Search This Blog

10.1.14

தமிழ்நாட்டில் தகுதியுடைய மருத்துவர்களுக்குப் பஞ்சமா?- கி.வீரமணி


சென்னை, ஜன.9- தந்தை பெரியார் பிறந்த சமூக நீதி பிறந்த மண்ணில்,  சமூக நீதிக்கு வெற்றி கிட்டும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியதாவது:

புத்தாண்டு பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனைவருக்கும்! அதே நேரத்தில் மகிழ்ச்சியோடு உங்களைச் சந்திக்க முடியவில்லை. தந்தை பெரியாரின் சமூக நீதி பிறந்த மண்ணிலே சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கைகளை இன்றைய தமிழக அரசு செய்து கொண்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில், தகுதித் தேர்வு என்ற பெயரில் சமூகநீதி புறக்கணிக்கப்பட்டது ஏனென்று கேட்டால் எங்கள் கொள்கை முடிவு என்கின்றனர். அது ஒரு ஒத்திகையே!

சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் தொடங்கப்படும் பல் நோக்குச் சிறப்பு உயர் மருத்துவமனையில் பேராசிரியர்கள் உள்ளிட்ட பணி நியமனத்தில் இடஒதுக்கீடு அறவே கிடையாது என்று தமிழக அரசு விளம்பரத்தில் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மை என்னவென்றால் இந்தியாவில் பல மாநிலங்களிலும் இயங்கி வரும் பல்நோக்குச் சிறப்பு உயர் மருத்துவமனை களில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு  வருகிறது.

விதிமுறைகளுக்கு எதிரானது

மெடிக்கல் சர்வீசஸ் ரெக்ரூட்மென்ட் போர்டு என்ற அமைப்பின் விதியிலேயே இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும் என்று தெளிவாகவே உள்ளது. அப்படி இருக்கும் பொழுது அதே பெயரில் வெளியிடப்பட்டுள்ள அரசு விளம்பரத்தில் இடஒதுக்கீடு அறவே கிடையாது என்று தெரிவிக்கப்பட்டு இருப்பது விதி முறைகள்படியும் தவறாகும்.

நீதிமன்றம் மூலம் நடவடிக்கை

இதனை எதிர்த்து திராவிடர் கழகம் உள்ளிட்ட பல அமைப்புகளின் சார்பில் ரிட் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

எம்.ஜி.ஆர். அவர்கள் பிற்படுத்தப்பட்டோருக்கு வருமான வரம்பு ஆணை பிறப்பித்தபோது மக்களைத் திரட்டிப் பெரும் போராட்டத்தை நடத்தி வெற்றி பெற்றோம்.

நீதிமன்றத்தைவிட மக்கள் மன்றம்தான் முக்கியமானது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சமூகநீதிக்கு எதிராக எந்த ஆட்சியும் நடைபெற முடியாது. அந்த வகையில் மக்கள் தீர்ப்புகள் ஏற்கெனவே உள்ளன.

வெளி மாநிலங்களிலிருந்து விண்ணப்பங்கள் ஏன்?

வெளி மாநிலத்திலிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஏன் தமிழ்நாட்டில் தகுதியுடைய மருத்துவர்களுக்குப் பஞ்சமா? எந்தப் பிரிவில் எத்தனை மருத்துவ நிபுணர்கள் தேவை? நாங்களேகூடப் பட்டியல் தரத் தயராக உள்ளோம். ஒப்பந்த அடிப்படையில்  பணி நியமனம் என்பது சரியானதல்ல. இது ஒரு தவறான அணுகுமுறை ஏற்கெனவே உள்ள ஒப்பந்த முறைகளைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள கால கட்டத்தில் அரசே இவ்வாறு நடந்து கொள்ளலாமா?

தகுதி திறமைக்குப் பஞ்சம் இல்லை. தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு மூலம் வாய்ப்புப் பெற்றுப் படித்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் உலகம் முழுவதும் கொடி கட்டிப் பறக்கின்றனர். 

வெளிநாடுகளில் இருந்தெல்லாம் மருத்துவ உதவி பெற தமிழ்நாட்டுக்கு அல்லவா வந்து கொண்டிருக்கின்றனர்.

தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு தேவை என்று வலியுறுத்தப்படும் இந்தக் கால கட்டத்தில் அரசுத் துறையிலேயே இடஒதுக்கீடு இல்லையென்றால் அதனைத் தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளவே கொள்ளாது. இங்கே எங்கள் அழைப்பை ஏற்று பல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வந்து கருத்துக்களைத் தெளிவாகவே எடுத்துக் கூறியுள்ளனர்.

முதற்கட்டமாக வரும் 13ஆம் தேதி மாலை பெரியார் திடலில் அனைத்து அமைப்புகளும் பங்கேற்கும் வகையில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம் - இந்தப் பிரச்சினையில் நீதிகிட்டும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.
 
-----------------------------"விடுதலை” 9-1-2014

35 comments:

தமிழ் ஓவியா said...

சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் தொடங்கப்படும் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் இடஒதுக்கீடு புறக்கணிப்பா?
வரும்13ஆம்தேதிசென்னைபெரியார்திடலில்
மாபெரும்அனைத்துக்கட்சிப்பொதுக்கூட்டம்!
அடுத்த கட்டமாக பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!!
திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிகள், சமூக நீதி அமைப்புகள் கலந்துகொண்ட சமூக நீதி பாதுகாப்புக் கூட்டத்தின் முடிவு

சென்னை, ஜன.9- சென்னையில் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட உள்ள பல்நோக்கு சிறப்பு உயர் மருத் துவமனையின் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு அறவே புறக்கணிக்கப்படுவதை எதிர்த்து, அனைத்துக் கட்சிப் பொதுக் கூட்டம் வரும் 13ஆம் தேதி மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற உள்ளது.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் இன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகள், அனைத்துச் சமூக நீதி அமைப்புகளின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

தீர்மானம்:

1. தமிழ்நாடு அரசு - சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முந்தைய தி.மு.க. அரசால் கட்டப்பட்டு நடைபெற்று வந்த சட்டப்பேரவைக் கட்டடத்தில், தொடங்கவிருக்கும் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ மனையில் மூத்த ஆலோசகர்கள், இணை ஆலோசகர்கள், இளநிலை ஆலோசகர்கள், பதிவாளர்கள், நிலைய மருத் துவர்கள் ஆகியோருக்கான 83 இடங்களுக்கான பணி நியமனத்தில்,

1. இடஒதுக்கீடு கிடையாது என்றும்,

2. இந்தியா முழுவதிலுமிருந்து விண்ணப்பிக்கலாம் என்றும்,

3. ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும்,

4. ஒப்பந்த அடிப்படையில் நியமனம் என்றும்,

5. தற்போது அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் சம தகுதி உள்ளவர்களுக்கு அளிக்கப்படும் ஊதியத்தை விட, ஒன்றரை மடங்கு, இரு மடங்கு அதிகம் என்றும் தமிழ்நாடு மருத்துவத் துறை பணி நியமன அமைப்பின் (Medical Services Recuritment Board - MRB) விளம்பர அறிக்கை (Notification No.10, Dated 27.12.2013) கூறுகிறது. (27.12.2013 அன்று விளம்பரப்படுத்தப்பட்டு, 7.1.2014 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கப்படவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது).

தமிழ்நாட்டிலும், மத்திய அரசு சிறப்பு மருத்துவமனை களிலும் நடைமுறையில் இருந்துவரும் அணுகுமுறை மற்றும் அளவுகோல்களுக்கு விரோதமாக இந்த அரசு விளம்பரம் அமைந்துள்ளது வெளிப்படையாகும். குறிப்பாக, இட ஒதுக்கீடு அறவே கிடையாது என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள தானது மிகுந்த அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிப்பதாக உள்ளது.

1928 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்துவரும் இட ஒதுக்கீடு முறை முதன்முதலாக வெளிப்படையாக மறுக்கப்பட்டுள்ளதற்கு இக்கூட்டம் தனது வன்மையான எதிர்ப்பினை திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள இந்த விளம்பர அறிக்கையினை விலக்கிக் கொண்டு தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்துவரும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும் என்ற உத்தரவாதத்துடனும், சம்பள விகிதத்தில் பாரபட்சம் அற்ற தன்மையுடனும், புது அறிவிக்கை - விளம்பரம் ஒன்றினை வெளியிடவேண்டும் என்று இக்கூட்டம் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது.

ஒப்பந்த முறை நியமனம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு - இவற்றினையும் விலக்கிக் கொள்ளவேண்டும் என்றும், சமூகநீதியை செயல்படுத்தும் வகையில், இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றிடவேண்டும் என்றும் இக்கூட்டம் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

தமிழ் ஓவியா said...


இவற்றை வற்புறுத்தும் வண்ணம் 13.1.2014 அன்று இந்த அமைப்பின் சார்பில் சென்னை பெரியார் திடலில் பொதுக்கூட்டம் நடத்துவது என்றும், அடுத்தகட்டமாக பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

சமூகநீதிப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோர்

கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம், வி.பி. துரை சாமி, துணைப் பொதுச்செயலாளர், திராவிட முன்னேற் றக் கழகம், டி.கே.எஸ்.இளங்கோவன், அமைப்புச் செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம், தொல். திருமாவளவன், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சுப.வீரபாண்டியன், பொதுச்செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை, கலி.பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம், வீ.அன்புராஜ், பொதுச் செயலாளர்,

திராவிடர் கழகம், பேராயர் எஸ்றா சற்குணம், பொதுச்செயலாளர், இந்திய சமூகநீதி இயக்கம், கே.ஏ.எம். முகம்மது அபூபக்கர், மாநில பொதுச்செயலாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புதுமடம் அனீஸ், மாநில செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி, கோ.கருணாநிதி, பொதுச்செயலாளர், அ.இ.பி.கூட்டமைப்பு, ஜெ.பார்த்தசாரதி, செயல் தலைவர், அ.இ.பி.கூட்டமைப்பு, ஜி.மலர்க்கொடி, பொதுச் செயலாளர், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பிற்படுத்தப் பட்டோர் நல அமைப்பு, சீரா.சுரேஷ், நிறுவன தலைவர், அருந்தமிழ் முன்னேற்றக் கழகம், சி.பத்மநாபன்,

விஸ்வகர்மா சங்கம், டாக்டர் வீ.இராமகிருட்டிணன், பொதுச்செயலாளர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு, எம்.ஜார்ஜ், பொதுச்செயலாளர், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர், கூட்டமைப்பு, (EWA), எம்.இளங்கோவன், பொருளாளர், ஏஅய்ஓபிசி, வெ.ஜீவகிரிதரன், மாநில செயலாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கே.மணிவண்ணன், துணைத் தலைவர், நியூ இண்டியா அஷ்யூரன்ஸ்(ஒபிசி) எழில். இளங் கோவன்,

பொருளாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை, மு.மாறன், வடக்கு மண்டல செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை, ஏ.ராஜசேகரன், பொதுச்செயலாளர், AIIOB OBC ST., Welfare Association, புலவர் டி.ஆனந்தராஜ், துணைப் பொதுச்செயலாளர், திராவிட மக்கள் விடுதலைக் கட்சி, இரா.வில்வநாதன், தென்சென்னை மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம், கி.சத்தியநாராயணன், செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம், அ.பாலசிங்கம், தலைமை நிலைய செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

Read more: http://viduthalai.in/e-paper/73360.html#ixzz2px8J5dyC

தமிழ் ஓவியா said...


மாபெரும் துரோகமே!


மத்திய அரசே தமிழ்நாட்டுக்குத் திட்டங் களை நிறைவேற்று! நிறைவேற்று!! என்று சொல்லப்பட்ட காலம் போய், மத்திய அரசே தமிழ்நாட்டுத் திட்டத்தை நிறைவேற்றாதே - நிறைவேற்றாதே! என்று கூறும் ஒரு விசித்திர நிலையை நம் நாடு சந்தித்துக் கொண்டு இருக்கிறது!

அது அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஜெ. ஜெயலலிதா அவர்களின் வாயிலிருந்து புறப்பட்டு இருக்கிறது.

ஏனிந்த நிலை? இதில் அரசியல் குறுகிய நோக்கம் புகுந்து புறப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. முதல் அமைச்சர் ஜெயலலிதா 2011இல் ஆட்சிக்கு வந்த முதற்கொண்டு அவர் எடுத்து வரும் நடவடிக்கையைக் கவனித்தால் ஓர் உண்மை இமயமலை போல கண்ணுக்கும், கருத்துக்கும் தெரியும்.

தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டது என்பதற் காக சட்டமன்றப் புதிய கட்டடத்தை அதற்குப் பயன்படுத்தாமல், பல் நோக்கு உயர் மருத்துவ மனை என்று அறிவித்து விட்டார்.

அண்ணா நூற்றாண்டு நினைவு நூல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுவோம் என்றார், உயர்நீதிமன்றத்தின் தடையால் அது நிறுத்தப்பட்டுள்ளது.

பறக்கும் பாலம், மதுரவாயிலிலிருந்து துறைமுகம் வரை உருவாக்கப்பட இருந்த மிக முக்கியமான திட்டத்தை முடக்கினார்.

கலைஞர் ஆட்சியில் சிதம்பரம் நடராஜர் கோயில் - இந்து அறநிலையத்துறை வசம் கொண்டு வரப்பட்ட நிலையில், அதனையும் திட்டமிட்டு நீதிமன்றத்தின் வாயிலாக தோற்கடித்துக் காட்டி விட்டார்.

அதனுடைய தொடர்ச்சிதான் - சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டமே கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக முதல் அமைச்சரால் அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகும்.

பிஜேபி கூட திட்டமே கூடாது என்று சொல்லவில்லை; இப்பொழுது நிறைவேற்றப்பட உள்ள ஆறாவது தடத்தில் செயல்படுத்தாமல் வேறு வழித் தடத்தில் செயல்படுத்த வேண்டும் என்றுதான் கூறுகிறது.

ஆனால், முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களோ திட்டமே கூடாது என்று அடம் பிடிப்பது எந்த அடிப்படையில்?

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும், அதிலும் குறிப்பாக கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் திமுகவைச் சேர்ந்த டி.ஆர். பாலுவாக இருப்பதால் அதன் அரசியல் லாபம் திமுகவுக்குப் போய் விடும் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, குறுகிய நோக்குடன் இந்தத் திட்டமே கூடாது என்கிறார் என்பதுதானே பச்சையான உண்மை.

இத்தகு மனப்பான்மை உள்ள முதல் அமைச்சராக இருக்கக் கூடியவர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எந்தளவு உறுதுணையாக இருப்பார் - ஆர்வம் காட்டுவார்?

மத்திய அரசை நோக்கி வேறு திட்டங்களை எப்படி முன் வைப்பார் என்று எதிர்பார்க்க முடியும்?

இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய - கருத்தூன்றிப் பார்க்க வேண்டிய ஒன்று இருக்கிறது. இலங்கை அரசைப் பொறுத்த வரையில் சேது சமுத்திரத் திட்டம் செயல் பாட்டுக்கு வந்தால் கொழும்பு துறைமுகத்தின் மூலம் கிடைக்கும் பெரும் வருமானம் அடிபட்டுப் போய் விடும்.

சேது சமுத்திரத் திட்டமே கூடாது என்று முதல் அமைச்சர் அடம் பிடிப்பது இன்னொரு வகையில் இலங்கை சிங்கள அரசுக்கு பொருளாதார ரீதியாகப் பேருதவி செய்ததாகி விடும் என்பதையும் மறுக்க முடியாது.

எந்த வகையில் பார்த்தாலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று நினைப்பது தமிழ்நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் இழைக்கும் பெருந் துரோகமாகும்; வரலாறு அவர்களை நிந்தித்துக் கொண்டே இருக்கும் - இது கல்லின் மேல் எழுத்தாகும்.

Read more: http://viduthalai.in/page-2/73362.html#ixzz2px8uuOck

தமிழ் ஓவியா said...


பக்குவமடையாதவன்


அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஒத்து வராததைப் பயத்தால் நம்புகிறவன் பக்குவமடைந்த மனிதனாகான்.
_ (விடுதலை, 3.4.1950)

Read more: http://viduthalai.in/page-2/73363.html#ixzz2px941GOD

தமிழ் ஓவியா said...

சென்னை உயர்நீதிமன்ற புது நீதிபதிகள் பட்டியல் வெளியிட மத்திய அரசுக்கு தடை


பதவியிலிருக்கும் நீதிபதியே ஆஜரான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற புது நீதிபதிகள் பட்டியல் வெளியிட மத்திய அரசுக்கு தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜன.9-சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமன பட்டி யலைத் திரும்பப் பெறக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தற்போ துள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் வருகை தந்து வாதிட்டதால் நீதி மன்றத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்ற வரலாற்றில் இப்படி ஒரு நீதிபதி ஆஜரானது இதுவே முதல்முறை.

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக 13 நீதிபதிகள் பதவி இடங்கள் உள்ளது. இதற்கு 12 பேரின் பெயரை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான குழு தேர்வு செய்து அதை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில் இந்த பட்டியல் நியாயமான முறையில் தயாரிக்கப்படவில்லை என்றும் பட் டியல் தயாரிப்பில் வெளிப்படையான நிலை பின்பற்றப்படவில்லை என்றும் வக்கீல்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

சென்னை உயர் நீதிமன்ற வர லாற்றில் பதவியில் இருக்கும் ஒரு நீதிபதி மற்ற நீதிமன்றத்தில் விசா ரணை நடந்துகொண்டிருக்கும்போது வருகை தந்து வாதிடுவது இதுவே முதல் முறை என்று நீதிபதி கர்ணனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

இந்த பட்டியலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு கூடுதல் பிரதிநிதித் துவம் தரப்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் நியமனத்தில் வெளிப் படையான நிலை இல்லை என்றும் அதனால் இந்த பட்டியலை திருப்பப் பெற வேண்டும் எனக் கோரி மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இதே கோரிக் கையுடன் வழக்குரைஞர் எஸ்.துரை சாமி, வக்கீல்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் தலைமை நீதிபதி அகர் வால், சத்தியநாராயணன் முன்னிலை யில் கடந்த 6ம் தேதி விசாரணைக்கு வந்தபோது அவர்கள் விசாரிக்க மறுத்துவிட்டனர்.

இதையடுத்து, நீதிபதி பால்வசந்த குமார் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அவர்களும் இந்த வழக்கை விசாரிக்க மறுத்தனர். இதனால் வழக்கு நீதிபதிகள் ராஜேஸ் வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் முன் நேற்று முன்தினம் விசார ணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்குரைஞர் எஸ்.பிரபா கரன் ஆஜராகி புதிய நீதிபதிகள் பட்டியலைத் திரும்பப் பெற வேண் டும் என்று வாதிட்டார். அவரது வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் விசாரணையை 7ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

தமிழ் ஓவியா said...

இந்நிலையில், இந்த வழக்கை இந்த டிவிஷன் பெஞ்ச் விசாரிக்கக் கூடாது என்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவின் அடிப்படையில், விசாரணை நீதிபதி கள் வி.தனபாலன், கே.கே.சசிதரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி சார்பாக தமிழ்நாடு வழக்குரைஞர்கள் சங்க தலைவர் எஸ்.பிரபாகரன், வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் பால்கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர்.

பிரபாகரன் வாதிடும்போது, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை. திறமையானவர்கள் பலர் இருந்தும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை. தற்போது 12 பேரின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதை மாற்றி அமைக்க வேண்டும். குறிப் பிட்ட சாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகமாக உள்ளனர்.

அனைத்து சாதியினருக்கும் சம வாய்ப்பு தர வேண்டும். தற்போது சிபாரிசு செய் யப்பட்டவர்களில் பலர் நீதிமன்றத் தில் அதிகமான அளவில் வருகை தந்ததில்லை. நீதிபதிகள் நியமனத்தில் உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறை களை சரியாக பின்பற்றவில்லை. எனவே திறமையான வழக்குரைஞர் கள் பெயரை சிபாரிசு செய்ய வேண் டும். இதனால் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பிய பட்டியலைத் திரும்ப பெற வேண்டும்.

இந்த பட்டியல் சமூக நீதியை கவனிக்கத் தவறிவிட்டது. நீதிபதிகள் குழு பட்டியலைத் தயாரிக்கும் முன் பட்டியலில் உள்ளவர்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யவில்லை. பரிந் துரை செய்யப்பட்டவர்களில் ஒரு வரும் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி குறிப்பிடத்தக்க வகையில் உத்தரவு களைப் பெறவில்லை. நீதிபதிகள் நியமனத்தில் இந்த நடைமுறை மிக வும் அத்தியாவசியமாகும் என்றார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஏராளமான வழக்குரை ஞர்கள் நீதிமன்றத்திற்கு வந்து வழக்குரைஞர்களின் வாதங்களை கேட்டனர். அப்போது, நீதிபதி சி.எஸ். கர்ணன் திடீரென நீதிமன்றத்துக்குள் தனது உதவியாளர்களுடன் வந்தார். அவரைப் பார்த்த வழக்குரைஞர்கள் ஆச்சரியப்பட்டனர்.

நீதிமன்றத்துக் குள் வந்த நீதிபதி கர்ணன், நீதிபதிகள் தனபாலன், கே.கே.சசிதரன் ஆகி யோரிடம், நீதித்துறையில் நானும் ஒரு அங்கம். நீதிபதிகள் பட்டியல் தயா ரிப்பு சரியாக, நியாயமான முறையில் நடைபெறவில்லை. இதை எதிர்த்து நான் தனியாக எனது பெயரில் மனு தாக்கல் செய்து வாதிடப்போகிறேன். நான் கூறியதை பதிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு பின்னர் அங்கிருந்து புறப்பட்டார்.

இதையடுத்து, நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு:

இந்த வழக்கில் மனுதாரர்களின் வாதங்களின் அடிப்படையில் புதிய நீதிபதிகள் பட்டியல் மீதான மேல் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. விசாரணை நாளை பிற்பகல் 2.15க்கு தள்ளி வைக்கப் படுகிறது. அதுவரை தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Read more: http://viduthalai.in/page-2/73364.html#ixzz2px9HznDB

தமிழ் ஓவியா said...


எம்.ஜி.ஆர். ஆதரித்த சேது திட்டத்தை ஜெயலலிதா மறுக்கிறாரா? கலைஞர் கேள்வி


சேது சமுத்திரத் திட்டம் வேண்டு மென்று கூறிவிட்டு தற்போது அதற்கு மாறான கருத்தை ஜெயலலிதா வலியு றுத்துகிறார் என்றால் அதிமுக வின் கொள்கைகளை அவர் ஏற்கவில்லையா? அல்லது எம்.ஜி.ஆர். ஆதரித்த திட் டத்தை மறுக்கிறாரா என திமுக தலைவர் கலைஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர் பான அவரது கேள்வி - பதில்.

கேள்வி :- சேது திட்டத்தை எந்த வழியிலும் துவங்கக்கூடாது என்று தமிழக அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறதே?

கலைஞர் :- சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில் ஒரு மூத்த வழக்கறி ஞரை தமிழக அரசின் சார்பில் முறையாக வாதாட வைக்க முன்வராத அ.தி.மு.க. அரசுதான் சேது திட்டத்தை எந்த வழி யிலும் துவங்கக்கூடாது என்று மீண்டும் உச்சநீதிமன்றத் தில் மனு கொடுத்திருக் கிறது. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போது இதே ஜெயலலிதா, அ.தி.மு.க. சார்பில் வைத்த தேர்தல் அறிக்கையில் பக்கம் 33இல், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி யிலும்,

நாட்டின் ஒட்டுமொத்தத் தொழில் மேம்பாட்டிலும் முக்கியப் பங்காற்ற விருக்கும் சேது சமுத்திரத் திட்டத்தினை நிறை வேற்றுவதற்கு உரிய நடவடிக் கைகளை எடுக்க, மய்ய ஆட்சியில், அமைச்சுப் பொறுப்பில் ஐந்தாண்டு காலம் இருந்த தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. கட்சிகள் தவறி விட்டதை இந்த நாடு நன்கறியும். இத்திட்டத்திற்குப் போதிய நிதியினை உடனடியாக ஒதுக்கி,

ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டு மென்று, அமைய இருக்கும் மய்ய அரசை அ.தி.மு.க. வலியுறுத்தும் என்று குறிப்பிட்டிருந் தார்கள். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை யில் சேது சமுத்திரத் திட்டம் வேண்டு மென்று திட்டவட்டமாகக் கூறி விட்டு,

தற்போது அதற்கு மாறான கருத்தை ஜெயலலிதா வலியுறுத்துகிறார் என்றால், அவர் அ.தி.மு.க.வின் கொள்கையை தற்போது ஏற்கவில்லையா? அல்லது எம்.ஜி.ஆர். அவர்களே ஆதரித்த திட் டத்தை இப்போது ஜெயலலிதா மறுக் கிறாரா?

முரசொலி 9.1.2014

Read more: http://viduthalai.in/page-2/73367.html#ixzz2px9WzvLV

தமிழ் ஓவியா said...


எம்.ஜி.ஆர். ஆதரித்த சேது திட்டத்தை ஜெயலலிதா மறுக்கிறாரா? கலைஞர் கேள்வி


சேது சமுத்திரத் திட்டம் வேண்டு மென்று கூறிவிட்டு தற்போது அதற்கு மாறான கருத்தை ஜெயலலிதா வலியு றுத்துகிறார் என்றால் அதிமுக வின் கொள்கைகளை அவர் ஏற்கவில்லையா? அல்லது எம்.ஜி.ஆர். ஆதரித்த திட் டத்தை மறுக்கிறாரா என திமுக தலைவர் கலைஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர் பான அவரது கேள்வி - பதில்.

கேள்வி :- சேது திட்டத்தை எந்த வழியிலும் துவங்கக்கூடாது என்று தமிழக அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறதே?

கலைஞர் :- சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில் ஒரு மூத்த வழக்கறி ஞரை தமிழக அரசின் சார்பில் முறையாக வாதாட வைக்க முன்வராத அ.தி.மு.க. அரசுதான் சேது திட்டத்தை எந்த வழி யிலும் துவங்கக்கூடாது என்று மீண்டும் உச்சநீதிமன்றத் தில் மனு கொடுத்திருக் கிறது. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போது இதே ஜெயலலிதா, அ.தி.மு.க. சார்பில் வைத்த தேர்தல் அறிக்கையில் பக்கம் 33இல், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி யிலும்,

நாட்டின் ஒட்டுமொத்தத் தொழில் மேம்பாட்டிலும் முக்கியப் பங்காற்ற விருக்கும் சேது சமுத்திரத் திட்டத்தினை நிறை வேற்றுவதற்கு உரிய நடவடிக் கைகளை எடுக்க, மய்ய ஆட்சியில், அமைச்சுப் பொறுப்பில் ஐந்தாண்டு காலம் இருந்த தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. கட்சிகள் தவறி விட்டதை இந்த நாடு நன்கறியும். இத்திட்டத்திற்குப் போதிய நிதியினை உடனடியாக ஒதுக்கி,

ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டு மென்று, அமைய இருக்கும் மய்ய அரசை அ.தி.மு.க. வலியுறுத்தும் என்று குறிப்பிட்டிருந் தார்கள். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை யில் சேது சமுத்திரத் திட்டம் வேண்டு மென்று திட்டவட்டமாகக் கூறி விட்டு,

தற்போது அதற்கு மாறான கருத்தை ஜெயலலிதா வலியுறுத்துகிறார் என்றால், அவர் அ.தி.மு.க.வின் கொள்கையை தற்போது ஏற்கவில்லையா? அல்லது எம்.ஜி.ஆர். அவர்களே ஆதரித்த திட் டத்தை இப்போது ஜெயலலிதா மறுக் கிறாரா?

முரசொலி 9.1.2014

Read more: http://viduthalai.in/page-2/73367.html#ixzz2px9WzvLV

தமிழ் ஓவியா said...


மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை: கலைஞர் கருத்து


சென்னை, ஜன.9- மக்கள் நலப்பணியாளர்களுக்கு வேலை தருவது பற்றி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பற்றிய கேள்விக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் பதில் வருமாறு:-

கேள்வி :- மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை தருவது பற்றி சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பு என்னவாயிற்று?

கலைஞர் :- தி.மு. கழக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை, அ.தி.மு.க. அரசு தமிழகத்தில் அமையும்போதெல்லாம் வீட்டிற்கு அனுப்புவதும், அவர்களில் சிலர் தற்கொலை செய்து கொள்வதும், பலர் வேலையின்றித் தவிப்பதும், அவர் களின் சங்கங்கள் நீதிமன்றத்திற்குச் சென்று முறை யிடுவதும் தொடர் கண்ணீர்க் கதையாக உள்ளன.

கடைசியாக இந்த முறையும், 2011ஆம் ஆண்டு மே திங்களில் அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற வுடன், மக்கள் நலப் பணியாளர்கள், 13 ஆயிரத்துக்கும் மேற் பட்டோரை, பணி நீக்கம் செய்து தமிழக அரசு, 8-11-2011 அன்று அரசாணை பிறப்பித்தது. பணி நீக்க உத்தரவை எதிர்த்து, அந்தச் சங்கத்தின் அலுவலர்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் பட்டது.

இந்த வழக்கில் நீதிபதி சுகுணா, பணி நீக்க உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தார். 21-11-2011 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கோர்ட் உத்தரவு நிறை வேற்றப்படவில்லை; மக்கள் நலப் பணியாளர்களை பணியில் சேர்க்கவில்லை என்று கூறப்பட்டது. உடனடி யாக அவர்களைப் பணியில் சேர்க்க அனுமதிக்க வேண்டுமென்றும், கோர்ட் உத்தரவை நிறைவேற்றியதற் கான அறிக்கையை 23-11-2011 அன்று தாக்கல் செய்ய வேண்டுமென்றும் நீதிபதி சுகுணா உத்தர விட்டார். நீதிபதி சுகுணா பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.

அதனை விசாரித்த தலை மை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச், மக்கள் நலப் பணியாளர்கள் நியமனம், நீக்கம் என அரசின் விருப்பத்துக்கு ஏற்ப நடந்துள்ளது தெரிகிறது. இவர்கள் அனைவரும் தற்காலிகப் பணியாளர்கள் என வாதத்துக்குக் கருதினாலும் கூட கடந்த 20 ஆண்டு களாகப் பணியாற்றி உள்ளனர். ஒரு கையெழுத்தில் அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டியிருந் தால் நீதியின் கொள்கைப்படியும், சட்டப்படியும் அவர் களை நீக்கும் முன்பு அவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து அரசு கருத்து கேட்கவில்லை.

இதைக் கருத்தில் கொண்டுதான் தனி நீதிபதி சுகுணா இந்த வழக்கில் தடை உத்தரவைச் சரியாகப் பிறப்பித்துள்ளார்.அதை நீக்க முடியாது. மக்கள் நலப் பணியாளர்களின் நிலையைப் பார்க்கும்போது கால்பந்து விளையாட்டு போல உள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுப் படி சம்பளம் நிர்ணயம் செய்து ஒருவருக்கு அரசுப் பணி வழங்கிய பிறகு சரியான காரணம் இல்லாமல் அவரை நீக்குவது சட்ட விரோத மானது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அரசு மாறும் போது மாறி மாறி உத்தரவு பிறப்பிப்பது கடும் கண்டனத்துக் குரியது, வேதனையானது, வருந்தத் தக்கது. எனவே அரசு வைத்துள்ள கோரிக்கையை நிராகரிக் கிறோம். கடந்த ஆட்சியின் திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தால் அந்த ஊழியர்களை வேறு பணியில் அமர்த்த வேண்டும்; அதை விட்டு விட்டு அவர்களை டிஸ்மிஸ் செய்வது தவறு.

இது எந்த விதத்தில் நியாயமானது?இது அரசியல் சார்புடையது என்பது தெரியும். இருந்தாலும் அதற்குள் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று கூறினார்கள். ஆனால் தமிழக அரசின் சார்பில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள்.

உச்சநீதிமன்றத்தில் 29-11-2011 அன்று நீதிபதிகள் டி.கே.ஜெயின், தவே ஆகியோர் இந்த மனுவை விசாரித்து, தமிழகத்தில் என்னதான் நடக்கிறது? ஆட்சி மாறும் போது முந்தைய அரசின் திட்டங்களை ரத்து செய்வது ஏன்? இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் நடக்கக்கூடாது என்று கண்டனம் தெரிவித்தார்கள்.


தமிழ் ஓவியா said...

இதனை அடுத்து இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்று தமிழக அரசு வழக்கறிஞர் விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் நிராகரித்தனர்.

இந்த வழக்குதான் தற்போது உச்சநீதி மன்றத்தில் 11-11-2013 அன்று விசாரணைக்கு வந்துள்ளது. நீதிபதிகள் அணில்தவே, தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வுதான் இதனை விசாரித்து அளித்த தீர்ப்பில், மக்கள் நலப் பணியாளர்களை பணி நீக்கம் செய்யலாம் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தர விட்டனர்.

அனைத்து அம்சங்களையும் தகுதி அடிப் படையில் கணக்கிலே எடுத்துக் கொண்டு, வழக்கை மறுவிசாரணை செய்து, ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். அதே நேரத்தில் தமிழக அரசு வழக்கை ஒத்தி வைக்குமாறு கோரக்கூடாது.

பொறுப்பில் லாத ஒருவருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களின் வாழ்க்கையை அரசு பாழடித்துள்ளது, கண்டிக்கத்தக்கது. இருபது வருடம் அரசுக்காக அவர்கள் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர் என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறி யிருக்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

இந்த விவரங்களை எல்லாம் விளக்கமாக நான் உடன்பிறப்பு மடலில் 14-11-2013 அன்றே எழுதியதோடு, ஜனநாயகத்தில் ஒரு அரசுக்கு இதைவிடக் கடுமையான கண்டனம் தேவையா? அந்த 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்கள் யார்? என்னுடைய உறவினர்களா? எனக்கு நேரடியாகத் தெரிந்தவர்களா? என்னுடைய கட்சியைச் சேர்ந்தவர்களா? தமிழ்நாட்டில் பிறந்தவர்கள்தானே? அவர்கள் எல்லாம் தமிழர்கள் தானே?

அந்த 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களின் ஊதியத்தை நம்பி அவர்களின் குடும்பங்களிலே வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தவர்கள் எத்தனை பேர்? வாட்டத்திற்கு ஆளானோரின் வயிற்றெரிச்சலை தனிப்பட்ட ஒரு பெண்மணி வாரிக்கட்டிக் கொள்வதில் என்ன பயன் இருக்கப் போகிறது? தி.மு. கழக ஆட்சியில் பணி வாய்ப்பினைப் பெற்றவர்கள் என்பதற்காக அவர்கள் மீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சி ஒரு பெண் முதலமைச்சருக்கு இருப்பது நல்லதா?

எத்தனை நீதிபதிகள் எந்த அளவிற்குக் கண்டனக் குரலோடு இந்த வழக்கில் தீர்ப்பளித்திருக்கிறார்கள்? இதையெல்லாம் அமைதியாக எண்ணிப் பார்த்து மனமாற்றம் அடைந் திருக்க வேண்டாமா? தி.மு. கழக ஆட்சியில் இவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டதைப் போலவே, அ.தி.மு.க. ஆட்சியிலும் எவ்வளவோ பேர் பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். அவர்கள் எல்லாம் தி.மு. கழக ஆட்சி அமைந்தபோது நீக்கப்பட்டு விட்டார்களா?

அவர்கள் எல்லாம் தொடர்ந்து பணியிலே நீடித்திருக்க வில்லையா? மாண்புக்குரிய நீதியரசர்கள், தமிழகத்திலே என்ன நடக்கிறது? என்றும், மக்கள் நலப் பணி யாளர்களை பந்துபோல் விளையாடுவது சரிதானா? என்றும் கேட்டிருக்கிறார்களே, அது இந்த அரசுக்கு அவமானமாகத் தெரிய வில்லையா? நடந்தது, நடந்தாக இருக்கட்டும். இனியாவது அ.தி.மு.க. அரசு தெளிவு பெற வேண்டும்.

முரசொலி, 9.1.2014

Read more: http://viduthalai.in/page-3/73370.html#ixzz2pxA9Lxcs

தமிழ் ஓவியா said...


அய்.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் தீர்மானம்!


கொழும்பு, ஜன. 9- அய்.நா. மனித உரிமை கவுன் சிலில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் தீர்மானம் கொண்டு வருகிறது. இதன் காரணமாக போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசா ரணை வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே நடந்த உள்நாட்டு போர் கடந்த 2009 ஆம் ஆண்டு உச்சக்கட்டம் அடைந்தது. அப்போது மனித உரிமைகள் மீறப்பட்டன. போர்க் குற்றங்கள் அரங்கேற்றப்பட்டன. போர் இல்லாத பிரதேசங்களில் தஞ்சம் புகுந்த அப்பாவி தமிழ் மக்களையும் சிங்கள ராணுவம் விட்டு வைக்க வில்லை.

அப்போது 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக அய்.நா. புள்ளிவிவரம் கூறு கிறது. போர் உச்சக்கட்டம் அடைந்தபோது மனித உரிமைகள் மீறப்பட்டதும், அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டதும் சர்வதேச நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இது தொடர்பாக அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கடந்த 2012, 2013 ஆண்டு களில் தீர்மானம் கொண்டு வந்தது. அந்த தீர் மானங்கள், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களி டையே நல்லிணக்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை களை விரைவுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத் தின.

ஆனால் போர் முடிந்து 5 ஆண்டுகள் ஆன நிலையிலும், இன்னும் பல இடங்களில் தமிழர்கள் முள்வேலிகளுக்குள் அடைபட்டு, ராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வாழ்கிற நிலைதான் உள்ளது. நல்லிணக்க சூழல் ஏற்படவில்லை. இந்த நிலையில், உலக குற்ற நீதித்துறை அமைப்பில் அமெரிக்க தூதராக உள்ள ஸ்டீபன் ராப், இலங்கையில் ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

நேற்று அவர் வடக்கு மாகாணத்திற்கு சென்று போரினால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார். தமிழ் தேசிய கூட்டணி தலைவர்களையும் அவர் சந்தித்து பேசினார். இன்னும் இரண்டு நாள் கள் அவர் அங்கே தங்கி இருந்து தமிழர் தலைவர் கள், அதிகாரிகளை சந்தித்து பேச உள்ளார்.

அய்.நா. மனித உரிமை கவுன்சிலில், இலங்கை பிரச்சினையில் அமெரிக்கா தனது மூன்றாவது தீர்மானத்தை மார்ச் மாதம் தாக்கல் செய்யும் என அவர் தன்னிடம் கூறியதாக தமிழ் தேசிய கூட்டணி யின் மூத்த தலைவர் சுமந்திரன் தெரிவித்தார்.

அமெரிக்காவின் இந்த தீர்மானம், போர்க்குற்ற நடவடிக்கைகளில் இலங்கையை பொறுப்பேற்க வைக்கவும், தமிழ் மக்களுடன் நல்லிணக்கம் ஏற் படுத்த நடவடிக்கை எடுக்கவும் சர்வதேச அளவில் நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப் படுகிறது.

அதுமட்டுமல்ல, போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்த வழிவகுக்குமா என்பதும் தெரிய வரும்.

அய்.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா மூன்றாவது தீர்மானம் கொண்டு வர இருப்பதாக ஸ்டீபன் ராப் கூறியது குறித்து, சிங்கள அரசின் செய்தித்தொடர்பாளரும், அமைச்சருமான கெஹ லிய ரம்புக்வெல்லாவிடம் கருத்து கேட்டபோது அவர், நிலைமையை எதிர்கொள்ள ராஜ்ய ரீதியில் இலங்கை தயாராக உள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கைகள் பற்றி இலங்கை முழுமையாக அறியும். அதில் ரகசியம் எதுவும் இல்லை என கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/73401.html#ixzz2pxAsc7wc

தமிழ் ஓவியா said...


லஞ்சப் புகாருக்கு ஹெல்ப் லைன்: டில்லியில் அறிமுகம்


புதுடில்லி, ஜன.9-அரசுத் துறைகளில் நிலவும் ஊழலை முடி வுக்குக் கொண்டு வரும் வகையில், லஞ்சம், ஊழல் தொடர்பான புகார்களுக்கு 011-27357169 என்ற ஹெல்ப் லைன் தொலைபேசி எண் டில்லியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதன்கிழமை அறிவித்தார்.

இது தொடர்பாக டில்லி தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

டில்லிவாசிகள் அனைவரையும் ஊழல், லஞ்ச ஒழிப்புக் கண்காணிப்பாளர்களாக மாற்றும் வகையில், இந்த "ஹெல்ப் லைன்' தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்சம், ஊழல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க விரும்பு வோர் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம். புகார் தெரி விக்கும்போது, புகார்தாரரின் பெயர், எண் உள்ளிட்ட தகவல்கள் பெறப்படும்.

இத் தகவல்களின் அடிப்படையில் டில்லி யூனியன் பிரதேச கண்காணிப்பு ஆணைய அதிகாரிகள் தொடர்பு கொண்டு, லஞ்சம் கேட்கும் அதிகாரிகளைப் பொறிவைத்து பிடிக்க உதவி செய்வார்கள். இத் தொலைபேசி எண் காலை 8 மணி இரவு 10 வரை செயல்பாட்டில் இருக்கும்.

சாதாரணக் குடிமக்களும் லஞ்சம் ஒழிப்பில் ஈடுபட வேண்டும். அவர்களைக் கண்டு அரசு அதிகாரிகள் அச்சமடைந்து, தனது பணியைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதே இத் தொலைபேசி எண் அறிவித்திருப்பதன் நோக்கம்மாகும்.

லஞ்சம் பெறும் காவல்துறை அதிகாரிகள் குறித்தும் புகார் தெரிவிக்கலாம். இந்த ஹெல்ப் லைன்' குறித்து டில்லி முழுவதும் விரிவாக விளம்பரம் செய்யப்படும் என்றார் அரவிந்த் கெஜ்ரிவால்.

Read more: http://viduthalai.in/page-8/73397.html#ixzz2pxBAGjQq

தமிழ் ஓவியா said...


சிந்தனைத் துணுக்குகள்! சித்திர புத்திரன்

எது நிஜம்?

இறந்தவர்களுக்கு திதி கொடுக்க வேண்டு மென்றால், இறந்து போனவர்களின் ஆத் மாவைப் பற்றி மூன்று விதமாகச் சொல்லப் பட்டிருக்கின்றது.

1. இறந்து போகும் ஜீவனின் ஆத்மா, மற் றொரு சரீரத்தைப் பற்றிக் கொண்டுவிடுவதாக

2. இறந்து போன ஜீவனின் ஆத்மா இறந்தவுடன் பிதிர் லோகத்தில் அங்கு இருப்பதாக, (பிதிர்களாய் இல்லாத ஆத்மா எங்கிருக்குமோ!)

3. இறந்து போன ஜீவனின் ஆத்மா அதனதன் செய்கைக்குத் தகுந்தபடி மோட்சத் திலோ, நரகத்திலோ பலன் அனுபவித்துக் கொண்டிருப்பதாக.

ஆகவே, இந்த மூன்று விஷயத்தில் எது நிஜம்? எதை உத்தேசித்து திதி கொடுப்பது?

இது தவிர, ஆத்மா கண்ணுக்குத் தெரி யாதது என்றும், சரீரம் உருவம் குணம் இல்லாதது என்றும் சொல்லப்பட்டிருக்கிறதே; சரீரம், குணம் இல்லாததற்கு நாம் பார்ப் பானிடம் கொடுக்கும் அரிசி, பருப்பு, செருப்பு, விளக்குமாறு ஆகியவை எப்படிப் போய்ச் சேரும்? அவற்றை ஆத்மா எப்படி அனுபவிக்க முடியும்?

வெட்கம், புத்தி இல்லையோ?

குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்தன. குடும்பம் பெருத்து விட்டது. அதனால் சாப் பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடினார் என்று புராணக் கதை சொல்லுகிறது.

குசேலர் பெண் ஜாதி குறைந்தது ஆண்டிற்கு ஒரு பிள்ளையாகப் பெற்று இருந்தாலும் கைக்குழந்தைக்கு ஒரு ஆண் டாவது இருக்குமானால், மூத்த பிள்ளைக்கு 27ஆவது ஆண்டாவது இருக்கும். ஆகவே, 20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேராவது இருந்திருப்பார்கள். இந்த 7 பிள்ளைகளும் ஒரு காசு கூட சம்பாதிக்காத சோம்பேறிப் பிள்ளைகளாகவா இருந்திருப் பார்கள்?

20 ஆண்டிற்கு மேற்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சைக்குப் போக குசேலருக்கு வெட்கமிருக்காதா? அல்லது பிச்சை போட்ட கிருஷ்ண பகவானுக்காவது, என்ன, பெரிய பெரிய வயது வந்த பிள்ளை களைத் தடிப்பயல்களாட்டமாய் வைத்துக் கொண்டு பிச்சைக்கு வந்தாயே, வெட்கமாக இல்லையா என்று கேட்கக் கூடிய புத்தி இருந்திருக்காதா?

இதிலென்ன தப்பு?

கேள்வி: என்னடா உனக்கு கடவுள் இல்லை என்று சொல்லுகிற அளவுக்குத் தைரியம் வந்து விட்டதா?

பதில்: அவர்தான் மனோவாக்குக் காயங்களுக்கு எட்டாதவர் என்று சொன் னாயே. அவரை நான் உண்டு என்று சொன் னால் நீயே, உனக்கு எப்படித் தெரியும் என்று கேட்பாயே! அதனால்தான் என் புத்திக்கு எட்டாததையும், தெரியாததையும் நான் ஒப்புக் கொள்ளுவதில்லை என்று சொல்லிவிட்டேன்; இதில் என்ன தப்பு?

அரைகோடி ஆண்டு!

இராமாயணம் நடந்தது திரேதா யுகத்தில். அதில் இராவணன் அரை கோடி வருஷம் (50 லட்சம் வருஷம்) அரசாண்டான் என்று காணப்படுகிறது.

அந்த யுகத்திற்கு மொத்த வருஷமே 12 லட்சத்து 96 ஆயிரம் வருஷங்களாகும். நாலு யுகமும் சேர்ந்தாலுமே 43 லட்சத்து 20 ஆயிரம் வருஷந்தான் ஆகிறது. ஆகவே இராவணன் எப்படி அரசாண்டிருக்க முடியும்?

Read more: http://viduthalai.in/e-paper/73443.html#ixzz2q3DrTqnn

தமிழ் ஓவியா said...


கடவுள் கருணை உள்ளவரா?


ஆசிரியர்: கடவுள் இல்லாமல் உயிரைப் படைக்க முடியுமா?

மாணவன்: முடியும் சார்!

ஆசிரியர்: எப்படி?

மாணவன்: இன்னைக்கு எங்க மாட்டை ஆஸ்பத்திரிக்கு ஓட்டிக்கிட்டுப் போயிருந் தேன்.

ஆசிரியர்: மாட்டுக்கு என்ன?

மாணவன்: வாலிலே புண், அதிலிருந்து ஒரு நூறு புழு இருக்கும் சார்!

ஆசிரியர்: அந்தப் புழுவையும் கடவுள்தான் படைத்தார்.

மாணவன்: அப்படின்னா, கடவுள் கருணை உள்ளவருன்னு சொன்னீங்களே, அது அசல் பொய்யா சார்?

ஆசிரியர்: எப்படி?

மாணவன்: பாவம், வாயில்லா ஜீவனாகிய ஒரு மாட்டு புண்ணுல போய் புழுவைப் படைப்பவர் கருணை உள்ளவரா சார்?

ஆசிரியர்: ? ? ?

Read more: http://viduthalai.in/e-paper/73444.html#ixzz2q3EMzIcn

தமிழ் ஓவியா said...

ஆதிசங்கரரின் அமரு சாதகம்!

ஆதி சங்கரர் தத்துவப் பொருள் பற்றி வாதிட்டுப் பலரை வென்று தமது கொள்கையை நிலைநாட்டினாராம். அவர் கூட்டங்களில் பேசிக் கொண்டிருக்கும் போதே -வாதம் புரிந்து கொண்டிருக்கும் போதே - மாயமாய் மறைந்து மக்களின் ஆதரவைத் தம்பக்கம் திருப்பி விடுவாராம்.

ஒருநாள் தம்மோடு வாதிட்டுத் தோற்ற ஒரு எதிரியின் மனைவி ஆண் - பெண் உறவு பற்றிக் கேட்ட கேள்விக்கு அவருக்கு விடை கூறத் தெரியவில்லையாம்! காரணம், திருமணமாகும் முன்பே துறவு பூண்டவரல்லவா? வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட ஆதிசங்கரர் ஆண்-பெண் உறவு பற்றிய கேள்விக்கு விடைசொல்ல சிறிது காலம் தவணை கேட்டு மறைந்தாராம்.

இறந்து போன அமரு என்ற ஒரு அரசனின் உடலில் தம் கலை மகிமையால் தம் உயிரை பாய்ச்சினாராம் ஆதிசங்கரர். இறந்த அமரு உயிர் பெற்றானாம். அழுது கொண்டிருந்த அவன் மனைவி ஆவலோடு ஓடி வந்து அணைத்தாளாம்! பிறகு..?

கொஞ்ச காலத்திற்கு பின்பு சங்கரர் தம் யோக சாதனைகளை முடித்து விட்டு, கேள்விக்குரிய விடையை நேரிடையாகப் பயின்று முடித்து கேள்வி கேட்ட பெண்ணிடம் வந்தாராம். திறமையாக விடையளித்து விவாதத்தில் வென்றாராம்.

இதுதான் ஆதிசங்கரரைப் பற்றிய அமரு சாதகம் என்ற நூல்.

ஆண் - பெண் உறவு பற்றிய கேள்விக்கு விடை சொல்லத் தெரியாதது துறவி ஆதிசங்கரருக்கு ஒரு குறையா? இதற்காக அமரு உருவம் பெறவேண்டுமா? அப்படியானால், உண்மைத் துறவியா? உண்மையாகவே வேற்றுருப் பெற்று அதற்குப் பின்புள்ள செயல் செய்தது பொய் என்றாலும் அப்படிப் பெற்றதாக பொய்யுரைத்து அமரு சாதகம் என்று ஒரு நூல் புனைய வேண்டுமா? சிந்தியுங்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/73444.html#ixzz2q3EXQ4vh

தமிழ் ஓவியா said...


ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் இலங்கைமீது அமெரிக்கா மீண்டும் தீர்மானம் போர்க் குற்றப் படங்களையும் வெளியிட்டது


நியூயார்க் ஜன.10- அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தில் (ஜெனிவா) மூன்றாவது முறையாக அமெரிக்கா, இலங்கை அரசின்மீது போர்க் குற்ற தீர்மா னத்தைக் கொண்ட வர உள்ளது. அதற்குமுன் இலங்கை இராணுவத் தில் போர்க் குற்றத்தை மெய்ப்பிக்கும் வகையில் ஏராளமான படங்களை யும் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நடை பெற்ற இறுதிக்கட்ட போரின்போது அந்த நாட்டு ராணுவத்தால் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்ட இடங் களின் நிழற்படங்களை அமெரிக்கா பகிரங்க மாக வெளியிட்டுள்ளது.

அமெரிக்க தூதரகத் தின் அதிகாரபூர்வ, ட்விட்டர் கணக்கில் அந்த நிழற்படங்கள் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளன. அதில் செயின்ட் அந்தோணி மீதான நிழற்படம் பிர தானமாக இடம் பெற்றுள்ளது. 2009-ஆம்ஆண்டில் இலங்கை ராணுவத்தின் பீரங்கி தாக்குதலில் நூற்றுக் கணக்கான தமிழ்க் குடும் பங்கள் கொல்லப்பட்ட இடம் என்று அந்த நிழற் படத்துக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை ராணு வத்தால் பொதுமக்க ளின் புகலிடங்களாக அறிவிக்கப்பட்ட பாது காப்பு மண்டலங்களின் புகைப்படங்களும் அமெரிக்க தூதரக ட்விட் டர் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளன.

2009ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் 40,000-க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள் ளது. இந்தக் குற்றச் சாட்டை இலங்கை அரசு ஆரம்பம் முதலே மறுத்து வருகிறது.

இந்நிலையில் அமெ ரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீபன் ஜே.ராப், இலங்கையில் தமிழர் பகுதிகளை வியாழக் கிழமை நேரில் பார்வை யிட்டார். அவரது சுற்றுப் பயணத்தைத் தொடர்ந்து ட்விட்டரில் ராணுவ போர்க் குற்றங் கள் தொடர்பான நிழற் படங்கள் வெளியிடப் பட்டுள்ளன.

அமெரிக்க தூதரகம் முன்பு இலங்கையில் ஆர்ப்பாட்டம்

அமெரிக்க தூதரும், அந்நாட்டின் குளோபல் கிரிமினல் ஜஸ்டிஸ் துறையின் தலைவரு மான ஸ்டீபன் ஜே ராப், ஒரு வார கால பயண மாக இலங்கை வந்துள் ளார். இவர் புதன்கிழமை யாழ்ப்பாணம் சென்று, தமிழ் தேசிய கூட்டணி யின் தலைவர்களை சந்தித்தார். பின்னர் அவர், ஜெனிவாவில் வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் போர்க் குற்றங்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக 3வது தீர்மானம் கொண்டு வர அமெரிக்கா திட்ட மிட்டு வருகிறது என்றார்.

இந்நிலையில் கொழும்புவில் தேசிய அமைப்புகளின் கூட்ட மைப்பு சார்பில் அமெ ரிக்க தூதரகத்தை நோக்கி பேரணியும், பின்னர் ஆர்ப்பாட்ட மும் நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இப்போராட் டத்தில், இலங்கைக்கு எதிரான நியாயமற்ற நடவடிக்கைகளை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

ராஜபக்சே புலம்பல்

இலங்கை குண்டு வெடிப்புகள் நடக்கா விட்டாலும், மனித உரிமை ஆணையத்தின் கண்டனத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது, என, இலங்கை அதிபர், ராஜ பக்சே தெரிவித்து உள் ளார்.

இஸ்ரேல் நாட்டுக்கு சென்றுள்ள, இலங்கை அதிபர், ராஜபக்சே, இஸ் ரேல் அதிபர், ஷிமோன் பெரசிடம் கூறியதாவது: இலங்கையில், 30 ஆண்டுகளாக நடந்த சண்டை, 2009இல் தான் ஓய்ந்தது. அனைத்து தரப்பு மக்களுக்கும் அமைதி கிடைக்க வேண்டும் என்பது தான், எங்கள் விருப்பம். பல ஆண்டு கால பயங்கர வாதத்தால், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி யடைந்தது.

தற்போது, பயங்கரவாதம் ஒழிந்து விட்டாலும், சர்வதேச சமூகத்தின் நெருக் கடியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஜெனி வாவில் ஆண்டுக்கு இரு முறை, மேற்கத்திய நாடுகள், இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருகின்றன. இலங்கையில் குண்டு வெடிக்காத போதிலும், இந்த நாடுகள், எங்கள் அரசைக் கண்டிக்கின் றன. சர்வதேச நாடுகளின் கோரிக்கையை பூர்த்தி செய்வதற்கு, மூன்று, நான்கு ஆண்டுகள் போதாது. இன்னும் கால அவகாசம் தேவை.

இவ்வாறு, ராஜபக்சே கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/73416.html#ixzz2q3Etrk3z

தமிழ் ஓவியா said...


புளுகோ புளுகு!


விண்வெளிக்கு பல்வேறு நாடுகள் தங்கள் செயற்கைக் கோள்களை அனுப்பியுள்ளன. மேலும் தற்போது வரை விண்ணில் செயற்கைக் கோள்களை அனுப்பி வருகின்றன. வானிலை, செல்போன், ராணு வம் ஆகியவற்றின் பயன்பாட் டிற்கும், மேலும் பல்வேறு காரணங்களுக்காகவும் செயற்கைக்கோள்கள் பூமியைச் சுற்றி வருகின்றன.

இவ்வாறு பூமியைச் சுற்றும் ஒரு அமெரிக்க செயற்கைக் கோள் பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியை கடக்கும்போது மட்டும் 3 விநாடிகள் ஸ்தம் பித்து விடுகிறது. அதன் பின்னர் வழக்கம் போல செயல்படத் தொடங்குகிறது. சரி செயற்கைக் கோளில் தான் ஏதோ பழுது என்று நினைத்தால், அதன் கருவி களும் பாகங்களும் மிகத் தெளிவாக பழுது இல்லாமல் இருந்தன.

இது நாசா விஞ் ஞானிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபற்றி புதிய ஆராய்ச்சியை நாசா மேற்கொண்டது. அதில் எந்த ஒரு செயற்கைகோளும் நமது நாட்டின் புதுச்சேரியில் உள்ள திருநள்ளாறு தர்ப்பாரண் யேசுவரர் கோயிலுக்கு (சனீஸ்வரன் கோயில்) நேர் மேலே உள்ள வான் பகுதியில் செல்லும்போது இந்த 3 விநாடிகள் ஸ்தம்பிப்பு ஏற் படுவது கண்டுபிடிக்கப்பட் டது.

இது நாசாவை மட்டு மல்ல; உலகத்தையே பிரமிக்க வைத்தது. அதற்குக் கார ணம் ஒவ்வொரு நாளும், விநாடியும் சனிக்கிரகத்தி லிருந்து கண்ணுக்குத் தெரி யாத கருநீலக் கதிர் அந்தக் கோவிலின் மீது விழுந்து கொண்டே இருப்பதுதான் (தினத்தந்தி தினம் ஒரு தக வல் நாள் 9.1.2014 பக்கம் 16).

இதைப் படிக்கும் பொழுது விலா நோக சிரிப்புதான் வந்தது. இன்னொரு வகை யில் தமிழர்களின் ஏடுகள் கூட தமிழர்கள் கெட்டுப் போக இப்படி மூடநம்பிக் கைகளை விதைக்கின்ற னவே என்ற வேதனை மற்றொருபுறம்.

தினத்தந்தி வெளியிட்டு இருப்பது புதிய சரக்கல்ல 2011ஆம் ஆண்டிலேயே இப்படி ஒரு புளுகை உலவ விட்டனர். பெரும்பாலும் திரு நள்ளாறு சனிஸ்வரன் கோயி லுக்கு ஒரு மகத்துவத்தைக் கற்பிப்பதற்காகப் பார்ப்பன அர்ச்சகர்கள் அவர்களின் வட்டாரம் கட்டி விட்ட கைச் சரக்கு தான் இது.

இந்தக் கோயிலைப் பொறுத்தவரை வட மாநிலங் களுக்குச் சென்று பெரிய பெரிய பணக்காரர்களிடம் இந்தக் கோயிலின் மகி மையை எடுத்துக் கூறி அவர் களை அழைத்து வரும் புரோக்கர்கள் இருக்கிறார் கள் - அதன் மூலம் இந்தத் தொழிலில் பெரும் பணம் பண்ணுகிறார்கள். பக்தி வந்தால் தான் புத்தியைப் பறி கொடுப்பது இயல்பு தானே!

2011ஆம் ஆண்டில் சனீஸ்வரன் கோயில்பற்றி இப்படி ஒரு பிரதாபம் கிளப்பி விடப்பட்டது. இதுபற்றி ஸ்ரீவிஜய் கண்டர் (Sri Vijay Kandar) Sir is it True? என்று சந்திராயன் புகழ் விஞ் ஞானியான - நமது தமிழ ரான மயில்சாமி அண்ணா துரையிடம் இதுபற்றி கேட்கப் பட்டபோது பளிச் சென்று அவர் பதில் சொன்னார்.

“To the Best of my knowledge it is not true”

என்னுடைய அறிவுக்கு எட்டிய வரை இது உண்மை யில்லை என்று சொன்னாரே பார்க்கலாம் கூகுள் இணையதளத்தில் இது இடம் பெற்றுள்ளது (12.10.2011) ஒரு விஞ்ஞானியே இப்படி சொல்லி விட்டபிறகு இந்த அஞ்ஞானிகள் எப்படி சொல் கிறார்கள் பாருங்கள்!)

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/73412.html#ixzz2q3F4DtC0

தமிழ் ஓவியா said...


தொழிலாளர் முன்னேற்றமே

தொழிலாளர்களின் விடுதலையே தமிழர்களின் விடுதலை; பார்ப்பனரல்லாதாரின் விடுதலையாகும். பார்ப்பனரல்லாதார் முன்னேற்றமென்பது உண்மையில் தொழிலாளர் முன்னேற்றமே.

- (விடுதலை, 21.6.1939)

Read more: http://viduthalai.in/page-2/73423.html#ixzz2q3FJBNqq

தமிழ் ஓவியா said...


தனிமைப்படுத்தப்படும் அதிமுக அரசு


தமிழ்நாடு மருத்துவத் துறை பணி நியமன அமைப்பு (Medical Services Recruitment Board - MRB) விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முந்தைய தி.மு.க. அரசால் கட்டப்பட்டு நடைபெற்று வந்த சட்டப் பேரவைக் கட்டடத்தில் தொடங்கவிருக்கும் பல் நோக்கு உயர் சிறப்பு மருத் துவமனைக்கு மூத்த மருத்துவத்துறை ஆலோச கர்கள், இணை ஆலோசகர்கள், இளநிலை ஆலோச கர்கள், பதிவாளர்கள், நிலைய மருத்துவர்கள் என்று 83 இடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப் பட்டுள்ளன.

அப்படி செய்யப்பட்ட விளம்பரத்தில்

1) இடஒதுக் கீடு அறவே கிடையாது

2) இந்தியா முழுவதிலி ருந்தும் விண்ணப்பிக்கலாம்.

3) தற்போது அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் சம தகுதி உடையவர்களைவிட மிகக் கூடுதலான சம்பளம்.

4) ஒப்பந்த முறையில் பணி நியமனம் என்பவற்றை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது அரசின் விளம்பரம்.

சமூக நீதிக்கும், சட்ட விதிமுறைகளுக்கும் எதிரானது இந்த அரசின் விளம்பரம் என்று கூறி திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கை மூலம் தெளிவுபடுத்தியிருந்தார் (விடுதலை 31.12.2013).

தமிழ்நாடு அரசின் விளம்பரம் சமூக நீதிக்கு விரோதமானது - ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு விரோதமானது; இதனை உடனே விலக்கிக் கொள்ள வேண்டும்; இல்லையெனில் அனைத்து எதிர்ப்பு நடவடிக்கை களிலும் சமூக நீதியாளர்களை ஒருங்கிணைத்துத் திராவிடர் கழகம் ஈடுபடும் என்று அவ்வறிக்கையில் திராவிடர் கழகத் தலைவர் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து திமுக தலைவர் கலைஞர் மற்றும் பல அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழ்நாடு அரசின் முடிவை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள் ளனர். அது தந்தை பெரியார் உழவு செய்து வளர்த்த சமூக நீதிக்கான அடையாளமாகும்.

இவ்வளவுக்குப் பிறகும் தமிழ்நாடு அரசின் சார்பில் அதிகார பூர்வமாக எந்தவித சமிக்ஞையும் காட்ட வில்லை; இது தனது தவறான முடிவை மாற்றிக் கொள்ளாத சமூக அநீதிப் போக்கை வெளிப்படுத் துவதாகும்.

இந்த நிலையில் திராவிடர் கழகம், அரசியலுக்கு அப்பாற்பட்ட முறையில் தனது சமூகநீதிக் கடமையைச் செய்துள்ளது.

அதுதான் நேற்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சி மற்றும் அனைத்துச் சமூக நீதி அமைப்புகளின் சமூக நீதிப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டமாகும். பி.ஜே.பி., அ.இ.அ.தி.மு.க. தவிர, அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது.

இடதுசாரிகள் உள்ளிட்ட சிலர் வரத் தவறி இருந்தாலும், அதற்கான காரணங்கள் என்னவாக விருந்தாலும், அவர்களும் சமூகநீதிக்கு ஆதரவான வர்களே என்பது - இந்தப் பிரச்சினையில் அவர்கள் தெரிவித்திருந்த கருத்துக்கள் மூலம் அறியப்படு கின்றன.

எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராகயிருந்த போது 1979இல் பிற்படுத்தப்பட்டோருக்கான ஆண்டு வருமானம் ரூ.9000 என்று நிர்ணயித்து, அதற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது என்று இடஒதுக்கீட்டின் தத்துவத்தைப் புரிந்து கொள்ளாத நிலையில் ஆணை ஒன்றினைப் பிறப்பித்தார்.

அப்பொழுதுகூட திராவிடர் கழகம்தான் அந்தப் பிரச்சினையை முன்னெடுத்து, தமிழ்நாட்டிற்கே கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்து, சமூக நீதி சக்திகளை ஒருங்கிணைத்து மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் சென்றும், வீதிக்கு வந்து போராடி, இறுதி வெற்றி சமூக நீதியாளர்களுக்கே எனும் நிலை உறுதிப்படுத்தப்பட்டது.

அதே அணுகுமுறையை இந்தப் பிரச்சினையிலும் திராவிடர் கழகத் தலைவர் பின்பற்றினார் என்பதற்கு அடையாளம்தான் நேற்று திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சி மற்றும் அனைத்துச் சமூக நீதி அமைப்புகளின் ஆலோ சனைக் கூட்டமாகும்.

கூட்டத்தில் மூன்று முக்கிய முடிவுகள் 1) முதலில் அனைத்து அமைப்புகளின் சார்பில் பொதுக் கூட்டம் 13.1.2014 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெறும். 2) மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம். 3) நீதிமன்ற வாயிலான நடவடிக்கைகள்.

இந்தப் பிரச்சினையில் சரியான முடிவை அதிமுக ஆட்சி எடுக்கவில்லையென்றால் அது தமிழ்நாட்டில் தனிமைப்படுத்தப்படும் என்பதில் அய்யமில்லை.

Read more: http://viduthalai.in/page-2/73425.html#ixzz2q3FTVJtO

தமிழ் ஓவியா said...

இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (FIRA) செயற்குழுக் கூட்டம் விஜயவாடாவில் நடைபெற்றது
தமிழர் தலைவர் கி.வீரமணி பங்கேற்று வழிகாட்டுதல் உரை ஆற்றினார்

விஜயவாடா, ஜன.10- இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் (Federation of Indian Rationalist Associations ) செயற்குழு கூட்டம் ஜனவரி 6ஆம் நாள் ஆந்திர மாநிலம் விஜய வாடாவில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கூட்ட மைப்பின் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக் தலைமை வகித்தார். கூட்டமைப்பின் செயலாளர் யு.கலாநாதன், செயற்குழு உறுப்பினர் அனை வரையும் வரவேற்று, கூட்டமைப்பின் அண்மைக் கால செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.

குறிப்பாக டில்லியில் நவம்பர் 25 அன்று நாடாளுமன்றத்தின் முன்பு நடத்தப்பட்ட அறப் போர் குறித்து விரிவாக விளக்கினார்.

பன்னாட்டு மனித நேய நன்னெறி ஒன்றியத்தின் (International Humanist and Ethical Union) பன்னாட்டு இயக்குநர் பாபு கோகினேனி சிறப்பு அழைப்பாளராக பங் கேற்றார்.

நடைபெற்ற அறப்போர் குறித்த கருத்துகளை கூட்டமைப்பின் உறுப்பினர் அமைப்பினர் தெரிவித் தனர். எதிர்கால செயல்பாடுகள் குறித்து கலந்துரை யாடினர். கூட்டமைப்பின் உறுப்பினர் அமைப் பினர் ஒவ்வொருவரும் தங்களது அமைப்பின் செயல்பாடுகள் பற்றிய குறிப்பினை வழங்கினர். நாடு தழுவிய அளவில் நடைமுறைப்படுத்தக் கூடிய அளவில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தினை மய்ய அரசு வடிவமைக்க வேண்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டமைப்பின் 9ஆவது தேசிய மாநாட்டினை ஒடிசா மாநிலம் பெர்காம்பூரில் நடத்திடவும் முடிவெடுக்கப்பட்டது.

தமிழர் தலைவரின் வழிகாட்டுதல் உரை

கூட்டமைப்பின் சிறப்பு அழைப்பினை ஏற்று தமிழர் தலைவர் கி.வீரமணி செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார். பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் தமிழர் தலைவர் கி.வீரமணி, தமது வழிகாட்டுதல் உரையில் குறிப்பிட்டதாவது:-

இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்ட மைப்பு, நாடு தழுவிய அளவில் பகுத்தறிவாளர் அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கு நிறுவப்பட்ட அமைப்பாகும். கூட்டமைப்பின் நிறுவனர் அமைப்புகளுள் ஒன்றான பகுத்தறிவாளர் கழகம் தமிழகத்தை பொறுத்தவரையில் பிரச்சார செயல்பாடுகளை முன்னெடுத்து செல்வதில் ஆரம்பக்காலம் முதல் அழுத்தமாக செயல்பட்டு வருகிறது.

பகுத்தறிவாளர்களான நாம் முற்போக்கு கருத்தியல்களில் பெரும்பான்மை மக்களிடத்தில் இருந்து மாறுபாடு கொண்டவர்களாகவே இருக் கிறோம். சிறுபான்மையினராக பகுத்தறிவாளர்கள் இருந்தாலும், சமுதாய நலனுக்கு உகந்த முற்போக்குக் கருத்துகளை பரப்புவதில், அவற்றை நடைமுறைப் படுத்துவதில் முனைப்பாக செயல்பட்டு வருகிறோம்.

கூட்டமைப்பின் உறுப்பினர் அமைப்புகள் அந்தந்த மாநிலங்களில் தங்களது செயல்பாடுகளை மேற் கொண்டாலும், நாடு தழுவிய அளவில் ஒருங் கிணைந்த பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு கூட்டமைப்பிற்கு உண்டு.

நாடு தழுவிய அளவில் நடைபெற வேண்டிய செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து உறுப்பினர் அமைப்பினரிடையே அணுகுமுறை வேறுபாடு ஏற்படுவது இயல்பே. உறுப்பினர் அமைப்பினர் விரிவாக தங்களது கருத்துகளை விவாதத்திற்கு உட்படுத்தி, அதன் பின்னர் எடுக்கப்படும் முடிவு களை செயல்படுத்துவதில், கருத்து மாறுபாடுகள் கொள்ளுதல் கூடாது.

எடுக்கப்பட்ட முடிவினை முழுமனதுடன் நிறைவேற்றுவதில் கூட்டமைப்பின் ஒவ்வொரு உறுப்பினர் அமைப்பும் முனைப்பாக தங்களது பங்களிப்பினை அளித்திட வேண்டும். எடுக்கப் பட்ட முடிவுகளின் வெற்றிக்கு கடுமையாக உழைத் திட வேண்டும்.

உறுப்பினர் அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டில்தான், கூட்ட மைப்பின் பணிகள் சிறப்படைய முடியும். இந்த அடிப்படையில் பகுத்தறிவாளர் கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர் அமைப்புகளும் செயல்பட வேண்டும் என்பதை இந்த நேரத்தில் வலியுறுத்தி கூறுகிறோம்.

கருத்துப் பரிமாற்றம், கருத்தொத்த முடிவு, களப் பணி காணுதல் என்ற தொடர் நடவடிக்கைகளின் மூலம் தான் கூட்டமைப்பின் செயல்பாடு செம்மைப் பட முடியும்.

அதற்கு அத்துணை உறுப்பினர் அமைப்புகளும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். - இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார். கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.குமரேசன், மற்றும் பெரும்பாலான உறுப்பினர் அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Read more: http://viduthalai.in/page-3/73426.html#ixzz2q3Fln3pX

தமிழ் ஓவியா said...


செய்தியும் - சிந்தனையும்!

வெளியேறியது - ஏன்?

செய்தி: மக்கள் நலனைப் பாதுகாக்கவே பா.ஜ.க.வில் இணைந்தேன்.
- எடியூரப்பா

சிந்தனை: அப்படியா னால் மக்கள் நலனைக் குலைப்பதற்காகவா பிஜேபியை விட்டு வெளி யேறினார்?

நம்புங்கள்

செய்தி: ஆர்.எஸ்.எஸ். தலைவருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்தச் சந்திப்பு முக்கியமானது.

- தினமணி செய்தி

சிந்தனை: ஆமாம் நம்புங்கள்! தேர்தல் அரசி யல் மற்றும் பி.ஜே.பி. உள் விவகாரத்தில் ஆர்.எஸ். எஸ். தலையிடுவதே கிடை யாது.

கடவுளை மற!

செய்தி: அய்யப்பப் பக்தர்களுக்காக பம்பையில் 6 இடங்களில் மருத்துவ முகாம்கள்.

சிந்தனை: அய்யப்பன் சக்திமீது நம்பிக்கை இல் லையோ? கடவுளை மற - மனிதனை நினை! - என்றார் தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/e-paper/73466.html#ixzz2q8gjMeSk

தமிழ் ஓவியா said...


திருப்பதி தேவஸ்தானத்தில் உடலுறவுக் கேவலம்!
எழுத்துரு அளவு Larger Font

திருப்பதி, ஜன.11 திருமலையில், தேவஸ் தான அலுவலகம் ஒன் றில், பாலியல் உறவில் ஈடுபட்ட ஊழியர்கள் இருவர், பணி நீக்கம் செய்யப்பட்டனர். திருமலையில் மது, மாமிசம், பீடி, சிகரெட், சீட்டு விளையாட்டு, விப சாரம், பிற மத பிரசாரம் போன்றவை, தடை செய்யப்பட்டுள்ளன.

திருமலை, சங்குமிட்டா துணை விசாரணை அலு வலகத்தில், குமாஸ்தா வாக பணிபுரியும் கோபி நாத், தன் பணி நேரத் தில், கடை நிலை ஊழிய ராகப் பணிபுரியும் பெண் ஒருவருடன், ஓராண் டாக, பாலியல் உறவில் ஈடுபட்டு வந்து உள்ளார்.

அலுவலக அறையில், அவர்கள் இருவரையும், கையும் களவுமாக, விஜிலென்ஸ் அதிகாரி கள் பிடித்து, காவல் துறையில் ஒப்படைத் தனர். இதையடுத்து, இருவரும் நேற்று, பணி யில் இருந்து நீக்கப்பட் டனர்.

இத்தகைய குற்றத்திற் காக, தேவஸ்தான ஊழி யர் பணி நீக்கம் செய்யப் பட்டது, இதுவே முதல் முறை என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/73464.html#ixzz2q8h6DmZX

தமிழ் ஓவியா said...


பாராட்டத்தக்க வழிகாட்டும் அறிவிப்பு


மும்பையில் பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில் மகாராட்டிர மாநில அமைச்சர் ஜகன்புஜ்பல் அவர்களுக்கு இன்று வழங்கப்பட்ட சமூக நீதிக்கான வீரமணி விருது வழங்கு விழாவில் அமைச்சர் புஜ்பால் பெரியார் உலகத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் நன்கொடையாக வழங்கினார். நன்றி.

Read more: http://viduthalai.in/e-paper/73468.html#ixzz2q8hO1Cts

தமிழ் ஓவியா said...


டாக்டர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு புறக்கணிப்பா? எதிர் வழக்கை ஏற்றது உயர்நீதிமன்றம்


மதுரை, ஜன.11- சென்னை அரசு சிறப்பு மருத்துவமனை டாக் டர்கள் நியமனத்தில், இட ஒதுக்கீடு முறையை புறக்கணித்துள்ளதால், அறிவிப்பை ரத்து செய்ய தாக்கலான வழக்கில், தமிழக அரசுக்கு தாக் கீது அனுப்ப, மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்ட தி.மு.க., துணைச் செய லாளர் மணிமுத்து தாக் கல் செய்த பொது நல மனு: தமிழ்நாடு மருத்து வப் பணியாளர்கள் தேர்வு வாரியம் 2013 டிச., 27 ல் அறிவிப்பு வெளி யிட்டது. அதில், 'சென்னை அரசு சிறப்பு மருத்துவ மனைக்கு (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இயக்குநர், டாக்டர்கள், இதர பணிக்கு 84 பேர் தேர்வு செய்யப்படுவர். பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், ஆதிதிரா விடர், பழங்குடியினர், இதர பிற்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.

இந்நியமனத்திற்கு, இட ஒதுக்கீட்டு விதிமுறை கள் பொருந்தாது' என உள்ளது. மருத்துவ பணி யாளர்களுக்கு மக்களின் வரிப் பணத்திலிருந்து, அரசு சம்பளம் வழங்கு கிறது. நியமனத்தில் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றாதது, அரசிய லமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. பணி நியமன அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஆர்.சுதா கர், வி.எம்.வேலுமணி பெஞ்ச் முன், மனு விசா ரணைக்கு வந்தது. மனு தாரர் தரப்பில் வழக்குரை ஞர் கே.சஞ்சய்காந்தி ஆஜரானார். தமிழக சுகாதாரத்துறை செயலர், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலருக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், ஜன., 27 க்கு ஒத்தி வைத்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/73465.html#ixzz2q8hZ8x9C

தமிழ் ஓவியா said...


சிறிதும் இராது


பார்ப்பனருக்கு நோக்கமெல்லாம் பதவி, உத்தியோகம் ஆகியவற்றில் தங்களுக்கு ஏகபோகம் இருக்கவேண்டும் என்பதுதானே ஒழிய, மற்றபடி நாணயம், நீதி, நேர்மைபற்றியோ பார்ப்பனர் தவிர்த்த மற்றவர்பற்றியோ கவலை சிறிதும் இராது.

- (விடுதலை, 10.6.1968)

Read more: http://viduthalai.in/page-2/73469.html#ixzz2q8hq97uu

தமிழ் ஓவியா said...


தமிழ்நாடு அரசு சிந்திக்குமா?செயல்படுமா?


சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் தமிழ்நாடு அரசு தொடங்கவிருக்கும் பல்நோக்கு சிறப்பு உயர் மருத்துவமனைக்கான மருத்துவ பேராசிரியர்கள் தொடர்பான பணி நியமனத்தில் இடஒதுக்கீட்டை அறவே புறக்கணித்ததன் மூலம் அடிப்படைத் தவறினைச் செய்துவிட்டது; அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும் தமிழ் நாடு அரசின் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கான சட்டத்திற்கு முரணாகவும் நடந்து கொண்டு இருக்கிறது.

இதுபற்றிக் கடுமையான விமர்சனங்கள், எதிர்ப்புகள் கிளர்ந்து எழுந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு தரப்பில் எந்தவித விளக்கமும் சொல்லப்படாததிலிருந்தே ஒன்று தெளிவாகவே தெரிகிறது. தமது தரப்பில் தவறு நடந்திருக் கிறது என்று அரசுக்கு நன்கு தெரிந்து விட்டது என்பதை அறிய முடிகிறது. இல்லாவிட்டால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிற முறையில் எதையாவது தெரிவித்திருப்பார்கள்.

சரி, தவறு நடந்து விட்டது என்று அறிந்த மாத்திரத்தில் விளம்பரத்தை மாற்றி வெளியிட வேண்டியதுதானே, அதில் என்ன தயக்கம்?

எந்த இடத்தில் இந்தத் தவறு நடந்திருக் கிறது என்று துறை ரீதியான விசாரணைகள் ஒரு பக்கம் நடத்தப்படட்டும், மற்றொரு பக்கம் சட்ட ரீதியாக இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனத்துக்கான அறிவிக்கையை விளம்பரமாகக் கொடுப்பதில் ஏன் தாமதம்?

நீதிமன்றம் சென்று அது தலையில் குட்டியதற்குப் பிறகுதான் திரு(ந்)துவது என்ற நிலைப்பாடு ஒரு நல்லரசுக்கு உகந்ததாக இருக்க முடியாது.

மெடிக்கல் சர்வீசஸ் ரெக்ரூட்மென்ட் போர்டு (MRB) சார்பில்தான் விளம்பரம் வெளியிடப் பட்டது. அதன் சட்ட விதிகளிலேயே நான்காம் பகுதியிலேயே (Chapter- 4) கீழ்க்கண்டவாறு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Number of posts reserved for scheduled castes, scheduled tribes and other backward classes in a cadre having morethan 13 posts shall be determined by multiplying the cadre strength by the percentage of reservation prescriped for the respective categories while during so fraction if any shall be ignored” என்று தெளிவாகவே கூறப்பட்டுள்ளதே.

13 இடங்கள் காலியாக உள்ள எந்த ஒரு பணியிடத்துக்கும் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதன்படி பார்க்கப் போனால் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசின் விளம்பர அறிக்கையில் மூத்த ஆலோசகர்கள் (Senior Consultants) 14 இடங்கள், இணை ஆலோச கர்கள் 13 இடங்கள், இளநிலை ஆலோசகர்கள் 23, நிலைய மருத்துவர்கள், 19 பதிவாளர்கள் 14 இடங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லாம் 13 இடங்களுக்கு மேற்பட்டது என்பதால் விதிமுறைகளின்படி கண்டிப்பாக இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டே ஆக வேண்டும்.

கட்சிகளைக் கடந்து திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னையில் கூட்டப்பட்ட சமூகப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அத்தனைப் பேரும், ஒருமித்த எண்ணத்தோடு இடஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளனர்.

அந்த வகையில் தீர்மானமும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பல்வேறு கட்சிகள் சமூக நீதி அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்கும் சிறப்புப் பொதுக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் வரும் 13ஆம் தேதி மாலை ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.

இந்தப் பிரச்சினையில் தந்தை பெரியார் அவர்களால் பக்குவப்படுத்தப்பட்ட தமிழ்நாட்டு மக்கள் சமூக நீதியின் பக்கம் பெரும் அளவில் திரண்டு நிற்பர் என்பதில் அய்யமில்லை.

காலம் கடந்துவிடவில்லை - தமிழ்நாடு அரசு சமூக நீதித் திசையில் சிந்திக்குமா? செயல் படுமா? எங்கே பார்ப்போம்!

Read more: http://viduthalai.in/page-2/73470.html#ixzz2q8hzn8Wn

தமிழ் ஓவியா said...


இன்னுமா சந்தேகம்? இரகசியம் வெளியாய் விட்டது


பார்ப்பனர்கள் காங்கிரஸின் பேராலும் தேசியத்தின் பேராலும் ஸ்ரீ வரதராஜுலு போன்ற ஆசாமிகளைச் சுவாதீனம் செய்து கொண்டு பார்ப்பனரல் லாதாருக்குக் கெடுதி செய்து வருவதைப் பற்றியும் சென்ற சட்டசபைத் தேர்தல் முடிந்தவுடன் காங்கிரசுக்கும் தேசியத்திற்கும் விரோதமாய்ப் பொய்க்கால் மந்திரிகளைச் சிருஷ்டித்ததும், அவர்களை ஆதரித்ததும் பார்ப்பனரல்லாதார் களுக்குக் கெடுதி உண்டாகச் செய்யவே என்பதாகவும் பலமுறை எழுதிவந்திருக்கின்றோம்.

இதற்கு சரியன ருசு கொடுக்க சமீபத்தில் சென்னை சட்ட சபையில் விலக்கப்பட்ட மந்திரியாகிய ஸ்ரீமான் ரங்கநாதமுதலியார் சொன்ன வாசகமே போதுமானதென்று நினைக்கின்றோம்.

அவர் சொன்னதாவது 1926-ல் நாங்கள் மந்திரி பதவிகளை ஏற்றுக் கொண்டவுடன் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் எங்களை ஆதரிப்பதாக காங்கிரஸ் கட்சியாரிடமிருந்து ஒப்பந்தம் வெளியாயிற்று.

அந்த ஒப்பந்த நிபந்தனை என்னவென்றால் ஸ்தல ஸ்தாபனங்களுக்கும், கமிட்டி களுக்கும் மற்ற நியமனங்களுக்கும் ஜஸ்டிஸ் கட்சியாரை நியமிக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான், இந்த வாசகம் ஸ்ரீமான் எ. ரங்கநாத முதலியார் அவர்கள் சொன்னதாக 23.03.1928இல் சுதேசமித்திரனிலேயே இருக்கிறது.

இதைக் காங்கிரஸ் கட்சி சட்டசபைத் தலைவர்கள் ஸ்ரீமான்கள் சாமி வெங்கிடாசலமும், சத்தியமூர்த்தியும் சட்டசபையில் மறுக்கவில்லை என்பதினாலேயே இது உண்மை என்பது ஒரு சிறிதும் சந்தேகமில்லை.

இப்படி இருக்க ஜனாப் அமீத்கான் சாயபு காங்கிரஸ் கட்சியாருக்கு அம்மாதிரி நிபந்தனை செய்து கொள்ள யாரும் அதிகாரம் கொடுக்கவில்லை என்பதினாலேயே ஸ்ரீரங்கநாத முதலியார் சொல்வது பொய்யாகி விடுகிறதா? என்பதை வாசகர்களே யோசித்துப் பார்த்துத் தேசியமென்பதும், காங்கிரசென்பதும் பார்ப்பனரல்லாதாருக்கு ஆபத்தா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டுகிறேன்.

- குடிஅரசு - கட்டுரை - 25.03.1928

Read more: http://viduthalai.in/page-7/73483.html#ixzz2q8iZSZ80

தமிழ் ஓவியா said...


சங்கீதமும் பார்ப்பனியமும்

சென்னை சங்கீத மகாநாட்டில் பார்ப்பன ரல்லாத சங்கீத வித்வான் ஸ்ரீமான் காஞ்சிபுரம் சி. சுப்பிரமணியப்பிள்ளை அவர்கள் விஷயத் தில் பார்ப்பனர்கள் எவ்வளவு நாணயக் குறை வாயும் குற்றமாயும் நடந்து கொண்டிருக் கின்றார்கள் என்பதை மற்றொரு பக்கத்தில் பிரசுரித்திருக்கும் நிரூபத்தால் அறியலாம். இவற்றை நமது பார்ப்பனரல்லாத பிரபுக்கள் சற்றும் லட்சியம் செய்யாமல் பார்ப்பனரல்லாத வித்வான்கள் எவ்வளவு பாண்டித்திய முடைய வர்களாயிருந்தாலும் அதை லட்சியம் செய்யா மல் பார்ப்பனர்கள் என்கின்றதற்காகவே அவர்களை ஆதரிக்க முற்படுகிறார்கள்.

நமது நாட்டுப்பிரபுக்களின் முட்டாள் தனத்திற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டியதில்லை என்பதே நமது அபிப்பிராயம். அன்றியும், பார்ப்பனரல்லாத வித்வான்களும் தங்கள் சுயமரியாதையைப் பற்றி ஒரு சிறிதும் கவலையில்லாமல் பார்ப்பன வித்வான்கள் என்பவர்கள் எவ்வளவு குறைவுபடுத்தினாலும் லட்சியம் செய்யாமல் சுவாமிகளே என்று வாயைப் பொத்தி முதுகை வளைத்துக் காட்டிக் கொண்டு அவர்கள் பின் தொடருகின்றார்களே யொழிய, மானத்துடன் வாழ ஒருப்படுவது அருமையாய் இருக்கின்றது. இவைகளை அனு சரித்தே ஒவ்வொரு ஊரிலும்.

பார்ப்பனரல்லாத சங்கீத சமாஜம் ஏற்படவேண்டும் என்றும், அங்கெல்லாம் பார்ப்பனரல்லாத வித்வான்களை ஆதரிக்க வேண்டுமென்றும் பல தடவைகள் சொல்லியும், எழுதியும் வந்திருக்கின்றோம். பெரும்பாலும் இதை உத்தேசித்தே கோவை யிலும் முதல் முதலாக ஒரு சங்கீத சபை ஏற்படுத்தியும் இருக்கின்றார்கள். மற்ற இடங்களும் இதைக் கவனித்து நடக்குமா?

சுழ்ச்சியும் ஏமாற்றமும்

திருவண்ணாமலை கோயில் வழக்கு ஆர்கியுமெண்டிற்காக ஸ்ரீமான் ஏ. ராமசாமி முதலியார் வரப்போகிறார் என்று திருவண்ணா மலை பொது ஜனங்களும் முனிசிபாலிட்டியாரும் ஸ்ரீமுதலியாருக்குப் பல வரவேற்புகளும் மீட்டிங்குகளும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இதைப் பொறுக்காத பார்ப்பனர்கள் இந்த பொதுஜனங்கள் ஏமாற்றமடையட்டும் என்கின்ற எண்ணத்தின் பேரிலும் ஸ்ரீமுதலியாருக்கு இவ்வளவு வரவேற்பா என்கின்ற பொறாமையின் பேரிலும் ஸ்ரீ முதலியார் அன்று திருவண்ணா மலைக்கு வராமல் இருக்கும்படி செய்ய வேண்டு மெனக் கருதி, டிப்டி கலெக்டர் கச்சேரியில் கோயில் கேசை திருவண்ணாமலை மெஜிஸ்ட் ரேட்டிடமிருந்து மாற்றவேண்டுமென்பதாக ஒரு விண்ணப்பம் போட்டு கேஸ் விசாரணையை நிறுத்தும்படி உத்திரவு வாங்கி விட்டார்கள்.

நல்ல வேளையாய் இந்த உத்திரவு போய்ச் சேருவதற்கு முன்பாகவே ஸ்ரீமான்கள் ராமசாமி முதலியாரும், கண்ணப்பரும் புறப்பட்டு விட்டதால் இப்படி எல்லா வரவேற்புகளும் மீட்டிங்குகளும் வெகு ஆடம்பரமாகவே நடந்து விட்டன.

பார்ப்பனர்கள் தங்கள் சூழ்ச்சியின் பயனாய் எதிர்பார்த்த காரியம் ஏமாற்ற மடைந்து விட்டதால் பிறகு மாற்று விண்ணப்பத்தைப் பற்றி கவலை எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் மாற்றுவதற்குப் போதுமான காரணம் இல்லை யென்று தெரிந்தே விஷமஞ் செய்யக் கருதி டிப்டி கலெக்டர் பார்ப்பனராயிருப்பதால் உத்திரவு கிடைத்துவிடுமென்று நினைத்து போட்டார்களானதால் உத்திரவு கிடைத்தும் உத்தேசித்த காரியம் நிறைவேறாமற் போய் விட்டது.

மற்றபடி கேசின் ஆர்க்யுமெண்டு திருவண் ணாமலையிலேயே நடக்கும். ஸ்ரீமான் முதலி யாரும் போவார் என்றே தெரிகின்றது.

அருப்புக் கோட்டையில் பார்ப்பனத் தொல்லை

அருப்புக் கோட்டையில் சில பார்ப்பனர்கள் தொல்லை விளைவித்து வருவதாகத் தெரி கின்றது. 98 பார்ப்பனரல்லாத வாலிபர்கள்மீது போலீசார் நடவடிக்கை எடுத்துக் கொண்ட தாகவும் அரஸ்ட் செய்து ஜெயிலில் வைத்து ஜாமீனில் விட்டிருப்பதாகவும் தெரிய வரு கின்றது. திருவண்ணாமலைக் கேசுபோலவே இந்தக் கேசும் பார்ப்பனர்களிடம் நடக்கக் கூடாது என்று விண்ணப்பம் போட வேண்டிய நிலைக்கு வரும்போல் தெரிகின்றது.

அந்த ஊரில் பார்ப்பனரல்லாத வக்கீல்கள் இல்லை யாதலால் மதுரையிலிருந்து யாராவது பார்ப்ப னரல்லாத வக்கீல் போகவேண்டி யிருப்பதையும் தெரிவித்துக் கொள்வதோடு இந்தத் திருவண் ணாமலை கேசு செலவுக்குப் பொதுஜனங்கள் உதவியது போலவே உதவவேண்டும் என்று அப்பீல் செய்து கொள்ளுகிறோம்.

- குடிஅரசு - கட்டுரை - 19.02.1928

Read more: http://viduthalai.in/page-7/73484.html#ixzz2q8ilWxS2

தமிழ் ஓவியா said...


யார் வார்த்தைகள் கடினம்?


பார்ப்பனர்களுக்கு அனுகூலமில்லாத மந்திரிகளைக் கண்டிப்பதற்கு என்று பார்ப்பனர்கள் காங்கிரசின் பேரால் கோகலே ஹாலில் ஸ்ரீ பெசண்டம்மையின் தலைமையில் ஒரு கூட்டம் கூடியபோது ஒருவர் பேசுகையில் மந்திரிகள் தங்கள் பெண் ஜாதிகளை விட்டுக்கொடுத்து மந்திரி வேலைகளைச் சம்பாதிப் பார்கள் என்று சொன்னாராம்.

இது யோக்கியமான வார்த்தையா என்று கேட்கின்றோம். இவ்வார்த்தைகளை எந்த யோக்கியர் களாவது கண்டித்தார்களா என்று கேட் கின்றோம். ஸ்ரீ வரதராஜுலுவாவது அவரது பத்திரிகையாவது தமது தலைவர் களுடைய இம் மாதிரி வார்த்தைகளை கண்டித்தாரா என்று கேட்கின் றோம்.

ஸ்ரீமான் குழந்தை கடற்கரையில் மந்திரிகளைக் கொடும்பாவி கொளுத் தியதற்கு கோபித்துக்கொண்டதாக வேஷம் போட்ட ஸ்ரீவரதராஜுலுவுக்கும் தமிழ்நாடுக்கும் பெண்ஜாதிகளை விட்டுக் கொடுப்பார்கள் என்று சொன்ன வார்த்தை அவ்வளவு கடினமானதாக தோன்றவில்லைபோல் இருக்கின்றது. இதனால் அக்கோஷ்டியின் அற்பத்தனமும் காலித்தனமும் எவ்வளவு என்பது விளங்க வில்லையா?

சாதாரணமாக ஹைகோர்ட் ஜட்ஜுகளில் யாருக்காவது மேகவியாதி இருக்குமானால் அது மைலாப்பூர் காங்கிரஸ்வாதிகள் தேசியவாதிகள் உபயமேயாகும். இம்மாதிரி யோக்கியர்கள் மிகுதியும் நிறைந்த சென்னை காங்கிரஸ் வாதிகள் தங்கள் யோக்கியதைகளை மறைத்துக் கொண்டு இம்மாதிரிப் பேச அயோக்கியர்களைத் தூண்டிவிடுவதும், அதை கண்டிக்காமல் இருக்கச் செய்வதும் ஒரு ஆச்சரியமல்ல.

தவிர, வேறு ஒரு காங்கிரஸ் தலைவராகிய ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்களும், அவரது ஆயுளில் இம்மாதிரியாக அநேக தடவை களில் அதிகப்பிரசங்கித் தனமாய்ப் பேசிவிட்டு மன்னிப்பு கேட்டுக் கொண்ட தானது ஸ்ரீவரதராஜுலு மன்னிப்பு கேட்டுக் கொண்டதைவிட நூறு பங்கு அதிகமாகவே இருக்கும்.

ஆகவே யாரு டைய வார்த்தைகள் கடினமானதென்பதும் முழுவதும் அக்கிரமமானதும், பொய்யா னதும் என்பதும் இழிவானது என்பதும் இதிலிருந்தாவது பொது ஜனங்கள் உணர வேண்டுமாய் எதிர்பார்க்கின்றோம்.

அன்றியும் பார்ப்பனர்களுக்கு அனு கூலமான, உத்தியோகங்கள் என்ன வேலை செய்து யார் பெற்றாலும் பத்திரி கைகள் என்ன வேலை செய்து யார் நடத்தி னாலும் அவைகள் எல்லாம் யோக்கியமான தேசியமென்பதும் பார்ப்பனர்களுக்கு அனுகூலமில்லையானால் அவைகளைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதுமே தேசியமாகவும் காங்கிரஸ் சட்டமாகவும் இருக்கின்றது என்பதையும் உணரவேண்டுமாய் விரும்புகின்றோம்.

- குடியரசு - கட்டுரை - 25.03.1928

Read more: http://viduthalai.in/page-7/73485.html#ixzz2q8iwV2DX

தமிழ் ஓவியா said...


அயல் பற்று


தமிழிசை ஆய்வாளரான மம்முது சொன்ன கருத்து புதிய தலைமுறை இதழில் (16.1.2014) வெளி வந்துள்ளது.

முத்தமிழ் என்று நாம் சொல்கிறோமே தவிர, இதில் இயற்றமிழ் தவிர்த்து இசை, நாடகத் தமிழ் பரவலாக யாருக்கும் தெரிவதில்லை. ஒரு முறை அமெரிக்கா சென் றிருக்கும்போது, அங்குள்ள பல்வேறு நண்பர்களின் வீடு களுக்குச் செல்ல வேண்டி இருந்தது.

அங்கு எல்லா ருடைய வீட்டிலும் ஏதாவது ஓர் இசைக் கருவியை வைத்திருக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒரு இசைக்கருவி வாசிக்கத் தெரிந்திருக்கிறது. அங்கு இசையைக் கொண்டாடுகின் றனர். ஆனால் நம்மிடையே இந்தப் பழக்கம் தலைகீழாக உள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் தமிழிசை அழியும் வாய்ப்புகள் அதிகம்.

தமிழிசையைக் காப் பாற்றுவது நம் ஒவ்வொரு வரின் கையில்தான் உள்ளது. இன்று திருமணங்களில் நாதஸ்வரம், தப்பாட்டம் போன்ற தமிழிசைகள் இடம் பெறுவதில்லை.

வேறு மாநில இசைக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் கூட தமிழிசைக் கலைஞர்களுக்கு தமிழர் களால் வழங்கப்படுவதில்லை. இந்த நிலையை மாற்ற வேண் டும். தமிழிசைக் கலைஞர் களுக்கான பொருளாதார வாய்ப்புகள் உறுதி செய் யப்பட்டாலே தமிழிசையை பெருமளவில் காப்பாற்ற முடியும். கர்நாடக சங்கீத சபாக்கள் போல தமிழிசைக் காக சபாக்கள் உருவாக் கப்பட வேண்டும். அங்கு நடக்கும் தமிழிசை நிகழ்ச்சி களில் தமிழர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

மேலே கண்டுள்ள மம்முது அவர்களின் கருத்தில் பல உட் பொருள்கள் பொதிந்து கிடக்கின்றன.

தமிழர் வீட்டுத் திரும ணங்களில் நாதஸ்வரம், தப்பாட்டம் போன்ற தமிழிசை காணப்படவில்லையே என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி யுள்ளார்.

விவசாயம் போலத்தான் இந்தத் தமிழ் இசைக் கலை களும்; விவசாயம் உடலு ழைப்பைப் பெரிதும் சார்ந்தது என்பதால் அதனைப் பாவத் தொழில் என்று மனுதர்மம் ஒதுக்கி விடவில்லையா? அதன் விளைவை இன்று வரை கூட நம் மக்கள் அனு பவித்துக் கொண்டு தானி ருக்கிறார்கள்.

நாதஸ்வரம், தப்பட்டம் போன்ற கலைகள் உடலு ழைப்பைக் கூடுதலாக உறிஞ் சக் கூடியதாகும். அதனாலே ஆரியம் அதனை ஒதுக்கி விட்டது. தவில் போன்ற கருவிகள் பக்கம்கூட அவர் கள் நெருங்க மாட்டார்களே!

வேறு மாநில இசைக் கலைக்கு வழங்கப்படும் இசை வாய்ப்புகள்கூட தமிழிசைக் கலைஞர்களுக்கு வழங்கப் படுவதில்லை என்று மம்முது அவர்கள் குறிப்பிட்டு இருப் பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.

இப்பொழுது புதிதாக ஒரு வியாதி கிளம்பி இருக்கிறது. தமிழ்நாட்டில். அது கேரளா விலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. செண்டை மேளமாம். இது குறித்துத் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர் களும் இ(அ)டித்துக் கூறி இருக்கிறார்.

தமிழர்கள் தங்களுக் குரிய மதிப்பைவிட அயல் வழக்குகளில் தங்களைப் பறி கொடுப்பது பல வகைகளி லும் நடந்து கொண்டு இருப்பதுதானே தமிழர்களின் இழப்புகளுக்குக் காரணம்.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/73522.html#ixzz2qEj5m5AX

தமிழ் ஓவியா said...

இந்நாள்... இந்நாள்....



பகுத்தறிவுச் சிந்தனையாளர் திராவிடர் இயக்கத்தின் தீரர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் மறைவு (2000).

நாவலர் கடைசியாகக் கலந்து கொண்ட நிகழ்ச்சி பெரியார் திடலில் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த புத்தாயிரம் தொடக்க விழாவில்தான் (31.12.1999 நள்ளிரவு).

Read more: http://viduthalai.in/e-paper/73520.html#ixzz2qEjoQalr

தமிழ் ஓவியா said...


முத்தமிழ்ப் பொங்கல்


பொங்கல் விழா! முத்தமிழ்ப் பொங் கல் விழா! முப்பால் பொங்கல் விழா! ஆரியத்தால் புராண மத மூட இதி காசத்தால், முதலாளித்துவத்தின் ஆணவ அடக்கு முறைகளால் தீண்டப் படாத, மங்காத தமிழர் பண்டைத் தனித் தமிழ் வாழ்வின் நந்தாத நறுஞ் சின்னம்! தனித் தமிழ் விழா! தன்மான விழா!

உழவர் விழா! நிலத்தின்மீது காத லற்று, அதனைப் பிறர் உழுவித்துத் தான் தன்மானமற்று, உழையா உழைப்பை உண்ணும் நில முதலாளி அல்லது ஜமீன், மிராசுதாரர் ஆகிய முதலாளித்துவக் கடவுளால் படைக் கப்பட்டு முன்னிருந்த, தானே தன் நிலத்தின் உரிமையாளனாய், தானே அதைத் தனித் தமிழ்க் காதலனாய் உழுது உழைத்துப் பயிரிடுபவனாய், தானே அதன் இன்பமும் பயனும் நுகர்பவனாய், தானே அதன் பண்டம் பரிமாறும் வணிகனாய், தானே ஊராளும் குடியரசன் குடிமொழிக்குரிய குடியாட்சி உரிமையாளனாய், தானே அக்குடியரசன் குடிப்படையின் வீரனாய், தன் குடும்பத்தின் தொழுகைக் கூட மாகிய கோயில் வீடு அல்லது அரங்கில் தானே தன் குடும்பத் தலைவனாய் வழிபாடாற்றும் வழிபாட்டுத் தலை வனாய் வாழ்ந்த பண்டைப் பொது வுடைமைப் பெருந்தமிழன் காலத் திலிருந்து இன்றுவரை பண்பு மாறாது கொண்டாடப்பட்டு வரும் உழவர் விழா! வேளாளர் விழுத் தமிழ் விழா! பொதுவுடைமைப் பண்பாட்டு விழா! தனித் தமிழர் திராவிடப் பெருவிழா!

யானை எருத்தம் பொலியக் குடை நிழற் கீழ் சேனைத் தலைவராய் வள்ளு வப் பெருமகன் தன் திண்டோள்கள் இரண்டும் புடைக்க, மகிழ்ச்சி முகத்தில் பெருக்கெடுத்து இருகண்வழி ஓடி ஒளிவீச, குன்றென நின்று கறங்கும் இரு முரசங்களை யானையின் இருபுறமும் ஞாற்றிக் கால்களால் அவற்றைத் தாங்கிக் கையிலுள்ள குணில்களால் புடைத்து, மன்னன் வளம் பாடி, மழை வளம், புகழ்பாடி, கொண்டல் வண் ணன் மழைவேந்தனுக்கு விழாவயர்வீர் மதுரை மன்னரீர்! என்று முழங்கி விழா வாட்டழைத்த பண்டைத் தமிழர் இந்திர விழா எங்கே! எங்கே! அது பொங்கல் விழாவின் பொங்கலில்தான் புதைந்து எஞ்சியுள்ளது! செஞ்சிலம்பார் சிலப்பதிகாரமும் பொன்மணியார்க்கும், வண்ண மணிமேகலையும் முழங்கும் இந்திர விழாவை நாம் இழந்தோம், இதனிற் கலந்தோம்!

வெள்ளைத் தீவைப் படையெடுத்து அதனில் வெண்கடப்பந் தார்சூடிக் கடம்பமரத் தடியிருந்து மேல்கட லாண்டு அக்கடலில் கலஞ்செலுத்திய மேல் நாட்டு வணிகரைச் சூறையாடிய கடம்பன் என்ற கடற்கொள்ளை இனத்தைத் தவிடுபொடியாக்கிய சேரரின் கடற்காவலனாய் மங்களூரைத் தலைநகராகக் கொண்டு தென் கன்னடத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட வேளிர் கோமான் நன்னன் தன் பெயரிட்டு மதுரையில் நடத்திய திருவோண விழா எங்கே! எங்கே! அத்தமிழர் தமிழ் விழா மறைந் தது! அது இந்தப் பொங்கல் விழா வில்தான் எஞ்சி உறைந்து கிடக்கின் றது.

தமிழகத்தில் மறைந்த திருவோண விழா பண்டைச் செந்தமிழ்ச் சேரல நாடான கேரள நாட்டில் இன்றும் தேசியத் திருவிழாவாக, மலையாள நாட்டுத் திராவிடத் திருநாளாகக் கொண்டாடப்பட்டுத் தான் வருகிறது. இன்றைய தமிழ் நாட்டுத்திராவிட இயக்கத்தார் கண்களுக்கு இன்னும் புலப்படாமல்! அது மாவலி மன்னன் தென்னாடெங்கும் ஒரே சக்கரவர்த் தியாய், ஆரியம் தென்னாட்டில் புகுமுன், ஒரு மொழி வைத்து ஒரு முத்தமிழ் இலக்கியம் கொண்டு ஒரு குல மக்களாய் ஒரு பெருங்கடவுள் போற்றி ஆண்ட காலத்தின் நினைவு நாள். ஆரியம் புகுந்தது குள்ளமான வாமன முனி உருவில், சூழ்ச்சி செய்தது,தானங் கேட்கும் உருவில்!

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்

என்ற வள்ளுவர் பண்பின்படி, வஞ்சனை என்று தெரிந்த வாமனன் சூழ்ச்சியில் தானேசென்று சிக்கி அழிந்தான் ஆனால் அவன் மாவலி. சிரஞ்சீவி, அழியா அறிவுருவினன். அவன் கூறினான், தென்னாட்டவரே! நீவிர் இன்று சீர்குலைகிறீர். ஆனால் பின்னால் சீர்ப்படுவீர். அதுகாறும் என் நினைவாக ஓணவிழாக் கொண்டாடுக. ஒருகாலம் வரும், ஓண விழாத்தோறும் நாடு உலா வரும் யான் ஒரு ஓண நாளில்மீண்டுந் தென்னாட்டை ஆள வருவேன் என்று. அதனைப் பாடி ஆணும் பெண்ணும் ஆரியமின்றி, ஆரிய வினை முறையின்றிக் கொண்டாடி வருகின்றனர் மலையாளத் திராவிடர்.

மாவலியின்பின் அவன் பிள்ளைகள் ஐவர், பாண்டியன், சோழன், சேரன், கருநாடன், ஆந்திரன் போராடி அய்ந்தரசராய் நாளடைவில் ஐந்து மொழி நாடுகளாண்டனர். சாதி சமய மூடம் புகுந்தது.

இத்திராவிடத் திருநாளுக்கும் பொங்கல் நாள் உடன் பிறந்த தங்கை நாள். பொங்குக பால்! பொங்குக தேன்! பொங்குக வருங்காலத் திராவிடப் பொங்கல்!

(திராவிடத் திருநாள் கலைமன்றம் சென்னை-1)

Read more: http://viduthalai.in/page-2/73526.html#ixzz2qEk39uCK

தமிழ் ஓவியா said...


தை தக்கா தை தக்கா!


தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் அறிக்கை வெளியிட்டதற்கு அஇஅதிமுக சார்பில் ஏதாவது பதில் சொல்ல வேண்டுமல்லவா! அதனால்தான் தை தக்கா தை தக்கா! என்று குதிக்கிறது. அக்கட்சியின் அதிகாரபூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். ஒரு பதில் எழுத முயற்சித்துள்ளது. குளிக்கப் போய் சேற்றில் விழுந்த கதை தான் அது.

திமுக தலைவர் கலைஞர் அறிக்கையில் தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதற்கு தமிழ் அறிஞர்களும், தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்களும் கூறிய கருத்துக்களை எடுத்துக் கூறியிருந்தார் (முரசொலி, 11.1.2014).

ஆனால் நமது எம்.ஜி.ஆர். ஏடு எவற்றை ஆதாரமாக எடுத்துக் காட்டியுள்ளது? தேவி பாகவதம், புராணங்கள், இதிகாசங்கள் இவற்றை எடுத்துக் காட்டியுள்ளது (புராணங்கள் வரலாறு அல்ல என்கிற அடிப்படை கூடத் தெரிய வில்லையே, அந்தோ பரிதாபம்!).

பிர்மா, விஷ்ணு என்னும் இந்து மதக் கடவுள் களையும் துணைக்கழைத்துள்ளது. (இதற்குப் பெயர்தான் இந்துத்துவா என்பது)

ஆரிய மாயை பற்றி அறிஞர் அண்ணா எழுதியுள்ளதைப் படித்தால் இந்த ஆரிய மாயையின் அடிப்படை அப்பட்டமாகப் புரியும்.

பூணூலின் மகத்துவத்தைப் பற்றி பிரஸ் தாபிக்கும் அண்ணா திமுக ஏடல்லவா! வேறு எப்படித் தான் எழுதும்?

ஆரியம் ஒரு நடமாடும் நாசம் திராவிடத் தோழா வேண்டாம் அதனிடம் பாசம்

அதனால் வருமே அந்தகக்காசம்!

- அறிஞர் அண்ணா (ஆரிய மாயை நூல்)

Read more: http://viduthalai.in/page-2/73534.html#ixzz2qEkcA9OW

தமிழ் ஓவியா said...

சுய விருப்பத்துடன் மதம் மாற உரிமை உண்டு! பெண் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு!!

மதுரை, ஜன. 12- தூத்துக்குடி மாவட்டம், காயல் பட்டினம் பகுதியைச் சேர்ந்த கீதா என்பவர் தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவு பிறப்பித்தது.

கீதா தனது மனுவில், எனது மகள் பவித்ராவை (வயது 19), தபிவீத் என்பவர் கடத்திச் சென்று கட்டாயப் படுத்தி இஸ்லாமிய மதத்துக்கு மாற்றம் செய்து திரு மணம் செய்து கொண்டார். மகளை மீட்க காயல் பட்டினம் காவல்துறையினருக்கு உத்தரவிட வேண் டும் எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இம்மனு விசாரணைக்கு வந்த போது காவல்துறை யினர் பவித்ராவை ஆஜர்படுத்தினர். அவரிடம் விசா ரித்த பிறகு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு. மனு தாரரின் மகள் பவித்ராவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் சட்ட விரோதமாக தங்கவைக் கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும் தனது விருப்பத்தின் பேரிலேயே இஸ்லாம் மதத்துக்கு மாறி திருமணம் செய்து கொண்டுள்ளார். இஸ்லாம் மதத்துக்கு மாற யாரும் கட்டாயப்படுத்த வில்லை என்றும் தெரிவித்துள்ளார். இது தனது பெற் றோருக்கும் தெரியும் என தெரிவித்துள்ளார்.

பவித்ரா திருமண வயதை அடைந்தவர் என்பதால் அவர் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ள உரிமை உள்ளது. மேலும் ஒருவர், தான் விரும்பும் மதத்துக்கு மாறுவது என்பதும் சட்டப்பூர்வ உரிமை யாகும். எனவே திருமணம் மற்றும் மதமாற்றம் ஆகிய விஷயங்களில் தவறு காண அடிப்படைக் காரணம் ஏதுமில்லாததால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

- இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது

Read more: http://viduthalai.in/page-5/73527.html#ixzz2qElHot2d