Search This Blog

21.1.14

பொங்கல் பண்டிகையை எல்லோரும் கொண்டாடுவோம்! -பெரியார்

எல்லோரும் கொண்டாடுவோம்!


பொங்கல் பண்டிகை என்பது நாள், நட்சத்திரம், மதக்கதை ஆதாரம் முதலியவை எதுவுமே இல்லாமல் தை மாதம் ஒன்றாம் தேதி என்பதாகத் தை மாதத்தையும் முதல் தேதி-யை-யு-மே ஆதாரமாகக் கொண்டதாகும்.
இதற்கு எந்தவிதமான கதையும் கிடையாது. இந்தப் பண்டிகை உலகில் எந்தப் பாகத்திற்கும் எந்த மக்களுக்கும் உரிமையுள்ள பண்டிகை-யாகும். என்றாலும், மற்ற இடங்களில், மற்ற மக்-க-ளால் பல மாதங்களில், பல தேதிகளில் பல பேர்களால் கொண்டாடப்-படுவதாகும்.

இக் கொண்டாட்டத்தின் தத்துவம் என்ன-வென்றால், விவசாயத்தையும், வேளாண்மை-யையும் அடிப்படையாகக் கொண்டு அறுவடைப் பண்டிகையென்று சொல்லப்படுவதாகும். ஆங்கிலத்தில் ஹார்வெஸ்ட் பெஸ்டிவல் (பிணீக்ஷீஸ்மீ திமீவீஸ்ணீறீ) என்று சொல்லப்படுவதின் கருத்தும் இதுதான்.

என்றாலும், பார்ப்பனர் இதை மத சம்பந்தம் ஆக்குவதற்காக விவசாயம், வெள்ளாண்மை, அறுவடை ஆகிய கருத்தையே அடிப்படையாகக் கொண்டு இதற்கு இந்திரன் பண்டிகை என்றும் அதற்குக் காரணம் வெள்ளாண்மைக்கு முக்கிய ஆதாரமான நீரை (மழையை)ப் பொழிகிறவன் இந்திரன் ஆதலால் இந்திரனைக் குறிப்பாய் வைத்து, விவசாயத்தில் விளைந்து வெள்ளாண் மையாகியதைப் பொங்கி (சமைத்து) மழைக்-கடவுளாகிய இந்திரனுக்கு வைத்துப் படைத்து பூசிப்பது என்றும் கதை கட்டி விட்டார்கள்.

இந்தக் கதையை இவ்வளவோடு விட்டு-விட-வில்லை. இம் மாதிரியான இந்திர விழாபற்றி கிருஷ்ணன் பொறாமைப்-பட்டுத் தனக்கும் அந்த விழாவை (பூசையை) நடத்தவேண்டுமென்று மக்-களுக்குக் கட்டளை இட்டதாகவும், மக்கள் அந்தப்-படிச் செய்த-தாகவும், இந்த இந்திரவிழா கிருஷ்ணமூர்த்தி விழாவாக மாறியது கண்ட இந்-திரன் கோபித்து ஆத்திரப்பட்டு, இந்த கிருஷ்ண-மூர்த்தி விழா ஈடேறாமல் நடைபெறாமல் போகும்-பொருட்டு, விழாக் கொண்டாடுவோர் வெள்-ளாண்மைக்கு ஆதரவாக இருந்த கால்-நடை-கள், ஆடு மாடுகள் அழியும் வண்ணமாகப் பெரும் மழையாகப் பெய்யச் செய்துவிட்டான் என்றும், இதற்கு ஆளான மக்கள் கிருஷ்ண-மூர்த்தியிடம் சென்று முறையிட்டதாகவும், கிருஷ்ண-மூர்த்தி மக்-களையும் ஆடுமாடுகளையும் காப்பாற்ற ஒரு பெரிய மலை (கோவர்த்-தனகிரி)-யைத் தூக்கி அதைத் தனது சுண்டு-விர-லால் தாங்கிப்-பிடித்து காப்பாற்றினதாகவும், இத-னால் இந்திரன் வெட்கமடைந்து கிருஷ்ண-னி-டம் தஞ்ச-மடைந்து தனது மரியாதையைக் காப்-பாற்ற வேண்டு-மென்று கேட்டுக்கொண்ட-தாக-வும், அதற்கு இரங்கி கிருஷ்ணன், எனக்கு ஒரு-நாள் பண்டிகை; உனக்கு ஒருநாள் பண்டிகை-யாக, மக்-கள் முதல்நாள் எனக்காக பொங்கல் பண்-டிகை-யாகவும் பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்-கல் என்று கொண்டாடும்படியும் ராஜி செய்து கொண்டார்கள் என்றும் சிரிப்-பிற்கிட-மான-_ஆபாச முட்டாள் தனமான கதைகளைக் கட்டிப் பொருத்தி விட்டார்கள்.

இதிலிருந்து தேவர்களுக்கு அரசனான இந்திர-னின் யோக்கியதை எப்படிப்பட்டது? மக்களு-க்குக் கடவுளான கிருஷ்ணனின் யோக்-கி-யதை எப்படிப்-பட்டது என்பதை மக்கள் சிந்தித்து உணர வேண்டு-மென்று வேண்டிக் கொள்ளு-கிறேன்.

மற்றும், இதில் பொங்கலுக்கு முதல் நாளை-க்கு ஒரு கதையையும், மறு நாளைக்கு ஒரு கதை-யையும் போகிப் பண்டிகையென்றும், சங்கராந்திப் பண்டிகையென்றும் பெயர்வைத்து மூன்றுநாள் பண்டிகையாக்கி, அதில் ஏராளமான முட்டாள்-தனத்தையும், மூடநம்பிக்கையையும் புகுத்தி-விட்டார்கள்.

நமது பார்ப்பனர்களுக்கு எந்தக் காரியம் எப்படியிருந்தாலும், யார் எக்கேடுகெட்டாலும் தாங்கள் மனித சமுதாயத்தில் உயர்ந்த பிறவி மக்களாகவும், உடலுழைப்பு இல்லாமல் வாழும் சுக ஜீவிகளாகவும் இருக்கவேண்டும் என்ப-தற்-காக மனித சமுதாயம் முழுவதுமே அறிவைப் பயன்--படுத்தாத, ஆராய்ச்சியைப் பற்றியே சிந்திக்-காத முட்டாள்களாகவும், காட்டுமிராண்டிகளா-கவும் இருக்கச் செய்யவேண்டும் என்பதே அவர்-களுடைய பிறவிப் புத்தியானதால் அதற்கேற்ப உலக நடப்பைத் திருப்பிப் பாதுகாத்து வைக்-கி-றார்கள்.

பார்ப்பனர்களின் இம் மாதிரியான அட்டூழிய, அக்கிரம காரியங்களில் இருந்து விடுபட்டு மனி-தர்களாக நாம் வாழவேண்டுமானால் பொங்கல் பண்டிகை என்கின்றதை முதல்நாள் அன்று-மட்டும் நல்ல உயர்வான உணவு அருந்துவதை-யும், நல்லுடை உடுத்துவதையும், மனைவி மக்கள் முதலியவர்களுடன் இன்பமாகக் காலம் கழிப்பதையும் கொண்டு, நம்மால் கூடிய அளவு மற்றவர்களுக்கும் உதவி, அவர்களுடன் குலாவுவதான காரியங்களையும் செய்வதன் மூலம் விழாக் கொண்டாட வேண்டியது அவசிய-மாகும்.

மற்றபடியாக, மதச் சார்பாக உண்டாக் கப்பட்டிருக்கும் பண்டிகைகள் அனைத்தும் பெரி-தும் நம் இழிவிற்கும், பார்ப்பனர் உயர்விற்கும், நம் மடமைக்கும், காட்டுமிராண்டித் தன்மைக்-கும் பயன்படத் தக்கதாகவே இருந்து வருவதால் பயனளித்து வருவதால் அறிவுள்ள, மான-முள்ள மக்கள் மத சம்பந்தமான எந்தப் பண்டிகையையும் கொண்டாடாமலிருந்து, தங்களை மானமும் அறிவுமுள்ள மக்களாக ஆக்கிக்-கொள்ள வேண்டுமென்று கேட்டுக்-கொள்ளுகிறேன்.

 மானமும் அறிவுமே மனிதற்கழகு.

              தந்தை பெரியார்   அறிக்கை - ”விடுதலை”13.1.1970


தமிழர் விழா

கிறித்தவர்கள் காலத்தைக் காட்ட கிருத்துவ ஆண்டு (கி.பி) இருக்கிறது. முஸ்லிம்கள் காலத்தைக்காட்ட இஸ்லாம் ஆண்டு (ஹிஜ்ரி) இருக்கிறது. இது போல தமிழனுக்கு என்ன இருக்கிறது? இதற்குத் தமிழனின் ஆதாரம் என்ன இருக்கிறது?

மற்றும், இப்படியேதான் தமிழனுக்குக் கடவுள், சமயம், சமய நூல், வரலாற்றுச் சுவடி, இலக்கியம் முதலியவை என்று சொல்ல எதுவும் காண மிகமிகக் கஷ்டமாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், தமிழர் விழா (பண்டிகை) என்பதாக நான் எதைச் சொல்ல முடியும்? ஏதாவது ஒன்று வேண்டுமே? அதை நாம் கற்பிப்பது என்பதும், எளிதில் ஆகக் கூடியது அல்லவே என்று கருதிப் பொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழா வாகக் கொண்டாடலாம் என்று முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் கூறினேன். மற்றும் யாராவது கூறியும் இருக்கலாம்.

இந்தப் பண்டிகையும் அறுவடைத் திருவிழா என்ற கருத்தில் தானேயொழிய, சங்கராந்திப் பண்டிகை, போகிப் பண்டிகை, இந்திர விழா என்று சொல்லப்படும் கருத்தில் அல்ல.

இந்தப் பொங்கல் பண்டிகையை தமிழர் எல்லோரும் கொண்டாட வேண்டும்.


- தந்தை பெரியார் (விடுதலை 30-1-1959)

39 comments:

தமிழ் ஓவியா said...


தீர்த்தம்!


குடும்பத்துடன் புனித நீராட ராமேஸ்வரம் சென்றிருந்தேன். முதலில் சூரியனை வணங்கிக் கடவுளைக் கும்பிட்டு, ஈர உடையுடன் டோக்கன் வாங்கி, 22 தீர்த்தங்களி லும் குளிக்கச் சென் றோம். எங்களுக்கு முன்பாக மூன்று மாதக் குழந்தையுடன் இளம் தம்பதியர் ஒவ்வொரு தீர்த்தத்திலும் தங்களது குழந்தைகளையும் குளிக்க வைத்தனர்.

முதல் நான்கைந்து தீர்த் தத்தில் குளிப்பதற்குள் அந்த மூன்று மாதக் குழந்தை குளிரில் நடுங் கிப் போய் விட்டது. கூடவே அந்தக் குழந்தை யின் கதறல் வேறு; நாங்கள் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் 22 தீர்த்தத்திலும் அக் குழந் தையைக் குளிப்பாட்டிக் கொண்டே இருந்தனர். குளிர்ந்த நீரில் குழந்தை அழுது கொண்டே மிக வும் சோர்வடைந்து விட் டது. பெற்றோர்களே.. பக்தி என்ற பெயரில் கைக் குழந்தையையும் கஷ்டப் படுத்த வேண்டுமா?

- வே. செந்தில்குமார் கொங்கணாபுரம்

- இப்படி ஒரு பக்த ரின் கடிதம் தினகரன் வசந்தம் (19.1.2014) இதழ் பக்கம் 17இல் வெளி வந் துள்ளது.

இதைப் படித்தால் கல் மனம் கொண்டவனும் கூடக் கலங்கவே செய் வான். பெத்தமனம் பித்து என்பார்கள். பக்தி விட யத்தில் அதுகூட செல்லு படியாகவில்லையே!

பச்சை மண்ணென்று சொல்வார்கள் - பச்சிளம் குழந்தையை அதன் உடல் தன்மை என்ன? தாங்கும் சக்தி என்ன? என்ற சிற்றறிவுகூட இல் லாமல் மூன்று மாத சிசு வைக்கூட தீர்த்தத்தில் முழுக்காட்டுவது என் றால், நினைத்துப் பார்க் கவே ஈரக்குலை நடுங் குகிறதே! பக்தி என்று வந்து விட்டால் புத்தி மட்டும் போவதில்லை ஈவு இரக்கம், மனிதநேயம், பொது அறிவுகூட பஞ் சாகப் பறக்கிறதே என் சொல்ல!

இப்படியெல்லாம் செய் தால்தான் புண்ணியத் தைக் கடவுள் கொடுப்பார் என்றால், அந்தக் கட வுளை விட ஈவு இரக்க மற்ற கல் நெஞ்சுக்காரன் வேறு யாராகத்தான் இருக்க முடியும்?

சரி... அவர்கள் பக் திக்கே வருவோம். தீர்த்த மாடுவது சிறந்த பக்தி தானா?

ஸ்கந்தபுராணம் - ஞானயோக காண்டம் என்ன கூறுகிறது?

தீரத்தே தாதையக்ஞே

காஷ்டே பாஷாண கேபதா

சிவம் பஸ்யதி

மூடாத் மாசி லோதே

ஹெபர் திஷ்டித

இதன் பொருள்: மூடாத்மாக்கள் தீர்த்தத் தினும், தானத்திலும், தபசி லும் யக் ஞத்திலும், கட்டை யிலும், கல்லிலும் சிவம் இருப்பதாக நினைக் கிறார்கள் என்று சொல் லப்படுகிறதே - இதற்குப் பதில் என்ன?

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/73827.html#ixzz2qzbWaNKe

தமிழ் ஓவியா said...

பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையும் இடஒதுக்கீடு பிரச்சினையும்:
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை திசை மாற்றி தவறான விளக்கம் கூறி இடஒதுக்கீட்டை முடக்கக் கூடாது!
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் எச்சரிக்கை அறிக்கை
தி.மு.க. மாணவரணி நடத்தும் நாளை ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் மாணவர் கழகமும் பங்கேற்கும்

சென்னை, ஜன.20- பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைகளின் பேராசிரியர்கள் நியமனத் தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை திசை மாற்றி, இடஒதுக்கீட்டை முடக்கக் கூடாது என்று திமுக தலைவர் கலைஞர் அறிக்கை மூலம் எச்சரித்துள்ளார். தி.மு.க. மாணவரணி நடத்தும் ஆர்ப்பாட் டத்தில் திராவிடர் மாணவர் கழகமும் பங்கேற் கும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிட் டுள்ளார்.

அறிக்கை வருமாறு: மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த மறுஆய்வு மனுமீது 16-1-2014 அன்று விசாரணை நடைபெற்றபோது, அதை விசாரித்து உச்சநீதி மன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், “It is for the Centre to take a decision whether there should be reservation in super-speciality Posts”

(உயர் சிறப்புப் பதவிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமா என்பது குறித்து மத்திய அரசே முடிவு செய்து கொள்ளலாம்) என்று தெரி வித்திருக்கிறார்கள். இந்த விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அடிஷனல் சொலி சிட்டர் ஜெனரல்களான எல். நாகேஸ்வர் ராவ் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர், “Indira Sawhney Judgment did not restrain the Government from providing Reservation in Super-Speciality Faculty Posts”

இந்திரா - சஹானி வழக்கில்

(இந்திரா சஹானி வழக்கில் வழங்கப்பட்ட உச்ச நீதி மன்றத் தீர்ப்பு உயர் சிறப்புப் பதவி களில் இட ஒதுக்கீடு வழங்கப் படுவதற்கு அரசை தடை செய் யவில்லை) என்று வாதிட்டிருக் கிறார்கள். மத்திய அரசுப் பணிகளில், பிற்படுத்தப்பட் டோர்க்கு 27 சதவிகித இட ஒதுக்கீட்டினை ஏற்றுக் கொண்டு அளித்த இந்திரா சஹானி வழக் கின் தீர்ப்பிலிருந்து உச்சநீதிமன்றம் மேற்கோள் காட்டி,. “In certain services in respect of certain posts, application of rule of reservation may not be advisable in regard to various technical posts, including posts in super-speciality medicine, engineering and other scientific and technical posts” (மருத்துவம், பொறியியல், விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பம் தொடர் பான உயர் சிறப்புப் பதவிகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று பரிந்துரைத்திட இயலாது) என்று கடந்த ஆண்டு சுட்டிக்காட்டியிருந்தது என்பதையும் இது தீர்ப்புரை (VERDICT) அல்ல - கருத்துரையே (OBSERVATION) என்பதையும் கவனத் திலே கொள்ள வேண்டும்.

இந்தச் செய்தியை வெளியிட்டுள்ள 17ஆம் தேதிய டைம்ஸ் ஆப் இந்தியா, “This will open the window for the Government to provide Reservation as a criteria for appointment to AIIMS Faculty Positions” (அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தின் உயர் சிறப்புப் பதவி களுக்கு நியமனம் செய்யும்போது இட ஒதுக் கீட்டை அடிப்படையாகக் கொண்டு நியமனம் செய்வதற் கான பலகணி அரசுக்கு திறந்து விடப்பட்டி ருக்கிறது) என்றே எழுதியுள்ளது.

உயர் சிறப்புப் பதவிகளில் நியமனம் செய்யும் போது, இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்பதற்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புதான் காரணம் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். ஆனால் உச்சநீதிமன்றம் இட ஒதுக்கீட்டினைப் பின் பற்றுவது என்பது மத்திய அரசின் முடிவாகும் என்று திட்டவட்டமாகத் தனது தீர்ப்பில் தெரி வித்துவிட்டது.


தமிழ் ஓவியா said...

இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என் பதைப் பரிந்துரைத்திட இயலாது என்று கூறியதோடு, மத்திய அரசிடம்தான் பந்து தற்போது உள்ளது என்றும் தெளிவாக உச்சநீதிமன்றம் தெரி வித்துவிட்டது. மேலும் மத்திய அரசின் வழக்கறி ஞர்கள் தெரிவித்துள்ள கருத்திலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு இத்தகைய உயர் பதவிகளில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படு வதைத் தடை செய்ய வில்லை என்றே கூறிவிட்டார்கள்.

எனவே, தமிழகத்தில் உச்சநீதி மன்றத் தீர்ப்பு காரணமாகத்தான், இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்று ஜெயலலிதா கூறியிருக்கும் காரணம், மக்களை ஏமாற்றுவதற்கும், சமூக நீதியைக் குழி தோண்டி புதைப்பதற்குமான ஒன்றே தவிர வேறல்ல.

உச்சநீதிமன்றம் 18-7-2013 அன்று தீர்ப்பளித்த பிறகு, ஜூலை 31ஆம் தேதி புதுவை ஜிப்மர் மருத்துவ மனை மற்றும் மருத்துவக் கல்தூரியில் 114 மருத்துவ அதிகாரிகளைத் தேர்ந் தெடுப்பதற்கான அறிவிப்பு வெளி வந்தபோது, உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் காரணம் காட்டி இட ஒதுக்கீடு கிடை யாது என்று மத்திய அரசு கூறவில்லை.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் இடஒதுக்கீடு

இட ஒதுக்கீட்டின்படி பிற்படுத் தப்பட்டோருக்கும், தாழ்த்தப்பட் டோருக்கும் இடஒதுக்கீடு செய்யப் பட்டிருந்தது. உச்சநீதிமன்றத் தீர்ப் புக்குப் பிறகும் டெல்லி எய்ம்ஸ் மருத் துவக் கல்வி நிறுவனத்திலேயே இட ஒதுக்கீடு தொடர்கிறது. உச்சநீதி மன்றத் தீர்ப்புக்கு எதிராக, சீராய்வு மனு தாக்கல் செய்யப் பட்டிருப்பதால் இட ஒதுக்கீட்டை தொடர்ந்து நடை முறைப்படுத்தும்படி, மத்திய சுகா தாரத் துறை கூறியதன் அடிப்ப டையில், 148 உதவி மருத்துவப் பேராசிரியர் பணி இடங்கள் இட ஒதுக்கீட்டைக் கடைப்பிடித்துத்தான் நிரப்பப்பட் டுள்ளன.

தமிழ் ஓவியா said...


எனவே உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும், மத்திய அரசின் நிறுவனங்களில், இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் தமிழக அரசு அதனை அமல்படுத்தாது, உச்ச நீதி மன்றத் தீர்ப்பின் மீதும், மத்திய அரசின் மீதும் பழி போடுவது என்பது எத் தகைய மோசடி வித்தை என்பதை இங்குள்ள தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் ஜெயலலிதா 12-1-2014 தேதிய அவருடைய அறிக்கையில், நடைமுறையில் உள்ள விதியினை யும், முன்மாதிரியையும் கருத்தில் கொண்டே ஓமந்தூ ரார் உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர்கள் நியமிக்கப் பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை திரு. கருணாநிதிக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள் ளார்.

நடை முறையில் உள்ள விதி யினையும், முன்மாதிரியையும் கருத் தில் கொண்டுதான் இட ஒதுக்கீடு இல்லாமல் தற்போது பணிகளுக்குத் தேர்ந் தெடுக்கப்படுவதாக ஜெய லலிதா கூறுகிறார். ஆனால் 31-3-2013 அன்று தமிழக அரசின் மருத்துவப் பணிகள் தேர்வு வாரியத்தின் சார்பில் வெளியிட்ட அறிவிக்கையில்“The Rule of Reservation is applicable as per the Rules in force” அதாவது தற் போது விதிகளில் உள்ள இட ஒதுக் கீடு பொருந்தும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது 27-12-2013 அன்று அதே தமிழக அரசின் மருத்துவப் பணிகள் தேர்வு வாரியத்தின் சார்பில் வெளியிட்ட அறிவிக்கையில், “There is no Reservation for these posts”

முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் முரண்பாடுகள்

அதாவது இந்தப் பதவிகளுக்கு இட ஒதுக்கீடு பொருந்தாது - என்று மாற்றப்பட்டுள்ளது. ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா தனது அறிக்கையில் நடைமுறையில் உள்ள விதியினையும், முன்மாதிரியையும் கருத்தில் கொண்டுதான் அறிவிக்கை வெளியிடப்பட்டதாக அப்பட்ட மாகப் பொய் சொல்லியிருக்கிறார்.

அடுத்து தற்போது தேர்ந்தெடுக்கப் படும் பல்வேறு மருத்துவர்களுக்கான மாதாந்திர ஊதியம் இரண்டரை இலட்சம் ரூபாய் என்றும், ஒன்றரை இலட்சம் ரூபாய் என்றும், ஒரு இலட்சம் ரூபாய் என்றும் உயர் அளவில் நிர்ணயம் செய்யப்பட்டிருக் கிறதே என்று நான் கேட்டதற்கு, பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ மனையில் பணி புரிய இருப்பதால், இந்த அளவிற்கு ஊதியம் என்று ஜெயலலிதா அவருக்கே உரிய மேல் தட்டுப் பாணியில் பதில் சொல்லி யிருந்தார்.

ஆனால் கடந்த மார்ச் மாதம் 31-3-2013 அன்று அரசு சார்பில் வெளியிட்ட அறிவிக்கையில் மருத்து வர்களுக்கு எவ்வளவு மாதாந்திர ஊதியம் என்று கூறியிருந்தார்கள் தெரியுமா?Scale of Pay : Rs. 15,600 - 39,100 + Grade Pay 5,400/- என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயிரக் கணக்கில் ஊதியம் என்பது இலட்சக் கணக்கில் உயர்த்தப்பட்டது ஏன்? எதற்காக?

எப்படி? இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டினை நடுநிலையா ளர்கள் புரிந்து கொண்டால் போதும்!

திராவிடர் கழக மாணவரணியும் பங்கேற்கும்

இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிராகச் செயல்படும் ஜெயலலிதா அரசைக் கண்டித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அணி சார்பில், ஜனவரி 21 அன்று மாநில மாணவர் அணிச் செயலாளர், தம்பி கடலுர் இள. புகழேந்தி தலைமையில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. தென்சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி ஜெ.அன்பழகன், எம்.எல்.ஏ., மாணவர் அணியின் துணைச் செயலாளர்கள் தம்பிகள் கோவி.செழியன், எம்.எல்.ஏ., குத் தாலம் க.அன்பழகன், கோவை கணேஷ்குமார், பூவை சி. ஜெரால்டு, மதுரை க.மகிழன் ஆகியோர் முன் னிலை வகிக்கிறார்கள்.

இந்த ஆர்ப் பாட்டத்தில் திராவிடர் கழக மாண வர் அணியும் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு என்பது திராவிட இயக்கங் களின் மூலா தாரக் கொள்கை என்பதை மனதிலே கொண்டு 21ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்ப்பாட் டத்தை வெற்றிகரமாக ஆக்கிட வேண்டும்.

இந்த ஆட்சி யினர் இனி யாவது மனம் திருந்தி அறிவிக்கப் பட்டுள்ள மருத்துவர் தேர்வில், இட ஒதுக்கீடு கொள்கை கடைப்பிடிக்கப் படும் என்ற அறிவிப்பினைச் செய்ய முன்வருவார்கள் என்று எதிர் பார்க் கிறேன். அதற்குப் பதிலாக நாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று பிடிவாதம் காட்டுவார்களே யானால், அதன் விளைவுகளை அவர் கள் சந்திக்கத்தான் வேண்டியிருக்கும்!

அன்புள்ள,
மு.க.

Read more: http://viduthalai.in/e-paper/73826.html#ixzz2qzbfr7cF

தமிழ் ஓவியா said...


பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய 400 பாதிரியார்கள் பதவி நீக்கம் வாடிகன் தகவல்


வாடிகன்சிட்டி, ஜன.20- முன் னாள் போப் 17ஆவது பெனடிக்ட் கடந்த ஆண்டு இவர் தானாகவே முன் வந்து பதவி விலகினார். அதை தொடர்ந்து புதிய போப்பாக பிரான் சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பெனடிக்ட் போப் ஆக இருந்த போது அய்ரோப்பியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த பாதிரியார்கள்மீது பாலியல் குற்றச்சாட்டு இருந்தது. குறிப்பாக குழந்தைகளிடம் பாலியல் தொந்தரவு மற்றும் பெண்களிடம் பாலியல் வன்கொடுமை புகார்கள் கூறப்பட்டன.

எனவே, பாலியல் புகாரில் சிக்கிய 400 பாதிரியார்களை அவர் பதவி நீக்கம் செய்துள்ளார். அவர் பதவி விலகுவதற்கு முன்பு 2 ஆண்டுகளில் இந்த நடவடிக்கையை மேற்கொண் டுள்ளார். அதில் 2011ஆம் ஆண்டில் 300 பேரும் 2012ஆம் ஆண்டில் 100 பேரும் அடங்குவர். இந்த தகவலை வாடி கனின் செய்தி தொடர்பாளர் பெடரி கோலாம் பார்டி தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/73828.html#ixzz2qzbsHhHS

தமிழ் ஓவியா said...


கவனிக்கவேண்டும்


மதத்தைக் காப்பாற்றவே கோயில்களும், சொத்துகளும் அவற்றைக் காக்க மடங்களும், மடாதிபதிகளும் ஏற்பட்டனர். இவை மக்கள் வாழ்க்கைக்கு அவசியமா? அதனால் மக்கள் கஷ்டம் நீங்குமா, நீங்காதா என்பதைத்தான் கவனிக்கவேண்டும்.

- (விடுதலை,3.12.1962)

Read more: http://viduthalai.in/page-2/73825.html#ixzz2qzcACUgj

தமிழ் ஓவியா said...


மாற்றம் ஒரு வழிப் பாதையா?


சென்னையில் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகம் அமைந்துள்ள ஹால்ஸ் சாலை தமிழ்ச் சாலை எனப் பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது குறித்து இந்து முன்னணியின் நிறுவனர் இராம. கோபாலன் அறிக்கை வருமாறு:

தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக வந்துள்ள இந்தச் செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்தபிறகு அடிமைத் தனத்தின் அடையாளமாக இருந்த சாலை, ஊர்ப் பெயர்களை படிப்படியாக மாற்றி, தமிழ்ப் பெயர்கள், தேசப் பக்தர்கள் பெயர்களைச் சூட்டியிருக்க வேண்டும்.

இன்னமும் நம்மை அடிமைப்படுத்தி, ஆக்ரமிப்பு செய்தவர்களின் பெயர்களை சாலைகள், ஊர்கள் தாங்கி நிற்பது நமக்கு அவமானம், இதனைத் துடைத்தெறிய வேண் டும் என்று இந்து முன்னணி நிறுவனர் திருவாளர் இராம. கோபாலன் தன் அறிக் கையில் குறிப்பிட்டுள்ளார். இதனை நாமும் நன்றாகவே வரவேற்கிறோம். அதே நேரத்தில் இவர் கூறுவது தமிழின்மீது கொண்ட பற்றுதலாலா? என்ற கேள்வி நியாயமாக எழத் தான் செய்யும்.

ஹால்ஸ் என்ற பெயர் ஆங்கிலேய கிறித்தவரின் பெயராக இருப்பதால்தான் அது மாற்றப்படுவதற்கு ஆதரவு தெரிவிக்கிறாரே தவிர, உண்மையிலேயே தமிழ்மீது கொண்ட ஆர்வமும், பற்றுதலும் அவரிடம் கரை புரண்டு ஓடுவதால் அல்ல- என்பது நினைவிருக்கட்டும்!

கோயில்களில் சமஸ்கிருதம் அர்ச்சனை மொழியாக இருப்பதை மாற்றி தமிழில்தான் அது நடக்க வேண்டும் என்று சொல்லிப் பாருங்கள். அப்பொழுதுதான் அவாளின் உண்மை உருவம் வெளிவரும்.

கோயில்களில் உள்ள கடவுள்களின் சமஸ்கிருதப் பெயர்களை மாற்றினால் ஏற்றுக் கொள்வார்களா?

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் முதல் அமைச்சர் கலைஞர் அவர்களின் பெரு முயற்சியினால் தமிழுக்குச் செம்மொழித் தகுதி கொண்டு வரப்பட்ட போது இதே பார்ப்பன ஊடகங்கள் எப்படியெல்லாம் கேலி செய்தன? வீட்டுக்கு வீடு மட்டன் பிரியாணி வரப் போகிறது பாருங்கள் என்று தினமலர் எழுதிய போது இந்த ராம. கோபாலன்களின் வாய்கள் கோணி ஊசியால் தைக்கப்பட்டுக் கிடந்தனவா?

சென்னைப் பெரு நகரில் வணிக விளம்பரங்களில் தமிழுக்கு முதலிடம் என்று அந்நாள் மேயர் மா. சுப்பிரமணியம் அவர்களே களத்தில் இறங்கி அந்தப் பணியைச் செய்த போது, துக்ளக்கில் இது மொழி நக்சலிசம் என்று எழுதியபோது இந்த அய்யர்வாள் எங்கே முடங்கிக் கிடந்தார்?

தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் நீண்ட காலமாக தமிழ் அறிஞர் பெரு மக்கள் கூறி வந்த கருத்தினை ஏற்று தனிச் சட்டம் செய்தாரே - அதனை அ.இ.அ.தி.மு.க. ஆட்சி யில் செல்வி ஜெ. ஜெயலலிதா மாற்றினாரே - அப்பொழுது இவர் போர்க் குரல் கொடுத்த துண்டா?

தமிழ்நாட்டின் ஊர்ப் பெயர்கள் எல்லாம் சமஸ்கிருதமயமாகிக் கிடக்கின்றனவே; அவற்றைத் தமிழில் மாற்றம் செய்ய வேண்டும் என்று இதே இந்து முன்னணித் தலைவர் அறிக்கை வெளியிடத் தயாரா?

சிற்றம்பலம் சிதம்பரம் என்றும் திருமரைக் காடு வேதாரண்யம் என்றும் திருமுதுகுன்றம் விருத்தாசலம் என்றும், குரங்காடுதுறை கபிஸ் தலம் என்றும் சமஸ்கிருதமயம் ஆக்கப்பட் டுள்ளதே - அவற்றை மீண்டும் தமிழ் மயப் படுத்த இந்து முன்னணி வகையறாக்கள் போராட்டம் நடத்துவார்களா?

ஹால்ஸ் என்பது கிறித்தவரின் பெயராக இருப்பதால்தான் மதவெறி இந்துக் கண்ணோட் டத்தோடு அது மாற்றப்படுவதற்காக ஆதரித்து அறிக்கை வெளியிடுகிறார் - இந்த மதவெறி யர்களை அடையாளம் காண வேண்டாமா? மாற் றம் என்பது வெறும் ஒரு வழிப் பாதை தானா?

Read more: http://viduthalai.in/page-2/73821.html#ixzz2qzcInc7a

தமிழ் ஓவியா said...

பணம் பறிக்க நவீன வசதி ஏழுமலையானுக்கு செல்பேசியில் காணிக்கையாம்

திருப்பதி, ஜன.20- உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலை யானுக்கு செல்பேசி யில் காணிக்கை செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், நகை உள்ளிட்டவற்றை உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். அதன்படி ஆண்டுக்கு காணிக்கை மூலம் மட்டும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.500 கோடி முதல் ரூ.600 கோடி வரை வருமானம் கிடைத்து வருகிறது.

நேரடியாக வரும் பக்தர்கள் மட்டுமே கோவில் பிரகாரத்தில் உள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தி வந்தனர். ஆனால் நேரடியாக கோவிலுக்கு வரமுடியாத பக்தர்களும் காணிக்கை செலுத்தும் வகையில் தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பக்தர்கள் இ-உண்டி திட்டம் மூலம் தங்களது செல்பேசி மூலமாக திருப்பதி ஏழு மலையானுக்கு காணிக்கை செலுத்தலாம். இதற்காக கடந்த சில நாட் களுக்கு முன்னர் ஆந்திரா வங்கி இந்த சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. மொபைல் பேங்கிங் மூலம் (அய்.எம்.பி.எஸ்) இந்த சேவையை பக்தர்கள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

Read more: http://viduthalai.in/page-2/73824.html#ixzz2qzcTZTmh

தமிழ் ஓவியா said...


மதவாத சக்திகள் ஆட்சிக்கு வர அனுமதிக்கக் கூடாது மத்திய அமைச்சர் மனீஷ் திவாரி


லூதியானா, ஜன.20- மதவாத சக்திகள் ஆட்சியை கைப்பற்ற அனுமதிக்க கூடாது என மத்திய அமைச்சர் மனீஷ் திவாரி கூறியுள் ளார். பஞ்சாப் மாநிலம் லூதியானா வில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் மத்திய அமைச்சர் திவாரி பேசிய தாவது: நாட்டின் ஒற்றுமையை பாதுகாக்க பாரம்பரியமாக தியாகம் செய்த வரலாறு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. ஆனால் மற்ற கட்சிகளுக்கு வெறுப்பை ஏற்படுத்திய வரலாறு தான் உள்ளது.

மதவாத மற்றும் சர்வாதிகார சக்திகள் ஆட்சி கைப் பற்றுவது நாட்டுக்கு நல்லதல்ல. இந்த சக்திகளுக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தேர்தலில், காங்கிரஸ் கட்சி மக்களின் ஆதரவை பெற்று வலுவான பிரத மரை நாட்டுக்கு அளிக்கும். என்றார்.

Read more: http://viduthalai.in/page-2/73822.html#ixzz2qzcb1slP

தமிழ் ஓவியா said...

போலியோ அற்ற நாடு இந்தியா: சான்றிதழ் வழங்க உலக சுகாதார மய்யம் முடிவு

பசிகா, ஜன. 20-இந்தியாவிற்கு போலியோ இல்லாத நாடு என்ற சான்றிதழை உலக சுகாதார மய்யம் விரைவில் வழங்கும் என பஞ்சாப் அமைச்சர் சுர்ஜித் குமார் ஜயானி தெரிவித்துள்ளார்.

அம்மாநிலத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை நேற்று தொடங்கி வைத்த அவர் போலியோ வைரஸ் பரவும் வாய்ப்புள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். அம்மாநிலத்தில் 2010-க்கு பிறகு போலியோ சம்பந்த மாக எவ்வித வழக்கும் பதிவாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள எல்லைப்பகுதியான வாகா-அட்டாரியிலும் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பஞ்சாப் மாநிலத்தில் 15000 முகாம் களில் 37.69 லட்சம் குழந்தைகள் இத்தடுப்பூசி போடுவதன் மூலம் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-2/73822.html#ixzz2qzcfyzw5

தமிழ் ஓவியா said...


திராவிடர் திருநாள் விழாவில் (19.1.2014) பெரியார் விருது பெற்றவர்களின் விவரக் குறிப்புகள்


பேராசிரியர் அ.மார்க்ஸ்

தலைசிறந்த பெரியாரியவாதியாக இருந்துகொண்டு ஜாதி-மத எதிர்ப்புப் பிரச்சாரங்களை செய்து வருபவர். இவரது தந்தை அந்தோணிசாமி, கூலித் தொழிலாளி யாக மலேசியா சென்று, அங்கே பொதுவுடைமைக் கட்சியை நிறுவியவர்களில் ஒருவர். இவருடைய தலைக்கு விலை கூறப்பட்டுத் தப்பி வந்தபின் நாடு கடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டவர்.

ராமதாஸ் என பொதுவுடமை இயக்கத்தில் அறியப்பட்ட அவர் இறுதி வரை ஒரு எளிய கம்யூனிஸ்டாக இருந்து மறைந்தவர். போராட்டக்காரரின் மகனாகப் பிறந்த அ.மார்க்ஸ் அவர்கள் நான்காம் வகுப்புவரை பள்ளி சென்று படித்ததில்லை. அதன்பின் அரசு பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பயின்றவர். மார்க்ஸ் அவர்கள் 37 ஆண்டுகள் அரசு கல்லூரி களில் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்ற வர். கடைசியாகப் பணியாற்றியது சென்னை மாநிலக் கல்லூரி.

ஆசிரியர் இயக்கங்களில் பல்வேறு மட்டங்களிலும் பொறுப்புகளில் இருந்து செயல்பட்டவர். நிறப்பிரிகை ஆசிரியர் குழுவில் ஒருவராகப் பங்கு பெற்றவர். இலக்கியம், அரசியல் மற்றும் மனித உரிமைக் களங்களில் கடந்த 35 ஆண்டுகளாகத் தொடர்ந்து செயல்பட்டு வருபவர். நாட்டில் கலவரங்கள் மனித உரிமை மீறல்கள் எங்கு நடந்தாலும் நேரடியாக களத்திற்கே சென்று உண்மைகளை கண்டறிந்து வெளிக்கொணர் வதில் இவருடைய செயல்பாடுகள் அனைவரையும் வியக்க வைக்கும்.

அறிவாற்றல் மிகுந்த பேராசிரியர் அ.மார்க்ஸ் 77 பெரிய நூல்களையும் 27குறு நூல்களையும் 25க்கு மேற் பட்ட சிறு வெளியீடுகளையும் எழுதியுள்ளார். பல்வேறு ஏடுகளில் பல்லாயிரக்கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இவரது கருத்துக்கள் கடும் விவாதங்களுக்கு உரியதாய் இருந்து வந்துள்ளன; இருந்து வருகின்றன. இருந்தபோதிலும், ஏற்றதொரு கருத்தை மனதிற்குப் பட்டதைப் பேசியும் எழுதியும் வருகிறார். இன்று ஒரு முழுநேர எழுத்து மற்றும் மனித உரிமைப் பணியாளர்.

அவரது குறிப்பிடத்தக்க சில நூல்கள்:

1. நமது கல்விப் பிரச்சனைகள் 2. குணா -பாசிசத்தின் தமிழ் அடையாளம் 3. இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு (3 தொகுதிகள்)

4. பெரியார் யார்?

5. ஆட்சியில் இந்துத்துவம் 6. குஜராத் 2002 : அர்த்தங்களும் உள்ளர்த்தங்களும் 7. பெரியார் - தலித்கள் - முஸ்லிம்கள் 8. ஆரியக் கூத்து

9. பெரியாரின் கல்விச் சிந்தனைகள் 10. பார்ப்பனர்களின் இராமர் பால அரசியல் 11. இலக்கியத்தில் இந்துத்துவம் - காலச் சுவடு ஓர் ஆள்காட்டி அரசியல் 12. இந்துத்துவத்தின் பாசிசத் தொடர்புகள் போன்ற ஆய்வுத்தர நூல்களைப் படைத்த தலைசிறந்த சிந்தனை யாளர்களில் ஒருவரான மனித உரிமைப் போராளி அ.மார்க்ஸ் அவர்களுக்கு பெரியார் விருது வழங்குவதில் பெருமகிழ்வு கொள்கிறோம்.

Read more: http://viduthalai.in/page-4/73815.html#ixzz2qzdBHzft

தமிழ் ஓவியா said...

எழுத்தாளர் தமிழ்மகன்

தமிழ்மகன் என்கிற பா.வெங்கடேசன் தமிழ்மகன் அன்றைய செங்கல்பட்டு மாவட்டம், இன்றைய திருவள்ளூர் மாவட்டம் காரணை கிராமத்தைச் சேர்ந்தவர். இயற்பியல் துறையில் இளம் அறிவியல் பட்டமும், அரசியல் அறிவியல் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். இவருக்கு மனைவி திலகவதி, மகன் மாக்சிம், மகள் அஞ்சலி ஆகியோர் உள்ளனர்.

தற்போது தினமணியில் முதுநிலை உதவி ஆசிரிய ராகப் பணியாற்றிவருகிறார். வளவன், தேனீ ஆகியவை பிற புனை பெயர்கள். இதுவரை ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், சில நாவல்கள் எழுதியுள்ளார். அறிவியல், சமூக சிறுகதைகளை சுவாரசியமான நடையில் எழுதி வருகிறார்.

திரைப்படம் தொடர்பான கட்டுரைகள், திரைப்படங் களுக்கு உரையாடல்கள் எழுதி உள்ளார். இவர் எழுதிய மானுடப் பண்ணை எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1994 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் வகைப்பாட்டிலும் எட்டாயிரம் தலைமுறை எனும் நூல் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை வகைப்பாட்டிலும் பரிசு பெற்றிருக்கின்றன.

எழுத்துலக அறிமுகம் 1984-ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் இயற்பியல் பட்டப் படிப்பில் இறுதி ஆண்டு படித்த போது, டி.வி.எஸ். நிறுவனமும் இதயம் பேசுகிறது வார இதழும் இணைந்து புதினப் போட்டி நடத்துவதாக அறிவித்தன. இறுதி ஆண்டு தேர்வை ஓரம் கட்டிவிட்டு வெள்ளை நிறத்தில் ஒரு காதல் என்ற புதினம் எழுதினார்.

அதில் தேர்வு பெற்று முதல் பரிசாக டி.வி.எஸ். 50. வாகனத்தைப் பெற்றார். அக்கதையை முதற் பரிசுக்குத் தேர்வு செய்தவர் சின்னக்குத்தூசி ஆவார். புதினம் அந்த இதழில் ஓவியர் ஜெயராஜ் வரைந்த ஓவியங்களோடு தொடர்கதையாக வெளியானது.

1990-களில் கடவுள் 2, ஆல்பா என்ற விஞ்ஞான தொடர்கதைகளை உண்மை இதழில் எழுதினார்.

நடிகர் சத்யராஜின் வாக்குமூலம் தொடரும் இவர் தொகுத்து எழுதியதுதான். இப்போது ஆனந்த விகடன் வார இதழில் ஆபரேஷன் நோவா என்ற விஞ்ஞானத் தொடர்கதை எழுதி வருகிறார்.

எழுதிய நூல்கள் கவிதை நூல்கள்

பூமிக்குப் புரிய வைப்போம்; ஆறறிவு மரங்கள்; இந்த இரண்டு நூல்களும் அவர் கல்லூரியில் படித்தபோது வெளியானவை.

தமிழ் ஓவியா said...

சிறுகதை நூல்கள்

எட்டாயிரம் தலைமுறை; மீன்மலர்; சாலை ஓரத்திலே வேலையற்றதுகள்

புதினங்கள்

வெள்ளை நிறத்தில் ஒரு காதல்; சொல்லித் தந்த பூமி; ஏவி.எம். ஸ்டூடியோ ஏழாவது தளம் 2; மிஸ் மாயா; மானுடப் பண்ணை; வெட்டுப் புலி (இருபதாம் நூற்றாண்டு தமிழகத்தின் திராவிட மனச் சூழலை விவரிக்கும் நாவல்) (2009); ஆண்பால் பெண்பால் (2011); வனசாட்சி (2012)

கட்டுரை நூல்கள்

விமானங்களை விழுங்கும் மர்மக்கடல்

வாழ்க்கைத் தொடர் கட்டுரைகள்

வாக்குமூலம் (தமிழ் திரைப்பட நடிகர் சத்யராஜ் பற்றியது); சங்கர் முதல் ஷங்கர் வரை (தமிழ் திரைப்பட இயக்குநர் ஷங்கர் பற்றியது)

திரையுலகத் தொடர் கட்டுரைகள்

தில்லானா தில்லானா (நடிகை மீனா கட்டுரைத் தொடர்); செல்லுலாய்ட் சித்திரங்கள் (நேரில் சந்தித்த திரைப்படக் கலைஞர்கள் பற்றிய நினைவுக் குறிப்புகள்); மொழி பெயர்க்கப்பட்டவை: இவரது சிறுகதைகள் ஆங்கிலம், மலையாளம், பஞ்சாபி மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

`உள்ளக்கடத்தில்', `ரசிகர் மன்றம்' ஆகிய திரைப் படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

எழுதிய இதழ்கள்

அச்சு இதழ்கள்

கணையாழி, அன்னம், அமுதசுரபி, இதயம் பேசுகிறது, தாய், ராணி, குங்குமம், ஆனந்த விகடன், தினமணிக் கதிர், உயிர்மை 3 , உயிரெழுத்து, வார்த்தை, யுகமாயினி மற்றும் புதிய புத்தகம் பேசுது

இணைய இதழ்கள்

ஆறாம் திணை, சென்னை ஆன்லைன், திண்ணை. காம், கீற்று.காம், உயிரோசை, தமிழ் ஸ்டூடியோ.காம், தமிழ் சினிமா.காம்
பணியாற்றிய பத்திரிகைகள்

போலீஸ் செய்தி புலனாய்வு இதழில் பொறுப்பாசிரியர் பணி; தமிழன் நாளிதழில் இலவச இணைப்பு இதழ் பொறுப்பு; வண்ணத்திரை செய்தியாளர்; தினமணி நாளிதழ் சினிமாச் செய்தியாளர்; குமுதம் வார இதழ் சினிமாச் செய்தியாளர்; குங்குமம் வண்ணத்திரை பொறுப்பாசிரியர்; தினமணியில் முதன்மை உதவி ஆசிரியர்; ஆனந்தவிகடன் குழும இதழில் உதவிப் பொறுப்பாசிரியர்

விருதுகள்

வெள்ளை நிறத்தில் ஒரு காதல் (இளைஞர் ஆண்டு நாவல் போட்டியில் முதல் பரிசு); மானுடப் பண்ணை (தமிழக அரசின் சிறந்த நாவல் விருது); மொத்தத்தில் சுமாரான வாரம் (தி. ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டியில் தேர்வு); கிளாமிடான் 9 (சிறுகதை) (அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைக்கதை விருது, இருபதாயிரம் ரூபாய் பரிசு); எட்டாயிரம் தலைமுறை (2008-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் சிறந்த சிறுகதை நூல் விருது); 2010ஆம் ஆண்டுக்கான ஜெயந்தன் அறக்கட்டளை விருது (வெட்டுப்புலி நாவலுக் காக); 2010ஆம் ஆண்டுக்கான கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருது (வெட்டுப்புலி நாவலுக்காக); வனசாட்சி நாவலுக்கான மலைச் சொல் விருது 2013; ஆண்பால் பெண்பால் (ஜி.எஸ்.மணி அறக்கட்டளை விருது, ஆனந்த விகடன் விருது (2012) பெற்றது.

இவ்வளவு சிறப்புகள் பெற்ற தமிழ்மகன் அவர்களுக்கு பெரியார் விருது வழங்குவதில் பெரு மகிழ்வு கொள்கிறோம்.

Read more: http://viduthalai.in/page-4/73815.html#ixzz2qzdhkRaQ

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 20-ஆம் ஆண்டு விழா திராவிடர் திருநாள் - தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா
எழுத்தாளர், கலைஞர்களுக்கு தமிழர் தலைவர் பெரியார் விருது வழங்கிப் பாராட்டினார்

பொங்கல் திருநாளையொட்டி களை கட்டிய உணவுத் திருவிழா (பெரியார் திடல்)

சென்னை, ஜன. 20- தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 20-ஆம் ஆண்டு விழாவின் மூன்று நாள் நிறைவு விழாவில் நேற்று (19.1.2014) பேராசிரியர் அ.மார்க்ஸ், நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், எழுத்தாளர் தமிழ்மகன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பெரியார் விருது வழங்கி பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்.

சென்னை வேப்பேரி பெரியார் திடலில் ஜனவரி 17, 18, 19 ஆகிய மூன்று நாள்கள் திராவிடர் திருநாள் பண்பாட்டுத் திருவிழாவாக, தமிழ்ப்புத்தாண்டு - பொங்கல் விழா மிகவும் எழுச்சியுடன் நடை பெற்றது.

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம், பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி, பெரியார் நூலக வாசகர் வட்டம், பகுத்தறிவாளர் கழகம் ஆகியவை இவ்விழாக்களை நடத்தின.

பறை இசை - வீரவிளையாட்டுகள்

வீரவிளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன்

மூன்றாம் நாளான நேற்று (19.1.2014) மாலை சென்னை பெரியார் திடலில் மாலை 4 மணியளவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திருத்தணி கவியரசு குழுவினரின் பறை இசை மற்றும் கறம்பக்குடி முத்துவின் வீரவிளையாட்டுகள் நடை பெற்றன.

மூன்றாம் நாள் விழாவில் உறி அடி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக பங்கேற்றனர் (19.1.2014).

பெரியார் திடலே நிரம்பி வழியும் அளவிற்கு தமிழ்க்குடி மக்கள் பெரும் திரளாக வந்திருந்து பறை இசை நிகழ்ச்சியையும், வீரவிளையாட்டுக் களையும் கண்டு களித்து மகிழ்ந்தனர்.

பட்டிமன்றம்

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் திருநாள் விழாவில் ஊடகங்களால் தமிழ்ப் பண்பாடு காப்பாற்றப்படுகிறது என்ற தலைப்பில் புதுகை பூபாளம் பிரகதீஸ்வரன், லால்குடி ஜோதி ஆகியோரும், கைவிடப்படுகிறது என்ற தலைப்பில் தேவக்கோட்டை மகாராஜன், கல்பாக்கம் ரேவதி ஆகியோரும் பங்கேற்றனர். இப்பட்டிமன்றத்திற்கு கவிஞர் நந்தலாலா நடுவராக இருந்தார்.

இதையடுத்து நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் தமிழர் திருநாள் பொங்கல் விழாவை யொட்டி சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. தொடக்கவுரையை மஞ்சை வசந்தன் ஆற்றினார்.

ஊடகங்களால் தமிழ்ப்பண்பாடு காப்பாற்றப் படுகிறதா? கைவிடப்படுகிறதா? என்ற பொருளின் தலைப்பில் நடைபெற்ற இப்பட்டி மன்றத்திற்கு கவிஞர் நந்தலாலா நடுவராக இருந்து மிகச்சிறப்பாக நடத்தினார்.

ஊடகங்களால் தமிழ்ப்பண்பாடு காப்பாற்றப்படு கிறது என்ற அணியில் இடம் பெற்ற புதுகை பூபாளம் பிரகதீஸ்வரன், லால்குடி ஜோதி ஆகியோர் தங்கள் வாதங்களை எடுத்து வைத்து உரையாற்றி னர். ஊடகங்களால் தமிழ்ப் பண்பாடு கைவிடப்படு கிறது என்ற தலைப்பில் தேவகோட்டை மகாராஜன், கல்பாக்கம் ரேவதி ஆகியோர் தங்கள் வாதங்களை எடுத்துவைத்து சிறப்பாக உரையாற்றினர். இப்பட்டி மன்ற நிகழ்வை நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத் தில் நிறைந்து இருந்த பார்வையாளர்கள் வெகுவாக ரசித்து கைதட்டி மகிழ்ந்தனர்.

தமிழ் ஓவியா said...


பெரியார் விருது அளித்து சிறப்பிப்பு

இதையடுத்து பெரியார் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. முதலாவதாக எழுத்தாளர் தமிழ் மகன் அவர்களுக்கும், திரைக்கலைஞர் எம்.எஸ். பாஸ்கர் அவர்களுக்கும், பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களுக்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து பெரியார் விருது (பெரியார் உலகத்தில் நிறுவப்பட வுள்ள சிலை மாதிரி) மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.

முன்னதாக பெரியார் விருது பெற்ற எழுத்தாளர் தமிழ்மகன் அவர்களின் சாதனைக் குறிப்பை தோழர் செல்வி வாசித்தார். நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் அவர் களின் சாதனைக் குறிப்பை நடிகை கனகா வாசித் தார். பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களின் சாதனைக் குறிப்பை தோழி பாக்கியலட்சுமி வாசித்தார்.

பெரியார் விருது பெற்ற பெருமக்கள் ஏற்புரை யாற்றுகையில் தந்தை பெரியார் அவர்களின் சீர்திருத்த கருத்துகளால் ஈர்க்கப்பட்டதால் அதன் அடிப்படையில் நாங்கள் எங்கள் துறையில் முன் னேற்றம் காண முடிந்தது. இனமானத் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் பெரியார் விருது பெறுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்தனர்.

தமிழர் தலைவரின் சிறப்புரை

தமிழ் ஓவியா said...

பெரியார் விருது பெற்ற பெருமக்களைப் பாராட்டி, சிறப்புரையாற்றிய தமிழர் தலைவர்:-

கலைத்துறைக்கும் திராவிடர் இயக்கத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறார்கள், கலைவா ணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் நகைச்சுவை கலந்த சீர்திருத்த கருத்துக்களை எந்த காலத்திலும் அழிக்க முடியாது.

அவரிடம், இவ்வளவு சீர்திருத்த கருத்துக்களை எப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டபோது, நான் அந்த காலத்திலேயே பச்சை அட்டை குடி அரசு இதழ் படிக்கும்போது தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கருத்துகள் கிடைத்தன என்று பெருமையாக சொல்வார்.

அதே போன்று பெரியாரின் சீர்திருத்த கருத்து களை திரைப்படங்களில் துணிச்சலாக பேசக் கூடியவராக திகழ்ந்தவர் நடிகவேள் எம்.ஆர்.இராதா அவர்கள். அவரின் பேரால் இந்த மன்றமே அமைந் திருக்கிறது.

இப்படிப்பட்ட பெருமக்கள்தான் சுயமரியாதை இயக்கத்தில் இருந்துக் கொண்டே நாடகம் மற்றும் கலைத்துறையில் சீர்திருத்தக் கருத்துகளை பரப் பினர். அதற்கு காரணம் திராவிடர் இயக்கம்தான்.

இங்கே பெரியார் விருது பெற்று இருக்கும் எழுத்தாளர் தமிழ்மகன் அவர்களின் படைப் பாற்றல் புத்துலகத்திற்கு சென்றுக் கொண்டிருக் கிறது. இன்னும் அவரின் எழுத்தாற்றல் இமயத்திற்கு செல்ல வேண்டும், அவருக்கு அதற்கான பாதுகாப் பிற்குதான் ஒரு அடையாளமாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் அ.மார்க்ஸ் எப்போதுமே பட் டென்று தனது கருத்தை சொல்பவர். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என கருத்தை எழுதிச் சொல்வதில் தமிழ்நாட்டில் இவர் முதன்மையானவர்.

நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் சுயமரியாதை இயக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். சுயமரியாதைகாரர் முத்து பேட்டை ஆர்.எம்.சோமு தேவர்தான் இவருடைய தந்தை. இவர் பெரியாரின் சீடர் தந்தை பெரியாரி டமும், அன்னை மணியம்மையார் மற்றும் என்னிட மும் உரிமை எடுத்துக்கொண்டு நட்பு பாராட்டு வார். அந்த வகையில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் சுயமரியாதை குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதில் எங்களுக்கு பெருமை.

எனவே நம்மவர்களை நாம் இங்கே அழைத்து பெரியார் விருது கொடுத்து பாராட்டுவது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பெரியார் விருது பெற்ற பெருமக்களை பாராட்டி சிறப்புரையாற் றினார்.

பட்டிமன்றத்தில் பங்கேற்றவர்களுக்கு சிறப்பு

முன்னதாக பட்டிமன்றத்தில் பங்கேற்ற கவிஞர் நந்தலாலா, தேவகோட்டை மகா ராஜன், புதுகை பூபாளம் பிரகதீஸ்வரன், லால்குடி ஜோதி, கல் பாக்கம் ரேவதி ஆகியோருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்.

இம்மூன்றாம் நாள் நிகழ்ச்சிக்கு பெரியார் நூலக வாசகர் வட்டத்தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பொன்னேரி வி.பன்னீர் செல்வம், தி.வெ.சு.திருவள்ளுவன், பா.முத்தையன், அனகை ஆறுமுகம், கு.தங்கமணி, உமா செல்வராஜ், உடுமலை வடிவேல், தாம்பரம் சிவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் செ.தமிழ்சாக்ரட்டீஸ் தொகுத்து வழங்கினார். பகுத்தறிவாளர் கழக தோழர் கொடுங்கையூர் கோவி.கோபால் நன்றியுரை கூறினார்.

இந்நிகழ்வில் திருத்தணி கவியரசு குழுவினருக் கும், கறம்பக்குடி முத்துவின் வீரவிளையாட்டு குழுவினருக்கும் நிகழ்ச்சியின் நிறைவில் மேற்கத்திய நடன இசை நிகழ்ச்சியை நடத்தி காட்டிய பெரியார் திடல் தோழர்கள் சரத்குழுவினருக்கும் தமிழர் தலை வர் அவர்கள் பாராட்டி பயனாடை அணிவித்து சிறப்பித்தார்.

திராவிடர் திருநாள் பொங்கல் விழா மூன்றாம் நாளில் நடைபெற்ற பட்டிமன்ற நிகழ்வுகளைக் கண்டுகளிக்கும் தமிழர் தலைவர் மற்றும் பார்வையாளர்கள் (சென்னை, 19.1.2014)

இம்மூன்றாம் நிறைவு நாள் நிகழ்வில் திராவிடர் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பெரியார் நூலக வாசகர் வட்ட செயலாளர் சத்திய நாராயணன் மற்றும் கழக முன்னணி தோழர் - தோழியர்கள் பொது மக்கள் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர்.

Read more: http://viduthalai.in/page-6/73809.html#ixzz2qzeLNhAd

தமிழ் ஓவியா said...


வாழைப்பழத்தின் வகைகளும், நன்மைகளும்


வாழைப்பழம் சாப்பிடுவது உடல் நலனுக்கு ஏற்றது என்பது பொதுவான கருத்தாகும். அது மட்டுமின்றி, அறிவியல் ரீதியாகவும் இது சரி என்று நிரூபணமாகி இருக்கிறது.

வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட், விட்டமின், கால்சியம், தாது சத்துக்கள் அடங்கி இருப்பதுடன், எளிதில் ஜீரணமாகும், கொழுப்பை குறைக்கும் சக்தியும் அதிகம் உள்ளதாம். இந்த சக்தி நன்றாக வேலை செய்யும்போது, உடல் எடையும் குறைகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காலை உணவுடன், அல்லது இரவு உணவுக்குப் பின்னர் வாழைப்பழம் சாப்பிடுவது உடல் நலனுக்கு ஏற்றது. வாழைப் பழத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. அனைத்து வகைகளும் உடலுக்கு பலனை அளிக்கக் கூடியவையே. இப்போது வாழைப்பழத்தின் வகைகளும், அவற்றின் நன்மைகளையும் பார்க்கலாம். மலை வாழைப்பழம்- மலச்சிக்கலைத் தீர்க்கும்

செவ்வாழைப் பழம்- உயிரணுக்களைப் பெருக்கும்

மஞ்சள் வாழைப்பழம்- குடல் புண்களை ஆற்றும்

ரஸ்தாளி வாழைப்பழம்- நாவுக்கு சுவை தரும்

மொந்தன் பழம்- உடலின் வறட்சியைப் போக்கும்

பச்சை வாழைப்பழம்- உடலுக்குக் குளிர்ச்சி தரும்

நேந்திரம் வாழைப்பழம்- சேரும் நஞ்சை முறிக்கும்.

தோலுக்கு மினுமினுப்பைத் தரும்.

Read more: http://viduthalai.in/page-7/73802.html#ixzz2qzeb66uE

தமிழ் ஓவியா said...


குளிர்காலங்களில் உடலை வெப்பமாக வைக்கும் உணவுகள்


குளிர்காலங்களில் வெப்பம் தரும் உணவு வகைகளைச் சாப்பிடுவது அவசியமான ஒன்றாகும். குளிர்காலங்களில் வெப்பம் அளிக்கும் உணவுகளை சாப்பிடுவதும் வெயில் காலங்களில் குளிர்ச்சியான உணவு களை சாப்பிடுவதும் பொதுவான ஒன் றாகும்.

இந்தக் குளிர்காலங்களில் சரியான உணவைத் தேர்ந்தெடுத்து உட்கொள்வது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். உங்கள் குளிர்கால உணவில் வெப்பம் தரும் உணவுகள் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

தமிழ் ஓவியா said...

எல்லா காலங்களிலும் நமது உடலின் வளர் சிதை மாற்றம் (மெட்ட பாலிசம்) சரிவர இயங் குவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

குறிப்பாக குளிர் காலங்களில் சரியான முறையில் இயங்குவது முக்கியமான ஒன் றாகும். இது நமது நோய் எதிர்ப்பு மண் டலத்தை ஒழுங்காக இயக்கச் செய்து, நம்மை நோய்களிடம் இருந்து பாதுகாக்க உதவும். இங்கு குளிர்காலங்களில் உடலை வெப்பமாக வைக்க உதவும் சில உணவு வகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பயன்பெறுங்கள்.

இஞ்சி சிகிச்சை மருத்துவப் பலன்களை பெற்ற இஞ்சி குழந்தைகள் மற்றும் பெரியோர்களால் உட்கொள்ளப்படும் பொதுவான உண வாகும். இது சளி பிடித்தலுக்கும், காய்ச் சலுக்கும் சிறந்த சிகிச்சையை அளிக்கக் கூடியது. இது குளிர் காலத்தில் வெப்பம் தரும் உணவுகளில் ஒன்றாகும். ஒரு கப் இஞ்சி டீ அருந்தினால், அது உங்கள் உட லில் உள்ள கொழுப்பு அமிலங்களை செரிக்க உதவி புரியும். மேலும், அசிடிட்டியை போக்குவதற்கும் உதவி புரியும்.

வேர்க்கடலைகள் குளிர்காலங்களில் சுவாச வாயுவின் அளவு குறைவாக இருக்கும். அதனால், இந்த குளிர்காலங்களில் சரியான உணவு முறையை பெறுவதற்கும் தேவையான பிராண வாயுவை உட்கொள்வதற்கும், இந்த வேர்க்கடலைகளை உங்கள் உணவில் சேர்த்து இவற்றை பெறலாம். இது குளிர் காலத்தில் வெப்பம் தரும் உணவுவகைகளில் ஒன்றாகும்.

தேன் இந்தக் குளிர்காலங்களில் உங்கள் உணவில் தேனை சேர்த்து கொள்ளுவது மிகச் சிறந்த ஒன்றாகும். இது உங்கள் ஜீரண சக்தியை அதிகரித்து உங்கள் ஆரோக் கியத்தையும் மேம்படுத்தும். மேலும், உங்கள் நோய்எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்த உதவி புரியும்.

பாதாம் பாதாமானது அதிக அளவில் பலன் களை அளிக்கக்கூடியதால் இது குளிர் காலங்களில் உட்கொள்ளும் உணவுகளில் மிகச்சிறந்த ஒன்றாகும். இது பொதுவாக குளிர்காலங்களில் ஏற்படும் மலச்சிக்கலை தவிர்க்க உதவி புரியும். இது சர்க்கரை நோய்க்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கும். வைட்டமின் ஈ நிறைந்துள்ளதால் உங்கள் தோலிற்கும் சிகிச்சை அளிக்கும் சிறந்த உணவாகும்.

தமிழ் ஓவியா said...

தானியங்கள் சிறு தானியங்கள் குளிர் காலங்களில் உங்கள் உணவில் சேர்த்து கொள்ள வேண்டிய உணவுகளில் மிகச்சிறந்த ஒன்றாகும். சிறு தானியங்களை சேர்த்து சப்பாத்தி செய்து குழந்தைகளுக்கு அளித்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்த பலனை அளிக்கக்கூடிய உணவுகளில் ஒன்றாகும்.

நீர் நிறைந்த பழங்களை தவிர்த்தல் குளிர்க்காலங்களில் நீர் நிறைந்த உணவுகளையும், பழங்களையும் தவிர்க்க வேண்டும். உங்கள் உணவில் பேரிக்காய், ப்ளம்ஸ் மற்றும் ஆரஞ்ச் பழங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். அதிகமான நீர் நிறைந்த பழங்களைக் உட்கொண்டால் அது உங்கள் உடலை மேலும் குளிர்ச்சியாக்கும்.

எள் விதைகள் குளிர்க்காலங்களில் எள் விதைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் சிறந்த பலனைப் பெறலாம். குளிர்க்காலங் களில் உங்கள் உணவில் வெப்பம் தரும் உணவுகளைக் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும். எள் விதைகள் உங்கள் உடலில் உள்ள வெப்பத்தை அதிகரித்து மேடபாளி சத்தை மேம்படுத்த உதவி புரியும்.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் குளிர்காலங்களில் சாப்பிட வேண்டிய உணவுகளில் சிறந்த ஒன்றாகும். மீன்களில் அதிக ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கும். தேவையான அளவு மீன்களை உட்கொள்ளு வது குளிர்காலங்களில் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு உதவி புரியும்.

இதில் அதிக அளவில் ஜிங்க் நிறைந் துள்ளதால் உங்கள் உடலில் உள்ள வெள் ளை ரத்த அணுக்களின் செயல்திறனை அதிகரிக்க உதவும். இந்த வெள்ளை ரத்த அணுக்கள் தான் நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமாக இருப்பது. இந்த நோய் எதிர்ப்பு சக்தியினால் தான் நாம் பலவகை நோய் களிடம் இருந்து பாதுகாக்கப்படுகின்றோம்.

காய்கறிகள் உங்கள் உணவில் சரியான அளவு காய்கறிகளை சேர்த்து கொள்ளவேண்டும். இந்த காய்கறிகள் உங்களுக்கு தேவையான சக்தியை அளித்து குளிர்காலத்தை சமா ளிக்க உதவி புரியும். அதிக அளவில் கீரை களையும், கேரட் மற்றும் பீட்ரூட் போன்ற காய்களை உட்கொள்ளவேண்டும்.

மேற்கண்ட உணவு வகைகளை தவ றாமல் உட்கொண்டால் இந்த ஆண்டு குளிர்காலத்தை நோயின்றி எளிதில் கடக்கலாம். அத்துடன் குழந்தைகளுக்கு தேவையான உணவு வகைகள் மற்றும் மருந்துகளை உரிய மருத்துவரின் ஆலோ சனையின்றி கொடுக்கக் கூடாது. தகுந்த முன்னேற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருப்பதும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

Read more: http://viduthalai.in/page-7/73801.html#ixzz2qzewoSHl

தமிழ் ஓவியா said...


நீதிபதிகள் நியமனக் குளறுபடிகள்: கலைஞர் பதில்


சென்னை, ஜன.21-நீதிபதிகள் நியமனத்தில் நடைபெறும் குளறுபடிகள் குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கேள்வி - பதில் பகுதியில் தெரிவித்துள்ளதாவது:

கேள்வி: சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கள் நியமனத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் பற்றி குறை கூறி வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதோடு, நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டமும் நடை பெற்றுள்ளதே?

கலைஞர்: அண்மைக் காலத்தில் நீதிபதிகள் பற்றியும், அவர்கள் நியமனம் குறித்தும் வெளிவருகின்ற செய்திகள் மன வேதனையை ஏற்படுத்துகின்றன. உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீதே குற்றச்சாட்டு கூறப் படுகிறது. உயர்நீதிமன்றத்திற்கு அண்மையில் நடைபெற்ற நீதிபதிகள் நியமனத்திலேகூட, யாரோ ஒரு பெண்மணி ஆளுங்கட்சி கூட்டங்களிலும், ஆளுங் கட்சிக்குரிய தொலைக்காட்சி நிறுவனத்திலே நேரத் தைக் கழித்தவர் என்றும் என்னிடம் கூறினார்கள்.

நீதிமன்றத்தில் வாதாடிப் பழக்கமே இல்லாதவர்கள் பெயர்கள் எல்லாம் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படிப்பட்டவர்களை பரிந்துரை செய்திருப்பவர்கள் இதற்கான விளக்கத்தைத் தந்தால் புரிந்துகொள்ள முடியும். நீதிபதிகள் நியமனத்திற்கு முன்பே இப்படிப்பட்ட புகார்களுக்கு ஆளாவார்களானால், அவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட பிறகு வருகின்ற விளைவுகளை வழக்காடும் பொதுமக்கள் எதிர்கொள்ள வேண்டுமல்லவா? மேலும் இந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரே, தற்போது செய்யப்பட்டுள்ள நியமனம் சரியில்லை என்று நீதிமன்றத்திலேயே தெரிவித்திருக்கிறார்.

உச்சநீதி மன்றத்தில் நீதிபதியாக இருந்த ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு, அந்த நீதிபதி உச்சநீதிமன்றம் தன்னைச் சரியாக நடத்தவில்லை என்று கூறியிருக் கிறார். தற்போது இன்னொரு உச்சநீதிமன்ற நீதிபதி மீது குற்றச்சாட்டு வெளி வந்திருக்கிறது.

ஒரு சில நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகள் இவ்வாறு கூறப்படுகின்ற காரணத்தால், நீதித் துறையின் மீதே களங்கம் ஏற்பட்டுவிடும்! மங்கை சூதகமானால் கங்கை யில் மூழ்கலாம், கங்கையே சூதகமானால் எங்கே மூழ்குவது? என்று தேவர் திருமகன்தான் அடிக்கடி கேட்பார்; அதுதான் நினைவுக்கு வருகிறது.

கேள்வி: சிதம்பரம் கோவிலுக்குள் நீதியும் நுழைய முடியாதா? என்ற தலைப்பில் தீக்கதிர் நாளேடு தலையங்கம் எழுதியுள்ளதே?

கலைஞர்: அந்த வழக்கை அ.தி.மு.க. அரசு எவ்வாறு நடத்தியது என்பதுபற்றியோ, அரசு வழக்குரைஞர் எவ்வாறு செயல்பட்டார் என்பதுபற்றியோ, அந்தத் தலையங்கத்தில் குற்றமாகக் கூறாமல், வழக்கை நடத் துவதில் தமிழக அரசு உரிய அக்கறை காட்டவில்லை என்ற புகார் உள்ளது என்று மட்டும் எழுதியிருப்பதோடு, தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதன்மூலம் நீதியையும், சமூகநீதியையும் நிலைநாட்ட முன்வரவேண்டும் என்று தலையங்கத்தை முடித்திருக்கிறது. அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சியின் இந்த வேண்டுகோளையாவது அ.தி.மு.க. அரசு ஏற்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் செய்தியாளர்களிடையே தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/73845.html#ixzz2r58n6xmR

தமிழ் ஓவியா said...


தியாகம் என்பது...


தியாகம் என்பது சுயநலத்துக் கான பயன் எதிர்பாராது, பொது நலத்துக்காகப் பாடுபடுவதும்; எவ்வித மான அவமானங்களையும் இலட்சியம் செய்யாமல் பல இன்னல்களுக்கும் தயாராகித் தொண்டாற்றுவதாகும்.

(விடுதலை, 11.1.1966

Read more: http://viduthalai.in/page-2/73848.html#ixzz2r592n6Qr

தமிழ் ஓவியா said...

அய்யா இல்லாத வெற்றிடம்...!


- கவிஞர் விக்ரமாதித்யன்

அன்று ஞாயிற்றுக்கிழமை; காலை டூட்டி முடிந்து, பஜார் பக்கமுள்ள அடைத்த கடை வாசலில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்; எதிரே, சுவரொட்டியில், தந்தை பெரியார் பேசுகிறார் என்றிருந்தது; சின்ன நோட்டீஸ்தான்; படம் கூட இல்லை.

சென்னையில், 62 தேர்தலின்போதும் அதற்கு முன்பும் அண்ணா, நாவலர், கே.ஆர்.ராமசாமியிலிருந்து எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர். வரையிலும் எல்லோருடைய மேடைப் பேச்சையும் கேட்டிருக்கிறேன்; அய்யா பெரியார் பேச்சுக் கேட்க வாய்ப்புக் கிடைக்கவில்லை; சாயுங்கால டூட்டி முடிந்ததும் போய்விட வேண்டியதுதான்.

திரளான கூட்டம்; கருப்புச் சட்டையுடன் திராவிடர் கழகத் தொண்டர்கள்; பொதுமக்கள்; பெரியார் பேச ஆரம்பித்ததுமே நிசப்தமாகிவிட்டது சூழல்; பாமரனும் புரிந்து கொள்ளக்கூடிய எளிமை; எதிரில் இருப்பவர்களுடன் உரையாடுவது போன்ற எதார்த்தம்; சுயமரியாதை என்ற சொல்லையே முதன்முதலாகக் கேள்விப்படுகிறேன்; வர்ணாஸ்ரமம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் அப்போதுதான் தெரியும்; சரளமான பேச்சு.

எண்பதுகளின் தொடக்க ஆண்டொன்றில் நானும் நண்பர் துரையும் சேர்ந்து, ஒரு பத்திரிகைக்கு நேர்காணல்கள், மேட்டர்கள் செய்து கொடுத்துக் கொண்டிருந்தோம்; மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், வித்துவான் மே.வீ.வேணுகோபால பிள்ளை, பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் ஆகியோரைப் பேட்டி எடுத்துத் தந்திருந்தோம்; ஆனால் வெளியிடப்படவில்லை; தகவலாக இருக்கிறது, பத்திரிகை சுவாரஸ்யம் இல்லை என்பதனாலோ என்னவோ தெரியாது (பாவாணர் மறைவையொட்டி, பாவாணர் என்ற பெயர் எப்படி வந்தது என்ற செய்தியை மட்டும் துணுக்காகப் போட்டிருந்தார்கள்.)

கா.அப்பாதுரையாரிடம் கேட்ட ஒரு கேள்வி:

நாகர்கோவில் பக்கம் ஹிந்தி பண்டிட்டாக இருந்த நீங்க எப்படிச் சென்னை வந்தீர்கள்?

பதில்: பெரியார், ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்குவதற்கு முன் ஹிந்தி பற்றித் தெரிந்துகொள்ள விரும்பினார்; தெரியாமல் எதிர்க்கக் கூடாதென்று எண்ணினார்; இதற்காகவே என்னை அழைத்து வந்தார்.

காமராஜர் ஆட்சியை பெரியார் ஆதரித்ததும், பச்சைத்தமிழன் என்று புகழ்ந்ததும் ஏன் என்பது தெரிந்தவர்களுக்கே தெரியும்.

யாராவது கூற முடியுமா, தமிழ், காட்டுமிராண்டி பாஷை என்று.

அய்யா பெரியார் அவர்களுக்கு இனம்தான் முதல்; பிறகுதான் மொழி.

திராவிடர் கழகத்தை ஏன் அரசியல் கட்சியாக இல்லாமல், சமூக இயக்கமாக வைத்திருந்தார் அவர்?

தமிழ்க் கவிதையைப் பெரிதாகப் பொருட்படுத்தாத அந்த உள்ளத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியுமா, என்ன.

சினிமாவைக் கடுமையாகக் கண்டனம் செய்து வந்ததை எவ்விதம் விளங்கிக் கொள்வீர்கள்?

மகத்தான ஆளுமைகளைச் சுலபத்தில் புரிந்து கொள்ள முடியாது; அதனால்தான் காலம் முழுக்க விமர்சனங்களும் விவாதங்களும்.

செயல்கள், அவற்றின் விளைவுகள் _ இவைதான் ஆக்கம்; எதிர்வினைகள் என்னவாகும்.

தமிழினம் கிடந்த கிடையிலிருந்து உசுப்பி எழவைத்த தலைவர் அவர்; வணக்கத்துக்குரிய வன்றொண்டர்.

நான் அறிவு ஜீவியல்லன்; உணர்வு வழிப்பட்ட கவிஞன்; என்னதான் ஆன்மிகமாக இருக்க முயன்றாலும் ஜோதிடமெல்லாம் கற்றுத் தேர்ந்தாலும் இன்னமும் உள்ளம் விரும்புவதையே கையில் எடுத்துக் கொள்கிறேன்; பெரியார் மீதான பிரியமும் இந்த விதம் வந்ததுதான்.

இன்றைய தமிழ்ச் சமூகத்தில் அய்யா அவர்கள் இல்லாத வெற்றிடம் வெளியரங்கமாகவே புலப்படுகிறது; அந்த நேர்மை, அந்த உண்மை, அந்த ரௌத்ரம், அந்த கலகக்குணம் கொண்ட தலைமை இப்பொழுது இந்த இனத்துக்கு வெகுவாக வேண்டியிருக்கிறது; இல்லையென்றால் உய்வடைவது தள்ளிப் போவதைக் காலம் கவனித்துக் கொண்டுதான் இருக்கும்; வேறென்ன சொல்ல.

நன்றி: குமுதம் தீராநதி டிசம்பர் 2013

தமிழ் ஓவியா said...

உழவர் திருநாள்

உழவேதலை என்றுணர்ந்த தமிழர்
விழாவே இப்பொங்கல் விழாவாகும்! காணீர்
முழவு முழங்கிற்று புதுநெல் அறுத்து
வழங்கும் உழவர்தோள் வாழ்த்துகின்றாரே!

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்என்ற சொல்லிற்
பழுதுண்டோ? காணீர் பழந்தமிழர் நாங்கள்
உழவரே என்றுவிழா ஒப்பி மகிழ்ந்தாரே

உய்யோமோ செங்கதிரே நீடுபனி ஓட்டிவந்த
தையே முதற்றிங்கள் தைம்முதலே ஆண்டுமுதல்
கையே துணையாகும் கைத்தொழிலே ஆக்கமென்று
செய்யே தரும்செந்நெல் சேயிழையார் குற்றினரே

தேரிழுப்பும், செம்பெடுப்பும் அல்லவிழா! அன்னவெல்லாம்
ஓரிழுப்புநோய்! - பொதுவின் உள்ளவிழைவே விழா!
ஏரெழுப்பும் புத்தம் புதுச்செல்வம் இட்ட பால்
பாரழைக்கப் பொங்கற் பயன்மணக்க வைத்தனரே!

அழகின் பரிதி உயிர்; அவ்உயிரை
முழுதும் நிறுத்தும் அமிழ்துதான் முத்து
மழை! உலகு தாய்! வளர்ப்புப் பாலே பயன்!நெய்
ஒழுக உண்டார் பொங்கல் எல்லாரும் ஒன்றியே!

ஆடைஎல்லாம் அந்நாள் மடிப்பு விரித்தவைகள்!
ஓடைஎனப் பாலும், உயர்குன் றரிசியும்
வாடைநெய்யும் பொங்கி வழியவே பொங்கலிட்ட
நாடுதான் கொண்ட நனிமகிழ்ச்சி செப்பரிதே!

இகழ்ச்சி அணுகா திலையில் அமிழ்தைப்
புகழ்ச்சி சொல்லிப் புத்துருக்கு நெய்யொழுக உண்ட
மகிழ்ச்சியே இந்நாள் போல் எந்நாளும் மல்க
மிகச்சீ ரியதமிழும் மேன்மையுற்று வாழியவே!

- புரட்சிக்கவிஞர்
பாரதிதாசன்

தமிழ் ஓவியா said...

ஊழ்

--------------கலைஞர்
புயலும் மழையும் ஓய்ந்து ஊர்மக்கள் வெளியில் தலைகாட்டத் தொடங்கினார்கள். ஆங்காங்கே பெருமரங்கள் அடியற்றுக் கிளைகளுடன் வீழ்ந்து கிடந்தன. காற்றுக்கு வளைந்து கொடுத்துத் தப்பித்துக் கொள்ளும் நாணலும், படுகை மண்ணோடு தூக்கியெறியப்பட்டுத் தலைகுப்புறச் சாய்ந்து கிடந்தது. ஊர்க் கோவிலின் கோபுரத்துக் கலசம், ஒரு கல் தொலைவுக்கப்பால் உருண்டு கிடந்தது. கால்நடைகள் ஒன்றிரண்டு தெருக்களில் மூச்சற்றுக் கிடந்தன. கிழங்கள் நடுங்கும் மேனியைப் போர்த்துக்கொண்டு தங்கள் இல்லத்துத் திண்ணைகளில் படுத்திருந்தன. வீதிகளில் தேங்கியிருந்த மழைநீர்க்குட்டைகளில் குறும்பு செய்யும் இளைஞர் கூட்டம் குதித்து விளையாடிக் கொண்டிருந்தது. கழனிகளில் தலைசாய்ந்து மிதந்த வண்ணமிருந்த நெற்கதிர்களை உழவர்கள் பெருமூச்சுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். புயலுக்குப்பின் ஏற்பட்ட அந்த அமைதியில் பெரும்பாலும் சோகத்தின் பின்னணியே ஒலித்துக் கொண்டிருந்தது. ஊரின் நடுவே தலையில் வகுத்த நேர்வகிடு போல் அமைந்திருந்த ஆறு; நிம்மதியிழந்து வெறி பிடித்தது போல் ஓடிக்கொண்டிருந்தது. கடுமழையும் புயலும்தான் ஆற்றின் ஆவேசத்துக்குக் காரணம்! இலைதழைகள், கிளைகள், ஆட்டுக்குட்டி, கன்றுக்குட்டிகளின் சவங்கள் ஆற்றின் தோள்மீது சவாரி செய்து கொண்டிருந்தன.

ஊர் நாட்டாண்மைக்காரரும், அவருடைய உதவியாளரும் ஆற்றின் வேகத்தைக் கண்டவாறு ஆற்றங்கரை மீது நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்க்கரையில் ஒரு கட்டுடல் படைத்த வாலிபன் ஆற்றையே உற்றுப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். அவன் பரபரப்பு அடைந்திருந்தான். அவனை நாட்டாண்மைக்காரர் பார்த்துவிட்டு, உதவியாளரிடம் கேட்டுச் சந்தேகத்தைப் போக்கிக் கொண்டார்.

ஏய்! எதிர்க்கரையில் நிற்பவன் நம்ம ஊர் சிங்கன்தானே?

ஆமாங்க! அவனே தான்! உங்க பரம விரோதி சிங்கனேதான்!

என்ன அப்படி, ஆற்றையே பார்க்கிறான் வைத்த விழி வாங்காமல்?

சாமி! சாமி! அடடே! ஒரு மான்குட்டி உயிருக்குத் தவிக்குதுங்க! அதோ பாருங்க ஆற்று நடுவினிலே!

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, எதிர்க்கரையில் நின்ற சிங்கன், மான்குட்டியைக் காப்பாற்ற ஆற்றில் குதித்துவிட்டான். குதித்தவனைச் சிறிது நேரம் காணவில்லை. நாட்டாண்மைக்காரருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.
பாரடா! பார்! என் பகைவன் ஆற்றோடு போய்விட்டான் அமிழ்ந்து! என்று அவர் கூச்சல் போட்டார்!

இருங்க சாமி! அவசரப்படாதீங்க! அவனுக்கு நீச்சல் தெரியும் என்றார் உதவியாளர்.
அவர் சொன்னபடியே சிங்கன் நீச்சலடித்துக் கொண்டு மான்குட்டியைக் காப்பாற்ற முன்னேறிக் கொண்டிருந்தான். ஆற்றின் கடுமையான வேகத்தைச் சமாளிக்க முடியாமல் அவன் தத்தளித்தான்.

நாட்டாண்மைக்காரர், தன் உதவியாளரிடம் சொன்னார்:

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்

என்று வள்ளுவர் சொன்ன வாக்குப் பொய்யாகப் போகாது பார்! ஊழைவிட மிக்க வலிமையுள்ளது எதுவுமில்லை! அதை விலக்குவதற்காக மற்றொரு வழியைப் பின்பற்றினாலும் அங்கேயும் ஊழ்தான் முன்வந்து நிற்கும். எனவே, இப்போது சிங்கனைவிட ஊழ் வலிமையாக நிற்கிறது! அதோ, அவன் திண்டாடுகிறான் பார்! அவன் கைகள் ஓய்ந்துவிட்டன பார்! மான்குட்டியை வேறு தோளிலே போட்டுக் கொண்டு நீந்துவது எளிதா? தொலைந்தான் சிங்கன்!

இவ்வாறு நாட்டாண்மைக்காரர் துள்ளிக் குதித்தார். உதவியாளர் விளக்கினார்:

சாமி! ஊழை வெல்ல முடியாது என்பது சரிதான். ஒன்று நம்மை வெல்லும்போது ஊழ் வென்றுவிட்டது என்கிறோம்! மாறாக, நாம் வெற்றி பெறும்போது ஊழ்தான் அந்த வெற்றியை நமக்குத் தந்தது என்கிறோம். எனவே, ஏற்படுகிற ஒரு விளைவுக்கு நாம் கற்பிக்கிற காரணம்தான் ஊழ் என்பதாகும். அதைத்தான் வள்ளுவர் கூறுகிறார்.

உதவியாளரின் விளக்கத்தைக் கேட்டு நாட்டாண்மைக்காரர் வியந்து போனார். அதற்குள் சிங்கனும் ஆற்றுச்சுழல்களை எதிர்த்து வெற்றி கண்டு மான் குட்டியுடன் கரையை வந்து அடைந்தான். நாட்டாண்மைக்காரருக்கு மேலும் வியப்பு! சிங்கன்மீது கொண்டிருந்த பகையைக்கூட மறந்துவிட்டு அவன் வீரத்தையும், மன உறுதியையும், இரக்கமுள்ள இதயத்தையும் பாராட்டி, ஓடிப்போய் அவனைத் தழுவிக் கொண்டார்.

எப்படியப்பா உன்னால் இந்தப் பயங்கர வெள்ளத்தைக் கடக்க முடிந்தது? என்று அவர் முகமலர்ச்சியுடன் கேட்ட கேள்விக்குச் சிங்கன் அளித்த பதிலும் ஒரு திருக்குறள்தான்.

அய்யா! சோர்வின்றி உறுதியுடன் முயற்சியில் ஈடுபடுகின்றவர்கள் ஊழையும் தோல்வி காணச் செய்து விடுவார்கள்! இதோ அதற்குக் குறள்! என்று உரக்கப் பாடினான் சிங்கன்.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்

நன்றி : கலைஞரின் குறளோவியம்

தமிழ் ஓவியா said...

கருப்பு என்பது வெறும் நிறமல்ல!


கலை என்பது சமுதாயத்தின் கண்ணாடி. சமூக அவலங்களுக்கு எதிரான ஆயுதம். மனிதர்களிடையே நல்லுறவை வளர்க்கும் உணர்வு. இந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பதுதான், கருப்பு கலைக் குழுமம் (Karuppu Art Collective).

கருப்பு என்பது வெறும் நிறமல்ல. அது வெளிச்சத்திற்கு முந்தைய புள்ளி. உணர்வை வெளிப்படுத்தும் வண்ணம். மனிதத் தோலின் நிறத்தை நிர்ணயிக்கும் மெலனின் தன்மை. தாயின் வயிற்றில் உள்ள கரு. எல்லாவற்றுக்கும் மேலாக ஜனநாயகம் தந்துள்ள உரிமையின் அடிப்படையில் வெளிப்படுத்தும் எதிர்ப்பின் அடையாளம். இவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் கருப்பு கலைக் குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை கவின் கலைக் கல்லூரியின் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த 9 பேர் இணைந்து இந்தக் குழுமத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஓவியக் காட்சியுடன் இதன் தொடக்க விழா 2013 டிசம்பர் 15ஆம் தேதி சென்னை ஈஞ்சம்பாக்கம் சோழமண்டலம் கலைஞர்கள் கிராமத்தில் உள்ள பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் -_ அனிதா இல்லத்தில் நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட கலைஞர்களும் கலை ஆர்வலர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்தியாவை மதவாதம் ஆளத்துடிக்கும் நிலையில் அதற்கெதிரான ஆயுதமாக கலைவடிவங்கள் இருக்க வேண்டும். தான் விரும்புவது மட்டுமே இருக்க வேண்டும் என்பதே பாசிசம். தான் விரும்புகிற கலையும் கலாச்சாரமும் மட்டுமே இருக்க வேண்டும் என நினைக்கும் இந்துத்வாவும் பாசிசம்தான். அதற்கு எதிரான குரலாக கலைஞர்கள் செயல்பட வேண்டும். வளர்ந்து உலகச் சூழலில் கலைஞர்களுக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதும், புதிய கலைஞர்களை ஊக்குவிப்பதும் இந்த அமைப்பின் நோக்கமாகும் என்றார் ஏ.எஸ்.பன்னீர்செல்வன்.

கவின்கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வரான ஓவியர் சந்துரு, கலை விமர்சகர் சதானந்த் மேனன், லலித்கலா அகாடமியின் மண்டலச் செயலாளர் இராம.பழனியப்பன் ஆகியோர் சென்னைக்குரிய கலை பாரம்பரியத்தையும் அவை ஏற்படுத்திய தாக்கங்களையும்

இன்று ஏற்பட்டுள்ள தொய்வினையும் சுட்டிக்காட்டி அதனை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். வரைதல், செதுக்குதல், உருவாக்குதல் மட்டுமல்லாமல், எங்கள் படைப்புகளையே திரும்பத் திரும்பச் செய்யும் இயந்திரத்தனத்தில் விழுந்துவிடாமல் இருக்கும் சவால்களைக் குறித்தும்

நாங்கள் விவாதிப்போம். 20-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் கொள்கை விளக்கங்களோடு வெளிப்பட்ட எங்கள் முன்னோர்கள் எதிர்கொண்டு விழுந்த குழிகளை நாங்கள் அறிந்தே இருக்கிறோம். அதே வேளை அரசியல், பண்பாடு, பொருளாதாரம், பாலியல் சமன்பாடு, சூழலியல் மற்றும் தத்துவம் போன்றவை குறித்த அக்கறையும் அது சார்ந்த படைப்புகளை உருவாக்கும் கடமையும் எங்களுக்கு இருக்கிறது, பத்தாண்டுகளில் எங்கள் வெளிப்பாடு கொள்கை விளக்கமாகக் கூட இருக்கும் என்று கூறும் கருப்பு குழுவினர் செயலிலும் அதைத் தொடங்கியுள்ளனர்.

கல்வி, எழுத்து, ஆய்வுப் புலம், கலை, ஊடகம் போன்றவற்றின் நிகழ்கால நிலை குறித்து பேராசிரியர் வீ.அரசு, எழுத்தாளர் இமையம், நிகழ்த்து கலைஞர் ப்ரீத்தி ஆத்ரேயா, இயக்குநர் ரமணி ஆகியோர் பங்கேற்ற கருத்துப் பகிர்வோடு டிசம்பர் 28-ஆம் தேதி நிறைவுற்றது கருப்பு கண்காட்சி.

அபராஜிதன் ஆதிமூலம், சந்துரு, எபினேசர் சுந்தர் சிங், கிருஷ்ணப் பிரியா, மரிய அந்தோணி ராஜ், மைக்கேல் இருதயராஜ், நடேஷ் முத்துசுவாமி, நரேந்திரன், ஷர்மிளா மோகன் தாஸ் ஆகியோர் படைப்புகளில் கருப்பின் நோக்கத்தை நாம் புரிந்துகொள்ள முடிந்தது. ஆண்டுதோறும் நடைபெறும் சென்னைக் கலைக்காட்சியில் ஒரு பகுதியாக கருப்பும் இவ்வாண்டு பங்கேற்கிறது என்று தெரிவித்தார் இதன் ஒருங்கிணைப்பில் ஈடுபட்டிருந்த அனிதா. கருப்பு புரட்சியின் நிறம்; புதுமையின் நிறம். மக்கள் பிரச்சினைகளிலிருந்து விட்டுக் கலை விலகியிருக்கிறதோ என்ற எண்ணத்தை அகற்றும் இந்தக் கருப்பு கலைக் குழுமம், இருளில் ஏற்றப்பட்ட விளக்காக ஒளிர்கிறது.

- ஓவியம்

தமிழ் ஓவியா said...

காததூரம் ஓடும் விபூதி பூதங்கள்....


நரையாய் பூமுகத்தில் - புன்னகை
நரம்பின் நார்களா
இடிமின்னலைப் புடம்போட்ட - இல்லை
எரிமலையின் வேர்களா

மூடத்தனக் காய்கள் - உச்சி
மலையேற எத்தனிக்க
ஒற்றுதலின்றிக் கருவறுத்த - நீ
ஒற்றைத்தாயம் நாயகரே

கைபர் போலன் - சிறு
கணவாய் வழிபுகுந்த
ஆரிய முகத்திரையை - கிழித்தீர்
அறிவொளிப் பெரியோனே

நாத்திக பூமியை - உன்
நெற்றிக்கண்ணில் சுழலவிட்டு
ஆத்திகக் குடுமியவிழ - அவா
ஆத்திரத்தில் தீயிட்டாய்

தூபக்கால் தீபக்கால் - கண்டு
தொப்பென்று விழுந்தவனுக்கு
யானைக்கால் பயணமிட்டீர் - எழுப்பி
ஞானப்பால் புகட்டத்தான்

ஆலிங்கன லீலைகளால் - இங்கே
ஆகுதி புகையெரிக்கும்
விபூதி பூதங்களுக்கு - அதன்
விலாவொடிய உடுக்கடித்தீர்

நெய்யிலும் நீரிலும் - பேதமா?
நியாய வாதமிட்டு
பொய்யின் புரவலருக்கு - நூல்
பெய்யும் புலவரானீர்

கையிருந்தும் களவா - உயர்
கற்பிதம் சொல்லி
மெய்யது உள்ளவரை - உயிர்
மெய்யாய் வாழ்ந்தீர்

சமத்துப் பேச்சில் - உனது
சமத்துவ வீச்சிருக்க
கரையேறும் கலப்புமணம் - நீதான்
கலங்கரை விளக்கிருக்க

பாட்டாளி மகனுனக்கு - தைப்
புத்தாண்டு பொங்கலா
பட்டுடுத்த தொகையில்ல - பொருமுறேன்
புதுப்பானை கலங்கலா

கல்லைத் தொழுதே - ஒரு
கல்லாமைப் பிண்டமா
மண்டூகமா நிற்பதென்ன - இன்னும்
மண்டியிட்ட முண்டமா

மந்திர எந்திரங்கள் - அட
மாந்திரிக அனுசரணையா
விஞ்ஞான யுகாந்திரத்தில் - சூன்யத்துக்கு
வெஞ்சாமர உபசரணையா

வயற்காட்டு மகசூல் - நூறு
விழுக்காடாம் போடா
தன்னலமென்ற ஊழலிருக்க - ஆகாது
தன்னிறைவு நாடா

தொடுத்தாரே கேள்விகளை - ஏதும்
தோனலையா காரணமா
எழாத பிணத்துக்கு - அடே
ஏழடுக்குத் தோரணமா

எருதுபூட்ட உழுமோ - கேளீர்
எங்கேனும் நுகத்தடி
பார்ப்பனியத்தைக் களையெடுக்க - நின்
போர்வாளே கைத்தடி

வீதியில்லா ஊரும் - உந்தன்
விதிநின்று பாடும்
காதில்லாப் புராணம் - அன்று
காததூரம் ஓடும்.

- சேரங்குலத்தான்

தமிழ் ஓவியா said...

சிந்தனை


மனித மூளை சிந்திக்கும் ஆற்றல் வாய்ந்தது, இச்சிந்தனை சக்தி மூலம் கடவுள் என்று அவனே உருவாக்கிக் கொண்டான். அது அவன் மூளைத்திறனை வலுவிழக்கச் செய்துவிட்டது.

நமது சிந்தனையைச் செயலாக்க முயலுவோம். இதற்குத் தடையாக இருப்பது மனிதனே உருவாக்கிய கடவுள் கொள்கைகள் தான்.

மனிதன் பறக்கவேண்டுமென்றால் இறக்கையுடன் படைத்திருப்பான் என்பது மதவாதிகளின் மடத்தனமான விவாதம்.

சிந்தனையைச் செயல்படுத்தத் தொடங்கினால் மனிதன் வானத்தின் எல்லைகளையும் மீறி பறந்துவிடுவான்...

- லியானர்டோ டா வின்சி

தமிழ் ஓவியா said...

தமிழனா-தெலுங்கனா? தமிழனா-உருது இஸ்லாமியனா?


தமிழ் மண்ணில் வெள்ளையனை எதிர்த்து வீரப் போர் புரிந்ததினால் தூக்கிலிடப்பட்டான் கட்டபொம்மன். அந்த வீரனின் பிறந்த நாள் ஜனவரி 3 என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அவர் தமிழரல்ல, தெலுங்கர் என்கிறார்கள், பச்சைத் தமிழர்கள்.

கட்டபொம்மனை வெள்ளையனுக்குக் காட்டிக் கொடுத்த புதுக்கோட்டை மன்னன் ராஜாதி ராஜா ராஜகுல விஜயரகுநாத தொண்டைமான், பச்சைத் தமிழன்தான்.

கட்டபொம்மன் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டார் என்பதற்காக அவர் தியாகத்தைத் தள்ளி வைப்பதும், தமிழன் என்பதற்காக புதுக்கோட்டை மகாராஜாவின் துரோகத்தைக் கொண்டாடவும் முடியுமா?

தமிழர்களான மருது சகோதரர்கள், தெலுங்கு பேசுகிறவர் என்பதற்காக கட்டபொம்மனைக் காட்டிக் கொடுக்கவில்லை. மாறாக ஊமைத்துரை, கட்டபொம்மன் சகோதரர்களுக்காக தன் ராஜ்ஜியத்தையும் தன் உயிரையுமே தியாகம் செய்தார்கள்; சின்ன மருது பெரிய மருது என்கிற அந்த வீர சகோதரர்கள்.
தன்னைப்போலவே தெலுங்கு பாளையக்கார மன்னன் என்பதற்காக கட்டபொம்மனை ஆதரிக்கவில்லை எட்டப்பன். வெள்ளையனிடம் கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்தான்.

தூக்கு மேடை ஏறும்போது தன் இனத்தைச் சேர்ந்த எட்டப்பன் முகத்தில் காறி உமிழ்ந்தான் மாவீரன் கட்டபொம்மன்.

தமிழன் புதுக்கோட்டை மகாராஜாவும் தெலுங்கன் எட்டப்பனும் ஓர் இனம்.

தமிழன் மருது சகோதரர்களும் தெலுங்கன் கட்டபொம்மனும் ஓர் இனம்.

துரோகிகள் எப்போதும் இனம் மொழி பார்ப்பதில்லை. தியாகிகளும் அப்படித்தான்.

வெள்ளையனை எதிர்த்து தன்னையும் தன் குடும்பத்தையுமே தியாகம் செய்து மதத்தைத் தாண்டி மாவீரனாக நின்றான் திப்புசுல்தான். அவன்தான் நமது முன்னோர். அவன் காலத்திலே வெள்ளையனுக்குக் காட்டிக் கொடுத்தார்கள் ஆற்காடு நவாப்பும், ஹைதராபாத் நிஜாமும்.

எந்த மொழி பேசினாலும் தியாகிகளே நமது முன்னோர்கள். சொந்த மொழி பேசினாலும் துரோகிகளே நமது எதிரிகள்.

- முகநூலில் வே. மதிமாறன்

தமிழ் ஓவியா said...

திராவிடத்தால் வளர்ந்தோம்

திராவிடத்தால் வாழ்ந்து, திராவிடத்தால் கல்வி கற்று, இப்போது முழுப் பலனையும் அனுபவித்துக் கொண்டு, திராவிடக் கட்சியால் சீரழிந்தோம், திராவிட மாயையை அகற்ற வேண்டும் என ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பது போல் உளறிக்கொண்டு இருக்கும் அரைவேக்காடுகளுக்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு.

1911_வாக்கில் நடந்த வர்ணாசிரம (குலக்கல்வி) பள்ளிப் பாடம்:

1. இவன் தச்சன்_மரவேலை செய்கிறான்
2. இவன் குயவன்_மண்பாண்டம் செய்கிறான்
3. இவன் கொல்லன்_இரும்புவேலை செய்கிறான்
4. இவன் அம்பட்டன்_முகச்சவரம் செய்கிறான்
5. இவன் வண்ணான்_துணி வெளுக்கிறான்
6. இவன் வாணியன்_எண்ணெய் ஆட்டுகிறான்
7. இவன் சேனியன்_துணி நெய்கிறான்
8. இவன் பறையன்_தப்படிக்கிறான்
9. இவன் சக்கிலியன் _ செருப்புத் தைக்கிறான்
10. இவர் அய்யர்_வேதம் ஓதுகிறார்!

2010 முதல் தமிழகப் பள்ளிகளில் நடத்தப்படும் பாடங்கள் பின்வருமாறு:

1. உழவர் _ பயிர்களை வளர்ப்பவர்
2. ஆசிரியர் _ பாடம் கற்பிப்பவர்
3. மீனவர் _ கடலில் மீன்பிடிப்பவர்
4. வணிகர் _ பொருள்களை வாங்கி விற்பவர்.
5. மருத்துவர் _ நோயிலிருந்து காப்பவர்
6. தூய்மைப் பணியாளர் _ துப்புரவு செய்பவர்
7. சலவைக்காரர்_துணிகளைச் சலவை செய்பவர்
8. நெசவாளர் _ துணிகளை நெய்து தருபவர்
9. காவலர் _ சட்டம் ஒழுங்கைக் காப்பவர்
10. கட்டடக் கலைஞர் _ வீடு கட்டித் தருபவர்

ஆதாரம்: (வளரும் இளமை, 4ஆம் வகுப்பு 2ஆவது பாடம் _ பக்கம் 6)

இந்திய மக்கள் அறிவில்லாமல் இருப்பதற்குப் பார்ப்பனர்களே காரணம் என்று இந்தியத் தாய் புத்தகத்தில் மிஸ் மேயோ எழுதியதையும் நினைவில் கொள்ள வேண்டும். - பொன்.வெங்கடேசன், இராணிப்பேட்டை

தமிழ் ஓவியா said...

பாவேந்தர்


இதழுலகில் பாவேந்தர்

பாரதிதாசன் அவர்கள் தாமே உரிமையாளராகவும் ஆசிரியராகவும் இருந்து நடத்திய ஏடுகள் 3. இதில் குயில் ஏடு மட்டும் 6 முறை வெவ்வேறு வடிவில் வெளியானது.

அதாவது 1946 முதல் 1962 வரை புத்தகமாக, மாத இதழாக, மாதமிருமுறை இதழாக, வார இதழாக, நாளிதழாக வெளியானது. இதற்கு முன் புதுவை முரசு(1930) மற்றும் ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம்(1935) ஆகிய இதழ்கள் வெளிவந்தன.


திரையுலகில் பாவேந்தர்

பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் 9 திரைப்படங்களுக்கு திரைக்கதை உரையாடல் எழுதியுள்ளார். இவற்றில் ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி(1947) என்ற படத்திற்கு அவர் எழுதியது பலருக்கும் தெரிந்திருக்கும். பாலாமணி(எ)பக்காத் திருடன் (1937), இராமானுஜர் (1938), கவிகாளமேகம் (1940), சுலோசனா (1944), பொன்முடி(1949), வளையாபதி(1952)ஆகிய படங்களும் பாவேந்தர் எழுத்தில் வெளிவந்தவை. சிவாஜி நடிக்க தயாரிப்பதாக இருந்த பாண்டியன் பரிசு மற்றும் மகாகவி பாரதியார் ஆகிய படங்கள் தயாரிக்கப்படவில்லை.

1937 தொடங்கி 1960 வரை 22 திரைப்படங்களில் பாவேந்தர் பாடல்கள் எழுதியுள்ளார். அவரது மறைவுக்குப் பின் ஏறத்தாழ 25 படங்களில் பாவேந்தர் எழுதிய கவிதைகள் பாடல்களாக இசைவடிவம் பெற்றுள்ளன.பாவேந்தரின் குறள் உரை

பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் 85 குறட்பாக்களுக்கு உரை எழுதியிருக்கிறார். இவற்றில் கடவுள் வாழ்த்து அதிகாரமும் ஒன்று. ஆனால், இதற்கு உலகின் தோற்றம் எனத் தலைப்பிட்டுள்ளார்.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 13 பள்ளிகளில் 1907 முதல் 1944 வரை பாவேந்தர் பாரதிதாசன் தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


சமூக ஒற்றுமை


ஒரு பெரும் சமூகம் ஒற்றுமையும், சீர்திருத்தமும் பெறவேண்டுமானால், அதிலுள்ள பிரிவுகளான ஒவ்வொரு சிறு சமூகமும், தங்களுக்குள் முதலில் ஒற்றுமையையும், சீர்திருத்தத்தையும் பெற்றாகவேண்டியது மிகவும் அவசியம். - (குடிஅரசு, 3.3.1929)

தமிழ் ஓவியா said...


24 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!


சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புதிதாகத் தேர்வு செய்யப்படுவதற்கான 12 உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகளில் மூன்று பேர் பார்ப்பனர்கள்; ஏற்கெனவே மூன்று பேர் பார்ப்பனர்களாக இருக்கும் நிலையில், ஒரு நீதிமன்றத்தில் குறிப்பிட்ட உயர்ஜாதியினரின் ஆதிக்கத்தை மேலும் நிலை நிறுத்துவது சமூகநீதிக்கு எதிரானது என்றும், இந்தப் பட்டியலில் தாழ்த்தப்பட்ட சமூக நீதிபதி ஒருவர் பெயர்கூட இடம்பெறவில்லை; தாழ்த்தப்பட் டோரில் அருந்ததியர் போன்றவர்களுக்கு வாய்ப்பு, காலங்காலமாக மறுக்கப்பட்ட பிரிவினருக்கும்கூட இடம் இல்லை; அதுபோலவே, மீனவர், சலவையாளர், முடிதிருத்துவோர் போன்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் பிரதிநிதியாக எவரும் இடம்பெறவில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்திருந்தார் (விடுதலை, 17.1.2014).

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை உணர்வை வெளிப்படுத்தவும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக் காலி இடங்களை நிரப்புவதற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பட்டியலை ரத்து செய்யவும் கோரி 24.1.2014 அன்று தமிழ்நாடெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவ்வறிக்கையில் அறிவித்திருந்தார்கள்.

அதற்கான ஏற்பாடுகளைத் தமிழ்நாடெங்கும் கழகத் தோழர்கள் செவ்வனே செய்துகொண்டுள் ளனர். இதில் ஒத்த கருத்துள்ள அமைப்பினரையும் இணைத்துக் கொள்ள ஆவன செய்யுமாறு கழகப் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சமூகநீதியும், சுயமரியாதையும் நம் நாட்டுக்கு மிகவும் அவசியம் என்று பிரபல ஆங்கிலப் பத்திரிகையாளர் தோழர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் அவர்கள் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் திருநாளான பொங்கல் விழாவில் மிகச் சரியாகவே குறிப்பிட்டுள்ளார் (17.1.2014).

திராவிடர் கழகத்தின் தொடர் பணியாகவும் அது அமைந்தே வந்திருக்கிறது என்பது ஊருக்கும், உலகுக்கும் தெரிந்த ஒன்றே! இதே சென்னை உயர்நீதிமன்ற வாயிலின் அருகேகூட நீதித் துறையில் பார்ப்பனர் ஆதிக்கத்தை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில், பலமுறை ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதுண்டு. அதற்கான நல் விளைவுகளும் ஏற்பட்டன என்பதை மறுக்க முடியாது.

நாளை மறுநாளும் இதே சமூகநீதி நோக்கத் தோடே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களும், மதுரைக் கிளை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களும் கூட இதே காரணத்திற்காக நீதிமன்ற வளாகத் துக்குள்ளேயே ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

மூத்த வழக்குரைஞர் திரு.ஆர்.காந்தி அவர்கள் இது தொடர்பாக ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்பமை நீதியரசர் கர்ணன் அவர்களும் தானே முன்வந்து ஆர்ப்பரித்துள்ளார்கள்.

தமிழ்நாட்டுக்கே உரித்தான இந்த மண்ணின் மனப்பான்மையை (Soil Psychology)
சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியும், மூத்த நீதி பதிகளும், உச்சநீதிமன்ற நீதிபதிகளும் உணர்ந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் மக் களுக்குத் தேவையான சட்டங்களை இயற்று கிறார்கள்; அந்தச் சட்டங்களைக்கூட செல்லாது என்று தடை செய்யும் அளவுக்கு உயர் அதிகாரம் படைத்த மய்யங்களாக உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் இருந்து வருகின்றன.

அப்படிப்பட்ட மய்யத்தில் வருணாசிரம உணர்வு, ஜாதீய உணர்வு நிலவும் ஒரு நாட்டில் அனைத்துச் சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது நியாயம் அல்லவா!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி (Justice Social) என்பதுதான் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அது நீதித்துறையிலிருந்து தொடங்கப்பட வேண்டாமா?

திராவிடர் கழகம் கொடுக்கும் இந்தக் குரல் சட்ட ரீதியானது; சமூகத் தளத்தில் முதன்மையாக எழுப்பும் இன்றியமையாத சமூகநீதிக்கானது.

இதனை ஒரு கட்சிப் பிரச்சினையாகக் கருதாமல், ஒன்றிணைந்து குரல் கொடுப்போம், வாரீர்! வாரீர்!! என்று 24 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்திற்கு அழைக் கிறோம்!!!

Read more: http://viduthalai.in/page-2/73918.html#ixzz2rArbUogj

தமிழ் ஓவியா said...


நீதித்துறையிலும் இடஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம் (24.1.2014) முழக்கங்கள்


1. வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!

2. வெல்க வெல்க வெல்கவே
திராவிடர் கழகம் வெல்கவே

3. வெல்க வெல்க வெல்கவே
சமூக நீதி வெல்கவே!

4. தேவை தேவை
நீதித்துறையிலும் நீதித்துறையிலும்
தேவை தேவை
சமூக நீதி சமூக நீதி
தேவை! தேவை!!

5. ஆதிக்கம் ஆதிக்கம்
நீதித்துறையில், நீதித்துறையில்
ஆதிக்கம் ஆதிக்கம்
பார்ப்பனர்களின் ஆதிக்கம்
பார்ப்பனர்களின் ஆதிக்கம்

6. வழக்குரைஞர் தொழிலில்
வழக்குரைஞர் தொழிலில்
அனுபவமே இல்லாத
அனுபவமே இல்லாத
பார்ப்பனர்களை பார்ப்பனர்களை
நீதிபதியாக்குவதா? நீதிபதியாக்குவதா?


7. பாராட்டுகிறோம், பாராட்டுகிறோம்
சமூகநீதிக்காக சமூகநீதிக்காக
குரல்கொடுத்த குரல்கொடுத்த
நீதியரசர் கர்ணன் அவர்களை
நீதியரசர் கர்ணன் அவர்களை
பாராட்டுகிறோம் - பாராட்டுகிறோம்

8. மத்திய அரசே, மத்திய அரசே
அனைத்துத் துறைகளிலும்
அனைத்துத் துறைகளிலும்
இடஒதுக்கீடு இடஒதுக்கீடு
கொண்டு வா! கொண்டு வா!!

9. நீதித்துறையில் நீதித்துறையில்
வாய்ப்பு மறுக்கப்பட்ட
வாய்ப்பு மறுக்கப்பட்ட
ஜாதிப் பிரிவினருக்கு
ஜாதிப் பிரிவினருக்கு
இடம் கொடு! இடம் கொடு!!

10. நீதித் துறையில் நீதித் துறையில்
பெண்களுக்கு பெண்களுக்கு
வாய்ப்பு கொடு! வாய்ப்பு கொடு!

11. தாழ்த்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட
பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட
மிகவும் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட
பெண்களுக்கு பெண்களுக்கு
இடம் கொடு, இடம் கொடு!

12. மாற்றுக! மாற்றுக!!
நீதிபதிகளே நீதிபதிகளை
நியமனம் செய்யும்
நியமனம் செய்யும்
கொலிஜியம் முறையை
கொலிஜியம் முறையை
மாற்றுக! மாற்றுக!!

13. போராடுவோம், போராடுவோம்!
வெற்றி கிட்டும்வரை வெற்றி கிட்டும்வரை
போராடுவோம் போராடுவோம்!

14. வென்றெடுப்போம்
வென்றெடுப்போம்
தமிழர் தலைவர் தலைமையிலே
தமிழர் தலைவர் தலைமையிலே
சமூக நீதியை சமூக நீதியை
வென்றெடுப்போம்!
வென்றெடுப்போம்!!

15. வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்கவே
அண்ணல் அம்பேத்கர் வாழ்கவே!!

- திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/page-4/73899.html#ixzz2rArvEUp1

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க.வின் இராமர் கோவில் திட்டம் கைவிடப்படவில்லை!


புரிந்துகொள்வீர்!

பா.ஜ.க.வின் இராமர் கோவில் திட்டம் கைவிடப்படவில்லை!

Question: There was no reference to the Ram temple in Modi’s speech. Have you kept Ram Mandir out of your agenda this time?

Answer: No, no. We will announce our manifesto. You will have to wait for it to find out what is in the agenda and what is not. Our commitment to our basic issues is always there. Whether each of them becomes an election issue or not is a separate subject. Mandir has always been in our agenda. Wait for our manifesto.

இதன் தமிழாக்கம் வருமாறு:

கேள்வி: மோடியின் உரைகளில் ராமன் கோவில்பற்றி எதுவும் இடம்பெறுவதில்லையே, ஏன்?

அருண்ஜேட்லி (மாநிலங்களவை பி.ஜே.பி. தலைவர் பதில்: தேர்தல் அறிக்கையில், ராமன் கோவில் கட்டப்படுவது குறித்த அறிவிப்பு வெளிவரும். எங்கள் அஜண்டாவில் என்ன இருக்கிறது என்பதைத் தேர்தல் அறிக்கை வெளிவரும்வரை பொறுத்திருக்கவேண்டும்; எங்களுடைய அடிப்படை நோக்கம், குறிப்பாக ராமன் கோவில் கட்டுவது என்பதில் மாற்றம் இல்லை. எங்கள் தேர்தல் அறிக்கையில் காணப் போகிறீர்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/73915.html#ixzz2rAuAe8te

தமிழ் ஓவியா said...


நீதித்துறையில் உயர்ஜாதி பார்ப்பனர் ஆதிக்கம்: எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் கொந்தளிப்பு!


சென்னை, ஜன.23- நீதித் துறையிலும் இடஒதுக்கீடு தேவை என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலை வர் தொல். திருமாவளவன் அவர் விடுத்துள்ள அறிக்கை யில் கூறப்பட்டு இருப்பதாவது:

நீதிபதிகள் மற்றும் நீதித் துறையின் மீதான நம்பிக்கை என்பது சமூக நீதியைக் காப்பாற் றுவதிலும்தான் அடங்கியிருக் கிறது. ஆனால், நீதிபதிகளின் நியமனத்தில் நீண்ட நெடுங்கால மாக சமூக நீதி பின்பற்றப்படுவ தில்லை. இது நீதியைக் காப்பாற் றும் முழுமையான நடவடிக்கை யாகாது. நாட்டின் ஆட்சி, நிர்வாக அமைப்புகளில், நிர்வகிப்பவர் களைத் தெரிவு செய்யும் முறை யில், சில குறைபாடுகளும் விமர் சனங்களும் இருந்தாலும், வெளிப் படைத் தன்மையே நடை முறையில் இருந்து வருகின்றது. ஆனால், நீதித்துறையில் மட்டும் அத்தகைய வெளிப்படைத் தன்மை இன்னும் வாய்க்காமல் இருக்கிறது. வெளிப்படைத் தன்மை இருப்பதனால்தான் நாட்டை நிர்வகிக்கும் இடங்களில் ஒடுக்கப்பட்ட மற்றும் சாதாரண குடிமக்களிலிருந்து யாராவது ஒருவர் உயர் பதவியில் அமர முடிகிறது. இல்லையெனில், இந்த வாய்ப்பும் அவர்களுக்கு மறுக்கப் படும். 20 பேர் மட்டுமே - தாழ்த்தப்பட்டோர்

ஆனால், தகுதி மற்றும் திறமையைக் காரணம் காட்டி நீதித் துறையில் இது தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவது பெரும் அநீதியாகும். தற்போது, இந்தியா விலுள்ள அனைத்து உயர்நீதிமன் றங்களிலும் நியமிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த நீதிபதிகளில் 20 பேர் மட்டுமே தாழ்த்தப்பட்டோர் உள்ளனர். இந்தியாவிலேயே அதிக பட்சமாக சென்னை உயர்நீதிமன் றத்தில் மட்டும் தாழ்த்தப்பட் டோர் 8 பேர் நீதிபதிகளாக இருக் கிறார்கள். அதிலும் 2 பேர் பதவி மூப்பின் அடிப்படையில் வந்தவர் கள். 6 பேர் மட்டுமே நியமனம் செய்யப்பட்டவர்கள். முற்போக்கு மாநிலமாகக் கருதப்படக்கூடிய தமிழகத்தில், 16 பேர் தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடியினராக இருக்க வேண்டிய சென்னை உயர்நீதிமன்றத்தில், வெறும் 8 பேர் மட்டுமே இருக்கிறார்கள் என்பது பெரும் அவலம். அப்படி யென்றால் பிற மாநிலங்களில் இருக்கக்கூடிய இத்தகைய அவ லத்தைப் பார்க்கும்போது ஒடுக்கப் பட்ட மக்களுக்கு எவ்வளவு பெரிய அநீதி இழைக்கப்பட்டுள் ளது என்பது புரியும்.

மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து உயர்நீதிமன்றங்களி லும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய பிரதிநிதித் துவம் வழங்கப்படவேயில்லை என்பது கசப்பான உண்மையாகும். அதேவேளையில், அனைத்து உயர்நீதி மன்றங்கள் மற்றும் உச்ச நீதி மன்றத்தில் முற்பட்ட வகுப்பின ரின் ஆதிக்கமே மேலோங்கியிருக் கிறது என்பதை அறிய முடிகிறது.

தற்போது சென்னை உயர் நீதிமன்றத்திற்கான நீதிபதி கள் நியமனத்திற்கு பரிந்துரைக்கப் பட்டுள்ள 12 பேர் கொண்ட பட் டியலில் முற்பட்ட வகுப்பின ருக்கே பெரும்பான்மையான பிரதிநிதித்துவம் அளிக்கப்பட் டுள்ளதாகத் தெரிகிறது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற வழக் குரைஞர்கள் தொடர் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த 12 பேரில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் 6 இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதை அறிந்து, அதனை எதிர்த்து வழக்குரை ஞர்கள் போராட்டம் நடத்து கிறார்கள். இந் தத் தெரிவுகள் தகுதி, திறமையின் அடிப் படையில் நடைபெற வில்லை என்பதை வழக்குரைஞர்கள் ஆதாரத்துடன் சுட்டிக் காட்டிப் போராடி வருகின்றனர். தகுதி யுள்ளவர்களிலிருந்து நீதிபதிகள் நியமிக்கப் பட வேண்டும் என்ப தில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அந்தத் தகுதி, திறமை உள்ளவர்கள் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, சிறுபான்மையின மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பி னரிலும் உள்ளனர் என்பதை யாரும் மறுக்க இயலாது. இத் தகைய ஒடுக்கப்பட்ட சமூகங் களிலிருந்து திறமையும், தகுதியும் உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமானால் நீதிபதிகள் நியமனம் என்பது வெளிப்படை யானதாக இருக்க வேண்டும். எனவே, இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றுவரும் வழக்குரைஞர் சமூகத்தின் போராட் டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்று ஆதரிக்கிறது.

மேலும், உயர் நீதிமன்றங்களி லும், உச்ச நீதிமன்றத்திலும் நீதி பதிகள் நியமனத்தில் இடஒதுக் கீட்டைப் பின்பற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுப்பதோடு, நீதித்துறையில் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தில், உரிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர வேண்டுமெனவும் இந்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/73960.html#ixzz2rGtqS6nu

தமிழ் ஓவியா said...


பண வேட்டையா? மகிழ்ச்சியா? - எது தேவை? - கி.வீரமணி


வாழ்க்கையின் முக்கிய தேவைகள், அடிப்படைத் தேவைகள் - இவைகளுக் காக பணம் (செல்வம்) அவசியம் தேவை. அதனால் துவக்கத்தில் மகிழ்ச்சி ஏற்படும்; கவலைகள் இராது.

ஆனால் அது ஒரு எல்லை வரையில்தான். அது எல்லையைத் தாண்டி விட்டால், மகிழ்ச்சி நாளுக்கு நாள் குறையத் துவங்கும்.

இதை Law of Diminishing Returns என்று பொருளாதாரப் பாடத்தில் கூறுவார்கள். எளிய முறையில் இதை விளக்க வேண்டுமானால் முதலில் நமது தேவையின் உச்சத்தில் நமக்குக் கிடைக்கும் பணத்தின் மதிப்பு நமக்கு மிக அதிகம். அதுவே அதிகமாகி பின்னால் கிடைக்கும்போது, அதே அளவு மகிழ்ச்சியை தருவதாக அது அமையாது; காரணம் முதலில் ஏற்பட்ட நமது நெருக்கடி - தேவை குறையக் குறைய, அடுத்து வரும் பணத்தின் மதிப்பு - நம்மைப் பொறுத்தவரை குறைந்ததாகவே காணப்படும் அல்லது உணரப்படும்.

எடுத்துக்காட்டாக, உங்கள் மகிழ்ச்சிக்கான கனவுத் திட்டமாக வைத்துள்ள நீங்கள் பணம் அதிகம் சம்பாதிக்கும் நிலையில் விலை உயர்ந்த கார் வாங்க எண்ணி, அதனை ஓட்டி மகிழ ஆசைப்பட்டு ஒரு Audi, Ferrari, BMW (ஆடி, பெராரி, பிஎம். டபுள்யூ) போன்ற விலை உயர்ந்த காரை வாங்கியவுடன் அதிக மகிழ்ச்சி கிடைக்கும்தான். அதிலே சிலர் மிதக் கவும் செய்வர்!

ஆனால் முதல் நாள், முதல் வாரம், முதல் மாதம், முதல் ஆண்டு - ஒரே மாதிரியான துவக்க மகிழ்ச்சி நீடிக்குமா? இருக்காதே - பரபரப்பு, இன்ப வேகம் கொஞ்சம் கொஞ்சம் குறைந்துதானே வரும்.

இதை மனோதத்துவ நிபுணர்கள், Hedonic Adaptation என்ற சொற்றொ டரில் கூறுகிறார்கள்.

பிறகு இந்த ஆசை குறைந்து இன்னொரு ஆசை துளிர்த்து அதற்கு மாறிடும், இறுதியில் அந்தப் பிடிப்பு அவ்வளவாக இருக்காது. தானே குறையும் மாறிவரும்.

இந்த சுழலை ‘Hedonic Treadmill’ என்ற சொற்றொடர் மூலம் குறிக் கிறார்கள் மனோதத்துவ துறையில் - உளவியலில் இந்த சுற்றி சுழலும் நிலை ஒரு விசித்திரம்-

செல்வம், அந்தஸ்து, புகழ் - இப்படி தொடரத் தொடர, ஆசை சில நேரங் களில் பெருகிக் கொண்டே இருந்து, உச்ச கட்டத்திற்குப் போனாலும் மகிழ்ச் சியை இறுதியில் தக்க வைக்க முடியாமல் தவிக்கும் நிலை சர்வ சாதாரணம்!

எனவே பண வேட்டையும், குவித் தலும் மகிழ்ச்சியை கொண்டுவந்து சேர்க்காது; மாறாக மனக் கவலை அதிகரிக்கவே செய்யும். நிம்மதி மெல்ல நிதானமாக விடை பெற கதவைத் தட்டும்!

எனவே இதனைத் தடுக்க அளவான பணத்தைச் சேர்ப்பதோடு தேவையான அளவு பணம் ‘Enough money’ தேவை களுக்கு ஓர் எல்லையை வரையறுத்துக் கொண்டால் மகிழ்ச்சி நீடித்து நிலைக்கும்.

மகிழ்ச்சி நம் மனதைப் பொறுத்தது தானே!

1. பொதுவாக பல்வகை அனுபவங்கள் தரும் மகிழ்ச்சி - வெறும் ஆடம்பர நுகர் பொருள்களால் வந்து விடாது.

2. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதைப் படித்தபலரும் நோயற்ற வாழ்வே குறைவற்ற மகிழ்ச்சி என்றும் உணர வேண்டும். எனவே உடல் நலம், உடலில் சக்தியை, ஆற்றலைப் பெருக்கி, தக்க வைத்துக் கொள்ளல் வற்றாத மகிழ்ச்சி ஊற்றாக அமையக் கூடும்.

3. நல்ல நண்பர்களுடன், நல்ல மனிதர்களுடன், நல்ல உறவுகளுடன் கூடிக் கலந்து வாழ்ந்தால், மகிழ்ச்சியின் பரிமாணம் மிகவும் விரிந்து பரந்து நம் வாழ்வைப் பெருக்கும்!

4. தொடர்ந்து எரிச்சல்தரும் நிலைமை களை புத்திசாலித்தனமாக தவிர்த்து விடக் கற்றுக் கொள்ளுங்கள்.

5. கொடுப்பதில் கொள்ளை மகிழ்ச்சி ஏற்படவே செய்யும்!

கடைசி நேரத்தில் எதையும் செய் யாமல், திட்டமிடாமல் இருந்துவிட்டு பிறகு அதற்காக மிகவும் எரிச்சலும், கோபமும் கொண்ட அன்றாட வாழ்க்கை யாக உங்கள் வாழ்க்கை அமைந்தால், நரம்புகள் உடல் ரீதியாக பலவீனம் அடைந்து, நரம்புத் தளர்ச்சியை உரு வாக்கி விடக் கூடும். பிறகு மகிழ்ச்சி ஏற்பட முடியுமா? சிந்தித்துப் பாருங்கள். எதையும் திட்டமிட்டு, நிதானித்துச் செய்தால் இந்த எரிச்சல் ஏற்பட வாய்ப்பே வராது அல்லவா?

6. சில ஓய்வு பெற்றவர்கள், அடுத்த நாள் முதலே ஏதோ மிகப் பெரிய இழப்புக்கு ஆளானதுபோல கவலை யில் நரை, திரை மூப்பு அடைந்தவர் களாக காட்சியளிப்பதை நாம் காணு கிறோம்.

இது தேவையற்ற மனோ நிலை யாகும். பணியாற்றினோம்; பெருமை யோடு ஓய்வைச் சுவைப்போம் - பொதுத் தொண்டு, மற்றவர்க்கு உதவுதல், புதுப்புது அனுபவங்களைக் கற்றுக் கொள்ளலாமே!

கற்றுக் கொள்ளுதலுக்கு வயது ஒரு தடையாக இருக்க முடியாதே! அது மகிழ்ச்சியைத் தருமே!

அதற்குமுன் செலவழிக்கத் தவறிய உங்கள் குடும்பத்தவர் தொடங்கி, வீடு, தெரு, ஊர், சமூகம், உலகம் என்று உத விடும் பணி எல்லையற்ற மகிழ்ச்சியை உங்களுக்கு வாரி வாரி வழங்குமே!

இதை மறக்கலாமா? எனவே பண வேட்டையா முக்கியம்? மகிழ்ச்சி ஊற்றைத் தோண்ட முயலுங்கள்.

Read more: http://viduthalai.in/page-2/73968.html#ixzz2rGubmMf2

தமிழ் ஓவியா said...


பேரறிவாளன் உள்ளிட்டோரையும் விடுதலை செய்க! கலைஞர் பேட்டி


சென்னை, ஜன. 23 - தூக்குத் தண்டனை கூடவே கூடாதென்ற எனது கருத்து இன்றைக்கு நிறைவேறியிருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன் என்றும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று பேருக்கும் இந்தத் தண்டனை பொருந்தும் வகையில் முடிவு வெளி வந்தால் பெரு மகிழ்ச்சியடைவேன் என்றும் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் நேற்று பகலில் அண்ணாஅறிவாலயத்திலிருந்து இல்லத்திற்குப் புறப்பட்டபோது செய்தி யாளர்களுக்கு அளித்தபேட்டியில் குறிப் பிட்டார்.

கலைஞர் அவர்கள்அளித்த பேட்டி வருமாறு :-

செய்தியாளர்:- உச்சநீதிமன்றம் நேற்றைய தினம் தூக்குத் தண்டனைக் கைதிகளின் தண்டனையைக் குறைத்து வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து உங்கள் கருத்துஎன்ன? ஏற்கனவே நீங்கள்பலமுறை தூக்குத் தண்டனை என்பதே கூடாது என்று பலமுறை எழுதியவர் ஆயிற்றே?

கலைஞர்:- தூக்குத் தண்டனை கூடவே கூடாதுஎன்று இன்று நேற்றல்ல; நீண்ட காலமாக நான் கூறி வருகிறேன். அது இன்றைக்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.இதைப் பற்றி நான் விரிவாக முரசொலியில் எழுதியிருக் கிறேன்.

செய்தியாளர் :- ராஜீவ்காந்தி கொலை வழக்கிலே சிக்கி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது கருணை மனுதாக்கல் செய்துள்ளநிலையில் சிறை யிலே இருக்கும் மூன்று பேருக்கும் இந்தத் தண்டனை பொருந்துமா?

கலைஞர்:-அவர்களுக்கும் இந்தத் தண்டனை பொருந்தும் வகையில்முடிவு வெளிவந்தால் நான் பெருமகிழ்ச்சி அடை வேன்.

ஸ்டாலின் கருத்துப் பற்றி...

செய்தியாளர் :- கழகப் பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஆங்கில இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கம்யூனிஸ்ட் கட்சி, சொத்துக் குவிப்பு வழக்கிலே சிக்கியுள்ள அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாமா என்றுகேட்டிருந்தார். அதுபற்றி உங்கள்கருத்து?

கலைஞர் :-பொதுவாகமக்களிடம் பிரதிபலிக்கும் கருத்தினைஅவர் தெரிவித் திருக்கிறார்.

செய்தியாளர் :- மாநிலங்கள்அவைத் தேர்தலில் தி.மு.கழக வேட்பாளருக்கு நீங்கள் எந்தெந்தக் கட்சிகளிடம் ஆதரவு கேட்கப் போகிறீர்கள்? காங்கிரஸ் கட்சி யிடம் கேட்கின்ற உத்தேசம் இருக்கிறதா?

கலைஞர் :-இல்லை.

செய்தியாளர் :- தே.மு.தி.க.விடம் ஆதரவு கேட்கப்படுமா?

கலைஞர் :-பொறுத்திருந்துபாருங்கள்.

செய்தியாளர் :- மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவியை தே.மு.தி.க.விற்கு தி.மு. கழகம் விட்டுக் கொடுத்தால், மக்களவைத் தேர்தலில்தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி உருவாக வாய்ப்பாக இருக்குமென்று அந்தக் கட்சியின் சார்பில் கருத்துச் சொல்லப்படுகிறதே?

கலைஞர் :- விஜயகாந்த் தலைமையிலே உள்ள தே.மு.தி.க.விற்கும், தி.மு. கழகத்திற்கும் இடையே கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை நடைபெறவில்லை. அந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றால், அப்போது நீங்கள் தெரிவித்தகருத்தும் பரிசீலிக்கப்படும்.
செய்தியாளர் :- மனிதநேயமக்கள் கட்சி சார்பிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிசார்பிலும் விஜயகாந்தைச் சந்தித்து, தே.மு.தி.க., இந்தத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணிவைத்துக் கொள்ள வேண்டு மென்று மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார் களே?
கலைஞர் :-அவர்களுடைய நல்லெண் ணத்தை நான் பாராட்டுகிறேன். செய்தியாளர் :- தே.மு.தி.க.விற்கு நீங்களே நேரடியாக அழைப்பு விடுக்க லாமே?

கலைஞர் :-எங்களுடைய அழைப்பை தெரிவிக்க வேண்டிய முறையில் தெரிவித் திருக்கிறோம்.

இவ்வாறு கலைஞர் அவர்கள் பேட்டி யளித்தார்.

Read more: http://viduthalai.in/page-3/73987.html#ixzz2rGuuZT5v

தமிழ் ஓவியா said...


பழநி கோயில் பஞ்சாமிர்தத்திலும் ஊழல்


பழநி முருகன் கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தத்திற்கு தேவையான கரும்பு சர்க்கரை, ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், விவசாயிகள் போர்வையில் வியாபாரிகளும் நுழைவதால், தரம் குறை வான சர்க்கரை அனுப்பப்படுவதாக விவ சாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சராசரியாக வாரத்திற்கு 2,000 மூட்டைகள் (ஒரு மூட்டை 60 கிலோ), பஞ்சாமிர்தத்திற்காக கொள்முதல் செய்யப்படும் நிலையில், சபரிமலை சீசன், தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்காலங்களில் வாரத்திற்கு 5,000 மூட்டை சர்க்கரை வரை கொள்முதல் நடந்து வருகிறது.

கவுந்தப்பாடி அமைந்துள்ள தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனப்பகுதியில், 50 ஆயிரம் ஏக்கர் வரை கரும்பு பயிரிடப்படு கிறது. இதில், தனியார் சர்க்கரை ஆலைக்கு வழங்கியது போக 20 முதல் 25 ஆயிரம் ஏக்கர் கரும்பு நாட்டு சர்க்கரை மற்றும் வெல்லம் தயாரிக்க பயன்பட்டு வருகிறது. இந்த பகுதியில் நிலம் மற்றும் நீர்வளம் காரணமாக இங்கு விளையும் கரும்பில் தயாரிக்கப்படும் சர்க்கரையை பயன்படுத்தி பஞ்சாமிர்தம் தயாரித்தால் கூடுதல் இனிப்பும், நீண்ட நாட்கள் கெடாமலும் இருப்பதாக கூறப் படுகிறது.
பஞ்சாமிர்தத்தின் தரம்

இதனால், கடந்த 25 ஆண்டுகளாக பழநி தேவஸ்தான நிர்வாகம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் வாயிலாக நேரடியாக சர்க்கரையை கொள்முதல் செய்து வருகிறது. முருகன் கோயில் பிரசாதத்திற்கு 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொ டர்ந்து சர்க்கரை விற்பனை செய்து வரு கின்றனர். பிரசாதத்திற்கு செல்லும் சர்க்கரை என்பதால் அதன் தன்மை கெடாமல் அதனை தயாரிக்கும் விவசாயிகள், தங்களது காணிக்கையாக சில மூட்டை சர்க்கரையை வழங்குவதையும் வழக்கமாக கொண் டுள்ளனர்.

இந்நிலையில், கவுந்தப்பாடி விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் போர்வையில் வியாபாரிகளும் நுழைந்துள்ளதால், வெளிச்சந்தையிலிருந்து வரவழைக்கப்படும் தரம் குறைவான சர்க்கரை பழநி தேவஸ் தானத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ள தாக விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில் வெளிப்படையாக சமீபத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

Read more: http://viduthalai.in/page-3/73989.html#ixzz2rGvFfOdE