Search This Blog

3.6.15

பெரியார் பிரிவினைவாதியா?

திராவிடர் கழகத்தைத் தடை செய்ய முதலமைச்சர் தனிப் பிரிவிடம் மனுவா? கேள்வி
பைத்தியக்காரர்கள்கூட அந்தப் பிரிவில் மனு கொடுக்கலாமே!
கழகத் தலைவர் பதில்சென்னை, ஜூன் 3_ திமுக தலைவர் கலைஞர் தமது 92 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அவரை வரவேற்று, வழி அனுப்பிய பிறகு, தந்தை பெரியார் நினைவிடம் அருகில் செய்தியாளர்களுக்கு தமிழர் தலைவர் அளித்த பேட்டி வருமாறு:

செய்தியாளர்: கலைஞர் பிறந்த நாள் செய்தியாக...?
தமிழர் தலைவர்: மானமிகு சுயமரியாதைக்காரர் என்று தன்னை அறிவித்துக் கொண்டுள்ள முத்தமி ழறிஞர் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்கள் இன்று 92 ஆம் ஆண்டு அகவையில் அடி எடுத்து வைக்கிறார். உழைப்பே அவரது தனித்தன்மை. எதிர்நீச்சல் அவரது பெருமை. வெற்றியா? தோல்வியா? என்பதைப்பற்றிக் கவலைப்படாமல் களத்தில் நின்று கடைசிவரை போராடும் சிப்பாயாக, போராளியாக உள்ள அவர் ஈரோட்டு குருகுலத்திலே பயின்று அறிஞர் அண்ணாவிடம் நல்ல அளவுக்கு பயின்று வளர்ந்துள்ளார்கள். மதவாதம், ஜாதீயவாதம் தலைதூக்குகின்ற இந்தக் காலகட்டத்தில் திராவிடர் இயக்கத்தினுடைய பணி என்பது மிகவும் முக்கியமானது. திராவிடத்தால்தான் எழ முடிந்தது. காரணம் திராவிடத்தை வீழ்த்த வேண்டும் என்று சொல்லக்கூடிய பன்னாட்டு படை யெடுப்பு வெகுவேகமாக தமிழகத்தையும்  குறிவைக்கும் இந்தக் காலகட்டத்தில், அவரைப்போன்ற தலைவர் களின் வழிகாட்டுதலும், மூத்த வயதில் உள்ள அரசிய லில் பொதுவாழ்க்கையில் உள்ள தலைவருமாகிய அவர் பல்லாண்டு காலம் வாழ்வதன்மூலமாக தமிழ் இனத் துக்கு நல்ல வழிகாட்ட வேண்டும் என்று கூறி ஒப்பற்ற வாழ்க்கையை வாழ்ந்து, தந்தை பெரியார் அவர்கள் 95 ஆண்டு காலம் தாண்டி வாழ்ந்தார்கள் என்று சொன்னால், நூற்றாண்டையும் தாண்டி கலைஞர் அவர்கள் வாழ்வார்கள் என்று வாழ்த்துகிறோம்.

செய்தியாளர்: 92 ஆம் பிறந்தநாளில் கலைஞர் குறித்து...?
தமிழர் தலைவர்: மாணவராக இருந்து பயிற்சி பெற்ற அவருடைய வாழ்வில் புதுமை என்னவென்றால், இந்தியாவிலேயே 80 ஆண்டுகள் தொடர்ந்த பொது வாழ்க்கை என்பதில் எதிர்நீச்சல் அடித்து வெற்றியா? தோல்வியா? என்பதைப்பற்றிக் கவலைப்படாமல் எத்தனை வசவுகளானாலும் அவைகளையெல்லாம் புகழ்மாலைகளாக ஏற்றுக்கொண்டு, தொடர்ந்து ஓய்வறியாது உழைக்கக்கூடிய அந்த உழைப்பின் உருவம் வாழ்க! நூற்றாண்டையும் தாண்டி வாழ்க! வாழ்க!! என்று திராவிடர் கழகம், தாய்க்கழகம் வாழ்த்துகிறது.

செய்தியாளர்: சென்னை அய்அய்டியில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்துக்கு தடைவிதித்துள்ள தற்குப் பிறகு, தமிழகத்தில் உள்ள திராவிடர் கழகத் துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சார்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உங்கள் கருத்து...?
தமிழர் தலைவர்: முதலமைச்சர் தனிப்பிரிவில் பைத்தியக்காரர்களும் சென்று மனு கொடுக்கிறார்கள் என்பதை உங்கள்மூலம் தெரிந்துகொண்டிருக்கிறோம். காரணம், ஏற்கெனவே ஒரு பார்ப்பனர் ராஜபாளையத்தைச் சார்ந்த ஆடிட்டர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டு, தடைசெய்வது போன்ற வழக்குகளை ஏற்க முடியாது என்பதை விசாரித்து வழக்கை தள்ளுபடி செய்திருக்கின்ற வரலாறு தமிழக அரசிடம் பதிவாகி இருக்கிறது. ஆகவே, பைத்தியக்காரர்களைப்பற்றி நாங்கள் கவலைப்படுவது இல்லை. ஆகவே, எங்கள் பயணம் தொடரும்.
செய்தியாளர்: தொடர்ந்து பெரியாருக்கு எதிரான கருத்துகள் அதிக அளவில் பரப்பப்பட்டு வருகிறதே...? இதற்கு காரணம் என்ன?


தமிழர் தலைவர்: காரணம் என்னவென்றால், பெரியார்தான் களத்தில் நிற்கக்கூடிய கொள்கையாளர் என்பதை எதிரிகள் உணர்ந்திருக்கிறார்கள். இது பெரியார்_ அவருடைய வாழ்க்கைக்குப் பிறகும் அவர் வாழ் கிறார், வெற்றி பெறுகிறார் என்பதற்கு நல்ல அடையாளம்.
செய்தியாளர்: பெரியாரை பிரிவினைவாதி என்று விமர்சனம் செய்கிறார்களே?
தமிழர் தலைவர்: ஆம். ஜாதியைப்போட்டு, பூணூலைப்போட்டுக் கொண்டு இருக்கிறவர்கள் எல்லாம் மனித சமத்துவவாதிகள். வெறும் முதுகோடு  இருக்கவேண்டும்; எல்லோரும் ஒரே மாதிரி இருக்க வேண்டும், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண் டும் என்று சொல்பவர் எல்லாம் பிரிவினைவாதி பொருள் என்றால், நிச்சயமாக பெரியார் பிரிவினைவாதிதான்.
செய்தியாளர்: அய்.அய்.டி பிரச்சினையில் தொடர்ந்து தமிழக அரசு மவுனம் காத்து வருவது மட்டுமல்லாமல், தேசிய தாழ்த்தப்பட்டவர்கள் பழங் குடியினருக்கான ஆணையம் நோட்டீசு அனுப்பியும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையையும் அய்.அய்.டி. மேற்கொள்ளவில்லை. நேற்று நடைபெற்ற பேச்சு வார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது. இதுகுறித்து உங்களின் கருத்து...?
தமிழர் தலைவர்: அய்.அய்.டி. என்பது அய்யர், அய்யங்கார் டெக்னாலஜி அமைப்பு. எனவே, எளிதில் அது அசையாது. மக்கள் அசைய வைப்பார்கள்.

_இவ்வாறு செய்தியாளர்களுக்கு தமிழர் தலைவர் அவர்கள் அளித்த பேட்டியின்போது குறிப்பிட்டார்கள்.
                      ----------------------------”விடுதலை” 03-06-2015Read more: http://www.viduthalai.in/e-paper/102625.html#ixzz3c0cfGtu9

38 comments:

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவாளர் கடமை


நாடு, மொழி, கடவுள், மதம், ஜாதி என்ற எந்தப் பற்றுமின்றி மானிடப் பற்றுடன், அறிவைக் கொண்டு சிந்தித்துச் செயல்புரிவதே பகுத்தறிவாளர் கடமையும், பொறுப்புமாகும்.
_ (உண்மை, 15.9.1976)Read more: http://www.viduthalai.in/page-2/102627.html#ixzz3c0hqOdxV

தமிழ் ஓவியா said...

ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கின் கதை!

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாட்டிறைச்சி தொடர்பான விவகாரத்தில் மீண்டும் குழப்பமான பதிலைத் தந்துள்ளார். மாட்டிறைச்சி விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ராஜ்நாத் சிங், மாட்டிறைச்சியை உண்பதற்கு தடை கிடையாது என்றும் பதிலளித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...

மோடி ஆட்சி ஏற்று ஓராண்டு முடிவடைந்ததைத் தொடர்ந்து அதிகாரமில்லாத கேபினெட் அமைச்சர்கள் மோடியின் புகழைப்பாட பத்திரிகையாளர் சந்திப்பைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், தன் பங்கிற்கு பத்திரி கையாளர் சந்திப்பை தனது அலுவலகத்தில் நடத்தினார். பத்திரிகையாளர் சந்திப்பு துவங்கிய உடனே அவர் எப்போதும் போல் இந்த ஓராண்டு ஊழல் இல்லாத ஆண்டாக மாற்றியுள்ளோம் என்று கூறினார். மேலும் அவர், தான் ஒரு மத்திய அமைச்சர் என்பதை மறந்து மட்டைப்பந்து விளையாட்டு வர்ணனையாளர்போல் தொடர்ந்து பேச ஆரம்பித்தார். அவர் கூறியதாவது:

நாங்கள் நல்ல மட்டைப்பந்து விளையாட்டு வீரர்கள்; எதிர் தரப்பில் பல்வேறு யூகங்கள் வகுத்து பந்து வீசு கின்றனர். ஆனால் நாங்கள் யாரும் அவுட் ஆகவில்லை; எங்களுக்கு ஸ்கோர் முக்கியமல்ல; விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொள்வதுதான் தற்போது எங்களின் முக்கிய வேலை என்று கூறினார். அதே நேரத்தில் இந்த ஓராண்டில் நாங்கள் கடந்த ஆட்சியின் குறைபாடுகளைச் சரிசெய்யவே நேரமிருந்தது, இருப்பினும் மோடி பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார் என்றார். இந்த நிலையில் கூட்டதில் இருந்த பத்திரிகையாளர் ஒருவர் மாட்டிறைச்சி தொடர்பான விவகாரத்தில் நாடாளு மன்ற விவகாரத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் அனைவரும் பாகிஸ்தான் செல்லவேண்டும் என்று பேசியது குறித்து கேள்வி எழுப்பினார். மிகவும் உற்சாகமாக பேசிக்கொண்டு இருந்த ராஜ்நாத் சிங் மாட்டிறைச்சி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியதும் மனிதர் சீறி விழுந்தார். இந்த நிலையில் மீண்டும் அந்த பத்திரிகையாளர் தொடர் கேள்வி கேட்டார்.

உங்களில் ஓர் அமைச்சர் மாட்டிறைச்சி சாப்பிடவேண்டும் என்பவர்கள் பாகிஸ்தான் செல்லச் சொல்கிறார். ஆனால் உங்கள் அருகில் உள்ள அமைச்சர் நானும் மாட்டிறைச்சி சாப்பிடுபவன், அது என்னுடைய உரிமை என்று கூறி னாரே; இப்படி உங்கள் அமைச்சர்களே முரணாக பேசிக் கொண்டு இருக்கிறார்களே இதற்கு என்ன பதிலளிப்பீர்கள் என்ற கேள்வியை எழுப்பினார். ஆரம்பத்தில் பதிலளிக்காமல் இருந்த ராஜ்நாத் சிங் எல்லா பத்திரிகையாளர்களும் ஒரே முகமாக பதில் அளிக்கவேண்டும் என்றவுடன் ராஜ்நாத் சிங் திணறிப் பதிலளித்தார். உணவு என்பது தனிப்பட்ட உரிமை; ஒருவர் எதைச் சாப்பிடவேண்டும், எதைச் சாப்பிடக்கூடாது என்று அரசு தீர்மானிக்காது; அதே நேரத்தில் அமைச்சர்களின் கருத் துக்கள் அனைத்துப் பத்திரிகையாளர்களால் திரிக்கப்பட்டு, மக்களிடையே தவறாக சித்தரிக்கப்படுகின்றன. முக்தார் அப்பாஸ் நக்வி விவகாரம் தொடர்பாக நான் எதுவும் கூற விரும்ப வில்லை.

தமிழ் ஓவியா said...

இது குறித்து நிறைய பேசியாகிவிட்டது. மேலும் இது எங்கள் அரசின் ஓராண்டு சாதனைகளை விளக் கும் கூட்டம் மாத்திரமே; இங்கு இதற்கு தொடர்பில்லாத கேள்வி களைக் கேட்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அதே நேரத்தில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக நாங்கள் நடந்துகொள்வோம். உள்துறை இணை அமைச்சர் நான் மாட்டிறைச்சி சாப்பிடுபவன் என்று கூறியிருப்பது அவரது சொந்த கருத்து; நாங்கள் அவரின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கிறோம். இருப்பினும் நமது நாட்டில் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்கவேண்டும். ஆகவே நாடுமுழுவதும் இறைச்சிக்காக மாடு வெட்டப்படுவதை தடைசெய்ய ஆலோசித்து வருகிறோம். ஆனால் மாட்டி றைச்சி சாப்பிடுவதற்கு அரசு தடைச்சட்டம் இயற்ற முடியாது. ஆகவே மாட்டிறைச்சி உண்பவர்கள் அவர்கள் விருப்பப்படி உண்ணலாம், என்று பதிலளித்தார். இது என்ன குழப்பம்? மாடுகள் வெட்டப்படுவதைத் தடுப்பார் களாம். ஆனாலும், மாட்டிறைச்சி சாப்பிடலாமாம். இந்தப் பத்திரிகையாளர் கூட்டத்தில் உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜ்ஜு உடனிருந்தார். இவர் சில நாள்களுக்கு முன்பு, நான் மாட்டிறைச்சி சாப்பிடுவேன், என்னை யாரும் பாகிஸ்தான் சென்று சாப்பிடு எனக்கூற முடியாது என்று தொலைக்காட்சி ஒன்றில் பேசிவிட்டு பிறகு நான் அப்படி ஒரு பொருள்படப் பேசவில்லை என்று பல்டியடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைக்கு மத்தியில் உள்ள அரசு எவ்வளவுப் பெரிய குழப்பத்துக்கும், முரண்பாடுகளுக்குமிடையே மூச்சுத் திணறிக் கொண்டு இருக்கிறது என்பதை நினைத்தால் வயிறு முட்ட சிரிப்புதான் வருகிறது. இன்னொரு பக்கத்தில் யார் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்கிற அள வுக்குக் கட்சி மட்டத்தில், ஆட்சி மட்டத்தில் தான்தோன்றித் தனம் தலைவிரித்தாடுகிறது என்பதைக் கவனிக்கவேண்டும்.

நரேந்திர மோடியின் நிர்வாகத் திறமை என்பது எவ்வளவுப் பலகீனமாக இருக்கிறது என்பதையும் கவனிக்கத் தவறக்கூடாது.
மாட்டிறைச்சி சாப்பிடுவது தனி மனிதர் உணர்வு என்று உள்துறை அமைச்சர் சொல்லுவது உண்மையென்றால், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மாட்டிறைச்சிக்குத் தடை போடும் சட்டம் நிறைவேற்றப்பட்டது எப்படி? என்ற கேள்வி எழாதா?
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கின் கதையாக மோடி அரசு விழி பிதுங்கி நிற்கிறது. ஓராண்டுக்குள்ளேயே இந்தக் கெதி என்றால், அடுத்த நான்காண்டுகளில் நிலை என்னவோ! அவர்கள் நம்பும் ராமனுக்குத்தான் வெளிச்சம்!Read more: http://www.viduthalai.in/page-2/102628.html#ixzz3c0hzkmLs

தமிழ் ஓவியா said...

மோடியும் - மோகன்பகவத்தின் நிழலும்!

இந்திய அரசியல் உறவுகளில் இப் போது மிகமிக முக்கியமானதாக இருப் பது பிரதமர் மோடி மற்றும் ஆர்.எஸ். எஸ்.சின் தலைவர் மோகன் பகவத் ஆகியோரிடையே நிலவும் உறவுதான். தொடக்கத்தில் அவர்களது உறவு நன்றாகவே இருந்தது. சங்கடமளிக்கும் அவர்களது தற்காலிக சமாதான உடன் படிக்கை நீடிக்குமா? என்பது இப்போது கேள்விக்குறியாக இருக்கிறது

தினேஷ் நாராயணன் கண்டறிந்து கூறுகிறார்.

2014 டிசம்பர் மாதத்தில் ஆக்ராவில் 250 முஸ்லிம்கள் இந்து மதத்திற்கு மாறு வதற்கு, ஆர்.எஸ்.எஸ்.சின் பிரச்சார கரும், தர்ம் ஜக்ரன் சமிதியின் அப்போ தைய தலைவராக இருந்தவருமான ராஜேஷ்வர்சிங் உதவியதாக செய்தி வெளிவந்தபோது, ஒரு புயல் எழுந்தது. இந்த முரண்பாடு ஹிந்து தேசியத்தின் கோட்பாட்டு ஊற்றுக்கண்ணான ஆர்.எஸ். எஸ்.சை அது அறியாமலேயே பிடித்துக் கொண்டு ஆட்டியது. சங் பரிவாரத்தின் துணை அமைப்புகள் பல ஆண்டுகளா கவே முஸ்லிம்களையும், கிறித்துவர் களையும் மத மாற்றம் செய்து கொண் டிருக்கையில், இந்தச் செய்தி இது போன்றதொரு புயலை ஏன்கிளப்பியது என்பதை அறியாமல் சங் பரிவார் தலைவர்கள் திகைத்து நின்றனர்.

2014 டிசம்பர் 21 அன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 65 வயது தலைவரான மோகன் பகவத் கொல்கத்தாவில் நடை பெற்ற ஒரு விராட் இந்து சம்மேளனத் தில் பேசும்போது, நம்மிடமிருந்து வழி தவறிப் போனவர்களை நாம் திரும்ப நம்மிடம் கொண்டு வருவோம். நம்மை விட்டு அவர்களாகவே போய்விட வில்லை. அவர்களுக்கு ஆசைகாட்டி கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இப்போது அந்த திருடன் பிடிபட்டுவிட் டான். எனது சொத்து அந்தத் திருட னிடம் இருக்கிறது. அதனை உலகமே அறியும். எனது சொத்தை நான் திரும்ப எடுத்துக் கொள்கிறேன். இதில் பெரி தாகப் பேசுவதற்கு என்ன இருக்கிறது? என்று கூறினார்.

ஏழு மாதங்களுக்கு முன்பு, ஈடு இணை யற்ற, அதற்கு முன் எப்போதுமே பெற்றி ராத ஒரு தேர்தல் வெற்றி பெற்றிருந்த நரேந்திர மோடியை இந்த அறிக்கை சங்கடத்தில் ஆழ்த்தியது. நாடாளுமன் றத்தை தன் கோயில் என்றும், அரச மைப்புச் சட்டத்தை தன் புனித நூல் என்றும் மோடி கூறியிருந்தார். இந்துத் துவ நோக்கங்களுக்கு உதவி செய்ய வில்லை என்பதற்காக, வாஜ்பேயி அரசுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் ஆதரவு அளிக்காத நிகழ்வை மோகன் பகவத்தின் இந்த அறிக்கை திரும்ப நினைவுக்குக் கொண்டு வந்தது.

தமிழ் ஓவியா said...

ஒருவரிடம் ஒருவர் மரியாதை கொண் டிருந்த நரேந்திர மோடியும், மோகன் பகவத்தும் ஒரு நல்லிணக்கத்தைப் பெற் றிருந்தனர். பொதுமக்களிடையே மோடிக்கு இருக்கும் செல்வாக்கு, ஆத ரவை மதிக்கும் பகவத், மோடி கடமை உணர்வு மிகுந்த ஒரு சுயம்சேவக் என் பதை அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறார்.

மக்களவை பொதுத்தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக, மோடி முன் நிறுத்தப்படுவதை பல மேல்மட்டத் தலைவர்கள் எதிர்த்த போது, மோடிக்கு ஆதரவாக கருத் தொற்றுமை ஏற்படுவதற்கு முக்கிய கரு வியாக விளங்கியவர் மோகன் பகவத். சங்கத்தின் கோட்பாட்டில் வேரூன்றி நிற்பவர் மோடி ஒருவர்தான் என்று 2013 ஆகஸ்ட்டில் மோடி பிரதமர் வேட்பா ளராக அறிவிக்கப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக, கொல்கத்தாவில் நடைபெற்ற ஓர் உள்அமைப்புக் கூட் டத்தில் பகவத் கூறினார். நடைமுறை அரசியலில் உள்ள கட்டாயங்களை அறிந்து கொண்டவர் என்றபோதிலும், சங்கத்தின் இறுதி இலக்கைச் சென்ற டைவதில் கவனத்தைக் குவித்திருப்பவர் என்ற அளவில் பகவத்தை, மோடி மதிக்கிறார் என்று ஓர் ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க.தலைவர் கூறினார்.

மோடியும், சங் தலைமையும் ஒரு மாபெரும் தொடக்கத்தை ஏற்படுத்தினர். மோகன் பகவத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். சின் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி மற்றும் இணைப் பொதுச்செய லாளர்களுக்கு தனது இல்லத்தில் மோடி, இரு முறை விருந்தளித்தார். சங்கம் மற்றும் பா.ஜ.க.வுக்கு இடையேயான ஒருங்கிணைப்பாளராக இருந்த சுரேஷ் சோனியை மாற்றி இணைப் பொதுச் செயலாளர் கிருஷ்ண கோபாலை நிய மித்தபோது, சோனி, கோபால் மற்றும் ஒரு சில மேல்மட்ட பா.ஜ.க. தலைவர் கள் மோடியை சந்தித்து இந்த மாற் றத்தை நேரில் தெரிவித்தனர். 2014 செப் டம்பரில் பிரதமர் இல்லத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்ற போதிலும் இந்த மாற்றம் பற்றிய அதிகார பூர்வமான அறிவிப்பு லக்னோவில் அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற ஒரு 10 நாள் ஆர்.எஸ்.எஸ். முகாமின் ஒரு பக்கத்தில் சத்தமின்றி வெளிவந்தது.

டி

தமிழ் ஓவியா said...

சம்பர் மாதத்தில் கர்வாப்சி என் னும் மதமாற்றம் பற்றிய முரண்பாடு எழுந்தபோதுதான் மோடி அரசு முதன் முதலாக ஆர்.எஸ்.எஸ்.சின் காரணமாக, குறிப்பாக பகவத்தின் காரணமாக, சங்கடமும், பின்னடைவும் ஏற்பட்டதாக உணர்ந்தது. பா.ஜ.கட்சியும், மோடியின் அரசும், மோகன் பகவத்தின் விமர் சனத்தைத் தவிர, வேறு எவரது விமர் சனத்தையும் எதிர்த்து நின்று தாங்கிக் கொள்ளும் என்பதை, மோடியின் தூதர் கள் மோகன் பகவத்திடம் தெரிவித்த தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகுதான், அரசுக்கு சங்கடங் களை ஏற்படுத்தும் எந்த அறிக்கை யையும் எவரும் வெளியிடக்கூடாது என்று சங்கத்தின் அனைத்து துணை அமைப்புகளின் தலைவர்களுக்கும் பகவத் அறிவுரை வழங்கினார்.

என்றாலும், தங்களின் தனிப்பட்ட செயல்திட்டத்தை பரிவார அமைப்புகள் மேற்கொள்வதை பகவத் தடுக்க வில்லை. சுவதேசி ஜக்ரன் மஞ்ச், பாரதிய கிசான் சங், பாரதிய மஜ்டூர் சங் ஆகிய அமைப்புகள், அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதா மற்றும் தொழில் உறவுக் கொள்கைகளுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கியுள்ளன. எந்த ஓர் அமைப்பும் என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிடுவது சங்கத்தின் வேலை அல்ல என்பதை மிகத் தெளிவாக மோகன் பகவத் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கூறிவிட்டனர். தான் என்ன செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொரு அமைப்புமே முடிவு செய்து கொள்ளும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைமையுடன் அடிக்கடி தொடர்பு வைத்துக் கொண் டிருக்கும் ஒரு மூத்த தலைவர் கூறினார். அரசு வழிதவறிப் போனால், அதனைக் கட்டுப்படுத்துவதற்கு சரியானவைதான் இந்த அமைப்புகள் என்று ஆர்.எஸ். எஸ்.சும் நம்புகிறது.

ஆர்.எஸ்.எஸ்.சின் தோற்றுநர் கேசவ் பாலிராம் ஹெட்கேவாருக்கும், அதன் மூன்றாவது தலைவர் பாலா சாகிப் தியோரா ஆகியோருக்கும் உண் மையான சீடராக இருப்பவர்தான் மோகன் பகவத் என்று சங்கத்தில் உள்ள பலரும் கருதுகின்றனர். சமூகத்தை மாற் றியமைப்பதற்கு அரசியல் அதிகாரம் தேவை என்பதை ஹெட்கேவாரும், தியோராவும் நன்கு அறிந்தே இருந் தனர். இதில் உள்ள பிரச்சினை என்ன வென்றால், இந்துக்கள் தங்களைத் தாங் களே சிறுபான்மையினராகக் கருதிக் கொள்வதுதான். ஓர் ஆக்கிரமிப்பு உணர்வு கொண்ட, தேசிய நிலைப் பாட்டை இந்துக்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கொல்கத்தாவில் பகவத் கூறினார்.

மோகன் பகவத் 1950 செப்டம்பர் 11 அன்று, ஆர்.எஸ்.எஸ்.சின் மதிப்பீடு களில் மூழ்கிக் கிடந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை மதுகர்ராவ் பகவத், குஜராத்தில் ஒரு பிரச்சாரகராகப் பணியாற்றினார். அவரைத்தான் நரேந் திர மோடி தனது வழிகாட்டி என்றும் குரு என்றும் குறிப்பிட்டுள்ளார். மகா ராஷ்டிர மாநிலம் அகோலாவில் உள்ள டாக்டர் பஞ்சாப்ராவ் தேஷ்முக் கிருஷி வித்யாபீடத்தில் கால்நடை அறிவியல் பட்டப் படிப்பு படித்த மோகன் பகவத் உடற் கூறியலில் தங்கப் பதக்கம் வென்றார்.

பாடுவதில் மிகுந்த விருப்பம் கொண்ட பகவத் அரங்கு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார் என்று அவரது நண்பர் களும், உறவினர்களும் கூறுகின்றனர். நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தப்பட்டபோது, தான் படித்து வந்த முதுகலைப் பட்டப் படிப்பை இடையில் நிறுத்திவிட்ட மோகன் பகவத் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழு நேரத் தொண்டரா னார். படிப்படியாக உயர்ந்த பகவத் 2009 மார்ச்சில் ஆர்.எஸ்.எஸ். தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அதற்கு முன் ஒன்பதாண்டு காலம் அதன் பொதுச்செயலாளராக இருந்த அவர், அதற்கு முன் உடற்பயிற்சி அமைப்பின் தலைவராக இருந்தபோது நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் பயணம் செய்து அமைப்பைக் கட்டமைத்தார்.

ஆர்.எஸ்.எஸ். தலைவராக பகவத் வந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, பா.ஜ.க. ஒரு மாபெரும் வீழ்ச்சியை சந்தித்தது. எல்.கே.அத்வானி தலைமை யில் மக்களவைத் தேர்தல் களம் கண்ட கட்சி தோல்வியடைந்தது. 2004 இல் அடைந்த தோல்வியைவிட இது மிகமிக மோசமான தோல்வியாக இருந்தது. அப்போதுதான், பா.ஜ.க.வுடனான சீர்கேடு அடைந்திருந்த ஆர்.எஸ்.எஸ் .சின் உறவுகளை பகவத் மறுபடியும் கட்டமைக்கத் தொடங்கியிருந்தார்.

முன்பு வாஜ்பேயி அரசு பதவியில் இருந்தபோது, பா.ஜ.கட்சியைக் கைகழுவி விடுவது பற்றி ஆர்.எஸ்.எஸ். மிகத் தீவிரமாக சிந்தித்து வந்தது. 2000 ஏப்ர லில் சந்தித்த பிரச்சாரகர்கள் தங்கள் முன் மூன்று வழிகள் இருப்பதாகக் கண்டனர். பா.ஜ. கட்சியை சரி செய்வது, கட்சியைப் பிளப்பது மற்றும் ஒரு புதிய கட்சியைத் துவங்குவது என்பவைதாம் அவை. ஒரு புதிய கட்சியைத் துவங்க மூன்றாண்டு காலம் தேவை என்று அவர்கள் மதிப்பிட்டனர். ஒரு சில மாதங் களுக்குப் பிறகு சந்தித்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கட்சியை சரி செய்வதே சரியான வழி என்ற முடிவுக்கு வந்தனர்.
அதன் பிறகுதான், அரசுக்கு சங்கடங் களை ஏற்படுத்தும் எந்த அறிக்கை யையும் எவரும் வெளியிடக்கூடாது என்று சங்கத்தின் அனைத்து துணை அமைப்புகளின் தலைவர்களுக்கும் பகவத் அறிவுரை வழங்கினார்.


தமிழ் ஓவியா said...

என்றாலும், தங்களின் தனிப்பட்ட செயல்திட்டத்தை பரிவார அமைப்புகள் மேற்கொள்வதை பகவத் தடுக்க வில்லை. சுவதேசி ஜக்ரன் மஞ்ச், பாரதிய கிசான் சங், பாரதிய மஜ்டூர் சங் ஆகிய அமைப்புகள், அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதா மற்றும் தொழில் உறவுக் கொள்கைகளுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கியுள்ளன. எந்த ஓர் அமைப்பும் என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிடுவது சங்கத்தின் வேலை அல்ல என்பதை மிகத் தெளிவாக மோகன் பகவத் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கூறிவிட்டனர். தான் என்ன செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொரு அமைப்புமே முடிவு செய்து கொள்ளும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைமையுடன் அடிக்கடி தொடர்பு வைத்துக் கொண் டிருக்கும் ஒரு மூத்த தலைவர் கூறினார். அரசு வழிதவறிப் போனால், அதனைக் கட்டுப்படுத்துவதற்கு சரியானவைதான் இந்த அமைப்புகள் என்று ஆர்.எஸ். எஸ்.சும் நம்புகிறது.

ஆர்.எஸ்.எஸ்.சின் தோற்றுநர் கேசவ் பாலிராம் ஹெட்கேவாருக்கும், அதன் மூன்றாவது தலைவர் பாலா சாகிப் தியோரா ஆகியோருக்கும் உண் மையான சீடராக இருப்பவர்தான் மோகன் பகவத் என்று சங்கத்தில் உள்ள பலரும் கருதுகின்றனர். சமூகத்தை மாற் றியமைப்பதற்கு அரசியல் அதிகாரம் தேவை என்பதை ஹெட்கேவாரும், தியோராவும் நன்கு அறிந்தே இருந் தனர். இதில் உள்ள பிரச்சினை என்ன வென்றால், இந்துக்கள் தங்களைத் தாங் களே சிறுபான்மையினராகக் கருதிக் கொள்வதுதான். ஓர் ஆக்கிரமிப்பு உணர்வு கொண்ட, தேசிய நிலைப் பாட்டை இந்துக்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கொல்கத்தாவில் பகவத் கூறினார்.

மோகன் பகவத் 1950 செப்டம்பர் 11 அன்று, ஆர்.எஸ்.எஸ்.சின் மதிப்பீடு களில் மூழ்கிக் கிடந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை மதுகர்ராவ் பகவத், குஜராத்தில் ஒரு பிரச்சாரகராகப் பணியாற்றினார். அவரைத்தான் நரேந் திர மோடி தனது வழிகாட்டி என்றும் குரு என்றும் குறிப்பிட்டுள்ளார். மகா ராஷ்டிர மாநிலம் அகோலாவில் உள்ள டாக்டர் பஞ்சாப்ராவ் தேஷ்முக் கிருஷி வித்யாபீடத்தில் கால்நடை அறிவியல் பட்டப் படிப்பு படித்த மோகன் பகவத் உடற் கூறியலில் தங்கப் பதக்கம் வென்றார்.

பாடுவதில் மிகுந்த விருப்பம் கொண்ட பகவத் அரங்கு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார் என்று அவரது நண்பர் களும், உறவினர்களும் கூறுகின்றனர். நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தப்பட்டபோது, தான் படித்து வந்த முதுகலைப் பட்டப் படிப்பை இடையில் நிறுத்திவிட்ட மோகன் பகவத் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழு நேரத் தொண்டரா னார். படிப்படியாக உயர்ந்த பகவத் 2009 மார்ச்சில் ஆர்.எஸ்.எஸ். தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அதற்கு முன் ஒன்பதாண்டு காலம் அதன் பொதுச்செயலாளராக இருந்த அவர், அதற்கு முன் உடற்பயிற்சி அமைப்பின் தலைவராக இருந்தபோது நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் பயணம் செய்து அமைப்பைக் கட்டமைத்தார்.

தமிழ் ஓவியா said...

ஆர்.எஸ்.எஸ். தலைவராக பகவத் வந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, பா.ஜ.க. ஒரு மாபெரும் வீழ்ச்சியை சந்தித்தது. எல்.கே.அத்வானி தலைமை யில் மக்களவைத் தேர்தல் களம் கண்ட கட்சி தோல்வியடைந்தது. 2004 இல் அடைந்த தோல்வியைவிட இது மிகமிக மோசமான தோல்வியாக இருந்தது. அப்போதுதான், பா.ஜ.க.வுடனான சீர்கேடு அடைந்திருந்த ஆர்.எஸ்.எஸ் .சின் உறவுகளை பகவத் மறுபடியும் கட்டமைக்கத் தொடங்கியிருந்தார்.

முன்பு வாஜ்பேயி அரசு பதவியில் இருந்தபோது, பா.ஜ.கட்சியைக் கைகழுவி விடுவது பற்றி ஆர்.எஸ்.எஸ். மிகத் தீவிரமாக சிந்தித்து வந்தது. 2000 ஏப்ர லில் சந்தித்த பிரச்சாரகர்கள் தங்கள் முன் மூன்று வழிகள் இருப்பதாகக் கண்டனர். பா.ஜ. கட்சியை சரி செய்வது, கட்சியைப் பிளப்பது மற்றும் ஒரு புதிய கட்சியைத் துவங்குவது என்பவைதாம் அவை. ஒரு புதிய கட்சியைத் துவங்க மூன்றாண்டு காலம் தேவை என்று அவர்கள் மதிப்பிட்டனர். ஒரு சில மாதங் களுக்குப் பிறகு சந்தித்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கட்சியை சரி செய்வதே சரியான வழி என்ற முடிவுக்கு வந்தனர்.

ஆர்.எஸ்.எஸ்.சிடம் உள்ள பிரச்சி னையே, துணிந்து செயல்பட அது தயங் குவதுதான். அபாயத்தைப் பொருட்படுத் தாமல் துணிவுடன் செயல்படாமல் உங்களால் அரசியல் செய்ய முடியாது என்று முன்னாள் பொதுச்செயலாளர் ஒருவர் கூறினார். பகவத்தின் தலை மையின்கீழ் இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. கடந்த ஆண்டு கேரளாவில் நடை பெற்ற ஒரு கூட்டத்தில் பேசும்போது, இந்த மாநிலத்தில், சங்கமும் அதன் துணை அமைப்புகளும் ஒரு பலமான அடித்தளத்தைக் கொண்டிருந்த போதி லும், சமூக, அரசியல் அளவில் எந்தவித லாபத்தையும் நம்மால் பெறமுடியவில் லையே என்று பகவத் புலம்பித் தீர்த்தார்.

அமைப்பின் வளர்ச்சிக்கும், அதன் இலக்கான பலம் வாய்ந்த இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்தியாவை வென்றடைவதற்கும் அரசியல் அதி காரம் தேவை என்பதை ஆர்.எஸ்.எஸ். உணர்ந்து கொண்டது. ஆர்.எஸ்.எஸ்.சு டன் நெருங்கிய தொடர்பு கொண்டி ருக்கும் திலிப் தியோதர் என்ற நாக்பூர் வணிகர் ஒருவர், அடிக்கடி தன்னை அதிகாரபூர்வமற்ற செய்தித் தொடர்பா ளராகக் கருதிக் கொள்பவர், கடுமை யான இலக்குகளை சங்கம் தனக்குத் தானே நிர்ணயித்துக் கொண்டிருப்பதாக அவர் கூறுகிறார்.

அடுத்த அய்ந்து ஆண்டுகளில் இந்தியாவின் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சென்றடைய அது விரும்புகிறது. அத்துடன் ஒரு லட்சம் ஷாகாக்கள் மற்றும் அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களின் உலக அளவி லான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கு வதையும், இந்திய மக்கள் தொகையில் 10 விழுக்காட்டினரையாவது சங்கத்தின் ஏதேனும் ஓரமைப்பில் உறுப்பினராகச் சேர்ப்பதையும் அது இலக்காகக் கொண் டிருக்கிறது என்று தியோதர் கூறுகிறார். இவர் முன்பு நாக்பூர் பல்கலைக் கழக மாணவர் விடுதி ஷாகாவின் தலை வராக இருந்தபோது, மோகன்பகவத் அங்கு வருவதை வழக்கமாகக் கொண் டிருந்தார். பகவத்தின் கண்ணோட்டத்தின் படி, 2025 ஆம் ஆண்டு ஆர்.எஸ். எஸ்.சின் நூற்றாண்டு விழா கொண்டா டப்படுவது வரை அரசியல் அதிகா ரத்தை சங் பரிவாரம் தக்க வைத்துக் கொண்டிருக்கவேண்டும்

தனது இறுதி இலக்கான ஹிந்து ராஷ்டிராவை உருவாக்குவதை நோக்கி மேற்கொள்ளும் பயணத்தை சங் பரி வாரம் தொடங்கிவிட்டதாக பகவத் நம்புகிறார். கடந்த வாரத்தில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் உள்ளிட்ட மத்திய கேபினட் அமைச்சர் கள் பலர், பகவத்தை சந்திக்க நாக்பூரில் உள்ள சங்கத்தின் தலைமை அலுலகத் துக்கு வரிசையாகச் சென்றனர். எல்லை பாதுகாப்பினை பலப்படுத்தும்படியும், அரசின் இரண்டாவது ஆண்டு ஆட்சி யில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளை அழிப்பதை இலக்காக ஆக்கிக் கொள் ளும்படியும் பகவத் அவர்களிடம் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவாஜி முடிசூட்டிக் கொண்ட நாளான 2010 ஜூன் 24 அன்று, நாக்பூரில் பேசும்போது, இந்தப் போரின் இரண்டாவது கட்டத்தில் சிவாஜியின் கொள்கைகளை நாம் பின்பற்றி இருந்தி ருப்போமேயானால், இது போன்ற திடமான வெற்றியையே நாம் பெற்றி ருந்திருப்போம். அவ்வாறு நாம் செய் யாததால், பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டது என்று கூறியுள்ளார்.

மக்கள் நலனைப் பேணும் இந்து ராஷ்டிராவில் அனைத்து வகையான முன்னேற்றங்களும் ஏற்படுத்தப்படுவ தற்கு, சிவாஜியைத் தங்களின் முன் மாதிரியாகக் கொண்டு ஒவ்வொருவரும் செயல்படவேண்டும் என்று அவர் விரும்புகிறார். மோடியின் முன்னேற்ற செயல் திட்டத்திலிருந்து இது எவ்வளவு அருகில் அல்லது தொலைவில் இருக் கிறது என்பது மட்டும் கூறப்படவில்லை. உடனடியான எதிர்காலத்தில் அது இல்லை என்பது மட்டும் தெரிகிறது.

எகானமிக் டைம்ஸ், 26.5.2015
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்Read more: http://www.viduthalai.in/page-2/102629.html#ixzz3c0iEw9ki

தமிழ் ஓவியா said...

ஆப்பதனை அசைத்துவிட்ட இந்துத்துவாவாதிகளுக்கு அர்ப்பணம்
அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம்
மும்பை, ஜாதவ்பூர், டில்லியிலும் துவங்கியது
டில்லி, ஜூன் 3_ சென்னை அய்.அய்.டி.யிலும் அம் பேத்கர், பெரியார் வாசகர் வட்டத்தைத் தடை செய்ததன் எதிரொலியாக மும்பை, டெல்லி, ஜாதவ் பூரிலும் இந்த அமைப்பத் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை அய்.அய்.டி நிர்வாகம் மனிதவளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் சர்வாதிகார ஆணைக்கு அடிபணிந்து, ஹிட்லரின் நடவடிக்கை யைப் போல் அம்பேத்கர் _ பெரியார்- வாசகர் வட் டத்தை தடை செய்தது. இந்தத் தடையை எதிர்த்து தமிழகத்தில் துவங்கிய போராட்டம் டில்லியிலும் எதிரொலித்தது.

திங்கள் அன்று மும்பை _ பவாயில் உள்ள அய். அய்.டி தலைமையத்தில் முற்போக்கு சிந்தனை யுள்ள மாணவர்கள் ஒன்று கூடி மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினர். இதனை அடுத்து அம்பேத் கர் _ பெரியார்- _ புலே பெயரில் வாசகர் வட்டம் ஒன்று துவங்கப்பட்டது.

துவங்கிய உடனே அதன் முதல் கூட்டத்தில் இந்த மூன்று தலைவர்களின் கருத்துகளை மக்களி டையே பரப்பும் கொள் கைதான் இந்த வாசகர் வட் டம் துவங்கப்பட்டதன் நோக்கம் என்று அறிவிக் கப்பட்டது. இந்நிலையில் மும்பையைத் தொடர்ந்து இந்தியாவின் அனைத்து அய்.அய்.டி-யிலும் பெரி யார் _ அம்பேத்கர் வாசகர் வட்டம் துவங்கப்பட்டுள் ளது.

டில்லி, கான்பூர் அய்.அய்.டியில் பெரியார் அம்பேத்கர் வாசகர் வட் டம் பல்வேறு குழுக்க ளைச் சேர்ந்த மாணவர் கள் ஒன்றிணை மீது ஆரம் பித்தனர்.

இதேபோல் ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்திலும் அம்பேத்கர் _ பெரியார்- மாணவர் வாசகர் வட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் துவக்கம்

இந்தியாவின் மிக முக் கியமான உயர்கல்வியக மான டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் செவ்வாய் அன்று அம் பேத்கர் _ -பெரியார் மாண வர் வாசகர் வட்டம் துவங் கப்பட்டது. மதவாத மாணவர் அமைப்பான எபிவிபி தலைமையகத் தின் எதிரிலேயே இந்த வாசகர் வட்டம் துவக்கப் பட்டது.

துவக்க விழாவில் கலந்து கொண்ட மாண வர் அமைப்பினர் செய்தி யாளர்களிடம் பேசும் போது அம்பேத்கர் _ பெரி யார் -வாசகர் வட்டமா னது உடனடியாக அனைத்து சமூகவலைதளங்களிலும் தங்களது அமைப்பிற்கென புதிய பக்கங்களைத் துவங் கியுள்ளது. மேலும் விரை வில் இதற்கென ஒரு இணையதளமும், கொள் கைகளை விளக்கும் இதழ் களையும் தொடர்ந்து வெளியிட முடிவுசெய்துள் ளதாக தெரிவித்தனர்.

டில்லி அய்.அய்.டி. மாணவர்கள் கருத்து

டில்லி அய்.அய்.டி அம்பேத்கர் _ பெரியார்-வாசகர் வட்ட மாணவர் கள் கூறியதாவது, இந்தியா வில் மொத்தம் 16 அய். அய்.டிக்கள் உள்ளன. தற்போது அய்ந்து அய். அய்.டிக்களில் பெரியார் _ அம்பேத்கர் வாசகர் வட் டம் துவங்கியிருக்கிறோம். இன்னும் சில நாட்களில் இந்தியா முழுவதிலும் உள்ள 16 அய்.அய்.டிக் களிலும் வாசகர் வட்டம் துவங்க தீர்மானித்து இருக் கிறோம்.

கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் உயர் கல்வி நிறுவனம் இந்துத் துவ சிந்தனைகொண்ட வர்களால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனமாகும், அங்கே உள்ள மாணவர் களால் அம்பேத்கர் பெரியார்- _ வாசகர் வட்டம் துவங்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

ஆகையால் மற்ற உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அய்.அய்.டிகளில் துவங்குவது மிகவும் எளிதான செயலாகும். விரைவில் அனைத்து அய்.அய்.டி மாணவர் வாசகர்வட்டத்தையும் ஒன்றிணைக்க இருக்கி றோம் என்று கூறினர்.

பிரதமர் மோடி மற்றும் இந்துத்துவா கொள் கைகளை விமர்சிக்கிறது எனக் கூறி மத்திய மனித வள மேம்பாட்டு அமைச் சகத்துக்கு ஒரு அனாம தேய கடிதம் வந்தது என்று கூறி ஸ்மிருதி இரா னியின் தலையீட்டால் தடைசெய்யப்பட்ட சென்னை அய்.அய்.டி பெரியார்- _ அம்பேத்கர் வாசகர் வட்டம் தற்போது பெரிய அளவில் இந்தியா முழுவதும் பரவி நிற்கிறது.

அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று பெண்ணடிமைச் சின்ன மான தாலி அகற்றுதல் குறித்த நிகழ்ச்சியை சென்னை பெரியார் திட லில் திராவிடர் கழகம், தமிழர் தலைவர் தலை மையில் நடத்தியது.

இதற்கு தடை மற்றும் இந்துத்துவ அமைப்பின் போராட்டத் தின் காரணமாக பெண் ணடிமைச் சின்னமாம் தாலியை அகற்றும் நிகழ்வு உலகம் முழுவதிலுமுள்ள முற்போக்குவாதிகளிடம் போய்ச் சேர்ந்தது. அதே போல் அம்பேத்கர் பெரி யார்- _ வாசகர் வட்டத் தின் தடையும் இன்று இந் தியா முழுவதிலுமுள்ள மாணவர்களை சென்ற டைந்துள்ளது.Read more: http://www.viduthalai.in/page-8/102622.html#ixzz3c0izsbo6

தமிழ் ஓவியா said...

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்ட மாணவர்களுக்கு அருந்ததி ராய் ஆதரவு

சென்னை, ஜுன் 3_ மாணவர் அமைப்பால் என்ன நேர்ந்துவிட்டது? ஏன் கல்விநிறுவனத்தின் தலைவர் அவர்களைக்கண்டு அச்சப் பட வேண்டும்? ஏன் அந்த அமைப்பைத் தடை செய்ய வேண்டும்?

அதற்கான காரணங்க ளாக அவர்கள் கூறுவது வழ மையான முட்டாள்தனமான காரணத்தையேதான் குறிப் பிட்டுள்ளார்கள். வெறுப்பு களை வகுப்புகளுக்கிடையே பரப்புகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அடுத்த காரணமாக அமைப் பின் பெயரில் அரசியல் இருப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், இதேபோன்று செயல்பட்டுவரும் அமைப் பாக விவேகானந்தா வாசகர் வட்டம் இருப்பதற்கு இவை யெல்லாம் பொருந்தவில் லையாம்.

இந்துத்துவத்தின் தேசிய அளவிலான நிகழ்ச்சியாக கர்வாப்சியை (ஏற்கெனவே ஆர்ய சமாஜம் சார்பில் சுத்தி நிகழ்ச்சியைப்போன்று) நடத்திவந்தபோது தாழ்த்தப் பட்டவர்களை இந்துக்கள் என்கிற வளையத்துக்குள் கொண்டுவருவதற்காக இந்துமதத்தை வெளிப் படையாகக் கண்டித்தவ ராகிய அம்பேத்கரின் 125ஆம் ஆண்டு பிறந்த நாளை , அவர் ஓர் இந்து என்று கூறிக்கொண்ட இந்துத்துவா அமைப்புகள் கொண்டாடி யதாக ஊடகங்களில் தக வல்கள் வெளிவந்தன.

அப் படி இருக்கும் போது, அம் பேத்கரைப் பின்பற்றுபவர் களாக இருப்பவர்கள் அவர் பெயரைப் பயன்படுத்தும் போது, ஹைர்லாஞ்சியில் உள்ள சுரோகா பாட்மாங்கே குடும்பத்தினர் கொல்லப் பட்டது ஏன்? செல்பேசியில் ஒலிக்கும்போது அம்பேத்கர் புகழ் பாடல் ரிங் டோன் ஒலித்ததால் தாழ்த்தப்பட்ட இளைஞரை அடித்தே கொன்றது ஏன்?

அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட மாணவர் அமைப்புக்குத் தடை போடுவதும் ஏன்? ஏனென்றால், எந்த நோக் கத்தாலோ, ஆட்டம் போடு வதன்மூலமாக ஆபத்தான இடத்தில் கைவைத்து விட்டார்கள். பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களிலும் ஜாதி யத்தை ஊடுருவச் செய்து விட்டார்கள். இந்த ஆட்சி யில் பல முனைகளிலும் அச்சுறுத்தல்களின் மூலமாக செய்துவரும் கேடுகளைவிட,

பகத்சிங் மற்றும் அம்பேத்கர் ஆகிய இருவரின் பெயரில் விழாக்களைக் கொண்டாடு வதன் மூலமாக அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் என்ன கேட்டினை செய்து விட்டது? இதுதான் அவர்களைக் கொந்தளிப்புக்கு உள்ளாக் கிள்ளது. ஆகவே, இதுதான் அவர்களைத் தடையை நீக்க வலியுறுத்திள்ளது.

இடதுசாரிகள் மற்றும் முற்போக்கான முசுலீம் அமைப்புகளுடன் கைகோர்ப் பதாக விடுதலை சிறுத்தை கள் கட்சியின் அறிவிப்பு அதற்கேற்பவே ஆட்சியா ளர்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்துக்கு விதிக் கப்பட்டுள்ள தடையின் மூலமாக ஒருமித்த கருத்துள் ளவர்களை ஒன்றிணைப்ப தன் தொடக்கமாக அமைந் துள்ளது.

_இவ்வாறு அருந்ததிராய் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.Read more: http://www.viduthalai.in/page-8/102622.html#ixzz3c0jBmWOr

தமிழ் ஓவியா said...

காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்!
கடவுள்களைக் காப்பாற்றுங்கள்!!
கோவில் கலசம் திருட்டு - மாரியம்மனுக்கு தாலியறுப்புவிருத்தாசலம், ஜூன் 3_- விருத்தாசலம் அடுத்த எருமனூர் மாரியம்மன் கோவிலில் அம்மனின் தாலியை யாரோ திருடிச்சென்றுள்ளனர். எருமனூர் கிராமத்தில் காட்டுப்பகுதியில் இருப்புப்பாதை அருகில் புற்று மாரியம்மன் கோயில் உள்ளது. தனிநபருக்கு சொந்தமான இக்கோயிலில் கிராம மக்கள் பொது வழிபாடு நடத்துவார்களாம்.

இந்நிலையில், வெள்ளிக் கிழமை மாலை மாரியம்மன் சிலைக்கு படைத்து விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளனர். இதனையடுத்து, சனிக்கிழமை காலை கோயிலுக்கு சிறுவர்கள் விளையாடச் சென்று ள்ளனர். அப்போது, கோபுரத்தின்மீது கலசம் இல்லாததைப் பார்த்த சிறுவர்கள், கிராம மக்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

பொது மக்கள் வந்து பார்த்தபோது, கலசத்தையும், மாரி யம்மன் கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தாலியையும் யாரோ திருடிச்சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் காவலர்கள், காவல் உதவி ஆய்வாளர் அன்பரசு தலைமையில் நேரில் சென்று விசாரணை நடத் தினர். அப்போது, கிராம மக்கள் கூறியதாவது:

இதுவரை மூன்று முறை இக்கோயிலில் திருட்டு போயுள்ளது. 10 கிலோ மணி, உண்டியல், பித்தளைப் பொருள்கள் ஆகியவற்றை முன்பு திருடிச் சென்றுள்ளனர். இப்போது, அம்மன் கலசம் மற்றும் தாலியையும் திருடிச் சென்றுள் ளனர் எனவே, திருடர்களைக் கண்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கூறினர்.

தன் தாலியையே காக்க முடியாத மாரியம்மனா ஊரார் தாலியைக் காக்கப் போகிறது? திராவிடர் கழகத்துக்காரர்கள் தாலி அறுத்து விட்டதாகக் கொக்கரிக்கும் மதவாதிகளே, சர்வ சக்தியுள்ள தாகக் கூறும் மாரியம்மனின் தாலியை திருட்டுப் பக்தர்கள் அறுத்துச் சென்றுள்ளனரே. மாரியம்மனின் சக்தி இதுதானோ?

பெரியார் திடலில் தாலியை அகற்றிக் கொண் டவர்களுக்கு திவசம் நடத்திய மதவாதிகளே, ஆத்தா தாலி அறுக்கப்பட்டு களவாடப்பட் டுள்ளதே, இப்போது யாருக்கு திவசம் நடத்து வீர்கள்?!Read more: http://www.viduthalai.in/page-8/102621.html#ixzz3c0jk8azs

தமிழ் ஓவியா said...

கல்வியாளர்கள் சந்தர்ப்பவாதம் பேசலாமா?

அய்.அய்.டி. மாணவர்கள் விவகாரம் என்ற தலைப்பில் இவ்வார துக்ளக் இதழில் (10.6.2015 பக்.6) கல்வியாளர் கருத்து ஒன்று வெளியாகியுள்ளது.

சென்னைஅண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் திரு விஸ்வநாதன் துக்ளக் நிருபரிடம் தெரிவித்த கருத்து என்று அதில் கூறப் பட்டுள்ளது.

அவர் என்ன சொல்லுகிறார்? மாணவர்கள் கல்வி தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடலாம். கல்வி மற்றும் பாடத் திட்டத்தையொட்டிய கூட்டங் களை வேண்டுமானால் நடத்தி, கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்களை அறியலாம். அரசியல் விவாதம் கல்வி நிலையத்திற்குள் வேண்டாத ஒன்று. இது மாணவர்களைப் பல பிரிவுகளாகப் பிரித்து, கல்வியைப் பாழடித்து விடும். கொள்கை சார்ந்த ஒரு அமைப்பு அனுமதிக்கப்பட்டால் மேலும் பல கருத்துகள் சார்ந்த அமைப்புகளும், கல்லூரிக்குள் உருவாகும். அரசியல் தேவை என்று கருதினால் அப்போது சர்ச்சைகளை நடத்தலாம். ஆனால் கல்விக்கூடம் அதற்கான இடம் அல்ல!! என்று திரு. விஸ்வநாதன் கூறி இருப்பதாக துக்ளக் கூறுகிறது.

மாணவர்கள் கல்வி தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடலாம் - அரசியல் பேசக் கூடாது - கல்விக்குப் பிறகு அதை வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லுவதே பகுத்தறிவுக்கும் விரோதமானது; நாட்டில் எது நடந்தாலும் அதைப்பற்றிக் கவலை கிடையாது என்று மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டுமா?

மதுப் போதை, மருந்துப் போதை, சினிமா போதை, கிரிக்கெட் போதை என்ற வலைகளுக்குள் சிக்கி இருப்பதைப்பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை; ஆனால் மாணவர்கள் அரசியல் பேசுவது வேண்டாத வேலை என்று சொல்லுவது திரு. விஸ்வநாதன் அவர்களுக்கு வேண்டாத வேலை என்று சொல்லத் தோன்றுகிறது.

இதில் இன்னொன்றை மறைத்துப் பேசுகிறார்கள். அய்.அய்.டி. வளாகத்துக்குள் பல்வேறு அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்துத்துவா பேசும் ஏ.பி.வி.பி.யும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு எதிர் வினையாக இன்னொரு அமைப்பு வருவது தவிர்க்கப்பட முடியாதது தானே?

விவேகானந்தர் பெயரில் இயங்கும் ஓர் அமைப்பு கீதைகளைப் பிரச்சாரம் செய்கிறது. கீதை வருணா சிரமத்தை வலியுறுத்தக் கூடிய இந்து மத நூல்; வைசியர்களும், சூத்திரர்களும், பெண்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்றும் கூறுகிறது. அந்த நூலைப் பிரச்சாரம் செய்தால், அதற்கு எதிர்ப்பான குரல் கிளம்புவது இயல்புதானே!

இதில் என்ன கொடுமை என்றால், மற்ற மற்ற அமைப்புகள் எல்லாம் அரசியல் செய்தபோது, அரசியல்வாதிகள் அழைக்கப்பட்டு அய்க்கிய முற் போக்குக் கூட்டணி அரசை விமர்சித்தபோது, மத்திய அரசுக்குரிய கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோ ருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வர அன்றைய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜூன் சிங் உருவத்தை அதே அய்.அய்.டி. வளாகத்தில் இந்துத்துவவாதிகள், ஏபிவிபி அமைப்பு முன்னின்று எரித்தபோது திரு. விஸ்வநாதன் போன்றவர்கள், இப்பொழுது சொல்லும் அறிவுரையைச் சொல்ல ஏன் முன் வரவில்லை? இதே துக்ளக் இதழும் ஏன் அக்கறை காட்டவில்லை? இப்பொழுது அதற்கு எதிர்ப்பான குரல் கொடுக்கும் அமைப்பு முன்வரும் பொழுது, அதுவும் சமூக நீதிக்காகப் பாடுபட்ட தந்தை பெரியார் பாபா சாகேப் அம்பேத்கர் பெயரில் ஓர் அமைப்பைத் தொடங்கும் பொழுது இதோபதேசம் செய்ய முன்வருகிறார்கள் என்றால், இதற்குள் புதைந்திருக்கும் உணர்வு என்ன?

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், சமூக நீதி என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. சட்டத்திற்கு விரோதமாக சமூக நீதிக்கு எதிரான அமைப்புகள் செயல்பட அனுமதிக்க லாம்; இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சமூக நீதிக்கான சரத்தை வலியுறுத்தும் சட்டப்படியான செயல்பாட்டை அனுமதிக்கக் கூடாதா?

சமூகநீதியைக் குழி தோண்டிப் புதைக்கும் அய்.அய்.டி. நிறுவனத்தின் வளாகத்துக்குள் தந்தை பெரியார் - பாபா சாகேப் அம்பேத்கர் சிந்தனைகள் முன் எடுக்கப்பட்டால் ஆதிக்கத்தின் அஸ்திவாரத்தையே நொறுக்கி விடும் என்ற அச்சத்தால் தான் இந்த அமைப்பைத் தடை செய்ய முன் வந்துள்ளனர் - என்பதுதானே உண்மை.

துக்ளக் ஒன்றில் ஈடுபடுகிறது என்றால் அதில் வருணாசிரம அரசியல் இருக்கும் என்பதை திரு. விஸ்வநாதன் போன்றவர்கள் புரிந்து கொள்ளாதது பரிதாபமே!Read more: http://www.viduthalai.in/page-2/102650.html#ixzz3c66jUSlK

தமிழ் ஓவியா said...

அண்ணாவின் பெயரில் உள்ள ஆட்சியில் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக

மழை வேண்டி வருண பகவானுக்கு யாகமாம்!
திருச்சி, ஜூன் 5- பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் மூடநம்பிக்கையை வளர்க்கும் வகையில், அறிஞர் அண்ணாவின் பெயரில் நடக்கும் ஆட்சியில், அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக மழை வேண்டி வருண பகவானுக்கு யாகமாம்!

அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த போது அரசு அலுவலகங் களில் உள்ள கடவுளர் படங்களை உடனே அகற்றுமாறு தனது ஆட்சியின்போது சுற்றறிக்கை விடுத்தார். அண்ணா திமுக ஆட்சியில் அரசு அதிகாரிகளே மழை வேண்டி யாகம் நடத்த அறிவுறுத்தி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பிக் கொண்டிருக்கும் அவலம் நடந்து கொண்டிருக்கிறது.

இது குறித்து டெக்கான் கிரானிக்கல் ஆங்கிலப் பத்திரிகையில் இன்று (5.6.2015) வந்த செய்தியில்:- பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியார் பிறந்த மண்ணில் தமிழக அரசு அலுவலகமே மழைவேண்டி யாகம் செய்ய சுற்றறிகை விட்டுக்கொண்டு இருக்கிறது, தமிழக நீர்வள ஆதாரத்துறை அலுவலகம் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழைவேண்டி சிறப்பு யாகங்கள் செய்யுமாறு கட்டளையிட்டுள்ளது. இயற்கை அன்னையின் பெயரில் மழைவேண்டி குறிப்பிட்ட கோவில்களில் யாகம் செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் நீர்வளத்துறை தலைமைப்பொறியாளர் எஸ்.அசோகன் இது குறித்து தனது கடிதத்தில் எழுதிய விபரம் தனியே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஜுன் ஒன்றாம் தேதி யாகம் நடத்திய பிறகு அதன் விபரங்களை படங்களோடு எந்த முறையில் செய்தீர்கள் என விளக்கமாக ஜூன் இரண்டாம் தேதி 10 மணிக்குள் தலைமைப்பொறியாளர் பார்வைக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது என செய்தி வெளிவந்துள்ளது.

இன்றைய நவீன உலகில் அறிவியல் கண்டுபிடிப்புகளால் அனைத்து துறையிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ள கால கட்டத்தில் அரசே மூடப் பழக்க வழக்கங்களை வளர்க்கும் வகையில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது கண்டனத்துக்குரியதாகும்.

குறிப்பு: அரசியல் அமைப்புச் சட்டம் கூறுவது என்ன?

இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ பிரிவில் ஒவ்வொரு குடிமகனும் கடைப்பிடிக்க வேண்டிய பத்து அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties) சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அதில் எட்டாவது கடமையில் - 51ஏ(எச்) அறிவியல் உணர்வையும், மனிதநேயத்தையும், சீர் திருத்தத்தையும் ஆய்வு மனப் பான்மையையும் போற்றி வளர்க்க வேண்டும். ’To develop the scientific temper, humanism and the spirit of inquiry and reforms 51A(h), என்று வலியுறுத்தப் பட்டுள்ளது. இது குடிமகனுக்கும் பொருந்தும் அதைவிட ஆட்சியாளர்களுக்கும் அரசு பதவியில் உள்ளவர்களுக்கும் கட்டாயமாக பொருந்தும் காரணம் அவர்கள் அரசியலைப்புச் சட்டத்தின் படி நடப்பேன் என்று உறுதிமொழி எடுத்து பதவிக்கு வருகின்றனர்.Read more: http://www.viduthalai.in/e-paper/102715.html#ixzz3cCCpHyI9

தமிழ் ஓவியா said...

சால்வை வேண்டாம் சந்தாக்களைத் தாரீர்!


அருமைக் கழகத் தோழர்களே! உரிய சிகிச்சைக்குப் பின் நமது அருமைக் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க தஞ்சை வருகிறார்கள் (13.6.2015).

கழகத் தோழர்களும், உடல் நலம் பெற்று திரும்பும் தலைவர் அவர்களைச் சந்திக்க பெரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் தோழர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய முக்கிய - அவசியமான - செய்தி ஒன்று உண்டு.

இதே தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில்தான் எனக்குச் சால்வை வேண்டாம் சால்வைக்குப் பதில் விடுதலை சந்தா வேண்டும் என்ற அறிவார்ந்த அன்பு வேண்டுகோளை தமிழர் தலைவர் முன் வைத்தார்கள் (விடுதலை 27.11.2003).

அதனை மீண்டும் மிகவும் அழுத்தமாக வலியுறுத்த வேண்டிய கால கட்டம் இது.

ஆசிரியர் அவர்களின் அய்ம்பதாண்டு விடுதலை ஆசிரியர் பணிக்காக 50 ஆயிரம் விடுதலை சந்தாக்களை அளித்து அவரை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினோம்.

வேறு எதைக் கொடுத்தாலும் இதற்கு ஈடானது. அவர்களைப் பொறுத்தவரையில் வேறு எதுவும் இருக்க முடியாது என்பதை அறிந்தவர்கள் ஆயிற்றே நாம்.

எனவே, அருமைக் கழகக் குடும்பத்த வர்களே! தஞ்சையில் நமது தலைவரைச் சந்திக்கும் பொழுது ஆசிரியர் அவர்களே ஆச்சரியமும், ஆனந்தப் பெருக்கும் அடையும் அளவுக்கு சந்தாக்களின் எண்ணிக்கையை அதிக அளவில் அவர்களின் கைகளில் அளி யுங்கள்! அளியுங்கள்!! அதன் மூலம் பெரும் மகிழ்வையும் உற்சாகத்தையும் தாருங்கள்! தாருங்கள்!!

- கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை, 5.6.2015Read more: http://www.viduthalai.in/e-paper/102721.html#ixzz3cCDGcLwG

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

துப்பாக்கியைத் தூக்க மாட்டானா?

திண்டுக்கல் அருகே இராணுவத்தில் பணியாற் றும் கணவர்களின் ஆயு ளுக்காக சப்பரத்தைப் பெண்கள் தோளில் தூக்கி வந்தனராம். பக்தி என்று வந்துவிட்டால் புத்தி வேலை செய்யாது என்பதற்கு இந்த எடுத்துக் காட்டுப் போதாதா?

சப்பரத்தைத் தூக்கி னால் எதிரி துப்பாக்கி யைத் தூக்கமாட்டானா?Read more: http://www.viduthalai.in/e-paper/102719.html#ixzz3cCDWCOQ8

தமிழ் ஓவியா said...

வீட்டு வசதி வாரிய இடத்தில் விநாயகர் கோயிலா? அரசு அகற்றுமா?சென்னை, ஜுன்5_ சென்னை எண்ணுர் காவல்நிலையப் பகுதிக் குட்பட்ட எர்ணாவூர் நெய்தல் நகர் அரசு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 156 அடுக்குமாடி களுடன் அடுக்குமாடிக் குடியிருப்பு அமைக்கப்பட் டுள்ளது. இக்குடியிருப்பு அமைக்கப்ட்டு ஏறக் குறைய 13ஆண்டுகள் ஆகின்றன. இக்குடியிருப் புப் பகுதியில் மதவேறு பாடுகள் ஏதுமின்றி இசு லாமிய, கிறித்தவ, இந்து மதங்களைச் சேர்ந்த வர்கள் என்று அனை வரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

அந்தக் குடியிருப்புப் பகுதியில் நிலவிவரும் மத நல்லிணக்கம் மற்றும் அமைதியான சூழலை சீர்குலைக்கும் வகையில் சட்டவிரோதமாக அர சின் வீட்டுவசதி வாரியத் துக்குச் சொந்தமான இடத்தில் பிள்ளையார் கோயிலைக் கட்டும் முயற் சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் குடியி ருப்பின் க்யூ பிளாக் பகுதிக்கு அருகில் 30.5.2015 அன்று இரவோடு இர வாக அத்துமீறி அந்த இடத்தில் செங்கல், சிமெண்ட் கொண்டு பீடம் அமைத்து, பிள்ளை யார் சிலையை வைத் துள்ளனர். அவ்வப்போது கோயிலை வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்த மான இடத்தில் அமைக்க முயற்சி செய்கிறார்கள் என்பதுகுறித்து குடியி ருப்பு சங்கத்தின் இந்நாள், மேனாள் நிர்வாகிகள் அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை உதவி ஆணையர் தென்னரசு, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குப்பன் உள்ளிட்டவர்களின் கவனத்துக்கு வீட்டுவசதி வாரியத்தில் குடியிருப் பவர்களால் கொண்டு செல்லப்பட்டும் அதைத் தடுத்து நிறுத்திட எவ்வித முயற்சியும் அவர்கள் எடுத்ததாகத் தெரிய வில்லை.

ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி வகையறாக்கள் தற்பொழுது இதுதான் சந்தர்ப்பம் என்று காவல் துறையினரையும் இச் சட்டவிரோத செயலுக்கு உடந்தையாக்கிக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். திருவள் ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், வீட்டு வசதித்துறையின் இயக் குநர் என்று அரசுத் துறையின் எந்த மட்டத் திலும் உரிய அனு மதியைப் பெறாமலே சிலையை வைத்து கோயி லைக்கட்டும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

அரசு வீட்டுவசதித் துறையின் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர் களும் இதை விரும்ப வில்லை.

நெய்தல் நகர் வீட்டு வசதி வாரியக் குடியிருப் போர் சங்கத்தின் துணைத் தலைவர் வி.மாணிக்கம், மேனாள் செயலாளர் சேகர் உள்ளிட்ட இந் நாள் மற்றும மேனாள் சங்க நிர்வாகிகள் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து வருகின்றனர் என்றாலும், அரசு வீட்டுவசதி வாரியம் எனும் அரசுத்துறையும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் முன் னெச்சரிக்கையாக ஆக்கிர மிப்பை தொடக்கத் திலேயே அகற்றிட வேண் டும் என்று அப்பகுதிவாழ் பொதுமக்களும் எதிர் பார்க்கின்றனர்.

அரசு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்த மான பகுதியை ஆக்கிர மித்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையார் சிலையை அகற்றி, உரிய நடவடிக் கையை அப்பகுதியை ஆக்கிரமிப்பிலிருந்து காத்திட அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா?Read more: http://www.viduthalai.in/e-paper/102720.html#ixzz3cCDdBS9m

தமிழ் ஓவியா said...

கடவுளின் பெயரால் மோதல்:

கோயில் விவகாரத்தில் இரு தரப்பினரிடையே மோதல் 21 கிராமங்களில் 144 தடை உத்தரவு

சேலம், ஜூன் 5--_ சேலத்தை அடுத்த திருமலைகிரியில் பழமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலை அப்பகுதியை சேர்ந்த ஒரு தரப்பு மக்கள், புனர மைப்பு செய்து குட முழுக்கு நடத்த ஏற்பாடு செய்தனர். கடந்த மார்ச் 4ம் தேதி குடமுழுக்கு நடக்க இருந்த நிலையில், கோயிலுக்குள் வருவது தொடர்பாக மற்றாரு தரப் பினருக்கிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட் டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகமும், மாநகர காவல்துறையின ரும் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத் தினர். அதில் முடிவு ஏற் படாததால், திருமலைகிரி உள்ளிட்ட அப்பகுதியில் உள்ள 21 கிராமங்களில் 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப் பித்தது. மேலும் கோயிலை இழுத்து பூட்டி சீல் வைத்தனர். குடமுழுக்கும் தடைப்பட்டது.

பின்னர், தொடர்ந்து பல்வேறு கட்ட பேச்சு நடத்தியும் தீர்வு ஏற் படாததால், 3 முறை 144 தடை உத்தரவு நீட்டிக் கப்பட்டது. மேலும் இக் கோயில் விவகாரம் தொடர்பாக இருதரப்பி னரும் சேலம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத் தில்  வழக்கு தொடர்ந் துள்ளனர். இந்நிலையில் இறுதியாக விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு  2ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு முடிவடைய இருந்தது. அதனால் மாவட்ட நிர்வாகம், மாந கர காவல்துறையினருடன் ஆலோசனை நடத்தியது. அதன்பின் சேலம் ஆர்டிஓ ஷேக் முகைதீன், திருமலை கிரி உள்ளிட்ட 21 கிரா மங்களிலும் 144 தடை உத்தரவு வரும் ஜூலை 2ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீடிக்கும் என அறிவிப்பு வெளியிட்டார். இந்த உத்தரவு, அந்த கிராம பகுதி மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. காவல் பாதுகாப்பு, ரோந்து தொடர்ந்து இருக்கும் என காவல் அதிகாரிகள் தெரி வித்தனர். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பதற் றமான சூழல் நிலவுகிறது.

தமிழ் ஓவியா said...

பொக்கிஷத்தைப் பாதுகாப்போம்


01.06.2015 தேதியிட்ட நமது விடுதலையில் தங்களது விடுதலையை வாங்கிப் படியுங்கள் - தாங்கிப் பிடியுங்கள் என்ற தலைப்பிலான அறிக்கையை படித்துப்பார்த்து கண் கலங்கினேன். உடல்நலம் குன்றி, மருத்துவமனையில் தங்கி, தொடர் சிகிச்சை எடுத்துக் கொண்டு இல்லம் திரும்பிய பிறகு நீங்கள் எழுதிய முதல் அறிக்கை என்பதை தெரிந்து கொண்டேன்.

தலைவர் தந்தை பெரியார் காலத்தில் விடுதலை ஏட்டிற்கு ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டு தொடர்ந்து தொய்வில்லாமல் 53 ஆண்டு காலம் விடுதலை நாளேட்டின் ஆசிரியராகப் பணியாற்றி வருவது சாதாரண விசயமே அல்ல, சம்பளத்திற்காக பிற இதழ்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் கூட எந்த ஏட்டிலும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பணி புரிந்து வந்ததாக தற்காலத்தில் சொல்ல முடியாது. கொள்கை களையும், லட்சியங்களையும் மட்டும் சம்பளமாகவும், சன்மானமாகவும் பெற்றுக் கொண்டு மலிவான, சுவை மிகுந்த, மக்களை விரைவில் சென்றடையும் விளம் பரங்களோ, செய்திகளோ இல்லாமல் சமூக நீதிக்களத்தில் மற்ற ஏடுகளுடன் போட்டி போட்டுக் கொண்டு தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ, அவர்கள் வீடெல்லாம் சென்று வரும் விடுதலைப் பயணத்திற்கு நீங்கள் கடந்த 50 ஆண்டு காலமாக ஆசிரியராக மட்டுமல்ல அதன் எல்லாமு மாகவே இருந்து வருகின்றீர்கள்.

மேலும் தங்களது அறிக்கையில், நெஞ்சில் கை வைத்து சொல்லட்டும், ஜோதிட மூடநம்பிக்கை, ராசிபலன், மலிவான சுவை களங்களான சின்னத்திரை, பெரிய திரை, மதம், ஆன்மிக வியாபாரம் இவற்றில் மக்களை சுரண்டாத சுயமரியாதை சொக்கத் தங்க நாளேடு விடுதலையை தவிர வேறு உண்டா? விரலை மடக்கத்தான் எவராலும் முடியுமா? என்று கேட்டிருப்பது இன எதிரிகளுக்கும், இயக்க துரோகிகளுக்கும் தாங்கள் கொடுத்த மிகப்பெரிய சாட்டையடி சவாலாகும். இதை எந்தக் கொம்பனும் நேருக்கு நேர் நின்று ஆதாரங்களோடு மறுக்க முடியாது.

அதுமட்டுமல்ல வருமானத்திற்காக முன் பக்கங்களை கூட காவு கொடுத்துள்ள நாளேடுகள் இன்று நம் கண் முன்னே சர்வ சாதாரணம் என்று தாங்கள் சொல்லியி ருப்பது நிதர்சனமான உண்மை என்பதோடு, இன்றைய கால கட்டத்தில் வருமானத்திற் காக கொள்கையை விலை பேசும் கூட்டத்தின் நடுவில் சுயமரியாதையை காப்பாற்றுவதற்காகவும், இனமானத்தை காப்பாற்றுவதற்காகவும் தொடர்ந்து லட்சங் களை தவிர்த்துவிட்டு லட்சியங்களுக்காக நஷ்டத்தில் இயங்கிவரும் நமது விடுதலை தமிழர்கள் நெஞ்சத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறது என்பதை நினைக்கும் பொழுது நமது நஷ்டங்களும், சங்கடங்களும் நமக்கு தூசாகவே தெரிகிறது.

அய்யா! விடுதலை ஏட்டை தொடர்ந்து நடத்துவதற்கும், நமது இயக்கத்தை தொய்வில்லாமல் இன எதிரிகள் மத்தியில் வீறுநடைபோடும் அளவிற்கு தொண்டாற் றவும், தலைவர் தந்தை பெரியாருக்குப் பின்னால், அன்னை மணியம்மையாருக்குப் பின்னால், எங்களைப் போன்ற கோடிக் கணக்கான தமிழர்களின் சமூக நலனில் அக்கறையுடன் உடல்நலத்தைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து இரவு, பகல் பாராமல் பணியாற்றி வரும் தங்களைப் பாராட்டுகின்ற நேரத்தில் அன்போடு கேட்டுக்கொள்வதெல்லாம் தங்கள் உடல் நலனை முதலில் கவனமாகப் பேணுங்கள், உங்களை வைத்து தான் இன்னும் கால் நூற்றாண்டிற்கு நமது இயக்கம் இன எதிரிகளை எல்லா களத்திலும் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.

அதனால்தான் தங்களுக்கு உடல் நலம் சரியில்லை என்று ஒரு மாதத்திற்கு முன்பாக கேள்விப்பட்டும் கூட நேரிலோ, தொலைபேசியிலோ தங்களை சிரமப் படுத்தவில்லை. எங்களுக்கு தொடர்ந்து தங்களுடைய பணி மேலும் கால் நூற்றாண் டுக்கு கிடைக்க வேண்டும் எனவே தயவு செய்து தங்களுக்கு தற்பொழுது தேவை பரிபூரணமான, ஓய்வு, ஓய்வு, ஓய்வு! வணக்கம்.

- கே.செல்வராஜ்
மாவட்ட திமுக வழக்குரைஞரணி அமைப்பாளர், தாராபுரம்Read more: http://www.viduthalai.in/page-2/102713.html#ixzz3cCEzIApv

தமிழ் ஓவியா said...

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில்
பெரியார் சிந்தனை மய்யம் - கல்வியியல் துறை இணைந்து நடத்திய
அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கான பயிற்சிப்பட்டறை
வல்லம், ஜூன் 5_ பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் பெரியார் சிந்தனை மய்யம்_- கல்வியல் துறை இணைந்து நடத்தும் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கான பயிற்சிப்பட்டறை நேற்று (4.6.2015) காலை 9.30 மணிக்கு பல்கலைக்கழக கல்வியல் துறை அரங்கில் மொழிவாழ்த்துடன் தொடங்கியது. கல்வியியல் துறை ஆசிரியை சுகந்தி வரவேற்புரை ஆற்றினார்.

பயிற்சிப் பட்டறைக்கு துணைவேந்தர் கர்னல் பேரா.நல்.இராமச்சந்திரன் தலைமையேற்று சிறப்பித்தார். திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் (மாவட்ட வருவாய் அலுவலர் ஓய்வு) பட்டறையைத் தொடங்கி வைத்து உரையாற் றினார். பெரியார் சிந்தனை மய்ய துணை இயக்குநர் டாக்டர் க.அன்பழகன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

துணைவேந்தர் தலைமை உரை

பல்கலைக்கழக துணைவேந்தர் தமதுரையில் குறிப்பிட்டதாவது:

இந்திய துணைக்கண்டத்திலேயே ஒரு கல்வி நிறு வனத்தில் அறிவியல் மனப்பான்மையை உருவாக்குவ தற்கான ஒரு பயிற்சிப் பட்டறையை நமது பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்தான் உருவாக்கியுள்ளது என பெருமைபடக் கூறினார்.

மேலும் நாட்டைத் திருத்தும் பொறுப்பிலுள்ள வருங்கால ஆசிரியர்களை நீங்கள் முதலில் திருத்தவேண்டும் அதன்பின் நீங்கள் வருங்கால சமூகத்தைத் திருத்தவேண்டும். இந்திய அரசமைப்புச் சட்டம் 51-கி(லீ) கூறுகிறபடி இந்தியக் குடிமக்கள் அனைவரும் அறிவியல் மனப்பான்மை உடையவராகவும், அதனை வளர்ப்பவராகவும் கட் டாயம் இருக்கவேண்டும்.

ஆக அரசமைப்புச் சட்டம் கூறுவதை நடைமுறைப்படுத்துவதுதான் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் நடத்தும் இந்த அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கான பயிற்சிப் பட்டறை என்று குறிப்பிட்டார்.

திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு

பயிற்சிப் பட்டறையைத் தொடங்கி வைத்து பேசும் போது வேறு கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் அரசுத் துறையினர் செய்யாததை, செய்ய வேண்டியதை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் செய்கிறது. பெரியார் படிப்பிற்கும், அறிவிற்கும் நம் நாட்டில் சம்பந்தமில்லை என்று கூறினார்.

காரணம் நமது கல்வி முறையில் அறிவியல் மனப்பான்மையை உருவாக்கும் திட்டம் பயனில்லை. எனவேதான், படித்தவர் எல்லாம் பகுத்தறிவாளராக இல்லாது இருக்கின்றனர். எனவேதான், இந்த அறிவியல் மனப்பான்மையை உருவாக்கும் இந்தப் பயிற்சிப் பட்டறையை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் நடத்துகிறது. நாட்டுக்கு இந்தப் பயிற்சிப் பட்டறை தான் முதல் நிகழ்வு.

அதனை தொடங்கி வைப்பது எனக்கு பெரும்பேறு என்று கூறி தொடங்கி வைத்தார். நிகழ்வில் மாநில பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் அழகிரிசாமி, கல்வியியல் துறை பேராசிரியர்கள் டாக்டர் ஆரோக்கியதாஸ், டாக்டர் சாமிநாதன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.Read more: http://www.viduthalai.in/page-8/102763.html#ixzz3cCG4r9vI

தமிழ் ஓவியா said...

சர்வ சக்தியா? சர்வ சைபரா?சுப்பன்: சர்வ சக்தியுள்ள கடவுளை நம்பமாட்டேன் என்கிறானே இந்தப்பாவி எவ்வளவு சொன்னாலும் ஒத்துக்கமாட்டேன் என்கிறானே.

ராமன்: அது மாத்திரம், அதிசயமல்லப்பா பசியாவரம் பெற்ற இந்த மகான் உணவு இல்லாமல் சாகக்கிடக்கிறார். ஒருவன் கூட ஒரு கை கூழ் ஊத்தமாட்டேங்கிறானே.

சுப்பன்: பசியா வரம் பெற்றவனுக்கு கஞ்சி என்னத்துக்கு? பட்டினி கஷ்டம் எப்படி வந்தது?

ராமன்: இது தான் வேடிக்கையா? நீ சொல்வது மட்டும் வேடிக்கையாக இல்லையா?

சுப்பன்: என்ன நான் சொல்றதிலே வேடிக்கை?

ராமன்: சர்வ சக்தி உள்ள கடவுள் என்றாய், அவனை ஒருத்தன் அப்படிப்பட்ட கடவுள் இல்லே என்று சொல்லுகிறான் என்றால் அது வேடிக்கையாக இல்லையா?

சுப்பன்: சர்வசக்தி உள்ள கடவுள் என்கிறாய். அந்த சர்வ சக்திக்கு இந்த ஒரு சாதாரண மனுஷனை நம்பும்படி செய்யமுடியவில்லை என்றால் இது முட்டாள் தனமான, சிரிப்புக்கு இடமான காரியமாக இல்லையா?

அதாவது பசியாவரம் பெற்ற மகான் பசியால் வாடுவது என்பதில் எவ்வளவு பித்தலாட் டம் இருக்கிறதோ அதேபோல் சர்வசக்தி உள்ள கடவுள் என்பதை ஒரு சாதாரண மனிதன் நம்பவில்லை என்பதும் அவனை நம்பச்செய்ய அந்தக் கடவுளால் முடியவில்லை என்பதுமாகும்.

- சித்திரபுத்திரன் (விடுதலை 22.2.1972)Read more: http://www.viduthalai.in/page-7/102755.html#ixzz3cCGGNNB5

தமிழ் ஓவியா said...

இராமாயணம் கற்பனை கதையே
இந்தோ- ஆரியர் போரைக் குறிப்பது

இராமாயணமும், மகாபாரதமும் இந்தோ - ஆரியர் காலத்தையும், அவர்களுடைய வெற்றிகளையும், உள்நாட்டுச் சண்டைகளையும் பற்றிக் கூறுவதாகும். இவைகள் உண்மையென்று நான் நம்பியதேயில்லை. பஞ்ச  தந்திரக் கதையிலுள்ள கற்பனைக் கதையைப் போன்றவை என்பதே என் கருத்து

- நேரு, டிஸ்கவரி ஆஃப் இந்தியா

தமிழ் ஓவியா said...

அட, அயோக்கிய புரோகிதர்களே!
சுவாமி விவேகானந்தர்மைசூர் ராஜ்யத்திலிருந்து புறப்பட்ட சுவாமிஜி, கொச்சி ராஜ்யத்தை அடைந்தார். அங்கு சில தினங்கள் தங்கிவிட்டு திருவனந்தபுரத்துக்குப் போனார். வழிநெடுகிலும் வனப்பு மிக்க இயற்கைக் காட்சிகளைக் கண்ணுற்று மகிழ்ந்தவாறே திருவனந்தபுரத்தை அடைந்தார். அப்போது டிசம்பர் மாதம்.

பேராசிரியர் சுந்தரராம அய்யர் வீட்டில் சுவாமிஜி தங்கினார். சுந்தரராம அய்யர், திருவிதாங்கூர் இளவரசருக்கு ஆங்கிலக் கல்வி போதிக்கும் ஆசிரியர் ஆவார்.

சுந்தரராம அய்யர் பிராமண உணர்வு மிகுந்தவர், வைதிக ஹிந்து சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர், எதையும் பிராமண இயல்போடு நோக்குபவர், பிராமணர் அல்லாத வர்களை சமபுத்தி இல்லாதவர் என்று சுவாமிஜி கூறியதாக எழுதி இருப்பவர். இவர் கூற்றில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பது ஆராயற்பாலது. பிராமண குலம் இந்தி யாவுக்கு மகத்தான காரியங்களைச் செய்திருக்கிறது.

இப்பொழுதும் மகத்தான காரியங்களை செய்து வருகிறது. இனியும் மகத்தான காரியங்களைச் செய்யும் என்று சுவாமிஜி கூறியதாகச் சுந்தரராம அய்யர் எழுதி இருக்கிறார் பிராமணர்களைப் பற்றிச் சுவாமிஜி கூறியிருக்கும் கருத்துக்கு இந்தக் கருத்து முற்றும் முரண்படுகிறது.

வேதங்களை இயற்றிவர்கள்?

வேதாந்தத்துக்கு ஆதாரமாய் இருப்பவை உபநிடதங்கள்; வேதங்களிலுள்ள இந்தப் பகுதிகள் க்ஷத்திரியர்களால் இயற்றப் பட்டவை என்பது சுவாமிஜியின் கருத்து. இது பிராமணர்கள் மகத்தான காரியங்களை இந்தியாவுக்கு செய்தார்கள் என்ற கருத்தோடு மாறுபடுகிறது.

வேதவியாசர், வசிஷ்டர், நாரதர் போன்றவர்கள் பிராமணர் குலத்தில் பிறந்தவர்கள் அல்லர். பிராமணர்களின் கருணை யின்மை காரணமாகவே நம்நாடு முகம்மதியர்களின் ஆட்சிக்கு இலக்காக நேர்ந்தது என்று சுவாமிஜி திட்டவட்டமாய்க் கூறி இருக்கிறார். அந்தக் கருத்துகளைத் தொகுத்து அடியில் தந்திருக்கிறோம்.

உப நிடதங்களிலுள்ள தத்துவங்கள் எல்லாம் அரசர் களுடைய மூளைகளில் அரும்பியவை. புரோகிதர்களிட மிருந்து பிறக்கவில்லை (3.280)

முன் காலத்திலே ரிஷிகள் ஆனோர் பலர். வசிஷ்டர் பிறப்பினால் இழிந்தவர்; வியாசர் மீனவப் பெண்ணுக்குப் பிறந்தவர்; நாரதர் பணிப்பெண்ணின் பிள்ளையாகப் பிறந்தவர். இவ்வாறு பிறந்தவர்கள் பலர் ரிஷிகள் ஆனார்கள் (6.433).

நெடுங்காலமாகத் தான் சேகரித்து வைத்திருக்கும் ஞானத்தைப் பிராமணன் இப்பொழுது பொது ஜனங்களுக்கு அளிக்க வேண்டும், இங்ஙனம் அவன் கொடுக்காத காரணத்தினால் முகம்மதியப் படையெடுப்புகள் சாத்தியமாயின. (6.234)

பார்ப்பனரல்லாதார் துயில் நீக்கம்!

குமரிலர், சங்கரர், ராமானுஜர் போன்ற முனிவர்கள், பிராமணர் சக்தியை மீண்டும் நிலைநாட்ட முயன்றனர். சிறிது காலம் அச்சக்தி இராசபுத்திர அரசரது வாளின் ஆதரவையும் பெற்றது. சமண புத்த எதிரிகளின் வீழ்ச்சிக்குப்பின், அது தனது அமைப்பை மறுபடியும் புதுப்பிக்கவும் முயன்றது. ஆயினும், அது, முகம்மதியரது ஆட்சியின் கீழ் என்றைக்கும் உறங்கும்படி செய்யப்பட்டது. (1.172)

பிராமணரல்லாத வகுப்பார் படிப்படியாகத் துயில் நீங்கி எழுகிறார்கள். பிராமணருடைய சாத்திரங்களிலும் மந்திரங்களி லும் அவர்களுக்குள்ள நம்பிக்கை நீங்குகிறது.

மேலை நாட்டுக் கல்வி பரவியதனால் பிராமணருடைய தந்திரங்கள் எல்லாம் மழைக் காலத்திலே பதுமா நதியினுடைய கரைகள் இடிந்து விழுவதுபோல அழிந்து போகின்றன! (5.180) இந்த அயோக்கியப் புரோகிதர்களோ, அல்லது இவர்களுடைய முன்னோர்களோ, சென்ற நானூறு தலைமுறைகளாக, வேதப் புத்தகம் ஒன்றைக் கூடப் பார்த்தது இல்லை.

கலியுகத்துப் பிராமண ரூபத்தில் இருக்கின்ற இராட்சசர்களிடமிருந்து இந்த அப்பாவி மக்களை, இறைவா! காத்து இரட்சிப்பாயாக! (9.126)
ஆதாரம்: சுவாமி விவேகானந்தர் வரலாறு (பக்கம் 162 முதல் 164 வரை)Read more: http://www.viduthalai.in/page-7/102756.html#ixzz3cCGZRVLp

தமிழ் ஓவியா said...

மதத்தில் இடமில்லை அறிவுக்கு


பொதுவாக, மதம் சில கொள்கை களை எடுத்துக்கூறி இதுதான் உண்மை, இதைத்தான் எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று பிடிவாதமாகவும் பலாத்காரமாக கட்டாயப்படுத்தியும் சாதிக்க ஆரம் பித்தது.

மதத்துக்கு யாவற்றையும் படித்து ஆராய்ந்து தேடித் தெரியக்கூடிய அறிவு என ஒன்று இருப்பதைப் பற்றி கவலை கிடையாது. விஞ்ஞானம் அய்யத்தோடும் தயக்கத்தோடும் பேசுகிறது.

ஏனெனில் விஞ்ஞானத்தின் தன்மையே இதுதான் உண்மை என்று எதையும் சாதிக்க இயலாது. பகுத்தறிவின் துணை கொண்டு எதையும் நன்கு சோதித்து ஆராய்ந்து பார்த்த பிறகே அது ஒன்றை முடிவு கட்ட இயலும். விஞ்ஞானத்தையும், விஞ்ஞான முறைகளையுமே நான் விரும்புகிறேன் என்பதை நான் உனக்குச் சொல்லத் தேவை இல்லை.

-நேரு, உலக சரித்திரம் பக்கம் 346

தமிழ் ஓவியா said...

மோடி அரசுக்கு எதிர்ப்பு

50 ஆண்டுகள் ஆனாலும் கங்கையை சுத்தம் செய்ய முடியவே முடியாது! முரளிமனோகர் ஜோஷி அதிரடிவாரணாசி, ஜுன்6_ பாஜக தலைமையிலான மத்திய அரசின் முக்கியத் துவம் வாய்ந்த திட்டங் களில் முதன்மையானதாக இருப்பது கங்கையை சுத்தம் செய்யும் திட்டம் நமாமி கங்கா(புனித கங்கை) என்று கூறிக் கொள்கிறார்கள்.

பாஜகவின் இந்தத் திட்டம் குறித்து பாஜக வின் முக்கிய தலைவர் களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி கூறுகையில், கங்கையை சுத்தப்படுத்துவது என்பது 50 ஆண்டுகள் ஆனாலும் முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட காலத்துக்கான கனவுத் திட்டமாக வேண் டுமானால் இருக்கலாம். தடைகளில்லாமல் நீரோட் டம் இருந்தால்தான் அது வும் சாத்தியம். ஆகவே, அடுத்த 50 ஆண்டுகள் ஆனாலும் கங்கையை சுத்தம் செய்ய முடியாது. அடுத்த 50 ஆண்டுகளில் கங்கை ஆற்றோட்டப் பகுதிகளை சிறுசிறு பாகங்களாகப்பிரித்து, சிறிய நீர்த் தேக்கங்களாக மாற்றினால் கங்கையைச் சுத்தம் செய்யலாம். என்று ஜோஷி கூறினார். மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்கு வரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கங்கையில் கப்பல் விடப்போவதாகக் கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு முரளி மனோகர் ஜோஷி கூறும் போது, பெரிய படகுகளே செல்ல முடியாத கங்கை யில் கப்பலை எப்படி விட முடியும்? என்று கேட் டார்.Read more: http://www.viduthalai.in/e-paper/102806.html#ixzz3cHT3uiYC

தமிழ் ஓவியா said...

ஜாதி மறுப்புத் திருமணம் செய்த இணையருக்கு பாதுகாப்பு அளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு


புதுடில்லி, ஜூன் 6- மதம் மாறி கலப்பு திருமணம் செய்த இணை யருக்கு கட்டப்பஞ் சாயத்து தீர்ப்பின் எதி ரொலியாக விடுக்கப்படும் கொலை மிரட்டலில் இருந்து அவர்களை பாது காக்குமாறு காவல்துறை யினருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரியானா மாநிலத் தில் உள்ள பரிதாபாத் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் குடும்பத் தாரின் பூரண ஒப்புத லுடன் தனது மனதுக்கு விருப்பமானவரை மதம் மாறி திருமணம் செய்து கொண்டார். உத்தரப்பிர தேசம் மாநிலத்தை சேர்ந்தவரான அந்த பெண்ணின் கணவர் டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இருவரும் இந்து முறைப் படி ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண் டனர்.

இந்த திருமணம் தொடர்பாக விசாரிக்க கூடிய உள்ளூர் பஞ்சாயத் தார், இந்த இணையரை கொன்றுவிடும்படி உத்தரவிட்டுள்ளனர். இதனால் பயந்துப்போன அந்த துணையர் தங்களது உயிருக்கு பாதுகாப்பு தேடி வழக்குரைஞரின் மூலமாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

உச்சநீதிமன்றத்தில் விடுமுறைக்கால அவசர அமர்வு முன்னர் இம் மனு விசாரணைக்கு வந் தது. இந்த இணையருக்கு தேவையான பாதுகாப்பு அளிக்குமாறும் இந்த புகார் தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் தாக்கல் செய்யும்படியும் அரியானா மற்றும் டில்லி காவல்துறையினருக்கு நீதிபதிகள் உத்தரவிட் டுள்ளனர்Read more: http://www.viduthalai.in/e-paper/102814.html#ixzz3cHTE9tmA

தமிழ் ஓவியா said...

எச்சரிக்கை!

ஈயம் கலந்த உணவுப் பொருள் எதுவும் மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கச் செய்யும். டின்களில் அடைத்து வைக்கப்படும் உணவுப் பொருள்களில் பெரும்பாலும் ஈயம் கலந்திருக்கும் - உண்ணாதீர் எச்சரிக்கை!

தமிழ் ஓவியா said...

நல்ல தமாஷ்!

பிஜேபியில் 30 லட்சம் சிறுபான்மையினர் உறுப்பி னர்கள் ஆகியுள்ளார்களாம். இந்தியக் கம்யூனிஸ்டு தமிழ் மாநில செயலாளர் தோழர் இரா. முத்தரசனையே மிஸ்டு காலில் பிஜேபி உறுப்பினராக ஆக்கியவர்கள் ஆயிற்றே.

தமிழ் ஓவியா said...

ஜூன் 7 : புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கான நாள்

ஒரு நோய் பாதிப்பிலிருந்து மீண்ட வர்களிடம் தான் அந்த நோய் பற்றிய உண்மையான அக்கறை இருக்கமுடியும், அதன் படி புற்று போன்ற கொடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு மீண்டவர் களுக்கான நாளாக ஜூன் இரண்டாம் வாரம் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த ஆண்டு ஏழாம் தேதி கொண்டாடப் படுகிறது.

நோயிற்கு மருத்துவம் ஆலோசனைகளைவிட அதனால் பாதித்து மீண்டவர்களின் ஆலோச னைகள் நமக்கு மிகவும் அவசிய மானவை. மீண்டவர்கள் சுற்றுப்புறச்சூழல் காரணமாகத்தான் எங்களுக்கு புற்று நோய் ஏற்பட்டது என்று கூறுகின்றனர். உலகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. புற்றுநோயால் நிகழும் இறப்புகளும் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. பொதுவாகப் புற்றுநோய் வந்துவிட்டால் உயிர் பிழைப்பது கடினம் என்றுதான் படித்தவர்களும் நினைக் கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. மரபணு மூலம் தொடர்ந்து அடுத்த தலை முறைக்குத் தொடரும் புற்றுநோயைத் தடுக்க முடியாது என்றாலும் குறித்த சமயத்தில் கண்டறிந்து குணப்படுத்த முடியும். தூய்மையான பழக்கவழக்கம் புற்றுநோய் வராமல் பாதுகாக்கும் முக்கிய காரணியாகும்.

புற்றுநோய் வருவதில் சுற்றுச்சூழலின் பங்கு அதிகம் என்று புற்று நோய் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். புகையிலைப் பொருட் களால் அதிக அளவு புற்றுநோய் ஏற்படு கிறது. புகையிலைப் பழக்கத்திற்கு அடிமை யானவர்களின் அதாவது சிகரெட், பீடி, பான்பராக், புகையிலை போன்ற பழக்கங் களால் வாய், நுரையீரல் போன்ற பகுதிகளில் புற்றுநோய் தாக்கும்.

தூய்மையற்ற நீர், மசாலா கலந்த உணவுகள், சரியான தூக்கமின்மை போன் றவைகள் உணவுப்பாதை நோய்களை உருவாக்கும், முக்கியமாக மாட்டிறைச் சியில் புற்றுநோய் உருவாக்கும் காரணிகள் என்ற ஒரு பொய்யான கருத்து பரப்பட்டு வருகிறது, இது உண்மையல்ல, எந்த ஒரு இறைச்சியானாலும் காய்கறி உணவானாலும் அதிக அளவு கார வகைகளைச் சேர்த்து உண்ணும் போது உணவுக்குழாய் பாதிப்பு ஏற்பட்டு நாளடைவில் புற்றுநோய் உருவாகும். நன்கு வேக வைத்து உண்ணும் மாட்டிறைச்சி புற்றுநோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்கும், நொதிகளை அதிகம் உற்பத்தி செய்யும் புரதங்களுக்கு ஊக்க மூட்டி களாக இருக்கிறது. தொடக்க அறிகுறிகள் உடலில் வலியில்லாத கட்டிகள், திடீர் எடை குறைவு, உடல் பாகங்களில் இருந்து ரத்தம் வடிதல், தொடர்ந்த மலச்சிக்கல் போன்றவை புற்றுநோயின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். நவீன மருத்துவ வசதிகள் அதிகரித்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் நோய் பற்றி கவலை கொள்ளத் தேவை யில்லை, தொடக்கத்தில் நாம் மருத்துவர் களை அணுகி தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால் புற்று நோயை குணப்படுத்தி விடலாம்

இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்குமேல் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 80 லட்சம் பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர்.

ஆண்களுக்கு நுரையீரல், வாய், உணவுக்குழாய், வயிறு ஆகிய உறுப் புகளில் புற்றுநோய் அதிகம் ஏற்படுகிறது. பெங் களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, திரிபுரா, கொல்லம், திருவனந் தபுரம் ஆகிய மய்யங்களில் நுரையீரல் புற்று நோய் பாதிப்பு அதிகம் பதிவாகியிருக் கிறது. குஜராத், மகாராஷ்டிரம், போபால் (ம.பி.) ஆகியவற்றில் வாய் புற்றுநோய் அதிகமாகப் பதிவாகியிருக்கிறது.

பெண்களைப் பொருத்தவரை மார் பகப் புற்றுநோயும், கருப்பைவாய்ப் புற்றுநோயும் அதிகம். கட்டிகளால் ஏற்படும் புற்றுநோய்கள் சிறுவர் சிறுமிகளையும் குழந்தைகளையும் அதிகம் பாதிக்கிறது. முக்கியமாக சிறுவர்களுக்கு ஏற்படும் புற்றுநோய்கள் அதிகம் சுகாதாரமற்ற சூழலினால் உருவாகிறது. நகர்ப்புறக் குடிசைப்பகுதி மற்றும் நெருக்கடியான நகர்ப்புறங் களில் வாழும் குழந்தைகளைப் புற்றுநோய் எளிதில் தாக்குகிறது.

தூய்மையான புறச்சூழல், நல்ல உணவுப் பழக்கவழக்கம் போன்றவை புற்றுநோயை எதிர்க்கும் காரணி களாகும், மரபணுமூலம் வரும் புற்று நோய் மிகவும் சொற்பமானவையே இவையெல்லாம் புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் நமக்கு கற்பிக்கும் பாடங்கள், சுற்றுப்புறத்தைச் சுகாதாரமாகப் பேணி புற்றுநோயின் தாக் கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வோம்.

- சரவணா ராஜேந்திரன்Read more: http://www.viduthalai.in/page-2/102801.html#ixzz3cHTjRZyW

தமிழ் ஓவியா said...

சொல்லவேண்டும்

பார்ப்பனியமும், மத ஆதிக்கமும் ஒழிந்தாலொழிய இந்தியாவில் யோக்கியமான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர்பார்க்க முடியாது. பார்ப்பனிய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன் னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.
(குடிஅரசு, 17.8.1930)

தமிழ் ஓவியா said...

பார்ப்பன பத்திரிகைகளும் சர். சண்முகமும்


தோழர் ஆர்.கே. சண்முகம் இந்தியா முழுவதுக்கும் தெரிந்த ஒரு முக்கியஸ்தர். அவருடைய நடவடிக்கைகளும், பேச்சுக் களும் மக்கள் கவனிக்கப்பட தக்கது என்பதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்காது. பலர் எதிர்பாக்கவும் கூடும்.

இந்நிலையில் தேசியப் பத்திரிகைகள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனப் பத்திரிகை அவரது நடவடிக் கைகளை யோக்கியமாய் பிரசுரிக்காமலும், பிரசங்கங்களையும் கேள்விகளையும், பதில்களையும் சிறிதும்கூட பிரசுரிக்காமலும் இருந்து வருகின்றன. சர். சண்முகம் அவர்கள்.

இந்திய சட்டசபையில் இராணுவ சம்பந்தமான பிரச்சினையில் கொடுத்த ஒரு தீர்ப்பு விஷயமாய் பார்ப்பனப் பத்திரிகைகள் பாராட்டாவிட்டாலும், விஷமத்தனமான பரிகாசங்களைச் செய்தன.

தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி அய்யர், ஜம்பை வைத்தியனாத பாகவதர், ரமண ரிஷி போன்றவர்கள் விஷயங்களைப் பெருக்கி கண்ணு, மூக்கு வைத்து கலம் கலமாய் அலங்கரிக்கின்றன.

இந்த மாதிரியான காரியங்களால் பார்ப்பனர்களுக்குக் கீர்த்தியும், மேன்மையும் ஏற்பட்டு விட்டதாகவோ, பார்ப்பனரல்லாதாருக்கு அபகீர்த்தியும், தாழ்மையும் ஏற்பட்டு விட்டதாகவோ நாம் சொல்ல வரவில்லை.

இந்த மாதிரியான நிலையில் பார்ப்பனர் இருக்கின்ற வரையில் சித்திரத்தில் மாதிரி பார்த்து எழுதக் கூட ஒரு பார்ப்பனர் கிடைக்காமல் பூண்டற்று போகக் கூடிய காலம் வரும் என் கின்ற தைரியம் நமக்கு உண்டு. அந்தத் தைரியம் இல்லாவிட்டால் இத் தொண்டை நாம் மேற்கொண்டிருக்க மாட்டோம்.

ஆனால் எதற்காக இதை எழுதுகின்றோம் என்றால், பார்ப்பனப் பத்திரிகைகள் தேசியப் பத்திரிகைகள் என்றும், பல பார்ப்பனர்கள் பார்ப்பனத் தன்மை இல்லாமல் நடு நிலைமை வாய்ந்தவர்கள் என்றும் கருதிக் கொண்டு பார்ப்பன சிஷ்யர்களாகவும், பார்ப்பன கூலிகளாகவும், பார்ப்பனர் களுக்கும், பார்ப்பன பத்திரிகைகளுக்கும் ஆதரவளிப்பவர் களாகவும் இருக்கும் முட்டாள்தனத்தையும், சுயமரியாதை அற்ற தன்மையையும் வெளிப்படுத்தவே இதை எழுதுகிறோம்.

விகடப் பத்திரிகை என்று வேஷம் போட்டுக் கொண்டு சில பத்திரிகைகள் பார்ப்பனியத்தைப் பிரச்சாரம் செய்துகொண்டு பார்ப்பனரல்லாத பிரமுகர்களை இழிவுபடுத்திக் கொண்டு வருகின்றன.

அவைகளுக்கும் சுத்த இரத்த ஓட்டமில்லாத - சுயமரியாதை அற்ற பணம் பிரதானமே தவிர வேறொன்றும் இல்லை என்று கருதுகின்ற சில பார்ப்பனரல்லாதார் ஆதர வளிக்கின்றதையும் பார்த்து வெட்கப்படுகின்றோம்.

என்ப தோடு 10 பணத்துக்கு மிஞ்சிய பதிவிரதை இல்லை என்று கற்பின் பித்தலாட்டத்துக்கு ஒரு பழமொழி சொல்வது போல் பணத்தை விட தங்கள் சுய நல வாழ்க்கையை விட, மானம் பெரிதல்ல என்று எண்ணி வாழ்க்கை நடத்தும் பார்ப்பனரல்லா தாரைக் கண்டு இரங்குகின்றோம்.

பார்ப்பனரைப் பார்த்து பாரதியார் நாயும் பிழைக்கு மிந்தப் பிழைப்பு என்று சொன்னது போல், ஒரு மனி தனின் பிழைப்பிற்காக மானத்தைத் தனது சமுகத்தை விற்று விட்டு ஜீவிக்க வேண்டியதில்லை என்றுதான் பரிதாபத்துடன் கண்ணீர் விட்டுக் கொண்டு இதை எழுதுகிறோம்.

- பகுத்தறிவு - கட்டுரை - 30.09.1934Read more: http://www.viduthalai.in/home/viduthalai/history-.html#ixzz3cHVjbxIE

தமிழ் ஓவியா said...

விஷமத்துக்கு விஷமமா?
அல்லது உண்மையா?திருச்சி நகர தூதன் பத்திரிகையில் தோழர் அவிநாசி லிங்கம் நிற்கவில்லை என்கின்ற தலைப்பின் கீழ் கோயம்புத்தூர், சேலம், வடாற்காடு ஜில்லாக்களின் இந்திய சட்டசபைத் தொகுதிக்குக் காங்கிரஸ் சார்பாக அபேட்ச கராய் நிறுத்தப்பட்டதாக சொல்லப்படும் தோழர் அவிநாசிலிங்கம் செட்டியார் கடைசிவரை அபேட்சகராய் நிற்க மாட்டாராம்.

காங்கிரசின் பெயரால் தோழர் அவிநாசிலிங்கம் செட்டியாரை முன்னிருத்தி அத்தகுதியைப் பயன்படுத்தி முடிந்ததும் கடைசியில் இருக்கக் கூடிய நிலைமையை அனுசரித்து இறுதியாகத் தோழர் ராஜகோபாலாச்சாரியாரே அதில் அபேட்சகராக நின்றுவிட ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு விட்டதாக நம்பத்தகுந்த இடத்திலிருந்து தெரியவருகிறது என்ற ஒரு சிறு குறிப்புக் காணப்படுகிறது.

பொய்க்கு பொய், கோளுக்குக் கோள், விஷமத்துக்கு விஷமம் செய்யத் தகுதி உள்ளவனுக்குத்தான் உலகில் இடமுண்டு என்கின்ற ஒரு ஆப்த வாக்கியம் உண்டு.

நகர தூதனில் காணப்படும் இந்தக் குறிப்பானது நகர தூதனுக்கு நம்பத் தகுந்த இடத்திலிருந்து வந்திருந்தாலும் இருக்கலாம். என்றாலும் அந்த நம்பத் தகுந்த இடத்துக்கு, நம்பத்தகுந்த இடத்திலிருந்து வந்தது உண்மையாய் இருக்குமா அல்லது மேல்கண்ட ஆப்தவாக்கியத்தை ஒட்டியதாக இருக்குமா என்பதை உறுதி கூற நம்மால் முடியவில்லை.

ஆகவே, தோழர் அவிநாசிலிங்கம் அவர்கள் நிற்கப் போவதில்லை என்பது உண்மையாய் இருந்தாலும் இருக்கலாம். அல்லது பொய்க்குப் பொய், கோளுக்குக் கோள், விஷமத்துக்கு விஷமம் என்கின்ற மனுதர்ம சாஸ்திரத்தை அனுசரித்து இருந்தாலும் இருக்கலாம் என்று எண்ணுகிறோம்.

- பகுத்தறிவு - கட்டுரை - 23.09.1934Read more: http://www.viduthalai.in/home/viduthalai/history-.html#ixzz3cHVvSPcL

தமிழ் ஓவியா said...

தமிழர்களிடையே ஜாதி உண்டா?

-பேராசிரியர் வி.எஸ்.ராஜம்

(பென்சில்வேனியா பல்கலைக் கழகம்)பென்சில்வேனியா பல்கலை க்கழகத்தின் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றிவரும் பேராசிரியர் வி.எஸ்.ராஜம் தமிழரிடையே தொடக்க காலங்களில் ஜாதி மற்றும் தீண்டாமை வழக்கத்தில் இல்லை என்பதைத் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளார்.

தமிழ் சமுதாயத்தில் எல்லா நிலைகளிலும் ஜாதிவெறி பரவிவரும் நேரத்தில் தமிழ்ப் பேராசிரியராகிய வி.எஸ்.ராஜம் சங்க காலத்தில் ஜாதி, தீண்டாமை, இன்னபிற.... என்கிற தலைப்பில் நூலை எழுதியுள்ளார். அந்த நூலில் தமிழர்களுக்குத் தொடக்க காலங்களில் ஜாதீய அமைப்பு முறைகள் இல்லாமல்தான் இருந்துள்ளன என்பதை ஆய்வாக குறிப்பிட் டுள்ளார்.

தமிழ்ச்சங்க காலங்களில் ஜாதிய பாகுபாடுகள் மற்றும் தீண்டாமை இருந்ததற்கான குறிப்புகள் ஏதும் கிடையாது என்று பேராசிரியர் வி.எஸ்.ராஜம் தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அடியார்க்கு நல்லார் எழுதிய சிலப்பதிகார விளக்கம் நூல் மற்றும் உ.வே.சாமிநாதய்யர் நூல், நம்மாழ்வார் திருமொழி ஆகிய நூல்களில் ஜாதீய முறைகள்குறித்து குறிப்பிட்டுள்ளார்கள் என்று பேராசிரியர் வி.எஸ்.ராஜம் குறிப்பிட்டுள்ளார்.

சிலப்பதிகார விளக்க நூல் எழுதிய அடியார்க்கு நல்லாரைக் கேள்வி கேட்கும் பேராசிரியர் ராஜம் செம் மொழி தமிழ் இலக்கிய இலக்கணக் குறிப்புகள் எனும் நூலின்வாயிலாக பேராசிரியர் ராஜம் முத்திரையைப் படைத்துள்ளவர் ஆவார். அந்த நூலை அமெரிக்க தத்துவச் சங்கம் வெளியிட் டுள்ளது.

சிலப்பதிகாரத்தில் இளங்கோ வடிகள் தங்கநகை செய்பவர்குறித்து குறிப்பிடும்போது, விலங்கு நடை செலவின்.... கொல்லன் என்று குறிப் பிடுகிறார். ஆனால், அவர் கூற்றுக்கு முற்றிலும் முரணாக அவன் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவன் என்பதால், உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவரிடமிருந்து ஒதுங்கி நின்றான் என்று அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டுள்ளார்.

நம்மாழ்வாரின் பாசுரத்தில், குலம் தங்கு சாதிகள் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இது ஜாதிக்கும் வருணத் துக்கும் உள்ள இணைப்பைக் குறிப் பிடுவதாக உள்ளது.

பழமையான தமிழ் இலக்கணநூலை வழங்கிய தந்தை ஹென்ரிக்சின் ஆர்டி டா லிங்குவா மலபார்: மொழியாக்கம், வரலாறு மற்றும் ஆராய்ச்சி எனும் நூலை மொழிபெயர்த்துள்ளவரான பேராசிரியர் ராஜம் கூறும்போது, 16ஆம் நூற்றாண்டில் கிறித்தவ மிஷனரியைச் சேர்ந்தவரான தந்தை ஹென்ரிக்ஸ் என்பவர்தான் முதல்முதலாக காஸ்டா (Casta) என்கிற சொல்லை பயன்படுத்தியவர். அதுதான் பிற்பாடு ஆங்கிலத்தில் காஸ்ட் (Caste) என்று உருவானது என்று கூறுகிறார்.

அந்த புத்தகம் ஹார்வார்ட் பல் கலைக்கழகத்தின் சார்பில் பதிப்பிக்கப் பட்டது. தமிழ்நாட்டின் தென்மாவட் டங்களில் உள்ள பறவாக்கள்மத்தியில் பணியாற்றி, 1546 ஆம் ஆண்டிலிருந்து 1600 ஆம் ஆண்டுவரை ஹென்ரிக்ஸ் தமிழ்_போர்த்துக்கீசிய அகராதியை உருவாக்கினார். புன்ணைக்காயல் பகுதியில் உயிரிழந்தபின்னர் அவர் உடல் தூத்துக்குடியில் பனிமயமாதா ஆலயத்தில் புதைக்கப்பட்டது. ஹென்ரிக்ஸ் ஆற்றிய பணிகள் அளவிட முடியாதவை.

சோனகன்(மூர்), சோனகத்தி(மூரினப் பெண்), பிராமணன், பிராமணத்தி என்பதுபோன்று உள்ளூர் ஜாதியினரின் பெயரைக்கொண்டு ஹென்ரிக்ஸ் பிரித்துக் கூறியுள்ளார். அதே நேரத்தில் அவர் ஜாதிக்கான குணங்களாக தாழ்த்தப்பட்டவர் என்றோ, உயர்ந்த ஜாதியினர் என்றோ, தீண்டத்தகாத வர்கள் என்றோ குறிப்பிடவில்லை என்று பேராசிரியர் ராஜம் விளக்கிக் கூறினார்.

சேரி

சேரி என்பதற்கு பொருள் தாழ்த் தப்பட்டவர்கள் வசிக்கும் பகுதி என்று கூறுவதை நிராகரிக்கும் பேராசிரியர் ராஜம் கூறுகையில், சங்க இலக்கி யங்களில் உள் ஆதாரங்களின்படி, சேரி என்பதற்கு பொருள் அனைத்து வகுப்பினரும் சேர்ந்து குடியேறிய பகுதி யையே சேரி என்று வழங்கப்பட்டது.

சேரியில் வசிப்பவர்கள் வறுமையில் உழன்றவர்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. அவரவர் தொழிலைச் செய்துகொண்டு மகிழ்ச்சி யுடனே வாழ்ந்தார்கள் என்று கூறினார்.

பேராசிரியர் ராஜம் குறிப்பிடு கையில் சிலப்பதிகாரம் விளக்கம் மற் றும் திருவாய்மொழி ஆகிய நூல்களில் தான் ஜாதியும், தீண்டாமையும் குறிப் படப்பட்டுள்ளன என்று கூறினார்.Read more: http://www.viduthalai.in/page3/102776.html#ixzz3cHWt0aNe

தமிழ் ஓவியா said...

சித்ரா பவுர்ணமி சொற் குற்றமும் பொருள் குற்றமும்

சைத்ரா என்றால் சமற்கிருதத்தில் ஆடு எனப் பொருள்படும். மேழம் என்றால் தமிழில் ஆடு எனப் பொருள்படும். பூமி சூரியனைச் சுற்றிவரும் பெயர்ச்சியின்போது இந்த மாதத்தில், பூமியில் இருந்து பார்க்கும்போது நிலவுக்குப் பின்னால் காணும் விண்மீன் கூட்டங்களை கற்பனைப் புள்ளியால் ஒருங்கிணைத்தால் ஆடு போன்ற தோற்றம் நினைவில் வரும்.

அதை தமிழ் முன்னோர்கள் மேழம் மாதம் என்று பெயர் சூட்டினார்கள். அதைத்தான் ஆரியம் புகுந்து மேஷம் என மாற்றியது. இந்த மாதம்  முழுவதும் ஆடு போன்ற தோற்றத்தை கற்பனை செய்து நிலவின் பின்புலம் அல்லது தோற்றம் என அழைத்தனர்.

பின்புலம் அல்லது தோற்றம் என்பதுதான் ஆரியத்தால் இராசி என அழைக்கப்பட்டு மேழம் பின்புலம் என்பது மேஷராசி ஆனது. சைத்ரா என்பது சித்திரை ஆனது.

பூமிக்கு இருக்கும் ஒரு நிலவு பூமியைச் சுற்றிவர 27.3 நாள்கள் ஆவதைத்தான் குசேலனுக்கு 27 பிள்ளைகள் என கதை அளந்த ஆரியப் புராணம் வேறு. சித்திரை பவுர்மணி என்பது மருவி சித்ரா பவுர்ணமி ஆகி, சித்ரா வெள்ளாடு ஆகி வழக்கில் உள்ளது.

அதைப் போலத்தான் கள்ளழகர் என்ற கற்பனை உருவ பொம்மையை உருவாக்கி இந்த மாதத்தில் வைகை ஆற்றில் இறக்கி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் என்று பத்திரிகைகளும், ஊடகங்களும் சொல்கின்றன.

உண்மையில் கள்ளழகர் என்ற (கடவுள்) சிலையை பக்தர்கள் சுமந்து வந்து வைகை ஆற்றில் இறக்கினார்கள் என்றல்லவா எழுத வேண்டும் அதை விடுத்து கள்ளழகர் ஆற்றில் இறங்கினார் என்றால், பக்தர்கள் யாருடைய துணையும் இல்லாமல் தானே அல்லவா இறங்கி இருக்க வேண்டும்.  அப்படி இறங்கினால்தானே இறங்கினார் என எழுத வேண்டும். சொல்ல வேண்டும்.

அப்படி எழுதினால் அதை நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபிக்க திராணியற்ற பத்திரிகை ஊடகங்களே இனிமேல் கள்ளழகர் சிலை பக்தர்களால் வண்ண உடை உடுத்தி சுமந்து செல்லப்பட்டு வைகை ஆற்றில் இறக்கப்பட்டது என எழுதுங்கள் உங்களுக்கு பத்திரிகை தருமம், எழுத்தில் நேர்மை, நாணயம் இருந்தால் இப்படி எழுதுங்கள்.

தயாரா? சொல்லில் குற்றம் இருந்தால் பொரு ளிலும் குற்றம் வரும். பொருள் படும்படி... படி என்கிறார் புரட்சிக் கவிஞர்.

- _ வசந்த விண்முகில்
- _ எதிலும் கட...உள் பேரவை-

தமிழ் ஓவியா said...

பிழை திருத்தும் மென்தமிழ் மென் பொருள் உருவாக்கிய அறிஞர்தமிழைப் பிழை இல்லாமலும், மொழிக் கலப்பு இல்லாமலும் எழுதக் கூடிய சிறந்த தமிழ் மென் பொருளை உருவாக்கியுள் ளார் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம். இதைக் கொண்டு கோடிக்கணக் கான தமிழ் சொற்களின் பிழைகளைத் திருத்த முடியும்.

இந்த மென்பொருளைச் சிறப்பாக வடிவமைத்த தெய்வசுந்தரம், முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பெற முதன்முறையாகத் தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஓர் இலட்சம் ரூபாய், ஒரு பவுன் தங்கம், பாராட்டுப் பத்திரம் கொண்ட விருது விரைவில் அவருக்கு வழங்கப்பட வுள்ளது.

இந்த மென்பொருளை கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவற்றில் பதிவேற்றி விட்டால், தமிழ் வார்த்தைகளில் உள்ள தவறை எளிதாகக் கண்டுபிடித்து ஒரு வினாடியிலேயே திருத்த முடியும். வார்த்தையில் ஓர் எழுத்து விடுபட்டி ருக்கலாம் அல்லது எழுத்து இடம் மாறி யிருக்கலாம் அல்லது தேவையில்லாமல் ஓர் எழுத்து சேர்க்கப்பட்டிருக்கலாம்.

இதுபோன்ற தவறுகளைக் கண்டுபிடித்து வினாடியிலே திருத்துவதுதான் இந்த மென்பொருளின் சிறப்பு. உதாரணத்துக்குக் கசலம் என்ற தவறான வார்த் தையைச் சொற்பிழை திருத்தியைக் கொண்டு திருத்தும்போது கசம், கலம், கமலம், கலசம் ஆகிய வார்த்தைகள் கம்ப்யூட்டர் திரையில் தோன்றும். அதில் நமக்குத் தேவையான சரியான வார்த்தையை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சந்திப்பிழையையும் திருத்த முடியும். எடுத்துக்காட்டாகப் படித்து பார்த்தான், வந்துப் பார்த்தான் என்ற வார்த்தை களில் உள்ள ஒற்றுப் பிழையைத் திருத்தி, படித்துப் பார்த்தான், வந்து பார்த்தான் என்று காண்பிக்கிறது. எண்களைக் கொடுத்தால் எழுத்துகளாக்கு கிறது. தமிழ் எழுத்துகளுக்கு எண்களைத் தருகிறது.

அதாவது 1,20,00,000 என எண் வடிவில் தட்டச்சு செய்தால் ஒரு கோடியே இருபது லட்சம் என்று தமிழ் எழுத்துகளாக வருகிறது. இந்த மென் பொருளில் உள்ள 56 ஆயிரம் தமிழ் அகராதி சொற்களைக் கொண்டு கோடிக்கணக்கான வார்த்தைகளைத் திருத்த முடியும்.

தமிழைத் தமிழாகவும், பிற மொழிக் கலப்பு இல்லாமலும், பிழை இல்லாமலும் எழுதப் பயன்படும் இந்த மென்பொருள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அரசு மற்றும் தனியார் அலுவலகப் பணியாளர்களுக்கும் மிகப் பெரிய வரப்பிரசாதம். ஆங்கிலம் மற்றும் தமிழ் அகராதியும் இருப்பது தனிச்சிறப்பு.

இந்தச் சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்கிய சென்னைப் பல்கலைக்கழக மொழியியல் துறை முன்னாள் தலைவர் ந.தெய்வசுந்தரம் கூறியதாவது:

எனது தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவின் 5 ஆண்டு உழைப்பே இந்த மென்பொருள். கணினி பயன்படுத்தத் தெரிந்த அனைவரும் இதன் முழுப்பலனைப் பெற முடியும். 15 வகையான கீ போர்டு வசதி இருப்பதால் உலகம் முழுவதும் பயன்படுத்தலாம்.

இத்தகைய மென்பொருட்களை உருவாக்கத் தமிழ் இலக்கணம் மட்டும் படித்தால் போதாது. மொழியியல் அறிவும் அவசியம். அதற்குப் பல்கலைக் கழகங்களில் மொழியியல் பாடம் கட்டாயம் இருக்க வேண்டும். அதன் மூலமே ஏராளமான தமிழ் மென் பொருட்களை உருவாக்கிக் கணினித் தமிழ்ப் பயன்பாட்டை ஆங்கில மொழிப் பயன்பாட்டுக்கு இணையாக வளர்க்க முடியும்.

_இவ்வாறு பேராசிரியர் தெய்வ சுந்தரம் கூறினார்.

தமிழ் ஓவியா said...

கடல் சூழ் உலகு (ஜூன் 8 உலக கடல் நாள்)

இவ்வுலகு நான்கில் மூன்று பாகம் கடலால் நிரம்பியுள்ளது. மனித இனம் மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் கடலை நம்பித்தான் உயிர்வாழ்கின்றன. கடலை நாம், சாதாரணமாக பார்க்கும் போது நீல வண்ணம் பவளம் போர்த்தியது போல் காட்சி தரலாம், கடலின் உள்ளே மனிதன் இதுவரை கண்டறியாத பல அறிவியல் அற்புதங்கள் புதைந்து கிடக்கின்றன. நமது அறிவியலாளர்கள் ஹப்பில் தொலைநோக்கி மூலம் நமது பால்வெளியையும் தாண்டி வேற்று பால்வெளியை (ஆண்டிரோமீடா) கண்டுவிட்டனர். ஆனால் தினசரி காணம் கடலில் வெறும் 30 விழுக்காடு மட்டுமே அறிந்துள்ளோம். அதே வேளையில் 70 விழுக்காடு கடலை நாம் வெறும் ஊகத்தின் அடிப்படையில்தான் இப்படி இருக்கலாம் என்று அறிந்து வருகிறோம். கடலில் தோன்றும் சிறிய மாற்றங்கள் கூட நிலப்பகுதியில் மிகப்பெரிய் சாதக பாதக விளைவுகளை ஏற்படுத்திவிடும். ஜூன் மாதம் துவங்கியதும் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை துவங்கி, மேற்கு தொடர்ச்சி மலையின் இறுதி முனையில் உள்ள தார்ப்பாலைவனத்தில் மழையே காணாத மாற்றங்களும் கடலில் ஏற்படும் மாற்றங்களால்தான் உருவாகிறது. மேற்குதொடர்ச்சி மலைதான் இந்தியாவின் பொருளாதாரத்தையே தீர்மானிக்கிறது. ஓர் ஆண்டு மேற்குதொடர்ச்சி மலை மழை தருவதை நிறுத்திவிட்டால் இந்தியாவில் மிகபெரிய பஞ்சம் ஏற்பட்டுவிடும். 2013-ஆம் ஆண்டு ஜூலை வார இறுதியில் தார்ப் பாலைவனப்பகுதியில் கடுமையான மழைபெய்தது, இது குறித்து தார்ப்பாலைவனப்பகுதியில் ஆடுகளை மேய்த்து வரும் 79 -வயது முதியவர் ஒருவர் கூறும் போது எனது தாத்தா தந்தை மற்றும் என்னுடைய காலத்தில் இதுபோன்ற மழையை கேள்விப்பட்டது மில்லை, கண்டதுமில்லை என்றார். அதே நேரத்தில் மற்றொரு மாற்றம் மத்திய இந்திய பகுதிகளில் வெறும் 30 விழுக்காடு மழைமட்டுமே பெய்துள்ளது. இது தொடர்ந்தால் இந்தியாவில் 50 விழுக்காடு மக்கள் பஞ்சத்தால் வாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏன் இந்தத் திடீர் மாற்றம் இந்தியப்பெருங்கடலின் உள்ளே உருவாகிவரும் மிகபெரிய மாற்றத்தின் ஆரம்பக் கட்டம்தான். ஆகையால்தான் தார்ப் பாலைவனத்தில் வெள்ளம் வரும் அளவிற்கு மழையும் ஆயிரம் ஆண்டுகளாக நல்ல மழைபெய்துவரும் பகுதிகளில் ஏற்பட்ட வறட்சியும் கொடுக்கிறது. கடலுக்கடியில் தேங்கும் வெப்பம் கோடிக்கணக்கான ஆண்டுகளாக புவியில் இயற்கையாக தோன்றும் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை மெல்லுடலிகள் உறிஞ்சி அதை சுண்ணாம்புப் பாறையாக தொடர்ந்து மற்றிக்கொண்டு வருகின்றன. ஆனால் கடந்த சில நூற்றாண்டாக தொழில்வளர்ச்சி காரணமாக உருவாகும் கார்பன் டை ஆக்ஸைடு வாயு, கடலின் அடியில் அளவுக்கு அதிகமாக தேங்கிக்கொண்டு வருகிறது, இப்படி தேங்கியிருக்கும் கார்பன் டை ஆக்ஸைடு வாயு இதை எடுத்துக்கொள்ளும் மெல்லுடலிகளை மெல்ல மெல்ல அழித்து வருகிறது. ஒருபுறம் கார்பன் தேக்கம் என்றால் மனிதன் உருவாக்கும் கழிவுகளும் கடலை மெல்ல மெல்ல நாசம் செய்துவருகின்றன.

உலகின் குப்பை கூடமாக மாறும் இந்தியப்பெருங்கடல் முக்கியமாக இந்தியப்பெருங்கடல் உலகின் வியாபாரப் பாதையாக மாறிவிட்ட சூழலில் மற்ற எந்த கடலையும் விட அதிக அளவு மாசுபடுகிறது. இந்திய பெருங்கடல் நாடுகளில் ஆஸ்திரேலியா, சிங்கப்பூரைத் தவிர மற்ற நாடுகள் இந்தியா உட்பட அனைத்தும் வறுமை தாண்டவமாடும் நாடுகள்தான், இந்தியப்பெருங்கடலில் ஏற்படும் மாசுக்கள் இந்த ஏழை நாடுகளை மேலும் பாதிக்கும் அபாயம் ஏற்படும் சூழல் நெருங்கி வருகிறது. மேலை நாடுகள் தங்கள் கடற்பகுதிகளை பாதுகாக்க பல்வேறு திட்டங்களை அவசர அவசரமாக நடைமுறைப் படுத்திக் கொண்டு இருக்கும் போது கடல்மாசை கட்டுபடுத்தவேண்டிய இந்தியா போன்ற நாடுகள் மேலை நாடுகளின் கூலியாளாக செயல்பட்டு தங்கள் கடலை குத்தகைக்கு விடும் கேவலமான நிலைக்குச் சென்றுவிட்டது. மேலைநாடுகளின் கைக்கூலிகளாக செயல்படும் அரசுக்கட்டிலில் அமர்ந்திருப்பவர்களின் பணத்தாசை, இந்தியா போன்ற நாடுகளின் வாழும் மக்களில் வாழ்வாதாரத்தையே பாதித்துவிடும். கடல்மாசடைவதை தடுப்பதோடு மேலை நாடுகள் இந்தியப் பெருங்கடலை ஆக்ரமிப்பதையும் தடுத்து நிறுத்தவேண்டிய சூழல் தற்போது நமக்கு ஏற்பட்டுள்ளது. இன்றைய கடல்தினத்தில் நாம் ஆற்றவேண்டிய கடமை அதிகமுள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.Read more: http://www.viduthalai.in/page-4/102883.html#ixzz3cNEQpuZM

தமிழ் ஓவியா said...

மழைக்காக சிறப்பு பூஜைகள் செய்வதா?
மூடநம்பிக்கையை தமிழக அரசு பரப்புவதா!
ராமதாஸ் கண்டனம்

சென்னை, ஜூன் 7_ தமிழக அரசின் நீர்வளத் துறை மூடநம்பிக்கையை பரப்பும் வகையில் மழைக் காக சிறப்பு பூஜைகள் செய்ய ஏற்பாடுகள் செய்வ தற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டித்து உள்ளனர்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளி யிட்டுள்ள அறிக்கையில்:_ தமிழ்நாட்டை நான்காவது ஆண்டாக வறட்சி வாட் டிக் கொண்டிருக்கும் நிலை யில், மழை பெய்ய வேண்டி தமிழகத்திலுள்ள பொதுப் பணித்துறையின் நீர்வளப் பிரிவு செயற்பொறியாளர் கள் அனைவரும் சிறப்பு பூஜைகளை நடத்த வேண் டும் என்றும், அதுகுறித்த விவரங்களை தலைமை அலுவலகத்திற்கு தெரி விக்க வேண்டும் என்றும் அத்துறையின் தலைமைப் பொறியாளர் அசோகன் சுற் றறிக்கை அனுப்பியுள்ளார்.
வறட்சியைப் போக்க மழை வேண்டும் என்ற நோக்கத்தில் எந்த தவறும் கிடையாது. அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ச் சியடைந்துள்ள இக்காலத் தில், செயற்கை மழை பெய்ய ஏற்பாடு செய்திருந் தால் அதை வரவேற்று பாராட்டியிருக்கலாம். அதை விடுத்து மூடநம்பிக் கையை பரப்பும் வகையில் மழை வேண்டி சிறப்பு பூஜைகளை செய்ய வேண் டும் என்று வலியுறுத்துவது கண்டிக்கப்பட வேண்டிய தாகும்.
மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி என்பார் கள். அதேபோல், ஜெயலலி தாவின் விடுதலைக்காக அமைச்சர் பெருமக்கள் அனைவரும் யாகம், பூஜை போன்றவற்றில் ஈடுபட்ட தன் பாதிப்போ என்னவோ அதிகாரிகளும் அதே வழி யில் செல்லத் தொடங்கி யுள்ளனர். இது மிகவும் ஆபத்தான போக்காகும். பகுத்தறிவுக்கும், அறிவிய லுக்கும் ஒவ்வாத இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, வறட்சிக்கு அறிவியலின் உதவியுடன் தீர்வு காண்ப தற்கு தலைமைப் பொறியா ளர் முயல வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

சால்வை வேண்டாம் சந்தாக்களைத் தாரீர்!அருமைக் கழகத் தோழர்களே! உரிய சிகிச்சைக்குப் பின் நமது அருமைக் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க தஞ்சை வருகிறார்கள் (13.6.2015).

கழகத் தோழர்களும், உடல் நலம் பெற்று திரும்பும் தலைவர் அவர்களைச் சந்திக்க பெரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் தோழர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய முக்கிய - அவசியமான - செய்தி ஒன்று உண்டு.

இதே தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில்தான் எனக்குச் சால்வை வேண்டாம் சால்வைக்குப் பதில் விடுதலை சந்தா வேண்டும் என்ற அறிவார்ந்த அன்பு வேண்டுகோளை தமிழர் தலைவர் முன் வைத்தார்கள் (விடுதலை 27.11.2003).
அதனை மீண்டும் மிகவும் அழுத்தமாக வலியுறுத்த வேண்டிய கால கட்டம் இது.

ஆசிரியர் அவர்களின் அய்ம்பதாண்டு விடுதலை ஆசிரியர் பணிக்காக 50 ஆயிரம்விடுதலை சந்தாக்களை அளித்து அவரை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினோம்.

வேறு எதைக் கொடுத்தாலும் இதற்கு ஈடானது. அவர்களைப் பொறுத்தவரையில் வேறு எதுவும் இருக்க முடியாது என்பதை அறிந்தவர்கள் ஆயிற்றே நாம்.

எனவே, அருமைக் கழகக் குடும்பத்த வர்களே! தஞ்சையில் நமது தலைவரைச் சந்திக்கும் பொழுது ஆசிரியர் அவர்களே ஆச்சரியமும், ஆனந்தப் பெருக்கும் அடையும் அளவுக்கு சந்தாக்களின் எண்ணிக்கையை அதிக அளவில் அவர்களின் கைகளில் அளி யுங்கள்! அளியுங்கள்!! அதன் மூலம் பெரும் மகிழ்வையும் உற்சாகத்தையும் தாருங்கள்! தாருங்கள்!!

- கலி. பூங்குன்றன்
சென்னை துணைத் தலைவர்
5.6.2015 திராவிடர் கழகம்Read more: http://www.viduthalai.in/page-8/102880.html#ixzz3cNFasNCB