Search This Blog

29.1.14

கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமா?

எதற்கும் ஓர் எல்லை உண்டே! 


கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம் - அது மீட்கப்பட வேண்டும் என்ற வழக்கை முதலில் தொடுத்தது திராவிடர் கழகம் (ஜூலை 1997) அந்த வழக்கு இன்னும் சென்னை உயர்நீதி மன்றத்தில் நிலுவையில்தான் உள்ளது. 

தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. சார்பிலும் இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இப்படியொரு சூழ்நிலையில் தனியார் தொடுத்த வழக்கு ஒன்றில் இந்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரம் அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது.

கச்சத்தீவு அருகே சென்று மீன்பிடிக்கும் உரிமை இந்திய மீனவர்களுக்கு இல்லை என்று கொஞ்சம்கூட கூச்சமும், நாணயமும் இன்றி கூறியுள்ளது இந்திய அரசு.

இப்படிச் சொன்ன பிறகு எந்த முகத்தோடு இலங்கை அரசோடு நாம் மோதுவது?

கச்சத்தீவு தமிழ்நாட்டுக்குச் சொந்தமென்று எத்தனை எத்தனை முறைதான், எத்தனை எத்தனை ஆதாரங்களோடுதான் இடித்து இடித்துக் கூறுவது!

1921ஆம் ஆண்டு, அக்டோபர் 25ஆம் தேதி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்திய அரசுக்கும்,  இலங்கை அரசுக்கும் இடையிலான கடல் எல்லை வரையறை ஒப்பந்தமானது, மீன்பிடி தொடர்பானது. ஒப்பந்தம் கையொப்பம் ஆவதற்கு முன்பே இந்தியக் குழுவிற்குத் தலைமையேற்ற சி. டபுள்யூ இ.காட்டன் அவர் களின் தலைமையிலான இந்தியக் குழுவிற்கும், பி. ஹார்ஸ்பெர்க் தலைமையிலான இலங்கை அரசுக்கும் இடையிலான பேச்சு வார்த்தையின் போது,  இரு நாடுகளுக்குமிடையிலான கரைகளுக்கு இடையே சம தூரத்தில் புள்ளிகள் வைத்து, கடல் எல்லைக் கோட்டை வரையறை செய்து கொள்வது என்று முடிவானது; அப் பொழுது கச்சத்தீவை இலங்கைக் கடற்பகுதிக் குள் வருமாறு கோட்டைச் சற்று இழுத்துப் போடுமாறு பி. ஹார்ஸ்பர்க் கேட்டுக் கொண் டார்; கச்சத் தீவு இலங்கைக்குச் சொந்தமானது என்றும் கூறினார்.

அதனை ஏற்க மறுத்த இந்தியக் குழுவின் தலைவர் சி. டபுள்யூ இ. காட்டன், கச்சத்தீவு இராமநாதபுரம் மன்னருக் குச் சொந்தமானது என்று இந்தியக் குழுவில் இடம் பெற்றிருந்த லீச் கூறியதைச் சுட்டிக் காட்டினார். மேலும் செயின்ட் ஜார்ஜ்கோட்டை யில் நடந்த - இதற்கு முற்பட்ட சந்திப்பில் அந்தக் கடல் எல்லைக் கோடு, கச்சத்தீவின் கிழக்கு எல்லையில் இருந்து ஒரு மைல் தூரத்தில் குறித்தே நிர்ணயம் செய்யப்பட்டதை யும் காட்டன் குறிப்பிட்டார்; அது மட்டுமல்ல; மீன் பிடித்தலுக்காகச் செய்யப்படும் கடல் எல்லை வரையறையானது - எந்த விதத்திலும் இரு நாடுகளின் நிலப் பகுதி தொடர்பான உரிமைக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்க ஒப்புக் கொள் ளப்பட்டே  ஒப்பந்தம் உருவானது என்பதையும் காட்டன் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவை 350 ஆண்டு காலம் ஆண்ட அந்நியனான வெள்ளைக்காரன் கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம் என்பதில் உறுதி காட்டினான். ஆனால் இந்திய அரசோ இல்லை- இல்லை - கச்சத்தீவு,  இலங்கை அரசுக்கே சொந்தம் என்று சொல்லி நமது மூக்கை நாமே அறுத்துக் கொள்ளும் ஒரு நிலையை எடுத்திருப்பது வெட்கக் கேடே!

தமிழ்நாடு, தமிழர்கள் என்றாலே இரண் டாந்தர குடி மக்களாகக் கருதும் ஒரு மாற்றாந்தாய் மனப்பான்மை இந்திய அரசுக்கு இருப்பதாகவே தெரிகிறது.
கச்சத்தீவு - இந்தியாவுக்கே சொந்தம் - அங்கு தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிக்க உரிமையுண்டு என்ற நிலை உறுதிப்படுத்தப் படாத வரை தமிழக மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு என்பது பெரும்பாலும் குதிரைக் கொம்பே!
சீன மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கலாம்; தமிழக மீனவர்கள் மட்டும் மீன் பிடிக்கக் கூடாது என்ற சிங்களவர்களின் நய வஞ்சகத்திற்கு ஒத்தடம் கொடுக்க வேண்டாம் - இந்திய அரசு. தமிழர்களின் உணர்வுகளை மதிக்கப் போவதில்லை என்ற உணர்வோடு இந்திய அரசு விளையாடிப் பார்க்க ஆசைப்பட வேண்டாம் - எதற்கும் ஓர் எல்லை இருக்கிறதே!

                       --------------------------------”விடுதலை” தலையங்கம் 28-1-2014

26 comments:

தமிழ் ஓவியா said...


கவலை ஏன்?


மனிதர்கள் எந்த மதத்தில் இருந்தாலும், அவர்கள் எந்த மதத்திற்குப் போனாலும், மற்ற மதத்தைச் சார்ந்த மனிதனுக்கு அதனால் கவலை ஏன் ஏற்படவேண்டும்?

- (குடிஅரசு,16.11.1946)

Read more: http://viduthalai.in/page-2/74265.html#ixzz2rjK8HVcM

தமிழ் ஓவியா said...


ஜெனிவாவில் மனித உரிமை ஆணையக் கூட்டம்: இந்தியா என்ன செய்ய வேண்டும்? தி.மு.க. தலைவர் கலைஞர் கருத்துரை

சென்னை, ஜன.28- அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டம் வரும் மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் நடைபெற உள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி ஆகிய நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானங்களைக் கொண்டு வரும் நிலையில், இந்தியாவே தனியொரு தீர்மானத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் இன்றைய முர சொலியில் கூறியுள்ளார். கருத்துரை வருமாறு:-

கேள்வி :- அந்தமான் தீவில் படகு கவிழ்ந்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 28 சுற்றுலா பயணிகள் பலியானதாக செய்தி வந்திருக்கிறதே?

கலைஞர் :- இந்த விபத்தில் பலியான அனைவரது குடும்பத்தின ருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரி வித்துக் கொள்கிறேன். தமிழக அரசின் சார்பில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தற்போது அறிவித் துள்ள ஒரு இலட்சம் ரூபாய் உதவி நிதி என்பது மிகவும் குறைவாகும். குறைந்தபட்சம் அய்ந்து இலட்சம் ரூபாயாவது தமிழக அரசின் சார்பில் அளிக்க வேண்டும். மேலும் இறந்த வர்களின் உடல்கள் இங்கே கொண்டு வரப்படுவதற்கான முயற்சிகளையும் முறையாக எடுக்க வேண்டும்.

கச்சத்தீவு அருகே மீன்பிடிப்பு உரிமையை கை கழுவும் இந்திய அரசு!

கேள்வி :- கச்சத் தீவு அருகே மீன் பிடிக்க தமிழக மீனவருக்கு உரிமை இல்லை என்று சென்னை உயர்நீதிமன் றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்திருக்கிறதே?

கலைஞர் :- தமிழகத்தின் சார்பில் மத்திய அரசில் பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர்களே மத்திய அரசின் நட வடிக்கைகள் குறித்து கவலைப்படு கிறார்கள். உதாரணமாகக் கூற வேண்டுமேயானால், ஜி.கே.வாசன் இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய அரசின் இந்தச் செய்தியைப் படித்து விட்டு, கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்திய நாட்டின் இறையாண்மைக்குக் கட்டுப்பட்ட கச்சத்தீவின் உரிமையை, இலங்கை நாட்டுக்கு விட்டுக் கொடுப்பது சம்பந்தமான பிரச்சினை நாடாளு மன்றத்தில் முறைப்படி விவாதிக்கப்பட்டு, அரசியல் சட்டத் திருத்தம் செய்யப்பட்டு, அதன் பிறகு நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தம் அல்ல என்றும், எனவே அந்த ஒப்பந்தம் செல்லாது என்று தெரிவிக்க வேண்டு மென்று கோரித்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத் திருக்கிறோம். அந்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையிலே இருக்கும் போது, சென்னை உயர்நீதிமன்றத்தில் கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது தொடர்பான வழக்கு நடைபெறுவதும், அதிலே மத்திய அரசு ஒரு மனுவினைத் தாக்கல் செய்வதும் தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒரு காரியமாகும். உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாக மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருக் கலாம். அதற்கு மாறாக தமிழர்களின் மனதை நோகடிப் பதற்காகவே இப்படியொரு மனுவினை மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பது தமிழர்கள் அனைவ ராலும் கண்டிக்கப்பட வேண்டிய ஒரு செயலாகும்.

தமிழ் ஓவியா said...


இந்தியா என்ன செய்ய வேண்டும்

கேள்வி :- அய்.நா. மனித உரிமை சபையில் இலங்கைக்கு எதிராக நான்கு நாடுகள் தீர்மானம் கொண்டுவரப் போவதாகச் செய்தி வந்திருக்கிறதே?

கலைஞர் :- ஆமாம், அய்.நா. மனித உரிமை சபையில், இலங் கைக்கு எதிராக, சுதந்திரமான சர்வ தேச போர்க் குற்ற விசாரணை வேண்டு மென்று கோரிக்கை வைத்து அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி ஆகிய நான்கு நாடுகள் தீர்மானங்களைக் கொண்டுவர உள்ளன. அய்.நா. மனித உரிமை சபையின் கூட்டம் வரும் மார்ச் திங்களில் ஜெனிவா நகரிலே நடைபெறவுள் ளது. கடந்த ஆண்டும், அதற்கு முன் பும் அமெரிக்கா ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தபோது, இந்தியாவின் உதவியால் அந்தக் கடுமை குறைக் கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதன் மூலம் இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டு மென்று கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் இலங்கை அரசு ஆக்கபூர்வமாகச் செயல்பட வில்லை. அதனால்தான் காமன்வெல்த் மாநாட்டிற்காக இலங்கை சென்ற இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், இலங்கை அரசுக்கு மூன்று மாத கெடு விதித் தார். அதற்குள் சுதந்திரமான விசார ணையை இலங்கை அரசு நடத்த வேண்டு மென்றும், இல்லாவிட்டால் சர்வதேச விசார ணைக்கு வலியுறுத் துவேன் என்றும் இங்கிலாந்து பிரத மர் தெரிவித்தார். இந்தக் கெடுவை யும் இலங்கை அரசு மதிப்பதாகத் தெரியவில்லை. எனவே அய்.நா. மனித உரிமை சபையில் சுதந்திர மான சர்வதேச விசாரணை வேண்டுமென்று கேட்டு தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. தீர்மானம் கொண்டுவரப்படும் நான்கு நாடுகளோடு இந்தியாவும் சேரவேண்டும் என்பது தான் தமிழர் களின் விண்ணப்பம், கோரிக்கை. இன்னும் அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட வேண்டுமானால், இந்தி யாவே தனியானதொரு தீர்மானத்தை அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வந்து நிறைவேற்றுவதற் கான தீவிரமான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். அந்தத் தீர்மானத்தில் இலங்கை யில் நடைபெற்ற இனப் படுகொலை சம்பந்தமாக சுதந்திரமான நம்பகத் தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும், ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் நிரந்தர அரசியல் தீர்வு காண்பதற்கு அய்.நா. மன்றத்தின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு வேண்டுமென் றும் திட்டவட்டமாகக் குறிப்பிட வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை. இந்தியா இப்படிப்பட்ட தீர்மானத்தைக் கொண்டு வருமா னால் ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட் டுள்ள மனக்காயங்களுக்கு ஓரளவுக் காவது மருந்து தடவுவதாக அமை யும். மத்திய அரசு எந்த மாதிரியான அணுகுமுறையைக் கையாளப் போகிறது என்பதைப் பொறுத் திருந்து பார்ப்போம்.

சி.பி.எம்.முக்கு பதில்

கேள்வி :- காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சவையில் தி.மு.கழகம் அங்கம் வகித்த காரணத்தால்தான் தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தி.மு.க.வுடன் சேராமல் அ.தி.மு.க.வுடன் தோழமை கொண்ட தாகச் சொல்லிக் கொள்கிறார்களே?

தமிழ் ஓவியா said...

கலைஞர் :- அதுதான் கார ணமா? மேற்கு வங்காளத்தில் மேல் சபை தேர்தலில் போட்டியிடும் காங் கிரஸ் வேட்பாளருக்கே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித் திருப்பதாக வெளிப்படையாகவே செய்தி வந்திருக்கிறதே? ஓகோ, அது மம்தா அரசியல்! இங்கே ஜெய லலிதா அரசியல் போலும்!

மாநிலங்களவைத் தேர்தலும் - அ.தி.மு.க.வினரும்

கேள்வி :- டில்லி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளர் ஒருவரை அறிவித்த இரண்டு நாட்களிலேயே மாற்றி விட்டார்களே?

கலைஞர் :- அந்தக் கட்சியில் இதுபோல நடப்பது இது ஒன்றும் புதுமை அல்ல. இதற்கு முன்பு அ.தி.மு.க. இரண்டு முறை வேட் பாளர்களை அறிவித்து விட்டு பின்னர் திரும்பப் பெற்றிருக் கிறது. 1996ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலங் களவைத் தேர்தலின் போது, ஆதி ராஜாராமை முதலில் அறிவித்து விட்டு, பிறகு என். தளவாய் சுந்தரம் என்பவரையும், அதன் பிறகு 2013ஆம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தலில் முதலில் சரவணப் பெருமாள் என்பவரை வேட்பாளராக அறிவித்து விட்டு, பின்னர் கே. தங்கமுத்துதான் வேட்பாளர் என்று மாற்றினார்கள். ஆதி ராஜாராமை முதலில் வேட் பாளராக அறிவித்த போது, மூத்த வழக்கறிஞர் திரு. விஜயன் தாக்கப் பட்ட வழக்கில் ஆதி ராஜாராம்தான் முதல் குற்றவாளி என்றும், அவர் ஜாமீன் பெற்று வெளியிலே இருப் பவர் என்றும் பின்னர் தெரிந்து, அது குறித்து நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் இருந்த காரணத்தால் வேட்பாளர் ஆதி ராஜாராமை மாற்றி விட்டு தளவாய் சுந்தரம் என்பவரை வேட்பாளராக் கினார்கள். 2013ஆம் ஆண்டு அ.தி.மு.க. வேட்பாளராக முதலில் சரவணப் பெருமாளை, அ.தி.மு.க. அறிவித்த போதும், அவர் 3,578 கிலோ வெள்ளியைக் கடத்திய தற்காக அவர் மீது சுங்க வரிச் சட்டம் மற்றும் அன்னியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப் பட்டிருந்தவர் என்பது தெரிந்து, அவரை வேட்பாளராக அறிவித் ததைத் திரும்பப் பெற்றுக் கொண்டு கே.தங்கமுத்துவை வேட்பாளராக அறிவித்தார்கள்.

எப்படிப்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் எல்லாம் அங்கே வேட்பாளர்களாகத் தேர்ந்தெ டுக்கப்படுகிறார்கள் என்பதற்கு இவை நல்ல உதாரணங்கள். மரபா அப்படி என்றால் என்ன?

கேள்வி :- 30ஆம் தேதி தமிழகச் சட்டப் பேரவை கூடப் போவதாக வும், ஆளுநர் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் முறையான அறிவிப்பு வெளிவந்துவிட்டது. சட்டப்பேரவை கூடுகின்ற தேதி அறிவிக்கப்பட்டு விட்டால், மரபுப் படி அரசின் சார்பில் முக்கிய அறிவிப்புகள் எதுவும் செய்யக் கூடாது. ஆனால் முதல் அமைச்சர் பெயரால் அறிவிப்புகள் அன்றாடம் வந்து கொண்டே இருக்கிறதே?

தமிழ் ஓவியா said...

கலைஞர் :- நீங்கள் கூறுவது, மரபு என்று தெரிவிப்பது எல்லாம் ஜன நாயக முறைப்படி நடை பெறுகின்ற ஓர் ஆட்சிக்குத்தான் பொருந்தும். இந்த ஆட்சியில் நீங்கள் இப்படி கேள்வி கேட்டதற்கே ஏன் அவதூறு வழக்கு உங்கள் மீது போடப்படக் கூடாது என்று யோசிப்பார்கள்!

கேள்வி :- டில்லி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளர் ஒருவரை அறிவித்த இரண்டு நாட்களிலேயே மாற்றி விட்டார்களே?

கலைஞர் :- அந்தக் கட்சியில் இதுபோல நடப்பது இது ஒன்றும் புதுமை அல்ல. இதற்கு முன்பு அ.தி.மு.க. இரண்டு முறை வேட் பாளர்களை அறிவித்து விட்டு பின்னர் திரும்பப் பெற்றிருக் கிறது. 1996ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலங் களவைத் தேர்தலின் போது, ஆதி ராஜாராமை முதலில் அறிவித்து விட்டு, பிறகு என். தளவாய் சுந்தரம் என்பவரையும், அதன் பிறகு 2013ஆம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தலில் முதலில் சரவணப் பெருமாள் என்பவரை வேட்பாளராக அறிவித்து விட்டு, பின்னர் கே. தங்கமுத்துதான் வேட்பாளர் என்று மாற்றினார்கள். ஆதி ராஜாராமை முதலில் வேட் பாளராக அறிவித்த போது, மூத்த வழக்கறிஞர் திரு. விஜயன் தாக்கப் பட்ட வழக்கில் ஆதி ராஜாராம்தான் முதல் குற்றவாளி என்றும், அவர் ஜாமீன் பெற்று வெளியிலே இருப் பவர் என்றும் பின்னர் தெரிந்து, அது குறித்து நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் இருந்த காரணத்தால் வேட்பாளர் ஆதி ராஜாராமை மாற்றி விட்டு தளவாய் சுந்தரம் என்பவரை வேட்பாளராக் கினார்கள். 2013ஆம் ஆண்டு அ.தி.மு.க. வேட்பாளராக முதலில் சரவணப் பெருமாளை, அ.தி.மு.க. அறிவித்த போதும், அவர் 3,578 கிலோ வெள்ளியைக் கடத்திய தற்காக அவர் மீது சுங்க வரிச் சட்டம் மற்றும் அன்னியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப் பட்டிருந்தவர் என்பது தெரிந்து, அவரை வேட்பாளராக அறிவித் ததைத் திரும்பப் பெற்றுக் கொண்டு கே.தங்கமுத்துவை வேட்பாளராக அறிவித்தார்கள்.

எப்படிப்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் எல்லாம் அங்கே வேட்பாளர்களாகத் தேர்ந்தெ டுக்கப்படுகிறார்கள் என்பதற்கு இவை நல்ல உதாரணங்கள். மரபா அப்படி என்றால் என்ன?

கேள்வி :- 30ஆம் தேதி தமிழகச் சட்டப் பேரவை கூடப் போவதாக வும், ஆளுநர் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் முறையான அறிவிப்பு வெளிவந்துவிட்டது. சட்டப்பேரவை கூடுகின்ற தேதி அறிவிக்கப்பட்டு விட்டால், மரபுப் படி அரசின் சார்பில் முக்கிய அறிவிப்புகள் எதுவும் செய்யக் கூடாது. ஆனால் முதல் அமைச்சர் பெயரால் அறிவிப்புகள் அன்றாடம் வந்து கொண்டே இருக்கிறதே?

கலைஞர் :- நீங்கள் கூறுவது, மரபு என்று தெரிவிப்பது எல்லாம் ஜன நாயக முறைப்படி நடை பெறுகின்ற ஓர் ஆட்சிக்குத்தான் பொருந்தும். இந்த ஆட்சியில் நீங்கள் இப்படி கேள்வி கேட்டதற்கே ஏன் அவதூறு வழக்கு உங்கள் மீது போடப்படக் கூடாது என்று யோசிப்பார்கள்!

Read more: http://viduthalai.in/page-2/74274.html#ixzz2rjKHDxsQ

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

வெளுப்பு

செய்தி: அய்.நா. மனித உரிமைகள் அமைப்புத் தேர்தலில் இந்தியா மீண்டும் போட்டி!

சிந்தனை: அதெல்லாம் சரிதான்! சிங்கள அரசின் மனித உரிமைக்கு எதிரான பிரச்சினையில் இந்தியா வின் முகம் வெளுத்து விட்டதே!

Read more: http://viduthalai.in/e-paper/74262.html#ixzz2rjL5iXQj

தமிழ் ஓவியா said...


மருத்துவத்தில் பெண்கள்


பல நூற்றாண்டுகள் கழித்து கிரேக்க நாட்டில் ஏற்பட்ட அறிவியல் புரட்சியும் பெண்களின் பங்களிப்போடுதான் நடந்திருக்கிறது. பிதாகரஸ், பிளாட்டோ போன்ற அறிஞர்களின் குழுவில் பெண்கள், ஆண்களுக்கு இணையாக அங்கம் வகித் திருக்கிறார்கள்.

சில நாடுகளில் பெண் மருத்துவர்கள், பெண்களுக்கு மட்டுமே சிகிச்சையளிக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தது. ஆனால் அப்போதும் ரோம் நகரில் பெண் மருத்துவர்கள், பால் வேறுபாடின்றி அனைவருக்கும் சிகிச் சையளிப்பது நடைமுறையில் இருந்திருக்கிறது.

அதேபோல அலெக்ஸாண்டிரியாவைச் சேர்ந்த மேரி என்கிற வேதியியல் வல்லுநர் சிற்சில கண்டுபிடிப்புகளையும் இந்த உலகிற்கு வழங்கியிருக்கிறார்.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் ஹைபாத்தியாவின் அறி வியல் பணி அளப்பரியது. இவர் தன் தந்தையின் வழிகாட்டு தலில், அலெக்ஸாண்டிரியா பல்கலைக்கழகத்தில் கணிதவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி குறித்த வகுப்புகளை நடத்தியிருக்கிறார்.

திரவங்களின் அடர்த்தியைக் கண்டறி வதற்கான கருவியையும், விண்ணில் நட்சத்திரங்களின் இடத்தைக் கண்டறியும் தொலைநோக்கியையும் ஹைபாத்தியா கண்டுபிடித்த தாகச் சொல்கிறார்கள்.

அதற்கடுத்து வந்த நூற்றாண்டுகளில் பெண் விஞ்ஞானி களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து, முடிவில் குறிப் பிட்டுச் சொல்லும்படி ஒன்றிரண்டு பேர் மட்டுமே நிலைத்து நின்றனர்.

என்ன செய்யப் போகிறோம்?

இப்போதும் உலக அளவில் கணக்கெடுக்கும் போது அறிவியல் தொழில்நுட்பத்திலோ, ஆராய்ச்சியிலோ சிறந்து விளங்குகிறவர்களின் பட்டியலில் பெண்களைத் தேட வேண்டியி ருக்கிறது. இதற்கு என்ன காரணம்? தங்கள் மகள் அறிவியல் துறையைத் தேர்ந்தெடுத்துப் படிப்பதைப் பெற் றோர்கள் தடுக்கிறார்களா? முழுவதுமாகத் தடுப்பதில்லை, ஆனால் அதற்கான எல்லையைச் சுருக்கிவிடுகிறார்கள்.

அறிவியல் என்றால் மருத்துவத்துறையை மட்டுமே நோக்கிய தாக இருக்கிறது பெற்றோர்களின் இலக்கு. மகன்களைத் துணிச்சலுடன் ஆராய்ச்சிப் படிப்புகளை நோக்கி நகர்த்தும் பெற்றோர், தங்கள் மகள் அதை நோக்கி நகர்வதை அவ்வள வாக விரும்புவதில்லை.

இந்தத் தயக்கம்தான் பெண்களை, குறுகிய வட்டத்துக்குள்ளேயே நிறுத்திவிடுகிறது. எல்லை தாண்டி சிந்திக்கவிடாமல் முடக்கிவிடுகிறது. உண்மையில் அறிவியல் அறிவில் ஆண்களைக் காட்டிலும் சிறந்து விளங்கும் திறமை பெண்களுக்கு இருக்கிறது. அதைத்தான் வரலாறும் சொல்கிறது. அந்த வரலாறு திரும்புவதற்கான வழிகளை ஏற்படுத்தித் தருவதும், தடைகளை அகற்றுவதும் நம் கைகளில்தான் இருக்கிறது.

Read more: http://viduthalai.in/page-7/74271.html#ixzz2rjMLe9AI

தமிழ் ஓவியா said...


விண்ணைத் தாண்டிய பெண்கள்


விண்வெளியில் தொடக்கக் காலச் சாதனை புரிந்த ரஷ்யாவின் வாலென்டினா தெரஸ்கோவாவின் காலம் முதல் விண்வெளி ஆராய்ச்சிகளில் பெண்களின் பங்கு குறைத்து மதிப்பிட முடியாத ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. விண்வெளி ஆராய்ச்சிகளில் ரஷ்யா வின் பங்கு குறைந்துவிட்ட நிலையில், அதில் தீவிரக் கவனம் செலுத்தி வரும் அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசாவின் ஆராய்ச்சிகளில் இதைத் தெளிவாகக் காணலாம்.

தெரஸ்கோவாதான் விண்வெளியில் பறந்த முதல் வீராங்கனை. அவருடைய அப்பா ஒரு உழுது வண்டியின் (டிராக்டர்) ஓட்டுநர், அம்மா ஜவுளி தொழிற்சாலைப் பணியாளர். அம்மாவைப் போல அவரும் ஜவுளி தொழிற் சாலையில் வேலை பார்த்துக்கொண்டே படித்தார். பாராசூட்டில் பறப்பதில் தெரஸ்கோவாவுக்கு அதிக ஆர்வம் இருந்தது.

விண்வெளி வீராங்கனையாக அவர் தேர்ந்தெடுக்கப்பட அதுவும் முக்கியக் காரணமாக இருந்தது. 1963இல் வாஸ்டாக் 6 விண்கலத்தில் அவர் பயணம் செய்தார். கிட்டத்தட்ட 3 நாள்கள் விண் வெளியில் செலவிட்ட அவர், 48 முறை உலகை வலம் வந்தார்.

நாசாவில்...

அமெரிக்காவின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த ஷன்னான் லூசிட், அவரது வயதை ஒத்த இளம் பெண்கள் சமைத்துக் கொண்டிருந்தபோது, வாயுக் களைக் கலந்து தண்ணீரை உருவாக்கலாம் என்பதைக் கண்டுபிடித்தார். 1960களில் பெண்கள் சந்தித்துவந்த பல்வேறு தடைகளை மீறி, விண்வெளிக்குச் செல்வதில் லூசிட் ஆர்வம் கொண்டிருந்தார்.

தமிழ் ஓவியா said...

விண்வெளி வீரர்/வீராங்கனை ஆவதற்கான பயிற்சி என்பது ராணுவ வீரர்/வீராங்கனை ஆவதற்கான பயிற்சியைவிட மிகக் கடுமையானது.

1983ஆம் ஆண்டில் சால்லி ரைட் அமெரிக்காவின் முதல் விண்வெளி வீராங்கனையாக விண்ணுக்குச் சென்றார். 1984இல் கேதரின் சல்லிவன் விண்வெளியில் நடந்த முதல் அமெரிக்கப் பெண் ஆனார்.

1996ஆம் ஆண்டில் ரஷ்ய விண்வெளி நிலையமான மிர்ரில் 188 நாள்களை லூசிட் செலவிட்டார். பின் னாளில் சுனிதா வில்லியம்ஸ் இந்தச் சாதனையைத் தகர்த்தார்.

விண்ணை ஆள்வோம்

ஆனால், லூசிட் வளர்ந்த போராட்டமான காலம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. நாசா ஊழியர்களில், 33 விழுக்காட்டுக்கு மேற்பட்ட பெண்கள் தற்போது உள்ளனர். 1981ஆம் ஆண்டுக்குப் பிந்தைய 18 ஆண்டுகளில் நாசா 94 விண்கலங்களைச் செலுத்தி உள்ளது. இதில் 57 முறை பெண்கள் பயணித்துள்ளனர். 1997க்குப் பிறகு எல்லா விண்கலங்களிலும் குறைந்தது ஒரு விண்வெளி வீராங்கனையாவது இடம்பெற்று வந்துள்ளனர்.

உயிரியல்-பொருள் அறிவியல்-எலும்பு செல் ஆராய்ச்சி ஆகியவற்றில் ஈடுபடும் நோக்கத்துடன் 1992இல் எண்டவர் விண்கலத்தில் மருத்துவரான மே ஜெமிசன் சென்றார். விண்வெளி சென்ற முதல் கறுப்பினப் பெண் அவர்.

அமெரிக்க விமானப் படையில் பணியாற்றிய லெப்டினன்ட் கர்னல் எலீன் காலின்ஸ், 1995இல் நாசா விண்கல விமானிகளில் ஒருவராக மாறினார். அவரே முதல் பெண் விண்கல விமானி. 1999ஆம் ஆண்டில் விண்கலத்தைச் செலுத்தும் முதன்மை விமானியாகவும் ஆனார்.


தமிழ் ஓவியா said...

1998ஆம் ஆண்டில் வரலாற்றிலேயே முதன் முறையாக விண்கலத்தைச் செலுத்துவதற்கான பொறுப்பாளர், அவரது உதவியாளர், விண்கல இயக்குநர், விண்கலம் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையிலான தொடர்பாளர் ஆகிய அனைவரும் பெண்களாக நியமிக்கப்பட்டனர்.

சோகங்கள்

விண்வெளிப் பயணம் மிகப் பெரிய சாகசமாகக் கருதப்பட்டாலும், விண்வெளிக்குச் சென்ற பெண்கள் சார்ந்து சில சோகங்களும் நிகழாமல் இல்லை. 1986ஆம் ஆண்டில் சாலெஞ்சர் விண்கலம் புறப்பட்டுச் சில நிமிடங்களிலேயே வெடித்துச் சிதறியதில் வீராங்கனை ஜூடி ரெஸனிக், பள்ளி ஆசிரியை கிறிஸ்டா மெக்ஆலிப் ஆகிய இருவரும் இறந்தனர்.

2003 பிப்ரவரி 1ஆம் தேதி கொலம்பியா விண்கலம் ஆராய்ச்சிகளை முடித்துக்கொண்டு பூமிக்குத் திரும்பியபோது, வளிமண்டலத்தில் உராய்வு ஏற்பட்டு வெடித்துச் சிதறியது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்பனா சாவ்லா, லாரல் பிளேர் சால்டன்கிளார்க் ஆகிய இரண்டு வீராங்கனைகள் உட்பட 7 பேர் பலியாகினர். நாசாவின் முயற்சிகளில் பெரும் பின்னடைவு ஏற்படக் காரணமாக இருந்த சம்பவம் இது.

இந்திய வம்சாவளியினர்

கல்பனா சாவ்லாதான், விண்வெளியில் பறந்த முதல் இந்திய வம்சாவளி பெண். 1988ஆம் ஆண்டு விண்வெளி பொறியியலில் முனைவர் ஆராய்ச்சி பட்டம் பெற்ற அவர், தொடர்ந்து நாசாவின் ஏம்ஸ் ஆராய்ச்சி மய்யத்தில் பணிபுரிய ஆரம்பித்தார். 1994ஆம் ஆண்டில் விண் வெளியில் 32 நாட்களுக்கு அவர் இருந்துள்ளார்.

அவருக்குப் பிறகு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் விண்ணுக்குச் சென்றுள்ளார். அமெரிக்கக் கடற்படை அதிகாரியான சுனிதா, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு நாசா அனுப்பிய 14ஆவது, 15ஆவது பயணங்களில் உறுப்பினராகவும், 32ஆவது பயணத்தில் விமானப் பொறியாளராகவும், 33ஆவது பயணத்துக்குக் கமாண்டராகவும் செயல் பட்டிருக்கிறார்.

ஒரே தடவையில் நீண்ட காலம் விண்வெளியில் கழித்த பெண் (195 நாள்கள்), விண்வெளியில் அதிக முறை நடந்த பெண் (7 முறை), விண்வெளியில் மிக அதிக நேரம் நடந்த பெண் (50 மணி, 40 நிமிடங்கள்) ஆகிய சாதனைகளை அவர் புரிந்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-7/74272.html#ixzz2rjMVDk7x

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகத்தின் புதிய விழுதாக சூழியம் என்ற துணை அமைப்பு உருவாக்கம்!


சென்னை, ஜன.28- திராவிடர் கழகத்தின் விழுதுகளில் ஒன்றாகச் சூழியம் என்ற ஓர் அமைப்பு தொடங்கப்பட்டது. திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் 26.1.2014 மாலை 5.30 மணிக்குச் சென்னை பெரியார் திடலில் இது உருவாக்கப்பட்டது.

பெரியார் பேருரையாளர் பேராசிரியர் முனைவர் மா. நன்னன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், திராவிட வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவர் முனைவர் அ. இராமசாமி, பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ. குமரேசன், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் அரசுப் பணியாளர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி, பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் துணைத் தலைவர் கோ. ஒளிவண் ணன், தமிழக மூதறிஞர் குழுத் துணைத் தலைவர் பொறி யாளர் வ. சுந்தரராசுலு, திராவிடர் கழக வழக்குரைஞர் அணியின் அமைப்பாளர் வழக்குரைஞர் வீரமர்த்தினி, வழக்குரைஞர் ம.வீ. அருள்மொழி, பெரியார் நூலக வாசகர் வட்டத் துணைச் செயலாளர் த. சுப்பிரமணியன், வடசென்னை பகுத்தறிவாளர் கழக செயலாளர் கோவி. கோபால், திராவிடப் புரட்சி, சைதை தென்றல், சேலம் இராசு, சாக்ரட்டீஸ் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துகளை எடுத்துக் கூறினர்.

அமைப்பின் பெயர் சூழியம்

நோக்கு;

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் (திருக்குறள் 445)

பொருள்: பல நூல்களை ஆய்ந்தறிந்து கூறும் பெரி யோரைத் தம் துணையாகக் கொள்ளும் அரசனுக்கு அவர்கள் ஆட்சி நடத்துதற்குரிய கண் போன்றவர் ஆவர். ஆதலால் அரசன் அத்தகைய பெரியோரை ஆய்ந்து தேடித் துணையாகக் கொள்ள வேண்டும்.

நோக்கம்: சிந்தனையாளர் ஆவோர்க்கு வாய்ப்பும் சிந்தனையாளரின் ஆக்கத்திற்கு வாய்ப்பும் அளித்தல்

அமைப்பு முறை:

அவ்வத்துறை வல்லுநர் - (தேவைப்படும் பொழுது அழைக்கப்படுவார்)

மொழியியல் - பொருளியல் - வரலாறு

இயற்பியல் - வேதியியல் - விண்ணியல்

பொறியியல் - மருத்துவம் - உடலியல்

உளவியல்- அறிவியல் - பிற (அவ்வத் துறைகளைச் சேர்ந்த வல்லுநர் ஒருவர் தேவைப்படும் பொழுது சிறப்பாக அழைக்கப்படுவார்)

1. சூழியம் - அமைக்கப்படுவதன்று; முற்றிலும் அமைவதே (வாழையை வாழ வைப்பது போன்றது)

2. அடிக்கோள் - சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்- (குறள் 445)

3. இது திராவிடர் கழக விழுதுகளில் ஒன்றே.


தமிழ் ஓவியா said...

4. திட்டம், கருத்து முடிவு, சிந்தனை போன்றவற்றை உருவாக்கித் தலைமைக் கழகத்துக்கு (தி.க.வுக்கு) அளிப்பது மட்டுமே இதன் பணி.

5. போகப் போகத் தேவைக்கேற்ப இதன் அமைப்பு போன்றவற்றைத் தானே மாற்றியும், மேம்படுத்தியும் அமைத்துக் கொள்ளும் திறம் வாய்ந்தது இது.

6. திராவிடர் கழகம் (தலைமை) தான் விரும்பும்போது தலையிடும் உரிமை பெற்றது.

7. தலைமையின் முடிவு எதுவாயினும் அது சூழியத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த வல்லது.

8. ஆயினும் சூழியம் முழுவதும் தன்னைத்தானே ஆண்டு கொள்ளும் தகுதி பெற்றது.

9. சூழியம் இயங்கத் தேவைப்படும் அனைத்தையும் தன் தலைமையிடமிருந்து (தி.க.) பெற்றுக் கொள்ளும் உரிமை படைத்தது.

10. திராவிடர் கழகத்தின் சார்பாகச் சூழியத்தோடு தொடர்பு கொண்டு அது இயங்க உதவுவோர் ஒருவரைத் திராவிடர் கழகத் தலைவர் அமர்த்துவார்.

11. தலைமை (திராவிடர் கழகத் தலைவர்) இம் முறைப்படியான சூழியத்தை உருவாகச் செய்து அதன் முதல் கூட்டத்தைக் கூட்டி அது தொடர்ந்து தானே இயங்கவும் ஆணை பிறப்பிப்பார்.

12. சூழியம் மாதம் ஒருமுறையேனும் கூடிச் சூழும்.

13. சூழியச் சூழ்வலர் சூழ்வாரைச் சூழ்ந்து கொண்டு சூழப்படுவதைத் தேர்ந்தெடுத்து சூழ்வார் மற்றும் சூழியர் ஆகியோருக்கு அறிவிப்பார்.

14. அவ்விரு பாலரும் தத்தம் கருத்துகளைப் பற்றிய பொருட் சுருக்கத்தை (இருபது வரிகளுக்குள்) ஒரு வார காலத்திற்குள் சூழ்வலர்க் களிப்பர்.

15. சூழ்வலர் அவற்றில் தக்கவற்றைச் சூழ்வாரோடு கூடித் தேர்ந்து அவற்றிலொன்றை அல்லது சிலவற்றை அதை அனுப்பியோருக்கனுப்பி அதன் வடிவத்தையும் அனுப்புமாறு பணிப்பார்.

16. அதற்குரியவர் பத்து நாள்களுக்குள் தம் சூழுரையின் முழு வடிவத்தையும் சூழ்வலருக்கு அனுப்பி விட வேண்டும்.

17. அச்சூழ் உரை முழுவதுமாகச் சூழ்வார், சூழியர் ஆகிய அனைவருக்கும் அனுப்பப்படும். அவர்கள் அதனைச் செப்பனிட்டு ஒரு வாரத்தில் சூழ்வலருக்கு அனுப்ப வேண்டும்.

தமிழ் ஓவியா said...

18. அவற்றைத் திரட்டி அதனைச் சூழியத்தைக் கூட்டி ஆராய்ந்து செவ்வடிவத்தைச் சூழியத்தில் படைத்து அதன் ஒப்புதலைப் பெற்றுத் தலைமைக்கு அனுப்புவார்.

19. தேவைப்படும்போது தேவைப்படும் துறை வல்லாரைச் சூழியத்துக்கு அழைத்துக் கொள்ளலாம்.

20. சூழ்வலர் தேவைப்படும் போதெல்லாம் தலைமை யோடு தொடர்பு கொண்டு கருத்தைப் பெறத் தவறார்.

21. திராவிடர் கழகத் தலைவர், துணைத் தலைவர், செயலவைத் தலைவர், செயலாளர்கள் ஆகியோர் சூழியத்தின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கருத்துக் கூறும் உரிமை பெற்றிருக் கிறவர்களேயாவர்.

தமிழ் ஓவியா said...

22. சூழியத்தின் கூட்டங்களில் கலந்து கொள்ள விழையும் அயலார் எவரையேனும் சூழ்வலர் (மிக மிக அரிதாக) அனுமதிக்க உரிமை படைத்தவர்.

23. அயலார் எவரேனும் சூழியத்திற்குத் தெரிவிக்க விரும்பும் கருத்துகளைச் சூழ்வார், சூழியர் ஆகியோருள் ஒருவரின் வாயிலாக மட்டுமே அதைச் செய்ய முடியும்.

24. அவ்வாறு பெறப்படும் அயற் கருத்தைத் தேர்ந்து தக்கவற்றை மட்டுமே சூழ்வார் சூழியர் ஆகியோர் சூழ்வலருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

25. அத்தகையவற்றை ஏற்பதோ புறக்கணிப்பதோ சூழ்வலரின் முழு உரிமைக்குட்பட்டதாகும்.

26. இவை போன்ற பிற ஆகிய அனைத்தையும் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்திச் செயற்படுத்தும் முழு உரிமையும் தலைமைக்கு (தி.க.) உண்டு.

27. முதல் சூழியத்துக்குரிய பொருள்:
மூடநம்பிக்கைக்குரிய வித்தும் வேரும்.
(வித்து ஒரு சூழியத்திலும், வேர் மற்றொரு சூழியத் திலும் ஆராயப்படலாம்)

28. அயலார் இதில் அடங்கார் புறவோர் பதிவு பெற்ற அயலார்.
புறவோரிலிருந்து சூழியரும், சூழியரிலிருந்து சூழ்வாரும் தேர்ந்தமைக்கப்பட வாய்ப்புண்டு. இவற்றை சூழ்வலர் செய்யலாம்.
சூழ்வாரிலிருந்து சூழ்வலர் தேர்ந்தெடுக்கப்பட நேரலாம். இதனைத் திராவிடர் கழகம் செய்யும்.

29. தி.க. தலைமை அமர்த்தும் தொடர்பாளர் செயலாளர் ஆகவும் செயற்படுவார்.

30. நிகழ்ச்சிக் குறிப்புக்கோப்பு ஒன்றை சூழ்வலரின் ஒப்பத்துடன் செயலாளர் பேணுவார்; அது 26.1.2014 நிகழ்ச்சி முதல் உருவாக வேண்டும்.

31. பொதுவாகச் சூழியம் என்றால் அது சூழ்வலர் தலைமையிலான சூழ்வாரை மட்டுமே குறிக்கும்.

32. சூழியம் *(நிகழிடம்) பெரியார் திடல் சென்னை-7

சூழ்வலர்: முனைவர் மா. நன்னன்
செயலாளர்: கலி. பூங்குன்றன்

சூழ்வார்: பேராசிரியர் அ. இராமசாமி வீ. குமரேசன்
கோ. கருணாநிதி
ஆ. வீரமர்த்தினி
வளர் தொழில் க. செயகிருட்டிணன்

சூழியர்: 1. வழக்குரைஞர் த. வீரசேகரன்
2. பொறியாளர் வ. சுந்தரராசலு
3. கோ. ஒளிவண்ணன்
4. பிரின்ஸ் என்.ஆர்.எஸ். பெரியார்
5. டெய்சி மணியம்மை
6. தமிழ்ச்செல்வன்
7. திராவிடப் புரட்சி
8. மஞ்சை வசந்தன்
9. பொறியாளர் கோவிந்தராசன்
10. சி. செங்குட்டுவன்

குறிப்பு: அடுத்த கூட்டம் 26.2.2014 அன்று மாலை பெரியார் திடலில் நடைபெறும்.

Read more: http://viduthalai.in/page-8/74284.html#ixzz2rjNhKyOL

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வு: சலுகை மதிப்பெண் வழங்க தமிழக அரசு தீவிர ஆலோசனை!

சென்னை, ஜன.29- ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்து, தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிக்க, அரசாணையில் வழிவகை செய்துவிட்டு, அதை அமல்படுத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் முன் வராததை, தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின், சென்னை மண்டல இயக்குநர், கடுமையாக விமர்சித்து உள்ளார்.

இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக, டி.ஆர்.பி., செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள இயக்குநர், உடனடியாக, டி.இ.டி., தேர்வில், மதிப்பெண் சலுகை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; தவறினால், தேசிய ஆணையத்தின் கவனத்திற்கு, பிரச்சினை கொண்டு செல்லப்படும்' என, எச்சரித்துள்ளார்.

இந்த விவகாரம், மிகப்பெரியதாக கிளம்பியிருப்பதால், மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்து, டி.ஆர்.பி., தீவிர ஆலோசனையில் இறங்கி உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தப் பிரச்சினையில், தன்னிச்சையாக, டி.ஆர்.பி., எந்த முடிவும் எடுக்க முடியாத நிலை உள்ளது. ஆணை யத்தின் உத்தரவு குறித்து, முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, உரிய முடிவை எடுக்க, டி.ஆர்.பி., தீர்மானித்துள்ளது. மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்த அறிவிப்பை, முதல்வரே வெளியிடுவார் எனவும், எதிர்பார்க்கப்படு கிறதாம்.

Read more: http://viduthalai.in/e-paper/74298.html#ixzz2rqQdalC9

தமிழ் ஓவியா said...


சபாஷ் சரியான நடவடிக்கை


சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட ஆசாராமின்
ஆசிரமம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது
அரசு அதிகாரிகள் நடவடிக்கை

ஜபல்பூர், ஜன.29- மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே பெதாகட் என்ற இடத்தில் உள்ள சாமியார் ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தை உள்ளூர் அதிகாரிகள் இடித்துத் தள்ளினர். இந்த ஆசிரமத்தை இடிப்பதற்கு பல்வேறு சட்ட ரீதியான சிக்கல்கள் இருந்து வந்தன. அவை நீங்கியதைத் தொடர்ந்து தற்போது ஆசிரமம் இடிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 7000 சதுர அடி பரப்பளவிலான இடத்தில் இந்த ஆசிரமம் கட்டப்பட்டிருந்தது. ஆசிரமம் இடிக்கப்படுவதையொட்டி பெருமளவிலான காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டி ருந்தனர். இதுகுறித்து பெதாகட் நகராட்சியின் தலைமை செயல் அதிகாரி அனிதா யாதவ், வட்டாட்சியர் ரிஷப் ஜெயின் செய்தியாளர்களிடம் கூறுகையில், இடிக்கப்பட்ட கட்டடம், சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகும். இதை இடிக்கத் தடை வாங்கியிருந்தனர். தற்போது அது நீங்கியுள்ளதைத் தொடர்ந்து இடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடம், இடம் ஆகிய அனைத்தும் சேர்த்து மொத்தம் 21,000 சதுர அடி பரப்பளவாகும் என்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/74300.html#ixzz2rqQnFovR

தமிழ் ஓவியா said...

திருவள்ளுவரா -முண்டகக் கண்ணியம்மனா?

சென்னை - கலங்கரை விளக்கம் (Light House) மயிலாப்பூருக்கும் இடையில் பறக்கும் இரயில் நிலையில் விரைவில் செயல்படவிருக்கிறது.

புதிய ரயில் நிலையம் உருவாக்கப்படும் பொழுது சம்பந்தப்பட்ட மாநில முதல் அமைச்சர் தான் ரயில் நிலையத்துக்குப் பெயர் சூட்டுவார். அந்த முறையில் ரயில்வே நிருவாகம் நான்கு பெயர்களை முதல் அமைச்சருக்குச் சிபாரிசு செய்தது.

1) திருவள்ளுவர் ரயில் நிலையம்
2) மாதவப் பெருமாள் ரயில் நிலையம்
3) சமஸ்கிருதக் கல்லூரி ரயில் நிலையம்
4) முண்டகக் கண்ணியம்மன் கோயில் ரயில் நிலையம்

இந்த நான்கு பெயர்களில் முதல் அமைச்சர் தேர்வு செய்து அறிவித்திருப்பது எது தெரியுமா?

முண்டகக் கண்ணியம்மன் கோயில் ரயில் நிலையம் என்று முதல் அமைச்சர் பெயர் சூட்டியுள்ளார்.

அண்ணா பெயரில் கட்சியையும், ஆட்சியையும் வைத்துக் கொண்டு இருக்கும் முதல் அமைச்ச ருக்கு, திருவள்ளுவரைவிட, மூடநம்பிக்கையின் அடிப்படையில் முண்டகக் கண்ணியம்மன் கோயில் முக்கியமாகப் போய் விட்டதா?

இனவுணர்வாளர்களும், பகுத்தறிவாளர் களும், மதச் சார்பின்மையை ஏற்பவர்களும் இது பற்றிச் சிந்திப்பார்களாக, அடையாளம் காண் பார்களாக! முதல் அமைச்சர் மறுபரிசீலனை செய்து திருவள்ளுவர் பெயரைச் சூட்டுமாறு வலியுறுத்துகிறோம்!


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.சென்னை
30.1.2014

Read more: http://viduthalai.in/e-paper/74386.html#ixzz2rvfwwB9W

தமிழ் ஓவியா said...


கலைஞர் தலைமையில் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) கலந்துரையாடல் கூட்டம்


டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் 1.2.2014 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் தமிழ்ஈழம் ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) கலந்துரையாடல் கூட்டம், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்.

அதுபோது டெசோ அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

- டெசோ

Read more: http://viduthalai.in/e-paper/74359.html#ixzz2rvg6C6Yy

தமிழ் ஓவியா said...


நாட்டு நடப்புகள்


மோசடி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிக்கெட் வாங்கித் தருவதாகக் கூறி பக்தர்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட போலி அய்.ஏ.எஸ். அதிகாரி வெங்கட் ரமணா கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 6.40 லட்சம் ரூபாய் ரொக்கம், ஒருகாரைப் போலீசார் பறி முதல் செய்தனர். (கைது செய்யப்பட்டு இருப்பவரும் திருப்பதி ஏழுமலையான் பெயரைக் கொண்டவர்தான் - வெங்கடேசன் தான். இது போன்ற மோசடி வேலை நடந்து கொண்டு இருந்ததன் தொடர்ச்சிதான் இது. இதைக் கூடத் தடுக்க முடியாதவன்தான் தீரார வினையெல்லாம் தீர்த்து வைப்பானாம். ஹி... ஹி....)

போராட்டம்

கோயம்பேடு சந்தை அருகே டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பெண்கள் போராட்டம் நடத்தினர். (நியாயந்தானே! இந்தப் பிரச்சினையில் பெரிதும் பாதிக்கப்படுவது குடும்பத் தலைவிகள் தானே?)

ஆபாசம்

இசையமைப்பாளர் அனிருத்து பெண்களைப் பற்றி ஆபாசமான பாடல் ஒன்றை யூ டியூப்பில் உலா விட்டுள்ளார். அவர்மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. (சினிமாவில் படுக்கையறைக் காட்சிகள், குத்தாட்டங்கள், இரு பொருள் கொண்ட பாடல்கள் கோயில்களில் ஆபாசமான சிலைகள், சித்தி ரங்கள் இத்தியாதி இத்தியாதி இருக்கத்தான் செய்கின்றன இவற்றைப் பற்றியும் சிந்திப்பது நல்லதல்லவா!)

ராகுல்பேச்சு

ராகுல் பேசினாலே பா.ஜ.க.வுக்கு வெற்றி - இவ்வாறு கூறியிருப்பவர் இல. கணேசன். (நரேந்திரமோடியை இன்னும் அதிகம் பேச விட்டாலே போதும் அது காங்கிரசுக்குச் சாதக மாகவே முடியுமே!)

குட்டையைக் குழப்பாதீர்!

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை - இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் டில்லியில் நேற்று சந்தித்துள்ளார். (மார்ச்சு மாதத்தில் அய்.நா.வின் மனித உரிமை அமைப்பில் முக்கிய நாடுகள் பல, இலங்கைக்கு எதிராகத் தீர்மானத்தைக் கொண்டு வரும் இந்தக் கால கட்டத்தில் இந்தச் சந்திப்பு, சிங்கள அரசுக்குப் பச்சைக்கொடி காட்டுவதற்கான ஆயத்தமாக இருக்கக் கூடாது; ஏற்கெனவே இந்தியாவுக்கு இருந்துவரும் கெட்ட பெயர் போதாதா? குளிக்கப் போய் சேற்றில் விழ வேண்டாமே!)

பலே கிராமத்து மகன்

செந்துறையையடுத்த பிலாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த இளம்வழுதி அகில இந்திய மருத்துவ மேற்படிப்பு நுழைவுத் தேர்வில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். (வாய்ப்பைக் கொடுத்துப் பாருங்கள் - ஒடுக் கப்பட்ட மக்களுக்கு - கிராமப்புற மக்களுக்கு - தங்கள் திறமையை தலை நிமிர்ந்து நிரூபித் துக் காட்டுவார்கள் - பலே இளம் வழுதி பலே!)

ஏலம்

அய்.பி.எல். கிரிக்கெட்டுப் போட்டியில் வீரர் களின் ஏலத் தொகை வெளியிடப்பட்டுள்ளது. (இவர்கள் என்ன விளையாட்டு வீரர்களா - ஆடு மாடுகளா ஏலம் போடப்படுவதற்கு?)

Read more: http://viduthalai.in/e-paper/74366.html#ixzz2rvgR192O

தமிழ் ஓவியா said...


இன்றைய நம் கேள்வி


பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தானே காந்தியார் சுட்டுக் கொல்லப் பட்டார்? பிரார்த்தனையின் பலன் இதுதானா?

Read more: http://viduthalai.in/e-paper/74361.html#ixzz2rvgb8KLa

தமிழ் ஓவியா said...


முயற்சிக்கவேண்டும்


தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையாவண்ணம் நடந்துகொள்ளவேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சியமாகக்கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்கவேண்டும். - (விடுதலை, 20.3.1950)

Read more: http://viduthalai.in/page-2/74367.html#ixzz2rvgsDgxz

தமிழ் ஓவியா said...

ஆசிரியருக்குக் கடிதம்

இந்திய நாணயங்களை (கரன்சி) அவமதிக்க வேண்டாமே...


சிமெண்ட் விளம்பரம் ஒன்றில் ஒரு நடிகர் தனது மனைவியோடு பாம்பன் பாலத்தில் நடந்துசெல்கின்றார். அப் போது அந்த நடிகர் கடல் அலைகளால் சேதப்படாமல் உறுதியாக இந்தப்பாலம் இருப்பதற்கு காரணம் குறிப்பிட்ட கம்பெனி தயாரிக்கும் சிமெண்ட் மட்டுமே பயன்படுத்தி கட்டப்பட்டதுதான் எனக் கூறுகின்றார். திடீரென அவரது துணை வியார் தனது தோல் பையிலிருந்து 2 ரூபாய் நாணயத்தை எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து பிரார்த்தனை செய்து கொண்டு கடலில் வீசுகின்றார். இதை பார்க்கின்ற நடிகர் என்ன இங்கும் வேண்டுதலா (கோரிக்கை மனுவா?) என சிரித்தபடியே கேட்கின்றார். ஒன்று மில்லை. இதைப்போன்ற சிமெண்ட் (இந்த சிமெண்ட்) நாம் வீடு கட்டும்போது நமக்கு வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டேன் என்கிறார். பிரார்த்தனை என்ற பெயரால் கடலில் நாணயத்தை தூக்கி எறிதல் என்ற செயல் இந்திய நாணயத்தை அவமதிக்கும் செயலாகும். நவராத்திரி தினத்தன்று கொலு பொம் மைகளுக்கு ரூபாய் நோட்டுக்களால் மாலையிடுதல், புத்தாண்டு (தமிழ் /ஆங்கில) நாட்களில் கடவுள் சிலை களுக்கு ரூபாய் நோட்டுக்களால் மாலையிடுதல், கடவுளர் படங்களை (உ.ம்: லெட்சுமி) பிரேம் செய்யும்போது ரூபாய் நோட்டுக்கள், நாணயங்களை பொருத் துதல், கோவில், குளங்கள், பள்ளிவாசல் (மசூதி) தேவாலயங்கள் (சர்ச்) போன்ற வழிபாட்டுத் தலங்களில் குறிப்பிட்ட இடங்களில் (உ.ம்: கொடிமேடை) நாணயங்கள், ரூபாய் நோட்டுக்களை வீசி எறிதல், ரூபாய் நோட்டுக்களில் இதயம், அம்பு போன்ற காதல் குறியீடுகளை வரைதல், இளங்காதலர்கள், நண்பர்கள் தங்கள் பெயர்களை எழுதிக் கொள்ளுதல் போன்ற செயல்கள் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் இந்திய கரன்சியை அவமதிக்கும் செயலாகும்.

ஏஐஐஐ, ஐஓ, ஓ -ஆம் வகுப்புகளில் ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பு அதை வெளி யிடும் ரிசர்வ் வங்கி அதை எவ்வாறு இனாம் (னுநடிஅயேவடி) (ரூ. 1000, ரூ. 500, ரூ. 100, ரூ. 50, ரூ. 20, ரூ. 10, ரூ. 5) வாரியாக கையாள்வது? எந்த வரிசையில் அடுக்க வேண்டும்? கள்ள நோட்டுகளை கண்டறிவது எப்படி? நீர்க்கோடுகள், காந்திபடம் போன்றவற்றை அறிந்து கொள்ளுதல், அஞ்சல், வங்கி போன்ற பாதுகாப்பான சேமிப்பு மற்றும் வங்கி, அஞ்சல்துறை படிவங்களை பூர்த்தி செய்தல் போன்ற வாழ்வியலோடு தொடர் புடையவற்றை எளிமைப்படுத்தி பாடங் களாக வைக்க வேண்டும். அவ்வாறு பயனுள்ள கருத்துகள் பாடத்திட்டத்தில் இணைக்கப்படும்போது மாணவர்களுக்கு எதிர்காலத்தில் பயனுள்ளதாக அவை அமையும்.

- சு. ஆறுமுகம்
(நன்னிலம், திருவாரூர் மாவட்டம்)

Read more: http://viduthalai.in/page-2/74380.html#ixzz2rvh1h6IT

ராவணன் said...

இன்னும் 25 பதிவுகள் எழுதலாமே....? எதுக்கு இந்த மறுமொழிகள்?

ராவணன் said...

1974-ல் கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுத்துவிட்டார்கள். 1997-ல் வழக்கா? ஒங்க வீரமணி வீரமானவரே...!

ராவணன் said...

ஜெ, கருணாநிதியை கைது செய்தபோது ஒங்க வீராப்பு மணி சொன்னது என்னவென்று சொன்னால் தமிழ் ஒலகம் அறிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

ராவணன் said...

ஐ என்பதை அய் என்றால் கை என்பதை கய் என்று கூறுவாயா?

…கலைஞர் என்பதை கலய்ஞர் என்று சொல்லு....

…பெரியார் சொன்னாலும்...பெருமாள் சொன்னாலும் அறிவோடு சிந்திப்பவனே மனிதன்.

…வீராப்பு கும்பலுக்கு எங்கே புரியும்?