Search This Blog

29.1.14

அமாவாசை திதியில் புத்தாண்டுப் பிறந்ததால் ஒரே ஆண் குழந்தை பெற்றவர்களுக்கு ஆபத்தா?


சென்னை தமிழ்நாட்டுக்கு மட்டும் தலைநகரமல்ல - மூடநம்பிக்கைக்கும் இதுதான் தலைநகரம் என்று சொல்லுவார் தந்தை பெரியார்.

நேற்று ஒரு வதந்தி - ஜனவரி மாதம் அமாவாசை திதியில் புத்தாண்டுப் பிறந்ததாலும், தை மாதம் செவ்வாய்க்கிழமை பிறந்ததாலும் ஒரே ஆண் குழந்தை பெற்றவர்களுக்கும், வீட்டுக்கும் ஆபத்து என்ற வதந்தி காஞ்சிபுரத்தில் பரவியது.

இதற்குப் பரிகாரமாக பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் ஏழு விளக்கு ஏற்றி வைத்து வழிபடவேண்டும் என்று யாரோ கூற, அந்த முட்டாள்தனமும் அட்டியின்றி நடைபெற்றுள்ளது. (ஏன் எட்டு விளக்கு ஏற்றினால் என்னவாம்? யாருக்குத் தெரியும்?).

அது சென்னை, பெரம்பூர், வியாசர்பாடி, சர்மா நகர், எஸ்.ஏ.காலனி, பாரதி நகர், கொடுங்கையூர் ஆகிய பகுதிகளிலும் பரவிட - பெண்கள் தெருக்களில் விளக்கேற்ற ஆரம்பித்துவிட்டனராம். அத்தோடு விட்டார்களா?

ஏழு சுமங்கலிப் பெண்களுக்கு வெற்றிலைப் பாக்கு, பழம், மஞ்சள், குங்குமத்துடன் ஜாக்கெட் துணி கொடுத்து, அவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றனராம். (நல்ல வியாபாரத் தந்திரம்தான்!)

இதுபோன்ற மூட நம்பிக்கைகள் அவ்வப்பொழுது கிளப்பிவிடப்பட்டு, ஒரு சில நாள்களிலேயே தானாகவே அடங்கிவிடும்.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் எருமை மாடு புகுந்தது என்றனர். திருப்பதி கோவிலில் தாயாரம்மாள் தாலி அறுந்து விழுந்தது என்று கிளப்பிவிட்டனர். தாலிக் கயிறு வியாபாரம் ஜோராக நடைபெற்றது.
இந்த வருஷப் பிறப்பு சரியில்லை - சகோதரிக்குப் பச்சைப் புடவை வாங்கிக் கொடுக்கவேண்டும் என்றனர்.

இன்னொரு முறையில் சிவப்புப் புடவை வாங்கிக் கொடுக்கவேண்டும் என்று கிளப்பிவிட்டனர் - ஜவுளிக் கடைக்காரர்களின் பிழைப்புக்கு வழி செய்யப்பட்டது.

பிள்ளையார் பால் குடித்தார் என்ற வதந்தி இரண்டொரு நாள்களில் வந்த சுவடு தெரியாமல் அடங்கிவிட்டது.

தலையில்லா முண்டம் டீ குடித்தது என்கிற அளவுக்குக்கூட தலைநகரமாம் சென்னையில் கிளப்பிவிடப்பட்டது. (அப்பொழுது சென்னை மாநகர ஆணையராக இருந்த சிறீபால் ஏதாவது ஒரு முண்டம் இப்படிக் கிளப்பிவிட்டிருக்கும் என்று மண்டையில் அடித்ததுபோல பதில் சொன்னார்).

மக்களிடத்தில் விஞ்ஞான மனப்பான்மையைப் பரப்பிடவேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் சொல்கிறது. ஆனால், இங்கே அதற்கு மாறாக மூட நம்பிக்கைகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.

அரசின் தலைமையே மூட நம்பிக்கையில் மூழ்கி எழுந்தால், குடிகளும் அவ்வழிதானே தொடர்வார்கள்.

வதந்தியில் ஈடுபடுவது என்பதும் குற்றமே! இதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்துத் தண்டிக்கவேண்டியது அரசின் தலையாய கடமையாகும். காவல்துறையின் உளவுப் பிரிவு முனைந்தால் வதந்தியாளர்களைக் கண்டுபிடித்து சட்டத்தின்முன் நிறுத்தலாம்.

தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தால், விஷமிகள் தங்கள் வாலைச் சுருட்டிக்கொள்வார்களே!

நமது தொலைக்காட்சிகளும் கொஞ்சம் சமூக அக்கறையோடு நடந்துகொண்டால், இதுபோன்ற மூடத்தனங்களைச் சுலபமாக குழிதோண்டி மூடிவிடலாமே!

கழகம் நடத்தும் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை ஒளிபரப்பினால்கூடப் போதும். இவர்கள்தான் மோசடி மகரஜோதியையே நேரலையாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்களே, என்ன செய்ய!

                      ---------------------------"விடுதலை” 29-1-2014

14 comments:

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வு: சலுகை மதிப்பெண் வழங்க தமிழக அரசு தீவிர ஆலோசனை!

சென்னை, ஜன.29- ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்து, தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிக்க, அரசாணையில் வழிவகை செய்துவிட்டு, அதை அமல்படுத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் முன் வராததை, தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின், சென்னை மண்டல இயக்குநர், கடுமையாக விமர்சித்து உள்ளார்.

இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக, டி.ஆர்.பி., செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள இயக்குநர், உடனடியாக, டி.இ.டி., தேர்வில், மதிப்பெண் சலுகை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; தவறினால், தேசிய ஆணையத்தின் கவனத்திற்கு, பிரச்சினை கொண்டு செல்லப்படும்' என, எச்சரித்துள்ளார்.

இந்த விவகாரம், மிகப்பெரியதாக கிளம்பியிருப்பதால், மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்து, டி.ஆர்.பி., தீவிர ஆலோசனையில் இறங்கி உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தப் பிரச்சினையில், தன்னிச்சையாக, டி.ஆர்.பி., எந்த முடிவும் எடுக்க முடியாத நிலை உள்ளது. ஆணை யத்தின் உத்தரவு குறித்து, முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, உரிய முடிவை எடுக்க, டி.ஆர்.பி., தீர்மானித்துள்ளது. மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்த அறிவிப்பை, முதல்வரே வெளியிடுவார் எனவும், எதிர்பார்க்கப்படு கிறதாம்.

Read more: http://viduthalai.in/e-paper/74298.html#ixzz2rqQdalC9

தமிழ் ஓவியா said...


சபாஷ் சரியான நடவடிக்கை


சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட ஆசாராமின்
ஆசிரமம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது
அரசு அதிகாரிகள் நடவடிக்கை

ஜபல்பூர், ஜன.29- மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே பெதாகட் என்ற இடத்தில் உள்ள சாமியார் ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தை உள்ளூர் அதிகாரிகள் இடித்துத் தள்ளினர். இந்த ஆசிரமத்தை இடிப்பதற்கு பல்வேறு சட்ட ரீதியான சிக்கல்கள் இருந்து வந்தன. அவை நீங்கியதைத் தொடர்ந்து தற்போது ஆசிரமம் இடிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 7000 சதுர அடி பரப்பளவிலான இடத்தில் இந்த ஆசிரமம் கட்டப்பட்டிருந்தது. ஆசிரமம் இடிக்கப்படுவதையொட்டி பெருமளவிலான காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டி ருந்தனர். இதுகுறித்து பெதாகட் நகராட்சியின் தலைமை செயல் அதிகாரி அனிதா யாதவ், வட்டாட்சியர் ரிஷப் ஜெயின் செய்தியாளர்களிடம் கூறுகையில், இடிக்கப்பட்ட கட்டடம், சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகும். இதை இடிக்கத் தடை வாங்கியிருந்தனர். தற்போது அது நீங்கியுள்ளதைத் தொடர்ந்து இடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடம், இடம் ஆகிய அனைத்தும் சேர்த்து மொத்தம் 21,000 சதுர அடி பரப்பளவாகும் என்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/74300.html#ixzz2rqQnFovR

தமிழ் ஓவியா said...


கழகத்தலைவர்பேட்டி


சென்னையில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களை இன்று சந்தித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியில் வந்த போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குச் சுருக்கமாகப் பதில் அளித்ததாவது:-

டெசோ கூட்டம் பற்றி டெசோ தலைவரிடம் பேசிடவே வந்தேன் என்று குறிப்பிட்டார்

தி.மு.க.வில் சகோதரர்களுக்குள் சண்டை நடக்கிறதா என்ற ஒரு செய்தியாளர் கேள்விக்கு சண்டை என்றெல்லாம் கூற முடியாது என்றார். சமரசம் நடக்கிறதா என்ற கேள்விக்கு அதையெல்லாம் தி.மு.க தலைவர் பார்த்துக் கொள்வார் - என்று குறிப்பிட்டார்.

தி.மு.க. மீது எங்களுக்கு எப்போதும் அக்கறை யுண்டு என்றும் கூறினார்.

அழகிரிக்கு பிறந்தநாளில் வாழ்த்து கூறுவீர்களா என்ற கேள்விக்கு வாழ்த்துகள் பொதுவாக எல்லோ ருக்குமே உண்டு என்று கூறினார் கழகத்தலைவர்.

Read more: http://viduthalai.in/e-paper/74360.html#ixzz2rvfiYLFi

தமிழ் ஓவியா said...

திருவள்ளுவரா -முண்டகக் கண்ணியம்மனா?

சென்னை - கலங்கரை விளக்கம் (Light House) மயிலாப்பூருக்கும் இடையில் பறக்கும் இரயில் நிலையில் விரைவில் செயல்படவிருக்கிறது.

புதிய ரயில் நிலையம் உருவாக்கப்படும் பொழுது சம்பந்தப்பட்ட மாநில முதல் அமைச்சர் தான் ரயில் நிலையத்துக்குப் பெயர் சூட்டுவார். அந்த முறையில் ரயில்வே நிருவாகம் நான்கு பெயர்களை முதல் அமைச்சருக்குச் சிபாரிசு செய்தது.

1) திருவள்ளுவர் ரயில் நிலையம்
2) மாதவப் பெருமாள் ரயில் நிலையம்
3) சமஸ்கிருதக் கல்லூரி ரயில் நிலையம்
4) முண்டகக் கண்ணியம்மன் கோயில் ரயில் நிலையம்

இந்த நான்கு பெயர்களில் முதல் அமைச்சர் தேர்வு செய்து அறிவித்திருப்பது எது தெரியுமா?

முண்டகக் கண்ணியம்மன் கோயில் ரயில் நிலையம் என்று முதல் அமைச்சர் பெயர் சூட்டியுள்ளார்.

அண்ணா பெயரில் கட்சியையும், ஆட்சியையும் வைத்துக் கொண்டு இருக்கும் முதல் அமைச்ச ருக்கு, திருவள்ளுவரைவிட, மூடநம்பிக்கையின் அடிப்படையில் முண்டகக் கண்ணியம்மன் கோயில் முக்கியமாகப் போய் விட்டதா?

இனவுணர்வாளர்களும், பகுத்தறிவாளர் களும், மதச் சார்பின்மையை ஏற்பவர்களும் இது பற்றிச் சிந்திப்பார்களாக, அடையாளம் காண் பார்களாக! முதல் அமைச்சர் மறுபரிசீலனை செய்து திருவள்ளுவர் பெயரைச் சூட்டுமாறு வலியுறுத்துகிறோம்!


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.



சென்னை
30.1.2014

Read more: http://viduthalai.in/e-paper/74386.html#ixzz2rvfwwB9W

தமிழ் ஓவியா said...


கலைஞர் தலைமையில் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) கலந்துரையாடல் கூட்டம்


டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் 1.2.2014 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் தமிழ்ஈழம் ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) கலந்துரையாடல் கூட்டம், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்.

அதுபோது டெசோ அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

- டெசோ

Read more: http://viduthalai.in/e-paper/74359.html#ixzz2rvg6C6Yy

தமிழ் ஓவியா said...


சட்டசபையில் ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க. வெளிநடப்பு


அரசின் பல்வேறு துறைகளில் இடஒதுக்கீடு பின்பற்றாதது ஏன்?

தமிழகத்திற்கு நன்மை தரக்கூடிய சேது சமுத்திரத் திட்டத்தைத் தடுப்பதா?

சாகுபடியை இழந்த விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீட்டை வழங்காதது ஏன்?

செம்மொழித் தகுதியைச் சீர்குலைக்கின்ற வகையில் நடவடிக்கைகளா?

சட்டசபையில் ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க. வெளிநடப்பு

சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே மு.க.ஸ்டாலின் பேட்டி


சென்னை, ஜன. 30- தமிழக அரசின் பல் வேறு துறைகளில் பல நூறு பணி இடங்கள் காலி - இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை மதிக் காதது, தமிழகத்திற்குப் பெரிதும் நன்மை தரக் கூடிய சேது சமுத்திரத் திட்டத்தை வரவிடாமல் தடுக்கின்ற அதிமுக அரசின் போக்கு, நீரின்றி சாகுபடியை இழந்த விவசாயிகளுக்கு முழு மையான இழப்பீட்டுத் தொகை வழங்காதது. செம்மொழித் தகுதியைச் சீர்குலைக்கின்ற வகை யில் நடவடிக்கைகள் இவை அனைத்தையும் கண்டிக்கின்ற வகையில் ஆளுநர் உரையை திமுகழகம் புறக்கணித்து வெளிநடப்பு செய் கின்றது என இன்று (30.1.2014) சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே திமுகழக சட்டமன்ற சட்சித்தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர் களிடையே தெரிவித் தார்.

இன்று (30.1.2014) நண் பகல் 12 மணியளவில் தமிழக சட்டமன்றத்தில் 2014-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழக ஆளுநர் டாக்டர் கே.ரோசய்யா அவர்கள் உரை நிகழ்த்தினார். அப்போது ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த திமுக சட்டமன்ற உறுப் பினர்கள் சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே வந்தனர். அங்கே கூடியி ருந்த செய்தியாளர்களி டம் திமுக சட்டமன்ற கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

இந்த ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து பல்வேறு கொடுமைகளுக்கும், இன்னல்களுக்கும் ஆளாகி வருகிறார்கள், கெட்டுப்போய்விட்ட சட்டம் ஒழுங்குப் பிரச் சினை - வாட்டி வதைத் திடும் மின்வெட்டுக் கொடுமை.

குறுவை, சம்பா பயிர் சாகுபடிக்கு உரிய காலத்தில் தேவையான அளவு காவிரி நீரைப் பெற்றுத் தரதவறியது - சாகுபடியை இழந்தும் கடன்பட்டும், கண் ணீர்க்கடலில் ஆழ்ந் துள்ள விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீட்டுத் தொகையை முறையா கவோ, முழுமையா கவோ வழங்காதது.

சாதிக்கலவரத்திற்குத் தகுந்த தீர்வு காணாதது. திமுக ஆட்சியில் தீட்டப் பட்ட திட்டங்களுக்குப் பொறாமை காரணமாக முடிவு கட்டிய கொடுமை - தமிழகத்தில் அனைத்து ஆறுகளிலும் நடைபெ றும் மணல் கொள்ளைகள்.

தமிழகத்திற்குப் பெரிதும் நன்மை தரக் கூடிய சேது சமுத்திரத் திட்டத்தை வரவிடாமல் தடுக்கின்ற வஞ்சகம். அரசின் பல்வேறு துறை களிலும் பல நூறு பணி இடங்கள் காலி - இட ஒதுக்கீட்டுக் கொள் கையை மதிக்காதது. நெல், கரும்பு விவசாயி களுக்குக் கட்டுப்படி யாகக் கூடிய உரிய விலை கொடுக்க முன் வராதது.


செம்மொழித் தகுதியைச் சீர்குலைக் கின்ற வகையில் நட வடிக்கைகள் என்று இவை போன்ற எண் ணற்ற ஜனநாயக விரோத - மக்கள் விரோத - சட்ட விரோத நடவடிக்கை களைக் கண்டித்து, ஆளுநர் உரையினைப் புறக்கணித்து, திராவிட முன்னேற்றக் கழகம் வெளிநடப்பு செய்கிறது என்று தெரிவித்து இந்த அவையை விட்டு வெளி யேறினோம் என்று சட் டமன்ற வளாகத்திற்கு வெளியே கூடியிருந்த செய்தியாளர்களிடம் திமுக சட்டமன்ற கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/74358.html#ixzz2rvgEIgoL

தமிழ் ஓவியா said...


நாட்டு நடப்புகள்


மோசடி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிக்கெட் வாங்கித் தருவதாகக் கூறி பக்தர்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட போலி அய்.ஏ.எஸ். அதிகாரி வெங்கட் ரமணா கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 6.40 லட்சம் ரூபாய் ரொக்கம், ஒருகாரைப் போலீசார் பறி முதல் செய்தனர். (கைது செய்யப்பட்டு இருப்பவரும் திருப்பதி ஏழுமலையான் பெயரைக் கொண்டவர்தான் - வெங்கடேசன் தான். இது போன்ற மோசடி வேலை நடந்து கொண்டு இருந்ததன் தொடர்ச்சிதான் இது. இதைக் கூடத் தடுக்க முடியாதவன்தான் தீரார வினையெல்லாம் தீர்த்து வைப்பானாம். ஹி... ஹி....)

போராட்டம்

கோயம்பேடு சந்தை அருகே டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பெண்கள் போராட்டம் நடத்தினர். (நியாயந்தானே! இந்தப் பிரச்சினையில் பெரிதும் பாதிக்கப்படுவது குடும்பத் தலைவிகள் தானே?)

ஆபாசம்

இசையமைப்பாளர் அனிருத்து பெண்களைப் பற்றி ஆபாசமான பாடல் ஒன்றை யூ டியூப்பில் உலா விட்டுள்ளார். அவர்மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. (சினிமாவில் படுக்கையறைக் காட்சிகள், குத்தாட்டங்கள், இரு பொருள் கொண்ட பாடல்கள் கோயில்களில் ஆபாசமான சிலைகள், சித்தி ரங்கள் இத்தியாதி இத்தியாதி இருக்கத்தான் செய்கின்றன இவற்றைப் பற்றியும் சிந்திப்பது நல்லதல்லவா!)

ராகுல்பேச்சு

ராகுல் பேசினாலே பா.ஜ.க.வுக்கு வெற்றி - இவ்வாறு கூறியிருப்பவர் இல. கணேசன். (நரேந்திரமோடியை இன்னும் அதிகம் பேச விட்டாலே போதும் அது காங்கிரசுக்குச் சாதக மாகவே முடியுமே!)

குட்டையைக் குழப்பாதீர்!

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை - இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் டில்லியில் நேற்று சந்தித்துள்ளார். (மார்ச்சு மாதத்தில் அய்.நா.வின் மனித உரிமை அமைப்பில் முக்கிய நாடுகள் பல, இலங்கைக்கு எதிராகத் தீர்மானத்தைக் கொண்டு வரும் இந்தக் கால கட்டத்தில் இந்தச் சந்திப்பு, சிங்கள அரசுக்குப் பச்சைக்கொடி காட்டுவதற்கான ஆயத்தமாக இருக்கக் கூடாது; ஏற்கெனவே இந்தியாவுக்கு இருந்துவரும் கெட்ட பெயர் போதாதா? குளிக்கப் போய் சேற்றில் விழ வேண்டாமே!)

பலே கிராமத்து மகன்

செந்துறையையடுத்த பிலாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த இளம்வழுதி அகில இந்திய மருத்துவ மேற்படிப்பு நுழைவுத் தேர்வில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். (வாய்ப்பைக் கொடுத்துப் பாருங்கள் - ஒடுக் கப்பட்ட மக்களுக்கு - கிராமப்புற மக்களுக்கு - தங்கள் திறமையை தலை நிமிர்ந்து நிரூபித் துக் காட்டுவார்கள் - பலே இளம் வழுதி பலே!)

ஏலம்

அய்.பி.எல். கிரிக்கெட்டுப் போட்டியில் வீரர் களின் ஏலத் தொகை வெளியிடப்பட்டுள்ளது. (இவர்கள் என்ன விளையாட்டு வீரர்களா - ஆடு மாடுகளா ஏலம் போடப்படுவதற்கு?)

Read more: http://viduthalai.in/e-paper/74366.html#ixzz2rvgR192O

தமிழ் ஓவியா said...


இன்றைய நம் கேள்வி


பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தானே காந்தியார் சுட்டுக் கொல்லப் பட்டார்? பிரார்த்தனையின் பலன் இதுதானா?

Read more: http://viduthalai.in/e-paper/74361.html#ixzz2rvgb8KLa

தமிழ் ஓவியா said...


முயற்சிக்கவேண்டும்


தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையாவண்ணம் நடந்துகொள்ளவேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சியமாகக்கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்கவேண்டும். - (விடுதலை, 20.3.1950)

Read more: http://viduthalai.in/page-2/74367.html#ixzz2rvgsDgxz

தமிழ் ஓவியா said...

ஆசிரியருக்குக் கடிதம்

இந்திய நாணயங்களை (கரன்சி) அவமதிக்க வேண்டாமே...


சிமெண்ட் விளம்பரம் ஒன்றில் ஒரு நடிகர் தனது மனைவியோடு பாம்பன் பாலத்தில் நடந்துசெல்கின்றார். அப் போது அந்த நடிகர் கடல் அலைகளால் சேதப்படாமல் உறுதியாக இந்தப்பாலம் இருப்பதற்கு காரணம் குறிப்பிட்ட கம்பெனி தயாரிக்கும் சிமெண்ட் மட்டுமே பயன்படுத்தி கட்டப்பட்டதுதான் எனக் கூறுகின்றார். திடீரென அவரது துணை வியார் தனது தோல் பையிலிருந்து 2 ரூபாய் நாணயத்தை எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து பிரார்த்தனை செய்து கொண்டு கடலில் வீசுகின்றார். இதை பார்க்கின்ற நடிகர் என்ன இங்கும் வேண்டுதலா (கோரிக்கை மனுவா?) என சிரித்தபடியே கேட்கின்றார். ஒன்று மில்லை. இதைப்போன்ற சிமெண்ட் (இந்த சிமெண்ட்) நாம் வீடு கட்டும்போது நமக்கு வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டேன் என்கிறார். பிரார்த்தனை என்ற பெயரால் கடலில் நாணயத்தை தூக்கி எறிதல் என்ற செயல் இந்திய நாணயத்தை அவமதிக்கும் செயலாகும். நவராத்திரி தினத்தன்று கொலு பொம் மைகளுக்கு ரூபாய் நோட்டுக்களால் மாலையிடுதல், புத்தாண்டு (தமிழ் /ஆங்கில) நாட்களில் கடவுள் சிலை களுக்கு ரூபாய் நோட்டுக்களால் மாலையிடுதல், கடவுளர் படங்களை (உ.ம்: லெட்சுமி) பிரேம் செய்யும்போது ரூபாய் நோட்டுக்கள், நாணயங்களை பொருத் துதல், கோவில், குளங்கள், பள்ளிவாசல் (மசூதி) தேவாலயங்கள் (சர்ச்) போன்ற வழிபாட்டுத் தலங்களில் குறிப்பிட்ட இடங்களில் (உ.ம்: கொடிமேடை) நாணயங்கள், ரூபாய் நோட்டுக்களை வீசி எறிதல், ரூபாய் நோட்டுக்களில் இதயம், அம்பு போன்ற காதல் குறியீடுகளை வரைதல், இளங்காதலர்கள், நண்பர்கள் தங்கள் பெயர்களை எழுதிக் கொள்ளுதல் போன்ற செயல்கள் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் இந்திய கரன்சியை அவமதிக்கும் செயலாகும்.

ஏஐஐஐ, ஐஓ, ஓ -ஆம் வகுப்புகளில் ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பு அதை வெளி யிடும் ரிசர்வ் வங்கி அதை எவ்வாறு இனாம் (னுநடிஅயேவடி) (ரூ. 1000, ரூ. 500, ரூ. 100, ரூ. 50, ரூ. 20, ரூ. 10, ரூ. 5) வாரியாக கையாள்வது? எந்த வரிசையில் அடுக்க வேண்டும்? கள்ள நோட்டுகளை கண்டறிவது எப்படி? நீர்க்கோடுகள், காந்திபடம் போன்றவற்றை அறிந்து கொள்ளுதல், அஞ்சல், வங்கி போன்ற பாதுகாப்பான சேமிப்பு மற்றும் வங்கி, அஞ்சல்துறை படிவங்களை பூர்த்தி செய்தல் போன்ற வாழ்வியலோடு தொடர் புடையவற்றை எளிமைப்படுத்தி பாடங் களாக வைக்க வேண்டும். அவ்வாறு பயனுள்ள கருத்துகள் பாடத்திட்டத்தில் இணைக்கப்படும்போது மாணவர்களுக்கு எதிர்காலத்தில் பயனுள்ளதாக அவை அமையும்.

- சு. ஆறுமுகம்
(நன்னிலம், திருவாரூர் மாவட்டம்)

Read more: http://viduthalai.in/page-2/74380.html#ixzz2rvh1h6IT

தமிழ் ஓவியா said...


சர்வாதிகாரமே சாதனைக்கேற்றது


பிரதிநிதித்துவத்தாலும், ஓட்டுகளாலும் எல்லாச் சீர்திருத்தமும் செய்துவிடலாம் என்று நினைப்பது முடியாத காரியமாகும். சில சீர்திருத்தங்கள் எதேச்சாதிகாரத் தினாலேயே செய்தாகவேண்டும்.

- (குடிஅரசு, 3.11.1929)

Read more: http://viduthalai.in/page-2/74455.html#ixzz2s1eQMTv1

தமிழ் ஓவியா said...


கயிறு கட்டாதே - திரிக்காதே!




ஏடுகளில் இரண்டு தக வல்கள் வெளிவந்துள்ளன. கையில் சாமிக் கயிறு கட்டுபவர்களை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கிண்டலடித் துள்ளார்; மூடநம்பிக்கைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். அப்படியா னால் சகோதரத்துவத்தை வளர்க்கும் ரக்ஷா பந்தன் நிகழ்ச்சியில் அணிவிக்கப் படும் ராக்கிக் கயிற்றையும் சரத்பவார் சாடுகிறாரா? - என்ற வினாவை எழுப்பி யுள்ளார் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே.

இராமநாதபுரம் அருகே தனியார் பள்ளியில் மாண வர்கள் கழுத்து, கைகளில் அணிந்திருந்த கயிறுகளை அகற்றுமாறு மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் (இப்படியும் ஓர் அருமை யான மாவட்ட ஆட்சியரா? சபாஷ்!) கூறி விட்டாராம். பொறுக்குமா இந்து மக்கள் கட்சி என்னும் மூடநம்பிக் கைக் கூட்டத்துக்கு? எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.

உண்மை நிலை என்ன? கழுத்திலோ, கையிலோ கயிற்றைக் கட்டினால் அழுக்குகள் சேர்வதில்லையா? கிருமி கள் ஏற்பட வாய்ப்பு ஏற் படாதா? கிருமிகள் குடி யிருக்கும் குளுகுளு மாளி கையல்லவா? இது சாதார ணமாகக் கேட்கப்பட வேண் டிய பொது அறிவு வினா.

அறிவியல் ரீதியான பதில் இதோ: தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தில் கோடைக் காலத்தில் பெரியார் பிஞ்சு குழந்தைகள் முகாம் ஆண்டுதோறும் நடத்தப் பட்டு வருகிறது. சில குழந்தைகளின் கைகளில் கயிறுகள் கட் டப்பட்டு இருந்தன. அந்தப் பிள்ளைகளை அறிவியல் ரீதியாக விளங்க வைக்க வேண்டுமே என்பதற்காக திருச்சிராப்பள்ளியில் பெரியார் அறக்கட்டளை சார்பில் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் பெரியார் மருந்தியல் கல் லூரிப் பேராசிரியர்கள் வரவழைக்கப்பட்டனர். ஒரு சிறுமியின் கையிலிருந்த அந்தக் கயிற்றை அவிழ்த்து இரசாயனப் பரிசோத னைக்கு அது உட்படுத்தப் பட்டது.

அதன் முடிவு (சுநளரடவ) என்ன தெரியுமா? கீழ்க் கண்ட கிருமிகள் அதில் குடி கொண்டு இருந்தன.

1) ஸ்டப்பை லோகாக் கஸ் (Staphy Lococcus)

2) ஆல்பஸ் ஸ்டப் பைலோ காக்கஸ் ஆரியஸ் (Staphyco Coccus Aureus).

3) எஸ்செரிக்கியா கோலி (Escherichia Coli (E.co21)

4) ஃப்யூஃபிளமென் டஸ் ஸ்டரக்சர்ஸ் (Few Filamen Tous Structures)
இந்தக் கிருமிகள் பல் வேறு நோய்களுக்குக் காரணமாகி வருகின்றன.

இத்தகு கயிறுகளைக் கட்டினால் பேய் அண்டாது என்ற நம்பிக்கையும், பெண்களுக்குச் சீக்கிரம் திருமணம் ஆகும் என்றும் மூடத்தனத்தைப் பரப்பி ஒரு கூட்டம் சுரண்டிக் கொண்டு இருக்கிறது. படித்த முட் டாள்கள்கூட கயிற்றைக் கட்டிக் கொண்டு திரிகிறார் களே-சிந்திக்கவேண் டாமா?

கயிறும் கட்டக் கூடாது - கயிறும் திரிக்கக் கூடாது!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/74448.html#ixzz2s1eYmQCp

தமிழ் ஓவியா said...

வெத்தா?

செய்தி: மோடி பிரதம ரானால் கச்சத் தீவு மீட்கப்படும்.
- இல. கணேசன்

சிந்தனை: அப்படியா னால் வாஜ்பேயி பிரதம ராக இருந்தாரே - அப் போது ஏன் அது நடக்க வில்லை? அவர் என்ன வெத்து வேட்டா?

Read more: http://viduthalai.in/e-paper/74453.html#ixzz2s1etySsm

தமிழ் ஓவியா said...

கடவுள் இருந்தால்....

சர்வ வல்லமையுள்ள கடவுள் ஒருவர் இருந்தால் மனிதனுடைய தேவைக்கும் ஆசைக்கும் தகுந்தபடி நடந்து கொண்டிருப்பார். அல்லது கடவுளுக்கு இஷ்டமில்லாத விஷயங்களைப் பற்றி மனிதனுக்குத் தேவையில்லாமலாவது, ஆசையில்லாமலாவது அல்லது நினைப்புக்கே வராமலாவது செய்திருப்பார்.

உதாரணமாக, மனிதன் தனக்கு முகத்தில் மயிர் வேண்டியதில்லை என்று கருதி, தினம் தினம் சவரம் செய்து கொள்ளுவதைப் பார்க்கிறோம். ஆனால், கடவுள் அனுக்கிரகத்தால் அது தினம் தவறாமல் முளைத்துக் கொண்டே வருவதையும் பார்க்கிறோம்.

இது என்ன கடவுளுடன் மனிதன் ஏற்றுக்கு மாறாய் நடந்து போட்டி போடுகிறானா? அல்லது மனிதனுடன் கடவுள் ஏற்றுக்கு மாறாய் நடந்து போட்டி போடுகிறாரா? அல்லது ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாமல் அவரவர் காரியத்தை அவரவர்கள் பார்க்கின்றார்களா?

- சித்திரபுத்திரன்

Read more: http://viduthalai.in/page-7/74413.html#ixzz2s1fp6KB0