Search This Blog

28.1.14

திராவிடர் கழகத் தலைவர் மீது விழுந்து ஏன் பிராண்டுகிறது?

கண்ணாடி மாளிகையிலிருந்து கல்லா?


அண்ணா திராவிட என்ற இரு அரும்பெரும் பெயர்களையும், அதன் பின்னணியில் அரும் பெரும் தத்துவங்களையும் தன் கட்சிக்குச் சூட்டிக்கொண்டு இருக்கும் ஒரு கட்சி (அண்ணா திமுக) அந்தத் தத்துவங்களைக் காலில் போட்டு மிதித்து, அக்கிரகார திமுக வாகவே மாறி (பூணூல் அணிவதன் தத்து வத்தைப் பற்றி கட்சியின் அதிகாரபூர்வ ஏடு பிரலாபிக்கிறதே!) யுள்ள நிலையில் அதற்கேற்ப ஏதாவது பினாத்தும்.
நேற்றுகூட (26.1.2014) அந்த ஏடு திராவிடர் கழகத் தலைவர் பற்றி அந்த ஏட்டுக்கே உரித்தான தராதரத்தில் கிறுக்கி இருக்கிறது.

தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். மாறுபட்டு சென்ற நேரத்தில், இன்னொரு கட்சியின் பிரச்சினை என்று தந்தை பெரியார் கண்டு கொள்ளாமல் இருந்ததில்லை; தலையிட்டுப் பேசினார்! கருத்தும் தெரிவித்தார்!
கலைஞர் அவர்களுக்கும், நாவலர் அவர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டபோதுகூட திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மை யார் தலையிட்டதுண்டு - கருத்து தெரிவித்ததும் உண்டு; திரு. வைகோ பிரிந்த போதும்கூட திராவிடர் கழகத் தலைவர் தலையிட்டு, பிளவைத் தவிர்க்க முயற்சி மேற்கொண்டதுண்டு. இந்த வரலாறு எல்லாம் இந்தக் கத்துக் குட்டிகளுக்கு எங்கே தெரியப்போகிறது?

திமுகவில் ஏற்படும் பிளவு அக்கட்சிக்குள் நடக்கும் தனிப்பட்ட ஒரு பிரச்சினையாகக் கருத முடியாது. குறிப்பாக இனநலம் பேணுவோர் கருதக்கூடாது.

ஒரு சமுதாயப் பிரச்சினை- இன நலக் கண் ணோட்டம் அதில் குடிகொண்டு இருக்கிறது.

அந்த அடிப்படையில்தான் இப்பொழுதும் திராவிடர் கழகத் தலைவர் தாய்க் கழகத்தின் தலைவர் என்ற முறையில் தன் கருத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு முன்பும்கூட அறிக்கை வெளியிட்டதுண்டு. கட்சியின் கட்டுப்பாட்டை வலி யுறுத்தியுள்ளார். யாரையோ தனிப்பட்ட முறையில் நினைத்துச் சொல்லப்பட்ட கருத்தல்ல அது.

பொது நிலையில் உள்ளவர்கள், திராவிடர் கழகத் தலைவரின் அறிக்கையை வரவேற்கிறார்கள். திமுக தோழர்களும் வரவேற்று வருகிறார்கள்.

இதில் அண்ணா திமுகவுக்கோ, அதன் அதிகார பூர்வ ஏட்டுக்கோ என்ன வந்தது? திமுக பலகீனப் பட்டுவிடாமல் காப்பாற்றப்படுகிறது என்ற அரசியல் காழ்ப்புணர்வுக் காரணமாக அம்மிக் குழவியை எடுத்து வயிற்றில் குத்திக் கொள்ளலாமா?

குறிப்பிடப்பட்டவரைப்பற்றி நேற்றுவரை, இவ் வேட்டின் - அக்கட்சியின் விமர்சனம் என்ன? மறந்துவிட்டதா?

திராவிடர் கழகத் தலைவர் மீது விழுந்து ஏன் பிராண்டுகிறது?

ஒரு கட்சியை ஆதரிப்பதும், எதிர்ப்பதும் எங்கள் கொள்கையின் பார்வையில்தான்.

அதிமுக பார்வையில் திராவிடர் கழகத் தலைவர் ஒரு கட்சியை ஆதரிப்பதற்குக் காரணம் பணம்தான் என்றால், ஆதாயம்தான் என்றால் அதிமுகவை ஆதரித்தபோது கொடுத்த பணம் எவ்வளவு? பெற்ற ஆதாயம் என்ன? நாணயம் இருந்தால், நல்லொழுக்கம் சிறிதும் இருந்தால் அதற்கான விவரத்தை வெளியிடட்டுமே பார்க்கலாம் - சவால் விட்டே கேட்கிறோம்!

ஒவ்வொரு முறையும் எதையாவது அண்ணா திமுக ஏடு எழுதுவது; அதற்கு நாம் பதிலடி கொடுப்பதும் உண்டு.

வாங்கிக் கட்டிக் கொண்டதே தவிர, ஒரே ஒரு முறையாவது அந்த ஏடு பதில் அளித்து எழுதிய துண்டா? எப்படி எழுத முடியும்?

அதன் ஆணிவேர்க்கே சென்று வைக்கும் அணுகுண்டாக அல்லவா ஆதாரபூர்வமாக விடுதலை அடி கொடுத்திருக்கிறது.

முதல்நாள் மாநிலங்களவைத் தேர்தலில் ஒருவர் பெயர் வேட்பாளராக அறிவிப்பு - மறு நாளே அந்த ஆள் சுத்த மோசம் - ஊழல் பேர்வழி - அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத் திலிருந்தும் நீக்கப்படுகிறார் - இந்தக் கோமாளிக் கூத்துகளை எழுத ஆரம்பித்தால் தாங்காது நமது எம்.ஜி.ஆர். ஏடு!

கட்சியின் தலைமைக்குத் தெரியாமலேயே கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஓட்டுப்போட முடியும் என்ற விசித்திர நிலையில் உள்ள மகாகட்டுப்பாடு உள்ள ஒரே கட்சி அதிமுகவாகத்தான் இருக்க முடியும். அதுகள் எல்லாம் பேனா பிடிக்க அவசரப்படு வதுதான் ஆச்சரியமும், வேடிக்கையும் கூட்டணி வைக்கும் அபத்தம்!

மண்சோறு சாப்பிடுவோர் எல்லாம் பகுத்தறி வாளர்களைச் சீண்டிப் பார்க்க ஆசைப்படக் கூடாது!

கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறியவும் வேண்டாம்.

-----------------------------"விடுதலை” 27-1-2014

32 comments:

தமிழ் ஓவியா said...


ஜோடியைப் பிரித்தஜோசியர்!


திருமணமான ஒருசில மாதங்களிலேயே, கண வனை இழந்த நான், சமீ பத்தில், மறுமணம் செய்து கொண்டேன். சில மாதங் கள் வரை, எங்கள் மண வாழ்க்கை, சந்தோஷமாக சென்றது. இரண்டு மாதங்களுக்கு முன், என் கணவர், தான் வேலை செய்யும் இடத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில், அவருடைய கால் எலும்பு முறிந்து, மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார். ஓர ளவு குணமான பின், வீடு திரும்பிய அவர், தனக்குத் தெரிந்த ஜோசியர் ஒரு வரிடம் குடும்பத்தின் எதிர் காலம்பற்றி கேட்டுள்ளார். பேச்சினிடையே என்னைப் பற்றியும் சொல்லியிருக் கிறார்.

உடனே, அவர் ஜோசி யர், நீ அந்த விதவைப் பெண்ணை மணந்து கொண்டதால் தான், இப் படிப்பட்ட ஆபத்து வந்திருக் கிறது. உன் மனைவிக்கு தோஷம் இருக்கிறது. கூடிய விரைவில் உன் உயிருக்கே கூட ஆபத்து வரலாம். அவளை விட்டு பிரிந்திருப் பதுதான் நல்லது.. என்று சொல்லி, என் கணவரைக் குழப்பி விட்டார்.

அதிலிருந்து எதற்கெ டுத்தாலும் எங்களுக்குள் ஒரே சண்டை, சச்சரவு தான். சிறு சிறு விஷயங் களை கூட பெரிதுபடுத்தி, என்னை அடிக்கவும், திட் டவும் ஆரம்பித்து விட்டார். இதனால், எங்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு, இரு வரும் பிரிந்து விட்டோம். இதற்கெல்லாம் காரணம், அந்த ஜோசியர்தான். இனி மேலாவது, ஒற்றுமையாக வாழ்ந்து வரும் குடும் பத்தைப் பிரித்து வைத்து, அவர்களின் வாழ்க்கையை பாழாக்காமல் இருப்பாரா!

- பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி. மேற்கண்ட செய்தியை வெளியிட்டு இருப்பது உண்மை இதழ் அல்ல - விடுதலை நாளேடும் அல்ல. சாட்சாத் தினமலர் அய்யர்வாள் ஏடு.
(தினமலர் வார மலர் 26.1.2004 பக்கம் 4)

என்னதான் அவர்கள் நமது பகுத்தறிவுப் பிரச் சாரத்தை இருட்டடித்துப் பார்த்தாலும், திரித்து வெளியிட்டு வந்தாலும் அவர்களை அறியாமலேயே உண்மையைக் கக்கித்தான் தீர வேண்டியுள்ளது.

ஜோதிடம் வாழ வைக் கவா? வாழும் குடும்பத்தின் தலையில் கொள்ளி வைக் கவா?

என்பதை ஆறாவது அறிவு இருப்பதாகக் கரு தப்படுகிற மனிதன் சிந் திக்க வேண்டாமா?

மனிதன் பிறக்கிறான். அவன் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகப் பொருத் தம் பார்க்கும் ஜோதிடர்கள், நாய் குட்டிப் போடுகிறதே - அந்த நேரத்தை வைத்து நாய்களுக்கு ஜாதகம் பார்ப்பதுண்டா?

மயிலாடுதுறையில் ஒரு நிகழ்ச்சி! நாய் குட்டிப் போட்ட நேரத்தையும், திரு மணம் ஆக வேண்டிய ஒரு பையன் பிறந்த நேரத்தை யும் கொண்டு சென்று ஒரு பிரபல ஜோதிடரிடம் கொடுத் துப் பொருத்தம் பார்க்கச் சொன்னபோது, சகலப் பொருத்தமும் ஜோடிக்கு ஜோராக இருக்கிறது என்று ஜோதிடர் அடித்துச் சொன் னதுதான் நினைவிற்கு வருகிறது. கறுப்புச் சட் டைக்காரன் சொல்லும் போது கோபம் வெடிக் கிறதே - தினமலரே சொல்லுகிறதே - என்ன செய்ய உத்தேசம்?

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/74192.html#ixzz2re4wCHjW

தமிழ் ஓவியா said...

உலகில் உயர்ந்தது ஆரிய இனமே என்று கொக்கரித்த கொடுங் கோலன் ஹிட்லர் 7 லட்சம் யூதர்களைப் படுகொலை செய்த நாள் இந்நாள் (1945).

இந்நாளை சர்வ தேசப் படுகொலை நினைவு நாளாக அய்.நா., அறிவித்துள்ளது (2005).

தமிழ் ஓவியா said...


மண்சோறு சாப்பிடும் மண்ணாங்கட்டிகள்!


விருத்தாசலம், ஜன.27- விருத்தாசலம் விருத்த கிரீஸ்வரர் கோவிலில் 2 ஆயிரத்திற்கும் மேற் பட்ட பக்தர்கள் மண் சோறு சாப்பிட்டன ராம். விருத்தாசலம் சந்திப்பு சாலையில் ஜெகமுத்து மாரியம்மன் கோவில் உள்ளதாம். இக்கோவிலில் ஒவ் வொரு ஆண்டும் தை மாதம் ஏராளமான பக்தர்கள் திருச்சி சமய புரம் மாரியம்மன் கோவி லுக்கு யாத்திரை செல்ல மாலை அணிவித்து விர தம் இருப்பார்களாம். மேலும், இந்த பக்தர்கள் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மண்சோறு சாப்பிட்டு, கோவிலுக்கு செல்வது வழக்கமாம்.

அதன்படி, கடந்த 19ஆம் தேதி யாத்திரை குழு தலைவர் பாலுகுரு சாமி தலைமையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினராம். விரதம் இருந்த ஆண் பக்தர்கள் மஞ்சள் நிற வேட்டி, துண்டும், பெண் பக்தர்கள் மஞ்சள் நிற சேலையும் அணிந்து தினமும் பூஜை நடத்தி வந்தனராம். இந்த நிலையில், நேற்று விருத்தகிரீஸ்வரர் கோவில் வளாகத்தில் மண்சோறு சாப்பிடும் நிகழ்ச்சி நடைபெற்ற தாம். இதனை முன் னிட்டு, ஜெகமுத்து மாரி யம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டு, முக்கிய வீதி கள் வழியாக விருத்த கிரீஸ்வரர் கோவிலைச் சென்றடைந்தனராம்.

தொடர்ந்து, அங்கு மாலை அணிந்து விரதம் இருந்த ஆயிரக்கணக் கான பக்தர்கள் மண் சோறு சாப்பிட்டு தங் களின் நேர்த்திக் கடன் களை நிறைவேற்றினார் கள். மேலும், மண்சோறு சாப்பிட்ட பக்தர்களி டம் சில பெண்கள் மடிப்பிச்சை எடுத்து, அந்த உணவை சாப் பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினராம். மூட நம்பிக்கைகளில் மூழ்கி இருக்கும் மக்கள் என்று தான் விழிப்புணர்வு பெறுவார்களோ!

Read more: http://viduthalai.in/e-paper/74194.html#ixzz2re5KuKrw

தமிழ் ஓவியா said...


இந்துத்துவா வெறியர்களின் வன்முறை வெறியாட்டம்!

மும்பை, ஜன.27- மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே, நாக்பூர் சுங்கச்சாவடிகளை மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தொண்டர்கள் அடித்து நொறுக்கி சூறையாடியிருக்கின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் சுங்கச் சாவடிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி சிவசேனா, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே, சுங்கச் சாவடிகளில் எந்த ஒரு கட்டணத்தையும் நாம் செலுத்தக் கூடாது. அப்படி செலுத்துமாறு யார் கேட்டாலும் போராடுங்கள்.. சண்டை போடுங்கள் என்று கூறியிருந்தார். இந்த பேச்சை தொடர்ந்து நாக்பூர், தானே மற்றும் அய்ரோலி ஆகிய இடங்களில் சுங்கச் சாவடிகளை அடித்து நொறுக்கி சூறையாடியிருக்கின்றனர் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவினர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/74195.html#ixzz2re5UdtVg

தமிழ் ஓவியா said...

இலங்கை அரசுக்கு எதிராக ஜெனீவாவில் நான்கு நாடுகள் தீர்மானம்

இலங்கையில் சமாதானம் நிலவுவதாகக் கூறுவதை நம்ப உலக நாடுகள் முட்டாள்கள் அல்ல!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. ஆவேசம்!


ஜெனீவா, ஜன. 27- அய்.நா. மனித உரிமை சபையில் இலங்கைக்கு எதிராக 4 நாடுகள் தீர்மானம் கொண்டு வர உள்ளன. சுதந்திரமான சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு கோரிக்கை விடுக்கின்றன. அய்.நா. மனித உரிமை சபையில் கூட்டம் மார்ச் மாதம் ஜெனீவா நகரில் நடக்கவுள்ளது. இதில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, இங்கி லாந்து, பிரான்சு, ஜெர்மனி ஆகிய 4 நாடுகள் தீர் மானங்களை கொண்டு வர உள்ளன.

இலங்கை போரின் கடைசி கட்டத்தில் ஏகப் பட்ட அளவில் மனித உரிமை மீறல்கள் நடந் தன. இது தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த கோரிக்கை விடப்பட வுள்ளது.
கடந்த ஆண்டும் இலங்கைக்கு எதிராக கடுமையான வாசகங் களுடன் அமெரிக்கா ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது. ஆனால் இந்தியாவின் உதவியால் அந்த கடுமை குறைக்கப்பட்டு நிறை வேற்றப்பட்டது.

அதன் மூலம் இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட் டது. அப்படி இருந்தும் இலங்கை அரசு ஆக்கப் பூர்வமாக செயல்பட வில்லை. அதனால், தான் காமன்வெல்த் மாநாட் டிற்கு சென்றிருந்த இங் கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இலங்கை அரசுக்கு 3 மாதகெடு விதித்தார்.

அதற்குள் சுதந்திர மான விசாரணையை இலங்கை நடத்த வேண் டும் என்றும், இல்லா விட்டால் சர்வதேச விசா ரணைக்கு வலியுறுத் துவேன் என்றும் எச்சரித் தார். இந்த கெடுவையும் இலங்கை அரசு மதிப் பதாக இல்லை. ஆகவே அய்.நா. மனித உரிமை சபை கூட்டத்தில் சுந்திர மான சர்வதேச விசா ரணை கேட்டு தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.
ஆனால் சீனா, ஜப் பான், பாகிஸ்தான், ரஷ்யா, இந்தியா போன்ற நாடு கள் இலங்கைக்கு சற்று ஆதரவாக செயல்படும் என தெரிகிறது. சர்வ தேச விசாரணைக்கு பதிலாக மீண்டும் இலங் கையே சுயாதீன விசா ரணை நடத்தலாம் என்ற அடிப்படையில் தீர்மா னத்தில் திருத்தத்தைக் கொண்டு வர முயலும் என்று கூறப்படுகிறது.

அய்.நா. மனித உரிமை சபையில் மொத்தம் 48 நாடுகள் உள்ளன. இவற் றில் பெரும்பாலான நாடுகளில் தீவிரவாதி களின் செயல்பாடுகள் உள்ளன. அப்படிப் பட்ட நாடுகள் சர்வதேச விசாரணைக்கு சம்மதம் தெரிவிக்காது என்றே கூறப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி., கண்டனம்

வட மாகாண தமிழ் மக்கள் யுத்தம் முடிந்து நான்கு ஆண்டுகளுக்கு பின்னரும் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வாழ்கின்றனர். இதனை உலகம் அறியும்.

தமிழ் ஓவியா said...

எனவே, அங்கு சமாதானம் நிலவுவதாக பாதுகாப்புச் செயலாளர் கூறுவதை நம்ப உலக நாடுகள் அதன் தலைவர் கள் முட்டாள்கள் அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாள ரும், எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரி வித்தார்.

நாட்டில் சிங்கள பவுத்த பேரினவாத சக்திகளை அரசாங்கமே தூண்டி விடுவதாகவும், அவர் தெரிவித்தார்.

வெளிநாடு சென்று தீர்வைப் பெற முடியாது. எமது குடும்பம் அரசி யல் வரலாறு கொண்ட குடும்பம் என பாது காப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக தமது பக்க நிலைப்பாட்டை தெளிவு படுத்துகையிலேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் இது தொடர்பாக தெளிவு படுத்துகையில்,

யுத்தம் முடிந்துவிட் டது. ஆனால் சமாதா னம் வந்துவிட்டதாகக் கூற முடியாது. தமிழ், சிங்கள மக்கள் இணைந்து ஒற்றுமையாக வாழும் சூழ்நிலை இன்னமும் ஏற்படுத்தப்படவில்லை.

எனவே, பாதுகாப்புச் செயலாளர் நாட்டில் சமாதானம் நிலவுவ தாகவும், அதனை சீர் குலைக்க வெளிநாடுகள் முயற்சிப்பதாகவும் கூறு வது மந்திரம் ஓதுவதற்கு சமமானதாகும்.

இன்னும் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்

யுத்தம் முடிந்து 4 ஆண்டு கழிந்த பின்ன ரும் வடபகுதி தமிழ் மக்கள் இராணுவக் கட் டுப் பாட்டுக்குள்ளேயே அடக்கியாளப்படுகின்றனர்.

இராணுவ முகாம்கள் பல அகற்றப்பட்டுள் ளதாக கூறப்பட்டாலும் அவ்வாறான நிலை அங்கு கிடையாது.

மாறாக இராணுவ முகாம்கள் விரிவாக்கப் பட்டு வருகின்றன. அதற் காக மக்களின் பூர்வீக சொந்தக்காணிகள் சுவீகரிக்கப்படுகின்றன.

உலகில் எந்தவொரு நாட்டில் மக்கள் இரா ணுவ அடக்கு முறைக் குள் ஆளப்படுகின்ற னரோ, அங்கெல்லாம் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். இது தான் உலக நியதி. இதனை மாற்ற முடியாது.

நாட்டில் சமாதானம் இல்லை. யுத்தம் முடிந்து 4 ஆண்டுகள் கடந்து விட்டன. அரசாங்கம் சிங்கள பவுத்த பேரின வாதச் சக்திகளின் சிறைக்கைதியாக சிக்கிக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாது சிங்கள பவுத்த பேரினவாதச் சக் திகளை தூண்டிவிட்டு இந்துக் கோவில்கள், முஸ்லிம் பள்ளிவாசல் கள், கிறிஸ்தவ தேவால யங்களை உடைக்கின் றது. இதன்மூலம் தமிழர் களுக்கு உரிமைகளை வழங்க மாட்டோம்.

மாறாக, சிங்கள பவுத்த பேரினவாத தீவிர வாத சக்திகளின் அடி மைகளாகவே தமிழர் கள் வாழ வேண்டும். தமிழர்களுக்கு உரிமை என்ற பேச்சுக்கே இட மில்லை என்பதே அர சாங்கத்தின் கொள்கை யாகும்.

அரசாங்கத்தின் சமா தானமும், தேசிய நல்லி ணக்கமும் உதட்டளவி லேயே உள்ளது. தவிர நடைமுறை சாத்திய மானதாக இல்லை.

எமது பிரச்சினையை உள்நாட்டில் தீர்க்க முடியும். வெளிநாடுகள் தேவையில்லை.

எமக்கு அரசியல் அனுபவம் உள்ளது போன்ற பாதுகாப்புச் செயலாளரின் மந்திரங் களை சர்வதேசம் செவி மடுக்காது.

ஏனென்றால் நடை முறையில் நாட்டில் எதுவுமே இல்லை.

சர்வதேசமோ, அதன் தலைவர்களோ இவர் களின் மந்திரங்களை கேட்குமளவிற்கு முட் டாள்களல்ல.

எதிர்வரும் அய்.நா. மனித உரிமை ஆணைக் குழு மாநாட்டில் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்குமென்பதை எதிர்பார்த்திருக்கின்றோம்.

எமது மக்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொள்வதற்கான முன்ன கர்வுகளையும் நாம் மேற் கொண்டு வருகின்றோம் என்றும் சுரேஷ் பிரேமச் சந்திரன் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/74193.html#ixzz2re5dyUFR

தமிழ் ஓவியா said...


இன்னும் எத்தனைப் பிரதமர்கள் தேவை?

புலி வருகிறது புலி வருகிறது! என்று சொல்லுவது போல, பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு இதோ வருகிறது - இதோ வருகிறது என்று நீண்ட காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது.

1996 தொடங்கி - இதுவரை பல பிரதமர்களைச் சந்தித்து வந்துள்ளது - இந்த மசோதா. மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம், மக்களவையில் நிறைவேற்றப்பட முடியாத நிலைதான் இன்றுவரை; நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தொடர் கூட்டத்தில், இதற்கான சட்டம் மக்களவையில் நிறைவேற்றப்படும் என்று காங்கிரஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் தருணம் என்பதால், அனேகமாக இந்தச் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று எதிர்ப் பார்க்கலாம்.

சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதாதளம் போன்ற கட்சிகள் இதில் உள் ஒதுக்கீடு தேவை என்று வலியுறுத்துகின்றன; இது ஒரு நியாயமான கோரிக்கையாகும்.

உள் ஒதுக்கீடு அளிக்கப்படாவிட்டால், இந்த வாய்ப்பை உயர் ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் கைப்பற்றிக் கொண்டு விடுவார்கள் என்ற அச்சத்தில் அதிகமாகவே நியாயம் உண்டு. மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதியை உயர் மட்டப் பெண்கள் பிடித்தால் அது ஆபத்தாகவே முடியும் என்பதை மறந்துவிட வேண்டாம்!

காங்கிரஸ் இந்த வகையில் தீர்க்கமாக முடிவு எடுத்தால் அதனை யார் எதிர்க்கப் போகிறார்கள்? இந்த எளிய கருத்து காங்கிரசுக்கு ஏன் விளங்கவில்லை என்பது விளங்காத புதிராகவே இருக்கிறது. காங்கிரசில் உள்ள உயர் ஜாதியினர், உள்ளுக்குள் முட்டுக்கட்டை போடுகிறார்களோ என்று அய்யப்படவும் இடம் இருக்கிறது.

மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரி பகுதியினராக இருக்கும் பெண்களின் வாக்குகள், யாருக்குக் கிடைக்கின்றனவோ, அவர்கள்தான் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பதை, மறந்து விடக் கூடாது. உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கப்படுகிறதே, அதே நிலை, சட்ட மன்றங்கள், மற்றும் நாடாளுமன்றத்தில் ஏன் பின்பற்றக் கூடாது?

நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை வெறும் 10.7 விழுக்காடுதான்; உலக நாடுகளின் வரிசையில் இதில் இந்தியாவுக்கு 104 ஆவது இடம் என்பது வருத்தப்பட வேண்டிய ஒன்றாகும். முசுலிம் நாடான பாகிஸ்தான் இப்பிரச்சினையில் 42ஆம் இடமாகும்.

இந்து மதம் - மற்ற மதங்களைவிட பெண்கள் பிரச்சினையில் எவ்வளவுப் பிற்போக்குத்தன மானது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பெண்களுக்கு வாய்ப்புக் கொடுத்தால் தங்கள் ஆற்றலை - சாதனைகளை வெளிப்படுத்தியே தீருவார்கள் என்பதற்கு எத்தனையோ எடுத்துக் காட்டுகள் உண்டு.

கல்வியை எடுத்துக் கொண்டால், மிகவும் தாமதமாகப் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப் பட்டாலும், தேர்வு முடிவுகளில் ஆண்களை பெண்கள் தண்ணீர் காட்டி வருகிறார்களே; இதன் பொருள் என்ன?

மாநிலங்கள், மற்றும் மத்திய அமைச்சரவையை எடுத்துக் கொண்டாலும் பெண்களுக்கு உரிய விகிதாசாரத்தில் இடம் கிடைப்பதில்லை - அப்படியே அமைச்சர் பொறுப்பு அளித்தாலும் சமூக நலத்துறை என்ற ஒன்றை பெண்களுக்காகவே ஒதுக்கி வைத்துள்ளார்கள்.

இதுபற்றியெல்லாம் பெண்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்ச்சி தேவையாகும். இந்தியாவிலேயே பெண்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திவரும் ஒரே இயக்கம் - தந்தை பெரியார் அவர்களின் திராவிடர் கழகமே.

பெண்கள் கவனம் அழகு சாதனப் பொருள் களைச் சுற்றிச் சுழன்று வராமல், முற்போக்குச் சிந்தனையாளர்களாக, தங்களுடைய உரிமை களுக்காகக் களத்தில் இறங்கிப் போராடுபவர் களாக மாற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். பெண்களுக்கு இடஒதுக்கீடு இல்லையென்றால் எங்கள் வாக்குகளும் இல்லை என்று பெண்கள் வீதிகளில் வந்து குரல் கொடுக்கட்டும்! நிச்சயம் விடிவு கிடைக்குமே!

Read more: http://viduthalai.in/page-2/74198.html#ixzz2re5uDMdT

தமிழ் ஓவியா said...


முதலில்...


மனிதத் தர்மத்தை அடிப்படையாக வைத்து மனிதச் சமுதாயத்திற்கு யாராவது தொண்டாற்ற வேண்டுமானால், முதலில் செய்யவேண்டியது பகுத்தறிவுப்படி மக்களை நடக்கச் செய்வதும், சிந்திக்கச் செய்வதுமேயாகும். - (விடுதலை, 25.7.1968)

Read more: http://viduthalai.in/page-2/74197.html#ixzz2re62gto8

தமிழ் ஓவியா said...


சபாஷ் பொதிகை


ஆசிரியருக்குக் கடிதம்

சபாஷ் பொதிகை

இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு பொதிகை தொலைக்காட்சியில் ஜனவரி 14,15,16 ஆகிய நாட்களில் கிராமிய நிகழ்ச்சிகளாகிய ஆண்கள், பெண்கள் பறை இசை, கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கோலாட்டம், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், கிராமியப் பாடல்கள் போன்றவற்றை பிரம்மாண்டமான முறை யில் தயாரித்து காலை முதல் இரவு வரை காண்பித்தார்கள் எந்த விதத் தொய் வுமில்லாமல் மனம் மகிழும் வண்ணம் இருந்தது.
ஜனவரி 17ஆம் தேதி வெள்ளி காலை 9.30 முதல் 10.00 மணி வரை அய்யா என்ற தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் காண்பித்தனர்.

வாழ்க பொதிகை! இதைப் போன்ற நல்லவைகளை மேலும் பொதிகை தொடர்ந்து செய்க என்று கேட்டுக் கொள் கிறேன்.

- எஸ். நல்லபெருமாள், நாகர்கோவில்

Read more: http://viduthalai.in/page-2/74204.html#ixzz2re6E1m9H

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி மாநில, மண்டல பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்


திருச்சி, ஜன. 27- குழந்தைகள், மாணவர்கள், இளை ஞர்களுக்கு நிறைய திட்டங்கள் இருக்கின்றன. அதை நாம் வென்றெடுக்க வேண்டும் என இளைஞ ரணி, மாணவரணி கூட்டத்தில் வீ.அன்புராஜ் பேசினார். திராவிடர் கழக இளைஞரணி, மாணவ ரணியின் மாநில, மண்டலப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் 26.01.2014 மாலை 6.00 மணியளவில், திருச்சி பெரியார் மாளிகையில் நடை பெற்றது. இந்நிகழ்வில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையேற்றுப் பேசியதாவது : அணுகுமுறையில் அழகு!

நம் இயக்கத்தில் இளைஞர்கள் நிறைய இருக் கின்றனர். எனினும் இன்னும் அதிகரிக்க வேண்டும். இளைஞர்கள் நம்மிடம் வருவதற்கு நிறைய வழிகள் உள்ளன. அதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சமூகத்தில் அவர்களுக்கான நெருக் கடிகள் கூடிக் கொண்டே இருக்கின்றன. பல்வேறு விதமான போதைகளை நோக்கி அவர்களின் பாதை அமைந்திருக்கிறது. அதை நாம்தாம் மீட்டாக வேண்டும். இளைஞர்களுக்கு நாம் நிறைய புதுத் திட்டங்களை வைத்திருக்கிறோம். நம் கொள்கை கள் மிகச் சிறப்பானவை என்பதை நீங்கள் அறிவீர் கள். இதில் என்ன மாதிரியான அணுகுமுறைகளைக் கையாண்டால், எளிதில் வெற்றி பெறலாம் என்பதைச் சிந்தியுங்கள். அவ்வழியே அவர்களிடம் பேசுங்கள். இலக்கு வைத்துச் செயல்படுவதே நம் நோக்கமாக இருக்க வேண்டும். நம்முடைய மாநாடுகள் எப்போதுமே தனித்தன்மை வாய்ந்தவை. அதிலும் இளைஞரணியின் பேரணிகளில் ஓர் அழகு இருக்கும். அண்மையில் ராஜபாளையத்தில் அதை நாம் ரசித் தோம்.

நிறைய விசயங்களில் நாம் இருக்கிறோம்! தமிழ்நாட்டில் புது வீச்சுடன் நிறைய செயல் களைச் செய்து வருகிறோம். அது பெரும் விளைச் சலைத் தந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பலரும் இன்று செய்து வரக்கூடிய செயல்களுக்கு, அடிப்படை நாமாக இருக்கிறோம். ஆக எல்லா விசயங்களிலும் நாம் இருக்கிறோம். இளைஞர்கள் எண்ணிக்கையை இன்னும் நாம் அதிகப்படுத்த வேண்டும். இந்த ஆண்டு 10 ஆயிரம் இளைஞர்கள் என்பது நம் இலக்காக வேண்டும். பொதுவாக இளைஞர்கள் வேகமாக வருகின்றனர். திருமணத் திற்குப் பின்பு ஒரு தயக்கம், தடங்கல் தெரிகிறது. அதை இணைந்து நாம் சரி செய்ய வேண்டும். நம்மிடம் சீரிய கொள்கையும், சிறந்த ஒழுக்கமும் இருக்கிறது. பிறகு ஏன் குடும்பங்களின் ஈடுபாடுகள் குறைய வேண்டும்? நம்முடைய அணுகுமுறைகளில் கொஞ்சம் மாற்றம் தேவைப்படுகிறது.


தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவரின் கனிவான பேச்சு! இடம், பொருள், சூழல் தகுந்து நம் செயல்கள் இருக்க வேண்டும். நம் அணுகுமுறைகளை ஒரே மாதிரியாக வைத்திருக்கக் கூடாது. பொது நிகழ்ச்சி களில் தமிழர் தலைவரின் பேச்சைக் கவனியுங்கள். இடத் திற்கும், தலைப்பிற்கும் ஏற்ற பேச்சாக இருக்கும். எவரையும் ஈர்க்கும், கனிவான பேச்சாக அது அமையும். நம்மைத் தவறாய் நினைத்திருப்பவர்கள் கூட, ஒரே சந்திப்பில் மாறும் அதிசயத்தை அங்கே காணலாம். நாம் கூட பொது நிகழ்ச்சிகளை நிறைய செய்யலாம். பெரிய செலவுகளும், ஆடம்பரங்களும் தேவையில்லை. சிறிய அரங்கம் போதும். இருபது, முப்பது பேர் இருந்தாலும் மகிழ்ச்சிதான். நண்பர் களை அழையுங்கள், நிச்சயம் வருவார்கள். அவர்க ளுடன் கலந்து பேசுங்கள். கனிவாகப் பேசுங்கள். அவர்கள் பேச்சால் நாம் புண்பட்டாலும் பரவா யில்லை, நம் பேச்சால் அது நடந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பொது மக்களோடு நாம் நம்முடைய அண்மைக் காலத் திட்டங்கள் யாவும் பொது மக்களுக்காக, பொது மக்களோடுதான்! அது மன்றல் நிகழ்ச்சியாக இருந்தாலும், பொங்கல் விழாவாக இருந்தாலும் எல்லாவற்றிலும் பொது மக்கள் நம்முடனே இருக்கின்றனர். மன்றல் நிகழ்ச் சியின் ஒவ்வொரு மனங்களிலும் நாம் நிறைந்திருக் கிறோம். இதுவரை நம்மிடம் வந்து திருமணங்கள் செய்த, நாம் செய்து வைத்த இணையர்களை ஒன்று திரட்ட உள்ளோம். எதிர்வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி மன்றலின் அடுத்த புறப்பாடு மீண்டும் சென்னையில் இருந்து தொடங்க இருக்கிறது. மாணவர்களோடு நாம்!

பெரியார் ஆயிரம் குறித்து ஆயிரமாயிரமாய் தோழர்கள் சொன்னீர்கள். சென்ற ஆண்டு நாம் பெற்ற "வீச்சு" இன்னும் அப்படியே இருக்கிறது. இந்த ஆண்டில் மேலும் நாம் உயர வேண்டும். பெரியார் ஆயிரம் குறித்த நமக்கு வந்த பின்னூட் டங்கள் பொக்கிசமானவை. நம் உழைப்பிற்கான முழு அறுவடையைக் கொடுத்த திட்டம் அது. தமிழ்நாடு தேர்வாணையத்திற்கு (டி.என்.பி.எஸ்.சி) படிப்பதைப் போல மாணவர்கள் படித்தார்கள்.

தமிழ் ஓவியா said...

பள்ளிகளின் நிர்வாகமும், ஆசிரியர்களும் தொடர்ந்து நமக்குப் பாராட்டுகளை வழங்கி வருகிறார்கள். நாமும் அவர்களுக்கு நன்றி தெரிவித் துக் கடிதங்கள் அனுப்பினோம். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெரியார் ஆயிரம் நடைபெறும். தமிழ் மட்டுமின்றி, பல மொழிகளில் தயாராகிறது. மும்பை, சிங்கப்பூர் உள்ளிட்ட பல இடங்களுக்குப் பெரியார் ஆயிரம் செல்கிறது. சென்ற ஆண்டை விடவும், தோழர்கள் முன்பே திட்டமிடுங்கள்; தொடர்ந்து எங்களுடன் இணைப்பில் இருங்கள்! அதேபோல மாணவர்களுக்குக் கணினிப் பயிற்சியும் நாம் வழங்குகிறோம். நம்முடைய வாகனத்திலே வர ஏற்பாடு செய்திருக்கிறோம். அதற்கான வரைவுகள் தயாராகி வருகின்றன. தோழர்கள் பெரிய செலவுகள் இன்றி, சிரமங்கள் இன்றி, எளிய வகையிலான இந்தத் திட்டங்களை எடுத்துச் செல்ல வேண்டும். குழந்தைகளோடு நாம்! குழந்தைகள் பழகு முகாம்களை நாம் நடத்தி வருவதை நீங்கள் அறிவீர்கள். பெரியவர்களுக்கு அங்கு அனுமதி இல்லை. அந்த முகாம்கள் குறித்துக் குழந்தைகளிடம் கேட்டுப் பாருங்கள். கதை, கதை யாய்ச் சொல்வார்கள். "கடவுள் இல்லை என எங்கள் குழந்தைகள் சொல்கிறார்கள். ஒரே வாரத்தில் அப்படி என்னதான் செய்தீர்கள் ?" எனப் பெற் றோர்கள் எங்களிடம் தொலைப்பேசியில் பேசினார் கள். நாங்கள் கடவுள் குறித்துக் குழந்தைகளிடம் பேசுவதே இல்லை. பிரச்சாரங்களும் செய்வதில்லை. மாறாக ஒரு "உயர் வகை" மனிதருக்குத் தேவையான அம்சங்களை அவர்களுக்கு வழங்குகிறோம். அதை வியப்பாகக் கற்றுக் கொள்ளும் குழந்தைகள், நம்மைப் பார்த்து, நம் செயல்களைப் பார்த்து, தாமாகவே ஒரு முடிவுக்கு வருகிறார்கள். ஒரு மனிதருக்கான புறச் சூழல் முக்கியம் என்போமே, அதுபோல இது அமைகிறது; வெற்றி பெறுகிறது! பொதுவாக 13 வயதுக்கு உள்ளிட்ட குழந்தைகளே பழகு முகாமில் பங்கேற்கலாம். இப்போது பெற் றோர்கள் என்ன கேட்கிறார்கள் ? "எங்கள் குழந் தைக்கு 14 வயது ஆகிவிட்டது, அதற்கு என்ன மாற்று வைத்திருக்கிறீர்கள்?" என்கிறார்கள். நாமும் அது குறித்து இப்போது சிந்தித்து வருகிறோம். 14 முதல் 17 வயதுக்கான திட்டங்கள் விரைவில் உருவாகலாம். இளைஞர்களோடு நாம்!

தமிழ் ஓவியா said...

நான் பள்ளியில் படிக்கும் போது, மாலை நேரங் களில் "விடுதலை" விநியோகம் செய்திருக்கிறேன். கல்லூரிகளின் விடுதிகளுக்கு நாளிதழ் கொண்டு சேர்ப்பேன். அந்தக் காலங்களில் விடுதிகள் நமக்கு பெரும் களமாக இருந்து வந்தன. நம்மிடம் வருபவர் கள் உடம்பில் கலர் சட்டை அணிந்து, கையில் கறுப்புக் கயிறு கட்டி வருவார்கள். நீங்கள் கவலைப் பட வேண்டாம். ஏற்றுக் கொள்ளுங்கள். உடனே சட்டையை மாற்ற வேண்டாம்; கயிறை அறுக்க வேண்டாம். நமது தொடர்ந்த அணுகுமுறையால் கையில் இருக்கிற கறுப்பு நிறம், சட்டை நிறமாக மாறிப் போகும். நம்முடைய கருத்துகளை எடுத்துச் சொல்கிற போது கோபமும், உணர்ச்சியும் இருக் கவே கூடாது. கோபத்தோடு, வேகத்தோடும் பேசி னால் தான் நாம் அழுத்தமான கொள்கையாளர்கள் என நினைக்கக் கூடாது. பொறுமையும், பக்குவமும் நமக்கு முக்கியம். இந்த அணுகுமுறையால் எவரை யும் நாம் வெல்ல முடியும். அதேபோல நம் வீட்டுப் பெண்கள் நிறைய பேர் கொள்கைக்கு வர வேண்டும். அவர்களை வெற்றி பெறும் புதிய அணுகுமுறை களை நீங்கள் கையாள வேண்டும். மகளிர்க்கு முக்கியத்துவம் கொடுத்து, குடும்பச் சந்திப்புகளை நடத்த வேண்டும். மகளிர் மிக, மிக முக்கியம் என் பதை நீங்கள் உணர வேண்டும். அதேபோல இளை ஞர்கள் இணையம், குறுந்தகவல் போன்றவற்றை அதிகம் பயன்படுத்த வேண்டும். கண்டிப்பாக விடுதலை படியுங்கள். இணையம் வழி படிப்பவராக இருந்தால், உங்கள் மூலம் விடுதலையை வேறொரு இடத்திற்குக் கொண்டு சேருங்கள். விடுதலை குறித்த உங்களின் விமர்சனங்கள், ஆலோசனைகளை எப்போது வேண்டுமானாலும் எங்களுக்குத் தெரி யப்படுத்தலாம். அதற்கான தொடர்பு எண் ஒன்றை வழங்கி உள்ளோம். அந்த எண்ணுக்குத் தவறிய அழைப்புக் கொடுங்கள்.(மிஸ்டு கால்) நாங்கள் பேசுகிறோம். உங்கள் ஊரில் புதிதாய் ஒரு சாமியார் வந்து விட்டாலும் உடனே எங்களுக்குச் சொல்லுங் கள். அந்தச் சாமியாரை அப்புறப்படுத்துவதின் மூலம் உங்கள் ஊருக்கு ஒரு நன்மை செய்ததாய் இருக்கட் டும். நாம் எங்கே வீழ்வோம் என எதிராளி நம்மைக் கவனித்துக் கொண்டே இருப்பார். அதற்கு நாம் இடம் தரக் கூடாது. தலைமை நிலையம் எல்லா வகையிலும் இளைஞர்களுக்கு உதவி வருகிறது. சின்ன, சின்ன விசயங்களிலும் நாம் கவனம் செலுத் தியே வருகிறோம். அண்மையில் கூட "அரசு அலு வலகங்களில் மதச் சம்பந்தமான விழாக்கள் நடை பெறக் கூடாது" என காவல்துறை ஆணையருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தோம். அதன் நகல் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நாம் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். இயக்கம் சார்ந்து பெற வேண்டிய தகவல்கள் குறித்து நாம் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். நம்முடைய இளைஞர்கள் சிறு, சிறு தொழில்களைச் சிறப்பாகச் செய்ய வேண் டும். அது குறித்த வாய்ப்புகளை நாம் கூடுதலாகச் சேகரித்தும், சிந்தித்தும் வருகிறோம். வேலை இல்லாமல் இருக்கக் கூடிய நம் இளைஞர்கள், தங்களுடைய சுய விவரத்தைத் தெளிவாக அச்சிட்டு அனுப்பி வையுங்கள். அதுகுறித்தும் பரிசீலிப்போம். உடனே பயன் வேண்டும் என எதிர்பார்க்காமல் கால அவகாசம் கொடுக்க வேண்டும். இளைஞர்கள் எப்போதும் உற்சாகமாக இருக்க வேண்டும். இன்றைய கலந்தாய்வு மற்றும் கருத்துக் கேட்பு கூட்டம் மனநிறைவைத் தந்துள்ளது. தொடர்ந்து நாம் சந்திப்போம்", எனக் கழகப் பொதுச் செயலா ளர் வீ.அன்புராஜ் பேசினார்.

Read more: http://viduthalai.in/page-3/74210.html#ixzz2re7CR84C

தமிழ் ஓவியா said...


கடவுளுக்கு முகவரி உண்டா? விடுதலை வாசகர் வட்டம் சொற்பொழிவில் கேள்வி

மதுரை, ஜன. 27- 12.01.2014 ஞாயிற்றுக் கிழமை மாலை 6.30 மணிக்கு மதுரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பாக 13ஆவது தொடர் சொற்பொழிவு நடைபெற்றது. கூட்டத்திற்கு விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவரும் பணி நிறைவு பெற்ற நீதிபதியுமான பொ. நடராசன் தலைமை தாங்கினார். விடுதலை வாசகர் வட்டத்தின் பொருளா ளர் பெரி.காளியப்பன் வந்திருந் தோரை வரவேற்றார். "பெரி யார் பேழை" என்ற தலைப்பில் சடகோபன் அவர்கள் உரை யாற்றினார். அவரது உரையில் தானாக பிறக்காத மனிதன் தனக்காக மட்டுமே வாழக் கூடாது என்ற தந்தை பெரியார் அவர்களின் கருத்தினை விவ ரித்து பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. விடுதலை "இம்மாத சிந் தனை" என்ற தலைப்பில் மதுரை மாநகர பகுத்தறிவாளர் கழக தலைவர் சுப.முருகானந்தம் இம்மாத விடுதலையில் வந்த செய்திகளை தொகுத்து ஆருத்ரா தரிசனம் பற்றிய விமர்சனம் மோடி வருகிறார் எச்சரிக்கை என்ற அரசியல் கட்டுரை, சிவகாசி மணியம் அவர்கள் எழுதிய கடவுளுக்கு முகவரி உண்டா" என்ற பகுத்தறிவுச் சிந்தனை, விடுதலை ஆசிரியரும் திராவிடர் கழகத்தலைவருமான தமிழர் தலைவர் அவர்களின் வாழ்வியல் சிந்தனையில் நடைப் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்த கட்டுரை மற்றும் பிரா மணாள் உணவு விடுதி பெயர் பலகை அகற்றல் பார்ப்பனர் மாநாட்டில் 10 இட ஒதுக்கீடு போன்ற விவரங்களை விரிவாக பேசி விடுதலையின் செய்திகள் அரசியல் பகுத்தறிவு வாழ்வியல் சிந்தனை இன உணர்வு போன்ற செய்திகளை சுட்டி காட்டியது வந்திருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது. பேச்சாளர் பற்றிய அறிமுகத்தை மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் அ.வேல் முருகன் செய்தார்.

சிறப்புப் பேச்சாளரான மதுரை மாநகர திராவிடர் கழகத் தலைவர் சே. முனியசாமி "அயல் நாட்டு அனுபவங்கள்" என்ற தலைப்பில் அவர் சுற்றிவந்த 12 நாடுகள் பற்றிய அனுவங்களை சுவை பட எடுத்துரைத்தார். புத்தர் கோவிலில் 6 கைகள் உள்ள சிலையில் கையில் வேலா யுதம் சூலாயுதம் இருந்த கட் சியை சுவைபட எடுத்துக் கூறி னார். ஹுண்டாய் கார் கம்பெ னியில் ஒரு நிமிடத்திருக்கு ஒரு கார் தயாரிப்பதையும் ஒரு லட்சம் பேர் அங்கு வேலை செய்வதையும் அவர் கூறும் போது அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். சாலைகள் தூய்மையாக இருப்பதைக்கூறி காரில் செல்ப வர்கள் கூட உதிரும் இலை களை எடுத்து தங்கள் பையில் போட்டுகொள்கிறார்கள். அதே நேரத்தில் சீனர்கள் கடும் உழைப் பாளிகள் என்றாலும் ஏமாற்று பவர்களும் இருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டினார். அங்கு நீதிமன்றங்களில் உரிமை இயல் வழக்குகள் 6 மாதங்களி லும் குற்றவியல் வழக்குகள் 3 மாதங்களிலும் முடிவுக்கு வரு கின்றன என்று அவர் கூறும் போது வியப்பாக இருந்தது. அங்கு அணைகளில் தேங்கி யுள்ள தண்ணீர் 5 ஆண்டு பாசனத்திற்கு பயன்படுகிறது என்றார். ஹாங்காங்கில் உள்ள ஓட்டல்களில் தங்க கதவு செயற்கை வானம் ஆகியவை 1000 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளதை வியந்து பாராட்டி பேசினார். அவரது அனுபவங் கள் அனைவரது கவனத்தை ஈர்த்ததோடு சிந்தனைக்கு விருந்தாகவும் அமைந்திருந்தது. கூட்ட முடிவில் விடுதலை வாச கர் வட்ட செயலாளர் அ. முரு கானந்தம் நன்றி கூறினார்.

Read more: http://viduthalai.in/page-4/74215.html#ixzz2re7jj1ea

தமிழ் ஓவியா said...


உடலில் தங்கியிருக்கும் கொழுப்பை வெளியேற்ற உதவும் 10 உணவுகள்


உடல் எடையை குறைக்க விரும்பினால், ஆரோக்கிய மற்ற உணவுகளை மட்டும் சாப்பிட்டு, உடற்பயிற்சி இயந் திரத்தில் நாள் முழுவதும் நேரத்தை செலவிட்டாலும் பலன் கிடைக்காது. நானும் உடல் எடையினை குறைத்து காட்டுகிறேன் பார் என்று கூறி அதிநவீன எந்திரங்கள் மூலம் உடல் நலத்தை கெடுத்துக்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களை செய் யாமல், உடல் எடையைக் குறைக்கும் குறிக்கோளை அடைய இயலாது. சந்தையில் பல்வேறு எடை குறைப்பு வாக்குறுதிகள் நிலவி வந்தாலும், அவை பெரும்பாலும் உண்மைக்குப் புறம்பானவையாகவும், உடலுக்கு ஆபத்தானவைகளாகவும் உள்ளன.

ஆனால் உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப் பாட்டுடன், எடை குறைப்பிற்கான ஒரு வழிமுறை உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பதாகும். இதற்கு உடனடி சிறந்த வழி, கொழுப்பை குறைக்கும் உணவுகளை வழக்கமான உணவில் சேர்த்துக் கொள்வதாகும்.

இங்கு எடை குறைப்பு திட்டத்தை எளிமையாகவும், பலனுள்ளதாகவும் மாற்ற கொழுப்பை குறைக்கும் உணவு வகைகளை கீழே கொடுத்துள்ளோம். அவற்றைப் படித்து உணவில் சேர்த்து பயன் பெறுங்கள்.


தமிழ் ஓவியா said...

1. கால்சியம் : கால்சியம் எலும்பு மற்றும் பற்களுக்கு வலுவூட்டும் என்று பலர் சொல்வதைக் கேள்வி பட்டிருப்பீர்கள். ஆனால் அவை பசியை கட்டுப்படுத்து வதில் உதவுகிறது என்பதை அறிந்தால் ஆச்சர்யப் படுவீர்கள்.

பால் பொருட்கள் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பொருட்களை உண்ணுதல், கொழுப்பின் அடர்த்தியை குறைக்கவும், உண்ணும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க முயற்சிக்கும் போது கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள்.

2. ஆப்பிள்கள்: தினசரி ஆப்பிள் உட்கொள்ளுதல் மருத்துவரை அணுகுவதை குறைக்கும். அதே வேளையில், கொழுப்புச் செல்களை குறைக்கவும் உதவுகிறது என்பது தெரியுமா! ஆம், ஆப்பிளின் தோல் எடை குறைப்பு குறிக்கோளை பூர்த்தி செய்யும் பல விந்தைகளை உள்ளடக்கியது. இதில் காணப்படும் பெக்டின் என்ற பொருள், உடற்செல்கள் கொழுப்பினை உறிஞ்சுவதை மட்டுப்படுத்துவதோடு, நீர்த்தன்மை யினால் கொழுப்பு சேர்க்கைகளை நீக்க உதவுகிறது.

3.வால்நட்: வால்நட்களில் ஒமேகா-3, ஆல்பா லினோலினிக் மற்றும் தன்னிறைவற்ற கொழுப்புச் சத்தை ஆரோக்கியமான அளவுகளில் கொண்டுள்ளது. இந்த தன்னிறைவற்ற கொழுப்புச்சத்தானது, பெரிய அளவில் நம் கொழுப்பை கரைக்க உதவுவதோடு, உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. ஆகவே ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்க சிறிதளவு வால்நட்கனை உட்கொள்ளுங்கள்.

தமிழ் ஓவியா said...

4.பீன்ஸ்: பீன்ஸ் ஒரு குறைந்த கொழுப்பையும், க்ளைசீமிக் குறியீடு எனப்படும் மெதுவாக சக்தி வெளியிடும் தன்மையும், அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதச் சத்தையும் கொண்ட உணவு. இது சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு சிறந்த புரதச்சத்து தரும் உணவு. அத்துடன் இது கொழுப்பை வெளியேற்றி, உடலுக்கு நல்ல வளர்சிதை சுழலை வழங்குவதால், இது நல்ல முறை யில் கொழுப்பை கரைக்கும் உணவாக விளங்குகிறது.

5.இஞ்சி: இஞ்சியில் பல ஆச்சரியப்படத்தக்க குணங்கள் உள்ளன. இது அஜீரணத்தை குறைக்கவும், வயிற்று எரிச்சலை குறைக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் மற்றும் தசை மீட்புக்கும் உதவுகிறது. மேலும் இது சக்தியையும், கொழுப்பை கரைக்கும் செயல்களையும் ஊக்குவிப்பதனால், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவராயின் இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

6. ஓட்ஸ் : காலை உடற்பயிற்சிக்குப் பின்னர் அல்லது காலை நடைப்பயிற்சிக்குப் பின்னர் ஓட்ஸ் உணவு சேர்த்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ் உணவு மெதுவாக செரிமானமாவதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும், அதே சமயம் கொழுப்பைக் கரைய வைத்து விரைவுப் படுத்தவும் உதவுகிறது. இப்படி மெதுவாக செரிமான மாகும் தன்மையினால் எடையை குறைக்க விரும்பும் ஒவ்வொருவருக்கும் இது இன்றியமையாத உண வாகும்.

7. க்ரீன் டீ : க்ரீன் டீ எனப்படும் பச்சை தேயிலையில் உள்ள பல்வேறு குணங்கள், உடலில் தங்கியுள்ள கொழுப்புக் களை கரைப்பதோடு, புற்றுநோய் செல்களையும் அழிக்கும் தன்மை கொண்டவை. ஆகவே நாள்தோறும் 12 டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.

8.மிளகு: மிளகை உபயோகிப்பதனால் உணவு உண்ட பின்னும்கூட சக்தி மற்றும் கொழுப்பு உடனடியாக வெளியேற்றப்பட்டு, உடலின் வளர்ச்சிதை மாற்றம் குறைந்த நேரத்திற்குள் விரைவுப்படுத்தப்படுகிறது. மேலும் இதில் உள்ள காப்சைசின் என்ற மூலப் பொருள், உடலின் அழுத்த அமிலங்களை விடுவித்து உடம்பிற்கு ஒரு தற்காலிக ஊக்கத்தை தருகிறது. இந்த முறையினால் உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்தி, சக்தியையும், கொழுப்பையும் கரைக்க உதவுகிறது.

9.தண்ணீர்: இது ஒரு உணவாக கருதப்படா விட்டலும், தேவையான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். உடலில் தண்ணீர் ஒரு இன்றி யமையாத ஒரு பாகமாகும். தேவையான தண்ணீர் குடிக்கவில்லையெனில், சில நிமிடங்களுக்குள் உடல் வறட்சியை உணரக்கூடும். சில சமயங்களில் தாக உணர்வினை பசி உணர்வு என்று தவறாக புரிந்து கொண்டு, தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக உண்ணத் தொடங்குகிறோம். எனவே கொழுப்பு கரைப்பிற்கு தண்ணீர் உதவுவதால், போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியமாகிறது.

10. முட்டை: முட்டை சிறப்பாக கொழுப்பை கரைக்கும் உணவுகளில் ஒன்று. இதன் மஞ்சள் கரு சக்தியையும், கொழுப்பையும் கரைக்க முக்கியமான தாகும். இதிலுள்ள கொழுப்புச்சத்து மிக சிறிய அளவில் தான் இரத்த கொழுப்பு அளவினை பாதிக்கிறது. மேலும், முட்டை உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங் களையும், புரதத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள தால், கொழுப்பை குறைக்க ஒரு நல்ல பொருத்தமான உணவுப் பொருளாக நிச்சயமாக கருத வேண்டியுள்ளது.

Read more: http://viduthalai.in/page-7/74224.html#ixzz2re8B49KM

தமிழ் ஓவியா said...


உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் வழிகள்


ஒரு மனிதனின் சராசரி ரத்த அழுத்தமானது 120/80 என்ற இரண்டு அளவுகளில் கணக்கிடப்படுகின்றது. முதல் அளவானது அவரது இதயம் எந்த அளவிற்கு தமனிகளில் ரத்தததைத் செலுத்துகின்றது என்ப தினையும், இரண்டாவது அளவு தொடரும் துடிப்பு களுக்கிடையே இதயமானது சீராக செயல்படுவதைக் கண்டறியவும் உதவுகின்றது.

இந்த அளவானது ஒருவருக்கு 140/90 என்ற அளவு வரை இருக்கலாம். அதனைவிட அதிகரிக்கும்போது பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு, இதய நோய் போன்றவை தாக்கக்கூடும் என்று எச்சரிக்கும் மருத்துவர்கள் இத்தகைய நோய்கள் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ள உதவும் வழிமுறைகளையும் பட்டியலிட்டுள்ளனர்.

ஆண்கள் மது அருந்தும் பழக்கம் உடையவர்களாக இருந்தால் ரத்த அழுத்த நோய்க்கு ஆளாகும் வாய்ப்பு அதிகரிக்கின்றது. எனவே, குடிப்பழக்கம் உள்ளவர்கள் மதுவைத் தவிர்ப்பதே சிறந்ததாகும் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல் புகை பிடிக்கும் பழக்கமும் இந்த நோய் வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பதாகக் குறிப்பிடும் மருத்துவர்கள் இந்தப் பழக்கத்தை விரைவில் கைவிடுவதே நல்லது என்றும் கருதுகின்றனர்.

ஒருவர் சாப்பிடும் உணவில் உப்பின் உபயோகமும் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் மருத்துவ அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவின் சுவையை அதிகரிக்க உப்பு உதவக்கூடும். ஆனால் இதன் அளவு அதிகரிக்கும்போது கொழுப்புப் படிவங்களை தமனிகளில் ஏற்படுத்தி ரத்த அழுத்த அளவை அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும், உடலில் உள்ள நீர் இருப்பை சமன்படுத்தவும், அமிலத்தன்மையைக் கட்டுப் படுத்தவும் உதவும் பொட்டாசியம் சத்து தமனிகளில் ரத்த ஓட்டம் சீராக நடைபெறவும் உதவுகின்றது. வாழைப்பழம், உருளைக்கிழங்கு, வெள்ளரி, ஆரஞ்சு, முட்டைக் கோஸ், தக்காளி, காலிபிளவர், கீரை மற்றும் பிரக்கோலி போன்ற உணவுகள் உடலில் பொட்டாசியம் சத்தை அதிகரிக்கக் உதவும்.

இதுதவிர ஊட்டச்சத்துகள், மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த பழங்களும், காய்கறிகளும் தேவையான அளவு உணவில் சேர்த்துக் கொள்ளப் படுவதே ஆரோக்கியமான வாழ்விற்கு வழி வகுக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

Read more: http://viduthalai.in/page-7/74225.html#ixzz2re8PXgoU

தமிழ் ஓவியா said...


இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக செயல்படுவதா? முதலமைச்சருக்கு திமுக ஆதிதிராவிடர் நலக் குழு கண்டனம்


சென்னை, ஜன. 27- தி.மு.க. ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (26.1.2014) மாலை 4 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்திலுள்ள அலு வலகத்தில் தி.மு.க. ஆதி திராவிடர் நலக்குழுச் செயலா ளர் க.சுந்தரம் அவர்கள் தலை மையில் - தி.மு.க. ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி - துணைச் செயலாளர்கள் வி.பி.ராஜன், திருமதி. சீனியம்மாள் ஆகி யோர் முன்னிலையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி சிறப்புரையாற் றினார்.

இக்கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலுள்ள ஆதி திராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் - துணை அமைப் பாளர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன:

திராவிடர் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையான சமூகநீதியின் எதிர்ப்பாளரான ஜெயலலிதா, தான் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பிற்படுத் தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப் பட்ட - தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு எதிராகவும், ஆதிக்க வெறியர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வண்ணம் அவர் களுக்கு ஆதரவாகவும் செயல் பட்டு வருவது அவரது வாடிக் கையான செயல்களில் ஒன்று.

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த போது கொண்டு வந்த - செயல் படுத்திய - நடைமுறைப்படுத் திய பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை, காழ்ப்புணர்ச் சியின் காரணமாக முடக்கி வரும் ஜெயலலிதா, உலகமே வியக்கும் வண்ணம் ஒமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய சட்டமன்றக் கட்ட டத்தை முடக்கி, சிறப்பு மருத் துவமனை என்ற பெயரில் அரைகுறையாக அமைக்கப் பட்டு திறக்கப்பட்டது.

அங்கே பணியாற்றிட விண்ணப்பத் திடக் கோரி, 2013 டிசம்பர் 27 அன்று ஜெயலலிதா அரசு அவ சரமாக ஒரு அறிக்கை வெளி யிட்டுள்ளது. அதில் இடஒதுக் கீடு விதிமுறை பின்பற்றப்பட மாட்டாது என சமூகநீதிக்கு எதிரான ஓர் அறிவிப்பை விடுத்து, பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட மக்களின் எதிரி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபணம் செய்துள்ளார் ஜெய லலிதா.

பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப் பட்ட வகுப்பினைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி, வேலை வாய்ப்புகளில் உரிய இடம் பெற இடஒதுக்கீடுதான் கார ணம். தந்தை பெரியார், பேரறி ஞர் அண்ணா, டாக்டர் அம் பேத்கர் ஆகிய தலைவர்கள் போராடி பெற்றுத்தந்த அந்த உரிமைகளை - தலைவர் கலை ஞர் உள்ளிட்ட இடஒதுக்கீட் டில் அக்கறையுள்ள பிற தலை வர்கள் பாதுகாத்து வரும் அக்கொள்கையினை சிதைக் கின்ற வகையில் ஜெயலலிதா அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

கடந்த 19-1-2014 அன்று திமுக தலைவர் கலைஞர் அவர் கள் இடஒதுக்கீட்டில் நீதிமன் றத்தின் மீதுபழி சுமத்துவதா? என்ற தலைப்பில் உடன்பிறப்பு களுக்கு எழுதிய கடிதத்தில், தமிழகத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு காரணமாகத்தான், இட ஒதுக்கீடு பின்பற்றப் படவில்லை என்று ஜெயலலிதா கூறியிருக் கும் காரணம், மக்களை ஏமாற் றுவதற்கும், சமூக நீதியைக் குழிதோண்டி புதைப்பதற்கு மான ஒன்றே தவிர வேறல்ல.

என ஜெயலலிதாவின் மோசடி களையும் - அவர் சமூகநீதியின் முதல் எதிரி என்பதை விளக்கி யிருப்பதோடு, இடஒதுக்கீடு என்பது திராவிட இயக்கங் களின் மூலாதாரக் கொள்கை என்பதை மனதிலே கொண்டு, இந்த ஆட்சியினர் இனியாவது மனம் திருந்தி அறிவிக்கப் பட்டுள்ள மருத்துவர் தேர்வில், இடஒதுக்கீடு கொள்கை கடைப்பிடிக்கப்படும் என்ற அறிவிப்பினைச் செய்ய முன் வருவார்கள் என்று எதிர்பார்க் கிறேன்.

அதற்குப் பதிலாக நாங் கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று பிடிவாதம் காட்டுவார்களேயானால், அதன் விளைவுகளை அவர்கள் சந்திக்கத்தான் வேண்டியிருக் கும்! என்று ஜெயலலிதாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதை இக்கூட்டம் சுட்டிக்காட்டுவ தோடு,

இடஒதுக்கீட்டுக் கொள் கையில் தொடர்ந்து, திராவிடர் இனத்துக்கு எதிராகவும் - தமி ழினப் பகைவர்களுக்கு ஆதர வாகவும் நடந்து வரும் ஆதி திராவிடர் இன விரோதியும், சமூகநீதி விரோதியுமான ஜெய லலிதாவின் இந்த நடவடிக் கையை இக்கூட்டம் வன்மை யாகக் கண்டிப்பதோடு, தனது போக்கினை மாற்றிக் கொண்டு, இடஒதுக்கீட்டுக் கொள்கை கடைப்பிடிக்கப்படும் என்ற அறிவிப்பினை உடனடியாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள் கிறது

Read more: http://viduthalai.in/page-7/74223.html#ixzz2re8Vds6s

தமிழ் ஓவியா said...


இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக செயல்படுவதா? முதலமைச்சருக்கு திமுக ஆதிதிராவிடர் நலக் குழு கண்டனம்


சென்னை, ஜன. 27- தி.மு.க. ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (26.1.2014) மாலை 4 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்திலுள்ள அலு வலகத்தில் தி.மு.க. ஆதி திராவிடர் நலக்குழுச் செயலா ளர் க.சுந்தரம் அவர்கள் தலை மையில் - தி.மு.க. ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி - துணைச் செயலாளர்கள் வி.பி.ராஜன், திருமதி. சீனியம்மாள் ஆகி யோர் முன்னிலையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி சிறப்புரையாற் றினார்.

இக்கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலுள்ள ஆதி திராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் - துணை அமைப் பாளர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன:

திராவிடர் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையான சமூகநீதியின் எதிர்ப்பாளரான ஜெயலலிதா, தான் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பிற்படுத் தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப் பட்ட - தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு எதிராகவும், ஆதிக்க வெறியர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வண்ணம் அவர் களுக்கு ஆதரவாகவும் செயல் பட்டு வருவது அவரது வாடிக் கையான செயல்களில் ஒன்று.

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த போது கொண்டு வந்த - செயல் படுத்திய - நடைமுறைப்படுத் திய பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை, காழ்ப்புணர்ச் சியின் காரணமாக முடக்கி வரும் ஜெயலலிதா, உலகமே வியக்கும் வண்ணம் ஒமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய சட்டமன்றக் கட்ட டத்தை முடக்கி, சிறப்பு மருத் துவமனை என்ற பெயரில் அரைகுறையாக அமைக்கப் பட்டு திறக்கப்பட்டது.

அங்கே பணியாற்றிட விண்ணப்பத் திடக் கோரி, 2013 டிசம்பர் 27 அன்று ஜெயலலிதா அரசு அவ சரமாக ஒரு அறிக்கை வெளி யிட்டுள்ளது. அதில் இடஒதுக் கீடு விதிமுறை பின்பற்றப்பட மாட்டாது என சமூகநீதிக்கு எதிரான ஓர் அறிவிப்பை விடுத்து, பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட மக்களின் எதிரி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபணம் செய்துள்ளார் ஜெய லலிதா.

பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப் பட்ட வகுப்பினைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி, வேலை வாய்ப்புகளில் உரிய இடம் பெற இடஒதுக்கீடுதான் கார ணம். தந்தை பெரியார், பேரறி ஞர் அண்ணா, டாக்டர் அம் பேத்கர் ஆகிய தலைவர்கள் போராடி பெற்றுத்தந்த அந்த உரிமைகளை - தலைவர் கலை ஞர் உள்ளிட்ட இடஒதுக்கீட் டில் அக்கறையுள்ள பிற தலை வர்கள் பாதுகாத்து வரும் அக்கொள்கையினை சிதைக் கின்ற வகையில் ஜெயலலிதா அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

கடந்த 19-1-2014 அன்று திமுக தலைவர் கலைஞர் அவர் கள் இடஒதுக்கீட்டில் நீதிமன் றத்தின் மீதுபழி சுமத்துவதா? என்ற தலைப்பில் உடன்பிறப்பு களுக்கு எழுதிய கடிதத்தில், தமிழகத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு காரணமாகத்தான், இட ஒதுக்கீடு பின்பற்றப் படவில்லை என்று ஜெயலலிதா கூறியிருக் கும் காரணம், மக்களை ஏமாற் றுவதற்கும், சமூக நீதியைக் குழிதோண்டி புதைப்பதற்கு மான ஒன்றே தவிர வேறல்ல.

என ஜெயலலிதாவின் மோசடி களையும் - அவர் சமூகநீதியின் முதல் எதிரி என்பதை விளக்கி யிருப்பதோடு, இடஒதுக்கீடு என்பது திராவிட இயக்கங் களின் மூலாதாரக் கொள்கை என்பதை மனதிலே கொண்டு, இந்த ஆட்சியினர் இனியாவது மனம் திருந்தி அறிவிக்கப் பட்டுள்ள மருத்துவர் தேர்வில், இடஒதுக்கீடு கொள்கை கடைப்பிடிக்கப்படும் என்ற அறிவிப்பினைச் செய்ய முன் வருவார்கள் என்று எதிர்பார்க் கிறேன்.

அதற்குப் பதிலாக நாங் கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று பிடிவாதம் காட்டுவார்களேயானால், அதன் விளைவுகளை அவர்கள் சந்திக்கத்தான் வேண்டியிருக் கும்! என்று ஜெயலலிதாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதை இக்கூட்டம் சுட்டிக்காட்டுவ தோடு,

இடஒதுக்கீட்டுக் கொள் கையில் தொடர்ந்து, திராவிடர் இனத்துக்கு எதிராகவும் - தமி ழினப் பகைவர்களுக்கு ஆதர வாகவும் நடந்து வரும் ஆதி திராவிடர் இன விரோதியும், சமூகநீதி விரோதியுமான ஜெய லலிதாவின் இந்த நடவடிக் கையை இக்கூட்டம் வன்மை யாகக் கண்டிப்பதோடு, தனது போக்கினை மாற்றிக் கொண்டு, இடஒதுக்கீட்டுக் கொள்கை கடைப்பிடிக்கப்படும் என்ற அறிவிப்பினை உடனடியாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள் கிறது

Read more: http://viduthalai.in/page-7/74223.html#ixzz2re8Vds6s

தமிழ் ஓவியா said...

எச்சரிக்கை

ஊறுகாய், கருவாடு உள்ளிட்ட உப்பு அதிகம் சம்பந்தப்பட்டு இருக்கும் உணவினை அதிகமாக சாப் பிட்டால் இரைப்பைப் புற்று நோய் வரும்; எண்ணெயைத் திருப்பித் திருப்பிப் பயன்படுத்தினாலும் இதே ஆபத்து தான்!

- சென்னைப் பொது மருத்துவமனைகருத்தரங்கில் அறிவிப்பு

Read more: http://viduthalai.in/e-paper/74262.html#ixzz2rjKs2aTM

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

வெளுப்பு

செய்தி: அய்.நா. மனித உரிமைகள் அமைப்புத் தேர்தலில் இந்தியா மீண்டும் போட்டி!

சிந்தனை: அதெல்லாம் சரிதான்! சிங்கள அரசின் மனித உரிமைக்கு எதிரான பிரச்சினையில் இந்தியா வின் முகம் வெளுத்து விட்டதே!

Read more: http://viduthalai.in/e-paper/74262.html#ixzz2rjL5iXQj

தமிழ் ஓவியா said...


மருத்துவத்தில் பெண்கள்


பல நூற்றாண்டுகள் கழித்து கிரேக்க நாட்டில் ஏற்பட்ட அறிவியல் புரட்சியும் பெண்களின் பங்களிப்போடுதான் நடந்திருக்கிறது. பிதாகரஸ், பிளாட்டோ போன்ற அறிஞர்களின் குழுவில் பெண்கள், ஆண்களுக்கு இணையாக அங்கம் வகித் திருக்கிறார்கள்.

சில நாடுகளில் பெண் மருத்துவர்கள், பெண்களுக்கு மட்டுமே சிகிச்சையளிக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தது. ஆனால் அப்போதும் ரோம் நகரில் பெண் மருத்துவர்கள், பால் வேறுபாடின்றி அனைவருக்கும் சிகிச் சையளிப்பது நடைமுறையில் இருந்திருக்கிறது.

அதேபோல அலெக்ஸாண்டிரியாவைச் சேர்ந்த மேரி என்கிற வேதியியல் வல்லுநர் சிற்சில கண்டுபிடிப்புகளையும் இந்த உலகிற்கு வழங்கியிருக்கிறார்.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் ஹைபாத்தியாவின் அறி வியல் பணி அளப்பரியது. இவர் தன் தந்தையின் வழிகாட்டு தலில், அலெக்ஸாண்டிரியா பல்கலைக்கழகத்தில் கணிதவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி குறித்த வகுப்புகளை நடத்தியிருக்கிறார்.

திரவங்களின் அடர்த்தியைக் கண்டறி வதற்கான கருவியையும், விண்ணில் நட்சத்திரங்களின் இடத்தைக் கண்டறியும் தொலைநோக்கியையும் ஹைபாத்தியா கண்டுபிடித்த தாகச் சொல்கிறார்கள்.

அதற்கடுத்து வந்த நூற்றாண்டுகளில் பெண் விஞ்ஞானி களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து, முடிவில் குறிப் பிட்டுச் சொல்லும்படி ஒன்றிரண்டு பேர் மட்டுமே நிலைத்து நின்றனர்.

என்ன செய்யப் போகிறோம்?

இப்போதும் உலக அளவில் கணக்கெடுக்கும் போது அறிவியல் தொழில்நுட்பத்திலோ, ஆராய்ச்சியிலோ சிறந்து விளங்குகிறவர்களின் பட்டியலில் பெண்களைத் தேட வேண்டியி ருக்கிறது. இதற்கு என்ன காரணம்? தங்கள் மகள் அறிவியல் துறையைத் தேர்ந்தெடுத்துப் படிப்பதைப் பெற் றோர்கள் தடுக்கிறார்களா? முழுவதுமாகத் தடுப்பதில்லை, ஆனால் அதற்கான எல்லையைச் சுருக்கிவிடுகிறார்கள்.

அறிவியல் என்றால் மருத்துவத்துறையை மட்டுமே நோக்கிய தாக இருக்கிறது பெற்றோர்களின் இலக்கு. மகன்களைத் துணிச்சலுடன் ஆராய்ச்சிப் படிப்புகளை நோக்கி நகர்த்தும் பெற்றோர், தங்கள் மகள் அதை நோக்கி நகர்வதை அவ்வள வாக விரும்புவதில்லை.

இந்தத் தயக்கம்தான் பெண்களை, குறுகிய வட்டத்துக்குள்ளேயே நிறுத்திவிடுகிறது. எல்லை தாண்டி சிந்திக்கவிடாமல் முடக்கிவிடுகிறது. உண்மையில் அறிவியல் அறிவில் ஆண்களைக் காட்டிலும் சிறந்து விளங்கும் திறமை பெண்களுக்கு இருக்கிறது. அதைத்தான் வரலாறும் சொல்கிறது. அந்த வரலாறு திரும்புவதற்கான வழிகளை ஏற்படுத்தித் தருவதும், தடைகளை அகற்றுவதும் நம் கைகளில்தான் இருக்கிறது.

Read more: http://viduthalai.in/page-7/74271.html#ixzz2rjMLe9AI

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வு: சலுகை மதிப்பெண் வழங்க தமிழக அரசு தீவிர ஆலோசனை!

சென்னை, ஜன.29- ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்து, தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிக்க, அரசாணையில் வழிவகை செய்துவிட்டு, அதை அமல்படுத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் முன் வராததை, தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின், சென்னை மண்டல இயக்குநர், கடுமையாக விமர்சித்து உள்ளார்.

இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக, டி.ஆர்.பி., செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள இயக்குநர், உடனடியாக, டி.இ.டி., தேர்வில், மதிப்பெண் சலுகை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; தவறினால், தேசிய ஆணையத்தின் கவனத்திற்கு, பிரச்சினை கொண்டு செல்லப்படும்' என, எச்சரித்துள்ளார்.

இந்த விவகாரம், மிகப்பெரியதாக கிளம்பியிருப்பதால், மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்து, டி.ஆர்.பி., தீவிர ஆலோசனையில் இறங்கி உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தப் பிரச்சினையில், தன்னிச்சையாக, டி.ஆர்.பி., எந்த முடிவும் எடுக்க முடியாத நிலை உள்ளது. ஆணை யத்தின் உத்தரவு குறித்து, முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, உரிய முடிவை எடுக்க, டி.ஆர்.பி., தீர்மானித்துள்ளது. மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்த அறிவிப்பை, முதல்வரே வெளியிடுவார் எனவும், எதிர்பார்க்கப்படு கிறதாம்.

Read more: http://viduthalai.in/e-paper/74298.html#ixzz2rqQdalC9

தமிழ் ஓவியா said...


சபாஷ் சரியான நடவடிக்கை


சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட ஆசாராமின்
ஆசிரமம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது
அரசு அதிகாரிகள் நடவடிக்கை

ஜபல்பூர், ஜன.29- மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே பெதாகட் என்ற இடத்தில் உள்ள சாமியார் ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தை உள்ளூர் அதிகாரிகள் இடித்துத் தள்ளினர். இந்த ஆசிரமத்தை இடிப்பதற்கு பல்வேறு சட்ட ரீதியான சிக்கல்கள் இருந்து வந்தன. அவை நீங்கியதைத் தொடர்ந்து தற்போது ஆசிரமம் இடிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 7000 சதுர அடி பரப்பளவிலான இடத்தில் இந்த ஆசிரமம் கட்டப்பட்டிருந்தது. ஆசிரமம் இடிக்கப்படுவதையொட்டி பெருமளவிலான காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டி ருந்தனர். இதுகுறித்து பெதாகட் நகராட்சியின் தலைமை செயல் அதிகாரி அனிதா யாதவ், வட்டாட்சியர் ரிஷப் ஜெயின் செய்தியாளர்களிடம் கூறுகையில், இடிக்கப்பட்ட கட்டடம், சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகும். இதை இடிக்கத் தடை வாங்கியிருந்தனர். தற்போது அது நீங்கியுள்ளதைத் தொடர்ந்து இடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடம், இடம் ஆகிய அனைத்தும் சேர்த்து மொத்தம் 21,000 சதுர அடி பரப்பளவாகும் என்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/74300.html#ixzz2rqQnFovR

தமிழ் ஓவியா said...


கழகத்தலைவர்பேட்டி


சென்னையில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களை இன்று சந்தித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியில் வந்த போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குச் சுருக்கமாகப் பதில் அளித்ததாவது:-

டெசோ கூட்டம் பற்றி டெசோ தலைவரிடம் பேசிடவே வந்தேன் என்று குறிப்பிட்டார்

தி.மு.க.வில் சகோதரர்களுக்குள் சண்டை நடக்கிறதா என்ற ஒரு செய்தியாளர் கேள்விக்கு சண்டை என்றெல்லாம் கூற முடியாது என்றார். சமரசம் நடக்கிறதா என்ற கேள்விக்கு அதையெல்லாம் தி.மு.க தலைவர் பார்த்துக் கொள்வார் - என்று குறிப்பிட்டார்.

தி.மு.க. மீது எங்களுக்கு எப்போதும் அக்கறை யுண்டு என்றும் கூறினார்.

அழகிரிக்கு பிறந்தநாளில் வாழ்த்து கூறுவீர்களா என்ற கேள்விக்கு வாழ்த்துகள் பொதுவாக எல்லோ ருக்குமே உண்டு என்று கூறினார் கழகத்தலைவர்.

Read more: http://viduthalai.in/e-paper/74360.html#ixzz2rvfiYLFi

தமிழ் ஓவியா said...

திருவள்ளுவரா -முண்டகக் கண்ணியம்மனா?

சென்னை - கலங்கரை விளக்கம் (Light House) மயிலாப்பூருக்கும் இடையில் பறக்கும் இரயில் நிலையில் விரைவில் செயல்படவிருக்கிறது.

புதிய ரயில் நிலையம் உருவாக்கப்படும் பொழுது சம்பந்தப்பட்ட மாநில முதல் அமைச்சர் தான் ரயில் நிலையத்துக்குப் பெயர் சூட்டுவார். அந்த முறையில் ரயில்வே நிருவாகம் நான்கு பெயர்களை முதல் அமைச்சருக்குச் சிபாரிசு செய்தது.

1) திருவள்ளுவர் ரயில் நிலையம்
2) மாதவப் பெருமாள் ரயில் நிலையம்
3) சமஸ்கிருதக் கல்லூரி ரயில் நிலையம்
4) முண்டகக் கண்ணியம்மன் கோயில் ரயில் நிலையம்

இந்த நான்கு பெயர்களில் முதல் அமைச்சர் தேர்வு செய்து அறிவித்திருப்பது எது தெரியுமா?

முண்டகக் கண்ணியம்மன் கோயில் ரயில் நிலையம் என்று முதல் அமைச்சர் பெயர் சூட்டியுள்ளார்.

அண்ணா பெயரில் கட்சியையும், ஆட்சியையும் வைத்துக் கொண்டு இருக்கும் முதல் அமைச்ச ருக்கு, திருவள்ளுவரைவிட, மூடநம்பிக்கையின் அடிப்படையில் முண்டகக் கண்ணியம்மன் கோயில் முக்கியமாகப் போய் விட்டதா?

இனவுணர்வாளர்களும், பகுத்தறிவாளர் களும், மதச் சார்பின்மையை ஏற்பவர்களும் இது பற்றிச் சிந்திப்பார்களாக, அடையாளம் காண் பார்களாக! முதல் அமைச்சர் மறுபரிசீலனை செய்து திருவள்ளுவர் பெயரைச் சூட்டுமாறு வலியுறுத்துகிறோம்!


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.சென்னை
30.1.2014

Read more: http://viduthalai.in/e-paper/74386.html#ixzz2rvfwwB9W

தமிழ் ஓவியா said...


சட்டசபையில் ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க. வெளிநடப்பு


அரசின் பல்வேறு துறைகளில் இடஒதுக்கீடு பின்பற்றாதது ஏன்?

தமிழகத்திற்கு நன்மை தரக்கூடிய சேது சமுத்திரத் திட்டத்தைத் தடுப்பதா?

சாகுபடியை இழந்த விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீட்டை வழங்காதது ஏன்?

செம்மொழித் தகுதியைச் சீர்குலைக்கின்ற வகையில் நடவடிக்கைகளா?

சட்டசபையில் ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க. வெளிநடப்பு

சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே மு.க.ஸ்டாலின் பேட்டி


சென்னை, ஜன. 30- தமிழக அரசின் பல் வேறு துறைகளில் பல நூறு பணி இடங்கள் காலி - இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை மதிக் காதது, தமிழகத்திற்குப் பெரிதும் நன்மை தரக் கூடிய சேது சமுத்திரத் திட்டத்தை வரவிடாமல் தடுக்கின்ற அதிமுக அரசின் போக்கு, நீரின்றி சாகுபடியை இழந்த விவசாயிகளுக்கு முழு மையான இழப்பீட்டுத் தொகை வழங்காதது. செம்மொழித் தகுதியைச் சீர்குலைக்கின்ற வகை யில் நடவடிக்கைகள் இவை அனைத்தையும் கண்டிக்கின்ற வகையில் ஆளுநர் உரையை திமுகழகம் புறக்கணித்து வெளிநடப்பு செய் கின்றது என இன்று (30.1.2014) சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே திமுகழக சட்டமன்ற சட்சித்தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர் களிடையே தெரிவித் தார்.

இன்று (30.1.2014) நண் பகல் 12 மணியளவில் தமிழக சட்டமன்றத்தில் 2014-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழக ஆளுநர் டாக்டர் கே.ரோசய்யா அவர்கள் உரை நிகழ்த்தினார். அப்போது ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த திமுக சட்டமன்ற உறுப் பினர்கள் சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே வந்தனர். அங்கே கூடியி ருந்த செய்தியாளர்களி டம் திமுக சட்டமன்ற கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

இந்த ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து பல்வேறு கொடுமைகளுக்கும், இன்னல்களுக்கும் ஆளாகி வருகிறார்கள், கெட்டுப்போய்விட்ட சட்டம் ஒழுங்குப் பிரச் சினை - வாட்டி வதைத் திடும் மின்வெட்டுக் கொடுமை.

குறுவை, சம்பா பயிர் சாகுபடிக்கு உரிய காலத்தில் தேவையான அளவு காவிரி நீரைப் பெற்றுத் தரதவறியது - சாகுபடியை இழந்தும் கடன்பட்டும், கண் ணீர்க்கடலில் ஆழ்ந் துள்ள விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீட்டுத் தொகையை முறையா கவோ, முழுமையா கவோ வழங்காதது.

சாதிக்கலவரத்திற்குத் தகுந்த தீர்வு காணாதது. திமுக ஆட்சியில் தீட்டப் பட்ட திட்டங்களுக்குப் பொறாமை காரணமாக முடிவு கட்டிய கொடுமை - தமிழகத்தில் அனைத்து ஆறுகளிலும் நடைபெ றும் மணல் கொள்ளைகள்.

தமிழகத்திற்குப் பெரிதும் நன்மை தரக் கூடிய சேது சமுத்திரத் திட்டத்தை வரவிடாமல் தடுக்கின்ற வஞ்சகம். அரசின் பல்வேறு துறை களிலும் பல நூறு பணி இடங்கள் காலி - இட ஒதுக்கீட்டுக் கொள் கையை மதிக்காதது. நெல், கரும்பு விவசாயி களுக்குக் கட்டுப்படி யாகக் கூடிய உரிய விலை கொடுக்க முன் வராதது.


செம்மொழித் தகுதியைச் சீர்குலைக் கின்ற வகையில் நட வடிக்கைகள் என்று இவை போன்ற எண் ணற்ற ஜனநாயக விரோத - மக்கள் விரோத - சட்ட விரோத நடவடிக்கை களைக் கண்டித்து, ஆளுநர் உரையினைப் புறக்கணித்து, திராவிட முன்னேற்றக் கழகம் வெளிநடப்பு செய்கிறது என்று தெரிவித்து இந்த அவையை விட்டு வெளி யேறினோம் என்று சட் டமன்ற வளாகத்திற்கு வெளியே கூடியிருந்த செய்தியாளர்களிடம் திமுக சட்டமன்ற கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/74358.html#ixzz2rvgEIgoL

தமிழ் ஓவியா said...


நாட்டு நடப்புகள்


மோசடி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிக்கெட் வாங்கித் தருவதாகக் கூறி பக்தர்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட போலி அய்.ஏ.எஸ். அதிகாரி வெங்கட் ரமணா கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 6.40 லட்சம் ரூபாய் ரொக்கம், ஒருகாரைப் போலீசார் பறி முதல் செய்தனர். (கைது செய்யப்பட்டு இருப்பவரும் திருப்பதி ஏழுமலையான் பெயரைக் கொண்டவர்தான் - வெங்கடேசன் தான். இது போன்ற மோசடி வேலை நடந்து கொண்டு இருந்ததன் தொடர்ச்சிதான் இது. இதைக் கூடத் தடுக்க முடியாதவன்தான் தீரார வினையெல்லாம் தீர்த்து வைப்பானாம். ஹி... ஹி....)

போராட்டம்

கோயம்பேடு சந்தை அருகே டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பெண்கள் போராட்டம் நடத்தினர். (நியாயந்தானே! இந்தப் பிரச்சினையில் பெரிதும் பாதிக்கப்படுவது குடும்பத் தலைவிகள் தானே?)

ஆபாசம்

இசையமைப்பாளர் அனிருத்து பெண்களைப் பற்றி ஆபாசமான பாடல் ஒன்றை யூ டியூப்பில் உலா விட்டுள்ளார். அவர்மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. (சினிமாவில் படுக்கையறைக் காட்சிகள், குத்தாட்டங்கள், இரு பொருள் கொண்ட பாடல்கள் கோயில்களில் ஆபாசமான சிலைகள், சித்தி ரங்கள் இத்தியாதி இத்தியாதி இருக்கத்தான் செய்கின்றன இவற்றைப் பற்றியும் சிந்திப்பது நல்லதல்லவா!)

ராகுல்பேச்சு

ராகுல் பேசினாலே பா.ஜ.க.வுக்கு வெற்றி - இவ்வாறு கூறியிருப்பவர் இல. கணேசன். (நரேந்திரமோடியை இன்னும் அதிகம் பேச விட்டாலே போதும் அது காங்கிரசுக்குச் சாதக மாகவே முடியுமே!)

குட்டையைக் குழப்பாதீர்!

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை - இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் டில்லியில் நேற்று சந்தித்துள்ளார். (மார்ச்சு மாதத்தில் அய்.நா.வின் மனித உரிமை அமைப்பில் முக்கிய நாடுகள் பல, இலங்கைக்கு எதிராகத் தீர்மானத்தைக் கொண்டு வரும் இந்தக் கால கட்டத்தில் இந்தச் சந்திப்பு, சிங்கள அரசுக்குப் பச்சைக்கொடி காட்டுவதற்கான ஆயத்தமாக இருக்கக் கூடாது; ஏற்கெனவே இந்தியாவுக்கு இருந்துவரும் கெட்ட பெயர் போதாதா? குளிக்கப் போய் சேற்றில் விழ வேண்டாமே!)

பலே கிராமத்து மகன்

செந்துறையையடுத்த பிலாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த இளம்வழுதி அகில இந்திய மருத்துவ மேற்படிப்பு நுழைவுத் தேர்வில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். (வாய்ப்பைக் கொடுத்துப் பாருங்கள் - ஒடுக் கப்பட்ட மக்களுக்கு - கிராமப்புற மக்களுக்கு - தங்கள் திறமையை தலை நிமிர்ந்து நிரூபித் துக் காட்டுவார்கள் - பலே இளம் வழுதி பலே!)

ஏலம்

அய்.பி.எல். கிரிக்கெட்டுப் போட்டியில் வீரர் களின் ஏலத் தொகை வெளியிடப்பட்டுள்ளது. (இவர்கள் என்ன விளையாட்டு வீரர்களா - ஆடு மாடுகளா ஏலம் போடப்படுவதற்கு?)

Read more: http://viduthalai.in/e-paper/74366.html#ixzz2rvgR192O

தமிழ் ஓவியா said...


இன்றைய நம் கேள்வி


பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தானே காந்தியார் சுட்டுக் கொல்லப் பட்டார்? பிரார்த்தனையின் பலன் இதுதானா?

Read more: http://viduthalai.in/e-paper/74361.html#ixzz2rvgb8KLa

தமிழ் ஓவியா said...


முயற்சிக்கவேண்டும்


தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையாவண்ணம் நடந்துகொள்ளவேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சியமாகக்கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்கவேண்டும். - (விடுதலை, 20.3.1950)

Read more: http://viduthalai.in/page-2/74367.html#ixzz2rvgsDgxz

தமிழ் ஓவியா said...

ஆசிரியருக்குக் கடிதம்

இந்திய நாணயங்களை (கரன்சி) அவமதிக்க வேண்டாமே...


சிமெண்ட் விளம்பரம் ஒன்றில் ஒரு நடிகர் தனது மனைவியோடு பாம்பன் பாலத்தில் நடந்துசெல்கின்றார். அப் போது அந்த நடிகர் கடல் அலைகளால் சேதப்படாமல் உறுதியாக இந்தப்பாலம் இருப்பதற்கு காரணம் குறிப்பிட்ட கம்பெனி தயாரிக்கும் சிமெண்ட் மட்டுமே பயன்படுத்தி கட்டப்பட்டதுதான் எனக் கூறுகின்றார். திடீரென அவரது துணை வியார் தனது தோல் பையிலிருந்து 2 ரூபாய் நாணயத்தை எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து பிரார்த்தனை செய்து கொண்டு கடலில் வீசுகின்றார். இதை பார்க்கின்ற நடிகர் என்ன இங்கும் வேண்டுதலா (கோரிக்கை மனுவா?) என சிரித்தபடியே கேட்கின்றார். ஒன்று மில்லை. இதைப்போன்ற சிமெண்ட் (இந்த சிமெண்ட்) நாம் வீடு கட்டும்போது நமக்கு வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டேன் என்கிறார். பிரார்த்தனை என்ற பெயரால் கடலில் நாணயத்தை தூக்கி எறிதல் என்ற செயல் இந்திய நாணயத்தை அவமதிக்கும் செயலாகும். நவராத்திரி தினத்தன்று கொலு பொம் மைகளுக்கு ரூபாய் நோட்டுக்களால் மாலையிடுதல், புத்தாண்டு (தமிழ் /ஆங்கில) நாட்களில் கடவுள் சிலை களுக்கு ரூபாய் நோட்டுக்களால் மாலையிடுதல், கடவுளர் படங்களை (உ.ம்: லெட்சுமி) பிரேம் செய்யும்போது ரூபாய் நோட்டுக்கள், நாணயங்களை பொருத் துதல், கோவில், குளங்கள், பள்ளிவாசல் (மசூதி) தேவாலயங்கள் (சர்ச்) போன்ற வழிபாட்டுத் தலங்களில் குறிப்பிட்ட இடங்களில் (உ.ம்: கொடிமேடை) நாணயங்கள், ரூபாய் நோட்டுக்களை வீசி எறிதல், ரூபாய் நோட்டுக்களில் இதயம், அம்பு போன்ற காதல் குறியீடுகளை வரைதல், இளங்காதலர்கள், நண்பர்கள் தங்கள் பெயர்களை எழுதிக் கொள்ளுதல் போன்ற செயல்கள் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் இந்திய கரன்சியை அவமதிக்கும் செயலாகும்.

ஏஐஐஐ, ஐஓ, ஓ -ஆம் வகுப்புகளில் ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பு அதை வெளி யிடும் ரிசர்வ் வங்கி அதை எவ்வாறு இனாம் (னுநடிஅயேவடி) (ரூ. 1000, ரூ. 500, ரூ. 100, ரூ. 50, ரூ. 20, ரூ. 10, ரூ. 5) வாரியாக கையாள்வது? எந்த வரிசையில் அடுக்க வேண்டும்? கள்ள நோட்டுகளை கண்டறிவது எப்படி? நீர்க்கோடுகள், காந்திபடம் போன்றவற்றை அறிந்து கொள்ளுதல், அஞ்சல், வங்கி போன்ற பாதுகாப்பான சேமிப்பு மற்றும் வங்கி, அஞ்சல்துறை படிவங்களை பூர்த்தி செய்தல் போன்ற வாழ்வியலோடு தொடர் புடையவற்றை எளிமைப்படுத்தி பாடங் களாக வைக்க வேண்டும். அவ்வாறு பயனுள்ள கருத்துகள் பாடத்திட்டத்தில் இணைக்கப்படும்போது மாணவர்களுக்கு எதிர்காலத்தில் பயனுள்ளதாக அவை அமையும்.

- சு. ஆறுமுகம்
(நன்னிலம், திருவாரூர் மாவட்டம்)

Read more: http://viduthalai.in/page-2/74380.html#ixzz2rvh1h6IT