Search This Blog

27.6.15

பெண்ணடிமை நீங்க பெண்களே சம்பாதியுங்கள்-பெரியார்

பெண்ணடிமை நீங்க, பெண்களே சம்பாதியுங்கள்


இந்த நிகழ்ச்சி பெருமளவில் நம் நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு மாறுபாடாகத் தோன்றலாம். இந்த முறை ஏன் மாற்றப்பட்டது? இதற்கு முன் நமக்கு எந்த முறை இருந்து வந்தது? எந்தக் காலம் முதற்கொண்டு இருந்து வந்தது? இந்த முறையின் தன்மை என்ன? என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.


எனது ஆராய்ச்சி எனக்குப் பல பெரிய புலவர்கள், வித்வான்கள், பண்டிதர்கள், நண்பர்களாக இருந்து இருக்கின்றார்கள். அவர்களிடம் கேட்டும், அறிந்து இருக்கின்றேன்.


என்னுடைய ஆராய்ச்சிப்படி சொல்கிறேன். நம் இலக்கியம் முழுவதும் எந்த இலக்கியமானாலும் சரி, குறள், தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு முதலியவை யாவும் பார்ப்பனர்கள் வருகைக்குப் பின்தான் ஏற்படுத்தப்பட்டவை. நம் தமிழ் இலக்கியங்கள் யாவும் ஆரியர் இந்த நாட்டிற்கு வந்த பின் தான் தோற்றுவிக்கப்பட்டன. தமிழனுக்கு இப்படி ஒரு நிகழ்ச்சி முறை இருந்திருக்க வேண்டுமானால், அதற்கு ஒரு பெயர் இருக்க வேண்டும்.


இந்த நிகழ்ச்சி முதலாவதாக யாருக்கு நல்ல பலன் அளிக்கிறது என்றால் பெண்களுக்குத் தான். பெண்கள் தான் பழைய முறை மூலம் அடிமைகளாக ஆக்கப்படுகிறார்கள். ஆண்களுக்கு நிரந்தரமான அடிமையாவது தான் இந்தத் தத்துவம். இதனால் இந்த நாடு, சமுதாயம் பெண்களால் அடையும் நலன்களை அடைய முடியாமல் போய்விட்டது. பெண்களின் அடிமை நிலையை நினைத்தால் ஜாதிக் கொடுமையை விட, சமுதாயத்தில் இருக்கும் தீண்டப்படாதவர்களை விட கொடுமையானதாகும்.


இப்போது மாறுதல் நிகழ்ச்சியின் பயனாகப் பெண்கள் அடிமை நீங்கி, ஆண்களால் இந்த நாட்டிற்கு எவ்வளவு பயன் ஏற்படுகிறதோ அந்த அளவு பயன் பெண்களால் நாட்டிற்கு ஏற்பட வேண்டுமென்கிற தன்மை ஏற்பட்டுள்ளது.


வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் என்கின்ற பெயரோ, திருமணம் என்கின்ற பெயரோ இல்லாவிட்டால் மீதி உள்ளவையாவும் வடமொழிச் சொற்களேயாகும். கல்யாணம் என்ற சொல்லுக்கு அர்த்தம் கணவன் - மனைவியாக வாழச் செய்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு உரிய சொல் அல்ல. மங்களகரமான காரியம் என்று தான் அர்த்தம். விவாகம் என்ற சொல்லும் மேல் - கீழ் என்ற தன்மையை உடையதே தவிர, நிகழ்ச்சிக்குரிய சொல் அல்ல.


ஒரு காரியத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் ஏன்? எதற்காக? என்று சிந்திக்க வேண்டியது அவசியம்.


இந்தக் காரியத்திற்குத் தமிழில் ஒரு சொல்லே இல்லை. சொல் இல்லை என்றால், அதற்கு முன் இந்நிகழ்ச்சி நம்மிடையே இல்லை என்றுதான் அர்த்தமாகும். இப்போது காஃபி குடிக்கிறோம். உலகத்தில் உள்ள எல்லா மக்களும் காஃபி - காஃபி என்று தான் சொல்கிறார்கள். ஆனால், அது தமிழ்ச் சொல் அல்ல. ஆங்கிலச் சொல். ஆங்கிலச் சொல் மட்டும் அல்ல; 10- மொழிகளின் சொல்லாகும். கிரீஸ், ஸ்பெயின், ஃபிரெஞ்சு எல்லாம் சேர்ந்தது அய்ரோப்பிய மொழிகள்; அவை எல்லாவற்றிலும் காஃபி என்றே அழைக்கப்பட்டு வருகின்றது. அதையே தமிழிலும் அழைக்கிறோம்.

ஆரியனுக்கும் இந்தத் திருமண வழக்கம் இல்லை. மத்தியில் கொண்டு வந்து புகுத்திய முறையேயாகும். அதற்கு முன் ஆண் - பெண் இல்லையா? அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று கேட்கலாம். இருந்தார்கள். ஆனால், இப்போது போல் அடிமையாக இல்லை. சுதந்திரமாக இருந்தார்கள். இந்த அமைப்பை வைத்துப் பெண்களைக் கீழ்மையாக்கி விட்டார்கள்.


நமக்கெல்லாம் புத்தி இல்லையா என்பீர்கள். ஓர் உதாரணம் சொல்கிறேன். நமக்கெல்லாம் அறிவு இல்லை, மானம் இல்லை, புத்தி இல்லை என்பதற்கு (ஆரியன்) பார்ப்பான் வந்த பின்தானே நாம் "சூத்திரன்?" அதற்கு முன் நாம் "சூத்திரனாக" இருந்ததில்லையே. அரசியலில் இருக்கும் முதல்மந்திரி (திரு. பக்தவத்சலம்) சூத்திரன் என்பதற்குக் கவலைப்படவில்லையே! அதை ஒரு ராவ்பகதூர் பட்டமாகக் கருதுகிறாரே! கடவுள் அப்படிச் சொல்கிறார் - மதத்தில் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது - சாஸ்திரத்தில் இருக்கிறது என்று இந்த மூன்றையும் தான் எந்தக் காரியமானாலும் எடுத்துக் காட்டுகிறானே தவிர, என் அறிவு இப்படிச் செல்கிறது என்று எவனும் சொல்லுவதில்லையே!


முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் மூட நம்பிக்கை - முட்டாள்தன காரியங்களுக்கு மதம் - சாஸ்திரம் - கடவுள் - இவற்றைத் தான் காட்டுகின்றனர். பார்ப்பானின் தயவினால் தான் இன்று நம்மை மலம் தின்னாமல் வைத்திருக்கின்றான். நான் சொல்லுவது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். இன்று உங்களை சாணியைத் தின்ன வைத்திருக்கின்றானா இல்லையா? பார்ப்பான் நம் வீட்டில் நடைபெறும்  காரியங்கள், திவசம், சாந்திக்கு வந்தால் நமக்கு முன்னாலேயே சாணி, மூத்திரம், நெய், பால், தயிர் இவற்றைக் கலந்து "பஞ்சகவ்வியம்" குடி என்கிறான்! நம் மடையன் பயபக்தியோடு கையில் வாங்கி குடித்துவிட்டு, தலையில் கூடத் தடவிக் கொள்கிறான். இது மதத்தின் பெயரால் நடைபெறுகிறது தானே?


மனு தர்மம், பாரதம், இராமாயணம் இவற்றை நாம் படிக்கிறோம் என்றால் படிக்கக் கூடாது என்று எழுதி வைத்திருக்கிறான். இவற்றின் மூலமே நம்மை அடிமையாக்கி வைத்திருக்கின்றான். நம் மக்களும் இதையே நம்பிக் கொண்டிருப்பதால் இன்றும் சூத்திரர்களாக, இழி மக்களாக இருந்து வருகின்றனர். இத்தன்மையால், இதில் மாற்றம் வேண்டுமென்று எவனுமே நினைக்கவில்லை. நாம் தான் முதன்முதலில் இதைப் பற்றிச் சிந்தித்து இதில் மாற்றம் வேண்டும் என்பதற்காகப் பாடுபட்டு வருகின்றோம். எதனால், எங்களால் மட்டும் இதைக் கூற முடிகிறது என்றால், கடவுள் - மதம் - சாஸ்திரம் இவற்றில் நம்பிக்கை எங்களுக்குக் கிடையாது. ஆகவே தான் துணிந்து எங்களால் இவற்றை எல்லாம் எடுத்துக் கூற முடிகிறது.


உலக நாடுகள் எப்படி முன்னேறிக் கொண்டிருக்கின்றன? வெளிநாட்டில் உள்ளவன் சந்திர மண்டலத்திற்குச் சென்று திரும்புகின்றான். எல்லா ஜீவன்களையும் விடச் சிறந்த பகுத்தறிவு மனிதனுக்கு இருக்கிறது. மற்ற நாட்டு மக்கள் தங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தி மிக விரைவில் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், நாம் இன்னும் பகுத்தறிவைப் பயன்படுத்தாத காரணத்தால் காட்டுமிராண்டிகளாக இருக்கிறோம். சூத்திரர்களாக பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனாக இருக்கின்றோம்.


இன்னும் 10-ஆண்டுகளில் இந்த முறையே இருக்காது. எங்களின் கடைசி இலட்சியமும், அடுத்த இலட்சியமும் இதுதான். எதற்காக இந்தக் கணவன் - மனைவி முறை? இது இல்லாவிட்டால் என்ன கெட்டுவிடும்? மேல்நாடுகள் பலவற்றில் இந்த முறை இல்லையே! அதனால் அந்த நாடு என்ன கெட்டு விட்டது? இந்த முறை ஒழிந்தால் மற்ற மக்களுக்குத் தொந்தரவு அற்ற நிலை ஏற்படும். குடும்பக் கவலை இன்று பிறருக்குத் தொண்டு செய்யவும் முடியும். 


பெண்களுக்குப் பிழைக்க வழி இல்லை என்பதால் பெண்ணுக்கு ஆணின் துணை தேவை இருந்தது. பெண் வாழும்படியான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விட்டால் அவள் தேவைக்கு அவள் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டால் அப்பறம் எதற்குத் துணை தேவை? 


பகுத்தறிவுவாதிக்கு எந்தப் பற்றும் இருக்கக் கூடாது. எந்தப் பற்று இருந்தாலும் அவன் பகுத்தறிவுவாதியாக முடியாது. பகுத்தறிவுவாதியாக வேண்டுமானால் அவனுக்குக் கடவுள்பற்று - மதப்பற்று - சாஸ்திரப்பற்று - தேசப்பற்று - மொழிப்பற்று எதுவுமே இருக்கக் கூடாது. மக்கள் வளரணும் - மக்கள் வளர்ச்சியடையணும் என்ற பற்றுத் தான் இருக்க வேண்டும். எந்தக் காரியத்தையும் நிர்வாணமாகப் பார்த்துச் சிந்திக்க வேண்டும். மனித சமுதாயத்திற்குக் கேடாக அமைந்திருக்கிற பெண்ணடிமை - மூடநம்பிக்கை - ஜாதி இழிவு - இவை ஒழிய வேண்டும். இவை ஒழிந்தால் தான் சமுதாயம் வளர்ச்சியடைய முடியும். 


இந்த மாறுதல் நிரந்தரமான மாறுதல் அல்ல இது 1966-ஆம் ஆண்டு மாடல். அவ்வளவுதான்! 1987-இல் இந்த முறை எப்படி மாறுமோ? 1980-இல் கணவன் மனைவி என்ற முறையே மாற்றமடையும். பெண்களுக்கு முழு சுதந்திரம் வந்தது என்றால் நிச்சயம் இம்முறை மாற்றமடைந்தே தீரும். அது முடியுமா என்பீர்கள்! இதுவரை ஆண்களுக்கு இந்த உரிமை இருக்கிறதா இல்லையா? இப்போது பெண்கள் 100-க்கு 20-பேர் படித்தவர்களாக இருக்கிறார்கள். இன்னும் 10-ஆண்டுகளில் 100-க்கு 100-ம் படித்தவர்களாகி விடுவார்கள். அப்போது கட்டாயம் இந்த முறை மாற்றமடைந்தே தீரும். இந்த ஆட்சி ஒழுங்கான ஆட்சியாக இருப்பின் பகுத்தறிவையே ஒரு பாடமாக்கி இருக்கும். 


ஜாதியின் காரணம் தான் - மக்கள் மூட நம்பிக்கைக்காரர்களாக - இழிஜாதி மக்களாக - சமுதாயத்தில் கீழ்ப்படுத்தப்பட்டவர்களாக இருப்பதற்கு முக்கிய அடிப்படையாகும். 


மணமக்கள் கூடுமான வரையில் தங்கள் வரவிற்குள் செலவிடப் பழக வேண்டும். மனிதன் அயோக்கியனாவதே வரவிற்கு மேல் செலவிடுவதால் தான். மக்கள் ஆடம்பரமான வாழ்வை விரும்பக் கூடாது. சாதாரண வாழ்க்கை வாழ வேண்டும். மற்றும் குழந்தைகள் பெறுவதில் மிக  எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 100-க்கு 97-பேராக நாம் இருந்தாலும் 7- பேருக்குத் தான் நிம்மதியான வாழ்க்கை நடத்தக் கூடிய வருவாய் வருகிறது. மிச்சம் 90-பேருக்கு வயிற்றுக் கணக்குப் பார்த்துத் தான் மற்றும் பற்றாமல் வருவாய் வருகிறது. இந்த நிலையில் அதிகக் குழந்தைகள் பெற்றுக் கொள்வதால் வருவாய் போதாமை ஏற்பட்டு அவதிப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆகவே, ஒன்றிரண்டு குழந்தைகளோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். 


பகுத்தறிவுவாதி கவலையற்று வாழ முடியும். பகுத்தறிவு அற்றவனுக்கு எவ்வளவு செல்வமிருப்பினும், கவலையும் அவனோடு இருந்து கொண்டுதான் இருக்கும். 


இதுவரை நடைபெற்ற ஆட்சி மனுதர்ம ஆட்சி. இப்போது நடைபெற்று வருவது மனித தர்ம ஆட்சியாகும். இந்த ஆட்சியைக் காப்பாற்ற வேண்டியது இந் நாட்டின் பெருங்குடி மக்களான நம் கடமையாகும். 


---------------------------- 02.09.1966- பழனியில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. "விடுதலை" 27.09.1966

55 comments:

தமிழ் ஓவியா said...

சங்கராச்சாரியாரை சந்தித்த ரஷ்யர்!

இந்தியாவுக்கு 1964இல் வந் திருந்த ஒரு ரஷ்யப் பிரமுகரிடம், ஒரு பார்ப்பனர் -இந்தியாவுக்கு யார் வந்தாலும் சங்கராச்சாரியாரைப் பார்த்துவிட்டு வருவதுதான் முக்கியமான காரியம் என்று சொல்லி, அவரைச் சங்கராச் சாரியாரிடம் அழைத்துப்போனார்.

அந்த ரஷ்யர், பல விஷயங்களைப்  பற்றி சங்கராச்சாரியாரிடம் பேசிவிட்டுக்  கடைசியில் உங்கள் நாட்டில் உங்கள் சம்பிரதாயத்திற்கும் உங்கள் மத சம்பிரதாயத்திற்கும்  விரோதமாகப் பெரியார் ஒரு இயக்கம் நடத்துகிறாரே, அதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன? என்று கேட்டார்.

அதற்குச் சங்கராச்சாரியார் ஆமாம் ! அப்படி ஓர் இயக்கம் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது என்றாலும், அது இன்றைக்குப் பதினேழுவருடங்களுக்கு முன்வரையில் நாங்கள் மிகக் கவலை கொள்ள வேண்டிய அளவுக்கு நடந்தது. இப்போது அதைப்பற்றிக் கவலைபடவேண்டிய அவசியமில்லாத  நிலை ஏற்பட்டு விட்டது. அது பாட்டுக்கு அது நடைபெறுகிறது என்றாலும் அதனால் இன்று எங்களுக்கு எந்தவிதத் தொந்தரவும் இல்லை என்றாராம்.

அந்த ரஷ்யர் அதற்குப் பின் தந்தை பெரியாரையும் சந்தித்தார்; சங்கராச்சாரியார் கூறியது பற்றியும்  கேட்டார்.   அவர் இப்படி கேட்கும்போது  ஒரு  பார்ப்பனரும் கூட இருந்தார்.    அப்போது தந்தை பெரியார்அதற்குப்  பதில் சொன்னார். அது ஒரு நல்ல அளவுக்கு உண்மைதான். எப்படி என்றால், நம் நாட்டுக்குச் சுதந்திரம் வந்து  17 ஆண்டுகள் ஆகிறது. அது பார்ப்பனருக்கு வந்த சுதந்திரமே ஆகும்.

நம்மிலிருந்து விளம்பரமும் செல்வாக்கும் பெற்ற ஒரு கூட்டம் பார்ப்பனர்க்கு நிபந்தனையற்ற அடிமையாகக் கிடைத்துவிட்டது. அதனால் பார்ப்பனர்கள், இடையில் இழந்ததை யெல்லாம் திரும்பவும் பெற்றுக்கொண்டு மேலேற வசதி ஏற்பட்டது. -என்று தந்தை பெரியார் பதில் கூறினார்.

தமிழ் ஓவியா said...

மவுடீக எண்ணங்கள்

இந்தியா தன்னுடைய மத மவுடீகங்களைக் களைந்து விஞ்ஞானப்  பாதையில் திரும்ப வேண்டும். தேவையற்ற, பொருளற்ற எண்ணங்களும், சமூகப் பழக்கவழக்கங்களும்  இந்தியதாய்க்கு  சிறைச்சாலை எழுப்பியிருக்கின்றன. இவைகளே இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கின்றன.

இந்த மதக்கோட் பாடுகள் சமூக உறவு ஏற்படத் தடையாகவிருக்கின்றன. சமுதாய நடவடிக்கையில்  குறுகிய எண்ணத்தை  ஏற்படுத்தியிருக்கின்றன. ஒரு வைதீக ஆசார இந்து என்பவரின் மதமே, எதைச்  சாப்பி டுவது; எதைச் சாப்பிடக்கூடாது; யாருடன் உணவருந்தலாம்; யாருடன் இருந்து உண்ணக் கூடாது என்பதில் தானே,

மற்ற ஆன்மிகக் கருத்துக்களைவிட அக்கறை காட்டுவதாயிருக் கிறது? இந்த ஆசார இந்துவின் சமூக வாழ்வை சமயலறையின் சட்ட திட்டங்கள்தான் ஆதிக்கஞ் செலுத்திவருகின்றன ! முஸ்லீம்கள் இதுமாதிரியான பழக்கங்களிலிருந்து விடு பட்டாலும் அவனுக்கும் குறுகிய மதக்கோட்பாடுகளும்  சடங்கு களும்  இருக்கின்றன.

அவைகளை அவன் அடுத்தடுத்து அனுசரிக்க வேண்டும். இவைகளை எல்லாம் கடைப்பிடிக்கும் அவன் தன் மதம் போதிக்கும் பாடமான சகோதரத்துவத்தை  தருணத்தில் மறந்துவிடுகிறானே! -நேரு டிஸ்கவரி ஆஃப் இந்தியா

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாரின் பெண்ணுரிமைக் கருத்து உலகிற்கே தேவை!

 

பெண்ணடிமைத்தனம் என்பது இந்தியாவுக்கு மட்டும் உள்ள தனிச் சொத்தல்ல; உலகம் முழுவதுமே இது நீக்கமற நிறைந்திருக்கிறது.

சென்னை - திருவொற்றியூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் (10.5.2007) நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் கூறுகிறது.

குடும்பச் சொத்தை உத்தேசித்தும், பெண்களின் உடல் நலனை முன்னிட்டும் கருத்தடை அவசியம் என்பதைவிட, பெண்கள் விடுதலை அடையவும், சுயேச்சை பெறவும் கருத்தடை அவசியம் என்ற தந்தை பெரியார் அவர்களின் கருத்தின் அடிப்படையில், ஒரு குழந்தைக்குமேல் இன்னொரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதுபற்றி முடிவு செய்யும் உரிமை பெண்களுக்கு மட்டுமே தனி உ,ரிமையாக இருக்க வேண்டும் என்பதை இம்மாநாடு வலியுறுத்துகிறது. தேவைப்பட்டால் இதற்கான தனிச் சட்டத்தையும் அரசு இயற்ற வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது என்பதுதான் திருவொற்றியூர் தீர்மானமாகும்.

இந்தத் தீர்மானம் ஏதோ இந்தியாவுக்கு மட்டும் தேவைப்படும் என்று நினைத்து விடக் கூடாது; அயர் லாந்து நாட்டில் நிலவும் ஒரு சட்டத்தைப் பார்க்கும் போது திருவொற்றியூர் மாநாட்டுத் தீர்மானத்தின் முக்கியத்துவம் புலனாகும். ஒரு பெண் கருவுற்றிருக்கிறாள். மருத்துவர் அந்தக்கரு சரியாக உருவாகவில்லை என்கிறார். ஆனால், அய்ரிஷ் சட்டமோ அந்தக் கருவை மகப் பேறு காலம்வரை அப்பெண் சுமந்தே தீரவேண்டும் என்கிறது.

ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறாள். அதனால், கருவுற்றிருக்கிறாள். அவள் அந்தக் கருவை சுமந்திருக்கும் ஒவ்வொரு நாளும் அவளுக்கு நேர்ந்த கொடுமையை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. இன்னமும் அய்ரிஷ் சட்டம் அவளை அந்தக் கருவை சுமந்தேயிருக்குமாறு கூறுகிறது.

அவளுக்குத் தேவை கருக்கலைப்பு. ஆனால் எந்தப் பெண்ணையும் கருக்கலைப்பு செய்து கொள்ள அயர்லாந்து அனுமதிப்பதில்லை. ஆகவே, அவள் அந்நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயத் துக்கு ஆளாகிறாள். அதுவும் அவள் உடல் அதற்கு இடம் கொடுத்தால்தான். அப்படி நாட்டைவிட்டு வெளியேற முடியாமல் அங்கேயே இருந்துகொண்டு கருக்கலைப்புக்கான முயற்சிகளைச் செய்தார் என்றால், அவருக்கு 14 ஆண்டுகள் சிறைவாசம் என்கிற அச்சுறுத்தல் இருக்கிறது.

அவர் குற்றவாளி இல்லை. அவருக்கு கருவைக் கலைத்துக்கொள்ளும் மனித உரிமை உள்ளது.
இவ்வாறு பன்னாட்டு பொதுமன்னிப்பு சபையின் சார்பில் அயர்லாந்து அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மேற்கண்ட கோரிக்கையை இணையத்தின் வாயிலாக வலியுறுத்தும் மனிதநேயர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக்கொண்டுள்ளது.
நன்றியறிவிப்பில் குறிப்பிடும்போது, கருக்கலைப்புச் சட்டத்தில் மாற்றம் கோரியமைக்கு நன்றி. அதேபோல் பெண்கள் மற்றும் இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளை குற்றவாளிகளாக்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
அதுமட்டுமன்றி, அயர்லாந்தில் உள்ள பெண்கள் மற்றும் இளம்பெண்கள், சிறுமிகளுக்கான சுகாதாரக் கவனிப்பு  மற்றும் மருத்துவ உதவிகள் தேவைப்படு கின்றன. அவர்களுக்கான மருத்துவர்கள், செவிலியர் மற்றும் மருத்துவ ஆலோசகர்கள் தேவை! அயர்லாந்து அரசுக்கு மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி அழுத்தம் கொடுத்துள்ளோம்.

இக்கோரிக்கைகளை இப்பொழுதே உங்கள் நண்பர்களுடன் இணைந்து பகிர்ந்துவிடுங்கள்.

இவ்வாறு அயர்லாந்து அரசுக்கு கருக்கலைப்புச் சட்டத்தில் மாற்றத்தை செய்திட இணையத்தின் வாயிலாக வலியுறுத்தும் கோரிக்கையாக பன்னாட்டு பொது மன்னிப்பு சபை வெளியிட்டுள்ளது.

பன்னாட்டுப் பொது மன்னிப்பு சபையின் வேண்டுகோள் மிகவும் நியாயமானது.
அதே நேரத்தில் இது போன்ற கருத்துக்களை தந்தை பெரியாரும் திராவிடர் கழகமும் வெகு நீண்ட காலத் திற்கு முன்பிருந்தே கூறி வருவதை இந்த நேரத்தில் நினைவூட்டுகிறோம்.

ஆம், மற்ற மற்ற கருத்துக்களில் சிலருக்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம். பெண்ணுரிமைப் பிரச்சி னையில் தந்தை பெரியாரியல் என்பது உலகிற்கே தேவைப்படக் கூடியது என்பதில் அய்யமே இல்லை.

தமிழ் ஓவியா said...

அட நடராஜா!

சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த நடராஜக் கட வுளின் தாத்பரியம்பற்றி அள்ளி விடுவார்கள். இந்த நடராஜனை ஆகாய லிங்க வடிவில் வழிபடு கிறார்களாம். கோவில் என்றாலே, அது சிதம் பரம் நடராஜன் கோவி லைத்தான் குறிக்குமாம்.

நடராஜர் நடனக் கலை வல்லுநராம். 108 வகை நடனங்களை ஆடு பவராம். நடராஜர் சிலை கனகசபையில் உள்ளது. மூலஸ்தானத்துக்கும், இதற்குமிடையே திரை ஒன்றுள்ளது. அந்தத் திரைக்குப் பின்புறத்தில் தான் ஆகாய வடிவம் இருக்கிறது. அதிலிருந்து தான் நடராஜப் பெருமான் தோன்றி பதஞ்சலி, வியாக்கிரபாதர் என்னும் இருடிகளுக்காக நடனம் ஆடினாராம்.

அடேயப்பா, இப்படிப் பட்ட சிதம்பரம் நடராஜன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத கையா லாகாத்தனத்தை எண்ணி னால் வயிறு முட்ட சிரிப்புதான் மிஞ்சும்.

இதோ அந்த வரலாறு

முப்பத்தேழு ஆண்டு, பத்து மாதம், இருபது நாள்கள் (24.12.1648 முதல் 14.11.1686) வரை சிதம்பரம் கோவிலில் உள்ள நட ராஜர் சிலை சிதம்பரத்தி லிருந்து வெளியேறியி ருந்தது என்னும் உண்மை இப்போதுதான் தெரிய வந்துள்ளது. சிதம்பரத்தி லிருந்து எடுத்துச் செல் லப்பட்ட நடராஜர் சிலை, முதல் நாற்பது மாதங்கள் குடுமியான்மலையிலும்,  பின்னர் மதுரையிலும் இருந்திருக்கிறது. இந்தச் செய்தி, இப்போது திரு வாரூரில் கிடைத்திருக் கும் மூன்று வடமொழிச் செப்பேடுகளிலிருந்து தெரிய வருகிறது.

தில்லையை விட்டு நடராஜர் சிலை அகற்றப் பட்டதற்கு என்ன கார ணம் என்பது சரிவரத் தெரியவில்லை. இருந் தாலும், அக்காலச் சூழ் நிலைகளை வைத்து ஆராயும்போது, பீஜப்பூர் சுல்தானுடைய படையெ டுப்புக்கு பயந்து கொண்டோ அல்லது 1647 ஆம் ஆண்டு தமி ழகத்தின் வடபகுதியில் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தின் காரணமா கவோ சிதம்பரத்திலுள்ள நடராஜருக்குச் சரிவர பூஜை நிகழ்த்த முடியாது என்று நினைத்த சில பக்தர்கள் இப்படி நட ராஜர் சிலையை எடுத்துச் சென்றிருக்கலாம் என்று யூகிக்கலாம்.

கடைசியில் மதுரை யில் இருந்த நடராஜரை மீண்டும் சிதம்பரத்திற்குக் கொண்டு வந்தது, மராட் டிய மன்னன் சகசி காலத் தில்தான் என்றும் தெரி கிறது.

ஆதாரம்: தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர்

(இந்தச் செய்தி இத யம் பேசுகிறது இதழிலும் எடுத்துப் போடப்பட்டுள் ளது).

இப்பொழுது சொல் லுங்கள், இந்த சிதம்பரம் நடராஜக் கடவுள்பற்றி அளப்பதெல்லாம் அசல் கட்டுக்கதைகளா இல் லையா?      - மயிலாடன்

தமிழ் ஓவியா said...

மற்றுமொரு தொல்லை

மதங்களின் பெயரால், கடவுளின் பெயரால், ஜாதிகளின் பெயரால் மனிதனை மனிதன் பிய்த்துப் பிடுங்கித் தின்னும் இந்நாட்டில், ஒரு கவளம் சோற்றுக்கு வழியின்றி எச்சிகல்லை நாயோடு சண்டை போட்டுழலும் ஏழைமக்கள் பல்லாயிரக் கணக்காயுள்ள இந்நாட்டில் மத சம்பந்தமான தெய்வ சம்பந்தமான ஆடம்பரத் தொல்லைகள் வாரம் தோறும் மாதம்தோறும் வந்து கொண்டுள்ளன.

தீபாவளித் தொல்லை வந்து இன்னுந் தீர்ந்தபாடில்லை. முதலாளிகள் கோடியாடை களின்னும் மழுங்கவில்லை. பலகார பட்சணங்களின் மப்பு மந்தாரம் இன்னும் வெளியாகவில்லை.

மயிலாடுவதைக் கண்டு கோழியாடிய மாதிரி, தாமும் அம்முதலாளிகளைப் பின்பற்றி இமிடேஷன் கொண்டாட்டம் நடத்திய ஏழைகள், கூலிகள், அடிமைகள், பாட்டாளி மக்கள் அதனால் பட்டகடன் தொல்லைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை.

இந்த லட்சணத்தில் கார்த்திகை தீபம் என்று மற்றொரு தொல்லையும் சமீபத்தில் வந்துவிட்டது; தீபாவளி தொல்லையாவது இருந்த இடத்திலேயே மக்களை பிடித்தாட்டி விட்டு போய்விட்டது.

இதுவோ (அண்ணாமலை தீபமோ) கடவுளே (சிவன்) ஜோதி மயமாகக் கிளம்புகிறா ரென்பதாக அண்ணாமலை மண்திடலுச்சியில் பெரிய கொப்பரையில் குடம் குடமான நெய்யும், ஆயிரக்கணக்கான ஜவுளிகளும் போட்டு பயித்தியக்காரத்தனமாகத் தீயை வைத்துவிட்டு அந்த நெருப்பு கொழுந்து விட்டெரிவதைப் பார்த்து அரகரா சிவசிவா என்று கன்னத்திலும், கண்ணிலும் அடித்துக் கொள்வதும், அதன் சாம்பலையும், குழம்பையும் எடுத்துப் பூசிக் கொள்வதும், போனவர்களெல்லாம் நெய்யையும், ஜவுளிகளையும் குடங்குடமாக, மூட்டை மூட்டையாகக் கொப்பரையில் கொட்டி நெருப்புக்கிரையாகத் திருப்தியடைவதுமான களியாட் டத்தைக் காண 20, 30, 50, 100 செலவழித்துக் கொண்டு போய் அண்ணாமலையென்னும் மண் திடலையும், அதன் உச்சியிலெரியும் நெருப்பையும் ஜோதிமயமான கடவுளென்று வணங்கி ஆகாய விமான சகாப்தமாகிய இந்த 20ஆம் நூற்றாண்டிலும் நம்பிக் கொண்டும் திருவண்ணாமலை தீபம், கார்த்திகை தீபம், திருப்பரங்குன்றம் பெரிய கார்த்திகை தீபத்திருவிழா என்றெல்லாம் மக்கள் பாமரத் தன்மையாய் பிதற்றிக் கொண்டும் திரிவார்களானால் இவர்களுக்கு எக்காலந்தான் விமோசனமென்பது விளங்கவில்லை.

மனிதன் முதல் முதலாக நெருப்பைக் கண்டுபிடித்த காலத்தில் அக்காலக் காட்டுமிராண்டிகளுக்கு அது ஒரு தெய்வீகமாகத் தோன்றியிருக்கலாம்.

நெருப்பின் உதவியேயில்லாமல் ஒரு பொத் தானைத் தட்டினால் லட்ச தீபம் போல அதுவும் பட்டப்பகல் போலப் பிரகாசிக்கும் விளக்குகளைக் கண்டுபிடித்து அனுபவித்து வரும் விஞ்ஞான காலம் இதுவென்பதைச் சிந்தித்து, அத்தகைய காட்டு மிராண்டித்தனமான காரியங்களில் மக்கள் வீணாக ஈடுபட்டு அறிவையும், பொருளையும், காலத்தையும் பாழாக்காமல் இக்காலத்திய விஞ்ஞான விஷயங்களில் மூளையைச் செலுத்துவதுடன் இத்தகைய பாமரத்தனமான கார்த்திகை தீபம், திருவண்ணாமலை தீபம், திருப்பரங்குன்ற தீபம் சொக்கப்பானை கொளுத்தல் முதலிய தொல்லைகளை அறிவுள்ள மக்கள் விட்டொழிக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.
- பகுத்தறிவு - கட்டுரை - 11.11.1934

தமிழ் ஓவியா said...

சென்னை பெண்கள் சங்கத்தின் அறியாமைசென்னையில் இந்திய பெண்கள் சங்கம் என்பதாக ஒரு சங்கம் இருக்கின்றது. அது சென்னை செல்வவான்கள் பெண்களும் அதிகாரிகள் மனைவிகளும், வக்கீல் மனைவி களும், பெரும்பான்மையாகக் கொண்டதாக ஒரு சில ஸ்திரீகளைக் கொண்டதாக இருந்து வருகின்றது.

இந்த நாட்டு பணக்காரர்கள் ஜமீன்தார்கள் ஆகியவர் களுக்கு எப்படி உண்மையான விடுதலை தேவை இல்லையோ அதேபோல் இந்தப் பெண்களுக்கும் உண்மை யான விடுதலை தேவை இல்லை என்பதோடு தெரிவதற்குக் கூட முடியாத நிலைமையில் இருந்து வருகிறார்கள். இந்த லட்சணத்தில் இவர்கள் அரசியல் துறையில் பிரவேசித்து தோழர் சத்தியமூர்த்தியை ஆதரிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார்கள் என்றால் பெண்கள் சமூகத்துக்கு அதைவிட வெட்கக் கேடு வேறு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் ஆண்களும் பெண்களும் சரிசமமான சுதந்திரத்திற்கு அருகதையுடை யவர்கள் என்பதையே ஒப்புக்கொள்ளுவதில்லை என்பதோடு சாஸ்திரங்களிலும், புராணங்களிலும் பெண்களுக்குள்ள இழிவையும், தாழ்வையும் அப்படியே நிலைநிறுத்தப்பாடு படுகின்றவர் என்பது யாவரும் அறிந்ததேயாகும்.

உதாரணமாக தேவதாசி தொழிலை ஒழிக்கக் கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து தேவதாசித் தொழிலை ஆதரித்தார். தேவதாசிகள் இல்லாவிட்டால் தெய்வங்களுக்குச் சக்தி குறைந்துவிடும் என்றும், ஆகமங்கள் கெட்டு விடும் என்றும் பேசினார்.

இரண்டாவதாக - குழந்தைகளுக்கு கலியாணம் செய்யக்கூடாது என்றும், குழந்தை பருவத்திலேயே பிள்ளை பெற விடக்கூடாது என்றும் கொள்கையுள்ள சாரதாசட்டத்தை ஹ. ராமசாமி முதலியார் ஆதரித்து இந்தியா முழுவதும் சுற்றி அபிப்பிராயம் தெரிந்து வரும் காலத்தில் தோழர் சத்திய மூர்த்தி அவர்கள் குழந்தை கலியாணம் கூடாது என்று சட்டம் செய்தால் நான் அந்தச் சட்டத்தை மீறி என் மகனுக்கு கலியாணம் செய்து சிறை செல்லுவேன் என்று தைரியம் சொல்லி மற்றவர்களையும் குழந்தைக் கலியாணம் செய்யத் தூண்டினார்.

இப்படிப்பட்டவருக்குப் பெண்கள் சங்கம் ஆதரவு கொடுப்ப தென்றால் அச்சங்கம் பெண்கள் சமூகத்தின் உண்மையான பிரதிநிதித்துவம் பொருந்தியதா என்பதைக் கவனிக்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்கிறோம். - பகுத்தறிவு - வேண்டுகோள் - 04.11.1934

தமிழ் ஓவியா said...

தோழர்கள் ஈவெ.ராமசாமி, சா.,ரா.கண்ணம்மாள் கைது செய்யப்பட்டார்கள்டிசம்பர் 20 மாலை இரண்டு மணி சுமாருக்கு மூன்று சர்க்கிள் இன்ஸ்பெக்டர்களும், நான்கு சப் இன்ஸ்பெக்டர்களும், பத்துப் பதினைந்து போலீஸ்காரர்களும் மோட்டாரிலும், மோட்டார் பஸ்களிலுமாக புரட்சிக் காரியாலயத்திற்கு வந்து தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்களோடு சுமார் அரை மணி நேரம் தனித்துப்பேசிக்கொண்டிருந்தார்கள். பின்னர் புரட்சி காரியாலயத்தின் LETTER FILE  களைப் பரிசோதனை செய்தும் றிஸிணிஷிஷி - ஙிளிளிரி பார்வையிட்டும் 46 கடிதங்களைக் கைப் பற்றியதோடு -PRESS - BOOK - லிருந்து மூன்று கடிதங்களின் முக்கியாம்சத்தையும் குறித்துக் கொண்டார்கள், 29.10.33 குடி அரசு பிரதிகளில் பலவற்றையும் கேட்டு வாங்கிக்கொண்டார்கள் மற்றும் குடி அரசுப் பதிப்பகப் புஸ்தகங்களையும்.

பலவற்றைக் கவனித்துவிட்டு தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்களை சற்று தங்களுடன் வரும்படியும் தோழர் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்களின் மாளிகையையும் பார்க்கவேண்டுமெனவும் அழைத்துச் சென்றார்கள். அதன்படி மோட்டாரில் புரட்சிக் காரியாலயத்திலிருந்து வீடுசேர்ந்து பரிசோதனை செய்துவிட்டு தோழர் எஸ்.ஆர்.கண்ணம்மாள் வீட்டுக்குவந்து அங்கு தோழர் ஈ.வெ.ராமசாமி தங்கியிருக்கும் இடத்தையும் பார்ப்பதற்காக வென்று கேட்டுக்கொண்டு அங்கு சென்றார்கள். சிறிது நேரத்தில் தோழர் எஸ்.ஆர்.கண்ணம்மாள் அவர்களையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும்படி அழைத்துச்சென்றார்கள்.

அங்கு இருவருக்கும் இ.பி.கோ.124 ஏ.செக்ஷன்படி பொதுவுடமை பிரச்சாரத்திற்காகவென்றும் இராஜ நிந்தனைக்காகவென்றும் குற்றம் சாட்டியிருப்பதாகவும் சொல்லி கைது செய்தனராம். குடி அரசு பிரசுரகர்த்தாவும் பதிப்பாளருமான தோழர் ச.ரா.கண் ணம்மாள் கைது செய்யப்பட்டதும் பெரிதும் உற்சாகத்தோடு தோழர் ஈ.வெ.ரா. அவர்களோடு உடன் சென்றது குறிப்பிடத்தக்கது.

தோழர்கள் ஈ.வெ.ராமசாமி, எஸ்.ஆர்.கண்ணம்மாள் அவர்கள் கைது செய்யப்பட்டதும் மாலை 5.30 மணி ரயிலில் கோவைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்கள், சப்.இன்ஸ்பெக்டரும் இரண்டு போலீஸ் ஹெட் கான்ஸ்டேபிளும் ஆக மூவரும்  ஒரே கம்பார்ட்மெண்டில் கோவைக்கு பந்தோபஸ்துக்காக சென்றார்கள்.

அன்று இரவு கோவை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஏராளமான போலீஸ் ஜவான்களோடு பஸ்ஸில் தோழர்கள் ஈ,.வெ.ரா அவர்களையும் சா.ரா.கண்ணம்மாள் அவர்களையும்,  போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று காவலில் (Lockup) வைத்திருந்தார்கள்.

தமிழ் ஓவியா said...

மறுநாள் காலை கோயமுத்தூர் ஜில்லா கலெக்டர் மிஸ்டர் G.W. வெல்ஸ் I.C.S. முன்பு ஆஜர்செய்தனர். அவர் அவர்களை ஜனவரி மாதம் 4ஆம்தேதி வரை ரிமாண்டில் வைத்திருக்கும்படி உத்தரவு பிறப்பித்தார்.
தோழர்கள் ஈ.வெ.ராமசாமி, சா.ரா.கண்ணம்மாள் ஆகிய இருவர்களும் கோவை சென்ட்ரல் ஜெயிலில் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். நண்பர்கள் பலர்போய் பார்த்து வருகிறார்கள்.

தோழர் ஈவெ,ராமசாமி அவர்கள் ஏழாவது தடவையாக இதுசமயம் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
1922-ஆம் வருடம் நவம்பர் மாதத்தில் மதுவிலக்கு பிரச்சாரத்திற்காக கைது செய்யப்பட்டு - தண்டனையடைந்தும் - 1942 ஆம் வருடம் மே மாதத்தில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் தீண்டாமை விலக்குக்காக செய்த சத்தியாக்கிரகப்போரில் கைது செய்யப்பட்டு தண்டனையடைந்தும், அறுவிக்குத்தி ஜெயிலி லிருந்தும் அதே வருஷம் நவம்பர் மாதத்தில் மறுபடியும் தீண்டாமை விலக்குக்காக கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் ஜெயிலில் கடினகாவல் தண்டனை அனுபவித்தும், மீண்டும் 11.9.1924இல் கதர் பிரசார காலத்தில் ராஜதுரோகமாய் பேசினதாய் ஈரோட்டில் கைதியாக்கப்பட்டு ரிமாண்டில் வைக்கப்பட்டு சென்னைக்கு கூட்டிக்கொண்டு போகப்பட்டு 3 மாத காலம்வரைக்கும் விசாரணை நடந்து அந்த வழக்கை சர்க்காரே வாபஸ் வாங்கிக்கொள்ளப்பட்டதும் - பின்னர் தென்னிந்திய இரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்த காலத்தில் 5.8.28 இல் இ.பி.கோ.143.1.88, 2ஆவது பிரிவுப்படி ஈரோட்டில் அவர் மாளிகையிலேயே கைது செய்யப்பட்டு பின்னர் கேசு.சர்க்காரால் வாய்தா இல்லாமலேயே ஒத்தி வைக்கப்பட்டதும் - மறுபடியும் இதுபோலவே சர்க்கார் - திருச்சியில் கத்தோலிக்க கிறிஸ்தமதச் சட்டப்படி இந்த வருஷ ஆரம்பத்தில் கைது செய்து விடப்பட்டதும் வாசகர்கள் நன்கு அறிவார்கள்.

இது மாத்தி.ரமல்லாம.ல் தே.ழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் மீது 1946 வருஷம் கோவை ஜில்லா கலைக்டரும் - முனிசிபல் சேர்மனும் சேர்ந்து பப்ளிக்ரிகார்ட் ஆக்டுபடி ஒரு வழக்குத் தொடரப்பட்டு அதை சர்க்கார் வாபஸ் வாங்கிக்கொண்டதும், 1924 வருஷம் 124ஏ செக்ஷன்படி வழக்குத் தொடுத்து வாரண்டு பிறப்பித்து கைது செய்து 2,3 மாதகாலம் தள்ளித்தள்ளி வாய்தா போட்டு விசாரணை நடந்து தோழர் ஈ.வெ.ரா. ஜாமீன் கொடுப்பதில்லை என்று எதிர்வாதம் செய்தும்கூட சர்க்கார் அந்த வழக்கையும் வாபஸ் வாங்கிக் கொண்டதும் இங்கு வாசகர்களுக்கு ஞாபகமூட்ட ஆசைப்படுகிறோம்.

இப்பொழுது கோவை சென்டிரல் சிறைச்சாலையிலிருக்கும் நமது இரு தோழர்களின் வழக்கையும் அமுல் நடத்த சென்னை சர்க்கார் பிரத்தியோகமாய் ராவ் சாகேப் கே.ராகவேந்திரா ராவ் பப்ளிக்பிராஸிகூட்டர் அவர்களை நியமித்திருக்கிறார்கள்.
வழக்கு விசாரண கோவை ஜில்லா கலெக்டர் முன்பாகவாவது செஷன்ஸ் நீதிபதி முன்பாகவாவது 4.1.,34இல் கோவையில் நடைபெறும்.

-  புரட்சி, 24.12.1933

தமிழ் ஓவியா said...

8 தமிழர்களை கொலை செய்த சிங்கள ராணுவ அதிகாரிக்கு மரண தண்டனை கொழும்பு உயர்நீதிமன்றம் உத்தரவு

சனி, 27 ஜூன் 2015


கொழும்பு, ஜூன், 27_ இலங்கையில் 4 குழந் தைகள் உள்பட 8 தமிழர் களை கொலை செய்த ராணுவ அதிகாரிக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இலங்கையில் தமிழர் களுக்கு எதிராக இழைக் கப்பட்ட போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து, சர்வ தேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 8 தமிழர்களை, சுனில் ரத்னாயகே என்ற சிங்கள ராணுவ அதிகாரி கடந்த 2000ஆம் ஆண்டு பிடித் துச் சென்று அவர்களது கழுத்தை அறுத்து கொடூர மாக கொலை செய்ததாக புகார் கூறப்பட்டது.

இலங்கையில் ஈழத் தமிழர்கள் மத்தியில் மிகவும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத் திய இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. சுமார் 15 ஆண்டு களாக நடந்து வந்த இந்த வழக்கில், ராணுவ அதி காரி சுனில் ரத்னாய கேவுக்கு மரண தண் டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை அரசு வழக்குரைஞரும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலு மான சரத் ஜெயமன்னா வரவேற்றுள்ளார். ஒரு நம்பகமான விசார ணையை எங்களால் நடத்த முடியும் என்பது இதன் மூலம் தெளிவு படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

புத்த மதத்தினரை பெரும்பான்மையாக கொண்ட நாடான இலங் கையில், கடந்த 1976ஆம் ஆண்டுக்குப்பிறகு யாருக் கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. அங்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி கள் சுமார் 400 பேர், தண் டனை நிறைவேற்றத்துக் காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இனவாதம் மீண்டும் தலைதூக்குகின்றது

மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு சமூக வலைத் தளமான டுவிட்டர் பக் கத்தில் 10000 பேர் தமது ஆதரவினை தெரிவித்துள் ளனராம்.

கடந்த 2000ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் மிருசுவிலில் 8 தமிழ் மக்களைப் படுகொலை செய்த வழக்கில் குற்ற வாளியாக நிரூபிக்கப்பட்டு கொழும்பு மேல் நீதிமன் றத்தால் நேற்றுமுன்தினம் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிபர் சுனில் ரத்னாயக் கவுக்கு ஆதரவாக டுவிட் டர் தொடங்கப்பட்ட பக்கத்திற்கு முதல் நாளி லேயே 10 ஆயிரம் பேர் ஆத ரவு தெரிவித்துள்ளனர்.


'போர் வெற்றி வீரர் சுனில் ரத்னாயக்கவை பாதுகாப்போம்' என்ற பொருள்படும் ஆங்கில வார்த்தைகளால் தொடங் கப்பட்ட இந்தப் பேஸ்புக் பக்கத்திற்கே பல்லாயிரக் கணக்கான சிங்களவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளன ராம்!

படைவீரர்களைப் பாதுகாப்போம் என அரசு மீண்டும் மீண்டும் கூறி வரும் நிலையில், சிங்கள மக்கள் மத்தியில் படை வீரர்கள் தொடர்பில் நிலவும் எண்ணத்தைப் பிரதிபலிப்பதாகவும் இந்த ஆதரவு அமைந்துள்ள தாக டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டவர் கள் குறிப்பிட்டுள்ளனர். ஈழத் தமிழர்மீது சிங்களர்களின் இனவாதம் மீண்டும் தலைதூக்குகின் றது என்ப தற்கு சான்றாக இதுவும் ஒன்றாக அமைந் துள்ளதாக சமூக வலைத் தள பதிவர்கள் தமது கருத் துக்களை பதிவிட்டிருக் கிறார்கள்.Read more: http://www.viduthalai.in/headline/104041-8-----------.html#ixzz3eHUPqUFO

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாருக்குப் பிறகு - அறக்கட்டளைகளைக் காப்பாற்ற வீரமணியால்தான் முடியும்:

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியால் பாதுகாக்கப்பட்ட  அன்னை மணியம்மையாரின் கடிதம் உறுதி செய்தது வரலாற்றை சுட்டிக்காட்டி அய்.ஓ.பி. முன்னாள் இயக்குநர் நமச்சிவாயம் பெருமிதம்சென்னை, ஜூன் 27_ தந்தை பெரியாருக்குப் பிறகு, அறக்கட்டளைகளைக் காப்பாற்ற வீரமணியால்தான் முடியும் என்று அன்னை மணியம்மையார் அவர்கள் கடிதம் எழுதி, அப்பொழுதைய இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இயக்குநர் நமச்சிவாயம் அவர்களிடம் வழங்கி, பாதுகாக்க சொல்லியதைப்பற்றி சுட்டிக் காட்டினார் நமச்சிவாயம் அவர்கள்.

பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளரும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மேலாளரும், வங்கி அதிகாரிகள் அமைப்பின் இணைப் பொதுச் செயலாளருமான வீ.குமரேசன் அவர்களின் வங்கிப் பணி நிறைவு, நன்றி செலுத்தும் விழா 25.6.2015 அன்று மாலை பெரியார் திடல் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது. இவ்விழாவில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேனாள் செயல் இயக்குநர் நமச்சிவாயம் பேசும்போது குறிப்பிட்ட தாவது:

தந்தை பெரியாருக்கும், எங்களுக்கும் மிகுந்த தொடர்பு உண்டு. அது நிறைய பேருக்குத் தெரியாது; தந்தை பெரியார் அவர்கள் நம்முடைய வங்கியிலே கதீட்ரல் கிளையில் ஓர் உறுப்பினராக இருந்தவர்கள். தந்தை பெரியார் விடுதலை பத்திரிகை பெரிய பத்திரிகை ஆவதற்காக வேண்டிய மெஷினை நாம் தான் இறக்குமதி செய்து கொடுத்தோம். அதுமட்டு மல்ல. மணியம்மையார் அம்மாவின் பெரிய நம்பிக்கைக்கு நாம் பாத்திரமானோம். மணியம்மையார் அம்மாவும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு வைத்திருந்தார்கள்.

தந்தை பெரியாருக்கு அப்புறம் யார் என்று சின்ன சந்தேகம் வந்தது. யாரை நிய மிப்பது என்று மணியம்மையார் அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அவர்கள் ஒரு சீட்டில் எழுதி கவரில் போட்டு எனக்கு பின்னால் இவர்கள் என்று சொல்லி வேறு யாரிடமாவது கொடுத்திருக்கலாம்.

என்னிடம் கொடுத்து நம்முடைய இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பெட்டகத்தில் (சேஃப்டி பாக்சில்) வைத்திருக்குமாறு சொன்னார்கள். அதில் யார் பெயர் இருந்தது என்று எனக்கும் தெரியாது. பெட்டகத்தில் வைத்திருங்கள். நான் போனபிறகு அதைத் திறந்து பாருங்கள் என்று கூறிவிட்டார். ஆகவே, அதை நம்முடைய வங்கியிலே சேஃப்டி பாக்சில் பத்திரமாக வைத்துவிட்டோம். அவர்கள் இறந்தபிறகு அதை எடுத்து ஒரு நாலைந்து பேருக்கு முன்னால் பிரித்துப் பார்த்ததால், வீரமணி அவர்களுடைய பெயர் இருந்தது. அவருக்கு அப்பொழுதே தெரியும், இவ் வளவு பெரிய டிரஸ்டை காப்பாற்ற வேண்டுமானால், தந்தை பெரியாருக்குப் பிறகு வீரமணி அவர்களால் தான் முடியும்  வேறு யாராலும் முடியாது என்று.

தமிழ் ஓவியா said...

ஆகவே, தந்தை பெரியாருக்கும் வங்கிக்கும் பெரிய தொடர்பு இருந்தது. அதிலே முழுமையாகச் சொல் வதானால், பெரியார், பெரியாருடன் வாழ்ந்துள் ளோம்.

ஆனால், இங்கே நடக்கின்ற நிகழ்வுகளைப் பார்க்கின்றபோது, யாராவது பணி ஓய்வு பெற்றால் வழியனுப்புகின்ற விழாவாகத்தான் செய்வார்கள். எனக்கும்கூட இதே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலு வலர்கள் சங்கம் எல்லாம் சேர்ந்து பெரிய அளவில் செய்தார்கள். ஆனால், தனக்கு உதவியவர்களை அழைத்து அவர்களுக்கு மரியாதை செய்வது என்பது இதுவரைக்கும், நான் கேள்விப்படாதது. குமரேசன் அவர் சார்ந்த இயக்கத்தை மறக்காமல் ஆசிரியர் அவர்களை அழைத்துள்ளார். அதுமட்டு மன்றி இந்த விழாவை பெரியார் திடலில் நடத்து கிறார். மிகப்பெரிய தன்னம்பிக்கை உள்ளவர்கள், ஆழ்ந்த சிந்தனை உடையவர்கள் என்பதை இதி லிருந்து பார்த்துவிடலாம். எனக்கும், குமரேசன் அவர்களுக்கும் வங்கி வழியாகத்தான் தெரியும். இருந்தாலும் என்னை இந்த விழாவுக்கு வரவேண்டும், உங்களை, நான் போற்ற வேண்டும் என்று சொன் னவுடனே அதிர்ச்சி அடைந்தேன். நான் ஆடிப் போய்விட்டேன் முதலில்.  நம்மை எதற்காக கூப்பிடு கிறார்கள் என்று முதலில் தெரியவில்லை.

நான் முதல் சம்பளம் வாங்கியபோது என்னுடைய பள்ளிக்கூடத்து ஆசிரியரிடம்தான் கொடுத்தேன். பேராசிரியர் அன்பழகன்கூட ஒரு முறை ஆசிரியர்கள் ஸ்டிரைக் நடந்துகொண்டிருந்தபோது சொன்னார். கூட்டத்தில் சொன்னாராம். நீங்கள் எல்லாம் படிக் கும்போதே பிள்ளைகளுக்குச்  சொல்லிக் கொடுத் திருந்தீர்கள் என்றால் நமச்சிவாயம்போல் முதல் சம்பளத்தை உங்களுக்கு அனுப்பிவிடுவார்கள். ஒவ் வொரு ஆசிரியரும் பெரிய பணக்காரர் ஆகியிருக்க லாம் என்று சொன்னார். அதுமாதிரி  பெரிய மரியாதைக்கு உரியவர் நம்முடைய ஆசிரியர் வீரமணி அவர்கள்.

தந்தை பெரியாருக்கும், நம்முடைய வங்கிக்கும் இருக்கின்ற ஒரு பெரிய தொடர்பு அதிகமாக இருந்த காரணத்தால், குமரேசன் இந்த இடத்தைத் தேர்ந் தெடுத்ததும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆகவே, குமரேசனை நாம் பாராட்டியாக வேண்டும். ஆனால், நம்மையெல்லாம் அழைத்து பாராட்டி இருக்கிறார்.

பாராட்டுதலுக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். நான் வேறு எந்த விதத்திலும் அவருக்குக் கடமைப்பட்டவன் அல்லன். ஆனால், அவர் வங்கியிலிருந்து ஓய்வு பெற்று, இந்த கழகப் பணிகளையும், மற்றும் ஏனையத் தொண்டுகளையும் செய்து, சிறப்பான வாழ்க்கையை வாழ வாழ்த்துகிறேன். _ இவ்வாறு நமச்சிவாயம் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...

ஏழுமலையான் சக்தி வெத்து வேட்டுதானா? கோயில்மீது விமானம் பறக்க தடையாம்!

சனி, 27 ஜூன் 2015

திருமலை, ஜூன் 27_ திருப்பதி ஏழுமலை யான் கோயில் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ய்பு இருப்பதாக மத்திய புலனாய்வு துறை பலமுறை எச்சரிக்கை செய்துள்ளதாம்!. கடந்த 3  ஆண்டுகளுக்கு முன் திருப்பதியை ஆய்வு செய்த எம்பிக்கள் குழு, ஏழுமலையான் கோயில் மீது விமானம் பறக்க தடை விதிக்க பரிந்துரை செய்தனர். இந்நிலையில் பாதுகாப்பு கருதி கோயில் மீது விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்த தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...

ஈழத் தமிழர்களுக்கு எதிரான உச்சக் கட்டப் போரில் வெள்ளைக் கொடியுடன் சரண் அடைந்தவர்கள் கொல்லப்பட்டது ஏன்?

சனி, 27 ஜூன் 2015
 

ஜெனீவா மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் மனைவிகள் கண்ணீர்ப் பேட்டிஜெனீவா, ஜூன் 27_ இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான உச்சக்கட்டப் போரில் வெள்ளைக் கொடியுடன் சரண் அடைந்தவர்களை இலங்கை சிங்கள ராணுவம் கொன்றது ஏன்  என்று ஜெனீவா நகரில் நடைபெற்ற அய்.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் மனைவிகள் கண்ணீர் மல்க கேள்வி கேட்டனர்.

அய்.நா. மனித உரிமைப் பேரவையின் 29ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் கடந்த 15ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. அடுத்த மாதம் (ஜூலை) 3ஆம் தேதி முடிய இந்த கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் இலங்கையில் 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலி களுக்கு எதிரான உச்சக் கட்டப்போரில் மனித உரிமைகள் மீறப்பட்டது தொடர்பாக இலங்கை அரசு மீது பல்வேறு நாடு களின் உறுப்பினர்களும் கடுமையாக குற்றம் சாட் டினர்.

அவர்கள் பேசும் போது: வெள்ளைக்கொடி யுடன் சரண் அடைந்த விடுதலைப்புலிகள் இயக் கத் தலைவர்கள் புலித் தேவன், நடேசன், மல ரவன், விடுதலைப்புலிகள், அப்பாவித் தமிழர்கள் உள்ளிட்ட 18 ஆயிரம் பேரின் நிலை என்ன ஆயிற்று? அவர்கள் உயி ருடன் இப்போது இருக் கிறார்களா? என்பதை சொல்ல இலங்கை அரசு ஏன் மறுக்கிறது? என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

முன்னதாக பசுமை தாயகம், இங்கிலாந்து தமிழர் பேரவை, அமெ ரிக்க தமிழர் அரசியல் செயற்பேரவை ஆகிய அமைப்புகள் இணைந்து இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள் குறித்த சிறப்பு இணை கூட்டத்தை நடத்தின.
கூட்டத்துக்கு இங்கி லாந்து முன்னாள் எம்.பி. யும், தமிழர்கள் நீதிக்கான நல்லெண்ண தூதுவரு மான லீ ஸ்காட் தலைமை தாங்கினார்.

சர்வதேச மனித உரி மைகள் சட்ட நிபுணரும், இங்கிலாந்து வழக்குரை ஞர்கள் பேரவையின் மனித உரிமை குழு தலை வருமான ஜெனைன் கிறிஸ்டி பிரிமெலோ கியூசி, தமிழக வழக்குரை ஞர்கள் சமூக நீதி பேரவை தலைவர் க.பாலு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இலங்கை போரின் போது வெள்ளைக்கொடி யுடன் சரண் அடைந்த விடுதலைப்புலிகள் இயக்க தலைவர்களான மலரவன் மனைவி சுசிலாம்பிகை, புலித்தேவன் மனைவி குறிஞ்சி மற்றும் நடேச னின் மகன் உள்ளிட்ட பல ருடைய உறவினர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பாக அய்.நா. சபையில் செப் டம்பர் மாதம் இறுதி அறிக்கை தாக்கல் செய் யப்பட இருக்கிறது. அப் போது அய்.நா.வின் நேரடி சாட்சிகளாக உள்ள இந்த மூவரின் சாட்சியங்களால் இலங்கை அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என்று கருதப்படுகிறது.

மலரவன் மனைவி சுசிலாம்பிகை கண்ணீர் மல்க ஜெனீவா அய்.நா. வளாகத்தில் கூறும்போது, 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி முல் லைத்தீவு வட்டுவாய்க்கால் பகுதியில் பல போராளி களுடன் எனது கணவரை சரணடைய வைத்தேன். அதன்பிறகு 6 ஆண்டுகள் ஆகியும் அவரைப்பற்றி எந்த தகவலும் இல்லை. இலங்கை ராணுவம் எந்த பதிலையும் தெரிவிக்க மறுக்கிறது என்றார்.

புலித்தேவனின் மனைவி குறிஞ்சி கூறும் போது, இலங்கை அரசு அனுமதியுடன் சர்வதேச நாடுகளுக்கு தெரிவித்த பிறகு ராணுவ கட்டுப் பாட்டு பகுதிக்குள் புலித் தேவன், நடேசன் உள் ளிட்ட போராளிகள் வெள்ளைக்கொடியுடன் சென்று சரண் அடைந் தனர். அதன்பிறகு அவர் களின் உயிரற்ற உடல் களைத்தான் இலங்கை மீடியா காட்டியது. வெள்ளைக்கொடியுடன் சரண் அடைந்தவர்கள் என்ன காரணத்துக்காக கொல்லப்பட்டனர் என்பதற்கு பதில் கிடைக்க வேண்டும் என்றார்.

தமிழ் ஓவியா said...

குஜராத் : பாலியல் வன்முறை மற்றும் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்தது நீதிமன்றம்

சனி, 27 ஜூன் 2015


அகமதாபாத் ஜூன் 27_ குஜராத் கலவரத்தில் சொந்தப் பகைக்காக பாலி யல் வன்புணர்வு செய்து கொலை செய்த குற்ற வாளிகளுக்கு எதிராக சாட்சிகள் இல்லாததைக் காரணம் காட்டி மூன்று குற்றவாளிகளையும் அகமதா பாத் நீதிமன்றம் விடுதலை செய்தது.   குஜராத் மாநிலத்தில் மோடியின் ஆட்சியின் போது 2002-ஆம் ஆண்டு மதக்கலவரம் நிகழ்ந்தது, இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் படு கொலை செய்யப்பட்ட னர். இஸ்லாமியர்களின் வசிப்பிடம் தொழில் நிறு வனம் மற்றும் சொத்துக் கள் சேதப்படுத்தப்பட் டன. இன்றுவரை இந்த கலவரத்திற்காக நீதி கிடைக்காத பட்சத்தில் முதன்மைக் குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப் பட்டு விட்டனர். கடந்த ஆண்டு மோடி, அமித் ஷா போன்றவர்களை சிறப்பு புலனாய்வு நீதி மன்றம் இந்தவழக்கில் இருந்து விடுவித்தது.   இதனை அடுத்து கலவர வழக்கில் நேரடித் தொடர்புடையவர்கள் தற்போது விடுவிக்கப் பட்டு வருகின்றனர்.  கலவரத்திற்கு தொடர் பில்லாத ஆனந்த மாவட் டத்தில் ஆடே என்ற ஊரில் நிலத் தகராறு தொடர்பாக அங்குள்ள முஸ்லீம் குடும்பத்தின் மீது அந்த ஊரில் உள்ள சிலர் வன்மம் வைத்திருந் தனர். கோத்ரா சம்பவம், அதைத் தொடர்ந்து அகமதாபாத் வரை கலவரம் பரவியதைச் சாதகமாகக் கொண்டு அந்த ஊரைச் சேர்ந்தவர் கள் முஸ்லீம் குடும்பத்தி னரைக் கொலை செய் தனர், முஸ்லீம் குடும்பப் பெண்களான ஆயிசா, நூரி ஆகியோரை அன்கூர்  படேல் மோகன் படேல், நிகுல் படேல் போன்றவர் கள் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய் தனர், நூரியின் சகோதர ரான காதர் என்பவரை உயிருடன் எரித்துக் கொலை செய்தனர். சம்பவம் நடந்த பிறகு அனைத்து பிணங்களை யும் வீட்டிற்குள் போட்டு எரித்து விட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஆடே ஊரைச் சேர்ந்த 20 பேர்கள் மீது சிறப்பு புலனாய்வுத்துறை வழக் குப் பதிவு விசாரணை செய்து வந்தது. கடந்த ஆண்டு 14 பேர், சாட் சிகள் இன்றி விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேரடித் தொடர்புடைய அங்கூர், மோகன், நிகுல் ஆகி யோரை அகமதாபாத் நீதி மன்ற நீதிபதி எ.எஸ்.பட்டு விடுதலை செய்தார். தனது தீர்ப்பில் அவர் கூறியுள்ளதாவது, சிறப்புப் புலனாய்வுத்துறை குற்றம் தொடர்பானவர்கள் மீதான சான்றுகளை வைக்கவில்லை. மேலும் சாட்சிகள் யாரும் இவர் கள் இந்தச் சம்பவத்தில் தொடர் புடையதாகக் கூறவில்லை. ஆகையால் இவர்கள் அனைவரும் இந்த வழக் கில் இருந்து விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று கூறியிருந்தார்.

தமிழ் ஓவியா said...

எழுத்தாளர் பார்வையில்... இந்தியக் குடிசை - (குறுநாவல்)

இந்தியக் குடிசை - (குறுநாவல்)

- செ. சண்முகசுந்தரம்
பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட சிந்தனையாளர் ரூசோவின் மாணவரான பெர்னார்தன் தெ சேன்பியேர் இந்திய சமூகத்தைப் பற்றி 1790இல் எழுதிய ஒரு குறுநாவல், இந்தியக் குடிசை. தமிழறிஞர் இரா. தேசிகப்பிள்ளை 1968ஆம் ஆண் டில் இந்நூலை பிரெஞ்சிலிருந்து தமி ழுக்குப் பெயர்த்தார். சிந்தனைப் பதிப்பகம் இக்குறுநாவலை வெளியிட்டிருந்தது. மிகச்சிறந்த பிரெஞ்சு அறிஞரான தெ சேன்பியேர் 18ஆம் நூற்றாண்டு இந்திய தேசத்தில் சாதியும் பார்ப்பனியமும் சமூ கத்தில் நிகழ்த்தியுள்ள கேடுகள் குறித்தும், அக்காலச் சமூகச் சூழல் குறித்தும் மிகச் சிறப்பாக இந்நாவலில் எடுத்துக்காட்டி யிருக்கிறார். இன்றைய இந்திய சாதி சமூகத்தைப் பற்றி ஏராளமான இலக் கியங்கள் அணிவகுத்துக் கிடக்கின்றன. தலித் மக்களின் வாழ்வியலை எடுத்து இயம்பும் தலித் இலக்கியங்கள் இன்று எல்லா இந்திய மொழிகளிலும் உள்ளன. தீண்டாதாரின் உச்சபட்ச அறிவுக் கோயிலான அண்ணல் அம்பேத்கர் பகுத்து எழுதாத துறை என்று இன்று எதுவும் இல்லை. ஆனால், 200 ஆண்டு களுக்கு முற்பட்ட ஒரு காலத்தில், இந்தி யாவில் சாதியக் கொடுமைகள் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாது இருக்கும்போது, இந்நாவல் தீண்டத்தகாத மக்கள் மீதான கொடுமையான சூழலை விவரிக்கிறது. இந்நாவல் காலத்துக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், இலண்டன் மாநகரத்தில், கலைஞர்கள் மற்றும் அறிஞர்களுக்கான சங்கம் ஒன்று தொடங் கப்படுகிறது. உயரிய குறிக்கோள்களுடன் தொடங்கப்படும் அச்சங்கத்தில் தேர்ந் தெடுத்த சில அறிஞர்கள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். அதன் குறிக்கோள்களுள் முக்கியமானது, இவ்வுலகம் முழுமைக்கும் அவ்வறிஞர்கள் சென்று உலகம் முழுவதிலும் பரந்து விரிந்திருக்கும் மானுட சமுதாயத்தினைப் பற்றி அறிந்து வரவேண்டும். வெவ்வேறு நாடுகளிலும் அரசர்களும் மதத்தலைவர் களும் சாதாரண மக்களும் பின்பற்றும் பழக்கவழக்கங்கள், சமய உண்மைகள், அரசாட்சி முறைகள் எனச் சகல துறைகளைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். மொத்தம் 20 அறிஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒவ்வொரு அறிஞரும் உலகின் பல பகுதிகளுக்கும் செல்ல தீர்மானிக்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...

அதற்கேது வாக எவ்வுண்மைகளை அவர்கள் அறிந்துவரவேண்டும் என்பது அடங்கிய சுவடியும் அவர்களுக்குத் தரப்பட்டது. தாங்கள் செல்லும் வழியில், விவிலியத்தின் பழைய சுவடிகள் எங்கு இருந்தாலும், அது என்ன விலையாக இருந்தாலும், அதனை வாங்கி வரவேண்டும் அல்லது அதன் பிரதியையாவது கொண்டு வரவேண்டும். பயணத்திற்கு ஆகும் மொத்த தொகையும் அவர்களுக்குத் தரப்பட்டது. முக்கியமாகச் சூரியனே அஸ்தமனமாகாத தேசமாக இங்கிலாந்து தேசம் அக்காலத்தில் இருந்தபடியால், உலகின் பல பகுதிகளிலும் இருக்கும் இங்கிலாந்து நாட்டின் ஆட்சி அலுவலர்களுக்குக் கடிதங்களும் கொடுத்தனுப்பப்பட்டன. எல்லாக் கலைகளும் தத்துவங்களும் வேதங்களும் செழித்து வளரும் இந்தியா வுக்கு மிகச்சிறந்த பண்டிதர் ஒருவர் அனுப்பப்படுகிறார். இந்திய மொழிகள் உள்ளிட்ட பல மொழிகள் தெரிந்த ஒரு பன்முகப்புலவர். அய்ரோப்பா மற்றும் துருக்கி வழியாக அவர் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். அய்ரோப்பா வின் புகழ்மிக்க நூல் நிலையங்களையும் கலைக் கூடங்களையும் சமயச் சின்னங் களையும் அவர் பார்வையிடுகிறார்.

மிகச்சிறந்த நூலகங்களில் அவர் மூழ்கு கிறார். தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற கேள்விச் சுவடிகளுக்கு விடைகளைத் தேடியபடியே அவர் அவ்விடங்களை வலம் வருகிறார். அரபு நாட்டிற்கும் செல்கிறார். பின்னர் அவர் டில்லி நகரை அடைகிறார். தனது மூன்றாண்டு பய ணத்தின் முடிவில் அவர் காசியில் இருக்கிறார். இந்தியாவின் ஏதென்ஸ் (கிரீஸ் நாட்டின் பழைய சிறந்த நகரம்) என்று அழைக்கப்படும் காசியில் பிராமணர்கள் பலரோடும் அவர் உரையாடுகிறார். அவர் கடந்து வந்த இந்த மூன்றாண்டு காலத்திலும் மொத்தமாக அவர் சேகரித்த பழைய நூல்கள், குறிப்புகள், ஆதாரங்கள், மூலப் புத்தகங்கள், கையேடுகள் இவை அனைத்தும் தொண்ணூறு மூட்டை களில் ஒன்பதாயிரத்து ஐநூற்று நாற் பத்தைந்து பவுண்டு எடை கொண்டவை யாக மாறிப்போயிருந்தது. அரசக் கழகத்தினர் தனக்குக் கொடுத்திருந்த, விடை காண வேண்டிய 3500 கேள்வி களுக்கும், ஒவ்வொரு கேள்விக்கும் ஐந்து பதில்களைச் சேர்த்திருந்தார் பண்டிதர். அதாவது பண்டிதரிடம் மட்டும் 17500 விடைகளுக்கான குறிப்புகள் இந்த 90 மூட்டைகளில் இருந்தன. ஆனால், ஒவ்வொரு விடையும் மற்றொரு விடை யோடு பிண்ணிப்பிணைந்து இடியாப்ப சிக்கலில் இருந்தது. அரசக் கழகத்தின் மீதம் உள்ள 19 அறிஞர்களும் இவ்வாறே கொண்டு வந்தார்கள் என்றால் மொத்த விடைகளின் எண்ணிக்கை 3,50,000 ஆகிவிடும். அரசக் கழகத்தினர் ஒவ்வொரு கேள்விக்கும் விடை அறிய இந்த 3,50,000 விடைச் சிக்கல்களிலும் புகுந்து புறப்பட்டு வரவேண்டும். தன்னளவில் தன்னுடைய பணி நிறைவடைந்துவிட்டது என்னும் முடிவுக்கு அந்தப் பண்டிதர் வந்தார். ஆனாலும், சுமையான இந்தப் பதில் மூட்டைகளை (குப்பைகளை) எண்ணி அவர் வருத்தமடைந்தார். அரசக் கழகத்தினர் எதிர்கொள்ளப்போகும் இச்சுமைகளை எண்ணியே அவர் வருத்தமடைந்தார். 3500 கேள்விகளுக்கும் இம்மூட்டைகளில் உள்ள பதில்கள் உண்மையாக அல்லாமல் சச்சரவு வருவாமானால் தனது நாட்டாரின் நிலையையும் அவர்கள் எதிர்நோக்கும் ஓய்வற்ற தன்மையையும் பண்டிதர் நினைத்துப் பார்த்தார்.


தமிழ் ஓவியா said...

இச்சமயத்தில் பண்டிதரின் நிலையைக் கண்ணுற்ற ஒரு பிராமணர், பண்டிதரின் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க வல்லவர் ஒருவரே எனவும், அவர் ஒரிஸ்ஸாவின் பூரி ஜெகந்நாதர் என்னும் கோவிலின் தலைமை அந்தணர்தான் என்றும் பண்டிதரிடம் தெரிவிக்கிறார். இங்கிலாந்து கிளம்பும் தனது முடிவை மாற்றிக்கொண்டு உடனடியாக ஜகந்நாதம் கோவிலுக்குத் தனது பரிவாரங்களுடன் செல்கிறார் பண்டிதர். தலைமை அந்தணருக்குக் கொடுப்ப தற்காக விலை உயர்ந்த பரிசுப் பொருட் களையும் அவரது மனைவிக்குப் பட்டு களையும் சீடர்களுக்குப் பட்டுக் கச்சைகள் செய்வதற்காகச் சீனப்பட்டுகளையும் அவர் தனது பெரிய பரிவாரங்களுடன் எடுத்துச் செல்கிறார். தனது 3500 கேள்விகளில் எக்கேள்வியிலிருந்து அந்தணரிடம் கேட்கலாம் என்று அவர் யோசனையில் மூழ்குகிறார். கங்கையாற்றின் உற்பத்தி யையும் அதன் வெள்ளங்களையும் பற்றிக் கேட்பதா அல்லது இந்துமாக் கடலின் ஆண்டுக்கு இருமுறை மாறி மாறி வரும் நீரோட்டத்தைப் பற்றிய கேள்வியிலிருந்து தொடங்குவதா அல்லது பூமண்ட லத்தைச் சூழ்ந்துள்ள பேராழியின் ஊற்றுக்களையும், கால முறைப்படி ஏற்படும் அசைவுகளையும் பற்றிய கேள்வியிலிருந்து தொடங்குவதா அல்லது பல பூசல்களுக்குக் காரணமாக இருக்கின்ற ஊழியின் விரிந்த தன்மையைக் குறித்துக் கேட்கலாமா அல்லது பலகோடி ஆண்டு களாய் இருந்து வருகிறதென இந்தியர்கள் கூறும் பூமண்டலம் தோன்றிய காலத் தைப் பற்றிக் கேட்கலாமா என்றவாறு சிந்தனை செய்துகொண்டே செல்கிறார். இப்படியாக அவரின் சிந்தனை சென்று கொன்டிருக்கும்போது அவருக்குத் திடீரென்று ஒரு சிந்தனை உதிக்கிறது. இதுகாறும் அறிவைக் கொண்டு உண் மையைத் தேடிய அனுபவத்தில் தனக்குக் கிடைத்த விடைகளும் குழப்பமாகவே இருப்பதைக் கண்ணுற்ற பண்டிதர், அந்தணரிடம் 3500 கேள்விகள் பற்றிக் கேட்டுக் குழப்பிக்கொள்வதற்குப் பதிலாக இம்மூன்று கேள்விகளை மட்டும் கேட்டால் என்ன என்று எண்ணுகிறார்:

தமிழ் ஓவியா said...

1. எவ்வழியாக உண்மையைத் தேட வேண்டும்?

2. உண்மையை எங்குத் தேட வேண்டும்?

3. மனிதரிடத்தில் உண்மையைக் கூற வேண்டுமா? இவைதான் அம்மூன்று கேள்விகளும். இதுகாறும் அறிவைக்கொண்டு உண் மையைத் தேடி வந்திருக்கும் அப்பண்டி தர், தான் சேகரித்து வைத்திருக்கும் தொன்னூறு மூட்டைகளில் இருக்கும் அறிவுக் களஞ்சியங்களைக் கொண்டு உண்மையைத் தேடமுடியுமா என்னும் அய்யத்திற்கு வருகிறார். எனவேதான் தலைமை அந்தணரைப் பார்த்துக் கேள்விகள் கேட்கும் சந்தர்ப்பத்தில் இம்மூன்று கேள்விகளை மட்டும் கேட்டு விடவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு தனது பயணத்தைத் தொடர்கிறார். அக்காலத்தில் இந்தியாவில் மிகப் புகழ்பெற்ற சமயத் தலைவராக விளங்கிய ஜகந்நாதர் கோவிலின் தலைமை அந்தணர் இருப்பிடத்திற்குப் பண்டிதர் அழைத்துச் செல்லப்படுகிறார். உண் மையை எவ்வழியாகத் தேடவேண்டும் என்ற தனது முதல் கேள்வியை அந்தணரிடம் கேட்கிறார். அதற்கு அந்தணர், அந்தணர்கள் வழியாகத்தான் உண்மை அறியப்படும் என்று பதிலுரைக்கிறார். உண்மையை எங்குப் போய்த் தேடவேண்டும்? என்ற பண்டிதரின் கேள்விக்கு, இலட்சத்து இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வடமொழியில் எழுதப்பட்ட நான்கு வேதங்களிலே எல்லா உண்மைகளும் அடங்கிக் கிடக்கின்றன. அவைகளின் நுட்பம் அந்தணர்களுக்குத்தான் தெரியும் என்று அந்தணர் உரைக்கிறார். தலைமை அந்தணரின் இப்பதிலுரைகளைக் கேட்டு அங்குக் கூடியிருந்த மக்கள் அனைவரும் ஆரவாரம் செய்கின்றனர். ஆரவாரம் அடங்கியவுடன் பண்டிதர் அந்தணரைப் பார்த்துக் கேட்கிறார்: அந்தணர்கள் மட்டுமே உணரக்கூடிய நூல்களில் கடவுள் உண்மையைப் பொதித்து வைத் தாரென்றால், அந்தணர்கள் இருக் கிறார்கள் என்பதைக்கூட அறியாத பெரும்பாலான மக்கள் அவ்வுண்மை களை அறியக்கூடாதென்று கடவுள் மறுத்திருப்பதாக அல்லவா அதற்கு அர்த்தம். அப்படியானால் கடவுள் நேர் மையானவனல்லன். அதற்கு அந்தணர் கூறுகிறார்: பிரம்மாவின் விருப்பம் அதுவே. அதற்கு மாறாக யாரும் எதுவும் செய்ய முடியாது.

பண்டிதர் தனது மூன்றாவது கேள் வியைக் கேட்கிறார். உண்மையை மக்களுக்குத் தெரிவித்தல் வேண்டுமா? அதற்கு அந்தணர், அந்தணரைத் தவிர்த்து மற்ற எல்லோருக்கும் அவ்வுண்மையைத் தெரியாமல் மறைக்க வேண்டும் என்கிறார். இப்பதிலுரைகளைக் கேட்டுக் கோபமடைந்த ஆங்கிலேயப் பண்டிதர், உண்மையில் அந்தணர்கள் நேர்மை யற்றவர்களே என்று கோபத்துடன் கூறுகிறார். கடவுள் நேர்மையில்லாதவன் என்று கூறியபோது அமைதியாக இருந்த கூட்டம், அந்தணர்கள் நேர்மையற்ற வர்கள் என்று கூறியபோது, ஆத்திரம் கொண்டு ஆங்கிலேயப் பண்டிதருடன் தர்க்கம் செய்யக் கிளம்புகிறது. பண்டிதர் அவையிலிருந்து பாதுகாப்பாக வெளி யேற்றப்படுகிறார். தனது பரிவாரங்களு டன் கோவிலைவிட்டு வெளியேறுகிறார். தன்னை உறுத்தும் இம்மூன்று கேள்வி களுக்குமான விடையைத்தான் தெரிந்து கொள்ளாமலேயே தனது நாடு திரும்புகிறோம் என்ற வருத்தத்தோடு அவர் போய்க்கொண்டிருக்கும்போது சூறைக்காற்றுடன் பெருமழை பெய்கிறது.

அக்கொடும் இயற்கை சீற்றத்திலிருந்து தப்பிக்க நினைத்து அப்பரிவாரங்கள் ஒரு காட்டில் இருக்கும் குடிசை ஓரம் ஒதுங் குகிறார்கள். பரிவாரங்கள் அக்குடிசையை அணுகிப் பார்த்ததும் அங்கு ஒரு தீண்டத்தகாதவன் தனது மனைவியுடனும் குழந்தையுடனும் தான் வளர்க்கும் நாயு டனும் இருப்பது கண்டு, பண்டிதரிடம் வந்து, அக்குடிசையில் ஒரு பறையன் இருக்கிறான் என்று கத்துகிறார்கள். (இந் நூலில் வரும் பறையன் என்னும் வார்த்தை அப்படியே இங்கு பயன் படுத்தப்படுகிறது.) உடனே அப்பண்டிதர் ஏதோ மிருகம் இருக்கிறது என்று எண்ணிக்கொண்டு தனது கைத் துப்பாக்கியை எடுத்து வைத்துக்கொண்டு பறையன் என்னும் சொல்லுக்கு அர்த்தம் என்ன என்று வினவுகிறார். அதற்கு அப்பரிவாரத்தில் இருக்கும் ஒருவன், நம்பிக்கையும் சட்டமும் இல்லாதவன் என்று பதில் சொல்லுகிறான். அதற்குள் அப்பரிவாரத்தின் தலைவனான இராஜ புத்திரன் ஒருவன் பண்டிதரிடம் சென்று, பறையனென்பவன் மிக இழிவான குலத்தைச் சேர்ந்த இந்தியன். அவனால் தீண்டப்பட்ட மாத்திரத்திலேயே அவனைக் கொன்று விடுவதற்கு அனுமதியுண்டு. அவன் இல்லத்தில் நாம் நுழைந்துவிட்டால், ஒன்பது பிறையளவும் நாம் எக்கோவிலுள்ளும் நுழைய முடியாது. நம்மை தூய்மைப்படுத்திக் கொள்ள ஒன்பது முறை கங்கையில் முழுக வேண்டும். அத்தனை முறை ஓர் அந்தணர் கையினால் பசு மூத்திரத்தைக் கொண்டு தலை முதல் கால் வரையில் கழுவிக்கொள்ள வேண்டும் என்கிறான். பண்டிதர் அந்தக் குடிசைக்குப் போக முடிவெடுக்கிறார்.

தமிழ் ஓவியா said...

இந்தியப் பரிவாரங்கள் அனைவரும், நாங்கள் ஒரு பறையன் வீட்டில் நுழைய மாட்டோம் என்று கூக்குரலிட்டனர். அதற்கு அந்தப்பண்டிதர், நீங்கள் வேண் டுமானால் இங்கேயே இருங்கள். என்னை மழையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இந்தியாவிலுள்ள எல்லாக் குலங்களும் எனக்கு ஒன்றே என்று சொல்லிவிட்டு குடிசையை நோக்கிச் சென்றார். அக்குடிசையில் அன்று இரவு அப்பண்டிதருக்கும் அப்பறையனுக்கும் நடக்கும் உரையாடல் நாவலின் முக்கியப் பகுதியாக அமைந்துள்ளது. பெரும் காடு ஒன்றில் மிருகங்களுக்கும் இயற்கைச் சீற்றங்களுக்கும் மத்தியில் ஒருமனிதன் தன்னந்தனியாகக் குடும்பம் நடத்துகிறான் என்பதை நினைக்கும்போது பண்டிதர் ஆச்சர்யத்தின் எல்லைக்கே செல்கிறார். அவனின் கடவுள் பற்றியும் நம்பிக்கைகள் பற்றியும் பண்டிதர் கேள்வி எழுப்புகிறார்.

இயற்கைதான் தான் வணங்கும் தெய்வம் என்று அம்மனிதன் கூறுகிறான். எழுதப் படிக்கத் தெரியாத தனக்கு இயற்கைதான் எல்லாமும் என்கிறான். பகல் முடிந்து இரவு தூக்கத்தை எதிர்பார்ப்பது போல இவ்வாழ்க்கை முடிந்து வாழ்வின் முடிவில் ஏற்படப்போகும் சாக்காட்டை இன் முகத்துடன் எதிர்பார்ப்பதாக அவன் கூறுகிறான். அம்மனிதனே தான் கண் டடைந்த ஞானியாக இருக்கமுடியும் என்றுணர்ந்த பண்டிதர், தான் கேட்க விரும்பிய மூன்று கேள்விகளை அவனி டம் கேட்க முடிவு செய்தார். உண்மையை எவ்வழியில் தேட வேண்டும் என்ற முதல் கேள்விக்கு அம் மனிதன் கூறுகிறான்: இயல்பான உள்ளத்தைக் கொண்டுதான் உண்மை யைத் தேடவேண்டும். புலன்களும் புத்தியும் தவறிவிடக்கூடும். ஆனால், இயல்பான உள்ளம் தான் ஏமாற்ற மடைய நேரினும், எப்பொழுதும் பிறருக்கு ஏமாற்றத்தைத் தருவதில்லை என்று உரைக்கிறான். ஆழமான கருத்துகள் நிறைந்துள்ள இப்பதிலை பண்டிதர் உடனே ஒப்புக்கொள்கிறார். அவனை ஒரு ஞானியாக உணர்கிறார். தனது அடுத்தக் கேள்வியான, உண்மையை எங்குத் தேடவேண்டும்? என்று அவனிடம் கேட்கிறார். அதற்கு அம்மனிதன், உண்மையை மனிதனிடத் தில் தேடவே கூடாது. இயற்கையிடத்தில் தான் தேடவேண்டும் என்கிறான். உலகத்தில் உள்ள எல்லாப் பொருட் களுக்கும் ஊற்றாயிருப்பது இயற்கைதான். மனிதர்கள் நூல்களைப் படைக்கிறார்கள். ஆனால், இயற்கையோ பொருள்களைப் படைக்கிறது. நூல் மனிதனின் கலையா யிருப்பது போல இயற்கை இறைவனது கலையாயிருக்கிறது என்றும் பண்டிதருக்கு அம்மனிதன் உரைக்கிறான். உண்மையை எல்லோருக்கும் சொல் லலாமா? என்னும், தனது இறுதி கேள்வியை அம்மனிதனிடம் கேட்கிறார் பண்டிதர். இயல்பான உள்ளத்தையுடைய மக்களுக் குத்தான் உண்மையைச் சொல்ல வேண்டும். உண்மையைத் தேடும் நன் மக்களுக்குத்தான் உண்மையை உரைக்க வேண்டும். உண்மைகளை வெறுத்துத் தள்ளும் தீயோர்க்கு உண்மைகளைச் சொல்லலாகாது என்று அம்மனிதன் பண்டிதரிடம் கூறுகிறார்.

தமிழ் ஓவியா said...

தனது மூன்று கேள்விகளுக்கும் மிகச்சிறந்த பதிலை அளித்த ஞானியான அப்பறையனை பண்டிதர் போற்றுகிறார். பல தேசத்தவர்கள் வணங்கிச்செல்லும் ஜெகந்நாதரின் தலைமை அந்தணர் தனக்குத் தெளிவு செய்ய முடியாத பல மெய்யறிவுக் கேள்விகளைக் காட்டில் தனது மனைவியோடு வசிக்கும் ஒரு பறையன் தீர்த்து வைப்பது கண்டு உள்ளம் நெகிழ்ந்து போகிறார் ஆங்கிலேயப் பண்டிதர். அவனோடு பல தத்துவ விசார ணைகளில் ஈடுபடுகிறார். கடுமையான துன்பம்தான் ஒரு மனிதனை உண்மையை உணர வைக்கிறது என்ற அம்மனிதனின் மொழியை மறுத்து பண்டிதர் பேசுகிறார். துன்பம் மனிதர்களை மூடநம்பிக்கையில் ஆழ்த்துகிறது. உள்ளத்தையும் அறிவையும் அது சாய்த்து விடுகிறது. எவ்வளவுக்கு மக்கள் துன்பமடைகிறார்களோ அவ் வளவுக்கு அவர்கள் இழிவுள்ளவர்களா கவும் எதையும் எளிதில் நம்புகிறவர் களாகவும் எவருக்கும் அடங்கிக் கிடக்கிறவர்களாகவும் இருக்கின்றார்கள் என்று பண்டிதர் உரைக்கிறார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்து அப்பறையன் பண்டிதரிடம் பற்பல உண்மைகளைச் சொல்லி விளக்குகிறான். நான் கண்ட மனிதர்களிலேயே நீதான் மிகச் சிறந்தவனாக இருக்கிறாய். ஆனால், உனது குலம் மட்டும் ஏன் தாழ்ந்த குலமாக இருக்கிறது? அந்தணர் குலம் ஏன் மிக உயர்ந்த குமலாக இருக்கிறது? என்று பண்டிதர் வினவுகிறார். அதற்கு அம் மனிதன், அந்தணர்கள் தொன்மையில் தாங்கள் பிரம தேவனின் தலையினின்று வெளிப்பட்டதாகவும், பறையர்கள் அவன் கால்களினின்று இறங்கினதாகவும் கூறுகிறார்கள். மேலும், பல கட்டுக் கதைகளைக் கூறி எங்களை மிகவும் கீழ்த்தர நிலைக்கு அந்தணர் குலத்தினர் விட்டுவிட்டார்கள். தங்களுக்கு ஒரு தெய்வீக மூலத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்னும் அக்கறையில் செயல்படும் அந்தணர்களின் சதிதான் அந்த வரலாறு. அவ்வரலாற்றை நம்ப மறுத்த எங்கள் குலத்தவரை பறையர் களாக்கிவிட்டார்கள் என்று பண்டி தரிடம் அவன் உரைக்கிறான். எல்லோராலும் ஒதுக்கப்பட்ட நிலையில் நீ உயிர்வாழ்வதற்கு என்ன செய்தாய்? என்று மிகவும் அக்கறையோடு கேட்கும் பண்டிதருக்கு தன்னுடைய நீண்ட துன்பமான வரலாற்றை எடுத் துரைத்தான். கிராமப்புறங்கள், வயல் வெளிகள், நகரங்கள் என்று எங்கெனும் அலைந்து திரிந்த அம்மனிதன் தீண்டத் தகாதவன் என்னும் ஒரே காரணத்திற் காகத் தான் எல்லா இடங்களிலிருந்தும் விரட்டப்பட்டதாகச் சொல்கிறான். இந்நிலையில் சதி ஏறுவதற்கு ஆயத்தமாக இருந்த ஒரு பிராமணப் பெண்ணின் மனத்தை மாற்றி, இருவரும் காதலர்களாகி காட்டுக்குள் ஓடி, இதோ இங்கேயே எங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டதாகவும் அவன் கூறுகிறான். பண்டிதருக்கும் அப்பறையனுக்கும் நடைபெற்ற உரையாடலின் வழி நூலின் ஆசிரியர் சாதி வேறுபாடுகளையும் தீண்டாமை வழக்கத்தையும் பார்ப்பனர் களின் சூழ்ச்சித் திறத்தையும் அலசுகிறார்.

தமிழ் ஓவியா said...

முகலாயச் சக்ரவர்த்திகளின் ஆடம்பரங் களையும் அரசியல் குழப்பங்களையும் விளக்குகிறார். தீண்டத்தகாத மனிதன் பட்ட எல்லாத் துன்பங்களும் அவனை உள்ளத்தில் வலுக்கொண்டவனாக மாற்றி விட்டது. சமயம் என்னும் ஒன்று அவனுக்கு எவ்வளவு பெரிய துன்பங் களைக் கொடுத்துவிட்டது. அவன் கூறு கிறான்: சமயம் என்பது என்னை அவ்வளவு அருவருப்புக்குரிய வனாக்கி விட்டது! உயிருள்ளவர்களிடையே எனக்கு நண்பர்கள் கிடையாது. ஆகையால், இறந்து பட்டவர்களிடையே எனக்கு நண்பர்களைத் தேடினேன். சுடுகாட்டுக்குச் சென்று அங்கே சவக்குழிகளின்மீது உறவினர்களின் வாஞ்சையால் தரப்படும் உணவை உண்டு வந்தேன். என் துன்பங்களின் அடிப் படையிலேதான் என் இன்பத்தின் அடிப்படையைக் கண்டேன்.

அன்றிரவு இப்படியாக உரையாடி விட்டு, அப்பண்டிதர் அவனுடைய குடிசையில் தங்குவதற்குத் தன்னுடைய கட்டிலை வழங்கினான். மறுநாள் காலை வரை அம்மனிதனும் அவன் மனைவியும் உறங்காது விழித்திருந்தனர். அதனை அறிந்து பண்டிதர் மிகவும் வருத்தம் அடைந்தார். பின்னர் காலை உணவை அக்குடிசையில் முடித்துக்கொண்டு அம் மனிதனிடம் விடை பெற்றுக்கொண்டு அப்பண்டிதர் கிளம்பினார். பண்டிதர் விலையுயர்ந்த தனது பல பொருட்களை அவனுக்குத் தர முடிவெடுத்தாலும் அவன் அப்பொருட்களை வாங்க மறுத்து விடுகிறான். ஏழ்மை எங்களிடமிருந்து திருடர்களைத் தொலைவில் நிறுத்தும் ஒரு பெரிய மதிலாகும் என்று கூறி அவன் மறுத்துவிடுகிறான். இறுதியில் புகை பிடிக்கும் குழாயை மட்டும் அவர்கள் தங்களுடையதை மாற்றிக்கொள்கிறார்கள். இப்படியாக நாவல் முடிவடைகிறது. பெரியார் பிறப்பதற்குச் சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்னர், இந்நாட்டில் நிலவிய கொடுமையான தீண்டாமைப் பழக்கத்தையும் பார்ப்பனர்களின் சூழ்ச்சித் திறத்தையும் பிரெஞ்சு தேசத்து எழுத் தாளரும் அறிஞருமான பெர்னார்தன் தெ சேன்பியர் இந்நாவல் வழியே படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். அன்றைய ஆட்சிக்கட்டிலில் முகலாயர்கள்தான் இருந்தார்கள் என்றாலும், அக்காலத்திய இஸ்லாமிய சமயச் சான்றோர்கள் எல் லோரும், இந்து சமயத்தின் அதிபதியாக விளங்கிய ஜெகந்நாதர் கோவிலின் தலைமை அந்தணரை வழிபட்டு அவரது சொற்படி நடந்து வந்திருக்கின்றனர் என்பதையும் இந்நாவலின் வழி ஆசிரியர் காட்டுகிறார். அதாவது அவர்கள் இந்து சமயத்தைச் சாராதவர்களாக இருந்தாலும் இந்து சமயத்தின் உயர்ந்த குடிகளாகக் கருதப்படும் பிராமணர்களை வழிபாடு செய்தும் போற்றியும் இருந்ததை சொல்கிறார். அதன் வழி இஸ்லாம் உள் ளிட்ட இச்சமுதாயத்தில் சாதி அடுக்குகள் மிகப் பலமாக நிலவியதையும் பிராமணி யத்தின் மேலாண்மையை அனைத்து ஆட்சிக்குடிகளும் ஆதரித்ததையும் ஆசிரியர் காட்டுகிறார். இயற்கை என்னும் ஒரு காரணிதான் எல்லா மனிதர்களையும் எவ்வித பாகுபாடும் காட்டாமல் ஒன்றிணைத்து வைக்கிறது என்னும் தத்துவ விசாரணையையும் இந்நாவலின் வழி ஆசிரியர் நிகழ்த்துகிறார். -_ ஜூன் 2015 அமிர்தா இதழில் வெளிவந்த கட்டுரை

இந்தியக் குடிசை (நாவல்): முதல் பதிப்பு, 1968,

சிந்தனைப் பதிப்பகம் வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு; நன்கொடை: ரூ. 35
கிடைக்குமிடம்: பெரியார் புத்தக நிலையம்
பெரியார் திடல், சென்னை - 7
தொ.பே. 044-26618162, செல்: 9626657609Read more: http://www.viduthalai.in/page2/104015.html#ixzz3eHXS1LVx

தமிழ் ஓவியா said...

லலித் மோடி பற்றி நரேந்திர மோடிக்கு விடப்படும் எதிர்பார்க்க இயலாத கேள்வி

 

- சுநந்தா கே டட்டா-ரே

பிரதமர் நரேந்திர மோடி வாய் திறந்து பேசியே ஆகவேண்டும் என்ற நிலை வந்துவிட்டது. லலித் மோடியின் செயல்களுக்கு நரேந்திர மோடியும் உடந்தையாக இருந்தார் என்று  எவர் ஒருவரும் அவர் மீது குற்றம் சாட்ட வில்லை. அல்லது லலித் மோடியின் செயல்கள் நேர்மையற்றவை, சட்டத் திற்குப் புறம்பானவை என்று கூட எவரும் குறிப்பிட்டுக் கூறவில்லை.  எந்த கருத்தையும் நாட்டின் பிரதமர் வெளிப் படுத்தாமல் அமைதி காப்பதினால் நாடு முழுவதிலும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் ஊகங்களிலிருந்து,, சர்வதேச யோகா நாள் எனும் கேளிக்கை நிகழ்ச்சியினால் கூட,  கவனத்தை திசை திருப்ப இயலவில்லை. ஆற்றல்மிகு சுயநல சக்திகள் சட்டத் திற்குப் புறம்பான, ரகசியமான முறை யில் ஒருங்கிணைந்து செயல்படுவது, இன்னொரு நெருக்கடி நிலை வருவ தற்காக உள்ள வாய்ப்புகளை புறக் கணித்துவிட முடியாது என்று எல்.கே. அத்வானி கூறியதை நினைத்துப் பார்க்கச் செய்கிறது. நரேந்திர மோடி உடனடியாகத் தெளிவுபடுத்தியாக வேண்டிய இரண்டு செய்திகள் தற்போது அவரை எதிர் கொண்டுள்ளன.  லலித் மோடியை இந்தியாவுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற இந்திய அரசின் நிலைப்பாடு இருந்தபோது, அவர் அய்ரோப்பாவில் பயணம் செய்வதற்கு பா.ஜ.க. அரசு உதவி செய்தது என்பது முதலாவது. விரும்பத்தகாத சில சக்திகளின் நற்பெயரைக் கெடுக்க மேற்கொள்ளப் பட்ட உட்கட்சி முயற்சிகள்; இரண் டாவது. பழைய காங்கிரஸ் கட்சியில் இருந்த கட்சித் தலைமை (ஹை கமாண்ட்) என்பது போன்ற பெயரள வுக்கான ஜனநாயக நடைமுறையும் கூட இல்லாத, ஒரே ஒரு மனிதரால் நடத்திச் செல்லப்படும் அமைப்புக்கும் (பா.ஜ.க.) எந்த நற்பெயரையும் அது வாங்கித் தந்துவிடாது. நரேந்திர மோடியின் அனுமதி இன்றி  பா.ஜ.க. யில் ஒரு ஈ கூட நகர முடியாது என்பதுதான் அக் கட்சி பற்றி பொதுமக்கள் கொண்டுள்ள கருத்தாகும்.

கிரிக்கெட் விளையாட்டிலும்  அதன் துணை நடவடிக்கைகளிலும் எனக்கு அதிக ஆர்வம் இல்லாத காரணத்தால், லலித் மோடி அப்படி என்ன குற்றத் தைத்தான் செய்துவிட்டார் என்பதை முழுமையாக என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், அவ ரது பாஸ்போர்டை ரத்து செய்ய அர சுக்கு போதுமான நியாயமான கார ணங்கள் இருந்திருக்கக்கூடும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவரை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கு இங்கிலாந்து நாட்டின் உதவியையும் நமது அரசு கேட்டிருந்தது என்பதையும் நானறிவேன். முந்தைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு லலித் மோடியின் மீது கொண்டிருந்த தனிப்பட்ட விருப்பு வெறுப்பு காரணங் களுக்காக மேற்கொள்ளப்பட்ட நட வடிக்கைகள் அல்ல;   இந்திய அரசி னால் மேற்கொள்ளப்பட்ட செயல்பா டுகள் என்றே கருதப்படுபவையாகும் அவை. பிரதமர் நரேந்திரமோடியும் அவரது அயல்துறை அமைச்சரும் அவற்றிற்குக் கட்டுப் பட்டவர்களே ஆவர். முந்தைய அரசின் முடிவுகளோடு கருத்து வேறுபாடு கொண்ட காரணத் தினால் அயல்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அச்செயல்பாடுகளை சட்டப் படி மாற்றியமைக்க முயன்றிருந்தால், அதனை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.  அதற்கு மாறாக, லலித் மோடிக்காக சலுகைகள் செய்யக் கேட்டு அவர் இங்கிலாந்து அரசை ரகசியமாக அணுகியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

சட்டத்திற்குப் புறம்பான இத்தகைய செயல்பாடுகளைப் பற்றி நரேந்திர மோடி அறிந்தும் இருக்கலாம்; அறியா மலும் இருக்கலாம். தனது மற்றும் தனது அரசின் நம்பகத்தன்மையை நிலை நாட்டிக் கொள்வதற்காக நரேந் திரமோடி தெளிவு படுத்தி விளக்கம் அளிக்கவேண்டிய ஒரு செய்தியாகும் இது. சுஷ்மா ஸ்வராஜின் செயல்பாடு களை ஓர் இங்கிலாந்து நாட்டு செய் தியிதழ் வெளிப்படுத்தாமல் போயி ருந்தால்,  நமது நாடு இதனைப் பற்றி அறிந்து கொள்ளவே இயலா மல் போயிருக்கும் என்பது மட்டுமே நாமனைவரும் அறிந்திருப்பதாகும். தான் மனிதாபிமான முறையில் செயல்பட்டதாக இப்போது சுஷ்மா தனது செயலுக்கு நியாயம் கற்பிக்க முயல்கிறார். பா.ஜ.கட்சியின் நற்பெய ரைப் பற்றிய கவலையை மட்டுமே கொண்டிருக்கும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சுஷ்மாவுக்கு ஆதரவாகப் பேச பாய்ந்து வருவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இதற்கு ஆதரவு தர அருண்ஜேட்லி ஓடி வந்ததைப் பார்த்து நான் அதிர்ச்சி யடைந்துபோனேன்.

நேர்மை, நியாயத்துக்குக் கட்டுப்பட் டவர் என்று அறியப்பட்டுள்ளவர் அருண் ஜேட்லி. எந்தச் செயல்பாட் டையும் நியாயப்படுத்தி, ஆதரவளித்து, பாதுகாப்பதில் புகழ் பெற்றவர் அவர். அரசாட்சி என்பதன் கொள்கைகள் மற்றும் மதிப்பீடுகளின் முக்கியத்துவத் தையும், நாகரிக சமூக அமைப்புகள் மற்றும் அவற்றின் நடைமுறைகளின் புனிதத்தன்மையின் மீதே அவை சார்ந்திருக்கின்றன என்பதையும் அவர் கட்டாயமாக அறிந்தே இருக்க வேண் டும். குற்றம் குறையே கூற இயலாத தொழில் நாணயம் கொண்ட வழக் குரைஞரான அவர், தனது சக அமைச் சர் இரண்டு வகைகளில் தவறிழைத் துள்ளார் என்பதையும் அறிந்திருக்கவே வேண்டும். வழக்குரைஞர்களான சுஷ்மாவின் கணவரும், மகளும் லலித் மோடிக்கான வழக்குரைஞராக அவரது வழக்கில் ஆஜராகி செயல்பட்டுள்ள னர். அதற்காக அவர்கள் சம்பளம் பெற்றார்களா இல்லையா என்பதல்ல இப்போதுள்ள கேள்வி. ஒரு நேர்மை யான அமைச்சராக சுஷ்மா தனது நிலையை வெளிப்படையாக அறிவித்து விட்டு, லலித் மோடி விவகாரத்தில் துணிவுடன் விலகியே இருந்திருக்க வேண்டும்.

சுஷ்மா ஸ்வராஜ் இந்த இரண்டை யுமே செய்யவில்லை. அதற்கு நேர் மாறாக, அரசு அமைப்புகள் மற்றும் அவற்றின் நடைமுறைகள், செயல்பாடு களின் முக்கியத்துவம் மற்றும் நியா யத்தன்மை மீது, ஒரு மூத்த அமைச்சராக இருக்கும்  தான் கொண்டிருக்கும் எல் லையற்ற வெறுப்பை அவர் வெளிப் படுத்தியுள்ளார். அவர் இவ்விவகாரத் தில் பிடிபட்டது தற்செயலாக நிகழ்ந்த ஒரு நிகழ்வே.

தமிழ் ஓவியா said...

சதித்திட்டக் கோட்பாடுகள் இல்லா விட்டால், இந்தியா இந்தியாவாகவே இருக்க முடியாது. சுஷ்மா ஸ்வராஜை இவ்வாறு சிக்கவைத்ததன் நோக்கமே,  2014 பொதுத் தேர்தலுக்கு முன்னர் பா.ஜ.க.யின் உள்கட்சி விவகாரங்களில் தவறான பக்கத்திற்கு ஆதரவு அளித்து வந்த ஒருவரின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வருவதுதான் என்றும் ஒரு கருத்து தெரிவிக்கப் படுகிறது. இத்தாக்குதலின் முக்கிய இலக்கே சுஷ்மாவை விட அதிக அளவு எரிச்சலூட்டுபவராக இருந்த வசுந் தராராஜேதான் என்ற இதிலிருந்து மாறுபட்ட கோட்பாடு ஒன்றும் இருக்கிறது. லலித் மோடி விவகாரத்தில் சுஷ்மாவை மட்டுமே பாதுகாப்பதன் மூலம், பொதுமக்களின் பேராதரவைப் பெற்றவரும், எளிதில் கவிழ்க்க முடி யாதவருமான ராஜஸ்தான் முதல மைச்சர் மீது எதிர்ப்பாளர்கள் தாக் குதல் நடத்தலாம் என்று  அழைப்பு விடப்பட்டிருக்கிறது.

இக்கோட்பாட்டை மேலும் கொண்டு சென்று, சிந்தியா கட்சியிலி ருந்து ஓரங்கட்டப்பட்டுவிட்டால், அவரையடுத்து அயல்துறை அமைச்சர் ஓரங்கட்டப்படும் முறை வந்துவிடும் என்று கூறுபவர்கள் சிலரும் உள்ளனர். யார் அறிவர்? ஆனால், இந்த இரண்டு பெண்மணிகளுமே அரசியல் களத்தி லிருந்து மறைந்த பிறகு, பல்லும் நகமும் பிடுங்கப்பட்ட பீஷ்ம பிதாமகரான அத்வானியை அழைத்து, பெயரளவுக்கு அவரை பிதாமகராகச் செயல்பட அழைப்பு விடுக்கும் தன்னம்பிக்கையை மோடி பெறுவார். பின்னர் அத்வானி யும் அவரது முறை வரும்போது, மகாபாரத பீஷ்மர் போல ஆணிகளின் படுக்கையில் விழவேண்டியதுதான்.

சிக்கல் நிறைந்ததும், எளிதில் புரிந்து கொள்ள முடியாததுமான பா.ஜ.கட்சி அரசியலில் மூழ்கி  உள்ளவர்களால் மட்டுமே, இத்தகைய சதித் திட்டக் கோட்பாடுகள் பற்றிய எந்த ஓர் ஊகத்தையும் தெரிவிக்க முடியும். ஆனால்,  சுஷ்மா என்ன செய்ய உத்தே சித்திருக்கிறார்  என்பதை முற்றிலுமாக அறியாதவர்களாகவே சுஷ்மாவின் எஜமானர்கள் இருக்க மாட்டார்கள் என்றே வெளியாட்களுக்கு நன்றாக தெரிகிறது. இக்கதையில் சுஷ்மா ஸீஸர் என்றால், நரேந்திர மோடியே ஸீஸரின் மனைவியாவார். எனவே அவர் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். அவர் இது பற்றி வாய்திறந்து பேசாதவரை,  சந்தேகத் திற்கு அப்பாற்பட்டவராக அவரால் இருக்க முடியாது.

இதில் அடங்கியுள்ள மாபெரும் செய்தி என்னவென்றால், அது ஒரு கட்சியையோ அல்லது ஒரு தனிப்பட்ட நபரான லலித் மோடியின் சமூக நிலையை  மட்டுமே பாதிப்பதாக இல் லாமல், ஒட்டுமொத்த நாட்டையும் பாதிக்கிறது என்பதாலேயே அது  மாபெரும் செய்தியாக விளங்குகிறது,  இதில் அயல்துறை அமைச்சர் மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் மட்டுமே சம்பந்தப்பட்டிருப்பவர்களாகத் தோன்றவில்லை; இந்திய குடியரசுத் தலைவர், ப.சிதம்பரம், சரத்பவார், சஷிதரூர், மும்பை காவல்துறை ஆணை யரும், இன்னும் யார்யாரெல்லாமோ சம்பந்தப்பட்டிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.லலித் மோடியின் சவடாலையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.   அரசு நடை முறைகள் மற்றும் பாரதநாடெனும் இந்தியாவின் பெருமையை விட பணத்துக்கும், மக்கள் தொடர்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவது விந்தை யாகவே தோன்றுகிறது.

முன்னொரு சமயம் கருப்பு சந்தைக்காரர்கள் மீது ஒரு சமூகப்  புறக்கணிப்பைக் கொண்டு வர இந்திரா காந்தி  திட்டமிட்டார்.  வி.பி.சிங்கோ ஒரு படி மேலே சென்று அவர்களை நாடுகடத்தவேண்டும் என்றார். இந்தியாவில் நிலவும் நிதர்சன, உண்மை நிலையை, இருவருமே அறிந்திருக்க வில்லை. லலித் மோடி விவகாரத்தில் தன்னை குற்றமற்றவராக மெய்ப்பித்துக் கொண்டு நரேந்திரமோடி வெளியே வந்தால்,  அவர்களைப் போல அவர் கனவுலகில் வாழமாட்டார். ஆனால் அவ்வாறு நரேந்திரமோடி செய்யாத வரை, நரேந்திரமோடியும் சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தராராஜே போன்றே  இச்சதிக்கு உடந்தையாக இருந்ததாகவே மக்கள் நினைப்பார்கள்.

நன்றி: டெக்கான் கிரானிகிள்

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழ் ஓவியா said...

பாஜக ஆட்சிக்கு எதிராக 8 மாதங்களில் பதவி விலகிய 4 கல்வியாளர்கள்இந்திய வரலாற்று ஆய்வுக்குழுவின் உறுப்பினர் செயலாளர், மூத்த வரலாற்றாசிரியர் கோபிநாத் ரவீந்திரன் கடந்த வாரத்தில் பதவி விலகி உள்ளார். இதற்கு முன்பாக மத்திய அரசின் உயர்பதவிகளிலிருந்து மூவர் பதவி விலகியுள்ள நிலையில் நான்காவதாக வரலாற்றுப்பேராசிரியர் கோபிநாத் ரவீந்திரன் விலகியுள்ளார்.கோபிநாத் ரவீந்திரன்

இந்திய வர லாற்று ஆய்வுக்குழு வின் தலைவராக ஒய்.சுதர்சன ராவ் மற்றும் ஆய்வுக் குழுவின் உறுப் பினர்கள் காவிமயச் சிந்தனையுடன் உள்ளவர்களாக இருப்பதாக கோபிநாத் ரவீந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த வாரத்தில் ஆய்வுக்குழுவின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தின் பதி வேட்டில் கோபிநாத் ரவீந்திரன் தம் முடைய கருத்தைப் பதிவு செய்யாததைக் கண்டித்து பதவி விலகி உள்ளார். பதவி விலகிய மற்றவர்களில் இருவர் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச் சகத்தைக் குறை கூறியுள்ளனர். மற்றும் ஒருவர் தம்முடைய பதவி விலகலுக்கு காரணமாக எதையும் குறிப்பிடவில்லை.

கோபிநாத் ரவீந்திரன் இந்திய வரலாற்று ஆய்வுக்குழுவின் உறுப்பினர் செயலாளர் பொறுப்பிலிருந்து கடந்த வாரத்தில் விலகியுள்ளார். இவர் கடந்த அய்க்கிய முற்போக்குக்கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் 2013ஆம் ஆண்டில் இந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டவர். பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றபிறகு இந்திய வரலாற்று ஆய்வுக்குழுவுக்குத் தலைவர் பொறுப்பில் ஆந்திரப்பிரதேசத் தைச் சேர்ந்த ஒய்.சுதர்சன ராவ் எனும் பிரகலத எல்லப்ப சுதர்சன ராவ் என்ப வரை நியமித்தது.  அவர் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்ட உடன் தம்முடைய இணையப்பக்கத்தில் (பிளாக்கில்) பழமையான இந்திய ஜாதீய முறையைப் புகழ்ந்து எழுதினார். அதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக பல்வேறு வகையிலான முரண்பாடுகள் அவரிடம் காணப்பட்டன.

தமிழ் ஓவியா said...

இந்திய வரலாற்று ஆய்வுக்கழகம் நிறுவிய நாள் விழாவில் மார்ச்சில் உரையாற்றியபோது இந்துத்துவாவாதி யும், வேத விற்பன்னருமான டேவிட் பிராலி என்பவரின் கருத்தில் மாற்றுக் கருத்துக் கூறியமையால் பார்வையாளர் வரிசையில் இருந்தவர்களால்  இடை யூறு ஏற்படுத்தப்பட்டு தொடர்ந்து பேசமுடியாமல் தடுக்கப்பட்டார்.

அதேபோல், இந்தியாவின் வரலாற் றாசிரியர்களின் பெருமைமிகு பத்திரிகை யான இந்திய வரலாற்றியல் ஆய்வு இதழின் ஆசிரியர் குழு மற்றும் ஆலோ சனைக்குழுவை மாற்றி அமைப் பதற்கான இந்திய வரலாற்று ஆய்வுக் குழுவின் முடிவை கோபிநாத் ரவீந் திரன் ஏற்காமல் எதிர்த்தார். ரொமீலா தாப்பர், இர்பான் ஹபீப், சத்தீஷ் சந்திரா, ரிச்சர்ட் ஈட்டன் மற்றும் பி.ஆர்.தாம்லின்சன் ஆகிய வரலாற்றா சிரியர்கள் ஆசிரியர் குழுவின் உறுப் பினர்களாக இருக்கிறார்கள். சுதர்சன ராவுடன் மாறுபட்டுள்ள கோபிநாத் ரவீந்திரன் இந்திய வரலாற்று ஆய்வுக் குழுவில் காவிமயம் பெருமளவில் இழையோடிக்கொண்டு இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். அவருடைய பதவி விலகலுக்கு மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் இதுவரை எந்தவிதக் கருத்தும் தெரிவிக்காமல் உள்ளது.

பர்வீன் சின்கிளார்என்சிஇஆர்டி பர்வீன் சின்கிளார் இயக்குநர் பொறுப் பிலிருந்து கடந்த ஆண்டு (2014) அக் டோபர் மாதத்தில் விலகிவிட்டார்.

மத்திய மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சரான ஸ்மிரிதி இரானியின் நேரடிப் பார்வையில் இருக்கின்ற உயர் பதவியில் இருந்தவரான பர்வீன் சின்கிளார்தான் முதல்முறையாக பணியிலிருந்து விலகியவர் ஆவார். 2012ஆம் ஆண்டில் அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்ட அவருக்கு அய்ந்து ஆண்டுகள் பணிக்காலம் இருந்த போதி லும், பாஜக தலைமையிலான ஆட்சி மாற்றத்தின் காரணமாக கல்வித் துறையில் வெகுவாக முறைகேடுகள் தலைதூக்கத் தொடங்கின. துறையின் நிர்வாக நடைமுறைகளில்  பாடப் புத்த கங்கள் அச்சடிப்பதற்கான பொருள் களை வாங்குவது உள்ளிட்ட எதிலும் எவ்வித நடைமுறைகளையும் பின்பற் றாமல், அதற்கான விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது. இதுகுறித்து அவர் கூறும்போது, என்சிஇஆர்டியில் எதைச் செய்யக் கூடாதோ, அதையெல்லாம் செய்வதற் காக அமைச்சகத்தின் சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டுவந்தது. எதிர்ப்புகள் வரும்வகையிலேயே அமைச்சகத்தின் செயல்பாடுகள் அமைந்துவருகின்ற நிலை உள்ளது. எதற்கெல்லாம் முக்கி யத்துவம் தேவைப்படுகிறதோ, எதற் கெல்லாம் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமோ அவைகளுக்கான அனு மதியை அளிக்க மறுத்து வருகிறது அமைச்சகம் என்றார்.

தமிழ் ஓவியா said...

பர்வீன் சின்கிளார் பதவி விலகலால் என்சிஇஆர்டி ஆய்வுக்குழு மற்றும் தேர்வுக்குழுவுக்கு புதிதாக இயக்குநரை நியமிக்க வேண்டிய நிலையில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை தள்ளப் பட்டுள்ளது. பர்வீன் கிளாமர் 2014 அக்டோபரில் பதவி விலகியதுமுதல் இன்றுவரையிலும் அந்த இடத்தை நிரப்பாமல்தான் உள்ளது.

ரகுநாத் கே. ஷெவ்காங்கர்டில்லியில் உள்ள அய்.அய்.டி. நிறுவனத்தின் இயக்குநர் ரகுநாத் கே. ஷெவ்காங்கர், அந்தப் பொறுப் பிலிருந்து கடந்த ஆண்டு டிசம்பரில் விலகியுள்ளார். அவர் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் இருக்கும்போதே பதவியிலிருந்து விலகி உள்ளார். பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியம் சாமி என்பவர் 1972ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டு வரை டில்லி அய்.அய்.டி.யின் பேராசிரியராகப் பணியாற்றியதாகக் கூறிஅவருக்கு அளிக் கப்பட வேண்டிய ஊதியப் பாக்கித் தொகை 70 இலட்சம் ரூபாய் என்றும் அதை உடனே வழங்கிட வேண்டும் என்றும் அதிகமான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாலேயே, அந்தத் தொகையை அளிக்க வேண்டும் இல்லையென்றால் பதவியிலிருந்து விலகிட வேண்டும் என அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாலேயே ஷெவ்காங்கர் தம்முடைய பணியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே பதவி விலக நேரிட்டுள்ளது. அதேநேரத்தில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் அமைச்சகமோ சுப்பிரமணிய சாமியின் கோரிக்கையை ஏற்க மறுத் துள்ளது. அய்.அய்.டி. டில்லி சார்பில் அந்த குறிப்பிட்ட காலத்தில் சுப்பிர மணிய சாமியின் வருவாய்குறித்த எவ் வித தகவலையும் அவர் அளிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி அவருக்கு ஊதியப் பாக்கி இருப்பதாகக் கூறப் படுவதை அளிக்க மறுத்துவிட்டது.

மொஷியஸ் நாட்டில் அமைக் கப்பட்டுள்ள பன்னாட்டு தொழில் நுட்ப ஆராய்ச்சி கல்வி நிறுவனத்துடன் புரிந்துணர்வு போடப்பட்ட விவகாரத் தில் அய்.அய்.டி.யின் விதிகளுக்குப் புறம்பாக நடந்துகொண்டதாகவும் ஷெவ்காங்கர்மீது குற்றச்சாற்றை அய்.அய்.டி.டில்லி சுமத்தி உள்ளது. இதில் அய்.அய்.டி. டில்லி நிர்வாகம் எவ்வித தவறையும் இழைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

இறுதியாக ஷெவ்காங்கர் 11.6.2015 அன்று பணியிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் பதவி விலகலுக்கு அவர் எந்த காரணத்தையும் வெளிப்படையாகக் கூறவில்லை. அவரைத் தொடர்ந்து அவர் வகித்த பதவியில் இன்று வரை வேறு எவரும் நியமிக்கப்படவில்லை. அவருடைய பதவி விலகல்குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் குறிப்பிடுகையில், சுப்பிரமணிய சாமியின் வேண்டுகோளை அய்.அய்.டி. டில்லிக்கு அனுப்பவும் இல்லை, அவர் கோரியுள்ள ஊதியப் பாக்கித் தொகை என்பதை அளிக்க வேண்டும் என்றும் எவ்வித உத்தரவையும் அளிக்கவே இல்லை, அந்தக் கோரிக்கையை நிதித் துறை அமைச்சகம் மற்றும்  கணக்குத் துறையினரே கவனிக்கவேண்டியதாகும் என்றும் அமைச்சகத்தின் சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனில் ககோட்கர்அய்.அய்.டி. மும்பையின் ஆட்சி மன்றக் குழுத்தலை வரான அனில் ககோட்கா அய். அய்.டி.யின் நிலைக் குழு மற்றும் தேர் வுக்குழுத் தலைவ ராகவும் பொறுப்பில் இருந்து வந்தவர்.

கடந்த மார்ச்சு மாதத்தில் மும் பையில் உள்ள அய்.அய்.டி.யின் இயக்குநர் பதவி நியமனம் தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துடன் ஏற்பட்ட முரண் பாடுகளால் தாம் வகித்த அனைத்து பதவியிலிருந்தும் விலகினார். மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச் சர் ஸ்மிரிதி இரானி அவரின் பதவி விலகலைத் திரும்பபப் பெறுமாறு கேட்டுக்கொண்டார். அவருடைய பதவிக்காலம் மே மாதம்வரை இருந்த போதிலும் மார்ச் மாதத்திலேயே விலகினார். அய்.அய்.டி.ரோபூர் இயக்குநர் நியமனத்தின்போது 22.3.2015 அன்று நடைபெற்ற நேர்காணலில் 37 பேர் பங்கேற்றனர். அந்த நேர்காணல் முடிவுகள் நீக்கப்பட்டது. அதனால் தேர்வுக்குழு எந்த முடிவையும் எடுக்க முடியாமல் போனது. இதுகுறித்து அனில் ககோட்கர் கூறுகையில்   முக்கியமான செயல்களில் மிகவும் அலட்சியமாக அமைச்சகம் செயல் பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார். தற்பொழுது அய்.அய்.டி. இயக்குநர் களைத் தேர்வு செய்வது என்பது 6 மணி முதல் 7 மணிநேரத்தில் லாட் டரியை நடத்துவதுபோல் இயக்குநர்கள் தேர்வு செய்யப்படும் நிலை உள்ளது என்று குறிப்பிட்டார்.

அவர் பதவி விலகலுக்குப்பின்னர் அவருடைய பணியிடம் இன்றுவரை நிரப்பப்படாமல் உள்ளது.

அமைச்சகத்தின் சார்பில் கடந்த ஏப்ரலில் அமைச்சர் ஸ்மிரிதி இரானி இதுகுறித்து குறிப்பிடும்போது, ககோட் கர் கண்ட நேர்காணல் குழு உரையா டல்கள் வீடியோப்பதிவுகள் என்னிடம் உள்ளன. அந்த நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் அடுத்த சுற்றில் தேர்வு செய்யப்படு வார்கள். தவறான அறிக்கை ஏதும் அச்சாகிவிடக்கூடாது என அமைச்சரே வீடியோ பதிவுடன் ஆதாரத்துடன் இருப்பதை எண்ணிப்பாருங்கள் என்று ஸ்மிரிதி இரானி குறிப்பிட்டார்.

_ இந்தியன் எக்ஸ்பிரஸ் 24.6.2015

தமிழ் ஓவியா said...

நீங்கள் விடும் செமிக்காத ஏப்பம் அதை என் முகத்தில் விடாதே!யோகாவை யாரும் தடை செய்யக் கோரவில்லை. யார் யாருக்கு என்ன முடியுமோ அப்படி மகிழ்ச்சியாக வாழலாம்.

ஆனால், இப்போது மோடி நடத்திய யோகா நாடகம், தனது மத்திய தர வர்க்க வாக்காளர் களிடையே கிழியத் தொடங்கும் நல்லாட்சி எனும் முகமூடியை ஒட்ட வைக்க நடத்தப்படும் ஒட்டுப் பிளாஸ்திரி வேலை என்பதால் இதை நாம் எதிர்க்க வேண்டி யிருக்கிறது.

ஏழைகளை இன்னும் விலக்கி வைக்கிற ஒரு பொருளாதார திட்டத்தை முன்னிறுத்தும் மோடி, பத்து பதினைந்து பணக்காரர்களை இன்னும் பணக்காரர்களாக்குவதே வளர்ச்சித் திட்டம் என்று சொல் லும் மோடி, ஏழைகளுக்கு பாது காப்பாக இருக்கிற நலத்திட்டங் களை எல்லாம் இழுத்து மூடிக்கொண்டிருக்கும் மோடி, தனது இந்துத்துவ அடியாட்கள் அடிக்கும் லூட்டிகளை அமைதி யாக இருந்து ஆமோதிக்கும் மோடி, கலர் கலராக உடையணிந்து நம்மைக் கேவலப்படுத்தும் மோடி, இந்தியாவில் இருக்கும் அறிவு சார்ந்தஅரசு நிறுவனங்களில் தனது ஜால்ராக்களை முக்கியஸ்தர் களாக்கி அவற்றை நீர்த்துப் போகச்செய்யும் மோடி, ஆதிவாசி, தலித், முஸ்லீம், கிறிஸ்தவர், ஹிந்தி அல்லாத பிற இந்திய மொழி பேசுபவர், விவசாயி, கைவினைஞர், மீனவர், பாலியல் சிறுபான்மை யினர், மாற்றுத் திறனாளி என்று எல்லோரையும் அந்நியனாக்கும் மோடி, யோகா என்ற பெயரில் நம்மை வைத்து காமெடி பண்ணுவ தாக சுயமரியாதை உள்ள எனக்குப் படுகிறது.

அதனால் நான் இந்த யோகா நாடகத்தை எதிர்க்கிறேன். சிலருக்கு வடக்கிருத்தல் உசிதம் என்றால் நான் அதையும் வரவேற்பேன்.

ஆன்மா சுத்தி அடையும், அதனால் கரண்ட் கம்பியில் தொங்க விருப்பமென்றாலும் நான் தடுக்க மாட்டேன். எனது பெருமை என்று என்னை உங்கள் விளையாட்டில் மட்டும் தயவு செய்து சேர்க்காதீர்!
இந்திய ஞானமரபு என்பது நீங்கள் விடும் செமிக்காத ஏப்பம். அதை என் முகத்தில் விடாதே என்று சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது.

(முக நூலிலிருந்து  குடந்தை கருணா)

தமிழ் ஓவியா said...

இனியாவது போகாதே!

அட முட்டாள்களா! எதற்காகக் கோயிலுக்குப் போகிறீர்கள்? அங்கே உன்னைப் பார்ப்பான் வெளியே நில், உள்ளே வரக்கூடாது என்கின்றானே! உனக்குமானமில்லையா?ரோசமில்லையா? அங்கு இனியாவது போகாதே!
விடுதலை, 20.11.1969

தமிழ் ஓவியா said...

எளிமை + பண்பு + பல்திறன் = அறிஞர் அண்ணா


அறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியார் அவர்களை தமது வாழ்நாள் தலைவராகக் கொண்டு இறுதிவரை வாழ்ந்து காட்டியவர்.

அய்யா பெரியார் அவர்களிடத்தில் இருந்த - தொண்டு புரிந்த காலத் தையே தமது வாழ்வின் வசந்தம் என்று முதல் அமைச்சர் ஆன பிறகும் நிலை நாட்டி உறுதிபடக் கூறியவர் அறிஞர் அண்ணா.

தந்தை பெரியார் அவர்களுடன் இருந்து ஈரோட்டுக் குருகுல வாச முன்னோடியான அவர், எப்போதும் எளிமையான பழக்க வழக்கங்களைக் கொண்ட மாமேதை.

பதவி அவரை அதிகார போதை யில் தள்ளாடச் செய்யவில்லை; மாறாக; இவ்வளவு பெரிய பொறுப்பை மக்கள் நம்மீது - இத்தேர்தல் முடிவு மூலம், சுமத்தி விட்டார்களே என்ற கவலை அவரை ஆட் கொண்டது. மேலும் தன்னடக்கத்தின் தாயகமாகத் தன்னை ஆக்கிக் கொண்டார்!

அருமை நண்பர் கவிவேந்தர் கா. வேழவேந்தன் அவர்களின் தித்திக்கும் தீந்தமிழ் என்ற தலைப்பில் பல கட்டுரைத் தொகுப்பாக ஒரு நூலைத் தொகுத்து, மணிவாசகர் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளார்கள்.

அந்நூலை எனக்கு அனுப்பி அதுபற்றி கருத்து எழுதும்படிக் கேட் டுக் கொண்டார்.
மகிழ்ச்சியோடும், மனநிறை வோடும் எழுதுகிறேன்.

நூலைப் படித்தேன் - நவில் தோறும் நயம் அதில் மலரின் தேன் போல் இருந்தது! படித்தேன் - சுவைத்தேன்.

அறிஞர் அண்ணாவின் சிந்தனைச் செழுமை என்ற தலைப்பில், ஒரு அரிய கட்டுரை. (பக்கம் 112 - 118 வரை) பல்வேறு செய்திகளை மருந்துக் குப்பி (சிணீஜீறீமீ) போன்று அடக்கி எழுதப் பட்டுள்ளது.

இன்றைய தலைமுறையும் தலை வர்களும் தங்களுக்கு அதனை வழி காட்டியாக, கலங்கரை வெளிச்சமாக கொண்டால் அவர்களுக்கு நல்லது.

அந்த பக்கங்களில் உள்ள செய்திகள்:

அண்ணா தம் வாழ்க்கையின் தொடக்க முதலே, பொது வாழ்க்கைக்கு இலக்கணம் வகுப்பவராக எளிமை யோடும், பொருளாசை இன்றியும் வாழ்ந்து காட்டினார்.

தமிழ் ஓவியா said...

நீதிக்கட்சியும் அவர் ஆற்றலுடன் இயங்கியதைக் கண்ட முத்தையா செட்டியார் அவர்கள், அண்ணாவை அணுகி, உங்களுக்குக் கை நிறைய ஊதியமும், தனி வீடும், தனிக் கார் வசதியும் தருகிறேன்; என்னிடம் பணிக்கு வந்து விடுங்கள் என்று கூறியபோதும், பெரியாரின் குருகுல வாழ்க்கையை விட்டு வர மாட்டேன் என்று, சொற்பச் சம்பளத்தில் தந்தை பெரியாரின் விடுதலை இதழில் தொண்டாற்றினார் அண்ணா. தாம் எம்.ஏ. படித்திருந்தாலும், அய்யாவின் அறிவியக்கத்தின் தன்மானக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட அண்ணா இறுதிவரை, நான் கண்டதும், கொண் டதும் ஒரே தலைவர் தந்தை பெரியார் தாம் என்றார்.

1949இல் இராபின்சன் பூங்காவில் பெரியாரிடமிருந்து பிரிந்து, திராவிட முன்னேற்றக் கழகம் எனும் தனி இயக்கம் கண்ட போதும், மேடையின் மத்தியில் ஒரு காலி நாற்காலியிட்டு, இது தந்தை பெரியாருக்கே உரிய தலைவர் நாற்காலி; தி.மு.கழகத்திற்குத் தனித் தலைவர் கிடையாது. என்றைக்கு இருந்தாலும் தந்தை பெரியார்தாம் தலைவர் என்று, தந்தைபெரியாரிடம் பக்தியும் பாசமும் காட்டியவர் அண்ணா.

1967இல் மக்கள் அண்ணாவை முதல் அமைச்சர் ஆக்கியவுடன், முதல் வேலையாகத் திருச்சிக்கே சென்று, அங்கே தங்கியிருந்த தந்தை பெரியா ருக்கு மாலை அணிவித்து, அமைந்தி ருக்கும் மந்திரி சபையே தந்தை பெரியா ருக்குக் காணிக்கை என்று கூறி, அய் யாவை நெகிழ வைத்தார். தாம் கடுமை யாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்தாலும், தனயன் அண்ணா காட்டிய உயரிய பண் புணர்வு, தந்தை பெரியாரைச் சிலிர்க்க வைத்தது.

தமிழக மக்கள் படிப்பாற்றல் பெற்றவர் களாகவும், நூலறிவு மிக்கவர்களாகவும் திகழ வேண்டுமென்று, அண்ணா கனவு கண்டார். ஏனெனில், அவரே எளிய ஓட்டு வீட்டில் பிறந்தாலும் ஏராளமான நூல்களை இராப் பகலாகப் படித்து, மாமேதையாக விளங்கியதால், புத்த கங்களே மக்களுக்குப் புத்தறிவு ஊட்டக் கூடியவை என்று, திடமாக நம்பினார்.

ஓர் எழுத்தாளர் சங்க மாநாட்டில் அறிஞர் அண்ணா, இப்படி முழங்கினார்: பாருங்கள்! நம் நண்பர் ஒருவரின் புதுமனை புகுவிழாவிற்குச் சென்றால், அவர் பெருமிதத்துடன் தாம் புதிதாகக் கட்டிய வீட்டின் திண்ணைகளைக் காட்டுவார்; கூடத்தைக் காட்டுவார்; வர வேற்பு அறையைக் காட்டுவார்; சமையல் அறையைக் காட்டுவார்; சாப்பிடும் அறையைக் காட்டுவார்; படுக்கை அறை யைக் காட்டுவார்; கடவுள் அறையை காட்டுவார். ஆனால் இதுதான் நான் படிக்கும் படிப்பறை என்று, ஒன்றைக் காட்டுகிறாரா? அப்படி வீட்டுக்கு வீடு நூலக அறை திகழும் நாள்தான், அறிவுப் புரட்சிக்கு வழிவகுக்கும் திருநாள்!

எத்தனை சிந்தனை ஆழத்துடன் அண்ணா அவர்கள் உதிர்த்த சொற்கள் இவை!

அதேபோல் தமிழ் மாந்தர், அறி யாமைச் சேற்றிலிருந்தும் வைதிகச் சகதியிலிருந்தும் வெளியே வந்தால் தான் அறிவார்ந்த விஞ்ஞான முன் னேற்றம் காண முடியும் என்று, திட்ட வட்டமாக எண்ணினார் அண்ணா.

அவர் ஒருமுறை அழுத்தத்து டனும், சிந்தனைச் செழுமையுடனும் கூறினார்; கடிகாரத்தின் நொடி முள்ளும், மணிமுள்ளும் நகர்வதைக் கவனித்து, வாழ்க்கையை வேகமாக நகர்த்திக் கொண்டிருக்கும் மேனாட் டார், எங்கோ உயரத்திற்கு முன் னேறிப் போய்க் கொண்டிருக்கி றார்கள். ஆனால் இன்னமும் பஞ்சாங் கத்தைப் பார்த்து, நவக்கிரகங்கள் நகர்வதைப் மட்டுமே சார்ந்து செயல் படும் நாம், பின்னேறிக் கொண்டே இருக்கிறோம்

அறிவுப் பாதைக்கு நம்மை ஆற்றுப் படுத்திட அண்ணாவின் சிந்தனையோட்டம் எப்படியெல்லாம் செயல்பட்டது.

அறிஞர் அண்ணா முதல் அமைச் சரான பிறகுகூட ஒரு விருந்து ஏற்பாடு நாகரசம்பட்டியில் திரு என்.எஸ். சம்பந்தம் வீட்டில். அப்போது முதல் வரை தனக்கு அருகில் அமர்த்திட வேண்டுமென அய்யா - விரும்பி ஜாடை காட்டினார் எங்களிடம்.

அண்ணாவோ மிகுந்த கூச்ச சுபாவம் உள்ளவர். அவர் தயங்கி சில இலைகள் தள்ளி என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். இதற் கிடையில் அய்யாவுக்குப் பக்கத்தில் ஒரு அதிகம் பேசும் தொணதொணா ஒருவர் அந்த இலையை ஆக்கிர மித்துக் கொண்டார்! அய்யாவுக்கு வந்த கோபத்தை எங்கள்மீது பார் வையில் காட்டி பிறகே உணவு உண்டார்!

ஈரோட்டில் விடுதலை ஆசிரிய ராக இருந்தபோது எப்படி அய்யா விடம் இருந்தாரோ - நடந்தாரோ - அதே பயபக்தி யுடன் முதல் அமைச் சரான அண்ணாவும் இருந்தார்.

அத்தகையவர்களை இனி எளி தில் எங்கே சந்திக்கப் போகிறோம்?

கவவேந்தர் கா. வேழவேந்தனின் மற்ற கட்டுரைகளும் நல்ல தகவல் களஞ்சியங்கள் ஆகும்.- கி.வீரமணி - வாழ்வியல் சிந்தனைகள்Read more: http://www.viduthalai.in/page-2/104054.html#ixzz3eHa7A5Kg

தமிழ் ஓவியா said...

நெருக்கடி நிலை பிரகடனமும், பாஜக., ஆர்.எஸ்.எஸ். தகிடுதத்தமும்


ஜூன் 25, 1975. இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை சட்டம் பிரகடனம் செய்யப்பட்டு. நாற்பது ஆண்டுகள் கழிந்துவிட்டன. அய்ம்பது வயதுக் குட்பட்டவர்களுக்கு, இந்த இருண்ட காலத்தின் சமூக, அரசியல் நடப்புகள் இன்று தெரியாது. தமிழ் நாட்டில் திரா விடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும், நெருக்கடி நிலை சட்டத்தால், கடுமையாக பாதிக்கப்பட்ட இயக் கங்கள். முன்னணித் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு, ஓராண்டு கடும் சிறை வாசம் மேற்கொண்டவர்கள் இந்த இயக்கத்தவர். சட்டமன்றத்தில் 183 உறுப்பினர்களைக் கொண்ட தனிப் பெரும்பான்மைப் பெற்ற கட்சியான திமுக, நெருக்கடி  நிலையை ஆதரிக் காமல், எதிர்க்கிறது என்பதற்காக, 356-ஆவது பிரிவின் கீழ் ஆட்சி கலைக்கப்பட்டது.

மிசா சட்டத்தை பயன்படுத்தி, பலரும் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, முரசொலிமாறன், மு.க. ஸ்டாலின், ஆற்காடு நா. வீராசாமி போன்றோர் கடுமையாக தாக்கப் பட்டனர். சிட்டிபாபு, சாத்தூர் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும், சிறை யில் கடுமையாக தாக்கப்பட்டு,  சிறையில் மாண்டனர்.

ஆளுநர் ஆட்சி என்ற பெயரில் தவே, சுப்ரமணியம் என்ற இரு பார்ப்பனர் களின் கொடுங்கோல் ஆட்சியைத்தான் தமிழகம் சந்தித்தது. விடுதலையில் தந்தை பெரியார் எனப் போடக்கூடாது என சென்சார் செய்யும் அளவுக்கு கட்டுப் பாடுகள் இருந்தன. அந்த இரு பார்ப் பனர்களும் சிண்டை அவிழ்த்து ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. வட நாட்டில் பல தலைவர்கள் கைது செய் யப்பட்டாலும், அவர்களுக்கு இத்தகைய தாக்குதல்கள் நடந்ததாக செய்திகள் இல்லை. பல தலைவர்கள் உடல் நலம் கருதி, பிணை பெற்று வந்துவிட்டார்கள்.

அதில், இன்றைய பாரத ரத்னா வாஜ்பாயும் ஒருவர். அவர் கைது செய்யப்பட்டதும், உடல் நலம் கருதி, இறுதிவரை மருத்துவமனை சிகிச்சை யில் தான் இருந்தார்.

ஏறக்குறைய இருபது மாதம் நெருக் கடி நிலை அமுலில் இருந்த காலத்தில், பெரும்பான்மை மாதங்கள், வாஜ்பாய் பரோலில் வெளியில் இருந்தார். அரசுக்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடு வதில்லை என்ற உறுதிமொழியைக் கொடுத்துவிட்டு, வாஜ்பாய் வெளியில் இருந்தார்.

இவ்வாறு நாம் சொல்லவில்லை; இன்று பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவ ரான சுப்ரமணியன் சுவாமி கூறியதைத் தான் நாம் மேற்கோள் காட்டுகிறோம்.  இதோடு அவர் நிறுத்தவில்லை.

அன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டு, அதன் அன்றைய  தலைவர் பாலாசாகிப் தியோரஸ், ஏர்வாதா சிறையில் இருந்தார். அங்கிருந்து இந்திரா காந்திக்கு பல கடிதங்கள் எழுதினார். ஆர்.எஸ்.எஸ்.க் கும், ஜெயபிரகாஷ் இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், தங்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, இந்திரா காந்தியின் இருபது அம்ச திட்டத்திற்கு முழு ஒத்து ழைப்பு தந்து பாடுபடும் என்று மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தார்.

தியோரஸும், வாஜ்பாயும் இவ்வாறு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து நெருக்கடி நிலைக்கு எதிரான இயக்கத்திற்கு முற்றிலும் துரோகம் இழைத்து விட்டார்கள். அப்போதைய மகாராட்டிர சட்டமன்ற நடவடிக்கைகளின் குறிப்புகளில் இந்த செய்திகள் இருக்கின்றன என ஆதாரத் துடன் சொன்னவரும் சாட்சாத் சுப்ர மணியன் சுவாமிதான். ஆதாரம் வேண்டு வோர், ஆங்கில இந்து பத்திரிக்கையில் ஜூன் 13, 2000 அன்று அவர் எழுதிய கட்டுரையைப் படித்து தெரிந்து கொள்ளவும். எந்த தருணத்தில் சுப்ரமணியன் சுவாமி இந்த கட்டுரையை எழுதினார் தெரியுமா? நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்து இரு பத்தைந்து ஆண்டுகள் ஆகிய நிலையில், அதை பாஜக நினைவுபடுத்தி நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்ததைக் கிண்டல் செய்து, சுவாமி இந்த கட்டுரையை எழுதினார்.

இவ்வாறு வாஜ்பாயும், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் மன்னிப்பு கோருவது ஒன்றும் புதிதல்ல. இதே பாரதரத்னா வாஜ்பாய், 1942 வெள்ளையனே வெளி யேறு போராட்டத்தில் கலந்து கொண்ட தியாகி என பீலா விட்டு, அது வடிகட்டின பொய் என்றும், எதேச்சையாக நான் கலவரம் நடந்த பகுதியில் இருந்தேன்; என்னை கைது செய்து விட்டார்கள் என நீதிமன்றத்தில் கடிதம் கொடுத்ததை, பிரண்ட் லைன் ஆங்கில பத்திரிகை (பிப்ரவரி 7-20, 1998) வெளியிட்டு, முக மூடியை கிழித்து விட்டது. அதேபோல், காந்தி படுகொலைக்குப் பின் ஆர். எஸ்.எஸ். இயக்கம் ஒரு முக்கிய காரணம் என்ற அடிப்படையில் பிப்ரவரி 2, 1948-இல் தடை செய்யப்பட்டது. இனி அரசி யல் நடவடிக்கை எதிலும் கலந்து கொள்ள மாட்டோம்; எங்கள் அமைப்பு ஒரு கலாச்சார அமைப்பு என்று ஒரு சட்ட விதி உருவாக்கி, மத்திய அரசுக்கு கடிதம் கொடுத்ததற்குப் பின் தான், ஜூலை 11, 1949-இல் ஆர்.எஸ்.எஸ். மீதான தடை நீக்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...

இந்த ஆர்.எஸ்.எஸ்., பாஜக பரிவாரங் களால் சுதந்திர போராட்ட தியாகி என பொய்யாக வர்ணிக்கப்பட்டு, நாடாளுமன் றத்தின் மய்ய மண்டபத்தில், காந்தியின் படத்திற்கு எதிராகவே, அன்றைய வாஜ்பாய் அரசால் 2003-இல் படமாக வைக்கப் பட்டுள்ள சவார்க்காரின் வீரத்தையும் சற்று பார்ப்போம்.

இந்த சவார்க்கர், காந்தி கொலையில் தொடர்புண்டு என்று கைது செய்யப் பட்டவர். முறையான ஆவணங்கள் இல்லை என்பதால் விடுதலை ஆனவர்.

சவார்க்கர், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார் என்பதாக அந்தமான் சிறையில் இருந்தவர்; அவர் சிறையில் இருந்து வெளிவர பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்பு கடிதம் எழுதுகிறார். என்னை பிரிட்டிஷ் அரசு, இரக்கத்தோடும், கருணையோடும் விடுதலை செய்தால், இந்த அரசுக்கு வலி மையான ஒரு விசுவாசியாக இருப்பேன்; அரசு என்ன மாதிரி விரும்புகிறதோ, அந்த வகையில் நான் சேவை செய்ய சித்தமாக இருக்கிறேன். என்மீது கருணையை மேன்மை தங்கிய தங்களால் மட்டுமே வழங்க முடியும். ஆகவே, இந்த ஊதாரித்தனமான மகன் பிரிட்டிஷ் அரசான பெற்றோரிடம் செல்லாமல் எங்கு செல்ல முடியும்

இப்படி எழுதி, வெளியில் வந்து, எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் காலத்தை கழித்தவர்தான், இந்த சவார்க்கர். இவர் தான் நாடாளுமன்றத்தில் படமாக வைக்கப்பட் டுள்ளார். இதைவிட அவமானம் நாடாளு மன்றத்திற்கு எதுவாக இருக்க முடியும்?

இந்த குறிப்புகளை சதாத்ரு சென் எழுதி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலில், உள் துறை அமைச்சகத்தின் குறிப்புகளிலிருந்து அதன் ஆசிரியர் மேற்கோள் காட்டியுள்ளார்.

ஆனால், திமுக 1975-இல் நெருக்கடி நிலைப் பிரகடனத்தை கடுமையாக எதிர்த்த நிலையில், இந்திரா காந்தியின் சார்பில் இரு பிரதிநிதிகள், கலைஞரைச் சந்தித்து, நீங்கள் நெருக்கடி நிலையை ஆதரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; மாறாக எதிர்க்காமல் இருந்தால், திமுக ஆட்சி தொடரும் என தெரிவித்தபோது, கலைஞர், தான் பெரியார், அண்ணா ஆகியோரின் மாணவன், எக் காரணத்தைக் கொண்டும் நெருக்கடி நிலையை ஆதரிக்க முடியாது. ஜனநாயகத்திற்கு ஆதரவாகவே திமுக இருக்கும் என உறுதிபட தெரிவித்ததை, ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் (25.6.2015) மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதற்கு முற்றிலும் மாறாக, நெருக் கடி நிலை பற்றி மூச்சு விடாமல் இருந்த கட்சி புரட்சி நடிகராக இருந்து புரட்சித் தலைவரான எம்.ஜி.ஆரின் அதிமுக,

இப்படி, பிரிட்டிஷ் அரசிடம் கைது செய்யப்பட்டால், மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தவர்களும், நெருக்கடி நிலை சட்டத்தின்போது கைது செய்யப் பட்டு மன்னிப்பு கடிதம் எழுதி வெளியே வந்தவர்களுமான, பாஜக, ஆர்.எஸ்.எஸ். கம்பெனி, தற்போது நாற்பாதாம் ஆண்டு நிகழ்ச்சியை நடத்துகிறார்களாம்.

நெருக்கடி நிலைக் காலத்தில் அதை எதிர்த்து இறுதி வரை நின்றவர்கள் யார்? அதற்காக ஆட்சியை இழந்தவர்கள் யார்? அதை எதிர்க்காமல் கட்சியை நடத்தியவர்கள் யார்? கைது செய்யப் பட்டதும் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து வெளியே வந்து இன்றைக்கு ஜனநாயகக் காவலர்களாக காட்டிக் கொள்பவர்கள் யார்? இதற்கான வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்ய வேண்டியது நம் கடமை. இதை நாம் சரியாக செய்யாத தினால்தான், மன்னிப்பு கேட்டவர்கள் இன்றைக்கு ஜனநாயகக் காவலர் வேடம் போடுகிறார்கள். தங்களுக்கு சார்பான கருத்துக்களை மட்டுமே பேச வேண்டும்; மாறான கருத்துக்கள் விவாதம் மேற் கொண்டால், வெடி குண்டு வீசுவோம்; ஆட்களை தீர்த்துக் கட்டுவோம் என சொல்லும் ஒரு பாசிசக் கூட்டம், நெருக் கடி நிலையில் ஜனநாயகம் நெரிக்கப் பட்டது என நிகழ்ச்சி நடத்தும் கூத்து இந்தியாவைத் தவிர வேறு எங்கும் நடக்காது.
இன்றைய தலைமுறை, இந்த வரலாற்றை தெரிந்து கொண்டால்தான், எதிர்காலத்தில் ஜனநாயகத்திற்கு நெருக்கடி வந்தால் யார் அதற்கு போராடுவார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

 

- குடந்தை கருணா

தமிழ் ஓவியா said...

தொண்டறம் செய்வதற்கு காலம் கனிந்திருக்கிறது; மலர்ந்த முகத்தோடு குமரேசன் அவர்களை வரவேற்கிறோம்!

தொண்டறம் செய்வதற்கு காலம் கனிந்திருக்கிறது; மலர்ந்த முகத்தோடு குமரேசன் அவர்களை வரவேற்கிறோம்!

தந்தை பெரியார் கொள்கையை சுட்டிக்காட்டி தமிழர் தலைவர் சிறப்புரைபகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன் பாராட்டுவிழாவில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர், பகுத்தறிவாளர் கழகப் புரவலர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

மிகுந்த எழுச்சியோடு ஒரு வழியனுப்பு, நன்றி அறிவிப்பு எல்லாவற்றையும் கடந்த ஒரு எழில் மிகுந்த உணர்ச்சிபூர்வமான, அறிவுபூர்வமான எல்லாம் கலந்த ஒரு நிகழ்ச்சி என்று நாம் பெருமைப்படத்தக்க ஒரு நிகழ்ச்சியாக நடந்துகொண்டிருக்கக் கூடிய அருமைத் தோழர் குமரேசன் அவர்களுடைய பணி நிறைவு என்பதையொட்டி, இங்கே வருகைபுரிந்து அவருடைய சிறப்புகளையெல்லாம்பற்றிய மலரையும் வெளியிட்டு, தந்தை பெரியாருக்கும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கும் உள்ள நீண்டகால தொடர்புபற்றியும் சிறப்பாக எடுத்து வைத்த என்றென்றைக்கும் எங்கள் நன்றிக்கும், பாராட்டுக்கும் உரிய மேனாள் செயல் தலைவர் அன்பிற்குரிய அய்யா நமச்சிவாயம் அவர்களே, இந்த நிகழ்ச்சியிலே எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்று அந்த காலத்திலே சொல்வார்கள். இறைவன் என்பதற்கு கடவுள் என்று பொருள் கொள்ளுகிற வர்களும் உண்டு.

தலைவன் என்று பொருள் கொள் ளுகிறவர்களும் உண்டு. எப்படிப்பட்ட நம்பிக்கைகள் உள்ளவர்கள் எப்படி சொல்லிக்கொண்டாலும், வணக்கத்துக்கும், பின்பற்றுதலுக்கும் உரியவர் நமக்கு போதித்த ஆசிரியர் என்ற அந்த சிறப்பான வகையிலே நன்றி மறவாது அறிவியல் ஆசிரியர் அவருக்கு சொல்லிக் கொடுத்த ஆசிரியரை முதன்மைப்படுத்தி, இங்கே அழைத்து சிறப்பு செய்யப்படும் மேனாள் அறிவியல் ஆசிரியரான நாடார் சரசுவதி மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் பாலு அவர்களே, அதேபோன்று வேளாண் துறையிலே அவர்களுக்கு பெரிய வாய்ப்பு அளித்து சிறப்பாகச் செய்த, வேளாண்மைத்துறையின் மேனாள் கூடுதல் இயக்குநர் கே.எம்.இராமானுஜம் அவர்களே, முதன்முதலில் தனக்கு வேலையைப் பயிற்றுவித்தவர் என்ற பெருமையோடும், நன்றியுணர்வோடும் அழைத்துப் பாராட்டப்பட்டிருக்கிற ஹுபர்ட் ராபின்சன் அவர்களே, அதேபோல இந்த நிகழ்ச்சியிலே சிறப்பான வகையில் முதல்முறையாக அவர்களுக்கு பெருமை சேர்த்துக்கொண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அமைப்பினிலே தலைவராக இருந்து, எல் லோருடைய பாராட்டுதலும், மகிழ்ச்சிக்குரியதாகவும், எவரிடத்திலும் இன்முகத்தோடு எதையும் பேசக்கூடிய தான ஒரு சந்திப்பை முதல்முறை அல்ல, இரண்டாம் முறையாக சந்திக்கின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.

தமிழ் ஓவியா said...


சிறப்பான பணியில் இருக்கக்கூடியவரான கே.வி. ஆச்சார்யா அவர்களே, ஆச்சார்யா என்றாலே வணக் கத்துக்குரிய குரு என்றுதான் வடமொழியிலே பெயர். அந்த பெயரே அவருக்கு அமைந்திருக்கிறது இயல்பாக. அதேபோல இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் உதவி பொது மேலாளர், மேனாள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலர் சங்க துணைத்தலைவர் டாக்டர் ஆர்.சங்கர நாராயணன் அவர்களே, குமரேசன் எப்போதும் அவருடைய தொழிற்சங்கத்திலே நிரம்ப ஈடுபாடு கொண்டவர். எங்களுக்கெல்லாம், அவரோடு நெருங்கிப் பழகியவர்களுக்கெல்லாம் தெரியும். தொலைப்பேசியிலே திடீரென்று அழைத்து ஏதாவது செய்தியை விசாரிப் பேன். அப்போது அவர் பேசிக்கொண்டே சொல்வார் இன்னும் இரண்டு நாள்களில் வந்துவிடுவேன். இப்போது நாகபுரியில் இருக்கிறேன் என்று சொல்லுவார். திடீரென்று கவுகாத்தியிலே இருக்கிறேன் என்று சொல்லுவார். அடுத்த நாள் கேட்டால், நான் விஜய வாடாவில் இருக்கிறேன், வந்துவிடுவேன் என்று சொல் வார். நான்தான் அதிகம் அலைகின்றேன் என்று இதுவரைக்கும் தவறாக நினைத்துக்கொண்டிருந்தேன். அதைவிட அதிகமான அலைச்சலும், நிரம்ப மகிழ்ச்சி யாகவும் தொழிற்சங்கத்தில் அவருடைய வேலையாக இருந்துள்ளது என்று சொன்னால், அதற்கு முழுக்க முழுக்க காரணமாக இருக்கக்கூடிய கோபிநாத் ராவ் அவர்களே, அவர் சொன்னார், தொழிற்சங்கத்தில் இருப் பவர்கள் வருத்தத்தோடு வருவார்கள், கவலையோடு வருவார்கள், அவர்களை திருப்பி அனுப்பும்போது மகிழ்ச்சியோடு அனுப்பவேண்டும் என்று சொல்வார் என்று சொன்னார். நிரம்ப புதுமையாக இருக்கிறது. எனக்குத் தெரிந்தவரையில் மகிழ்ச்சியோடு தொழிற்சங்கத்தலைவர்கள் போய் இருக்கிறார்கள். வருத்தத்தோடு திரும்பி இருக்கிறார்கள்.

இந்த தொழிற் சங்கம் நிரம்ப வித்தியாசமான தொழிற்சங்கமாக இருக்கக்கூடிய அளவிலே, ஒரு எடுத்துக்காட்டான தொழிற்சங்கமாக சிறப்பாக இருக்கின்ற அளவிலே இது ஒரு கூட்டுக் குடும்பமாக நடந்து வந்திருக்கிறது. அதுவும் பழைய காலத்துக் கூட்டுக்குடும்பம், அப்படிப்பட்ட எழில் மிகுந்த நிலையில் இருக்கக்கூடிய கோபிநாத் அவர்களே, அதேபோல அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்று சொல்லக்கூடிய அளவிலே நாம் ஒரு நண்பரை சந்தித்தோமானால், அவர் ஆனந்த குமார் அவர்கள் எல்லோரிடத்திலும் கனிந்த அன்போடு இருக்கக் கூடியவர்கள், அதேபோல அதற்கு சமமாக நிரம்ப அன்பாக அவர் தமிழ் மண்ணுக்கு அப்பாற் பட்டவராக இருந்தாலும், தமிழ் மண்ணுக்கே உரியதாக இருக்கக்கூடிய அளவுக்கு ஜெ.டி.சர்மா அவர்கள் நம்மிலே ஒருவராக இருக்கக்கூடியவர். இவ்வளவு பெரிய நிலையிலே இத்தனை பேரின் அன்பு.

சாதாரணமாக வரவேற்பதற்கு நிறைய பேர் வரு வார்கள். வழியனுப்புவதற்கு இவ்வளவு பேர் வருவார் களா என்று சொல்ல முடியாது. அப்படிப்பட்ட நிலை யிலே இங்கு அவருடைய தொண்டு எப்படிப்பட்டது? அவருடைய பணி எப்படிப்பட்டது என்பதில் ஈர்க்கக்கூடிய அளவிலே, ஒரு பெரிய அரசியல் அமைப் புகளில் எல்லாம்கூட ஆட்களைக் கூட்டிக்கொண்டு வருகிறார்கள். ஆனால், இங்கு பார்த்தால் ஒரு குடும்பப் பாசத்தோடு, பெரிய மகிழ்ச்சியோடு இருக்கும்போது, அவர் என்னை அழைக்கும் போது தலைவர் என் றெல்லாம் கூறினாலும், நமக்கு எல்லோருக்கும் தலைவர் தந்தை பெரியார் என்று நினைக்கிறவன், நான் தொண்டனுக்குத் தொண்டன். தோழனுக்குத் தோழன். அந்த முறையில் இருக்கும்போது அவர் எனக்கு சகோ தரர் அவ்வளவுதான்.

அப்படிப்பட்ட ஒருவர் இந்த வாய்ப்பு சாதாரணமானதல்ல. அய்யா தந்தை பெரியார் அவர்கள் சொல்வார்கள் தமிழர்களிடையே நன்றி காட்டுவது, அய்யா நமச்சிவாயம் அவர்கள் சொல் லும்போது சொன்னார்கள். நிரம்ப புதுமையாக இருக் கிறது, ஆசிரியரை அழைத்து, அவருக்கு சொல்லிக் கொடுத்த ஆசிரியர், அவருக்கு வேலை சொல்லிக் கொடுத்தவர்கள், தொழிற்சங்கத்திலே வழிகாட்டக் கூடியவர்கள் இவர்களையெல்லாம் அழைத்து அவர்களுக்கு நன்றி காட்டக்கூடிய ஒரு நன்றிகாட்டுத் திருவிழா ‘Thanks Giving Day வழி அனுப்புவிழா என்பதைக்கூட ‘Get Together’ என்பதைக்கூட ‘Thanks Giving Day’ என்று நன்றி சொல்லக்கூடிய விழா. நன்றி என்று சொல்லும்போது, நிரம்ப வியப்பாக ஒன்றைச் சொன்னார். தந்தை பெரியார் தத்துவத்திலே ஊறியவர் நம்முடைய அருமைத் தோழர் குமரேசன் அவர்கள் மாநிலப் பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச்செயலாளர் கூடுதலாக அந்தப்பணியைச் செய்கிறார்.

தமிழ் ஓவியா said...

1933இல், எங்களைப் போன்றவர்கள் பிறக்காத காலத்தில் குடிஅரசு ஏட்டில் தந்தை பெரியார் எழுதிய தலையங்கத்தில் அவர்கள் தெளிவாகச் சொல்லுகிறார் கள். நன்றி என்பது உதவி செய்பவர்கள் எதிர்பார்ப்பது அல்ல. பயன் அடைந்தவர்கள் காட்ட வேண்டிய பண்பு. உதவி செய்தவர்கள் எதிர்பார்க்கக் கூடாது. பயன் அடைந்தவர்கள் காட்ட வேண்டிய பண்பு. உதவி செய்ப வர்கள் எதிர்பார்த்தால், அதை சிறுமைக்குணம் என்று சொல்வேன் என்று சொல்கிறார். எத்தனையோ பேருக்கு உதவி செய்த உடன், நாம் உதவி செய்தோமே, அவர்கள் நன்றி சொல்லவில்லையே என்று எதிர்பார்க்கக் கூடாது. எதிர்பார்த்தால் நமக்கு உதவி செய்யும் மனப்பான்மையே வராது. மனித இயல்பு அது. பல பேருக்கு தந்தை பெரியார் அவர்கள் சொல்வார்கள். பிரத்யட்ச அனுப வத்தில் நடைமுறையில் இந்த காரியம் அவருக்கு சொன் னேனே அது நடந்ததா? என்று கேட்பார். முடித் தாயிற்று அய்யா, அவருக்கு இந்நேரம் கிடைத்திருக்குமே என்று சொன்னால், ஆமாமாம், கிடைக்கவில்லை என்றால்தான் மறுபடியும் என்னிடம் வந்திருப்பாரே அவர், கிடைத்திருந்தால் வந்திருக்கமாட்டார். வரவில்லை என்றால் கிடைத்துவிட்டது என்றுதான் அர்த்தம் என்று சொல்வார்கள். அது இயல்பு. உலகியல். ஆனால், அந்த சூழ்நிலையிலே மிகப் பெரிய அளவுக்கு செய்திருக்கிறார்கள் என்றால், சாதாரணமானதல்ல. எனவே, அவருடைய தொண்டு நிரம்ப சிறப்பானது. இதில் தமிழில் சொல்லும்போது பணி நிறைவு என்று போட்டார்கள். சின்ன திருத்தம். இந்தியன் வங்கியி னுடைய பணிநிறைவு. அவர் பணி இன்னும் நிறைய, அந்தப்பணியை இப்போது நாங்கள் வாங்கிக் கொண் டிருக்கிறோம், நாங்கள் பெற்றிருக்கிறோம். உங்களுடைய செலவு, எங்களுடைய வரவு. அதைத்தான் அய்யா நமச்சிவாயம் அவர்கள் அழகாக சொன்னார்.

I am a student of the economics and I would have a crucial age which was one of the I have read, many theories might have come after sixty years. The judicial theory of economics, there is an acclimatory of proof, One man’s Expenditure is Another man’s Income. we all knew this. So, your expenditure-ðEG¬ø¾, your completion job, I don’t call it as retirement, because I never say retirement. Because retirement is very different.

தமிழ் ஓவியா said...

ஏனென்றால் வாழ்க்கையில் எப்பவும் ரிடையர்மன்ட் தேவைஇல்லை. பணி செய்வதுதான் நிறைவடையலாம். completition the service. வாழ்க்கையில் கடைசி வரைக்கும் உழைப்பது இருக்கிறது பாருங்கள் அதில் ரிடையர் மென்ட்டுக்கு அடையாளமே இல்லை. ரிடையர்மென்ட் என்றால் எல்லாம் சோர்ந்துபோய், ஒன்றுமே இல்லாமல் அப்படியே இருக்கிறமாதிரிதான். பணி நிறைவு அப்படி என்றால், நிறைவான பணி முடித்திருக்கிறார். அந்த வங்கிப் பணிகளுக்காக குமரேசனைப் பாராட்டி, நன்றி தெரிவித்து, வழியனுப்புவதற்காக வந்திருக்கிறீர்கள். நான் இங்கே வந்திருப்பது அவரை வரவேற்பதற்காக வந்திருக்கிறேன். பொதுப்பணிக்கு வாருங்கள். உங்களுக்கு என்று சில இடங்களை காலியாக வைத்திருக்கிறோம். எதிர்பார்த்தே வைத்திருக்கிறோம்.

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

இருக்கின்ற அத்தனைபேரையும் உயிரோடு உள்ள வர்களாக திருவள்ளுவர் ஒத்துக்கொள்ளமாட்டேன் என்கிறார். இல்லறம் என்பது ஒரு பகுதி, அந்த இல்லறத்தையும் தாண்டி தந்தை பெரியார் சொன்னார் துறவறம் அல்ல, தொண்டறம் என்று சொன்னார். எனவே, அவர் தொண் டறத்தை செய்வதற்கு காலம் கனிந்திருக்கிறது. இரு கைகளை நீட்டி மலர்ந்த முகத்தோடு நாங்கள் வர வேற்கிறோம். ஆசிரியர் பாலு அற்புதமாக ஒரு கவிதையை எழுதியிருக்கிறார்.

“Bud as blossom I’m happy to see, My Bud has come as Blossom”

அது மட்டுமல்ல, குமரேசன் மொட்டாக இருந்து பூத்தார், காய்த்தது, கனிந்தது. அந்த கனியின் சுவையை நாம் எல்லாம் பகிர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்குத்தான் இந்த அரிய விழாவாகும். ஆகவே, சிறப்பான நிகழ்ச்சி.

Religion may divide, Caste may divide, Party may divide, Positions may divide, But Humanism Unites. we welcome to humanism service. Thanking you.

மதம், ஜாதி, கட்சி, பதவிகள் பிரிக்கலாம்; ஆனால், மனிதநேயம் இணைக்கிறது. அந்த மனிதநேயப் பணிக்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம். நன்றி, வணக்கம்! _ இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேசுகையில் குறிப்பிட்டார்.

கலந்துகொண்டவர்கள்

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், பெரியார் நூலக வாசகர் வட்ட செயலாளர் சத்தியநாராயணன், பொருளாளர் மனோகரன், துணைச் செயலாளர் சேரன், வட சென்னை மாவட்டத் தலைவர் சு.குமாரதேவன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், தொழிலாளர் அணி இணைச் செயலாளர் செல்வராசு, பெரியார் களம் இறைவி, சி.வெற்றிச்செல்வி, வழக்குரைஞர்கள் ந.விவேகானந்தன், சென்னியப்பன், பேராசிரியர் இசையமுது, மருத்துவர் தேனருவி உள்பட ஏராளமானவர்கள் விழாவில் பங்கேற்றனர். விழா நிகழ்ச்சிகளை மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னரெசு பெரியார் இணைப்புரைகளுடன் தொகுத்தளித்தார்.Read more: http://www.viduthalai.in/page-4/104039.html#ixzz3eHajc3WO

தமிழ் ஓவியா said...

அறிவு ஆசான் தந்தை பெரியாருக்கு யுனெஸ்கோ விருது வழங்கிய நாள்- இந்நாள்!

1970 ஜூன் 27 நினைவிருக்கிறதா? அன்று ஒரு பொன்னாள் - அறிவு மலர்ந்து மணம் வீசிய நாள் -அன்றுதான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களுக்கு அய்.நா.வின் யுனஸ்கோ தேடி வந்து விருது அளித்து பெருமை என்னும் விருதினை அணி கலனாக பூண்டநாள்!
பெரியார் - புதிய உலகின் தொலை நோக்காளர்
தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ்
சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை
அறியாமை, மூடநம்பிக்கை,
பொருளற்ற பழக்க வழக்கங்கள் மற்றும்
கீழான நடவடிக்கைகளுக்கு கடும் எதிரி  என்ற விருது வழங்கப்பட்ட நாள்! மத்திய அமைச்சர் திரிகுணசென் தலைமையில், தமிழக முதல்வர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களால் அறிவு ஆசான் பெரியாரின் திருக்கரங்களில் அந்த விருது வழங்கப்பட்டது.

குறிப்பு: இத்தகு பெருமைமிக்க பாராட்டுரைகளை ஆய்வு செய்து கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கடந்த ஆண்டு நான்கு நாள்கள் கட்டணத்துடன் கூடிய ஆய்வு சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இவ்வுரைகள் தொகுக்கப்பட்டு சிறந்த ஆய்வு நூலாக விரைவில் வெளிவர உள்ளது.

தமிழ் ஓவியா said...

பக்தி படுத்தும் பாட்டைப் பாரீர்!வினோத வழிபாடாம்:
அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணமாம்!
வத்தலக்குண்டு, ஜூன். 29 திண் டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பட்டிவீரன்பட்டி அண்ணா நகரில் கருப்பண்ணசாமி பாண்டி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சிவனின் உருவமாக அரச மரத்தையும், அம்மனின் உருவமாக வேப்பமரத்தையும் கருதி இரு மரங் களுக்கும் கிராம மக்கள் திருமணம் நடத்தி வினோத வழிபாடு செய்து வருகிறார்கள்.

உலக அமைதி வேண்டி இந்த திருமணம் ஆண்டுதோறும் நடை பெறுவதாக கிராம மக்கள் அய்தீகமாக கருதுகின்றனர். இதே போல இந்த ஆண்டும் மணமக்கள் போல அரச மரத்தையும், வேப்பமரத்தையும் ஜோடித்து திருமணம் செய்து வைக் கப்பட்டது.

இதற்காக மணமேடை அமைத்து யாகம் வளர்த்து கோவில் குருக்கள் மூலம் திருமணம் நடத்தி வைக்கப்பட் டது. தொடர்ந்து ஊர் கிராம மக்கள் அட்சதை தூவி வாழ்த்தினர். இந்த நிகழ்ச்சியில் வத்தலக்குண்டு, பட்டி வீரன் பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்னர்.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், இயற்கையான மரங்களை தெய்வங்களாக வழிபட்டு அவற்றுக்கு திருமணம் செய்து வைத்தால் ஊரில் அமைதி நிலவும் என்பது எங்களது அய்தீகம். அதனால் ஊரில் அமைதி நிலவ மரங்களுக்கு திருமணம் நடத் தினோம். கடந்த 33 ஆண்டுகளாக இது போன்று செய்து வருகின்றோம் என்றனர்.Read more: http://www.viduthalai.in/e-paper/104167.html#ixzz3eTLCnh3g

தமிழ் ஓவியா said...

பூசாரி வீட்டை சூறையாடிய காட்டு யானைகள்
வால்பாறை, ஜூன் 29 வால் பாறை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கி வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் னால் வில்லோனி எஸ்டேட் பகுதியில் முகாமிட்டிருந்த 2 குட்டி உள்பட 7 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் லோயர் பாரளை எஸ்டேட் பகுதி குடியிருப்புக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தி விட்டு புதுத்தோட்டம் வனப்பகுதியில் முகாமிட்டிருந்தது.

 

இந்த யானைகள் கூட்டம் நேற்று இரவு அங்கிருந்து வால்பாறை பொள்ளாச்சி மெயின்ரோட்டை கடந்து புதுத்தோட்டம் பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்து பூசாரி மணி என்பவரின் வீட்டின் ஜன்னலை உடைத்தது.

வீட்டுக்குள் துதிக்கையை உள்ளே விட்டு சாப்பிடுவதற்கு அரிசி கிடைக்குமா? என்று தேடியது. வீட்டி லிருந்த பொருட்கள் முழுவதையும் உடைத்து சேதப்படுத்தியது. தகவல றிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் எஸ்டேட் பகுதி மக்களுடன் இணைந்து யானை களை விரட்டினர்.

தமிழ் ஓவியா said...

அம்மன் கோவிலில் தீ விபத்து: பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்
காஞ்சீபுரம், ஜூன் 29 காஞ்சீபுரம் ராஜாஜி மார்க்கெட் பின்வாயில் பகுதி யில் சிறீதண்டு மாரியம்மன் கோவில் உள்ளது.
புகழ் பெற்ற இக்கோவிலுக்கு பொதுமக்கள் தினமும் அதிகளவில் வந்து செல்வர். இந்நிலையில் நேற்று மதியம் கோவிலில் அமைக்கப்பட் டுள்ள இன்வெர்டர்கள் திடீரென வெடித்தது. இதனால் தீ மளமளவென பரவ தொடங்கியது.

 

இதை பார்த்து கோவில் அருகில் இருந்தவர்கள், பக்தர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். விபத்து குறித்து காஞ்சீபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இது குறித்து விஷ்ணு காஞ்சி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...

மந்திரச்சடங்குகளுக்காக தம்பியின் ரத்தத்தையே உறிஞ்சி எடுத்த  மந்திரவாதி கைது

புர்த்வான், ஜூன் 29- வளர்ச்சி யடைந்த நவீன சமூகம் என்று மனித சமூகம் தன்னை கருதிக் கொள்ளும் இந்தக் காலத்திலும் கூட, மந்திரச் சடங்குகளுக்காக தனது உடன்பிறந்த சகோதரரின் ரத்தத்தையே உறிஞ்சி எடுத்த கொடூரம் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்துள்ளது. காஞ்சன் நகர் கிராமத்தில் மந்திர தந்திர வேலைகளில் ஈடுபட்டு வருபவர் ஷூபஜித்(40).

கடந்த சில வாரங்களாக இவரது தம்பியான ஷாமிக்கை கிராமத்தில் எங்கும் காணமுடியாததால், சந்தேகமடைந்த கிராம மக்கள் அவரது வீட்டை மறைமுகமாக சோதனையிட்டனர். அப்போது, அவரது தம்பி ஷாமிக், உடல் நலம் மிகவும் மோசமான நிலையில் வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித் தனர்.  இதுகுறித்து காவல் நிலை யத்தில் புகாரளித்தனர்.

உடனடியாக நடவடிக் கையில் இறங்கிய காவல் துறையினர் ஷூபஜித்தின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கடந்த ஒன்றரை மாதங்களாக ஷாமிக்கை அடைத்து வைத்து தனது மந்திரச் சடங்கு களுக்காக  அவரிடமிருந்து ரத்தத்தை உறிஞ்சி எடுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து ஷூபஜித்தைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...

ஆட்சியாளர்கள் வரலாற்று பாடப் புத்தகங்களை எழுதக் கூடாது : அப்துல் கலாம்புதுடில்லி ஜூன் 29_ ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள் வரலாற்றுப் பாடப் புத்தகங்களை எழுதக் கூடாது என்று குடியரசு முன்னாள் தலை வர் அப்துல் கலாம் கூறி யுள்ளார்.

ஒளிமயமான எதிர் காலத்துக்கு அறிவியல் வழிகள்' என்ற நூலை அப்துல் கலாம் எழுதியுள் ளார். அதில், விண்வெளி அறிவியல், ரோபாட் டிக்ஸ், மருத்துவம், புதைப் படிமவியல் ஆகிய துறை களில் உள்ள இளைஞர் களுக்கு அறிவுரை வழங் கும் வகையில் இந்தப் புத் தகம் எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில், டில்லியில் அவர், ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

பெரும்பாலான வரலாற் றுப் பாடப் புத்தகங்கள் ஆட்சியாளர்களால் எழுதப்பட்டவை. அந்தப் புத்தகங்களை நேர்மை யுடன் அணுகி, ஆய்வு செய்ய வேண்டும். வர லாற்று ரீதியாக உண்மை யில் என்ன நடந்தது என் பதையும் கண்டறிய வேண்டும்.

புத்தகங்கள் மறு ஆய்வு செய்யப்பட்டு, முறையாக எழுதப்பட வேண்டும். அந்தப் புத்த கங்களை ஆட்சியதிகாரத் தில் இருப்பவர்கள் எழுதக் கூடாது. மாறாக, கல்வித் துறையில் சிறந்து விளங்கு பவர்கள் எழுத வேண்டும் என்றார்.

தமிழ் ஓவியா said...

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை

வெளிநாடுகளில் இந்திய முதலாளிகள் பதுக்கி வைத்துள்ள தொகை அசாதாரணமானது; குறிப்பாக ஸ்விட்சர்லாந்து நாட்டு வங்கிகளில்தான் பெருந் தொகை பதுங்கிக் கிடக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கி, கறுப்புப் பணத்தைக் கொண்டு வந்தே தீருவோம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வோம் என்று அடேயப்பா மோடியும் அவரைச்சார்ந்த விற்பன்னப் புலிகளும் கொட்டி முழங்கிய சமாச்சாரத்தைக் கேட்டு கொட்டாவி விட்டுக் காத்துக் கொண்டு இருந்தனர் - இந்திய மக்களும், இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கும் கீழ் இருக்கும் மக்கள் 30 சதவிகிதம் மக்களும். இரவு உணவுக்கு வழியின்றி வயிற்றில் ஈரத் துணியைப் போட்டுக் கொண்டு புரண்டு புரண்டு படுக்கும் மக்கள் தொகை 19 கோடி.

நாள் ஒன்றுக்கு வெறும் 20 ரூபாய் வருமானம் உடையோர் 77 விழுக்காடு  என்று புள்ளி விவரங்களை அள்ளி விடுவதும் இந்திய அரசுதான்.
இந்தச் சூழலில் வெளிநாட்டு வங்கிகளில் பதுங்கிக் கிடக்கும் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவோம் கொண்டு வருவோம் என்று சொல்லிக் கொண்டுதான் வருகிறார்களே தவிர நடைமுறையில் சுழியம்தான் இவ்வளவுக் கால அவகாசம் கொடுத்தால் பண முதலைகள் வாளா இருக்குமா?
அந்தக் கறுப்புப் பணத்தை அந்த வங்கிகளிலிருந்து எடுத்து வேறு ஏற்பாடுகளைச்  செய்துவிட மாட் டார்களா?
தேர்தலுக்கு முன்பு மோடி பேசிய பேச்சை இப்பொழுது மாற்றிப் பேச ஆரம்பித்து விட்டனர்.

'வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள அனைத்து கருப்புப் பணத்தையும் மீட்டு நாட்டின் ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம்' என்று மோடி(போபாலில் 18 ஏப்ரல் 2014-அன்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது) பேசியது குறித்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் அளித்துள்ளார்.

மாநிலங்களவையில் அருண் ஜேட்லி இது குறித்து விளக்கம் அளிக்கும்போது, "வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் பற்றிய உத்தேசங் களின் அடிப்படையில் ஓர் 'எடுத்துக்காட்டுக்கு' கூறியதே அந்த ரூ.15 லட்சம் விவகாரம்" என்றார். நாடாளுமன்ற தேர்தலின்போது கருப்புப் பணத்தை ஒழிப்பது பற்றி தனது பிரச்சாரங்களில் மோடி கூறிய போது, கருப்புப் பணம் முழுதையும் ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு கொண்டு வந்து ஒவ்வொரு இந்தியரின் கணக்கிலும் ரூ.15 லட்சம் சேர்ப்போம் என்று கூறியது பற்றி மாநிலங்களவையில்  கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த ஜேட்லி, "வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தின் அளவு, அதைப் பற்றிய உத்தேசக் கணிப்புகளின் அடிப்படையில் அந்தத் தொகையை ஏற்றுக் கொண்டோமேயானால், ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஏற்படும் பயன் ரூ.15 லட்சமாக இருக்கும் என்ற அடிப்படையில் எடுத்துக் காட்டு கூற்றாக மட்டுமே அது கூறப்பட்டது.

மேற்கூறிய இந்த அர்த்தத்தில்தான் பலரும் அதனைப் பயன்படுத்தினர். எனவே இதனை இந்தப் பொருளில் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அருண் ஜேட்லி. இது எவ்வளவுப் பெரிய உண்மைக்கு மாறானது என்பது நாட்டு மக்களுக்கு மிக நன்றாகவே தெரியும். பாஷ்ய கர்த்தாக்கள் இப்படித் தான் பேசுவார்கள்.
இவர்கள் வியாக்கியானம் மக்களைத் திருப்திப் படுத்தாத நிலையில், பிஜேபியின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷா வேறு வழியின்றி ஓருண்மையைப் போட்டு உடைத்து விட்டார்.

மோடி பேசியது உண்மைதான்; அது தேர்தல் நேரத்தில் அரசியலுக்காகச் சொல்லப்பட்டது என்று சொன்னாரே பார்க்கலாம். மக்களின் மறதிதான் இத்தகைய அரசியல்வாதிகளுக்கு மூலதனமாகும்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது நிலத்தைக் கையகப்படுத்தும் மசோதாமீது எப்படியெல்லாம் இந்த பிஜேபி நாடாளுமன்ற உறுப் பினர்கள் குதியாட்டம் போட்டார்கள்; இப்பொழுது இந்தப் பூனையும் இந்தப் பாலைக் குடிக்குமா என்கிற பாணியில் பேச ஆரம்பித்து விட்டார்கள். மக்கள் பிரச் சினையைத் திசை திருப்பிட யோகா போன்றவற்றைக் கொண்டு வந்து திணிக்கிறார்கள். கழுதை தேய்ந்து  கட்டெறும்பு ஆன கதைதான்.

இரயில்வே போன்ற பெரும் அரசுத் துறைகளே கார்ப்பரேட்டுகளின் கைகளுக்குத்தான் போகப் போகின்றன. உண்மையிலேயே ஆட்சி நடத்துப வர்களும் அவர்களே!

தமிழ் ஓவியா said...

முதலில்...

மனிதத் தர்மத்தை அடிப்படையாக வைத்து மனிதச் சமுதாயத்திற்கு யாராவது தொண்டாற்ற வேண்டு மானால், முதலில் செய்யவேண்டியது பகுத்தறிவுப்படி மக்களை நடக்கச் செய்வதும், சிந்திக்கச் செய்வதுமே யாகும்.
(விடுதலை, 25.7.1968)

தமிழ் ஓவியா said...

செத்தமொழி சமஸ்கிருதத்திற்கு மோடி அரசு தரும் முக்கியத்துவத்தை பாரீர்

குடந்தை கருணா


ஆண்டு தோறும் உலக அளவில் சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட ஒருவருக்கு 20,000 அமெரிக்க டாலர் பரிசாக வழங் கிடவும், வெளியுறவு அமைச்சகத்தில் சமஸ்கிருதத்திற்கு என தனியாக ஒரு இணை செயலாளர் நியமனம் செய்வதாகவும், பாங்காக் நகரில் நடந்த உலக சமஸ்கிருத மாநாட்டில் இந்திய வெளியுறவுத் துறை அமைச் சர் சுஸ்மா சுவராஜ் அறிவித்தார்.

மோடி அமைச்சரவை பதவி ஏற்கும்போது, சுஸ்மா சுவராஜ் சமஸ்கிருத மொழியில் உறுதி மொழி எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அம்மையார்தான், பகவத் கீதை தேசிய நூல் என அரசு அறி விக்க இருக்கிறது என்பதை டில்லி யில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசியவர். தற்போது, அரசால் குற்ற வாளி என அறிவிக்கப்பட்ட அய்.பி. எல். சூதாட்ட நாயகன் லலித் மோடிக்கு மனிதாபிமான அடிப் படையில் விசா வழங்கியதாகக் கூறு வதும்  இந்த சுஸ்மா சுவராஜ் தான்.

தமிழ் ஓவியா said...

அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளின்
சத்துக்களும், மருத்துவ குணங்களும்
தக்காளி: வைட்டமின், ஏ, பி, சி மற்றும் இரும்புச்சத்துக்கள் உள்ளன. உடல் உறுதி, ரத்தவிருத்திக்கு நல்லது.

கத்தரிக்காய்: வைட்டமின் பி, சி, பாஸ்பரஸ், போலிக் ஆசிட் உள்ளன. ரத்தத்தை சுத்திகரிக்கும் இயல்புடையது.

புடலங்காய்: வைட்டமின் ஏ, பி, இரும்பு, தாமிரம், கால்சியம் சத்துக்கள் உள்ளன. பீன்ஸ்: புரதம், கால்சியம், இரும்பு, வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் உள்ளன. எலும்பு வலுவடைய உதவுகிறது.

வெண்டைக்காய்: மூளை  வளர்ச்சிக்கு உதவும், குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். போலிக் ஆசிட், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துகள் உள்ளன. அவரைக்காய்: நார், புரதச்சத்துக்கள் உள்ளன. மலச்சிக்கலை நீக்கும்.

முருங்கைக்காய்: வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் உள்ளன. ஆண்களுக்கு  ஆண்மையை அதிகரிக்க உதவும், பெண்களுக்கு உதிரப்போக்கை கட்டுப்படுத்தும்.

வெங்காயம்: தினமும் சாப்பாட்டில் சின்ன வெங்காயம் சேர்த்தால் கொழுப்பு கரையும். கால்சியம், இரும்புச்சத்துக்கள் உள்ளன.

சுண்டைக்காய்: வைட்டமின் ஏ, புரதம், இரும்புச்சத்துக்கள் உள்ளன. எலும்புகளுக்கு  வலு சேர்க்கவும், ரத்தசோகை வராமல் தடுக்கவும் உதவும்.

கருணைக்கிழங்கு:  கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி சத்துக்கள் உள்ளன. இதை சாப்பிட்டால், உடல்  வளர்ச்சிக்கு நல்லது. மூல நோய் வராமல் தடுக்கவும்,  கட்டுப்படுத்தவும் செய்கிறது.

வாழைத்தண்டு: பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம் சத்துக்கள், வைட்டமின் பி, சி ஆகியவை உள்ளன. சிறுநீர் பாதையில் கல் அடைப்பை கரைக்க உதவும்.

வாழைப்பூ: கால்சியம், பாஸ்பரஸ், புரதம், நார், இரும்புச்சத்துகள் உள்ளன. வைட்டமின் பி, சி உள்ளன. மலச்சிக்கலை போக்க உதவும்.

பீட்ரூட்: சோடியம், துத்தநாகம், கால்சியம், பொட்டாசியம் சத்துக்கள் உள்ளன. உடலை வலுப்படுத்தும்.

உருளைக்கிழங்கு: மாவுச்சத்து அதிகம் உள்ளது. வைட்டமின் ஏ, சி மற்றும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை உள்ளன.

பாகற்காய்: வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், கால்சிய சத்துக்கள் உள்ளன. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.

காரட்: வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. பார்வை கோளாறை கட்டுப்படுத்தும். ரத்த விருத்தி தரும்.

மரவள்ளிக்கிழங்கு: உடலுக்கு குளிர்ச்சி தரும். பனங்கிழங்கு: புரதச்சத்து அதிகமுடையது. மலச்சிக்கலை போக்கி பசியை அதிகரிக்கும்.

இப்படி பலப்பல சத்துக்கள் காய்கறிகளில் குவிந்து கிடக்கின்றன. எனவே, கேரளா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில், தமிழகத்தில் காரைக்குடி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் வீட்டு உரிமையாளர்கள் மொட்டை மாடியில் தோட்டம் அமைத்து காய்கறிகளை வளர்த்து வருகின்றனர். இயற்கை முறையில், பூச்சிக்கொல்லி மருந்து அதிகமின்றி உருவாகும் இந்த காய்கறிகள் உடலுக்கும் நல்லது.

தமிழ் ஓவியா said...

அனைவருக்கும் உகந்த வெங்காயம்...!

ஒரு கடி வெங்காயத்தில் ஒரு பிடி பழங்கஞ்சி குடிக்கிற ஏழ்மை. பர்கரிலும் வெங்காயம் சுவைக்கிற வளமை... இப்படி வெங்காயம் ஒரு பொதுமை காட்டி நிற்கிறது. இது ஒரு பழமையான மூலிகைப்பயிர்.  6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் ருசித்தது. இதன் அதிக பயன்பாட்டை அரேபியர்களிடம் பார்க்கலாம்.

வெங்காய காரத்திற்கு அலைல் புரோப்பைல் டை சல்பைடு வேதிப்பொருளே காரணமாம். இதுவே நெடி நிரப்பி, கண்ணீர் வரவழைக்கிறது. எனவேதான் வெட்டுபவனையே அழவைத்து விந்தை செய்யும் வெங்காயத்தை தமிழ் இலக்கியங்களும் விட்டுவைக்கவில்லை. மரத்தில் தொங்கும் தேன் ராட்டு எடுக்க, வெங்காயத்தை மென்று ஊதி ஈ துரத்துவதை கிராமத்துச் சிறுவர்களிடம் இன்றும் காணலாம்.

இன்றும் திருமண வீடுகளில் வழங்கும் சீர்பொருட்களில் ஒரு தட்டு வெங்காயமும் இடம் பிடிக்கிறது. சந்தனத்திற்கு மாற்றாக வெற்றிலையுடன் வெங்காயம் சேர்த்து அரைத்த கலவையை புண், வேனற்கட்டு வராதிருக்க குழந்தைகளின் மொட்டைத் தலைகளில் தடவுதல் தென்மாவட்டத்தில் தொடர்கிறது.

தவறுக்கு தண்டனையாய் கண்களில் வெங்காயச் சாறிடுதல் தென்னக கிராமங்களில் இருக்கிறது. மயங்கியவரை எழுப்பிட வெங்காயம் முகரச் செய்தலும் உண்டு. வெங்காயத்தில் புரதம், தாது உப்புகள், வைட்டமின்கள் என உடம்புக்கான ஊட்டச்சத்து அதிகம். இதய சக்தி தருகிறது. நரை, தலை வழுக்கையை தடுக்கிறது. உடல் வெம்மை தணித்து, ரத்த விருத்தி, எலும்பு வலிமை நிறைக்கிறது.

பித்த, கண், வாத நோய்கள் தீர்க்கிறது. பாலில் இட்டு காய்ச்சிக் குடித்தால் சளி, இருமல் பறக்கிறது. இன்னும் உணவே மருந்தாக வெங்காயம் செய்யும் விந்தைகள் ஏராளம்.

தமிழ் ஓவியா said...

வாத நோய் போக்கும் நன்னாரிஅங்காரி மூலி, நறுநெட்டி, பாதாள முளி, கோபாகு, சாரிபம், பாறட்கொடி, நீறுண்டி, சாரியம் என்று பல்வேறு பெயர்களால்  அழைக்கப்படும் நன்னாரி நமது உடலில் ஏற்படும் அதிகமான வெப்பத்தை அகற்றி பல்வேறு வெப்ப நோய்களையும் நீக்குகிறது.  நன்னாரி என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது சர்பத்துதான். இதன் மணத்திற்கும் சுவைக்கும் ஆட்படாதவர்களே இல்லை  என்று கூறலாம்.

அதுவும் கோடைகாலத்தில் சில் என்று அதை குடிக்கும் போது ஏற்படும் அனுபவமே தனியானது. எதிரடுக்கில் நீண்ட இலைகள்  கொண்டது. இதன் கொடிகம்பி போன்று அமைந்திருக்கும். மணம் வீசும் வேர்கள் மருத்துவ குணம் கொண்டவை. தானாகவே  வளரும் பாலுள்ள கொடி இனம்.

நறுக்குமூலம்,நறுநீண்டி, தாதுவெப்ப அகற்றியாகவும் வியர்வை, சிறுநீர் ஆகியவற்றை பெருக்கும்  மருந்தாகவும் நோயகற்றி உடல் தேற்றவும் உடல் உரமூட்டவும் பயன்படும். குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் போது சில  ஆண்களுக்கு எரிச்சல் ஏற்படும்.

இவர்கள் நன்னாரி வேரை 15 கிராம் அளவில் எடுத்து 500 மிலி தண்ணீரில் நசுக்கி போட்டு 250  மிலியாக சுண்டியதும் வடிகட்டி 50மிலி அளவில் மூன்று நாட்கள் காலை மாலை குடித்து வர எரிச்சல் நீங்கி முழுமையான  குணம் ஏற்படும்.

பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மிலி பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மேக வெட்டை, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாட்கள் இதை சாப்பிட்டு வர நரை முற்றிலும் மாறும். நன்னாரி வேரை குடிநீர் செய்து இளம் சூட்டில் 100மிலி அளவில் குடித்து வந்தால் ஆண்மை பெருகும். நன்னாரி சர்பத்தாகவும்  குடிக்கலாம்.

நன்னாரி வேர் 20 கிராம் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு 200 மிலியாக காய்ச்சி 100 மிலி வீதம் காலை  மாலை சாப்பிட்டு வர நாட்பட்ட வாதம். பாரி சவாதம், தோல் நோய்கள் நீங்கி குணமடையும். பித்த குன்மம் முற்றிலும் நீங்கும்.

நன்னாரி வேரை இடித்து 135 கிராம் எடை எடுத்து அதனுடன் 700 மில்லி வெந்நீர் விட்டு நான்கு மணி நேரம் ஊற வைத்து  வடிகட்டி 1 கிலோ அளவில் சீனியை சேர்த்து சிறு தீயில் காய்ச்சி வைத்துக் கெண்டு வேளை ஒன்றுக்கு 2 தேக்கரண்டி வீதம்  தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் வெப்பம் தணியும்.

நன்னாரி வேரை வாழை இலையில் சுருட்டி பொட்டலமாக கட்டி அதை  கும்பிசாம்பலில் புதைத்துவைத்து மறுநாள் எடுத்து நன்னாரி வேரில் உள்ள நரம்பை நீக்கிவிட்டு, வெல்லம், சீரகம் சேர்த்து  அரைத்து நெல்லிக்காய் அளவு உருண்டையாக பிடித்து உண்டு வந்தால் நீர் சுருக்கு, நீர் எரிச்சல் நீங்கும்.

தமிழ் ஓவியா said...

மாதுளம் பழமும் மருத்துவச் சிறப்பும்மாதுளம்பழம் என்றாலே பெரும்பாலும் பலர் அதன் முத்துக்களின் சாரத்தை மட்டும் ருசித்து விட்டு விதைகளை உமிழ்ந்து விடுவார்கள். ஆனால் மாதுளம்பழத்தின் சத்தோ அதன் விதைகளில் தான் அதிகம் உள்ளது என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.

பொதுவாக அக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதத்திற்குள் பூத்துக் காய்த்து பழமாகும் மாதுளம் பழத்தின் சத்துக்களையும், மருத்துவச் சிறப்புகளையும் இப்போது பார்ப்போம். மாதுளம்பழத்தில் அதிக பட்சமாக நீர்சத்து 78 விழுக்காடு உள்ளது. மாதுளம் பழத்தைப் பொறுத்தவரை பூ, தோல், விதை என அனைத்து மே மருத்துவச் சிறப்பு வாய்ந்தவை.

மாதுளம் பூ, இரத்த வாந்தி, இரத்த மூலம், வயிற்றுக் கடுப்பு, சூடு முதலியவற்றை போக்கும். பூவை கஷாயமாக செய்து குடித்தால் தொண்டை தொடர்பான பலபிணிகளும் அகலும். மாதுளம் பழரசம் தாதுவைப் பெருக்கும், வாந்தியை நிறுத்தும் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க் குறை பாடுகளை அகற்றும்.

இது தவிர, காதடைப்பு, வெப்பக்காய்ச்சல், மந்தம், மயக்கம் ஆகியவற்றையும் பழரசம் விலக்கும். மாதுளம் பழரசத்துடன் ஒன்றரைப் பங்கு கற்கண்டு அல்லது வெள்ளைச் சர்க்கரை சேர்த்துப் பாகு பதத்தில் காய்ச்சி வைத்துக் கொண்டு சாப்பிட்டு வந்தால் பித்தம் தொடர்பாக ஏற்படக்கூடிய பிரச்சினைகள் நீங்கும்.

அன்றாடம் பாதி மாதுளம்பழம் அளவிற்கு நன்றாக மென்று சாப்பிட்டு வந்தால் மலக்கட்டு நீங்கும், மாதுளம் பழச்சாறும், இஞ்சிச்சாறும் சம அளவு எடுத்து சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் எவ்வளவு கடுமையான இருமலும் குணமாகும். மாதுளம்பழத்தின் விதைகளை எடுத்து வெயிலில் உலர்த்திப் பொடி செய்து தினமும் பசும்பாலில் சிட்டிகை அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் தாது பலம் பெற்று உடலும் நலம் பெறும். இது தவிர,

மேலே குறிப்பிட்டது போல் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டால் ஆண்மைக் குறைபாடு நீங்கும். மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் தொடர்ந்து ஏற்படும் விக்கல் உடனே நிற்கும். ஏதேனும் காரணத்தினால் நீர் அருந்தாமலே,

டலில் நீர்த் தன்மை குறைந்த அதிக தாகம் எடுக்கும் போதே மாதுளம்பழம் சாப்பிட்டால் உடனடியாக தாகம் தணியும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். உடல் குளிர்ச்சியடையும்.  மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.

தமிழ் ஓவியா said...

சமஸ்கிருதம் மக்களின் மனதைத் தூய்மைப்படுத்துகிறதாம் சுஷ்மா ஸ்வராஜ்


பாங்காக், ஜூன் 30_- சமஸ்கிருத மொழி மக்களின் மனதைத் தூய்மைப்படுத்துவதாகவும் அதனை மேலும் விரிவாகப் பரப்ப வேண்டு மெனவும் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்திருக்கிறார். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 16ஆவது உலக சமஸ்கிருத மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் 60 நாடுகளைச் சேர்ந்த சமஸ் கிருத நிபுணர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்த விழாவில் கலந்து கொண்டு பேசியபோது மக்களிடம் சமஸ்கிருத மொழி பேசுவதற்கு பிரச்சாரம் செய்யப்பட வேண்டும். இந்த மொழி மக்களின் மனதை துய்மைப்படுத் துவதுடன் உலகம் முழுவதையும் புனிதப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். மேலும், சாஸ்திரங் களுக்கும் அறிவியலுக்கும் இடையே உள்ள இடை வெளியை குறைக்க வேண்டும் என்பதில் நாங்கள் முயற்சி எடுக்கி றோம் என்றும் அமைச்சர் சுஷ்மா தனது உரையில் தெரிவித்தார். அவர் இந்த மாநாட்டில் சமஸ்கிருத மொழியிலேயே பேசியது குறிப் பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

குஜராத்தில் யோகா கட்டாய பாடமாம்

காந்திநகர், ஜூன் 30- குஜராத் மாநிலத்தில் வருகிற 2016-ஆம் ஆண்டு 9-ஆம் வகுப்பு முதல் அனைத்து பள்ளி மாண வர்களுக்கு யோகாவை கட்டாய பாடமாக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆர் எஸ்எஸ்-சின் யோகா திட்டத்தை, குஜராத் மாநில அரசு முதன் முதலில் 9-ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் உயர் கல்வி படிக்கும் மாணவ ர்கள் வரை கட்டாய பாடமாக கொண்டுவர திட்டமிட்டு உள்ளது. குஜராத் மாநிலம் முழு வதும் உள்ள 15 ஆயிரம் உயர்நிலை மற்றும் மேல் நிலை பள்ளிகளில் 2016-ஆம் ஆண்டு முதல் யோகா பாடம் நடத்தப் பட உள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளி களில் யோகா பாடத்தை நடத்த குஜராத் கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சாதஸ்மா தலைமையில் அமைக்கப்பட்ட குழு முடிவு செய்துள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் ஏற்கெனவே தொடங்கி விட்டதாகவும் கூறப்படு கிறது. மேலும் இந்த ஆண்டு தீபாவளி விடு முறையில் பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரி யர்களுக்கும் யோகா பயிற்சி அளிக்க திட்ட மிடப்பட்டிருக்கிறது. அப்போது அவர்களுக்கு யோகாவில் உள்ள பல ஆசனங்கள் செய்வது பற்றி பயிற்சி அளிக்கப் படும். அது மட்டுமல்லா மல் யோகாவில் ஏற்படும் நன்மைகள் குறித்து மாண வர்களுக்கு சொல்லிக் கொடுக்க ஆசிரியர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சாதஸ்மா தெரிவித்தார். பள்ளி மாணவர்களின் யோகா பாடத்தில் போக்குவரத்து விதிமுறைகள், சுற்றுச் சூழல் சுகாதார விழிப் புணர்வு, மரம் நடுதல், காடுகள் அவசியம் குறித் தவைகளும் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள் ளது. மேலும் தொழில் அதிபர்கள் திருபாய் அம் பானி, நான்ஜி மேத்தா பற்றிய பாடங்களையும் அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இதுபற்றி கடந்த வெள்ளிக்கிழமை கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சாதஸ்மா தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இறுதி முடிவு விரைவில் கல்விக்குழு எடுக்கும் என்று கூறப்படுகிறது. இதேபோல் கடந்த ஆண்டு நரேந்திர மோடி குறித்து பள்ளிகளில் பாடத்தை கொண்டு வர அரசு திட்டமிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டதால் தனது திட்டத்தை அரசு கை விட்டது. ஏற்கெனவே குஜராத்தில் கல்வியை காவிமயமாக்கும் விதத்தில் பல்வேறு பாடத் திட்டங் கள் சேர்க்கப்பட்டிருக் கின்றன என்பது குறிப் பிடத்தக்கது

தமிழ் ஓவியா said...

பா.ஜனதா தலைவர் பாலியல் தொல்லை பெண் தொண்டர் புகார் - காவல்துறை விசாரணை

கான்பூர், ஜூன் 30_ உத்தரபிரதேசம் மாநிலத் தில் பாரதீய ஜனதா தலைவர் மற்றும் அவரது 4 உதவியாளர்கள் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் தொண்டர் புகார் கொடுத்து உள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அனுப் திவாரி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகாரில் தெரிவித்துள் ளார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஜூன் 20ஆ-ம் தேதி பெண் தொண்டரை அவரது வீட்டில் இறக்கிவிடுவதாக காரில் ஏற்றிச்சென்ற, திவாரி காரில் அவரிடம் தவறாக நடந்து கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் தொடர் பாக கட்சியின் அப்பகுதி தலைவர்களிடம் பாதிக்கப் பட்ட பெண் புகார் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கட்சியின் அலுவலகத்திற்கு மறுநாள் வந்த திவாரி தனது உதவியாளர்கள் நான்கு பேருடன் புகார் அளித்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டு உள்ளனர். அவருடைய ஆடைகளை களைவதற் கும் முயற்சி செய்துள் ளனர் என்று காவல்துறை யில் தெரிவித்துள்ளனர்.

இந்த இரண்டு சம் பவம் தொடர்பாக கட் சியின் அப்பகுதியை சேர்ந்த தலைவர்களிட மும், மாநில தலைவர்களி டமும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்து உள்ளார் என்றும் இது தொடர்பாக அவர்களுக்கு எதிராக எந்தஒரு நட வடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே பாதிக் கப்பட்ட பெண் காவல் நிலையத்தை அனுகி உள் ளார் என்றும் தெரிவிக் கப்பட்டுள்ளது. காவல் அதிகாரியின் உத்தரவின்பேரில், பெண் ணின் புகாரை ஏற்றுக் கொண்டு காவல்துறையி னர் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். இதுதொடர் பாக விசாரணை நடை பெற்று வருவதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என் றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.Read more: http://www.viduthalai.in/e-paper/104219.html#ixzz3eYRa2RGf

தமிழ் ஓவியா said...

கவலை ஏன்?

மனிதர்கள் எந்த மதத்தில் இருந் தாலும், அவர்கள் எந்த மதத்திற்குப் போனாலும், மற்ற மதத்தைச் சார்ந்த மனிதனுக்கு அதனால் கவலை ஏன் ஏற்படவேண்டும்?
_ (குடிஅரசு, 16.11.1946)

தமிழ் ஓவியா said...

கழகக் கூட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுப்பது குறித்து சட்டரீதியாக அணுகப்படும் திராவிடர் கழக வழக்குரைஞர் அணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, ஜூன் 30_ கழகக்கூட்டங்களுக்கு காவல் துறை அனுமதி மறுப் பது குறித்து சட்ட ரீதியாக அணுகப்படும் திராவிடர

கழகக் கூட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுப்பது குறித்து சட்டரீதியாக அணுகப்படும்

திராவிடர் கழக வழக்குரைஞர் அணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்சென்னை, ஜூன் 30_ கழகக்கூட்டங்களுக்கு காவல் துறை அனுமதி மறுப் பது குறித்து சட்ட ரீதியாக அணுகப்படும்

திராவிடர் கழக வழக் குரைஞரணி கலந்துரை யாடல் கூட்டம் சென்னை, பெரியார் திடலில் 21.6.2015 அன்று காலை 10.30 மணி யளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திராவி டர் கழகத் தலைவர், தமி ழர் தலைவர், ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமை தாங்கினார். இக்கூட்டத் தில் கலந்து கொண்டவர் களும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் பின்வரு மாறு:_

கி.வீரமணி, ஜெ.துரை சாமி, கரூர் இராசசேகரன், மு.சென்னியப்பன், ஆ.வீரமர்த்தினி, ஆ.பாண் டியன், ம.வீ.அருள்மொழி, ந.இளங்கோ, த.வீரசேக ரன், சின்னம்பேடு எஸ். கண்ணன், செஞ்சி விவே கானந்தன், ஜெ.தம்பிபிர பாகரன், வி.பெரியசாமி, எஸ்.பி.சக்திவேல், எஸ்.குமாரதேவன், இராம ராஜன், அ.அருள்மொழி, பீ.இரமேஷ், இரா.சர வணகுமார், மு.இராசா

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1) தற்போதைய சூழ் நிலையில் சட்டக்கல்வி யின் அவசியம் அதிகரித்து வருவதாகவும், தற்போ தைய சட்டக்கல்வி தர மானதாகவும், போது மானதாகவும் இல்லாத தால் பெரியார்- _ மணி யம்மை பல்கலைக் கழகத்தில் சட்டக்கல்லூரி தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று பெரியார் மணியம்மை கல்வி அறப் பணிக்கழகத்தையும், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தையும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

2) அண்மைக்காலத் தில் திராவிடர் கழகம் சார்பாக ஏற்பாடு செய்யும் பொதுக்கூட்டங்களுக்கு உரிய காலத்தில் அனுமதி தராமலும், போதிய கார ணமின்றி அனுமதி மறுப் பதும், சட்டவிரோதமான வகையில் கூட்டத்தில் பேச வேண்டிய கருத்து களுக்கு தடைவிதிப்பதும், காவல் துறையின் வாடிக் கையாக இருந்து வருகிறது. இந்த சட்ட விரோத போக்கினை தடுப்பதற்கு அந்தந்த மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் திராவிடர் கழக சட்டத் துறை அமைக்க, சட்ட ஆலோசனைக் குழுவிடம் அணுக வேண்டுமென்று மேற்படி சட்ட ஆலோ சனைக்குழு தமிழகம் எங்கும் ஒரே சீரான அணுகுமுறையை மேற் கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்றும் கேட் டுக்கொள்கிறது. இப்பிரச் சினை சட்ட ரீதியாக அணுகப்படும்.3) திராவிடர் கழக வழக்குரைஞரணி சார்பாக விரைவில் மாவட்டம் தோறும் முக்கியமான சட்டப்பிரச்சினைகள் குறித்த கருத்தரங்குகள் நடைபெற வேண்டுமென தீர்மானிக்கப்படுகிறது.

4) ஆங்கிலேயர் ஆட் சிக் காலத்தில் குடிமக் களை அடக்கி ஒடுக்குவ தற்காக ஏற்படுத்தப்பட்ட பல காலாவதியான சட் டங்களை தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறும், அரசியல் சட்டம் அங் கீகரிக்கும் கருத்துரிமை, பேச்சுரிமைகளுக்கு பங்கம் ஏற்படாதவகையில் திருத் தங்கள் மேற்கொள்ளப் பட வேண்டுமென்று மத் திய _ மாநில அரசைக் இக் கூட்டம் கேட்டுக்கொள் கிறது.

5) விரைவில் திராவி டர் கழக வழக்குரைஞரணி மண்டல, மாவட்ட நிர் வாகிகள் நியமிக்கப்பட வேண்டுமென்றும் தீர் மானிக்கப்படுகிறது.

திராவிடர் கழக வழக் குரைஞரணி மதுரை மண் டல மாவட்ட நிர்வாகிகள்  நியமனம்

தராவிடர் கழக சட் டத்துறை செயலர் ச. இன் பலாதன் அவர்களால் ஏற்பாடு செய்யப்படட தராவிடர் கழக வழக்கு ரைஞரணி அமைப்புக் கூட்டம் 27.10.2014 மதுரையில் தராவிடர் கழக வழக்குரைஞரணி துணைத்தவைர் பொ.நடராசன் நீதிபதி (பணி நிறைவு) அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற போது கீழ்க்கண்ட நர் வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர்.

மதுரை மண்டலம்

தலைவர்: கோ. சுப்பிர மணியன் பி.ஏ. பி.எல்., வழக் குரைஞர், தண்டுக்கல். செயலர்: -மு. சத்தார்த் தன், பி.ஏ., பி.எல்., வழக் குரைஞர், உயர்நதிமன்றம், மதுரை.

மதுரை மாவட்டம்

தலைவர்: கே. பொன் னையா, எம்.ஏ., பி.எல்., வழக் குரைஞர், உயர்நதிமன்றம், மதுரை, செயலர்: சோ. தியாக ராசன், பி.ஏ., பி.எல்., வழக் குரைஞர், உயர்நதி மன்றம், மதுரை,

தண்டுககல் மாவட்டம்

தலைவர்: சுப. ஜெக நாதன், பி.ஏ., பி.எல்., வழக குரைஞர், திண்டுக்கல்
செயலர்:- சாக்ரடீஸ், பி.ஏ., பி.எல்., வழக்கு ரைஞர், திண்டுக்கல்.

விருதுநகர் மாவட்டம்

அமைப்பாளர் - பகர தன் பி.ஏ., பி.எல்., வழக் குரைஞர், திருவில்லிபுத் தூர்
தேனி மாவட்டம்

அமைப்பாளர்: - சின்ன முத்து பி.ஏ., ப.எல்., வழக் குரைஞர், பெரியகுளம்.