Search This Blog

26.1.14

தனியார்துறைகளில் இடஒதுக்கீடு - ஒரு பார்வை!


தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு கொண்டு வரப்படும் என்று 16ஆவது மக்களவைத் தேர்தலுக்குமுன் காங்கிரஸ் முன் வைக்கிறது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே!

ஆனால், காங்கிரஸ் இப்படி கூறுவது ஒன்றும் புதிதல்ல - 2004ஆம் ஆண்டு அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் குறைந்தபட்ச செயல் திட்டத்திலேயே இடம் பெற்ற ஒன்றுதான் இது. அதற்காக அமைச்சரவைக் குழுகூட ஒன்று அமைக்கப்பட்டதுண்டு - தொழிலதிபர்களுடன் பேசியதெல்லாம் வெறும் சடங்காகவே போய் விட்டது.

2006ஆம் ஆண்டில் இந்தியத் தொழி லதிபர் சம்மேளனம் மற்றும் வர்த்தக சபை யும் கைகோர்த்து ஒரு திட்டத்தை மேற் கொண்டன.

பத்து பல்கலைக் கழகங்களிலிருந்து 1000 தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிப்பது; அதில் நூறு பேருக்கு தொழில் தொடர்பான பயிற்சி, 500 பேர்களுக்கு அய்.ஏ.எஸ். அய்.பி.எஸ். தேர்வுகளுக்குப் பயிற்சி கொடுப்பது; அய்.அய்.டி., அய்.அய்.எம். போன்ற கல்வி நிறுவனங் களில் படிக்கும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் பிரிவைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவது; வெளி நாடுகளில் பயிலும் ஒடுக்கப்பட்டவர்கள் அய்ந்து பேர்களுக்கு உதவுவது என்பதெல்லாம் ஆண்டிமடம் கடவுள் கதையாக ஆனது தான் மிச்சம்!

இப்பொழுது காங்கிரஸ் அறிவித் திருப்பது அந்தக் கதிக்கு ஆளாகி விடக் கூடாது என்பதே ஒடுக்கப்பட்ட மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாகும்.
தனியார் துறையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் 12 சதவீத வளர்ச்சி என்ற இலக்கை அடைவதில் பெரும் சிக்கல் ஏற்படும் என்று தொழில் கூட்டமைப்பைச் சேர்ந்த ராகுல்பஜாஜ், சுனில்பாரதி, மிட்டல் உள்ளிட்டோர் கூறினர்.

(19.4.2006 அன்று டில்லியில் கூடிய தொழில் கூட்டமைப்புக் கூட்டத்தில் மேற்கண்ட கருத்துக் கூறப்பட்டது - தினமலர் 20.4.2006).

இந்தியாவில் இடஒதுக்கீட்டை அளிக்க மறுக்கும் இதே தொழில் அதி பர்கள் வெளிநாடுகளில் தொழில்களைத் தொடங்கும்போது இதே அணுகு முறைகளைக் கடைப்பிடிக்கிறார்களா என்றால் அதுதான் இல்லை.
குறிப்பாக தென்னாப்பிரிக்காவில் நடந்து கொள்வது எப்படி?
கறுப்பரின் பொருளாதார அதிகாரம் என்பது _- ஒரு தொழில் நிறுவனத்தில் கறுப்பர் ஒருவர் தலைமைச் செயல் அலு வலராக இருப்பதும், ஒரு நிறுவனத்தில் குறிப்பிட்ட விழுக்காட்டினரான கறுப் பர்கள் மேலாண்மையினராக இருப்பது மட்டுமன்றி தொழில் நிறுவனங்களில் பங்குகளும் கறுப்பர்களுக்குத் தரப்பட்டாக வேண்டும்.

தென்னாப்பிரிக்காவில் உள்ள தனது வெவ்வேறு தொழில் நிறுவனங்களின் பங்குகளை இந்தியாவின் டாடா நிறுவனம் பங்குகளைக் கொடுத்துள்ளது. இதுகுறித்து 27.5.2005 நாளிட்ட பிசினஸ் ஸ்டாண் டர்டு இதழ் விரிவாக வெளி யிட்டுள்ளது.

கேள்வி எண் 1: தனியார்த் துறை களிலும் இடஒதுக்கீடு அவசியம் ஏன்? பதில்: இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி (Justice Social) என்பதற்கு முதல் இடம் அளித்துள்ளது. அரசுத் துறைக்கு மட்டும் என்று அதில் எங்கும் குறிப்பிடப்பட வில்லை. கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு தனியார்த்துறைகளிலும் பொருந்தக் கூடியதே!

மண்டல் குழுப் பரிந்துரையில்

விதி முறைகளைத் திருத்தி மத்திய - மாநில அரசு பதவிகள் பொதுத் துறை நிறுவனப் பகுதிகள், அரசு உதவி பெறும் தனியார்த் துறைப் பதவிகள் பல்கலைக் கழகங்கள் கல்லூரிகள் அனைத்திலும் இடஒதுக்கீட்டினை அமுல்படுத்த வேண் டும் என்று மண்டல் குழுப் பரிந்துரை களுள் ஒன்றாகக் கூறப்பட்டுள்ளது.

இந்திய குடியரசு அரசமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26 முதல் செயல்பாட்டுக்கு வந்திருந்தாலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. 1990 ஆகஸ்டில் சமூக நீதிக் காவலர் மாண்பு மிகு வி.பி. சிங் அவர்கள் பிரதமராக வந்த நிலையில் தான் பிற்படுத்தப்பட் டோருக்குக் வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு அறிவிக்கப்பட்டது. கல்வியில் இடஒதுக்கீடு 2005ஆம் ஆண்டில்தான் கொண்டு வரப்பட்டது.

ஆனால் நிலைமை என்னவென்றால் பிரத்தியட்சமாக அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய இடம் 7 சதவீதம்தான் என்று மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமி நாடாளுமன்றத்தில் அறிவித்தார். (18.11.2011).

2012லும் இதுதான் சமூகநீதி நிலை

மத்திய அரசில் 149 உயர் அரசு செய லாளர்களில் ஒருவர்கூட தாழ்த்தப்பட்டவர் இல்லை
கூடுதல் செயலாளர்கள்    108
தாழ்த்தப்பட்டவர்    2
இணைச் செயலாளர்கள்    477
தாழ்த்தப்பட்டவர்    31 (6.5%)
மலைவாழ் மக்கள்    15 (3.1%)
இயக்குநர்கள்    590
தாழ்த்தப்பட்டவர்    17 (2.9%)
மலைவாழ் மக்கள்    7 (1.2%)
அய்.ஏ.எஸ். அதிகாரிகள்    3251
தாழ்த்தப்பட்டவர்    13.9%
மலைவாழ் மக்கள்    7.3%
பிற்படுத்தப்பட்டோர்    12.9%
காலி இடங்கள் 73 துறைகளில் தாழ்த்தப்பட்டோருக்கான
காலி இடங்கள்    25037
குருப் ஏ
தாழ்த்தப்பட்டோர்    13%
மலைவாழ் மக்கள்    3.8%
இதர பிற்படுத்தப்பட்டோர்    5.4%
குரூப் பி
தாழ்த்தப்பட்டோர்    14.5%
மலைவாழ் மக்கள்    5.2%
இதர பிற்படுத்தப்பட்டோர்    4.2%
சுத்திகரிப்பாளர் (Sweeper)
தாழ்த்தப்பட்டோர்    59.4%

இந்தப் புள்ளி விவரங்கள் தாழ்த்தப்பட் டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவில்லையா?

கேள்வி எண் 2: வெளிநாடுகளில் இதுபோல் இடஒதுக்கீடு அளிக்கப் படுகிறதா?
பதில்: தென்னாப்பிரிக்காவில் கிரிக் கெட் விளையாட்டில்கூட இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இது குறித்து தீக்கதிர் ஏட்டில் வெளி வந்துள்ள தகவல் வருமாறு:

ஒதுக்கீடு முறை தொடர்கிறது தென் ஆப்பிரிக்கா அறிவிப்பு!
கிரிக்கெட் அணியில் கறுப்பர்களுக் கான ஒதுக்கீடு முறை இன்னும் தொட ரும் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
நிறவெறி அரசிடமிருந்து விடுதலை பெற்ற பிறகு கிரிக்கெட் போன்ற விளை யாட்டுகளில் கறுப்பினத்தை சேர்ந்த வர்களும் வாய்ப்பு பெற வேண்டும் என்பதற்காக ஒதுக்கீடு முறை கொண்டு வரப்பட்டது. இவ்வாறு கொண்டு வரப் பட்ட முறையால் பல ஆட்டக்காரர்கள் பலன் அடைந்ததோடு, கறுப்பர்கள் மத்தியில் விளையாடுவதற்கான ஆர்வமும் தூண்டப்பட்டது.

இந்தக் கொள்கை நடைமுறைப்படுத் தப்படுவதுபற்றி ஒவ்வொரு ஆண்டும் வாரிய அதிகாரிகள் விவாதிப்பது வழக்கம். அதே போல 2009-_இல் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை குறித்து விவா தித்த அவர்கள், இந்த ஒதுக்கீடு முறை தொடர வேண்டும் என்று கூறியுள்ளனர். விலக்கிக் கொள்வதுபற்றி 2011க்கு முன்பாக முடிவு செய்ய முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜெரால்டு மஜோலா, தகுதி அடிப்படையில் மட்டுமே தேர்வு இருக்க வேண்டும் என்று தான் நாங்களும் விரும்புகிறோம். ஆனால் அதற்கான சூழலும் உருவாக வேண்டும். அது இன்னும் உருவாகவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

1998ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த கொள்கையால் தேர்வு செய்யப் பட்ட முதல் ஆட்டக்காரர் கிப்ஸ் ஆவார். அதன் பிறகு நிடினி, பிரின்ஸ், ஹாசிம் அம்லா போன்றவர்களும் அணியில் சேர்க்கப்பட்டனர்.

இவ்வாறு ஓதுக்கீடு முறையில் சேர்க்கப்பட்டவர்களும் சர்வதேசக் கவ னத்தை ஈர்க்கும் வகையில் விளையாடி யது குறிப்பிடத்தக்கது.
(தீக்கதிர் 5.12.2008)

தென் ஆப்பிரிக்கா: தொழில் நடத் தும் நிறுவனங்கள் 25 சதவீதம் அளவு கறுப்பினத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை தர வேண்டும்.
பிரேசில்: பிரேசிலில் பிறந்த குடி மக்கள், கறுப்பர் ஆகிய இனத்தவர் களுக்கு 20 சதவீதம், அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு 20 சதவீதம், ஊன முற்றோருக்கு 5 சதவீதம், ஒதுக்கீடு செய் யப்படுகின்றன.
நார்வே: வேலை வாய்ப்பில் 40 சதவீதம் பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் உள்ளது.

அமெரிக்கா; அமெரிக்காவில் 11 பேர்களுக்கு மேல் பணியாற்றும் எந்த நிறுவனமும் ஒவ்வொரு ஆண்டும் தம் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களில் கறுப்பர்கள் எத்தனைப் பேர் என்று அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். எந்தப் பிரிவினராவது தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லையென்றால் வழக்குத் தொடரலாம். இந்த முறைக்கு அமெரிக் காவில் Affirmative Action  என்று பெயர்). (அவுட்லூக் இதழ் 29.5.2006)

கேள்வி எண்: 3 இடஒதுக்கீடு அளிப்பதால் தகுதி, திறமை பாதிக்கப் படாதா?
நமது பதில்: இதற்கு மத்திய அமைச் சர் வீரப்பமொய்லி அவர்கள் அறிக் கையே பொருத்தமானது.

இதர பிற்படுத்தப்பட்டோர் என்பது வெறும் மாயையா? அவர்கள் முன் னேறவே இல்லையா? படிப்பில் சாதிக்க வில்லையா? அவர்களுக்கு ஒதுக்கீடு தந்தால், படிப்பின் தரம் குறையுமா?

இப்படி பல கேள்விகளுக்கு வீரப்பமொய்லி தரும் இறுதிப் பரிந்துரை அறிக்கையில் தகவல்கள் இருக்கும். வீரப்பமொய்லி தலைமையில் கமிட்டி போடப்பட்டவுடன், பல்வேறு மாநிலங் களில் உள்ள பல்வேறு கல்வித் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் கொண்ட துணை கமிட்டியை அவர் அமைத்தார்.

அவர்கள் மூலம், ஆங்காங்கு உள்ள பிற்படுத்தப்பட்டோர் கல்வித்தரம், அவர்களின் படிப்பு திறன் பற்றி ஒரு புள்ளி விவரம் தரச் சொன்னார். அப்படி அமைக்கப்பட்ட குழுக்களில் ஒன்று தான், பெங்களூர் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் என்.ஆர். ஷெட்டி தலைமையிலான குழு ஓ.பி.சி. எனப்படும் இதர பிற்படுத்தப்பட் டோருக்கு ஒதுக்கீடு அளித்தால் கல்வித் தரம் பாதிக்கப்படுமா என்ற இவர்களின் அறிக்கையில் புள்ளி விவரம் தர வேண் டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

ஷெட்டி தன் அறிக்கையில், வித்தி யாசமான தகவல்களை ஆதாரங்களுடன் கூறியிருக்கிறார். அவர் அறிக்கையில் சில தகவல்கள்:

பெங்களூரில் உள்ள விஸ்வேஸ் வரய்யா தொழில் நுட்ப பல்கலைக் கழகத்தில் பயின்ற 1998_-2002 மற்றும் 2001-_2005 பேட்ச் மாணவர்களை ஒப்பிட்டு பார்த்ததில், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தான் தேர்ச்சி வீதத்தில் முன்னணியில் உள்ளனர்.

கடந்த 1998_-2002ஆ-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட மாணவர்களில் 93.01 விழுக்காடு பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே சமயம், கடந்த 2001_-2005ஆம் ஆண்டு பேட்ச் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 97.4 விழுக்காடாக உள்ளது.
அதே சமயம், பொதுப் பிரிவு மாணவர்கள், கடந்த 1998_-2002ஆம் ஆண்டுகள் பேட்ச்சில் 66.09 விழுக்காடு பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 200-2_2005 பேட்ச் மாணவர்களில் தேர்ச்சி வீதம் 94.77 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஒப்பிட்டால், பொதுப் பிரிவு மாணவர்களைவிட, இதர பிற்படுத்தப் பட்ட மாணவர்கள் மூன்று சதவீதம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது தெரியும். இதில் கடந்த 1998-_2002 பேட்ச் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களில் முதல் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 37.7 விழுக்காடு பேர். கடந்த 2001-2005 பேட்ச் மாணவர்களில் முதல் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 42.35 விழுக்காடு பேர்.
இதுகுறித்து ஷெட்டி தன் அறிக் கையில் குறிப்பிடுகையில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப் பட்டால், திறம்பட சாதிப்பர் என்பதுதான் இந்த புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. அவர்களால் கல்வித்தரம் குறையாது. உயரத்தான் செய்யும் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த அறிக்கைகளை எல்லாம் ஆதரங்களாக வைத்துத்தான் மொய்லி தன் இறுதி அறிக்கையை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் சமர்ப்பிக்கப் போகிறார்.
(தினமலர் 4.10.2006 பக்கம் 7)

கேள்வி எண் 4: தனியார்த் துறை களில் இடஒதுக்கீட்டுக்காக திராவிடர் கழகம் மேற்கொண்டது என்ன?

நமது பதில்: 1.1.1982 அன்று மதுரை ரீகல் திரையரங்கில் நடைபெற்ற  மதுரை மாவட்ட கழக இளைஞரணி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எண்2: வேலை வாய்ப்புகளில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குச் செய்யப்படும் இடஒதுக்கீட்டினை அரசுத் துறையில் மட்டுமின்றி, தனியார்த்துறை கூட்டுத்துறை (றிக்ஷீவீஸ்ணீமீ ஷிமீநீஷீக்ஷீ, யிஷீவீஸீ ஷிமீநீஷீக்ஷீ) ஆகிய துறைகளிலும் அமல்படுத்த அரசு ஆணை பிறப்பித்து நடைமுறைப் படுத்த வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. அதன் மூலம் பல லட்சக்கணக்கில் படித்துவிட்டு, வேலை வாய்ப்புகளை இழந்து நிற்கும் தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய இளை ஞர்களுக்கும், பொதுவாகப் பார்ப்பனர் அல்லாத இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்கப் போதிய அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளு மாறு கழகப் பொதுச் செயலாளர் அவர்களை இந்த இளைஞர் இன எழுச்சி மாநாடு கேட்டுக் கொள்கிறது. (விடுதலை 2.1.1982 பக்கம் 1).

போராட்டம்

யார் பாதிக்கப்பட்டோர்களோ, யார் அடிபட்டார்களோ, அவர்களை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்ப்பதற்கு பதிலாக தின்று விட்டு செரிமானம் ஆகாத புளி ஏப்பக்காரர்களை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்ப்பதா?

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலேயே தனியார் துறைகளில் இன்றைக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகின்றது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இதுவரையில் தனியார் துறைகளில் இடஒதுக்கீடு வழங்கப்படவே இல்லை.

முன்னேறிய ஜாதி ஏழையினருக்கு இடஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத் திற்கே விரோதமானது. (சென்னையில் தபால் தந்தி அலுவலகம் முன் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டது)

(விடுதலை 17.10.2003 பக்.3)

திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ் நாடெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம். பொருள்: தனியார்த்துறை களில் இடஒதுக்கீடு தேவை மற்றும் இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவு கோல் கூடாது. (விடுதலை 17.10.2003).

நாடாளுமன்ற நிலைக்குழுவிடமும் வைக்கப்பட்ட கோரிக்கை

பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் சிறிது சிறிதாகக் குறைந்து வரும் இக்கால கட்டத்தில், கூடுதலான வேலை வாய்ப்புக்களைப் பெறுவதற்கு மக்கள் நம்பி எதிர்பார்க்கும் துறை தனியார் துறை ஒன்றே. ஆனால் இந்தத் தனியார்த்துறைகளில் ஆதிக்கம் செலுத்திவரும் அனைத்து உயர் பதவி களிலும் இருக்கும் உயர் ஜாதியினர்கள், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவு மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் கொள் கையைப் பின்பற்றுவதில்லை.தகுதி, திறமை என்ற பெயர்களில், தங்களின் சமூகக் கடமையை நிறைவேற்றாமல் தட்டிக் கழிக்கவே அவர்கள் முயலு கிறார்கள். அதே நேரத்தில் அரசிட மிருந்து கடன் மற்றும் இதர கட்டமைப்பு வசதிகளையும், வரிச் சலுகை போன் றவைகளையும் அவர்கள் முழுமையாக அனுபவித்துக் கொள்ளவும் தவறுவ தில்லை. எனவே நாடாளுமன்றக் குழு இந்தப் பிரச்சினையைத் தீவிரமாகப் பரிசீலனையில் எடுத்துக் கொண்டு தனியார்த் துறைகளிலும் பிற்படுத்தப்பட் டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினத் தவர் ஆகியோருக்கு இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத்தை இயற்றி நிறைவேற்றச் செய்யுமாறு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்து, நிறைவேற்றச் செய்ய வேண்டியதே. இந்தக் காலக் கட்டத்தின் மிகப் பெரிய தேவையாகும். (சென்னை வந்த நாடா ளுமன்ற நிலைக் குழுவிடம் திராவிடர் கழகத்தின் சார்பில் கி.வீரமணி அவர் களால் அளிக்கப்பட்ட கோரிக்கைகளில் ஒன்று இது (28.9.2012).

தந்தை பெரியார் நினைவு நாள் சூளுரை

தனியார்த்துறைகளிலும் இடஒதுக்கீடு - இதுவே தந்தை பெரியார் நினைவு நாள் (24.12.2012) சூளுரை என்று குறிப்பிட்டார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

இராசபாளையம் மாநாட்டில்

2013 மே இராசபாளையத்தில் நடை பெற்ற மாநில இளைஞரணி மாநாட்டில் தனியார்த் துறையில் இடஒதுக்கீடு குறித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கான முயற்சியில் ஈடுபடுவது  என்று முடிவு செய்யப்பட்டது.
கேள்வி எண் 5: தனியார்த் துறை களின் இன்றைய நிலை என்ன?
நமது பதில்: தனியார்த்துறை விரிவடைந்து போகிறது; பன்னாட்டு நிறுவனங்கள் குவிந்து கொண்டுள்ளன. அவற்றில் உச்சக்கட்ட அதிகாரமிக்க பதவிகளில் உயர் ஜாதி பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.
எடுத்துக்காட்டாக தனியார் நிறுவ னங்களில் மொத்தம் இயக்குநர்களின் எண்ணிக்கை 83787, இதில் முன்னேறிய ஜாதியினர் 92.6 சதவீத பார்ப்பனர் - 4037, வைசியர் 4167,  சத்திரியர் 46, பிற முன் னேறிய வகுப்பினர் 137, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 346 (3.8%) தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 319 (3.5%)
(Economic & Political Weekly Dated 11.8.2012)

மேற்கண்ட புள்ளி விவரங்கள் விளக்குவதென்ன? தனியார்த் துறைகளில் தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் இடஒதுக்கீடு அவசி யம் தேவை என்பதை எடுத்துக் காட்டவில்லையா?

தனியார்த்துறை என்றால் கடன் உதவி, குறைந்த விலையில் நிலம் (இனமாகக் கூட) தண்ணீர், மின்சாரம் இவை எல்லாம் அரசின் உதவியுடன் தானே நடக்கின்றன. பெரிய அளவில் இலாபம் கொழிக்கும்போது உள் நாட்டில் வாழும் பெரும்பான்மையான மக்களுக்கு வேலை வாய்ப்பில் உரிய இடங்கள் அளிக்கப்படுவதுதானே சமூகநீதி? வெளிநாடுகளிலும் இந்த நிலைதானே இருக்கிறது. எனவே தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு என்பது காலத்தின் கட்டாயம் ஆகும். காங்கிரஸ் தன் தேர்தல் அறிக்கையில் தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று அறிவித் திருப்பது வரவேற்கத்தக்கதே!


அகில இந்திய அளவில்

தனியார்த்துறைகளிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை அகில இந்திய அளவிலும் எழத் தொடங்கியது.

தனியார்த்துறைகளிலும் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டுமென்றும், இதை நீதிமன்றத்தில் வழக்குக்கு ஆட்படுத்தாத வகையில் அரசியல் சட்டத்தின் 9வது அட்டவணையில் இடஒதுக்கீடு சேர்க்கப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்ற தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஆதிவாசிகள் அமைப்பு கோரியுள்ளது.

இந்த அமைப்பின் சார்பில் ஒரு குழுவினர் (18.3.1994) குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.
இக்குழுவின் தலைவர்களாகச் சென்ற ராம் விலாஸ் பஸ்வான் (ஜனதா தளம்) மற்றும் திலீப் சிங் பூரியா (காங்) ஆகியோர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினர். இடஒதுக்கீட்டை தனியார் துறைக்கு விஸ்தரிப்பது முக்கியமான பிரச்சினை என்றும், அதுபற்றி பிரதமருக்குத்தான் கடிதம் எழுதுவதாகவும் சர்மா உறுதியளித்ததாக அவர்கள் தெரிவித்தனர். தனியார் துறைக்கு ஆதரவாக பொதுத் துறை தாரை வார்த்து வரப்படுவதால் இச்சமுதாய இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இடஒதுக்கீடு தனியார் துறைக்கும் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
1991ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உயர்ந்துள்ள இப்பிரிவினரைச் சார்ந்தோரை கணக்கிலெடுத்து 22.5 சதவிகித ஒதுக்கீடு 25 சதவிகிதமாக உயர்த்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரினர். தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு முடிவு கட்டவும், இப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு காலியாக உள்ள அரசு வேலைகளை நிரப்பவும் கோரினர்.

அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த உறுப்பினர்கள் இக்குழுவில் இருந்தனர்.

தி.மு.க. மாநாட்டில்

திருச்சியில் நடைபெற்ற திமுக ஒன்பதாவது மாநில மாநாட்டில் இரண்டாம் நாளில் (4.3.2006) நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

தனியார்துறையில் இடஒதுக்கீடு: தொழில் துறையில் வளர்ச்சி காணும்போது தனியார் முதலீடு பெருகிவரும் சூழ்நிலையில், தனியார் நிறுவனங்கள் இடஒதுக்கீட்டு முறையை ஏற்றுப் பின்பற்றாததால், ஆண்டாண்டுக் காலமாகப் போராடிப் பெற்ற சமூக நீதிக் கொள்கையில் முழுப் பயனும் பல வகையிலும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு கிடைக்காமல் போய் விடுகிறது. எனவே, முதல்கட்டமாக அரசின் அனுமதியோ நிதியுதவியோ பெற்று நடைபெறும் தனியார் நிறுவ னங்களில், இடஒதுக்கீட்டு முறையை ஏற்று நடைமுறைப்படுத்துவதற்கு உரிய வழிவகையை மத்திய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
மேலும் மகளிர் இடஒதுக்கீடு, சிறுபான்மையினர்க்கு இடஒதுக்கீடு, மத்திய ஆட்சி மொழியாகத் தமிழ், வேலை நிறுத்த உரிமை, நதிநீர் இணைப்பு மாநில சுயாட்சி உள்ளிட்ட 4 முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.              (விடுதலை 5.3.2006)
 
-------------------- கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் 25-1-2014 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

29 comments:

தமிழ் ஓவியா said...


மருத்துவக் காப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?


மருத்துவச் செலவு என்பது திடீரென வரக் கூடியது. ஆதலால் மருத்துவக் காப்பீட்டு எடுத்து வைத்துக் கொள்வது மிக நல்லது. தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் நம்மிடம் பிரீமியத் தொகை பெற்றுக் கொண்டு காப்பீடு அளிக் கின்றன. அதுவும் சில நோய்களுக்குள், அவசர சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சைகளுக்கு மட்டுமே. அதுபோல பொருளாதார வசதி இல்லாத ஏழை களுக்காகக் கொண்டு வரப்பட்டது முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம். இத்திட்டத்தின் பயனைப் பெற விண்ணப்பிப்பது எப்படி? அதற்கான தகுதிகள் என்ன? ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்பது என்ன?

நமக்கு ஏற்படும் சில மருத்துவ உதவிகளுக்குத் தேவையான பணத்தை அரசே செலுத்துவதுதான் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.
தகுதிகள்: இத்திட்டத்தின் பயனைப் பெற ஒரு குடும்பத்தின் ஆண்டு வருவானம் 72,000 ரூபாய்க்குக் கீழே இருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்: கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனில் கிராம நிர்வாக அலுவலரிடமும், நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்கள் எனில்தாசில்தாரிடமும் வருமானச் சான்றிதழ் வாங்கிக் கொடுக்கவேண்டும். குடும்ப அட்டை இருக்க வேண்டும். குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் பயனைப் பெற முடியும்.
எங்கே விண்ணப்பிப்பது?

ஒவ்வொரு மாவட்ட அலுவலகத்திலும் காப்பீட்டுத் திட்ட மய்யம் இயங்கி வருகிறது. அந்த மய்யத்திற்குச் சென்று விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களைக் கொடுக்கவும், பின்னர் அவர்கள் சொல்லும் தேதியில் குடும்பத்துடன் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவும். புகைப்படம் எடுக்கப்பட்டதும் ஓரிரு நாட்களில் மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கப்படும்.

பயனை எப்படி பெறுவது?

இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் பதிவு பெற்ற தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்பெற முடியும். இதன் மூலம் கீழ்க்கண்ட சிகிச்சைகளைப் பெற முடியும். இதயம் மற்றும் இதய நெஞ்சக அறுவைச் சிகிச்சை, புற்றுநோய் மருத்துவம், சிறுநீரக நோய்கள், மூளை மற்றும் நரம்பு மண்டலம், கண் நோய் சிகிச்சை, இரைப்பை (ம) குடல் நோய்கள், ஒட்டுறுப்பு (பிளாஸ்டிக்) அறுவைச் சிகிச்சைகள் , காது, மூக்கு மற்றும் தொண்டை நோய்கள், கருப்பை நோய்கள், ரத்த நோய்கள்.

மருத்துவமனை செல்லும்போது கவனிக்க வேண்டியவை:

சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் முதல் நாள் முதல் சிகிச்சைமுடிந்து வீட்டுக்கு அனுப்பப்படும் நாளிலிருந்து அய்ந்து நாட்களுக்கு செய்யப்படும் பரிசோதனைகளுக்கான கட்டணம் மற்றும் இதர செலவினங்களுக்கான தொகையும் இத்திட்டத்தில் வழங்கப்படும். இலவச சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் முன் அந்த மருத்துவமனையில் காப்பீடுத் திட்ட அலுவலரைச் சந்தித்து மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஒரே சிகிச்சை வெவ்வேறு மருத்துவமனைகளில் வெவ்வேறு கட்டணங்கள் பெறப்படுவதுண்டு.

ஆன்லைனில் தெரிந்து கொள்ள: உறுப்பினர் விண்ணப்பப் படிவத்தைப் பெற இந்த இணைப்பில் செல்லவும்.

https://docs.google.com/file/d/1vpMQHGnb QymYPIAxYoW8AFec27t6s6sUNMjA IJdGJUtzluRhC2G9 kqJI5aMS/edit.

கிராம நிர்வாக அலுவலரிடம் வாங்க வேண்டிய சான்றின் மாதிரிப் படிவத்தைக் காண இந்த இணைப்பில் செல்லவும்.

https://docs.google.com/file/ d/1oiaOxsjjbSFT3CFsMrR5AgnK6x8jvSGE4bNiGIYX9I EUJH5Do8cP9 JL6WL4J/edit

உங்கள் ஊரின் எந்த மருத்துவமனையில் இந்த வசதிகளைப் பெறலாம் என்பதைத் தெரிந்து கொள்ள இங்கு செல்லவும்.

https://docs.google.com/file/d/1yOaTDA5h&NrGk&uJazqlgFKXvViHqJm ZaFKeRn9v8mm9 ZTsrEKq UNPVCCwv/eidt

மேலதிக விவரங்களுக்கு: இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்வதற்கும், மேற்கொண்டு விவரங்களைப் பெறவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

https://www.cmchistn.com/ இத்தளத்திற்குச் செல்லலாம்.
1800 425 3993 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Read more: http://viduthalai.in/page2/74073.html#ixzz2rRo5t2Uy

தமிழ் ஓவியா said...


போகாத இடம்தன்னிலே போக வேண்டாம்


- மு.வி.சோமசுந்தரம்

விடுதலை வெளியூர் 23.7.2013 இதழில் ஒடிசா, பூரி ஜெகன்நாதர் தேரோட்டத் திருவிழாவில், இத்தாலி நாட்டை சேர்ந்த அம்மையாருக்கு, பக்தி போதையும் பண மோகமும் கொண்ட அர்ச்சகப் பார்ப்பன பண்டாக்களால் அரங்கேற்றிய வன்முறைச் செயலை, ஊசி மிளகாய் நன்கு எடுத்துக்காட்டி, பார்ப்பன பாரதியைக் கொண்டே வழிமொழியச் செய்துள்ளது பொருத்தமாக இருந்தது.

ஆணவமும், அகங்காரமும் கொண்ட அக்ரகார அர்ச்சகர்கள் பணம் தின்னும் பேய்கள் என்பதை விளக்கும், பூரி ஜெகன்நாத விழாவில் நடந்த கொடிய செயலை வேதனை யுடன், சென்னையை சேர்ந்த திரு. பி.இராமதாஸ், தி இந்து (23.7.2013) இதழில் ஆசிரியருக்கு கடிதம் பகுதி யில் கூறியுள்ளதைக் காண்போம்.

பூரியில், சிட்டாரிஸ்ட் அம்மையா ருக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி படித்தபோது நான் ஆச்சரியப்பட வில்லை. எழில் தோற்றத்துடனும், வழிபடத்தக்கதுமான லார்ட் ஜெகன்நாதன் கோயிலுக்கு யாத்ரீகர் களாக வரும் பெரும்பான்மையோ ருக்கும் இதே அவல நிலைதான். இதில் வித்தியாசம் இல்லை. ஒரு நண்பர் குழுவை 2011-ஆம் ஆண்டு ஒடிசாவுக்கு அழைத்துச் சென்றேன். மரத்தால் செய்யப்பட்ட ஜெகன்நாதர், பாலபத்ரா, சுபத்ரா கடவுள் பொம் மைகள் கருவறையில் ஒளி வீசி காணப்பட்டன.

நாங்கள் (கூட்டத்தில்) மெதுவாக நகர்ந்து கருவறை அருகில் சென்ற போது, அங்கிருந்த அர்ச்சகர்கள் எங்களை இழுத்து முரட்டுத்தனமாக வெளியே இழுத்தார்கள். அதில் ஒருவன் என்னை தள்ளி என் தலையை லார்ட் பாதங்களில் அழுத்தி, என்னை அசைய விடாமல், தலையைத் தூக்கவிடாமலும் வைத்து, நான் பல நூறு ரூபாய்களைக் கொடுத்தபிறகு என்னை விடுவித்தான். அர்ச்ககர்கள் எங்களை அடுத்ததாக கடவுள்களை சுற்றிவர சொன்னார்கள். அந்த குறுகிய பாதையில் வேறு பல அர்ச்சகர்களைப் பார்த்தோம். அவர்கள் மேலும் பணம் கொடுக்கும்படி நச்சரித்தார்கள்.

இது சூடுபட்ட பூனை போன்ற ஒருவரின் ஒளிவு மறைவற்ற ஒப்பாரி. மக்களின் பணத்தை உறிஞ்சும் அட்டை யாக செயல்படத்தான் கோயில்கள் கட்டப்பட்டன என்று அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியர் கூறியுள்ளார். பணத்தை பறிகொடுத்த துடன், அறிவையும் அடைமானம் வைக்கத் தயாராக உள்ளவரை என்னவென்று அழைப்பது? முட்டாள் என்று அழையுங்கள் என்று சரியான பதிலை அறிவு ஆசான் சொல் லிவிட்டாரே.

தந்தை பெரியார் சுருங்கச் சொல்லி விளங்க வைத்ததை தத்துவமாக பாடல் வரிகளாக
பேருற்ற உலகிலுறு சமயமத நெறியெலாம் பேய்ப்பிடிப் புற்ற பிச்சுப்
பிள்ளைவிளையாட்டென உணர்ந்திடா துயிர்கள் பல
சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தேன்
சாத்திரக் குப்பையும் தணந்தேன் என
வடலூர் வள்ளலார் கூறியுள்ளார்.

இதே பூரி செகன்நாதன் கோயி லுக்குச் சென்ற மேனாள் இந்திய பிரதமர் இந்திராகாந்தி அம்மையாரை கோயிலின் உள்ளே செல்ல அனுமதிக்க வில்லை. காரணம் அவரின் கணவர் இந்து அல்லவாம். போகாத இடந் தன்னில் போவதால்தானே இந்த வேடிக்கை பிள்ளை விளையாட்டெல்லாம்.

Read more: http://viduthalai.in/page2/74074.html#ixzz2rRoLxjf4

தமிழ் ஓவியா said...


மார்பகப் புற்றுநோய் ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம்மார்பகப் புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் உடலில் இருப்பதை ரத்தப் பரிசோதனை மூலமாக கண்டறியும் நவீன தொழில்நுட்பம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

எலிகளை வைத்து நடத்தப்பட்ட சோதனையில், மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் உடலில் இருப்பதை ரத்த பரிசோதனையில் கண்டறியும் முறை வெற்றி பெற்றுள்ளதாகவும், தற்போது இது மனிதர்களிடம் சோதனை முறையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த முறை பயன்பாட்டுக்கு வந்தால், மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளித்து பல உயிரிழப்புகளை தவிர்க்கலாம்.

Read more: http://viduthalai.in/page3/74076.html#ixzz2rRoZYKpR

தமிழ் ஓவியா said...


ஆதிமூலம்: தமிழ் நவீனத்துவத்தின் அடையாளம் - சுயமரியாதைப் பார்வை


- ஏ.எஸ். பன்னீர்செல்வன்தமிழில் நவீனத்துவத்தின் பயணம் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளலாரிலிருந்து தொடங்கு கிறது. வள்ளலார் அவரது படைப் புத் திறனின் உச்சத்தை எட்டிய சமயத்தில்தான் காலனியாதிக்க நிர்வாகம் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் ஆர்ட் என்னும் அமைப்பைக் கையகப்படுத்திக்கொண்டது. 1852-ல் அலெக்ஸாண்டர் ஹுண்டர் என்பவரின் முயற்சியால் உருவான தனியார் அமைப்பு இது. சுதந்திரப் போராட்டம் பரவிக் கொண்டிருந்த காலம் அது. பலவிதமான சமூக இயக்கங்கள் தோன்றிக் கொண் டிருந்தன. மதராஸ் மாகாணத்தின் அரசியல் களம் பெரும் மாறுதலுக்கு உள்ளானது. நமக்கேயான பாணியைக் கண்டடையும் தேடல், அனைத்து விதமான கதையாடல் களின் படைப்பு சார்ந்த முனைப் புகள் மாற்றம்கொள்வதில் பெரும் பங்காற்றின. டி.பி.ராய் சவுத்ரி, கே.சி.எஸ். பணிக்கர் ஆகிய இரு ஓவியர்களும் அர்த்தமுள்ள செயல் பாடுகளில் ஈடுபாடும் செயலூக்கமும் கொண்டவர்கள். மேற்கத்திய உணர்வியல்புகளை இங்கே நகல் எடுக்காமல் இந்தியாவுக்கான நவீனத்துவம் என்னும் கருத்தியலை உருவாக்க வேண்டும் என அவர்கள் முடிவுசெய்தார்கள். காலனியாதிக்கத்துக்கு எதிரான காங்கிரஸின் போராட்டத்தைப் போலவே இவர்களது அணுகு முறையும் நாடு தழுவியதாக அமைந் தது. தமிழ் மண்ணில் நடை பெற்றுக்கொண்டிருந்த இன்னொரு போராட்டத்தையும் இந்தக் கல்லூரி கூர்ந்து கவனித்தது. அதுதான் சுயமரியாதை இயக்கம்.

சுயமரியாதை இயக்கத்தின் பங்களிப்பு சுயமரியாதை இயக்கத்தின் பண்பாட்டு நடவடிக்கைகள் இந் தியப் படைப்பாற்றலின் பன்மொழி சார்ந்த தன்மையைத் தக்க வைத்துக் கொள்வதில் பல விதங்களிலும் பங்காற்றின. பன்முகத் தன்மை கொண்ட துணைக் கண்டத்து மரபு ஒற்றைப்படைத் தன்மை கொண்ட தாக மாறிவிடாமல் தடுத்த பண் பாட்டுரீதியான முதல் முயற்சி என்று சுயமரியாதை இயக்கத்தைச் சொல்லலாம். திரைப்படம், நாடகம், இலக்கியம், இசை, காட்சிக் கலை ஆகிய அனைத்து விதமான கதை யாடல்களிலும் இந்த இயக்கத்தின் பண்பாட்டுத் தளம் பரவியிருந்தது. இண்டியன் பீப்பிள்ஸ் தியேட்டர் அசோசி யேஷன், புரோக் ரஸிவ் ஆர்டிஸ்ட்ஸ் குரூப் ஆகிய இந்திய இடது சாரிக் கலை இயக் கங்களின் பங்களிப்புகள் செறிவாக ஆவணப் படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் சுயமரியாதை இயக்கத்தின் பண்பாட்டு வரலாறு அவ்வாறு எழுதப்படவில்லை. பெருமைமிகு வழித்தோன்றல் ராய் சௌத்ரியும் பணிக்கரும் இந்தியக் கலையின் அனைத்திந்திய அளவிலான எழுச்சியைப் பிரதி நிதித்துவப் படுத்தினார்கள் என்றால் எஸ்.தனபால், ஏ.பி.சந்தானராஜ், எ.முனுசாமி போன்றோர் சுய மரியாதை இயக்கத்தால் விளைந்த கூடுதலான நுட்பங்களைப் பிரதி நிதித்துவப்படுத்தினார்கள். தனபால் சுயமரியாதை இயக்கத் தவர்களுடனும் தமிழ் உணர்வியல் புகளைப் பிரதி நிதித்துவப்படுத்திய ப.ஜீவானந்தம் போன்ற இடது சாரிகளுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அற்புதமான ஓவியர் என்னும் நிலையிலிருந்து தொடங்கி நவீன சிற்பியாக மாறிய தனபால், பன்முக ஊடகங்கள் மற்றும் கலை சாதனங்களைத் திறமையுடன் கையாள்வது குறித்த கருத்தியலைச் சென்னைக் கலைக் கல்லூரிக்கு அளித்தார். சந்தான ராஜின் அபாரமான கோடுகள் ஓவியம் தீட்டுவது குறித்த கோட் பாடுகளில் உறுதியான பிடி மானத்தை அளித்தன.

தமிழ் ஓவியா said...

மைய நீரோட்டத் திரைப்படங்களிலிருந்தும் சமூக அரசியல் இயக்கங்களிலிருந்தும் உத்வேகம் பெற்ற முனுசாமியின் கலை சமூகத்தில் ஆழ மாக வேர் கொள்ளும் கருத்தியலை அளித்தது. இந்த மரபின் பெருமை மிகு வழித் தோன்றலாக விளங் கினார் ஆதிமூலம். ஓவி யங்கள், கோட் டோ வியங்கள் ஆகியவற்றை அவர் உருவாக்கினார். கறுப்பு வெள்ளையிலும் வண்ணங்களிலும் பரிசோ தனைகள் செய்தார். அரூப ஓவியங்களைத் தீட்டி னார்.

பல்வேறு தனிக் கருத்துகளின் அடிப்படையில் பணிபுரிந்த அவர் கோட்பாட்டு ரீதியாக அவற்றை விரிவுபடுத்தினார். அவரது கருத்தியல்சார் பிரபஞ்சம் அற்புதமான அடுக்குகளால் ஆனது. கலை சார்ந்த உணர்வியல்புகளில் சமகாலத் தன்மை கொண்டது. தமிழ் நவீனத்துவம் குறித்த விரிவான பரிசோதனைகளின் எல்லைகளுக்குள் உள்ளூர் பாணிகளிலிருந்தும் தன் கலைக்கான கருத்துகளைப் பெற்றார். எல்லைகளைத் தொடர்ந்து விரிவு படுத்திக்கொண்டே இருந்தார். ஆதிமூலம் பள்ளி நவீன தமிழிலக்கியத்தின் முக்கிய மான ஆளுமைகளுடன் ஆதிமூலம் நெருக்கமாகப் பணிபுரிந்திருக்கிறார். அவர் கூர்மையான அரசியல் பார்வை கொண்டவர். சுயமரியாதை இயக்கத்தின் விடுதலைநிலைப் பண்புகளை உணர்ந்துகொண்டவர். சாதிரீதியான சகிப்பின்மைக்கு எதி ரான ஜனநாயகப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் மக்களின் மொழி மற்றும் பண்பாட்டில் உள்ள உயிர்த்துடிப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் விரும் பினார். அதே நேரம், கலையை ஜன நாயகபூர்வமாக முன்னெடுத்துச் செல்வதற்கும் வெகுஜனத் தோரணை களுக்கும் இடையில் உள்ள கோடு அவருக்குத் தெரியும். ஒருபோதும் இந்தக் கோட்டை அவர் தாண்டிய தில்லை. வாழ்வு மற்றும் கலை குறித்த தனது அணுகுமுறையில் எவ்விதமான முதிர்ச்சியின்மையும் வெளிப்பட அவர் இடம்கொடுக்கவில்லை. திருச்சி அருகேயுள்ள கீராம்பூர் கிராமத்தில் தொடங்கி உலகின் பல முக்கியமான கலை அரங்கங்கள் வரை ஆதிமூலத்தின் கலை பயணம் செய்திருக்கிறது. இந்தப் பயணத்தில் குறிப் பிடத்தக்கது அவரது கலை நேர்மை. பல ஊடகங்களையும் பல பரப்புகளையும் அவர் பயன்படுத்தி யிருக்கிறார். எண்ணெய், பென்சில், பேனா, கரித்துண்டு, பிரஷ், கத்தி, கைக்குட்டை, நுனிவிரல் போன்ற வற்றைப் பயன்படுத்திக் கல், பீங்கான், கான்வாஸ், சுவர்கள், துணி என்று எதிலும் வரையவும் தீட்டவும் செய்வார். ஊடகம் எதுவாயினும், அவரது கலையின் தனித்த ஆளுமை வெளிப்பட்டது. வெகுஜன ஊடகங் களுக்கான அவரது படைப்புகள் பலரும் அணுகும் தன்மையோடு இருந்தாலும் அதில் எந்த விதமான சமரசமும் இருந்ததில்லை. 1968 முதல் 2008 வரை வாழ்ந்த இரண்டு தலைமுறை தமிழர்களுக்கு அவர் ஒரு தனிநபர் கலைரசனை வகுப்பாகத் திகழ்ந்தார். சமகாலத் தமிழ்ப் பதிப் பகங்களிடம் தற்போதுள்ள துடிப் பையும் நேர்த்தியையும் வர்ணங்கள் பற்றிய சீரிய கருத்தமைவையும் தந்ததில் ஆதிமூலம் முக்கியப் பங்கு வகித்தார். நன்றி: ஃப்ரண்ட்லைன், தமிழில்: அரவிந்தன், கவிதா முரளிதரன். (ஜன. 15 ஆதிமூலம் நினைவு நாள்).

Read more: http://viduthalai.in/page4/74077.html#ixzz2rRomeDxX

தமிழ் ஓவியா said...

சாதி ஒழிப்பை கையில் எடுங்கள்!'' பெரியார் விருது விழாவில் கி.வீரமணி

பிற இதழிலிருந்து....

சாதி ஒழிப்பை கையில் எடுங்கள்!''
பெரியார் விருது விழாவில் கி.வீரமணி

இந்த ஆண்டுக்கான பெரியார் விருது ஒன்பது பேருக்கு தரப்பட் டுள்ளது! பறை இசை, கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், உறியடித்தல்... என்று கோலாகலமாக, திருவிழாபோல், சென்னை பெரியார் திடலில் கி.வீரமணி தலைமையில் 'திராவிடர் திருநாள் மூன்று நாள்கள் நடந்தது. அதில் பத்திரிகை, எழுத்து, இசை, விமர்சனம் என்று இயங்கும் ஒன்பது பேருக்கு பெரியார் விருதுகள் வழங்கப்பட்டன.

விருது பெற்றவர்கள் பேச்சில் இருந்து...

இதழாளர் ஏ.எஸ்.பன்னீர் செல்வன்: ''யார் ஒருவன் இந்தச் சமூகத்தில் நீதி நிலைக்கிறது என்று நினைக்கிறானோ... யார் ஒருவன் இந்தச் சமூகத்தின் நீதி ஒரு குறிப் பிட்ட மக்களுக்கு மட்டும் சொந்த மல்ல; அனைவருக்கும் சமமானது தான் என்று பரந்த பார்வை கொள்கிறானோ... அவனே சிறந்த பத்திரிகையாளனாக இருக்க முடியும். என்னைப் பொறுத்தவரையில் சுய மரியாதை இயக்கம் என்பது, அடிப்படையில் ஒரு மனி தனாக செயல்படுவதற்கான பார்வையைக் கொடுத்து இருக்கிறது.''

எழுத்தாளர் இமையம்: ''என்னுடைய தந்தையும் தாயும், நான் படிக்க வேண்டும்; மனித னாக இருக்க வேண்டும் என்று விரும்பவில்லை. அவர்கள் மூடநம்பிக்கைகளை எனக்குள் விதைத்தனர். ஆனால், நான் சுயசிந்தனை உள்ள மனிதனாக மாறியதற்குக் காரணம் பெரியார்தான்!''

எழுத்தாளர் பாமரன்: ''நான் சின்ன வயதில் ஒழுங்காகத்தான் இருந்தேன். என்னைக் கெடுத்ததே இந்த மாதிரி கறுப்புச் சட்டை போட்டவர்கள் தான். செவ்வாய்க்கிழமை காமாட்சி யம்மன் கோயிலுக்குப் போவேன். போகும் வழியில் சுவரில், 'பச்ச ரத்தம் குடிக்கும் பூசாரி, பால்டாயில் குடிப்பானா?, 'பரிசுத்த ஆவியால் இட்லி வேகவைக்க முடியுமா? என் றெல்லாம் எழுதி இருக்கும். இதைப் பார்த்துக்கொண்டே சென்றால், எப்படி விளங்கும்? எல்லாத்தையும் விட்டுட்டேன். நம் இயக்கத்தைப் பற்றியும் விமர்சனம் செய்து எழுதி இருக்கிறேன். ஆனால், அதை எல் லாம் மறந்து எனக்கு விருது கொடுத்து இருக்கிறார்கள்.'' எழுத் தாளர் பிரியா பாபு: ''இந்த விருதைப் பெற்ற எனக்கு இரண்டு வகையான மகிழ்ச்சி. ஒன்று, பொங்கல் திருநாள் அன்று திருநங்கைகளுக்கு புது வெளிச்சம் கிடைத்து இருக்கிறது. அடுத்து, என்னுடைய தேடல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர இந்த விருது உத்வேகமாக அமைந்து இருக்கிறது. திருநங்கைகளுக்கு வாய்ப்பு கொடுப்பதும் இல்லை; வாய்ப்பு கிடைப்பதும் இல்லை. ஒரு வாய்ப்பை மட்டும் எங்களைப் போன்றவர்களுக்குக் கொடுத்துப் பாருங்கள்... திருநங்கைகள் எவ்வளவு சாதிப்பார்கள் என்பது புரியும்.'' டிரம்ஸ் சிவமணி: ''சிறுவயதில் இருந்தே இசையோடு வளர்ந்தவன் நான். என் வீட்டுப் பக்கத்தில் ஒரு சுடுகாடு இருந்தது. அங்கு வாசிப் பதைக் கேட்கும்போது அருமையாக இருக்கும். அப்படி என்னுள் ஆர்வம் கலந்து வளர்ந்ததுதான் இசை.''

தமிழ் ஓவியா said...


ஆவணப்படத் தயாரிப்பாளர் நிழல் திருநாவுக்கரசு: ''பெரியாரின் கருத்துக்கள் மீது, சிறு வயதில் இருந்தே ஆர்வமும் பரிச்சயமும் இருந்தது. அதன் மூலமாக தமிழ் சமுதாயத்துக்கு தேவையான பணி களைத் தொடர்ந்து செய்து வந்தேன். தமிழகத்தில் மறைக்கப்பட்ட இசை யாளர்களைக் கண்டு அவர்களது வரலாற்றை ஆவணப்படுத்துவதற்கு பெரியாரின் கருத்துக்கள் உறுதுணை யாக இருக்கின்றன.'' எழுத்தாளர் தமிழ்மகன்: ''என் அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு சின்னஞ்சிறு வயதில் இந்தத் திடலுக்கு முதன்முதலில் வந்தேன். மேடையில் பெரியாரைப் பார்த்தேன். அந்த மேடையில் எனக்கு அவர் பெயரில் விருது வழங்கப்பட்டுள்ளது. பெரியாரை இழிவுபடுத்திப் பார்க்க ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. ஆனால், அவர்களால் வெல்ல முடியாது.'' நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்: ''விபூதி பூசிக்கொண்டு விழாவுக்கு வந்து இருக்கிறேன்னு பார்க்கு றீங்களா? நான் இறை நம்பிக்கை உள்ளவன். ஆனால் மூடநம்பிக்கை இல்லாதவன். எந்த நாட்டுக்குச் சென்றாலும் தமிழன் தனித்துத் தெரிவான். தமிழனால் முடியாதது எதுவுமே கிடையாது.'' பேராசிரியர் அ.மார்க்ஸ்: ''எனக்கு விருதுகள் கொடுக்க யாரும் தயாராக இல்லை. அப்படி விருதுகள் கொடுக்க முன்வந்தாலும், ஏதாவது கார ணத்தைச் சொல்லி நான் கழன்று விடுவது வழக்கம். பெரியார் அறிவுப் புரட்சி செய்தார். அவரது பெயரால் வழங்கப்பட்ட இந்த விருது, எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.''

இப்படி ஒவ்வொருவரும் தங்களது எண்ணங்களை பதிவு செய்தார்கள்.

தலைமை உரையாற்றினார் திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி. ''திராவிடர் கழகத்துக்காரர்களுக்குக் கூட கலை உணர்வு இருக்கிறதா... கலைஞர்களை அழைத்து பாராட்டு கிறார்களே என்று சிலர் எண்ணு கிறார்கள். எங்களுக்கு கலைஞர்கள் மீதும் எழுத்தாளர்கள் மீதும் அக் கறை இருக்கிறது. நாங்கள் அவர் களைத் தூக்கி நிறுத்த வேண்டும் என்று எண்ணுகிறோம். அவர்களை ஊக்கப்படுத்தும் பணி எங்களுடை யது. சிங்கப்பூரின் பிரதமராக இருந்தவர் லீ குவான் யூ. அவரது காலகட்டத்தில்தான் சிங்கப்பூர் பெரிய நாடாக வளர்ந்து வந்தது. அவர் 'ஷீஸீமீ னீணீஸீ ஸ்வீமீஷ் ஷீயீ லீமீ ஷ்ஷீக்ஷீறீபீ என்ற ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார். பல நாடுகளைப் பற்றியும் அவரது பார்வையில் சொல்கிறார். இந்தி யாவைப் பற்றி குறிப்பிடும்போது, 'இந்தியா வளராததற்கு முக்கியக் காரணம் சாதி. அதனால்தான் இந்தியா இன்னும் முன்னேறாமல் இருக்கிறது. சாதிகளால்தான் இந்தியா பிரிந்து சிதறிக் கிடக்கிறது என்கிறார். பெரியாரும் இதையேதான் தொலைநோக்குடன் சொன்னார். இத்தகைய கருத்துக்களை விருது பெற்றவர்கள் மக்களிடம் ஆணித் தரமாக எடுத்து உரைக்க வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்தார்.

சாதிகள் ஒழிய அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்!

நன்றி: ஜுனியர் விகடன் - 26.1.2014

Read more: http://viduthalai.in/page5/74080.html#ixzz2rRp1UjiX

தமிழ் ஓவியா said...


வரிப் பாக்கி டிமிக்கிகள்!1. வோடாபோன் இன்டர்நேஷனல் ஹோல்டிங் ரூ.22146 கோடி
2. எல்.அய்.சி. ரூ.11,606 கோடி
3. ஆதித்யா பிர்லாடெல்காம் ரூ.3173 கோடி
4. எச்.டி.எஃப்சி வங்கி ரூ.2653 கோடி
5. ஆந்திரா பேவரேஜ் கார்ப்பரேசன் ரூ.2413 கோடி
6. பிரதீப் பாஸ்பேட்ஸ் ரூ.2374 கோடி
7. மைக்ரோ சாஃப்ட் இந்தியா ரூ.1999 கோடி
8. ஹீரோ ஹோண்டா மோட்டார்ஸ் ரூ.1856 கோடி
9. ஆந்திரப் பிரதேச வீட்டு வசதி வாரியம் ரூ.1753 கோடி
10. அய்.சி.அய்.சி.அய். வங்கி ரூ.1658 கோடி
ரூ.51,661 கோடி

Read more: http://viduthalai.in/page8/74082.html#ixzz2rRpXgb00

தமிழ் ஓவியா said...


சம்பிரதாயமும், ஆன்மீகமும் சங்கராச்சாரியாரின் காலடியில்


கோயில் வரலாற்றையேமீறி முதல் முறையாக காரில் சென்றார் சங்கராச்சாரியார்

சிதம்பரம், ஜன. 25- சிதம்பரம் நடராஜர் கோயிலின் உள்பிரகாரத் தில் வெள்ளிக்கிழமை (24.1.2014) அன்று காஞ்சி ஜெயேந்திரர் தனது காரில் சென்றார். நட ராஜர் கோயில் வர லாற்றில் முதன் முறை யாக கோயில் உள் பிர காரத்தில் காரில் உள்ளே வந்து ஒருவர் தரிசனம் செய்தது இதுவே முதல் முறை. என்று பக்தர் களும் உள்ளூர்வாசி களும் ஆச்சரியத்துடன் தெரிவித்தனர். ஆகம விதிகளின்படி கார் எல்லாம் கோயிலுக்குள் வரலாமா? விதிகளும் எல்லாம் அவர்களின் காலடியில்தானே.

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ஜெயேந் திரர் நேற்று காலை வந்தார். அவரது கார் கோயில் நடனபந்தல் வரை சென்றதால் பர பரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சி தர்கள் சார்பில் கும்ப மரியாதை, மேளதாளத் துடன் அவரை கோயி லுக்கு அழைத்து சென் றனர். பின்னர் மூல வரான நடராஜ சிலை வீற்றிருக்கும் சித்சபை ஏறி சாமி தரி சனம் செய்தார். முன்னதாக ஜெயேந்திரர் வந்த கார் நேராக கீழ் கோபுரத்தின் பக்கவாட்டு வாயில் வழியாக நடன பந்தல் அருகே சென்று நின்றது. சித்சபையில் நடராஜர் தரிசனத்தை முடித்து விட்டு முருகன் கோயில், சிவகாமசுந்தரி அம்பாள் ஆலயத்துக்கும் காரி லேயே சென்று வழிபட் டார்.

முக்கிய பிரமுகர்கள் யார் வந்தாலும் கோபுர வாயிலுக்கு வெளியிலேயே கார் நிறுத்தப்பட்டு அங் கிருந்து நடந்து வந்து தான் கோயிலுக்குள் செல்வார்கள். அறநிலை யத்துறை நிர்வாகத்தின் போது கடந்த அமைச் சர்கள் கார், கோயில் வாயில் அருகே வந்த போது பெரும் சர்ச்சைக் குள்ளானது, ஆனால் தற்போது ஜெயேந்திரர் கார் கோயிலின் நடன பந்தல் வரை சென்றது அப்பகுதி மக்கள் மத் தியில் சலசலப்பை ஏற் படுத்தியுள்ளது.

நடராஜர் கோயில் அறநிலையத்துறையிடம் இருந்து தீட்சிதர்கள் வசம் வந்ததையடுத்து ஜெயேந்திரர் கோயி லுக்கு வந்தது குறிப்பிடத் தக்கது. ஜெயேந்திரர் செய்தியாளர்களிடம் கூறும்போது, சிதம்பரம் நடராஜர் கோயில் மீண்டும் தீட்சிதர்கள் வசம் வந்தது, அவர் களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. கோயில் உள்ளே இருக்கும்பாண் டிய நாயகர்கோயில் திருப்பணி மற்றும் குடமுழுக்கிற்கான முழு செலவையும் சங்கர மடமே ஏற்றுக் கொள் ளும் என்றாராம்!

Read more: http://viduthalai.in/e-paper/74093.html#ixzz2rRpqttk8

தமிழ் ஓவியா said...


திராவிட உணர்வு, இசை, நாகரிகம் நாட்டு மக்களிடம் பொங்கியெழும்


நல்வாய்ப்பைப் பயன்படுத்தி நமது கலைச்செல்வத்தைப் போற்றிப் பாராட்ட வேண்டும்!

முத்தமிழ்ப் பேரவை இசை விழாவில் விருதுகள் வழங்கி கலைஞர் சிறப்புரை

சென்னை, ஜன. 25 - திராவிட உணர்வு, திராவிட இசை, திராவிட நாகரிகம் எனும் உணர்வு நாட்டு மக்களிடம் இன்று பொங்கி யெழும் நல் வாய்ப்பைப் பயன்படுத்தி நமது கலைச் செல்வத்தைப் போற்றிப் பாராட்ட வேண்டும் என முத்தமிழ்ப் பேரவையின் இசை விழாவில் கலைஞர்உரையாற்றினார்.

சென்னை -இராஜா அண்ணாமலைபுரத்தில் திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் பிள்ளை கலையரங்கில் நேற்று (24.1.2014) மாலை நடைபெற்ற முத்தமிழ்ப் பேரவையின் 36 ஆம் ஆண்டு இசை விழாவில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கலந்து கொண்டு, கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி, அவர்களை வாழ்த்திச் சிறப்புரையாற்றினார்.

கலைஞர் அவர்கள் ஆற்றிய உரையில்

36 ஆண்டுக் காலமாக இந்த முத்தமிழ்ப் பேரவை சார்பில் இசை விழா தொடர்ந்து நடைபெறுவது என்பது ஒரு அற்புதமான செய்தி மாத்திரமல்ல, அதிசயமான செய்தியுமாகும்.தொடர்ந்து 36 ஆண்டுக் காலமாக, அதுவும் தமிழ்நாட்டில், இன்னும் சொல்லப் போனால் சென்னை மாநகரில், நாம் இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக் கிறோம் என்பதை எண்ணிப் பார்த்தால், மகிழ்ச்சி ஒருபுறமும், பெருமிதம் ஒருபுறமும் ஏற்படத்தான் செய்கிறது.


தமிழ் ஓவியா said...

36 ஆண்டு இசை நிகழ்ச்சிகளிலும்
பங்கேற்கும் வாய்ப்புப் பெற்றவன்!

இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள உங்களை யெல்லாம் காணும்போது, இசைக்கு அதிலும் குறிப்பாக தமிழிசைக்கு, முத்தமிழ்ப் பேரவை சார்பில் வழங்கப்படுகின்ற விருதுகளைப் பெறு கின்றவர் களைப் பாராட்டுகின்ற, வாழ்த்துகின்ற நிகழ்ச்சியில் இவ்வளவு பேர் கலந்து கொண்டி ருப்பது பெருமைக் குரிய ஒன்றாகும். இதே முத்தமிழ்ப் பேரவையில் அந்தக் காலத்தில் இசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் எல்லாம் நடத்தப்பட்ட அந்தக் காலத்திலேயே நான், அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவன். 36 ஆண்டுக் காலமாக இந்த முத்தமிழ்ப் பேரவையில் நடைபெறுகின்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு, உங்களுடைய மகிழ்ச்சியிலும் பங்கு பெற்று, 36வது ஆண்டு இசை விழா நிகழ்ச்சியிலும் பங்கு பெறுகிற வாய்ப்பினை நான் பெற்றிருக்கிறேன்.

எவ்வளவு பெரிய சூறாவளி வீசினாலும், அதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் இந்த முத் தமிழ்ப் பேரவை நிகழ்ச்சிக்கு கலைஞர் வந்திருக் கிறார் என்று இங்கே பேசிய வழுவூர் ரவி குறிப் பிட்டார். நான் இந்த இயக்கம் என்கிற கப்பலைச் செலுத்துவதே சூறாவளிக்கு இடையிலேதான் (கைதட்டல்), புயலுக்கு இடையிலேதான். எனவே தான் நான் புயல், சூறாவளி, பூகம்பம் இவைகளைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல், என்னுடைய கடமையை நான் செய்ய வேண்டும், என்னுடைய பொறுப்பினை நான் நிறைவேற்றித் தீர வேண்டும் என்கின்ற அந்த நிலையிலே தான் உங்கள் முன்னால் இன்றைக்கும் அமர்ந்திருக்கிறேன். இங்கே பேசிய பொன்முடி அவர்கள் குறிப் பிட்டதைப் போல, கலாச்சாரத்தை ஒரு பக்கத்திலே நாம் வளர்த்து வந்தாலுங்கூட, ஒரு பக்கத்திலே கலாச்சாரச் சீரழிவுக்கான பணிகள் நடைபெற்றுக் கொண் டிருக்கின்றன என்பதை நாம் யாரும் மறந்து விடுவதற்கில்லை.

நம்முடைய நாட்டுப்புறக் கலைகளை வளர்ப் பதற்கு என்று நாம் எடுத்துக் கொண்ட முயற்சி களுக்கிடையே, அப்படி வளர்க்கப்படுகின்ற கலை களை, இன்னொரு பக்கத்தில் சாய்ப்பதற்கு என்றும் ஒரு முயற்சி நடைபெறுவதை நாம் மறைப்பதற் கில்லை. நாட்டுப்புறக் கலைகள் ஆனாலும், அல்லது நகர்ப்புறக் கலைகள் ஆனாலும், நடனக் கலை ஆனாலும், இசைக் கலை ஆனாலும் எந்தக் கலையானாலும் இவை எல்லாம் தமிழர்களுடைய நல்வாழ்விற்காக உருவான கலைகள்தான் என்பதை யும் மறந்துவிடாமல், நாம் நம்முடைய பணிகளை ஆற்ற வேண்டும்.

தமிழ் ஓவியா said...

பேரறிஞர் அண்ணா இசைவிழா நடத்திய
இனிய நிகழ்வு நெஞ்சில் நிழலாடுகிறது!

பேரறிஞர் அண்ணா அவர்களே முன்னின்று திராவிட இசை விழா என்ற விழாவினை காஞ்சிபுரத் திலே நடத்தத் தொடங்கி அந்த விழாவிற்கு தமிழ் நாட்டிலே உள்ள புகழ் பெற்ற கலைஞர்களை எல்லாம் அழைத்து நடத்தினார்கள். அந்த விழா விற்கு என்னுடைய மைத்துனர் சிதம்பரம் ஜெய ராமன் அவர்களோடு நானும் சென்றிருக்கிறேன். அந்த விழா எவ்வளவு சிறப்பாக நடைபெற்றது என்பதையும், அந்த விழாவிற்கு அண்ணா அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளையும், அங்கே ஒரு மூலையில் ஒரு துண்டை விரித்துப் போட்டுக் கொண்டு, அண்ணா அவர்கள் அதிலே அமர்ந்து, அந்த இசை நிகழ்ச்சிகளை ரசித்து மகிழ்ந்ததையும் இன்றைக்கும் நான் என் மனக்கண்ணால் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். அத்தகைய ஆர்வம் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும், அவரால் வளர்க்கப்பட்ட தம்பிமார்களுக்கும் இருந்தது. அது நாளாவட்டத்தில் குறைந்து, பிறகு பாடுவது, மிருதங்கம் வாசிப்பது, பிடில் வாசிப்பது எல்லாம் ஏதோ ஒரு வகுப்பாருக்குத்தான் சொந்தம், எல்லோரும் இதிலே ஈடுபட முடியாது என்ற எண்ணம் தலைதூக்கி நாம் நம்முடைய கலைகளை மறந்து, நம்முடைய கலாச்சாரத்தை மறந்து யாருக்கோ அடிமைப்பட்டவர்களாக ஆகிவிட் டோம். அதைப் பயன்படுத்திக் கொண்டு இன் றைக்கு நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து நாம் நம்முடைய கலைச் செல்வத்தையும் போற்றிப் பாராட்ட வேண்டும் என்ற ஆர்வத்தைப் பெற வேண்டும். அந்த ஆர்வம்தான், கலை நமக்குத் தருகின்ற அந்த ஆர்வம், நம்மை எதிர்காலத்திலே நாம் திராவிட மரபினர், இந்த மரபு இன்றைக்கு மறக்கப் பட்ட மரபாக ஆகியிருக்கலாம் அல்லது மறக்கச் செய்கின்ற முயற்சியிலே சிலர் வெற்றி பெற்றிருக் கலாம். ஆனால் அவர்களையும் மீறி திராவிட உணர்வு, திராவிட இசை, திராவிட நாகரிகம் இவை எல்லாம் நாட்டு மக்களிடத்திலே பொங்கி யெழுவதைப் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் பார்த்தால், நம்முடைய கிராமங்களில் ராவணன் என்ற பெயரைச் சொல்லவே சில பேர் பயப்படுவார் கள். இன்றைக்கு ராவணன் மசாலா என்றே பெயர் வைக்கப்பட்டு, அதற்கு நாட்டிலே கிராக்கி ஏற் பட்டிருக்கின்றது. என்னுடைய முதல் பையனுக்கு என்ன பெயர் வைப்பது என்று வீட்டிலே அப்போது யோசித்த போது, நான் வைத்த பெயர் இந்திரஜித்து என்பதாகும். எல்லோரும் என்னப்பா, இந்திரஜித்து என்று பெயர் வைக்கிறாயே? என்றெல்லாம் கேட்டார்கள். இன்றைக்கு ராவணன் பெயராலேயே மசாலாவுக்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

எதற்காக இதைச் சொல்கிறேன், இந்தப் பெயர்கள் எல்லாம் ஒரு காலத்திலே இகழ்ந்துரைக் கப்பட்டு, பயமுறுத்தப்பட்டு, அதன் காரணமாக மறைக்கப்பட்ட பெயர்கள். அந்தப் பெயர்கள் எல்லாம் இன்றைக்குத் தாராளமாக மக்கள் மத்தியில் புழங்குகின்ற பெயர்களாக ஆகி விட்டிருக்கின்றன, அதனால்தான் சொல்கிறேன், ராவணன் ஆனாலும், இந்திரஜித் ஆனாலும், இவர்கள் எல்லாம் திராவிடக் கலாச்சாரத்திற்கு எடுத்துக் காட்டாக விளங்கக் கூடியவர்கள். அப்படிப்பட்ட பெயர்களை நாம் வைப்பது தவறல்ல. அப்படிப்பட்ட ஒரு நிலை, ஒரு மாறுதல் அன்றைக்கு இருந்த நிலைமையிலே இருந்து படிப்படியாக மாறி, ராவணன் என்று பெயர் வைத்தாலும் பரவாயில்லை என்று எண்ணுகின்ற அளவிற்கு இந்தச் சமுதாயம் முற்போக்கு அடைந்திருக்கிறது என்றால், இதற் கெல்லாம் மூலகாரணம், தந்தை பெரியார், தந்தை பெரியார் என்பதை யாரும் மறந்து விட முடியாது.

தமிழ் ஓவியா said...

பெரியாருடைய துணிச்சல்

அந்தப் பெரியாருடைய துணிச்சலையும், அந்தப் பெரியாருடைய பிரச்சாரத்தையும், அந்தப் பிரச் சாரத்தை மக்களுடைய மனதிலே பதிய வைக்கின்ற அந்தப் பாங்கினையும் ஏற்றுக் கொண்டு, பேரறிஞர் அண்ணா அவர்கள் நீதி தேவன் மயக்கம் என்ற நாடகத்தை நடத்தி, அதிலே அண்ணாவே ராவணன் வேடம் தாங்கி, ராவணனுக்காக வாதாடிய அந்தக் காட்சிகளையெல்லாம் பார்த்தால் எந்த அளவிற்கு இயல், இசை, கூத்து என்ற இந்தக் கலைத் துறையில் நாம் நம்முடைய கொள்கைகளை எல்லாம் பரப்ப முடிந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அப்படிப்பட்ட நிலைமைகளை உருவாக்க இந்த முத்தமிழ்ப் பேரவைகள் பயன்பட வேண்டும் என்று நான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

முத்தமிழ்ப் பேரவை இன்று பிரகாசமான
நிலையில் இருப்பதைக் காண்கிறேன்!

முத்தமிழ்ப் பேரவை தொடங்கிய காலத்தையும் நான் அறிவேன். இடையில் இந்தப் பேரவைக்கு ஏற்பட்ட தொல்லைகளையும் நான் அறிவேன். அதனைத் தூக்கி நிறுத்துகின்ற அந்த முயற்சியில் நான் ஈடுபட்டதையும் நான் நினைத்துப் பார்க்கிறேன். அப்படிப்பட்ட முத்தமிழ்ப் பேரவை இடை யிடையே துவண்டும், இடையிடையே தொய்வு விழுந்தும், நடந்தாலுங்கூட, இன்றைக்கு ஒரு பிரகாசமான நிலையிலே இருப்பதை நான் காண்கிறேன். இது யாருடைய காதிலாவது விழுந்தால், என்ன ஆகுமோ என்ற நினைப்போடு இதற்கு மேல் அது பற்றி நான் எடுத்துரைக்க விரும்பாமல், முத்தமிழ்ப் பேரவையின் இந்தச் சிறப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உங்கள் அனைவரையும் விருது பெற்று இந்தப் பேரவையைப் பெருமைப்படுத்திய கலைஞர் களுடைய நல்லெண்ணத்தையும் பாராட்டி, வாழ்த்தி இந்த அளவோடு என் உரையை நிறைவுசெய்கிறேன்.

இவ்வாறு கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் இயல் செல்வம் விருது அவ்வை நடராஜனுக்கும், ராஜரத்னா விருது கோவில் கண்ணாபம்பூர் கே. நடராஜனுக்கும், இசை செல்வம் விருது நித்யசிறீ மகாதேவனுக்கும், நாதஸ்வர செல்வம் விருது திருகாட்டுப்பள்ளி டி.ஜெ. சுப்பிரமணி யனுக்கும், நாட்டிய செல்வம் விருது கே. சண்முக சுந்தரத்திற்கும், தவில் செல்வம் விருது கோவிலூர் கே.ஜி. கல்யாணசுந்தரத்திற்கும் வழங்கப்பட்டன.

Read more: http://viduthalai.in/e-paper/74095.html#ixzz2rRqHHPLi

தமிழ் ஓவியா said...


வாழ்க்கைஒருவன் வாழ்வது என்பது அவனுடைய வாழ்க்கையால் பிறர் நன்மையடைந்தார்கள், மற்றவர்கள் சுகங் கண்டார்கள் என்று அமையவேண்டும்.
_ (விடுதலை,20.3.1956)

Read more: http://viduthalai.in/page-2/74098.html#ixzz2rRqiQCoF

தமிழ் ஓவியா said...

பார்ப்பன சூழ்ச்சியும் பனகல் ராஜாவும்

டாக்டர். சுப்பராயன் அவர்கள் இப்போது பார்ப்பனர்களின் தாளத்திற்குத் தகுந்தபடி ஆடாததால் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துவிட்டார்கள். நமது சட்டசபை என்பது பெரிதும் விளையாட்டுத் தனத்திற்கும், அயோக்கியத் தனத்திற்கும் உறைவிடமாகி விட்டதாக கருத வேண்டி இருக்கின்றதே தவிர ஏதாவது ஒரு கவுரவமோ கண்ணியமோ, பிரதிநிதித் துவமோ பொருந்தியது என்று சொல்வதற் கில்லை. இந்த ஒரு வருஷத்திற்குள்ளாக 3,4, தடவை நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டாய் விட்டது. இதைப் போன்ற விளை யாட்டு விஷயங்களே மிகுதியும் சட்ட சபைகளில் நடக்கின்றதேயல்லாமல் பொதுஜனங்களுக்கு அனுகூலமாக ஒரு காரியமாவது நடந்திருப்ப தாகச் சொல்வதற்கில்லை.

இப்போது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை யில்லாத் தீர்மானத்தில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் பார்ப்பனர் கட்சி யாகிய காங்கிரஸ் என்கின்ற கட்சியில் 23பேரும், மந்திரி கட்சியில் 7 பேரும், ஜஸ்டிஸ் கட்சியில் 6 பேரும் எழுந்து நின்ற தாகத் தெரிகின்றது. ஆகவே மூன்று கட்சிகளிலும் பிளவு ஏற்பட்டிருக் கிறதாகத் தெரிகிறது. ஆனால் ஜஸ்டிஸ் கட்சியிலும் ஆறு பேர்கள் எழுந்து நின்றதாக ஏற்பட்ட தானது பெரிய முட்டாள்தனமான காரியம் என்றே சொல்லுவோம். ஜஸ்டிஸ் கட்சியார் பார்ப்பனரல்லாதார் நன்மைக்காக சர்க்காருடன் ஒத்துழைப்பதைப் பற்றியும், சர்க்காரோடு ஒத்துழையாமை செய்வதைப் பற்றியும், அவர்களும் பார்ப்பனர்களைப் போல் தேசிய வேஷம் போடுவதைப் பற்றியும் நமக்கு சிறிதும் கவலையில்லை. ஆனால் அந்த அறிவு அதாவது பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு என்கின்ற அறிவு ஒரு சிறிதும் இல்லாமல் நூற்றுக்கு மூன்றுபேர் கொண்ட பார்ப்பன சூழ்ச்சிக்கு அனுகூலமான வழிகளில் பார்ப்பனருடன் ஒத்துழைக்கப் போவது நமது சமுகத்திற்கும் நாட்டிற்கும் ஆபத்தான காரியம் என்பதே நமதபிப் பிராயம். கொஞ்ச காலமாக பனகல் ராஜா அவர்களின் போக்கு மிகுதியும் ஒழுங்கற்ற தாகவே போய்க் கொண்டிருக்கின்றது. கோயமுத்தூர் மகாநாட்டிலிருந்து குற்றத் தின் மேல் குற்றம், அறியாமையின்மேல் அறியாமையாகவே, நடவடிக்கைகள் நடந்து கொண்டு வருகின்றன. இது ராஜா அவர்களின் பெரிய யுக்தியான காரியமாயும் இருக்கலாம். அதனால் ஏதாவது சில வெற்றி ஏற்பட்டதாகவும் காணலாம். ஆனால் இதெல்லாம் பார்ப்பன ரல்லாதார் கட்சி தேய்ந்து போகும்படியானதாகி விடும் என்று நாம் பயப்படுவதுடன் ராஜா அவர் களும் கண்டிப்பாய் சீக்கிரத்தில் உணரக் கூடும் என்றே சொல்லுவோம். டாக்டர். சுப்பராயனிடம் இப்போது ஜஸ்டிஸ் கட்சிக்கு ஏற்பட்ட அவ நம்பிக்கை என்ன வென்று கேட்கின்றோம். இந்த விஷயத்தில் ஜஸ்டிஸ் கட்சிக்குள்ளும் ஏன் பிரிவு ஏற்பட இடம் உண்டாக வேண்டும்? பார்ப் பனர்கள் சைமன் கமிஷன் விஷயமாய் இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்கள் என்பது ராஜா அவர்களுக்குத் தெரியாதா என்று கேட்கின்றோம்.

உண்மையில் இரட்டை ஆட்சியை ஒழிக்கத் தீர்மானம் கொண்டு வந்திருந்தால் அது வேறு விஷயம். அப்படிக்கில்லாமல் இரண்டு மந்திரி களை இரட்டை ஆட்சிக்கு உதவிபுரிய விட்டு விட்டு பார்ப்பன ஆட்சியின் அனுகூலத்திற்காக ஒரு தீர்மானம் பார்ப்பனக் கட்சியார் கொண்டு வந்தால் அதற்கு பார்ப்பனரல் லாதார் கட்சித் தலைவர் என்பவர் உதவி அளிக்கலாமா? என்பது நமக்கு விளங்கவில்லை. சூதாடுவதில் லாபமே ஏற்பட்டாலும் அதுகெட்டகாரியம் என்பதையும் அது எப்படியானாலும் கடைசி யாக நஷ்டத்தையும் கஷ்டத்தையும் கொடுத்தே தீரும் என்பதையும் உணர்ந்து இனியாவது ராஜா அவர்கள் தயவு செய்து இந்த அரசியல் சதுரங்கத்தை விடுத்து கட்சியை உருவாக்க முயற்சிப்பாராக!
- குடிஅரசு - தலையங்கம்-04.03.1928

Read more: http://viduthalai.in/page-7/74112.html#ixzz2rRrMCgmA

தமிழ் ஓவியா said...

ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியாரின் ஞானோதயம்

ராஜீய உலகத்தில் பார்ப்பனர்களுடையவும், அவர்களது வால்களினு டையவும் நாணயமும் யோக்கியதையும் அடியோடு ஒழிந்து அவர்களின் அயோக்கியத் தனம் வெளியாய் விட்டதால் இந்த சமயம் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க யாரும் இல்லாததை அறிந்து ஸ்ரீமான் காந்தி காலத்தில் அவர் நிழலில் யோக்கியதை பெற்ற ஸ்ரீ சி. ராஜகோபாலாச்சாரியார் இப்போது வெகு மும்முரமாய் முழு பார்ப்பன வேஷத்தோடு ஆதரிக்க வெளிவந்து விட்டார்.

முதலாவதாக, மனுதர்ம சாஸ்திரத்தை ஆதரித்து எழுதினார். பிறகு ஜஸ்டிஸ் கட்சியை வைது எழுதினார். இப்போது அரசியலே அயோக்கியத்தனமென்றும் தற்கால மந்திரிகள் ராஜினாமா கொடுக்க வேண்டும் என்றும் எழுதி இருக்கிறார். ஸ்ரீ ஆச்சாரியார் அரசியல் அயோக்கியத்தனம் என்பதை என்றைய தினம் தெரிந்து கொண்டார்? திருட்டுத்தனமாய் பார்ப்பனர்களுடன் சேர்ந்துகொண்டு ஒத்துழையாமைக்கு டில்லியில் உலைவைத்தாரே அன்றா? அல்லது காகிநாடாவில் சட்டசபைக்கு போனவர்களை ஆதரித்தாரே அன்றா? அல்லது ஜமன்லால் பஜாஜ் இடம் ரூ.50,000 வாங்கினாரே அன்றா? அல்லது புதுப் பாளையம் ஜமீன்தாரிடம் 10,000 ரூபாய் பெறுமான தோப்பு தானமாய் வாங்கினாரே அன்றா? அல்லது ஸ்ரீ வெங்கட்டரமணய்யங்காருக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்க நாயக்கர்மார்கள் கிராமங்களில் சுத்தினாரே அன்றா? அல்லது மது விலக்கின் பெயரால் சுயராஜ்யக் கட்சிக்கு ஓட்டுச் செய்யும்படி பத்திரிகைகளில் கோடு கட்டிய குறள்கள் எழுதிவந்தாரே அன்றா? அல்லது சட்டசபைத் தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சிக்குப் பலம் குறைந்ததாகத் தெரிந்தவுடன் சென்னைக்கு ஓடி டாக்டர் சுப்பராயனை முதல் மந்திரி ஆக்கினாரே அன்றா? அல்லது தமிழ் நாட்டில் எந்தப் பார்ப்பனரும் வெளியில் தலைகாட்டுவதற்கு யோக்கியதை இல்லாமல் போன சமயம் பார்த்து ஸ்ரீமான் காந்தியை தமிழ் நாட்டுக்கு அழைத்து வந்து வருணாசிரமப் பிரச்சாரம் செய்வித்து அவரை அடியோடு ஒழித்தாரே அன்றா?

அல்லது ஸ்ரீமான் காந்தி செய்த பிரச்சார தைரியத்தை வைத்துக் கொண்டு மனுதர்ம சாஸ்திரப் பிரசாரம் செய்யத் துணிந்தாரே அன்றா? அல்லது புதுப்பாளையத்தில் பார்ப்பனரல்லாத ஜமீன்தாராகிய ஸ்ரீ ரத்தின சபாபதி கவுண்டர் தானமாய் கொடுத்த தான பூமியில் இருந்து கொண்டு பத்மாசூரன் கதைபோல் அந்த சமுகத்தையே ஒழிக்க ஒரு பத்திரிகை சீக்கிரத்தில் ஆரம் பிக்க முடிவு செய்தாரே அன்றா? அல்லது இவர் பார்ப்பனருக்கு அனுகூலமாக பிடித்து வைத்த மந்திரிக்கு பார்ப்பனரல்லாதார் அபிமானம் சிறிது தோன்ற ஆரம்பித்ததே அன்றா? என்று கேட்கின்றோம். நமது ஆச்சாரியாருக்கு தானும் தன் இனமும் என்ன அயோக்கியத்தனம் செய்தாலும் அது காந்தீயம், ஒத் துழையாமை, தேசாபிமானம், ஆஸ்ரமத் தன்மை முதலியவை ஆகி விடு
கின்றது.

பார்ப்பனரல்லாதார் நன்மைக்காக ஏதாவது ஒரு சிறுநன்மை காணப்பட்டால் அது திடீரென்று தேசிய அயோக்கியத்தனமாகி விடுகின்றது. இதுவே தற்கால பார்ப்பனரல்லாதார் நிலைக்கு உதாரணம் போலும். நம்மவரே நம்ம குலத்தைக் கெடுக்கக் கைப்பிடியாய் இருக்கும் போது இரும்பு என்ன செய்யும்?, என்று ஒரு மரம் சொல்லிற்றாம். அதுபோல் பார்ப்பனரல்லாதாரிலே உள்ள கோடாலிக் காம்புகளை நினைக்கும்போது ஸ்ரீராஜகோபாலாச்சாரியாரின் நடவடிக்கை நமக்கு ஆச்சரியமாகத் தோன்றவில்லை.
- குடிஅரசு - தலையங்கம்-01.04.1928

Read more: http://viduthalai.in/page-7/74112.html#ixzz2rRrcykE0

தமிழ் ஓவியா said...


செய்திச் சிதறல்கள்!

சுதந்திரம்

சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவுக்கு 8 அடுக்குக் காவல்துறைப் பாதுகாப்பு (சுதந்திரம் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்; முன்பு ஒரு தடவை இந்தியப் பிரதமர் கூண்டுக்குள்ளிருந்து தேசியக் கொடியை ஏற்றினார் என்பதும் நினைவூட்டத்தக்கது).

வெற்றி! வெற்றி!!

இன்று சென்னை கடற்கரையில் குடியரசுத் தின விழா நடைபெற்றது. ஆளுநர் ரோசய்யா தேசியக் கொடியை ஏற்றினார். முதல் அமைச்சர் பங்கு கொண் டார். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வெற்றி! வெற்றி! எனும் தொடங்கும் ஒரே பாடலுக்கே நடனம், ஒயிலாட்டம், கரகாட்டம் என்று பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த இரு பால் மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினர் - சிறப்பாகவே இருந்தது.

வெற்றி! வெற்றி! என்று முதல் அமைச்சரைக் குளிர வைப்பதற்கானவை அதற்குள் இடம் பெற்றி ருந்தன; நமது அதிகாரிகள் அரசியல்வாதிகளாக மாறி விட்டனரோ என்ற நினைக்கத் தோன்றுகிறது. அது எப்படியோ போகட்டும்!

அந்தப் பாடல் காளிதேவியிடம் அருள் கேட்பதாக அமைந்துள்ளதே - அது எப்படி? குடியரசு தினம் என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவானது அல்லவா!

அதில் ஒரு ஹிந்து மதக் கடவுளச்சியிடம் பிரார்த்தனை செய்வதாகப் பாட்டு அமையலாமா?

வந்தே மாதரம் பாடல் வேறு வரிகளில் ஒலிக்கிறதா? காளியிடம் வேண்டுகோள்விடுப்பதை மற்ற மற்ற மதக் காரர்கள் ஏற்றுக் கொள்வார்களா? பகுத்தறிவாளர்களின் கருத்து அது பற்றி என்ன? மதச் சார்பற்ற ஓர் அரச மைப்புச் சட்டத்தை ஒரு பக்கத்தில் வைத்துக் கொண்டு அந்த நாட்டின் குடியரசு தின விழாவிலே குறிப்பிட்ட மதத்தின் கடவுளை முன்னிலைப்படுத்தலாமா!

கட்சியின் பெயர்தான் வேறு - ஆனால் நடப்பது ஹிந்துத்துவா ஆட்சி என்று தங்களை அடையாளம் காட்டுகிறதா அ.இ.அ.தி.மு.க. ஆட்சி?
வாழ்க அண்ணா நாமம்!

அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்

மாநிலங்களவைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளராக சின்னத்துரை என்பவர் முதல் நாள் அக் கட்சியின் பொதுச் செயலாளரால் அறிவிக்கப்படுகிறார். மறுநாள் அவருக்குப் பதிலாக வேறொருவர் அறி விக்கப்படும் தமாஷ் ஒருபுறம் இருக்கட்டும்.

முதலில் அறிவிக்கப்பட்டவரை கட்சியின் அடிப்படை உறுப் பினர் உட்பட அனைத்திலிருந்தும் நீக்கி வைக்கும் அதிரடி அறிக்கை கட்சியின் பொதுச் செயலாளரிட மிருந்து வருகிறது என்றால். அடேடே இதற்குப் பெயர்தான் அவரே போல் உண்டா? இதற்கெல்லாம் ஒரு தனி அத்து வேண்டும் என்று சொல்ல ஆரம் பித்து விடுவார்கள்; எழுத ஆரம்பித்து விடுவார்கள்.

ஒரு வேட்பாளரை அறிவிப்பதற்கு முன் அவரைப் பற்றி தீர விசாரித்து அடையாளங்கண்டு அறிவிக்கும் அடிப்படை அணுகுமுறை இல்லையே என்று எவராவது எழுதுவார்கள் என்று நினைக்கிறீர்களா? நல்ல பத்திரிகா தர்மம்!

வேதமந்திரம் குறுந்தகடு

வேத மந்திரம் குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றுள்ளது. ராமானுஜ எம்பார்ஜீயர் வெளியிட, பெற்றுக் கொண்டவர்கள் ஓய்வு பெற்ற முன்னாள் அய்.ஏ.எஸ். அதிகாரி சுந்தரம், உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் என். வெங்கட் ராமன், அறக்கட்டளைத் தலைவர் மோகன் பராசரன், மியூசிக் அகாடமி செயலாளர் பட்டி வேணுகோபால் ராவ் - இதில் அவாளைத் தவிர வேறு எவாளையும் அழைக்காததிலிருந்து என்ன தெரிகிறது? அவாள் என்றென்றும் அவாளாகவே இருக்கிறார்கள் - இது இவாளுக்கு எப்பொழுது புரியப் போகிறதோ?

Read more: http://viduthalai.in/e-paper/74142.html#ixzz2rYe93w7p

தமிழ் ஓவியா said...


ஜோடியைப் பிரித்தஜோசியர்!


திருமணமான ஒருசில மாதங்களிலேயே, கண வனை இழந்த நான், சமீ பத்தில், மறுமணம் செய்து கொண்டேன். சில மாதங் கள் வரை, எங்கள் மண வாழ்க்கை, சந்தோஷமாக சென்றது. இரண்டு மாதங்களுக்கு முன், என் கணவர், தான் வேலை செய்யும் இடத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில், அவருடைய கால் எலும்பு முறிந்து, மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார். ஓர ளவு குணமான பின், வீடு திரும்பிய அவர், தனக்குத் தெரிந்த ஜோசியர் ஒரு வரிடம் குடும்பத்தின் எதிர் காலம்பற்றி கேட்டுள்ளார். பேச்சினிடையே என்னைப் பற்றியும் சொல்லியிருக் கிறார்.

உடனே, அவர் ஜோசி யர், நீ அந்த விதவைப் பெண்ணை மணந்து கொண்டதால் தான், இப் படிப்பட்ட ஆபத்து வந்திருக் கிறது. உன் மனைவிக்கு தோஷம் இருக்கிறது. கூடிய விரைவில் உன் உயிருக்கே கூட ஆபத்து வரலாம். அவளை விட்டு பிரிந்திருப் பதுதான் நல்லது.. என்று சொல்லி, என் கணவரைக் குழப்பி விட்டார்.

அதிலிருந்து எதற்கெ டுத்தாலும் எங்களுக்குள் ஒரே சண்டை, சச்சரவு தான். சிறு சிறு விஷயங் களை கூட பெரிதுபடுத்தி, என்னை அடிக்கவும், திட் டவும் ஆரம்பித்து விட்டார். இதனால், எங்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு, இரு வரும் பிரிந்து விட்டோம். இதற்கெல்லாம் காரணம், அந்த ஜோசியர்தான். இனி மேலாவது, ஒற்றுமையாக வாழ்ந்து வரும் குடும் பத்தைப் பிரித்து வைத்து, அவர்களின் வாழ்க்கையை பாழாக்காமல் இருப்பாரா!

- பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி. மேற்கண்ட செய்தியை வெளியிட்டு இருப்பது உண்மை இதழ் அல்ல - விடுதலை நாளேடும் அல்ல. சாட்சாத் தினமலர் அய்யர்வாள் ஏடு.
(தினமலர் வார மலர் 26.1.2004 பக்கம் 4)

என்னதான் அவர்கள் நமது பகுத்தறிவுப் பிரச் சாரத்தை இருட்டடித்துப் பார்த்தாலும், திரித்து வெளியிட்டு வந்தாலும் அவர்களை அறியாமலேயே உண்மையைக் கக்கித்தான் தீர வேண்டியுள்ளது.

ஜோதிடம் வாழ வைக் கவா? வாழும் குடும்பத்தின் தலையில் கொள்ளி வைக் கவா?

என்பதை ஆறாவது அறிவு இருப்பதாகக் கரு தப்படுகிற மனிதன் சிந் திக்க வேண்டாமா?

மனிதன் பிறக்கிறான். அவன் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகப் பொருத் தம் பார்க்கும் ஜோதிடர்கள், நாய் குட்டிப் போடுகிறதே - அந்த நேரத்தை வைத்து நாய்களுக்கு ஜாதகம் பார்ப்பதுண்டா?

மயிலாடுதுறையில் ஒரு நிகழ்ச்சி! நாய் குட்டிப் போட்ட நேரத்தையும், திரு மணம் ஆக வேண்டிய ஒரு பையன் பிறந்த நேரத்தை யும் கொண்டு சென்று ஒரு பிரபல ஜோதிடரிடம் கொடுத் துப் பொருத்தம் பார்க்கச் சொன்னபோது, சகலப் பொருத்தமும் ஜோடிக்கு ஜோராக இருக்கிறது என்று ஜோதிடர் அடித்துச் சொன் னதுதான் நினைவிற்கு வருகிறது. கறுப்புச் சட் டைக்காரன் சொல்லும் போது கோபம் வெடிக் கிறதே - தினமலரே சொல்லுகிறதே - என்ன செய்ய உத்தேசம்?

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/74192.html#ixzz2re4wCHjW

தமிழ் ஓவியா said...

உலகில் உயர்ந்தது ஆரிய இனமே என்று கொக்கரித்த கொடுங் கோலன் ஹிட்லர் 7 லட்சம் யூதர்களைப் படுகொலை செய்த நாள் இந்நாள் (1945).

இந்நாளை சர்வ தேசப் படுகொலை நினைவு நாளாக அய்.நா., அறிவித்துள்ளது (2005).

தமிழ் ஓவியா said...


மண்சோறு சாப்பிடும் மண்ணாங்கட்டிகள்!


விருத்தாசலம், ஜன.27- விருத்தாசலம் விருத்த கிரீஸ்வரர் கோவிலில் 2 ஆயிரத்திற்கும் மேற் பட்ட பக்தர்கள் மண் சோறு சாப்பிட்டன ராம். விருத்தாசலம் சந்திப்பு சாலையில் ஜெகமுத்து மாரியம்மன் கோவில் உள்ளதாம். இக்கோவிலில் ஒவ் வொரு ஆண்டும் தை மாதம் ஏராளமான பக்தர்கள் திருச்சி சமய புரம் மாரியம்மன் கோவி லுக்கு யாத்திரை செல்ல மாலை அணிவித்து விர தம் இருப்பார்களாம். மேலும், இந்த பக்தர்கள் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மண்சோறு சாப்பிட்டு, கோவிலுக்கு செல்வது வழக்கமாம்.

அதன்படி, கடந்த 19ஆம் தேதி யாத்திரை குழு தலைவர் பாலுகுரு சாமி தலைமையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினராம். விரதம் இருந்த ஆண் பக்தர்கள் மஞ்சள் நிற வேட்டி, துண்டும், பெண் பக்தர்கள் மஞ்சள் நிற சேலையும் அணிந்து தினமும் பூஜை நடத்தி வந்தனராம். இந்த நிலையில், நேற்று விருத்தகிரீஸ்வரர் கோவில் வளாகத்தில் மண்சோறு சாப்பிடும் நிகழ்ச்சி நடைபெற்ற தாம். இதனை முன் னிட்டு, ஜெகமுத்து மாரி யம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டு, முக்கிய வீதி கள் வழியாக விருத்த கிரீஸ்வரர் கோவிலைச் சென்றடைந்தனராம்.

தொடர்ந்து, அங்கு மாலை அணிந்து விரதம் இருந்த ஆயிரக்கணக் கான பக்தர்கள் மண் சோறு சாப்பிட்டு தங் களின் நேர்த்திக் கடன் களை நிறைவேற்றினார் கள். மேலும், மண்சோறு சாப்பிட்ட பக்தர்களி டம் சில பெண்கள் மடிப்பிச்சை எடுத்து, அந்த உணவை சாப் பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினராம். மூட நம்பிக்கைகளில் மூழ்கி இருக்கும் மக்கள் என்று தான் விழிப்புணர்வு பெறுவார்களோ!

Read more: http://viduthalai.in/e-paper/74194.html#ixzz2re5KuKrw

தமிழ் ஓவியா said...


இந்துத்துவா வெறியர்களின் வன்முறை வெறியாட்டம்!

மும்பை, ஜன.27- மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே, நாக்பூர் சுங்கச்சாவடிகளை மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தொண்டர்கள் அடித்து நொறுக்கி சூறையாடியிருக்கின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் சுங்கச் சாவடிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி சிவசேனா, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே, சுங்கச் சாவடிகளில் எந்த ஒரு கட்டணத்தையும் நாம் செலுத்தக் கூடாது. அப்படி செலுத்துமாறு யார் கேட்டாலும் போராடுங்கள்.. சண்டை போடுங்கள் என்று கூறியிருந்தார். இந்த பேச்சை தொடர்ந்து நாக்பூர், தானே மற்றும் அய்ரோலி ஆகிய இடங்களில் சுங்கச் சாவடிகளை அடித்து நொறுக்கி சூறையாடியிருக்கின்றனர் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவினர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/74195.html#ixzz2re5UdtVg

தமிழ் ஓவியா said...


இன்னும் எத்தனைப் பிரதமர்கள் தேவை?

புலி வருகிறது புலி வருகிறது! என்று சொல்லுவது போல, பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு இதோ வருகிறது - இதோ வருகிறது என்று நீண்ட காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது.

1996 தொடங்கி - இதுவரை பல பிரதமர்களைச் சந்தித்து வந்துள்ளது - இந்த மசோதா. மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம், மக்களவையில் நிறைவேற்றப்பட முடியாத நிலைதான் இன்றுவரை; நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தொடர் கூட்டத்தில், இதற்கான சட்டம் மக்களவையில் நிறைவேற்றப்படும் என்று காங்கிரஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் தருணம் என்பதால், அனேகமாக இந்தச் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று எதிர்ப் பார்க்கலாம்.

சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதாதளம் போன்ற கட்சிகள் இதில் உள் ஒதுக்கீடு தேவை என்று வலியுறுத்துகின்றன; இது ஒரு நியாயமான கோரிக்கையாகும்.

உள் ஒதுக்கீடு அளிக்கப்படாவிட்டால், இந்த வாய்ப்பை உயர் ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் கைப்பற்றிக் கொண்டு விடுவார்கள் என்ற அச்சத்தில் அதிகமாகவே நியாயம் உண்டு. மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதியை உயர் மட்டப் பெண்கள் பிடித்தால் அது ஆபத்தாகவே முடியும் என்பதை மறந்துவிட வேண்டாம்!

காங்கிரஸ் இந்த வகையில் தீர்க்கமாக முடிவு எடுத்தால் அதனை யார் எதிர்க்கப் போகிறார்கள்? இந்த எளிய கருத்து காங்கிரசுக்கு ஏன் விளங்கவில்லை என்பது விளங்காத புதிராகவே இருக்கிறது. காங்கிரசில் உள்ள உயர் ஜாதியினர், உள்ளுக்குள் முட்டுக்கட்டை போடுகிறார்களோ என்று அய்யப்படவும் இடம் இருக்கிறது.

மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரி பகுதியினராக இருக்கும் பெண்களின் வாக்குகள், யாருக்குக் கிடைக்கின்றனவோ, அவர்கள்தான் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பதை, மறந்து விடக் கூடாது. உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கப்படுகிறதே, அதே நிலை, சட்ட மன்றங்கள், மற்றும் நாடாளுமன்றத்தில் ஏன் பின்பற்றக் கூடாது?

நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை வெறும் 10.7 விழுக்காடுதான்; உலக நாடுகளின் வரிசையில் இதில் இந்தியாவுக்கு 104 ஆவது இடம் என்பது வருத்தப்பட வேண்டிய ஒன்றாகும். முசுலிம் நாடான பாகிஸ்தான் இப்பிரச்சினையில் 42ஆம் இடமாகும்.

இந்து மதம் - மற்ற மதங்களைவிட பெண்கள் பிரச்சினையில் எவ்வளவுப் பிற்போக்குத்தன மானது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பெண்களுக்கு வாய்ப்புக் கொடுத்தால் தங்கள் ஆற்றலை - சாதனைகளை வெளிப்படுத்தியே தீருவார்கள் என்பதற்கு எத்தனையோ எடுத்துக் காட்டுகள் உண்டு.

கல்வியை எடுத்துக் கொண்டால், மிகவும் தாமதமாகப் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப் பட்டாலும், தேர்வு முடிவுகளில் ஆண்களை பெண்கள் தண்ணீர் காட்டி வருகிறார்களே; இதன் பொருள் என்ன?

மாநிலங்கள், மற்றும் மத்திய அமைச்சரவையை எடுத்துக் கொண்டாலும் பெண்களுக்கு உரிய விகிதாசாரத்தில் இடம் கிடைப்பதில்லை - அப்படியே அமைச்சர் பொறுப்பு அளித்தாலும் சமூக நலத்துறை என்ற ஒன்றை பெண்களுக்காகவே ஒதுக்கி வைத்துள்ளார்கள்.

இதுபற்றியெல்லாம் பெண்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்ச்சி தேவையாகும். இந்தியாவிலேயே பெண்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திவரும் ஒரே இயக்கம் - தந்தை பெரியார் அவர்களின் திராவிடர் கழகமே.

பெண்கள் கவனம் அழகு சாதனப் பொருள் களைச் சுற்றிச் சுழன்று வராமல், முற்போக்குச் சிந்தனையாளர்களாக, தங்களுடைய உரிமை களுக்காகக் களத்தில் இறங்கிப் போராடுபவர் களாக மாற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். பெண்களுக்கு இடஒதுக்கீடு இல்லையென்றால் எங்கள் வாக்குகளும் இல்லை என்று பெண்கள் வீதிகளில் வந்து குரல் கொடுக்கட்டும்! நிச்சயம் விடிவு கிடைக்குமே!

Read more: http://viduthalai.in/page-2/74198.html#ixzz2re5uDMdT

தமிழ் ஓவியா said...


முதலில்...


மனிதத் தர்மத்தை அடிப்படையாக வைத்து மனிதச் சமுதாயத்திற்கு யாராவது தொண்டாற்ற வேண்டுமானால், முதலில் செய்யவேண்டியது பகுத்தறிவுப்படி மக்களை நடக்கச் செய்வதும், சிந்திக்கச் செய்வதுமேயாகும். - (விடுதலை, 25.7.1968)

Read more: http://viduthalai.in/page-2/74197.html#ixzz2re62gto8

தமிழ் ஓவியா said...


சபாஷ் பொதிகை


ஆசிரியருக்குக் கடிதம்

சபாஷ் பொதிகை

இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு பொதிகை தொலைக்காட்சியில் ஜனவரி 14,15,16 ஆகிய நாட்களில் கிராமிய நிகழ்ச்சிகளாகிய ஆண்கள், பெண்கள் பறை இசை, கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கோலாட்டம், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், கிராமியப் பாடல்கள் போன்றவற்றை பிரம்மாண்டமான முறை யில் தயாரித்து காலை முதல் இரவு வரை காண்பித்தார்கள் எந்த விதத் தொய் வுமில்லாமல் மனம் மகிழும் வண்ணம் இருந்தது.
ஜனவரி 17ஆம் தேதி வெள்ளி காலை 9.30 முதல் 10.00 மணி வரை அய்யா என்ற தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் காண்பித்தனர்.

வாழ்க பொதிகை! இதைப் போன்ற நல்லவைகளை மேலும் பொதிகை தொடர்ந்து செய்க என்று கேட்டுக் கொள் கிறேன்.

- எஸ். நல்லபெருமாள், நாகர்கோவில்

Read more: http://viduthalai.in/page-2/74204.html#ixzz2re6E1m9H

தமிழ் ஓவியா said...


கடவுளுக்கு முகவரி உண்டா? விடுதலை வாசகர் வட்டம் சொற்பொழிவில் கேள்வி

மதுரை, ஜன. 27- 12.01.2014 ஞாயிற்றுக் கிழமை மாலை 6.30 மணிக்கு மதுரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பாக 13ஆவது தொடர் சொற்பொழிவு நடைபெற்றது. கூட்டத்திற்கு விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவரும் பணி நிறைவு பெற்ற நீதிபதியுமான பொ. நடராசன் தலைமை தாங்கினார். விடுதலை வாசகர் வட்டத்தின் பொருளா ளர் பெரி.காளியப்பன் வந்திருந் தோரை வரவேற்றார். "பெரி யார் பேழை" என்ற தலைப்பில் சடகோபன் அவர்கள் உரை யாற்றினார். அவரது உரையில் தானாக பிறக்காத மனிதன் தனக்காக மட்டுமே வாழக் கூடாது என்ற தந்தை பெரியார் அவர்களின் கருத்தினை விவ ரித்து பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. விடுதலை "இம்மாத சிந் தனை" என்ற தலைப்பில் மதுரை மாநகர பகுத்தறிவாளர் கழக தலைவர் சுப.முருகானந்தம் இம்மாத விடுதலையில் வந்த செய்திகளை தொகுத்து ஆருத்ரா தரிசனம் பற்றிய விமர்சனம் மோடி வருகிறார் எச்சரிக்கை என்ற அரசியல் கட்டுரை, சிவகாசி மணியம் அவர்கள் எழுதிய கடவுளுக்கு முகவரி உண்டா" என்ற பகுத்தறிவுச் சிந்தனை, விடுதலை ஆசிரியரும் திராவிடர் கழகத்தலைவருமான தமிழர் தலைவர் அவர்களின் வாழ்வியல் சிந்தனையில் நடைப் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்த கட்டுரை மற்றும் பிரா மணாள் உணவு விடுதி பெயர் பலகை அகற்றல் பார்ப்பனர் மாநாட்டில் 10 இட ஒதுக்கீடு போன்ற விவரங்களை விரிவாக பேசி விடுதலையின் செய்திகள் அரசியல் பகுத்தறிவு வாழ்வியல் சிந்தனை இன உணர்வு போன்ற செய்திகளை சுட்டி காட்டியது வந்திருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது. பேச்சாளர் பற்றிய அறிமுகத்தை மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் அ.வேல் முருகன் செய்தார்.

சிறப்புப் பேச்சாளரான மதுரை மாநகர திராவிடர் கழகத் தலைவர் சே. முனியசாமி "அயல் நாட்டு அனுபவங்கள்" என்ற தலைப்பில் அவர் சுற்றிவந்த 12 நாடுகள் பற்றிய அனுவங்களை சுவை பட எடுத்துரைத்தார். புத்தர் கோவிலில் 6 கைகள் உள்ள சிலையில் கையில் வேலா யுதம் சூலாயுதம் இருந்த கட் சியை சுவைபட எடுத்துக் கூறி னார். ஹுண்டாய் கார் கம்பெ னியில் ஒரு நிமிடத்திருக்கு ஒரு கார் தயாரிப்பதையும் ஒரு லட்சம் பேர் அங்கு வேலை செய்வதையும் அவர் கூறும் போது அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். சாலைகள் தூய்மையாக இருப்பதைக்கூறி காரில் செல்ப வர்கள் கூட உதிரும் இலை களை எடுத்து தங்கள் பையில் போட்டுகொள்கிறார்கள். அதே நேரத்தில் சீனர்கள் கடும் உழைப் பாளிகள் என்றாலும் ஏமாற்று பவர்களும் இருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டினார். அங்கு நீதிமன்றங்களில் உரிமை இயல் வழக்குகள் 6 மாதங்களி லும் குற்றவியல் வழக்குகள் 3 மாதங்களிலும் முடிவுக்கு வரு கின்றன என்று அவர் கூறும் போது வியப்பாக இருந்தது. அங்கு அணைகளில் தேங்கி யுள்ள தண்ணீர் 5 ஆண்டு பாசனத்திற்கு பயன்படுகிறது என்றார். ஹாங்காங்கில் உள்ள ஓட்டல்களில் தங்க கதவு செயற்கை வானம் ஆகியவை 1000 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளதை வியந்து பாராட்டி பேசினார். அவரது அனுபவங் கள் அனைவரது கவனத்தை ஈர்த்ததோடு சிந்தனைக்கு விருந்தாகவும் அமைந்திருந்தது. கூட்ட முடிவில் விடுதலை வாச கர் வட்ட செயலாளர் அ. முரு கானந்தம் நன்றி கூறினார்.

Read more: http://viduthalai.in/page-4/74215.html#ixzz2re7jj1ea

தமிழ் ஓவியா said...


இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக செயல்படுவதா? முதலமைச்சருக்கு திமுக ஆதிதிராவிடர் நலக் குழு கண்டனம்


சென்னை, ஜன. 27- தி.மு.க. ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (26.1.2014) மாலை 4 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்திலுள்ள அலு வலகத்தில் தி.மு.க. ஆதி திராவிடர் நலக்குழுச் செயலா ளர் க.சுந்தரம் அவர்கள் தலை மையில் - தி.மு.க. ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி - துணைச் செயலாளர்கள் வி.பி.ராஜன், திருமதி. சீனியம்மாள் ஆகி யோர் முன்னிலையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி சிறப்புரையாற் றினார்.

இக்கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலுள்ள ஆதி திராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் - துணை அமைப் பாளர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன:

திராவிடர் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையான சமூகநீதியின் எதிர்ப்பாளரான ஜெயலலிதா, தான் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பிற்படுத் தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப் பட்ட - தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு எதிராகவும், ஆதிக்க வெறியர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வண்ணம் அவர் களுக்கு ஆதரவாகவும் செயல் பட்டு வருவது அவரது வாடிக் கையான செயல்களில் ஒன்று.

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த போது கொண்டு வந்த - செயல் படுத்திய - நடைமுறைப்படுத் திய பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை, காழ்ப்புணர்ச் சியின் காரணமாக முடக்கி வரும் ஜெயலலிதா, உலகமே வியக்கும் வண்ணம் ஒமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய சட்டமன்றக் கட்ட டத்தை முடக்கி, சிறப்பு மருத் துவமனை என்ற பெயரில் அரைகுறையாக அமைக்கப் பட்டு திறக்கப்பட்டது.

அங்கே பணியாற்றிட விண்ணப்பத் திடக் கோரி, 2013 டிசம்பர் 27 அன்று ஜெயலலிதா அரசு அவ சரமாக ஒரு அறிக்கை வெளி யிட்டுள்ளது. அதில் இடஒதுக் கீடு விதிமுறை பின்பற்றப்பட மாட்டாது என சமூகநீதிக்கு எதிரான ஓர் அறிவிப்பை விடுத்து, பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட மக்களின் எதிரி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபணம் செய்துள்ளார் ஜெய லலிதா.

பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப் பட்ட வகுப்பினைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி, வேலை வாய்ப்புகளில் உரிய இடம் பெற இடஒதுக்கீடுதான் கார ணம். தந்தை பெரியார், பேரறி ஞர் அண்ணா, டாக்டர் அம் பேத்கர் ஆகிய தலைவர்கள் போராடி பெற்றுத்தந்த அந்த உரிமைகளை - தலைவர் கலை ஞர் உள்ளிட்ட இடஒதுக்கீட் டில் அக்கறையுள்ள பிற தலை வர்கள் பாதுகாத்து வரும் அக்கொள்கையினை சிதைக் கின்ற வகையில் ஜெயலலிதா அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

கடந்த 19-1-2014 அன்று திமுக தலைவர் கலைஞர் அவர் கள் இடஒதுக்கீட்டில் நீதிமன் றத்தின் மீதுபழி சுமத்துவதா? என்ற தலைப்பில் உடன்பிறப்பு களுக்கு எழுதிய கடிதத்தில், தமிழகத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு காரணமாகத்தான், இட ஒதுக்கீடு பின்பற்றப் படவில்லை என்று ஜெயலலிதா கூறியிருக் கும் காரணம், மக்களை ஏமாற் றுவதற்கும், சமூக நீதியைக் குழிதோண்டி புதைப்பதற்கு மான ஒன்றே தவிர வேறல்ல.

என ஜெயலலிதாவின் மோசடி களையும் - அவர் சமூகநீதியின் முதல் எதிரி என்பதை விளக்கி யிருப்பதோடு, இடஒதுக்கீடு என்பது திராவிட இயக்கங் களின் மூலாதாரக் கொள்கை என்பதை மனதிலே கொண்டு, இந்த ஆட்சியினர் இனியாவது மனம் திருந்தி அறிவிக்கப் பட்டுள்ள மருத்துவர் தேர்வில், இடஒதுக்கீடு கொள்கை கடைப்பிடிக்கப்படும் என்ற அறிவிப்பினைச் செய்ய முன் வருவார்கள் என்று எதிர்பார்க் கிறேன்.

அதற்குப் பதிலாக நாங் கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று பிடிவாதம் காட்டுவார்களேயானால், அதன் விளைவுகளை அவர்கள் சந்திக்கத்தான் வேண்டியிருக் கும்! என்று ஜெயலலிதாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதை இக்கூட்டம் சுட்டிக்காட்டுவ தோடு,

இடஒதுக்கீட்டுக் கொள் கையில் தொடர்ந்து, திராவிடர் இனத்துக்கு எதிராகவும் - தமி ழினப் பகைவர்களுக்கு ஆதர வாகவும் நடந்து வரும் ஆதி திராவிடர் இன விரோதியும், சமூகநீதி விரோதியுமான ஜெய லலிதாவின் இந்த நடவடிக் கையை இக்கூட்டம் வன்மை யாகக் கண்டிப்பதோடு, தனது போக்கினை மாற்றிக் கொண்டு, இடஒதுக்கீட்டுக் கொள்கை கடைப்பிடிக்கப்படும் என்ற அறிவிப்பினை உடனடியாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள் கிறது

Read more: http://viduthalai.in/page-7/74223.html#ixzz2re8Vds6s

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

வெளுப்பு

செய்தி: அய்.நா. மனித உரிமைகள் அமைப்புத் தேர்தலில் இந்தியா மீண்டும் போட்டி!

சிந்தனை: அதெல்லாம் சரிதான்! சிங்கள அரசின் மனித உரிமைக்கு எதிரான பிரச்சினையில் இந்தியா வின் முகம் வெளுத்து விட்டதே!

Read more: http://viduthalai.in/e-paper/74262.html#ixzz2rjL5iXQj

தமிழ் ஓவியா said...


மருத்துவத்தில் பெண்கள்


பல நூற்றாண்டுகள் கழித்து கிரேக்க நாட்டில் ஏற்பட்ட அறிவியல் புரட்சியும் பெண்களின் பங்களிப்போடுதான் நடந்திருக்கிறது. பிதாகரஸ், பிளாட்டோ போன்ற அறிஞர்களின் குழுவில் பெண்கள், ஆண்களுக்கு இணையாக அங்கம் வகித் திருக்கிறார்கள்.

சில நாடுகளில் பெண் மருத்துவர்கள், பெண்களுக்கு மட்டுமே சிகிச்சையளிக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தது. ஆனால் அப்போதும் ரோம் நகரில் பெண் மருத்துவர்கள், பால் வேறுபாடின்றி அனைவருக்கும் சிகிச் சையளிப்பது நடைமுறையில் இருந்திருக்கிறது.

அதேபோல அலெக்ஸாண்டிரியாவைச் சேர்ந்த மேரி என்கிற வேதியியல் வல்லுநர் சிற்சில கண்டுபிடிப்புகளையும் இந்த உலகிற்கு வழங்கியிருக்கிறார்.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் ஹைபாத்தியாவின் அறி வியல் பணி அளப்பரியது. இவர் தன் தந்தையின் வழிகாட்டு தலில், அலெக்ஸாண்டிரியா பல்கலைக்கழகத்தில் கணிதவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி குறித்த வகுப்புகளை நடத்தியிருக்கிறார்.

திரவங்களின் அடர்த்தியைக் கண்டறி வதற்கான கருவியையும், விண்ணில் நட்சத்திரங்களின் இடத்தைக் கண்டறியும் தொலைநோக்கியையும் ஹைபாத்தியா கண்டுபிடித்த தாகச் சொல்கிறார்கள்.

அதற்கடுத்து வந்த நூற்றாண்டுகளில் பெண் விஞ்ஞானி களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து, முடிவில் குறிப் பிட்டுச் சொல்லும்படி ஒன்றிரண்டு பேர் மட்டுமே நிலைத்து நின்றனர்.

என்ன செய்யப் போகிறோம்?

இப்போதும் உலக அளவில் கணக்கெடுக்கும் போது அறிவியல் தொழில்நுட்பத்திலோ, ஆராய்ச்சியிலோ சிறந்து விளங்குகிறவர்களின் பட்டியலில் பெண்களைத் தேட வேண்டியி ருக்கிறது. இதற்கு என்ன காரணம்? தங்கள் மகள் அறிவியல் துறையைத் தேர்ந்தெடுத்துப் படிப்பதைப் பெற் றோர்கள் தடுக்கிறார்களா? முழுவதுமாகத் தடுப்பதில்லை, ஆனால் அதற்கான எல்லையைச் சுருக்கிவிடுகிறார்கள்.

அறிவியல் என்றால் மருத்துவத்துறையை மட்டுமே நோக்கிய தாக இருக்கிறது பெற்றோர்களின் இலக்கு. மகன்களைத் துணிச்சலுடன் ஆராய்ச்சிப் படிப்புகளை நோக்கி நகர்த்தும் பெற்றோர், தங்கள் மகள் அதை நோக்கி நகர்வதை அவ்வள வாக விரும்புவதில்லை.

இந்தத் தயக்கம்தான் பெண்களை, குறுகிய வட்டத்துக்குள்ளேயே நிறுத்திவிடுகிறது. எல்லை தாண்டி சிந்திக்கவிடாமல் முடக்கிவிடுகிறது. உண்மையில் அறிவியல் அறிவில் ஆண்களைக் காட்டிலும் சிறந்து விளங்கும் திறமை பெண்களுக்கு இருக்கிறது. அதைத்தான் வரலாறும் சொல்கிறது. அந்த வரலாறு திரும்புவதற்கான வழிகளை ஏற்படுத்தித் தருவதும், தடைகளை அகற்றுவதும் நம் கைகளில்தான் இருக்கிறது.

Read more: http://viduthalai.in/page-7/74271.html#ixzz2rjMLe9AI

தமிழ் ஓவியா said...


சபாஷ் சரியான நடவடிக்கை


சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட ஆசாராமின்
ஆசிரமம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது
அரசு அதிகாரிகள் நடவடிக்கை

ஜபல்பூர், ஜன.29- மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே பெதாகட் என்ற இடத்தில் உள்ள சாமியார் ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தை உள்ளூர் அதிகாரிகள் இடித்துத் தள்ளினர். இந்த ஆசிரமத்தை இடிப்பதற்கு பல்வேறு சட்ட ரீதியான சிக்கல்கள் இருந்து வந்தன. அவை நீங்கியதைத் தொடர்ந்து தற்போது ஆசிரமம் இடிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 7000 சதுர அடி பரப்பளவிலான இடத்தில் இந்த ஆசிரமம் கட்டப்பட்டிருந்தது. ஆசிரமம் இடிக்கப்படுவதையொட்டி பெருமளவிலான காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டி ருந்தனர். இதுகுறித்து பெதாகட் நகராட்சியின் தலைமை செயல் அதிகாரி அனிதா யாதவ், வட்டாட்சியர் ரிஷப் ஜெயின் செய்தியாளர்களிடம் கூறுகையில், இடிக்கப்பட்ட கட்டடம், சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகும். இதை இடிக்கத் தடை வாங்கியிருந்தனர். தற்போது அது நீங்கியுள்ளதைத் தொடர்ந்து இடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடம், இடம் ஆகிய அனைத்தும் சேர்த்து மொத்தம் 21,000 சதுர அடி பரப்பளவாகும் என்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/74300.html#ixzz2rqQnFovR