற்றையும் விட பெண்களிடம் மிகப் பெரிய அளவில் விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

டில்லியில் கிளர்ந்து எழுந்தது போல காரைக்காலில் மக்கள் சமுத்திரம் ஏன் பொங்கி எழவில்லை?

தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது தொடர் பாக இன்னும் விசாரணையே தொடங்கப்படவில்லையாம்; தூத்துக்குடியில் ஏன் கிளர்ச்சி ஏற்படவில்லை? என்ற கேள்விகள் எழத் தான் செய்கின்றன.
பரீட்சார்த்தமாகப் பெண்களுக்கு தற்காப்புக்காகத் துப்பாக்கிகளை கொடுத்துப் பார்க்கலாமே!

ஆம்பளை (அ)சிங்கங்கள் வாலாட்டிய நான்கு இடத்தில் துப்பாக்கிக் குண்டுகள்தான் வெடிக்கட்டுமே! அப்பொழுதுதான் பிரச்சினைக்கு ஒரு முடிவு ஏற்படும் என்றால் சற்றும் தயங்காமல் பரீட்சித்துப் பார்க்கலாம் தான்.

பாலியல் வன்கொடுமை தொடர்பான பிரச்சினையில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள், காவல்துறையின ருக்கு சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு நிகரான தண்டனை வழங்கப்பட வேண்டும். பெண்களும் வீதிக்கு வந்து போராட முன் வர வேண்டும். இது குறித்துக் கழகமும் உரத்த முறையில் சிந்திக்கும் - செயல்படும்.

Read more: http://viduthalai.in/page-2/73111.html#ixzz2pQvnLRHQ

தமிழ் ஓவியா said...


சிங்கப்பூரில் கற்ற பாடங்கள்! - கி.வீரமணி


சிங்கப்பூரின் வாடகைக் காரோட்டி களும், எவ்வளவு நாணயமும் ஒழுங்கும் உள்ளவர்களாக இருக்கிறார்கள்; அங் குள்ள காவல்துறையினர் பயணிகளிடம் புகார்களை எந்த நேரத்திலும், தொலை பேசியிலேயே வாங்கி பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுத்து, காலந் தாழ்த்தாமல் இழந்தவைகளை, கண்டு பிடித்து உரியவர்களிடம் திருப்பிக் கொடுக் கும் வியத்தகு அணுகுமுறைகளை கையாளுகின்றனர் என்பதை நேற்று (3.1.2014) சிங்கப்பூரில் நேரில் அனுபவத் தில் கண்டு மகிழ்ந்ததை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எத்தனையோ முறை சிங்கப்பூருக்குச் சென்றுள்ளேன் என்றாலும் இதற்கு முன் எப்போதும் நிகழாத எனது கவனக் குறைவு காரணமாக டாக்சியில் - வாடகை உந்தில் நிகழ்ந்தது. அதனால் பல நல்ல உண்மைகளை இதற்கு முன் பலர் மூலம் கேட்டறிந்ததை படித்தறிந் ததை நேரிலேயே நானே பார்த்து உணரும் வாய்ப்பு ஏற்பட்டது.

லிட்டில் இந்தியா செராங்கூன் சாலைப் பகுதி தேக்கா என்றெல்லாம் அழைக்கப்படும் நமது வணிகர்கள் பெரி தும் வாணிபம் புரியும் பகுதியில் உள்ள நண்பர் இலியாஸ் கடைக்கு, நான் எப்போ தும் வழமையாகச் சென்று அவரையும் அவரது வாழ்விணையர், அக்கடையில் பணிபுரியும் (சங்கம் டெக்ஸ்டைல்ஸ்) தோழர்களையும் சந்தித்து, நலம் விசா ரித்து, உரையாடிவிட்யடு, அவர் மூலம் பல பழைய நண்பர்களுடன் உரையாடியும், திரும்புவது உண்டு. நேற்று மாலை சுமார் 6.30 மணி அளவில் சென்று, பேசிக் கொண்டிருந்து விட்டு, கவிதா இல்லத்திற்குத் திரும்ப அங்கிருந்து ஒரு டாக்சி பிடித்துத் திரும்பினோம்- சுமார் மாலை 7.30 மணிக்குத் திரும்பினோம்.

வாடகைக் காருக்குரிய கட்டணத்தை நான் செலுத்த முயன்றதை முந்திக் கொண்டு எனது மகள் கவிதா ஓட்டுநரிடம், வீட்டருகில் இறக்கிவிடும் போது கொடுத்து விட்டார்; நான் எனது முழுக்கால் சட்டை பேண்ட் பையிலிருந்து எனது மணிப் பர்சை வேலட்டை எடுத்து மீண்டும் அதில் வைப்பதாக எண்ணி அதை அந்த டாக்சியில் பின் சீட்டிலேயே தெரியாமல் விட்டு விட்டேன்; அல்லது பையிலிருந்து வழுவி நழுவி இருக்கலாம். இறங்கி வீடு வந்து சேர்ந்து, உடைமாற்றியபோது எனக்கு அதிர்ச்சி...! வேலட்டை காணவில்லை. உடனே நினைவூட்டிப் பார்த்தேன். வீட்டிற்கு இறங்கும்போது கையில் எடுத்ததை நன்கு நினைவூட்டிக் கொண்டு, மகளிடம் கூறினேன்.

உடனே கவிதா, அப்பாஒன்றும் கவலைப்படாதீர்கள். நான் உடனே புகார் செய்கிறேன். பெரிதும் அங்கு கிடைத்தால் நம்மிடம் திருப்பிகொடுத்துவிடுவார்கள் என்று கூறி, தொலைப்பேசியில் காவல் துறையின் அதிகாரியை அழைத்து, விவரங்களைக் கூறி, புகார் பதிவு செய்தார். இது இரவு 8.15 மணியாகும். அவர்கள் உடனடியாக புகாரைப் பதிவு செய்து கொண்டு அதற்குரிய எண்ணைத் தந் தார்கள் - தொலைப்பேசி எண்ணையும் தந்தார்கள். இதில் குறிப்பிட வேண்டிய மற்றொரு பாராட்டத்தக்க அம்சம் என்ன தெரியுமா? உடனே பதிவு செய்து கொண்டு, புகார் என்பதை இந்த தொலைப்பேசியில் நீங்கள் அழைத்து நிலவரத்தை விசாரிக்க லாம் என்று இரண்டு தொலைப்பேசி எண்ணைத் தந்தார்கள் காவல் துறையினர்.

தமிழ் ஓவியா said...

ஒன்று அலுவலக நேர எண். மற் றொன்று அலுவலக நேரத்திற்கு அப்பால் எந்த நேரத்திலும் விசாரிக்க வாய்ப்பாகும் எண். என்னே அற்புதமான காவல்துறை ஏற்பாடு! அவர்கள் விசாரித்தபோது கவிதா, கீழ்க்காணும் தகவல்களை மட்டும் தான் கூறினார்,

1) மஞ்சள் நிற டாக்சி (அதன் எண் தெரியாது)

2) அந்த ஓட்டுநர் பெயர் ஏதோ அப்துல்லாவோ என்னவோ!

3) புறப்பட்ட நேரம், இறங்கிய நேரம்

4) புறப்பட்ட இடம் இறங்கிய வீட்டு முகவரி இவை தான் உள்ளன.

5) வேலட் கறுப்புநிறம் அதில் இருந்த கொஞ்சம் சிங்கப்பூர் பணம், சென்னை முகவரி கார்டுகள்.

சிங்கப்பூரில் தங்கியிருக்கும் முகவரி கார்டு இல்லை.

நாங்கள் வீட்டில் எங்கள் பணிகளை கவனித்துக் கொண்டிருந்தோம். (எங்கே கிடைக்கப் போகிறது நாம் சரியான தகவல்களை டாக்சி எண் - நமது முகவரி எதுவும் இல்லையே என்று நினைத்தேன்)

சரியாக இரவு 9 மணிக்கு (அதாவது புகார் கொடுத்த 30 நிமிடங்களில்) தொலைப்பேசி அழைப்பு உங்கள் வேலட் - மணிப்பர்சு கிடைத்துவிட்டது. அந்த டாக்சி யின் எண் இது. அந்த டாக்சி ஓட்டுநரிடம் உள்ளது. அவர் உங்கள் முகவரிக்கு வந்து கொடுக்க வேண்டுமா? அல்லது நாளை அந்த டாக்சி நிறுவனத்திடம் நீங்கள் நேரில் சென்று பெற்றுக் கொள்ளுகிறீர்களா? என்று கேட்டு, அப்படி அவர் உங்கள் வீட்டுக்கு வந்து கொடுக்க வேண்டுமெனில், அவர் எந்தப்பகுதியிலிருந்து வருகிறாரோ அந்தக்கட்டணம் (மீட்டர்படி) நீங்கள் கொடுக்க இசைந்தால் அவரை வரச் சொல்லுகிறோம் என்று காவல் துறையினர் கேட்டனர்.

வீட்டிற்கே வந்து கொடுக்கச் சொல்லி கட்டணம் தர இசைவுதந்தோம்.

உடனே அந்த ஓட்டுநர் தொலைப்பேசி யில் சற்று நேரம் கழித்து அழைத்து இரவு 10.30 மணிக்கு வந்து பொருளை ஒப்படைப்பதாகக் கூறினார்!

ஆனால் அவர் இரவு 10.15 மணிக்கே எங்கள் இல்லம் அருகில் வந்து ஒப்படைத்து. எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள் என்றார். நானும் மாறனும் சென்று அதனைப் பெற்று, அவருக்கான பயணக் கட்டணத்தைச் செலுத்தியதோடு, ஆழ்ந்த நன்றியை அவருக்குத் தெரிவித்தோம். அதற்கு மேல் 10 சிங்கப்பூர் வெள்ளியை அவருக்குப் பரிசாக அளித்தோம். அவர் பெயர் அமானுல்லாகான் என்று அறிந்தோம்; அவர் சிங்கப்பூர் - மலாய் கார இஸ்லாமியர்.

சிங்கப்பூர் காவல் துறையின் ஒத்து ழைப்பையும், எவ்வளவு சிறப்பான அரசு உள்ளது என்பதையும் அனுபவத்தில் கண்டு உணர்ந்து, வியக்கும் வாய்ப்பும், இந்த எனது கவனக்குறைவு காரணமாக எற்பட்ட நன்மையான அனுபவமும் எனக்குக் கிடைத்தது. அதனால் பெற்ற பாடங்களும் உண்டு.

1) வெளிநாடுகளில் வெளியூர்களில் டாக்சிகளின் அவற்றின் எண்களைக் குறித்து வைத்துக்கொள்ளுதல் அவசியம்.

2) நமது மணிப்பர்சு களில் முகவரி அட்டை கார்டு ஒன்று உள்ளூர் தங்கும் முகவரி, தொலைப்பேசி எண்ணையும் எழுதி அதில் சொருகி வைத்திருப்பதும் அவசியம்.

3) இவற்றிற்கெல்லாம் மேலாக, நம் நாட்டில் இப்படி ஒரு காவல்துறை ஒத் துழைப்பு (தொலைப்பேசியிலேயே புகார் கூறி கூறிய 30 நிமிடங்களில் தொலைந்த பொருள் மீட்டப்பட்டதையும் எளிதில் பார்க்க முடியுமா என்ற வேதனையும், வருத்தமும் மிச்சம்.

(நமது நாட்டிலும் பல நேர்மையான ஓட்டுநர்கள் உண்டு என்றாலும், அங் குள்ள ஏற்பாடு எவ்வளவு விஞ் ஞான பூர்வமாக உள்ளது என்பது அறிய மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதல்லவா?)

4) என்னிடம் இருந்தது ஒன்றும் பெரிய தொகை அல்ல என்றாலும், கவனக் குறைவு எவ்வளவு பேருக்குத் தொந்தர வும் அவசியமற்ற மனஉளைச்சலையும் தந்தது. இனி தவிர்க்கப்படல் வேண்டும்.

புத்தி கொள்முதலுக்கு 30 சிங்கப்பூர் வெள்ளியை விலையாகக் கொடுத்தேன்.

Read more: http://viduthalai.in/page-2/73112.html#ixzz2pQwX6O56

தமிழ் ஓவியா said...

காலித்தனமும் வட்டி சம்பாதிக்கின்றது

சென்னை கடற்கரையில் பார்ப்பனரல்லாதாரால் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் கதர் இலாகா காரியதரிசி ஸ்ரீ எஸ். ராமநாதன் அவர்கள் பகிஷ்காரப் புரட்டைப்பற்றி பேசிக் கொண்டிருக்கையில் காங்கிரசு வீரப்புலிகள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்கள் திருட்டுத்தனமாக கூட்டத்தின் மத்தியில் இரண்டு செருப்புகளை வீசி எறிந்துவிட்டு ஓடிப்போய் விட்டார்கள் என்றும் அந்தச் செருப்புகள் ஏலம்போடப்பட்டனவென்றும் கேள்விப்பட்டோம். ஆனால் அடுத்த சில தினத்தில் அதே கடற்கரையில் பார்ப் பனர்களால் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் பல பார்ப்பனரல் லாதார்களைக் கூலிக்குப் பிடித்துக் கொண்டு போயிருந்துங் கூட கல்லும் செருப்பும் பறந்ததோடு கலகமும் அடிதடியும் காயமும் ஏற்பட்டு விட்டதாம்: காங்கிரசுகாரர்கள் தாங்கள் தான் மிக புத்திசாலிகள் என்பதாக கருதி காலித்தனத்தை ஆரம்பித்து விடுகிறார்கள். இதனால் அந்த சமயம் வெற்றி கிடைத்ததுபோல் காணப்பட்டாலும் வட்டியுடன் திரும்பவும் அனுபவித்து விடுகின்றார்களேயொழிய இதுவரை ஒரு இடத்திலாவது தப்பித்துக் கொண்டதாகச் சொல்வதற்கே இல்லை.

பகிஷ்கார இயக்கப் பிரச்சாரத்திற்கு ஸ்ரீ சத்தியமூர்த்தி தலைவராகி விட்டார், ஸ்ரீ வரதராஜுலு வாலராகிவிட்டார். மற்றபடி ஸ்ரீமான்கள் குழந்தை, ஓ. கந்தசாமி செட்டியார், பஷீர் அகமது முதலியவர்களுக்குள்ளாகவே தேசபக்தி அடங்கிவிட்டது. இவர்கள் போகும் கூட்டங்கள் முழுவதும் இந்தக் கதியையே அடைந்து வருகின்றன. பிரச்சாரத்திற்கு என்று காங்கிரஸ் நாடகத்தில் மீதியான ரூபாயில் 5000, 6000 ரூபாய்களை எடுத்து வீசி எறிகின்றார்கள். இந்த ரூபாய் களுக்காக எப்போதும் கூட்டங்கள் கூடிக் கொண்டே இருக்கின்றன. இது எங்குபோய் முடியும் என்பது மாத்திரம் விளங்கவில்லை.

ஸ்ரீமான் வரதராஜுலு பேச ஆரம்பித்தவுடன் கலகம் ஏற்பட்டதென்றும், அடிதடிகள் நடந்ததென்றும் பொது ஜனங்கள் அவரைப் பேசவிடாமல் உட்காரச் செய்து விட்டார்கள் என்றும் பத்திரிகைகளில் காணப்படுகின்றன. பொது ஜனங்களால் இந்த யோக்கியதை பெற்ற ஸ்ரீ வரதராஜுலு அவர்கள், ராமசாமி நாயக்கர் சர்க்கார் பிரச்சாரம் செய்கின்றார் என்று எழுதுகின்றார், பேசுகின்றார், வாசகர்களைச் சுத்தமுட்டாள்கள் என்றும் எதையும் நம்பிவிடுவார்கள் என்றும் எண்ணிக் கொண்டு இம்மாதிரி தந்திரங்களைச் செய்கின்றார்.

அப்படியே நாயக்கர் சர்க்கார் பிரச்சாரம் செய்வதாக வைத்துக் கொண்டாலும், பார்ப்பனப் பிரச்சாரத்தைவிட சர்க்கார் பிரசாரம் எத்தனையோ மேலான தென்பதை இவரே பலதடவை உணர்ந்திருந்தும் பேசியிருந்தும் இன்று மாத்திரம் ஸ்ரீ வரதராஜுலுக்குப் பார்ப்பனப் பிரசாரம் இவ்வளவு பயனளிக்கக் கூடியதாகி விட்டதின் இரகசியமென்ன?

ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார் தலைமையும், இரங்கசாமி அய்யங்கார் காரியதரிசித் தன்மையும் ஒழிந்த பிறகு ஸ்ரீமான்கள், சத்திய மூர்த்தி அய்யரின் தலைமையும் வரதராஜுலுவின் காரியதரிசித் தன்மையும் இவ்வருஷம் முழுவதும் தாண்டவமாடக்கூடும். இனி, இவர் தலைமையில் அவர் பிரசங்கமும் அவர் தலைமையில் இவர் பிரசங்கமும் மாறி மாறி நடந்ததாக பத்திரிகை கலங்கள் நிறையக் கூடும். ஆனாலும் நம்புவதற்குதான் இனி தமிழ் நாட்டில் ஆட்கள் கிடையாது என்பதும் அவர்களுக்கே தெரிந்துவிட்டது.

ஆனாலும் ஜனங்களின் முட்டாள் தனத்தில் அவர்களுக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கின்றது. பொது ஜனங்கள் சீக்கிரம் இவர்களுக்குப் புத்தி கற்பிப் பார்களாக.
- குடிஅரசு - (துணைத் தலையங்கம் - 05.02.1928)

Read more: http://viduthalai.in/page-7/73120.html#ixzz2pQxtsQ7p

தமிழ் ஓவியா said...

உஷார்! உஷார்! மண்டையிலடியுங்கள்

சென்னையில் பார்ப்பனியத்தைப் பரப்புவதற்கு ஒரு புதிய ஸ்தாபனம் சமீபத்தில் பார்ப்பனர்களால் உண்டாக்கப்பட்டிருக்கின்றது. அதுதான் கிராமப் புணருத்தாரண வேலை ஸ்தாபனம். நண்பர்களே இந்தப் பெயரைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள். கொஞ்ச காலத்திற்கு முன்பு ஸ்ரீமான்கள் நேரு, சீனிவாசய்யங்கார், சீனிவாச சாஸ்திரியார் போன்றவர்கள் ஒன்று சேர்ந்து இந்திய அய்க்கிய ஒற்றுமை சங்கம் என்பதாக ஒன்றை ஸ்தாபித்தார்கள். அதில் வகுப்பு உணர்ச்சி உள்ளவர்களை சேர்ப்பதில்லை என்றும் நிபந்தனை போட்டார்கள். அது நமது தமிழ் நாட்டிற்குள் வராதபடி மண்டையிலடித்து கொல்லப்பட்டுப் போய்விட்டது.

அதுபோலவே இப்போது மறுபடியும் முயற்சி எடுத்து கிராம புனருத்தாரணம் என்னும் பெயரில் சென்னையில் ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கு மெம்பர்கள் ஸ்ரீமான்கள். சர்.சி.பி. ராமசாமி அய்யர், மோதிலால் நேரு, ஏ. ரங்கசாமி அய்யர், கேல்கர், பட்டாபி சீதாராமய்யர், பி. சிவராவ், டாக்டர் பெசண்டு, அருண்டேல், ரங்கநாத முதலியார் போன்றவர்களே. இது பிரம்மஞான சங்கத்தினர் வாலைப்பிடித்து ஆரம்பித்த புதிய சூழ்ச்சியேயாகும்.

தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாதார் நன்மைக்குக் கொடிய எதிரியாக பிரம்மஞான சங்கம் விளங்குகின்றது. அச்சங்கத் தலைவர் ஸ்ரீமதி பெசண் டம்மைக்கு உள்ள பணமும் செல்வாக்கும் அடையாறு பிரம்மஞான சங்கத் தோற்றமும் அநேக பார்ப்பனரல்லாதார்களையும் மூடர்களாகவும் இனத் துரோகி களாகவும் ஆக்கி அச்சங்கத்திற்குப் பலிகொடுத்திருக்கிறது. இதைப்பார்த்து யாரும் ஏமாந்து விடக் கூடாது என்றும், இப்புதிய சூழ்ச்சியில் யாரும் சிக்கி அதற்கு ஆளாகக் கூடாது எனவும் எச்சரிக்கை செய்து பணிவாய் வேண்டிக் கொள்கிறோம்.
- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 25.03.1928

Read more: http://viduthalai.in/page-7/73120.html#ixzz2pQy10y85

தமிழ் ஓவியா said...


கேப்டன் தொலைக்காட்சியில் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன்


கேப்டன் தொலைக்காட்சியில் மக்கள்கேள்வி என்ற பகுதியில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பங்குகொள்ளும் நிகழ்வு இன்று (4.1.2014) பிற்பகல் 1.30 மணியளவில் ஒளிபரப்பாகியது. மறு ஒளிபரப்பு இன்று இரவு 7 மணியளவில் ஒளிபரப்பாகும்.

இதன் தொடர்ச்சியாக நாளை (5.1.2014) பிற்பகல் 1.30 மணிக்கும், அதன் மறு ஒளிபரப்பு இரவு 7 மணிக்கும் ஒளிபரப்பாகும்.

Read more: http://viduthalai.in/page-8/73126.html#ixzz2pQyhEFiP