முத்தமிழ் அறிஞர் கலைஞரின் முத்தாய்ப்பான அறிக்கை
சென்னை, ஜன.11- தை முதல் நாள் தமிழ்ப்
புத்தாண்டு அல்ல; சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் திருநாள்
என்று தமிழர் பகைவர்கள் எப்படி வேண்டுமானாலும் செய்து விட்டுப் போகட்டும்;
நம்மைப் பொறுத்தவரை, தமிழர்களைப் பொறுத்தவரை தைத்திங்கள் முதல் நாளே
தமிழ்ப் புத்தாண்டு தொடங் கும் நாள் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள்
வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
உடன்பிறப்பே,
23-1-2008 அன்று தமிழகச் சட்டப்
பேரவையில் மேதகு ஆளுநர் அவர்கள் தனது உரையிலே செய்த அறிவிப்பில்,
திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்
தாண்டுத் தொடக்கம் என்பது, ஒட்டு மொத்தமாக தமிழ் அறிஞர்கள் அனை வரும்
ஒருமனதாக ஒப்புக் கொண்டுள்ள உண்மை என்பதால்; தைத் திங்கள் முதல் நாளையே
தமிழ்ப் புத்தாண்டுத் தொடக் கம் என அறிவித்து நடைமுறைப்படுத்திட
தி.மு.கழக அரசு முடிவு செய்துள்ளது என்றும், எனவே, பொங்கல் திருநாளைத்
தமிழர் திருநாளாகப் போற்றிக் கொண் டாடி வரும் தமிழ்நாட்டு மக்கள்;இனி - தமிழ்ப் புத்தாண்டு பிறந்த
நாளாகவும் இணைத்து இந்நாளை இரட்டிப்பு மகிழ்ச் சியுடனும்,
எழுச்சியுடனும் கொண்டா டும் வகையில், வாழை, மா, பலா என முக்கனித்
தருக்களை நாட்டி; வண்ண வண்ணக் கோலங்களிட்டு; வரிசை விளக்கு களால் ஒளியுமிழ்
இல்லங்கள் புது எழில் காட்டிட; புத்தாடை புனைந்து தமிழ் மானம், தன்
மானம் போற்றிப் பாடியும், ஆடியும்; சமத்துவ உணர்வு பரப்பியும்; தமிழ்ப்
புத்தாண்டு இதுவெனத் துள்ளும் மகிழ்ச்சியால் அன்பை அள்ளிப் பொழிய
வேண்டுமென்றும் வெளியிட்டார்.
1939ஆம் ஆண்டு திருச்சியில்....
1939ஆம் ஆண்டு திருச்சியில் அகில
இந்தியத் தமிழர் மாநாடு சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. அதில்,
தந்தை பெரியார், கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர் உமாமகேசுவரனார், மறைமலை
அடிகளார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், தமிழ்த் தென்றல் திரு.வி.க.,
பேராசிரியர் கா.சுப்பிரமணியம், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், தமிழவேள்
பி.டி.இராஜன், ஆற்காடு ராமசாமி முதலியார், பட்டுக் கோட்டை அழகிரி உட்பட
பலரும் பங்கேற்றனர். அந்த மாநாடும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு
என்றும், பொங்கல் திருநாளே தமிழர் திருநாள் என்றும் அறிவித்தது.
திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர்,
இளவல் வீரமணி அவர்களோ தைத் திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின்
தொடக்கம் என்ற நமது நீண்ட நாள் கோரிக்கைக்கு வெற்றி கிடைத்துள்ளது. தமிழர்
பண் பாட்டு வரலாற்றுத் திசையில் புதியதோர் மறுமலர்ச்சி அத்தியாயம் இது.
பாராட் டுகிறோம், மகிழ்ச்சி அடைகிறோம் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆளுநரின் அறிவிப்பு வெளிவந்த மறு நாளே
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் விடுத்த அறிக்கை யில்
தொன்மைக் காலம் தொட்டே சமயம் சார்ந்தும், இயற்கை வாழ்வு சார்ந்தும்,
மண்ணும் மனிதர்களும் சார்ந்தும் விவசாய வாழ்வு சார்ந்தும் தைத் திங்கள்
முதல் நாளே தமிழர் வாழ்வு சார்ந்த எழுச்சியும் மகிழ்ச்சியும் ஊட்டுகின்ற
திருநாளாகும்.
மறைமலை அடிகளார் போன்ற மூத்த தனிப்பெரும்
தமிழ் அறிஞர்கள் தைத் திங்கள் முதல் நாளைத் தொடக்கமாய்க் கொண்டு அய்யன்
திருவள்ளுவர் பெயரில் தமிழ்ப் புத்தாண்டாய் அறிவித்ததை நடைமுறைப் படுத்த
உள்ள முத்தமிழறி ஞர் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு நன்றி, பாராட்டுக்கள்
என்று தெரிவித் திருந்தார்.
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் விடுத்த
அறிக்கையில், தைத்திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள்
என்று ஆளுநர் உரையில் கலைஞர் அரசு அறிவித்திருப்பது கண்டு உணர்வுமிக்க
தமிழர்கள் கொண்டாடிக் கூத்தாடு கிறார்கள். எல்லா தேசிய இனங்களுக் கும்
அழிக்க முடியாத சில அடையாளங்கள் உண்டு.
தமிழர்களுக்கு நில அடையாளம் இருக்கிறது;
இன அடையாளம் இருக் கிறது; ஆனால் கால அடையாளம் மட் டும் குழப்பத்தில்
இருந்தது. அந்தக் குழப்ப இருள் உடைந்து விடிந்து இன்று வெளிச் சம்
வந்திருக்கிறது. அய்யன் திருவள்ளு வரை கருத்துலகத்தின் அளவுகோலாய்க்
காட்டியது திராவிட இயக்கம். இன்று காலத்தின் அளவுகோலாகவும் திருவள்ளு
வரைக் கருதச் செய்திருக்கிறது கலைஞர் அரசு. இது சரித்திரத்தைச் சரி
செய்யும் சரித்திரமாகும் என்று எழுதியிருந்தார்.
அதிமுக ஆட்சியால் ஏற்பட்ட ஆபத்து!
கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இந்த நல்
முயற்சிக்கு அ.தி.மு.க. ஆட்சியில் தற்போது ஒரு பெரும் ஆபத்து ஏற்பட்டது.
தமிழ்நாட்டுச் சரித் திரத்திலே தமிழையே பகைத்துக் கொள்கிற - செம்மொழி
என்றாலே வெறுக்கிற - ஒதுக்குகிற - புறக்கணிக்கிற ஒரு பிற்போக்குக் கூட்டம்
இருக்கத்தான் செய்கிறது. அந்தக் காலத்திலும் இப்படி தமிழையே வெறுக்கின்ற
புலவர்கள் ஓரிருவர் இருந்திருக்கிறார்கள்.
இதோ ஒரு கதை!
நக்கீரன் காலத்திலே குயக்கொண்டான் என்று
ஒருவர் தமிழ்ச் சங்கத்திலே நடைபெற்ற ஒரு பட்டி மன்றத்திலே ஆரியம் நன்று,
தமிழ் தீது என்று சொல்ல - உடனே நக்கீரனுக்கு கோபம் வந்து, தமிழ்
தீதென்றும், வடமொழி நன்று என்றும் சொன்ன நீ, சாகக் கடவாய் என்று அறம்
பாடினாராம். உடனே குயக் கொண்டான் கீழே விழுந்து இறந்து விடுகிறார். உடனே
அங்கேயிருந்த சிலர் நக்கீரனைப் பார்த்து குயக் கொண்டானைப் பிழைக்க வைக்கக்
கேட்டுக் கொண்டார்கள்.
அதைக் கேட்ட நக்கீரன், ஆரியம் நன்று தமிழ்
தீ தென் றுரைத்த காரியத்தால் காலன் கோட் பட்டானைச் - சீரிய அந்தண்
பொதியில் அகத்தியனார் ஆணையினால் செந்தமிழே தீர்க்க சுவாகா! என்று பாட,
குயக் கொண்டான் உயிர் பெற்று எழுந்தானாம்.
சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவு
ஆளுநர் உரையிலே செய்யப்பட்ட அறிவிப்
பினைத் தொடர்ந்து அதே ஆண்டில் 29-1-2008 அன்று தமிழ்ப் புத்தாண்டு சட்ட
முன் வடிவை பேரவை முன் நான் அறிமுகம் செய்தேன். 1-2-2008 அன்று இச்சட்ட
மசோதா மீதான விவாதம் நடைபெற்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈ.எஸ்.
எஸ்.ராமனும், பா.ம.க. சார்பில் கி.ஆறுமுகமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
சார்பில் என்.நன்மாறனும், இந்தியக் கம்யூனிஸ்ட் சார்பில் வை.சிவபுண்ணி
யமும், ம.தி.மு.க. சார்பில் மு.கண்ணப்பனும், விடுதலைச் சிறுத்தைகள்
சார்பில் கு.செல்வமும் அந்த மசோதாவினை மனமார வரவேற்றுப் பேசி அது
நிறைவேறியது. மலேசியா நாட்டில் தமிழர்கள் தை முதல் நாளையே புத்தாண்டாகக்
கொண்டாடி வருகிறார்கள்.
டாக்டர் மு. வரதராசனார் அவர்கள், முன்
காலத்தில் வருடப் பிறப்பு சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல்
நாளைத்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர் கொண்டாடினர். அந்த நாளில் புதிய
ஆடைகளை வாங்கி உடுப் பார்கள். தெருவில் புது மண் போட்டு, செம்மண் இட்டு,
ஒழுங்கு செய்வார்கள். ஊரெல்லாம் திருவிழா நடத்துவார்கள். இப்படி நகரங்களில்
புத்தாண்டு பிறப்பாகப் பொங்கல் கொண்டாடு கிறார்கள் என்று
விளக்கியுள்ளார்.
தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் கண்டனம்!
இப்படியெல்லாம் போற்றப்பட்ட, பாராட்டப்
பட்ட ஒரு முடிவு நடைமுறைப்படுத்தப்பட தி.மு. கழக ஆட்சியிலே சட்டமாகக்
கொண்டு வரப்பட்டு 2008ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. தி.மு. கழக
ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது என்றால் இருக்கலாமா என்று ஆத்திரத்தோடு
அதற்கு முடிவு கட்ட அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு மசோதா பேரவை யிலே
அறிமுகப்படுத்தப் பட்டது.
மசோதாவை அவையிலேயே இரண்டு
கம்யூனிஸ்ட்களும் எதிர்த்தார்கள் என்ற தகவலை செய்தியாளர்கள் என்னிடம்
தெரிவித்து அதுபற்றிக் கருத்து கேட்டபோது அவர்களின் தமிழ் உணர்வுக்குத்
தலை வணங்குகிறேன் என்று பதில் கூறினேன்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்
விடுத்த அறிக்கையில் அ.தி.மு.க. அரசின் அந்த முடிவு தமிழ் உணர்வாளர்களை
வேதனைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றும் திடீரென்று தமிழ்ப்
புத்தாண்டை மீண்டும் சித்திரை மாதத்துக்கு மாற்றுவது முறையல்ல என்றும்
அது மிகப் பெரிய வரலாற்றுப் பிழையாக அமைந்து விடும் என்று கூறினார்.
தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களும் இந்த முடிவினை வன்மையாக கண்டித்து
செய்தி யாளர்களிடம் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இன்னும் சொல்ல வேண்டுமேயானால் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களே, நித்திரையில் இருக்கும் தமிழா!
இன்னும் சொல்ல வேண்டுமேயானால் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களே, நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
தரணியாண்ட தமிழருக்கு
தைம்முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!
தரணியாண்ட தமிழருக்கு
தைம்முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!
என்று பாடியதையும் நினைவுகூர
விரும்புகிறேன். தைத் திங்கள் முதல் நாளை - தமிழர் திருநாளாக - தமிழ்ப்
புத்தாண்டாகக் கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடு களையும் கழக ஆட்சியில்
ஆர்வத்தோடு சிறப்பாகச் செய்தோம். ஆனால் 2011ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு
வந்ததும், கழக அரசின் மற்ற திட்டங்களுக்கு காழ்ப்புணர்வு மிகக் கொண்டு
மூடுவிழா நடத்தியதைப் போல, தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு
தினம் என்பதை மாற்றிவிட்டு, சித்திரைத் திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப்
புத்தாண்டு என்று புரட்டிப் போட்டு மாற்றுகின்ற வகையில் மசோதா ஒன்றினை
சட்டப்பேரவை யிலே கொண்டு வந்து நிறைவேற்றி னார்கள். அதன் மூலமாக தி.மு.
கழகத்திற்கோ அது நடத்திய ஆட்சிக்கோ அவமானமா என்றால் இல்லை.
அ.தி.மு.க. அரசின் திரிபுவாத மசோதாவினால் தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற பழம் பெரும் வரலாறு
பொய்த்துப் போய்விடுமா? நம்மைப் பொறுத்த வரையில் பொங்கல் திருநாளை தமிழர்
திருநாள் என்று நாம் கொண்டாடுகிறோம். இனியும் கொண்டாடுவோம். ஆண்டுக்
கணக்கிலே ஆங்கிலேயர்களுடைய முதல் நாளை அவர்கள் கொண்டாடுவதைப் போல, நாமும்
நம்முடைய ஆண்டு முதல் நாளை, விழா எடுத்துக் கொண்டாட வேண்டும்.
இனப்பகைவர்கள் எப்படியும் செய்து விட்டுப் போகட்டும்!
தமிழ் இனப் பகைவர் எப்படி வேண்டுமானாலும்
செய்து விட்டுப் போகட்டும். நம்மைப் பொறுத்த வரையில், உண்மையான
உணர்வுமிக்க தமிழர் களைப் பொறுத்தவரையில், தைத் திங்கள் முதல் நாள்தான்
தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள். அதேநேரத்தில், நான் ஏற்கெனவே
தெரிவித்தவாறு, சித்திரைத் திங்கள் முதல் நாளில் விழா கொண்டாடு வோரை, நாம்
வேண்டாமென்று தடுக்கமாட் டோம்.
நம்மைப் பொறுத்தவரையில் தைத் திங்கள்
முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடிடு வோம். அன்றையதினம்
ஆங்காங்கு மின் விளக்கு களைத் தோரணமாக்கி, மின்மினி மின்னுவதைப் போல எல்லா
மரங்களிலும் விளக்குகளைத் தொங்க விட்டு, கடைகளின் முகப்புகளில் எல்லாம்
கண் கவர் அலங்காரம் செய்து, ஒவ்வொரு வீட்டிலும், எழில் குலுங்கச்
சிங்காரித்து இந்நாளை ஏற்றமுடன் கொண்டாடிடுவோம்.
ஏழை, பணக்காரர் வேறுபாடு ஏதுமின்றி
அனைவரும் சமத்துவம் கமழ்ந்திட இந்நாளை தமிழர் திருநாளாக புத்தாடை உடுத்திப்
புத்துணர்வுடன் விழா எடுத்திடுவோம். தைத் திங்கள் முதல் நாளே, தமிழர்
புத்தாண்டுத் திருநாள் என்பதைத் தரணி அறிய நிலைநாட்டிடுவோம்.
அன்புள்ள,
மு.க.
(முரசொலி 11.1.2014)
மு.க.
(முரசொலி 11.1.2014)
20 comments:
இன்று தமிழகத்தை ஆளும் கட்சியினர், திராவிட இன, தமிழ் மொழி உணர்வுகளுக்கு பகையானவர்கள் என்பதை மக்களிடம் அடையாளப்படுத்த வேண்டியது, உணர்வாளர்களின் கடமையெனக் கொண்டு பணியாற்றுவோம்
சுப்பிரமணிய சுவாமி முகநூல் (பேஸ்புக்) மூலம் விஷமப் பிரச்சாரம்
புதுடில்லி, ஜன. 16- பொய்யான தகவல்களை பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதன் மூலம் பாரதீய ஜனதா கட்சியில் ஐக்கியமாகியுள்ள சுப்பிரமணியசுவாமி பல்வேறுபிரச்சனைகளுக்கிடையே யும் ஒற்றுமையாக இருந்து வரும் இந்து மற்றும் முஸ்லிம் சமுதாய மக்களி டையே வெறுப்பை ஏற்படுத்தி வரு கிறார். சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றை சமூகத்தில் பல்வேறு மாற்றங்களை உருவாக்குவதற்கும், சிலர் திட்டமிட்டு வன்முறைகளை உருவாக்கு வதற்கும் பயன்படுத்தி வருகிறனர். குறிப்பாக இளைஞர்கள் இந்த சமூக வலைத் தளங்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதனை பாஜக முழுமையாக பயன்படுத்தி எப்படியாவது மோடியை பிரதமராக்கிட வேண்டும் என்ற முயற்சி யில் பல்வேறு அவதூறுகளையும், பொய்களையும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. வரலாறுகளையே திரித்துக் கூறி வருகிறது. மேலும் பல அய்டி நிறுவனங்களையே குத்தகைக்கு எடுத்து அதன் வழியாக இது போன்ற இழி செயல்களில் பாஜக ஈடுபட்டு வருவதை சமீபத்தில் கோப்ரா போஸ்ட் இதழ் அம்பலப்படுத்தியது. மோடியின் பொய்ப் பிரச்சாரப்படையில் ஜனதா கட்சியின் தலைவராகவும், தொண்ட ராகவும் இயங்கி வந்த சுப்பிரமணிய சுவாமி தற்போது அய்க்கியமாகியுள்ளார். அவர் தனது பேஸ்புக் கணக்கில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இஸ்லாமி யர்களுக்கு எதிராக இந்துக்களை வன் முறைக்கு தூண்டிவிடும் வகையில் பொய்த் தகவலை வெளியிட்டுள்ளார்.
அவரது பேஸ்புக் கணக்கில் வெளியிடப் பட்டுள்ள புகைப்படம் ஒன்றில், நீண்ட தடிகளுடன் இருக் கும் வாலிபர்கள், மற்றவர்களைத் தாக்குவதுபோல் உள்ளது. இதன் குறிப்பாக, வங்காளதேசத்தில் இந்துக் கள் முஸ்லிம்களால் தாக்கப்படுகின் றனர். தற்போதைய வங்காளதேச மக்கள் தொகை யில் 8 சதவிகிதம் பேர் இந்துக்கள் (இது 1941ல் 28 சதவிகிதமாக இருந்தது) என்று எழுதப்பட்டுள்ளது. இந்தப் பதிவை ஆயிரக்கணக்கான மோடியின் இணையதள பிரச்சாரக் குழுவினர் லைக் தெரிவித்துள் ளதோடு, அதனை விஷமத்தனமாக மற்றவர் களுக்கும் பகிர்ந்து வருகின்றனர். உண்மை யில், இந்தப் புகைப்படம் வங்காளதேசத்தில் பொதுத்தேர்தலின் போது வாக்களிக்கச் சென்றவர்களை எதிர்க்கட்சியின் ஆதர வாளர்கள் தாக்கிய போது எடுத்தபடம். இதனை குஜராத்தின் உண்மை என்ற பேஸ்புக் கணக்கில் நண்பராக இருக்கும் யூனுஸ் என்பவர் கண்டறிந்து, உண் மையை வெளிக் கொண்டு வந்துள்ளார். இதற்கு சான்றாக வாஷிங்டன் போஸ்டில் வெளி யிடப்பட்டிருந்த இந்தப் புகைப் படத்தை அவர் இணைத்துள்ளார். அதில், வங்காளதேசத் தில் நடைபெற்ற பொதுத் தேர்தலை எதிர்க்கட்சியான வங்காள தேச தேசியக் கட்சி புறக்கணித்திருந்த நிலையில், தேர்தலில் வாக்களிக்கச் சென்ற வாக் காளர்களை அக்கட்சியின் ஆதரவாளர் கள் தாக்கியதாகவும், வாக்காளர்கள் வாக் களிப்பதற்காக காவல்துறையினர் போராட்டக்காரர்களை நோக்கி மீண்டும் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வாக்கைப் பெறும் மலிவான அரசியலில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.முன்னதாக, பாஜகவிற்கு தனது ஆதரவைத் தெரி வித்த சர்ச்சை சாமியாரான பாபா ராம்தேவ், தனது பேஸ்புக் கணக்கில், முன்னாள் பிரதமர்களான ஜவஹர் லால் நேரு மற்றும் லால்பகதூர் சாஸ்திரி தொடர்பான படங்களை வெளியிட்டு, போலியான தகவல்களை தெரிவித் திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, இதற்கு எவ்வித வருத்தமும் தெரிவிக்காமல் அப்புகைப் படங்களை தனது பக்கத்திலிருந்து நீக்கி யது குறிப்பிடத்தக்கது. இது போன்று திட்டமிட்டு இந்து முஸ்லீம் மக்களிடையே வன் முறையை உருவாக்கும் சுப்பிரமணிய சுவாமி, சாமியார் ராம்தேவ் உள்ளிட்டவர் கள் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 153 (எ) பிரிவின் படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தள பயன்பாட் டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி: தீக்கதிர் 16.1.2014
Read more: http://viduthalai.in/page-2/73644.html#ixzz2qc23L9o7
இந்து அறநிலையத்துறையின் வேலையா இது?
நீதிக் கட்சியின் ஆட்சியில் இந்து அற நிலையத் துறை உண்டாக்கப்பட்டது - கோயில்களில் அர்ச்சகப் பார்ப்பனர்களின் சுரண்டலைத் தடுப்பதற்காகத்தான்.
கோயில்களைப் பொறுத்தவரை எந்தவித வரவு - செலவு கணக்குகளும் கடைப்பிடிப்பதில்லை. ஏதோ தங்களின் பூர்வீகச் சொத்துகளாகக் கருதி பார்ப்பனர்கள் தானடித்த மூப்பாக அவற்றைப் பயன்படுத்தி வந்தனர்.
இவற்றைக் கட்டுப்படுத்தவும், ஒழுங்குப்படுத்தவும் தான் இத்துறை பனகல் அரசர் காலத்தில் உருவாக்கப்பட்டது.
தி.மு.க. ஆட்சியில் டாக்டர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் இந்து அறநிலையத்துறை அமைச்சர் எனும் தகுதியில், சிதம்பரம் நடராஜன் கோயிலுக்குச் சென்ற பொழுதுகூட, அர்ச்சகர்கள் கொடுத்த பிரசாதத்தை இந்தக் கையில் வாங்கி, அந்தக் கையால் கீழே போட்டார். அதுபற்றி அவரிடம் கேட்கப்பட்ட பொழுது, இந்து அறநிலையத்துறை அமைச்சர் வேலை 4 மரக்கால் அரிசியை பயன் படுத்துவது என்றால் அதன்படி ஒழுங்காக செயல்படுகிறதா என்று சரி பார்ப்பதுதானே தவிர, கோயில் புனஷ்கார நடவடிக்கையில் ஈடுபடுவதல்ல என்று கறாராகக் கூறினார். அதனை வரவேற்று தந்தை பெரியார் அவர்கள் சபாஷ்! சபாஷ்! நெடுஞ்செழியன்! என்று விடுதலையில் முதல் பக்கத்திலேயே கையொப்பமிட்டு பெட்டிச் செய்தியாக வெளியிடச் செய்தார். அந்த இந்து அறநிலையத்துறை இப்பொழுது என்ன செய்துள்ளது தெரியுமா? ஒரு சுற்றறிக் கையைக் கல்வித்துறை மூலம் பள்ளிகளுக்கு அது அனுப்பியுள்ள தகவல் கண்டனத்துக்குரியது. இந்து அறநிலையத்துறை என்பது இந்து மதம் பரப்புத்துறையாக மாறி விட்டதோ என்று நினைக்கத் தோன்றும் ஒரு வேலையைச் செய்துள்ளது.
பள்ளி மாணவ - மாணவிகளுக்குத் திருவாசகம் பற்றி கட்டுரைப் போட்டியும், திருப்பாவை - திருவெம்பாவை பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியும் நடத்த வேண்டும் என்பதுதான் அந்தச் சுற்றறிக்கை.
முதல் பரிசு ரூ.2500, இரண்டாம் பரிசு ரூ.2000, மூன்றாம் பரிசு ரூ.1500 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல பள்ளிகளிலும் இது நடத்தப்பட்டும் உள்ளது.
இது விதிகளின்படி சரியானது தானா? எந்த விதியின் கீழ் இந்து அறநிலையத்துறை இந்த முடிவை எடுத்தது? எந்த விதிமுறைகளுக்கிணங்க கல்வித்துறையும் இந்த வேலையைச் செய்திருக் கிறது?
இதுவரை எந்த கால கட்டத்திலும் இல்லாத நடைமுறை இந்தக் கால கட்டத்தில் அரங்கேற்றப் பட்டது எப்படி? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? அண்ணா பெயரை கட்சியில் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு கட்சிதானே ஆட்சியில் இருந்து கொண்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் எந்தவித வழிபாட்டுச் சின்னங்களும் இருக்கக்கூடாது என்று ஆணை பிறப்பித்தவர் முதல் அமைச்சர் அண்ணா என்பது இந்த முதல்அமைச்சருக்கு தெரியுமா? அண்ணாவைத் திட்டமிட்டு அவமதிப்பதுதான் அண்ணா திமுக ஆட்சியின் திட்டமா?
கருநாடக மாநிலத்தில் முதல் அமைச்சராக வந்த பி.எஸ். எடியூரப்பா முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்றவுடன் முதல் ஆணையாக எல்லா இந்துக் கோயில்களிலும் தனது பெயரில் அர்ச்சனை செய்யப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். அது கடும் பிரச்சினைக்கு உட்படுத்தப்பட்ட நிலை யில், அந்த உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு அரசும் இந்தச் சுற்றறிக்கையை விலக்கிக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்து கிறோம். இந்தச் சுற்றறிக்கை கல்வி நிலையங் களுக்குள் தேவையற்ற மதச் சர்ச்சைகளை உண் டாக்கும்; வெறும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களின் வீட்டுப் பிள்ளைகள் மட்டுமா படிக்கிறார்கள்? மற்ற மற்ற மதக்காரர் வீட்டுப்பிள்ளைகளின் நிலை என்னாவது?
மதச் சார்பற்ற அரசு குறிப்பிட்ட மதக் காரியத்தைச் செயல்படுத்தலாமா? அதுவும் ஆண்டாள் பாடல் என்றால் கொக்கோகம் தோற்றுவிட வேண்டுமே! இதையா பிஞ்சு உள்ளங்களில் விதைப்பது?
எந்தவகையில் பார்த்தாலும் இந்து அறநிலையத் துறையின் செயல்பாடு உகந்ததல்ல! அரசு அதி காரிகள் அரசனை விஞ்சிய விசுவாசிகளாகச் செயல்படுவது ஆபத்து!
எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!
Read more: http://viduthalai.in/page-2/73643.html#ixzz2qc2HQbvv
தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டும்?
தமிழ்நாடு அரசு தொடங்கவிருப்பதாக அறிவித்துள்ள பல் நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவத் துறைப் பேராசிரியர்கள் உட்பட 84 பதவிகளுக்காகச் செய்யப்பட்ட விளம்பரத்தில் இடஒதுக்கீடு அறவே கிடையாது என்று குறிப்பிடப் பட்டுள்ளதானது தமிழ்நாட்டில் கட்சி, ஜாதி, மதங்களுக்கு அப்பால் பெரும் கொதி நிலையை ஏற்படுத்தி விட்டது.
அரசு விளம்பரத்திற்கு ஏதோ விளக்கம் கொடுப்பதுபோல் நினைத்துக் கொண்டு, முதல் அமைச்சர் கொடுத்த விளக்கம் மேலும் அரசின் தரப்பைப் பலகீனப்படுத்தி விட்டது.
எய்ம்ஸ் மருத்துவமனைப் பேராசிரியர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் தொட்டுக் காட்டிய இந்திரா சஹானி வழக்கில் நீதிபதிகள் ஆலோசனையாகச் சொன்ன வரிகளைப் பிடித்துக் கொண்டு, அந்த அடிப்படையில்தான் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக் கான விளம்பரத்தில் இடஒதுக்கீடு தவிர்க்கப் பட்டுள்ளது என்ற முதல் அமைச்சரின் சமாதானம் வலிய திணிப்பதாகும்.
அந்தத் தீர்ப்புக்குப் பிறகு மத்திய சுகாதார அமைச்சகம் அதே எய்ம்ஸ் மருத்துவமனை பணி நியமனத்தில் இடஒதுக்கீடு செய்வது தொடரப்பட வேண்டும்; சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் அரசு விண்ணப்பிக்கும் என்று ஆணை பிறப்பித்து அதன் அடிப்படையில் டில்லி மற்றும் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவ மனைகளில் ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமனத்தில் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் தம் அறிக்கையில் எவருக்கும் எளிதாகப் புரியும் வகையில் தெளிவுபடுத்தி விட்டார்.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் நேற்று பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பில் கூட பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை பணி நியமனங்களில் இடஒதுக்கீட்டைப் பின்பற்றுவதா கூடாதா என்பதை மத்திய அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று தெளிவுபடுத்தியாகி விட்டது.
தமிழ்நாடு அரசுக்கு முன்னுள்ள ஒரே செயல் சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் தொடங்கப்பட உள்ள பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கான பணி நியமனம் குறித்து ஏற்கெனவே வெளியிட்ட அறிக்கையைப் பின்வாங்கி 69 சதவீத அடிப்படையில் இடஒதுக்கீடு என்பதைத் தெளிவுபடுத்தி புதிய விளம்பரத்தை வெளியிடுவது என்பதேயாகும்.
நீதிமன்றத்தில் கூறப்பட்ட ஆலோசனை வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு, தான் எடுத்த நடவடிக்கையை நியாயப்படுத்த அதிமுக அரசு முயற்சி செய்யக் கூடாது.
சமூக நீதியில் அக்கறை இருக்கும் பட்சத்தில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வாய்ப்பு சிறிது கிடைத்தாலும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் எண்ணமும் செயலும்தான் முன்னால் வந்து நிற்கும்.
இடஒதுக்கீடு பிரச்சினை என்று வருகிறபோது தமிழ்நாட்டில் அசைக்கவே முடியாத 69 சதவீதத்தை உறுதிப்படுத்தும் சட்டம் இருக்கிறது. கண்களை மூடிக் கொண்டு அதன் அடிப்படையில் செயல்பட்டால் நீதிமன்றமும் குறுக்கிடாது; மக்கள் மன்றமோ இரு கரம் இணைத்து கரஒலி எழுப்பி மாலை சூட்டி வரவேற்கும்.
முதல் அமைச்சர் என்ன செய்யப் போகிறார் என்பதை வெகு மக்கள் வெகுவாகவே எதிர்ப்பார்க்கிறார்கள்.
Read more: http://viduthalai.in/page-2/73675.html#ixzz2qhqh4bOS
பகுத்தறிவு
பகுத்தறிவில்லாத எந்தச் சீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துவதில்லை, தன் இனத்தின் உழைப்பாலேயே வாழ்வதில்லை. தன் இனத்தின்மீது சவாரி செய்வதில்லை.
- (குடிஅரசு, 26.5.1935)
Read more: http://viduthalai.in/page-2/73674.html#ixzz2qhr3ZRcS
இடஒதுக்கீடுபற்றி முடிவு மத்திய, மாநில அரசுகள்தான் எடுக்க வேண்டும்
சிறப்புத் தகுதியுள்ள மருத்துவத்துறை போன்ற நியமனங்களுக்கு இடஒதுக்கீடுபற்றி முடிவு மத்திய, மாநில அரசுகள்தான் எடுக்க வேண்டும்
பந்து அவர்களது கோர்ட்டில்தான் உள்ளது
டில்லி எய்ம்ஸ் மருத்துவப் பேராசிரியர்கள் வழக்கின் மறுசீராய்வு மனுவின்மீது 5 நீதிபதிகள் அமர்வு அறிவிப்பு
புதுடில்லி, ஜன.17-சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவக் கல் லூரி பதவி நியமனங்க ளுக்கு இடஒதுக்கீடு வழங் குவது குறித்து மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. டில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் உள் ளிட்ட சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத் துவமனைகளில் (எய்ம்ஸ்) உள்ள பதவி நியமனங்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்று, உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்தஜூலை மாதம் தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும்படி கோரி, மத்திய அரசு சார்பில் தாக்கல் செய் யப்பட்டு இருந்த மனு, எச்.எல்.தத்து தலைமை யிலான 5 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் எல்.நாகேஸ்வரராவ் தனது வாதத்தை தொடங்க முயன்றார்.
உடனே குறுக்கிட்ட நீதிபதிகள், கடந்த 1992ஆம் ஆண்டின் மண்டல் வழக்கு என்று அழைக்கப்படும் இந் திரா சஹானி வழக்கில் தீர்ப்பு வழங்கிய 9 நீதிபதிகளைக்கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, உயர் சிறப்பு நிலை பதவிகளுக்கு இட ஒதுக்கீடு பொருந்தாது. இதில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று தீர்ப்பு கூறி இருந்தது. எனவே இந்த தீர்ப்புக்கு எதிரான நிலை எதையும் மேற் கொள்ள முடியாது என்று சுட்டிக் காட்டி னார்கள். நீதிபதிகள் மேலும் தொடர்ந்து கூறும்போது, இதைத் தான் எங்களால் சொல்ல முடியும். அதே நேரத் தில், இதுபோன்ற உயர் சிறப்பு நிலைகளில் இட ஒதுக்கீடு வழங்குவதா, வேண்டாமா என்பது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், அவர்கள் விளக்கம் அளித்தனர். நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான இந்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் எஸ்.எஸ். நிஜ்ஜார், ரஞ்சன் கோகாய், எம்.ஒய்.இக் பால், விக்ரம்ஜித்சென் ஆகியோரும் இடம் பெற்று இருந்தனர். அப்படி மத்திய அரசு விரும்பினால், அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்து இந்த பதவி களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம். அதன்பின் இந்த விவகாரம் நீதிமன் றத்திற்கு வந்தால் அப் போது பார்த்துக் கொள் ளலாம் என்றும், நீதிபதி கள் அப்போது கருத்துத் தெரிவித்தனர்.
(13.1.2014 சமூகநீதிப் பொதுக் கூட்டத்திலும் 16.1.2014 தமிழர் தலைவர் அறிக்கையிலும் சுட்டிக் காட்டியபடி, மாநில, மத்திய அரசுகள் முடிவு செய்யலாம் என்று குறிப்பிட்டதை நேற்று உச்சநீதிமன்ற நீதிபதி களும் கூறியிருக்கின்றனர்).
Read more: http://viduthalai.in/e-paper/73672.html#ixzz2qhrQUTNa
பாசிச மனப்போக்கு
இராமாயணக் கதையில், சீதாப்பிராட்டியைத் தேடி வந்த ராமதூதன் அனுமான் இலங்கையை எரித்தது பயங்கரவாதச் செயலா அல்லது வெறும் தற்காப்புச் செயலா என்ற கேள்வியை டில்லியைச் சேர்ந்த ஹன்ஸ் என்ற இந்தி பத்திரிகை தனது தலையங்கத்தில் எழுப்பியிருக்கிறது. இலங்கையை எரித்த அனுமானை ஒரு பயங்கரவாதியாகத்தான் கருத வேண்டும் என்று அந்தப் பத்திரிகை முடிவு கட்டுகிறது.
புராண, இதிகாசங்களை விஞ்ஞான முறையில் அணுகினால், இந்த முடிவு சரிதான் என்று அந்தப்பத்திரிகையின் ஆசிரியர் ராஜேந்திர யாதவ் எழுதியிருப்பது, இந்து தெய்வங்களைத் தாழ்த்துவதாக விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள் ஆகியவைகளிடமிருந்து கடும் எரிச்சல் மிகுந்த கண்டனத்தைக் கிளப்பியுள்ளது. பிரபல இந்தி எழுத்தாளர் பிரேம் சந்த் அவர்களால் 1930இல் துவங்கப்பட்ட இந்த ஹன்ஸ் பத்திரிகை முற்போக்கு இந்தி எழுத்தாளர்களின் இலக்கிய படைப்புகளுக்கும், பகுத்தறிவு ஆராய்ச்சிகளுக்கும் புகலிடம் தருகிறது.
எழுந்துள்ள கூக்குரலுக்குப் பதில் சொல்லும் வகையில், மதத் தலைவர்களின் முதன்மையை எதிர்த்து ஏதாவது சொன்னால், அதையே ஒரு வன்முறை என்று கூறி அடக்க வந்து விடுகிறார்கள் என்று ஆசிரியர் யாதவ் சொல்கிறார்
(டில்லி இந்தியன் எக்ஸ்பிரஸ் 17.1.2002)
Read more: http://viduthalai.in/page-7/73686.html#ixzz2qht2sJCv
வீரத் தமிழன்
என்னருமைத் துணைவி! நானோ கொடிய நோயினால் வருந்துகிறேன். இனிப் பிழைத் திருப்பேன் என்று சொல்வதற்கில்லை. ஆகவே என் மனதிலுள்ளதைச் சொல்லுகிறேன் கேள்.
நான் இறந்த பின், நீ என்னையே எண்ணிக் காலங்கழிக்காதே. என்னை மறந்துவிட்டு சந்தோஷமாயிரு. உன் மனதுக்குரியவனை மணந்து வாழ். மதவெறி கொண்ட நாய்கள் குரைக்கும். வைதீகப் பேய் பிடித்த கழுதைகள் கத்தும்.
சுயநலங் கொண்ட விஷப் பாம்புகள் சீறும். நீ இவைகளை கண்டு பயப்படாதே.
வீரத்துடன் வெளியே போ. மலர் மாலை சூடி மகிழ்வுடனே வந்து வாழ் என்று கூறி மகிழ்ச்சி யுடன் உயிரை விட்டான் வீரத் தமிழன். இதை அழகுற எடுத்துக் கூறுகிறார், நமது உயிர்க் கவி பாரதிதாசன் கீழ்வரும் உயிரோவியத்தில்.
பெண்ணே! கண்ணே!! கண்மணியே!!!
கடும்பிணியாளன் நான் இறந்தபின், மாதே!
கைம் பெண்ணாய் வருந்தாதே
பழி என்றன் மீதே.
அடஞ் செய்யும் வைதீகம்
பொருள்படுத் தாதே!
ஆசைக் குரியவனை நாடு -
மகிழ்வோடு - தார்சூடு - நலம் தேடு.
- (குடிஅரசு 27.11.1943)
Read more: http://viduthalai.in/page-7/73686.html#ixzz2qhtBQM1c
17 ஆம் தேதி பிறந்த பெரியாருக்கு, 17 பவுன் நிதி வழங்குவேன்! பொறியாளர் நெடுமாறன் பெருமிதம்!
சென்னை, ஜன.17- பெரியார் பெருந்தொண்டர் வந்தவாசி வேல்.சோமசுந்தரம் அவர்களின் மகன் பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன் அவர்கள், பொங்கல் விழாவிற்கு தமிழர் தலை வரை தனது இல்லத்திற்கு வருகை தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டதற் கிணங்க, 15.1.2014 அன்று மாலை அவருடைய இல்லத்திற்கு தமிழர் தலைவர் அவர்கள் சென்றார். அவர் இல்ல நுழைவு வாயிலில் தந்தை பெரியாரின் 135 அடி உயர சிலையின் தோற்றம் பிளக்ஸ் பேனரில் வைக்கப்பட்டி ருந்தது. தமிழர் தலைவர் அவர்கள் அதனைப் பார்த்து மகிழ்ந்து, வெகுவாகப் பாராட்டினார். இல்லத்திற்குச் சென்ற தமிழர் தலைவர் அவர்களை வேல்.சோ.நெடுமாறனின் இணையர் டாக்டர் விஜயலட்சுமி, மகன் டாக்டர் பரத்குரு, மருமகள் டாக்டர் பாரதி மற்றும் உற்றார், உறவினர்கள் அகமகிழ்வோடு வரவேற்றனர்.
அங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன் அவர்கள் மிகுந்த உணர்வுவயப்பட்டு கூறியதாவது:
தந்தை பெரியாருக்கு 135 அடி சிலை அமைப் பதற்குத் தமிழர் தலைவர் அவர்கள் அறிவித்தவுடன், இந்தத் திட்டத் திற்கு நான் அதிக மாக நிதி வழங்க வேண்டும் என எண்ணிக்கொண்டே இருந்தேன். சுமார் 40 கோடி செலவில் உருவாகும் இத்திட் டம் மிகுந்த சிறப்பான ஒன்றாகும்.
இத்திட்டத்திற்கு முதற்கட்டமாக கழகத் தோழர்கள் இரண்டரை கோடி ரூபாயினை திரட்டித் தந்திருக்கிறார்கள். அந்த வகையில், எனது நண்பர்கள் இந்தத் திட்டத்திற்கு ஒத்து ழைக்கவேண்டும் என நினைத்து, இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்தேன்.
நான் எவ்வளவு நிதி கொடுக்கலாம் என யோசித்துப் பார்த்து, 135 கிராம் கொடுக்கலாம் என முடிவெடுத்து, ஒரு கிராம் சேர்த்து, 136 கிராம் கொடுத்தால், 17 பவுன் ஆகும்.
17 ஆம் தேதி பிறந்த தந்தை பெரியாருக்கு, 17 பவுன் (136 கிராம்) வழங்குவதாக நினைத்து, யாரும் வழங்காத அளவிற்குப் பெரிய அளவில் நான் வழங்கவேண்டும் என நினைத்தேன். அதன் முயற்சியாக, முதல் தவணையாக 5 பவுனுக்கான தொகை ரூ.1,25,000-த்தினை வழங்குகிறேன்.
தந்தை பெரியார் சிலை மூன்று ஆண்டு களுக்குள் அமைந்துவிடும் என தமிழர் தலைவர் கூறியதால், மூன்று மாதத்திற்கு ஒருமுறை ரூ.25 ஆயிரம் என வழங்கி, மூன்று ஆண்டுகளுக்குள் நான் 17 பவுனுக்கான தொகையை வழங்கி விடுவேன் என தெரிவித்தார்.
இதனை செவிமடுத்த தமிழர் தலைவர் அவர்கள், பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன் அவர்களின் தொண்டுள்ளத்தைப் பாராட்டியும், கடந்த காலங்களில் வேல்.சோமசுந்தரம் அவர் களின் இல்லத்தில் சென்று தங்கி கழகப் பிரச் சாரத்தில் ஈடுபட்ட பழைய நினைவுகளை எடுத்துக் கூறி, இது எனது குடும்பம் என உரிமையோடும், மகிழ்வோடும் உரையாற்றினார்.
Read more: http://viduthalai.in/page-8/73705.html#ixzz2qhu6RaIP
86 வயது இளைஞர் புலிவலம் அகமது
இசுலாம் மார்க்கத்து குடும்பங்களில் பல பேர் திராவிடர் கழகத்தில் பணியாற்றிய வரலாறு உண்டு. இன்றும் உள்ளனர். அவர்களில் 81-ஆம் அகவையில் தமிழர் தலைவரின் மனதில் இடம் பெற்ற பழம்பெரும் கழகத் தொண்டர் திருவாரூர் - புலிவலம் வாழ் மானமிகு பி.எஸ்.அகமது; 86 வயதான சுறுசுறுப்பான இளைஞர்
இவர் பிறந்து வளர்ந்த ஊர் சன்னாநல்லூர் ஆகும். 1943-ஆம் ஆண்டு முதல் கழகத்தில் ஈடுபாடு கொண்டவர். இந்த ஊரில் ஒரு மளிகைக் கடையில் (அவரும் ஒரு முஸ்லீம்) நான் வேலை பார்த்தேன். அந்த கடைக்காரர் குடியரசு பத்திரிகை வாங்கிப் படிப்பார். நானும் மற்றவர்களும் ஓய்வு நேரங்களில் அதைப் படிக்கப் பழகினோம்.
நீடாமங்கலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாடுதான் நான் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி. பிறகு தந்தை பெரியார் பூந்தோட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்தபோது திருவாரூர் தோழர் யாகூப் அவர்கள் அய்யாவிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். அக்காலந்தொட்டு இன்றுவரை நான் திராவிடர் கழகத்தில் உறுப்பினராக இருந்து வருகிறேன் என்று கூறிய இவரிடம் உங்கள் வாழ்வில் நெகிழ்ச்சி அடைந்த சம்பவம் என்று எதைக் கூறுவீர்கள்? என்று கேட்ட தற்கு சில ஆண்டுகளுக்கு முன் பூந்தோட்டத்தில் ஒரு திரையுலக இயக்குநர், கழக இளைஞர் ஒருவரின் திருமணத்தை தமிழர் தலைவர் அய்யா வீரமணி அவர்கள் நடத்தி வைத்தபோது அவரது பழைய நினைவுகளை வெளிப்படுத்தி பேசும்போது இந்த ஊரில் கழகக் கூட்டத்தில் பேச வந்த என்னை கூட்டம் முடிந்ததும் அகமது என்ற கழகத்தொண்டர் மிதிவண்டியில் அழைத்துச் சென்று பேரளத்தில் புகைவண்டியில் அனுப்பி வைத்ததை நான் மறக்க மாட்டேன் என்று பெருமைப்பட பேசியதாக திருவாரூர் கழகத் தோழர்கள் வந்து சொன்னபோது, நெகிழ்ந்து மகிழ்ந்து போனேன் என்றார்.
திருவாரூர் புலிவலத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் குடியேறிய நான், மாவட்ட தலைவர் காலஞ் சென்ற சுயமரியாதைச் சுடரொளி எஸ்.எஸ்.மணியம் அவர்கள் இல்லத்தில் காவலராகப் பணியாற்றினேன். அவருடன் கழகப்பணிகளில் ஈடுபட்டேன் என்று கூறும் இவர் என் பயணம் கழகப்பணிகளில் தொடர்வது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று உணர்ச்சி ததும்பக் கூறினார்.
மேலும் திருவாரூரில் பெரியார் புத்தக விற்பனை நிலையத்தில் விற்பனையாளராக இருக்கும் இவர், இன்றும் மிதிவண்டியில் தான் இளைஞராக பயணிக் கிறார். இவரை ஊக்குவித்தல் நம் கடமையல்லவா!
- பேட்டி கண்டவர்: க.முனியாண்டி, திருவாரூர் மாவட்ட ப.க தலைவர்
Read more: http://viduthalai.in/page4/73729.html#ixzz2qtbFMUe8
இப்படியும் மூடநம்பிக்கைகள்
பசுமாட்டின் 5வது காலைத்தொட்டு கும்பிட்டால் ஆண் குழந்தை உறுதியாம்!
இந்தியாவில் உள்ள சட்டீஸ்கார் என்ற மாநிலத்தின் தலைநகர் ராஜ்பூரில் மூன்று வருடங்களுக்கு முன் பிறந்த ஒரு பசுமாட்டிற்கு ஐந்து கால்கள் உள்ளது. தலைப் பகுதியின் அருகில் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த ஐந்தாவது காலை கருவுற்ற பெண்கள் தொட்டுக்கும்பிட்டால் ஆண் குழந்தை பிறக்கும் என நம்பப்பட்டு வருகிறது
ராஜ்பூர் நகரில் ராஜ் பிரதாப் என்ற இளைஞர் வளர்த்து வரும் பசுமாடு ஒன்றிற்கு ஐந்து கால்கள் உள்ளன. ஐந்து மில்லியன் கால் நடைகளுக்கு ஒன்று இதுபோன்று ஐந்து கால்களுடன் பிறக்கும் என்று கால்நடை மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் இந்த 5ஆவது காலை வைத்து ஏதாவது வித்தியாசமாக செய்யலாமா? என்று இந்த இளைஞர் யோசித்து வந்த வேளையில், ஒரு கருவுற்ற பெண் பசுமாட்டின் ஐந்தாவது காலைத் தொட்டுக்கும்பிட அனுமதி கேட்டுள்ளார். பின்னர் தொட்டுக் கும்பிட்டவுடன் வீட்டுக்கு சென்ற அவருக்கு பிரசவ வலி ஏற்பட் டுள்ளது. அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. பசுமாட்டின் 5ஆவது காலைத் தொட்டுக்கும்பிட்டதால்தான் தனக்கு ஆண் குழந்தை பிறந்தது என்று அந்தப் பெண் நம்பியதாகக் கூறப்படுகிறது.
இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியதால் பக்கத்து ஊர்களில் இருந்தும் கருவுற்ற பெண்கள் தங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கவேண்டும் என எண்ணி, அந்த வித்தியாசமான பசுமாட்டை தொட்டுக்கும்பிட வருகை தருகின்றனர். இதற்காக ராஜ் பிரதாப் ஒவ்வொரு பெண்ணிடமும் ரூ.500 வரை பணம் வாங்குகிறார்.
Read more: http://viduthalai.in/page4/73730.html#ixzz2qtbmyCQE
ஒரு கேள்வி? பதில்!
கேள்வி: நீங்கள் 1.10.2013 அன்று கலைஞர் தொலைக் காட்சியில் பேசினீர்களாமே?
பதில்: ஆமாம் சென்னையிலுள்ள எல்லா தொ.கா. களிலும் பேசியிருக்கிறேனே! அவர்களாக அழைத்துப் போனதுதான்!
கலைஞர் தொ.கா.யிலிருந்து உங்களை நேர்காண வேண்டும் வருகிறீர்களா? என்றார்கள், சென்றேன். என் பெயர்த்தியைப் போன்ற ஒரு பெண்மணி கேட்ட வினாக்களுக்கெல்லாம் உதிரிப்பூக்களால் மாலை தொடுப்பது போல தொடுத்தேன்.
அய்யாவைப்பற்றி, அண்ணாவைப்பற்றி, கலை ஞரைப்பற்றி, தமிழைப்பற்றி, தமிழ் அறிஞர்களைப்பற்றி, திரைப்படங்களில், தொலைக்காட்சிகளில் வரும் பண்பாட்டுச் சீரழிவுகளைப் பற்றியும், அவற்றைப் போக்கும் வழிமுறைகளைப் பற்றியும் 35 மணித்துளிகளில் கடுகைத்துளைத்து ஏழு கடல்களைப் புகுத்தியதுபோல் சொல்லி முடித்துவிட்டு விடை பெறும்போது, நேர் காணல் செய்த பெண்மணியிடம், அம்மா, உங்களைப் போல் பல பெண்மணிகள் எல்லாத்துறையிலும் முன்னேறி இருப்பதற்குக் காரணம், தந்தை பெரியார் தான்! அவருடைய நூல்களில் பெண் ஏன் அடிமை யானாள்? இனிவரும் உலகம் என்னும் சிறு சிறு நூல் களையாவது படியுங்கள். அவை மிகக்குறைந்த விலையில் சென்னை - பெரியார் திடலில் கிடைக்கும் என்று என் முத்திரையைப் பதித்துவிட்டு விடைபெற்றேன்!
நூல்: முகம்
தொகுப்பு: சி.சுவாமிநாதன், ஊற்றங்கரை.
Read more: http://viduthalai.in/page4/73732.html#ixzz2qtbvLZiy
மன்னர் காலத்தில் பயன்படுத்திய சுவர் விளக்கு
புதுக்கடை அருகே ஆர்.சி.தெருவை சேர்ந்தவர் சூசைபாக்கியம் (வயது 65). இவரது உறவினர் ஒருவர் புதிதாக வீடு கட்ட நிலத்தில் இருந்து மண் தோண்டப்பட்டது. அப்போது, கல்லினால் செய்யப்பட்ட சுவர் விளக்கு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தியதாக தெரிகிறது.
இந்த விளக்கு சிற்பியின் கைவண்ணத்தில், கருங்கல்லில் குடைந்து எடுக்கப்பட்டு இருந்தது. மின்சார விளக்குகள் இல்லாத காலக்கட்டத்தில் வசதியானவர்கள் வீடுகளிலும், கோயில்களிலும் இந்த விளக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த விளக்கில் எண்ணெய் ஊற்றி, துணியை திரியாக பயன்படுத்தி பழைமை வாய்ந்ததாக இருக்கலாம் எனத் தெரிகிறது. - தினத்தந்தி (21-10-2013)
Read more: http://viduthalai.in/page8/73738.html#ixzz2qtdtwxoS
பிழிவுகள்... பிழிவுகள்...
ஒத்தி வைப்பு
சென்னையில் நாளை (20.1.2014) நடைபெற விருந்த தமிழ்நாடு - இலங்கை மீனவர் பேச்சு வார்த்தை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. (ஒத்தி வைக்கப்பட்டாலும் தேவை - நிரந்தரத் தேர்வு!). வழக்கமானது தான்
சென்னை - நந்தம்பாக்கம் தொழிலதிபர் வீட்டில் 100 சவரன் நகை, 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள், மூன்றரை லட்சம் ரூபாய் கொள்ளை யடிக்கப்பட்டது. (வானிலை அறிக்கைபோல இது தமிழ்நாட்டின் அன்றாட செய்தி தானே!)
கோயிலுக்கு
திண்டிவனம் - தீர்த்தக்குளம் பூந்தோட்டத்தைச் சேர்ந்த செல்வராசு என்பவரின் மனைவி கிருட்டின வேணி கட்டி வைத்திருந்த கோயிலிலேயே அந்தப் பெண் படுகொலை செய்யப்பட்டார்.
(காத்தல் தொழில் கடவுள் எங்கே போனதாம்?)
நீதிபதி கேட்கிறார்
சென்னையில் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு தி இந்து (தமிழ்) ஏட்டில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். நீலாங்கரையில் உள்ள சக்தி மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் மீன் சந்தை அமைப்பதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித் துள்ளது.
இதுகுறித்து முன்னாள் நீதிபதி என்ன எழுது கிறார்? சைவ மதத்தில் கண்ணப்ப நாயனாருக்கும் (பன்றிக் கறி படைத்தவர்) சிறுத் தொண்டர் நாயனா ருக்கும் (பிள்ளைக் கறி படைத்தவர்) சிறப்பான இடத்தைக் கொடுத்து விட்டு, கடவுளை சைவமாக்க முயற்சிப்பது எவ்விதத்தில் சரி என்ற வினாவை தம் கட்டுரையில் எழுப்பியுள்ளார் முன்னாள் நீதிபதி சந்துரு. (கடவுளேகூட மீன் அவதாரம் (மச்ச அவதாரம்) எடுத்தவர்தானே?)
பதற்றம்
மோடி பிரதமரானால் இந்திய அமெரிக்க உறவில் பதற்றம் அதிகரிக்கும் என்று டைம்ஸ் பத்திரிகை கருத்துத் தெரிவித்துள்ளது. (இந்தியாவுக்குள்ளேயே நாளும் பதற்றம் வெடித்துக் கொண்டே இருக்குமே - முதலில் அதைப்பற்றித் தானே கவலைப்பட வேண்டும்)
ஒத்தி வைப்பு
பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளின் முயற்சியை இந்தியா முறியடித்தது.
(இது என்ன ஓடி விளையாடு பாப்பா என்ற கதையாக அல்லவா அடிக்கடி நிகழ்கிறது!)
Read more: http://viduthalai.in/e-paper/73768.html#ixzz2qtgxmLqf
உச்சநீதிமன்றத்தின் தேவையற்ற வாசகங்களைப் புறந்தள்ளி இடஒதுக்கீட்டை அரசுகள் செயல்படுத்த முன்வர வேண்டும்
சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கமா?
தமிழர் தலைவரின் சமூகநீதிப் பாதுகாப்பு அறிக்கை நீதிமன்றங்கள் தம் கருத்தாகச் சொல்லும் சொற் களைப் பற்றிக் கவலைப்படாமல் சமூகநீதியைச் செயல்படுத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-
ஏற்கெனவே சுப்ரீம்கோர்ட்டால் கொடுக்கப்பட்ட டில்லி AIIMS FACULTY -பேராசிரியர்கள் போட்ட வழக்கில் 18.7.2013 தீர்ப்பில் - மண்டல்கமிஷன் வழக்காகிய இந்திரா சஹானி வழக்கு என்ற வழக்கில் வெறும் கருத்துரையாக,OBSERVATION- (OBITER-DICTA) சொல்லப்பட்ட ஒன்றை நீதிமன்றம் சுட்டிக் காட்டியது. உயர் சிறப்பு மருத்துவத் துறைப் படிப்பு (Super Speciality) மருத்துவத்துறையில் இட ஒதுக்கீடு கொடுப்பது விரும்பத்தக்கதல்ல என்றும் கருதலாம் என்பதாகக் குறிப்பிட்ட அந்தப் பெரும்பான்மை தீர்ப்பில் பாரா 861இல்
“..... Be that as it may, we are of the opinion that in certain services and in respect of certain posts, application of the rule of reservation may not be advisable for the reason indicated hereinbefore
என்று குறிப்பிட்டுள்ளது.
இதன் தமிழாக்கம்: முக்கியமான உயர்நிலை பதவிகளில் சேருவதற்கான விதிமுறைகளை பின்பற்றி பணிக்கான நபர்களைத் தேர்ந்தெடுக்கும் போது இடஒதுக்கீட்டுக்கான சட்டதிட்டங்கள் கடைப்பிடிக்கப் படுவது உகந்ததாக இருக்காது என்று கூறப்பட்டது. இது தீர்ப்புரை அல்ல; வெறும் கருத்துரை - பொதுவாகச் சொல்லப்பட்ட கருத்து.
இதன்படி இது சட்டக்கட்டாயத்தன்மை (MANDATORY LAW) அல்ல. நீதிபதியின் ஆலோசனை போன்ற ஒரு கருத்து.
அரசமைப்புச் சட்டம் 16 ஆவது பிரிவு கூறுவது என்ன?
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தருவது பற்றிய 16 ஆவது பிரிவில், போதிய அளவு பிற்படுத் தப்பட்டவருக்குத் தருவது என்பதும், பிற்படுத்தப்பட்டவரை அடையாளம் கண்டறிந்து பட்டியலில் சேர்ப்பது என்பது பற்றியுமான உரிமையை அரசுக்குத்தான் அளித்துள்ளதே தவிர, நீதிமன்றங்களுக்கு அல்ல. In the opinion of the State என்றுதான் குறிப்பிடுகிறது.
நீதிமன்றங்கள் கருத்துக்கள் கூட கூற இயலாது என்பது இதன் மூலம் திட்டவட்டம்!
உச்சநீதிமன்றத்தின் தேவையற்ற வாசகங்களைப் புறந்தள்ளி இடஒதுக்கீட்டை அரசுகள் செயல்படுத்த முன்வர வேண்டும்
சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கமா?
தமிழர் தலைவரின் சமூகநீதிப் பாதுகாப்பு அறிக்கை நீதிமன்றங்கள் தம் கருத்தாகச் சொல்லும் சொற் களைப் பற்றிக் கவலைப்படாமல் சமூகநீதியைச் செயல்படுத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-
ஏற்கெனவே சுப்ரீம்கோர்ட்டால் கொடுக்கப்பட்ட டில்லி AIIMS FACULTY -பேராசிரியர்கள் போட்ட வழக்கில் 18.7.2013 தீர்ப்பில் - மண்டல்கமிஷன் வழக்காகிய இந்திரா சஹானி வழக்கு என்ற வழக்கில் வெறும் கருத்துரையாக,OBSERVATION- (OBITER-DICTA) சொல்லப்பட்ட ஒன்றை நீதிமன்றம் சுட்டிக் காட்டியது. உயர் சிறப்பு மருத்துவத் துறைப் படிப்பு (Super Speciality) மருத்துவத்துறையில் இட ஒதுக்கீடு கொடுப்பது விரும்பத்தக்கதல்ல என்றும் கருதலாம் என்பதாகக் குறிப்பிட்ட அந்தப் பெரும்பான்மை தீர்ப்பில் பாரா 861இல்
“..... Be that as it may, we are of the opinion that in certain services and in respect of certain posts, application of the rule of reservation may not be advisable for the reason indicated hereinbefore
என்று குறிப்பிட்டுள்ளது.
இதன் தமிழாக்கம்: முக்கியமான உயர்நிலை பதவிகளில் சேருவதற்கான விதிமுறைகளை பின்பற்றி பணிக்கான நபர்களைத் தேர்ந்தெடுக்கும் போது இடஒதுக்கீட்டுக்கான சட்டதிட்டங்கள் கடைப்பிடிக்கப் படுவது உகந்ததாக இருக்காது என்று கூறப்பட்டது. இது தீர்ப்புரை அல்ல; வெறும் கருத்துரை - பொதுவாகச் சொல்லப்பட்ட கருத்து.
இதன்படி இது சட்டக்கட்டாயத்தன்மை (MANDATORY LAW) அல்ல. நீதிபதியின் ஆலோசனை போன்ற ஒரு கருத்து.
அரசமைப்புச் சட்டம் 16 ஆவது பிரிவு கூறுவது என்ன?
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தருவது பற்றிய 16 ஆவது பிரிவில், போதிய அளவு பிற்படுத் தப்பட்டவருக்குத் தருவது என்பதும், பிற்படுத்தப்பட்டவரை அடையாளம் கண்டறிந்து பட்டியலில் சேர்ப்பது என்பது பற்றியுமான உரிமையை அரசுக்குத்தான் அளித்துள்ளதே தவிர, நீதிமன்றங்களுக்கு அல்ல. In the opinion of the State என்றுதான் குறிப்பிடுகிறது.
நீதிமன்றங்கள் கருத்துக்கள் கூட கூற இயலாது என்பது இதன் மூலம் திட்டவட்டம்!
இந்திரா சஹானி (மண்டல்) வழக்கில் மேலே குறிப்பிட்ட பத்தியிலேயே இக்கருத்து முடிக்கப்பட்டு, வலியுறுத்தப்பட்டுள்ளது. “It is the Government of India to consider and specify the service and posts to which the rule of reservation shall not apply (but on that account the implementation in the impugned office Memorandum dated 13th August 1990 can not be stayed or with held)”
இதன் தமிழாக்கம்: இட ஒதுக்கீட்டிற்குப் பொருந்தாத சேவைகள் மற்றும் பணியிடங்கள் எவை என்பதை இந்திய அரசுதான் குறிப்பிட வேண்டும். (ஆனால் இந்த காரணங்களுக்காகவே குறிப்பிடப்பட்ட ஆகஸ்டு 13, 1990 நாளிட்ட அலுவலக குறிப்பினை நடைமுறைக்கு தடை விதிக்கவோ, நிறுத்தி வைக்கவோ முடியாது).
இதன்படி, - அண்மையில் அய்ந்து நீதிபதிகள் மறு சீராய்வில் குறிப்பிட்டபடி, பந்து மத்திய அரசின் கோர்ட்டுக்குள்ளே தான் இருக்கிறது. அதாவது டில்லி மத்திய அரசுக்குத்தான் எவை எவை தெளிவாக இடஒதுக்கீட்டில் சேர்க்கப்படலாம் என்று கூறவேண்டிய பொறுப்பு என்று கூறிவிட்டு கடைசியில் தேவையற்ற ஒரு கருத்துரையைப் போட்டு ஒரு புதுக் குழப்பத்தை தீர்ப்பின் மூலம் எடுத்துக்காட்ட முயன்றுள்ளார்கள்.
தேவையற்ற கருத்து
அரசியல் சட்டத்திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று கூறிய கருத்தே அது!
மத்திய அரசு குறிப்பிட்டுச் சொன்னாலே போதுமானது. அரசியல் சட்டத் திருத்தம் என்பது தேவையற்ற ஒன்று- இந்திரா சஹானி வழக்கின் பாரா 861 வாக்கியங்கள் அதை தெளிவாக்குகின்றன.
டில்லி எய்ம்ஸ் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் 18.7.2013 அன்று அளித்த தீர்ப்புரைக்குப்பிறகு, மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத், நாடாளுமன்றத்தில் தெளிவாகவே குறிப்பிட்டார்: We are ignoring the Judgement என்று கூறினார். அதனைத் தொடர்ந்து சீராய்வு மனுவை நீதிமன்றத்தில் தொடருவோம் - நீங்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனங்களைச் செய்யலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம், எய்ம்ஸ் நிறுவனத்துக்கு தாக்கீது பிறப்பித்தது. அதன் அடிப் படையில் ரிஷிகேஷ் எய்ம்ஸ் நிறுவனம் ஒப்பந்த அடிப் படையில் பணி நியமனம் செய்யும் ஒரு விளம்பரத்தில் இட ஒதுக்கீடு உண்டு என்று தெளிவாகவே தெரிவித்திருந்தது. துவக்கத்திலிருந்தே இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றங்கள் முட்டுக்கட்டை போடுவதும், அதன்பிறகு புதிய சட்டத்திருத்தம், ஆணைகளை, அரசுகளும் சட்டமன்றங்களும், நாடாளுமன்றமும், ஆட்சி மன்றமும் கொண்டு வந்து செயல்படுத்துவதும் நமது சமூகநீதிப் போராட்டத்தில் பல்வேறு மைல்கற்கள் அல்லவா?
வேகத்தடையும்- சமூகநீதிப் பயணமும்
எனவேதான் இந்த வேகத்தடைகளைப் பொருட்படுத் தாது சமூகநீதிப் பயணம் தடையின்றித் தொடரவேண்டும்.
தவறான வியாக்கியானங்களைப் புறந்தள்ளி ஆட்சிகள் செயல்படுவதுதான் நமது ஜனநாயகத்தில் சமூகநீதியை கடைக்கோடி மகனுக்கும், மகளுக்கும் கொண்டு போய்ச் சேர்ப்பதாகும்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை 18.1.2014
Read more: http://viduthalai.in/page1/73739.html#ixzz2qthmCL86
வேடிக்கை சம்பாஷணை - சித்திரபுத்திரன் -
குடித்தனக்காரன் : அய்யா ஆ ஆ! எங்க வீதியில் நெருப்புப் பிடித்து 10, 20 வீடு வேகுதய்யா! எவ்வளவு தண் ணீர் ஊற்றியும் அவிய மாட்டேன் என் கிறது. எல்லோரும் வந்து கொஞ்சம் உதவி செய்யுங்கள். உங்கள் பிள்ளைக் குட்டி களுக்குப் புண்ணியமாகும்.
சித்திரபுத்திரன் : அய்யய்யோ! ஏனப்பா நெருப்புப் பிடித்தது?
குடித்தனக்காரன்: ஒருத்தருக்கும் தெரியவில்லை அய்யா.
சித்திரபுத்திரன்: அப்படியானால் உங்கள் வீதியில் பிராமணாள் இருக் கின்றார்களா?
குடித்தனக்காரன் : ஆம் 4, 5 வீட்டுக் காரர்கள் இருக்கின்றார்கள்.
சித்திரபுத்திரன் : அவர்கள் ஏதாவது உங்கள் வீதிப்பக்கம் வந்தார்களா?
குடித்தனக்காரன் : ஆம் அய்யா, காலையில் ஒரு பிராமணர் ஆத்துக்கு போய் குளித்துவிட்டு மொணா மொணா என்று சொல்லிக்கொண்டு இந்த வீதியில் தான் போனார்.
சித்திரபுத்திரன் : சரி, சரி, உங்கள் வீதி வீடுகள் வெந்துபோனதற்குக் காரணம் தெரிந்து போயிற்று.
குடித்தனக்காரன் : என்ன அய்யா எனக்குத் தெரியவில்லையே!
சித்திரபுத்திரன் : இது தெரியாதா உனக்குப் பிராமணாள் கையில் நெருப்பு இருக்கிறதே; நீ கேட்டதில்லையா?
குடித்தனக்காரன்: நான் கேட்ட தில்லையே!
சித்திரபுத்திரன் : அட பைத்தியமே, பிராமணாள் நாம் கும்பிட்டால் அவர்கள் இடது கையை மோந்து பார்ப்பது போல் மூக்குக்குப் பக்கத்தில் தூக்குகிறார்களே அது ஏன்? வலது கையில் அக்கினி இருப்பதால் அது தூக்கினால் எரிந்து போய் விடுவோம் என்று இடது கையை மோந்து பார்ப்பது.
குடித்தனக்காரன் : அப்படியா! அது எனக்குத் தெரிந்திருந்தால் நான் அவர் களை அந்த வீதியிலேயே நடக்கவிட்டு இருக்க மாட்டேனே. ஏமாந்து போய் விட்டேன்.
சித்திரபுத்திரன் : அது மாத்திரமா, பிராமணாள் வாயிலும், நெருப்பு, வயிற் றிலும் நெருப்பு; இது உனக்குத் தெரியாதா?
குடித்தனக்காரன்: தெரியவில்லையே! சற்றுத் தெரியும்படியாய் சொல்லுங்களேன்.
சித்திரபுத்திரன் : பிராமணாள், எங்கள் வாயில் விழுந்தால் பஸ்பமாய் போய் விடுவாய் என்று சொல்லு கிறார்களே அது என்ன? வாயில் நெருப்பு இருப்ப தால்தானே அவர்கள் அப்படிச் சொல்வது. தவிரவும், பிராமணாள், நம்மைப் பற்றி ஏதாவது நினைத்தால் நாம் பஸ்பமாய் விடுவோம் என்று சொல்லுகின்றார்களே அதன் அர்த்தம் என்ன? நினைத்தால் பஸ்பமாய் விடுவதாய் இருந்தால் வயிற்றில் நெருப்பு இல்லா விட்டால் முடியுமா?
குடித்தனக்காரன் : இதென்ன இந்த இழவு பார்ப்பனர்கள் சங்கதி. கையில் நெருப்பு, வாயில் நெருப்பு, வயிற்றில் நெருப்பு இப்படி வைத்திருந்தால் நாம் எப்படி அவர்களோடு வாழ்வது? இப்படி தினம் ஒரு வீதி வெந்து சாம்பலாவ தானால் இந்த நாலு பிராமணர்களாலேயே இந்த ஊரே சீக்கிரம் சாம்பலாய் விடும் போலிருக் கிறதே.
சித்திரபுத்திரன் : பின்னை தெரியா மலா நம்முடைய பெரியவாள் பிராமணர் களை கிட்ட சேர்க்க வேண்டாம் என்று சொல்லுகின்றார்கள்.
குடித்தனக்காரன்: ஓ! ஹோ!! இதற் காகத்தான் அவர்கள் அப்படி சொல் கின் றார்களா! சரி, இனி புத்தியாய் பிழைத்துக் கொள்கிறேன். இந்த நெருப்பை எப்படி யாவது அணைத்து விடுங்களய்யா?
- குடிஅரசு -கற்பனை உரையாடல்- 18.03.1928
Read more: http://viduthalai.in/page1/73748.html#ixzz2qtjOohab
தர்மத்தின் நிலை
நாட்டுக்கோட்டை நகரத்தாருள் முக்கியஸ்தரான ஸ்ரீமான் சர். அண்ணாமலை செட்டியார் அவர்கள் 20 லட்சம் ரூபாய் கல்விக்காக தர்மம் செய்திருப் பதாக அறிகின்றோம். ஆனால் அத்தருமம் எவ்வளவு தூரம் நாட்டிற்கோ அல்லது பார்ப்பனரல்லாத மக்களுக்கோ உபயோகப்படும் என்பது அறியக் கூடாததாகவே இருக்கின்றது. தவிர பார்ப்பனர் எந்த ஒரு சிறிய தர்மம் செய்தாலும் அது தங்கள் இனத்தாரைத் தவிர வேறு யாருக்கும் உபயோகப் படாதபடியே செய்வது வழக்கம். ஆனால் பார்ப்பனரல்லாதாரில் பெரிதும் குறிப்பாய் நாட்டுக் கோட்டை நகரத்தார் செய்யும் தருமங்கள் ஒவ்வொன்றும் பார்ப்பனரைப் போல் தமது சமூகத்தாராகிய பார்ப்பனரல் லாதாருக்கே உபயோகப்படும்படி செய்யாவிட்டாலும் முழுதும் பார்ப்பனர் களுக்கே உபயோகப்படும்படி செய்வதே வழக்கமாகி வருகிறது. கோவில்கள், வேதபாடசாலைகள், சத்திரங்கள், அறுபதாம் கல்யாணங்கள் முதலியவைகளில் செலவிடும் பணங்கள் போகும் வழிகளை அறிந்தவர்கள் தான் உண்மையை உணரலாம். அதோடு கூடவே, இப்படிப் பார்ப் பனருக்கே பெரிதும் தருமஞ் செய்த பல நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் கோடீஸ் வரர்களாயிருந்து பாப்பராகிவிட்டதையும் அறியலாம். இப்படி இவர்கள் பாப்பர்களாவதில் யாரும் வருத்தப்பட நியாயமிருப்ப தாகவும் தெரியவில்லை. ஏனெனில் இவர்கள் எந்த சமூகத்தாரிடம் இருந்து நல்வழியிலேயோ, கெட்ட வழியிலேயோ இப்படி கோடிக்கணக்கான பணம் சம்பாதித்தார்களோ அந்த சமூகத்தாருக்குத் துரோகம் செய்து பார்ப்பனரல்லாத மக்களை வஞ்சித்துப் பிழைக்கும் ஒரு சமூகத்தாருக்கே அதைச் செலவு செய்வதானால் அப்படியவர்கள் தண்டனை அடைய வேண்டியது கிரமமா அல்லவா! ஆதலால் நமது சர். அண்ணாமலை செட்டியார் செய்திருக்கும் இந்த 20 லட்ச ரூபாய் தர்மமானது மேல்கண்ட குற்றத்திற்கு ஆளாகாமல் இருக்கத்தக்க மாதிரியில் தமது தர்மப் பணங்கள் முழுதும் உபயோகப்படும்படியாக தக்க ஏற்பாடும் செய்ய வேண்டும் என்று சர். அண்ணாமலை செட்டியார் நன்மையையும், பார்ப்பனரல்லாதார் நன்மையையும், நமது நாட்டின் நன்மையையும், உத்தேசித்து வேண்டிக் கொள்ளுகிறோம்.
- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 08.04.1928
Read more: http://viduthalai.in/page1/73748.html#ixzz2qtjXKHfv
துருக்கியில் மாறுதல்
துருக்கி ராஜாங்கத்தில் அரசாங்க விஷயத்தில் மதசம்பந்தமே இருக்கக் கூடாது என்று பலமான மாறுதல்கள் ஏற்படக்கூடும் என்பதாக பத்திரிகைகளில் காணப்படுகின்றன. இதை நாம் மனமார வரவேற்பதுடன் இது உலக விடுதலைக்கு ஒரு பெரிய அறிகுறியென்றே சொல்லுவோம். துருக்கி ராஜாங்கம் மதத்திற் காகவே இருப்பதாக சொல்லப்படுவது. கிலாபத்து இயக்கமும் அதற்காகவே ஏற்பட்டது. அப்படிப்பட்ட அரசாங்கம் மத சம்பந்தத்தை நீக்க - மனித தர்மத்தை ஆதாரமாக வைத்து - அரசாட்சி புரிய ஏற்பட்டால் இன்றைய தினமே நாம் துருக்கிப் பிரஜையாக இருக்க பதிவு செய்து கொள்ளத் தயாராகயிருக்கிறோம்.
- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 08.04.1928
Read more: http://viduthalai.in/page1/73748.html#ixzz2qtjdjYZc
Post a Comment