Search This Blog

23.1.14

நவநாகரிக உலகத்தில் மரண தண்டனை நீடிப்பதா?


அம்மூவரையும் உடனே விடுதலை செய்க!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ப.சதாசிவம் தலைமையிலான அமர்வின் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது!

தமிழர் தலைவர் விடுத்துள்ள மனிதநேய அறிக்கை
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ப.சதாசிவம் அவர்களின் தலைமையிலான அமர்வு, மீசை மாதய்யா உள்ளிட்டோர் மீதான தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பை அடிப்படையாகக் கொண்டது - அத்தீர்ப்பு பேரறிவாளன் உள்ளிட்டோருக்கும் பொருந்தக்கூடியதே. ஆகையால், அவர்களை உடனே விடுவிக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள மனிதநேய அறிக்கை வருமாறு:

வீரப்பன் கூட்டாளிகள் நான்கு பேர் (பிலேந்திரன், சைமன், மீசை மாதய்யா, ஞானப்பிரகாசம்) உள்பட, இந்தியா முழுவதிலும் உள்ள மரண தண்டனை பெற்ற குற்றவாளிகள் 13 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து நேற்று (21.1.2014) உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி திரு.ப.சதாசிவம் அவர்கள் தலைமையிலான மூன்று நீதிபதிகளின் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

இந்த மனிதாபிமானத் தீர்ப்பு, நீதி தவறாது குற்றவாளிகளுக்கு மறுக்கப்பட்ட நியாயம் - நீதி மீண்டும் மீட்டெடுக்கப்பட்ட வரலாற்றுப் பெருமைமிக்க தீர்ப்பு என்பதால், தலைமை நீதிபதி மனிதநேயர் ஜஸ்டீஸ் ப.சதாசிவம் அவர்களையும், அவரது அமர்வில் இடம்பெற்ற நீதிபதிகளையும் உளம் உவந்து பாராட்டி மகிழ்கிறோம்!

நவநாகரிக உலகத்தில் மரண தண்டனை நீடிப்பதா?

இந்த நாகரிக யுகத்தில் மரண தண்டனை நீடிப்பதே ஒரு காட்டுமிராண்டி கால சிந்தனையாகும். அது நீடிக்கக் கூடாது என்பதே உலகின் பெரும்பாலான மக்களின், நாடுகளின் மனிதப் பற்றாளர்களின் மகத்தான கருத்தாகும்.
ஏனோ, இதில் இந்திய அரசு பிடிவாதம் காட்டுகிறது? நமக்கே புரியவில்லை!
கைக்குக் கை, காலுக்குக் கால், உயிருக்கு உயிர் என்ற (Code of Hammurabi) அமுராபி அரசரின் சட்டம் இன்றைய நிலையில், நயத்தக்க நாகரிகம் உடையவர் களால் ஏற்கப்படத்தக்கதல்ல.

தண்டனையின் நோக்கம் திருத்தவே பயன்படவேண்டும்!

தண்டனைகள், மனிதர்கள் மேலும் கொடூரமான குற்ற வாளிகளாக சமூகத்தில் மாறும் வகையில் அமையாமல், திருந்தும் வகையிலேயே அமையவேண்டும் என்பதே நமது கருத்தாகும். அது ஒருபுறமிருக்கட்டும்!
கருணை காட்ட மனு போடும் உரிமை சட்டப்படி தூக்குத்தண்டனை அளிக்கப்பட்ட கைதிகளின் உரிமையாகும்.

பேரறிவாளன் உள்ளிட்டோருக்கும் பொருந்தும்

அதனை உண்டு, இல்லை என்று மத்திய அரசு பரிசீலித்து உடன் பதில் அளிக்காமல், 9 ஆண்டுகள் கிடப்பில் போட்டு, 2013 ஆம் ஆண்டிலா நிராகரிப்பது? மன இறுக்கம், மன உளைச்சல், மனச் சிதைவுக்கு இட்டுச் செல்லுகிறதே! கைதிகள் சிலரை மனநோயாளிகளாகவே ஆக்கிவிட்டதே! இதைவிட மனித உரிமைப் பறிப்பு வேறு உண்டா? மற்ற சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகி யோரும் போட்ட கருணை மனு 11 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டு, 2011 ஆம் ஆண்டில் நிராகரிக்கப்பட்டது கொடுமையல்லவா?

மேலும் இரண்டாண்டுகள் என்றால், 13 ஆண்டுகளில் அவர்களது மனநிலை எப்படிப்பட்ட அவலம், வேதனை, உறுத்தல், விரக்தி இவைகளுக்கு ஆளாகியிருக்கக்கூடும்.

இதையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து, மிகுந்த மனித நேயத்துடன், தாமதிக்கப்பட்ட நீதி இறுதிவரை மறுக்கப் பட்ட நீதியாகவே அமைந்துவிடக்கூடாது என்ற நீதி பரி பாலனக் கண்ணோட்டத்தில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி திரு.ப.சதாசிவம் அவர்களும், சக நீதிபதிகளும் சட்டத்தின் மரியாதையை, இதன்மூலம் காப்பாற்றியுள்ளார் கள்; இது ஏதோ மனிதாபிமானத்தை மட்டும் கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்பாக யாரும் விமர்சிக்க முடியாது.

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

1. கருணை மனுவை நிராகரிக்க காலம்  தாழ்த்துவது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைப் பதற்கு அடித்தளமாக அமையும்.

2. மரண தண்டனைக் கைதிகளுக்கு சட்ட உதவி கிடைக்க, சிறைத் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

3. ஒரு கைதியின் (மரண தண்டனை பெற்ற கைதி) கருணை மனு குடியரசுத் தலைவராலோ அல்லது ஆளுநராலோ நிராகரிக்கப்பட்டால், அந்தத் தகவல் அவரது குடும்பத்தினருக்குக் கண்டிப்பாக தெரிவிக்கப்படல் வேண்டும்.

4. தண்டனையை நிறைவேற்றும்முன் அந்தக் கைதி தனது குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும்.

5. மரண தண்டனைக் கைதி உள்பட யாராக இருந்தாலும், தனிச் சிறையில் அடைத்து வைப்பது சட்ட விரோதம். சிறைகளில் அந்த நடைமுறையைக் கடைப் பிடிப்பது கூடாது.

6. மனச் சிதைவால் பாதிக்கப்பட்டுள்ள கைதிகளானால் அவர்களுக்கு தூக்குத் தண்டனையை நிறை வேற்றக் கூடாது.

வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கமா?மிக வரலாற்றுப் பெருமையும், மிகச் சிறந்த மனித நேயமும் ஒளிரும் மிக எடுத்துக்காட்டான நெறிமுறை களைக் கொண்ட இத்தீர்ப்பின் அடிப்படையில் உள்ள சிறை நடைமுறைகள் திருத்தப்படுதல் அவசியம், அவசரம்!
இதே அடிப்படையும், அதற்கு மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, தூக்குத் தண்டனை அளிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறி வாளன் போன்றவர்களின் விசாரணை அதிகாரிகளின் மனந்திறந்த பேட்டிகளுக்குப் பிறகு, மறுஆய்வுக்கு உரியவையே!

நிரபராதிகள் தண்டிக்கப்படக் கூடாது!

உச்சநீதிமன்றத்தின் நெறிமுறைகள் அவர்களுக்கும் திறவுகோலாக அமையும் என்று நாடே எதிர்ப்பார்க்கிறது!

ஏற்கெனவே அவர்கள் ஆயுள் தண்டனைக் குற்றவாளி களின் வழமையான அத்தண்டனைக் காலத்திற்குமேல் சிறை வாழ்க்கையை கழித்துவிட்டவர்களானபடியால், அவர்களின் விடுதலை இன்றியமையாதது! இது சட்டப்படியும், மனிதாபிமானப்படியும் சரி என்பதால், இந்தப் புதிய வெளிச்சத்தின்மூலம், சட்ட இருட்டறையில் இருந்து அவர்கள் வெளியே வந்து வாழட்டும்!

பத்து குற்றவாளிகள் தப்பித்தாலும்கூட, ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதுதான் நமது குற்றவியல் சட்டத்தின் அடிப்படை என்பதால், பேரறிவாளன் உள்பட மற்றவர்களும் வெளியே வருவது அவசியமாகும்.


---------------------கி.வீரமணி தலைவர்,    திராவிடர் கழகம்.
சென்னை
22.1.2014

35 comments:

தமிழ் ஓவியா said...


சமூக ஒற்றுமை


ஒரு பெரும் சமூகம் ஒற்றுமையும், சீர்திருத்தமும் பெறவேண்டுமானால், அதிலுள்ள பிரிவுகளான ஒவ்வொரு சிறு சமூகமும், தங்களுக்குள் முதலில் ஒற்றுமையையும், சீர்திருத்தத்தையும் பெற்றாகவேண்டியது மிகவும் அவசியம். - (குடிஅரசு, 3.3.1929)

தமிழ் ஓவியா said...


24 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!


சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புதிதாகத் தேர்வு செய்யப்படுவதற்கான 12 உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகளில் மூன்று பேர் பார்ப்பனர்கள்; ஏற்கெனவே மூன்று பேர் பார்ப்பனர்களாக இருக்கும் நிலையில், ஒரு நீதிமன்றத்தில் குறிப்பிட்ட உயர்ஜாதியினரின் ஆதிக்கத்தை மேலும் நிலை நிறுத்துவது சமூகநீதிக்கு எதிரானது என்றும், இந்தப் பட்டியலில் தாழ்த்தப்பட்ட சமூக நீதிபதி ஒருவர் பெயர்கூட இடம்பெறவில்லை; தாழ்த்தப்பட் டோரில் அருந்ததியர் போன்றவர்களுக்கு வாய்ப்பு, காலங்காலமாக மறுக்கப்பட்ட பிரிவினருக்கும்கூட இடம் இல்லை; அதுபோலவே, மீனவர், சலவையாளர், முடிதிருத்துவோர் போன்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் பிரதிநிதியாக எவரும் இடம்பெறவில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்திருந்தார் (விடுதலை, 17.1.2014).

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை உணர்வை வெளிப்படுத்தவும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக் காலி இடங்களை நிரப்புவதற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பட்டியலை ரத்து செய்யவும் கோரி 24.1.2014 அன்று தமிழ்நாடெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவ்வறிக்கையில் அறிவித்திருந்தார்கள்.

அதற்கான ஏற்பாடுகளைத் தமிழ்நாடெங்கும் கழகத் தோழர்கள் செவ்வனே செய்துகொண்டுள் ளனர். இதில் ஒத்த கருத்துள்ள அமைப்பினரையும் இணைத்துக் கொள்ள ஆவன செய்யுமாறு கழகப் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சமூகநீதியும், சுயமரியாதையும் நம் நாட்டுக்கு மிகவும் அவசியம் என்று பிரபல ஆங்கிலப் பத்திரிகையாளர் தோழர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் அவர்கள் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் திருநாளான பொங்கல் விழாவில் மிகச் சரியாகவே குறிப்பிட்டுள்ளார் (17.1.2014).

திராவிடர் கழகத்தின் தொடர் பணியாகவும் அது அமைந்தே வந்திருக்கிறது என்பது ஊருக்கும், உலகுக்கும் தெரிந்த ஒன்றே! இதே சென்னை உயர்நீதிமன்ற வாயிலின் அருகேகூட நீதித் துறையில் பார்ப்பனர் ஆதிக்கத்தை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில், பலமுறை ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதுண்டு. அதற்கான நல் விளைவுகளும் ஏற்பட்டன என்பதை மறுக்க முடியாது.

நாளை மறுநாளும் இதே சமூகநீதி நோக்கத் தோடே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களும், மதுரைக் கிளை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களும் கூட இதே காரணத்திற்காக நீதிமன்ற வளாகத் துக்குள்ளேயே ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

மூத்த வழக்குரைஞர் திரு.ஆர்.காந்தி அவர்கள் இது தொடர்பாக ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்பமை நீதியரசர் கர்ணன் அவர்களும் தானே முன்வந்து ஆர்ப்பரித்துள்ளார்கள்.

தமிழ்நாட்டுக்கே உரித்தான இந்த மண்ணின் மனப்பான்மையை (Soil Psychology)
சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியும், மூத்த நீதி பதிகளும், உச்சநீதிமன்ற நீதிபதிகளும் உணர்ந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் மக் களுக்குத் தேவையான சட்டங்களை இயற்று கிறார்கள்; அந்தச் சட்டங்களைக்கூட செல்லாது என்று தடை செய்யும் அளவுக்கு உயர் அதிகாரம் படைத்த மய்யங்களாக உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் இருந்து வருகின்றன.

அப்படிப்பட்ட மய்யத்தில் வருணாசிரம உணர்வு, ஜாதீய உணர்வு நிலவும் ஒரு நாட்டில் அனைத்துச் சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது நியாயம் அல்லவா!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி (Justice Social) என்பதுதான் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அது நீதித்துறையிலிருந்து தொடங்கப்பட வேண்டாமா?

திராவிடர் கழகம் கொடுக்கும் இந்தக் குரல் சட்ட ரீதியானது; சமூகத் தளத்தில் முதன்மையாக எழுப்பும் இன்றியமையாத சமூகநீதிக்கானது.

இதனை ஒரு கட்சிப் பிரச்சினையாகக் கருதாமல், ஒன்றிணைந்து குரல் கொடுப்போம், வாரீர்! வாரீர்!! என்று 24 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்திற்கு அழைக் கிறோம்!!!

Read more: http://viduthalai.in/page-2/73918.html#ixzz2rArbUogj

தமிழ் ஓவியா said...


நீதித்துறையிலும் இடஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம் (24.1.2014) முழக்கங்கள்


1. வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!

2. வெல்க வெல்க வெல்கவே
திராவிடர் கழகம் வெல்கவே

3. வெல்க வெல்க வெல்கவே
சமூக நீதி வெல்கவே!

4. தேவை தேவை
நீதித்துறையிலும் நீதித்துறையிலும்
தேவை தேவை
சமூக நீதி சமூக நீதி
தேவை! தேவை!!

5. ஆதிக்கம் ஆதிக்கம்
நீதித்துறையில், நீதித்துறையில்
ஆதிக்கம் ஆதிக்கம்
பார்ப்பனர்களின் ஆதிக்கம்
பார்ப்பனர்களின் ஆதிக்கம்

6. வழக்குரைஞர் தொழிலில்
வழக்குரைஞர் தொழிலில்
அனுபவமே இல்லாத
அனுபவமே இல்லாத
பார்ப்பனர்களை பார்ப்பனர்களை
நீதிபதியாக்குவதா? நீதிபதியாக்குவதா?


7. பாராட்டுகிறோம், பாராட்டுகிறோம்
சமூகநீதிக்காக சமூகநீதிக்காக
குரல்கொடுத்த குரல்கொடுத்த
நீதியரசர் கர்ணன் அவர்களை
நீதியரசர் கர்ணன் அவர்களை
பாராட்டுகிறோம் - பாராட்டுகிறோம்

8. மத்திய அரசே, மத்திய அரசே
அனைத்துத் துறைகளிலும்
அனைத்துத் துறைகளிலும்
இடஒதுக்கீடு இடஒதுக்கீடு
கொண்டு வா! கொண்டு வா!!

9. நீதித்துறையில் நீதித்துறையில்
வாய்ப்பு மறுக்கப்பட்ட
வாய்ப்பு மறுக்கப்பட்ட
ஜாதிப் பிரிவினருக்கு
ஜாதிப் பிரிவினருக்கு
இடம் கொடு! இடம் கொடு!!

10. நீதித் துறையில் நீதித் துறையில்
பெண்களுக்கு பெண்களுக்கு
வாய்ப்பு கொடு! வாய்ப்பு கொடு!

11. தாழ்த்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட
பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட
மிகவும் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட
பெண்களுக்கு பெண்களுக்கு
இடம் கொடு, இடம் கொடு!

12. மாற்றுக! மாற்றுக!!
நீதிபதிகளே நீதிபதிகளை
நியமனம் செய்யும்
நியமனம் செய்யும்
கொலிஜியம் முறையை
கொலிஜியம் முறையை
மாற்றுக! மாற்றுக!!

13. போராடுவோம், போராடுவோம்!
வெற்றி கிட்டும்வரை வெற்றி கிட்டும்வரை
போராடுவோம் போராடுவோம்!

14. வென்றெடுப்போம்
வென்றெடுப்போம்
தமிழர் தலைவர் தலைமையிலே
தமிழர் தலைவர் தலைமையிலே
சமூக நீதியை சமூக நீதியை
வென்றெடுப்போம்!
வென்றெடுப்போம்!!

15. வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்கவே
அண்ணல் அம்பேத்கர் வாழ்கவே!!

- திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/page-4/73899.html#ixzz2rArvEUp1

தமிழ் ஓவியா said...

புதுச்சேரியில் மார்ச் மாதத்தில் மதவாத, ஜாதீயவாத ஒழிப்பு சமூகநீதிப் பாதுகாப்பு மாநாடு வ.சு.சம்பந்தம் படத்திறப்பு நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் அறிவிப்பு


பெரியார் இல்லத்தின் நுழைவுவாயிலுக்கு வ.சு. சம்பந்தம் பெயர் சூட்டப்படும்

புதுச்சேரியில் மார்ச் மாதத்தில் மதவாத, ஜாதீயவாத ஒழிப்பு சமூகநீதிப் பாதுகாப்பு மாநாடு

வ.சு.சம்பந்தம் படத்திறப்பு நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் அறிவிப்பு

புதுச்சேரி, ஜன. 22- திராவிடர் கழக கடலூர் மண்டலத் தலைவர் மான மிகு வ.சு.சம்பந்தம் அவர்களின் படத் திறப்பு, நூல் வெளியீடு நினைவேந்தல் நிகழ்ச்சி 18.1.2014 சனிக்கிழமை காலை 10 மணிக்கு புதுச்சேரி என்.டி. மகால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலை மையேற்று சுயமரியாதை சுடரொளி சம்பந்தம் அவர்களின் படத்தினை திறந்து வைத்து மரியாதை செலுத் தினார். கருப்புச் சட்டையின் நெகிழ வைத்த நெருப்பு வாழ்க்கை என்ற சம்பந்தம் வாழ்க்கைக் குறிப்பு நூலினை வெளியிட்டார்.

நூலினை சமூகநீதிப் பேரவையின் தலைவர் முன்னாள் அமைச்சர் இரா. விசுவநாதன், புதுவை திராவிட முன் னேற்றக் கழக அமைப்பாளர் டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன், புதுவை முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகி ராமன், புதுவை தமிழ்ச்சங்க தலைவர் வி.முத்து திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன், பெரியார் பெருந்தொண்டர் செய்யாறு பா.அருணாசலம், சிவ கங்கை வழக்குரைஞர் இன்பலாதன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

சம்பந்தம் அவர்கள் பெயர்த்தி இ.தாமரையின், செம்மொழி வாழ்த் துடன் தொடங்கிய நினைவேந்தல் நிகழ்ச்சியில் சம்பந்தத்தின் வாழ்க்கைக் குறிப்பினை திராவிடர் கழக பொதுக் குழு உறுப்பினர் வே.அன்பரசன் வாசித் தார். திராவிடர் கழக அமைப்பாளர் கே.குமார் சம்பந்தத்தின் நினைவேந்தல் வீரவணக்கப் பாடலை பாடினார். நூல் வெளியீட்டுக்கான தொடக்க உரையை மீனா சம்பந்தம் பொருட்டு அவரது மகள் அமுதச் செல்வி வாசித்தார். வந்திருந்த அனைவரையும் ஜெனோ மாறன் பில்டர்ஸ் நிர்வாக இயக்குநர் ச.தங்க மணிமாறன் வர வேற்று உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...

திண்டிவனம் மாவட்ட தி.க. தலைவர் கா.மு.தாஸ், பேராசிரியர் கல்யாணி, புதுவை தி.மு.க. அமைப் பாளர் டாக்டர் எம்.ஏ.சுப்பிரமணி யன், தமிழ்ச்சங்கத் தலைவர் வி.முத்து, சமூகநீதிப் பேரவை செயலாளர் இரா. தாமோதரன், தி.க. பொதுச் செயலா ளர் துரை.சந்திரசேகரன், புதிய நீதி கட்சித் தலைவர் பொன்னுரங்கம், புதுவை முன்னாள் முதல்வர் ஆர்.வி. ஜானகிராமன், சமூகநீதி பேரவைத் தலைவர் இரா.விசுவநாதன், தி.க. செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு ஆகியோர் வீரவணக்க உரையாற்றிய பின் நிறையவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் நினைவேந்தல் உரையாற் றினார்.

தமதுரையில், மறைந்த சம்பந்தம் அவர்களின் தொண்டினை எடுத்துக் கூறினார். புதுச்சேரியில் பெரியார் இல்லம் கட்டுவதற்கு உறுதுணையாக இருந்த மறைந்த சம்பந்தம், சமூக நீதிப் பேரவையின் தலைவர் விசுவநாதன் ஆகியோரது புகைப்படம் பெரியார் இல்லத்தில் மய்யப்பகுதியில் இடம் பெறும்.

பெரியார் இல்லத்தின் நுழைவு வாயிலில் பெரியார் பெருந்தொண்டர் சம்பந்தம் நுழைவுவாயில் என்று பெயர் சூட்டப்படும்.

புதுச்சேரியில் மதவாதம், ஜாதீய வாதம், சமூக நீதிக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் மார்ச் மாதத்தில் மதவாத, ஜாதீயவாத ஒழிப்பு சமூகநீதிப் பாது காப்பு மாநாடு மிகப் பெரிய அளவில் சிறப்பாக நடைபெறும் என்றும் மேலும் பல்வேறு கருத்துகளை எடுத்துக் கூறினார்.
கடலூர் மண்டல திராவிடர் கழக தலைவராக சிவ.வீரமணியை தமிழர் தலைவர் அறிவித்தார்.

வ.சு.சம்பந்தம் அவர்களின் இளைய மகன் ச.இளங்கோவன் அனைவருக் கும் நன்றி தெரிவித்தார்.

பகுத்தறிவாளர் கழக புதுவை மாவட்ட செயலாளர் கோ.மு.தமிழ்ச் செல்வன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத் தார். புதுவை சட்டபேரவை எதிர்க் கட்சித் தலைவர் முன்னாள் முதல்வர் வெ.வைத்தியலிங்கம் அவர்களின் நினைவேந்தல் உரை வாசிக்கப்பட் டது.

படத்திறப்பு நிகழ்ச்சியில் மோகனா வீரமணி, மேனாள் சட்டமன்ற உறுப் பினர்கள் இரா.இராமநாதன், நாரா. கலைநாதன், ஜெயமூர்த்தி மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் அனைத்து அரசியல் கட்சி, சமுதாய இயக்கங் களின் ஜெனோ மாறன் பில்டர்ஸ் நண்பர்களும், ஊழியர்களும் கலந்து கொண்டனர். புதுச்சேரி திராவிடர் கழகத்தின் சார்பில் துணைத் தலைவர் சு.துளசிராமன், செயலாளர் கி.அறி வழகன், பொதுக் குழு உறுப்பினர்கள் சிவ.வீரமணி, ஜி.கிருஷ்ணமூர்த்தி, லோ.பழனி, பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வீர.இளங்கோவன், இளை ஞர் அணித் தலைவர் தி.இராசா மற் றும் தோழர்கள் ஆதிநாராயணன், பாலமுருகன், பாட்ஷா, திராவிடச் செல்வன், முத்துவேல், ராமன், சாம்ப சிவம், சண்முகம், உலகநாதன், ஆறு முகம், சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொறுப்பாளர்கள் எல்லை.சிவகுமார், கீதநாதன் மற்றும் தோழர்களும் கடலூர் மண்டல திராவிடர் கழகச் செயலாளர் ஆர். பன்னீர்செல்வம், மாவட்ட திராவிடர் கழக தலைவர் செயலாளர் பொறுப் பாளர்களும் கலந்து கொண்டனர்.

திண்டிவனம் நகரக் கல்வி மேம் பாட்டுக்குழு பிரபா.கல்விமணி, இரா.முருகப்பன், இரா.நசீர் அகமது, இரா.கனகசபாபதி, ஆ.வெங்கடேசன், செ.விசுவதாசு, வழக்குரைஞர் மு. பூபால் ஆகியோர் கலந்து கொண் டனர். புதுச்சேரி திராவிடர் கழகத்தின் சார்பில் நிகழ்ச்சிக்கு வருகை தந்த கழகத் தலைவருக்கு கொக்குபார்க் அருகில் தலைவர் இரா.இராசு தலை மையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்த தமிழர் தலைவரை புதுச்சேரியில் முதலில் பத்மபூஷன் விருதை பெற்ற திருபுவனை பகுதியை சேர்ந்த இயற்கை விஞ்ஞானி வேங்கடபதி அவர்கள் சந்தித்து தனது அன்பினை பரிமாறிக் கொண்டார்.

புதுச்சேரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அமைப்புச் செயலாளர் சு. பாவாணன் செயலாளர் அமுதவன் ஆகியோர் தோழர்களுடன் வருகை தந்து தமிழர் தலைவர்க்கு சால்வை அணிவித்தனர்.

மறைந்த சுயமரியாதை சுடரொளி வ.சு.சம்பந்தம் அவர்களின் நினை வேந்தல் நிகழ்ச்சியில் அவருடைய இயக்க பணிகள், போராட்டங்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வுகள் தமிழர் தலைவருடன் பல்வேறு காலங்களில் பேசுதல் போன்ற அரிய நிகழ்வு களுடன் கூடிய 150-க்கும் மேற்பட்ட நிழற்படங்களை ஒரு நிழற்பட கண் காட்சியாக மண்டப வாயிலில் அமைக் கப்பட்டு இருந்ததை அனைவரும் பார்த்து வியந்தனர்.

படத்திறப்பு, நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகள் தமிழர் தலைவரின் வீரவணக்க உரையுடன் முடிவுற்றது. சம்பந்தம் வாழ்க்கைக் குறிப்பு புத்தகம் விற்பனைத் தொகையை திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள தந்தை பெரியார் 95 அடி உயர பேருருவச் சிலைக்கும் பெரியார் உலகத்திற்கும் நன்கொடையாக வழங்கப்படும் என்பதை தெரிவித்தனர்.

Read more: http://viduthalai.in/page-4/73896.html#ixzz2rAtj1cqj

தமிழ் ஓவியா said...


குஜராத் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கான முன் மாதிரியா?


நரேந்திரமோடி விகாஷ் புருஷ் எனும் வளர்ச்சியின் நாயகனா?

குஜராத் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கான முன் மாதிரியா?

- முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்


இல்லாததையெல்லாம் சொல்லி, ஆகா, ஓகோவென்று மக்கள் மத்தியில் ஒரு மாயையை உருவாக்குவதற்கு பா.ஜ.க. தலைமை மட்டுமல்ல ஆப்கோ வேர்ல்டுவைடு (ஹஞஊடீ றுடீசுடுனுறுஐனுநு) என்ற நிறுவனம் உலகம் முழுவதும் மோடியைப் பற்றிப் பிரச்சாரம் செய்து வருகிறது. இதற்காக இந்த நிறுவனத் திற்கு மாதம் 25 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கொடுக்கப்படுவதாகச் சொல் லப்படுகிறது. ஹிட்லர் தலைமையிலான ஜெர்மனியில் பொய்யை மீண்டும், மீண்டும் சொல்லி மெய்யாக்குவதற்கு நியமிக்கப்பட்ட கோயபல்ஸ் நடத்திய பிரச்சாரத்தைப் போன்றே மோடியைப் பற்றியும் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. பா.ஜ.க குறிப்பாக அக்கட்சி முன்னிறுத்தும் மோடியை ஒரு பகுதி கார்ப்பொரேட் கம்பெனிகள் ஆதரிக் கின்றன.இளைஞர்கள் மத்தியிலும் நடுத்தர மக்கள் மத்தியிலும் மோடி பற்றிய மாயையை உருவாக்குவதற்கு ஒரு பகுதி ஊடகங்கள் முயல்கின்றன என நாம் அறிந்த அதிர்ச்சி தரும் உண்மையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகிறார்.

ஆப்கோ வேர்ல்டுவைடு


தமிழ் ஓவியா said...

ஆப்கோ வேர்ல்டுவைடு என்னும் மக்கள் தொடர்பு நிறுவனம் இந்தி யாவைப் பாதித்து கொண்டிருக்கிற அனைத்து சமூகப்பிணிகள் அரசியல் கோளாறுகள் ஆகியவற்றிற்கு ஒரே ஒரு தீர்வாக மோடியைக் காட்ட ஒரு மாதத்திற்கு 25,000 டாலர்கள் என்கிற கட்டணத்துடன் வாடகைக்கு ஏற்பாடு செய்யப் பெற்றுள்ளது. ஆப்கோ நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் இருப்பவர்கள் இசுரேலிய நாட்டின் அயலுறவுத்துறை, பாதுகாப்புப்படை ஆகியவற்றிலிருந்து ஓய்வு பெற்ற அலுவர்கள் ஆவர்.

இந்த ஆப்கோ நிறுவனத்தின் யோக்யதை எப்படிப்பட்டது தெரியுமா? புகையிலை புற்றுநோய்க்குக் காரணம் எனும் ஆதாரத்தைப் பொய்த்துப்போகச் செய்து அமெரிக்க புகையிலை லாபியை ஆதரிக்க முன்னணி நிறுவனங்களை உருவாக்கினர் எனும் செய்தி வெளி யானபோது, ஆப்கோ எனும் இந்நிறு வனம் எத்தகைய கீழான தந்திரங்களை யும் கையாளக்கூடியது என்பது வெளி யானது. மோடியை முன்னிறுத்துகின்ற பி.ஜே.பி யின் வகுப்புவாதக் கொள் கைகள் எனும் புற்றுநோய், எய்ட்சுக்கு ஒப்பான அரசியலை நிறைவேற்ற இந்த ஆப்கோ நிறுவனம் இன்று முன்வந் துள்ளது.

தமிழ் ஓவியா said...


மோடியை பி.ஜே.பி முன்னிறுத்துவது தனிப்பட்ட இலட்சியங்களை விடாது துரத்திக்கொண்டிருக்க, தனி மனிதரின் இலட்சியத்தைச் செயல்படுத்துவதற் கான செயல் அல்ல. இச்செயல், உள் நாட்டு, அந்நிய கார்ப்பொரேட்டுகள் ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் செயல், இந்தக்கார்ப்பொரேட்டுகள் தங்களால் வழி நடத்தப் பெறும் சீர்திருத்தப்பெற்ற இந்தியா எனும் கனவை நிறைவேற்று வதற்கான ஒரு வாய்ப்பாக மோடி என்கிற முன்மாதிரியைப் பார்க்கின்றனர் எனப் பொதுவுடைமையினர் கருது கின்றனர்.

நம்மைப் பொறுத்தவரை மோடியை நாம் காண்கிற கண்ணோட்டமே வேறு. இந்துத்துவா கொள்கைக்கு பிஜேபி கூட்டணிக் கட்சிகள் விதித்த தடை களால் பொறுமையிழந்த ஆர்.எஸ்.எஸ் - மோடியின் தலைமையில் இந்துத்துவா பயிர் செழித்து வளரும் என்று நம்புவதால் அதனுடைய ஆசீர்வாதத்தையும் பெற்றிருக்கிறது என நம்புகிறோம்.

தமிழ் ஓவியா said...


மோடி ஒரு திறமையான நிர்வாகி எனும் கட்டுக்கதையைத் தோலுரித்துக் காட்டுவோம்.

பிஜேபி யும், மோடி ஆதரவாளர்களும் இந்தியாவிற்கான முன்மாதிரி வளர்ச் சியாகக் குஜராத் வளர்ந்திருப்பதாகக் காட்டுகிறார்கள் மாநில உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் குஜராத் முதல் ஆறு மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறதாம். உற்பத்தித் துறைகளில் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது. குஜராத் அதிக மூலதனத்தை ஈர்க்கிற மாநிலங்களில் மாநில உள்நாட்டு உற்பத்தியில் அதி அளவிலான பங்கைக் கொண்டுள்ளது. ஆனால் துடிப்பான குஜராத் உச்சி மாநாடுகள் நடத்திய பிறகு முதலீடு குவிந்ததாகக் கூறும் முதலீடு மிகவும் குறைவாகும். 2009-இல் திரட்டப் பெற்றதாகக் கூறப்பெற்ற முதலீட்டில் 32 விழுக்காடு மட்டும் தான் நடை முறைக்குச் சாத்தியமானது 2011 அய்ப் பொறுத்தவரை அது வெறும் 0.5 விழுக்காடு தான் என மோடியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவரே கூறுகிறார்.

சமூக ஏற்றத்தாழ்வுகள் நிரம்பிய மாநிலம் குஜராத். அதுவும் உ.பி. உள் ளிட்ட பிற மாநிலங்களோடு ஒப்பிடு கையில் குஜராத்தில் ஊட்டச்சத்து குறைபாடுகள் அதிக அளவு இருக்கும் அதுவும் இந்த ஊட்டச்சத்து குறைபாடு சத்திஷ்கார், ஒடிசா ஆகிய மாநிலங் களுக்குச் சமமாக உள்ளது.

இதை நாம் சொல்லவில்லை.பன் னாட்டு நிறுவனமான யூனி செஃபின் சமீபத்திய அறிக்கை குஜராத் குறித்துக் கூறுவது இது. குஜராத்தில் உள்ள குழந்தைகளில் ஒவ்வொரு இரண்டாவது குழந்தை ஊட்டச்சத்து குறைவாகவும் நான்கில் மூன்று குழந்தைகள் இரத்தச்சோகை யோடு இருப்பதாகவும், மூன்றில் ஒரு தாய் வரையறுக்கப் பெற்ற ஊட்டச் சத்தின் அளவைவிடக் குறைவாக எடுத்துக்கொள்கிறார்கள் என்கிறது.

இந்தியாவில் உள்ள குழந்தைகள் பற்றிய இந்திய அரசின் அறிக்கையில் சமூக முன்னேற்றத்திற்கான முதன்மை அளவுகோலாகக் குழந்தை இறப்பு விகிதம் கருதப்பெறுகிறது. பிறக்கும் 1000 குழந்தைகளில் 44 குழந்தைகள் இறந்து விடுகின்றன எனும் அடிப்படையில் குஜராத் 11 ஆவது இடத்தில் உள்ளது. ஏனெனில் குஜராத் பெண்கள் உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்று பூசி மெழுகு கிறார் மோடி என்றால் அவருடைய துடிப்பான குஜராத்தில் உள்ள ஏழை எளியவர்கள் உழைக்கும் பிரிவினரை அவமதிக்கிறார் என்பதுதான் பொரு ளாகும்.

ஏழைகளுக்கான உள் கட்டமைப்பு வசதிகளைச்செய்து கொடுப்பதில் குஜராத் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. கிராமப்புறத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான மக்களுக்கு சுகாதார வசதிகள், தண்ணீர் வசதிகள் மறுக்கப் பெறுகின்றன. அவர்களில் 67 விழுக்காட்டினருக்குக் கழிப்பறை வசதி கிடையாது. 16.7 விழுக்காட்டினருக்கு குடிதண்ணீர் வசதியும் கிடையாது.

குஜராத் மாதிரி வளர்ச்சி தலித்து கள், பெண்கள், ஆதிவாசிகளுக்கு எதிராக பாகுபாடு காட்டக்கூடியதாக இருக்கிறது. ஆதிவாசிகள் வசிக்கும் அனைத்துப் பகுதிகளும் எந்தவிதமான வளர்ச்சியையும் காணவில்லை அனைத்து வகையான வளர்ச்சிக் காரணிகளும் தாழ்த்தப்பட்டோர், பெண்கள், ஆதிவாசிகள் ஆகியோ ருக்கு எதிரான பாகுபாட்டையே காட்டுகின்றன.

குஜராத்தில் கல்வி, சுகாதார வசதிகள் குறித்துத் திட்டக்குழு ஆய்வு செய்து கல்வி, சுகாதாரம் ஆகிய இரண்டிலும் தோல்வி கண்டுள்ளது என்று கூறுகிறது. குழந்தைகளைத் தொடர்ந்து பள்ளியில் படிக்க வைப்பதில் குஜராத் 18 ஆவது இடத்தில் இருப்ப தாக யுஎன்டிஅய் புள்ளி விவரம் கூறுகிறது.

மேல்நிலைக் கல்வியில் சேரும் குஜராத் மாணவர்களின் ஒட்டு மொத்த விழுக்காடு தேசிய விழுக்காடான 39.3 அய் விட மூன்று புள்ளிகள் குறைவு. தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்கள் பள்ளி யிலிருந்து இடை நிற்கும் விழுக்காடு 57.9. இது நாட்டின் சராசரியான 49.3அய் விட அதிகம். எந்த அளவு கோலின்படி என்ன சமாதானம் சொன்னாலும் இது வெட்கப்படக்கூடிய வேதனைப் படக்கூடிய அளவு என்பதில் அய்யமேயில்லை. இந்தியாவிற்கே முன் மாதிரியாக இருக்கக்கூடிய ஆட்சியின் அதிர்ச்சி தரக்கூடிய ஓர் எடுத்துக்காட்டு பெண் சிசுக்கொலை. இதனைத் தொடர்ந்து மோசமான பாலின விகிதம் போன்றவை தான். 2001 இல் தொடங்கி 2011 வரை குஜராத்தின் பாலின விகிதம் 921-லிருந்து 918 என மிகவும் மோசமடைந் தது. குழந்தைகள; பாலின விகிதம் 0-6 வயது கடந்த பத்து ஆண்டை விடச் சற்றுப் பரவாயில்லை என்றாலும் கூட 2011 இல் 886 ஆக இருந்தது என்று 2011 இல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சி யளிக்கக்கூடியது.

நிலைமை இப்படி இருக்க இங்கே இருக்கும் சில பிரகிருதிகள் குஜராத் என்னவோ சிங்கப்பூர், லண்டன், மலேசியா போல் மாறிவருவதாகக் கதை கட்டுவிடும் அவலத்தை என்ன சொல்ல!

- தொடரும்

Read more: http://viduthalai.in/page-2/73919.html#ixzz2rAtsyGLZ

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க.வின் இராமர் கோவில் திட்டம் கைவிடப்படவில்லை!


புரிந்துகொள்வீர்!

பா.ஜ.க.வின் இராமர் கோவில் திட்டம் கைவிடப்படவில்லை!

Question: There was no reference to the Ram temple in Modi’s speech. Have you kept Ram Mandir out of your agenda this time?

Answer: No, no. We will announce our manifesto. You will have to wait for it to find out what is in the agenda and what is not. Our commitment to our basic issues is always there. Whether each of them becomes an election issue or not is a separate subject. Mandir has always been in our agenda. Wait for our manifesto.

இதன் தமிழாக்கம் வருமாறு:

கேள்வி: மோடியின் உரைகளில் ராமன் கோவில்பற்றி எதுவும் இடம்பெறுவதில்லையே, ஏன்?

அருண்ஜேட்லி (மாநிலங்களவை பி.ஜே.பி. தலைவர் பதில்: தேர்தல் அறிக்கையில், ராமன் கோவில் கட்டப்படுவது குறித்த அறிவிப்பு வெளிவரும். எங்கள் அஜண்டாவில் என்ன இருக்கிறது என்பதைத் தேர்தல் அறிக்கை வெளிவரும்வரை பொறுத்திருக்கவேண்டும்; எங்களுடைய அடிப்படை நோக்கம், குறிப்பாக ராமன் கோவில் கட்டுவது என்பதில் மாற்றம் இல்லை. எங்கள் தேர்தல் அறிக்கையில் காணப் போகிறீர்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/73915.html#ixzz2rAuAe8te

தமிழ் ஓவியா said...


கழகத் தோழர்களின் முக்கிய கவனத்துக்கு நாளை ஆர்ப்பாட்டம் நிறுத்தி வைப்பு!


சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புதிதாக நியமனம் செய்யப்பட வேண்டிய 12 நீதிபதிகளுக்கான பட்டியலில் மூன்று பார்ப்பனர்கள் இடம் பெற்றுள்ளனர். ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 பார்ப்பன நீதிபதிகள் இருக்கிறார்கள்.

மேலும் வழக்குரைஞர் தொழிலில் போதிய அனுபவமும்கூட இல்லாதவர்கள் எல்லாம் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அதே நேரத்தில் இதுவரை நீதித்துறையில் வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் பகுதியினர் ஏராளம் உள்ளனர்; (தாழ்த்தப் பட்டவர் ஒருவர்கூட இல்லை) அவர்களுக்கெல்லாம் வாய்ப்பு மறுக்கப்பட்டு, மேலும் மேலும் பார்ப்பன ஆதிக்கம் நீதித்துறையில் இடம் பெற்று வருவதை எதிர்த்தும், கண்டித்தும் திராவிடர் கழகம் தொடர்ந்து போராடி வந்திருக்கிறது.

கடந்த 16.12.2013 அன்றுகூட சென்னையிலும், மதுரையிலும் இதற்கான ஆர்ப்பாட்டத்தைக் கழகம் நடத்தியுள்ளது. தற்போது சென்னை உயர்நீதிமன்ற இரு பால் வழக்குரைஞர்களும் சமூக அநீதியை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர்நீதி மன்ற நீதிபதியாக உள்ள உயர்திரு சி.எஸ். கர்ணன் அவர்களே தானாக முன்வந்து இந்தப் பிரச்சினையில் சமூக நீதிக்காகக் குரல் கொடுத்தது பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி விட்டது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வழக் குரைஞர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் நேற்று (22.1.2014) மத்திய சட்டத்துறை அமைச்சர் திரு. கபில்சிபல், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உயர்திரு ப. சதாசிவம் மற்றும் சில நீதிபதிகள் சந்தித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பதவிக் காகப் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் உள்ள குறை பாடுகள் மற்றும் சமூக அநீதி பற்றி எடுத்துரைத்தனர். மத்திய சட்ட அமைச்சரும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் இந்தப் பிரச்சினையில் மறுபரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர். இதனை ஏற்றுக் கொண்டு வழக்குரைஞர்களும் தங்கள் போராட்டத்தைக் கை விட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திராவிடர் கழகத்தின் சார்பில் நாளை (24.1.2014) நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் நிறுத்தி வைக்கப்படுகிறது. தேவைப்பட்டால் அந்தப் போராட்டம் மீண்டும் நடத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.

சென்னை 23.1.2014

Read more: http://viduthalai.in/e-paper/73959.html#ixzz2rGte8Axv

தமிழ் ஓவியா said...


நீதித்துறையில் உயர்ஜாதி பார்ப்பனர் ஆதிக்கம்: எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் கொந்தளிப்பு!


சென்னை, ஜன.23- நீதித் துறையிலும் இடஒதுக்கீடு தேவை என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலை வர் தொல். திருமாவளவன் அவர் விடுத்துள்ள அறிக்கை யில் கூறப்பட்டு இருப்பதாவது:

நீதிபதிகள் மற்றும் நீதித் துறையின் மீதான நம்பிக்கை என்பது சமூக நீதியைக் காப்பாற் றுவதிலும்தான் அடங்கியிருக் கிறது. ஆனால், நீதிபதிகளின் நியமனத்தில் நீண்ட நெடுங்கால மாக சமூக நீதி பின்பற்றப்படுவ தில்லை. இது நீதியைக் காப்பாற் றும் முழுமையான நடவடிக்கை யாகாது. நாட்டின் ஆட்சி, நிர்வாக அமைப்புகளில், நிர்வகிப்பவர் களைத் தெரிவு செய்யும் முறை யில், சில குறைபாடுகளும் விமர் சனங்களும் இருந்தாலும், வெளிப் படைத் தன்மையே நடை முறையில் இருந்து வருகின்றது. ஆனால், நீதித்துறையில் மட்டும் அத்தகைய வெளிப்படைத் தன்மை இன்னும் வாய்க்காமல் இருக்கிறது. வெளிப்படைத் தன்மை இருப்பதனால்தான் நாட்டை நிர்வகிக்கும் இடங்களில் ஒடுக்கப்பட்ட மற்றும் சாதாரண குடிமக்களிலிருந்து யாராவது ஒருவர் உயர் பதவியில் அமர முடிகிறது. இல்லையெனில், இந்த வாய்ப்பும் அவர்களுக்கு மறுக்கப் படும். 20 பேர் மட்டுமே - தாழ்த்தப்பட்டோர்

ஆனால், தகுதி மற்றும் திறமையைக் காரணம் காட்டி நீதித் துறையில் இது தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவது பெரும் அநீதியாகும். தற்போது, இந்தியா விலுள்ள அனைத்து உயர்நீதிமன் றங்களிலும் நியமிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த நீதிபதிகளில் 20 பேர் மட்டுமே தாழ்த்தப்பட்டோர் உள்ளனர். இந்தியாவிலேயே அதிக பட்சமாக சென்னை உயர்நீதிமன் றத்தில் மட்டும் தாழ்த்தப்பட் டோர் 8 பேர் நீதிபதிகளாக இருக் கிறார்கள். அதிலும் 2 பேர் பதவி மூப்பின் அடிப்படையில் வந்தவர் கள். 6 பேர் மட்டுமே நியமனம் செய்யப்பட்டவர்கள். முற்போக்கு மாநிலமாகக் கருதப்படக்கூடிய தமிழகத்தில், 16 பேர் தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடியினராக இருக்க வேண்டிய சென்னை உயர்நீதிமன்றத்தில், வெறும் 8 பேர் மட்டுமே இருக்கிறார்கள் என்பது பெரும் அவலம். அப்படி யென்றால் பிற மாநிலங்களில் இருக்கக்கூடிய இத்தகைய அவ லத்தைப் பார்க்கும்போது ஒடுக்கப் பட்ட மக்களுக்கு எவ்வளவு பெரிய அநீதி இழைக்கப்பட்டுள் ளது என்பது புரியும்.

மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து உயர்நீதிமன்றங்களி லும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய பிரதிநிதித் துவம் வழங்கப்படவேயில்லை என்பது கசப்பான உண்மையாகும். அதேவேளையில், அனைத்து உயர்நீதி மன்றங்கள் மற்றும் உச்ச நீதி மன்றத்தில் முற்பட்ட வகுப்பின ரின் ஆதிக்கமே மேலோங்கியிருக் கிறது என்பதை அறிய முடிகிறது.

தற்போது சென்னை உயர் நீதிமன்றத்திற்கான நீதிபதி கள் நியமனத்திற்கு பரிந்துரைக்கப் பட்டுள்ள 12 பேர் கொண்ட பட் டியலில் முற்பட்ட வகுப்பின ருக்கே பெரும்பான்மையான பிரதிநிதித்துவம் அளிக்கப்பட் டுள்ளதாகத் தெரிகிறது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற வழக் குரைஞர்கள் தொடர் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த 12 பேரில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் 6 இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதை அறிந்து, அதனை எதிர்த்து வழக்குரை ஞர்கள் போராட்டம் நடத்து கிறார்கள். இந் தத் தெரிவுகள் தகுதி, திறமையின் அடிப் படையில் நடைபெற வில்லை என்பதை வழக்குரைஞர்கள் ஆதாரத்துடன் சுட்டிக் காட்டிப் போராடி வருகின்றனர். தகுதி யுள்ளவர்களிலிருந்து நீதிபதிகள் நியமிக்கப் பட வேண்டும் என்ப தில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அந்தத் தகுதி, திறமை உள்ளவர்கள் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, சிறுபான்மையின மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பி னரிலும் உள்ளனர் என்பதை யாரும் மறுக்க இயலாது. இத் தகைய ஒடுக்கப்பட்ட சமூகங் களிலிருந்து திறமையும், தகுதியும் உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமானால் நீதிபதிகள் நியமனம் என்பது வெளிப்படை யானதாக இருக்க வேண்டும். எனவே, இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றுவரும் வழக்குரைஞர் சமூகத்தின் போராட் டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்று ஆதரிக்கிறது.

மேலும், உயர் நீதிமன்றங்களி லும், உச்ச நீதிமன்றத்திலும் நீதி பதிகள் நியமனத்தில் இடஒதுக் கீட்டைப் பின்பற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுப்பதோடு, நீதித்துறையில் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தில், உரிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர வேண்டுமெனவும் இந்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/73960.html#ixzz2rGtqS6nu

தமிழ் ஓவியா said...


அருண்ஜேட்லி சொல்லுவதைக் கவனியுங்கள்! கவனியுங்கள்!!


450 ஆண்டு கால வரலாறு படைத்த சிறுபான்மையின மக்களான முசுலிம் மக்களின் அயோத்தி பாபர் மசூதியை இடித்த குற்றவாளி கள், அந்த இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயிலைக் கட்டுவோம் என்றும், அந்தத் திட்டம் எங்களின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் என்றும் பி.ஜே.பி.யின் முன்னணி தலைவர்களுள் ஒருவரும், பிஜேபியின் மாநிலங் களவைத் தலைவருமான அருண்ஜேட்லி பச்சை யாக, கொஞ்சமும் ஒளிவு மறைவு இல்லாமல் பேட்டி கொடுத்துள்ளார். (Economic Times Dated 22.1.2014) என்றால் இதனை எந்தத் தரத்தில் வைத்து எடை போடுவது?

பிஜேபியின் மக்களவைத் தலைவர் சுஷ்மா சுவராஜ் நாடாளுமன்றத்திலேயே என்ன பேசினார்?

பாபர் மசூதியை இடித்தது பா.ஜ.க. மற்றும் சங்பரிவார் அமைப்புகள்தான் - இதைச் செய் ததற்காக என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ளோம் (தினமலர் 9.12.2009) என்று சொல்ல வில்லையா?

இந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் எல்லாம் சாதாரணமானவர்கள் அல்லர்; எல்.கே. அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, அசோக் சிங்கால், உமாபாரதி போன்ற பிஜேபியின் பெருந் தலைவர்கள்.

21 ஆண்டுகள் ஓடி விட்டன. இதற்குப்பிறகும் கூட குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை; இன்னும் சொல்லப் போனால் இந்தக் குற்றத்தைச் செய்த பிறகு இந்தியாவின் துணைப் பிரதமராக அத்வானி வந்தார், முரளி மனோகர் ஜோஷி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரானார். உமாபாரதி மத்தியப் பிரதேசத் தில் முதல் அமைச்சராக வந்தார் என்றால், இந்தக் கேவலத்தை எந்த வார்த்தைகளால் எடுத்துச் சொல்லுவது?

இந்த இழி செயலைச் செய்ததன் மூலம் இந்தியாவின் மதச் சார்பற்ற தன்மையை இடித்து நொறுக்கினர். இந்திய அரசமைப்புச் சட்டத்தை கிழித்து எறிந்தனர். இந்நாட்டுக் குடி மக்களான சிறுபான்மை மக்களுக்குப் பாது காப்பற்ற ஒரு பயங்கரத் தன்மையை ஏற்படுத்தி விட்டனர்.

இப்பொழுது அடுத்த கட்டமாக பாபர் மசூதியை இடித்த இடத்தில் ராமன் கோயிலைக் கட்டுவோம் - அதனைக் கட்சியின் தேர்தல் அறிக்கையிலேயே இடம் பெறச் செய்வோம் என்று சொல்லுகிற அளவுக்கு தங்களின் இழி குணத்தை, காட்டு விலங்காண்டித்தனத்தை பேட்டியாகக் கொடுக்கிறார்கள் என்றால், இந்திய நாட்டு மக்கள் மிகவும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியவர்கள் என்பதை மறந்து விடக் கூடாது.

இதன் மூலம் பயங்கரவாதத்தை, வன் முறையை தங்களின் கொள்கையாகக் கொண் டவர்கள், அணுகுமுறையாகக் கொண்டவர்கள் நாட்டை ஆளத் துடிதுடித்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த நிலை உள்நாட்டு மக்கள் மத்தியில் மட்டுமல்ல; உலக நாடுகள் மத்தியிலும் எத்தகைய அதிர்வை ஏற்படுத்தும் என்பதைச் சிந்திக்க வேண்டும். பொய்ப் பிரச்சாரத்தில் புத்தியைப் பறி கொடுத்தால் அதன் ஒட்டு மொத்தமான விபரீதத்தை நாட்டு மக்கள்தான் அனுபவிக்க நேரிடும் என்பதை மறந்துவிடக் கூடாது!

அதுவும் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ள 2000 சிறுபான்மை மக்களை நர வேட்டையாடிக் கொன்ற நரேந்திரமோடி, பிரதமர் நாற்காலியில் அமர்வார் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை; நாடு காடாகி விடுவதற்கு நாட்டு மக்களே துணை போய்விடக் கூடாது என்பதுதான் நல்லோர் களின் கவலையாகும்.

மோடி பிரதமர் ஆனால் நாடே குஜராத்தாக மாறும் - மதவெறியின் கோரத்தாண்டவம் நடக் கும்; அதன் விளைவாக மனித ரத்த ஆறு தான் ஓடும் - மீண்டும் மீண்டும் எச்சரிக்கை! எச்சரிக்கை!!

Read more: http://viduthalai.in/page-2/73966.html#ixzz2rGu8ctAa

தமிழ் ஓவியா said...


போகாதே!

அட முட்டாள்களா! எதற்காகக் கோயிலுக்குப் போகிறீர்கள்? அங்கே உன்னைப் பார்ப்பான் வெளியே நில், உள்ளே வரக்கூடாது என்கின்றானே! உனக்குமானமில்லையா? ரோசமில்லையா? அங்கு இனியாவது போகாதே!

- விடுதலை, 20.11.1969

Read more: http://viduthalai.in/page-2/73963.html#ixzz2rGuHZAEz

தமிழ் ஓவியா said...


பண வேட்டையா? மகிழ்ச்சியா? - எது தேவை? - கி.வீரமணி


வாழ்க்கையின் முக்கிய தேவைகள், அடிப்படைத் தேவைகள் - இவைகளுக் காக பணம் (செல்வம்) அவசியம் தேவை. அதனால் துவக்கத்தில் மகிழ்ச்சி ஏற்படும்; கவலைகள் இராது.

ஆனால் அது ஒரு எல்லை வரையில்தான். அது எல்லையைத் தாண்டி விட்டால், மகிழ்ச்சி நாளுக்கு நாள் குறையத் துவங்கும்.

இதை Law of Diminishing Returns என்று பொருளாதாரப் பாடத்தில் கூறுவார்கள். எளிய முறையில் இதை விளக்க வேண்டுமானால் முதலில் நமது தேவையின் உச்சத்தில் நமக்குக் கிடைக்கும் பணத்தின் மதிப்பு நமக்கு மிக அதிகம். அதுவே அதிகமாகி பின்னால் கிடைக்கும்போது, அதே அளவு மகிழ்ச்சியை தருவதாக அது அமையாது; காரணம் முதலில் ஏற்பட்ட நமது நெருக்கடி - தேவை குறையக் குறைய, அடுத்து வரும் பணத்தின் மதிப்பு - நம்மைப் பொறுத்தவரை குறைந்ததாகவே காணப்படும் அல்லது உணரப்படும்.

எடுத்துக்காட்டாக, உங்கள் மகிழ்ச்சிக்கான கனவுத் திட்டமாக வைத்துள்ள நீங்கள் பணம் அதிகம் சம்பாதிக்கும் நிலையில் விலை உயர்ந்த கார் வாங்க எண்ணி, அதனை ஓட்டி மகிழ ஆசைப்பட்டு ஒரு Audi, Ferrari, BMW (ஆடி, பெராரி, பிஎம். டபுள்யூ) போன்ற விலை உயர்ந்த காரை வாங்கியவுடன் அதிக மகிழ்ச்சி கிடைக்கும்தான். அதிலே சிலர் மிதக் கவும் செய்வர்!

ஆனால் முதல் நாள், முதல் வாரம், முதல் மாதம், முதல் ஆண்டு - ஒரே மாதிரியான துவக்க மகிழ்ச்சி நீடிக்குமா? இருக்காதே - பரபரப்பு, இன்ப வேகம் கொஞ்சம் கொஞ்சம் குறைந்துதானே வரும்.

இதை மனோதத்துவ நிபுணர்கள், Hedonic Adaptation என்ற சொற்றொ டரில் கூறுகிறார்கள்.

பிறகு இந்த ஆசை குறைந்து இன்னொரு ஆசை துளிர்த்து அதற்கு மாறிடும், இறுதியில் அந்தப் பிடிப்பு அவ்வளவாக இருக்காது. தானே குறையும் மாறிவரும்.

இந்த சுழலை ‘Hedonic Treadmill’ என்ற சொற்றொடர் மூலம் குறிக் கிறார்கள் மனோதத்துவ துறையில் - உளவியலில் இந்த சுற்றி சுழலும் நிலை ஒரு விசித்திரம்-

செல்வம், அந்தஸ்து, புகழ் - இப்படி தொடரத் தொடர, ஆசை சில நேரங் களில் பெருகிக் கொண்டே இருந்து, உச்ச கட்டத்திற்குப் போனாலும் மகிழ்ச் சியை இறுதியில் தக்க வைக்க முடியாமல் தவிக்கும் நிலை சர்வ சாதாரணம்!

எனவே பண வேட்டையும், குவித் தலும் மகிழ்ச்சியை கொண்டுவந்து சேர்க்காது; மாறாக மனக் கவலை அதிகரிக்கவே செய்யும். நிம்மதி மெல்ல நிதானமாக விடை பெற கதவைத் தட்டும்!

எனவே இதனைத் தடுக்க அளவான பணத்தைச் சேர்ப்பதோடு தேவையான அளவு பணம் ‘Enough money’ தேவை களுக்கு ஓர் எல்லையை வரையறுத்துக் கொண்டால் மகிழ்ச்சி நீடித்து நிலைக்கும்.

மகிழ்ச்சி நம் மனதைப் பொறுத்தது தானே!

1. பொதுவாக பல்வகை அனுபவங்கள் தரும் மகிழ்ச்சி - வெறும் ஆடம்பர நுகர் பொருள்களால் வந்து விடாது.

2. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதைப் படித்தபலரும் நோயற்ற வாழ்வே குறைவற்ற மகிழ்ச்சி என்றும் உணர வேண்டும். எனவே உடல் நலம், உடலில் சக்தியை, ஆற்றலைப் பெருக்கி, தக்க வைத்துக் கொள்ளல் வற்றாத மகிழ்ச்சி ஊற்றாக அமையக் கூடும்.

3. நல்ல நண்பர்களுடன், நல்ல மனிதர்களுடன், நல்ல உறவுகளுடன் கூடிக் கலந்து வாழ்ந்தால், மகிழ்ச்சியின் பரிமாணம் மிகவும் விரிந்து பரந்து நம் வாழ்வைப் பெருக்கும்!

4. தொடர்ந்து எரிச்சல்தரும் நிலைமை களை புத்திசாலித்தனமாக தவிர்த்து விடக் கற்றுக் கொள்ளுங்கள்.

5. கொடுப்பதில் கொள்ளை மகிழ்ச்சி ஏற்படவே செய்யும்!

கடைசி நேரத்தில் எதையும் செய் யாமல், திட்டமிடாமல் இருந்துவிட்டு பிறகு அதற்காக மிகவும் எரிச்சலும், கோபமும் கொண்ட அன்றாட வாழ்க்கை யாக உங்கள் வாழ்க்கை அமைந்தால், நரம்புகள் உடல் ரீதியாக பலவீனம் அடைந்து, நரம்புத் தளர்ச்சியை உரு வாக்கி விடக் கூடும். பிறகு மகிழ்ச்சி ஏற்பட முடியுமா? சிந்தித்துப் பாருங்கள். எதையும் திட்டமிட்டு, நிதானித்துச் செய்தால் இந்த எரிச்சல் ஏற்பட வாய்ப்பே வராது அல்லவா?

6. சில ஓய்வு பெற்றவர்கள், அடுத்த நாள் முதலே ஏதோ மிகப் பெரிய இழப்புக்கு ஆளானதுபோல கவலை யில் நரை, திரை மூப்பு அடைந்தவர் களாக காட்சியளிப்பதை நாம் காணு கிறோம்.

இது தேவையற்ற மனோ நிலை யாகும். பணியாற்றினோம்; பெருமை யோடு ஓய்வைச் சுவைப்போம் - பொதுத் தொண்டு, மற்றவர்க்கு உதவுதல், புதுப்புது அனுபவங்களைக் கற்றுக் கொள்ளலாமே!

கற்றுக் கொள்ளுதலுக்கு வயது ஒரு தடையாக இருக்க முடியாதே! அது மகிழ்ச்சியைத் தருமே!

அதற்குமுன் செலவழிக்கத் தவறிய உங்கள் குடும்பத்தவர் தொடங்கி, வீடு, தெரு, ஊர், சமூகம், உலகம் என்று உத விடும் பணி எல்லையற்ற மகிழ்ச்சியை உங்களுக்கு வாரி வாரி வழங்குமே!

இதை மறக்கலாமா? எனவே பண வேட்டையா முக்கியம்? மகிழ்ச்சி ஊற்றைத் தோண்ட முயலுங்கள்.

Read more: http://viduthalai.in/page-2/73968.html#ixzz2rGubmMf2

தமிழ் ஓவியா said...


பேரறிவாளன் உள்ளிட்டோரையும் விடுதலை செய்க! கலைஞர் பேட்டி


சென்னை, ஜன. 23 - தூக்குத் தண்டனை கூடவே கூடாதென்ற எனது கருத்து இன்றைக்கு நிறைவேறியிருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன் என்றும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று பேருக்கும் இந்தத் தண்டனை பொருந்தும் வகையில் முடிவு வெளி வந்தால் பெரு மகிழ்ச்சியடைவேன் என்றும் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் நேற்று பகலில் அண்ணாஅறிவாலயத்திலிருந்து இல்லத்திற்குப் புறப்பட்டபோது செய்தி யாளர்களுக்கு அளித்தபேட்டியில் குறிப் பிட்டார்.

கலைஞர் அவர்கள்அளித்த பேட்டி வருமாறு :-

செய்தியாளர்:- உச்சநீதிமன்றம் நேற்றைய தினம் தூக்குத் தண்டனைக் கைதிகளின் தண்டனையைக் குறைத்து வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து உங்கள் கருத்துஎன்ன? ஏற்கனவே நீங்கள்பலமுறை தூக்குத் தண்டனை என்பதே கூடாது என்று பலமுறை எழுதியவர் ஆயிற்றே?

கலைஞர்:- தூக்குத் தண்டனை கூடவே கூடாதுஎன்று இன்று நேற்றல்ல; நீண்ட காலமாக நான் கூறி வருகிறேன். அது இன்றைக்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.இதைப் பற்றி நான் விரிவாக முரசொலியில் எழுதியிருக் கிறேன்.

செய்தியாளர் :- ராஜீவ்காந்தி கொலை வழக்கிலே சிக்கி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது கருணை மனுதாக்கல் செய்துள்ளநிலையில் சிறை யிலே இருக்கும் மூன்று பேருக்கும் இந்தத் தண்டனை பொருந்துமா?

கலைஞர்:-அவர்களுக்கும் இந்தத் தண்டனை பொருந்தும் வகையில்முடிவு வெளிவந்தால் நான் பெருமகிழ்ச்சி அடை வேன்.

ஸ்டாலின் கருத்துப் பற்றி...

செய்தியாளர் :- கழகப் பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஆங்கில இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கம்யூனிஸ்ட் கட்சி, சொத்துக் குவிப்பு வழக்கிலே சிக்கியுள்ள அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாமா என்றுகேட்டிருந்தார். அதுபற்றி உங்கள்கருத்து?

கலைஞர் :-பொதுவாகமக்களிடம் பிரதிபலிக்கும் கருத்தினைஅவர் தெரிவித் திருக்கிறார்.

செய்தியாளர் :- மாநிலங்கள்அவைத் தேர்தலில் தி.மு.கழக வேட்பாளருக்கு நீங்கள் எந்தெந்தக் கட்சிகளிடம் ஆதரவு கேட்கப் போகிறீர்கள்? காங்கிரஸ் கட்சி யிடம் கேட்கின்ற உத்தேசம் இருக்கிறதா?

கலைஞர் :-இல்லை.

செய்தியாளர் :- தே.மு.தி.க.விடம் ஆதரவு கேட்கப்படுமா?

கலைஞர் :-பொறுத்திருந்துபாருங்கள்.

செய்தியாளர் :- மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவியை தே.மு.தி.க.விற்கு தி.மு. கழகம் விட்டுக் கொடுத்தால், மக்களவைத் தேர்தலில்தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி உருவாக வாய்ப்பாக இருக்குமென்று அந்தக் கட்சியின் சார்பில் கருத்துச் சொல்லப்படுகிறதே?

கலைஞர் :- விஜயகாந்த் தலைமையிலே உள்ள தே.மு.தி.க.விற்கும், தி.மு. கழகத்திற்கும் இடையே கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை நடைபெறவில்லை. அந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றால், அப்போது நீங்கள் தெரிவித்தகருத்தும் பரிசீலிக்கப்படும்.
செய்தியாளர் :- மனிதநேயமக்கள் கட்சி சார்பிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிசார்பிலும் விஜயகாந்தைச் சந்தித்து, தே.மு.தி.க., இந்தத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணிவைத்துக் கொள்ள வேண்டு மென்று மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார் களே?
கலைஞர் :-அவர்களுடைய நல்லெண் ணத்தை நான் பாராட்டுகிறேன். செய்தியாளர் :- தே.மு.தி.க.விற்கு நீங்களே நேரடியாக அழைப்பு விடுக்க லாமே?

கலைஞர் :-எங்களுடைய அழைப்பை தெரிவிக்க வேண்டிய முறையில் தெரிவித் திருக்கிறோம்.

இவ்வாறு கலைஞர் அவர்கள் பேட்டி யளித்தார்.

Read more: http://viduthalai.in/page-3/73987.html#ixzz2rGuuZT5v

தமிழ் ஓவியா said...


பழநி கோயில் பஞ்சாமிர்தத்திலும் ஊழல்


பழநி முருகன் கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தத்திற்கு தேவையான கரும்பு சர்க்கரை, ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், விவசாயிகள் போர்வையில் வியாபாரிகளும் நுழைவதால், தரம் குறை வான சர்க்கரை அனுப்பப்படுவதாக விவ சாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சராசரியாக வாரத்திற்கு 2,000 மூட்டைகள் (ஒரு மூட்டை 60 கிலோ), பஞ்சாமிர்தத்திற்காக கொள்முதல் செய்யப்படும் நிலையில், சபரிமலை சீசன், தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்காலங்களில் வாரத்திற்கு 5,000 மூட்டை சர்க்கரை வரை கொள்முதல் நடந்து வருகிறது.

கவுந்தப்பாடி அமைந்துள்ள தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனப்பகுதியில், 50 ஆயிரம் ஏக்கர் வரை கரும்பு பயிரிடப்படு கிறது. இதில், தனியார் சர்க்கரை ஆலைக்கு வழங்கியது போக 20 முதல் 25 ஆயிரம் ஏக்கர் கரும்பு நாட்டு சர்க்கரை மற்றும் வெல்லம் தயாரிக்க பயன்பட்டு வருகிறது. இந்த பகுதியில் நிலம் மற்றும் நீர்வளம் காரணமாக இங்கு விளையும் கரும்பில் தயாரிக்கப்படும் சர்க்கரையை பயன்படுத்தி பஞ்சாமிர்தம் தயாரித்தால் கூடுதல் இனிப்பும், நீண்ட நாட்கள் கெடாமலும் இருப்பதாக கூறப் படுகிறது.
பஞ்சாமிர்தத்தின் தரம்

இதனால், கடந்த 25 ஆண்டுகளாக பழநி தேவஸ்தான நிர்வாகம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் வாயிலாக நேரடியாக சர்க்கரையை கொள்முதல் செய்து வருகிறது. முருகன் கோயில் பிரசாதத்திற்கு 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொ டர்ந்து சர்க்கரை விற்பனை செய்து வரு கின்றனர். பிரசாதத்திற்கு செல்லும் சர்க்கரை என்பதால் அதன் தன்மை கெடாமல் அதனை தயாரிக்கும் விவசாயிகள், தங்களது காணிக்கையாக சில மூட்டை சர்க்கரையை வழங்குவதையும் வழக்கமாக கொண் டுள்ளனர்.

இந்நிலையில், கவுந்தப்பாடி விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் போர்வையில் வியாபாரிகளும் நுழைந்துள்ளதால், வெளிச்சந்தையிலிருந்து வரவழைக்கப்படும் தரம் குறைவான சர்க்கரை பழநி தேவஸ் தானத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ள தாக விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில் வெளிப்படையாக சமீபத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

Read more: http://viduthalai.in/page-3/73989.html#ixzz2rGvFfOdE

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர் கருத்து

24.1.2014 அன்று முற்பகல் தி.மு.க. பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் விடுத்த தி.மு.க.வின் கட்டுப்பாடு காக்கும் அறிக்கையின்மீது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் கருத்து வருமாறு:

தந்தை பெரியார் அறிவுறுத்தியபடி, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதில் கட்டுப்பாட்டிற்கே முதல் முன்னுரிமை என்பதற்கேற்ப அமைந்துள்ள இந் நடவடிக்கை பெரிதும் வரவேற்கத்தக்கது.

குடும்ப அரசியல் நடத்துகிறது தி.மு.க. என்ற பழி இதன்மூலம் துடைக்கப் பட்டுள்ளது.
தி.மு.க. இதன் மூலம் பேருரு (விஸ்வரூபம்) எடுத்துள்ளது.

சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான ஆரோக்கியமான நடவடிக்கையாகும் இது என்பது தாய்க் கழகத்தின் கருத்தாகும்
.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.சென்னை 24.1.2014

Read more: http://viduthalai.in/e-paper/74016.html#ixzz2rMQx189h

தமிழ் ஓவியா said...

மோடி

தேர்தல் நேரத்தில்தான் காங்கிரசுக்கு ஏழைகள் நினைவு வரும். - நரேந்திரமோடி

(அது எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும்; தேர்தல் நேரத்தில்தானே இவர்களுக்கு மதச் சார்பின்மை பற்றியும், சிறுபான்மை மக்களைப் பற்றியும் நினைவுக்கு வந்து தொலைக்கிறது).

வை.கோ

இனி திமுக, அதிமுக நிழலில்கூட ஒதுங்க மாட்டோம்! - வைகோ (ஆமாம் ராமர்பாலம், ராமர் கோயில், இந்துத்துவா என்ற ஜோதியில் தான் கரைந்தாகி விட்டதே!)

Read more: http://viduthalai.in/e-paper/74024.html#ixzz2rMRSexMM

தமிழ் ஓவியா said...இதோ ஒரு இரட்டை நாக்கு!

காங்கிரஸ் மதவாதத்தைத் தூண்டும் கட்சி; பா.ஜ.க.வோ மதச் சார்பற்ற கட்சி இப்படி சொல்லி யிருப்பவர் யார் தெரியுமா, 450 ஆண்டு கால வரலாறு படைத்த முஸ்லீம்களின் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை இடித்த கட்சியின் தலைவரான ராஜ்நாத் சிங்!

இரட்டை வேடம் - இரட்டை நாக்கு என்பது இந்துத் துவா கூட்டத்தின் இரட்டைக் குழந்தைகளோ!

Read more: http://viduthalai.in/e-paper/74024.html#ixzz2rMRgq8rP

தமிழ் ஓவியா said...


கடவுள்களின் கையாலாகாத்தனம்!


எடப்பாடியில் கோவில் உண்டியலை உடைத்துக் கொள்ளை

எடப்பாடி, ஜன.24- எடப்பாடி அருகே உள்ள தாதாபுரம் பகுதியில் சொக்கநாச்சியம்மன், மாரியம்மன் ஆலயம் ஊரின் மய்யப்பகுதியில் அமைந்துள்ளது ஆண்டு தோறும் மாசி மாதம் சிறப்பாக திருவிழா நடைபெறுவது வழக்கம். இக்கோவி லில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிறைந்திருக்கும். கோவில் திருப்பணி களுக்காக சொக்கநாச்சியம்மன், மாரியம்மன் திருக்கோவில்களில் தனித்தனி உண்டியல் வைக்கப்பட் டுள்ளது.

ஆண்டு தோறும் மாசிமாத திரு விழா முடிந்த பின்னர்தான் ஆண்டுக் கொருமுறை உண்டியல் திறக்கப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வருமானம் மூலம் ஆண்டு முழுவதும் கோவில் நிர்வாகம் செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு சொக்கநாச்சி யம்மன் கோவிலில் வழக்கமான பூஜைகள் முடித்த அதன் பூசாரி செல்வராஜ் கோவிலின் வெளிமண்ட பத்தில் படுத்து உறங்கியுள்ளார்.

நள்ளிரவில் ஓசைபடாமல் கோவிலின் உள்பிரகாரத்தில் நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த உண்டி யலை அடியோடு பெயர்த்து எடுத்து அருகில் உள்ள ஆற்றங்கரைக்கு கொண்டு சென்று கோவில் சூலத்தின் (வேல்கம்பு) மூலம் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் மற்றும் காணிக்கை பொருட்களை கொள் ளையடித்துள்ளனர். ஆற்றங்கரையில் உண்டியலை வீசிய கொள்ளையர்கள் அருகில் இருந்த மாரியம்மன் கோவில் உண்டியலையும் அடியோடு பெயர்த்து எடுத்து கொள்ளை யடித்தபின் ஆற்றங்கரையில் வீசி சென்றுள்ளனர். அதிகாலையில் அந்தப்பக்கம் சென்ற பொதுமக்கள் கோவில் உண்டியல்கள் கொள்ளை யடிக்கப்பட்ட சம்பவம் குறித்து எடப்பாடி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

எடப்பாடி காவல்துறையினர் உண்டியல் கொள்ளை பற்றி விசா ரனை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சையில் தஞ்சை நாகை சாலை அருகே மருதம் நகர் உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களுக்கும் முன்பு சோமசுந்த ரேஸ்வரர் கோவில் புதிதாக கட்டப் பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று காலை கோவிலின் கிரில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் கோவிலுக்குள் உள்ள சில்வர் உண்டி யலும் உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை அப்பகுதி மக்கள் பார்த்து தஞ்சை தாலுகா காவல்துறையி னருக்கு தகவல் கொடுத்தனர்.

காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில், யாரோ சில நபர்கள் நேற்று நள்ளிரவில் கடப்பாரை, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் கோவில் கிரில் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

அங்கு கோவிலுக்குள் இருந்து சுமார் 4 அடி உயரம் உள்ள சில்வர் உண்டியலை அடியோடு பெயர்த்து கோவிலிருந்து சுமார் 50 அடி தூரத்தில் எடுத்து சென்று உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

மேலும், கோவிலுக்குள் மற்றொரு அறையில் இருந்த பீரோவையும் சில நபர்கள் உடைத்து திறந்து பார்த்து உள்ளனர். அதில் பணமோ, நகையோ ஏதும் இல்லாததால் பீரோவில் இருந்த கோவில் பூஜை பொருட்களை கலைத்து விட்டு சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும், திருட்டுக்கு பயன்படுத்திய கடப்பாரை, அரிவாள் ஆகியவற்றை அங்கேயே போட்டு விட்டு சென்று உள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவுச் செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/74023.html#ixzz2rMRnPxaZ

தமிழ் ஓவியா said...


மோடியின் கரங்கள் அப்பாவி மக்களின் ரத்தம் தோய்ந்த கரங்கள்: முலாயம்சிங்


மோடியின் கரங்கள் "அப்பாவிகளின் ரத்தம் தோய்ந்த கரங்கள்' என்று முலாயம் சிங் (யாதவ்) குற்றம்சாட்டினார்.

வாரணாசியில் வியாழக் கிழமை நடைபெற்ற பேரணியில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் பேசியதாவது:

குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவியில் இருந்தபோது, 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு, படுகொலை களும், அடக்குமுறைகளும், கொடுமை களும் அரங்கேறின.

அதற்குப் பிறகும், மோடியை எப்படி பிரதமர் வேட்பாளராக பாஜக தேர்ந்தெடுத்தது என்பது தெரியவில்லை.

கோரக்பூரில் பேசிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச மாநிலத்தை குஜராத்தாக மாற்றப் போவதாக கூறியுள்ளார்.

ஆனால், குஜராத்தில் படுகொலை களை அரங்கேற்றியதுபோல், இங்கும் அத்தகைய சம்பவங்களை நிகழ்த்தும் நிலையில் அவர் இல்லை.

குஜராத்தில் நடை பெற்ற இனக்கலவரத்துக்கு மோடிதான் முழுப் பொறுப்பு. அவரது கரங் கள் "அப்பாவிகளின் ரத்தம் தோய்ந்த கரங்கள்'.

குஜராத் அரசு வேலை யில்லா பட்டதாரிகளுக்கு ஊக்கத்தொகை வழங் கியதா? விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ததா? பெண்களுக்கு சிறப்பு வசதிகளை செய்து கொடுத் ததா? இவற்றில் எதையும் செய்ய வில்லை. ஆனால், செய்ததாக புர ளியைப் பரப்புவதைத் தவிர பாஜகவுக்கு வேறு வேலை இல்லை.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு சமாஜ்வாதி கட்சியின் ஆதரவின்றி மத்தியில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது.

மத்தியில் ஆட்சி செய்து வரும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஊழல் மற்றும் பணவீக்கத்தால் பொருளாதார நெருக்கடியை மட் டுமே கொடுத்தது என்று முலாயம் சிங் யாதவ் பேசினார்

Read more: http://viduthalai.in/e-paper/74019.html#ixzz2rMRxGL9U

தமிழ் ஓவியா said...


இல்லஸ்டிரேட்டட் வீக்லியில் ஒரு கடிதம்


அய்யா, சினிமா நடிகர், நடிகைகள் இல்லங்கள் நோக்கி வருமான வரி திடீர் சோதனைகளை அரசு நடத்துகிறது. ஏன்? கடவுளரது இல்லங்கள் நோக்கி இவைகளை நடத்தக்கூடாது? சினிமா நடிகர்கள் தங்களிடம் உள்ள கறுப்புப் பணத்தைப் பெற கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள்; மற்றவர்களுக்கு ஒரு கேளிக்கையாவது அளிக்கிறார்கள்.

புனிதமான இடங்களில் நடைபெறுவது பச்சையாக இலஞ்சம் அல்லாமல் வேறு என்ன? நாம் கடவுள் நம்பிக்கையை இழக்கத்தானே அவை பயன்படுகின்றன? புனிதமான இடங்கள் எனப்படுபவைகளை அரசு தேசிய மயமாக்கட்டும். வறுமையை ஒழிப்போம் - வறுமையே வெளியேறு என்ற கோஷத்தினை அச்செல்வத்தினை எடுத்து விநியோகிப்பதன் மூலம் செயல்படுத்தட்டும்.

அதில் முக்கியமாக விழிப்புடன் இருக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், அர்ச்சகர்களிடமிருந்து அதிகாரிகள் கொள்ளையாக அது மாறாமல் பார்த்துக் கொள்வதேயாகும். மேற்கண்ட கடிதம் 1.10.1972 இல்லஸ்டிரேட்டட் வீக்லி ஏட்டில் கல்கத்தாவைச் சேர்ந்த அருண்டுரோவர் என்பவரால் எழுதப்பட்ட ஒன்றாகும்.

Read more: http://viduthalai.in/page-7/74027.html#ixzz2rMT1YPg3

தமிழ் ஓவியா said...

ஜாதிக்கொரு சமையலறை

உயர்ந்த ஜாதி இந்து ஒருவன் சாப்பிடும் போது தான் சாப்பிடும் உணவு பற்றி மட்டும் கவனிப்பதில்லை. அந்த உணவைச் சமைத் தது யார் என்பது பற்றியும் அக்கறையோடு கவனிக்கிறான். தாழ்ந்த ஜாதி உணவை யார் சாப்பிட்டாலும் அல்லது சமைத்தாலும் அவனும் தாழ்ந்த ஜாதிக்காரனாகி விடு கிறான்.

எல்லா உயர்ந்த ஜாதிக்காரர்களுமே பணக்காரர்களாக இருந்து விடுவதில்லை. அவர்களிலும் சிலபல ஏழைகள் இருக்கின்றனர். இதனால் பணக்காரப் பார்ப் பனர்கள் தங்கள் வீடுகளில் சமைப்பதற்காக ஏழ்மை நிலையில் இருந்து கொண்டு, பிழைப்புக்கு வழி தேடிக் கொண்டு இருக்கும் பார்ப்பன சமையல்காரர்களை வைத்துக் கொண்டுள்ளனர்.

பார்ப்பனரல்லாதார் பலர் தங்கள் வீடுகளில் பார்ப்பன விருந்தினர்களுக்கு உணவு சமைக்க பார்ப்பன சமையல்காரர்கள் ஒருவரையும், தங்களுக்கும் பார்ப்பனரல்லாத விருந்தினர்களுக்கும் சமைப்பதற்காக மற்றொரு சமையல்காரரையும் வைத்திருக் கின்றனர். இதற்காக தனித்தனி சமைய லறைகள் உள்ளன.

தென்னிந்திய கல்லூரி ஒன்றில் வெவ்வேறு ஜாதி மாணவர்களுக்காக தனித் தனியாக எட்டு சமையற்கூடங்கள் இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு ஜாதி மாணவனும் அந்தந்த ஜாதிக்கென்று உள்ள சமையற்கூட சாப்பாட்டு அறையில் சென்று சாப்பிடுவான். மக்களின் ஆன்மீகத் தலைவர்களாக பார்ப்பனர்கள் இருந்த காலத்தில்தான் இது போன்ற ஜாதிக்கொரு சமையலறை ஏற்பட்டது.

- ராபின் ஹோவே எழுதிய இந்தியா வில் உணவு என்ற கட்டுரையிலிருந்து.
நூல்: ஜான் கென்னத் கால்பிரெய்த் இன்ட்ரடியூகஸ் இண்டியா, பக்கம் 187.

Read more: http://viduthalai.in/page-7/74027.html#ixzz2rMTAJSul

தமிழ் ஓவியா said...


உறவின் முறையில் திருமணம் குறைபாடுடைய குழந்தைகள் பிறக்க வழிவகுக்கும்


சென்னை, ஜன. 24- உறவு முறைகளில் திரும ணம் செய்வது குறைபா டுடைய குழந்தைகள் பிறக்க வழிவகுக்கும் என மாற்றுத்திறனாளிகளுக் கான மாநில ஆணையர் கே.மணிவாசன் கூறினார்.

செவித்திறன் குறை பாடுள்ள குழந்தைக ளுக்கு செவியின் உள் பகுதியில் பொருத்தப் படும் காக்ளியர் கருவி பற்றிய விழிப்புணர்வு சி.டி. மற்றும் வீடியோ வெளியிடும் நிகழ்ச்சி போரூர் ராமச்சந்திரா மருத்துவக் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.

காது, மூக்கு, தொண்டை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை துறை, பேச்சு மற்றும் கேட்பு அறிவியல் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அதன் தலைவர் மருத்துவர் ஏ.ரவிக்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கே.மணிவாசன் மற்றும் மருத்துவர் ஏ.ரவிக்குமார் ஆகியோர் பேசியது: குழந்தைகள் பிறந்த உடனேயே அனைத்து விதமான மருத்துவ சோத னைகளையும் தாமத மின்றி மேற்கொள்ள வேண்டும்.

பிறவியிலேயே ஏற் படும் குறைபாடுகளை சற்று தாமதமாக தெரிந் துகொள்வதன் மூலம் அதை சரிசெய்வதில் பல் வேறு சிரமங்கள் ஏற்படு கின்றன. காதுகேட்கும் திறன் குறைந்த மற்றும் முற்றிலுமாக பாதிக்கப் பட்டவர்களுக்கு காக் ளியர் கருவி பொருத்தப் பட்டவுடன் கேட்பியல் நிபுணர்கள், பேச்சுப் பயிற்சி நிபுணர்கள் ஆகி யோர் உதவியுடன் படிப் படியாக குழந்தைகளின் கேட்கும் திறன் மேம்படு கிறது.

இதுபோன்ற குறை பாடுகளுக்கு உறவின் முறையில் திருமணம் செய்துகொள்வதுதான் முக்கிய காரணமாக கரு தப்படுகிறது. எனவே இதுகுறித்த விழிப்பு ணர்வை பொதுமக்களி டம் ஏற்படுத்த வேண் டும் என்றனர்.

Read more: http://viduthalai.in/page-8/74056.html#ixzz2rMTHmhse

தமிழ் ஓவியா said...


மூட மதக்கிருமியைப் பரவ விடாதீர்!


நோய் நொடிகளால் சாகும் குழந்தைகளை விட பெற்றோர்களின் மூடநம்பிக் கைகளால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையே அதிகம் என்று குழந்தை நல மருத்துவக் குழுவினர் அறிவித்திருக் கின்றனர்.

நோய்க்கிருமிகளைவிட மதக்கிருமியே பயங்கரமானது என்பதை அந்த மருத்துவக் குழுவின் கருத்து நமக்குத் தெரிவிக்கிறது.

நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான மூடநம்பிக்கை நிலவி வருகிறது. இவற்றால் நாள்தோறும் குழந்தைகள் இறந்தவண்ணமிருக்கின்றனர்.

இறந்த பிறகு மோட்சத்துக்குப் போக ஆண் குழந்தைதான் வேண்டுமாம்! எனவே, பெண் குழந்தைகள் புறக்கணிக்கப்படு கின்றனர்.

பிரசவ அறையின் கதவுகளும், ஜன்னல் கதவுகளும், எப்போதுமே மூடி வைக்கப்பட்டிருக்க வேண்டுமாம்! இல்லை யென்றால் குழந்தையையும், தாயையும் துர்த்தேவதைகள் தாக்கி அவர்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமாம்!

உண்மையில் நடப்பது என்னவென்றால், பிரசவ அறையின் எல்லா கதவுகளையும் மூடி வைத்திருப்பதால் அவர்களுக்கு மூச்சுத் திணறல்தான் ஏற்படும்.

மற்றவர்களின் கண் திருஷ்டியால் தான் குழந்தைகளுக்கு கண்வலி வருகிறது என்ற மூடநம்பிக்கையும், இருந்து வருகின்றன. இதற்கு திருஷ்டி கழிக்க வேண்டி உணவு பொருள்கள் பாழாக்கப்படுகின்றன.

ஒருவனை நாய் கடித்து விட்டால் அவன் 16 கிணறுகளுக்குச் சென்று அந்தக் கிணறு களில் ஏதாவது ஒன்றிலாவது நாயின் உருவம் தெரிகிறதா என்று தொடர்ந்து பார்த்து வர வேண்டுமாம்! அப்படித் தெரிந் தால் அவன் சிகிச்சை எதுவும் செய்ய வேண்டாமாம்.

இப்படி அவன் நாட்களைக் கழிப்பதற்குள் நோய் முற்றி விடுகிறது. பின்பு யாராலும் அவனைக் காப்பாற்ற இயலாது போய்விடுகிறது. எனவே மக்களுக்கு பகுத் தறிவு ஊட்டுவதும், அவர்களை சிந்திக்க வைப்பதும் தான் இன்றைய அவசியத் தேவை.

- விமன்ஸ் எரா, (1976 டிசம்பர் 16 இதழ் தலையங்கம்

Read more: http://viduthalai.in/page-7/74031.html#ixzz2rMTTBskz

தமிழ் ஓவியா said...

ஆண்டவனின் தனிக் கருணை

அன்றொரு நாள் தான் எவ்வாறு ஆண்டவனின் தனிக்கருணைக்கு ஆளானார் என்பது குறித்து ஒருவர் என்னிடம் கூறிக் கொண்டு வந்தார். ஒருநாள் அவர் வெளிநாட்டிற்குக் கடற்பயணம் செய்ய இருந்தார். ஆனால், அது யாது காரணத்தாலோ, பயணம் தடைப்பட்டு விட்டது.

ஆண்டவனின் தனிக் கருணையால்அவர் போகாதது நின்றதே நல்லதாயிற்று. ஏன்? அந்தக் கப்பல் கடலில் மூழ்கி விட்டது. அதிலிருந்த அய்நூறு பேரும் மாண்டனர். அய்நூறு பேர்களோடு மூழ்கிய கப்பலில் செல்லாவண்ணம் ஆண்டவனின் தனிக் கருணையால் ஒருவன் காப்பாற்றப்பட்டான்.

ஆனால், இந்த அய்நூறு பேர்கள்? அதிலிருந்த தாய்மார்கள்? அவர்களின் கள்ளங்கபட மற்ற மழலை பேசும் இளங்குழவிகள்? அவற்றின் அருமைத் தந்தையர்? அக்கரையில் என்று கப்பல் வந்தடையும்? என் இனிய துணைவர் என்று வருவார் என்று ஆவலே உருவாய் நிற்கும் இளம்பெண்கள்? இவர்களின் கதி? இதன் பெயர்தான் ஆண்டவனின் தனிக்கருணை என்பது!

-அறிஞர் இங்கர்சால்
தகவல்: ச.ராமசாமி

Read more: http://viduthalai.in/page-7/74031.html#ixzz2rMTb6wf0

தமிழ் ஓவியா said...


மருத்துவக் காப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?


மருத்துவச் செலவு என்பது திடீரென வரக் கூடியது. ஆதலால் மருத்துவக் காப்பீட்டு எடுத்து வைத்துக் கொள்வது மிக நல்லது. தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் நம்மிடம் பிரீமியத் தொகை பெற்றுக் கொண்டு காப்பீடு அளிக் கின்றன. அதுவும் சில நோய்களுக்குள், அவசர சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சைகளுக்கு மட்டுமே. அதுபோல பொருளாதார வசதி இல்லாத ஏழை களுக்காகக் கொண்டு வரப்பட்டது முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம். இத்திட்டத்தின் பயனைப் பெற விண்ணப்பிப்பது எப்படி? அதற்கான தகுதிகள் என்ன? ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்பது என்ன?

நமக்கு ஏற்படும் சில மருத்துவ உதவிகளுக்குத் தேவையான பணத்தை அரசே செலுத்துவதுதான் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.
தகுதிகள்: இத்திட்டத்தின் பயனைப் பெற ஒரு குடும்பத்தின் ஆண்டு வருவானம் 72,000 ரூபாய்க்குக் கீழே இருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்: கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனில் கிராம நிர்வாக அலுவலரிடமும், நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்கள் எனில்தாசில்தாரிடமும் வருமானச் சான்றிதழ் வாங்கிக் கொடுக்கவேண்டும். குடும்ப அட்டை இருக்க வேண்டும். குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் பயனைப் பெற முடியும்.
எங்கே விண்ணப்பிப்பது?

ஒவ்வொரு மாவட்ட அலுவலகத்திலும் காப்பீட்டுத் திட்ட மய்யம் இயங்கி வருகிறது. அந்த மய்யத்திற்குச் சென்று விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களைக் கொடுக்கவும், பின்னர் அவர்கள் சொல்லும் தேதியில் குடும்பத்துடன் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவும். புகைப்படம் எடுக்கப்பட்டதும் ஓரிரு நாட்களில் மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கப்படும்.

பயனை எப்படி பெறுவது?

இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் பதிவு பெற்ற தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்பெற முடியும். இதன் மூலம் கீழ்க்கண்ட சிகிச்சைகளைப் பெற முடியும். இதயம் மற்றும் இதய நெஞ்சக அறுவைச் சிகிச்சை, புற்றுநோய் மருத்துவம், சிறுநீரக நோய்கள், மூளை மற்றும் நரம்பு மண்டலம், கண் நோய் சிகிச்சை, இரைப்பை (ம) குடல் நோய்கள், ஒட்டுறுப்பு (பிளாஸ்டிக்) அறுவைச் சிகிச்சைகள் , காது, மூக்கு மற்றும் தொண்டை நோய்கள், கருப்பை நோய்கள், ரத்த நோய்கள்.

மருத்துவமனை செல்லும்போது கவனிக்க வேண்டியவை:

சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் முதல் நாள் முதல் சிகிச்சைமுடிந்து வீட்டுக்கு அனுப்பப்படும் நாளிலிருந்து அய்ந்து நாட்களுக்கு செய்யப்படும் பரிசோதனைகளுக்கான கட்டணம் மற்றும் இதர செலவினங்களுக்கான தொகையும் இத்திட்டத்தில் வழங்கப்படும். இலவச சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் முன் அந்த மருத்துவமனையில் காப்பீடுத் திட்ட அலுவலரைச் சந்தித்து மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஒரே சிகிச்சை வெவ்வேறு மருத்துவமனைகளில் வெவ்வேறு கட்டணங்கள் பெறப்படுவதுண்டு.

ஆன்லைனில் தெரிந்து கொள்ள: உறுப்பினர் விண்ணப்பப் படிவத்தைப் பெற இந்த இணைப்பில் செல்லவும்.

https://docs.google.com/file/d/1vpMQHGnb QymYPIAxYoW8AFec27t6s6sUNMjA IJdGJUtzluRhC2G9 kqJI5aMS/edit.

கிராம நிர்வாக அலுவலரிடம் வாங்க வேண்டிய சான்றின் மாதிரிப் படிவத்தைக் காண இந்த இணைப்பில் செல்லவும்.

https://docs.google.com/file/ d/1oiaOxsjjbSFT3CFsMrR5AgnK6x8jvSGE4bNiGIYX9I EUJH5Do8cP9 JL6WL4J/edit

உங்கள் ஊரின் எந்த மருத்துவமனையில் இந்த வசதிகளைப் பெறலாம் என்பதைத் தெரிந்து கொள்ள இங்கு செல்லவும்.

https://docs.google.com/file/d/1yOaTDA5h&NrGk&uJazqlgFKXvViHqJm ZaFKeRn9v8mm9 ZTsrEKq UNPVCCwv/eidt

மேலதிக விவரங்களுக்கு: இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்வதற்கும், மேற்கொண்டு விவரங்களைப் பெறவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

https://www.cmchistn.com/ இத்தளத்திற்குச் செல்லலாம்.
1800 425 3993 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Read more: http://viduthalai.in/page2/74073.html#ixzz2rRo5t2Uy

தமிழ் ஓவியா said...


போகாத இடம்தன்னிலே போக வேண்டாம்


- மு.வி.சோமசுந்தரம்

விடுதலை வெளியூர் 23.7.2013 இதழில் ஒடிசா, பூரி ஜெகன்நாதர் தேரோட்டத் திருவிழாவில், இத்தாலி நாட்டை சேர்ந்த அம்மையாருக்கு, பக்தி போதையும் பண மோகமும் கொண்ட அர்ச்சகப் பார்ப்பன பண்டாக்களால் அரங்கேற்றிய வன்முறைச் செயலை, ஊசி மிளகாய் நன்கு எடுத்துக்காட்டி, பார்ப்பன பாரதியைக் கொண்டே வழிமொழியச் செய்துள்ளது பொருத்தமாக இருந்தது.

ஆணவமும், அகங்காரமும் கொண்ட அக்ரகார அர்ச்சகர்கள் பணம் தின்னும் பேய்கள் என்பதை விளக்கும், பூரி ஜெகன்நாத விழாவில் நடந்த கொடிய செயலை வேதனை யுடன், சென்னையை சேர்ந்த திரு. பி.இராமதாஸ், தி இந்து (23.7.2013) இதழில் ஆசிரியருக்கு கடிதம் பகுதி யில் கூறியுள்ளதைக் காண்போம்.

பூரியில், சிட்டாரிஸ்ட் அம்மையா ருக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி படித்தபோது நான் ஆச்சரியப்பட வில்லை. எழில் தோற்றத்துடனும், வழிபடத்தக்கதுமான லார்ட் ஜெகன்நாதன் கோயிலுக்கு யாத்ரீகர் களாக வரும் பெரும்பான்மையோ ருக்கும் இதே அவல நிலைதான். இதில் வித்தியாசம் இல்லை. ஒரு நண்பர் குழுவை 2011-ஆம் ஆண்டு ஒடிசாவுக்கு அழைத்துச் சென்றேன். மரத்தால் செய்யப்பட்ட ஜெகன்நாதர், பாலபத்ரா, சுபத்ரா கடவுள் பொம் மைகள் கருவறையில் ஒளி வீசி காணப்பட்டன.

நாங்கள் (கூட்டத்தில்) மெதுவாக நகர்ந்து கருவறை அருகில் சென்ற போது, அங்கிருந்த அர்ச்சகர்கள் எங்களை இழுத்து முரட்டுத்தனமாக வெளியே இழுத்தார்கள். அதில் ஒருவன் என்னை தள்ளி என் தலையை லார்ட் பாதங்களில் அழுத்தி, என்னை அசைய விடாமல், தலையைத் தூக்கவிடாமலும் வைத்து, நான் பல நூறு ரூபாய்களைக் கொடுத்தபிறகு என்னை விடுவித்தான். அர்ச்ககர்கள் எங்களை அடுத்ததாக கடவுள்களை சுற்றிவர சொன்னார்கள். அந்த குறுகிய பாதையில் வேறு பல அர்ச்சகர்களைப் பார்த்தோம். அவர்கள் மேலும் பணம் கொடுக்கும்படி நச்சரித்தார்கள்.

இது சூடுபட்ட பூனை போன்ற ஒருவரின் ஒளிவு மறைவற்ற ஒப்பாரி. மக்களின் பணத்தை உறிஞ்சும் அட்டை யாக செயல்படத்தான் கோயில்கள் கட்டப்பட்டன என்று அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியர் கூறியுள்ளார். பணத்தை பறிகொடுத்த துடன், அறிவையும் அடைமானம் வைக்கத் தயாராக உள்ளவரை என்னவென்று அழைப்பது? முட்டாள் என்று அழையுங்கள் என்று சரியான பதிலை அறிவு ஆசான் சொல் லிவிட்டாரே.

தந்தை பெரியார் சுருங்கச் சொல்லி விளங்க வைத்ததை தத்துவமாக பாடல் வரிகளாக
பேருற்ற உலகிலுறு சமயமத நெறியெலாம் பேய்ப்பிடிப் புற்ற பிச்சுப்
பிள்ளைவிளையாட்டென உணர்ந்திடா துயிர்கள் பல
சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தேன்
சாத்திரக் குப்பையும் தணந்தேன் என
வடலூர் வள்ளலார் கூறியுள்ளார்.

இதே பூரி செகன்நாதன் கோயி லுக்குச் சென்ற மேனாள் இந்திய பிரதமர் இந்திராகாந்தி அம்மையாரை கோயிலின் உள்ளே செல்ல அனுமதிக்க வில்லை. காரணம் அவரின் கணவர் இந்து அல்லவாம். போகாத இடந் தன்னில் போவதால்தானே இந்த வேடிக்கை பிள்ளை விளையாட்டெல்லாம்.

Read more: http://viduthalai.in/page2/74074.html#ixzz2rRoLxjf4

தமிழ் ஓவியா said...


வரிப் பாக்கி டிமிக்கிகள்!1. வோடாபோன் இன்டர்நேஷனல் ஹோல்டிங் ரூ.22146 கோடி
2. எல்.அய்.சி. ரூ.11,606 கோடி
3. ஆதித்யா பிர்லாடெல்காம் ரூ.3173 கோடி
4. எச்.டி.எஃப்சி வங்கி ரூ.2653 கோடி
5. ஆந்திரா பேவரேஜ் கார்ப்பரேசன் ரூ.2413 கோடி
6. பிரதீப் பாஸ்பேட்ஸ் ரூ.2374 கோடி
7. மைக்ரோ சாஃப்ட் இந்தியா ரூ.1999 கோடி
8. ஹீரோ ஹோண்டா மோட்டார்ஸ் ரூ.1856 கோடி
9. ஆந்திரப் பிரதேச வீட்டு வசதி வாரியம் ரூ.1753 கோடி
10. அய்.சி.அய்.சி.அய். வங்கி ரூ.1658 கோடி
ரூ.51,661 கோடி

Read more: http://viduthalai.in/page8/74082.html#ixzz2rRpXgb00

தமிழ் ஓவியா said...


சம்பிரதாயமும், ஆன்மீகமும் சங்கராச்சாரியாரின் காலடியில்


கோயில் வரலாற்றையேமீறி முதல் முறையாக காரில் சென்றார் சங்கராச்சாரியார்

சிதம்பரம், ஜன. 25- சிதம்பரம் நடராஜர் கோயிலின் உள்பிரகாரத் தில் வெள்ளிக்கிழமை (24.1.2014) அன்று காஞ்சி ஜெயேந்திரர் தனது காரில் சென்றார். நட ராஜர் கோயில் வர லாற்றில் முதன் முறை யாக கோயில் உள் பிர காரத்தில் காரில் உள்ளே வந்து ஒருவர் தரிசனம் செய்தது இதுவே முதல் முறை. என்று பக்தர் களும் உள்ளூர்வாசி களும் ஆச்சரியத்துடன் தெரிவித்தனர். ஆகம விதிகளின்படி கார் எல்லாம் கோயிலுக்குள் வரலாமா? விதிகளும் எல்லாம் அவர்களின் காலடியில்தானே.

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ஜெயேந் திரர் நேற்று காலை வந்தார். அவரது கார் கோயில் நடனபந்தல் வரை சென்றதால் பர பரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சி தர்கள் சார்பில் கும்ப மரியாதை, மேளதாளத் துடன் அவரை கோயி லுக்கு அழைத்து சென் றனர். பின்னர் மூல வரான நடராஜ சிலை வீற்றிருக்கும் சித்சபை ஏறி சாமி தரி சனம் செய்தார். முன்னதாக ஜெயேந்திரர் வந்த கார் நேராக கீழ் கோபுரத்தின் பக்கவாட்டு வாயில் வழியாக நடன பந்தல் அருகே சென்று நின்றது. சித்சபையில் நடராஜர் தரிசனத்தை முடித்து விட்டு முருகன் கோயில், சிவகாமசுந்தரி அம்பாள் ஆலயத்துக்கும் காரி லேயே சென்று வழிபட் டார்.

முக்கிய பிரமுகர்கள் யார் வந்தாலும் கோபுர வாயிலுக்கு வெளியிலேயே கார் நிறுத்தப்பட்டு அங் கிருந்து நடந்து வந்து தான் கோயிலுக்குள் செல்வார்கள். அறநிலை யத்துறை நிர்வாகத்தின் போது கடந்த அமைச் சர்கள் கார், கோயில் வாயில் அருகே வந்த போது பெரும் சர்ச்சைக் குள்ளானது, ஆனால் தற்போது ஜெயேந்திரர் கார் கோயிலின் நடன பந்தல் வரை சென்றது அப்பகுதி மக்கள் மத் தியில் சலசலப்பை ஏற் படுத்தியுள்ளது.

நடராஜர் கோயில் அறநிலையத்துறையிடம் இருந்து தீட்சிதர்கள் வசம் வந்ததையடுத்து ஜெயேந்திரர் கோயி லுக்கு வந்தது குறிப்பிடத் தக்கது. ஜெயேந்திரர் செய்தியாளர்களிடம் கூறும்போது, சிதம்பரம் நடராஜர் கோயில் மீண்டும் தீட்சிதர்கள் வசம் வந்தது, அவர் களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. கோயில் உள்ளே இருக்கும்பாண் டிய நாயகர்கோயில் திருப்பணி மற்றும் குடமுழுக்கிற்கான முழு செலவையும் சங்கர மடமே ஏற்றுக் கொள் ளும் என்றாராம்!

Read more: http://viduthalai.in/e-paper/74093.html#ixzz2rRpqttk8

தமிழ் ஓவியா said...


வாழ்க்கைஒருவன் வாழ்வது என்பது அவனுடைய வாழ்க்கையால் பிறர் நன்மையடைந்தார்கள், மற்றவர்கள் சுகங் கண்டார்கள் என்று அமையவேண்டும்.
_ (விடுதலை,20.3.1956)

Read more: http://viduthalai.in/page-2/74098.html#ixzz2rRqiQCoF

தமிழ் ஓவியா said...

பெரிய அக்கிரமம்

பம்பாயில் ஆயிரம் பேர்கள் பார்ப்பன மதத்தில் சேர்க்கப்பட்டதாக கேட்க மிகவும் வருந்துகிறோம். இது ஒரு பெரிய அக்கிரமமாகும். இந்த அக்கிரமத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பம்பாய் பார்ப்பனரல்லாதாருக்கு அறிவிருந்ததா இல்லையா என்று சந்தேகிக்கின்றோம். அதாவது,

ஆயிரம் தீண்டாதார்கள் என்பவர்களுக்குப் பூணூல் போட்டு உபநயனம் செய்யப்பட்டதாம். இதற்காகப் பார்ப்பனர்களுக்கு செய்யும் சடங்குகள் எல்லாம் செய்யப்பட்டனவாம். இந்தத் தீண்டாதார்கள் எனப்படும் ஆயிரம் பேரும் நாளைக்கு நமக்கு எமனாய் வரப்போகிறார்கள் என்பது சத்தியம்.

ஏனெனில் இதுபோல் ஒவ்வொரு காலத்தில் சீர்திருத்தம் என்னும் பெயரால் நம்மவர்களுக்கு போட்ட பூணூலினாலும் செய்த உபநயனத் தாலுமே இந்நாட்டில் இத்தனை பார்ப்பன எமன்கள் தோன்றியிருக்கின்றன என்பது ஆராய்ச்சி உள்ள எவருக்கும் தெரியும். எனவே இந்தப் பூணூல் போட்ட ஆயிரம் பேரும் நாமம் போட்டார்களானால் ஸ்ரீமான்கள் சி. ராஜகோபாலாச்சாரியார், எஸ். சீனிவாசய் யங்கார், வி.வி. சீனிவாசய்யங்கார்களாகவும் விபூதி பூசினார்களானால் ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, சிவசாமி அய்யர், சீனிவாச சாஸ்திரிகள், கே.நடராஜன் போன்றவர்களாகவும், கோபி சந்தனம் போட்டார்களானால் ஸ்ரீமான்கள் மதனமோகன மாளவியாவாகவும் தோன்றப்போகிறார்கள் என்பதில் ஒரு சிறிதும் சந்தேகமே இல்லை. இவைகளுக்குச் சற்று தாமதமானாலும் ஸ்ரீமான் ஆதிநாராயண செட்டியா ராகவாவது வெகு சீக்கிரத்தில் வரப்போகிறார்கள் என்பது உறுதி. பூணூலை அறுத்தெரிய வேண்டிய சமயத்தில் ஆயிரக்கணக் கான பேருக்குப் பூணூல் உபநயனம் நடப்பது அக்கிரமம்! அக்கிரமம்!! பெரிய அக்கிரமம்!!!

எனவே தீண்டாதார்கள் என்கிற நமது சகோதரர்களைப் பார்ப்பன மதத்திற்கு விட்டு பார்ப்பனர்களுக்குப் பறிகொடுக்காமல் அவர்களுக்குச் சகல உரிமைகளும் கொடுக்க வேண்டியது பார்ப்பனரல்லாதாரின் முக்கிய கடமையாகும்.
- குடிஅரசு - கட்டுரை - 25.03.1928

Read more: http://viduthalai.in/page-7/74112.html#ixzz2rRrV7QWm

தமிழ் ஓவியா said...


நாமக் கடவுளுக்கே நாமம் போட்ட தேவஸ்தானம்

திருப்பதி, ஜன.26- திருப்பதி ஏழுமலை யான் கோவிலில் கடந்த வைகுண்ட ஏகாதசி, துவாதசியன்று சொர்க்க வாசல் வழியாக சுவா மியை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதிய தாம்!

வி.அய்.பி.க்கள் பாஸ் அதிக அளவில் வழங்கப் பட்டதால் சாதாரண பக்தர்களுக்கு தரிசனம் செய்ய மணிக்கணக்கில் தாமதமானது. இதனால் பக்தர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

திருமலையில் ஆர்ப் பாட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ள தால் போராட்டம் நடத் திய பக்தர்கள் மீது வழக் குப் பதிவு செய்யப்பட் டது. பின்னர் அது திரும் பப் பெறப்பட்டது.

இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசி யன்று சாதாரண பக்தர் களுக்கு போதிய வசதி செய்யவில்லை என்று தேவஸ்தானம் மீது குற் றச்சாட்டு கூறப்பட்டது.

இதுதொடர்பாக தெலுங்கு தேச பிரமுகர் தவசானி சிறீனிவாச யாதவ், ஆந்திர உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து உள் ளார். தனது மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

வைகுண்ட ஏகாத சியன்று நாடு முழுவ திலும் இருந்து ஏராள மான பக்தர்கள் ஏழு மலையான் கோவிலுக்கு வருவார்கள் என்று தெரிந்தும் உரிய ஏற் பாடுகளை செய்ய நிர் வாகம் தவறி விட்டது.

வி.அய்.பி. தரிசன அனுமதிச் சீட்டுகளை முறைகேடாக விற்று விட்டது. வி.அய்.பி. பக் தர்கள் அதிக அளவில் தங்களது குடும்பத்தினரு டன் வந்ததால் அவர்கள் தரிசிக்க அதிக நேரம் ஒதுக்கப்பட்டதால் சாதாரண பக்தர்கள் அவதிப்பட்டனர்.

முதல் அமைச்சர் கிரண் குமார் ரெட்டி யின் தம்பி கிஷோர் குமார் ரெட்டிக்கு அதிக முக்கியத்துவம் அளிக் கப்பட்டது. எந்த பத வியும் இல்லாத ஒருவ ருக்கு தேவஸ்தானம் எப்படி முக்கியத்துவம் அளிக்கலாம்.

வைகுண்ட ஏகாத சியன்று வி.அய்.பி. பக்தர்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தர விட வேண்டும். இவ் வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது. இந்த மனு மீது விரைவில் விசா ரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/74138.html#ixzz2rYdqSfob

தமிழ் ஓவியா said...


செய்திச் சிதறல்கள்!

சுதந்திரம்

சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவுக்கு 8 அடுக்குக் காவல்துறைப் பாதுகாப்பு (சுதந்திரம் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்; முன்பு ஒரு தடவை இந்தியப் பிரதமர் கூண்டுக்குள்ளிருந்து தேசியக் கொடியை ஏற்றினார் என்பதும் நினைவூட்டத்தக்கது).

வெற்றி! வெற்றி!!

இன்று சென்னை கடற்கரையில் குடியரசுத் தின விழா நடைபெற்றது. ஆளுநர் ரோசய்யா தேசியக் கொடியை ஏற்றினார். முதல் அமைச்சர் பங்கு கொண் டார். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வெற்றி! வெற்றி! எனும் தொடங்கும் ஒரே பாடலுக்கே நடனம், ஒயிலாட்டம், கரகாட்டம் என்று பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த இரு பால் மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினர் - சிறப்பாகவே இருந்தது.

வெற்றி! வெற்றி! என்று முதல் அமைச்சரைக் குளிர வைப்பதற்கானவை அதற்குள் இடம் பெற்றி ருந்தன; நமது அதிகாரிகள் அரசியல்வாதிகளாக மாறி விட்டனரோ என்ற நினைக்கத் தோன்றுகிறது. அது எப்படியோ போகட்டும்!

அந்தப் பாடல் காளிதேவியிடம் அருள் கேட்பதாக அமைந்துள்ளதே - அது எப்படி? குடியரசு தினம் என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவானது அல்லவா!

அதில் ஒரு ஹிந்து மதக் கடவுளச்சியிடம் பிரார்த்தனை செய்வதாகப் பாட்டு அமையலாமா?

வந்தே மாதரம் பாடல் வேறு வரிகளில் ஒலிக்கிறதா? காளியிடம் வேண்டுகோள்விடுப்பதை மற்ற மற்ற மதக் காரர்கள் ஏற்றுக் கொள்வார்களா? பகுத்தறிவாளர்களின் கருத்து அது பற்றி என்ன? மதச் சார்பற்ற ஓர் அரச மைப்புச் சட்டத்தை ஒரு பக்கத்தில் வைத்துக் கொண்டு அந்த நாட்டின் குடியரசு தின விழாவிலே குறிப்பிட்ட மதத்தின் கடவுளை முன்னிலைப்படுத்தலாமா!

கட்சியின் பெயர்தான் வேறு - ஆனால் நடப்பது ஹிந்துத்துவா ஆட்சி என்று தங்களை அடையாளம் காட்டுகிறதா அ.இ.அ.தி.மு.க. ஆட்சி?
வாழ்க அண்ணா நாமம்!

அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்

மாநிலங்களவைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளராக சின்னத்துரை என்பவர் முதல் நாள் அக் கட்சியின் பொதுச் செயலாளரால் அறிவிக்கப்படுகிறார். மறுநாள் அவருக்குப் பதிலாக வேறொருவர் அறி விக்கப்படும் தமாஷ் ஒருபுறம் இருக்கட்டும்.

முதலில் அறிவிக்கப்பட்டவரை கட்சியின் அடிப்படை உறுப் பினர் உட்பட அனைத்திலிருந்தும் நீக்கி வைக்கும் அதிரடி அறிக்கை கட்சியின் பொதுச் செயலாளரிட மிருந்து வருகிறது என்றால். அடேடே இதற்குப் பெயர்தான் அவரே போல் உண்டா? இதற்கெல்லாம் ஒரு தனி அத்து வேண்டும் என்று சொல்ல ஆரம் பித்து விடுவார்கள்; எழுத ஆரம்பித்து விடுவார்கள்.

ஒரு வேட்பாளரை அறிவிப்பதற்கு முன் அவரைப் பற்றி தீர விசாரித்து அடையாளங்கண்டு அறிவிக்கும் அடிப்படை அணுகுமுறை இல்லையே என்று எவராவது எழுதுவார்கள் என்று நினைக்கிறீர்களா? நல்ல பத்திரிகா தர்மம்!

வேதமந்திரம் குறுந்தகடு

வேத மந்திரம் குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றுள்ளது. ராமானுஜ எம்பார்ஜீயர் வெளியிட, பெற்றுக் கொண்டவர்கள் ஓய்வு பெற்ற முன்னாள் அய்.ஏ.எஸ். அதிகாரி சுந்தரம், உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் என். வெங்கட் ராமன், அறக்கட்டளைத் தலைவர் மோகன் பராசரன், மியூசிக் அகாடமி செயலாளர் பட்டி வேணுகோபால் ராவ் - இதில் அவாளைத் தவிர வேறு எவாளையும் அழைக்காததிலிருந்து என்ன தெரிகிறது? அவாள் என்றென்றும் அவாளாகவே இருக்கிறார்கள் - இது இவாளுக்கு எப்பொழுது புரியப் போகிறதோ?

Read more: http://viduthalai.in/e-paper/74142.html#ixzz2rYe93w7p