Search This Blog

13.4.09

பேதவாதியாய் இருந்தாலும்,பகுத்தறிவு நாத்திகவாதியாய் இருந்தால் நம்புங்கள்


"வயதில் அறிவில் முதியார் நாட்டின்
வாய்மைப் போருக்கு என்றும் இளையார்
உயர் எண்ணங்கள் மலரும் சோலை
ஓதும் இராமசாமி வாழ்க".


என்று சரியாக படம் பிடித்தார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அப்படிப்பட்ட

தந்தைபெரியாரின் கருத்துக்கள் "உயர் எண்ணங்கள்" என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. அந்நூலில் உள்ள கருத்துக்கள் இங்கு தரப்படுகிறது. அந்த உயர் எண்ணங்களை நீங்களும் படித்துப் பயன் பெற வேண்டுகிறேன்.
-------------------------------------------------------------------------------------

17. சமதர்மம்


சமதர்மக் கொம்கைக்காரர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் எந்த ஸ்தாபனக்காரர் ஆனாலும், எந்தத் தலைவரானாலும்,எந்தம் பிரமுகர் ஆனாலும் முதலில் அவர்கள் பகுத்தறிவுவாதிகளா,மூடநம்பிக்கையற்றவர்களா (உண்மையான நாத்திகர்களா) என்று சந்தேகமறத் தெளிவாய்த் தெரிந்துகொண்ட பிறகே, அவர்களை நம்புங்கள்; அவர்களுடன் இணைப்புக் கொள்ளுங்கள்.

அரசியல்வாதிகளால் விளைந்த கேடு
நமது நாட்டில் இன்று அரசியல் பிழைப்புக்காரர்களாய் விளங்குபவர்களில் நூற்றுக்குத் தொன்னூற்றொன்பது பேர், தங்கள் வாழ்வு நலத்திற்காக எந்த வேஷத்தையும் போட்டுக்கொண்டு - எந்தக் கொள்கைகளையும் சொல்லிக்கொண்டு மானம், வெட்கம், நேர்மை, உண்மை, யோக்கியம், நாணயம் இல்லாமல் மக்களை ஏய்த்தும் பிழைக்கத் துணிந்து முன்வந்து விட்டார்கள்.


இது-

காந்தி சகாப்தம் ஏற்பட்டதிலிருந்து பாவமன்னிப்பு ஸ்தாபனம் போல் அரசியலைக் கருதிக்கொண்டு நடந்து - நாட்டையும், நாட்டின் உயர் பண்புகளையும் அடியோடு அழித்து ஒழித்து கடும் புலி வாழும் காடாக ஆக்கிவிட்டது.


கேடு கெட்ட அரசியல் நிலை

இந்த இழி நிலை சிறிதாவது மாற்றம் அடைய வேண்டுமானால், நமது நாட்டு கேடுகெட்ட அரசியல் நிலை மாறியே ஆகவேண்டும். அதனால் -சமதர்மம் என்ற கொள்கையைக் காட்டிப் பேசும் வெறும் பேச்சைக் கேட்டு ஏமாந்து விடாதீர்கள்.

ஒருவன் பேத வாதியாய் இருந்தாலும், அவன் பகுத்தறிவு -
நாத்திகவாதியாய் இருந்தால் அவனை நம்புங்கள்.
கண்டிப்பாய் நாமம், விபூதிக்காரனை நம்பாதீர்கள். கண்டிப்பாய் நம்பாதீர்கள்.

பகுத்தறிவாளர்களுக்குத்தான் இடம் உண்டு என்று சொல்லப்படுகின்ற ஸ்தானங்களை, குழுக்களை நம்புங்கள்.

லாபம் இல்லாவிட்டாலும் நட்டம் இருக்கக்கூடாது.

சமதர்மத்துக்கும் பகை

ஒருவன் பூணூல் போட்டுக் கொண்டு, நெற்றிக்குறி இட்டுக் கொண்டு - அவன் தாயார் மொட்டை அடித்து முக்காடு போட்டுக் கொண்டு, அவன் மனைவி கோவணம் போட்டு சேலை கட்டிக் கொண்டு இருக்க உங்களிடம் வந்து “நான் பொதுவுடமைவாதி”அதுவும் இடதுசாரிக் கம்யூனிஸ்டு என்று சொன்னால், அதை நீங்கள் நம்பினால், நீங்கள் எவ்வளவு தூரம் முட்டாளாவீர்களோ-

அதே போல்தான்

நெற்றிக்குறியுடன் ராமாயணம், பாரதம், தேவாரம், பிரபந்தங்களைப் படித்துக்கொண்டு - பாராயணம் செய்து கொண்டு, பூஜை புனஸ்காரங்களுடன் திரிகின்றவனை சமதர்மவாதி என்று நம்புவதால் முட்டாள்களாவீர்கள்; நம்பாதீர்கள்; கண்டிப்பாய் நம்பாதீர்கள்.



புரட்டர்கள்

ஆனால் -

இந்த நாமக்கார, விபூதிக்கார சமதர்மவாதிகள் அத்தனை பேரும் புரட்டர்கள் அல்லது முட்டாள்கள் என்பவர்களே; எந்த அளவுக்கு இவர்களை அண்டுகின்றோமோ -

அந்த அளவுக்கு மோசம்தான்; ஆபத்துத்தான்.

உணருங்கள்.


--------------------- தந்தைபெரியார் – நூல்:-“உயர் எண்ணங்கள்” பக்கம்:-39-40

(இத்துடன் இந்நூல் முடிவடைந்தது- படித்த தோழர்களுக்கு மிக்க நன்றி)

3 comments:

அக்னி பார்வை said...

அய்யா,

ஒரு உதவி செய்யவேண்டும்.நீங்கள் சமிபகாலமாகவே ஈழ விஷ்யத்தில் பலரின் நிலைபாட்டை (குறிப்பாக வீரமணி மற்றும் கலைஞர் அவகள்)எழுதி வருகிறீர்கள்..மகிழ்ச்சி..அதை இன்னும் சுருக்கி ஒரு பறவை பார்வையில் ஆரம்பத்தில் இருந்து கலைஞரின் ஈழ நிலைப்பாட்டயும் ஒரே பதிவில் எழுதி தொகுக்க முடியுமா? அனைவருக்கும் சேர்க்க அச்சிலேற்றும் விதமாக

இதை செய்ய நிறைய தகவல் கள் வேண்டும் தங்களிடம் இருக்கும்.. ஆனால் அதை தொகுக்க வேண்டும் அது தான் ச்வாலான விஷயம்

:)

தமிழ் ஓவியா said...

1983 ஆம் ஆண்டிலிருந்தே ஈழப்பிரச்சினையை பார்த்து வருகிறேன்.
டெசோ முதல் ஈழத்தமிழர் பாது காப்பு இயக்கம் வரை. ஒவ்வொருவரும் அரசியல் செய்கிறார்கள்.விதி விலக்காக அன்றிலிருந்து இன்று வரை தி.க. மட்டும் சரியான நிலைப்பாட்டை எடுத்து செயல்பட்டு வருகிறது.

இப்போது கூட ஈழப்பிரச்சினையை முதன் முதலாக 23-9-2008 அன்று ரயில் மறியல் போரட்டம் என்று மக்களிடம் கொண்டு சென்ரது தி.க. அப்போராட்டத்தில் சுப.வீ, திருமா போன்றோர் கலந்து கொண்டனர். அதன் பின் தா.பா அக்டோபர் 2 இல் போராட்டத்தை தொடங்கி னாஅர் நேற்ற்றுக்கூட தி.க. போரை நிறுத்த போராட்டம் நடத்தியுள்லது.


இதில் என்ன வேடிக்கை என்றால் 23-9-2008 இல் தி.க. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எல்லாம் ஒரு அணியில்,

அதர்கு பின் ஆரம்பித்தது அரசியலுக்கான போராட்டம் அவைகள் ஒரு அணியில் .. காலத்தின் கோலம் இது தான்

தி.க.வின் உண்மையான நிலையை உணர்ந்து கொள்ளாமல் ஒருசிலர் கொச்சைப்படுத்தி வருகிறார்கள். அவைகளை அலட்சியப்படுத்திவிட்டு நீங்கள் சொன்னது போல் ஒரு ஆய்வு செய்வோம்.


முயற்சி செய்கிறேன் அய்யா. கனனி முன்பு போல் ஒத்துழைக்க மறுக்கிரது. முதலில் அதை சரிபடுத்த வேண்டும். பாஅர்ப்போம்.. உங்கல் கோரிக்கையை நிரைவேற்ர முயற்சி செய்கிரேன்.

அக்னி பார்வை said...

நன்றி