Search This Blog

6.1.14

குரங்கு சாமிக்கு இப்படி ஒரு கொண்டாட்டமா?





ஆஞ்சநேயர் என்ற அனுமாருக்கு ஜெயந்தியாம் - அதாவது பிறந்த நாளாம்!

அனுமாருக்குப் பிறந்த நாள் முன்பெல்லாம் கொண்டாடுவதில்லை; அண்மைக் காலத்தில் பார்ப்பனப் பண்பாட்டின் பரிமாணங்கள் பெருகிய வண்ணமே உள்ளன! இந்து மதப் பிரச்சாரப் புதிய உத்தி!

யாருக்காவது சந்தேகம் வந்தால் நம்ம சன் டிவி போன்ற பல டி.வி.களில் வரும் சீரியல்களையும் மெகா சீரியல்களையும் பார்த்தாலே தெரியும்.

நாட்டில் யாருக்குமே தெரியாத புதிய சடங்குகள், சம்பிரதாயங்கள், வேண்டுதல்கள், சாபங்கள், பேய் வந்து பெண்கள்மீது ஏறிக் கொள்ளுதல் மஹா பாரதம் இப்படி பரிசு பெற வேண்டிய புருடாக்களை பலமாகப் பரப்பி வருகின்றனவே!

புராணக் கதைப்படி அனுமார் எப்படி பிறந்தார் என்றால் வாயு புத்திரன் அவர், அதாவது காற்றுக்குப் பிறந்தவர் - நம்நாட்டில் காற்றுக்குக்கூட பிள்ளைகளைப் பெற்றுத் தரும் விநோதமான சக்தி உண்டு போலும்!

இன்னொரு பக்கத்தில் பீமனோடும் தொடர்புபடுத்திக் கதைவிடல்!

அறிவியல்  - பரிணாமத் தத்துவப்படி டார்வின் கூற்றுப் படி, குரங்கிலிருந்து மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்றான் என்பது ஒருபுறமிருக்க, இந்த அனுமான் எப்போது, எப்படி பிறந்தான்? என்பதையெல்லாம் கிராஸ் எக்சாமின் பண்ணினால் அது வாதத்திற்கு நிற்காது!

அந்த அனுமார்  கடலைக் கடந்து இலங்கைக்குத் தாவி சீதா பிராட்டியைச் சந்திக்கும் இராம தூதுவனாகச் சென்று, சீதையிடம் அந்தக் குரங்கு பேசியதாம்!

அவள் தயங்கியவுடன், அந்த சந்தேகத்தைப் போக்கிட ஸ்ரீமான் இராமச்சந்திர மூர்த்தியின் அங்க மச்ச அடையாளங்களையெல்லாம் கூட அதுவும் வெகு ரகசியமானவைகளாக சீதை - இராமன் மட்டுமே அறிந்த வைகளைக்கூட அனுமன் புட்டு புட்டு வைக்கிறான்! என்னே கொடுமை!

(சந்தேகமிருந்தால் வால்மீகி இராமாயணம் சுந்தரகாண்டத்தைப் பார்த்து விவரம் தெரிந்து கொள்ளுங்கள்).

நாமக்கல் ஆஞ்சநேயர் கடவுள்! இவருக்கு அங்கே ஜெயராமய்யர்கள் அர்ச்சனை செய்யும் பிரபல ஜோதிடக் கோயிலுக்குத் தான் தேவகவுடா, எம்.ஜி.ஆர்., ஜானகி அம்மாள் முதலிய பலரும் சென்று அர்ச்சனை, வேண்டுதல் நடத்தி  பதவியைக் காப்பாற்ற முடியாது ஏமாந்தவர் களானவர்கள் என்றாலும் புத்தி வரவில்லையே பக்தர்களுக்கு!

குரங்கைக் கடவுளாகக் கொண்டு வழிபடும் நாடு இந்தியா என்று கார்ல் மார்க்ஸ் இந்தியாவைப் பற்றிய கட்டுரைகளில் எழுதி யுள்ளார்! அதன் மூலம் கார்ல் மார்க்ஸ் பேனாவையும் நம்ம ஊர் அனுமார் ஒரு பதம் பார்த்து விட்டார்! ஜெய் அனுமான்!

வாழ்க ஜெய் அனுமான்! அவரது ஜெயந்தியில், தஞ்சை, திருச்சி பல கோயில்களில் 10,000 வடை மாலை சாத்தி அதோடு 10,000 லிட்டர் பால், தேன், நெய்யை அந்தக் கல்லின்மீது ஊற்றி பாழ்ப்படுத்தி பக்தி பரவசம் பெற்றுள்ள செய்தியை நமது டி.வி.கள். இந்த சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை விட்டு விடக் கூடாது என்று கருதி படம் பிடித்துக் காட்டி பக்தியைப் பரப்பிட புத்தியை ஒழிக்கவும் ஆயத்தமாகி விட்டார்கள். ஞான பூமியல்லவா நமது பூமி!

பாலுக்கு அழும் பச்சிளம் குழந்தைகள் கோடிக் கணக்கில் ஒருபுறம்!

மறுபுறம் இப்படி கல் சிலை - குரங்குக்கு பாலாபி ஷேகம் என்று கூத்து!

அட வெட்கம் கெட்ட ஜெனமங்களா? செவ்வாய் கிரகம் சென்றாலும் உங்கள் புத்தி மாறாதா? தெளி வடையாதா?

அங்கும் சென்று அனுமாருக்குக் கோயில் கட்டி ஜெயந்தி கொண்டாட வடை சுடாமல் இருந்தால் சரி!

----------------------------ஊசி மிளகா எழுதிய கட்டுரை -"விடுதலை" 05-01-2014

13 comments:

தமிழ் ஓவியா said...


திருவாரூர் கே.தங்கராசு அவர்கள் மறைவுக்கு இரங்கல்


நண்பர் திருவாரூர் கே.தங்கராசு அவர்கள் ஒரு பெரியார் பெருந்தொண்டர். 89 வயதில் அவரது மறைவு சுயமரியாதைக் கொள்கை உலகுக்கு ஒரு பெரும் இழப் பாகும். தொடக்கத்தில் திருவாரூரில் காங்கிரஸ் காரராக இருந்தாலும், பிறகு அவர் 1950 ஆம் ஆண்டுவாக்கில் திராவிடர் கழகத்தில் இணைந்தார்.

நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்களது நாடகங்கள் சிலவற்றிற்கு கதை, வச னம் எழுதினார். அவற்றுள் ரத்தக் கண்ணீர், இராமாயணம் ஆகிய நடிகவேளின் நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை (பின்னது பெரிதும் தந்தை பெரியாரின் இராமாயணம் பற்றிய ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டே எழு தப்பட்டது). அவர் திராவிடர் கழகத்தின் பல போராட்டங் களிலும் கலந்து கொண்டு சிறையேகியவர்; கழகத்தின் பேச்சாளர்களில் முக்கியமான ஒருவராகத் திகழ்ந்தார்.

அன்னை மணியம்மையார் அவர்கள் தலைமையேற்ற பிறகு, கருத்து வேறுபாடுகளால் அவரால் இயக்கத்தில் இணைந்து பணியாற்ற இயலாமல், வெளியேற்றப்பட்ட வர்களுடன் இருந்தார். என்றாலும், அவரது மாறாத சுய மரி யாதை, பகுத்தறிவுக் கொள்கைக்காக (அவர் நம்மை எவ்வளவு விமர்சித்தபோதிலும்) அவருக்கு வீர வணக்கத் தைத் திராவிடர் கழகம் தெரிவித்துக் கொள்கிறது.

அவரது குடும்பத்தினருக்கும், வாழ்விணையர், மகள், மகன் மற்றும் அனைவருக்கும் இரங்கலைத் துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னை,
5.1.2014

கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

கழகத் தலைவர் மரியாதை

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர் கள் சென்னை ராஜா அண்ணா மலைபுரத்தில் உள்ள திருவாரூர் தங்கராசு அவர்களின் இல்லத்திற்குச் சென்று, மலர்மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். அவரின் இணையர், மகள்கள், மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார்.

கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், மாநில மாணவரணிச் செய லாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன், தோழர் முரளி, விடுதலை மேலாளர் ப.சீதாராமன், மந்தைவெளிப் பகுதி இளைஞரணிச் செயலாளர் முகிலன், இரா.பிரபாகரன் மற்றும் தோழர்களும் உடன் சென்று இறுதி மரியாதை செலுத்தினர்.

Read more: http://viduthalai.in/page-8/73237.html#ixzz2pceLIYnd

தமிழ் ஓவியா said...


சனிக்கோளை படமெடுத்த நாசா விஞ்ஞானிகள்


பூமியை விட எட்டு மடங்கு பரப்பளவு கொண்ட சனிக்கோளை மிக நெருக்கமாக நாசா விஞ்ஞானிகள் படம் பிடித்தார்கள். வரலாற்றிலேயே முதன் முறையாக நிகழ்ந்த இந்த சம்பவத்தை ஜெட் ப்ரபல்ஷன் ஆய்வகம் புதன்கிழமை அறிவித்தது. இந்தப் படங்களை நாசா ஏவிய கசினி விண்கலம் எடுத்ததாகவும் நாசா தெரிவித்தது.

2010 டிசம்பர் 5ஆம் தேதி அன்று எப்போதும் சீற்றத்துடன் ஒரு சூறாவளி காணப்பட்டதை கசினி கண்டுபிடித்தது. இது சனியின் வடக்குத் திசையில் ஏறத்தாழ 35 டிகிரி அளவில் காணப்பட்டது. விண்கலம் சனியைச் சுற்றிப் பார்த்ததில் கண்ட பெரிய சீற்றம் இதுதான். நாசா விஞ்ஞானிகள் 1990இல் இதே போன்றதொரு சீற்றத்தைப் படம் எடுத்திருந்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/73231.html#ixzz2pcevDb74

தமிழ் ஓவியா said...

வரவேற்கத்தக்க திமுக மாணவரணியின் ஆர்ப்பாட்டம்

இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராகச் செயல் படும் ஜெயலலிதா அரசைக் கண்டித்து தி.மு.க. மாணவர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஜனவரி 21 அன்று மாநில மாணவர் அணிச் செயலாளர் கடலூர் இள. புகழேந்தி தலைமையில் சென்னையில் நடைபெறுகிறது.

இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக செயல்படும் ஜெயலலிதா அரசைக் கண்டித்து திமுக மாணவர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 21.1.2014 அன்று காலை 10 மணியளவில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகில் நடைபெறுகிறது. கண்டன ஆர்ப்பாட் டத்திற்கு திமுக மாணவர் அணிச் செயலாளர் கடலூர் இள. புகழேந்தி தலைமை வகிக்கிறார்.

தென்சென்னை மாவட்டக் கழக செயலாளர் ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ. மாணவர் அணி துணைச் செயலாளர்கள் கோவி. செழியன் எம்.எல்.ஏ., குத்தாலம் க. அன்பழகன், கோவை கணேஷ்குமார், பூவை சி. ஜெரால்டு, மதுரை க. மகிழன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இடஒதுக்கீட்டை வலியுறுத்தி அ.தி.மு.க. அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்திட நடைபெறும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க கழக மாணவர் அணி நிர்வாகிகளும், மாணவர் அணித் தோழர்களும் திரண்டு வாரீர் வாரீர் என தி.மு.க. மாணவர் அணி சார்பில் அணியின் செயலாளர் இள. புகழேந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/73221.html#ixzz2pcfJhek2

தமிழ் ஓவியா said...


பூரி ஜெகநாதர் கோவில் பூசாரிகள் முறையான வருகைக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு


புவனேஸ்வர், ஜன. 6- பூரி ஜெகநாதர் கோவிலில் பணிபுரிந்துவரும் சுமார் 2,000 பூசாரிகளுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை அறி முகப்படுத்த கோவில் நிருவாகம் முடிவு செய் துள்ளது.

பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 85 பூசாரிகள் கோவிலில் நாள்தோறும் பூஜைகளை நடத்தி வருகின்றனர். இவர்கள் மிகவும் தாமதமாக வருவதால் பூஜைகளை சரிவர நிறைவேற்று வதில்லை என்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதினாலேயே நிருவாகம் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாகத் தெரிய வருகின்றது.

கோவில் நிருவாகம் அளித்த தகவல்களின்படி இங்கு நாள்தோறும் காலை 6 மணியிலிருந்து இரவு வரை 23 விதமான பூஜைகள் நடைபெறு கின்றன. திருவிழாக் காலங்களில் 32 சடங்குகள் நிறைவேற்றப்படுகின்றன. இந்தியாவிலேயே இந்தக் கோவிலில்தான் பல சிக்கலான பூஜை களும் நிறைவேற்றப்படுகின்றன.

எனவே பூசாரிகளின் முறையான வருகை அவசியமாகின்றது. பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்று கோவிலின் தலைமை நிருவாகி யான அரவிந்த்பதி கூறினார். இந்த முறையின் மூலம் காலதாமதம் எற்படுத்து வோருக்கு ஊதிய வெட்டு அறி விக்கப்படும் என்றும், இதன்மூலம் அவர்களைத் தங்களின் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரி வித்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற இந்தக் கோவிலின் தேர்த்திருவிழாவில் போலியான பூசாரிகளால் நடை பெற்ற சம்பவங்களைத் தொடர்ந்து இவர்களுக்கான அடையாள அட் டைகள் வழங்கப்படும் என்று ஒடிசா அரசு சென்ற மாதம் தெரிவித்தது.

வரும் 2015 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நபகலேபார் திருவிழா எனப் படும் தெய்வங்களின் சிலைகளை மாற்றும் நிகழ்ச்சியின்போது இந்த அட்டைகள் அவர்களுக்கு வழங்கப் படும் என்றும் அரசு குறிப்பிட்டுள் ளது. எனவே அதன்பின்னரே அவர் களின் வருகைப்பதிவும் முறைப் படுத்தப்பட முடியும் என்று கோவில் நிர்வாகம் தெரிவிக்கின்றது.

Read more: http://viduthalai.in/page-8/73230.html#ixzz2pcfW4aJi

தமிழ் ஓவியா said...


சமூக நீதிக்கு எதிரான நியமன அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது


சென்னை, ஜன.6- மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை யில் நிரப்பப்பட வேண்டிய பணி யிடங்களான மருத்துவப் பேராசிரி யர்கள், உதவிப் பேராசிரியர்கள், பதிவாளர்கள் போன்ற பணியிடங் களுக்கு ஜனவரி 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என டிசம் பர் 27ஆம் தேதி மருத்துவ நியமனத் துறை குறுகிய காலக்கெடுவை நிர்ண யித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதில் இடஒதுக்கீடு பகிர்வு குறித்த எந்தக் குறிப்பும் காணப்படவில்லை. மருத்துவர்களிடையே பார பட்சம் காட்டும் போக்கும், சமூக நீதிக்கு எதிரான போக்கும் தமிழக அரசின் இந்த அறிவிப்பில் வெளிப்பட்டுள் ளது. சமூகநீதிக்கு முரணான எந்தச் செய லையும் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை பணியாளர்கள் குறித்து வெளியிடப் பட்டுள்ள சமூகநீதிக்கு எதிரான நியமன அறிக்கை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம் என்று மமக தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/73234.html#ixzz2pcfmAefU

தமிழ் ஓவியா said...


நிரந்தர விரோதி


நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்கள் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால், நமது நாட்டில் மதமும், மூட நம்பிக்கையும் ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதியாய் இருக்கிறது.

- (குடிஅரசு, 13.4.1930)

Read more: http://viduthalai.in/e-paper/73207-2014-01-06-09-57-59.html#ixzz2pcgyvMkY

தமிழ் ஓவியா said...


இதய நோயைத் தவிர்க்க 3 வழிகள்


இன்றைய அவசர உலகில் மோசமான உணவு பழக்க வழக்கம் மற்றும் உடல் உழைப்பின்மை காரணமாக பலருக்கும் ஏற்படும் நோய்களில் ஒன்றாக இதய நோய் உள்ளது.

உடல் உழைப்பின்மையும், நொறுக்குத் தீனிப் பழக்கமும், உடல் பருமனை ஏற்படுத்துகிறது. இதன் மூலமாக இதயநோய் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக் கிறது. இதனைத் தவிர்க்க மூன்று வழிகளை பின்பற்ற வேண்டும்.

அதாவது, ஆரோக்கியமான உணவு... ஆலிவ் எண்ணெய், தானியங்கள், காய்கறிகள், கடல் உணவுகள் போன்றவற்றை ஆரோக்கியமாக தயாரித்து சுகாதாரமான முறையில் உண்ண வேண்டும். இன்னமும், கிரிக் நாடுகளில் தங்களது பழைமையான உணவுப் பழக்கத்தைக் கையாளும் மக்களுக்கு இதயநோய் ஏற்படுவதில்லை என்று ஆய்வுகள் சான்றளிக்கின்றன.

புகை பிடிக்காதீர்

இதயநோய்களை ஏற்படுத்தும் காரணிகளில் சிகரெட் பிடிப்பது முக்கியக் காரணமாக உள்ளது. இந்த காரணத்தால், அமெரிக்காவில் தற்போது புகைப்போரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந் துள்ளது.

ஆனால், மோசமான செய்தி என்னவென் றால், மக்கள் தொகை அதிகமாக இருக்கும் இந்தியா, சீனாவில் புகைப்போரின் எண்ணிக்கை அதிகரித் துக் கொண்டே வருகிறது. புகைப்பதால் நுரையீரல் புற்று நோய் மட்டுமே ஏற்படும் என்று எண்ணி வந்துள்ளோம். ஆனால், புகைப்பதால் இதய நோய்

ஏற்படும் என்ற விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.

நடையை ஓரம் கட்டாதீர்

பலருக்கும் இப்போது நடப்பதற்கான வாய்ப்பே குறைவாக உள்ளது. எங்கு செல்வதென்றாலும் வாகனத்திலும், ஆட்டோவிலும் செல்கிறோம். முன்பெல்லாம் வசதி இல்லாததால் அதிகம் நடந் தார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியமாகவும் வாழ்ந்தார்கள்.

இதயநோய் ஏற்பட்டு மருத்துவ மனைக்கு நடையாய் நடக்க வேண்டாம் என்று விரும்பினால், இப்போதே ஆரோக்கியமாக நடைப் பயணம் மேற்கொள்வோம்.

Read more: http://viduthalai.in/page-7/73210.html#ixzz2pchOk3qt

தமிழ் ஓவியா said...


தூக்கமின்மை நரம்பியல் அழிவிற்கு வழிவகுக்கும்: ஆய்வுத் தகவல்


ஒரு மனிதனின் ஆரோக்கியமான உடல் நலத்திற்கு நல்ல தூக்க மும் ஒரு காரணமாக உள்ளது. தூக்கம் இல்லாமை என்பது மாரடைப்பு, உடற் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் வருவ தற்கு அதிக வாய்ப்புகளை அளிப்பதாகவே நிபுணர்கள் கருது கின்றனர்.

சுவீடன் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வானது தூக்கமின்மை என்பது எவ்வாறு மக்களின் சுகாதாரத்தைப் பாதிக்கின்றது என்பதை தெரிவிப்பதாக உள்ளது. உப்சாலா பல்கலைக்கழகத்தின் ஆய்வுகள் ஒரு இரவின் தூக்கமின்மை என்பது மனிதனின் மூளையில் காணப்படும் மூலக்கூறுகளில் இரத்த அளவு அதிகரிப்பதை நிரூபித்துள்ளது.

இந்தப் பரிசோதனையை மேற்கொண்ட சுய ஆர்வலர்களின் இரத்தத்தில் மூளைத் திசுக்களின் அழிவைக் குறிக்கும் என்எஸ்ஈ மற்றும் எஸ்-100பி போன்ற காரணிகள் அதிகரித்திருந்தது கண் டறியப்பட்டது. ஸ்லீப்' என்ற மருத்துவ இதழில் சாதாரண எடை கொண்ட 15 பேரின் தூக்க நேரத்தின் அளவுகள் கணக்கிடப் பட்டிருந்தன.

இவர்களில் ஒருவர் மட்டும் ஒரு நாள் இரவு தூங்க வில்லை. மற்றவர்கள் அனைவரும் எட்டு மணிநேர தூக்கத்தைப் பெற் றிருந்தார்கள். ஒரு நாள் இரவு தூங்காமல் இருந்த நபரின் இரத்தத்தில் மூளைத் திசுக்களின் அழிவுக் காரணிகளான என்எஸ்ஈ மற்றும் எஸ்-100பி இவற்றின் கலவைகள் அதிகரித்துக் காணப்பட்டன.

இதன்மூலம் தூக்கமின்மை என்பது ஒருவரது நரம்பியல் அழிவிற்கான செயல்முறைகளைத் விரைவுப்படுத்து கின்றது என்று உப்சலா பல்கலைக்கழகத்தின் முன்னணி ஆராய்ச்சி யாளரான கிறிஸ்டியன் பெனடிக்ட் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இத்தகைய ஆய்வுகள் ஒரு நல்ல இரவு தூக்கமானது மனிதனின் மூளையை ஆரோக்கியமாக வைத்திருப் பதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதைத் தெரிவிக்கின்றன.

Read more: http://viduthalai.in/page-7/73209.html#ixzz2pchrsOyM

தமிழ் ஓவியா said...


சிந்திக்க முடிந்தது


புத்தர் அந்தக் காலத்திலேயே துணிந்து சொன்னார்; கடவுள் ஒன்று இல்லை; அது இருக்கவேண்டிய அவசியமுமில்லை என்று சொன்னார். கடவுள் இல்லை என்பதை உணர்ந்ததால்தான் புத்தரால் அறிவோடு சிந்திக்க முடிந்தது.

- (விடுதலை, 23.1.1968

Read more: http://viduthalai.in/page-2/73275.html#ixzz2plA8tsTM

தமிழ் ஓவியா said...


நீதிபதிகளை மை லார்ட்' என அழைக்க வேண்டியது கட்டாயமல்ல: உச்சநீதிமன்றம்


புதுடில்லி, ஜன.7- நீதிமன்றங் களில் நீதிபதிகளை மை லார்ட், யுவர் ஆனர், யுவர் லார்ட்ஷிப் என அழைக்க வேண்டிய கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்.எல். தத்து மற்றும் எஸ்.ஏ.பாப்டே ஆகி யோர் அடங்கிய அமர்வு திங்கள் கிழமை கூறியதாவது:

மை லார்டு என்றுதான் அழைக்க வேண்டியது கட்டாயம் என நாங்கள் எப்போது கூறினோம்? நீதிபதிகளை "ஸார்' என்று அழைக்கலாம். "யுவர் ஆனர்', "லார்டுஷிப்' என்று அழைத் தாலும் ஏற்றுக் கொள்கிறோம்.

எனினும், இதுபோன்ற வார்த்தை களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யுமாறும், நீதிபதிகளை இது போன்ற பாரம்பரிய முறைப்படி அழைக்கக் கூடாது என்றும் மனு தாரர் கோருவதை ஏற்க முடியாது.

நீதிபதிகளை எவ்வாறு அழைக்க வேண்டும் என்று நாங்கள் உத்தரவிட முடியாது. அது வழக்குரைஞரின் விருப்பம் என்று நீதிபதிகள் தெரி வித்தனர்.

சிவசாகர் திவாரி என்ற 75 வயது வழக்குரைஞர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த பொது நல வழக்கில் "நீதிமன்றங்களில் நீதிபதிகளை மைலார்டு, கனம் கோர்ட்டார் அவர் களே என்று அழைப்பது காலனி ஆதிக்க சகாப்தத்தின் அடையாள மாகும். எனவே இவ்வாறு அழைப்ப தற்குத் தடை விதிக்க வேண்டும்' என்று கோரியிருந்தார். அவரது மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்து, நீதிபதி கள் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்

Read more: http://viduthalai.in/page-2/73281.html#ixzz2plAsyRUg

தமிழ் ஓவியா said...


நோய்களை வரும்முன்பே கண்டுபிடித்து தடுக்கும் ஆய்வுகளில் மருத்துவமனைகள் ஈடுபட வேண்டும் அப்துல்கலாம்

சென்னை, ஜன. 7- நோய்கள் வரும் முன்பே கண்டுபிடித்து தடுக்கும் ஆய்வுகளில் மருத்துவமனைகள் ஈடுபட வேண்டும் என்று முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் கேட்டுக் கொண்டார்.

சென்னை, அப்போலோ மருத் துவமனையில், டெலிரேடியாலஜி தொலைதூர கலந்தாலோசனை மற்றும நோயறிதல் சேவையை முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நேற்று துவக்கி வைத் தார். அப்போலோ மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ப்ரீதாரெட்டி வரவேற்றார். மருத்துவமனை சேர்மன் பிரதாப் சி.ரெட்டி சிறப்புரையாற் றினார்.

டெலிரேடியாலஜி தொலைதூரச் சேவையை அப்துல் கலாம் துவக்கி வைத்து பேசியதாவது:

கிராமங்களில் இருந்து எளிதில் நகரத்தில் உள்ள மருத்துவமனை களுக்கு வர முடியாத நோயாளிகள், அவசர சூழ்நிலையில் எக்ஸ்ரே, சிடி மற்றும் எம்ஆர்ஸ்கேன் போன்ற ரேடி யாலஜி ரிப்போட்டை அப்போலோ மருத்துவமனையில் புதியதாக துவங் கப்பட்டுள்ள மய்யத்துக்கு அனுப்பி உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும். இதன்மூலம் உலகத்தின் எந்த பகுதியில் இருக்கும் வல்லு நர்களையும் தொடர்பு கொண்டு நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க முடியும்.

இந்தியாவில் குறிப்பாக மருத்து வத்தில் 1980ஆம் ஆண்டுகளில் இருந்த நிலை தற்போது முற்றிலும் மாறியுள்ளது. இப்போது யாரும் சிகிச்சை பெற வெளிநாடு செல்ல தேவை இல்லை. அதிகளவில் வெளிநாட்டில் இருந்து நோயாளிகள் சென்னை வருகிறார்கள். அப் போலோ மருத்துவமனையில் உலக தரத்துக்கு இணையான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் 45 வயதானவர் களுக்கு இதயநோய் வருவதற்கு மியோட்டின் பைன்டிங் புரோட்டீன் சி என்ற ஜீன் அதிக காரணமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இதுபோன்ற நோய்கள் வரும் முன்னே கண்டு பிடித்து தடுக்க வேண்டும். அதற்கான ஆய்வுகளில் மருத்துவமனைகள் ஈடுபட வேண்டும். அந்த ஆய்வுகள் நோய்களை முற்றிலும் தீர்ப்பதற்கான தீர்வாக இருக்க வேண்டும். நோய் களை முற்றிலுமாக ஒழிக்கக்கூடிய மருந்து கண்டுபிடிக்க அதிக நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.

Read more: http://viduthalai.in/page-2/73280.html#ixzz2plB8SAB9

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


தமிழர்கள் தானே!

செய்தி: தமிழக மீனவர்கள் 125 பேரின் காவலை ஜனவரி 20ஆம் தேதி வரை நீட்டித்து இலங்கை நீதிமன்றங்கள் உத்தரவிட்டன. சிந்தனை: அன்றாட வானிலை அறிவிப்புப் போல வரும் செய்திதான் இது. தமிழர்கள் என்ன மலை யாளிகளா? இரு கேரள மீனவர்களை இத்தாலியைச் சேர்ந்த கப்பல் படையினர் சுட்டுக் கொன்றபோது எப்படியெல்லாம் மத்திய அரசு துள்ளிக் குதித்தது - நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டும் இருக்கிறது என்பதைக் கவனித்தால் இந்திய அரசின் மாற்றாந்தாய் மனப்போக்குப் பளிச் சென்று புரியுமே!

சமுதாயக் கூட்டணி அம்போவா?

செய்தி: பெஸ்ட் ராமசாமி தலைமையிலான கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்துக்கு (கொ.மு.க.) மாநில மற்றும் முக்கிய நிர்வாகிகள் அடங்கிய 51 பேர் கொண்ட உயர்நிலை தேர்தல் நிர்வாகக் குழு அமைக்கப் பட்டுள்ளது.

சிந்தனை: ஏன் 50 கட்சி சமுதாய (ஜாதி) கூட்டணி என்னவாயிற்றாம்?

படிப்பும் - பகுத்தறிவும்

செய்தி: ஜி.எஸ்.எல்.வி. டி5 ராக்கெட் வெற்றிகர மாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக நன்றி தெரிவித்துக் கொள்ள இஸ்ரேல் தலைவர் ராதா கிருஷ்ணன் திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்தார்.

சிந்தனை: ஒரே ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதற்கு முன்பெல்லாம் ராக்கெட்டை ஏவுவதற்கு முன், அது குறித்த மாதிரியைக் கொண்டு போய் ஏமுமலை யானின் பாதங்களிலும், காளகஸ்தி கோயிலிலும் வைத்து வழிபடுவார்.

அதுகுறித்து கடும் விமர்சனங்கள் வந்த நிலையில், இப்பொழுது ராக்கெட்டை விண்ணில் செலுத்திய பிறகு இந்தத் தரிசனங்கள் நடந்துள்ளன.

ஒரு கேள்வி: ராக்கெட் விண்ணில் பறந்தது - விஞ்ஞான சாதனையா? குழவிக்கல்லு ஏழுமலையான் சாதனையா? (நம் நாட்டுப் படிப்புக்கும் பகுத் தறிவுக்கும் சம்பந்தமில்லை - தந்தை பெரியார்)

ஓம் முருகா!

செய்தி: திருச்செந்தூர் பாத யாத்திரை பக்தர்கள் 3 பேர் விபத்தில் பலி! சிந்தனை: ஒம் முருகா ஓம் முருகா, வேல்! வேல்!! என்று பக்தர்கள் கத்துவதன் பலா பலன் இதுதானோ!
அர்ச்சகப் பார்ப்பனர்கள் தன்னை (சிலையை) சுரண்டுவதையே தடுக்க முடியாத முருகனா பக்தர்களைக் காப்பாற்றப் போகிறான்?

ஓவர் ஜனநாயகம்!

செய்தி: காஷ்மீரில் இராணுவம் நீடிப்பது தொடர்பாக ஆம்ஆத்மி கட்சியின் பிரசாந்த் பூஷன் மக்கள் கருத்தை அறிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கருத்துக்கு அக்கட்சியின் அகில இந்திய அமைப்பாளரும், டில்லி மாநில முதல் அமைச்சருமான அர்விந்த் கெஜ்ரிவால் மறுப்புத் தெரிவித்தார். சிந்தனை: எந்தப் பிரச்சினைக்கும் மக்கள் கருத்தைக் கேட்பது என்ற நிலைப்பாட்டை உண்டாக் கியதே கெஜ்ரிவால் தானே! இன்னும் என்னென்ன கூத்து நடக்கப் போகிறதோ!

சுறுசுறுப்பு தான்!

செய்தி: இளம் பெண்ணை வேவு பார்த்த விவகாரத்தில் மோடியின்மீது விசாரணை ஆணையம் அமைப்பதில் - நீதிபதிகள் நியமனத்தால் தாமதம். சிந்தனை: அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எந்த விடயத்தில் துரித கதியில் செயல்பட்டு இருக்கிறது - பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தைத் தவிர?

பேராசையே போற்றி!

செய்தி: அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு நிதி நிறுவனங்களிடம் ஏமாறாதீர்கள் - செபி (பங்கு பரிவர்த்தனை வாரியம்) எச்சரிக்கை! சிந்தனை: மோசடி நிறுவனங்கள் பற்றி ஏராளமான செய்திகள் வந்த வண்ணம் இருந்தாலும் பேராசை யாரை விட்டது?

(கடவுள் நம்பிக்கையிலிருந்து பணப் பிரச்சினை வரை எல்லாம் பேராசைதான்!)

Read more: http://viduthalai.in/e-paper/73273.html#ixzz2plBIwTA7

தமிழ் ஓவியா said...


கடவுள் சக்தி இவ்வளவுதான்!


லாரி மோதி அய்யப்பப் பக்தர் பலி

நெல்லை, ஜன.7- நெல்லை அருகே சபரி மலைக்கு பயணம் சென்ற அய்யப்ப பக்தர்களில் ஒருவர் லாரி மோதி பலியாகினார். விருதுநகர் மாவட்டம் முகவூரைச் சேர்ந்த ராமன் மகன் ராகவன் (41), பக்தர்கள் சிலருடன் சபரிமலைக்கு பாதயாத்திரை சென்றுள்ளார். இவர்கள் தென்காசி சாலையில் உள்ள திரிகூடபுரம் அருகே வந்த போது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் ராகவன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் முக வூரைச் சேர்ந்த பாண்டி கனகராஜ் என்பவர் படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

அய்யப்பப் பக்தர்கள் ஆறு பேர் காயம்

உடுமலை, ஜன.7 அய்யப்ப பக்தர்கள் பயணம் செய்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில், ஆறு பேர் காயமடைந்தனர். மதுரை கொச்சைக்காலான் தெருவைச் சேர்ந்தவர் குழந்தைவேலு,33; வேன் ஓட்டுநர். இவர் நேற்றுமுன்தினம் இரவு மதுரையில் இருந்து, தனது சுற்றுலா வேனில், அய்யப்ப பக்தர்கள் 12 பேருடன் சபரிமலைக்கு புறப்பட்டார். நேற்று காலை 6.30 மணிக்கு, உடுமலை- பழநி ரோடு அண்ணா குடியிருப்பு அருகே சென்று கொண்டி ருந்தபோது, மொபட் வாகனத்தில் ஒரு சிறுவன் ரோட்டை கடக்க முயன்றான். மோதுவதை தவிர்க் கும் முயற்சியில் வேன் சாலையோர சிறு பள்ளத்தில் கவிழ்ந்தது. மொபட்டில் வந்த பள்ளி மாணவன் கீழே விழுந்து காயமடைந்தான். இவ்விபத்தில் வேன் ஓட்டுநர் குழந்தைவேலு உள்பட ஆறு பேர் காய மடைந்தனர். உடுமலை காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/73266.html#ixzz2plBXcLTI