Search This Blog

24.6.15

திருமணங்கள் எல்லாம் பெரியார் வழியில் நடக்க வேண்டும்!-இராஜகோபாலாச்சாரியார்

திருமணங்கள் எல்லாம் பெரியார் வழியில் நடக்க வேண்டும்!

வியப்பாக இருக்கிறதா? உங்களுக்கு வியப்பாக இருக்கும்; இந்துத்வா பேர்வழிகளுக்கோ அதிர்ச்சியில் இருக்கும். வியப்பாயினும் அதிர்ச்சியாயினும் உண்மை இதுதான்!

31.05.1936இல் குற்றாலத்தில் காலை 9 மணிக்கு பட்டிணம் பொடி உரிமையாளர் தோழர் எஸ்.தங்கவேலுவுக்கும் மதுரை அய்யம்பாளையம் வியாபாரி கே.எஸ்.இராமசாமி பிள்ளையின் மகள் பூரணத்தமாளுக்கும் குற்றாலம் காடல்குடி ஜமீன்தார் மாளிகையில் தந்தை பெரியார் தலைமையில் வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் நடந்தது.

அத்திருமணத்தில் இராசகோபாலாச்சாரியார் (இராஜாஜி), டி.கே.சிதம்பரநாத முதலியார், பப்ளிக் பிராசிக்கியூட்டர் பி.ஆவுடையப் பிள்ளை, அ.பொன்னம்பலனார், ஏ.வேணுகோபால், பி.பிச்சையா, கே.சி.இராமசாமி (கொல்லம்), எ.கே.கே.குற்றாலிங்க முதலியார், சு.ரா.அருணாசலம் பிள்ளை, எஸ்.சண்முகசுந்தரம் பிள்ளை முதலானோர் கலந்துகொண்டனர்.

தலைமை வகித்த தந்தை பெரியார் முகவுரையாக, நான் இங்கு புரோகித முறையில் திருமணம் நடத்திக் கொடுக்க வரவில்லை, சீர்திருத்த முறையில் மக்களுக்கு நன்மையுண்டாக நாலு வார்த்தைகள் பேசவும், கொஞ்ச நேரமாவது இதில் கவனம் செலுத்தவும்தானே ஒழிய வேறில்லை என்று சொல்லி, மணமக்களுக்கு திருமண ஒப்பந்த உறுதிமொழியை எடுத்துச் சொல்லி அவர்களையும் சொல்லச் செய்து திருமணத்தை முடித்தார்.

அதன்பின் பேசிய இராஜகோபாலாச்சாரியார்,

நண்பர்களே! இந்தத் திருமணத்தைப் பார்க்க எனக்குத் திருப்தி ஏற்படுகிறது. நல்லமுறையில் இந்தக் கல்யாணம் நடத்தப்பட்டது. எனது நண்பர் இராமசாமி (பெரியார்) அவர்கள், தான் புரோகிதர் இல்லையென்று சொன்னார். அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். அவர் புரோகிதர்தான். நூறு தடவைச் சொல்வேன். ஆனால், இந்தப் புரோகிதம் (ஒப்பந்த உறுதிமொழியும் அதுசார்ந்த சொற்பொழிவும்) மேலான புரோகிதமாகும். அவர் அதை விடாமல் மக்கள் ஷேமத்துக்காக இன்னும் வெகு நாளைக்குத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். இராமசாமி இதனால் தேசத்துக்கு நன்மை செய்து கஷ்டம் இருந்து வருகிறது. அது மாறவேண்டும். திருமணம் என்றும் நினைவில் நிற்கும்படி நடக்க வேண்டும். அச்செய்கையில் ஒரு மதிப்பு இருக்கும்படியாகவும் நடத்தவேண்டும்.

கல்யாணத்தில் தம்பதிகள் சேமமும் சந்தோஷமும் முக்கியமானவை. அவர்கள் ஒற்றுமையாய் இருக்க வேண்டும்.

மணமக்களை ஆசீர்வதிக்கும்படி இராமசாமி என்னைக் கேட்டுக்கொண்டார். நான் ஆசீர்வதிக்கத் தகுதியற்றவன். கடவுள்தான் ஆசீர்வதிக்க வேண்டும். ஆனாலும் அவர் சொன்னதற்கு மணமக்கள் சந்தோஷமாகவும், ஒற்றுமையாகவும் நீண்ட நாள் வாழவும் வேண்டுமென்று கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.

மணமகன் பெண்ணுக்கு சம உரிமை கொடுக்க வேண்டும். கல்யாணம் எல்லாம் சீர்திருத்த முறையில் நடக்க வேண்டும். இது மாதிரி எல்லோரும் செய்ய முன்வர வேண்டும் என்று பேசினார்.

பின் தலைமை வகித்த தந்தை பெரியார் தன் முடிவுரையாக பேசியதாவது:-

எனது மதிப்பிற்குரிய தோழர் ஆச்சாரியார் அவர்களும், தோழர் முதலியார் அவர்களும் இத்திருமணத்தைப் பாராட்டிப் பேசியது எனக்கு மிகவும் பெருமையளிக்கத் தக்கதாகவே இருந்தது.
இதுவரை நான் எத்தனையோ திருமணத்தில் கலந்திருக்கிறேன்; பார்த்திருக்கிறேன்; தலைமை வகித்தும் இருக்கிறேன் என்றாலும், இன்றைய திருமணத்தில் நான் கலந்திருப்பதை உண்மையாகவே நான் பெருமையாக எண்ணுகிறேன். இத்திருமண முறை இப்பெரியார்களின் ஆமோதிப்பையும் ஆசியையும் பெற்றது உண்மையிலேயே எனக்குக் கிடைக்கக் கூடாத ஒரு சாதனம் கிடைத்தது போலவே இருக்கிறது. மணமக்களுக்கும் இந்த சந்தர்ப்பமானது ஒரு மறக்கக் கூடாததும், என்றும் ஞாபகத்தில் இருக்கக்கூடிய பெருமையானதுமான சம்பவமும் ஆகும். ஆதலால் அவர்களையும் நான் பாராட்டுகிறேன்.


எனது பணிவிற்குரிய ஆச்சாரியார் அவர்கள் நான் இத்திருமணத்திற்கு புரோகிதன் என்று சொன்னார்கள். இதுதான் புரோகித முறையாகவும் புரோகிதத்துக்கு இவ்வளவுதான் வேலை என்றும் இருந்தால் நான்அந்த புரோகிதப் பட்டத்தை ஏற்க தயாராய் இருப்பதோடு புரோகிதத் தன்மையை எதிர்க்கவும் மாட்டேன். புரோகிதக் கொடுமையும் புரோகிதப் புரட்டும் பொறுக்க முடியாமல் இருப்பதாலும் அப்படி இருந்தும் அதற்கு செல்வாக்கு இருப்பதாலும் தான் புரோகிதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்கிறேன். மற்றபடி எனக்கு வேறு எண்ணம் இல்லை. இன்று நடந்த இந்த காரியங்கள்கூட இல்லாமல் திருமணம் என்பவை நடக்க வேண்டும் என்பது எனது அவா. அப்படியே அநேக இடங்களில் நடக்கின்றன.


ஆணும் பெண்ணும் ரிஜிஸ்டர் ஆபீசுக்குப் போய் வாழ்க்கைத் துணைவர்களாகி விட்டோம் என்று சொல்லி கையெழுத்துப் போட்டுவிட்டு வந்துவிட்டால் போதும். அந்த வெறும் கையெழுத்து திருமணத்துக்கு இதைவிட அதிக மதிப்பும் நன்மையும் சுதந்திரமும் உண்டு. புருஷன் பல பெண்ஜாதிகளைக் கட்டிக் கொள்ள முடியாது. ஆண் பெண் குழந்தைகளுக்கு சொத்தில் சரிபங்கு உண்டு. நிர்வகிக்க முடியாத நிலை ஏற்பட்டால் ஆணோ பெண்ணோ பிரிந்து இஷ்டமானால் வேறு கல்யாணமும் செய்து கொள்ளலாம். புரோகித கூலி, தட்சணை, தாம்பூலம், சாப்பாடு, ஆடல், பாடல், ஆடம்பரம் ஆகிய செலவும் தொல்லையும் கிடையாது. இன்று கூட நாம் இங்குக் கூடி இந்தக் காரியங்களைச் செய்வது இந்த வாழ்க்கை ஒப்பந்தத்துக்கு ஒரு விளம்பரத்துக்கு ஆகவே ஒழிய மற்றபடி இப்படிச் செய்தால்தான் கல்யாணம் ஆகும் என்பதற்கு ஆக அல்ல. ஆகையால் வர வர இவைகள்கூட அவசியமில்லாத மாதிரி செய்து கொள்ள வேண்டும். சட்டங்களிலும் சீர்திருத்தம் வேண்டும்.


மற்றும் ஆச்சாரியார் அவர்கள், நான் அவர்களை திருமணத்தை பாராட்டி வாழ்த்தும்படி கேட்டதை ஆசீர்வாதம் செய்யும்படி கேட்டதாகவும், அது கடவுளுக்குத்தான் உரிமை என்றும் சொன்னார். நான் கேட்டுக் கொண்டதை ஒப்புக் கொள்ளுகிறேன். ஆச்சாரியார் பாராட்டுதலக்கும் வாழ்த்துதலுக்கும் மதிப்பு உண்டென்று இப்போதும் கருதுகிறேன்.


இத்திருமண முறையை பெரியார் ஆச்சாரியார் ஆதரித்து விட்டதால் எனக்கு எவ்வளவோ தைரியம் ஏற்பட்டுவிட்டது.


இத்திருமண முறைக்கு இன்று ஒரு பொது ஆமோதிப்பு ஏற்பட்டுவிட்டதென்றும் அது இம்முறை பெருக ஒரு நல்ல ஆதரவு என்றும் சொல்லுவேன்.


இது நமக்கு ஒரு லாபகரமான காரியம் என்றே கருதுகிறேன். இதற்கு ஆக அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டவனேயாவேன்.


நிற்க ஆசீர்வாதம் செய்யச் சொன்னேன் என்பதிலும் எனக்கு ஆட்சேபணையில்லை.
ஆனால் அதற்கு தான் தகுதியில்லை என்றும் கடவுள்தான் செய்யவேண்டும் என்று சொன்னதற்கு நான் சொல்லக்கூடிய சமாதானம் என்னவென்றால் ஆச்சாரியார் அவர்கள் ஆசீர்வாதம் செய்வதற்கு தகுதி உடையவர்கள் என்றே சொல்லுகிறேன். அவர் போன்றவர்கள் இம் மணமக்கள் வாழ்க்கை நலத்தில் ஆசை கொண்டு ஆசி கூறிவிட்டால் அந்த ஆசி வீண் ஆசியாகவோ, கடவுள் ஆசியாகவோ, தட்சணைக்கு ஆக செய்யவும் ஆசியாகவோ ஆகிவிடுமா?

உதாரணமாக அரசியல் உலகில் ஒரு வைசிராய் ஒரு ஆசாமியைப் பார்த்து நீ முன்னேற்றமடைய தகுதி உடையவன், நீ முன்னேற்றமடைந்து பெரிய பதவிகளுக்கு வரவேண்டுமென்று ஆசைப்படுகின்றேன் என்று ஆசி கூறுவாரேயானால் அந்த ஆளுக்கு அந்த ஆசி பயன்படுமா, படாதா என்று யோசித்துப் பாருங்கள். வைசிராயானவர் அந்த ஆசாமிக்கு ஆபத்து வரும் காலத்தில் எல்லாம் தன்னால் கூடியதைச் செய்து தன் வாக்கு நிறைவேற முயற்சிப்பாரா இல்லையா என்று யோசித்துப் பாருங்கள். அதுபோல் ஆச்சாரியார் அவர்களால் ஆசி பெற்றுவிட்டால் மணமக்கள் வாழ்க்கையில் ஆச்சாரியார் அவர்கள் கண்காணிப்பும் கவலையும் இருந்துதான் தீரும். அதற்கு ஆகத்தான் தகுந்தவர்களிடம் ஆசி பெறவேண்டும் என்பது.

மற்றபடி கடவுள் ஆசி என்றால் அரை அணா வாங்கிக் கொண்டு தெருவில் போகின்றவன் யாதொரு பொறுப்பும் இல்லாமல் மணமக்கள் 16 மக்கள் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்று சொல்லி விடுவார்கள்.

கடைசியாக இவ்வளவு சுருக்கமுறையில் திருமணம் நடத்திக் கொள்ள முற்பட்ட மணமக்களுக்கும் அதை ஒப்புக்கொண்ட மணமக்கள் பெற்றோர்களுக்கும் இங்கு விஜயம் செய்த பெரியோர்களுக்கும் நன்றி கூறி அமருகிறேன் என்று பேசினார்.


56 comments:

தமிழ் ஓவியா said...

இந்துக் கலாச்சாரத்தின் மேன்மையை வெளிப்படுத்தும் பாடத்திட்டங்கள் தயாரிப்பாம் - எச்சரிக்கை!

புதன், 24 ஜூன் 2015


புதுடில்லி, ஜூன் 24-_ இந்துக் கலாச்சாரத் தின் மேன்மையை வெளிப்படுத் தும் பாடத் திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றனவாம், அதற்கான திட்டங்களில் மத்திய ஆட்சி இறங்கியுள் ளதாம்.

தற்போது காவி மய மாக்கப்பட்ட வரலாற்று பாட நூல்கள்குறித்து மறு ஆய்வு செய்து, மீண்டும் திருத்தப்பட்ட வரலாற்றுப் பாடங்கள் அறிமுகம் செய் யப்பட உள்ளதாக தகவல் கள் கூறுகின்றன.

இம்மாதத்தின் தொடக்கத்தில் 8.6.2015 முதல் 12.6.2015 வரை என்சிஇஆர்டி என்று உள்ள மத்திய அரசின் கல்வித்திட்டத்தின்படி உள்ள வரலாற்றுப் பாட நூல்களை உடனடியாக ஆய்வு செய்து அறிக்கை யைத் தருமாறு உத்தர விடப்பட்டுள்ளது. இந்திய வரலாற்று ஆய்வுக்குழுவி லிருந்து மூன்று பேர் உள்பட இந்தியா முழு வதும் உள்ள கல்வியாளர் களைக்கொண்டு மறு ஆய்வுப்பணிகள் நடை பெற்று வருகின்றன.

ஆய்வுப்பணி மேற் கொள்வதற்கு முன்பாக மத்திய மனித வள மேம் பாட்டுத்துறை யின்சார்பில் என்சிஇஆர்டி அலுவலர் களைக் கொண்டு ஆலோ சனைக் கூட்டம் நடை பெற்றுள்ளது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் வரலாற்றுப் பாடநூல் களில் மாற்றங்களை ஏற் படுத்த வேண்டியுள்ளது குறித்து விவாதிக்கப்பட் டது. அந்தக் கூட்டத்தில் மத்திய மனிவள மேம்பாட் டுத்துறை மற்றும் என்சி இஆர்டி ஆகிய இரண்டு தரப்பு அலுவலர்களும் வரலாற்றுப் பாடநூல் களில் ஏற்பட்டுள்ள பிழை கள் மற்றும் முரண்பாடு கள்குறித்து விவாதித்துள் ளனர்.

இந்திய வரலாற்று ஆய்வுக்குழு உறுப்பின ரான சர்திந்து முகர்ஜி என்பவர் கூறுகையில், பாடநூல்களில் பிரச்சினை கள் இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த புத்த கங்கள் திரும்பப் பெறப் பட்டு வேறு புத்தகங்கள் அளிக்கப்பட உள்ளன என்று கூறினார்.

மத்திய அரசின் பாடத் திட்டத்தின்கீழ் வர லாற்றுப் பாடநூலுடன் தொடர்புள்ள அலுவலர் ஒருவர் கூறும்போது, 1977ஆம் ஆண்டு தொடக் கத்திலிருந்து ஜனதா ஆட்சியில் ஜனசங்கம் இணைந்ததிலிருந்து என்சி ஆர்டி பாடநூல்களில் குறிப்பாக வரலாற்றுப் பாடநூல்களில் மாற்றங் களை ஏற்படுத்தக் கோரும் அச்சுறுத்தல்கள் இருந்த வண்ணம் உள்ளன. 1999 ஆம் ஆண்டு தேசிய ஜன நாயக கூட்டணியின் ஆட் சிப்பொறுப்பேற்றபோது மத்திய அரசின் பாடத் திட்டத்தின்கீழ் உள்ள வரலாற்றுப் பாடநூல் களில் மாற்றங்கள் செய் யப்பட்டன. அதன்பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரசு தலைமையிலான அய்க்கிய ஜனநாயக கூட்டணி 2004ஆம் ஆண்டில் அந்த நூல்களில் மீண்டும் மாற்றங்களை ஏற்படுத்தியது. சிறிய அள விலான மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக மட்டுமே இந்த 5 நாள்கள் ஆய்வு நடை பெறவில்லை. 10 ஆண்டுகளுக்கும் மேலாக இதே பாட நூல்கள்தான் பயன்படுத் தப்பட்டு வந்துள்ளன. புதிய வரலாற்று நூல் கள் எழுதப்பட வேண்டும் என்பதற்காகவே மறுஆய் வுப் பணிகள், விவாதங்கள் நடைபெற்றவருவதாகக் கூறப்படுகிறது.

தமிழ் ஓவியா said...

முகர்ஜி கூறுகையில், முடிவு அரசிடம்தான் உள்ளது. 18 மாதங்களி லிருந்து 24 மாதங்களாக வரலாற்று நூல்களைத் திருத்தி எழுதிட பணிக் கப்பட்டுள்ளோம். அதன் படி, புதிய புத்தகங்கள் 2017ஆம் ஆண்டில் மட் டுமே வெளியாகும். முத லில் ஆங்கிலத்தில் எழு தப்படும் நூல்கள் பின்னர் உருது மற்றும் பிற மொழி களில் மொழியாக்கம் செய்யப்பட உள்ளன என்று கூறினார்.

முகர்ஜி மற்றும் மீனாக்ஷி ஜெயின், ஆர்.எஸ்.அகர்வால் ஆகிய மூவரும் இந்திய வரலாற்று ஆய்வுக்குழுவிலிருந்து ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்திய வரலாற்று ஆய்வுக்குழு வின் தலைவரான ஒய்.சுதர் ஷன் ராவ்வால் இக்கூட் டத்துக்கான ஏற்பாடு களைச் செய்ய முடிய வில்லை.

முகர்ஜி கூறுகையில், மத்திய அரசின் பாடத் திட்டத்தில் 12 ஆம் வகுப்பில் வரலாற்றுப் பாடநூலில் பிரச்சினை உள்ளது. காந்தியைப்போல் ஜின்னா போராடியதாக புரட்சியாளர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசியம் குறித்த அவசரத் தேவை குறித்து முறையாக குறிப்பிடப்படவில்லை. இவை யெல்லாம் அதற்கு முன்பாக படித்ததைவிட 12 ஆம் வகுப்பில் விரிவாக வரலாற்றுப் பாடத்தை எடுத்துப்படிப்பவர்களுக்கு அளிக்கப்படவேண்டும். பெரிய அளவிலான தவறு கள் வரலாற்றுப் பாட நூல்களில் இடம் பெற் றிருப்பதை என்னதான் தாம் எதிர்த்தாலும், கொள்கைசார்ந்த விஷயங் களில் எதுவும் செய்ய முடியவில்லை என்று கூறி யுள்ளார்.

ஆய்வுப்பணிகள் என்ன நடைபெற்றன என்பதைக் கூறுமுடியாது என மறுத்து விட்ட என்சிஇஆர்டி அலுவலக இயக்குநர் பி.கே.திரிபாதி கூறுகையில், இதுவரை நான் எந்த அறிக்கையையும் பெறவில்லை. நான் யோகா பணிகளில் மும்முரமாக இருக்கிறேன். சிறிய அள விலான பிழைகளைத் திருத்தும் பணிகள் தான் நடைபெறுகின்றன என்று கூறினார்.

செய்யப்படும் மாற்றங்கள்

இந்துக் கலாச்சாரத்தின் மேன்மை மற்றும் இந்தி யாவை அதன்படி உரு வாக்குவதற்கான பணி களை முடுக்கிவிடுதல்

தேசிய அளவிலான இயக்கம் குறித்த புதிய கருத்துகளை சேர்த்தல்

விடுதலைப்போராட்டத் தில் போராடியவர்களின் பங்களிப்புகுறித்து விரிவாக

அளித்தல்

பிரிட்டிஷ் காலத்தில் போராடியவர்களில் பெரும் பான்மையரைச் சேர்த்தல்
இந்திய அரசியலில் ஜின்னாவின் பங்களிப்பு குறித்த தகவல்களைக் குறைத்தல்.
மேற்கண்ட மாற்றங் களை செய்ய உள்ளதாக ஆய்வுக் குழுக் கூட்டத் தில் விவாதிக்கப்பட்டுள் ளன.Read more: http://www.viduthalai.in/e-paper/103860.html#ixzz3e07JKEZt

தமிழ் ஓவியா said...

அட நடராஜா!

புதன், 24 ஜூன் 2015

சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த நடராஜக் கட வுளின் தாத்பரியம்பற்றி அள்ளி விடுவார்கள். இந்த நடராஜனை ஆகாய லிங்க வடிவில் வழிபடு கிறார்களாம். கோவில் என்றாலே, அது சிதம் பரம் நடராஜன் கோவி லைத்தான் குறிக்குமாம்.

நடராஜர் நடனக் கலை வல்லுநராம். 108 வகை நடனங்களை ஆடு பவராம். நடராஜர் சிலை கனகசபையில் உள்ளது. மூலஸ்தானத்துக்கும், இதற்குமிடையே திரை ஒன்றுள்ளது. அந்தத் திரைக்குப் பின்புறத்தில் தான் ஆகாய வடிவம் இருக்கிறது. அதிலிருந்து தான் நடராஜப் பெருமான் தோன்றி பதஞ்சலி, வியாக்கிரபாதர் என்னும் இருடிகளுக்காக நடனம் ஆடினாராம்.

அடேயப்பா, இப்படிப் பட்ட சிதம்பரம் நடராஜன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத கையா லாகாத்தனத்தை எண்ணி னால் வயிறு முட்ட சிரிப்புதான் மிஞ்சும்.

இதோ அந்த வரலாறு

முப்பத்தேழு ஆண்டு, பத்து மாதம், இருபது நாள்கள் (24.12.1648 முதல் 14.11.1686) வரை சிதம்பரம் கோவிலில் உள்ள நட ராஜர் சிலை சிதம்பரத்தி லிருந்து வெளியேறியி ருந்தது என்னும் உண்மை இப்போதுதான் தெரிய வந்துள்ளது. சிதம்பரத்தி லிருந்து எடுத்துச் செல் லப்பட்ட நடராஜர் சிலை, முதல் நாற்பது மாதங்கள் குடுமியான்மலையிலும்,  பின்னர் மதுரையிலும் இருந்திருக்கிறது. இந்தச் செய்தி, இப்போது திரு வாரூரில் கிடைத்திருக் கும் மூன்று வடமொழிச் செப்பேடுகளிலிருந்து தெரிய வருகிறது.

தில்லையை விட்டு நடராஜர் சிலை அகற்றப் பட்டதற்கு என்ன கார ணம் என்பது சரிவரத் தெரியவில்லை. இருந் தாலும், அக்காலச் சூழ் நிலைகளை வைத்து ஆராயும்போது, பீஜப்பூர் சுல்தானுடைய படையெ டுப்புக்கு பயந்து கொண்டோ அல்லது 1647 ஆம் ஆண்டு தமி ழகத்தின் வடபகுதியில் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தின் காரணமா கவோ சிதம்பரத்திலுள்ள நடராஜருக்குச் சரிவர பூஜை நிகழ்த்த முடியாது என்று நினைத்த சில பக்தர்கள் இப்படி நட ராஜர் சிலையை எடுத்துச் சென்றிருக்கலாம் என்று யூகிக்கலாம்.

கடைசியில் மதுரை யில் இருந்த நடராஜரை மீண்டும் சிதம்பரத்திற்குக் கொண்டு வந்தது, மராட் டிய மன்னன் சகசி காலத் தில்தான் என்றும் தெரி கிறது.

ஆதாரம்: தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர்

(இந்தச் செய்தி இத யம் பேசுகிறது இதழிலும் எடுத்துப் போடப்பட்டுள் ளது).

இப்பொழுது சொல் லுங்கள், இந்த சிதம்பரம் நடராஜக் கடவுள்பற்றி அளப்பதெல்லாம் அசல் கட்டுக்கதைகளா இல் லையா?      - மயிலாடன்

தமிழ் ஓவியா said...

பெண்களைக் கடத்திய மதபோதகர்

புதன், 24 ஜூன் 2015

திருச்சி, ஜூன் 24_ புதுக்கோட்டை மாவட் டம் விராலிமலை அருகே உள்ள ராமகவுண்டம் பட்டியைச் சேர்ந்தவர் கிட்டப்பா(வயது 48). இவர் விராலிமலை காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்ப தாவது:

நான் விராலிமலை பகுதியில் விறகு வியாபா ரம் செய்து வருகிறேன். எனக்கு தனலெட்சுமி(45), மோகனா(38) என 2 மனைவிகளும், புஷ்ப லதா(27), ரேவதி(25), ராஜேஷ்வரி(19) பாக்கிய லெட்சுமி(17) என 4 மகள் களும் உள்ளனர். இவர் களில் புஷ்பலதாவுக்கும், ரேவதிக்கும் திருமணமாகி விட்டது. ராஜேஸ்வரி, பாக்கியலெட்சுமி ஆகிய இருவரும் தனியார் கல் லூரியில் படித்து வருகின் றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி பாலக்கரையை சேர்ந்த முத்து ஆப்ரகாம் என்ற மத போதகருக்கும், எனது மகள் ரேவதிக்கும் நட்பு ஏற்பட்டது. இதை பயன்படுத்தி முத்து ஆப்ர காம் எனது மனைவிகள் தனலெட்சுமி, மோகனா, மகள்கள் ரேவதி, ராஜேஸ் வரி, பாக்கியலெட்சுமி ஆகியோரிடம் மூளை சலவை செய்துள்ளார்.

மேலும் நீங்கள் மதம் மாறினால் நன்றாக இருக் கலாம் என்று கூறி வீட்டில் வியாபாரத்திற்கு வைத்திருந்த ரூ. 8.6 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 28 பவுன் தங்க நகைகளுடன் அவர்களை கடத்திச் சென்று விட் டார். அவர்களை பத்திர மாக மீட்டு தர வேண்டும் என்று அதில் கூறி உள்ளார்.

இது குறித்து விசா ரணை நடத்திய விராலி மலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வரு கிறார்கள். மத போதகர் ஒருவரே வியாபாரியின் 2 மனைவிகள், 3 மகள்களை கடத்தி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் ஓவியா said...

பெண்களைக் கடத்திய மதபோதகர்

புதன், 24 ஜூன் 2015

திருச்சி, ஜூன் 24_ புதுக்கோட்டை மாவட் டம் விராலிமலை அருகே உள்ள ராமகவுண்டம் பட்டியைச் சேர்ந்தவர் கிட்டப்பா(வயது 48). இவர் விராலிமலை காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்ப தாவது:

நான் விராலிமலை பகுதியில் விறகு வியாபா ரம் செய்து வருகிறேன். எனக்கு தனலெட்சுமி(45), மோகனா(38) என 2 மனைவிகளும், புஷ்ப லதா(27), ரேவதி(25), ராஜேஷ்வரி(19) பாக்கிய லெட்சுமி(17) என 4 மகள் களும் உள்ளனர். இவர் களில் புஷ்பலதாவுக்கும், ரேவதிக்கும் திருமணமாகி விட்டது. ராஜேஸ்வரி, பாக்கியலெட்சுமி ஆகிய இருவரும் தனியார் கல் லூரியில் படித்து வருகின் றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி பாலக்கரையை சேர்ந்த முத்து ஆப்ரகாம் என்ற மத போதகருக்கும், எனது மகள் ரேவதிக்கும் நட்பு ஏற்பட்டது. இதை பயன்படுத்தி முத்து ஆப்ர காம் எனது மனைவிகள் தனலெட்சுமி, மோகனா, மகள்கள் ரேவதி, ராஜேஸ் வரி, பாக்கியலெட்சுமி ஆகியோரிடம் மூளை சலவை செய்துள்ளார்.

மேலும் நீங்கள் மதம் மாறினால் நன்றாக இருக் கலாம் என்று கூறி வீட்டில் வியாபாரத்திற்கு வைத்திருந்த ரூ. 8.6 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 28 பவுன் தங்க நகைகளுடன் அவர்களை கடத்திச் சென்று விட் டார். அவர்களை பத்திர மாக மீட்டு தர வேண்டும் என்று அதில் கூறி உள்ளார்.

இது குறித்து விசா ரணை நடத்திய விராலி மலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வரு கிறார்கள். மத போதகர் ஒருவரே வியாபாரியின் 2 மனைவிகள், 3 மகள்களை கடத்தி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் ஓவியா said...

நலவாழ்வின் எதிரி சர்க்கரை நோய் - புரிந்திடுவீர்!


சர்க்கரை நோய் என்பது மிகவும் ஆபத்தானது; அது மட்டுமா? ஒருமுறை நம் உடம்பினுள் புகுந்து அது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டால், அது நமக்கு வாழ்நாள் முழுவதும் கூடவே இருந்தே தீரும் என்பதுதான் இதுவரை நிலவிவரும் மருத்துவத் தகவல். இனி எதிர்காலத்தில் - ஆய்வுகளால் எப்படி மாறுமோ? நாம் அறியோம்!

இன்றைய (24.6.2015) டைம்ஸ் ஆஃப் இண்டியா ஆங்கில நாளேட்டில் இந்த நோய் தாக்குவதற்குரிய மூலகாரணம் ஒன்றைப்பற்றி மிகவும் தெளிவாக ஒரு செய்திக் கட்டுரை வந்துள்ளது.

மிக நீண்ட நேரம் அமர்ந்தே, எழா மல், சிறிதுநேரம்கூட நடந்து, திரும்பி பணியை மேற்கொள்ளாது பணியாற்றும் போது, அந்தப் பல மணிநேர அமர்வு - உட்கார்ந்திருத்தல்கூட, நாம் பணியாற்று கிறோம்; சும்மா இருக்கவில்லை என்ற போதிலும்கூட, அது நமது ரத்தத்தின் சர்க்கரை அளவை மிகவும் கூடுதலாக்கி, சர்க்கரை நோயை (Diabetes) கொண்டு வந்து விடுகிறது.

பொதுவாக பணியாற்றுகிறவர்கள் கணினி முன்னால், அல்லது பல மணிநேரம் இடைவிடாது நாற்காலியில் அமர்ந்தோ தொடர்ந்து தொலைக் காட்சி (டி.வி.) பார்த்துக்கொண்டே இருக்கும் இருபாலர்களோ, சில பொது நிகழ்ச்சிகளில்கூட அன்பு தண்டனை யாக மூன்று, நான்கு மணிநேரம் நம்மை அமரச் செய்து, நீங்கள் முக்கிய மானவர்; இறுதியில் பேசுங்கள்; அப் போதுதான் கூட்டம் கலையாமல் இருக்கும் என்று கூறி, நேரத்தை வீணாக்கி, மற்ற பலரையும் பேசவிட்டு, பெருங்கூட்டத்தைக் கொஞ்சம் கொஞ்ச மாகக் கலையச் செய்த பிறகு, கூட்டத் தினரிடையே பேச வைக்கும் ஏற்பாடு - இப்படி எத்தனையோ விதங்களில் தொடர்ந்து அமர்ந்திருப்பது - எழாமல் இருப்பது - சர்க்கரை நோய் மட்டுமல்ல - கூடுதல் கொழுப்பு (கொலஸ்ட்ரால்) - அதன் விளைவாக மாரடைப்பு - இருதய நோயை உண்டாக்குதல் போன்றவை களோகூட முன்னோட்டமான நிலை மைகளை உருவாக்குவது போன்ற தொடர் நிகழ்வுகள்தான்!

இவைகளைத் தவிர்க்க, எளிய வழிகள்:

1. நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்காமல், அடிக்கடி எழுந்து, அல்லது அலுவலக அறைக் குள்ளே பொடி நடைச் சுற்று சுற்றி மீண்டும் வந்து அமர்ந்து பணி தொடர் தல் போன்றவற்றைச் செய்யலாம்.

உடல் அசைவுகள், எல்லா உறுப்பு களுக்கும் ரத்த ஓட்டம் செல்லும்படி சிறு சிறு மாற்றுப் பணிகள் இடைவேளை களில் செய்தல், எழுந்து, நடந்து மீண்டும் அமர்தல் போன்றவைகளைச் செய்யலாம்.

நீண்ட நேரம் அமர்ந்திருப்பது (தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்த உருளைக்கிழங்கு போண் டாக்களும் இது சேர்ந்ததே)

இருதயம்:

எந்தெந்த உடல் உறுப்புகளை இப்படி நீண்ட நேரம் குந்தியே (உட் கார்ந்தே) சில ஊர்களில் இச்சொற் றொடர் புழக்கத்தில் உள்ளது.

நீங்கள் அமர்ந்தே இருக்கும்போது ரத்த ஓட்டம் குறைகிறது; தசைகளில் கொழுப்பை (உணவின்மூலம் சேரு வதை) எரிப்பது குறைகிறது. விளைவு கொழுப்பு திரவங்கள் (Fatty Acids) இதயத்தின் இரத்தக் குழாய்களை அடைக்கின்றன.

கணையம்:

உடல் உறுப்பில் இந்தக் கணையம் (Pancreas) தான் இன்சுலின் என்பதை ஈர்த்து ஒழுங்குபடுத்தும் கருவி,  ஒரு நாள் அதிகமாக உட்கார்ந்தே இருப்பது அதிகமான அளவு இன்சுலின் அதிக அளவில் உற்பத்தியாவதற்குக் காரண மாக - சர்க்கரை நோயைத் தோற்று விக்கிறது.

செரிமான உறுப்புகள்:

உட்கார்ந்தே இருப்பதால், செரி மானப் பணிகளைச் செய்யும் வயிற்று உறுப்புகள் சுருங்கி, செரிமானத்தைத் தாமதிக்கிறது. இப்படி சரியானபடி ஆகாத மிகவும் தாமதமான செரிமானம் - வயிற்றில் ஒரு பிடிப்பு (வலி) (Cramping, Bloating) நெஞ்சு எரிச்சல் (Heart Burn)  மலச்சிக்கல் (Constipation) இவைகளை உருவாக்குகிறது.

உடற்பயிற்சி ஏதும் செய்யாது மிக நீண்ட நேரம் அமர்ந்தே இருப்பதனால், சுறுசுறுப்பு இன்றி மிகவும் டல்லாக குறைந்த சக்தியை மட்டுமே பெறும் அளவுக்கு ஆக்கி அசத்தி உட்காரவும் வைத்துவிடுகிறது!

எனவே, அடிக்கடி எழுந்து குறு நடை நடைப் பயிற்சி செய்து; உள்ளே, வெளியே சென்று தண்ணீர் குடித்தோ, உரையாடியோ திரும்புங்கள்.

இன்று வந்துள்ள இந்து ஆங்கில நாளேட்டில் சர்க்கரை நோய் வரு வதற்கு நான்கு முக்கிய காரணங்கள் என்பவைபற்றியும் விளக்கி ஒரு செய்திக் கட்டுரை வந்துள்ளது.

அந்த நான்கு பெரிய (Big Four) என்ன தெரியுமா?

1. உணவு - கண்டதையும் அரைத்தல் (குறிப்பாக, வேக உணவுகள்)

2. உடற்பயிற்சி இன்மை - lack of exercise

3. உடற்பருமன் - Obesity

4. கொலஸ்ட்ரால் (கொழுப்புச் சத்து) மிகுதல்

இவற்றில் நாம் அனைவரும் கவனம் செலுத்துதல் முக்கியம் - மிக முக்கியம்  - நல வாழ்வுக்கு.

தமிழ் ஓவியா said...

எதிலும் மதப்பார்வை என்பது ஆபத்தானது!


தீவிர அரசியலில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஊடுருவ வேண்டும் என்ற திட்டத்தின்படி ராம் மாதவ் சிவ்பிரகாஷ் போன்றோர் 2014 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி  பாஜகவில் இணைந்தனர். அதற்கு முன்வரை ஆர்.எஸ்.எஸின் செய்தித் தொடர்பாளராக இருந்த ஆந்திரக்காரர் இவர்.

முக்கியமாக ராம் மாதவ் பாஜகவில் இணைந்த உடனேயே பள்ளிக் கல்வியில் மாற்றம் குறித்த கூட்டத்திற்கு கலந்தாய்வு செய்ய அரசுக்கு சிறிதும் தொடர்பில்லாத பல இந்து அமைப்புகளின் தலைவர்களை அழைத்து ஸ்மிரிதி இராணியுடன் பேசச் செய்தார். கடந்த ஜூலை 10 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடனான ஸ்மிரிதி இராணியின் சந்திப்பு முடிந்த பிறகுதான் சமஸ்கிருத பிரச்சினை வெடித்தது.    ராம் மாதவ் மத்தியில் உள்ள சிறுபான்மை இன அதிகாரிகளையும், உயர்பதவி வகிக்கும் பலரையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து மத ரீதியாகவே விமர்சனம் செய்து வந்தார்.

ஜனவரி 26 ஆம் தேதி நடந்த குடியரசு நாள் விழாவில் அமீத் அன்சாரி கொடிவணக்கம் செலுத்தவில்லை என்று கூறி பிரச்சினையைக் கிளப்பியதின் பின்புலத்திலும் ராம்மாதவ் இருந்திருக்கிறார்.  ராம்மாதவின் இதுபோன்ற மட்டமான செயல்களுக்கும் மோடி மறைமுக ஆதரவுஅளித்தார். ராம் மாதவ் எழுப்பும் எந்தவொரு செயலுக்கும் பாஜக தரப்பில் மறுப்போ அல்லது வருத்தமோ தெரிவிப்பதில்லை. குடியரசு நாள் விழா விவாதத்தில்கூட துணைக் குடியரசுத் தலைவர் அலுவலகம் தான் விதிப்படி குடியரசுத் தலைவர் தலைமையில் நடக்கும் விழாவில் துணைக் குடியரசுத் தலைவர் கொடிவணக்கம் செலுத்தக் கூடாது என்ற விதி உள்ளதைக் கூறியுள்ளது.  கடந்த ஞாயிறு அன்று  டில்லியில் நடைபெற்ற உலக யோகா நாள் நிகழ்ச்சிக்கு துணைக் குடியரசுத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஹமீத் அன்சாரி ஏன் வரவில்லை என தேவையில்லாமல் கேள்வி எழுப்பி இருந்தார்.

மிகவும் உயர்ந்த பதவியில் உள்ளவரை சிறுபான்மை யினத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக மீண்டும் மீண்டும் அவரை இழிவுபடுத்தும் நோக்கில் செயல் படுகிறார்கள். எதிலும் மதப் பார்வைதான் இந்த மதம் பிடித்தவர்களுக்கு. முதலில் யோகா நாள் விழாவில் கலந்துகொள்ள துணைக் குடியரசுத் தலைவருக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவேயில்லை. இதற்கு ஆயுர் வேத அமைச்சகம் தெரிவித்துள்ள சப்பைக் காரணமானது பிரதமர் தலைமையில் நடக்கும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவருக்கு அழைப்பிதழ் அனுப்பப்படுவதில்லை என்று கூறியிருந்தார். ஆனால், இது மிகவும் பொய்யான ஒரு தகவலாகும்; அரசின் சார்பில் எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் மரியாதை நிமித்தமாக குடியரசுத்தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு தகவல் தெரிவிக்கப்படும். இது பாரம்பரியமாக இருந்துவரும் நடைமுறையேயாகும்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை, மோடி நேரில் சந்தித்து உலக யோகா நிகழ்ச்சிபற்றி உரையாடி அழைப்பிதழ் கொடுத்துள்ளார்; குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி யோகா நாள் வாழ்த்துக்களும், அதற்காக சிறப்புரையும் ஆற்றினார். அப்படி இருக்க துணைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல்  இருந்துவிட்டு குட்டு உடைந்த பிறகு, ஒரு அமைச்சகமே இப்படி மக்களிடையே பொய் கூறியுள்ளது.

புளுகினாலும் பொருத்தமாகப் புளுகவேண்டாமா? கெட்டிக்காரன் புளுகே எட்டு நாளைக்குத்தான் - இவர்கள் புளுகோ இரண்டு நாள்களுக்குத் தாங்கவில்லையே!

யோகாவுக்கு வராத துணைக் குடியரசுத் தலைவர் பாகிஸ்தான் செல்லவேண்டும் என்று வி.எச்.பி. முன்னணி தலைவரான பிராய்ச்சி சாமியாரிணி கீழ்த்தரமாகப் பேசியுள்ளார்! பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள் என்று இப்படி இந்தக் கூட்டம் அடிக்கடி கூறுவது - பக்கத்து நாட்டையும் பகைக்கும் தன்மையதே!

முதலில் துணைக் குடியரசுத் தலைவர் உடல் நிலை சரியில்லாததால் கலந்து கொள்ளவில்லை என்று மேலும் ஒரு பொய்யைக் கூறிய உடன் தான் மத்திய அரசின் ஏமாற்றுவேலை வெளியே தெரியவந்துள்ளது.

ராம் மாதவின் இந்த பிரிவினைவாத நடவடிக்கை குறித்து காங்கிரஸ் கூறியதாவது, அன்சாரி புறக்கணிக்கப் பட்டதன்மூலம் பா.ஜ.க.வின் பிரிவினைவாத அரசியல் முகம் வெளிப்பட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள மத்திய ஆயுர்வேத அமைச்சர் சிறீபாத் நாயக் தெரியாமல் இந்த தவறு நிகழ்ந்து விட்டதாகவும், ராம் மாதவும் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இதை தவிர்த்திருக்க முடியும் என்று கூறியுள்ள அவர், நடந்த தவறுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவர் ஒரு முஸ்லிம் என்பதாலேயே இந்த இந்துத்துவாவாதிகளால் குறி வைத்துத் தாக்கப்படுகிறார். மிகப்பெரிய பதவியில் உள்ளவர்களுக்கே இத்தகைய அவமானம் என்றால், பி.ஜே.பி. ஆட்சியில் சட்டம் ஒழுங்கையோ, மரபுகளையோ, நாகரிகத்தையோ எதிர்ப்பார்க்க முடியுமா?

தமிழ் ஓவியா said...

குலத் தொழிலுக்குத் தலைமுழுக்கிடுக!


எப்பாடு பட்டாவது மக்களைப் படிக்க வைத்து வசதி செய்து கொடுத்துத் தகப்பன் வேலையை விட்டு, ஜாதி வேலையை விட்டு, வேறு வேலைக்கு அனுப்பவேண்டும். எந்தத் தலை முறையும் தன் ஜாதி வேலைக்கே வராமல் செய்வதுதான் முக்கியக் கடமையாகும். _ (விடுதலை, 9.5.1961)

தமிழ் ஓவியா said...

நீதிக்கட்சியின் நூற்றாண்டு விழாவை நடத்துகின்ற தகுதி யார் யாருக்கெல்லாம் உண்டு

செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு பேச்சு
கரூர், ஜூன் 24_ கரூர் மாவட்ட திராவிடர் கழ கத்தின் சார்பில் திராவி டர் விழிப்புணர்வு 4ஆவது வட்டார மாநாடு வேலா யுதம்பாளையத்தில் பெரி யார் திடல், ச.சங்கரன் நினை வரங்கம் மலைவீதியில் நடைபெற்றன. நிகழ்ச்சி யில் ஆ.பழனிசாமி (பகுத் தறிவாளர் கழகம்) அவர் கள் அனைவரையும் வர வேற்று பேசினார். கரூர் ஒன்றியத் தலைவர் சு.பழனி சாமி தலைமையில் நடை பெற்ற மாநாட்டில் பெரி யார் சுயமரியாதைப் பிரச் சார நிறுவனத்தலைவர் பொத்தனூர் க.சண்முகம் மாநாட்டு கொடி ஏற்றி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியின் தொடக் கத்தில் திண்டுக்கல் அழ கர்சாமியின் மந்திரமா? தந் திரமா? நிகழ்ச்சியை செய்து காட்டினார். சாமியார்கள் செய்யும் மந்திர வித்தை கள், பித்தலாட்டங்கள் ஆகியவற்றினைப் பற்றி எல்லாம் மந்திரம் அல்ல தந்திரமே என்று செய்து காட்டினார். மாநாட்டின் சிறப்புரையை தலைமைக் கழகப் பேச்சாளர் என்ன ரெசு பிராட்லா மத்திய, மாநில அரசுகளின் மக் கள் விரோத இந்துத்துவா கொள்கைகளை பரப்பும் செயல்களை கண்டித்துப் பேசினார். இறுதியாக கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு பேசிய தாவது:_

நீதிக்கட்சி தொடங்கி வரும் நவம்பர் மாதம் 20ஆம் தேதி 100 ஆண்டு ஆகிறது. தமிழ்நாட்டில் நீதிக்கட்சியின் நூற் றாண்டு விழாவை நடத்து கின்ற தகுதி திராவிடர் கழகத்திற்கும், திமுக, மதி முக போன்ற தோழமை கட்சிகளுக்கு மட்டும் சொந்தம் கொண்டாட தகுதி உள்ளது. பிஜேபியி னர் ராகுல் காந்திக்கு என்ன படிப்பு தகுதி உள் ளது என்று கேட்கின்றனர். ஆனால் பிஜேபி மத்திய கல்வி அமைச்சர் ஸ்மிருதி ரானிக்கு என்ன கல்வித் தகுதி என்று காங்கிரஸ் கேட்டனர் பி.காம் என்று அமைச்சர் சொன்னார் ஹார்வர்ட் பல்கலைகழ கத்தில் நடந்த பயிற்சி முகா மில் 15 நாட்கள் கலந்து கொண்டு சான்றிதழ் வாங்கியுள்ளதை டிப் ளமோ படித்தேன் என்கி றார். உலகில் 53 இராமா யணங்கள் உள்ளது. ஜப் பான், இந்தோனேசியா, தாய்லாந்து, திபெத், இலங்கை போன்ற நாடு களில் ஒவ்வொரு இராமா யணக் கதை உள்ளன. இந் தோனேசியாவில் உள்ள இராமாயணத்தில் இரா மன் தலையை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்திருந்தாக அறிஞர் அண்ணா எடுத்து கூறி னார். கல்கியில் இராஜாஜி எழுதிய இராமாயணத் தில் எட்டாவது பக்கத்தில் இராமன் கடவுள் அல்ல கற்பனை கதை என்பதை மு.கருணாநிதி முரசொலி யில் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் இராமாய ணத்தை முழுவதுமாக படித்தவர் பெரியார், இராஜாஜி இருவர் மட் டும் தான், உலகத்தில் மூன்று இனம் (வெள்ளை, கருப்பர் _ (நீக்ரோ இனம்), மாநிறம் (மங்கலான சிவப்பு) சாப்பிடவே வழி யில்லாமல் இருக்கும்போது யோகா ஒரு கேடா என் றார் லல்லுபிரசாத் யாதவ். தமிழகத்தில் இரண்டு முறை முதல்வர் பொறுப்பு வந்தும், வேண்டாம் என்று உதறித் தள்ளியவர் பெரி யார் என்று செயலவைத் தலைவர் பேசினார். இறுதியாக பெருமாள் நன்றி கூறினார்.

தமிழ் ஓவியா said...

அறிவோம் சட்டம்


விடுதலை வாசகர்களே! திராவிடர் இயக்கமும், விடுதலையும், சமுதாய விழிப்புணர்வுக்கும், மறு மலர்ச்சிக்கும், ஆற்றிவரும் தொண்டு அளப்பரியது. இந்தியாவிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும், இயற்றப் பட்ட சட்டங்கள் பெரும்பாலும், திராவிட இயக்கத்தின் அயராத பணியின் காரணமாகவே ஏற்படுத்தப் பட்டவை என்பதை திராவிட இயக்க வரலாற்றை அறிந்தவர்கள் அனைவரும் அறிவர்.

அத்தகைய சட்டங்களையும், சமூகத்திற்குத் தேவையான சட்டங்களையும் வாசகர்கள் எளிய முறையில் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற அறிவுரையை தமிழர் தலைவர் அவர்கள் வழங்கியதன் தொடர்பாக அறிவோம் சட்டம்'' என்ற தொடர் துவக்கப்படுகிறது.

கழகத் தோழர்கள் உள்ளிட்ட  அனைத்து விடுதலை வாசகர்களும் புரிந்துகொள்ளும் வகையில் இத்தொடர் அமைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள், சமுதாய சீர்திருத்தச் சட்டங்கள் போன்ற வைகளை தொகுத்து வழங்க முனைந்துள்ளோம். வாசகர்கள் படித்துப் பயன் பெறுவார்கள்.

பெண்கள் பாதுகாப்பிற்கான சட்டம்

6. முகமதியர் மற்றும் கிருத்துவர் சட்டம்

இஸ்லாம் மதம் மனித இனத்தின் இரு பாலரையும் பிரித்துப் பார்க்கவில்லை. ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்த குரான் பலவகைகளில் பெண்களைப் பற்றிய கருத்துக்களை கூறுகிறது. பெண் என்ற தலைப்பில் தனியாக ஒரு அத்தியாயமே வெளிப்படுத்தியுள்ளது.

மற்ற அத்தி யாயங்களிலும் பரவலாக பெண்களுக்கு சிறப்பான அறிவு ரைகள், நல்லொழுக்க விதிகள், கட்டளைகள் அவர்களின் குழந்தைப் பருவம் இல்லறவாழ்க்கை, வயோதிகம் ஆகிய காலகட்டங்களில் கடைப்பிடிக்க வேண்டியவைகளை குரான் கூறுகிறது. முகமதியரின் திருமணம் ஆண்-பெண் இடையே குழந்தைகளை பெற்றெடுக்கவும் சட்டப்பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கான ஓர் ஒப்பந்தமாகவே கருதப்படுகிறது.

அந்த ஒப்பந்தம் இரு பாலருக்கும் நன்மை பயக்கக் கூடியதாகவும் அமைகிறது. திருமணத்திற்கான தகுதி என்பது மனநிலை சரியாக இருக்க வேண்டும் என்பது தான். முகமதியர்களின் சட்டங்கள், ஹனபி, இத்னா, அஷாரி, ஷாபி, இஸ்மைலி என பல பிரிவுகளாக உள்ளன. அதனால் திருமணம் பற்றிய சட்டங்கள் ஒரே மாதிரியாக அமைய வில்லை. பருவமடைந்தவர் எனக் கருத பையனுக்கு 12 வயது என்றும், பெண்ணுக்கு 9 வயது எனவும் பொதுவாக கருதப்படுகிறது.

எனவே இளவராக (மைனராக) இருப்பவர்களுக்கும் திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது. இந்திய வயது வந்தோர் சட்டம் (Indian majarity Act) 1875 முஸ்லீம் சட்டங்களைப் பாதிக்காது. இருப்பினும் இளவர்களாக உள்ளவர்களடையே திருமணம் நடைபெற்றால் குழந்தை திருமண தடைச் சட்டம் 1929 (சாரதா சட்டம்)-ன் படி அத்திருமணத்திற்கான பொறுப்பாளர்களை மணமக்களின் காப்பாளர்களை குற்றவியல் வழக்கு தொடர்ந்து தண்டிக்க முடியும்.

ஆனால் மேற்கண்ட சட்டத்தில் இத்திருமணம் செல்லாது என அறிவிக்க சட்டப்பிரிவுகள் ஏதுமில்லை. ஒரு முகமதிய ஆண் ஒரே நேரத்தில் நான்கு பெண்களை திருமணம் செய்து கொள்ள குரான் அனுமதித்துள்ளது. ஆனால் அந்த மனைவிகளை நியாயமாகவும், சமமாகவும் பாவிக்க வேண்டும்.

நான்கு மனைவிகளைத் திருமணம் செய்யலாம் என்பது ஒரு அனுமதி தானேயொழிய கட்டாயம் இல்லை. அதே நேரத்தில் முஸ்லிம் திருமணச் சட்டம் 1939இன் படி ஒரு முஸ்லிம் பெண் தனது கணவன் இன்னொரு திருமணமும் செய்து தன்னை சமமாகவும், நியாயமாகவும் நடத்தவில்லை எனக் கூறி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு போடலாம்.

நான்கு மனைவிகள் உள்ளவர் அய்ந்தாவதாக இன்னொரு பெண்ணை மணந்தால் ஷியா சட்டப்படி அது செல்லாததாகும் ஆனால் சன்னி சட்டப்படி அது வெறும் முறைகேடு தான். ஒரு பெண் ஒரு நேரத்தில் ஒரு ஆணைத்தான் திருமணம் செய்து கொள்ள முடியும்.

ஒரு கணவன் இருக்கும் போது இன்னொருவனை திருமணம் செய்தால் அப்பெண் இந்தியத் தண்டனைச் சட்டம் 494 ஆவது பிரிவின் கீழ் தண்டனைக்கு ஆளாவார். இரண்டாவது திருமணத்தில் பிறந்த குழந்தைகள் சட்ட விரோத குழந்தைகள் ஆகும்.

திருமணத்தின் மறுபயனாக மனைவி, கணவனிடமிருந்து பணமோ சொத்தோ பெற உரிமையுடையவர். இந்த பங்கு (மஹர்) திருமணத்தின் போதும் தரலாம். கணவன் இறந்தபோதோ அல்லது விவாகரத்தின்போதோ தரலாம். கணவன் தன் விருப்பப்படி  மனைவிக்கு விவாகரத்தை அறிவிக்கலாம் என்ற நிலை இருப்பதால் மனைவிக்கு ஒரு பாதுகாப்பிற்காகவே இந்த பங்கு (மஹர்) வழங்கப்படுகிறது.

ஒரு கால அளவுக்கு மட்டும் செய்து கொள்ளும் திருமணம் மூட்டா திருமணம் என்பதாகும். இம்முறைத் திருமணத்தை ஷியா சட்டம் அங்கீகரிக்கிறது. இத்திரு மணத்தின் மூலம் வாரிசு உரிமை கோர முடியாது.

இருப்பினும் தம்பதியினரிடையே இதற்கு மாறான ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளலாம். இஸ்லாமியச் சட்டத்தில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு சமமாக பாவிக்கப்படாலும் கூட ஆண் மூன்று முறை தலாக் எனக்கூறி பெண்ணை விவாகரத்து செய்து விடலாம் என்பது ஒரு பலவீனமாகவே காணப்படுகிறது. எல்லா ஆண்களும் அப்படிச் செய்வ தில்லை என்றாலும் அந்த உரிமை தவறாக பயன்படுத்த வாயப்பு அளக்கிறது என்பதை மறுக்க முடியாது.

தமிழ் ஓவியா said...

கிறித்துவ பெண்கள்

இந்திய கிருத்துவர்கள் திருமணத்தில் ஆணுக்கு 21 வயது என்றும் பெண்ணுக்கு 18 வயது என்றும் நிர்ணயிக்கப் படடுள்ளது. கிருத்துவர்களின் திருமண ஒப்பந்தத்தில் இரு தரப்பாரின் ஒப்புதல் தவிர்க்க முடியாததாகும். கிருத்தவர்களுக் கென தனிச்சட்டம் இல்லாததால், திருமணம் சம்பந்தமாக இந்தியக் கிருத்தவர் திருமணச் சட்டம் 1872 மற்றும் இந்திய விவாகரத்து சட்டம் 1869 இயற்றப்பட்டிருகின்றன.

இவை தவிர சில சட்டங்கள் இல்லை என சட்ட வல்லுநர்கள் கருதுகிறார்கள். இவர்களின் திருமணங்களை பதிவு செய்ய திருமணப் பதிவாளர், திருமண நேரம், இடம், திருமணப்பதிவு, திருமணச் சான்று போன்ற விவரங்களை இந்தியக் கிருத்துவர் திருமணச்சட்டம் 1872 விவரிக்கிறது.

இச்சட்டத்தின்படி வாழ்க்கைப் பொருள் உதவி, திருமண உறவைப் புதுப்பித்தல், பிரிதல், விவாகரத்து போன்றவற்றிற்கு வகை செய்யப் பட்டுள்ளது. திருமணத்திற்கு முன்பு திருமணம் செய்ய இருப்பவர்கள் அறிக்கை சமர்பித்து அதை விளம்பரப்படுத்த வேண்டும். திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

கிருத்துவப் பெண்ணுக்கு அவளது கணவனுக்கு இணையான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. பல பெண்களை மணப்பது தடுக்கப்பட்டுள்ளது. தடை செய்யப் பட்ட உறவினர்களடையே திருமணம் கூடாது. குழந்தை திருமண தடைச் சட்டம், 1929 கிருத்துவர்களுக்கும் பொருந்தக் கூடியதே.

கிருத்துவப் பெண்களுக்கான தகுதி மற்றும் உரிமைகளை விளக்குவதற்கு தனிச்சட்டம் இல்லை என்றாலும் கூட இந்து, முஸ்லிம் பெண்களைப் போலவே இவர்களுக்கும் சமஉரிமைகள் உள்ளன.

(தொடரும்)

தமிழ் ஓவியா said...

யோகா திராவிடர் கலையே! ஆரியர்களுடையது அல்ல!

சூழ்ச்சியால், தங்கள் கலையாக்கிக் கொண்டனர்

பெங்களூரு மடாதிபதி வீரபத்ர சென்னமல்ல அதிரடி!பெங்களூரு ஜூன் 23_ யோகக்கலை திராவிடக் கலாச்சாரம் கொடுத்த கொடையாகும், அதை ஆரியர்கள் சூழ்ச்சி செய்து தனதாக்கிக் கொண் டார்கள்  என்று, நிடுமா முடி மடத்தின் மடாதிபதி வீரபத்ர சென்னமல்ல சுவாமிகள் தெரிவித்தார்.

பெங்களூரு நகரில் திங்களன்று நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் நிடுமாமுடி மடத் தின் மடாதிபதி வீரபத்ர சென்னமல்ல கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் போது யோகா குறித்து அவர் கூறியதாவது:  யோகா கலை என்பது வாழ்வியல் தொடர்பான ஒன்று இது சிந்துவெளி நாகரிகத்தில் இருந்து தொடர்ச்சியாக திராவிட நாகரிகம் உள்ள இடங்கள் அனைத்திலும் வியாபித் திருந்தது. இது ஒரு தனிப் பட்ட இந்து மதத் துற வியோ அல்லது முனிவர் களோ வழங்கியது அல்ல, யோகாவிற்கும் ஆரிய வேத கலாச்சாரத்திற்கும் எள்ளளவும் தொடர் பில்லை. ஆரியர்கள் திரா விடர்களின் இந்த வாழ் வியல் கலையை தங்கள தாக்கிக் கொண்டனர். பிறகு அதனுடன் வேத ஸ்லோகங்களை இணைத்து அதை வேதகால கலையைப் போல் மாற்றிவிட்டனர்.   யோகா என்பது இந்து மத முனிவர்கள் அல்லது குருக்கள் கொண்டு வந்த கலை என்று தற்போது அதிகம் பேசப்பட்டு வரு கிறது. ஆனால் இது முழுவதும் பொய்யான ஒன்றாகும். யோகா கலையை வேதகாலத்தில் கற்றுக்கொண்டவர்கள் தங்களது மாணவர்களுக்கு இந்தக்கலை குறித்த பொய்யான தகவலைக் கூறிவைத்தனர். இந்த பொய்த்தகவல் காரண மாக பிற்காலத்தில் இது வேதமதம் தொடர்புடைய தாக மக்கள் நினைத்துக் கொண்டனர்.   யோகா என்பது மதம் தொடர்பானது அல்ல; இது மனித குலத்திற்குத் தேவையான நல்ல ஒரு மென்மையான உடற் பயிற்சியாகும். மனவளம் பெறவும் யோகா மிகவும் உதவியாக இருக்கும்.

ஆனால், தற்போது சிலர் யோகா பயிற்சிக்கு மதச்சாயம் பூசி, பணம் பார்க்கும் தொழிலாக  மாற்றிவிட்டனர். யோகாவின் மூலம் பணம் பார்ப்பவர்களால் எப்படி மக்களைத் தெளிவாக வைத்திருக்க முடியும்? இந்துத்துவ அமைப் புகள் வலுக்கட்டாயமாக யோகாவை பிறரிடம் திணிக்க முயற்சிக்கிறது. இந்துத்துவ அமைப்பு களின் பிடியில் இருந்து யோகா விடுதலை பெற்று அனைவரிடமும் போய்ச் சேரவேண்டும் என்று, நிடுமாமுடி மடத்தின் மடாதிபதி வீரபத்ர சென்னமல்ல சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...

மீண்டும் போலியோவா?


உத்தரப்பிரதேச மாநிலம், பரித்பூர்(பரேலி மாவட் டம்) பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தை களின் ரத்தமாதிரியைப் பரிசோதித்த போது போலியோ வைரஸ் கிருமி தாக்கி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாவட்டத்தில் உள்ள மீரஞ்கஞ்ச், பரித்பூர், நவாப்கஞ்ச், பஹேரி, கேசர்பூர், ரிதோரா, காலாப்பூர் போன்ற தாலுக்காக்களில் உள்ள குழந்தை களிடமிருந்து பெற்ற மாதிரிகளில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உடலில் போலியோ வைரஸ் கிருமித் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதை உறுதி செய்ய அனைத்து மாதிரிகளும் மும்பை மற்றும் அய்தராபாத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி கூறிய தகவல் அதிர்ச்சியளிக்கிறது. கடந்த வாரம் பரேலி அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு கால்வலி, முடக்குவாத பாதிப்பு, போன்றவைகள் உள்ளதாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இது குறித்து உடனடியாக உலக சுகாதார அமைப்பிற்கு தகவல் அளிக்கப்பட்டுவிட்டது. தகவல் தெரிவிக்கப்பட்ட உடன் 6 சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு வருகை தந்தது, அவர்கள் மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறும் குழந்தைகளை முழுமையாக பரிசோதனை செய்தபோது அந்தக்குழந்தைகளை போலியோ வைரஸ் கிருமி பாதித்த அடையாளம் உள்ளதாக தெரிவித்தனர். இதனை அடுத்து மாவட்டம் முழுவதிலுமுள்ள 15 வயதிற்குட்பட்ட ஆயிரம் குழந்தைகளிடம் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று பரிசோதனை நடத்தினர். இந்த சோதனையில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ வைரஸ் கிருமித்தொற்று இருப்பது தெரிய வந்தது. தற்போது 460 சோதனை முடிவுகள் வெளியாகி யுள்ளன. இதில் 200 மாதிரிகளில் போலியோ வைரஸ் கிருமித் தொற்று இருப்பதாக தெரிகிறது. இன்னும் 600-க்கும் மேற்பட்ட மாதிரிகளின் சோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது என்று தெரிகிறது.

நிலைமை இப்படி இருக்க, மத்திய சுகாதாரத்துறை வேறு மாதிரி அறிக்கை வெளியிட்டுள்ளது, அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் பரேலி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்குக் கால் வலி மற்றும் வலுவின்மை போன்ற காரணங்களால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்குப் போலியோ நோய் தாக்கி இருக்குமா என்று உறுதியாக கூறமுடியாது. இருப்பினும் சிகிச்சையை மேற்கொள்ளவும் மேலும் இதே போல் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீண்டும் பரிசோத னைக்கு ஆட்படுத்தவும் நடவடிக்கைகள் மேற் கொள் ளப்பட்டு வருகின்றன. இது யாரை ஏமாற்றும் வேலை? 2010-ஆம் ஆண்டு இதே மாவட்டத்தில் உள்ள பமூரா என்ற கிராமத்தில் இறுதியாக போலியோ நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக் கப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து 3 ஆண்டுகள் போலியோ நோய் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதனால் இந்தியாவை போலியோ நோய் இல்லாத நாடாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது. மோடி அரசு ஆட்சிக்கு வந்தில் இருந்து சுகாதாரத் துறைக்குத் தேவையான நிதியை குறைத்து விட்டது. முக்கியமாக தொற்றுநோயான எலும்புருக்கி நோய் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை நிறுத்திவைத்தது இதேபோல் போலியோ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் போலியோ தடுப்பு மருந்து குறித்த தெருமுனைப் பிரச்சாரங்களை முழுமையாக தடை செய்து விட்டது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் போலியோ நோய் தடுப்பு மருந்துகளுக்கு என்று இருந்த சிறப்பு மருத்துவப் பிரிவை ரத்து செய்து பொது மருத்துவ நோயாளி களுக்கான சிகிச்சையாக மாற்றப்பட்டது.இதனால் போலியோவிற்கென்று தனிப்பட்ட கவனம் மருத்துவர் களால் செலுத்த முடியாமல் போனதால் இந்த நிலை உருவாகியுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மற்றும் அங்கன்வாடிகளுக்கான நிதியை மாநிலங்களே திரட்டிக் கொள்ள வேண்டும் என்று கூறி நிதிநிலை அறிக்கையில் நிதியை வழங்காமல் நிறுத்தியது மோடி அரசு. ஏற்கெனவே குஜராத், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் அரியானா போன்ற மாநிலங்களில் ஊட்டச்சத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில் உபி-யில் போலியோ நோய் பரவும் செய்தி போலியோ இல்லாத நாடு இந்தியா என்ற நிலையில் மாற்றம் வர வாய்ப்புள்ளது.

தமிழ் ஓவியா said...

வ்வளவு பிரச்சினைகள் நடந்த பிறகும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நாடா, பிகார் தேர்தலில் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளார். பிரதமர் மோடியோ யோகாவில் மூழ்கியுள்ளார். மக்கள் நல் வாழ்வுத் துறைக்காக மற்ற மற்ற நாடுகள் ஒதுக்கும் தொகையோடு ஒப்பிடும் பொழுது இந்தியா பின் தங்கியே உள்ளது. சீனா 3%, ருசியா 3.8%, நேபாளம்கூட 2.2%, ஆனால் இந்தியாவிலோ வெறும் 1.3% சுகாதாரத்துக்காக ரூ.35,163 கோடியிலிருந்து ரூ.29.653 அரசு குறைத்து விட்டது.

ஒரு நாட்டின் முதுகெலும்புப் பிரச்சினையில் எவ்வளவு அலட்சியமாக பிஜேபி அரசு இருக்கிறது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாமே. உயிர் காக்கும் மருந்துகளின் விலையும் இந்த ஆட்சியில் பல மடங்கு உயர்த்தப்பட்டு விட்டது.

அதே நேரத்தில் கங்கையைச் சுத்தப்படுத்த 20 ஆயிரம் கோடி ரூபாயைக் கொட்டி அழப் போகிறார்களாம். நோய் வருவது அவாள் அவாள் தலையெழுத்து - கர்மப் பலன் என்று இந்துத்துவாவின் தத்துவார்த் தத்தை சொன்னாலும், சொல்லுவார்கள் - யார் கண்டது?

போலியோ நோய் இல்லாத நாடு என்ற தைரியத்தில் இந்திய மக்கள் நிம்மதியாக இருந்தனர். மோடி ஆட்சியில் அதற்கும் ஆபத்து வந்து விட்டது. இது ஓர் அபாயகரமான நிலையே!Read more: http://www.viduthalai.in/page1/103797.html#ixzz3e0A0CktG

தமிழ் ஓவியா said...

கவனிக்கவேண்டும்

மதத்தைக் காப்பாற்றவே கோயில்களும், சொத்துகளும் அவற்றைக் காக்க மடங்களும், மடாதிபதிகளும் ஏற்பட்டனர். இவை மக்கள் வாழ்க்கைக்கு அவசியமா? அதனால் மக்கள் கஷ்டம் நீங்குமா, நீங்காதா என்பதைத்தான் கவனிக்கவேண்டும்.
_ (விடுதலை,3.12.1962)

தமிழ் ஓவியா said...

யாகம் நடத்திய அதிகாரிக்கு மன்னிப்பாம்!


சென்னை, ஜூன் 23_ தமிழகத்தின் டெல்டா மாவட் டங்களில் பாசனத் துக்கு தேவையான தண் ணீர் இல்லை. எனவே, பயிர்கள் கருகும் நிலை உருவானது. எனவே, திருச்சி நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன், 30 உப கோட்ட அலுவலகத்துக்கு சுற்றறிக்கை அனுப்பினார்.

அதில், மழை வேண்டி ஒவ்வொரு அலுவலகம் சார்பில் அந்தெந்த பகுதிகளில் உள்ள கோயிலில் சிறப்பு யாகம் நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்படி கடந்த 3ஆம் தேதி திருச்சி மண்டலத்தில் 30 கோயில்களில் சிறப்பு யாகம் நடந்தது.  இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், பொதுப் பணித் துறை தலைமை அறிவுரை இல்லாமல் அந்த தலைமை பொறியாளர் தன்னிச் சையாக யாகம் நடத்த உத்தர விட்ட தாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அந்த அதிகாரியிடம் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டுமென்று கேட்டு பொதுப் பணித் துறை தலைமை அறிவிக்கை அனுப்பியது. இந்த நிலையில், அரசு தரப்பில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று பொதுப் பணித் துறை தலை மைக்கு உத்தரவிட்டதாக கூறப்படு கிறது. இதனை தொடர்ந்து அந்த தலைமை பொறியாளரை அழைத்து விளக்கம் கேட்டதுடன், அவரை மன்னித்து அனுப்பிவிட்டது.

இதுகுறித்து பொதுப் பணித்துறை உயர் அதி காரி ஒருவர் கூறும் போது, மழை வேண்டி யாகம் நடத்த உத்தர விட்ட பிரச்சினையில் தலைமை பொறியாளர் மீது நடவடிக்கை எடுப்ப தால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை. இதுதொடர்பாக மேலிடம் தலையிட்டு தலைமை பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று உத்தர விட்டதால் அவரிடம் விளக்கம் மட்டும் கேட்கப்பட்டது.

தொடர்ந்து பொதுப் பணித்துறை தலைமை அனுமதி இல்லாமல் இனிமேல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்ற அறிவுரையும், மன்னிப்பும் வழங்கியது பொதுப்பணித் துறை என்றார்.

தமிழ் ஓவியா said...

வடலூர் திருக்குறள் மாநாட்டில் விழி பிதுங்கிய தினமணி வைத்தியநாதய்யர்!

நமது சிறப்புச் செய்தியாளர்வடலூரில் நடைபெற்ற திருக்குறள் தேசிய நூல் மாநாட்டில் மீண்டும் மீண்டும் ஒலித்த தந்தை பெரியாரின் கருத்துகளால் கருவாட்டை பறிகொடுத்த பாப்பாத்தி போல் ஆனார் அந்த மாநாட்டின் சிறப்புப் பேச்சாளர், தினமணி ஆசிரியர் வைத்தியநாதன்! இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே போன வைத்தியநாதன், புலால் உண்பவர்களுக்கு திருக்குறள் பற்றி பேச தகுதி இருக்கிறதா? என்று பேசி மாநாட்டுப் பார்வை யாளர்களின் கடும் விமர்சனத்துக்கும் ஆளானார்.

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் மற்றும் தென்றல் சமூகநல அறக்கட்டளை இணைந்து வடலூரில் ஜூன் 21ஆம் தேதி மாலை திருக்குறள் தேசிய நூல் மாநாடு நடத்தினர். இந்த மாநாட்டு சிறப்பு அழைப்பாளராக வைத்தியநாதன் அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த மாநாட்டு மேடையில் பேசிய பேச்சாளர்களில் சிலர், திருக்குறளை பரப்பியதில் திராவிடர் இயக்கம் மற்றும் பெரியாரின் பெரும்பங்கினைப் பற்றியும் ராமாயணம் மகாபாரதம், கீதை ஆகியவற்றை படிப்பதைவிட திருக்குறளை படிப்பதே சிறந்தது எனவும் பெரியாரின் கருத்துகளை மேற்கோள்காட்டிப் பேசினர்.

பேராசிரியர் மோகனராசு

குறிப்பாக இந்த மாநாட்டுக்குத் தலைமை ஏற்றிருந்த, கு.மோகனராசு (ஆசிரியர் -வாழும் வள்ளுவம்), அவர் கள் கீதை எவ்வளவு மோச மான வர்ணாசிரமக் கருத்து களை உடையது ஆனால் திருக்குறள் அதற்கு நேரெ திராக சமத்துவத்தை பேசக் கூடியது என்று அடுக்கடுக் காக கருத்துகளை முன் வைத்தார்.

மோகனராசு பேசியதன் சுருக்கம் வருமாறு: கீதையை தேசிய நூலாக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் திருக்குறளுக்குத் தான் தேசிய நூலுக்கான முழுத்தகுதியும் உண்டு. இந்தியாவின் அரசியல் சட்டமானது மக்களுக்கான சமத்துவம், சமவாய்ப்பு பற்றி சொல்கிறது. ஆனால், மக்களை நான்கு வர்ணமாகப் பிரித்து ஜாதிக்கு ஒரு தொழிலை பிரித்துக்கொடுக்கிறது கீதை.

தமிழ் ஓவியா said...

இதில் சூத்திரன் அடிமை வேலை செய்யவேண்டும் என்றிருக்கிறது. பேதத்தை வலியுறுத்துகிற ஒரு நூல் எப்படி தேசிய நூலாக முடியும்? ஆனால், திருக்குறளோ பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிறது. பார்ப்பனர்கள் உழவுத் தொழில் செய்யக்கூடாது என்கிறது வர்ணாசிரமம். ஆனால், உழவுத் தொழிலின் முக்கியத்துவத்தையும் உழவர்களின் சிறப்பையும் பற்றி சொல்கிறது திருக்குறள்.

இவ்வாறு தொடர்ச்சியாக, பல திருக்குறள்களை மேற் கோள்காட்டி திருக்குறளின் சிறப்பையும், கீதையின் கேடு பயக்கும் கருத்துகளையும் மாற்றி மாற்றி சொல்லிக்கொண்டே போனார் மோகனராசு அவர்கள். அவரின் உரையில், அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்து கொண்டிருந்தது.

ஆனால், வைத்தியநாதனுக்கு மட்டும் நெரிக்கட்டத் தொடங்கியது. நாற்காலியில் உட்கார்ந்தபடியே நெளிந்தார். முகம் சிவந்தது. ஆனால் என்ன செய்ய முடியும்?

தினமணி வைத்தியநாதய்யர்!

அடுத்து பேச வந்தார் வைத்தியநாதன். பார்ப்பன விஷத்தை கக்கினார்.

வள்ளலாரின் வடலூரில் நின்றுகொண்டு வள்ளுவரை பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வள்ளுவரும், வள்ள லாரும் கொல்லாமையை, புலால் உண்ணாமையை வலியுறுத்தியவர்கள். எனவே, புலால் சாப்பிடுகிற வாயால் வள்ளுவரைப் பற்றி பேசுவது முறையாகுமா? புலால் உண வையும்,

கள்ளையும் யார் தவிர்க்கிறார்களோ அவர்களுக்கே திருக்குறளைப் பற்றி பேச முழுத்தகுதியும் உண்டு. புலாலையும் சாப்பிட்டுக்கொண்டு திருக்குறளையும் தேசிய நூலாக்க வேண்டும் என்று கேட்பது சரியாகுமா? புலால் உண்பவர்கள் திருக்குறளை பற்றிப் பேசும்போது குற்ற உணர்வோடுதான் பேசவேண்டும் என்று சமாளிக்க முயன்றார்.

பேராசிரியர் மோகனராசு அவர்களின் உரைக்குப் பதில் சொல்ல வக்கத்து வேறு கிளைக்குத் தாவும் பரிதாபத்தைப் பாரீர்!

எதிரிலே உட்கார்ந்திருக்கிற நூற்றுக்கணக்கான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் பலரும் புலால் உண்பவர்கள் என்று நன்றாக தெரிந்திருந்தும் அவர்களுக்கு திருக்குறள் பற்றிப் பேசும் தகுதி இல்லை என்று அங்கேயே ஜாதி உணர்வோடு பேசினார்.

அதாவது புலால் உண்ணாமையை கடைப்பிடிக்கிற பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் திருக்குறளைப் பற்றி பேசுகிற முழுத்தகுதியும் உண்டு என்று மறைமுகமாகச் சொல்கிறார்!

கூட்டத்தில் அமர்ந் திருந்தவர்களோ,  கேலி யாக சத்தம் போட்டனர். அப்படிப் பேசிக்கொண்ட வர்கள் வைத்தியநாதனை காய்ச்சி எடுத்தார்கள்.

திருவள்ளுவரும், வள் ளலாரும் கொல்லாமையை மட்டும்தான் வலியுறுத்தி னார்கள் என்பதுபோல் பேசுகிறாரே? பிறப்பொக் கும் எல்லா உயிர்க்கும் என்றார் வள்ளுவர். வைத்தியநாதன் இதை ஏற்கக்கூடியவரா? பார்ப்பனர்கள்தான் உயர்ந்தவர்கள் என்று சொல்பவராயிற்றே என்றார் ஒருவர். சாதி, மதம், சடங்குகள், ஏன் உருவ வழிபாட்டுக்கே எதிரானவர் வள்ளலார்.

கண்மூடிப்பழக்கம் எலாம் மண்மூடிப்போக என்றார் வள்ளலார். வைத்தியநாதன் இதைப் பின்பற்றுகிறாரா? என்னமோ இவருக்கு மட்டுந்தான் வள்ளுவரையும், வள்ளலாரையும் பற்றி பேசுகிற தகுதி உண்டு என்கிற ரீதியில் பேசுகிறாரே என்றார் இன்னொருவர். புலால் உண்பதாலேயே எங்களுக்கு திருக்குறள் பற்றிப் பேசத் தகுதி இல்லை என்றால் உருவவழிபாட்டையும் பேதங்களையும் மனு தர்மத்தையும்,

வர்ணாசிரமத்தையும் ஏற்றுக் கொள்கிற வைத் தியநாதனுக்கு அந்தத் தகுதி முற்றாகவே கிடையாது என்றார் ஒரு முதிய தமிழன்பர். வைத்தியநாதனுக்கு பிறகு வேறு யாரையாவது உரையாற்றவிட்டிருந்தால், இந்த பார்ப்பனக் கருத்துகளை கிழித்தெடுத்திருப்பார்கள் என்றார் மற்றொருவர்.

பெரியார் மறைந்தாலும்...

ஆக, ஒவ்வொருவரும் பெரியாரின் கருத்துகளை வெவ்வேறு குரல்களில் பேசிக்கொண்டேதான் அரங்கில் இருந்து கலைந்து சென்றனர். மறைந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும் பார்ப்பனர்களை குத்திக்குடைந்திருக்கிறார் பெரியார் என்பது இந்த விழாவே எடுத்துக்காட்டு! அதனால்தான், பார்ப்பனர்கள் பெரியார் என்ற பெயரைக் கேட்டாலே கொதிக்கிறார்கள்.

வைத்தியநாதன் அவர்களே, நீங்கள் எங்கே சென்றாலும் பெரியார் கருத்துகள் உங்களை தொடர்ந்துவரும். அதனால்தான், இதை பெரியார் மண் என்கிறோம். எச்சரிக்கையும், அசிங்கப்பட்டதற்கு வாழ்த்துகளும்!

தமிழ் ஓவியா said...

மருத்துவக் கல்லூரி விளைச்சலைப் பாரீர்!

-கவிஞர் கலி. பூங்குன்றன்திராவிடர் இயக்கம் என்ன சாதித்து விட்டது? என்று கேள்வி கேட்கும் அதி மேதாவிகள் சிலர் கிளம்பி விட்டனர். இப்படிக் கேள்வி கேட்கும் புத்தியைத் தீட்டிக் கொடுத்ததே தந்தை பெரியார் அவர்களின் தன்மான இயக்கமே!

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே! என்பதில் உள்ள சூழ்ச்சியைச் சுக்கல் நூறாக உடைத்தது திராவிடர் இயக்கமே!

சூத்திரனாக ஆக்கப்பட்டது எப்படி என்ற வினாவை எழுப்பி அந்தச் சூத்திரத்தின் சூல் பையையே அறுத்து எறிந்தது தந்தை பெரியார்தம் தன்மான திராவிடர் இயக்கமே.

ஆச்சாரியார் (ராஜாஜி) இரண்டு முறை சென்னை மாநில முதல் அமைச்சராக வந்தாரே நினைவிருக்கிறதா? அந்த இரண்டு முறையும் அவர் என்ன செய்தார் என்பதை ஒரு முறை நினைத்துப் பார்க்க வேண்டும்.

1938இல் 6000 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடினார்; முதல் தலைமுறையாகப் பள்ளிகளின் படிக்கட்டுகளை மிதிக்க வந்த பஞ்சம, சூத்திரப் பிள்ளைகளுக்கு இந்தி கட்டாயம் என்று கூறி மிரட்டினார்.

சரி.. அத்தோடுதான் தொலைந்ததா? இரண்டாவது முறை 1952இல் சென்னை மாநிலத்தின் முதல் அமைச்சரராக கொல்லைப்புறம் வழியாக வந்து புகுந்தாரே! அப்பொழுதும் என்ன செய்தார்? 8000 பள்ளிகளை இழுத்து மூடியும் மீதிப் பள்ளிகளில் அரை நேரம் படித்தால் போதும்; மீதி அரை நேரத்தில் அப்பன் தொழிலை, பிள்ளை செய்ய வேண்டும்; அவ்வாறு ஒழுங்காகச் செய்கிறார்களா என்று ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டாரா இல்லையா?

அரசாங்கம் என்றால் முதலில் மக்க ளுக்குக் கல்விக் கண்களைத் திறப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். ஆனால், அக்கிரகாரத்து முனிபுங்கவரான ஆச்சாரி யாரோ இருக்கிற பள்ளிகளையும் இழுத்து மூடினார் என்றால் இதன் பொருள் என்ன?

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே! என்கிற மனுதர்மப் புத்தியே அதற்குக் காரணம். அன்று ஆச்சாரியார் கொண்டு வந்த அந்தத் திட்டத்திற்குத் தொழில் கல்வி என்று நாம கரணம் சூட்டி மக்களை ஏய்க்கப் பார்த்தனர்.

ஈரோட்டு ஏந்திழையின் நுண்ணாடி யிலிருந்தா அந்தச் சூட்சுமம் தப்பும்? ஆச்சாரியார் கொண்டு வந்தது குலக் கல்வித் திட்டம் - வருணாசிரம அடிப் படையிலான பிறப்பின் அடிப்படை யிலேயே குலத் தொழிலைப் புனரமைக்கும்  புரட்டு என்று கூறி பூகம்பமாய் எழுந்தது ஈரோட்டு எரிமலை.

அருமை நண்பர் ஆச்சாரியாரே, உங்களின் அக்கிகாரப் புத்தி - சூழ்ச்சி என்னிடமா பலிக்கும்? மனு, மந்தாதா காலம் மலையேறி விட்டது - மீண்டும் அதற்கு மகுடம் சூட்ட நினைத்தால் மண்ணுக்குள் புதைவீர்கள் - ஜாக்கிரதை! என்று கூறி ஆயிரங்கால் சிங்கமாகப் பிடரி சிலிர்த்து எழுந்து நின்றார்.

தமிழ் ஓவியா said...

தேதி குறிப்பிட்டு விடுவேன் - எதற்குத் தெரியுமா? அக்கிரகாரத்திற்கு; அதற்குமுன் ஒருநிபந்தனை; குலக் கல்வித் திட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும்; அல்லது முதல் அமைச்சர் ஆச்சாரியார் பதவி விலக வேண்டும்; இரண்டும் நடக்காவிட்டால் கருஞ்சட்டைத் தோழர்களே!

தீப்பந்தமும், பெட்ரோலும் தயாராக இருக்கட்டும் - அக்ரகாரத்திற்கு நெருப்பு வைக்க!  என்றாரே பார்க்கலாம் - ஆச்சாரியாரின் அஸ்தியில் ஜூரம் கண்டுவிட்டது. விலகு கிறேன் பதவியை விட்டு! என்று ஓடியவர் தான். கடைசி வரை அவரால் அதற்குப்பின் தமிழ்நாட்டில் தலையெடுக்கவே முடிய வில்லை.

அன்றைக்கு அய்யாவும், அவரின் தொண்டர்களும் அரிமாக்களாய்ச் சிலிர்த்து எழவில்லை என்றால் இன்றைக்கு அய்.ஏ. எஸ்.களாகவும், அய்.ஜி.களாகவும், அய்க் கோர்ட் ஜட்ஜ்சுகளாகவும், அணைகட்டும் பொறியாளர்களாகவும், துணைவேந்தர் களாகவும் வீற்றிருக்கும் தமிழர்கள் எந்த நிலையில் இருந்திருப்பார்கள்? ஆடு, மாடு மேய்த்துத் திரிந்து கொண்டுதான் இருப் பார்கள் - இதனை நாம் சொல்லவில்லை. நன்றியுள்ள தமிழ் அதிகாரிகளே மனந் திறந்து சொல்லுவதுண்டு.அன்றைக்கு 1925இல் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் 50 சதவீதம் தான் இடஒதுக்கீடு கேட்டார் தந்தை பெரியார். அன்றைக்கு மரியாதையாக பார்ப்பனர்கள் அளித்திருந்தால் பார்ப்பனர்கள் இன்று மாநாடு கூட்டி எங்களுக்கும் இடஒதுக்கீடு தேவை என்று பிச்சைப் பாத்திரம் ஏந்தும் நிலை ஏற்பட்டு இருக்குமா? பார்ப்பனர் களுக்கு ஏது முன்புத்தி?

ஆச்சாரியாரை விரட்டி, பச்சைத் தமிழர் காமராசரை அந்த முதல் அமைச்சர் நாற்காலியில் அமர வைத்து, ஆச்சாரியார் மூடிய 8000 பள்ளிகளை மீண்டும் திறக்க வைத்து மேலும் 12 ஆயிரம் புதிய பள்ளிகளைத் திறக்கச் செய்து இலவச உணவு, இலவச உடை, இலவசப் புத்தகம், இலவசக் கல்வி என்ற கல்வி ஓடையைத் திறக்கச் செய்ததன் வெள்ளாமையை இதோ நாடு கண்டு கொள் முதல் செய் கிறதே!

தமிழ்நாட்டில் 2015-2016ஆம் ஆண்டுக் கான மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கான பட்டியல் வெளி வந் துள்ளது.

தந்தை பெரியாரும், கல்வி வள்ளல் காமராசரும் இருந்து பார்க்கவில்லையே என்ற எண்ணம் ஒரு பக்கத்தில் நம் நெஞ்சையெல்லாம் உலுக்குகிறது.

இந்த விளைச்சலை இந்தியாவின் எந்த ஒரு பாகத்திலும் பார்க்க முடியாது - பார்க்கவே முடியாது என்பது நினைவிருக் கட்டும். இதோ அந்தப் பட்டியல்:

இந்த ஆண்டு, 2015-2016ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பிற்கான தர வரிசைப் பட்டியலை "நல்ல நேரம்" பார்த்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அவர்கள் சொல்லும் நல்ல நேரம் வேறு; தமிழர்களுக்கு - ஒடுக்கப்பட்ட மக்களுக் கான நல்ல காலம் இது.

நூற்றாண்டுப் போராட்டம், கல்விக்காக, இட ஒதுக்கீட்டுக்காக நடந்ததை எத்தனை மாணவர்கள் அறிந்து கொள்வார்களோ இல்லையோ, ஆனால் சமூக உணர்வு உள்ளவர்கள் நன்றாகவே உணர்வர்.
வெள்ளுடை வேந்தர் பி. தியாகராயர், டாக்டர் சி. நடேசனார், டாக்டர் டி.எம். நாயர்,  தந்தை பெரியார், முத்தையா முதலியார், காமராஜர், அண்ணா, கலைஞர், தந்தை பெரியாரின் வழித்தோன்றல் வீரமணி போன்றோர் அயராது உழைத்த தின் பயனை இன்றய இளைய தலை முறையினர் அறுவடை செய்கின்றனர்.       புரட்சிக் கவிஞர் கருதிய "கல்வி நீரோடை " பரவலாக்கப்பட்டுள்ளது.

திராவிடர் கழகமே முன்னரிமை கொடுத்து செயல்படுவது கண் கூடு! 69 சதவீதமே அத்தாட்சி!

தமிழ் ஓவியா said...

குலக் கல்வியை ஒழித்து காமராஜரை முதல்வராக்கிய தந்தை பெரியார் கல்வி பரவ வழி வகுத்தார். காமராஜர்,  நெ,.து.சுந் தரவடிவேலு அயராது உழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.     அறிஞர் அண்ணா வின் இரு மொழித் திட்டம் மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைத்தது.      தமிழர் தலைவர் வீரமணி அய்யாவின் அடித்தளப்  பணியின்  வழியாக 69% இட ஒதுக்கீடு சட்டம் அமலாக்கப் பட்டது.

கலைஞரின் நுழைவுத் தேர்வு நீக்கம் கிராமப் புற மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் நுழையும் வாய்ப்பை பெரிதும் உருவாக் கியது.   வரிசைப் பட்டியலுக்கு வருவோம்.

முதல் இடத்தை பிடித்த மாணவர் பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவர்.

200/200 மதிப்பெண் பெற்றவர்கள் 17 பேர்.

இதில் 13 மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள்.

ஒரு மாணவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்.

ஒரு மாணவர் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்.

இரண்டு மாணவர்கள் முற்பட்ட வகுப் பினர் . இந்த இருவரில் ஒரு மாணவர் ,ஜெ,எம் .திராவிடன் , தன்னுடைய விண்ணப்பத்தில் தனக்கு மதமுமில்லை, சாதியுமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அதனால் முற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டார்.

199.75 மதிப்பெண் பெற்றவர்கள் 37 பேர்.
இதில் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள்-25
மிகவும் பிற்படுத்தப்பட்டோர்.  7
பிற்பட்ட இஸ்லாமியர்  1
தாழ்த்தப் பட்டோர் -3
முற்பட்டோர் -1

199.50 மதிப்பெண் பெற்ற மாணவர்கள்  எண்ணிக்கை   57
இதில் பிற்படுத்தப் பட்டோர்--43
மிகவும் பிற்படுத்தப் பட்டோர்.-5
பிற்பட்ட இஸ்லாமியர் -2
முன்னேறிய வகுப்பினர் -6
தாழ்த்தப் பட்டோர் -1

அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதே பெரும்பாலான மாணவர்கள் விரும்புவர். காரணம் எல் கே ஜி படிப்பை விட கல்விக் கட்டணம் குறைவு என்பதால். ஒரு முழு ஆண்டின் படிப்புக் கட்டணம் வெறும் ரூ.4000/- மட்டுமே. இதர செலவினங்களையும்   சேர்த்தால் ஒரு ஆண்டுக்கான கல்விக் கட்டணம் ரூ.13,600/- மட்டுமே.

இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டு வீரர்கள், முன்னாள் இராணுவத்தினரின் குழந் தைகள், மாற்றுத் திறனாளிகள் போன் றோருக்கு ஒதுக்கிய இடங்கள் போக  மற்று விண்ணப்பதாரர்களுக்கு கிடைக்கும் இடங்கள் ஏறக்குறைய 2100.

இதில் 31% ( 651) பொதுப் போட்டி 30%(630) பிற்படுத்தப் பட்டோர்களுக்கான இடங்கள்.
20%(420) மிகவும் பிற்படுத்தப்பட்டோ ருக்கான இடங்கள்.

18%(378) தாழ்த்தப் பட்டோர்களுக்கு 1%(21) தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் பொதுப் போட்டி இடங்கள் -651 இவற்றில் பிற்படுத்தப் பட்டோர் -471
மிகவும் பிற்படுத்தப் பட்டோர் -87
பிற்பட்ட இஸ்லாமியர் -22
தாழ்த்தப்பட்டோர்-18
முற்பட்டோர் -53 இந்த பட்டியல் வழியாக நாம் அறிவது -பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட தாழ்த்தப் பட்ட மாணவர்களில் மேலும் 598 மாணவர் களுக்கு இட ஒதுக்கீடு வழியாக அனுமதி கிடைக்க வழி வகுக்கின்றது.

இந்த 651 மாணவர்களில் முற்பட்ட வகுப்பினர் 53 பேர் மட்டுமே.
இது 8.14 விழுக்காடு மட்டுமே.
கல்வி பரவலாக்கப் பட்டதினால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தங்கள் கல்வித் திறனை மிகச் சிறப்பாக வெளிக்கொணர்ந்துள்ளனர்.

கல்வி மற்றும் அறிவு, யாருடைய  தனிச் சொத்தல்ல. கல்வி ஒன்றே சமூகத்தை சமன் செய்யும் கருவி.
இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப் பட்ட, ஒடுங்கிக் கிடந்த சமூகம் இப் பொழுது சிறிது விழித்துக் கொண்டுள்ளது. ஆனால் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகமாக உள்ளது.

கூடுதல் தகவல்(Tail Piece)

1925ஆம் ஆண்டு வரை மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது - எத்தனைப் பேருக்குத் தெரியும்? இப் பொழுது இருக்கும் டாக்டர்களுக்காவது தெரியுமா? இது எப்படி ஒழிந்தது? தந்தை பெரியார் குரல் கொடுத்தார். நீதிக் கட்சியைச் சேர்ந்த அன்றைய பிரதமர் பனகல் அரசர் ஒழித்தார். அந்த விளை வின் விளைச்சலே இது என்பதை நன்றி உணர்வோடு நினைவு கூர்வோம்!

தகுதி திறமை எங்களுக்குத்தான் உண்டு. இடஒதுக்கீட்டால் தகுதி தரை மட்டமாகும். திறமை தீர்ந்து போய்விடும்; அதிக மார்க்கு வாங்கியவர்களுக்கு இடம் கொடுக்காமல் ஜாதி பார்த்து குறைந்த மார்க்கு வாங்கியவர்களுக்கு இடம் கொடுப்பதா என்று தாண்டிக் குதித்தவர்கள் எல்லாம் இப்பொழுது எங்கே போனார்கள்?

ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு பெற்றவர்களில் அடுத்த தலைமுறை அந்த மார்க்கு உயர  தாண்டுதலில் முதலிடத் தைப் பெற்று விட்டார்களே - இப்பொழுது முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்களாம்? உப்புக் கண்டத்தைப் பறி கொடுத்த பார்ப்பனத்தி என்ற பழமொழி உண்டு. பார்ப்பனர்களைப் பொறுத்தவரை இப் பொழுது அந்த நிலைதான்;

மருத்துவக் கல்லூரியில் நுழையும் பார்ப்பனர் அல்லாத இருபால் மாணவர்களே! அந்தக் கல்லூரிப் படிக்கட்டை மிதிக்கும் நேரத்தில் அதற்குக் காரணமான நமது தலைவர் களை ஒரு நொடியாவது நினையுங்கள்! உங்களை அறியாமலே கண்களில் நீர்ப் பனிக்கும்.
வாழ்க பெரியார்! வெல்க சமூக நீதி!!

தமிழ் ஓவியா said...

பாதி பொய்த்துப் போச்சே பாரதியார் வாக்கு

-மு.வி.சோமசுந்தரம்பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே வெள்ளைப் பரங் கியை துரை என்ற காலமும் போச்சே

_- பாரதியார்

இந்த இரண்டு வரிகளில் இரண் டாவது வரியில் கூறப்பட்ட கருத்து உண்மைக் கூற்றாக தற்போது ஏற்றுக் கொள்ளலாம். ஆங்கிலேயர்கள் மட்டுமின்றி ஏனைய மேலை நாட்டவர்களும் பரங்கியர் என்று அழைக்கப்பட்டனர் நம் நாட்டில்.

பரங்கியர் -  துரை

ஜானத்தன் கில் ஹேரிஸ் என்பவர் பரங்கியர் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். பரங்கியராகத் தன்னைக் கூறிக் கொள்வதோடு பரங்கியர் இந்தியன் என்றும் கூறு கிறார். நாம் அவர்களை ஆங்கிலோ -_ இந்தியர் என்று குறிப்பிட்டு வந்தோம். இன்றும் அந்த வகை இனத்தவரை இந்திய மக்களின் ஓர் அங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளோம்.

இந்தியா,  ஆங்கிலேயர் ஆட்சியில் அடிமை நாடாக இருந்த காலத்தில் அவர்களை நம் எஜமானர்களாகக் கருதி ஆங்கிலேயர்களை மரியாதை யுடன் குறிப்பிட துரை என்று அழைக் கப்பட்டனர். ராபர்ட் துரை, வில்லியம் துரை என்று அழைக்கப்பட்டனர். மகளிரை துரைசானி அம்மா என்று அழைக்கப்பட்டனர். வெள்ளைத் தோல் அடையாளத்தின் தன்மையில் பெரும் பாலும் துரை என்ற மரியாதை சொல் லுக்கு தகுதித் தன்மையைப் பெற்றனர்.

ஏன் வந்தார்கள்?

இத்தகைய பரங்கியர் 16 ஆம் நூற்றாண்டில் பலவித காரணங்களுக் காக புலம் பெயர்ந்த மக்களாக இந்தி யாவில் குடியேறினர். பெரும்பாலும் வறுமை, மதக் கொடுமைகளிலிருந்து தப்பிக்கவே வந்தனர். மேலும் பலர் அடிமைகளாக பணியாட்களாக, வீரச் செயல் புரிபவர்களாக, சட்டப் பிடியி லிருந்து தப்பிக்க ஓடி வந்தவர்களாக இருந்தனர்.

தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்பும் எண்ணம் இல்லாதவர்கள். குடிபுகுந்த நாட்டின் நிலைமைக்கு ஏற்பத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டனர். வெப்பத் தட்ப நிலை, அதனால் ஏற்படும் உடல் நல பாதிப்பு, உணவு, உடை மாற்றம், மொழி, தொழில் ஆகிய அனைத்துக்கும் தங்களை உட்படுத்திக் கொண்டனர்.

வெள்ளையர் வருவதற்கு முன்னதாக இங்கிருந்த முஸ்லீம் மக்களிடனும் தொடர்பு கலப்பு ஏற்பட்டு வெள்ளை முகலாயர் (White Mughals) என்ற அதி காரம் படைத்த பிரிவும் உருவாகியது.

கிச்சடி கூட்டம்

இங்கு குறிப்பிட்ட புத்தகத்தின் ஆசிரியர் நியூசிலாந்தில் வளர்ந்து, ஆங்கிலக் கல்வி பெற்று பல ஆண் டுகள் அமெரிக்காவில் ஆசிரியப்பணி ஆற்றி, வந்து சேர்ந்தவர். அவருடைய முன்வாழ்க்கை முறை, எண்ணங்கள், நடைமுறை வேறாக இருந்தாலும், உணர்ந்தும், உணராமலும், புதிய சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்க்கையை சமன்படுத்திக் கொண்டார். இந்தியாவில் குடிபுகுந்தவர் என்றாலும் இந்தியராக வாழ்ந்தாலும் அயல் நாட்டவர் பரங்கி என்ற முத்திரை பதிக்கப்பட்டவர்.

கில்ஹேரிஸ் பரங்கியர் முத்திரை தாங்கியவர்கள், அய்ரோப்பிய கிறித்தவர்கள் மட்டுமின்றி, சீனர்கள், ஆப் பிரிக்கா, பாரசீக நாட்டு யூதர் போன்றோரும் பட்டடியலில் வந்து விடுகின்றனர் என்கிறார். இதை ஒரு கிச்சடி என்று கூறலாம் என்கிறார் பரங்கியர் கிச்சடியில் ஒரு சிலரது வாழ்க்கையையும், இந்நாட்டில் அவர் களது பங்களிப்பையும் விவரிக்கிறார்.

தமிழ் ஓவியா said...

கார்சியா டே ஒர்டா

இவர் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த யூதர். கத்தோலிக்க மத சட்ட தண்டனையிலிருந்து தப்பித்து ஓடி வந்தவர். அவருடைய சகோதரி பொது இடத்தில் எரிக்கப்பட்டார். அவர், தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அகமதா பாத்தில் கழித்தார். அந்தப் பகுதி வாழ் மக்களுடன் பழகி உரையாடி வெப்ப நாட்டு வியாதிகளுக்கான புகழ்மிக்க மருத்துவ புத்தகத்தைத் தயாரித்தார்.

அவரின் பணியைப் பாராட்டி 20ஆம் நூற்றாண்டில் அவரின் நினைவாக போர்ச்சுகல் நாடு நாணயம் ஒன்றை வெளியிட்டது. ஒர்டா அகமதாபாத்தில் இருந்தபோது சுல்தானின் தனி மருத்துவராகவும் இருந்தார்.

தாமஸ் ஸ்டீபன்ஸ்

இவர் மதக் கடுமை சட்டத்திற்குப் பயந்து ஓடி வந்தவர். வின்செஸ்டர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகங்களில் படித்தவர். பரங்கியராக இந்தியாவில் இருந்தபோது, பத்ரிகுரு என்ற பெயரில் மராத்திய கவிஞராக விளங்கினார். கொங்கனி மொழியில் கிருஷ்டபுராணம் என்ற காப்பியத்தைப் படைத்தார். ஒரு இலக்கிய படைப்பாக கருதப்படுகிறது.

நிக்கோல மனூசி

வெனிஸ் நகரத்தை சேர்ந்த 13 வயதான சிறுவன், வீட்டில் நிலவிய வறுமையின் காரணமாக திருட்டுத் தனமாகக் கப்பலில் மறைந்து வந்து இந்தியா  வந்தவர். சென்னையில் புனித தாமஸ் மலைப் பகுதியில் பிரபல சித்த மருத்துவராக விளங்கினார். 50 ஆண்டுகள் நாட்டின் பலப் பகுதிகளில் கண்டு கேட்டு, ஆய்ந்து பெற்ற அறிவி னால் சிறந்த சித்த மருத்துவராகத் தொண்டு செய்தார்.

சின்னாலி

சீன நாட்டைச் சேர்ந்தவர். இனத் தைப்பற்றி அறிய முடியவில்லை. ஒரு மாலுமியாக இந்தியா வந்தார். மலபார் கடற்கரைப் பகுதியில் வல்லமையுடன் விளங்கிய போர் வீரனாக, போர்த்து கீசியர் தொல்லையையும், இடம் பிடிக் கும் நோக்கத்தையும் எதிர்த்து வந்த குன்ஹலி மரைக்காயரின் நம்பிக் கைக்குரிய தளபதியாக இருந்தார்.

தாவலாய்

டச்சு நாட்டு கப்பற் படை தளபதி திருவாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவால் கைது செய்யப்பட்டவர். நாளடைவில் மன்னரின் நன்மதிப்பைப் பெற்று, படைத் தளபதியாகி, திருவாங் கூர் கோட்டையை வலுப்படுத்தவும், இராணுவத்தில் சீர் திருத்தங்களைச் செய்து, ஆட்சிக்கு நீடித்த பெருமையை சேர்ந்தவர். ஊர் மக்களால் அன்புடன் திவ்வ நாய் என்று அழைக்கப்பட்டார்.

மாலிக்அயான்

கைது செய்யப்பட்ட ஒரு பரங்கி. குஜராத் கப்பற்படையின் தலைமைத் தளபதியாகவும் டய்யூவின் ஆளுநராக வும் இருந்து அதை செழிப்பான துறைமுகமாக்கினார்.

மாலிக் அன்வர்

எத்தியோப்பிய அடிமை மராத்தியப் பகுதியில் புதிய கொரில்லாப் போர் முறையை அறிமுகப்படுத்தி அதன் மூலம் தக்காணத்தை, முகாலயர்கள் கைப்பற்றுவதைத் தடுத்து நிறுத்த உதவினார்.

சுபி கவிஞர் சர்மட்

சீனாவிலிருந்து இந்தியா வந்த அர்மீனிய யூதர். ஒரு சிறுவனின் மேல் ஏற்பட்ட பாசத்தால் தன் உடையை களைந்து பிச்சை எடுக்கும் துறவியாக மாறியவர் சூபி கவிஞர் சர்மட்.

பார்ப்பனப் பாங்கு

பாரதியார் பாடலில் குறிப்பிடும் பரங்கியரைப் பற்றிய செய்திகளை The First Firangis என்ற நூலின் வாயிலாக ஒரளவு அறிய முடிகிறது. ஆனால், அதே பாடலில் பாரதியார் குறிப்பிடும் பார்ப்பனரைப் பற்றி அறிஞர் அண்ணா வின் ஆரிய மாயை நூல் ஒன்றே படம் பிடித்து காட்டும். பரங்கியர்கள் ஒரு சிலரின் குறிப்புகளோடு, பார்ப்பனர் களின் ஆதிக்க சுரண்டி வாழும் தன்மையை ஒப்பிடின் வேற்றுமை தெரியும், வேதனை மிகும்.

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று - (குறள் 259)

பிறர் பொருளில், உழைப்பில் வாழ்பவர் பார்ப்பனர் சூதுக்கும், சுய நலத்துக்கும், சொந்தக்காரர்கள் பார்ப் பனர்கள் என்பதை சுட்டிக்காட்டும் ஒரு செய்தி.

வேத மந்திரங்களின் வல்லுநராகிய மகோ மகோபாத்யாயா அரபிரசாத் சாஸ்திரியார் தெரிவிப்பது.

பேராசை பிடித்த பார்ப்பனர்கள் தங்கள் மனச்சான்றை மறைத்துக் கொண்டு சிவாஜியின் முடிசூட்டு விழா வில் ஓதிய மந்திரங்கள் அவன் செவி களில் ஒரு சொல்கூட விழாதவாறு வெறும் வாயை அசைத்து முணு முணுத்துக் கொண்டிருந்தார்கள்.

பார்ப்பனர்கள் சூத்திரர்களை, அடிமைகளை நடத்திய விதம் இது.

என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் என்று பாரதி கூறுவதையும்

பெருந்தமிழர் ஆழ்ந்த நெடுந் தூக்கத்தின் பயன் இதுவன்றோ? என்று புரட்சிக் கவிஞர் கூறியதையும் கருத்தில் கொண்டு பார்க்கின் பார்ப்பனரை அய்யர் (தலைவர், உயர்ந்தவர்) என்று அழைப்பது அடுக்குமோ? வாஞ்சிநாத அய்யர், எஸ்.வீ. அய்யர், சோ. அய்யர் என்று அறியப்படுகின்றதே.

பரங்கியை துரை என்று அழைக்கும் நிலை இல்லை. ஆனால், பார்ப்பானை அய்யர் என்ற காலம் போச்சே என்று கூறுவது பொய்ப் பேச்சாகத்தானே உள்ளது.

தமிழ் ஓவியா said...

இந்துவாகி இழிந்தது போதாதா?

-மா. பால்ராசேந்திரம்

அரிதான அறன்எய்தி அருளியோர்க்கு அளித்தலும்
பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும்

தமிழர் தமிழராய் இருந்த காலை தமக்குக் கருணையோடு நற்பயன் ஈந் தோர்க்குச் செய்தற்கரிய நற்செயல் களைச் செய்து உயர் பண்பாளர்களாய் வாழ்ந்தவர்களாவர். தம்மிடம் நட் பின்றிப் பகையெண்ணிப் பகைப் போரைப் பகைத்து அழித்திடும் செயலையும் அஞ்சாது செய்து, சிறந்த வீரத்திற்குரியோராய் வாழ்ந்தோரே தமிழரென்பார் கலித்தொகையில் பாலை பாடிய பெருங்கடுங்கோ.

அந்நற்றமிழர், இந்துவாகத் தம்மை மாற்றிக் கொண்டதால் அடைந்த அவமானங்களை எடுத்துரைக்கின் விரியுமே அன்றி சுருங்கி நிற்காது. இனமானம் காத்திடப் புறப்பட்ட, அறிவாசான் தந்தை பெரியாரால்தான் இன்று சுயமரியாதையுள்ள தமிழராய் வாழ்ந்து வருகிறோம்.

இல்லையாயின் அத்தனைத் தமிழனும் பார்ப்பனரின் காலைக் கழுவிக் குடித்துக் கொண்டே தான் இருந்திருப்பான். இன்றோ எல்லோரும் மீண்டும் இந்துவாக வாழ்வோம்; தன்மானத்தைத் தானம் செய்வோம் வாரீர்! என்னும் ஓநாய் களின் ஓலமிகு அழைப்பு ஆடுகளுக்கு விடுக்கப்படுகிறது. ஆடுகள் எச்சரிக் கையாய் இருக்க வேண்டிய வேளை இது.

இந்துவாய் இருந்து சூத்திரன், பஞ்சமன் எனும் இழிநிலையைச் சுமந்து இழந்தது போதும். மக்களாய் இல்லாமல் மாக்களாய் வதிந்து வாழ்ந்த நிலைக்கு முடிவு கட்ட இளந்தலைமுறையினர் தயாராக வேண்டும்.

ஜெப ஸ்தப தீர்த்தயாத்திர பிரவர்ஜ்ஜய
மந்தர சாதனம், தேவதாராதனம்
சசய்வஸ்திரீ சூத்திர பததானிஷன்

இந்துவாக இருந்தாலும் ஜபம், தபசு, தீர்த்த யாத்திரை, சந்நியாசம், கடவுள் தோத்திரம், ஆராதனை இந்துப் பெண் களுக்கும், இந்து சூத்திரர்க்கும் கிடை யாது என்கிறது ரிக்வேதம், சூத்திரர் என்றால் யார்? பார்ப்பனரல்லாத உழைக்கும் இந்து மக்கள் தாம். அவர்கள் வேசி புத்திரர்களாம் இந்து சாஸ்திரங்கள் சொல்கின்றன. இந்த இந்துமதம் தேவையா?

சூத்திரர் பற்றி வைகானச ஆகமம், சூத்திரர், சாமி விக்ரகத்தைத் தொட் டால் தீட்டாகி விடும். அதற்கு 108 கலசங்கள் வைத்துப் பிம்பங்களுக்குச் சம்ப்ரோட்சணம் செய்ய வேண்டும். தொடர்ந்து மகாசாந்தி ஹோமமும், பிராமண போஜனமும் செய்ய வேண்டும் என்கிறது. தீட்டுத் தண்டம் என்பதிலுங்கூட ஏழைகளுக்கு அன்னதானம் செய் என்றில்லாமல் பிராமணர்க்குப் போஜனம் செய் என்பதிலிருந்தே இந்துமதம் யாருடைய நலனுக்காக ஏற்படுத்தப்பட்டது என்பது நம் மக்களுக்குப் புரிய வேண்டாமா?

இந்து ஆசிரமக் கொள்கைப்படி பிரம்மச்சரியம், கிரகஸ்தன், வானப் பிரஸ்தன், சந்நியாசி என்ற நான்கு கட்டங்களில் சூத்திரர்க்குப் பின்னிரு நிலைகள் கிடையாது. ஏன்? வனாந்திரம் சுற்றும் நிலை ஏற்படுமாயின் ஊரில், நாட்டில் அடிமைத்தொழில் செய்திட, விளை பொருள் விளைவித்திட ஆளில் லாச் சூழல் உருவாகி உடலுழைப் பிலாத செல்வர் உலகை ஆண்டுலாவ லும் கடவுளாணை என்று ஏமாற்றும் பார்ப்பனர்த் தொப்பை வற்றிச் சுடுகாடு நிரம்பிடுவாரே பிணங்களாக அதனால் தான்.

இது மட்டுமன்று, இந்துத்துவா முழுமையையும் கைக்கொள்ள எல்லா ஜாதி இந்துக்களுக்கும் உரிமை கிடை யாது. ரிஷிகளின் வேதங்கள், சுருதிகள், ஸ்மிருதிகள், 16 வகைச் சடங்குகள், சாஸ்திரங்கள், புராணங்கள், ஆகமங்கள் இவற்றை நம்பி, ஏற்றுக் கொள்பவரே இந்து ஆவார். ஆராய்ந்தறிய முற்படு பவன் நாத்திகன் எனப் புறந்தள்ளப் படுவான். நம்புகிறவனிலுங்கூட அனைத்து இந்து ஜாதியினரும் எல்லாச் சடங்குகளையும் செய்திட உரிமை கிடையாது. ஏனிந்தப் பாகுபாடு என்று எவராவது சிந்திப்பது உண்டா?

வைதிக மதத்தின் அடிப்படையில் சனாதான தர்மத்தின் வழியில் கபிலர் கூறியது போல, நால்வகைச் சாதியை இந்நாட்டினில் நாட்டியோர் பார்ப் பனரே அதிலுங்கூடப் பார்ப்பனர் தவிர்த்தோரின் பிறப்பையும் கேவல மாகச் சித்தரித்துள்ளனர். ஜமதக் கினிக்கும், சத்யவதிக்கும் பிறந்த பரசுராமன், அர்ச்சுனனை வெட்டி அழித்தான்.

தொடர் பகையால் சத்திரியகுல ஆண் இனமே அழிந்தது. விதவைகளான சத்திரிய குலப் பெண் களுடன் பார்ப்பனர் கூடிப் பிறந்த இனமே சத்திரிய குலமாம். பார்ப்பனப் பெண்ணுக்கும் சூத்திரனுக்கும் பிறந் தோரே சண்டாளராம். இந்த இழிக் கருத்தையும் ஏற்று வாழ்வோரே இந்துவாம்.

தமிழ் ஓவியா said...

இந்து என்போர் தம்  ஜாதிக்குள் தனித்தே வாழ்கின்றனர். இன்ப துன்பங்கள் இந்துக்களுக்குள் அல்ல; அந்தந்த ஜாதிகளுக்குள் தாம். இறப்பிலும் இந்து இடுகாடு, இந்து சுடுகாடு கிடையாது. எல்லாமே ஜாதி வாரிதான். இதுவே, இசுலாமியர், கிறித்தவர் என்றால் ஒரே அமைவிடம் தான். பிறகெப்படி இந்து ஒன்றாக முடியுமென நினைக்கின்றனர்? இந்து ஒற்றுமைக்கு இந்துதானே எதிரியாக உள்ளார். பிற மதத்தவர் இல்லையே! இதனை ஏன் உணர மறுக்கின்றார்கள்?

இந்து என்போரின் தொழிலும், அவனவன் பிறப்பதற்கு முன்பே நிர்ணயிக்கப்படுகிறது. தொழிலுக்கும் அவனது திறமை, உளப்பாங்கிற்கும் எந்த உறவும் கிடையாது. மற்றைய ஜாதியாரின் விருப்பத்தை நிறைவேற் றிடக் கட்டாயப்படுத்தப்படுகிறான். உயர் ஜாதி இந்துக்களுக்கு ஊழியஞ் செய்யவே இந்து சூத்திரன் என்ற நிலை உறுதியாகி விட்டது. அவரின் இலட்சிய மும் அதுவே என்றாக்கி விட்டனர்.

கீழ் ஜாதித்தன்மை ஒழிய வேண்டு மாயின் அந்நியருக்காக நாம் உழைக்கப் பிறந்தோம் என்கின்ற எண்ணத்தைக் கைவிட்டு, நம் உழைப்பின் பயனைச் சோம்பேறிகள், பாடுபடாத மக்கள் அனுபவிக்கக் கூடா தென்ற உறுதி கொள்ள வேண்டும் என்பார் தந்தை பெரியார் அவர்கள். ஜாதியைப் போக்கிட முயலாமல் இந்துவாக வீரியத்துடன் ஆரியத்தை அணைத் திடுவது கொள்ளிக்கட்டை யால், தன் தலையைதானே சொரிந்து கொள்வதற்கு ஒப்பாகுந்தானே!

இந்துவாய் இதுவரைக் கண்ட பலன் யாது? சித்தம் துடிக்கின்ற சேயின் நிலைமைக்கு ரத்தவெறி கொண்டலை யும் நால்வருணம் ஏனிரங்கும்?

இரங்காதென்பார் புரட்சிக் கவிஞர் இன்றும், நிகழ்கிறதே! 2001இல் உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர்பூர் மாவட்டம், அலிப்பூரைச் சேர்ந்த விஷால் என்ற 20 வயதுப் பார்ப்பனப் பையன், சோனு எனும் 18 வயது ஜாட் இனப்பெண். இருவருமே ஒருவரையொ ருவர் விரும்பினர்.

தமிழ் ஓவியா said...

ஊரார்க்குத் தெரிய வர இருவரையும் பிடித்துத் தூக்கி லிட்டுக் கொன்றனர் இந்துப் பெரிய வர்கள். இந்துக்கள் ஒன்றுபடுவோம் என்பதைத் தலையில் பிறந்த பார்ப்பனர்கள், முன்னிறுத்திக் காட்ட வில்லையே? இந்துத்துவா இந்துவையே சமத்துவ மனிதராக ஏற்றுக் கொள்ளாது என்பதுதானே உண்மை. ஜாதியால் தானே மனிதனின் மதிப்பும், இழிவும் காட்டப்படுகின்றது. ஜாதி நீங்கிய இந்து நிலைநிற்காதுதானே!

1927இல் பாலக்கோட்டில், காம கோடி பீடாதிபதி ஜகத்குரு சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், காந்தியாரிடம், இந்து அரிஜன ஆலயப் பிரவேசத்தில் சாஸ்திரங்களையும், பழைய வழக்கங்களையும் நம்பி,  நாட்டில் பெரும்பாலோர் இருக்கின் றனர். அவர்கள் மனம் நோகும்படிச் செய்யும் எந்த ஒரு மாறுதலும் இம்சைக்கு ஒப்பானதாகுமென, தாம் முடிவுக்கு வர வேண்டியதுள்ளது என்றாரே! பழைய வழக்கம், சாஸ்திர மென்றால் என்ன?

மாதரமுபைத்ய கஸாரமுபைதி புத்ரார்தீத
சகாமார்த்தி நாபத்ரலோகா நாஸ்தீத
ஸ்வரம்பரவோ விந்துஹஃ தஸ்மாத் புத்ரார்த்தம்
மாதரம், ஸுரஞ்சதி, ரோஹதி

புத்திரர் நிமித்தம் தாய், தமக்கை, தங்கை, மகள் யாரோடாயினும் புணரலாம். இந்த இழிந்த சாக்கடைச் சாஸ்திரங்களை நம்புகிறவர் மனம்தாம் நோகுமாம். இந்த இம்சைக்கு எதிராக அரியின் குழந்தைகளாம் அரிஜனங் களைக் கோயிலுக்குள் விட மறுத்தார் லோககுரு.

இன்று நுழைகின்றனரே யாரால்? தந்தை பெரியாரின் வைக்கம் போராட் டமே தெருவையும், கோயிலையும் விரியத் திறந்தது. கோவா அகதிகளாம் சரஸ்வதிப் பார்ப்பனருங்கூடக் கேரளக் கோவிலுக்குள் நுழைந்தது. பெரியா ராலே என்று வாய்விட்டுக் கூறி மகிழ்ந்தாரே.

மனிதநேயத்தை மறுப்பது இந்துத்துவா மனிதநேயம் காப்பது சுயமரியாதை இயக்கமே! இந்து எனும் கட்டு ஜாதிபேதம் கற்பித்து, உட்பகையாய்த் தலைவிரித்தாடி அரத்தால் தேய்த்திடும் இரும்பு, வலிமை குன்றுவதுபோல தமிழர் சமுதாயத்தை என்றுமே உயர விடாது தடுத்திடும்.

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி என்பது குறள் கூறும் நெறி.

இந்துவில் வீழோம்; சுயமரியாதைத் தமிழராய் வாழ்வோம் என்று உறுதி யேற்போம்.

தமிழ் ஓவியா said...

ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டுநம் நாடு மதச்சார்பற்ற ஜனநாயக நாடு என்று பெரும்பான்மையோரால் பேசப்படுகிறது.

அரசமைப்புச் சட்டத்தின் அடிப் படை உரிமைகளான கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை என பல உரிமைகள் இருந்தாலும் கூட அவை ஆளும் மத்திய பாஜக மோடி அரசால் கடைப்பிடிக்கப்படுகிறதா என்றால் கண்டிப்பாக உறுதியாக இல்லை என்றே சொல்லலாம்.

கடந்த காலங்களில் தமிழகத்தில் கருத்து சுதந்திரத்திற்கும், எழுத்து சுதந்திரத்திற்கும் எதிராக, கருத்துரி மைக்கு சுருக்குக் கயிறு போட்டது அரசுகள் என்பதை நாம் பார்த்தோம் (எ.கா) பெருமாள் முருகன், புலியூர் முருகேசன் நிகழ்வுகள்.

அடுத்த செய்தி புதிய தலைமுறை என்கிற தனியார் தொலை காட்சியில் தாலியைப் பற்றி நடந்த ஒரு விவாதம் நடத்திய நிகழ்ச்சியில் பொறுத்துக் கொள்ளாத, அவற்றைத் தாங்கிக் கொள்ளாத அல்லது அதற்கான சரியான பதிலை சொல்ல முடியாத மதவாதிகள் காவிக்கூட்டத்தினர், மிரட்டி ஊடக நிழற் படக்கலைஞர் களை தாக்கி, ஒளிப்பதிவு கேமராக்களை உடைத்து காலிகள் காட்டுதர்பார் நடத்தியதுடன் அந்த தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது வெடிகுண்டுகளையும் வீசியது.

அதைத் தொடர்ந்து தாலி பெண்ணடிமைச்சின்னம், ஆணாதிக்க வர்க்கத்தால் மாட்டப்படும் பெண் களுக்கான சுருக்குக் கயிறு என்பதாலும், தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டும் அல்லாமல் பிற சமூக பெரும்பான்மை மக்களால் உண்ணப்படும் (மராட்டியம் மற்றும் உத்தரபிரதேசத்தில்) மாட்டுக் கறியை தடை செய்ததை தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் அய்யா வீரமணி அவர்கள் தாலி அகற்றும் நிகழ்ச்சியும்,

மாட்டுக்கறி விருந்தும் ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளில் நடைபெறும் என்று அறிவித் ததை தொடர்ந்து மனுவாதிகளின் கூட்டம் கீழுக்கும் மேலுக்குமாக மந்திகள் போல் குதித்து ஆட்டம் போட்டது.

ஏப்ரல் 14ஆம் தேதி பெரியார் திடலில் தலைவர் அறிவிப்பின்படி சிறிதும் ஆர்ப்பாட்டமில்லாமல் அடக்கமாக அவர்களாகவே முன்வந்து ஜாதி, மதம், மொழி கடந்து, தன் அடிமைச் சின்னமான தாலியை அகற்றிக் கொண்டார்கள்.

அவ்வளவுதான், கருஞ்சட்டைத் தோழர்கள் கலைந்து சென்று விட்ட நிலையில் காவிக்கூட்டத்தினர் எல்லை மீறி பெரியார் திடலில் நுழைந்து கூச்சலிட்டு வன்முறையில் ஈடுபட்டனர்.

கருத்துரிமைக்கு எதிராக காவிக் கூட்டம் வன்முறையை, கட்டவிழ்த்து விட்டதை நாடே அறியும்.

தற்போது, சென்னை அய்.அய்.டி. (அய்யர், அய்யங்கார் டெக்னாலஜி) என்னும் கல்வி நிறுவனத்தில் உள்ள அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் என்ற மாணவர்கள் அமைப்பை குறித்து அடையாளம் தெரியாத ஒரு நபர் அனுப்பிய முகவரி இல்லாத மொட்டை கடிதத்திற்கு மதிப்பளித்து தொடர்புடைய வாசகர் வட்டத் தினரிடம் எவ்வித விளக்கமும் கேட் காமல் கருத்துரிமையை நசுக்கும் வகையில் அந்த அமைப்புக்கு தடை விதித்துள்ளது.

பொதுவாகவே அய்.அய்.டி. நிறு வனம் என்றாலே அது பார்ப்பனர் களின் கூடாரம் என்பதை நாடே அறியும். ஏதோ சென்னை அய்.அய். டி.யில் விதிமுறைகள் வகுக்கப்பட்டு அந்த விதிமுறைகளை அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தினர் மீறி விட்டதாகக் கூறி அவற்றை தடை செய்தது என்பதை எண்ணி வாயால் சிரிக்கமுடியாது.

சென்னை அய்.அய்.டி. நிறுவனம், என்று துவங்கியதோ அன்றிலிருந்து இன்றுவரை இந்துத்துவாவைப் பற்றியும் ஆர்.எஸ்.எஸ். பற்றியும் பிரச்சாரம் செய்யும் இடமாகவே களம் அமைத்திருந்தனர். இந்துத்துவ ஆதிக்க ஜாதியினர்.

அங்கே பக்தி பஜனை என்று கூத்தடித்ததும் இல்லாமல் சுப்பிர மணியசாமி குருமூர்த்தி போன்றவர் களை அழைத்து வந்து பேச வைத்தது. இராமாயனம், மகாபாரதம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தியது என அனைத்து விதிமுறைகளையும் மீறி செய்ததுடன் கல்வி நிறுவனத்தில் நேரடியாக இந்துசார்பு கொள்கைகளை யும், இந்தி மொழி திணிப்பு, சமஸ்கிருத வாரம், மாட்டுக் கறிக்குத் தடை போன்ற விவாதங்கள் அங்கே அரங்கேற்றி நடத்தப்பட்டு வந்தன.

இவற்றை எல்லாம் இந்நாள் வரை மத்திய அரசும், மனிதவள மேம் பாட்டுத்துறையும், இந்துத்துவா வாதிகளும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்தனர்.

ஆனால் உயர்கல்வி பயிலும் மாணவர்களிடையே முற் போக்கு கருத்துக்கள் விவாதிக்கப்படுவ தற்கான சூழலை அங்கு படிக்கும் ஒடுக் கப்பட்ட நசுக்கப்பட்ட அடக்கப்பட்ட சமூக இளைஞர்கள் 2014இல் அம்பேத்கர் பிறந்த நாளில் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் என்னும் அமைப்பை தொடங்கி மாணவர்களி டையே மண்டிக்கிடக்கும் மூடப்பழக்க வழக்கங்களையும் ஜாதியம், மதவெறி, சமூக நீதி, சமநீதி, சமத்துவம் பற்றி கலந்துரையாடி வாசகர் மத்தியில் விழிப் புணர்வை ஏற்படுத்த முன்வந்தனர்.

அவ்வளவுதான் பூநூல் மேனிகள் சும்மா இருக்குமா என்ன? உடனே தடை வரை சென்றார்கள்.

இதுப்பற்றி தொலைக்காட்சிகளில் விவாதம் துவங்கியது. இந்துத்துவா சக்திகள் ஆர்.எஸ்.எஸ்.அனுதாபிகள் விலை போன விந்தை மனிதர்கள் என ஒரு சிலர் குதித்தார்கள்.

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர் அவர்கள் ஒன்றை சொல்லுவார் பார்ப்பனர்களுக்கு முன்புத்தி இல்லை என்று அப்படி முன்புத்தி இல்லாமல் செய்துவிட்டு மாட்டிக்கொண்டு விழிக்கிறார்கள். அதற்கு ஊடகங்களில் பெரியார் கொள்கை வேறு, அம்பேத்கர் கொள்கை வேறு, பெரியார் பிரிவினைவாதி, அம்பேத்கார் தேசியவாதி, அம்பேத்கர் இந்து மக்களுக்கு ஆதரவானவர்.

பெரியார் இந்து மதத்தை ஒழிக்க முனைந்தவர் அதனால் பெரியாரோடு, அம்பேத்கரை ஒப்பிட்டுப் பேசக்கூடாது. அய்.அய்.டி.நிறுவனத்திற்கு அம்பேத்கர் பெயரைக்கூட வைக்கலாம் என்று நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்த கதையாக அம்பேத்கருக்கு வக்காலத்து வாங்கத் துவங்கி விட்டது இந்துத் துவாக் கூட்டம்.

விவாதத்தில் பேசிய மதவாதிகள் அனைவரும் பெரியாரை பிரித்து அம்பேத்கரை ஆதரித்துப் பேசினார்கள். இன்னும் ஒருபடி மேலேபோய் பெரி யாரின் கருத்து வேறு - அம்பேத்கரின் கருத்து கொள்கை வேறு இவற்றை ஒப்பிடவே கூடாது என வாதிட்டனர்.

இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? ஜாதிய, மதவாதிகள், மனுவாதிகள், ஆதிக்கவாதிகள் தந்தை பெரியாரின் தடியால் அடிவாங்கி ஓடியதை அவர்களால் மறக்க முடிய வில்லை. இந்துமதத்தில் பிறந்த பெரியாரை புறக்கணிக்கிறார்கள். தாழ்த் தப்பட்ட மக்கள் இந்துக்கள் அல்ல என்று சொன்ன அம்பேத்கரை ஆதரிக் கிறார்கள். இதுதான் பார்ப்பன சூழ்ச்சி.

மதத்தின் பெயரால் ஜாதியின் பெயரால் அம்பேத்கர்பட்ட துன்பங்கள், துயரங்கள் என்ன என்பதை அவரே எழுதி இருக்கிறார். நான் இந்துவாக பிறந்துவிட்டேனே ஒழிய சாகும்போது ஒரு இந்துவாக சாகமாட்டேன் என்று சொன்ன அண்ணல் அம்பேத்கர் கூறியதை வசதியாக மதவாதிகள் மறந்துவிட்டார்கள் போல் இருக்கிறது.

இந்த நேரத்தில் அம்பேத்கர்வாதிகள் தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த குள்ளநரிகளிடம் மிக எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அவர்கள் பெரி யாரையும் ஏற்க மாட்டார்கள் அவரின் தொண்டரையும் ஏற்க மாட்டார்கள் அவர்தான் பெரியார். பெரியார் என்னும் தேன்கூட்டில் இந்துத்துவாவினர் கையை வைத்துவிட்டு கொட்டுதே! கொட்டுதே!! என்று துடியாய்த் துடிக்கிறார்கள்.

தந்தை பெரியார் பிறந்தமண், இது தமிழ்நாடு என்பதை மறந்துவிட்டு ஏதேதோ செய்தார்கள் அவ்வளவுதான். பெரியார், ஒருவருக்கோ, ஓர் அமைப்புக்கோ அவர் சொந்தமல்லர் என்பதை அனைத்து கட்சியினரும் அமைப்பினரும், அனைத்து இயக்கங் களும் என இரண்டு மூன்று நாள் ஆர்ப்பரித்து, ஆர்ப்பாட்டம் செய்தனர். மாணவர்கள் மகளிர், குழந்தைகள் என தன் எதிர்ப்பை மோடி அரசுக்கு காட்டி உள்ளார்கள்.

தமிழன் தூங்கியுள்ளான் என்று தொடையில் கயிறு திரிக்க மதவாதக்கூட்டம் முயலக்கூடாது. அதன் விளைவு தமிழ்நாடு மட்டும் அல்ல இந்தியாவில் பல மாநிலங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் தலைநகர் டில்லியில் போராட்டம். ஏன் பல மாநில கல்வி நிலையங்களில் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டங்கள் என பல கிளைகள் உருவாகி விட்டன.

தமிழ்நாடு என்பது திராவிடர் இயக்கத்தால் சுயமரியாதை உணர்வால், பகுத்தறிவுச் சிந்தனையால், சமதர்மக் கொள்கையால் வளர்க்கப்பட்டது.

ஏதோ தந்தை பெரியார் - அண்ணல் அம்பேத்கர் என்னும் பூக்கள் பூத்து விழுந்து விட்டன என்று மனப்பால் குடிக்காதே அது காய்ந்து கனிந்து விதை விட்டுள்ளது. என்பதை மத, ஜாதியவாதிகள் மறந்து விடக்கூடாது

-  தமிழ்ச்செல்வன்
தருமபுரி

தமிழ் ஓவியா said...

கீதைக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு!கீதை மனிதநேயத்தை சிதைக்கிறது, அரசு அலுவலகங்களில் பகவத் கீதை படிக்க கொடுப் பது அமெரிக்க மதச்சார்பின்மைக்கு எதிரான தாகும் என்கிறார்- அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவ்விக்.

அமெரிக்க ஆளும் கட்சியின் இடஹோ மாகாண உறுப்பினர் தனது மாகாண அரசு அலுவலகத்தில் பகவத் கீதைவகுப்பு  குறித்த நிகழ்ச்சிக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது இந்து மதம், மனிதர்களைப் பிரிக்கும் ஜாதியை மய்யமாகக் கொண்டது, பகவத் கீதை ஜாதியை வலியுறுத் துகிறது மனித நேயமற்ற கருத்தை வலியுறுத்தும் ஒரு மதவழிபாடு இங்கு நடைபெறுமாயின் அது அமெரிக்க மதச்சார்பின்மைக்கு பங்கம் விளைவிக்கும் என்று கூறினார்.

அமெரிக்காவின் இடஹோ மாகாண அரசு அலுவலகத்தில் பகவத் கீதை தொடர்பான வகுப்பு ஒன்றை நடத்த அம்மாகாண உறுப்பினர் களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான பரிசீலனையின் போது இடஹோ மாகாண உறுப்பினர் ஸ்டீவ் விக் கூறியதாவது:  அமெரிக்காவில் எந்த ஒரு மாகாணத்திலும்  அரசு அலுவலகங்களில் பகவத் கீதைவகுப்பு களுக்கு அனுமதியளிக்கக்கூடாது.

மேலும் இந்து மதம், அமெரிக்க அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டுள்ளது.  அமெரிக்காவின் அரசமைப்புச் சட்டம் தயாரிக்கப்பட்ட போது அனைத்து மதவிதிகளும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது இந்துமதம் மற்றும் அதில் உள்ள ஜாதிய பேதங்கள் குறித்து அந்த மத பிரதிநிதி களுடன் விவாதிக்கப்பட்டது.

அந்த மதத்தில் மனிதர்களைப் பிரிக்கும் ஜாதி உள்ளது. ஆகை யால் அமெரிக்க அரசமைப்புச் சட்ட நூலில் இந்துமதம் குறித்த எந்த ஒரு வாசகமும் இடம் பெறவில்லை, பகவத் கீதை மனிதர்களைப் பிரிக்கும் ஜாதியை வலியுறுத்துகிறது,

பிறப்பால் ஜாதிபாராட்டும் நூல் பகவத் கீதை, பிறப்பால் ஒருவரை ஜாதிகளாகப் பிரிக்கும் மனிதநேயமற்ற கருத்தைக் கூறும் பகவத் கீதை என்ற நூல் வலியு றுத்தும் மதம் அமெரிக்க மதச்சார்பின்மைக்கு பங்கம் விளைவிக்கும், அதை அமெரிக்க அரசு அலுவலகங்களில் படிக்கக்கூடாது என்று கூறி இந்து மதவழிபாடு நடத்த எதிர்ப்பு தெரிவித்து அந்தக் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

மேலும் அவர் முகநூலில் எழுதியுள்ளதாவது, இந்து மதவழிபாட்டை ஆதரித்துதான் இந்திய நாட்டுடன் நட்புறவை வலுப்படுத்தவேண்டும் என்று சொல்வதற்கில்லை. எனது கருத்துகள் இந்தியாவில் தவறாகப் பிரச்சாரம் செய்யப்பட லாம். அதுகுறித்து, நான் கவலைப்படமாட்டேன். எனது கருத்துகளை மனிதநேயமுள்ள இந்தி யர்கள் பாராட்டுவார்கள் என்று தனது முக நூலில் எழுதியிருந்தார்.

தமிழ் ஓவியா said...

மூளையின் அதிசய செயல்பாடுகள்மூளையின் எடை 1200 கிராம் முதல் 1350 கிராம் அளவுதான். ஆனால் இதில் 100 பில்லியன் நரம்பு செல்கள் உள்ளன. ஒரு பில்லியன்: 100 கோடி. உலகின் மிகப்பெரிய அதிசயங்களில் ஒன்று மனித மூளை. உங்கள் மூளை மிகவும் சுறுசுறுப்பாக, பரபரப்பாக இல்லாமல் ஓய்வாக இருக்கும் நேரத்தில் தான் புதுமையான புதுப்புது ஆலோசனைகளை கண்டு பிடிப்புகளைச் சொல்லும்.

மிகவும் சோர்வாக இருக் கின்றதா? அதிக மூளை உழைப்பு உங்களை களைப்பாக்கி விட்டது என்றால் சற்று ஓய்வு எடுங்கள். நல்ல குளியல் எடுங்கள். அப்போது நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையில் புதுப்புது யோசனைகள் கிடைக்கும். நம்புங்கள் இது ஆராய்ச்சி பூர்வமான உண்மை.

* மனஉளைச்சல் மூளையை சுருங்கச் செய்து சிரிதாக்கி விடுகின்றது. சுருங்கிய மூளையால் அநேக பாதிப்புகள் ஏற்படும்.

* ஒரே நேரத்தில் பல விஷயங்களை நினைப்பது மூளைக்கு சுமையாக இருக்கும். பொறுமையாக ஒவ்வொன்றாக செய்தால் நிறைய சாதிக்கலாம்.

* சின்னச்சின்ன தூக்கம். அதாவது, பத்து நிமிடம் கண்மூடி அமைதி யாக இருப்பது மூளையின் செயல்பாட்டுத்திறனை கூட்டும்.

* ஹிப்போகாம்பஸ் எனும் பகுதியில் தான் மூளை நினைவுகளை பதிவு செய்யும். மூளை மிக வேகமாக அதிக மாக பதிவு செய்யும் போது பல விஷயங்களை பதிவு செய்ய மறந்து விடுகின்றது. 10 அல்லது- 20 நிமிட குட்டித் தூக்கம் ஞாபகத் திறனை கூட்டுகின்றது. படிக்கும் ஆற்றலை அதிகரிக்கின்றது.

உங்கள் மூளையின் சிறந்த நேரம் எது என்று நீங்களே உங்களை ஆராய்ந்து பாருங்கள். பலர் காலை நேரத்தில் நல்ல சுறுசுறுப்புடன் இருப்பார்கள். மணி அடித்தார் போல் இரவு 9 மணிக்கு படுத்து தூங்கி விடுவார்கள். பலர் இரவு எட்டு மணிக்கு மேல் தான் படிப்பார்கள், எழுதுவார்கள். இரவில் வெகு நேரம் கண் விழித்திருப்பார்கள்.

காலை 8 மணிக்கு முன்னால் எழுந்திருக்க மாட்டார்கள். பொதுவில் அன்றாட செயல்களுக்கான மூளையின் சிறந்த நேரங்கள் காலை 9 முதல் 11 மணி ஆகும். மூளை சிறிதளவு ஸ்டிரெஸ் ஹார்மோன் கார்டிசால் இருக்கும். காரணம் படிப்போ, வேலையோ அதற்காக உங்களை தயார்படுத்தி பழகியிருப்பதால் நல்ல கவனத்தை செய்யும் வேலையில் உங்களால் செலுத்த முடியும்.

தமிழ் ஓவியா said...

கிடுக்கிப்பிடியில் பிஜேபி முதல் அமைச்சர்

லலித்மோடி எனது உறவினர் - அவருக்கு அவமானம் என்றால் அது எனக்கும் தான்!

வசுந்தரா ராஜே கடிதம் அம்பலமானது


லலித்மோடியின் அழைப்பின் பேரில் லண்டன் சென்ற நிதின் கட்கரி, வசுந்தரா ராஜே, ஸ்மிருதி இரானியுடன், லலித்மோடியின் நெருங்கிய நண்பரும், லண்டனில் லலித்மோடிக்கு நிதி உதவிகள் செய்துவரும் விஜய் ஜோலியும் 2011 ஆம் ஆண்டு எடுத்தபடம்


ராஜஸ்தான் மாநில முதல்வராக உள்ள வசுந் தரா ராஜே 2011-ஆம் ஆண்டு லண்டன் நீதிமன் றத்திற்கு எழுதிய கடி தத்தை காங்கிரஸ் கட்சியினர் டில்லி யில் வெளியிட்டனர். இந்தக் கடிதத்தில் லலித் மோடி தனது உறவினர் என்றும் தான் இந்தியாவில் உள்ள ஒரு மாகாணத்தின் மகா ராணி; லலித் மோடி எனது உறவினர், லலித் மோடிக்கு அவமானம் என்றால் அது மகாராணி யான எனக்கும் அவ மானம் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
அந்தக் கடித்ததின் முழு விவரம் வருமாறு:    இங்கிலாந்தின் நீதி மன்ற ஆவணப் பதிவு களில் இருந்து சண்டே மெயில் என்ற பத்திரி கைக்கு 2011 ஆகஸ்ட் 18 தேதியிட்ட ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அந்தக் கடிதத்ததில் முதல் பத்தியி லேயே நான் இந்தியாவின் ஒரு மாநில முதல்வராக வரும் தேர்தலில் தேர்ந் தெடுக்கப்படப் போகி றேன். ஆகையால், நான் எழுதியுள்ள இந்தக் கடி தத்தை பொதுப்படுத்தக் கூடாது; இதனால் எனது அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படலாம்.
 
என்று குறிப்பிட்டுள்ளார்.  அதைத் தொடர்ந்து அவர் எழுதியுள்ளதாவது: விரைவில் இந்தியா வில் ஆட்சி மாற்றம் ஏற்படும்; அப்போது எங்கள் கட்சி மத்தியிலும், மாநிலத்தி லும் ஆட்சிக்கு வரும்; தற் போது இருக்கும் காங் கிரஸ் அரசு விரைவில் வீழ்த்தப்படும்; மக்களி டையே நாங்கள் கடுமை யான பிரச்சாரம் மேற் கொண்டு வருகிறோம்.  காங்கிரஸ் அரசை மக்கள் வெறுக்கத் துவங்கி விட்டனர். ஆகையால் தான் இந்தியா முழுவதும் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
 
இந்தியா முழுவதும் தேசியக் கட்சிகள் பலமி ழந்து வருகின்றன. ஆகை யால் தென் மாநிலங்களில் பாஜகவும் வடமாநிலங்க ளில் காங்கிரசும் வெற்றி வாய்ப்பை இழக்கும், இருப்பினும் வரும் காலத் தில் பாஜகவின் கைகள் பலம்பொருந்தி இருக்கும்.    லலித் மோடி எனது உறவினர், எனது தலை மையில் ஆன அரசு 2008-ஆம் ஆண்டு தோல்வி அடைந்ததும், லலித் மோடியை உடனடியாக ராஜஸ்தான் கிரிக்கெட் போர்ட் தலைவர் பதவி யில் இருந்து அரசு நீக்கி விட்டது. இது பழி வாங்கும் செயலாகும். என் மீது காங்கிரஸ் ஆட்சி யாளர் பொறாமை கொண்டுள்ளனர். அவர் களுக்கு எனது உறவினர் கள் முக்கியபதவியில் இருப்பது பிடிக்கவில்லை.
 
அதன் பிறகு எனது அரசியல் எதிரிகள் லலித் மோடி மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவரைச் சிறை யில் தள்ள முயற்சி செய் தார்கள். தேர்தல் பிரச் சாரத்தின் போது லலித் மோடியின் மீது பொய் யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அதற்கு நான் உடந்தையாக இருப்பது போல் காட்டிக் கொண் டார்கள். இதன் காரண மாக நான் தோல்வி யடைய நேர்ந்தது. நான் தோல்வியடைந்த பிறகு அசோக் கெலாட் தலை மையில் உள்ள அரசு எனக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. என்னை மோசடிக்காரி என்றும் ஊழல்வாதி என்றும் கூறி வருகிறார்கள்.
 
லலித் மோடி இங் கிலாந்தின் பிரபல விளை யாட்டான கிரிக் கெட்டை இந்தியாவில் பிரபலப்படுத்தியவர்களுள் முதன்மையானவர், அய். பி.எல். என்னும் கிரிக் கெட்டை கொண்டுவந்து குறுகிய காலத்திலேயே இந்தியாவில் உள்ள அனைத்து இளைய தலை முறைகளிடம் கொண்டு சேர்த்தவர். இது ஒரு சாதனையாகும்; லலித் மோடியின் இந்தச் செயல் பாராட்டத்தக்கதாகும். அவர் எனது உறவினர் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். லலித் மோடியின் மீது எந்த ஒரு குற்றச்சாட்டும் இந்தியா வில் இல்லை, தற்போது உள்ள பிரச்சினை எல் லாம் அரசியல் சூழ்ச்சி தான், ஆகையால் அவ ருக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையும் இங்கி லாந்து நீதிமன்றம் எடுக் கத் தேவையில்லை.  இங்கி லாந்து நீதிமன்றம் தவறு தலாக லலித்மோடி மீது நடவடிக்கை எடுத்தால், அது லலித்மோடியை அவமானப்படுத்துவது போலாகிவிடும். லலித் மோடிக்கு ஓர் அவமானம் என்றால் அது ராஜஸ் தானின் மகாராணியான எனக்கும் அவமானம் தான் என்று என்னுடைய சுயநினைவுடன்  ஆங்கி லத்தில் நானே எழுது கிறேன்.

இத்துடன் லலித் மோடி எங்களது குடும்ப உறவுகள் குறித்த சில ஆவணங்களை இணைத்துள்ளேன். மேலும் அதிக ஆவணங்களை நான் நேரில் கொண்டு வந்து இங்கி லாந்து நீதி மன்றத்தில் வழங்குவேன்.

தமிழ் ஓவியா said...

மாலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளிகளைத்
தப்பிக்கவிட மத்திய - மாநில அரசுகள் அழுத்தம்!

அரசு வழக்குரைஞரே அம்பலப்படுத்துகிறார்


டில்லி, ஜூன் 26_ மாலேகான் குண்டுவெ டிப்பில் கைதாகி சிறையில் உள்ள கைதிகளின் வழக்கை தீவிரமாக கையாளக் கூடாது என்றும், அவர் களை விரைவில் விடு விக்கும் வகையில் வழக் காட வேண்டுமென்றும் தனக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததாக அரசுத் தரப்பில் ஆஜராகி வழக்காடி வரும் ரோகினி செலியன், ஆங்கிலப் பத் திரிகை ஒன்றிற்குப் பேட்டி யளித்துள்ளார்.

இதன் விவரம்: 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி மகாராஷ்டி ராவில் உள்ள மாலேகான் பகுதியில் வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 37 பேர் பலியானார்கள், 140-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கை விசாரித்த காவல் துறை, உள்ளூரைச் சேர்ந்த சில முஸ்லீம் இளைஞர் களைக் கைது செய்தது. அதன் பிறகு இந்த வழக்கு சிறப்பு புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்ட பிறகு இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த் தியது தெரியவந்தது.  தொடர் விசாரணைக்குப் பிறகு பிரங்யா சிங் தாக் கூர் என்ற சாமியாரினி, சிவ்நாராயண் கோபால், ராணுவ அதிகாரியான சிரிகாந்த் புரோகித், கல சஹரா, ஷ்யாம் போன் றோர் கைது செய்யப்பட் டனர். இவர்களுடன் மேலும் 12 காவி பயங்கர வாதிகள் கைது செய்யப் பட்டனர். அதில் நான்கு பேர் தற்போது பிணையில் வெளியே வந்து விட்டனர். இவர்கள் இந்து அமைப் பான அபினவ் பாரத் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. இந்த அமைப்பிற்கும் ஆர்.எஸ். எஸ்.க்கும் தொடர்பு உள்ள தாக மும்பை தாக்குதலில் மரணமடைந்த காகரே புலனாய்வு செய்து கூறி யிருந்தார்.   தொடர்ந்து இந்த வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கின் அரசுத் தரப்பு வழக்குரைஞரான ரோகினி செலியன் பத்தி ரிகைக்கு அளித்த பேட் டியில் கூறியதாவது.

மோடி அரசு வந்த உடனேயே தேசிய புல னாய்வு அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் என்னை நேரில் சந்தித் தார். தொலைபேசியில் கூட பேசவேண்டாம் என்று கூறி நேரில் வந்த அந்த அதிகாரி,  உங்க ளுக்கு ஒரு செய்தி இருக் கிறது. இந்த வழக்கில் தீவிரமாக வாதாட வேண் டாம் என்று கூறினார்.

பிறகு இந்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி வழக் கின் விசாரணை நாளன்று, அதே அதிகாரி மீண்டும் வந்து  மேலிடத்தின் விருப்பப்படி இந்த வழக் கில் நீங்கள் வாதாட வேண்டாம். உங்களுக்கு பதில் வேறு வழக்குரை ஞர் நீதிமன்றத்தில் வாதா டுவார் என்று வெளிப் படையாகவே மிரட்டினார்.

இதற்குப் பதிலளித்த நான் நல்லது, ஏற்கெ னவே நீங்கள் சொல்லியி ருப்பதால் இதைத் தான் எதிர்பார்த்தேன். எனது கணக்கு வழக்கு களை முடியுங்கள். மேலும் இந்த வழக்கிலிருந்து என்னை விடுவிப்பதாக அறிவித் தால்தான் தேசிய புல னாய்வு அமைப்பிற்கு எதிரான வழக்குகளில்  -_ இந்த வழக்கில் அல்ல -_  ஈடுபட முடியும் என்று  கூறினேன்.
 
அதற்கு பிறகு அந்த அதிகாரி மற்றும் புலனாய்வு அமைப் பிலிருந்து யாரும் பேச வில்லை என்றார் அவர். ரோஹினி செலிய னுக்கு அரசு தரப்பில் தரவேண்டிய சலுகைகள் அனைத்தும் கடந்த சில மாதங்களாக குறைக் கப்பட்டுவிட்டன. அரசு தரப்பு ஓட்டுநர் திடீரென உடல் நிலை சரியில்லை என்று விடுப்பு எடுத்து விட்டார். அதனை அடுத்து நீங்களே ஓட்டுநரை வைத்துக் கொள்ளுங்கள் அதற்கு தேவையான பணத்தை அரசு வழங்கும் என்று கூறிய நிலையில் வழக்குரைஞர் தனக்கான ஓட்டுநரை வைக்க நடை முறையில் செய்ய இயலாத வகையில் பல்வேறு விதி களை புதிதாகப் புகுத்தியது.  மேலும் பயணச் செலவு, வழக்குச் செல வுகள் தொடர்பான விவ காரங்களில் தொடர்ந்து அலைக்கழிக்க வைக்கப் பட்டார். மத்திய அரசின் போக்கிற்கு துணைபோ காத காரணத்தால் வேறு வழியில் அவருக்கு தொந் தரவுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக வழக்குரைஞர் கூறியதாவது என்னை இந்த வழக்கில் இருந்து அவ்வளவு சாமா னியத்தில் விடுவிக்க முடியாது ஆகவே நானாக விலகிக்கொள்ளும் வகை யில் பல்வேறு வழிகளில் தொந்தரவு கொடுக் கிறார்கள். அதே நேரத்தில் ஒரு புதிய வழக்குரைஞர் இதை விசாரித்து வாதா டுவது சிரமம். அவர் எதுவும் செய்ய முடியாது. இந்த வழக்கை திரும்பப் பெற முடியாது என்பதால்  அரசு தரப்பு தோல்வி யுற்று வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் இதைத்தான் மத்திய அரசு விரும்புகிறது என்று கூறினார். தேசிய புலனாய்வுத் துறை அமைப்பு, பிரதம ரின் கட்டுப்பாட்டில் உள்ள ஓர் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

வாழ்க்கை

ஒருவன் வாழ்வது என்பது அவனுடைய வாழ்க்கையால் பிறர் நன்மையடைந்தார்கள், மற்றவர்கள் சுகங் கண்டார்கள் என்று அமைய வேண்டும்.
_ (விடுதலை,20.3.1956)

தமிழ் ஓவியா said...

காவல்துறை கவனிக்குமா?

இந்தியாவில் அதிகமாக இருப்பது ஓரல் கேன்சர் என்னும் வாய்ப்புற்று நோயும், மார்பகப் புற்று நோயும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அடையாறு புற்றுநோய் மருத்துவ மனைத் தலைவர் மருத்துவர் சாந்தா அம்மையார், சமீபத்தில் அறிக்கை ஒன்றில் இந்த வாய்ப்புற்றுநோய் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அதுவும் சென்னையிலேயே அதிகமாக உள்ளது என அபாய அறிவிப்பு விடுக்கிறார்.

சமீபத்தில் புகையிலை எதிர்ப்பு நாள் கொண்டாடப்பட்டபோது, சென்னை மாநகரக் காவல்துறை ஆணையாளரும், டாக்டர் சாந்தா அம்மையாரோடு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது புகையிலைப் பழக்கத்தின் கெடுதியை வலியுறுத்தியிருப் பதைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக விடிவு காலம் பிறக்கும் என்றுதான் எண்ணி னோம். ஆனால் சென்னை நகர வீதிகளில் எட்டுத்திசைகளிலும் சுற்றிப்பார்த்தால் தமிழ்ச்சமுதாயத்தைச் சீரழிக்கும், தமிழ்க் குடும்பங்களின் அமைதியை அழிக்கும், சோகத்தை ஏற்படுத்தும் போதைப் பொருள் தாராளமாக, எவ்வித பயமுமின்றி, தயக்க முமின்றி விற்கப்படுவதைக் காணலாம்.

அதிலும் கல்லூரிகளில் இன்றைய மாணவர்களின் பையைச் சோதனை செய்தால் தவறாமல் காணலாம். சென்னை நகர வீதிகளில் தடை செய்யப்பட்ட பான்பராக் விற்பனை ஒருபுறம் நடைபெறுகிறது என்றால் தடையிலில்லாமல் மலிவு விலையில் விற்கப் படும் போதைப் பொருட்கள் மற்றொருபுறம்.

வட்டமான வண்ணக்குடை, அதன் கீழே வடநாட்டுக்காரன் ஒருவன் வட்டத்தட்டில் வரிசையாக மூடிபோட்ட டப்பாக்கள், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது பீடாக்கடை. ஆனால் அங்கு விற்கப்படும் போதைப்பொருள் பெயர் மாவா

பத்து ரூபாய் சில இடங்களில் ஒன்பது ரூபாய்க்கும் கிடைக்கிறது. மாவா என்று கேட்டால் போதும் ஒரு சிறு பிளாஸ்டிக் கவரில், பொடிபோல் மேலே ஒரு ரப்பர் பேண்டு சுற்றி உடனே கிடைக்கிறது.

இந்த மாவா போடுகிறவன் வாய்குளறும். ஒரு மயக்கமூட்டும் வாசனை வரும். இதைப்போட்டால் மூளை மந்தமாகும். மூளைக்குப் போகும் ரத்தக்குழாயில் ரத்தத்தை உறைய வைக்கும். இது போட்டால் மது அருந்திய அளவிற்குத் தள்ளாட்டமும் இருக்கும். இந்த சுகம் பத்து ரூபாய்க்குள் சாலையின் ஓரங்களில் மட்டுமல்ல, முதன்மையான இடங்களில் காவலர் எதிரேயே விற்கப்படுவதுதான் கொடுமை. திருவல்லிக்கேணி பாரதிசாலை தொடக்கத் தில் எக்ஸ்பிரஸ் அவின்யூ எதிரில் மயிலாப் பூரில், வடசென்னையில் தாராளமாக விற்கப்படுகிறது. இவ்வாறு விற்பவர்கள் தவறாமல் மாமூல் கொடுத்து விடுவதாகவும் கேள்வி.

மதுரவாயலில் உள்ள பொறியியல் பல்கலைக்கழகம், கேளம்பாக்கம் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் அருகில் மிகத் தாரா ளமாக விற்பனை ஜோராக நடைபெறுகிறது.

இது போல் புகார் செய்யப்படும்போது ரெய்டு என்று ஏமாற்றுவது நடைபெறும். எங்கிருந்து வருகிறதோ அங்கேயே வராமல் தடுப்பதை விட்டு இது போல் ஏமாற்று வேலை. இதனால் பாதிப்பிற்குள்ளாவது மாணவர்கள் மட்டுமில்லை. நம் திராவிடச் சமூகத்தின் உழைக்கும் வர்க்கமான கட்டடக் கலைஞர்கள் சிறுசிறு பணியாளர்கள் என்று பலரும் அடக்கம்.

தலைக்கவசம் போடவேண்டும் என்று வலியுறுத்தும் நீதிமன்றம் இதைத்தடுக்கும் படி அரசுக்கு எச்சரிக்கக்கூடாதா?

அண்டை மாநிலமான கேரளத்தில் இந்த ஆபத்தான பொருள் விற்பனை கிடையாது. இங்கே அரசாங்கம், காவல்துறை பற்றிய அச்சமோ, கவலையோ இல்லாமல் ஒளிவு மறைவு கூட இல்லாமல் விற்கிறார்கள்.

இது இப்படியென்றால் வெற்றிலை பாக்குக் கடைகளில் பகிரங்கமாக விற்கப் படும் போதைப்பொருள் பெட்டி பெட்டியாக விற்கப்படும் போதைப் பொருளின் ஹான்ஸ் என்பது. மஞ்சள் வண்ண பிளாஸ்டிக் உறையில், முகர்ந்து பார்த்தாலே ஒரு வித மயக்கம் தரும் புகையிலைப் பொருள் வெளிப்படையாக விற்கப்படு கிறது. இதன் விலையும் மலிவு தான்.

ஏற்கெனவே தெருவிற்கு இரண்டுகடை என்று மதுபானக்கடையைத் திறந்து போதையை பரப்பும் அரசு மாவா, ஹான்ஸ் விஷயத்தில் மட்டும் நட வடிக்கை எடுத்து விடுமா?

சமூக ஆர்வலர்கள் என்போர் மது வுக்கு எதிராக மட்டும் குரல் கொடுத்தால் போதாது?

இந்தப் போதைப்பொருள் விற் பனையை முழுமையாக ஒழிக்க நீதிமன்றம் தான் செல்ல வேண்டுமா?

சென்னை நகரில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணியாளர்கள், பிரபல மான கடைகளில் பணிபுரியும் ஏராளமான வடநாட்டவர்கள் வருகையால் ஏற்பட்ட சமூகத் தீமை இது.

கழிவறை, யோகா என்றெல்லாம் பரப்புரை செய்யும் மய்ய அரசு, சமுதாயத்தை மெல்லக் கரையான் போல் அரித்துப் புற்றுநோய்க்கு வழிகாட்டும் இந்தத் தீமைக்கு, மனித மூளையைச் செயல்படாமல் தடுக்கும் நஞ்சை அகற்ற நடவடிக்கை எடுக்குமா?

வெற்றிலை பாக்குக் கடைகளில் பதினெட்டு வயதுக்குட்பட்டவர்களுக்குப் புகையிலைப் பொருட்கள் விற்பனை கிடையாது எனும் விளம்பரத்தைப் பார்க்கையில் இந்தக் கேலிக்கூத்தை நினைத்துச் சிரிப்பு வருகிறது.

- முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்
செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்

தமிழ் ஓவியா said...

மவுடீக எண்ணங்கள்

இந்தியா தன்னுடைய மத மவுடீகங்களைக் களைந்து விஞ்ஞானப்  பாதையில் திரும்ப வேண்டும். தேவையற்ற, பொருளற்ற எண்ணங்களும், சமூகப் பழக்கவழக்கங்களும்  இந்தியதாய்க்கு  சிறைச்சாலை எழுப்பியிருக்கின்றன. இவைகளே இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கின்றன.

இந்த மதக்கோட் பாடுகள் சமூக உறவு ஏற்படத் தடையாகவிருக்கின்றன. சமுதாய நடவடிக்கையில்  குறுகிய எண்ணத்தை  ஏற்படுத்தியிருக்கின்றன. ஒரு வைதீக ஆசார இந்து என்பவரின் மதமே, எதைச்  சாப்பி டுவது; எதைச் சாப்பிடக்கூடாது; யாருடன் உணவருந்தலாம்; யாருடன் இருந்து உண்ணக் கூடாது என்பதில் தானே,

மற்ற ஆன்மிகக் கருத்துக்களைவிட அக்கறை காட்டுவதாயிருக் கிறது? இந்த ஆசார இந்துவின் சமூக வாழ்வை சமயலறையின் சட்ட திட்டங்கள்தான் ஆதிக்கஞ் செலுத்திவருகின்றன ! முஸ்லீம்கள் இதுமாதிரியான பழக்கங்களிலிருந்து விடு பட்டாலும் அவனுக்கும் குறுகிய மதக்கோட்பாடுகளும்  சடங்கு களும்  இருக்கின்றன.

அவைகளை அவன் அடுத்தடுத்து அனுசரிக்க வேண்டும். இவைகளை எல்லாம் கடைப்பிடிக்கும் அவன் தன் மதம் போதிக்கும் பாடமான சகோதரத்துவத்தை  தருணத்தில் மறந்துவிடுகிறானே! -நேரு டிஸ்கவரி ஆஃப் இந்தியா

தமிழ் ஓவியா said...

கடவுள் இல்லை இந்திய விடுதலை போராட்ட வீரர் லாலா.லஜபதிராய் கருத்து(தோழர்  லஜபதிராய் அவர்கள் தனது நண்பர் தோழர் டி .பிர்லாவுக்கு எழுதிய கடிதம் ஒன்று பீபிள் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதின் மொழிபெயர்ப்பு.) ஒரு காலத்தில் கடவுளை நான் நம்பியதுண்டு. கடவுளை நோக்கிப் பிரார்த்திப்பதால், அவர் நமது வேண்டுகோளைக்கேட்டு நமக்கு நன்மை செய்கிறாரென நம்பினேன்.

நன்மையான தர்ம கைங்கர்யஞ் செய்கிறவர்களுக்குக் கடவுள் நன்மையையே செய்கிறார். என்றும், துஷ்டர்களை அடியோடு அழித்து நிக்கிரகஞ் செய்கிறாரென்றும் எண்ணினேன். இந்த நம்பிக்கையில் நான் மகா உறுதிகொண்டிருந்தேன். ஆனால் படிப்படியாக என் நம்பிக்கை குறைந்து கொண்டு வந்துஇப்பொழுது அந்த நம்பிக்கையே எனக்கில்லாமல் போய்விட்டது.

இந்த மாயவஞ்சகம்நிறைந்த ஒரு உலகத்தை ஆண்டு நடத்திக்  காப்பாற்றி வரும் ஒரு கடவுளை நான் எப்படி நம்ப முடியும்? அக் கடவுள் மகா அன்புடையவர் மகா கருணாநிதி, சத்தியவந்தர், சர்வ வல்லமையுள்ளவர், எங்கும் பரம்பொருளாக நிறைந்திருப்பவர் என்பதை நான் எப்படி நம்பக்கூடும்? மகா தயாநிதியாகி,

சத்தியமே ஒரு உருவான மெய்க்கடவுள் இருந்தால் இந்த உலகத்தைச் சிருஷ்டித்திருக்க முடியுமா? இந்த உலகம் அநீதி,நிறைந்தது சமத்துவத்திற்குப்  பரம விரோதியாய் இருக்கிறது. சகல கொடுமைகளுக்கும் உறைவிடம்.

மிருகத்தனமானது

வஞ்சகம், சூது, ஏமாற்றம் முதலியவை உருவெடுத்த மனிதர்கள் நிறைந்தது. இந்த நாசமான இந்த உலகத்தை சத்திய வந்தரான கடவுள் எப்படி உண்டு பண்ணியிருக்க முடியும்? பல ஆயிரக்கணக்கான கொடியர் ஜீவிக்கிறார்கள். இவ்வுலகில் இன்னும் பலர் முட்டாள்கள். மூளை என்பதே கிடையாது அன்பு, சத்தியம் நிறைந்த.

இருதயத்தை இழந்த துஷ்டர்கள் பல ஆயிரம். ஏழைகளை இம்சிக்கும் ராஷதர்களும், சத்ய வந்தரை தொல்லைப்படுத்தி, அடக்கி, நசக்கி, மண்ணுக்கும் இரையாக்கும் மிருகத்தனம் படைத்தவர்களும் இன்னும் பல ஆயிரம். கொள்ளை அடிக்கும் திருடர்கள் பலர், சுயநலமே உருக் கொண்ட தீயர்கள்  எத்தனையோ லட்சம் இந்த சுயநலப் பேய்களே மகாசொகுசாக, உல்லாச வாழ்க்கை நடத்தி வரு கிறார்கள், ஏழைகளை வஞ்சித்து இம்சித்துத் துன்புறுத்து கிறார்கள்.

ஏழைகளின் கதியோஅதோ கதிதான். அவர்கள் மானமிழந்து அடிமைகளாகிய, தரித்திரத்திற்குள்ளாகி, உண்ண உணவின்றி, உடுக்க ஆடையின்றி பசியால் வாடி மடிகின்றனர். முடிவில் மண்ணோடு மண்ணாகிப்போகிறார்கள். உலகில் இந்தக் கொடுமைகள் ஏன்? சத்தியமும், உண்மையும் உருக்கொண்ட ஒரு தெய்வம் இந்த கொடிய உலகத்தை உண்டு பண்ணி யிருக்கமுடியுமா?

வேதங்கள் பொய்

சத்தியம் என்பது என்ன? சத்தியம் எங்கிருக்கிறது? வேதங்களிலாவது உண்மை இருக்கிறதா அல்லது நம்பிக் கையாவது உண்டா? வேதங்களில் சத்தியத்தைக்கண்டுபிடித்து விட்டதாக சிலர் பறை சாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

அதெல்லாம் வெறும் பொய்க்கூற்று. அவர்கள் ஏதோ மாய்கையில் மூழ்கி அவ்வாறு அல்லற்படுகிறார்கள் வெறும் மத வெறி கொண்டவர்களே உண்மையிருப்பதாக உளறிக் கொண்டிருப்பதுண்டு. புத்த பகவா, கிறிஸ்துவோ, முகமது நபியோ உண்மையை கண்டு பிடித்திருக்கிறார்களா?

அவர்கள் கண்டுபிடித்த சத்தியம் எங்கே? அந்த சத்தியம் மறைந்து விட்டதா? அல்லது அதை போதிக்கப்புறப்பட்டவர்கள் திரித்து சத்தியத்தையே மறைத்து விட்டார்களா? இவர்கள் மனிதர் களைப் பாகுபாடுபடுத்தி பிரித்து வைத்தது ஏன்? சத்திய மென்றால் ஒற்றுமையின்றி பல பாகுபாடு உண்டு பண்ணி சுயநலத்துடன் வாழ்வதென்று அர்த்தமா?

லாலாஜி வாழ்க்கை

இவ்விதம் கூறும் நான் ஏன் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்டுவந்தேனெனக் கேட் கலாம். உண்மையைக் கூறுமிடத்து நான் சுயநல நோக்கங் கொண்டே பொது சேவையில் ஈடுபட்டேனென்று கூறுவேன். அதாவது நான் உள்ளவரை ஏதேனும் ஒரு காரியம் செய்து கொண்டிருக்கவேண்டும். இது மனித சுபாவம் ஒரு குணம். அதுசதா என்னைக் கிளர்ச்சி செய்யத் தூண்டிக் கொண்டிருக்கிறது.

(பகுத்தறிவு, 1933)

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

இன்றைய சுதந்திரம் வடநாட்டானுக்கும் அவன் மொழிக்கும் தென்னாட்டவர் அடிமையாய் வாழ வேண்டு மென்றே ஆக்கப்பட்டுவிட்டது. வெள்ளையரிடமிருந்து பெற்ற சுதந்திரத்தைவிட வடவரிடமிருந்து சுதந்திரம் பெறுவதே மிகமிக முக்கியமானது.
கம்பராமாயணக் கதை வெறும் பொய்க் களஞ்சியமே யாகும். அதன் கற்பனையை எடுத்துக் கொண்டால் அது ஒரு சிற்றின்பச் சாகரம். ஒரு மாதிரி காமத்துப் பால் ஆகும். நடப்பை எடுத்துக் கொண்டால் காட்டுமிராண்டித் தனத்தின் உருவகமே அது.

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் பற்றி அம்பேத்கர்பகுத்தறிவு தந்தை பெரியாரவர்கள் 1924-ஆம் ஆண்டில் பங்கேற்று நடத்திய வைக்கம் போராட்டம் அறிஞர் அம்பேத்கரின் உள்ளத்தில் ஓர் அரும் தாகத்தினை  விளைவித்தது !

திருவாங்கூர் நாட்டின் வைக்கத்தில் தீண்டத்தகாதோர் நுழையலாகாது எனத் தடுக்கப்பட்ட  ஒரு குறிப்பிட்ட  பாதையை பயன்படுத்துவதற்கு அவர்களுக்கு உரிமையுண் டென்று நிலைநாட்ட,  இராமசாமி நாயக்கர்  அமைதியான எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டார்  ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான  போராட்டத்தில் அந்த ஆண்டின் மிகச் சிறப்பு வாய்ந்த  நிகழ்ச்சி அதுவே.

மிகவும் கவலையோடு இக்கிளர்ச்சியைக்  கவனித்துக் கொண்டிருந்த அம்பேத்கர் மகாத் அறப்போரையொட்டி எழுதிய ஒரு தலையங்கத்தில் வைக்கம் கிளர்ச்சிபற்றி உள்ளம் நெகிழும் வண்ணம் குறிப்பிட்டார் என்னும் செய்தியை அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளிப்படுத்துகிறது.

புரட்சி மனப்பான்மையுடையவன் போப் ஆகவே மாட்டான். இக்கருத்து இந்திய பார்ப்பனர்கட்கும் பொருந்தும் போப் ஆகிறவன் புரட்சி செய்ய விரும்ப மாட்டான் என்றால் பார்ப்பானாகப் பிறந்தவனும் புரட்சி செய்ய விரும்ப மாட்டான் என்பது உறுதி. பார்ப்பானாகப் பிறந்தவன் சமூகப் புரட்சிக்காரனாக இருப்பான் என்று எதிர்பார்ப்பது  நல்லகண்ணுடைய குழந்தைகளை யெல்லாம் கொன்றுவிட வேண்டுமென  ஆங்கில பாராளுமன்றம்  சட்டம் இயற்றும் என்று எதிர்பார்ப்பதற்கு ஒப்பேயாகும் !

- சாதியை  ஒழிக்க வழி எனும் நூலிலிருந்து.     மக்கள் உலகம் முழு வதும் ஒன்றுபட வேண்டும்; மற்ற சீவன்களுக்குத் தன்னால் கெடுதி இல் லாத வாழ்வு பெற வேண்டும்.  மனிதனி டத்தில் பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாது சாந்தி வாழ்வுக்கு வகை தேட வேண்டும்.  இது தான் எனது ஆசை.

- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

மக்கள் உலகம் முழு வதும் ஒன்றுபட வேண்டும்; மற்ற சீவன்களுக்குத் தன்னால் கெடுதி இல் லாத வாழ்வு பெற வேண்டும்.  மனிதனி டத்தில் பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாது சாந்தி வாழ்வுக்கு வகை தேட வேண்டும்.  இது தான் எனது ஆசை.
- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

சிந்தித்துப் பார்

நீ கிணற்றுத் தவளையாக இருக்க விரும்புகிறாயா? அல்லது வேடந்தாங்கலில் வந்து இளைப்பாறிப் போகும் வெளிநாட்டுப் பட்சியாக இருக்க விரும்புகிறாயா? மனிதனே சிந்தித்துப் பார்.
_ (விடுதலை, 22.9.1967)

தமிழ் ஓவியா said...

தினமணியின் மூக்கில் வியர்ப்பது ஏன்?

வடலூரில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில், தினமணி ஆசிரியர் திரு.வைத்தியநாதய்யரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு பேராசிரியர் மோகன ராசு கீதையையும், திருக்குறளையும் ஒப்பிட்டுக் கீதையின் முகத்திரையைக் கிழித்து எறிந்தார் அல்லவா!

அதற்குப் பதில் சொல்ல முடியாத தினமணி அய்யர்வாள் திருக்குறளிலே கொல்லாமை கூறப்பட்டுள்ளதே - அதைக் கடைப்பிடிக்காதவர்கள் திருக்குறளைப்பற்றிப் பேசலாமா? என்று பிரச்சினை யைத் திசை திருப்பிப் பேசினார்; மக்கள் சலசலப்பைக் காட்டினார்கள்.

ஒரு நூலைப் போற்றவேண்டும் என்றால், அந்நூலில் உள்ள அத்தனையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவது அசல் விதண்டாவாதமே! வடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியை விடுதலை விரிவாக வெளியிட்டு இருந்தது (23.6.2015, பக்கம் 8) அல்லவா!

அதைக்கண்டு ஆத்திரப்பட்ட தினமணி அய்யர்வாள் இன்றைய தினமணி ஏட்டில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார். மீண்டும் அந்தப் புலால் உண்ணாமைப் புராணம்தான்.

திருவாளர் தினமணி அய்யரைக் கேட்கிறோம். பார்ப்பான் பிச்சை எடுத்துதான் சாப்பிடவேண்டும்; அத்தகையவன்தான் பூணூல் போட்டுக்கொள்ள அருகதை உடையவன்; அப்படி இருக்கும்பொழுது, நீங்கள் ஏன் பூணூல் போட்டுக்கொண்டு பிராமணன் என்று மார்தட்டுகிறீர்கள் என்று நாங்கள் கேட்டால் உங்கள் பதில் என்ன?

சங்கராச்சாரியார் என்றால் கால்நடையாகத்தான் ஊர் சுற்றவேண்டும். உங்கள் லோகக் குரு ஜெயேந்திர சரசுவதி விமானத்தில் பறக்கிறாரே அது எப்படி? என்று நாங்கள் கேட்டால், உங்கள் பதில் என்ன?

அய்தீக முறைப்படி திருவாளர் வைத்திய நாதய்யர் உச்சிக்குடுமி வைத்துக்கொண்டுள்ளாரா? அப்படி வைத்துக் கொண்டால்தானே அவர் பூணூல் தரிக்க முடியும்.

இந்த வகைகளில் கேள்விக் கணைகளைத் தொடுக்க ஆரம்பித்துவிட்டால், ஒரு பார்ப்பான்கூட தேறமாட்டானே.

ஆக, வடலூர் நிகழ்ச்சி - தினமணியாரின் ரத்தக் கொதிப்பை அதிகரிக்கச் செய்துவிட்டது என்பது மட்டும் உண்மை. தினமணி கட்டுரை அதைத்தான் வெளிப்படுத்துகிறது.Read more: http://www.viduthalai.in/page1/103950.html#ixzz3eBk6rVbs

தமிழ் ஓவியா said...

சங்கராச்சாரியாரை சந்தித்த ரஷ்யர்!

இந்தியாவுக்கு 1964இல் வந் திருந்த ஒரு ரஷ்யப் பிரமுகரிடம், ஒரு பார்ப்பனர் -இந்தியாவுக்கு யார் வந்தாலும் சங்கராச்சாரியாரைப் பார்த்துவிட்டு வருவதுதான் முக்கியமான காரியம் என்று சொல்லி, அவரைச் சங்கராச் சாரியாரிடம் அழைத்துப்போனார்.

அந்த ரஷ்யர், பல விஷயங்களைப்  பற்றி சங்கராச்சாரியாரிடம் பேசிவிட்டுக்  கடைசியில் உங்கள் நாட்டில் உங்கள் சம்பிரதாயத்திற்கும் உங்கள் மத சம்பிரதாயத்திற்கும்  விரோதமாகப் பெரியார் ஒரு இயக்கம் நடத்துகிறாரே, அதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன? என்று கேட்டார்.

அதற்குச் சங்கராச்சாரியார் ஆமாம் ! அப்படி ஓர் இயக்கம் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது என்றாலும், அது இன்றைக்குப் பதினேழுவருடங்களுக்கு முன்வரையில் நாங்கள் மிகக் கவலை கொள்ள வேண்டிய அளவுக்கு நடந்தது. இப்போது அதைப்பற்றிக் கவலைபடவேண்டிய அவசியமில்லாத  நிலை ஏற்பட்டு விட்டது. அது பாட்டுக்கு அது நடைபெறுகிறது என்றாலும் அதனால் இன்று எங்களுக்கு எந்தவிதத் தொந்தரவும் இல்லை என்றாராம்.

அந்த ரஷ்யர் அதற்குப் பின் தந்தை பெரியாரையும் சந்தித்தார்; சங்கராச்சாரியார் கூறியது பற்றியும்  கேட்டார்.   அவர் இப்படி கேட்கும்போது  ஒரு  பார்ப்பனரும் கூட இருந்தார்.    அப்போது தந்தை பெரியார்அதற்குப்  பதில் சொன்னார். அது ஒரு நல்ல அளவுக்கு உண்மைதான். எப்படி என்றால், நம் நாட்டுக்குச் சுதந்திரம் வந்து  17 ஆண்டுகள் ஆகிறது. அது பார்ப்பனருக்கு வந்த சுதந்திரமே ஆகும்.

நம்மிலிருந்து விளம்பரமும் செல்வாக்கும் பெற்ற ஒரு கூட்டம் பார்ப்பனர்க்கு நிபந்தனையற்ற அடிமையாகக் கிடைத்துவிட்டது. அதனால் பார்ப்பனர்கள், இடையில் இழந்ததை யெல்லாம் திரும்பவும் பெற்றுக்கொண்டு மேலேற வசதி ஏற்பட்டது. -என்று தந்தை பெரியார் பதில் கூறினார்.

தமிழ் ஓவியா said...

மவுடீக எண்ணங்கள்

இந்தியா தன்னுடைய மத மவுடீகங்களைக் களைந்து விஞ்ஞானப்  பாதையில் திரும்ப வேண்டும். தேவையற்ற, பொருளற்ற எண்ணங்களும், சமூகப் பழக்கவழக்கங்களும்  இந்தியதாய்க்கு  சிறைச்சாலை எழுப்பியிருக்கின்றன. இவைகளே இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கின்றன.

இந்த மதக்கோட் பாடுகள் சமூக உறவு ஏற்படத் தடையாகவிருக்கின்றன. சமுதாய நடவடிக்கையில்  குறுகிய எண்ணத்தை  ஏற்படுத்தியிருக்கின்றன. ஒரு வைதீக ஆசார இந்து என்பவரின் மதமே, எதைச்  சாப்பி டுவது; எதைச் சாப்பிடக்கூடாது; யாருடன் உணவருந்தலாம்; யாருடன் இருந்து உண்ணக் கூடாது என்பதில் தானே,

மற்ற ஆன்மிகக் கருத்துக்களைவிட அக்கறை காட்டுவதாயிருக் கிறது? இந்த ஆசார இந்துவின் சமூக வாழ்வை சமயலறையின் சட்ட திட்டங்கள்தான் ஆதிக்கஞ் செலுத்திவருகின்றன ! முஸ்லீம்கள் இதுமாதிரியான பழக்கங்களிலிருந்து விடு பட்டாலும் அவனுக்கும் குறுகிய மதக்கோட்பாடுகளும்  சடங்கு களும்  இருக்கின்றன.

அவைகளை அவன் அடுத்தடுத்து அனுசரிக்க வேண்டும். இவைகளை எல்லாம் கடைப்பிடிக்கும் அவன் தன் மதம் போதிக்கும் பாடமான சகோதரத்துவத்தை  தருணத்தில் மறந்துவிடுகிறானே! -நேரு டிஸ்கவரி ஆஃப் இந்தியா

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாரின் பெண்ணுரிமைக் கருத்து உலகிற்கே தேவை!

 

பெண்ணடிமைத்தனம் என்பது இந்தியாவுக்கு மட்டும் உள்ள தனிச் சொத்தல்ல; உலகம் முழுவதுமே இது நீக்கமற நிறைந்திருக்கிறது.

சென்னை - திருவொற்றியூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் (10.5.2007) நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் கூறுகிறது.

குடும்பச் சொத்தை உத்தேசித்தும், பெண்களின் உடல் நலனை முன்னிட்டும் கருத்தடை அவசியம் என்பதைவிட, பெண்கள் விடுதலை அடையவும், சுயேச்சை பெறவும் கருத்தடை அவசியம் என்ற தந்தை பெரியார் அவர்களின் கருத்தின் அடிப்படையில், ஒரு குழந்தைக்குமேல் இன்னொரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதுபற்றி முடிவு செய்யும் உரிமை பெண்களுக்கு மட்டுமே தனி உ,ரிமையாக இருக்க வேண்டும் என்பதை இம்மாநாடு வலியுறுத்துகிறது. தேவைப்பட்டால் இதற்கான தனிச் சட்டத்தையும் அரசு இயற்ற வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது என்பதுதான் திருவொற்றியூர் தீர்மானமாகும்.

இந்தத் தீர்மானம் ஏதோ இந்தியாவுக்கு மட்டும் தேவைப்படும் என்று நினைத்து விடக் கூடாது; அயர் லாந்து நாட்டில் நிலவும் ஒரு சட்டத்தைப் பார்க்கும் போது திருவொற்றியூர் மாநாட்டுத் தீர்மானத்தின் முக்கியத்துவம் புலனாகும். ஒரு பெண் கருவுற்றிருக்கிறாள். மருத்துவர் அந்தக்கரு சரியாக உருவாகவில்லை என்கிறார். ஆனால், அய்ரிஷ் சட்டமோ அந்தக் கருவை மகப் பேறு காலம்வரை அப்பெண் சுமந்தே தீரவேண்டும் என்கிறது.

ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறாள். அதனால், கருவுற்றிருக்கிறாள். அவள் அந்தக் கருவை சுமந்திருக்கும் ஒவ்வொரு நாளும் அவளுக்கு நேர்ந்த கொடுமையை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. இன்னமும் அய்ரிஷ் சட்டம் அவளை அந்தக் கருவை சுமந்தேயிருக்குமாறு கூறுகிறது.

அவளுக்குத் தேவை கருக்கலைப்பு. ஆனால் எந்தப் பெண்ணையும் கருக்கலைப்பு செய்து கொள்ள அயர்லாந்து அனுமதிப்பதில்லை. ஆகவே, அவள் அந்நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயத் துக்கு ஆளாகிறாள். அதுவும் அவள் உடல் அதற்கு இடம் கொடுத்தால்தான். அப்படி நாட்டைவிட்டு வெளியேற முடியாமல் அங்கேயே இருந்துகொண்டு கருக்கலைப்புக்கான முயற்சிகளைச் செய்தார் என்றால், அவருக்கு 14 ஆண்டுகள் சிறைவாசம் என்கிற அச்சுறுத்தல் இருக்கிறது.

அவர் குற்றவாளி இல்லை. அவருக்கு கருவைக் கலைத்துக்கொள்ளும் மனித உரிமை உள்ளது.
இவ்வாறு பன்னாட்டு பொதுமன்னிப்பு சபையின் சார்பில் அயர்லாந்து அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மேற்கண்ட கோரிக்கையை இணையத்தின் வாயிலாக வலியுறுத்தும் மனிதநேயர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக்கொண்டுள்ளது.
நன்றியறிவிப்பில் குறிப்பிடும்போது, கருக்கலைப்புச் சட்டத்தில் மாற்றம் கோரியமைக்கு நன்றி. அதேபோல் பெண்கள் மற்றும் இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளை குற்றவாளிகளாக்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
அதுமட்டுமன்றி, அயர்லாந்தில் உள்ள பெண்கள் மற்றும் இளம்பெண்கள், சிறுமிகளுக்கான சுகாதாரக் கவனிப்பு  மற்றும் மருத்துவ உதவிகள் தேவைப்படு கின்றன. அவர்களுக்கான மருத்துவர்கள், செவிலியர் மற்றும் மருத்துவ ஆலோசகர்கள் தேவை! அயர்லாந்து அரசுக்கு மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி அழுத்தம் கொடுத்துள்ளோம்.

இக்கோரிக்கைகளை இப்பொழுதே உங்கள் நண்பர்களுடன் இணைந்து பகிர்ந்துவிடுங்கள்.

இவ்வாறு அயர்லாந்து அரசுக்கு கருக்கலைப்புச் சட்டத்தில் மாற்றத்தை செய்திட இணையத்தின் வாயிலாக வலியுறுத்தும் கோரிக்கையாக பன்னாட்டு பொது மன்னிப்பு சபை வெளியிட்டுள்ளது.

பன்னாட்டுப் பொது மன்னிப்பு சபையின் வேண்டுகோள் மிகவும் நியாயமானது.
அதே நேரத்தில் இது போன்ற கருத்துக்களை தந்தை பெரியாரும் திராவிடர் கழகமும் வெகு நீண்ட காலத் திற்கு முன்பிருந்தே கூறி வருவதை இந்த நேரத்தில் நினைவூட்டுகிறோம்.

ஆம், மற்ற மற்ற கருத்துக்களில் சிலருக்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம். பெண்ணுரிமைப் பிரச்சி னையில் தந்தை பெரியாரியல் என்பது உலகிற்கே தேவைப்படக் கூடியது என்பதில் அய்யமே இல்லை.

தமிழ் ஓவியா said...

அட நடராஜா!

சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த நடராஜக் கட வுளின் தாத்பரியம்பற்றி அள்ளி விடுவார்கள். இந்த நடராஜனை ஆகாய லிங்க வடிவில் வழிபடு கிறார்களாம். கோவில் என்றாலே, அது சிதம் பரம் நடராஜன் கோவி லைத்தான் குறிக்குமாம்.

நடராஜர் நடனக் கலை வல்லுநராம். 108 வகை நடனங்களை ஆடு பவராம். நடராஜர் சிலை கனகசபையில் உள்ளது. மூலஸ்தானத்துக்கும், இதற்குமிடையே திரை ஒன்றுள்ளது. அந்தத் திரைக்குப் பின்புறத்தில் தான் ஆகாய வடிவம் இருக்கிறது. அதிலிருந்து தான் நடராஜப் பெருமான் தோன்றி பதஞ்சலி, வியாக்கிரபாதர் என்னும் இருடிகளுக்காக நடனம் ஆடினாராம்.

அடேயப்பா, இப்படிப் பட்ட சிதம்பரம் நடராஜன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத கையா லாகாத்தனத்தை எண்ணி னால் வயிறு முட்ட சிரிப்புதான் மிஞ்சும்.

இதோ அந்த வரலாறு

முப்பத்தேழு ஆண்டு, பத்து மாதம், இருபது நாள்கள் (24.12.1648 முதல் 14.11.1686) வரை சிதம்பரம் கோவிலில் உள்ள நட ராஜர் சிலை சிதம்பரத்தி லிருந்து வெளியேறியி ருந்தது என்னும் உண்மை இப்போதுதான் தெரிய வந்துள்ளது. சிதம்பரத்தி லிருந்து எடுத்துச் செல் லப்பட்ட நடராஜர் சிலை, முதல் நாற்பது மாதங்கள் குடுமியான்மலையிலும்,  பின்னர் மதுரையிலும் இருந்திருக்கிறது. இந்தச் செய்தி, இப்போது திரு வாரூரில் கிடைத்திருக் கும் மூன்று வடமொழிச் செப்பேடுகளிலிருந்து தெரிய வருகிறது.

தில்லையை விட்டு நடராஜர் சிலை அகற்றப் பட்டதற்கு என்ன கார ணம் என்பது சரிவரத் தெரியவில்லை. இருந் தாலும், அக்காலச் சூழ் நிலைகளை வைத்து ஆராயும்போது, பீஜப்பூர் சுல்தானுடைய படையெ டுப்புக்கு பயந்து கொண்டோ அல்லது 1647 ஆம் ஆண்டு தமி ழகத்தின் வடபகுதியில் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தின் காரணமா கவோ சிதம்பரத்திலுள்ள நடராஜருக்குச் சரிவர பூஜை நிகழ்த்த முடியாது என்று நினைத்த சில பக்தர்கள் இப்படி நட ராஜர் சிலையை எடுத்துச் சென்றிருக்கலாம் என்று யூகிக்கலாம்.

கடைசியில் மதுரை யில் இருந்த நடராஜரை மீண்டும் சிதம்பரத்திற்குக் கொண்டு வந்தது, மராட் டிய மன்னன் சகசி காலத் தில்தான் என்றும் தெரி கிறது.

ஆதாரம்: தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர்

(இந்தச் செய்தி இத யம் பேசுகிறது இதழிலும் எடுத்துப் போடப்பட்டுள் ளது).

இப்பொழுது சொல் லுங்கள், இந்த சிதம்பரம் நடராஜக் கடவுள்பற்றி அளப்பதெல்லாம் அசல் கட்டுக்கதைகளா இல் லையா?      - மயிலாடன்

தமிழ் ஓவியா said...

மற்றுமொரு தொல்லை

மதங்களின் பெயரால், கடவுளின் பெயரால், ஜாதிகளின் பெயரால் மனிதனை மனிதன் பிய்த்துப் பிடுங்கித் தின்னும் இந்நாட்டில், ஒரு கவளம் சோற்றுக்கு வழியின்றி எச்சிகல்லை நாயோடு சண்டை போட்டுழலும் ஏழைமக்கள் பல்லாயிரக் கணக்காயுள்ள இந்நாட்டில் மத சம்பந்தமான தெய்வ சம்பந்தமான ஆடம்பரத் தொல்லைகள் வாரம் தோறும் மாதம்தோறும் வந்து கொண்டுள்ளன.

தீபாவளித் தொல்லை வந்து இன்னுந் தீர்ந்தபாடில்லை. முதலாளிகள் கோடியாடை களின்னும் மழுங்கவில்லை. பலகார பட்சணங்களின் மப்பு மந்தாரம் இன்னும் வெளியாகவில்லை.

மயிலாடுவதைக் கண்டு கோழியாடிய மாதிரி, தாமும் அம்முதலாளிகளைப் பின்பற்றி இமிடேஷன் கொண்டாட்டம் நடத்திய ஏழைகள், கூலிகள், அடிமைகள், பாட்டாளி மக்கள் அதனால் பட்டகடன் தொல்லைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை.

இந்த லட்சணத்தில் கார்த்திகை தீபம் என்று மற்றொரு தொல்லையும் சமீபத்தில் வந்துவிட்டது; தீபாவளி தொல்லையாவது இருந்த இடத்திலேயே மக்களை பிடித்தாட்டி விட்டு போய்விட்டது.

இதுவோ (அண்ணாமலை தீபமோ) கடவுளே (சிவன்) ஜோதி மயமாகக் கிளம்புகிறா ரென்பதாக அண்ணாமலை மண்திடலுச்சியில் பெரிய கொப்பரையில் குடம் குடமான நெய்யும், ஆயிரக்கணக்கான ஜவுளிகளும் போட்டு பயித்தியக்காரத்தனமாகத் தீயை வைத்துவிட்டு அந்த நெருப்பு கொழுந்து விட்டெரிவதைப் பார்த்து அரகரா சிவசிவா என்று கன்னத்திலும், கண்ணிலும் அடித்துக் கொள்வதும், அதன் சாம்பலையும், குழம்பையும் எடுத்துப் பூசிக் கொள்வதும், போனவர்களெல்லாம் நெய்யையும், ஜவுளிகளையும் குடங்குடமாக, மூட்டை மூட்டையாகக் கொப்பரையில் கொட்டி நெருப்புக்கிரையாகத் திருப்தியடைவதுமான களியாட் டத்தைக் காண 20, 30, 50, 100 செலவழித்துக் கொண்டு போய் அண்ணாமலையென்னும் மண் திடலையும், அதன் உச்சியிலெரியும் நெருப்பையும் ஜோதிமயமான கடவுளென்று வணங்கி ஆகாய விமான சகாப்தமாகிய இந்த 20ஆம் நூற்றாண்டிலும் நம்பிக் கொண்டும் திருவண்ணாமலை தீபம், கார்த்திகை தீபம், திருப்பரங்குன்றம் பெரிய கார்த்திகை தீபத்திருவிழா என்றெல்லாம் மக்கள் பாமரத் தன்மையாய் பிதற்றிக் கொண்டும் திரிவார்களானால் இவர்களுக்கு எக்காலந்தான் விமோசனமென்பது விளங்கவில்லை.

மனிதன் முதல் முதலாக நெருப்பைக் கண்டுபிடித்த காலத்தில் அக்காலக் காட்டுமிராண்டிகளுக்கு அது ஒரு தெய்வீகமாகத் தோன்றியிருக்கலாம்.

நெருப்பின் உதவியேயில்லாமல் ஒரு பொத் தானைத் தட்டினால் லட்ச தீபம் போல அதுவும் பட்டப்பகல் போலப் பிரகாசிக்கும் விளக்குகளைக் கண்டுபிடித்து அனுபவித்து வரும் விஞ்ஞான காலம் இதுவென்பதைச் சிந்தித்து, அத்தகைய காட்டு மிராண்டித்தனமான காரியங்களில் மக்கள் வீணாக ஈடுபட்டு அறிவையும், பொருளையும், காலத்தையும் பாழாக்காமல் இக்காலத்திய விஞ்ஞான விஷயங்களில் மூளையைச் செலுத்துவதுடன் இத்தகைய பாமரத்தனமான கார்த்திகை தீபம், திருவண்ணாமலை தீபம், திருப்பரங்குன்ற தீபம் சொக்கப்பானை கொளுத்தல் முதலிய தொல்லைகளை அறிவுள்ள மக்கள் விட்டொழிக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.
- பகுத்தறிவு - கட்டுரை - 11.11.1934

தமிழ் ஓவியா said...

சென்னை பெண்கள் சங்கத்தின் அறியாமைசென்னையில் இந்திய பெண்கள் சங்கம் என்பதாக ஒரு சங்கம் இருக்கின்றது. அது சென்னை செல்வவான்கள் பெண்களும் அதிகாரிகள் மனைவிகளும், வக்கீல் மனைவி களும், பெரும்பான்மையாகக் கொண்டதாக ஒரு சில ஸ்திரீகளைக் கொண்டதாக இருந்து வருகின்றது.

இந்த நாட்டு பணக்காரர்கள் ஜமீன்தார்கள் ஆகியவர் களுக்கு எப்படி உண்மையான விடுதலை தேவை இல்லையோ அதேபோல் இந்தப் பெண்களுக்கும் உண்மை யான விடுதலை தேவை இல்லை என்பதோடு தெரிவதற்குக் கூட முடியாத நிலைமையில் இருந்து வருகிறார்கள். இந்த லட்சணத்தில் இவர்கள் அரசியல் துறையில் பிரவேசித்து தோழர் சத்தியமூர்த்தியை ஆதரிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார்கள் என்றால் பெண்கள் சமூகத்துக்கு அதைவிட வெட்கக் கேடு வேறு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் ஆண்களும் பெண்களும் சரிசமமான சுதந்திரத்திற்கு அருகதையுடை யவர்கள் என்பதையே ஒப்புக்கொள்ளுவதில்லை என்பதோடு சாஸ்திரங்களிலும், புராணங்களிலும் பெண்களுக்குள்ள இழிவையும், தாழ்வையும் அப்படியே நிலைநிறுத்தப்பாடு படுகின்றவர் என்பது யாவரும் அறிந்ததேயாகும்.

உதாரணமாக தேவதாசி தொழிலை ஒழிக்கக் கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து தேவதாசித் தொழிலை ஆதரித்தார். தேவதாசிகள் இல்லாவிட்டால் தெய்வங்களுக்குச் சக்தி குறைந்துவிடும் என்றும், ஆகமங்கள் கெட்டு விடும் என்றும் பேசினார்.

இரண்டாவதாக - குழந்தைகளுக்கு கலியாணம் செய்யக்கூடாது என்றும், குழந்தை பருவத்திலேயே பிள்ளை பெற விடக்கூடாது என்றும் கொள்கையுள்ள சாரதாசட்டத்தை ஹ. ராமசாமி முதலியார் ஆதரித்து இந்தியா முழுவதும் சுற்றி அபிப்பிராயம் தெரிந்து வரும் காலத்தில் தோழர் சத்திய மூர்த்தி அவர்கள் குழந்தை கலியாணம் கூடாது என்று சட்டம் செய்தால் நான் அந்தச் சட்டத்தை மீறி என் மகனுக்கு கலியாணம் செய்து சிறை செல்லுவேன் என்று தைரியம் சொல்லி மற்றவர்களையும் குழந்தைக் கலியாணம் செய்யத் தூண்டினார்.

இப்படிப்பட்டவருக்குப் பெண்கள் சங்கம் ஆதரவு கொடுப்ப தென்றால் அச்சங்கம் பெண்கள் சமூகத்தின் உண்மையான பிரதிநிதித்துவம் பொருந்தியதா என்பதைக் கவனிக்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்கிறோம். - பகுத்தறிவு - வேண்டுகோள் - 04.11.1934

தமிழ் ஓவியா said...

8 தமிழர்களை கொலை செய்த சிங்கள ராணுவ அதிகாரிக்கு மரண தண்டனை கொழும்பு உயர்நீதிமன்றம் உத்தரவு

சனி, 27 ஜூன் 2015


கொழும்பு, ஜூன், 27_ இலங்கையில் 4 குழந் தைகள் உள்பட 8 தமிழர் களை கொலை செய்த ராணுவ அதிகாரிக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இலங்கையில் தமிழர் களுக்கு எதிராக இழைக் கப்பட்ட போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து, சர்வ தேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 8 தமிழர்களை, சுனில் ரத்னாயகே என்ற சிங்கள ராணுவ அதிகாரி கடந்த 2000ஆம் ஆண்டு பிடித் துச் சென்று அவர்களது கழுத்தை அறுத்து கொடூர மாக கொலை செய்ததாக புகார் கூறப்பட்டது.

இலங்கையில் ஈழத் தமிழர்கள் மத்தியில் மிகவும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத் திய இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. சுமார் 15 ஆண்டு களாக நடந்து வந்த இந்த வழக்கில், ராணுவ அதி காரி சுனில் ரத்னாய கேவுக்கு மரண தண் டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை அரசு வழக்குரைஞரும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலு மான சரத் ஜெயமன்னா வரவேற்றுள்ளார். ஒரு நம்பகமான விசார ணையை எங்களால் நடத்த முடியும் என்பது இதன் மூலம் தெளிவு படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

புத்த மதத்தினரை பெரும்பான்மையாக கொண்ட நாடான இலங் கையில், கடந்த 1976ஆம் ஆண்டுக்குப்பிறகு யாருக் கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. அங்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி கள் சுமார் 400 பேர், தண் டனை நிறைவேற்றத்துக் காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இனவாதம் மீண்டும் தலைதூக்குகின்றது

மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு சமூக வலைத் தளமான டுவிட்டர் பக் கத்தில் 10000 பேர் தமது ஆதரவினை தெரிவித்துள் ளனராம்.

கடந்த 2000ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் மிருசுவிலில் 8 தமிழ் மக்களைப் படுகொலை செய்த வழக்கில் குற்ற வாளியாக நிரூபிக்கப்பட்டு கொழும்பு மேல் நீதிமன் றத்தால் நேற்றுமுன்தினம் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிபர் சுனில் ரத்னாயக் கவுக்கு ஆதரவாக டுவிட் டர் தொடங்கப்பட்ட பக்கத்திற்கு முதல் நாளி லேயே 10 ஆயிரம் பேர் ஆத ரவு தெரிவித்துள்ளனர்.


'போர் வெற்றி வீரர் சுனில் ரத்னாயக்கவை பாதுகாப்போம்' என்ற பொருள்படும் ஆங்கில வார்த்தைகளால் தொடங் கப்பட்ட இந்தப் பேஸ்புக் பக்கத்திற்கே பல்லாயிரக் கணக்கான சிங்களவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளன ராம்!

படைவீரர்களைப் பாதுகாப்போம் என அரசு மீண்டும் மீண்டும் கூறி வரும் நிலையில், சிங்கள மக்கள் மத்தியில் படை வீரர்கள் தொடர்பில் நிலவும் எண்ணத்தைப் பிரதிபலிப்பதாகவும் இந்த ஆதரவு அமைந்துள்ள தாக டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டவர் கள் குறிப்பிட்டுள்ளனர். ஈழத் தமிழர்மீது சிங்களர்களின் இனவாதம் மீண்டும் தலைதூக்குகின் றது என்ப தற்கு சான்றாக இதுவும் ஒன்றாக அமைந் துள்ளதாக சமூக வலைத் தள பதிவர்கள் தமது கருத் துக்களை பதிவிட்டிருக் கிறார்கள்.Read more: http://www.viduthalai.in/headline/104041-8-----------.html#ixzz3eHUPqUFO

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாருக்குப் பிறகு - அறக்கட்டளைகளைக் காப்பாற்ற வீரமணியால்தான் முடியும்:

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியால் பாதுகாக்கப்பட்ட  அன்னை மணியம்மையாரின் கடிதம் உறுதி செய்தது வரலாற்றை சுட்டிக்காட்டி அய்.ஓ.பி. முன்னாள் இயக்குநர் நமச்சிவாயம் பெருமிதம்சென்னை, ஜூன் 27_ தந்தை பெரியாருக்குப் பிறகு, அறக்கட்டளைகளைக் காப்பாற்ற வீரமணியால்தான் முடியும் என்று அன்னை மணியம்மையார் அவர்கள் கடிதம் எழுதி, அப்பொழுதைய இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இயக்குநர் நமச்சிவாயம் அவர்களிடம் வழங்கி, பாதுகாக்க சொல்லியதைப்பற்றி சுட்டிக் காட்டினார் நமச்சிவாயம் அவர்கள்.

பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளரும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மேலாளரும், வங்கி அதிகாரிகள் அமைப்பின் இணைப் பொதுச் செயலாளருமான வீ.குமரேசன் அவர்களின் வங்கிப் பணி நிறைவு, நன்றி செலுத்தும் விழா 25.6.2015 அன்று மாலை பெரியார் திடல் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது. இவ்விழாவில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேனாள் செயல் இயக்குநர் நமச்சிவாயம் பேசும்போது குறிப்பிட்ட தாவது:

தந்தை பெரியாருக்கும், எங்களுக்கும் மிகுந்த தொடர்பு உண்டு. அது நிறைய பேருக்குத் தெரியாது; தந்தை பெரியார் அவர்கள் நம்முடைய வங்கியிலே கதீட்ரல் கிளையில் ஓர் உறுப்பினராக இருந்தவர்கள். தந்தை பெரியார் விடுதலை பத்திரிகை பெரிய பத்திரிகை ஆவதற்காக வேண்டிய மெஷினை நாம் தான் இறக்குமதி செய்து கொடுத்தோம். அதுமட்டு மல்ல. மணியம்மையார் அம்மாவின் பெரிய நம்பிக்கைக்கு நாம் பாத்திரமானோம். மணியம்மையார் அம்மாவும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு வைத்திருந்தார்கள்.

தந்தை பெரியாருக்கு அப்புறம் யார் என்று சின்ன சந்தேகம் வந்தது. யாரை நிய மிப்பது என்று மணியம்மையார் அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அவர்கள் ஒரு சீட்டில் எழுதி கவரில் போட்டு எனக்கு பின்னால் இவர்கள் என்று சொல்லி வேறு யாரிடமாவது கொடுத்திருக்கலாம்.

என்னிடம் கொடுத்து நம்முடைய இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பெட்டகத்தில் (சேஃப்டி பாக்சில்) வைத்திருக்குமாறு சொன்னார்கள். அதில் யார் பெயர் இருந்தது என்று எனக்கும் தெரியாது. பெட்டகத்தில் வைத்திருங்கள். நான் போனபிறகு அதைத் திறந்து பாருங்கள் என்று கூறிவிட்டார். ஆகவே, அதை நம்முடைய வங்கியிலே சேஃப்டி பாக்சில் பத்திரமாக வைத்துவிட்டோம். அவர்கள் இறந்தபிறகு அதை எடுத்து ஒரு நாலைந்து பேருக்கு முன்னால் பிரித்துப் பார்த்ததால், வீரமணி அவர்களுடைய பெயர் இருந்தது. அவருக்கு அப்பொழுதே தெரியும், இவ் வளவு பெரிய டிரஸ்டை காப்பாற்ற வேண்டுமானால், தந்தை பெரியாருக்குப் பிறகு வீரமணி அவர்களால் தான் முடியும்  வேறு யாராலும் முடியாது என்று.

தமிழ் ஓவியா said...

ஆகவே, தந்தை பெரியாருக்கும் வங்கிக்கும் பெரிய தொடர்பு இருந்தது. அதிலே முழுமையாகச் சொல் வதானால், பெரியார், பெரியாருடன் வாழ்ந்துள் ளோம்.

ஆனால், இங்கே நடக்கின்ற நிகழ்வுகளைப் பார்க்கின்றபோது, யாராவது பணி ஓய்வு பெற்றால் வழியனுப்புகின்ற விழாவாகத்தான் செய்வார்கள். எனக்கும்கூட இதே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலு வலர்கள் சங்கம் எல்லாம் சேர்ந்து பெரிய அளவில் செய்தார்கள். ஆனால், தனக்கு உதவியவர்களை அழைத்து அவர்களுக்கு மரியாதை செய்வது என்பது இதுவரைக்கும், நான் கேள்விப்படாதது. குமரேசன் அவர் சார்ந்த இயக்கத்தை மறக்காமல் ஆசிரியர் அவர்களை அழைத்துள்ளார். அதுமட்டு மன்றி இந்த விழாவை பெரியார் திடலில் நடத்து கிறார். மிகப்பெரிய தன்னம்பிக்கை உள்ளவர்கள், ஆழ்ந்த சிந்தனை உடையவர்கள் என்பதை இதி லிருந்து பார்த்துவிடலாம். எனக்கும், குமரேசன் அவர்களுக்கும் வங்கி வழியாகத்தான் தெரியும். இருந்தாலும் என்னை இந்த விழாவுக்கு வரவேண்டும், உங்களை, நான் போற்ற வேண்டும் என்று சொன் னவுடனே அதிர்ச்சி அடைந்தேன். நான் ஆடிப் போய்விட்டேன் முதலில்.  நம்மை எதற்காக கூப்பிடு கிறார்கள் என்று முதலில் தெரியவில்லை.

நான் முதல் சம்பளம் வாங்கியபோது என்னுடைய பள்ளிக்கூடத்து ஆசிரியரிடம்தான் கொடுத்தேன். பேராசிரியர் அன்பழகன்கூட ஒரு முறை ஆசிரியர்கள் ஸ்டிரைக் நடந்துகொண்டிருந்தபோது சொன்னார். கூட்டத்தில் சொன்னாராம். நீங்கள் எல்லாம் படிக் கும்போதே பிள்ளைகளுக்குச்  சொல்லிக் கொடுத் திருந்தீர்கள் என்றால் நமச்சிவாயம்போல் முதல் சம்பளத்தை உங்களுக்கு அனுப்பிவிடுவார்கள். ஒவ் வொரு ஆசிரியரும் பெரிய பணக்காரர் ஆகியிருக்க லாம் என்று சொன்னார். அதுமாதிரி  பெரிய மரியாதைக்கு உரியவர் நம்முடைய ஆசிரியர் வீரமணி அவர்கள்.

தந்தை பெரியாருக்கும், நம்முடைய வங்கிக்கும் இருக்கின்ற ஒரு பெரிய தொடர்பு அதிகமாக இருந்த காரணத்தால், குமரேசன் இந்த இடத்தைத் தேர்ந் தெடுத்ததும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆகவே, குமரேசனை நாம் பாராட்டியாக வேண்டும். ஆனால், நம்மையெல்லாம் அழைத்து பாராட்டி இருக்கிறார்.

பாராட்டுதலுக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். நான் வேறு எந்த விதத்திலும் அவருக்குக் கடமைப்பட்டவன் அல்லன். ஆனால், அவர் வங்கியிலிருந்து ஓய்வு பெற்று, இந்த கழகப் பணிகளையும், மற்றும் ஏனையத் தொண்டுகளையும் செய்து, சிறப்பான வாழ்க்கையை வாழ வாழ்த்துகிறேன். _ இவ்வாறு நமச்சிவாயம் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...

ஏழுமலையான் சக்தி வெத்து வேட்டுதானா? கோயில்மீது விமானம் பறக்க தடையாம்!

சனி, 27 ஜூன் 2015

திருமலை, ஜூன் 27_ திருப்பதி ஏழுமலை யான் கோயில் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ய்பு இருப்பதாக மத்திய புலனாய்வு துறை பலமுறை எச்சரிக்கை செய்துள்ளதாம்!. கடந்த 3  ஆண்டுகளுக்கு முன் திருப்பதியை ஆய்வு செய்த எம்பிக்கள் குழு, ஏழுமலையான் கோயில் மீது விமானம் பறக்க தடை விதிக்க பரிந்துரை செய்தனர். இந்நிலையில் பாதுகாப்பு கருதி கோயில் மீது விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்த தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...

ஈழத் தமிழர்களுக்கு எதிரான உச்சக் கட்டப் போரில் வெள்ளைக் கொடியுடன் சரண் அடைந்தவர்கள் கொல்லப்பட்டது ஏன்?

சனி, 27 ஜூன் 2015
 

ஜெனீவா மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் மனைவிகள் கண்ணீர்ப் பேட்டிஜெனீவா, ஜூன் 27_ இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான உச்சக்கட்டப் போரில் வெள்ளைக் கொடியுடன் சரண் அடைந்தவர்களை இலங்கை சிங்கள ராணுவம் கொன்றது ஏன்  என்று ஜெனீவா நகரில் நடைபெற்ற அய்.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் மனைவிகள் கண்ணீர் மல்க கேள்வி கேட்டனர்.

அய்.நா. மனித உரிமைப் பேரவையின் 29ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் கடந்த 15ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. அடுத்த மாதம் (ஜூலை) 3ஆம் தேதி முடிய இந்த கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் இலங்கையில் 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலி களுக்கு எதிரான உச்சக் கட்டப்போரில் மனித உரிமைகள் மீறப்பட்டது தொடர்பாக இலங்கை அரசு மீது பல்வேறு நாடு களின் உறுப்பினர்களும் கடுமையாக குற்றம் சாட் டினர்.

அவர்கள் பேசும் போது: வெள்ளைக்கொடி யுடன் சரண் அடைந்த விடுதலைப்புலிகள் இயக் கத் தலைவர்கள் புலித் தேவன், நடேசன், மல ரவன், விடுதலைப்புலிகள், அப்பாவித் தமிழர்கள் உள்ளிட்ட 18 ஆயிரம் பேரின் நிலை என்ன ஆயிற்று? அவர்கள் உயி ருடன் இப்போது இருக் கிறார்களா? என்பதை சொல்ல இலங்கை அரசு ஏன் மறுக்கிறது? என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

முன்னதாக பசுமை தாயகம், இங்கிலாந்து தமிழர் பேரவை, அமெ ரிக்க தமிழர் அரசியல் செயற்பேரவை ஆகிய அமைப்புகள் இணைந்து இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள் குறித்த சிறப்பு இணை கூட்டத்தை நடத்தின.
கூட்டத்துக்கு இங்கி லாந்து முன்னாள் எம்.பி. யும், தமிழர்கள் நீதிக்கான நல்லெண்ண தூதுவரு மான லீ ஸ்காட் தலைமை தாங்கினார்.

சர்வதேச மனித உரி மைகள் சட்ட நிபுணரும், இங்கிலாந்து வழக்குரை ஞர்கள் பேரவையின் மனித உரிமை குழு தலை வருமான ஜெனைன் கிறிஸ்டி பிரிமெலோ கியூசி, தமிழக வழக்குரை ஞர்கள் சமூக நீதி பேரவை தலைவர் க.பாலு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இலங்கை போரின் போது வெள்ளைக்கொடி யுடன் சரண் அடைந்த விடுதலைப்புலிகள் இயக்க தலைவர்களான மலரவன் மனைவி சுசிலாம்பிகை, புலித்தேவன் மனைவி குறிஞ்சி மற்றும் நடேச னின் மகன் உள்ளிட்ட பல ருடைய உறவினர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பாக அய்.நா. சபையில் செப் டம்பர் மாதம் இறுதி அறிக்கை தாக்கல் செய் யப்பட இருக்கிறது. அப் போது அய்.நா.வின் நேரடி சாட்சிகளாக உள்ள இந்த மூவரின் சாட்சியங்களால் இலங்கை அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என்று கருதப்படுகிறது.

மலரவன் மனைவி சுசிலாம்பிகை கண்ணீர் மல்க ஜெனீவா அய்.நா. வளாகத்தில் கூறும்போது, 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி முல் லைத்தீவு வட்டுவாய்க்கால் பகுதியில் பல போராளி களுடன் எனது கணவரை சரணடைய வைத்தேன். அதன்பிறகு 6 ஆண்டுகள் ஆகியும் அவரைப்பற்றி எந்த தகவலும் இல்லை. இலங்கை ராணுவம் எந்த பதிலையும் தெரிவிக்க மறுக்கிறது என்றார்.

புலித்தேவனின் மனைவி குறிஞ்சி கூறும் போது, இலங்கை அரசு அனுமதியுடன் சர்வதேச நாடுகளுக்கு தெரிவித்த பிறகு ராணுவ கட்டுப் பாட்டு பகுதிக்குள் புலித் தேவன், நடேசன் உள் ளிட்ட போராளிகள் வெள்ளைக்கொடியுடன் சென்று சரண் அடைந் தனர். அதன்பிறகு அவர் களின் உயிரற்ற உடல் களைத்தான் இலங்கை மீடியா காட்டியது. வெள்ளைக்கொடியுடன் சரண் அடைந்தவர்கள் என்ன காரணத்துக்காக கொல்லப்பட்டனர் என்பதற்கு பதில் கிடைக்க வேண்டும் என்றார்.

தமிழ் ஓவியா said...

குஜராத் : பாலியல் வன்முறை மற்றும் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்தது நீதிமன்றம்

சனி, 27 ஜூன் 2015


அகமதாபாத் ஜூன் 27_ குஜராத் கலவரத்தில் சொந்தப் பகைக்காக பாலி யல் வன்புணர்வு செய்து கொலை செய்த குற்ற வாளிகளுக்கு எதிராக சாட்சிகள் இல்லாததைக் காரணம் காட்டி மூன்று குற்றவாளிகளையும் அகமதா பாத் நீதிமன்றம் விடுதலை செய்தது.   குஜராத் மாநிலத்தில் மோடியின் ஆட்சியின் போது 2002-ஆம் ஆண்டு மதக்கலவரம் நிகழ்ந்தது, இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் படு கொலை செய்யப்பட்ட னர். இஸ்லாமியர்களின் வசிப்பிடம் தொழில் நிறு வனம் மற்றும் சொத்துக் கள் சேதப்படுத்தப்பட் டன. இன்றுவரை இந்த கலவரத்திற்காக நீதி கிடைக்காத பட்சத்தில் முதன்மைக் குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப் பட்டு விட்டனர். கடந்த ஆண்டு மோடி, அமித் ஷா போன்றவர்களை சிறப்பு புலனாய்வு நீதி மன்றம் இந்தவழக்கில் இருந்து விடுவித்தது.   இதனை அடுத்து கலவர வழக்கில் நேரடித் தொடர்புடையவர்கள் தற்போது விடுவிக்கப் பட்டு வருகின்றனர்.  கலவரத்திற்கு தொடர் பில்லாத ஆனந்த மாவட் டத்தில் ஆடே என்ற ஊரில் நிலத் தகராறு தொடர்பாக அங்குள்ள முஸ்லீம் குடும்பத்தின் மீது அந்த ஊரில் உள்ள சிலர் வன்மம் வைத்திருந் தனர். கோத்ரா சம்பவம், அதைத் தொடர்ந்து அகமதாபாத் வரை கலவரம் பரவியதைச் சாதகமாகக் கொண்டு அந்த ஊரைச் சேர்ந்தவர் கள் முஸ்லீம் குடும்பத்தி னரைக் கொலை செய் தனர், முஸ்லீம் குடும்பப் பெண்களான ஆயிசா, நூரி ஆகியோரை அன்கூர்  படேல் மோகன் படேல், நிகுல் படேல் போன்றவர் கள் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய் தனர், நூரியின் சகோதர ரான காதர் என்பவரை உயிருடன் எரித்துக் கொலை செய்தனர். சம்பவம் நடந்த பிறகு அனைத்து பிணங்களை யும் வீட்டிற்குள் போட்டு எரித்து விட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஆடே ஊரைச் சேர்ந்த 20 பேர்கள் மீது சிறப்பு புலனாய்வுத்துறை வழக் குப் பதிவு விசாரணை செய்து வந்தது. கடந்த ஆண்டு 14 பேர், சாட் சிகள் இன்றி விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேரடித் தொடர்புடைய அங்கூர், மோகன், நிகுல் ஆகி யோரை அகமதாபாத் நீதி மன்ற நீதிபதி எ.எஸ்.பட்டு விடுதலை செய்தார். தனது தீர்ப்பில் அவர் கூறியுள்ளதாவது, சிறப்புப் புலனாய்வுத்துறை குற்றம் தொடர்பானவர்கள் மீதான சான்றுகளை வைக்கவில்லை. மேலும் சாட்சிகள் யாரும் இவர் கள் இந்தச் சம்பவத்தில் தொடர் புடையதாகக் கூறவில்லை. ஆகையால் இவர்கள் அனைவரும் இந்த வழக் கில் இருந்து விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று கூறியிருந்தார்.

தமிழ் ஓவியா said...

நீங்கள் விடும் செமிக்காத ஏப்பம் அதை என் முகத்தில் விடாதே!யோகாவை யாரும் தடை செய்யக் கோரவில்லை. யார் யாருக்கு என்ன முடியுமோ அப்படி மகிழ்ச்சியாக வாழலாம்.

ஆனால், இப்போது மோடி நடத்திய யோகா நாடகம், தனது மத்திய தர வர்க்க வாக்காளர் களிடையே கிழியத் தொடங்கும் நல்லாட்சி எனும் முகமூடியை ஒட்ட வைக்க நடத்தப்படும் ஒட்டுப் பிளாஸ்திரி வேலை என்பதால் இதை நாம் எதிர்க்க வேண்டி யிருக்கிறது.

ஏழைகளை இன்னும் விலக்கி வைக்கிற ஒரு பொருளாதார திட்டத்தை முன்னிறுத்தும் மோடி, பத்து பதினைந்து பணக்காரர்களை இன்னும் பணக்காரர்களாக்குவதே வளர்ச்சித் திட்டம் என்று சொல் லும் மோடி, ஏழைகளுக்கு பாது காப்பாக இருக்கிற நலத்திட்டங் களை எல்லாம் இழுத்து மூடிக்கொண்டிருக்கும் மோடி, தனது இந்துத்துவ அடியாட்கள் அடிக்கும் லூட்டிகளை அமைதி யாக இருந்து ஆமோதிக்கும் மோடி, கலர் கலராக உடையணிந்து நம்மைக் கேவலப்படுத்தும் மோடி, இந்தியாவில் இருக்கும் அறிவு சார்ந்தஅரசு நிறுவனங்களில் தனது ஜால்ராக்களை முக்கியஸ்தர் களாக்கி அவற்றை நீர்த்துப் போகச்செய்யும் மோடி, ஆதிவாசி, தலித், முஸ்லீம், கிறிஸ்தவர், ஹிந்தி அல்லாத பிற இந்திய மொழி பேசுபவர், விவசாயி, கைவினைஞர், மீனவர், பாலியல் சிறுபான்மை யினர், மாற்றுத் திறனாளி என்று எல்லோரையும் அந்நியனாக்கும் மோடி, யோகா என்ற பெயரில் நம்மை வைத்து காமெடி பண்ணுவ தாக சுயமரியாதை உள்ள எனக்குப் படுகிறது.

அதனால் நான் இந்த யோகா நாடகத்தை எதிர்க்கிறேன். சிலருக்கு வடக்கிருத்தல் உசிதம் என்றால் நான் அதையும் வரவேற்பேன்.

ஆன்மா சுத்தி அடையும், அதனால் கரண்ட் கம்பியில் தொங்க விருப்பமென்றாலும் நான் தடுக்க மாட்டேன். எனது பெருமை என்று என்னை உங்கள் விளையாட்டில் மட்டும் தயவு செய்து சேர்க்காதீர்!
இந்திய ஞானமரபு என்பது நீங்கள் விடும் செமிக்காத ஏப்பம். அதை என் முகத்தில் விடாதே என்று சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது.

(முக நூலிலிருந்து  குடந்தை கருணா)

தமிழ் ஓவியா said...

இனியாவது போகாதே!

அட முட்டாள்களா! எதற்காகக் கோயிலுக்குப் போகிறீர்கள்? அங்கே உன்னைப் பார்ப்பான் வெளியே நில், உள்ளே வரக்கூடாது என்கின்றானே! உனக்குமானமில்லையா?ரோசமில்லையா? அங்கு இனியாவது போகாதே!
விடுதலை, 20.11.1969

தமிழ் ஓவியா said...

அறிவு ஆசான் தந்தை பெரியாருக்கு யுனெஸ்கோ விருது வழங்கிய நாள்- இந்நாள்!

1970 ஜூன் 27 நினைவிருக்கிறதா? அன்று ஒரு பொன்னாள் - அறிவு மலர்ந்து மணம் வீசிய நாள் -அன்றுதான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களுக்கு அய்.நா.வின் யுனஸ்கோ தேடி வந்து விருது அளித்து பெருமை என்னும் விருதினை அணி கலனாக பூண்டநாள்!
பெரியார் - புதிய உலகின் தொலை நோக்காளர்
தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ்
சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை
அறியாமை, மூடநம்பிக்கை,
பொருளற்ற பழக்க வழக்கங்கள் மற்றும்
கீழான நடவடிக்கைகளுக்கு கடும் எதிரி  என்ற விருது வழங்கப்பட்ட நாள்! மத்திய அமைச்சர் திரிகுணசென் தலைமையில், தமிழக முதல்வர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களால் அறிவு ஆசான் பெரியாரின் திருக்கரங்களில் அந்த விருது வழங்கப்பட்டது.

குறிப்பு: இத்தகு பெருமைமிக்க பாராட்டுரைகளை ஆய்வு செய்து கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கடந்த ஆண்டு நான்கு நாள்கள் கட்டணத்துடன் கூடிய ஆய்வு சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இவ்வுரைகள் தொகுக்கப்பட்டு சிறந்த ஆய்வு நூலாக விரைவில் வெளிவர உள்ளது.