Search This Blog

2.1.14

காமப் பாதையில் கண்ணன் நாமம்-மார்கழி மாதத்தை பீடை மாதம் என்று ஒதுக்கி வைப்பது ஏனோ?


மார்கழி திங்கள் அல்லவா -
மதி கொஞ்சும் நாளல்லவா - இது
கண்ணன் வரும் பொழுதல்லவா! - என்ற திரைப்படப் பாடல் நினைவுக்கு வருமே!
இம்மாதம் வைணவர்கள் எல்லாம் துள்ளிக் குதித் தாடும் பக்திப் பூங்கா அல்லவா - கோவில்களில் எல்லாம் ஒலிபெருக்கி வைத்து, ஆண்டாள் பாசுரங்களை வாயில் நெய்யொழுகப் பாடி மகிழ்கிறார்களே!
நமது தமிழ் ஏடுகளுக்கு இவற்றைப் பக்கம் பக்கமாக வெளியிடாமல் வேறு வேலை என்ன?
அதுவும் இருக்கவே இருக்கிறார் கண்ணதாசன். அவர் சரக்குகளை அள்ளி விடுகிறார்கள்.
உலகத்தில் எல்லாமே இறைவனுடைய இயக்கம். ஆண் - பெண் உறவு இதற்கு விதிவிலக்கல்ல. அந்தச் சுவை மிகப்படப் போயினும் தவறில்லை. அது ஞானியை இறைவனிடமும், நல்ல மனிதனை மனைவியிடமும் சேர்க்கிறது என்று விளக்கம் சொல்லுகிறார் கவிஞர் கண்ணதாசன்.
அது சரி, இருக்கட்டும்; இந்த ஆண் - பெண் உறவெல்லாம் சிற்றின்பம்; சேரவேண்டியதோ பேரின்பம் என்று ஆன்மிகப் பெரியவாள் சொன்னதெல்லாம், இந்த இடத்தில் மறந்தே போய்விட்டதோ! இதற்காக கண்ணதாசனை தேடுவது பரிதாபமே!

அவர் என்ன செய்வார்?
ஒரு கோப்பையில் என் குடியிருப்பு - ஒரு கோல மயில் என் துணையிருப்பு என்ற காம மாளிகையில் குடியிருந்தவராயிற்றே!
ஒரு வகையில் ஆண்டாள் பாசுரத்துடன், அவர் ஞானம் ஒத்துப் போகக்கூடியது என்பதால், கண்ண தாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் நூலிலிருந்து தி இந்து எடுத்தாண்டு இருக்கலாம்.
ஆண்டாள் எதை ஆண்டாள்? இதோ அந்தப் பெண்ணின் விரகதாப காமக்கடல்:
பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண்ணாழ்வார்! அவர்தான் ஆண்டாள் அம்மை யார். கோதையென்றும், சூடிக் கொடுத்த சுடர்க் கொடி என்றும், நப்பின்னைபிராட்டி, பூமிப் பிராட்டி, பெரிய பிராட்டி என்றும் வியப்போடு அழைப்பர்.
அவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் நந்தவனத்தில் துளசி மலரில், பூமிப் பிராட்டியராக, அமசையாய் அயோ நிஜையாய் திருவவதரித் தருளினாராம். அதாவது யோனிவழி பிறவாத, பூமியில் கண்டெடுத்த சுரும்பார் குழற்கோதையாவார்! அனாதையோவென அய்யுற வேண்டாம்! அவதாரமென மெய்யுணர் வீரே! அவரைக் கண்டெடுத்து, வளர்த்து, திருமாலுக்கே கைப்பிடித்து இட்டவர் விஷ்ணுசித்தர் எனப் புகழ் பெற்ற பெரியாழ்வாரே!
அலங்காரப்பித்து
ஆண்டாள் தன்னை அலங்கரித்துக் கொள்வதில் மிக்க திறமையும், ஆர்வமும் கொண்டவர்.
அவனுக்கு நேரொவ்வா திருக்கிறேனோ?
ஒத்திருக்கிறேனோ?
என்று காரை பூண்டு, கூறையுடுத்து, கைவளை குலுக்கி, கோவைச் செவ்வாய் திருத்தி, எப்படி ஒப்பனை! அவ்வொப்பனை யழகைக் கண்ணாடியிலே கண்டு கண்டு மகிழ்வாராம்!
திருமணப் பேச்சு அடிபடுவதற்கு முன்னமேயே, கட்டிலறைக் கனவுகள் காண்பதில் வல்லவர்! காதல் வேட்கையால் உந்தப்பட்டு பற்பல பாக்கள் பரவசமாய்ப் பாடியிருக்கிறார். உறுப்புகளின் அழகை வருணிப்பதில் ஆண்கள் கெட்டார்கள்.
அவ்வளவு நேர்த்தியாக, கவர்ச்சியாக, பாலுணர்ச்சி சுவையோடு பாடியதில் கம்பனே பிச்சை வாங்கவேண்டும் ஆண்டாளிடம்.

அப்படிப்பட்ட ஆண்டாள் அருளிச் செய்த நாச்சியார் திருமொழியிலோ:
அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
ஆதரித் தெழுந்த என்தட முலைகள்
உன்னித் தெழுந்த என்தட முலைகள்
சாயுடை வயிறும் என் தட முலைகள்
துவரைப் பிரானுக்கே! ஊனிடை
யாழி சங்கு உத்தமர்க்கே!
என்று உருகித் தவிப்பாராம்!
கிருஷ்ணன், துகிலைத் திருடிக் கொண்டு மரக் கிளையில் போட்டு, அமர்ந்து கோபியரின் கொங்கை யழகையும், இரகசிய உறுப்புகளையும், நீச்சலுடைகூட இல்லாத அப்படிப்பட்ட அம்மணக் குட்டிகளைக் கண்டு களிப்பதைப் பெண் ஆழ்வாராகிய ஆண்டாளே பாடுகிறார்:
தோழியும் நானும் தொழுதோம்
துகிலைப் பணித் தருளாயே!
இது என் புகுந்ததுஇங்கு அந்தோ!
நீ வேண்டிய தெல்லாம் தருவோம்!
பட்டைப் பணித்தருளாயே!
கோலச் சிற்றாடை பலவும்
கொண்டு நீயேறி யிராதே!
கோலம் கரிய பிரானே!
நீரிலே நின்று அயர்க்கின்றோம்!
நீதியல்லாதன செய்தாய்!
என்று கதறிக் கதறிக் கேட்டும் கண் கொட்டாமல் களித்து இன்புற்ற காட்சியைக் காணாத கண் என்ன கண்ணோ! வென ஏங்குவார்களேயென்று தான் கற்சிற்பங்களாக, வண்ண ஓவியமாக வடித்து வைத்து இன்றும் கோகுலாஷ்டமி கொண்டாடி களிக்கிறார்கள்.
ஏக்கத்தின் உருக்கம்
ஏக்கத்தின் உருக்கத்தால் பாடும்போது:
முத்தன்ன வெண்முறுவல்
செவ்வாயும் முலையும்
அழகழிந்தேன் நான்!
புணர்வதோராசையினால் என்
கொங்கை கிளர்ந்து
குமைத்துக்
குதூகலித்து ஆவியை ஆகுலம்
செய்யும் அங்குயிலே!
கண்ணீர்கள்
முலைக்குவட்டில் துளி
சோரச்சோர் வேனை காமத்தீயுள் புகுந்து
கதுவப்பட்டு இடைக்கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு
இங்கிலக்காய்
நானிருப்பேனே!
என்னாகத்திளங் கொங்கை
விரும்பித்தாம் நாள்தோறும்
பொன்னாகம் புல்குதற்கு
எனப் புரிவுடைமை
செப்புமினே!
கொங்கைமேல் குங்குமத்தின்
குழம்பழியப் புகுந்து
ஓர் நந்நாள்
தங்குமேல் என்னாவி
தங்குமென்று உரையீரே!
பாம்பறியும் பாம்பின்கால் என்பார்கள். அதற் கொப்ப நுட்பமான உட்பொருள்களையெல்லாம் அம் பலப்படுத்திப்பாட இப்படியெல்லாம் ஆணாழ்வார் களால் முடியுமா? அதற்காகவென்றே அத்தனைப் பேர்களுள் கொங்கைக் காமத்தைப் பாட, அதிருசி, தனிருசியுடன் பாட அவிதரித்தார் போலும் ஆண்டாளம்மையார்! மேலும், மேலும் கேட்க, படிக்க அவாவுறும் வகையில் தொடருகிறார்:
கொங்கைத் தலமிவை
நோக்கிக் காணீர்
கோவிந்தனுக்கல்லால்
வாயில் போகா!
 கொங்கைக்கும் செவ்வாயிற்கும் உறவு பற்றியது இது!
இருக்கட்டும், இதைக் கேளுங்கள்:
காமப் பாதையில் கண்ணன் நாமம்
குற்றமற்ற முலைதன்னைக் குமரன்
கோலப்பணைத் தோளோடு
அற்றகுற்றமவைதீர அணைய
அமுக்கிக் கட்டீரே!
எப்படி அணைத்தல், அமுக்கல் வர்ணனைகள்! போதாவோ? சரி கேளுங்கள்.
கொள்ளும் பயனொன் றில்லாத கொங்கை
தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பி
லெறிந்து என்னழலைத் தீர்வேனே!
அப்பாடி! காமவேட்கைத் தீயின் சுவாலையை எப்படித்தான் எழுதுவது? நிற்க,
கொம்மை முலைகள் இடர்தீரக்
கோவிந்தற்கு ஓர் குற்றேவல்
என்றவாறெல்லாம் தவித்து, பக்த கோடிகளை யும் ஒழுக ஒழுக உருக வைத்து எப்படி எப்படி யெல்லாம் காமத்தினூடே கண்ணன் நாமம் பாடி நம்மையும் வாழவிட்டார் பார்த்தீர்களா?
இந்த ஆபாச இந்துமாக்கடலைப் பொறுக்க முடி யாமல்தான் ஆச்சாரியார் (ராஜாஜி) ஆண்டாள் என்னும் ஸ்திரி இருந்ததேயில்லை. பெரியாழ்வார் என்னும் ஆழ்வார் சில பாசுரங்களைப் பாடி அப்பாசுரங்களை ஆண்டாள் என்னும் ஒரு பெயரால் வெளிப்படுத்தினார் (திரிவேணி இதழில்).
ஆச்சாரியாரே ஒரு வைணவர் ஆயிற்றே - அசிங்கத்தை எதையாவது போட்டு மூடவேண்டாமா?
வால்முனை (Tail Piece)
வைணவர்கள் கொண்டாடும் இந்தப் புனித மாதத்தை பீடை மாதம் என்று ஒதுக்கி வைப்பது ஏனோ?

Read more: http://viduthalai.in/page1/72700.html#ixzz2p6pp5wdu

          ------------------------"விடுதலை” 27-12-2013

51 comments:

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி.யின் இரட்டை வேடம் : கிழிக்கிறார் கபில்சிபல்


வேவு பார்ப்பு விவகா ரத்தில் பாஜக இரட்டை நாக்குடன் இருவேறு விதமாக பேசி வருகிறது என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது இணையதளத்தில் கூறியிருப்பதாவது:

கோத்ரா கலவரம் தொடர்பாக விசாரிக்க முதல்வர் நரேந்திர மோடி, நானாவதி ஆணையத்தை நியமித்தார். அந்த ஆணை யம் 4 மாதங்களில் விசா ரணை அறிக்கையை தாக் கல் செய்திருக்க வேண்டும். ஆனால், சுமார் 11 ஆண்டு கள் ஆகிவிட்டன. இன் னும் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. பெண் பொறியாளர் வேவு பார்க்கப்பட்ட விவகா ரம் தொடர்பாகவும் முதல்வர் மோடி விசா ரணை ஆணையம் நியமித்துள்ளார். இந்த ஆணையமும் நானா வதி ஆணையம் போல் தான் செயல்படும்.

பெண் பொறியா ளர் வேவு பார்க்கப் பட்டதில் இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம், டெலிகிராப் சட்டம் ஆகியவை அப்பட்டமாக மீறப் பட்டுள்ளன. ஒரு இளம்பெண்ணின் தனிப்பட்ட உரிமை யும் பாதிக்கப்பட்டி ருக்கிறது.

இதன் காரண மாகத் தான் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆணையம் பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட் லியின் தொலைப்பேசி உரையாடல் விவரங்கள் வெளியான விவகாரம் குறித்தும் விசாரணை நடத்தும்.

மேலும் இமாசலப் பிரதேச முதல்வர் வீர பத்ர சிங், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது அவரது தொலைப் பேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் குறித்தும் விசாரணை நடத்தும்.

மாறி மாறி பேசும் பா.ஜ.க.

அருண் ஜேட்லியின் தொலைப்பேசி உரை யாடல் விவரம் வெளி யானபோது, அதுதொடர் பாக விசாரணை ஆணை யம் அமைக்க வேண்டும் என்று பாஜக தலை வர்கள் குரல் எழுப்பினர். அதேநேரம் இளம் பெண் வேவு பார்ப்பு விவகாரம், இமாசலப் பிரதேச முதல்வர் வீர பத்ர சிங்கின் தொலைப் பேசி உரையாடல் ஒட் டுக் கேட்பு ஆகியவை குறித்து ஆணையம் அமைக்க பாஜக தலை வர்கள் எதிர்ப்பு தெரி விக்கின்றனர்.
இது, மாறி மாறி பேசும் அந்தக் கட்சியின் இரட்டை நாக்கை வெளிப்படுத்துகிறது. ஒரு மாநில முதல்வர் மக்களின் அந்தரங் கத்தை எட்டிப் பார்ப் பதை சட்டம் ஒரு போதும் அனுமதிக்காது என்று கபில் சிபல் கூறி யுள்ளார். -பி.டி.அய்.

Read more: http://viduthalai.in/page1/72740.html#ixzz2pCQ5KkzS

தமிழ் ஓவியா said...


செய்தியும் - சிந்தனையும்மூன்று உக்கள்

இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மூன்று உக்கள் முக்கியம் என்றார் பிரபல இதய மருத்துவ நிபுணர் மருத்துவர் சொக்கலிங்கம்.

உணர்வு, உணவு, உடற்பயிற்சி இவைதான் - அவை!

(இதயத்தின் புறவலிமைக்கு இவை தேவையே - இதயத்திற்குள் நல்லெண்ணங் களும், முற்போக்குச் சிந்தனைகளும் மலருவதற்கு மூன்று அக்கள் தேவை; அறிவு, அன்பு, அரவணைப்பு).

சந்நியாசி

சாமியார் நித்யானந்தாவின் 37ஆம் ஆண்டு பிறந்த நாளில் நித்யானந்தாவிடம் முறைப்படி தீட்சை பெற்று சந்நியாசியானார் நடிகை ரஞ்சிதா.

(பரவாயில்லை, இனி நிரந்தரமாக சாமியாரிடம் தங்கிக் கொள்ளலாம் அல்லவா!)

லட்டான சேதி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டுப் பிரசாதத்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்திலிருந்து நெய் வருவதில் தாமதமாம்!

(இதையெல்லாம்கூட சரி செய்ய முடி யாமலா அங்கு ஒரு குத்துக் கல்லு உட் கார்ந்து கொண்டிருக்கிறது?)

24 மணி

திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க பக் தர்கள் 24 மணி நேரம் காத்திருக்க நேர்ந்ததாம்.
(உலகத்தில் காலத்தைக் கடவுளின் பெயரால் கரியாக்கும் சோம்பேறிகள் இந்தப் புண்ணிய பாரதமின்றி வேறு எங்கேதான் காண முடியும்?)

ஆதிமூலமே!

வனத்துறை நல வாழ்வு முகாமிற்குள் கொம்பன் யானை ஒன்று காட்டுக்குள்ளிருந்து வெளிவந்து முகாம் யானைகளைத் தாக்கியதில் பல யானைகள் படுகாயம் அடைந்தன.

(முதலை ஒன்று யானையின் காலைக் கவ்வியபோது ஆதிமூலமே என்று யானை அலறியபோது, அந்த இடத்திற்குப் பறந்தோடி வந்து சங்கு சக்கரத்தை ஏவி முதலையை சம்ஹாரம் செய்தான் விஷ்ணு என்று கதை எழுதி வைத்துள்ளார்களே - அது போன்று இப்பொழுது அங்கேறாதது ஏனோ? நடந்த தாகக் கூறும் கட்டுக் கதை எல்லாம் இறந்த காலத்தில் தானோ!

சரி அது போகட்டும்; தும்பிக்கை கையன் ஆன விநாயகன்தான் எங்கே போனானாம்?)

இசை மழை

சென்னை மாநகரில் உள்ள சபாக்களில் எல்லாம் இசைக் கச்சேரிகள்.

(ஆனாலும், தப்பித் தவறி தமிழில் பாடுவதை அரிதாகத்தானே கேட்க முடிகிறது; இது தமிழ்நாடாம்!).

Read more: http://viduthalai.in/page1/72742.html#ixzz2pCQFL4gC

தமிழ் ஓவியா said...


விண்வெளித் துறை எட்டாத துறையா?


1975 ஆம் ஆண்டு முதற் கொண்டு இந்திய விண்வெளி ஆய்வு (i s r o) மற்றும் விண்வெளித் துறையும் நாடுமுழுவதிலும் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களை வேலைக்கு எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தது, ஆராய்ச்சி அல்லாத முன்னேற்றப் பணிகளைச் செய்வதற்கான அறிவியல் மற்றும் தொழில் நுட்ப முதல் தர நேரடிப் பணிகளுக்கான இட ஒதுக்கீடு ஆணைகள் பின்பற்றப்படுவதில்லை. 10 ஆண்டு கால நீண்ட போராட்டத்திற்குப் பிறகு டில்லியில் உள்ள தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் விண்வெளித் துறைக்கு ஒரு பரிந்துரையை அனுப்பியது. அதன் அடிப் படையில் 23-06-1975 தேதியிட்ட நிர்வாக சீர்திருத்த துறையின் O.M.No.9.02.1973ESST (SCT) தாழ்த்தப் பட்டோருக்கான இட ஒதுக் கீட்டாணையை நடைமுறைப்படுத்தி அது தொடர்பான அறிக்கையை தேசிய தாழ்த்தப் பட்டோருக்கான ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும், ஆனால் டில்லியில் உள்ள தாழ்த்தப் பட்டவர்களுக்கான தேசிய ஆணையத்திற்கு கீழ்ப்படியாமல் விண்வெளித் துறை புறக் கணிக்கிறது, இந்த அறிக்கை அனுப்பி 60 நாட்கள் கடந்து விட்ட நிலையில், டில்லி தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் ஆணையின் படி விண்வெளித் துறை உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கு மக்கள் எழுச்சியை வெளிப்படுத்த இந்த விவரத்தை அகில இந்திய அளவில் விளம்பரம் கொடுத்து தாழ்த்தப்பட் டோருக்கான இடஒதுக்கீட்டினை அமல் செய்ய ஆவன செய்யவேண்டும் என்ற குரல் எழுந் துள்ளது. திராவிடர் கழகம் தொடர்ந்து விதி விலக்கின்றி அனைத்துத் துறைகளிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது. விதி விலக்கு என்று குறிப்பிட்ட துறைகளை ஒதுக்கி வைத்தால், நாளடைவில் விதி விலக்குப் பட்டியலில் உள்ள துறைகளின் எண்ணிக்கைதான் விரிவடைந்து போகும்.

எந்தத் துறையாக இருந்தாலும் சரி, அதில் குறிப்பிட்ட உயர் ஜாதி வட்டத்தைச் சேர்ந்த வர்கள்தான் இடம் பெற முடியும்என்ற நிலை இருப்பது நியாயமாகாது; தகுதி, திறமை என்ற தந்திர வலையை உருவாக்கி, குறிப்பிட்ட உயர் ஜாதி யினர் மட்டுமே ஏக போகக் குத்தகை தாரர்களாக இருந்து வருவதை இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தான் அனுமதிக்க முடியும்?

மின்னஞ்சலைக் (E-Mail) கண்டுபிடித்த சிவ. அய்யாதுரை என்பவர் திருவில்லிப்புத்தூரை யடுத்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்தான்.

ஆனாலும் இந்தியப் பார்ப்பன ஊடகத்தார் அவரின் அருஞ் சாதனையை மூடி போட்டு மறைத்து விட்டனரே!

மும்பையைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட பார்ப்பன ஆங்கில இதழின் ஆசிரியர் தன்னைப் பற்றி சொன்னதை சென்னை நிகழ்ச்சியில் விஞ்ஞானி சிவா அய்யாதுரை எடுத்துக் கூறிக் குமுறினாரே!

பார்ப்பனர் அல்லாத சிவ அய்யாதுரை எப்படி இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்க முடியும் என்று கூறினாராம். இதுதான் இன்றைக்கும் இருக்கும் பார்ப்பன மனப்பான்மை.
தகுதி திறமை எல்லோருக்கும் பொது என்பதை ஒடுக்கப்பட்ட மக்கள் நிருபித்து வருகிறார்கள். எனவே விண்வெளித்துறை உட்பட அனைத்துத் துறைகளிலும் இடஒதுக் கீடு தேவை - இத்திசையில் திராவிடர் கழகம் தொடர்ந்து போராடும்.

Read more: http://viduthalai.in/page1/72745.html#ixzz2pCQsvU88

தமிழ் ஓவியா said...


பித்தலாட்டம்


மனித சக்திகளுக்கு மேற்பட்ட சக்தி தன்னிடம் இருப்பதாக எவன் கூறினாலும், அவன் எவ்வளவு தான் உயர் நிலையில் இருந்தாலும் சரி - அது பித்தலாட்டம், மோச வார்த்தை என்பதை மனதில் உறுதியாக வைத்துக் கொள்ளுங்கள்.

- (விடுதலை, 20.5.1948)

Read more: http://viduthalai.in/page1/72744.html#ixzz2pCRJ3KqE

தமிழ் ஓவியா said...


கடவுள் சக்தி இவ்வளவுதான்


திருப்பதி சென்று திரும்பிய பக்தர்கள் இருவர் சாவு

சென்னை, டிச.28-திருத்தணி அருகே டேங்கர் லாரி மீது கார் மோதியதில் குழந்தை உள்பட இருவர் இறந்தனர். நால்வர் படுகாய மடைந்தனர்.

சென்னை கீழ்கட்டளை அருள் முருகன் நகர் திருப்பரங்குன்றம் தெருவைச் சேர்ந்தவர் ராமாச்சாரி. இவரது மனைவி மனோரஞ்சிதம். இவர்களது மகன் பாலாஜி (46). இவரது மனைவி நாகமணி (34). இவர்களுக்கு விக்னேஷ் (16), நந்த குமார் (1) என்ற மகன்கள் இருந்தனர்.

கடந்த 25ஆம் தேதி குடும்பத்தினர் அனைவரும் திருப்பதி கோயிலுக்கு சென்றுள்ளனர். அங்கு தரிசனம் முடிந்து, நேற்று முன்தினம் இரவு சென்னை புறப்பட்டனர். காரை, பாலாஜி ஓட்டி வந்தார். திருத்தணி அருகே கார் வந்துகொண்டு இருந் தது. அப்போது ஆந்திராவில் இருந்து புதுச்சேரிக்கு பாமாயில் ஏற்றி சென்ற லாரியின் பின்புறம், கார் மோதியது. காரின் முன்பகுதி நொறுங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே விக் னேஷ், நந்தகுமார் ஆகியோர் பரி தாபமாக உயிரிழந்தனர். மற்றவர்கள் படுகாயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.

தகவலறிந்த திருத்தணி ஆய்வாளர் சிகாமணி, எஸ்அய் அண்ணாதுரை ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந் தனர். உயிருக்கு போராடியவர்களை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப் பினர். அவர்களுக்கு சிகிச்சை அளிக் கப்படுகிறது.

திருத்தணி காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்து, தர்மபுரி மாவட்டம், அரூர், அக்ரஹாரம் தெருவை சேர்ந்த லாரி ஓட்டுநர் குமாரை (36) கைது செய்தனர்.

Read more: http://viduthalai.in/page1/72750.html#ixzz2pCRXfLfh

தமிழ் ஓவியா said...


பகிஷ்காரமும் ஜஸ்டிஸ் கட்சியும்

பகிஷ்காரமும் ஜஸ்டிஸ் கட்சியும்

பகிஷ்காரக் கூட்டத்தில் ஜஸ்டிஸ் கட்சி யாரும் சேர்ந்துகொண்டால் தேவலாம் போல அக்கட்சி பிரமுகர்களுக்குத் தோன்றுவதாய்த் தெரிகின்றது. ஏனெனில் பாமர ஜனங்களிடம் தங்களுக்குச் செல்வாக்கில்லை என்று நினைப்பதுடன் அரசாங்கத் தாரும் தங்களைக் கண்டால் பயப்படுவதில்லை என்றும் நினைப்பதாய்க் காணப்படுகிறது. அவர்கள் அப்படி நினைத்திருப்பது தப்பு என்பது நமது கெட்டியான அபிப்பிராயம், பாமர மக்கள் எப்போதும் பாமர மக்களாகவே இருக்க முடியாது. இப்பொழுது சற்று கண் விழித்துக் கொண்டு வருகின்றார்கள். பாமர மக்களிடம் செல்வாக்குப்பெற்று ஏதாவது நன்மை செய்யவேண்டுமானால் பாமர மக்கள் மகிழும்படியான மாதிரியிலேயே போய்க் கொண்டிருப்பதினால் ஒரு பலனும் ஏற்படாது. அவர்கள் உண்மையை உணர்ந்து நன்மையைக் கடைப்பிடிக்கும்படி செய்யவேண்டும். அதற்காக காத்திருந்தாலும் குற்றமில்லை. இரண்டொரு தடவை தோல்வி ஏற்பட்டாலும் குற்றமில்லை. இல்லாவிட்டால் முக்கியமான சமயத்தில் ஆபத்து வந்துவிடும். பிறகு சுலபமாய் திருத்த முடியாமலும் போய்விடும். ஆதலால் தக்க அஸ்திவாரத்துடனும் நிலை யான கொள்கைகளுடனும் வேலைசெய்ய வேண்டியதுதான் பொறுப்பாகுமே தவிர கூட்டத்தில் கோவிந்தா போடுவது பொறுப்பாகாது என்று நினைக்கிறோம்.

தவிர, சர்க்கார் பயப்படமாட்டார்கள் என்று எண்ணுவது தப்பு என்று நினைக்கின்றோம். சர்க்காரைப் பயப்படுத்துவதாய் நினைப்பதைப் போல முட்டாள் தனமான காரியம் வேறில்லை. வெறும் உத்தியோகம் மாத்திரம் நமது கவலை யானால் சர்க்காரை மிரட்டுவது பயன்படும், அது நமது முக்கிய நோக்கமல்ல. ஒருக்கால் அப்படியே வைத்துக் கொண்டாலும் நாமாக ஒரு காரியம் செய்து அதன் மூலம் சர்க்காரை மிரட்டலாம். அந்த யோக்கியதை வரும் வரை காத்திருக்கலாம். அப்படிக்கில்லாமல் பார்ப்பனர்களோடு சேர்ந்து நாமும் கூப்பாடு போடுவதின் மூலம் சர்க்காரை மிரட்டினால், ஒரு சமயம் சர்க்காரும் பயப்படுவ தனால் அதன் பலன் முன்னின்று சத்தம் போட்ட பார்ப்பனர்களுக்குத்தான் ஏற்படுமே தவிர மற்றவர்களுக்கு ஒன்றும் ஏற்படப்போவதில்லை. பார்ப்பனர்கள் அவ்வளவு பைத்தியக்காரர்களல்ல. மிஞ்சி ஏதாவது கிடைத்தால் அவர்கள் தின்றது போக மீதி எச்சில்தான் கிடைக்கும். ஒரு சமயம் நமக்கு ஏதாவது பெரியபலன் கிடைப்பதாயிருந்தால் அப்போது வேறு வழியை அனுஷ்டிக்க பார்ப்பனர்களுக்குத் தெரியும். தவிரவும் ஒரு பெரிய சமூகத்தின் நிரந்தரமான முன்னேற்றத்திற்கு பாடுபடும் இயக்கம் இம்மாதிரி அடிக்கடி மாறும் கொள்கைகளைப் பார்ப்பன அரசியல்காரருக்கும் வயிற்றுச் சோற்று தேசபக்தர்களுக்கும் பயந்துகொண்டு மாற்றி வந்தார்களா? பார்ப்பனரல்லாதார் என்கின்ற இவ்வளவு பெரிய சமூகத்தின் பேரால் ஏற்பட்ட இயக்கம் தனக்கென ஒரு மனத்துணிவும் நிலையும் இல்லாமல் கூச்சலுக்கும் கும்பலுக்கும் பயந்து கொண்டிருக்கின்றது என்று பிறர்சொல்லும்படி நடந்தார்கள்? சர்க்காரையாவது உதறித்தள்ளிவிட வேண்டும். யோக்கியமான நிலையான கொள்கைகளைக் கட்டிக்கொண்டு சாக வேண்டும்.

அப்பொழுதுதான் நமதுபின் சந்ததிக்காவது பலனுண்டு. இம்மாதிரி மனக்கிலேசங்கள் வரும்போது உண்மைத் தலைவர்களான டாக்டர் நாயர் பெருமானையும் சர்.தியாகராயரையும் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்கள் ஏதாவது அடிக்கடி மாறினார்களா? பாமர மக்களுக்காவது பயந்தார்களா என்பது ஞாபகப்படுத்தும் என்று நினைக்கின்றோம். முடிவாக நாம் சொல்லுவது என்னவென்றால் பார்ப்பனரல்லாத சமூக இயக்கத் தலைவர்கள், தங்களைக் காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்களைப்போல் தாங்கள் தங்கள் பெண்டு பிள்ளை குடும்பங்களுக்கு மாத்திரம் தலைவர்கள் என்று எண்ணாமல், பார்ப்பனர்களாலும் அரசாங்கத்தாராலும் எவ்வளவோ கொடுமைகள் செய்யப்பட்டு வாயில்லாப் பூச்சிகளாய் கிடக்கின்ற பாமர மக்களுக்கும் தொழிலாளிகளுக்கும் தலைவர்கள் பிரதிநிதிகள் என்பதை நினைத்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளுகின்றோம்.

- குடிஅரசு - துணைத் தலையங்கம் - 11.12.1927

Read more: http://viduthalai.in/page1/72762.html#ixzz2pCS5s8YZ

தமிழ் ஓவியா said...

திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதைச் சங்க மகாநாடு

இவ்வாண்டு விழாவுக்கு நான் தலைமை வகிக்க வேண்டுமென்று கட்டளை இட்ட கனவான்கள் எல்லாம் என்னைப்பற்றி அதிகம் கூறினார்கள். அது என்னை மிகுதியும் வெட்கப்படும்படி செய்துவிட்டது. அதனால் நான் என்ன பேசவேண்டு மென்று எண் ணினேனோ, அதை மறக்கச் செய்தது. அவர் களுக்கு என்னிடமும், எனது இயக்கத்திடமும் உள்ள பற்றும், அவர்களின் இயற்கையான பெருந்தன் மையும், அளவுக்கு மீறி என்னைப் புகழச்செய்தது. அப்புகழுரைகளுக்கு நான் சிறிதும் அருகனல்ல, ஆனாலும் (இல்லை இல்லை முழுதும் பொருந்தும் இன்னமும் அதிகமாயும் பொருந்தும் என்கின்ற கூச்சல்) அதற்கு வந்தனம் செலுத்துகின்றேன்.

இயக்கம் ஆரம்பித்த காலத்தில் எதிர்ப்புகள் பலமாய் இருந்தது. இன்னும் யாவரும் ஏகமனதாய் ஆதரிப்பதாகவும் எண்ண இட மில்லை. இன்னும் அதிக எதிர்ப்பு இருக்கிறது. ஆயினும், இத்தகைய மகான்கள் எல்லாம் ஆதரவு அளித்து வருவதைக் கண்டு, மிக தைரியங்கொண்டு, அந்த ஆசையின்மீது அவர்கள் உரையை நான் சகித்துக் கொண்டி ருக்கிறேன். குடிஅரசைப்பற்றி மிக அதிக மாகக் கூறினார்கள். அதில் உள்ள குற்ற மெல்லாம் எனக்குத் தெரியும். அதில் உள்ள மெல்லின, வல்லினம் போன்ற பல இலக் கணப் பிழைகளும் மற்றும் பல பிழைகளும் எனக்குத் தெரியும். இதற்காக நான் இலக் கணம் கற்கப்போவதில்லை. இவ்வாண்டு விழாவுக்கு எனக்குக் கடிதம் அனுப்பா விட் டாலும் எங்கிருந்தாலும் ஓடி வந்துவிடுவேன். இந்த நிலையில் உள்ள என்னையே தலைமை வகிக்க வேண்டுமென்று கூறியது எனது பாக்கியமே யாகும். சிறந்த கல்வியாளர்களும், பெரியார்களும் நிறைந்த இந்த ஜில்லா வாசிகளான நீங்கள் இவ்வியக்கத்துக்கு இவ்வளவு ஆதரவு காட்டி வருவதைக் கண்டு நான் பெருமை அடைவது மட்டுமல்ல, மற்ற ஜில்லாவாசிகளும் உங் களுடன் போட்டியிட்டு தங்கள் சுய மரியாதையை நிலைநிறுத்துவதில் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டு மென்று மீண்டும் அறிவித்துக் கொள்ளு கிறேன்.

தமிழ் ஓவியா said...

சுயமரியாதை

சுயமரியாதை இயக்க மென்றோரியக்கம் தோன்றிய காலத்தில் பலர் பல விதமாகப் பேசியதுண்டு. ஆனால், இப்பொழுதோவெனில், இவ்வியக்கம் பலரால் ஒப்புக் கொள்ளக்கூடிய தாயும், மனிதனுடைய வாழ்விற்கும் உலக முற் போக்குக்கும் இன்றியமையாததென நம்மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள். உணர்ந்தும் வருகிறார்கள். இப்பொழுது எங்கு பார்த்தாலும் சுயமரியாதைப் பேச்சாகத்தானிருக்கிறது. நம் நாடு, வெளிநாடு தேசியவாதிகளும்கூட இச்சுயமரியாதையென்னும் வார்த்தையை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஸ்ரீ காந்தியும் சுயமரியாதை யைப்பற்றி பேசுகிறார். ஒத்துழையாமையே சுயமரியாதைக்காக ஆரம்பித்ததே ஒழிய சுயராஜ்யத்திற்காக அல்ல. இப்பொழுது கொஞ்சகாலமாய் நமது நாட்டில் நடந்துவரும் ராயல் கமிஷன் பகிஷ்காரம் என்கின்ற கூச்சல்கூட சுயமரியாதைக் காகத்தான் என்று சொல்லுகிறார்கள்.

இச்சுயமரியாதைச் சங்கத்தின் கொள் கைகள் என்னவெனிலோ, பிறப்பில் உயர்வு தாழ்வில்லை என்பதும், மேல் கீழ் இல்லை யென்பதும் தானேயல்லாமல் எந்தத் தனி வகுப்பாரையும் இழிவுபடுத்தவில்லை யென் பதையும் உங்களுக்கு நினைப்பூட்டு கின்றேன். ஆனால் நம் நாட்டுப் பார்ப்பனர்கள் தங்களை ஏதோ துவேஷிப்பதாகக் கூறி வருகின்றனர். இது அக்கூட்டத்தாரின் யோசனையின்மை யாலும், பேராசையாலுமே ஏற்படுகிறது. ஆனால் தாழ்த்தப்பட்டவர்களென்று சொல்லிக்கொள்கிறவர்களுக்கும் நமக்கும் சுயமரியாதை தத்துவம் எவ்வளவு பயன்படு கிறதோ அதைவிட அதிகமாக பார்ப்பனர் களுக்கும் பயனுண்டு.

பார்ப்பனரல்லாதாராகிய நாம் எவ்வளவு தூரம் இழிவுபடுத்தி வைக்கப் பட்டிருக்கின் றோமோ, அந்த அளவுக்கு பார்ப்பனர்கள் சுகம் அனுபவித்து வருகிறார்கள். நாம் எவ்வளவுக் கெவ்வளவு கொடுமையுடன் நடத்தப்படு கின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு அவர் களுக்கு நன்மையாகவே இருக்கிறது. இவ்வியக்கத்தின் பயனால் நாம் மாத்திரம் சுகப்படுவதல்லாமல், பார்ப்பனர்களும் இதன் மூலமாய் தங்கள் இழிவைப் போக்கிக் கொள்ளுகிறவர்களாகிறார்கள். உண்மையாக, கடைசியாக இவ்வியக்கத்தால் யாருக்காவது கடுகளவாவது துன்பம் நேரிடுமா என்றால் இல்லவே இல்லை. ஆனால், அரசாங்கத் தாருக்கு மாத்திரம் கொஞ்ச காலத்திற்கு கஷ்டமாகத்தானிருக்கும். ஏனெனில், நாம் எவ்வளவு தூரம் சுயமரியாதையற்றிருக்கின் றோமோ, அவ்வளவு தூரம் நம்மை இழிவுபடுத்தி நம்மிடமிருந்து அவர்கள் கொள்ளையடித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், அவர்களுக்குங் கூட கொஞ்ச நாளைக்குள் புத்தி வந்து விடும். எத்தனை நாளைக்குத்தான் தூங்குகிறவன் தொடையில் கயிறு திரிப்பதென்று சொல்லி விலகி விடுவார்கள். பின்னர் யாரும் சுதந்திரத் துடன் வாழலாம். ஆகையால், வாழ்க்கையின் பரிசுத்தத்திற்கும் சுயமரியாதையே அடிப் படையானது. இதைப்பற்றி எத்தனையோ பெரியார்கள் கூறியிருக்கின்றனர். கவரிமான் ஒரு மயிரிழப்பின் உயிர் வாழாது என்பதுபோல், மனிதனும் மானமிழந்து வாழ விரும்பான். ஆகவே, நம் மானத்தை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், மனிதத் தன்மை யோடிசைந்த வாழ்க்கை நடத்தவேண்டு மென்றால் சுயமரியாதைதான் வேண்டற்பாலது. இப்பொழுது மணி 12 ஆகிவிட்டது. மீண்டும் மாலையில் இம்மகாநாடு கூடவேண்டியிருப்ப தால் இத்துடன் எனது பிரசங்கத்தை முடித்துக் கொள்வதுடன் எனக்கு அன்புடன் இவ்வக் கிராசனப் பதவியை அளித்த அன்பர் களுக்கும் எனது மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்திக் கொள்ளுகிறேன்.
- குடிஅரசு - சொற்பொழிவு - 04.12.1927

Read more: http://viduthalai.in/page1/72762.html#ixzz2pCSFNtjY

தமிழ் ஓவியா said...

இருக்கின்றபல்கலைக்கழகங்களைஊக்கப்படுத்தாமல் புதியபல்கலைக்கழகங்களைதொடங்குவதா?

மத்தியக் கல்வித் துறையில் நடைபெறும் குளறுபடி- குழப்பங்களை நீக்க
பிரதமர் மன்மோகன்சிங், திருமதி. சோனியா காந்தி தலையிடவேண்டும்

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை

இருக்கின்ற பல்கலைக் கழகங்களை ஊக்கப்படுத்தாமல், புதிய பல்கலைக் கழகங்கள் தொடங்குவதற்கான அறிவிப்பா? மத்தியக் கல்வித் துறையில் நடைபெறும் குளறுபடி, குழப்பங்களை நீக்க பிரதமர் மன்மோகன்சிங், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் திருமதி.சோனியா காந்தி ஆகியோர் தலையிட்டு நடவடிக்கை எடுப்பது அவசர - அவசியம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (U.P.A.) ஆட்சியில் மிகவும் குளறுபடிகளுக்கு ஆளான ஒரு துறை இருக்கிறது என்றால் அது, மனித வள மேம்பாட்டுத் துறை என்று அழைக்கப்படும் மத்தியக் கல்வித் துறையாகும். (மாநிலத்தில் அ.தி.மு.க. ஆட்சியின் கல்வித் திட்டங்கள் செயற்பாடுகள் அதற்குச் சற்றும் சளைத்ததல்ல. அது ஒருபுறம் இருக்கட்டும்).

மிகப் பெரிய தவறு

கல்வித்துறையை கபில்சிபல் அவர்களிடம் கொடுத்ததைவிட மிகப் பெரிய தவறு வேறு இல்லை. மக்கள் தொடர்போ, சமூகநீதிக் கொள்கை பற்றிய புரிந்துணர்வோ அறவே இல்லாத மேல்தட்டு வர்க்கத்தவர் அவர்.

அவர் சில கல்வியாளர்கள் என்பவர்களிடம் பல விஷயங்களை விட்டு, அவர்களது விருப்பு வெறுப்புக்கேற்ப தத்தம் இஷ்டத்திற்கு உயர் கல்வித் துறை தொடங்கி, பல வகையிலும் பிரச்சினைகளை உருவாக்கும் நிலவரங்களையும், குழப்பங்களையுமே உருவாக்கி விட்டனர்!

அவருக்கு அடுத்து வந்த திரு. பல்லம்ராஜூ அவர்கள் மேல்தட்டு அறிஞர். அவரது தெலங் கானா பிரிவினை பிரச்சினை காரணமாக அவர் கல்வி அமைச்சராக தொடர்ந்து பணியாற்றி கோப்புகளைப் பார்த்து, அதிகாரிகளிடம் வேலை வாங்குகிறாரா இல்லையா என்பதே நாட்டு மக்களுக்கு புரியாத புதிராக உள்ளது.

மத்தியப் பட்டியலில் ஒன்றான பொதுப் பட்டியல் (Concurrent List) என்பதில் 1976இல் நெருக்கடி காலத்தில் கல்வியை இணைத்ததின் விளைவு, *(மாநிலப் பட்டியலிலிருந்து எடுத்து அதில் இணைப்பு).

குழப்பங்களும், குளறுபடிகளும்!

பல்வேறு குழப்பங்களும், முரண்பாடுகளும், குளறுபடிகளும் மத்திய கல்வித் துறையில் தொடர்ந்து அரங்கேறி தலைவலியை மக்களுக் கும், ஆட்சியாளருக்கும் ஏற்படுத்தவே செய் துள்ளன!

எடுத்துக்காட்டாக, உயர்கல்வி என்பது சீனாவில் 20 விழுக்காடு என்றால், நம் நாட்டில் 6 முதல் 8 விழுக்காடுதான் என்ற பரிதாப நிலை!

ஒருபுறத்தில் பல்கலைக் கழகங்கள் புதிதாக 1500 உருவாக வேண்டும் நம் நாட்டில் என்று அறிவுசார் கமிஷன் (Knowledge Commission)பரிந்துரை,

தமிழ் ஓவியா said...

1500-க்கு மேல் தேவை என்று 11ஆவது அய்ந்தாண்டு திட்டத்தில் மதிப்பீடு - பரிந்துரை,
ஆனால், தேவையற்று வெளிநாட்டில் போணி யாகாத சில பல்கலைக் கழகங்களை இங்கே நுழைப்பது என்ற தன்னிச்சையாக முடிவு செய்து மத்திய மனித வளத்துறை அமைச்சர், வேண்டு மென்றே இங்கே துவக்கப்பட்ட நிகர் நிலைப் பல்கலை கழகங்கள்மீது வீண்பழி தூற்றி, வழக்கு மன்றம் வரை சென்று கடந்த 4 ஆண்டுகளாக அவற்றின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட் டுள்ள வேதனையான நிலையில் இவ்வாண்டு மேலும் 269 புதிய பல்கலைக் கழகங்களைத் தொடங்க அறிவிப்பு!

இதில் உள்ள சுய முரண்பாட்டைக் கவனிக்க வேண்டும்; இருப்பதை - வளருவதை ஊக்கப்படுத் தாமல் மூடி, புதியதைத் துவக்குவார்களாம்! என்னே விசித்திரம்!

கண்டனத்திற்குரியது

இந்த நிலையில் பல்கலைக் கழகங்களோ, கல்லூரிகளோ வெளிநாட்டு, உள்நாட்டுப் பல்கலைக் கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் எது செய்தாலும் மத்திய கல்வித் துறையின் முன் அனுமதி பெற்றாக வேண்டும் என்பதாக 2010 புதிய மசோதாவில் இணைத்து, புதியதாக அறிவிப்புகள் வந்திருப்பது மிகவும் கண்டனத் திற்குரியதாகும்.

பல்கலைக் கழகங்களின் சங்கத் தலைவர் ஏ.ஐ.கூ வேந்தர் திரு. விசுவநாதன் அவர்களும், கல்வி யாளர்களும் இதனைக் கண்டித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்கள். (செய்தி கீழே காண்க)

தான்தோன்றித்தன முடிவை திரும்பப் பெற...

அவர்தம் கருத்து மத்திய கல்வித்துறைக்கு காலத்தால் தரப்பட்ட சரியான அறிவிப்பு ஆகும். கல்வியாளர்கள் எவரையும் கலந்து ஆலோசிக் காமல், தான் தோன்றித்தனமாக எடுத்த முடிவு இது. இது தவறானதாகும். திரும்பப் பெற காரணங்கள் வருமாறு:

1. 2010 விதிகள் பற்றிய வழக்கு நீதிமன்றத் தில் விசாரணையில் உள்ளது.

2. சில பேர் தடையாணையும் வாங்கியுள் ளனர்.

3. பல்கலைக் கழகங்கள் என்றால் அவை தன்னாட்சி (Autonomous) உரிமை படைத் தவை. அதில் தேவையற்ற அரசியல் தலை யீடுகளோ, குறுக்கீடுகளோ இருக்கக் கூடாது.

தவறுகள் நடந்தால் மட்டுமே அரசுகள் குறுக்கிட உரிமையும், அதிகாரமும் உண்டு.

சமூக முன்னேற்றத்திற்கு உதவி

எனவே தேவையில்லாத அடுத்த தேர்தல் இன்னும் சில மாதங்களில் வரவிருக்கும் நிலை யில், இருப்பவைகளை மாற்றி குழப்பங்களை கோலோச்ச செய்யும் முடிவுகளை கைவிட்டு, இயங்கும் பல்கலைக் கழகங்கள் - நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளை வளர்ச்சி யடைய வழி காட்டினால் அது சமூக முன்னேற்றத் திற்கு மத்திய அரசு உதவியதாகும்!

அவசர அவசியம்!

எனவே, மத்திய அரசு, பிரதமர் மன்மோகன் சிங், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் திருமதி. சோனியா காந்தி ஆகியோர் இதில் தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்து, குளறுபடிகளைத் தவிர்ப்பது அவசரம் - அவசியம்.கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

முகாம்: சிங்கப்பூர்

29.12.2013

Read more: http://viduthalai.in/page1/72810.html#ixzz2pCTL8kQX

தமிழ் ஓவியா said...


தமிழ் பிரபாகரனை கைது செய்ததற்கு தமிழர் தலைவர் கண்டனம்ஜூனியர் விகடன் வார ஏட்டின் செய்தியாளர் திரு. தமிழ் பிரபாகரனை இலங்கை அரசு அங்கே அவர் ஏதோ நிழற்படம் எடுத்தார் என்ற சாக்கைக் காட்டி கைது செய்து நடவடிக்கை எடுக்க முனைந்ததை, நாம், வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இதுபற்றி நமது நாடாளுமன்ற உறுப்பினர், வெளியுறவுத் துறை அமைச்சரிடம் பேசி, ஜனநாயக உரிமைப்படி பத்திரிகையாளர் சுதந்திரத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொண்டு அவரை விடுவித்து இருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

ஏற்கெனவே அங்கே பல பத்திரிகையாளர்கள் காணாமற் போனதாக தகவல்கள் உண்டு. அவர்கள் சிங்களவர்கள் ஆன போதிலும்கூட!

பிரபாகரன் என்ற பெயரேகூட அந்த ஆட்சியினருக்கு ஒவ்வாமையைத் தந்திருக்கக் கூடும்!

உடனடியாக இதற்குரியவைகளைச் செய்து அவரைத் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்திருப்பது நமது மத்திய அரசின் முதற் கடமையாகவே கருதுகிறோம்!

பத்திரிகையாளருக்கு, தூதுவரைப் போல சில தனி உரிமைகளும் உண்டு அவர்கள் கடமையாற்றும்போது என்பது விளக்கப்பட வேண்டியதில்லையே!


கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

29.12.2013

Read more: http://viduthalai.in/page1/72811.html#ixzz2pCTtSs6p

தமிழ் ஓவியா said...


தேவையற்ற பணம் நீரோடு செல்லும்; இயக்கத்திற்கு வருகின்ற பணம் ஈரோடு செல்லும்!

மலேசியாவில் தமிழர் தலைவர் எழுச்சியுரை

மலேசியத் திராவிடர் கழகத் தலைவர் பி.எஸ். மணியம் அவர்களுக்கு தமிழக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். உடன் துணைத் தலைவர் காந்தராஜ், பொதுச்செயலாளர் மு.சு.மணியம், பினாங்கு மாநில தலைவர் அண்ணாமலை, மகேந்திரன் ஆகியோர் உள்ளனர்.

கோலாலம்பூர், டிச.29- தேவையற்ற பணம் நீரோடு செல்லும், இயக்கத்திற்கு வருகின்ற பணம் ஈரோடு செல்லும் என திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் உரையாற்றினார்.
மலேசிய திராவிடர் கழகத்தின் உண்டியல் ஏந்திய தோழர்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி கோலாலம்பூர் டைனாஸ்ட்டி விடுதியில் 21.12.2013 அன்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்றார்.

முன்னதாக டைனாஸ்ட்டி விடுதியில் விருந் துடன் கூடிய நிகழ்ச்சிகள் நேர்த்தியாக வடி வமைக்கப்பட்டிருந்தன.

சிறப்பான வரவேற்பு

மொழி உணர்வு, இன உணர்வுடன் கூடிய பாடல்கள் உணர்ச்சிகளை மிகுதிப்படுத்தின. சரியாக 7 மணிக்கு வருகை தந்த தமிழர் தலைவரை சீருடை அணிந்த தோழர்கள் மிடுக்குடன் அழைத்துச் சென்றனர். மலேசிய இயக்கப் பொறுப்பாளர்கள் ஆசிரியரை வரவேற்று மகிழ்ந்தனர்.

நீண்ட நெடிய வரலாற்றுத் தொடர்பினை...

மிகப்பெரிய அவ்வரங்கில் அதிகமாகவே தோழர் கள் காணப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் தெரிவித்து, நலம் விசாரித்த வண்ணம் இருந்தனர். ஆசிரியர் அவர்களும், ஒவ்வொருவரின் பெயரை விளித்தும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களைக் குறிப் பிட்டும் நலம் விசாரித்த காட்சியானது தமிழர் தலைவருக்கும், மலேசிய இயக்கத்திற்குமான நீண்ட நெடிய வரலாற்றுத் தொடர்பினை வெளிப்படுத் தியது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சிகள் இரவு 7.30 மணிக்குத் தொடங்கின.

பி.எஸ்.மணியம்

மலேசிய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் மு.சு.மணியம் வரவேற்றார். தேசியத் தலைவர் பி.எஸ்.மணியம் தலைமை வகித்துப் பேசினார்.

அவர் தம் உரையில்,

மலேசியத் தமிழர்கள் பெரும்பகுதி தோட்டத் தொழிலாளர்களாக இருந்து வந்தனர். நிர்வாகத் தால் அடிக்கப்பட்டும், காரணமின்றி வெளி யேற்றப்படவும் செய்தார்கள். மலேசிய சமூகத்தில் இப்படி எல்லா நிலைகளிலும் ஏற்றத் தாழ்வுகளை நாம் கண்டிருக்கிறோம். இந்நிலையினையும் முற்றி லுமாக ஒழித்தது நம் பெரியார் இயக்கமே! அதன் வெளிப்பாடு இங்கு திரண்டிருக்கும் தோழர்கள். தங்களைப் பாதுகாத்தது இந்த இயக்கம் என்கிற நன்றி உணர்வோடு, இந்த இயக்கத்தைப் பாதுகாக்க, வந்த செம்மல்கள் இவர்கள். இவ்வியக்கம் செழிப் போடு இருக்க, பொருளியல் முக்கிய காரணமா கிறது. அந்த வகையில், இந்த இயக்கத்திற்கான சொந்தக் கட்டடத்தினைப் பெற தெருக்கள் முழு வதும் உண்டியல் ஏந்தி நன்கொடை பெற்றவர்கள் இவர்கள்.


தமிழ் ஓவியா said...

1974 ஆம் ஆண்டு தொடங்கி, 1980 ஆம் ஆண்டு முடிய 6 ஆண்டுகள் இவர்கள் போகாத தெருக்கள் இல்லை. நுழையாத வீடுகள் இல்லை. கூச்சம் என்பதை துச்சமாக நினைத்த தொண்டர்கள். கர்ப்ப நிலையில் ஒரு பெண்மணி நன்கொடை கேட்டு சென்றபொழுது, சாலையில் மயங்கி விழுந்தார். சில இடங்களில் சில காரணங்களை முன்னிட்டு, காவல் துறை கைதும் செய்தது. தீபாவளி அன்றுகூட உண்டியல் ஏந்தி சென்றார்கள். அன்றைக்கு 30 வயது இளைஞர்களாக இருந்தவர்கள், இன்றைக்கு 60 வயதில் வந்திருக்கிறார்கள்.

நம் இயக்கத்தில் 90 விழுக்காடு சாமானியர்களே உள்ளனர். அவர்களைக் கொண்டுதான் நாம் சாதித்து வருகிறோம். இன்றைக்கு நம் மலேசிய இயக்கத்திற்கு இரண்டு கட்டடங்கள் இருக்கக் காரணமே, நம் தோழர்கள்தான். நம்மோடு டத்தோ ச.சுப்பிரமணியம் போன்றோர் அருகில் இருப்பதும் நமக்குக் கூடுதல் பலம். தொடர்ந்து நாம் பெரியார் கொள்கையில் வெல்லவேண்டும் என உறுதியேற் போம் என பி.எஸ்.மணியம் அவர்கள் உரையாற்றி னார்.

மலேசிய நலத்துறை அமைச்சர்
டத்தோ ச.சுப்பிரமணியம்

தொடர்ந்து மலேசிய நலத்துறை அமைச்சர் டத்தோ ச.சுப்பிரமணியம் அவர்கள் உரையாற்றி னார்.

அவர் உரையாற்றுகையில் கூறியதாவது:

செய்த உதவிகளை ஏற்று நன்றி சொல்பவர்கள் மிகக் குறைவு. செய்யாமல் விடுபட்டவைகளைச் சொல்பவர்களே அதிகம். ஆனால், திராவிடர் கழகம் என்றைக்கும் தனித்துவத்துடன் செயல்படும். ஆசிரியர் வீரமணி அவர்கள் தமிழகத்திலிருந்து சிறப்பு விருந்தினராக வருகை புரிந்துள்ளார். இளமைத் துடிப்போடு விளங்குபவர் அவர். அவரைத் துடிப்புமிக்க தலைவர் என்று சொல்வது பொருந்தும். மருத்துவர் என்பதால் அவரின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். மாதத்தில் 25 நாள்கள் சுற்றுப்பயணத்தில் இருப்பதாகக் கூறினார். ஆச்சரியமாகவும், வியப்பாகவும் இருந்தது. அவர் நீண்ட காலம் தமிழ்ச் சமுதாயத்திற்குப் பணியாற்ற வேண்டும்.

உண்டியல் தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் தமிழக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். சிறப்பு செய்யப்பட்டோரில் ஒரு பகுதியினர்.

தமிழகத்தில் கருவான திராவிடர் இயக்கம் மலேசியாவிலும் உருவானது. மலேசிய மக்கள் ஒரு சமூக அமைப்பாக ஒன்றிணைய தமிழ்நாடு முக்கிய காரணம். அந்த அமைப்பு இன்று வெற்றி பெற் றுள்ளது. மக்களிடையே ஏற்றத் தாழ்வுகள், பெண் ணடிமை, தமிழ்ப் பள்ளிகளின் நிலை என எல்லாமே மாற்றம் பெற்றது.

மேன்மையான சமூகத்தையும், அறிவான மனி தரையும் உருவாக்குவதே பெரியாரின் நோக்கமாக இருந்தது. இந்த நோக்கத்தை நாம் மென்மேலும் வளர்த்தெடுக்கவேண்டும்.
இன்றைக்கு சில இளைஞர்கள் வன்செயல் கலாச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். மதுவுக்கு அடிமை யாகி, திருட்டு, கொலை என வன்செயல்கள் வளர்ந்து போகிறது. ஒரு பகுதி இளைய சமுதாயம் உழைக்க விரும்புகிறது. மற்றொரு பகுதியினரோ உழைக் காமல் அதுவும் விரைவில் பணக்காரராக ஆசைப் படுகிறார்கள். இந்த நிலைகளில் இருந்து மீள, சிந்தனைத் தெளிவு வேண்டும்.

அதை வலியுறுத்தும் ஒரே இயக்கம் திராவிடர் கழகம். அதனைப் பயன்படுத்தி, இளைஞர்கள் தங் களை உயர்த்திக் கொள்ளவேண்டும் என டத்தோ ச.சுப்பிரமணியம் உரையாற்றினார்.

கழக முரசம் பட்டம்

இந்நிகழ்ச்சியில், தேசிய தலைவர் பி.எஸ்.மணியம் அவர்களுக்கு கழக முரசம் என பட்டம் வழங்கப் பட்டது. அதற்கான சான்றிதழை வழங்கி, பய னாடை மற்றும் நினைவுச் சின்னம் அளித்து தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்பித்தார்.

தொடர்ந்து உண்டியல் தொண்டர்கள் ஒவ் வொருவருக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

மலேசியா முழுவதிலுமிருந்து எண்ணற்றோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவர்களுக்குத் தமிழக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்பு செய்தார். இறுதியில், அனைவரும் ஆசிரி யருடன் ஒன்றாக இணைந்து ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர்.

தமிழ் ஓவியா said...

இந்நிகழ்வுகளில் மக்கள் ஓசை நிர்வாக இயக் குநர் சுந்தர் சுப்ரா, ஆசிரியர் ராஜன், மலேசிய திரா விடர் கழக தேசிய துணைத் தலைவர் எஃப்.காந்த ராஜ், உதவித் தலைவர்கள் க.ராமன், மு.பாலன், பொதுச்செயலாளர் மு.சு.மணியம், துணைப் பொதுச்செயலாளர் கே.ஆர்.அன்பழகன், பொரு ளாளர் இரா.கெங்கய்யா, அமைப்புச் செயலாளர் கா.நா.கோபால், இளைஞரணி தலைவர் ப.தமிழினி யன், செயலாளர் ம.இளவரசன், மகளிரணி தலைவர் வழக்குரைஞர் சு.குமுதா, செயலாளர் க.மலர்விழி, மத்திய செயலவை உறுப்பினர்கள் ச.ராமசாமி, பொன்ராமன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்துகொண்டனர்.

தமிழர் தலைவர் உரை

நிகழ்வின் தொடக்கத்தில் மருதமுத்து அவர் களின் படத்தை தமிழர் தலைவர் அவர்கள் மேடை யில் திறந்து வைத்தார். பின்னர் அவர் உரை யாற்றும்பொழுது,

கூட்டுக் குழுவாக செயல்பட்டு இழந்ததை மீட்டது இந்த இயக்கம். எப்பேர்ப்பட்ட துன்பங் களிலும் மலேசிய தோழர்கள் பணிபுரிவார்கள். உழைத்து உழைத்து புத்தாக்கம் பெறும் தோழர்கள் நீங்கள். மலேசிய நாட்டின் மொத்தத் தோழர்களும் குடும்பம் குடும்பமாகத் திரண்டுள்ளீர்கள். தோழர் மருதமுத்து கட்டடத்தின் மீட்புப் பணி என்பது நன்றி மறக்க முடியாத ஒன்று. இப்படத்தினைத் திறந்தது, எனக்குக் கிடைத்த பேறு என்றே சொல்வேன். ரத்தம் இல்லாவிட்டால் உடல் ஏது? தொண்டர்கள் இல்லாவிட்டால் இயக்கம்தான் ஏது? பணக்காரர்களும், முதலாளிகளும் இந்த இயக்கத்தில் இல்லை. இங்கு இருந்தால் கசப்புதான் கிடைக்கும். மான உணர்ச்சிக்கு ஆட்பட்டு, லட்சியத்தினைப் பரப்புபவர்களே, இப்பணியை செய்ய முடியும். உண்டியல் கருத்து எப்படி உருவானது? பெரியாருக்கு மாலை போடுவார்கள்; புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். கையொப்பம் வாங்குவார்கள்; இவைகளுக்குக் காலணா, அரையணா வாங்கி அதனைச் சேர்த்து வைத்து, மக்களுக்கே திருப்பி கொடுத்தவர் பெரியார்.
பாடுபட்டு இயக்கம் வளர்த்தவர்

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார்

பெரியார் இயல்பிலேயே பெரும் பணக்காரர்; எனினும், அதனைத் துறந்து மக்களுக்காக உழைக்க வந்தவர். தமிழ்நாட்டில் உண்டியல் ஏந்தியும், துண்டு ஏந்தியும் உருவாக்கியவைதான் இன்றைய கல்வி நிறுவனங்கள். இப்படி வசூலித்து சமூகத்திற்குச் செய்வது என்பது மாபெரும் மனித மாண்பிற்கான அடையாளம். அதேநேரம் சொத்து சேர்ந்தால், அது என்ன பாடுபடுத்தும் என்பதையும் நாம் அறிவோம். ஒரு கட்சியில் இரண்டாயிரம் ரூபாய் மிச்சம் இருந்தாலே, குழப்பம் வந்துவிடும். யாரிடம் அதனைக் கொடுப்பது என்கிற பிரச்சினைகள், அதனால்தான் பெரியார் அவர்கள், அறக்கட்டளை என்கிற ஏற்பாட்டினை செய்தார். பெரியார் ஒரு ரூபாயினைக்கூட பாதுகாத்தவர். கூட்டங்களில் அவருடன் புகைப்படம் எடுக்க, நிறைய பேர் வரு வார்கள். நானும், புலவர் இமயவரம்பன் அவர்களும் ஒவ்வொருவரிடமும் புகைப்படம் எடுப்பதற்கு காசு வாங்குவோம். இறுதியில், பத்து பேர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள் என, அய்யாவிடம் தொகையைக் கொடுப்போம். அவரோ பணம் குறைகிற மாதிரி தெரிகிறதே, என்பார். என்மீது பதினோரு முறை வெளிச்சம் (குடயளா) பட்டதே; ஆனால், நீங்கள் பத்து பேரிடம்தானே வாங்கியி ருக்கிறீர்கள் என்பார். அந்த அளவிற்குப் பாடுபட்டு இயக்கம் வளர்த்தவர் பெரியார்.

இப்படி, உருவாக்கிய அறக்கட்டளையை ஆதிக்கவாதிகள் அழிக்க நினைத்தார்கள். வரி என்கிற பெயரில் நிறுவனங்களை ஒழிக்க நினைத் தார்கள். பெரியார் காலத்தில் 15 லட்சம் ரூபாய் வரி, மணியம்மையார் காலத்தில் அது ரூ.60 லட்சம்; நான் பொறுப்பேற்ற பிறகு ரூ.80 லட்சம் என அதி கரித்துக்கொண்டே போனது. எப்பேர்ப்பட்ட ஏகாதிபத்தியத்தையும் எதிர்க்கும் வல்லமை படைத் தது பெரியார் இயக்கம். அவ்வகையில், நீதிமன்றம் சென்று, இவை அனைத்தும் மக்கள் சொத்து என்பதை நிரூபித்து, வெற்றி கண்டோம். இந்த இயக்கம் மக்களுக்காகப் பாடுபடும் இயக்கம். இந்த சொத்தும் மக்களுக்கான சொத்து. அதேபோன்ற உணர்வோடு மலேசிய இயக்கமும் செயல்பட்டு வருகிறது. மருதமுத்து அவர்களை, அவரின் குக்கிராமத்தில் குடிசை வீட்டிற்குச் சென்று பல முறை சந்தித்து வந்திருக்கிறேன். அவர் ஒரு தியாகச் செம்மல்; திறக்கப்பட்டது அவரின் படம் மட்டுமல்ல; என்றென்றும் நமக்கான பாடம். மற்ற அமைப்புகளுக்கு கோடி கோடியாகப் பணம் கொடுத்து, பயன் பெறுவார்கள். ஆனால், நம் இயக்கத்திற்கு எதை எதிர்பார்த்துக் கொடுக்கிறார் கள். இன எழுச்சி, சமூக மாற்றம், சமத்துவம் ஆகியவற்றை எதிர்பார்த்தே கொடுக்கிறார்கள்.

மலேசிய நலத்துறை அமைச்சர் டத்தோ ச.சுப்பிரமணியம் அவர்களுக்கு மலேசிய திராவிடர் கழகம் என்றென்றும் நன்றி பாராட்டவேண்டும். இவர் போன்ற உயர்ந்த உள்ளம் படைத்தோர் அரிது. பெரியார் உலகம்!

தமிழ்நாட்டில், திருச்சி சிறுகனூரில் பெரியார் உலகம் ஒன்றை அமைக்க உழைத்து வருகிறோம். பெரியாருக்குமுன், பெரியாருக்குப் பின் உள்ள அனைத்துப் பதிவுகளும் அங்கே இடம்பெறும்.

தந்தை பெரியாருக்கு 40 அடி உயர பீடத்தில், 95 அடி உயர சிலை எழுப்ப இருக்கிறோம். மொத்தம் 135 அடி உயரம். டிசம்பர் 2 ஆம் தேதி, எனக்குப் பிறந்த நாள் வந்தது. பொதுவாக அந்த நாளில், நான் ஊரில் இருப்பதில்லை. எனினும், 81 ஆம் ஆண்டு பிறந்த நாளினைக் கொண்டாடவேண்டும் எனத் தோழர்கள் கேட்டுக்கொண்டார்கள். நான் மறுத்து, அப்படி விழா எடுத்தால், பெரியார் உலகம் அமைய நிதி தாருங்கள் எனக் கேட்டு, அன்றைய தினம் கழகத் தோழர்கள் வசூலித்த 1005 பவுனுக்குரிய தொகையை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மூலம் வழங்கினார்கள்.

அசையும் சொத்து - அசையாச் சொத்து!

அடுத்து,பெரியார் உலகத்திற்காக உங்களிடமும் உண்டியல் ஏந்தி வருவோம். ஏனெனில், பெரியார் பேருலகத்திற்கு உலகளாவிய பங்களிப்பு இருக்க வேண்டும். பெரியார் இயக்கத்தில்தான் நிறைய பணம் இருக்கிறதே, பிறகு ஏன் வசூல் செய்கிறீர்கள் என சிலர் கேட்கின்றனர். விதை நெல்லை கடைசி வரை பாதுகாக்கவேண்டும். அதனை எடுத்துச் செலவழித்துவிடக் கூடாது. எங்களிடம் அசையும் சொத்து - அசையாச் சொத்துகள் நிறைய உள்ளன.

நாடு முழுவதும் இருக்கின்ற தோழர்கள் எங் களின் அசையும் சொத்து; எங்களின் லட்சியங்கள் எங்களுக்கு அசையாச் சொத்து.

ஆகவே தோழர்களே, நன்றாக உழையுங்கள் என்று கூறி மற்ற பணம் நீரோடு செல்லும்; இங்கே வருகின்ற பணம் ஈரோடு செல்லும் என்று கூறி முடிக்கிறேன் என தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page1/72789.html#ixzz2pCUZpJpz

தமிழ் ஓவியா said...


பெரியார் உலகம் - பெரியார் பேருருவச் சிலை தோழர்களே, கவனம்! கவனம்!!

கழகத் தோழர்களே! நமது நெஞ்சங்களில் ஒவ்வொரு நொடியும் உசுப்பி விட்டு இருப்பது பெரியார் உலகம்! பெரியார் உலகம்!! பெரியார் பேருருவச் சிலை! பெரியார் பேருருவச் சிலையே!!

முதற்கட்டமாக தமிழர் தலைவரின் 81ஆம் ஆண்டு பிறந்த நாளில் (2.12.2013) தஞ்சையில் நமது இலக்கை விஞ்சியும் தங்கத்திற்கான நிதியைத் தந்து மகிழ்ந்தோம்.

அந்த இலக்கு என்பது குறைந்தபட்சமே தவிர - அதுதான் முடிந்த இலக்கு அல்ல! தேவைக்கான அய்ந்து விழுக்காடே அது!

பல மாவட்டங்கள் இலக்கை விஞ்சி இலச்சினை பதித்து விட்டன. சில மாவட்டங்கள் இன்னும் கணக்கையே தொடங்க வில்லை; வேறு சில மாவட்டங்கள் பாதிக் கிணறு தாண்டி யுள்ளன.

வெளி நாட்டுச் சுற்றுப் பயணத்தில் இருக்கும் நமது தலைவர் ஜனவரி முதல் வார இறுதியில் தமிழகம் திரும்ப உள்ளார்கள்.

அதற்குள் அவசர அவசரமாக, கச்சையை இறுக்கிக் கட்டி, கடமையைச் சக்கரமாக்கிச் சுழன்று சுழன்று; மற்றவர்களால் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்பதைச் செயலில் காட்டும் வகையில் கட்சிகளைக் கடந்து, தமிழ்ப் பெருமக்களை அணுகிப் பெரும் பொருள் திரட்டி, தந்தை பெரியார் தம் பெரும் பணிக்கு ஆயத்தமாவீர்! ஆயத்தமாவீர்!!

மாநிலப் பொறுப்பாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் கழகத்தின் அனைத்து அணிகளைச் சேர்ந்தவர்களும் ஒரு மூச்சுப் பிடியுங்கள் - நீங்கள் எதிர்ப் பார்ப்பதைவிட தந்தை பெரியார் அவர்களுக்காக அளப்பரிய அன்புடனும், ஆர்வத்துடனும் நிதியினை அளித்திடக் காத்திருக் கிறார்கள், அஞ்சல் துறை ஊழியரைப் போல அதனை பெற்றுக் கொள்வதுதான் நமது வேலை.

வெளிநாடு சென்று பிரச்சாரப் பணி ஆற்றி வருகை தரவிருக் கின்ற நமது தலைவரை வெறுங்கையோடு சந்திப்பதைவிட, 135 அடி உயரத்தில் (பீடத்தோடு) செம்மாந்து நிற்கவிருக்கும் சகாப்தத் தலைவருக்குச் சிலை எழுப்பும் - பெரியார் உலகம் படைக்கும் - பெரும் பணிக்கான நிதியோடு வருவீர்களேயானால், அது எவ்வளவு சிறப்பாக இருக்கும்! தலைவருக்கும் எத்தகைய மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

எண்ணிப் பார்ப்போம் - இலக்கை முடித்து இறும்பூ தெய்துவோம்!

- கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர்
திராவிடர் கழகம்
பெரியார் உலகம் நிதி ஒருங்கிணைப்பாளர்

சென்னை
30.12.2013

Read more: http://viduthalai.in/page1/72839.html#ixzz2pCVu9wJ3

தமிழ் ஓவியா said...


சிந்தித்துப் பார்


நீ கிணற்றுத் தவளையாக இருக்க விரும்புகிறாயா? அல்லது வேடந்தாங்கலில் வந்து இளைப்பாறிப் போகும் வெளிநாட்டுப் பட்சியாக இருக்க விரும்புகிறாயா? மனிதனே சிந்தித்துப் பார். - (விடுதலை, 22.9.1967)

Read more: http://viduthalai.in/page1/72838.html#ixzz2pCW5uqAL

தமிழ் ஓவியா said...

இந்தியச் சமுதாயம் பற்றி ஆப்பிரிக்கப் பாதிரியார்


டெஸ்மாண்ட் டுடு

நோபல் பரிசு பெற்றவரும் தென் ஆப்பிரிக்காவின் நிற வேற்றுமை எதிர்ப்பாளருமான ஆர்ச்பிஷப் டெஸ்மாண்ட் டுடு, தான் அம்பேத்கரைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை என்று இந்து நாளிதழ் நிருபரிடம் கூறியுள்ளார். இந்திய அரசியல் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக அம்பேத்கர் பங்கு பெற்று இருந்தார் என்பதை அறிந்தவுடன் டுடு மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார்.

மகாத்மா காந்திக்குச் செலுத்திய கவனத்தை நிற வேற்றுமைக்கு எதிராகப் போராடும் ஆப்பிரிக்கத் தலைவர்கள், அம்பேத்கர் மீது ஏன் செலுத்தவில்லை என்று டுடு-விடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், நாங்கள் தென் ஆப்பிரிக்காவில் இன அநீதிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும்போது நீங்கள் உங்கள் சக வாழ்வு நிலைமையை மாற்றி அமைப்பதற்கான போராளிகளைத் தேடிக் கொண்டிருந்தீர்கள். ஆகவே, வெளிப்படையாகவே அந்தந்த நாட்டின் செல்வாக்கும் சக்தியும் மிக்கவர்களை நாடிப்போக வேண்டியதாயிற்று என்று கூறினார்.

டுடு, இன வேற்றுமை பாராட்டும் அரசுக்கு எதிராகப் போராடும் ஆப்பிரிக்கர்களுடன் ஜாதி வெறுப்புகளுக்கு எதிராகப் போராடும் தாழ்த்தப்பட்டவர்கள் கூட்டு வைத்துக்கொள்வது இயற்கைதான் என்று குறிப்பிட்டார்.

நாம் எல்லோரும் ஜாதி வேற்றுமையைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். இந்திய சமூகத்தின் மற்றொரு பாதியினருக்கு நாம் ஏன் இந்தக் கொடுமையை அனுமதித்துக் கொண்டிருக்கிறோம் என்று கேள்வி எழுப்பிக்கொண்டு இருக்க வேண்டும், அது எல்லாம் எல்லோருக்கும் என்று எண்ணம் கொண்டு இருந்தால் உங்கள் அரசியல் அமைப்புச் சட்டம் கூறுவதைத்தான் நான் கூறுகிறேன்.

ஆர்ச்பிஷப், தாழ்த்தப்பட்டவர்கள் நிலைமை பற்றி இந்தியச் சமுதாயம் சவாலுக்கு இழுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறார். அதற்குக் காரணம், அது மனிதத் தன்மையைப் பாதிப்பதுதான் என்றும் கூறினார்.

நன்றி: தி இந்து 8.11.13

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


மனைவியை அடித்து, கையை உடைத்த கணவன் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது விசாரணை செய்த நீதிபதி முத்துசாமி அய்யர், மனுதர்மப்படி மனைவியை அடிப்பது குற்றமல்ல என்று தீர்ப்பளித்த வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

எம்மதமும் சம்மதம் இல்லை


நீங்கள் நாத்திகவாதியாக இருப்பதில் மகிழ்ச்சியே... ஆனால் உங்கள் பகுத்தறிவு, மற்ற மதங்களை சாய்ஸில் விட்டுவிட்டு இந்து மதத்தை மட்டும்தான் கேள்வி கேட்குமா?- புகழேந்தி, கள்ளக்குறிச்சி

என்னைப் போன்ற உண்மையான பகுத்தறி வாளனுக்கு எம்மதமும் சம்மதம் இல்லை!

அமாவாசை மூலம் தமிழக அரசியல்வாதிகளுக்கு குறுக்குவழியில் முன்னேறும் உத்தியைக் கற்றுக் கொடுத்தீர்கள். ஆனால், நீங்கள் ஏன் அரசியலில் இறங்கவில்லை? - பாஸ்கரன், திருப்பூர்

எனக்குனு ஒரு சமூகப் பார்வை இருக்கு. இப்ப குறிப்பிட்ட கட்சியில் சேர்ந்துட்டா, அந்தக் கட்சித் தலைமை என்ன சொல்லுதோ, அதுக்கு நான் கட்டுப்படணும். உதாரணத்துக்கு ஓட்டுக் கேட்கப் போகும்போது, பெண்கள் ஆரத்தி எடுத்துப் பொட்டு வைக்க வந்தால், இதெல்லாம் வேண்டாம், நம்பிக்கை இல்லைனு நான் சொல்லமுடியுமா? உங்க கொள்கையை எல்லாம் உங்களோடவே வெச்சுக்குங்க சார்னு கட்சி சொல்லாதா? இது எல்லாத்தையும்விட, நான் சுகவாசி. சினிமா நடிப்புக்காக மட்டும்தான் கஷ்டப்பட்டு இருப்பேன். மற்றபடி தேர்தல் பிரச்சாரத்துக்காக அலையிற மனோபாவம் எனக்கு இல்லை. என் கேரக்டரை நல்லா புரிஞ்சிக் கிட்டதாலதான் நான் அரசியலுக்கு வரலை!

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரித்த உங்களுக்கு, இப்போது இந்திப் படங்களில் நடிக்கும்போது மனநிலை எப்படி இருக்கும்? - சங்கர் குமார், நாசரேத்

நண்பா சங்கர்... அப்போது இருந்து இப்போது வரை, இந்தியை யாரும் எதிர்க்கலை; இந்தித் திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். நான் தமிழன். எனக்குத் தமிழ் தெரியும். கணிப்பொறி, செல்போன்னு நவீன சாதனங்களை இயக்க நான் ஆங்கிலம் கத்துக்குவேன். ஆனா, ஆர்வத்தின் பேரில் நான் கத்துக்க வேண்டிய மூணாவது மொழி எது?னு நான்தான் தீர்மானிக்கணும். ஒருவேளை நான் கேரளாவில் வாழ்க்கையை நடத்த வேண்டி இருந்தா, மலையாளம் கத்துக்குவேன். ஹைதராபாத்ல செட்டில் ஆக வேண்டியிருந்தா தெலுங்கு கத்துக்குவேன். ஆனா, காலம் முழுக்க தமிழ்நாட்ல வாழப் போறவனுக்கு எதுக்கு இந்தி? அதனால் சங்கர், திணிப்புதான் தப்பு; மொழி தப்பு கிடையாது. இந்தப் புரிதல் இருந்ததால்தான், இந்திப் படத்தில் நடிக்கும்போது எனக்கு எந்த மனவருத்தமோ, கூச்சமோ இல்லை!

நன்றி: ஆனந்த விகடன், 18.12.2013

தமிழ் ஓவியா said...

ஒரே பாலின ஈர்ப்பு : சரியா தீர்ப்பு?

இந்தியாவின் ஆகப் பெரிய வழக்கு மன்றத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கில் முடிவு கூறப்பட்டுள்ளது. இந்த முடிவு பலரின் எதிர்ப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. சிலரின் ஆதரவும்கூட கிடைத்துள்ளது.இந்திய நாட்டின் மாநிலங்களின், மத்திய அரசின் நேரடிப் பார்வையில் நடைபெறும் யூனியன் பிரதேசங்கள் எனப்படும் சிறு மாநிலங்களிலேயே, உயர் வழக்கு மன்றம் ஒன்றினைப் பெற்றிருக்கும் மாநிலமாக டெல்லி விளங்குகிறது. டெல்லி உயர் வழக்கு மன்றம் தந்த முடிவுக்கு எதிர்ப்பாகச் செய்யப்பட்ட மேல்முறையீட்டின் மீதுதான் ஆகப் பெரிய வழக்கு மன்றம் முடிவைக் கூறியுள்ளது.

வழக்கு, தன்பாலினச் சேர்க்கை / உறவு குற்றமா, அல்லவா என்பது பற்றியது. தகுதியான வயது உள்ள இருவர் தனித்து உறவு கொண்டிருந்தால், அது குற்றமாகக் கருதப்படக் கூடாது என்பது உயர் வழக்கு மன்றத்தின் முடிவு. இப்படிப்பட்ட உறவைக் குற்றம் என்றும் அதற்காகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் இ.பி.கோ பிரிவு 377 கூறுகிறது. அதன்படி தண்டனை 10 ஆண்டுகள் என்கிறது.

மெக்காலே எழுதியது

இ.பி.கோ. எனப்படும் இந்தியக் குற்றவியல் சட்டம் ஆங்கிலேயர் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டத்தை எழுதியவர் லார்டு மெக்காலே. இந்தியாவின் கல்வித் திட்டத்தை உருவாக்கியவரும் இவரே. 1837இல் இ.பி.கோ.வை எழுதித் தந்தார். 1860 முதல் அது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. எழுதிய காலத்தின் நிலைக்கேற்ப குற்றங்கள் குறிக்கப்பட்டு, தண்டனைகளும் கூறப்பட்டன.

19ஆம் நூற்றாண்டின் பழக்க வழக்கங்கள் 21ஆம் நூற்றாண்டில் பல மாறுதல்களைப் பெற்றுவிட்டன உலகம் முழுவதும்! இந்திய நாடும் மக்களும் அதற்கு விலக்கல்ல. எனவே, சில சட்டங்கள் திருத்தப்பட வேண்டும், நீக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கைகள் மக்களிடமிருந்து எழுப்பப்பட்டன. அவற்றில் பல ஏற்கப்பட்டன. சில ஏற்கப்படவில்லை. அப்படி எழுப்பப்பட்ட கோரிக்கைகளில் ஒன்றுதான் தன்பாலின உறவு தண்டிக்கப்படக் கூடிய குற்றமாக்கப்படக் கூடாது என்பது! அதற்காக இ.பி.கோ. 377 தக்கவாறு திருத்தம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை டெல்லி உயர் வழக்கு மன்றம் ஏற்றது. 2009ஆம் ஆண்டில் ஏற்கப்பட்ட கோரிக்கையை ஆகப் பெரிய வழக்கு மன்றம் 2013 இறுதியில் நிராகரித்து நீக்கிவிட்டது. இன்றைய நிலையில் பழைய சட்டமே நீடிக்கிறது. தன்பாலின உறவு குற்றம், அதற்குத் தண்டனை என்ற நிலை மீண்டும் ஏற்படுத்தப்பட்டு விட்டது.

தமிழ் ஓவியா said...

அவசரக் கோலத்தில்...

முடிவை எழுதிப் படித்த நீதிபதி(ஜி.எஸ்.சிங்வி) தனது பதவிக்காலத்தின் கடைசி நாளில் இதை அறிவித்துள்ளார். அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்த முடிவு என்கிறார்கள் சட்டம் கற்றோர். உயர் வழக்கு மன்ற முடிவு இ.பி.கோ. 377 பிரிவு முழுவதுமாக நீக்கப்பட வேண்டும் எனக் கூறவில்லை, அப்பிரிவில் பலவகைக் குற்றங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் மனச் சம்மதத்துடன், மனமகிழ்வுக்காக வயது வந்தவர்கள் தனித்த முறையில் உறவு கொள்வது மட்டும் குற்றமாக்கப்படக் கூடாது என்றுதான் குறிப்பிட்டுள்ளது. ஆகப்பெரிய வழக்கு மன்ற மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவான் (டைம்ஸ் ஆப் இந்தியா 13-_12_13). வல்லுறவு, சிறுவர்களுடன் உறவு கொள்ளுதல், விலங்குகளுடன் உறவு கொள்ளுதல் ஆகியவை உயர் வழக்கு மன்ற முடிவின்படியும்கூட, தண்டிக்கப்படக் கூடிய குற்றங்கள்தான் இன்றளவும்! ஆகப் பெரிய வழக்கு மன்றம் இதனைக் கவனிக்கவேயில்லையே, என ஆதங்கப்படுகிறார் ராஜீவ் தவான்! முடிவைக் குறைகூறுவதோ, முடிவெடுத்தவரின் உட்கருத்தை உற்றுப் பார்ப்பதோ, கட்டுரையின் நோக்கம் அன்று! மாறாக, முடிவெடுக்கக் கூறப்பட்ட காரணம் இருக்கிறதே, தன்பாலின உறவு என்பது இயற்கையின் கட்டளைக்கு மாறானது என்று இருக்கிறதே, அது சரியானதுதானா என ஆய்வது மட்டுமே! மதங்கள் மறைந்தன மெக்காலேயின் இ.பி.கோ. வருவதற்கு முன் இந்தியாவில் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே முடிவுகள் கூறப்பட்டு தண்டனைகள் அளிக்கப்பட்டன. இந்துக்களுக்கு மனுசாத்திரம், இசுலாமியர்களுக்கும் கிறித்துவர்களுக்கும் அவரவர் மதச் சட்டங்கள் அடிப்படை! ஆளுக்கொரு மாதிரியான சட்டம் இருந்ததால், முடிவுகளும் ஆளுக்குத் தக்க மாதிரி இருந்தன. அதனை மாற்றி ஒரே சீரான தண்டனைகள் அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில்தான் இ.பி.கோ. எழுதப்பட்டது. மனு சாத்திரப்படி கொலை செய்த பார்ப்பனனுக்கு தலைமயிரை மொட்டை அடிக்க வேண்டியது மட்டுமே தண்டனை! மற்றையோர்களுக்கு சிரச்சேதம். இந்த முறை இ.பி.கோ வந்த பிறகு ஒழிந்தது. அதனாலேயே ஆர்.எஸ்.எஸ் இன்றளவும் மெக்காலேயைக் கரித்துக் கொட்டுகிறார்கள். இயற்கையின் கட்டளையை மக்களுக்கு அறிவித்தது யார்? கடவுளா? மதங்களா? மத நூல்களா? ஆகப் பெரிய வழக்குமன்றம் விவரிக்கவில்லை! கிறித்துவத்தின் கடவுள் கூறிய முதல் கட்டளையையே முதல் மனித ஜோடி (ஆதாம், ஏவாள்) மதிக்கவில்லையே! மதிக்காமல் உடல் உறவு கொண்டு காயீன், ஆபேல் என்ற பிள்ளைகளைப் பெற்றார்கள்? இந்த எதிர்ப்புப் போக்கை யூத, இசுலாமிய மதங்களும் ஏற்று தத்தம் மத நூல்களில் எழுதி வைத்துக் கொண்டுள்ளனவே! இயற்கை எழுச்சியே இன்ப நுகர்ச்சி இயற்கையானது. மனதில் தோன்றுவது. மூளையின் செயல்பாடுகளால் கிளர்ந்து எழுவது. அது இப்படித்தான், இந்த உறுப்புகளால்தான், இன்னாருடன்தான் என்றெல்லாம் மனம்தான் முடிவு செய்கிறது. விலங்குகள் எவையும் எவற்றுடனும் உறவு கொண்டு இனப் பெருக்கம் செய்கின்றன. மனிதர்களும் அதே போலவே இருந்துதான், வளர்ச்சி அடைந்து இன்னாருக்கு இன்னார் என்று வந்தபிறகும் பல மனைவிகள், பல கணவர்கள் என்றெல்லாம் நிலைமைகள் இருக்கின்றனவே! இன்ப நுகர்வு இதற்குக் காரணி என்றாலும் யார் கட்டளையை யார் மீறினார்கள் என்று கூறமுடியுமா? தந்தையுடன் மகளும் தாயுடன் மகனும் உறவு கொண்ட செயல்கள் பரவலாக இருப்பதால்தான் உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃபிராய்டு அதற்கு ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் எனப் பெயர் வைத்து, கிரேக்கப் பழங்கதைக் காலங்கள்தொட்டே இது இருந்து வருகிறது என்பதை அம்பலப்படுத்தினார். இந்நிகழ்வுகளில் யார் கட்டளையை எப்படி மீறினார்கள்?

தமிழ் ஓவியா said...

இந்துப் பழங்கதையில்கூட, பிரம்மா தன் மகள் சரசுவதியைப் பல ஆண்டுக்காலம் புணர்ந்தது குறிப்பிடப்பட்டு உள்ளதே! அப்பன் புணர்ந்த மகளான சரசுவதியைப் பின்னர் அவளது சகோதரன் சுயம்பு வைத்துக் கொண்டிருந்தது எழுதப்பட்டிருக்கிறதே! இவர்களுக்கு இயற்கைக் கட்டளை கிடையாதா? இவர்கள் மட்டும் இயற்கைக் கட்டளையை மீறலாமா? கடவுள்கள் செய்ததை இயற்கைக் கட்டளை என்று எடுத்துக் கொண்டால் என்னாவது? பதவிக் கூழுக்குப் பேசும் பேச்சா? கூழுக்குப் பாடிய _ வறுமையில் வாடிய புலவர்களைப் போல, பதவிப் பசியால் வாடும் பேச்சு வியாபாரி வக்காலத்துப் போட்டு வாதம் செய்கிறாரே, அவர் என்ன பதில் கூறுவார்? பேச்சு வணிகர் போய்க் கொண்டிருக்கும் மாளிகையைச் சேர்ந்த ஜவடேகர் என்பாரிடம் கருத்துக் கேட்டபோது சிவ, சிவா என்று கூவிக் கொண்டே தாடையில் போட்டுக் கொண்டு காதைப் பொத்திக் கொண்டாராம்! அவர் கூப்பிட்ட சிவன் கதை என்ன? தன்பாலினப் புணர்ச்சியில் ஈடுபட்டவன் தானே! அரிகர புத்திரன் _ அய்யப்பன் _ வந்த விதம் அந்தப் புணர்ச்சியால் தானே! நீர்த்தூங்கி எனப் பொருள்படும் நாராயணன் மூவுலகும் சுற்றிவரும் சோம்பேறி நாரதனைப் புணர்ந்து 60 பிள்ளைகளைப் பெற்றதும் தன் பாலினப் புணர்ச்சியின் மூலம்தானே! ஒருதலை உணர்வல்ல இயற்கைக் கட்டளை என்று ஆகப் பெரிய வழக்குமன்றம் கூறியதை கடவுள்களே மீறலாமா? அரிகரப் புணர்ச்சிக்கு அரன் ஆசை மட்டுமே காரணம்! 60 வருடப் பிள்ளைகளைப் பெற்றதற்கு நாரதனின் ஆசை மட்டுமே காரணம்! ஆனால் டெல்லி உயர் வழக்குமன்றம் இருவரும் விரும்பி, மனமொத்து, கொள்ளும் விருப்ப உறவைக் குற்றம் எனக் கூறாதே என்றுதான் கூறியது. புலன் நுகர்ச்சி, காம உணர்ச்சி போன்றவையே இத்தகைய உறவுக்குக் காரணம்! மலரினும் மெல்லிய காமம் காரணி! எனில், எப்படித் தவறெனக் கூறலாம்?

அந்த நாள் முதல்...

தமிழ் ஓவியா said...

திருமணமாகாத கன்னிப் பெண்களுடன் கலவி செய்திட, பெற்ற தந்தை விருப்புடன் கூறிய போதும், ஆண்களுடன் கலவி செய்த விருந்தாளிகளின் வரலாற்றை யூத, கிறித்துவ மதங்களின் நூலான ஆதியாகமம் கூறுகிறது.

SODOM என்ற ஊரில் இது நடந்ததால் அந்தப் புணர்ச்சிக்கு SODOMY என்றே பெயர் வைத்துவிட்டது இங்கிலீஷ்! ஆக, எது இயற்கைக் கட்டளை? கோனார்க் (ஒடிசா), கஜூரஹோ (பிகார்) கோவில்களில் வடிக்கப்பட்டிருக்கும் கலை அழகு ததும்பும் கற்சிலைகளிலும்கூட, தன்பாலின உறவுப் படிமங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றனவே! பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே வடிக்கப்பட்டவை இவை! அப்படி என்றால், இயற்கைக் கட்டளை மீறப்பட்டும் அத்தனை நூற்றாண்டுகள் ஆகிவிட்டன என்றுதானே ஆகிறது?

ORAL SEX எனப்படும் வாய்வழிக் கலவி, இ.பி.கோ 377இன்படி குற்றமல்ல என்று சட்டம் கொண்டுவந்த பிரிட்டிஷார் ஆண்ட காலத்திலேயே 1886இல் ஒரு முடிவும் 1925இல் ஒரு முடிவும் உயர் வழக்கு மன்றங்களில் கூறப்பட்டுள்ளன. பின்னரும்கூட, 2013இல் இப்படி ஒரு முடிவு என்றால்...? 2006இல் எடுக்கப்பட்ட கணக்கின்படி, 25 லட்சம் பேர் தன்பாலின உறவில் ஈடுபடும் நபர்கள், இவர்களின் உணர்வை, உரிமையை, மிகமிகச் சிறுபான்மையர் எனக்கூறி ஆகப் பெரிய வழக்கு மன்றம் புறந்தள்ளிவிட்டு, அவர்கள் செய்வது குற்றம் என்றால் என்ன அநீதி! இன்றைய நிலை இதுவே இ.பி.கோ. 377 கொண்டுவந்த பிரிட்டனில் ஒரே பாலினத் திருமணங்கள் சட்டப்படி செல்லத்தக்கன என்றே சட்டம் வந்துள்ளது. 2014 மார்ச் மாதம் 29ஆம் நாள் முதல் அச்சட்டம் நடைமுறைக்கு வருகிறது. ஒரே பாலினத் தம்பதியர்க்கு தேவாலயத்தில் ஆசீர்வாதம் வழங்க வேண்டுமென இங்கிலாந்தின் சர்ச்சுகளுக்கான ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. மூன்று மாதங்களில் அங்கேயே தலைகீழ் மாறுதல்கள் நடக்கும் என்கிறபோது இங்கே, இந்தியாவில்...? இவர்கள் என்ன பிரிட்டிஷ் ராணியை விஞ்சிய ராணி விசுவாசிகளா? எனும் கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியவில்லையே! மேல்முறையீட்டு வழக்கில் எல்லாம் முடிந்து தீர்ப்புக்கான தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது 27.3.2012இல்! 20 மாதங்கள் இருந்துவிட்டு 21ஆம் மாத மத்தியில் முடிவு அறிவிக்கப்படுகிறது. அந்த முடிவு பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத முடிவாக அமைந்துவிட்டது. முடிவைக் கூறியவர் மறுநாள் பிறந்தநாள் கொண்டாடி விட்டார். நம்மால் முடிவைக் கொண்டாட முடியவில்லை. பாரதத்தில் லெஸ்பியன் கங்கை நதி ஆகாயத்தில் இருந்ததாம். அதனைத் தரைக்குக் கொண்டு வந்து, இன்று ஓடிக்கொண்டிருக்கும் நிலையை உருவாக்கியவன் பகீரதன். அவன் செய்த கடும் தவத்தால் இது நடந்ததாம். அவன் இதற்காக எடுத்த முயற்சிகளைப் பகீரதப் பிரயத்தனம் என்பார்கள். மாமல்லபுரத்தில் அவனுடைய தவம் கல்லிலே வடிக்கப்பட்டு விளங்குகிறது. அந்த பகீரதனின் பெற்றோர் திரிதரன் எனும் அயோத்தி மன்னனின் மகள்கள்! ஆம், இரு பெண்களும் ஒரே கட்டிலில் கட்டிப் பிடித்துப் படுத்து இருந்ததால் பிறந்தவன்தான் பகீரதன்! இங்கேயும் தன்பாலினப் புணர்ச்சிதான். லெஸ்பியன் எனப்படுபவர்கள் மற்றைய நாடுகளில்! இந்தியாவிலும் உண்டென்பதற்கு அய்ந்தாம் வேதமான பாரதமே சாட்சி! இந்த வகையில் இயற்கைக் கட்டளையை மீறியதற்குத் தூண்டுகோல் யார்? எது? இன்ப நுகர்வுணர்ச்சி தானே! எப்படி இது குற்றமாகும்? தன்பாலின உறவு பாரதம் எழுதப்பட்ட காலத்திலேயே இருந்திருக்கிறது. கடவுள்களாலேயே கடைப் பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது எப்படி இயற்கைக் கட்டளையை மீறியதாகும்?

தமிழ் ஓவியா said...

இந்து மத யோக்யதை இ.பி.கோ. 377 விலங்குகளுடனான புணர்ச்சியைத் தண்டிக்கத்தக்க குற்றம் என்கிறது. சரி! தன்பாலின உறவு மலிந்து இருந்த இங்கிலாந்தில் 1260ஆம் ஆண்டு முதல் சட்டம் இருந்துள்ளது. 18ஆம் நூற்றாண்டில் எண்ணிக்கையும் பெருகி தண்டனையும் கடுமையானது. பலரும் பாதுகாப்பான இடம் என்று இந்தியாவுக்கு வந்து அந்தக் குற்றத்தைச் செய்ததால் இங்கும் அதே சட்டத்தை அமல் செய்து விட்டனர். ஆனால், விலங்குப்புணர்ச்சி இங்கே, புண்ணிய பாரத பூமியில் நிறைய இருந்ததால் சட்டப் பிரிவில் இதனையும் சேர்த்துவிட்டனர். சரியானதே! விலங்குப் புணர்ச்சியில் பிறந்த முனிபுங்கவர்கள்தான், இந்து மதத்தினர்களுக்கு ஒழுக்கம், நீதி, முறை, கடவுள்/இயற்கைக் கட்டளைகள் போன்றவற்றைக் கற்பித்தனர். மானைப் புணர்ந்து பெற்ற கலைக்கோட்டு முனி, நரியைப் புணர்ந்து பெற்ற ஜம்புக ரிஷி, பசுவைப் புணர்ந்து கவுதம ரிஷி, தவளையைப் புணர்ந்து மாண்டவ்ய முனி, முதலையைப் புணர்ந்து கார்க்கேய முனி, நாயைப் புணர்ந்து சவுநக ரிஷி (பட்டியல் நீளூம்) முதலியோர் பிறந்துள்ளனர். ஆகவே இந்தச் சட்டப்பிரிவு இந்தக் குற்றங்களைத் தண்டிக்கலாம். மாறுவதே மாறாதது இயற்கைக் கட்டளைப்படி கலவி செய்வது மனித இன விருத்திக்குத்தான்.

இன விருத்தியை மட்டும் மனதில் வைத்து புணர்ச்சியில் ஈடுபடுவது, ஓரறிவு உயிர் முதல் அய்ந்தறிவு உயிர் வரை உள்ளவற்றிற்கு இயற்கை. ஆனால் ஆறறிவு மனிதனுக்கு அப்படி அல்லவே! இனப் பெருக்கத்தைப் பின்தள்ளி, மன மகிழ்ச்சியை முன்நிறுத்தி உறவில் ஈடுபடுவதுதான் மனிதனின் இயல்பு, வழக்கம், இயற்கை! ஈர்ப்பு எதிர்பாலிடத்து ஏற்படுவதுபோல் சிலருக்குத் தன் பாலிடத்து ஏற்படுகிறது! சிலருக்கு இருவகைகளிலும் ஈர்ப்பு ஏற்படுகிறது! இது எப்படித் தவறு? இது எப்படிக் குற்றம்? காலம் மாற, மாற, கருத்துகளும் மாற வேண்டுமே! கால, தேச, வர்த்தமான என்று இதைத்தானே இங்கே கூறுகிறார்கள்? அறிவு வளர, வளர, அறிவியல் வளர, வளர அணுகுமுறைகளும் மாறவேண்டுமா, இல்லையா? மாறுவதுதானே, மாறாதது!

தமிழ் ஓவியா said...

இதைச் செய்கின்றனரே

ஆண் பெண் குறிப் புணர்ச்சி (PENOVAGINAL) என்பது இனப் பெருக்கத்துக்கு வழி. இருந்தும் கருத்தரிக்க முடியாத குறைபாடு உள்ளவர்களுக்குச் செயற்கை முறைக் கருத்தரித்தலை அறிவியல் தந்துள்ளது. மதத்தையும், கடவுளையும், இயற்கைக் கட்டளையையும் புறந்தள்ளி _ தேவைப்படுவோர் செயற்கைக் கருத்தரித்தலை ஏற்றுக்கொள்கின்றனரே! விலங்குகளுக்கும் செய்விக்கின்றனர்.

எங்கே போனது இயற்கைக் கட்டளை! அறிவியல் கண்டுபிடிப்பு இல்லாத நிலையில் யாருடனும் புணர்ந்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் _ ஒரே நிபந்தனையாக குறியில் நெய் தடவிக்கொள்ள வேண்டும் என்கிறதே மனுசாத்திரம்! இயற்கைக் கட்டளைக்கு எதிரானது அல்லவா? அக்காலச் சமூகம் ஏற்றுக் கடைப்பிடித்தது என்றால்... எது கட்டளை? மதநூல் எழுத்துகளா? மனிதத் தேவைகளா? குளோனிங் முறையில் டாலி ஆடு (DOLLY) உருவாக்கப்பட்டபோதுகூட இயற்கைக் கட்டளையைக் காட்டி எதிர்த்தார்கள். பின் அடங்கிப் போனார்கள். பலவகை விலங்குகளை குளோனிங் முறையில் உருவாக்கி இறுதியாக மனிதக் குழந்தையை உருவாக்கும்போது மீண்டும் எதிர்ப்புக் காட்டினார்கள். கடவுளிடம் விளையாடுகிறீர்களா? (ARE YOU PLAYING GOD?)” என்றே கேட்டார்கள். கமுக்கமாக அதுவும் நடந்து முடிந்துள்ளது என்பது செவிவழித் தகவல்.

அறிவியல் வழியே வேறு

ஆக இவர்கள் கூறும் இயற்கைக் கட்டளை பலவீனமானது. டிசம்பர் 13ஆம் நாள் செய்தியின்படி, ஆணின் விந்தணு சேர வேண்டிய திக்கில் பயணிக்காமல் வீணாகிப் போகும் விரயத்தைத் தவிர்க்கக் கூடிய (BIO ROBOT) பயோ ரோபாட் கண்டுபிடித்துள்ளார்கள்.

தமிழ் ஓவியா said...

விந்தணுவை ஒழுங்காகச் செல்லச் செய்து, செலுத்தச் செய்து கருத்தரிக்க மாபெரும் உதவியைச் செய்யும். இங்கேயும் இயற்கைக் கட்டளையின் இடுப்பு உடைக்கப்படுகிறது. இது அறிவியல் உலகம். அறிவியல் வேகத்திற்கு ஈடாகப் பயணம் செய்யாதவர்கள் காட்டு விலங்காண்டிக் காலத்திற்குத் தள்ளப்படுவார்கள். ஆகப் பெரிய வழக்கு மன்றத்தின் சிலர் இதனை உணர்ந்து செயல்படும் காலம் விரைந்து வரவேண்டும்! மூத்த வழக்குரைஞர் ஹரிஷ் சால்வே எழுதியதைப் போல (டுவிட்டரில் காண்க) இன்றைக்கு இ.பி.கோ.377 என்பார்கள்.

நாளைக்கு நாத்திகம் என்பார்கள். அப்புறம் கருப்பு உடையை சனிக்கிழமையில் அணியாதே என்பார்கள். இது என்ன கோமாளித்தனம் என்று கேட்கிறார். ஒரு தனிமனிதனின் கருத்து சட்டம் என்றாகிற நிலை. ஒரு வழக்கு மன்றம் ஒரு மாதிரி, வேறு வழக்கு மன்றம் வேறு மாதிரி என்றால், நாட்டில் அறமன்றமே கிடையாது போல் இருக்கிறதே!

வரலாற்றில் தன்பாலின உறவு

சாக்ரடீஸ், அவரது மாணவன் பிளேட்டோ ஆகியோர் தன்பாலின உறவு கொண்டவர்கள் என வரலாறு கூறுகிறது. அதுபோலவே, இந்துத்வா என நூல் எழுதி இந்துமத வெறியைக் கிளப்பி அதன் விளைவாக இந்தியா இரண்டாகப் பிரிக்கப்பட காரணியாய் அமைந்துவிட்ட விநாயக தாமோதர் சாவர்க்கர் கூட, தன்பாலின உறவுக்காரர் என்றே நள்ளிரவில் சுதந்திரம் (FREEDOM AT MIDNIGHT) நூலின் 417ஆம் பக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. (முதல் பதிப்பு _ ஜூலை 1976). எனவே மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி இன்றளவும் மனிதர்களால் செய்யப்பட்டு வரும் உறவு இயற்கைக் கட்டளையை மீறும் செயலாகும். இதுதான் அறம் திருமணச் சடங்குகள் எதனையும் கைக்கொள்ளாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் தன்மையைச் சட்டப்பூர்வ தம்பதியினர் எனும் தகுதி பெற்ற உறவு என்று எழுதிய அறமன்றங்கள் இங்கே இருக்கின்றன. அவர்கள் பிரிய நேர்ந்தால் அதனை ஏற்று சடங்குகளின்படி செய்து கொள்ளப்பட்ட இணையர் பிரிய நேர்ந்தால் என்ன நிலையோ அதே நிலை இவர்கட்கும் உண்டு என்று தீர்வுகண்ட அறமன்றங்கள் இங்கே உண்டு. தன்னை வளர்த்த தந்தையின் மனைவியுடன் (ராதா) வாழ்ந்த கடவுள் கிருஷ்ணனையே உதாரணமாகக் காட்டி இத்தகைய தீர்வுகளை அம்மன்றம் கூறியது. ஆகப் பெரிய வழக்கு மன்றத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் எழுதிய அறக் கருத்துகள் அவை.

இன்று எங்கே அத்தகைய தீர்வு? அறம் ஆளுக்கு ஆள் மாறுமா? எனில் அது அறமா? முடிவா? இத்தகைய முடிவுகள் வேண்டா. அறநெறிகளே தேவை! அறமன்றங்கள்தான் தேவை! இரண்டு பேருக்குக் கொடுமை மிகப் புகழ் பெற்ற எழுத்தாளரான ஆஸ்கர் வைல்டு, கணினி அறிவியலின் தந்தை எனப்படும் ஆலன் டூரிங் ஆகியோர் தன்பாலின உறவு கொண்டமைக்காகத் தண்டிக்கப்பட்டார்கள். சீரிய பகுத்தறிவாளரான அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் எடுத்த முயற்சிகளின் விளைவாக 2009இல் பிரிட்டிஷ் அரசு அநீதியான தண்டனைக்காக மன்னிப்புக் கேட்டது. தண்டிக்கப்பட்ட ஆஸ்கர் வைல்டு சிறைக்குப் போனார். சிறைக்குப் போனால் தன் ஆராய்ச்சி தடைப்படும் என்பதால் ஆலன் டூரிங் தன் ஆண்மைத் தன்மையை இழக்க வேதியியல் வழி தண்டனையை மேற்கொண்டார்.

எனினும் நிலைகுலைந்து போய் ஆய்வையும் மேற்கொள்ள முடியாமல் போனார். அரசு கேட்ட மன்னிப்பினால், என்ன பரிகாரம் ஏற்பட்டது? ஏற்பட முடியும்? என்றாலும் மன்னிப்புக் கேட்டார்கள்! அவர்கள் பிரிட்டிஷ்காரர்கள். இங்கேயோ இந்தியர்கள்! மன்னிப்புக்கூடக் கேட்க மாட்டார்கள்! எனவே, ஏற்படுவது நிரந்தரப் பாதிப்புதான்! வழக்குமன்றம் முடித்துக் கொண்டு விட்டது. சட்டமன்றம்தான் இனிமேல் கவனிக்க வேண்டும். மக்கள் மன்றம்தான் அதனைத் தூண்ட வேண்டும்!

தமிழ் ஓவியா said...

கருத்து


அண்மைக் காலங்களில் கற்பழிப்புக் குற்றவாளிகளுக்கு சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட தண்டனை வழங்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது. கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிகள் ஏற்கெனவே சிறையில் இருந்த காலங்களையே தண்டனையாகக் கருதி அவர்களை விடுவிக்கும் வழக்கம் உயர் நீதிமன்றம் மற்றும் கீழ் நீதிமன்றங்களில் உள்ளது. ஆனால், அவ்வாறு குறைந்த தண்டனை வழங்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் கிடையாது.- பி. சதாசிவம், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிதிருநங்கைகளை, பெற்ற பெற்றோரே மதிக்காத சூழல் இருப்பதால் சமுதாயத்திலும் அவர்களை யாரும் மதிப்பதில்லை. காவல்துறையில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் குடும்பப் பொறுப்பு இருக்கிறது. எங்களுக்குக் குடும்பம் என்ற ஒன்று இல்லை. எனவே, 24 மணி நேரமும் எங்களால் சேவையாற்ற முடியும்.

- அனுசியா சிறீ, திருநங்கை

மருத்துவப் பராமரிப்புக்காக சீன அரசு செலவிடுவதில் நான்கில் ஒரு பங்கையே இந்திய அரசு செலவிடுகிறது. நமது மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜிடிபி) 1.2% நாம் செலவிடுகிறோம். சீன அரசோ கிட்டத்தட்ட 3% செலவிடுகிறது. எனவே, தனியார் துறை சிறப்பாகச் செயல்படும் என்பதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை.

அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியாது என்றே நாம் நம்புகிறோம்; எல்லாவற்றையும் தனியாரிடம் கொடுக்கிறோம்; கூடுதல் பணத்தையும் அவர்களுக்குக் கொடுத்துவிட்டு நம்மாலேயே விடுவிக்க முடியாத கண்ணி ஒன்றை நாமே வைத்துவிட்டு அதில் நாமே அகப்பட்டுக் கொள்கிறோம்.

- அமர்த்தியா சென், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர்

தமிழ் ஓவியா said...

கலையும் இசையும் கடவுளுக்கல்ல..!


இந்தியாவில் உயர்ஜாதியினரால் மேடையேற்றப்படும் நாட்டியக் கலையும், பாரம்பரிய இசையும் அவர்களின் பொழுதுபோக்கிற்கும், தமது மதத்தைக் காப்பதற்கும், வர்ணதர்மத்தைக் காக்கும் ஜாதியைத் தக்கவைப்பதற்குமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால்தான் கலையிலும், இசையிலும் கடவுளர்களைப் பற்றி மட்டுமே பாடுவதும் ஆடுவதுமாக இருக்கின்றனர்.

இசையும் கலையும் மனித மன உணர்வின் வெளிப்பாடுகளாகத்தான் தோன்றின. இந்தியா நீங்கலாக உலகின் பிற நாடுகளில் இன்னும் இப்படித்தான் இருக்கின்றன. அங்கெல்லாம் இதில் ஒரு பகுதியாக வேண்டுமானால், கடவுளைப் பாடுவதும், தேவதூதர்களை வழிபடப் பயன்படுத்துவதும், மதத்திற்காகவுமாக இருக்கலாம். ஆனால், பெரும்பாலும் இசைக்கருவிகளைக் கொண்டு மட்டுமே இசைக்கோவைகளை உருவாக்கி அது இசைக்கப்படும்போது மனிதரின் உள்ளத்தை ஈர்த்து, அமைதியை இதமாகத் தரும் அருமருந்தாக இசை இருக்கிறது. ஆனால், இந்தியாவிலோ பெரும்பாலும் கடவுளர்க்கும், மதங்களுக்குமே பாரம்பரிய இசை பயன்படுத்தப்படுகிறது. மேலும், பாரம்பரிய இசை என்பது இது ஒரு சாராருக்கே உரியதாகவும் ஆக்கப்பட்டுள்ளது. அப்படி ஆக்கிக்கொண்டவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் கலையையும் இசையையும் அங்கீகரிப்பதுமில்லை; அவை இசையே அல்ல என்றும், கலையே அல்ல என்றும் சொல்லி வந்தனர். பழமைச் சமூகத்தைப் புரட்டிப்போட வந்த தந்தை பெரியாரும் திராவிட இயக்கத்தினரும், திராவிட இனத்தின் கலையையும், இசையையும் மீட்டெடுத்தனர். அவற்றில் மனித மேம்பாட்டிற்கும் ,தமிழ் மொழி உணர்விற்கும், திராவிட இன உணர்விற்கும் ஆக்கம் சேர்த்தனர். 75 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் இந்தக் குரலை ஒலித்து வந்துள்ளோம்.

தமிழ் ஓவியா said...

சாஸ்திரிய சங்கீதம் என்றும், கர்நாடக சங்கீதம் என்றும் சொல்லப்படுவது பழந்தமிழர் கண்டெடுத்த தமிழிசையே என்பது நிறுவப்பட்டுவிட்டது. என்றாலும், இன்னும் அந்த இசை மேடைகளில் தமிழ்ப் பாடல்கள் துக்கடாப் பாடல்களாகத்தான் கடைசியாகப் பாடப்படுகின்றன. ஓரிருவர் தமிழ்ப் பாடல்களுக்குச் சற்று கூடுதல் இடமளிப்பது ஆறுதல். ஆனாலும், தமிழ்நாட்டு இசை மேடைகளில் முற்று முழுதாக தமிழ்ப் பாடல்களே பாடும் நிலை வரும்வரை நாம் இந்தக் குரலை ஓயாமல் ஒலித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும். இந்தச் சூழலில்தான் மெல்ல மெல்ல மேல்தட்டு வர்க்கம் இசையென்றால் அது கடவுளுக்கு மட்டுமே ஆனதல்ல என்று கூறத் தொடங்கியுள்ளது. 2013ஆம் ஆண்டின் மார்கழி இசை விழாக்காலத்தில் முதல் முறையாக இந்தக் குரல் கேட்டது. கர்நாடக, சாஸ்திரீய இசை வடிவங்கள் எல்லாம் கடவுளைப் பற்றிப் பாடுவதற்கும் உணர்வதற்கும் மட்டும்தான் என்ற கருத்து நிலவுகிறது.

ஆனால் இந்த இசையையும் ராகங்களையும் வைத்துக்கொண்டு இன்றைய உலகத்தை அச்சுறுத்திவரும், இயற்கை ஆர்வலர்களைக் கவலைப்படுத்திவரும் புவி வெப்பமயமாதலைப் பற்றி சீஸன்ஸ் என்ற இசை ஆல்பம் தயாரித்து உலகெங்கும் கொண்டுசென்று இருக்கிறார்கள் வயலின் கலைஞர்களான கணேஷ்-_குமரேஷ் சகோதரர்கள். பூமி வெப்ப மயம் குறித்து ஒரு இசைத்தொகுப்பை வெளியிட்டுள்ளனர்.இதுபற்றி, ஒரு கலைஞனாகவும் அடுத்த தலைமுறைக்கு நல்ல விஷயங்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடும் நாங்கள் இருவரும் இந்த சீஸன்ஸ் ஆல்பத்தை இசையமைத்து உருவாக்கியுள்ளோம். மரம் வளர்க்கிறோம், செடி வளர்க்கிறோம் என்று சொல்லி, இயற்கையை நாம் காப்பாற்றிக் கொண்டிருப்பதாகப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். உண்மையில் இயற்கைதான் நம்மைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது (கல்கி, டிசம்பர் 22) என்று கூறியுள்ளனர். ``இசை என்பது ஜாதி, மதங்களைக் கடந்தது. குறிப்பிட்ட ஜாதியினர்தான் கர்நாடக இசையைப் பயில வேண்டும்; பாட வேண்டும் என்பதல்ல. அனைத்து ஜாதியினரும் இதில் ஆழ்ந்த புலமை பெறும் வகையில் நம் சூழல் மாறவேண்டும். பிற ஜாதியினரின் திறமையைத் திறந்த மனதுடன் அங்கீகரிக்கும் பார்வை இங்கே வேண்டும். இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த ஒப்பற்ற கலைஞர்கள் இசைக்கு அபாரமான தொண்டாற்றியுள்ளனர். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. கர்நாடக இசை என்பது ஜாதி, மதம் மட்டுமின்றி பக்தி, மொழி ஆகியவற்றையும் கடந்தது. ஒரு தலித், கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்று மியூசிக் அகடமியில் பாடவேண்டும். தலித்துகளும் சங்கீத கலாநிதி விருது பெறும் நாள் வரவேண்டும்- என்று பேசியிருப்பவர் பிரபல கர்நாடக இசை வாய்ப்பாட்டுக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா (தி இந்து, 18.12.13). இவர் பேசிய இடம் சென்னை கலாஷேத்ரா அரங்கம்(16.12.2013). இந்த மாற்றத்தை நாம் வரவேற்போம். இசையை, மனித மாண்புகளை உயர்த்திடப் பயன்படுத்தப்பட வேண்டும். எல்லாப் பேதங்களையும் நீக்கி மானுடத்தை ஒன்றுபடுத்தப் பயன்படுத்த வேண்டும்.

கவிப்பேரரசு வைரமுத்துவும் ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பெருவெள்ளம் உண்டாக்கிய பேரழிவுகளைப் பாடுபொருளாகக் கொண்டு அவர் ஒரு பாடல் எழுதி அதனை ஸ்ரீநிதி கார்த்திக் பரதநாட்டியமாக அரங்கேற்றவுள்ளார். இதுபற்றி, நிகழ்காலத்தின் மக்கள் பிரச்சினையைத் தள்ளிவைத்துவிட்டு கலைகள் முழுமைபெற முடியாது. வாழ்க்கை இரும்படித்துக் கொண்டிருக்கும்போது, கலை பூப்பறித்துக் கொண்டிருக்க முடியுமா? மக்கள், கலைகள் மீது ஆண்டாண்டு காலம் கொண்ட ஆதங்கம் இது.

மரபுகளை உடைக்கப் பார்க்கிறீர்களா என்று சிலர் கேள்வி கேட்கலாம். இல்லை. அப்படி இல்லை. ஆனால், விடுவிக்கப் பார்க்கிறோம். காலங்காலமாக ராதைகளுக்குக் கிருஷ்ணன் ஊதிய புல்லாங்குழல், இன்று இத்துப்போய் மேலும் சில ஓட்டைகள் கண்டுவிட்டது. கண்ணனுக்காக ஆடி ஆடி மூத்துப் போன ராதைகளுக்கு மூட்டு வலி வந்துவிட்டது. கூறியது கூறல் ஒரு குற்றம் என்றாகும்போது, ஆடியது ஆடல் குற்றம் என்றாகாதா? வந்து பாருங்கள். இது இளைஞர்களுக்கு மத்தியில் கணிசமான அதிர்வலைகளை ஏற்படுத்துமென்றே கருதுகிறோம்!

நமது இசை, நாட்டிய, சிற்ப மரபுகள் எல்லாம் பெரும்பாலும் மத வழிப்பட்டவை. இல்லாத கதை மாந்தர்களே பெரும்பாலும் கலைகளுக்குக் கருப்பொருளாகியிருக்கிறார்கள். இலங்கையில் நடந்த இனப் படுகொலை ஏன் இந்தக் கலையாளர்களின் கண்களுக்குத் தெரியவில்லை? அடுத்த ஆண்டு இதற்குத்தான் நான் முனைவேன். அதற்காக என்னை முன்மொழியும் கலைஞர்களை நான் வழிமொழிவேன்; துணையிருப்பேன்! என்று கவிப்பேரரசு கூறியுள்ளார். (ஆனந்த விகடன், 11.12.13) கலையும் இசையும் முழுக்க மக்களுக்கானதே தவிர, மதங்களுக்கும் கடவுளர்க்கும் ஆனதல்ல என்பதை சங்கீத விற்பன்னர்கள் உணரத் தொடங்கியுள்ளனர். இந்த நிலை வளரட்டும்; அதுவே தொடரட்டும்.

- அன்பன்

தமிழ் ஓவியா said...

காலத்தை வீணடிக்கும் இந்து மதம்


நல்ல செயல் செய்யக் கூடாத நாட்கள்....

இராகுகாலம் 1 மாதத்திற்கு 1.30 X 30=45
ஒரு ஆண்டிற்கு 540 மணி

எமகண்டம் 1 மாதத்திற்கு 1.30x30=45
ஒரு ஆண்டிற்கு 540 மணி

அஷ்டமி (மாதத்திற்கு 2 நாள்)
ஒரு ஆண்டிற்கு 48x12=576 மணி

நவமி (மாதத்திற்கு 2 நாள்)
ஒரு ஆண்டிற்கு 48x12=576 மணி

மரணயோகம் 1 மாதத்திற்கு 1.30x30=45
ஒரு ஆண்டிற்கு 540 மணி

கரிநாள் (மாதத்தில் 3 நாட்கள்)
ஒரு ஆண்டிற்கு 864 மணி

பிரதமை (பாட்டிமை மாதம் 2 நாட்கள்)
ஒரு ஆண்டிற்கு 48x12=576 மணி

சூரிய கிரகணம் ஒரு ஆண்டிற்கு
ஒரு நாள் 24 மணி

சந்திரகிரகணம் ஒரு ஆண்டிற்கு
ஒரு நாள் 24 மணி

மதம் சார்ந்த பண்டிகை ஆண்டிற்கு
33 நாட்கள் ஒரு ஆண்டிற்கு 33x24=792 மணி

ஆக, மொத்தம் 5052 மணி
(5052/24 மணி = 210 நாட்கள்)

ஆக ஆண்டிற்கு 365 நாட்களில் 210 நாட்கள் வீண்.

இந்து மத நம்பிக்கை என்ற பேரால் விலை மதிக்கமுடியாத நம் நேரம் வீணடிக்கப்படுகிறது. நம் மூளையில் இடப்பட்ட இந்த விலங்கை உடை. சாதனை படை. காலம் பொன் போன்றது,

-கடமை கண் போன்றது.

வேர்ல்டு தமிழ் எம்பசி,
வழி: கோபால் கிருஷ்ணன்

தமிழ் ஓவியா said...

சட்டம் கடமையைச் செய்யட்டும்


உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து, சில காலம் முன்பு ஓய்வு பெற்ற _- மேற்கு வங்கத்தைச் சார்ந்த ஜஸ்டிஸ் ஏ.கே.கங்குலி அவர்கள்பற்றி, பயிற்சி பெண் வழக்குரைஞர் கொடுத்த பாலியல் புகார்பற்றி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் மூவர் (ஒருவர் பெண் நீதிபதி உட்பட) விசாரணை நடத்தி தலைமை நீதிபதியிடம் தங்களது விசாரணை அறிக்கையைத் தந்தனர்.இவர்மீது சொல்லப்பட்ட புகார்களுக்கு முகாந்திரம் உள்ளது என்பதை விசாரணை செய்த மூன்று நீதிபதிகளின் அறிக்கை தெளி வாக்கி விட்டது.

இதனை ஒளிவு மறைவின்றி உண்மைகளை விசாரித்து தக்க தண்டனையை குற்றம் புரிந்தவருக்கு வழங்கி நீதியை நிலைநாட்ட வேண்டியது _- நாட்டின் நிர்வாகத் துறையின் தலையாய கடமையாகும்.

டில்லியில் பாலியல் நீதிக்காக பல நாள் நிர்வாகமே நிலை குலையும் அளவுக்கு மக்கள் திரண்டு கிளர்ச்சிகள் நடந்தன.

வளர் இளம் பிராய வாலிபர்களுக்குக் கூட _ துள்ளித் திரியும் பொறுப்பற்ற வயது என்றால்கூட -_ சட்டம் அவர்களை மன்னிக்கத் தயாராக இல்லை.

குற்றங்கள் நாட்டில் நடைபெறாது தடுக்க வேண்டிய பெருங் கடமை நீதித் துறைக்கே உண்டு; மக்களின் கடைசி நம்பிக்கையே இன்றைய நிலையில் நீதித்துறைதான்!

நீதியரசர்கள், ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்து நீதி வழங்கினால்தான் நாட்டில் பொது ஒழுக்கமும், ஒழுங்கும் காப்பாற்றப்பட முடியும்.

இந்த கங்குலி விவகாரத்தில் இதுவரை மறைத்து வைக்கப்பட்ட பல செய்திகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளன. பல தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியைத் தருவதாக உள்ளன.

தனது பேத்தி வயதுள்ள _- பயிற்சி வழக்குரைஞரை தன்னுடைய அறையில் தங்கும்படி நீதிபதி கங்குலி வற்புறுத்தினார். உரையாடும்போது இரட்டை அர்த்தமுள்ள பேச்சாகவே அவரது பேச்சிருந்தது; தன்னுடன் மது அருந்தவும் அப்பெண்ணை வற்புறுத்தினார் என்றெல்லாம் தொலைக்காட்சி ஊடகங்களில் செய்தி வருவதைக் கேட்கும்போது, வெட்கமும் வேதனையும் படமெடுத்து ஆடுகின்றன!

இந்த ஏ.கே. கங்குலி இப்போது மேற்கு வங்க மாநில மனித உரிமை ஆணையத் தலைவராகவும் உள்ளார். அவரை உடனே பதவி நீக்கம் செய்து, அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் வற்புறுத்தி வருகிறார்.

16.12.2013 அன்று வந்துள்ள பல செய்திகளைக் கண்டு மத்திய சட்ட அமைச்சர் கபில்சிபல் அவர்கள், அவர்மீது உடனே நடவடிக்கையை எடுக்க உச்ச நீதிமன்றம் ஏற்பாடு செய்ய வேண்டுமென்று பேட்டி கொடுத்துள்ளார்!

மகளிர் அமைப்புகள் பலவும் கிளர்ச்சிகளுக்கு முன்னோட்டமாகக் குரல் கொடுக்கத் துவங்கி விட்டன! ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் அவர்மீது பாயாமல் அவர் ராஜநடை போட்டு, நான் பதவி விலக மாட்டேன் என்று பிடிவாதமாகக் கூறுகிறார்!

நீதி பரிபாலனத்தில், நீதியை வழங்கினால் மட்டும் போதாது; நீதி வழங்கப்பட்டுள்ளது என்று மற்றவர்களுக்குத் தெரியும் வகையில் அமைய வேண்டும் என்று கூறுவது உண்டு; (Not only Justice done; it is also important Justice appears to be done) இப்பிரச்சினை மேலும் நாடு தழுவிய கிளர்ச்சியாக, பெருந்தீயாக ஆகுமுன்பே நீதிபதி கங்குலி மீது கிரிமினல் நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பால் இருக்க வேண்டும். அவர் நிரபராதி என்று காட்டி நிரூபித்துப் பிறகு வெளியே வரட்டும். அடிக்கடி நீதிபதிகள் தங்கள் தீர்ப்புரைகளில் எழுதுவார்களே சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்று.

வெறும் சந்தேகத்திற்கே அவ்வளவு முக்கியத்துவம் அச்சொற்றொடரில் இருக்கையில், அதிர்ச்சியூட்டக் கூடிய தகவல்கள் மூன்று நீதிபதிகளின் விசாரணை மூலமே வெளியாகியுள்ள நிலையில், மவுனமாக நீதித்துறையும் உள்துறையும் இருக்கலாமா?

அரசு இடத்தை ஆக்கிரமித்ததாகக் குற்றம் சுமத்தி உச்ச நீதிமன்ற நீதிபதியாக வந்திருக்க வேண்டிய ஒரு தாழ்த்தப்பட்ட (கிறித்துவ) நீதிபதியை அவருடைய தீர்ப்புகள் பலவும் மிகவும் சிறந்தவை என்ற நிலை இருந்தாலும், கட்டுப்பாடான பிரச்சாரத்தின் மூலமே அவரை விரட்டினரே!

இங்கே என்ன அளவுகோல்? இந்தக் குற்றம் புரிந்ததாக குற்றச் செயல்கள் பற்றி பிரஸ்தாபிக்கப்படும் நபர் உயர் ஜாதி என்பதால் அவருக்கு இப்படி ஒரு மென்மையான அணுகுமுறையா?

நாட்டில் மனுதர்ம ஆட்சியா பச்சையாக நடைபெறுகிறது என்று மக்கள் கேட்க மாட்டார்களா?

எனவே நீதியின் மாண்பைக் காப்பாற்ற உடனடியாக சட்ட நடவடிக்கைகளைத் தொடர வேண்டும்; அவரிடமிருந்து பதவி பறிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்மீது நடவடிக்கை சார்பின்றி நடைபெற வாய்ப்பு ஏற்படும்.

உடனே செய்ய வேண்டும்; இதை வற்புறுத்தி திராவிடர் கழக மகளிரணியினர் சென்னையில் தந்தை பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 காலை 11 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை தலைமைச் செயற்குழு உறுப்பினர் மானமிகு க. பார்வதி அவர்களின் தலைமையில் நடத்தியுள்ளனர்.

ஆங்காங்கே தொடர் பிரச்சாரம் நடைபெறும்.

- கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

தமிழ்ப் பல்கலையில் ஜோதிடக் கல்வியா?


தி இந்து தமிழ் நாளிதழில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் விளம்பரம் ஒன்று பார்த்தேன்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் திரு. திருமலை அவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்றாலும் .தந்தை பெரியார் பற்றாளர். அவரிடம் அன்பான வேண்டுகோள்: தயவுசெய்து ஜோதிட பட்டயப் படிப்பை நீக்கி சமுதாயம் சிறக்க உதவுங்கள்.

ஜோதிடவியல் ஓராண்டு பட்டயப் படிப்பு அறிவிப்பு வந்துள்ளது. ஜோதிடவியல் படிப்பை ரத்து செய்ய வேண்டும். ஜோதிடம் என்பது அறிவியல் அன்று, மூடநம்பிக்கை. .அரசு, அறிவியல்பூர்வமான கருத்துகளை மட்டுமே மக்களிடம் கற்பிக்க வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டம் சொல்கின்றது. ஜோதிடம் மதம் சார்ந்தது; மதச் சார்பற்ற அரசு பல்கலைக்கழகம் ஜோதிடத்தைப் பாடமாக _ பட்டயப் படிப்பாக கற்பிப்பது சட்டத்திற்கு முரணானது .

எனவே, அனைத்துப் பல்கலைக்கழகங்களும் ஜோதிடக் கல்வியை ரத்து செய்ய வேண்டும். பித்தலாட்ட ஜோதிடம், கல்வி அன்று. ஜோதிடம் அறிவியல் அன்று.

ஒரு மனிதனின் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதுகின்றனர். பிறந்த நேரமே யாருக்கும் சரியாகத் தெரியாதபோது, ஜோதிடம் எப்படி உண்மையாகும்? பிறந்த சில நிமிடங்கள் கழித்து வந்து செவிலியர் சொல்லும் நேரத்தை பிறந்த நேரம் என்று குறிக்கின்றனர்; பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதுகின்றனர்.

ஜாதகத்தை வைத்து திருமணப் பொருத்தம் பார்க்கின்றனர். எல்லாப் பொருத்தங்களும் உள்ளது என்று சொல்லித் திருமணம் செய்கின்றனர். சில நாட்களில் சண்டை வந்து மணவிலக்குக் கேட்கின்றனர். சிலர் எந்தப் பொருத்தமும், ஜோதிடமும் பார்க்காமல் திருமணம் செய்கின்றனர். பல்லாண்டுகள் சண்டை இன்றி ஒற்றுமையாக வாழ்கின்றனர்.

ஒருவரின் ஜாதகத்தை மூன்று ஜோதிடர்களிடம் கொடுத்து ஜாதக பலன்களைத் தனித்தனியாக எழுதச் சொல்லிப் பாருங்கள். மூன்றும் ஒரே மாதிரி இருக்கவே இருக்காது. மூன்றும் மூன்று மாதிரியாகவே இருக்கும்.

நாளிதழ்களில் வரும் ராசி பலனைப் படித்துப் பாருங்கள். ஒரே ராசிக்கு ஒரே மாதிரிதானே வர வேண்டும் ஒவ்வொரு நாளிதழிலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஜோதிடம் அறிவியல் என்றால் இப்படி வேறுபாடு ஒரே ராசிக்கு ஒரே நாளில் வருமா ? சிந்திக்க வேண்டாமா?

சுனாமி வரும் என்று எந்த ஜோதிடரும் சொல்லவில்லை. சொல்லி இருந்தால் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாமே! ஜோதிடர்களுக்குத் தெரிந்தால்தானே சொல்வார்கள்.

கண்ணன் என்ற ஜோதிடர் 5 கொலைகள் செய்து இப்போது சிறை சென்றுள்ளார். அவர் ஜாதகத்தை அவர் கணித்து இருக்கலாமே. இப்படித்தான் பல சாமியார்கள் ஜோதிடம் சொல்லி பித்தலாட்டம் செய்து வருகின்றனர். ஜோதிடர்கள் தொல்லை சாமியார்கள் தொல்லை தினசரி செய்தியாக வருகின்றது.

ஜோதிட பட்டயப் படிப்பு வேறு படித்துவிட்டால் நாட்டில் பித்தலாட்ட ஜோதிடர்கள் பெருகி விடுவார்கள். நாட்டில் தொல்லை இன்னும் அதிகமாகி விடும் பணத்தாசை காரணமாக.

பல்கலைக்கழகத்தினர் பித்தலாட்ட ஜோதிடத்தைப் பாடமாக கற்பிக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்.

தந்தை பெரியார் சொன்னது போல எதையும் ஏன்? எதற்கு? எப்படி? எதனால் என்று கேட்டுப் பாருங்கள்.

மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சொன்னது:

எனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் ஆயிரம் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள கிரகங்கள் மனித வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் என்பதில் எனக்குத் துளியும் நம்பிக்கை இல்லை.

- இரா.இரவி, மதுரை

தமிழ் ஓவியா said...

பள்ளிக்கூடம்


- பள்ளபட்டி கா.காளிராசன்

பவுர்ணமி நிலவு மகள், மேகத் திரைக்குள் மறைந்துகொண்டு இருந்தாள். கந்தசாமிக்குத் தூக்கம் வரவில்லை, புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தான். அவனது இமைகள் மூட மறுத்தன. அவனது மகனின் எதிர்காலம் அவனை வாட்டி வதைத்தது. இதுவரை பள்ளிக்கூடம் பக்கமே சென்றதில்லை, எப்படி டவுன் பள்ளிக்கூடத்தில் போய் மகனைச் சேர்ப்பது என்கிற அச்சமே, அவனது மனதை ரணமாக்கியது.

கந்தசாமி சிறுவயதாக இருக்கும்போது, உற்சாகமாய் தொடக்கப் பள்ளிக்குச் சென்று வந்தான். ஒன்றாம் வகுப்பில் நன்றாகப் படித்தான். மூன்றாம் வகுப்புக்கு வந்தபோது ஒரு புதிய ஆசிரியர் அவனது வகுப்பிற்குப் பாடம் எடுக்க வந்தார். அவர் மிகவும் கண்டிப்பானவர், கணக்கு வாத்தியார், நெற்றியில் நீண்ட நாமம் போட்டு இருப்பார். வீட்டில் இருந்து வரும்போது தண்ணீர் கொண்டு வந்து விடுவார். எந்தப் பையனையும் தொட மாட்டார்.

நீண்ட பிரம்பு ஒன்று வைத்து இருப்பார். தப்பாகச் சொன்னாலும் சரியாகச் சொன்னாலும் அடி விழுவது உறுதி. ஒருசமயம் அந்த ஆசிரியர் அடித்த அடியில் கந்தசாமிக்கு மண்டை வீங்கியே போச்சு. அது மட்டுமல்லாமல் நீங்களெல்லாம் எதுக்குடா பள்ளிக்கூடத்துக்கு வர்றீக? பன்னி மேய்க்கத் தான்டா லாயக்குனு சொல்லியவாறு திட்டித் தீர்த்தார். கந்தசாமியால் இந்த வார்த்தையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மறுநாள் காலையில் வழக்கம்போல பள்ளிக்கூடத்திற்கு சைக்கிளில் வந்துகொண்டு இருந்த அந்த ஆசிரியர் மீது கல்லெறிந்து அவரது மண்டையை உடைத்து விட்டான் கந்தசாமி. அன்றைக்கு பள்ளிக்கூடத்திற்கு முழுக்குப் போட்டவன்தான்.

அன்று இருந்த ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி இன்றும் அதே நிலையில்தான் இருந்தது. இப்பொழுது அய்ந்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டான் மணிகண்டன். ஆறாம் வகுப்பு படிக்க வேண்டும் என்றால் நகரத்துப் பள்ளிக்கூடத்துக்குத்தான் போக வேண்டும்.

தனியார் பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும் என்றால் பணம் கட்ட வேண்டும். கந்தசாமியிடம் அவ்வளவாக வசதியில்லை. அன்றாட கூலி வேலை செய்து வாழ்க்கையை ஓட்டுபவன். இப்படி பலவாறாக எண்ணியவாறு இருந்த கந்தசாமி தன்னை அறியாமலேயே தூங்கிவிட்டான்.

தமிழ் ஓவியா said...

நகரப் பள்ளிக்கூடத்துக்குப் போகப் போகின்றோம் என்கிற மகிழ்ச்சியில் மணிகண்டன் வேகமாக அதாவது அதிகாலையிலேயே எழுந்திருச்சி குளிச்சிட்டு ரெடியாயிட்டான். கந்தசாமி இன்னும் எழுந்திருக்கவில்லை. மணிகண்டன்தான் எழுப்பிவிட்டான்.

மணி எட்டை தன் ஓசையால் பக்கத்தில் இருந்த சர்ச் ஓசை எழுப்பியது.

என்னப்பா கந்தசாமி தகப்பனும் மகனும் எங்கேயோ கிளம்பிட்டாப்புல தெரியுது?

இவன பள்ளிக்கூடத்துல சேக்கப் போறேண்ணே

நல்ல விஷயந்தான், என்ன ஒன்னு படிச்சவன் பாட்டக் கெடுத்தான்கிற கணக்குல
போகும் போதே அபசகுணமா பேசுறானே, இவனெல்லாம் திருந்தவே மாட்டான்க, போறாம புடிச்ச பயல்க என மனசுக்குள்ளே திட்டினான்.

மூன்று கிலோ மீட்டர் கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்தபோது, வழியில் ஒரு பள்ளிக்கூடம் தென்பட்டது. பள்ளிக்கூடம் மிகப் பெரியதாக இருந்தது.

காமராஜர் மெட்ரிக்குலேசன் ஸ்கூல் என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் பள்ளியின் முகப்பில் இருந்தது. காமராஜர் உருவப் படம் பொறிக்கப்பட்டிருந்தது.

பள்ளிக்கூட கேட் மூடி இருந்தது. மணி 9.30 இருக்கும் வாட்சுமேனிடம் கந்தசாமி தன் பையனைப் பள்ளிக்கூடத்தில் புதிதாகச் சேர்க்கணும் எனக் கேட்டபோது, உன் பையன இங்கெல்லாம் சேர்க்க மாட்டாங்க. இது பெரிய பெரிய பணக்காரப் புள்ளக படிக்கிற பள்ளிக்கூடம், உன் பையன கார்பரேசன் ஸ்கூல்ல போய்ச் சேர்த்துவிடு என்றார்.

கந்தசாமி வாட்சுமேன் அறையில் மாட்டி இருந்த காமராஜர் உருவப் படத்தையே பார்த்தான்.

சரி சரி இடத்தக் காலி பண்ணுப்பா, பிரின்ஸ்பால் பார்த்தா என்னை வேலையில இருந்து காலி பண்ணிடுவார் என கந்தசாமியை விரட்டாத குறையாக விரட்டினான். வேறு வழியில்லாமல் அப்பள்ளியை விட்டு வேறு பள்ளிக்குச் செல்லுவோம் என்கின்ற எண்ணத்துடன் தன் மகனைக் கூட்டிக் கொண்டு நடந்தான்.

சற்றுத் தொலைவில் தேவமார் மேல்நிலைப் பள்ளி தென்பட்டது. கந்தசாமியின் மனம் ரணமாய் வலித்தது. பிச்சைப் புகினும் கற்கை நன்றே என்கிற ஆசிரியரின் குரல் கந்தசாமியின் காதில் வந்து அறைந்தது போல் இருந்தது.

தலைமை ஆசிரியரிடம் தன் மகனைப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றான். அதற்குத் தலைமை ஆசிரியர், சேர்த்துவிடுவோம். பள்ளிக்கூடத்திற்கு நான்கு சேர் வாங்கிக் கொடுத்திடலாமா? எனக் கேட்டார். ஒரு சேரின் விலை 350 ரூபாய் என்றார்.

கந்தசாமிக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

அந்தளவுக்கு என்ட்ட வசதியில்லீங்க ஒரு சேர் வேணும்னா வாங்கித் தர்ரேன்ங்க சார் என்றான்.

அதெல்லாம் முடியாது, வேறு பள்ளிக் கூடத்துல போய்ச் சேர்த்துக்கோ என்றார் தலைமை ஆசிரியர். வேறு வழியில்லாமல் அந்தப் பள்ளியில் இருந்து வெளியேறினான். அங்கிருந்த முத்துராமலிங்கத் தேவரின் முழு உருவப் படம் இவனைப் பார்த்துப் பரிதாபப்பட்டது போலத் தோன்றியது.

மணி 12 ஆனது. மணிகண்டனுக்குப் பசி எடுத்தது. சரி விஸ்வநத்தம் ரோட்டுல ஒரு பள்ளிக்கூடம் இருக்கு. அங்க போய் சேத்துவுடுறேன்டா, போற வழியில ஓட்டலில் சாப்பிட்டுக்கிடுவோம் என்று சொல்லியவாறு நடந்தான். வழியில் ஏதோ ஒரு அரசியல் கட்சிக்காரர்கள் ஜாதி ஒழிப்பு மாநாடு நடத்திக் கொண்டு இருந்தார்கள்.

கந்தசாமி வேடிக்கை பார்த்த வண்ணம் நடந்தான். அண்ணாமலை நாடார் உண்ணாமலை அம்மாள் நகராட்சி மேல்நிலைப் பள்ளி கந்தசாமியையும் மணிகண்டனையும் வரவேற்றது.

மாணவர்கள் மட்டும் பயிலும் பள்ளிக் கூடம், மாணவர்கள் ஊதா நிறக் கால் சட்டையும் வெள்ளைநிற மேல்சட்டையும் அணிந்து இருந்தனர். தலைமை ஆசிரியர் அறைக்கு முன்பாகச் சென்று நின்றனர் கந்தசாமியும் மணிகண்டனும். மதியம் மணி 2 ஆனது. தலைமை ஆசிரியர் சாப்பிட்டு விட்டு அவரது அறையில் வந்து அமர்ந்தார்.

என்னப்பா இந்த நேரம் வந்து இருக்க, காலையில வந்து இருக்கக் கூடாதா? என்றார் தலைமை ஆசிரியர். கந்தசாமியால் பேச முடியவில்லை. கண்களில் இருந்து கண்ணீர்தான் வந்தது. என்னப்பா நான் பேசிக்கிட்டே இருக்கேன். நீ என்னடானா பதில் பேச மாட்டேங்குற. சரி சரி நாளைக்குக் காலையில சீக்கிரமா வந்துரு. பையன் எங்க படிச்சான்.

எங்க ஊர்லதான் சார்.

என்ன பேருடா?

மணிகண்டன் என்றான்.

ஒழுங்கா சேட்டை செய்யாம படிக்கணும், விடுமுறை எதுவும் எடுக்கக் கூடாது என்றார் தலைமை ஆசிரியர். இன்னைக்கு அட்மிஷன் போட்டுறேன். நாளைக்கு வந்து சேர்ந்துக்கோ என்று கிளார்க் வசம் போகச் சொன்னார்.

அந்த அறையில் மாட்டப்பட்டிருந்த அம்பேத்கரும் பெரியாரும் மணிகண்டனை வரவேற்பது போல் இருந்தது. பள்ளியை விட்டு கந்தசாமியும் மணிகண்டனும் வெளியே வந்தனர். மீண்டும் பள்ளியின் பெயரை ஏறிட்டுப் பார்த்தான், அண்ணாமலை நாடார் உண்ணாமலை அம்மாள் நகராட்சி மேல்நிலைப் பள்ளி என்று இருந்தது. மெதுவாக உச்சரித்துப் பார்த்தான். அப்போது பள்ளிக்குள் இருந்து ஜாதிகள் இல்லையடி பாப்பா என்ற ஒரு மாணவனின் உரத்த குரல் கந்தசாமியைச் சிரிக்க வைத்தது.

தமிழ் ஓவியா said...

மருத்துவ அறிவியலின் வெற்றி துடிக்கிறது.... உலகின் முதல் செயற்கை இதயம்

பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் 75 வயது முதியவருக்கு உலகின் முதல் செயற்கை இதய மாற்று அறுவைச் சிகிச்சையினைச் செய்து பாரிசில் உள்ள ஜார்ஜஸ் போம்பிடௌ மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கார்மட் என்னும் உயிரி மருந்தியல் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்தச் செயற்கை இதயம் டென்மார்க்கைச் சேர்ந்த அய்ரோப்பிய ஏரோநாட்டிக் டிபன்ஸ் அன்ட் ஸ்பேஸ் (EADS) நிறுவனத்தால் மேம்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. லித்தியம் _அயன் பேட்டரியால் இயங்கக்கூடிய செயற்கை இதயத்தின் பேட்டரியினை உடலின் வெளிப்பகுதியில் அணிந்து கொள்ள வேண்டும்.

உயிரிப் பொருள்களுடன் மாட்டின் திசுக்களைச் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளதால் உடல் ஏற்றுக் கொள்ளாமலிருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது. பிளாஸ்டிக் போன்ற செயற்கை இழைகள் பயன்படுத்தப்படாமல் மாட்டின் திசுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் ரத்தம் உறைந்து கட்டியாவதையும் தடுக்கும் சிறப்பம்சத்துடன்கூடிய செயற்கை இதயம் 5 ஆண்டுகள் இயங்கும் செயல்திறன் கொண்டது.

ஆரோக்கியமான மனிதனின் இதயத்தின் எடை (250 கிராம் முதல் 300 கிராம்)யுடன் ஒப்பிடும்போது செயற்கை இதயம் மூன்று மடங்கு அதிகமாகும் (ஒரு கிலோவுக்குக் கொஞ்சம் குறைவு). இதற்கு முன்பு உருவாக்கப்பட்ட செயற்கை இதயங்கள் தற்காலிகப் பயன்பாட்டுக்கு மட்டுமே ஏற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


செய்தியும், சிந்தனையும்!


கோபம் வராதது - ஏன்?

செய்தி: மக்களவைத் தேர்தலில் பிஜேபியோடு மதிமுக நிபந்தனையில்லாக் கூட்டணி - ஈழத் தமிழர்களைக் கொன்ற ராஜபக்சேவுக்கு துணை போன காங்கிரசைத் தோற்கடிக்க வேண்டும். - வைகோ, ம.தி.மு.க. பொதுச் செயலாளர்

சிந்தனை: ஈழத் தமிழர்களைக் கொன்ற ராஜபக்சே மீது ஏற்படும் நியாயமான கோபம், சிறுபான்மை மக்களை பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்த நரேந்திர மோடியின் மீதும் ஏற்படாதது - ஏன்? தம்பிகளே பார்த்து ஓட்டுங்கப்பா!

Read more: http://viduthalai.in/e-paper/72989.html#ixzz2pFU029I8

தமிழ் ஓவியா said...


பெருமைமந்திரிப் பதவி பெரிதல்ல; பணக்காரனாக இருப்பதும் பெரிதல்ல; மனிதனாக வாழ்வதுதான் பெருமை. இழிவற்றவனாக வாழ்வதுதான் பெருமை.
(விடுதலை, 10.10.1973)

Read more: http://viduthalai.in/page-2/72990.html#ixzz2pFUrnz5O

தமிழ் ஓவியா said...

சிந்தனைத் துணுக்குகள்!

எப்படி தெரிந்ததோ?

கேள்வி: கடவுள் கருணாநிதி அல்லவா?

பதில்: கடவுளே நமது மனத்துக்கும் காயத்துக்கும் எட்டாதவராய் இருக்கும் போது, அவர் கருணாநிதி என்பது எப்படித் தெரிந்தது?

- சித்திரபுத்திரன்

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/73049-2014-01-03-10-57-14.html#ixzz2pKmXWK7x

தமிழ் ஓவியா said...

எலி பாவம்பாப்பா: அம்மா... அம்மா ஓடியாங்க, ஓடியாங்க. (அம்மா ஓடி வருகின்றாள்) என்னா கண்ணு என்னா?

பாப்பா: அந்த எலியைப் பாரும்மா... பாவம்.. அது மேல என்னமோ ஒன்று உட்கார்ந்து கிட்டு அழுத்துது... (அம்மா ஒரேயடியாகச் சிரிக்கிறாள்)

பாப்பா: ஏம்மா சிரிக்கிறே?

அம்மா: அது புள்ளையாரு சாமி... எலிதான் அதுக்கு வாகனம்.

பாப்பா: சாமிக்கு கொஞ்சம் கூட இரக்கமே இல்லம்மா!

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/73049-2014-01-03-10-57-14.html#ixzz2pKmdCjvD

தமிழ் ஓவியா said...

காப்பி அடிக்கப்பட்ட கடவுள் சாபிதா

கிரேக்க ரோம கடவுள்களிட மிருந்து இந்துக் கடவுள்கள் காப்பி அடிக்கப்பட்ட பட்டியல் பாரீர்:

சிவன், இந்திரன் - ஜுபிடர்

பிர்மா - சாட்டர்னஸ்

யமன் - மைனாஸ்

வருணன் - நெப்ட்யூன்

சூரியன் - சோல்

சந்திரன் - லூனஸ்

வாயு - ஈயோவஸ்

விசுவகர்மா - காஸ்டர் போல் வாக்ஸ்

கணேசன் - ஜுனஸ்

விரஜாநதி - ஸ்டிக்ஸ்நதி

குபேரன் - ப்ளூட்டர்ஸ்

கிருஷ்ணன் - அப்பிலோ

நாரதன் - மெர்குரியன்

ராமன் - பச்சுஸ்

கந்தன் - மார்ஸ்

துர்க்கை - ஜுனோ

ரம்பை - வீனஸ்

உஷா - அரேமரா

ஸாகா - வெஸ்டா

பிரிருவி - சைபெல்வி

ஸ்ரீ - சிரஸ்

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/73044-2014-01-03-10-50-35.html#ixzz2pKmsxQf0

தமிழ் ஓவியா said...


நட்சத்திரம் இரவில் தோன்றுவது ஏன்?


சந்திர, சூரிய நட்சத்திரங்களைப் பற்றி உலகம் தழுவிய மூடக்கதைகள் கொடிக்கட்டிப் பறக்கின்றன. நட்சத் திரங்கள் பற்றிக் கூறும் ஒரு ஆசிய மதக் கதை ஒரு ஹாஸ்யமானது.

சூரியனும் சந்திரனும் பெண்களே. நாம் இப்பொழுது காணும் நட்சத் திரங்கள் எல்லாம் சந்திரனின் குழந்தைகள். சூரியனுக்கும் ஒரு காலத்தில் ஏராளமான குழந்தைகள் இருந்தன. சூரியன், சந்திரன் அவற்றின் குழந்தைகள் முதலியவைகளின் ஒளியை மக்கள் தாங்கமாட்டார்கள் எனப் பயந்து, தம் குழந்தைகளைக் கொன்றுவிடுவது என்று சூரியனும் சந்திரனும் தீர்மானித்தன.

ஒப்பந்தப்படி சூரியன் தன் குழந்தைகளை எல்லாம் விழுங்கி விட்டது. சந்திரன் தந்திரசாலி. தன் குழந்தைகளை விழுங்கவில்லை. சூரியன் தன் குழந்தைகளை விழுங்கு மட்டும், சந்திரன் தன் குழந்தைகளை வான மண்டலத்தில் ஒளித்து வைத்து இருந்ததாம்.

சூரியன் தன் குழந்தைகளை எல்லாம் விழுங்கிய பிறகு, சந்திரன் தன் குழந்தைகளை அழைத்ததாம். சந்திரன் குழந்தைகளைக் கண்டதும் சூரிய னுக்கு அடங்காக் கோபம் வந்து, சந்திரனே, உடனே உன் குழந்தை களை கொல்லுகிறாயா இல்லையா? என்று கூச்சல்போட்டுப் பாய்ந்ததாம். சந்திரன் ஓட, சூரியன் விரட்ட இப்படியே வெகுநாள் ஓட்டப்பந்தயம் நடந்ததாம்; இன்னும் நடக்கிறதாம்.

சில சமயங்களில் சூரியன் சந்திரனை நெருங்கி விடுமாம். அப்பொழுதுதான் கிரகணம் உண்டாகிறதாம். சந்திரன் தன் குழந்தைகளான நட்சத்திரங்களை, சூரியன் இல்லாத பொழுதாகிய இரவில் கொண்டு வரும் இரகசியம் இது தானாம்!

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/73044-2014-01-03-10-50-35.html#ixzz2pKmzhPVL

தமிழ் ஓவியா said...


யோக்கியர் எடியூரப்பா பராக்! பராக்!!

பாரதீய ஜனதா கட்சி என்பது, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் கும்பகோணம் மகா மகக் குளம் புண்ணிய முழுக்குப் போன்றது. 12 வருடங்கள் பஞ்சமா பாதகங்கள் செய்தாலும், மகா மகத்தன்று ஒரு முழுக்குப் போட்டு விட்டால், ஒட்டு மொத்தமாக அனைத்துப் பாவங்களும் நீங்கி, புண்ணியம் கிட்டும் என்பது இந்து மதத்தின் அய்தீகம்.

இந்துத்துவாவின் ஏக போகக் குத்தகைக் காரர்கள் அல்லவா இந்தப் பிஜேபியினர்! அதனால் தான் ஊழல் காரணமாக முதல் அமைச்சர் பதவியை இழந்து சிறைச்சாலை வரை சென்று வந்த கருநாடக மாநில பி.எஸ். எடியூரப்பா கடை விரித்தேன். கொள்வாரில்லை - மீண்டும் பழைய காயிலகங் கடை வியாபாரத்தையே தொடங்குகிறேன் என்ற தன்மையில் தன்னால் உருவாக்கப்பட்ட கருநாடக ஜனதா கட்சியின் கழுத்தைத் திருகிக் கொன்று விட்டு, தனது பூர்வீகக் கூடாரமான பிஜேபிக்கே சென்று விட்டார்; ஊழல் ஒழித்த உத்தமப் புத்திரர் களின் புண்ணிய பூமியாகத் தங்கள் முதுகைத் தாங்களே தட்டிக் கொள்ளும் பிஜேபியும் இரு கரம் ஏந்தி - அந்தப் பழம் பெரும் ஊழல் பெருச்சாளியைப் பூர்ண கும்பம் கொடுத்து வரவேற்று விட்டது.

இமாசலப் பிரதேச முதல் அமைச்சர் வீரபத்ரசிங் ஊழல் செய்து விட்டார் என்று கூறி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வீட்டின் முன் மறியல் போராட்டத்தை பி.ஜே.பி.யினர் செய்து கொண்டி ருக்கும் இந்தக் கால கட்டத்தில்தான், ஊழல் குற்றச் சாட்டில் சிறை சென்று வந்த கருநாடக மாநில முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பாவை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றுள்ளனர்.

கருநாடக மாநிலத்தின் முதல் அமைச்சர் பி.எஸ். எடியூரப்பா மற்றும் அம்மாநில உள்துறை அமைச்சர் ஆர். அசோக்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்குத் தொடர அம்மாநில ஆளுநர் எச்.ஆர். பரத்வாஜ் அனுமதியளித்தார்.

ஷிமோகாவைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் சிரஜின் பாஷா மற்றும் கே.என். பால்ராஜ் ஆகியோர் கடந்த 2000 டிசம்பர் 28ஆம் தேதி ஆளுநர் பரத்வாஜைச் சந்தித்து மேற்கண்டவர்கள்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்குத் தொடர அனுமதி கேட்டதன் அடிப்படையில்தான் ஆளுநரால் அனுமதி வழங்கப்பட்டது.
ஊழல் தடுப்புச் சட்டம் 1988 பிரிவு 19(1) மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 பிரிவு 193இன் கீழ் வழக்குத் தொடர அனுமதிக்கப்பட்டது.
உத்தமபுரத்திரர்களாகத் தம்பட்டம் அடிக்கும் பிஜேபி என்ன செய்தது? வழக்கை நேர்மையான முறையில் சந்திக்க மார்பைப் புடைத்துக் காட்டியதா?
இல்லை; நாடு தழுவிய அளவில் பந்த் ஒன்றை அறிவித்து அமைச்சர்களே முழக்கம் போட்டு வந்தனர்.

சட்டம் ஒழுங்கை அமைச்சர்களே சீர்குலைத்தனர். அரசுப் பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன, ஏன், எரிக்கவும் பட்டன!

ஜனதா தளத்தின் (மதச் சார்பற்றது) தலைவர் குமாரசாமி, எடியூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டினை முன் வைத்தார். கோயிலில் சத்தியம் செய்யலாமா என்று பாமரத் தன்மையாக ஒருவருக்கொருவர் சவால் விட்டனர்.

முதல் அமைச்சர் பதவியை முறைகேடாகப் பயன்படுத்தி, விலை உயர்வு வீட்டுமனைகளையும், நிலங்களையும் தனது மகன் மற்றும் குடும்பத் தினர்க்கு ஒதுக்கினார் முதல் அமைச்சர் எடியூரப்பா என்பது குற்றச்சாற்று!

சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு பெல்லாரி மாவட் டத்தையே தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்த ரெட்டி சகோதரர்கள் அமைச்சர்களாக இருந்த தெல்லாம் மிகப் பெரிய ஊழல் கந்தாயமாகும்.

ரெட்டி சகோதரர்களை எதிர்த்துப் பார்த்து, கடைசியில் முதல்வர் எடியூரப்பா அவர்களிடம் சரண் அடைந்ததெல்லாம் கடைந்தெடுத்த நகைச்சுவைத் துணுக்குகள். வெகு தூரம் போக வேண்டாம். எடியூரப் பாவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததுண்டே!

பதவி அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள, மக்களுக்குத் துரோகம் செய்து வருகிறோம்; இதில் நானும் அடக்கம்! மக்கள் மன்னிக்க மாட்டார்கள். மக்களுக்கு நன்மை செய்யாமல் தேவையற்ற வேலைகளைச் செய்து கொண்டிருக் கிறோம். மாநிலத்தில் அதிருப்தி அரசியல் தலை தூக்கிய போதும், பெண் அமைச்சர் ஷோபா வின் ராஜினாமாவை ஏற்றக் கொண்டபோதும் நான் கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட்டது. தொலை நோக்குப் பார்வையில்லாமல் சுய நலத்திற்காக அரசியலில் மூழ்கி உள்ளதால் மக்களின் நலனை முழுமையாக மறந்து வருகிறோம் என்றாரே எடியூரப்பா (தினமலர் 14.12.2009).

இந்த ஒழுக்க சிகாமணியை மக்களவைத் தேர்தலுக்காக கையேந்தி வரவேற்கும் பிஜேபியை யும், அதன் பிரதமருக்கான வேட்பாளரையும் வாக்காளர்கள் அடையாளம் காண்பார்களாக!

Read more: http://viduthalai.in/page-2/73059.html#ixzz2pOIjRkzh

தமிழ் ஓவியா said...


பொருளல்ல...


மனக் குறையில்லாமல் வாழ வேண்டுமென்றால், வசதி தேடிக் கொள்ள வேண்டுமென்பது பொரு ளல்ல; இருப்பதைக் கொண்டு குறையில்லாமல் வாழவேண்டும்.

(விடுதலை, 10.6.1970)

Read more: http://viduthalai.in/page-2/73058.html#ixzz2pOJ0bVYE

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம்

மனக்குமுறல்

இன்றைய அதிமுக ஆட்சியில் தை முதல் நாள் ஆண்டுத் தொடக்கம் என்பதை மாற்றியிருப்பது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதைப் போல சிதம்பரம் கோவிலை மீண்டும் தீட்சிதரிடம் ஒப்படைப்பது.

அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கிடும் நடைமுறையைத் துரிதப்படுத்தாமை. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் மாண்புமிகு கலைஞர் அவர்களால் நிறுவப்பட்ட செம்மொழி நூலகத்தைச் சின்னாபின்னப்படுத்தியது.

தொல்காப்பியர் பூங்கா என்றதில் தொல்காப்பியர் பெயர் நீக்கம்.

133 திருவள்ளுவர் சிலைப் பராமரிப்புக்குக் கூட கெஞ்சுதல்

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை வேண்டுமென்றே சிதைத்துச் சீரழித்தல்

தமிழா! இன உணர்வு கொள். எதையும் தாங்கினாலும் இவற்றை எப்படித்தான் தாங்கிடுவதோ?

பார்ப்பான் நாகசாமி இப்போதும் The Mirror of Tamil and Sanscrit என நூல் எழுதுகிறாரே?

- _ க. பழநிசாமி, தெ.புதுப்பட்டி

Read more: http://viduthalai.in/page2/73065.html#ixzz2pOJj1mWU

தமிழ் ஓவியா said...


கடலுக்குள் வழித்தடம்


துருக்கியில்: ஒட்டாமன் சுல்தான் 150 ஆண்டுகளுக்கு முன் ஆசைப்பட்ட கடலினுள் குழாய்த் தடம் அமைக்கும் திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்து சாதனையாகியுள்ளது.

அய்ரோப்பாவையும், ஆசியாவையும் இணைக்கும் வகையில் கடலடி ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. கருங்கடலையும், மார்மரைக்கடலையும் பாஸ்பரஸ் ஜலசந்தி இணைத்துள்ளது. இந்த ஜலசந்திக்குக்கீழே மார்மரைக் குழாய்ப்பாதை செல்கிறது. இந்த பாதை 13.6 கி.மீ. நீளம், இதில் 1.4 கி.மீ. கடலுக்கடியில் 180 அடி ஆழத்தில் செல்கிறது.

ஜப்பானில்: ஜப்பானில் ஹான்ஷூ தீவையும், ஹோக்கைடோ தீவையும் இணைக்கும் கடலுக்குள் ளான பாதை கடல் படுகைக்கு(Seabed) 460 அடிக்கு கீழே உள்ளே அமைந்துள்ளது. இது உலகத்திலேயே அதிகமான ஆழமான பாதை. இது 790 அடி கடல் மட்டத்திற்கு (Sealevel) கீழே உள்ளது.

இங்கிலாந்து - பிரான்ஸ்: பிரிட் டனையும், பிரான்சையும் கடல்கீழ் இணைக்கும் தடம் 250 அடி கடல் மட்டத்துக்கு கீழே செல்கிறது.

செய்தி வழங்குதல்: சோம.வச்சலா

Read more: http://viduthalai.in/page2/73066.html#ixzz2pOJwfzt2

தமிழ் ஓவியா said...


மதத்தின் விளைவு


மதத்தின் விளைவு

ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர் ஜோமோ கென்யாட்டா தான் ஒரு முறை சுவையோடு சொன்னார். பாருங்கள் தலைமுறை தலைமுறை யாக ஆப்பிரிக்க மண் எங்கள் கைகளில் இருந்தது.

கப்பலில் வந்த வெள்ளைக் காரர்கள் தங்கள் கரங்களில் இருந்த பைபிளை எங்கள் கைகளில் தந்து, கண்களை மூடிச் செபம் செய்யச் சொன்னார்கள்; நாங்கள் விழிகளை மூடினோம், தூங்கி விட்டோம்.

காலதாமதமாக விழித்துப் பார்த்த போது வெள்ளையர் கைகளில் எங்கள் நாடு இருந்தது;

ஆனால் எங்கள் கைகளிலோ பைபிள் மட்டுமே மிஞ்சி இருந்தது! என்றார்.
எத்தனை பொருளாழம் நிறைந்த சொற்கள் இவை!

(கவிவேந்தர் கா.வேழவேந்தன் முன்னாள் அமைச்சர் அவர்களின் தெரிய... தெளிய... கட்டுரைத் தொகுதி - முதற் பதிப்பு டிசம்பர் 2000 72-ஆம் பக்கத்தில் இருப்பது).

Read more: http://viduthalai.in/page5/73069.html#ixzz2pOKtOsxW

தமிழ் ஓவியா said...

வாக்களிக்க விரும்பாதார்

நடைபெற்ற நான்கு மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாத வர்கள் (நோட்டா).

டில்லி 0.67 சதவீதம்

மத்தியப்பிரதேசம் 1.90 சதவீதம்

ராஜஸ்தான் 1.92 சதவீதம்

சத்தீஸ்கர் 3.07 சதவீதம்

Read more: http://viduthalai.in/page5/73069.html#ixzz2pOLAsUQL

தமிழ் ஓவியா said...


பெண்களும் - சொத்துரிமையும்

ஓரிருவர் எடுத்துக்காட் டாக வழிகாட்டும்போது, அது அவர்தம் தனித் துணிச்சல், பொறுப்பற்ற தன்மை என்று குறைபேசி ஒதுங்குவோர் கூட, அவர் கள் பலராகும்போது, அதுவும் நியாயமே என்று ஏற்க முன்வருவர்.

துணிந்து செயற்படுவோ ருக்குத் துணை நிற்கச் சிலரேனும் முன்வரும் சூழலை உருவாக்கியதே சுயமரியாதை இயக்கத்தின் தொண்டினால் நாடு பெற்ற நற்பயன் எனலாம்.

அப்படிப்பட்ட உரிமை உணர்வு தழைக்கப் பெண்கள் - தம் காலிலே நிற்கும் நிலை, தாமே ஊதியம் பெற்று வாழும் நிலை உருவாக வேண்டும். படித்த பெண்கள் வேலைக்குச் செல்லலாம் என்னும் கருத்து வளர்ந்து வந்தாலும், அதை விரும்பாதாரும், தடுப்பவருங்கூட உள்ளனர்.

கணவனை நம்பித்தான் வாழ்ந்தாக வேண்டும் என்னும் நிலையிலிருந்து, தான் தனது வருவாயிலிருந்தே வாழ முடியும் என்னும் நம்பிக்கை கொள்ளும் நிலையே பெண்ணின் உரிமைக்கு அடிப்படையாகும்.

அதே போன்று, சொத்துரிமை உள்ள சமூகத்தில் அந்த உரிமை ஆண் மக்க ளுக்கு மட்டுமே என்றுள்ள முறையே, பெண்கள் உரிமைக்குத் தகுதியுடையவர் ஆகார் என்னும் எண்ணத்தை உறுதி செய்ய ஏதுவாகிறது.

சொத்து எவ்வளவு? சிறிய அளவின துதானே? அதனாலா பெண்ணுரிமை காக்கப்படும் என்று சிலர் ஐயம் எழுப்புவர். ஆண்களுக்கும் அது பொருந்துமன்றோ? சொத்தின் அளவு பெரிதாகுமிடத்து, அந்த உரிமை பெண் ணையும் அடையு மன்றோ? சிறிதெனி னும் - ஆணுக்கு உள்ள அளவு பெண்ணும் பெறுவாளன்றோ!

பெண்ணின் மனத்தில் அதுவே தாழ்வு மனப்பான் மையைப் போக்க ஏதுவாகும்.

அதனால் தான் 1929-ஆம் ஆண்டில் செங்கற்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் ஆண்களைப் போன்றே பெண்களுக்கும் உடைமை உரிமை வழங்க வேண்டும் என்றும், அதற்குரிய வழியில் அரசு, சட்டத்திருத்தம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த நாட்களில் முதல் அமைச்ச ராக விளங்கிய டாக்டர் பி.சுப்பராயன் அந்த மாநாட்டில் கலந்து கொண்டி ருந்தார். பெரியார் ஈ.வெ.ரா. அவர்களே அப்படிப்பட்ட தீர்மானம் வரத்தூண்டு கோல் ஆனவர்.

ஆயினும், அத்தீர்மானம் அறுபது ஆண்டுகட்குப் பின்னர், கலைஞர் மு.கருணாநிதி முதல்வராக விளங்கிய 1990-ஆம் ஆண்டிலேதான தமிழ்நாடு சட்டப் பேரவையில் சட்டத் திருத்த மாகக் கொண்டு வரப்பட்டு நிறை வேற்றப்பட்டது.

(பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் தமிழர் திருமணமும் இனமானமும் பரிசுப்பதிப்பு நூலில் -_ பக்கம் 264)

-_ க. பழநிசாமி, தெ.புதுப்பட்டி

Read more: http://viduthalai.in/page6/73071.html#ixzz2pOLKr3bJ

தமிழ் ஓவியா said...


கீரைவகைகள்மணத்தக்காளி கீரை இந்த கீரையில் இலை, காய், பழம் இருக்கும். இந்த மூன்றையும் சமைத்து சாப்பிடலாம். இதில் சிறிய அளவில் வெள்ளை பூக்களும் மலரும். மணத் தக்காளி கீரையின் காய்கள் மிக சிறியதாக கொத்து கொத்தாக காய்க் கும். காய் முற்றினால் கத்தரிக்காய் நிறத்தில் இருக்கும். இதில் மற்றொரு வகை உள்ளது. அதில் பழம் இளம் சிவப்பாக இருக்கும்.

மணத்தக்காளி கீரையின் பழம் இனிப்பு புளிப்பு கலந்த சுவையாக இருக்கும். காய், பழத்தை பச்சையாக வும் சாப்பிடலாம். சட்டினி, பச்சடி, கூட்டு, பொரியல், ரசம் வைத்தும் சாப்பிடலாம். காய் மற்றும் பழத்தை புளிக்குழம்பு வைத்து சாப்பிடலாம்.

பலன்கள்: 1. மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந் தால் குடல் புண், மூலம் ஆகிய நோய்கள் குணமாகும். சளி, இருமல், போன்ற கப நோய்களைப் போக்கும் தன்மை கொண்டது. பிள்ளை பெற்ற பெண்களுக்கு மிகவும் நல்லது.

2. கண் பார்வை நன்றாக தெரியும்.

3. விட்டமின் ஏ, பி மற்றும் இரும்பு, சுண்ணாம்பு ஆகிய சத்துக் கள் மணத்தக்காளி கீரையில் அதிகம்.

4. குறைந்த விலையில் கிடைத் தாலும், மணத்தக்காளி கீரையில் போஷாக்கு அதிகம்.

5. குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. மணத்தக்காளி கீரைக் குழம்பு.

வயிற்று புண்ணை குணப்படுத்தும் முளைக்கீரை

கீரையை தினமும் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். முளைக்கீரை அதிக வைட்டமின் சத்துக்கள் நிறைந்த கீரை. இக்கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் கே, வைட்டமின் சி, போலேட் மற்றும் ரிபோப்லாவின் ஆகியவற்றை கொண்டுள்ளது.. நீர்சத்து அதிக முள்ள முளைக்கீரை வயிற்றுப் புண்ணை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

உடலுக்கு பலம் கூட்டும் சக்தியை கொண்டது. சிறுவர்களுக்கு இந்தக் கீரையை தொடர்ந்து கொடுத்தால் நல்ல உடல் வளர்ச்சி அடைவார் கள். முளைக்கீரையில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம், பாஸ்பரஸ், மங்கனீசு போன்ற கனிமங்களைக் கொண்டுள் ளது முளைக்கீரை. கோதுமை, அரிசி, ஓட்ஸ், ஆகியவற்றில் கொண் டுள்ள புரதத்தை விட 30% அதிக புரதத்தை கொண்டுள்ளது. இதய நோய், உயர் ரத்தஅழுத்தம் உள்ள வர்களுக்கு முளைக்கீரை உதவுகிறது.

Read more: http://viduthalai.in/page6/73072.html#ixzz2pOLU2VQb

தமிழ் ஓவியா said...


சோதிடம் - அறிவியலல்ல!


விண்வெளிக் களங்களைப் பற்றி என்னிடம் பல நண்பர்கள் கேள்விகள் கேட்ட போது, அவர்கள் சில நேரங்களில் ஜோதிடம் பற்றியும் கூட கேள்விகள் கேட் டனர். நமது சூரிய மண்டலத்தில் நம்மை விட்டு வெகு தொலைவில் உள்ள கோள்களுக்கு நமது மக்கள் இந்த அளவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்ததன் பின்னணியில் உள்ள காரணத்தை உண்மையில் என்னால் எப்போதுமே புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.

ஜோதிடம் ஒரு கலை என்பதற்கு எதிராக நான் எந்தக் கருத்தையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் அது அறிவியல் என்ற போர்வையில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு நான் வருந்தவே செய்கிறேன். இந்த கோள்கள், நட்சத்திரக் கூட்டங்கள், செயற்கைக் கோள்கள் ஆகியவை மனித உயிர்கள் மீது ஆற்றல் செலுத்த இயலுமென்ற கட்டுக் கதைகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன?

என்பதை நானறியேன். விண்வெளியில் உள்ள இவற்றின் சரியான இயக்கத்தைச் சுற்றி, குழப்பம் மிகுந்த கணக்குகளை கற்பனையில் உருவாக்கி அவற்றிலிருந்து மக்களின் வாழ்க்கை நடைமுறைகள் பற்றி முடிவுகளைப் பெறுவது என்பது சரியானதென எனக்குத் தோன்றவில்லை.

நான் காணும் வரை, பூமி ஒன்றே ஆற்றல் மிகுந்த, சுறுசுறுப்புடன் இயங்கும் ஒரு கோளாகும். தனது இழந்த சொர்க்கம் (8ஆம் புத்தகத்தில்) ஜான்மில்டன் அழகாக கூறியபடி, பூமிக்கும் மற்ற நட்சத்திரங்களுக்கும் சூரியன் மய்யமானதாக இருந்தால் என்ன?

மூன்று வேறுபட்ட வழிகளில் பூமி அறிவற்றபடி இயங்குவதாக தோன்றினாலும், பூமி என்னும் இக்கோள் எவ்வளவு உறுதியாகச் செயல்படுகிறது!

நெருப்பு இறக்கைகள் என்ற தனது சுயசரிதையில் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியும், இந்திய அரசின் அறிவியல் ஆலோசகருமான ஏ.பி.ஜே.அப்துல்கலாம்.

Read more: http://viduthalai.in/page6/73073.html#ixzz2pOLzzPMW