Search This Blog

31.1.14

காந்தியார் படுகொலை செய்யப்பட்ட கறுப்பு நாள்இன்று காந்தியார் படுகொலை செய்யப்பட்ட கறுப்பு நாள் (1948).

ஒரு தகவல் தெரியுமா? செத்துப் போன காந்தி யாரை உயிர்ப் பிழைக்க வைக்க ஒரு சாமியார் முன் வந்தார் - இந்தச் சேதி புதியதாக இருக்கலாம் - ஆச்சரியமாகவும் இருக்க லாம்.

சாமியாருக்கு அந்தச் சக்தியிருக்குமேயானால், அதை டில்லிக்கு வந்துதான் செய்ய வேண்டுமா? சென் னையிலிருந்தே செய்ய வேண்டியதுதானே? என்ற பகுத்தறிவு வினாவை எழுப்பினார் பிரதமர் நேரு.

சாமியார் விடுவதாக இல்லை - பெரிய மனிதர் களை எல்லாம் சந்தித்து தன்னை டில்லிக்கு அனுப்பு மாறு வேண்டினார். கடைசி யில் இருவர் சிக்கினர். ஒருவர் டாக்டர் சுப்பராயன் (சென்னை மாநில முன் னாள் முதல்வர்). இரண் டாமவர் கொடை வள்ளல் - பிரபல செல்வந்தர் அழகப் பச் செட்டியார். சாமியாரை விமானத்தில் அழைத்துக் கொண்டு டில்லிக்கும் சென்றனர்.
டில்லி சென்ற சாமியார் காந்தியாரின் கை கால் களைத் தொட்டார். எந்தப் பலனும் ஏற்படவில்லை. அடுத்த கட்டத்துக்குச் சென்றார் அந்த சாமியார்.
காந்தியாரின் தொண்டையை அறுத்து ஒரு குளிகையைப் போட வேண்டும் என்றார். ஆனால் அங்குள்ளவர்கள் யாரும் அதற்கு இடம் கொடுக்க வில்லை. சாமியாரை வெளி யேற்றி விட்டனர். டில்லி யிலே விடப்பட்ட சாமியார் பிழைக்க வழியின்றி அல்லாடியிருக்கிறார்.

இந்தச் செய்தியை குடிஅரசு இதழ் (7.2.1948) பெட்டிச் செய்தியாக வெளி யிட்டது.
படித்தவர்களாக இருக்க லாம்; பெரும் பதவிக் காரர்களாகக் கூட இருக்க லாம் மிகப் பெரிய செல் வந்தர்களாகக்கூட இருக்கலாம்.

இவ்வளவும் இருந்து என்ன பயன்? பகுத்தறிவு வேலை செய்யவில்லையே! யாரோ ஒரு  கிறுக்கன் சொல்லுகிறான் என்பதற் காக காந்தியாரை உயிர்ப் பிக்க சாமியாரை விமா னத்தில் ஏற்றிச் சென்றனர் என்றால், பார்த்துக் கொள்ளலாமே!

காந்தியார் 120 ஆண்டு காலம் வாழ்வார் என்று திருத்தணியைச் சேர்ந்த அந்தக் காலத்தில் பிரபல மான சோதிடர் வி.கே. கிருஷ்ணமாச்சாரி கணித்து எழுதினார் பாரததேவி இதழில் (15.8.1947).

காந்தியடிகள் பிறந்தது சிம்மலக்கினம், மகநட் சத்திரம் விடியற்காலையில் மக நட்சத்திரத்தில் பிறந்த வர்களுக்கு தீர்க்காயுள் யோகம் உண்டு. மேலும் ஜன்ம லக்னம் சிம்மமாகவும், அதில் சந்திரன் தனித்தி ருப்பதாலும், ஆயுள் ஸ்தான திபதியான குரு, தசமகேந் திரத்தில் நின்று லக்னாதி பதியான சூரியனையும், ஆயுள்காரகனாகிய சனியையும் பார்ப்பதனாலும்  பரம ஆயுள் என்ற கணக் கில் 120 வருஷம் ஆயுள் உண்டு என்று அந்தப் பிரபல ஜோதிடர் கணித் தாரே - கடைசியில் காந் தியார் வாழ்ந்தது வெறும் 78 ஆண்டு ஆறு மாதங் கள்தானே!

--------------------- மயிலாடன் அவர்கள் 30-1-014 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

26 comments:

தமிழ் ஓவியா said...


கழகத்தலைவர்பேட்டி


சென்னையில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களை இன்று சந்தித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியில் வந்த போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குச் சுருக்கமாகப் பதில் அளித்ததாவது:-

டெசோ கூட்டம் பற்றி டெசோ தலைவரிடம் பேசிடவே வந்தேன் என்று குறிப்பிட்டார்

தி.மு.க.வில் சகோதரர்களுக்குள் சண்டை நடக்கிறதா என்ற ஒரு செய்தியாளர் கேள்விக்கு சண்டை என்றெல்லாம் கூற முடியாது என்றார். சமரசம் நடக்கிறதா என்ற கேள்விக்கு அதையெல்லாம் தி.மு.க தலைவர் பார்த்துக் கொள்வார் - என்று குறிப்பிட்டார்.

தி.மு.க. மீது எங்களுக்கு எப்போதும் அக்கறை யுண்டு என்றும் கூறினார்.

அழகிரிக்கு பிறந்தநாளில் வாழ்த்து கூறுவீர்களா என்ற கேள்விக்கு வாழ்த்துகள் பொதுவாக எல்லோ ருக்குமே உண்டு என்று கூறினார் கழகத்தலைவர்.

Read more: http://viduthalai.in/e-paper/74360.html#ixzz2rvfiYLFi

தமிழ் ஓவியா said...

திருவள்ளுவரா -முண்டகக் கண்ணியம்மனா?

சென்னை - கலங்கரை விளக்கம் (Light House) மயிலாப்பூருக்கும் இடையில் பறக்கும் இரயில் நிலையில் விரைவில் செயல்படவிருக்கிறது.

புதிய ரயில் நிலையம் உருவாக்கப்படும் பொழுது சம்பந்தப்பட்ட மாநில முதல் அமைச்சர் தான் ரயில் நிலையத்துக்குப் பெயர் சூட்டுவார். அந்த முறையில் ரயில்வே நிருவாகம் நான்கு பெயர்களை முதல் அமைச்சருக்குச் சிபாரிசு செய்தது.

1) திருவள்ளுவர் ரயில் நிலையம்
2) மாதவப் பெருமாள் ரயில் நிலையம்
3) சமஸ்கிருதக் கல்லூரி ரயில் நிலையம்
4) முண்டகக் கண்ணியம்மன் கோயில் ரயில் நிலையம்

இந்த நான்கு பெயர்களில் முதல் அமைச்சர் தேர்வு செய்து அறிவித்திருப்பது எது தெரியுமா?

முண்டகக் கண்ணியம்மன் கோயில் ரயில் நிலையம் என்று முதல் அமைச்சர் பெயர் சூட்டியுள்ளார்.

அண்ணா பெயரில் கட்சியையும், ஆட்சியையும் வைத்துக் கொண்டு இருக்கும் முதல் அமைச்ச ருக்கு, திருவள்ளுவரைவிட, மூடநம்பிக்கையின் அடிப்படையில் முண்டகக் கண்ணியம்மன் கோயில் முக்கியமாகப் போய் விட்டதா?

இனவுணர்வாளர்களும், பகுத்தறிவாளர் களும், மதச் சார்பின்மையை ஏற்பவர்களும் இது பற்றிச் சிந்திப்பார்களாக, அடையாளம் காண் பார்களாக! முதல் அமைச்சர் மறுபரிசீலனை செய்து திருவள்ளுவர் பெயரைச் சூட்டுமாறு வலியுறுத்துகிறோம்!


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.சென்னை
30.1.2014

Read more: http://viduthalai.in/e-paper/74386.html#ixzz2rvfwwB9W

தமிழ் ஓவியா said...


கலைஞர் தலைமையில் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) கலந்துரையாடல் கூட்டம்


டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் 1.2.2014 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் தமிழ்ஈழம் ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) கலந்துரையாடல் கூட்டம், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்.

அதுபோது டெசோ அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

- டெசோ

Read more: http://viduthalai.in/e-paper/74359.html#ixzz2rvg6C6Yy

தமிழ் ஓவியா said...


சட்டசபையில் ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க. வெளிநடப்பு


அரசின் பல்வேறு துறைகளில் இடஒதுக்கீடு பின்பற்றாதது ஏன்?

தமிழகத்திற்கு நன்மை தரக்கூடிய சேது சமுத்திரத் திட்டத்தைத் தடுப்பதா?

சாகுபடியை இழந்த விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீட்டை வழங்காதது ஏன்?

செம்மொழித் தகுதியைச் சீர்குலைக்கின்ற வகையில் நடவடிக்கைகளா?

சட்டசபையில் ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க. வெளிநடப்பு

சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே மு.க.ஸ்டாலின் பேட்டி


சென்னை, ஜன. 30- தமிழக அரசின் பல் வேறு துறைகளில் பல நூறு பணி இடங்கள் காலி - இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை மதிக் காதது, தமிழகத்திற்குப் பெரிதும் நன்மை தரக் கூடிய சேது சமுத்திரத் திட்டத்தை வரவிடாமல் தடுக்கின்ற அதிமுக அரசின் போக்கு, நீரின்றி சாகுபடியை இழந்த விவசாயிகளுக்கு முழு மையான இழப்பீட்டுத் தொகை வழங்காதது. செம்மொழித் தகுதியைச் சீர்குலைக்கின்ற வகை யில் நடவடிக்கைகள் இவை அனைத்தையும் கண்டிக்கின்ற வகையில் ஆளுநர் உரையை திமுகழகம் புறக்கணித்து வெளிநடப்பு செய் கின்றது என இன்று (30.1.2014) சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே திமுகழக சட்டமன்ற சட்சித்தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர் களிடையே தெரிவித் தார்.

இன்று (30.1.2014) நண் பகல் 12 மணியளவில் தமிழக சட்டமன்றத்தில் 2014-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழக ஆளுநர் டாக்டர் கே.ரோசய்யா அவர்கள் உரை நிகழ்த்தினார். அப்போது ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த திமுக சட்டமன்ற உறுப் பினர்கள் சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே வந்தனர். அங்கே கூடியி ருந்த செய்தியாளர்களி டம் திமுக சட்டமன்ற கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

இந்த ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து பல்வேறு கொடுமைகளுக்கும், இன்னல்களுக்கும் ஆளாகி வருகிறார்கள், கெட்டுப்போய்விட்ட சட்டம் ஒழுங்குப் பிரச் சினை - வாட்டி வதைத் திடும் மின்வெட்டுக் கொடுமை.

குறுவை, சம்பா பயிர் சாகுபடிக்கு உரிய காலத்தில் தேவையான அளவு காவிரி நீரைப் பெற்றுத் தரதவறியது - சாகுபடியை இழந்தும் கடன்பட்டும், கண் ணீர்க்கடலில் ஆழ்ந் துள்ள விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீட்டுத் தொகையை முறையா கவோ, முழுமையா கவோ வழங்காதது.

சாதிக்கலவரத்திற்குத் தகுந்த தீர்வு காணாதது. திமுக ஆட்சியில் தீட்டப் பட்ட திட்டங்களுக்குப் பொறாமை காரணமாக முடிவு கட்டிய கொடுமை - தமிழகத்தில் அனைத்து ஆறுகளிலும் நடைபெ றும் மணல் கொள்ளைகள்.

தமிழகத்திற்குப் பெரிதும் நன்மை தரக் கூடிய சேது சமுத்திரத் திட்டத்தை வரவிடாமல் தடுக்கின்ற வஞ்சகம். அரசின் பல்வேறு துறை களிலும் பல நூறு பணி இடங்கள் காலி - இட ஒதுக்கீட்டுக் கொள் கையை மதிக்காதது. நெல், கரும்பு விவசாயி களுக்குக் கட்டுப்படி யாகக் கூடிய உரிய விலை கொடுக்க முன் வராதது.


செம்மொழித் தகுதியைச் சீர்குலைக் கின்ற வகையில் நட வடிக்கைகள் என்று இவை போன்ற எண் ணற்ற ஜனநாயக விரோத - மக்கள் விரோத - சட்ட விரோத நடவடிக்கை களைக் கண்டித்து, ஆளுநர் உரையினைப் புறக்கணித்து, திராவிட முன்னேற்றக் கழகம் வெளிநடப்பு செய்கிறது என்று தெரிவித்து இந்த அவையை விட்டு வெளி யேறினோம் என்று சட் டமன்ற வளாகத்திற்கு வெளியே கூடியிருந்த செய்தியாளர்களிடம் திமுக சட்டமன்ற கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/74358.html#ixzz2rvgEIgoL

தமிழ் ஓவியா said...

ஆசிரியருக்குக் கடிதம்

இந்திய நாணயங்களை (கரன்சி) அவமதிக்க வேண்டாமே...


சிமெண்ட் விளம்பரம் ஒன்றில் ஒரு நடிகர் தனது மனைவியோடு பாம்பன் பாலத்தில் நடந்துசெல்கின்றார். அப் போது அந்த நடிகர் கடல் அலைகளால் சேதப்படாமல் உறுதியாக இந்தப்பாலம் இருப்பதற்கு காரணம் குறிப்பிட்ட கம்பெனி தயாரிக்கும் சிமெண்ட் மட்டுமே பயன்படுத்தி கட்டப்பட்டதுதான் எனக் கூறுகின்றார். திடீரென அவரது துணை வியார் தனது தோல் பையிலிருந்து 2 ரூபாய் நாணயத்தை எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து பிரார்த்தனை செய்து கொண்டு கடலில் வீசுகின்றார். இதை பார்க்கின்ற நடிகர் என்ன இங்கும் வேண்டுதலா (கோரிக்கை மனுவா?) என சிரித்தபடியே கேட்கின்றார். ஒன்று மில்லை. இதைப்போன்ற சிமெண்ட் (இந்த சிமெண்ட்) நாம் வீடு கட்டும்போது நமக்கு வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டேன் என்கிறார். பிரார்த்தனை என்ற பெயரால் கடலில் நாணயத்தை தூக்கி எறிதல் என்ற செயல் இந்திய நாணயத்தை அவமதிக்கும் செயலாகும். நவராத்திரி தினத்தன்று கொலு பொம் மைகளுக்கு ரூபாய் நோட்டுக்களால் மாலையிடுதல், புத்தாண்டு (தமிழ் /ஆங்கில) நாட்களில் கடவுள் சிலை களுக்கு ரூபாய் நோட்டுக்களால் மாலையிடுதல், கடவுளர் படங்களை (உ.ம்: லெட்சுமி) பிரேம் செய்யும்போது ரூபாய் நோட்டுக்கள், நாணயங்களை பொருத் துதல், கோவில், குளங்கள், பள்ளிவாசல் (மசூதி) தேவாலயங்கள் (சர்ச்) போன்ற வழிபாட்டுத் தலங்களில் குறிப்பிட்ட இடங்களில் (உ.ம்: கொடிமேடை) நாணயங்கள், ரூபாய் நோட்டுக்களை வீசி எறிதல், ரூபாய் நோட்டுக்களில் இதயம், அம்பு போன்ற காதல் குறியீடுகளை வரைதல், இளங்காதலர்கள், நண்பர்கள் தங்கள் பெயர்களை எழுதிக் கொள்ளுதல் போன்ற செயல்கள் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் இந்திய கரன்சியை அவமதிக்கும் செயலாகும்.

ஏஐஐஐ, ஐஓ, ஓ -ஆம் வகுப்புகளில் ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பு அதை வெளி யிடும் ரிசர்வ் வங்கி அதை எவ்வாறு இனாம் (னுநடிஅயேவடி) (ரூ. 1000, ரூ. 500, ரூ. 100, ரூ. 50, ரூ. 20, ரூ. 10, ரூ. 5) வாரியாக கையாள்வது? எந்த வரிசையில் அடுக்க வேண்டும்? கள்ள நோட்டுகளை கண்டறிவது எப்படி? நீர்க்கோடுகள், காந்திபடம் போன்றவற்றை அறிந்து கொள்ளுதல், அஞ்சல், வங்கி போன்ற பாதுகாப்பான சேமிப்பு மற்றும் வங்கி, அஞ்சல்துறை படிவங்களை பூர்த்தி செய்தல் போன்ற வாழ்வியலோடு தொடர் புடையவற்றை எளிமைப்படுத்தி பாடங் களாக வைக்க வேண்டும். அவ்வாறு பயனுள்ள கருத்துகள் பாடத்திட்டத்தில் இணைக்கப்படும்போது மாணவர்களுக்கு எதிர்காலத்தில் பயனுள்ளதாக அவை அமையும்.

- சு. ஆறுமுகம்
(நன்னிலம், திருவாரூர் மாவட்டம்)

Read more: http://viduthalai.in/page-2/74380.html#ixzz2rvh1h6IT

தமிழ் ஓவியா said...


இட ஒதுக்கீட்டிற்கு இந்த ஆட்சியில் இடமே இல்லையா?


சென்னை, ஜன.30- ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க தேசிய தாழ்த்தப் பட்டோர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இந்நிலை யில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு இதுவரை ஏற் பட்டுள்ள இழப்புக்கு ஈடான பணி இடங்களை அவர்களுக்கு வழங்கி நிரப்பிட முதல்வர் முன்வரு வாரா? என தி.மு.க. தலைவர் கலைஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கேள்வி :- ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.) இட ஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை அளிக்காத அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தேசிய ஆதி திராவிடர் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறதே; சலுகை அளிக்காத அரசின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

கலைஞர் :- அதிகாரிகள் மீது நடவடிக்கை என் றால், அரசு மீது மறைமுகமான குற்றச்சாட்டு என்றுதான் பொருளாகும். இந்தப் பிரச்சினை பற்றி நான் பல முறை விளக்கமாக எழுதியிருந்தேன். வேறு சில கட்சித் தலைவர்களும் அறிக்கை விடுத்திருந் தார்கள். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17, 18ஆம் தேதிகளில், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

அரசுப் பள்ளிகளில் சுமார் 23 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு, ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வினை இரண்டு முறை தேர்வு வாரியம் நடத்தியது. முதலில் நடைபெற்ற தேர்வில் வெறும் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனால் அக்டோ பரில் மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. அப்போது தேர்வு நேரத்தை ஒன்றரை மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாக அதிகரித்ததுடன், கேள்வித்தாள் கடினமாக இல்லாத அளவில் பார்த்துக் கொள்ளப் பட்டது. ஏறத்தாழ ஆறரை லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதியதில், 10,397 இடைநிலை ஆசிரியர்களும், 8,849 பட்டதாரி ஆசிரியர்களும் தேர்வு பெற்றனர். காலியாக உள்ள ஆசிரியர் பணி இடங்களை அடுத்த தகுதித் தேர்வு மூலமாக நிரப்பப்படும் என்று அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படிதான் அந்தத் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டன. தகுதித் தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 150. தேர்ச்சி பெறுவதற்கு 90 மதிப்பெண்கள் பெற வேண்டும், அதாவது 60 சதவிகிதம். இரண்டு முறை ஏற்கெனவே நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததால், அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால், குறைந்தபட்சம் இட ஒதுக்கீட்டுப் பிரிவி னருக்காவது சலுகை வழங்கப்படும் என்று எதிர் பார்க்கப்பட்ட போதிலும், தேர்ச்சி மதிப்பெண்ணில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப் பட்டோர் ஆகியோர்; உயர் வகுப்பினரைப் போலவே 60 சதவிகிதம் மதிப்பெண் பெற வேண்டும் என்று தமிழகத்திலே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


இது தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலுக்கு விரோதமானதாகும். தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி, ஆந்திராவில் உயர் சாதியினருக்கு 60, பிற்படுத்தப்பட்டோருக்கு 50, தாழ்த்தப் பட்டோருக்கு 40 சதவிகிதம் மதிப்பெண்கள் என்றும் - அஸ்ஸாமில் உயர் ஜாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 55 சதவிகிதம் என்றும் - ஒரிசாவில் உயர்ஜாதியினருக்கு 60 சதவிகிதம், மற்றவர்களுக்கு 50 சதவிகிதம் மதிப்பெண்கள் என்றும் தகுதி மதிப்பெண்கள் நிர்ண யிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அ.தி.மு.க. அரசு அனைத்துப் பிரிவினருக்கும் 60 சதவிகித மதிப்பெண் என்று நிர்ணயித்துள்ளது என்பது, தந்தை பெரியார் அவர்களின் சமூக நீதி கொள்கைக்கு எதி ரானதும், இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு விரோத மானதுமாகும்.

தமிழ் ஓவியா said...

எனவே ஆசிரியர் தகுதித் தேர்வினை ஆகஸ்ட் திங்களில் நடத்தப்போவதாக அறிவித்துள்ள தமிழக அரசு இந்த முறையாவது இட ஒதுக்கீட்டுக் கொள் கைக்கு முக்கியத்துவம் அளித்து தேர்வுக்கான மதிப்பெண்களில் மாற்றம் செய்ய முன்வர வேண்டும் என்று கடந்த ஆண்டே 7-6-2013 அன்று நான் விளக்கி யிருந்தேன். அதனை அ.தி.மு.க. அரசு காதில் போட்டுக் கொள்ளாமல் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிரா கவே செயல்பட்டது.

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர், பிரின்ஸ் கஜேந்திரபாபு, ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப் பெண் சலுகை அளிக்காதது குறித்து தேசிய ஆதி திரா விடர் ஆணையத்தின் சென்னை மண்டல இயக்கு நருக்கு புகார் கொடுத்திருக்கிறார். அந்தப் புகாரை ஆய்வு செய்து மண்டல இயக்குனர் திரு. வெங்கடேசன் பிறப்பித்துள்ள உத்தரவில், தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் வழிகாட்டு தலை ஏற்று, தமிழக அரசு வெளியிட்ட அரசாணை 181இல், டி.இ.டி. தேர்வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் தேர்ச்சி பெறுவதற்கு குறைந்தபட்ச மதிப்பெண்ணில் சலுகை அளிக்க வழி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தேர்வை நடத்தும் டி.ஆர்.பி., அதை அமல்படுத்தாமல் புறக்கணித் துள்ளது. இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்பட்டுள்ளது. டி.இ.டி. தேர்வில் தமிழக அரசின் கொள்கையை 12ஆம் தேதி முதல்வர் தெளிவுபடுத்தி உள்ளார். அதில், கல்லூரி ஆசிரியர் நியமனத்திற்கு, தேசிய தகுதித் தேர்வு, மாநில தகுதித் தேர்வு எப்படி கட்டாயமாக்கப்பட்டு உள்ளதோ, அதுபோலத்தான் ஆசிரியர் தகுதித் தேர்வும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

தமிழ் ஓவியா said...

அரசின் ஆணைப்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான கொள் கையை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது வன்கொடு மை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவு மீது எடுத்த நடவடிக்கை குறித்து தேசிய ஆதி திராவிடர் ஆணையத் தின் சென்னை மண்டல அலுவலகத்திற்கு பதில் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் இந்தப் புகார் தொடர்பான விவரம் தேசிய ஆணையத்தின் கவனத் திற்குக் கொண்டு செல்லப்படும் (The action of Teachers’ Recruitment Board is arbitrary, unjust, unlawful and against the Reservation Policy. It is, therefore, requested that appropriate action may be taken for relaxing minimum qualifying marks for the reserved category as provided in the G.O. No. (Ms) No. 181 SE(C2) D dated 15-11-2011. Further, it is requested that action may be initiated against the erring Officials responsible for non-implementation of Policy under Sec. 4 of the SCs/STs (POA) Act,1989. Action taken report may be furnished to this Commission immediately, failing which, the issue will be referred to the Headquarters of NCSC, New Delhi)

என்று திட்டவட்டமாக ஆணை பிறப்பித்துள்ளார்.

ஜெயலலிதா புதிதாக அறிவித்துள்ள பல்துறை உயர் சிறப்பு மருத்துவமனையில் இடஒதுக்கீட்டினை நடை முறைப்படுத்தாமல் மருத்துவர்களைத் தேர்ந்தெடுக்க தமிழக அரசு முனைந்தது பற்றி நான் விடுத்த அறிக் கைக்கு 12-1-2014 அன்று நீண்ட பதிலளித்த முதலமைச்சர் ஜெயலலிதா, ஆசிரியர்கள் பணி நியமனத்திலும் சமூக நீதி கடைப்பிடிக்கப்படவில்லை என்று கலைஞர் கூறியுள்ளார். ஆசிரியர் நியமனத்தில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு முற்றிலும் பின்பற்றப்பட் டுள்ளது என்று நான் என்ன எழுதினேன் என்பதையே புரிந்து கொள்ளாமல் ஒரு பதிலளித்திருந்தார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தவறுக்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் உத்தரவு பிறப்பித் துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தவறுக்குக் காரணமான அதிகாரிகள், முதலமைச்சரின் உத்தர வுக்குக் கட்டுப்பட்டுத்தான் நடவடிக்கை எடுத்திருக்க முடியுமே தவிர, தன்னிச்சையாகச் செயல்பட்டிருக்க முடியாது. எனவே இந்தப் பிரச்சினையில் தவறுக்குக் காரணமானவர் முழுக்க முழுக்க முதல் அமைச்சர் ஜெயலலிதாதான் என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது. இந்தத் தவறினை பலமுறை நான் சுட்டிக்காட்டிய போதிலும், அதனை ஏற்காமல், தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்பதைப் போல சாதித்து, எனக்குப் பதில் கூறி அறிக்கை விடுத்த ஜெயலலிதா இப்போது என்ன பதில் சொல்லப்போகிறார்?

தமிழ் ஓவியா said...

உண்மையை இப்போதாவது ஒப்புக்கொள்வாரா? ஒப்புக்கொள்வ தோடு, இட ஒதுக்கீட்டுப் பிரிவினர்க்கு இதுவரை ஏற்பட்டிருக்கும் இழப்புக்கு ஈடான பணி இடங்களை அவர்களுக்கு வழங்கி நிரப்பிடவும் முன்வருவாரா?

சொத்துக் குவிப்பு வழக்கு...

கேள்வி :- சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை 27-1-2014 அன்று பெங்களூருவில் நடைபெற்றிருக் கிறதே; விசாரணையில் எந்த அளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது?
கலைஞர் :- தமிழக நாளேடுகளில் பல, இந்த வழக்கு விசாரணை விவரங்களை வெளியிடுவதே இல்லை. வெளியிட்டாலும் ஜெயலலிதாவுக்குப் பாதகமான பெரும் பகுதியை மறைத்து விடுகிறார்கள். 27ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, வழக்கிலே குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு நேரில் ஆஜராகாமல் இருப்பதற்காக விலக்களிக்க வேண்டுமென்று கோரி, அவர்களுடைய வழக்குரை ஞர்கள் நீதிபதியின் முன்னால் மனுக்கள் தாக்கல் செய்திருக்கிறார்கள். அதில் ஜெயலலிதா, தமிழக முதல்வராக இருப்ப தால் அரசுப் பணி இருப்பதாகவும், சசிகலாவுக்கு கண் வலி இருப்பதாகவும், சுதாகரனுக்கு மூட்டு வலி இருப்பதாகவும், இளவரசிக்கு நீரிழிவு நோய் இருப்ப தாகவும், அதனால் நீதிமன்றத்திற்கு வர இயலவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதற்கு கழக வழக்கறிஞர் தாமரைச்செல்வன் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், இதற்கு ஆட்சேபணை தெரிவிக்க வேண்டிய எதிர்தரப்பு வழக்குரைஞர், அதாவது அரசு வழக்கறிஞர் எந்த விதமான ஆட்சேபமும் தெரிவிக்க வில்லை. அரசு வழக்குரைஞர் பவானி சிங் ஆட்சே பணை தெரிவிக்காத காரணத்தால், நீதிபதி அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். அப்போதுகூட நீதிபதி, நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்குக் கோரும் மனுவில் உரிய மருத்துவச் சான்றிதழ்கள் இணைக்கப்பட வில்லை. இருப்பினும் இந்த முறை மட்டும் இம்மனுக்களை ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

தமிழ் ஓவியா said...

அடுத்து ஜெயலலிதாவின் வழக்குரைஞர், தங்கள் கட்சிக்காரர்களின் வீடுகளில் சோதனை செய்த போது கைப்பற்றப்பட்ட பொருள்களில் வழக்குக்குத் தொடர் பில்லாதவற்றை திரும்பக் கொடுக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு ஒரு மனுவினை புதிதாக தாக்கல் செய்திருக்கிறார். வழக்கு முடிவடையும் கட்டத்தில் இருக்கிறபோது, இவ்வளவு நாட்களும் சும்மா இருந்து விட்டு திடீரென்று இப்படி யொரு கோரிக்கையை குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வைக்க வேண்டிய அவசியம் என்ன? வழக்கினைத் தாமதம் செய்வதுதான் நோக்கமா?

அந்த மனு மீதான ஆட்சேபணையை தாக்கல் செய்யும்படி அரசு வழக்குரைஞரிடம் நீதிபதி கேட்ட போது, ஆட்சேபணை மனுவைத் தாக்கல் செய்ய இரண்டு வாரம் கால அவகாசம் வேண்டுமென்று கூறியிருக்கிறார். கைப்பற்றப்பட்ட பொருள்களைத் திரும்ப கொடுக்க வேண்டுமா, வேண்டாமா என்பதற்கு ஆட்சேபணையைத் தெரிவிக்குமாறு நீதிபதி அரசு வழக்குரைஞரைக் கேட்டால், அதற்கு அரசு வழக் குரைஞர் இரண்டு வார காலம் அவகாசம் வேண்டும், 2 வாரத்திற்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறாராம். எதற்காக அவ்வளவு கால அவகாசம்; அதுவும் அரசு வழக்குரை ஞரே கேட்கிறார்! யாரோடு கலந்தாலோசனை செய்ய அவ்வளவு கால அவகாசம் தேவைப்படுகிறது அவருக்கு?

அதை ஏற்றுக் கொள்ளாத நீதிபதி, வாய்மொழி யாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ ஜனவரி 31ஆம் தேதிக்குள் ஆட்சேபணை மனுவினைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். அப்போதும் அரசு வழக்கறிஞர் தமிழக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்பதால் ஒரு வார கால அவகாசமாவது வேண்டுமென்று கேட்ட போது, நீதிபதி அதனை ஏற்காமல் நிராகரித்துவிட்டார். அரசுத் தரப்பு வழக்குரைஞர் இவ்வாறு கால அவகாசம் கேட்டபோது, அதிருப்தி தெரிவித்த நீதிபதி, இது குற்றவியல் நீதிமன்றமா அல்லது ஒத்திவைப்பு நீதிமன்றமா என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார். மேலும் நீதிபதி அவர்கள், இந்த வழக்கு விசாரணை கடந்த பதினைந்து ஆண்டுகளாக நடந்து வருகிறது. விசாரணை நடந்த நாட்களைக் காட்டிலும், ஒத்தி வைக்கப்பட்ட நாட்கள் தான் அதிகம் இருந்துள்ளது. தனி நீதிமன்றம் மற்றும் தனி நீதிபதி நியமனம் செய்ததின் நோக்கம், விசாரணை தினமும் நடந்து விரைவில் முடிக்க வேண்டும் என்பதற்காகத்தான். அந்த நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. இனியாவது வழக்கு தடை இல்லாமல் நடக்க வேண்டும் என்றெல் லாம் கருத்து தெரிவித்திருக்கிறார்.

கடந்த 20ஆம் தேதியன்று விசாரணை நடந்த போது, சென்னையிலிருந்து பெங்களூரு கொண்டு வரப்பட்ட அசையும் சொத்துக்கள் தொடர்பான அத்தனை விவரங்களையும், பரிசுப் பொருள்களின் பட்டி யலையும் தங்களுக்கு வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு வழக்குரைஞர்கள் மனு தாக்கல் செய்து, நீதிபதி அப்போது அதனைத் தள்ளுபடி செய்தார். மேலும் நீதிபதி அவர்கள், இந்த வழக்கை விரைந்து முடிக்க வசதியாக, வழக்குரைஞர்களின் இறுதி வாதம் பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்றும், உச்சநீதிமன்ற உத்தரவின்படி தினமும் விசாரணை நடக்கும் என்றும், முதலில் அரசுத் தரப்பு வழக்குரை ஞர் வாதம் செய்தபின், குற்றம் சாட்டப்பட்ட வர்களின் தரப்பு வழக்குரைஞர் வாதம் செய்ய வேண்டும் என்றும், இறுதிக் கட்ட வாதம் தொடங்கு வதை எந்த நிலை யிலும் காலம் கடத்த முடியாது என்றும் தெரிவித் திருக்கிறார்.
இந்தச் செய்திகளையெல்லாம் வெளியிடுவதற்கு தமிழக நாளேடுகளுக்கு எப்படி மனம் வரும்? வெளி யிட்டால், ஆள்வோரின் கோபத்திற்கல்லவா ஆளாக நேரிடும்! (முரசொலி, 30.1.2014)

Read more: http://viduthalai.in/page-3/74350.html#ixzz2rvhJ3iTw

தமிழ் ஓவியா said...


கயிறு கட்டாதே - திரிக்காதே!
ஏடுகளில் இரண்டு தக வல்கள் வெளிவந்துள்ளன. கையில் சாமிக் கயிறு கட்டுபவர்களை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கிண்டலடித் துள்ளார்; மூடநம்பிக்கைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். அப்படியா னால் சகோதரத்துவத்தை வளர்க்கும் ரக்ஷா பந்தன் நிகழ்ச்சியில் அணிவிக்கப் படும் ராக்கிக் கயிற்றையும் சரத்பவார் சாடுகிறாரா? - என்ற வினாவை எழுப்பி யுள்ளார் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே.

இராமநாதபுரம் அருகே தனியார் பள்ளியில் மாண வர்கள் கழுத்து, கைகளில் அணிந்திருந்த கயிறுகளை அகற்றுமாறு மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் (இப்படியும் ஓர் அருமை யான மாவட்ட ஆட்சியரா? சபாஷ்!) கூறி விட்டாராம். பொறுக்குமா இந்து மக்கள் கட்சி என்னும் மூடநம்பிக் கைக் கூட்டத்துக்கு? எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.

உண்மை நிலை என்ன? கழுத்திலோ, கையிலோ கயிற்றைக் கட்டினால் அழுக்குகள் சேர்வதில்லையா? கிருமி கள் ஏற்பட வாய்ப்பு ஏற் படாதா? கிருமிகள் குடி யிருக்கும் குளுகுளு மாளி கையல்லவா? இது சாதார ணமாகக் கேட்கப்பட வேண் டிய பொது அறிவு வினா.

அறிவியல் ரீதியான பதில் இதோ: தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தில் கோடைக் காலத்தில் பெரியார் பிஞ்சு குழந்தைகள் முகாம் ஆண்டுதோறும் நடத்தப் பட்டு வருகிறது. சில குழந்தைகளின் கைகளில் கயிறுகள் கட் டப்பட்டு இருந்தன. அந்தப் பிள்ளைகளை அறிவியல் ரீதியாக விளங்க வைக்க வேண்டுமே என்பதற்காக திருச்சிராப்பள்ளியில் பெரியார் அறக்கட்டளை சார்பில் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் பெரியார் மருந்தியல் கல் லூரிப் பேராசிரியர்கள் வரவழைக்கப்பட்டனர். ஒரு சிறுமியின் கையிலிருந்த அந்தக் கயிற்றை அவிழ்த்து இரசாயனப் பரிசோத னைக்கு அது உட்படுத்தப் பட்டது.

அதன் முடிவு (சுநளரடவ) என்ன தெரியுமா? கீழ்க் கண்ட கிருமிகள் அதில் குடி கொண்டு இருந்தன.

1) ஸ்டப்பை லோகாக் கஸ் (Staphy Lococcus)

2) ஆல்பஸ் ஸ்டப் பைலோ காக்கஸ் ஆரியஸ் (Staphyco Coccus Aureus).

3) எஸ்செரிக்கியா கோலி (Escherichia Coli (E.co21)

4) ஃப்யூஃபிளமென் டஸ் ஸ்டரக்சர்ஸ் (Few Filamen Tous Structures)
இந்தக் கிருமிகள் பல் வேறு நோய்களுக்குக் காரணமாகி வருகின்றன.

இத்தகு கயிறுகளைக் கட்டினால் பேய் அண்டாது என்ற நம்பிக்கையும், பெண்களுக்குச் சீக்கிரம் திருமணம் ஆகும் என்றும் மூடத்தனத்தைப் பரப்பி ஒரு கூட்டம் சுரண்டிக் கொண்டு இருக்கிறது. படித்த முட் டாள்கள்கூட கயிற்றைக் கட்டிக் கொண்டு திரிகிறார் களே-சிந்திக்கவேண் டாமா?

கயிறும் கட்டக் கூடாது - கயிறும் திரிக்கக் கூடாது!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/74448.html#ixzz2s1eYmQCp

தமிழ் ஓவியா said...


கிருத்துவ மயக்கம்


கிருத்துவ மதம் கடலோரப் பகுதிகளில் பரவி, பின் வளர்ந்தது. அதற்குக் காரணம் அங்கு இருந்த இயற்கை வளங்களைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்ட கிருத்தவ மதப் போதகர்களே.

1. கடல்நீர் கரிப்பதையும், கடலுக்கருகே மணலில் தோண்டப்படும் கேணிநீர் இனிய சுவை தருவதையும், கர்த்தரின் மகிமை என்றனர். கல்வியறிவில்லா பாமரர் மனம் அதை மெய்யென்று நம்பத்தூண்டியது; நம்பினர்.

2. கடல் நண்டுகளின் ஓடுகள் மேல் + குறி இருந்தது. அதனை கிருத்துவ மதப் போதகர்கள் தங்கள் மதக்குறி என்று சொல்லி ஏய்த்தனர்.

3. தங்களிடம் இருந்த சில உளநூல் திறத்தாலும் கல்வியறிவின்றி இருந்த கடற்கரைப் பகுதி மக்களை தங்கள் சாதுர்யப் பேச்சுக்களால் கர்த்தரைப்பற்றியும், இயற்கையான வற்றையெல்லாம் (கண்டதையெல்லாம்) கர்த்தரின் படைப்பால் பாமரர் மயக்கமுற தேமதுர இசையொலியையும், பாடல்களையும், கர்த்தரின் குணாதிசயங்களாக அன்பையும், அருளையும் சொல்லி கிருத்துவ மதத்தைப் பரப்பினர்.

மேலும் அவர்களுக்கு தேவையான சமயத்தில் வினோதமான சிலஅறிவியல் கருவிகளைக் காட்டி அவைகளையெல்லாம் கர்த்தர் தந்ததாகக் கூறியதோடு, அவற்றை அவர்களுக்குத் தந்தனர். பணஉதவி, படிப்புதவி இவைகளாலும் எதற்கு மயங்குவானோ அதையும் தந்து தம் மதம் என்னும் மயக்கத்திலாழ்த்தினர்.

-பாணன்

Read more: http://viduthalai.in/page-7/74413.html#ixzz2s1fhIsHv

தமிழ் ஓவியா said...

கடவுள் இருந்தால்....

சர்வ வல்லமையுள்ள கடவுள் ஒருவர் இருந்தால் மனிதனுடைய தேவைக்கும் ஆசைக்கும் தகுந்தபடி நடந்து கொண்டிருப்பார். அல்லது கடவுளுக்கு இஷ்டமில்லாத விஷயங்களைப் பற்றி மனிதனுக்குத் தேவையில்லாமலாவது, ஆசையில்லாமலாவது அல்லது நினைப்புக்கே வராமலாவது செய்திருப்பார்.

உதாரணமாக, மனிதன் தனக்கு முகத்தில் மயிர் வேண்டியதில்லை என்று கருதி, தினம் தினம் சவரம் செய்து கொள்ளுவதைப் பார்க்கிறோம். ஆனால், கடவுள் அனுக்கிரகத்தால் அது தினம் தவறாமல் முளைத்துக் கொண்டே வருவதையும் பார்க்கிறோம்.

இது என்ன கடவுளுடன் மனிதன் ஏற்றுக்கு மாறாய் நடந்து போட்டி போடுகிறானா? அல்லது மனிதனுடன் கடவுள் ஏற்றுக்கு மாறாய் நடந்து போட்டி போடுகிறாரா? அல்லது ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாமல் அவரவர் காரியத்தை அவரவர்கள் பார்க்கின்றார்களா?

- சித்திரபுத்திரன்

Read more: http://viduthalai.in/page-7/74413.html#ixzz2s1fp6KB0

தமிழ் ஓவியா said...


கணவர் வருமானத்தை விட மனைவிக்கு அதிக வருவாய் இருப்பதால் ஜீவனாம்சம் தேவையில்லை: கருநாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு


பெங்களூரு, ஜன.31- கருநாடகாவில் மைசூர் மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் ராகவேந்திராவுக்கும், தென்கனரா மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் ரஷ்மிக்கும் 2003இல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளார். சில ஆண்டு களுக்கு பிறகு கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

மனைவியிடம் இருந்து மணவிலக்கு கோரி மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் ராகவேந்திரா கொடுத்த மனு நிராகரிக் கப்பட்டதை தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் திருமணம் முடிந்த பின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள எனது பெற்றொர் வீட்டில் வசித்தோம்.

எனது மனைவி மேல்படிப்பு படிப்பதற்காக தாவணகெரெ சென்றார். நான் மைசூரில் தனியாக மருத்துவமனை தொடங்கி நடத்தியதுடன், அங்கு வீடும் வாடகை எடுத்து வசித்து வருகிறேன்.

கடந்த 2006ஆம் ஆண்டு குழந்தைப் பேறுக்காக தாய் வீட்டிற்கு சென்ற எனது மனைவி மீண்டும் வீடு திரும்பவில்லை. பலமுறை வீட்டிற்கு வந்து குடும்பம் நடத்தும்படி வலியுறுத்தியும் கேட்கவில்லை. இதனிடையில் வரதட்சணை கேட்டு நானும், எனது பெற்றொரும் துன்புறுத்துவதாக எங்கள் மீது காவல் நிலையத்தில் பொய் வழக்கு கொடுத்தார்.

இவ்வளவு தொல்லை கொடுத்த வருடன் வாழ் விரும்பவில்லை என்று கூயிருந்தார். கணவர் ராகவேந்திராவின் புகாருக்கு பதில் மனுதாக்கல் செய்த ரஷ்மி, தனது கணவர் மற்றும் அவரது பெற்றோர் ரூ.20 லட்சம் வரதட்சணை கொண்டு வரும்படி தொல்லை கொடுத்தனர்.

கணவருடன் நான் வாழ மாமனார், மாமியார் வாய்ப்பு கொடுக்காமல் தடுத்தனர். என்னை சரியாக கவனித்து கொள்ளவில்லை என்று தெரிவித் திருந்தார்.

இவ்வழக்கை விசாரணை நடத்திய நீதிமன்றம், இருவரும் பிரியாமல் சேர்ந்து வாழ முயற்சிக்கும்படி ஆலோசனை வழங்கியது. அப்போது எனது பெற்றோருடன் வாழ பிடிக்கவில்லை என்றால், மைசூரில் நான் வாடகைக்கு எடுத்து வசித்து வரும் வீட்டிற்கு வரும்படி ராகவேந்திரா கேட்டார்.

அதற்கு ஒப்புகொள்ளாத ரஷ்மி, பெங்களூரில் வீடு வாடகை எடுத்தால் வசிப்பதாக கூறினார். ஆனால் அதை ராகவேந்திரா ஏற்றுகொள்ளவில்லை. எங்கு வசிப்பது என்ற விஷயத்தில் கணவன் மனைவி இடையில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இறுதியாக ராகவேந்திரா மணவிலக்கில் உறுதியானார். ரஷ்மி ஜீவனாம்சம் கேட்பதில் உறுதியாக இருந்தார்.

இந்த விவாகரத்து வழக்கு விசாரணை முடிந்து நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், வழக்கில் தொடர் புடைய கணவர், மனைவி இருவரும் சமூகத்தில் மருத்துவம் படித்த பட்டதாரியாக உயர்ந்த நிலையில் உள்ளனர். அவர்கள் இருவரில் ஏற்பட்ட மனக்கசப்பை போக்கி சுமுக வாழ்வுக்கு நீதிமன்றம் பல வாய்ப்புகள் கொடுத்தும் இருவரும் பயன்படுத்தி கொள்ள வில்லை. அவர்கள் சேர்ந்து வாழ நீதிமன்றம் எடுத்த முயற்சி அனைத்தும் தோல்வியில் முடிந்தது.

மேலும், மணவிலக்கு பெற்றுள்ள ரஷ்மி, தனது கணவரிடம் ஜீவனாம்சம் கேட்டுள்ளார். ரஷ்மியின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், கணவர் ராகவேந்திராவை விட கூடுதல் வருமானம் (மாதம் ரூ.1.30 லட்சம்) இருப்பதால், கணவர் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

அதே சமயத்தில் மகனுக்கு 7 வயது நிரம்பியுள்ளதால், தாயின் அரவணைப்பில் வசிப்பது அவசியம். குழந்தைக்கு தரமான கல்வி, உணவு, ஆடை உள்பட அவர் தேவைக்கான செலவுகளை ராகவேந்திரா வழங்க வேண்டும் என்று கூறி மணவிலக்கு வழங்கி தீர்ப்பளித்தார்.

Read more: http://viduthalai.in/page-7/74410.html#ixzz2s1gCMzpv

தமிழ் ஓவியா said...


குடிஅரசு கருவூலத்திலிருந்து திராவிட மாணவர் மாகாண மாநாடு


திராவிட மாணவர் மாகாண மாநாடு இதுவே முதல் மாநாடு எனலாம்.

மாநாட்டுக்கு தமிழ் நாட்டின் பல்வேறு பக்கங்களில் இருந்தும் வந்திருந்த மக்கள்சுமார் 5000 பேர்களுக்கு மேலிருந்தாலும் காலேஜ் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மாணவர்கள் தொகை 2000 பேர்களுக்குக் குறையாது என்றே சொல்லலாம்.

மொத்தத்தில் கருப்புச் சட்டையுடன் வந்தவர்கள் எண்ணிக்கை 1500 இளைஞர்களுக்கு மேலேயே இருக்கும்.

இதில் மாணவிகளும் வந்து கலந்து கொண்டி ருந்தது குறிப்பிடத் தகுந்ததாகும்.

மாநாடு, சேலம் காலேஜ் பிரின்சிபால் அறிஞர் எ. இராமசாமி கவுண்டர் அவர்கள் தலைமையில் நடந்தது என்பதோடு மற்றும் பல ஆசிரியர்களும் வந்து கலந்து கொண்டதானது மாநாட்டுக்கு மிகவும் பெருமையும், உற்சாகமும் ஊக்கமும் அளித்தது.

இரண்டு நாளும் மாநாடு ஒரு மாபெரும் கொண்டாட்டமாக இருந்தது.

மாநாட்டில் கலந்து கொண்ட மாணவர்களில் பெரும்பாலோர் நம் நாடும் இனமும், இன்று இருக்கும் நிலையில், நாம் நம் வாழ்நாளில் நல்ல நாட்களை பயனற்ற பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கழித்து அடிமைத்தனம் கற்றுக் கொண்டு இருப்பது பெரியதொரு நாட்டுத் துரோகமும், இனத் துரோகமுமான செய்கை என்று கருதித் துயருற்ற வண்ணம் காணப்பட்டதானது மிகவும் குறிப்பிட வேண்டிய காரியமாகும்.
அடுத்தாற் போல் அங்கு தாண்டவமாடிய உணர்ச்சி என்னவென்றால் இந்த மாநாடு முடிந்த வுடனே தங்களுக்கு ஏதாவது ஒரு பணி ஆற்றத் தலைவர் அனுமதி அளிக்க மாட்டாரா? என்கின்ற ஆர்வமும் எழுச்சியும் பொங்கி வழிந்ததேயாகும்.
(குடிஅரசு தொகுதி 34 பக்கம் 79)


தமிழ் ஓவியா said...

மத விடுமுறை மதமில்லாத சர்க்காரிலா?

மதமில்லாத சர்க்கார் என்று சொல்லிக் கொள்ளும் இந்திய யூனியன் சர்க்கார் மத சம்பந்தமான நாட்களுக்காக விடுமுறை விடுவதானது முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறபடியால், மத சம்பந்தமான நாட்களுக்கு விடுமுறை விடுவதை நிறுத்த வேண்டுமாய் இம்மாநாடு சர்க்காரைக் கேட்டுக் கொள்கிறது.

இராமாயண எதிர்ப்பைத் தீவிரமாகச் செய்!

இராமாயணம் திராவிட மக்களை இழிவுபடுத்தும் புராணம். ஆதலாலும், மதத்தின் பேரால் மக்களிடையே புகுத்தப்பட்டு மக்களின் அறிவு வளர்ச்சிக்கு பல விதங்களிலும் தடையேற்படுத் தியதோடு, மூடப் பழக்கங்கள் மக்களிடையே வளருவதற்கு இராமாயணமே காரணமாயிருப்பதனால் இராமாயண எதிர்ப்புப் பிரச்சாரத்தை நாட்டில் தீவிரமாக நடத்த வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது. - (குடிஅரசு தொகுதி 40 131ஆம் பக்கம்)

பகுத்தறிவும், சுயமரியாதையும்!

திராவிடர் கழகம் மற்ற காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எவ்விதத்திலும் விரோதமானதல்ல. அவைகளைவிட தீவிரமான கருத்துக்களையும், திட்டங்களையும் கொண்டதுதான் எங்கள் கழகம் என்று எங்கு வேண்டுமானாலும் சொல்வோம்.

சொல்லுவது மட்டுமல்ல, மெய்ப்பித்தும் காட்டுவோம்.

காங்கிரஸ்காரனோ, கம்யூனிஸ்டோ நெருங்கக்கூட பயப்படும் ஆத்மார்த்தத்த் துறையில் நாங்கள் அஞ்சாது குதிக்கிறோம்.

ஆத்மார்த்தக்காரர்கள் நம்மைக் கண்டு அஞ்சும் அளவுக்கு மக்களுக்குப் பகுத்தறிவு ஊட்டி வருகிறோம்.

புராணக்காரனுக்கு மேலாக தத்துவார்த்தம் பேசுகிறோம்.

அவன் தத்துவார்த்தம் பேசினால் அவனுக்கும் மேலாக வேதாந்தம் பேசுவோம்.

அவன் வேதாந்தத்தை விட்டு ராமகிருஷ்ணரின் சிஷ்யன் என்றால், நாங்கள் அவருக்கும் மேலான இராமலிங்கரின் சிஷ்யர்கள் என்போம்.

அவன் மோட்சத்தைப்பற்றிப் பேசினால், அதற்கும் நாங்கள் குறுக்குவழி காட்டியனுப்புவோம்.

சமுதாயத்தில் உண்மையான சமத்துவம் நிலவ வேண்டுமே என்பது தான் எங்கள் ஆசை. சமத்துவம் என்றால் சமுதாய இயல், பொருளா தார இயல், அரசியல், மொழியியல் ஆகிய எல்லாத் துறைகளிலும் சமத் துவ சுதந்திரம் வேண்டுமென்பதுதான் எங்கள் கோரிக்கை.

ஆகவே, எங்களைச் சற்று தீவிரவாதிகள் என்று யாராவது கூறலாமே தவிர, எங்களைப் பிற்போக்கானவர்கள் என்றோ, மத துவேஷி என்றோ கூற இயலாது.
குடிஅரசு தொகுதி 39 207ஆம் பக்கத்தில் இருப்பது

புண்ணிய ஸ்தலங்கள்

இதிகாசங்களைப் பற்றியும், புராணங்களைப் பற்றியும், கடவுள்களைப் பற்றியும் தனித்தனி மகுடமிட்டு குடிஅரசில் எழுதிக் கொண்டு வருவதை வாசகர்கள் கூர்ந்து கவனித்து வாசித்து வருகின்றார்கள் என்றே எண்ணுகின்றேன்.

அவற்றை எழுதி வருவதன் நோக்கமெல்லாம், ஒரு சில சயநலக்காரர்கள் தங்கள் நன்மையின் பொருட்டு எவ்வளவு ஆபாசமானவைகளையும், அசம்பாவிதமானவைகளையும் எழுதி வைத்துக் கொண்டு பிரமாதப்படுத்தி,

அவற்றையே மதம் என்றும், பக்தி என்றும், மோட்சத்திற்கு மார்க்கம் என்றும் பாமர மக்களை நம்பும்படியாகச் செய்து, மக்கள் அறிவையும், சுதந் திரத்தையும், சுயமரியாதையையும், ஒற்றுமையையும் கெடுத்து வருகின்றார்கள் என்பதை உலகத்திற்கு எடுத்துக்காட்டி, மக்கள் யாவரும் சமம் என்பதை யுணர்ந்து சுயமரியாதையோடு வாழ வேண்டு மென்பதுதான்.

மேற்படி சுயநலக்காரர்கள் சிற்சில இடங்களைப் பெரிய புண்ணிய ஸ்தலம் என்பதாக பெயர் கொடுத்து, அவற்றிற்கு ஏராளமான யோக்கிய தைகளைக் கற்பித்திருப்பதை, பகுத்தறிவற்ற மூட ஜனங்கள் புண்ணிய ஸ்தல யாத்திரை என்பதாகக் கருதி வெகு பணங்களைச் செலவு செய்து கொண்டு வருகின்றனர்.
தொகுப்பு: க. பழநிசாமி, தெ.புதுப்பட்டி

Read more: http://viduthalai.in/page2/74468.html#ixzz2s7XOs1nK

தமிழ் ஓவியா said...


வீதியில் நீதி தேவதை!பார்ப்பான்
சூத்திரனைக் கொன்றால்
சிகைச்சேதம்!
பார்ப்பானை
சூத்திரன் கொன்றால்
சிரச்சேதம்!
பார்ப்பானை
பார்ப்பானே கொன்றால்?
மனுதர்மம்
என்ன சொல்லுவதோ!
நம் நீதிமன்றம்
சொன்ன தீர்ப்பால்...
கையிலிருந்த நியாயத் தராசு
களவாடப்பட்டு...
கருப்புத் துணியால்
கண்கள் கட்டப்பட்டு...
நினைவிழந்து
நிர்வாணமாய்...
வீதியில்
நீதி தேவதை!

- சீர்காழி கு.நா. இராமண்ணா

Read more: http://viduthalai.in/page3/74470.html#ixzz2s7Y9LnfY

தமிழ் ஓவியா said...


பெரியார்- கவிஞர் கலிகாலன், ஈரோடு

பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தனைநீ! எனினும்
பகுத்தறிவுக் கனல் பரப்பும்
சூரியனாய் உருவெடுக்கத் தவறவில்லை!
உனைக் கண்டு -
சாத்திரம் பேசும் சனாதனப் பூனைகள்
பூணூல் மறைத்தே புதுநூல் படித்தன!

சாதிமதப் பேய்கள் தடுமாறி ஒளிந்தன!
ஒளிவது போதாது வேரடி மண்ணோடும்
அழிவது வேண்டுமென,
அல்லும் பகலும் நீ அயராது உழைத்தாய்!
பகுத்தறிவுத் தேரேறி அஞ்சாமை வாள் சுழற்றி
அரும்பாடு பட்ட அய்யாவே
நின்புகழ் நிலைத்தோங்குக!

சூத்திரன், தாழ்த்தப்பட்டவன்,
தீண்டத்தகாதவன் எனப்பலவும் சுமக்கும்
கழுதைகளாய்க் காரிருளில்
அடிமைப்பட்டுக் கிடந்த எம்
கைவிலங்கு அறுத்தனை நீ!

சனாதனச் சகுனிகளின் பொய்முகம்
கிழித்திட்டு அரியென முழங்கிய
அடலேறே! வெண்தாடி வேந்தனே!
திக்குத் தெரியாது தவித்திட்ட எங்களுக்கு
வழிகாட்ட ஈரோட்டில் வந்துதித்த
பகுத்தறிவுப் பகலவனே!

மனிதநேயமற்ற மனுதர்மக் கதிர்வீச்சால்
ஆண்டுபலவாக அடிமை விலங்கேந்திக்
கூனிக்குறுகி கும்பிட்டே வாழ்ந்திருந்தோம்!
நோய் போக்கும் வழியறியோம்
நொந்து நொந்து வெந்தழிந்தோம்
வந்தனை நீ! எங்கட்கும் புதுவாழ்வு
தந்தனை! எம் தலைநிமிர வைத்திட்டாய்!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும்
பெருநீதி நாட்டினாய்!

ஏழையரும் கல்விபெற
வேலை முதல் அனைத்தும்பெற
இடஒதுக்கீட்டால் ஏற்றம் பெறச் செய்திட்டாய்
நீருள்ளளவும் நிலம் நெருப்புள்ளளவும்
வானுள்ளளவும் வளியுள்ளளவும்
பெரியார் எனும் பெயர் உனக்கே,
உனக்கே பொருந்தும் ஒப்பிலான் நீயே!

Read more: http://viduthalai.in/page6/74478.html#ixzz2s7Yi2M69

தமிழ் ஓவியா said...


அ(வி)ஞ்ஞானம்அஞ்ஞானம்: கார்த்திகை கடைசி வெள்ளி அன்று மக்களின் அமைதியான வாழ்வுக்கு காவல்துறையினரும், பயிர்கள் செழித்து வளர வேண்டும் என வேண்டி பொதுப் பணித் துறையினரும் பால், பன்னீர், புஷ்பகாவடி இரணியலிலிருந்து குமாரகோவிலுக்குத் தூக்கிச் சென்றனர்.

விஞ்ஞானம்: விண்வெளி ஆய்வு மய்யத் தில் உள்ள குளிரூட்டும் சாதனம் பழுதடைந்த தால், அங்கு தங்கி ஆய்வு நடத்தி வரும், அமெரிக்கர், ரஷ்யர், ஜப்பான் விண்வெளி வீரர்கள் ஆய்வு மய்யத்திலிருந்து வெளியில் வந்து அந்த சாதனத்தின் பழுதை சரி செய் தார்கள்.

- எஸ். நல்லபெருமாள், வடசேரி

Read more: http://viduthalai.in/page6/74477.html#ixzz2s7Yr4kL3

தமிழ் ஓவியா said...


அய்.நா., பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம் அவசியம் இந்தியா வலியுறுத்தல்


அய்.நா.பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினராக ஆப்பிரிக்க கண்டம் இடம் பெறாதது அய்.நாவின் நம்பகத் தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளதாகவும் வரலாற்று அநீதிகளை ஒழிக்க அந்த சபையில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. அய்.நா.வில் நடைபெறும் பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் அடங்கிய குழு நியூயார்க் சென்றுள்ளது. இக்குழுவில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பிரினீத் கவுரும் இடம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் அய்.நா., பொதுச் சபையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆப்பிரிக்க வளர்ச்சிக்கான புதிய தோழமை என்ற விவாதத்தில் கலந்து கொண்டு பிரினீத் கவுர் பேசினார். அப்போது 75 சதவீத பணிகள் ஆப்பிரிக்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஒட்டு மொத்த ஆப்பிரிக்க நாடுகளும் அய்.நா.பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக இல்லாதது இந்த அவையின் நம்பகத் தன்மையில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்றார். மேலும் அவர் பேசியதாவது: உலக மயமாக்கல் நடைமுறையை வலுப்படுத்தவும் பல்வேறு நிலைகளில் ஜனநாயக வழிமுறைகளை நடைமுறைப்படுத்தவும் ஆப்பிரிக்காவுடன் இந்தியா கூட்டு வைத்துள்ளது. தற்கால நடைமுறைகளுக்கு ஏற்ற பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் அய்.நா.பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று ஆப்பிரிக்காவுடன் இணைந்து இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும். 2015-இல் அய்.நா பாதுகாப்பு சபையின் 70-ஆவது ஆண்டு தினம் கொண்டாடப்படவுள்ளது. இதில் 2005-இல் நடைபெற்ற உலக உச்சி மாநாட்டின் போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்படி பத்து ஆண்டுகளில் எந்தெந்த நாடுகள் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன என்பதை காணலாம். இது உலக நாடுகள் தங்களது சாதனைகளை எடுத்துரைக்க நல்லதொரு வாய்ப்பாக அமையும். ஆப்பிரிக்காவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையிலும் அது ஒட்டு மொத்த வளர்ச்சியும், செழிப்பும் அடைய ஏராளமான சவால்களை எதிர்கொள்ள வேண்டியது இருக்கிறது. கடும் வறட்சி, பசி, -பட்டினி ஊட்டச்சத்து பற்றாக்குறை, மோதல் போன்றவையே ஆப்பிரிக்காவின் வளர்ச்சிக்கு தடையாக இருந்து வருவதாகவும் பிரினீத் கவுர் தெரிவித்தார்.

- சட்டக்கதிர் - ஜனவரி 2014 - பக்கம் 62

Read more: http://viduthalai.in/page6/74480.html#ixzz2s7ZJlzB0

தமிழ் ஓவியா said...


கோயில்களில் நடக்கும் கொள்ளைகள்


வைஷ்ணவ தேவி கோவில் காணிக்கையில் 43 கிலோ போலி தங்கம்

ஜம்மு, பிப்.1- வைஷ் ணவ தேவி கோவிலுக்கு பக்தர்கள் அளித்த காணிக்கைகளில், 43 கிலோ தங்கமும், 57 கிலோ வெள்ளியும் போலி யானது என்ற தகவல் வெளியாகி உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து, 5,300 அடி உயரத்தில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத் தில், வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள் ளது. இந்த கோவிலில், கடந்த ஆண்டு, ஒரு கோடி பக்தர்கள், தரி சனம் மேற்கொண்டுள்ள னர். அவ்வாறு வரும் பக்தர்கள், கோவிலுக்கு, தங்கம், வெள்ளி மற்றும் பணத்தை காணிக்கை யாக அளிப்பர். இது குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்யப் பட்டது. அந்த மனு வுக்கு, கோவில் வாரிய நிர்வாக அதிகாரி அளித்த பதிலில் கூறியிருப்பதா வது: கடந்த, அய்ந்தாண் டுகளில், 193 கிலோ தங்கம் மற்றும் 81 ஆயிரம் கிலோ வெள்ளியும் காணிக்கையாக கிடைத் துள்ளது. இதில், 43 கிலோ தங்கம், 57 கிலோ வெள்ளி போலியானது என்பது தெரிய வந்துள் ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.போலி தங்கத்தை, உண்மை யான தங்கம் என, பக் தர்கள் நினைத்து கோவி லில் காணிக்கையாக அளித்தார்களா... என்ற விவரம் தெரிவிக்கப்பட வில்லை.

பூசாரிகள் குற்றச்சாட்டு சிவகங்கை, பிப்.1- தமிழகத்திலுள்ள இந்து கோயில்கள் உண்டியல் மூலம் ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வருவாயில், ரூ.41 கோடியை மட் டுமே அரசு கணக்கு காட்டுவதாக , கிராமக் கோவில் பூஜாரிகள் சங்க மாநில இணைச் செயலாளர் சோமசுந் தரம் குற்றம் சாட்டியுள் ளார்.

சமீபத்தில், சென்னை யில் கிராம கோயில்கள் பூஜாரிகள் சங்க நிறு வனர் வேதாந்தம் மீது சில சமூக விரோத கும் பல் தாக்குதல் நடத் தியது. இதனை கண்டித் தும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத் தியும், சிவகங்கையில் நேற்று, கிராம கோயில் பூஜாரி சங்கம், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கிராம கோயில் பூஜாரி கள் சங்க மாநில இணைச் செயலாளர் சோமசுந்த ரம் பேசியதாவது: தமி ழக இந்துக் கோவில் களில் இருந்து ஆண் டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வருமானம் கிடைக் கிறது. ஆனால், அரசு ரூ.41 கோடியை மட் டுமே கணக்கு காட்டு கிறது. இதில், 36 கோடி கோயில் சார்ந்த அதி காரி, ஊழியர்களுக்கு ஊதியமாக வழங்கப்படு கிறது என்ற புள்ளி விவ ரங்களை நம்ப முடிய வில்லை.

தமிழகம் முழுவதும் இந்துக் கோயில்களுக்கென நாலரை லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இவை அனைத்தும் தற் போது, சில அரசியல் வாதி மற்றும் அவர் களது பினாமிகளின் கைவசம் உள்ளன. ஏக் கருக்கு ஆண்டுக்கு ரூ.100 அல்லது ரூ.200க்கான வாடகை ரசீதை மட்டும் செலுத்தி விட்டு, கோடிக்கணக்கில் சம்பா தித்து, அரசை ஏமாற்று கின்றனர். கோயில் நிலங் கள் மீட்கப்பட வேண் டும். கோயில்கள் மூலம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான வரு வாய் கிடைக்கும் நிலை யில், கிராமப்புறத்தில் பெரும்பாலான இந்துக் கோயில்களில் ஒரு கால பூஜை, விளக்கு போடுவ தற்கு கூட, வழியின்றி, கிராமக்கோயில் பூஜாரி கள் சொந்த செலவில் பூஜை செய்கின்றனர். இது போன்ற நிலை மாற வேண்டும், என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/74490.html#ixzz2s7a0mzlY

தமிழ் ஓவியா said...


பரிதாபமே!இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேஷம் காரணமல்ல; மக்கள்மீது உள்ள பரிதாபமே காரணம். - (குடிஅரசு, 8.9.1940)

தமிழ் ஓவியா said...


கண்ணோட்டம்: வைகோவின் வாயை அடைத்த மோடி அலை!


கருவாட்டுப் பானையை சுற்றி வரும் கபட பூனையைப் போல தமிழகத்திற்கு அடிக்கடி வருகிறார் நரேந்திர மோடி. ஏற்கெனவே திருச்சிக்கு வந்து கூட்டிவரப்பட்ட கூட்டத்தில் முழங்கிவிட்டுப் போனார். வேதாரண்யத்திற்கு வ.உ.சி. உப்பு காய்ச்சப்போனார் என்பன உள்ளிட்ட தவறான தகவல்களை கூறி பல ருக்கும் பீதி யூட்டினார். பின்பு அருண்ஷோரி எழுதிய புத்தகத்தை வெளியிடுவதற்காக சென்னை வந்தார். இப்போது மீண்டும் சென்னை வர இருக்கிறாராம். அவரை வரவேற்க வரவேற்புக்குழு ஒன்றை புரட்சி புயல் வைகோ அமைத்துள்ளாராம். பாஜக கூட இப்படியொரு வரவேற்புக் குழுவை அமைத்ததாக தகவல் இல்லை. ஆனால் இன்னமும் எத் தனை இடம் என்று கூட முடிவாகாத நிலையில் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படும் வைகோ வர வேற்புக் குழுவை அமைத்திருக்கிறார்.

விட்டால் இவரே கூட அன்றைக்கு புலி வேசம் போட்டு ஆடுவார் போலி ருக்கிறது. பாஜக விரித்த வலையில் தமிழ கத்தை பொறுத்தவரையில் மதிமுகவை தவிர வேறு எந்தக் கட்சியும் இதுவரை சிக்கவில்லை. தாயகத்தில் ஒருமுறை, கமலாலயத்தில் ஒருமுறை என்று இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கிறது. எனினும் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இந்த பேச்சுவார்த்தைகளில் காந்திய மக்கள் இயக்க தலைவர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் தமிழருவி மணியனும் பங்கேற்றாராம், திருமண தரகு வேலை பார்ப்பவர்கள் கூட ஜாதக பரிமாற்றத்தோடு நின்று விடுவார்கள். ஆனால் இவரோ கல்யாண வீட்டில் இலை எடுப்பது வரை இருப்பது போல பாஜகவுக்கு சேவை செய்து வருகிறார். அந்தளவுக்கு மோடியின் மீது `பாசம் பொங்கி வழிகிறது. நான் சென்னையில் கூட்டிய கூட்டத்தில்தான் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வாஜ்பாய் உறுதியளித்தார். என்னைத் தவிர இந்த திட்டத்திற்கு வேறு யாரும் உரிமை கோர முடியாது என்று முழங்குவார் வைகோ. ஆனால் பாஜக பக்கம் இவருடைய பாசப்பார்வை திரும்பிய வுடனேயே சேது சமுத்திரத் திட்டத்தில் சுற்றுச்சூழல் பிரச்சினை இருப்பதாக பேசத் தொடங்கிவிட்டார். இப்போதுதான் கடலுக்கு அடியில் பவளப்பாறைகளும் பாசிகளும் இருப்பது இவருக்கு தெரிய வந்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் ஆழமாக மூழ்கினால் ராமர் கட்டிய பாலமும் கூட அவருக்கு தெரியக்கூடும். அண்மைக் காலமாக மோடியை நினைக்கும் பொழுதெல்லாம் வைகோவுக்கு, ஆவேசம் அதிகமாகி வியர்த்துக் கொட்டத் தொடங்கி விடு கிறது. நாடெங்கும் மோடி அலை, வீடெங்கும் மோடி அலை, டீக் கடை கள், காடுகள், கழனிகள், எங்கெங்கும் மோடி அலை வீசுகிறது என்று புல் லரித்து, போர்வையை எடுத்து போர்த்திக் கொள்கிறார். தேர்தல் வர இன்னும் சில மாதங்கள் உள்ளன. அதற்குள் இவ் வளவு புல்லரிப்பு என்றால் இன்னும் போகப்போக என்னாகுமோ தெரிய வில்லை. டீக்கடை பாய்லரில் அடிக்கும் ஆவி கூட இவருக்கு மோடி அலை யாகத் தெரிகிறது.

பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா என்பவர் தந்தை பெரியாரை மிகமிக இழிவாகப் பேசியிருக்கிறார். பெரியார் வழி வந்ததாக கூறிக் கொள்ளும் வைகோ இதுகுறித்து இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை. உலகத்தில் எந்த மூலையில் என்ன நடந்தாலும் அதற்காக கண்டனம் முழங்கும் வைகோ பெரியாரைப் பழித்ததை, இழித்துரைத்ததை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏனோ? நாகரிகமான அரசியலுக்காகவே பாஜகவுக்கு பல்லக்கு தூக்குவதாக கூறிக்கொள்ளும் தமிழருவியும் இதைக் கண்டு கொள்ளவில்லை. இப்போதைக்கு இவர்களுக்கு பெரி யாரால் ஆகப் போவது ஒன்றுமில்லை. அதிகாலை வேளையில் மோடி பஜனை பாடிக்கொண்டு யாராவது வந்தால் அவர்களை உற்றுப் பாருங் கள். ஒரு வேளை அவர்கள் வைகோ, தமிழருவியாக கூட இருக்கக்கூடும்.

- மதுரை சொக்கன்
(நன்றி: தீக்கதிர் 29.1.2014

Read more: http://viduthalai.in/page-2/74497.html#ixzz2s7bQ1HJr

தமிழ் ஓவியா said...

தர்மத்தின் நிலை

நாட்டுக்கோட்டை நகரத்தாருள் முக்கியஸ்தரான ஸ்ரீமான் சர். அண்ணாமலை செட்டியார் அவர்கள் 20 லட்சம் ரூபாய் கல்விக் காக தர்மம் செய்திருப்பதாக அறிகின்றோம். ஆனால் அத்தருமம் எவ்வளவு தூரம் நாட்டிற்கோ அல்லது பார்ப்பனரல்லாத மக்களுக்கோ உபயோகப்படும் என்பது அறியக் கூடாததாகவே இருக்கின்றது. தவிர பார்ப்பனர் எந்த ஒரு சிறிய தர்மம் செய்தாலும் அது தங்கள் இனத் தாரைத் தவிர வேறு யாருக்கும் உபயோகப் படாதபடியே செய்வது வழக்கம். ஆனால் பார்ப்பனரல்லாதாரில் பெரிதும் குறிப்பாய் நாட்டுக் கோட்டை நகரத்தார் செய்யும் தருமங்கள் ஒவ்வொன்றும் பார்ப்பனரைப் போல் தமது சமுகத்தாராகிய பார்ப்பனரல் லாதாருக்கே உபயோகப்படும்படி செய்யா விட்டாலும் முழுதும் பார்ப்பனர் களுக்கே உபயோகப்படும்படி செய்வதே வழக்கமாகி வருகிறது. கோவில்கள், வேதபாட சாலைகள், சத்திரங்கள், அறுபதாம் கல்யாணங்கள் முதலி யவைகளில் செலவிடும் பணங்கள் போகும் வழிகளை அறிந்தவர்கள் தான் உண்மையை உணரலாம். அதோடு கூடவே, இப்படிப் பார்ப்பனருக்கே பெரிதும் தருமஞ் செய்த பல நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் கோடீஸ்வரர் களாயிருந்து பாப்பராகிவிட்டதையும் அறியலாம். இப்படி இவர்கள் பாப்பர்களாவதில் யாரும் வருத்தப்பட நியாய மிருப்பதாகவும் தெரியவில்லை. ஏனெனில் இவர்கள் எந்த சமுகத்தாரிடம் இருந்து நல்வழியிலேயோ, கெட்ட வழி யிலேயோ இப்படி கோடிக்கணக்கான பணம் சம்பாதித்தார் களோ அந்த சமுகத்தாருக்குத் துரோகம் செய்து பார்ப்ப னரல்லாத மக்களை வஞ்சித்துப் பிழைக்கும் ஒரு சமுகத் தாருக்கே அதைச் செலவு செய்வதானால் அப்படியவர்கள் தண்டனை அடைய வேண்டியது கிரமமா அல்லவா! ஆதலால் நமது சர். அண்ணாமலை செட்டியார் செய்திருக்கும் இந்த 20 லட்ச ரூபாய் தர்மமானது மேல்கண்ட குற்றத்திற்கு ஆளாகாமல் இருக்கத்தக்க மாதிரியில் தமது தர்மப் பணங்கள் முழுதும் உபயோகப்படும்படியாக தக்க ஏற்பாடும் செய்ய வேண்டும் என்று சர். அண்ணாமலை செட்டியார் நன்மையையும் பார்ப்பனரல்லாதார் நன்மையையும் நமது நாட்டின் நன்மையையும் உத்தேசித்து வேண்டிக் கொள்ளுகிறோம்.
- குடிஅரசு துணைத்தலையங்கம், 08.04.1928

Read more: http://viduthalai.in/page-7/74522.html#ixzz2s7cGncE4

தமிழ் ஓவியா said...

ரிவோல்ட்

ரிவோல்ட் என்னும் ஆங்கில வாரப் பத்திரிகை யின் பதிப்பாளராகவும், வெளியிடுவோராகவும் மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் பதிவு செய்து கொள்ள ஸ்ரீமதி நாகம்மாள் 19.04.1928இல் மறுபடியும் கோர்ட்டுக்குப் போனதில், மேஜிஸ்ட்ரேட் தான் இது விஷயமாய் போலீசாரை ரிப்போர்ட்டு கேட்டு விட்டிருப்பதாகவும் அது வந்த மேல்தான் பதிவு செய்துகொள்ள முடியும் என்றும் சொல்லி பதிவு செய்துகொள்ள மறுத்துவிட்டார்.

பிறகு போலீசார் ரிவோல்ட் என்னும் பத்திரிகையின் கொள்கை என்ன என்பது பற்றியும் மற்றும் பல விஷயங் களைப் பற்றியும் இரகசியமாகவும் வெளிப்படையாகவும் வேவு விசாரித்து வருவ தாகத் தெரிகிறது. ஸ்ரீமதி நாகம்மாள் அவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் கேட்ட கேள்விகளுக்கு அடியிற்கண்ட ஸ்டேட்மெண்டு எழுதிக் கொடுக் கப்பட்டிருக்கின்றது.

ஈரோடு டவுன் கச்சேரி வீதியிலிருக்கும் உண்மை விளக்கம் பிரஸ் புரோப்ரைட்ரெஸ் ஸ்ரீமதி நாகம்மாள் எழுதிக் கொடுத்த ஸ்டேட்மெண்ட்:- இப்பவும் மேற்படி பிரசில் ரிவோல்ட் என்கின்ற ஆங்கில வாரப்பத்திரிகை நடத்துவதன் கருத்து, இப்போது நான் பதிப்பாளராயிருந்து நடத்தும் குடிஅரசு என்னும் தமிழ் வாரப்பத்திரிகையின் கொள்கைகளையே முக்கியமாய்க் கொண்டு நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சுநஎடிடவ என்கிற வார்த்தைக்கு நான் எடுத்துக் கொண்ட அர்த்தம் கட்டுப்பாட்டை உடைத்தல் என்பது. அதாவது மனித தர்மத்துக்கும் மனித இயற்கைக்கும் விரோதமாக அரசியலிலானாலும் சரி, மத இயலிலானாலும் சரி, அதிகார இயலி லானாலும் சரி, முதலாளி இயலிலானா லும் சரி, ஆண் இயலிலானாலும் சரி மற்றும் எவைகளி லானாலும் சரி அவைகளினால் ஏற்படும் இயற் கைக்கும் அறி வுக்கும் மாறுபட்ட கட்டுப்பாடுகளை உடைத்து உலகமும் அதன் இன்பமும் எல் லோருக்கும் பொது என்பதும் மக்கள் யாவரும் சமம் என்பதுமான கொள்கையை மனச்சாட்சிப்படி சாத்தியமான வழிகளில் பிரச்சாரம் செய்வதே அதன் நோக்கம். இதற்கு பத்திராதிபராக எனது கணவர் ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் இருப்பார். இதன்மேல் போலீசாரின் அறிக்கை இன்னது என்றும் மாஜிஸ்ட்ரேட் எப்பொழுது பதிவு செய்து கொள்வார் என்பதும் குறிப்பாய்த் தெரிய வில்லை.

- குடிஅரசு - துணைத் தலையங்கம் - 22.04.1928

Read more: http://viduthalai.in/page-7/74522.html#ixzz2s7cPz0M5