Search This Blog

14.1.14

தமிழர் புத்தாண்டாம் தை முதல் நாளில் இனவுணர்வு பொங்கட்டும்!



இனவுணர்வு பொங்கட்டும்! 

தமிழர் புத்தாண்டாம் தை முதல் நாளில் தமிழர்கள் பொங்கலினை  மகிழ்ச்சியுடன் கொண்டாடவிருக்கின்றனர் நாளை.

உலகெங்கும் அறுவடைத் திருநாள் (Harvest Festival) நடப்பதுண்டு. தமிழர்களைப் பொறுத்தவரை  தை முதல் நாள்தான் அந்த அறுவடைத் திருநாள்.

உழுவார் உலகத்துக்கு அச்சாணியன்றோ! உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் அல்லவா!

அந்த இயற்கை விழாவைத் தான் தமிழர்கள் தங்களின் பண்பாட்டு விழாவாகக் கொண்டாடி வருகிறார்கள்.

மற்றவையெல்லாம் பண்டிகைகள்; பொங்கல்தான் தமிழர் தம் தனிப் பெரும் விழா. தமிழர்களின் பண்பாட்டுத் தடத்தில், சமஸ்கிருதம் ஊடுருவல் செய்து உருக்குலைத்தது போலவே தமிழர்தம் பண்பாட்டுத் திருவிழாவையும் ஆரியப் பார்ப்பனர்கள் சங்கராந்தியாக்கி, மூடப் புராணச் சேற்றை அப்பியுள்ளார்கள்.

இந்திரன் மழை வருஷிப்பவன் ஆதலால் அவன் செய்த நன்மையின் பொருட்டு, தை மாதம் முதலில் அறுத்த முதற் பயிரை மழைக் கடவுளாகிய இந்திரனுக்கு ஆராதித்து வந்தனர் எனவும், அது கிருஷ்ணமூர்த்தி அவதரித்தபின், அவர் அதை நாராயணனுக்குப் படைக்கக் கட்டளையிட்டார் எனவும் அதனால் இந்திரன் கோபித்து பெருமழை பெய்விக்க, குடிகள் நிலை குலைந்து மாடுகள், கன்றுகளை இழந்து தடுமாற, கண்ணன் கோவர்த்தனம் எடுத்து குடி மக்களைக் காத்தான் எனவும் அதனால் இந்திரன் வெட்கி வேண்ட, சங்கராந்திக்கு முன்னாள் அவன் பெயரால் பண்டிகை அமைந்ததாம். அது போகிப் பண்டிகை எனவும், மறுநாள் சங்கராந்திப் பண்டிகை எனவும், அதற்கு மறுநாள் மழையினால் வருந்திய மாடு கன்றுகளைத் தளை அவிழ்த்து விட்டுக் களித்தமையால் மாட்டுப் பொங்கல் எனவும்.  அதற்கு மறுநாள் மழையால் உண்டாகிய சுகாசுகங்களை ஒருவருக்கொருவர் விசாரித்ததால் காண்பொங்கல்  எனவும் கூறுவர் என்று புராணக் கதை எழுதினர்.

இதில் கொஞ்சமாவது அறிவுக்கு இடம் இருக்கிறதா? கடவுள் என்றால் பொறாமைப்படுவார்களா? ஆரிய கீழ்க் குணங்களை எல்லாம் அவியலாக்கிப் பண்டிகைகளாகத் தமிழர்கள் தலையில் கட்டி விட்டனர்.

தந்தை பெரியார் தோன்றி சுயமரியாதை இயக்கம் கண்டு மக்கள் மத்தியில் பெரும் அளவுக்கு பகுத்தறிவுப் பிரச்சாரப் புயலைக் கிளப்பியதால் மறுமலர்ச்சிச் சிந்தனை மலர்ந்து மணம் வீசத் தொடங்கிற்று.

தமிழ் நாடெங்கும் திராவிடர் திருநாள் பொங்கல் என்று திராவிடர் கழகம் முன்னின்று நடத்தியது.

தீஞ்ச பயல் தீபாவளி காஞ்ச பயல் கார்த்திகை; மகராஜன் பொங்கல் என்று சாதாரண மக்கள்கூட மதிக்கும் மண்ணுக்குரிய விழா தைப் பொங்கலே!

அந்தத் தை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று நமது தமிழப் புலவர் பெரு மக்களும், தந்தை பெரியார் போன்ற தலைவர்களும் முன்மொழிந்து ஏற்றுக் கொள்ளச் செய்த நிலையில், திராவிடர் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த தன்மையில் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் தமிழுணர்வு காரணமாக தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் இயற்றினார் உலகத் தமிழர்கள் வாயார, மனமார, கையார வாழ்த்தினார்கள் - பாராட்டி னார்கள்.

அதற்குப்பின் 2011இல் தமிழ்நாட்டில் வந்த - திராவிடர் இயக்கத்திற்குள் ஊடுருவிய ஆரியத்தினால் அந்த நிலை மாற்றப்பட்டு,  மீண்டும் சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற நிலை ஏற்படுத்தப்பட்டது.
அரசு சட்டம் செய்தாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்னும் உணர்வோடு நாடெங்கும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

இந்த நாளில் தமிழ் கூறும் நல்லுலகம் அனைத்திற்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறோம்.

ஜாதியற்ற சமூகத்தைப் படைப்போம்; தமிழன் என்ற ஓரினக் கோட்பாட்டுக்குத் தடைக் கல்லாக உள்ள ஜாதியின் ஆணி வேரை வீழ்த்தித் தகர்ப்போம்!
தமிழா இனவுணர்வு கொள்!

தமிழா தமிழனாக இரு!! என்ற முழக்கத்தை வீடு தோறும் எழுப்பி இன உணர்வ கொள்ளச் செய்வோம்!

வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!!

                --------------------------------------------"விடுதலை” தலையங்கம் 13-1-2014

49 comments:

தமிழ் ஓவியா said...


சிறகை விரி - செவ்வானமும் சிறிதாகும்!

நாள்தோறும்
தேதியைக்
கிழிக்கும்
நண்பனே, நண்பனே!

புதிய தேதியில்
புத்தாக்க
ஓவியத்தைத்
தீட்டு!

நேற்றைக்கு
விடுமுறை
இன்றைக்குப்
புதுநடை!

உன் வீட்டில்
பஞ்சாங்கம்
இருக்கிறதா?
போ(க்)கியில் எரி!

புராணப்
புத்தகங்கள்
உண்டா?
பொங்கலுக்கு
விறகைத் தேடாதே!

சாமிப் படங்கள்
உண்டா?
சவரம் செய்யத்
தேவைப்படும்!

மிக மிகப்
பழைமையா?
மிக மிகத் தேவை
திருத்தம் - இது
பெரியார் கொடுத்த
அழுத்தம்!


காகித ஊருக்குக் கரையானா
பேருந்து?

காலத்தை வெல்ல
கடவுளா
படை மருந்து?

சனி சரியில்லை
யென்று
வெள்ளியைத்
தேடினால்
நட்டம் அய்ந்து
நாட்கள்!

செவ்வாய்
தோஷமென்றால்
செவ்வாய்க்கிரகம்
செல்பவன்
சிரிப்பானே!

உன் காலை
உன் கையாலா
கட்டுவது?
உள்ளத்தில்கோழை
குடிகொண்டால்
உன் பகைவன்
நீயேதான்!

செவ்வாயன்று
பொங்கல்!
சிரித்தபடி
பொங்கலிடு!

சிறகைவிரி
செவ்வானமும்
சிறிதாகும்!
பொங்கலோ
பொங்கல்!

- கவிஞர் கலி.பூங்குன்றன்

Read more: http://viduthalai.in/page-1/73563.html#ixzz2qJwYTlx5

தமிழ் ஓவியா said...


சிவத்தம்பி பார்வையில் திராவிடர் இயக்கம்


சமுதாய மாற்றத்தைக் கொண்டுவருவதில் கலைப்படைப்புக்கு முக்கியப் பங்குண்டு என்பதனைத் திராவிட இயக்கத்தினர் நன்கு அறிந்திருந்தனர். எனவே மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளைக் கலையாகவும் இலக்கிய மாகவும் படைக்க விரும்பினர்.

தாங்கள் கொண்ட கொள்கைகளைக் குறிப்பாக மேடைப் பேச்சின் வாயிலாகவே மக்களிடம் சேர்ப்பித்தனர். இருப்பினும் இவர்கள் திரைப்படம், கதை, கட்டுரை, நாடகம் போன்றவற்றின் வழியாகவும் கொண்டு சென்றனர். இவர்கள் மேற்கொண்ட சமூகச் சீர்திருத்தத்திற்கு இலக்கிய வடிவங்கள் பெரிதும் துணை நின்றன.

-கா. சிவத்தம்பி
தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், பக்கம் 83-90

பார்ப்பனர் அல்லாதார் இயக்கம்!

தென்னிந்திய வரலாற்றில் இந்த நூற்றாண்டின் மிகச் சிறப்பான நிகழ்ச்சி, திராவிட இயக்கம் என்று கூறப்படுகின்ற பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தின் எழுச்சியும் அதன் வளர்ச்சியுமாகும். இந்திய வரலாற்றில் முதன் முறையாக மதமோ, இனமோ அன்றிச் சாதியே பெருஞ்சக்தியாக அரசியலுள் நுழைந்தது.

திராவிட இயக்கம் இந்திய வரலாற்றில் ஓர் அண்மைக்கால அத்தியாயமெனினும் இவ்வியக்கத்தின் தொடக்கம் குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. இப்போது இதுஒரு வரலாற்று ஆய்வுப் பொருளாகவே ஆகிவிட்டது.

- ஏ.என். சட்டநாதன்,
தமிழ்நாட்டில் திராவிட இயக்கமும் அதன் பாரம்பரியமும், ப.3

Read more: http://viduthalai.in/page2/73564.html#ixzz2qJwvhiuP

தமிழ் ஓவியா said...


புரட்சிக் கவிஞரின் நகைச்சுவை ஒவியங்கள்


ஒரு சந்தேகம்

சரியாய் இரவு 1 மணி, தூக்கம் வரவில்லை. நமது புரோகிதரிடம் போனாலும் ஏதாகிலும் சந்தேகத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று தோன்றிற்று. மூன்றாவது வீதியிலுள்ள எங்கள் புரோகிதர் வீடு போய்க் கதவைத் தட்டினேன். உள்ளே குறட்டைவிடும் சத்தம் கேட்டதைத் தவிர, ஏன் என்று கேட்கவில்லை. பிறகு, ஐயர் அலறி எழுந்து யார்? யார் என்றார். கதவை இரண்டு உதை விட்டதினால்.

புரோகிதர்: யார் இந்நேரத்தில்?

நான்: நான்தான் கிண்டல்காரன்

புரோ: என்ன அப்பா, நல்ல தூக்கம்! நடுநிசி!

நான்: ஒரு முக்கியமான விஷ யத்தை நாடி வந்திருக்கிறேன். உங் களுக்கு மிக்க கீர்த்திக்குரிய விஷயம். ஐயர் விளக்கேற்றிக் கொண்டு வேஷ் டியைத் திருத்தமாய்க் கட்டிக்கொண்டு என் எதிரில் திண்ணையில் வந்து உட்கார்ந்தார்.

ஐயர்: என்ன விஷயம்? இந்நேரத் தில் வந்ததைப் பார்த்தால் நூதனமான செய்தியாகத்தான் இருக்க வேண்டும். (ஒரு சிட்டிகைப் பொடி போட்டுக் கொண்டு, என்னிடமும் நீட்டி) பொடி போடுகிறீரா? என்ன நூதனம்? அதை முன்னதாகச் சொல்?

நான்: எனக்கேற்பட்டிருக்கும் கவலையில் பொடியும் ஒரு கேடா? ஐயர்: (ஆச்சரியமாய்) அப்படி என்ன?

நான்: விஷயம் அதற்கு... அதற்குச் சொந்த அர்த்தம் இன்னதென்று தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. உங்களிடம் அகராதி இருக்கிறதா?

ஐயர்: நீர் சொல்லுமே! எனக்குத் தெரியாவிட்டால் பிறகு அகராதி கொண்டு வருகின்றேன்.

நான்: அப்படியானால் சரி. விஷயம் என்னவென்றால் புரோகிதர் வீட்டுக்கு வீடு சென்று அரிசி, பருப்பும் மரக்கறி கள் மற்றும் சாமான்கள், சொர்ணப் புஷ்பம், இவைகளெல்லாம் வாங்கிக் கொண்டு வருகிறார்கள். இந்த விஷயம் பகலில் தானே நடக்கிறது?

ஐயர்: ஆம்

நான்: பகலில் நடத்தும் இதற்குப் புரோகிதம் என்றல்லவா பெயர்?

ஐயர்: புரோகிதம் என்று தான் பெயர்

நான்: புரோகிதம் என்ற பெயர் இதற்காகிவிட்டது.பகற் கொள்ளைக்கு என்ன பெயரிடுவது? யோசித்து, காலையிலாவது சொல்லுங்கள், நான் போய் வருகின்றேன்.

- புதுவை முரசு விசேஷ அநுபந்தம்

Read more: http://viduthalai.in/page2/73576.html#ixzz2qJxPoUXZ

தமிழ் ஓவியா said...

ரேகை சாஸ்திரம்



ரேகை சாஸ்திரம் பார்த்துக் கொள்ளச் சொல்லி ஐயர் வேலப்பரை வேண்டினார். வேலப்பர், ஐயரை உள்ளே அழைத்துத் தெருக்கதவைச் சாத்திக் கொண்டு கைகழுவிக் கொண்டு வருவதாய் அறைக்குச் சென்று பின் ஐயர் எதிர் உட்கார்ந்திருந்தார்.

ஐயர்: கையை விரித்து நீட்டுங்கள்

வேலப்: நன்றாகப் பார்த்துப் பலன் சொல்லுங்கள் (உள்ளங்கையை வேலப் பர் காட்டினார். அதில் சுயமரியாதைக் காரன் என்று எழுதியிருந்தது)

ஐயர்: (அதைப் பார்த்ததும்) நீர் தெருக்கதவைச் சாத்திய காரணம் என்ன?

வேல்ப்: நான் காரணமில்லாமல் தெருக்கதவைச் சாத்துகிறவன் என்று ரேகை சொல்லுகிறதோ?

கடவுள் ஆவேச சக்தி

தாய்: என் மகளுக்கு வெகு நாளாகியும் பிள்ளை இல்லை.

சாமி: நீ ஒரு பொருளைப் பற்றிக் கேட்கின்றாய். ஒரு நாள் அல்லது ஒரு மாசம் அல்லது ஒரு வருஷத்தில் கிடைக்கும்.

தாய்: (சாமிக்குப் பக்கத்திலிருந்த சிஷ்யையை நோக்கி) இதென்ன! சாமி என்னமோ சொல்லுகிறதே!

சிஷ்யை: உரக்கச் சொல்ல வேண்டும். சாமிக்குக்காது செவிடு.

- புதுவை முரசு விசேஷ அநுபந்தம்

Read more: http://viduthalai.in/page2/73576.html#ixzz2qJxZK0tI

தமிழ் ஓவியா said...

பிள்ளை வளர்க்கும் முறை



ஆஸ்திகர்: பிள்ளைகளைச் சிறுவய திலேயே ஒழுக்க முறையில் வளர்க்க வேண்டும்.

சுய.மரி: அதோ நிர்வாணமாக நிற் கிறானே. அவன் தான் உங்கள் பிள் ளையோ?

ஆஸ்திகர்: ஆம், பார்த்தீர்களா? பக்கத்திலுள்ள பையன் (தலை சீவி நன்கு உடுத்தி இருந்தவனைக் காட்டி) ஒரு நாளாவது நெற்றியில் நாமம் வைத்துக் கொள்வதில்லை.

ஆயிரம் வருடமாக அடித்துக் கொண்டு போகிறான்

மேல் நாட்டில் பிறந்து வளர்ந்த ஓர் இந்தியர்

(தோட்டியைக் காட்டி) இவர் யார்?

உள்ளூரார்: இவர் வீட்டிலுள்ள அசுத்தங்களை எடுத்துப் போகின்றார்.

மே இந்தி: (வண்ணானைக் காட்டி) இவர் யார்?

உள்: இவர் வீட்டிலுள்ள அழுக்குத் துணிகளையெல்லாம் எடுத்துப் போகிறார்.

மே. இந்: திரும்பவும் சலவை செய்து வந்து கொடுப்பாரா?

உள்: ஆமா!

மே. இந்: (புரோகிதரைக் காட்டி) இவர் யார்?

உள்: இவர் வீட்டிலுள்ள அரிசி, பருப்பு முதலியவைகளை மூட்டை கட்டிக் கொண்டு போகிறார்.

மே. இந்: சமையல் செய்து கொண்டு வந்து கொடுப்பாரா?

உள்: திரும்பிக் கொடுப்பதில்லை.

மே. இந்: அடித்துக் கொண்டா போகின்றான்?

உள்: ஆம்

மே. இந்: அடித்துக்கொண்டு போவ தைப் பார்த்துக் கொண்டா இருப் பார்கள்?

உள்: ஓய்! எத்தனை தரம் சொல் லுவது! அடித்துக் கொண்டு தான் போகின்றான்! 100 வருடமாக இப்படி.

சீக்கிரம் வெளுத்துவிடும்

புரோகிதன்: சென்ற தடவையில் திவசத்துக்கு வந்தேன். நீர் கொடுத்த அரிசி கறுப்பாக இருந்தது. இப்போதும் அதற்கு மேல் இருக்கிறது. என் மந்திர மும் உங்களுக்கு கறுப்பாக முடிந்துவிடும்.

வீட்டுக்காரர்: சீக்கிரம் எல்லாமே வெளுத்துவிடும். போய் வாருங்கள்.

- பாரதிதாசன் கதைகள்

Read more: http://viduthalai.in/page2/73576.html#ixzz2qJy5mLsX

தமிழ் ஓவியா said...

படைத்தது யார்?



(ஒரு சிற்பி கோயிலில் வினாயகருக் கெதிரில் நின்று வணங்கிய வண்ணம்) அப்பனே! (ப்ரபூ)! என்னை ரக்ஷிக்க வேண்டும். கை, கால்கள் நோயில்லாமல் இருக்க கிருபை செய்ய வேண்டும். எல் லாவற்றையும் படைத்த கருணாநிதியே!

அண்மையிலிருந்த ஒருவன்: சிற்பியாரே! இந்த வினாயகரை யார் செய்தது? அமைப்பாக இருக்கிறது.

சிற்பி: நான்தான் செய்தேன்!

ஒருவன்: எல்லாவற்றையும் அது படைத்ததாய் சொன்னீர்களே! அதற் காகக் கேட்டேன்.

- பாரதிதாசன் கதைகள்

போலீஸ் காபந்து இல்லாமல் வைகுண்டத்திற்குப் போக வேண்டாம்

ஒருவன் பல கொலைக் குற்றம் செய்து வந்ததின் பயனாய்ச் சர்க்காரால் தூக்கில் இடப்பட்டான். அவன் மகன் வெளியிட்ட கருமாதிப் பத்திரிகையின் படி, அந்தக் கொலைகாரன் வைகுண் டம் போனதாய்த் தெரிகிறது. தக்க போலீஸ் காபந்து இருந்தாலொழிய வைகுண்டத்திற்கு எவரும் போக வேண்டாம்!

- பாரதிதாசன் கதைகள்

Read more: http://viduthalai.in/page2/73576.html#ixzz2qJyEkhgf

தமிழ் ஓவியா said...

வானலோகத்தில் காற்றே இல்லை

வானலோகம் சென்றுவிட்டால், ஊர்வசி, ரம்பை சகிதம் சுகமாய் இருக்க லாம் என்று நாம் சொல்லுகிறோம். அங்கு மூச்சுத் திணறும்படி காற்றே இல்லை என்று ஐரோப்பியர்கள் சொல்லுகிறார்கள்!

குரு பூஜை தான் நடக்கிறது

புத்தர்களை ஒழிக்க கடவுள் சங்கரராக அவதரித்தாராம். சங்கரருக்கு இப்போது, குருபூஜைதான் நடக்கிறது. 40 - 50 கோடி புத்தர்கள் வாழ்கிறார்கள்.

- பாரதிதாசன் கதைகள்

என்ன அர்த்த புஷ்டி

வருந்தி அழைத்தாலும் வாராது வாரா!

பொருந்துவன போமின் என்றாற் போகா

என்ன அர்த்த புஷ்டி! இந்த வரிகளைப் பொன் தகட்டில்

செதுக்குமுன், ஈய எழுத்தால் அச்சடித்து விட்டார்கள்.

- பாரதிதாசன் கதைகள்

மோக்ஷ வழி காட்டுங்கள்

அடிகள்: பணம் கொடுங்கள், இதோ மோக்ஷம்.

குடிகள்:எப்போதும் இது ஓர் கவலையா? வேண்டிய பணம் மொத்த மாய் கொடுக்கிறோம். மோக்ஷத்துக்கு முன்னே போய் வழிகாட்டித் தொலை யுங்கள்.

- சிரிக்கும் சிந்தனைகள்

அவர்கள் நினைப்பது சரி

சர்வ வல்லமையுள்ள கடவுளுக்குப் பரிந்துகொண்டு கோபிக்கும் தொண் டர்கள். அந்தக் கடவுள் பேரால் நடக் கும் அட்டூழியங்களைக் கண்டிப்ப வரைப் பற்றிப் போலீஸின் உதவியை நாடுவதுண்டு. கடவுளைவிடப் போலீஸ் காரன் அதிக வல்லமையுடையவன் என்று அவர்கள் நினைப்பது சரி.

- சிரிக்கும் சிந்தனைகள்

அழிப்பது அரிது தான்

ஒன்றை ஆக்குதல் அரிது, அழித்தல் எளிது என்பது முதுமொழி. இது எல்லா விஷயத்திலும் சரியில்லை. கடவுள் பெயரால் வெகு எளிதாகப் புளுகி வைத் துள்ளார்கள். அவைகளை அழிப்பது மிக அரிதாக முடிகிறது.

- சிரிக்கும் சிந்தனைகள்

ஒற்றுமைக்கு வழியேது

பிற நாட்டினர் இயற்கை முறையில் தமது முகப்பொலிவை உண்டாக்கி, உருவத்திலும் சமூக ஒற்றுமை கொண்டிருக்கின்றனர். நம் நாட்டினர், சரக்குக் கேடாயிருந்தாலும் அதனுடைய டப்பி யை அழகு படுத்துவது போல் வற்றிய முகத்தில் நாமம், விபூதி முதலி யவைகளை எழுதிக் கொண்டு சமூக பேதத்தை வளர்த்துக் கொண்டு போகின்றார்கள்.

- சிரிக்கும் சிந்தனைகள்

Read more: http://viduthalai.in/page2/73576.html#ixzz2qJyNzFhm

தமிழ் ஓவியா said...


தமிழர் திருநாளில் வெளியிடுவோம் புதிய சமத்துவப் புத்தகம்!


- கவிஞர் கண்ணிமை

இலை, தழை

கிழங்கு, காய்கனிகள், நீர்

இவைகளே குமரிக் கண்ட

முதல் மனிதனின் உணவு!

நிலத்தின் கன்னிமை கழிய உழுது

விந்து வியர்வையை விதைத்தான்!

அகர முதல் னகர இறுவாய்

அனைத்தும் பெற்றுக் கொடுத்தது நிலம்!

உணவுப் பழக்கம்

தலைமுறை நமக்குத்

திரட்டிக் கொடுத்த திரு!

பூமிக்குத் தமிழன்

கொடுத்த பரிசு

புட்டும் தோசையும்!

கோடை வெயிலுக்குக்

கொங்கு மண்டலம்

கொடுத்த கொடை

கம்பங் கூழ்!

கிண்டிய கழியும், கீரையும்

ஆன சோறு

உமிழ்நீர்ச்சுரப்பி மகிழ்ந்து

ஊற்றெடுக்கும்!

நோய் நீங்கி ஆயுள் நீளும்!

சிக்கிமுக்கிக் கல்லைக்

கண்டுபிடித்ததே

உணவின் பொற்காலம்!

அறிவுஆழ்ந்த அகன்றபோது

உணவு

அறுசுவையானது!

தமிழ்ச்சித்தன்

உணவே மருந்து என்றான்!

ஈன்றாள்பசி குழந்தைகளின் பசி

மூத்தோர் பசி

இவை போக்கும் மனிதனைக்

கையெடுத்துக் கும்பிடலாம்!

விருந்தோம்புதல் என்ற

சொல்லுக்கு ஈடான வினைச்சொல்

உலகமொழிகளில் இல்லை!

கைகுலுக்குதல் கட்டித் தழுவுதல்

மனிதகுலத்தின்

பண்பாட்டுப் பதிவுகள்!

ஒழுக்கக் கட்டமைத்தபோது

வானுயர் தோற்றம்

வசப்பட்டது!

வழிகிற கண்ணீரைத்

துடைக்கும் விரல்கள் இருந்தால்

அது

வாழக் கிடைத்த கொடை!

கல்லைக் கடவுளாக்க

சிலை வடிக்காதே!

மனிதனை வள்ளலாக்கி

வாழவை!

புகழை நிறுத்திவிட்டுப்

போக வேண்டும் என்றால்

அறம்செய்!

வெடித்துச் சிதறிய

வன்முறைகளால்

மரண வாசலில் கிடக்கிறது

மனிதம்!

அன்பும் பரிவும்

விரவிய சொற்களைக் கொண்டு

தமிழர் திருநாளில்

வெளியிடுவோம்

புதிய சமத்துவப்

புத்தகம்!

Read more: http://viduthalai.in/page3/73565.html#ixzz2qJyfccmY

தமிழ் ஓவியா said...

மலேசியத் தமிழர்களும்; திராவிடர் கழகமும்!


மலாயா! இப்படித்தான் அழைத் தார்கள் இன்றைய மலேசியாவை அன்று மலாயா! அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. உலகின் பல நாடுகள் அவர்களின் கீழ்தானே இருந்தது. இந்தியாவும் அப்படி இருந்த நேரம்.

தமிழர்களைக் கூலி வேலைக் காக மலாயா அழைத்துச் சென்றார்கள் பிரிட்டிஷ்காரர்கள். தங்களின் தோட் டங்களிலும், பல்வேறு உடலுழைப்பு வேலைகளிலும் அவர்களை ஈடுபடுத் தினர். தமிழ்நாட்டில் இருந்து வெளி நாடு சென்ற போதும், தமிழர்களின் மன வேதனை குறையவில்லை என்பது தான் நாம் பார்க்க இருக்கும் சோக வரலாறு.

இன்றைய மலேசியா முன்னேறிய நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. நவீனங்கள் பெருகிவிட்டன. இசுலாம் மதத்தில் ஈடுபாடு கொண்டாலும், பெரிய கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. அனைத்து மத, இன மக்களும் உரிமை யுடன் வாழ்கின்றனர். குறிப்பாகத் தமி ழர்கள் நல்ல வண்ணம் வசிக்கின்றனர். அரசியல் மற்றும் தொழில் துறைகளில் வெற்றிகளைக் குவிக்கின்றனர்.

உலகில் எந்த நாட்டிலும் காணாத வகையில், தமிழர்களின் பேச்சு மொழி தொண் ணூறு விழுக்காடு மேல் தமிழாகத்தான் இருக்கிறது. எனினும் இப்போதைய குழந்தைகள் பலர் தமிழ் எழுதவும், வாசிக்கவும் தடுமாறுகிறார்கள். ஒரு மொழி பேசுவதில் மட்டுமின்றி, எழுத்து நடையும் அவசியம் என் பார்கள். தவறும்போது மொழியும் தவறும் அபாயம் உள்ளது.

இன்றைய மலேசிய வாழ் தமிழர் கள், தமிழ்நாட்டிலே இருந்திருந்தால் இப்படியான வசதியான வாழ்வு கிடைத்திருக்குமா என்பது அய்யமே. அதற்காக நாம் தமிழ்நாட்டைக் குறைத்து மதிப்பிடவில்லை. எனினும் வரலாற்றின் போக்கோடு சென்று ஒப் பிட்டுப் பார்க்கிறோம். சரி ! இப்படியான மலேசியத் தமிழர்கள் அன்று எப்படி இருந்தார்கள்? தமிழ்நாட்டில் இருந்து அனைத்தையும் இழந்து மலேசியா சென்றார்கள்.

தமிழ் ஓவியா said...


ஆனால் ஒன்றே ஒன்று அவர்களின் அனுமதி இல்லாமல் கூடவே சென்றது. ஆம்! அதுதான் அவர் களின் ஜாதி! அந்த ஜாதியும் விமானம் ஏறி சென்றதுதான் பெருங்கொடுமை. உலகில் எல்லோரையும் மனிதராகப் பார்த்தவர்கள், தமிழனை ஜாதியாகப் பார்த்தார்கள்.

தமிழர்களுக்கு வெளிநாடு வந்த மகிழ்ச்சி இல்லை, கூடுதல் வருமானம் என்ற இன்பம் இல்லை. மாறாக ஜாதி நோய் அவர்களைக் கொன்று குதறியது. மலேசியாவிலும் அப்படியா என்று நீங்கள் கேட்டால், ஆம் அப்படித்தான் என்பதே பதில். அந்த வரலாறுகளை இன்று நினைத் தாலும் வலி நிற்காது.

1901 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் - மலாயா அரசு ஒரு விதி (எண் - 18) வைத்தது. அதில் ,"ஒரு தொழிலாளி இந்த நாட்டில் குடி புகுந்த பிறகு, அவர்கள் சொந்த நாட்டில், அன்றாட வாழ்க்கையில் அனுசரிக்கப்பட்ட ஜாதிப் பிரிவினை, குடி புகுந்த நாட்டில் தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கக் கூடாது", என எழுதினார்கள். எப்படி இருக்கும் போனவர்களுக்கு ? வேலை எடுப்பதில் ஜாதி பார்த்தார்கள், குடியி ருப்புகளைத் தனியே வைத்தார்கள், கோவிலுக்குள் விடமாட்டேன் என் றார்கள்.

திருமண விழாக்களில் மற்றவர் களுடன் சாப்பிடவும், வீதிகளில் காலணி அணியவும், வேட்டியை இறக்கி விடவும், தலைப்பாகைக் கட்டவும் அனுமதி கிடையாது என் றார்கள். பொது நிகழ்ச்சிகளில் பொறுப்பு ஏற்கவும் தடை விதித்தார்கள்.

தமிழ்நாட்டில் இருந்த எல்லாமும் அங்கு இருந்தது. ஆனால் வாழுமிடம் மலேசியா என்பது மட்டும் மாறியி ருந்தது. இப்படியான கொடுமைகளில் இருந்து தமிழர்களுக்கு எப்போது மாற்றம் ஏற்பட்டது? அதை மலேசி யாவின் வரலாற்றுப் பக்கங்களில் தேடினால் அது "1929" எனும் ஆண்டை நமக்கு விடையாகத் தருகிறது.

தமிழ் ஓவியா said...

அப்படி என்ன 1929 இல் நடந்தது? மலேசியத் தமிழர்களிடம் புரட்சி ஏதும் ஏற்பட்டதா? அல்லது ஆதிக்கவாதிகள் தாங்களாகவே மாறிப் போனார்களா? இவ்விரண்டில் எதுவும் இல்லை! அந்த ஆண்டில் தான் தந்தை பெரியார் மலேசியா சென்று இறங்கினார். சரியாகச் சொன்னால் 19.12.1929 காலை நாகம்மையார் அவர்கள், எஸ்.இராம நாதன், சாமி.சிதம்பரனார், நடராஜன் ஆகியோருடன் "எஸ்.எஸ்.ரஜுலா" எனும் கப்பலில் பினாங்கு விக் டோரியா துறைமுகம் சென்று கால் பதிக்கிறார் பெரியார். கடலின் மூன்று மைல் தூரத்தில் கப்பல் நிறுத்தப்பட, அந்த இடத்திற்கே சென்று பெரியாரை வரவேற்கின்றனர்.

பெரியார் வந்தது தெரியாமலும், அவர் வருவதினால் என்ன பயன் என்பது தெரியாமலும் தமிழர்கள் கூட்டம் ஆங்காங்கே அடிமை வாழ்வு வாழ்ந்து வந்தது. தத்தம் அடிமை வாழ்வு நீங்க இதற்கு முன்னர் அவர்கள் அழுதிருக்கக் கூடும் அல்லது முதலாளிகளைக் கெஞ்சியிருக் கக் கூடும் அல்லது ஆண்டவர்களை(?) அழைத்திருக்கக் கூடும். எந்தப் பயனுமின்றி போகவே, அடிமை வாழ்வைத் தொடர்ந்திருக்கக் கூடும். இதோ... பெரியார் இறங்கினார்.

நகரங்களுக்குப் போகிறார். பின்னர் தோட்டங்களுக்குப் போகிறார். தமிழர்கள் முன்பாகத் தொடர்ந்து பேசுகிறார்.விளைவு, மொத்தமும் மாறிப் போகிறது. மலேசியத் தமிழர்களுக்குச் சிரிக்கவும், சிந்திக்கவும் அதுதான் தொடக்கம். அவர்கள் உடலின் பழைய இரத்தம், புது பாய்ச்சலைக் கொடுக்க, சிலிர்த்துப் போகிறார்கள். பின் நாள்களில் குடியரசு இதழ் தமிழ்நாட்டில் இருந்து விமானம் ஏறுகிறது. தினம் தினம் பெரியாரைப் படிக்க, சுயமரியாதை பெறுகிறார்கள்.

மீண்டும் பெரியார் 14.12.1954 இல் மலேசியா செல்கிறார். முதல் பயணத் தில் பெரியாரை எதிர்த்தவர்கள், ஜாதி, மதத்திற்கு வால் பிடித்தவர்கள் எல்லாம் இந்த முறை பெரியாரை ஒன்றாய் சேர்ந்து வரவேற்க, தமிழர்கள் நிலை ஏறுமுகம் காண்கிறது. விளைவு 10.02.1946 இல் மலேசியாவில் திராவிடர் கழகம் உதயமாகிறது.

மலேசியாவின் அனைத்து மாநிலங்களிலும் தமிழர்கள் தோழர்களாக வெளிவரத் தொடங் கினர். மலேசிய சாலைகளில் கறுப்புச் சட்டைகள் அணிவகுக்கத் துவங்கின. தோட்டத் தொழிலாளர்கள், தாங்கள் பெரியார் சிந்தனையாளர்கள் என்பதை வலியுறுத்தும் பொருட்டு, கறுப்புத் துணி கட்டிக் கொண்டு வேலை செய்த நிகழ்வுகள் அரங்கேறுகிறது. அதேநேரம் கொள்கைப் பேசியதாலே வேலையை இழந்தத் துயரங்களும் அரங்கேறின. இதனிடையே மலேசியாவில் பல்வேறு பெயர்களில் செயல்பட்ட எண்ணற்ற அமைப்புகள் திராவிடர் கழகத்தோடு தங்களை இணைத்துக் கொண்டன.

ஒரு கட்டத்தில் மலேசிய அரசாங்கத் தால் திராவிடர் கழகம் அங்கீகரிக் கப்படுகிறது. சுயமரியாதைத் திருமணங் களும் ஏற்கப்படுகின்றன. சுயமரியாதைப் பிரச்சாரம், கல்விப் பணி, இலக்கியப் பணி, சுயமரியாதைத் திருமணங்கள் செய்து வைத்தல், பாலர் பள்ளி, தையல் வகுப்பு, மொழி வளர்ச்சி என இயக்கப் பணிகள் இன்றைக்கு விரிவடைந்து இருக்கின்றன. இந்த அற்புதமான வர லாறுக்குப் பின்னால் அய்யாறு வாத் தியார், திருச்சுடர் கே.ஆர்.இராமசாமி என ஒரு நீண்ட பட்டியலே உண்டு.

இறுதியாகத் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்துக் கூற வேண்டும். மலேசியாவின் ஒவ்வொரு அணுவும் அறிந்தவர் நம் ஆசிரியர் அவர்கள். மேலே எழுதப்பட்டுள்ள வரலாறு என்பது ஒரு சுருக்கம் தான். அதன் முழு வரலாறுகளையும், ஆணிவேர் வரை அறிந்தவர் தமிழர் தலைவர் அவர்கள்.

மலேசியாவிற்கும், ஆசிரியருக்கும் அய்ம்பது ஆண்டு கால தொடர்பு இருக்கிறது. "தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களும், மலேசியத் திராவிடர் கழகமும்" என தனி நூல் எழுதும் அள விற்கு வரலாற்றுச் செய்திகள் உள்ளன. முடிவாக, தமிழ்நாட்டில் மட்டுமின்றி மலேசியாவிலும் தமிழர்கள் உரிமை யுடன் வாழ, "பெரியாரே அடிப்படை" என்பதோடு பதிவை நிறைவு செய் வோம்.

- வி.சி. வில்வம்

Read more: http://viduthalai.in/page4/73567.html#ixzz2qJz21Go7

தமிழ் ஓவியா said...


தமிழ்ப் புத்தாண்டு முதல் நாள்


தை முதல் நாள் பொங்கல் என்று

கட்டியம் கூறுதற்கு ஆங்கிலப் புத்தாண்டு

கொட்டிய முழக்குடன் வரும் நாள் இன்று!

நன்முறைகள் நாளும் மேற்கொண்டு

வன்முறையை வெற்றி கொள்ளும் நாளாக,

பன்மொழி மாந்தர்க்கும் இந்நாள் அமையட்டும்!

எம்மொழி இனிதென்றும் அது எமக்கு உயிர் என்றும்,

எல்லோர்க்கும் பெருமை கொள்ள உரிமை உண்டு

வல்லோராயிருப்பதாலே பிற மொழி தாழ்த்தல் தீது!

ஆண்டவன் படைப்பிலே அனைவரும் சமமென்றுரைத்து

அறியாத மக்களை அடிமை கொள நினைத்தல் அதனினும் தீது!

கொள்கையொன்று உரைத்து, கொடியும் உயர்த்தி

கோடிப் பணம் எதிரே கண்டவுடன்

நாடி ஓடி நமஸ்கரித்து நல்ல விலைக்குத் தன்னை விற்று

நாளைக்கு ஒரு வேடமெனப் புனைந்தாடினால்

மனிதனே, அது உன் மானத்தை விற்பதற்குச் சமமான தீதாம்!

- முத்தமிழ் அறிஞர் கலைஞர் 1.1.2009
(குறிப்பு தமிழ்ப் புத்தாண்டு பிறக்குமுன் வரும் ஆங்கிலப் புத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டு வருகைக்குக் கட்டியம் கூறுகிறதாம்!)

Read more: http://viduthalai.in/page4/73566.html#ixzz2qJzKlVS6

தமிழ் ஓவியா said...


தமிழர் திருநாள்


தமிழர்களிடையே கொண்டாடப்பட்டு வரும் விழாக்களில் பல, தமிழர்களை இழிபடுத்துவனவாகவும், தமிழை அழிவுபடுத்துவனவாகவும், பொருளற்றனவும் அறிவுக்குப் பொருத்தமற்றனவுமான தொன்ம (புராண)க் கதைகளைப் பின்புலமாகக் கொண்டனவாகவும் இருந்த போதிலும் மக்கள் அவற்றையெல்லாம் பெரும்பொருட் செலவிலும் ஆரவாரமாகவும் கொண்டாடுவதில் பெரிதும் ஈடுபாடும் முனைப்பும் உடையவர்களாய் இருக்கின்றனர். இதனால் கடன்பட்டு உழல்வாரும் பலர்.


தமிழ் ஓவியா said...

இந்நிலைகளுக்கு மாற்றாகவும், தமிழ் மக்களிடையே தமிழிய உணர்வும் இனநல உணர்வும் கிளர்ந்தெழுதற்கு வாய்ப்பாகவும், பொங்கலை வாழ்வியல் சிறப்பு விழா வாகக் கொண்டாடுவதோடு, இயக்க நிலைப்படுத்தியும் நாடெங்கும் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று பெரு மக்கள் சிலர் மனங்கொண்டனர்.

தமிழ் ஓவியா said...

பேரா. கா. நமச்சிவாயனார் ஏறத்தாழக் கடந்த எழுபது ஆண்டுகளுக்கு முன்னர்ப் பொங்கல் தமிழ் விழாவாகக் கொண்டாடப்பட வேண்டும் என்னும் முயற்சியில் முனைப்புடன் ஈடுபட்டார். தமிழ்ப் பேரறிஞர்கள், தமிழுணர்வுடைய அரசியல் கட்சித் தலைவர்கள் முதலானோரைக் கண்டு அளவளாவியதன் விளைவாகப் பொங்கல் தமிழர் திருநாளாக மலர்ந்தது. நாடெங்கும் பல்வேறு அமைப்புகளின் சார்பாகத் தமிழர் திருநாள் கூட்டங்கள் எழுச்சியுற நடைபெறலாயின.

தமிழர் திருநாள் தொடர்பாக மலேயாவில் உள்ள பெரியவர் புலவர் கா.ப. சாமி அவர்கள் கூறியுள்ளது அறியத் தக்கது. அது வருமாறு:

1937இல் திருச்சியில் அனைத்துத் தமிழர் மாநாடு என்று ஒரு மாநாடு, பசுமலை சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்றது. அதில் கா. சுப்பிரமணி யனார், மதுரைத் தமிழவேள் பி.டி. இராசன், திரு.வி.க., மறைமலையடிகளார் முதலான தமிழறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர். நானும் அக்காலத்தில் இந்தி எதிர்ப்புப் போரில் பங்கு பெற்றிருந்தமையால், அங்கு இருந்த சூழ்நிலையில், அம் மாநாட்டிற்குச் சென்றிருந்தேன். அந்த மாநாட்டில், பொங்கல் சமய விழாவா, சமயமற்ற விழாவா என்று கடுமையான தருக்கம் நடைபெற்றது.

இறுதியாக மறைமலையடிகளார் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார் இது (பொங்கல்) சமயச் சார்பு இல் லாத விழா. எந்தச் சமயத்துக்காரன், இந்த விழாவை எடுத்துள்ளான்? எந்த இலக்கணம் இதற்கு இருக் கிறது? எந்தப் புராணம், எந்த இதிகாசம் இருக்கிறது? எனவே, எந்தப் புராணமும் இல்லாத போது, தமிழில் புறநானூற்றில் பிட்டங் கொற்றனின் வரலாற்றில் கரு வூர்க் கதப்பிள்ளை சாத்தனாரின் பாடலில் சான்று இருக்கிறது. இதை யார் மறுக்க முடியும்? நண்பர் ஈ.வே.இரா. இதை ஏற்றுக் கொண் டாலும் சரி, ஏற் றுக் கொள்ளா விட்டாலும் சரி! என்றார்.

இல்லை; நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று பெரியார் தெளிவாக மறுமொழி உரைத்தார். பெரியார்தாம் இம்மாநாட்டை நடத்தினார்.

பொங்கல் மதச்சார்பற்ற, முதன்மையான, பொன்னான விழா என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று பெரியார் சொன்னதும் அனைவரும் கையொலி எழுப்பினர். திரு.வி.க எழுந்து, அருமை நண்பர் ஈ.வே.இரா. அவர்கள், பொங்கலைச் சமயச் சார்பற்ற ஒரு தனிப் பெருந் தமிழர் விழா என்று ஏற்றுக் கொண்டமைக்குத் தமிழுலகமே பாராட்டக் காத்திருக்கிறது என்று குறிப்பிட்டார். அதன் பிறகுதான் மிகச் சிறந்த விழாவாகப் பொங்கலை அனைவரும் ஏற்கத் தொடங்கினர்.

இச்செய்தி பலருக்குத் தெரியாது. நான் அம்மாநாட்டில் கலந்து கொண்டேன். எனக்கு அப்பொழுது அகவை 19.

அம்மாநாடு சிறப்பாக இந்தியை எதிர்ப்பதற்கு கூட்டப்பட்டதுதான். அதில்தான் பொங்கலைப் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தைமுன்மொழிந்தவர் பி.டி. இராசன். வழிமொழிந்தவர் திரு.வி.க.

தமிழர் திருநாள் கொண்டாடத் தொடங்கிய பின் வகை வகையான பொங்கல் வாழ்த்துக்கள் எழிலார்ந்த தோற்றத் தொடும், இனிய தமிழிலும் ஏற்றமிகு கருத்துகளொடும் மக்களி டையே பரவின. ஆரியப் பார்ப்பனர்கள் நடத்திய இதழ்கள் தீபாவளி மலர் வெளியிட்டு வந்ததைப் போல், தமிழுணர்வார்ந்த ஏடுகள் பொலிவான தோற்றத்தோடு பொங்கல் மலர் வெளியிடலாயின.

மேற்கூறியவாறு பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஆங்காங் குத் தமிழர் திருநாள் கூட்டங்கள் எழுச்சியுற நடத்தப்பட்டன. தூயதமிழ்க் காவலர் கு.மு .அண்ணல்தங்கோ அவர்கள் தமிழர் திருநாளை ஆண்டுதோறும் பத்துநாள் விழாவாகப் பல்லாண்டுக் காலம் நடத்திவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

பெரியார் மறுமொழி

பொங்கற் பெருநாளைத் தமிழர் திருநாளாக அறிவித்து அதனைத் தமிழ்நல, இனநல இயக்கங்களும் பிறவும் எழுச்சியுறக் கொண்டாடத் தொடங்கிய அளவில் அது தமிழ்மக்கள் வாழும் அயல்நாடுகளிலும் பரவலாயிற்று. ஆயினும் மலேயா -- சிங்கப்பூர் நாடுகளில் தமிழர் திருநாளைப் பரப்புவதில் பெரிதும் முனைந்து நின்றவர்களுட் சிலரே அதில் சற்று முரண்படுவார் ஆயினர்.

தமிழர்களில் கடவுள் நம்பிக்கையும் சமயப்பற்றும் கொண்டவர்களின் பொங்கல் கொண்டாட்டத்தில் சமயக் கடைப்பிடிகள் சில ஒட்டி நிற்றலைச் சுட்டிக்காட்டி, பொங்கல் விழா இந்துமதப் பண்டிகை யென்றும், அது தமிழர் திருநாளாகாது என்றும், தமிழர் திருநாளைப் பொங்கலொடு சார்த்தக் கூடாது என்றும், பொங்கற் பெருநாள் வேறு; தமிழர் திருநாள் வேறு என்றும் குறுக்குச்சால் ஓட்டத் தொடங்கினர்.

மலேயா -_ சிங்கப்பூரில் பொங்கல் நன்னாளே தமிழர் திருநாள் என்பாரும், அது இந்துமத விழாவே; தமிழர் திருநாள் அன்று என்பாருமாய்த் தமிழர்கள் முரண்பட்டு நின்ற நிலையில், அங்குச் சுற்றுச் செலவு மேற்கொண்டிருந்த தன்மானத் தந்தை பெரியார் ஈ.வே.இரா. அவர்களிடம் இதுபற்றி அவர்தம் கருத்தை அன்பர்கள் உசாவினர். அப்போது பெரியார் அவர்கள் கூறிய மறுமொழி பலரையும் வியப்பில் ஆழ்த்தியது!

அதுவருமாறு:

பொங்கல் தமிழர் விழாதான். அது இந்துமத விழா ஆகாது. இந்தமத விழாவாக இருந்தால், மற்ற மற்ற இந்துமத விழாக்களைப் போல் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுமா இல்லையா? அப்படிக் கொண்டாடப்படுவது இல்லையே, அது ஏன்? பொங்கல் தமிழ்நாட்டில் மட்டுந்தானே, அதிலும் தமிழர்களால் மட்டுந்தானே கொண்டாடப்படுகிறது!

பார்ப்பனர்கள் அதைக் கொண்டாடுகிறார்களா? இல்லையே! இந்துமத விழாவாக இருந்தால் அதைப் பார்ப்பான் கொண்டாடாமல் இருப்பானா? அவன்தானே, அதைக் கொண்டாடுவதில் முந்திக் கொண்டு நிற்பான்! பார்ப்பான் அதைக் கொண்டாடவில்லை; கண்டு கொள்ளாமல் இருக்கிறான் என்றால் என்ன பொருள்? அது தமிழர் திருநாள் என்பதுதானே! இதில் என்ன ஐயப்பாடு?

நூல்: தமிழ்த் தேசிய திருநாள் புலவர் இறைக்குருவனார்

Read more: http://viduthalai.in/page4/73568.html#ixzz2qJzalUlP

தமிழ் ஓவியா said...


திருவாரூர் கமலாலயம்


திருவாரூரில் சரண கமலாலயம் என்ற 16 ஏக்கரில் உள்ள குளம் இருக்கிறது. அங்கு முதலில் சமணர்கள்தான் இருந்தார்கள். சமணர்களை அடியோடு வெட்டிக் கொன்றனர். அந்த இடத்தைக் குளமாகவும் ஆக்கினர்.

- கி.வீரமணி
(நூல்: பெரியாரியம் (கடவுள்) பக்கம் 212

Read more: http://viduthalai.in/page4/73569.html#ixzz2qK09yd85

தமிழ் ஓவியா said...

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு

தமிழ் ஆண்டைப் போல சிந்துச் சமவெளி மக்களுக்கு ஆண்டுப் பிறப்பு தை மாதத்திலேயே தொடங் கிற்று. சுமேரியருக்கு இராசிகள் பத்தாயிருக்க. சிந்துச் சமவெளி மக்களுக்கு எட்டேயிருந்தன. இத னால் சிந்துவெளி நாகரிகத்தின் பழைமை கி.மு. 5610 வரை எட்டு வதாக தெரிகிறது.

இது சுமேரிய நாகரி கம் பிறப்பதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட கால மாகும். மனித நாகரிகத்தின் பிறப் பிடமும், வளர்ப்புப் பண்ணையும் எகிப்தோ, பாபிலோனோ அல்ல சிந் துவெளியும் தென்னாடுமே என்பதை, இது அறுதியிட்டுக் காட்டுகிறது

(தென்னாடு கா. அப்பாத்துரை பக்கம் 48)

Read more: http://viduthalai.in/page4/73569.html#ixzz2qK0KfNyI

தமிழ் ஓவியா said...

கல்கி கூறும் மூடநம்பிக்கை

கேள்வி: இந்த வருஷம் தியாகராஜ ஆராதனை விழாவில் தங்களைக் கவர்ந்தது எது?

பதில்: டி.வி. ஒளிபரப்புக்கு சேட்டிலைட் கிடைக்கக் காத்திருந்து ராகு காலத்தில் பஞ்சரத்ன கிருதிகள் பாடியதுதான்; - மூடநம்பிக்கையை விஞ்ஞானம் வென்றது.

(நன்றி: கல்கி)

Read more: http://viduthalai.in/page4/73569.html#ixzz2qK0SF0rS

தமிழ் ஓவியா said...


பொங்குக பொங்கலே!

- வய்.மு. கும்பலிங்கன்

சாதி மதத் தீங்கொழியப் பொங்கட்டும் பொங்கல்!
சதிகாரர் செயல்மாயப் பொங்கட்டும் பொங்கல்!
வீதியிலே தமிழ்மணக்கப் பொங்கட்டும் பொங்கல்!
விடுதலை உணர்வோடு பொங்கட்டும் பொங்கல்!
இதிகாச இருளகலப் பொங்கட்டும் பொங்கல்!
இல்லாமை இல்லென்றே பொங்கட்டும் பொங்கல்!
வேதியக் கூட்டமது விளம்புகிற நூற்கள்
வீணென்றே வீரியமாய்ப் பொங்கட்டும் பொங்கலே!

தன்மான வாழ்வமையப் பொங்கட்டும் பொங்கல்!
தமிழரெலாம் ஒன்றென்றே பொங்கட்டும் பொங்கல்!
உண்மைநெறி சிறந்தோங்கப் பொங்கட்டும் பொங்கல்!
உழவர்உழும் உழவாலே பொங்கட்டும் பொங்கல்!
பெண்டிரெலாம் பண்பாடப் பொங்கட்டும் பொங்கல்!
பானையிலே பகுத்தறிவாயப் பொங்கட்டும் பொங்கல்!
கண்மூடித் தனமெல்லாம் மண்மூடிப் போக
கணக்கிலா வளத்தோடு பொங்குக பொங்கலே!

பெரியாரின் புகழ்விளங்கப் பொங்கட்டும் பொங்கல்!
பைந்தமிழர் வாழ்வெலாம் பொங்கட்டும் பொங்கல்!
நரிக்குணத்தார் நாணிடவே பொங்கட்டும் பொங்கல்!
நம்கொள்கை நாடாளப் பொங்கட்டும் பொங்கல்!
உரிமையுணர் வோடெங்கும் பொங்கட்டும் பொங்கல்!
உழைப்பறியார் உருண்டோடப் பொங்கட்டும் பொங்கல்!
ஆரியரின் கொட்டமதை அடிசாய மாய்த்து
அண்ணாவின் புகழ்விளங்கப் பொங்கட்டும் பொங்கலே!

Read more: http://viduthalai.in/page4/73570.html#ixzz2qK0ecQHm

தமிழ் ஓவியா said...


சரித்திரம்திருத்தப்படவேண்டும்

- ஏ.வி.பி.ஆசைத்தம்பி

தமிழர்கள் துரத்தப்பட்டவர்களாம். வட இந்தியாவிலிருந்து தென் இந்தியாவுக்கு ஆரியர்களால் துரத்தப்பட்டு வந்தவர்களாம் தமிழர்கள்!

இப்படிக் கூறுகிறது இன்றைய சரித்திரம்!

சரித்திரத்தின் உயிர், சரியான ஆதாரம்; ஆதாரம் இல்லாத எதுவும் சரித்திரத்தில் நிச்சயம் இடம் பெற முடியாது. கல்வெட்டு, சிற்பம், இலக்கியம், தோண்டி எடுக்கப்படும் பொருள்கள் ஆகியவை தாம் சரித்திரத்தின் ஆதாரங்கள்.

ஆரியர்கள் வருகையின் போது இந்தியாவில் இருந்தவர்கள் தமிழர்கள் என்று சரித்திரம் கூறுகிறது. இதற்கு ஆதாரமாக எத்தனையோ சான்றுகள் உள்ளன.

நில நூல் ஆராய்ச்சிப்படி முதலில் வட இந்தியா என்ற நிலப்பரப்பு இல்லையென்றும், தென்னிந்தியாவுக்குப் பிறகுதான் வட இந்தியா தோன்றியிருக்க வேண்டும் எனவும், காபூல், குவெட்டா, கங்கை சிந்துச் சமவெளி, அஸ்ஸாம் போன்ற இடங்களில் அடிக்கடி பூகம்பம் ஏற்படுவதைத் கொண்டு, போப், மாக்ஸ்முல்லர், கரிசன், விபுலானந்தர் ஆகியோர் கூறுகின்றனர். இது மறுக்க முடியாத உண்மை.

இதிலிருந்து தமிழர்கள், வட இந்தியா தோன்றுவதற்கு முன்பு தென்னிந்தியாவில் தான் வசித்திருக்க வேண்டும் என்று தெரிகிறதல்லவா?

இங்ஙனம் தமிழர்கள் அன்று இந்தியா பூராவும், பரவி வாழ்ந்து வரும்போது தமிழர்களிடத்தில் சாதி, சமயம் என்பவை இல்லை. அவை வேற்றுமொழி வார்த்தையாக இருப்பதால், வேற்று மொழியார் இந்நாட்டுக்கு வந்த பின் தான் அவை பரவியிருக்க வேண்டும். ஆரியர்கள் நுழைவு வரை நிச்சயமாகத் தமிழர்களிடத்தில் சாதியோ, சமயமோ இல்லை. அழகு, முருகு, ததும்பிய இயற்கைக் காட்சிகளைக் கண்டு தமிழர்கள் களிப்படைந்து வந்தனர்.

மனோதத்துவ ஆராய்ச்சிப்படி கடவுளை நம்பி, எல்லாம் கடவுள் செயல் எனக்கருதி வாழ்பவன், வலிவற்றவன், ஏனெனில் கடவுள் நம்பிக்கையால், மனிதன் தன்நம்பிக்கையை இழக்கிறான், சாதி சக்திக்கு விரோதி, சாதி, சமயம், கடவுள் ஆகிய எதிலும் சிக்காத ஒரு சமூகம். சிறியதா யிருந்தாலும் சர்வ வல்லமை கொண்ட சமூகமாக அது இருக் கும் உள்ளத்தில் பயமில்லாத, உறுதி பெற்ற உன்னத சமூகமாக அது விளங்கும்.

இன்று ருஷ்யர்களுக்கு இருக்கும் மனோபலத்தைவிடத் தமிழர்களுக்குப் பன் மடங்கு அதிகம் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் ருஷ்யர்கள், கார்ல்மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியவர்களால் இடைக்காலத்தில் திருத்தப்பட்டவர்கள், தமிழர்கள் அப்படி அல்ல.

சாதி, மதங்களுக்கு மூதாதையர்களான ஆரியர்கள், வட இந்தியாவினுள் நுழையும் வரை. அந்த நச்சு வாடையின்றியே அவர்கள் வாழ்ந்தனர். தமிழ்ப் பெண்களின் வீரமும் பெருமைப்படக்கூடியவாறு - தன் மகன் போரில் புறமுதுகு காட்டி மரணம் எய்தியிருந்தால், அவன் குடித்த மார்பையே அறுத்தெறியும் தன்மையில் விவரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இச்சிறப்புப் பொருந்திய தமிழ் மக்கள் துரத்தப்பட்டதாகச் சரித்திரம் கூறுகிறது. இது உண்மையாக இருக்குமானால், தமிழர்களைத் துரத்தியவர்கள் மிக மிக வீரம் செறிந்தவர் களாக இருந்திருக்க வேண்டும். அப்படி அதிசய வீரம் கொண்ட வீரசிகாமணிகள் யார்? ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு கைபர் கணவாய் வழியாய் அண்டிப் பிழைக்க நுழைந்த கதியற்ற ஆரியர்கள் தாம் தமிழர்களைத் துரத்தினார்களாம்!

சிந்தித்தால் சிரிப்பு மட்டுமல்ல உண்மை மறைக்கப்பட்டிருக்கிறதே என்ற உணர்ச்சியும், உள்ளக்கொதிப்பும் உதிக்கும். ஏனெனில் ஆரியர்களிடம் தமிழர்களைத் துரத்துவ தற்குரிய வீரமும், பகைவரோடு போராடக்கூடிய பண்பும், அடித்துக் துரத்தத்தக்க ஆயுதமும் இருந்தனவா, அல்லது ஏதேனும் ஒன்று உண்டா என்பதை எண்ணிப்பார்த்தால் எதுவும் இருந்ததில்லை என்பது நன்கு தெரியும். அது மட்டுமல்ல.

ஆரியர்களின் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் புல்லைத் தவிர சிறு கல்லையும் அசைத்தறியா அப்பாவிகள் என்றும், பூசலுக்கு வழி கோலிய பூசுரர்கள் என்றும், துரோகத்திற்கு உறுதுணையாக இருந்த புரூட்டஸ்கள் என்றும், காட்டிக் கொடுப்பதிலே கௌடில்யர்கள் என்றும் நாம் தெளிவாகக் காணலாம். அதோடு சாதியும், மதமும், சர்வேஸ்வரனும் ஆரியர்களின் உடன்பிறந்த பொருள்களாகையால் வெறும் ஊத்தை உடம்பினராக இருந்திருக்க முடியுமே தவிர ஊக்கம் இருந்திருக்க முடியாது.

இத்தகைய ஆரியர்களால் அன்றைய தமிழர்கள் துரத்தப்பட்டிருக்க முடியுமா? இன்று கூடப்பண்டைத் தமிழர்களின் வீரம் மாறாதிருப் பதற்கு எத்தனையோ கூறமுடியும், எடுத்துக் காட்டாக வியாபாரம் செய்யவந்த வெள்ளையன் வேள்வி செய்த வேதியரோடு சேர்ந்து, சதி செய்து, இந்தியாவின் பெரும் பாகத்தைப் பிடித்துவிட்டான்.


தமிழ் ஓவியா said...

மன்னர்கள் மண்டியிட்ட பின்பு, சிற்றரசர்கள் செயலற்றுப் போன பின்பு, ஆயுத பலத்தோடு இருந்த அதே ஆங்கிலே யர்களை இறுதி வரை குருதி உள்ளவரை எதிர்த்தவன் சக்ரவர்த்தி அல்ல, சாதாரண மனிதன். மறத் தமிழ்குலத்திலே பிறந்தவன், பரம் பரை வீரத்தின் ஓரத்திலே நெருங்கியவன், வானம் பொழிகிறது, பூமி விளைகிறது மன்ன வன் காணிக்கை ஏனடா என்று தலை நிமிர்ந்து மார்தட்டிக் கேட்டவன், கன்னித் தமிழன் கட்டப்பொம்மு!

பின் எந்த ஆதாரத்தை வைத்துத் தமிழர்கள் துரத்தப்பட்டவர்கள் என்று எழுதப்பட்டது? குடிப்பவனுக்குக் குடிகாரன் என்றும், கொலைகாரன் என்றும் பெயர் வரு வதைப் போல தமிழர்களுக்குத் திரா விடர் என்ற பெயர் இருப்பதால் துரத் தப்பட்டவர்கள் எனப்பெயர் வந்ததாம். திராவிடர் என்ற சொல்லுக்குப் பகுதி த்ரு என்பதாம். த்ரு என்றால் துரத்து என அர்த்தமாம். துரத்து என்ற பகுதியுடைய ஒரு சொல் தமிழர்களுக்குப் பெயராக இருப் பதால் தமிழர்கள் துரத்தப்பட்டவர்களாம்.

தமிழ் ஓவியா said...


முதலில் திராவிடர் என்ற சொல், தமிழர்-த்ரமிளர்-திராவிடர் என்றும், தமிழர்கள் வாழ்ந்த இடம் அழகு ததும்பி இருந்ததால் திரு-வும் இடமும் சேர்ந்து திராவிடம் என்று வந்திருக்கலாம், என்றும் கூறப்படும் முடிவுகளை ஒப்புக்கொண்டால் துரத்து என்ற பகுதிக்கு இடமே இல்லாமல் போய்விடும், எனவே இதைவிட்டு அதையே ஆராய்வோம்.

ஒன்று துரத்துகிறவர், இரண்டு துரத்தப்பட் டவர். ஆகிய இரு வார்த்தைகளின் பொருள் வெவ்வேறு, ஆனால், பகுதி மட்டும் துரத்து என்பதுதான். எனவே துரத்து என்ற பகுதி உடைய சொல், துரத்தப்பட்டவரையும் குறிக்க லாம். இதிலிருந்து பகுதியை வைத்து எது என்று நிர்ணயிக்க முடியாது என்பதை எவரும் உணர லாம். அப்படி இருக்கத் தமிழர்களைத் துரத்தப் பட்டவர்கள் - என்று கூறுவது, பொருந்தாக் கூற்று என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

இதோடு மட்டுமல்ல, எந்த இலக்கியத்திலும் கல்வெட்டுகளிலும் துரத்தப்பட்டவர்கள் என்பதற்கு ஆதாரமாக எதுவும் கிடையாது. ஆனால் இதற்கு மாறாக் காஞ்சிப்புராணம் 10-ஆவது பாடலிலே எவ்வினையும் ஒப்புகிலார் திராவிடர் என்று வருகிறது. வினை என்றால், வருகிறகஷ்டம், துன்பம், எதிர்ப்பு ஆகியவை.

ஒப்புதல் என்றால் துரத்துதல் எனப் பொருள், எதையும், வினை என்பதைக்கூடச் சமாளித்துத் துரத்தும்திறமை தமிழர்களுக்கு இருந்த தாலேயே திராவிடர்கள் எனப்பெயர் வந்ததாக இந்த ஆதாரம் கூறுகிறது. இப்படி ஒரு சிறு ஆதாரம் கூட துரத்தப்பட்டவர் எனக் கூறுவதற்கு கிடையாது. தமிழர்கள் துரத்தி இருப்பார்கள் என்பதற்கு கடாரத்து வெற்றி, இமயத்தில் கொடி நாட்டிய நிகழ்ச்சி, கனக விஜயர் தலையில் கல்லேற்றிய காட்சி ஆகியவைகளே போதுமானவையாகும்.

தமிழர்கள் துரத்தியவர்கள் தான் என்ற முடிவுக்கு நாம் வந்தால் - வட இந்தியாவில் வாழ்ந்த தமிழர்கள் தென்னிந்தியா வரக்கார ணம் என்ன? என்ற கேள்வி எழலாம். இக்கேள் விக்கு விடை கஷ்டமல்ல வந்தவர்க்கு ஈந்து வள்ளல்(!) ஆனவர்கள் தாம் தமிழர்கள். இதற் குத் திருக்குறள் விருந்தோம்பல் உணர்ந்தாலே போதும். வந்தவரை வரவேற்றுச் சிறப்பளிக்கும் சீரிய குணமும் இரவிலே வருவோர் இருக்க இடமின்றி இடர்ப்படக் கூடாதென வீடு கட்டும் திட்டத்திலே திண்ணை போட்டுக் கட்டும் பெருந்தன்மையும் கொண்டவர்கள் தான்.

தமிழர்கள் இதனால் தான் ஆரியர்களை அன்போடு வரவேற்றனர். வசதி செய்து கொடுத் தனர். அடுத்துச் சிந்துநதி வெள்ளத்தால் தமிழர்கள் அல்லல்பட்டிருக்க வேண்டும் என ஹரப்பா மொகஞ்சொதரா, நாகரீக அழி வுக்கு காரணஞ் சொல்லப்படுகிறது. தமிழர்கள் தென்னிந்தியா வந்ததற்கும், வெள்ளத்தால் ஏற்பட்ட வேதனையும் வள்ளல் தன்மையும் ஏன் காரணங்களாக இருக்கக் கூடாது?

எனவே, எப்படி ஆராய்ந்தாலும் தமிழர்கள் நிச்சயமாகத் துரத்தப்பட்டவர்கள் அல்ல. துரத்தியவர்கள் என்பதற்கு ஆதாரங்கள் ஏராளம் உள்ளன. ஆகையால் சரித்திரம் விரைவில் திருத்தப்பட வேண்டும்.

Read more: http://viduthalai.in/page4/73571.html#ixzz2qK0sIiFE

தமிழ் ஓவியா said...


நரம்பியல் நிபுணர் டாக்டர் ராமமூர்த்தி சொல்கிறார்


எனக்கு ஜோசியத்திலோ கிரகங்களினால் கெடுதல், அல்லது நன்மை ஏற்படுவதாகச் சொல்வதிலோ நம்பிக்கை கிடையாது.

செவ்வாய்தோசம் என்றால் என்ன என்று யாருக் காவது சந்தேகமறத் தெரியுமா?

செவ்வாய்க்கிரகம் எத்தனையோ தொலை தூரத் துக்கு அப்பால் - _ கோடிக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ளது. உயிரினங்கள் வசிக்க இயலாததாகக் கருதப்படும் உஷ்ணமான கோளம் அது.

அவ்வளவு தூரத்தில் உள்ள ஒரு கிரகத்தினால், இங்குள்ள ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்றால் எப்படி நம்ப முடியும்?

இதெல்லாம் சுத்த அபத்தம் மூடநம்பிக்கையை வளர்க்கும் எந்த விஞ்ஞான ஆராய்ச்சியையும் நாம் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

எந்த விஞ்ஞான ஆராய்ச்சியும், ஒரு தடவைக்கு (முதல் முறையாக மற்றவர்களாலும் அந்த கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டு போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அதை முழு மையான ஆராய்ச்சி என்று ஒப்புக் கொள்ள இயலும்.

சில வருடங்களுக்கு முன்பு ஒரே கோட்டில் எட்டுக் கிரகங்கள் ஒன்று சேரப் போவதாகவும், அதனால் உலகில் பல விபரீதங்கள் நடைபெறப் போவதாகவும் அமர்க்களப்பட்டதே கடைசியில் என்ன ஆயிற்று?

ஒன்றுமே நடக்கவில்லை என்பதுதான் நாம் கண் கூடாகப் பார்த்த விஷயம்.

Read more: http://viduthalai.in/page4/73572.html#ixzz2qK17q6Y8

தமிழ் ஓவியா said...

கம்பன் தொண்டு

பொன்னும் மாமணியும் புனை சாந்தமும்

கன்னி மாரொடு காசினி ஈட்டமும்

இன்ன யாவையும் ஈந்தனள் அந்தணர்க்கு

அன்னமும் தளிர் ஆடையும் நல்கினாள்.

தன் மகன் இராமனுக்கு முடிசூட்டப் போவதைக் கேட்டுக் கோயிலுக்குப் போய்ப் பார்ப் பனர்க்குத் தானமாகப் பொன் னையும் பெருமை பெற்ற மணிகளையும், பூசுதற்குரிய சந்தனத்தையும், இளம் பெண் களையும், பல ஊர்களையும் இவை போன்றவைகளையும், சோற்றையும் ஆடை களையும் அளிக்கின்றாள்.

இராமாயணத்தைத் தமிழாக்கிய கம்பன், தமிழ்ப் பண்பாடு கெடாமல் - தக்கவாறு மாற்றியமைந்துள் ளான் என்கின்றனர்.

எங்கே மாற்றியமைத்தான்? - பார்ப்பானுக்கு இளம் பெண்களையும் கொடுப்பதென்பது தமிழர் பண்பாடா? - அந்த இழி செயல் ஆரியர்க்கு ஏற்கும். அதை அப்படியே தமிழர் முன்வைக்கும் கம்பனின் செயல் எத்தகையது? எண்ணுக!

- புரட்சிக் கவிஞர் - (குயில் 28.10.1958)

Read more: http://viduthalai.in/page4/73572.html#ixzz2qK1JU2qH

தமிழ் ஓவியா said...


இன்பவீடு


தலைவி:

பொற்கோலப் பானையிலே மஞ்சள் கட்டிப்
பொங்கியநற் சோற்றினிலே நெய்யை யூற்றிக்
கற்கண்டு, தேன் பருப்பு, வெல்லம் இட்டுக்
கலந்துவைத்தேன் அத்தானே! உண்ண வாரீர்!

தலைவன்:

சொற்கரும்பே! என்னன்பே! மக்களைத்தான்
சோறுண்ண அழைத்தனையோ? அவர்க ளெங்கே?

தலைவி:

நற்கரும்பின் சுவைசுவைத்துக் கொண்டிருப்பார்
நானழைத்து வருகின்றேன்! இருங்க ளிங்கே!
(தலைவி மக்களை அழைத்து வந்தாள்)

பெண்:

அப்பா! நம் செந்தமிழில் வளரு கின்ற
ஆரியத்தை மறைமலையார், களையும் செய்கைக்(கு)
ஒப்பாக அண்ணனின்று கரும்பின் தோகை
ஒருவெட்டில் விழவைத்தார். மேலும் அந்தத்
தப்பான ஆரியத்தின் முதுகுத் தோலைத்
தாமுரித்தல் போற்கரும்பின் பட்டை நீக்கிக்
கைப்பகற்றித் தனித் தமிழைத் தருதல் போலே
கரும்புவெட்டித் தந்திடநான் சுவைத்திட்டேனே!

மைந்தன்:

தன்மானக் கொடிகட்டி வீட்டின் உச்சி
தனில்உயர்த்திப் பறக்கவிட்டேன்; வந்துபாரீர்!
என்மானங் காத்ததமிழ்த் தாய்க்கிந் நாளில்
என்படையல், எப்படிநீர் சொல்லும், அப்பா!

தலைவன்:

பொன்மானே! நம்மக்கள் இருவரும்தான்
புவிபுகழும் பாவரசி, வீர னென்று
பின்நாளில் இலங்கிடுவார் என்று காணப்
பெருமகிழ்வால் என்நெஞ்சம் விரிந்த தன்றே!

தலைவி:

தமிழ்ச்சுவையில் திளைத்திருக்கும் அத்தானே! நான்
தரும்பொங்கற் சுவைகாண எழுந்துவாரீர்!
எமதருமை மக்காள்நீவிர் எழுந்துவாரீர்!
இனியவெல்லச் சோறுண்டு மகிழலாமே!
(உணவுண்ணச் சென்றார்)

தலைவன்:

நமதருமைப் பிள்ளைகட்கும் படைத்துச் சற்று
நறுநெய்யும் ஊற்றிவிட்டு நீயும் உட்கார்!
(உண்ணும்போது)

மிகவினிது! மிகவினிது! வெல்லச்சோறு
மேலுமொரு சுரண்டியிட்டுக் கொள்ளுவோமே!
(உணவுண்டுகூடம் சென்றார்)

வாழ்வினியே சுவைதந்தாய்! இன்பந்தந்தாய்!
வடிவழகே! நல்லசுவைப் பொங்கலிட்டாய்!
யாழுடனே தமிழிசையைச் சேர்த்து நல்கின்
அதுதானே பேரின்பம்! தொடங்குவாயே!

தலைவி:

யாழுடனே தமிழிசைக்கும் முன்னர் என்றன்
அகத்தெழுமோர் அய்யத்தைத் தீர்த்துவைப்பீர்!
வாழ்வளிக்கும் பொங்கலினை மறந்துவிட்டு
வண்டமிழர் தீவாளி கொண்ட தேனோ?

தலைவன்:

ஆரியத்தின் சூழ்ச்சியினால் தமிழர் இந்நாள்
அவர்க்கிழிவு தருநாளைத் திருநாள் என்று
பாரினிலே கொண்டாடித் தம்மா னத்தைப்
பறிகொடுத்து பெறவுழைக்கும் இராம சாமிப்
பெரியாரின் தன்மான இயக்கம் இன்று
பேரியக்க மாய்வளர்ந்து செய்யுந்தொண்டு
பெரு நாட்டில் விழிப்பருளும்! பாடுவாயே!

தலைவி, யாழெடுத்துப் பாடினாள்:
பொன்னாய் விளைந்த நெல்லைக் குற்றி
அன்னம் ஆக்கிப் படைக்கும் பொங்கல்
அன்னம் ஆக்கிப் படைக்கும் பொங்கல்
என்னே நல்கிற் றின்பம் இன்பம்!

இன்னா நீக்கிக் கைகள் நிறையப்
பொன்னாய்க் குவிக்கும் பொங்கல், நன்னாள்
பொன்னாய்க் குவிக்கும் பொங்கல் நன்னாள்
என்னே நல்கிற் றின்பம் இன்பம்!

தமிழர் வாழ்வில் மகிழ்வே தோன்ற
அமிழ்தாய் இன்பம் ஆக்கும் பொங்கல்
அமிழ்தாய் இன்பம் ஆக்கும் பொங்கல்
எமக்கே நல்கிற் றின்பம் இன்பம்!

- நாரா. நாச்சியப்பன்
(பொன்னி பொங்கல் மலர் 1948)

Read more: http://viduthalai.in/page4/73573.html#ixzz2qK1YLYLn

தமிழ் ஓவியா said...


கும்பகோணம் மகாமகம் ஓர் எச்சரிக்கை


கும்பகோணத்தில் சுற்று வட்டாரத்தில் உள்ள கேடிகள், பிக்பாக்கெட்டுகள் ஒரு மாதத்துக்கு முன்னரே கை அரிக்குதம்மா என்று பேசிக் கொள்வார்களாம். லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடங்களில் இவர்கள் கை வரிசையைக் காட்டுவது சுலபமாயிற்றே...

மற்றும் கூட்டத்தைக் சாக்காக வைத்து பெண்களிடம் சில்விஷமம் செய்யும் இடி ராஜாக்கள்.

நன்றி: கல்கி 9.2.1992

Read more: http://viduthalai.in/page4/73574.html#ixzz2qK20YMeN

தமிழ் ஓவியா said...

செம்மொழித் தமிழில் சிரித்திடும் பொங்கல்!

-பகுத்தறிவுப் பாவலர் தென்மொழி ஞானபண்டிதன்

செங்கதிர் ஒளியில் திகழும் கீழ்த்திசை வங்கக் கடலலை வரிசையாய் வணங்கும்

பொங்கல் திருநாள்! பூமியின் பெருநாள்!

பசும்புல் குளிர்மை பாரெலாம் பரவச்

செம்மொழித் தமிழில் சிரித்திடும் பொங்கல்!

தமிழர் தம்மைத் தலைநிமிர்த் திடும் நாள்!

பெருமைக் குரியதாய்ப் பெரியார் உரைத்த

அமுதப் பொங்கல்! அனைத்துயிர்க் கெல்லாம்

இனியபுத் தாண்டின் இயற்கைப் பொங்கல்!

இன்பந் தரும்இப் பொங்கல் திருநாள்

உழவர் உழைப்பை உலகோர்க் குணர்த்திக்

கழனிச் செந்நெல் கரும்பு மஞ்சள்

விளைவைக் காட்டும் விடியல் பொங்கல்!

அழகுப் பெண்கள் குலவை ஒலிக்க,

பழகும் சிறுவர் முதியோர் பாட,

இளைஞர் வீரம் கவிஞர் வாழ்த்தக்

களைப்பெலாம் போக்கித் திளைத்திட வைத்தே

என்றும் மகிழ்வைத் தருவதால்

நன்றியின் பொங்கலை நாம்வாழ்த் துவமே!

Read more: http://viduthalai.in/page4/73574.html#ixzz2qK2BRjU4

தமிழ் ஓவியா said...


வைக்கம் போராட்டம் - சுயமரியாதை இயக்கத் தோற்றம்


தந்தை பெரியாரின் இப்பணிகளுக்கு ஈடு இணை ஏதுமில்லை

மும்பையில் ஆளுநர் சங்கரநாராயணன் கருத்துரை


மும்பை, ஜன.13- தீண்டாமையை எதிர்த்து வைக்கத்தில் பெரியார் நடத் திய போராட்டமும், சுயமரியாதை இயக்கத்தைஅவர் தோற்றுவித்ததும் சாதாரணமானவையல்ல - இவற்றிற்கு ஈடு இணை ஏதுமில்லை என்றார் மகா ராட்டிர மாநில ஆளுநர்.

மராட்டிய மாநிலத் தலைநகர் மும்பையில் 2013-ஆம் ஆண்டுக்கான சமூகநீதிக்கான கி.வீரமணி விருது வழங்கும் விழா 11.1.2014 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. மும்பை நகர், பிரபாதேவி பகுதி, சயானி மார்க்கில் அமைந்துள்ள ரவீந்திர நாட்டிய மந்திர் அரங்கத்தில் காலையில் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவிற்கு மராட்டிய மாநில ஆளுநர் மேதகு சங்கர நாரயணன் தலைமை வகித்து விருதினை வழங்கினார். திராவிடர் கழகத்தின் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி தொடக்க உரை யாற்றினார். விருதினை நிறுவிய அமெரிக் காவில் உள்ள பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் வரவேற்புரையாற்றினார். விருதினைப் பெற்றுக்கொண்ட மராட்டிய மாநில பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜகன் புஜ்பல் ஏற்புரை வழங்கினார்.

விருது வழங்கும் விழாவில் மராட்டிய மொழியில் முதல் முறையாக மொழி பெயர்க்கப்பட்ட பெரியார் ஈ.வெ.ராம சாமி - சரித்ர ஆத்மக் ஆலேக் (தந்தை பெரியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்) புத்தகம் வெளியிடப்பட்டது. பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பாக பிரசுரிக்கப்பட்ட புத்தகத்தினை மராட்டிய மாநில ஆளுநர் வெளியிட்டார்.

விழாவில் மராட்டிய மாநில சட்டமன்ற உறுப்பினர் பங்கஜ் புஜ்பல், நாடாளுமன்ற உறுப்பினர் சோனூர் புஜ்பல், பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் கழகத்தின் மேனாள் தலைவர் டாக்டர் காமோத் கைலாஷ் மற் றும் மராட்டிய மண்டல பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நிறுவனத்தின் மேனாள் தலைவர் பாபுசாகேப் புஜ்பல் ஆகியோர் பங்கேற்றனர்.

சமூக நீதிப்புரட்சியாளர்களுக்கு மரியாதை

விருது வழங்கும் விழா மேடையில் சமூக நீதிப் புரட்சியாளர்கள் சத்ரபதி சிவாஜி, மகாத்மா ஜோதிபா பூலோ, சாகுமகராஜ், சிறீ நாராயண குரு, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரது நிழற்படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தன. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர் சமூக நீதிப் புரட்சியாளர் படங்களுக்கு, மராட்டிய மாநில ஆளுநர் மேதகு சங்கர நாராயணன், தமிழர் தலைவர் கி.வீரமணி, மராட்டிய மாநில அமைச்சர் ஜகன்புஜ்பல் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

டாக்டர் சோம இளங்கோவன் வரவேற்புரை

சமூகநீதி விருது விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று அமெரிக்காவில் உள்ள பெரியார் பன்னாட்டு மய்யத்தில் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் பேசினார். தமது வரவேற்புரையில் அவர் குறிப்பிட்டதாவது:


தமிழ் ஓவியா said...

சமூகநீதி என்பது அன்னையர் அன் பினை போன்றது. தமது குழந்தைகளை விரும்பாத தாயைக் காண முடியுமா? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட திருக்குறள், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என சமத்துவத்தை, சமூகநீதியை எடுத்துக்கூறுகிறது. இந்திய தாய்நாடு தனது குடிமக்கள் அனைவரையும் சமமாக பாவித்திட வேண்டும். நலமாக இருக்கும் குழந்தை அனைத்துவித சத்துணவு களையும் பெறும் பொழுது, பிற பிள்ளைகள் உணவின்றி, பட்டினியால் வாடும் நிலை நிலவு கிறது. மேலும் அப்படி வளரும் குழந்தை வெறுக்கப்படும் சூழலும் கூடுதலாக நிலவு கிறது.

சமூக நிலையில் நிலவிய இந்த பாகு படுத்தலை களைந்திட, மகாத்மா ஜோதிபா பூலே, சாகுமகராஜ், சிறீ நாராயண குரு, பாபா சாகிப், அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியார் ஆகியோர் போராடினர். சமூக அநீதிக்கு ஆதாரம் சேர்த்திட வல்ல மூட நம்பிக்கை ஒழிப்பிற்கான தனிச்சட்டம் கொண்டு வந்த மராட்டிய மாநில மக்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தந்தை பெரியாரின் கொள்கை வழித் தோன்றல் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களது பெயரில் சமூகநீதி விருது, பெரியார் பன்னாட்டு மய்யத்தால் நிறுவப்பட்டு, கடந்த காலங்களில் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங், சந்திரஜித் யாதவ், சீதாராம் கேசரி, நீதியரசர் பி.எஸ்.ஏ.சுவாமி, கலைஞர் மு.கருணாநிதி மற்றும் மலேசியா, மியான்மர், துபாய், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வாழும் சமூக நீதிப்போராளி களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2013-ஆம் ஆண்டுகள் சமூகநீதிக்கான வீரமணி விருது மராட்டிய மாநில அமைச்சர், சமூகநீதிப் போராளி ஜகன் சந்திரகாந்த் புஜ்பல் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. பூலே மற்றும் மண்டல் ஆகிய சமூகநீதி சக்திகளின் வளர்ப்பாக புஜ்பல் விளங்குகிறார். இந்நாட்டு மக்களிடம் சமத்துவம், சமத்துவ வாய்ப்பினை உருவாக்கிடும் சமூகநீதிக்காக போராடிய பணியில் முக்கிய தளகர்த்தர் புஜ்பல் ஆவார். இந்தியாவில் ஜாதி ஒழிக்கப்படும் நாளே சமூகநீதி வெற்றி பெற்ற நாளாகும். அதற்கு நாம் அனைவரும் இணைந்து போராடுவோம். இதில் உங்கள் பங்கு சிறப்பாக அமைந்திட வேண்டும்.

அவருக்கு சமூகநீதிக்கான வீரமணி விருதினை வழங்கிடுவதில் பெரியார் பன்னாட்டு மய்யம் பெருமை கொள்கிறது. விருது வழங்கும் இந்த விழாவிற்கு வருகை தந்துள்ள அனைத்துத் தரப்பினரையும் வரவேற்று மகிழ்கிறோம்.

தமிழர் தலைவரின் உரை

தமிழர் தலைவர் கி.வீரமணி, சமூகநீதி விருது வழங்கப்படுவதற்கு முன்னர் தொடக்க உரையில் குறிப்பிட்டதாவது.

இந்த நாளை வரலாற்றுச் சிறப்புமிக்கதாகக் கருதுகிறேன். நான் மிகவும் மரியாதைக்கு உரிய நிலைக்கு ஆட்படுத்தப்படுகிறேன். என்னைப் பொறுத்த அளவில் பணிவுடனும், அடக்கத்துட னும் இருக்கவே விரும்புகிறேன். நான் என்றைக்கும் பெரியாரின் தத்துவத்தைப் பயிலும், நடைமுறைப் படுத்தவிழையும் ஒரு மாணவன்தான். தமிழ்நாட் டின் சமூக நிலையினை முற்றிலும் மாற்றிய தலைவர் தந்தை பெரியார் ஆவார். அரசியல் அதிகார மாற்றத் திற்காக மட்டும் தந்தை பெரியார் பாடுபடவில்லை. சமூகத்தில் அடக்கு முறைக்கு ஆட்படுத்தப்பட்டு வந்த மக்களிடம் அதிகாரம் செல்லுகின்ற வகையில் மாற்றத்தினை ஏற்படுத்திய புரட்சியாளர் தந்தை பெரியார்.

தமிழ் ஓவியா said...

மராட்டிய மாநிலம், வீரம் விளைவித்த சத்ரபதி சிவாஜி பிறந்த மண். சமூகநீதிக்குப் பாடுபட்ட மகாத்மா ஜோதிபா பூலே வாழ்ந்திட்ட மண். ஒரு காலத்தில் சமூக அநீதி நிலவிய பூமி இது. சத்ரபதி சிவாஜிக்கு ஏற்பட்ட அநீதி உலக வரலாற்றில் எங்குமே காணமுடியாத அடக்கு முறை நிலை யாகும். போரில் வெற்றி பெற்ற சத்ரபதி சிவாஜிக்கு மன்னராக மகுடம் சூட்டிக்கொள்ளும் உரிமை மதவாதிகளால் மறுக்கப்பட்டது. வரலாற்று அறிஞர் ஜாடுநாத் சர்க்கார். அப்பொழுது நிலவிய நிலைமையை சரியாக பதிவு செய்துள்ளார். தந்தை பெரியாரின் முதன்மை மாணாக்கரும், தமிழ்நாட் டின் மேனாள் முதலமைச்சருமான அறிஞர் அண்ணா அவர்கள் சத்ரபதி சிவாஜிக்கு நேர்ந்த கொடுமையினை சிவாஜி கண்ட இந்து சாம் ராஜ்ஜியம் என நாடகமாக வடித்தார், தமிழ் நாட்டில் அதன் மூலம் ஓர் எழுச்சி உருவானது. இந்திய நாடு கண்ட முதல் மகாத்மா, ஜோதிபா பூலே ஆவார். சமூகநீதிக்கு உழைத்த அந்த மாபெரும் புரட்சியாளர் பிறந்த பகுதியிலிருந்து இன்று சமூக நீதி விருது வழங்கப்பட இருக்கின்ற அமைச்சர் ஜான் புஜ்பல் உருவாகி உள்ளார். நாட்டில், சமூக உரிமைக்கு உழைத்த புரட்சியாளர்கள் பலராயினும் அவர்கள் அனைவரும் ஒரே சமூக நீதி நாணயத்தின் பல பக்கங்களாக இருந்து போராடி வந்துள்ளனர்.

விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றுகிறார். மேடையில் மேதகு ஆளுநர் கே.சங்கரநாராயணன், மாநில அமைச்சர் ஜெகன் புஜ்பல் (விருது நாயகர்), டாக்டர் சோம.இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர் பங்கஜ் புஜ்பல், நாடாளுமன்ற உறுப்பினர் சோனூர் புஜ்பல், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கழகத்தின் மேனாள் தலைவர் டாக்டர் காமோத் கைலாஷ், மராட்டிய மண்டல பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நிறுவனத்தின் மேனாள் தலைவர் பாபுசாகேப் புஜ்பல் மற்றும் மராட்டிய மாநில அரசின் கூடுதல் செயலாளர் அன்பழகன் அய்.ஏ.எஸ். ஆகியோர் உள்ளனர்.


தமிழ் ஓவியா said...


இன்று சமூகநீதி விருதினை வழங்கிட உள்ள மராட்டிய மாநில ஆளுநர் 1965-ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியாருக்கு அவர்தம் இயக்கத்திற்கு அறிமுகமானவர். சமூகநீதிக் களத்தில் பாடுபட்டவர். 1924-ஆம் ஆண்டு கேரள மாநிலம் வைக்கத்தில் நடைபெற்ற மனித உரிமைப் போருக்கு அடிப்படை - ஈழச் சமுதாயத்தைச் சார்ந்த வழக்குரைஞர். டி.கே.மாதவா அவர்கள் கோயிலைச் சுற்றியுள்ள தெருவின் வழியாக நடந்து நீதிமன்றத்திற்குச் சென்று தனது பணியினை ஆற்ற உரிமை மறுக்கப்பட்ட போது, தந்தை பெரியார் தலைமையில் வைக்கம் போராட்டம் வெற்றி கண்டது. அந்த வழக்குரைஞர் டி.கே.மாதவா பெயரால் ஏற்படுத்தப்பட்ட கேரள மாநிலம், மாவேலிக்கரா அருகில் உள்ள நங்கியார் குளக்கராவிற்கு 1965-ஆம் ஆண்டில் தந்தை பெரியார் அழைக்கப்பட்டிருந்தார். உடன் சென்றிருந்தோம். அன்றைய கேரள முதல்வர் சங்கர் அவர்களுடன் கேரள மாநில ஆளும் கட்சியான காங்கிரசு இயக்கத்தின் அன்றைய தலைவரான இன்றைய மராட்டிய மாநில ஆளுநர் சங்கர நாராயணன் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். சமூகநீதியில் ஆழ்ந்த பற்றுகொண்டவர், இன்று நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துள்ள ஆளுநர் சங்கர நாராயணன் அவர்களாவார்.

சமூகநீதியை வென்றெடுக்க கடந்த காலங்களில் களங்கள் பல கண்டுள்ளோம்; வெற்றியும் பெற் றுள்ளோம். சமூக நீதிக்காக போராடிய களங்கள் மாறி மாறி வந்துள்ளன. ஆனால் அதற்கான போர் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. (றந யஎந றடி அயலே யெவவடநள, ரெவ வாந றயச ளவடைட உடிவேரேநள) அனைவருக்கும் சம உரிமை என்பது அடிப்படை உரிமை. சமூகநீதித்தளத்தில் நாம் உரிமை கோரிப் போராடுவது இந்திய அரசமைப்புச் சட்டத்தினை மீறிய செயல் அல்ல. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள சமூகநீதிக்காகத் தான் போராடி வருகிறோம். மகாத்மா ஜோதிபா பூலே, சீறி நாராயணகுரு, சாகுமகராஜ், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போட்டுத்தந்த பாதையில் சமூகநீதியினை வென்றெடுக்கப் போராடி வருகிறோம்.

இந்த விழாவில் மேடையில் அமர்ந்துள்ளவர் களைப் பார்க்கும் பொழுது இந்த சமூகநீதிக் கூட்டணி மாநில எல்லைகளைக் கடந்துள்ளது என்பது விளங்கும். இன்னும் சொல்லப் போனால் நாட்டு எல்லைகளையும் கடந்து உள்ளது. ஆம்; இது பன்னாட்டு பங்கேற்பு கொண்ட சமூக கூட்டணி ஆகும். நினைத்தோம்; செயல்படுகிறோம் என்ற நிலை அணுகுமுறை கொண்டவர்கள் அல்ல நாம்; தத்துவார்த்த அடிப்படையில் செயல்பாடுகளை மேற்கொண்டுள்ள அணுகுமுறையாளர்கள் நாம். தொடர்ந்து விழிப்புணர்வுடன் முழுமையாக இருந்து நாம் செயல்படுவதே உண்மையான சமூக விடுதலைக்கு நாம் கொடுக்கும் விலையாக இருக்க முடியும். (நுவநசயேட ஏபைடையஉந ளை வாந யீசஉந றந யஎந வடி யீயல கடிச வாந கசநநனடிஅ யெஉமநன றவை ளுடிஉயைட துரளவஉந) அத்தகைய விழிப்புணர்வுடன் இருந்து போராட்டக் களங்களில் ஒருங்கிணைந்த செயல்பட்டு சமூக நீதியினை வென்றெடுப்போம்!

- இவ்வாறு தமிழர் தலைவர் தமது துவக்க உரையில் குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...

மராட்டிய மொழியில் முதன்முறையாக தந்தை பெரியாரின் வாழ்க்கைக் குறிப்புகள் புத்தகம் வெளியீடு

தந்தை பெரியாரின் வாழ்க்கைக் குறிப்புகள் (டுகைந ளுமநவஉ டிக ஞநசலையச) புத்தகம் முதன் முறையாக மராட்டிய மொழியில் மாற்றம் செய்யப்பட்டு பெரியார் ஈ.வெ.ராமசாமி - சரித்ர ஆத்மக் ஆலேக் எனும் தலைப்பில் சமூகநீதிக்கான வீரமணி விருது வழங்கப்படும் விழாவில் வெளியிடப்பட்டது.

பெரியார் ஈ.வெ.ராமசாமி - சரித்ர ஆத்மக் ஆலேக் புத்தகத்தினை மராட்டிய மாநில ஆளுநர் சங்கரநாராயணன் வெளியிட முதல் நூலினை விருது பெறும் நாயகர் மராட்டிய மாநில அமைச்சர் ஜகன் புஜ்பல் பெற்றுக் கொண்டார்.

சமூக நீதிக்கான வீரமணி விருது வழங்கல்

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பெரியார் பன்னாட்டு மய்யம் வழங்கிடும் 2013-ஆம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான வீரமணி விருது (மு.ஏநநசயஅய ஹறயசன கடிச ளுடிஉயைட துரளவஉந) வழங்கப்பட்டது. மராட்டிய மாநில ஆளுநர் சங்கரநாராயணன் சமூகநீதி விருதினை சமூகநீதிப் போராளியும், மராட்டிய மாநில அமைச்சருமான ஜகன் புஜ்பல் அவர்களுக்கு வழங்கினார். விருதுப் பட்டயத்தினையும், ரூபாய் ஒரு லட்சம் விருது தொகையினையும், விருது நாயகர் ஜகன் புஜ்பல் அவர்களுக்கு வழங்கினார். அரங்கத்தில் அமர்ந் திருந்த மராட்டிய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளி ருந்தும் வருகை தந்திருந்த அனைவரும் எழுந்து நின்று மகிழ்ச்சியினையும், வாழ்த்துகளையும் தங் களது கரவொலி மூலம் தெரிவித்துக் கொண்டனர்.

தமிழ் ஓவியா said...

மராட்டிய மாநில ஆளுநர் மேதகு சங்கரநாராயணன் உரை

சமூகநீதி விருது வழங்கிய விழாவின் நிறைவுரை யினை மராட்டிய மாநில ஆளுநர் மேதகு சங்கர நாராயணன் வழங்கினார். அவர் தமது உரையில் குறிப்பிட்டதாவது.

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற, போற்றத் தக்க தலைவராக தந்தை பெரியார் விளங்குகிறார். தந்தைப் பெரியாரின் சமுதாயப் பங்களிப்பில் காலத்தையும் தாண்டிய அவரது பெருமையினை பறைசாற்றிக் கொண்டிருப்பது இரண்டு நிகழ்வுகள்; கட்டம் ஒன்று 1924-25 ஆண்டுகளில் கேரள மாநிலம் வைக்கம் போராட்டத்திற்கு தலைமையேற்று கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் அனைத்து மக்களும் நடந்து செல்லும் மனித உரிமையினைப் பெற்றுத் தந்தது. அடுத்த கட்டம் 1925 ஆண்டில் சுயமரியாதை இயக்கத்தினை நிறுவியது. தந்தை பெரியாரைப் போன்று யாருமே சமுதாயப் பணி ஆற்றியது இல்லை. சமுதாயத்தின் அடித்தளத்தில் வாழ்ந்த மனிதருக்கும் தன்மானம், சுயமரியாதை யினை உணர்வினை ஊட்டியவர் தந்தை பெரியார்.

இன்று வழங்கப்பட்ட சமூகநீதி விருதின் பெயரில் உள்ள டாக்டர் கி.வீரமணி அவர்களை பல ஆண்டு காலமாகவே அறிவேன். தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை, அர்ப்பணிப்பு உணர்வோடு. மேற்கொண்டு சமுதாயப்பணி ஆற்றி வருகிறார்.

விருது வழங்கப்பட்ட நாயகர் அமைச்சர் ஜகன் புஜ்பல் ஒரு சிறந்த சமூகநீதிப் போராளி. மக்களின் நாடியை உணர்ந்து பணியாற்றுபவர். பட்டறிவு மிக்க, ஆளுமை கொண்டவர்; மராட்டிய அரசின் அமைச்சர் ஆவர். மராட்டிய மாநிலத்தின் நாசிக், பூனா, மும்பாய் மற்றும் பிற பகுதிகளில் அவர் ஆற்றிவரும் மக்கள் நலம் சார்ந்த பணிகளை நேரடியாக நான் அறிவேன். அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாடு மற்றும் நல் வாழ்விற்கான தெளிவான சிந்தனை, செயல்பாடு கொண்டவர் அமைச்சர் ஜெகன் புஜ்பல். புஜ்பல் அவர்கள் சமூக நீதித்தளத்தில் மிகுந்த மரியாதையும், தொண்டர் பலமும் கொண்ட போராளி. மாநில எல்லைகளையும் தாண்டி செயல்படுகின்றவர். மிகவும் பொருத்தமானவருக்கு, மரியாதைக்குரிய சமூகநீதிக்கான வீரமணி விருது வழங்கப்பட்டு உள்ளது. எனது வாழ்த்துதலை அமைச்சர் புஜ்பல் லுக்குத் தெரிவித்து கொள்கிறேன்.

மராட்டியம் மாநிலம் சமூக சீர்திருத்தத்தில் பாரம்பரியம் மிக்கது. மகாத்மா ஆகியோர் ஜோதிபா பூலே, சாவித்திரிபாய் பூலே, சாகு மகராஜ், டாக்டர் அம்பேத்கர், மகரிஷி கார்வே, கடும் பணிகளை மேற்கொண்டு மக்களின் மனப்பாங்கினை மாற்றி அவர்களின் மேம்பாட்டுக்கு பாடுபட்ட தலைவர் கள் ஆவர். தந்தை பெரியார் தலைமையில் எனது அரசியல் ஆசான் காமராசர் மற்றும் சி.என்.அண்ணா துரை ஆகியோர் சமூகநீதிக்காக தமிழ் நாட்டில் பாடுபட்டு வந்தனர்.

இந்திய நாடு வளர்ந்து விட்ட நாடு என கூறப் பட்டாலும் வளர்ச்சி என்பது மேலும் தொடர வேண்டிய நிலை நீடிக்கிறது. மக்களின் உளப்பாங்கு, மனநோக்கத்தினை மாற்றம் காணச் செய்திருப்பதில் பன்னெடும் தூரம் பயணப்பட வேண்டியுள்ளது. சமூக அநீதி உணர்வுகள் இன்னும் ஆதிக்கவாதி களிடம் ஆழமாக வேரூன்றி உள்ளது. அவைகள் வெகு விரைவில் மறைந்திட வேண்டும். உலக மயமாக்கப் பணியின் விளைவுகள், பெரும்பான்மை மக்களிடம் சென்று சேரவில்லை. தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களிடம் குறிப்பாகச் சென்றடைய வில்லை. ஏழை - பணக்காரன் இடைவெளி மேலும் பெருகமடைந்து உள்ளது. படிப்பறிவின்மை, பசி, சுரண்டல் ஆகிய நிலைகளிலிருந்து, புதிய பொருளா தாரச் சூழல்களிலிருந்து மக்களைக்காத்து மேம் படுத்த வேண்டிய பணி நமக்கு உள்ளது. பிற்போக்குத் தன்மை வாய்ந்த, சமுதாயத்தில் சமத்துவமின்மை யினை வலியுறுத்தி நீடித்திடச் செய்யும் ஆன்மீகச் சக்திகளிடமிருந்து வெகு மக்களைக் காத்திட வேண்டும். சமூகநீதித் தளத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்திட வேண்டும்.

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகம் போன்ற இயக்கங்கள் சமூக, பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களின் உரிமை நிலைநாட்டலுக்கு மேலும் பாடுபட வேண்டும். நம்மிடையே வாழ்ந்து வரும் மனிதர்களில் மகத் தானவர் கி.வீரமணி ஆவார். டாக்டர் கி.வீரமணிக்கு எங்களின் வாழ்த்துக்கள் எப்பொழுதும் உண்டு. உலக அரங்கில் பெரியாரின் தத்துவங்கள், பெரியா ரின் பற்றாளார்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். பெரியார் பன்னாட்டு மய்யத்தின் பணி பாராட்டுக் குரியது - இவ்வாறு மராட்டிய மாநில ஆளுநர் தமதுரையில் குறிப்பிட்டார்.

விழாவின் நிறைவாக மராட்டிய மாநில அரசின் தொழிற்வளர்ச்சிக் கழகத்தின் கூடுதல் செயலாளர் அன்பழகன் அய்.ஏ.எஸ். அவர்கள் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளில் மய்ய ஆற்றலாக விளங்கினார்.

விழாவிற்கு, மும்பை மற்றும் மராட்டிய மாநிலத் தின் பல பகுதிகளிலிருந்தும் பெருந்திரளாக மக்கள் வருகை தந்திருந்தனர். மும்பை வாழ் தமிழ்க் குடும்பத் தினர் மிகப்பலர் வந்திருந்தனர். அரங்கத்தில் தரைத் தளம், முதல் தளம் இருக்கைகள் நிரம்பி, வெளியி லும் பலர் விழா நிகழ்ச்சிகளை நின்று கொண்டு பார்த்து கேட்டனர்.

விருது வழங்கிடும் விழா ஏற்பாடுகளை மும்பை பகுத்தறிவாளர் கழகத்தின் அமைப்பாளர் அ.ரவிச்சந் திரன், தமிழ் லெமூரியா இதழின் முதன்மை ஆசிரியர் அ.குமணராசன், மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன் மற்றும் தோழர்கள் பலர் உறு துணையாக இருந்து கவனித்தார்.

நம்மிடையே வாழ்ந்து வரும் மிகச்சிறந்த மனிதர்களுள் ஒருவர் கி.வீரமணி: ஆளுநர் சங்கரநாராயணன்

விழா தொடங்குவதற்கு முன்பு மராட்டிய மாநில ஆளுனரின் வருகைக்காக அனைவரும் காத்திருந்தனர். வருகை தந்த மேதகு ஆளுநர் சங்கரநாராயணன் விழா மேடைக்குச் செல்வதற்கு முன்னர் மேடைக்கு அருகில் உள்ள அறையில் அமர்ந்திருந்த தமிழர் தலைவரைச் சந்திக்க வந்தார். தமிழர் தலைவர் அவருக்கு வணக்கம் தெரிவித்து, தந்தை பெரியார் பங்கேற்று, இன்றைய ஆளுநர் அப்பொழுது கலந்து கொண்ட நிகழ்வுகளைக் குறிப்பிட்டு பேசும் பொழுது, ஆளுநரை எப்படி இருக்கிறீர்கள்? நினைவிருக்கிறதா? என தமிழில் கேட்டார். ஆளுநரும் உடனே சரளமாக, மலையாள தொனியுடன் கூடிய தமிழில் அதை எப்படி மறக்க முடியும்? நன்றாக நினைவிருக்கிறது என உணர்ச்சி பூர்வமாக பதிலளித்தார். தனிப்பட்ட உரையாடலாக நடைபெற்ற இந்த நிகழ்வினை பின்னர் மேடையில் ஆளுநர் தமது உரையில் குறிப்பிட்டார். ஆங்கிலத்தில் உரையாற்றிய ஆளுநர் இந்த வரிகளை மட்டும் தமிழில் கூறினார்.

டாக்டர் கி.வீரமணியை சற்று முன்பு சந்தித்த பொழுது நினைவிருக்கிறதா? எனக்கேட்டார். நீங்கள் எளிதில் மறக்கப்படக் கூடியவரா? உங்களை போன்ற நல்ல மனிதர்களை எப்படி மறக்க முடியும்? மோசமான மனிதர்கள் தான் நினைவில் நிற்க மாட்டார்கள். உங்களை எப்படி மறக்க முடியும்? எனக்கூறினார், நம்மிடையே வாழ்ந்து வரும் மிகச்சிறந்த மனிதர்களுள் ஒருவராக கி.வீரமணி விளங்குகிறார்.

- இவ்வாறு ஆளுநர் குறிப்பிட்டதும் அரங்கத்தில் அமர்ந்திருந்த அனைவரின் கரவொலியும் சற்று பலமாகவே ஒலித்தது.

Read more: http://viduthalai.in/e-paper/73595.html#ixzz2qK2bpi00

தமிழ் ஓவியா said...


நல்ல பணியை...

மனிதர் செத்துப் போனார் என்றால், சத்துப் போனது என்பதுதான் பொருள். செத்துப் போனவர்-களைப்-பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டு இல்லாமல், அவர் செய்த நல்ல பணியை, வழியை நாமும் மேற்-கொள்ள -வேண்டும் என்பதுதான் முறை.

- (விடுதலை, 23.1.1964)

Read more: http://viduthalai.in/page-2/73611.html#ixzz2qK3OhzLl

தமிழ் ஓவியா said...


பொங்கற் புதுநாளில் உங்கள் தொண்டு என்ன?

பொங்கற் புதுநாள் எங்கள் திருநாள் என்று சொல்லுகின்றான் தி.க. தொண்டன்.

அவ்வாறு சொல்லும் தகுதி அவனுக்குத்தான் உண்டு. மற்றவர்கட்கு இல்லை.

தி.க. தொண்டன் தான் உண்மைத் தமிழன்; அவனிடந்தான் தமிழ்த் தன்மை மிளிர்கின்றது. அவன்தான் கறைபடுத்தப்பட்டு வரும் தமிழ்த் தன்மைகளைக் கறை நீக்கி, நிலைநிறுத்த அல்லும் பகலும் பாடுபட்டு வருகின்றான்.

தமிழ்நாட்டைத் தமிழன் அடைய வேண்டும் என்று எண்ணுகின்றவன் வேறு எவன்? தமிழ்மொழி வாழ வேண்டும். இந்தி தொலைய வேண்டும் என்று உயிரைப் பணயம் வைத்துப் போரில் இறங்க எவன் முன் வருகின்றான்?

சாதி ஒழிய வேண்டும்; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று இறப்பு வரும் நேரத்தும் இன்னா நேரும் நேரத்தும் இயம்புவோன் தி.க. தொண்டனைவிட வேறு எவன் உள்ளான்? எங்கே பார்க்க முடிகின்றது?

பொங்கற் புது நாளைச் சிறப்பிக்க வேண்டிய பொறுப்பு அவன் தலையில் தான் விழுந்துள்ளது.

தமிழர் திருநாளைத் தமிழன் சிறப் பிப்பது என்றால் என்ன? தமிழர் திரு நாளைத் தமிழன் கொண்டாடுவதென் றால் என்ன? தமிழர் எண்ணத்தைத் தமிழர் செயல்களைத் தமிழர் ஆசை களைச் சிறப்புறச் செய்வதே அன்றோ?

இனித் தி.க. தோழர்களை, தி.க.. தலைவர்களை நான் கேட்கின்றேன். பொங்கல் நாளில் என்ன செய்யப் போகின்றீர்கள் என்று.

நேற்றுத் தி.க. கொள்கைகளை ஆய்ந்தீர்கள்; நேற்றுச் சொற் பெருக்காற் றினீர்கள், நேற்றுப் பாடினீர்கள் நாட்டுப் பாட்டு. பொங்கல் புதுநாளில் - உங்கள் திருநாளில் என்ன செய்யப் போகின் றீர்கள் சிறப்பாக?

மாவட்டத் தலைவர்கட்குக் கூறு கின்றேன்; ஒரு மாவட்டத்தில் - எங்கும் ஆயிரம் கழகக் கொடி ஏற்றப்படுதல் வேண்டும்.

ஒரு மாவட்டத்தில் - எங்கும் ஆயி ரம் விடுதலை பரப்பப்படுதல் வேண்டும்.

ஒரு மாவட்டத்தில் - எங்கும் ஆயிரம் கழக நூற்கள் பரப்பப்படுதல் வேண்டும்.

ஒரு மாவட்டத்தில் எங்கும் ஆயிரம் புதிய உறுப்பினர் சேர்க்கப்படுதல் வேண்டும்.
இவ்வாறு செய்க!

சோம்பல் என்னும் பள்ளத்தைத் தூர்க்க, உள்ளத்திற் காண்க தமிழர் திருநாள் தரும் பேரின்பத்தை.

- புரட்சிக் கவிஞர்
(குயில், கிழமை இதழ், 30.12.1958 ப.2)

Read more: http://viduthalai.in/page-2/73615.html#ixzz2qK3ZByWV

தமிழ் ஓவியா said...

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் தமிழ்ப் புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்து

தைத்திங்கள் முதல்நாள்! தமிழ்ச் சமுதாயத்தின் தன்னிகரற்ற பண் பாட்டுத் திருநாளாம் பொங்கல் நன்னாளுடன் தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளையும் இணைத்துக் கொண் டாடி மகிழும் அறிவார்ந்த தமிழ்ச் சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

பொங்கல் திருநாள் அறுவடைத் திருநாள்! உழுது பயிரிட்டு வளர்த்துப் பாதுகாத்து, அறுவடை செய்து, அனைவரும் வயிறார உண்ண உணவு தரும் விவசாயப் பெருங்குடி மக்களின் நலமும் வளமும் கருதி, திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்த காலங்களில் விவசாயத் தொழி லாளர்கள் குடியிருக்கும் வீட்டுமனை களை அவர்களுக்கே சொந்தமாக்கும் குடியிருப்பு அனுபோகதாரர்கள் உரிமைச் சட்டம்! விவசாயப் பம்ப் செட்டுகளுக்கு இலவச மின்சாரம்! உழுவோர்க்கும் நுகர்வோர்க்கும் பெரும் பயன்தரும் உழவர் சந்தை! 7000 கோடி ரூபாய்க் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி! வட்டியில்லாப் பயிர்க் கடன்! பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் செலுத்த வேண்டிய 50 விழுக்காடு காப்பீட்டுத் தொகையை அரசே செலுத்தும் திட்டம் என நிறைவேற்றப்பட்ட இந்தியாவின் இதர மாநிலங்களுக்கும் வழிகாட்டும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பல்வேறு திட்டங்களையும், அவற்றால் தமிழக விவசாயக் குடும் பங்கள் அடைந்த பயன்களையும் இத்திருநாளில் எண்ணி மகிழ்கிறேன்.

ஆனால், இன்று தமிழகத்தில் அமைந்துள்ள தமிழ்இன விரோத ஆட்சி, தமிழ்ச் சமுதாய முன்னேற்றம் கருதி கழக ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட பல திட்டங்களை - அதன் அடையாளங்களை அழிப்ப தில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதை என்னால் சகித்திட முடிய வில்லை.

# கடற்கரை காமராசர் சாலை யில் அண்ணா ஆட்சியில் அமைக்கப் பட்ட தமிழனின் பண்பாட்டுச் சின்னம் கண்ணகி சிலை 2002இல் அகற்றப்பட்டது; 2006இல் கழக அரசு மீண்டும் அமைந்த பின்னர்தான் அச்சிலை அதே இடத்தில் மறுபடியும் நிறுவப்பட்டது;

# அன்றும் இன்றும் சென்னை, வள்ளுவர் கோட்டத்தைச் சீரழிக்கும் செயல் தொடர்கிறது;

# குமரி முனையில் கண்டோர் வியக்க 133 அடி உயரத்திற்கு நாம் நிறுவிய அய்யன் திருவள்ளுவர் சிலை பராமரிக்கப்படுவதில் மெத்தனம் காட்டப்படுகிறது;

# சமச்சீர் கல்வித் திட்டத்தை சீர்குலைக்க முனைந்து - அத்திட்டப் பாடநூல்களில் அச்சிடப்பட்டிருந்த அய்யன் திருவள்ளுவர் படங்களை மறைத்து, தாள்கள் ஒட்டப்பட்ட கொடுமையும் நிகழ்ந்தது;

# தென்தமிழ்நாட்டு மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் என நூறாண்டு காலத் திற்கு மேல் முயன்று பாடுபட்டு, மத்திய அரசுடன் போராடி, அனுமதி பெற்று ரூ.2,427 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றத் தொடங்கி, ஏறத்தாழ 60 விழுக்காடு பணிகள் நிறை வுற்றிருந்த நிலையில், கழக அரசு காலத்தில் நிறைவேற்றப்படுகிறதே என்ற வயிற்றெரிச்சலால், ராமர் பாலம் எனும் பிரச்சினையை எழுப்பி, அத்திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது;

# உலகச் செம்மொழிகளில் - இன்றும் வாழும் மொழியாக விளங்குவது பழைமையும், இலக்கிய வளமும் கொண்ட தமிழ்மொழியே என உலக அறிஞர்கள் பலர் கூறி வந்த நிலையில்; நூறாண்டுகளுக்கும் மேலாக, தமிழுக்குச் செம்மொழித் தகுதி வழங்கிட வேண்டுமென்ற கோரிக்கையை நிறைவேற்றிட வேண்டுமென்று வலியுறுத்தி, மத்திய அரசிடம் ஆணை பெற்றதைப் பொறாது, செம்மொழித் தமிழின் பெருமைகள் மேலும் மேலும் பெரு கிட, கோவையில் 2010 சூன் திங்களில் கழக அரசு எடுத்த செம்மொழி மாநாட்டின் தொடர்ச்சியாக சென் னையில் அமைக்கப்பட்ட செம் மொழிப் பூங்காவின் பெயரும் அதன் அழகும் குலைக்கப்பட் டுள்ளன;

# கோவை செம்மொழி மாநாட்டில் அறிவிக்கப்பட்ட ஐந்திணை மரபணுப் பூங்காக்கள் அமைக்கப்படவில்லை; ட சென்னையில், தொல்காப் பியப் பூங்கா பராமரிப்பு புறக்கணிக் கப்பட்டுள்ளது;

# மைசூரில் இருந்து சென் னைக்கு மாற்றப்பட்டுச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த செம் மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளது;

# வேளாண்மை நாளுக்கு நாள் குன்றி வருகிறது; நெல்லுக்கும் கரும்புக்கும் நியாயவிலை இல்லை; வறட்சியில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்குப் பயிர்க் காப்பீட் டுத் தொகை வழங்கப்படவில்லை.

# விவசாயம் செய்ய முடிய வில்லையே என விவசாயிகள் குமுறும் நிலை ஏற்பட்டுள்ளது; விலைமதிப்பற்ற நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகள் பல கொண்ட பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகத்தைச் சின்னாபின்னம் செய்தமை;

தமிழ் ஓவியா said...


# தமிழ்ப் பண்பாட்டுப் பெருமை விளங்க, 2009ஆம் ஆண்டு முதல், தைத் திங்கள் முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு எனச் சட்டமியற்றி, நடைமுறைப் படுத்திய கழக அரசின் முத்திரைச் சாதனை மாற்றப்பட்டது;

# அரசுத் தொடக்கப் பள்ளி களில் தமிழ் பயிற்சி மொழியின் அவசியத்தை அலட்சியம் செய்து, ஆங்கில வழிக் கல்வியைப் புகுத்து கின்றமை;

# கழக அரசு அறிமுகப்படுத் திய, தமிழ் வழியிலான பொறியியல் கல்வியைப் பயின்றோர்க்கு வேலை வாய்ப்பு நல்குவதை உதாசீனப் படுத்துகின்றமை;

# கழக அரசு நிர்மாணித்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஒளி குன்றச் செய்து, அதன் எழிலைச் சிதைத்துள்ளமை;

# தமிழகத்தின் பெருமை விளங்க இரண்டாண்டு காலம், இரவுபகல் பாராமல், பார்த்து பார்த்து உருவாக் கிக் கட்டிய புதிய தலைமைச் செயலக, சட்டமன்ற கட்டடத் தினை மருத்துவமனையாக மாற்றிட மேற்கொண்டுள்ள அடாவடித்தனம் மற்றும் அந்த மருத்துவமனைக்குத் தேவையான மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கும் நியமனம் செய்வதில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படாது என அறிவித்து ஆணை பிறப்பித்துள்ள சமூகநீதிக்கு எதிரான சதிவேலை;

# மத்திய அரசுடன் மட்டுமல் லாமல், அண்டை மாநில அரசுகளு டனும் மோதல் போக்கினைக் கடைப்பிடித்து, தமிழ் மக்களுக்கும் - தமிழகத்திற்கும் பயனளிக்கக் கூடிய பல திட்டங்களை தொடர்ந்து தடுத்து வருகின்ற வேதனைகள்;

# மத்தாப்பு வெடிகளைப் போல், தினம் தினம் அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டு; அவற்றை நிறைவேற்றுவதற்கு உரிய முயற்சிகள் மேற்கொள்ளாமல் - கழக ஆட்சி காலத்தில் அனுமதிக்கப்பட்டு கட் டப்பட்ட கட்டடங்கள், பாலங்கள் ஆகியவற்றின் திறப்பு விழாக்களை மட்டும் காணொலி காட்சி வாயிலாக இருந்த இடத்தில் இருந்தபடியே திறந்து வைத்து, மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

- அ.தி.மு.க. அரசின் திராவிட இயக்கத்தின் அடிப்படை இலட்சியங் களுக்கு எதிரான இத்தகைய நேர்மையற்ற அராஜகச் செயல்களால், தொழில்வளம் விவசாயம் - நெசவுத் தொழில் முதலிய அனைத்துத் துறைகளும் நலிவடைந்து தமிழகம் சமூக, பொருளாதார நிலைகளில் பின்னடைவுகளைச் சந்தித்து வருகின் றது.

தமிழகம் சந்தித்து வரும் பின்ன டைவுகளுக்கும், தமிழகத்தில் அனைத்து வகைப் பொருள்கள்மீதும் விஷம்போல் ஏறியுள்ள விலைவாசிக் கொடுமைகளால் மக்கள் பட்டுவரும் அல்லல்களுக்கும், மத்திய அரசும் - தி.மு.க.வுமே காரணம் எனக் கூறி, தமிழக மக்களை இன்றைய ஆட்சி கடந்த மூன்று ஆண்டுகளாக ஏமாற்றி வருகிறது.
இந்த ஏமாற்றுக்காரர்களின் முகமூடிகளை இப்புத்தாண்டில் கிழித்தெறிவோம் என உறுதியேற்று;

கொஞ்சும் மழலைகள் - கோலவிழி மாதர்கள் - பெற்றெடுத்த தெய்வங்கள் - உற்றார் உறவினர்கள் - நண்பர்கள் சூழ, தமிழ்ப் புத்தாண்டு - பொங்கல் திருநாள் கொண்டாடி மகிழ்ந்திட என் உளமார்ந்த நல்வாழ்த் துகளை, தமிழ்ச் சமுதாய மக்கள் அனை வருக்கும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி யடைகிறேன்

Read more: http://viduthalai.in/page-2/73616.html#ixzz2qK3pqrgL

தமிழ் ஓவியா said...


பாலியல் தொழில்


பண்டையக் கால அரசர்கள், மகாராஜாக்களின் காலங்களில் அரசின் குருமார்களாக விளங்கிய உயர்ஜாதி எனப்படுபவர்களால் அமல்படுத்தப்பட்டு வந்த, ஏழைப் பெண்களை கோவில்களில் பணிபுரியும் பொருட்டு நியமித்து அவர்களை தேவனுக்கு அடியாள்கள் என்றும் தேவதாசிகள் என்று பட்டம் கட்டி கொத்தடிமைப் பணியாளர்களாக்கினர்.

இந்த நடைமுறையினை எதிர்த்து நீதிக்கட்சியினரும், சுயமரியாதை இயக் கத்தவர்களும் போராடினர். நீதிக்கட்சி அமைச்சரவையால் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது.

மேலும் பெண்கள் பாலியல் தொழி லாளர் முழுமையாக விடுதலை பெறவும் சுயமாகத் தொழில் தொடங்கி வாழ்க் கைக்கு வழிவகை கண்டிட நபர் ஒருவ ருக்கு மாதம் ஒன்றுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ.1000/- வழங்க வேண்டும்.

தனி வட்டாட்சியர் மூலம் தேவதாசி முறை இங்கு ஒழிக்கப்பட்டுள்ளது என கோவில் வாயில்களில் எழுதி பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.

எதிர்வரும் அரசு நிதி நிலையில் (பட்ஜெட்) கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்தும், அனைவருக்கும் குடியிருப்புகள் கட்டித் தரப்பட வேண்டும். அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு கால் நடைகள் வளர்ப்புத் தொழில் செய்திட வங்கிகளும் அரசும் தாராளமாய் உதவித் தொகையுடன் கூடிய கடன் வசதி செய்து தர வேண்டுமென கருநாடகத் திராவிடர் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப் படுகிறது.

- மு. சானகிராமன், பெங்களூர்

Read more: http://viduthalai.in/page-2/73618.html#ixzz2qK41DJMb

தமிழ் ஓவியா said...


ஊழல், வறுமையைவிட வகுப்புவாதம் கொடுமையானது-தேசத்துக்கு ஆபத்தானது! செய்தியாளர்களிடையே தொல்.திருமாவளவன்

சென்னை, ஜன.13- ஊழல், வறுமையைவிட வகுப்புவாதம் கொடுமை யானது, தேசத்திற்கே ஆபத்தானது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.

விடுதலைச் சிறுத்தை கள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சென்னையில் நேற்று (12.1.2014) செய்தியாளர் களுக்கு பேட்டியளித் தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதலில் தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கு எனது பொங்கல் நல் வாழ்த்துக்களைத் தெரி வித்துக் கொள்கிறேன். இந்தப் பொங்கல் திரு நாளில் தமிழக மக்கள் யாவரும் ஓர் உறுதி மொழியை ஏற்க வேண் டும். அதாவது, நடை பெற உள்ள நாடாளு மன்ற தேர்தலில் சாதிய வாத சக்திகளை, மதவாத சக்திகளைப் புறக்கணிப் போம் என்ற உறுதி மொழியை ஏற்க வேண் டும்.

ஊழல், வறுமையை விட வகுப்புவாதம் கொடுமையானது. தேசத் திற்கே ஆபத்தானது. இதையே நேற்று தே.மு. தி.க. தலைவர் விஜய காந்தை சந்தித்து வேண் டுகோள் விடுத்தேன். ஏற் கெனவே, தி.மு.க.வுக்கு இதே வேண்டுகோளை வைத்தேன். மேலும், ம.தி. மு.க.வும் தனது முடிவை பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள் கிறேன்.

பாதுகாப்பு இருக்காது

நரேந்திரமோடி பிரத மரானால், அரசியல் அமைப்பு சட்டத்தையே அடியோடு மாற்றி விடு வார்கள். சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைத்து விடுவார்கள். சிறுபான் மையினருக்கும், பின்தங் கிய மக்களுக்கும் பாது காப்பு இருக்காது. ஆகவே, இந்தக் கோரிக் கையை விடுதலைச் சிறுத் தைகள் கட்சி முன்வைக் கிறது.

தமிழகத்தில் பிப்ர வரி 20 ஆம் தேதி சிங் கள மீனவர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடைபெற உள்ளதாக கூறுகி றார்கள். சிங்கள அர சுக்கும், இந்திய அரசுக் கும் இடையே நடை பெற வேண்டிய பேச்சு வார்த்தையை மீனவ பிரதிநிதிகளை வைத்து நடத்துவது எந்த பய னும் தராது. மீனவ பிர திநிதிகளுக்கு வேண்டு கோள் ஒன்றை வைக்கிறேன்.

மீனவர்கள் இடையே முரண் பாட்டை உருவாக்க இரு நாட்டு ஆட்சியா ளர்களும் திட்டமிட் டுள்ளனர். எனவே, மீன வர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மார்ச் 7 ஆம் தேதி ஜெனிவாவில் அய்.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டம் கூடு கிறது. அதில், அமெ ரிக்கா சிங்கள அரசுக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிய இருக் கிறது. போர்க் குற்றம் குறித்தும் விவாதிக்க இருக்கிறது. இந்த நிலை யில், இந்திய அரசு சிங் கள அரசுக்கு எதிராக போர் குற்ற விசார ணையை நடத்த மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் முன் மொழிய வேண்டும்.

- இவ்வாறு தொல். திருமாவளவன் கூறி னார்.

Read more: http://viduthalai.in/page-5/73591.html#ixzz2qK4Pc4SE

தமிழ் ஓவியா said...


பெரியார் உலகம் தருமபுரி மாவட்டம் வழிகாட்டுகிறது!


சிறுகனூரில் அமையவிருக்கும் பெரியார் உலகத்திற்கான நிதி திரட்டுவதில் தருமபுரி மாவட்டம் வழிகாட்டுகிறது.

தந்தை பெரியார் அவர்களால் நேரிடையாகப் பலன் பெற்ற தமிழர் கள் இலட்சக்கணக்கில் உண்டு. அவர்களின் கதவுகளைத் தட்டுங்கள் - நிதி தாராளமாகக் கிட்டும் என்று நமது கழக அமைப்புக் கூட்டங் களில் பேசியதுண்டு.

அதனைச் செயல்படுத்திக் காட்டுவோம் என்ற முனைப்போடு தருமபுரி மாவட்டத் தோழர்கள் களத்தில் இறங்கினர்.

பெரியார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படித்து ஆசிரியர் களாகப் பணிபுரிவோர் தருமபுரி, கிருட்டிணகிரி மாவட்டத்தில் ஏரா ளம் உண்டு. அவர்களை அணுகு வது என்று திட்டமிட்டுக் களத்தில் இறங்கினர் கழகத் தோழர்கள்.

திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ப.சுப்பிரமணியம் அவர்களும் துணை நின்றார்.

தருமபுரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் புலவர் வேட்ராயன் (அவரும் முன்னாள் ஆசிரியர்தானே!) மாவட்டக் கழகச் செயலாளர் வீ.சிவாஜி, மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஊமை செயராமன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கிருட்டிணமூர்த்தி, மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் கரு.பாலன், மாநிலப் பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் அண்ணா சரவணன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கதிர் செந்தில், மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் பீம.தமிழ் பிரபாகரன், பகுத்தறிவாளர் கழக ஒன்றியச் செயலாளர் தீ.சிவாஜி, பென்னாகரம் ஒன்றியக் கழகத் தலைவர் சின்னராசு, த.மணிவேல் ஆகியோர் இணைந்தனர்.

ஏ, அப்பா, இப்படியொரு படை புறப்பட்டால் எதைத்தான் சாதிக்க முடியாது.

41 ஆசிரியர்களின் பட்டியலைத் தேர்வு செய்தனர். அதில் உடனடியாக ஒரு சவரன் தங்கத்துக்கான தொகையான ரூபாய் 25 ஆயிரத்தை மூன்று பேர் அளித்து நன்னம்பிக்கை முனையைக் கொடுத்தனர். தொடர்ந்து அவர்களின் பயணம் - மேலும் 23 பேர் அந்தத் தொகையை அளிக்க ஒப்புதல் அளித்தனர்.

அதன் விவரம் இதோ:

தங்கத்திற்கான ரூ.25 ஆயிரத்தை உடனடியாக வழங்கியவர்:

1. மு.பிரபாகரன், ஆசிரியர், தேக்கல் நாயக்கன்பட்டி

2. கே.எம்.திலகவதி, தலைமை ஆசிரியர், கே.எம்.அருள்மொழி, கூத்தப்பாடி

3. தனசேகரன் - காளியப்பன், ஒகேனக்கல்

தங்கம் வழங்க ஒப்புதல் வழங்கியவர்கள்

1. அண்ணாதுரை, தலைமை ஆசிரியர், சிகரலஹல்லி 2 பவுன்

2. தீ.சிவாஜி, தலைமை ஆசிரியர், சந்தப்பட்டி 1 பவுன்

3. வி.குமார், தலைமை ஆசிரியர், பாப்பாரப்பட்டி 1 பவுன்

4. எஸ்.கே.பாலகிருஷ்ணன், ஆசிரியர், தருமபுரி 1 பவுன்

5. தங்கதுரை, ஆசிரியர், தருமபுரி 1 பவுன்

6. முருகவேல், ஆசிரியர்,கூத்தப்பாடி 1 பவுன்

7. ந.வெங்கடேசன், ஆசிரியர், பி.அக்ரகாரம் 1 பவுன்

8. எஸ்.மோகன்குமார், ஆசிரியர், அய்குந்தம் 1 பவுன்

9. அழகிரி, ஆசிரியர், சந்தப்பட்டி 1 பவுன்

10.புஷ்பராஜ், ஆசிரியர், புதுப்பட்டி 1 பவுன்

11. அருள்முருகன், ஆசிரியர், ரெட்டியூர் 1 பவுன்

12. சா.சிற்றரசு, ஆசிரியர், ராமியம்பட்டி 1 பவுன்

13. எஸ்.கே.சி. அழகிரிசாமி, சந்தப்பட்டி 1 பவுன்

14. ஜெ.சோலைராஜா, ஆசிரியர், ராமியம்பட்டி 1 பவுன்

15. பொன்.சிவகுமார், ஆசிரியர், பாண்டவர் குட்டை 1 பவுன்

16. சே.ஆனந்த், ஆசிரியர், ஊற்றங்கரை 1 பவுன்

17. சங்கர், தலைமை ஆசிரியர், ஓட்டப்பட்டி 1 பவுன்

18. சி.செந்தில்குமார், ஆசிரியர், கவுண்டம்பட்டி 1 பவுன்

19. நீலமேகம், ஆசிரியர், நத்தமேடு 1 பவுன்

20. குமார்-ஜான் பாஷா, ஒகேனக்கல் 1 பவுன்

21. மணிவண்ணன் - மாவு பாஷா, ஒகேனக்கல் 1 பவுன்

22. சுந்தரேசன் - சந்துரு, ஒகேனக்கல் 1 பவுன்

23. தருமபுரி பெரியார் மன்ற வணிக நிறுவனங்கள் 2 பவுன்

மொத்தம் 28 பவுன்

தோழர்களே!

தருமபுரி மாவட்டம் வழிகாட்டுகிறது. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அவர்களால் முடிந்தது, உங்களால் முடியாதா?

முயலுங்கள், முயற்சி திருவினை ஆக்கும்!

Read more: http://viduthalai.in/page-8/73586.html#ixzz2qK4qZvow

தமிழ் ஓவியா said...


இல்லவே இல்லை!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

எல்லா மதக்காரர்களும் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது, ஒரு முடிகூட உதிராது என்று கூறுகிறார்கள். அது வெறும் வேஷம் ஆகும். அவன் அவன் முடியை எடுத்துக்கொள்ள வேண்டு மானால், நாவிதனிடம்தான் போகின்றான்! எனவே, 370 கோடி மக்களில் எவனும் கடவுளிடம் நம்பிக்கை உடையவன் இல்லவே இல்லை.

- (விடுதலை, 26.4.1972)

Read more: http://viduthalai.in/page-2/73642.html#ixzz2qc1YpnBE

தமிழ் ஓவியா said...


சுப்பிரமணிய சுவாமி முகநூல் (பேஸ்புக்) மூலம் விஷமப் பிரச்சாரம்

புதுடில்லி, ஜன. 16- பொய்யான தகவல்களை பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதன் மூலம் பாரதீய ஜனதா கட்சியில் ஐக்கியமாகியுள்ள சுப்பிரமணியசுவாமி பல்வேறுபிரச்சனைகளுக்கிடையே யும் ஒற்றுமையாக இருந்து வரும் இந்து மற்றும் முஸ்லிம் சமுதாய மக்களி டையே வெறுப்பை ஏற்படுத்தி வரு கிறார். சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றை சமூகத்தில் பல்வேறு மாற்றங்களை உருவாக்குவதற்கும், சிலர் திட்டமிட்டு வன்முறைகளை உருவாக்கு வதற்கும் பயன்படுத்தி வருகிறனர். குறிப்பாக இளைஞர்கள் இந்த சமூக வலைத் தளங்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதனை பாஜக முழுமையாக பயன்படுத்தி எப்படியாவது மோடியை பிரதமராக்கிட வேண்டும் என்ற முயற்சி யில் பல்வேறு அவதூறுகளையும், பொய்களையும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. வரலாறுகளையே திரித்துக் கூறி வருகிறது. மேலும் பல அய்டி நிறுவனங்களையே குத்தகைக்கு எடுத்து அதன் வழியாக இது போன்ற இழி செயல்களில் பாஜக ஈடுபட்டு வருவதை சமீபத்தில் கோப்ரா போஸ்ட் இதழ் அம்பலப்படுத்தியது. மோடியின் பொய்ப் பிரச்சாரப்படையில் ஜனதா கட்சியின் தலைவராகவும், தொண்ட ராகவும் இயங்கி வந்த சுப்பிரமணிய சுவாமி தற்போது அய்க்கியமாகியுள்ளார். அவர் தனது பேஸ்புக் கணக்கில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இஸ்லாமி யர்களுக்கு எதிராக இந்துக்களை வன் முறைக்கு தூண்டிவிடும் வகையில் பொய்த் தகவலை வெளியிட்டுள்ளார்.

அவரது பேஸ்புக் கணக்கில் வெளியிடப் பட்டுள்ள புகைப்படம் ஒன்றில், நீண்ட தடிகளுடன் இருக் கும் வாலிபர்கள், மற்றவர்களைத் தாக்குவதுபோல் உள்ளது. இதன் குறிப்பாக, வங்காளதேசத்தில் இந்துக் கள் முஸ்லிம்களால் தாக்கப்படுகின் றனர். தற்போதைய வங்காளதேச மக்கள் தொகை யில் 8 சதவிகிதம் பேர் இந்துக்கள் (இது 1941ல் 28 சதவிகிதமாக இருந்தது) என்று எழுதப்பட்டுள்ளது. இந்தப் பதிவை ஆயிரக்கணக்கான மோடியின் இணையதள பிரச்சாரக் குழுவினர் லைக் தெரிவித்துள் ளதோடு, அதனை விஷமத்தனமாக மற்றவர் களுக்கும் பகிர்ந்து வருகின்றனர். உண்மை யில், இந்தப் புகைப்படம் வங்காளதேசத்தில் பொதுத்தேர்தலின் போது வாக்களிக்கச் சென்றவர்களை எதிர்க்கட்சியின் ஆதர வாளர்கள் தாக்கிய போது எடுத்தபடம். இதனை குஜராத்தின் உண்மை என்ற பேஸ்புக் கணக்கில் நண்பராக இருக்கும் யூனுஸ் என்பவர் கண்டறிந்து, உண் மையை வெளிக் கொண்டு வந்துள்ளார். இதற்கு சான்றாக வாஷிங்டன் போஸ்டில் வெளி யிடப்பட்டிருந்த இந்தப் புகைப் படத்தை அவர் இணைத்துள்ளார். அதில், வங்காளதேசத் தில் நடைபெற்ற பொதுத் தேர்தலை எதிர்க்கட்சியான வங்காள தேச தேசியக் கட்சி புறக்கணித்திருந்த நிலையில், தேர்தலில் வாக்களிக்கச் சென்ற வாக் காளர்களை அக்கட்சியின் ஆதரவாளர் கள் தாக்கியதாகவும், வாக்காளர்கள் வாக் களிப்பதற்காக காவல்துறையினர் போராட்டக்காரர்களை நோக்கி மீண்டும் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வாக்கைப் பெறும் மலிவான அரசியலில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.முன்னதாக, பாஜகவிற்கு தனது ஆதரவைத் தெரி வித்த சர்ச்சை சாமியாரான பாபா ராம்தேவ், தனது பேஸ்புக் கணக்கில், முன்னாள் பிரதமர்களான ஜவஹர் லால் நேரு மற்றும் லால்பகதூர் சாஸ்திரி தொடர்பான படங்களை வெளியிட்டு, போலியான தகவல்களை தெரிவித் திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, இதற்கு எவ்வித வருத்தமும் தெரிவிக்காமல் அப்புகைப் படங்களை தனது பக்கத்திலிருந்து நீக்கி யது குறிப்பிடத்தக்கது. இது போன்று திட்டமிட்டு இந்து முஸ்லீம் மக்களிடையே வன் முறையை உருவாக்கும் சுப்பிரமணிய சுவாமி, சாமியார் ராம்தேவ் உள்ளிட்டவர் கள் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 153 (எ) பிரிவின் படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தள பயன்பாட் டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி: தீக்கதிர் 16.1.2014

Read more: http://viduthalai.in/page-2/73644.html#ixzz2qc23L9o7

தமிழ் ஓவியா said...


இந்து அறநிலையத்துறையின் வேலையா இது?

நீதிக் கட்சியின் ஆட்சியில் இந்து அற நிலையத் துறை உண்டாக்கப்பட்டது - கோயில்களில் அர்ச்சகப் பார்ப்பனர்களின் சுரண்டலைத் தடுப்பதற்காகத்தான்.

கோயில்களைப் பொறுத்தவரை எந்தவித வரவு - செலவு கணக்குகளும் கடைப்பிடிப்பதில்லை. ஏதோ தங்களின் பூர்வீகச் சொத்துகளாகக் கருதி பார்ப்பனர்கள் தானடித்த மூப்பாக அவற்றைப் பயன்படுத்தி வந்தனர்.

இவற்றைக் கட்டுப்படுத்தவும், ஒழுங்குப்படுத்தவும் தான் இத்துறை பனகல் அரசர் காலத்தில் உருவாக்கப்பட்டது.

தி.மு.க. ஆட்சியில் டாக்டர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் இந்து அறநிலையத்துறை அமைச்சர் எனும் தகுதியில், சிதம்பரம் நடராஜன் கோயிலுக்குச் சென்ற பொழுதுகூட, அர்ச்சகர்கள் கொடுத்த பிரசாதத்தை இந்தக் கையில் வாங்கி, அந்தக் கையால் கீழே போட்டார். அதுபற்றி அவரிடம் கேட்கப்பட்ட பொழுது, இந்து அறநிலையத்துறை அமைச்சர் வேலை 4 மரக்கால் அரிசியை பயன் படுத்துவது என்றால் அதன்படி ஒழுங்காக செயல்படுகிறதா என்று சரி பார்ப்பதுதானே தவிர, கோயில் புனஷ்கார நடவடிக்கையில் ஈடுபடுவதல்ல என்று கறாராகக் கூறினார். அதனை வரவேற்று தந்தை பெரியார் அவர்கள் சபாஷ்! சபாஷ்! நெடுஞ்செழியன்! என்று விடுதலையில் முதல் பக்கத்திலேயே கையொப்பமிட்டு பெட்டிச் செய்தியாக வெளியிடச் செய்தார். அந்த இந்து அறநிலையத்துறை இப்பொழுது என்ன செய்துள்ளது தெரியுமா? ஒரு சுற்றறிக் கையைக் கல்வித்துறை மூலம் பள்ளிகளுக்கு அது அனுப்பியுள்ள தகவல் கண்டனத்துக்குரியது. இந்து அறநிலையத்துறை என்பது இந்து மதம் பரப்புத்துறையாக மாறி விட்டதோ என்று நினைக்கத் தோன்றும் ஒரு வேலையைச் செய்துள்ளது.

பள்ளி மாணவ - மாணவிகளுக்குத் திருவாசகம் பற்றி கட்டுரைப் போட்டியும், திருப்பாவை - திருவெம்பாவை பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியும் நடத்த வேண்டும் என்பதுதான் அந்தச் சுற்றறிக்கை.

முதல் பரிசு ரூ.2500, இரண்டாம் பரிசு ரூ.2000, மூன்றாம் பரிசு ரூ.1500 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல பள்ளிகளிலும் இது நடத்தப்பட்டும் உள்ளது.

இது விதிகளின்படி சரியானது தானா? எந்த விதியின் கீழ் இந்து அறநிலையத்துறை இந்த முடிவை எடுத்தது? எந்த விதிமுறைகளுக்கிணங்க கல்வித்துறையும் இந்த வேலையைச் செய்திருக் கிறது?

இதுவரை எந்த கால கட்டத்திலும் இல்லாத நடைமுறை இந்தக் கால கட்டத்தில் அரங்கேற்றப் பட்டது எப்படி? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? அண்ணா பெயரை கட்சியில் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு கட்சிதானே ஆட்சியில் இருந்து கொண்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் எந்தவித வழிபாட்டுச் சின்னங்களும் இருக்கக்கூடாது என்று ஆணை பிறப்பித்தவர் முதல் அமைச்சர் அண்ணா என்பது இந்த முதல்அமைச்சருக்கு தெரியுமா? அண்ணாவைத் திட்டமிட்டு அவமதிப்பதுதான் அண்ணா திமுக ஆட்சியின் திட்டமா?

கருநாடக மாநிலத்தில் முதல் அமைச்சராக வந்த பி.எஸ். எடியூரப்பா முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்றவுடன் முதல் ஆணையாக எல்லா இந்துக் கோயில்களிலும் தனது பெயரில் அர்ச்சனை செய்யப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். அது கடும் பிரச்சினைக்கு உட்படுத்தப்பட்ட நிலை யில், அந்த உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு அரசும் இந்தச் சுற்றறிக்கையை விலக்கிக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்து கிறோம். இந்தச் சுற்றறிக்கை கல்வி நிலையங் களுக்குள் தேவையற்ற மதச் சர்ச்சைகளை உண் டாக்கும்; வெறும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களின் வீட்டுப் பிள்ளைகள் மட்டுமா படிக்கிறார்கள்? மற்ற மற்ற மதக்காரர் வீட்டுப்பிள்ளைகளின் நிலை என்னாவது?

மதச் சார்பற்ற அரசு குறிப்பிட்ட மதக் காரியத்தைச் செயல்படுத்தலாமா? அதுவும் ஆண்டாள் பாடல் என்றால் கொக்கோகம் தோற்றுவிட வேண்டுமே! இதையா பிஞ்சு உள்ளங்களில் விதைப்பது?

எந்தவகையில் பார்த்தாலும் இந்து அறநிலையத் துறையின் செயல்பாடு உகந்ததல்ல! அரசு அதி காரிகள் அரசனை விஞ்சிய விசுவாசிகளாகச் செயல்படுவது ஆபத்து!

எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!

Read more: http://viduthalai.in/page-2/73643.html#ixzz2qc2HQbvv

தமிழ் ஓவியா said...


தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டும்?


தமிழ்நாடு அரசு தொடங்கவிருப்பதாக அறிவித்துள்ள பல் நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவத் துறைப் பேராசிரியர்கள் உட்பட 84 பதவிகளுக்காகச் செய்யப்பட்ட விளம்பரத்தில் இடஒதுக்கீடு அறவே கிடையாது என்று குறிப்பிடப் பட்டுள்ளதானது தமிழ்நாட்டில் கட்சி, ஜாதி, மதங்களுக்கு அப்பால் பெரும் கொதி நிலையை ஏற்படுத்தி விட்டது.

அரசு விளம்பரத்திற்கு ஏதோ விளக்கம் கொடுப்பதுபோல் நினைத்துக் கொண்டு, முதல் அமைச்சர் கொடுத்த விளக்கம் மேலும் அரசின் தரப்பைப் பலகீனப்படுத்தி விட்டது.

எய்ம்ஸ் மருத்துவமனைப் பேராசிரியர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் தொட்டுக் காட்டிய இந்திரா சஹானி வழக்கில் நீதிபதிகள் ஆலோசனையாகச் சொன்ன வரிகளைப் பிடித்துக் கொண்டு, அந்த அடிப்படையில்தான் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக் கான விளம்பரத்தில் இடஒதுக்கீடு தவிர்க்கப் பட்டுள்ளது என்ற முதல் அமைச்சரின் சமாதானம் வலிய திணிப்பதாகும்.

அந்தத் தீர்ப்புக்குப் பிறகு மத்திய சுகாதார அமைச்சகம் அதே எய்ம்ஸ் மருத்துவமனை பணி நியமனத்தில் இடஒதுக்கீடு செய்வது தொடரப்பட வேண்டும்; சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் அரசு விண்ணப்பிக்கும் என்று ஆணை பிறப்பித்து அதன் அடிப்படையில் டில்லி மற்றும் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவ மனைகளில் ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமனத்தில் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் தம் அறிக்கையில் எவருக்கும் எளிதாகப் புரியும் வகையில் தெளிவுபடுத்தி விட்டார்.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் நேற்று பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பில் கூட பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை பணி நியமனங்களில் இடஒதுக்கீட்டைப் பின்பற்றுவதா கூடாதா என்பதை மத்திய அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று தெளிவுபடுத்தியாகி விட்டது.

தமிழ்நாடு அரசுக்கு முன்னுள்ள ஒரே செயல் சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் தொடங்கப்பட உள்ள பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கான பணி நியமனம் குறித்து ஏற்கெனவே வெளியிட்ட அறிக்கையைப் பின்வாங்கி 69 சதவீத அடிப்படையில் இடஒதுக்கீடு என்பதைத் தெளிவுபடுத்தி புதிய விளம்பரத்தை வெளியிடுவது என்பதேயாகும்.

நீதிமன்றத்தில் கூறப்பட்ட ஆலோசனை வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு, தான் எடுத்த நடவடிக்கையை நியாயப்படுத்த அதிமுக அரசு முயற்சி செய்யக் கூடாது.

சமூக நீதியில் அக்கறை இருக்கும் பட்சத்தில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வாய்ப்பு சிறிது கிடைத்தாலும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் எண்ணமும் செயலும்தான் முன்னால் வந்து நிற்கும்.

இடஒதுக்கீடு பிரச்சினை என்று வருகிறபோது தமிழ்நாட்டில் அசைக்கவே முடியாத 69 சதவீதத்தை உறுதிப்படுத்தும் சட்டம் இருக்கிறது. கண்களை மூடிக் கொண்டு அதன் அடிப்படையில் செயல்பட்டால் நீதிமன்றமும் குறுக்கிடாது; மக்கள் மன்றமோ இரு கரம் இணைத்து கரஒலி எழுப்பி மாலை சூட்டி வரவேற்கும்.

முதல் அமைச்சர் என்ன செய்யப் போகிறார் என்பதை வெகு மக்கள் வெகுவாகவே எதிர்ப்பார்க்கிறார்கள்.

Read more: http://viduthalai.in/page-2/73675.html#ixzz2qhqh4bOS

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவு



பகுத்தறிவில்லாத எந்தச் சீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துவதில்லை, தன் இனத்தின் உழைப்பாலேயே வாழ்வதில்லை. தன் இனத்தின்மீது சவாரி செய்வதில்லை.

- (குடிஅரசு, 26.5.1935)

Read more: http://viduthalai.in/page-2/73674.html#ixzz2qhr3ZRcS

தமிழ் ஓவியா said...


இடஒதுக்கீடுபற்றி முடிவு மத்திய, மாநில அரசுகள்தான் எடுக்க வேண்டும்


சிறப்புத் தகுதியுள்ள மருத்துவத்துறை போன்ற நியமனங்களுக்கு இடஒதுக்கீடுபற்றி முடிவு மத்திய, மாநில அரசுகள்தான் எடுக்க வேண்டும்

பந்து அவர்களது கோர்ட்டில்தான் உள்ளது

டில்லி எய்ம்ஸ் மருத்துவப் பேராசிரியர்கள் வழக்கின் மறுசீராய்வு மனுவின்மீது 5 நீதிபதிகள் அமர்வு அறிவிப்பு


புதுடில்லி, ஜன.17-சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவக் கல் லூரி பதவி நியமனங்க ளுக்கு இடஒதுக்கீடு வழங் குவது குறித்து மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. டில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் உள் ளிட்ட சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத் துவமனைகளில் (எய்ம்ஸ்) உள்ள பதவி நியமனங்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்று, உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்தஜூலை மாதம் தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும்படி கோரி, மத்திய அரசு சார்பில் தாக்கல் செய் யப்பட்டு இருந்த மனு, எச்.எல்.தத்து தலைமை யிலான 5 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் எல்.நாகேஸ்வரராவ் தனது வாதத்தை தொடங்க முயன்றார்.

உடனே குறுக்கிட்ட நீதிபதிகள், கடந்த 1992ஆம் ஆண்டின் மண்டல் வழக்கு என்று அழைக்கப்படும் இந் திரா சஹானி வழக்கில் தீர்ப்பு வழங்கிய 9 நீதிபதிகளைக்கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, உயர் சிறப்பு நிலை பதவிகளுக்கு இட ஒதுக்கீடு பொருந்தாது. இதில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று தீர்ப்பு கூறி இருந்தது. எனவே இந்த தீர்ப்புக்கு எதிரான நிலை எதையும் மேற் கொள்ள முடியாது என்று சுட்டிக் காட்டி னார்கள். நீதிபதிகள் மேலும் தொடர்ந்து கூறும்போது, இதைத் தான் எங்களால் சொல்ல முடியும். அதே நேரத் தில், இதுபோன்ற உயர் சிறப்பு நிலைகளில் இட ஒதுக்கீடு வழங்குவதா, வேண்டாமா என்பது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், அவர்கள் விளக்கம் அளித்தனர். நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான இந்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் எஸ்.எஸ். நிஜ்ஜார், ரஞ்சன் கோகாய், எம்.ஒய்.இக் பால், விக்ரம்ஜித்சென் ஆகியோரும் இடம் பெற்று இருந்தனர். அப்படி மத்திய அரசு விரும்பினால், அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்து இந்த பதவி களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம். அதன்பின் இந்த விவகாரம் நீதிமன் றத்திற்கு வந்தால் அப் போது பார்த்துக் கொள் ளலாம் என்றும், நீதிபதி கள் அப்போது கருத்துத் தெரிவித்தனர்.

(13.1.2014 சமூகநீதிப் பொதுக் கூட்டத்திலும் 16.1.2014 தமிழர் தலைவர் அறிக்கையிலும் சுட்டிக் காட்டியபடி, மாநில, மத்திய அரசுகள் முடிவு செய்யலாம் என்று குறிப்பிட்டதை நேற்று உச்சநீதிமன்ற நீதிபதி களும் கூறியிருக்கின்றனர்).

Read more: http://viduthalai.in/e-paper/73672.html#ixzz2qhrQUTNa

தமிழ் ஓவியா said...


மதம் மாற்றம் செய்யும் ஒரு கடவுள்!


மதம் மாற்றம் செய்யும் ஒரு கடவுள்!

இந்து மதம், சைவ சமயம் தவிர்த்த பிற மதங்களில் மத மாற்றம் என்பது அந்தந்த மதத்தைச் சேர்ந்த பக்தர்களால், தொண் டர்களால் நிகழ்த்தப் பெறுகிறது. அவர்கள் தங்கள் மத நன்மைகளையும், சீர்களையும், சிறப்புகளையும் எடுத்துச் சொல்லி, அறி வுரைகள் வழங்கி, அதன் அடிப்படையில் மத மாற்றம் செய்ய முனைகிறார்கள்.

மேலும் சிறப்பாகவும், குறிப்பாகவும், கிறித்துவ மதத்தினர் மக்களுக்குக் கல்வி தந்து - மருத்துவ வசதிகள் செய்து, பால் மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கி, அதன் அடிப்படையில் மக்களை நேசித்துக் கவர்ந்து தங்கள் மதத்திற்கு ஈர்க்கிறார்கள். இதுதான் உலக நடைமுறையாக இருந்து வருகிறது. ஆனால், எந்த மதத்திலும், அந்த மதக் கடவுளே முன்னின்று மத மாற்றத் திற்குக் காரணமாக இருந்ததாக வரலாறு இல்லை. இந்நிலையில், சைவ சமயத்தில் தான், சைவ சமயக் கடவுளான பரமேஸ் வரன் என்னும் சாட்சாத் சிவபெருமானே முன்னின்று மதமாற்றம் நடைபெற காரணமாக இருந்துள்ளார் என்பது தெரிய வருகிறது.

அதாவது அறிவுரை வழங்கியோ, நன்மைகளை எடுத்துரைத்தோ, மத மாற்றம் செய்ததாக தெரியவில்லை. மாறாக அடித்தும், மிரட்டியும், உதைத்தும், பயப்படுத்தியும் வழிப்பறி கொள்ளை நடைபெறுவது போல, பிற மதத்தைச் சேர்ந்தோருக்கு நோயைக் கொடுத்து மிரட்டி, அச்சப்படுத்தி தன் சமயத்திற்கு ஈர்த்ததாக வரலாறு அமைகிறது.

சைவ பக்த அடியார்கள் மிகப் பெருமை யாகக் கீழ்க்கண்டவாறு கூறுவதை நாம் அடிக்கடி கேட்கலாம். எங்கள் சிவபெரு மான் பாலைக் கொடுத்து ஞான சம்பந்த ரையும், ஓலை கொடுத்து சுந்தரமூர்த்தி யாரையும், நூலைக் கொடுத்து மாணிக்க வாசகரையும் தடுத்தாட்கொண்டு மீட்டது போல, - சூலைக் (சூலை என்று சொல்லக் கூடிய கடுமையான வெப்ப வயிற்று வலியை) கொடுத்து திருநாவுக்கரசரை ஆட் கொண்டார் அதாவது சமண சமயத்தி லிருந்து சைவ சமயத்திற்கு மாற்றினார்.

இதற்கு, மத மாற்றம் தவறு; கூடாது என்று கூச்சல் போட்டு குழப்பமும், குதர்க்கமும் செய்யும் இந்து முன்னணித் தலைவர் ஆரியப் பார்ப்பன இராம. கோபால அய்யர்வாள்தான் விடை யிறுக்க வேண் டும்; பதில் சொல்ல வேண்டும்!

இதோ ஆதாரம்: சமண மதம் புகுந்து, பின் சிவபெருமான் தந்த சூலை நோயால் மீண்டும் சைவ சமயம் சேர்ந்தார் திருநாவுக்கரசர்.

(மறைமலை அடிகள் எழுதிய சாதி வேற்றுமையும் போலிச் சைவமும் எனும் நூலில் பக்கம் 75, தகவல்: குடந்தை கும்பலிங்கன்) அரசர்களும் - புரோகிதர்களும்
தலைமைப் பதவியிலும், பிறருடைய உழைப்பைச் சுரண்டு வதிலும், கொள்வினை கொடுப்பினையிலும் பிறப்பினாலுங்கூட அரசர்களும், புரோகிதர்களும் ஒரே இனத்தவர்கள்தாம். ஆயினும் அவர்கள் சத்திரியர்கள், பிராமணர்கள் என்று தனித்தனியே அழைக்கப் படுகிறார்கள்.
- ராகுல சாங்கிருத்தியாயன்

Read more: http://viduthalai.in/page-7/73686.html#ixzz2qhsueob2