ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்
பல் நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைப் பிரச்சினை:
69 சதவிகித அடிப்படையில் புதிய விளம்பரம் தேவை!
தமிழர் தலைவர் விடுத்துள்ள சமூகநீதி தீர்வுக்கான அறிக்கை!
தமிழ்நாடு அரசின் செயல்பாட்டைப் பொறுத்தே நமது அடுத்த கட்ட நடவடிக்கை!
சென்னை ஓமந்தூரார் பல் நோக்கு சிறப்பு
உயர் மருத்துவமனையில் பேராசிரியர்கள் நியமனத்தில் தமிழ்நாடு அரசு
இடஒதுக்கீட்டைப் புறக்கணித் துள்ளது குறித்தும், இந்தப் பிரச்சினைக்குத்
தீர்வுகள் குறித்தும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்
விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில்
தி.மு.க. ஆட்சியால் சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகத்துக் காகக்
கட்டப்பட்ட கட்டடத்தில் பல் நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை
தொடங்கப்படுவது தொடர்பாக பேராசிரியர்கள் பணி நியமனம் தொடர்பான மருத்துவப்
பணியாளர் தேர்வாணையம் (Medical Services Recruitment Board) 2013 டிசம்பர்
27 அன்று இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்தது.
இந்தப் பணி நியமனங்கள் ஒப்பந்த
அடிப்படையில் செய்யப்படும் என்றும் இடஒதுக்கீடு அறவே கிடையாது என்றும்
இந்தியா முழுவதிலிருந்தும் விண்ணப்பிக்கலாம் என்றும், ஓய்வு பெற்றவர்களும்
விண்ணப்பிக்கலாம் என்றும் அந்த விளம்பரத்தில் குறிக்கப்பட்டு இருந்தது.
விடுதலையின் அறிக்கை
இதுகுறித்து 31.12.2013 அன்று விடுதலை வாயிலாக அறிக்கையொன்றினை வெளியிட்டு இருந்தோம்.
முதன் முதலாக தமிழ்நாட்டின் சமூக நீதிக்கு
எதிரான அ.இ.அ.தி.மு.க. அரசின் அறிக்கை தவறானது என்றும், அது வாபஸ்
வாங்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் தமிழ்நாடு கொந்தளித்து
எழும் என்றும் எச்சரித்திருந்தோம் (31.12.2013).
அந்த அறிக்கையினைத் தொடர்ந்து தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்களும் 3.1.2014 நாளிட்டு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தார்கள்.
தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர் களும் தமிழ்நாடு அரசின் செயல்பாட்டுக்கு எதிராக அறிக்கையினை வெளியிட்டு இருந்தனர்.
திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம்
இப்பிரச்சினை தொடர்பாக 9.1.2014 அன்று
சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகம் அனைத்துக் கட்சிகள் மற்றும் சமூக
நீதி அமைப்புகளின் கூட்டத்தினைக் கூட்டியது.
அக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு
வெளியிட்டுள்ள பணி நியமன விளம்பர அறிக்கையை விலக்கிக் கொண்டு,
தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்து வரும் 69 சதவிகித அடிப்படையில் பணி
நியமனம் செய்யப்படும் என்ற உத்தரவாதத்துடனும், சம்பள விகிதத்தில் பாரபட்சம்
அற்ற தன்மையுடனும், புது விளம்பரத்தினை வெளியிட வேண்டுமென்றும் கேட்டுக்
கொள்ளப்பட்டது. ஒப்பந்த முறை நியமனம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும்
விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று
அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இத்தீர்மானத்தை
வலியுறுத்தும் வகையில் 13.1.2014 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் இவ்
வமைப்புகளின் சார்பில் பொதுக் கூட்டம் ஒன்றை நடத் துவது என்றும், அடுத்த
கட்டமாக பெருந்திரள் ஆர்ப் பாட்டம் ஒன்றை நடத்துவது என்றும்
அத்தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது.
அனைத்துக் கட்சிகள் கலந்துரையாடல்
அத்தீர்மானத்தின்படி கடந்த 13.1.2014
அன்று சென்னை - பெரியார் திடலில், திராவிடர் கழகத்தின் சார்பில் சிறப்புப்
பொதுக் கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. தலைவர்
கலைஞர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்,
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.
வீரபாண்டியன், மனிதநேய மக்கள் கட்சியின் நிறுவனர் பேராசிரியர் ஜவாஹிருல்லா
எம்.எல்.ஏ., இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநிலப் பொதுச்
செயலாளர் முகம்மது அபூபக்கர், இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர்
எஸ்றா. சற்குணம் அகில இந்தியப் பிற்படுத்தப் பட்டோர் அரசுப் பணியாளர்
கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி பிற்படுத்தப்பட்டோர்
கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் வீ. இராமகிருஷ்ணன் ஆகியோர்
கருத்துரையாற்றினர்.
பல் நோக்கு சிறப்பு மருத்துவமனை என்பது தமிழக அரசால் தொடங்கப்படும் என்று முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்படியென்றால், முழுக்க முழுக்க மக்கள்
வரிப் பணத்தில் நடைபெறப்போகும் நவீன கால மருத்துவமனை அந்த மருத்துவமனை
என்பது தெளிவான செய்தி.
தமிழ்நாட்டில், இதே அம்மையார்
காலத்தில்தான் இந்திரா - சகானி வழக்கு - மண்டல் கமிஷன் வழக்கில், இட
ஒதுக்கீடு 50 விழுக்காட்டிற்குமேல் போகக்கூடாது என்று ஒரு பொது விதிபோல
தீர்ப்பில் - பெரும்பான்மை நீதிபதிகள் எழுதிய தீர்ப்பில் - குறிப்பிட்ட
போதிலும், 1980 முதலே தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்து வந்த 69 சதவிகித
இட ஒதுக்கீட்டைக் காப்பாற்ற - திராவிடர் கழகம் - கொடுத்த ஆலோசனையை ஏற்று,
அதுவரை இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் அரசு ஆணையாக - கம்யூனல் ஜி.ஓ.வாக
மட்டுமே இருந்ததை மாற்றி - முதல் முறையாக அரசியல் சட்ட 31-சி பிரிவின்படி
ஒரு இட ஒதுக்கீடு சட்டமாக, சட்டமன்றத்தைக் கூட்டி, சட்டமாக (By an Act)
நிறைவேற்றி, அச்சட்டம் 1992 மண்டல் ஆணையப் பரிந்துரைக்கு முன்பிருந்தே
செயல்படும் வகையில் (Retrospective effect) அமைத்து அரசியல் 76ஆவது சட்டத்
திருத்தமாக 9ஆவது அட்டவணைப் பாது காப்புடன் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பின்றி
நிறைவேற்றப் பட்டு, பிரதமர் நரசிம்மராவ் அவர்கள் ஆட்சியில், குடியரசுத் தலைவர் சங்கர்தயாள் சர்மா அவர்களின்
ஒப்புதல் பெற்று, அரசமைப்புச் சட்டத்தின் 9ஆவது அட்ட வணையில், ‘‘257A -
The Tamil Nadu Backward Classes, Scheduled Castes and Scheduled Tribes
(Reservation of Seats in Educational Institutes and of Appointments or
Posts in the Services in the under the State) Act 1993 Tamil Nadu Act 45
of 1994) என்று வைக்கப்பட்டுள்ளது.
இதன்மீது வழக்கு, தலைமை நீதிபதி ஜஸ்டீஸ்
கபாடியா அவர்கள் தலைமையிலான அமர்வில் இது செல்லும் என்றும் பிரதான
தீர்ப்பளிக்கப்பட்டு, மறுசீராய்வு - அதனை எதிர்த்துப் போடப்பட்டதும் கூட
தள்ளுபடி செய்யப்பட்டது.
இது, தானே செய்த, தன்னுடைய அரசின் சாதனை
என்று அறிக்கை விட்டு மார்தட்டும் முதலமைச்சர், அதே இட ஒதுக்கீட்டை, புதிய
மருத்துவமனையில் முற்றிலும், 84 பதவிகளுக்கும் புறக்கணித்து, இட ஒதுக்கீடே
கிடையாது என்று அறிவித்ததோடு மட்டுமல்லாமல், அந்தப் பதவிகளுக்கு அதிகச்
சம்பளம் தரும் ஒப்பந்தப் பதவிகளே - வெளி மாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம்;
ஓய்வு பெற்றவரும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளார்கள்!
சில பகுதி, ஒரு சில பதவிகள் ஒப்பந்த
அடிப்படையில் இருக்கலாமே தவிர, (அதுவும் இட ஒதுக்கீட்டு முறைக்கு
அப்பாற்பட்டதல்ல என்பது பின் காட்டப்படும் சான்றுகள் மூலம் தெளிவாக
எவருக்கும் விளங்கும்) அரசு வரிப் பணத்தில் நடக்கும் மருத்துவமனையில் இட
ஒதுக்கீட்டை அறவே மறுப்பது சட்ட விரோதம் (illegal and Unconstitutional)
ஆகும்.
உயிர் காப்பது என்றால், அதே வாதம்
எம்.பி.பி.எஸ்., டாக்டர்களுக்கும் பொருந்துமே! அவர்களால் காக்கப்படும்
உயிர்கள் நாளும் பல்லாயிரக்கணக்கில் நாட்டில் உண்டே!
இவர்கள் தேடும் பல சிறப்பு மருத்துவர்கள்கூட, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்ந்து, பிறகு M.S., M.ch. போன்ற படிப்புகளில் படித்தவர்கள்தானே!
இவர்கள் கிரிமீலேயர் முறையை நான்
கடைபிடிக்க வில்லை என்று கூறுகிறாரே அந்த அறிக்கையில், அதை நாம்
வரவேற்கிறோம். அதே நிலைப்பாடு, இந்திரா - சகானி வழக்கினைப்பற்றி
கருத்துரையில் சொல்லப்பட்ட வைகளில் மட்டும் இவர் ஏன் செயல்படத் தயங்கி,
இதில் இடஒதுக்கீடு கிடையாது என்று கூறவேண்டும்?
கிரிமீலேயர் கண்டறியப்படவேண்டும் என்பது தீர்ப்புரை.
சில சிறப்புத் தகுதியுள்ள மருத்துவமனைகளில் இட ஒதுக்கீடு தருவது விரும்பத்தக்கதல்லவா என்றும் கருதலாம் என்று வெறும் கருத்துரையாக (Observation
- Obitor dicta) சொன்னதை மட்டும் அதே தீர்ப்பின் அடுத்த பகுதியாக,
எந்தெந்த பகுதிகள் என்பதை மத்திய அரசு தீர்மானிக்க வேண்டும் என்று கூறியதை
ஏனோ கவனிக்க மறந்தார்கள்?
சமூக அநீதியைத் தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள்
சிறப்புக் கூட்டத்தில் பேசிய பெரு மக்களின் கருத்துச் சாரமாவது:
1) தமிழ்நாடு என்பது சமூக நீதியில் இந்தியாவுக்கே வழிகாட்டி மாநிலம்.
2) தமிழ்நாட்டு மக்கள் சமூகநீதிக்கு
எதிரான எந்த நடவடிக்கையையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சமூகநீதிக்கு
எதிராகச் செயல்படும் ஆட்சியை, கட்சியைத் தமிழ்நாட்டு மக்கள்
புறக்கணிப்பார்கள்.
3) தமிழ்நாட்டில் 69 சதவிகித இடஒதுக்கீடு என்பது சட்டப்படியானது. அதனைப் புறந்தள்ளி செயல்படுவது விரோதமாகும்.
4) இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சமூகநீதி கட்டிக் காக்கப்படும் என்று முதல் நிலையிலேயே உத்தரவாதம் தரப்பட்டுள்ளது.
இந்திரா சஹானி வழக்கு என்பது என்ன?
தமிழ்நாடு அரசு சுட்டிக் காட்டியுள்ள இந்திரா - சஹானி எனும் வழக்கில் உச்சநீதிமன்றம் சொன்ன சில வரிகள், கருத்துரை ஆலோசனைகளே தவிர தீர்ப்பு அல்ல;
டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைப் பேராசிரியர்கள் தொடுத்த வழக்கில்
உச்சநீதிமன்றம் இந்திரா சஹானி வழக்கில் தீர்ப்பை எழுதிய உச்சநீதிமன்ற தலைமை
நீதிபதியே இதை ஒப்புக் கொண்டுள்ளனர்; ஆனால் தீர்ப்பு மட்டும் வேறு விதம்,
வேடிக்கையான நிலை! தொட்டுக் காட்டியிருந்தாலும் மத்திய அரசு சீராய்வு
(Review Petition) மனுவைத் தாக்கல் செய்த நிலையில் வழமையான இடஒதுக்கீட்டை
டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை பின் பற்றியது என்றும் ஆதாரபூர்வமாக சிறப்புக்
கூட்டத்தில் தலைவர்கள் எடுத்துக்காட்டி, இதற்கு மேலும் தமிழ்நாடு அரசு
ஏற்கெனவே வெளியிட்ட பணி நியமன அறிக்கையை விலக்கிக் கொண்டு,
இடஒதுக்கீட்டுக்கு உத்தரவாதம் தரும் புதிய விளம்பரத்தை வெளியிட வேண்டும்
என்றும் அவ்வாறு செயல்படாவிடின் அடுத்த கட்டம் போராட்டம் தான் என்று
பெரியார் திடல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மிக எழுச்சியோடு நடைபெற்ற அந்தப் பொதுக்
கூட்டத்தின் உணர்வு தமிழ்நாடு அரசின் காதுகளுக்கு உளவுத்துறை மூலம்
எட்டியிருக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்.
இதற்கிடையில் தமிழ்நாடு அரசு சார்பில்
முதல் அமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் 12.1.2014 அன்று அறிக்கை
ஒன்றினை வெளியிட்டார். அந்த அறிக்கையில் காணப்படும் தவறுகளையும், குறைபாடு
களையும் பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்புப் பொதுக் கூட்டத்தில் சுட்டிக்
காட்டப்பட்டுள்ளன.
முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிக்கையில் (12.1.2014) குறிப்பிடப்பட்டுள்ளவற்றிற்கான பதில்கள்:
முதல் அமைச்சரின் அறிக்கை:
1) இந்திய
அரசுக்கு எதிராக எய்ம்ஸ் பேராசிரியர்கள் சங்கம் (Facully Association of
AIIMS) தொடர்ந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம், தனது 18.7.2013 நாளைய
தீர்ப்பில், பல் துறை உயர் சிறப்பு மருத்துவமனை பொறியியல் மற்றும் இதர
அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பதவிகளில் இடஒதுக்கீட்டினை பின்பற்றுவது
சரியாக இருக்காது என்று இந்திரா சஹானி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை
மாற்ற இயலாது என்று தெரிவித்துள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மத்திய
அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனு
இன்னமும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
உச்சநீதிமன்றத்தின் இந்தத்
தீர்ப்பினையும், நடை முறையில் உள்ள விதியினையும் முன்மாதிரியையும்
கருத்தில் கொண்டே ஓமந்தூரார் உயர் சிறப்பு மருத்துவ மனையில் மருத்துவர்கள்
நியமிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை திரு. கருணாநிதிக்கு
தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
நமது பதில்: 18.7.2013
தீர்ப்புக்குப் பிறகு 2013 ஆம் ஆண்டில் அதே எய்ம்ஸ் மருத்துவமனை ஒப்பந்த
அடிப் படையில் பேராசிரியர் பதவிகளுக்கான விளம்பரத் தில் இடஒதுக்கீடு
அளிக்கப்பட்டுள்ளதே!
2013 ஜூலை 18ஆம் தேதி தீர்ப்புக்குப்
பிறகு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் 2013 செப்டம்பர் 12 அன்று
கீழ்க்கண்ட ஆணையைப் பிறப்பித்து விட்டதே.
AIIMS told to appoint on quota
New
Delhi: Following an uproar in Parliament in the recent session, the
health misnistry has asked AIIMS to continue with reservation in
appointments to faculty posts, contrary to a apex court judgement.
In a
letter issued to the director of the institute on september 3, the
ministry justified its defiance by citing a review petition it has filed
before the SC against its July 18 verdict delivered by a Constitution
bench, It claimed that
new appointments in a range of super specialties could be made subject to outcome of the reiview petition.
(The Times of India - 12.9.2013)
அதாவது, மத்திய சுகாதார மற்றும் குடும்ப
நல அமைச்சகம், இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில்
மனுதாக்கல் செய்துள்ளதைச் சுட்டிக் காட்டி, இடஒதுக்கீட்டைப் பின்பற்றியே
148 பணியிடங்களையும் நிரப்பும்படி எய்ம்ஸ் நிறுவனத்துக்கு அறிவுறுத்தி
இருந்தது.
எய்ம்ஸ் மருத்துவமனை வழக்கில்
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு (18.7.2013)ப் பிறகும்கூட மத்திய சுகாதார
அமைச்சகத் தின் ஆணையின்படி (12.9.2013) இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி
நியமனங்கள் செய்யப்பட்டே வருகின்றன.
ரிஷிகேஷ் - எய்ம்ஸ் மருத்துவமனையின் விளம்பரம்
எடுத்துக்காட்டாக ரிஷிகேஷ் - எய்ம்ஸ்
மருத்துவமனைக்கான பணி நியமன ஆணை 16.11.2013 அன்று வெளி யிடப்பட்டுள்ளது.
அதில் இடஒதுக்கீடு தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நியமனங்களும்
ஒப்பந்த அடிப் படையில்தான் (தனியே காண்க).
இதன் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு கிடையாது என்ற தமிழ்நாடு அரசின் வாதமும் அடிப்பட்டுப் போகிறதே!
2) முதல்அமைச்சரின் அறிக்கை: தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணிகள் விதி 11-இன் படி
மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் ஒப்பந்த அடிப் படையில் பணி நியமனம்
செய்யப்படுபவர் களுக்கு இடஒதுக்கீடு உட்பட பொது விதிகள் பொருந்தாது -
இதுவும் முதல் அமைச்சரின் அறிக்கையில் காணப்படுகிறது.
நமது பதில்: இந்த
விதியின் பணியின் தன்மை, சம்பளம் சம்பந்தமான விவரங்கள் உள்ளனவே தவிர
இடஒதுக்கீடு குறித்து ஏதும் கூறப்படாத நிலையில் இதனை எப்படிப் பயன்படுத்தி
இடஒதுக்கீடு கூடாது என்று வாதாடுகிறார் முதல் அமைச்சர்.
3) முதல் அமைச்சரின் அறிக்கை:
திரு. கருணாநிதி தனது அறிக்கையில் இயக்குநர் பதவிக்கான மாதாந்திர சம்பளம்
எவ்வளவு தெரியுமா? இரண்டரை இலட்சம் ரூபாய், தலைமைச் செயலாளருக் குக் கூட
ஏன் முதல் அமைச்சருக்குக் கூட இந்த அளவிற்குச் சம்பளம் இருக்குமா என்று
தெரியவில்லை. மூத்த மருத்துவ ஆலோசகர் என்று 14 பேர்களை நியமிக் கப்
போகிறார்களாம். அவர்களுக்கான ஊதியம் தலா ஒன்றரை லட்சம் ரூபாய் என
மருத்துவர்களின் சம்பளம் குறித்து நீட்டி முழக்கி இருக்கிறார் கருணாநிதி.
பல்துறை உயர் சிறப்பு மருத்துவ மனையில்
பணிபுரிய அதிக தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் தனி யார்
மருத்துவமனையில் அதிக சம்பளம் பெற்று வருகிறார்கள் என்பதால், அவர்களை ஏழை,
எளிய மக்களுக்கு இதுபோன்ற வசதிகள் கிடைக்கக் கூடாது என்ற நினைப்பில்
இதுபோன்ற அறிக் கையை விடுத்திருக்கிறார் போலும் திரு. கருணாநிதி.
நமது பதில்: 175 ஆண்டு
புகழ் பெற்றது சென்னை அரசு பொது மருத்துவமனை மேலும் பல புகழ்பெற்ற அரசு
மருத்துவ மனைகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. இங்கெல்லாம் தகுதி - திறமை
வாய்ந்த மருத்துவர்கள் இல்லையா? தனியார்த் துறையில்தான் அத்தகையவர்கள்
இருக் கின்றனர் என்பது அரசே, அரசு மருத்துவர்களின் தகுதியை குறைவாக எடை
போடுவது ஆகாதா? அதுவும் பதிவாளர்களும் நிலைய மருத்துவர்களும் கூட அரசு
மருத்துவமனைகளிலிருந்து கிடைக்க மாட்டார்களா?
பொதுவாக ஒப்பந்த முறையில் பணி நியமனம் என்று வருகிறபோது குறைந்த தொகுப்பூதியம்தான் அளிக்கப்படுவது வழக்கம்.
2001-2006இல் இதே ஜெயலலிதா அவர்கள் முதல்
அமைச்சராக இருந்த போது 1500 மருத்துவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி
நியமனம் செய்தாரே - அவர்களுக்கு அளிக்கப்பட்ட தொகுப்பூதியம் என்ன?
எம்.பி.பி.எஸ். படித்தவர்களுக்கு மாத ஊதியம் ரூ.8000 தானே? எம்.பி.பி.எஸ்.
மற்றும் டிப்ளமோ தகுதி பெற்றவர்களுக்கு மாத ஊதியம் ரூ.9000, பட்ட
மேற்படிப்புப் படித்தவர் களுக்கு ரூ.10,000 தானே அளிக்கப்பட் டது? கலைஞர்
அவர்கள் முதல் அமைச்சர் ஆனபிறகுதானே அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு
மாத ஊதியம் ரூ.40,000 அளிக்கப்பட்டது?
அரசு மருத்துவருக்கு ரூ.40 ஆயிரம் ஒப்பந்த
மருத்துவருக்கோ ரூ.8 ஆயிரம் அய்ந்தில் ஒரு பங்கு. இப்பொழுதோ ஒப்பந்த
மருத்துவர்களுக்கு அரசு மருத்து வர்களைவிட இரு மடங்கு, ஒன்றரை மடங்கு - இது
எந்த வகையில் நியாயம்?
தலைகீழாக அல்லவா இருக்கிறது!
இடஒதுக்கீடு கொடுக்கப்படக் கூடாது என்று
திட்டமிட்டே தான் ஒப்பந்த முறை என்றும், பல் நோக்கு சிறப்பு மருத் துவமனை
என்றும் ஆக்கி இருக்கிறார்கள் என்று கருத இடம் இருக்கிறது - அதிலும்
ஏராளமான தவறுகள்!
முதல் அமைச்சர் தனது அறிக்கையில் சமூக
நீதிக்காக தான் அதிகம் செய் துள்ளேன் என்று சொல்லுகிறார். அப்படி யென்றால்
அந்தச் சமூக நீதிக்கு, இடஒதுக்கீடுக்கு வழி இருக்கும்போது அந்தப் பாதையை
அடைத்தது ஏன்?
4. இடஒதுக்கீடு - சமூகநீதி என்பது ஒட்டு
மொத்தமான சமூகத்தின் பிரச்சினை. ஆளும் கட்சி தவறு செய்தால் எதிர்க்கட்சிகள்
சுட்டிக் காட்ட உரிமை உண்டு. அதுவும் 5 முறை முதல் அமைச்சராக இருந்த
கலைஞர் அவர்கள் குறைகளைச் சுட்டிக்காட்டும் பொழுது பொறுப்புடன் அது
குறித்துச் சிந்திப்பது தான் ஒரு நல்லாட்சியின் மக்கள் நல ஆட்சியின்
ஜனநாயகக் கடமையாக இருக்க முடியும்.
அதை விட்டு விட்டு சம்பந்தா சம்பந்தம்
இல்லாமல் இது ஏதோ தி.மு.க. அ.தி.மு.க.வுக்கு இடையே மட்டும் உள்ள அரசியல்
பிரச்சினை என்பதுபோல பிரச்சினையை திசை திருப்புவது சரி தானா?
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் 16 ஆவது பிரிவின்படி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு சட்டப்படி உள்ள உரிமை.
மற்ற (முன்னேறிய)வர்களோடு சமமான நிலை
அடையும் அளவுக்கு (‘‘Adequately’’) இட ஒதுக்கீட்டின் அளவு இருக்கலாம்
என்றும் கூறுவதோடு, இதைக் கண்டறிந்து கூறும் வேலை, உரிமை (மத்திய, மாநில)
அரசுகளுக்கே உண்டு என்று அப்பிரிவில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.
அதன்படிதான் 18.7.2013 எய்ம்ஸ்
பேராசிரியர் வழக்கின் தீர்ப்புக்கு மறு சீராய்வு மனுவை மத்திய அரசு போட்
டுள்ளதோடு, அதன்பின்னும், சுற்ற றிக்கை, மற்ற அமைப்புகளின் விளம்பரத் தில்
அவை ஒப்பந்த முறையாக இருப் பினும், தற்காலிகமாக (Temprary Post)
இருப்பினும் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுகிறது - படவேண்டும் என்று
கூறப்பட்டுள்ளது.
முதலில் இது குறித்து கருத்துத்
தெரிவித்தது - அறிக்கை வெளியிட்டது திராவிடர் கழகமே! அதனைத் தொடர்ந்து
தி.மு.க. தலைவர் கலைஞர் மற்றும் தமிழ் நாட்டின் முக்கிய கட்சிகளின் தலைவர்
களும் தமிழ்நாடு அரசின் செயல் பாட்டைக் கண்டித்து அறிக்கை வெளியிட்
டுள்ளார்களே இதில் பெரும்பாலும் முதல் அமைச்சர் தனிமைப்படுத்தப்பட்டு
விட்டாரே!
தி.மு.க. தலைவர் கலைஞர் மீதான எதிர்ப்பு
அரசியல் என்ற திரையில் சமூகநீதிக்கு எதிரான தமது ஆட்சியின் நிலைப்பாட்டை
செயல்பாட்டை நியாயப் படுத்தி விடலாம் என்று முதல் அமைச்சர் தப்புக் கணக்கு
போடுவது சரியல்ல. எதிர்வினைத்தான் அது உருவாக்கும் என்பது உறுதி.
நிரந்தரமாக செயல்பட வேண்டிய பல்நோக்கு
அரசு சிறப்பு உயர் மருத்துவ மனையில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள்
நியமனம் செய்யப்படுவது சரியானதாக, பொருத்தமானதாக இருக்க முடியுமா? என்பது
முக்கியமான கேள்வியாகும்.
இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணியில்
அமர்த்தப்பட்ட மருத்துவர்களை, மாற்றுப் பணி மூலம் அரசு மருத்துவ மனைகளில்
இருந்து நியமனம் செய்து இந்தப் பிரச்சினைக்கு எளிதில் தீர்வு காணலாம்
அல்லது தமிழ்நாட்டின் 69 சதவிகித அடிப்படையில் இடஒதுக்கீடு செய்து புது
விளம்பரம் செய்யலாம். இவ்வளவு எளிய வழிகள் இருக்கும்போது தமிழ்நாடு அரசு
வீண் பழியைத் தேடிக் கொள்ள வேண்டாம் என்பதே நமது கருத்தாகும்.
5) ஆசிரியர்கள் பணி
நியமனத்தில் சமூக நீதி புறக்கணிக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுக்கு
முதல் அமைச்சர் நேரடியாகப் பதில் அளிக்கவில்லை.
69 விழுக்காடு அடிப்படையில்தான் பணி
நியமனம் செய்யப்படவில்லை என்று யாரும் கூறவில்லை. ஆசிரியர்கள் தகுதித்
தேர்வில் தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் கொடுத்த வழிகாட்டு தலின்படி
முன்னேறியோர், தாழ்த்தப்பட் டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு சமூக நீதியின்
அடிப்படையில் தகுதி மதிப் பெண்களைத் தனித்தனியாக அறிவித் திருந்தும்
பிகார், ஆந்திரா, அஸ்ஸாம், ஒரிசா போன்ற மாநிலங்கள் அதனைப் பின்பற்றி
இருந்தும், எடுத்துக்காட்டாக ஆந்திராவில் முன்னேறிய வகுப்பின ருக்கு தகுதி
மதிப்பெண் 60%பிற்படுத்தப் பட்டோருக்கு தகுதி மதிப்பெண் 50%
தாழ்த்தப்பட்டோருக்கு தகுதி மதிப்பெண் 40% சமூகநீதிக்கு வழிகாட்டி மாநிலமான
தமிழ்நாட்டில் மட்டும் முன்னேறியவர்களாக இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர்களாக
இருந்தாலும், பிற்படுத்தப்பட்டவர் களாக இருந்தாலும் 60 சதவிகிதம்
கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று சகட்டுமேனியாக நிர்ணயம் செய்திருப்பது
தமிழ்நாடு அரசு பிடிவாதமாக சமூகநீதி யின் கழுத்தை நெரிக்கிறதா? இல்லையா?
என்ற கேள்விக்கு நேரிடையாக முதல் அமைச்சர் தம் அறிக்கையில் பதில் கூற
முடியாமல், 69 சதவிகித அடிப்படையில் தான் ஆசிரியர் பணி நியமனம்! அதற்கு
மாறாக நடக்க முடியாதே! என்று திசை திருப்புவது சரியானது தானா?
தவறு செய்திருக்கலாம். சுட்டிக் காட்டிய
பிறகு திருத்திக் கொள்ள வேண்டுமே தவிர கோபாக்னியைக் கொட்டித் தீர்ப்பது
ஓர் ஆட்சித் தலைமைக்கு அழகல்ல.
இன்னொரு முக்கிய சட்டபூர்வ தகவல்
அன்றைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
அல்தாமஸ்கபீர் - டில்லி AIIMS பேராசிரியர்கள் போட்ட வழக்கினை (வழக்கு எண்
C.A. Civil Applete Jurisdiction C.A. No.4500 of 2002 -ல் தீர்ப்பு
வழங்கிய நாள் 18.7.2013) தான் தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்கள் புதிய
Super Specialy Hospital நியமனங்களில் செய்ய இயலாது என்று
குறிப்பிட்டுள்ளார்.
அத்தீர்ப்பே சட்டப்படியே தவறானது என்பதால்தான் மறுசீராய்வு மனு
(Review Petition) மத்திய அரசால் உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது;
தீர்ப் பினை பொருட்படுத்தாமல், பிறகு வந்த டெல்லி மருத்துவ அரசு
மருத்துவமனை களில் செய்யப்படும் (ஒப்பந்த நியமனங்கள் உட்பட) விளம்பரங்களில்
இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது.
மண்டல் கமிஷன் இந்திரா சகானி வழக்கில் 4
நீதிபதிகளும் ஜஸ்டீஸ் திரு. ரத்தினவேல் பாண்டியன் அவர்களும் சேர்ந்து 9
நீதிபதிகளில் 5 (மெஜாரிட்டி) தீர்ப்பினை 2013-ல் உச்சநீதிமன்றம் பின்பற்றி
தீர்ப்பு எழுதாமை காரணமாக - முற்றிலும் எதிராக எழுதியிருப்பதனால் அது தவறான
தீர்ப்பு மட்டுமல்ல; செல்லாத தீர்ப்பும் ஆகும்.
எனவே தமிழக அரசு செல்லாத தீர்ப்புக்களைக் காட்டி சமூகநீதியை - பெரியார் மண்ணில் மறுப்பது நியாயம் அல்ல. அல்லவே அல்ல.
நமது அடுத்த கட்ட நடவடிக்கை
வரும் 21ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி நடத்தும் ஆர்ப்பாட்டத்தில், திரா விடர் கழக மாணவர் அணியும் கலந்து கொள்ளும்.
தமிழ்நாடு அரசின் நடவடிக்கையைப் பொறுத்து நமது அடுத்தக் கட்ட நட வடிக்கை இருக்கும்.
நாம் ஓயப் போவதில்லை. எமக்கு எந்த அரசியல் நோக்கமும் இல்லை; - சமூக நீதிக் கண்ணோட்டத்தைத் தவிர.
------------------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்.சென்னை 16.1.2014
46 comments:
இல்லவே இல்லை!
எல்லா மதக்காரர்களும் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது, ஒரு முடிகூட உதிராது என்று கூறுகிறார்கள். அது வெறும் வேஷம் ஆகும். அவன் அவன் முடியை எடுத்துக்கொள்ள வேண்டு மானால், நாவிதனிடம்தான் போகின்றான்! எனவே, 370 கோடி மக்களில் எவனும் கடவுளிடம் நம்பிக்கை உடையவன் இல்லவே இல்லை.
- (விடுதலை, 26.4.1972)
Read more: http://viduthalai.in/page-2/73642.html#ixzz2qc1YpnBE
சுப்பிரமணிய சுவாமி முகநூல் (பேஸ்புக்) மூலம் விஷமப் பிரச்சாரம்
புதுடில்லி, ஜன. 16- பொய்யான தகவல்களை பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதன் மூலம் பாரதீய ஜனதா கட்சியில் ஐக்கியமாகியுள்ள சுப்பிரமணியசுவாமி பல்வேறுபிரச்சனைகளுக்கிடையே யும் ஒற்றுமையாக இருந்து வரும் இந்து மற்றும் முஸ்லிம் சமுதாய மக்களி டையே வெறுப்பை ஏற்படுத்தி வரு கிறார். சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றை சமூகத்தில் பல்வேறு மாற்றங்களை உருவாக்குவதற்கும், சிலர் திட்டமிட்டு வன்முறைகளை உருவாக்கு வதற்கும் பயன்படுத்தி வருகிறனர். குறிப்பாக இளைஞர்கள் இந்த சமூக வலைத் தளங்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதனை பாஜக முழுமையாக பயன்படுத்தி எப்படியாவது மோடியை பிரதமராக்கிட வேண்டும் என்ற முயற்சி யில் பல்வேறு அவதூறுகளையும், பொய்களையும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. வரலாறுகளையே திரித்துக் கூறி வருகிறது. மேலும் பல அய்டி நிறுவனங்களையே குத்தகைக்கு எடுத்து அதன் வழியாக இது போன்ற இழி செயல்களில் பாஜக ஈடுபட்டு வருவதை சமீபத்தில் கோப்ரா போஸ்ட் இதழ் அம்பலப்படுத்தியது. மோடியின் பொய்ப் பிரச்சாரப்படையில் ஜனதா கட்சியின் தலைவராகவும், தொண்ட ராகவும் இயங்கி வந்த சுப்பிரமணிய சுவாமி தற்போது அய்க்கியமாகியுள்ளார். அவர் தனது பேஸ்புக் கணக்கில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இஸ்லாமி யர்களுக்கு எதிராக இந்துக்களை வன் முறைக்கு தூண்டிவிடும் வகையில் பொய்த் தகவலை வெளியிட்டுள்ளார்.
அவரது பேஸ்புக் கணக்கில் வெளியிடப் பட்டுள்ள புகைப்படம் ஒன்றில், நீண்ட தடிகளுடன் இருக் கும் வாலிபர்கள், மற்றவர்களைத் தாக்குவதுபோல் உள்ளது. இதன் குறிப்பாக, வங்காளதேசத்தில் இந்துக் கள் முஸ்லிம்களால் தாக்கப்படுகின் றனர். தற்போதைய வங்காளதேச மக்கள் தொகை யில் 8 சதவிகிதம் பேர் இந்துக்கள் (இது 1941ல் 28 சதவிகிதமாக இருந்தது) என்று எழுதப்பட்டுள்ளது. இந்தப் பதிவை ஆயிரக்கணக்கான மோடியின் இணையதள பிரச்சாரக் குழுவினர் லைக் தெரிவித்துள் ளதோடு, அதனை விஷமத்தனமாக மற்றவர் களுக்கும் பகிர்ந்து வருகின்றனர். உண்மை யில், இந்தப் புகைப்படம் வங்காளதேசத்தில் பொதுத்தேர்தலின் போது வாக்களிக்கச் சென்றவர்களை எதிர்க்கட்சியின் ஆதர வாளர்கள் தாக்கிய போது எடுத்தபடம். இதனை குஜராத்தின் உண்மை என்ற பேஸ்புக் கணக்கில் நண்பராக இருக்கும் யூனுஸ் என்பவர் கண்டறிந்து, உண் மையை வெளிக் கொண்டு வந்துள்ளார். இதற்கு சான்றாக வாஷிங்டன் போஸ்டில் வெளி யிடப்பட்டிருந்த இந்தப் புகைப் படத்தை அவர் இணைத்துள்ளார். அதில், வங்காளதேசத் தில் நடைபெற்ற பொதுத் தேர்தலை எதிர்க்கட்சியான வங்காள தேச தேசியக் கட்சி புறக்கணித்திருந்த நிலையில், தேர்தலில் வாக்களிக்கச் சென்ற வாக் காளர்களை அக்கட்சியின் ஆதரவாளர் கள் தாக்கியதாகவும், வாக்காளர்கள் வாக் களிப்பதற்காக காவல்துறையினர் போராட்டக்காரர்களை நோக்கி மீண்டும் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வாக்கைப் பெறும் மலிவான அரசியலில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.முன்னதாக, பாஜகவிற்கு தனது ஆதரவைத் தெரி வித்த சர்ச்சை சாமியாரான பாபா ராம்தேவ், தனது பேஸ்புக் கணக்கில், முன்னாள் பிரதமர்களான ஜவஹர் லால் நேரு மற்றும் லால்பகதூர் சாஸ்திரி தொடர்பான படங்களை வெளியிட்டு, போலியான தகவல்களை தெரிவித் திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, இதற்கு எவ்வித வருத்தமும் தெரிவிக்காமல் அப்புகைப் படங்களை தனது பக்கத்திலிருந்து நீக்கி யது குறிப்பிடத்தக்கது. இது போன்று திட்டமிட்டு இந்து முஸ்லீம் மக்களிடையே வன் முறையை உருவாக்கும் சுப்பிரமணிய சுவாமி, சாமியார் ராம்தேவ் உள்ளிட்டவர் கள் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 153 (எ) பிரிவின் படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தள பயன்பாட் டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி: தீக்கதிர் 16.1.2014
Read more: http://viduthalai.in/page-2/73644.html#ixzz2qc23L9o7
இந்து அறநிலையத்துறையின் வேலையா இது?
நீதிக் கட்சியின் ஆட்சியில் இந்து அற நிலையத் துறை உண்டாக்கப்பட்டது - கோயில்களில் அர்ச்சகப் பார்ப்பனர்களின் சுரண்டலைத் தடுப்பதற்காகத்தான்.
கோயில்களைப் பொறுத்தவரை எந்தவித வரவு - செலவு கணக்குகளும் கடைப்பிடிப்பதில்லை. ஏதோ தங்களின் பூர்வீகச் சொத்துகளாகக் கருதி பார்ப்பனர்கள் தானடித்த மூப்பாக அவற்றைப் பயன்படுத்தி வந்தனர்.
இவற்றைக் கட்டுப்படுத்தவும், ஒழுங்குப்படுத்தவும் தான் இத்துறை பனகல் அரசர் காலத்தில் உருவாக்கப்பட்டது.
தி.மு.க. ஆட்சியில் டாக்டர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் இந்து அறநிலையத்துறை அமைச்சர் எனும் தகுதியில், சிதம்பரம் நடராஜன் கோயிலுக்குச் சென்ற பொழுதுகூட, அர்ச்சகர்கள் கொடுத்த பிரசாதத்தை இந்தக் கையில் வாங்கி, அந்தக் கையால் கீழே போட்டார். அதுபற்றி அவரிடம் கேட்கப்பட்ட பொழுது, இந்து அறநிலையத்துறை அமைச்சர் வேலை 4 மரக்கால் அரிசியை பயன் படுத்துவது என்றால் அதன்படி ஒழுங்காக செயல்படுகிறதா என்று சரி பார்ப்பதுதானே தவிர, கோயில் புனஷ்கார நடவடிக்கையில் ஈடுபடுவதல்ல என்று கறாராகக் கூறினார். அதனை வரவேற்று தந்தை பெரியார் அவர்கள் சபாஷ்! சபாஷ்! நெடுஞ்செழியன்! என்று விடுதலையில் முதல் பக்கத்திலேயே கையொப்பமிட்டு பெட்டிச் செய்தியாக வெளியிடச் செய்தார். அந்த இந்து அறநிலையத்துறை இப்பொழுது என்ன செய்துள்ளது தெரியுமா? ஒரு சுற்றறிக் கையைக் கல்வித்துறை மூலம் பள்ளிகளுக்கு அது அனுப்பியுள்ள தகவல் கண்டனத்துக்குரியது. இந்து அறநிலையத்துறை என்பது இந்து மதம் பரப்புத்துறையாக மாறி விட்டதோ என்று நினைக்கத் தோன்றும் ஒரு வேலையைச் செய்துள்ளது.
பள்ளி மாணவ - மாணவிகளுக்குத் திருவாசகம் பற்றி கட்டுரைப் போட்டியும், திருப்பாவை - திருவெம்பாவை பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியும் நடத்த வேண்டும் என்பதுதான் அந்தச் சுற்றறிக்கை.
முதல் பரிசு ரூ.2500, இரண்டாம் பரிசு ரூ.2000, மூன்றாம் பரிசு ரூ.1500 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல பள்ளிகளிலும் இது நடத்தப்பட்டும் உள்ளது.
இது விதிகளின்படி சரியானது தானா? எந்த விதியின் கீழ் இந்து அறநிலையத்துறை இந்த முடிவை எடுத்தது? எந்த விதிமுறைகளுக்கிணங்க கல்வித்துறையும் இந்த வேலையைச் செய்திருக் கிறது?
இதுவரை எந்த கால கட்டத்திலும் இல்லாத நடைமுறை இந்தக் கால கட்டத்தில் அரங்கேற்றப் பட்டது எப்படி? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? அண்ணா பெயரை கட்சியில் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு கட்சிதானே ஆட்சியில் இருந்து கொண்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் எந்தவித வழிபாட்டுச் சின்னங்களும் இருக்கக்கூடாது என்று ஆணை பிறப்பித்தவர் முதல் அமைச்சர் அண்ணா என்பது இந்த முதல்அமைச்சருக்கு தெரியுமா? அண்ணாவைத் திட்டமிட்டு அவமதிப்பதுதான் அண்ணா திமுக ஆட்சியின் திட்டமா?
கருநாடக மாநிலத்தில் முதல் அமைச்சராக வந்த பி.எஸ். எடியூரப்பா முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்றவுடன் முதல் ஆணையாக எல்லா இந்துக் கோயில்களிலும் தனது பெயரில் அர்ச்சனை செய்யப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். அது கடும் பிரச்சினைக்கு உட்படுத்தப்பட்ட நிலை யில், அந்த உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு அரசும் இந்தச் சுற்றறிக்கையை விலக்கிக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்து கிறோம். இந்தச் சுற்றறிக்கை கல்வி நிலையங் களுக்குள் தேவையற்ற மதச் சர்ச்சைகளை உண் டாக்கும்; வெறும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களின் வீட்டுப் பிள்ளைகள் மட்டுமா படிக்கிறார்கள்? மற்ற மற்ற மதக்காரர் வீட்டுப்பிள்ளைகளின் நிலை என்னாவது?
மதச் சார்பற்ற அரசு குறிப்பிட்ட மதக் காரியத்தைச் செயல்படுத்தலாமா? அதுவும் ஆண்டாள் பாடல் என்றால் கொக்கோகம் தோற்றுவிட வேண்டுமே! இதையா பிஞ்சு உள்ளங்களில் விதைப்பது?
எந்தவகையில் பார்த்தாலும் இந்து அறநிலையத் துறையின் செயல்பாடு உகந்ததல்ல! அரசு அதி காரிகள் அரசனை விஞ்சிய விசுவாசிகளாகச் செயல்படுவது ஆபத்து!
எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!
Read more: http://viduthalai.in/page-2/73643.html#ixzz2qc2HQbvv
மடத்துக்குளம் ஒன்றிய திராவிடர் கழகம் நடத்திய திராவிடர் திருநாள் பொங்கல்விழா - வழக்காடு மன்றம்
மடத்துக்குளம், ஜன. 16- மடத்துக்குளத்தில் திராவிடர் கழகம் சார்பில் காரசாரமாக நடை பெற்ற வழக்காடுமன்றத்தில் தமிழர்களை சூழ்ச்சி யால் பிரித்தாளும் பார்ப்பனர்கள் ஒழிக்கப்பட வேண்டியவர்கள்! ஏமாந்த தமிழன் திருத்தப்பட வேண்டியவன்! என்று பண்பாட்டுப் படை யெடுப்பை முறியடிக்கும் விதமாக அருமையான தீர்ப்பு வழங்கப்பட்டது.
தை முதல் நாளே! தமிழ்ப் புத்தாண்டு
1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல் லூரியில் தமிழ்த்தென்றல் திரு.வி.க., மறைமலை அடிகள் ந.மு.வேங்கடசாமி நாட்டார், பாரதிதாசன் உள்ளிட்ட 540-க்கும் மேற்பட்ட புலவர்கள் ஒன்று கூடி தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்பதை ஆராய்ந்தும், சித்திரை என்பதும் அவற்றில் கூறப் படுகின்ற 60 வருடங்கள் என்பதும் வெறும் ஆபாசம் நிறைந்த கட்டுக்கதைகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதையும் அவற்றில் தொடர் ஆண்டு கணக்கிடுவதில் உள்ள தெளிவில்லாத சூழ் நிலையைக் கருத்திற் கொண்டும் அவற்றை விடுத்து குறள் ஆசான், மாதானுபங்கி திருவள்ளுவர் பிறந்தநாளை அடிப்படையாகக் கொண்டு மொழி யப்பட்ட நாள் தான் தை முதல் நாள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற கருத்தில் இருந்தே இது அந்நியக் கலப்பில்லாத விழா என்பதை நாம் உணர முடிகிறது.
திராவிடர் திருநாள் படைப்பு
திராவிடர் திருநாள், தமிழர் திருநாள், அறுவடைத் திருநாள், நன்றி தெரிவிக்கும் விழா இவ்வாறாக தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டுப் பொங்கல் திருநாள் அனைத்து தரப்பு மக்களாலும் சிறப்போடு தித்திப்போடும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நியப் பண்பாட்டு படையெடுப்புச் சீரழிவால் தாக்குண்ட திராவிட இன மக்களான நம் தமிழ் மக்களின் வாழ்வைச் சீரழித்து அவர்களின் ஒற் றுமையை சீர்குலைக்கும் ஜாதி, மத, மூடநம்பிக் கைகள் இந்நாளில் முற்றாக ஒழிக்கப்பட்டு தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் ஓரணியில் திரள வேண்டும் என்ற நோக்கத்தோடு திராவிடர் கழகம், திராவிடர் திருநாள் படைப்பாக தமிழக மெங்கும் பொங்கல் விழா சிறப்பு கூட்டங்களை நடத்தி வருகிறது. அவற்றின் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கழக மாவட்ட பகுதி களுக்குட்பட்ட மடத்துக்குளம் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் திராவிடர், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் விழாவையொட்டி சிலம்பாட்ட நிகழ்ச்சியும் ஜாதி, மத மூடநம்பிக்கைகளுக்குப் பலியாகும் தமிழன் குற்றவாளியே! என்ற வழக்காடு மன்றமும் 10.1.2014 அன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணியிலிருந்து மடத்துக்குளம் நால்ரோடு, குமரலிங்கம் சாலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மடத்துக்குளம் ஒன்றிய தி.க தலைவர் அ.ஜெயப்பிரகாஷ் தலைமை தாங்கினார்.
கோவை மண்டல தி.க இளைஞரணிச் செயலா ளரும், சிலம்பாட்டக் கலைஞரும், ஓவியருமான சோழமாதேவி நா.மாயவன் வரவேற்புரையாற் றினார். தி.க மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் ஆ.பாண்டியன், வழக்குரைஞர் தம்பி பிரபாகரன், தாராபுரம் கழக மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் நா.சக்திவேல், செயலாளர் க.கிருஷ்ணன், அமைப்பாளர் கி.மயில் சாமி, தி.க பொதுக்குழு உறுப்பினர் நா.சாமிநாதன், தாராபுரம் கழக மாவட்ட ப.க தலைவர் கவிஞர் ச.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வழக்காடு மன்ற அவையோர்கள்
ஜாதி, மத, மூடநம்பிக்கைகளுக்குப் பலியாகும் தமிழன் குற்றவாளியே என்ற தலைப்பில் இவ்வழக் காடு மன்றத்தில் வழக்குத் தொடுப்பவராக தி.க தலைமைக்கழகப் பேச்சாளரும், கோவை மண்டல தி.க செயலாளருமான புலியகுளம் வீரமணி அவர்களும், வழக்கு மறுப்பவராக தி.க தலைமை நிலையச் சொற்பொழிவாளரும், திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவருமான கோபி, வெ.குமார ராசா அவர்களும், கேள்விக்கணைகள் தொடுத்து இவ்வழக்கின் வாதப், பிரதிவாதங்களை விசாரித்து தீர்ப்பு வழங்கும் வழக்காடு மன்ற நடு வராக தி.க தலைமைக் கழகச் சொற்பொழிவாளரும், பெரியார் சமூகக்காப்பு அணியின் பயிற்சியாளரு மான தஞ்சை இரா.பெரியார் செல்வன் அவர்களும் வழக்காடு மன்றத்தின் அவையோர்களாகப் பங்கேற்றனர்.
தமிழர்களின் வீரவிளையாட்டு
சமுதாயத் தளத்தில் பண்பாட்டுப் படையெடுப்பு களின் ஊடுருவல்களான ஜாதி, மத, மூடநம்பிக்கை களை வேரறுக்க மக்கள் மன்றத்தின் முன்பாக திராவிடர் கழகம் நோயைத்தீர்க்கும் மருத்துவப் பணிப்போல பகுத்தறிவுப் பிரச்சாரங்களைச் சூறா வளியாகச் சுழன்று செய்து வருவது போல் திரா விடக் கலைகளான தமிழர்களின் வீர விளையாட்டு களை அனைவரும் கற்கவேண்டும் என்ற வகை யிலும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து இளைஞர்கள் மாணவச் செல்வங்கள் மத்தியில் மனநலம், உடல் நலம் பேணுதல் என்ற அடிப்படையில் சிறப்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்திவருகிறது.
இப்பணியை திராவிடர் கழகத்தின் அமைப்பு களில் ஒன்றான பெரியார் வீர விளையாட்டுக் கழகம் செவ்வனே செய்து வருகிறது. அவ்வகையில் இவ்வழக்காடு மன்றத்தின் துவக்க நிகழ்ச்சியாக பெரியார் வீரவிளையாட்டுக் கழகத்தின் சார்பில் சோழமாதேவி பெரியார் சிலம்புப் பயிற்சி பள்ளி மாணவ, மாணவியர்கள், பெரியார் பிஞ்சுகள் சிறப் பான முறையில் சிலம்ப குத்துவரிசை, அடிவரிசை, சுருள்வாள் சுழற்றுதல், தீப்பந்தம் சுழற்றுதல், கத்தி விளையாட்டு, மடு (மான்கொம்பு) சண்டை, சிறுதடி (சில்தான்) சண்டை, பிடிவரிசை, களரி போன்ற வீர விளையாட்டுக்களை ஆக்ரோஷமாக விவேகத்துடனும் நிகழ்த்திக் காட்டினார். இந்நிகழ்ச் சியை
தாராபுரம் கழக மாவட்ட தி.க தலைவர் வழக்குரைஞர் நா.சக்திவேல் துவக்கி வைத்தார்.
இதற்கான பயிற்சியினை கோவை மண்டல தி.க இளைஞரணிச் செயலாளரும், திருப்பூர், தாராபுரம் கழக மாவட்ட பெரியார் - வீரவிளையாட்டுக் கழகத் தலைவரும், பயிற்சியாளருமான நா.மாயவன் மற்றும் திராவிடர் கழக ஆர்வலரும், வீரவிளையாட்டு வித்தகரும், பயிற்சியாளருமான முத்து (எ) பழனிசாமி ஆகியோர் கொடுத்திருந்தனர்.
இவ்வீரவிளையாட்டுக் களத்தில் மஞ்சுளா தேவி, மஞ்சுப்பிரியா, அருண்குமார், தீபக் மகராஜன், சங்கர், கார்த்தி, வினோத்குமார் மற்றும் பெரியார் பிஞ்சுகள் - ம.முகிலன், இளந்தென்றல் மனோஜ் பிரபாகர், அஸ்வின் (எ) பெரியசாமி ஆகியோர் களமாடினர் இவர்களுள் தேசிய அளவிலும், மாநில அளவிலும் வீரவிளையாட்டுகளுக்கான சிறப்புச் சான்றிதழ் பெற்றவர்களும் அடங்குவர்.
வழக்காடு மன்றம் தொடங்குவதற்கு முன் வீர விளையாட்டுக்களை நிகழ்த்திக் காட்டிய மாணவ, மாணவியர்கள் இன்னும் பல சாதனைகளையும், விருதுகளையும் பெற தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளவேண்டும். பெண்கள் பாலியல் வன் முறைக்கு உள்ளாக்கப்படும் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பெண்களுக்கு தற் காப்புக்கலைப் பயிற்சிகள் அவசியமாகிறது. மாணவச் சமுதாயம் சீர்கெட்டுப் போயுள்ளதை தூத்துக்குடி கல்லூரி முதல்வர் கொலை மற்றும் சென்னையில் கேளிக்கையால் நடைபெற்ற கொலைச் சம்பவங்கள் இப்படியாக மனிதத்தன்மை கொண்டவர்களின் மனதைப் பிளக்கும்படியாக பல செய்திகள் நிரூபிக்கின்றன.
ஆகவே இளைஞர்களும், மாணவச் செல்வங் களும் பகுத்தறிவு அடிப்படையில் நடை பயில வேண்டும். உடல் நலம், மன நலம் பேண வீர விளை யாட்டுக்களைக் கற்க வேண்டும். பெற்றோர்களும், மாணவர்களுக்கு மனவலிமையையும், உற்சாகத் தையும் தரவேண்டும் என்று இளைஞர்களுக்கும், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்களுக்கும் அறிவுரை வழங்கியதோடு, வியாபாரத்தொழிலாகப் பட்டி மன்றங்கள், வழக்காடு மன்றங்கள் நாட்டில் பரவலாக நடைபெற்று வருகின்றன. ஆனால் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்கள் வியாபார நோக்கங்கள், சுயநலம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு பொருள் பொதிந்த நிலையில் மக்களுக்கு உண்மைக் கருத்துக்களை சுவை படக்கூறவேண்டும் என்ற நோக்கத்திலும், கலாச்சாரச் சீர்கேட்டால் ஜாதி, மத, மூடநம்பிக்கையால் தாக்குண்ட தமிழர்களை அவற்றிலிருந்து மீட்டு ஒன்று திரட்டும் வகையில் எழுச்சியை மறந்து போன நமது வரலாற்று நிகழ்வு களை உரிய ஆதாரத்துடன் விளக்கி உணர்ச்சியூட்ட வும், தமிழே இல்லாதது தமிழ்ப் புத்தாண்டாக எவ்வாறு இருக்க முடியும்? என்பதை தமிழர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும், தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாட வேண்டும் என்பதற்காகவுந்தான் இவ்வழக்காடு மன்றம் ஏற் பாடு செய்யப்பட்டிருக்கிறது என்ற வகையில் வழக்காடு மன்ற நடுவர் தன் தொடக்கவுரையை நிறைவு செய்தார்.
தமிழ்சமுதாயம் நிம்மதியாகவும், சுயமரியாதை யோடும் வாழ இந்து மதத்தை ஒழிக்க வேண்டும். ஏனென்றால் தமிழகத்தின் வாழ்வாதாரத் திட்ட மான சேது சமுத்திரத் திட்டத்தை மதத்தின் பேரால் பார்ப்பனர்கள் முடக்கியிருக்கிறார்கள். ஆதாம் பாலத்தை பார்ப்பனர்கள் இராமர் பாலம் என் கிறார்கள் அதற்கு மகுடம் சூட்டும் வகையில் தமிழர்களே பெருவாரியாக பங்கேற்று சேது சமுத்திரத் திட்டத்திற்கு எதிராகப் போராடு கிறார்கள் எனவே பார்ப்பனர்களால் கற்பிக்கப் பட்ட மதத்தை போற்றும் வகையில் செயல்படுகின்ற தமிழர்கள் குற்றவாளிகளே!
மேலும் ஜாதி என்பது தமிழ்ச் சொல்லே அல்ல! ஆயினும் தமிழ் சமுதாயத்தில் ஜாதி என்பது ஆழமாக ஊடுருவியிருக்கிறது. தமிழர்கள் ஜாதியை பறைசாற்றும் வண்ணம் அடிக்கடி கலவரங்களில் ஈடுபடுகிறார்கள். ஆகவே பார்ப்பனர்களின் பிரித் தாளும் சூழ்ச்சிக்கு ஜாதிவாரியாக பலியாகிக் கொண்டிருக்கும் தமிழன் குற்றவாளியே!
தமிழ்ச் சமுதாயத்தில் தமிழர்களின் மூளைக்கு மாட்டப்பட்ட விலங்காக மூடநம்பிக்கை குடி கொண்டிருக்கிறது. காவி ஆட்டம் ஆடுவதிலும், தீர்த்தம் எடுப்பதிலும், பறவைகளையும், மிருகங் களையும் பார்ப்பனர்களால் உருவகப்படுத்தப்பட்ட கடவுள் என்ற மூத்த மூடநம்பிக்கைக்கு பலி கொடுப் பதிலும் மூடத்தனத்தின் உச்சமாக மாலையிட்டுக் கொண்டு தொலை தூரப்பயணம் சென்று கடவுளை வணங்குவதிலும், ஜாதகம், சோதிடம், பில்லி, சூன்யம், வாஸ்து போன்ற வயிற்றுப்பிழைப்புக்காக நடத்தப்படுகிற தந்திர யுக்திகளுக்கு பலியாவதிலும் தமிழர்கள் தங்களுடைய செல்வங்களையெல்லாம் இழந்து தங்களைத் தாங்களே சுரண்டிக் கொண்டி ருக்கிறார்கள். தமிழர்கள் மானத்தோடு வாழ வழியில்லாத நிலைக்குக் காரணம் ஜாதி, மத, மூட நம்பிக்கைகளே!
எனவே இவற்றிற்கு பலியாகும் தமிழன் குற்ற வாளியே ஜாதி, மத, மூடநம்பிக்களை அழித் தொழிப்போம் புதிய உலகைப்படைப்போம்! தந்தை பெரியார்தான் அவ்வுலகிற்கு வழிகாட்டி என்று தன் வாதத்தை நிறைவு செய்தார்.
தமிழர்கள் இந்து மதத்தை போற்றி ஏற்றுக் கொள்ளவில்லை பார்ப்பனர்களால் தமிழர்கள் இந்துக்களாகப் பலிகொடுக்கப்பட்டிருக்கிறார்கள். பார்ப்பனர்களால் சூத்திரன், பஞ்சமர் என்று தான் இழிவு படுத்தப்பட்டிருப்பதையே அறியாத தமிழர் பலி கொடுக்கப்பட்ட தமிழன் குற்றவாளி அல்ல! பழியாக்கிய பார்ப்பனர்கள் தான் குற்றவாளி!
தமிழன் காலங்காலமாக பார்ப்பனர்களால் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கிறான். தமிழனு டைய கல்வி, வீரம், நாடு, போன்றவைகள் பார்ப் பனர்கள் ஏற்படுத்திய கலாச்சாரப் படையெடுப்பால் அழித்தொழிக்கப்பட்டது. எனவே ஏமாந்த தமிழன் குற்றவாளியல்ல! விழிப்புணர்வுக்கு உட்படுத்தப் படவேண்டியவன்! தமிழனை தன் வயிற்றுப் பிழைப்புக்காகவும், மேன்மைக்காகவும், வஞ்சித்து துரோகம் புரிந்த பார்ப்பனப் பதர்களே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்கள்.
கைபர் போலன் கணவாய் வழியாக மத்தியக் கிழக்கு ஆசியாவிலிருந்து பார்ப்பனர்கள் வருகைக்கு முன் நம்முடைய தொண்மை வாய்ந்த தமிழ் மொழியிலோ, கலாச்சாரப்பழக்க வழக்கங்களிலோ, இலக்கியங்களிலோ, ஜாதி, மத, மூடநம்பிக்கைச் சுவடுகள் ஏதும் இல்லை. பார்ப்பனர்களுடைய வருகையால் தான் தமிழர்களின் வாழ்வு நசுக்கப் பட்டது. நாசமாக்கப்பட்டது.
ஜாதி, மத, மூடநம்பிக்கைகளுக்கு ஆட்பட்ட தமிழன் குற்றவாளியல்ல! தமிழர்களை நயவஞ்சக மாக ஏமாற்றி நரித்தனம் புரிந்த ஆரியப் பார்ப்பனர்களே குற்றவாளிகள் என்று தன் பிரதிவாதத்தைப் பதிவு செய்தார்.
நடுவரின் இறுதித் தீர்ப்பு
தந்தை பெரியார் இந்த மண்ணில் ஜாதி ஒழிப்புக் காகத்தான் இந்த இயக்கத்தைத் தொடங்கினார். கடவுள் இல்லை என்று சொல்வதற்கல்ல. கடவுள் இருந்திருந்தால், இருந்தால் நாட்டில் கொடுமைகள் நடக்குமா? குறிப்பாக கோவிலில் தான் இடி விழுமா? இந்தியாவில் 6422 ஜாதிகள் உள்ளது. இந்த ஜாதி களுக்கு இந்திய அரசியல் சட்டத்தில் பாதுகாப்பும் உள்ளது. ஆகவே தான் பெரியார் இந்திய அரசியல் சட்டத்தை கொளுத்தினார். மேலும் தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது. என்பதற்கு பதிலாக ஜாதி ஒழிக்கப்பட்டு விட்டது என்று இந்திய அரசியல் சட்டத்தில் மாற்றம் செய்யும் படியும் வலியுறுத் தினார். அதை தந்தைபெயிர் அடியொற்றி இன் றளவும் போராட்டங்களின் மூலம் வற்புறுத்தி வரும் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
தந்தை பெரியார் அவர்கள் மேடையில் நின்று பேசிக்கொண்டிருக்கும் போது முகத்தில் மலத்தை வீசினார்கள். பெரியார் அவர்கள் சொன்னார்கள் மலம் என் மீது விழுந்ததற்காக நான் சங்கடப்பட வில்லை, கோபப்படவில்லை. அது மலம் என்று தெரிந்தும் தமிழன் அதில் கை வைக்கின்றானே அதுதான் எனக்கு வருத்தம் என்றார்கள்.
பெரியார் ஒரு போதும் தமிழனை எதிரியாகவோ, விரோதியாகவோ கருதியது கிடையாது. கடவுளைக் கற்பித்தவன் முட்டாள். கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டு மிராண்டி என்று சொன்னார். கடவுளை வணங்கும் காட்டு மிராண்டிகள் திருத்தப்பட வேண்டிய வர்கள்.
தந்தை பெரியார் வசதி படைத்த குடும்பத்தைச் சார்ந்தவர் எதிர்கால சமுதாயத்தை மாற்ற வேண்டும் என்று நினைத்தார்! உடல் நலிவுற்றபோதும் 95 வயது வரை எதற்காக பெரியார் போராடினார் தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.
இன்றளவும் சமுகத்தை முற்போக்கான சூழ் நிலைக்கு மாறவிடாமல் தடுத்துக் கொண்டிருப்பவர் கள் யார்? இந்த கணினி யுகத்திலும் புராணத்தைத் திணித்துக் கொண்டிருப்பவர்கள் யார்? சிதம்பரம் நடராஜரைத் தரிசிக்க வந்த நந்தனைக் கொன்ற வர்கள் யார்? மதம் என்ற பேய் பிடியாதிருக்க வேண்டும், கண்மூடிப் பழக்க வழக்கங்களெல்லாம் மண்மூடிப்போக என்று பாடிய வள்ளலாரைக் கொன்றவர்கள் யார்? வந்தேறிகளான பார்ப்பனர்கள் தானே! இன்றுவரை அவர்கள் திருந்தினார்களா? சிதம்பரம் கோவிலை தீட்சிதர்களே நிர்வகிக்கலாம் என்ற தீர்ப்பை பெற்றதோடு ஆறுமுகசாமி தேவாரம், திருவாசகம், கோவிலுக்குள் வந்து பாடக்கூடாது என்ற ஆணையையும் பார்ப்பனர்கள் வாங்கி வந் துள்ளார்கள் என்றால் பார்ப்பனர்கள் மாறவில்லை.
தமிழகத்தின் வளர்ச்சி திட்டம், கனவுத்திட்டம், அந்நியச் செலவாணியைத் தமிழகத்திற்கு தரக்கூடிய திட்டம் இவ்வாறாக தமிழ்நாட்டின் வாழ்வாதாரத் திட்டமான சேது சமுத்திரத் திட்டம் 2427 கோடி செலவு செய்யப்பட்டு 70 விழுக்காடு பணிமுடிந்த நிலையில் இராமனைக்காட்டி பார்ப்பன வகை யறாக்கள் முடக்குகிறார்கள் என்றால் இதற்கு தமிழ கத்தை ஆண்டு கொண்டிருக்கும் அரசு துணை போகிறதென்றால் என்ன அர்த்தம்? பார்ப்பனர்கள் திருந்தவில்லை.
எனவே தமிழகத்தின் வளர்ச்சியை, முன்னேற் றத்தை, வாய்ப்பு வசதியை, உரிமைகளை, ஒற்று மையை தடுத்து சீர்குலைக்கும் பார்ப்பனர்கள் ஒழிக்கப்பட வேண்டியவன் என்ற பரபரப்பான தீர்ப்பை வழக்காடு மன்ற நடுவர் இரா.பெரியார் செல்வம் வழங்கினார்.
இந்நிகழ்வில் தாராபுரம் கழக மாவட்ட ப.க செயலாளர் ஓவியர் பு.முருகேசு, அமைப்பாளர் வே.கலையரசன், மாவட்ட தி.க இளைஞரணிச் செயலாளர் ம.பரிதி இளம்வழுதி, மடத்துக்குளம் ஒன்றிய தி.க இ.அ.தலைவர் அர்ச்சுனன், கணியூர் கிளைக்கழக தி.க தலைவர் மா.ராமசாமி, செயலாளர் ஆறுமுகம், இளைஞரணித் தலைவர் கி.கண்ணன், கடத்தூர் கிளைக்கழக தி.க தலைவர் நா.மனோகரன், உடுமலை நகர தி.க தலைவர் போடிபட்டி காஞ்சி மலையா, செயலாளர் இல.ஈஸ்வரன், உடுமலை ஒன்றிய தி.க செயலாளர் போடிபட்டி திருமுருகன், பழனி மாவட்ட ப.க செயலாளர் பெருமாள், கணியூர் பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்த கா.வேலுமணி, பழ.பெரியசாமி, வெள்ள கோவில் பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்த சு.சிவக்குமார், ஜெகநாதன, ரகுவரன், சரவணன், சக்திவேல், செந்தில்குமார், சண்முகம் மற்றும் திராவிடர் தொழிலாளர் சங்கத்தைச் சார்ந்த பழனி சந்திரகோபால் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
நிகழ்வின் முடிவில் திராவிடர் தொழிலாளர் சங்கத்தைச் சார்ந்த மடத்துக்குளம் மா.சிவக்குமார் அவர்கள் நன்றி கூறினார்.
- தொகுப்பு: ச.மணிகண்டன்
Read more: http://viduthalai.in/page-4/73658.html#ixzz2qc36z4cY
இந்த மண்ணின் அடிப்படைக் கொள்கைகளைக் காத்திடக் கூடிய இயக்கம் எது என்பதை, வாக்காளர்கள் மறந்து விடுவதால், ஏமாந்த நேரத்தில் ஏற்றம் கொண்டோர்; இப்படிப்பட்ட சமூக அநீதியை செய்திட துணிகிறார்கள்
ஆனால், பெரியாரின் சிந்தனைகளை அடிநாதமாக கொண்ட, அரசியல் இயக்கத்தினை வழி நடத்தி வரும் தலைவர் கலைஞர் அவர்கள்;தங்களைப் போன்ற கொள்கையாளர்கள் துணையுடன் இச்சதியினை முறியடிப்பார்
தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டும்?
தமிழ்நாடு அரசு தொடங்கவிருப்பதாக அறிவித்துள்ள பல் நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவத் துறைப் பேராசிரியர்கள் உட்பட 84 பதவிகளுக்காகச் செய்யப்பட்ட விளம்பரத்தில் இடஒதுக்கீடு அறவே கிடையாது என்று குறிப்பிடப் பட்டுள்ளதானது தமிழ்நாட்டில் கட்சி, ஜாதி, மதங்களுக்கு அப்பால் பெரும் கொதி நிலையை ஏற்படுத்தி விட்டது.
அரசு விளம்பரத்திற்கு ஏதோ விளக்கம் கொடுப்பதுபோல் நினைத்துக் கொண்டு, முதல் அமைச்சர் கொடுத்த விளக்கம் மேலும் அரசின் தரப்பைப் பலகீனப்படுத்தி விட்டது.
எய்ம்ஸ் மருத்துவமனைப் பேராசிரியர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் தொட்டுக் காட்டிய இந்திரா சஹானி வழக்கில் நீதிபதிகள் ஆலோசனையாகச் சொன்ன வரிகளைப் பிடித்துக் கொண்டு, அந்த அடிப்படையில்தான் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக் கான விளம்பரத்தில் இடஒதுக்கீடு தவிர்க்கப் பட்டுள்ளது என்ற முதல் அமைச்சரின் சமாதானம் வலிய திணிப்பதாகும்.
அந்தத் தீர்ப்புக்குப் பிறகு மத்திய சுகாதார அமைச்சகம் அதே எய்ம்ஸ் மருத்துவமனை பணி நியமனத்தில் இடஒதுக்கீடு செய்வது தொடரப்பட வேண்டும்; சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் அரசு விண்ணப்பிக்கும் என்று ஆணை பிறப்பித்து அதன் அடிப்படையில் டில்லி மற்றும் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவ மனைகளில் ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமனத்தில் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் தம் அறிக்கையில் எவருக்கும் எளிதாகப் புரியும் வகையில் தெளிவுபடுத்தி விட்டார்.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் நேற்று பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பில் கூட பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை பணி நியமனங்களில் இடஒதுக்கீட்டைப் பின்பற்றுவதா கூடாதா என்பதை மத்திய அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று தெளிவுபடுத்தியாகி விட்டது.
தமிழ்நாடு அரசுக்கு முன்னுள்ள ஒரே செயல் சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் தொடங்கப்பட உள்ள பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கான பணி நியமனம் குறித்து ஏற்கெனவே வெளியிட்ட அறிக்கையைப் பின்வாங்கி 69 சதவீத அடிப்படையில் இடஒதுக்கீடு என்பதைத் தெளிவுபடுத்தி புதிய விளம்பரத்தை வெளியிடுவது என்பதேயாகும்.
நீதிமன்றத்தில் கூறப்பட்ட ஆலோசனை வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு, தான் எடுத்த நடவடிக்கையை நியாயப்படுத்த அதிமுக அரசு முயற்சி செய்யக் கூடாது.
சமூக நீதியில் அக்கறை இருக்கும் பட்சத்தில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வாய்ப்பு சிறிது கிடைத்தாலும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் எண்ணமும் செயலும்தான் முன்னால் வந்து நிற்கும்.
இடஒதுக்கீடு பிரச்சினை என்று வருகிறபோது தமிழ்நாட்டில் அசைக்கவே முடியாத 69 சதவீதத்தை உறுதிப்படுத்தும் சட்டம் இருக்கிறது. கண்களை மூடிக் கொண்டு அதன் அடிப்படையில் செயல்பட்டால் நீதிமன்றமும் குறுக்கிடாது; மக்கள் மன்றமோ இரு கரம் இணைத்து கரஒலி எழுப்பி மாலை சூட்டி வரவேற்கும்.
முதல் அமைச்சர் என்ன செய்யப் போகிறார் என்பதை வெகு மக்கள் வெகுவாகவே எதிர்ப்பார்க்கிறார்கள்.
Read more: http://viduthalai.in/page-2/73675.html#ixzz2qhqh4bOS
பகுத்தறிவு
பகுத்தறிவில்லாத எந்தச் சீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துவதில்லை, தன் இனத்தின் உழைப்பாலேயே வாழ்வதில்லை. தன் இனத்தின்மீது சவாரி செய்வதில்லை.
- (குடிஅரசு, 26.5.1935)
Read more: http://viduthalai.in/page-2/73674.html#ixzz2qhr3ZRcS
இடஒதுக்கீடுபற்றி முடிவு மத்திய, மாநில அரசுகள்தான் எடுக்க வேண்டும்
சிறப்புத் தகுதியுள்ள மருத்துவத்துறை போன்ற நியமனங்களுக்கு இடஒதுக்கீடுபற்றி முடிவு மத்திய, மாநில அரசுகள்தான் எடுக்க வேண்டும்
பந்து அவர்களது கோர்ட்டில்தான் உள்ளது
டில்லி எய்ம்ஸ் மருத்துவப் பேராசிரியர்கள் வழக்கின் மறுசீராய்வு மனுவின்மீது 5 நீதிபதிகள் அமர்வு அறிவிப்பு
புதுடில்லி, ஜன.17-சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவக் கல் லூரி பதவி நியமனங்க ளுக்கு இடஒதுக்கீடு வழங் குவது குறித்து மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. டில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் உள் ளிட்ட சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத் துவமனைகளில் (எய்ம்ஸ்) உள்ள பதவி நியமனங்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்று, உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்தஜூலை மாதம் தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும்படி கோரி, மத்திய அரசு சார்பில் தாக்கல் செய் யப்பட்டு இருந்த மனு, எச்.எல்.தத்து தலைமை யிலான 5 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் எல்.நாகேஸ்வரராவ் தனது வாதத்தை தொடங்க முயன்றார்.
உடனே குறுக்கிட்ட நீதிபதிகள், கடந்த 1992ஆம் ஆண்டின் மண்டல் வழக்கு என்று அழைக்கப்படும் இந் திரா சஹானி வழக்கில் தீர்ப்பு வழங்கிய 9 நீதிபதிகளைக்கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, உயர் சிறப்பு நிலை பதவிகளுக்கு இட ஒதுக்கீடு பொருந்தாது. இதில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று தீர்ப்பு கூறி இருந்தது. எனவே இந்த தீர்ப்புக்கு எதிரான நிலை எதையும் மேற் கொள்ள முடியாது என்று சுட்டிக் காட்டி னார்கள். நீதிபதிகள் மேலும் தொடர்ந்து கூறும்போது, இதைத் தான் எங்களால் சொல்ல முடியும். அதே நேரத் தில், இதுபோன்ற உயர் சிறப்பு நிலைகளில் இட ஒதுக்கீடு வழங்குவதா, வேண்டாமா என்பது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், அவர்கள் விளக்கம் அளித்தனர். நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான இந்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் எஸ்.எஸ். நிஜ்ஜார், ரஞ்சன் கோகாய், எம்.ஒய்.இக் பால், விக்ரம்ஜித்சென் ஆகியோரும் இடம் பெற்று இருந்தனர். அப்படி மத்திய அரசு விரும்பினால், அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்து இந்த பதவி களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம். அதன்பின் இந்த விவகாரம் நீதிமன் றத்திற்கு வந்தால் அப் போது பார்த்துக் கொள் ளலாம் என்றும், நீதிபதி கள் அப்போது கருத்துத் தெரிவித்தனர்.
(13.1.2014 சமூகநீதிப் பொதுக் கூட்டத்திலும் 16.1.2014 தமிழர் தலைவர் அறிக்கையிலும் சுட்டிக் காட்டியபடி, மாநில, மத்திய அரசுகள் முடிவு செய்யலாம் என்று குறிப்பிட்டதை நேற்று உச்சநீதிமன்ற நீதிபதி களும் கூறியிருக்கின்றனர்).
Read more: http://viduthalai.in/e-paper/73672.html#ixzz2qhrQUTNa
மதம் மாற்றம் செய்யும் ஒரு கடவுள்!
மதம் மாற்றம் செய்யும் ஒரு கடவுள்!
இந்து மதம், சைவ சமயம் தவிர்த்த பிற மதங்களில் மத மாற்றம் என்பது அந்தந்த மதத்தைச் சேர்ந்த பக்தர்களால், தொண் டர்களால் நிகழ்த்தப் பெறுகிறது. அவர்கள் தங்கள் மத நன்மைகளையும், சீர்களையும், சிறப்புகளையும் எடுத்துச் சொல்லி, அறி வுரைகள் வழங்கி, அதன் அடிப்படையில் மத மாற்றம் செய்ய முனைகிறார்கள்.
மேலும் சிறப்பாகவும், குறிப்பாகவும், கிறித்துவ மதத்தினர் மக்களுக்குக் கல்வி தந்து - மருத்துவ வசதிகள் செய்து, பால் மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கி, அதன் அடிப்படையில் மக்களை நேசித்துக் கவர்ந்து தங்கள் மதத்திற்கு ஈர்க்கிறார்கள். இதுதான் உலக நடைமுறையாக இருந்து வருகிறது. ஆனால், எந்த மதத்திலும், அந்த மதக் கடவுளே முன்னின்று மத மாற்றத் திற்குக் காரணமாக இருந்ததாக வரலாறு இல்லை. இந்நிலையில், சைவ சமயத்தில் தான், சைவ சமயக் கடவுளான பரமேஸ் வரன் என்னும் சாட்சாத் சிவபெருமானே முன்னின்று மதமாற்றம் நடைபெற காரணமாக இருந்துள்ளார் என்பது தெரிய வருகிறது.
அதாவது அறிவுரை வழங்கியோ, நன்மைகளை எடுத்துரைத்தோ, மத மாற்றம் செய்ததாக தெரியவில்லை. மாறாக அடித்தும், மிரட்டியும், உதைத்தும், பயப்படுத்தியும் வழிப்பறி கொள்ளை நடைபெறுவது போல, பிற மதத்தைச் சேர்ந்தோருக்கு நோயைக் கொடுத்து மிரட்டி, அச்சப்படுத்தி தன் சமயத்திற்கு ஈர்த்ததாக வரலாறு அமைகிறது.
சைவ பக்த அடியார்கள் மிகப் பெருமை யாகக் கீழ்க்கண்டவாறு கூறுவதை நாம் அடிக்கடி கேட்கலாம். எங்கள் சிவபெரு மான் பாலைக் கொடுத்து ஞான சம்பந்த ரையும், ஓலை கொடுத்து சுந்தரமூர்த்தி யாரையும், நூலைக் கொடுத்து மாணிக்க வாசகரையும் தடுத்தாட்கொண்டு மீட்டது போல, - சூலைக் (சூலை என்று சொல்லக் கூடிய கடுமையான வெப்ப வயிற்று வலியை) கொடுத்து திருநாவுக்கரசரை ஆட் கொண்டார் அதாவது சமண சமயத்தி லிருந்து சைவ சமயத்திற்கு மாற்றினார்.
இதற்கு, மத மாற்றம் தவறு; கூடாது என்று கூச்சல் போட்டு குழப்பமும், குதர்க்கமும் செய்யும் இந்து முன்னணித் தலைவர் ஆரியப் பார்ப்பன இராம. கோபால அய்யர்வாள்தான் விடை யிறுக்க வேண் டும்; பதில் சொல்ல வேண்டும்!
இதோ ஆதாரம்: சமண மதம் புகுந்து, பின் சிவபெருமான் தந்த சூலை நோயால் மீண்டும் சைவ சமயம் சேர்ந்தார் திருநாவுக்கரசர்.
(மறைமலை அடிகள் எழுதிய சாதி வேற்றுமையும் போலிச் சைவமும் எனும் நூலில் பக்கம் 75, தகவல்: குடந்தை கும்பலிங்கன்) அரசர்களும் - புரோகிதர்களும்
தலைமைப் பதவியிலும், பிறருடைய உழைப்பைச் சுரண்டு வதிலும், கொள்வினை கொடுப்பினையிலும் பிறப்பினாலுங்கூட அரசர்களும், புரோகிதர்களும் ஒரே இனத்தவர்கள்தாம். ஆயினும் அவர்கள் சத்திரியர்கள், பிராமணர்கள் என்று தனித்தனியே அழைக்கப் படுகிறார்கள்.
- ராகுல சாங்கிருத்தியாயன்
Read more: http://viduthalai.in/page-7/73686.html#ixzz2qhsueob2
பாசிச மனப்போக்கு
இராமாயணக் கதையில், சீதாப்பிராட்டியைத் தேடி வந்த ராமதூதன் அனுமான் இலங்கையை எரித்தது பயங்கரவாதச் செயலா அல்லது வெறும் தற்காப்புச் செயலா என்ற கேள்வியை டில்லியைச் சேர்ந்த ஹன்ஸ் என்ற இந்தி பத்திரிகை தனது தலையங்கத்தில் எழுப்பியிருக்கிறது. இலங்கையை எரித்த அனுமானை ஒரு பயங்கரவாதியாகத்தான் கருத வேண்டும் என்று அந்தப் பத்திரிகை முடிவு கட்டுகிறது.
புராண, இதிகாசங்களை விஞ்ஞான முறையில் அணுகினால், இந்த முடிவு சரிதான் என்று அந்தப்பத்திரிகையின் ஆசிரியர் ராஜேந்திர யாதவ் எழுதியிருப்பது, இந்து தெய்வங்களைத் தாழ்த்துவதாக விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள் ஆகியவைகளிடமிருந்து கடும் எரிச்சல் மிகுந்த கண்டனத்தைக் கிளப்பியுள்ளது. பிரபல இந்தி எழுத்தாளர் பிரேம் சந்த் அவர்களால் 1930இல் துவங்கப்பட்ட இந்த ஹன்ஸ் பத்திரிகை முற்போக்கு இந்தி எழுத்தாளர்களின் இலக்கிய படைப்புகளுக்கும், பகுத்தறிவு ஆராய்ச்சிகளுக்கும் புகலிடம் தருகிறது.
எழுந்துள்ள கூக்குரலுக்குப் பதில் சொல்லும் வகையில், மதத் தலைவர்களின் முதன்மையை எதிர்த்து ஏதாவது சொன்னால், அதையே ஒரு வன்முறை என்று கூறி அடக்க வந்து விடுகிறார்கள் என்று ஆசிரியர் யாதவ் சொல்கிறார்
(டில்லி இந்தியன் எக்ஸ்பிரஸ் 17.1.2002)
Read more: http://viduthalai.in/page-7/73686.html#ixzz2qht2sJCv
17 ஆம் தேதி பிறந்த பெரியாருக்கு, 17 பவுன் நிதி வழங்குவேன்! பொறியாளர் நெடுமாறன் பெருமிதம்!
சென்னை, ஜன.17- பெரியார் பெருந்தொண்டர் வந்தவாசி வேல்.சோமசுந்தரம் அவர்களின் மகன் பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன் அவர்கள், பொங்கல் விழாவிற்கு தமிழர் தலை வரை தனது இல்லத்திற்கு வருகை தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டதற் கிணங்க, 15.1.2014 அன்று மாலை அவருடைய இல்லத்திற்கு தமிழர் தலைவர் அவர்கள் சென்றார். அவர் இல்ல நுழைவு வாயிலில் தந்தை பெரியாரின் 135 அடி உயர சிலையின் தோற்றம் பிளக்ஸ் பேனரில் வைக்கப்பட்டி ருந்தது. தமிழர் தலைவர் அவர்கள் அதனைப் பார்த்து மகிழ்ந்து, வெகுவாகப் பாராட்டினார். இல்லத்திற்குச் சென்ற தமிழர் தலைவர் அவர்களை வேல்.சோ.நெடுமாறனின் இணையர் டாக்டர் விஜயலட்சுமி, மகன் டாக்டர் பரத்குரு, மருமகள் டாக்டர் பாரதி மற்றும் உற்றார், உறவினர்கள் அகமகிழ்வோடு வரவேற்றனர்.
அங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன் அவர்கள் மிகுந்த உணர்வுவயப்பட்டு கூறியதாவது:
தந்தை பெரியாருக்கு 135 அடி சிலை அமைப் பதற்குத் தமிழர் தலைவர் அவர்கள் அறிவித்தவுடன், இந்தத் திட்டத் திற்கு நான் அதிக மாக நிதி வழங்க வேண்டும் என எண்ணிக்கொண்டே இருந்தேன். சுமார் 40 கோடி செலவில் உருவாகும் இத்திட் டம் மிகுந்த சிறப்பான ஒன்றாகும்.
இத்திட்டத்திற்கு முதற்கட்டமாக கழகத் தோழர்கள் இரண்டரை கோடி ரூபாயினை திரட்டித் தந்திருக்கிறார்கள். அந்த வகையில், எனது நண்பர்கள் இந்தத் திட்டத்திற்கு ஒத்து ழைக்கவேண்டும் என நினைத்து, இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்தேன்.
நான் எவ்வளவு நிதி கொடுக்கலாம் என யோசித்துப் பார்த்து, 135 கிராம் கொடுக்கலாம் என முடிவெடுத்து, ஒரு கிராம் சேர்த்து, 136 கிராம் கொடுத்தால், 17 பவுன் ஆகும்.
17 ஆம் தேதி பிறந்த தந்தை பெரியாருக்கு, 17 பவுன் (136 கிராம்) வழங்குவதாக நினைத்து, யாரும் வழங்காத அளவிற்குப் பெரிய அளவில் நான் வழங்கவேண்டும் என நினைத்தேன். அதன் முயற்சியாக, முதல் தவணையாக 5 பவுனுக்கான தொகை ரூ.1,25,000-த்தினை வழங்குகிறேன்.
தந்தை பெரியார் சிலை மூன்று ஆண்டு களுக்குள் அமைந்துவிடும் என தமிழர் தலைவர் கூறியதால், மூன்று மாதத்திற்கு ஒருமுறை ரூ.25 ஆயிரம் என வழங்கி, மூன்று ஆண்டுகளுக்குள் நான் 17 பவுனுக்கான தொகையை வழங்கி விடுவேன் என தெரிவித்தார்.
இதனை செவிமடுத்த தமிழர் தலைவர் அவர்கள், பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன் அவர்களின் தொண்டுள்ளத்தைப் பாராட்டியும், கடந்த காலங்களில் வேல்.சோமசுந்தரம் அவர் களின் இல்லத்தில் சென்று தங்கி கழகப் பிரச் சாரத்தில் ஈடுபட்ட பழைய நினைவுகளை எடுத்துக் கூறி, இது எனது குடும்பம் என உரிமையோடும், மகிழ்வோடும் உரையாற்றினார்.
Read more: http://viduthalai.in/page-8/73705.html#ixzz2qhu6RaIP
அடுத்து துருக்கியில் உள்ள நிலையைப் பார்ப்போம். அய்ரோப்பிய யூனியனில் உறுப்பினர் தகுதியைப் பெற துருக்கி மக்களுக்கு அதிகமான சுதந்திரத்தை வழங்கியது. மதமும் அரசியலும் தனித்தனியாக இயங்கின. துருக்கி அரசியலமைப்பு மதச்சார்பின்மை தத்துவத்தில் சட்டமுறை செயல்படும் வகையில் அமைந்துள்ளது. 99% முஸ்லீம் மக்கள் இருப்பினும், பல்கலைக்கழகங் களில், பொது இடங்களில், அரசு கட்டடங்களில் ஹிஜாப் அணிவது தடை செய்யப்பட்டுள்ளது பெரிய வியப்பை அளிப்பதாக உள்ளது. (தற்போது சிறிது தளர்த்தப்பட்டுள்ள தாகக் கூறப்படுகிறது) ஹிஜாப் மத அடையாளமாகக் கருதப்படுவதால் அரசு நிர்வாகத்தில் அதன் தொடர்பு இருப்பது கூடாது.
பெரும்பான்மை முஸ்லீம்கள் வாழும் நாடுகள் நடுப்பாதை நிலை யில் செயல்படுகின்றன. மலேசியா பரந்த நோக்குடன் உள்ளது. ஈரான் அப்படி இல்லை. பாகிஸ்தான் நடுப் பாதை கொள்கையை கடைப் பிடிக்கிறது. நம்மை மீண்டும் அதே கேள்விக்கு அழைத்துச் செல்கிறது. மேலே சுட்டிய எடுத்துக்காட்டுகளுள் எவர் முஸ்லீம் என்று கூறத்தக்கவர்? சரியான ஒரு விடை இல்லை என்பதுதானே உண்மை. ஒரு துருக்கி முஸ்லீம், சவுதி முஸ்லீம் நடத்தையிலிருந்து மாறுபட்டுள்ளார் என்பதைத் தானே அறிய முடிகிறது.
எனவே, இந்த ஒரு கேள்வியைக் கேட்போம். இந்திய முஸ்லீம் எந்த முஸ்லீம் முறையை பின்பற்ற விழைகிறார்? துருக்கி முஸ்லீமையா? சவுதி முஸ்லீமையா? அல்லது காணும் முயற்சியில் ஈடுபடமாட்டேன். இது என்னுடைய வேலை இல்லை. முஸ்லிம் சமூகத்திலிருந்து விடை வரவேண்டும்.
இனி எழக்கூடிய கேள்விகளாவன: இந்திய சமூகம் எந்த திக்கில் செல்ல விரும்புகிறது? நாம் முன்னேற்றம் அடைய விரும்புகிறோமா? நம் முடைய இளைஞர்களின் எதிர் பார்ப்புகளை எட்டும் வகையில் நாட்டை உருவாக்க விரும்புகிறோமா? நம்முடைய சமய நூல்களில் உள்ள பழமையான, கொடுமையான விதி முறைகளை நமக்கு வசதியானவை என்று ஏற்றுக்கொள்ள போகி றோமா? அல்லது நமக்கு ஏற்றதான ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்வது சரியான ஒன்றா?
இந்த வகையில் ஒரு விவாதம் தேவைப்படுகிறது. ஆனால் இது நடை பெறுவதில்லை. பிளவுபட்டு உள்ள நம் அரசியல்வாதிகள் இதை ஊக்குவிப்பதில்லை. இந்தியாவின் நலம் விரும்பிகள், அறிவு ஜீவிகள், நம் சமூக நலனில் மதம் கடந்த அக்கறை உள்ளவர்கள் கலந்து பேச வேண்டும். இந்த பிரச்சினையில் ஆர்வம் காட்டவேண்டும். இது நடைபெறவில்லையென்றால், தீவிரவாதிகள், மத விவாதத்தைக் கடத்திச் செல்லும் செயல் தொடரும். பிளவுபட்ட அரசியல்வாதிகள், குழப்ப நிலையைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வர். இது நாட்டிற்கு அழிவைத் தேடித்தரும்.
(நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா (2.11.2013) புதினம் ஆசிரியர் செட்டன் பகத் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)
கட்டுரைத் தொடர்பான கருத்து
கட்டுரையாளர், இந்து மதத்திலும், இஸ்லாம் மதத்திலும் காணப்படும் பிரிவுகளையும், தனித்தனி அணுகு முறைகளையும் எடுத்துக்கூறி, இதனால் இந்திய சமூகம், சரியான பாதையில் இயங்காமல், தடம் பெயர்ந்த நிலையில் உள்ளதை விளக்கி, இந்த அவல நிலை நீங்க பல கோணங்களில் விவாதம் தேவை என்று கூறுகிறார். இவர் வைக்கும் கோரிக்கையை நிறைவு செய்யும் வகையில், கை கண்ட மருந்தாக அமைந்துள்ளது. தந்தை பெரியாரின் பார்வையும், பரிகாரமும் ஆகும், தந்தை பெரியார் கண்ட தீர்வு:
பகுத்தறிவைப் பெரிதாகப் போற்றாத, மதத்தை கண்மூடி நம்பாமல் இயற்கையோடு ஒன்றிய உள்ளத்தின் இயல்பான உணர்வு காட்டும் வழியில் செல்ல வேண்டும்.
ஒவ்வொரு வகுப்பும் முன்னேற வேண்டும். இதை அறவே விடுத்து வெறும், தேசம் தேசம் என்று கூக்குர லிடுவது எமது பத்திரிகையின் நோக்கம் அன்று, மக்களுக்குள் சுயமரியாதையும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளர வேண்டும், உயர்வு தாழ்வு என்னும் உணர்ச்சியே நம் நாட்டில் வளர்ந்து வரும் சாதிச்சண்டை என்னும் ருப்புக்கு நெய் (மே மாதம் 1925 குடியரசு).
அங்கும் இங்கும்
மனிதாபிமானம்: மகன் பிறந்த நாளில் பயணிகளுக்கு காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை இலவசமாக ஆட்டோ இயக்கினார், தச்ச நல்லூர் சீனய்யா தெருவைச் சார்ந்த என். பாலசுப்பிரமணியன் (40).
வீண் செலவு: ஜனவரி 1ஆம் தேதி ஆஞ்சநேயர் பிறந்த நாளை முன்னிட்டு ஆஞ்ச நேயருக்கு அபிசேகம் -சந்தனம், பன்னீர், தயிர், பால் மட்டும் 15,000 லிட்டர். நடந்தது குமரி மாவட்டம் சுசீந்திரத்தில்.
- எஸ். நல்லபெருமாள், வடசேரி
Read more: http://viduthalai.in/page5/73734.html#ixzz2qtcpTVLZ
மன்னர் காலத்தில் பயன்படுத்திய சுவர் விளக்கு
புதுக்கடை அருகே ஆர்.சி.தெருவை சேர்ந்தவர் சூசைபாக்கியம் (வயது 65). இவரது உறவினர் ஒருவர் புதிதாக வீடு கட்ட நிலத்தில் இருந்து மண் தோண்டப்பட்டது. அப்போது, கல்லினால் செய்யப்பட்ட சுவர் விளக்கு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தியதாக தெரிகிறது.
இந்த விளக்கு சிற்பியின் கைவண்ணத்தில், கருங்கல்லில் குடைந்து எடுக்கப்பட்டு இருந்தது. மின்சார விளக்குகள் இல்லாத காலக்கட்டத்தில் வசதியானவர்கள் வீடுகளிலும், கோயில்களிலும் இந்த விளக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த விளக்கில் எண்ணெய் ஊற்றி, துணியை திரியாக பயன்படுத்தி பழைமை வாய்ந்ததாக இருக்கலாம் எனத் தெரிகிறது. - தினத்தந்தி (21-10-2013)
Read more: http://viduthalai.in/page8/73738.html#ixzz2qtdtwxoS
சாத்தாணியின் புரோகிதம்
நாயக்கர் ஜாதியிலேயெல்லாம் சாத்தாணியைத்தான் புரோகிதம் செய்ய அழைப்பார்கள். சாத்தாணி என்றால் பூணூல் சாத்தாதவன் என்று அர்த்தம். பின்னர்தான் அதுவும் எங்களூரில் எங்கள் வீட்டிலேதான் அதுவும் நாங்கள் சிறிது பணக்காரர் ஆனபின் முதன்முதலாக சாத்தாணி யையும், பார்ப்பானையும் சேர்த்து அழைக்க ஆரம்பித்தோம்.
அது எப்படியோ நாளடைவில் பார்ப்பானே நிரந்தரமாகப் புரோகிதம் செய்யும்படியான நிலையில் வந்து விட்டது. சாத்தாணி தட்சணை வாங்குபவனாகி விட்டான். அப்படிப் பார்ப்பானை அழைப்பதால் என்ன விளைவு ஏற்படுகிறது? சுற்றி வளைத்துப் பார்த்தால் மிஞ்சுவது நாம் கீழ் ஜாதி என்பதுதான்
- ஈ.வெ.ரா.
(ஆதாரம்: வாழ்க்கைத் துணை நலம் என்னும் புத்தகத்திலிருந்து - 1958ஆம் ஆண்டு பதிப்பு)
Read more: http://viduthalai.in/page8/73737.html#ixzz2qte6Dadq
காலாவதியான மருந்தைப் பயன்படுத்த மறுப்பதுபோல காலாவதியான கருத்துக்களையும் வெறுத்து ஒதுக்குங்கள்!
பெரியாரின் தத்துவம் மனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்டது
படியுங்கள் - படியுங்கள் - பகுத்தறிவை வளருங்கள்! வளருங்கள்!!
புத்தகச் சந்தை நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவரின் கருத்தாழமிக்க உரை
சென்னை, சன. 19- காலாவதியான மருந்தை ஒதுக்குவது போல காலாவதியான கருத்துக்களையும் ஒதுக்கித் தள்ளுங்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
15.1.2014 அன்று சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் அவர்கள் நிறை வுரையாற்றினார். அவரது உரை வருமாறு:
மிகுந்த எழுச்சியோடு நடைபெறக்கூடிய அறி வாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களால் உரு வாக்கப்பட்ட பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறு வனத்தின் சார்பாக வெளியிடப்பட்டிருக்கக்கூடிய சிறந்த அறிவு நூல்கள், பெரியார் களஞ்சியம்- பகுத்தறிவு என்ற தலைப்பில் வெளிவந்த மூன்று பகுதிகள், அதுபோலவே,
கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் எழுதிய ஒற்றைப் பத்தி, தந்தை பெரியார் அவர்களு டைய மொழியும், இலக்கியமும், பெரியாரியம் தொகுப் புகள், பெரியார் சிந்தனைத் திரட்டு, பெரியார் களஞ் சியம், அதேபோல, மனித உரிமைப் போரில் பெரியார் பேணிய அடையாளம் ஆகிய நூல்களை வெளியிட் டும், அந்த நூல்களையெல்லாம் மிகச் சிறப்பான வகையில், குறுகிய நேரத்தில், வானொலியில் உரை யாற்றுவதைப்போல,
தொலைக்காட்சியில், நேரத்தின் நெருக்கடியில் உரையாற்றுவதைப்போல, மிக ஆழ மான கருத்துகளை இன்றைய உலகிற்கு, இன்றைய தலைமுறைக்குத் தேவையான கருத்துகளை மிகச் சிறப்பாக எடுத்து வைத்து உரையாற்றி அமர்ந்துள்ள பகுத்தறிவு பேராசிரியர் பெரியார் பேருரையாளர் முனைவர் அய்யா மா.நன்னன் அவர்களே, அதேபோல, அன்பிற்குரிய முனைவர் அவ்வை நடராசன் அவர்களே,
அருமைச் சகோதரர் திராவிடர் இயக்கத் தமிழர் பேர வையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் மானமிகு சுப.வீரபாண்டியன் அவர்களே, திராவிடர் கழகத்தின் பிரச்சார செயலாளரும், சீரிய வழக்குரைஞருமான மானமிகு தோழியர் அருள்மொழி அவர்களே, இந்த நிகழ்ச்சியில் அனைவரையும் வரவேற்று உரையாற்றிய பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க. நடராசன் அவர்களே, தலைமையேற்று, நூலக வாசகர் வட் டத்தை நடத்திக் கொண்டிருக்கக்கூடிய மானமிகு மயிலை கிருட்டிணன் அவர்களே, சத்திய நாராயணன் அவர்களே,
சிறப்பாக நூலைப் பெற்றுக்கொண்ட சுய மரியாதைக் குடும்பத்தினுடைய மிகப்பெரிய பிரதி பலிப்பாக என்றைக்கும் திகழ்ந்துகொண்டிருக்கக் கூடிய சீரிய பகுத்தறிவாளர் அன்பிற்குரிய அய்யா எஸ்.பி.முத்துராமன் அவர்களே, பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன் அவர்களே, சிறப்பாக திரண்டிருக்கக்கூடிய அறிவார்ந்த அவையினராகிய சான்றோர் பெருமக்களே, நண்பர்களே, புத்தக நண்பர் களே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.
நேரத்தின் நெருக்கடி காரணமாக, குறிப்பிட்ட நேரத்தில் இந்தக் கூட்டம் முடிக்கப்படவேண்டும் என்கிற காரணத்தினால், ஒரு பத்து மணித்துளிகளை நான் எடுத்துக்கொண்டு என்னுடைய உரையை நிறைவு செய்ய இருக்கிறேன்.
பெரியார் மருந்து வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது
இங்கே உரையாற்றிய அறிஞர்களுக்கு முதற்கண் என்னுடைய மனமுவந்த நன்றியை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் என்கிற முறையிலும், வாழ்நாள் முழுவதும் பெரியா ரின் மாணவன் என்கிற அந்த அடிப்படையிலும், இவர்கள் எல்லோருக்கும் நன்றி சொல்கின்ற நேரத்தில், இந்த அரங்கம் நிரம்பக் கூடிய அளவிற்கு வந்திருக் கக்கூடிய நீங்கள், எளிதில் எங்களுடைய பொதுக் கூட்டத்திற்கு வராதவர்கள் பலர்.
அதுதான் இந்தக் கூட்டத்தினுடைய வெற்றியை நிர்ணயிக்கக் கூடியது. நீங்கள் புத்தகம் வாங்குகிறீர்களோ இல்லையோ, இந்தக் கருத்துகளை உள்வாங்கியிருக்கிறீர்கள். அய்யா அவர் கள், உங்களை வகுப்பறையில் உள்ள மாணவர்களைப் போல நடத்தியிருக்கிறார்கள். நீங்கள் சிந்திக்க ஆரம் பித்திருக்கிறீர்கள். பெரியார் மருந்து வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. உள்ளே புகுந்துவிட்டால் போதும்; எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.
தந்தை பெரியார் அவர்கள் தந்த மருந்து இருக்கிறதே, அது கசப்பான மருந்துதான்
ஏனென்றால், இந்தப் புத்தகக் கடை மற்றவைகளி லிருந்து மாறுபட்டது; இது ஒரு மருந்துக் கடை; அதுதான் மிக முக்கியமானது. மற்றவை எல்லாம் புத்தகக் கடை. அங்கே வியாபாரம் முக்கியம். ஆனால், எங்களுக்கு வியாபாரம் முக்கியமல்ல; சமுதாயம் முக் கியம்.
அதுதான் மிக முக்கியமானது. அந்த அடிப்படை யில், சமுதாயத்தில் இருக்கின்ற அறியாமை நோயைப் போக்குவதற்காக, இந்த மாமருந்து, தந்தை பெரியார் அவர்கள் தந்த மருந்து இருக்கிறதே, அது கசப்பான மருந்துதான். இனிப்பாக இருக்காது.
அதிகமான இனிப்பை சேர்ப்பதற்கும், தந்தை பெரியார் அவர்கள் அனுமதிப்பதில்லை. சில நண்பர்கள் கேட்பார்கள், இவ்வளவு கசப்பாக இருந்தால் எப்படி அவர்கள் முதலில் உண்பார்கள்? எனவே, கொஞ்சம் இனிப்பை சேர்த்துக் கொடுக்கவேண்டாமா? என்று.
ஆனால், தந்தை பெரியாரின் நேரடியான கருத் தாளராக இருக்கின்ற அய்யா நன்னன் அவர்களுடைய உரையைக் கேட்டீர்கள் அல்லவா? அவர் இனிப்பை ஒருபோதும் கலந்துகொடுக்கக் கூடாது என்பதில், பெரியாரைப்போலவே இருக்கக்கூடிய பெரியார் தொண்டர், பெரியார் கருத்தாளர். அதில் ஒன்றும் தவறில்லை.
சிலர் கேட்கலாம், இதில் இனிப்பைச் சேர்த்துக் கொடுத்தால் நல்லதுதானே என்று. இன்றைக்கு நாம் அதை அனுமதித்துவிட்டால், பெரியார் காலத்திலேயே, பெரியார் அனுமதித்துவிட்டால், பிறகு கடைசியாக மிஞ்சுவது இனிப்பாக மட்டுமே இருக்குமே தவிர, அந்த மருந்து இருக்காது.
அந்தளவிற்கு மற்றவர்கள் மருந் தாளுநராக இருந்து அப்படி ஆக்கிவிடுவார்கள் என்ப தற்காகத்தான் இவர்கள் தெளிவான கருத்துகளை, மிக ஆழமான கருத்துகள் இங்கே சொல்லப்பட்டிருக் கின்றன. இது வியாபாரத்திற்காக, வணிகத்திற்காக அல்ல, பிரச்சார நோக்கம்.
வணிக நோக்கமே கிடையாது!
நீங்கள், இங்கே வெளியிடப்பட்டிருக்கின்ற புத் தகத்தின் மதிப்பை போட்டுப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும். அதனுடைய விலை மிகக் குறைவாகத்தான் இருக்கும். மற்ற புத்தகங்களில் விலை கொஞ்சம் அதிக மாக இருக்கும். அது தவறு என்று சொல்லமாட்டோம்.
ஏனென்றால், இன்றைய பதிப்பக நிலைகள் அப்படி இருக்கின்றன. ஆனால், அவைகளை ஒப்பிட்டுப் பார்க் கும்பொழுது, இங்கே விலை குறைவாக இருப்பதற்கு என்ன காரணம் என்றால், அதற்கு இரண்டு காரணம்.
பிரச்சார நோக்கத்தில் செல்லவேண்டும் என்று அய்யா அவர்கள், காலணா, காலணாவாகச் சேர்த்த காசுகளையெல்லாம், இப்படி ஒரு அறக்கட்டளையாக ஆக்கி, நட்டம் வந்தாலும், அதனை நாம் தாங்கிக் கொண்டு மக்களுக்கு அடக்க விலைக்கும் குறைவாகக் கொடுக்கவேண்டும்; கருத்துப் போய் மக்களிடம் சேரவேண்டும். இதுதான் தந்தை பெரியார் அவர் களுக்கு இருக்கின்ற கருத்து. அதில் வணிக நோக்கமே கிடையாது.
அந்த அடிப்படையில் இந்தக் கருத்துகள் பரப்பப் படுகின்றன. நீங்கள் இந்த நூல்களை வாங்கவேண்டும்; படிக்கவேண்டும்; மற்றவர்களுக்கும் கொடுக்கவேண் டும். இது ஒரு அறியாமை நோயைப் போக்குவதற்காகும்.
காலாவதி தேதியைப் பார்க்கவேண்டும்
மருந்து வாங்கும்பொழுதுகூட, நாம் ஒரு பெரிய தவறுகளைச் செய்வோம், சில இடங்களில். அது என்ன வென்றால், டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்துதானா என்று பார்ப்போமே தவிர, அந்த மருந்து கடைகளில் இருந்து வாங்கிய பிறகு, அதில் மிக முக்கியமாக எல்லோரும் கவனிக்கவேண்டிய ஒரு பகுதி என்ன வென்றால், அந்த மருந்துக்குரிய காலாவதி தேதி யைப் பார்க்கவேண்டும்.
அந்த மருந்து எப்பொழுது தயாரிக்கப்பட்டது? அந்த மருந்தினை எந்தக் காலகட்டத்திற்குள் பயன் படுத்தவேண்டும்? காலாவதியாகிவிட்டால், அந்த மருந்துக்கு சக்தி கிடையாது.
ஆனால், தந்தை பெரியாரின் நேரடியான கருத் தாளராக இருக்கின்ற அய்யா நன்னன் அவர்களுடைய உரையைக் கேட்டீர்கள் அல்லவா? அவர் இனிப்பை ஒருபோதும் கலந்துகொடுக்கக் கூடாது என்பதில், பெரியாரைப்போலவே இருக்கக்கூடிய பெரியார் தொண்டர், பெரியார் கருத்தாளர். அதில் ஒன்றும் தவறில்லை.
சிலர் கேட்கலாம், இதில் இனிப்பைச் சேர்த்துக் கொடுத்தால் நல்லதுதானே என்று. இன்றைக்கு நாம் அதை அனுமதித்துவிட்டால், பெரியார் காலத்திலேயே, பெரியார் அனுமதித்துவிட்டால், பிறகு கடைசியாக மிஞ்சுவது இனிப்பாக மட்டுமே இருக்குமே தவிர, அந்த மருந்து இருக்காது.
அந்தளவிற்கு மற்றவர்கள் மருந் தாளுநராக இருந்து அப்படி ஆக்கிவிடுவார்கள் என்ப தற்காகத்தான் இவர்கள் தெளிவான கருத்துகளை, மிக ஆழமான கருத்துகள் இங்கே சொல்லப்பட்டிருக் கின்றன. இது வியாபாரத்திற்காக, வணிகத்திற்காக அல்ல, பிரச்சார நோக்கம்.
வணிக நோக்கமே கிடையாது!
நீங்கள், இங்கே வெளியிடப்பட்டிருக்கின்ற புத் தகத்தின் மதிப்பை போட்டுப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும். அதனுடைய விலை மிகக் குறைவாகத்தான் இருக்கும். மற்ற புத்தகங்களில் விலை கொஞ்சம் அதிக மாக இருக்கும். அது தவறு என்று சொல்லமாட்டோம்.
ஏனென்றால், இன்றைய பதிப்பக நிலைகள் அப்படி இருக்கின்றன. ஆனால், அவைகளை ஒப்பிட்டுப் பார்க் கும்பொழுது, இங்கே விலை குறைவாக இருப்பதற்கு என்ன காரணம் என்றால், அதற்கு இரண்டு காரணம்.
பிரச்சார நோக்கத்தில் செல்லவேண்டும் என்று அய்யா அவர்கள், காலணா, காலணாவாகச் சேர்த்த காசுகளையெல்லாம், இப்படி ஒரு அறக்கட்டளையாக ஆக்கி, நட்டம் வந்தாலும், அதனை நாம் தாங்கிக் கொண்டு மக்களுக்கு அடக்க விலைக்கும் குறைவாகக் கொடுக்கவேண்டும்; கருத்துப் போய் மக்களிடம் சேரவேண்டும். இதுதான் தந்தை பெரியார் அவர் களுக்கு இருக்கின்ற கருத்து. அதில் வணிக நோக்கமே கிடையாது.
அந்த அடிப்படையில் இந்தக் கருத்துகள் பரப்பப் படுகின்றன. நீங்கள் இந்த நூல்களை வாங்கவேண்டும்; படிக்கவேண்டும்; மற்றவர்களுக்கும் கொடுக்கவேண் டும். இது ஒரு அறியாமை நோயைப் போக்குவதற்காகும்.
காலாவதி தேதியைப் பார்க்கவேண்டும்
மருந்து வாங்கும்பொழுதுகூட, நாம் ஒரு பெரிய தவறுகளைச் செய்வோம், சில இடங்களில். அது என்ன வென்றால், டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்துதானா என்று பார்ப்போமே தவிர, அந்த மருந்து கடைகளில் இருந்து வாங்கிய பிறகு, அதில் மிக முக்கியமாக எல்லோரும் கவனிக்கவேண்டிய ஒரு பகுதி என்ன வென்றால், அந்த மருந்துக்குரிய காலாவதி தேதி யைப் பார்க்கவேண்டும்.
அந்த மருந்து எப்பொழுது தயாரிக்கப்பட்டது? அந்த மருந்தினை எந்தக் காலகட்டத்திற்குள் பயன் படுத்தவேண்டும்? காலாவதியாகிவிட்டால், அந்த மருந்துக்கு சக்தி கிடையாது.
நம்முடைய நாட்டில் இருக்கின்ற மிகப்பெரிய கோளாறு என்னவென்றால், ஏன் பெரியாருடைய மாமருந்து தேவை என்று சொன்னால், காலாவதியான மருந்துகளை எப்படி நாம் கண்டுபிடித்து அதனை ஒதுக்குகிறோமோ, அதுபோல, காலாவதியான கருத்துகளைக் கண்டுபிடித்து நாம் ஒதுக்குவது கிடையாது.
அதுதான் மிக முக்கியம். எவ்வளவுக்கெவ் வளவு அதிகம் காலாவதியாகிவிட்டதோ, அவ்வளவுக் கவ்வளவு மிகச் சிறப்பு என்று சொல்கிறான். இது போன்ற ஒரு விசித்திரமான கூட்டத்தை உலகத்தில் எங்கேயும் பார்த்ததே கிடையாது. ஆகவேதான், ரொம்ப காலாவதியானால் ரொம்ப நல்ல மருந்து என்று நினைத்தால், இதைவிட ஒரு தவறான வாதம் இருக்க முடியுமா என்று நீங்கள் எண்ணிப் பாருங்கள்.
அய்யா அவர்கள், பகுத்தறிவைப்பற்றி மிக அழ காகச் சொன்னார்கள். ஒவ்வொரு கருத்துகளையும் நேரமின்மை காரணத்தினால், மிகச் சுருக்கமாக சொன்னார். ஒவ்வொரு கேள்வியும், பெரியாருடைய கேள்வி இருக்கிறது பாருங்கள்; பெரியார் எல்லோ ருடைய கேள்விகளுக்கும் பதில் சொல்லியிருக்கிறார்.
ஆனால், பெரியார் அவர்கள் கேட்ட கேள்விக்கு இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை. அதுதான் மிக முக்கியமான, தனியான ஒரு சிறப்பாகும்.
அய்யா அவர்கள் கேட்டால், கழுதை இருக்கிறதே, 2000 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி உதைத்தது? பின்னங்கால்களால் உதைத்தது. இன்றைய கழுதை, அது பகுத்தறிவுவாதி வீட்டுக்கு முன்பு கட்டிப் போட்ட கழுதையாக இருந்தாலும் சரி, சங்கரமடம் முன்பாக கட்டிப் போட்ட கழுதையாக இருந்தாலும் சரி, ஒரே மாதிரிதான் உதைக்குமே தவிர, பின்னங் கால்களை மாற்றி, 21 நூற்றாண்டு, செல்போன் எல்லாம் வந்திருக்கிறது, அதனால் டெக்னிக்காக உதைக்கலாம் என்று எந்தக் கழுதைக்காவது தோன்றுமா? இல்லை!
ஆனால், குகையில் வாழ்ந்த மனிதன் இன்றைக்கு எப்படி எப்படியெல்லாம் வீடுகளைக் கட்டிக் கொண் டிருக்கிறான்? அதாவது, நாம் நம்மை சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும்; தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டுமே என்பதில்கூட, தண்ணீருக்குப் பஞ்சம் வந்துவிட்டது என்றவுடன், அந்தத் தண்ணீரையே பயன்படுத்தாத அளவிற்கு, ஜப்பானில் டாய்லெட்டுகள் வந்துவிட்டன. அது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது.
இதோ ஒலி பெருக்கி இருக்கிறதே; இதைப்பற்றி முப்பது முக்கோடி தேவர்களில் ஒருவருக்காவது தெரியுமா? மின்சார வெட்டு, நமக்கு மிகவும் பழகிப் போன ஒன்று. ஆனால், அந்த மின்சார வெட்டு, சர்வ சக்தி வாய்ந்த பகவானுக்கும் சேர்த்துத்தான்;
கோவிலில் மட்டும் மின்சார வெட்டு இல்லை என்றால், நம் முடைய சக்தி மிகக் குறைவு; பகவானுக்கு சக்தி அதிகம் என்று கருதலாம். ஆனால், பவர்கட் பகவானுக்கும் சேர்த்துத்தான். ஆகவே, எல்லாம் வல்லவன் என்று பகவானைச் சொல்ல முடியாது.
கோவிலுக்குப் போகின்ற பக்தர்களையெல்லாம் மெட்டல் டிடெக்டர் வைத்து சோதனை செய் கிறார்கள். பெரியார் கேட்டார், கடவுளை நாம் காப் பாற்றுகிறோமா, நம்மை கடவுள் காப்பாற்றுகிறானா? என்று. ஆகவே, தந்தை பெரியார் கேட்ட கேள்வி களுக்கு யாரும் பதில் சொல்ல முடியவில்லை.
யானைக்குக் கோவணம் கட்டிய மாதிரி
பெரியார் இன்னொரு கேள்வி கேட்டார், யானை எவ்வளவு பெரியது; சிங்கம் எவ்வளவு பெரியது; புலி எவ்வளவு பெரியது.
அய்யா பகுத்தறிவு அடிப்படை யில் கேட்கிறார், அதெல்லாம் எதாவது உடை உடுத்தி யிருக்கிறதா? திரைப்படங்கள் நன்றாக ஓடவேண்டும் என்பதற்காக முதலில் யானையைத்தான் காட்டு வார்கள்; யாராவது கமிட்டி போட்டு, இவ்வளவு பெரிய யானை நிர்வாணமாக வருகிறது; நம்ம காலத்தில் துணி இல்லாமல் இருந்திருக்கலாம், இப்பொழுது ஒரு பட்டுக் குஞ்சமாவது கட்டலாம் என்று யாராவது நினைப்பார்களா?
ஆனால், பழமொழி ஒன்று இருக்கிறது, யானைக்கு கோவணம் கட்டிய மாதிரி என்று. அதை யாரும் நிர்வாணம் என்று நினைப்பதில்லை. அந்த யானை நிர்வாணமாக வருகிறது என்பதற்காக யாராவது கூச்சப்படுகிறார்களா?
ஆனால், ஒரு மனிதனை அழைத்து, ஒரு பத்து ரூபாய் தருகிறேன், நிர்வாணமாக வா என்று சொன்னால், அவன் சும்மா இருப்பானா? ஓங்கி இரண்டு அறை அறைகிறான் பாருங்கள், அதற்குப் பெயர்தான் மானம் என்று சொல்வது. மானமும் அறிவும் மனிதருக்கு அழகு!
அன்றைக்குக் கூடு கட்டிய குருவி, அப்படியே கூடு கட்டுகிறது; உதைத்த கழுதை அப்படியே உதைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், குகையில் இருந்த மனிதன், இன்றைக்கு நகர்த்துகின்ற வீடுகளை செய்துவிட்டான்.
ஒரு காலத்தில், வீடு என்றால், அசையா சொத்துக் கள்; வழக்குரைஞர்களை கேட்டால், அதனை அசையா சொத்துகள் என்றுதான் சொல்வார்கள். இன்றைக்கு சோவியத் ரஷ்யாவில் ஆரம்பித்து, சீனாவிலிருந்து உலகம் முழுவதும் நகரும் வீடுகள். வீடுகள் இன்றைக்கு அசையா சொத்து அல்ல; அது அசையும் சொத்து. ஆகவே, அறிவு, அறிவு, அறிவு! அதுதான் மிக முக்கிய மானது.
எனவே, ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்பது இருக்கின்றதே, அதனுடைய விளைவுதான் இத்தனை யும், மிக முக்கியமாக. இன்றைக்கு நாம் இந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறோமே இதுதான் கேள்வியினுடைய பயனாகும். இங்கே அமர்ந்திருக்கக்கூடிய அனைவரும் கைத்தொலைபேசியை அணைத்து வைத்திருக்கிறீர்கள். அதனால்தான் கைத்தொலைபேசியின் சத்தம் கேட் காமல் இருக்கிறது.
இனிவரும் உலகம் எப்படி என்று அன்றைக்கே சொன்னார் பெரியார்
தந்தை பெரியார் அவர்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார், எதிர்காலத்தில் எல்லோரும் ஒருவருக் கொருவர் கையில் தொலைப்பேசி வைத்துக்கொண்டு பேசிக் கொண்டிருப்பார்கள்; இனிமேல் யாரும் சுலபமாக நடக்கமாட்டார்கள்; மேலே பறந்து கொண்டிருப்பார்கள். உணவுகூட பெரிய அளவிற்குத் தேவைப்படாது; மிகக் குறைவாகவே தேவைப்படும் என்று. யார் சொன்னது? கல்லூரிக்கே போகாத தந்தை பெரியார் அவர்கள். இனிவரும் உலகம் எப்படி என்று அன்றைக்கே சொன்னார்.
நாளாக, நாளாக செல்போன், இதில் எத்தனை வகைகள் வந்திருக்கிறது. கேமராமேன் எல்லாரையும் ஒழித்தாகிவிட்டது. அவர்கள் கடைகளை மூடி விட்டார்கள். இப்பொழுது செல்போனிலேயே படம் எடுத்துவிடுகிறார்கள். அதேபோல், டேப்ரிக்காடர்;
அய்பேட் என்று பல அறிவியல் சாதனங்கள் வந்துவிட்டன. நம்மாள் என்ன செய்கிறான், அதனை வாங்கி, ஆயுத பூஜை அன்று அதற்குப் பொட்டு வைத்து பூஜை செய்கிறான். அவன் கண்டுபிடித்தது அது; இவன் கண்டுபிடித்தது இது. பகுத்தறிவினுடைய சிந்தனை என்ன? அதைத்தான் தந்தை பெரியார் அவர்கள் கேட்டார். பெரியாருடைய சிந்தனை என்பது யாரை யும் புண்படுத்துவது அல்ல; மக்களைப் பண்படுத் துவது. அதைத்தான் நீங்கள் எல்லாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.
கடவுளை மற என்று சொன்ன பெரியார் அவர்கள், அதோடு முடிக்கவில்லை. மனிதனை நினை என்றார்.
அய்யோ, சாமி இல்லை என்பவர்கள் இவர்கள்; ஏதோ பெரிய சமூகக் குற்றம் செய்தவர்கள் மாதிரி சொல்லுவார்கள்.
ஒருத்தர்கூட கடவுள் நம்பிக்கை யாளர்கள் உண்மையாக கடவுளை நம்புபவர்கள் என்பவர்கள் நாட்டில் கிடையாது. அப்படி கடவுளை நம்பினால், வீட்டினை பூட்டு போட்டுவிட்டு வரக் கூடாது; பெட்டியெல்லாம் திறந்திருக்கவேண்டும்; கோவில்கள் எல்லாம் திறந்திருக்கவேண்டும். ஏனென்றால் சர்வசக்தி படைத்தவன் கடவுள்; அங்கிங்கெனா தபடி, தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் அல்லவா? அவன் பார்த்துக் கொள்ளமாட்டானா?
கடவுள் இல்லை என்று நான் ஒலிபெருக்கியில் சொன்னேன் என்றால், உங்களுக்கு அதுதானே காதில் விழுகிறது. ஒலிபெருக்கியில் கடவுள் இருப்பானா? இல்லையா? நீங்கள் நன்றாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தலைவர் வந்து ஒலிபெருக்கியில், வீரமணி இப்பொழுது இங்கே இல்லை; அவர் பேசமாட்டார்; வருவதாக இருந்தார் என்று சொன்னால்,
நான் இங்கே உட்கார்ந்து இருப்பவன் சும்மா இருப்பேனா? நான் இங்கே இருக்கிறேன், நீங்கள் எப்படி இல்லை என்று சொல்வீர்கள் என்று மறுத்து சொல்வேனா இல்லையா? அந்த அறிவு எனக்கு வருமா இல்லையா? அந்த முனைவு வருமா? இல்லையா?
எனவே, சாதாரண அறிவுள்ள எனக்கே அதை மறுக்கின்ற துணிச்சல் இருக்கின்றபொழுது, கடவுள் சர்வ சக்தி படைத்தவன் அல்லவா, கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்று நான் சொல்லும்பொழுது,
நான் இருக்கிறேன், நான் இருக்கிறேன் என்று என்னிடம் வந்து முட்டவேண்டாமா? இல்லையே!
இதனை எதற்காகச் சொல்கிறேன் என்றால் நண்பர்களே, அன்றைக்கு வெளிச்சத்தை பார்த்தான், காற்று வேகமாக அடித்தது, கன்னத்தில் கைகளைப் போட்டுக்கொண்டான்; வாயு பகவான் என்று சொல்லிவிட்டான். நெருப்பு எரிந்தது அதனை அக்னி பகவான் என்று சொல்லிவிட்டான்.
ஆனால், இன்றைக்கு அக்னி பகவான் ஒவ்வொரு டைய பைக்குள்ளும் இருக்கிறான்; தீப்பெட்டியில் இருக்கிறான். வா இந்தப் பக்கம் என்றால், உடனே வந்தாகவேண்டுமே அக்னி பகவான். மின்விசிறியை எவ்வளவு வேகமாகவும் சுழல வைக்கலாம்; மிகவும் மெதுவாகவும் சுழல வைக்கலாம்; வாயு பகவான் இப்பொழுது நம்முடைய கண்ட் ரோலில்தான் இருக்கிறான். பகவான் கண்ட்ரோலில் நாம் இல்லை.
எவ்வளவோ குழந்தைகள் பாலில்லாமல் பட்டினியாக இருக்கிறார்கள்
அதனால்தான் அய்யா சொன்னார், கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; யாரையும் திட்டுவதற்காக அல்ல. முட்டாள் தனத்திலே பிறந்து, அயோக்கியத் தனத்தால் பரப்பப்பட்டு, அது வசதியாக இருக்கிறது, அதனால் சம்பாதிக்கலாம் என்று. ஆயிரம் வடை வைத்து, ஆஞ்சநேயனுக்குப் படைக்கிறார்கள் என்றால், அந்த வடையை சாப்பிடுகிறவர் யார்? ஆஞ்சநேயர் சாப்பிட்டால் கொடுக்கலாம்;
அவனுடைய பெயரைச் சொல்லி வேறு ஒருவன் சாப்பிடுகிறானே? இன்றைக்கு 21 ஆம் நூற்றாண்டில், 10 ஆயிரம் லிட்டர் பாலைக் கொண்டு வந்து சிலைக்கு ஊற்றுகிறார்களே; எவ்வளவோ குழந்தைகள் பாலில்லாமல் பட்டினியாக இருக்கிறார்கள் தெரியுமா? எனவேதான், கடவுளை மற என்று சொன்ன தந்தை பெரியார், அதோடு நிறுத்தா மல், அடுத்தது மனிதனை நினை என்று சொன்னார்.
மக்கள் தொகையில் சரி பகுதி பெண்கள் இருக் கிறார்கள். அந்தப் பெண்களை சமமாக நடத்தவில் லையே! அந்தப் பெண்களை அடிமைகளாக நடத்து கிறீர்களே! பெண்களுக்குச் சொத்துரிமை இல்லை என்கிறீர்களே, அந்தப் பெண்களுக்குப் படிப்புரிமை இல்லை என்கிறீர்களே, இது மனிதாபிமானமா? என்று தந்தை பெரியார் அவர்கள் கேட்டார்.
மனிதநேயம், மனிதநேயம், மனிதநேயம்தான்!
ஆகவே, அய்யா அவர்கள் ஒரு மனிதநேயர். அவரு டைய ஜாதி மறுப்பு, கடவுள் மறுப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு வளர்ப்பு இவை அத்தனைக்கும் மூலாதாரம், அடிப்படை எது என்று சொன்னால், மனிதநேயம், மனிதநேயம், மனிதநேயம்தான்.
ஆகவே, தலைசிறந்த மனிதநேயர்களாக நீங்கள் ஆகவேண்டும்.
பெரியாருடைய தத்துவம் நாட்டில் எவரையும், அய்யா அவர்கள் சொன்னதைப்போல, துணைவேந்தர் அவர்கள் குறிப்பிட்டதைப்போல, அருள்மொழி அவர்கள் சுட்டிக்காட்டியதைப்போல, சுப.வீ. அவர்கள் சொன்னதைப்போல, முழுக்க முழுக்க பகுத்தறிவு கேள்விகள்.
பெரியார் அவர்கள் கேட்டார், ஆத்மா அழியாது; உடல் அழியுது; ஆத்மா வெளியே போய், இன்னொரு கூட்டுக்குள் நுழைந்து, அப்படியே அது திரும்பவும் வருகிறது என்றால், ஆரம்பத்தில் மக்கள் தொகை எவ்வளவு இருந்ததோ, அதே அளவுதானே மக்கள் தொகை இருக்கவேண்டும். இன்றைக்கு எப்படி மக்கள் தொகை அதிகமானது என்று கேள்வி கேட்டார்.
அர்ஜூனா நீ தாராளமாகக் கொலை செய்!
பகவான் கண்ணன் கீதையில் சொல்லியிருக்கிறான், ஆத்மா அழியாது; நீ சண்டை போடு; நீ யாரையாவது கொன்றால்கூட, அவன் மாயத் தோற்றம், கீழே விழுவான்; நீ கொலை செய்ததாக ஆகாது; ஆகவே, அர்ஜூனா நீ தாராளமாகக் கொலை செய் என்று கொலையை செய்யச் சொல்லி கிருஷ்ணபகவானே கீதையில் சொல்லியிருக்கிறார்.
இன்றைக்கு நீதிமன்றத்தில் நானோ, அருள் மொழியோ சென்று, கொலை வழக்கில் ஆஜராகி, பகவான் கண்ணன் சொல்லியிருக்கிறான்; யாரையும் யாரும் சாகடிக்க முடியாது; ஏனென்றால், புறத்தோற்ற மான உடல்தான் அழிகிறது;
ஆத்மாதான் உண்மை யானது. ஆகவே, என்னுடைய கட்சிக்காரர் கத்தியால் குத்தினார் என்பது உண்மை; அவர் கீழே விழுந்தார் என்பது உண்மை; அவர் செத்துப் போனார் என்று சொல்வது உண்மை; ஆனால், அவர் உயிரோடுதான் இருக்கிறார்;
காரணம், பகவான் கண்ணன் கீதையில் சொன்னபடி, ஆத்மா அழியாது; அது அப்படியே போயிருக்கும். ஆகவே, என்னுடைய கட்சிக்காரர் குற்றவாளியல்ல; அவரை விடுதலை செய்யவேண்டும் என்று நாங்கள் வாதாடினால்,
நீதிபதி என்ன சொல்வார், சபாஷ், இதுபோல் எந்த வழக்குரைஞரும் விளக்கம் சொல்லவில்லை. நானும் இந்திய அரசியல் சட்டத்தைப் படித்திருக்கிறேன். இதையெல்லாம் அதில் சொல்லவில்லை என்று; மூடநம்பிக்கைக்காரராக இருந்தால் வேறுவிதமாக இருப்பார். அவர் பகுத்தறிவுவாதியாக இருந்தால் தீர்ப்பில் என்ன சொல்வார்?
இந்த வழக்குரைஞர் சொன்ன வாதங்களை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்; ஆத்மா அழியாது; கொலை நடக்க வில்லை; ஆனால், செத்துப் போனார்; கீழே விழுந்தார். ஆகவே, இவருக்கும் தூக்குத் தண்டனை கொடுக் கிறேன். அவரும் மேலே போய் கயிற்றில் தொங்குவார்; சாகமாட்டார், அவருடைய ஆத்மாவும் அழியாது. அவர் நிரந்தரமாக இருப்பார், பகவான் கண்ணன் கீதையில் சொன்னபடி என்று சொன்னால் யாராவது ஒப்புக்கொள்வார்களா?
இந்தக் கேள்வியை தந்தை பெரியார் கேட்டார்.
எனவே, சிந்தனை என்பது இருக்கிறதே, அது வளர்ச்சியின் அடையாளம்; தேக்கம் என்பது இருக் கிறதே, அது மூடநம்பிக்கையினுடைய வெளிப்பாடு!
ஆகவே, சிந்தியுங்கள், சிறப்பாக - சிந்தனை, சிந்தனைக்காக அல்ல; செயலுக்காக. ஒரு நல்ல உலகத்தை உருவாக்குங்கள்; அன்போடு வாழுங்கள், வித்தியாசம் இல்லாமல் வாழுங்கள்; நட்புறவோடு வாழுங்கள்; மனிதர்களுக்குள்ளே பிரிந்து பிரிந்து வாழக்கூடிய நிலையில்லாமல், ஜாதியால், கட்சியால், மதத்தால், கடவுளால், பேதத்தால் வாழாமல், மனிதர் களாக வாழுவோம்! மனிதநேயம் தழைக்கட்டும்! சுயமரியாதை உலகு பிறக்கட்டும்! நன்றி, வணக்கம்!
அனைவரும் வாய்ப்பு இருக்கும் புத்தகங்களை வாங்குங்கள்; எளிய விலைக்குக்கூட இருக்கிறது; படியுங்கள், பிறருக்கும் கொடுங்கள்; சிந்தியுங்கள், சிந்தித்து உங்களுக்கு கருத்துகள் சரி என்று பட்டால், கடைசியில் ஆனால் போட்டுவிடாதீர்கள்; அது தான் மிக முக்கியம். துணிச்சலாக நீங்கள் நடைமுறைப் படுத்துங்கள் என்று கேட்டு, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி முடிக்கின்றேன்.
ஏற்பாடு செய்த தோழர்களுக்கும் நன்றி! புத்தகக் கண்காட்சியினர் இதற்கு அனுமதி தந்து, இந்த ஏற்பாட்டினை செய்வதற்கு வாய்ப்பளித்ததற்கும் நன்றி கூறி முடிக்கிறேன்.
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
Read more: http://viduthalai.in/page-4/73787.html#ixzz2qtfHp085
இதுதான் மதச் சார்பின்மையா? இந்துக் கடவுள் உருவம் பொறித்த புதிய நாணயங்களால் சர்ச்சை
புதுடில்லி, ஜன. 19- மாதா வைஷ் ணவ தேவி கோவில் வாரியத்தின் வெள்ளி விழாவைக் குறிக்கும் வகை யில் இந்திய ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ள புதிய 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்களில் வைஷ்ணவி தேவி உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இது தங்களது மத உணர்வை புண் படுத்துவதாகவும், மதச்சார்பின் மைக்கு இது எதிராக இருப்பதாகவும் முஸ்லிம் மத குருமார்கள் குறிப்பிட் டுள்ளனர்.
இந்திய நாணயத்தில் ஒரு இந்துமதக் கடவுளின் உருவம் வரும் போது தங்களின் பிறைச்சந்திரனும் நாணயங்களில் கொண்டுவரப்பட லாம் என்று இவர்கள் கூறுகின்றனர்.
நேற்று பழைய டில்லியில் உள்ள முஸ்லிம் வர்த்தகப் பகுதியில் உள்ள ஒரு கடைக்காரரான முகமது அப்சல்கான் 500 ரூபாய்க்கு 5 ரூபாய் நாணயங்களைப் பெற்றுள்ளார். அவற்றில் கடவுளின் உருவத்தைக் கண்டதும் முதலில் இவை போலி யானவை என்று நினைத்துள்ளார்.
அதன்பின்னரே அவருக்கு அரசு அச்சடித்துள்ள புதிய நாணயங்கள் இவை என்று தெரியவந்துள்ளது. தான் எந்த மதத்திற்கும் ஆதரவு அளிப்பவர் அல்ல என்றபோதிலும் இவ்வாறான நாணயங்களை அரசு வெளியிடுவது வித்தியாசத்தைத் தோற்றுவிக்கும் என்று கான் குறிப்பிட்டார்.
இத்தகைய நாணயங்கள் மனதைப் புண்படுத்துவதாக உள்ளதால் அவற் றைப் பயன்படுத்துவது தவிர்க்கப் படவேண்டும். இத்தகைய நாணயங் கள் பிரச்சினைகளைத் தூண்டும் விதத்தில் பயன்படுத்தப்பட முடியும். தேச நலனுக்காக அரசு இவற்றைத் திரும்பப் பெறவேண்டும் என்று பதேபூர் மசூதியின் இமாமான முப்டி முகமது முகரம் அகமது கூறியுள்ளார்.
இதுபோன்ற நினைவு நாணயங்கள் வெளியிடப்படுவது சாதாரண நடைமுறை என்று குறிப்பிட்ட ரிசர்வ் வங்கியின் தகவல் தொடர்பாளர் அல்பனா கிள்ளவலா, மத்திய அரசின் வெளியீட்டை தாங்கள் விநியோகம் மட்டுமே செய்வதாகக் குறிப்பிட்டார்.
ஹோமிபாபா, செயின்ட் அல் போன்சோ, கதர் கிராமத் தொழில், இந்தியன் ஸ்டேட் வங்கி, ஓஎன்ஜிசி, லால்பகதூர் சாஸ்திரி, தண்டி யாத் திரை, சுவாமி விவேகானந்தா, மோதி லால் நேரு, மதன் மோகன் மாளவியா, மத்திய தலைமை கணக்கு தணிக்கை மற்றும் கு.க இயக்கம் போன்ற நினைவு நாணயங்கள் இந்தியாவில் வெளி யிடப்பட்டுள்ளன.
ஆயினும், வைஷ் ணவி தேவியின் உருவம் இந்து மதத்தை மட்டுமே குறிப்பிடுவதால் அரசு இதுபோன்ற முடிவுகளில் கவன மாக இருக்க வேண்டும் என்று வர்த்த வணிகரான கான் குறிப்பிட்டார்.
Read more: http://viduthalai.in/page-2/73769.html#ixzz2qtgHFrIr
வரலாற்றின் பின் ஒரு தொடர் ஓட்டம்
- சமஸ்
ஒரு புத்தகம் எழுத எவ்வளவு காலம் மெனக்கெடலாம்? பழ. அதியமான் 15 ஆண்டுகள் மெனக்கெட்டிருக்கிறார்.
சேரன்மாதேவி குருகுலப் போராட்டப் பின்னணியைப் பற்றி ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தோடு 1998-இல் தன் பயணத்தைத் தொடங்கி அதியமான், அந்தப் போராட்டத்தைப் பற்றிய முதல் நூலாக பெரியாரின் நண்பர்; டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு புத்தகத்தை 2012-இல் கொண்டு வந்தார்.
இரண்டாவது நூல் சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும், திராவிட இயக்கத்தின் எழுச்சியும் கடந்த மாதம் வெளியாகியிருக்கிறது (காலச்சுவடு வெளியீடு). தமிழக அரசியல் போக்கையே புரட்டிப் போட்ட நிகழ்வு சேரன்மாதேவி குருகுலப் போராட்டம். காங்கிரஸிலிருந்து பெரியார் வெளியேற்றத்துக்கும் திராவிட இயக்கத்தின் பேரெழுச்சியின் தொடக் கத்துக்கும் அதுவே மையம்.
தமிழில் அந்த நிகழ்வைப்பற்றி விரிவான வரலாற்றுப் பதிவொன்று வர 88 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அதிய மானின் இந்த நூல்கள் மட்டும் அல்ல; முந்தைய நூல்களான திஜ.ர., அறியப்படாத ஆளுமை; ஜார்ஜ் ஜோசப் வ.ரா. சக்தி வை.கோவிந்தன் ஆகிய வையும் இப்படித்தான்; பெரும் உழைப்பைக் கோருபவை. அடுத்து வைக்கம் போராட் டத்தை நோக்கி நகர ஆரம்பித்திருக் கிறார் அதியமான்.
எங்க அம்மா பேர் சக்தி; அதாவது ஆற்றல். சித்தி பேர் ரஷ்யா. மாமா பேர் ஸ்டாலின். 1930-களில் வைக்கப் பட்ட பெயர்கள் இதெல்லாம் அப்படிப்பட்ட குடும்பத்துல பெண் எடுத்த எங்கப்பா, எங்களுக்கு எல்லாம் இளங்கோ, பூங்குழலி, மலையமான், அதியமான்னு பேர் வெச்சார். நான் வளர்ந்த குடும்பப் பின்னணியை இது உணர்த்தும்னு நெனைக்கிறேன்.
அப்பா நல்ல வாசகர். நல்ல புத்தகங்கள் வாங் குறதுக்குன்னே 150 கி.மீ. பயணம் செஞ்சு அடிக்கடி சென்னை வருவார். ரஷ்ய மொழிபெயர்ப்புப் புத்தகங்களை எல்லாம் அள்ளிக் கிட்டு வருவார். வாசிப்பு மேலான ஆர்வம் இப்படிக் கொஞ்சம் கொஞ்சமா வரலாற்று மேலான பேரார்வமா மாறியது. அதுதான் நாம வரலாற்றுல எவ்வளவு அசட்டையா இருக்கிறோம் கிறதையும் உணர்த்தியது.
சேரன்மாதேவி குரு குலப் போராட்டத்தையே எடுத்துக்குவோமே, தமிழ்நாட்டு அரசியலோட உள்கட்டுமானத்தையே குலைச்சுப் போட்ட போராட் டம் அது. ஆனா, அதுபத்திப் படிக்கணும்னு தேடினப்ப, ஒரு சின்ன புத்தகம்தான் எனக்குக் கிடைச்சிச்சு. எவ்வளவு பெரிய வரலாற்று நிகழ்வு அது? அது ஏற்படுத் தின மாற்றங்கள் எவ்வளவு? யோசிச்சுப்பாருங்கள்...
ஒரு மனுஷனுக்குப் பக்கத்துல சக மனுஷன் உட்கார்ந்து சாப்பிட எவ்வளவு நூற் றாண்டு ஆகியிருக்கு? நாயும் பன்றியும் உரிமையோட சுத்தித் திரியுற தெருக்கள்ல ஒர மனுஷன் கால் வெச்சு நடக்குறதுக்கு எத்தனை பேர் மலநாத்தத்துக்கு இடையில கொட் டடியில கிடக்க வேண்டியிருந்திருக்கு?
ஒரு போராட்டத்துக்குப் பின்னாடி எத்தனை பேர் வாங்கின அடி, உதை, வலி, வதை எல்லாம் உறைஞ்சுகிடக்கு? ஆனா, அப்படிப்பட்ட முக்கியமான போராட்டங்களுக்கான ஆவணப் பதிவே நம்மகிட்ட இல்லேன்னா வர்ற தலைமுறை எதைப் படிக்கும்? நமக்குச் செய்யப்பட்ட தியாகங்களை எப்படி உணரும்? அட, ஆளாளுக்கு வரலாற்றையே மாத்திடு வானே.
இந்த உணர்வுதான் நாம ஏதாவது செய்யணும்கிற எண்ணத்தை உருவாக் குச்சு. அதோட விளைவு தான் நான் எழுதிக்கிட்டும் தொகுத்துக்கிட்டும் இருக்குற நூல்கள். உண்மையில, இன்றைக்குத் திரும்பிப் பார்க்கும்போது 1980-கள்ல நான், சலபதி, இன்னும் சில நண்பர்கள் எல்லாம் பேசிக்கிட்டி ருந்ததை நெனைக்கிறேன். நாங்க செய்யணும்னு பேசிக்கிட்டிருந்ததுல, ரொம்ப கொஞ்சத்தைத்தான் இப்போ செஞ்சுருக்கோம்னு தோணுது. நெனைச் சதுக்கும், செஞ்சதுக்கும் இடையில ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி? நம்மோட சூழலைத்தான் சொல்லணும்.
இந்தச் சேரன்மாதேவி புத்தகத் தையே எடுத்துக்குவோமே, 15 வருஷம் அலைஞ்சு திரிஞ்சுருக்கேன். எப்பவுமே முதன்மை ஆதாரங் கள் அடிப்படையிலதான் எழுதணும்கிறது நான் கடைப் பிடிக்குற விதி. 1924-1925-இல் நடந்த போராட்டம் இது. அந்தக் காலத்துப் பத்திரிகை களைப் பார்க்கணும். எல்லாம் தமிழ்நாட்டுல வெளிவந்தது தான். ஆனா, இன்னைக்கு அதுல பெரும்பாலானவை இங்கே பார்க்கக் கிடைக்காது. தேட ஆரம்பிச்சா சேரன் மாதேவி, காரைக்குடி, டெல்லி, சிகாகோன்னு விரியுது இந்த இதழ்கள் இருக்குற இடம். பல்வேறு ஊர்கள், மனிதர்கள், அனுபவங்கள்.
ஒரு துறவிகிட்ட ஒரு ஆவணத்தைப் பார்க்கப் போயிருந்தேன். காந்தியை மகாத்மானு குறிப்பிட்டி ருக்குற பத்திரம் அது. 1930கள்ல அரசு ஆவணங் கள்ல அப்படிக் குறிப்பிட்டிருக்குறது அரிதான விஷயம். ஒரு ஜெராக்ஸ் எடுத்துக்கிட்டு தர்றேனு எவ்வளவோ மன்றாடிப் பார்த்தேன். ம்ஹும்... முடியலை. துறவியே இப்படி.
ஒரு வரலாற்று நூலில் சில வரிகள் எழுத இவ்வளவு உழைப்பு தேவைப்படுது. பணம் தேவைப்படுது. என் பிழைப்புக்கு ஆல் இந்தியா ரேடியோ வேலை இருக்கு. இந்த ஆய்வுச் செலவுகளுக்கு எங்கே போறது? குடும்பச் செலவுலதான் கை வைக்கிறேன். வீட்டுல எவ்வளவோ திட்டிப் பார்த்து மனைவி சலிச்சுப் போய்ட்டாங்க. ஒரு வேலைல இருக்குற என்னோட சக்திக்கே மீறின விஷயமா இருக்கு. எழுத்தையே நம்பி இருக்குற ஒரு எழுத்தாளருக்கு இது சாத் தியமா?
சரி, எல்லாத்துக்கும் அப்புறம் புத்தகம் வந்துச்சு. என்ன எதிர்பார்க் கிறோம்? வசையைத்தான் எதிர் பார்த்துக் காத்திருக்கோம். அப்படித் தான் இருக்கு நம்ம சமூகச் சூழல். ஆனா, அதுக்காக விட்டுவிட முடியுமா? இந்தச் சமூகத்துக்கு நாம ஒவ்வொருத் தரும் செலுத்த வேண்டிய நன்றிக் கடன் இருக்கு. நான் என்னோட புத்தகங்கள் மூலமா அதைச் செலுத்துகிறேன். அசலும் வட்டியுமா நெறைய சேர்ந்து கிடக்கு!
நன்றி: தி இந்து (தமிழ்) 19.1.2014 பக்கம் 9)
Read more: http://viduthalai.in/page-2/73772.html#ixzz2qtgQBuSN
கடவுள் நம்பிக்கை இன்னமும் தேவையா?
மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற சையதினா முகமது புர்ஹானுதீனின் (உள்படம்) இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற தாவூதி போரா சமூகத்தினர் - நெரிசலில் 18 பேர் பலி!
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
எல்லாம் கடவுள் செயல்; அவனின்றி ஓரணுவும் அசையாது
கடவுள் கருணையே வடிவானவன்; சர்வதயாபரன்
கடவுள் ஆபத்பாந்தவன் அகிலத்தையும் அறிந்தவன்
அவனே வழி நடத்துபவன்; அவனே ஆட்டி வைப்பவன்!
- இப்படியெல்லாம் நாளும் மதப் பிரசங்கிகளும், மதத் தலைவர்களும், அர்ச்சகர்களும், மதத்தின் மூலம் பக்தி வியாபாரம் செய்யும் கடவுள் தரகர்களும் கூறி, காலங் காலமாக பக்தி வியாபாரத்தைச் செழுமையுடன் நடத்தி, உழைப்பின்றி உண்டு கொழிக்கின்றனர்.
ஆனால், உண்மையாக நடக்கும் நடப்புகள் இக்கூற்றுகளைப் பொய்யாக்கவல்லோ செய்கின்றன!
எடுத்துக்காட்டாக இன்று வெளிவந்துள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் 9ஆம் பக்கத்தில் ஒரு செய்தி கடவுள் காப்பாற்றினாரா? பாதுகாத்தாரா?
கூடிய திருவிழாக் கூட்ட காலத்தில் ஆண்டுவாரி யாக எவ்வளவு பக்த கோடிகள் விபத்தில் நெரிசலில் சிக்கி உயிர் விட்டுள்ளனர் என்ற கோரச் செய்தியைப் பாருங்கள். கடவுள் காப்பாற்றி உதவினாரா இல்லையே!
1. 2003 ஆகஸ்ட் 27 நாசிக் (மகராஷ்டிர மாநிலம்): அருகில் நடந்த கும்பமேளாவில் கோதாவரி ஆற்றுக்கு அருகில் ஏற்பட்ட நெரிசலால் உயிரிழந்த வர்கள் சுமார் 40 பேர்.
2. 2005 ஜனவரி 25 (ராஜஸ்தான்): மந்தார் தேவிகோயில் திருவிழா நெரிசலில் சிக்கி உயிர் இழந்தவர்கள் சுமார் 300 பேர்.
3. 2008 மார்ச் 27 (மத்திய பிரதேசம்): கரில்லா கிராம திருவிழாவில் நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை எட்டு (8) பேர்.
4. 2008 ஆகஸ்ட் 3 (இமாச்சல் பிரதேசம்): மழைக்காகப் போட்டிருந்த பாதுகாப்புக் கூரை உடைந்து திருவிழாவுக்கு வந்தவர்கள் - நைனாதேவி கோயில் திருவிழா - இறந்தோர் எண்ணிக்கை குறைந்தபட்சம் 140 பேர் ஆகும்!
5. 2008, செப்டம்பர் 30 (ராஜஸ்தான்): ஜோத்பூர் சாமுண்டிதேவி இந்து கோயில் திருவிழா நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை - கோயிலுள்ளே! (ஜோத்பூர் மேரங்கங்கார் கோட்டை அருகில்).
6. 2010 மார்ச் 4 (உத்தரப்பிரதேசம்): ராம் ஜானகி கோயில் திருவிழாவில் கட்டி முடிக்கப்படாத மேல் கூரைக் கட்டடம் விழுந்து 63 பேர் செத்தனர்!
7. 2011 ஜனவரி 14 (கேரளா): சபரிமலை அய்யப்ப பக்தர்கள் விழா முடிந்து திரும்பிடும் நிலையில் ஏற்பட்ட விபத்தில் இறந்தோர் 100 பேர்களுக்கு மேல் அய்யப்பப் பக்தர்கள்!
8. 2011 - நவம்பர் 8 (உ.பி.): ஹரித்துவார் அருகில் கங்கை ஆற்றில் 22 பேர் படகு கவிழ்ந்து இறந்தனர்.
9. 2012 பிப்ரவரி 19 (குஜராத் மாநிலம்): ஜுனாகாத் பவ்நாத் கோயில் மஹா சிவராத்திரி திருவிழா நெரிசலின்போது இரவு 6 பேர் உயிரிழந்தனர்!
10. 2013 அக்டோபர் 13ஆம் தேதி (மத்தியப் பிரதேசம்): தத்தியா மாவட்டம் அருகே உள்ள கோயில் திருவிழாவுக்கு ஒரு பாலம் வழியே செல்லும்போது பாலம் முறிந்து இறந்தவர் எண்ணிக்கை 89 பேர்.
மேலே காட்டிய வெறும் நெரிசலால் உயிர் இழந்த பக்த கோடிகள் மட்டுமே!
உத்திரகாண்ட் வெள்ளத்தில் பல்லாயிரக்கணக்கில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை இதில் காட்டவில்லை!
கோயில்களுக்குச் சென்று திரும்பும் போது ஏற்பட்ட விபத்துக்களால் மறைந்த உயிர்களை இதில் குறிப்பிட வில்லை. நடுநிலையோடு, இப்போது சொல்லுங்கள் கடவுள் (கற்பனை) கருணை உள்ளது தானா?
போதைப் பொருளில் மூழ்கியவன் அதை மீண்டும் மீண்டும் எப்படித் தேடுவானோ அப்படி கடவுள் கடவுள் என்று கதறி கைப் பொருளையும், மானத்தையும், இழந்து கொண்டே இருக்கிறார்கள்! என்னே கொடுமை!!
சிந்தியுங்கள் பக்தர்களே!
கடவுளை மற; மனிதனை நினை என்ற தந்தை பெரியாரின் அறிவுமொழியினைப் பின்பற்றி மாமனித ராகா விட்டாலும்கூட குறைந்தபட்சம் ஆறறிவு மனிதர் ஆகுங்கள். மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற சையதினா முகமது புர்ஹானுதீனின் (உள்படம்) இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற தாவூதி போரா சமூகத்தினர் - நெரிசலில் 18 பேர் பலி!
Read more: http://viduthalai.in/e-paper/73767.html#ixzz2qtgjTC4i
பிழிவுகள்... பிழிவுகள்...
ஒத்தி வைப்பு
சென்னையில் நாளை (20.1.2014) நடைபெற விருந்த தமிழ்நாடு - இலங்கை மீனவர் பேச்சு வார்த்தை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. (ஒத்தி வைக்கப்பட்டாலும் தேவை - நிரந்தரத் தேர்வு!). வழக்கமானது தான்
சென்னை - நந்தம்பாக்கம் தொழிலதிபர் வீட்டில் 100 சவரன் நகை, 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள், மூன்றரை லட்சம் ரூபாய் கொள்ளை யடிக்கப்பட்டது. (வானிலை அறிக்கைபோல இது தமிழ்நாட்டின் அன்றாட செய்தி தானே!)
கோயிலுக்கு
திண்டிவனம் - தீர்த்தக்குளம் பூந்தோட்டத்தைச் சேர்ந்த செல்வராசு என்பவரின் மனைவி கிருட்டின வேணி கட்டி வைத்திருந்த கோயிலிலேயே அந்தப் பெண் படுகொலை செய்யப்பட்டார்.
(காத்தல் தொழில் கடவுள் எங்கே போனதாம்?)
நீதிபதி கேட்கிறார்
சென்னையில் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு தி இந்து (தமிழ்) ஏட்டில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். நீலாங்கரையில் உள்ள சக்தி மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் மீன் சந்தை அமைப்பதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித் துள்ளது.
இதுகுறித்து முன்னாள் நீதிபதி என்ன எழுது கிறார்? சைவ மதத்தில் கண்ணப்ப நாயனாருக்கும் (பன்றிக் கறி படைத்தவர்) சிறுத் தொண்டர் நாயனா ருக்கும் (பிள்ளைக் கறி படைத்தவர்) சிறப்பான இடத்தைக் கொடுத்து விட்டு, கடவுளை சைவமாக்க முயற்சிப்பது எவ்விதத்தில் சரி என்ற வினாவை தம் கட்டுரையில் எழுப்பியுள்ளார் முன்னாள் நீதிபதி சந்துரு. (கடவுளேகூட மீன் அவதாரம் (மச்ச அவதாரம்) எடுத்தவர்தானே?)
பதற்றம்
மோடி பிரதமரானால் இந்திய அமெரிக்க உறவில் பதற்றம் அதிகரிக்கும் என்று டைம்ஸ் பத்திரிகை கருத்துத் தெரிவித்துள்ளது. (இந்தியாவுக்குள்ளேயே நாளும் பதற்றம் வெடித்துக் கொண்டே இருக்குமே - முதலில் அதைப்பற்றித் தானே கவலைப்பட வேண்டும்)
ஒத்தி வைப்பு
பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளின் முயற்சியை இந்தியா முறியடித்தது.
(இது என்ன ஓடி விளையாடு பாப்பா என்ற கதையாக அல்லவா அடிக்கடி நிகழ்கிறது!)
Read more: http://viduthalai.in/e-paper/73768.html#ixzz2qtgxmLqf
உச்சநீதிமன்றத்தின் தேவையற்ற வாசகங்களைப் புறந்தள்ளி இடஒதுக்கீட்டை அரசுகள் செயல்படுத்த முன்வர வேண்டும்
சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கமா?
தமிழர் தலைவரின் சமூகநீதிப் பாதுகாப்பு அறிக்கை நீதிமன்றங்கள் தம் கருத்தாகச் சொல்லும் சொற் களைப் பற்றிக் கவலைப்படாமல் சமூகநீதியைச் செயல்படுத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-
ஏற்கெனவே சுப்ரீம்கோர்ட்டால் கொடுக்கப்பட்ட டில்லி AIIMS FACULTY -பேராசிரியர்கள் போட்ட வழக்கில் 18.7.2013 தீர்ப்பில் - மண்டல்கமிஷன் வழக்காகிய இந்திரா சஹானி வழக்கு என்ற வழக்கில் வெறும் கருத்துரையாக,OBSERVATION- (OBITER-DICTA) சொல்லப்பட்ட ஒன்றை நீதிமன்றம் சுட்டிக் காட்டியது. உயர் சிறப்பு மருத்துவத் துறைப் படிப்பு (Super Speciality) மருத்துவத்துறையில் இட ஒதுக்கீடு கொடுப்பது விரும்பத்தக்கதல்ல என்றும் கருதலாம் என்பதாகக் குறிப்பிட்ட அந்தப் பெரும்பான்மை தீர்ப்பில் பாரா 861இல்
“..... Be that as it may, we are of the opinion that in certain services and in respect of certain posts, application of the rule of reservation may not be advisable for the reason indicated hereinbefore
என்று குறிப்பிட்டுள்ளது.
இதன் தமிழாக்கம்: முக்கியமான உயர்நிலை பதவிகளில் சேருவதற்கான விதிமுறைகளை பின்பற்றி பணிக்கான நபர்களைத் தேர்ந்தெடுக்கும் போது இடஒதுக்கீட்டுக்கான சட்டதிட்டங்கள் கடைப்பிடிக்கப் படுவது உகந்ததாக இருக்காது என்று கூறப்பட்டது. இது தீர்ப்புரை அல்ல; வெறும் கருத்துரை - பொதுவாகச் சொல்லப்பட்ட கருத்து.
இதன்படி இது சட்டக்கட்டாயத்தன்மை (MANDATORY LAW) அல்ல. நீதிபதியின் ஆலோசனை போன்ற ஒரு கருத்து.
அரசமைப்புச் சட்டம் 16 ஆவது பிரிவு கூறுவது என்ன?
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தருவது பற்றிய 16 ஆவது பிரிவில், போதிய அளவு பிற்படுத் தப்பட்டவருக்குத் தருவது என்பதும், பிற்படுத்தப்பட்டவரை அடையாளம் கண்டறிந்து பட்டியலில் சேர்ப்பது என்பது பற்றியுமான உரிமையை அரசுக்குத்தான் அளித்துள்ளதே தவிர, நீதிமன்றங்களுக்கு அல்ல. In the opinion of the State என்றுதான் குறிப்பிடுகிறது.
நீதிமன்றங்கள் கருத்துக்கள் கூட கூற இயலாது என்பது இதன் மூலம் திட்டவட்டம்!
இந்திரா சஹானி (மண்டல்) வழக்கில் மேலே குறிப்பிட்ட பத்தியிலேயே இக்கருத்து முடிக்கப்பட்டு, வலியுறுத்தப்பட்டுள்ளது. “It is the Government of India to consider and specify the service and posts to which the rule of reservation shall not apply (but on that account the implementation in the impugned office Memorandum dated 13th August 1990 can not be stayed or with held)”
இதன் தமிழாக்கம்: இட ஒதுக்கீட்டிற்குப் பொருந்தாத சேவைகள் மற்றும் பணியிடங்கள் எவை என்பதை இந்திய அரசுதான் குறிப்பிட வேண்டும். (ஆனால் இந்த காரணங்களுக்காகவே குறிப்பிடப்பட்ட ஆகஸ்டு 13, 1990 நாளிட்ட அலுவலக குறிப்பினை நடைமுறைக்கு தடை விதிக்கவோ, நிறுத்தி வைக்கவோ முடியாது).
இதன்படி, - அண்மையில் அய்ந்து நீதிபதிகள் மறு சீராய்வில் குறிப்பிட்டபடி, பந்து மத்திய அரசின் கோர்ட்டுக்குள்ளே தான் இருக்கிறது. அதாவது டில்லி மத்திய அரசுக்குத்தான் எவை எவை தெளிவாக இடஒதுக்கீட்டில் சேர்க்கப்படலாம் என்று கூறவேண்டிய பொறுப்பு என்று கூறிவிட்டு கடைசியில் தேவையற்ற ஒரு கருத்துரையைப் போட்டு ஒரு புதுக் குழப்பத்தை தீர்ப்பின் மூலம் எடுத்துக்காட்ட முயன்றுள்ளார்கள்.
தேவையற்ற கருத்து
அரசியல் சட்டத்திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று கூறிய கருத்தே அது!
மத்திய அரசு குறிப்பிட்டுச் சொன்னாலே போதுமானது. அரசியல் சட்டத் திருத்தம் என்பது தேவையற்ற ஒன்று- இந்திரா சஹானி வழக்கின் பாரா 861 வாக்கியங்கள் அதை தெளிவாக்குகின்றன.
டில்லி எய்ம்ஸ் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் 18.7.2013 அன்று அளித்த தீர்ப்புரைக்குப்பிறகு, மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத், நாடாளுமன்றத்தில் தெளிவாகவே குறிப்பிட்டார்: We are ignoring the Judgement என்று கூறினார். அதனைத் தொடர்ந்து சீராய்வு மனுவை நீதிமன்றத்தில் தொடருவோம் - நீங்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனங்களைச் செய்யலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம், எய்ம்ஸ் நிறுவனத்துக்கு தாக்கீது பிறப்பித்தது. அதன் அடிப் படையில் ரிஷிகேஷ் எய்ம்ஸ் நிறுவனம் ஒப்பந்த அடிப் படையில் பணி நியமனம் செய்யும் ஒரு விளம்பரத்தில் இட ஒதுக்கீடு உண்டு என்று தெளிவாகவே தெரிவித்திருந்தது. துவக்கத்திலிருந்தே இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றங்கள் முட்டுக்கட்டை போடுவதும், அதன்பிறகு புதிய சட்டத்திருத்தம், ஆணைகளை, அரசுகளும் சட்டமன்றங்களும், நாடாளுமன்றமும், ஆட்சி மன்றமும் கொண்டு வந்து செயல்படுத்துவதும் நமது சமூகநீதிப் போராட்டத்தில் பல்வேறு மைல்கற்கள் அல்லவா?
வேகத்தடையும்- சமூகநீதிப் பயணமும்
எனவேதான் இந்த வேகத்தடைகளைப் பொருட்படுத் தாது சமூகநீதிப் பயணம் தடையின்றித் தொடரவேண்டும்.
தவறான வியாக்கியானங்களைப் புறந்தள்ளி ஆட்சிகள் செயல்படுவதுதான் நமது ஜனநாயகத்தில் சமூகநீதியை கடைக்கோடி மகனுக்கும், மகளுக்கும் கொண்டு போய்ச் சேர்ப்பதாகும்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை 18.1.2014
Read more: http://viduthalai.in/page1/73739.html#ixzz2qthmCL86
வேடிக்கை சம்பாஷணை - சித்திரபுத்திரன் -
குடித்தனக்காரன் : அய்யா ஆ ஆ! எங்க வீதியில் நெருப்புப் பிடித்து 10, 20 வீடு வேகுதய்யா! எவ்வளவு தண் ணீர் ஊற்றியும் அவிய மாட்டேன் என் கிறது. எல்லோரும் வந்து கொஞ்சம் உதவி செய்யுங்கள். உங்கள் பிள்ளைக் குட்டி களுக்குப் புண்ணியமாகும்.
சித்திரபுத்திரன் : அய்யய்யோ! ஏனப்பா நெருப்புப் பிடித்தது?
குடித்தனக்காரன்: ஒருத்தருக்கும் தெரியவில்லை அய்யா.
சித்திரபுத்திரன்: அப்படியானால் உங்கள் வீதியில் பிராமணாள் இருக் கின்றார்களா?
குடித்தனக்காரன் : ஆம் 4, 5 வீட்டுக் காரர்கள் இருக்கின்றார்கள்.
சித்திரபுத்திரன் : அவர்கள் ஏதாவது உங்கள் வீதிப்பக்கம் வந்தார்களா?
குடித்தனக்காரன் : ஆம் அய்யா, காலையில் ஒரு பிராமணர் ஆத்துக்கு போய் குளித்துவிட்டு மொணா மொணா என்று சொல்லிக்கொண்டு இந்த வீதியில் தான் போனார்.
சித்திரபுத்திரன் : சரி, சரி, உங்கள் வீதி வீடுகள் வெந்துபோனதற்குக் காரணம் தெரிந்து போயிற்று.
குடித்தனக்காரன் : என்ன அய்யா எனக்குத் தெரியவில்லையே!
சித்திரபுத்திரன் : இது தெரியாதா உனக்குப் பிராமணாள் கையில் நெருப்பு இருக்கிறதே; நீ கேட்டதில்லையா?
குடித்தனக்காரன்: நான் கேட்ட தில்லையே!
சித்திரபுத்திரன் : அட பைத்தியமே, பிராமணாள் நாம் கும்பிட்டால் அவர்கள் இடது கையை மோந்து பார்ப்பது போல் மூக்குக்குப் பக்கத்தில் தூக்குகிறார்களே அது ஏன்? வலது கையில் அக்கினி இருப்பதால் அது தூக்கினால் எரிந்து போய் விடுவோம் என்று இடது கையை மோந்து பார்ப்பது.
குடித்தனக்காரன் : அப்படியா! அது எனக்குத் தெரிந்திருந்தால் நான் அவர் களை அந்த வீதியிலேயே நடக்கவிட்டு இருக்க மாட்டேனே. ஏமாந்து போய் விட்டேன்.
சித்திரபுத்திரன் : அது மாத்திரமா, பிராமணாள் வாயிலும், நெருப்பு, வயிற் றிலும் நெருப்பு; இது உனக்குத் தெரியாதா?
குடித்தனக்காரன்: தெரியவில்லையே! சற்றுத் தெரியும்படியாய் சொல்லுங்களேன்.
சித்திரபுத்திரன் : பிராமணாள், எங்கள் வாயில் விழுந்தால் பஸ்பமாய் போய் விடுவாய் என்று சொல்லு கிறார்களே அது என்ன? வாயில் நெருப்பு இருப்ப தால்தானே அவர்கள் அப்படிச் சொல்வது. தவிரவும், பிராமணாள், நம்மைப் பற்றி ஏதாவது நினைத்தால் நாம் பஸ்பமாய் விடுவோம் என்று சொல்லுகின்றார்களே அதன் அர்த்தம் என்ன? நினைத்தால் பஸ்பமாய் விடுவதாய் இருந்தால் வயிற்றில் நெருப்பு இல்லா விட்டால் முடியுமா?
குடித்தனக்காரன் : இதென்ன இந்த இழவு பார்ப்பனர்கள் சங்கதி. கையில் நெருப்பு, வாயில் நெருப்பு, வயிற்றில் நெருப்பு இப்படி வைத்திருந்தால் நாம் எப்படி அவர்களோடு வாழ்வது? இப்படி தினம் ஒரு வீதி வெந்து சாம்பலாவ தானால் இந்த நாலு பிராமணர்களாலேயே இந்த ஊரே சீக்கிரம் சாம்பலாய் விடும் போலிருக் கிறதே.
சித்திரபுத்திரன் : பின்னை தெரியா மலா நம்முடைய பெரியவாள் பிராமணர் களை கிட்ட சேர்க்க வேண்டாம் என்று சொல்லுகின்றார்கள்.
குடித்தனக்காரன்: ஓ! ஹோ!! இதற் காகத்தான் அவர்கள் அப்படி சொல் கின் றார்களா! சரி, இனி புத்தியாய் பிழைத்துக் கொள்கிறேன். இந்த நெருப்பை எப்படி யாவது அணைத்து விடுங்களய்யா?
- குடிஅரசு -கற்பனை உரையாடல்- 18.03.1928
Read more: http://viduthalai.in/page1/73748.html#ixzz2qtjOohab
தர்மத்தின் நிலை
நாட்டுக்கோட்டை நகரத்தாருள் முக்கியஸ்தரான ஸ்ரீமான் சர். அண்ணாமலை செட்டியார் அவர்கள் 20 லட்சம் ரூபாய் கல்விக்காக தர்மம் செய்திருப் பதாக அறிகின்றோம். ஆனால் அத்தருமம் எவ்வளவு தூரம் நாட்டிற்கோ அல்லது பார்ப்பனரல்லாத மக்களுக்கோ உபயோகப்படும் என்பது அறியக் கூடாததாகவே இருக்கின்றது. தவிர பார்ப்பனர் எந்த ஒரு சிறிய தர்மம் செய்தாலும் அது தங்கள் இனத்தாரைத் தவிர வேறு யாருக்கும் உபயோகப் படாதபடியே செய்வது வழக்கம். ஆனால் பார்ப்பனரல்லாதாரில் பெரிதும் குறிப்பாய் நாட்டுக் கோட்டை நகரத்தார் செய்யும் தருமங்கள் ஒவ்வொன்றும் பார்ப்பனரைப் போல் தமது சமூகத்தாராகிய பார்ப்பனரல் லாதாருக்கே உபயோகப்படும்படி செய்யாவிட்டாலும் முழுதும் பார்ப்பனர் களுக்கே உபயோகப்படும்படி செய்வதே வழக்கமாகி வருகிறது. கோவில்கள், வேதபாடசாலைகள், சத்திரங்கள், அறுபதாம் கல்யாணங்கள் முதலியவைகளில் செலவிடும் பணங்கள் போகும் வழிகளை அறிந்தவர்கள் தான் உண்மையை உணரலாம். அதோடு கூடவே, இப்படிப் பார்ப் பனருக்கே பெரிதும் தருமஞ் செய்த பல நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் கோடீஸ் வரர்களாயிருந்து பாப்பராகிவிட்டதையும் அறியலாம். இப்படி இவர்கள் பாப்பர்களாவதில் யாரும் வருத்தப்பட நியாயமிருப்ப தாகவும் தெரியவில்லை. ஏனெனில் இவர்கள் எந்த சமூகத்தாரிடம் இருந்து நல்வழியிலேயோ, கெட்ட வழியிலேயோ இப்படி கோடிக்கணக்கான பணம் சம்பாதித்தார்களோ அந்த சமூகத்தாருக்குத் துரோகம் செய்து பார்ப்பனரல்லாத மக்களை வஞ்சித்துப் பிழைக்கும் ஒரு சமூகத்தாருக்கே அதைச் செலவு செய்வதானால் அப்படியவர்கள் தண்டனை அடைய வேண்டியது கிரமமா அல்லவா! ஆதலால் நமது சர். அண்ணாமலை செட்டியார் செய்திருக்கும் இந்த 20 லட்ச ரூபாய் தர்மமானது மேல்கண்ட குற்றத்திற்கு ஆளாகாமல் இருக்கத்தக்க மாதிரியில் தமது தர்மப் பணங்கள் முழுதும் உபயோகப்படும்படியாக தக்க ஏற்பாடும் செய்ய வேண்டும் என்று சர். அண்ணாமலை செட்டியார் நன்மையையும், பார்ப்பனரல்லாதார் நன்மையையும், நமது நாட்டின் நன்மையையும், உத்தேசித்து வேண்டிக் கொள்ளுகிறோம்.
- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 08.04.1928
Read more: http://viduthalai.in/page1/73748.html#ixzz2qtjXKHfv
துருக்கியில் மாறுதல்
துருக்கி ராஜாங்கத்தில் அரசாங்க விஷயத்தில் மதசம்பந்தமே இருக்கக் கூடாது என்று பலமான மாறுதல்கள் ஏற்படக்கூடும் என்பதாக பத்திரிகைகளில் காணப்படுகின்றன. இதை நாம் மனமார வரவேற்பதுடன் இது உலக விடுதலைக்கு ஒரு பெரிய அறிகுறியென்றே சொல்லுவோம். துருக்கி ராஜாங்கம் மதத்திற் காகவே இருப்பதாக சொல்லப்படுவது. கிலாபத்து இயக்கமும் அதற்காகவே ஏற்பட்டது. அப்படிப்பட்ட அரசாங்கம் மத சம்பந்தத்தை நீக்க - மனித தர்மத்தை ஆதாரமாக வைத்து - அரசாட்சி புரிய ஏற்பட்டால் இன்றைய தினமே நாம் துருக்கிப் பிரஜையாக இருக்க பதிவு செய்து கொள்ளத் தயாராகயிருக்கிறோம்.
- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 08.04.1928
Read more: http://viduthalai.in/page1/73748.html#ixzz2qtjdjYZc
தீர்த்தம்!
குடும்பத்துடன் புனித நீராட ராமேஸ்வரம் சென்றிருந்தேன். முதலில் சூரியனை வணங்கிக் கடவுளைக் கும்பிட்டு, ஈர உடையுடன் டோக்கன் வாங்கி, 22 தீர்த்தங்களி லும் குளிக்கச் சென் றோம். எங்களுக்கு முன்பாக மூன்று மாதக் குழந்தையுடன் இளம் தம்பதியர் ஒவ்வொரு தீர்த்தத்திலும் தங்களது குழந்தைகளையும் குளிக்க வைத்தனர்.
முதல் நான்கைந்து தீர்த் தத்தில் குளிப்பதற்குள் அந்த மூன்று மாதக் குழந்தை குளிரில் நடுங் கிப் போய் விட்டது. கூடவே அந்தக் குழந்தை யின் கதறல் வேறு; நாங்கள் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் 22 தீர்த்தத்திலும் அக் குழந் தையைக் குளிப்பாட்டிக் கொண்டே இருந்தனர். குளிர்ந்த நீரில் குழந்தை அழுது கொண்டே மிக வும் சோர்வடைந்து விட் டது. பெற்றோர்களே.. பக்தி என்ற பெயரில் கைக் குழந்தையையும் கஷ்டப் படுத்த வேண்டுமா?
- வே. செந்தில்குமார் கொங்கணாபுரம்
- இப்படி ஒரு பக்த ரின் கடிதம் தினகரன் வசந்தம் (19.1.2014) இதழ் பக்கம் 17இல் வெளி வந் துள்ளது.
இதைப் படித்தால் கல் மனம் கொண்டவனும் கூடக் கலங்கவே செய் வான். பெத்தமனம் பித்து என்பார்கள். பக்தி விட யத்தில் அதுகூட செல்லு படியாகவில்லையே!
பச்சை மண்ணென்று சொல்வார்கள் - பச்சிளம் குழந்தையை அதன் உடல் தன்மை என்ன? தாங்கும் சக்தி என்ன? என்ற சிற்றறிவுகூட இல் லாமல் மூன்று மாத சிசு வைக்கூட தீர்த்தத்தில் முழுக்காட்டுவது என் றால், நினைத்துப் பார்க் கவே ஈரக்குலை நடுங் குகிறதே! பக்தி என்று வந்து விட்டால் புத்தி மட்டும் போவதில்லை ஈவு இரக்கம், மனிதநேயம், பொது அறிவுகூட பஞ் சாகப் பறக்கிறதே என் சொல்ல!
இப்படியெல்லாம் செய் தால்தான் புண்ணியத் தைக் கடவுள் கொடுப்பார் என்றால், அந்தக் கட வுளை விட ஈவு இரக்க மற்ற கல் நெஞ்சுக்காரன் வேறு யாராகத்தான் இருக்க முடியும்?
சரி... அவர்கள் பக் திக்கே வருவோம். தீர்த்த மாடுவது சிறந்த பக்தி தானா?
ஸ்கந்தபுராணம் - ஞானயோக காண்டம் என்ன கூறுகிறது?
தீரத்தே தாதையக்ஞே
காஷ்டே பாஷாண கேபதா
சிவம் பஸ்யதி
மூடாத் மாசி லோதே
ஹெபர் திஷ்டித
இதன் பொருள்: மூடாத்மாக்கள் தீர்த்தத் தினும், தானத்திலும், தபசி லும் யக் ஞத்திலும், கட்டை யிலும், கல்லிலும் சிவம் இருப்பதாக நினைக் கிறார்கள் என்று சொல் லப்படுகிறதே - இதற்குப் பதில் என்ன?
- மயிலாடன்
Read more: http://viduthalai.in/e-paper/73827.html#ixzz2qzbWaNKe
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய 400 பாதிரியார்கள் பதவி நீக்கம் வாடிகன் தகவல்
வாடிகன்சிட்டி, ஜன.20- முன் னாள் போப் 17ஆவது பெனடிக்ட் கடந்த ஆண்டு இவர் தானாகவே முன் வந்து பதவி விலகினார். அதை தொடர்ந்து புதிய போப்பாக பிரான் சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பெனடிக்ட் போப் ஆக இருந்த போது அய்ரோப்பியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த பாதிரியார்கள்மீது பாலியல் குற்றச்சாட்டு இருந்தது. குறிப்பாக குழந்தைகளிடம் பாலியல் தொந்தரவு மற்றும் பெண்களிடம் பாலியல் வன்கொடுமை புகார்கள் கூறப்பட்டன.
எனவே, பாலியல் புகாரில் சிக்கிய 400 பாதிரியார்களை அவர் பதவி நீக்கம் செய்துள்ளார். அவர் பதவி விலகுவதற்கு முன்பு 2 ஆண்டுகளில் இந்த நடவடிக்கையை மேற்கொண் டுள்ளார். அதில் 2011ஆம் ஆண்டில் 300 பேரும் 2012ஆம் ஆண்டில் 100 பேரும் அடங்குவர். இந்த தகவலை வாடி கனின் செய்தி தொடர்பாளர் பெடரி கோலாம் பார்டி தெரிவித்தார்.
Read more: http://viduthalai.in/e-paper/73828.html#ixzz2qzbsHhHS
மாற்றம் ஒரு வழிப் பாதையா?
சென்னையில் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகம் அமைந்துள்ள ஹால்ஸ் சாலை தமிழ்ச் சாலை எனப் பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது குறித்து இந்து முன்னணியின் நிறுவனர் இராம. கோபாலன் அறிக்கை வருமாறு:
தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக வந்துள்ள இந்தச் செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்தபிறகு அடிமைத் தனத்தின் அடையாளமாக இருந்த சாலை, ஊர்ப் பெயர்களை படிப்படியாக மாற்றி, தமிழ்ப் பெயர்கள், தேசப் பக்தர்கள் பெயர்களைச் சூட்டியிருக்க வேண்டும்.
இன்னமும் நம்மை அடிமைப்படுத்தி, ஆக்ரமிப்பு செய்தவர்களின் பெயர்களை சாலைகள், ஊர்கள் தாங்கி நிற்பது நமக்கு அவமானம், இதனைத் துடைத்தெறிய வேண் டும் என்று இந்து முன்னணி நிறுவனர் திருவாளர் இராம. கோபாலன் தன் அறிக் கையில் குறிப்பிட்டுள்ளார். இதனை நாமும் நன்றாகவே வரவேற்கிறோம். அதே நேரத்தில் இவர் கூறுவது தமிழின்மீது கொண்ட பற்றுதலாலா? என்ற கேள்வி நியாயமாக எழத் தான் செய்யும்.
ஹால்ஸ் என்ற பெயர் ஆங்கிலேய கிறித்தவரின் பெயராக இருப்பதால்தான் அது மாற்றப்படுவதற்கு ஆதரவு தெரிவிக்கிறாரே தவிர, உண்மையிலேயே தமிழ்மீது கொண்ட ஆர்வமும், பற்றுதலும் அவரிடம் கரை புரண்டு ஓடுவதால் அல்ல- என்பது நினைவிருக்கட்டும்!
கோயில்களில் சமஸ்கிருதம் அர்ச்சனை மொழியாக இருப்பதை மாற்றி தமிழில்தான் அது நடக்க வேண்டும் என்று சொல்லிப் பாருங்கள். அப்பொழுதுதான் அவாளின் உண்மை உருவம் வெளிவரும்.
கோயில்களில் உள்ள கடவுள்களின் சமஸ்கிருதப் பெயர்களை மாற்றினால் ஏற்றுக் கொள்வார்களா?
தி.மு.க. ஆட்சிக் காலத்தில் முதல் அமைச்சர் கலைஞர் அவர்களின் பெரு முயற்சியினால் தமிழுக்குச் செம்மொழித் தகுதி கொண்டு வரப்பட்ட போது இதே பார்ப்பன ஊடகங்கள் எப்படியெல்லாம் கேலி செய்தன? வீட்டுக்கு வீடு மட்டன் பிரியாணி வரப் போகிறது பாருங்கள் என்று தினமலர் எழுதிய போது இந்த ராம. கோபாலன்களின் வாய்கள் கோணி ஊசியால் தைக்கப்பட்டுக் கிடந்தனவா?
சென்னைப் பெரு நகரில் வணிக விளம்பரங்களில் தமிழுக்கு முதலிடம் என்று அந்நாள் மேயர் மா. சுப்பிரமணியம் அவர்களே களத்தில் இறங்கி அந்தப் பணியைச் செய்த போது, துக்ளக்கில் இது மொழி நக்சலிசம் என்று எழுதியபோது இந்த அய்யர்வாள் எங்கே முடங்கிக் கிடந்தார்?
தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் நீண்ட காலமாக தமிழ் அறிஞர் பெரு மக்கள் கூறி வந்த கருத்தினை ஏற்று தனிச் சட்டம் செய்தாரே - அதனை அ.இ.அ.தி.மு.க. ஆட்சி யில் செல்வி ஜெ. ஜெயலலிதா மாற்றினாரே - அப்பொழுது இவர் போர்க் குரல் கொடுத்த துண்டா?
தமிழ்நாட்டின் ஊர்ப் பெயர்கள் எல்லாம் சமஸ்கிருதமயமாகிக் கிடக்கின்றனவே; அவற்றைத் தமிழில் மாற்றம் செய்ய வேண்டும் என்று இதே இந்து முன்னணித் தலைவர் அறிக்கை வெளியிடத் தயாரா?
சிற்றம்பலம் சிதம்பரம் என்றும் திருமரைக் காடு வேதாரண்யம் என்றும் திருமுதுகுன்றம் விருத்தாசலம் என்றும், குரங்காடுதுறை கபிஸ் தலம் என்றும் சமஸ்கிருதமயம் ஆக்கப்பட் டுள்ளதே - அவற்றை மீண்டும் தமிழ் மயப் படுத்த இந்து முன்னணி வகையறாக்கள் போராட்டம் நடத்துவார்களா?
ஹால்ஸ் என்பது கிறித்தவரின் பெயராக இருப்பதால்தான் மதவெறி இந்துக் கண்ணோட் டத்தோடு அது மாற்றப்படுவதற்காக ஆதரித்து அறிக்கை வெளியிடுகிறார் - இந்த மதவெறி யர்களை அடையாளம் காண வேண்டாமா? மாற் றம் என்பது வெறும் ஒரு வழிப் பாதை தானா?
Read more: http://viduthalai.in/page-2/73821.html#ixzz2qzcInc7a
பணம் பறிக்க நவீன வசதி ஏழுமலையானுக்கு செல்பேசியில் காணிக்கையாம்
திருப்பதி, ஜன.20- உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலை யானுக்கு செல்பேசி யில் காணிக்கை செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், நகை உள்ளிட்டவற்றை உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். அதன்படி ஆண்டுக்கு காணிக்கை மூலம் மட்டும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.500 கோடி முதல் ரூ.600 கோடி வரை வருமானம் கிடைத்து வருகிறது.
நேரடியாக வரும் பக்தர்கள் மட்டுமே கோவில் பிரகாரத்தில் உள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தி வந்தனர். ஆனால் நேரடியாக கோவிலுக்கு வரமுடியாத பக்தர்களும் காணிக்கை செலுத்தும் வகையில் தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.
உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பக்தர்கள் இ-உண்டி திட்டம் மூலம் தங்களது செல்பேசி மூலமாக திருப்பதி ஏழு மலையானுக்கு காணிக்கை செலுத்தலாம். இதற்காக கடந்த சில நாட் களுக்கு முன்னர் ஆந்திரா வங்கி இந்த சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. மொபைல் பேங்கிங் மூலம் (அய்.எம்.பி.எஸ்) இந்த சேவையை பக்தர்கள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
Read more: http://viduthalai.in/page-2/73824.html#ixzz2qzcTZTmh
திராவிடர் திருநாள் விழாவில் (19.1.2014) பெரியார் விருது பெற்றவர்களின் விவரக் குறிப்புகள்
பேராசிரியர் அ.மார்க்ஸ்
தலைசிறந்த பெரியாரியவாதியாக இருந்துகொண்டு ஜாதி-மத எதிர்ப்புப் பிரச்சாரங்களை செய்து வருபவர். இவரது தந்தை அந்தோணிசாமி, கூலித் தொழிலாளி யாக மலேசியா சென்று, அங்கே பொதுவுடைமைக் கட்சியை நிறுவியவர்களில் ஒருவர். இவருடைய தலைக்கு விலை கூறப்பட்டுத் தப்பி வந்தபின் நாடு கடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டவர்.
ராமதாஸ் என பொதுவுடமை இயக்கத்தில் அறியப்பட்ட அவர் இறுதி வரை ஒரு எளிய கம்யூனிஸ்டாக இருந்து மறைந்தவர். போராட்டக்காரரின் மகனாகப் பிறந்த அ.மார்க்ஸ் அவர்கள் நான்காம் வகுப்புவரை பள்ளி சென்று படித்ததில்லை. அதன்பின் அரசு பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பயின்றவர். மார்க்ஸ் அவர்கள் 37 ஆண்டுகள் அரசு கல்லூரி களில் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்ற வர். கடைசியாகப் பணியாற்றியது சென்னை மாநிலக் கல்லூரி.
ஆசிரியர் இயக்கங்களில் பல்வேறு மட்டங்களிலும் பொறுப்புகளில் இருந்து செயல்பட்டவர். நிறப்பிரிகை ஆசிரியர் குழுவில் ஒருவராகப் பங்கு பெற்றவர். இலக்கியம், அரசியல் மற்றும் மனித உரிமைக் களங்களில் கடந்த 35 ஆண்டுகளாகத் தொடர்ந்து செயல்பட்டு வருபவர். நாட்டில் கலவரங்கள் மனித உரிமை மீறல்கள் எங்கு நடந்தாலும் நேரடியாக களத்திற்கே சென்று உண்மைகளை கண்டறிந்து வெளிக்கொணர் வதில் இவருடைய செயல்பாடுகள் அனைவரையும் வியக்க வைக்கும்.
அறிவாற்றல் மிகுந்த பேராசிரியர் அ.மார்க்ஸ் 77 பெரிய நூல்களையும் 27குறு நூல்களையும் 25க்கு மேற் பட்ட சிறு வெளியீடுகளையும் எழுதியுள்ளார். பல்வேறு ஏடுகளில் பல்லாயிரக்கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ளார்.
இவரது கருத்துக்கள் கடும் விவாதங்களுக்கு உரியதாய் இருந்து வந்துள்ளன; இருந்து வருகின்றன. இருந்தபோதிலும், ஏற்றதொரு கருத்தை மனதிற்குப் பட்டதைப் பேசியும் எழுதியும் வருகிறார். இன்று ஒரு முழுநேர எழுத்து மற்றும் மனித உரிமைப் பணியாளர்.
அவரது குறிப்பிடத்தக்க சில நூல்கள்:
1. நமது கல்விப் பிரச்சனைகள் 2. குணா -பாசிசத்தின் தமிழ் அடையாளம் 3. இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு (3 தொகுதிகள்)
4. பெரியார் யார்?
5. ஆட்சியில் இந்துத்துவம் 6. குஜராத் 2002 : அர்த்தங்களும் உள்ளர்த்தங்களும் 7. பெரியார் - தலித்கள் - முஸ்லிம்கள் 8. ஆரியக் கூத்து
9. பெரியாரின் கல்விச் சிந்தனைகள் 10. பார்ப்பனர்களின் இராமர் பால அரசியல் 11. இலக்கியத்தில் இந்துத்துவம் - காலச் சுவடு ஓர் ஆள்காட்டி அரசியல் 12. இந்துத்துவத்தின் பாசிசத் தொடர்புகள் போன்ற ஆய்வுத்தர நூல்களைப் படைத்த தலைசிறந்த சிந்தனை யாளர்களில் ஒருவரான மனித உரிமைப் போராளி அ.மார்க்ஸ் அவர்களுக்கு பெரியார் விருது வழங்குவதில் பெருமகிழ்வு கொள்கிறோம்.
Read more: http://viduthalai.in/page-4/73815.html#ixzz2qzdBHzft
திரைப்பட நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்
சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு தொலைக் காட்சியில் நகைச்சுவைத்தொடராக வந்த சின்னபாப்பா பெரியபாப்பா என்ற தொடரில் காதின் மீது கைவைத்த படியே அச்சு அசலாக பாப்பார பாஷையில் பேசி அல்லல் படும் பட்டாபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தொலைக்காட்சி ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டு தலைப்பெற்ற எம்.எஸ் பாஸ்கர் என்று அழைக்கப்படும் மு.சோ.பாஸ்கர்.
தன்னிகரற்ற கலைஞர்களைத்தந்த தஞ்சை மாவட்டமே இவரையும் திரை உலகிற்கு தந்துள்ளது. முத்துப்பேட்டை சோமு என்பவரின் மகனாகிய மு.சோ. பாஸ்கர் அவர்களின் நடிப்பாற்றலைக்கண்ட சினிமாத் திரை சின்னத்திரையிடமிருந்து சுவீகரித்துக் கொண்டது.
பச்சையப்பர் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை பட்டம் பெற்ற இவர் சுமார் 1000 படங்களுக்கு மேல் பல நடிகர்களுக்கு பின்னணி பேசியவர்.
தமிழ் நடிகர்களுக்கு மட்டுமல்ல ஹாலிவுட் நடிகர் களுக்கும் தமிழில் பின்னணி பேசியுள்ளார். பின்னணி பேசியதில் சிறப்பாக, குறிப்பாக கர்மவீரர் காமராஜ் படத்தில் காமராஜராக நடித்தவருக்கு பின்னணி பேசிய தைக் குறிப்பிடலாம். பெரியார் திரைப்படத்தின் தொடக்க காட்சிலும், பெரியார் பற்றி கருத்துருவை சிறப்பாக தனது குரலில் வழங்கியுள்ளார்.
என்னதான் நடிப்பைக் கற்றுக்கொடுத்தாலும் அது எல்லோருக்கும் வருவதில்லை. அதிலும் குணசித்திர வேடங்களில் நடிப்பவர்களும் நகைச்சுவைப் பாத்திரங் களை ஏற்று நடிப்பவர்களும், அந்த நடிப்பிலிருந்து வேறுபட்ட நடிப்பை வழங்குவதென்பது அவ்வளவு எளிதில் வந்துவிடாது.
ஒரு சிலர் மட்டுமே அதில் மேன்மை பெற்றவர்கள். அந்த ஒருசிலரில் மிக முக்கியமானவர் இன்று விருது பெற வீற்றிருக்கும் பாஸ்கர். இவருடைய நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டாக வெள்ளித்திரை, இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம், தர்மபுரி, சிவகாசி, திருப்பாச்சி மாசிலாமணி, அழகியதீயே, சாது மிரண்டால், இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களைச் சொல்லலாம்.
எங்கள் அண்ணா படத்தையும், குரு என் ஆளு படத்தையும் பார்த்தவர்கள் இவருடைய நகைச்சுவை நடிப்பைப் பார்த்து இன்றும் கூட மனதில் நினைத்தால் சிரிக்காமல் இருக்கமாட்டார்கள். இவருடைய குணசித்திர நடிப்புக்கான படங்களாக மொழி, பயணம், அஞ்சாதே, சூது கவ்வும் போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.
அதிலும் குறிப்பாக 2007-இல் வெளிவந்த மொழி என்ற திரைப்படம் இவருக்கு தமிழக அரசின் சிறந்த துணை நடிகர் விருதைப் பெற்றுத்தந்தது. இந்த விருதைப்பெற்ற இவரை கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் நேரில் அழைத்துப் பாராட்டினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பல மொழிகளை அறிந்தவர்.
இவ்வளவு பெருமைகள் பெற்ற திராவிட இனத்தைச் சேர்ந்த மண்ணின் மைந்தரான மு.சோ.பாஸ்கர் அவர் களுக்கு பெரியார் விருது வழங்குவதில் பெருமகிழ்வு கொள்கிறோம்.
Read more: http://viduthalai.in/page-4/73815.html#ixzz2qzdLxV2X
தூக்கம் ஒரு மனிதனின் மூளைச்சிதைவை தடுக்கும்: விஞ்ஞானிகள் தகவல்
ஒரு மனிதனின் ஆரோக்கியமான உடல் நலத்திற்கு நல்ல தூக்கமும் ஒரு காரணமாக உள்ளது. தூக்கம் இல்லாமை என்பது மாரடைப்பு, உடற்பருமன் மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்புகளை அளிப்பதாகவே நிபுணர்கள் கருதுகின்றனர்.
சுவீடன் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வானது தூக்கமின்மை என்பது எவ்வாறு மக்களின் சுகாதாரத்தைப் பாதிக்கின்றது என்பதை தெரிவிப்பதாக உள்ளது. உப்சாலா பல்கலைக்கழகத்தின் ஆய்வுகள் ஒரு இரவின் தூக்கமின்மை என்பது மனி தனின் மூளையில் காணப்படும் மூலக்கூறு களில் இரத்த அளவு அதிகரிப்பதை நிரூபித் துள்ளது.
இந்தப் பரிசோதனையை மேற்கொண்ட சுய ஆர்வலர்களின் இரத்தத்தில் மூளை திசுக்களின் அழிவைக் குறிக்கும் என்எஸ்ஈ மற்றும் எஸ்-100பி போன்ற காரணிகள் அதிகரித்திருந்தது கண்டறியப்பட்டது. ஸ்லீப்' என்ற மருத்துவ இதழில் சாதாரண எடை கொண்ட 15 பேரின் தூக்க நேரத்தின் அளவுகள் கணக்கிடப்பட்டிருந்தன.
இவர்களில் ஒருவர் மட்டும் ஒரு நாள் இரவு தூங்கவில்லை. மற்றவர்கள் அனைவரும் எட்டு மணி நேர தூக்கத்தை பெற்றிருந்தார்கள். ஒரு நாள் இரவு தூங்காமல் இருந்த நபரின் இரத்தத்தில் மூளைத் திசுக்களின் அழிவுக் காரணிகளான என்எஸ்ஈ மற்றும் எஸ்-100பி இவற்றின் கலவைகள் அதிகரித்துக் காணப் பட்டன.
இதன்மூலம் தூக்கமின்மை என்பது ஒருவரது நரம்பியல் அழிவிற்கான செயல் முறைகளைத் விரைவுப்படுத்துகின்றது என்று உப்சலா பல்கலைக்கழகத்தின் முன்னணி ஆராய்ச்சியாளரான கிறிஸ்டியன் பெனடிக்ட் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இத்தகைய ஆய்வுகள் ஒரு நல்ல இரவு தூக்கமானது மனிதனின் மூளையை ஆரோக்கியமாக வைத்திருப்பதை வெளிப் படுத்துவதாக அமைந்துள்ளதைத் தெரிவிக் கின்றன.
Read more: http://viduthalai.in/page-7/73802.html#ixzz2qzelzuvc
Post a Comment