Search This Blog

1.11.13

தீபாவளி திடுக்கிடும் உண்மைகள்!



இந்துமதப் பண்டிகைகள் பெரும்பாலும் அசுரனைக் கொன்றதாக - அரக்கனைக் கொன்றதாகக் கூறி, அவற்றின் அடிப்படையில் கொண் டாடப்படுகின்றன. மகாவிஷ்ணு எடுத்த தாகக் கூறப்படும் அவதாரங்களும் அசுரர்களைக் கொன்றதாகவே இருக்கின்றன.

தீபாவளி கதையை எடுத்துக் கொண் டாலும், நரகாசுரனைக் (அசுரனை) கொன்றதாகத்தான் கூறப்படுகிறது. அசுரர்கள், அரக்கர்கள், தஸ்யூக்கள், ராட்சதர்கள், குரங்குகள், கரடிகள் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் யார்? வரலாற்றுப் பேராசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்?

தென்னிந்தியாவில் வசித்துவந்த ஆரியரல்லாதவர்களையே குரங்குகள் என்றும் அசுரர்கள் என்றும் ராமா யணக் கதையில் எழுதி வைக்கப்பட் டிருக்கிறது

------------------------(ரோமேஷ் சந்திர டட் எழுதிய புராதன இந்தியா எனும் நூல் பக்கம் 52)

ராமாயணக் கதை என்பது, ஆரியர்கள் தென் இந்திய தஸ்யூக்கள் அல்லது திராவிடர்கள் மீது படை யெடுத்து வெற்றி பெற்றதைச் சித் திரித்துக் காட்டுவதாகும்

--------------------(சிதம்பரம்பிள்ளை எழுதிய திராவிடரும் ஆரியரும் எனும் நூல் பக்கம் 24)

தென்னிந்தியாவில் இருந்த மக்களேதான் ராமாயணத்தில் குரங்கு கள் என்றும் , அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்

-----------------------------(விவேகானந்தரின் சொற்பொழிவு களும் கட்டுரைகளும் என்னும் நூலில் ராமாயணம்  எனும் தலைப்பில் 587-589 ஆம் பக்கங்களில் இடம் பெற் றுள்ளது)

ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர்கள் என்றும், தஸ்யூக் கள், அசுரர்கள் என்றும் கூறப்பட் டிருக்கிறது. ஆரியருக்கும் ஆரியரல் லாதவருக்கும் இருந்து கொண்டிருந்த அடிப்படையான பகைமையைப் பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காண லாம். இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும், அரசியல் வேற் றுமையுமே இந்தப் பகை மைக்குக் காரணமாகும்

----------------------------(டாக்டர் ராதாகுமுத முகர்ஜி எம்.ஏ., பிஎச்.டி., எழுதிய இந்து நாகரிகம் எனும் நூல் பக்-69)

இராமாயணமும், மகாபாரதமும் இந்தோ ஆரியர் காலத்தையும் அவர் களுடைய வெற்றிகளையும், உள்நாட்டுச் சண்டைகளையும் பற்றிக் கூறுவதாகும்.

-------------------------(ஜவகர்லால் நேரு எழுதிய டிஸ்கவரி ஆஃப் இந்தியா நூல் பக்கம் 76-_77)

இராமாயணம் என்பது தென் னிந்தியாவில் ஆரியர் பரவியதைக் குறிப்பதாகும்.

---------------------------(ஜவகர்லால் நேரு -_ அதே நூல் பக்கம் 82)

இந்த வரலாற்று உண்மைகளை அடிப்படையாகத் தெரிந்து கொண் டால், நாம் கொண்டாடும் பண்டிகை களில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் அசுரர்கள் எல்லாம் திராவிடர்கள்தாம் என்ற பேருண்மை சூரிய ஒளி போலத் தெரிந்துவிடும்.

நம்மை அழித்ததற்காக நாமே விழா கொண்டாடலாமா என்பதுதான் கேள்வி. காந்தியைக் கொன்றதற்காக கோட்சேக்கு விழா கொண்டாடலாமா?

தீபாவளிக் கதையைக் கொஞ்சம் கருத்தூன்றி இந்த வெளிச்சத்தில் படியுங்கள். உண்மை பளிச்சென்று தெரிந்து விடுமே! இதுபற்றி தந்தை பெரியார் என்ன கூறுகிறார்?

தீபாவளி என்றால் என்ன?

1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.

2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக் கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து  விரித்தார்.

3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றி யுடன்  கலவி  செய்ய ஆசைப்பட்டது.

4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு)  பூமியுடன் கலவி செய்தது.

5. அதன் பயனாக பூமி  கர்ப்பமுற்று நரகாசுரன் என்ற பிள்ளையையும் பெற்றது.

6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.

7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசுர டனுடன் போர்  துவங்கினார்.

8. விஷ்ணுவால்  அவனைக் கொல்ல முடியவில்லை.  விஷ்ணுவின் மனைவி நரகாசுரனுடன் போர்தொடுத்து  அவனைக் கொன்றாள்.

9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

10.  இந்த மகிழ்ச்சி (நரகாசுரன் இறந் ததற்காக)  நரகாசுரனின்  இனத் தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

மேற்கண்டவற்றை புராணங்களி லிருந்து தந்தை பெரியார் எடுத்துக்கூறி, இவை அறிவுக்குப் பொருந்துமா என்று நம்மை சிந்திக்கத் தூண்டியுள்ளார். தந்தை பெரியார் கூற்றில் நியாயமும், பகுத்தறிவும் இருக்கிறதா இல்லையா என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

சிந்திப்பதுதான் மனிதனுக்கு பகுத் தறிவு இருக்கிறது என்பதற்கு அடை யாளம்.
இந்த 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பூமிக்கும், பன்றிக்கும் கலவி நடந்தது _ பிள்ளை பிறந்தது என்பதை ஏற்றால், நாம் காட்டுமிராண்டிகள் அல்லவா! பக்தி என்று வந்துவிட்டால் சகலத்தையும் துறந்துவிட வேண்டுமா? 
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகல்லவா, சிந்திப்பீர்!

                  -----------------------”விடுதலை”  1-11-2013 “நரகாசுரன் சிறப்பிதழிலிருந்து....

52 comments:

தமிழ் ஓவியா said...


தீபாவளி -அறிவுடையோர் சிந்திப்பீர் !

லால்குடி இந்துவின் தீபாவளி வேறு, லாகூர் இந்துவுக்கு தீபாவளி மற்றோர் காரணத்துடன் ஏற்பட்டிருக்கிறது. லாகூரில் ஒரு ரூபாய்க்குப் பதினாறு அணா, லால்குடியிலும் அதேதான்! இதோ தீபாவளி பற்றி அண்ணா அவர்களின் கட்டுரை.

இங்கே தீபாவளி நரகாசுரவதத்தைக் குறிக்கிறது அல்லவா? பஞ்சாபிலே அப்படிக் கிடையாது. நளச் சக்கரவர்த்தி, சூதாடி அரசு இழந்த இரவுதான் தீபாவளியாம்! இங்கே நாம், அசுரனை ஒழித்த நாளென்று ஸ்நானம் செய்து மகிழ்வது சடங்காகக் கூறப்படுகிறதல்லவா? பஞ்சாபிலே நடப்பது என்ன? சூதாடுவார்களாம், பண்டிகையின்போது! தமிழகத்து இந்து, தீபாவளியை நரகாசுரவதமாகவும், பஞ்சாப் இந்து அதே தீபாவளியை நளமகாராஜனுடைய சூதாட்டத் தினமாகவும் கருதுவது எதைக் காட்டுகிறது? வேடிக்கையல்லவா? லாகூரில் ஒரு ரூபாய்க்குப் பதினாறு அணா, லால்குடியிலும் அதேதான்! ஆனால் லாகூர் இந்து தீபாவளியின் போது, நரகாசுரனை நினைத்துக் கொள்ளவில்லை. லால்குடி இந்துவுக்கு தீபாவளி, நளச் சக்ரவர்த்தி சூதாடிய இரவு என்று தெரியாது. மான்செஸ்டரிலே உள்ள கிறிஸ்துவரை, ஏசுநாதர் எதிலே அறையப்பட்டார் என்று கேளுங்கள், சிலுவையில் என்பார். மானாமதுரையிலே மாயாண்டி, மத்தியாஸ் என்னும் கிறிஸ்துவரான பிறகு அவரைக் கேளுங்கள், அவரும் ஏசு சிலுவையில் அறையப்பட்டார் என்றுதான் சொல்வார்.

இங்கோ லால்குடி இந்துவின் தீபாவளி வேறு, லாகூர் இந்துவுக்கு தீபாவளி மற்றோர் காரணத்துடன் ஏற்பட்டிருக்கிறது. அவ்வளவோடு முடிந்ததா வேடிக்கை! - மேலும் உண்டு. மகாராஷ்டிர தேசத்திலே, தீபாவளிப் பண்டிகை எதைக் குறிக்கிறது என்று கேட்டால், விநோதமாக இருக்கிறது. மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலியின் முடியிலே அடியை வைத்த நாளாம் அது! லால்குடிக்கு லாகூர் மாறுகிறது. லாகூரிலிருந்து புனா போனால், புதுக் கதை பிறந்துவிடுகிறது. கூர்ஜரத்திலே தீபாவளி புது வருசத்து வர்த்தகத்தைக் குறிக்கிறதாம்! வங்காள தேசத்தில் காளிதேவியை இலட்சுமியாகப் பூஜை செய்யும் நாளாம் தீபாவளி! சிலர், ராமன் மகுடம் சூட்டிக் கொண்ட தினமே தீபாவளி என்று கொண்டாடுகிறார்களாம்! சரித்திர ஆராய்ச்சியைத் துணை கொள்ளும் சில இடங்களிலே, தீபாவளி என்பது தேவ கதைக்கான நாளல்ல; உஜ்ஜைனி நகர அரசன் விக்கிரமாதித்தன் பட்டம் சூடிய நாளைக் கொண்டாடும் பண்டிகையாம்! இவ்வளவோடு முடிந்ததா? இல்லை.
இந்திய தேசத்திலே நான்கு ஜாதிகள், சிரவணம் பிராமணருக்கு, நவராத்திரி க்ஷத்திரியர்களுக்கு, வைசியர்களுக்கு தீபாவளி, இதராளுக்கு (!!) ஹோலிப் பண்டிகை என்று சம்பிரதாயம் ஏற்பட்டிருப்பதாக மற்றோர் சாரார் கூறுகின்றனர்.

இதில் எது உண்மை? அறிவுடையோர் சிந்திப்பீர்!

- தொகுப்பு: க. பரணீதரன்

தமிழ் ஓவியா said...


தீபாவளியைப் பற்றிய சரடுகள்!


தீபாவளி என்றால் அதற்குக் காரணா காரியத்தைப் பொருத்த மாகச் சொல்லட்டும். ஆள் ஆளுக் குத் தத்தம் விருப்பம் போல் அவிழ்த் துக் கொட்டுகிறார்கள் என்றால் அதன் பொருள் என்ன?

உண்மை என்று இருந்தால் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் அது எப்படி இப்படியெல்லாம் மாறுபடும்?

தீபாவளி சிறப்பிதழ் என்று போட்டி போட்டுக் கொண்டு வெளியிடு கிறார்களே -_ அவற்றில் தான் எத்தனை எத்தனை மாறுபாடுகள்.

இதோ ஓர் இதழ்:

மகாலட்சுமியும் தீபாவளியும்

பாற்கடலில் அவதரித்த மகா லட்சுமி தன் மனம் கவர்ந்த மகா விஷ்ணுவிற்கு மாலை சூட்டினாள். திரு மார்பன் (ஸ்ரீவத்ஸன்) என்ற பெயர் பெருமாளுக்கு ஏற்படும் வண்ணம் எம்பெருமாள் இதயத்தில் இடம் பிடித்தாள். மகாலட்சுமி பாற்கடலில் அவதரித்த நாள். எம் பெருமானைமணந்த நாள் தீபாவளி திருநாளாம்.

அயோத்தியில் தீபாவளி

பதினான்கு ஆண்டு கால வன வாசத்துக்கு பிறகு தம் நகரத்துக்கு திரும்பிய ராமபிரானை அயோத்தி நகர மக்கள் வரவேற்றபோது வீதி களில் வரிசையாக விளக்குகள் ஏற்றப் பட்டன. அந்த நாள் தான் தீபவாளி திருநாள் என்பது அயோத்தியில் கடைப்பிடிக்கும் சம்பிரதாயமாம்

தமிழகத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கார்த்திகை தீப திருநாளை தான் வடநாட்டினர் தீபாவளி என்னும் பெயரோடு கொண்டாடி வருகின்றனர்.

மூவடியால் உலகை அளந்து பாதாளம் சென்ற மாவலி ஆண்டிற்கு ஒரு முறை பூவுலகம் வர மகா விஷ் ணுவிடம் வரம் பெற்றான். அப்படி அவன் வரும் நாள் தீபாவளி என்பது கேரள மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகையின் மறை பொருள்.
(தினத்தந்தி தீபாவளி சிறப்பிதழ் ஆன்மிகம் 29.10.2013).

தமிழ் ஓவியா said...


வடநாட்டுப் பண்டிகையே தீபாவளி!


தீபாவளி குறித்து வெவ்வேறு கதைகள் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வழங்குகின்றன. தமிழகத்தில் தீபாவளிக்கு நரகாசுரன் கதை கூறப்படுகிறது. இக்கதைக்கும், தீபாவளிக்கும் தொடர்பே இல்லை.

தீபாவளி புதுக்கணக்குப் புத்தாண்டுப் பிறப்பு விழாவாகும். இது விஜய நகரத்திலும் புத்தாண்டுப் புதுக்கணக்கு விழாவாகக் கொண்டாடப்பட்டதை நிக்கோலோ டிகாண்டி என்பவர் குறிப்பிட்டுள்ளார். இது வடநாட்டுக் குஜராத்திகளுக்கும், மார்வாரிகளுக்கும் புதுக்கணக்குப் புத்தாண்டு விழாவாகும். விஜயநகரத்திலிருந்து வந்து மதுரையில் குடியேறிய சவுராஷ்டிரர்களும் இதைக் கொண்டாடி வருகிறார்கள். தீபாவளி அன்று புதுக்கணக்கு எழுதப்படும். வடநாட்டார் தீபாவளி அன்று விளக்கு அலங்காரம் செய்வதுண்டு. தீபம் = விளக்கு; ஆவளி = வரிசை; தீப ஆவளி=தீபாவளி. குஜராத்திகளும், மார்வாரிகளும் இன்றும் தீபாவளி அன்று வீடுகளில் விளக்கேற்றி வைக்கிறார்கள். புதுக் கணக்கு எழுதுகிறார்கள். ஆனால், தீபாவளி தமிழ்நாட்டில் தொன்று தொட்டு வந்த திருநாளன்று. மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை - செஞ்சி நாயக்கர்களாலும் தமிழகத்தில் புகுத்தப்பட்டதால் பதினாறாம் நூற்றாண்டி லிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படவே இல்லை. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங் களில் தீபாவளியில் புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக் காலம் வரையில் இருந்ததில்லை.

(ஆசிரியர்: பேராசிரியர் அ.கி. பரந்தாமனார், நூல்: மதுரை நாயக்கர் வரலாறு பக்கம்: 433-434)

தமிழ் ஓவியா said...


தீபாவளி



மனித நேயங்களை நசுக்கி எரித்து தன் சுயநலத்தை பகட்டை காட்டுவதற்கு தெரிந்தே தானே போய் ஏமாற, தன்னுடைய உடலுழைப்பை வினாடிகளில் கரியாக்க கொண் டாடப்படும் உலகின் ஒரே ஒரு மடத் தனமான கேளிக்கை கூத்து என்றால் அது மிகையாகாது. தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு 700 விலைபட்டியல் ஒட்டி 50 தள்ளுபடி என்று விற்ற அதே பொருள் திபாவளி நெருங்கிய உடன் 2000 லேபிள் ஒட்டி 300 ரூ தள்ளுபடி என்று ஏமாற்றி விற்பனை செய்வார்கள், நம்ம ஆள் அதை அடித்து பிடித்து வாங்க ஓடுகிறான், கூடவே பையனுக்கு ஒரு 10 ரூ மதிப் புள்ள சைனா தொப்பி இலவசமாம், இன்றைய விலைவாசியில் பணம் சேர்ப்பது என்பது சாமானியர்களுக்கு குதிரைக்கொம்பு பணக்காரர்களுக்கு வேண்டுமென்றால் பொழுதுபோக்காக இருக்கலாம் ஆனால் அவர்கள் உழைத்து பணம் சேர்த்திருந்தார்கள் என்றால் அதன் மதிப்பு தெரிந்து விரயமாக்கமாட்டார்கள் அவர்கள் ஏழைகளின் உழைப்பைச்சுரண்டி சேர்த்த பணம் தானே அது.

இருவருமே உழைப்பின் ஊதி யத்தை பட்டாசு என்ற பெயரில் சில வினாடிகளில் கரியாக்குகிறார்கள், உங்க காசு நீங்க என்னமும் செய்யலாம் என்று கூறிவிடமுடியாது. பட்டா சினால். காற்று மாசு ஓசை மாசு, மற்றும் ஒளிமாசு என இயற்கையை வன் கொடுமை செய்கிறார்கள், எத்தனை காகங்கள் குருவிகள் அணில்கள் சென்னை சாலையில் செத்துவிழு கின்றன தெரியுமா, காரணம் காற்றில் அதிகம் கலந்துவிடு கந்தகம் உயிரினங் களின் மென்மையான சுவாச உறுப்பு களை வெந்து போக செய்துவிடும். பெருநகரங்களில் எந்த பாவமும் அறியாமல் செயற்கைச்சூழலை எதிர்த்து போராடும் ஒரு சில உயிரினங்களையும் கொலை செய்யும் போது செயலை ஏன் செய்கிறீர்கள், உலகின் வெறெந்த விழா விலும் ஏழைகளின் முகங்களில் இய லாமையின் ஏக்கத்தை காணமுடியாது அது பொங்கலானாலும் சரி, ரம்ஜானாக இருந்தாலும், கிருஸ்துமஸாக இருந்தா லும் சரி இந்த விழாக்களில் பரம்,அ ஏழைகள் முதல் அனைவரின் மனதி லும் ஒருவித சந்தோசம் இழையோடும் இதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் தீபாவளியோ நாள் நெருங்க நெருங்க ஏழைகளில் மனதில் வேதனை குடிகொண்டுவிடும், சென்ற வருடம் தீபாவளிக்கு வாங்கிய வட்டி யும் முதலும் சமீபத்தில் தான் அடைத் திருப்பான் மீண்டும் அந்த கொடூரக் கும்பலிடம் கையேந்தும் கொடுமையும் தீபாவளியில் தான். அடுத்தவர் முன்பு பகட்டாக கொண்டாட சிலர் நினைக் கும் இந்த மடத்தனமான கேளிக்கை வேதனையான தொடர்விளைவுகளை உண்டாக்கிவிடுகிறது, சமூகத்தில் அனைத்து மட்டத்திலும் இயற்கைச் சூழலிலும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த மடத்தனமான கோளிக்கையை புறக்கணிப்போம்.

- சரவணா. இராசேந்திரன்

தமிழ் ஓவியா said...


53 ஆண்டுகளாக தீபாவளியைப் புறக்கணிக்கும் கிராமம்


சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா சிங்கம்புணரி ஒன்றியத்தைச் சேர்ந்த எஸ். மாம்பட்டி ஊராட்சி கிராம மக்கள் 53 ஆண்டுகளாக தீபாவளிப் பண்டிகையைப் புறக்கணித்து வருகின்றனர். மயில்ராயன்கோட்டை என்று அழைக்கப்படும் எஸ்.மாம்பட்டி ஊராட்சி வானம் பார்த்த பூமியாகும். இங்கு சுமார் 3,500 பேர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் ஒப்பிலான்பட்டி, தும்பைப்பட்டி, சத்திரப்பட்டி, எம்.வலையப்பட்டி, கிளுகிளுப்பைப் பட்டி, திருப்பதிபட்டி, கச்சப்பட்டி, தோப்புப்பட்டி, இந்திராநகர், கலிங்குபட்டி ஆகிய ஊர்கள் அடங்கியுள்ளன. இக்கிராம மக்களின் வாழ்வாதாரமே விவசாயமும், கால்நடை வளர்ப்பும் தான். விவசாயம் தொடங்கும் காலத்தில் தீபாவளி வருவதால் அனைவரின் பொருளாதாரத்திலும் ஏற்றத்தாழ்வு நிலவிவருகிறது. இதனை கருத்தில் கொண்டு மாம்பட்டி கிராமத்தின் அப்போதைய அம்பலக்காரர் சேவுகன்அம்பலம், முன்னாள் அம்பலக்காரர்களோடு விவாதித்தார். எல்லோரும் மாற்றுக் கருத்துக்கு இடம் அளிக்காமல் 1959இல் ஊர்க் கூட்டம் கூட்டி, ஊராட்சிக்குள்பட்ட 12 கிராமங்களிலும் தீபாவளிப் பண்டிகையை கொண்டாட வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று வரை தீபாவளி பண்டிகையை கொண்டாடாமல் புறக்கணித்து வருகின்றனர். இதுகுறித்து சேவுகன் அம்பலம் மகன் சபாபதி அம்பலம் கூறுகையில், எனக்கு திருமணமான ஆண்டுதான் தீபாவளி திருநாள் கைவிடப்பட்ட ஆண்டு. இந்தியாவே கொண்டாடும் ஒரு பண்டிகையை ஒரு கிராமம் நிறுத்துவதா என்ற கேள்விகளை தூக்கியெறிந்து, மற்ற கிராமங்கள் கொண்டாடும் போது நாம் கொண்டாடவில்லை என்றால் ஊருக்கு இழுக்காகுமோ என்ற போலி சித்தாந்தங்களை உடைத்தெறிந்து, சூழ்நிலைக்கும் இயற்கை அமைப்பிற்கு ஏற்ப வாழ்ந்து கொள்வதுதான் சரி என்று தீர்மானித்தோம். அதன்படி இன்றுவரை வாழ்ந்து வருகிறோம். மேலும் சேவுகன்அம்பலம் உலகநாதன் கூறுகையில், விவசாயங்கள் மறைந்து வெளிநாட்டு வருமானத்தில் வாழ்க்கை முறை மாற்றங்கள் ஏற்பட்டாலும் அன்று கிராமங்கள் கட்டுப்பட்டு நின்றது போல எங்கள் தலைமுறையிலும் கட்டுப்பாடு காக்கப்படுகிறது. இனிவரும் தலைமுறையும் இதனை கடைப்பிடிக்கும் என்று நம்புகிறோம் என்றார். மேலும், இக்கிராமங்களில் வெள்ளாடு வளர்ப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது ஏன் என்று வினவும் போது மரம், செடி, கொடிகள் காக்கப்படவே தடை செய்யப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.

தமிழ் ஓவியா said...


பார்க்கவில்லையா உள்ளங்கையை?


நம் உள்ளங்கையில் விரல் நுனியில் லட்சுமியும், மத்தி யில் சரஸ்வதியும், கடைசியில் துர்க்கா தேவியும் உள்ளனர். காலையில் எழுந்ததும் உள்ளங்கையைக் கண்களால் பார்ப்பது நல்லது

- காஞ்சி சங்கராச்சாரியார் தினமணி 21.9.2010 பக்கம் 2

காஞ்சி வரதராஜ பெரு மாள் கோயில் சங்கர்ராமன் கொலை வழக்கில் இதே காஞ்சி சங்கராச்சாரியார் ஒரு தீபாவளி நாளில் கைது செய்யப்பட்டாரே அன்று காலை எழுந்தவுடன் தன் உள்ளங்கையைப் பார்க்கத் தவறி விட்டாரோ!

தமிழ் ஓவியா said...


கடவுளிடம் வேண்டுதல் என்பது சரியானதுதானா?


கடவுள்தான் எல்லாம் அறிந்தவர் என்றும் அவனன்றி ஓரணுவும் அசையாது என்றும் ஆன்மீக சிரோன்மணிகள் அளக்கிறார்களே _ அப்படி இருக்கும் போது ஆண்டவனி டம் கோரிக்கைகளை வைப்பது ஏன்? வரங்களை வேண்டு வது - _ ஏன்?

அவன்தான் எல்லாம் அறிந்தவனா யிற்றே? கல்லினுள் தேரைக்கும் படியளப் பவனாயிற்றே _ அப்படி இருக்கும் பொழுது ஆண்டவ னிடம் அதைக் கொடு, இதைக் கொடு என்று கேட்பது அதி கப் பிரசங்கித்தனமா அல்லது ஆண்டவன் ஒரு அறியாமை ஆசாமி _ நாம் எடுத்துச் சொன்னால்தான் விளங்கிக் கொள்வான் என்று கருதும் மனப்பான்மையா? இதுகுறித்து கறுப்புச் சட்டைக்காரன் கூறினால் கொஞ்சம் கசக்கும்தான்

கல்கி சொன்னால் இனிக்கும் அல்லவா?

இதோ கல்கியில்
கடவுளை வியாபாரியாக்காதே!

கேள்வி: கோயிலுக்குச் சென்று கடவுளிடம், எனக்கு அதைக் கொடு இதைக் கொடு! என்று கேட்பது சரியா தவறா...?

- - _ வி. மனோகரி, குமாரபாளையம்

பதில்: அப்படிக் கேட்பதன் மூலமாக நீங்கள் கடவுளை ஒரு வியாபாரி யாக்கிக் கேவலப்படுத்துவதாக நான் நினைக்கிறேன். எனக்கு இந்த வேலையை முடித்துக் கொடு. நான் உனக்கு பாலபிஷேகம் செய்கிறேன். வேல் சாத்துகிறேன். ஒரு மண்டலம் பூஜை செய்கிறேன் என்றெல்லாம் பேரம் பேசுவது இறைவழிபாடு அல்ல. கடவுளிடம் நாம் எதையும் கேட்க வேண்டியது இல்லை. நமக்கு எதைத் தர வேண்டும். எதைத் தரக் கூடாது என்பதெல்லாம் அவனுக்குத் தெரியும். எந்த ஒரு கோரிக்கையும் இல்லாமல் கோயிலுக்குப் போக வேண்டும். அப்படிக் கோரிக்கை எதுவும் இல்லாவிட்டால் நாம் கோயில்களையே மறந்து விடுவோம்.

ஒரு பிரச்சினை தீர்ந்தால் இன்னொரு பிரச்சினை என்று மனித வாழ்வில் எட்டிப் பார்ப்பதால்தான் இன்றைக்குக் கோயில்களில் கூட்டம் கூடுகிறது. பிரதோஷம் என்றால் பத்து வருடங்களுக்கு முன்பு கோயில் குருக்களுக்கு மட்டுமே தெரியும். இன்றைக்கு பிரதோஷம் எல்லாக் கோயில்களிலும் பிரபலம். பக்தி என்பது நமது உள்ளத்தைச் சுத்தப்படுத்தும் ஒரு கருவி. அந்தக் கருவியை உபயோகித்து இறைவனிடம் பேரம் பேசி நமது பேராசைகளை பிரார்த்தனை என்ற பெயரில் நிறைவேற்றிக் கொள்ள நினைப்பது, நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் ஓர் அவமானம். எல்லாம் நீயே! என்று சரணடைந்து பாருங்கள். மனசுக்குள் நிம்மதி பச்சைப் பசேலென்று துளிர்விடும்.

(எழுத்தாளர் ராஜேஷ்குமார் _ கல்கி 6.11.2011)

சரணடைந்து பாருங்கள்! என்று சொல்லுவது ஒருபுறம் இருக்கட்டும்!

பிரார்த்தனை என்பது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் ஓர் அவமானம் என்று கருப்புச் சட்டை சொல்லவில்லை கல்கி சொல்லுகிறதே இதற்கு என்ன பதில்?

தமிழ் ஓவியா said...


நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க


தீபாவளி என்றால் மனுசர்களுக்கு மட்டுமல்ல; கடவுள் களுக்கும்கூட தலைத் தீபாவளியாம்.

திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகனுக்கு இந்திரன் தன் மகள் தெய்வானையைக் கட்டிக் கொடுத்தா ராம். பிறகு முருகனுக்குத் தலைத் தீபாவளி சீர்வரிசை செய் தாராம்.

சிவன் கோயிலில் இந்தத் திருக்கூத்து என்றால் வைணவர்கள் சும்மா இருப்பார்களா?

ஆண்டாளை ரெங்கனுக்குக் கட்டிக் கொடுத்த பெரியாழ்வார் தீபாவளிக்கு முதல் நாள் மருமகனாகிய ரெங்கனுக்கு நல்லெண்ணெய் சீயக்காய்களை அனுப்பி வைப்பாராம்.

தீபாவளி விடியற்காலையில் ரெங்கநாதன் ஆண்டாளுக்குப் புத்தாடை அணிவிப்பார்களாம்.

பிள்ளை விளையாட்டே என்று இராமலிங்க அடிகள் சும்மாவா சொன்னார்?

தமிழ் ஓவியா said...


திரு நீறு - திரு நீறு



திரு நீறு எப்படி தயாரிக்க வேண்டும் தெரியுமா? அதற்கென்றும் சில சடங்காச்சாரங்கள் உண்டாம். வியாதியில்லாத கன்றுடன் (எப்படி தேடி பிடிப்பார்களோ?) கூடிய பசு சாணம் போடும் வரை காத்திருக்க வேண்டும். சாணம் போடும் சமயத்தில் கையில் வைத்திருக்கும் தாமரை இலை யில் அந்தச் சாணத்தைப் பிடித்து, உருண்டையாக்கி சில மந்திரங்கள் சொல்லி அக்னியில் எரிக்க வேண்டும்; -இப்படிதான் திருநீறு தயாரிக்க வேண்டுமாம். அய்தீகம் சொல்கிறது. இப்பொழுதெல்லாம் இப்படிதான் திருநீறு தயாரிக்கப்படுகிறதா? கடைகளில் விற்பனைப் பொருளாகி விட்டதே! மற்ற மற்ற விஷயங்களுக்குகெல்லாம் வக்கணைப் பேசுபவர்கள் இதுபற்றி ஏன் சிந்திக்கவில்லை?

தமிழ் ஓவியா said...


மகாலட்சுமியின் குடியிருப்பு பசுவின் பின்புறமாம்



பசு தேவராலும், மூவராலும், முத்தேவியராலும் தொழப்பெறும் கோமாதா காரணம், பசுவின் உடலில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு தெய்வம் இருப்பதுதான். பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். காலையில் எழுந்ததும் காணத் தக்கவற்றுள் பசுவின் பின் பக்கமும் ஒன்று. அருகம்புல்லைப் பசுவிற்கு கொடுப் பது 32 வகை அறங்களுள் ஒன்றாகும். யாவர்க்கும் ஆம் பசுவிற்கு ஒரு வாயுறை என்றார் திருமூலர். (மாலை மலர்)

வெளியிட்டுள்ள தீபவாளி மலர் பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி குடியிருக்கிறாளாம். வாடகை இல்லாத வீடு அங்குதான் கிடைக்குமோ!

தமிழ் ஓவியா said...


பெரியார் திரட்டு!

தீபாவளி
கொண்டாடும்
திராவிடா!
உன்னைத்தான்.

திக்கித் திணறாமல்
நேருக்கு நேர்
பதில் கூறு பார்க்கலாம்

எழவு வீட்டிலா
திருமணம்?
திராவிடர் வீட்டிலா
தீபாவளி?

என்னடா
வெட்கக்கேடு?
கன்னக்கோலா
செங்கோல்?

சாக்கடையா
சந்தனம்?
பூக்கடையா
பொதிசேறு?

தமிழர் பண்பாட்டு
தாடை மூக்கு
தட்டுப்படுகிறதா
கூறு!

ஆரியன் வைத்த கண்ணியிலே
அறுந்தது திராவிட
வேரல்லவா!

சங்க இலக்கியத்தில்
உண்டா? தமிழர்
சரித்திரத்தில்தான்
கண்டவொன்றா?

கிருஷ்ண பரமாத்மா
சத்தியபாமா
சத்தியமா
சொல்லுக!

என்ன உறவு?
என்ன உறவு?
இந்தத் திராவிட
இனத்துக்கு?

இருளுக்கு எதிரி
சூரியனே? இன
உரிமைக்கு எதிரி
ஆரியனே!

பூமியைப் பாயாகச்
சுருட்டுவதா?
புத்தியுள்ளோர் - இதைப்
போய் நம்புவதா?

வராக (பன்றி)
அவதாரத்திற்கும்
பூமாதேவிக்கும்
பிள்ளை பிறக்குமா?

சரி சரி
அதை விடுங்கள்
ஒரு கேள்வி
கேட்க ஆசை!

பன்றி அவதாரத்திற்கு
தீபாவளியன்று
எதை வைத்துப் படைக்க உத்தேசம்?

நல்லாதான்
வருது வாயில்!
நாக்கைப் பிடுங்க
நாலு வார்த்தை கேட்கும் முன்

மரியாதையாக
மாறிவிடு!
மூடக் கழுதையை
உதைத்துவிரட்டு

மானமும் அறிவும்
மனிதனுக்கழகு - இது
ஞாலப் பெரியார்
ஞானத் திரட்டு!



- கவிஞர் கலி. பூங்குன்றன்

தமிழ் ஓவியா said...


பட்டாசு வெடிப்பதால்....


ஒவ்வொரு தீபாவளிக்கும் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபாடு, ஒலி மாசுபாட்டின் அளவு எல்லையை மீறிச் செல்வதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.

2011ஆம் ஆண்டில் சென்னையில் பட்டாசு ஒலி மாசுபாடு கண்காணிக்கப்பட்ட அயனாவரம், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, சௌகார்பேட்டை, தி.நகர் ஆகிய பகுதிகளில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாகவே இருந்திருக்கிறது. அதே ஆண்டில் காற்றில் கலந்திருந்த சஸ்பெண்டட் பார்ட்டிகுலேட் மேட்டர் (காற்றில் கலந்திருக்கும் துகள்) கியூபிக் மீட்டருக்கு 498 மைக்ரோகிராம் அளவு இருந்திருக்கிறது.

125 டெசிபலுக்கு மேலாக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடை செய்துள்ளது. ஆனால், சந்தையில் கிடைக்கும் சில பட்டாசுகள் ஏற்படுத்தும் சத்த அளவு கீழே தரப்பட்டுள்ளது. ஆட்டம் பாம் - 145 டெசிபல், சரவெடி - 142 டெசிபல், தண்டர்போல்ட் - 140 டெசிபல், கிங்பிஷர் ஷெல் - 141 டெசிபல், ஹைட்ரஜன் பாம் - 122 டெசிபல். இவை அனைத்துமே அந்தக் கட்டுப்பாட்டை மீறுகின்றன.

இந்த அளவு சத்தத்தைக் கேட்டால் காது செவிடாவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அது மட்டுமில்லாமல் உயர் ரத்த அழுத்தமும் தூங்குவதில் பிரச்சினைகளும் ஏற்படலாம்.

காற்று மாசுபாட்டால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம், அவர்களது நுரையீரல் வளர்ந்து வரும் நிலையில் இருப்பதுதான். குறைவான மாசுபாட்டைக்கூட அவை தாங்குவதில்லை. எதிர்காலத்தில் அவர்களிடம் சுவாசக் கோளாறை ஏற்படுத்துவதில் பட்டாசுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தமிழ் ஓவியா said...

விநாயகர்


தென் ஆப்பிரிக்காவில் ஒரு தமாஷ்! இந்திய கிரிக் கெட் விளையாட்டுக் கம் பெனி. தென் ஆப்பிரிக்கா வுக்குக் கிரிக்கெட் விளை யாடப் போகிறது. தென் னாப்பிரிக்காவில் உள்ள ஆங்கில ஏட்டில் கார்ட்டூன் ஒன்று வெளி வந்துள்ளது. பிரபலமான கார்ட்டூனிஸ்ட் ஜோனாதன் ஷபிரோ என் பவர் அதை வரைந்துள் ளார்.

விநாயகர் ஒரு கையில் கிரிக்கெட் மட்டை; இன் னொரு கையில் நிறைய பணம்; அந்த விநாயகர் சிலை முன் தெ. ஆப்பிரிக் காவின் கிரிக்கெட் குழு பொறுப்பாளர் ஹாரூன் வேஸ்ட் என்பவரைப் பலி கொடுப்பது போன்ற கார்ட்டூன் அது!

இதைப் பார்த்து விட்டு தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்துக்கள் கொதித் துப் போய் விட்டார்களாம்.

இதில் கொதித்தெழ என்ன இருக்கிறது? இந்த விநாயகன் பிறப்பே ஆபா சம்! பார்வதி தேவியாரின் உடல் அழுக்கிலிருந்து பிறந்தவன் விநாயகன் என்று சொல்லும் பொழுது வராத கோபம் இப்பொழுது மட்டும் வருவது ஏன்?

சூரபத்பனுக்கும் சுப்பிர மணியனுக்கும் சண்டை நடந்தபோது தன் சகோ தரனுக்காக வல்லபை என்ற அசுரப் பெண்ணின் குறியி லிருந்து படை வீரர்கள் வந்து கொண்டே இருந் தனர், என்றறிந்து தன் துதிக்கையை வல்லபை யின் குறியில் வைத்து அடைத்தான் என்று எழுதி வைத்து இருப்பதைக் கண்டு வராத கோபம் இப் பொழுது மட்டும் வரு வானேன்? (பெண்ணின் குறியில் துதிக்கையை வைத்துள்ள இந்த விநாய கருக்கு வல்லபைக் கணபதி என்று பெயர் மத்தூர் கோயி லில் இன்றும் காணலாம்.)

கார்கில் பிள்ளையார் என்று கூறி பிள்ளையாரின் கையில் துப்பாக்கியைக் கொடுத்தபோது, கிரிக்கெட் பிள்ளையார் என்று சொல்லி விநாயகன் கையில் கிரிக் கெட் மட்டையைக் கொடுத்து ஊர்வலம் வந்தபோது வராத கோபம். இப்பொழுது மட்டும் எங்கிருந்து குதித்த தாம்?

கோபப்படுவதைவிட வெட்கப்படுவதற்கு இன் னும் எத்தனை எத்த னையோ இந்த விநாய கனைப் பொறுத்து உண்டு.

அம்மாவைப் போல் தனக்கு ஒரு பெண் வேண் டும் கல்யாணம் செய்து கொள்ள என்று கேட்டவன் என்று எழுதி வைத்துள் ளனரே எவ்வளவு கோவலம் - ஆபாசம்!
தாயா, தாராமா?

விநாயகர் சமுத்திர ஸ்நானம் செய்யப் போனா ராம். அப்பொழுது கட லையே உறிஞ்சி விட்டாராம். பின் அதை சிறு நீராகக் கழித்தாராம். அதிலிருந்து தான் கடல் நீர் உப்புக் கரிக்கிறதாம்! (கடவுள் சமாச்சாரம் என்றாலே நல்ல தமாஷ் தான்!)

கடைசியாக ஒன்று ;விநாயகரை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கிறோம் என்ற பெய ரில் அந்த பொம்மைகளை உதைத்து அடித்துத் துவைக்கிறார்களே பக்தர்கள் - அப்பொழுது ஏன் கோபம் குமுறிக் கொண்டு வரவில்லையாம்?

- மயிலாடன்விநாயகர்

தென் ஆப்பிரிக்காவில் ஒரு தமாஷ்! இந்திய கிரிக் கெட் விளையாட்டுக் கம் பெனி. தென் ஆப்பிரிக்கா வுக்குக் கிரிக்கெட் விளை யாடப் போகிறது. தென் னாப்பிரிக்காவில் உள்ள ஆங்கில ஏட்டில் கார்ட்டூன் ஒன்று வெளி வந்துள்ளது. பிரபலமான கார்ட்டூனிஸ்ட் ஜோனாதன் ஷபிரோ என் பவர் அதை வரைந்துள் ளார்.

தமிழ் ஓவியா said...


விநாயகர் ஒரு கையில் கிரிக்கெட் மட்டை; இன் னொரு கையில் நிறைய பணம்; அந்த விநாயகர் சிலை முன் தெ. ஆப்பிரிக் காவின் கிரிக்கெட் குழு பொறுப்பாளர் ஹாரூன் வேஸ்ட் என்பவரைப் பலி கொடுப்பது போன்ற கார்ட்டூன் அது!

இதைப் பார்த்து விட்டு தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்துக்கள் கொதித் துப் போய் விட்டார்களாம்.

இதில் கொதித்தெழ என்ன இருக்கிறது? இந்த விநாயகன் பிறப்பே ஆபா சம்! பார்வதி தேவியாரின் உடல் அழுக்கிலிருந்து பிறந்தவன் விநாயகன் என்று சொல்லும் பொழுது வராத கோபம் இப்பொழுது மட்டும் வருவது ஏன்?

சூரபத்பனுக்கும் சுப்பிர மணியனுக்கும் சண்டை நடந்தபோது தன் சகோ தரனுக்காக வல்லபை என்ற அசுரப் பெண்ணின் குறியி லிருந்து படை வீரர்கள் வந்து கொண்டே இருந் தனர், என்றறிந்து தன் துதிக்கையை வல்லபை யின் குறியில் வைத்து அடைத்தான் என்று எழுதி வைத்து இருப்பதைக் கண்டு வராத கோபம் இப் பொழுது மட்டும் வரு வானேன்?

(பெண்ணின் குறியில் துதிக்கையை வைத்துள்ள இந்த விநாய கருக்கு வல்லபைக் கணபதி என்று பெயர் மத்தூர் கோயி லில் இன்றும் காணலாம்.)

கார்கில் பிள்ளையார் என்று கூறி பிள்ளையாரின் கையில் துப்பாக்கியைக் கொடுத்தபோது, கிரிக்கெட் பிள்ளையார் என்று சொல்லி விநாயகன் கையில் கிரிக் கெட் மட்டையைக் கொடுத்து ஊர்வலம் வந்தபோது வராத கோபம். இப்பொழுது மட்டும் எங்கிருந்து குதித்த தாம்?

கோபப்படுவதைவிட வெட்கப்படுவதற்கு இன் னும் எத்தனை எத்த னையோ இந்த விநாய கனைப் பொறுத்து உண்டு.

அம்மாவைப் போல் தனக்கு ஒரு பெண் வேண் டும் கல்யாணம் செய்து கொள்ள என்று கேட்டவன் என்று எழுதி வைத்துள் ளனரே எவ்வளவு கோவலம் - ஆபாசம்!
தாயா, தாராமா?

விநாயகர் சமுத்திர ஸ்நானம் செய்யப் போனா ராம். அப்பொழுது கட லையே உறிஞ்சி விட்டாராம். பின் அதை சிறு நீராகக் கழித்தாராம். அதிலிருந்து தான் கடல் நீர் உப்புக் கரிக்கிறதாம்! (கடவுள் சமாச்சாரம் என்றாலே நல்ல தமாஷ் தான்!)

கடைசியாக ஒன்று ;விநாயகரை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கிறோம் என்ற பெய ரில் அந்த பொம்மைகளை உதைத்து அடித்துத் துவைக்கிறார்களே பக்தர்கள் - அப்பொழுது ஏன் கோபம் குமுறிக் கொண்டு வரவில்லையாம்?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


மத்திய அரசும், தனியாரும் கூட்டுச் சேர்ந்து மாநிலங்களில் மாதிரிப் பள்ளிகளைத் தொடங்குவதா?


அன்று நவோதயா கல்வியை எதிர்த்ததுபோல

இன்றும் தமிழ்நாடு சும்மா இராமல் பொங்கி எழும்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள எச்சரிக்கை!

பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்கின்ற கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா?

மத்திய அரசும் - தனியாரும் இணைந்து மாநிலங்களில் மாதிரிப் பள்ளிகளை தொடங்குவது - மாநில அரசுகளின் உரிமையில் தலையிடு வதாகும். முன்பு பிரதமர் ராஜீவ்காந்தி காலத்தில் கொண்டு வரப்பட்ட நவோதயா கல்வித் திட்டத்தை எதிர்த்தது போல இந்தத் திட்டத்தையும் தமிழ்நாடு எதிர்க்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் மத்திய அரசு, ஏற்கெனவே ஆக்கிர மித்தது போதாது என்ற முறையில், கல்வித் துறையில் புதியதோர் ஆக்கிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் ராஷ்டிரிய ஆதர்ஷ் வித்தியாலயா திட்டப்படி, மத்திய அரசும், தனியாரும் கூட்டுச் சேர்ந்து மாதிரிப் பள்ளிகள் என்று தனியே தொடங்கிட முயற்சிப்பதாக வந்துள்ள செய்தி- சரியாக இருக்குமானால் - அதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மாநிலப் பட்டியலிலிருந்து கல்வியைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றதால் ஏற்படும் விபரீதம்

கல்வி என்பது ஏற்கெனவே மாநிலப் பட்டியலில் இருந்த முக்கிய துறையாகும்; அதனை - நெருக்கடி கால நிலையில் - ஓசையில்லாமல் மத்திய அரசு, பொதுப் பட்டியலில் (State to Concurrent List) கொண்டு போய் சேர்த்து மாற்றம் ஏற்படுத்தியது.

இது நடந்தது 1976-இல்; அதன்பின் வந்த ஆட்சிகள் இதை ஒரு முக்கிய பிரச்சினையாக எடுத்துக் கொண்டு, மீண்டும் பழைய படி மாநிலப் பட்டியலுக்குள் கல்வியைக் கொண்டு வரத் தவறியதன் விளைவே, பல்வேறு சமூக அநீதிகளும், சமூகக் கொடுமைகளும் சட்ட பூர்வமாகவே மத்திய அரசால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன - மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை என்ற கல்வித் துறையின் மூலம். எடுத்துக் காட்டாக, மாநில அரசு ஒழித்த பொது நுழைவுத் தேர்வு என்பதை - மருத்துவக் கல்வி, மற்றும் தொழிற்படிப்புகளில் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை ஆதிக்க அதிகார சக்திகள் செய்து வரு கின்றன. ஏற்கெனவே உச்சநீதிமன்ற பெரும்பான்மைத் தீர்ப்பு நுழைவுத் தேர்வு ரத்து சரிதான் என்று கூறிய பிறகும் மருத்துவக் கவுன்சில் மறுசீராய்வு மனுவைப் போட்டுள்ளது; மத்திய அரசும் அதனை ஆதரிக்கிறது!

இது போன்ற கல்வியில் இரண்டு எஜமானர்கள் ஒரே நேரத்தில் அதிகாரம் செலுத்தும் விசித்திர நிலை ஏற்பட்டுள்ளது!

மாநிலங்கள் வெறும் நகராட்சிகளா?

மாநிலங்களின் உரிமைகள் - அதிகாரங்கள் ஏற்கெனவே பெரிதும் பாதிக்கப்பட்டு, வெறும் முனிசிபாலிட்டிகளைப் போன்று மாநில அரசுகள் ஆக்கப்பட்டுள்ள நிலையில், இது போன்ற புதிய அறிவிப்புகள் மேலும் மேலும் மாநிலங்களின் அதிகாரப் பறிப்புக்குத் தான் வழி வகுக்கும். தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் அறிக்கை, காலத்தால் தரப்பட்ட சரியான எச்சரிக்கைமணி!

மாநில அரசின் ஒப்புதலோ, அல்லது அதனுடன் கலந்து ஆலோசிக்காமலோ இப்படி தன்னிச்சையாக மத்திய அரசு நடந்து கொள்வது எவ்வகையில் நியாயம்?

கல்வியை வியாபாரமாக்காதே என்ற குரல் ஓங்கி முழங்கிக் கொண்டே இருக்கும் நிலையில், வெளிநாட்டுப் பெரும் வணிகத் திமிங்கிலங்களுக்குக் கதவு திறந்து விட்டு, நம் நாட்டில் சில்லறை வணிகத்தினை அழிப்பது போல, இப்போதுள்ள பள்ளிகளையும்கூட மறைமுகமாக கொஞ்சம் கொஞ்சமாக இத்தகைய மாதிரிப் பள்ளிகள் - வணிகமயம் ஆகும்; அதுவும் மத்திய அரசும் தனியாரும் (Private - Public Partnership) நடத்துவது எவ்வகையில் நியாயப்படுத்தக் கூடியது?

அன்றே நவோதயாவை எதிர்த்தோமே!

கல்வி அடிப்படை உரிமை (Education is Citizen’s Fundamental Right - Right to Education) என்று அரச மைப்புச் சட்டத்தில் சட்ட ரீதியாக அறிவிக்கப்பட்டபின், இப்படி மத்திய கல்வித்துறை ஒரு முடிவு எடுத்திருப்பது மிகப் பெரிய, அரசியல் சட்ட விரோதப் போக்காகும்!

இதனை தமிழ்நாட்டுக் கல்வி அறிஞர்கள், மாநில உரிமை காக்க விழைவோர், உண்மையான ஜனநாயக விரும்பிகள், அனைவரும் ஒட்டு மொத்தக் குரலில் எதிர்க்க வேண்டும்; தமிழக அரசும் முதல்வரும் உடனடியாக எதிர்ப்பைப் பதிவு செய்தாக வேண்டும்.

முன்பு ராஜீவ்காந்தி கொண்டு வந்த நவோதயா பள்ளிகளே ஹிந்தித் திணிப்புக்கு மறைமுக வழி என்று கண்டித்து நிறுத்திய தமிழ்நாடு, இப்பொழுது சும்மா இருக்காது - இருக்கவும் கூடாது. கிளர்ந்தெழ வேண்டும்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
1.11.2013

தமிழ் ஓவியா said...


தொல்லை



வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப்படுபவர்கள் நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பவர்கள்.
(குடிஅரசு, 19.9.1937)

தமிழ் ஓவியா said...


இந்தியாவின் தோல்வி

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகள் மதிக்கப்படும் என்று டெசோ தலைவர் கலைஞர் அவர்களுக்கு பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் எழுதிய கடிதம் - இப்பொழுது பிரதமரின் நம்பகத் தன்மையைக் கேள்விக் குறியாக்கி விட்டது.

பிரதமர் கருத்து மதிக்கப்படவில்லையா? அவர் பின்னணியில் அந்த உணர்வை வீழ்த்தும் சக்தி எது என்ற கேள்விகள் எழுந்து நிற்கின்றன -என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

இந்தப் பிரச்சினையில் திராவிடர் இயக்கக் கட்சிகள் கூறும் கருத்து மறுபுறம் இருக்கட்டும். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மற்றும் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள தமிழர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாண்புமிகு ஜி.கே. வாசன் தெரிவித்த கருத்துகளும், அகில இந்திய காங்கிரசின் உயர் மட்டக் குழுவால், நிராகரிக்கப்பட்டு விட்டன.

தமிழ்நாடு சட்டப் பேரவையில், ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும், மதிக்கத் தயாராக இல்லை, அகில இந்தியக் காங்கிரஸ் தலைமை.

இதன் விளைவு என்ன? திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களும் டெசோ தலைவரும் தி.மு.க. தலைவரு மான மானமிகு கலைஞர் அவர்களும் வெளியிட்ட கருத்தின்படி இதற்குரிய கடுமையான விலையைக் காங்கிரஸ் கொடுத்தே தீர வேண்டும், தமிழ் நாட்டைப் பொறுத்தவரை காங்கிரஸ் கை கழுவி விட்டது என்பது கடைசியாகவும் உறுதி செய்யப் பட்டு விட்டது என்று எடுத்துக் கொள்ளலாம்.

இது ஒரு புறம் இருந்தாலும், இந்திய ஆட்சி பற்றிய பொது மதிப்பீடு என்னவாக இருக்க முடியும்?

இலங்கையில் நடப்பது இனப்படுகொலை (Genocide) என்று பகிரங்கமாக சொன்னவர் அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி (16.8.1983).

அவரைத் தொடர்ந்து பிரதமராக வந்த ராஜீவ்காந்தியும், இனப் படுகொலை என்ற கருத்தை திராவிடர் கழகத் தலைவரிடம் சொன்ன துண்டு (டில்லி - 2.6.1990).

ஒரு நாட்டில் இன படுகொலை நடந்தால், அதில் தலையிடவும், கண்டிக்கவும் எந்த ஒரு நாட்டுக்கும் உரிமையுண்டு என்ற அய்.நா.வின் எழுதப்பட்ட எழுத்துக்கு உகந்த வகையிலும், நடந்திடவில்லை இந்திய அரசு.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்ப தால் இலங்கை வாழ் தமிழர்களுக்குத் தேவை யானவற்றை வாதாடிப் பெற முடியும் என்பது ஒப்புக்குச் சப்பாணி நியாயக் கற்பிப்பு!

இதுவரை, இந்த வகையில் இந்தியா நடந்து கொண்டதற்குக் கிடைத்த பலன் என்ன?

1987இல் ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதா? - அதில் கண்டுள்ள எந்த சரத்தை இலங்கை அரசு நிறைவேற்றியது?

வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பு நடந்ததா? தமிழுக்குரிய அரசு மொழித் தகுதி தரப்பட்டதா? இவை செய்யப்படாத நிலையில், இலங்கை அரசைத் தட்டிக் கேட்கும் தைரியம் இந்தியாவுக்கு இருந்ததா?

ராஜ தந்திர நிலையில், இந்தியா வெற்றி பெற்றுள்ளதா? இந்தியா - சீனா யுத்தத்தின் போதும் சரி, இந்தியா - பாகிஸ்தான் சண்டையின் போதும் சரி, இலங்கை இந்தியாவுக்கு எதிராக நடந்து கொள்ளவில்லையா?

இப்பொழுதுகூட இந்தியாவின் எதிர் வரிசை யில் இருக்கும் சீனா மற்றும் பாகிஸ்தானோடு தானே தோளில் கை போட்டுத் திரிகிறார் ராஜபக்சே.

இந்தியாவின் எதிரி நாடுகள் உள்பட இந்தியா வையும் கையில் போட்டுக் கொண்டு சாமர்த்திய மாகக் காயை நகர்த்துகிறதே சுண்டைக்காய் நாடான இலங்கை; இந்த வகையில் வெற்றி பெற்றது இந்தியாவின் ராஜ தந்திரமா? இலங்கை அரசின் ராஜ தந்திரமா?

எல்லா வகையிலும் இந்தப் பிரச்சினையில் இந்தியா முழுத் தோல்வியை அடைந்து விட்டது என்பதுதான் அறிவு நாணயத்தோடு ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மையாகும்.

தமிழ் ஓவியா said...


ஏழு மொழிகள்

1. என்னிடம் ஆறு நேர்மையான பணியாளர்கள் உள்ளனர். அவர்களின் பெயர்கள் வருமாறு: எங்கே? என்ன? எப்போது? ஏன்? எப்படி? யார்?
- ரட்சார்ட் கிப்லீவ்

2. அர்ச்சகன் பொறுக்கித் தின்ன ஆண்டவன். அதிகாரி பொறுக்கித் தின்ன அரசாங்கம். அயோக்கியன் பொறுக்கித்தின்ன அரசியல்
- தந்தை பெரியார்

3. தேசீயம் என்பதெல்லாம் பொய். இது எதார்த்தப் பொருள் அல்ல. கற்பனை உணர்ச்சி; இளமையிலிருந்து சொல்லிக் கொடுத்த வெறுஞ்சொல்.
- ம.சிங்காரவேலர்

4. புரட்சி தவிர்க்கப்படக் கூடியது அல்ல என்பதே எப்போதும் எனது - கருத்தாகும்.
-பெஞ்சமின் டிஸ்ரேலி வெண்டல் பிலிப்ஸ்

5. ஆயுதப் புரட்சிக்கு முன்னோடியாக எப்போதும் கருத்துப் புரட்சி நிகழ்ந்தே வந்திருக்கின்றது.
- பகத்சிங்

6. நாட்டின் அறியாமையைக் கண்டு என் உள்ளம் வேதனை யால் துடிக்கின்றது! அரசியல் விடுதலை சோசலிசம் என்ற இலட்சியத்துக்கான வழியை மட்டுமே தரும். ஆனால் உண்மை யான சோசலிசம் என்பதோ இங்குள்ள மதமூட நம்பிக்கைகள் ஒழிக்கப்பட்டால் தான் முடியும்.

7. (1) பார்ப்பான் (2) படிப்புக்காரன் (3) பதவிக்காரன் (4)பணக்காரன் நான்கு எதிரிகள்
- தந்தை பெரியார்.

தமிழ் ஓவியா said...

தெரியவில்லை மகனே!

மகன்: பூமியிலே கண்டம் அய்ந்து, மதங்கள் கோடி என்று பாரதி பாடியிருக்கிறான் இல்லையா? அப்பா.

அப்பா: ஆமாம் மகனே!

மகன்: இருக்கிற மதங்களிலேயே மிகவும் சகிப்புத் தன்மை வாய்ந்த மதம் இந்து மதம் தான் என்று இந்து மதத் தலைவர்கள் பறைசாற்றுகிறார் கள் இல்லையா அப்பா...!

அப்பா: ஆமாம் மகனே.

மகன்: அப்படி யென்றால் அண்மையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மீனாட்சிபுரம் என்ற ஊரில் ஆயிரம் தாழ்த்தப்பட்டவர்கள் இஸ்லாம் மதத்தில் சேர்ந்து விட்டதற்காக ஏதோ பிரளயம் ஏற்பட்டு விட்டதைப் போல இந்து மதவாதிகள் ஆகாயத்திற்கும் பூமிக்கும் தாவிக் குதிக்கிறார்களே! அது ஏன் அப்பா?

அப்பா: தெரியவில்லை மகனே. உண்மையான தெய்வம் எதிரே இருக்கும் கல்லிலே இல்லை; அது உங்கள் தோள் வலிமையிலேஇருக்கிறது!

தமிழ் ஓவியா said...

ரோம் நகரம் எரிந்த போது பிடில் வாசித்த நீரோவைப் போலவே, இந்த உலகமும் கொடுமை நிறைந்ததாகவே இருக்கிறது! நிலவையும் நிழலையும் பிணைத்து வைக்கிறது, கற்களை வழிபடுவதற்காக மலர்களை உண்டாக்குகிறது. உண்மையிலேயே கற்களல்லவா கற்களை வழிபட வேண்டும்!

- வி.ச. காண்டேகர், தகவல்: புலவர். வெற்றியழகன்

தமிழ் ஓவியா said...

குற்றால நாதருக்கு தீராத தலைவலியாம்



குற்றாலத்தில் உள்ள குற்றால நாத சாமிக்கு தினமும் காலையில் குளிப் பாட்டும்பொழுது கொஞ்சம் மூலிகைத் தைலம் வைத்து தான் குளிப்பாட்டுவார்கள். காரணம் அவருக்குத் தலைவலியாம்!

தகவல்: இரா.பேச்சிமுத்து, குற்றாலம் (நெல்லை)

தமிழ் ஓவியா said...


சோதிடம் - அறிவியலல்ல!


விண்வெளிக் களங் களைப் பற்றி என்னிடம் பல நண்பர்கள் கேள் விகள் கேட்ட போது, அவர்கள் சில நேரங் களில் ஜோதிடம் பற்றியும் கூட கேள்விகள் கேட் டனர்.

நமது சூரிய மண்டலத்தில் நம்மை விட்டு வெகு தொலைவில் உள்ள கோள்களுக்கு நமது மக்கள் இந்த அளவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்ததன் பின்னணியில் உள்ள காரணத்தை உண்மையில் என்னால் எப்போதுமே புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.

ஜோதிடம் ஒரு கலை என்பதற்கு எதிராக நான் எந்தக் கருத்தையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் அது அறிவியல் என்ற போர்வையில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு நான் வருந்தவே செய்கிறேன்.

இந்த கோள்கள், நட்சத்திரக் கூட்டங்கள், செயற்கைக் கோள்கள் ஆகியவை மனித உயிர்கள் மீது ஆற்றல் செலுத்த இயலுமென்ற கட்டுக் கதைகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன

என்பதை நானறியேன். விண்வெளியில் உள்ள இவற்றின் சரியான இயக்கத்தைச் சுற்றி, குழப்பம் மிகுந்த கணக்குகளை கற்பனையில் உருவாக்கி அவற்றிலிருந்து மக்களின் வாழ்க்கை நடைமுறைகள் பற்றி முடிவுகளைப் பெறுவது என்பது சரியானதென எனக்குத் தோன்றவில்லை.

நான் காணும் வரை, பூமி ஒன்றே ஆற்றல் மிகுந்த, சுறுசுறுப்புடன் இயங்கும் ஒரு கோளாகும். தனது இழந்த சொர்க்கம் (8ஆம் புத்தகத்தில்) ஜான்மில்டன் அழகாக கூறியபடி,

பூமிக்கும் மற்ற நட்சத்திரங்களுக்கும் சூரியன் மய்யமானதாக இருந்தால் என்ன?

மூன்று வேறுபட்ட வழிகளில் பூமி அறிவற்றபடி இயங்குவதாக தோன்றினாலும், பூமி என்னும் இக்கோள் எவ்வளவு உறுதியாகச் செயல்படுகிறது!

நெருப்பு இறக்கைகள் என்ற தனது சுயசரிதையில் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியும், இந்திய அரசின் அறிவியல் ஆலோசகருமான ஏ.பி.ஜே.அப்துல்கலாம்.

தமிழ் ஓவியா said...


உடுமலையாரின் பாடல்


ஆண்: காசிக்குப் போனாக் கருவுண்டாகு மென்ற
காலம் மாறிப் போச்சு... இப்ப
ஊசியைப் போட்டா உண்டாகு மென்ற
உண்மை தெரிஞ்சு போச்சு

பெண்: ஈசன் செயலால் இறப்பும் பிறப்பும்
எல்லாம் நடக்குதுங்க - அதை
எண்ணாமே எவனோ சொன்னான்னு கேட்டு
ஏமாந்து போகாதீங்க!

ஆண்: ஆகாரம் சமைக்க சூரிய ஒளியால்
அடுப்பை மூட்டுறாங்க
ஆணைப் பெண்ணாக பெண்ணை ஆணாக
ஆளையே மாத்துறாங்க - இங்கே
ஆளையே மாத்துறாங்க.

பெண்: அது... ஆயிரங் காலத்துக் கப்பாலே நடக்கிற
ஆராய்ச்சி விசயமுங்க... மூளை
ஆராய்ச்சி விசயமுங்க - நம்ம
அறிவுக்குப் பொருத்தம்
ஆறு, கோயில், அரசமரந்தானுங்க!

ஆண்: கோழி யில்லாமெ தன்னால முட்டைகளில்
குஞ்சுகளைப் பொரிக்க வச்சார் - உங்
கொப்பன் பாட்டன் காலத்தில் யாரிந்த
கோளாறைக் கண்டு பிடிச்சார்.... இந்தக்
கோளாறைக் கண்டு பிடிச்சார்!

பெண்: அந்தக் குஞ்சுகள் பொறிக்க வச்ச கோளாறுக் காரனை
முட்டை யொண்ணு பண்ணச் சொல்லுங்க? - பார்ப்போம்
முட்டை யொண்ணு பண்ணச் சொல்லுங்க - வாய்
கூசாமல் எதையும் யோசனை செய்யாமே
பேசுவது தப்பித முங்க

ஆண்: எட்டாத விஷயத்தை ஈசன் பெயரால்
இயற்கை யெங்குறாங்க - இனிமேல்
இயற்கையுங் கூட செயற்கையில்.. ஆகும்
முயற்சியும் பண்ணுறாங்க!

- சுயமரியாதைக் கவிஞர் உடுமலை நாராயண கவி இயற்றி கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும், மதுர மும் பாடிய பகுத்தறிவுக் கருத்துகள் நிறைந்த இப் பாடல் டாக்டர் சாவித்திரி எனும் படத்தில் இடம் பெற் றுள்ளது.

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வும்-நீதிபதி விதித்த அபராதமும்! தி.மு.க. தலைவர் கலைஞர் கருத்து


சென்னை, நவ.1- ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர் பான வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அளித்த அபராதம் குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் தெரிவித்த கருத்து வருமாறு:

கேள்வி: ஆசிரியர் தகுதித் தேர்வில் குளறுபடி நடைபெற்றதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்ற (மதுரைக் கிளை) நீதிபதி நாகமுத்து அவர்கள் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்திருக்கிறாரே?

கலைஞர்: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலை வராக ஒரு மூத்த அய்.ஏ.எஸ். அதிகாரிதான் பணியில் இருந்து வருகிறார். அவருக்கு உயர்நீதிமன்றம் அப ராதம் விதித்திருப்பது என்பது அரசுக்கே அவ மானத்தைத் தரக்கூடிய ஒரு தீர்ப்பாகும்.

நீதியரசர் தனது தீர்ப்பில், இந்த வழக்கு ஓராண் டாக நிலுவையில் உள்ளது. பலமுறை விசார ணைக்கு வந்தும், தேர்வு வாரியத்தின் தலைவர் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. அரசுத் தரப்பிற்கு கால அவகாசம் அளித்தும், நடவடிக்கை இல்லை. இத னால் மனுதாரர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி யுள்ளார்.

தேர்வு வாரியத் தலைவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறேன். அவர் தொகையை மனுதாரருக்கு வழங்கவேண்டும் என்றெல்லாம் சொல்லியிருப்பது, தனிப்பட்ட ஒரு அதிகாரிக்குக் கண்டனம் அல்ல, அ.தி.மு.க. அரசுக்கே விதிக்கப் பட்ட தண்டனையாகத்தான் கருத வேண்டும்.

இந்த வழக்கிலே மாத்திரமல்ல; இரண்டு நாட் களுக்கு முன்பு உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஜெயச்சந் திரன், நாகமுத்து ஆகியோர், கொலை வழக்கு ஒன்றில் அளித்த தீர்ப்பிலேகூட தங்கள் வேதனை யைத் தெரிவித்திருக்கிறார்கள். அந்தத் தீர்ப்பில், குற்றவாளிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கீழ் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கொலைக்குப் பயன்படுத்திய அரிவாளை காவல்துறையினர் பறி முதல் செய்துள்ளனர்.

அதை நீதிமன்றத்தில் ஒப்ப டைக்கவில்லை. அதில் படிந்திருந்த ரத்தக்கறையை டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பி, அந்த அரி வாளைத்தான் கொலையாளிகள் பயன்படுத்தினர் என்பதை நிரூபிக்கவில்லை. விசாரணையில் பல் வேறு குறைபாடுகள் இருந்தன. அந்தக் குறை பாடுகளைக் களைய காவல்துறையினருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதைக் காவல்துறையினர் சரி யாகப் பயன்படுத்தவில்லை.

இந்த வழக்கில் காவல்துறையினரின் பல்வேறு குறைபாடுகள், தவறுகள், திறமையின்மை வெளிப் பட்டுள்ளது. இதற்குமேல் விசாரணை அமைப்பை எப்படி விமர்சனம் செய்யவேண்டும் எனத் தெரிய வில்லை. கல்நெஞ்சம் படைத்த கொலையாளிகள் நான்கு பேரைக் கொடூரமாகக் கொலை செய் துள்ளனர். காவல்துறையினரின் விசாரணை முழு வதும் வீணாகி விட்டது. உயர்நீதிமன்றம் வைத் திருந்த நம்பிக்கையை காவல்துறையினர் தகர்த்து விட்டனர்.

தகுந்த ஆதாரங்கள் சாட்சியங்களின் அடிப்படையில் நிரூபிக்க காவல்துறையினர் தவறிவிட்டனர். காவல்துறையினர் பொறுப்பு, கடமைகளில் தவறியதை உணரவேண்டும். விசாரணையில் காவல்துறையினர் அலட்சியம் காட்டுவது, நீதி, நியாயம் தோற்கக் காரணமாக அமைகிறது.

இந்த வழக்கில் நீதி தோற்றதை கனத்த இதயத்துடன் சொல்கிறோம் என்று காவல்துறைபற்றி நீதிபதிகள் விமர்சித்திருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இப்படியொரு தீர்ப்பு வந்திருந்தால் உடனே காவல்துறைக்குப் பொறுப் பேற்றுள்ள மைனாரிட்டி ஆட்சியின் முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்று அறிக்கை கொடுத் திருப்பார்கள். ஆனால் இப்போது?

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


பிரபாகரன் மகள் என சந்தேகித்து இசைப்பிரியாவை கைது செய்யும் காட்சிகள்... புதிய வீடியோ வெளியீடு!


லண்டன், நவ.1 இலங்கை இறுதிப் போரில் இலங்கை ராணுவத்தின ரால் கைது செய்யப் பட்டு பின்னர் பாலியல் வன்முறைக்கு ஆளாக் கப்பட்டு கொலை செய் யப்பட்ட தமிழீழத் தேசிய தொலைக்காட் சியின் செய்தி வாசிப்பா ளரான இசைப்பிரியா தொடர்பான புதிய போர்க்குற்ற ஆதாரம் ஒன்றை சேனல் 4 தொலைக்காட்சி வெளி யிட்டுள்ளது.

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை ராணுவத்தி னரால் இசைப்பிரியா படுகொலை செய்யப் பட்டு கிடக்கும் காட்சி கள் ஏற்கெனவே வெளி யாகியிருந்தன. ஆனால் இசைப்பிரியா போரின் போதே கொல்லப்பட் டார் என்று இலங்கை அரசு கூறி வருகிறது.

இந்நிலையில் இலங்கை ராணுவத்தின ரால் இசைப்பிரியா உயி ரோடு கைது செய்யப் பட்ட வீடியோ ஆதா ரத்தை இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக் காட்சி நேற்று வெளி யிட்டுள்ளது. கடற்கரை ஒன்றில் மேலாடையின்றி நீருக் குள் அமர்ந்திருக்கும் இசைப்பிரியாவை இலங்கை ராணுவத்தி னர் வெள்ளைத் துணி ஒன்றைப் போர்த்தி இழுத்து வரும் காட்சி அதில் பதிவாகியுள்ளது.

இலங்கை ராணுவத் தினர் 6 பேர் இசைப் பிரியாவை பிடித்து வரு வதும் அப்போது அவர் கள் பிரபாகரனின் மகள் என்று அவரைக் கூறு வதும் அதற்கு அவர் அய்யோ அது நானில்லை என்று அழுவதும் அந்த காட்சியில் பதிவாகி யுள்ளது.

இதன் மூலம் இசைப் பிரியா இலங்கை ராணு வத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்டு படு கொலை செய்யப்பட் டுள்ளது உறுதியாகியுள் ளது. வெள்ளைத் துணி போர்த்தப்பட்ட நிலை யிலும், துணி அகற்றப் பட்ட நிலையிலும் இசைப்பிரியாவின் உடல் கிடந்த காட்சிகள் ஏற்கெனவே வெளியாகி யிருந்தன என்பது குறிப் பிடத்தக்கது.

இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் இந்த புதிய போர்க்குற்ற ஆதார வீடியோ வெளியாகி இருப்பது அந்நாட்டுக்கு பெரும் நெருக் கடியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் ஓவியா said...

விதவையர்க்கும் மரியாதை!


- கர்நாடகத்தில் ஓர் மாற்றம்!

கோவில் கருவறைக்குள் பெண்கள் நுழையவே அனுமதியில்லாத நம் நாட்டில் விதவைப் பெண்களான இந்திரா சாந்தி, லட்சுமி சாந்தி என இருவர் அர்ச்சகராகியுள்ளனர். மங்களூர் குத்ரோலியில் இருக்கும் கோகர்னாதேஸ்வரர் கோவிலில் இரண்டு விதவைப் பெண்கள் தினமும் சிவனுக்கு அர்ச்சனை செய்து வருகின்றனர். கோவிலுக்குள் வந்ததும் பாரம்பரிய முறைப்படி மேளதாள வரவேற்பு அர்ச்சகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கான பெருமை மேனாள் மத்திய நிதி அமைச்சரும், தற்போது கோவிலின் ஆலோசனைக் குழுத் தலைவருமான ஜனார்த்தன பூஜாரியைச் சாரும்.

கோவிலுக்குப் பக்கத்து ஊரான பன்னூர் கிராமத்திலிருந்து வரும் இந்திராசாந்தி திருமணமான சிறிது காலத்திலேயே கணவனை இழந்து சமுதாயக் கொடுமைகளுக்கு ஆளானவர். இவரை அழைத்த கோவில் நிர்வாகம், கோவிலில் பூஜை செய்ய வேண்டும் என்று சொன்னபோது பயந்தவர், பின்பு, சமூகத்தில் விதவைப் பெண்கள் மீதான மூடநம்பிக்கையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக ஒத்துக் கொண்டதாகக் கூறியுள்ளார். மேலும், தான் செய்யும் பூஜையை ஏற்றுக்கொண்ட பக்தர்கள், தன்னிடம் தீர்த்தம், பூ, பிரசாதம் வாங்கிச் செல்வது மகிழ்ச்சியாக உள்ளது என்று பூரித்துள்ளார்.

இது குறித்து ஜனார்த்தன பூஜாரி,

எந்த ஜாதியைச் சேர்ந்த பெண்களாக இருந்தாலும், எந்த மதத்தைச் சார்ந்த பெண்களாக இருந்தாலும் ஒரு நாள் பயிற்சி எடுத்துக்கொண்டு இந்தக் கோயில் கருவறைக்குள் சென்று பூஜை செய்யலாம். விதவைப் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். கோவில் நிர்வாகத்தின் சார்பாக விதவைகளுக்கு மறுமணமும் இலவசமாக செய்து வைக்கிறோம். இதை யாரும் எதிர்க்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. காரணம், அவர்களும் ஒரு பெண்ணின் வயிற்றில்தான் பிறந்திருப்பார்கள் என்று கூறியுள்ளார். மேலும், மாறிவரும் காலத்திற்கேற்ப நாமும் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். பெண்களை பூமா தேவியாக மதிக்கும் நம் நாட்டில், அவர்கள் கணவனை இழந்துவிட்டால் எந்த நல்ல காரியத்திலும் பங்கு கொள்ள அழைக்காமல் புறக்கணிப்பது மூடநம்பிக்கையின் அடையாளம். இந்த வழக்கம் நாட்டிலிருந்து ஒழிய வேண்டும் என்றும் கூறியுள்ளார் பூஜாரி.

விதவைப் பெண்கள் அர்ச்சகர் நியமனத்தை கர்நாடகாவிலுள்ள பல பெண்கள் அமைப்பினர் வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

வறுமையில் முதலிடம் மோடியின் குஜராத்


நாட்டிலேயே அதிகமாக வறுமையில் வாடுபவர்கள் குஜராத் மாநிலத்தில் வசிக்கிறார்கள் என்பதை சமீபத்திய ஆய்வு ஒன்று தெளிவுபடுத்தியது. குஜராத்தில் நர்மதா பள்ளத்தாக்கில் இருந்த 2 இலட்சம் பேர் அரசால் வெளியேற்றப்பட்டதால் இன்று மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் பிச்சை எடுத்துக் கொண்டு பிளாட்பாரங்களில் தூங்கிக் கொண்டு உள்ளனர். மோடியைப் போன்றவர்கள் நாட்டை ஆண்டால் என்னவாகும்!

- ஹர்ஷ் மந்திர், அய்.ஏ.எஸ்

தமிழ் ஓவியா said...

ராகுல் காந்திககு சில கேள்விகள்


எனது பாட்டியைக் கொன்ற பேயந்த் சிங், சத்வந்த் சிங் ஆகியோர் மீதான கோபம் தணிய எனக்கு சுமார் 15 ஆண்டுகள் ஆனது. பஞ்சாப் மக்கள் அப்போது கோபமாக இருந்தார்கள். இப்போது தணிந்துவிட்டது. சில மாதங்களுக்கு முன் பஞ்சாபிலிருந்து என்னைப் பார்க்க சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் வந்தார். திரும்பிப் போவதற்கு முன் என்னைப் பார்த்து 20 ஆண்டுகளுக்கு முன் உங்களைச் சந்தித்திருந்தால் கொன்றிருப்பேன். அப்போது கோபமோ கோபம். இப்போது கோபம் தணிந்துவிட்டதாகக் கூறி என்னைத் தழுவிக் கொண்டார். கோபம் தணிய பல ஆண்டுகள் ஆகிறது. அதைத் தூண்டி விட ஒரு நிமிடம் போதும். கோபத்தை மறக்கவும் சகோதரத்துவத்தை ஏற்படுத்தவும் பல நாட்கள் ஆகின்றன. இப்படிப் பேசியிருப்பவர் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி.

இவரது உணர்வுகளை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. கொலை என்பது எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. கொலைகளை யார் செய்தாலும் குற்றம் குற்றமே. இதில் நமக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், சில கேள்விகளும் நம்மிடம் உள்ளன. இவரது தந்தை ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் ஈழத் தமிழர்களில் சிலர் என்பதால் அவர்கள் மீதான கோபம் இன்னும் ராகுலிடம் தணியவில்லையே, ஏன்? 22 ஆண்டுகள் கடந்தும் கூட அந்தக் கோபம் நீடிப்பது ஏன்? ஒரு சிலர் செய்த தவறுக்காக அந்த இனத்தையே அழிக்க சிங்களர் அரசுக்குத் துணைபோவது சரியா? 2009 ஆம் ஆண்டில் நடந்த முள்ளிவாய்க்கால் போருக்கு ராகுலின் கட்சி ஆளும் இந்திய அரசு துணைபோனதா? இல்லையா? இதற்குப் பெயர் பழிவாங்கும் நடவடிக்கை அல்லவா? 2009க்குப் பின் நான்கு ஆண்டுகள் ஆகியும் இன்னும் தமிழின அடையாளங்களை அழிக்கும் சிங்கள அரசின் கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பது சரியா? அவரது தலைமையை ஏற்கும் வகையில் காமன்வெல்த் மாநாட்டுக்கு இந்தியா செல்லுவது என்ற முடிவில் இன்னும் மாற்றமில்லையே ஏன்?

அமைதிப் படை என்கிற பெயரில் ஈழத்தில் தமிழர்களை உங்கள் அப்பா ராஜீவின் இந்திய ராணுவம் கொன்றது உங்களுக்குத் தெரியுமா? அதனால் அவர்கள் கோபம் கொண்டார்கள் என்பதை அறிவீர்களா? இவ்வளவு நடந்த பின்னும் தமிழ்நாடு உங்கள் மீது கோபம் கொள்ளாமல் இன்னும் கோரிக்கை மட்டுமே வைத்துக் கொண்டிருக்கிறதே, இதனை நீங்கள் புரிந்துகொண்டீர்களா? உங்கள் தந்தையைக் கொன்றதற்கு உங்கள் குடும்பத்தை விட அதிகம் அழுதவர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ராகுல்? 1991 வரை ஈழத்தமிழர்களுக்கு எல்லா வகையிலும் உதவி வந்த தமிழ்நாடு, உங்கள் தந்தையைக் கொன்றதையடுத்து, அவர்கள்மீது ஒருவித கண்டிப்புடனே நடந்ததே, நீங்கள் அறிவீர்களா?

பஞ்சாபியர்களின் கோபம் தணிக்க மன்மோகன் சிங்கை 10 ஆண்டுகள் பிரதமர் பதவியில் உட்கார வைத்தீர்கள். இன்னும் தங்களிடம் நேசம் காட்டும் தமிழர்கள்மீது உங்களது பாசத்தை எப்போது காட்டுவீர்கள் ராகுல்?

- பெரியாரிடி

தமிழ் ஓவியா said...

நூல்

நூல்: தமிழர் தலைவரின் அரசியல் பயணம் |

ஆசிரியர்: கி. வீரமணி

வெளியீடு: திராவிடர் கழக(இயக்க) வெளியீடு,

84/1,(50) ஈ.வெ.கி.சம்பத் சாலை, சென்னை-_7. (: 044_26618161

பக்கங்கள்: 64 | விலை: ரூ.35/_

பத்து வயது அடையும் முன்பே பெரியார் கொள்கையைப் பரப்பத் தொடங்கி, 80 வயதிலும் அதே தொண்டைத் தொடர்ந்து கொண்டிருக்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் அரசியல், சமூக நீதிப் பயணத்தை திரும்பிப் பார்க்கும் நூல்! துக்ளக் இதழில் இந்த ஆண்டு தமிழர் தலைவர் கி.வீரமணி எழுதிய தொடர் கட்டுரைகளுடன், 1982ஆம் ஆண்டு சோ அவர்களால் துருவித் துருவிக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு திராவிடர் கழகத் தலைவர் அளித்த விளக்கமான நேர்காணலும், 1985ஆம் ஆண்டு வைக்கம் போராட்டம் பற்றி வெளிவந்த கட்டுரைச் செய்திக்கு தகுந்த ஆதாரங்களுடன் கொடுத்த மறுப்பும் சேர்க்கப்பட்டிருக்கிறது. மாற்றுக் கருத்துடைய இதழ் ஒன்றில் இடம் பெற்ற பதிவுகளின் தொகுப்பு என்பது கூடுதல் ஆர்வத்தைக் கொடுக்கிறது.

தமிழ் ஓவியா said...

ஆவணப்படம்

அஃறிணைகள்
இயக்கம் : இளங்கோவன்
செல்பேசி 9789725197

திருநங்கைகளுக்கும் மனம் உண்டு, அறிவாற்றல், சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு உண்டு என்பதை வெளிப்படுத்தியுள்ள படம். ஆண் என்ற நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உணர்வுகளால் மாறி திருநங்கையாகும் விதம் மனநல மருத்துவரின் விளக்கத்துடன் இடம் பெற்றுள்ளது.

அரவணைக்க வேண்டிய பெற்றோர் காட்டும் வெறுப்பு, சமூகம் பார்க்கும் பார்வை, எதிர்கொள்ளும் பிரச்சினைகள், எதிர்நீச்சல் போட்டு முன்னுக்கு வரும் வழிமுறைகள், விளக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட நபர்களே கதாபாத்திரங்களாக தோன்றி இயல்பு நிலையை வெளிப்படுத்தி காண்போர் நெஞ்சையும் கருத்தையும் நிறைத்து திருநங்கைகளுக்கு சமுதாயத்தில் ஓர் அங்கீகாரத்தை - மதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. உணர்வுகளால் மாற்றம் பெற்று வரும் ஆண்களுக்கு தன்னம்பிக்கையை உண்டாக்கியுள்ள படம்.

தமிழ் ஓவியா said...


சட்டத்தை மதிக்கும் நீதிபதி

இது மதச்சார்பற்ற நீதிமன்றம். இங்கு இந்துமதப் பண்டிகையான ஆயுதபூஜைக்கான செலவை யார் ஏற்பது? நீதிமன்றச் செலவுகளுக்கு அரசு கொடுக்கும் பணத்தில் பூஜை நடத்துவது சட்ட விரோதம். ஊழியர்கள் தங்கள் சொந்தச் செலவில் கொண்டாடினால் அதனால் ஏற்படும் செலவினங்களை அவர்கள் எப்படி ஈடுகட்டுவார்கள். அது தவறு செய்ய அவர்களைத் தூண்டிவிடும் செயலாக மாறிவிடும். எனவே, இந்த பூஜைக் கொண்டாட்டங்கள் எல்லாம் நான் நீதிபதியாக இருக்கும் நீதிமன்றத்தில் நடத்தக் கூடாது. இப்படிச் சொல்லி இருப்பவர் ஒரு நீதிபதி. தமிழ்நாட்டில் உள்ளவர் அல்ல; கர்நாடக மாநிலத்தில் இருப்பவர். அவர் பெயர் முடிகவுடா. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து வருபவர் இவர்தான். இந்தியாவின் அரசியல் சட்டம் மதச்சார்பற்ற நாடு என்கிறது. ஆனால், இங்கே அரசு இயந்திரங்கள் எல்லாம் இந்து மதச் சாயம் பூசிக்கொள்கின்றன. கொஞ்சமும் கூச்சமில்லாமல் தமது சொந்த மத நம்பிக்கையை எல்லோருக்கும் பொதுவான அரசின் மீது திணிக்கிறார்கள்.

அரசு ஆணைகள் எல்லாம் அவமதிக்கப்படுகின்றன. அரசை வழிநடத்தும் ஆட்சியாளர்கள் வாழ்த்து சொல்கிறார்கள்; அதிகாரிகள் அலுவலகங்களில் பூஜை போடுகிறார்கள். நீதிபதிகளே தங்களின் அலுவலகத்தில் மதக் கடவுள் படங்களை வைத்துக் கொள்கிறார்கள். மத விழாக்களுக்குச் செல்கிறார்கள்; மதவாதிகளுக்கு அடி பணிகிறார்கள். இத்தகைய நேர்மையில்லாத சூழலில் நீதியரசர் முடிகவுடாவின் நேர்மைக்கு ஒரு வணக்கம் சொல்வோம்; முடிகவுடா அவர்களுக்கு மதச்சார்பற்ற மனிதநேயர் என்ற மகுடம் சூட்டுவோம்.

தமிழ் ஓவியா said...

துளிச் செய்திகள்


வியாழனைவிட எட்டு மடங்கு பெரிய கோளினைக் கண்டுபிடித்து அதற்கு எம்.ஓ.எ.2011_பி.எல் என்று பெயரிட்டுள்ளனர்.

நியூசிலாந்து நாட்டின் பெண் எழுத்தாளர் எலியனார் காட்டன் (வயது 28) எழுதிய தி லூமினரீஸ் என்ற நாவலுக்கு புக்கர் விருது (2013) வழங்கப்பட உள்ளது.

இணைய இணைப்புக்காக எல்இடி பல்புகளைப் பயன்படுத்தி சமிக்ஞைகளைக் கடத்தும் லைஃபை என்ற புதிய தொழில் நுட்பத்தை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பூமியிலிருந்து 80 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள புதிய கிரகத்தைக் கண்டுபிடித்த அமெரிக்காவின் ஹவாயில் உள்ள விஞ்ஞானிகள் அதற்கு பி.எஸ்.ஓ.ஜெ 318.5_22 என்று பெயரிட்டுள்ளனர்.

செல்பேசி மூலம் ரயில் பயணச்சீட்டை முன்பதிவு செய்யும் வசதியை அய்.ஆர்.சி.டி.சி. அறிமுகப்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 15 கடல்மைல் தொலைவில் நுழைந்த எம்வி சீமேன் கார்டு ஓகியோ என்ற ரோந்துக் கப்பலினை அக்டோபர் 12 அன்று இந்தியக் கடலோரக் காவல் படையினர் பிடித்தனர்.

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

துடைப்பத்தை எடுத்த பெண்ணும் துடைப்பத்தால் அடிபட்ட பெண்ணும்!

உலக அதிசயங்களுள் ஒன்றாக ஆக்ராவை அலங்கரிக்கும் தாஜ்மகால் கருதப்படுகிறது.

அமெரிக்கப் பெண்மணியின் பெயர் எரின் நயிட் (30) தாஜ்மகாலைப் பார்க்க வேண்டும் என்று பறந்தோடி வந்தார். தாஜ்மகாலைச் சுற்றிப் பார்த்தவருக்கு ஒரு அதிர்ச்சி!



எங்குப் பார்த்தாலும் குப்பைக் கூளங்கள் அசுத்தம் _ மூக்கைத் துளைத்தன.

வெளிநாட்டுக்காரர்கள் இந்தியா வரத் தயங்குவதற்கு முக்கிய இடம் வகிப்பது இந்த அசுத்தங்களும் திறந்த வெளியில் மலம் கழிக்கும் போக்கும் இந்தக் கொசுக்களும்தான்.

என்ன இருந்தாலும் இந்தப் பூமிக்குப் புண்ணிய பூமி என்ற பெயர் மட்டும் இன்று வரை தள்ளாடாமல் நிற்கிறது.

அமெரிக்கப் பெண் சாதாரணமானவரும் அல்லர். உளவியல் மருத்துவரும்கூட!
அழகிய ஆக்ரா அழுக்குப் போர்வை போர்த்திக் கொண்டு அசிங்கப்பட்டுக் கிடக்கிறது. இதைவிடக் கூடாது; இந்த நகரைச் சுத்தப்படுத்தியே தீருவேன் என்று கையில் துடைப்பத்தை எடுத்துக் கொண்டு ஆக்ராவின் வீதியில் இறங்கிவிட்டார். தாஜ்மகாலையும் பெருக்க ஆரம்பித்துவிட்டார்.

தாஜ்மகாலாக இருந்ததால் தப்பித்தோம். இதுவே இந்துக் கோயிலாக இருந்திருந்தால், என்னதான் எலிப்புழுக்காக நாற்றமும், நாய் விட்டைப் போடும் கக்கூசாக இருந்தாலும் சரி, ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி துடைப்பத்தை எடுத்துக் கொண்டு சுத்தம் செய்யும் வேலையில் இறங்க முடியுமா? முதலில் கோவில் வளாகத்துக்குள்தான் காலடி எடுத்து வைக்கவும் முடியுமா?

வேற்று மதக்காரர்கள் உள்ளே நுழையக் கூடாது என்ற எச்சரிக்கை _ கோவிலின் நுழைவு வாயிலிலேயே கால்களை இயங்காது ஆக்கிவிடுமே.

இதற்கு விளக்கம் வேண்டுமானால் 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு நாம் பயணிக்க வேண்டும்.

பமீலா கே ஃபிளிக் (28) என்ற பெண்மணி ஒருவர். அவரும் அமெரிக்காவிலிருந்து வந்தவர்தான்.

வாரணாசியில் வந்து தங்கிய போது அணில் யாதவ் என்ற பொறியாளருடன் காதல் கொண்டு திருமணமும் செய்து கொண்டார். அதற்காக இந்து மதத்திற்கும் மாறினார். ஒரிசா தலைநகர் புவனேஸ்வர் லிங்கராஜ் கோவிலுக்கு அந்த இணையர்கள் வந்தனர்.

அவ்வளவுதான். ஒரே களேபரம்தான். உள்ளே நுழையாதே! என்ற குரல்.

மதம் மாறிவிட்டோம் என்று ஆதாரங்களைக் காட்டியும் பயனில்லை. வார்த்தைகள் முற்றி இணையர்கள் அடி உதை பட்டதுதான் மிச்சம்.

இதனைச் சற்றும் எதிர்பாராத மதம் மாறிய அந்தப் பெண்மணி _ காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார். புகார் மனு பெற்றுக் கொள்ளவும் மறுக்கப்படுகிறது.

இந்தச் செய்தி பரபரப்பாக ஏடுகளில் வெளிவரவே, அவசர அவசரமாக காவல்துறை புகாரைப் பெற்றுக் கொண்டார்கள். பெயர் அளவுக்கு நடந்த சடங்காச்சாரம் அவ்வளவுதான்.

கோவில் நிர்வாகி ராம்காந்த் மிஸ்ரா. அவரிடமும் அந்தப் பிரச்சினை முட்டியது. அவர் மிஸ்ராவாயிற்றே!

நெற்றியில் திலகமிட்டுக் கொண்டாலும் ஒரு வெளிநாட்டுப் பெண் இந்துவாகிவிட முடியுமா? என்று தனது கோணல் திருவாயால் மொழிந்தார்.

பூரி சங்கராச்சாரியார் நிஷ்ச்சாலனந்தா சரஸ்வதிதான் இதில் முடிவெடுக்க முடியும் என்று அவரிடம் அனுப்பி வைத்தனர்.

அங்கும்தான் சென்று பார்ப்போமே! சென்றனர். பெரியவாள் தன் பெரிய வாயைத் திறந்தார்.

வேற்று மதத்தைச் சேர்ந்த ஒருவர் இந்துவாக மதம் மாறி, ஒரு இந்துவை மணம் புரிந்தால் அவரை இந்துவாக ஏற்றுக் கொள்வதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால், வழிபாடுகளில் இவர்களுக்கான உரிமைகள் மாறுபடுகின்றன. இந்து சனாதன தர்மத்தின்படி கோவில் வழிபாடுகள் வர்ணாசிரமத்துக்கு அல்லது ஜாதியின் பிரிவுக்கு ஏற்ப அமைந்துள்ளன.

வேற்று மதத்திலிருந்து இந்துவாக மதம் மாறியவர்கள் வர்ணாசிரம தர்மத்துக்கு அப்பாற்பட்டவர்கள். எனவே, வழிபாடு பற்றிய உரிமைகள் அவர்களுக்குப் பொருந்தாது. யார் வேண்டுமானாலும் இந்து மதத்துக்கு மாறலாம். ஆனால், தான் எந்தத் தரமான இந்து என்பதை அவர்கள் முடிவு செய்துகொள்ள வேண்டும். உலகின் எல்லா மதங்களிலும் விதிகளும், வரன்முறைகளும் உள்ளன. இந்துக் கடவுள்கள் மீது உண்மையான பக்தியும், நம்பிக்கையும் ஒருவன் கொண்டிருப்பானேயானால், தன் மீது விதிக்கப்படும் இந்த ஜாதிகளையும், வரைமுறைகளையும் மனமுவந்து பின்பற்ற வேண்டும் என்று இதோபதேசம் செய்ய ஆரம்பித்து விட்டார் பெரியவாள்.

வெறுத்தே போனார் அந்த வெள்ளைக்காரப் பெண்மணி. இதற்காகவா இந்து மதத்துக்கு மாறினேன் என்று புலம்பினார்.

நம் நாட்டு மொழியில் சொல்ல வேண்டுமானால் என் புத்தியைச் செருப்பால் அடிக்க வேண்டும் என்று சொல்லியிருப்பார்கள். (ஆதாரம்: ஜூனியர் விகடன் 23.11.2005)

ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி ஆக்ரா வருகிறார். தாஜ்மகாலைச் சுற்றிப் பார்க்கிறார். தாஜ்மகாலையும் ஆக்ராவையும் சுத்தப்படுத்த துடைப்பத்தைக் கையில் எடுக்கிறார்.

இன்னொரு அமெரிக்கப் பெண்மணி இந்தியா வருகிறார். இந்துவாகவும் மதம் மாறுகிறார். இந்து மதக் கணவருடன் இந்துக் கோவிலுக்குள் நுழைந்தால் துடைப்ப அடி விழுகிறது.

இதுதான் அர்த்தமுள்ள இந்துமதம்!

தமிழ் ஓவியா said...

சாமியார் கிளப்பிய புருடா நாடு எங்கே போகிறது?


அறிஞர் அண்ணா அவர்கள் தீட்டி சிறப்பான கருத்துகளை உள்ளடக்கிய நல்லதம்பி திரைப்படத்தில் பல்வேறு அரிய தொலைநோக்குச் சிந்தனைகளை கலைவாணர் நகைச்சுவை அரசர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களும், அவரது வாழ்விணையர் டி.ஏ. மதுரமும் சேர்ந்து கூறிடும் அறிவுரைக் காட்சிகள் ஏராளம் உண்டு.

பகுத்தறிவுப் புலவர் உடுமலை நாராயண கவி அவர்களது கருத்தமைந்த பாடல்களும் மேற்கூறிய முற்போக்குப் புரட்சிகர கருத்துகளுக்கு வலிமை சேர்ப்பதாக அமைந்தன.



அதில் ஒரு பாடல் எட்டு, ஏழு, ஆறு என்று தொடங்கும்; அதன் வரிகள் சிறப்பான கருத்துகளைக் கூறும்.

பல்லவி: எட்டு... ஏழு... ஆறு... ஓர் எட்டு... ஏழு... ஆறு... எல்லாம் தங்கம்... ஈயாத பேரு ஏமாற்றும் தங்கம்...

சரணம்: தேசிங்குராஜன் செத்தான்-_அவனது தேசம் அழிஞ்ச பின்னாலே... மாசில்லாத தங்கக் குவியல் மறைஞ்சிருக்குது மண்ணாலே... எட்டடி நீளம்.... ஏழடி அகலம்... கட்டி கட்டியாய் தங்கப் பாளம் வெட்டிப் பார்த்தால் புதையல் இருக்கும் வேறெவரிடமும் சொல்லாதே!

என்று டி.ஏ. மதுரம் அம்மையார் பாடுவார்!

ஏராளமான தங்கம் தரையில் உள்ளது என்று ஒருவர் புரளி கிளப்பி, அதனை உண்மை என நம்பி, பலரும் மண்வெட்டிகளைத் தூக்கிக் கொண்டு, நிலத்தை வெட்டி, உழுது பார்த்திட கூட்டம் கூட்டமாகக் கிளம்பி விடுவர்.

அதுதான் பாட்டின் முதல் வரியாகும்; சோம்பேறிகளாக இருந்த மக்களை உசுப்பி விட்டு, தரிசாக இருந்த நிலங்களை உழுது பண்படுத்திடும் நிலையை உருவாக்குவர் என்பது அப்பாட்டின் மய்யக் கருத்தாகும்!

உலகத்தின் எந்த மூலையிலும் தங்கப் புதையல் வேட்டை நடத்துவது எப்போதாவது நடப்பதுதான் என்ற போதிலும், அண்மையில் எவரோ ஒரு சாமியார் கனவில் ஒருவர் வந்தார்; புதையல் இருப்பதாகச் சொன்னார் என்று கிளப்பிய புருடாவை முன் வைத்து, உ.பி. அரசாங்கம், தொல்பொருள் துறையும் இப்படி இறங்கியிருப்பது, அப்பாவி மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே செல்வது மகா மகா வெட்கக்கேடான மூடநம்பிக்கை அல்லவா?

இந்தப் புரட்டுப் பிரச்சாரத்தில் உ.பி. அரசோ, மத்திய அரசோ (தொல்பொருள் துறையினரும்) இதில் இறங்கலாமா? இதுபற்றி உச்ச நீதிமன்ற வழக்கொன்றில், உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறியிருப்பது அதைவிட வேதனையான, ஏற்க முடியாத நிலையாகும்!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51A(h) பிரிவு - அறிவியல் மனப்பான்மையைப் பரப்பிட வேண்டிய பொறுப்பு, ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள அடிப்படைக் கடமை என்கிறபோது, அந்தப் பொறுப்பு, குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாத்து, கடமைகளை நினைவூட்ட வேண்டியது உச்ச நீதிமன்றத்தின் முக்கியக் கடமை அல்லவா? அரசின் கொள்கை முடிவுகளிலும் முக்கிய வழக்குகளிலும்கூட கருத்துக் கூறி வேறு வகையான தீர்ப்புகளைக் கூறும் உச்ச நீதிமன்றத்தின் இந்த நிலைப்பாடு, அரசமைப்புச் சட்டத்தின் 51A(h) பிரிவுக்கு உடன்பாடானதாக நமக்குத் தெரியவில்லை.

அரசியல்வாதிகள் _ குறிப்பாக பிரதமர் வேட்பாளராக பெரும் அளவில் ஊடகங்களாலும், பா.ஜ.க.வாலும் பெரிதாக விளம்பர வெளிச்சம் போட்டுக் காட்டப்படும் மோடி, இந்தத் தங்கப் புதையல் வேட்டையை சில நாள்களுக்குமுன்பு கண்டித்துப் பேசி விட்டு, இப்போது தலைக்குப்புற அந்தர் பல்டி அடித்து, அந்த சாமியாரைப் புகழ்ந்து தள்ளியிருப்பது, மோடி எப்படிப்பட்ட பேசு நா இரண்டுடைய அரசியல்வாதி என்பதை நாடு புரிந்து கொள்ள இது ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது!

தமிழ் ஓவியா said...

மின்னணுவியல் -_ அறிவியல் தொழில் நுட்பம் வளர்ந்து, செவ்வாய்க் கோளுக்கு, விண்கலத்தை, இந்தியா அனுப்பும் அளவுக்கு உள்ள நிலையில், இப்படி ஒரு தங்க வேட்டை என்று சாமியார்களை - மோசடி மன்னர்களை உயர்த்திக் காட்டுவது, அப்பாவி மக்கள் ஏமாறுவது எல்லோரையும் திருவாளர் 420 (ஏமாற்று மோசடி வேலை) செய்ய வைப்பது விரும்பத்தக்கதா?

இந்த தங்க வேட்டைக் கனவின் கதையும், அதை ஒட்டிய நடப்பும் நம் நாட்டு அரசியலில் மூடநம்பிக்கைகள் எப்படி ஆட்சி புரிகின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது; இது அண்மைக் கால விசித்திரங்களில் தலையானதாக உள்ளது!

மத்திய உணவு பதப்படுத்தும் துறையின் இணையமைச்சரான சரண்தாஸ் மகந்த என்பவரிடம் ஒரு சாது (சாமியார்) கூறினாராம்: இப்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி _ ரூபாய் நாணய மதிப்பின் வீழ்ச்சி _- நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க இந்த இடத்தில் தங்கப் புதையலைத் தோண்டினால், அரசு நிதி நெருக்கடிப் பிரச்சினை தீரக் கூடும் என்று. உடனே இந்த அமைச்சர், பிரதமர், நிதியமைச்சர், உள்துறையமைச்சர், சுரங்கத்துறை அமைச்சர், தொல்பொருள் துறை அமைச்சர், அய்.மு. கூட்டணித் தலைவர் திருமதி சோனியாகாந்தி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, புவி ஆய்வுத்துறை GSI (Geologicial Servey of India) எல்லாவற்றிற்கும் எழுதிய பிறகே இது முக்கியத்துவம் பெற்று, பூமி தோண்டும் பணி துவங்கியுள்ளது என்றால், இதைவிட (அரசே) இப்படிப்பட்ட கேலிக் கூத்தில் ஈடுபடும் மூடத்தனத்தின் முடைநாற்றம் வேறு உண்டா? இதைவிட, இஸ்ரேல் போன்ற நாட்டினர் பாலைவனத்தை விவசாயப் பூமியாக்கி உள்ளனரே, அந்தத் தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்தாலாவது பயன் அளிக்காதா?

உழைப்பைத் தொலைத்துவிட்டு, ஊர் மக்களை பேராசைப் பிடித்தவர்களாக்கி விடும் நிலையை மத்திய, மாநில அரசுகளே உருவாக்கிடலாமா? இதற்கு உச்ச நீதிமன்றம் போன்ற அமைப்புகளும்கூட துணை போகலாமா? நாடு எங்கே போகிறது? மதச்சார்பற்ற அரசு என்பதும், அறிவியல் மனப்பான்மையைப் பெருக்குதலும் வெறும் ஏட்டுச் சுரைக்காய்தானா?

வெட்கம்! வேதனை- - தேசிய அவமானம்!

- கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

கவிதை : குறி அறுத்தேன்


மாதவம் ஏதும் செய்யவில்லை நான் குறி அறுத்து
குருதியில் நனைந்து
மரணம் கடந்து
மங்கையானேன்
கருவறை உனக்கில்லை
நீ பெண்ணில்லை என்றீர்கள்
நல்லது

ஆண்மையை அறுத்தெறிந்ததால் சந்ததிக்குச் சமாதி கட்டிய
பட்டுப்போன ஒற்றை மரம் நீ


விழுதுகள் இல்லை உனக்கு
வேர்கள் உள்ளவரை மட்டுமே
பூமி உனைத் தாங்கும் என்றீர்கள்
நல்லது

நீங்கள் கழிக்கும் எச்சங்களை ஜாதி வெறியும் மதவெறியும் கொண்டு
நீங்கள் விருட்சமாக்க
விதைபோட்ட
உங்கள் மிச்சங்களை
சிசுவாக சுமக்கிற
கருவறை எனக்கு வேண்டாம்
உங்கள் ஏற்றத்தாழ்வு
எச்சங்களைச் சுமந்ததால்
பாவம், அவள் கருவறை
கழிவறை ஆனது

நல்லவேளை
பிறப்பால் நான் பெண்ணில்லை
என்னைப் பெண்ணாக
நீங்கள் ஏற்க மறுத்ததே
எனக்குக் கிடைத்த விடுதலை



பெண்மைக்கு நீங்கள் வகுத்துள்ள அடிமை இலக்கணங்களை
நான் வாசிப்பதில்லை
என்னை இயற்கையின் பிழை என்று தாராளமாய் சொல்லிக்கொள்ளுங்கள்
நான் யார் என்பதை
நானே அறிவேன்

மதம் மறந்து ஜாதி துறந்து
மறுக்கப்பட்டவர்கள் ஒன்றுகூடி வாழும் வாழ்க்கையை
வாழமுடியுமா உங்களால்?

கருவில் சுமக்காமலேயே
தாயாக முடியுமா
உங்களால்?

மார்முட்டிப் பசியாறாமலேயே
மகளாக முடியுமா உங்களால்?

என்னால் முடியும்

உங்களின் ஆணாதிக்கக் குறியை
அறுத்துக் கொள்ளுங்கள்
நீங்கள் யார் என்பதை அப்போது நீங்கள் அறிவீர்கள்
பிறகு சொல்லுங்கள்
நான் பெண்ணில்லை என்று.

-

- கல்கி சுப்ரமணியம்
தனது முகநூலில் எழுதியது

தமிழ் ஓவியா said...

கருத்து


எதிர்காலத்தில் நான் அரசியல்வாதியாக வேண்டும் என விரும்புகிறேன். பாகிஸ்தானில் மாற்றம் வரவேண்டும். கட்டாயக் கல்வி கொண்டுவர வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். பாகிஸ்தான் மக்களிடம் அமைதி, சுதந்திரம் அனைத்து உரிமைகள் பெறும் காலம் ஒரு நாள் கண்டிப்பாக மலரும். ஒவ்வொரு சிறுமி மற்றும் சிறுவர்கள் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். எங்கள் நாட்டு சமுதாயத்திடம் இருக்கும் மோசமான சிந்தனை, அதை யாராவது வந்து செய்யட்டும். அதுவரை நாம் காத்திருக்கலாம்.

- மலாலா யூசுஃப்
(தலிபான்களுக்கு எதிராகப் போராடி சுடப்பட பாகிஸ்தான் சிறுமி)

மருத்துவமனையின் தரம் என்பது நோயாளியின் வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டது. மருத்துவமனையில் நோயாளி ஒருவர் உயிரிழக்கிறார் என்றால் அதற்கு நோயை மட்டுமே காரணமாகச் சொல்ல முடியாது. மருத்துவமனையில் நிலவும் நோய் பரவும் சூழலும் ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலோருக்கு இது தெரியாது.

- டாக்டர் கிர்தர் ஜே கியானி,
தலைமை இயக்குநர், இந்திய மருத்துவமனை உரிமையாளர் சங்கம்.

பெற்றோர்கள், பிள்ளைகளின் எதிர்காலம் என்ற பெயரில் பணம், வேலையை மட்டுமே முதன்மையாக நினைக்கின்றனர். எப்படியாவது மதிப்பெண் பெற வேண்டும். எப்படியாவது நல்ல வேலை பெற வேண்டும் என சொல்கிறார்களே தவிர எப்படி உழைக்க வேண்டும், உருவாக வேண்டும் என சொல்லித் தருவதில்லை.

- டாக்டர் சி.ராமசுப்பிரமணியன், மனநல ஆலோசகர்

இந்தியாவில் சராசரி எடையைக் காட்டிலும் குறைந்த அளவிலான எடை கொண்ட 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஒவ்வொரு நகரிலும் அதிகளவில் உள்ளனர். 40 சதவீதம் குழந்தைகள் இதுபோன்ற நிலையில் உள்ளனர். சமூகத்தில் சமத்துவம் இல்லாதது குறைந்த அளவிலான ஊட்டச் சத்து, கல்வி, பெண்களுக்கான சமூக நிலை ஆகியவையே, தெற்கு ஆசியாவில் ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கைக்குக் காரணமாக உள்ளன.

- பார்பெல் டைக்மேன், சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு அமைப்பு

தமிழ் ஓவியா said...

எனது பாதை தொடங்கிய இடம் - நடிகர் கமல்ஹாசன்


நீங்க ஒருத்தரோட முரண்பட்டீங்கன்னா அவன் சொல்றது தப்புன்னு நிரூபியுங்க. ஒருத்தரோட கருத்து தப்புன்னு நிரூபிக்க உயிரை எடுக்காதீங்க. பகுத்தறிவுவாதியான நரேந்திர தபேல்கர் மாதிரியான ஆட்கள் கொல்லப்படுவது, இந்தியாவுக்கே பெருத்த அவமானம். இத்தனை குழப்பங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் நடுவிலே வட இந்தியாவுக்கு ஏற்பட்ட பாதிப்பு தமிழ்நாட்டுக்கு இல்லைங்கிறதுல நான் மிகவும் பெருமைப்படுறேன்.



***


நான் சுயமரியாதை இயக்கத்தோட உருவாக்கம். நான் பிறந்தது எங்கே? சுப்ரபாதம் என் காதில் ஒலிக்கிற சூழல்ல நான் பிறந்தேன். 10 வயசு வரைக்கும் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் பிரார்த்தனை பண்ணுவேன். என்னோட அப்பா, சித்தப்பா, அண்ணன் இவங்க மேல பெரியாரோட தாக்கம்தான் இதுக்குக் காரணம். அவங்க அவரைத் திட்டுவாங்க... விமர்சிப்பாங்க... அவரோட அறிவை எண்ணி உள்ளுக்குள் சிரிச்சிக்குவாங்க. ஆக, அவரோட எதிர் முகாமிலும் அவருக்கு ரசிகர்கள் இருந்தாங்க. நான் அந்த எதிர் முகாம்ல இருந்து வந்தவன்.

***

தபேல்கர் கொலை, நம்பிக்கை இழக்கச் செய்வதாக இருக்கலாம். ஆனால் அது நான் பேசவேண்டியதை பேசுவதிலிருந்து மாற்ற முடியாது. அதற்கு தமிழ்நாட்டுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். இங்கே நிறைய விஷயங்கள் தவறாவும் இருக்கு. கூவம், அடையாறு உட்பட நிறைய விஷயங்கள் சரி செய்யப்படல. அற்புதங்கள்ல எனக்கு நம்பிக்கையில்லை. ஆனா எனக்கு மேஜிக் மேல நம்பிக்கையிருக்கு. ஏதோ ஒன்றை பார்க்கத் தவறும்போது அந்த மேஜிக் நடக்கும். சினிமா அப்படிப்பட்டதுதான். அந்த மேஜிக்கை சினிமா உருவாக்குது. யார் வேணும்னாலும் மேஜிக்கை நிகழ்த்தலாம். கற்றல் என்கிற மிக மெதுவான செயல்முறையால் மாறுதல் நிகழணும்.

***

ராமாயணம் புராணம். அதுல எல்லாம் கலந்து கிடக்கு. நான் சின்னப்பையனா கன்னியாகுமரி போயிருந்தப்ப, ஒரு ஜோடி மிகப்பெரிய காலடித் தடத்தைக் காட்டுனாங்க. அப்ப நான் பக்தி மார்க்கத்துல இருந்தேன். அவங்க இது ராமனோட காலடித் தடம்னு சொன்னாங்க. அது ரொம்ப பெரிசா இருந்ததால, ராமன் என்ன ராட்சஷனான்னு கேட்டேன். பகுத்தறிவுக்கான என்னோட பாதை அங்க தொடங்கிச்சு.

- நன்றி: ஃப்ரண்ட் லைன், அக்டோபர் 18, 2013

தமிழ் ஓவியா said...

இதுதான் பார்ப்பனீயம்!


திருவாளர் சோ என்று ஒருவர் இருக்கிறார். நடுநிலைக்கே அவர்தான் குத்தகைதாரர் என்று பார்ப்பன ஊடகங்களால் முடிசூட்டப் பட்டவர். நம்ம சூத்திர முண்டங்கள் சிலதுகளும் இதனை வழிமொழிவதுண்டு. இரட்டைநாக்குப் பேர்வழியான இந்தப் புளுகுணி தன் இனத்தின் நலனை மட்டுமே முன்னிறுத்திப் பேசும்; எழுதும். பல நூறுமுறை இதன் பார்ப்பனக் குள்ளநரித்தனத்தை நாம் தோலுரித்திருக்கிறோம். இதோ இது அண்மையில் நடந்தது. அக்டோபர் 18 அன்று பா.ஜ.க.வைச் சேர்ந்த நரவேட்டை மோடி சென்னை வந்திருந்தார். சென்னைப் பல்கலைக் கழக மண்டபத்தில் வடநாட்டு சோ-வான அருண்சோரியின் நூலை வெளியிட்டார். அதனைப் பெற்றுக்கொண்ட துக்ளக் சோ அய்யர்வாள் பிரதமர் மன்மோஹன் சிங்கைக் கேலி செய்து பேசினாராம். பேசியதோடு மன்மோஹன்சிங் எப்படி சோனியா, ராகுலுக்கு அடங்கி இருக்கிறார் என்பதை நடித்துக்காட்டினாராம். அதனை மோடி ரசித்தாராம்.

சரி, அவர் நடித்துக்காட்டட்டும். இதில் நமக்கொன்றும் கவலை இல்லை; ஆனால், சோனியா, ராகுலுக்குப் பணிவதை விடக் கேவலமாக தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குக் குனிவதையே மந்திரிமார்கள் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனரே, இதனை இதுவரை எத்தனை முறை இந்த நடுநிலை(?) நாற்றமெடுக்கும் சோ கேலி செய்திருப்பார்? இந்த முறை ஜெயலலிதா ஆட்சிப் பொறுப் பேற்கும் போதே அமைச்சர்கள் அந்தக் குனி குனிந்தனரே, எதிரே இந்த சோ உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தாரே, அங்கு மட்டும் எப்படி இவரது நடுநிலை வேலை செய்யவில்லை.

மன்மோஹன் சிங்கைக் கேலி செய்யும் சோ அய்யர், தன்மானத்தை அடகுவைக்கும் அந்த மேடைக்கு முன்னே அமர்ந்திருக்கலாமா? தெரிந்துகொள்ளுங்கள் தமிழர்களே... ஒரு பார்ப்பன அம்மையாரின் காலில் ஒரு தமிழன் விழுவதை ரசிப்பது சோ பார்ப்பனரின் குணம். அது அந்த இனத்துக்கே உரிய தனிக்குணம்.

அடுத்து கருமாதிப் பத்திரிகைக்கு வருவோம். தினமல(ம்)ர் என்றொரு நாளிதழ் இருக்கிறது.இதற்கு தமிழ், தமிழினம், திராவிடம், ஈழத்தமிழர் என்றால் பேதியாகிவிடும். அவ்வளவு அலர்ஜி. தமிழின வளர்ச்சிக்குப் போராடுபவர்களை அவ்வளவு கேலி செய்யும். தி.க., தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க,. என கொள்கை முழங்கும் கட்சிகளையெல்லாம் சிறுமைப்படுத்தும்.

ஆனால், இதனிடம் சில நாட்களுக்கு முன் ஒரு மாற்றம். கடந்த வாரம் ஜாதிக் கட்சிகளையெல்லாம் திரட்டி பா.ம.க. ராமதாஸ் தேர்தலில் நிற்கப்போவதாக அறிவித்தார்.இதுவரை சமூகநீதி, தமிழ், தமிழினம், ஈழத்தமிழர், பெரியார் என்றெல்லாம் பேசிவந்த ராமதாஸ், ஒரு தேர்தலில் காணாமல் போகவே ஜாதி ஆயுதத்தைக் கையில் எடுத்தார். அவ்வளவுதான் தினமல(ம்)ர் பா.ம.க.வின் செய்தியை படத்துடன் 6 பத்தியில் போடுகிறது.(தினமலர் சென்னை பதிப்பு, பக்.12, 23.10.2013).

சமூக நீதி பேசியவர் ஜாதிக் கட்சியானபின் அதனை ஊக்குவிக்கிறது. அதுவும் இன்னொரு ஜாதிக்கட்சிக்காரரைச் சந்திக்கும் நிகழ்ச்சிக்கே இவ்வளவு பெரிய விளம்பரம். தமிழினத்தை மேலும் மேலும் பிரிக்கும் செயலைச் செய்யும் துரோகிகளுக்கு விளம்பரம் வழங்கும் வேலையை தினமல(ம்)ர் செய்யத் தொடங்கியுள்ளது.திராவிட இயக்கத்தால் ஒழிக்கப்பட்ட ஜாதிவெறியை மீண்டும் உயிர்ப்பிக்கும் செயலுக்கு ஊக்கம் கொடுக்கிறது.

தமிழர்களே...ஆரியத்தின் நோக்கம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டாமா?

- பெரியாரிடி
செய்திகளை பகிர்ந்து கொள்ள

தமிழ் ஓவியா said...

புதுப்பா


காசா? கடவுளா?

காசியில் இருக்கும் கடவுளுக்கும்
காசினியில் வாழும் மனிதனுக்கும்
காசுமட்டும் இருந்தால் ஏகமதிப்பு!
காசுமட்டும் இல்லாவிடில் ஏதுமதிப்பு!

கடவுளுக்கும் காசுக்கும் ஓட்டம்
கண்டுகழிக்க மானுடக் கூட்டம்
காசிடம் கடவுள் தோற்கிறது
காசைத்தான் அதுகள் ஏற்கிறது (பிச்சையெடுத்தல்)

காசுபணம் பறிப்பதற் காகவே
கற்பனைக் கடவுள்களை விதைத்தனர்
விண்ணையும் மண்ணையும் காட்டியே
விற்பனையில் மனிதநேயத்தைப் புதைத்தனர்

காசுபொருள் இருக்கும் கோவிலில்
கடல்போல் மனிதக் கூட்டம்
காசில்லா கோவில் என்றாலே
காணலையே மக்கள் நடமாட்டம்

- மின்சாரம் வெ.முருகேசன், விருதுநகர்

தமிழ் ஓவியா said...


தீபாவளி கொண்டாடுவோரே, வாழ்த்துச் சொல்வோரோ சிந்தனை செய்வீர்!

தீபாவளி - நரகாசுரன் கதை கட்டியது பார்ப்பனரே

தமிழ்க்கடல் மறைமலை அடிகளாரின் கருத்து

கண்ணன், நரகாசுரனைக் கொன்ற நாளின் நினைவுக் குறியாக தீபாவளி நாள் கொண்டாடப்படுவதாயிற்று என்னும் கதை பிற்காலத்தில் பார்ப்பனர் கட்டி விட்டதொன்றாகும். பார்ப்பனர் தமது உயிர்க் கொலை வேள்விக்கு உடன்படாத நரகாசுரன் என்னும் மன்னன் ஒருவனை தமக்குத் துணையாயிருந்த தமிழ் மன்னன் கண்ணனை ஏவிக் கொலை செய்தனர்

- தமிழர் மதம் என்ற நூலில் பக்கம் 200-201)

தமிழ் ஓவியா said...


அடுத்த பிசினஸ் ஆரம்பம்!


தீபாவளி இன்றோடு முடிந்தது - காசைக்கரியாக்கியாயிற்று; அடுத்த பிசினஸ் ஆரம்பிக்கப்பட வேண்டாமா?

கந்தசஷ்டி நாளை முதல் தொடக்கமாம்; சூரசம்ஹாரம் நவம்பர் 8ஆம் தேதி என்றுஎழுத ஆரம்பித்து விட்டனர்.

பக்தி என்பது பிசினஸ் என்று சொன்ன வாரியார் இன்று இருந்தால் அவர் வாயில் சாக்கரையைத்தான் அள்ளிக் கொட்ட வேண்டும்.

தமிழ் ஓவியா said...


இந்து ஏட்டில் ஆர்.எஸ்.எஸ். பற்றி எழுதிய பெண் எழுத்தாளருக்கு கொலை மிரட்டல்
புதுடில்லி, நவ.2- சர்தார் வல்லபாய் படேல் பற்றி கட்டுரை எழுதிய பெண் பத்திரிகையாள ருக்கு ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஜய் மாக் கன் புகார் கூறினார். இச்சம்பவத் துக்குக் கடும் கண்டனம் தெரி வித்த அவர், இது குறித்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக டில்லியில் செய்தியாளர்களிடம் அஜய் மாக் கன் வியாழக்கிழமை கூறியதாவது:

ஆங்கில நாளிதழில் பெண் பத்திரிகையாளர் வித்யா சுப்பிர மணியன் சர்தார் வல்லபாய் படேல் கால நிகழ்வு தொடர்பாக கட்டுரை எழுதினார். அதைத் தொடர்ந்து அவருக்கு ஆர்எஸ் எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப் புகள் மிரட்டல் விடுத்ததாக கடந்த 15-ஆம் தேதி டில்லி நாடா ளுமன்ற சாலை காவல் நிலையத் தில் புகார் அளித்தார். அதில் தனக்கு தொலைபேசி வாயிலாக வும் உடல் ரீதியாகவும் குண்டு வீசி கொலை செய்து விடுவதாகவும் ஆர்எஸ்எஸ், விஸ்வ ஹிந்து பரி ஷத் அமைப்புகளைச் சேர்ந்த வர்கள் மிரட்டல் விடுப்பதாக வித்யா சுப்பிரமணியன் கூறியுள் ளார். இந்த விவகாரம் தொடர் பாக உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி டில்லி காவல்துறைக்கு உத்தர விடும்படி மத்திய உள்துறை அமைச் சர் சுஷீல் குமார் ஷிண்டே வுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.

பத்திரிகை சுதந்திரத்தைப் பாது காப்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. சமூகத்தைப் பிரதிபதி லிக்கும் நிகழ்வுகளை ஆய்வு செய்து கட்டுரை எழுதும் பத்திரி கையாளரை அதுவும் பெண் பத்திரிகையாளருக்கு மிகவும் இழிவான முறையில் ஆர்எஸ்எஸ் அமைப்பு விடுக்கும் மிரட்டல் ஏற்றுக்கொள்ள முடியாதது. கண்டனத்துக்குரியது என்றார் அஜய் மாக்கன்.

இது குறித்து கருத்து தெரி வித்த மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே, அஜய் மாக்கனின் கடி தத்தை மத்திய உள்துறைச் செய லாளர் அனில் கோஸ்வாமிக்கு அனுப்பியுள்ளேன். உரிய நடவ டிக்கை எடுக்கப்படும். ஜனநாயகத் தில் ஓர் அமைப்பு தொடர்பான விமர்சனங்களை ஏற்றுக் கொள் ளும் பக்குவம் சமூக அமைப்பு களுக்கு இருக்க வேண்டும். மிரட் டல் விடுவது சரியல்ல என்றார்.

இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லேகி கருத்து கூறுகையில் அஜய் மாக் கனின் கடிதத்துக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என்று வித்யா சுப்பிரமணியனே தொலைக்காட் சிக்கு அளித்த பேட்டியில் கூறி யுள்ளார். இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி ஆதாயம் பெற காங்கிரஸ் முயற்சிக்கிறது என்றார்.

இதற்கிடையே, வித்யா சுப்பிரமணியன் புகார் குறித்து நாடாளுமன்ற காவல் நிலைய துணை ஆணையர் எஸ்.பி.எஸ். தியாகியிடம் கேட்டதற்கு பெண் பத்திரிகையாளர் அளித்த புகார் மீது இந்திய தண்டனைச் சட்டம் 506-ஆவது பிரிவின்படி (குற்றம் புரியும் நோக்குடன் அச்சுறுத்து வது) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவர் புகார் கூறிய அதே நாளில் அதை மேல் விசாரணைக்காக தமிழ்நாடு காவல்துறைக்கு தில்லி காவல் துறை அனுப்பி விட்டது என்றார்.

தமிழ் ஓவியா said...


சொல்லவேண்டும்


பார்ப்பனியமும், மத ஆதிக்கமும் ஒழிந்தாலொழிய இந்தியாவில் யோக்கியமான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர்பார்க்க முடியாது. பார்ப்பனிய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.
(குடிஅரசு, 17.8.1930)

தமிழ் ஓவியா said...


கலைஞர்மீது காய்ச்சல்!
மோடியைப் பிரதமர் நாற்காலியில் உட்கார வைத்தே தீருவது என்று, ஒற்றைக்காலில் ஊசி முனையில் அமர்ந்து தவம் இருக்கும் திருவாளர் சோ ராமசாமி, தமது துக்ளக் இதழில் (30.10.2013 பக்.21) கேள்வி ஒன்றுக்கு அளித்த பதில் வருமாறு:

கேள்வி: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தை, குஜராத் அரசு முறையாகச் செயல்படுத்தவில்லை என்று, சி.ஏ.ஜி. குற்றம் சாட்டியுள்ளாரே! இதற்கு உங்கள் பதில் என்ன?

பதில்: இதற்கு உங்கள் பதில் என்ன என்று என்னை நீங்கள் கேட்பதற்கு நான் என்ன குஜராத் அரசா?

என்று பதில் எழுதியுள்ளார். சோவின் அறிவு நாணயம் எந்தத் தன்மையது - பதில் சொல்லும் தரம் எந்தத் தகுதியானது? என்பதற்கு இது ஒருபதம்.

மோடியைப் பற்றியும் அவர் ஆட்சியையும் பற்றிக் கேட்டால் இதே பாணியில்தான் பதில் சொல்லி வந்திருக்கிறாரா?

பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடிக்குப் பயங்கரவாதிகளால் ஆபத்து இருப்பதாக நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு இதே பாணியில் பதில் சொல்வதாக இருந்தால் என்ன சொல்லியிருக்க வேண்டும்? நான் என்ன சி.பி.அய். இயக்குநரா இதையெல்லாம் தெரிந்து வைப்பதற்கு என்று சொல்லவில்லையே! இன் றைக்கு, இந்தியத் தலைவர்களில் பாதுகாப்பு மிகவும் தேவைப்படுகிறவர், மோடிதான் என்பதில் சந்தேகமே இல்லை, என்று பதில் சொல்லுகிறாரே எப்படி?

மோடியைக் காப்பாற்ற முடியவில்லை என்றால், நழுவி ஓடுவது, அல்லது எதிர்க் கேள்வி போட்டுத் தப்பிப்பது - இதுதான் சோவின் சூரத்தனம் போலும்!

2ஜிபற்றி சி.ஏ.ஜி. சொன்னால் அத்திரிபாட்சா கொழுக்கட்டை என்று தாவி குதிப்பார். அதே சி.ஏ.ஜி. குஜராத் முதல் அமைச்சர் பற்றி குற்றம் சுமத் தினால் நான் என்ன குஜராத் அரசா என்று குறுக்கு வழியில் தப்பித்து ஓடப் பார்ப்பார்.

உண்மையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தில், குஜராத் படுபாதாளத்தில் விழுந்து கிடக்கிறது.

குழந்தைகள் இறப்பு விகிதம் ஆயிரத்திற்கு 62 குஜராத்தில்; பிற மாநிலங்களிலோ 12 முதல் 14 வரைதான்!

மற்ற மற்ற மாநிலங்களில் பெண்களின் ஆயுள் காலம் 75 என்றால், குஜராத்தில் வெறும் 64 ஆண்டுகள்தான்.

அதே சி.ஏ.ஜி. 2012இல் குஜராத் மாநிலத்தில், நடைபெற்ற ஊழல் ரூ.16 ஆயிரம் கோடி என்று கூறியுள்ளார் - சி.ஏ.ஜி. அறிக்கை என்றால், அது 2ஜி மட்டும்தான் - திமுக சம்பந்தப்பட்டதுதான் - அதற்கு மட்டும்தான் சோ அய்யர் வாளால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

இன்னொரு கேள்வி:

வரும் மக்களவைத் தேர்தலில் மோடியுடன் கை கோர்க்க கலைஞர் முன் வந்தால், அந்தக் கூட்டணிகளுக்கு உங்கள் ஆதரவுண்டா?

சோவின் பதில்: அவசியமே இல்லை. அது தானாகவே தோற்கும்; என் உதவி தேவைப்படாது என்கிறார்.

இந்தியா பூராவும் மோடியின் செல்வாக்குப் பறப்பதாக தம் பட்டம் அடிக்கும் திருவாளர் சோ திமுகவோடு கூட்டணி சேர்ந்தால் தோற்கும் என்கிறாரே இதன் பொருள் என்ன? (தமிழ் நாட்டிலே பி.ஜே.பி. இருக்கும் நிலையில் தி.மு.க.வுடன் கூட்டுச் சேர்ந்தால் பிஜேபிக்கும் இடம் கிடைக்கும் என்று அவரால் எழுத முடியாது. அப்படியொரு கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்பது வேறு சங்கதி)

மோடி பிரதமராக வரவேண்டும் என்பதைவிட கலைஞர் மீதான வெறுப்பு என்பது பூணூலில் நெருப்புப் பிடித்ததுபோல் கொதிக்கிறது.

அவர் வந்தால் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பார்; செம்மொழிக்கு சிம்மாசனம் கிடைக்கும், இடை இடையே தமிழன் தமிழ்ப் பண்பாடு, தமிழீழம், பகுத்தறிவுக் கொள்கை என்றெல்லாம் பேசிக்கொண்டே இருப்பார்.

பொறுக்குமா பூணூல் கோத்திரங்களுக்கு? அதுதான் கலைஞர்மீது பாய்ந்து பிராண்டுவ தற்குக் காரணம்; பார்ப்பனர்களுக்குத் தெரிவது தமிழர்களுக்குத் தெரிவதில்லையே என்ன செய்வது!

தமிழ் ஓவியா said...


தஞ்சை நகர மன்ற தலைவரின் தகாத பேச்சுகள்

ஆசிரியருக்குக் கடிதம்

தஞ்சை நகர மன்ற தலைவரின் தகாத பேச்சுகள்

நான் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் 2003 முதல் தஞ்சை நகர தி.க. செயலாளர் பொறுப்பில் இருந்து கொண்டு இயக்கப்பணி செய்து வருகிறேன். என் துணைவியார் மு.ஜெயலட்சுமி தஞ்சை நகர 3-ஆவது வட்ட திமுக நகர் மன்ற உறுப்பினராக உள்ளார். கடந்த 7.10.2013 அன்று தஞ்சை நகராட்சி சார்பில் கரந்தைப் பகுதியில் மக்கள் குறை கேட்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தஞ்சை நகர் மன்றத் தலைவர் தஞ்சை தொகுதி சட்டமன்ற உறுப்பினர், கரந்தை பகுதி நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளார்கள்.

குறை கேட்கும் சமயத்தில் 3-ஆவது வட்டத்தைச் சேர்ந்த செல்லியம்மன் கோயில் தெரு தனபால் என்பவர் தனது வீட்டுக்கு ஒரு ஆண்டாக குடி தண்ணீர் வரவில்லை என்று சற்று கடுமையாக கேட்டுள்ளார். அது சமயம் என் துணைவியாரும் எங்கள் வார்டில் தண்ணீர் சரியாக வரவில்லை என்று கூறியிருக்கிறார். இது தொடர்பாக நகர் மன்றத் தலைவர் சாவித்திரி கோபால் என்பவர் முகாம் நடந்த இடத்தில் தக்க பதில் அளிக்காமல், மறு நாள் (8.10.2013) அன்று நகர் மன்றத் தலைவர் என்னுடைய அலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் 3-ஆவது வார்டைச் சேர்ந்த அரசுப் பணியி லிருந்த ஓய்வு பெற்ற ஒருவன், அவன் வீட்டுக்கு ஒரு ஆண்டாக தண்ணீர் வரவில்லை என்று சொல்கிறான். உங்கள் பெண்டாட்டியும் தண்ணீர் வரவில்லை என்று சொல்கிறார். என்னிடம் நேரில் வந்து சொல்லாமல் குறை கேட்கும் முகாமில் எப்படி சொல்லலாம். கரந்தை பகுதியில் உள்ள திமுக 3 வார்டுகளிலும் உள்ள பொதுமக்கள் பொய்யான கோரிக்கை மனு கொடுத்து இருக்கிறார்கள் என்று கரந்தையில் ஒலி பெருக்கி வைத்து விளம்பரம் செய்வேன். மூன்று வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் நடைபெறுவதை நிறுத்தி விடுவேன் என்று கடுங்கோபத்துடன் என்னை மிரட்டினார். நான் என் துணைவியாரை விசாரிக்கிறேன் என்று கூறிவிட்டு அலைபேசியை வைத்துவிட்டேன்.

மக்கள் குறை கேட்கும் முகாம் நடைபெற்ற விவரத்தை என் துணைவி யாரிடம் கேட்டபோது தெருக்களுக்கு தண்ணீர் சரியாக வரவில்லை என்று தான் சொன்னேன். மற்றபடி தவறாக எதுவும் சொல்லவில்லை என்று கூறினார். இதன் பிறகு நான் 9.10.2013 அன்று அலைபேசியில் மிரட்டியது குறித்து நகர் மன்றத் தலைவர் சாவித்திரி கோபால் அவர் அறையில் நேரில் சந்தித்து விவரம் கேட்டேன். அப்போதும் மக்கள் குறை கேட்கும் முகாமில் தண்ணீர் வரவில்லை என்று உங்கள் பெண்டாட்டி எப்படி சொல்லலாம்? அலுவலகத்தில் என்னிடம் நேரில் வந்துதானே சொல்ல வேண்டும் என்று ஆத்திரம் பொங்க கேட்டார். அதற்கு நான் என் துணைவியார் தவறாக கேட்கவில்லையே அவ்வாறு அவர் கேட்டது தவறு என்று உங்களுக்கு பட்டிருந்தால் அங்கேயே முகாம் நடந்த இடத்தில் கவுன்சிலரை கேட்க வேண்டியது தானே என்றவுடன், உங்கள் செல்போன் நம்பர்தானே இங்கு இருக்கிறது என்றார். ஏன் முரணாக பதில் சொல்லுறீங்க என்று கேட்டதும் மிகவும் கோபத்துடன் உங்களையெல்லாம் நாற்காலியில் உட்கார வைத்துப் பேசுவதே தப்பு என்று சொன்னார். அவருடைய எதிர்பாராத வார்த்தையில் அதிர்ச்சி அடைந்த நான் தொடர்ந்து வாதம் செய்தால் மேலும் அசிங்க படுத்துவார் என்று எண்ணி உடனடியாக அவர் அறையை விட்டு வெளியே வந்தேன். நான் அவரிடம் தவறாகவும் பேசவில்லை, தவறாகவும் நடந்து கொள்ளவில்லை. அவ்வாறு இருக்கும்போது நாற்காலியில் உட்கார வைத்துப் பேசுவது தப்பு என்று ஏன் சொன்னார் என்ற விவரம் தெரிய வில்லை. ஒரு வேளை அவர் உயர்ஜாதி (பாப்பாத்தி) பெண்மணியாகவும் நான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவன் என்ற எண்ணமா? அல்லது தி.க.காரனை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பேசினாரா? என்ற விவரம் தெரியவில்லை. எனவே இந்த நிகழ்வு தொடர்பாக கண்டனம் தெரிவிக்கும் வகையில் மேற்படி செய்தியை விடுதலையில் வெளியிட வேண்டும் என்று கணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

- கரந்தை சு. முருகேசன், நகரச் செயலாளர், தி.க. தஞ்சாவூர்

தமிழ் ஓவியா said...


டெல்லி கிருஷ்ணனும் - தமிழ்நாட்டுக் கிருஷ்ணனும்: சித்திரபுத்திரன்


டெல்லியில் உள்ள பாலகிருஷ்ண சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி என்கிற பண்டி கையின்போது தீண்டாதவர்கள் என்கிறவர்களை எல்லாம் கோவி லுக்குள் அனுமதிக்கப்பட்டிருப்ப தாக தமிழ்நாடு பத்திரிகையில் காணப்படுகிறது. புராணங்களின்படி கிருஷ்ணன் என்பதாக ஒரு சுவாமியோ, ஆசாமியோ இருந்ததாக நாம் ஒப்புக் கொள்வதானால் அது ஒரே சாமியாகத் தான் இருந் திருக்கலாமே தவிர, டெல்லிக்கு ஒரு கிருஷ்ணனும், தமிழ்நாட்டுக்கு ஒரு கிருஷ்ண னும் இருந்திருக்க முடியாது.

அப்படியிருக்க டெல்லி கிருஷ்ணன் தீண்டாதவர்கள் கோவிலுக்குள் போனால் ஓடிப்போகாமல் கோவில்களுக் குள்ளாகவே தைரியமாய் உயிருடன் இருக்கும்போது, நமது தமிழ்நாட்டுக் கோவில்களில் உள்ள கிருஷ்ணன் மாத்திரம் தீண்டாதவர்கள் உள்ளே போனால் கோவிலைவிட்டு ஓடிப்போவதோ அல்லது ஒரே அடியாய் செத்துப்போவதோ ஆனால் இந்த மாதிரி கிருஷ்ணனை வைத்து பூஜை செய்வ தால் நமக்கு என்ன பலன் அவரால் உண்டாகக் கூடும்?

ஒரு மனிதன் உள்ளே வந்தால் தாக்குப் பிடிக்காத கிருஷ்ணன் யாருக்கு என்ன செய்ய முடியும்? ஆதலால் தமிழ் நாட்டு கிருஷ்ணனை துரத்திவிட்டு டெல்லி கிருஷ்ணனைத்தான் தருவித்துக் கொள்ளவேண்டுமேயல்லாமல் இந்த மாதிரி சக்தியில்லாத, கிட்டப்போனால் ஓடிப்போகிற கிருஷ்ணன் நமக்கு அரை நிமிஷங்கூட கண்டிப்பாய் உதவவே உதவாது.

- குடிஅரசு - கட்டுரை - 28.8.1927

தமிழ் ஓவியா said...

ஒரு மறுப்பு!:நாயக்கர் முதல் மந்திரிக்கு உபசாரம் செய்தது

தமிழ்நாடு பத்திரிகையில் ஈரோடு ரெயில்வே ஸ்டேஷனில் ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் முதலானவர்கள் கனம் முதல் மந்திரியை வந்து சந்தித்து உபசரித்தார்கள் என்றும் சுதேசமித் திரனில் ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் டாக்டர் சுப்பராயனைக் கண்டு பேசினார் என்றும் எழுதப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு பத்திரிகைகளும் முறையே மந்திரிக்கு உபசாரம் மந்திரிகளின் பிரசாரம் என்ற தலைப்பு களின் கீழ் இதை எழுதியிருக்கின்றனர்.

எனவே, இதைப் படிக்கிறவர்கள் சந்தேகப்படக்கூடும். என்ன வெனில் மந்திரி சுப்பராயன் முதலியவர்களின் அக்கிரமமான நடத்தைகளை ஆதரிப்பதற்காகவும், மேன்மை தங்கிய கவர்னர், கவர்னர் பதவிக்கு லாயக்கில்லை, ஆதலால் அவரை திருப்பி அழைத்துக்கொள்ள வேண்டுமென்று கோவை மகாநாட்டில் தீர்மானம் கொண்டுவந்த ஒருவர் அதே மந்திரிக்கு ரயிலில் உபசாரம் செய்தார் என்பதாக ஏற்படுமானால் அவருக்கு (தீர்மானம் கொண்டு வந்தவருக்கு) எவ்வளவு யோக்கியப் பொறுப்பு இருக்கும் என்பதாக ஜனங்கள் நினைக்கக்கூடும் என்பதற்காகவும்,

மந்திரி தனது வேலையைக் காப்பாற்றிக் கொள்ளும் முறையில் அவர் செய்யும் பிரசாரத்தில் நமக்குப் பங்கு இருந்தது என்று பலர் நினைக்க இடமுண்டாகும் என்கிற எண்ணத்தின் பேரிலும், அந்த இரண்டு பத்திரிகைகளின் கூற்றையும் மறுக்கக் கடமைப்பட்டவனாக இருக் கிறேன். எனது நண்பர் ஸ்ரீமான் பி.டி.ராஜன் அவர்கள் தான் 26ஆம் தேதி மெயிலில் நீலகிரியிலிருந்து வருவதாக தந்தி கொடுத் திருந்ததால் அவரை வரவேற்க நான் ரயிலுக்குப் போயிருந்தேன். அப்போது ஸ்ரீமான் ராஜன் அவர்களும், டாக்டர் சுப்பராயன் அவர்களும் ஒரே வண்டியில் இருந்ததால் ஒருவருக்கொருவர் வந்தனம் செய்து கொண்டோம். நீலகிரிமலையில் மழை உண்டா என்று கேட்டேன். மந்திரி ஆம் என்றார்.

இதே மாதிரி மந்திரி கேட்ட ஒரு கேள்விக்கு நான் ஆம் என்றேன். இதற்குள் ஸ்ரீமான் ராஜனவர்களின் சாமான்கள் வண்டியி லிருந்து இறக்கப்பட்டு விட்டதால் இருவரும் டாக்டர் சுப்பராயனிடம் பயணம் சொல்லிக்கொண்டு புறப்பட்டு விட்டோம். மந்திரி இலாகா நியமனத் திற்காகவும், அவ்விலாகாவிலுள்ள ஆவலாதி களுக்காகவும், பலர் அங்கு வண்டிக்குள்ளாகவே கூடிவிட்டார்கள். இதுதான் நடந்த விஷயம். இவற்றைத் திரித்து நிருபர்கள் பத்திரிகைகளுக்கு எழுதி இருப்பது சரியல்லவென்றே கண்டிக்கிறேன்.

மந்திரிகளை நான் பார்ப்பது எனது நிலைக்கு உயர்வு தாழ்வு என்றாவது கருதி நான் இம்மறுப்பை எழுதவில்லை. அவசியம் நேர்ந்தால், அல்லது நண்பர்கள் என்கிற முறையில், ஒருவரை ஒருவர் காணவும், அளவளாவவும் கடமைப்பட்டவர்களே யாவோம். ஆனால், இந்த சந்தர்ப்பத்தில் விஷமத் தனமான தலையங்கமிட்டு ஜனங்கள் தப்பர்த்தம் கொள்ளும்படி எழுதியிருப்பதால் மறுக்க நேரிட்ட தற்கு வருந்துகிறேன்.

- குடிஅரசு - அறிவிப்பு - 31.07.1927

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்

கடவுளா? நதியா?

செய்தி: வரும் காலங்களில் வெள்ளப் பெருக்கிலிருந்து கோதார்நாத் சிவன் கோவிலைக் காப்பாற்ற வேண்டுமானால் நடுவே ஓடும் மந்தாகினி ஆற்றின் வழியை மாற்றியமைக்க வேண்டும் என்று தொல் பொருள் ஆய்வுத் துறை வலியுறுத்தியுள்ளது. சிந்தனை: ஆமாம், நாட்டுக்கு நதியைவிட குத்துக் கல்லுக் கடவுள்தானே முக்கியம்? ஆமாம் கடவுள் தான் சர்வசக்தி வாய்ந்தவரா யிற்றே - அவரைக் காப்பாற்றிக் கொள்ள அவராலேயே முடியாதா?

தமிழ் ஓவியா said...


கணக்கு மேதை ராமானுஜமும், கற்க வேண்டிய உண்மைப் பாடங்களும்!


- ஊசி மிளகாய்

விஜயபாரதம் மலரில் பருத்தியூர் டாக்டர் கே. சந்தானராமன் என்பவர் கணித மேதை (கும்பகோணம்) ராமானுஜன்பற்றி ஒரு வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை எழுதியுள்ளார்.

(ராமானுஜன் வாழ்க்கைப்பற்றிய வரலாற்றுத் திரைப்படத்தை பெரியார் படத்தின் இயக்குநர் ஞானராஜசேகரன் அவர்கள் தயாரித்து முடித்துள்ளார்).

இந்த ராமானுஜன் ஒரு ஏழை பார்ப்பனர் குடும்பத்தில் பிறந்தவர்; திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படித்தவர். அய்ந்தாம் வகுப்பு (பொதுத் தேர்வு அப்போது உண்டு) தஞ்சை மாவட்டத்திலேயே முதலாவதாக தேர்வாகி, ஸ்காலர்ஷிப் பெற்றுப் படித்தவர்.

பள்ளிப் பருவத்தில் கணக்கில் ஆர்வம் கொண்டு சிறந்தவராகத் திகழ்ந்த இவர் அங்கும் கணக்குப் புலி என்றால் கும்ப கோணம் அரசுக் கல்லூரியில் இண்டர் மீடியட் வகுப்பில் சேர்ந்து ஒரு முறை அல்ல; மூன்று முறை (இருமுறை கும்பகோணம் கல்லூரி, ஒருமுறை பச்சையப்பன் கல்லூரியில்) தோல்வி அடைந்தார்.

பிறகு குமாஸ்தா வேலையில் சேர்ந்து குடும்ப வாழ்வை நடத்தினார்.

இவருக்கு வாழ்வளித்தவர்கள் பச்சை யப்பன் கல்லூரி பேராசிரியர் சிங்காரவேலு, கேம்ப் பிரிட்ஜ் பல்கலைக் கழக ஹார்டி என்ற கணிதப் பேராசிரியர், லிட்டில்வுட் என்ற பேராசிரியர் மற்றும் கில்பர்ட்டி வாக்கர்.

1916ஆம் ஆண்டு இராமா னுஜத்திற்கு அவரின் கணித அறிவைப் பாராட்டி கேம் பிரிட்ஜ் பல்கலைக் கழகம் அவருக்கு பி.ஏ. பட்டம் வழங்கியது. (சென்னைப் பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவராக இருந்தபோது அங்கே கிடைக் காத பட்டம் கேம்பிரிட்ஜில் கிட்டியது).

தகுதி, திறமை முதல் வகுப்பு தேர்வு மார்க்குகளே அறிவின் எல்லை என்பவை போலித் தனங்கள் என்பதை இந்த சம்பவங்கள் காட்டவில்லையா?

வெள்ளைக்காரர்களுக்கு - இருந்த மனிதநேயம், சொந்த நாட்டு ஜாதிக்காரர் களுக்கோ, பணம், நிலபுல வசதி படைத்த வர்களுக்கோ இல்லையே! வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களும் அதன் பேராசிரியர் களும் காட்டிய பரிவு, கொடுத்த அங்கீகாரத் தின் முன்பு சுய ஜாதி அபிமானம், தேசாபிமானம் எம்மாத்திரம்?

அது மட்டுமா?

லண்டன் புறப்படுவதற்கு முன்னால் ராமானுஜன் குடுமியை எடுத்துவிட்டு கிராப்புத் தலையாக மாற்றிக் கொண்டார்! ஆங்கிலேயரைப் போல் கோட்டும், சூட்டும், டையும் அணிந்தார்!

பூஜை, புனஸ்காரங்களைவிடவில்லை (அதையும் இவர் எழுதியுள்ளார்)

அப்படியெல்லாம் இருந்து வாழ்ந்த அவருக்குரிய இறுதி மரியாதை அவர் சாவின் போது அந்த ஜாதி யினர், சொந்த உறவுகளால் கிடைத்ததா? அதுதான் வேதனை - வெட்கம்!

1920ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் நாள் இராமனுஜன் மறைந்தார். ராமானுஜன் இறுதிச் சடங்குகளில் அவர் உற வினர் வரவில்லை; காரணம் கடல் கடந்தார் (இராமன் கடல் கடந்துதானே இராவ ணனிடம் சண்டை போட்ட தாக இராமாயணம் கூறுகிறது; அது தோஷ மில்லையா? அதனால்தானோ என்னவோ இராமன் சரயு நதியில் வீழ்ந்து மாண்டான் போலும்!) என்பதற்காக யாரும் கலந்து கொள்ளவில்லை. ஜாதி வெறி - சனாதனம் படுத்திய பாட்டைப் பார்த்தீர்களா?

கட்டுரையாளர் எழுதுகிறார்:

நம் பெருமாள் செட்டியார் என்பவரும், சென்னை கலெக்டரும் (வெள்ளைக்காரர்) இறுதிக் கடன்களை இயற்றினர்!

நாடே இன்று போற்றுகின்ற இராமானு ஜத்தை உலகறியச் செய்தது அவரது ஜாதியல்ல; மதமல்ல, அறிவுதான் என்பதும், அதனை அங்கீகரித்து உதவியவர்கள் வெள்ளைக்காரர்கள் - அந்நியர்கள் என்பதும், இறுதி மரியாதை செலுத்தக் கூட ஜாதியும், சனாதனமும் முன் வராமல் இதயமற்ற முறையில் நடந்து கொண்டன என்பதும்தான் கற்க வேண்டிய பாடம் அல்லவா?

தமிழ் ஓவியா said...


தமிழா எது புனிதம்?


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான் என்றார் வள்ளுவனார்!

பிறக்கின்ற மனிதரிலே ஜாதி என்ற அடையாளம் இருப்பதுண்டா?

ஆதியிலே தொழில் முறையில் ஜாதி எனும் குறிப்பைத் தந்தார்.

பின்னாளில் ஜாதியிலே பேதம் தந்தார்

நால் வருண பேதமதை சுய நலத்தால்

மனுதர்மமெனும் பெயரில் எழுதி வைத்தார்.

பிரம்மாவின் சிரசினிலே தோன்றி னோம் என்று

பிறவியிலே தாங்கள் தான் உயர்ந் தோரென்றார்

உழைக்காமல் பிறர் உழைப்பில் வாழ்ந்து கொண்டு

தான் உயர்ந்தோர் என்பதிலே நியாயம் உண்டோ?

மற்றவரை சூத்திரராய் தீண்டாதாராய்

நடத்துவதில் கடுகளவும் தர்மம் உண்டா?

கோவில்களை கட்டுபவன் சூத்திரனா?

சிலை வடிக்கும் சிற்பியும் சூத்திரனா?

சூத்திரர்கள் வெட்டாத குளங்களுண்டா?

உழைப்பதற்கு மட்டும்தான் சூத்திரர்கள்

உழைக்காமல் எப்பொருளும் எமக்கு சொந்தம்

என்கின்ற பார்ப்பனனை அழைத்து வந்து

நம் வீட்டின் நடுவினிலே அமர வைத்து

அவன் வேண்டுகின்ற பொருளனைத்தும் வாரித் தந்து

அவன் காலில் சாஷ்டாங்கதெண்டனிட்டு

புரியாத அவன் மொழியை காதில் கேட்டு

புனித மென்று குடியுங்கள் கோமியத்தை

என்கின்ற அவன் சொல்லை நம்பி நாமும்

கோமியத்தை குடிப்பதனால் புனிதம் உண்டா?

இதை நன்கு சிந்திப்பீர் தமிழர்களே!

நம் வீட்டில் நடத்துகின்ற நிகழ்ச்சிகளுக்கெல்லாம்

பார்ப்பனன் வந்தால் தான் புனிதமென்று நினைப்பீரானால்

நாம் நம்மை சூத்திரராய் ஏற்பதாகும்.

இனியேனும் நமக்கு சுய மரியாதை வேண்டுமானால்

நம் வீட்டு நிகழ்ச்சிகளை நாமே செய்வோம்!

க.ஜெயராமன் (எ) பெரியார் தாசன்
ஜீ.மூக்கனூர்பட்டி.

தமிழ் ஓவியா said...

தீபாவளி: பட்டாசால் விபரீதம்!

கூரை வீடுகள் சாம்பல்

கெங்கவல்லி, நவ.3- கெங்கவல்லி அருகே, பட்டாசு விழுந்ததால், இரண்டு கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது.கெங்கவல்லி அருகே, ஒதியத்தூர் வடக்கு காட்டுக் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். அவருக்குச் சொந்தமான விவசாய தோட்டத்தில், கூரை கொட்டகை அமைத்து குடியிருந்து வந்தார்.

நேற்று பகல், 12.10 மணியளவில், பட்டாசு வெடித்தபோது, அதிலிருந்து வெளியான தீப்பொறி, கூரை கொட்டகையின் மீது விழுந்து, தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த நாகராஜ் தலைமையிலான, கெங்கவல்லி தீயணைப்பு அலுவலர்கள், விரைந்து சென்று, மேலும் தீ பரவாமல் தடுத்தணைத்தனர்.

எனினும், தீ விபத்தில், கூரை வீடு எரிந்து சாம்பலானது.அதேபோல், வீரகனூர், நல்லூரைச் சேர்ந்த சின்னசாமி என்பவரது குடியிருப்பு வீட்டின் அருகில், ராக்கெட் பட்டாசு வெடித்தபோது, அதன் தீப்பொறி கூரைவீட்டின் மேல் விழுந்து, மேற்கூரை தீயில் கருகியது.

மூன்று வீடுகள் சாம்பல்: ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்

நாகப்பட்டினம், நவ.3- நாகையில் நேற்று முன் தினம் இரவு பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று வீடுகள் எரிந்து சாம்பலானது.

நாகை, செக்கடித் தெருவைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (60); கூலித் தொழிலாளி. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை, அப்பகுதியில் உள்ளவர்கள் பட்டாசு வெடித்தனர். ராக்கெட் வெடி ஒன்று திருநாவுக்கரசு வீட்டின் கூரை மீது விழுந்ததில், வீடு தீப்பற்றி எரிந்தது. தீ, அருகில் இருந்த வெங்கடேசன், இளையராஜா ஆகியோர் வீடுகளுக்கும் பரவியது.

மூன்று வீடு களிலும் இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களும் தீயில் சேதமடைந்தன. நாகை, தீயணைப்பு நிலைய கோட்ட அலுவலர் துரை மாணிக்கம் தலைமையிலான, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, தீயை அணைத்தனர். தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மாவட்ட ஆட்சியர் முனுசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும், தலா 5 ஆயிரம் ரூபாய், 5 கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய், வேட்டி, சேலைகளை நிவாரணமாக வழங்கினார். சம்பவம் குறித்து நாகை டவுன் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சாக்குக் கிடங்கில் தீ விபத்து

திருப்பூர் குறிஞ்சி நகர் மெயின் வீதியில் உள்ள தனியார் சாக்குக் கிடங்கில் நேற்று இரவு திடீரெனத் தீப்பிடித்தது.

இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. அருகில் இருந்த சில வீடுகளுக்கும் தீ பரவியது. தகவல் அறிந்த தீய ணைப்புத் துறையினர் வந்து மேலும் பரவாமல் தீயை அணைத்தனர்.

அப்பகுதியில் பட்டாசு வெடித்தபோது தீப்பொறி பட்டு சாக்குக் கிடங்கில் தீப்பிடித்ததாகக் கூறப் படுகிறது. உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.