Search This Blog

8.1.14

இதுதான் பார்ப்பனர்களின் ஒழுக்கம் !!

இதுதான் பார்ப்பனர்களின் ஒழுக்கம் என்பது 


பொதுவாகப் பார்ப்பனர்களின் ஒழுக்கம் என்பது தரம் தாழ்ந்ததாகவே இருக்கும். அவர்கள் பின்பற்றும் மதம் மரபு வழி பழக்கங்கள், நம்பிக்கைகள், சடங்குகள் இவை இதற்கு மூல ஊற்று ஆகும்.

எந்த ஒழுக்கக் கேட்டுக்கும் எளிதாகப் பிராயச்சித்தங்களை, கழுவாய்களை வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

12 வருடம் பாவம் பண்ணினாலும் மகா மகத்தன்று கும்பகோணம் குளத்தில் ஒரு   முழுக்குப் போட்டு விட்டால் ஒட்டு மொத்த மான பாவங்கள் போகும் என்று ஏற்பாடு செய்து வைத்திருந்தால், ஒழுக்கக் கேடாக நடப்பதற்குப் பஞ்சமா பாதகம் புரிவதற்கு தயக்கம் எங்கிருந்து குதிக்கப் போகிறது?

இது சாதாரண பார்ப்பனர்கள் விடயத்தில் மட்டுமல்ல - உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ஏ.கே. கங்குலி வரைக்கும் இது பொருந்தக் கூடியதே.
பெண்களைப் பாவயோனியில் பிறந்தவர் கள் என்று கூறியிருக்கின்றார் அவர்களின் கடவுள் - காமக் கிறுக்கன் கிருஷ்ணன்.

அதனாலே பெண்கள் என்றால் காமக் கண்ணோடு பார்ப்பதற்கு உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தவருக்கே சிறிதும் தயக்கம் இல்லை.

பாலியல் குற்ற வழக்கில்கூட பெண் கூறிவிட்டால் வேறு சாட்சியம் தேவை இல்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ஒருவருக்குத் தெரியாதா?
அதே கண்ணோட்டம் கங்குலி விடயத்தில் மட்டும் இல்லாமற் போனது ஏன்? தன்னிடம் தவறான உணர்வோடு அணுகினார், நெருங் கினார் என்று பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளாரே!

தொடுதல், இரட்டைப் பொருளில் பேசுதலும் குற்றம் என்று ஆணைகள் உள்ள நாட்டில், ஒரு பெண் கையில் முத்தம் கொடுப்பதும் இரு பொருளில் பேசுவதும் சட்டப்படி குற்றம் தானே?

இவ்வளவு சிரிப்பாக சிரித்த பிறகும் மனித உரிமை ஆணையத்தில் தலைமைப் பொறுப் பிலிருந்து விலகிட ஏன் கால தாமதம்?  

2ஜி என்ற யூகத்தின் அடிப்படையிலான பொருளிழப்பைப் பெரும் குற்றமாக்கி, சம்பந்தப்பட்ட மனிதர் இன்னும் அமைச்சர் பதவியிலா இருக்கிறார்? என்று கேள்வி கேட்ட மகா யோக்கியர் கங்குலிதான் மேற்கு வங்க மாநிலத்தில் மனித உரிமைத் தலைவர் பதவியிலிருந்து விலக முடியாது என்று அடம் பிடித்தார். மாநில முதல் அமைச்சர் விலக வேண்டும் என்று சொன்னபிறகும் நாற்காலியின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். இதற்குப் பெயர்தான் பார்ப்பனத்தனம் என்பது.

ஒரு நீதிபதி தினகரன் ஏதோ நில ஆக்கிரமிப்பு செய்தார் என்று கூறி இந்த நாட்டுப் பார்ப்பன ஊடகங்கள் அவரை எப்படியெல்லாம் இழிவுபடுத்தின? உடனே பதவி விலக வேண்டும் என்று எப்படியெல் லாம் கூக்குரல் போட்டார்கள். காரணம் அவர் தாழ்த்தப்பட்டவர்.

அந்த எழுதுகோல்கள் ஏ.கே. கங்குலி விடயத்தில் மட்டும் வேலை நிறுத்தம் செய்வானேன்?

ஒரு குலத்துக்கொரு நீதி என்னும் பார்ப்பன மனு தர்மப் புத்திதானே - மறுக்க முடியுமா?

ஆளுநராக இருந்த ஒரு பார்ப்பனர், ஆளுநர் மாளிகையேயே படுக்கையறையாக மாற்றினாரே - கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளும்வரை பதவியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இருக்கவில்லையா? இதற்குப் பெயர்தான் பார்ப்பனர்களின் கல்யாணத் திருக்குணங்கள் என்பது. கங்குலியின் காலந் தாழ்ந்த விலகல் என்பதும் இந்த ரகத்தைச் சார்ந்ததுதான்.

இன்னும் பார்ப்பனர்களின் யோக்கி யதையைத் தெரிந்து கொள்ள வேண்டு மானால் அவாளின் சங்கராச்சாரியார் ஜெயேந் திரரைப் பாருங்கள்!

இன்னும் அவாளுக்கு அவர் ஜெகத் குரு தானே!

------------------------"விடுதலை” தலையங்கம் 07-01-2014

23 comments:

தமிழ் ஓவியா said...


சிந்திக்க முடிந்தது


புத்தர் அந்தக் காலத்திலேயே துணிந்து சொன்னார்; கடவுள் ஒன்று இல்லை; அது இருக்கவேண்டிய அவசியமுமில்லை என்று சொன்னார். கடவுள் இல்லை என்பதை உணர்ந்ததால்தான் புத்தரால் அறிவோடு சிந்திக்க முடிந்தது.

- (விடுதலை, 23.1.1968

Read more: http://viduthalai.in/page-2/73275.html#ixzz2plA8tsTM

தமிழ் ஓவியா said...


அதிமுக அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட விளைவு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் அறிக்கை


சிதம்பரம் நடராஜர் கோயில்: அரசுக்கு விரோதமான உச்சநீதிமன்ற தீர்ப்பு!

நானும், வீரமணி அவர்களும் உரிய நேரத்தில் எச்சரிக்கை

விடுத்தும் அதிமுக அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட விளைவு

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் அறிக்கை

http://viduthalai.in/images/stories/dailymagazine/2013/dec/26/s29.jpg

சென்னை, ஜன.7- சிதம் பரம் நடராஜர் கோயில் தொடர்பான வழக்கில், தீட்சிதர்களுக்குச் சாதக மாக வழங்கப்பட்ட தீர்ப் புக்குக் காரணம் - அ.தி. மு.க. அரசின் மெத்தனப் போக்கும், அலட்சியமுமே காரணம் என்று திராவிட முன்னேற்றக் கழகத் தலை வர் கலைஞர் அவர்கள் இன்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சிதம்பரம் நடராஜர் கோயிலை பொது தீட்சிதர் களே நிர்வகிக்கலாம் என்று இந்திய உச்சநீதிமன்றம் நேற்றையதினம் தீர்ப்பு அளித் துள்ளது. அந்தக் கோவில் நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்று நடத்தலாம்என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனெவே அனுமதி அளித் துப் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதி மன்றம் தற்போது ரத்து செய்துள்ளது.

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களின் மறுப்பு

சிதம்பரம் நடராஜர் கோயில் பிரச்சினை நீண்ட நெடுங்காலமாகப் பேசப் பட்டு - கடைசியாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் 2-2-2009 அன்று அந்தக் கோவில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதனை எதிர்த்து, சிதம்பரம் தீட்சிதர்கள் உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடுத்தார்கள். அதிலே அவர்கள் வெற்றி பெற முடியவில்லை. அதன் பின்னர் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்து கொண்டார்கள். அந்த வழக்கு கடந்த மாதம் 25ஆம் தேதி உச்சநீதி மன்றத்திலே விசாரணைக்கு வந்த போது சுப்பிரமணியசாமி திராவிட இயக்கத்தைப் பற்றி தேவை யில்லாமல் மனம் போன போக்கில் தெரிவித்த கருத்து களுக்கு அப்போதே திராவி டர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி தக்க பதில் அளித்துள்ளார்.

உயர்நீதிமன்றத் தீர்ப்புகள்

தமிழ் ஓவியா said...

எம்.ஜி.ஆர். முதலமைச்ச ராகவும், இந்து அறநிலையத் துறை அமைச்சராக ஆர்.எம். வீரப்பனும் இருந்த போதே சிதம்பரம் கோவிலுக்கு நிர் வாக அதிகாரியை நியமிக்க 5-8-1987 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை எதிர்த்து அப்போதே தீட்சிதர்கள் நீதிமன்றத்துக்குச் சென் றார்கள். கோயிலை நிர்வகிக் கும் பொது தீட்சிதர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாலேயே கோயி லுக்குச் செயல் அதிகாரி நியமனம் செய்யப்பட்டார் என்று அரசுத் தரப்பில் வாதி டப்பட்டது. கழக ஆட்சியில், 2009ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதியன்று நீதிபதி பானுமதி அவர்கள் அளித்த தீர்ப்பில், கோயிலை நிர்வகிக்கும் உரிமை என்பது மதத்தின் ஒரு பகுதியோ, மத வழக்கமோ அல்ல. கோயில் நிர்வாகத்தைக் கட்டுப்படுத் தும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. எனவே இந்த வழக்கில் மதம் தொடர்பான சட்டத்தின்படி பொது தீட்சி தர்கள் பாதுகாப்பு கோர முடியாது. கோயில் நிர்வாகத் தில் முறைகேடுகள் நடை பெற்றால், அந்தக் கோயி லுக்கு செயல் அதிகாரியை நியமிக்க இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை ஆணையருக்கு அதிகாரம் உள்ளது. கோயிலில் வரவு செலவு கணக்கு எதையும் பொது தீட்சிதர்கள் வைத் திருக்கவில்லை. கோயிலுக்கு வர வேண்டிய வருவாயும் வசூலிக்கப்படவில்லை. எனவே, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு செயல் அதி காரியை நியமித்து பிறப்பிக் கப்பட்ட உத்தரவு சரியானது. இந்த விஷயத்தில் கோயில் செயல் அதிகாரிக்கு பொது தீட்சிதர்கள் முழு ஒத்து ழப்பு அளிக்க வேண்டும். இந்து சமயம் மற்றும் அற நிலையத் துறை ஆணையர் ஒரு வார காலத்துக்குள் கோயில் செயல் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பானுமதி கூறியிருந்தார்.

தமிழ் ஓவியா said...

தீட்சிதர்கள் சார்பில் 4-2-2009 அன்று உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு, நீதிபதி கே. ரவிராஜ பாண்டியன், நீதிபதி டி. ராஜா ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடைபெற்று, நீதிபதிகள் 15-9-2009 அன்று பிறப்பித்த உத்தரவில், பொது தீட்சிதர் களோ அல்லது அவர்களது மூதாதையர்களோ சிதம்பரம் நடராஜர் ஆலயத்தைக் கட்ட வில்லை என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. எனவே, அவர் கள் அரசியல் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கோர முடியாது. இந்தக் கோயில் தங்கள் சமூகத்துக்கே உரியது என்று பொது தீட்சிதர்கள் சொந் தம் கொண்டாட முடியாது.

நடராஜர் ஆலயத்துக்குச் சொந்தமான 400 ஏக்கர் விளைநிலங்கள், காணிக்கை யாக வழங்கப்பட்ட தங்க நகைகள் மற்றும் பணத்துக்கு பொது தீட்சிதர்கள் பல ஆண்டுகளாக முறையான கணக்கு எதையும் வைத்திருக்கவில்லை. எனவே, ஆலயத்தை நிர்வகிக் கும் கடமையிலிருந்து பொது தீட்சிதர்கள் தவறி விட்டனர் என்று இந்து அறநிலையத் துறை ஆணையர் முடிவு செய்துள்ளார். கோயிலுக்கு வழங்கப்பட்ட கட்டளைகள் மற்றும் நிலங்களை அடையாளம் காணவும், வருவாயைப் பெருக்கவும், செயல் அதிகாரியை நியமித்து உத்தரவிடப்பட்டி ருப்பது சரியானதே. சிதம்பரம் நடராஜர் ஆலயச் சொத்துக்களை முறையாக நிர்வகித்திருந்தால் திருப்பதி மற்றும் பழனிக்கு நிகராகச் செல்வத்தைப் பெற்ற ஆலயமாக மாறியிருக்கும். இந்த நிலையில் செயல் அதிகாரி நியமனத்தில் தலையிட்டால், அது பாரம்பரியம் மிக்க கோயிலைக் காக்கும் கடமையிலிருந்து நீதி மன்றம் தவறியது போலாகும். அவ்வாறு செய்தால், பழம்பெருமை வாய்ந்த கோயில் அழிவதோடு, பொது தீட்சிதர்களின் வருவாய் ஆதாரமும் பாதிக்கும் என்று கூறி மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தார்கள்.

இதற்குப் பிறகும் தீட்சிதர்கள் சும்மாயிருக்க வில்லை. இந்த இரண்டு தீர்ப்புகளையும் ஏற்றுக் கொள்ளாமல் உச்ச நீதி மன்றத்திற்கு மேல் முறையீடு செய்து, அந்த வழக்கில் தான் தற்போது தீட்சிதர் களுக்கு ஆதரவாக உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித் துள்ளது.

நானும், வீரமணி அவர்களும்

இந்த வழக்கு கடந்த மாதம் உச்ச நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த போதே, உடனடியாக தமிழக அரசு வீண் கால தாமதம் செய்யாமல், மூத்த வழக்கறிஞர்களை உச்ச நீதி மன்றத்தில் சிறப்பாக வாதாடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினை தி.மு. கழகத்தின் சார்பில் நானும், திராவிடர் கழகத்தின் சார்பில் கி. வீரமணியும் அறிக்கை விடுத்தோம்.

உச்ச நீதி மன்றத்தில் உடனடியாக தமிழக அரசு தகுதி மிக்க மூத்த வழக்கறிஞரை வைத்து திட மாகவும் உரிய முறையிலும் வாதாடாவிட்டால் தீட்சிதர்கள் பக்கம் ஒருதலை சார்பாக தீர்ப்பு சொல்ல வேண்டி வரும் என்று நீதிபதிகளே அ.தி.மு.க. அரசை எச்சரித்திருப்பதாகவும் செய்தி வந்தது. மேலும் டிசம்பர் 3இல் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பிலான வழக்கறிஞர் 15 நிமிடங்கள் மட்டுமே சம்பிரதாயத்துக்காக வாதாடினார் என்றும் செய்தி வந்தது.

நான் இவ்வளவு விவரங்களையும் தெரிவிக்கக் காரணம், இந்த உத்தரவு ஏதோ திராவிட முன் னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில், நான் முதலமைச் சராக இருந்த போது பிறப்பிக்கப்பட்ட ஆணை என்பதால், அதன் காரணமாக தற்போதைய தமிழக அரசு அக்கறை இல்லாமல் இருந்து விடக் கூடாது; எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போதே 1987ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தான், இடையிலே தீட்சிதர்கள் இடைக் காலத் தடை பெற்ற காரணத்தால் நடைமுறைக்கு வராமல் இருந்து 2009ஆம் ஆண்டு கழக ஆட்சியில் நடைமுறைக்கு வந்தது; அதற்கு தீட்சிதர்கள் இடையூறு விளைவிக்க எண்ணுகிறார்கள்; அதற்கு இன்றைய தமிழக அரசு துணை போய் விடக் கூடாது என்பது தான் தமிழர்கள் அனைவரது விருப்பம் என்று நான் 6-12-2013 அன்றே ஒரு நீண்ட அறிக்கை விடுத்திருந்தேன்.

அ.தி.மு.க. அரசின் அலட்சியம்

ஆனால் அ.தி.மு.க. அரசு என்ன காரணத் தாலோ இந்தப் பிரச்சினையில் அக்கறை காட் டாமல் அலட்சியப்படுத்தியதன் விளைவாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஏற்கெனவே எடுத்த முடிவுக்கும், அந்த முடிவை நடைமுறைப் படுத்திய தற்கும் எதிராகத் தீர்ப்பு நேற்று வந்துள்ளது. இப்படியொரு தீர்ப்பு அரசுக்கு எதிராகவும், எதிர்பாராத விதமாக தீட்சிதர்களுக்கு ஆதர வாகவும் வந்ததற்கு முழு முதல் காரணம், தமிழக அரசின் மெத்தனமும், அக்கறையின்மையும், அலட்சியமும் தான் என்று நான் அ.தி.மு.க. அரசை நேரடியாகவே குற்றஞ்சாட்டுகிறேன்!

Read more: http://viduthalai.in/e-paper/73264.html#ixzz2plAVJUIh

தமிழ் ஓவியா said...


நீதிபதிகளை மை லார்ட்' என அழைக்க வேண்டியது கட்டாயமல்ல: உச்சநீதிமன்றம்


புதுடில்லி, ஜன.7- நீதிமன்றங் களில் நீதிபதிகளை மை லார்ட், யுவர் ஆனர், யுவர் லார்ட்ஷிப் என அழைக்க வேண்டிய கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்.எல். தத்து மற்றும் எஸ்.ஏ.பாப்டே ஆகி யோர் அடங்கிய அமர்வு திங்கள் கிழமை கூறியதாவது:

மை லார்டு என்றுதான் அழைக்க வேண்டியது கட்டாயம் என நாங்கள் எப்போது கூறினோம்? நீதிபதிகளை "ஸார்' என்று அழைக்கலாம். "யுவர் ஆனர்', "லார்டுஷிப்' என்று அழைத் தாலும் ஏற்றுக் கொள்கிறோம்.

எனினும், இதுபோன்ற வார்த்தை களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யுமாறும், நீதிபதிகளை இது போன்ற பாரம்பரிய முறைப்படி அழைக்கக் கூடாது என்றும் மனு தாரர் கோருவதை ஏற்க முடியாது.

நீதிபதிகளை எவ்வாறு அழைக்க வேண்டும் என்று நாங்கள் உத்தரவிட முடியாது. அது வழக்குரைஞரின் விருப்பம் என்று நீதிபதிகள் தெரி வித்தனர்.

சிவசாகர் திவாரி என்ற 75 வயது வழக்குரைஞர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த பொது நல வழக்கில் "நீதிமன்றங்களில் நீதிபதிகளை மைலார்டு, கனம் கோர்ட்டார் அவர் களே என்று அழைப்பது காலனி ஆதிக்க சகாப்தத்தின் அடையாள மாகும். எனவே இவ்வாறு அழைப்ப தற்குத் தடை விதிக்க வேண்டும்' என்று கோரியிருந்தார். அவரது மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்து, நீதிபதி கள் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்

Read more: http://viduthalai.in/page-2/73281.html#ixzz2plAsyRUg

தமிழ் ஓவியா said...


நோய்களை வரும்முன்பே கண்டுபிடித்து தடுக்கும் ஆய்வுகளில் மருத்துவமனைகள் ஈடுபட வேண்டும் அப்துல்கலாம்

சென்னை, ஜன. 7- நோய்கள் வரும் முன்பே கண்டுபிடித்து தடுக்கும் ஆய்வுகளில் மருத்துவமனைகள் ஈடுபட வேண்டும் என்று முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் கேட்டுக் கொண்டார்.

சென்னை, அப்போலோ மருத் துவமனையில், டெலிரேடியாலஜி தொலைதூர கலந்தாலோசனை மற்றும நோயறிதல் சேவையை முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நேற்று துவக்கி வைத் தார். அப்போலோ மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ப்ரீதாரெட்டி வரவேற்றார். மருத்துவமனை சேர்மன் பிரதாப் சி.ரெட்டி சிறப்புரையாற் றினார்.

டெலிரேடியாலஜி தொலைதூரச் சேவையை அப்துல் கலாம் துவக்கி வைத்து பேசியதாவது:

கிராமங்களில் இருந்து எளிதில் நகரத்தில் உள்ள மருத்துவமனை களுக்கு வர முடியாத நோயாளிகள், அவசர சூழ்நிலையில் எக்ஸ்ரே, சிடி மற்றும் எம்ஆர்ஸ்கேன் போன்ற ரேடி யாலஜி ரிப்போட்டை அப்போலோ மருத்துவமனையில் புதியதாக துவங் கப்பட்டுள்ள மய்யத்துக்கு அனுப்பி உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும். இதன்மூலம் உலகத்தின் எந்த பகுதியில் இருக்கும் வல்லு நர்களையும் தொடர்பு கொண்டு நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க முடியும்.

இந்தியாவில் குறிப்பாக மருத்து வத்தில் 1980ஆம் ஆண்டுகளில் இருந்த நிலை தற்போது முற்றிலும் மாறியுள்ளது. இப்போது யாரும் சிகிச்சை பெற வெளிநாடு செல்ல தேவை இல்லை. அதிகளவில் வெளிநாட்டில் இருந்து நோயாளிகள் சென்னை வருகிறார்கள். அப் போலோ மருத்துவமனையில் உலக தரத்துக்கு இணையான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் 45 வயதானவர் களுக்கு இதயநோய் வருவதற்கு மியோட்டின் பைன்டிங் புரோட்டீன் சி என்ற ஜீன் அதிக காரணமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இதுபோன்ற நோய்கள் வரும் முன்னே கண்டு பிடித்து தடுக்க வேண்டும். அதற்கான ஆய்வுகளில் மருத்துவமனைகள் ஈடுபட வேண்டும். அந்த ஆய்வுகள் நோய்களை முற்றிலும் தீர்ப்பதற்கான தீர்வாக இருக்க வேண்டும். நோய் களை முற்றிலுமாக ஒழிக்கக்கூடிய மருந்து கண்டுபிடிக்க அதிக நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.

Read more: http://viduthalai.in/page-2/73280.html#ixzz2plB8SAB9

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


தமிழர்கள் தானே!

செய்தி: தமிழக மீனவர்கள் 125 பேரின் காவலை ஜனவரி 20ஆம் தேதி வரை நீட்டித்து இலங்கை நீதிமன்றங்கள் உத்தரவிட்டன. சிந்தனை: அன்றாட வானிலை அறிவிப்புப் போல வரும் செய்திதான் இது. தமிழர்கள் என்ன மலை யாளிகளா? இரு கேரள மீனவர்களை இத்தாலியைச் சேர்ந்த கப்பல் படையினர் சுட்டுக் கொன்றபோது எப்படியெல்லாம் மத்திய அரசு துள்ளிக் குதித்தது - நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டும் இருக்கிறது என்பதைக் கவனித்தால் இந்திய அரசின் மாற்றாந்தாய் மனப்போக்குப் பளிச் சென்று புரியுமே!

சமுதாயக் கூட்டணி அம்போவா?

செய்தி: பெஸ்ட் ராமசாமி தலைமையிலான கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்துக்கு (கொ.மு.க.) மாநில மற்றும் முக்கிய நிர்வாகிகள் அடங்கிய 51 பேர் கொண்ட உயர்நிலை தேர்தல் நிர்வாகக் குழு அமைக்கப் பட்டுள்ளது.

சிந்தனை: ஏன் 50 கட்சி சமுதாய (ஜாதி) கூட்டணி என்னவாயிற்றாம்?

படிப்பும் - பகுத்தறிவும்

செய்தி: ஜி.எஸ்.எல்.வி. டி5 ராக்கெட் வெற்றிகர மாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக நன்றி தெரிவித்துக் கொள்ள இஸ்ரேல் தலைவர் ராதா கிருஷ்ணன் திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்தார்.

சிந்தனை: ஒரே ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதற்கு முன்பெல்லாம் ராக்கெட்டை ஏவுவதற்கு முன், அது குறித்த மாதிரியைக் கொண்டு போய் ஏமுமலை யானின் பாதங்களிலும், காளகஸ்தி கோயிலிலும் வைத்து வழிபடுவார்.

அதுகுறித்து கடும் விமர்சனங்கள் வந்த நிலையில், இப்பொழுது ராக்கெட்டை விண்ணில் செலுத்திய பிறகு இந்தத் தரிசனங்கள் நடந்துள்ளன.

ஒரு கேள்வி: ராக்கெட் விண்ணில் பறந்தது - விஞ்ஞான சாதனையா? குழவிக்கல்லு ஏழுமலையான் சாதனையா? (நம் நாட்டுப் படிப்புக்கும் பகுத் தறிவுக்கும் சம்பந்தமில்லை - தந்தை பெரியார்)

ஓம் முருகா!

செய்தி: திருச்செந்தூர் பாத யாத்திரை பக்தர்கள் 3 பேர் விபத்தில் பலி! சிந்தனை: ஒம் முருகா ஓம் முருகா, வேல்! வேல்!! என்று பக்தர்கள் கத்துவதன் பலா பலன் இதுதானோ!
அர்ச்சகப் பார்ப்பனர்கள் தன்னை (சிலையை) சுரண்டுவதையே தடுக்க முடியாத முருகனா பக்தர்களைக் காப்பாற்றப் போகிறான்?

ஓவர் ஜனநாயகம்!

செய்தி: காஷ்மீரில் இராணுவம் நீடிப்பது தொடர்பாக ஆம்ஆத்மி கட்சியின் பிரசாந்த் பூஷன் மக்கள் கருத்தை அறிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கருத்துக்கு அக்கட்சியின் அகில இந்திய அமைப்பாளரும், டில்லி மாநில முதல் அமைச்சருமான அர்விந்த் கெஜ்ரிவால் மறுப்புத் தெரிவித்தார். சிந்தனை: எந்தப் பிரச்சினைக்கும் மக்கள் கருத்தைக் கேட்பது என்ற நிலைப்பாட்டை உண்டாக் கியதே கெஜ்ரிவால் தானே! இன்னும் என்னென்ன கூத்து நடக்கப் போகிறதோ!

சுறுசுறுப்பு தான்!

செய்தி: இளம் பெண்ணை வேவு பார்த்த விவகாரத்தில் மோடியின்மீது விசாரணை ஆணையம் அமைப்பதில் - நீதிபதிகள் நியமனத்தால் தாமதம். சிந்தனை: அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எந்த விடயத்தில் துரித கதியில் செயல்பட்டு இருக்கிறது - பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தைத் தவிர?

பேராசையே போற்றி!

செய்தி: அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு நிதி நிறுவனங்களிடம் ஏமாறாதீர்கள் - செபி (பங்கு பரிவர்த்தனை வாரியம்) எச்சரிக்கை! சிந்தனை: மோசடி நிறுவனங்கள் பற்றி ஏராளமான செய்திகள் வந்த வண்ணம் இருந்தாலும் பேராசை யாரை விட்டது?

(கடவுள் நம்பிக்கையிலிருந்து பணப் பிரச்சினை வரை எல்லாம் பேராசைதான்!)

Read more: http://viduthalai.in/e-paper/73273.html#ixzz2plBIwTA7

தமிழ் ஓவியா said...


கடவுள் சக்தி இவ்வளவுதான்!


லாரி மோதி அய்யப்பப் பக்தர் பலி

நெல்லை, ஜன.7- நெல்லை அருகே சபரி மலைக்கு பயணம் சென்ற அய்யப்ப பக்தர்களில் ஒருவர் லாரி மோதி பலியாகினார். விருதுநகர் மாவட்டம் முகவூரைச் சேர்ந்த ராமன் மகன் ராகவன் (41), பக்தர்கள் சிலருடன் சபரிமலைக்கு பாதயாத்திரை சென்றுள்ளார். இவர்கள் தென்காசி சாலையில் உள்ள திரிகூடபுரம் அருகே வந்த போது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் ராகவன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் முக வூரைச் சேர்ந்த பாண்டி கனகராஜ் என்பவர் படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

அய்யப்பப் பக்தர்கள் ஆறு பேர் காயம்

உடுமலை, ஜன.7 அய்யப்ப பக்தர்கள் பயணம் செய்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில், ஆறு பேர் காயமடைந்தனர். மதுரை கொச்சைக்காலான் தெருவைச் சேர்ந்தவர் குழந்தைவேலு,33; வேன் ஓட்டுநர். இவர் நேற்றுமுன்தினம் இரவு மதுரையில் இருந்து, தனது சுற்றுலா வேனில், அய்யப்ப பக்தர்கள் 12 பேருடன் சபரிமலைக்கு புறப்பட்டார். நேற்று காலை 6.30 மணிக்கு, உடுமலை- பழநி ரோடு அண்ணா குடியிருப்பு அருகே சென்று கொண்டி ருந்தபோது, மொபட் வாகனத்தில் ஒரு சிறுவன் ரோட்டை கடக்க முயன்றான். மோதுவதை தவிர்க் கும் முயற்சியில் வேன் சாலையோர சிறு பள்ளத்தில் கவிழ்ந்தது. மொபட்டில் வந்த பள்ளி மாணவன் கீழே விழுந்து காயமடைந்தான். இவ்விபத்தில் வேன் ஓட்டுநர் குழந்தைவேலு உள்பட ஆறு பேர் காய மடைந்தனர். உடுமலை காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/73266.html#ixzz2plBXcLTI

தமிழ் ஓவியா said...


மதக் குறி என்பதுமாட்டுக்குறியே!


மதக்குறி என்பது மாட்டு மந்தைக்காரன் தன் மாடுகளுக்குப் போடும் அடையாளம்போலவே மதத் தலைவன் தனது மதத்தைப் பின்பற்றுகின்றவர்கள் என்பதைக் காட்ட ஏற்படுத்தப்பட்ட குறியேயாகும்.

(குடிஅரசு, 3.11.1929)

Read more: http://viduthalai.in/e-paper/73309.html#ixzz2prAswES4

தமிழ் ஓவியா said...


இராமன் பாலம் என்பது ஆர்.எஸ்.எஸின் குரலே!


தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையான சேது சமுத்திரத் திட்டத்தை அறவே கூடாது என்ற நிலைப்பாட்டில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் முதலமைச்சரும், அ.இ.அ.தி.மு.க. வின் பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா அம்மையார்.

திருவாளர் சுப்பிரமணியசாமியும், இதில் சங்கமமாகி உள்ளார்.

இனம் இனத்தோடு சேர்கிறது என்றாலும், அண்ணாவின் பெயரைச் சொல்லிக் கொண்டு திராவிட இனக் கலாச்சாரப் பெயரையும் பயன் படுத்திக் கொண்டு இதனைச் செய்வது சரிதானா? அறிவு நாணயமா? என்பதுதான் நமது கேள்வி.

இதே அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை களில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவேண்டும் என்றும், ஆதாம் பாலம் என்றும், மணல் திட்டு என்றும் சொல்லப்படவில்லையா?

சந்தர்ப்பவாதம் என்பது நாகரிகமான ஒன்றல்ல; கொள்கையில்லாத வெறும் கூட்டைத்தான் இந்த வார்த்தைகளால் அழைப்பது வழக்கம். அதன்படி செல்வி ஜெயலலிதா தலைமையிலான அ.இ. அ.தி.மு.க. என்பது கொள்கைக்கோட்பாடுகள் இல்லாத ஒரு கூடாரம் என்றுதான் சொல்ல வேண்டும்.

எந்த அளவுக்கு அம்மையார் சென்றார் தெரியுமா?

தான் உருவாக்கிய ராமர் பாலத்தை, ராமபிரான்தானே தகர்த்தார் என்று ராமாயணத்தில் எங்கும் கூறப்படவில்லை. ராமபிரானைப்பற்றிய அனைத்து அம் சங்களையும் மக்கள் நம்பலாம்; ஆனால், ராமர் பாலம் மட்டும் நம்பிக் கைகளுக்கு அப்பாற்பட்டதா?

காஷ்மீரில் ஹஸ்ரத்பால் திருத் தலத்தில் திருடப்பட்ட புனிதப் பொருள் மீட்கப்பட்டது போன்றும், வின்ஸ்கோட் திரைப்படம், கிறிஸ்தவர்களின் மன தைப் புண்படுத்துகிறது எனத் தடை செய்யப்பட்டது போன்றும், ராமர் பாலம் நம்பிக்கையையும் நம்பவேண்டும்.

இறைத் தூதர் முகம்மது நபிகளின் புனிதப் பொருள் மதிப்புக்குரியது என்றும், கிறிஸ்துவப் பெருமக்களின் விசுவாச விஷயங்களை மதித்துப் போற்றுவது போன்றே இந்துக்களின் இறை நம்பிக்கையையும் புராதனச் சின்னங்களையும் மதிக்கிறேன்.

ராமர் பாலம் குறித்து மத்திய அரசு முரண்பாடான தகவல்கள் ராமர் பாலத்தைத் தகர்த்து மதக் கலவரங் கள் ஏற்படுத்த மத்திய அரசு எடுக்கும் முயற்சியைக் கழகம் தடுக்கும்.

(அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர்., நாள்: 26.7.2008).

இந்து முன்னணி ராமகோபாலனும், பி.ஜே.பி. இல.கணேசனும் கூறுவதுபோல இல்லையா?

அண்ணா பெயரையும், திராவிடப் பெயரையும், தம் கட்சியில் வைத்துக்கொண்டுள்ள ஜெ.ஜெய லலிதா கூறுகிறார் என்றால் இதன் பொருள் என்ன?

புத்த மார்க்கத்திற்கு ஏற்பட்ட ஊடுருவல் திராவிட இயக்கத்திலும் நிகழ்ந்திருக்கிறது என்றுதானே அர்த்தம்?

ராமர் பாலம் - மதக் கலவரம் என்றெல்லாம் ஒருவர் பேசுகிறார் என்றால், அவரின் மனப் பான்மை எத்தகையது என்பதை எளிதிற் தெரிந்துகொள்ளலாம்.

அண்ணாவின் கொள்கையை இவர் காப் பாற்றுவார் - திராவிட இயக்கத்தின் கொள்கை இவரிடம் பாதுகாப்பாக இருக்கும் என்று உள்ள படியே நம்புகின்றவர்கள் யாராவது ஒருவர் அ.இ.அ.தி.மு.க.வில் இருந்தாலும் அவர்கள் அறிவு நாணயத்தோடு சிந்திக்கக் கடமைப்பட்டுள் ளார்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/73310.html#ixzz2prB8lRCb

தமிழ் ஓவியா said...


சன் டி.வி. வீரபாண்டியனுக்கு அச்சுறுத்தல்: கண்டனம்


சென்னை, ஜன. 8- மத வாத அரசியல் குறித்துக் கருத்துக் கூறிய ஊடக வியலாளர் சன் டிவி வீரபாண்டியன் மீது பாஜக தொடுத்துள்ள தாக்குதல் தொடர்பாக அரசியல் தலைவர்களும் ஊடகவியலாளர்களும் சமூகச் செயல்பாட்டா ளர்களும் கண்டித்து செவ்வாயன்று (ஜன. 7) வெளியிட்ட கூட்ட றிக்கை:

மதவாதத்திற்கு எதி ராகப் பேசியதால் சன் தொலைக்காட்சியின் அரசியல் விமர்சகர் வீர பாண்டியனை பணியிலி ருந்து நீக்க வேண்டுமென மதவாத சக்திகள் வலி யுறுத்தியுள்ளதை மதச் சார்பின்மை மீது நம் பிக்கை கொண்டுள்ள இந்த கூட்டறிக்கையில் கையொப்பமிட்டுள்ள நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சென்னையில் சில வாரங்களுக்கு முன்பு மனித உரிமை அமைப்பு ஒன்றின் சார்பில், முசா பர் நகரில் சிறுபான்மை யினர் மீதான வன்முறை குறித்த உண்மை அறியும் குழு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீரபாண்டி யன் பா.ஜ.க. மீது சில விமர்சனங்களை முன் வைத்துப் பேசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பா.ஜ.க.வின் மாநில அலுவலகச் செயலாளர் திரு.கி.சர்வோத்தமன் சன் தொலைக்காட்சிக் குழும மேலாண் இயக்கு நருக்கும் டிசம்பர் 23 அன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் வீரபாண்டியன் பேச்சு இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்துவதாகவும், வீரபாண்டியன் தொலைக்காட்சியில் நடத்தும் நிகழ்ச்சிகள் நடுநிலையோடு இருக் காது எனவும் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக் கும்படி கோரியுள்ளார்.

அவர் முன்நின்று நடத்தும் விவாத நிகழ்ச் சிகளில் பா.ஜ.க. சார்பில் யாரும் கலந்து கொள்ள மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர காவல் ஆணையரிடமும் அவர் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித் துள்ளதாக தெரிய வரு கிறது.

இதன்பின்னர், கடந்த வாரம் சனிக்கிழமை முதல் அவர் நடத்தும் நிகழ்ச்சி ஒளிபரப்பப் படவில்லை. இந்த அணு குமுறை ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண் டோராகிய எங்களுக்கு மிகுந்த வேதனையும், கவலையும் அளிக்கிறது.

ஊடகங்களில் ஒரு ஊடகவியலாளர் நடு நிலையாக இருந்து கருத் துரைக்க வேண்டுமென் பதுதான் அறம். அதனா லேயே அவருக்குச் சொந்த கருத்தோ அல்லது அர சியல் பார்வையோ இருக் கக் கூடாது என்பது தவ றானது. இதர குடிமக்க ளுக்கு உள்ள அனைத்து அரசியல் உரிமைகளும் ஊடகவியலாளர்களுக்கும் உண்டு.

பல்வேறு வகையில் அனைத்துத் தரப்பு மக் களின் கருத்துகளுக்கும் இடமளித்து வரும் சன் தொலைக்காட்சி நிர்வா கம் வீரபாண்டியன் நடத் தும் அரசியல் விவாத நிகழ்ச்சி தொடர ஆவன செய்து, கருத்துரிமை, பேச்சுரிமைக்கு தொடர்ந்து மதிப்பளித்திட வேண் டும் என கேட்டுக் கொள் கிறோம்.

இந்திய அரசியல் சட்டம் வகுத்துள்ள மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் விடுத்து செயல்பட்டு வரும் மத வாதக் கட்சிகள் இது போன்று ஊடகவிய லாளர்களுக்கு நேரடி அச்சுறுத்தல்கள் விடுப்பதை அனைத்து அச்சு மற்றும் காட்சி ஊடகத்தினர் கண்டிக்க முன்வர வேண்டுமென வலியுறுத்துகிறோம். இவ்வாறு அந்த கூட்ட றிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

அறிக்கையில் கி.வீர மணி (தி.க.), ஞானதேசி கன் எம்.பி. (காங்.), மத் திய அமைச்சர் இ.எம். சுதர்சன் நாச்சியப்பன், தா.பாண்டியன் (சிபி அய்), தொல்.திருமாவள வன் (விசிக), எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., (மமக), கே.எம்.காதர் முகைதீன் எம்.பி., (முஸ் லீம் லீக்), சுப.வீரபாண் டியன் (திஇதபேரவை), தமஎகச மாநிலத் தலை வர் ச.தமிழ்ச்செல்வன், கவிக்கோ, அப்துல் ரஹ் மான், பேரா.அ.மார்க்ஸ், கவிஞர் மனுஷ்யபுத்தி ரன், ஜே.எஸ்.ரிபாயி (தமு முக), பேராயர்கள் எஸ்றா.சற்குணம், தேவ சகாயம், பத்திரிகையா ளர்கள் அ.குமரேசன், ஞாநி, டி.எஸ்.எஸ்.மணி உள்ளிட்ட பலரும் கையெழுத்திட்டுள்ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/73343.html#ixzz2prBHvfZS

தமிழ் ஓவியா said...


மக்கள் குறைகளைத் தீர்க்க வக்கில்லை மத விழா நடத்துவதில் மட்டும் குறைச்சல் இல்லை மக்கள் குறை தீர்ப்பு எங்கே?


தாராபுரம் தாலுக்கா, நாவிதம்புதூர் பொதுமக்கள் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்கக் கோரி காலிக் குடங்களை தலையில் வைத்தபடி திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

திருப்பூர், ஜன. 8- எல்லை மீறும் வகையில் திருப்பூர் மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்தும் மதச் சார்பின்மை தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வருவதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே மார் கழி சிறப்புப் பூஜை கூத்துகள் அரங்கேறி வருவது அரசு என்று ஒன்று உள்ளதா? என்ற கேள்வியை மதச்சார்பின்மையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருப்பூர் பல்லடம் சாலையிலுள்ள பஞ்சு ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் (Cotton Regulated Marketing Committee) செயல்பட்டு வருகிறது.

இங்கு பஞ்சு விற்பனை, கொள்முதல் சம்பந்தமாக வந்து செல்லும் திருப்பூரைச் சார்ந்த வியாபாரிகளால் சிறீகற்பக விநாயகர் கோவில் கட்டப்பட்டு 8.9.2011இல் திருப்பூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் மா.மதி வாணன் தலைமையில் கும்பாபி சேகம் நடைபெற்று, இதற்குச் சான்றாக ஒரு கல்வெட்டும் அமைக்கப்பட்டு ஏற்கெனவே மதச்சார்பின்மை குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது.

மேலும் திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த அனைத்துப் பகுதிகளிலும் சாலையை மறிக்கும் கோவில்கள், அரசு அலுவலக வளாகங்களில் கட்டப்படும் புதிய கோவில்கள் மற்றும் கோவில்களால் ஏற்படு கின்ற வன்முறைச் சம்பவங்கள், தீண்டாமைக் கொடுமைகள் என கோவில்களால் ஏற்படும் சட்ட, ஒழுங்கு பாதிப்பு பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இந்நிலையில் மாவட்ட ஆட் சியர் அலுவலக வளாகத்தில் கட் டப்பட்டுள்ள மேற்கண்ட கோவி லில் மார்கழி சிறப்புப் பூஜை கூத்துக்கள், 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கூட அன்னதானத்து டன், 6.1.2014 திங்களன்று அரங்கே றியும், அரங்கேறிய வண்ணமு மாக தொடர்கின்றன.

ஆகவே, அரசு அலுவலகங்க ளைப் பஜனை மடமாக மாற்றி மதச்சார்பின்மையை எள்ளி நகையாடும் இதுபோன்ற செயல் களைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் சம் பந்தப்பட்ட அலுவலக அதிகாரி கள் பேரில் கடும் நடவடிக்கை களை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மேற்கொள்ள வேண் டுமென்று மதச்சார்பின்மையா ளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/73348.html#ixzz2prBWcxC0

தமிழ் ஓவியா said...


தீக்கதிர் தலையங்கம் சிதம்பரம் கோவிலுக்குள் நீதியும் நுழையமுடியாதா?


சிதம்பரம் நடராசர் கோவில் நிர் வாகத்தை தமிழக அரசு ஏற்றுக் கொண்டது செல்லாது என்றும், நிர் வாகம் பொது தீட்சிதர்களின் கைகளில்தான் இருக்கவேண்டு மென்றும் உச்சநீதிமன்றம் வழங்கி யுள்ள தீர்ப்பு மெச்சத்தக்கதாக இல்லை. ஒரு குறிப்பிட்ட ஜாதியின் ஆதிக்கத்தில்தான் இந்தக்கோவில் இருக்க வேண்டும் என்று நாட்டின் உயர்ந்த நீதி பரிபாலன அமைப்பு கூறியுள்ளது சமூகநீதி சக்திகளுக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

தென்னாடுடைய சிவனே போற்றி என்றுபோற்றப்படும் சிதம்பரம் நடராசர் கோவிலின்சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம், திருவாசகம் பாட, சிவனடியாரான ஆறுமுகசாமிக்கு தீட்சிதர்களால் அனுமதி மறுக்கப் பட்டது. தொடர்ந்து பலஆண்டுகளாக தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இந்தக் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்தப் பின்னணியில்தான் 2008 பிப்ரவரியில் சிதம்பரம் நடராசர் கோவிலை தமிழக அரசு கையகப் படுத்தியது. இதை எதிர்த்து தீட்சி தர்கள் தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றத்தில் தீட்சிதர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமான்கள், நடராசர் கோவிலை தமிழக அரசு ஏற்றது செல்லாது என்றும், தீட்சிதர்கள் நிர்வாகத்தில்தான் கோயில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

முறைகேடு குறித்து புகார் வந்தால் அதை சரி செய்ய கோவில் நிர் வாகத்துக்கு தமிழக அறநிலையத் துறை பரிந்துரைகள் வழங்கலாம் அல்லது புகார்கள் குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுத்து அதை மேற்பார் வையிடலாம் என்று கூறியுள்ளனர். இந்த முரண்பாட்டை புரிந்துகொள்ள முடியவில்லை.

சிதம்பரம் கோவிலை பொறுத்தவரை தமிழக அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. பரிந்துரை வழங்கலாம். ஆனால் அதை ஏற்க வேண்டுமென்ற அவசியம் எதுவும் தீட்சிதர்களுக்கு இல்லை என்றாகிறது. சிதம்பரம் நடராசர் கோவிலை பொது தீட்சிதர்கள் தான் கட்டினார் கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நீதிமன்றத்தில் நிரூபிக்கப் படவும் இல்லை.

தமிழகத்தில் ஏராளமான கோவில் கள் பல்வேறு ஜாதியினரால் நிர்வகிக் கப்பட்டு வந்தநிலையில் தமிழக அரசு அந்தக் கோவில்களை அறநிலையத் துறையின்கீழ் கொண்டு வந்துள்ளது. ஆனால் இப்போதைய தீர்ப்பு அனைத் துக் கோவில்களும் மீண்டும் ஜாதி களின் கையில் செல்லவும், அறநிலை யத்துறையே அர்த்தமற்றுப் போகவும் வழிசெய்யும் ஆபத்து உள்ளது.

தேவாரப் பாடல்களை பதுக்கி வைத்தது, நந்தனாரை தீயில் தள்ளிக் கொன்றது, வள்ளலாரை கோவில் கருவறைக்குள் அனுமதிக்க மறுத்தது, சிவனடியார் ஆறுமுகசாமியை அடித்து நொறுக் கியது நகைகள் திருட்டு என்று சிதம்பரம் தீட்சிதர்கள் மீது வரலாற்று காலந் தொட்டு ஏராளமான புகார்கள் உள்ளன.

கோவில் சொத்தை நிர்வகிப்பதிலும் வெளிப்படையான கணக்கு வழக்கு இல்லை. இந்த கோவில் நிர்வாகத்தை ஏற்ற தமிழக அரசு வழக்கை நடத்து வதில் உரிய அக்கறை காட்டவில்லை என்ற புகார் உள்ளது. சேது சமுத்திர திட்ட வழக்கிலும் கூட நம்பிக்கை என்பதற்கு கொடுத்த அழுத்தத்தை வளர்ச்சிப்பணி என்பதற்கு உச்சநீதிமன்றம் கொடுக்க வில்லை.

இந்த வழக்கிலும் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு ஏற்புடையதாக இல்லை. தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு (மறு சீராய்வு) செய்வதன் மூலம் நீதியையும், சமூக நீதியையும் நிலைநாட்ட முன்வரவேண்டும்.

நன்றி: தீக்கதிர், தலையங்கம், 8.1.2014

Read more: http://viduthalai.in/e-paper/73311.html#ixzz2prBt86JK

தமிழ் ஓவியா said...


மோடிக்கு எதிராக துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!

அகமதாபாத்,ஜன.8- குஜராத்தில் நரேந்திர மோடி அரசுக்கு எதி ராக துப்புரவுத் தொழிலாளர்கள் மாபெரும் பேரணி நடத்தினார்கள்.

குஜராத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பணி புரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு மிகக்குறைந்த ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பல்லாண்டு காலமாக பணிபுரிந்து வரும் இந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய தொடர்ந்து மோடி அரசு மறுத்து வருகிறது.

இஎஸ்அய், பிஎஃப் உள்ளிட்ட சட்ட சலுகைகளையும் அமல்படுத்த குஜராத் அரசு மறுத்து வருகிறது. தொடர்ந்து சமூகத்தில் பின் தங்கியிருக்கும் துப்புரவு தொழிலா ளர்களை கொத்தடிமைகள் போலவே மோடி தலைமையிலான அரசு நடத்தி வருகிறது. இதனைக் கண்டித்து, காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் துப்புரவுத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களை மோடி அரசு மிரட்டி பணிய வைக்கவும், பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. வேலை நிறுத்தத்தை கைவிட்டு உடனே வேலைக்கு திரும்ப வேண்டும். அல்லது துப்புரவுப் பணியில் இருந்து அனைவரையும் ஒட்டுமொத்தமாக வெளியேற்றி விடுவோம்.

வேறு நபர்களுக்கு வேலை வழங்கி விடுவோம் என்பது உள்ளிட்ட பல்வேறு வகையில் தொடர்ந்து தொழிலாளர்களை மோடி அரசு மிரட்டி வருகிறது. ஆனால் இவற்றிற்கெல்லாம் அஞ்சாமல் துப்புரவுத் தொழிலாளர்கள் தீரத்துடன் போராடி வருகின்றனர். தொடர்ந்து 8 ஆவது நாளாக நடைபெற்று வரும் இந்த வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக மோடி அரசை கண்டித்து அகமதாபாத் நகரில் மாபெரும் கண்டனப் பேரணி நடத்தினர்.

சிலைக்குப் பல்லாயிரம் கோடியா?

தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் கொடுக்காமல் படேல் சிலை அமைக்க பல கோடி ரூபாய்களை அரசு வீணடிப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். ஏழை மக்களுக்கு நன்மை செய்யப் போவதாக நாடு முழுவதும் பொய்ப் பிரச்சாரம் செய்து வரும் நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தில் உரிமைகளுக்காக குரல் கொடுத்துவரும் துப்புரவுத் தொழிலாளர்களை கண்டு கொள்ளவில்லை.இதனால் ஏமாற்றம் அடைந்த துப்புரவுத் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை அகமதாபாத்தில் மாபெரும் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரம சாலையில் அவர்கள் பேரணியாக சென்றார்கள். வழியில் உள்ள காந்தியார் சிலைக்கு அவர்கள் பாலபிஷேகம் நடத்தினார்கள். குஜராத் மாநில பாரதிய ஜனதா அரசின் அசுத்தத்தை கழுவும் வகையில் பாலபிஷேகம் செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த பேரணியில் நகராட்சி போக்குவரத்துத்துறை தொழிலாளர்கள், குஜராத் தொழில் பாதுகாப்புத்துறை காவலர்கள் கலந்து கொண்டனர். காந்தியார், சர்தார் வல்லபாய் பட்டேல் மீது தேர்தலுக்காக போலி அன்பு காட்டும் மோடிக்கு எதிராக பேரணியில் கலந்து கொண்டவர்கள் முழக்கமிட் டனர்.பேரணி காந்தியாரின் சபர்மதி ஆசிரமம் அருகில் சென்று முடிவடைந்தது.

அங்கு அவர்கள் பொதுக்கூட்டம் நடத்தினார்கள். கூட்டத்தில் பேசியவர்கள், பட்டேல் சிலை அமைப்பதற்காக குஜராத் அரசு கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கிறது. அந்த பணத்தை குஜராத்தில் உள்ள ஏழை தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி, சுகாதாரத்துக்கு செலவிடலாம் என்று வலியுறுத்தினர்.

Read more: http://viduthalai.in/e-paper/73308.html#ixzz2prCM3pSQ

தமிழ் ஓவியா said...


மாபெரும் துரோகமே!


மத்திய அரசே தமிழ்நாட்டுக்குத் திட்டங் களை நிறைவேற்று! நிறைவேற்று!! என்று சொல்லப்பட்ட காலம் போய், மத்திய அரசே தமிழ்நாட்டுத் திட்டத்தை நிறைவேற்றாதே - நிறைவேற்றாதே! என்று கூறும் ஒரு விசித்திர நிலையை நம் நாடு சந்தித்துக் கொண்டு இருக்கிறது!

அது அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஜெ. ஜெயலலிதா அவர்களின் வாயிலிருந்து புறப்பட்டு இருக்கிறது.

ஏனிந்த நிலை? இதில் அரசியல் குறுகிய நோக்கம் புகுந்து புறப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. முதல் அமைச்சர் ஜெயலலிதா 2011இல் ஆட்சிக்கு வந்த முதற்கொண்டு அவர் எடுத்து வரும் நடவடிக்கையைக் கவனித்தால் ஓர் உண்மை இமயமலை போல கண்ணுக்கும், கருத்துக்கும் தெரியும்.

தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டது என்பதற் காக சட்டமன்றப் புதிய கட்டடத்தை அதற்குப் பயன்படுத்தாமல், பல் நோக்கு உயர் மருத்துவ மனை என்று அறிவித்து விட்டார்.

அண்ணா நூற்றாண்டு நினைவு நூல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுவோம் என்றார், உயர்நீதிமன்றத்தின் தடையால் அது நிறுத்தப்பட்டுள்ளது.

பறக்கும் பாலம், மதுரவாயிலிலிருந்து துறைமுகம் வரை உருவாக்கப்பட இருந்த மிக முக்கியமான திட்டத்தை முடக்கினார்.

கலைஞர் ஆட்சியில் சிதம்பரம் நடராஜர் கோயில் - இந்து அறநிலையத்துறை வசம் கொண்டு வரப்பட்ட நிலையில், அதனையும் திட்டமிட்டு நீதிமன்றத்தின் வாயிலாக தோற்கடித்துக் காட்டி விட்டார்.

அதனுடைய தொடர்ச்சிதான் - சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டமே கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக முதல் அமைச்சரால் அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகும்.

பிஜேபி கூட திட்டமே கூடாது என்று சொல்லவில்லை; இப்பொழுது நிறைவேற்றப்பட உள்ள ஆறாவது தடத்தில் செயல்படுத்தாமல் வேறு வழித் தடத்தில் செயல்படுத்த வேண்டும் என்றுதான் கூறுகிறது.

ஆனால், முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களோ திட்டமே கூடாது என்று அடம் பிடிப்பது எந்த அடிப்படையில்?

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும், அதிலும் குறிப்பாக கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் திமுகவைச் சேர்ந்த டி.ஆர். பாலுவாக இருப்பதால் அதன் அரசியல் லாபம் திமுகவுக்குப் போய் விடும் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, குறுகிய நோக்குடன் இந்தத் திட்டமே கூடாது என்கிறார் என்பதுதானே பச்சையான உண்மை.

இத்தகு மனப்பான்மை உள்ள முதல் அமைச்சராக இருக்கக் கூடியவர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எந்தளவு உறுதுணையாக இருப்பார் - ஆர்வம் காட்டுவார்?

மத்திய அரசை நோக்கி வேறு திட்டங்களை எப்படி முன் வைப்பார் என்று எதிர்பார்க்க முடியும்?

இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய - கருத்தூன்றிப் பார்க்க வேண்டிய ஒன்று இருக்கிறது. இலங்கை அரசைப் பொறுத்த வரையில் சேது சமுத்திரத் திட்டம் செயல் பாட்டுக்கு வந்தால் கொழும்பு துறைமுகத்தின் மூலம் கிடைக்கும் பெரும் வருமானம் அடிபட்டுப் போய் விடும்.

சேது சமுத்திரத் திட்டமே கூடாது என்று முதல் அமைச்சர் அடம் பிடிப்பது இன்னொரு வகையில் இலங்கை சிங்கள அரசுக்கு பொருளாதார ரீதியாகப் பேருதவி செய்ததாகி விடும் என்பதையும் மறுக்க முடியாது.

எந்த வகையில் பார்த்தாலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று நினைப்பது தமிழ்நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் இழைக்கும் பெருந் துரோகமாகும்; வரலாறு அவர்களை நிந்தித்துக் கொண்டே இருக்கும் - இது கல்லின் மேல் எழுத்தாகும்.

Read more: http://viduthalai.in/page-2/73362.html#ixzz2px8uuOck

தமிழ் ஓவியா said...


பக்குவமடையாதவன்


அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஒத்து வராததைப் பயத்தால் நம்புகிறவன் பக்குவமடைந்த மனிதனாகான்.
_ (விடுதலை, 3.4.1950)

Read more: http://viduthalai.in/page-2/73363.html#ixzz2px941GOD

தமிழ் ஓவியா said...

சென்னை உயர்நீதிமன்ற புது நீதிபதிகள் பட்டியல் வெளியிட மத்திய அரசுக்கு தடை


பதவியிலிருக்கும் நீதிபதியே ஆஜரான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற புது நீதிபதிகள் பட்டியல் வெளியிட மத்திய அரசுக்கு தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜன.9-சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமன பட்டி யலைத் திரும்பப் பெறக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தற்போ துள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் வருகை தந்து வாதிட்டதால் நீதி மன்றத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்ற வரலாற்றில் இப்படி ஒரு நீதிபதி ஆஜரானது இதுவே முதல்முறை.

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக 13 நீதிபதிகள் பதவி இடங்கள் உள்ளது. இதற்கு 12 பேரின் பெயரை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான குழு தேர்வு செய்து அதை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில் இந்த பட்டியல் நியாயமான முறையில் தயாரிக்கப்படவில்லை என்றும் பட் டியல் தயாரிப்பில் வெளிப்படையான நிலை பின்பற்றப்படவில்லை என்றும் வக்கீல்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

சென்னை உயர் நீதிமன்ற வர லாற்றில் பதவியில் இருக்கும் ஒரு நீதிபதி மற்ற நீதிமன்றத்தில் விசா ரணை நடந்துகொண்டிருக்கும்போது வருகை தந்து வாதிடுவது இதுவே முதல் முறை என்று நீதிபதி கர்ணனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

தமிழ் ஓவியா said...


இந்த பட்டியலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு கூடுதல் பிரதிநிதித் துவம் தரப்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் நியமனத்தில் வெளிப் படையான நிலை இல்லை என்றும் அதனால் இந்த பட்டியலை திருப்பப் பெற வேண்டும் எனக் கோரி மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இதே கோரிக் கையுடன் வழக்குரைஞர் எஸ்.துரை சாமி, வக்கீல்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் தலைமை நீதிபதி அகர் வால், சத்தியநாராயணன் முன்னிலை யில் கடந்த 6ம் தேதி விசாரணைக்கு வந்தபோது அவர்கள் விசாரிக்க மறுத்துவிட்டனர்.

இதையடுத்து, நீதிபதி பால்வசந்த குமார் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அவர்களும் இந்த வழக்கை விசாரிக்க மறுத்தனர். இதனால் வழக்கு நீதிபதிகள் ராஜேஸ் வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் முன் நேற்று முன்தினம் விசார ணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்குரைஞர் எஸ்.பிரபா கரன் ஆஜராகி புதிய நீதிபதிகள் பட்டியலைத் திரும்பப் பெற வேண் டும் என்று வாதிட்டார். அவரது வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் விசாரணையை 7ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கை இந்த டிவிஷன் பெஞ்ச் விசாரிக்கக் கூடாது என்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவின் அடிப்படையில், விசாரணை நீதிபதி கள் வி.தனபாலன், கே.கே.சசிதரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி சார்பாக தமிழ்நாடு வழக்குரைஞர்கள் சங்க தலைவர் எஸ்.பிரபாகரன், வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் பால்கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர்.

பிரபாகரன் வாதிடும்போது, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை. திறமையானவர்கள் பலர் இருந்தும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை. தற்போது 12 பேரின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதை மாற்றி அமைக்க வேண்டும். குறிப் பிட்ட சாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகமாக உள்ளனர்.

அனைத்து சாதியினருக்கும் சம வாய்ப்பு தர வேண்டும். தற்போது சிபாரிசு செய் யப்பட்டவர்களில் பலர் நீதிமன்றத் தில் அதிகமான அளவில் வருகை தந்ததில்லை. நீதிபதிகள் நியமனத்தில் உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறை களை சரியாக பின்பற்றவில்லை. எனவே திறமையான வழக்குரைஞர் கள் பெயரை சிபாரிசு செய்ய வேண் டும். இதனால் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பிய பட்டியலைத் திரும்ப பெற வேண்டும்.

இந்த பட்டியல் சமூக நீதியை கவனிக்கத் தவறிவிட்டது. நீதிபதிகள் குழு பட்டியலைத் தயாரிக்கும் முன் பட்டியலில் உள்ளவர்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யவில்லை. பரிந் துரை செய்யப்பட்டவர்களில் ஒரு வரும் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி குறிப்பிடத்தக்க வகையில் உத்தரவு களைப் பெறவில்லை. நீதிபதிகள் நியமனத்தில் இந்த நடைமுறை மிக வும் அத்தியாவசியமாகும் என்றார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஏராளமான வழக்குரை ஞர்கள் நீதிமன்றத்திற்கு வந்து வழக்குரைஞர்களின் வாதங்களை கேட்டனர். அப்போது, நீதிபதி சி.எஸ். கர்ணன் திடீரென நீதிமன்றத்துக்குள் தனது உதவியாளர்களுடன் வந்தார். அவரைப் பார்த்த வழக்குரைஞர்கள் ஆச்சரியப்பட்டனர்.

நீதிமன்றத்துக் குள் வந்த நீதிபதி கர்ணன், நீதிபதிகள் தனபாலன், கே.கே.சசிதரன் ஆகி யோரிடம், நீதித்துறையில் நானும் ஒரு அங்கம். நீதிபதிகள் பட்டியல் தயா ரிப்பு சரியாக, நியாயமான முறையில் நடைபெறவில்லை. இதை எதிர்த்து நான் தனியாக எனது பெயரில் மனு தாக்கல் செய்து வாதிடப்போகிறேன். நான் கூறியதை பதிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு பின்னர் அங்கிருந்து புறப்பட்டார்.

இதையடுத்து, நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு:

இந்த வழக்கில் மனுதாரர்களின் வாதங்களின் அடிப்படையில் புதிய நீதிபதிகள் பட்டியல் மீதான மேல் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. விசாரணை நாளை பிற்பகல் 2.15க்கு தள்ளி வைக்கப் படுகிறது. அதுவரை தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Read more: http://viduthalai.in/page-2/73364.html#ixzz2px9HznDB

தமிழ் ஓவியா said...


எம்.ஜி.ஆர். ஆதரித்த சேது திட்டத்தை ஜெயலலிதா மறுக்கிறாரா? கலைஞர் கேள்வி


சேது சமுத்திரத் திட்டம் வேண்டு மென்று கூறிவிட்டு தற்போது அதற்கு மாறான கருத்தை ஜெயலலிதா வலியு றுத்துகிறார் என்றால் அதிமுக வின் கொள்கைகளை அவர் ஏற்கவில்லையா? அல்லது எம்.ஜி.ஆர். ஆதரித்த திட் டத்தை மறுக்கிறாரா என திமுக தலைவர் கலைஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர் பான அவரது கேள்வி - பதில்.

கேள்வி :- சேது திட்டத்தை எந்த வழியிலும் துவங்கக்கூடாது என்று தமிழக அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறதே?

கலைஞர் :- சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில் ஒரு மூத்த வழக்கறி ஞரை தமிழக அரசின் சார்பில் முறையாக வாதாட வைக்க முன்வராத அ.தி.மு.க. அரசுதான் சேது திட்டத்தை எந்த வழி யிலும் துவங்கக்கூடாது என்று மீண்டும் உச்சநீதிமன்றத் தில் மனு கொடுத்திருக் கிறது. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போது இதே ஜெயலலிதா, அ.தி.மு.க. சார்பில் வைத்த தேர்தல் அறிக்கையில் பக்கம் 33இல், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி யிலும்,

நாட்டின் ஒட்டுமொத்தத் தொழில் மேம்பாட்டிலும் முக்கியப் பங்காற்ற விருக்கும் சேது சமுத்திரத் திட்டத்தினை நிறை வேற்றுவதற்கு உரிய நடவடிக் கைகளை எடுக்க, மய்ய ஆட்சியில், அமைச்சுப் பொறுப்பில் ஐந்தாண்டு காலம் இருந்த தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. கட்சிகள் தவறி விட்டதை இந்த நாடு நன்கறியும். இத்திட்டத்திற்குப் போதிய நிதியினை உடனடியாக ஒதுக்கி,

ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டு மென்று, அமைய இருக்கும் மய்ய அரசை அ.தி.மு.க. வலியுறுத்தும் என்று குறிப்பிட்டிருந் தார்கள். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை யில் சேது சமுத்திரத் திட்டம் வேண்டு மென்று திட்டவட்டமாகக் கூறி விட்டு,

தற்போது அதற்கு மாறான கருத்தை ஜெயலலிதா வலியுறுத்துகிறார் என்றால், அவர் அ.தி.மு.க.வின் கொள்கையை தற்போது ஏற்கவில்லையா? அல்லது எம்.ஜி.ஆர். அவர்களே ஆதரித்த திட் டத்தை இப்போது ஜெயலலிதா மறுக் கிறாரா?

முரசொலி 9.1.2014

Read more: http://viduthalai.in/page-2/73367.html#ixzz2px9WzvLV

தமிழ் ஓவியா said...


அய்.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் தீர்மானம்!


கொழும்பு, ஜன. 9- அய்.நா. மனித உரிமை கவுன் சிலில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் தீர்மானம் கொண்டு வருகிறது. இதன் காரணமாக போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசா ரணை வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே நடந்த உள்நாட்டு போர் கடந்த 2009 ஆம் ஆண்டு உச்சக்கட்டம் அடைந்தது. அப்போது மனித உரிமைகள் மீறப்பட்டன. போர்க் குற்றங்கள் அரங்கேற்றப்பட்டன. போர் இல்லாத பிரதேசங்களில் தஞ்சம் புகுந்த அப்பாவி தமிழ் மக்களையும் சிங்கள ராணுவம் விட்டு வைக்க வில்லை.

அப்போது 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக அய்.நா. புள்ளிவிவரம் கூறு கிறது. போர் உச்சக்கட்டம் அடைந்தபோது மனித உரிமைகள் மீறப்பட்டதும், அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டதும் சர்வதேச நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இது தொடர்பாக அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கடந்த 2012, 2013 ஆண்டு களில் தீர்மானம் கொண்டு வந்தது. அந்த தீர் மானங்கள், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களி டையே நல்லிணக்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை களை விரைவுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத் தின.

ஆனால் போர் முடிந்து 5 ஆண்டுகள் ஆன நிலையிலும், இன்னும் பல இடங்களில் தமிழர்கள் முள்வேலிகளுக்குள் அடைபட்டு, ராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வாழ்கிற நிலைதான் உள்ளது. நல்லிணக்க சூழல் ஏற்படவில்லை. இந்த நிலையில், உலக குற்ற நீதித்துறை அமைப்பில் அமெரிக்க தூதராக உள்ள ஸ்டீபன் ராப், இலங்கையில் ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

நேற்று அவர் வடக்கு மாகாணத்திற்கு சென்று போரினால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார். தமிழ் தேசிய கூட்டணி தலைவர்களையும் அவர் சந்தித்து பேசினார். இன்னும் இரண்டு நாள் கள் அவர் அங்கே தங்கி இருந்து தமிழர் தலைவர் கள், அதிகாரிகளை சந்தித்து பேச உள்ளார்.

அய்.நா. மனித உரிமை கவுன்சிலில், இலங்கை பிரச்சினையில் அமெரிக்கா தனது மூன்றாவது தீர்மானத்தை மார்ச் மாதம் தாக்கல் செய்யும் என அவர் தன்னிடம் கூறியதாக தமிழ் தேசிய கூட்டணி யின் மூத்த தலைவர் சுமந்திரன் தெரிவித்தார்.

அமெரிக்காவின் இந்த தீர்மானம், போர்க்குற்ற நடவடிக்கைகளில் இலங்கையை பொறுப்பேற்க வைக்கவும், தமிழ் மக்களுடன் நல்லிணக்கம் ஏற் படுத்த நடவடிக்கை எடுக்கவும் சர்வதேச அளவில் நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப் படுகிறது.

அதுமட்டுமல்ல, போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்த வழிவகுக்குமா என்பதும் தெரிய வரும்.

அய்.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா மூன்றாவது தீர்மானம் கொண்டு வர இருப்பதாக ஸ்டீபன் ராப் கூறியது குறித்து, சிங்கள அரசின் செய்தித்தொடர்பாளரும், அமைச்சருமான கெஹ லிய ரம்புக்வெல்லாவிடம் கருத்து கேட்டபோது அவர், நிலைமையை எதிர்கொள்ள ராஜ்ய ரீதியில் இலங்கை தயாராக உள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கைகள் பற்றி இலங்கை முழுமையாக அறியும். அதில் ரகசியம் எதுவும் இல்லை என கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/73401.html#ixzz2pxAsc7wc

தமிழ் ஓவியா said...


அய்.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் தீர்மானம்!


கொழும்பு, ஜன. 9- அய்.நா. மனித உரிமை கவுன் சிலில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் தீர்மானம் கொண்டு வருகிறது. இதன் காரணமாக போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசா ரணை வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே நடந்த உள்நாட்டு போர் கடந்த 2009 ஆம் ஆண்டு உச்சக்கட்டம் அடைந்தது. அப்போது மனித உரிமைகள் மீறப்பட்டன. போர்க் குற்றங்கள் அரங்கேற்றப்பட்டன. போர் இல்லாத பிரதேசங்களில் தஞ்சம் புகுந்த அப்பாவி தமிழ் மக்களையும் சிங்கள ராணுவம் விட்டு வைக்க வில்லை.

அப்போது 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக அய்.நா. புள்ளிவிவரம் கூறு கிறது. போர் உச்சக்கட்டம் அடைந்தபோது மனித உரிமைகள் மீறப்பட்டதும், அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டதும் சர்வதேச நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இது தொடர்பாக அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கடந்த 2012, 2013 ஆண்டு களில் தீர்மானம் கொண்டு வந்தது. அந்த தீர் மானங்கள், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களி டையே நல்லிணக்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை களை விரைவுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத் தின.

ஆனால் போர் முடிந்து 5 ஆண்டுகள் ஆன நிலையிலும், இன்னும் பல இடங்களில் தமிழர்கள் முள்வேலிகளுக்குள் அடைபட்டு, ராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வாழ்கிற நிலைதான் உள்ளது. நல்லிணக்க சூழல் ஏற்படவில்லை. இந்த நிலையில், உலக குற்ற நீதித்துறை அமைப்பில் அமெரிக்க தூதராக உள்ள ஸ்டீபன் ராப், இலங்கையில் ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

நேற்று அவர் வடக்கு மாகாணத்திற்கு சென்று போரினால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார். தமிழ் தேசிய கூட்டணி தலைவர்களையும் அவர் சந்தித்து பேசினார். இன்னும் இரண்டு நாள் கள் அவர் அங்கே தங்கி இருந்து தமிழர் தலைவர் கள், அதிகாரிகளை சந்தித்து பேச உள்ளார்.

அய்.நா. மனித உரிமை கவுன்சிலில், இலங்கை பிரச்சினையில் அமெரிக்கா தனது மூன்றாவது தீர்மானத்தை மார்ச் மாதம் தாக்கல் செய்யும் என அவர் தன்னிடம் கூறியதாக தமிழ் தேசிய கூட்டணி யின் மூத்த தலைவர் சுமந்திரன் தெரிவித்தார்.

அமெரிக்காவின் இந்த தீர்மானம், போர்க்குற்ற நடவடிக்கைகளில் இலங்கையை பொறுப்பேற்க வைக்கவும், தமிழ் மக்களுடன் நல்லிணக்கம் ஏற் படுத்த நடவடிக்கை எடுக்கவும் சர்வதேச அளவில் நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப் படுகிறது.

அதுமட்டுமல்ல, போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்த வழிவகுக்குமா என்பதும் தெரிய வரும்.

அய்.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா மூன்றாவது தீர்மானம் கொண்டு வர இருப்பதாக ஸ்டீபன் ராப் கூறியது குறித்து, சிங்கள அரசின் செய்தித்தொடர்பாளரும், அமைச்சருமான கெஹ லிய ரம்புக்வெல்லாவிடம் கருத்து கேட்டபோது அவர், நிலைமையை எதிர்கொள்ள ராஜ்ய ரீதியில் இலங்கை தயாராக உள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கைகள் பற்றி இலங்கை முழுமையாக அறியும். அதில் ரகசியம் எதுவும் இல்லை என கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/73401.html#ixzz2pxAsc7wc

தமிழ் ஓவியா said...


லஞ்சப் புகாருக்கு ஹெல்ப் லைன்: டில்லியில் அறிமுகம்


புதுடில்லி, ஜன.9-அரசுத் துறைகளில் நிலவும் ஊழலை முடி வுக்குக் கொண்டு வரும் வகையில், லஞ்சம், ஊழல் தொடர்பான புகார்களுக்கு 011-27357169 என்ற ஹெல்ப் லைன் தொலைபேசி எண் டில்லியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதன்கிழமை அறிவித்தார்.

இது தொடர்பாக டில்லி தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

டில்லிவாசிகள் அனைவரையும் ஊழல், லஞ்ச ஒழிப்புக் கண்காணிப்பாளர்களாக மாற்றும் வகையில், இந்த "ஹெல்ப் லைன்' தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்சம், ஊழல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க விரும்பு வோர் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம். புகார் தெரி விக்கும்போது, புகார்தாரரின் பெயர், எண் உள்ளிட்ட தகவல்கள் பெறப்படும்.

இத் தகவல்களின் அடிப்படையில் டில்லி யூனியன் பிரதேச கண்காணிப்பு ஆணைய அதிகாரிகள் தொடர்பு கொண்டு, லஞ்சம் கேட்கும் அதிகாரிகளைப் பொறிவைத்து பிடிக்க உதவி செய்வார்கள். இத் தொலைபேசி எண் காலை 8 மணி இரவு 10 வரை செயல்பாட்டில் இருக்கும்.

சாதாரணக் குடிமக்களும் லஞ்சம் ஒழிப்பில் ஈடுபட வேண்டும். அவர்களைக் கண்டு அரசு அதிகாரிகள் அச்சமடைந்து, தனது பணியைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதே இத் தொலைபேசி எண் அறிவித்திருப்பதன் நோக்கம்மாகும்.

லஞ்சம் பெறும் காவல்துறை அதிகாரிகள் குறித்தும் புகார் தெரிவிக்கலாம். இந்த ஹெல்ப் லைன்' குறித்து டில்லி முழுவதும் விரிவாக விளம்பரம் செய்யப்படும் என்றார் அரவிந்த் கெஜ்ரிவால்.

Read more: http://viduthalai.in/page-8/73397.html#ixzz2pxBAGjQq