Search This Blog

25.1.14

இதற்குப் பெயர்தான் பெரியார் மண் என்பது!சென்னை உயர்நீதிமன்றத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகள் 12 காலியாக உள்ளன. இதற்காக  சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் மூத்த இரு நீதிபதிகள் சேர்ந்து உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்த 12 பேர்களைக் கொண்ட பட்டியல் பெரும் சர்ச்சைப் புயலைப் பிரசவித்து விட்டது.

ஏற்கெனவே அய்ந்து பார்ப்பன நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில், விகிதாசாரத்துக்கு மேல் பல மடங்கு உள்ளனர். போதும் போதாதற்கு இந்தப் பட்டியலில் மேலும் மூன்று பார்ப்பனர்களைச் சிபாரிசு செய்துள்ளனர்  - அவர்கள் போதிய அனுபவம் இல்லாதவர்கள் கூட!

இப்படிப்பட்ட சூழ்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற இருபால் வழக்குரைஞர்களும் போர்க் கொடி உயர்த்தி விட்டனர். மதுரை உயர்நீதிமன்றக் கிளையிலும் போராட்டம் வலுத்து விட்டது. மூத்த வழக்குரைஞர் திரு ஆர். காந்தி ரிட் மனு தாக்கல் செய்து விட்டார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கக் கூடிய திரு சி.எஸ். கர்ணன் அவர்களும் இந்தப் பிரச்சினையில் தானும் மனு தாக்கல் செய்வதாக முன் வந்து புதுத் திருப்பத்தை ஏற்படுத்தி விட்டார்.

இந்தப் பிரச்சினையில் இவர்களுக்கெல்லாம் முந்திக் கொண்டு ஆர்ப்பாட்டம் ஒன்றை சென்னை யிலும், மதுரையிலும் திராவிடர் கழகம் நடத்திய துண்டு. மேலும் ஒரு போராட்டத்தை அறிவித் திருந்தது.

இதற்கிடையில் சென்னை வழக்குரைஞர் சங்கத்தினர் மத்திய சட்ட அமைச்சர் திரு கபில்சிபல் அவர்களையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு ப. சதாசிவம் அவர்களையும் சந்தித்து முறையிட, அவர்கள் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு சரி செய்வதாக உத்தரவாதம் கொடுத்த நிலையில் வழக்குரைஞர்கள் தங்கள் போராட்டத்தை நிறுத்திக் கொண்டனர்.

திராவிடர் கழகமும் மாவட்டத் தலைநகரங்களில் இன்று நடத்தவிருந்த போராட்டத்தையும் நிறுத்தி வைத்துள்ளது - தேவைப்பட்டால் போராட்டம் நடக்கும் என்ற அறிவிப்புடன். சமூக நீதி என்பதும், பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பு என்பதும் ஏதோ திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் கிளப்பி விடும் ஒன்று என்று வாய்ப் புளித்ததோ  மாங்காய்ப் புளித்ததோ என்று பேசியவர்கள், எழுதி வந்தவர்கள் இப்பொழுது ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

வழக்குரைஞர்களை திராவிடர் கழகமா தூண்டியது? மூத்த வழக்குரைஞர் திரு ஆர். காந்தி என்ன திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவரா? நீதியரசர் திரு. சி.எஸ். கர்ணன் அவர்கள் கறுப்புச் சட்டைக் காரரா?

இல்லையே! இருந்தும் இவர்கள் எல்லாம் கிளர்ந்து எழுந்தனர் என்றால், இதற்குப் பெயர்தான் தந்தை பெரியார் பிறந்த மண் என்பதற்கான (Soil Psychology) அடையாளமாகும்.

இதுபோல ஒரு பிரச்சினை எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சியில்  எழுந்தபோது, திராவிடர் கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியது; அப்பொ ழுது சட்ட அமைச்சராக திரு சி. பொன்னையன் இருந்தார்.
பிரச்சினை முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் வரை சென்றது. அப்பொழுதே அது பெரியார் பிறந்த மண்ணின் சிந்தனை மணம் என்று தெரிவிக்கப் பட்டது. ஏதோ பெரியார் மறைந்துவிட்டார் - அத்தோடு அந்தச் சகாப்தம் முடிந்து விட்டது என்று சிலர் மனப்பால் குடித்துக் கிடந்தனர்.

தந்தை பெரியார் அவர்களுக்குப்பிறகு தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் செம்மாந்த இன நலப் பணியின் காரணமாகத்தான்  பார்ப்பனர்கள் பழனியில் மாநாடு கூட்டி, அவரின் உருவத்தைப் பாடை கட்டித் தூக்கினர்.
அதன் மூலம் பெரியார் பாதையில் வீரமணி சரியாகவே செல்லு கிறார் என்பதை அடையாளப்படுத்தவும் செய் தார்கள். அதில் ஒன்றும் தொய்வு ஏற்பட்டு விட வில்லை என்பதற்கு அடையாளம்தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் இப்பொழுது உயர்த்தப்பட்டு இருக்கும் போர்க் கொடி!
உடலால் பெரியார் மறைந்திருக்கலாம்; உணர்வால் நம்மிடையே அவர் வாழ்ந்து கொண்டுதானிருக் கிறார்! வாழ்க பெரியார்!

---------------------------------"விடுதலை” தலையங்கம் 24-1-2014

32 comments:

தமிழ் ஓவியா said...

பாலியல் வன்கொடுமை

பொன்னேரியையடுத்த சோம்பட்டையைச் சேர்ந்த நாகதாஸ் என்னும் பேர் வழி, பெண் ஒருவரை மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்முறையில் ஈடுபட் டான். பெண் கர்ப்பம் தரித்தார். திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தவன் பின் மறுத்தான். வழக்குத் தொடுக்கப்பட்டு - மேல் முறையீட்டில்தான் பெண்ணுக்கு நியாயம் கிடைத்தது - ஆசாமிக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையுடன் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

(டில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்; நாடே கொந்தளித்தது; ஆனால் தமிழ்நாட்டில் இது போன்ற கொடுமைகள் தொடர்ந்து வந்த நிலையி லும், தமிழ்நாடு அமைதி பூத்த தடாகமாகக் காட்சி யளிக்கிறது; ஊடகங்களும் கப்-சிப்! புதிய மனுதர்மம் அழகு நடை போடுகிறதோ!)

Read more: http://viduthalai.in/e-paper/74024.html#ixzz2rMRFt2CR

தமிழ் ஓவியா said...

வாரா(ய்) நீ வாரா(ய்) கடன்

வாராக் கடன் வசூலில் குறிப்பிடத்தக்க முன்னேற் றம் காணப்படுகிறது.
- ராஜீவ் டாக்ரு, ரிசர்வ் வங்கி செயலாளர்

(வாராக் கடன் பட்டியலில் உள்ள (அ)சிங்கங் களைத் தப்ப விட்டு விட்டு, ஏழை பாழையாம் சுண்டெலிகளை வேட்டையாடுவது என்ன நியாயமோ!)

அமெரிக்காவில்

அமெரிக்கப் பெண்களில் அய்ந்தில் ஒருவர் பாலியல் பலாத்காரத்தால் பாதிப்பு. (மகாபாரதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அங்கு ஒளிபரப்பு செய்திருப்பார்களோ!)

கார்ட்டூன் திமுகவுடன் தேமுதிக கூட்டணி பற்றி தினமணி வைத்திய நாதய்யர்வாள் வட்டாரத்தில் வயிற்றில் புளியைக் கரைத்து இருக்கிறது என்பதற்கு இதுதான் அடையாளம் - ஆமாம், தினமணி நடு நிலை ஏடு நம்பித் தொலையுங்கள்!

Read more: http://viduthalai.in/e-paper/74024.html#ixzz2rMRZfMCf

தமிழ் ஓவியா said...இதோ ஒரு இரட்டை நாக்கு!

காங்கிரஸ் மதவாதத்தைத் தூண்டும் கட்சி; பா.ஜ.க.வோ மதச் சார்பற்ற கட்சி இப்படி சொல்லி யிருப்பவர் யார் தெரியுமா, 450 ஆண்டு கால வரலாறு படைத்த முஸ்லீம்களின் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை இடித்த கட்சியின் தலைவரான ராஜ்நாத் சிங்!

இரட்டை வேடம் - இரட்டை நாக்கு என்பது இந்துத் துவா கூட்டத்தின் இரட்டைக் குழந்தைகளோ!

Read more: http://viduthalai.in/e-paper/74024.html#ixzz2rMRgq8rP

தமிழ் ஓவியா said...


கடவுள்களின் கையாலாகாத்தனம்!


எடப்பாடியில் கோவில் உண்டியலை உடைத்துக் கொள்ளை

எடப்பாடி, ஜன.24- எடப்பாடி அருகே உள்ள தாதாபுரம் பகுதியில் சொக்கநாச்சியம்மன், மாரியம்மன் ஆலயம் ஊரின் மய்யப்பகுதியில் அமைந்துள்ளது ஆண்டு தோறும் மாசி மாதம் சிறப்பாக திருவிழா நடைபெறுவது வழக்கம். இக்கோவி லில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிறைந்திருக்கும். கோவில் திருப்பணி களுக்காக சொக்கநாச்சியம்மன், மாரியம்மன் திருக்கோவில்களில் தனித்தனி உண்டியல் வைக்கப்பட் டுள்ளது.

ஆண்டு தோறும் மாசிமாத திரு விழா முடிந்த பின்னர்தான் ஆண்டுக் கொருமுறை உண்டியல் திறக்கப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வருமானம் மூலம் ஆண்டு முழுவதும் கோவில் நிர்வாகம் செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு சொக்கநாச்சி யம்மன் கோவிலில் வழக்கமான பூஜைகள் முடித்த அதன் பூசாரி செல்வராஜ் கோவிலின் வெளிமண்ட பத்தில் படுத்து உறங்கியுள்ளார்.

நள்ளிரவில் ஓசைபடாமல் கோவிலின் உள்பிரகாரத்தில் நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த உண்டி யலை அடியோடு பெயர்த்து எடுத்து அருகில் உள்ள ஆற்றங்கரைக்கு கொண்டு சென்று கோவில் சூலத்தின் (வேல்கம்பு) மூலம் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் மற்றும் காணிக்கை பொருட்களை கொள் ளையடித்துள்ளனர். ஆற்றங்கரையில் உண்டியலை வீசிய கொள்ளையர்கள் அருகில் இருந்த மாரியம்மன் கோவில் உண்டியலையும் அடியோடு பெயர்த்து எடுத்து கொள்ளை யடித்தபின் ஆற்றங்கரையில் வீசி சென்றுள்ளனர். அதிகாலையில் அந்தப்பக்கம் சென்ற பொதுமக்கள் கோவில் உண்டியல்கள் கொள்ளை யடிக்கப்பட்ட சம்பவம் குறித்து எடப்பாடி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

எடப்பாடி காவல்துறையினர் உண்டியல் கொள்ளை பற்றி விசா ரனை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சையில் தஞ்சை நாகை சாலை அருகே மருதம் நகர் உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களுக்கும் முன்பு சோமசுந்த ரேஸ்வரர் கோவில் புதிதாக கட்டப் பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று காலை கோவிலின் கிரில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் கோவிலுக்குள் உள்ள சில்வர் உண்டி யலும் உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை அப்பகுதி மக்கள் பார்த்து தஞ்சை தாலுகா காவல்துறையி னருக்கு தகவல் கொடுத்தனர்.

காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில், யாரோ சில நபர்கள் நேற்று நள்ளிரவில் கடப்பாரை, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் கோவில் கிரில் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

அங்கு கோவிலுக்குள் இருந்து சுமார் 4 அடி உயரம் உள்ள சில்வர் உண்டியலை அடியோடு பெயர்த்து கோவிலிருந்து சுமார் 50 அடி தூரத்தில் எடுத்து சென்று உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

மேலும், கோவிலுக்குள் மற்றொரு அறையில் இருந்த பீரோவையும் சில நபர்கள் உடைத்து திறந்து பார்த்து உள்ளனர். அதில் பணமோ, நகையோ ஏதும் இல்லாததால் பீரோவில் இருந்த கோவில் பூஜை பொருட்களை கலைத்து விட்டு சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும், திருட்டுக்கு பயன்படுத்திய கடப்பாரை, அரிவாள் ஆகியவற்றை அங்கேயே போட்டு விட்டு சென்று உள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவுச் செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/74023.html#ixzz2rMRnPxaZ

தமிழ் ஓவியா said...


மோடியின் கரங்கள் அப்பாவி மக்களின் ரத்தம் தோய்ந்த கரங்கள்: முலாயம்சிங்


மோடியின் கரங்கள் "அப்பாவிகளின் ரத்தம் தோய்ந்த கரங்கள்' என்று முலாயம் சிங் (யாதவ்) குற்றம்சாட்டினார்.

வாரணாசியில் வியாழக் கிழமை நடைபெற்ற பேரணியில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் பேசியதாவது:

குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவியில் இருந்தபோது, 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு, படுகொலை களும், அடக்குமுறைகளும், கொடுமை களும் அரங்கேறின.

அதற்குப் பிறகும், மோடியை எப்படி பிரதமர் வேட்பாளராக பாஜக தேர்ந்தெடுத்தது என்பது தெரியவில்லை.

கோரக்பூரில் பேசிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச மாநிலத்தை குஜராத்தாக மாற்றப் போவதாக கூறியுள்ளார்.

ஆனால், குஜராத்தில் படுகொலை களை அரங்கேற்றியதுபோல், இங்கும் அத்தகைய சம்பவங்களை நிகழ்த்தும் நிலையில் அவர் இல்லை.

குஜராத்தில் நடை பெற்ற இனக்கலவரத்துக்கு மோடிதான் முழுப் பொறுப்பு. அவரது கரங் கள் "அப்பாவிகளின் ரத்தம் தோய்ந்த கரங்கள்'.

குஜராத் அரசு வேலை யில்லா பட்டதாரிகளுக்கு ஊக்கத்தொகை வழங் கியதா? விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ததா? பெண்களுக்கு சிறப்பு வசதிகளை செய்து கொடுத் ததா? இவற்றில் எதையும் செய்ய வில்லை. ஆனால், செய்ததாக புர ளியைப் பரப்புவதைத் தவிர பாஜகவுக்கு வேறு வேலை இல்லை.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு சமாஜ்வாதி கட்சியின் ஆதரவின்றி மத்தியில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது.

மத்தியில் ஆட்சி செய்து வரும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஊழல் மற்றும் பணவீக்கத்தால் பொருளாதார நெருக்கடியை மட் டுமே கொடுத்தது என்று முலாயம் சிங் யாதவ் பேசினார்

Read more: http://viduthalai.in/e-paper/74019.html#ixzz2rMRxGL9U

தமிழ் ஓவியா said...


சிந்தித்துப் பார்


நீ கிணற்றுத் தவளையாக இருக்க விரும்புகிறாயா? அல்லது வேடந்தாங்கலில் வந்து இளைப்பாறிப் போகும் வெளிநாட்டுப் பட்சியாக இருக்க விரும்புகிறாயா? மனிதனே சிந்தித்துப் பார்.

- (விடுதலை, 22.9.1967)

Read more: http://viduthalai.in/page-2/74025.html#ixzz2rMS9LPGg

தமிழ் ஓவியா said...


இல்லஸ்டிரேட்டட் வீக்லியில் ஒரு கடிதம்


அய்யா, சினிமா நடிகர், நடிகைகள் இல்லங்கள் நோக்கி வருமான வரி திடீர் சோதனைகளை அரசு நடத்துகிறது. ஏன்? கடவுளரது இல்லங்கள் நோக்கி இவைகளை நடத்தக்கூடாது? சினிமா நடிகர்கள் தங்களிடம் உள்ள கறுப்புப் பணத்தைப் பெற கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள்; மற்றவர்களுக்கு ஒரு கேளிக்கையாவது அளிக்கிறார்கள்.

புனிதமான இடங்களில் நடைபெறுவது பச்சையாக இலஞ்சம் அல்லாமல் வேறு என்ன? நாம் கடவுள் நம்பிக்கையை இழக்கத்தானே அவை பயன்படுகின்றன? புனிதமான இடங்கள் எனப்படுபவைகளை அரசு தேசிய மயமாக்கட்டும். வறுமையை ஒழிப்போம் - வறுமையே வெளியேறு என்ற கோஷத்தினை அச்செல்வத்தினை எடுத்து விநியோகிப்பதன் மூலம் செயல்படுத்தட்டும்.

அதில் முக்கியமாக விழிப்புடன் இருக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், அர்ச்சகர்களிடமிருந்து அதிகாரிகள் கொள்ளையாக அது மாறாமல் பார்த்துக் கொள்வதேயாகும். மேற்கண்ட கடிதம் 1.10.1972 இல்லஸ்டிரேட்டட் வீக்லி ஏட்டில் கல்கத்தாவைச் சேர்ந்த அருண்டுரோவர் என்பவரால் எழுதப்பட்ட ஒன்றாகும்.

Read more: http://viduthalai.in/page-7/74027.html#ixzz2rMT1YPg3

தமிழ் ஓவியா said...


உறவின் முறையில் திருமணம் குறைபாடுடைய குழந்தைகள் பிறக்க வழிவகுக்கும்


சென்னை, ஜன. 24- உறவு முறைகளில் திரும ணம் செய்வது குறைபா டுடைய குழந்தைகள் பிறக்க வழிவகுக்கும் என மாற்றுத்திறனாளிகளுக் கான மாநில ஆணையர் கே.மணிவாசன் கூறினார்.

செவித்திறன் குறை பாடுள்ள குழந்தைக ளுக்கு செவியின் உள் பகுதியில் பொருத்தப் படும் காக்ளியர் கருவி பற்றிய விழிப்புணர்வு சி.டி. மற்றும் வீடியோ வெளியிடும் நிகழ்ச்சி போரூர் ராமச்சந்திரா மருத்துவக் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.

காது, மூக்கு, தொண்டை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை துறை, பேச்சு மற்றும் கேட்பு அறிவியல் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அதன் தலைவர் மருத்துவர் ஏ.ரவிக்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கே.மணிவாசன் மற்றும் மருத்துவர் ஏ.ரவிக்குமார் ஆகியோர் பேசியது: குழந்தைகள் பிறந்த உடனேயே அனைத்து விதமான மருத்துவ சோத னைகளையும் தாமத மின்றி மேற்கொள்ள வேண்டும்.

பிறவியிலேயே ஏற் படும் குறைபாடுகளை சற்று தாமதமாக தெரிந் துகொள்வதன் மூலம் அதை சரிசெய்வதில் பல் வேறு சிரமங்கள் ஏற்படு கின்றன. காதுகேட்கும் திறன் குறைந்த மற்றும் முற்றிலுமாக பாதிக்கப் பட்டவர்களுக்கு காக் ளியர் கருவி பொருத்தப் பட்டவுடன் கேட்பியல் நிபுணர்கள், பேச்சுப் பயிற்சி நிபுணர்கள் ஆகி யோர் உதவியுடன் படிப் படியாக குழந்தைகளின் கேட்கும் திறன் மேம்படு கிறது.

இதுபோன்ற குறை பாடுகளுக்கு உறவின் முறையில் திருமணம் செய்துகொள்வதுதான் முக்கிய காரணமாக கரு தப்படுகிறது. எனவே இதுகுறித்த விழிப்பு ணர்வை பொதுமக்களி டம் ஏற்படுத்த வேண் டும் என்றனர்.

Read more: http://viduthalai.in/page-8/74056.html#ixzz2rMTHmhse

தமிழ் ஓவியா said...


மூட மதக்கிருமியைப் பரவ விடாதீர்!


நோய் நொடிகளால் சாகும் குழந்தைகளை விட பெற்றோர்களின் மூடநம்பிக் கைகளால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையே அதிகம் என்று குழந்தை நல மருத்துவக் குழுவினர் அறிவித்திருக் கின்றனர்.

நோய்க்கிருமிகளைவிட மதக்கிருமியே பயங்கரமானது என்பதை அந்த மருத்துவக் குழுவின் கருத்து நமக்குத் தெரிவிக்கிறது.

நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான மூடநம்பிக்கை நிலவி வருகிறது. இவற்றால் நாள்தோறும் குழந்தைகள் இறந்தவண்ணமிருக்கின்றனர்.

இறந்த பிறகு மோட்சத்துக்குப் போக ஆண் குழந்தைதான் வேண்டுமாம்! எனவே, பெண் குழந்தைகள் புறக்கணிக்கப்படு கின்றனர்.

பிரசவ அறையின் கதவுகளும், ஜன்னல் கதவுகளும், எப்போதுமே மூடி வைக்கப்பட்டிருக்க வேண்டுமாம்! இல்லை யென்றால் குழந்தையையும், தாயையும் துர்த்தேவதைகள் தாக்கி அவர்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமாம்!

உண்மையில் நடப்பது என்னவென்றால், பிரசவ அறையின் எல்லா கதவுகளையும் மூடி வைத்திருப்பதால் அவர்களுக்கு மூச்சுத் திணறல்தான் ஏற்படும்.

மற்றவர்களின் கண் திருஷ்டியால் தான் குழந்தைகளுக்கு கண்வலி வருகிறது என்ற மூடநம்பிக்கையும், இருந்து வருகின்றன. இதற்கு திருஷ்டி கழிக்க வேண்டி உணவு பொருள்கள் பாழாக்கப்படுகின்றன.

ஒருவனை நாய் கடித்து விட்டால் அவன் 16 கிணறுகளுக்குச் சென்று அந்தக் கிணறு களில் ஏதாவது ஒன்றிலாவது நாயின் உருவம் தெரிகிறதா என்று தொடர்ந்து பார்த்து வர வேண்டுமாம்! அப்படித் தெரிந் தால் அவன் சிகிச்சை எதுவும் செய்ய வேண்டாமாம்.

இப்படி அவன் நாட்களைக் கழிப்பதற்குள் நோய் முற்றி விடுகிறது. பின்பு யாராலும் அவனைக் காப்பாற்ற இயலாது போய்விடுகிறது. எனவே மக்களுக்கு பகுத் தறிவு ஊட்டுவதும், அவர்களை சிந்திக்க வைப்பதும் தான் இன்றைய அவசியத் தேவை.

- விமன்ஸ் எரா, (1976 டிசம்பர் 16 இதழ் தலையங்கம்

Read more: http://viduthalai.in/page-7/74031.html#ixzz2rMTTBskz

தமிழ் ஓவியா said...

ஆண்டவனின் தனிக் கருணை

அன்றொரு நாள் தான் எவ்வாறு ஆண்டவனின் தனிக்கருணைக்கு ஆளானார் என்பது குறித்து ஒருவர் என்னிடம் கூறிக் கொண்டு வந்தார். ஒருநாள் அவர் வெளிநாட்டிற்குக் கடற்பயணம் செய்ய இருந்தார். ஆனால், அது யாது காரணத்தாலோ, பயணம் தடைப்பட்டு விட்டது.

ஆண்டவனின் தனிக் கருணையால்அவர் போகாதது நின்றதே நல்லதாயிற்று. ஏன்? அந்தக் கப்பல் கடலில் மூழ்கி விட்டது. அதிலிருந்த அய்நூறு பேரும் மாண்டனர். அய்நூறு பேர்களோடு மூழ்கிய கப்பலில் செல்லாவண்ணம் ஆண்டவனின் தனிக் கருணையால் ஒருவன் காப்பாற்றப்பட்டான்.

ஆனால், இந்த அய்நூறு பேர்கள்? அதிலிருந்த தாய்மார்கள்? அவர்களின் கள்ளங்கபட மற்ற மழலை பேசும் இளங்குழவிகள்? அவற்றின் அருமைத் தந்தையர்? அக்கரையில் என்று கப்பல் வந்தடையும்? என் இனிய துணைவர் என்று வருவார் என்று ஆவலே உருவாய் நிற்கும் இளம்பெண்கள்? இவர்களின் கதி? இதன் பெயர்தான் ஆண்டவனின் தனிக்கருணை என்பது!

-அறிஞர் இங்கர்சால்
தகவல்: ச.ராமசாமி

Read more: http://viduthalai.in/page-7/74031.html#ixzz2rMTb6wf0

தமிழ் ஓவியா said...


மருத்துவக் காப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?


மருத்துவச் செலவு என்பது திடீரென வரக் கூடியது. ஆதலால் மருத்துவக் காப்பீட்டு எடுத்து வைத்துக் கொள்வது மிக நல்லது. தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் நம்மிடம் பிரீமியத் தொகை பெற்றுக் கொண்டு காப்பீடு அளிக் கின்றன. அதுவும் சில நோய்களுக்குள், அவசர சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சைகளுக்கு மட்டுமே. அதுபோல பொருளாதார வசதி இல்லாத ஏழை களுக்காகக் கொண்டு வரப்பட்டது முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம். இத்திட்டத்தின் பயனைப் பெற விண்ணப்பிப்பது எப்படி? அதற்கான தகுதிகள் என்ன? ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்பது என்ன?

நமக்கு ஏற்படும் சில மருத்துவ உதவிகளுக்குத் தேவையான பணத்தை அரசே செலுத்துவதுதான் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.
தகுதிகள்: இத்திட்டத்தின் பயனைப் பெற ஒரு குடும்பத்தின் ஆண்டு வருவானம் 72,000 ரூபாய்க்குக் கீழே இருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்: கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனில் கிராம நிர்வாக அலுவலரிடமும், நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்கள் எனில்தாசில்தாரிடமும் வருமானச் சான்றிதழ் வாங்கிக் கொடுக்கவேண்டும். குடும்ப அட்டை இருக்க வேண்டும். குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் பயனைப் பெற முடியும்.
எங்கே விண்ணப்பிப்பது?

ஒவ்வொரு மாவட்ட அலுவலகத்திலும் காப்பீட்டுத் திட்ட மய்யம் இயங்கி வருகிறது. அந்த மய்யத்திற்குச் சென்று விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களைக் கொடுக்கவும், பின்னர் அவர்கள் சொல்லும் தேதியில் குடும்பத்துடன் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவும். புகைப்படம் எடுக்கப்பட்டதும் ஓரிரு நாட்களில் மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கப்படும்.

பயனை எப்படி பெறுவது?

இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் பதிவு பெற்ற தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்பெற முடியும். இதன் மூலம் கீழ்க்கண்ட சிகிச்சைகளைப் பெற முடியும். இதயம் மற்றும் இதய நெஞ்சக அறுவைச் சிகிச்சை, புற்றுநோய் மருத்துவம், சிறுநீரக நோய்கள், மூளை மற்றும் நரம்பு மண்டலம், கண் நோய் சிகிச்சை, இரைப்பை (ம) குடல் நோய்கள், ஒட்டுறுப்பு (பிளாஸ்டிக்) அறுவைச் சிகிச்சைகள் , காது, மூக்கு மற்றும் தொண்டை நோய்கள், கருப்பை நோய்கள், ரத்த நோய்கள்.

மருத்துவமனை செல்லும்போது கவனிக்க வேண்டியவை:

சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் முதல் நாள் முதல் சிகிச்சைமுடிந்து வீட்டுக்கு அனுப்பப்படும் நாளிலிருந்து அய்ந்து நாட்களுக்கு செய்யப்படும் பரிசோதனைகளுக்கான கட்டணம் மற்றும் இதர செலவினங்களுக்கான தொகையும் இத்திட்டத்தில் வழங்கப்படும். இலவச சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் முன் அந்த மருத்துவமனையில் காப்பீடுத் திட்ட அலுவலரைச் சந்தித்து மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஒரே சிகிச்சை வெவ்வேறு மருத்துவமனைகளில் வெவ்வேறு கட்டணங்கள் பெறப்படுவதுண்டு.

ஆன்லைனில் தெரிந்து கொள்ள: உறுப்பினர் விண்ணப்பப் படிவத்தைப் பெற இந்த இணைப்பில் செல்லவும்.

https://docs.google.com/file/d/1vpMQHGnb QymYPIAxYoW8AFec27t6s6sUNMjA IJdGJUtzluRhC2G9 kqJI5aMS/edit.

கிராம நிர்வாக அலுவலரிடம் வாங்க வேண்டிய சான்றின் மாதிரிப் படிவத்தைக் காண இந்த இணைப்பில் செல்லவும்.

https://docs.google.com/file/ d/1oiaOxsjjbSFT3CFsMrR5AgnK6x8jvSGE4bNiGIYX9I EUJH5Do8cP9 JL6WL4J/edit

உங்கள் ஊரின் எந்த மருத்துவமனையில் இந்த வசதிகளைப் பெறலாம் என்பதைத் தெரிந்து கொள்ள இங்கு செல்லவும்.

https://docs.google.com/file/d/1yOaTDA5h&NrGk&uJazqlgFKXvViHqJm ZaFKeRn9v8mm9 ZTsrEKq UNPVCCwv/eidt

மேலதிக விவரங்களுக்கு: இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்வதற்கும், மேற்கொண்டு விவரங்களைப் பெறவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

https://www.cmchistn.com/ இத்தளத்திற்குச் செல்லலாம்.
1800 425 3993 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Read more: http://viduthalai.in/page2/74073.html#ixzz2rRo5t2Uy

தமிழ் ஓவியா said...


போகாத இடம்தன்னிலே போக வேண்டாம்


- மு.வி.சோமசுந்தரம்

விடுதலை வெளியூர் 23.7.2013 இதழில் ஒடிசா, பூரி ஜெகன்நாதர் தேரோட்டத் திருவிழாவில், இத்தாலி நாட்டை சேர்ந்த அம்மையாருக்கு, பக்தி போதையும் பண மோகமும் கொண்ட அர்ச்சகப் பார்ப்பன பண்டாக்களால் அரங்கேற்றிய வன்முறைச் செயலை, ஊசி மிளகாய் நன்கு எடுத்துக்காட்டி, பார்ப்பன பாரதியைக் கொண்டே வழிமொழியச் செய்துள்ளது பொருத்தமாக இருந்தது.

ஆணவமும், அகங்காரமும் கொண்ட அக்ரகார அர்ச்சகர்கள் பணம் தின்னும் பேய்கள் என்பதை விளக்கும், பூரி ஜெகன்நாத விழாவில் நடந்த கொடிய செயலை வேதனை யுடன், சென்னையை சேர்ந்த திரு. பி.இராமதாஸ், தி இந்து (23.7.2013) இதழில் ஆசிரியருக்கு கடிதம் பகுதி யில் கூறியுள்ளதைக் காண்போம்.

பூரியில், சிட்டாரிஸ்ட் அம்மையா ருக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி படித்தபோது நான் ஆச்சரியப்பட வில்லை. எழில் தோற்றத்துடனும், வழிபடத்தக்கதுமான லார்ட் ஜெகன்நாதன் கோயிலுக்கு யாத்ரீகர் களாக வரும் பெரும்பான்மையோ ருக்கும் இதே அவல நிலைதான். இதில் வித்தியாசம் இல்லை. ஒரு நண்பர் குழுவை 2011-ஆம் ஆண்டு ஒடிசாவுக்கு அழைத்துச் சென்றேன். மரத்தால் செய்யப்பட்ட ஜெகன்நாதர், பாலபத்ரா, சுபத்ரா கடவுள் பொம் மைகள் கருவறையில் ஒளி வீசி காணப்பட்டன.

நாங்கள் (கூட்டத்தில்) மெதுவாக நகர்ந்து கருவறை அருகில் சென்ற போது, அங்கிருந்த அர்ச்சகர்கள் எங்களை இழுத்து முரட்டுத்தனமாக வெளியே இழுத்தார்கள். அதில் ஒருவன் என்னை தள்ளி என் தலையை லார்ட் பாதங்களில் அழுத்தி, என்னை அசைய விடாமல், தலையைத் தூக்கவிடாமலும் வைத்து, நான் பல நூறு ரூபாய்களைக் கொடுத்தபிறகு என்னை விடுவித்தான். அர்ச்ககர்கள் எங்களை அடுத்ததாக கடவுள்களை சுற்றிவர சொன்னார்கள். அந்த குறுகிய பாதையில் வேறு பல அர்ச்சகர்களைப் பார்த்தோம். அவர்கள் மேலும் பணம் கொடுக்கும்படி நச்சரித்தார்கள்.

இது சூடுபட்ட பூனை போன்ற ஒருவரின் ஒளிவு மறைவற்ற ஒப்பாரி. மக்களின் பணத்தை உறிஞ்சும் அட்டை யாக செயல்படத்தான் கோயில்கள் கட்டப்பட்டன என்று அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியர் கூறியுள்ளார். பணத்தை பறிகொடுத்த துடன், அறிவையும் அடைமானம் வைக்கத் தயாராக உள்ளவரை என்னவென்று அழைப்பது? முட்டாள் என்று அழையுங்கள் என்று சரியான பதிலை அறிவு ஆசான் சொல் லிவிட்டாரே.

தந்தை பெரியார் சுருங்கச் சொல்லி விளங்க வைத்ததை தத்துவமாக பாடல் வரிகளாக
பேருற்ற உலகிலுறு சமயமத நெறியெலாம் பேய்ப்பிடிப் புற்ற பிச்சுப்
பிள்ளைவிளையாட்டென உணர்ந்திடா துயிர்கள் பல
சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தேன்
சாத்திரக் குப்பையும் தணந்தேன் என
வடலூர் வள்ளலார் கூறியுள்ளார்.

இதே பூரி செகன்நாதன் கோயி லுக்குச் சென்ற மேனாள் இந்திய பிரதமர் இந்திராகாந்தி அம்மையாரை கோயிலின் உள்ளே செல்ல அனுமதிக்க வில்லை. காரணம் அவரின் கணவர் இந்து அல்லவாம். போகாத இடந் தன்னில் போவதால்தானே இந்த வேடிக்கை பிள்ளை விளையாட்டெல்லாம்.

Read more: http://viduthalai.in/page2/74074.html#ixzz2rRoLxjf4

தமிழ் ஓவியா said...


மார்பகப் புற்றுநோய் ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம்மார்பகப் புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் உடலில் இருப்பதை ரத்தப் பரிசோதனை மூலமாக கண்டறியும் நவீன தொழில்நுட்பம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

எலிகளை வைத்து நடத்தப்பட்ட சோதனையில், மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் உடலில் இருப்பதை ரத்த பரிசோதனையில் கண்டறியும் முறை வெற்றி பெற்றுள்ளதாகவும், தற்போது இது மனிதர்களிடம் சோதனை முறையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த முறை பயன்பாட்டுக்கு வந்தால், மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளித்து பல உயிரிழப்புகளை தவிர்க்கலாம்.

Read more: http://viduthalai.in/page3/74076.html#ixzz2rRoZYKpR

தமிழ் ஓவியா said...


வரிப் பாக்கி டிமிக்கிகள்!1. வோடாபோன் இன்டர்நேஷனல் ஹோல்டிங் ரூ.22146 கோடி
2. எல்.அய்.சி. ரூ.11,606 கோடி
3. ஆதித்யா பிர்லாடெல்காம் ரூ.3173 கோடி
4. எச்.டி.எஃப்சி வங்கி ரூ.2653 கோடி
5. ஆந்திரா பேவரேஜ் கார்ப்பரேசன் ரூ.2413 கோடி
6. பிரதீப் பாஸ்பேட்ஸ் ரூ.2374 கோடி
7. மைக்ரோ சாஃப்ட் இந்தியா ரூ.1999 கோடி
8. ஹீரோ ஹோண்டா மோட்டார்ஸ் ரூ.1856 கோடி
9. ஆந்திரப் பிரதேச வீட்டு வசதி வாரியம் ரூ.1753 கோடி
10. அய்.சி.அய்.சி.அய். வங்கி ரூ.1658 கோடி
ரூ.51,661 கோடி

Read more: http://viduthalai.in/page8/74082.html#ixzz2rRpXgb00

தமிழ் ஓவியா said...

அந்தத் தீயும் - இந்தத் தீயும்

அந்தத் தீ: திருவண்ணாமலை நகரத்தில் நள்ளிரவில் கோயி லுக்குச் சொந்தமான கோயிலுக்கு எதிரே உள்ள 12 பாத்திரக்கடைகள் எரிந்து சேதமடைந்தன. வியாபாரிகள் அய்யோ, அய்யோ என்று வயிற்றில் அடித்துக் கொண்டார்கள்.

இந்தத் தீ: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் கொப்பரையில் காடாவை யும், நெய்யையும் போட்டு எரித்தார்கள் கூடியிருந்த ஆயிரக்கான மக்கள் அரோகரா என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள்.

- எஸ். நல்லபெருமாள், வடசேரி

Read more: http://viduthalai.in/page8/74082.html#ixzz2rRpgkmdc

தமிழ் ஓவியா said...


சம்பிரதாயமும், ஆன்மீகமும் சங்கராச்சாரியாரின் காலடியில்


கோயில் வரலாற்றையேமீறி முதல் முறையாக காரில் சென்றார் சங்கராச்சாரியார்

சிதம்பரம், ஜன. 25- சிதம்பரம் நடராஜர் கோயிலின் உள்பிரகாரத் தில் வெள்ளிக்கிழமை (24.1.2014) அன்று காஞ்சி ஜெயேந்திரர் தனது காரில் சென்றார். நட ராஜர் கோயில் வர லாற்றில் முதன் முறை யாக கோயில் உள் பிர காரத்தில் காரில் உள்ளே வந்து ஒருவர் தரிசனம் செய்தது இதுவே முதல் முறை. என்று பக்தர் களும் உள்ளூர்வாசி களும் ஆச்சரியத்துடன் தெரிவித்தனர். ஆகம விதிகளின்படி கார் எல்லாம் கோயிலுக்குள் வரலாமா? விதிகளும் எல்லாம் அவர்களின் காலடியில்தானே.

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ஜெயேந் திரர் நேற்று காலை வந்தார். அவரது கார் கோயில் நடனபந்தல் வரை சென்றதால் பர பரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சி தர்கள் சார்பில் கும்ப மரியாதை, மேளதாளத் துடன் அவரை கோயி லுக்கு அழைத்து சென் றனர். பின்னர் மூல வரான நடராஜ சிலை வீற்றிருக்கும் சித்சபை ஏறி சாமி தரி சனம் செய்தார். முன்னதாக ஜெயேந்திரர் வந்த கார் நேராக கீழ் கோபுரத்தின் பக்கவாட்டு வாயில் வழியாக நடன பந்தல் அருகே சென்று நின்றது. சித்சபையில் நடராஜர் தரிசனத்தை முடித்து விட்டு முருகன் கோயில், சிவகாமசுந்தரி அம்பாள் ஆலயத்துக்கும் காரி லேயே சென்று வழிபட் டார்.

முக்கிய பிரமுகர்கள் யார் வந்தாலும் கோபுர வாயிலுக்கு வெளியிலேயே கார் நிறுத்தப்பட்டு அங் கிருந்து நடந்து வந்து தான் கோயிலுக்குள் செல்வார்கள். அறநிலை யத்துறை நிர்வாகத்தின் போது கடந்த அமைச் சர்கள் கார், கோயில் வாயில் அருகே வந்த போது பெரும் சர்ச்சைக் குள்ளானது, ஆனால் தற்போது ஜெயேந்திரர் கார் கோயிலின் நடன பந்தல் வரை சென்றது அப்பகுதி மக்கள் மத் தியில் சலசலப்பை ஏற் படுத்தியுள்ளது.

நடராஜர் கோயில் அறநிலையத்துறையிடம் இருந்து தீட்சிதர்கள் வசம் வந்ததையடுத்து ஜெயேந்திரர் கோயி லுக்கு வந்தது குறிப்பிடத் தக்கது. ஜெயேந்திரர் செய்தியாளர்களிடம் கூறும்போது, சிதம்பரம் நடராஜர் கோயில் மீண்டும் தீட்சிதர்கள் வசம் வந்தது, அவர் களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. கோயில் உள்ளே இருக்கும்பாண் டிய நாயகர்கோயில் திருப்பணி மற்றும் குடமுழுக்கிற்கான முழு செலவையும் சங்கர மடமே ஏற்றுக் கொள் ளும் என்றாராம்!

Read more: http://viduthalai.in/e-paper/74093.html#ixzz2rRpqttk8

தமிழ் ஓவியா said...


செய்தியும் - சிந்தனையும்


அசையாது

செய்தி: ஆம்பூர் அருகே சுமார் 100 டன் எடையுள்ள கோயில் ஒன் பது அடி நகர்த்தப்பட்டது.

சிந்தனை: அசைக்க முடியாது ஆண்டவனை என்பார்கள் அதையும் அசைத்து விட்டார் களோ! (அவனன்றி ஓரணுவும் அசையாதாம்!)

Read more: http://viduthalai.in/e-paper/74091.html#ixzz2rRpy4kAL

தமிழ் ஓவியா said...


செவ்வாய்க்கோளில் நல்ல தண்ணீர் அமெரிக்காவின் ஆப்பர்சூனிட்டி விண்கலம் கண்டுபிடித்தது


வாஷிங்டன், ஜன.25- அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மய்யம் கடந்த 10 ஆண்டு களுக்கு முன்பாக செவ்வாய்க்கோளுக்கு ஆப்பர்சூனிட்டி என்ற விண்கலத்தை அனுப் பியது. தற்போது அந்த விண்கலம் செவ்வாய்க் கோளின் மேற்பரப்பில் நல்ல தண்ணீர் இருந்த தற்கான ஆதாரத்தை கண்டுபிடித்துள்ளது. அது குடி தண்ணீரை போன்றது என்று வாஷிங் டன் பல்கலைக்கழக பேராசிரியர் ஆர்விட் சான் கூறியுள்ளார்.

ஏற்கெனவே நாசா வின் மற்றொரு விண் கலமான கியூரியாசிட்டி விண்கலம், செவ்வாய்க் கோளின் மற்றொரு பகுதி யில் தண்ணீர் இருந்த தற்கான ஆதாரத்தைக் கண்டறிந்தது. இப் போது ஆப்பர்சூனிட்டி விண்கலமும் கண்டு பிடித்திருப்பது செவ் வாய்க்கோளில் நல்ல தண்ணீர் இருந்ததற் கான வலுவான ஆதார மாக அமைந்துள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/74094.html#ixzz2rRq9odfj

தமிழ் ஓவியா said...


காகிதப் புலிகளின் கணிப்புகள்!


16ஆவது மக்களவைத் தேர்தலில் பிஜேபி வெற்றி உறுதி என்றும், நரேந்திரமோடி இப்பொழுதே பிரதமராக ஆகி விட்டார் என்பது போலவும் ஊடகங்கள் ஒருமாயையை மக்கள் மத்தியில் உருவாக்கி வருகின்றன. கருத்துக் கணிப்பு என்னும் புழுதியைக் கிளப்பிப் பொது மக்களின் கண்களை மறைக்கப் பார்க்கின்றன.

பெரும் பெரும் பணக்காரர்களும், தொழில் அதிபர்களும், உயர் ஜாதிப் பார்ப்பனர்களும் தொலைக்காட்சி மற்றும் ஏடுகள், இதழ்களின் உரிமையாளர்களாகவும், பிரச்சாரகர்களாகவும் இருப்பதால் மோடி பிரதமர் ஆவது அவர்களின் சுயநல வளர்ச்சிக்குப் பெரிதும் பயன் உடைய தாக இருக்கும் என்ற உள்நோக்கத்தில்தான் இத்தகையப் பிரச்சாரப் பலூனை ஊதி ஊதி வண்ண வண்ணமாக வானில் பறக்க விடும் கண்கட்டு வித்தையைச் செய்து காட்டுகின் றனர்.

கீரிக்கும், பாம்புக்கும் சண்டை சண்டை என்று கூவி பொது மக்களை பெரிய அளவில் கூட்டி அவர்களிடம் பணம் பறித்து கடைசி வரை அந்தச் சண்டையை நடத்திக் காட்டாத தெரு வோரத்துக் கில்லாடிகள் போல இந்துத்துவா கூட்டம் செயல்படத் தொடங்கி விட்டது!

இந்தியாவில் உள்ள மிகப் பெரிய ஆங்கிலம் மற்றும் இந்தி ஏடுகள் தொலைக்காட்சிகள் 37இல் முக்கியப் பொறுப்புகளில் உள்ள 315 பத்திரிகையாளர்களில் ஒருவர்கூட தாழ்த்தப் பட்டவரோ பழங்குடியினரோ இல்லை. இதில் 49 சதவிகிதம் பார்ப்பனர்கள் (இவ்வளவுக்கும் இவர்கள் மூன்றே மூன்று சதவீதத்தினரே!) மராத்தாக்கள், படேல்கள், ஜாட்கள் என்று 88 சதவீதம் உயர் ஜாதியினர் ஊடகத் துறைகளில்.

மக்கள் தொகையில் பெரும் பகுதியினரான பிற்படுத்தப்பட்டோர் ஊடகத் துறையில் ஒரு சதவீதத்துக்கும் குறைவே. பெண்களைப் பொறுத்த வரையில் ஊடகத்துறையில் உயர் பதவிகளில் பார்ப்பனர்களாகவே இருந்து வருகின்றனர். இவற்றையெல்லாம் கவனத்தில், கணக்கில் கொண்டால்தான், கருத்துக் கணிப்பு என்ற பெயரால் மக்கள் மத்தியில் ஒரு மாயையை ஏற்படுத்தும் சூழ்ச்சிக்கான பின்னணி புரியும்.


இணையதளங்களைப் பொறுத்தவரையில் மோடி செய்யும் மோடி மஸ்தான் வேலை அம்பலப்படுத்தப்பட்டு விட்டது.

மோடியின் டுவிட்டர் என்ற இணையதளத் தில் பத்து லட்சம் பேர் இணைந்து விட்டனர் என்று பிரச்சாரப் பெரு வெள்ளம் அனைவர் மூக்கிலும் விரலை வைத்துப் பார்க்கச் செய்தது. இலண்டன் ஸ்டேட்டஸ் பீப்பிள்ஸ் என்ற இணையதளப் பொறியாளர் குழு, மோடியின் கணக்கில் உள்ளதில் 46 சதவீதம் போலி என்றும்; 41 சதவீதம் பேர் பயன்படுத்தப்படாத கணக்காளர்கள் என்றும் அம்பலப்படுத்தப் படவில்லையா!

இவற்றைப்பற்றி எல்லாம் - இப்பொழுது கருத்துக் கணிப்பு வெளியிடும் இந்த ஊட கங்கள் எந்த அளவு மோடியை அம்பலப் படுத்தின? மோடியை ஒரு பொய்யர் என்று எழுத முன் வந்தனவா?

2004 மக்களவைத் தேர்தலில்கூட பிஜேபி தான் வெற்றி பெறும் என்று இந்த ஊடகங்கள் எழுதவில்லையா? தேர்தல் முடிவு வேறு விதமாகத் தானே அமைந்தது. இதை அத்வானி சில நாட்களுக்கு முன் நினைவூட்டிட வில்லையா?

2009 தேர்தலில் இந்தியா ஒளிர்கிறது என்ற பிரச்சார விளம்பரம் பிஜேபிக்குக் கை கொடுத்ததா?

அதேபோல்தான் இப்பொழுது பிஜேபி பற்றியும், மோடி பற்றியும் திட்டமிட்ட வகையில் செய்யப்படும் பிரச்சாரமும், கருத்துக் கணிப்பும்! வாக்காளர்களே, ஏமாந்து விடாதீர்கள். விரியன் பாம்பை விலைக்கு வாங்காதீர்கள்! எச்சரிக்கை! எச்சரிக்கை!!

Read more: http://viduthalai.in/page-2/74099.html#ixzz2rRqbXzyg

தமிழ் ஓவியா said...


வாழ்க்கைஒருவன் வாழ்வது என்பது அவனுடைய வாழ்க்கையால் பிறர் நன்மையடைந்தார்கள், மற்றவர்கள் சுகங் கண்டார்கள் என்று அமையவேண்டும்.
_ (விடுதலை,20.3.1956)

Read more: http://viduthalai.in/page-2/74098.html#ixzz2rRqiQCoF

தமிழ் ஓவியா said...

ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியாரின் ஞானோதயம்

ராஜீய உலகத்தில் பார்ப்பனர்களுடையவும், அவர்களது வால்களினு டையவும் நாணயமும் யோக்கியதையும் அடியோடு ஒழிந்து அவர்களின் அயோக்கியத் தனம் வெளியாய் விட்டதால் இந்த சமயம் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க யாரும் இல்லாததை அறிந்து ஸ்ரீமான் காந்தி காலத்தில் அவர் நிழலில் யோக்கியதை பெற்ற ஸ்ரீ சி. ராஜகோபாலாச்சாரியார் இப்போது வெகு மும்முரமாய் முழு பார்ப்பன வேஷத்தோடு ஆதரிக்க வெளிவந்து விட்டார்.

முதலாவதாக, மனுதர்ம சாஸ்திரத்தை ஆதரித்து எழுதினார். பிறகு ஜஸ்டிஸ் கட்சியை வைது எழுதினார். இப்போது அரசியலே அயோக்கியத்தனமென்றும் தற்கால மந்திரிகள் ராஜினாமா கொடுக்க வேண்டும் என்றும் எழுதி இருக்கிறார். ஸ்ரீ ஆச்சாரியார் அரசியல் அயோக்கியத்தனம் என்பதை என்றைய தினம் தெரிந்து கொண்டார்? திருட்டுத்தனமாய் பார்ப்பனர்களுடன் சேர்ந்துகொண்டு ஒத்துழையாமைக்கு டில்லியில் உலைவைத்தாரே அன்றா? அல்லது காகிநாடாவில் சட்டசபைக்கு போனவர்களை ஆதரித்தாரே அன்றா? அல்லது ஜமன்லால் பஜாஜ் இடம் ரூ.50,000 வாங்கினாரே அன்றா? அல்லது புதுப் பாளையம் ஜமீன்தாரிடம் 10,000 ரூபாய் பெறுமான தோப்பு தானமாய் வாங்கினாரே அன்றா? அல்லது ஸ்ரீ வெங்கட்டரமணய்யங்காருக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்க நாயக்கர்மார்கள் கிராமங்களில் சுத்தினாரே அன்றா? அல்லது மது விலக்கின் பெயரால் சுயராஜ்யக் கட்சிக்கு ஓட்டுச் செய்யும்படி பத்திரிகைகளில் கோடு கட்டிய குறள்கள் எழுதிவந்தாரே அன்றா? அல்லது சட்டசபைத் தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சிக்குப் பலம் குறைந்ததாகத் தெரிந்தவுடன் சென்னைக்கு ஓடி டாக்டர் சுப்பராயனை முதல் மந்திரி ஆக்கினாரே அன்றா? அல்லது தமிழ் நாட்டில் எந்தப் பார்ப்பனரும் வெளியில் தலைகாட்டுவதற்கு யோக்கியதை இல்லாமல் போன சமயம் பார்த்து ஸ்ரீமான் காந்தியை தமிழ் நாட்டுக்கு அழைத்து வந்து வருணாசிரமப் பிரச்சாரம் செய்வித்து அவரை அடியோடு ஒழித்தாரே அன்றா?

அல்லது ஸ்ரீமான் காந்தி செய்த பிரச்சார தைரியத்தை வைத்துக் கொண்டு மனுதர்ம சாஸ்திரப் பிரசாரம் செய்யத் துணிந்தாரே அன்றா? அல்லது புதுப்பாளையத்தில் பார்ப்பனரல்லாத ஜமீன்தாராகிய ஸ்ரீ ரத்தின சபாபதி கவுண்டர் தானமாய் கொடுத்த தான பூமியில் இருந்து கொண்டு பத்மாசூரன் கதைபோல் அந்த சமுகத்தையே ஒழிக்க ஒரு பத்திரிகை சீக்கிரத்தில் ஆரம் பிக்க முடிவு செய்தாரே அன்றா? அல்லது இவர் பார்ப்பனருக்கு அனுகூலமாக பிடித்து வைத்த மந்திரிக்கு பார்ப்பனரல்லாதார் அபிமானம் சிறிது தோன்ற ஆரம்பித்ததே அன்றா? என்று கேட்கின்றோம். நமது ஆச்சாரியாருக்கு தானும் தன் இனமும் என்ன அயோக்கியத்தனம் செய்தாலும் அது காந்தீயம், ஒத் துழையாமை, தேசாபிமானம், ஆஸ்ரமத் தன்மை முதலியவை ஆகி விடு
கின்றது.

பார்ப்பனரல்லாதார் நன்மைக்காக ஏதாவது ஒரு சிறுநன்மை காணப்பட்டால் அது திடீரென்று தேசிய அயோக்கியத்தனமாகி விடுகின்றது. இதுவே தற்கால பார்ப்பனரல்லாதார் நிலைக்கு உதாரணம் போலும். நம்மவரே நம்ம குலத்தைக் கெடுக்கக் கைப்பிடியாய் இருக்கும் போது இரும்பு என்ன செய்யும்?, என்று ஒரு மரம் சொல்லிற்றாம். அதுபோல் பார்ப்பனரல்லாதாரிலே உள்ள கோடாலிக் காம்புகளை நினைக்கும்போது ஸ்ரீராஜகோபாலாச்சாரியாரின் நடவடிக்கை நமக்கு ஆச்சரியமாகத் தோன்றவில்லை.
- குடிஅரசு - தலையங்கம்-01.04.1928

Read more: http://viduthalai.in/page-7/74112.html#ixzz2rRrcykE0

தமிழ் ஓவியா said...


ஜோடியைப் பிரித்தஜோசியர்!


திருமணமான ஒருசில மாதங்களிலேயே, கண வனை இழந்த நான், சமீ பத்தில், மறுமணம் செய்து கொண்டேன். சில மாதங் கள் வரை, எங்கள் மண வாழ்க்கை, சந்தோஷமாக சென்றது. இரண்டு மாதங்களுக்கு முன், என் கணவர், தான் வேலை செய்யும் இடத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில், அவருடைய கால் எலும்பு முறிந்து, மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார். ஓர ளவு குணமான பின், வீடு திரும்பிய அவர், தனக்குத் தெரிந்த ஜோசியர் ஒரு வரிடம் குடும்பத்தின் எதிர் காலம்பற்றி கேட்டுள்ளார். பேச்சினிடையே என்னைப் பற்றியும் சொல்லியிருக் கிறார்.

உடனே, அவர் ஜோசி யர், நீ அந்த விதவைப் பெண்ணை மணந்து கொண்டதால் தான், இப் படிப்பட்ட ஆபத்து வந்திருக் கிறது. உன் மனைவிக்கு தோஷம் இருக்கிறது. கூடிய விரைவில் உன் உயிருக்கே கூட ஆபத்து வரலாம். அவளை விட்டு பிரிந்திருப் பதுதான் நல்லது.. என்று சொல்லி, என் கணவரைக் குழப்பி விட்டார்.

அதிலிருந்து எதற்கெ டுத்தாலும் எங்களுக்குள் ஒரே சண்டை, சச்சரவு தான். சிறு சிறு விஷயங் களை கூட பெரிதுபடுத்தி, என்னை அடிக்கவும், திட் டவும் ஆரம்பித்து விட்டார். இதனால், எங்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு, இரு வரும் பிரிந்து விட்டோம். இதற்கெல்லாம் காரணம், அந்த ஜோசியர்தான். இனி மேலாவது, ஒற்றுமையாக வாழ்ந்து வரும் குடும் பத்தைப் பிரித்து வைத்து, அவர்களின் வாழ்க்கையை பாழாக்காமல் இருப்பாரா!

- பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி. மேற்கண்ட செய்தியை வெளியிட்டு இருப்பது உண்மை இதழ் அல்ல - விடுதலை நாளேடும் அல்ல. சாட்சாத் தினமலர் அய்யர்வாள் ஏடு.
(தினமலர் வார மலர் 26.1.2004 பக்கம் 4)

என்னதான் அவர்கள் நமது பகுத்தறிவுப் பிரச் சாரத்தை இருட்டடித்துப் பார்த்தாலும், திரித்து வெளியிட்டு வந்தாலும் அவர்களை அறியாமலேயே உண்மையைக் கக்கித்தான் தீர வேண்டியுள்ளது.

ஜோதிடம் வாழ வைக் கவா? வாழும் குடும்பத்தின் தலையில் கொள்ளி வைக் கவா?

என்பதை ஆறாவது அறிவு இருப்பதாகக் கரு தப்படுகிற மனிதன் சிந் திக்க வேண்டாமா?

மனிதன் பிறக்கிறான். அவன் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகப் பொருத் தம் பார்க்கும் ஜோதிடர்கள், நாய் குட்டிப் போடுகிறதே - அந்த நேரத்தை வைத்து நாய்களுக்கு ஜாதகம் பார்ப்பதுண்டா?

மயிலாடுதுறையில் ஒரு நிகழ்ச்சி! நாய் குட்டிப் போட்ட நேரத்தையும், திரு மணம் ஆக வேண்டிய ஒரு பையன் பிறந்த நேரத்தை யும் கொண்டு சென்று ஒரு பிரபல ஜோதிடரிடம் கொடுத் துப் பொருத்தம் பார்க்கச் சொன்னபோது, சகலப் பொருத்தமும் ஜோடிக்கு ஜோராக இருக்கிறது என்று ஜோதிடர் அடித்துச் சொன் னதுதான் நினைவிற்கு வருகிறது. கறுப்புச் சட் டைக்காரன் சொல்லும் போது கோபம் வெடிக் கிறதே - தினமலரே சொல்லுகிறதே - என்ன செய்ய உத்தேசம்?

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/74192.html#ixzz2re4wCHjW

தமிழ் ஓவியா said...

உலகில் உயர்ந்தது ஆரிய இனமே என்று கொக்கரித்த கொடுங் கோலன் ஹிட்லர் 7 லட்சம் யூதர்களைப் படுகொலை செய்த நாள் இந்நாள் (1945).

இந்நாளை சர்வ தேசப் படுகொலை நினைவு நாளாக அய்.நா., அறிவித்துள்ளது (2005).

தமிழ் ஓவியா said...


இந்துத்துவா வெறியர்களின் வன்முறை வெறியாட்டம்!

மும்பை, ஜன.27- மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே, நாக்பூர் சுங்கச்சாவடிகளை மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தொண்டர்கள் அடித்து நொறுக்கி சூறையாடியிருக்கின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் சுங்கச் சாவடிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி சிவசேனா, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே, சுங்கச் சாவடிகளில் எந்த ஒரு கட்டணத்தையும் நாம் செலுத்தக் கூடாது. அப்படி செலுத்துமாறு யார் கேட்டாலும் போராடுங்கள்.. சண்டை போடுங்கள் என்று கூறியிருந்தார். இந்த பேச்சை தொடர்ந்து நாக்பூர், தானே மற்றும் அய்ரோலி ஆகிய இடங்களில் சுங்கச் சாவடிகளை அடித்து நொறுக்கி சூறையாடியிருக்கின்றனர் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவினர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/74195.html#ixzz2re5UdtVg

தமிழ் ஓவியா said...


முதலில்...


மனிதத் தர்மத்தை அடிப்படையாக வைத்து மனிதச் சமுதாயத்திற்கு யாராவது தொண்டாற்ற வேண்டுமானால், முதலில் செய்யவேண்டியது பகுத்தறிவுப்படி மக்களை நடக்கச் செய்வதும், சிந்திக்கச் செய்வதுமேயாகும். - (விடுதலை, 25.7.1968)

Read more: http://viduthalai.in/page-2/74197.html#ixzz2re62gto8

தமிழ் ஓவியா said...


சபாஷ் பொதிகை


ஆசிரியருக்குக் கடிதம்

சபாஷ் பொதிகை

இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு பொதிகை தொலைக்காட்சியில் ஜனவரி 14,15,16 ஆகிய நாட்களில் கிராமிய நிகழ்ச்சிகளாகிய ஆண்கள், பெண்கள் பறை இசை, கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கோலாட்டம், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், கிராமியப் பாடல்கள் போன்றவற்றை பிரம்மாண்டமான முறை யில் தயாரித்து காலை முதல் இரவு வரை காண்பித்தார்கள் எந்த விதத் தொய் வுமில்லாமல் மனம் மகிழும் வண்ணம் இருந்தது.
ஜனவரி 17ஆம் தேதி வெள்ளி காலை 9.30 முதல் 10.00 மணி வரை அய்யா என்ற தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் காண்பித்தனர்.

வாழ்க பொதிகை! இதைப் போன்ற நல்லவைகளை மேலும் பொதிகை தொடர்ந்து செய்க என்று கேட்டுக் கொள் கிறேன்.

- எஸ். நல்லபெருமாள், நாகர்கோவில்

Read more: http://viduthalai.in/page-2/74204.html#ixzz2re6E1m9H

தமிழ் ஓவியா said...


கடவுளுக்கு முகவரி உண்டா? விடுதலை வாசகர் வட்டம் சொற்பொழிவில் கேள்வி

மதுரை, ஜன. 27- 12.01.2014 ஞாயிற்றுக் கிழமை மாலை 6.30 மணிக்கு மதுரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பாக 13ஆவது தொடர் சொற்பொழிவு நடைபெற்றது. கூட்டத்திற்கு விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவரும் பணி நிறைவு பெற்ற நீதிபதியுமான பொ. நடராசன் தலைமை தாங்கினார். விடுதலை வாசகர் வட்டத்தின் பொருளா ளர் பெரி.காளியப்பன் வந்திருந் தோரை வரவேற்றார். "பெரி யார் பேழை" என்ற தலைப்பில் சடகோபன் அவர்கள் உரை யாற்றினார். அவரது உரையில் தானாக பிறக்காத மனிதன் தனக்காக மட்டுமே வாழக் கூடாது என்ற தந்தை பெரியார் அவர்களின் கருத்தினை விவ ரித்து பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. விடுதலை "இம்மாத சிந் தனை" என்ற தலைப்பில் மதுரை மாநகர பகுத்தறிவாளர் கழக தலைவர் சுப.முருகானந்தம் இம்மாத விடுதலையில் வந்த செய்திகளை தொகுத்து ஆருத்ரா தரிசனம் பற்றிய விமர்சனம் மோடி வருகிறார் எச்சரிக்கை என்ற அரசியல் கட்டுரை, சிவகாசி மணியம் அவர்கள் எழுதிய கடவுளுக்கு முகவரி உண்டா" என்ற பகுத்தறிவுச் சிந்தனை, விடுதலை ஆசிரியரும் திராவிடர் கழகத்தலைவருமான தமிழர் தலைவர் அவர்களின் வாழ்வியல் சிந்தனையில் நடைப் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்த கட்டுரை மற்றும் பிரா மணாள் உணவு விடுதி பெயர் பலகை அகற்றல் பார்ப்பனர் மாநாட்டில் 10 இட ஒதுக்கீடு போன்ற விவரங்களை விரிவாக பேசி விடுதலையின் செய்திகள் அரசியல் பகுத்தறிவு வாழ்வியல் சிந்தனை இன உணர்வு போன்ற செய்திகளை சுட்டி காட்டியது வந்திருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது. பேச்சாளர் பற்றிய அறிமுகத்தை மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் அ.வேல் முருகன் செய்தார்.

சிறப்புப் பேச்சாளரான மதுரை மாநகர திராவிடர் கழகத் தலைவர் சே. முனியசாமி "அயல் நாட்டு அனுபவங்கள்" என்ற தலைப்பில் அவர் சுற்றிவந்த 12 நாடுகள் பற்றிய அனுவங்களை சுவை பட எடுத்துரைத்தார். புத்தர் கோவிலில் 6 கைகள் உள்ள சிலையில் கையில் வேலா யுதம் சூலாயுதம் இருந்த கட் சியை சுவைபட எடுத்துக் கூறி னார். ஹுண்டாய் கார் கம்பெ னியில் ஒரு நிமிடத்திருக்கு ஒரு கார் தயாரிப்பதையும் ஒரு லட்சம் பேர் அங்கு வேலை செய்வதையும் அவர் கூறும் போது அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். சாலைகள் தூய்மையாக இருப்பதைக்கூறி காரில் செல்ப வர்கள் கூட உதிரும் இலை களை எடுத்து தங்கள் பையில் போட்டுகொள்கிறார்கள். அதே நேரத்தில் சீனர்கள் கடும் உழைப் பாளிகள் என்றாலும் ஏமாற்று பவர்களும் இருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டினார். அங்கு நீதிமன்றங்களில் உரிமை இயல் வழக்குகள் 6 மாதங்களி லும் குற்றவியல் வழக்குகள் 3 மாதங்களிலும் முடிவுக்கு வரு கின்றன என்று அவர் கூறும் போது வியப்பாக இருந்தது. அங்கு அணைகளில் தேங்கி யுள்ள தண்ணீர் 5 ஆண்டு பாசனத்திற்கு பயன்படுகிறது என்றார். ஹாங்காங்கில் உள்ள ஓட்டல்களில் தங்க கதவு செயற்கை வானம் ஆகியவை 1000 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளதை வியந்து பாராட்டி பேசினார். அவரது அனுபவங் கள் அனைவரது கவனத்தை ஈர்த்ததோடு சிந்தனைக்கு விருந்தாகவும் அமைந்திருந்தது. கூட்ட முடிவில் விடுதலை வாச கர் வட்ட செயலாளர் அ. முரு கானந்தம் நன்றி கூறினார்.

Read more: http://viduthalai.in/page-4/74215.html#ixzz2re7jj1ea

தமிழ் ஓவியா said...


இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக செயல்படுவதா? முதலமைச்சருக்கு திமுக ஆதிதிராவிடர் நலக் குழு கண்டனம்


சென்னை, ஜன. 27- தி.மு.க. ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (26.1.2014) மாலை 4 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்திலுள்ள அலு வலகத்தில் தி.மு.க. ஆதி திராவிடர் நலக்குழுச் செயலா ளர் க.சுந்தரம் அவர்கள் தலை மையில் - தி.மு.க. ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி - துணைச் செயலாளர்கள் வி.பி.ராஜன், திருமதி. சீனியம்மாள் ஆகி யோர் முன்னிலையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி சிறப்புரையாற் றினார்.

இக்கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலுள்ள ஆதி திராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் - துணை அமைப் பாளர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன:

திராவிடர் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையான சமூகநீதியின் எதிர்ப்பாளரான ஜெயலலிதா, தான் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பிற்படுத் தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப் பட்ட - தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு எதிராகவும், ஆதிக்க வெறியர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வண்ணம் அவர் களுக்கு ஆதரவாகவும் செயல் பட்டு வருவது அவரது வாடிக் கையான செயல்களில் ஒன்று.

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த போது கொண்டு வந்த - செயல் படுத்திய - நடைமுறைப்படுத் திய பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை, காழ்ப்புணர்ச் சியின் காரணமாக முடக்கி வரும் ஜெயலலிதா, உலகமே வியக்கும் வண்ணம் ஒமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய சட்டமன்றக் கட்ட டத்தை முடக்கி, சிறப்பு மருத் துவமனை என்ற பெயரில் அரைகுறையாக அமைக்கப் பட்டு திறக்கப்பட்டது.

அங்கே பணியாற்றிட விண்ணப்பத் திடக் கோரி, 2013 டிசம்பர் 27 அன்று ஜெயலலிதா அரசு அவ சரமாக ஒரு அறிக்கை வெளி யிட்டுள்ளது. அதில் இடஒதுக் கீடு விதிமுறை பின்பற்றப்பட மாட்டாது என சமூகநீதிக்கு எதிரான ஓர் அறிவிப்பை விடுத்து, பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட மக்களின் எதிரி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபணம் செய்துள்ளார் ஜெய லலிதா.

பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப் பட்ட வகுப்பினைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி, வேலை வாய்ப்புகளில் உரிய இடம் பெற இடஒதுக்கீடுதான் கார ணம். தந்தை பெரியார், பேரறி ஞர் அண்ணா, டாக்டர் அம் பேத்கர் ஆகிய தலைவர்கள் போராடி பெற்றுத்தந்த அந்த உரிமைகளை - தலைவர் கலை ஞர் உள்ளிட்ட இடஒதுக்கீட் டில் அக்கறையுள்ள பிற தலை வர்கள் பாதுகாத்து வரும் அக்கொள்கையினை சிதைக் கின்ற வகையில் ஜெயலலிதா அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

கடந்த 19-1-2014 அன்று திமுக தலைவர் கலைஞர் அவர் கள் இடஒதுக்கீட்டில் நீதிமன் றத்தின் மீதுபழி சுமத்துவதா? என்ற தலைப்பில் உடன்பிறப்பு களுக்கு எழுதிய கடிதத்தில், தமிழகத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு காரணமாகத்தான், இட ஒதுக்கீடு பின்பற்றப் படவில்லை என்று ஜெயலலிதா கூறியிருக் கும் காரணம், மக்களை ஏமாற் றுவதற்கும், சமூக நீதியைக் குழிதோண்டி புதைப்பதற்கு மான ஒன்றே தவிர வேறல்ல.

என ஜெயலலிதாவின் மோசடி களையும் - அவர் சமூகநீதியின் முதல் எதிரி என்பதை விளக்கி யிருப்பதோடு, இடஒதுக்கீடு என்பது திராவிட இயக்கங் களின் மூலாதாரக் கொள்கை என்பதை மனதிலே கொண்டு, இந்த ஆட்சியினர் இனியாவது மனம் திருந்தி அறிவிக்கப் பட்டுள்ள மருத்துவர் தேர்வில், இடஒதுக்கீடு கொள்கை கடைப்பிடிக்கப்படும் என்ற அறிவிப்பினைச் செய்ய முன் வருவார்கள் என்று எதிர்பார்க் கிறேன்.

அதற்குப் பதிலாக நாங் கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று பிடிவாதம் காட்டுவார்களேயானால், அதன் விளைவுகளை அவர்கள் சந்திக்கத்தான் வேண்டியிருக் கும்! என்று ஜெயலலிதாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதை இக்கூட்டம் சுட்டிக்காட்டுவ தோடு,

இடஒதுக்கீட்டுக் கொள் கையில் தொடர்ந்து, திராவிடர் இனத்துக்கு எதிராகவும் - தமி ழினப் பகைவர்களுக்கு ஆதர வாகவும் நடந்து வரும் ஆதி திராவிடர் இன விரோதியும், சமூகநீதி விரோதியுமான ஜெய லலிதாவின் இந்த நடவடிக் கையை இக்கூட்டம் வன்மை யாகக் கண்டிப்பதோடு, தனது போக்கினை மாற்றிக் கொண்டு, இடஒதுக்கீட்டுக் கொள்கை கடைப்பிடிக்கப்படும் என்ற அறிவிப்பினை உடனடியாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள் கிறது

Read more: http://viduthalai.in/page-7/74223.html#ixzz2re8Vds6s

தமிழ் ஓவியா said...


கவலை ஏன்?


மனிதர்கள் எந்த மதத்தில் இருந்தாலும், அவர்கள் எந்த மதத்திற்குப் போனாலும், மற்ற மதத்தைச் சார்ந்த மனிதனுக்கு அதனால் கவலை ஏன் ஏற்படவேண்டும்?

- (குடிஅரசு,16.11.1946)

Read more: http://viduthalai.in/page-2/74265.html#ixzz2rjK8HVcM

தமிழ் ஓவியா said...

எச்சரிக்கை

ஊறுகாய், கருவாடு உள்ளிட்ட உப்பு அதிகம் சம்பந்தப்பட்டு இருக்கும் உணவினை அதிகமாக சாப் பிட்டால் இரைப்பைப் புற்று நோய் வரும்; எண்ணெயைத் திருப்பித் திருப்பிப் பயன்படுத்தினாலும் இதே ஆபத்து தான்!

- சென்னைப் பொது மருத்துவமனைகருத்தரங்கில் அறிவிப்பு

Read more: http://viduthalai.in/e-paper/74262.html#ixzz2rjKs2aTM

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

வெளுப்பு

செய்தி: அய்.நா. மனித உரிமைகள் அமைப்புத் தேர்தலில் இந்தியா மீண்டும் போட்டி!

சிந்தனை: அதெல்லாம் சரிதான்! சிங்கள அரசின் மனித உரிமைக்கு எதிரான பிரச்சினையில் இந்தியா வின் முகம் வெளுத்து விட்டதே!

Read more: http://viduthalai.in/e-paper/74262.html#ixzz2rjL5iXQj

தமிழ் ஓவியா said...


மருத்துவத்தில் பெண்கள்


பல நூற்றாண்டுகள் கழித்து கிரேக்க நாட்டில் ஏற்பட்ட அறிவியல் புரட்சியும் பெண்களின் பங்களிப்போடுதான் நடந்திருக்கிறது. பிதாகரஸ், பிளாட்டோ போன்ற அறிஞர்களின் குழுவில் பெண்கள், ஆண்களுக்கு இணையாக அங்கம் வகித் திருக்கிறார்கள்.

சில நாடுகளில் பெண் மருத்துவர்கள், பெண்களுக்கு மட்டுமே சிகிச்சையளிக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தது. ஆனால் அப்போதும் ரோம் நகரில் பெண் மருத்துவர்கள், பால் வேறுபாடின்றி அனைவருக்கும் சிகிச் சையளிப்பது நடைமுறையில் இருந்திருக்கிறது.

அதேபோல அலெக்ஸாண்டிரியாவைச் சேர்ந்த மேரி என்கிற வேதியியல் வல்லுநர் சிற்சில கண்டுபிடிப்புகளையும் இந்த உலகிற்கு வழங்கியிருக்கிறார்.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் ஹைபாத்தியாவின் அறி வியல் பணி அளப்பரியது. இவர் தன் தந்தையின் வழிகாட்டு தலில், அலெக்ஸாண்டிரியா பல்கலைக்கழகத்தில் கணிதவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி குறித்த வகுப்புகளை நடத்தியிருக்கிறார்.

திரவங்களின் அடர்த்தியைக் கண்டறி வதற்கான கருவியையும், விண்ணில் நட்சத்திரங்களின் இடத்தைக் கண்டறியும் தொலைநோக்கியையும் ஹைபாத்தியா கண்டுபிடித்த தாகச் சொல்கிறார்கள்.

அதற்கடுத்து வந்த நூற்றாண்டுகளில் பெண் விஞ்ஞானி களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து, முடிவில் குறிப் பிட்டுச் சொல்லும்படி ஒன்றிரண்டு பேர் மட்டுமே நிலைத்து நின்றனர்.

என்ன செய்யப் போகிறோம்?

இப்போதும் உலக அளவில் கணக்கெடுக்கும் போது அறிவியல் தொழில்நுட்பத்திலோ, ஆராய்ச்சியிலோ சிறந்து விளங்குகிறவர்களின் பட்டியலில் பெண்களைத் தேட வேண்டியி ருக்கிறது. இதற்கு என்ன காரணம்? தங்கள் மகள் அறிவியல் துறையைத் தேர்ந்தெடுத்துப் படிப்பதைப் பெற் றோர்கள் தடுக்கிறார்களா? முழுவதுமாகத் தடுப்பதில்லை, ஆனால் அதற்கான எல்லையைச் சுருக்கிவிடுகிறார்கள்.

அறிவியல் என்றால் மருத்துவத்துறையை மட்டுமே நோக்கிய தாக இருக்கிறது பெற்றோர்களின் இலக்கு. மகன்களைத் துணிச்சலுடன் ஆராய்ச்சிப் படிப்புகளை நோக்கி நகர்த்தும் பெற்றோர், தங்கள் மகள் அதை நோக்கி நகர்வதை அவ்வள வாக விரும்புவதில்லை.

இந்தத் தயக்கம்தான் பெண்களை, குறுகிய வட்டத்துக்குள்ளேயே நிறுத்திவிடுகிறது. எல்லை தாண்டி சிந்திக்கவிடாமல் முடக்கிவிடுகிறது. உண்மையில் அறிவியல் அறிவில் ஆண்களைக் காட்டிலும் சிறந்து விளங்கும் திறமை பெண்களுக்கு இருக்கிறது. அதைத்தான் வரலாறும் சொல்கிறது. அந்த வரலாறு திரும்புவதற்கான வழிகளை ஏற்படுத்தித் தருவதும், தடைகளை அகற்றுவதும் நம் கைகளில்தான் இருக்கிறது.

Read more: http://viduthalai.in/page-7/74271.html#ixzz2rjMLe9AI