இந்தியத்
துணைக் கண்டத்தில் எத்தனை எத்தனையோ கறுப்பு நாட்கள் உண்டு. அதில் ஜனவரி
30ஆம் தேதி குறிப்பிடத்தக்கது; இந்திய மக்களால் மகாத்மா காந்தி என்றும்
தேசத் தந்தை என்றும் பரவலாக மக்களால் மதிக்கப்பட்ட ஒரு தலைவர் இந்துத்துவா
வெறியர்களின் திட்டமிட்ட சதியால் படுகொலை செய்யப்பட்ட நாள் இந்நாள்.
(1948).
நாதுராம் கோட்சே என்னும் மகாராட்
டிரத்தைச் சேர்ந்த இந்துவெறி பிடித்த பார்ப்பனன்தான் அந்தக் கொடூரத்தைச்
செய்தவன்; அவன் ஆர்.எஸ்.எஸின் தொட்டிலில் வளர்ந்தவன் என்று அவனுடைய சகோதரர்
கோபால் கோட்சேயே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளான்.
கோட்சே ஆர்.எஸ்.எஸைச் சேர்ந்தவன் அல்ல
என்று அத்வானி சொல்லுவது கடைந் தெடுத்த கோழைத்தனம் என்றும் கோபால் கோட்சே
சொன்னதுண்டு. சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பித்தவர்
சவார்க்கர்.
காந்தியாரைப் படுகொலை செய்தது என்பது ஏதோ
திடீரென்று உணர்ச்சி வயப்பட்டு நடந்ததல்ல; திட்டமிட்டுச் செய்யப்பட்டது.
படுகொலை செய்யப்பட்ட 10 நாள்களுக்கு முன்புகூட ஒரு முயற்சி
மேற்கொள்ளப்பட்டு, மயிரிழையில் காந்தியார் தப்பினார். இந்த வகையில்
காவல்துறை விழிப்பாக இருக்க வில்லை என்ற குற்றச்சாற்று மறுக்கப்பட முடியாத
ஒன்றே!
7.2.1948 நாளிட்ட குடிஅரசு இதழில் ஒரு பெட்டிச் செய்தி வெளியாகியுள்ளது.
நான் நாதுராம் வினாயக கோட்சேவை பூனாவில்
மூன்று மாதங்களுக்கு முன்பு சந்தித்தேன். அவர் முஸ்லீம்களின் பரம்பரை
விரோதியாகக் காணப்பட்டார். இந்தியாவி லுள்ள முஸ்லீம்களின் பிரஜா உரிமைகள்
பறிக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து அவர் தர்க்க ரீதியாக என்னிடம்
விவாதித்தார்; தோழர் கோட்சே உயர் ஜாதிப் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர்.
ஹிந்து ராஷ்டிரா என்ற தீவிரத் தேசியப் பத்திரிகையின் ஆசிரியருமாவார்
அவரது வாதமானது; இந்தியாவில் உள்ள
முஸ்லீம்கள் பாகிஸ்தான் எய்தப் பெற ஜின்னாவையும், முஸ்லீம் லீக்கையும்
ஆதரித்து வந்தனர். இப்பொழுது அவர்கள் பாகிஸ்தானை அடைந்து விட்டார்கள். எனவே
அவர்கள் ஹிந்து ஸ்தானத்தை விட்டு, வெளியேற வேண்டியது தானே முறை! தாய்நாடு
பிளவு உண்டதற்கு இந்து சமுதாயம் தனது வஞ்சத்தை தீர்த்துக் கொள்ளப் போவது
உறுதி. இந்தியா முஸ்லீம்களுக்கு விற்கப்பட்டது.
மகாராஷ்டிரர்களின் பழங்காலக்
கீர்த்திபற்றி தோழர் கோட்சே பேசுகையில் அவரது கண்களில் வெறியுணர்ச்சி
தாண்டவ மாடியது. கோபக் கனல் பொங்க ஆத்திரக் குரலில் தோழர் கோட்சே
காந்தியாரைக் கொடூரமாகச் சபித்து, என்னை விட்டுப் பிரிந்தார். எதுவும் பேச
எனக்கு நா எழவில்லை
- இவ்வாறு லண்டன் ரெய்னால்டஸ் நிறுவனப் பத்திரிகையில் தோழர் தாமன்கார் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வெறிபிடித்த கூட்டத்தைச் சேர்ந்த வர்கள், காந்தியார் மீது கொண்ட கோபத்தை வெறியை இன்று வரை தளர்த்திக் கொண் டார்கள் இல்லை.
மத்தியில் பிஜேபி ஆட்சிக் காலத்தில் இதே
இந்துத்துவா சக்திகள் மை நாதுராம் கோட்சே போல்தா என்ற நாடகத்தை இந்தியாவின்
முக்கிய நகரங்களில் அரங்கேற்றினர்.
நான் காந்தியார் என்ற அரக்கனைத்தான் கொன்றேன் என்று காந்தியாரை அரக் கனாக்கி, கோட்சேயைக் கடவுளாக்கிச் சித்தரிக்கப்பட்ட நாடகம் அது.
இந்தக் கூட்டத்தின் இந்தக் காலத்திய
அவதாரப் புருடர் தான் பிஜேபியின் பிரதம ருக்கான வேட்பாளரான நரேந்திரமோடி
என் பதை மறக்கக் கூடாது. காந்தியார் படுகொலை செய்யப்பட்ட இந்த நாளில்
இந்தச்சிந்தனையை விதைப்போமாக! பரப்புவோமாக!
----------------------”விடுதலை” தலையங்கம் 30-1-2014
8 comments:
சட்டசபையில் ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க. வெளிநடப்பு
அரசின் பல்வேறு துறைகளில் இடஒதுக்கீடு பின்பற்றாதது ஏன்?
தமிழகத்திற்கு நன்மை தரக்கூடிய சேது சமுத்திரத் திட்டத்தைத் தடுப்பதா?
சாகுபடியை இழந்த விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீட்டை வழங்காதது ஏன்?
செம்மொழித் தகுதியைச் சீர்குலைக்கின்ற வகையில் நடவடிக்கைகளா?
சட்டசபையில் ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க. வெளிநடப்பு
சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே மு.க.ஸ்டாலின் பேட்டி
சென்னை, ஜன. 30- தமிழக அரசின் பல் வேறு துறைகளில் பல நூறு பணி இடங்கள் காலி - இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை மதிக் காதது, தமிழகத்திற்குப் பெரிதும் நன்மை தரக் கூடிய சேது சமுத்திரத் திட்டத்தை வரவிடாமல் தடுக்கின்ற அதிமுக அரசின் போக்கு, நீரின்றி சாகுபடியை இழந்த விவசாயிகளுக்கு முழு மையான இழப்பீட்டுத் தொகை வழங்காதது. செம்மொழித் தகுதியைச் சீர்குலைக்கின்ற வகை யில் நடவடிக்கைகள் இவை அனைத்தையும் கண்டிக்கின்ற வகையில் ஆளுநர் உரையை திமுகழகம் புறக்கணித்து வெளிநடப்பு செய் கின்றது என இன்று (30.1.2014) சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே திமுகழக சட்டமன்ற சட்சித்தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர் களிடையே தெரிவித் தார்.
இன்று (30.1.2014) நண் பகல் 12 மணியளவில் தமிழக சட்டமன்றத்தில் 2014-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழக ஆளுநர் டாக்டர் கே.ரோசய்யா அவர்கள் உரை நிகழ்த்தினார். அப்போது ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த திமுக சட்டமன்ற உறுப் பினர்கள் சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே வந்தனர். அங்கே கூடியி ருந்த செய்தியாளர்களி டம் திமுக சட்டமன்ற கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
இந்த ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து பல்வேறு கொடுமைகளுக்கும், இன்னல்களுக்கும் ஆளாகி வருகிறார்கள், கெட்டுப்போய்விட்ட சட்டம் ஒழுங்குப் பிரச் சினை - வாட்டி வதைத் திடும் மின்வெட்டுக் கொடுமை.
குறுவை, சம்பா பயிர் சாகுபடிக்கு உரிய காலத்தில் தேவையான அளவு காவிரி நீரைப் பெற்றுத் தரதவறியது - சாகுபடியை இழந்தும் கடன்பட்டும், கண் ணீர்க்கடலில் ஆழ்ந் துள்ள விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீட்டுத் தொகையை முறையா கவோ, முழுமையா கவோ வழங்காதது.
சாதிக்கலவரத்திற்குத் தகுந்த தீர்வு காணாதது. திமுக ஆட்சியில் தீட்டப் பட்ட திட்டங்களுக்குப் பொறாமை காரணமாக முடிவு கட்டிய கொடுமை - தமிழகத்தில் அனைத்து ஆறுகளிலும் நடைபெ றும் மணல் கொள்ளைகள்.
தமிழகத்திற்குப் பெரிதும் நன்மை தரக் கூடிய சேது சமுத்திரத் திட்டத்தை வரவிடாமல் தடுக்கின்ற வஞ்சகம். அரசின் பல்வேறு துறை களிலும் பல நூறு பணி இடங்கள் காலி - இட ஒதுக்கீட்டுக் கொள் கையை மதிக்காதது. நெல், கரும்பு விவசாயி களுக்குக் கட்டுப்படி யாகக் கூடிய உரிய விலை கொடுக்க முன் வராதது.
செம்மொழித் தகுதியைச் சீர்குலைக் கின்ற வகையில் நட வடிக்கைகள் என்று இவை போன்ற எண் ணற்ற ஜனநாயக விரோத - மக்கள் விரோத - சட்ட விரோத நடவடிக்கை களைக் கண்டித்து, ஆளுநர் உரையினைப் புறக்கணித்து, திராவிட முன்னேற்றக் கழகம் வெளிநடப்பு செய்கிறது என்று தெரிவித்து இந்த அவையை விட்டு வெளி யேறினோம் என்று சட் டமன்ற வளாகத்திற்கு வெளியே கூடியிருந்த செய்தியாளர்களிடம் திமுக சட்டமன்ற கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
Read more: http://viduthalai.in/e-paper/74358.html#ixzz2rvgEIgoL
இன்றைய நம் கேள்வி
பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தானே காந்தியார் சுட்டுக் கொல்லப் பட்டார்? பிரார்த்தனையின் பலன் இதுதானா?
Read more: http://viduthalai.in/e-paper/74361.html#ixzz2rvgb8KLa
முயற்சிக்கவேண்டும்
தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையாவண்ணம் நடந்துகொள்ளவேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சியமாகக்கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்கவேண்டும். - (விடுதலை, 20.3.1950)
Read more: http://viduthalai.in/page-2/74367.html#ixzz2rvgsDgxz
ஆசிரியருக்குக் கடிதம்
இந்திய நாணயங்களை (கரன்சி) அவமதிக்க வேண்டாமே...
சிமெண்ட் விளம்பரம் ஒன்றில் ஒரு நடிகர் தனது மனைவியோடு பாம்பன் பாலத்தில் நடந்துசெல்கின்றார். அப் போது அந்த நடிகர் கடல் அலைகளால் சேதப்படாமல் உறுதியாக இந்தப்பாலம் இருப்பதற்கு காரணம் குறிப்பிட்ட கம்பெனி தயாரிக்கும் சிமெண்ட் மட்டுமே பயன்படுத்தி கட்டப்பட்டதுதான் எனக் கூறுகின்றார். திடீரென அவரது துணை வியார் தனது தோல் பையிலிருந்து 2 ரூபாய் நாணயத்தை எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து பிரார்த்தனை செய்து கொண்டு கடலில் வீசுகின்றார். இதை பார்க்கின்ற நடிகர் என்ன இங்கும் வேண்டுதலா (கோரிக்கை மனுவா?) என சிரித்தபடியே கேட்கின்றார். ஒன்று மில்லை. இதைப்போன்ற சிமெண்ட் (இந்த சிமெண்ட்) நாம் வீடு கட்டும்போது நமக்கு வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டேன் என்கிறார். பிரார்த்தனை என்ற பெயரால் கடலில் நாணயத்தை தூக்கி எறிதல் என்ற செயல் இந்திய நாணயத்தை அவமதிக்கும் செயலாகும். நவராத்திரி தினத்தன்று கொலு பொம் மைகளுக்கு ரூபாய் நோட்டுக்களால் மாலையிடுதல், புத்தாண்டு (தமிழ் /ஆங்கில) நாட்களில் கடவுள் சிலை களுக்கு ரூபாய் நோட்டுக்களால் மாலையிடுதல், கடவுளர் படங்களை (உ.ம்: லெட்சுமி) பிரேம் செய்யும்போது ரூபாய் நோட்டுக்கள், நாணயங்களை பொருத் துதல், கோவில், குளங்கள், பள்ளிவாசல் (மசூதி) தேவாலயங்கள் (சர்ச்) போன்ற வழிபாட்டுத் தலங்களில் குறிப்பிட்ட இடங்களில் (உ.ம்: கொடிமேடை) நாணயங்கள், ரூபாய் நோட்டுக்களை வீசி எறிதல், ரூபாய் நோட்டுக்களில் இதயம், அம்பு போன்ற காதல் குறியீடுகளை வரைதல், இளங்காதலர்கள், நண்பர்கள் தங்கள் பெயர்களை எழுதிக் கொள்ளுதல் போன்ற செயல்கள் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் இந்திய கரன்சியை அவமதிக்கும் செயலாகும்.
ஏஐஐஐ, ஐஓ, ஓ -ஆம் வகுப்புகளில் ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பு அதை வெளி யிடும் ரிசர்வ் வங்கி அதை எவ்வாறு இனாம் (னுநடிஅயேவடி) (ரூ. 1000, ரூ. 500, ரூ. 100, ரூ. 50, ரூ. 20, ரூ. 10, ரூ. 5) வாரியாக கையாள்வது? எந்த வரிசையில் அடுக்க வேண்டும்? கள்ள நோட்டுகளை கண்டறிவது எப்படி? நீர்க்கோடுகள், காந்திபடம் போன்றவற்றை அறிந்து கொள்ளுதல், அஞ்சல், வங்கி போன்ற பாதுகாப்பான சேமிப்பு மற்றும் வங்கி, அஞ்சல்துறை படிவங்களை பூர்த்தி செய்தல் போன்ற வாழ்வியலோடு தொடர் புடையவற்றை எளிமைப்படுத்தி பாடங் களாக வைக்க வேண்டும். அவ்வாறு பயனுள்ள கருத்துகள் பாடத்திட்டத்தில் இணைக்கப்படும்போது மாணவர்களுக்கு எதிர்காலத்தில் பயனுள்ளதாக அவை அமையும்.
- சு. ஆறுமுகம்
(நன்னிலம், திருவாரூர் மாவட்டம்)
Read more: http://viduthalai.in/page-2/74380.html#ixzz2rvh1h6IT
சர்வாதிகாரமே சாதனைக்கேற்றது
பிரதிநிதித்துவத்தாலும், ஓட்டுகளாலும் எல்லாச் சீர்திருத்தமும் செய்துவிடலாம் என்று நினைப்பது முடியாத காரியமாகும். சில சீர்திருத்தங்கள் எதேச்சாதிகாரத் தினாலேயே செய்தாகவேண்டும்.
- (குடிஅரசு, 3.11.1929)
Read more: http://viduthalai.in/page-2/74455.html#ixzz2s1eQMTv1
கயிறு கட்டாதே - திரிக்காதே!
ஏடுகளில் இரண்டு தக வல்கள் வெளிவந்துள்ளன. கையில் சாமிக் கயிறு கட்டுபவர்களை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கிண்டலடித் துள்ளார்; மூடநம்பிக்கைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். அப்படியா னால் சகோதரத்துவத்தை வளர்க்கும் ரக்ஷா பந்தன் நிகழ்ச்சியில் அணிவிக்கப் படும் ராக்கிக் கயிற்றையும் சரத்பவார் சாடுகிறாரா? - என்ற வினாவை எழுப்பி யுள்ளார் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே.
இராமநாதபுரம் அருகே தனியார் பள்ளியில் மாண வர்கள் கழுத்து, கைகளில் அணிந்திருந்த கயிறுகளை அகற்றுமாறு மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் (இப்படியும் ஓர் அருமை யான மாவட்ட ஆட்சியரா? சபாஷ்!) கூறி விட்டாராம். பொறுக்குமா இந்து மக்கள் கட்சி என்னும் மூடநம்பிக் கைக் கூட்டத்துக்கு? எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.
உண்மை நிலை என்ன? கழுத்திலோ, கையிலோ கயிற்றைக் கட்டினால் அழுக்குகள் சேர்வதில்லையா? கிருமி கள் ஏற்பட வாய்ப்பு ஏற் படாதா? கிருமிகள் குடி யிருக்கும் குளுகுளு மாளி கையல்லவா? இது சாதார ணமாகக் கேட்கப்பட வேண் டிய பொது அறிவு வினா.
அறிவியல் ரீதியான பதில் இதோ: தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தில் கோடைக் காலத்தில் பெரியார் பிஞ்சு குழந்தைகள் முகாம் ஆண்டுதோறும் நடத்தப் பட்டு வருகிறது. சில குழந்தைகளின் கைகளில் கயிறுகள் கட் டப்பட்டு இருந்தன. அந்தப் பிள்ளைகளை அறிவியல் ரீதியாக விளங்க வைக்க வேண்டுமே என்பதற்காக திருச்சிராப்பள்ளியில் பெரியார் அறக்கட்டளை சார்பில் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் பெரியார் மருந்தியல் கல் லூரிப் பேராசிரியர்கள் வரவழைக்கப்பட்டனர். ஒரு சிறுமியின் கையிலிருந்த அந்தக் கயிற்றை அவிழ்த்து இரசாயனப் பரிசோத னைக்கு அது உட்படுத்தப் பட்டது.
அதன் முடிவு (சுநளரடவ) என்ன தெரியுமா? கீழ்க் கண்ட கிருமிகள் அதில் குடி கொண்டு இருந்தன.
1) ஸ்டப்பை லோகாக் கஸ் (Staphy Lococcus)
2) ஆல்பஸ் ஸ்டப் பைலோ காக்கஸ் ஆரியஸ் (Staphyco Coccus Aureus).
3) எஸ்செரிக்கியா கோலி (Escherichia Coli (E.co21)
4) ஃப்யூஃபிளமென் டஸ் ஸ்டரக்சர்ஸ் (Few Filamen Tous Structures)
இந்தக் கிருமிகள் பல் வேறு நோய்களுக்குக் காரணமாகி வருகின்றன.
இத்தகு கயிறுகளைக் கட்டினால் பேய் அண்டாது என்ற நம்பிக்கையும், பெண்களுக்குச் சீக்கிரம் திருமணம் ஆகும் என்றும் மூடத்தனத்தைப் பரப்பி ஒரு கூட்டம் சுரண்டிக் கொண்டு இருக்கிறது. படித்த முட் டாள்கள்கூட கயிற்றைக் கட்டிக் கொண்டு திரிகிறார் களே-சிந்திக்கவேண் டாமா?
கயிறும் கட்டக் கூடாது - கயிறும் திரிக்கக் கூடாது!
- மயிலாடன்
Read more: http://viduthalai.in/e-paper/74448.html#ixzz2s1eYmQCp
கடவுள் இருந்தால்....
சர்வ வல்லமையுள்ள கடவுள் ஒருவர் இருந்தால் மனிதனுடைய தேவைக்கும் ஆசைக்கும் தகுந்தபடி நடந்து கொண்டிருப்பார். அல்லது கடவுளுக்கு இஷ்டமில்லாத விஷயங்களைப் பற்றி மனிதனுக்குத் தேவையில்லாமலாவது, ஆசையில்லாமலாவது அல்லது நினைப்புக்கே வராமலாவது செய்திருப்பார்.
உதாரணமாக, மனிதன் தனக்கு முகத்தில் மயிர் வேண்டியதில்லை என்று கருதி, தினம் தினம் சவரம் செய்து கொள்ளுவதைப் பார்க்கிறோம். ஆனால், கடவுள் அனுக்கிரகத்தால் அது தினம் தவறாமல் முளைத்துக் கொண்டே வருவதையும் பார்க்கிறோம்.
இது என்ன கடவுளுடன் மனிதன் ஏற்றுக்கு மாறாய் நடந்து போட்டி போடுகிறானா? அல்லது மனிதனுடன் கடவுள் ஏற்றுக்கு மாறாய் நடந்து போட்டி போடுகிறாரா? அல்லது ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாமல் அவரவர் காரியத்தை அவரவர்கள் பார்க்கின்றார்களா?
- சித்திரபுத்திரன்
Read more: http://viduthalai.in/page-7/74413.html#ixzz2s1fp6KB0
கணவர் வருமானத்தை விட மனைவிக்கு அதிக வருவாய் இருப்பதால் ஜீவனாம்சம் தேவையில்லை: கருநாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு
பெங்களூரு, ஜன.31- கருநாடகாவில் மைசூர் மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் ராகவேந்திராவுக்கும், தென்கனரா மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் ரஷ்மிக்கும் 2003இல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளார். சில ஆண்டு களுக்கு பிறகு கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
மனைவியிடம் இருந்து மணவிலக்கு கோரி மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் ராகவேந்திரா கொடுத்த மனு நிராகரிக் கப்பட்டதை தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் திருமணம் முடிந்த பின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள எனது பெற்றொர் வீட்டில் வசித்தோம்.
எனது மனைவி மேல்படிப்பு படிப்பதற்காக தாவணகெரெ சென்றார். நான் மைசூரில் தனியாக மருத்துவமனை தொடங்கி நடத்தியதுடன், அங்கு வீடும் வாடகை எடுத்து வசித்து வருகிறேன்.
கடந்த 2006ஆம் ஆண்டு குழந்தைப் பேறுக்காக தாய் வீட்டிற்கு சென்ற எனது மனைவி மீண்டும் வீடு திரும்பவில்லை. பலமுறை வீட்டிற்கு வந்து குடும்பம் நடத்தும்படி வலியுறுத்தியும் கேட்கவில்லை. இதனிடையில் வரதட்சணை கேட்டு நானும், எனது பெற்றொரும் துன்புறுத்துவதாக எங்கள் மீது காவல் நிலையத்தில் பொய் வழக்கு கொடுத்தார்.
இவ்வளவு தொல்லை கொடுத்த வருடன் வாழ் விரும்பவில்லை என்று கூயிருந்தார். கணவர் ராகவேந்திராவின் புகாருக்கு பதில் மனுதாக்கல் செய்த ரஷ்மி, தனது கணவர் மற்றும் அவரது பெற்றோர் ரூ.20 லட்சம் வரதட்சணை கொண்டு வரும்படி தொல்லை கொடுத்தனர்.
கணவருடன் நான் வாழ மாமனார், மாமியார் வாய்ப்பு கொடுக்காமல் தடுத்தனர். என்னை சரியாக கவனித்து கொள்ளவில்லை என்று தெரிவித் திருந்தார்.
இவ்வழக்கை விசாரணை நடத்திய நீதிமன்றம், இருவரும் பிரியாமல் சேர்ந்து வாழ முயற்சிக்கும்படி ஆலோசனை வழங்கியது. அப்போது எனது பெற்றோருடன் வாழ பிடிக்கவில்லை என்றால், மைசூரில் நான் வாடகைக்கு எடுத்து வசித்து வரும் வீட்டிற்கு வரும்படி ராகவேந்திரா கேட்டார்.
அதற்கு ஒப்புகொள்ளாத ரஷ்மி, பெங்களூரில் வீடு வாடகை எடுத்தால் வசிப்பதாக கூறினார். ஆனால் அதை ராகவேந்திரா ஏற்றுகொள்ளவில்லை. எங்கு வசிப்பது என்ற விஷயத்தில் கணவன் மனைவி இடையில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இறுதியாக ராகவேந்திரா மணவிலக்கில் உறுதியானார். ரஷ்மி ஜீவனாம்சம் கேட்பதில் உறுதியாக இருந்தார்.
இந்த விவாகரத்து வழக்கு விசாரணை முடிந்து நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், வழக்கில் தொடர் புடைய கணவர், மனைவி இருவரும் சமூகத்தில் மருத்துவம் படித்த பட்டதாரியாக உயர்ந்த நிலையில் உள்ளனர். அவர்கள் இருவரில் ஏற்பட்ட மனக்கசப்பை போக்கி சுமுக வாழ்வுக்கு நீதிமன்றம் பல வாய்ப்புகள் கொடுத்தும் இருவரும் பயன்படுத்தி கொள்ள வில்லை. அவர்கள் சேர்ந்து வாழ நீதிமன்றம் எடுத்த முயற்சி அனைத்தும் தோல்வியில் முடிந்தது.
மேலும், மணவிலக்கு பெற்றுள்ள ரஷ்மி, தனது கணவரிடம் ஜீவனாம்சம் கேட்டுள்ளார். ரஷ்மியின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், கணவர் ராகவேந்திராவை விட கூடுதல் வருமானம் (மாதம் ரூ.1.30 லட்சம்) இருப்பதால், கணவர் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
அதே சமயத்தில் மகனுக்கு 7 வயது நிரம்பியுள்ளதால், தாயின் அரவணைப்பில் வசிப்பது அவசியம். குழந்தைக்கு தரமான கல்வி, உணவு, ஆடை உள்பட அவர் தேவைக்கான செலவுகளை ராகவேந்திரா வழங்க வேண்டும் என்று கூறி மணவிலக்கு வழங்கி தீர்ப்பளித்தார்.
Read more: http://viduthalai.in/page-7/74410.html#ixzz2s1gCMzpv
Post a Comment