Search This Blog

2.1.14

மோடியின் கபடம்! - மோடி ஒரு மரண வியாபாரி

மோடியின் கபடம்! (1) 


இந்தியாவையே குலுக்கிய இரு முக்கிய நிகழ்வுகள்
1992 டிசம்பர் 6 அம்பேத்கர் நினைவு நாளன்று சங்பரி வார்க் கும்பல் - பிஜேபி தலைவர் எல்.கே. அத்வானி தலைமையில் சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை - இடித்துச் சுக்கு நூறாக்கிய கொடுமை;
இரண்டாவது 2002இல் மோடியின் தலைமையிலான குஜராத் பிஜேபி ஆட்சி சிறுபான்மை மக் களான முஸ்லீம்கள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர் களை (குழந்தைகள் கர்ப்பிணிப் பெண்கள் உட்பட) அரசு பயங்கரவாதமாகக் கொன்று குவித்த கொடுமை!
முதல் குற்றத்தைச் செய்த அத்வானி, வாஜ்பேயி உள்ளிட்ட 68 பேர் தண்டிக்கப்படாமல் (லிபரான் ஆணை யத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி) படாடோ பமாக பதவிச் சுகங்களையும் அனுபவித்த நிலையில் பல்லக்குச் சவாரி செய்து கொண்டிருக்கிறார்கள்.
இரண்டாவது, ஈராயிரம் பேர்களுக்கு மேல் படு கொலை செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்த நபர், இந்தியாவின் பிரதமருக்கான  வேட்பாளராகப் பவனி வருகிறார்.
இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல!
இதுவரை இந்தக் கொலைக் குற்றங்களுக்குப் பொறுப்பு ஏற்காத, அதற்காக வருத்தம் கூடத் தெரிவிக் காத நீரோ மன்னன் (உச்சநீதிமன்றம் பயன்படுத்திய வார்த்தை இது) கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு பசப்பு வார்த்தைகளால் அந்தச் சம்பவம் வார்த்தை களால் விவரிக்க முடியாத வேதனையைத் தமக்கு ஏற்படுத்தியதாகக் கூறியுள்ளார்.
இப்பொழுதுகூட அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை; மன்னிப்பும் கோரவில்லை.
என்ன கூறுகிறார்? முதன் முதலாக  எனது துயரத்தை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறுகிறார்.
அவரின் ஒப்புதல் வாக்கு மூலப்படி பார்த்தாலும்கூட ஒரு கொடிய நிகழ்வுக்கு ஒரு மனிதன்12 ஆண்டு களுக்குப் பிறகு முதன் முதலாக துயரத்தை வெளிப் படுத்துகிறார் என்றால் இது இயல்பானதுதானா? நம்பத் தகுந்தது தானா?
12 வருடம் கழித்தா ஒரு மனிதனுக்கு வருத்தம் பீறிட்டுக் கிளம்பும்? பல ஊடகங்கள் மிகவும் வெளிப் படையாக கேட்டும்கூட, அந்த நேரத்தில் எல்லாம் விடாப் படியாக நின்றவர் - அத்தகு சந்தர்ப்பத்தில்கூட வருத்தம் தெரிவிக்க மனம் இல்லாதவர், இப்பொழுது துயரம், வருத்தம் என்று கூறுவதற்கு என்ன காரணம்?
இந்தியாவில் டவுசர் போடாத கோலி விளையாடும் சின்னஞ்சிறு பொடியன்கூட படக்கென்று சொல்லி விடுவான்;  தேர்தலுக்காகப் பசப்பும் ஏமாற்றும் வார்த்தையென்று; வெகு தூரம் கூடப் போக வேண்டாம். 5 மாதங்களுக்கு முன்புகூட இவர் என்ன சொன்னார்? குஜராத் காந்தி நகரில் அதிகார பூர்வ இல்லத்தில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி பேட்டி அளித்தார். அப்போது குஜராத் கலவரம் தொடர்பாக பலரும் தங்கள்மீது குற்றம் சாட்டியபோது விரக்தி அடைந்தீர்களா? என்று செய்தியாளர் கேட்டதற்கு மோடி அளித்த பதில் வருமாறு:
நான் ஏதாவது செய்திருந்தால்தான் நான் குற்றம் செய்ததாக நினைத்திருப்பேன். நாம் பிடிபட்டு விட்டோம். நாம் திருடி விட்டதால் சிக்கிக் கொண்டு விட்டோம் என்பதுபோல் நினைக்கும்போதுதான் எரிச்சலும், விரக்தியும் ஏற்படும். ஆனால் எனது விஷயம் அப்படிப்பட்டதல்ல; நடந்த நடவடிக்கை களுக்காக (குஜராத் கலவரம்) வருத்தப்படு கிறீர்களா? என்று கேட்கிறீர்கள். இந்த விவகா ரத்தைப் பொறுத்தவரை உச்சநீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழு எனக்கு விரிவான நற்சான்றிதழை அளித்துள்ளது.
எனினும் ஒரு காரை நாமே ஓட்டிச் சென்றாலும் சரி, மற்றொருவர் ஓட்டும்போது பின் சீட்டில் அமர்ந் திருந்தாலும் சரி, ஒரு நாய்க் குட்டி காரின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டால் நமக்கு மன வேதனை ஏற்படுமா? ஏற்படாதா? என் நிலையும் அதுபோன்றதுதான் (தினமணி 13.7.2013 பக்கம்1)
அய்ந்து  மாதங்களுக்கு முன் இதே நரேந்திரமோடி கூறியவைதான் இவை.
இன்றைக்குத் தெரிவிக்கும் மோடியின் வருத்தம் எந்த ரகத்தைச் சேர்ந்தது? நாம் பயணிக்கும் காரில் நாய்க்குட்டி ஒன்று அடிபட்டு இறந்ததால் ஏற்படும் வருத்தத்துக்குச் சமமானது என்பதுதானே!
கடந்த ஜூலையில் சொன்ன வருத்தத்துக்கும், இப்பொழுது மோடி சொல்லும் வருத்தத்திற்கும் அடர்த்தியில், ஆழத்தில், வேறுபாடு உண்டா என்பதை மோடிதான் விளக்க வேண்டும். (இதற்கு வக்காலத்துப் போட்டு பாஷ்யம் செய்ய ஒருக்கால் சோ. ராமசாமி அய்யர் வந்தாலும் வரக்கூடும்).
மோடி - ஒரு மரண வியாபாரி என்று காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியா காந்தி சொன்னார். மோடியின்மீது விழுந்த கொலைக் கறைக்காக  தேர்தலில் பாடம் கற்பிக்கப்படும் என்ற பயம் உலுக்கும் நிலையில், அவர் வட்டாரத்தில் யாரோ சொன்ன யோசனையை ஏற்றுதான் 2002 நிகழ்வுக்கு வேதனைப்படுவதாக வெளிப்படுத்தியுள்ளார்.
மோடியைப் பற்றி அறிந்தவர் களுக்கு இது வெறும் உதட்டு அசைவு - உள்ளத்தின் வெளிப்பாடு அல்ல என்பது நூற்றுக்கு ஆயிரம் சதவீதம் தெரியுமே!
                  ----------------- ----------------”விடுதலை” தலையங்கம் 30-12-2013
மோடியின் கபடம்! (2)

நாய்க்குட்டி காரில்  அடிபட்டதையும்  குஜராத் மாநிலத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ் லீம்கள் கொல்லப்பட்டதையும், பெண்கள் சூறையாடப் பட்டதையும் சமப்படுத்திப் பேசிய நிலையில், டில்லி மாநில பி.ஜே.பி. துணைத் தலைவர் அமீர்ராசா உசேன் என்பவர் பதவியிலிருந்து மட்டுமல்ல; கட்சியிலிருந்தும் விலகினார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறினார்.
நரேந்திர மோடியின் இந்தக் கருத்து இழிவானது; மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தக் கூடியது. இதுபோல் பேசினால் இஸ்லாமியர்களின் ஆதரவை அவர் எப்போதும் பெற முடியாது. மோடி பிஜேபியின் தலைவர்; என்னுடைய தலைவர் இல்லை என்று கூறினாரே!
பதவி விலகல் குறித்து மேலும் அவர் கூறினார். என்னைப் போல் பல சிறுபான்மையினர் காங்கிரஸ் அல்லாத மாற்றுக் கட்சிகளை எதிர்பார்க்கிறோம். அதை வாஜ்பேயி, அத்வானியால் வழங்க முடிந்தது.  மோடியை முன்னிலைபடுத்துவதன் மூலம் எங்களுக்கிருந்த மாற்று வழியை பி.ஜே.பி. அடைத்துவிட்டது. எல்.கே. அத்வானியோ, சுஷ்மா சுவராஜோ பிரதமர் வேட்பாளராக வேண்டும் என்றே இஸ்லாமியர்கள் விரும்புகின்றனர். மோடி தனது கருத்துக்கு மன்னிப்புக் கேட்க மறுத்து விட்டார். எனவே கட்சியிலிருந்து விலக எனக்கு முழு உரிமை உள்ளது என்று எழுதினாரே.
(வாஜ்பேயியாக இருந்தாலும், அத்வானியாக இருந் தாலும் அடிப்படை கொள்கை ஒன்றுதான்)
இதுதான் பாதிக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த வரின் உண்மையான உள்ளக் குமுறலாக இருக்க முடியும். குஜராத்தில் முஸ்லிம்கள் மோடிக்கு வாக்களித்து இருக் கிறார்கள் என்று சோ போன்றவர்கள் குருட்டுத்தனமாக வக்காலத்து வாங்கி எழுதுவது முஸ்லீம்கள் மீதான தாக்குதலை வேறு சொற்களில் நியாயப்படுத்துவதாகும்.
குஜராத்தில் சட்டப் பேரவைத் தேர்தலில்  பிஜேபி சார்பில் ஒரே ஒரு முஸ்லீம்கூட நிறுத்தப்படவில்லை
மோடி சொன்ன உதாரணம்கூட அடிப்படையில் தவறானது. காரில் நாய்க்குட்டி அடிபட்டதுகூட விபத்து - தற்செயலானது.
ஆனால், குஜராத்தில் சிறுபான்மையினர் ஆயிரக் கணக்கில் படுகொலை செய்யப்பட்டது - திட்டவட்ட மானதாகும்.
கோத்ரா நிகழ்வுக்குப் பிறகு - பலியானவர்களை சம்பந்தப்பட்டவர்களின் ஊருக்கு அனுப்ப அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு எடுத்த நிலையில், அதனை மாற்றி அனைத்துப் பிணங்களையும் ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று முதல் அமைச்சர் மோடி ஆணையிட்டார் என்றால், அதன் பொருள் என்ன? பொது மக்கள் மத்தியில் பெரும்பான்மையினரான இந்துக்கள் மத்தியில் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு வெறியாகி, விபரீதமாக உருமாற வேண்டும் என்ற படுநாசமான கோரப்புத்தி தானே!

குஜராத் கலவரத்தில் பொடா சட்டத்தின் கீழ் நரேந்திர மோடி அரசால் சிறையில் தள்ளப்பட்ட 287 பேர்களுள் 286 பேர்கள் சிறுபான்மையினரான முசுலிம் கள், ஒருவர் சீக்கியர் - ஒருவர்கூட இந்து கிடையாது.
குஜராத்தில் சிறுபான்மை மக்கள் கொல்லப் பட்டபோது விவரிக்க வார்த்தையே இல்லாத அளவுக்கு வருத்தப்பட்டதாக இப்பொழுது பசப்புகிறாரே - அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களைத்தானே பொடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தார்? பாதிப்புக்குக் காரணமான கொலை வெறியர்களை - பெரும்பான்மை சமுதாயத் தினர்களுள் ஒருவரைக்கூட பொடாவின் கீழ் கைது செய்யவில்லையே, ஏன்? இதற்கு முதலில் பதில் சொல்லட்டும் பார்க்கலாம்.
கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து முக்கிய அதிகாரிகளை அழைத்து, மூன்று நாள் கெடு கொடுத்து, அதற்குள் அதிகபட்சமாக எவ்வளவு முஸ்லிம் மக்களைத் தீர்த்துக் கட்ட முடியுமோ அத்தனைப் பேர்களையும் வேட்டையாட அதிகாரம் கொடுத்தார் என்று காவல்துறை அதிகாரிகளே கூறியுள்ளார்களே!
காவல்துறைத் தலைவர் (டிஜிபி) சிறீகுமார், புலனாய் வுத்துறையின் உயரதிகாரி சஞ்சீவ்பட் ஆகியோர் ஆவணப்படுத்தியுள்ளார்களே!
மோடி முதல் அமைச்சராகவிருந்த பிஜேபி சட்டப் பேரவை உறுப்பினர் அதுவும் கோத்ரா தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் ஹரீஷ் பட் என்பவர் தெகல்கா புலனாய்வுத் துறையிடம் கூறியவை பதிவு செய்யப்பட் டுள்ளன.
கலவரத்தை நடத்த பி.ஜே.பி., வி.எச்.பி. தலைவர் களுக்கு மோடி மூன்று நாள் அவகாசம் கொடுத் திருக்கிறார். வி.எச்.பி. தலைவர்கள் என்னை சபர்கந்தா என்னும் இடத்தில் உள்ள குவாரிக்கு அழைத்துச் சென்று குண்டுகள் எப்படி தயாரிக்கப்பட்டன? எப்படி அகமதாபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன என்று நேரடியாக விளக்கினர். இந்துக்கள், முஸ்லீம்களைப் பழி தீர்த்துக் கொள்ளும்போது காவல்துறையினர் அமைதி யாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப் பட்டனர். காவல்துறையினர் உதவி மட்டும் இல்லாமல் போயிருந்தால் இஹ்கான் ஜாஃப்ரியைக் கொன்றிருக்க முடியாது என்று கூறினாரே!
இவ்வளவுக்கும் மூலகாரணமாக இருந்த முதல் அமைச்சர் மோடிதான் குஜராத் கலவரத்தால் அவருக்கு ஏற்பட்ட வேதனையை விவரிக்க வார்த்தையில்லை என்று இன்று கூறுகிறார் என்றால், இவர்களைவிட கொடியவர் களை மனிதம் என்ற ஒன்று அறவேயில்லாதவர்களை வரலாறு சந்திப்பது அரிதினும் அரிதே!
இப்படிப்பட்ட ஒருவர் 120 கோடி இந்திய மக்களுக்குப் பிரதமரா? நினைத்துப் பார்க்கவே முடியாத பயங்கரம் அது!

Read more: http://viduthalai.in/page-2/72884.html#ixzz2p4RVge1a
 ----------------------------------”விடுதலை” தலையங்கம் 31-12-2013

மோடியின் கபடம் (3)

குஜராத் கலவரத்திற்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு வருத்தம் தெரிவிக்கிறார் - அம்மாநில முதலமைச்சர் என்றால், அதனை யாரும் நம்பமாட்டார்கள்.
அந்தக் கலவரம் நடந்த பின்னணியைக் கருத்தில் கொண்டால், அது முழுக்க முழுக்க முதலமைச்சர் மோடி என்ற மய்யப் புள்ளியிலிருந்து வெடித்துக் கிளம்பிய விபரீதம் ஆகும்.

சிறுபான்மையினரை வளைத்து வளைத்துக் கொன்றனர் - அதற்காக மலைவாழ் மக்களைக்கூடப் பயன்படுத்திக் கொண்டனர். ஜெய் ஸ்ரீராம் என்று குரல் கொடுத்தால் காவல்துறையினர் ஒதுங்கிக் கொள்ளவேண்டும்; சிறுபான்மையினரை உயிரோடு கொளுத்த காவல்துறையின் வாகனங்களில் இருந்துகூட பெட்ரோல் கொடுத்து உதவப்பட்டுள்ளது.

காவல்துறை ஜீப்பில்கூட சிறுபான்மையினர் கொண்டுவரப்பட்டு, சங் பரிவார்க் கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதெல்லாம் உலகில் எங்கும் கேள்விப்பட்டிருக்க முடியாத அவலம் ஆகும்.

மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினர் முகாம்களில் சரணடைந்தனர். அந்த நேரத்தில், முதலமைச்சர் மோடி கவ்ரவ் யாத்திரை ஒன்றை நடத்தினார். அப்பொழுது அவரின் திருவாய் அவிழ்த்துக் கொட்டியது என்ன?

நாங்கள் அகதி முகாம்கள் நடத்தி, முஸ்லிம்களுக்குப் பிள்ளை பெறும் வாய்ப்பு களை ஏற்படுத்திக் கொடுக்க விரும்பவில்லை. இவ்வாறு இனப்பெருக்கம் செய்யும் மக்களுக் குப் பாடம் படித்துக் கொடுக்கவேண்டும் என்று பேசினாரா இல்லையா? இது மிகப்பெரிய- பிரச்சினையாக வெடித்தபோது முதல்வர் அவ்வாறு பேசவில்லை என்றனர்; ஆனால், அவர் அவ்வாறு பேசிய ஒலிநாடா வெளியில் வந்துவிட்டதே - மோடியின் முகம் வெளிறிப் போனதுதான் மிச்சம்.
குஜராத்தில் கலவரம் நடந்த ஒரு மாதம் கழித்து அன்றைய பிரதமர் வாஜ்பேயி அகதி முகாம்களைப் பார்வையிட்டார். நிவாரண நிதியாக ரூ.150 கோடி அறிவித்தார் பிரதமர். ஆனால், இதற்குமுன் 7.3 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு விட்டது - இனி நிதியோ, திட்டங்களோ தேவைப்படாது என்று மோடியின் உள்துறை அமைச்சர் கூறினாரா இல்லையா?
இன்னொரு தகவலும் முக்கியமானது. குஜராத்தில் சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மல்லிகா சாராபாய் பொதுநல வழக்கொன்றைத் தொடர்ந்தார்.

அந்த வழக்கைச் சீர்குலைக்கும் நோக்கத்தோடு தனது வழக்குரைஞர்களுக்கு லஞ்சமாகப் பணம் கொடுத்தார் என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தினாரே - முதலமைச்சர் நரேந்திர மோடி மீது - அதற்கு இதுவரை பதில் உண்டா?
காவல்துறை அதிகாரி சிறீகுமார் இந்தத் தகவலை நானாவதி ஆணையத்திடமே நேரில் சொன்னதுண்டே!

குஜராத் கலவரத்திற்கும், மோடிக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லையாம் - பம்மாத்துப் பேசுகிறார்கள்.

பெரிய வீராதி வீரர் சூராதி சூரர் என்று பொதுக்கூட்ட மேடைகளில் தோள் தட்டுகிறாரே - 12 ஆண்டுகளுக்குப் பிறகு வருத்தப்படுவதாக நீலிக் கண்ணீர் வடிக்கிறாரே, இதே மோடி சி.என்.என்., அய்.பி.என். தொலைக்காட்சியில் பிரபல ஊடகவியலரான கரண்தாப்பருடன் பேட்டிக்கு அமர்ந்தபோது, குஜராத் கலவரம் குறித்து வினாக்கள் எழுப்பப்பட்டபோது, தாக்குப் பிடிக்க முடியாமல் வெறும் நான்கரை நிமிடங்களே தாக்குப்பிடித்து, தண்ணீர் குடித்து ஜகா வாங்கி வெளியேறினாரா இல்லையா?

உண்மையை மறைப்பதும், அப்பட்டமாகப் பொய்களைப் பேசுவதும், நீலிக் கண்ணீர் வடிப்பதும் எல்லாம் சங் பரிவார்க் கும்பலுக்குக் கைவந்த கலை. அதில் கைதேர்ந்தவர் இந்த மோடி. அதில் ஒன்றுதான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத் சம்பவம் வருணிக்க முடியாத துயரத்தை தனக்கு அளித்தது என்று பசப்புவது ஆகும். இந்தக் கபட நாடகத்தை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் -  நம்பவே மாட்டார்கள்.
         ----------------------------”விடுதலை” தலையங்கம் --2-1-2014

34 comments:

தமிழ் ஓவியா said...


செய்தியும், சிந்தனையும்!


கோபம் வராதது - ஏன்?

செய்தி: மக்களவைத் தேர்தலில் பிஜேபியோடு மதிமுக நிபந்தனையில்லாக் கூட்டணி - ஈழத் தமிழர்களைக் கொன்ற ராஜபக்சேவுக்கு துணை போன காங்கிரசைத் தோற்கடிக்க வேண்டும். - வைகோ, ம.தி.மு.க. பொதுச் செயலாளர்

சிந்தனை: ஈழத் தமிழர்களைக் கொன்ற ராஜபக்சே மீது ஏற்படும் நியாயமான கோபம், சிறுபான்மை மக்களை பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்த நரேந்திர மோடியின் மீதும் ஏற்படாதது - ஏன்? தம்பிகளே பார்த்து ஓட்டுங்கப்பா!

Read more: http://viduthalai.in/e-paper/72989.html#ixzz2pFU029I8

தமிழ் ஓவியா said...


வாழ்க்கையை நீட்ட இதோ ஒரு எளிய வழி!


2014இல் எத்தனையோ பேர் புதுப்புது முடிவுகளை எடுப்பர்; பலர் அதன்படி நடப்பார்கள். சிலர் நடக்க முயற்சிப்பார்கள்; வேறு சிலரோ, நடக்காமல், ஓரிரு நாட்களிலேயே அதனை முறிப்பார்கள்!

நமது உடல் நலம் பேணுவது நம் அனைவருக்கும் உள்ள முதற் கடமை யாகும். காரணம் நோயற்ற வாழ்வு தானே மக்களுக்குக் குறைவற்ற செல்வம்! இல்லையா?

இளையவர்களும்கூட இப்போது சர்க்கரை நோய்க்கும், இதய நோய்க் கும் ஆளாகும் கொடுமை மலிந்து வருகிறது.

அதனைத் தவிர்க்க அனைவரும் - ஏன் இருபாலரும்கூட - நாள்தோறும் தவறாமல் நடைப் பயிற்சி பழகிடத் தவறக் கூடாது.

அண்மைக் கால ஆய்வுகள், பல பல்கலைக் கழகங்கள் - அமெரிக்க இதய சிகிச்சை மருத்துவக் கழகத் தினர் போன்றவர்கள் செய்த ஆய்வுகள், தெரிவிக்கும் முடிவு என்ன தெரியுமா?

அன்றாடம் நடந்து, நடந்து, நடைப் பயிற்சியை ஒரு பழக்கமாகத் தொடர்ந்து வரும் பலரும் நீண்ட ஆயுளைப் பெறுபவர்களாகவும், அவர்களோடு ஒப்பிடுகையில் நடைப் பயிற்சியோ, உடல் வேலைகளோ செய்யாமல் வெறும் குத்துக்கல் போலவும் படுக்கை உருளைக் கிழங்குகள், (Couch Potatos) போலவும் உள்ளவர்கள் எடை அதிகமாகிய கன வான்களின் ஆயுள் குறைவான தாக இருக்கின்றது என்று கண்டறியப் பட்டுள்ளது!

அமெரிக்க இதய சிகிச்சை மருத்து வர்கள் சங்கத்தினரின் பரிந்துரைப்படி

வாரத்தில் குறைந்தபட்சம் 2½ மணி நேரம் (60+60+30) மணித் துளிகள் உடல் ரீதியாக மிகவும் சுறுசுறுப்பாக பணிகளில் ஈடுபட வேண்டும். அதாவது 5 நாள்கள் - நாள் ஒன்றுக்கு 30 (நிமிடங்கள்) மணித் துளிகள் நடைப் பயிற்சி போன்ற உடல் பணிகளில் (Physical Activities) ஈடுபடுதல் அவசியம்.

அதற்கு மேலும் செய்தால் அது கூடுதல் பயனைத் தரும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லையே!


தமிழ் ஓவியா said...

அமெரிக்காவின், கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பெர்க்லி நேஷனல் லேபரட்டரி என்ற தேசிய ஆய்வுக் கூடத்தின் விஞ்ஞானியான டாக்டர் பால் வில்லியம்ஸ் என்பவர் தலைமையில் இதுபற்றி (இந்த நடைப்பயிற்சி ஆராய்ச்சி மூலம்) கண்டறியப்பட்டுள்ளது.
நடுத்தர வயதினரான 42,000 பேர்களைக் கொண்டு (1998 முதல் 2001 வரை) தேசிய நடைப் பயிற்சியாளர் களின் நலச் சர்வே எடுக்கப் பட்டது. நடைப்பயிற்சிக் கெனவே நடைபெறும் ஒரு பத்திரிகையின் சந்தாதாரர் களாகவும் அவர்கள் உள்ள னர். அதன் மூலம் திரட்டப்பட்ட வினா - விடை மூலம், வாழ்க்கை முறை (Life Style) உணவுப் பழக்க வழக்கம், உடற்பயிற்சி இவைகளை வெகுவாக ஆய்வு செய்துள்ளனர்! மரணம்பற்றிய குறிப்புகளும் அதில் இணைக்கப்பட் டுள்ளன.

அவர்களில் 2008 வரை உயிருடன் உள்ளவர்கள் யார் யார் என்று ஆய்வு செய்துள்ளனர்.

23 விழுக்காட்டினர் எந்த உடல் வேலையும் செய்யாதவர்கள் (அந்த வழிகாட்டும் அளவுகோல்படி)

16 விழுக்காட்டினர் அவர்களது வழிகாட்டும் நெறிமுறைகளைப் பின் பற்றியவர்கள்.

மற்றவர்கள் அதை தாண்டியவர். இதில் சராசரி 91\2 ஆண்டுகளில், 2448 பேர் அதாவது 6 சதவிகிதத்தினர் - இறப்புக்கு ஆளானவர்கள்!

யார் மேற்காட்டிய அளவுக்கு உடற்பயிற்சி அதிகமாக உள்ளவர்களில் மூன்றில் ஒருபங்கினருக்கு மரணம் எளிதில் வரும் வாய்ப்பு மிக மிகக் குறைவு.

மற்றபடி அளவோடு 2ஙூ மணி நேரம் - வாரத்தில் - அதாவது 150 நிமிடங்கள் 5 நாளில் (ஒரு நாளுக்கு 30 நிமிடம் நடை) 11 சதவிகிதத்தினருக்கு எளிதில் மரண வாய்ப்பு மிகவும் குறைவே!

ஸ்டேராக் என்ற பக்கவாதம், சர்க்கரை நோய், இதய நோய் போன்ற நோய் தாக்குதல்கள் நடைப்பயிற்சி செய்தவர்களுக்கு மிகவும் குறைவு - குறைவு!

நடைப்பயிற்சியால் பல நன்மைகள் உண்டு. மிகுதியும் நடக்கும் பழக்க முடையவர்கள் எப்போதும் சுறுசுறுப் புடன், இயங்குவர்; ஆரோக்கியத்துடன் இருப்பர்.

நம் ஆயுளை நடைப்பயிற்சி நீட்டிட உதவுகிறது என்பதை மறவாதீர்!

எனவே நாளும் நடைப்பயிற்சியைத் தவிர்க்காதீர்கள்!

24 மணி நேரத்தில் - 1440 மணித் துளிகளில் - 30 மணித் துளிகளைக் கூடவா ஒதுக்க முடியாத அளவுக்கு நீங்கள் பல்வேறு வேலைகளில் ஈடுபடுகின்றீர்கள்? நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள்!

நடைப்பயிற்சி, உணவில் கட்டுப் பாடு, போதிய தூக்கம், மருத்துவர் கூறிய தேவைப்படும் மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ளுதல் இவை இருந்தால், நோயைக் கண்டு நாம் பயப்பட வேண்டாம்; நோய் நம்மைப் பார்த்து பயப்பட்டு நடையைக் கட்டும்!
என்ன, நடக்க ஆயத்தமாகி விட்டீர்களா? புறப்படுங்கள்!

Read more: http://viduthalai.in/page-2/72994.html#ixzz2pFUWSoDj

-------------கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


பெருமைமந்திரிப் பதவி பெரிதல்ல; பணக்காரனாக இருப்பதும் பெரிதல்ல; மனிதனாக வாழ்வதுதான் பெருமை. இழிவற்றவனாக வாழ்வதுதான் பெருமை.
(விடுதலை, 10.10.1973)

Read more: http://viduthalai.in/page-2/72990.html#ixzz2pFUrnz5O

தமிழ் ஓவியா said...


ஜாதி-மூடநம்பிக்கைஊடுருவல்களுக்கு ஒரேதடுப்புமருந்துதந்தைபெரியாரே! பினாங்கில் தமிழர் தலைவர் ஆய்வுரை


பட்டவொர்த், சன. 2- ஜாதி மூடநம்பிக்கை என்னும் நோய்களைத் தடுக்கும் ஒரே மருந்து தந்தை பெரியாரே என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

பினாங் மாநிலம் பட்டவொர்த் நகரில் தந்தை பெரியாரின் 40 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி 24.12.2013, டேவான் மாரியம்மன் மண்டபத்தில் இரவு 7.30 மணியளவில் தொடங்கியது. கே.ஆர். இராமசாமி, மு.வி.அன்பரசன், வி.கணேசன், முனு சாமி, அ.மு.துரைசிங்கம், ச.பாபு, எஸ்.எஸ். இப்ராகிம், கு.வேலாயுதம் ஆகியோரின் பெயரில் அரங்கம் அமைக்கப்பட்டிருந்தன. டாக்டர் முரளி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். பினாங் மாநிலத் தலைவர் ச.த.அண்ணாமலை தலைமை வகித்துப் பேசினார். பினாங் மாநிலக் குற்றத் தடுப்பு அறவாரிய ஆட்சிக்குழு உறுப்பினரும், பினாங் மாநில ஆலோசகருமான டத்தோ கா.புலவேந்திரன் தந்தை பெரியாரின் படத்தைத் திறந்து வைத்து உரை யாற்றினார். நிறைவாகத் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப் புரையாற்றினார்.

தனி மனிதருக்கு இறப்புண்டு; தத்துவத்திற்கு அல்ல!


தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாரின் நினைவு நாள் நிகழ்ச்சி மலேசியாவின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இது சம்பிரதாய நிகழ்ச்சி அல்ல. மாறாகச் சரித்திரத்தைத் திரும்பிப் பார்க்கும் நாள். பெரியார் எப்படியெல்லாம் வாழ்ந்தார் என்பதை நினைவு கொள்ளும் நாள். சொத்துகள் நிறைந்த பெரியார் எல்லாவற்றையும் துறந்து, சமூகத்திற்கென்றே வாழ்ந்தார். குடும்பப் பற்றுத் துறந்து, மனிதப் பற்றோடு வாழ்ந்தவர். பெரியார் என்பவர் தனி மனிதரல்ல; அவர் ஓர் தத்துவம். அறிஞர் அண்ணா சொன்னது போல, அவர் ஓர் சகாப்தம், திருப்பம், காலகட்டம். எனவே தனி மனிதருக்கு இறப்பு இருக்கலாம்; தத்துவத்திற்கு ஒருபோதும் இறப்புக் கிடையாது. இன்றைய இளைஞர்கள் மலேசியாவில் தமிழர்கள் வாழ்ந்த நிலை குறித்து அறிய வேண்டும். இன்றைக்கு எவ்வளவோ மாற்றங்கள் வந்து விட்டன. ஆனால் அன்றைக்கு அடிப்படை உரிமைகள் அற்று வாழ்ந்து வந்தனர். பெரியாரின் முதல் மலேசிய வருகை பெரியார் 1929 ஆம் ஆண்டில் மலேசியாவிற்கு முதன்முதலில் வந்தார். இதே பினாங் பகுதியில்தான் வந்து இறங்கினார். அவர் வரக்கூடாது எனப் பலத்த எதிர்ப்புகள் இருந்தன. அதையும் மீறி வந்தார். இன்றைக்கு நாம் அனுபவிக்கும் அனைத்தையும் பெற்றுத் தந்தார். இந்த நிகழ்ச்சிக்குக் கூட பழைய தோழர்கள் தம் பேரன், பேத்திகளோடு வந்துள் ளனர். அதுதான் இந்த இயக்கத்தின் சிறப்பு. இந்த மேடை பெரியார் பெருந்தொண்டர்கள் 9 பேர் பெயரால் அமைக்கப்பட்டுள்ளது. பெரியார் மலேசியா வந்தது முதல் இந்த நாட்டில் பெரியார் தொண்டர்கள் உருவாகிக் கொண்டே இருக் கிறார்கள்.

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவருக்கு பினாங் மாநிலத் தலைவர் ச.த.அண்ணாமலை அவர்கள் பயனாடை அணிவித்தார்.

பெரியார் அனுப்பிய தந்தி!

பெரியாரை மலேசியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது எனப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டன. அப்போது ஒரு வினோத முயற்சியும் நடந்தது. அதாவது "மலேசிய நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை", என விழா ஏற்பாடு செய்தவர்களுக்கு ஒரு தந்தி வந்தது. அதுவும் பெரியார் பெயரில், பெரியாரே கொடுத்ததாகத் தந்தி வந்தது. விசாரித்த போது அந்தத் தந்தி எதிர்ப்பாளர்கள் செய்த ஏற்பாடு எனத் தெரிந்தது. அந்தளவிற்கு எதிர்ப்புகள் இருந்தன. மிகப் பெரிய எதிர்ப்புகள் வந்த போதும் பெரியார் வருந்த வில்லை. மாறாக இவை பொது வாழ்க்கைக்கே உண்டான இயல்பு என எடுத்துக் கொண்டார். பெரியாரிடம் குழந்தை வரம் கேட்ட மலேசியப் பெண்மணி பெரியார் நகரங்கள் மட்டுமின்றி கரடுமுரடான தோட்டங்களுக்கும் சென்று மக்களைச் சந்தித்தார். "கூலித் தொழிலாளர்கள்" என்ற பெயருடன் வாழ்ந்தவர்களைச் சிந்திக்க வைத்து, சுயமரி யாதையை உணர வைத்து, தங்களும் உரி மைகள் உள்ள மனி தர்களே என்கிற முடி வுக்கு வரச் செய்தார். உறவினர் திருமணம் என்றாலும் அழைப் பிதழ் வராவிட்டால் போகமாட்டோம். சுயமரியாதை நம்மைத் தடுக்கும். அப்படி யிருக்க, நீ தாழ்ந்த ஜாதி, உனக்குக் கல்வி இல்லை, வேலை இல்லை, எந்த உரிமைகளும் கிடை யாது எனும்போது உன் சுயமரியாதை எங்கே போனது என்று கேட் டார்? ஒருமுறை தோட் டங்களுக்குச் சென்று பிரச்சாரம் செய்து விட்டு, ஒரு வீட்டில் தங்கினார் பெரியார். அப்பகுதியில் இந்தத் தகவல் பரவி மக்கள் எல்லோரும் கூடி விட்டனர். அப்போது ஒரு பெண்மணி பெரியாரின் தாடியைப் பார்த்துவிட்டு, இவர் ஓர் சாமியார் எனக் கருதி, காலில் விழுந்து, தனக்குக் குழந்தை இல்லை, எனவே வரம் கொடுங்கள் எனக் கேட்டுள்ளார். பெரியாரும், மற்றவர்களும் எவ்வளவோ சொல்லியும் அப்பெண் மணி கேட்கவில்லை. மேலை நாடுகளில் வசித்தாலும் நம் மக்கள் பகுத்தறிவற்ற நிலையிலே இருந்தார்கள். அப்படியான மக்களை மாற்றி, சிந்திக்க வைத்தவர் தான் பெரியார். என்றைக்கும் பெரியார் தேவை :

தந்தை பெரியாரின் 40 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றோர்.

கருப்புச் சட்டைக்காரர்கள் சமூக விஞ்ஞானி களாக இருந்து, வளர்ச்சிப் பாதைக்கு வித்திட் டாலும், அதற்கு எதிரானவர்களும் தொடர்ந்து இயங்கி வருகிறார்கள். மனித அறிவு என்பது சிறப் பான ஒன்று. அது நல்ல வழி, கெட்ட வழி இரண்டி லும் போகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கழுதைகளும், குருவிகளும் என்ன செய்தனவோ அதையேதான் இப்போதும் செய்கின்றன. மனிதர் களும் பல விசயத்தில் அப்படியேதான் இருக் கிறார்கள். இது எந்த வகையில் நியாயமாகும்? புதிதாகக் கணினி வாங்கினால் உ சிவமயம் போடு கிறார்கள். கணினிக்கும், கணபதிக்கும் என்ன சம்பந்தம்? இப்போது நிறையப் படித்த தற்குறிகள் கிளம்பி இருக்கிறார்கள். பழைய செல்லரித்த கருத்து களுக்குப் புதிய பதில்கள் சொல்லி வருகிறார்கள். மனிதர்களைச் சிந்திக்க வைப்பதே கடினமான வேலை. அதில் இது போன்று இருந்தால் எப்படி வளர்ச்சி காண முடியும்? எனவே மீண்டும் மீண்டும் ஜாதியும், மூட நம்பிக்கைகளும் சமூகத்தில் ஊடுருவ முயலும். அதற்கான ஒரே தடுப்பு மருந்து பெரியார் கொள்கைகளே. அதுதான் உங்களின் வாழ்வுக்கும், வளத்துக்குமான மாமருந்து. எனவே பெரியார் என்றைக்கும் தேவைப்படுவார். இளைஞர்கள் பகுத்தறிவுச் சிந்தனையோடு செயல்பட்டு தங்களுக் கும், சமூகத்திற்கும் பயன்பட வேண்டும்" எனத் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பேசினார்.

Read more: http://viduthalai.in/e-paper/72971.html#ixzz2pFVC3CSI

தமிழ் ஓவியா said...


இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு நமது இரங்கல்!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் அறிமுகமான இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் நேற்று முன்தினம் (31.12.2013) இயற்கை எய்தினார் என்ற துயரச் செய்தி நம்மை மிகவும் வேதனைக்கும் துயரத்திற்கும் உள்ளாக்கியது.

காலந்தாழ்ந்துதான் செய்தி அறிந்தேன். இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார் அவர்கள் ஒரு தனி மனிதப் போராளியாகவே (டீநே அய யசஅல) ஒரு தேவையான பணி செய்து, செயற்கை உரங்களாலும், மற்றும் தேவையில்லாத வணிக லாபத்தையே மய்யப்படுத்தி, மக்கள் நலத்தையும் ஆயுளையும் பணயம் வைக்கும் பலரை, தயவு தாட்சண்யமின்றிக் கண்டனம் செய்து, ஒரு வேளாண்மைப் புரட்சி வீரராகவே காட்சியளித்தார்.

வயலுக்கும், வேளாண்மைக்கும் சிறிதும் தொடர்பில்லாத பார்ப்பனர்களுக்கு, வேளாண் விஞ்ஞானி என்று பெயர் சூட்டப்படும் விசித்திர நாட்டில், உண்மையாகவே அனுபவ ரீதியாக மண்ணை மணந்த மாமனிதர் திரு. நம்மாழ்வார் அவர்கள்.
இயற்கை வேளாண்மை, மக்கள் நலப் பாதுகாப்பு - கருத்தும் போராட்டமும் இருக்கும் இடமெல்லாம் அவர் வாழ்வார்; மறையமாட்டார்!

அவரது வேளாண் தோழர்களுக்கும், குடும்பத் தினருக்கும் நமது கழக சார்பில் ஆழ்ந்த இரங் கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முகாம்: சிங்கப்பூர்
2.1.2014

- கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/page-8/73006.html#ixzz2pFVXv8f9

தமிழ் ஓவியா said...

சிந்தனைத் துணுக்குகள்!

எப்படி தெரிந்ததோ?

கேள்வி: கடவுள் கருணாநிதி அல்லவா?

பதில்: கடவுளே நமது மனத்துக்கும் காயத்துக்கும் எட்டாதவராய் இருக்கும் போது, அவர் கருணாநிதி என்பது எப்படித் தெரிந்தது?

- சித்திரபுத்திரன்

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/73049-2014-01-03-10-57-14.html#ixzz2pKmXWK7x

தமிழ் ஓவியா said...

எலி பாவம்பாப்பா: அம்மா... அம்மா ஓடியாங்க, ஓடியாங்க. (அம்மா ஓடி வருகின்றாள்) என்னா கண்ணு என்னா?

பாப்பா: அந்த எலியைப் பாரும்மா... பாவம்.. அது மேல என்னமோ ஒன்று உட்கார்ந்து கிட்டு அழுத்துது... (அம்மா ஒரேயடியாகச் சிரிக்கிறாள்)

பாப்பா: ஏம்மா சிரிக்கிறே?

அம்மா: அது புள்ளையாரு சாமி... எலிதான் அதுக்கு வாகனம்.

பாப்பா: சாமிக்கு கொஞ்சம் கூட இரக்கமே இல்லம்மா!

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/73049-2014-01-03-10-57-14.html#ixzz2pKmdCjvD

தமிழ் ஓவியா said...


நட்சத்திரம் இரவில் தோன்றுவது ஏன்?


சந்திர, சூரிய நட்சத்திரங்களைப் பற்றி உலகம் தழுவிய மூடக்கதைகள் கொடிக்கட்டிப் பறக்கின்றன. நட்சத் திரங்கள் பற்றிக் கூறும் ஒரு ஆசிய மதக் கதை ஒரு ஹாஸ்யமானது.

சூரியனும் சந்திரனும் பெண்களே. நாம் இப்பொழுது காணும் நட்சத் திரங்கள் எல்லாம் சந்திரனின் குழந்தைகள். சூரியனுக்கும் ஒரு காலத்தில் ஏராளமான குழந்தைகள் இருந்தன. சூரியன், சந்திரன் அவற்றின் குழந்தைகள் முதலியவைகளின் ஒளியை மக்கள் தாங்கமாட்டார்கள் எனப் பயந்து, தம் குழந்தைகளைக் கொன்றுவிடுவது என்று சூரியனும் சந்திரனும் தீர்மானித்தன.

ஒப்பந்தப்படி சூரியன் தன் குழந்தைகளை எல்லாம் விழுங்கி விட்டது. சந்திரன் தந்திரசாலி. தன் குழந்தைகளை விழுங்கவில்லை. சூரியன் தன் குழந்தைகளை விழுங்கு மட்டும், சந்திரன் தன் குழந்தைகளை வான மண்டலத்தில் ஒளித்து வைத்து இருந்ததாம்.

சூரியன் தன் குழந்தைகளை எல்லாம் விழுங்கிய பிறகு, சந்திரன் தன் குழந்தைகளை அழைத்ததாம். சந்திரன் குழந்தைகளைக் கண்டதும் சூரிய னுக்கு அடங்காக் கோபம் வந்து, சந்திரனே, உடனே உன் குழந்தை களை கொல்லுகிறாயா இல்லையா? என்று கூச்சல்போட்டுப் பாய்ந்ததாம். சந்திரன் ஓட, சூரியன் விரட்ட இப்படியே வெகுநாள் ஓட்டப்பந்தயம் நடந்ததாம்; இன்னும் நடக்கிறதாம்.

சில சமயங்களில் சூரியன் சந்திரனை நெருங்கி விடுமாம். அப்பொழுதுதான் கிரகணம் உண்டாகிறதாம். சந்திரன் தன் குழந்தைகளான நட்சத்திரங்களை, சூரியன் இல்லாத பொழுதாகிய இரவில் கொண்டு வரும் இரகசியம் இது தானாம்!

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/73044-2014-01-03-10-50-35.html#ixzz2pKmzhPVL

தமிழ் ஓவியா said...


பணமா? பக்தியா?


பக்தியா? பணமா? என்று ஒரு பட்டிமன்றம் நடத்தினால் பணத்திற்குத் தான் வெற்றிகிட்டும்.

ஆங்கிலப் புத்தாண்டுத் தினத்தன்று இந்து மதக் கோயில்களை இரவில் திறந்து வைக்கக் கூடா தென்று சங்கராச்சாரியார் சொல்லிப் பார்த்தார்; ராம. கோபாலன் வகையறாக்கள் அலறிப் பார்த்தன.

ஆனால் அதனை யாரா வது சட்டை செய்தார்களா? பக்கம் பக்கமாக படங்களு டன் செய்திகளைப் பார்ப் பன ஏடுகளே வெளியிட் டுள்ளன! மயிலாப்பூர் கபா லீஸ்வரன் கோயிலில் நள் ளிரவில் பக்தர்கள் திரண்ட காட்சியை சாங்கோ பாங்க மாக வண்ண வண்ணப் படங்களுடன் வெளியிட் டுள்ளது மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவான இந்து ஏடே! திருப்பதி ஏழுமலை யான் கோயிலும் இதற்கு விலக்கல்ல.


பக்தர்கள் மூலம் பணம் வந்து குவியுமேயானால் பார்ப்பன அர்ச்சகர்களுக் குப் படா குஷிதானே?

அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் உரிமை என்று கூறினால் ஆகமங்களைத் தூக்கிக் கொண்டு டில்லி உச்சநீதி மன்றத்துக்கு வியர்த்து விறுவிறுக்க ஓடுவார்கள்.

அவாள் பாஷையில் மிலேச்சர்களாகிய ஆங்கி லேயர்களின் புத்தாண்டில் நள்ளிரவில் இந்துக் கோயில்களைத் திறந்து வைக்க எந்த ஆகமத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது?

இன்னொரு சேதி, திருப்பதியில் பக்தர்கள் ஆர்ப்பாட்டம் என்பது தலைப்பு; எதற்காகவாம்?
சனவரி முதல் தேதி நள்ளிரவில் ஏழுமலையான் கோயிலுக்கு அருகில் உள்ள நாதநீராஜன மண்ட பம் வரை மட்டுமே பக் தர்கள் அனுமதிக்கப்பட்ட தால், பக்தர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். மேலும் - அப்பகுதியில் வி.அய். பி.கள் வருகைக்காக சிவப் புக் கம்பளங்கள் விரிக்கப் பட்டு இருந்தன.

பக்தர்களுக்கோ படு கோபம்; பணம் படைத்த வர்கள் என்றால், பதவிக் காரர்கள் என்றால் பகவான் சன்னிதியில்கூட முன்னு ரிமையா? மணிக்கணக் காக பகவானைத் தரிசிக்கக் காத்துக் கிடக்கும் உண் மையான பக்தர்களான எங்களைக் கோவில் முன் வரைகூட செல்ல அனும திக்க மறுப்பது என்ன நியாயம்? என்று கூச்சல் போட்டனர்.

கையில் காசில்லாத வன் கடவுளேயானாலும் கதவைச் சாத்தடி! என்ற ஒரு பாடல் உண்டு. கையில் காசு இருந்தால் மட்டும் பகவான் கதவைத் திறந்து விடடி என்பது புதிய பாடல்.

பக்தி ஒரு பிசினஸ், அது வர்த்தகமாகி விட்டது என்று (சங்கராச்சாரியா ரும், கிருபானந்தவாரியா ரும்கூடக் கூறியதுண்டு) நாம் சொன்னால் மூக்குப் புடைக்கும் கோபத்துக்கு மட்டும் குறைச்சல் இல்லை. - மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/73051.html#ixzz2pOHq0aeP

தமிழ் ஓவியா said...


யோக்கியர் எடியூரப்பா பராக்! பராக்!!

பாரதீய ஜனதா கட்சி என்பது, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் கும்பகோணம் மகா மகக் குளம் புண்ணிய முழுக்குப் போன்றது. 12 வருடங்கள் பஞ்சமா பாதகங்கள் செய்தாலும், மகா மகத்தன்று ஒரு முழுக்குப் போட்டு விட்டால், ஒட்டு மொத்தமாக அனைத்துப் பாவங்களும் நீங்கி, புண்ணியம் கிட்டும் என்பது இந்து மதத்தின் அய்தீகம்.

இந்துத்துவாவின் ஏக போகக் குத்தகைக் காரர்கள் அல்லவா இந்தப் பிஜேபியினர்! அதனால் தான் ஊழல் காரணமாக முதல் அமைச்சர் பதவியை இழந்து சிறைச்சாலை வரை சென்று வந்த கருநாடக மாநில பி.எஸ். எடியூரப்பா கடை விரித்தேன். கொள்வாரில்லை - மீண்டும் பழைய காயிலகங் கடை வியாபாரத்தையே தொடங்குகிறேன் என்ற தன்மையில் தன்னால் உருவாக்கப்பட்ட கருநாடக ஜனதா கட்சியின் கழுத்தைத் திருகிக் கொன்று விட்டு, தனது பூர்வீகக் கூடாரமான பிஜேபிக்கே சென்று விட்டார்; ஊழல் ஒழித்த உத்தமப் புத்திரர் களின் புண்ணிய பூமியாகத் தங்கள் முதுகைத் தாங்களே தட்டிக் கொள்ளும் பிஜேபியும் இரு கரம் ஏந்தி - அந்தப் பழம் பெரும் ஊழல் பெருச்சாளியைப் பூர்ண கும்பம் கொடுத்து வரவேற்று விட்டது.

இமாசலப் பிரதேச முதல் அமைச்சர் வீரபத்ரசிங் ஊழல் செய்து விட்டார் என்று கூறி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வீட்டின் முன் மறியல் போராட்டத்தை பி.ஜே.பி.யினர் செய்து கொண்டி ருக்கும் இந்தக் கால கட்டத்தில்தான், ஊழல் குற்றச் சாட்டில் சிறை சென்று வந்த கருநாடக மாநில முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பாவை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றுள்ளனர்.

கருநாடக மாநிலத்தின் முதல் அமைச்சர் பி.எஸ். எடியூரப்பா மற்றும் அம்மாநில உள்துறை அமைச்சர் ஆர். அசோக்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்குத் தொடர அம்மாநில ஆளுநர் எச்.ஆர். பரத்வாஜ் அனுமதியளித்தார்.

ஷிமோகாவைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் சிரஜின் பாஷா மற்றும் கே.என். பால்ராஜ் ஆகியோர் கடந்த 2000 டிசம்பர் 28ஆம் தேதி ஆளுநர் பரத்வாஜைச் சந்தித்து மேற்கண்டவர்கள்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்குத் தொடர அனுமதி கேட்டதன் அடிப்படையில்தான் ஆளுநரால் அனுமதி வழங்கப்பட்டது.
ஊழல் தடுப்புச் சட்டம் 1988 பிரிவு 19(1) மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 பிரிவு 193இன் கீழ் வழக்குத் தொடர அனுமதிக்கப்பட்டது.
உத்தமபுரத்திரர்களாகத் தம்பட்டம் அடிக்கும் பிஜேபி என்ன செய்தது? வழக்கை நேர்மையான முறையில் சந்திக்க மார்பைப் புடைத்துக் காட்டியதா?
இல்லை; நாடு தழுவிய அளவில் பந்த் ஒன்றை அறிவித்து அமைச்சர்களே முழக்கம் போட்டு வந்தனர்.

சட்டம் ஒழுங்கை அமைச்சர்களே சீர்குலைத்தனர். அரசுப் பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன, ஏன், எரிக்கவும் பட்டன!

ஜனதா தளத்தின் (மதச் சார்பற்றது) தலைவர் குமாரசாமி, எடியூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டினை முன் வைத்தார். கோயிலில் சத்தியம் செய்யலாமா என்று பாமரத் தன்மையாக ஒருவருக்கொருவர் சவால் விட்டனர்.

முதல் அமைச்சர் பதவியை முறைகேடாகப் பயன்படுத்தி, விலை உயர்வு வீட்டுமனைகளையும், நிலங்களையும் தனது மகன் மற்றும் குடும்பத் தினர்க்கு ஒதுக்கினார் முதல் அமைச்சர் எடியூரப்பா என்பது குற்றச்சாற்று!

சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு பெல்லாரி மாவட் டத்தையே தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்த ரெட்டி சகோதரர்கள் அமைச்சர்களாக இருந்த தெல்லாம் மிகப் பெரிய ஊழல் கந்தாயமாகும்.

ரெட்டி சகோதரர்களை எதிர்த்துப் பார்த்து, கடைசியில் முதல்வர் எடியூரப்பா அவர்களிடம் சரண் அடைந்ததெல்லாம் கடைந்தெடுத்த நகைச்சுவைத் துணுக்குகள். வெகு தூரம் போக வேண்டாம். எடியூரப் பாவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததுண்டே!

பதவி அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள, மக்களுக்குத் துரோகம் செய்து வருகிறோம்; இதில் நானும் அடக்கம்! மக்கள் மன்னிக்க மாட்டார்கள். மக்களுக்கு நன்மை செய்யாமல் தேவையற்ற வேலைகளைச் செய்து கொண்டிருக் கிறோம். மாநிலத்தில் அதிருப்தி அரசியல் தலை தூக்கிய போதும், பெண் அமைச்சர் ஷோபா வின் ராஜினாமாவை ஏற்றக் கொண்டபோதும் நான் கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட்டது. தொலை நோக்குப் பார்வையில்லாமல் சுய நலத்திற்காக அரசியலில் மூழ்கி உள்ளதால் மக்களின் நலனை முழுமையாக மறந்து வருகிறோம் என்றாரே எடியூரப்பா (தினமலர் 14.12.2009).

இந்த ஒழுக்க சிகாமணியை மக்களவைத் தேர்தலுக்காக கையேந்தி வரவேற்கும் பிஜேபியை யும், அதன் பிரதமருக்கான வேட்பாளரையும் வாக்காளர்கள் அடையாளம் காண்பார்களாக!

Read more: http://viduthalai.in/page-2/73059.html#ixzz2pOIjRkzh

தமிழ் ஓவியா said...


பொருளல்ல...


மனக் குறையில்லாமல் வாழ வேண்டுமென்றால், வசதி தேடிக் கொள்ள வேண்டுமென்பது பொரு ளல்ல; இருப்பதைக் கொண்டு குறையில்லாமல் வாழவேண்டும்.

(விடுதலை, 10.6.1970)

Read more: http://viduthalai.in/page-2/73058.html#ixzz2pOJ0bVYE

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம்

மனக்குமுறல்

இன்றைய அதிமுக ஆட்சியில் தை முதல் நாள் ஆண்டுத் தொடக்கம் என்பதை மாற்றியிருப்பது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதைப் போல சிதம்பரம் கோவிலை மீண்டும் தீட்சிதரிடம் ஒப்படைப்பது.

அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கிடும் நடைமுறையைத் துரிதப்படுத்தாமை. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் மாண்புமிகு கலைஞர் அவர்களால் நிறுவப்பட்ட செம்மொழி நூலகத்தைச் சின்னாபின்னப்படுத்தியது.

தொல்காப்பியர் பூங்கா என்றதில் தொல்காப்பியர் பெயர் நீக்கம்.

133 திருவள்ளுவர் சிலைப் பராமரிப்புக்குக் கூட கெஞ்சுதல்

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை வேண்டுமென்றே சிதைத்துச் சீரழித்தல்

தமிழா! இன உணர்வு கொள். எதையும் தாங்கினாலும் இவற்றை எப்படித்தான் தாங்கிடுவதோ?

பார்ப்பான் நாகசாமி இப்போதும் The Mirror of Tamil and Sanscrit என நூல் எழுதுகிறாரே?

- _ க. பழநிசாமி, தெ.புதுப்பட்டி

Read more: http://viduthalai.in/page2/73065.html#ixzz2pOJj1mWU

தமிழ் ஓவியா said...


கடலுக்குள் வழித்தடம்


துருக்கியில்: ஒட்டாமன் சுல்தான் 150 ஆண்டுகளுக்கு முன் ஆசைப்பட்ட கடலினுள் குழாய்த் தடம் அமைக்கும் திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்து சாதனையாகியுள்ளது.

அய்ரோப்பாவையும், ஆசியாவையும் இணைக்கும் வகையில் கடலடி ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. கருங்கடலையும், மார்மரைக்கடலையும் பாஸ்பரஸ் ஜலசந்தி இணைத்துள்ளது. இந்த ஜலசந்திக்குக்கீழே மார்மரைக் குழாய்ப்பாதை செல்கிறது. இந்த பாதை 13.6 கி.மீ. நீளம், இதில் 1.4 கி.மீ. கடலுக்கடியில் 180 அடி ஆழத்தில் செல்கிறது.

ஜப்பானில்: ஜப்பானில் ஹான்ஷூ தீவையும், ஹோக்கைடோ தீவையும் இணைக்கும் கடலுக்குள் ளான பாதை கடல் படுகைக்கு(Seabed) 460 அடிக்கு கீழே உள்ளே அமைந்துள்ளது. இது உலகத்திலேயே அதிகமான ஆழமான பாதை. இது 790 அடி கடல் மட்டத்திற்கு (Sealevel) கீழே உள்ளது.

இங்கிலாந்து - பிரான்ஸ்: பிரிட் டனையும், பிரான்சையும் கடல்கீழ் இணைக்கும் தடம் 250 அடி கடல் மட்டத்துக்கு கீழே செல்கிறது.

செய்தி வழங்குதல்: சோம.வச்சலா

Read more: http://viduthalai.in/page2/73066.html#ixzz2pOJwfzt2

தமிழ் ஓவியா said...


மதத்தின் விளைவு


மதத்தின் விளைவு

ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர் ஜோமோ கென்யாட்டா தான் ஒரு முறை சுவையோடு சொன்னார். பாருங்கள் தலைமுறை தலைமுறை யாக ஆப்பிரிக்க மண் எங்கள் கைகளில் இருந்தது.

கப்பலில் வந்த வெள்ளைக் காரர்கள் தங்கள் கரங்களில் இருந்த பைபிளை எங்கள் கைகளில் தந்து, கண்களை மூடிச் செபம் செய்யச் சொன்னார்கள்; நாங்கள் விழிகளை மூடினோம், தூங்கி விட்டோம்.

காலதாமதமாக விழித்துப் பார்த்த போது வெள்ளையர் கைகளில் எங்கள் நாடு இருந்தது;

ஆனால் எங்கள் கைகளிலோ பைபிள் மட்டுமே மிஞ்சி இருந்தது! என்றார்.
எத்தனை பொருளாழம் நிறைந்த சொற்கள் இவை!

(கவிவேந்தர் கா.வேழவேந்தன் முன்னாள் அமைச்சர் அவர்களின் தெரிய... தெளிய... கட்டுரைத் தொகுதி - முதற் பதிப்பு டிசம்பர் 2000 72-ஆம் பக்கத்தில் இருப்பது).

Read more: http://viduthalai.in/page5/73069.html#ixzz2pOKtOsxW

தமிழ் ஓவியா said...

சமுதாயத் தொண்டு

சமுதாயத் தொண்டு செய்வது லேசான வேலையல்ல; பெருந் தொல்லையான காரியமாகும்.

படிக்குப்படி ஒவ்வொரு கட்டத் திலும் தொல்லைகள் எதிர்நோக்கி நிற்கும், நாம் செய்யும் சமுதாயப் பணியினால் யாருக்கு அனுகூலமு ம் வசதியும் கிடைக்குமோ,
யாருடைய இழிவுகள் ஒழி யுமோ, அந்த மக்களின் ஆதரவு அபிமானம் கூட நமக்கு கிடைக் காது.

(குடிஅரசு தொகுதி 3 -208-ஆம் பக்கம்)

Read more: http://viduthalai.in/page5/73069.html#ixzz2pOL2sDDW

தமிழ் ஓவியா said...

வாக்களிக்க விரும்பாதார்

நடைபெற்ற நான்கு மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாத வர்கள் (நோட்டா).

டில்லி 0.67 சதவீதம்

மத்தியப்பிரதேசம் 1.90 சதவீதம்

ராஜஸ்தான் 1.92 சதவீதம்

சத்தீஸ்கர் 3.07 சதவீதம்

Read more: http://viduthalai.in/page5/73069.html#ixzz2pOLAsUQL

தமிழ் ஓவியா said...


கீரைவகைகள்மணத்தக்காளி கீரை இந்த கீரையில் இலை, காய், பழம் இருக்கும். இந்த மூன்றையும் சமைத்து சாப்பிடலாம். இதில் சிறிய அளவில் வெள்ளை பூக்களும் மலரும். மணத் தக்காளி கீரையின் காய்கள் மிக சிறியதாக கொத்து கொத்தாக காய்க் கும். காய் முற்றினால் கத்தரிக்காய் நிறத்தில் இருக்கும். இதில் மற்றொரு வகை உள்ளது. அதில் பழம் இளம் சிவப்பாக இருக்கும்.

மணத்தக்காளி கீரையின் பழம் இனிப்பு புளிப்பு கலந்த சுவையாக இருக்கும். காய், பழத்தை பச்சையாக வும் சாப்பிடலாம். சட்டினி, பச்சடி, கூட்டு, பொரியல், ரசம் வைத்தும் சாப்பிடலாம். காய் மற்றும் பழத்தை புளிக்குழம்பு வைத்து சாப்பிடலாம்.

பலன்கள்: 1. மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந் தால் குடல் புண், மூலம் ஆகிய நோய்கள் குணமாகும். சளி, இருமல், போன்ற கப நோய்களைப் போக்கும் தன்மை கொண்டது. பிள்ளை பெற்ற பெண்களுக்கு மிகவும் நல்லது.

2. கண் பார்வை நன்றாக தெரியும்.

3. விட்டமின் ஏ, பி மற்றும் இரும்பு, சுண்ணாம்பு ஆகிய சத்துக் கள் மணத்தக்காளி கீரையில் அதிகம்.

4. குறைந்த விலையில் கிடைத் தாலும், மணத்தக்காளி கீரையில் போஷாக்கு அதிகம்.

5. குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. மணத்தக்காளி கீரைக் குழம்பு.

வயிற்று புண்ணை குணப்படுத்தும் முளைக்கீரை

கீரையை தினமும் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். முளைக்கீரை அதிக வைட்டமின் சத்துக்கள் நிறைந்த கீரை. இக்கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் கே, வைட்டமின் சி, போலேட் மற்றும் ரிபோப்லாவின் ஆகியவற்றை கொண்டுள்ளது.. நீர்சத்து அதிக முள்ள முளைக்கீரை வயிற்றுப் புண்ணை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

உடலுக்கு பலம் கூட்டும் சக்தியை கொண்டது. சிறுவர்களுக்கு இந்தக் கீரையை தொடர்ந்து கொடுத்தால் நல்ல உடல் வளர்ச்சி அடைவார் கள். முளைக்கீரையில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம், பாஸ்பரஸ், மங்கனீசு போன்ற கனிமங்களைக் கொண்டுள் ளது முளைக்கீரை. கோதுமை, அரிசி, ஓட்ஸ், ஆகியவற்றில் கொண் டுள்ள புரதத்தை விட 30% அதிக புரதத்தை கொண்டுள்ளது. இதய நோய், உயர் ரத்தஅழுத்தம் உள்ள வர்களுக்கு முளைக்கீரை உதவுகிறது.

Read more: http://viduthalai.in/page6/73072.html#ixzz2pOLU2VQb

தமிழ் ஓவியா said...


சோதிடம் - அறிவியலல்ல!


விண்வெளிக் களங்களைப் பற்றி என்னிடம் பல நண்பர்கள் கேள்விகள் கேட்ட போது, அவர்கள் சில நேரங்களில் ஜோதிடம் பற்றியும் கூட கேள்விகள் கேட் டனர். நமது சூரிய மண்டலத்தில் நம்மை விட்டு வெகு தொலைவில் உள்ள கோள்களுக்கு நமது மக்கள் இந்த அளவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்ததன் பின்னணியில் உள்ள காரணத்தை உண்மையில் என்னால் எப்போதுமே புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.

ஜோதிடம் ஒரு கலை என்பதற்கு எதிராக நான் எந்தக் கருத்தையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் அது அறிவியல் என்ற போர்வையில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு நான் வருந்தவே செய்கிறேன். இந்த கோள்கள், நட்சத்திரக் கூட்டங்கள், செயற்கைக் கோள்கள் ஆகியவை மனித உயிர்கள் மீது ஆற்றல் செலுத்த இயலுமென்ற கட்டுக் கதைகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன?

என்பதை நானறியேன். விண்வெளியில் உள்ள இவற்றின் சரியான இயக்கத்தைச் சுற்றி, குழப்பம் மிகுந்த கணக்குகளை கற்பனையில் உருவாக்கி அவற்றிலிருந்து மக்களின் வாழ்க்கை நடைமுறைகள் பற்றி முடிவுகளைப் பெறுவது என்பது சரியானதென எனக்குத் தோன்றவில்லை.

நான் காணும் வரை, பூமி ஒன்றே ஆற்றல் மிகுந்த, சுறுசுறுப்புடன் இயங்கும் ஒரு கோளாகும். தனது இழந்த சொர்க்கம் (8ஆம் புத்தகத்தில்) ஜான்மில்டன் அழகாக கூறியபடி, பூமிக்கும் மற்ற நட்சத்திரங்களுக்கும் சூரியன் மய்யமானதாக இருந்தால் என்ன?

மூன்று வேறுபட்ட வழிகளில் பூமி அறிவற்றபடி இயங்குவதாக தோன்றினாலும், பூமி என்னும் இக்கோள் எவ்வளவு உறுதியாகச் செயல்படுகிறது!

நெருப்பு இறக்கைகள் என்ற தனது சுயசரிதையில் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியும், இந்திய அரசின் அறிவியல் ஆலோசகருமான ஏ.பி.ஜே.அப்துல்கலாம்.

Read more: http://viduthalai.in/page6/73073.html#ixzz2pOLzzPMW

தமிழ் ஓவியா said...


ஏழை நாடாம்...


திருப்பதி நாமக் கடவுளான ஏழுமலையா னுக்கு 2013இல் மட்டும் பக்தக் கோடிகள் அளித்த பணம் ரூ.723 கோடி; தங்கம் 1200 கிலோ!

தீர்க்க முடியவில்லை

செய்தி: கடந்த ஆண்டைவிட 2013இல் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை 50 லட்சம் குறைவாம் - காரணம் தெலுங்கானா பிரச்சினை காரணமாக போக்குவரத்துப் பாதிப்பாம்.

சிந்தனை: இதைக்கூட தீர்த்து வைக்க முடியாத ஏழுமலையானை நோக்கிதான் தீர்த்த யாத்திரையோ?

Read more: http://viduthalai.in/page2/73086.html#ixzz2pQsXETiO

தமிழ் ஓவியா said...


உழவனின் நண்பன் நுண்ணுயிர்கள்!

(தம் வாழ்நாளை இயற்கை விஞ்ஞானத்துக்காகவே அர்ப் பணித்த டாக்டர் கோ. நம்மாழ்வார் நினைவாக இக்கட்டுரை).

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்(து)

இயற்கை யறிந்து செயல் (637) _- குறள்

ஆஸ்திரேலியப் பேராசன் பில் மொல்லிசன் ஒரு முறை, மலைவாழ் மக்கள் தலைவனிடம், சமவெளிப் பகுதியில், டிராக்டர் வைத்து, ரசாயன உரங்களைக் கொட்டி, ஆழ்குழாய் கிணறு மூலம் நீர் எடுத்து, பூச்சிக்கொல்லி தெளித்து விவசாயம் செய்யும் பண்ணையாருக்கும், மழை நேரத்தில் கோலால் துளையிட்டு, அதில் விதை போட்டு பெரு விரலால் மூடும்உனக்கும் என்ன வேறுபாடு? என்று கேட்டார்.

அதற்கு, நாங்கள் இயற்கைத் தாயிடம் இருந்து பாலை மட்டும் குடிக்கிறோம். பண்ணையார், இயற்கை தாயின் முலையையே அறுத்து ரத்தம் குடிக்கிறார்! என்று பதில் சொன்னான் மலைவாழ் மக்களின் தலைவன்.

இயற்கையைத் தாயாகப் பாவிப்பதும், தாயைப் பேணிப் பாதுகாத்து, தாய் மடியில் குழந்தையாகப் படுத்துக் கிடந்து இன்பம் அனுபவிப்பதும் காட்டு மிராண்டித்தனமாம். ஆனால், இயற்கையை சின்னாபின்னமாக்கி, உணவை நஞ்சாக்கி அதை உண்டு வாழும் மக்களை நோயாளியாக்கி, அவர்களுக்காக வானுயரத்தில் மருத்துவமனைகளைக் கட்டி லாபம் சம்பாதிப்பது நாகரிக வளர்ச்சியாம்.

அய்ந்து சென்ட் நிலத்தில் விளைந்ததை இருபதால் பெருக்கி அதை இரண்டரையால் வகுத்து, ஒரு ஹெக்டர் நிலத்தில் இவ்வளவு விளைந்திருக்கிறது என்று விளம்பரம் செய்து விழா நடத்தும் ஆடம்பர மெல்லாம்.. இனி உலகுக்கு உணவளிக்க முடியாது என்று அனைவரும் உணர்ந்து விட்டனர். மனித சமுதாயம் தன்னை அழிவில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், நீடித்து நிலைத்த உணவு உற்பத்தி தேவை. நீரும் நிலமும் உணவு உற்பத்திக்கு அடிப் படை. எப்படிப்பட்ட நிலம் இருந்தால் உற்பத்தி தொடரும்?

நாஞ்சில் நாட்டைப் பற்றிப் பாடியிருக்கும் மனோன்மணீயம் ஆசிரியர் பேரா.பெ. சுந்தரம்பிள்ளை. சிறகு கொண்டு குழந்தை உடலில் தடவும்போது, குழந்தை சிலிர்த்துக் குதூகலிப்பதுபோல, நாஞ்சில் நாட்டு உழவர்கள் கலப்பை என்ற சிறகைக் கொண்டு நில மகளுக்குக் கிச்சுகிச்சு மூட்டும்போது அவள் மெய் சிலிர்த்து பெரு விளைச்சலைத் தருகிறாள் என்றி ருக்கிறார். அப்படி ஓர் உயிரோட்ட முள்ள நிலம் இருந்தால், உற்பத்தி தொடரும்.

மசானபு ஃபுகோகாவின் ஒற்றை வைக்கோல் புரட்சி என்ற புத்தகத்தை நமது உழவர்கள் வாங்கி திரும்பத் திரும்பப் படிக்க வேண்டும். பச்சைப் புரட்சியால் தீமை என்று தெரிந்ததுமே, தனது பணியைத் துறந்து, தந்தையின் நிலத்தில் ஆராய்ச்சியைத் தொடங் கினார். குறுகிய காலப் பயிரான குள்ள ரக நெல்லைத் தூக்கி தூரப் போட்டு, நீண்ட நாள் பயிரான பாரம்பரிய விதையைக் கையில் எடுத்தார். அது உயரமாக வளரும்போது களை கட்டுப்படுகிறது. அதற்கு ரசாயன உரம் தேவை இல்லை. உரம் இடாத நிலத் துக்கு நீரைத் தேக்க வேண்டியதில்லை. நீர் தேங்காத நிலத்தில் நுண்ணுயிர்கள் (பாக்டீரியா, பூஞ்சை, காளான்) பெருகு கின்றன. மண்புழுக்கள் ஓய்வு ஒழிச்சல் இல்லாது நிலத்தை உழுகின்றன என்பதைப் பார்த்த ஃபுகோகா, அவரது நிலத்தில் ஒரு தேக்கரண்டி மண்ணில், பத்து லட்சம் நுண்ணுயிர்கள் இருப்பதையும் கண்டுபிடித்தார்.

அந்த நுண்ணுயிர்கள் தான், வைக்கோலை எருவாக மாற்றுகின்றன. மண்ணிலும், நீரிலும் உள்ள சத்துகளைத் தாவரங்கள் எடுத்துக் கொள்ளும் வகை யில் மாற்றித் தருகின்றன. நிலத்தில் நுண்ணுயிர்கள் பெருகினால்தான், பூமி யானது மீண்டும் மீண்டும் உற்பத்தியைப் பெருக்கும் சக்தியைப் பெறும்.


ஜீவன் என்ற ஃபிரெஞ் சுக்காரர், உழவர், தனக்கும் மண்ணுக்கும் உணவு உற்பத்தி செய்ய வேண்டும். நிலத்துக்குக் கரிமப் பொருள்தான் உணவு என்று சொல்லி இருக்கி றார். செடி, மண்ணில் இருந்து உணவை எடுப்ப தில்லை; பச்சை இலைகள், சூரிய ஒளியின் மூலம் ஸ்டார்ச் தயாரிப்பது தான் ஒளிச்சேர்க்கை என்று நாம் மூன்றாம் வகுப்பிலேயே படித்து விடுகிறோம். ஒளிச்சேர்க்கைக்குக் காற்றும் தேவை. நிலம் நன்கு விளைய கரிமப் பொருட்களும் நிறைய தேவை. ஆத லால், பயிர்ச் சுழற்சியில் அதிகம் வைக் கோல் தட்டை தரக்கூடிய ஒரு பயிர் கட்டாயம் இருக்க வேண்டும்.

மசானபு ஃபுகோகா வைக்கோலையே (பழைய ரகம்) நிலத்துக்கு அளித்தார். தமிழக உழவர்கள் வைக்கோலை மாட்டுக்கு அளித்து மாட்டு எருவை நிலத்தில் இட்டார்கள். நிலம் தொடர்ந்து விளைய நிறைய வைக்கோல் தேவை. வைக்கோல் போர் உயர, நீண்ட நாள் விளையும் பாரம்பரிய விதைகள் தேவை.

நன்றி: எந்நாடைய இயற்கையே போற்றி

-- இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்
ஆனந்தவிகடன் வெளியீடு

Read more: http://viduthalai.in/page2/73087.html#ixzz2pQsp5K00

தமிழ் ஓவியா said...


முப்புரி தரிக்க முடியுமோ? மோடியால்!


மோடியால் எல்லாம் முடியுமாம்!

மூச்சுக்கு முந்நூறு முறை முழங்கி நின்றிடும் முப்புரி கூட்டம் . பாலாறும் தேனாறும் பண ஆறும்
ஓடுமாம் இந்தியாவில், என பார்ப்பன கூட்டங்கள் உளறுகின்றன
அதையே ஊடக ஒலிபேசிகள்
ஓயாமல் அலறுகின்றன இஸ்லாமியர் இரத்த ஆறும் என்பதை ஏனோ மறந்தனர்! மறுக்கின்றனர்!

நரேந்திர மோடியின் நல்லாட்சியில்
பன்னாட்டு மூலதனங்கள் பயமின்றி நுழையுமாம்!
பண மழையும் கொட்டுமாம்!
கூவித் திரிகின்றன! கோயபல்சு கூட்டங்கள்!

அன்னியர் நுழைவது இருக்கட்டும் ஒருபுறம்!
இந்திய நாட்டில் எங்கேனும் ஓரிடம்,
ஆகம கோயில் கருவறைக்குள்ளே
நுழைய முடியுமோ நரேந்திர மோடியால்!
சூப்பர் மேனாக உடை அணிந்தாலும்,
அவாளுக்கு, தொங்கு சதை தானே!

அடுத்த பிரதமராய்- மோடியை ஆக்கியே தீர்வதென ஆர்ப்பரிக்கும் ஆரியகூட்டமே!
மோடிக்கு முப்புரி தரித்து,
சங்கராச்சாரியாரின் வாரிசு -என அறிவிக்க முடியுமோ?
மதவெறி பிடித்த பாஜகவுக்கு தேவை ஒரு நரேந்திர மோடி!
இந்திய ஹிட்லர் மோடிக்கு,
தேவை ஒரு பாஜக!
ஜாடிக்கேற்ற மூடிகள்!

ஈழத் தமிழனின் இரத்தம் குடித்த
மகிழ்ந்த ராஜபக்சே சர்வதேச குற்றவாளி!
இசுலாமியத் தோழனின் இரத்தம் குடித்த நரேந்திர மோடியோ நாளைய பிரதமர்!
இதுதான் இன்றைய
அரசியல் கூட்டணிகளின் அவலத் தத்துவம்!
அனைத்திலும் பின்னூடாய் ஆரியத் தந்திரம்!
பார்ப்பனியமே! உன் மறு பெயர் தான் வன்முறையோ!

- தகடூர் தமிழ்ச்செல்வி

Read more: http://viduthalai.in/page5/73090.html#ixzz2pQtjBgx9

தமிழ் ஓவியா said...


அம்பேத்கர் பேசுகிறார்


ஜஸ்டிஸ் கட்சி எல்லாம் இந்திய கட்சி ஆக இப்போது நல்ல சமயம்; நல்ல வேலைத் திட்டமும் தீர்மானங்களும் இருப்பதால் துணிந்து தைரிய மாகவும் இந்தியா பூராவும் சுற்றி வேலை செய்யும்படியும் ஆங்காங்கு தமது நண்பர்களுக்கு எழுதியும் தம்மால் ஆன அள வுக்கு ஒத்துழைத்தும் ஆதரவு அளிப்பதாகவும் அம்பேத்கர் சொன்னார் என்பதாகத் தெரிகிறது (69 ஆண்டுகளுக்கு முன்பு)

(குடிஅரசு 30.09.1944 சென்னை தந்தை பெரியாரும் டாக்டர் அம்பேத்காரும் பக்கம் 2)

தந்தை பெரியாருக்கு எதிராக தங்களுக்குத் தாங்களே ஜஸ்டிஸ் கட்சி என்று சொல்லிக் கொண் டிருந்த சிலர் டாக்டர் அம்பேத் காருக்கு விருந்து ஒன்றை கொடுத்தனர். விருந்துக்கு நன்றி தெரிவித்துப் பேசிய டாக்டர் அம்பேத்கர் அவர்கள் பெரியாருக்கு விரோதமாக நடப்பதைக் கண்டித்தார். தலை வரை மதித்துக் கட்டுப்பாடாக நடக்க வேண்டுமென்று அறிவுரை கூறினார். தந்தை பெரியார் அவர்களை டாக்டர் அம்பேத்கர் எப்படி மதித்தார் என்பதற்கு இது ஓர் அரிய எடுத்துக்காட்டு அல் லவா? 30.9.1944 அன்று கடைசியாக திராவிடஸ்தானை யும், பாகிஸ்தானையும் ஒன்றாகக் கருதியது தப்பு என்றும், அதன் தத்துவம் வேறு என்றும், இதன் தத்துவம் வேறு என்றும், அது முஸ்லீம்கள் மெஜாரிட்டி உள்ள இடத்திற்கு மாத்திரம் பொருத்த மானது என்றும், பிராமணீயம் இந்தியா முழுவதும் பொறுத்த விசயமென்றும் திராவிடஸ்தானில் தங்களையும் வேறு மாகாணங் களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னார் என்பதாகத் தெரிகிறது. எனவே இப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் கூறியதுபோல் மதச்சார்பற்ற மாநிலங்களைச் சேர்ந்தவை ஒன்றுபடச்சேர்ந்து தேர்தலைச் சந்திப்பது அவசிய மாகும்.

- அ.இனியன், பத்மநாதன், ஈரோடு

Read more: http://viduthalai.in/page7/73092.html#ixzz2pQtyXKWH

தமிழ் ஓவியா said...


ராமபக்தர்களின் பொது ஒழுக்கம், இது தான்

டில்லி போட்கிளப் மைதானத்தில் பாரதிய ஜனதாவும் - விசுவ இந்து பரிஷத்தும் சேர்ந்து நடத்திய பேரணிக்கு வந்த ராமபக்தர்கள் அனை வரும் புதுடில்லி ரயில் நிலையத்துக்கு வந்தனர். யார் யாரோ ரிசர்வ் செய்த பெட்டிகளில் - தங்கள் பெட்டி படுக்கைகளுடன் ஏறி உட்கார்ந்து கொண்டனர். உட்கார்ந்து கொண்டு முன்கூட்டியே பதிவு செய்தவர்கள் உள்ளே வராதபடி கதவுகளை இழுத்து மூடிக் கொண்டனர்.

முன்பதிவு செய்த ஏராளமான பயணிகள், டிக்கட் இருந்தும், ரயிலில் ஏற முடியவில்லை. உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தைக் கூறலாம். ஒரு குடும்பத்தினர், டில்லியிலிருந்து கோரக்பூர் செல்ல வைஷாலி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்கூட்டியே டிக்கட் பதிவு செய்தனர். பதிவும் உறுதியானது; குடும்பத்துடன் ரயில் நிலையம் வந்தனர். ரயில் நிலையம் முழுவதும் காவி உடை, ராம் ராம் முழக்கங்கள். பதிவு செய்யப்பட்ட பெட்டிக்கு சென்றால் - உள்ளே எல்லா இருக்கைகளிலும் ராமபக்தர்கள் முன் பதிவு செய்த அந்தக் குடும்பத்தினர் ஏற முடியவில்லை. கதவு சாத்தப்பட்டு விட்டது. காவல்துறையிடம் -பல பயணிகள் முறையிட்டனர். அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை; ரயில்வே அதிகாரிகளோ, வெளியே வராமல் பதுங்கியே விட்டனர். அன்று முழுவதும் டில்லியிலிருந்து புறப்பட்ட அத்தனை ரயில்களிலும் இது தான் நிலைமை. இன்று முன்பதிவு எதுவும் கிடையாது எல்லாமே ரத்து செய்யப் பட்டுவிட்டது என்று ராம பக்தர்கள் அனைவரும் உற்சாகமாகக்கூறி மகிழ்ந்து வந்தனர்.
-- டைம்ஸ் ஆப் இந்தியா ஏப்.6 1991

பாரதிய ஜனதா, விசுவ இந்து பரிஷத் அமைப்புகள் தான் ஒழுக்கமானவை; கட்டுப்பாடானவை என்றெல்லாம் பார்ப்பன ஏடுகள் பிரச்சாரம் செய்கின்றன. இவர்களின் பொது ஒழுக்கத்துக்கு. இது ஒரு சிறு உதாரணம்

Read more: http://viduthalai.in/page8/73094.html#ixzz2pQuSS7jU

தமிழ் ஓவியா said...


திண்டிவனத்தில் உணவு விடுதியில் பிராமணாள் பெயர் ஒழிந்தது! மாவட்டக் கழகம் எடுத்த முயற்சிக்கு வெற்றி!


திண்டிவனம் ஜன.4- திண்டிவனத்தில் உணவு விடுதி ஒன்றில் பிராமணாள் கபே என்று விளம்பரப் பலகை இடம் பெற்றி ருந்தது. திராவிடர் கழக மாவட்டப் பொறுப்பாளர்களும் கழகத் தோழர்களும் மேற்கொண்ட உடனடி முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. பிராமணாள் கபே என்ற பெயரை நீக்கி விட்டார்.

இதன் விவரம் வருமாறு:

திண்டிவனம் விழுப்புரம் நெருஞ்சாலையில் பேரணி கூட்டுப் பாதையில் பிராமணாள் ஓட்டல் கபே என்று விளம்பர பலகை வைத்து உணவு விடுதி நடத்தப்பட்டு வந்ததை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் பேருந்தில் வரும்போது பார்த்துவிட்டு வந்து மாவட்ட செயலாளர் நவா. ஏழுமலை அவர்களிடம் கூறினார். இதைக் கேள்விப்பட்டதும் மயிலம் ஒன்றிய செயலாளர் க. அன்புக்கரசனிடம் தொடர்பு கொண்டு பேரணி கூட்டுச் சாலையில் பிராமணாள் ஓட்டல் கபே விளம்பர பலகை வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வந்து உள்ளது. உடனே சென்று பார்க்கவும் என்று கூறியதும் ஒன்றிய செயலாளர் அன்புக்கரசன் அங்கு சென்று பார்வையிட்டு அந்த விளம்பர பலகையை நிழற்படம் எடுத்துக் கொண்டு வந்து காண்பித்தார். உடனே மாவட்ட செயலாளர் நவா ஏழுமலை தலைமை நிலையத்தோடு தொடர்பு கொண்டு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களிடம் தகவல் கூறப் பட்டதும் உடனடியாக நிறைய கழகத் தோழர்களோடு அங்கு சென்று உணவு விடுதி மேலாளரிடம் சென்று நம்முடைய கருத்தைக் கூறுங்கள் என்று கூறினார்.

உணவு விடுதி மேலாளர்

மாவட்டத் தலைவர் க.மு. தாஸ், மாவட்ட செயலாளர் நவா. ஏழுமலை, மாவட்ட ப.க. தலைவர் மு. கந்தசாமி, மாவட்ட இ.அணி தலைவர் மா. பன்னீர்செல்வம், மாவட்ட இ.அணி அமைப்பாளர் மு. ரமேஷ், நகர செயலாளர் சு. பன்னீர்செல்வம், மண்டல மாணவரணி தலைவர் தா. தம்பி பிரபாகரன் நகர துணைச் செயலாளர் ச. சனார்த்தனன், ஒன்றிய செயலாளர் உ. பச்சையப்பன், மயிலம் ஒன்றிய செயலாளர் க. அன்புக்கரசன், நகர ப.க. தலைவர் ஏ.ஆர். ஜெயமூர்த்தி ஆகியோர் ஒரு காரில் சென்று உணவு விடுதி மேளலாளரைச் சந்தித்து திராவிடர் கழக மாவட்டப் பொறுப் பாளர்கள் நாங்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு உங்கள் உணவு விடுதிக்கு பிராமணாள் ஓட்டல் கபே என்று விளம்பரப் பலகை வைத்துள்ளீர்கள் இது தமிழர்களை இழிவுபடுத்துவதாக உள்ளது. பெரியார் காலத் திலிருந்து பிரமணாள் என்ற வார்த்தையை உணவு விடுதிகளுக்கு வைக்கக் கூடாது என்று பல முறை போராட்டங்கள் நடத்தி வெற்றி பெற்றுள்ளோம். தமிழ்நாட்டில் எங்குமே இந்த பெயர் வைப்பது தடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கூட சிறீரங்கத்தில் ஒரு பார்ப்பனர் பிராமணாள் உணவு விடுதி என்று வைத்தார். உடனடியாக தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலையிட்டு ஒரு பொதுக் கூட்டம் நடத்தியதுமே உணவு விடுதியை மூடி விட்டு ஓடி விட்டார் என்று எடுத்துக் கூறினார்.

முயற்சிக்குக் கைமேல் வெற்றி

உணவு விடுதி மேலாளர் இந்த ஓட்டல் முதலாளி வெளி நாட்டில் உள்ளார் அவரிடம் தகவல் சொல்லி விட்டு இந்த விளம்பரப் பலகையை மாற்றி விடுவதாக உறுதி அளித்தார். அதோடு இந்த பலகையை வைத்ததற்கு காரணம் இந்த ஓட்டலுக்கு ஒரு பார்ப்பன சமையல்காரர் (மாஸ்டர்) வந்து வேலை செய்தார். அவர்தான் என்னுடைய முதலாளியிடம் பிராமணாள் ஓட்டல் கபே என்று பலகை வைத்தால் வியாபாரம் நன்றாக நடைபெறும் என்று கூறினார். அதன் அடிப் படையில்தான் இந்த விளம்பர பலகையை வைத்ததாகவும் மற்றபடி எங்களுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை என்றும் எங்களுடைய முதலாளி நாயுடு இனத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறினார். அதோடு உடனடியாக விளம்பர பலகை மாற்றி விடுவதாகவும் கூறியதை அடுத்து நாங்கள் வீடு திரும்பினோம். அந்த ஓட்டல் கும்பகோணம் டிகிரி காபி என்று பெயர் மாற்றம் செய்து விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது; உடனடியாக கழகம் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிட்டியது.

Read more: http://viduthalai.in/e-paper/73104.html#ixzz2pQuqFo9y

தமிழ் ஓவியா said...


அரசின் புது மருத்துவனையில் மருத்துவர் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு புறக்கணிப்பா? - தொல்.திருமாவளவன் போர்க் கொடி!


சென்னை, சன.4- சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் தொடங் கப்பட உள்ள தமிழ் நாடு அரசின் உயர் நிலை மருத்துவமனைக் குப் பேராசிரியர் உள் ளிட்ட பொறுப்புக ளுக்கு பணி நியமனத் தில் இடஒதுக்கீடு கிடையாது என்ற அதிமுக அரசின் செயல்பாட்டைக் கண்டித்துப் போர்க் கொடி உயர்த்தியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமா வளவன். அரசினர் தோட்ட வளா கத்தில் தலைமைச் செயலகத் திற்கென எழுப்பப்பட்ட கட்ட டத்தில் தற்போது அரசு பொது மருத்துவமனை இயங்கவிருப்பது அனைவரும் அறிந்ததே. அம் மருத்துவமனையில் பணியாற் றுவதற்குரிய மருத்துவர்களைத் தேர்வு செய்ய தமிழக அரசு அறிவிப்புச் செய்துள்ளது. அப் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாது எனவும் அரசு அறிவித்திருப்பது பெரும் அதிர்ச் சியாகவுள்ளது.

பெரியார், அண்ணா வழியில் வந்த அதிமுக தலை மையிலான அரசு சமூகநீதிக்கு எதிரான முடிவை எடுத்திருப்பது வியப்பை யும் வேதனையையும் அளிக் கிறது. தாழ்த்தப் பட்டோர், பழங் குடியினர், பிற்படுத்தப் பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப் பட்டோர் ஆகிய ஏழை எளியவர் களுக்குக் காலம் காலமாய் மறுக்கப் பட்ட நீதியை வழங் கிட உருவாக்கப்பட் டுள்ள ஒரு வாய்ப் புத்தான் இடஒதுக்கீடு என்னும் நடைமுறையாகும். மகாத்மா ஃபூலே, புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற மாமனிதர்களின் பங் களிப்பால் வென்றெடுக்கப்பட்ட சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் சதி முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதனை எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது. தமிழக அரசு உட னடியாக இந்த முடிவைக் கைவிட வேண்டுமென விடுதலைச் சிறுத் தைகள் கேட்டுக்கொள்கிறது.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பொருளாதார அடிப்படையில் பின்தங்கியோருக்கும் இட ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பித்தபோது தமிழக மக்கள் அதனை ஏற்கவில்லை. அப்போது நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக வாக்களித்து தமது கடுமையான எதிர்ப்பை வெளிப் படுத்தினர் என்பது வரலாறாகும். இதனை இன்றைய அதிமுக அரசிற்கு நினைவூட்டுவது விடு தலைச் சிறுத்தைகளின் கடமை யெனக் கருதுகிறோம். தமிழகத் தில் சமூகநீதியை நிலைநாட்ட, மருத்துவர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்த, அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து தமிழக அரசை வற்புறுத்திட முன்வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமது அறிக்கையில் பெரி யாரும், அண்ணாவும் உலவிய மண்ணில், சமுதாய ஆதிக்க மனப் பான்மையுடன் முதல் அமைச்சர் நடந்து கொள்வதைக் கண்டித் துள்ளார்.

மருத்துவர் ச. இராமதாசு

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசும் அ.இ.அ.தி.மு.க. கட்சியின் சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கையை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார். வழக்கமான நடைமுறையைக் கடைப்பிடிக்காவிட்டால் பா.ம.க. போராட்டம் நடத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/73107.html#ixzz2pQuzdEnz

தமிழ் ஓவியா said...


காரைக்கால் கொடூரம்!

நன்னிலத்தைச் சேர்ந்த இளம்பெண், தன் காதலனைச் சந்திக்க காரைக்கால் வந்தார். உடன் வந்த தோழியை விட்டு விட்டு அவர்கள் திருநள்ளாறு சென்று விட்டனர். வரத் தாமதமானது.

தோழிப் பெண் தனிமையில் இருப்பதைப் பார்த்த மூவர் காவல்துறையினர் என அறிமுகம் செய்து கொண்டு ஒரு வீட்டு மாடிக்கு அழைத்துச் சென்று குளிர் பானத்தில் மயக்க மருந்து கொடுத்து வன்புணர்ச்சி செய்தனர். சத்தம் கேட்டு வந்த 7 பேர் அவர்களை விரட்டிவிட்டு தனியிடத்திற்கு அழைத்துச் சென்று தருமபுரம் சுடுகாட்டுப் பகுதியில் வைத்து பாலியல் வன்முறை செய்தனர். பின்னர் 5 பேரை வரவழைத்து திருநள்ளாறுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்முறை செய்தனர். மறுநாள் காவல் நிலையத்தில் புகார் தந்த போது உதவி ஆய்வாளர் வெங்கடாசலபதி, தலைமைக் காவலர் சபாபதி வழக்கைப் பதிவு செய்யவில்லை. மாவட்ட கண்காணிப்பாளர் மோனிகா பரத்வாஜ் விசாரணை நடத்தி வழக்கைப் பதிவு செய்தார்.

எழிலரசன், பாபுராஜ், இக்பால், காசிம், அமீர் அலி, அக்பர் யூசுப், நாசர், மதன், முமைத் கைது மற்றும் ஜெயகாந்தன், பைசல், ஓட்டுநர் மணி தேடப்படுகின்றனர்.

தனியாக இருந்த இளம் பெண், காரைக்காலில் கயவர்கள் பலரால் சூறையாடப்பட்ட கொடுமை குருதியை உறையச் செய்யக் கூடியதாகும்.

பெண்ணென்றாலே காமப் பதுமை என்று புரையோடிப் போய் விட்டதா சமூகத்தில்?

தனியாக நின்ற பெண்ணை காவல்துறையினர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட மூன்று கயவர்கள் முதலில் சூறையாடினர் என்றும், அதன் பின்னர் எழுவர் சூறையாடினர் என்பதெல்லாம் எழுதவே அருவருப்பாக இருக்கிறது. இந்த எழுவரின் அழைப்பின் பேரில் மேலும் அய்வர் வந்து கொடூரம் செய்தனர் என்பதெல்லாம் வக்கிரத்தின் கடைசி எல்லையாகவே தோன்றுகிறது.

மறு நாள் காவல் நிலையத்தில் வழக்கைப் பதிவு செய்யவில்லை என்பதும், மாவட்டக் கண்காணிப்பாளர் வந்த பிறகே வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்பதும் நமது நாட்டின் நிருவாக முறை, குறிப்பாகக் காவல்துறை எந்த அளவு கடமை உணர்ச்சியற்றது என்பதற்கு எடுத்துக் காட்டாகும்.

இது ஏதோ ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட இழிவு என்று குறுக்கிவிடக் கூடாது; நாகரிக சமுதாயத்துக்கே மானக்கேடும், மாபெரும் சவாலுமாகும்.

காதல், மதம், ஜாதி என்கிற வேறு தளத்திற்கு இழுத்துச் சென்று அரசியல் குளிர்காயாமல், நாளும் நடைபெற்று வரும் இந்தக் கேவலத்தை முடிவுக்குக் கொண்டு வருவது எப்படி என்பதில் கவனம் செலுத்தி யாக வேண்டும்.

இந்தியாவின் தலைநகரான டில்லியில் இந்தக் குற்றத்தைச் செய்த கயவர்களுக்குத் தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்ட பிறகும் இதுபோன்றவை நடக்கிறது என்றால் இதன் பொருள் என்ன?

பெண்கள் நடை உடை பாவனைகள்மீது குற்றப் பத்திரிகை படித்து விட்டு பிரச்சினை என்னும் கோப்பை முடித்து விடக் கூடாது. கட்சிகளைக் கடந்து மதம், ஜாதி என்னும் கோடுகளைக் கடந்து சமூகப் பொறுப்புணர்ச் சியுடன் சிந்திக்க வேண்டும் - செயல்படவும் வேண்டும். கல்வித் திட்டத்தில் தொடங்கி, கலாச்சார வடிவங்கள் வரை மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

பெண் என்றால் அரைகுறை ஆடைகளோடு சித்தரிக்கும் சீக்கு மனப்பான்மையை ஊடகங்கள் கலையுலகச் சித்தர்கள் விட்டொழிக்க வேண்டும். இலட்சக்கணக்கில் விற்பனையாகும் வார இதழ்களில் அட்டைப் படங்கள் எல்லாம் பெரும்பாலும் அரைகுறை ஆடை சினிமா பெண்மணிகள்தாம்.

சின்னத் திரைகளும், பெரிய திரைகளும், இணையதளங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு ஆபாசங்களை நவீனம் என்னும் போர்வையில் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன.

சட்டமன்றம் நடக்கும் போதே மக்கள் பிரதிநிதிகள் கைப்பேசியில் ஆபாசப் படங்களைப் பார்க்கின்றனர் என்றால், நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது?

இணையதளங்களில் ஏமாற்றுக்காரர்கள் பெருகி விட்டனர். எல்லாவற்றையும் விட பெண்களிடம் மிகப் பெரிய அளவில் விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

டில்லியில் கிளர்ந்து எழுந்தது போல காரைக்காலில் மக்கள் சமுத்திரம் ஏன் பொங்கி எழவில்லை?

தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது தொடர் பாக இன்னும் விசாரணையே தொடங்கப்படவில்லையாம்; தூத்துக்குடியில் ஏன் கிளர்ச்சி ஏற்படவில்லை? என்ற கேள்விகள் எழத் தான் செய்கின்றன.
பரீட்சார்த்தமாகப் பெண்களுக்கு தற்காப்புக்காகத் துப்பாக்கிகளை கொடுத்துப் பார்க்கலாமே!

ஆம்பளை (அ)சிங்கங்கள் வாலாட்டிய நான்கு இடத்தில் துப்பாக்கிக் குண்டுகள்தான் வெடிக்கட்டுமே! அப்பொழுதுதான் பிரச்சினைக்கு ஒரு முடிவு ஏற்படும் என்றால் சற்றும் தயங்காமல் பரீட்சித்துப் பார்க்கலாம் தான்.

பாலியல் வன்கொடுமை தொடர்பான பிரச்சினையில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள், காவல்துறையின ருக்கு சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு நிகரான தண்டனை வழங்கப்பட வேண்டும். பெண்களும் வீதிக்கு வந்து போராட முன் வர வேண்டும். இது குறித்துக் கழகமும் உரத்த முறையில் சிந்திக்கும் - செயல்படும்.

Read more: http://viduthalai.in/page-2/73111.html#ixzz2pQvnLRHQ

தமிழ் ஓவியா said...


சிங்கப்பூரில் கற்ற பாடங்கள்! - கி.வீரமணி


சிங்கப்பூரின் வாடகைக் காரோட்டி களும், எவ்வளவு நாணயமும் ஒழுங்கும் உள்ளவர்களாக இருக்கிறார்கள்; அங் குள்ள காவல்துறையினர் பயணிகளிடம் புகார்களை எந்த நேரத்திலும், தொலை பேசியிலேயே வாங்கி பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுத்து, காலந் தாழ்த்தாமல் இழந்தவைகளை, கண்டு பிடித்து உரியவர்களிடம் திருப்பிக் கொடுக் கும் வியத்தகு அணுகுமுறைகளை கையாளுகின்றனர் என்பதை நேற்று (3.1.2014) சிங்கப்பூரில் நேரில் அனுபவத் தில் கண்டு மகிழ்ந்ததை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எத்தனையோ முறை சிங்கப்பூருக்குச் சென்றுள்ளேன் என்றாலும் இதற்கு முன் எப்போதும் நிகழாத எனது கவனக் குறைவு காரணமாக டாக்சியில் - வாடகை உந்தில் நிகழ்ந்தது. அதனால் பல நல்ல உண்மைகளை இதற்கு முன் பலர் மூலம் கேட்டறிந்ததை படித்தறிந் ததை நேரிலேயே நானே பார்த்து உணரும் வாய்ப்பு ஏற்பட்டது.

லிட்டில் இந்தியா செராங்கூன் சாலைப் பகுதி தேக்கா என்றெல்லாம் அழைக்கப்படும் நமது வணிகர்கள் பெரி தும் வாணிபம் புரியும் பகுதியில் உள்ள நண்பர் இலியாஸ் கடைக்கு, நான் எப்போ தும் வழமையாகச் சென்று அவரையும் அவரது வாழ்விணையர், அக்கடையில் பணிபுரியும் (சங்கம் டெக்ஸ்டைல்ஸ்) தோழர்களையும் சந்தித்து, நலம் விசா ரித்து, உரையாடிவிட்யடு, அவர் மூலம் பல பழைய நண்பர்களுடன் உரையாடியும், திரும்புவது உண்டு. நேற்று மாலை சுமார் 6.30 மணி அளவில் சென்று, பேசிக் கொண்டிருந்து விட்டு, கவிதா இல்லத்திற்குத் திரும்ப அங்கிருந்து ஒரு டாக்சி பிடித்துத் திரும்பினோம்- சுமார் மாலை 7.30 மணிக்குத் திரும்பினோம்.

வாடகைக் காருக்குரிய கட்டணத்தை நான் செலுத்த முயன்றதை முந்திக் கொண்டு எனது மகள் கவிதா ஓட்டுநரிடம், வீட்டருகில் இறக்கிவிடும் போது கொடுத்து விட்டார்; நான் எனது முழுக்கால் சட்டை பேண்ட் பையிலிருந்து எனது மணிப் பர்சை வேலட்டை எடுத்து மீண்டும் அதில் வைப்பதாக எண்ணி அதை அந்த டாக்சியில் பின் சீட்டிலேயே தெரியாமல் விட்டு விட்டேன்; அல்லது பையிலிருந்து வழுவி நழுவி இருக்கலாம். இறங்கி வீடு வந்து சேர்ந்து, உடைமாற்றியபோது எனக்கு அதிர்ச்சி...! வேலட்டை காணவில்லை. உடனே நினைவூட்டிப் பார்த்தேன். வீட்டிற்கு இறங்கும்போது கையில் எடுத்ததை நன்கு நினைவூட்டிக் கொண்டு, மகளிடம் கூறினேன்.

உடனே கவிதா, அப்பாஒன்றும் கவலைப்படாதீர்கள். நான் உடனே புகார் செய்கிறேன். பெரிதும் அங்கு கிடைத்தால் நம்மிடம் திருப்பிகொடுத்துவிடுவார்கள் என்று கூறி, தொலைப்பேசியில் காவல் துறையின் அதிகாரியை அழைத்து, விவரங்களைக் கூறி, புகார் பதிவு செய்தார். இது இரவு 8.15 மணியாகும். அவர்கள் உடனடியாக புகாரைப் பதிவு செய்து கொண்டு அதற்குரிய எண்ணைத் தந் தார்கள் - தொலைப்பேசி எண்ணையும் தந்தார்கள். இதில் குறிப்பிட வேண்டிய மற்றொரு பாராட்டத்தக்க அம்சம் என்ன தெரியுமா? உடனே பதிவு செய்து கொண்டு, புகார் என்பதை இந்த தொலைப்பேசியில் நீங்கள் அழைத்து நிலவரத்தை விசாரிக்க லாம் என்று இரண்டு தொலைப்பேசி எண்ணைத் தந்தார்கள் காவல் துறையினர்.

ஒன்று அலுவலக நேர எண். மற் றொன்று அலுவலக நேரத்திற்கு அப்பால் எந்த நேரத்திலும் விசாரிக்க வாய்ப்பாகும் எண். என்னே அற்புதமான காவல்துறை ஏற்பாடு! அவர்கள் விசாரித்தபோது கவிதா, கீழ்க்காணும் தகவல்களை மட்டும் தான் கூறினார்,

தமிழ் ஓவியா said...


1) மஞ்சள் நிற டாக்சி (அதன் எண் தெரியாது)

2) அந்த ஓட்டுநர் பெயர் ஏதோ அப்துல்லாவோ என்னவோ!

3) புறப்பட்ட நேரம், இறங்கிய நேரம்

4) புறப்பட்ட இடம் இறங்கிய வீட்டு முகவரி இவை தான் உள்ளன.

5) வேலட் கறுப்புநிறம் அதில் இருந்த கொஞ்சம் சிங்கப்பூர் பணம், சென்னை முகவரி கார்டுகள்.

சிங்கப்பூரில் தங்கியிருக்கும் முகவரி கார்டு இல்லை.

நாங்கள் வீட்டில் எங்கள் பணிகளை கவனித்துக் கொண்டிருந்தோம். (எங்கே கிடைக்கப் போகிறது நாம் சரியான தகவல்களை டாக்சி எண் - நமது முகவரி எதுவும் இல்லையே என்று நினைத்தேன்)

சரியாக இரவு 9 மணிக்கு (அதாவது புகார் கொடுத்த 30 நிமிடங்களில்) தொலைப்பேசி அழைப்பு உங்கள் வேலட் - மணிப்பர்சு கிடைத்துவிட்டது. அந்த டாக்சி யின் எண் இது. அந்த டாக்சி ஓட்டுநரிடம் உள்ளது. அவர் உங்கள் முகவரிக்கு வந்து கொடுக்க வேண்டுமா? அல்லது நாளை அந்த டாக்சி நிறுவனத்திடம் நீங்கள் நேரில் சென்று பெற்றுக் கொள்ளுகிறீர்களா? என்று கேட்டு, அப்படி அவர் உங்கள் வீட்டுக்கு வந்து கொடுக்க வேண்டுமெனில், அவர் எந்தப்பகுதியிலிருந்து வருகிறாரோ அந்தக்கட்டணம் (மீட்டர்படி) நீங்கள் கொடுக்க இசைந்தால் அவரை வரச் சொல்லுகிறோம் என்று காவல் துறையினர் கேட்டனர்.

வீட்டிற்கே வந்து கொடுக்கச் சொல்லி கட்டணம் தர இசைவுதந்தோம்.

உடனே அந்த ஓட்டுநர் தொலைப்பேசி யில் சற்று நேரம் கழித்து அழைத்து இரவு 10.30 மணிக்கு வந்து பொருளை ஒப்படைப்பதாகக் கூறினார்!

ஆனால் அவர் இரவு 10.15 மணிக்கே எங்கள் இல்லம் அருகில் வந்து ஒப்படைத்து. எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள் என்றார். நானும் மாறனும் சென்று அதனைப் பெற்று, அவருக்கான பயணக் கட்டணத்தைச் செலுத்தியதோடு, ஆழ்ந்த நன்றியை அவருக்குத் தெரிவித்தோம். அதற்கு மேல் 10 சிங்கப்பூர் வெள்ளியை அவருக்குப் பரிசாக அளித்தோம். அவர் பெயர் அமானுல்லாகான் என்று அறிந்தோம்; அவர் சிங்கப்பூர் - மலாய் கார இஸ்லாமியர்.

சிங்கப்பூர் காவல் துறையின் ஒத்து ழைப்பையும், எவ்வளவு சிறப்பான அரசு உள்ளது என்பதையும் அனுபவத்தில் கண்டு உணர்ந்து, வியக்கும் வாய்ப்பும், இந்த எனது கவனக்குறைவு காரணமாக எற்பட்ட நன்மையான அனுபவமும் எனக்குக் கிடைத்தது. அதனால் பெற்ற பாடங்களும் உண்டு.

1) வெளிநாடுகளில் வெளியூர்களில் டாக்சிகளின் அவற்றின் எண்களைக் குறித்து வைத்துக்கொள்ளுதல் அவசியம்.

2) நமது மணிப்பர்சு களில் முகவரி அட்டை கார்டு ஒன்று உள்ளூர் தங்கும் முகவரி, தொலைப்பேசி எண்ணையும் எழுதி அதில் சொருகி வைத்திருப்பதும் அவசியம்.

3) இவற்றிற்கெல்லாம் மேலாக, நம் நாட்டில் இப்படி ஒரு காவல்துறை ஒத் துழைப்பு (தொலைப்பேசியிலேயே புகார் கூறி கூறிய 30 நிமிடங்களில் தொலைந்த பொருள் மீட்டப்பட்டதையும் எளிதில் பார்க்க முடியுமா என்ற வேதனையும், வருத்தமும் மிச்சம்.

(நமது நாட்டிலும் பல நேர்மையான ஓட்டுநர்கள் உண்டு என்றாலும், அங் குள்ள ஏற்பாடு எவ்வளவு விஞ் ஞான பூர்வமாக உள்ளது என்பது அறிய மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதல்லவா?)

4) என்னிடம் இருந்தது ஒன்றும் பெரிய தொகை அல்ல என்றாலும், கவனக் குறைவு எவ்வளவு பேருக்குத் தொந்தர வும் அவசியமற்ற மனஉளைச்சலையும் தந்தது. இனி தவிர்க்கப்படல் வேண்டும்.

புத்தி கொள்முதலுக்கு 30 சிங்கப்பூர் வெள்ளியை விலையாகக் கொடுத்தேன்.

Read more: http://viduthalai.in/page-2/73112.html#ixzz2pQwX6O56

தமிழ் ஓவியா said...

காலித்தனமும் வட்டி சம்பாதிக்கின்றது

சென்னை கடற்கரையில் பார்ப்பனரல்லாதாரால் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் கதர் இலாகா காரியதரிசி ஸ்ரீ எஸ். ராமநாதன் அவர்கள் பகிஷ்காரப் புரட்டைப்பற்றி பேசிக் கொண்டிருக்கையில் காங்கிரசு வீரப்புலிகள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்கள் திருட்டுத்தனமாக கூட்டத்தின் மத்தியில் இரண்டு செருப்புகளை வீசி எறிந்துவிட்டு ஓடிப்போய் விட்டார்கள் என்றும் அந்தச் செருப்புகள் ஏலம்போடப்பட்டனவென்றும் கேள்விப்பட்டோம். ஆனால் அடுத்த சில தினத்தில் அதே கடற்கரையில் பார்ப் பனர்களால் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் பல பார்ப்பனரல் லாதார்களைக் கூலிக்குப் பிடித்துக் கொண்டு போயிருந்துங் கூட கல்லும் செருப்பும் பறந்ததோடு கலகமும் அடிதடியும் காயமும் ஏற்பட்டு விட்டதாம்: காங்கிரசுகாரர்கள் தாங்கள் தான் மிக புத்திசாலிகள் என்பதாக கருதி காலித்தனத்தை ஆரம்பித்து விடுகிறார்கள். இதனால் அந்த சமயம் வெற்றி கிடைத்ததுபோல் காணப்பட்டாலும் வட்டியுடன் திரும்பவும் அனுபவித்து விடுகின்றார்களேயொழிய இதுவரை ஒரு இடத்திலாவது தப்பித்துக் கொண்டதாகச் சொல்வதற்கே இல்லை.

பகிஷ்கார இயக்கப் பிரச்சாரத்திற்கு ஸ்ரீ சத்தியமூர்த்தி தலைவராகி விட்டார், ஸ்ரீ வரதராஜுலு வாலராகிவிட்டார். மற்றபடி ஸ்ரீமான்கள் குழந்தை, ஓ. கந்தசாமி செட்டியார், பஷீர் அகமது முதலியவர்களுக்குள்ளாகவே தேசபக்தி அடங்கிவிட்டது. இவர்கள் போகும் கூட்டங்கள் முழுவதும் இந்தக் கதியையே அடைந்து வருகின்றன. பிரச்சாரத்திற்கு என்று காங்கிரஸ் நாடகத்தில் மீதியான ரூபாயில் 5000, 6000 ரூபாய்களை எடுத்து வீசி எறிகின்றார்கள். இந்த ரூபாய் களுக்காக எப்போதும் கூட்டங்கள் கூடிக் கொண்டே இருக்கின்றன. இது எங்குபோய் முடியும் என்பது மாத்திரம் விளங்கவில்லை.

ஸ்ரீமான் வரதராஜுலு பேச ஆரம்பித்தவுடன் கலகம் ஏற்பட்டதென்றும், அடிதடிகள் நடந்ததென்றும் பொது ஜனங்கள் அவரைப் பேசவிடாமல் உட்காரச் செய்து விட்டார்கள் என்றும் பத்திரிகைகளில் காணப்படுகின்றன. பொது ஜனங்களால் இந்த யோக்கியதை பெற்ற ஸ்ரீ வரதராஜுலு அவர்கள், ராமசாமி நாயக்கர் சர்க்கார் பிரச்சாரம் செய்கின்றார் என்று எழுதுகின்றார், பேசுகின்றார், வாசகர்களைச் சுத்தமுட்டாள்கள் என்றும் எதையும் நம்பிவிடுவார்கள் என்றும் எண்ணிக் கொண்டு இம்மாதிரி தந்திரங்களைச் செய்கின்றார்.

அப்படியே நாயக்கர் சர்க்கார் பிரச்சாரம் செய்வதாக வைத்துக் கொண்டாலும், பார்ப்பனப் பிரச்சாரத்தைவிட சர்க்கார் பிரசாரம் எத்தனையோ மேலான தென்பதை இவரே பலதடவை உணர்ந்திருந்தும் பேசியிருந்தும் இன்று மாத்திரம் ஸ்ரீ வரதராஜுலுக்குப் பார்ப்பனப் பிரசாரம் இவ்வளவு பயனளிக்கக் கூடியதாகி விட்டதின் இரகசியமென்ன?

ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார் தலைமையும், இரங்கசாமி அய்யங்கார் காரியதரிசித் தன்மையும் ஒழிந்த பிறகு ஸ்ரீமான்கள், சத்திய மூர்த்தி அய்யரின் தலைமையும் வரதராஜுலுவின் காரியதரிசித் தன்மையும் இவ்வருஷம் முழுவதும் தாண்டவமாடக்கூடும். இனி, இவர் தலைமையில் அவர் பிரசங்கமும் அவர் தலைமையில் இவர் பிரசங்கமும் மாறி மாறி நடந்ததாக பத்திரிகை கலங்கள் நிறையக் கூடும். ஆனாலும் நம்புவதற்குதான் இனி தமிழ் நாட்டில் ஆட்கள் கிடையாது என்பதும் அவர்களுக்கே தெரிந்துவிட்டது.

ஆனாலும் ஜனங்களின் முட்டாள் தனத்தில் அவர்களுக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கின்றது. பொது ஜனங்கள் சீக்கிரம் இவர்களுக்குப் புத்தி கற்பிப் பார்களாக.
- குடிஅரசு - (துணைத் தலையங்கம் - 05.02.1928)

Read more: http://viduthalai.in/page-7/73120.html#ixzz2pQxtsQ7p

தமிழ் ஓவியா said...

உஷார்! உஷார்! மண்டையிலடியுங்கள்

சென்னையில் பார்ப்பனியத்தைப் பரப்புவதற்கு ஒரு புதிய ஸ்தாபனம் சமீபத்தில் பார்ப்பனர்களால் உண்டாக்கப்பட்டிருக்கின்றது. அதுதான் கிராமப் புணருத்தாரண வேலை ஸ்தாபனம். நண்பர்களே இந்தப் பெயரைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள். கொஞ்ச காலத்திற்கு முன்பு ஸ்ரீமான்கள் நேரு, சீனிவாசய்யங்கார், சீனிவாச சாஸ்திரியார் போன்றவர்கள் ஒன்று சேர்ந்து இந்திய அய்க்கிய ஒற்றுமை சங்கம் என்பதாக ஒன்றை ஸ்தாபித்தார்கள். அதில் வகுப்பு உணர்ச்சி உள்ளவர்களை சேர்ப்பதில்லை என்றும் நிபந்தனை போட்டார்கள். அது நமது தமிழ் நாட்டிற்குள் வராதபடி மண்டையிலடித்து கொல்லப்பட்டுப் போய்விட்டது.

அதுபோலவே இப்போது மறுபடியும் முயற்சி எடுத்து கிராம புனருத்தாரணம் என்னும் பெயரில் சென்னையில் ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கு மெம்பர்கள் ஸ்ரீமான்கள். சர்.சி.பி. ராமசாமி அய்யர், மோதிலால் நேரு, ஏ. ரங்கசாமி அய்யர், கேல்கர், பட்டாபி சீதாராமய்யர், பி. சிவராவ், டாக்டர் பெசண்டு, அருண்டேல், ரங்கநாத முதலியார் போன்றவர்களே. இது பிரம்மஞான சங்கத்தினர் வாலைப்பிடித்து ஆரம்பித்த புதிய சூழ்ச்சியேயாகும்.

தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாதார் நன்மைக்குக் கொடிய எதிரியாக பிரம்மஞான சங்கம் விளங்குகின்றது. அச்சங்கத் தலைவர் ஸ்ரீமதி பெசண் டம்மைக்கு உள்ள பணமும் செல்வாக்கும் அடையாறு பிரம்மஞான சங்கத் தோற்றமும் அநேக பார்ப்பனரல்லாதார்களையும் மூடர்களாகவும் இனத் துரோகி களாகவும் ஆக்கி அச்சங்கத்திற்குப் பலிகொடுத்திருக்கிறது. இதைப்பார்த்து யாரும் ஏமாந்து விடக் கூடாது என்றும், இப்புதிய சூழ்ச்சியில் யாரும் சிக்கி அதற்கு ஆளாகக் கூடாது எனவும் எச்சரிக்கை செய்து பணிவாய் வேண்டிக் கொள்கிறோம்.
- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 25.03.1928

Read more: http://viduthalai.in/page-7/73120.html#ixzz2pQy10y85

தமிழ் ஓவியா said...


கேப்டன் தொலைக்காட்சியில் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன்


கேப்டன் தொலைக்காட்சியில் மக்கள்கேள்வி என்ற பகுதியில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பங்குகொள்ளும் நிகழ்வு இன்று (4.1.2014) பிற்பகல் 1.30 மணியளவில் ஒளிபரப்பாகியது. மறு ஒளிபரப்பு இன்று இரவு 7 மணியளவில் ஒளிபரப்பாகும்.

இதன் தொடர்ச்சியாக நாளை (5.1.2014) பிற்பகல் 1.30 மணிக்கும், அதன் மறு ஒளிபரப்பு இரவு 7 மணிக்கும் ஒளிபரப்பாகும்.

Read more: http://viduthalai.in/page-8/73126.html#ixzz2pQyhEFiP