Search This Blog

30.6.15

மதத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய பகுத்தறிவுவாதிகளே, சமதர்மவாதிகளே முன்வருக!உலகம் முழுவதும் மதத்தின் பெயரால் படுகொலைகள்

மதங்களால் மக்களுக்கு அமைதியில்லை - ஒற்றுமையில்லை!

மதத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய பகுத்தறிவுவாதிகளே, சமதர்மவாதிகளே முன்வருக!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அழைப்பு!உலகம் முழுவதும் மதங்களின் பெயரால் படுகொலைகள் நடந்த வண்ணமே உள்ளன; மதங்களால் உலகில் அமைதி நிலவாது; ஒற்றுமை யும் ஏற்படாது. எனவே பகுத்தறிவுவாதிகளும், சமதர்மவாதிகளும் மத எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடத்திட முன் வருமாறு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

மத ஓடத்தில் ஏறிய மாந்தரே - பலி
பீடத்திலே சாய்ந்தீரே

என்று 70 ஆண்டுகளுக்கு முன் கவிதை வரிகளில் மக்களைப் பார்த்து, பரிதாபப்பட்டுக் கேட்டார் புரட்சிக் கவிஞர்.

மதம் என்பது மக்களை ஒரு போதும் ஒன்று சேர்ந்து அமைதியாக கூடிவாழ உதவி செய்யாது; அது தன் வெறியை உண்டாக்கி மனித குலத்தின் ஒற்றுமைக்கு உலை வைத்து அவர்களை நிம்மதியாக வாழ விட்டதாக வரலாறு இல்லை என்றார் தந்தை பெரியார்.

மதம் மக்களுக்கு அபின், போதை என்றார் கார்ல் மார்க்ஸ்.

மதம் மக்களுக்குச் செய்த நன்மை என்ன? என்று கேட்டு, இல்லை இல்லை என்று விளக்கம் கூறினார் இங்கர்சால்.

இக்கூற்றுக்கு இன்றும் - மனிதன் விண்வெளியில், ராக்கெட் விட்டு, பறந்து, அடுத்து செவ்வாய்க்கோளில் குடியேறவும் ஆயத்தமாகிறார்கள் என்ற செய்தி வரும் நிலையில், நமது ஞானபூமியில் மட்டும் மதச் சண்டை அதன் விளைவான ஜாதிச் சண்டை நடந்து கொண்டே உள்ள அவலம் அன்றாட அவலமாகக் காட்சியளிக்கிறது. 

மதவாதிகள் கூற்றும் - நடைமுறை முரண்பாடுகளும்

எந்த மதமும் மனிதர்களை ஒழுக்கவாதியாக சமூகத்தில் நல்லிணக்கமும் ஒற்றுமையும் நிலவுவதற்கே ஏற்பட்டன என்ற மதக் குருமார்களும், மதவியாபாரிகளும் இன்றுகூட கூறத் தவறுவதில்லை.

ஆனால், நடைமுறைக் காட்சி  முந்தைய வரலாற்றுக் காலம் முதல் இன்றைய கால நிகழ்வுகள் வரை என்ன?

அய்ரோப்பாவில் சிலுவைப் போர்கள் (Crusades) என்பவை முதல் தொடங்கி, இன்றும் மதங்களிடையே போர்களும், வன்முறைகளும் தொடர் கதையாகவே தொடருகின்ற கொடுமையின் கோரத் தாண்டவம் மாறி உள்ளதா? இல்லையே!

மூன்று கண்டங்களில் நடந்த மதக்கொலைகள்!

அண்மைக்காலத்தில் மூன்று கண்டங்களில் நிகழ்ந்த மதப் படுகொலைகள் மனித குலத்தின் மாண்பினைத் துடைத்தெறிகின்றன!

அந்தோ கொடுமை! கொடுமை!!

1. துனிஷியாவில் 37 (அந்நியர்கள் உட்பட)  சுட்டுக் கொல்லப்பட்டனர். தேசிய கண்காட்சி அகத்தில் இது நடந்துள்ளது.

2. குவைத் நாட்டில் மசூதியில் தொழுகையில் இருந்த வர்களை நோக்கி மனிதவெடிகுண்டு 25 பேர்களைக் கொன்றுள்ளது. (இவர்கள் ஒரே மதம்  - இஸ்லாமின் ஒரு பிரிவிற்கும் மற்றொரு பிரிவுக்கும் நடந்த சண்டை).

3. பிரான்சில் அமெரிக்கருக்குச் சொந்தமான தொழிற்சாலை - அதற்குமுன் ஒரு பத்திரிகை அலுவலகம்!

துனிஷியாவிலும், குவைத்திலும் மொத்தம் 67 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்!

பாபர் மசூதி இடிப்புக்குப் பின்

இதற்கிடையில் பாபர் மசூதி இடிப்புக்குப்பின் இந்தியாவில் சிறுபான்மைச் சமூகத்தவர்களான இஸ்லாமியர், ஹிந்துத்துவா பஜ்ரங்தளம் போன்ற தீவிரவாத குழுக்களால் அச்சுறுத்தப்படுகின்றனர்.

ஆஸ்திரேலியப் பாதிரியார் - தொழுநோயாளிகளுக்கு உதவிட குழந்தைகளோடு வந்து தொண்டு செய்த ஸ்டேன்ஸ் பாதிரியார் குடும்பத்துடன் எரிக்கப்பட்ட கதை மறக்கக் கூடியதுதானா?

75 வயது நிறைந்த கன்னியாஸ்திரி கல்கத்தாவில் வன்புணர்ச்சிக்கு ஆளாகிறார்; கிறித்தவர்களின் சர்ச்சு களும் இடிக்கப்படுகின்றன.

கர்வாப்சி என்ற கட்டாய மதமாற்றம் ஆக்ரா போன்ற பகுதிகளில் - தங்கு தடையின்றி நடைபெறுகின்றன.

மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சி உணவுக்குத் தடைச் சட்டம்!
உலகம் முழுவதும்கூட மதச் சண்டைகளுக்கு பஞ்சமில்லையே!

மதங்களுக்குள்ளேயே சண்டைகள்

இஸ்ரேல் - பாலஸ்தீனங்கள் பிரச்சினை இரு மதங் களின் அடிப்படையில் தானே ஏற்பட்டுள்ளன.

ஒரே மதத்திலும்  இச்சண்டை; எல்லா மதங்களிலும் இந்த நிலை! புத்தரின் பர்மா - மியன்மாவில் - இலங்கையில் - இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டு விரட்டப்படும் நிலை ஒருபுறம்; ஏற்கெனவே இலங்கை புத்த பூமி - ரத்த பூமி ஆனது  - சிங்கள இராஜபக்சே ஆட்சிகளில் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது!

மதம் மக்களுக்கு நன்மை செய்யாது. யானைக்கு வடகலை நாமமா? தென் கலை நாமமா? வழக்குக்கு சண்டைத் தீர்வு இன்னும் அர்த்தமுள்ள (?) இந்து மதத்தில் காணப்படவில்லையே!

எனவே, மதங்களால் கெட்டுள்ள உலக அமைதி - மக்கள் ஒற்றுமை கைப்புண் போலத் தெரிந்தும், இன்னமும் மத குருமார்களுக்கு செல்வாக்கும், செழுமையும் இருக்கலாமா?

இன்னமும் பாபா ராம்தேவ்களுக்கும், சங்கராச்சாரிகளுக் கும், ராம்பால் போன்ற ஹரியானா சாமியார்களுக்கும், ஆசாராம்களுக்கும் நித்தியானந்தா போன்ற காமக் கொடூரர்களுக்கும் (தனக்கு ஆண்மை இல்லை என்று பொய் சொன்ன மதத் தலைவர் இந்த மத வியாபாரி) செல்வாக்கு இருப்பது எதனால்?

மதத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய பகுத்தறிவாளர்களே முன்வருக!

ஊடகங்கள் ஊதிப் பெருக்குவதனாலும், அமைச்சர்கள் அடிபணிந்து விளம்பரப்படுத்துவதாலும் மக்களின் அறியாமையினாலும் தானே!

எனவே இதனை எதிர்த்து கடும் பிரச்சாரம் மனிதநேயப் பிரச்சாரம் செய்ய அனைத்துப் பகுத்தறிவாளர்கள், சமதர்மவாதிகள் முன் வர வேண்டும்.

   --------------------------------கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்---30-06-2015

25 comments:

தமிழ் ஓவியா said...

சமஸ்கிருதம் மக்களின் மனதைத் தூய்மைப்படுத்துகிறதாம் சுஷ்மா ஸ்வராஜ்


பாங்காக், ஜூன் 30_- சமஸ்கிருத மொழி மக்களின் மனதைத் தூய்மைப்படுத்துவதாகவும் அதனை மேலும் விரிவாகப் பரப்ப வேண்டு மெனவும் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்திருக்கிறார். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 16ஆவது உலக சமஸ்கிருத மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் 60 நாடுகளைச் சேர்ந்த சமஸ் கிருத நிபுணர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்த விழாவில் கலந்து கொண்டு பேசியபோது மக்களிடம் சமஸ்கிருத மொழி பேசுவதற்கு பிரச்சாரம் செய்யப்பட வேண்டும். இந்த மொழி மக்களின் மனதை துய்மைப்படுத் துவதுடன் உலகம் முழுவதையும் புனிதப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். மேலும், சாஸ்திரங் களுக்கும் அறிவியலுக்கும் இடையே உள்ள இடை வெளியை குறைக்க வேண்டும் என்பதில் நாங்கள் முயற்சி எடுக்கி றோம் என்றும் அமைச்சர் சுஷ்மா தனது உரையில் தெரிவித்தார். அவர் இந்த மாநாட்டில் சமஸ்கிருத மொழியிலேயே பேசியது குறிப் பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

குஜராத்தில் யோகா கட்டாய பாடமாம்

காந்திநகர், ஜூன் 30- குஜராத் மாநிலத்தில் வருகிற 2016-ஆம் ஆண்டு 9-ஆம் வகுப்பு முதல் அனைத்து பள்ளி மாண வர்களுக்கு யோகாவை கட்டாய பாடமாக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆர் எஸ்எஸ்-சின் யோகா திட்டத்தை, குஜராத் மாநில அரசு முதன் முதலில் 9-ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் உயர் கல்வி படிக்கும் மாணவ ர்கள் வரை கட்டாய பாடமாக கொண்டுவர திட்டமிட்டு உள்ளது. குஜராத் மாநிலம் முழு வதும் உள்ள 15 ஆயிரம் உயர்நிலை மற்றும் மேல் நிலை பள்ளிகளில் 2016-ஆம் ஆண்டு முதல் யோகா பாடம் நடத்தப் பட உள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளி களில் யோகா பாடத்தை நடத்த குஜராத் கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சாதஸ்மா தலைமையில் அமைக்கப்பட்ட குழு முடிவு செய்துள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் ஏற்கெனவே தொடங்கி விட்டதாகவும் கூறப்படு கிறது. மேலும் இந்த ஆண்டு தீபாவளி விடு முறையில் பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரி யர்களுக்கும் யோகா பயிற்சி அளிக்க திட்ட மிடப்பட்டிருக்கிறது. அப்போது அவர்களுக்கு யோகாவில் உள்ள பல ஆசனங்கள் செய்வது பற்றி பயிற்சி அளிக்கப் படும். அது மட்டுமல்லா மல் யோகாவில் ஏற்படும் நன்மைகள் குறித்து மாண வர்களுக்கு சொல்லிக் கொடுக்க ஆசிரியர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சாதஸ்மா தெரிவித்தார். பள்ளி மாணவர்களின் யோகா பாடத்தில் போக்குவரத்து விதிமுறைகள், சுற்றுச் சூழல் சுகாதார விழிப் புணர்வு, மரம் நடுதல், காடுகள் அவசியம் குறித் தவைகளும் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள் ளது. மேலும் தொழில் அதிபர்கள் திருபாய் அம் பானி, நான்ஜி மேத்தா பற்றிய பாடங்களையும் அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இதுபற்றி கடந்த வெள்ளிக்கிழமை கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சாதஸ்மா தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இறுதி முடிவு விரைவில் கல்விக்குழு எடுக்கும் என்று கூறப்படுகிறது. இதேபோல் கடந்த ஆண்டு நரேந்திர மோடி குறித்து பள்ளிகளில் பாடத்தை கொண்டு வர அரசு திட்டமிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டதால் தனது திட்டத்தை அரசு கை விட்டது. ஏற்கெனவே குஜராத்தில் கல்வியை காவிமயமாக்கும் விதத்தில் பல்வேறு பாடத் திட்டங் கள் சேர்க்கப்பட்டிருக் கின்றன என்பது குறிப் பிடத்தக்கது

தமிழ் ஓவியா said...பா.ஜனதா தலைவர் பாலியல் தொல்லை பெண் தொண்டர் புகார் - காவல்துறை விசாரணை

கான்பூர், ஜூன் 30_ உத்தரபிரதேசம் மாநிலத் தில் பாரதீய ஜனதா தலைவர் மற்றும் அவரது 4 உதவியாளர்கள் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் தொண்டர் புகார் கொடுத்து உள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அனுப் திவாரி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகாரில் தெரிவித்துள் ளார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஜூன் 20ஆ-ம் தேதி பெண் தொண்டரை அவரது வீட்டில் இறக்கிவிடுவதாக காரில் ஏற்றிச்சென்ற, திவாரி காரில் அவரிடம் தவறாக நடந்து கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் தொடர் பாக கட்சியின் அப்பகுதி தலைவர்களிடம் பாதிக்கப் பட்ட பெண் புகார் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கட்சியின் அலுவலகத்திற்கு மறுநாள் வந்த திவாரி தனது உதவியாளர்கள் நான்கு பேருடன் புகார் அளித்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டு உள்ளனர். அவருடைய ஆடைகளை களைவதற் கும் முயற்சி செய்துள் ளனர் என்று காவல்துறை யில் தெரிவித்துள்ளனர்.

இந்த இரண்டு சம் பவம் தொடர்பாக கட் சியின் அப்பகுதியை சேர்ந்த தலைவர்களிட மும், மாநில தலைவர்களி டமும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்து உள்ளார் என்றும் இது தொடர்பாக அவர்களுக்கு எதிராக எந்தஒரு நட வடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே பாதிக் கப்பட்ட பெண் காவல் நிலையத்தை அனுகி உள் ளார் என்றும் தெரிவிக் கப்பட்டுள்ளது. காவல் அதிகாரியின் உத்தரவின்பேரில், பெண் ணின் புகாரை ஏற்றுக் கொண்டு காவல்துறையி னர் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். இதுதொடர் பாக விசாரணை நடை பெற்று வருவதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என் றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.Read more: http://www.viduthalai.in/e-paper/104219.html#ixzz3eYRa2RGf

தமிழ் ஓவியா said...

ஓநாய் சைவம் பேசுகிறது!


புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பாஜக தலைவர் அமித்ஷா தற்போதுள்ள சூழலில் உலகம் முழுவதும் இந்துமதம் மாத்திரமே அமைதிக்கான ஒரே தீர்வாகும் என்று கூறியதைவிட நகைச்சுவை வேறு ஒன்றும் இருக்க முடியாது.

மும்பையில் 3 நாள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்ள செல்லும் வழியில் அகமதாபாத நகரில் புத்தக வெளியீட்டுவிழா ஒன்றில் அமித்ஷா கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியவை நல்ல நகைச்சுவை விருந்தாகும். தற்போது உலகம் முழுவதிலும் தீவிரவாதம் மேலோங்கிவருகிறது. தீவிரவாதம் என்பது மதரீதியாக தற்போது அதிகரித்து வருகிறது, எந்த மதம் என்று குறிப்பிட்டுச் சொல்லத் தேவையில்லை, இந்த நிலையில் இந்தியாவின் வரலாற்றை நாம் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும், இங்கே நீண்ட நெடுங்காலமாக அமைதி திகழ்ந்துவந்தது. அந்நியமதங்கள் இங்கு வரும் வரை நாட்டில் எந்த ஒரு சிக்கலுமில்லாமல் அவர வர்கள் வேலையை அவரவர்கள் செய்துகொண்டு இருந்தனர், பிற மதங்கள் இங்கு வந்த பிறகு பேதங்கள் தோன்ற ஆரம்பித்துவிட்டன. சில நாடுகளில் ஒரு மதம் மாத்திரமே உள்ளது. அங்கு பிற மதங்களுக்கு வேலையில்லை, அதே நேரத்தில் அங்கு தீவிரவாதம் தழைத்தோங்கியுள்ளது. இதற்கு காரணம் எந்தமதம் என்பது அனைவருக்கும் தெரியும், தற்போதுகூட மதத்தின் பெயரால் தான் சில நாடுகளில் கொலைகள் செய்கின்றனர்.

ஆகையால் தான் நான் சொல்கிறேன் இந்துமதம் தான் உலகில் அமைதியை கொண்டுவரும் உன்னத மதமாகும். இதை நான் இந்து என்பதற்காக பெருமை யுடன் கூறவில்லை. நான் இரண்டு ஆண்டுகளாக பெரும் சிக்கலில் மாட்டியிருந்தேன். அப்போது நான் இந்தியாவில் உள்ள அனைத்துக் கோவில்களுக்கும் சென்று வழிபாடுகள் செய்தேன் தமிழ் நாட்டின் பகவதி அம்மன் கோவில் முதல் காஷ்மீரின் வைஷ்ணவா தேவி மற்றும் அனைத்து சக்திபீடம் போன்ற கோவில்களுக்குச் சென்று வழிபட்டேன். இப்போது எனக்கு எந்த சிக்கலுமில்லாமல், தலைமைப்பதவியில் இருக்கிறேன். ஆகையால் இந்துமதம் எல்லா சமாதானத்திற்கும் தீர்வு என்பதை நான் அனுபவத்தில் உணர்ந்துள்ளேன் என்று கூறியுள்ளார் பிஜேபி தலைவர் அமித்ஷா.

பி.ஜே.பியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அதன் ஆணி வேர்களான சங்பரிவார்களானாலும் சரி பொய்ப் பேசுவதில் அசகாய சூரர்கள், பொய்களையும் திட்டமிட்டுச் சொல்லுவதில் அவர்களை வெல்ல யாரும் பிறக்கவில்லை என்று கூட சொல்லலாம்.

தீவிரவாதம் இந்து மதத்தில் கிடையாதாம் - வன்முறை என்ற பேச்சுக்கும் இடமில்லையாம்.
450 ஆண்டுகால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலமான அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை ஒரு பட்டப் பகலில் இந்த அமைப்புகளின் மிகப் பெரிய தலைவர்கள் தலைமை தாங்கி, ஆயிரக்கணக்கான இந்து வெறியர்களைத் திரட்டி அடித்து நொறுக்கியவர்கள் எந்தத் துணிவில் இப்படிப் பேசுகிறார்கள்?

தமிழ் ஓவியா said...

இந்து மதத்தின் அடிப்படையே பிறப்பிலேயே மனிதனைப் பிளவுப்படுத்துவது தானே? பிராமணர் பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன்; பிர்மாவானவர் இந்தப் பிராமணனுக்கே இந்த உலகைப் படைத்தார் என்றும், இந்நாட்டின் பெரும்பான்மையான மக்களைச் சூத்திரர்கள் - வைப்பாட்டி மக்கள் என்றும், இவர்கள் பிராமணர்களுக்குச் சேவை செய்தே கிடக்க வேண்டும் என்பதையும்விட கொடூரமான வன்முறை எது? மனித விரோத ஏற்பாடு எது? இதுதான் ஒற்றுமைக்கான ஏற்பாடா?

இவர்கள் தூக்கி நிறுத்தும் மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படும் இராமனே சம்பூகன் என்ற சூத்திரன் தவம் இருந்தான் என்பதற்காக, தவம் செய்ய சூத்திரனுக்கு அருகதை கிடையாது; அவன் வருண தருமம் மீறினான் என்றுகூறி அந்த ராமனே வாளால் வெட்டிக் கொன்று இருக்கிறானே - இதுதான் பிஜேபி தலைவர் அமித்ஷா கூறும் இந்து மதத்தின் உன்னதமான சிலாக்கியமா? இந்து மதத்தில் கடவுள்களே சண்டை போட்டு இருக்கிறதே - எதிரிகளைக் கொலைசெய்திருக்கிறதே, பெண்களை வன்புணர்ச்சி செய்திருக்கிறதே - இந்து மதத்தில் கடவுள்கள் தம் யோக்கியதையே இப்படி இருக்கும் பொழுது எந்தத் தைரியத்தில் இந்து மதத்தைத் தூக்கிப் பிடிக்க இவர்களால் முடிகிறது?

வில் கலையில் தேர்ச்சி பெற்ற ஏகலைவன் கட்டை விரலை காணிக்கையாக கேட்டுப் பெற்ற துரோணாச் சாரியாரின் மனப்பான்மை தானே இந்து மனப்பான்மை? இதனை இன்னும் நியாயப்படுத்துகிறாரா அமித்ஷா?

இந்து மதம் தாராள சிந்தனை உடையது தானா? அப்படி இருந்தால் இந்தியாவின் பிரதமர் அனைத்து மக்களையும் அரவணைத்து அழைத்துச் செல்ல வேண்டிய கடப்பாடு உள்ளவர் என்ன சொல்லுகிறார்? நான் இந்து நேஷனலிஸ்ட் என்று தானே கூறுகிறார். இதுதான் இந்துமதம் ஊட்டுகிற உன்னதமான உயர் பண்பாடோ!

சராபுதின் கொலை வழக்கு, இஷ்ரத் ஜகான் போலி என்கவுண்டர் போன்றவற்றில் சம்பந்தப்பட்ட அமித்ஷாதான் இந்து மதத்தைப் பற்றிச் சிலாகிக்கிறார்.

ஓநாய் சைவம் பேசுகிறது - ஆம் அமித்ஷா உயர் சீலங்களைப் பற்றியும் பேசுகிறார்.

தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறுகிறவர் தானே இவர்களின் ஜெகத்குரு! சுடுகாட்டிலும்கூடப் பேதம் இருப்பது சரிதான் என்பவர்கள்தானே இவர் களின் லோகக் குரு!Read more: http://www.viduthalai.in/page-2/104214.html#ixzz3eYSEOsnp

தமிழ் ஓவியா said...

கவலை ஏன்?

மனிதர்கள் எந்த மதத்தில் இருந் தாலும், அவர்கள் எந்த மதத்திற்குப் போனாலும், மற்ற மதத்தைச் சார்ந்த மனிதனுக்கு அதனால் கவலை ஏன் ஏற்படவேண்டும்?
_ (குடிஅரசு, 16.11.1946)

தமிழ் ஓவியா said...

குடிஒருமனநோய்!


தமிழகம் மிகவும் மோசமாகச் சீரழிந்து வருவது மாபெரும் துயரம் ! இன்று குடியினால் அழிந்து வரும் குடும்பங்கள் ஏராளம் ! ஏராளம் !! முக்கியமாக அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியவற்றில் சில வற்றைப் பார்ப்போம்.

குடிப்பழக்கம் ஒரு மன நோய் என்று உலக மருத்துவம் பதிவு செய்து ஆண்டுகள் பலவாகிவிட்டன. குடிப் பவர்கள் அனைவரும் குடிகாரர்கள் ஆவது இல்லை! ஆனால் குடிகாரர்கள் யாரும் நான் குடிகாரன் என்று ஒத்துக் கொள்வதே இல்லை !குடிகாரர்களுக்கு அவர்கள் மூளையிலே உள்ள பதிவு உணர்வுகள் பல ஆண்டுகளில் அந்த நினைவே ஒரு வெறியைத் தூண்டு மளவிற்குப் பதிவு செய்து விடுகின்றன, ஒரு முறை ஆழமாகப் பதிவான பின் அவர்கள் நிறுத்துவது என்பது மிகவும் கடினம். குடி என்ற நினைப்பே அந்த வெறியைத் தூண்டி மற்ற மனிதர் களுக்குள்ள வெட்கம், மானம்,சுய சிந்தனை, நல்லது, கெட்டது, பிள்ளை, குட்டி, குடும்பம், வேலை, பெருமை போன்ற அனைத்தும் பின் தள்ளப் பட்டு விடும். குடிப்பது மட்டுந்தான், அதுவும் ஒரு வெறியுடன் 24 மணி நேரமும் மூளையை ஆட்டிப் படைக் கும். இதனால் நேரும் அவமானங்கள் கூடப் பெரிதாகத் தோன்றாது. எல்லா விதமான காரணங்களும், மன்னிப் பையும் சொல்லி ஏன் குடிக்கிறேன் என்று சமாதானம் சொல்லிக் கொள் வார்கள். உற்றார் உறவினரிடமும் சொல்லி விடுவார்கள், திரும்பத் திரும்ப அதையே சொல்வார்கள்.

இந்த மன நோய்க்கு அடிப்படைக் காரணங்கள் சில. சிறுவயதில் பட்ட துன்பங்கள், அடைந்த அவமானங்கள். மற்ற குணங்களான போட்டி, பொறாமை, மற்றவர் செய்த நம்பிக்கை மோசடி,போன்ற அனைத்தும் மனதை வறுக்கும் மன உளைச்சலாக ஓடிக் கொண்டே இருக்கும். தலைமுறை நோயாக இருப்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

80 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நியூயார்க் மருத்துவரின் மருமகன் வெற்றிகரமான தொழில் வர்த்தக நிபுணர் குடியை நிறுத்த முடியாமல் பல இன்னல் களுக்கு ஆளானார். அவர் அங்கிருந்து 1000 மைல்கள் காரோட்டிச் சென்று ஆக்ரன் ஓகையோவில் உள்ள ஒரு மருத்துவரைப் பார்க்க வேண்டினார். மருத்துவர் சில மணித்துளிகளே ஒதுக் கினார். ஆனால் இருவரும் மணிக்கணக் காகவும், பின்னர் நாட்கணக்காவும் பேசி னர். இருவரும் குடிகாரர்கள். அவர்களி டம் ஒரு ஒற்றுமை, நம்பிக்கை பிறந்தது. மற்றவர்களிடம் சொல்ல முடியாததை இருவரும் பகிர்ந்து கொண்டு இருவரும் இன்று ஒரு நாள் மட்டும் குடிப்பதில்லை என்று தினமும் பல முறை முடிவெடுத்துக் கொண்டனர். குடி வெறி வந்ததும் ஒருவரையொருவர் அழைத்து இன்னும் அரை மணி நேரம் குடிக்க மாட்டேன், இன்னும் ஒரு மணி நேரம் குடிக்க மாட்டேன் என்று பேசிக்கொண்டு அன்று முழுவதும் குடிக்காமல் இருந்தனர். இதை யறிந்த மற்ற குடிகாரர்கள் அவர்களுடன் இணைந்தனர். பெயர் சொல்லி அறிமுகம் செய்வதில்லை. அமெரிக்க முறைப்படி டாம், பேட்ரிக் என்று நண்பர்கள் போலப் பேசிக்கொள்வார்கள், ஆனால் முழுப் பெயருந் தெரியாது. இந்தக் கூட்டம் பெரிதாகிப் பல நகரங்களிலும் ஆரம் பித்தது. மருத்துவர்கள் தங்களைக் குணப் படுத்த முடியாது. நாம் தான் நம்மைக் குணப்படுத்திக் கொள்ள ஒருவருக்கொரு வர் ஆசிரியராக இருந்து, பேசி, கூட்டம் போட்டு குணப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தனர்.

தமிழ் ஓவியா said...

அதுவே "ஆல்கஹாலிக் ஆனானி மஸ்" என்ற அமைப்பாகி விட்டது.அதன் குறிக்கோள் " ஆண்,பெண் ஒரு குழுவாகக் கலந்து தங்கள் அனுபவம், துணிவு, நம்பிக்கை பற்றிப் பேசி நமது நோயை குணப்படுத்திக் கொள்வோம். குடியிலிருந்து விடுதலை பெறுவோம். நான் குடியை நிறுத்திக் கொள்ள விரும் புகின்றேன் என்று நினைப்பவர் அனை வரும் உறுப்பினர் ஆகலாம்.கட்டணம் கிடையாது.நமது அன்பளிப்பாலேயே நடத்திக் கொள்வோம். எந்த ஒரு அமைப்போ, அரசியலோ, நிறுவனமோ சார்ந்திருக்க மாட்டோம், எதையும் ஆதரிக்கவோ எதிர்க்கவோ மாட்டோம். நமது குறிக்கோள் குடியை நிறுத்தி மற்ற வர்களையும் நிறுத்துவதற்கு உதவுவது மட்டுமே."

உலகெங்கிலும் பல்லாயிரக்கணக் கான அமைப்புகள் உள்ளன. கோடிக் கணக்கானவர்கள் பல்லாண்டுகள் உறுப் பினர்களாக உள்ளனர். பலதுறைப்பட்ட வர்கள் தொழிலாளி முதல் முதலாளி வரை, வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், மதவாதிகள்,  நடிக நடிகையர் என்று பல தரப்பட்டவர்கள். கூட்டத்திலே வந்ததும் அவர்கள் அனைவரும் சமம். அவர்களு டைய குடி பற்றிய நினைப்புகள், நிறுத்து வதற்குப்படும் துன்பங்கள் பற்றிச் சுருக்க மாகப் பேசுவார்கள். மற்றவர்கள் அந்த மாதிரித் தருணத்தில் தான் என்ன செய்தேன், எப்படி முன்னேறினேன் என்று மட்டும் சொல்வார்கள். அறிவு ரைகள் சொல்ல மாட்டார்கள். தனியே அவரவர் அவரது குழுவினருடனும் அவர்களாகவே அமைத்துக் கொண்ட வழிகாட்டியிடமும் பேசிக் கொள்வார்கள். தொலைபேசி எண் பகிர்ந்து கொள் வார்கள். கூட்டத்திலே புதிதாகச் சேருப வர்களுக்கும், ஒரு வாரம், ஒரு மாதம், மூன்று மாதம், 6 மாதம், ஓராண்டு என்று நிறுத்தியவர்களைக் கைதட்டிப் பாராட்டி, காசு வில்லைக் (ரூபாய் நாணயம் மாதிரி) கொடுத்துப் பாராட்டுவார்கள்.

24 மணி நேரமும், புத்தாண்டு, விடுதலை நாட்களில் சிறப்பாக இரவும் பகலுமான கூட்டங்களும் உலகெங் கிலும் நடைபெறுகின்றன. யார் வேண்டு மானாலும் எந்தக் கூட்டத்திற்கும் செல்லலாம். கூட்டத்தில் ஒரு கூடையை அனுப்பு வார்கள். அதில் ஒரு டாலர் போன்று அன்பளிப்பு போடுவார்கள். இதுவே உலகெங்கும் பல சிறப்புத் தொண்டாற்ற பயன் பட்டுள்ளது. ஆண்டு விழாக்கள் பல பெரிய நகரங்களிலே பெரிய பெரிய விளையாட்டு மைதானங்கள் நிறைந்து வழியக் கொண்டாடப்படும். இந்த 80ஆவது ஆண்டு விழா அமெரிக்க அட்லாண்டா நகரிலே ஜூலை மாதம் கொண்டாடப்படவுள்ளது.

இதை யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் ஆரம்பிக்க லாம். சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடத்த வேண்டும்.உலகெங்கும் உள் ளனர். அதில் ஒரு கூட்டத்திற்குச் சென்று உதவி கேட்டால் நிறைய உதவிகள் செய்வார்கள். தொழில் தொடங்கவும் உதவி செய்வார்கள்.

குடி ஒரு குடும்ப நோய். குடிகா ரருக்கு நேராகவும், மறைமுகமாகவும் குடும்பத்தினர் மறைத்தும், பொய் சொல் லியும், உதவியும், நொந்து போயும், பல இழப்புகளுக்கும், அவமரியாதைகளுக் கும் ஆளாவதும் தினம் நடப்பது. எனவே, அவர்களுக்காக ஆல் அனான் என்று குடும்பத்தினர்க்கு ஒரு அமைப்பும் உள்ளது. 1951இல் அமைக்கப்பட்டது .

இதற்கு உதவும் பல நூல்கள் உள் ளன. இணையத்திலேயே கிடைக்கும்.

தமிழில் இரண்டு புத்தகங்கள்
"ஒரு நாள் மட்டும்"
"உன்னையே நீ விரும்பு"
என்று சென்னை சீதை பதிப்பகத் தினர் வெளியிட்டுள்ளனர்.

குடி மன நோய், சரிப்படுத்தக் கூடியது. ஆனால் அவர்களாகவே சரியாக நினைக்க வேண்டும். அடுத்தவர் சொல்லி நடக்காது. குடி குடும்ப நோய், குடிகாரர் நிறுத்தாவிட்டாலும் அவர்கள் "ஆல் அனான்" நூல்கள் படித்தோ, குழுக்கள் ஆரம்பித்தோ தெளிவு பெற்றுக் கொள்ள வேண்டும்.

தகவல்: சோம. இளங்கோவன்

தமிழ் ஓவியா said...

கழகக் கூட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுப்பது குறித்து சட்டரீதியாக அணுகப்படும் திராவிடர் கழக வழக்குரைஞர் அணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, ஜூன் 30_ கழகக்கூட்டங்களுக்கு காவல் துறை அனுமதி மறுப் பது குறித்து சட்ட ரீதியாக அணுகப்படும் திராவிடர

கழகக் கூட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுப்பது குறித்து சட்டரீதியாக அணுகப்படும்

திராவிடர் கழக வழக்குரைஞர் அணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்சென்னை, ஜூன் 30_ கழகக்கூட்டங்களுக்கு காவல் துறை அனுமதி மறுப் பது குறித்து சட்ட ரீதியாக அணுகப்படும்

திராவிடர் கழக வழக் குரைஞரணி கலந்துரை யாடல் கூட்டம் சென்னை, பெரியார் திடலில் 21.6.2015 அன்று காலை 10.30 மணி யளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திராவி டர் கழகத் தலைவர், தமி ழர் தலைவர், ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமை தாங்கினார். இக்கூட்டத் தில் கலந்து கொண்டவர் களும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் பின்வரு மாறு:_

கி.வீரமணி, ஜெ.துரை சாமி, கரூர் இராசசேகரன், மு.சென்னியப்பன், ஆ.வீரமர்த்தினி, ஆ.பாண் டியன், ம.வீ.அருள்மொழி, ந.இளங்கோ, த.வீரசேக ரன், சின்னம்பேடு எஸ். கண்ணன், செஞ்சி விவே கானந்தன், ஜெ.தம்பிபிர பாகரன், வி.பெரியசாமி, எஸ்.பி.சக்திவேல், எஸ்.குமாரதேவன், இராம ராஜன், அ.அருள்மொழி, பீ.இரமேஷ், இரா.சர வணகுமார், மு.இராசா

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1) தற்போதைய சூழ் நிலையில் சட்டக்கல்வி யின் அவசியம் அதிகரித்து வருவதாகவும், தற்போ தைய சட்டக்கல்வி தர மானதாகவும், போது மானதாகவும் இல்லாத தால் பெரியார்- _ மணி யம்மை பல்கலைக் கழகத்தில் சட்டக்கல்லூரி தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று பெரியார் மணியம்மை கல்வி அறப் பணிக்கழகத்தையும், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தையும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

2) அண்மைக்காலத் தில் திராவிடர் கழகம் சார்பாக ஏற்பாடு செய்யும் பொதுக்கூட்டங்களுக்கு உரிய காலத்தில் அனுமதி தராமலும், போதிய கார ணமின்றி அனுமதி மறுப் பதும், சட்டவிரோதமான வகையில் கூட்டத்தில் பேச வேண்டிய கருத்து களுக்கு தடைவிதிப்பதும், காவல் துறையின் வாடிக் கையாக இருந்து வருகிறது. இந்த சட்ட விரோத போக்கினை தடுப்பதற்கு அந்தந்த மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் திராவிடர் கழக சட்டத் துறை அமைக்க, சட்ட ஆலோசனைக் குழுவிடம் அணுக வேண்டுமென்று மேற்படி சட்ட ஆலோ சனைக்குழு தமிழகம் எங்கும் ஒரே சீரான அணுகுமுறையை மேற் கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்றும் கேட் டுக்கொள்கிறது. இப்பிரச் சினை சட்ட ரீதியாக அணுகப்படும்.3) திராவிடர் கழக வழக்குரைஞரணி சார்பாக விரைவில் மாவட்டம் தோறும் முக்கியமான சட்டப்பிரச்சினைகள் குறித்த கருத்தரங்குகள் நடைபெற வேண்டுமென தீர்மானிக்கப்படுகிறது.

4) ஆங்கிலேயர் ஆட் சிக் காலத்தில் குடிமக் களை அடக்கி ஒடுக்குவ தற்காக ஏற்படுத்தப்பட்ட பல காலாவதியான சட் டங்களை தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறும், அரசியல் சட்டம் அங் கீகரிக்கும் கருத்துரிமை, பேச்சுரிமைகளுக்கு பங்கம் ஏற்படாதவகையில் திருத் தங்கள் மேற்கொள்ளப் பட வேண்டுமென்று மத் திய _ மாநில அரசைக் இக் கூட்டம் கேட்டுக்கொள் கிறது.

5) விரைவில் திராவி டர் கழக வழக்குரைஞரணி மண்டல, மாவட்ட நிர் வாகிகள் நியமிக்கப்பட வேண்டுமென்றும் தீர் மானிக்கப்படுகிறது.

திராவிடர் கழக வழக் குரைஞரணி மதுரை மண் டல மாவட்ட நிர்வாகிகள்  நியமனம்

தராவிடர் கழக சட் டத்துறை செயலர் ச. இன் பலாதன் அவர்களால் ஏற்பாடு செய்யப்படட தராவிடர் கழக வழக்கு ரைஞரணி அமைப்புக் கூட்டம் 27.10.2014 மதுரையில் தராவிடர் கழக வழக்குரைஞரணி துணைத்தவைர் பொ.நடராசன் நீதிபதி (பணி நிறைவு) அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற போது கீழ்க்கண்ட நர் வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர்.

மதுரை மண்டலம்

தலைவர்: கோ. சுப்பிர மணியன் பி.ஏ. பி.எல்., வழக் குரைஞர், தண்டுக்கல். செயலர்: -மு. சத்தார்த் தன், பி.ஏ., பி.எல்., வழக் குரைஞர், உயர்நதிமன்றம், மதுரை.

மதுரை மாவட்டம்

தலைவர்: கே. பொன் னையா, எம்.ஏ., பி.எல்., வழக் குரைஞர், உயர்நதிமன்றம், மதுரை, செயலர்: சோ. தியாக ராசன், பி.ஏ., பி.எல்., வழக் குரைஞர், உயர்நதி மன்றம், மதுரை,

தண்டுககல் மாவட்டம்

தலைவர்: சுப. ஜெக நாதன், பி.ஏ., பி.எல்., வழக குரைஞர், திண்டுக்கல்
செயலர்:- சாக்ரடீஸ், பி.ஏ., பி.எல்., வழக்கு ரைஞர், திண்டுக்கல்.

விருதுநகர் மாவட்டம்

அமைப்பாளர் - பகர தன் பி.ஏ., பி.எல்., வழக் குரைஞர், திருவில்லிபுத் தூர்
தேனி மாவட்டம்

அமைப்பாளர்: - சின்ன முத்து பி.ஏ., ப.எல்., வழக் குரைஞர், பெரியகுளம்.

தமிழ் ஓவியா said...

கோயில் சிலைகள் திருட்டு

வத்தலக்குண்டு, ஜூலை. 3 வத்தலக்குண்டு திண்டுக்கல் மெயின் ரோட்டில் அருணாச்சலபுரம் என்ற இடத்தில் செல்வவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களாக பல்வேறு சுவாமிகளுக்கு கற்சிலைகள் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 2 இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து வந்த கொள்ளையர்கள் கோவில் அருகே நின்று நோட்டமிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள் அவர்களை விசாரித்து விட்டு அனுப்பி விட்டனர்.

நேற்று காலை கோவிலில் இருந்த ஆஞ்சநேயர், துர்க்கையம்மன், பாலமுருகன் ஆகிய சிலைகள் திருட்டு போனது கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் தட்சிணாமூர்த்தி, சிவலிங்கம் ஆகிய சிலை களை எடுக்க முயன்று அது முடியாமல் போகவே அந்த சிலைகளை அப்படியே விட்டு விட்டு சென்றுவிட்டனர்.
இது குறித்து கோவில் நிர்வாக தலைவர் மின்னல் கொடி, செயலாளர் வேலுச்சாமி, துணைத் தலைவர் முத்துராமலிங்கம் ஆகியோர் வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் ஆய்வாளர் வினோஜி தலைமையிலான காவலர் அங்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலில் சாமி சிலைகள் கொள்ளை போன சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் ஓவியா said...

கோவில் விழா கூட்டத்தில் மோதல்  பிளேடு கத்தி வெட்டு
பண்ருட்டி, ஜூலை. 3 பண்ருட்டியை அடுத்த எம்.ஏரிப்பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழக்கம் போல் வருகிற ஆடி மாதத்தில் திருவிழா நடைபெற உள்ளது.

இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் அந்த கிராமத்தில் நடைபெற்றது. இதில் ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் கிராமத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் திருவிழாவுக்காக அந்த ஊரில் உள்ள குடும்பங்களுக்கு வரி விதிப்பதுபற்றி ஆலோசிக்கப்பட்டது. வேலைக்காக வெளியூர் சென்றவர்களுக்கு வரிவிதிக்க பல இளைஞர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

இதனால் கூட்டத்தில் வாக்குவாதம் உருவாகி தகராறு ஏற்பட்டது. இதில் சீத்தாராமன் என்ற இளைஞர் தாக்கப்பட்டார். உடனே ஆத்திர மடைந்த அவர், தனது சட்டை பையில் இருந்த பிளேடால் தன்னை எதிர்த்தவர்களை சரமாரியாக தாக்கினார்.

இதில் பிளேடு வெட்டு விழுந்து படுகாய மடைந்த அழகுகண்ணன் (32), வெங்கடகிருஷ்ணன், பாலமுருகன் (42), மணிகண்டன் (29) ஆகியோர் சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக் காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுபற்றி பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் ஆய்வாளர் முருகேசன், உதவி ஆய்வாளர் சக்கரபாணி ஆகி யோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...

இந்து மதத்தால் ஏற்பட்ட விபரீதம்!
கிறிஸ்தவ மதத்திலும் ஜாதி வேறுபாடா?

உயர்நீதிமன்ற மதுரை கிளை சுட்டிக்காட்டி கண்டனம்
மதுரை, ஜூலை3_ ஜாதீய முறைகளினால் ஏற்பட்டுவரும் கொடுமை கள் மனிதன் செத்த பிற கும்கூட விட்டபாடில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ஆழ்ந்த வேதனையைத் தெரிவித்துள்ளது.

இந்து மதத்திலிருந்து வெளியேறி கிறித்துவத்தில் சேர்ந்த பிறகும்கூட ஒவ் வொரு ஜாதியினருக்கும் வெவ்வேறான சுடுகாடு களைக் கோருகின்ற அவல நிலை உள்ளது. சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் எஸ்.மணிக் குமார் மற்றும் ஜி.சொக்க லிங்கம் ஆகியோரைக் கொண்ட டிவிஷன் அமர்வு முன்பாக பொதுநல வழக்கு நேற்று (2.7.2015) விசாரணைக்கு வந்தது. திண்டுக்கல் வட் டத்தைச் சேர்ந்த ஏ.வெள ளோடு கிராமத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் மற்றும் பெந்தகோஸ்தே பிரிவு கிறித்தவர்களுக்கும் இடையே பிரச்சினைகள் இருப்பதாக அவ்விரு பிரிவினருக்கும் என தனித்தனியே சுடுகாடுகள் கோரி பொதுநலவழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கில் நீதிபதி கள் குறிப்பிடும்போது, கிறித்துவத்தில் ஜாதீய முறை கிடையாது. இந்து மதத்தில் உள்ளதும், அதன டிப்படையில் பழக்கங் களின் அடிப்படையில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஜாதீய முறை கிறித்துவத் திலும் ஊடுருவிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

கிறித்துவ பைபிள் இவைகளை அனுமதிக் கிறதா என்பதுதான் ஆச்ச ரியமாக இருக்கிறது. அதற்கு காரணமான ஜாதியை பெருமையின் அடையாளமாக பார்க் கிறார்கள். ஜாதீயமுறைகளால் செத்த பிறகும் தனித்தனி இடங்களுக்காகப் போரா டும் நிலை ஏற்பட்டுள்ளது குறித்து நீதிபதிகள் வேதனையை வெளிப் படுத்தினார்கள்.

சட்டப்படியான நடை முறைகள் இருந்தபோதி லும், வருவாய்த்துறை அலு வலர்கள் சமாதானக் கூட் டங்களை நடத்துவதற்கு தள்ளப்படுகின்றனர்.

நீதிபதி எஸ்.மணிக் குமார் கூறும்போது, வாழும் காலங்களில் மக்கள் பழமைகளின் பெயரால், தனிப்பட்ட வகையிலும், சொத்து களுக்காகவும் இன்னும் மற்றவைகளுக்காகவும் பல்வேறு உரிமைகளுக் காகப் போராடிவருகின்ற னர். ஆனால், எங்களுக்கு வேதனையெல்லாம் அவர்கள் இறந்தபிறகும் அவர்களைப் புதைக்க வேண்டிய இடத்துக்காக வும் போராட்டம் தொடர் கிறது என்பதுதான். கல் லறைகள் அமைதியான இடங்களாக இருக்க வேண்டியவை. இறந்தபிறகு நாம் விரும்புவதுகூட அமைதியாக ஓய்வெடுக்க வேண்டும் என்பதுதான். ஆனால், உண்மை நிலை, இந்த வழக்கில் உள்ள சூழ்நிலைப்படி பார்க்கும் போது, மனிதன் உயிருடன் இருக்கும்போது மட்டு மன்றி இறந்தபிறகும்கூட அமைதியே இல்லாமல் இருப்பதைத்தான் பார்க்க முடிகிறது என்று குறிப் பிட்டுள்ளார்.

அமர்வில் நீதிபதிகள் மேனாள் நீதிபதி கே.சந்துரு எடுத்துக்காட்டிய 1956ஆம் ஆண்டில் வெளியான ரம்பையின் காதல் தமிழ்த் திரைப்படப் பாடல் சமரசம் உலாவும் இடமே.... 2008ஆம் ஆண்டு வழக்கில் முடிவாக அவர் அளித்த தீர்ப்பில், குறைந்தபட்சம் இந்த உலகைவிட்டு நீங்கும் போதாவது ஒற்றுமை உணர்வு இருக்க வேண் டும் என்பதை சுட்டிக் காட்டினார்கள். மேலும் மதுரை தத்தனேரி சுடு காட்டுப்பகுதியில் வெவ் வேறு ஜாதியினருக்கு வெவ்வேறு சுடுகாடுகள், புதைக்கும் இடங்கள் என்று சமூக பாகுபாடு களுக்கு இடமில்லாமல் மதுரை மாநகராட்சி அலுவலர்கள் செயல் படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே இவ்வழக்கில், திண்டுக்கல் வருவாய்த்துறை கோட் டாட்சியர் சமாதானக் கூட்டத்தில் எடுத்த முடி வாகிய பெந்தகோஸ்தே பிரிவினருக்கான சுடுகாட் டுக்கான தனி இடத்தை, அரசமைப்புகூறும் சமத் துவம் மற்றும் சகோதரத் துவம் ஆகிய இலட்சியங் களின்படி மாவட்ட ஆட்சியர் முழுமையான தீர்வு காணும்வரை தற் காலிகமாக மட்டுமே பயன் படுத்திக் கொள்ள   வேண் டும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட் டுள்ளனர்.

மேலும் அமர்வின் சார்பில் நீதிபதிகள் குறிப் பிடும்போது, மதத் தலைவர்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்வதெல்லாம் உங்கள் கூட்டங்களில், அறிவுரைகளில் சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சகோதரப் பாசங்களை எடுத்துக்கூறுங்கள் என்பது தான் என்று குறிப்பிட் டுள்ளார்கள்.

தமிழ் ஓவியா said...

பரிதாபமே!

இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேஷம் காரணமல்ல; மக்கள்மீது உள்ள பரிதாபமே காரணம்.
(குடிஅரசு, 8.9.1940)

தமிழ் ஓவியா said...

ஊழல் சகதியில் பிஜேபி

 

பொருளாதார மோசடிக்குற்றவாளியான லலித் மோடிக்கு உதவிய விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே பல்வேறு குற்றச்சாட்டுகளில் தொடர்ந்து சிக்கி வருகிறார். இந்த நிலையில் அரசுக்குச் சொந்தமான அரண்மனையை தனது பெயருக்கு மாற்றினார் என்றும் இந்த விவகாரத்தில் லலித்மோடி வசுந்தரா ராஜேவிற்கு உதவியுள்ளார் என்று அது தொடர்பான ஆவணங்களுடன் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக  காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் சில ஆவணங்களை தலைநகர் டில்லியில் வெளியிட்டார்.

தவுல்பூர் அரண்மனை ராஜஸ்தான் அரசுக்கு சொந்தமானது. 1954-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரையிலான வருவாய்த்துறை ஆவணங்களில் இந்த அரண்மனை அரசுக்குச் சொந்தமானது என்றே காணப்படுகிறது. 1980-ஆம் ஆண்டு இது தொடர்பாக வசுந்தரா ராஜேயின் கணவர் ஹேமந்த் சிங் அளித்த வாக்குமூலத்திலும், தவுல்பூர் அரண்மனை  ராஜஸ்தான் அரசாங்கத்துக்கு சொந்தமானது என்றே கூறி இருக்கிறார். வசுந்தரா ராஜேவும் கூட அதை ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

2013-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது வசுந்தரா ராஜே தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், நியாந்த் ஹெரிடேஜ் ஓட்டல்ஸ் நிறுவனத்தில் தனது மகன் துஷ்யந்த் சிங், மருமகள் நிஹாரிகா மற்றும் லலித் மோடி ஆகியோருக்கும் பங்குகள் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். இந்த அரண்மனையை துஷ்யந்த் சிங், தான் நடத்தும் நியாந்த் ஹெரிடேஜ் ஓட்டல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான தனியார் ஓட்டலாக மாற்றிக்கொண்டுவிட்டார். இந்த நிறுவனம் லலித் மோடியும், வசுந்தரா ராஜேவும் இணைந்து நடத்துவதாகும். இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், வசுந்தரா ராஜே, அவருடைய குடும்பம் மற்றும் லலித் மோடி ஆகியோர் இணைந்து ராஜஸ்தான் அரசுக்கு சொந்தமான இடத்தில் சொகுசு ஓட்டலை கட்டி இருக்கின்றனர். இதில் மாநிலத்தின் பங்களிப்பு இல்லாமலேயே ரூ.100 கோடியை இருவரும் முதலீடு செய்தும் உள்ளனர்.

இந்த ஓட்டலை கட்டுவதற்கு மொரீஷியஸ் வழியாக லலித் மோடி பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். இது திட்டமிட்டே அரசாங்க சொத்தை தங்களுக்கு சொந்தமாக்கிக்கொண்டதாகும். சட்டவிரோதமும் ஆகும். இதன் மூலம் தலைமறைவாக உள்ள லலித் மோடியுடன், வசுந்தரா ராஜே வர்த்தக தொடர்பு கொண்டிருப்பதும் தெளிவாக தெரிகிறது.       லலித் மோடி விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து அமைதி காத்து வருகிறார். வெளிப் படையான ஆட்சி, ஊழலில்லாத ஆட்சி என்று கூறிக்கொண்டு வந்த மோடி இப்போது அவரது அமைச்சரவையிலேயே பலர் தொடர்ந்து ஊழல் வழக்குகளில் சிக்கிவருகின்றனர். இது குறித்து இன்னும் பதில் ஏன் கூறவில்லை என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது என்றாலும் இது மக்கள் முன் வெகுவாக எழுந்து நிற்கும் கேள்வியும்கூட!

ஓராண்டு பிஜேபி ஆட்சியின் சாதனை என்ன என்று கேள்வி கேட்டால், ஊழலற்ற ஆட்சியைக் கொடுத்திருக்கிறோமே அது போதாதா என்று நெஞ்சை நிமிர்த்தியும், குரலை உயர்த்தியும் பேசிக் கொண்டிருந்த வர்களுக்கு லலித்மோடி தொண்டைக்குள் சிக்கிய முள்ளாகி  விட்டார்.

ராஜஸ்தான் மாநில முதல் அமைச்சர் மட்டுமல்ல; இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜும் பலமாக சிக்கிக் கொண்டு விட்டாரே - பிரதமர் நரேந்திர மோடியோ மவுன சாமியாராகி விட்டார். மன்மோகன் சிங்கைத்தான் அப்படி அழைத் தார்கள். அவரின் இயல்புப்படி அதிகம் பேசாதவர்! அவர்கூட நாடாளுமன்றத்தில் தேவைப்பட்ட நேரத்தில் எழுந்து பேசததான் செய்தார்.

ஆனால், 56 அங்குல மார்பளவு கொண்ட மாபெரும் வீரரான வாய் நீளம் காட்டும் மோடியோ இப்பொழுது - மன்மோகன் சிங்கையே தோற்கடிக்கும் அளவுக்குத் தமக்குத் தாமே தம் வாய்க்குள் அலிகார் பூட்டைப் போட்டுக் கொண்டு விட்டாரே ஏன்? மவுனம் சம்மதத்திற்கு அடையாளம் என்பது இது தானோ?

தமிழ் ஓவியா said...

சங்கராச்சாரியின் சங்கடம்

கொள்ளையடித்த பணம் கொள்ளை போயிற்று

தற்சமயம் காசியில் தங்கியிருக்கும் ஸ்மார்த்த பிராமணக் கூட்டத்தின் தலைவரான லோககுரு சங்கராச்சாரியாரிடம் இருந்த ஏராளமான சொத்துக்கள் திருட்டுப் போய்விட்டன.

அவருடைய பூஜையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 15 விக்கிரகங்களும், இரண்டரை தோலா தங்கம் வைத்துக் கட்டப்பட்டிருந்த பெரிய சங்கு ஒன்றும் திருட்டுப் போய் விட்டனவாம். இவற்றின் விலை பல ஆயிரக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ளதென்று கூறுகிறார்கள்.

பூஜையில் வைக்கப்பட்டிருந்த விக்கிரகங்களுக்கோ, அல்லது லோககுரு என்று சொல்லிக்கொண்டு ஊரை ஏமாற்றித் திரிகின்ற சங்கராச்சாரியாருக்கோ, ஏதாவது சக்தி யென்பது இருந்தால் திருடர்கள் அவைகளை எடுத்துக் கொண்டு போயிருக்க முடியுமா? என்று இப்பொழுதுதான் மூட ஜனங்கள் யோசித்துப்பார்க்க ஆரம்பித் திருக்கிறார்கள்.

ஒன்றுந் தெரியாத பாமர மக்களையும், பார்ப்பனர்களின் தயவு பெற அவர்கள் காலை வருடிக் கொண்டு கிடக்கும் பார்ப் பனரல்லாத பணக்காரர்களையும் ஏமாற்றிப் பாத காணிக்கை யென்னும் பேரால், பகிரங்கப் பகற்கொள்ளை போல் சம்பாதித்துச் சேர்த்து வைத்த பொருள் நிஜமாகவே கொள்ளை போனதில்ஆச்சரியப்படத் தக்க விஷயம் என்ன இருக்கிறது? என்று உண்மை தெரிந்தவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

திருடர்களைப் கண்டுபிடிக்கப் காவல்துறையினரும் அதிதீவிர முயற்சி செய்து வருகிறார்களாம்! அய்யோ! பரிதாபம்! சங்கராச்சாரியார் அவர்களே! சங்கடப்படவேண்டாம்! தேசத்தில் இன்னும் எவ்வளவோ முட்டாள்களிருக்கிறார்கள்.

மற்றொரு சுற்றுப்பிரயாணத்தைத் தடபுடலாக விளம் பரத்துடன் நடத்தினால் இழத்த பொருளையும், அதற்கு மேலான பொருளையும் சம்பாதித்துக்கொள்ளலாம், முட்டாள்கள் இருக்கும் வரையில் தங்களுக்கு ஏன் கவலை ? ஆகையால் கவலைப்படாதீர்கள் என்று ஆறுதல் சொல்லு கிறோம்.

(குடிஅரசு - 1935)

தமிழ் ஓவியா said...

அப்பா - மகன்


மகன்: எதிர்த்த வீட்டு ஜோசியரு ஜாதக பொருத்த மெல்லாம் பார்க்க ரொம் பவும் ராசி யான ஆளா? 50, 100ண்ணு அங்க வர்றவங் கள்ளாம் தட்சணை கொடுக்கிறாங்களே... அந்த பணத்தை எல்லாம் அவரு என்ன பண்ணுவாரு?

தந்தை: அங்க வர்றவங்கள்ளாம் தர்ற தட்சணைப் பணத்தை எல்லாம் சேர்த்து வச்சு தம் பொண்ணுக வரனுக்கு வரதட்சணையா கொடுப்பாரு!

தமிழ் ஓவியா said...

யார் கெட்டிக்காரர்கள்?

சந்திரலோகத்தைக் கண்டு விடமுடியும்இந்தப்பூலோகத்துக்கும், சந்திரலோகத்துக்கும் 250000 இரண்டு லட்சத்து அய்ம்பது ஆயிரம் மைல்தூரம் இருக்கிறது. இதை மணி ஒன்றுக்கு  2500 இரண்டாயிரத்து அய்ந்நூறு மைல் வேகம்  போகக்கூடிய பறக்கும் யந்திரத்தின் மூலம்  100 நிமிட நேரத்தில் பூலோகத்தில் இருந்து சந்திர மண்டலத்துக்குப் போய் விடலாம் என்று அமெரிக்க சங்கத்தார் உத்தேச திட்டம் போட்டிருக்கிறார்கள்.

இந்தத் திட்டத்தை  நமது இந்திய  மகாத்மாக்களும், சங்கராச்சாரிகளும் பண்டார சன்னதிகளும் ஆகிய ஞானிகள் ஆகாயக்கோட்டையென்றோ, வீண்கனவென்றோ தான் சொல்லுவார்கள்.

ஆனால் மணி ஒன்றுக்கு  700 மைல் வேகம் போகக்கூடிய ஆகாய விமானம் செய்து பார்த்தாய் விட்டது. இனியும் இதிலிருந்து பல அபிவிருத்திகள் நடந்து வேகத்தைப் பெருக்க வசதி இருக்கிறது என்பதைக் கண்டு வருகிறார்கள்.

ஆகவே மேல் நாட்டு மக்களுடைய ஆசையும், முயற்சியும் இந்தமாதிரியான துறைகளில் சென்று கொண்டிருக்கின்றன. நம்முடைய முயற்சிகள்  கிருஷ்ணன் மனிதனா -கடவுளா ?

ராமாவதாரம் முந்தியா -கிருஷ்ணாவதாரம் முந்தியா ?
பூமியை ஆதிசேஷன்  தாங்கினால், ஆதிசேஷயைர் தாங்குகிறார் ?

உலகத்தை இரணியாஷதன் பாயாய்ச்சுருட்டிக்கொண்டு சமுத்திரத்துக்குள் புகுந்து கொண்டான். என்றால் அப்போது சமுத்திரம் எங்கு? எதன் மேல் இருந்தது ?

மகாவிஷ்ணு, பன்றி அவதாரமெடுத்தபோது  என்ன ஆகாரம் சாப்பிட்டார்?

சிவனும் விஷ்ணும் (ஆணும் ஆணும்) சேர்ந்தால்  பிள்ளை எப்படி பிறந்திருக்கும்?

இந்திரியத்தை வாய் வழி உட்கொண்டால் பிள்ளை பிறக்குமா? அப்படியானால், இப்போது ஏன் அப்படி  எவருக்கும் பிள்ளை பிறப்பதில்லை? என்பது போன்ற  முட்டாள்தனமானதும்  போக்கிரித் தனமானதுமான பிரச்சினையில் நமது சாஸ்திரிகளுடைய ஆராய்ச்சிகள் சென்று கொண்டிருக்கின்றன. இவ்வளவோடு நின்றுவிடுகின்றோமா ?

சந்திரலோகத்தைப் பார்க்க இப்போது தான் நமது வெள்ளைக்காரர்கள் நினைத்து இருக்கிறார்கள். நம்முடைய பெரியவர்கள் எத்தனையோ காலத்துக்கு முன் சந்திரனைப் பார்த்தாகிவிட்டதென்றும், நம்முடைய குருவின்மார்  மனைவிகள் சந்திரனைப் புணர்ந்து, புதனைப் பெற்று இருக்கிறார்கள் என்றும் அதற்காகப்புருஷர்கள் அந்தச்சந்திரன்  மீது  கோபித்து அவனை மாதத்திற்கு ஒரு முறை தேயவும்,

வளரவும் செய்து விட்டார்கள் என்றும், அதுமாத்திரமல்லாமல்,  சந்திரனையும் அவனுக்கு வெகுதூரத் திலிருக்கும் சூரியனையும், சராசரி வருஷத்துக்கு  ஒரு  முறையானது (ராகு) கடிக்கச்செய்து அந்த விஷமிறங்க நம்ம  சாஸ்திரிகள் ஜபம் செய்கிறார்கள்.

என்றும் சொல்லி விடுகிறோம். ஆகவே வெள்ளைக்காரர்களுடைய அறிவிற்கும், நம் சாஸ்திரிகளுடைய அறிவுக்கும்  எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்பதையும்  யார் கெட்டிக்காரர்கள் புத்திசாலிகள் என்பதையும் நீங்களே கண்டு பிடியுங்கள். (குடிஅரசு - 1935)

தமிழ் ஓவியா said...

சமூகப் புரட்சி


ஒரு பெரிய சமூகப் புரட்சி உண்டாகாமல் அபேத வாதிகள் (சோஷலிஸ்ட்) விரும்பும் பொருளாதார சுதந்திரம் ஏற்பட போவதில்லை என்பது உறுதி. புரட்சி செய்து அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமானால் ஏழை - எளியோர் முன் வந்துதான் ஆக வேண்டும்.

ஏனையோர், தம்மை சமமாகவும், சகோதர உணர்வுடனும், நீதியாகவும் நடத்துகிறார்கள் என்ற நம்பிக்கை இருந்தால்தான் பாமர மக்கள் மற்ற மக்க ளுடன் சேர்ந்து புரட்சி செய்வார்கள்.

வெற்றி பெற்ற பிறகு ஜாதி - மதவேற்றுமை பாராட்டாமல் சமத்துவமாக நடத்துவார்கள் என்ற நம்பிக்கை இருந்தா லொழிய எத்தகைய புரட்சிக்கும் மக்கள் முன் வரமாட்டார்கள்.

ஜாதியில் எங்களுக்கு நம்பிக்கையில்லை என்று வாயளவில் மட்டும் அபேதவாதிகள் கூறிவிட்டால் போதாது. ஜாதி உயர்வு - தாழ்வு பிரச்சினையை முடிவு செய்யாமல் அபேத வாதிகள் ஒரு விநாடி கூட ஆட்சி நடத்த முடியாது.

- டாக்டர் அம்பேத்கர்

தமிழ் ஓவியா said...

மதக்கோட்பாடுகள்நாம் நம்மைப்பற்றிய பழைய நினைவுகளில் மூழ்கி யிருக்கிறோமே தவிர, நம்மைச்சுற்றி இன்று என்ன நடக்கிறது  என்று அறிந்து கொள்ள முயல்வதில்லை. அறியத் தவறிவிடுகிறோம். இதற்குக் காரணம் நம்முடைய மதக் கோட்பாடுகள்தான்.

ஆகவே நாம் குறுகிய மதக்கோட்பாடு களிலிருந்தும், இயற்கைக்கு மீறிய சக்திகள் உள்ளன என்ற அர்த்தமற்ற  மாயையிலிருந்தும் விடுபடவேண்டும். இந்த வாழ்க்கை -இந்த உலகம் -இந்த இயற்கை என்று நிகழ்காலத்தைப் பற்றியே நாம் கெட்டியாகப் பிடித்து எண்ணிப்பார்க்கவேண்டும்.

சில இந்துக்கள் நாம் வேதகாலத்திற்குச் செல்வதைப்பற்றியே பேசுகிறார்கள். சில முஸ்லீம்கள் இஸ்லாமிய மத ஆட்சியைப் பற்றியே கனவுகாண்கிறார்கள். இவைகள் யாவும் சோம்பேறித்தனமான கற்பனைகளாகும்.

ஏனெனில் இனி நாம் பின் நோக்கிச் செல்வது என்பது முடியாத காரியம். போகவும் முடியாது. காலமென்னும்பாதை ஒரு வழிப் பாதையே (One Way Traffic)  எனவே திரும்பி வருவதென்பது விரும்பத்தக்கதாக நினைத்தாலும் கூட நாம் இனி திரும்பிவருவதற்கில்லை. உலகத்தை ஒட்டி முன் சென்றே ஆகவேண்டும்.

***************************
பழைமை எண்ணங்கள்

நன்மை தீமைகளை நாம் பிரித்துக்காட்டும் போது மாறுபட்ட பல கருத்துக்கள் தோன்றும். இவைகளை நாம் கோடிட்டுப் பிரிக்கவேண்டிய அவசியமுமில்லை, ஏனெனில், மாறிமாறி  வரும் வாழ்வும், அதில்  தொடர்ந்து வரும் நிகழ்ச்சிகளும் நமக்கு நன்மை எது? தீமை எது.? என்று காட்டிவிடும்.

எந்தவிதமான முன்னேற்றமும், விஞ்ஞானமோ அல்லது தத்துவார்த்தமோ எதிலும் அந்த முன்னேற்றம் நம்முடைய சமூகத் தேவைகளுக்கும், சொந்த வாழ்க்கைக்கும் தொடர்புடையதாக இருக்கவேண்டும்.

முன்பு நாம் பல்வேறுபட்ட எண்ணக் கூறுகளைத் தொகுத்து ஒன்றாக்கி  அதன் (Synthetic approach) மூலம் அறிவைப்பெற  முயன்றோம், இன்று இதன் மூலம் அறிவை நாடுபவர்கள் வெகு சிலரேயாவர்.

இந்த முறையில் அறிவை அணுகுவதற்கு இங்கே முட்டுக்கட்டைப்  போடப்பட்டது. அதனால் இந்த முறை  வேறொன்றுக்கு வழி விட வேண்டிய கட்டாயம்  ஏற்பட்டது. இந்தப்  புதிய வசதி (Analytical approach)  பழைமையாயிருந்து வந்தவைகளுக்கு நேர் எதிர்மாறானதாகும்.  -நேரு, டிஸ்கவரி ஆஃப்  இந்தியா

தமிழ் ஓவியா said...

மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு
மழைக்காக பூஜை செய்ய உத்தரவிடுவதா?

தலைமைப் பொறியாளருக்கு மதுரை உயர்நீதிமன்றம் தாக்கீது
மதுரை, ஜூலை 2_ மழை பெய்வதற்காக பூஜை செய்யச்சொல்லி ஆணை பிறப்பித்த நீர்வளத்துறைத் தலைமைப் பொறியாளர் மீது திராவிடர் கழக வழக் குரைஞர் அணியைச் சேர்ந்த மதுரை வழக் குரைஞர் ந.இளங்கோ அவர்களால் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. அரசமைப்புச் சட்டத்திற் கும் மாநில, மத்திய அரசு களின் ஆணைகளுக்கும் எதிராக எப்படி இத்தகைய ஆணையைப் பிறப்பிக்க லாம் என்பதற்குப் பதில் அளிக்குமாறு மதுரை உயர்நீதிமன்ற கிளை 2 நீதி பதிகள் அடங்கிய அமர்வு தலைமைப் பொறியாள ருக்கு தாக்கீது பிறப்பித் துள்ளது.

தமிழ் ஓவியா said...

பூஜை செய்தால் மழை வருமாம் பொறியாளரின் புதிய கண்டுபிடிப்பு

திருச்சியில் நீர்வளத் துறையில் தலைமைப் பொறியாளராக பணி புரிந்து வருபவர். எஸ். அசோகன். எம்.இ. ஆவார். அவர் கடந்த 26.05.2015இல் தனக்கு கீழ் பணிபுரியும் அனைத்து பொறியாளர் களும் அந்தந்த கோட்டங் களின் ஆளுகைக்கு உட் பட்ட கோயில்களில் 1.06.2015 அன்று சிறப்புப் பூஜைகள் செய்யவேண்டும்  என்றும் இந்த விவரத் தினை 2.6.2015 அன்று காலை 10 மணிக்குள் மின் னஞ்சல் மூலம் தெரிவித் திட வேண்டும் என்றும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி யிருந்தார். இதனை ஆட் சேபித்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக் குரைஞரும், திராவிடர் கழக வழக்குரைஞர் அணி யைச் சேர்ந்தவருமான ந.இளங்கோ மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார். திராவிடர் கழக வழக்குரை ஞரணித் தலைவர் த.வீர சேகரன் மனுதாரர் சார் பில் வாதாடினார்.

அந்த மனுவில் தமிழக அரசு பிறப்பித்த 29.04.1968 தேதியிட்ட குறிப்பாணை மற்றும் 13.12.1993 தேதி யிட்ட தமிழக அரசின் அரசாணை எண். 426, 18.08.1994இல்  தமிழக அர சின் தலைமைச் செயலர், மற்ற துறைச் செயலாளர் களுக்கு அனுப்பிய கடிதம், மத்திய அரசின் உள்துறை இணைச்செயலாளர் அனைத்து மாநிலச் செய லாளர்களுக்கும் அனுப்பிய கடிதம் ஆகியவற்றின் நகல்களை தாக்கல் செய்து, அவற்றில் அரசு அலுவல கங்களில் எவ்வித மதச் சடங்குகளோ, பூஜை களோ, செய்யக்கூடாது என்றும், கடவுளர் படங்கள், சிலைகள், மதம் சம்பந்தப் பட்ட வாசகங்கள் அரசு அலுவலகங்களில் இருக்கக் கூடாது என்றும், அரசு அலுவலகங்களுக்கு அறி வுரை கூறப்பட்டிருக்கிறது என்றும், அதையும் மீறி இதுபோன்ற அரசு அலு வலர்கள் தங்களது அரசு கடமைகளைச் செய்யாமல், மத காரியங்களில் ஈடு படுவது அரசு ஆணை களை மீறிய செயலாகும் என்றும் அரசு ஊழியர் களின் நன்னடத்தைச் சட்டம் பிரிவு 14இன் கீழ் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டதாகும் என்றும் தனது மனுவில் கூறியிருந் தார். அதோடு இதே மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நீதியரசர்கள் இப்ராஹிம் கலிபுல்லா, மற்றும் வாசுகி ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ் சில் 17.03.2010இல்  பிறப் பிக்கபட்ட உத்தரவில், அரசாணை 426 மிகவும் கடுமையாக பின்பற்றப் படவேண்டும் என்றும் தவறு செய்யும் அரசு ஊழியர்களின் மீது நட வடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு அறிவுரை வழங்கியிருந்தது.

அரசமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது?

இந்த உத்தரவுக்கு பின்னரும் பல அரசு அலு வலகங்களில் மதச் சடங் குகளும், பூஜைகளும் நடந்து கொண்டிருக்கும் வேளையில், திருச்சி நீர்வளத் துறை தலைமைப் பொறியாளர் மழைக்காக கோயில்களில் பூஜைகள் நடத்திட தனக்கு கீழ் பணி புரியும் அனைத்துப் பொறி யாளர்களையும், பூஜை நடத்த கட்டளையிடுவது மதச் சார்பின்மைக்கு எதிரானது மட்டுமல்லா மல், அரமைப்புச் சட்டத் தில் அத்தியாயம் 4-எ பிரிவு 51-எ (எச்)- ல் அறிவுறுத்தப் பட்டுள்ள அடிப்படை கடமைகளுக்கு விரோத மானதாகும். அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும்  என்றும் ஆராய்ச்சி மனப்பான்மையில் ஈடு படவேண்டும் என்றும் அப்பிரிவில் வலியுறுத்தப் பட்டிருக்கும் நிலையில், இந்த பொறியாளரின் அறிக்கை, மேற்படி அரச மைப்புச் சட்ட விதிகளுக் குப் புறம்பானதாகும். மழைக்காக பூஜை செய்ய வேண்டும் என்ற முறை அந்த பொறியாளர் படித்த பி.இ அல்லது எம். இ பட்டபடிப்பில் பாடத் திட்டங்களில் ஒன்றாக இல்லாத நிலையில், ஒரு பொறியாளர் அதுவும் அரசு அதிகாரியாக இருக் கும் ஒருவர் இவ்வாறு சுற்றறிக்கை விடுவது கேலிக்குரியதாகும். மேலும் அரசு ஊழியர்கள் பெரும் பாலும் மேய்ப்பன் இல் லாத ஆடுகளாகவே பணிபுரிந்து வருகிறார்கள் என்பது கவலைக்குரிய விஷயம்.

ஏனெனில் உயர் நீதிமன்றம் தலைமைச் செயலாளருக்கு இது போன்ற மத சம்பந்தமான நடவடிக்கை கூடாது என்று அறிவுறுத்திய பின் பும் இது தொடர்கிறது என்பதே சான்றாகும்  என்று மனுதாரர் வழக் குரைஞர் ந. இளங்கோ கூறியிருந்தார்.    இந்த மனு 30.06.2015இல் நீதியரசர்கள் மணிக்குமார் மற்றும் ஜி. சொக்கலிங்கம் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ் சில் விசாரணைக்கு வந்த போது நீதியரசர் மணிக் குமார் அவர்கள் கூடுதல் தலைமை வழக்குரைஞர் அவர்களிடம் எவ்வாறு ஓர் அரசு அதிகாரி மத சார்பான, ஓர் உத்தரவைப் பிறப்பிக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பினார். அதற்குக் கூடுதல் தலைமை வழக்குரைஞர் அனைத்து மத கோயில்களிலும் பூஜை நடத்தத்தான் உத்தரவிட் டிருந்தார் என்று பதில் கூறியபோது அதுவும் மதச்  சார்பின்மைக்கு விரோத மானதுதானே என்று கூறிய நீதியரசர் விரிவான எதிருரையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தலைமைப் பொறியாளர் அசோகன் நீதிமன்றத்தில் ஆஜராகி பதில் உரை தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டு மனு விசாரணையை மூன்று வாரங்களுக்குத் தள்ளி வைத்தார்.

தமிழ் ஓவியா said...

இன்னும் எத்தனை இளவரசன்கள் தேவை?


தருமபுரி மாவட்டத்தில் தான் ஜாதித் தீ பிடித்து அலைக் கழித்தது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளவரசன்களை ஜாதித் திமிங்கலம் பலி கொண்டது. அது தற்கொலையா? கொலையா? என்று ஆய்வு செய்வதைவிட எதுவாயினும் ஜாதி என்னும் கொலை தத்துவம்தான் அவனைக் கொன்று பசி வெறியைத் தீர்த்துக் கொண்டது.

2013 ஜூலை 4ஆம் தேதி அந்தக் கட்டிளங்காளை தர்மபுரி ரயில் தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்தான் என்றால் இன்னொரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்ற இளஞ்சிங்கம் ஈரோடு அருகே கிழக்குத் தொட்டிப்பாளையம் தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்தான் என்பது அதிர்ச்சிக்குரியது.

காதலர்களுக்கெல்லாம் இரயில்வே தண்ட வாளங்கள்தான் தண்டனை மெத்தைகளா?

இளவரசன் மரணத்தின் மர்மங்களுக்கு இன்னும் கூட விடை கிடைக்காத நிலையில் கோகுல் ராஜின் மரணத்தின் பின்னணிக்கான வெளிச்சம் என்றைக்குத் தெரியப் போகிறதோ?

சுவாதியும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கோகுல் ராஜும் காதலித்ததுதான் பெரும் பாவமாகப் போய் விட்டது போலும்!
ஜாதியை வைத்து அரசியல் நடத்தும் பிற்போக்கு வாதிகள் இத்தகைய மரணங்களுக்கு அல்லது படுகொலைகளுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்.

ஏடுகளில் வெளிவந்த தகவல்களைப் பார்க்கும் பொழுது குற்றவாளிகள் யார் என்பது அனேகமாகக் காவல் துறையினருக்குத் தெரிந்திருக்கும்.

உயர் ஜாதிக்காரர்களா? வளமான பொருளாதாரப் பின்னணி உள்ளவர்களா? என்ற ஆராய்ச்சியில் ஈடுபடாமல் காவல்துறை, தன் கடமையைச் செய்ய வேண்டும்.

காதலிப்பது ஒன்றும் பஞ்சமா பாதகமல்ல - சட்ட விரோதமான செயலும் அல்ல; ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் இருக்கிறதா என்பதுதான் முக்கியமே தவிர எந்த ஜாதி என்பது முக்கியமல்ல.

தந்தை பெரியார் பிறந்து முக்கால் நூற்றாண்டுக் காலம் பாடுபட்டுப் பக்குவப்படுத்தப்பட்ட தமிழ் மண்ணிலே பாழும் அரசியலுக்காக ஜாதியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு ஜாதிக் கூட்டணி வைத்து, ஜாதியின் பிரதாபங்களை முழங்கும் பேர் வழிகள் - இத்தகைய மரணங்களுக்குப் பிறகாவது மனம் திருந்த வேண்டும்.

வெட்கம் கெட்ட செயலுக்குப் பெயர் கவுரவக் கொலையாம். எது கவுரவம்? ஜாதி ஒழிப்பு - மறுப்பு என்பதுதானே உண்மையான கவுரவம்!

பகுத்தறிவும், முற்போக்குச் சிந்தனைகளும் சக மனிதனை மதிப்பதும், சகோதரத்துவ உணர்வும் தானே கவுரவத்துக்கான இலக்கணம்!

ஜாதிப் பித்து என்பது எப்படி பகுத்தறிவு உள்ள மனிதனுக்குக் கவுரவமானதாக இருக்க முடியும்?

ஜாதி என்பதற்கு என்னதான் அடையாளம்? பத்து பேர்களை வரிசையாக நிற்க வைத்து, யார் என்ன ஜாதி என்று யாராலாவது சொல்ல முடியுமா? குரங்கிலிருந்து தோன்றிய மனிதனுக்கு எங்கிருந்து ஜாதி வந்து குதித்ததாம்?

மூதாதையர்களான குரங்குகளிலேதான் ஜாதி உண்டா? உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் சேர்த்துத்தானே குரங்கு மூதாதை? அந்த நாடுகளில் எல்லாம் ஜாதிகள் இல்லையே - இங்கு மட்டும் எங்கிருந்து வந்தது ஜாதி?

கபிலர் பாடியது போல மற்ற நாடுகளில் எல்லாம் ஜாதியில்லாமைக்குக் காரணம் அங்குப் பார்ப்பனர் இல்லாமையால் தானே இன்னொன்றையும் முக்கிய மாகக் கவனிக்க வேண்டாமா? தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர், முன்னேறியோர் என்று நமக்குள் பிரித்துக் கொண்டு மட்டத்தில் உசத்தி என்று நாம் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டாலும் நம் எல்லோரையும் பார்ப்பான் ஒட்டு மொத்தமாகச் சேர்த்துத்தானே சூத்திரன் - பிர்மாவின் காலில் பிறந்தவன் என்று இழிவுபடுத்துகிறான்?
சூத்திரன் என்றால் பாரத ரத்னா பட்டமா? பார்ப்பனர்களுக்கு வைப்பாட்டி மக்கள் என்றுதானே பொருள்! இந்த இழிவை ஒழிக்க நமக்குச் சூடு வரவில்லை, சொரணை பிறக்கவில்லை.

மூலத்தை விட்டுவிட்டு நிழலோடு சண்டை போடுவது புத்திசாலித்தனமாகுமா? இன்னும் தமிழன் கட்டிய கோயில் கருவறைக்குள் தமிழன் போக முடியவில்லை - கோயிலைக் கட்டிய பரம்பரையைக் கம்பிக்கு வெளியே நிற்க வைக்கிறான் - இது ஏன் என்று சிந்திக்கும் யோக்கியதை வரவில்லை இன்னும் எவ்வளவுக் காலத்துக்கு நமக்குள் கீழ் ஜாதி மேல் ஜாதி என்று நினைத்துக் கொண்டு உயிர்களைப் பலி கொடுப்பது? சிந்திக்க வேண்டாமா?

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் கவுரவக் கொலைகள் என்ற பெயரில் கொலைகள் நாளும் விழுந்து கொண்டு தானிருக்கின்றன.

அண்ணா பெயரைக் கட்சியிலும், உருவத்தைக் கொடியிலும் வைத்துக் கொண்டால் போதுமா? தந்தை பெரியார் உருவத்தை சுவரொட்டிகளில் பொறித்துக் கொண்டால்தான் போதுமா? அவர்களின் கொள்கை களை மதிக்க வேண்டாமா?

கவுரவக் கொலைகளுக்கு ஒரு முடிவு ஏற்பட்டாக வேண்டும்; கொலையாளிகளுக்கு உரிய தண்டனை கிடைத்தாக வேண்டும் - அதனை விரைவுபடுத்தவும் வேண்டும். அப்பொழுதுதான் குறைந்தபட்சம் ஜாதி வெறியர்கள் மத்தியில் அச்சம் ஏற்படும். ஆட்சி விரைந்து செயல்படட்டும்!

தமிழ் ஓவியா said...

இஸ்ரோ!

இஸ்ரோ என்பது (Indian Space Research Organi sation) இந்திய விண்வெளி ஆய்வு மய்யமாகும். இதன் பெயரிலிருந்தே இதன் அறிவியல் தன்மை என்ன வென்று விளங்கும்.

விண்வெளி என்றாலே வானுலகம் என்று கருதிய மூடத்தனம் ஒரு காலத்தில் நிலவியிருக்கலாம். சூரி யனை, சந்திரனை, நட்சத் திரங்களை கடவுள்களாகக் கும்பிட்ட காலம் ஒன்று இருந்தது. சந்திரன், குரு பத் தினியைக் கற்பழித்ததால், அவனுக்குக் கொடுக்கப் பட்ட சாபமே  தேய்பிறை என்ற கதைகள் எல்லாம் கவைக்கு உதாவதவை என்று தூக்கி எறியப்பட்ட காலத்தில், பார்ப்பனர்கள் என்னதான் விஞ்ஞானம் பேசினாலும், அஞ்ஞானக் குப்பையை நடு வீட்டில் குவிப்பதில் மட்டும் எப்பொ ழுதுமே குறியாக இருப் பார்கள்.

மூடநம்பிக்கைதான் அவர்களின் மூலதனம் - அது இருந்தால்தான் மக் களின் மூளைத்தனத்தைக் களவாடிக் காசுப் பறிக்க லாம் - தங்களின் ஜாதி ஆதிக் கத் தர்பாரில் பறக்கும் பிறவி முதலாளித்துவக் கொடியையும் இறக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
திருநெல்வேலி - மகேந் திரகிரியில் உள்ள இஸ்ரோ அலுவலகம் தொடர்பான ஒரு செய்தி: 29.6.2015 அன்று காலை கணபதி ஹோமம் நடத்தப்பட்டுள் ளதாம். எதற்காக? அந்த அலுவல கத்தின் நீட்சியாகக் கட்டப் படும் கட்டடத்திற் கான பூமிபூஜை! கடந்த 29 ஆம் தேதி அன்று காலை கண பதி ஹோமத்துடன் நடத் தப்பட்டுள்ளது. இதனை நடத்தியவர் அந்த அலுவல கத்திலேயே உள்ள பார்ப் பனப் பணியாளர்.

நாடு எந்த யோக்கிய தையில் இருக்கிறது? விஞ் ஞான மனப்பான்மையை ஏற்படுத்தவேண்டும் - இது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட் டம் பிரிவு  4 (51A(h)) வலி யுறுத்தும் நிலையில், ஒரு விஞ்ஞான நிறுவனத் தில் கணபதி ஹோமம் நடத்தப் படுகிறது என்றால், இது சட்ட விரோதம் அல்லவா? இதற்குக் காரணமானவர் கள் நீதிமன்றத்தின்முன் நிறுத்தப்பட்டு தண்டனை அளிக்கப்பட வேண்டாமா?

இஸ்ரோவின் தலைவ ராக இருந்த கேரளாவைச் சேர்ந்த இராதாகிருஷ்ணன் என்ற பார்ப்பனர், இப் படித்தான் விண்வெளியில் ராக்கெட் ஏவப்படும் பொழு தெல்லாம் திருப்பதி, காள ஹஸ்தி கோவில்களுக் கெல்லாம் சென்று திட்ட நகலை அந்தக் கடவுள் களின் காலடியில் வைத்துக் கொண்டிருந்தார்.

பவுதீக அறிவியலாள ரான பாரத ரத்னா சி.என். ஆர்.ராவ் இதனைக் கண் டித்து பெங்களூரு பிரஸ் கிளப்பில் பேசியது நினை வில் இருக்கலாம் (செய்தி 24.11.2013).

இந்திய விண்வெளி ஆய்வு மய்யம் திருப்பதிக் கடவுளின் கருணையில் ராக் கெட்டுகளை விடுகிறதா என்ற வினாவை எழுப்பினார்.

கல்வியறிவு அற்ற மனி தர்கள் நம்பிக்கைகளை வைத்துள்ளனர். அவர்கள் எது நடந்தாலும், அது கட வுளின் செயல் என்று கூறி கடவுளுக்குக் கணிக்கை செலுத்துவார்கள். ஆனால், மிகவும் புகழ்பெற்ற அறி வியல்அறிஞர்கள் நிறைந்த இஸ்ரோவிலும் இதே மூடத் தனம் தொடர்கிறதே என்று பேசினார்.

இதைவிட எப்படித் தான் சவுக்கடி கொடுக்க முடியும்?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...

முஸ்லிம் ஒருவருக்குப் பிறந்தவர் நேருவாம்! மோடி அரசின் தகவலால் பரபரப்பு!புதுடில்லி, ஜூலை 1_ மோடி அரசு இன்று டிஜிட்டல் இந்தியா என்ற ஒரு புதிய திட்டத்தை அறிவித்தது.  இந்த நிகழ்ச் சியின்போது இந்திய வர லாறு மற்றும் தலைவர் கள் தொடர்பான பல் வேறு தகவல்கள் பல் வேறு இணையதளங் களில் வெளியாகின. இதில் ஜவஹர்லால் நேரு பற்றிய விவரங்களும் இந்திய அரசால் வெளி யிடப்பட்டு அது விக்கி பீடியா என்ற இணைய தளத்தில் வெளியானது. இந்த இணையதளத்தில் ஜவஹர்லால் நேரு முஸ் லிமிற்கு பிறந்தவர் என்று கூறப்பட்டுள்ளது.    இது குறித்து காங் கிரஸ் செய்தித்தொடர் பாளர் ரனதீப் சூரஜ் வாலா கூறும்போது: மோடி அரசு, மிகவும்  கேவலமான ஒரு காரி யத்தைச் செய்திருக்கிறது. நாட்டின் முக்கிய தலை வரும், இந்தியாவின் பெரு மையை உலக அரங்கில் மிளிர வைத்தவரும், நவீன இந்தியாவின் சிற்பி என்று அழைக்கப்படுபவருமான ஜவஹர்லால் நேருவை முஸ்லிமிற்கு பிறந்தவர் என்று விக்கிபீடியா இணையதளத்திற்கு தகவல் கொடுத்து எடிட் செய்து வெளியிட்டுள் ளது.    ஜூன் 26 ஆம் தேதி விக்கிபீடியாவில் நேரு குடும்பம் பற்றிய செய்தி யில் பல திருத்தங்கள் செய்யப்பட்டு இருந்தன.

இதில் ஆதாரம் (sourses) என்பதில் இந்திய அரசு என்றும் எழுதியிருந்தது. மேலும் திருத்தப்பட்ட கணினியின் அடையாளக் குறியீடு (அய்.பி. எண்) தேசிய தகவல் அமைச்ச கத்தின் குறியீடு ஆகும். இந்த அமைச்சகமும் மோடியின் நேரடிக் கட் டுப்பாட்டின் கீழ் தான் வருகிறது.    இந்த விவ காரம் தொடர்பாக மோடி, நாட்டுமக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண் டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.   ஆங்கிலத்தில் விக்கிபீடி யாவில் வெளியான அந்த தகவலின் தமிழாக்கம் வருமாறு:

Moti Lal Nehru family?

மோதிலால் நேருவின் குடும்பம்

Motilal Nehru had one real wife and 4 other illegal wives.

மோதிலால் நேரு விற்கு ஒரு உண்மையான மனைவியும், சட்டவிரோ தமாக 4 மனைவியும் உள்ளனர்.

(1) Mrs Swaroop Rani (married wife) had two children with her.

சுவரூப் ராணி சட்டப் படி மணந்த மனைவி அவருக்கு மோதிலால் நேருவின் மூலம் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

(2) Thussu Rahman Bai – already had 2 children from her previous marriage to Mubarak Ali (employer of Motilal Nehru)

மோதிலால் நேரு  வீட்டில் வேலைபார்த்த முபாரக் அலி திடீர் மரணம் அடைந்தார். அவரது மனைவியான தவுசு ரகமான் பாய் என் பவரை இரண்டாவதாக மணம் முடித்துக்கொண் டார். முபாரக் அலியின் மூலம் பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒருவர்தான் ஜவஹர்லால் நேரு.

a. Jawaharlal Nehru (Mubarak Ali was the real father). Moti inherited his wealth, business and kept his wife and children like a true Muslim)

மோதிலால் நேரு விற்கு இரண்டு குழந்தை கள் இருந்தாலும் முபாரக் அலி மூலம் பிறந்த ஜவ ஹர்லால் நேரு மிகவும் புத்திசாலி மற்றும் மூத்த வராகையால் சொத்து முழுவதிற்கும் தானே உரிமையாளராக ஆவ ணங்களை மாற்றிவிட் டார். இரானிய விபச்சாரி ஒருவருடனும் குடும்பம் நடத்தினார். அவருக்கு ஒரு மகள் பிறந்தார்.  தன்னுடைய ஆசிரியரின் மகள் ஒருவருடனும் சட்ட விரோதமாக குடும்பம் நடத்தினார். அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். -   sources- biography of MO Mathai (Jawaharlal Nehru’s personal assistant

தமிழ் ஓவியா said...

நம்பாதவன் நாத்திகனாம்


இப்பொழுது மத சம்பந்தமாகவோ, சாஸ்திர சம்பந்தமாகவோ, கடவுள் சம்பந்தமாகவோ உள்ள புரட்டுகளுக்கெல்லாம் ஒரே சமாதானம்தான் இருந்து வருகின்றது. அது என்னவென்றால், நம்பாதவன் நாத்திகன் என்பதுவே.
_ (குடிஅரசு, 3.11.1929)