Search This Blog

4.1.14

நாயும் முஸ்லீம்களும் - எச்சரிக்கை! எச்சரிக்கை!! மரண வியாபாரி மோடி வருகிறார் எச்சரிக்கை!

எச்சரிக்கை! எச்சரிக்கை!! மரண வியாபாரி மோடி வருகிறார் எச்சரிக்கை!
குஜராத் கலவரங்களைத் தூண்டி விட்டதே நரேந்திர மோடிதான் என்று ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் தீர்ப்பு வாங்கிவிட வேண்டும் என்று காங் கிரஸும், மத்திய அரசும், அவர்களு டைய ஆதரவில் செயல்படுகிறவர்களும் செய்து வருகிற முயற்சிகள் இன்னமும் தொடர்கின்றன. கலவரங்களுக்கு மோடி பொறுப்பு என்று வழக்காட ஆதாரம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டினால் நியமிக்கப்பட்ட விசேஷ விசாரணைக்குழு முடிவு சொல்லியும், அந்த முடிவை நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தும், இவர்கள் விடுவதாக இல்லை. ஒரு பெண்ணை குஜராத் போலீஸ் மூலம் வேவு பார்த்ததாக ஒரு குற்றம் சுமத்தினார்கள்; அதுவும் எடுபடவில்லை என்பதால் இப்போது அந்தப் புகாரை விசாரிக்க, ஒரு விசரணைக் கமிஷனை நியமிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது. விசாரணை முடிவு மூன்று மாதத்தில் வர வேண்டும் என்பதும் அமைச்சரவையின் முடிவு. அதாவது தேர்தலுக்குள், தேர்தல் பிரச்சாரத்திற்காக, நரேந்திர மோடியை ஏதாவது ஒரு குற்றத்தில் சிக்க வைத்து காங்கிரஸ் கட்சிக்கு உதவுவதற்காக, மத்திய அரசு எடுத்துள்ள முடிவு இது. கட்சிக்காக, ஆட்சி துஷ்பிரயோகம் என்பதன் உச்சகட்டம் இது.(துக்ளக் 8.1.2014)

மேற்கண்ட வாசகங்கள் துக்ளக் இதழில் திருவாளர் சோ ராமசாமி  எச்சரிக்கை என்று தலையங்கத்தின் மேல் பகுதியில் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையிலேயே எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!! என்று எச்சரிக்கவேண்டியது நாம் தான்.

திருடனே திருடன், திருடன்! என்று குரல் கொடுத்து ஓடித் தப்புவது போன்றது சோ ராமசாமி போன்றவர்களின் தந்திரப் புத்தியாகும்.

உலக வரலாற்றில் மனிதப் படு கொலையாளர்கள் வரிசையில் இட்லர் தொடங்கி மோடி வரை என்று ஒரு நீண்ட சரிதம் எழுதப்பட வேண்டும்.
காவல்துறை அதிகாரிகளை அழைத்து மூன்று நாள்கள் கெடு கொடுத்து அதற்குள் சிறுபான்மை முசுலிம்களை எந்த அளவு படுகொலை செய்ய முடியுமோ, செய்து முடியுங்கள் என்று உத்தரவிட்டவர் அனேகமாக நர வேட்டை நரேந்திர மோடியாகத் தானி ருக்க முடியும்.

நீதிமன்றம் குற்றவாளி என்று சொல்லாததாலேயே சவர்க்கார் காந்தியார் கொலையில் சம்பந்தப்படாதவர் ஆக மாட்டார். நீதிமன்றத்தில் தண்டனை வழங்காததாலேயே சங்கராச்சாரியார் குற்றமற்றவர் ஆக மாட்டார்.
நீதிமன்றம் இதுவரை தீர்ப்பு வழங்காததாலேயே பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் பரிசுத்த மனிதர்களாகி விட மாட்டார்கள். மோடியும் அந்த ரகத்தைச் சேர்ந்தவர் தான்.

இட்லர் கூட தேர்தலில் நின்று வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தவர்தான் பாலங்களையும், சாலைகளையும் போட் டவன்தான். அதற்காக சொந்த நாட்டு யூதர்களை அவன் கொன்று குவித்த கொடுமையின் ரத்த வாடை வரலாற்றை விட்டு நீங்கி விடுமா?

திறமையான நிருவாகி, குஜராத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தூக்கி நிறுத்திய திறமைசாலி என்று காற்றடித்து உப்ப வைத்து வானில் பலூனாகப் பறக்கவிடுவதெல்லாம் மோடியின் மூர்க்கத்தனமான மத வெறியை மூடி மறைக்கத்தான்; மாநில முதல் அமைச்சராக இருந்தபோதே இப்படி என்றால் பிரதமர் ஆனால் அவ் வளவுதான் - நாடு தாங்கவே தாங்காது.

இதோ சில எடுத்துக்காட்டுகள்:

விசாரணை அமைப்புகள் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்
2002-இல் கலவரத்தின்போது நரேந்திரமோடி நடந்து கொண்ட விதம் குறித்து பல்வேறு மனித உரிமை அமைப்புகள் மட்டுமல்லாது தேசிய மனித உரிமை ஆணையம் (NHRC) போன்ற நிறுவனங்களும், உச்சநீதிமன்ற மும் கடுமையாக கண்டித்துள்ளன.

கலவரம் நடந்தவுடன் உடனடியாக ஐந்துக்கும் மேற்பட்ட உண்மை அறியும் குழுக்கள் நேரடியாக சென்று விசாரித் ததுடன் கலவரத்தில் அரசாங்கத்தின் பங்கேற்பை உறுதி செய்துள்ளன. குறிப்பாக நீதியரசர் கிருஷ்ண அய்யர் தலைமையிலான குழுவின் அறிக்கையில் மோடி அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப் பட்டுள்ளது. அடுத்து தேசிய மனித உரிமை ஆணையமும் கண்டித்துள்ளது.

2004-ல் உச்சநீதிமன்றத்தில் நீதி யரசர்கள் அர்ஜூன் பசாயத் மற்றும் துரைசாமிராஜு ஆகியோர் அளித்த தீர்ப் பில் ரோம் எரிந்து கொண்டிருக்கும்போது பிடில் வாசித்த நீரோ மன்னனோடு மோடியை ஒப்பிட்டார்கள்.

கலவரம் நடந்தபோது தனியறையில் அமர்ந்து கொண்டு குற்றவாளிகளை எப்படி தப்ப வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார் போலும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டார்கள். அப்படி சொன்னது மட்டுமல்லாமல் அவ்வழக்கு குஜராத்தில் நடந்தால் நீதி கிடைக்காது எனக் கூறி மகாராஷ்டிர மாநிலத்துக்கு அந்த வழக்கை மாற்றவும் செய்தார்கள்.

அதுமாத்திரமல்ல குற்றவாளிகளை விசாரிக்கும் அரசு வழக்கறிஞர்களை அந்த மாநில அரசுகளே நியமித்து கொள்ளும் வழக்கத்துக்கு மாறாக குஜராத் படுகொலையில் அரசாங்கமே ஈடுபட்டி ருப்பதாக குற்றச்சாட்டு இருப்பதால் மோடி அரசாங்கம் நியமிக்கும் அரசு வழக்கறிஞர் ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி. போன்ற சவ்பரிவார் சிந்தனை உடையவராக இருக்க நேர்வதுடன் அவர்கள் குற்றவாளிகளை தண்டனை யிலிருந்து தப்பவைக்க முயற்சித்தார்கள் என்பதுடன், சாட்சிகளை மிரட்டுவதற்கும் காரணமாக இருந்ததால் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றியதுடன், அரசு வழக்கறிஞரை பாதிக்கப்பட்டவர்களின் ஒப்புதலுடன்தான் நியமிக்க வேண்டும் என்ற புரட்சிகரமான தீர்ப்பையும் வழங்கியது. இந்நிகழ்ச்சி வேறு எந்த மாநிலத்திலும் இதற்கு முன்பு நடந்திராத ஒன்றாகும்.

இப்படி பல்வேறு சந்தர்ப்பங்களில் உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல அமைப்புகளின் கண்டனத்துக்கு நரேந்திரமோடி ஆளாகியிருப்பதுடன், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசார ணையின்போது பல அடிப்படையான கேள்விகளுக்குக்கூட பதில் சொல்ல முடியாத நிலையில் உள்ளார்.
கோத்ரா பிணங்களைக் காட்டி மதக் கலவரங்களை தூண்டினார்!
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் பலியான 56 உடல்களை அரசு நடை முறை வழக்கத்திற்கு மாறாக குஜராத் தலைநகருக்கு வரவழைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று மக்களின் உணர்ச் சிகளைத் தூண்டிவிட்டு பழிவாங்கும் எண்ணத்தை ஏற்படுத்தி கலவரத்திற்கு காரணமாக இருந்தார்.
அன்று இரவே காவல்துறை உள்ளிட்ட அரசின் முக்கிய துறைகளின் அதிகாரிகளை அழைத்து ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் இரண்டு நாட்களுக்கு கலவரங்கள் நடக்கும். அதை கண்டுகொள்ளாதீர்கள், தடுக்காதீர்கள் என பகிரங்கமாக கூறியதாக 2002-லேயே சில பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன. அதனை உறுதிப்படுத்துகின்ற வகையில் அந்த ஆலோசனை கூட்டத்தில் மினிட் நடைமுறை பின்பற்றப்படாதது மனித உரிமை அமைப்புகளின் சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

தெகல்கா பத்திரிகை
வெளிப்படுத்திய உண்மைகள்!

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக தெகல்கா பத்திரிகை, குஜராத் கலவரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பேட்டி எடுத்து வெளியிட்டது. அதில் பல அதிர்ச் சியான உண்மைகள் வெளிப்பட்டன.

முஸ்லிம் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி படுகொலை செய்த குற்றவாளியை மோடி பாராட்டியதுடன், உங்கள் செயலுக்காக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளீர்கள் என தெரிவித்துள்ளார்.

கலவரம் நடந்த பகுதிகள் சிலவற்றிற்கு நேரடியாகச் சென்று குற்றவாளிகளுக்கு ஊக்கம் கொடுத்துள்ளார். அந்த குற்றவாளிகளை தப்ப வைக்க அனைத்து முயற்சிகளையும் அரசு மூலமாக மேற்கொண்டார். குற்றவாளிகளைக் கண்டித்த நீதிபதிகளை இடம் மாற்றம் செய்தார். சுமார் 20-க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை ஒரு பள்ளத்தில் தள்ளிவிட்டு, எரித்து கொலை செய்த ஒரு குற்றவாளியை நீதிபதிகள் நீ செய்த இந்தச் செயலுக்கு, உன்னை பலமுறை தூக்கில் போட்டாலும் தகும் என தெரிவித் தனர். ஆனால், அந்த நீதிபதிகளெல்லாம் மோடியினால் மாற்றப்பட்டார்கள். அந்தக் குற்றவாளி விடுதலையடைந்து சுதந்திர மாக உள்ளான்.
####

முதல்வர் மோடியின் வானொலிப் பேச்சு

அச்சுறுத்தப்பட்டு அடங்கியொடுங்கிக் கிடப்போர், நியாயம் கேட்க மாட்டோம் என்ற உறுதியை அளித்தால்தான் அமைதி திரும்பும்
- _ குஜராத் கலவரம் தொடங்கிய மூன்றாம் நாள் முதல் அமைச்சர் நரேந்திரமோடியின் வானொலி உரையில் (தி இந்தியன் எக்ஸ்பிரஸ் 8.10.2003)

####

எதிர்வினையாம்

2005 சனவரி 17ஆம் தேதியன்று கோத்ரா ரயில் எரிப்புத் தொடர்பான உமேஷ் சந்திரா பானர்ஜி ஆணையத் தின் இடைக்கால அறிக்கை வெளியிடப் பட்டது. அடுத்த இரு நாட்களில் தினேஷ் மோகன் ஏ.கே. ராய், சுனில்காலே, எஸ்.என் சக்ரவர்த்தி முதலிய பேரா சிரியர்கள் மற்றும் பொறியாளர்களின் கோத்ரா ரயில் எரிப்புத் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது. கோத்ரா ரயில் எரிப்பு என்பது முஸ்லிம்களின் திட்டமிட்ட சதி என்கிற மோடி கும்பலின் பொய்களுக்கு இவ்விரு அறிக்கைகளும் மறுப்புத் தெரிவித்துவிட்டன. கோத்ரா ரயில் எரிப்பின் இயற்கையான எதிர்வினையே குஜராத் பயங்கரங்கள் என்னும் அவர்களின் நியாயங்கள் அடிபட்டுப் போயின.

####

படுகொலையே நியாயப்படுத்திய கொடுமை

சங்பரிவார்க் கும்பல் பந்த் நடத்தினர். நரோடா -_ பாட்டியா என்னும் இடத்தில் 58 பெண்களையும் பச்சிளங் குழந்தைகளையும் கொன்று குவித்தனர். அது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அடங்கிய வாசகம் என்ன தெரியுமா?
கோத்ரா வன்முறை நிகழ்வுக்கு எதிர்விளைவாக இந்தச் சம்பவம் நடந்தது என்று குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டதன் மூலம் அந்தப் படுகொலைக்கு மோடி அரசாங்கத்தின் காவல்துறையே நியாயம் கற்பித்து விட்டது.

வழக்கு வாபஸ்!

குஜராத் மதக் கலவரத்தின் போது 4252 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் இரண்டாயிரத்துக்கும் மேற் பட்ட வழக்குகள் மோடி அரசால் விலக் கிக் கொள்ளப்பட்டன. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ருமாபால், சின்கா மற்றும் கபாடியா அடங்கிய அமர்வு அத்தனை வழக்குகள் மீதும் விசாரணை நடத்து மாறு ஆணை பிறப்பித்தது. (17.8.2004)

####

பொடா சட்டம்

குஜராத்தில் பொடா பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் அல்ல _- பயங்கரவாதி களைத் தயார் செய்யும் சட்டம்(Production of Terrorist Act) என்று சொன்னார் குஜராத் மாநிலத்தில் மனித உரிமைகளுக்காகப் போராடி வரும் டாக்டர் முகில் சின்ஹா.

குஜராத்தில் பொடாவின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் மொத்தம் 287 அதில் முஸ்லிம்கள் 286, சீக்கியர் ஒருவர்; மகாராட்டிராவில் மனித உரிமை ஆர்வலர் மேமோன் குஜராத் உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்தபோது இதைச் சுட்டிக் காட்டி நேருக்கு நேரே கேட்டார். பொடாவில் இந்துக்கள் கைது செய்யப்படக் கூடாது என்ற தனிப் பிரிவு ஏதேனும் இருக்கிறதா? என்று கேட்டார்.

####

ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டனவாம்!

2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கிற்குச் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அழிக்கப் பட்டு விட்டதாக மோடி அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் எஸ்.பி. வகில் என்பவர் நீதிபதி நானாவதி விசாரணை ஆணையத்தின் முன் பகிரங்கமாக அறிவித்தார்.

கோத்ரா சம்பவம் நடந்த அன்று இரவு காவல்துறையின் உயர் அதி காரிகளோடு முதல் அமைச்சர் நரேந்திர மோடி நடத்திய கூட்டத்தில் இந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தும்போது அதில் தலையிடாதீர்கள்! என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனை அக்கூட்டத்தில் கலந்துகொண்ட காவல்துறை உளவுத்துறை உதவி ஆணையர் சஞ்சீவ்பட் அய்.பி.எஸ். உச்சநீதிமன்றத்தில்  தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் வெளிப்படையாகத் தெரிவித்தார். அந்தக் கூட்டத்திலேயே அந்த அதிகாரி கலந்து கொள்ளவில்லை என்றது மோடி அரசு. அப்படியானால் தகவல் அறியும் சட்டத்தின்படி அந்தக் கூட்டத்தில் நடவடிக்கை ஆவணங்களை அளிக்குமாறு கோரினார்; இரகசியக் காப்புச் சட்டத்தின் கீழ் அளிக்க இயலாது என்று அப்பொழுது சொன்னவர்களே, பிற்காலத்தில் அந்த ஆவணங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு விட்டதாகச் சொன்னார்கள்.

####

போலி என் கவுண்டர்

2004 ஜூன் 15ஆம் தேதியன்று இஸ்ரத் ஜஹான், ஜாவேத் ஷேக் அம்ஜத்அலி ராணா மற்றும் ஜீஷன் ஹோஹாய் ஆகிய நான்கு பேரைப் போலி என்கவுண்டரில் கொலை செய்த விவகாரத்தில் முறையான விசார ணையை குஜராத் காவல்துறை செய்யும் என்பதை நம்ப முடியாது என்று குஜராத் உயர்நீதிமன்றம்  கூறியது. இந்த வழக்கில் மேலும் விசாரணை செய்யுமாறு மத்தியப் புலனாய்வுக் குழுவை (சி.பி.அய்.) உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெயந்த் படேல் மற்றும் அபிலாஷ்குமாரி ஆகியோர் அடங்கிய அமர்வு ஆணை பிறப்பித்தது. படுகொலை செய்யப்பட்ட இந்த நால்வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் -_ இ-தொய்பா அமைப்புக்காக வேலை செய்தவர்கள் என்றும் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடியைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டினர் என்றும் குற்றஞ் சாட்டப்பட்டு இருந்தனர். குஜராத் உயர்நீதிமன்றம் ஆணைப்படி புலனாய்வு செய்த சி.பி.அய். நால்வரும் கொல்லப்பட்டது போலி என் கவுண்டர்தான் என்று உறுதி செய்தது.  இந்தப் போலி என்கவுண்டரில்  கொலை செய்த காவல்துறை அதிகாரி வன்சாரா அந்தப் போலி என்கவுண்டர் முதல் அமைச்சர் மோடி உத்தரவுப்படியேதான் நடந்தது என்று சிறையிலிருந்தபடியே தெரிவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

####

மத நல்லிணக்கத்தைக் காப்பாற்ற உண்ணாவிரதமாம்

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி (சத்பாவனா) மோடி உண்ணாவிரதம் இருந்தது ஆச்சரியமே! மூன்று நாள் உண்ணாவிரதம் ஒன்றை குஜராத் பல் கலைக் கழக வளாகத்தில் குளிரூட்டப் பட்ட மண்டபத்தில் உண்ணாவிரதம் இருந்தவர்.
மதநல்லிணக்கம் அல்லவா! - சில முஸ் லீம்களும் வந்திருந்தனர். மதக் குரு (இமாம்) ஒருவர் மோடியைக் கட்டித் தழுவி தான் அணிந்திருந்த குல்லாயை அணியுமாறு கொடுத்ததை அணிய மறுத்தார் மோடி (இதுதான் அவரின் மத நல்லிணக்கம்) அதனை சிவசேனா சுட்டிப் பாராட்டியது.
(தினமலர் 22.9.2011 பக்கம் 3)

எப்பொழுதும் மோடி அப்படிதான்!

குஜராத் படுகொலை நடைபெறு வதற்குப் பத்தாண்டுகளுக்குமுன் ஒரு நிகழ்வு; பிரபல சமூகவியல் சிந்தனை யாளர் -_ எழுத்தாளர் ஆஷிஸ்நந்தி அன்றைய ஆர்.எஸ்.எஸின் பிரசாரகராக விருந்த நரேந்திரமோடியைப் பேட்டி கண்டவர்; அதுபற்றி ஆஷிஸ் நந்தி என்ன கூறினார்?

அனைத்துக் குணங்களும் கொண்ட ஒரு ஃபாசிஸ்டைத்தான் நான் சந்தித்தேன் ஃபாசிஸ்ட்டு என்று அழைப்பது ஆட்சேபகரமான வார்த்தையல்ல; எல்லா குணங்களும் நிறைந்த ஒரு ஃபாசிஸ்டாக அவர் விளங்கினார் சர்வாதிகாரத்தின் பரிபூரணமான மனநிலை கொண்டவராக அவர் விளங்கினார்; ஒரு கொலை யாளியை சில வேளைகளில் ஒருகூட்டுக் கொலையாளியை நான் சந்தித்தேன். முற்றிலும் பீதியுடன் அல்லாமல், நாட்டின் எதிர்காலத்தை நோக்கி எனது பார்வையைச் செலுத்த முடியவில்லை என்று ஆஷிஷ் நந்தி குறிப்பிட்டார்.

ஊழல்! ஊழல்!!

குஜராத்தில் ஊழலே கிடையாது என்பது பொய்ப் பிரச்சாரம் அது உண்மையென்றால் மாநிலத்தில் ஊழல்களை விசாரிக்கும் உரிமை படைத்த லோக் அயுக்தா நீதிமன்றத்திற்கு எட்டு ஆண்டு காலம் நீதிபதி நியமிக்கப்படாதது  ஏன்?  ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தான் இதற்கு நியமிக்கப்பட வேண்டும். பதவியில் இருக்கும் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிதான் லோக் அயுக் தாவுக்கு ஒரு நீதிபதியைப் பரிந்துரைப் பார். அதனை முதல் அமைச்சரும் எதிர்க்கட்சி தலைவரும் பரிசீலித்து, ஆளுநருக்குப் பரிந்துரைப்பார்கள். எஸ்.டி. தவே என்ற நீதிபதியை தலைமை நீதிபதி பரிந்துரைத்தார் ஆனால், அதனை முதல்வர் மோடி ஏற்றுக் கொள்ளவில்லை.  வோரா என்னும் நீதிபதி  அப்பதவிக்கு வரவேண்டும் என்பது மோடியின் விருப்பம். ஏன் அவர்மீது அவ்வளவு அக்கறை? 2002இல் 14 பேர்களை உயிரோடு பெஸ்டு பேக்கரியில் வைத்து எரித்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அத்தனைப் பேரையும் குற்ற மற்றவர்கள் என்று விடுதலை செய்தவர்தான் அந்த வோரா. மோடி ஆட்சியில் உள்துறை அமைச் சராகவிருந்த ஹிரேன் பாண்டியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மோடிக்கு ஆதரவாகத் தீர்ப்புக் கொடுத் தவரும் இந்த வோராதான்.

####

அதற்குப்பின் வேறு ஒரு புதிய நீதிபதியைப் பரிந்துரைக்குமாறு உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியை (மு. கோபாத்தியாயா)க் கோருகிறார்; ஆளுந ரால் ஆர்.ஏ. மேத்தா என்ற நீதிபதி பரிந்துரைக்கப்படுகிறார். அதனையும் ஏற்க மறுக்கிறார் முதல்வர் மோடி. மீண்டும் அந்த வோராவையே நியமிக்குமாறு ஆளுநருக்குக் கடிதம் எழுதினார் மோடி. மேத்தாவை நியமிக்க எதிர்க்கட்சித் தலைவரும் இசைவு தந்த நிலையில் ஆளுநர் தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதிபதி ஆர்.ஏ. மோத் தாவையே லோக் அயுக்தாவுக்கு நீதிபதியாக நியமித்தார். இதற்காகத்தான் பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட் டனர் என்பதை மறந்து விடக் கூடாது.

####

நோபெல் விஞ்ஞானி சந்திக்க மறுப்பு! குஜராத் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞானியான வெங்கி ராமகிருஷ்ணன். அவரைச் சந்திக்க பல வகைகளிலும் முதல் அமைச்சராக நரேந்திர மோடி முயற்சி செய்து பார்த்தார்.

2002 மதக் கலவரத்தில் முதல் அமைச்சர் மோடி சம்பந்தப்பட்டு இருப்ப தால் சந்திக்க இயலாது என்று அந்த விஞ்ஞானி மறத்துவிட்டார்!

இப்படிப்பட்ட கொடூர மனிதனான நரேந்திர மோடிதான் பிரதமர் ஆக வேண்டுமாம் - இவருக்காகத்தான் சோ வகையறாக்கள் முட்டுக் கொடுக்கிறார்கள் - எச்சரிக்கை!

----------------------------------------மின்சாரம்  அவர்கள் 4-01-2014 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

46 comments:

தமிழ் ஓவியா said...


தமிழருவி மணியனின் தவறான தர்க்கங்கள்!

- மஞ்சை வசந்தன்

மதவாதக் கட்சியான பா.ஜ.விற்கு மகுடம் சூட்டி மகிழ தமிழருவி மணியன் தவியாத் தவிக்கிறார். பரிதவிக்கும் இலங்கைத் தமிழரின் வாழ்விற்கு பா.ஜ.க., விடிவு காணும் என்பது அவரது ஒற்றை நம்பிக்கை! யாரை நம்புவது என்ற தீர்க்கம்கூட இல்லாத இவர், கற்பனைகளின் உந்துதலில் கூட்டணி அமைத்து, மதவெறிக் கும்பலுக்குத் துணை நிற்கின்றார். தமிழில் பேச வல்லவர் என்ற தகுதிமட்டும், அரசியல் தீர்க்கத்திற்கும், தீர்விற்கும் போதாது என்ற பால பாடம்கூட இவர் அறியாதது பரிதாபந்தான்!

காங்கிரஸும் வேண்டாம், தி.மு.க., அ.தி.மு.க.வும் வேண்டாம் இது மணியனின் மார்க்கம். திராவிடக் கட்சிகள் வேண்டாம் என்ற பா.ம.க.வினின்று இவர் மாறுபடுகிறார். இந்த முரண்பாட்டிற்குள் பா.ம.க.வை நுழைக்க முட்டித் தள்ளுகிறார்.

தி.மு.க. அணி வலுப்பெற்று விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்து, கரு உருவாகும்போதே கலைத்து விட்டுக் கொண்டிருக்கும் தினமணி அய்யர், தற்போது அணி அரும்பும் என்று செய்தி வந்ததுமே துடித்துப் போய், தமிழருவி மணியனின் தலைவாசலைத் தட்டியுள்ளார்.

முதலில் நாம் கேட்கும் சில கேள்விகள்:

1. ஊழல் இல்லாத தூய கட்சி எது?

2.இலங்கைப் பிரச்சினையில் உறுதி யான நிலைப்பாடுள்ள கட்சி எது?

3. 2016இல் ஆட்சி அமைப்போம் என்று சொல்லாத கட்சி எது?

இதற்கு நாணயத்தோடு தமிழருவி மணியன் பதில் சொல்ல வேண்டும். இதில் தி.மு.க.வை மட்டும் குற்றவாளி என்று பழி சுமத்துவது அயோக்கி யத்தனமல்லவா?

ஆக, ஊழல், இலங்கைப் பிரச்சினை என்பதெல்லாம் மக்களைத் திசை திருப்ப செய்யப்படும் வஞ்சகத் திட் டங்கள். இலங்கைப் பிரச்சினையில் அதிகம் இழந்த கட்சி, பாதிக்கப்பட்ட கட்சியென்றால் அது தி.மு.க. மட்டுமே. ஆனால், மற்ற எல்லாமும் ஆதாயம் அடைந்த கட்சிகள்.

இலங்கைப் பிரச்சினையில் சரியான நிலைப்பாட்டில் இருந்த கட்சி எதுவும் இல்லை. ம.தி.மு.க.வைச் சொல்லலாமே என்றால், விடுதலைப்புலிகளை, அதன் தலைவரை அறவே வெறுத்து, இராச பக்சேவிற்கு வக்காலத்து வாங்கிய அ.தி. மு.க.வுடன் கைகோர்த்தவர் வைக்கோ.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிப்பு தி.மு.க. ஆட்சியில் நடந்திருந் தால், பழ. நெடுமாறனும் வைக்கோவும் எப்படி எகிறியிருப்பார்கள்? இது என்ன இரட்டை அளவுகோல்?

முள்ளிவாய்க்காலில் முனைப்புடன் நடந்த போரின்போது, பிரணாப்முகர்ஜி கலைஞரை ஏமாற்றியது உண்மை; கலைஞர் நம்பி ஏமாறியதும் உண்மை.

தான் ஆடாவிட்டாலும் தசையாடும் என்ற உள்ளுணர்வு உடையவர் கலைஞர். அரசியல் பண்ண வேண்டிய கட்டாயத்தில் சில நிலைப்பாடுகள் இருந்திருக்குமே தவிர, இனத் துரோகம் செய்யும் உள்ளம் உடையவர் அல்ல அவர்.

அவரைத் தவிர இனத்திற்காக இலங்கைத் தமிழருக்காக ஆட்சியை இழந்தவர்கள் யார்?

பிரணாப் முகர்ஜி பேச்சில், உறுதியில் ஏமாறாமல் கலைஞர் எச்சரிக்கையாய் இருந்து, காங்கிரஸ் ஆதரவை விலக்கி வெளியில் வந்திருந்தால், இந்தியா - காங்கிரஸ் ஆட்சி - இலங்கை நட்பை விட்டு, விடுதலைப்புலிகளுக்கு உதவியி ருக்குமா? ஏன், பா.ஜ.க.வே. ஆட்சியில் இருந்தாலும் அதைச் செய்திருக்குமா?

தமிழருவிமணியனை கேட்கிறோம், பா.ஜ.க. தனியீழத்தை அங்கீகரித்து, விடுதலைப்புலிகளை ஆதரிக்கத் தயார் என்று அறிவிக்கத் தயாரா? தமிழருவி இந்த உத்தரவாதம் அளிக்கத் தயாரா/

தி.மு.க. அன்றைக்கு காங்கிரஸ் ஆதரவை விட்டு வந்திருந்தால், பதுங்கிப் பதுங்கி இலங்கை அரசுக்கு உதவிய இந்திய அரசு, வெளிப்படையாக உதவி யிருக்கும். தட்டிக் கேட்கக் கூட நாதி யிருந்திருக்காது. போர் இன்னும் தீவிர மாய் இருந்திருக்கும், இழப்பும் கூடியி ருக்கும்? ஒரு மாநில ஆட்சி, கட்சி என்ன செய்துவிட முடியும்? காங்கிரஸில் இருக்கின்ற தமிழனே காட்டிக் கொடுக்கும்போது, இலங்கைச் சிக்கலில் என்ன தீர்வுகாண முடியும்?

தமிழ் ஓவியா said...

இன்றைக்கு கூட்டணி அமைக்க முயலும் தமிழருவி மணியன், தனி ஈழத்தை பா.ஜ.க. அமைக்கும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவிக்க செய்வாரா? அது இயலாது என்றால், அருவியாய் பேசிக் கொண்டு வேலையைப் பார்க்க வேண்டும்!

இனி விஜயகாந்த் விவகாரத்திற்கு வருவோம்:

தி.மு.க. --_ தே.மு.தி.க. கூட்டணிக்கு வாய்ப்பு என்றவுடன் வைத்தியநாத அய்யருக்குத் தூக்கம் வரவில்லை. உடனே தமிழருவிமணியனின் கதவைத் தட்டியுள்ளார். அவர் தர்க்க ரீதியில் விஜயகாந்தை குழப்பியுள்ளார்.

என்ன அவரது தர்க்கம்?

1. 2016-இல் மு.க. ஸ்டாலின் முதல்வர் என்பதை விஜயகாந்தால் ஏற்க முடியுமா? என்கிறார்.

2016இல் அன்புமணி முதல்வர் என்று சொல்லும் பா.ம.க.வுடன் மட்டும் விஜயகாந்த் இணைய முடியுமா? ஏற்க முடியுமா?

உண்மையென்னவென்றால், தி.மு.க. வுடன் கூட்டு சேர்வது தே.மு.தி.க.விற்கு வலு, இலாபம் பா.ம.க.வுடன் கூட்டு சேர்வது தற்கொலைக்குச் சமம். ஆதாயம் பா.ம.க.விற்குதான்! அ.தி.மு.க .வுடன் கூட்டு சேர்ந்து நேர்ந்த இழப்பை விட பெரும் இழப்பு இதில் வரும் இதை விஜயகாந்த் சிந்திக்க மாட்டாரா?

2. தி.மு.க. ஊழல் மூட்டையை தே.மு. தி.க. சுமக்குமா? மணியன் கேட்கிறார்.

பா.ஜ.க. ஊழல் செய்யாத கட்சியா? பங்காரு லட்சுமணன்கள் பட்டவர்த்தன மாய் வாங்கியதெல்லாம் மணியனுக்கு மறந்து போய் விட்டதா?

3. திராவிடக் கட்சிகள் கூட்டணி இல்லையென்றால், பா.ம.க., திராவிடக் கட்சியான மதிமுகவுடன் எப்படி கூட் டணி வைக்க முடியும். அது திராவிடக் கட்சியில்லையென்று வைக்கோ சொல்வாரா?

தே.மு.தி.க. திராவிடக் கட்சி தானே! அ.இ.அ.தி.மு.க.வை திராவிடக் கட்சி என்று ஏற்கும்போது, தே.மு.தி.க.விற்கு தர முத்திரைத் தரலாமே! அப்படியிருக்க இரு திராவிடக் கட்சிகளுடன் பா.ம.க. எப்படி கூட்டுச் சேரும்?

தலித்திற்கு எதிரான கட்சி பா.ஜ.க. என்பதை, தலித் கட்சியை சேர்ப்பதன் மூலம் துடைக்கப் போகிறாராம். ஒரு கட்சியை ஒட்ட வைத்தால் தலித்து களின் மோசக் கட்சி, பாசக் கட்சியாகி விடுமா? இந்த இரசவாத வித்தையை மணியன் எங்கு கற்றார்? என்ன செய்ய! சேர்க்கை அப்படி!!

விஜயகாந்த் அவர்களுக்கும், வைக்கப்பட வேண்டிய வேண்டுகோள் இதுதான். என்றைக்கு இருந்தாலும் தமிழர் உணர்வுள்ள தி.மு.க.வுடன் சேர்வதுதான் எதிர்காலத் தமிழர் நலனுக்கு நல்லது. கலைஞரை, ஸ்டா லினை தட்டிக் கேட்க இவர்களுக்கு உரிமையுண்டு. இந்த உரிமை வேறு எங்கு கிடைக்கும்?

உரிமையுள்ள இடமா? உருமாறி கபடம் ஆடும் கூடாரமா? விஜயகாந்தும், வைக்கோவும் சிந்திக்க வேண்டும்!

திராவிடத் தீண்டாமையை பா.ம.க.வும் கைவிட்டு, தாழ்த்தப்பட்ட வர்களும் வன்னியர்களும் மீண்டும் ஒன்றுபட்டு, தமிழர் என்ற உணர் வோடு, தமிழர் அணியை அமைத்து தமிழர் நலன் காக்க வேண்டும்; தமிழர் உரிமைகளை, அடையாளங்களை, சிறப்புகளை மீட்க வேண்டும்!

Read more: http://viduthalai.in/page2/73084.html#ixzz2pQsGo9Df

தமிழ் ஓவியா said...


உழவனின் நண்பன் நுண்ணுயிர்கள்!

(தம் வாழ்நாளை இயற்கை விஞ்ஞானத்துக்காகவே அர்ப் பணித்த டாக்டர் கோ. நம்மாழ்வார் நினைவாக இக்கட்டுரை).

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்(து)

இயற்கை யறிந்து செயல் (637) _- குறள்

ஆஸ்திரேலியப் பேராசன் பில் மொல்லிசன் ஒரு முறை, மலைவாழ் மக்கள் தலைவனிடம், சமவெளிப் பகுதியில், டிராக்டர் வைத்து, ரசாயன உரங்களைக் கொட்டி, ஆழ்குழாய் கிணறு மூலம் நீர் எடுத்து, பூச்சிக்கொல்லி தெளித்து விவசாயம் செய்யும் பண்ணையாருக்கும், மழை நேரத்தில் கோலால் துளையிட்டு, அதில் விதை போட்டு பெரு விரலால் மூடும்உனக்கும் என்ன வேறுபாடு? என்று கேட்டார்.

அதற்கு, நாங்கள் இயற்கைத் தாயிடம் இருந்து பாலை மட்டும் குடிக்கிறோம். பண்ணையார், இயற்கை தாயின் முலையையே அறுத்து ரத்தம் குடிக்கிறார்! என்று பதில் சொன்னான் மலைவாழ் மக்களின் தலைவன்.

இயற்கையைத் தாயாகப் பாவிப்பதும், தாயைப் பேணிப் பாதுகாத்து, தாய் மடியில் குழந்தையாகப் படுத்துக் கிடந்து இன்பம் அனுபவிப்பதும் காட்டு மிராண்டித்தனமாம். ஆனால், இயற்கையை சின்னாபின்னமாக்கி, உணவை நஞ்சாக்கி அதை உண்டு வாழும் மக்களை நோயாளியாக்கி, அவர்களுக்காக வானுயரத்தில் மருத்துவமனைகளைக் கட்டி லாபம் சம்பாதிப்பது நாகரிக வளர்ச்சியாம்.

அய்ந்து சென்ட் நிலத்தில் விளைந்ததை இருபதால் பெருக்கி அதை இரண்டரையால் வகுத்து, ஒரு ஹெக்டர் நிலத்தில் இவ்வளவு விளைந்திருக்கிறது என்று விளம்பரம் செய்து விழா நடத்தும் ஆடம்பர மெல்லாம்.. இனி உலகுக்கு உணவளிக்க முடியாது என்று அனைவரும் உணர்ந்து விட்டனர். மனித சமுதாயம் தன்னை அழிவில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், நீடித்து நிலைத்த உணவு உற்பத்தி தேவை. நீரும் நிலமும் உணவு உற்பத்திக்கு அடிப் படை. எப்படிப்பட்ட நிலம் இருந்தால் உற்பத்தி தொடரும்?

நாஞ்சில் நாட்டைப் பற்றிப் பாடியிருக்கும் மனோன்மணீயம் ஆசிரியர் பேரா.பெ. சுந்தரம்பிள்ளை. சிறகு கொண்டு குழந்தை உடலில் தடவும்போது, குழந்தை சிலிர்த்துக் குதூகலிப்பதுபோல, நாஞ்சில் நாட்டு உழவர்கள் கலப்பை என்ற சிறகைக் கொண்டு நில மகளுக்குக் கிச்சுகிச்சு மூட்டும்போது அவள் மெய் சிலிர்த்து பெரு விளைச்சலைத் தருகிறாள் என்றி ருக்கிறார். அப்படி ஓர் உயிரோட்ட முள்ள நிலம் இருந்தால், உற்பத்தி தொடரும்.

மசானபு ஃபுகோகாவின் ஒற்றை வைக்கோல் புரட்சி என்ற புத்தகத்தை நமது உழவர்கள் வாங்கி திரும்பத் திரும்பப் படிக்க வேண்டும். பச்சைப் புரட்சியால் தீமை என்று தெரிந்ததுமே, தனது பணியைத் துறந்து, தந்தையின் நிலத்தில் ஆராய்ச்சியைத் தொடங் கினார். குறுகிய காலப் பயிரான குள்ள ரக நெல்லைத் தூக்கி தூரப் போட்டு, நீண்ட நாள் பயிரான பாரம்பரிய விதையைக் கையில் எடுத்தார். அது உயரமாக வளரும்போது களை கட்டுப்படுகிறது. அதற்கு ரசாயன உரம் தேவை இல்லை. உரம் இடாத நிலத் துக்கு நீரைத் தேக்க வேண்டியதில்லை. நீர் தேங்காத நிலத்தில் நுண்ணுயிர்கள் (பாக்டீரியா, பூஞ்சை, காளான்) பெருகு கின்றன. மண்புழுக்கள் ஓய்வு ஒழிச்சல் இல்லாது நிலத்தை உழுகின்றன என்பதைப் பார்த்த ஃபுகோகா, அவரது நிலத்தில் ஒரு தேக்கரண்டி மண்ணில், பத்து லட்சம் நுண்ணுயிர்கள் இருப்பதையும் கண்டுபிடித்தார்.

அந்த நுண்ணுயிர்கள் தான், வைக்கோலை எருவாக மாற்றுகின்றன. மண்ணிலும், நீரிலும் உள்ள சத்துகளைத் தாவரங்கள் எடுத்துக் கொள்ளும் வகை யில் மாற்றித் தருகின்றன. நிலத்தில் நுண்ணுயிர்கள் பெருகினால்தான், பூமி யானது மீண்டும் மீண்டும் உற்பத்தியைப் பெருக்கும் சக்தியைப் பெறும்.


ஜீவன் என்ற ஃபிரெஞ் சுக்காரர், உழவர், தனக்கும் மண்ணுக்கும் உணவு உற்பத்தி செய்ய வேண்டும். நிலத்துக்குக் கரிமப் பொருள்தான் உணவு என்று சொல்லி இருக்கி றார். செடி, மண்ணில் இருந்து உணவை எடுப்ப தில்லை; பச்சை இலைகள், சூரிய ஒளியின் மூலம் ஸ்டார்ச் தயாரிப்பது தான் ஒளிச்சேர்க்கை என்று நாம் மூன்றாம் வகுப்பிலேயே படித்து விடுகிறோம். ஒளிச்சேர்க்கைக்குக் காற்றும் தேவை. நிலம் நன்கு விளைய கரிமப் பொருட்களும் நிறைய தேவை. ஆத லால், பயிர்ச் சுழற்சியில் அதிகம் வைக் கோல் தட்டை தரக்கூடிய ஒரு பயிர் கட்டாயம் இருக்க வேண்டும்.

மசானபு ஃபுகோகா வைக்கோலையே (பழைய ரகம்) நிலத்துக்கு அளித்தார். தமிழக உழவர்கள் வைக்கோலை மாட்டுக்கு அளித்து மாட்டு எருவை நிலத்தில் இட்டார்கள். நிலம் தொடர்ந்து விளைய நிறைய வைக்கோல் தேவை. வைக்கோல் போர் உயர, நீண்ட நாள் விளையும் பாரம்பரிய விதைகள் தேவை.

நன்றி: எந்நாடைய இயற்கையே போற்றி

-- இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்
ஆனந்தவிகடன் வெளியீடு

Read more: http://viduthalai.in/page2/73087.html#ixzz2pQsp5K00

தமிழ் ஓவியா said...


சமூக விஞ்ஞானி பெரியாரைப் போற்றிய இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்

1913ஆம் ஆண்டு -_ தைத் திங்களில் தமிழர்கள் _ தந்தை பெரி யாரின் அடிச்சுவட்டில் இம்மியும் பிறழாத தஞ்சை மாவட்டத்துக் காரர்கள் கொண்டாடும் பொங்கல் விழா. சுமார் 50,000 பேர் உழைக்கும் திருக்கூட்டம் குடும்பம் குடும்பமாகக் கூடியுள்ள தமிழர் பண்பாட்டுக் கலை விழா. அவ்விழாவில் விருதுபெறு வோரில் நானும் ஒருவன். அங்கே விருது பெறக் கம்பீரமாய் வீற்றிருந்த 75 வயதுப் பெரியவரை முதன் முதலில் பார்க்கிறேன். கிராமத்தான் என்று கொச்சையாகச் சொல்வார்களே அதுபோன்ற தோற்றம் தலையில் துணியால் முண்டாசு, மேலே சட்டை கிடையாது. இடுப்பில் கணுக்காலுக்கு மேல் ஏறியிருந்த தூய வேட்டி இயற்கை அறிவியலார் கோ. நம் மாழ்வார் என்று அறிமுகம் ஆகிறார். அவர் பெயரைக் கேள்விப்பட்டு மட்டும் கண்டிருந்த எனக்கு நேரில் பார்த்தபோது வியப்பு.

வெள்ளைத் தாடி, மீசைக்கிடையே குறு, குறுத்த அந்த விழிகள் இயற்கை, இயற்கை என்று இயற்கையைத் தேடிய விழிகள்.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு கிராமத்தில் பிறந்த எளிமையான தோற்றமுள்ள அந்த மனிதர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்புப் படித்தவர் என்றால் எவரும் நம்ப மாட்டார்கள்.

அந்த மனிதர் பசுமைப் புரட்சி, தொழில் மயமாக்கம், சூழல் மாசடை தல் தொடர்பாகச் சூடான விமர்சனங் களை மட்டுமல்லாது, ஆக்கபூர்வமாக மாற்றுகளையும் முன் வைத்ததோடு, தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்கு வித்தவர் என்பது எவரும் அறிந்த செய்தி. வானகம் குடும்ப அமைப்பு உள்ளிட்ட பல அரசு சாரா அமைப் புகளின் அமைப்பாளரும் ஆவார்.

அவர் வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அவர் உழவர்களின், விவசாயிகளின் தோழர் மட்டுமல்லாது, விவசாயம் எனப்படும் வேளாண்மையின் உற்ற நண்பர்.

அவருடைய போராட்ட வரலாற்றுப் பக்கத்தைப் புரட்டினால் பூச்சிக் கொல்லிகள் எனும் மக்கள் உயிர்க் கொல்லிகள், மரபணுச் சோதனைகள், பி.டி.கத்திரிக்காய் எதிர்ப்பு, இங்குள்ள உழவனுக்குப் பயிரிட்டவற்றிற்கு உரிய விலை கிடைக்காத நிலையில் வெளி நாடுகளில் இருந்து உணவு தானியங்கள் இறக்குமதி, விவசாய நிலங்களை வேறு நோக்கங்களுக்கு எதிர்த்தும் போராடி யவர் என்று விரியும்.

தந்தை பெரியாரின் வழியில் மனிதர்களை நேசித்த மாமனிதர் அவர். மனிதம் போற்றிய பெரியார் வழி நின்றவர். பெரியார் பிறந்திராவிடில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கதிமோட்சம் இல்லை எனும் ஆழ்ந்த கருத்துடையவர் எனவே அவருடைய களப்பணிகளைப் பார்த்தால் அவர் மனிதம் வாழ மேற்கொண்ட பணிகள் என்பது விளங்கும்.
சுனாமியினால் பாதிக்கப் பெற்ற நாகப்பட்டினம் மாவட்ட நிலங்கள் சீரமைப்பு, 60க்கும் மேற்பட்ட கரிம விவசாயப் பயிற்சி மய்யங்களைத் தமிழ்நாட் டில் உள்ள வெவ்வேறு மாவட் டங்களில் நிறுவுதல் தமிழின வாழ்வியல் பல்கலைக் கழகம் எனும் அமைப்பினைத் தொடங் கிக் கிராமப்புறங்கள் அனைத் தையும் கால்நடையாகவே சென்று கருத்தரங்குகளும், பயிற்சி வகுப்புகளும் நடத்தி வந்த இயற்கை அறிவியல் பேராசிரிய ரான அவருடைய இயற்கை உழவாண்மை வாழ்வியல் கூறும் மாத இதழ் பேரிகை முழங்கியவர்!

பட்டங்கள் விருதுகளைத் தேடி ஓடாத அவரை விருதுகள் தேடி நாடி வந்தன. இயற்கை வேளாண்மையை இந்த இந்திய மண்ணுக்குள்ளே குதிரை ஓட்டாமல் இயற்கை வேளாண்மையை வலியுறுத்தி தமிழ் மண் கடந்து பிற மாநிலங்களுக்கும் சென்று வலியுறுத்திய தோடல்லாமல் ஏராளமான அய் ரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் பயணித்துள்ளார்.


தமிழ் ஓவியா said...

2004இல் தமிழ்நாடு மாசுக் கட்டுப் பாடு வாரியத்தில் சுற்றுச் சூழல் சுடரொளி விருது, 2007இல் காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் ஈரோட்டில் மக்கள் சிந் தனையாளர் விருது, பாரதியார் விருது கபித்தலம் தமிழர் பண்பாட்டுப் பொங்கல் விழா விருது என்று பல விருதுகளைப் பெற்றவர் அவர்.

உழவுக்கும் உண்டு வரலாறு எனும் விகடன் வெளியீடு, தாய்மண்ணே வணக்கம் களை எருது, பூமித்தாயே, எந்நாடுடைய இயற்கையே போற்றி, இனி விதைகளே பேராயுதம், வயிற்றுக்குச் சோறிட வேண்டும் என்று தலைப்பிலேயே வித்தியாசமான இயற்கை வளம், உரம், வாழ்வு போற்றும் நூல்களைப் படைத்தவர் உலகிலேயே இவர்தவிர வேறு ஒருவரும் இரார்.

தன் சாதனைகளைக் குறித்துத் தலைக்கனம் கொள்ளாதவர் அடிக்கடி சொல்வது வெளிநாட்டு நிறுவனங் களை எதிர்ப்பது பெரிய விசயமல்ல, சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் கியூபா அமெரிக் காவை எதிர்த்துத் தலைநிமிர்ந்து நிற்கிறது எனத் தந்தை பெரியாரைப் போல் உழவர்களுக்குத் துணிச்சல் ஊசி போட்ட இயற்கை மருத்துவர் அவர்.
மதுரை நீதிமன்றம், புதுக்கோட்டை பேருந்து நிலையம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதலியவைகூட ஏரியில்தான் உள்ளன. அது மட்டுமல்லாது மதுரையைச்சுற்றி 40 அரசுக் கட்டடங்கள் ஏரியில் உள்ளன சென்னையில் 200-க்கும் மேற்பட்ட ஏரிகளைக் காணவில்லை. இது போன்ற சூழல்கள் இருந்தால் விவசாயம் எப்டிச் செழிக்கும் என்று வினா எழுப்பி இராசாயன உரங்களை அறவே புறந்தள்ளி பாரம்பரிய இயற்கை விவசாய முறைகளை நாம் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியவரின் துணிச்ச லான இந்த உரை நம் விழிகளைத் திறக்கட்டும்.

இந்தியாவில் பசுமைப் புரட்சி என்றெல்லாம் கூறுகிறார்கள். அது சுத்தப் பொய். சென்ற வாரம் தமிழக வேளாண் துறைச் செயலாளர் சுர்ஜித் கே.சௌத்ரி, அய்.ஏ.எஸ். அவர்கள் ஒரு பத்திரிகைக்கு நேர்காணல் கொடுத் துள்ளார். அதில் பசுமைப் புரட்சி எனச்சிலர் கூறி வருகிறார்கள். அவை காலத்துக்குச் சரிப்பட்டு வராதவை. வேளாண் விஞ்ஞானி எனக் கூறப்படும் எம்.எஸ். சுவாமிநாதன் போன்றவர் களின் பேச்சைக்கேட்டு நாம் தவறான பாதையில் சென்று விட்டோம் என்று வெளிப்படையாகக் கூறியதை வெளிச்சம் போட்டுக் காட்டியவர். உதகையில் தட்பவெப்பத்தில் மட்டுமே விளையக்கூடிய மிளகு கூடப்பட்டுக் கோட்டையில் இயற்கை முறை வேளாண்மையில் விளைவதைச் சுட்டிக் காட்டுகிறார்.

பெரியாரியச் சிந்தனையாளர் - பெரியார் பாரம்பரியத்திற்குச் சொந்தக் காரர் என்பதற்கு அவர் ஒரு முறை வழங்கிய இந்த நேர்காணல் சான்றா கும். நான் தொடக்கத்தில் களக்காடு பகுதியில் பணியாற்றிய போது அங்குள்ள இளைஞர்களுடன் இயற்கை வேளாண்மை குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி அடிக்கடி நடைபெறும். இந்நிகழ்ச்சியில் ப. சுப்பிரமணியன், ப. சீத்தாராமன் ஆகியோர் தவறாமல் பங்கேற்பர். அவர்கள் பிறகு தற்போது பெரியார் வளாகத்தில் பணிபுரி கிறார்கள். எனது குடும்பம் பெரியார் பாரம்பரியத்தில் வந்ததுதான் எனப் பெருமையோடு குறிப்பிட்ட இயற்கை வேளாண் மைக்குக் குரல் கொடுத்த அவர் தமிழர் பண்பாட்டுக் கலை விழாவில் தந்தை பெரியாரைக் குறித்து முழங்கிய முழக்கங்கள் கூடிய முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தின.

இந்த ஆண்டு ஜனவரி 25ஆம் நாள் அதே இடத்தில் தமிழர் பண்பாட்டுக் கலை விழா பத்தாமாண்டு நிகழ்ச் சிகள் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற இருக்கின்றன. அப்போது கூடும் திராவிட கூட்டம் கடந்த ஆண்டு பெரி யாரைப் புகழ்ந்து பாடிய இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவில் திகழும்.

ஏன்? டிசம்பர் 2013 அன்று பட்டுக் கோட்டை அருகே அத்திவெட்டியில் பிச்சினிக் கோட்டை கிராமத்தில் மீத்தேன் வாயுத் திட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்தச் சென்றபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டு இயற் கையோடு கலந்த அவர் உடல் அவர் பிறந்த திருக்காட்டுப் பள்ளிக்கு அருகே யுள்ள இளங்காடு கிராமத்தில் மண் ணோடு கலந்தது.

Read more: http://viduthalai.in/page4/73088.html#ixzz2pQtKQmq9

தமிழ் ஓவியா said...

விஞ்ஞானமா - அஞ்ஞானமா?


அக்னி ஹோத்ரம் ஒரு அறிவியலா?

புராணங்களிலும், அரச கதைகளிலும் காணப்படுவது யாகம் அல்லது வேள்வி என்னும் சொல். நெருப்பை வளர்த்து அதில் நெய் ஊற்றப்பட்டு தானியங் களும், மூலிகைகளும் போடப்படும். தழன்று எரியும் நெருப்பின் முன் முனி வர்கள் மந்திரத்தை உச்சரிப்பார்கள். நினைத்தது நிறைவேற யாகம் வளர்ப்பதுண்டு.

தற்போதும் அக்னி ஹோத்ரம் என்ற பெயரில் இது தொடர்கிறது. மண் சட்டியில் நெருப்பு வளர்த்து அதில் பசுஞ்சாண வறட்டி, நெய், முனை முறியாத அரிசி, மூலிகைகள், மலர்கள், தானியங்கள் போடப்படுகின்றன. அவை எரியும் போது அதிலிருந்து மணம் நிறைந்த புகை கிளம்பும். இவ்வாறு கிளம்பும் அக்னி ஹோத்ரா புகை வானில் அடர்ந்திருக்கும் நச்சுப் புகையை அழித்து காற்றை சுத்தப் படுத்துகிறது. இதனால் இயற்கையான முறை சரிப்படுத்தப்படுகிறது. இதுவே அக்னி ஹோத்ரத்தின் தத்துவம்.

முன்னோர்கள் சொன்ன ஒவ்வொரு சடங்கிலும் ஒரு அர்த்தம் இருக்கிறது. அதை உணர்ந்தவர்கள் அக்னி ஹோத்ரம் அறிவியல் என்பதற்கு ஒரு சம்பவத்தை கூறுகிறார்கள். 1984ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி போபால் நகரில் உள்ள யூனியன் கார்பைடு கம்பெனியில் இருந்து நச்சுவாயுக் கசிவு ஏற்பட்டது. அதில் ஆயிரக்கணக்கான மக்களும், கால்நடைகளும் மரணமடைய நேரிட்டது. பல்லாயிரக் கணக்கான வர்கள் உடல் ஊனத்தால் பாதிக்கப் பட்டனர்.

தமிழ் ஓவியா said...


உலகை உலுக்கிய இந்த சம்பவத்தில் அங்கிருந்த இரண்டு குடும்பத்தினர் மட்டும் எவ்விதப் பாதிப்புமின்றித் தப்பினார்கள். எப்படி நிகழ்ந்தது அந்த அதிசயம்? நச்சு வாயு அந்த பகுதியில் வேகமாக பரவிய போது தப்பி ஓட சக்தியற்ற அந்த குடும்பத்தினர் வீட்டில் அக்னி ஹோத்ரத்தை செய்து கொண்டே இருந்தார்களாம். அக்னி ஹோத்திரத்தில் எழுந்த புகை யூனியன் கார்பைடு கம்பெனியின் நச்சுப் புகையை செயலிழக்க செய்து இவர்களை காப்பாற்றியதாக சொல்கிறார்கள். வீட்டில் செய்யப்படும் இந்த அக்னி ஹோத்ர புகைக்கு அணுச் சிதைவினால் உண்டாகும் கதிரியக்கத்தின் தீய விளைவு களை கூட சமனப்படுத்தி தீங்கற்றதாக மாற்றி விடும் ஆற்றல் இருப்பதாக ஒரு ரஷ்ய விஞ்ஞானி கூறியிருக்கிறார்.
வேள்விகள் செய்யப்படும் இடத்தில் காணப்பட்ட நச்சுப் புகையின் அளவை யும், வேள்விக்கு பின்னர் அதே இடத் தில் நிகழ்ந்த மாறுபட்டையும் எலாப் டிக் என்னும் அளவுமானியை கொண்டு அளந்து இது போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படு கிறது. அமெரிக்க மனோதத்துவ நிபுணரான பின்னி ராதீன் இந்தியாவில் நடத்தப்படும் வேள்விச் சடங்குகளை ஆய்வு செய்திருக்கிறார். அவர் கூற்றுப் படி, அக்னி ஹோத்ர மந்திரங்களும், புகையும், காற்று மண்டலத்தில் நுண்ணிய மாற்றங்களை செய்கிறது. அப்போது அதனை சுவாசிக்கும் மனிதர்களிடத்தில் வியக்கத்தக்க மனமாற்றம் ஏற்படுகிறது என்கிறார்.

திருட்டுகளை தடுக்க காவல் நிலையத்திலும், நோய்களை தடுக்க மருத்துவமனையிலும் யாகம் செய்தார் கள் என்று கேள்விப்படுகிறோம். அக்னி ஹோத்ரம் அதற்கு உதவுமா என்பதை தடுக்கப்படும் திருட்டும், கட்டுப்படுத் தப்படும் நோயும் தான் நிரூபிக்கும்..
தினந்தந்தி 30.12.2013, பக்கம் 16

மதச் சடங்குப் புகையால் உருகும் இமயமலைப் பாறைகள்

மதச் சடங்குகளின்போது வெளி யேறும் கரியமில வாயு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்கள் புவி வெப்ப மடைதலுக்கு காரணமாக அமைந்துள் ளன. அதன் காரணமாக இமயமலை யில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருகின்றன என்று ஆய்வில் தெரியவந் துள்ளது. காற்று மாசுபடுவதற்கு இந்தியா, நேபாளம் உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளில் மேற்கொள்ளப்படும் மதச் சடங்குகளின் போது வெளிப்படும் புகையும் ஒரு காரணம் என்று நீண்ட நாள்களாக சூழலிய லாளர்களிடையே கருத்து நிலவி வந்தது. இது தொடர்பாக அமெரிக்காவின் நெவாடா பாலைவன ஆய்வு மய்யமும், சத் தீஸ்கரின்

பண்டிட் ரவிசங்கர் சுக்லா பல்கலைக் கழகமும் இணைந்து ஆய்வு நடத்தியது. அதில், புதை படிம எரிபொருளை மனிதன் எரிக் கும்போது வெளியாகும் வாயுக்களின் மூலம் காற்று மாசுபடுவதற்கான துகள்கள் அதிகளவில் வெளியாகின்றன. இது ஒட்டு மொத்த காற்று மாசுபாட்டுக்கான காரணிகளில் 23 சதவீதமாகும். புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய விரைவில் ஆவியாகும் தன்மையுடைய கரிமச் சேர்மங்கள், இந்த புதைப் படிம எரிபொருளில் இருப்ப தாகத் தெரியவந்துள்ளது. மதச் சடங்குகள் இந்துக்களின் திரும ணத்தின்போது செய்யப்படும் ஹோமம், இறுதிச் சடங்கின் போது சடலத்தை எரியூட்டு வதால் வெளியேறும் வாயு, முஸ்லிம், புத்த மதத்தினர், தங்களின் வழிபாட்டுத் தலத்தில் பத்தியை கொளுத்துதல் போன்ற வற்றால் காற்று மண்டலத்தில் கலக்கும் கரியமல வாயு உள் ளிட்ட பசுமை இல்ல வாயுக்கள் குறித்து 2011_2012 வரை ஆய்வு செய்யப்பட்டது. சடலத்தை எரியூட்டும்போது, அதிகளவில் பழுப்பு கார்பன் ஏரோஸெல் வாயுக்கள் வெளியாவதாக தெரிய வந்துள்ளது. இந்த வாயுக்கள் புவி வெப்பமயமாதலுக்கு காரணி களாக உள்ளன. இவை சூரிய வெப்பத்தை தன்னுள் ஈர்த்து, அதிக அளவு வெப்பத்தை வெளியிடுகின்றன. இதனால், இமயமலை உள்ளிட்ட மலைப் பகுதிகளில் வெப்பநிலை அதி கரித்து பனிப்பாறைகள் உருகு கின்றன. இது குறித்து ஆய்வாளர் ஷம்ஸ் பர்வேஸ் கூறுகையில், "2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியா வில் மட்டும் 30 லட்சம் வழி பாட்டுத் தலங்கள் உள்ளன. ஆண்டுக்கு 1 கோடி திருமணங் கள் நடைபெறுகின்றன. எனவே, மதச் சடங்குகளின்போது உருவாகும் வாயுக்களின் அளவு நாம் நினைத்துப் பார்க்காத அளவுக்கு மிகவும் அதிகம் என் பதை உணர வேண்டும்" என்றார். தி இந்து தமிழ் 31.10.2013

Read more: http://viduthalai.in/page5/73089.html#ixzz2pQtaI5Fh

தமிழ் ஓவியா said...


முப்புரி தரிக்க முடியுமோ? மோடியால்!


மோடியால் எல்லாம் முடியுமாம்!

மூச்சுக்கு முந்நூறு முறை முழங்கி நின்றிடும் முப்புரி கூட்டம் . பாலாறும் தேனாறும் பண ஆறும்
ஓடுமாம் இந்தியாவில், என பார்ப்பன கூட்டங்கள் உளறுகின்றன
அதையே ஊடக ஒலிபேசிகள்
ஓயாமல் அலறுகின்றன இஸ்லாமியர் இரத்த ஆறும் என்பதை ஏனோ மறந்தனர்! மறுக்கின்றனர்!

நரேந்திர மோடியின் நல்லாட்சியில்
பன்னாட்டு மூலதனங்கள் பயமின்றி நுழையுமாம்!
பண மழையும் கொட்டுமாம்!
கூவித் திரிகின்றன! கோயபல்சு கூட்டங்கள்!

அன்னியர் நுழைவது இருக்கட்டும் ஒருபுறம்!
இந்திய நாட்டில் எங்கேனும் ஓரிடம்,
ஆகம கோயில் கருவறைக்குள்ளே
நுழைய முடியுமோ நரேந்திர மோடியால்!
சூப்பர் மேனாக உடை அணிந்தாலும்,
அவாளுக்கு, தொங்கு சதை தானே!

அடுத்த பிரதமராய்- மோடியை ஆக்கியே தீர்வதென ஆர்ப்பரிக்கும் ஆரியகூட்டமே!
மோடிக்கு முப்புரி தரித்து,
சங்கராச்சாரியாரின் வாரிசு -என அறிவிக்க முடியுமோ?
மதவெறி பிடித்த பாஜகவுக்கு தேவை ஒரு நரேந்திர மோடி!
இந்திய ஹிட்லர் மோடிக்கு,
தேவை ஒரு பாஜக!
ஜாடிக்கேற்ற மூடிகள்!

ஈழத் தமிழனின் இரத்தம் குடித்த
மகிழ்ந்த ராஜபக்சே சர்வதேச குற்றவாளி!
இசுலாமியத் தோழனின் இரத்தம் குடித்த நரேந்திர மோடியோ நாளைய பிரதமர்!
இதுதான் இன்றைய
அரசியல் கூட்டணிகளின் அவலத் தத்துவம்!
அனைத்திலும் பின்னூடாய் ஆரியத் தந்திரம்!
பார்ப்பனியமே! உன் மறு பெயர் தான் வன்முறையோ!

- தகடூர் தமிழ்ச்செல்வி

Read more: http://viduthalai.in/page5/73090.html#ixzz2pQtjBgx9

தமிழ் ஓவியா said...


அம்பேத்கர் பேசுகிறார்


ஜஸ்டிஸ் கட்சி எல்லாம் இந்திய கட்சி ஆக இப்போது நல்ல சமயம்; நல்ல வேலைத் திட்டமும் தீர்மானங்களும் இருப்பதால் துணிந்து தைரிய மாகவும் இந்தியா பூராவும் சுற்றி வேலை செய்யும்படியும் ஆங்காங்கு தமது நண்பர்களுக்கு எழுதியும் தம்மால் ஆன அள வுக்கு ஒத்துழைத்தும் ஆதரவு அளிப்பதாகவும் அம்பேத்கர் சொன்னார் என்பதாகத் தெரிகிறது (69 ஆண்டுகளுக்கு முன்பு)

(குடிஅரசு 30.09.1944 சென்னை தந்தை பெரியாரும் டாக்டர் அம்பேத்காரும் பக்கம் 2)

தந்தை பெரியாருக்கு எதிராக தங்களுக்குத் தாங்களே ஜஸ்டிஸ் கட்சி என்று சொல்லிக் கொண் டிருந்த சிலர் டாக்டர் அம்பேத் காருக்கு விருந்து ஒன்றை கொடுத்தனர். விருந்துக்கு நன்றி தெரிவித்துப் பேசிய டாக்டர் அம்பேத்கர் அவர்கள் பெரியாருக்கு விரோதமாக நடப்பதைக் கண்டித்தார். தலை வரை மதித்துக் கட்டுப்பாடாக நடக்க வேண்டுமென்று அறிவுரை கூறினார். தந்தை பெரியார் அவர்களை டாக்டர் அம்பேத்கர் எப்படி மதித்தார் என்பதற்கு இது ஓர் அரிய எடுத்துக்காட்டு அல் லவா? 30.9.1944 அன்று கடைசியாக திராவிடஸ்தானை யும், பாகிஸ்தானையும் ஒன்றாகக் கருதியது தப்பு என்றும், அதன் தத்துவம் வேறு என்றும், இதன் தத்துவம் வேறு என்றும், அது முஸ்லீம்கள் மெஜாரிட்டி உள்ள இடத்திற்கு மாத்திரம் பொருத்த மானது என்றும், பிராமணீயம் இந்தியா முழுவதும் பொறுத்த விசயமென்றும் திராவிடஸ்தானில் தங்களையும் வேறு மாகாணங் களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னார் என்பதாகத் தெரிகிறது. எனவே இப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் கூறியதுபோல் மதச்சார்பற்ற மாநிலங்களைச் சேர்ந்தவை ஒன்றுபடச்சேர்ந்து தேர்தலைச் சந்திப்பது அவசிய மாகும்.

- அ.இனியன், பத்மநாதன், ஈரோடு

Read more: http://viduthalai.in/page7/73092.html#ixzz2pQtyXKWH

தமிழ் ஓவியா said...


ராமபக்தர்களின் பொது ஒழுக்கம், இது தான்

டில்லி போட்கிளப் மைதானத்தில் பாரதிய ஜனதாவும் - விசுவ இந்து பரிஷத்தும் சேர்ந்து நடத்திய பேரணிக்கு வந்த ராமபக்தர்கள் அனை வரும் புதுடில்லி ரயில் நிலையத்துக்கு வந்தனர். யார் யாரோ ரிசர்வ் செய்த பெட்டிகளில் - தங்கள் பெட்டி படுக்கைகளுடன் ஏறி உட்கார்ந்து கொண்டனர். உட்கார்ந்து கொண்டு முன்கூட்டியே பதிவு செய்தவர்கள் உள்ளே வராதபடி கதவுகளை இழுத்து மூடிக் கொண்டனர்.

முன்பதிவு செய்த ஏராளமான பயணிகள், டிக்கட் இருந்தும், ரயிலில் ஏற முடியவில்லை. உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தைக் கூறலாம். ஒரு குடும்பத்தினர், டில்லியிலிருந்து கோரக்பூர் செல்ல வைஷாலி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்கூட்டியே டிக்கட் பதிவு செய்தனர். பதிவும் உறுதியானது; குடும்பத்துடன் ரயில் நிலையம் வந்தனர். ரயில் நிலையம் முழுவதும் காவி உடை, ராம் ராம் முழக்கங்கள். பதிவு செய்யப்பட்ட பெட்டிக்கு சென்றால் - உள்ளே எல்லா இருக்கைகளிலும் ராமபக்தர்கள் முன் பதிவு செய்த அந்தக் குடும்பத்தினர் ஏற முடியவில்லை. கதவு சாத்தப்பட்டு விட்டது. காவல்துறையிடம் -பல பயணிகள் முறையிட்டனர். அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை; ரயில்வே அதிகாரிகளோ, வெளியே வராமல் பதுங்கியே விட்டனர். அன்று முழுவதும் டில்லியிலிருந்து புறப்பட்ட அத்தனை ரயில்களிலும் இது தான் நிலைமை. இன்று முன்பதிவு எதுவும் கிடையாது எல்லாமே ரத்து செய்யப் பட்டுவிட்டது என்று ராம பக்தர்கள் அனைவரும் உற்சாகமாகக்கூறி மகிழ்ந்து வந்தனர்.
-- டைம்ஸ் ஆப் இந்தியா ஏப்.6 1991

பாரதிய ஜனதா, விசுவ இந்து பரிஷத் அமைப்புகள் தான் ஒழுக்கமானவை; கட்டுப்பாடானவை என்றெல்லாம் பார்ப்பன ஏடுகள் பிரச்சாரம் செய்கின்றன. இவர்களின் பொது ஒழுக்கத்துக்கு. இது ஒரு சிறு உதாரணம்

Read more: http://viduthalai.in/page8/73094.html#ixzz2pQuSS7jU

தமிழ் ஓவியா said...


அரசின் புது மருத்துவனையில் மருத்துவர் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு புறக்கணிப்பா? - தொல்.திருமாவளவன் போர்க் கொடி!


சென்னை, சன.4- சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் தொடங் கப்பட உள்ள தமிழ் நாடு அரசின் உயர் நிலை மருத்துவமனைக் குப் பேராசிரியர் உள் ளிட்ட பொறுப்புக ளுக்கு பணி நியமனத் தில் இடஒதுக்கீடு கிடையாது என்ற அதிமுக அரசின் செயல்பாட்டைக் கண்டித்துப் போர்க் கொடி உயர்த்தியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமா வளவன். அரசினர் தோட்ட வளா கத்தில் தலைமைச் செயலகத் திற்கென எழுப்பப்பட்ட கட்ட டத்தில் தற்போது அரசு பொது மருத்துவமனை இயங்கவிருப்பது அனைவரும் அறிந்ததே. அம் மருத்துவமனையில் பணியாற் றுவதற்குரிய மருத்துவர்களைத் தேர்வு செய்ய தமிழக அரசு அறிவிப்புச் செய்துள்ளது. அப் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாது எனவும் அரசு அறிவித்திருப்பது பெரும் அதிர்ச் சியாகவுள்ளது.

பெரியார், அண்ணா வழியில் வந்த அதிமுக தலை மையிலான அரசு சமூகநீதிக்கு எதிரான முடிவை எடுத்திருப்பது வியப்பை யும் வேதனையையும் அளிக் கிறது. தாழ்த்தப் பட்டோர், பழங் குடியினர், பிற்படுத்தப் பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப் பட்டோர் ஆகிய ஏழை எளியவர் களுக்குக் காலம் காலமாய் மறுக்கப் பட்ட நீதியை வழங் கிட உருவாக்கப்பட் டுள்ள ஒரு வாய்ப் புத்தான் இடஒதுக்கீடு என்னும் நடைமுறையாகும். மகாத்மா ஃபூலே, புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற மாமனிதர்களின் பங் களிப்பால் வென்றெடுக்கப்பட்ட சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் சதி முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதனை எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது. தமிழக அரசு உட னடியாக இந்த முடிவைக் கைவிட வேண்டுமென விடுதலைச் சிறுத் தைகள் கேட்டுக்கொள்கிறது.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பொருளாதார அடிப்படையில் பின்தங்கியோருக்கும் இட ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பித்தபோது தமிழக மக்கள் அதனை ஏற்கவில்லை. அப்போது நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக வாக்களித்து தமது கடுமையான எதிர்ப்பை வெளிப் படுத்தினர் என்பது வரலாறாகும். இதனை இன்றைய அதிமுக அரசிற்கு நினைவூட்டுவது விடு தலைச் சிறுத்தைகளின் கடமை யெனக் கருதுகிறோம். தமிழகத் தில் சமூகநீதியை நிலைநாட்ட, மருத்துவர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்த, அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து தமிழக அரசை வற்புறுத்திட முன்வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமது அறிக்கையில் பெரி யாரும், அண்ணாவும் உலவிய மண்ணில், சமுதாய ஆதிக்க மனப் பான்மையுடன் முதல் அமைச்சர் நடந்து கொள்வதைக் கண்டித் துள்ளார்.

மருத்துவர் ச. இராமதாசு

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசும் அ.இ.அ.தி.மு.க. கட்சியின் சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கையை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார். வழக்கமான நடைமுறையைக் கடைப்பிடிக்காவிட்டால் பா.ம.க. போராட்டம் நடத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/73107.html#ixzz2pQuzdEnz

தமிழ் ஓவியா said...


சிந்திக்கவேண்டும்


சமஸ்கிருதத்தினால் தமிழர்களும், தமிழ்நாடும் இன்று என்ன நிலைமைக்குத் தாழ்ந்து தொல்லையும், மடமையும், இழிவும் அனுபவிக்கிறோம் என்பதைச் சிந்திக்கவேண்டும்.
_ (விடுதலை, 5.8.1963)

Read more: http://viduthalai.in/page-2/73110.html#ixzz2pQvdztel

தமிழ் ஓவியா said...


காரைக்கால் கொடூரம்!

நன்னிலத்தைச் சேர்ந்த இளம்பெண், தன் காதலனைச் சந்திக்க காரைக்கால் வந்தார். உடன் வந்த தோழியை விட்டு விட்டு அவர்கள் திருநள்ளாறு சென்று விட்டனர். வரத் தாமதமானது.

தோழிப் பெண் தனிமையில் இருப்பதைப் பார்த்த மூவர் காவல்துறையினர் என அறிமுகம் செய்து கொண்டு ஒரு வீட்டு மாடிக்கு அழைத்துச் சென்று குளிர் பானத்தில் மயக்க மருந்து கொடுத்து வன்புணர்ச்சி செய்தனர். சத்தம் கேட்டு வந்த 7 பேர் அவர்களை விரட்டிவிட்டு தனியிடத்திற்கு அழைத்துச் சென்று தருமபுரம் சுடுகாட்டுப் பகுதியில் வைத்து பாலியல் வன்முறை செய்தனர். பின்னர் 5 பேரை வரவழைத்து திருநள்ளாறுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்முறை செய்தனர். மறுநாள் காவல் நிலையத்தில் புகார் தந்த போது உதவி ஆய்வாளர் வெங்கடாசலபதி, தலைமைக் காவலர் சபாபதி வழக்கைப் பதிவு செய்யவில்லை. மாவட்ட கண்காணிப்பாளர் மோனிகா பரத்வாஜ் விசாரணை நடத்தி வழக்கைப் பதிவு செய்தார்.

எழிலரசன், பாபுராஜ், இக்பால், காசிம், அமீர் அலி, அக்பர் யூசுப், நாசர், மதன், முமைத் கைது மற்றும் ஜெயகாந்தன், பைசல், ஓட்டுநர் மணி தேடப்படுகின்றனர்.

தனியாக இருந்த இளம் பெண், காரைக்காலில் கயவர்கள் பலரால் சூறையாடப்பட்ட கொடுமை குருதியை உறையச் செய்யக் கூடியதாகும்.

பெண்ணென்றாலே காமப் பதுமை என்று புரையோடிப் போய் விட்டதா சமூகத்தில்?

தனியாக நின்ற பெண்ணை காவல்துறையினர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட மூன்று கயவர்கள் முதலில் சூறையாடினர் என்றும், அதன் பின்னர் எழுவர் சூறையாடினர் என்பதெல்லாம் எழுதவே அருவருப்பாக இருக்கிறது. இந்த எழுவரின் அழைப்பின் பேரில் மேலும் அய்வர் வந்து கொடூரம் செய்தனர் என்பதெல்லாம் வக்கிரத்தின் கடைசி எல்லையாகவே தோன்றுகிறது.

மறு நாள் காவல் நிலையத்தில் வழக்கைப் பதிவு செய்யவில்லை என்பதும், மாவட்டக் கண்காணிப்பாளர் வந்த பிறகே வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்பதும் நமது நாட்டின் நிருவாக முறை, குறிப்பாகக் காவல்துறை எந்த அளவு கடமை உணர்ச்சியற்றது என்பதற்கு எடுத்துக் காட்டாகும்.

இது ஏதோ ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட இழிவு என்று குறுக்கிவிடக் கூடாது; நாகரிக சமுதாயத்துக்கே மானக்கேடும், மாபெரும் சவாலுமாகும்.

காதல், மதம், ஜாதி என்கிற வேறு தளத்திற்கு இழுத்துச் சென்று அரசியல் குளிர்காயாமல், நாளும் நடைபெற்று வரும் இந்தக் கேவலத்தை முடிவுக்குக் கொண்டு வருவது எப்படி என்பதில் கவனம் செலுத்தி யாக வேண்டும்.

இந்தியாவின் தலைநகரான டில்லியில் இந்தக் குற்றத்தைச் செய்த கயவர்களுக்குத் தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்ட பிறகும் இதுபோன்றவை நடக்கிறது என்றால் இதன் பொருள் என்ன?

பெண்கள் நடை உடை பாவனைகள்மீது குற்றப் பத்திரிகை படித்து விட்டு பிரச்சினை என்னும் கோப்பை முடித்து விடக் கூடாது. கட்சிகளைக் கடந்து மதம், ஜாதி என்னும் கோடுகளைக் கடந்து சமூகப் பொறுப்புணர்ச் சியுடன் சிந்திக்க வேண்டும் - செயல்படவும் வேண்டும். கல்வித் திட்டத்தில் தொடங்கி, கலாச்சார வடிவங்கள் வரை மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

பெண் என்றால் அரைகுறை ஆடைகளோடு சித்தரிக்கும் சீக்கு மனப்பான்மையை ஊடகங்கள் கலையுலகச் சித்தர்கள் விட்டொழிக்க வேண்டும். இலட்சக்கணக்கில் விற்பனையாகும் வார இதழ்களில் அட்டைப் படங்கள் எல்லாம் பெரும்பாலும் அரைகுறை ஆடை சினிமா பெண்மணிகள்தாம்.

சின்னத் திரைகளும், பெரிய திரைகளும், இணையதளங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு ஆபாசங்களை நவீனம் என்னும் போர்வையில் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன.

சட்டமன்றம் நடக்கும் போதே மக்கள் பிரதிநிதிகள் கைப்பேசியில் ஆபாசப் படங்களைப் பார்க்கின்றனர் என்றால், நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது?

இணையதளங்களில் ஏமாற்றுக்காரர்கள் பெருகி விட்டனர். எல்லாவற்றையும் விட பெண்களிடம் மிகப் பெரிய அளவில் விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

டில்லியில் கிளர்ந்து எழுந்தது போல காரைக்காலில் மக்கள் சமுத்திரம் ஏன் பொங்கி எழவில்லை?

தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது தொடர் பாக இன்னும் விசாரணையே தொடங்கப்படவில்லையாம்; தூத்துக்குடியில் ஏன் கிளர்ச்சி ஏற்படவில்லை? என்ற கேள்விகள் எழத் தான் செய்கின்றன.
பரீட்சார்த்தமாகப் பெண்களுக்கு தற்காப்புக்காகத் துப்பாக்கிகளை கொடுத்துப் பார்க்கலாமே!

ஆம்பளை (அ)சிங்கங்கள் வாலாட்டிய நான்கு இடத்தில் துப்பாக்கிக் குண்டுகள்தான் வெடிக்கட்டுமே! அப்பொழுதுதான் பிரச்சினைக்கு ஒரு முடிவு ஏற்படும் என்றால் சற்றும் தயங்காமல் பரீட்சித்துப் பார்க்கலாம் தான்.

பாலியல் வன்கொடுமை தொடர்பான பிரச்சினையில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள், காவல்துறையின ருக்கு சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு நிகரான தண்டனை வழங்கப்பட வேண்டும். பெண்களும் வீதிக்கு வந்து போராட முன் வர வேண்டும். இது குறித்துக் கழகமும் உரத்த முறையில் சிந்திக்கும் - செயல்படும்.

Read more: http://viduthalai.in/page-2/73111.html#ixzz2pQvnLRHQ

தமிழ் ஓவியா said...

சிங்கப்பூரில் கற்ற பாடங்கள்! - கி.வீரமணி

சிங்கப்பூரின் வாடகைக் காரோட்டி களும், எவ்வளவு நாணயமும் ஒழுங்கும் உள்ளவர்களாக இருக்கிறார்கள்; அங் குள்ள காவல்துறையினர் பயணிகளிடம் புகார்களை எந்த நேரத்திலும், தொலை பேசியிலேயே வாங்கி பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுத்து, காலந் தாழ்த்தாமல் இழந்தவைகளை, கண்டு பிடித்து உரியவர்களிடம் திருப்பிக் கொடுக் கும் வியத்தகு அணுகுமுறைகளை கையாளுகின்றனர் என்பதை நேற்று (3.1.2014) சிங்கப்பூரில் நேரில் அனுபவத் தில் கண்டு மகிழ்ந்ததை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எத்தனையோ முறை சிங்கப்பூருக்குச் சென்றுள்ளேன் என்றாலும் இதற்கு முன் எப்போதும் நிகழாத எனது கவனக் குறைவு காரணமாக டாக்சியில் - வாடகை உந்தில் நிகழ்ந்தது. அதனால் பல நல்ல உண்மைகளை இதற்கு முன் பலர் மூலம் கேட்டறிந்ததை படித்தறிந் ததை நேரிலேயே நானே பார்த்து உணரும் வாய்ப்பு ஏற்பட்டது.

லிட்டில் இந்தியா செராங்கூன் சாலைப் பகுதி தேக்கா என்றெல்லாம் அழைக்கப்படும் நமது வணிகர்கள் பெரி தும் வாணிபம் புரியும் பகுதியில் உள்ள நண்பர் இலியாஸ் கடைக்கு, நான் எப்போ தும் வழமையாகச் சென்று அவரையும் அவரது வாழ்விணையர், அக்கடையில் பணிபுரியும் (சங்கம் டெக்ஸ்டைல்ஸ்) தோழர்களையும் சந்தித்து, நலம் விசா ரித்து, உரையாடிவிட்யடு, அவர் மூலம் பல பழைய நண்பர்களுடன் உரையாடியும், திரும்புவது உண்டு. நேற்று மாலை சுமார் 6.30 மணி அளவில் சென்று, பேசிக் கொண்டிருந்து விட்டு, கவிதா இல்லத்திற்குத் திரும்ப அங்கிருந்து ஒரு டாக்சி பிடித்துத் திரும்பினோம்- சுமார் மாலை 7.30 மணிக்குத் திரும்பினோம்.

வாடகைக் காருக்குரிய கட்டணத்தை நான் செலுத்த முயன்றதை முந்திக் கொண்டு எனது மகள் கவிதா ஓட்டுநரிடம், வீட்டருகில் இறக்கிவிடும் போது கொடுத்து விட்டார்; நான் எனது முழுக்கால் சட்டை பேண்ட் பையிலிருந்து எனது மணிப் பர்சை வேலட்டை எடுத்து மீண்டும் அதில் வைப்பதாக எண்ணி அதை அந்த டாக்சியில் பின் சீட்டிலேயே தெரியாமல் விட்டு விட்டேன்; அல்லது பையிலிருந்து வழுவி நழுவி இருக்கலாம். இறங்கி வீடு வந்து சேர்ந்து, உடைமாற்றியபோது எனக்கு அதிர்ச்சி...! வேலட்டை காணவில்லை. உடனே நினைவூட்டிப் பார்த்தேன். வீட்டிற்கு இறங்கும்போது கையில் எடுத்ததை நன்கு நினைவூட்டிக் கொண்டு, மகளிடம் கூறினேன்.

உடனே கவிதா, அப்பாஒன்றும் கவலைப்படாதீர்கள். நான் உடனே புகார் செய்கிறேன். பெரிதும் அங்கு கிடைத்தால் நம்மிடம் திருப்பிகொடுத்துவிடுவார்கள் என்று கூறி, தொலைப்பேசியில் காவல் துறையின் அதிகாரியை அழைத்து, விவரங்களைக் கூறி, புகார் பதிவு செய்தார். இது இரவு 8.15 மணியாகும். அவர்கள் உடனடியாக புகாரைப் பதிவு செய்து கொண்டு அதற்குரிய எண்ணைத் தந் தார்கள் - தொலைப்பேசி எண்ணையும் தந்தார்கள். இதில் குறிப்பிட வேண்டிய மற்றொரு பாராட்டத்தக்க அம்சம் என்ன தெரியுமா? உடனே பதிவு செய்து கொண்டு, புகார் என்பதை இந்த தொலைப்பேசியில் நீங்கள் அழைத்து நிலவரத்தை விசாரிக்க லாம் என்று இரண்டு தொலைப்பேசி எண்ணைத் தந்தார்கள் காவல் துறையினர்.

ஒன்று அலுவலக நேர எண். மற் றொன்று அலுவலக நேரத்திற்கு அப்பால் எந்த நேரத்திலும் விசாரிக்க வாய்ப்பாகும் எண். என்னே அற்புதமான காவல்துறை ஏற்பாடு! அவர்கள் விசாரித்தபோது கவிதா, கீழ்க்காணும் தகவல்களை மட்டும் தான் கூறினார்,

1) மஞ்சள் நிற டாக்சி (அதன் எண் தெரியாது)

2) அந்த ஓட்டுநர் பெயர் ஏதோ அப்துல்லாவோ என்னவோ!

3) புறப்பட்ட நேரம், இறங்கிய நேரம்

4) புறப்பட்ட இடம் இறங்கிய வீட்டு முகவரி இவை தான் உள்ளன.

5) வேலட் கறுப்புநிறம் அதில் இருந்த கொஞ்சம் சிங்கப்பூர் பணம், சென்னை முகவரி கார்டுகள்.

சிங்கப்பூரில் தங்கியிருக்கும் முகவரி கார்டு இல்லை.

தமிழ் ஓவியா said...

நாங்கள் வீட்டில் எங்கள் பணிகளை கவனித்துக் கொண்டிருந்தோம். (எங்கே கிடைக்கப் போகிறது நாம் சரியான தகவல்களை டாக்சி எண் - நமது முகவரி எதுவும் இல்லையே என்று நினைத்தேன்)

சரியாக இரவு 9 மணிக்கு (அதாவது புகார் கொடுத்த 30 நிமிடங்களில்) தொலைப்பேசி அழைப்பு உங்கள் வேலட் - மணிப்பர்சு கிடைத்துவிட்டது. அந்த டாக்சி யின் எண் இது. அந்த டாக்சி ஓட்டுநரிடம் உள்ளது. அவர் உங்கள் முகவரிக்கு வந்து கொடுக்க வேண்டுமா? அல்லது நாளை அந்த டாக்சி நிறுவனத்திடம் நீங்கள் நேரில் சென்று பெற்றுக் கொள்ளுகிறீர்களா? என்று கேட்டு, அப்படி அவர் உங்கள் வீட்டுக்கு வந்து கொடுக்க வேண்டுமெனில், அவர் எந்தப்பகுதியிலிருந்து வருகிறாரோ அந்தக்கட்டணம் (மீட்டர்படி) நீங்கள் கொடுக்க இசைந்தால் அவரை வரச் சொல்லுகிறோம் என்று காவல் துறையினர் கேட்டனர்.

வீட்டிற்கே வந்து கொடுக்கச் சொல்லி கட்டணம் தர இசைவுதந்தோம்.

உடனே அந்த ஓட்டுநர் தொலைப்பேசி யில் சற்று நேரம் கழித்து அழைத்து இரவு 10.30 மணிக்கு வந்து பொருளை ஒப்படைப்பதாகக் கூறினார்!

ஆனால் அவர் இரவு 10.15 மணிக்கே எங்கள் இல்லம் அருகில் வந்து ஒப்படைத்து. எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள் என்றார். நானும் மாறனும் சென்று அதனைப் பெற்று, அவருக்கான பயணக் கட்டணத்தைச் செலுத்தியதோடு, ஆழ்ந்த நன்றியை அவருக்குத் தெரிவித்தோம். அதற்கு மேல் 10 சிங்கப்பூர் வெள்ளியை அவருக்குப் பரிசாக அளித்தோம். அவர் பெயர் அமானுல்லாகான் என்று அறிந்தோம்; அவர் சிங்கப்பூர் - மலாய் கார இஸ்லாமியர்.

சிங்கப்பூர் காவல் துறையின் ஒத்து ழைப்பையும், எவ்வளவு சிறப்பான அரசு உள்ளது என்பதையும் அனுபவத்தில் கண்டு உணர்ந்து, வியக்கும் வாய்ப்பும், இந்த எனது கவனக்குறைவு காரணமாக எற்பட்ட நன்மையான அனுபவமும் எனக்குக் கிடைத்தது. அதனால் பெற்ற பாடங்களும் உண்டு.

1) வெளிநாடுகளில் வெளியூர்களில் டாக்சிகளின் அவற்றின் எண்களைக் குறித்து வைத்துக்கொள்ளுதல் அவசியம்.

2) நமது மணிப்பர்சு களில் முகவரி அட்டை கார்டு ஒன்று உள்ளூர் தங்கும் முகவரி, தொலைப்பேசி எண்ணையும் எழுதி அதில் சொருகி வைத்திருப்பதும் அவசியம்.

3) இவற்றிற்கெல்லாம் மேலாக, நம் நாட்டில் இப்படி ஒரு காவல்துறை ஒத் துழைப்பு (தொலைப்பேசியிலேயே புகார் கூறி கூறிய 30 நிமிடங்களில் தொலைந்த பொருள் மீட்டப்பட்டதையும் எளிதில் பார்க்க முடியுமா என்ற வேதனையும், வருத்தமும் மிச்சம்.

(நமது நாட்டிலும் பல நேர்மையான ஓட்டுநர்கள் உண்டு என்றாலும், அங் குள்ள ஏற்பாடு எவ்வளவு விஞ் ஞான பூர்வமாக உள்ளது என்பது அறிய மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதல்லவா?)

4) என்னிடம் இருந்தது ஒன்றும் பெரிய தொகை அல்ல என்றாலும், கவனக் குறைவு எவ்வளவு பேருக்குத் தொந்தர வும் அவசியமற்ற மனஉளைச்சலையும் தந்தது. இனி தவிர்க்கப்படல் வேண்டும்.

புத்தி கொள்முதலுக்கு 30 சிங்கப்பூர் வெள்ளியை விலையாகக் கொடுத்தேன்.

Read more: http://viduthalai.in/page-2/73112.html#ixzz2pQwX6O56

தமிழ் ஓவியா said...

காலித்தனமும் வட்டி சம்பாதிக்கின்றது

சென்னை கடற்கரையில் பார்ப்பனரல்லாதாரால் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் கதர் இலாகா காரியதரிசி ஸ்ரீ எஸ். ராமநாதன் அவர்கள் பகிஷ்காரப் புரட்டைப்பற்றி பேசிக் கொண்டிருக்கையில் காங்கிரசு வீரப்புலிகள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்கள் திருட்டுத்தனமாக கூட்டத்தின் மத்தியில் இரண்டு செருப்புகளை வீசி எறிந்துவிட்டு ஓடிப்போய் விட்டார்கள் என்றும் அந்தச் செருப்புகள் ஏலம்போடப்பட்டனவென்றும் கேள்விப்பட்டோம். ஆனால் அடுத்த சில தினத்தில் அதே கடற்கரையில் பார்ப் பனர்களால் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் பல பார்ப்பனரல் லாதார்களைக் கூலிக்குப் பிடித்துக் கொண்டு போயிருந்துங் கூட கல்லும் செருப்பும் பறந்ததோடு கலகமும் அடிதடியும் காயமும் ஏற்பட்டு விட்டதாம்: காங்கிரசுகாரர்கள் தாங்கள் தான் மிக புத்திசாலிகள் என்பதாக கருதி காலித்தனத்தை ஆரம்பித்து விடுகிறார்கள். இதனால் அந்த சமயம் வெற்றி கிடைத்ததுபோல் காணப்பட்டாலும் வட்டியுடன் திரும்பவும் அனுபவித்து விடுகின்றார்களேயொழிய இதுவரை ஒரு இடத்திலாவது தப்பித்துக் கொண்டதாகச் சொல்வதற்கே இல்லை.

பகிஷ்கார இயக்கப் பிரச்சாரத்திற்கு ஸ்ரீ சத்தியமூர்த்தி தலைவராகி விட்டார், ஸ்ரீ வரதராஜுலு வாலராகிவிட்டார். மற்றபடி ஸ்ரீமான்கள் குழந்தை, ஓ. கந்தசாமி செட்டியார், பஷீர் அகமது முதலியவர்களுக்குள்ளாகவே தேசபக்தி அடங்கிவிட்டது. இவர்கள் போகும் கூட்டங்கள் முழுவதும் இந்தக் கதியையே அடைந்து வருகின்றன. பிரச்சாரத்திற்கு என்று காங்கிரஸ் நாடகத்தில் மீதியான ரூபாயில் 5000, 6000 ரூபாய்களை எடுத்து வீசி எறிகின்றார்கள். இந்த ரூபாய் களுக்காக எப்போதும் கூட்டங்கள் கூடிக் கொண்டே இருக்கின்றன. இது எங்குபோய் முடியும் என்பது மாத்திரம் விளங்கவில்லை.

ஸ்ரீமான் வரதராஜுலு பேச ஆரம்பித்தவுடன் கலகம் ஏற்பட்டதென்றும், அடிதடிகள் நடந்ததென்றும் பொது ஜனங்கள் அவரைப் பேசவிடாமல் உட்காரச் செய்து விட்டார்கள் என்றும் பத்திரிகைகளில் காணப்படுகின்றன. பொது ஜனங்களால் இந்த யோக்கியதை பெற்ற ஸ்ரீ வரதராஜுலு அவர்கள், ராமசாமி நாயக்கர் சர்க்கார் பிரச்சாரம் செய்கின்றார் என்று எழுதுகின்றார், பேசுகின்றார், வாசகர்களைச் சுத்தமுட்டாள்கள் என்றும் எதையும் நம்பிவிடுவார்கள் என்றும் எண்ணிக் கொண்டு இம்மாதிரி தந்திரங்களைச் செய்கின்றார்.

அப்படியே நாயக்கர் சர்க்கார் பிரச்சாரம் செய்வதாக வைத்துக் கொண்டாலும், பார்ப்பனப் பிரச்சாரத்தைவிட சர்க்கார் பிரசாரம் எத்தனையோ மேலான தென்பதை இவரே பலதடவை உணர்ந்திருந்தும் பேசியிருந்தும் இன்று மாத்திரம் ஸ்ரீ வரதராஜுலுக்குப் பார்ப்பனப் பிரசாரம் இவ்வளவு பயனளிக்கக் கூடியதாகி விட்டதின் இரகசியமென்ன?

ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார் தலைமையும், இரங்கசாமி அய்யங்கார் காரியதரிசித் தன்மையும் ஒழிந்த பிறகு ஸ்ரீமான்கள், சத்திய மூர்த்தி அய்யரின் தலைமையும் வரதராஜுலுவின் காரியதரிசித் தன்மையும் இவ்வருஷம் முழுவதும் தாண்டவமாடக்கூடும். இனி, இவர் தலைமையில் அவர் பிரசங்கமும் அவர் தலைமையில் இவர் பிரசங்கமும் மாறி மாறி நடந்ததாக பத்திரிகை கலங்கள் நிறையக் கூடும். ஆனாலும் நம்புவதற்குதான் இனி தமிழ் நாட்டில் ஆட்கள் கிடையாது என்பதும் அவர்களுக்கே தெரிந்துவிட்டது.

ஆனாலும் ஜனங்களின் முட்டாள் தனத்தில் அவர்களுக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கின்றது. பொது ஜனங்கள் சீக்கிரம் இவர்களுக்குப் புத்தி கற்பிப் பார்களாக.
- குடிஅரசு - (துணைத் தலையங்கம் - 05.02.1928)

Read more: http://viduthalai.in/page-7/73120.html#ixzz2pQxtsQ7p

தமிழ் ஓவியா said...

உஷார்! உஷார்! மண்டையிலடியுங்கள்

சென்னையில் பார்ப்பனியத்தைப் பரப்புவதற்கு ஒரு புதிய ஸ்தாபனம் சமீபத்தில் பார்ப்பனர்களால் உண்டாக்கப்பட்டிருக்கின்றது. அதுதான் கிராமப் புணருத்தாரண வேலை ஸ்தாபனம். நண்பர்களே இந்தப் பெயரைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள். கொஞ்ச காலத்திற்கு முன்பு ஸ்ரீமான்கள் நேரு, சீனிவாசய்யங்கார், சீனிவாச சாஸ்திரியார் போன்றவர்கள் ஒன்று சேர்ந்து இந்திய அய்க்கிய ஒற்றுமை சங்கம் என்பதாக ஒன்றை ஸ்தாபித்தார்கள். அதில் வகுப்பு உணர்ச்சி உள்ளவர்களை சேர்ப்பதில்லை என்றும் நிபந்தனை போட்டார்கள். அது நமது தமிழ் நாட்டிற்குள் வராதபடி மண்டையிலடித்து கொல்லப்பட்டுப் போய்விட்டது.

அதுபோலவே இப்போது மறுபடியும் முயற்சி எடுத்து கிராம புனருத்தாரணம் என்னும் பெயரில் சென்னையில் ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கு மெம்பர்கள் ஸ்ரீமான்கள். சர்.சி.பி. ராமசாமி அய்யர், மோதிலால் நேரு, ஏ. ரங்கசாமி அய்யர், கேல்கர், பட்டாபி சீதாராமய்யர், பி. சிவராவ், டாக்டர் பெசண்டு, அருண்டேல், ரங்கநாத முதலியார் போன்றவர்களே. இது பிரம்மஞான சங்கத்தினர் வாலைப்பிடித்து ஆரம்பித்த புதிய சூழ்ச்சியேயாகும்.

தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாதார் நன்மைக்குக் கொடிய எதிரியாக பிரம்மஞான சங்கம் விளங்குகின்றது. அச்சங்கத் தலைவர் ஸ்ரீமதி பெசண் டம்மைக்கு உள்ள பணமும் செல்வாக்கும் அடையாறு பிரம்மஞான சங்கத் தோற்றமும் அநேக பார்ப்பனரல்லாதார்களையும் மூடர்களாகவும் இனத் துரோகி களாகவும் ஆக்கி அச்சங்கத்திற்குப் பலிகொடுத்திருக்கிறது. இதைப்பார்த்து யாரும் ஏமாந்து விடக் கூடாது என்றும், இப்புதிய சூழ்ச்சியில் யாரும் சிக்கி அதற்கு ஆளாகக் கூடாது எனவும் எச்சரிக்கை செய்து பணிவாய் வேண்டிக் கொள்கிறோம்.
- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 25.03.1928

Read more: http://viduthalai.in/page-7/73120.html#ixzz2pQy10y85

தமிழ் ஓவியா said...

ரிவோல்ட் [REVOLT]

ஸ்ரீமான்கள் ராஜகோபாலாச்சாரியும் கே. நடராஜன் போன்றவர்களும் மற்றும் சில சுயநலக்காரர்களும், கூலிகளும் நமது பிரச்சாரத்திற்கு விரோதமாக ஆங்கிலத்தில் பத்திரிகைகள் மூலியமாயும், வியாசங்கள் மூலியமாயும் பிரச்சாரம் செய்கிறபடியாலும், நமது பிரச்சாரமும் பத்திரிகையும் தமிழிலேயே இருப்பதாலும் அது தமிழ்நாட்டை விட்டு வெளியில் போக மார்க்கமில்லாமல் இருப்பதாலும் ஆங்கிலத்தில் ஒரு வாரப் பத்திரிகை குடிஅரசுக் கொள்கையை ஆதாரமாகக் கொண்டு ஆரம்பிக்க வேண்டுமென்பதாக ஒரு யோசனை தோன்றி யிருக்கிறது. அப்பத்திரிகைக்கு ரிவோல்ட் [REVOLT] என பேர் கொடுப்பதென்றும் தீர்மானித்திருக்கிறோம். அப்பத்திரிகைக்குக் கவுரவ ஆசிரியர்களாக இருக்க சில ஆங்கிலங் கற்ற நண்பர்கள் வாக்களித்து இருக்கிறார்கள். பல அறிஞர்கள் அரிய விஷயதானம் செய்யவும் ஒப்புக் கொண்டி ருக்கிறார்கள். அப்பத்திரிகையை தற்கால குடிஅரசு அளவில் 8 (எட்டு) பக்கம் கொண்டதாகவும் வருஷ சந்தா ரூ.3 ஆகவும் வைத்து வெளிப்படுத்தத் தீர்மானித்துள்ளோம். சமீபத்தில் வெளியிட முயற்சித்துக் கொண்டிருக்கிறோமாதலால் அன்பர்கள் சந்தாதாரர் களாய் சேரவும் மற்றும் கூடிய உதவிகள் செய்யவும் முன்வர வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறோம். சந்தாதாரர்களாகச் சேர இஷ்டமுள்ளவர்கள் பதிவு செய்துகொள்ள வேண்டுமாய் விரும்புகிறோம். - குடிஅரசு - அறிவிப்பு - 25.03.1928

Read more: http://viduthalai.in/page-7/73120.html#ixzz2pQy8LRhO

தமிழ் ஓவியா said...

நரேந்திர மோடி பிரதமரானால் நாடு பேரழிவைச் சந்திக்கும்! -பிரதமர் மன்மோகன்சிங் கருத்து


புதுடில்லி, ஜன.4- -நரேந்திர மோடி பிரதமரானால் நாடு பேரழிவைச் சந்திக்கும் என்றார் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங். டில்லியில் நேற்று (3.1.2014) செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:

இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சி அதிகாரத்தை புதிய பிரத மரிடம் ஒப்படைப்பேன். அய்க்கிய முற் போக்குக் கூட்டணியை சேர்ந்தவரே அடுத்த பிரதமராக இருப்பார் என நம்பு கிறேன். நமது புதிய தலைமுறை தலைவர் கள், முன் அறிந்திராத, மாறுபடக்கூடிய உலகளாவிய மாற்றங்களின் வழியே, இந்த தேசத்தை வெற்றிகரமாக வழிநடத்து வார்கள் என்று நம்புகிறேன்.

மத்தியில் மீண்டும் அய்க்கிய முற்போக் குக் கூட்டணி ஆட்சி அமைந்தால் நான் மூன்றாவது முறை பிரதமர் பதவி ஏற்க மாட்டேன். அந்தப் பதவிக்கு தேவையான எல்லாத் தகுதிகளையும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பெற்று இருக்கிறார். உரிய நேரத்தில் பிரதமர் வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்கும் என கட்சி தலைவர் சோனியா காந்தி ஏற்கெனவே கூறி இருக்கிறார்.

வரலாறு கனிவு காட்டும்

பிரதமராக 9 ஆண்டுகளாக என்னு டைய பணியை நான் மகிழ்ச்சியுடன் மேற் கொண்டிருக்கிறேன். பதவி விலகுவதுபற்றி நான் ஒருபோதும் யோசிக்கவில்லை. என்னுடைய பணியை நான் அனைத்து வகையிலும் நேர்மையுடனும், அர்ப் பணிப்பு உணர்வுடனும் எவ்வித அச்சமும் இன்றி யாருக்கும் சாதகமாக செயல்படா மல் செய்து இருக்கிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.

நான் பலவீனமான பிரதமராக இருந்தி ருக்கிறேன் என்று நம்பவில்லை. சம கால ஊடகங்கள் அல்லது நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளைவிட வரலாறு என்மீது கனிவு காட்டும் என்று நான் நம்புகிறேன். அரசியல் நிர்ப்பந்தங்களில், நான் என்னால் இயன்ற அளவு சிறந்ததை செய்து இருக் கிறேன்.

10 ஆண்டு காலம் நான் பிரதமர் பதவி வகித்த காலத்தில், சிறந்த காலம் எது என்று கேட்டால், அது அமெரிக்காவுடன் சிவில் அணு ஆற்றல் உடன்படிக்கையை ஏற்படுத் திய காலம்தான்.

மோடி ஒரு பேரழிவு சக்தி

நரேந்திர மோடிக்கும், ராகுல் காந்திக் கும் இடையேயான போட்டி சம அளவி லானதாக இருக்குமா என்று கேட்கிறீர்கள். நரேந்திரமோடியின் பலங்களைப்பற்றி விவாதிக்காமல், நரேந்திர மோடி பிரதம ரானால் இந்த நாடு பேரழிவை சந்திக்கும் என்று நான் கருதுகிறேன். நரேந்திரமோடி சொல்வதெல்லாம் நடக்கப்போவதில்லை என்று நான் உறுதியுடன் நம்புகிறேன்.

ஆமதாபாத் தெருக்களில் நடந்த திர ளான மக்கள் படுகொலைக்கு தலைமை தாங்குவதுதான் வலிமையான பிரதமர் என்பதற்கு தகுதி என்று மதிப்பிட்டால், அதில் எனக்கு நம்பிக்கை கிடையாது.

தமிழ் ஓவியா said...

ராகுல் காந்தியைப்பற்றி...

மத்திய அமைச்சரவையில் சேருமாறு பல்வேறு சமயங்களில் ராகுல் காந்தியை கேட்டுக்கொண்டேன். ஆனால் அவரோ கட்சிப் பணி ஆற்ற விரும்புகிறேன் என்று கூறி மறுத்துவிட்டார். ராகுல் காந்தி அர சாங்கத்தில் ஒரு அங்கமாக இருந்திருந்தால், அரசு இன்னும் வலிமை வாய்ந்ததாக அமைந்திருக்கும் என நான் எப்போதும் கருதுகிறேன்.
எனது முதலாவது ஆட்சிக்காலத்தில், முதல் முறையாக 9 சதவிகித பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டது. இந்த சிறப்பான முன்னேற்றத்தை தொடர்ந்து உலகளாவிய பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. கடந்த இரண்டாண்டுகளாக வளர்ந்து வரும் நாடுகள் பொருளாதார மந்த நிலையை சந்தித்து வந்திருக்கின்றன. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல. இந்த நிலை விரைவில் சரி செய்யப்படும்.

மீண்டும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியே!

ஊழல் குற்றச்சாட்டுக்களைப் பொறுத்த மட்டில், பெரும்பாலான குற்றச்சாட்டுக் கள் அய்க்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சிக்காலம் தொடர்பானவை. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு இரண்டுமே அந்த ஆட்சிக் காலத்திற்கு உரியதுதான்.

2009 ஆம் ஆண்டு நாங்கள் தேர்தலை சந்தித்தோம். ஆனால் மக்கள் இவை எதனையும் கருத்தில் கொள்ளவில்லை. ஏனென்றால், மீண்டும் மத்தியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் அமைய வேண்டுமென விரும்பி மக்கள் எங்களுக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு அளித்தார்கள்.

நான் பிறந்த ஊர்
பாகிஸ்தானில் உள்ளது

நான் பிறந்த ஊர் இப்போது பாகிஸ் தானில்தான் உள்ளது. பிரதமரான பிறகு பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக இது வரை பாகிஸ்தான் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. இன்னும் அய்ந்து மாதங்கள்தான் இருக்கின்றன. இப்போதும் என்னால் அங்கு செல்ல இயலாது என்றுதான் நினைக்கிறேன்.

இந்திய துணைத் தூதர் தேவயானி விஷயத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான பிரச்சினை தற்காலிக மானது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவினை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு எடுத்து வருகிறது.

தெற்கு ஆசியாவில் அமைதி நிலவ இந்தியா-பாகிஸ்தான் இடையே நல்லுறவு நிலவவேண்டும்.

பணவீக்கம்

விடாப்பிடியாக தொடர்ந்து வரும் பணவீக்கத்தை நாங்கள் விரும்பிய அள வுக்கு கட்டுப்படுத்துவதில் வெற்றி காண வில்லை. உணவுப் பொருள் தட்டுப்பாடு, பணவீக்கம் பெருகியதே இதற்கு காரணம். இருப்பினும், எங்கள் ஒன்றிணைந்த கொள் கைகள் நலிவடைந்த மக்கள் கைகளில் கூடுதல் பணப் புழக்கத்துக்கு வழி வகுத்தி ருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த விநியோகத்தை அதிகரிக்க வேண்டும். சந்தையிடுதலையும், சேமித்தலை யும் திறமையான முறையில் நெறிப்படுத்த வேண்டும். ஒரு சிறிய பின்னடைவு என்னவென்றால், கடந்த 10 ஆண்டுகளாக உற்பத்தித் துறையில் தேவைக்கு ஏற்ப வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்படவில்லை. இதனை நோக்கி நாங்கள் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டிய அவசியம் உள்ளது.

செய்யத் தவறியவை

சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக நாம் இன்னும் வலுவான முயற்சிகளை எடுத்திருக்க வேண்டும். இது நாட்டில் வேலை வாய்ப்பை பல மடங்கு பெருக்கும் வல்லமை கொண்ட துறையாகும். இதனை நாம் சரிவர கவனிக்கவில்லை. வருங்காலத்தில் வலுவான ஒரு வேலை வாய்ப்பை உருவாக்குவது நம்முடைய இலக்காக அமையும்.

பிற நாடுகளுடன் இந்தியா எப்போதும் ஒரு சுமூகமான உறவையே வைத்துள்ளது. பல்வேறு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டிருப்பது நாட்டின் வளர்ச்சிக்காக மட்டுமே தவிர சுயலாபத் திற்காக அல்ல.

குறிப்பிடத்தக்க சாதனை

காங்கிரஸ் தலைவர், பிரதமர் ஆகிய இரு பதவிகளில் ஒரே நபர் இல்லாமல் செய்யப்பட்ட ஏற்பாடு மிகச்சிறப்பாக இருந்து வந்துள்ளது. பிரதமர்-காங்கிரஸ் தலைவர் இடையே சிக்கல்கள் இன்றி நான் 10 ஆண்டுகளை நிறைவு செய்வது என்பது என்னைப் பொறுத்தமட்டில் குறிப்பிடத்தக்க சாதனை ஆகும். சோனியா காந்தி அளித்து வந்த ஆதரவு அபாரமானது.

கடந்த 9 ஆண்டு காலத்தில் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் எப்போதும் அரசுக்கு ஆதரவாக இருந்து வந்தனர். கட்சியின் தூண்டுதல் காரணமாக சில முடிவுகளை அரசு மறு பரிசீலனை செய்தது என்றால், அது நாட்டின் நல னைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகும். - இவ்வாறு பிரத மர் மன்மோகன் சிங் செய்தியாளர்களிடம் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/73125.html#ixzz2pQyYtZrl

ராவணன் said...

நல்லாருக்கு....கருணாநிதி போல் கேள்வியும் நானே பதிலும் நானே... இது நல்லாருக்கு...

ராவணன் said...

திருப்பிப்போடு...

…நாயும் தமிழர்களும் -எச்சரிக்கை! எச்சரிக்கை! மோசடி வியாபாரி வீரமணி வருகின்றான் எச்சரிக்கை!

தமிழ் ஓவியா said...


கழகத்தின் இந்தப் புரட்சிக்கு ஈடு ஏது? பாடையை சுடுகாடு வரை தூக்கிச் சென்று கழகப் பெண்கள் புரட்சி!


திருவாரூர், ஜன.5- சுடுகாடு வரை பாடையைத் தூக்கிச்சென்று கருஞ்சட்டை மகளிர் அணியினர் புரட்சி செய்தனர்.

உலகில் எத்தனையோ சமூக அமைப் புகள், கட்சிகள் தோன்றியிருக்கலாம்; கிடுகிடுக்க வைத்த கம்யூனிஸ்டுக் கட்சி கள் உலகின் பல பாகங்களை அதிர வைத்துள்ளன.

ஆனால், சமுதாய அடித்தளத்தையே புரட்டிப் போடும் பூகம்பக் கரங்களைக் கொண்ட புரட்சி இயக்கமாம் திராவிடர் கழகத்திற்கு இணை ஏது? கருஞ்சட்டைப் பாசறைக்கு ஈடு ஏது?

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்று கேட்ட காலத்தைக் கழுவிலேற்றிய இயக்கம் ஏது?

இருட்டுப் பூச்சிகளாய், ஜன்னல் களையே காணாதவர்களாய், வெளிச்ச மத்தாப்புகளையே காணாதவர்களாக ஆக்கப்பட்ட, வயதுக்கு வந்த பெண்களை நீயும் மானுடத்தின் ஒரு கூறு - கூண்டை விட்டுவெளியே வா பெண்ணே!

என்று குரல் கொடுத்து கல்விக் கண்களைத் திறந்து உத்தியோகப் படிக்கட்டுகளை மிதிக்கச் செய்து கணவன் கையைப் பார்த்து நத்தி வாழவேண்டிய நயவஞ்சக சமூக அமைப்பின் வேரை நசுக்கி எறிந்து, பொருளீட்டும் புதிய பொருளாதாரக் கணக்கையும் திறந்து, ஆணுக்குப் பெண் சமானம் என்ற சரித்திரத்தைச் சமைத்தது தந்தை பெரியாரின் இந்த இயக்கம் அல்லவா!

தொட்டிலை ஆட்டும் கை தொல் லுலகை ஆளும் கை என்று புரட்சிக்கவி ஞரைப் பாட வைத்ததும் இந்தப் பகுத்தறிவு இயக்கம்தான்.

தாலி பெண்களுக்கு வேலி என்பதைக் காலி செய்த கருத்துக் கனலையும் தந்தது இந்த இயக்கம்தான்.

மாவோ செய்யாத மகத்தான புரட்சி களையெல்லாம் செய்துகாட்டி வருகிறோம். விதவைப் பெண்களுக்குப் பூச்சூட்டு விழாவை நடத்திக் காட்டியாயிற்று.

அடக்கம் பெண்களுக்கு அணிகலன் என்று சொன்னது அரும் பண்புக்காக அல்ல - அடங்கிக் கூனிக் கிடக்கும் ஒரு மனப்பான்மையை அவர்களின் ஆழ்மனத் தில் ஊன்றவேதான்.

ஆண் - பெண் வேறுபாடு தெரியாத ஆடையை அணிவீர்; பெயர்களில்கூட பால் வேறுபாடு தேவையில்லை என்று பளிச்சென்று சொன்னவரும் நம் பகுத்தறிவுப் பகலவன் பெரியாரே!

தந்தை செத்தாலும் சரி, தாய் செத்தாலும் சரி, மணாளன் செத்தாலும் சரி, மகன் செத்தாலும் சரி, ஒரு பெண் சுடுகாடுவரை செல்ல முடியுமா?

இந்த இரும்பு வேலிகளையெல்லாம் நொறுக்கிய இலட்சியத் தீபத்தை ஏந்தி நிற்கும் இனமானப் பெரும்படைதான் திராவிடர் கழகம்.

இதோ பாருங்கள், எங்கள் கருஞ் சட்டை மகளிர் அணியினரை.

திருவாரூர், திராவிடர் கழகத் தீரர் களின் கோட்டை ஆயிற்றே! நகர கழகத் துணைத் தலைவர் தியாகத்தீயில் புடம் போட்ட கருப்புத் தங்கம் அறிவுக்கண்ணு அவர்கள் மறைந்தார் - அந்த வட்டாரமே துக்கத்தின் பிடியில் சிக்கி விம்மியது என்றாலும், தவிர்க்க முடியாததை ஏற்கத்தானே வேண்டும்.

அவருடைய இறுதி ஊர்வலம் எப்படிச் சென்றது தெரியுமா? திருவாரூரே தம் கண்களை அகலத் திறந்து உண்மையா? நம்ப முடியவில்லையே? இப்படிக்கூட நடக்குமா? என்று அந்த ஒரு நிமிடம் நிலைகுலைந்தே போனார்கள்.

ஆம், அந்தக் கொள்கை வீரரின் பாடையை, பெண்களே சுடுகாடுவரை தூக்கிச் சென்று, காலம் காலமாய் கட்டிப் போட்டு வந்த அந்த ஆணாதிக்க அடக்கு முறை சமூக அமைப்பின் கட்டை உடைத்து, அதனைச் சுடுகாட்டிலே எரித்துவிட் டார்களே!

இதற்கு முன்பும் திருவரங்கம் பெரியார் பெருந்தொண்டர் கோ.பாலு, மயிலாடு துறை நகர கழகத் தலைவர் ந.தியாகராச னின் அன்னையார் மறைந்தபோது இந்தப் புரட்சியை நடத்திக் காட்டினர்.

பெரியாருக்குப் பின் திராவிடர் கழகம்? கேள்வி கேட்போரே! இந்தச் செயல்களைப் பார்த்த பிறகாவது, கோணல் வாயை மூடிக் கொள்க!

திருவாரூர் கருஞ்சட்டை சகோதரி களே! உங்கள் செயலுக்கு ஒரு வணக்கம் - உங்களால் திருந்தட்டும் பழைமைச் சமூகச் சழக்குகள்!

Read more: http://viduthalai.in/e-paper/73137.html#ixzz2pWwIhQC1

தமிழ் ஓவியா said...


தாழ்த்தப்பட்டோரே, பிற்படுத்தப்பட்டோரே உங்களுக்குத் தகுதி இல்லையாம்!

சமூக நீதிக் கொள்கையில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி சாதாரணமாக விழவில்லை; தந்தை பெரியார் சொல்லுவதுபோல தடுக்கி விழுந்தவன் அரிவாள் மணையில் விழுந்தது போல அல்லவா விழுந்திருக்கிறது!

அக்கட்சியின் அதிகாரபூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். (பக்கம் 4) இடஒதுக்கீட்டுக்கு இன்னல் என்றால் பொறுக்க மாட்டோம் என்று பொங்கு கிறாரே கருணாநிதி? என்று பெட்டிச் செய்தியை வெளியிட்டுள்ளது.

எதற்கெடுத்தாலும் கருணாநிதி கருணாநிதி என்ற காமாலைக் கண்ணனின் (Phobia) பார்வை தானா?

சமூக நீதியைப் பற்றி கலைஞர் பேசக் கூடாதா? அய்ந்து முறை முதல் அமைச்சராக இருந்தவருக்கு இல்லாத அக்கறையா இவர்களுக்கு?

சமூகநீதியில் சரித்திரம் படைத்தவராயிற்றே! இது சூத்திரர்களுக்கான அரசு என்று சட்டப் பேரவை யிலேயே முழங்கிய முத்தமிழ் அறிஞர் ஆயிற்றே! கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை என்றால் வக்கணையாக எழுதுவதால் என்ன பயன்?

கலைஞர் மட்டுமா கண்டித்துள்ளார்? முதல் அறிக்கையை திராவிடர் கழகத் தலைவர் வெளியிட்டார். தொடர்ந்து தமிழ்நாட்டில் கட்சித் தலைவர்கள் எல்லாம் கண்டனம் தெரிவித்துள்ளனரே!

உயிர் காக்கும் மருத்துவத்தில் அதுவும் பல் நோக்கு சிகிச்சை மய்யம் என்ற தலை சிறந்த விஞ் ஞானத் தரமான மருத்துவ சிகிச்சைக்கு இலக் கணம் வகுக்கின்ற ஓர் அமைப்பில் இட ஒதுக்கீட்டு முறை இடையூறாக அமைந்து விடக் கூடாது என்பதை மக்களின் ஆரோக்கியத்தில் அளவில்லா முன்னுரிமை அளித்துவரும் நம் அன்னைத் திருமக ளின் அரசு பரிசீலித்ததை ஏதோ இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தது போல கருணாநிதி இட்டுக் கட்டிய பித்தலாட்டத்தை அரங்கேற்றப் பார்ப்பது அவரது அரசியல் மோசடியையே காட்டுகிறது என்று எழுதுகிறது அதிமுக ஏடு?

இதன் மூலம் என்ன சொல்லப்படுகிறது? தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப் பட்டோருக்கும் இடஒதுக்கீடு அளித்தால் உயிர் காக்கும் மருத்துவம் செத்துப் போய் விடும் என்கிறார்களா?

உயிர்காக்கும் மருத்துவப் பணிகளுக்கு தாழ்த்தப் பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும் லாயக்கு அற்றவர்கள் என்கிறதா அ.இ.அ.தி.மு.க. ஏடு? இதுதான் இந்த ஆட்சியின் நிலைப்பாடா?

இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தால் தகுதி திறமை போய் விடும் என்று பார்ப்பனர்களிடம் இரவல் குரல் வாங்கி அம்மையாருக்காக வக்காலத்து வாங்குகிறதா அண்ணா தி.மு.க.?

இதுதான் அண்ணா கூறிய சமூக நீதியா? அண்ணா திமுக என்று பெயர் வைத்தால் மட்டும் போதுமா? இடஒதுக்கீட்டில் அண்ணாவின் கருத்து என்ன என்று தெரிந்து கொள்ளாதவர்கள் எல்லாம் அண்ணா பெயரைப் பயன்படுத்தலாமா? பெரியார் பெயரைப் பயன்படுத்தலாமா? திராவிட என்ற சித்தாந்தத்தின் குறியீட்டை வைத்துக் கொள்ளலாமா?

தாழ்த்தப்பட்ட மக்களே, பிற்படுத்தப்பட்ட மக்களே! உங்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தால் உயிர் காக்கும் மருத்துவத் தொழில் உருப்படாமல் போகுமாம் - உயிர் களைக் காக்கும் ஆற்றல், சக்தி உங்களுக்குக் கிடையாதாம்.

இதுதான் இன்றைய அ.இ.அ.தி.மு.க. ஆட்சி - புரிந்து கொள்வீர்!

Read more: http://viduthalai.in/e-paper/73140.html#ixzz2pWwTsbeb

ராவணன் said...

எச்சரிக்கை...தமிழ் ஓவியா என்ற பொம்பள வருது... எச்சரிக்கை...அதுவும் திண்டுக்கல்லாக... எச்சரிக்கை!

ராவணன் said...

நாங்களும் போடுவோம் எச்சரிக்கை...

ராவணன் said...

வீணாய்போன வீரமணி கும்பல் எச்சரிக்கை போடும் போடும் போது யார் வேண்டுமானாலும் எச்சரிக்கை போடலாம்.

தமிழ் ஓவியா said...


குரங்கு சாமிக்கு இப்படி ஒரு கொண்டாட்டமா?


ஆஞ்சநேயர் என்ற அனுமாருக்கு ஜெயந்தியாம் - அதாவது பிறந்த நாளாம்!

அனுமாருக்குப் பிறந்த நாள் முன்பெல்லாம் கொண்டாடுவதில்லை; அண்மைக் காலத்தில் பார்ப்பனப் பண்பாட்டின் பரிமாணங்கள் பெருகிய வண்ணமே உள்ளன! இந்து மதப் பிரச்சாரப் புதிய உத்தி!

யாருக்காவது சந்தேகம் வந்தால் நம்ம சன் டிவி போன்ற பல டி.வி.களில் வரும் சீரியல்களையும் மெகா சீரியல்களையும் பார்த்தாலே தெரியும்.

நாட்டில் யாருக்குமே தெரியாத புதிய சடங்குகள், சம்பிரதாயங்கள், வேண்டுதல்கள், சாபங்கள், பேய் வந்து பெண்கள்மீது ஏறிக் கொள்ளுதல் மஹா பாரதம் இப்படி பரிசு பெற வேண்டிய புருடாக்களை பலமாகப் பரப்பி வருகின்றனவே!

புராணக் கதைப்படி அனுமார் எப்படி பிறந்தார் என்றால் வாயு புத்திரன் அவர், அதாவது காற்றுக்குப் பிறந்தவர் - நம்நாட்டில் காற்றுக்குக்கூட பிள்ளைகளைப் பெற்றுத் தரும் விநோதமான சக்தி உண்டு போலும்!

இன்னொரு பக்கத்தில் பீமனோடும் தொடர்புபடுத் திக் கதைவிடல்!

அறிவியல் - பரிணாமத் தத்துவப்படி டார்வின் கூற்றுப் படி, குரங்கிலிருந்து மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்றான் என்பது ஒருபுறமிருக்க, இந்த அனுமான் எப்போது, எப்படி பிறந்தான்? என்பதையெல்லாம் கிராஸ் எக்சாமின் பண்ணினால் அது வாதத்திற்கு நிற்காது!

அந்த அனுமார் கடலைக் கடந்து இலங்கைக்குத் தாவி சீதா பிராட்டியைச் சந்திக்கும் இராம தூதுவனாகச் சென்று, சீதையிடம் அந்தக் குரங்கு பேசியதாம்!

அவள் தயங்கியவுடன், அந்த சந்தேகத்தைப் போக்கிட ஸ்ரீமான் இராமச்சந்திர மூர்த்தியின் அங்க மச்ச அடையாளங்களையெல்லாம் கூட அதுவும் வெகு ரகசியமானவைகளாக சீதை - இராமன் மட்டுமே அறிந்த வைகளைக்கூட அனுமன் புட்டு புட்டு வைக்கிறான்! என்னே கொடுமை!

(சந்தேகமிருந்தால் வால்மீகி இராமாயணம் சுந்தரகாண்டத்தைப் பார்த்து விவரம் தெரிந்து கொள்ளுங்கள்).

நாமக்கல் ஆஞ்சநேயர் கடவுள்! இவருக்கு அங்கே ஜெயராமய்யர்கள் அர்ச்சனை செய்யும் பிரபல ஜோதிடக் கோயிலுக்குத் தான் தேவகவுடா, எம்.ஜி.ஆர்., ஜானகி அம்மாள் முதலிய பலரும் சென்று அர்ச்சனை, வேண்டுதல் நடத்தி பதவியைக் காப்பாற்ற முடியாது ஏமாந்தவர் களானவர்கள் என்றாலும் புத்தி வரவில்லையே பக்தர்களுக்கு!

குரங்கைக் கடவுளாகக் கொண்டு வழிபடும் நாடு இந்தியா என்று கார்ல் மார்க்ஸ் இந்தியாவைப் பற்றிய கட்டுரைகளில் எழுதி யுள்ளார்! அதன் மூலம் கார்ல் மார்க்ஸ் பேனாவையும் நம்ம ஊர் அனுமார் ஒரு பதம் பார்த்து விட்டார்! ஜெய் அனுமான்!

வாழ்க ஜெய் அனுமான்! அவரது ஜெயந்தியில், தஞ்சை, திருச்சி பல கோயில்களில் 10,000 வடை மாலை சாத்தி அதோடு 10,000 லிட்டர் பால், தேன், நெய்யை அந்தக் கல்லின்மீது ஊற்றி பாழ்ப்படுத்தி பக்தி பரவசம் பெற்றுள்ள செய்தியை நமது டி.வி.கள். இந்த சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை விட்டு விடக் கூடாது என்று கருதி படம் பிடித்துக் காட்டி பக்தியைப் பரப்பிட புத்தியை ஒழிக்கவும் ஆயத்தமாகி விட்டார்கள். ஞான பூமியல்லவா நமது பூமி!

பாலுக்கு அழும் பச்சிளம் குழந்தைகள் கோடிக் கணக்கில் ஒருபுறம்!

மறுபுறம் இப்படி கல் சிலை - குரங்குக்கு பாலாபி ஷேகம் என்று கூத்து!

அட வெட்கம் கெட்ட ஜெனமங்களா? செவ்வாய் கிரகம் சென்றாலும் உங்கள் புத்தி மாறாதா? தெளி வடையாதா?

அங்கும் சென்று அனுமாருக்குக் கோயில் கட்டி ஜெயந்தி கொண்டாட வடை சுடாமல் இருந்தால் சரி!

Read more: http://viduthalai.in/e-paper/73141.html#ixzz2pWwraOi9

ராவணன் said...

இந்த எச்சக்கல வீரமணி ஜெயலலிதாவிற்கு கொடுத்த பட்டம் என்ன எனபதை கொஞ்சம் குனிஞ்சு பார்த்து சொல்லு...

தமிழ் ஓவியா said...


புகழும்போது போதை; இடித்துச் சொல்லும்போது எரிச்சலா?


கலைஞருக்குப் பதில் சொல்லுவதாக நினைத்துக் கொண்டு ஜெயலலிதா அம்மை யாருக்கு சமூகநீதி காத்த வீராங்கனை பட்டத்தை வீரமணி கொடுத்தாரே என்று ஏதோ பெரிய குற்றச்சாட்டு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டதாக நினைத்து அ.இ.அ.தி.மு.க.வின் நமது எம்.ஜி.ஆர். ஏடு எகிறுகிறது.

ஆமாம்; மறுக்கவில்லை. 69 சதவிகித இட ஒதுக்கீட்டை காப்பாற்ற திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள், அவருக்கே உரித்தான சட்ட ஞானத்தால் கருத்துரு கொடுத்ததோடு, அதற் கான மாதிரிச் சட்டத்தையும் உருவாக்கிக் கொடுத்து, 69 சதவிகிதத்தைக் காப்பாற்றிட வழி செய்தார்.

அதனை ஏற்றுக்கொண்டு சட்டம் செய்ததால், சமூகநீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை அளித்தார் திராவிடர் கழகத் தலைவர்.

அதனைக் காப்பாற்றிக் கொள்ளாமல், சமூகநீதியின் வேரையே வெட்டி வீழ்த்த ஆவேசம் கொண்டால், கையைக் கட்டிக்கொண்டு வீரமணி அவர்கள் வேடிக்கை பார்க்கவேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. எதிர்பார்க் கிறதா? பட்டம் பெற்றபோது மகிழ்ச்சிப் போதை - தவறைச் சுட்டிக்காட்டி இடித்துச் சொல்லும்போது எரிச்சலா?

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும் (குறள் 448)

என்றார் திருவள்ளுவர்.

நினைவிருக்கட்டும்!

Read more: http://viduthalai.in/page-8/73173.html#ixzz2pWyLz5Rq

தமிழ் ஓவியா said...


நெத்தியடிக்கு ஒரு புத்தி அடி!


அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளேட்டில் (5.1.2014, பக்கம் 6) நெத்தியடி! எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவரை வீண் வம்புக்கு இழுத்துள்ளது.

ஓமாந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிதாகத் தொடங்கப்பட உள்ளதாக அறிவித்த பல்நோக்கு மருத்துவமனையில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றாவிட்டால், தமிழகம் கொந்தளிக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளாராம் - அதைப் படித்துவிட்டு கொந்தளித்துள்ளது டாக்டர் நமது எம்.ஜி.ஆர். ஏடு.

கொந்தளிக்கவேண்டியவர்கள் இட ஒதுக்கீடு - சமூகநீதி மறுக்கப்பட்ட மக்களே! அரும்பாடுபட்டு, போராடி கட்டிக் காக்கப்பட்ட சமூகநீதியை சவக்குழிக்கு அனுப்பிட, அண்ணா பெயரில் உள்ள ஓர் ஆட்சி திட்டமிடுகிறது என்றால், மக்கள் கொந்தளிக்கத்தான் செய்வார்கள் - ஒடுக்கப்பட்ட மக்களின் உன்னதமான இயக்கத்தின் தலைவராம் மானமிகு கி.வீரமணி அவர்கள் கொந்தளிக்கத்தான் செய்வார்.

அதற்காக டாக்டர் நமது எம்.ஜி.ஆர். ஏடு என்ன சமாதானம் சொல்கிறதாம்?

முள்ளிவாய்க்கால் படுகொலையின்போது கருணாநிதிக்கு எதிராக ஏன் புரட்சி செய்யவில்லை வீரமணி என்று கேள்வி கேட்கிறது!
பட்டுக்கோட்டைக்கு வழி என்னவென்றால், கொட்டைப் பாக்கு தூக்கு முக்கால் ரூபாய் என்றானாம் என்று கிராமத்திலே ஒரு பழ மொழியைச் சொல்லுவார்கள் - அதுதான் நினைவிற்கு வருகிறது.

சரி, அதற்கே வருவோம்! ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது அம்மையார் என்ன சொன்னார்?

யுத்தம் என்று ஒன்று வந்தால், அப்பாவி மக்கள் கொல்லப்படத் தான் செய்வார்கள் (இதே நமது எம்.ஜி.ஆர்., 18.1.2009) என்று ராஜபக்சேவின் ஊதுகுழலாக முழங்கியவர் தானே அம்மையார் ஜெயலலிதா? (நமது எம்.ஜி.ஆர். ஏட்டின் எழுத்தாளர் தேவை யில்லாமல் அம்மையாரைச் சிக்கலில் மாட்டி விடுகிறார்!).

யுத்தத்தை நிறுத்தவேண்டும் என்று கருணாநிதி சொல்வது விடுதலைப்புலிகளைக் காப்பாற்றிடத்தான் (இதே நமது எம்.ஜி.ஆர்., 16.10.2008) என்று திருவாய் மலர்ந்தவராயிற்றே அம்மையார்?

வாய்ப் புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ எனும் பாணியில் கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம் டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.

Read more: http://viduthalai.in/page-8/73176.html#ixzz2pWyU8AKY

தமிழ் ஓவியா said...


சூரியன் பற்றி அறிய ஆதித்யா நான்காண்டுகளில் அனுப்ப திட்டம் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை


திருப்பூர், ஜன.5- சூரி யன் பற்றிய அறிவியல் தகவல்களை கூடுதலாக அறிய, ஆதித்யா செயற் கைக்கோள், நான்கு ஆண்டுகளில் விண் வெளிக்கு அனுப்பப்பட உள்ளது,'' என, இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் மயில்சாமி அண்ணா துரை தெரிவித்தார்.

மங்கள்யான் செயற் கைக்கோள் குறித்த கருத்தரங்கு, திருப்பூரில் நேற்று (4.1.2014) நடந்தது. இதில், பெங்களூரு, இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மய்ய திட்ட இயக்குநர் டாக்டர் மயில் சாமி அண்ணாதுரை பங்கேற்றார்.

அப்போது, செய்தி யாளர்களிடம் கூறிய தாவது: நிலாவைப்பற்றி ஆய்வு செய்ய சந்திரயா னும், செவ்வாயைப் பற்றி ஆராய்ச்சி செய்ய மங்கள்யானும் அனுப் பியதை போல, அடுத்த கட்டமாக, சூரியனை பற்றி ஆய்வு செய்ய ஆதித்யா என்ற செயற் கைக்கோள், விண் வெளிக்கு அனுப்பப்பட உள்ளது. சூரியனுக்கு இது செல்லாது.

பூமிக் கும், சூரியனுக்கும் விசை உள்ளது; இந்த விசை களுக்கு இடைப்பட்ட ஒரு பகுதியில் நிரந்தர மாக ஆதித்யா நிலை நிறுத்தப்பட்டு, பூமி, சூரியன் பற்றிய தகவல் களை அனுப்பும். இன் னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில், ஆதித்யா விண்வெ ளிக்கு அனுப்பப்படும். அதற்கான பணி துவங்கி யுள்ளது.

சூரியனை பற்றிய பல தகவல்களை அறியும் வகையில், இந்த கோள் அனுப்பப்படுகிறது; அறிவியல் ரீதியான பல ஆய்வுகளுக்கு இது, உதவும். மங்கள்யான், நிர்ணயித்தபடி, அதன் பாதையில் சென்று கொண்டிருக்கிறது; தீவிர கண்காணிப்பில் உள்ளது. இதுவரை 9 மில்லியன் கி.மீ., சென் றுள்ளது; இன்னும் 200 மில்லியன் கி.மீ., செல் லும்போது, வரும் செப். 24 ஆம் தேதி, செவ் வாய்க் கோளினை அடையும்.

அமெரிக்கா ஆறு முறையும், ரஷ்யா 10 முறையும் முயற்சித்து தோற்ற நிலையில், இந் தியாவின் முதல் முயற்சி வெற்றி பெற்றால், உல கில் விண்வெளி ஆராய்ச் சியில் செவ்வாய்க் கோளினை அடைந்த பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும்.

அய்ரோப்பா, அமெ ரிக்கா நாடுகளின் தொழில்புரட்சியை தொடர்ந்து மூன்றாவது புரட்சியாக இந்தியா வில், விண்வெளி புரட்சி நடக்கிறது. இதில், நாம் பின்தங்கி விடக்கூடாது என்பதால், சந்தர்ப்பங் களை சரியான முறை யில் பயன்படுத்தி வரு கிறோம். - இவ்வாறு டாக்டர் மயில்சாமி அண்ணா துரை செய்தியாளர்களி டம் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/73174.html#ixzz2pWynR6f7

தமிழ் ஓவியா said...


திருவாரூர் கே.தங்கராசு அவர்கள் மறைவுக்கு இரங்கல்


நண்பர் திருவாரூர் கே.தங்கராசு அவர்கள் ஒரு பெரியார் பெருந்தொண்டர். 89 வயதில் அவரது மறைவு சுயமரியாதைக் கொள்கை உலகுக்கு ஒரு பெரும் இழப் பாகும். தொடக்கத்தில் திருவாரூரில் காங்கிரஸ் காரராக இருந்தாலும், பிறகு அவர் 1950 ஆம் ஆண்டுவாக்கில் திராவிடர் கழகத்தில் இணைந்தார்.

நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்களது நாடகங்கள் சிலவற்றிற்கு கதை, வச னம் எழுதினார். அவற்றுள் ரத்தக் கண்ணீர், இராமாயணம் ஆகிய நடிகவேளின் நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை (பின்னது பெரிதும் தந்தை பெரியாரின் இராமாயணம் பற்றிய ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டே எழு தப்பட்டது). அவர் திராவிடர் கழகத்தின் பல போராட்டங் களிலும் கலந்து கொண்டு சிறையேகியவர்; கழகத்தின் பேச்சாளர்களில் முக்கியமான ஒருவராகத் திகழ்ந்தார்.

அன்னை மணியம்மையார் அவர்கள் தலைமையேற்ற பிறகு, கருத்து வேறுபாடுகளால் அவரால் இயக்கத்தில் இணைந்து பணியாற்ற இயலாமல், வெளியேற்றப்பட்ட வர்களுடன் இருந்தார். என்றாலும், அவரது மாறாத சுய மரி யாதை, பகுத்தறிவுக் கொள்கைக்காக (அவர் நம்மை எவ்வளவு விமர்சித்தபோதிலும்) அவருக்கு வீர வணக்கத் தைத் திராவிடர் கழகம் தெரிவித்துக் கொள்கிறது.

அவரது குடும்பத்தினருக்கும், வாழ்விணையர், மகள், மகன் மற்றும் அனைவருக்கும் இரங்கலைத் துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னை,
5.1.2014

கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

கழகத் தலைவர் மரியாதை

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர் கள் சென்னை ராஜா அண்ணா மலைபுரத்தில் உள்ள திருவாரூர் தங்கராசு அவர்களின் இல்லத்திற்குச் சென்று, மலர்மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். அவரின் இணையர், மகள்கள், மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார்.

கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், மாநில மாணவரணிச் செய லாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன், தோழர் முரளி, விடுதலை மேலாளர் ப.சீதாராமன், மந்தைவெளிப் பகுதி இளைஞரணிச் செயலாளர் முகிலன், இரா.பிரபாகரன் மற்றும் தோழர்களும் உடன் சென்று இறுதி மரியாதை செலுத்தினர்.

Read more: http://viduthalai.in/page-8/73237.html#ixzz2pceLIYnd

தமிழ் ஓவியா said...


முருகன் காப்பாற்றவில்லையே! வாகனம் மோதி முருக பக்தர்கள் பலிதூத்துக்குடி, ஜன.6 தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரை பகுதியில் திருச்செந்தூருக்குப் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பக்தர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இவர்கள் அனைவரும் விருதுநகர் மாவட்டம் முடியனூரைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இவர்களில் ராஜா(23), சீனி(45), மகாலிங்கம் (35) ஆகிய 3 பேரும் உயிரிழந்துள்ளனர். சின்னகிச்சான்(29) என்பவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/73227.html#ixzz2pcempsj0

தமிழ் ஓவியா said...


சனிக்கோளை படமெடுத்த நாசா விஞ்ஞானிகள்


பூமியை விட எட்டு மடங்கு பரப்பளவு கொண்ட சனிக்கோளை மிக நெருக்கமாக நாசா விஞ்ஞானிகள் படம் பிடித்தார்கள். வரலாற்றிலேயே முதன் முறையாக நிகழ்ந்த இந்த சம்பவத்தை ஜெட் ப்ரபல்ஷன் ஆய்வகம் புதன்கிழமை அறிவித்தது. இந்தப் படங்களை நாசா ஏவிய கசினி விண்கலம் எடுத்ததாகவும் நாசா தெரிவித்தது.

2010 டிசம்பர் 5ஆம் தேதி அன்று எப்போதும் சீற்றத்துடன் ஒரு சூறாவளி காணப்பட்டதை கசினி கண்டுபிடித்தது. இது சனியின் வடக்குத் திசையில் ஏறத்தாழ 35 டிகிரி அளவில் காணப்பட்டது. விண்கலம் சனியைச் சுற்றிப் பார்த்ததில் கண்ட பெரிய சீற்றம் இதுதான். நாசா விஞ்ஞானிகள் 1990இல் இதே போன்றதொரு சீற்றத்தைப் படம் எடுத்திருந்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/73231.html#ixzz2pcevDb74

தமிழ் ஓவியா said...


வரும் 9ஆம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சி மற்றும் சமூகநீதி ஆதரவாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் தமிழர் தலைவர் அழைப்பு - அறிவிப்பு!


தமிழ்நாடு அரசின் பல் நோக்கு மருத்துவமனையில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான போக்கு

வரும் 9ஆம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சி மற்றும் சமூகநீதி ஆதரவாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்

தமிழர் தலைவர் அழைப்பு - அறிவிப்பு!

சென்னை, ஜன.6- சென்னையில் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட உள்ள பல்நோக்கு மருத்துவமனையில் பணி நியமனங்களில் இடஒதுக் கீடு கிடையாது என்று மிகவும் வெளிப்படையாக அரசு சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதனை எதிர்க்கும் வகையிலும், தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்துவரும் 69 சதவீத இடஒதுக்கீட்டைச் செயல்படுத்த வைக்கும் நோக்கத்திலும், சமூக நீதிக் கொள்கையில் அக்கறை உள்ள கட்சிகள் மற்றும் சமூக நீதி ஆதரவாளர்கள், அமைப்புகள் ஆகியவற்றின் கலந்துரையாடல் கூட்டம் வரும் 9ஆம் தேதி காலை சென்னை பெரியார் திடலில் நடைபெற உள்ளது இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தலைவர்களுக்கு இன்று கடிதம் எழுதப்பட் டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

சமூகநீதியைக் காப்பாற்றுவதற்கான ஆலோசனைக் கூட்ட அழைப்பு

பேரன்புடையீர், வணக்கம். ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட உள்ள பல்நோக்கு உயர் மருத்துவமனையில் பேராசிரியர்கள், இயக் குநர்கள், பதிவாளர்கள் போன்ற பதவிகளுக்கான பணி நியமனத்தில் இடஒதுக்கீடு அரசால் பின் பற்றப்படாது என்று அறிவிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சிக்கு உரியது.

1928 முதல் தமிழ்நாட்டில் செயல்பாட்டில் உள்ள இடஒதுக்கீட்டை குழி தோண்டிப்புதைக்கும் சமூக அநீதியான செயல்பாடாகும் இது.

இதனைத் தடுத்து நிறுத்தி, தமிழ்நாட்டில் நடை முறையில் இருக்கும் 69 சதவீத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசைச் செயல்பட வைக்க தேவையான முடிவுகளை எடுக்க வரும் 9.1.2014 வியாழன் காலை 10.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடைபெறும், ஆலோசனைக் கூட்டத்திற்கு தங்கள் அமைப்பின் சார்பில் தாங்களோ அல்லது தங்கள் பிரதிநிதி ஒருவரையோ அனுப்பி வைக்குமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி. தங்கள் அன்புள்ள,

- கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

குறிப்பு: வர வாய்ப்பு இல்லாதவர்கள் தங்கள் கருத் தினை எழுதி அனுப்புமாறும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/73221.html#ixzz2pcf8ZcPp

தமிழ் ஓவியா said...

வரவேற்கத்தக்க திமுக மாணவரணியின் ஆர்ப்பாட்டம்

இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராகச் செயல் படும் ஜெயலலிதா அரசைக் கண்டித்து தி.மு.க. மாணவர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஜனவரி 21 அன்று மாநில மாணவர் அணிச் செயலாளர் கடலூர் இள. புகழேந்தி தலைமையில் சென்னையில் நடைபெறுகிறது.

இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக செயல்படும் ஜெயலலிதா அரசைக் கண்டித்து திமுக மாணவர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 21.1.2014 அன்று காலை 10 மணியளவில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகில் நடைபெறுகிறது. கண்டன ஆர்ப்பாட் டத்திற்கு திமுக மாணவர் அணிச் செயலாளர் கடலூர் இள. புகழேந்தி தலைமை வகிக்கிறார்.

தென்சென்னை மாவட்டக் கழக செயலாளர் ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ. மாணவர் அணி துணைச் செயலாளர்கள் கோவி. செழியன் எம்.எல்.ஏ., குத்தாலம் க. அன்பழகன், கோவை கணேஷ்குமார், பூவை சி. ஜெரால்டு, மதுரை க. மகிழன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இடஒதுக்கீட்டை வலியுறுத்தி அ.தி.மு.க. அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்திட நடைபெறும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க கழக மாணவர் அணி நிர்வாகிகளும், மாணவர் அணித் தோழர்களும் திரண்டு வாரீர் வாரீர் என தி.மு.க. மாணவர் அணி சார்பில் அணியின் செயலாளர் இள. புகழேந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/73221.html#ixzz2pcfJhek2

தமிழ் ஓவியா said...


பூரி ஜெகநாதர் கோவில் பூசாரிகள் முறையான வருகைக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு


புவனேஸ்வர், ஜன. 6- பூரி ஜெகநாதர் கோவிலில் பணிபுரிந்துவரும் சுமார் 2,000 பூசாரிகளுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை அறி முகப்படுத்த கோவில் நிருவாகம் முடிவு செய் துள்ளது.

பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 85 பூசாரிகள் கோவிலில் நாள்தோறும் பூஜைகளை நடத்தி வருகின்றனர். இவர்கள் மிகவும் தாமதமாக வருவதால் பூஜைகளை சரிவர நிறைவேற்று வதில்லை என்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதினாலேயே நிருவாகம் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாகத் தெரிய வருகின்றது.

கோவில் நிருவாகம் அளித்த தகவல்களின்படி இங்கு நாள்தோறும் காலை 6 மணியிலிருந்து இரவு வரை 23 விதமான பூஜைகள் நடைபெறு கின்றன. திருவிழாக் காலங்களில் 32 சடங்குகள் நிறைவேற்றப்படுகின்றன. இந்தியாவிலேயே இந்தக் கோவிலில்தான் பல சிக்கலான பூஜை களும் நிறைவேற்றப்படுகின்றன.

எனவே பூசாரிகளின் முறையான வருகை அவசியமாகின்றது. பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்று கோவிலின் தலைமை நிருவாகி யான அரவிந்த்பதி கூறினார். இந்த முறையின் மூலம் காலதாமதம் எற்படுத்து வோருக்கு ஊதிய வெட்டு அறி விக்கப்படும் என்றும், இதன்மூலம் அவர்களைத் தங்களின் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரி வித்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற இந்தக் கோவிலின் தேர்த்திருவிழாவில் போலியான பூசாரிகளால் நடை பெற்ற சம்பவங்களைத் தொடர்ந்து இவர்களுக்கான அடையாள அட் டைகள் வழங்கப்படும் என்று ஒடிசா அரசு சென்ற மாதம் தெரிவித்தது.

வரும் 2015 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நபகலேபார் திருவிழா எனப் படும் தெய்வங்களின் சிலைகளை மாற்றும் நிகழ்ச்சியின்போது இந்த அட்டைகள் அவர்களுக்கு வழங்கப் படும் என்றும் அரசு குறிப்பிட்டுள் ளது. எனவே அதன்பின்னரே அவர் களின் வருகைப்பதிவும் முறைப் படுத்தப்பட முடியும் என்று கோவில் நிர்வாகம் தெரிவிக்கின்றது.

Read more: http://viduthalai.in/page-8/73230.html#ixzz2pcfW4aJi

தமிழ் ஓவியா said...


சமூக நீதிக்கு எதிரான நியமன அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது


சென்னை, ஜன.6- மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை யில் நிரப்பப்பட வேண்டிய பணி யிடங்களான மருத்துவப் பேராசிரி யர்கள், உதவிப் பேராசிரியர்கள், பதிவாளர்கள் போன்ற பணியிடங் களுக்கு ஜனவரி 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என டிசம் பர் 27ஆம் தேதி மருத்துவ நியமனத் துறை குறுகிய காலக்கெடுவை நிர்ண யித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதில் இடஒதுக்கீடு பகிர்வு குறித்த எந்தக் குறிப்பும் காணப்படவில்லை. மருத்துவர்களிடையே பார பட்சம் காட்டும் போக்கும், சமூக நீதிக்கு எதிரான போக்கும் தமிழக அரசின் இந்த அறிவிப்பில் வெளிப்பட்டுள் ளது. சமூகநீதிக்கு முரணான எந்தச் செய லையும் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை பணியாளர்கள் குறித்து வெளியிடப் பட்டுள்ள சமூகநீதிக்கு எதிரான நியமன அறிக்கை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம் என்று மமக தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/73234.html#ixzz2pcfmAefU

தமிழ் ஓவியா said...கோவில் பெருச்சாளிகளுக்கு ஜே! சிதம்பரம் நடராஜன் கோவில் தீட்சிதர் வசம்! உச்சநீதிமன்றம் தீர்ப்பு


புதுடில்லி, ஜன.6-கரை யான் புற்றெடுக்க கரு நாகம் குடிபுகுந்தது போல சிதம்பரம் நட ராஜன் கோவில் மீண்டும் தீட்சிதர்களின் கைகளில் உச்சநீதிமன்றம் ஒப்ப டைத்துள்ளது.

சிதம்பரம் நடராஜன் கோவில் நிர்வாகத்தில் முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்தன. உள் ளூர் தீட்சிதப் பார்ப் பனர்களே புகார் தெரி வித்தனர். இதையடுத்து கோவில் நிருவாகத்தை தமிழக அரசு கையில் எடுத்துக்கொண்டது. அதைத் தொடர்ந்து கோவிலை நிர்வகிப்ப தற்காக செயல் அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமனம் செய்தது.

இந்த நியமனத்தை எதிர்த்து பொது தீட்சி தர்கள் சார்பில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டது. இதை விசா ரித்த நீதிபதிகள் செயல் அதிகாரி நியமிக்கப்பட் டது செல்லும் என்று தீர்ப்பு கூறினார்கள்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து பொது தீட்சி தர்கள் மேல் முறையீடு செய்தனர். நீதிபதிகள் சவுகான், போப்டே ஆகி யோர் முன்னிலையில் இந்த விசாரணை நடந்து வந்தது. பொது தீட்சிதர் கள் தரப்பில் சுப்பிரமணி யசாமி வாதாடினார்.

விசாரணை முடிந்து நீதிபதிகள் இன்று (5.1.2014) தீர்ப்பு கூறி னார்கள். நீதிபதிகள் கூறிய தாவது:

சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வகிக்க செயல் அதிகாரியை நியமித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. கோவி லில் தவறு நடக்கிறது என்று தெரிந்தால் சிறிது காலத்துக்கு மட்டும் அதி காரியை நியமிக்கலாம். அதை தொடர்ந்து நீடிக்க செய்ய முடியாது.

- இவ்வாறு நீதிபதி கள் கூறினார்கள்.

Read more: http://viduthalai.in/page-8/73228.html#ixzz2pcgAxNvB

தமிழ் ஓவியா said...

திருமண வாக்குறுதியளித்து பாலியல் உறவு கொண்டால் வல்லுறவு ஆகாதாம்

புதுடில்லி, ஜன.6-திருமண வாக்குறுதி அளித்த பிறகு வயது வந்த இருவர் பாலியல் உறவு வைத்துக் கொண் டால், அது வல்லுறவு ஆகாது. திருமணத் துக்கு முந்தைய பாலியல் உறவு தீயொழுக்கம் என அனைத்து சமய கோட் பாடுகளும் கூறியுள்ளன என டில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டில்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் இளம் பெண் ஒருவர், பன் னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் தனது காதலன் மீது கடந்த 2011 ஆம் ஆண்டு வல்லுறவுப் புகார் அளித்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த டில்லி நீதி மன்ற நீதிபதி வீரேந்தர் பட் கூறியதாவது:

திருமண வாக்குறுதி மூலம் நடைபெறும் பாலியல் உறவுகள், வல்லுறவு அல்ல என்பது என் கருத்து. வயது முதிர்ச்சி அடைந்த, நன்கு படித்த, அலுவல கத்தில் பணியாற்றும் பெண் தனது நண்பர் அல்லது சக ஊழியர் அளிக்கும் திருமண வாக் குறுதி மூலம் பாலியல் உறவு கொண்டால், அதன் விளைவை அவர் அறிந்தே செய்கிறார்.

அவர் அளிக்கும் வாக் குறுதிக்கு எந்த உத்திர வாதமும் இல்லை என் பதை அந்தப் பெண் புரிந்து கொண் டிருக்க வேண்டும். அந்த இளை ஞர் தனது வாக்குறு தியை நிறைவேற்றா விட்டால் அது வல்லுறவு ஆகாது. ஒரு பெண், ஒரு ஆணிடம் தனது உடலை ஒப்ப டைக்க முடிவு செய்யும் போது, அதன் சாதக பாதகங்களை அவர் எண்ணிப்பார்க்க வேண் டும்.

திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவை, உலகில் எந்த மதமும் அனுமதிப்ப தில்லை. அது அனைத்து மத கோட்பாடுகளுக் கும் எதிரான தீயொ ழுக்கம். திருமண உறுதி அளித்ததற்கான எந்த வொரு பதிவு ஆதாரமும் இல்லை. இ-மெயில் மற்றும் சாட் ஆதாரங் களைப் பார்க்கும் போது, பாலியல் உற வுக்கு அந்த இளை ஞனை, அந்தப் பெண் தான் தூண்டினார் என் பது தெரிகிறது.

இத னால் வல்லுறவு குற்றச் சாட்டில் இருந்து அந்த இளைஞர் விடுவிக்கப்ப டுகிறார்.

- இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/73228.html#ixzz2pcgK6ycM

தமிழ் ஓவியா said...


கொட்டைப் பருப்புகள் - என்றும் நம் பாதுகாவலர்கள்!
---veramani

ஓவ்வொரு நாளும் கைநிறைய கொஞ்சம் பருப்புக் கொட்டைகளை (Nuts) எடுத்து தின்று கொண்டு வரும் பழக்கத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்; அது உங்களை நல்ல உடல் நலத்தோடு இருக்கச் செய்வதோடு, நீண்ட ஆயுளையும் தரும் - ஆயுள் நீட்டியாகவும் பயன்படக் கூடும்.

வாதுமை - வால்நட்ஸ் - WalNuts பாதாம் பருப்புக் கொட் டைகள், பிஸ்தா பருப்புகள், முந்திரி பருப்பு (அளவோடு) இவற்றுடன் உலர்ந்த திராட்சை போன்றவை களையும் கலந்து ஒரு வாய் கொள்ளும் சிறு அளவு எடுத்து நாள்தோறும் சாப்பிட்டால், மிகுந்த உடல் நலப் பாதுகாப்பு கிடைக்கும்.

இவைகளில் உள்ள நார்ச்சத்துக் கள் பெரிதும் செரிமானத்திற்கு உதவுபவை மட்டுமல்ல, சர்க்கரை வியாதியையும் கட்டுப்படுத்த உதவும். இதய நோய்த் தடுப்புக்கும் உதவி புரியக் கூடும்.

இப்படி நியூ இங்கிலாந்து ஜெர் னல் ஆஃமெடிசன் என்ற மருத்துவக் குறிப்பு ஆய்வு ஏடு தெளிவாகக் கூறுகிறது.

போதிய ஆய்வுகள் நடத்திய பிறகே இம்முடிவுகளை அந்த மருத்துவ ஆய்வு ஏடு வெளியிட்டுள்ளது!

76,464 பெண்கள், 42,498 ஆண்கள் ஆகியவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட 30 ஆண்டுகால ஆய்வின் மூலம் அவர்கள் இப்படி ஒரு முடிவை அறிவித்துள்ளனர்! மரணத்தைக் குறைக்க இந்தக் கொட் டைகளை உண்ணும் பழக்கம் உதவுகிறது.

ஒரு அவுன்ஸ் பருப்புக்கொட்டை களை தினசரி சாப்பிட்டு வருபவர் களுக்கு 20 விழுக்காடு அளவில் மரண வாய்ப்புகள் வெகுவாகத் தள்ளிப் போட உதவுகின்றது!

இப்படிப்பட்ட பழக்கம் இல்லாத வர்களை ஒப்பிடும்போது - அவர்களது மரண விகிதத்துடன் சேர்த்து எண்ணும்போது, அத்தகையவர்கள் ஆயுள் குறுகி விடுகிறதாம்!

ஒரு வாரத்திற்கு ஒரு முறை இப்படி பருப்புக் கொட்டைகளைச் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பின் 11 சதவிகித ரிஸ்க் இதனால் குறைய வாய்ப்புண்டாம்!

அது மட்டுமல்ல, இப்படி பருப்புக் கொட்டைகளை தவறாமல் உண்ணும் பழக்கமுடையவர்களுக்கு புற்றுநோய், நுரையீரல் வியாதிகளான ‘OPD’ என்ற Obstructive Pulmonary Disease) போன்ற நோய்களிலிருந்தும்கூட பாது காப்புக் கிடைக்கக் கூடுமாம்!

கொட்டைப் பருப்புகள், மிகவும் அருமையான சத்துணவும் ஆகும். வைட்டமின்கள், தேவையான உணவு செரிமானத்திற்கு உதவும் (unsaturated Fatty acids) தாதுச் சத்துக்கள், நார்ச்சத்துக்கள் முதலிய பல்வேறு ஊட்டச் சத்துக்கள் இதயப் பாதுகாப்பு (Cardio Protective, anti carcinogenic, anti - inflammatory and anti - oxidents properties) மற்றும் பல்வேறு வகை நோய்த் தடுப்பான்களாகவும் இவை பயன்படுகின்றன என்பதை New England Medical Journal கூறுகிறது.

ஏராளமான எண்ணெய்ப் பலகாரங் களைத் தின்று வயிற்றை அடைப்பதும், அதனால் சர்க்கரை, கொழுப்புச் சத்துக்கள் உடலில் வளர்ந்து பெருகி பல்வேறு நோய்களையும் உருவாக் கிடாமல் இருக்க, இந்தக் கொட்டைப் பருப்புகளை நாள்தோறும் கொஞ்சம் உண்ணும் பழக்கம் நம்மை நல்ல உடல் நலத்துடன் வளரச் செய்யும்.

இவை விலை உயர்வு என்று கருதி னால் எளிய வருமானம் உள்ளவர்கள் - வெறும் கடலைக் கொட்டைகளை - வேர்க்கடலையைக் கொஞ்சம் வாங்கி அவித்துச் சாப்பிட்டால் நல்ல பயன் தருமே!

அதேபோல நாளும் தயிர் சாப் பிடுங்கள். அதுவும் சிறந்த ஊட்டத் தையும், பாதுகாப்பையும் தரும் என்பதும் அனுபவ மருத்துவமாகும்.

Read more: http://viduthalai.in/e-paper/73213.html#ixzz2pcglrDCQ

தமிழ் ஓவியா said...


இதய நோயைத் தவிர்க்க 3 வழிகள்


இன்றைய அவசர உலகில் மோசமான உணவு பழக்க வழக்கம் மற்றும் உடல் உழைப்பின்மை காரணமாக பலருக்கும் ஏற்படும் நோய்களில் ஒன்றாக இதய நோய் உள்ளது.

உடல் உழைப்பின்மையும், நொறுக்குத் தீனிப் பழக்கமும், உடல் பருமனை ஏற்படுத்துகிறது. இதன் மூலமாக இதயநோய் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக் கிறது. இதனைத் தவிர்க்க மூன்று வழிகளை பின்பற்ற வேண்டும்.

அதாவது, ஆரோக்கியமான உணவு... ஆலிவ் எண்ணெய், தானியங்கள், காய்கறிகள், கடல் உணவுகள் போன்றவற்றை ஆரோக்கியமாக தயாரித்து சுகாதாரமான முறையில் உண்ண வேண்டும். இன்னமும், கிரிக் நாடுகளில் தங்களது பழைமையான உணவுப் பழக்கத்தைக் கையாளும் மக்களுக்கு இதயநோய் ஏற்படுவதில்லை என்று ஆய்வுகள் சான்றளிக்கின்றன.

புகை பிடிக்காதீர்

இதயநோய்களை ஏற்படுத்தும் காரணிகளில் சிகரெட் பிடிப்பது முக்கியக் காரணமாக உள்ளது. இந்த காரணத்தால், அமெரிக்காவில் தற்போது புகைப்போரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந் துள்ளது.

ஆனால், மோசமான செய்தி என்னவென் றால், மக்கள் தொகை அதிகமாக இருக்கும் இந்தியா, சீனாவில் புகைப்போரின் எண்ணிக்கை அதிகரித் துக் கொண்டே வருகிறது. புகைப்பதால் நுரையீரல் புற்று நோய் மட்டுமே ஏற்படும் என்று எண்ணி வந்துள்ளோம். ஆனால், புகைப்பதால் இதய நோய்

ஏற்படும் என்ற விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.

நடையை ஓரம் கட்டாதீர்

பலருக்கும் இப்போது நடப்பதற்கான வாய்ப்பே குறைவாக உள்ளது. எங்கு செல்வதென்றாலும் வாகனத்திலும், ஆட்டோவிலும் செல்கிறோம். முன்பெல்லாம் வசதி இல்லாததால் அதிகம் நடந் தார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியமாகவும் வாழ்ந்தார்கள்.

இதயநோய் ஏற்பட்டு மருத்துவ மனைக்கு நடையாய் நடக்க வேண்டாம் என்று விரும்பினால், இப்போதே ஆரோக்கியமாக நடைப் பயணம் மேற்கொள்வோம்.

Read more: http://viduthalai.in/page-7/73210.html#ixzz2pchOk3qt

தமிழ் ஓவியா said...


முதுமையின் வலிகள்


முதுமைப் பருவம் குழந்தைப் பருவத்துக்கு சமம் என்பார்கள். உடல், மன வேதனைகளை குழந்தை களுக்கு எப்படி சொல்ல தெரியாதோ அதே மாதிரி தான் முதியவர்களுக்கும். 2020 இல் உலகில் ஆயிரம் மில்லியன் முதியவர்கள் இருப்பார்கள். அதில் இந்தியாவில் மட்டுமே 142 மில்லியன் பேர் என்கிறது உலகச் சுகாதார நிறுவனம். வயதானவர்கள் அதிகமாக, ஆக அவர்களின் உடல் நலப்பிரச்சினை களும் அதிகரிக்கவே செய்யும்.

65 வயதிற்குப்பிறகு ஆண்களும், பெண்களும் அதிக வலிகளால் அவதிப்படுகிறார்கள். அவர்களின் வலிகள், மற்றவர்களின் வலிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. அதற்கான அணுகுமுறை, சிகிச்சை எல்லாமே வேறு என்கிறார் வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் குமார். முதுமையில் வரக்கூடிய வலி திசுக்களின் தேய்மானம், பலவீனத்தால் வரக்கூடியது.

ரத்த அழுத்தம், நீரிழிவு, எலும்பு மூட்டுப் பிரச்சினை, மற்ற நோய்களின் விளைவால் வரக்கூடியது. தனிமை, வாழ்க்கையைப்பற்றிய பயம், வருமானம் இல்லை என்கிற வேறு காரணங்களால் உணரப்படுகின்ற வலி, புற்றுநோயால் வரக்கூடிய வலி. இதெல்லாம் வயதானவர்களின் வலிக்கான காரணங்கள். 65 வயதிற்குப் பிறகு புற்றுநோய் தாக்குகின்ற ஆபத்து அவர்களுக்கு அதிகம்.

இவர்களுக்கு சிகிச்சை கொடுப்பது அவ்வளவு எளிதானதல்ல. சிகிச்சைக்கு ஒத்துழைக்க மாட்டார்கள். காது கேட்காதது, கவனமின்மை, மறதி, மனரீதியான பிரச்சினைகள் என்று பல காரணங் களால் சிகிச்சைகளை பற்றிப் புரிந்துகொள்கின்ற சக்தி அவர்களுக்கு இருக்காது. உடற்பயிற்சி, பிசியோதெரபி மாதிரியான விஷயங்களுக்கும் ஒத்துழைக்க மாட்டார்கள். மிகவும் பொறுமையாகத் தான் அவர்களை அணுகவேண்டும் என்கிறார் மருத்துவர் குமார்.

மூட்டு வலி, தோள்பட்டை வலி, முதுகு வலி, கழுத்து வலி, கால் எரிச்சல், புற்றுநோய் வலி ஆகியவையே முதியவர்களிடம் காணப்படுகிற வலிகள் என்கிறார்.

ஏற்கெனவே அவர்களுக்கு ஏதாவது நோய் இருந்தால், வலிகளுக்கான மருந்துகளை கொடுக் கிறபொழுது அதிகபட்ச கவனம் தேவை. எல்லா மருந்துகளும் அவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது. நோயின் தன்மை, அவர்களுடைய உடல் மற்றும் மனநிலையை தெரிந்து கொண்டுத்தான் மருந்துகள் தர வேண்டும். 60 வயதிற்கு மேலானவர்கள் எக்காரணத்தைக் கொண்டும், எந்த வலிக்கும் சுய மருத்துவம் செய்யவே கூடாது.

மருந்து கொடுத்து சரி செய்ய முடியாது என்கிற வலிகளுக்கு கலந்தாய்வும், உளவியல் ரீதியான தெரபிகளும் தேவைப்படலாம். பிசியோதெரபி செய்வது மூலம் வலியோட தீவிரம் அதிகமாவதைத் தவிர்க்கலாம். சில வலிகளுக்கு அறுவை சிகிச்சை தான் தீர்வாக இருக்கும். ஆனால் முதுமை காரணமாக அறுவை சிகிச்சை செய்ய முடியாது, மருந்துகளும் தர முடியாது என்கிற நிலைமையில் உள்ளவர்களுக்கு, வலி நிர்வாக கிளினிக்கை அணுகி, சிறப்பு வலி நிவாரண சிகிச்சைகள் கொடுப்பது பலன் தரும் என்கிறார்.

Read more: http://viduthalai.in/page-7/73211.html#ixzz2pchcqwLD

தமிழ் ஓவியா said...


தூக்கமின்மை நரம்பியல் அழிவிற்கு வழிவகுக்கும்: ஆய்வுத் தகவல்


ஒரு மனிதனின் ஆரோக்கியமான உடல் நலத்திற்கு நல்ல தூக்க மும் ஒரு காரணமாக உள்ளது. தூக்கம் இல்லாமை என்பது மாரடைப்பு, உடற் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் வருவ தற்கு அதிக வாய்ப்புகளை அளிப்பதாகவே நிபுணர்கள் கருது கின்றனர்.

சுவீடன் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வானது தூக்கமின்மை என்பது எவ்வாறு மக்களின் சுகாதாரத்தைப் பாதிக்கின்றது என்பதை தெரிவிப்பதாக உள்ளது. உப்சாலா பல்கலைக்கழகத்தின் ஆய்வுகள் ஒரு இரவின் தூக்கமின்மை என்பது மனிதனின் மூளையில் காணப்படும் மூலக்கூறுகளில் இரத்த அளவு அதிகரிப்பதை நிரூபித்துள்ளது.

இந்தப் பரிசோதனையை மேற்கொண்ட சுய ஆர்வலர்களின் இரத்தத்தில் மூளைத் திசுக்களின் அழிவைக் குறிக்கும் என்எஸ்ஈ மற்றும் எஸ்-100பி போன்ற காரணிகள் அதிகரித்திருந்தது கண் டறியப்பட்டது. ஸ்லீப்' என்ற மருத்துவ இதழில் சாதாரண எடை கொண்ட 15 பேரின் தூக்க நேரத்தின் அளவுகள் கணக்கிடப் பட்டிருந்தன.

இவர்களில் ஒருவர் மட்டும் ஒரு நாள் இரவு தூங்க வில்லை. மற்றவர்கள் அனைவரும் எட்டு மணிநேர தூக்கத்தைப் பெற் றிருந்தார்கள். ஒரு நாள் இரவு தூங்காமல் இருந்த நபரின் இரத்தத்தில் மூளைத் திசுக்களின் அழிவுக் காரணிகளான என்எஸ்ஈ மற்றும் எஸ்-100பி இவற்றின் கலவைகள் அதிகரித்துக் காணப்பட்டன.

இதன்மூலம் தூக்கமின்மை என்பது ஒருவரது நரம்பியல் அழிவிற்கான செயல்முறைகளைத் விரைவுப்படுத்து கின்றது என்று உப்சலா பல்கலைக்கழகத்தின் முன்னணி ஆராய்ச்சி யாளரான கிறிஸ்டியன் பெனடிக்ட் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இத்தகைய ஆய்வுகள் ஒரு நல்ல இரவு தூக்கமானது மனிதனின் மூளையை ஆரோக்கியமாக வைத்திருப் பதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதைத் தெரிவிக்கின்றன.

Read more: http://viduthalai.in/page-7/73209.html#ixzz2pchrsOyM

தமிழ் ஓவியா said...

மார்பகப் புற்றுநோய்: ரத்தப் பரிசோதனைமூலம் கண்டறியலாம்

மார்பகப் புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் உடலில் இருப்பதை ரத்தப் பரிசோதனை மூலமாகக் கண்டறியும் நவீன தொழில்நுட்பம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

எலிகளை வைத்து நடத்தப்பட்ட சோதனையில், மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் உடலில் இருப்பதை ரத்த பரிசோதனையில் கண்டறியும் முறை வெற்றி பெற்றுள்ளதாகவும், தற்போது இது மனிதர்களிடம் சோதனை முறையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த முறை பயன்பாட்டுக்கு வந்தால், மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளித்து பல உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம்.

Read more: http://viduthalai.in/page-7/73209.html#ixzz2pci0oQJb