Search This Blog

23.6.15

சீனப் படைக்குச் சக்தியா - சிவனுக்குச் சக்தியா? சிந்திப்பீர்!

அட சிவனே!53 ஆண்டுகளுக்குப் பிறகு கைலாஷ் மானசரோவருக்குப் பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டுள்ளனராம். கைலாயங்கிரி என்றால் சிவன் உறையும் இடம் என்று தடபுடலாக மத்தளம் கொட்டி சிலாகிப் பார்கள் இந்துக்கள்.

அந்தக் கைலாசமலை இப்பொழுது எங்கே இருக்கிறது. சீன ஆக்கிரமிப்புப் பகுதியில், கைதியாக சிவனேன்னு கிடக்கிறான்.

இதோ ஆதாரம் பேசுகிறது;

பாரதத்தின் கலை - கலாச்சார ஆன்மிகத் துறைகளுக்கு ஆதார சக்தியாக விளங்கி வந்திருக் கிறது இந்த பூலோக சொர்க்கம். இதற்கு பாரதத் தில் வழங்கிய புராதனப் பெயர் த்ரிவிஷ்டபம் (திபெத்) சிருஷ்டியின் தொடக்கம் இப்பிரதேசத் தில்தான் ஏற்பட்டது என்று ரிக் வேதம் கூறுகிறது. பூமியில் பேரதிர்வு ஏற் பட்டு, இமயமலை எழுந்த தும், கடல்கள் உருவான தும் இப்பகுதியிலிருந்து தான். ரிக் வேதத்தில் இத் தகவலைத் தரும் பல சூக் தங்கள் இருக்கின்றன. த்ரய: ஸுபர்ணா உபரஸ்ய மாயூ நாகஸ்ய ப்ருஷ்ட்டே. அதி விஷ்ட பிச்ரிதா: என்று தொடங்கும் சூக்தம், இந்தக் கருத்தை வெளியிடு கிறது.

மூன்று தைவ சக்திகள் - அக்னி இடி மின்னல், சூரியன் இங்கு ஒன்று சேர்ந்து இயங்கியதால் ஜீவராசியின் சிருஷ்டி தொடங்கியது. இதுதான் சொர்க்க லோகம்; இங்கு அமிர்த சக்தி இருக்கிறது. ஜீவர்கள் இந்த அமுத சக்தியைப் பெற்று வளர் கின்றன. இதனாலேயே இப்பகுதியை த்ரவிஷ் டபம் (மூன்று தைவ சக் திகள் ஒருமித்த  சொர்க்கம்) என்று அழைக்கிறோம்.

மகாபாரதத்தில் வியாச முனிவர் இந்த திபெத் பிரதேசத்தை த்ரதவிஷ் டபம் என்றே குறிப்பிட்டு, ஆர்ய  வர்த்தகத்தின் நடுப் பகுதி, மிகப் புனித மான புண்ய பூமி என்று கூறியி ருக்கிறார். கிம்புரு ஷவர்ஷம், கின்னரதேசம், கந் தர்வ லோகம் என்றெல் லாம் இப்பகுதியில் உள்ள பிரதேசங்களை வர்ணிக் கிறார். கைலாஸ பர்வ தத்தை ஹேம கூடம் என்று மகாபாரதமும் கிரெ ளஞ்ச பர்வதம் என்று வால் மீகி ராமாயணமும் குறிப் பிடுகின்றன.

ஏழாம் நூற்றாண்டில் இங்கு ஆட்சி புரிந்து வந்த ஸோங் வத்ஸன் ஸகம்போ எனும் திபெத்திய அரச னின் காலத்திலிருந்து 1954-இல் சீனா இந்நாட்டை ஆக்கிரமித்துக் கொள்வ தற்கு முன்பு வரையில் பார தத்தின் பகுதி போலவே இங்கு இந்திய யாத்ரீகர்கள் போய் வந்து கொண்டிருந் தார்கள். கைலாஸ் - மான ஸரோவர் பகுதியிலுள்ள மகன்ஸர் கிராமத்திலிருந்து பாரதம் 1948-க்கு முன்பு வரைக்கும் கிஸ்தி வசூல் செய்து கொண்டிருந்தது. 1950 வாக்கில் இப்பகுதியு டன் கிட்டத்தட்ட எண்பதா யிரம் சதுர மைல் பரப்புள்ள இந்தியப் பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்துக் கொண்டு விட்டதால் 1962இல் ஏற் பட்ட சீனப் படையெடுப் பிற்குப்பின் கைலாஸ் மானஸரோவர் புனிதயாத் திரை தடைப்பட்டு விட்டது.

- திரு சௌரி எழுதிய இந்தியாவின் கலையும் கலாச்சாரமும் என்ற நூல்- பக்கம் 145,146  (வானதி பதிப்பக வெளியீடு)

சீனப் படைக்குச் சக்தியா - சிவனுக்குச் சக்தியா? சிந்திப்பீர்!

------------------- மயிலாடன் அவர்கள் 23-06-2015 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

25 comments:

தமிழ் ஓவியா said...

அட நடராஜா!

புதன், 24 ஜூன் 2015

சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த நடராஜக் கட வுளின் தாத்பரியம்பற்றி அள்ளி விடுவார்கள். இந்த நடராஜனை ஆகாய லிங்க வடிவில் வழிபடு கிறார்களாம். கோவில் என்றாலே, அது சிதம் பரம் நடராஜன் கோவி லைத்தான் குறிக்குமாம்.

நடராஜர் நடனக் கலை வல்லுநராம். 108 வகை நடனங்களை ஆடு பவராம். நடராஜர் சிலை கனகசபையில் உள்ளது. மூலஸ்தானத்துக்கும், இதற்குமிடையே திரை ஒன்றுள்ளது. அந்தத் திரைக்குப் பின்புறத்தில் தான் ஆகாய வடிவம் இருக்கிறது. அதிலிருந்து தான் நடராஜப் பெருமான் தோன்றி பதஞ்சலி, வியாக்கிரபாதர் என்னும் இருடிகளுக்காக நடனம் ஆடினாராம்.

அடேயப்பா, இப்படிப் பட்ட சிதம்பரம் நடராஜன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத கையா லாகாத்தனத்தை எண்ணி னால் வயிறு முட்ட சிரிப்புதான் மிஞ்சும்.

இதோ அந்த வரலாறு

முப்பத்தேழு ஆண்டு, பத்து மாதம், இருபது நாள்கள் (24.12.1648 முதல் 14.11.1686) வரை சிதம்பரம் கோவிலில் உள்ள நட ராஜர் சிலை சிதம்பரத்தி லிருந்து வெளியேறியி ருந்தது என்னும் உண்மை இப்போதுதான் தெரிய வந்துள்ளது. சிதம்பரத்தி லிருந்து எடுத்துச் செல் லப்பட்ட நடராஜர் சிலை, முதல் நாற்பது மாதங்கள் குடுமியான்மலையிலும்,  பின்னர் மதுரையிலும் இருந்திருக்கிறது. இந்தச் செய்தி, இப்போது திரு வாரூரில் கிடைத்திருக் கும் மூன்று வடமொழிச் செப்பேடுகளிலிருந்து தெரிய வருகிறது.

தில்லையை விட்டு நடராஜர் சிலை அகற்றப் பட்டதற்கு என்ன கார ணம் என்பது சரிவரத் தெரியவில்லை. இருந் தாலும், அக்காலச் சூழ் நிலைகளை வைத்து ஆராயும்போது, பீஜப்பூர் சுல்தானுடைய படையெ டுப்புக்கு பயந்து கொண்டோ அல்லது 1647 ஆம் ஆண்டு தமி ழகத்தின் வடபகுதியில் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தின் காரணமா கவோ சிதம்பரத்திலுள்ள நடராஜருக்குச் சரிவர பூஜை நிகழ்த்த முடியாது என்று நினைத்த சில பக்தர்கள் இப்படி நட ராஜர் சிலையை எடுத்துச் சென்றிருக்கலாம் என்று யூகிக்கலாம்.

கடைசியில் மதுரை யில் இருந்த நடராஜரை மீண்டும் சிதம்பரத்திற்குக் கொண்டு வந்தது, மராட் டிய மன்னன் சகசி காலத் தில்தான் என்றும் தெரி கிறது.

ஆதாரம்: தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர்

(இந்தச் செய்தி இத யம் பேசுகிறது இதழிலும் எடுத்துப் போடப்பட்டுள் ளது).

இப்பொழுது சொல் லுங்கள், இந்த சிதம்பரம் நடராஜக் கடவுள்பற்றி அளப்பதெல்லாம் அசல் கட்டுக்கதைகளா இல் லையா?      - மயிலாடன்

தமிழ் ஓவியா said...

பெண்களைக் கடத்திய மதபோதகர்

புதன், 24 ஜூன் 2015

திருச்சி, ஜூன் 24_ புதுக்கோட்டை மாவட் டம் விராலிமலை அருகே உள்ள ராமகவுண்டம் பட்டியைச் சேர்ந்தவர் கிட்டப்பா(வயது 48). இவர் விராலிமலை காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்ப தாவது:

நான் விராலிமலை பகுதியில் விறகு வியாபா ரம் செய்து வருகிறேன். எனக்கு தனலெட்சுமி(45), மோகனா(38) என 2 மனைவிகளும், புஷ்ப லதா(27), ரேவதி(25), ராஜேஷ்வரி(19) பாக்கிய லெட்சுமி(17) என 4 மகள் களும் உள்ளனர். இவர் களில் புஷ்பலதாவுக்கும், ரேவதிக்கும் திருமணமாகி விட்டது. ராஜேஸ்வரி, பாக்கியலெட்சுமி ஆகிய இருவரும் தனியார் கல் லூரியில் படித்து வருகின் றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி பாலக்கரையை சேர்ந்த முத்து ஆப்ரகாம் என்ற மத போதகருக்கும், எனது மகள் ரேவதிக்கும் நட்பு ஏற்பட்டது. இதை பயன்படுத்தி முத்து ஆப்ர காம் எனது மனைவிகள் தனலெட்சுமி, மோகனா, மகள்கள் ரேவதி, ராஜேஸ் வரி, பாக்கியலெட்சுமி ஆகியோரிடம் மூளை சலவை செய்துள்ளார்.

மேலும் நீங்கள் மதம் மாறினால் நன்றாக இருக் கலாம் என்று கூறி வீட்டில் வியாபாரத்திற்கு வைத்திருந்த ரூ. 8.6 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 28 பவுன் தங்க நகைகளுடன் அவர்களை கடத்திச் சென்று விட் டார். அவர்களை பத்திர மாக மீட்டு தர வேண்டும் என்று அதில் கூறி உள்ளார்.

இது குறித்து விசா ரணை நடத்திய விராலி மலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வரு கிறார்கள். மத போதகர் ஒருவரே வியாபாரியின் 2 மனைவிகள், 3 மகள்களை கடத்தி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் ஓவியா said...

துணைக் குடியரசுத் தலைவர் பாகிஸ்தான் செல்லட்டும்!
வி.எச்.பி. சாமியாரிணி அடாவடிப் பேச்சு

புதுடில்லி, ஜூன் 24_ அதிரடி விவாதப் பேச் சைப் பேசிவரும்  விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப் பின் தலைவர்களில் ஒரு வரான சாமியாரினி பிராச்சி தற்போது மேலும் அடாவடித்தனமாகப் பேசியுள்ளார்.

டில்லியில் நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சிக்கு துணைக் குடியரசுத் தலை வர் ஹமித் அன்சாரிக்கு அழைப்பு விடுக்கப்படா தது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிராச்சி யோகா தினம் ஒன்றும் திருமண நிகழ்ச்சி கிடை யாது; அழைப்பிதழ் வைத்து அழைக்க, அவரா கவே வந்து கலந்து கொள்ளவேண்டும். அப்படி பிடிக்கவில்லை என்றால் பாகிஸ்தான் சென்றுவிடலாம் என்று துணைக் குடியரசுத் தலை வர் அமித் அன்சாரியைக் குறிப்பிட்டு அவர் கூறி யுள்ளார் மனங்களை இணைக்கும் பாலமாகச் செயல்படும் யோகாசனம் என்பது ஒரு தனிப்பட்ட மத நம்பிக்கைக்கு மட்டும் சொந்தமானது அல்ல.

இந்தியாவில் உள்ள மக்களின் பாரம்பரியங் களுக்கும், கலாசாரங்களுக் கும் ஆட்சேபணை தெரி விப்பது ஒருபோதும் தேவையில்லாத செயலா கும். இந்த நாட்டின் நலனுக்காக அவர் (ஹமீது அன்சாரி) என்ன செய் துள்ளார் அவர் அந்தப் பதவியில் இருப்பதே எதற்காக என்று தெரிய வில்லை. இதை நானும் பல நாள்களாக பார்த்து வருகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் கலாச் சாரம் மற்றும் பாரம்பரி யத்துடன் முஸ்லிம்களே தங்களை இணைத்துக் கொள்ளவேண்டும். அதை விடுத்து ஆட்சேபம் தெரி விக்கக்கூடாது என்றும், அப்படி ஆட்சேபணை தெரிவிப்பவர்கள் இந் தியாவுக்குள் வாழ்வதற்கு உரிமை இல்லாதவர்கள் என்றும், அவர்கள் பாகிஸ் தானுக்கு போய் விடலாம் எனவும் சாமியாரிணி பிராச்சி கூறினார்.

தமிழ் ஓவியா said...

நலவாழ்வின் எதிரி சர்க்கரை நோய் - புரிந்திடுவீர்!


சர்க்கரை நோய் என்பது மிகவும் ஆபத்தானது; அது மட்டுமா? ஒருமுறை நம் உடம்பினுள் புகுந்து அது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டால், அது நமக்கு வாழ்நாள் முழுவதும் கூடவே இருந்தே தீரும் என்பதுதான் இதுவரை நிலவிவரும் மருத்துவத் தகவல். இனி எதிர்காலத்தில் - ஆய்வுகளால் எப்படி மாறுமோ? நாம் அறியோம்!

இன்றைய (24.6.2015) டைம்ஸ் ஆஃப் இண்டியா ஆங்கில நாளேட்டில் இந்த நோய் தாக்குவதற்குரிய மூலகாரணம் ஒன்றைப்பற்றி மிகவும் தெளிவாக ஒரு செய்திக் கட்டுரை வந்துள்ளது.

மிக நீண்ட நேரம் அமர்ந்தே, எழா மல், சிறிதுநேரம்கூட நடந்து, திரும்பி பணியை மேற்கொள்ளாது பணியாற்றும் போது, அந்தப் பல மணிநேர அமர்வு - உட்கார்ந்திருத்தல்கூட, நாம் பணியாற்று கிறோம்; சும்மா இருக்கவில்லை என்ற போதிலும்கூட, அது நமது ரத்தத்தின் சர்க்கரை அளவை மிகவும் கூடுதலாக்கி, சர்க்கரை நோயை (Diabetes) கொண்டு வந்து விடுகிறது.

பொதுவாக பணியாற்றுகிறவர்கள் கணினி முன்னால், அல்லது பல மணிநேரம் இடைவிடாது நாற்காலியில் அமர்ந்தோ தொடர்ந்து தொலைக் காட்சி (டி.வி.) பார்த்துக்கொண்டே இருக்கும் இருபாலர்களோ, சில பொது நிகழ்ச்சிகளில்கூட அன்பு தண்டனை யாக மூன்று, நான்கு மணிநேரம் நம்மை அமரச் செய்து, நீங்கள் முக்கிய மானவர்; இறுதியில் பேசுங்கள்; அப் போதுதான் கூட்டம் கலையாமல் இருக்கும் என்று கூறி, நேரத்தை வீணாக்கி, மற்ற பலரையும் பேசவிட்டு, பெருங்கூட்டத்தைக் கொஞ்சம் கொஞ்ச மாகக் கலையச் செய்த பிறகு, கூட்டத் தினரிடையே பேச வைக்கும் ஏற்பாடு - இப்படி எத்தனையோ விதங்களில் தொடர்ந்து அமர்ந்திருப்பது - எழாமல் இருப்பது - சர்க்கரை நோய் மட்டுமல்ல - கூடுதல் கொழுப்பு (கொலஸ்ட்ரால்) - அதன் விளைவாக மாரடைப்பு - இருதய நோயை உண்டாக்குதல் போன்றவை களோகூட முன்னோட்டமான நிலை மைகளை உருவாக்குவது போன்ற தொடர் நிகழ்வுகள்தான்!

இவைகளைத் தவிர்க்க, எளிய வழிகள்:

1. நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்காமல், அடிக்கடி எழுந்து, அல்லது அலுவலக அறைக் குள்ளே பொடி நடைச் சுற்று சுற்றி மீண்டும் வந்து அமர்ந்து பணி தொடர் தல் போன்றவற்றைச் செய்யலாம்.

உடல் அசைவுகள், எல்லா உறுப்பு களுக்கும் ரத்த ஓட்டம் செல்லும்படி சிறு சிறு மாற்றுப் பணிகள் இடைவேளை களில் செய்தல், எழுந்து, நடந்து மீண்டும் அமர்தல் போன்றவைகளைச் செய்யலாம்.

நீண்ட நேரம் அமர்ந்திருப்பது (தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்த உருளைக்கிழங்கு போண் டாக்களும் இது சேர்ந்ததே)

இருதயம்:

எந்தெந்த உடல் உறுப்புகளை இப்படி நீண்ட நேரம் குந்தியே (உட் கார்ந்தே) சில ஊர்களில் இச்சொற் றொடர் புழக்கத்தில் உள்ளது.

நீங்கள் அமர்ந்தே இருக்கும்போது ரத்த ஓட்டம் குறைகிறது; தசைகளில் கொழுப்பை (உணவின்மூலம் சேரு வதை) எரிப்பது குறைகிறது. விளைவு கொழுப்பு திரவங்கள் (Fatty Acids) இதயத்தின் இரத்தக் குழாய்களை அடைக்கின்றன.

கணையம்:

உடல் உறுப்பில் இந்தக் கணையம் (Pancreas) தான் இன்சுலின் என்பதை ஈர்த்து ஒழுங்குபடுத்தும் கருவி,  ஒரு நாள் அதிகமாக உட்கார்ந்தே இருப்பது அதிகமான அளவு இன்சுலின் அதிக அளவில் உற்பத்தியாவதற்குக் காரண மாக - சர்க்கரை நோயைத் தோற்று விக்கிறது.

செரிமான உறுப்புகள்:

உட்கார்ந்தே இருப்பதால், செரி மானப் பணிகளைச் செய்யும் வயிற்று உறுப்புகள் சுருங்கி, செரிமானத்தைத் தாமதிக்கிறது. இப்படி சரியானபடி ஆகாத மிகவும் தாமதமான செரிமானம் - வயிற்றில் ஒரு பிடிப்பு (வலி) (Cramping, Bloating) நெஞ்சு எரிச்சல் (Heart Burn)  மலச்சிக்கல் (Constipation) இவைகளை உருவாக்குகிறது.

உடற்பயிற்சி ஏதும் செய்யாது மிக நீண்ட நேரம் அமர்ந்தே இருப்பதனால், சுறுசுறுப்பு இன்றி மிகவும் டல்லாக குறைந்த சக்தியை மட்டுமே பெறும் அளவுக்கு ஆக்கி அசத்தி உட்காரவும் வைத்துவிடுகிறது!

எனவே, அடிக்கடி எழுந்து குறு நடை நடைப் பயிற்சி செய்து; உள்ளே, வெளியே சென்று தண்ணீர் குடித்தோ, உரையாடியோ திரும்புங்கள்.

இன்று வந்துள்ள இந்து ஆங்கில நாளேட்டில் சர்க்கரை நோய் வரு வதற்கு நான்கு முக்கிய காரணங்கள் என்பவைபற்றியும் விளக்கி ஒரு செய்திக் கட்டுரை வந்துள்ளது.

அந்த நான்கு பெரிய (Big Four) என்ன தெரியுமா?

1. உணவு - கண்டதையும் அரைத்தல் (குறிப்பாக, வேக உணவுகள்)

2. உடற்பயிற்சி இன்மை - lack of exercise

3. உடற்பருமன் - Obesity

4. கொலஸ்ட்ரால் (கொழுப்புச் சத்து) மிகுதல்

இவற்றில் நாம் அனைவரும் கவனம் செலுத்துதல் முக்கியம் - மிக முக்கியம்  - நல வாழ்வுக்கு.

தமிழ் ஓவியா said...

எதிலும் மதப்பார்வை என்பது ஆபத்தானது!


தீவிர அரசியலில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஊடுருவ வேண்டும் என்ற திட்டத்தின்படி ராம் மாதவ் சிவ்பிரகாஷ் போன்றோர் 2014 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி  பாஜகவில் இணைந்தனர். அதற்கு முன்வரை ஆர்.எஸ்.எஸின் செய்தித் தொடர்பாளராக இருந்த ஆந்திரக்காரர் இவர்.

முக்கியமாக ராம் மாதவ் பாஜகவில் இணைந்த உடனேயே பள்ளிக் கல்வியில் மாற்றம் குறித்த கூட்டத்திற்கு கலந்தாய்வு செய்ய அரசுக்கு சிறிதும் தொடர்பில்லாத பல இந்து அமைப்புகளின் தலைவர்களை அழைத்து ஸ்மிரிதி இராணியுடன் பேசச் செய்தார். கடந்த ஜூலை 10 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடனான ஸ்மிரிதி இராணியின் சந்திப்பு முடிந்த பிறகுதான் சமஸ்கிருத பிரச்சினை வெடித்தது.    ராம் மாதவ் மத்தியில் உள்ள சிறுபான்மை இன அதிகாரிகளையும், உயர்பதவி வகிக்கும் பலரையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து மத ரீதியாகவே விமர்சனம் செய்து வந்தார்.

ஜனவரி 26 ஆம் தேதி நடந்த குடியரசு நாள் விழாவில் அமீத் அன்சாரி கொடிவணக்கம் செலுத்தவில்லை என்று கூறி பிரச்சினையைக் கிளப்பியதின் பின்புலத்திலும் ராம்மாதவ் இருந்திருக்கிறார்.  ராம்மாதவின் இதுபோன்ற மட்டமான செயல்களுக்கும் மோடி மறைமுக ஆதரவுஅளித்தார். ராம் மாதவ் எழுப்பும் எந்தவொரு செயலுக்கும் பாஜக தரப்பில் மறுப்போ அல்லது வருத்தமோ தெரிவிப்பதில்லை. குடியரசு நாள் விழா விவாதத்தில்கூட துணைக் குடியரசுத் தலைவர் அலுவலகம் தான் விதிப்படி குடியரசுத் தலைவர் தலைமையில் நடக்கும் விழாவில் துணைக் குடியரசுத் தலைவர் கொடிவணக்கம் செலுத்தக் கூடாது என்ற விதி உள்ளதைக் கூறியுள்ளது.  கடந்த ஞாயிறு அன்று  டில்லியில் நடைபெற்ற உலக யோகா நாள் நிகழ்ச்சிக்கு துணைக் குடியரசுத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஹமீத் அன்சாரி ஏன் வரவில்லை என தேவையில்லாமல் கேள்வி எழுப்பி இருந்தார்.

மிகவும் உயர்ந்த பதவியில் உள்ளவரை சிறுபான்மை யினத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக மீண்டும் மீண்டும் அவரை இழிவுபடுத்தும் நோக்கில் செயல் படுகிறார்கள். எதிலும் மதப் பார்வைதான் இந்த மதம் பிடித்தவர்களுக்கு. முதலில் யோகா நாள் விழாவில் கலந்துகொள்ள துணைக் குடியரசுத் தலைவருக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவேயில்லை. இதற்கு ஆயுர் வேத அமைச்சகம் தெரிவித்துள்ள சப்பைக் காரணமானது பிரதமர் தலைமையில் நடக்கும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவருக்கு அழைப்பிதழ் அனுப்பப்படுவதில்லை என்று கூறியிருந்தார். ஆனால், இது மிகவும் பொய்யான ஒரு தகவலாகும்; அரசின் சார்பில் எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் மரியாதை நிமித்தமாக குடியரசுத்தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு தகவல் தெரிவிக்கப்படும். இது பாரம்பரியமாக இருந்துவரும் நடைமுறையேயாகும்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை, மோடி நேரில் சந்தித்து உலக யோகா நிகழ்ச்சிபற்றி உரையாடி அழைப்பிதழ் கொடுத்துள்ளார்; குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி யோகா நாள் வாழ்த்துக்களும், அதற்காக சிறப்புரையும் ஆற்றினார். அப்படி இருக்க துணைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல்  இருந்துவிட்டு குட்டு உடைந்த பிறகு, ஒரு அமைச்சகமே இப்படி மக்களிடையே பொய் கூறியுள்ளது.

புளுகினாலும் பொருத்தமாகப் புளுகவேண்டாமா? கெட்டிக்காரன் புளுகே எட்டு நாளைக்குத்தான் - இவர்கள் புளுகோ இரண்டு நாள்களுக்குத் தாங்கவில்லையே!

யோகாவுக்கு வராத துணைக் குடியரசுத் தலைவர் பாகிஸ்தான் செல்லவேண்டும் என்று வி.எச்.பி. முன்னணி தலைவரான பிராய்ச்சி சாமியாரிணி கீழ்த்தரமாகப் பேசியுள்ளார்! பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள் என்று இப்படி இந்தக் கூட்டம் அடிக்கடி கூறுவது - பக்கத்து நாட்டையும் பகைக்கும் தன்மையதே!

முதலில் துணைக் குடியரசுத் தலைவர் உடல் நிலை சரியில்லாததால் கலந்து கொள்ளவில்லை என்று மேலும் ஒரு பொய்யைக் கூறிய உடன் தான் மத்திய அரசின் ஏமாற்றுவேலை வெளியே தெரியவந்துள்ளது.

ராம் மாதவின் இந்த பிரிவினைவாத நடவடிக்கை குறித்து காங்கிரஸ் கூறியதாவது, அன்சாரி புறக்கணிக்கப் பட்டதன்மூலம் பா.ஜ.க.வின் பிரிவினைவாத அரசியல் முகம் வெளிப்பட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள மத்திய ஆயுர்வேத அமைச்சர் சிறீபாத் நாயக் தெரியாமல் இந்த தவறு நிகழ்ந்து விட்டதாகவும், ராம் மாதவும் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இதை தவிர்த்திருக்க முடியும் என்று கூறியுள்ள அவர், நடந்த தவறுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவர் ஒரு முஸ்லிம் என்பதாலேயே இந்த இந்துத்துவாவாதிகளால் குறி வைத்துத் தாக்கப்படுகிறார். மிகப்பெரிய பதவியில் உள்ளவர்களுக்கே இத்தகைய அவமானம் என்றால், பி.ஜே.பி. ஆட்சியில் சட்டம் ஒழுங்கையோ, மரபுகளையோ, நாகரிகத்தையோ எதிர்ப்பார்க்க முடியுமா?

தமிழ் ஓவியா said...

குலத் தொழிலுக்குத் தலைமுழுக்கிடுக!


எப்பாடு பட்டாவது மக்களைப் படிக்க வைத்து வசதி செய்து கொடுத்துத் தகப்பன் வேலையை விட்டு, ஜாதி வேலையை விட்டு, வேறு வேலைக்கு அனுப்பவேண்டும். எந்தத் தலை முறையும் தன் ஜாதி வேலைக்கே வராமல் செய்வதுதான் முக்கியக் கடமையாகும். _ (விடுதலை, 9.5.1961)

தமிழ் ஓவியா said...

நீதிக்கட்சியின் நூற்றாண்டு விழாவை நடத்துகின்ற தகுதி யார் யாருக்கெல்லாம் உண்டு

செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு பேச்சு
கரூர், ஜூன் 24_ கரூர் மாவட்ட திராவிடர் கழ கத்தின் சார்பில் திராவி டர் விழிப்புணர்வு 4ஆவது வட்டார மாநாடு வேலா யுதம்பாளையத்தில் பெரி யார் திடல், ச.சங்கரன் நினை வரங்கம் மலைவீதியில் நடைபெற்றன. நிகழ்ச்சி யில் ஆ.பழனிசாமி (பகுத் தறிவாளர் கழகம்) அவர் கள் அனைவரையும் வர வேற்று பேசினார். கரூர் ஒன்றியத் தலைவர் சு.பழனி சாமி தலைமையில் நடை பெற்ற மாநாட்டில் பெரி யார் சுயமரியாதைப் பிரச் சார நிறுவனத்தலைவர் பொத்தனூர் க.சண்முகம் மாநாட்டு கொடி ஏற்றி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியின் தொடக் கத்தில் திண்டுக்கல் அழ கர்சாமியின் மந்திரமா? தந் திரமா? நிகழ்ச்சியை செய்து காட்டினார். சாமியார்கள் செய்யும் மந்திர வித்தை கள், பித்தலாட்டங்கள் ஆகியவற்றினைப் பற்றி எல்லாம் மந்திரம் அல்ல தந்திரமே என்று செய்து காட்டினார். மாநாட்டின் சிறப்புரையை தலைமைக் கழகப் பேச்சாளர் என்ன ரெசு பிராட்லா மத்திய, மாநில அரசுகளின் மக் கள் விரோத இந்துத்துவா கொள்கைகளை பரப்பும் செயல்களை கண்டித்துப் பேசினார். இறுதியாக கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு பேசிய தாவது:_

நீதிக்கட்சி தொடங்கி வரும் நவம்பர் மாதம் 20ஆம் தேதி 100 ஆண்டு ஆகிறது. தமிழ்நாட்டில் நீதிக்கட்சியின் நூற் றாண்டு விழாவை நடத்து கின்ற தகுதி திராவிடர் கழகத்திற்கும், திமுக, மதி முக போன்ற தோழமை கட்சிகளுக்கு மட்டும் சொந்தம் கொண்டாட தகுதி உள்ளது. பிஜேபியி னர் ராகுல் காந்திக்கு என்ன படிப்பு தகுதி உள் ளது என்று கேட்கின்றனர். ஆனால் பிஜேபி மத்திய கல்வி அமைச்சர் ஸ்மிருதி ரானிக்கு என்ன கல்வித் தகுதி என்று காங்கிரஸ் கேட்டனர் பி.காம் என்று அமைச்சர் சொன்னார் ஹார்வர்ட் பல்கலைகழ கத்தில் நடந்த பயிற்சி முகா மில் 15 நாட்கள் கலந்து கொண்டு சான்றிதழ் வாங்கியுள்ளதை டிப் ளமோ படித்தேன் என்கி றார். உலகில் 53 இராமா யணங்கள் உள்ளது. ஜப் பான், இந்தோனேசியா, தாய்லாந்து, திபெத், இலங்கை போன்ற நாடு களில் ஒவ்வொரு இராமா யணக் கதை உள்ளன. இந் தோனேசியாவில் உள்ள இராமாயணத்தில் இரா மன் தலையை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்திருந்தாக அறிஞர் அண்ணா எடுத்து கூறி னார். கல்கியில் இராஜாஜி எழுதிய இராமாயணத் தில் எட்டாவது பக்கத்தில் இராமன் கடவுள் அல்ல கற்பனை கதை என்பதை மு.கருணாநிதி முரசொலி யில் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் இராமாய ணத்தை முழுவதுமாக படித்தவர் பெரியார், இராஜாஜி இருவர் மட் டும் தான், உலகத்தில் மூன்று இனம் (வெள்ளை, கருப்பர் _ (நீக்ரோ இனம்), மாநிறம் (மங்கலான சிவப்பு) சாப்பிடவே வழி யில்லாமல் இருக்கும்போது யோகா ஒரு கேடா என் றார் லல்லுபிரசாத் யாதவ். தமிழகத்தில் இரண்டு முறை முதல்வர் பொறுப்பு வந்தும், வேண்டாம் என்று உதறித் தள்ளியவர் பெரி யார் என்று செயலவைத் தலைவர் பேசினார். இறுதியாக பெருமாள் நன்றி கூறினார்.

தமிழ் ஓவியா said...

யோகா திராவிடர் கலையே! ஆரியர்களுடையது அல்ல!

சூழ்ச்சியால், தங்கள் கலையாக்கிக் கொண்டனர்

பெங்களூரு மடாதிபதி வீரபத்ர சென்னமல்ல அதிரடி!பெங்களூரு ஜூன் 23_ யோகக்கலை திராவிடக் கலாச்சாரம் கொடுத்த கொடையாகும், அதை ஆரியர்கள் சூழ்ச்சி செய்து தனதாக்கிக் கொண் டார்கள்  என்று, நிடுமா முடி மடத்தின் மடாதிபதி வீரபத்ர சென்னமல்ல சுவாமிகள் தெரிவித்தார்.

பெங்களூரு நகரில் திங்களன்று நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் நிடுமாமுடி மடத் தின் மடாதிபதி வீரபத்ர சென்னமல்ல கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் போது யோகா குறித்து அவர் கூறியதாவது:  யோகா கலை என்பது வாழ்வியல் தொடர்பான ஒன்று இது சிந்துவெளி நாகரிகத்தில் இருந்து தொடர்ச்சியாக திராவிட நாகரிகம் உள்ள இடங்கள் அனைத்திலும் வியாபித் திருந்தது. இது ஒரு தனிப் பட்ட இந்து மதத் துற வியோ அல்லது முனிவர் களோ வழங்கியது அல்ல, யோகாவிற்கும் ஆரிய வேத கலாச்சாரத்திற்கும் எள்ளளவும் தொடர் பில்லை. ஆரியர்கள் திரா விடர்களின் இந்த வாழ் வியல் கலையை தங்கள தாக்கிக் கொண்டனர். பிறகு அதனுடன் வேத ஸ்லோகங்களை இணைத்து அதை வேதகால கலையைப் போல் மாற்றிவிட்டனர்.   யோகா என்பது இந்து மத முனிவர்கள் அல்லது குருக்கள் கொண்டு வந்த கலை என்று தற்போது அதிகம் பேசப்பட்டு வரு கிறது. ஆனால் இது முழுவதும் பொய்யான ஒன்றாகும். யோகா கலையை வேதகாலத்தில் கற்றுக்கொண்டவர்கள் தங்களது மாணவர்களுக்கு இந்தக்கலை குறித்த பொய்யான தகவலைக் கூறிவைத்தனர். இந்த பொய்த்தகவல் காரண மாக பிற்காலத்தில் இது வேதமதம் தொடர்புடைய தாக மக்கள் நினைத்துக் கொண்டனர்.   யோகா என்பது மதம் தொடர்பானது அல்ல; இது மனித குலத்திற்குத் தேவையான நல்ல ஒரு மென்மையான உடற் பயிற்சியாகும். மனவளம் பெறவும் யோகா மிகவும் உதவியாக இருக்கும்.

ஆனால், தற்போது சிலர் யோகா பயிற்சிக்கு மதச்சாயம் பூசி, பணம் பார்க்கும் தொழிலாக  மாற்றிவிட்டனர். யோகாவின் மூலம் பணம் பார்ப்பவர்களால் எப்படி மக்களைத் தெளிவாக வைத்திருக்க முடியும்? இந்துத்துவ அமைப் புகள் வலுக்கட்டாயமாக யோகாவை பிறரிடம் திணிக்க முயற்சிக்கிறது. இந்துத்துவ அமைப்பு களின் பிடியில் இருந்து யோகா விடுதலை பெற்று அனைவரிடமும் போய்ச் சேரவேண்டும் என்று, நிடுமாமுடி மடத்தின் மடாதிபதி வீரபத்ர சென்னமல்ல சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...

கவனிக்கவேண்டும்

மதத்தைக் காப்பாற்றவே கோயில்களும், சொத்துகளும் அவற்றைக் காக்க மடங்களும், மடாதிபதிகளும் ஏற்பட்டனர். இவை மக்கள் வாழ்க்கைக்கு அவசியமா? அதனால் மக்கள் கஷ்டம் நீங்குமா, நீங்காதா என்பதைத்தான் கவனிக்கவேண்டும்.
_ (விடுதலை,3.12.1962)

தமிழ் ஓவியா said...

யாகம் நடத்திய அதிகாரிக்கு மன்னிப்பாம்!


சென்னை, ஜூன் 23_ தமிழகத்தின் டெல்டா மாவட் டங்களில் பாசனத் துக்கு தேவையான தண் ணீர் இல்லை. எனவே, பயிர்கள் கருகும் நிலை உருவானது. எனவே, திருச்சி நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன், 30 உப கோட்ட அலுவலகத்துக்கு சுற்றறிக்கை அனுப்பினார்.

அதில், மழை வேண்டி ஒவ்வொரு அலுவலகம் சார்பில் அந்தெந்த பகுதிகளில் உள்ள கோயிலில் சிறப்பு யாகம் நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்படி கடந்த 3ஆம் தேதி திருச்சி மண்டலத்தில் 30 கோயில்களில் சிறப்பு யாகம் நடந்தது.  இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், பொதுப் பணித் துறை தலைமை அறிவுரை இல்லாமல் அந்த தலைமை பொறியாளர் தன்னிச் சையாக யாகம் நடத்த உத்தர விட்ட தாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அந்த அதிகாரியிடம் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டுமென்று கேட்டு பொதுப் பணித் துறை தலைமை அறிவிக்கை அனுப்பியது. இந்த நிலையில், அரசு தரப்பில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று பொதுப் பணித் துறை தலை மைக்கு உத்தரவிட்டதாக கூறப்படு கிறது. இதனை தொடர்ந்து அந்த தலைமை பொறியாளரை அழைத்து விளக்கம் கேட்டதுடன், அவரை மன்னித்து அனுப்பிவிட்டது.

இதுகுறித்து பொதுப் பணித்துறை உயர் அதி காரி ஒருவர் கூறும் போது, மழை வேண்டி யாகம் நடத்த உத்தர விட்ட பிரச்சினையில் தலைமை பொறியாளர் மீது நடவடிக்கை எடுப்ப தால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை. இதுதொடர்பாக மேலிடம் தலையிட்டு தலைமை பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று உத்தர விட்டதால் அவரிடம் விளக்கம் மட்டும் கேட்கப்பட்டது.

தொடர்ந்து பொதுப் பணித்துறை தலைமை அனுமதி இல்லாமல் இனிமேல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்ற அறிவுரையும், மன்னிப்பும் வழங்கியது பொதுப்பணித் துறை என்றார்.

தமிழ் ஓவியா said...

கீதைக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு!கீதை மனிதநேயத்தை சிதைக்கிறது, அரசு அலுவலகங்களில் பகவத் கீதை படிக்க கொடுப் பது அமெரிக்க மதச்சார்பின்மைக்கு எதிரான தாகும் என்கிறார்- அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவ்விக்.

அமெரிக்க ஆளும் கட்சியின் இடஹோ மாகாண உறுப்பினர் தனது மாகாண அரசு அலுவலகத்தில் பகவத் கீதைவகுப்பு  குறித்த நிகழ்ச்சிக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது இந்து மதம், மனிதர்களைப் பிரிக்கும் ஜாதியை மய்யமாகக் கொண்டது, பகவத் கீதை ஜாதியை வலியுறுத் துகிறது மனித நேயமற்ற கருத்தை வலியுறுத்தும் ஒரு மதவழிபாடு இங்கு நடைபெறுமாயின் அது அமெரிக்க மதச்சார்பின்மைக்கு பங்கம் விளைவிக்கும் என்று கூறினார்.

அமெரிக்காவின் இடஹோ மாகாண அரசு அலுவலகத்தில் பகவத் கீதை தொடர்பான வகுப்பு ஒன்றை நடத்த அம்மாகாண உறுப்பினர் களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான பரிசீலனையின் போது இடஹோ மாகாண உறுப்பினர் ஸ்டீவ் விக் கூறியதாவது:  அமெரிக்காவில் எந்த ஒரு மாகாணத்திலும்  அரசு அலுவலகங்களில் பகவத் கீதைவகுப்பு களுக்கு அனுமதியளிக்கக்கூடாது.

மேலும் இந்து மதம், அமெரிக்க அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டுள்ளது.  அமெரிக்காவின் அரசமைப்புச் சட்டம் தயாரிக்கப்பட்ட போது அனைத்து மதவிதிகளும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது இந்துமதம் மற்றும் அதில் உள்ள ஜாதிய பேதங்கள் குறித்து அந்த மத பிரதிநிதி களுடன் விவாதிக்கப்பட்டது.

அந்த மதத்தில் மனிதர்களைப் பிரிக்கும் ஜாதி உள்ளது. ஆகை யால் அமெரிக்க அரசமைப்புச் சட்ட நூலில் இந்துமதம் குறித்த எந்த ஒரு வாசகமும் இடம் பெறவில்லை, பகவத் கீதை மனிதர்களைப் பிரிக்கும் ஜாதியை வலியுறுத்துகிறது,

பிறப்பால் ஜாதிபாராட்டும் நூல் பகவத் கீதை, பிறப்பால் ஒருவரை ஜாதிகளாகப் பிரிக்கும் மனிதநேயமற்ற கருத்தைக் கூறும் பகவத் கீதை என்ற நூல் வலியு றுத்தும் மதம் அமெரிக்க மதச்சார்பின்மைக்கு பங்கம் விளைவிக்கும், அதை அமெரிக்க அரசு அலுவலகங்களில் படிக்கக்கூடாது என்று கூறி இந்து மதவழிபாடு நடத்த எதிர்ப்பு தெரிவித்து அந்தக் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

மேலும் அவர் முகநூலில் எழுதியுள்ளதாவது, இந்து மதவழிபாட்டை ஆதரித்துதான் இந்திய நாட்டுடன் நட்புறவை வலுப்படுத்தவேண்டும் என்று சொல்வதற்கில்லை. எனது கருத்துகள் இந்தியாவில் தவறாகப் பிரச்சாரம் செய்யப்பட லாம். அதுகுறித்து, நான் கவலைப்படமாட்டேன். எனது கருத்துகளை மனிதநேயமுள்ள இந்தி யர்கள் பாராட்டுவார்கள் என்று தனது முக நூலில் எழுதியிருந்தார்.

தமிழ் ஓவியா said...

மூளையின் அதிசய செயல்பாடுகள்மூளையின் எடை 1200 கிராம் முதல் 1350 கிராம் அளவுதான். ஆனால் இதில் 100 பில்லியன் நரம்பு செல்கள் உள்ளன. ஒரு பில்லியன்: 100 கோடி. உலகின் மிகப்பெரிய அதிசயங்களில் ஒன்று மனித மூளை. உங்கள் மூளை மிகவும் சுறுசுறுப்பாக, பரபரப்பாக இல்லாமல் ஓய்வாக இருக்கும் நேரத்தில் தான் புதுமையான புதுப்புது ஆலோசனைகளை கண்டு பிடிப்புகளைச் சொல்லும்.

மிகவும் சோர்வாக இருக் கின்றதா? அதிக மூளை உழைப்பு உங்களை களைப்பாக்கி விட்டது என்றால் சற்று ஓய்வு எடுங்கள். நல்ல குளியல் எடுங்கள். அப்போது நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையில் புதுப்புது யோசனைகள் கிடைக்கும். நம்புங்கள் இது ஆராய்ச்சி பூர்வமான உண்மை.

* மனஉளைச்சல் மூளையை சுருங்கச் செய்து சிரிதாக்கி விடுகின்றது. சுருங்கிய மூளையால் அநேக பாதிப்புகள் ஏற்படும்.

* ஒரே நேரத்தில் பல விஷயங்களை நினைப்பது மூளைக்கு சுமையாக இருக்கும். பொறுமையாக ஒவ்வொன்றாக செய்தால் நிறைய சாதிக்கலாம்.

* சின்னச்சின்ன தூக்கம். அதாவது, பத்து நிமிடம் கண்மூடி அமைதி யாக இருப்பது மூளையின் செயல்பாட்டுத்திறனை கூட்டும்.

* ஹிப்போகாம்பஸ் எனும் பகுதியில் தான் மூளை நினைவுகளை பதிவு செய்யும். மூளை மிக வேகமாக அதிக மாக பதிவு செய்யும் போது பல விஷயங்களை பதிவு செய்ய மறந்து விடுகின்றது. 10 அல்லது- 20 நிமிட குட்டித் தூக்கம் ஞாபகத் திறனை கூட்டுகின்றது. படிக்கும் ஆற்றலை அதிகரிக்கின்றது.

உங்கள் மூளையின் சிறந்த நேரம் எது என்று நீங்களே உங்களை ஆராய்ந்து பாருங்கள். பலர் காலை நேரத்தில் நல்ல சுறுசுறுப்புடன் இருப்பார்கள். மணி அடித்தார் போல் இரவு 9 மணிக்கு படுத்து தூங்கி விடுவார்கள். பலர் இரவு எட்டு மணிக்கு மேல் தான் படிப்பார்கள், எழுதுவார்கள். இரவில் வெகு நேரம் கண் விழித்திருப்பார்கள்.

காலை 8 மணிக்கு முன்னால் எழுந்திருக்க மாட்டார்கள். பொதுவில் அன்றாட செயல்களுக்கான மூளையின் சிறந்த நேரங்கள் காலை 9 முதல் 11 மணி ஆகும். மூளை சிறிதளவு ஸ்டிரெஸ் ஹார்மோன் கார்டிசால் இருக்கும். காரணம் படிப்போ, வேலையோ அதற்காக உங்களை தயார்படுத்தி பழகியிருப்பதால் நல்ல கவனத்தை செய்யும் வேலையில் உங்களால் செலுத்த முடியும்.

தமிழ் ஓவியா said...

கிடுக்கிப்பிடியில் பிஜேபி முதல் அமைச்சர்

லலித்மோடி எனது உறவினர் - அவருக்கு அவமானம் என்றால் அது எனக்கும் தான்!

வசுந்தரா ராஜே கடிதம் அம்பலமானது


லலித்மோடியின் அழைப்பின் பேரில் லண்டன் சென்ற நிதின் கட்கரி, வசுந்தரா ராஜே, ஸ்மிருதி இரானியுடன், லலித்மோடியின் நெருங்கிய நண்பரும், லண்டனில் லலித்மோடிக்கு நிதி உதவிகள் செய்துவரும் விஜய் ஜோலியும் 2011 ஆம் ஆண்டு எடுத்தபடம்


ராஜஸ்தான் மாநில முதல்வராக உள்ள வசுந் தரா ராஜே 2011-ஆம் ஆண்டு லண்டன் நீதிமன் றத்திற்கு எழுதிய கடி தத்தை காங்கிரஸ் கட்சியினர் டில்லி யில் வெளியிட்டனர். இந்தக் கடிதத்தில் லலித் மோடி தனது உறவினர் என்றும் தான் இந்தியாவில் உள்ள ஒரு மாகாணத்தின் மகா ராணி; லலித் மோடி எனது உறவினர், லலித் மோடிக்கு அவமானம் என்றால் அது மகாராணி யான எனக்கும் அவ மானம் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
அந்தக் கடித்ததின் முழு விவரம் வருமாறு:    இங்கிலாந்தின் நீதி மன்ற ஆவணப் பதிவு களில் இருந்து சண்டே மெயில் என்ற பத்திரி கைக்கு 2011 ஆகஸ்ட் 18 தேதியிட்ட ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அந்தக் கடிதத்ததில் முதல் பத்தியி லேயே நான் இந்தியாவின் ஒரு மாநில முதல்வராக வரும் தேர்தலில் தேர்ந் தெடுக்கப்படப் போகி றேன். ஆகையால், நான் எழுதியுள்ள இந்தக் கடி தத்தை பொதுப்படுத்தக் கூடாது; இதனால் எனது அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படலாம்.
 
என்று குறிப்பிட்டுள்ளார்.  அதைத் தொடர்ந்து அவர் எழுதியுள்ளதாவது: விரைவில் இந்தியா வில் ஆட்சி மாற்றம் ஏற்படும்; அப்போது எங்கள் கட்சி மத்தியிலும், மாநிலத்தி லும் ஆட்சிக்கு வரும்; தற் போது இருக்கும் காங் கிரஸ் அரசு விரைவில் வீழ்த்தப்படும்; மக்களி டையே நாங்கள் கடுமை யான பிரச்சாரம் மேற் கொண்டு வருகிறோம்.  காங்கிரஸ் அரசை மக்கள் வெறுக்கத் துவங்கி விட்டனர். ஆகையால் தான் இந்தியா முழுவதும் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
 
இந்தியா முழுவதும் தேசியக் கட்சிகள் பலமி ழந்து வருகின்றன. ஆகை யால் தென் மாநிலங்களில் பாஜகவும் வடமாநிலங்க ளில் காங்கிரசும் வெற்றி வாய்ப்பை இழக்கும், இருப்பினும் வரும் காலத் தில் பாஜகவின் கைகள் பலம்பொருந்தி இருக்கும்.    லலித் மோடி எனது உறவினர், எனது தலை மையில் ஆன அரசு 2008-ஆம் ஆண்டு தோல்வி அடைந்ததும், லலித் மோடியை உடனடியாக ராஜஸ்தான் கிரிக்கெட் போர்ட் தலைவர் பதவி யில் இருந்து அரசு நீக்கி விட்டது. இது பழி வாங்கும் செயலாகும். என் மீது காங்கிரஸ் ஆட்சி யாளர் பொறாமை கொண்டுள்ளனர். அவர் களுக்கு எனது உறவினர் கள் முக்கியபதவியில் இருப்பது பிடிக்கவில்லை.
 
அதன் பிறகு எனது அரசியல் எதிரிகள் லலித் மோடி மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவரைச் சிறை யில் தள்ள முயற்சி செய் தார்கள். தேர்தல் பிரச் சாரத்தின் போது லலித் மோடியின் மீது பொய் யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அதற்கு நான் உடந்தையாக இருப்பது போல் காட்டிக் கொண் டார்கள். இதன் காரண மாக நான் தோல்வி யடைய நேர்ந்தது. நான் தோல்வியடைந்த பிறகு அசோக் கெலாட் தலை மையில் உள்ள அரசு எனக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. என்னை மோசடிக்காரி என்றும் ஊழல்வாதி என்றும் கூறி வருகிறார்கள்.
 
லலித் மோடி இங் கிலாந்தின் பிரபல விளை யாட்டான கிரிக் கெட்டை இந்தியாவில் பிரபலப்படுத்தியவர்களுள் முதன்மையானவர், அய். பி.எல். என்னும் கிரிக் கெட்டை கொண்டுவந்து குறுகிய காலத்திலேயே இந்தியாவில் உள்ள அனைத்து இளைய தலை முறைகளிடம் கொண்டு சேர்த்தவர். இது ஒரு சாதனையாகும்; லலித் மோடியின் இந்தச் செயல் பாராட்டத்தக்கதாகும். அவர் எனது உறவினர் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். லலித் மோடியின் மீது எந்த ஒரு குற்றச்சாட்டும் இந்தியா வில் இல்லை, தற்போது உள்ள பிரச்சினை எல் லாம் அரசியல் சூழ்ச்சி தான், ஆகையால் அவ ருக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையும் இங்கி லாந்து நீதிமன்றம் எடுக் கத் தேவையில்லை.  இங்கி லாந்து நீதிமன்றம் தவறு தலாக லலித்மோடி மீது நடவடிக்கை எடுத்தால், அது லலித்மோடியை அவமானப்படுத்துவது போலாகிவிடும். லலித் மோடிக்கு ஓர் அவமானம் என்றால் அது ராஜஸ் தானின் மகாராணியான எனக்கும் அவமானம் தான் என்று என்னுடைய சுயநினைவுடன்  ஆங்கி லத்தில் நானே எழுது கிறேன்.

இத்துடன் லலித் மோடி எங்களது குடும்ப உறவுகள் குறித்த சில ஆவணங்களை இணைத்துள்ளேன். மேலும் அதிக ஆவணங்களை நான் நேரில் கொண்டு வந்து இங்கி லாந்து நீதி மன்றத்தில் வழங்குவேன்.

தமிழ் ஓவியா said...

மாலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளிகளைத்
தப்பிக்கவிட மத்திய - மாநில அரசுகள் அழுத்தம்!

அரசு வழக்குரைஞரே அம்பலப்படுத்துகிறார்


டில்லி, ஜூன் 26_ மாலேகான் குண்டுவெ டிப்பில் கைதாகி சிறையில் உள்ள கைதிகளின் வழக்கை தீவிரமாக கையாளக் கூடாது என்றும், அவர் களை விரைவில் விடு விக்கும் வகையில் வழக் காட வேண்டுமென்றும் தனக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததாக அரசுத் தரப்பில் ஆஜராகி வழக்காடி வரும் ரோகினி செலியன், ஆங்கிலப் பத் திரிகை ஒன்றிற்குப் பேட்டி யளித்துள்ளார்.

இதன் விவரம்: 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி மகாராஷ்டி ராவில் உள்ள மாலேகான் பகுதியில் வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 37 பேர் பலியானார்கள், 140-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கை விசாரித்த காவல் துறை, உள்ளூரைச் சேர்ந்த சில முஸ்லீம் இளைஞர் களைக் கைது செய்தது. அதன் பிறகு இந்த வழக்கு சிறப்பு புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்ட பிறகு இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த் தியது தெரியவந்தது.  தொடர் விசாரணைக்குப் பிறகு பிரங்யா சிங் தாக் கூர் என்ற சாமியாரினி, சிவ்நாராயண் கோபால், ராணுவ அதிகாரியான சிரிகாந்த் புரோகித், கல சஹரா, ஷ்யாம் போன் றோர் கைது செய்யப்பட் டனர். இவர்களுடன் மேலும் 12 காவி பயங்கர வாதிகள் கைது செய்யப் பட்டனர். அதில் நான்கு பேர் தற்போது பிணையில் வெளியே வந்து விட்டனர். இவர்கள் இந்து அமைப் பான அபினவ் பாரத் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. இந்த அமைப்பிற்கும் ஆர்.எஸ். எஸ்.க்கும் தொடர்பு உள்ள தாக மும்பை தாக்குதலில் மரணமடைந்த காகரே புலனாய்வு செய்து கூறி யிருந்தார்.   தொடர்ந்து இந்த வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கின் அரசுத் தரப்பு வழக்குரைஞரான ரோகினி செலியன் பத்தி ரிகைக்கு அளித்த பேட் டியில் கூறியதாவது.

மோடி அரசு வந்த உடனேயே தேசிய புல னாய்வு அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் என்னை நேரில் சந்தித் தார். தொலைபேசியில் கூட பேசவேண்டாம் என்று கூறி நேரில் வந்த அந்த அதிகாரி,  உங்க ளுக்கு ஒரு செய்தி இருக் கிறது. இந்த வழக்கில் தீவிரமாக வாதாட வேண் டாம் என்று கூறினார்.

பிறகு இந்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி வழக் கின் விசாரணை நாளன்று, அதே அதிகாரி மீண்டும் வந்து  மேலிடத்தின் விருப்பப்படி இந்த வழக் கில் நீங்கள் வாதாட வேண்டாம். உங்களுக்கு பதில் வேறு வழக்குரை ஞர் நீதிமன்றத்தில் வாதா டுவார் என்று வெளிப் படையாகவே மிரட்டினார்.

இதற்குப் பதிலளித்த நான் நல்லது, ஏற்கெ னவே நீங்கள் சொல்லியி ருப்பதால் இதைத் தான் எதிர்பார்த்தேன். எனது கணக்கு வழக்கு களை முடியுங்கள். மேலும் இந்த வழக்கிலிருந்து என்னை விடுவிப்பதாக அறிவித் தால்தான் தேசிய புல னாய்வு அமைப்பிற்கு எதிரான வழக்குகளில்  -_ இந்த வழக்கில் அல்ல -_  ஈடுபட முடியும் என்று  கூறினேன்.
 
அதற்கு பிறகு அந்த அதிகாரி மற்றும் புலனாய்வு அமைப் பிலிருந்து யாரும் பேச வில்லை என்றார் அவர். ரோஹினி செலிய னுக்கு அரசு தரப்பில் தரவேண்டிய சலுகைகள் அனைத்தும் கடந்த சில மாதங்களாக குறைக் கப்பட்டுவிட்டன. அரசு தரப்பு ஓட்டுநர் திடீரென உடல் நிலை சரியில்லை என்று விடுப்பு எடுத்து விட்டார். அதனை அடுத்து நீங்களே ஓட்டுநரை வைத்துக் கொள்ளுங்கள் அதற்கு தேவையான பணத்தை அரசு வழங்கும் என்று கூறிய நிலையில் வழக்குரைஞர் தனக்கான ஓட்டுநரை வைக்க நடை முறையில் செய்ய இயலாத வகையில் பல்வேறு விதி களை புதிதாகப் புகுத்தியது.  மேலும் பயணச் செலவு, வழக்குச் செல வுகள் தொடர்பான விவ காரங்களில் தொடர்ந்து அலைக்கழிக்க வைக்கப் பட்டார். மத்திய அரசின் போக்கிற்கு துணைபோ காத காரணத்தால் வேறு வழியில் அவருக்கு தொந் தரவுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக வழக்குரைஞர் கூறியதாவது என்னை இந்த வழக்கில் இருந்து அவ்வளவு சாமா னியத்தில் விடுவிக்க முடியாது ஆகவே நானாக விலகிக்கொள்ளும் வகை யில் பல்வேறு வழிகளில் தொந்தரவு கொடுக் கிறார்கள். அதே நேரத்தில் ஒரு புதிய வழக்குரைஞர் இதை விசாரித்து வாதா டுவது சிரமம். அவர் எதுவும் செய்ய முடியாது. இந்த வழக்கை திரும்பப் பெற முடியாது என்பதால்  அரசு தரப்பு தோல்வி யுற்று வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் இதைத்தான் மத்திய அரசு விரும்புகிறது என்று கூறினார். தேசிய புலனாய்வுத் துறை அமைப்பு, பிரதம ரின் கட்டுப்பாட்டில் உள்ள ஓர் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

வாழ்க்கை

ஒருவன் வாழ்வது என்பது அவனுடைய வாழ்க்கையால் பிறர் நன்மையடைந்தார்கள், மற்றவர்கள் சுகங் கண்டார்கள் என்று அமைய வேண்டும்.
_ (விடுதலை,20.3.1956)

தமிழ் ஓவியா said...

காவல்துறை கவனிக்குமா?

இந்தியாவில் அதிகமாக இருப்பது ஓரல் கேன்சர் என்னும் வாய்ப்புற்று நோயும், மார்பகப் புற்று நோயும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அடையாறு புற்றுநோய் மருத்துவ மனைத் தலைவர் மருத்துவர் சாந்தா அம்மையார், சமீபத்தில் அறிக்கை ஒன்றில் இந்த வாய்ப்புற்றுநோய் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அதுவும் சென்னையிலேயே அதிகமாக உள்ளது என அபாய அறிவிப்பு விடுக்கிறார்.

சமீபத்தில் புகையிலை எதிர்ப்பு நாள் கொண்டாடப்பட்டபோது, சென்னை மாநகரக் காவல்துறை ஆணையாளரும், டாக்டர் சாந்தா அம்மையாரோடு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது புகையிலைப் பழக்கத்தின் கெடுதியை வலியுறுத்தியிருப் பதைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக விடிவு காலம் பிறக்கும் என்றுதான் எண்ணி னோம். ஆனால் சென்னை நகர வீதிகளில் எட்டுத்திசைகளிலும் சுற்றிப்பார்த்தால் தமிழ்ச்சமுதாயத்தைச் சீரழிக்கும், தமிழ்க் குடும்பங்களின் அமைதியை அழிக்கும், சோகத்தை ஏற்படுத்தும் போதைப் பொருள் தாராளமாக, எவ்வித பயமுமின்றி, தயக்க முமின்றி விற்கப்படுவதைக் காணலாம்.

அதிலும் கல்லூரிகளில் இன்றைய மாணவர்களின் பையைச் சோதனை செய்தால் தவறாமல் காணலாம். சென்னை நகர வீதிகளில் தடை செய்யப்பட்ட பான்பராக் விற்பனை ஒருபுறம் நடைபெறுகிறது என்றால் தடையிலில்லாமல் மலிவு விலையில் விற்கப் படும் போதைப் பொருட்கள் மற்றொருபுறம்.

வட்டமான வண்ணக்குடை, அதன் கீழே வடநாட்டுக்காரன் ஒருவன் வட்டத்தட்டில் வரிசையாக மூடிபோட்ட டப்பாக்கள், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது பீடாக்கடை. ஆனால் அங்கு விற்கப்படும் போதைப்பொருள் பெயர் மாவா

பத்து ரூபாய் சில இடங்களில் ஒன்பது ரூபாய்க்கும் கிடைக்கிறது. மாவா என்று கேட்டால் போதும் ஒரு சிறு பிளாஸ்டிக் கவரில், பொடிபோல் மேலே ஒரு ரப்பர் பேண்டு சுற்றி உடனே கிடைக்கிறது.

இந்த மாவா போடுகிறவன் வாய்குளறும். ஒரு மயக்கமூட்டும் வாசனை வரும். இதைப்போட்டால் மூளை மந்தமாகும். மூளைக்குப் போகும் ரத்தக்குழாயில் ரத்தத்தை உறைய வைக்கும். இது போட்டால் மது அருந்திய அளவிற்குத் தள்ளாட்டமும் இருக்கும். இந்த சுகம் பத்து ரூபாய்க்குள் சாலையின் ஓரங்களில் மட்டுமல்ல, முதன்மையான இடங்களில் காவலர் எதிரேயே விற்கப்படுவதுதான் கொடுமை. திருவல்லிக்கேணி பாரதிசாலை தொடக்கத் தில் எக்ஸ்பிரஸ் அவின்யூ எதிரில் மயிலாப் பூரில், வடசென்னையில் தாராளமாக விற்கப்படுகிறது. இவ்வாறு விற்பவர்கள் தவறாமல் மாமூல் கொடுத்து விடுவதாகவும் கேள்வி.

மதுரவாயலில் உள்ள பொறியியல் பல்கலைக்கழகம், கேளம்பாக்கம் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் அருகில் மிகத் தாரா ளமாக விற்பனை ஜோராக நடைபெறுகிறது.

இது போல் புகார் செய்யப்படும்போது ரெய்டு என்று ஏமாற்றுவது நடைபெறும். எங்கிருந்து வருகிறதோ அங்கேயே வராமல் தடுப்பதை விட்டு இது போல் ஏமாற்று வேலை. இதனால் பாதிப்பிற்குள்ளாவது மாணவர்கள் மட்டுமில்லை. நம் திராவிடச் சமூகத்தின் உழைக்கும் வர்க்கமான கட்டடக் கலைஞர்கள் சிறுசிறு பணியாளர்கள் என்று பலரும் அடக்கம்.

தலைக்கவசம் போடவேண்டும் என்று வலியுறுத்தும் நீதிமன்றம் இதைத்தடுக்கும் படி அரசுக்கு எச்சரிக்கக்கூடாதா?

அண்டை மாநிலமான கேரளத்தில் இந்த ஆபத்தான பொருள் விற்பனை கிடையாது. இங்கே அரசாங்கம், காவல்துறை பற்றிய அச்சமோ, கவலையோ இல்லாமல் ஒளிவு மறைவு கூட இல்லாமல் விற்கிறார்கள்.

இது இப்படியென்றால் வெற்றிலை பாக்குக் கடைகளில் பகிரங்கமாக விற்கப் படும் போதைப்பொருள் பெட்டி பெட்டியாக விற்கப்படும் போதைப் பொருளின் ஹான்ஸ் என்பது. மஞ்சள் வண்ண பிளாஸ்டிக் உறையில், முகர்ந்து பார்த்தாலே ஒரு வித மயக்கம் தரும் புகையிலைப் பொருள் வெளிப்படையாக விற்கப்படு கிறது. இதன் விலையும் மலிவு தான்.

ஏற்கெனவே தெருவிற்கு இரண்டுகடை என்று மதுபானக்கடையைத் திறந்து போதையை பரப்பும் அரசு மாவா, ஹான்ஸ் விஷயத்தில் மட்டும் நட வடிக்கை எடுத்து விடுமா?

சமூக ஆர்வலர்கள் என்போர் மது வுக்கு எதிராக மட்டும் குரல் கொடுத்தால் போதாது?

இந்தப் போதைப்பொருள் விற் பனையை முழுமையாக ஒழிக்க நீதிமன்றம் தான் செல்ல வேண்டுமா?

சென்னை நகரில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணியாளர்கள், பிரபல மான கடைகளில் பணிபுரியும் ஏராளமான வடநாட்டவர்கள் வருகையால் ஏற்பட்ட சமூகத் தீமை இது.

கழிவறை, யோகா என்றெல்லாம் பரப்புரை செய்யும் மய்ய அரசு, சமுதாயத்தை மெல்லக் கரையான் போல் அரித்துப் புற்றுநோய்க்கு வழிகாட்டும் இந்தத் தீமைக்கு, மனித மூளையைச் செயல்படாமல் தடுக்கும் நஞ்சை அகற்ற நடவடிக்கை எடுக்குமா?

வெற்றிலை பாக்குக் கடைகளில் பதினெட்டு வயதுக்குட்பட்டவர்களுக்குப் புகையிலைப் பொருட்கள் விற்பனை கிடையாது எனும் விளம்பரத்தைப் பார்க்கையில் இந்தக் கேலிக்கூத்தை நினைத்துச் சிரிப்பு வருகிறது.

- முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்
செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்

தமிழ் ஓவியா said...

சங்கராச்சாரியாரை சந்தித்த ரஷ்யர்!

இந்தியாவுக்கு 1964இல் வந் திருந்த ஒரு ரஷ்யப் பிரமுகரிடம், ஒரு பார்ப்பனர் -இந்தியாவுக்கு யார் வந்தாலும் சங்கராச்சாரியாரைப் பார்த்துவிட்டு வருவதுதான் முக்கியமான காரியம் என்று சொல்லி, அவரைச் சங்கராச் சாரியாரிடம் அழைத்துப்போனார்.

அந்த ரஷ்யர், பல விஷயங்களைப் பற்றி சங்கராச்சாரியாரிடம் பேசிவிட்டுக் கடைசியில் உங்கள் நாட்டில் உங்கள் சம்பிரதாயத்திற்கும் உங்கள் மத சம்பிரதாயத்திற்கும் விரோதமாகப் பெரியார் ஒரு இயக்கம் நடத்துகிறாரே, அதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன? என்று கேட்டார்.

அதற்குச் சங்கராச்சாரியார் ஆமாம் ! அப்படி ஓர் இயக்கம் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது என்றாலும், அது இன்றைக்குப் பதினேழுவருடங்களுக்கு முன்வரையில் நாங்கள் மிகக் கவலை கொள்ள வேண்டிய அளவுக்கு நடந்தது. இப்போது அதைப்பற்றிக் கவலைபடவேண்டிய அவசியமில்லாத நிலை ஏற்பட்டு விட்டது. அது பாட்டுக்கு அது நடைபெறுகிறது என்றாலும் அதனால் இன்று எங்களுக்கு எந்தவிதத் தொந்தரவும் இல்லை என்றாராம்.

அந்த ரஷ்யர் அதற்குப் பின் தந்தை பெரியாரையும் சந்தித்தார்; சங்கராச்சாரியார் கூறியது பற்றியும் கேட்டார். அவர் இப்படி கேட்கும்போது ஒரு பார்ப்பனரும் கூட இருந்தார். அப்போது தந்தை பெரியார்அதற்குப் பதில் சொன்னார். அது ஒரு நல்ல அளவுக்கு உண்மைதான். எப்படி என்றால், நம் நாட்டுக்குச் சுதந்திரம் வந்து 17 ஆண்டுகள் ஆகிறது. அது பார்ப்பனருக்கு வந்த சுதந்திரமே ஆகும்.

நம்மிலிருந்து விளம்பரமும் செல்வாக்கும் பெற்ற ஒரு கூட்டம் பார்ப்பனர்க்கு நிபந்தனையற்ற அடிமையாகக் கிடைத்துவிட்டது. அதனால் பார்ப்பனர்கள், இடையில் இழந்ததை யெல்லாம் திரும்பவும் பெற்றுக்கொண்டு மேலேற வசதி ஏற்பட்டது. -என்று தந்தை பெரியார் பதில் கூறினார்.Read more: http://www.viduthalai.in/page-7/103998.html#ixzz3eBDtz8O9

தமிழ் ஓவியா said...

மவுடீக எண்ணங்கள்

இந்தியா தன்னுடைய மத மவுடீகங்களைக் களைந்து விஞ்ஞானப்  பாதையில் திரும்ப வேண்டும். தேவையற்ற, பொருளற்ற எண்ணங்களும், சமூகப் பழக்கவழக்கங்களும்  இந்தியதாய்க்கு  சிறைச்சாலை எழுப்பியிருக்கின்றன. இவைகளே இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கின்றன.

இந்த மதக்கோட் பாடுகள் சமூக உறவு ஏற்படத் தடையாகவிருக்கின்றன. சமுதாய நடவடிக்கையில்  குறுகிய எண்ணத்தை  ஏற்படுத்தியிருக்கின்றன. ஒரு வைதீக ஆசார இந்து என்பவரின் மதமே, எதைச்  சாப்பி டுவது; எதைச் சாப்பிடக்கூடாது; யாருடன் உணவருந்தலாம்; யாருடன் இருந்து உண்ணக் கூடாது என்பதில் தானே,

மற்ற ஆன்மிகக் கருத்துக்களைவிட அக்கறை காட்டுவதாயிருக் கிறது? இந்த ஆசார இந்துவின் சமூக வாழ்வை சமயலறையின் சட்ட திட்டங்கள்தான் ஆதிக்கஞ் செலுத்திவருகின்றன ! முஸ்லீம்கள் இதுமாதிரியான பழக்கங்களிலிருந்து விடு பட்டாலும் அவனுக்கும் குறுகிய மதக்கோட்பாடுகளும்  சடங்கு களும்  இருக்கின்றன.

அவைகளை அவன் அடுத்தடுத்து அனுசரிக்க வேண்டும். இவைகளை எல்லாம் கடைப்பிடிக்கும் அவன் தன் மதம் போதிக்கும் பாடமான சகோதரத்துவத்தை  தருணத்தில் மறந்துவிடுகிறானே! -நேரு டிஸ்கவரி ஆஃப் இந்தியா

தமிழ் ஓவியா said...

கடவுள் இல்லை இந்திய விடுதலை போராட்ட வீரர் லாலா.லஜபதிராய் கருத்து(தோழர்  லஜபதிராய் அவர்கள் தனது நண்பர் தோழர் டி .பிர்லாவுக்கு எழுதிய கடிதம் ஒன்று பீபிள் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதின் மொழிபெயர்ப்பு.) ஒரு காலத்தில் கடவுளை நான் நம்பியதுண்டு. கடவுளை நோக்கிப் பிரார்த்திப்பதால், அவர் நமது வேண்டுகோளைக்கேட்டு நமக்கு நன்மை செய்கிறாரென நம்பினேன்.

நன்மையான தர்ம கைங்கர்யஞ் செய்கிறவர்களுக்குக் கடவுள் நன்மையையே செய்கிறார். என்றும், துஷ்டர்களை அடியோடு அழித்து நிக்கிரகஞ் செய்கிறாரென்றும் எண்ணினேன். இந்த நம்பிக்கையில் நான் மகா உறுதிகொண்டிருந்தேன். ஆனால் படிப்படியாக என் நம்பிக்கை குறைந்து கொண்டு வந்துஇப்பொழுது அந்த நம்பிக்கையே எனக்கில்லாமல் போய்விட்டது.

இந்த மாயவஞ்சகம்நிறைந்த ஒரு உலகத்தை ஆண்டு நடத்திக்  காப்பாற்றி வரும் ஒரு கடவுளை நான் எப்படி நம்ப முடியும்? அக் கடவுள் மகா அன்புடையவர் மகா கருணாநிதி, சத்தியவந்தர், சர்வ வல்லமையுள்ளவர், எங்கும் பரம்பொருளாக நிறைந்திருப்பவர் என்பதை நான் எப்படி நம்பக்கூடும்? மகா தயாநிதியாகி,

சத்தியமே ஒரு உருவான மெய்க்கடவுள் இருந்தால் இந்த உலகத்தைச் சிருஷ்டித்திருக்க முடியுமா? இந்த உலகம் அநீதி,நிறைந்தது சமத்துவத்திற்குப்  பரம விரோதியாய் இருக்கிறது. சகல கொடுமைகளுக்கும் உறைவிடம்.

மிருகத்தனமானது

வஞ்சகம், சூது, ஏமாற்றம் முதலியவை உருவெடுத்த மனிதர்கள் நிறைந்தது. இந்த நாசமான இந்த உலகத்தை சத்திய வந்தரான கடவுள் எப்படி உண்டு பண்ணியிருக்க முடியும்? பல ஆயிரக்கணக்கான கொடியர் ஜீவிக்கிறார்கள். இவ்வுலகில் இன்னும் பலர் முட்டாள்கள். மூளை என்பதே கிடையாது அன்பு, சத்தியம் நிறைந்த.

இருதயத்தை இழந்த துஷ்டர்கள் பல ஆயிரம். ஏழைகளை இம்சிக்கும் ராஷதர்களும், சத்ய வந்தரை தொல்லைப்படுத்தி, அடக்கி, நசக்கி, மண்ணுக்கும் இரையாக்கும் மிருகத்தனம் படைத்தவர்களும் இன்னும் பல ஆயிரம். கொள்ளை அடிக்கும் திருடர்கள் பலர், சுயநலமே உருக் கொண்ட தீயர்கள்  எத்தனையோ லட்சம் இந்த சுயநலப் பேய்களே மகாசொகுசாக, உல்லாச வாழ்க்கை நடத்தி வரு கிறார்கள், ஏழைகளை வஞ்சித்து இம்சித்துத் துன்புறுத்து கிறார்கள்.

ஏழைகளின் கதியோஅதோ கதிதான். அவர்கள் மானமிழந்து அடிமைகளாகிய, தரித்திரத்திற்குள்ளாகி, உண்ண உணவின்றி, உடுக்க ஆடையின்றி பசியால் வாடி மடிகின்றனர். முடிவில் மண்ணோடு மண்ணாகிப்போகிறார்கள். உலகில் இந்தக் கொடுமைகள் ஏன்? சத்தியமும், உண்மையும் உருக்கொண்ட ஒரு தெய்வம் இந்த கொடிய உலகத்தை உண்டு பண்ணி யிருக்கமுடியுமா?

வேதங்கள் பொய்

சத்தியம் என்பது என்ன? சத்தியம் எங்கிருக்கிறது? வேதங்களிலாவது உண்மை இருக்கிறதா அல்லது நம்பிக் கையாவது உண்டா? வேதங்களில் சத்தியத்தைக்கண்டுபிடித்து விட்டதாக சிலர் பறை சாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

அதெல்லாம் வெறும் பொய்க்கூற்று. அவர்கள் ஏதோ மாய்கையில் மூழ்கி அவ்வாறு அல்லற்படுகிறார்கள் வெறும் மத வெறி கொண்டவர்களே உண்மையிருப்பதாக உளறிக் கொண்டிருப்பதுண்டு. புத்த பகவா, கிறிஸ்துவோ, முகமது நபியோ உண்மையை கண்டு பிடித்திருக்கிறார்களா?

அவர்கள் கண்டுபிடித்த சத்தியம் எங்கே? அந்த சத்தியம் மறைந்து விட்டதா? அல்லது அதை போதிக்கப்புறப்பட்டவர்கள் திரித்து சத்தியத்தையே மறைத்து விட்டார்களா? இவர்கள் மனிதர் களைப் பாகுபாடுபடுத்தி பிரித்து வைத்தது ஏன்? சத்திய மென்றால் ஒற்றுமையின்றி பல பாகுபாடு உண்டு பண்ணி சுயநலத்துடன் வாழ்வதென்று அர்த்தமா?

லாலாஜி வாழ்க்கை

இவ்விதம் கூறும் நான் ஏன் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்டுவந்தேனெனக் கேட் கலாம். உண்மையைக் கூறுமிடத்து நான் சுயநல நோக்கங் கொண்டே பொது சேவையில் ஈடுபட்டேனென்று கூறுவேன். அதாவது நான் உள்ளவரை ஏதேனும் ஒரு காரியம் செய்து கொண்டிருக்கவேண்டும். இது மனித சுபாவம் ஒரு குணம். அதுசதா என்னைக் கிளர்ச்சி செய்யத் தூண்டிக் கொண்டிருக்கிறது.

(பகுத்தறிவு, 1933)

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

இன்றைய சுதந்திரம் வடநாட்டானுக்கும் அவன் மொழிக்கும் தென்னாட்டவர் அடிமையாய் வாழ வேண்டு மென்றே ஆக்கப்பட்டுவிட்டது. வெள்ளையரிடமிருந்து பெற்ற சுதந்திரத்தைவிட வடவரிடமிருந்து சுதந்திரம் பெறுவதே மிகமிக முக்கியமானது.
கம்பராமாயணக் கதை வெறும் பொய்க் களஞ்சியமே யாகும். அதன் கற்பனையை எடுத்துக் கொண்டால் அது ஒரு சிற்றின்பச் சாகரம். ஒரு மாதிரி காமத்துப் பால் ஆகும். நடப்பை எடுத்துக் கொண்டால் காட்டுமிராண்டித் தனத்தின் உருவகமே அது.

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் பற்றி அம்பேத்கர்பகுத்தறிவு தந்தை பெரியாரவர்கள் 1924-ஆம் ஆண்டில் பங்கேற்று நடத்திய வைக்கம் போராட்டம் அறிஞர் அம்பேத்கரின் உள்ளத்தில் ஓர் அரும் தாகத்தினை  விளைவித்தது !

திருவாங்கூர் நாட்டின் வைக்கத்தில் தீண்டத்தகாதோர் நுழையலாகாது எனத் தடுக்கப்பட்ட  ஒரு குறிப்பிட்ட  பாதையை பயன்படுத்துவதற்கு அவர்களுக்கு உரிமையுண் டென்று நிலைநாட்ட,  இராமசாமி நாயக்கர்  அமைதியான எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டார்  ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான  போராட்டத்தில் அந்த ஆண்டின் மிகச் சிறப்பு வாய்ந்த  நிகழ்ச்சி அதுவே.

மிகவும் கவலையோடு இக்கிளர்ச்சியைக்  கவனித்துக் கொண்டிருந்த அம்பேத்கர் மகாத் அறப்போரையொட்டி எழுதிய ஒரு தலையங்கத்தில் வைக்கம் கிளர்ச்சிபற்றி உள்ளம் நெகிழும் வண்ணம் குறிப்பிட்டார் என்னும் செய்தியை அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளிப்படுத்துகிறது.

புரட்சி மனப்பான்மையுடையவன் போப் ஆகவே மாட்டான். இக்கருத்து இந்திய பார்ப்பனர்கட்கும் பொருந்தும் போப் ஆகிறவன் புரட்சி செய்ய விரும்ப மாட்டான் என்றால் பார்ப்பானாகப் பிறந்தவனும் புரட்சி செய்ய விரும்ப மாட்டான் என்பது உறுதி. பார்ப்பானாகப் பிறந்தவன் சமூகப் புரட்சிக்காரனாக இருப்பான் என்று எதிர்பார்ப்பது  நல்லகண்ணுடைய குழந்தைகளை யெல்லாம் கொன்றுவிட வேண்டுமென  ஆங்கில பாராளுமன்றம்  சட்டம் இயற்றும் என்று எதிர்பார்ப்பதற்கு ஒப்பேயாகும் !

- சாதியை  ஒழிக்க வழி எனும் நூலிலிருந்து.     மக்கள் உலகம் முழு வதும் ஒன்றுபட வேண்டும்; மற்ற சீவன்களுக்குத் தன்னால் கெடுதி இல் லாத வாழ்வு பெற வேண்டும்.  மனிதனி டத்தில் பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாது சாந்தி வாழ்வுக்கு வகை தேட வேண்டும்.  இது தான் எனது ஆசை.

- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

மக்கள் உலகம் முழு வதும் ஒன்றுபட வேண்டும்; மற்ற சீவன்களுக்குத் தன்னால் கெடுதி இல் லாத வாழ்வு பெற வேண்டும்.  மனிதனி டத்தில் பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாது சாந்தி வாழ்வுக்கு வகை தேட வேண்டும்.  இது தான் எனது ஆசை.
- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

அதிரடி நடவடிக்கை
லலித்மோடி விவகாரம் : நிதியமைச்சர் அருண்ஜெட்லிமீது எஃப்.அய்.ஆர் பதிவு

புதுடில்லி ஜூன் 25 லலித் மோடிக்கு உதவிய தாக வெளிவந்த சான்று களின் அடிப்படையில் டில்லியில் உள்ள அய்.பி. எஸ்டேட் காவல் நிலையத் தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்.அய்.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜகவின் நாடாளு மன்ற உறுப்பினர் கீர்த்தி ஆசாத் கடந்த திங்க ளன்று பொருளாதார மோசடி வழக்கில் தேடப் படும் குற்றவாளியான லலித்மோடிக்கு உதவியது தவறு என்று கூறியிருந் தார். லலித்மோடிக்கு உதவிய விவகாரத்தில் சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே, அருண்ஜெட்லி என தொடர்ந்து பாஜக வின் முக்கியத் தலைவர் கள் பெயர் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன.

இந்தப் பரபரப்பான சூழலில் லீஜீ://ஷ்ஷ்ஷ்.றீணீறீவீ னீஷீபீவீ.நீஷீனீ என்ற தன்னு டைய இணையதளத்தில் அருண்ஜெட்லி மற்றும் தனது வழக்கு தொடர் பான ஆவணங் களை வெளியிட்டிருந் தார். இந்த ஆவணங்கள் அருண் ஜெட்லி கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கும் போது நடந்த பரிமாற்றமாகும், இதன டிப்படையில் பார்க்கும் போது லலித்மோடியின் அனைத்து ஊழலுக்கும் அருண்ஜெட்லி துணை போயுள்ளார் என்றே தெரிகிறது. இந்த ஆவணங்களின் அடிப்படையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கீர்த்தி ஆசாத், அருண் ஜெட்லி மீது காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதில் லலித் மோடி தொடர்பான ஹவாலா பணப்பரி மாற் றம் அனைத்தும் அருண் ஜெட்லிக்குத் தெரிந்தே நடந்துள்ளது. ஒரு நாட் டின் பொருளாதார மோசடிக் குற்றத்திற்கு ஆளாகி தலைமறைவாக இருக்கும் குற்றவாளிக்கு தெரிந்தே உதவிபுரிந்திருக் கிறார். இது தேச நல னுக்கு எதிரான செயலா கும் மத்தியில் நிதி அமைச் சர் போன்ற முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவரே இப்படிச் செய் வது தவறான முன்னு தாரணமாகிவிடும் என்று அந்தப் புகாரில் தெரிவித் துள்ளார்.

புகார் அளித்த பிறகு கீர்த்தி ஆசாத் செய்தி யாளர்களிடம் கூறியதா வது: இந்திய கிரிக்கெட் வாரியத் தின் கூட்டம் 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி டில்லி பிரோசா கோட்லா மைதானத்தில் நடை பெற்றது. இந்தக் கூட்டத் தில் அனைவருக்கும் மது பரிமாறப்பட்டது. காந்தி யார் பிறந்த நாளான அன்று இந்தியா முழுவ தும் மதுவிற்பனை மற்றும் பரிமாற்றம் சட்ட விதிப் படி தடை செய்யப்பட் டுள்ளது. ஆனால் டில்லி கிரிக்கெட் போர்ட் தலை வராக உள்ள அருண் ஜெட்லி அனைவருக்கும் மது பரிமாற ஆணையிட் டுள்ளார். வெளியே மோடி தெருக்கூட்டிக் கொண்டு இருக்கும் போது, உள்ளே அருண்ஜெட்லி சாராயம் அருந்திக்கொண்டு கும்மாளமிட்டுக்கொண்டு இருந்தார் இது குறித்தும் புகார் மனுவில் எழுதி யுள்ளேன் என்று கூறினார்.Read more: http://www.viduthalai.in/page1/103918.html#ixzz3eBFUTlQI

தமிழ் ஓவியா said...

சிந்தித்துப் பார்

நீ கிணற்றுத் தவளையாக இருக்க விரும்புகிறாயா? அல்லது வேடந்தாங்கலில் வந்து இளைப்பாறிப் போகும் வெளிநாட்டுப் பட்சியாக இருக்க விரும்புகிறாயா? மனிதனே சிந்தித்துப் பார்.
_ (விடுதலை, 22.9.1967)

தமிழ் ஓவியா said...

தினமணியின் மூக்கில் வியர்ப்பது ஏன்?

வடலூரில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில், தினமணி ஆசிரியர் திரு.வைத்தியநாதய்யரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு பேராசிரியர் மோகன ராசு கீதையையும், திருக்குறளையும் ஒப்பிட்டுக் கீதையின் முகத்திரையைக் கிழித்து எறிந்தார் அல்லவா!

அதற்குப் பதில் சொல்ல முடியாத தினமணி அய்யர்வாள் திருக்குறளிலே கொல்லாமை கூறப்பட்டுள்ளதே - அதைக் கடைப்பிடிக்காதவர்கள் திருக்குறளைப்பற்றிப் பேசலாமா? என்று பிரச்சினை யைத் திசை திருப்பிப் பேசினார்; மக்கள் சலசலப்பைக் காட்டினார்கள்.

ஒரு நூலைப் போற்றவேண்டும் என்றால், அந்நூலில் உள்ள அத்தனையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவது அசல் விதண்டாவாதமே! வடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியை விடுதலை விரிவாக வெளியிட்டு இருந்தது (23.6.2015, பக்கம் 8) அல்லவா!

அதைக்கண்டு ஆத்திரப்பட்ட தினமணி அய்யர்வாள் இன்றைய தினமணி ஏட்டில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார். மீண்டும் அந்தப் புலால் உண்ணாமைப் புராணம்தான்.

திருவாளர் தினமணி அய்யரைக் கேட்கிறோம். பார்ப்பான் பிச்சை எடுத்துதான் சாப்பிடவேண்டும்; அத்தகையவன்தான் பூணூல் போட்டுக்கொள்ள அருகதை உடையவன்; அப்படி இருக்கும்பொழுது, நீங்கள் ஏன் பூணூல் போட்டுக்கொண்டு பிராமணன் என்று மார்தட்டுகிறீர்கள் என்று நாங்கள் கேட்டால் உங்கள் பதில் என்ன?

சங்கராச்சாரியார் என்றால் கால்நடையாகத்தான் ஊர் சுற்றவேண்டும். உங்கள் லோகக் குரு ஜெயேந்திர சரசுவதி விமானத்தில் பறக்கிறாரே அது எப்படி? என்று நாங்கள் கேட்டால், உங்கள் பதில் என்ன?

அய்தீக முறைப்படி திருவாளர் வைத்திய நாதய்யர் உச்சிக்குடுமி வைத்துக்கொண்டுள்ளாரா? அப்படி வைத்துக் கொண்டால்தானே அவர் பூணூல் தரிக்க முடியும்.

இந்த வகைகளில் கேள்விக் கணைகளைத் தொடுக்க ஆரம்பித்துவிட்டால், ஒரு பார்ப்பான்கூட தேறமாட்டானே.

ஆக, வடலூர் நிகழ்ச்சி - தினமணியாரின் ரத்தக் கொதிப்பை அதிகரிக்கச் செய்துவிட்டது என்பது மட்டும் உண்மை. தினமணி கட்டுரை அதைத்தான் வெளிப்படுத்துகிறது.Read more: http://www.viduthalai.in/page1/103950.html#ixzz3eBk6rVbs