Search This Blog

9.1.14

பார்ப்பனர்கள் பூதேவர்கள் என்று அழைத்துக் கொள்வதன் சூட்சமம் புரிகிறதா?


சிதம்பரம் நடராஜன் கோவில் பிரச்சினையில் தங்களுக்குச் சாதகமாக தீர்ப்புக் கிடைத்ததற்காக தீர்ப்பு வழங்கிய நீதிபதி கள் பி.எஸ்.சவுகான், எஸ்.போப்டே, வழக்காடிய சுப்பிரமணியசாமி ஆகி யோரின் பெயரில் சிதம் பரம் நடராஜன் கோவில் தீட்சிதர்கள் லட்சார்ச் சனை செய்துள்ளார்கள் என்று தீட்சிதர்கள் சங் கத்தின் உதவி செயலா ளர் சபாபதி தீட்சிதர் தெரிவித்த தகவலை தி இந்து (தமிழ்) இன்று செய்தியாக வெளியிட் டுள்ளது.


இதற்காக சிதம்பரம் நடராஜன் சாமிக்கு நன்றி தெரிவிக்கப்பட்ட தாம். இதை நினைத்தால் வயிறு குலுங்கும் அளவுக்குச் சிரிப்புதான் வருகிறது.
சிதம்பரம் நடராஜ னுக்கு அவ்வளவு சக்தியிருந்தால், தீட்சிதர்கள் ஏன் உச்சநீதிமன்றம் சென்று தவம் இருக்க வேண்டும்? வழக்குரைஞர்களை அமைத்துப் பணத்தைக் கொட்டிக் கொடுக்கவேண்டும்?

நடராஜக் கடவுளையே தங்கள் ஜாதிக் கட்டுக்குள் வைத்தவர் கள் ஆயிற்றே! ஆமாம், சாதாரண நடராஜன் அல்ல - அவர் நடராஜ தீட்சிதர்.
கைலாயத்திலிருந்து இந்தத் தீட்சிதர்களை சாட்சாத் சிவபெருமானே தில்லைக்கு (சிதம்பரத் திற்கு) அழைத்து வந்தா ராம்.

எண்ணிப் பார்த்த போது மூவாயிரம் தீட்சி தர்களில் எண்ணிக்கை யில் ஒருவர்  குறைந்தா ராம். அப்பொழுது திரு வாளர் நடராஜக் கடவுள் அந்த ஒருவர் நான்தான் என்றாராம்.

புரிகிறதா? சிதம்பரம் நடராஜக் கடவுளையே தீட்சிதர் என்னும் ஜாதிப் பட்டியலுக்குள் அடைத்து விட்டனரே!

பார்ப்பனர்கள் தங்களைப் பூதேவர்கள் என்று அழைத்துக் கொள்வதன் சூட்சமம் புரி கிறதா?


 இப்படிக் கட வுளே தீட்சிதராக இருக் கும்பொழுது, அவாளுக் குப் பிரச்சினை வர லாமா?

அப்படி பிரச்சினையே வந்தாலும், அவாள் நீதி மன்றம் செல்லும் அள வுக்கு விடலாமா? அரசு கையகப்படுத்தும் நிலையை ஸ்ரீமான் நட ராஜ தீட்சிதர் (கடவுள்) அனுமதிக்கலாமா?

இதில் ஒன்றைக் கவ னிக்கவேண்டும் - சிதம் பரம் தீட்சிதர்கள் சு.சாமியின் பெயரில் அர்ச்சனை செய்வது எப்படியோ தொலைந்துபோகட்டும்!

உச்சநீதிமன்ற நீதிபதி களுக்கும் சேர்த்து லட் சார்ச்சனை என்றால், இதன் பின்னணி என்ன?

உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சவுகான், நல்ல காரியம் செய்யப் போகி றேன் என்று முன்னதா கவே, வெளிப்படையாக தெரிவித்த வார்த்தை களே அதற்குச் சாட்சியம்.

------------------ மயிலாடன் அவர்கள் 08-01-2014 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

22 comments:

தமிழ் ஓவியா said...


மதக் குறி என்பதுமாட்டுக்குறியே!


மதக்குறி என்பது மாட்டு மந்தைக்காரன் தன் மாடுகளுக்குப் போடும் அடையாளம்போலவே மதத் தலைவன் தனது மதத்தைப் பின்பற்றுகின்றவர்கள் என்பதைக் காட்ட ஏற்படுத்தப்பட்ட குறியேயாகும்.

(குடிஅரசு, 3.11.1929)

Read more: http://viduthalai.in/e-paper/73309.html#ixzz2prAswES4

தமிழ் ஓவியா said...


சன் டி.வி. வீரபாண்டியனுக்கு அச்சுறுத்தல்: கண்டனம்


சென்னை, ஜன. 8- மத வாத அரசியல் குறித்துக் கருத்துக் கூறிய ஊடக வியலாளர் சன் டிவி வீரபாண்டியன் மீது பாஜக தொடுத்துள்ள தாக்குதல் தொடர்பாக அரசியல் தலைவர்களும் ஊடகவியலாளர்களும் சமூகச் செயல்பாட்டா ளர்களும் கண்டித்து செவ்வாயன்று (ஜன. 7) வெளியிட்ட கூட்ட றிக்கை:

மதவாதத்திற்கு எதி ராகப் பேசியதால் சன் தொலைக்காட்சியின் அரசியல் விமர்சகர் வீர பாண்டியனை பணியிலி ருந்து நீக்க வேண்டுமென மதவாத சக்திகள் வலி யுறுத்தியுள்ளதை மதச் சார்பின்மை மீது நம் பிக்கை கொண்டுள்ள இந்த கூட்டறிக்கையில் கையொப்பமிட்டுள்ள நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சென்னையில் சில வாரங்களுக்கு முன்பு மனித உரிமை அமைப்பு ஒன்றின் சார்பில், முசா பர் நகரில் சிறுபான்மை யினர் மீதான வன்முறை குறித்த உண்மை அறியும் குழு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீரபாண்டி யன் பா.ஜ.க. மீது சில விமர்சனங்களை முன் வைத்துப் பேசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பா.ஜ.க.வின் மாநில அலுவலகச் செயலாளர் திரு.கி.சர்வோத்தமன் சன் தொலைக்காட்சிக் குழும மேலாண் இயக்கு நருக்கும் டிசம்பர் 23 அன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் வீரபாண்டியன் பேச்சு இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்துவதாகவும், வீரபாண்டியன் தொலைக்காட்சியில் நடத்தும் நிகழ்ச்சிகள் நடுநிலையோடு இருக் காது எனவும் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக் கும்படி கோரியுள்ளார்.

அவர் முன்நின்று நடத்தும் விவாத நிகழ்ச் சிகளில் பா.ஜ.க. சார்பில் யாரும் கலந்து கொள்ள மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர காவல் ஆணையரிடமும் அவர் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித் துள்ளதாக தெரிய வரு கிறது.

இதன்பின்னர், கடந்த வாரம் சனிக்கிழமை முதல் அவர் நடத்தும் நிகழ்ச்சி ஒளிபரப்பப் படவில்லை. இந்த அணு குமுறை ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண் டோராகிய எங்களுக்கு மிகுந்த வேதனையும், கவலையும் அளிக்கிறது.

ஊடகங்களில் ஒரு ஊடகவியலாளர் நடு நிலையாக இருந்து கருத் துரைக்க வேண்டுமென் பதுதான் அறம். அதனா லேயே அவருக்குச் சொந்த கருத்தோ அல்லது அர சியல் பார்வையோ இருக் கக் கூடாது என்பது தவ றானது. இதர குடிமக்க ளுக்கு உள்ள அனைத்து அரசியல் உரிமைகளும் ஊடகவியலாளர்களுக்கும் உண்டு.

பல்வேறு வகையில் அனைத்துத் தரப்பு மக் களின் கருத்துகளுக்கும் இடமளித்து வரும் சன் தொலைக்காட்சி நிர்வா கம் வீரபாண்டியன் நடத் தும் அரசியல் விவாத நிகழ்ச்சி தொடர ஆவன செய்து, கருத்துரிமை, பேச்சுரிமைக்கு தொடர்ந்து மதிப்பளித்திட வேண் டும் என கேட்டுக் கொள் கிறோம்.

இந்திய அரசியல் சட்டம் வகுத்துள்ள மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் விடுத்து செயல்பட்டு வரும் மத வாதக் கட்சிகள் இது போன்று ஊடகவிய லாளர்களுக்கு நேரடி அச்சுறுத்தல்கள் விடுப்பதை அனைத்து அச்சு மற்றும் காட்சி ஊடகத்தினர் கண்டிக்க முன்வர வேண்டுமென வலியுறுத்துகிறோம். இவ்வாறு அந்த கூட்ட றிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

அறிக்கையில் கி.வீர மணி (தி.க.), ஞானதேசி கன் எம்.பி. (காங்.), மத் திய அமைச்சர் இ.எம். சுதர்சன் நாச்சியப்பன், தா.பாண்டியன் (சிபி அய்), தொல்.திருமாவள வன் (விசிக), எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., (மமக), கே.எம்.காதர் முகைதீன் எம்.பி., (முஸ் லீம் லீக்), சுப.வீரபாண் டியன் (திஇதபேரவை), தமஎகச மாநிலத் தலை வர் ச.தமிழ்ச்செல்வன், கவிக்கோ, அப்துல் ரஹ் மான், பேரா.அ.மார்க்ஸ், கவிஞர் மனுஷ்யபுத்தி ரன், ஜே.எஸ்.ரிபாயி (தமு முக), பேராயர்கள் எஸ்றா.சற்குணம், தேவ சகாயம், பத்திரிகையா ளர்கள் அ.குமரேசன், ஞாநி, டி.எஸ்.எஸ்.மணி உள்ளிட்ட பலரும் கையெழுத்திட்டுள்ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/73343.html#ixzz2prBHvfZS

தமிழ் ஓவியா said...


தீக்கதிர் தலையங்கம் சிதம்பரம் கோவிலுக்குள் நீதியும் நுழையமுடியாதா?


சிதம்பரம் நடராசர் கோவில் நிர் வாகத்தை தமிழக அரசு ஏற்றுக் கொண்டது செல்லாது என்றும், நிர் வாகம் பொது தீட்சிதர்களின் கைகளில்தான் இருக்கவேண்டு மென்றும் உச்சநீதிமன்றம் வழங்கி யுள்ள தீர்ப்பு மெச்சத்தக்கதாக இல்லை. ஒரு குறிப்பிட்ட ஜாதியின் ஆதிக்கத்தில்தான் இந்தக்கோவில் இருக்க வேண்டும் என்று நாட்டின் உயர்ந்த நீதி பரிபாலன அமைப்பு கூறியுள்ளது சமூகநீதி சக்திகளுக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

தென்னாடுடைய சிவனே போற்றி என்றுபோற்றப்படும் சிதம்பரம் நடராசர் கோவிலின்சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம், திருவாசகம் பாட, சிவனடியாரான ஆறுமுகசாமிக்கு தீட்சிதர்களால் அனுமதி மறுக்கப் பட்டது. தொடர்ந்து பலஆண்டுகளாக தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இந்தக் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்தப் பின்னணியில்தான் 2008 பிப்ரவரியில் சிதம்பரம் நடராசர் கோவிலை தமிழக அரசு கையகப் படுத்தியது. இதை எதிர்த்து தீட்சி தர்கள் தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றத்தில் தீட்சிதர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமான்கள், நடராசர் கோவிலை தமிழக அரசு ஏற்றது செல்லாது என்றும், தீட்சிதர்கள் நிர்வாகத்தில்தான் கோயில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

முறைகேடு குறித்து புகார் வந்தால் அதை சரி செய்ய கோவில் நிர் வாகத்துக்கு தமிழக அறநிலையத் துறை பரிந்துரைகள் வழங்கலாம் அல்லது புகார்கள் குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுத்து அதை மேற்பார் வையிடலாம் என்று கூறியுள்ளனர். இந்த முரண்பாட்டை புரிந்துகொள்ள முடியவில்லை.

சிதம்பரம் கோவிலை பொறுத்தவரை தமிழக அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. பரிந்துரை வழங்கலாம். ஆனால் அதை ஏற்க வேண்டுமென்ற அவசியம் எதுவும் தீட்சிதர்களுக்கு இல்லை என்றாகிறது. சிதம்பரம் நடராசர் கோவிலை பொது தீட்சிதர்கள் தான் கட்டினார் கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நீதிமன்றத்தில் நிரூபிக்கப் படவும் இல்லை.

தமிழகத்தில் ஏராளமான கோவில் கள் பல்வேறு ஜாதியினரால் நிர்வகிக் கப்பட்டு வந்தநிலையில் தமிழக அரசு அந்தக் கோவில்களை அறநிலையத் துறையின்கீழ் கொண்டு வந்துள்ளது. ஆனால் இப்போதைய தீர்ப்பு அனைத் துக் கோவில்களும் மீண்டும் ஜாதி களின் கையில் செல்லவும், அறநிலை யத்துறையே அர்த்தமற்றுப் போகவும் வழிசெய்யும் ஆபத்து உள்ளது.

தேவாரப் பாடல்களை பதுக்கி வைத்தது, நந்தனாரை தீயில் தள்ளிக் கொன்றது, வள்ளலாரை கோவில் கருவறைக்குள் அனுமதிக்க மறுத்தது, சிவனடியார் ஆறுமுகசாமியை அடித்து நொறுக் கியது நகைகள் திருட்டு என்று சிதம்பரம் தீட்சிதர்கள் மீது வரலாற்று காலந் தொட்டு ஏராளமான புகார்கள் உள்ளன.

கோவில் சொத்தை நிர்வகிப்பதிலும் வெளிப்படையான கணக்கு வழக்கு இல்லை. இந்த கோவில் நிர்வாகத்தை ஏற்ற தமிழக அரசு வழக்கை நடத்து வதில் உரிய அக்கறை காட்டவில்லை என்ற புகார் உள்ளது. சேது சமுத்திர திட்ட வழக்கிலும் கூட நம்பிக்கை என்பதற்கு கொடுத்த அழுத்தத்தை வளர்ச்சிப்பணி என்பதற்கு உச்சநீதிமன்றம் கொடுக்க வில்லை.

இந்த வழக்கிலும் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு ஏற்புடையதாக இல்லை. தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு (மறு சீராய்வு) செய்வதன் மூலம் நீதியையும், சமூக நீதியையும் நிலைநாட்ட முன்வரவேண்டும்.

நன்றி: தீக்கதிர், தலையங்கம், 8.1.2014

Read more: http://viduthalai.in/e-paper/73311.html#ixzz2prBt86JK

தமிழ் ஓவியா said...

வடமாநிலத்திலும் பெரியார் கொள்கை முழக்கம்! மும்பையில் தந்தை பெரியார் மற்றும் பொங்கல் விழா


வடமாநிலத்திலும் பெரியார் கொள்கை முழக்கம்!
மும்பையில் தந்தை பெரியார் மற்றும் பொங்கல் விழா-
சமூகநீதிக்கான வீரமணி விருது வழங்கும் விழா

மும்பை, ஜன.8- மும்பையில் வரும் 11, 12 ஆகிய இரு நாள்களிலும் பெரியார் கொள்கை பரப்பு விழா நடைபெற உள்ளது.

பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில் சமூகநீதி விருது வழங்கும் விழா முதல் நாள் அன்றும், தந்தை பெரியார் பிறந்த நாள், தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் ஆகிய விழாக்கள் மும்பை திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் சார்பிலும் நடை பெற உள்ளன.

அதன் விவரம் வருமாறு:

பெரியார் பன்னாட்டு மய்யம் அமெரிக்கா - 2013 ஆம் ஆண்டுக்கான சமூக நீதி விருது மராட்டிய மாநில அமைச்சர் ஜகன் புஜ்பல் பெறுகிறார் அமெரிக்காவில் இயங்கி வரும் தந்தை பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சமூகநீதிக்காகத் தொண்டாற்றிய பெருமக்களுக்கு கி.வீரமணி சமூக நீதி விருதுஅளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விருது 1996 ஆம் ஆண்டிலிருந்து அறிவிக் கப்பட்டு முதன் முதலாக மேனாள் இந்திய தலைமை அமைச்சர் விசுவநாத் பிரதாப் சிங், மேனாள் காங்கிரசு தலைவர் சீத்தாராம் கேசரி, முன்னாள் மத்திய அமைச்சர் சந்திரஜித் யாதவ், மேனாள் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர், மேனாள் உ.பி. முதலமைச்சர் செல்வி மாயாவதி, ஜி.கே.மூப்பனார், கருநாடக தலைமை வழக்கறிஞர் பேரா.ரவி வர்மாகுமார் உட்பட பல முன்னணித் தலை வர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

மாண்புமிகு அமைச்சர் ஜகன்புஜ்பாலுக்கு விருது

அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டுக்கான கி.வீரமணி சமூக நீதி விருது 2013 மராத்திய மாநில பொதுப்பணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மாண்புமிகு ஜகன் புஜ்பாலுக்கு வழங்கப்படுகிறது. மராத்திய மாநிலத்தின் சமுகநீதிப் பேராளியான மகாத்மா புலேவின் கொள்கைகளைப் பரப்பி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தொண்டாற்றியமைக்காகவும், மண்டல் குழு அறிக்கையை செயல்படுத்த மிகுந்த உழைப்பிற்காகவும் இவ்விருது அவ ருக்கு வழங்கப்படுகிறது.

விருது வழங்கும் விழா 11.01.2014 அன்று காலை 11 மணிக்கு மும்பை, பிரபாதேவி அருகில் உள்ள இரவீந்திர நாட்டிய மந்திர் கலையரங்கில் நடைபெறுகிறது. விழாவின் சிறப்பு விருந்தினராக மராத்திய மாநில ஆளுநர் கே.சங்கர நாராயணன் கலந்து கொண்டு விருது வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி முன்னிலை வகித்து உரையாற்றுகிறார். பெரியார் பன்னாட்டு மய்ய நிருவாக இயக்குநர் டாக்டர் சோம. இளங் கோவன் வரவேற்புரையாற்றுகிறார். விழாவில் மராத்திய மக்களும், தமிழ் மக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டுமென விருதுக்குழுவின் தலைவர் பேராசிரியர் இலக்குவன் தமிழ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிகழ்ச்சிக்காக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பெரியார் பன்னாட்டு மய்ய நிரு வாகிகள் டாக்டர் சோம.இளங் கோவன், தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ.கும ரேசன் ஆகியோர் சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணிக்கு விமானம் மூலம் மும்பை வருகின்றனர்.

தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு

இவ்விழாவினைத் தொடர்ந்து 12.01.2014 அன்று காலை 9.30 மணிக்கு மும்பை திராவிடர் கழகம் மற்றும் மும்பை பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 135 ஆவது பிறந்தநாள் விழா - பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு விழா மும்பை மாதுங்கா, மைசூர் அசோசியேசன் அரங்கில் கொண்டாடப்படுகிறது. விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சிறப்புரையாற்றுகிறார்.

விழாவில் மும்பை பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அ.ரவிச்சந்திரன் வரவேற்புரையாற்றுகிறார். பெரியார் படத்தை சீர் வரிசை சண்முக ராசன் திறந்து வைக்கிறார். மும்பை திராவி டர் கழகத் தலை வர் பெ.கணேசன் தொடக்கவுரையு டன் நிகழும் இவ் விழாவில் பெரி யார் பன்னாட்டு மய்ய இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன்,

இலெமுரியா அறக்கட்டளைத் தலைவரும், தமிழ் இலெ முரியா முதன்மை ஆசிரியருமான சு.குமணராசன், மும்பை புறநகர் தி.மு.க செயலாளர் அலிசேக் மீரான், மனித நேய இயக்க அமைப்பாளர் பி.கே. சங்கர் திராவிட், எழுத்தாளர் மன்ற தலைவர் பேரா. சமீரா மீரான் உள்பட பலர் கருத்துரை வழங்குகின்றனர். இறுதியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றுகின்றார்.

விழாவிற்கு எஸ்.எஸ்.அன்பழகன், வி.தேவதாசன், த.மு.பொற்கோ, த.மு.ஆரிய சங்காரன், வெ.ம.உத்த மன், பொ.அப்பாத்துரை, ம.சேசுராசு, எஸ்.ஏ.துரை, முகமதலி ஜின்னா, கொ.வள்ளுவன், சேதுராமன் சாத்தப்பன், நெல்லை சிறீதர், கே.வி.அசோக்குமார், சிவ.நல்ல சேகரன், தொல்.காமராஜ், புதிய மாதவி, இரவீந்திரன், வதிலை பிரதாபன், வழக்குரைஞர் சுபாஸ் சந்திரபோஸ், கோ.மா.விசுவநாதன், இறை சா.இராஜேந்திரன், கவிஞர் குணா, டி.கே.சந்திரன், மணிமாறன், தமிழ்நேசன், செ.அப்பாத்துரை உள்பட ஏராளமானோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இருவிழாவிற்கான ஏற்பாடுகளை பெரியார் பன்னாட்டு மய்யத்தின் சார்பில் பொ.அன்பழகன் அய்.ஏ.எஸ்., சு.குமணராசன், அ.ரவிச்சந்திரன், பெ.கணேசன் ஆகியோர் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/73307.html#ixzz2prCAXeHN

தமிழ் ஓவியா said...


மோடிக்கு எதிராக துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!

அகமதாபாத்,ஜன.8- குஜராத்தில் நரேந்திர மோடி அரசுக்கு எதி ராக துப்புரவுத் தொழிலாளர்கள் மாபெரும் பேரணி நடத்தினார்கள்.

குஜராத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பணி புரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு மிகக்குறைந்த ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பல்லாண்டு காலமாக பணிபுரிந்து வரும் இந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய தொடர்ந்து மோடி அரசு மறுத்து வருகிறது.

இஎஸ்அய், பிஎஃப் உள்ளிட்ட சட்ட சலுகைகளையும் அமல்படுத்த குஜராத் அரசு மறுத்து வருகிறது. தொடர்ந்து சமூகத்தில் பின் தங்கியிருக்கும் துப்புரவு தொழிலா ளர்களை கொத்தடிமைகள் போலவே மோடி தலைமையிலான அரசு நடத்தி வருகிறது. இதனைக் கண்டித்து, காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் துப்புரவுத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களை மோடி அரசு மிரட்டி பணிய வைக்கவும், பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. வேலை நிறுத்தத்தை கைவிட்டு உடனே வேலைக்கு திரும்ப வேண்டும். அல்லது துப்புரவுப் பணியில் இருந்து அனைவரையும் ஒட்டுமொத்தமாக வெளியேற்றி விடுவோம்.

வேறு நபர்களுக்கு வேலை வழங்கி விடுவோம் என்பது உள்ளிட்ட பல்வேறு வகையில் தொடர்ந்து தொழிலாளர்களை மோடி அரசு மிரட்டி வருகிறது. ஆனால் இவற்றிற்கெல்லாம் அஞ்சாமல் துப்புரவுத் தொழிலாளர்கள் தீரத்துடன் போராடி வருகின்றனர். தொடர்ந்து 8 ஆவது நாளாக நடைபெற்று வரும் இந்த வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக மோடி அரசை கண்டித்து அகமதாபாத் நகரில் மாபெரும் கண்டனப் பேரணி நடத்தினர்.

சிலைக்குப் பல்லாயிரம் கோடியா?

தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் கொடுக்காமல் படேல் சிலை அமைக்க பல கோடி ரூபாய்களை அரசு வீணடிப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். ஏழை மக்களுக்கு நன்மை செய்யப் போவதாக நாடு முழுவதும் பொய்ப் பிரச்சாரம் செய்து வரும் நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தில் உரிமைகளுக்காக குரல் கொடுத்துவரும் துப்புரவுத் தொழிலாளர்களை கண்டு கொள்ளவில்லை.இதனால் ஏமாற்றம் அடைந்த துப்புரவுத் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை அகமதாபாத்தில் மாபெரும் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரம சாலையில் அவர்கள் பேரணியாக சென்றார்கள். வழியில் உள்ள காந்தியார் சிலைக்கு அவர்கள் பாலபிஷேகம் நடத்தினார்கள். குஜராத் மாநில பாரதிய ஜனதா அரசின் அசுத்தத்தை கழுவும் வகையில் பாலபிஷேகம் செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த பேரணியில் நகராட்சி போக்குவரத்துத்துறை தொழிலாளர்கள், குஜராத் தொழில் பாதுகாப்புத்துறை காவலர்கள் கலந்து கொண்டனர். காந்தியார், சர்தார் வல்லபாய் பட்டேல் மீது தேர்தலுக்காக போலி அன்பு காட்டும் மோடிக்கு எதிராக பேரணியில் கலந்து கொண்டவர்கள் முழக்கமிட் டனர்.பேரணி காந்தியாரின் சபர்மதி ஆசிரமம் அருகில் சென்று முடிவடைந்தது.

அங்கு அவர்கள் பொதுக்கூட்டம் நடத்தினார்கள். கூட்டத்தில் பேசியவர்கள், பட்டேல் சிலை அமைப்பதற்காக குஜராத் அரசு கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கிறது. அந்த பணத்தை குஜராத்தில் உள்ள ஏழை தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி, சுகாதாரத்துக்கு செலவிடலாம் என்று வலியுறுத்தினர்.

Read more: http://viduthalai.in/e-paper/73308.html#ixzz2prCM3pSQ

தமிழ் ஓவியா said...

இருபதாம் நூற்றாண்டில் மனிதர்களை மனிதப்படுத்திய நாத்திகச் செம்மல் தந்தை பெரியாரும், நாத்திக அறிஞர் கோராவும்!

விஜயவாடா - நாத்திகர் மய்யத்தின் 75 ஆம் ஆண்டு விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்று உரை!

விஜயவாடா - கோரா நாத்திகர் மய்யத்தின் 75 ஆம் ஆண்டு விழாவில் தமிழர் தலைவருக்கு, மய்ய நிர்வாகிகள் பயனாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினர்

விஜயவாடா, ஜன.8- செல்வாக்கு, அதிகாரம் நோக்கிய பொதுவாழ்க்கைப் பணிகளைத் துறந்து, மனிதர்களை மனிதப்படுத்தும் கடும் பணியினை மேற்கொண்ட புரட்சியாளர்கள் தந்தை பெரியாரும், நாத்திக அறிஞர் கோராவும் ஆவர்.

செல்வாக்கினைப் பற்றிய விருப்பு அறவே இன்றி, தங்களது பகுத்தறிவுப் பிரச்சார சொல்வாக்கின் மூலம் எதிர்ப்புகளை நேர்கொண்டு வெற்றி கண்டவர்கள் பெரியாரும், கோராவும் என, விஜயவாடா நாத்திகர் மய்யத்தின் 75-ஆம் ஆண்டு விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் கி.வீரமணி பங்கேற்று, உரையாற்றினார்.

ஆந்திர மாநிலம் - விஜயவாடாவில் உள்ள நாத்திகர் மய்யம் நாத்திக அறிஞர் கோரா (கோபராஜூ ராமச்சந்திர ராவ்) அவர்களால் நிறுவப்பட்டது. அதன் 75 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் ஜனவரி 5, 6 -ஆகிய நாள்களில் விஜயவாடாவில் பெரிய அளவில் நடைபெற்றது. பல தரப்பட்ட மனித நேய ஆர்வலர்கள், நாட்டின் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு பகுத் தறிவாளர், நாத்திக, மனித நேய அமைப்பினைச் சார்ந்த தலைவர் கள் பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.

விஜயவாடா நகரின் மய்யப் பகுதியில் அமைந்துள்ள சித் தார்த்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கத்தில், ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதல் நாள் (ஜனவரி 5) தொடங்கிய நிகழ்ச் சியினை சீரிய அறிவியலாளரும், தேசிய அறிவுசார் ஆணையத்தின் மேனாள் துணைத் தலைவருமான முனைவர் பி.எம்.பார்கவா தொடங்கி வைத்தார்.

நார்வே நாட்டு மனித நேயத் தலைவரும், உலக மனிதநேய நன்னெறி ஒன்றியத்தின் (International Humanist & Ethical Union) மேனாள் தலைவருமான லெவி பிராகல் தலைமை வகித்தார். விஜயவாடா நாத்திகர் மய்யத்தின் செயல் இயக்குநர் முனைவர் கோ.விஜயம் வருகைதந்த அனைவரையும் வரவேற்றுப்பேசினார்.

நாத்திக அறிஞர்களின் உரை, ஆராய்ச்சி யாளர்களின் உரை, கல்வியாளர்களின் பேச்சு, கலை நிகழ்ச்சி, புத்தக வெளியீடு என பலதரப்பட்ட நிகழ்வுகளை உள் ளடக்கியதாக வெகு விமரிசையாக ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற் றன.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் பங்கேற்பு

கோரா நாத்திகர் மய்யத்தின் 75 ஆம் ஆண்டு விழாவில் லெவி பிராகலுக்கு பயனாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினர்

இரண்டாம் (ஜனவரி 6) நாள் நிகழ்ச் சியில் திராவிடர் கழகத் தலைவரும் மற்றும் பெரியார் மணியம்மை பல் கலைக் கழகத்தின் வேந்தருமான தமிழர் தலைவர் கி.வீரமணி பங்கேற்றுச் சிறப் பித்தார். ஆண்டு விழாவின் நிறைவுரை யினை ஆற்றினார். தமிழர் தலைவருடன் பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன் சென்று நாத்திகர் மய்ய விழாவில் கலந்து கொண்டார்.


தமிழ் ஓவியா said...

நாத்திக அறிவியல் அறிஞர் பி.எம்.பார்கவா - தமிழர் தலைவரின் பாராட்டு

அறிவியல் உலகில் 50 ஆண்டு களுக்கும் மேலாக பங்களித்து சாதனை புரிந்தவரும் நாத்திக அறிவி யலாளருமான முனைவர் பி.எம். பார்கவா அவர்களை அனைத்து நாத்திகர் அமைப்பின் சார்பாக தமிழர் தலைவர் கி.வீரமணி பாராட்டி சால்வை அணிவித்துப் பெருமைப்படுத்தினார். தனது பாராட்டுரையில் தமிழர் தலைவர் குறிப்பிட்டதாவது:-

நாத்திகர் உலகின் பெருமைகளில் ஒன்றாக விளங்குபவர் பி.எம்.பார் கவா, தனது பணி நாள் முழுவதும் - அறிவியல் முன்னேற்றத்திற்குப் பங்களித்ததோடு, நாத்திகராகவே, வாழ்ந்து, நாத்திகக் கருத்துப் பிரச்சாரத்திற்கு வளம் சேர்த்தவர் பி.எம்.பார்கவா. அய்தராபாத்தில் செயல்பட்டுவரும் மூலக்கூறு உயிரியல் மய்யத்தினை நிறுவி அதன் நிறுவனர் இயக்குநராக பெரும்பணியாற்றியவர். அறிவியல் மனப்பான்மையினை மக்களிடம் உருவாக்குவதில் அளப்பரிய பங்காற்றியவர் அவர்.

பிரதமர் ஜவஹர்லால் நேரு காலம் தொடங்கி இன்று வரை 85 வயது நிரம்பிய வேளையிலும் அறிவியல் உலகிற்கு, நாத்திகர் உலகிற்கு பங்களிப் பதில் தணியாத ஆர்வம் மிக்கவராக விளங்கி வருகிறார். அறிவியல் என்பதன் அடிப்படை, ஆதாரப்பூர்வ மாக பரிசோதனை மூலம் உண்மை நிலை அறிதலே ஆகும். அறிவியல் என்பது கடவுள் மறுப்பு தன்மை வாய்ந்தது. அறிவியளாளர்கள் இயல்பாகவே நாத்திகர்களாக இருந்திடல் வேண் டும்.

ஆனால் நடைமுறையில் அறிவியலாளர்களில் மிகப்பலர் கடவுள் நம்பிக்கையாளர்களாகவே உள்ளனர். உண்மையான அறிவியலாளர் நாத்தி கராக இருந் திடல் வேண்டும் என்பதன் எடுத்துக் காட்டாக விளங்குகிறார் பார்கவா; பார்கவாக்கள் பலர் உருவாகிட வேண்டும். பார்கவாவின், அறிவியல் மனப்பான்மையினை வளர்த்திடும் பணி தொடர்ந்திட வேண்டும்.

நூல் வெளியீடு

நாத்திகர் மய்யத்தின் 75-ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சிகளுள் ஒன்றாக புத்தக வெளியீடு நடை பெற்றது. சீரிய பகுத்தறிவாளர் பசலா பீமண்ணா அவர்கள் எழுதித் தொகுத்த அறிவியல் இயக்கினை மேம்படுத்துவோம் (Promote Scientific Attitude) ஆங்கிலப் புத்தகத்தினை தமிழர் தலைவர் கி.வீரமணி வெளியிட்டார்.

தமிழ் ஓவியா said...

முதல் பிரதியை நார்வே நாட்டு மனித நேயத் தலைவர் லெவி பிராகல் பெற்றுக் கொண்டார். புத்தக ஆசிரியர் பெரியார் இயக்கத்தின் சார்பாக வெளிவரும் தி மாடர்ன் ரேசனலிஸ்ட் (The Modern Rationalist) ஆங்கில இதழுக்கு கட்டுரை வழங்கிடும் வாசகர் ஆவார்.

நாத்திகர் மய்ய முன்னணிப் பொறுப்பாளர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு

75 ஆம் ஆண்டு விழா காணும் விஜயவாடா நாத்திகர் மய்யத்திற்கு பாராட்டு தெரிவிக்கப் பட்டது. நாத்திக அறிஞர் கோராவின் கொள்கை களை அவரது காலத்திற்குப் பின்னரும் தொடர்ந்து பிரச்சாரம் செய்துவரும் அவரது குடும்பத்தினருக்கு, மய்யத்தின் முன்னணிப் பொறுப்பாளர்களுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி பெரியார் இயக்கத்தின் சார்பாக சால்வை அணிவித்து, அவர்களை பாராட்டிப் பெருமைப்படுத்தினார்.

நாத்திகர் மய்யத்தின் செயல் இயக்குநர் முனைவர் கோ.விஜயம், கோராவின் மூத்தமகன் கோ.லவனம், மருத்துவர் கோ.சமரம், மகள் மைத்ரி மற்றும் மாரு ஆகியோர் தமிழர் தலைவரால் பாராட்டப்பட்டனர்.

தமிழர் தலைவர் ஆற்றிய நிகழ்ச்சி நிறைவுரை

நாத்திகர் மய்யத்தின் 75-ஆம் ஆண்டு விழா நிறைவு நிகழ்ச்சியில் ஆங்கில உரையினை தமிழர் தலைவர் கி.வீரமணி வழங்கினார். அவர் தம துரையில் குறிப்பிட்டதாவது;

மக்களது உடனடி ஆதரவினை எதிர்பார்க்கும் செயல்பாடு, அதன் அடிப்படையில் உருவாகும் செல்வாக்கு மற்றும் அதிகார நிலை நோக்கிய பொது வாழ்க்கையில் பயணம் - இவையனைத் தையும் துறந்து மனிதர்களை மனிதப்படுத்திய மாபெரும் சமூகப் புரட்சியாளர்கள் தந்தை பெரியாரும், நாத்திக அறிஞர் கோராவும் ஆவர்.

நாத்திகத்தினை மய்யப்படுத்தி பிரச்சாரத்தினை மக்கள் இயக்கமாக நடத்திய தலைவர்கள் அவர்கள். தந்தை பெரியாரும், கோராவும் இந்த மண்ணில், இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற நாத்திகப் பிரச்சார நாணயத்தின் இருபக்கங்களாக வாழ்ந்த வர்கள். அந்தந்த தலைவர்களது மறைவிற்குப் பின் அவர்கள் உருவாக்கிய அமைப்பினர் அவர்தம் லட்சியங்களை வென்றெடுக்கப் பாடுபட்டு வரு கின்றனர். அவர்கள் போட்டுத்தந்த பொது வாழ்க் கைப் பாதையில் போராடி வருகின்றனர்.

75 ஆண்டுகளுக்கு முன்பு நாத்திக அறிஞர் கோரா நிறுவிய நாத்திகர் மய்யம் இன்று விழா காணு கிறது. ஆந்திர மாநிலம், நாட்டின் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து பல்வேறு அமைப்பு களைச் சேர்ந்த நாத்திக, மனிதநேயத் தலைவர்கள் அறிஞர்கள், கலந்து கொண்டு கோராவின் கொள்கைகளுக்கு வளம் சேர்த்துள்ளனர்.

இந்நாட்டு நாத்திகத் தலைவர்கள் வெளி நாட்டவர்களால் பாராட்டப்படுகின்ற நிகழ்வின் அடையாளமாக நாத்திகர் மய்யத்தின் 75-ஆம் ஆண்டு விழா நடைபெற்றுள்ளது. நார்வே நாட்டு மனித நேயத் தலைவர் லெவி பிராகல், நாத்திகக் கொள்கைக்கு இந்நாட்டில் கிடைக்கும் மரியாதை பற்றிக் குறிப்பிட்டது நினைவு கூரத்தக்கது.

உலகில் எந்த இடத்திலும் காண இயலாத வகையில் தமிழ்நாட்டில் - சென்னையில் இரண்டு நாத்திகத் தலைவர்களின் பெயரால் முக்கிய சாலைகள் அடையாளம் காணப்படுகின்றன. அந்த சாலைகளின் பெயர்கள்: பெரியார் ஈ.வெ.ரா சாலை மற்றும் அண்ணா சாலை.

தமிழ் ஓவியா said...

இந்த மண்ணில் நாத்திக் கொள்கைகளுக்கு வளம், பெருமை சேர்த்த தலைவர்களை சரியாக அடையாளம் கண்டு வெளிநாட்டுத்தலைவர்கள் பாராட்டியது பெருமைக்குரியது. இந்த மண்ணில் நிலவும் இத்தகைய நிலைமைகள் தங்களது நாட்டில் நினைத்துக் கூட பார்க்க இயலாது என ஆதங்கமாக வெளிப்படுத்தி உள்ளனர். கடுமையான சமூக நிலையினை எதிர்த்துப் போராடிய நாத்திகத் தலைவர்கள் தந்தை பெரியாரும், கோராவும் ஆவர்.

மனித நேயத்தை மய்யப்படுத்தாத மதக்கொள் கைகள் எங்கும் நிலைத்து விட முடியாது. பெரியார், கோரா வலியுறுத்திய நாத்திகம் மனித நேயத்தை மய்யப்படுத்தி மானிடத்தை வளப்படுத்திடும் கொள்கையாகும். இரத்தினச் சுருக்கமாக கட வுளை மற, மனிதனை நினை, என மனிதத்தை வலியுறுத்தி நாத்திகப் பிரச்சாரத்தினை தந்தை பெரியார் மேற்கொண்டார்.

பகுத்தறிவைப் பயன் படுத்தி மனிதர் மேம்பட வேண்டும். பகுத்தறிவைப் பயன்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளுக்கு முன்னரே வலியுறுத்தியவர் புத்தர். சித்தார்த்தன் என இயற்பெயர் இருந்தாலும் பின்னாளில் புத்தர் என புகழ் பெற்றார். புத்தியைப் பயன்படுத்தும் அனை வரும் புத்தரே என தந்தை பெரியார் கூறுவார்.

படிப்பும், புத்தியும்!

ஆனால் இன்று நிலவும் நிலைமைகளோ புத்தியைப் பயன்படுத்தும் நிலையில் பெரும் பாலோர் இருப்பதில்லை படித்தவர்களே புத்தியைப் பயன்படுத்தும் நிலையில் இல்லை, படிப்பு என்பது பகுத்தறிவினைப் பயன்படுத்தத் தூண்டுவதாக அமையவில்லை. இங்கிலாந்து நாத்திக அறிஞர் ரிச்சர்டு டாக்கின்சின் கட்டுரை “This will make you smarter” எனும் ஆங்கிலப் புத்தகத்தில் தொகுப்பாக வெளிவந்துள்ளது.

படித்தவர்கள் நிரம்பிய அமெரிக்காவின் நிலைமையினை படம் பிடித்துக் காட்டுகிறது. Why do half of all Americans believe in ghosts, three-quarters believe in angels, a third believe in astrology, three-quarters believe in hell? (அமெரிக்கர்களில் பாதிப் பகுதியினர் ஆவிகள் பற்றிய நம்பிக்கையாளர்கள், நான்கில் மூன்று பகுதியினர் வானத்தில் உறைபவர்கள் பற்றி நம்புகிறார்கள், மூன்றில் ஒரு பகுதியினர் ஜோதிடத்தில் நம்பிக்கை வைத்துள் ளனர், நான்கில் மூன்று பகுதியினர் நரகத்தை நம்புகின்றனர், ஏன் இந்த நிலை?) என ரிச்சர்ட் டாக்கின்ஸ் குறிப்பிடுகிறார்.

படிப்பறிவு பெற்றவர்கள் அனைவரும் பகுத்தறிவைப் பயன்படுத்துவதில்லை. படித்தவர்கள் உண்மையில் படித்தவர்களாக இருப்பதில்லை. (The educated are not really educated) படித்தவர்கள் மனதில் பகுத்தறிவிற்குப் புறம்பாக பாசிபோன்ற படிமங்கள் தங்கிவிடுகின்றன. இதனால் படிப்பின் முழுப்பயன் வெளிப்படாத வகையில் ஒருவிதத் தேக்கத்தை, ஒரு வித முரண்பாட்டை அவர்களது வாழ்க்கையில் உருவாக்கிவிடுகிறது.

பகுத்தறிவிற்குப் புறம்பான பெரும்பாலானவற்றை பல படித்தவர்கள் கற்றுக் கொண்டுவிடுகின்றனர். இதிலிருந்து அவர்கள் மீள வேண்டும். Educate the educated (படித்தவர்கள் கற்பிக்கப்பட வேண்டும்) பகுத்தறி வினைப் பயன்படுத்தினால் அறிவியல் மனப்பான் மை வளரும். படித்தவர்கள் இதில் முழுமை யடையும் நிலையில் அவர்கள் வளர்த்திடும் எண் ணம், எடுக்கும் முயற்சிகள் முழு வெற்றியினை, முழுப்பயனை அளிக்க வல்லதாய் அமையும்.

இத்தகைய அணுகுமுறையினை - படித்தவர்களுக்கு கற்பிக்கும் நிலையினை நாத்திகர் அமைப்புகள் கடைப்பிடித்து சமுதாயப்பணி ஆற்றிட வேண்டும்.

தமிழ் ஓவியா said...

ஜாதி என்பது மனிதரைப் பிளவு படுத்தும் சமூகப் பண்பாக நிலவுகிறது. இதனைத் தகர்த்தெறிய ஜாதி மறுப்புத் திருமணங்களே அடிப்படை வழிமுறை. தந்தை பெரியார் சுயமரியாதைத் திருமணங்களாக பல ஜாதி மறுப்புத் திருமணங்களை நடத்தி வைத்தார். நாத்திக அறிஞர் கோராவின் குடும்பத் தினர் அவரது சந்தததியினர் அனைவரும் ஜாதி மறுப்பு திருமணம் புரிந்து, மாநில எல்லைகள், நாட்டு எல்லைகளை கடந்து ஒரு நாத்திக அமைப் பினராக வாழ்ந்து வருகின்றனர்.

நாத்திகப் பிரச்சாரம், இனி வரும் காலங்களில் முழுவீச்சில் நடைபெற வேண்டும். 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நாத்திக மய்யம் புதிய வழி முறைகளுக்கு வழிவகுக்கும் நாத்திகர் மய்யத்திற்கு பாராட்டுகளை, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார். (தமிழர் தலைவருடைய முழு உரை பின்னர் வெளிவரும்)

பெரியார் உலகம் அமைத்திடல்

திருச்சிக்கு அருகில் சிறுகனூரில் நிறுவப்பட இருக்கும் 95 அடி உயர தந்தை பெரியாரின் சிலை மற்றும் 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திட உள்ள பெரியார் உலகம் பற்றிய விபரங்களை பகுத்தறி வாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன் தனது சிற்றுரையில் குறிப்பிட்டு பேசினார். நாட்டின் அனைத்துப் பகுதியில் உள்ள பகுத்தறிவாளர்கள் வெளிநாட்டிலிருந்து வருகை தந்திருந்த மனித நேய அமைப்பாளர் ஆகிய அனைவவரது நிதி ஆதர வினை, அவர்தம் மற்றும் மேலான பரிந்துரைகளை வழங்கிடவும் வேண்டுகோள் விடுத்தார்.

நாத்திகர் மய்யத்தின் 75 ஆம் ஆண்டு விழாவினை யொட்டி மருத்துவ முகாம் கண்காட்சி மற்றும் நாத்திகர் மய்யத்தின் வரலாற்றுப் படக்கண்காட்சி என அரங்குகளை அமைத்திருந்தனர். நிகழ்வின் நிறைவாக, ஆண்டு விழாவில் பங்கேற்ற அனைத்து அறிஞர் பெருமக்களும் நாத்திகர் மய்யத்தினரால் பாராட்டப்பட்டு நினைவுப் பரிசுகள் அளிக்கப் பட்டன. நாத்திகர் மய்யத்தின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்துவரும் நாத்திகர் அமைப்பு குடும்பங்களின் தலைவர் என்ற முறையில் தமிழர் தலைவர் பாராட்டப்பட்டார்.

விஜயவாடாவில் நடைபெற்ற நாத்திகர் மய்யத்தின் இரண்டு நாள் நிகழ்ச்சிகள் நாத்திகர் அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு உற்சாகம், உத்வேகம் அளிக்கும் வகையில் இருந்தன.

Read more: http://viduthalai.in/e-paper/73317.html#ixzz2prCbbBoa

தமிழ் ஓவியா said...


மாபெரும் துரோகமே!


மத்திய அரசே தமிழ்நாட்டுக்குத் திட்டங் களை நிறைவேற்று! நிறைவேற்று!! என்று சொல்லப்பட்ட காலம் போய், மத்திய அரசே தமிழ்நாட்டுத் திட்டத்தை நிறைவேற்றாதே - நிறைவேற்றாதே! என்று கூறும் ஒரு விசித்திர நிலையை நம் நாடு சந்தித்துக் கொண்டு இருக்கிறது!

அது அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஜெ. ஜெயலலிதா அவர்களின் வாயிலிருந்து புறப்பட்டு இருக்கிறது.

ஏனிந்த நிலை? இதில் அரசியல் குறுகிய நோக்கம் புகுந்து புறப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. முதல் அமைச்சர் ஜெயலலிதா 2011இல் ஆட்சிக்கு வந்த முதற்கொண்டு அவர் எடுத்து வரும் நடவடிக்கையைக் கவனித்தால் ஓர் உண்மை இமயமலை போல கண்ணுக்கும், கருத்துக்கும் தெரியும்.

தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டது என்பதற் காக சட்டமன்றப் புதிய கட்டடத்தை அதற்குப் பயன்படுத்தாமல், பல் நோக்கு உயர் மருத்துவ மனை என்று அறிவித்து விட்டார்.

அண்ணா நூற்றாண்டு நினைவு நூல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுவோம் என்றார், உயர்நீதிமன்றத்தின் தடையால் அது நிறுத்தப்பட்டுள்ளது.

பறக்கும் பாலம், மதுரவாயிலிலிருந்து துறைமுகம் வரை உருவாக்கப்பட இருந்த மிக முக்கியமான திட்டத்தை முடக்கினார்.

கலைஞர் ஆட்சியில் சிதம்பரம் நடராஜர் கோயில் - இந்து அறநிலையத்துறை வசம் கொண்டு வரப்பட்ட நிலையில், அதனையும் திட்டமிட்டு நீதிமன்றத்தின் வாயிலாக தோற்கடித்துக் காட்டி விட்டார்.

அதனுடைய தொடர்ச்சிதான் - சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டமே கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக முதல் அமைச்சரால் அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகும்.

பிஜேபி கூட திட்டமே கூடாது என்று சொல்லவில்லை; இப்பொழுது நிறைவேற்றப்பட உள்ள ஆறாவது தடத்தில் செயல்படுத்தாமல் வேறு வழித் தடத்தில் செயல்படுத்த வேண்டும் என்றுதான் கூறுகிறது.

ஆனால், முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களோ திட்டமே கூடாது என்று அடம் பிடிப்பது எந்த அடிப்படையில்?

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும், அதிலும் குறிப்பாக கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் திமுகவைச் சேர்ந்த டி.ஆர். பாலுவாக இருப்பதால் அதன் அரசியல் லாபம் திமுகவுக்குப் போய் விடும் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, குறுகிய நோக்குடன் இந்தத் திட்டமே கூடாது என்கிறார் என்பதுதானே பச்சையான உண்மை.

இத்தகு மனப்பான்மை உள்ள முதல் அமைச்சராக இருக்கக் கூடியவர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எந்தளவு உறுதுணையாக இருப்பார் - ஆர்வம் காட்டுவார்?

மத்திய அரசை நோக்கி வேறு திட்டங்களை எப்படி முன் வைப்பார் என்று எதிர்பார்க்க முடியும்?

இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய - கருத்தூன்றிப் பார்க்க வேண்டிய ஒன்று இருக்கிறது. இலங்கை அரசைப் பொறுத்த வரையில் சேது சமுத்திரத் திட்டம் செயல் பாட்டுக்கு வந்தால் கொழும்பு துறைமுகத்தின் மூலம் கிடைக்கும் பெரும் வருமானம் அடிபட்டுப் போய் விடும்.

சேது சமுத்திரத் திட்டமே கூடாது என்று முதல் அமைச்சர் அடம் பிடிப்பது இன்னொரு வகையில் இலங்கை சிங்கள அரசுக்கு பொருளாதார ரீதியாகப் பேருதவி செய்ததாகி விடும் என்பதையும் மறுக்க முடியாது.

எந்த வகையில் பார்த்தாலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று நினைப்பது தமிழ்நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் இழைக்கும் பெருந் துரோகமாகும்; வரலாறு அவர்களை நிந்தித்துக் கொண்டே இருக்கும் - இது கல்லின் மேல் எழுத்தாகும்.

Read more: http://viduthalai.in/page-2/73362.html#ixzz2px8uuOck

தமிழ் ஓவியா said...

சென்னை உயர்நீதிமன்ற புது நீதிபதிகள் பட்டியல் வெளியிட மத்திய அரசுக்கு தடை


பதவியிலிருக்கும் நீதிபதியே ஆஜரான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற புது நீதிபதிகள் பட்டியல் வெளியிட மத்திய அரசுக்கு தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜன.9-சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமன பட்டி யலைத் திரும்பப் பெறக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தற்போ துள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் வருகை தந்து வாதிட்டதால் நீதி மன்றத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்ற வரலாற்றில் இப்படி ஒரு நீதிபதி ஆஜரானது இதுவே முதல்முறை.

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக 13 நீதிபதிகள் பதவி இடங்கள் உள்ளது. இதற்கு 12 பேரின் பெயரை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான குழு தேர்வு செய்து அதை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில் இந்த பட்டியல் நியாயமான முறையில் தயாரிக்கப்படவில்லை என்றும் பட் டியல் தயாரிப்பில் வெளிப்படையான நிலை பின்பற்றப்படவில்லை என்றும் வக்கீல்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

சென்னை உயர் நீதிமன்ற வர லாற்றில் பதவியில் இருக்கும் ஒரு நீதிபதி மற்ற நீதிமன்றத்தில் விசா ரணை நடந்துகொண்டிருக்கும்போது வருகை தந்து வாதிடுவது இதுவே முதல் முறை என்று நீதிபதி கர்ணனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

இந்த பட்டியலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு கூடுதல் பிரதிநிதித் துவம் தரப்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் நியமனத்தில் வெளிப் படையான நிலை இல்லை என்றும் அதனால் இந்த பட்டியலை திருப்பப் பெற வேண்டும் எனக் கோரி மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இதே கோரிக் கையுடன் வழக்குரைஞர் எஸ்.துரை சாமி, வக்கீல்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் தலைமை நீதிபதி அகர் வால், சத்தியநாராயணன் முன்னிலை யில் கடந்த 6ம் தேதி விசாரணைக்கு வந்தபோது அவர்கள் விசாரிக்க மறுத்துவிட்டனர்.

இதையடுத்து, நீதிபதி பால்வசந்த குமார் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அவர்களும் இந்த வழக்கை விசாரிக்க மறுத்தனர். இதனால் வழக்கு நீதிபதிகள் ராஜேஸ் வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் முன் நேற்று முன்தினம் விசார ணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்குரைஞர் எஸ்.பிரபா கரன் ஆஜராகி புதிய நீதிபதிகள் பட்டியலைத் திரும்பப் பெற வேண் டும் என்று வாதிட்டார். அவரது வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் விசாரணையை 7ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கை இந்த டிவிஷன் பெஞ்ச் விசாரிக்கக் கூடாது என்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவின் அடிப்படையில், விசாரணை நீதிபதி கள் வி.தனபாலன், கே.கே.சசிதரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி சார்பாக தமிழ்நாடு வழக்குரைஞர்கள் சங்க தலைவர் எஸ்.பிரபாகரன், வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் பால்கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர்.

பிரபாகரன் வாதிடும்போது, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை. திறமையானவர்கள் பலர் இருந்தும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை. தற்போது 12 பேரின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதை மாற்றி அமைக்க வேண்டும். குறிப் பிட்ட சாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகமாக உள்ளனர்.

அனைத்து சாதியினருக்கும் சம வாய்ப்பு தர வேண்டும். தற்போது சிபாரிசு செய் யப்பட்டவர்களில் பலர் நீதிமன்றத் தில் அதிகமான அளவில் வருகை தந்ததில்லை. நீதிபதிகள் நியமனத்தில் உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறை களை சரியாக பின்பற்றவில்லை. எனவே திறமையான வழக்குரைஞர் கள் பெயரை சிபாரிசு செய்ய வேண் டும். இதனால் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பிய பட்டியலைத் திரும்ப பெற வேண்டும்.

தமிழ் ஓவியா said...

இந்த பட்டியல் சமூக நீதியை கவனிக்கத் தவறிவிட்டது. நீதிபதிகள் குழு பட்டியலைத் தயாரிக்கும் முன் பட்டியலில் உள்ளவர்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யவில்லை. பரிந் துரை செய்யப்பட்டவர்களில் ஒரு வரும் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி குறிப்பிடத்தக்க வகையில் உத்தரவு களைப் பெறவில்லை. நீதிபதிகள் நியமனத்தில் இந்த நடைமுறை மிக வும் அத்தியாவசியமாகும் என்றார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஏராளமான வழக்குரை ஞர்கள் நீதிமன்றத்திற்கு வந்து வழக்குரைஞர்களின் வாதங்களை கேட்டனர். அப்போது, நீதிபதி சி.எஸ். கர்ணன் திடீரென நீதிமன்றத்துக்குள் தனது உதவியாளர்களுடன் வந்தார். அவரைப் பார்த்த வழக்குரைஞர்கள் ஆச்சரியப்பட்டனர்.

நீதிமன்றத்துக் குள் வந்த நீதிபதி கர்ணன், நீதிபதிகள் தனபாலன், கே.கே.சசிதரன் ஆகி யோரிடம், நீதித்துறையில் நானும் ஒரு அங்கம். நீதிபதிகள் பட்டியல் தயா ரிப்பு சரியாக, நியாயமான முறையில் நடைபெறவில்லை. இதை எதிர்த்து நான் தனியாக எனது பெயரில் மனு தாக்கல் செய்து வாதிடப்போகிறேன். நான் கூறியதை பதிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு பின்னர் அங்கிருந்து புறப்பட்டார்.

இதையடுத்து, நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு:

இந்த வழக்கில் மனுதாரர்களின் வாதங்களின் அடிப்படையில் புதிய நீதிபதிகள் பட்டியல் மீதான மேல் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. விசாரணை நாளை பிற்பகல் 2.15க்கு தள்ளி வைக்கப் படுகிறது. அதுவரை தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Read more: http://viduthalai.in/page-2/73364.html#ixzz2px9HznDB

தமிழ் ஓவியா said...


எம்.ஜி.ஆர். ஆதரித்த சேது திட்டத்தை ஜெயலலிதா மறுக்கிறாரா? கலைஞர் கேள்வி


சேது சமுத்திரத் திட்டம் வேண்டு மென்று கூறிவிட்டு தற்போது அதற்கு மாறான கருத்தை ஜெயலலிதா வலியு றுத்துகிறார் என்றால் அதிமுக வின் கொள்கைகளை அவர் ஏற்கவில்லையா? அல்லது எம்.ஜி.ஆர். ஆதரித்த திட் டத்தை மறுக்கிறாரா என திமுக தலைவர் கலைஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர் பான அவரது கேள்வி - பதில்.

கேள்வி :- சேது திட்டத்தை எந்த வழியிலும் துவங்கக்கூடாது என்று தமிழக அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறதே?

கலைஞர் :- சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில் ஒரு மூத்த வழக்கறி ஞரை தமிழக அரசின் சார்பில் முறையாக வாதாட வைக்க முன்வராத அ.தி.மு.க. அரசுதான் சேது திட்டத்தை எந்த வழி யிலும் துவங்கக்கூடாது என்று மீண்டும் உச்சநீதிமன்றத் தில் மனு கொடுத்திருக் கிறது. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போது இதே ஜெயலலிதா, அ.தி.மு.க. சார்பில் வைத்த தேர்தல் அறிக்கையில் பக்கம் 33இல், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி யிலும்,

நாட்டின் ஒட்டுமொத்தத் தொழில் மேம்பாட்டிலும் முக்கியப் பங்காற்ற விருக்கும் சேது சமுத்திரத் திட்டத்தினை நிறை வேற்றுவதற்கு உரிய நடவடிக் கைகளை எடுக்க, மய்ய ஆட்சியில், அமைச்சுப் பொறுப்பில் ஐந்தாண்டு காலம் இருந்த தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. கட்சிகள் தவறி விட்டதை இந்த நாடு நன்கறியும். இத்திட்டத்திற்குப் போதிய நிதியினை உடனடியாக ஒதுக்கி,

ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டு மென்று, அமைய இருக்கும் மய்ய அரசை அ.தி.மு.க. வலியுறுத்தும் என்று குறிப்பிட்டிருந் தார்கள். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை யில் சேது சமுத்திரத் திட்டம் வேண்டு மென்று திட்டவட்டமாகக் கூறி விட்டு,

தற்போது அதற்கு மாறான கருத்தை ஜெயலலிதா வலியுறுத்துகிறார் என்றால், அவர் அ.தி.மு.க.வின் கொள்கையை தற்போது ஏற்கவில்லையா? அல்லது எம்.ஜி.ஆர். அவர்களே ஆதரித்த திட் டத்தை இப்போது ஜெயலலிதா மறுக் கிறாரா?

முரசொலி 9.1.2014

Read more: http://viduthalai.in/page-2/73367.html#ixzz2px9WzvLV

தமிழ் ஓவியா said...


அய்.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் தீர்மானம்!


கொழும்பு, ஜன. 9- அய்.நா. மனித உரிமை கவுன் சிலில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் தீர்மானம் கொண்டு வருகிறது. இதன் காரணமாக போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசா ரணை வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே நடந்த உள்நாட்டு போர் கடந்த 2009 ஆம் ஆண்டு உச்சக்கட்டம் அடைந்தது. அப்போது மனித உரிமைகள் மீறப்பட்டன. போர்க் குற்றங்கள் அரங்கேற்றப்பட்டன. போர் இல்லாத பிரதேசங்களில் தஞ்சம் புகுந்த அப்பாவி தமிழ் மக்களையும் சிங்கள ராணுவம் விட்டு வைக்க வில்லை.

அப்போது 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக அய்.நா. புள்ளிவிவரம் கூறு கிறது. போர் உச்சக்கட்டம் அடைந்தபோது மனித உரிமைகள் மீறப்பட்டதும், அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டதும் சர்வதேச நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இது தொடர்பாக அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கடந்த 2012, 2013 ஆண்டு களில் தீர்மானம் கொண்டு வந்தது. அந்த தீர் மானங்கள், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களி டையே நல்லிணக்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை களை விரைவுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத் தின.

ஆனால் போர் முடிந்து 5 ஆண்டுகள் ஆன நிலையிலும், இன்னும் பல இடங்களில் தமிழர்கள் முள்வேலிகளுக்குள் அடைபட்டு, ராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வாழ்கிற நிலைதான் உள்ளது. நல்லிணக்க சூழல் ஏற்படவில்லை. இந்த நிலையில், உலக குற்ற நீதித்துறை அமைப்பில் அமெரிக்க தூதராக உள்ள ஸ்டீபன் ராப், இலங்கையில் ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

நேற்று அவர் வடக்கு மாகாணத்திற்கு சென்று போரினால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார். தமிழ் தேசிய கூட்டணி தலைவர்களையும் அவர் சந்தித்து பேசினார். இன்னும் இரண்டு நாள் கள் அவர் அங்கே தங்கி இருந்து தமிழர் தலைவர் கள், அதிகாரிகளை சந்தித்து பேச உள்ளார்.

அய்.நா. மனித உரிமை கவுன்சிலில், இலங்கை பிரச்சினையில் அமெரிக்கா தனது மூன்றாவது தீர்மானத்தை மார்ச் மாதம் தாக்கல் செய்யும் என அவர் தன்னிடம் கூறியதாக தமிழ் தேசிய கூட்டணி யின் மூத்த தலைவர் சுமந்திரன் தெரிவித்தார்.

அமெரிக்காவின் இந்த தீர்மானம், போர்க்குற்ற நடவடிக்கைகளில் இலங்கையை பொறுப்பேற்க வைக்கவும், தமிழ் மக்களுடன் நல்லிணக்கம் ஏற் படுத்த நடவடிக்கை எடுக்கவும் சர்வதேச அளவில் நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப் படுகிறது.

அதுமட்டுமல்ல, போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்த வழிவகுக்குமா என்பதும் தெரிய வரும்.

அய்.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா மூன்றாவது தீர்மானம் கொண்டு வர இருப்பதாக ஸ்டீபன் ராப் கூறியது குறித்து, சிங்கள அரசின் செய்தித்தொடர்பாளரும், அமைச்சருமான கெஹ லிய ரம்புக்வெல்லாவிடம் கருத்து கேட்டபோது அவர், நிலைமையை எதிர்கொள்ள ராஜ்ய ரீதியில் இலங்கை தயாராக உள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கைகள் பற்றி இலங்கை முழுமையாக அறியும். அதில் ரகசியம் எதுவும் இல்லை என கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/73401.html#ixzz2pxAsc7wc

தமிழ் ஓவியா said...


சிந்தனைத் துணுக்குகள்! சித்திர புத்திரன்

எது நிஜம்?

இறந்தவர்களுக்கு திதி கொடுக்க வேண்டு மென்றால், இறந்து போனவர்களின் ஆத் மாவைப் பற்றி மூன்று விதமாகச் சொல்லப் பட்டிருக்கின்றது.

1. இறந்து போகும் ஜீவனின் ஆத்மா, மற் றொரு சரீரத்தைப் பற்றிக் கொண்டுவிடுவதாக

2. இறந்து போன ஜீவனின் ஆத்மா இறந்தவுடன் பிதிர் லோகத்தில் அங்கு இருப்பதாக, (பிதிர்களாய் இல்லாத ஆத்மா எங்கிருக்குமோ!)

3. இறந்து போன ஜீவனின் ஆத்மா அதனதன் செய்கைக்குத் தகுந்தபடி மோட்சத் திலோ, நரகத்திலோ பலன் அனுபவித்துக் கொண்டிருப்பதாக.

ஆகவே, இந்த மூன்று விஷயத்தில் எது நிஜம்? எதை உத்தேசித்து திதி கொடுப்பது?

இது தவிர, ஆத்மா கண்ணுக்குத் தெரி யாதது என்றும், சரீரம் உருவம் குணம் இல்லாதது என்றும் சொல்லப்பட்டிருக்கிறதே; சரீரம், குணம் இல்லாததற்கு நாம் பார்ப் பானிடம் கொடுக்கும் அரிசி, பருப்பு, செருப்பு, விளக்குமாறு ஆகியவை எப்படிப் போய்ச் சேரும்? அவற்றை ஆத்மா எப்படி அனுபவிக்க முடியும்?

வெட்கம், புத்தி இல்லையோ?

குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்தன. குடும்பம் பெருத்து விட்டது. அதனால் சாப் பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடினார் என்று புராணக் கதை சொல்லுகிறது.

குசேலர் பெண் ஜாதி குறைந்தது ஆண்டிற்கு ஒரு பிள்ளையாகப் பெற்று இருந்தாலும் கைக்குழந்தைக்கு ஒரு ஆண் டாவது இருக்குமானால், மூத்த பிள்ளைக்கு 27ஆவது ஆண்டாவது இருக்கும். ஆகவே, 20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேராவது இருந்திருப்பார்கள். இந்த 7 பிள்ளைகளும் ஒரு காசு கூட சம்பாதிக்காத சோம்பேறிப் பிள்ளைகளாகவா இருந்திருப் பார்கள்?

20 ஆண்டிற்கு மேற்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சைக்குப் போக குசேலருக்கு வெட்கமிருக்காதா? அல்லது பிச்சை போட்ட கிருஷ்ண பகவானுக்காவது, என்ன, பெரிய பெரிய வயது வந்த பிள்ளை களைத் தடிப்பயல்களாட்டமாய் வைத்துக் கொண்டு பிச்சைக்கு வந்தாயே, வெட்கமாக இல்லையா என்று கேட்கக் கூடிய புத்தி இருந்திருக்காதா?

இதிலென்ன தப்பு?

கேள்வி: என்னடா உனக்கு கடவுள் இல்லை என்று சொல்லுகிற அளவுக்குத் தைரியம் வந்து விட்டதா?

பதில்: அவர்தான் மனோவாக்குக் காயங்களுக்கு எட்டாதவர் என்று சொன் னாயே. அவரை நான் உண்டு என்று சொன் னால் நீயே, உனக்கு எப்படித் தெரியும் என்று கேட்பாயே! அதனால்தான் என் புத்திக்கு எட்டாததையும், தெரியாததையும் நான் ஒப்புக் கொள்ளுவதில்லை என்று சொல்லிவிட்டேன்; இதில் என்ன தப்பு?

அரைகோடி ஆண்டு!

இராமாயணம் நடந்தது திரேதா யுகத்தில். அதில் இராவணன் அரை கோடி வருஷம் (50 லட்சம் வருஷம்) அரசாண்டான் என்று காணப்படுகிறது.

அந்த யுகத்திற்கு மொத்த வருஷமே 12 லட்சத்து 96 ஆயிரம் வருஷங்களாகும். நாலு யுகமும் சேர்ந்தாலுமே 43 லட்சத்து 20 ஆயிரம் வருஷந்தான் ஆகிறது. ஆகவே இராவணன் எப்படி அரசாண்டிருக்க முடியும்?

Read more: http://viduthalai.in/e-paper/73443.html#ixzz2q3DrTqnn

தமிழ் ஓவியா said...


கடவுள் கருணை உள்ளவரா?


ஆசிரியர்: கடவுள் இல்லாமல் உயிரைப் படைக்க முடியுமா?

மாணவன்: முடியும் சார்!

ஆசிரியர்: எப்படி?

மாணவன்: இன்னைக்கு எங்க மாட்டை ஆஸ்பத்திரிக்கு ஓட்டிக்கிட்டுப் போயிருந் தேன்.

ஆசிரியர்: மாட்டுக்கு என்ன?

மாணவன்: வாலிலே புண், அதிலிருந்து ஒரு நூறு புழு இருக்கும் சார்!

ஆசிரியர்: அந்தப் புழுவையும் கடவுள்தான் படைத்தார்.

மாணவன்: அப்படின்னா, கடவுள் கருணை உள்ளவருன்னு சொன்னீங்களே, அது அசல் பொய்யா சார்?

ஆசிரியர்: எப்படி?

மாணவன்: பாவம், வாயில்லா ஜீவனாகிய ஒரு மாட்டு புண்ணுல போய் புழுவைப் படைப்பவர் கருணை உள்ளவரா சார்?

ஆசிரியர்: ? ? ?

Read more: http://viduthalai.in/e-paper/73444.html#ixzz2q3EMzIcn

தமிழ் ஓவியா said...

ஆதிசங்கரரின் அமரு சாதகம்!

ஆதி சங்கரர் தத்துவப் பொருள் பற்றி வாதிட்டுப் பலரை வென்று தமது கொள்கையை நிலைநாட்டினாராம். அவர் கூட்டங்களில் பேசிக் கொண்டிருக்கும் போதே -வாதம் புரிந்து கொண்டிருக்கும் போதே - மாயமாய் மறைந்து மக்களின் ஆதரவைத் தம்பக்கம் திருப்பி விடுவாராம்.

ஒருநாள் தம்மோடு வாதிட்டுத் தோற்ற ஒரு எதிரியின் மனைவி ஆண் - பெண் உறவு பற்றிக் கேட்ட கேள்விக்கு அவருக்கு விடை கூறத் தெரியவில்லையாம்! காரணம், திருமணமாகும் முன்பே துறவு பூண்டவரல்லவா? வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட ஆதிசங்கரர் ஆண்-பெண் உறவு பற்றிய கேள்விக்கு விடைசொல்ல சிறிது காலம் தவணை கேட்டு மறைந்தாராம்.

இறந்து போன அமரு என்ற ஒரு அரசனின் உடலில் தம் கலை மகிமையால் தம் உயிரை பாய்ச்சினாராம் ஆதிசங்கரர். இறந்த அமரு உயிர் பெற்றானாம். அழுது கொண்டிருந்த அவன் மனைவி ஆவலோடு ஓடி வந்து அணைத்தாளாம்! பிறகு..?

கொஞ்ச காலத்திற்கு பின்பு சங்கரர் தம் யோக சாதனைகளை முடித்து விட்டு, கேள்விக்குரிய விடையை நேரிடையாகப் பயின்று முடித்து கேள்வி கேட்ட பெண்ணிடம் வந்தாராம். திறமையாக விடையளித்து விவாதத்தில் வென்றாராம்.

இதுதான் ஆதிசங்கரரைப் பற்றிய அமரு சாதகம் என்ற நூல்.

ஆண் - பெண் உறவு பற்றிய கேள்விக்கு விடை சொல்லத் தெரியாதது துறவி ஆதிசங்கரருக்கு ஒரு குறையா? இதற்காக அமரு உருவம் பெறவேண்டுமா? அப்படியானால், உண்மைத் துறவியா? உண்மையாகவே வேற்றுருப் பெற்று அதற்குப் பின்புள்ள செயல் செய்தது பொய் என்றாலும் அப்படிப் பெற்றதாக பொய்யுரைத்து அமரு சாதகம் என்று ஒரு நூல் புனைய வேண்டுமா? சிந்தியுங்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/73444.html#ixzz2q3EXQ4vh

தமிழ் ஓவியா said...


ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் இலங்கைமீது அமெரிக்கா மீண்டும் தீர்மானம் போர்க் குற்றப் படங்களையும் வெளியிட்டது


நியூயார்க் ஜன.10- அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தில் (ஜெனிவா) மூன்றாவது முறையாக அமெரிக்கா, இலங்கை அரசின்மீது போர்க் குற்ற தீர்மா னத்தைக் கொண்ட வர உள்ளது. அதற்குமுன் இலங்கை இராணுவத் தில் போர்க் குற்றத்தை மெய்ப்பிக்கும் வகையில் ஏராளமான படங்களை யும் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நடை பெற்ற இறுதிக்கட்ட போரின்போது அந்த நாட்டு ராணுவத்தால் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்ட இடங் களின் நிழற்படங்களை அமெரிக்கா பகிரங்க மாக வெளியிட்டுள்ளது.

அமெரிக்க தூதரகத் தின் அதிகாரபூர்வ, ட்விட்டர் கணக்கில் அந்த நிழற்படங்கள் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளன. அதில் செயின்ட் அந்தோணி மீதான நிழற்படம் பிர தானமாக இடம் பெற்றுள்ளது. 2009-ஆம்ஆண்டில் இலங்கை ராணுவத்தின் பீரங்கி தாக்குதலில் நூற்றுக் கணக்கான தமிழ்க் குடும் பங்கள் கொல்லப்பட்ட இடம் என்று அந்த நிழற் படத்துக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை ராணு வத்தால் பொதுமக்க ளின் புகலிடங்களாக அறிவிக்கப்பட்ட பாது காப்பு மண்டலங்களின் புகைப்படங்களும் அமெரிக்க தூதரக ட்விட் டர் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளன.

2009ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் 40,000-க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள் ளது. இந்தக் குற்றச் சாட்டை இலங்கை அரசு ஆரம்பம் முதலே மறுத்து வருகிறது.

இந்நிலையில் அமெ ரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீபன் ஜே.ராப், இலங்கையில் தமிழர் பகுதிகளை வியாழக் கிழமை நேரில் பார்வை யிட்டார். அவரது சுற்றுப் பயணத்தைத் தொடர்ந்து ட்விட்டரில் ராணுவ போர்க் குற்றங் கள் தொடர்பான நிழற் படங்கள் வெளியிடப் பட்டுள்ளன.

அமெரிக்க தூதரகம் முன்பு இலங்கையில் ஆர்ப்பாட்டம்

அமெரிக்க தூதரும், அந்நாட்டின் குளோபல் கிரிமினல் ஜஸ்டிஸ் துறையின் தலைவரு மான ஸ்டீபன் ஜே ராப், ஒரு வார கால பயண மாக இலங்கை வந்துள் ளார். இவர் புதன்கிழமை யாழ்ப்பாணம் சென்று, தமிழ் தேசிய கூட்டணி யின் தலைவர்களை சந்தித்தார். பின்னர் அவர், ஜெனிவாவில் வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் போர்க் குற்றங்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக 3வது தீர்மானம் கொண்டு வர அமெரிக்கா திட்ட மிட்டு வருகிறது என்றார்.

இந்நிலையில் கொழும்புவில் தேசிய அமைப்புகளின் கூட்ட மைப்பு சார்பில் அமெ ரிக்க தூதரகத்தை நோக்கி பேரணியும், பின்னர் ஆர்ப்பாட்ட மும் நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இப்போராட் டத்தில், இலங்கைக்கு எதிரான நியாயமற்ற நடவடிக்கைகளை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

ராஜபக்சே புலம்பல்

இலங்கை குண்டு வெடிப்புகள் நடக்கா விட்டாலும், மனித உரிமை ஆணையத்தின் கண்டனத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது, என, இலங்கை அதிபர், ராஜ பக்சே தெரிவித்து உள் ளார்.

இஸ்ரேல் நாட்டுக்கு சென்றுள்ள, இலங்கை அதிபர், ராஜபக்சே, இஸ் ரேல் அதிபர், ஷிமோன் பெரசிடம் கூறியதாவது: இலங்கையில், 30 ஆண்டுகளாக நடந்த சண்டை, 2009இல் தான் ஓய்ந்தது. அனைத்து தரப்பு மக்களுக்கும் அமைதி கிடைக்க வேண்டும் என்பது தான், எங்கள் விருப்பம். பல ஆண்டு கால பயங்கர வாதத்தால், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி யடைந்தது.

தற்போது, பயங்கரவாதம் ஒழிந்து விட்டாலும், சர்வதேச சமூகத்தின் நெருக் கடியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஜெனி வாவில் ஆண்டுக்கு இரு முறை, மேற்கத்திய நாடுகள், இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருகின்றன. இலங்கையில் குண்டு வெடிக்காத போதிலும், இந்த நாடுகள், எங்கள் அரசைக் கண்டிக்கின் றன. சர்வதேச நாடுகளின் கோரிக்கையை பூர்த்தி செய்வதற்கு, மூன்று, நான்கு ஆண்டுகள் போதாது. இன்னும் கால அவகாசம் தேவை.

இவ்வாறு, ராஜபக்சே கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/73416.html#ixzz2q3Etrk3z

தமிழ் ஓவியா said...


தொழிலாளர் முன்னேற்றமே

தொழிலாளர்களின் விடுதலையே தமிழர்களின் விடுதலை; பார்ப்பனரல்லாதாரின் விடுதலையாகும். பார்ப்பனரல்லாதார் முன்னேற்றமென்பது உண்மையில் தொழிலாளர் முன்னேற்றமே.

- (விடுதலை, 21.6.1939)

Read more: http://viduthalai.in/page-2/73423.html#ixzz2q3FJBNqq

தமிழ் ஓவியா said...

இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (FIRA) செயற்குழுக் கூட்டம் விஜயவாடாவில் நடைபெற்றது
தமிழர் தலைவர் கி.வீரமணி பங்கேற்று வழிகாட்டுதல் உரை ஆற்றினார்

விஜயவாடா, ஜன.10- இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் (Federation of Indian Rationalist Associations ) செயற்குழு கூட்டம் ஜனவரி 6ஆம் நாள் ஆந்திர மாநிலம் விஜய வாடாவில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கூட்ட மைப்பின் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக் தலைமை வகித்தார். கூட்டமைப்பின் செயலாளர் யு.கலாநாதன், செயற்குழு உறுப்பினர் அனை வரையும் வரவேற்று, கூட்டமைப்பின் அண்மைக் கால செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.

குறிப்பாக டில்லியில் நவம்பர் 25 அன்று நாடாளுமன்றத்தின் முன்பு நடத்தப்பட்ட அறப் போர் குறித்து விரிவாக விளக்கினார்.

பன்னாட்டு மனித நேய நன்னெறி ஒன்றியத்தின் (International Humanist and Ethical Union) பன்னாட்டு இயக்குநர் பாபு கோகினேனி சிறப்பு அழைப்பாளராக பங் கேற்றார்.

நடைபெற்ற அறப்போர் குறித்த கருத்துகளை கூட்டமைப்பின் உறுப்பினர் அமைப்பினர் தெரிவித் தனர். எதிர்கால செயல்பாடுகள் குறித்து கலந்துரை யாடினர். கூட்டமைப்பின் உறுப்பினர் அமைப் பினர் ஒவ்வொருவரும் தங்களது அமைப்பின் செயல்பாடுகள் பற்றிய குறிப்பினை வழங்கினர். நாடு தழுவிய அளவில் நடைமுறைப்படுத்தக் கூடிய அளவில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தினை மய்ய அரசு வடிவமைக்க வேண்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டமைப்பின் 9ஆவது தேசிய மாநாட்டினை ஒடிசா மாநிலம் பெர்காம்பூரில் நடத்திடவும் முடிவெடுக்கப்பட்டது.

தமிழர் தலைவரின் வழிகாட்டுதல் உரை

கூட்டமைப்பின் சிறப்பு அழைப்பினை ஏற்று தமிழர் தலைவர் கி.வீரமணி செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார். பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் தமிழர் தலைவர் கி.வீரமணி, தமது வழிகாட்டுதல் உரையில் குறிப்பிட்டதாவது:-

இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்ட மைப்பு, நாடு தழுவிய அளவில் பகுத்தறிவாளர் அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கு நிறுவப்பட்ட அமைப்பாகும். கூட்டமைப்பின் நிறுவனர் அமைப்புகளுள் ஒன்றான பகுத்தறிவாளர் கழகம் தமிழகத்தை பொறுத்தவரையில் பிரச்சார செயல்பாடுகளை முன்னெடுத்து செல்வதில் ஆரம்பக்காலம் முதல் அழுத்தமாக செயல்பட்டு வருகிறது.

பகுத்தறிவாளர்களான நாம் முற்போக்கு கருத்தியல்களில் பெரும்பான்மை மக்களிடத்தில் இருந்து மாறுபாடு கொண்டவர்களாகவே இருக் கிறோம். சிறுபான்மையினராக பகுத்தறிவாளர்கள் இருந்தாலும், சமுதாய நலனுக்கு உகந்த முற்போக்குக் கருத்துகளை பரப்புவதில், அவற்றை நடைமுறைப் படுத்துவதில் முனைப்பாக செயல்பட்டு வருகிறோம்.

கூட்டமைப்பின் உறுப்பினர் அமைப்புகள் அந்தந்த மாநிலங்களில் தங்களது செயல்பாடுகளை மேற் கொண்டாலும், நாடு தழுவிய அளவில் ஒருங் கிணைந்த பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு கூட்டமைப்பிற்கு உண்டு.

நாடு தழுவிய அளவில் நடைபெற வேண்டிய செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து உறுப்பினர் அமைப்பினரிடையே அணுகுமுறை வேறுபாடு ஏற்படுவது இயல்பே. உறுப்பினர் அமைப்பினர் விரிவாக தங்களது கருத்துகளை விவாதத்திற்கு உட்படுத்தி, அதன் பின்னர் எடுக்கப்படும் முடிவு களை செயல்படுத்துவதில், கருத்து மாறுபாடுகள் கொள்ளுதல் கூடாது.

எடுக்கப்பட்ட முடிவினை முழுமனதுடன் நிறைவேற்றுவதில் கூட்டமைப்பின் ஒவ்வொரு உறுப்பினர் அமைப்பும் முனைப்பாக தங்களது பங்களிப்பினை அளித்திட வேண்டும். எடுக்கப் பட்ட முடிவுகளின் வெற்றிக்கு கடுமையாக உழைத் திட வேண்டும்.

உறுப்பினர் அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டில்தான், கூட்ட மைப்பின் பணிகள் சிறப்படைய முடியும். இந்த அடிப்படையில் பகுத்தறிவாளர் கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர் அமைப்புகளும் செயல்பட வேண்டும் என்பதை இந்த நேரத்தில் வலியுறுத்தி கூறுகிறோம்.

கருத்துப் பரிமாற்றம், கருத்தொத்த முடிவு, களப் பணி காணுதல் என்ற தொடர் நடவடிக்கைகளின் மூலம் தான் கூட்டமைப்பின் செயல்பாடு செம்மைப் பட முடியும்.

அதற்கு அத்துணை உறுப்பினர் அமைப்புகளும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். - இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார். கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.குமரேசன், மற்றும் பெரும்பாலான உறுப்பினர் அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Read more: http://viduthalai.in/page-3/73426.html#ixzz2q3Fln3pX