Search This Blog

6.6.15

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அனுப்பி வைத்த ரகசிய சுற்றறிக்கை

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அனுப்பி வைத்த ரகசிய சுற்றறிக்கை
(காவியுடை பாசிசம் என்னும் நூலிலிருந்து)


மக்கள் தொகையில் பெரும்பான் மையினராக உள்ள தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட ,-  தலித் பகுஜன் மக்களை ஏமாற்றிப் பயன்படுத்துவது என்பதன் அடிப்படையில் அமைந்த பார்ப்பனீய நடைமுறையைப் பாதுகாப்பதுதான் இந்துத்துவாவின் அடிப்படை நோக்க மாகும் என்பதை, ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கைகளையும், அறிக்கைகளையும்  கூர்ந்து ஆராய்ந்து வந்த எண்ணற்ற கல்வியாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.இந்துத்துவத்தைப் பற்றி  அண்மையில் நான் காண நேர்ந்த ஆர்வமளிக்கும்  ஓர் ஆய்வு அது பெற்றிருக்கவேண்டிய கவனத்தைப் பெறாமல் போனது பெரும் இழப்புக் கேடேயாகும்.  சியாம் சந்தின் காவியுடை பாசிசம் என்ற நூல் ஓர் மதி நுட்பம் நிறைந்த, நுணுக்கமாக மேற் கொள்ளப்பட்ட ஆய்வு நூலாகும். சியாம் சந்த் அரியானா சட்ட மன்ற உறுப் பினராக பல ஆண்டுகள் இருந்து, கலால், வரிவிதிப்பு, நகர்ப்புற மேம்பாடு, உணவு, வினியோகம், சமூக நலம் போன்ற பல துறைகளில் அமைச்சராகவும் சேவை செய்துள்ளார்.ஆர்.எஸ்.எஸ். தனது பிரசாரகர்களுக்கு  அனுப்பிய ஒரு ரகசிய சுற்றறிக்கையின் சில பகுதிகள் இந்நூலில் அளிக்கப்பட் டுள்ளது. முஸ்லிம்களையும், கிறித்துவர் களையும் தாக்குவதற்கு தலித் பகுஜன் மக்களைப் பயன்படுத்திக் கொள்ளும் பார்ப்பன உத்தியை அது தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. தலித் பகுஜன் மக்களை  உயர்ஜாதியினரின் நிரந்தர அடிமைகளாக வைத்திருக்கும் நோக்கம் கொண்டது இது.இந்நூலின் 143-44 ஆம் பக்கங்களில் இருப்பதை அப்படியே இங்கு தருகிறேன்.


சுற்றறிக்கையிலிருந்து . . . . ( . . . ) அம்பேத்கரின் ஆதரவாளர் களையும், முசல்மான்களையும் எதிர்த்து சண்டையிடுவதற்கான தொண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்த கட்சியில் தாழ்த்தப்பட்ட ஜாதி மக்களும், பிற்படுத் தப்பட்ட ஜாதி மக்களும் சேர்க்கப்பட வேண்டும்.


பழிவாங்கும் ஒரு நோக்கம் மற்றும் உணர்வுடன் இந்துத்துவக் கோட்பாடு மருத்துவர்களிடையேயும், மருந்தாளர்களி டையேயும் பிரச்சாரம் செய்யப்படவேண் டும். அவர்களது உதவியுடன் காலம் கடந்த மருந்துகளையும், தீவிரமான மருந்துகளையும் தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியின மக்கள் மற்றும் முசல் மான்களிடையே வினியோகிக்க வேண்டும்.


சூத்ரர்கள், ஆதி சூத்ரர்கள், முசல்மான்கள், கிறித்துவர்கள் மற்றும் அது போன்றவர்களின் குடும்பங்களில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு, ஊசி மருந்து செலுத்தி அவர்களை முடவர் களாக ஆக்கவேண்டும்.  ஒரு ரத்ததான முகாம்  நடத்துவது போல காட்டி இதனைச் செய்யப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.


தாழ்த்தப்பட்டவர்கள், முசல்மான்கள், கிறித்துவர்கள் குடும்பப் பெண்கள் விப சாரத்தில் ஈடுபடுவதைத் தூண்டிவிட்டு, ஊக்கம் அளிக்கவேண்டும்.
தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட் டவர்கள், முசல்மான்கள், கிறித்துவர்கள், குறிப்பாக அம்பேத்கர் வழிநடப்பவர்கள்,  உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவை உண்ணச் செய்து அவர்களை முடமாக் கும் திட்டங்கள் தவறின்றி தீட்டி நிறை வேற்றப் படவேண்டும். நமது கட்டளைப் படி எழுதப்பட்ட வரலாற்றை தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்  மாணவர்களை படிக் கச் செய்வதில் சிறப்பு கவனம் செலுத் தப்பட வேண்டும்.


கலவரங்களின்போது தாழ்த்தப்பட்ட ஜாதி மற்றும் முசல்மான் பெண்கள் கூட் டங் கூட்டமாகக் கற்பழிக்கப்படவேண் டும். நண்பர்களையும், தெரிந்தவர்களையும் கூட விட்டு வைக்கக்கூடாது. சூரத்தில் நடைபெற்றது போல இந்தப் பணி நடை பெற வேண்டும்.முசல்மான்கள், கிறித்துவர்கள், பவுத்தர்கள், அம்பேத்கர் வழிநடப்பவர் களுக்கு எதிரான பிரசுரங்கள் எழுதி வெளியிடும் பணி தீவிரப்படுத்தப்பட வேண்டும். அசோகர்ஆர்யர்களுக்கு எதிரானவர் என்பதை மெய்ப்பிக்கும் வழியில் கட்டுரைகளும், நூல்களும் எழுதி வெளியிடப்படவேண்டும்.
இந்துக்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் எதிரான அனைத்து இலக்கியங்களும் அழிக்கப்படவேண்டும். தாழ்த்தப்பட்ட வர்கள், முசல்மான்கள், கிறித்துவர்கள், , அம்பேத்கர் வழிநடப்பவர்களிடம் இத்தகைய இலக்கியங்கள் உள்ளனவா என்பது சோதனையிடப்படவேண்டும்.


அத்தகைய இலக்கியங்கள் பொது மக்களைச் சென்றடையாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் அளவில் மிகமிக கவனமாக இருக்கவேண்டும். இந்து இலக்கியம் மட்டுமே பிற்படுத்தப் பட்ட மற்றும் அம்பேத்கர் வழி நடப்ப வர்களுக்கானதாக இருக்க வேண்டும்.
தங்களுக்கென ஒதுக்கப்பட்டு நிரப்பப் படாமல்  உள்ள பேக்லாக் பணியிடங் களில்  தாழ்த்தப்பட்டோரும், பழங்குடியி னத்தவரும் எக்காரணம் கொண்டும் நியமிக்கப்பட அனுமதிக்கக்கூடாது. அரசுத் துறைகள், அரசு சார்ந்த துறைகள்,  அரசு சாரா துறைகளில் நியமிக்கப்படவும், பதவி உயர்வு அளிக்கப்படவுமான அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்படு வதையும், அவர்களைப் பற்றிய ரகசிய அறிக்கைகள் அவர்களது வேலையை பாழக்கும் வண்ணம் மோசமாக எழுதப் படுவதையும் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களிடையே  நிலவும் போட்டி, பொறாமையை மேலும் மேலும் ஆழப் படுத்தி பலப்படுத்தவேண்டும். இதற்கு துறவிகள் மற்றும் சாமியார்களின் உதவியைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.


சமத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் கம்யூனிஸ்டுகள், அம்பேத்கர் வழிநடப்ப வர்கள், இஸ்லாமிய ஆசிரியர்கள், கிறித்து பிரசாரகர்கள், அண்டை அயலில் வாழும் கிறித்துர்கள் மீதான தீவிரத் தாக்குதல்கள் மேற்கொள்ளத் தொடங்கப்படவேண்டும்.


அம்பேத்கர் சிலைகள் மீது இன்னமும் பெரிய முயற்சியுடன் தாக்குதல்கள் நடத்தப்படவேண்டும். தாழ்த்தப்பட்ட, முஸ்லிம் எழுத்தாளர்கள் நமது கட்சியில் அதிக அளவில் நியமிக்கப்படவேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள், அம்பேத்கர் வழிநடப்பவர்களுக்கு எதிரான இலக் கியங்களை அவர்களைக் கொண்டு எழுதச் செய்து பிரச்சாரம் செய்யப்பட வேண்டும். இத்தகைய செய்திகள் முறையாகத் தொகுக்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்படுவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.இந்துத்துவ எதிர்ப்பாளர்கள் போலி என்கவுன்டர்கள் மூலம் கொல்லப்பட வேண்டும். இப்பணி காவல்துறை மற்றும் பாராமிலிடரி சக்திகளின் உதவி யுடனேயே எப்போதும் கட்டாயமாக மேற்கொள்ளப்படவேண்டும்.

 ----------------------யோகீந்தர் சிக்கந்த் - தமிழில்: த.க.பாலகிருட்டிணன்-"காவியுடை பாசிசம்" என்னும் நூலிலிருந்து - "விடுதலை” ஞாயிறுமலர் 6-6-2015


Read more: http://www.viduthalai.in/page8/102786.html#ixzz3cHMzxVJm

58 comments:

தமிழ் ஓவியா said...

மதச் சார்பின்மைக்கு விரோதமாகவும், விஞ்ஞான மனப்பான்மைக்கு முரணாகவும் மழைக்காக சிறப்புப் பூஜை நடத்த ஆணையிட்ட அதிகாரிகள்மீது கழகத்தின் சார்பில் வழக்குத் தொடுக்கப்படும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள சட்டபூர்வமான அறிக்கை

இரயில்வே நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்!

மழை வேண்டி கோயில்களில் சிறப்புப் பூஜை நடத்தக் கோரி ஆணை பிறப்பித்த நீர்வளத்துறை அதிகாரிகள்மீது சட்டப்படி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணிஅவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு அரசின் நீர்வள ஆதாரத்துறை - காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்வதற்காக சிறப்பு பூஜைகளை நடத்துமாறு அத்துறையைச் சார்ந்த அனைத்து செயற்பொறியாளர்களுக்கும் ஆணை பிறப்பித்துள்ளது.

பொறியியல் படித்தவர்கள் அறிவியலுக்கு முரணாக நடக்கலாமா?

1. பொறியியல் படித்தவர்கள் அறிவியலுக்கு மாறான - அவர்கள் படித்த படிப்புக்கு முரணான வகையில் இப்படி ஓர் சுற்றறிக்கையை ஆணையாக வெளியிட்டு இருப்பது மிக கேலிக்குரியது என்பதில் சந்தேகம் இல்லை.

யாகம் செய்தால் மழை பொழிந்து விடுமா? மழை எப்படி பொழிகிறது என்பதை இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களைக் கேட்டாலே எளிதில் தெரிந்து விடுமே! பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்குத் தெரிய வில்லையா? படிப்புக்கும், பகுத்தறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்று தந்தை பெரியார் கூறியது சரியாகி விட்டதே!

தமிழ் ஓவியா said...

அதிகாரிகளா அழுக்கு மூட்டைகளா இவர்கள்?

இந்தியா மதச்சார்பற்ற நாடு அல்லவா!

2) இரண்டாவதாக அரசு அலுவலர்கள் - இந்தியா மதச் சார்பற்ற நாடு (Secular State)என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டாமா? கோயில்களில் சிறப்புப் பூஜைகள், யாகங்கள் நடத்தினால் மழை பொழிந்து தீர்த்து விடுமா?

மக்களுக்குத் தேவை என்பது கடவுள்களுக்குத் தெரியாதா? பூஜை செய்தால்தான் கடவுள் மனம் திறப் பாரா? அப்படி என்றால் கடவுள் மனம் கல்லா? கருணையே உருவானவன் கடவுள் என்பது எல்லாம் புனை சுருட்டுதானா?

வருண பகவானுக்காக யாகம் நடத்தினால் மழை பொழியும் என்பது இந்து மதத்தின் ஏற்பாடு; யாகம் மூலம் பார்ப்பனப் புரோகிதர்களுக்கு நல்ல வருவாய்கிட்டும் அல்லவா! மக்களின் மூடத்தனம்தானே அவர்களுக்கு முதலீடு!

விஞ்ஞானிகள் முன் நிரூபிக்கப்படவில்லையே!

1992இல் மதுரா நகரில் 86 வயதான பார்ப்பன முதியவர் ஒருவர் யாகம் நடத்தி மழையை வரவழைக்கிறேன் என்று சவால் விட்டார். அந்தச் சமயத்தில் இந்திய வானிலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் அதனைக் கண்காணித் தனர். ஒரு சொட்டு மழைகூட பெய்யவில்லை என்பதை டில்லியி லிருந்து வெளிவந்த நேச்சர் (Nature) என்ற இதழில் கே.எஸ். ஜெயராமன் கட்டுரை ஒன்று எழுதியதை இந்த இடத்தில் நினைவூட்டுவது பொருத்த மானதாகும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்ன?

3) அரசு என்பது மதச் சார்பற்றது - அது எந்த மதச் சடங் கோடும் தன்னைச் சம்பந்தப்படுத்திக் கொள்ளக்கூடாது.

உச்சநீதிமன்றத்தில் பி.பி. ஜீவன் ரெட்டி தலைமையில் 9 நீதிபதிகள் கொண்ட ஓர் அமர்வு வழங்கிய தீர்ப்பு மிகவும் முக்கியமானது. எந்த ஒரு மாநில அரசும், மதச் சார்பின்மைக்கு எதிரான கொள்கைகளை கொண்டிருப்பதோ, மதச் சார்பின்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதோ அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. அத்தகைய மாநில ஆட்சிகளை அரசமைப்புச் சட்டத்தில் 356ஆவது பிரிவின்கீழ் கலைக்க குடியரசு தலைவருக்கு உரிமை உண்டு என்று 1994 மார்ச்சில் உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி. ஜீவன் ரெட்டி தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பில் கூறியுள்ளது. எங்களுடைய இந்தக் கருத்துகளை சிலர் ஜீரணிக்க முடியாமல் போகலாம். அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனரே!

அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

மதச் சார்பின்மைக்கு விரோதமாக நடப்பது எவ்வளவுப் பெரிய குற்றம் என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?

மழை பொழிவதற்கு சட்ட விரோதமாக இந்து மதத்தின் படி பூஜை நடத்தச் சொல்லி ஆணை பிறப்பித்த அதிகாரிகள்மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

வழக்குத் தொடுக்கப்படும்!

இந்த சுற்றறிக்கைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்; இல்லையெனில் இது குறித்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை திராவிடர் கழகம் தொடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

4) இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 51A(h)என்ற பிரிவு என்ன கூறுகிறது?

இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ பிரிவில் ஒவ்வொரு குடிமகனும் கடைப்பிடிக்க வேண்டிய பத்து அடிப்படைக் கடமைகள்(Fundamental Duties) சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அதில் எட் டாவது கடமையில் - 51ஏ(எச்) அறிவியல் உணர் வையும், மனிதநேயத்தையும், சீர்திருத்தத்தையும் ஆய்வு மனப்பான்மையையும் போற்றி வளர்க்க வேண்டும். To develop the scientific temper, humanism and the spirit of inquiry and reforms 51A(h), என்று வலியுறுத்தப்பட்டுள்ளதே!

மழைக்காக சிறப்புப் பூஜை நடத்துவது, யாகம் நடத்துவது அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள விஞ்ஞான மனப்பான்மைக்கு விரோதமானது என்பது வெளிப்படை இந்த வகையிலும் தமிழ்நாடு அரசு, அதன் நீர்வளத்துறை சட்டத்தை மீறி இருக்கிறது. தமிழ்நாடு அரசு இதற்குரிய விளக்கங்களை அளிக்க வேண்டும்; தவறு செய்த அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.

இல்லையெனில் அரசும் இதற்குப் பொறுப்பு ஏற்க நேரிடும். அடுத்த கட்டமாக சட்ட ரீதியான நடவடிக்கையில் விரைவில் திராவிடர் கழகம் ஈடுபடும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை , 6.6.2015Read more: http://www.viduthalai.in/e-paper/102804.html#ixzz3cHSjyiyV

தமிழ் ஓவியா said...

மோடி அரசுக்கு எதிர்ப்பு

50 ஆண்டுகள் ஆனாலும் கங்கையை சுத்தம் செய்ய முடியவே முடியாது! முரளிமனோகர் ஜோஷி அதிரடிவாரணாசி, ஜுன்6_ பாஜக தலைமையிலான மத்திய அரசின் முக்கியத் துவம் வாய்ந்த திட்டங் களில் முதன்மையானதாக இருப்பது கங்கையை சுத்தம் செய்யும் திட்டம் நமாமி கங்கா(புனித கங்கை) என்று கூறிக் கொள்கிறார்கள்.

பாஜகவின் இந்தத் திட்டம் குறித்து பாஜக வின் முக்கிய தலைவர் களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி கூறுகையில், கங்கையை சுத்தப்படுத்துவது என்பது 50 ஆண்டுகள் ஆனாலும் முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட காலத்துக்கான கனவுத் திட்டமாக வேண் டுமானால் இருக்கலாம். தடைகளில்லாமல் நீரோட் டம் இருந்தால்தான் அது வும் சாத்தியம். ஆகவே, அடுத்த 50 ஆண்டுகள் ஆனாலும் கங்கையை சுத்தம் செய்ய முடியாது. அடுத்த 50 ஆண்டுகளில் கங்கை ஆற்றோட்டப் பகுதிகளை சிறுசிறு பாகங்களாகப்பிரித்து, சிறிய நீர்த் தேக்கங்களாக மாற்றினால் கங்கையைச் சுத்தம் செய்யலாம். என்று ஜோஷி கூறினார். மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்கு வரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கங்கையில் கப்பல் விடப்போவதாகக் கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு முரளி மனோகர் ஜோஷி கூறும் போது, பெரிய படகுகளே செல்ல முடியாத கங்கை யில் கப்பலை எப்படி விட முடியும்? என்று கேட் டார்.Read more: http://www.viduthalai.in/e-paper/102806.html#ixzz3cHT3uiYC

தமிழ் ஓவியா said...

ஜாதி மறுப்புத் திருமணம் செய்த இணையருக்கு பாதுகாப்பு அளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு


புதுடில்லி, ஜூன் 6- மதம் மாறி கலப்பு திருமணம் செய்த இணை யருக்கு கட்டப்பஞ் சாயத்து தீர்ப்பின் எதி ரொலியாக விடுக்கப்படும் கொலை மிரட்டலில் இருந்து அவர்களை பாது காக்குமாறு காவல்துறை யினருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரியானா மாநிலத் தில் உள்ள பரிதாபாத் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் குடும்பத் தாரின் பூரண ஒப்புத லுடன் தனது மனதுக்கு விருப்பமானவரை மதம் மாறி திருமணம் செய்து கொண்டார். உத்தரப்பிர தேசம் மாநிலத்தை சேர்ந்தவரான அந்த பெண்ணின் கணவர் டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இருவரும் இந்து முறைப் படி ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண் டனர்.

இந்த திருமணம் தொடர்பாக விசாரிக்க கூடிய உள்ளூர் பஞ்சாயத் தார், இந்த இணையரை கொன்றுவிடும்படி உத்தரவிட்டுள்ளனர். இதனால் பயந்துப்போன அந்த துணையர் தங்களது உயிருக்கு பாதுகாப்பு தேடி வழக்குரைஞரின் மூலமாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

உச்சநீதிமன்றத்தில் விடுமுறைக்கால அவசர அமர்வு முன்னர் இம் மனு விசாரணைக்கு வந் தது. இந்த இணையருக்கு தேவையான பாதுகாப்பு அளிக்குமாறும் இந்த புகார் தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் தாக்கல் செய்யும்படியும் அரியானா மற்றும் டில்லி காவல்துறையினருக்கு நீதிபதிகள் உத்தரவிட் டுள்ளனர்Read more: http://www.viduthalai.in/e-paper/102814.html#ixzz3cHTE9tmA

தமிழ் ஓவியா said...

எச்சரிக்கை!

ஈயம் கலந்த உணவுப் பொருள் எதுவும் மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கச் செய்யும். டின்களில் அடைத்து வைக்கப்படும் உணவுப் பொருள்களில் பெரும்பாலும் ஈயம் கலந்திருக்கும் - உண்ணாதீர் எச்சரிக்கை!

தமிழ் ஓவியா said...

நல்ல தமாஷ்!

பிஜேபியில் 30 லட்சம் சிறுபான்மையினர் உறுப்பி னர்கள் ஆகியுள்ளார்களாம். இந்தியக் கம்யூனிஸ்டு தமிழ் மாநில செயலாளர் தோழர் இரா. முத்தரசனையே மிஸ்டு காலில் பிஜேபி உறுப்பினராக ஆக்கியவர்கள் ஆயிற்றே.

தமிழ் ஓவியா said...

உயிரோடு விளையாடுவோர்மீது தேவை கடும் நடவடிக்கை!


கடந்த ஒரு வார காலமாக தடபுடலாக மக்கள் மத்தியில் ஊடகங்கள் வாயிலாக ஒரு செய்தி உலவிக் கொண்டு இருக்கிறது.

அது ஏதோ சாதனை செய்தியல்ல; இவ்வளவுக் காலமாக உண்மை அறியாமல் சிலவற்றை உணவாக ஏற்றுக் கொண்டு இருக்கிறோமே என்ற அச்சம் நாட்டு மக்களை உலுக்கிக் கொண்டு இருக்கிறது. மாநில வாரியாக தடை பற்றிய செய்தி ஒவ்வொரு நாளும் வந்து கொண்டுள்ளது. உணவைப் பாதுகாப்பதற்காக (றிக்ஷீமீமீக்ஷீஸ்ணீவீஷீஸீ) காரீயம் என்ற இரசாயனப் பொருள் அனுமதிக்கப்பட்ட அளவை விஞ்சி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தான் அந்த அதிர்ச்சியூட்டும் தகவல். இன்னும் புரியும் படியாகச் சொல்ல வேண்டுமானால் நெஸ்லே என்னும் அமெரிக்க நிறுவனம்தான் இந்திய நாட்டு மக்களின் உயிரோடு நீண்ட காலமாக விளையாடிப் பார்த்திருக் கிறது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக ஆணையரகம் தமிழ்நாடு முழுவதும் மேகி நூடுல்ஸ் உட்பட 65 உணவு மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்துக் கொண்டதில் ஏழு மாதிரிகளில் 6 இல் காரீயத்தின் அளவு - அளவுக்கு விஞ்சியதாக இருந்தது சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேகிநூடுல்ஸ், வய்வய்எக்ஸ் பிரஸ் நூடுல்ஸ், ரிலையன்சின் செலக்ட் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் ஆகிய வற்றிலும் அனுமதிக்கப்பட்டுள்ள காரீயத்தைவிட அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் தமிழ்நாடு அரசும் இதனைத் தடை செய்திருப்பது வரவேற்கத் தக்கதே!

தமிழ் ஓவியா said...

கோவையிலிருந்து இன்னொரு தகவல் வந்துள்ளது. கோவையில் விற்பனைசெய்யப்பட்ட நெஸ்லே நிறு வனத்தின் பால் பவுடர் பாக்கெட்டில் லார்வாப் புழுக்கள் மற்றும் வண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சந்தேகம், அச்சம் என்னவென்றால் இன்னும் என்னென்ன உணவுகளில் இது மாதிரியான - உட லுக்கும், உயிருக்கும் கேடு செய்யும் நச்சுப் பொருள்கள் கலந்துள்ளன என்பதுதான்!
கொஞ்ச காலத்துக்குமுன் பெப்சியில் உடலுக்குக் கேடு செய்யும் வேதிப் பொருள்கள் இருக்கின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு நிறுவனம் ஒரு பொருளைத் தயாரிக்கும் பொழுது அந்தப் பொருளில் எந்தெந்த (மிஸீநீக்ஷீமீபீவீமீஸீ) பொருள்கள் எந்தெந்த விகிதத்தில் இருக்கின்றன என்று மேல் உறையில் அச்சிடப்பட வேண்டும்.

ஆய்வு செய்வதற்கான அரசுத்துறைகள் அடிக்கடி ஆய்வுகளை மேற்கொண்டு தவறுகளைக் கண்டுபிடிக் கும் கடமையைச் சரி வர செய்திருக்கின்றனவா என்ற கேள்விகூட மக்கள் மத்தியில் எழுந்ததுள்ளது. இதிலும் இலஞ்ச லாவண்யம் புகுந்து விளையாடுகிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

இந்தச் சூழல்கள் அனைத்தையும் விரிவாக ஆய்வு செய்து உண்மை நிலையை வெளிச்சத்துக்குக் கொண்டு வரச் செய்வது அரசின் அவசிய கடமையாகும். மக்கள் தங்கள் உடலுக்கும், உயிருக்குமான உத்தரவாதம் மக்கள் நல அரசிடம் தானே ஒப்படைத்துள்ளனர். அப்படி இருக்கும் பொழுது அரசு அந்தக் கடமையைச் செய்ய வேண்டாமா?

வெளிநாட்டு நிறுவனங்களைத் தங்கு தடையின்றி உள்ளே நுழைய விடும் மத்திய அரசு, உணவு தொடர்பான உற்பத்தியில் கூடுதல் கவனம் கொள்ள வேண்டாமா?

போபால் கார்பைடு நிறுவனத்தின் நச்சு வாயு வெளியேறியதால் 22 ஆயிரம் பொது மக்கள் தங்கள் உயிரைப் பலி கொடுத்தனர். ஒரு லட்சத்து 5500 பேர்கள் ஊனமுற்றவர்கள் ஆனார்கள்.

ஆனால், அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டிய வெளிநாட்டு நிறுவனமோ அதனைத் தட்டிக் கழித்து விட்டது. கார்பைடு நிறுவனத்தின் சார்பில் வாதாடிய வழக்குரைஞர் நீதிமன்றத்தில் என்ன சொன்னார் தெரியுமா?

வெளியேறிய வாயு மிகவும் நச்சுத் தன்மை கொண்டது என்பதும், உயிருக்கு ஆபத்தானது என் பதும் உண்மைதான். ஆனால் நடந்த விபத்துக்கு நாங்கள் எப்படிப் பொறுப்பேற்க முடியும்? இது கடவுளின் செயல்; எந்த ஒரு தனி மனிதரும் கடவுளின் செயலுக்குப் பொறுப்பேற்க முடியாது.

It was an act of god for which no human being was responsible என்று நீதிமன்றத்தில் சொல்லப்பட்டது.

இது எவ்வளவுப் பெரிய பித்தலாட்டம்! இப்படி வெளிநாட்டு நிறுவனங்கள் நடந்துகொள்ளும் போக்குக்கு மூக்கணாங் கயிறே கிடையாதா?

இப்பொழுதுகூட கூடங்குளம் போன்ற அணுமின் உலைக் கூடங்களில் கோளாறு ஏற்பட்டால், அதன் விளைவுகளுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் பொறுப் பேற்கத் தேவையில்லை என்ற, தான் தோன்றித்தனமாக உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
நெஸ்லே என்ற வெளிநாட்டு நிறுவனம்தான் மக்களின் உயிரோடு விளையாடியிருக்கிறது என்பது இப்பொழுது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டது. இதன்மீது எடுக்கப்படப் போகும் நடவடிக் கைகள்தான் என்ன? அந்த நடவடிக்கைகள் மற்ற மற்ற நிறுவனங்களுக்கும் கடுமையான எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.

கார்ப்பரேட் நிறுவனங்களின் சந்தைக் காடாக ஆக்கப்பட வெண்சாரம் வீசும் மோடி தலைமையி லான அரசில் இதனை எதிர்ப்பார்ப்பது என்பது குதிரைக் கொம்பே!

பாட்டிலிலும், அட்டைப் பெட்டிகளிலும் உணவுப் பொருள்களைப் பதப்படுத்துவதற்காக (ரெடிமேடு உணவு) கார்-பைடைஆக்ஸிட், சோடியம் மற்றும் பொட்டாசியம் நைட்ரேட் போன்ற வேதியப் பொருள்கள் அனுமதிக்கப்பட்ட அளவுக்குமேல் சேர்க்கப்படு கின்றன. இந்த உணவுப் பொருள்கள் தொலைக்காட்சி விளம்பரங்களால் பிள்ளைகள் ஈர்க்கப்படுவது கண் கூடு; இவற்றை வாங்கிஉண்பது ஒரு நாகரிகம், ஒரு அந்தஸ்து என்ற போதை தலைக்கு மேல் ஏறிக் கூத்தாடுகிறது!

பெற்றோர்களே எச்சரிக்கை! எச்சரிக்கை!!Read more: http://www.viduthalai.in/page-2/102797.html#ixzz3cHTwg3ND

தமிழ் ஓவியா said...

அய்.அய்.டி பிரச்சினையில் ஆர்.எஸ்.எஸ்.சின் பங்கு

- அ. மார்க்ஸ்


குறி வைக்கப்படும் கலைப் பாடங்கள் மற்றும் சமூக அறிவியல் (HSS) துறை. இலக்காக்கப்படும் மூன்று ஆசிரியர்கள்

சென்னை அய்.அய்.டி. நிர்வாகம் மோடி அரசின் அறிவுறுத்தலை ஏற்று அம்பேத்கர் பெரியார் மாணவர் வட்டம் எனும் அமைப்பின் அங்கீ காரத்தை ரத்து செய்தது, தேன் கூட்டில் கல்லெறிந்த கதையாகிவிட்டது பா.ஜ.க,அ.தி.முக, சில தமிழ் தேசியக் குழுக்கள் தவிர அனைத்து முக்கிய கட்சிகளும், இயக்கங்களும் இந்த நடவடிக்கையைக் கண்டித்துக் களத் தில் இறங்கி விட்டன. அய்.அய்.டி நிர் வாகமும், மத்திய அரசும் பம்முகின்றன.

ஒரே ஒரு தரப்புதான் அய்.அய்.டி நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக் கையைச் சரி என்கிறது. சரி என்பது மட்டுமல்ல, இன்னும் சில பேராசிரியர் களையும் அடையாளம் காட்டி அவர்களையும் களை எடுக்க வேண் டும் என்கிறது. அவர்கள் இதற்குச் சொல்லும் காரணத்தை ஆய்ந்தால் அவர்களின் அடிப்படை நம்பிக்கை களையும், இறுதி நோக்கங்களையும் நாம் புரிந்து கொள்ள இயலும்.

ஆர்.எஸ். எஸ்சின் அறிவுத் தொட் டியில் ஒருவர்தான் ராதாராஜன். நிறைய ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை விளக்கி ஆங்கிலத்தில் எழுதிக் குவிப்பவர். அவரது பெரு நூல் ஒன்று அத்வானி முன்னுரையுடன் வெளிவந்துள்ளது. India Facts
என்கிற அவரது வலைத் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள

Something Awry in IIT Madras: The Full Story என்னும் கட்டுரையிலிருந்து சில செய்திகள்:

1. 2006இல் சென்னை அய்.அய்.டி யில் ஆங்கிலம், வளர்ச்சிக் கல்விகள், பொருளாதாரம் ஆகிய பாடங்களுக் கான ஒருங்கிணைக்கப்பட்ட அய்ந் தாண்டு எம்.ஏ. படிப்பு தொடங்கப்பட்ட காலத்திலிருந்துதான் அங்கு இத்தகைய பிரச்சினைகள்..

2. இப்படி உருவான மாணவர் 'ஆக்டிவிசம்' மற்றும் சீரழிவு அறிவு ஜீவித்தனம் (student activism and disruptive intellectualism) கிட்டத்தட்ட சென்னை சட்டக் கல்லூரி, நந்தனம் கலைக் கல்லூரி, மாநிலக் கல்லூரி முதலானவற்றில் உள்ள வன்முறை களுக்கு இணையான மாணவ ரவுடித் தனத்திற்கு ஒப்பான தோற்றத்தை எடுத்தது.

தமிழ் ஓவியா said...

3.கலை மற்றும் சமூகவியல் துறை (HSS) ஆசிரியர்கள் மற்றும், வெளி யிலிருந்து பேசுவதற்கு அழைக்கப்பட்ட வர்களின் கருத்தியல் சாய்வு, விவாதங் களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகள், நவம்பர் 2004இல் IIT வளாகத்தில் அரங்கேற்றப்பட்ட முத்தப் போராட்டம், பிறகு இப்போது நடைபெறும் இந்த இந்து மத எதிர்ப்பு மாணவர் அமைப்புப் (அ.பெ.மா.வ) போராட்டம் எல்லாம் ஒரு காலத்தில் உன்னதமாக விளங்கிய அய்.அய்.டி யில் வளர்ந்துள்ள இந்தப் புற்று நோயின் வெளிப்பாடுதான். ஆக 2006இல் தொடங்கப்பட்ட ஒருங்கி ணைக்கப்பட்ட அய்ந்தாண்டு எம்.ஏ. பட்டப் படிப்புதான் எல்லாவற்றிற்கும் காரணம் எனச் சொல்லும் இந்த ஆர்.எஸ்.எஸ் சார்பு இணையம், "ஏன் இப்படி அய்.அய்.டி நிர்வாகம் அ.பெ.மா. வவைத் தடை செய்ய நேர்ந்தது என்பதை மோடி அரசு அறிய வேண்டுமானால் ஏன் இந்த அய்ந்து ஆண்டு ஒருங்கி ணைக்கப்பட்ட எம்.ஏ படிப்பைக் காங் கிரஸ் தலைமையிலான அய்.மு.கூ அரசு தொடங்கியது என ஆய்வு செய்ய வேண்டும்" என்கிறது. மோடி சர்க்கார் இதையெல்லாம் பரிசீலிக்க வேண்டுமாம்?

4. மோடி சர்கார் இந்த அய்ந்தாண்டு ஒருங்கிணைக்கப்பட்ட எம்.ஏ. வகுப்பின் பாடத் திட்டம், யாரெல்லாம் ஆசிரியர் களாகத் தேர்வு செய்யப்பட்டார்கள், அவர்களின் கருத்தியல் சாய்வு, இந்த வகுப்பிற்கு எவ்வித மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள் ஆகியவற்றைப் பரிசீலித்தால் இந்த அய்ந்தாண்டுப் பாடத்திட்டத்தின் உண்மை நோக்கம் வெளிப்படும்.

இந்த இடத்தில் கலை மற்றும் சமூக விஞ்ஞானத் துறைத் தலைவர் பேரா. எஸ்.செல்லா ராஜனை நோக்கி நீள்கிறது கட்டுரையாளரின் விரல். இந்தப் பேராசிரி யரால் தொடங்கப்பட்ட அய்ந்தாண்டு ஒருங்கிணைக்கப்பட்ட எம்.ஏ பாடத் திட்டத்திற்கான அறிமுக வெளியீட்டில் உள்ள, "இப்பாடத் திட்டம் ஒரு பன்மை ஒழுங்கு அணுகல் முறையுடன் (interdisciplinary perspective) அமையும்" என்கிற சொற்களை உருவி எடுத்து ஒரு மிகப்பெரிய சொற் சிலம்பாட்டத்தை ஆடிக் காட்டுகிறார் கட்டுரை ஆசிரியர். அந்த ஆட்டத்தின் ஊடாக அவரது உண்மை உருவம் வெளிப்பட்டுவிடுகிறது.

5. வரலாறு தொடர்பான இந்தப் பன்மை ஒழுங்கு அணுகல் முறை மிகவும் ஆபத் தானது. அரசியல் அறிவியல், சமூக அறிவியல் மற்றும் மானுடவியல் ஆகிய போலி அறிவியல்களைப் பயன்படுத்தி தேசம், தேசியம் முதலான வரலாற்றுத் தரவுகளை மதிப்பீடுசெய்கிற பெயரில் அவற்றை மறுப்பதற்காகப் பயன்படுத்தப் படுவதுவதுதான் இந்தப் பன்மை ஒழுங்குஅணுகல்முறை. தாங்கள் வென்ற மனிதர்கள் மற்றும் ஆக்ரமித்த நிலங்களின் வரலாற்றை எழுத கிறிஸ்தவம் கண்டு பிடித்த அறிவுத் துறைதான் இந்தப்பன்மை ஒழுங்கு அணுகல்முறை.

6. அமெரிக்காவில்'பெரிங் ஸ்ட்ரைட் கோட்பாடு' இப்படித்தான் உருவானது. உள்நாட்டு அமெரிக்கர்கள் என்போர், உண்மையில் உள்நாட்டில் தோன்றிய வர்கள் அல்லர். அவர்கள் ஆதி காலத்தில் புலம்பெயர்ந்து வந்தவர்கள் என்று இந்தக் கோட்பாடு கூறியது. இந்தியாவில் இந்த அணுகல் முறைதான் சமஸ்கிருதத்திற்கு இருந்த உன்னத இடத்தை அழித்தது. ஆரியப் புலப் பெயர்வுக் கொள்கையை முன்வைத்து பிராமணர்களை இந்தத் தேசத்திற்கு வெளியிலிருந்து வந்தவர் களாக நிறுத்தியது.

தமிழ் ஓவியா said...

7. இத்தகைய அணுகல் எளிதில் சாதி, வர்க்கம், பெண்ணியம் மற்றும் பழங்குடி உள்ளுறைகளுடன் கூடிய அறிதல்களாக மாற்றி அமைக்கத் தோதாக உள்ளது

ஆக ஆடிய ஆட்டத்தில் கட்டு ரையாளர் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு விட்டார். அவரது ஆத்திரம் எங்கிருந்து முளைக்கிறது என்பது வெளிப் பட்டு விட்டது. இங்கே அவர் ஒப்பிலக் கணம், ஒப்பிலக்கியம், கால்டுவெல்லின் திராவிட மொழிகள் குறித்த கண்டுபிடிப்பு ஆகியவை பற்றி எல்லாம் சொல்லா விட்டாலும் இத்தகையவற்றின்மீது இங்குள்ள பார்ப்பன அறிவு ஜீவிகளின் ஆத்திரத்தை அவர் மறைமுகமாக வெளிப்படுத்தி விட்டார். சமஸ்கிருதத்தை, மொழிகளின் தாய் எனச் சொல்ல விடா மல்செய்து விட்டார்களே, முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் மட்டும்தான் வந் தேறிகள் என நம்மை அரசியல் பண்ண விடாமல் செய்து விட்டார்களே என்று அவர் சீறிப் பெருமூச்சு விடுகிறார். பேயாய் அலறுகிறார்.

7. 17,18,19 நூற்றாண்டுகளில் அய்ரோப் பிய மிஷனெரிகள் தமது கட்டுப்பாட்டில் இந்தியாவில் ஆங்கில வழிப் பள்ளிகள் அப்புறம் கல்லூரிகள், பல்கலைக் கழகங் கள் முதலியவற்றை எல்லாம் இந்த நோக்கத்திற்காகவே கொண்டு வந்தனர். சுதந்திரத்திற்குப் பின் மார்க்சிஸ்ட்கள் நேரடியாகவும், கிறிஸ்தவ அறக்கட்ட ளைகள் மறைமுகமாகவும் வரலாற்றுக் கல்வியைத் தங்கள் கைக்குள் வைத்துக் கொண்டார்கள். தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தவர் பிராமண எதிர்ப்பு, இந்து எதிர்ப்புக் கருத்துக்களை கல்வித் துறையில் புகுத்தினர்.

ஆர்.எஸ்.எஸ் அம்மையாரின் கட்டுரை விரிவானது, அது தொடர்கிறது. அது கிடக்கட்டும். ஒப்பிலக்கணம், மானுடவியல் முதலியன இந்திய வர லாற்று ஆய்வில் பல முக்கிய பங்களிப்பு களைச் செய்துள்ளன. (பார்க்க: எனது, 'ஆரியக்கூத்து', எதிர் வெளியீடு, பொள் ளாச்சி). சமஸ்கிருதத்தைத் தேவ பாஷை யாகவும், தமிழை நீச்சமொழியாகவும் கட்டமைத்திருந்த வரலாற்றைத் தகர்த்தது. சாதிகளின் உருவாக்கம், அதன் இயக்கம் ஆகியவற்றைப் புரிந்து கொள்ள உதவியது. அது எப்படி, தாழ்த்தப்பட் டோர், பழங்குடியினர், பெண்கள் முதலானோர் அடிமைகளாக்கப்பட்டனர் என்பதை விளக்கியது.

அது பொறுக்கவில்லை இவர்களுக்கு. அது மட்டுமல்ல கல்வியைக் கிறிஸ்தவம் இங்கு கொண்டு வந்ததே ஒரு சதி என இன்று சொல்லவும் துணிவதை நாம் நோக்க வேண்டும். ஏகலைவனின் கட்டை விரலை வெட்டியவர்கள் வேறென்ன சொல்வார்கள். சில ஆண்டு களுக்கு முன் இவர்களின் இன்னொரு அறிவு ஜீவிக் கருத்தியலாளர் கே.ஆர். மல்கானி"இந்தியர்களுக்குப் படிப்பு தேவையில்லை" எனக் கூறி சர்ச்சை ஒன்றைக் கிளப்பியது நினை வில்லையா?

அதுவும் கிறிஸ்தவத்தின்மூலம் இங்கு கொண்டுவரப்பட்ட கல்வி அடித்தள மக்களுக்கும் அல்லவா கல்வியைக் கொண்டு சென்றது. மாணவச் சீரழிவுக்கு எடுத்துக்காட்டாக அம்மையார் சொல்கிற கல்லூரிகளைக் கவனியுங்கள்.சென்னை சட்டக் கல்லூரி, நந்தனம் மற்றும் மாநிலக்கல்லூரி. அத்தனையும் அடித்தள மாணவர்கள் அதிகம் படிக்கிற அரசு கல்லூரிகள்.

தமிழ் ஓவியா said...

சரி. படிப்பே வேண்டாம் என்றால் இவர்கள் சொல்லும் வலிமையான இந்தியாவை எப்படி உருவாக்குவது? வேறொன்றுமில்லை.அய்.அய்.டியை வெறுமனே தொழில் நுட்பர்களை, நுண்திறன் பெற்ற 'டெக்னோக்ராட்' களை உருவாக்கும் நிறுவனமாக மாற்றுவதுதான் இவர்களின் நோக்கம்.

இங்கெதற்கு இந்தக் கலைத்துறைப் படிப்பு, பன்மை ஒழுங்கு அறிதல்முறை, ஒப்பிலக்கணம், மானுடவியல் என்கிற"கல்விச் சீரழிவுகள் எல்லாம்?" எனக் கேட்கிறது ஆர்.எஸ்.எஸ்.

சோவியத் ருஷ்யாவில் லெனின் காலம் தொடங்கி சுமார் 30 ஆண்டு காலம் கல்வி அமைச்சராக இருந்த லூனாசாஎஸ்கி சொவார்:"அதீத நுண் திறம் ஒருவரை முடமாக்கும்" (Overspecialisation cripples a man). கல்வியின் அடிப்படை நோக்கம் முழுமையான மனிதனை உருவாக் குவது. அதனால்தான் பட்டப் படிப்புகளுக்கு Bachelor, Master, Doctor of Philosophy என்றெல்லாம் பெயர்கள் கொடுக்கப்பட்டன. ஒரு 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு பட்டப் படிப்பிலும் ஒரு major
பாடம் தவிர ஒரு பாடமும் இருந்தது. விஞ் ஞானம் பயில்பவர் ஒரு கலைப் பாடத்தையும், கலைப்பாடத்தில் பட்டப்படிப்பு படிப்பவர் சிறிது விஞ்ஞானத்தையும் அறிவது அவசியம் எனக் கருதப்பட்டது. இது கார்ப்பரேட் காலம். கலைப் பாடங்களையே ஒழிக்க வேண்டும் எனச் சொல்கிற காலம். கார்ப்பரேட்களும், இந்துத்துவமும் கைகோர்க்கும் இன்னொரு முக்கியப் புள்ளி இது.

கலை மற்றும் சமூக அறிவியல் துறைத் தலைவர் டாக்டர் சுதிர் செல்லா ராஜன் மிகவும் தகுதிமிக்க படிப்பு களையும் அனுபவங்களையும் கொண்டவர். அவர், அவரது மனைவி சுஜாதா பைரவன், பேரா. மிலிந்த் ப்ராஹ்மி ஆகிய மூவரே இன்றைய அய்.அய்.டி "சீரழிவுக்கு" காரணம் என அடையாளம் காட்டுகிறது ஆர்.எஸ்.எஸ்.

ஒன்று நிச்சயம். இப்போதைய எதிர்ப்பின் விளைவாக அய்.அய்.டி நிர்வாகமும், மோடி அரசும் சற்றே பொறுத்திருந்தாலும் விரைவில் சென்னை அய்.அய்.டியில் உள்ள இந்த அய்ந்து ஆண்டு ஒருங்கிணைக்கப் பட்ட M.A., படிப்பு ஒழிக்கப்படும் அல்லது மாற்றியமைக்கப்படும். சுட்டிக் காட்டப்பட்ட ஆசிரியர்கள் பழி வாங்கப்படும் கொடுமை நிகழும்.Read more: http://www.viduthalai.in/page-2/102799.html#ixzz3cHU8dXD1

தமிழ் ஓவியா said...

சொல்லவேண்டும்

பார்ப்பனியமும், மத ஆதிக்கமும் ஒழிந்தாலொழிய இந்தியாவில் யோக்கியமான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர்பார்க்க முடியாது. பார்ப்பனிய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன் னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.
(குடிஅரசு, 17.8.1930)

தமிழ் ஓவியா said...

இரணியன் நாடகம்

தோழர்களே!

சென்னை சீர்திருத்த நாடக சங்கத்தாரால் நடிக்கப்பட்ட இந்த முதல் நாடகத்துக்குத் தலைமை வகிக்கும் பெருமை எனக்களித்ததற்கு நன்றி செலுத்துகிறேன். நாடகம் என்பது ஒரு விஷயத்தைத் தத்ரூபமாக நடித்துக்காட்டுவது என்பதோடு, அது பெரிதும் மக்களின் நடத்தைக்கு வழி காட்டியாகவும், ஒழுக்கங்கள் கற்பிக்கப்படுவதற்கும் பயன்படுத்தப்படு கின்றது என்றும் சொல்லப்படுகின்றது.

ஆனால் அது அந்தப்படி தத்ரூபமாய் நடத்திக் காட்டப்படுவதும் இல்லை, மக்கள் ஒழுக்கத்துக்கும், நடப்புக்கும் வழிகாட்டியாய் நடப் பிப்பதும் இல்லை என்று சொல்லுவதற்கு நாடக அபிமானிகள் மன்னிக்க வேண்டுகிறேன்.

தத்ரூபம் என்பதில் விஷயங்களின் ரசபாவங்களும், உண்மையாய் நடந்திருக்கும் என்று நினைக்கும்படியான எண்ணமும் ஜனங்களுக்கும் விளங்க வேண்டும்.

அந்தப்படி இல்லாமல் நமது நாடகங்கள் பெரிதும் சங்கீதக் கச்சேரி போலவும், காலட்சேபசபை போலவும், விகட சபை போலவும் நகைகள், உடுப்புகள், காட்சி சாலைகள் போலவும், விஷயங்களுக்குப் பொருத்தமில்லாத பேச்சுகளை அடுக்கி பேசும் பேச்சு வாத சபை போலவும் என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

நாடகங்களுக்கு நடிப்புகளில் மிக விசேஷ சமயங்களில் அல்லது அசல் விஷயத்திலேயே பாட்டு வரும் சந்தர்ப்பங்களில் தவிர மற்ற சமயங்களில் பாட்டுகள் பொருத்த மற்றது என்பது நமது அபிப்பிராயம்.

தமிழ் ஓவியா said...

உதாரணமாக நெருப்பு பிடித்து விட்ட சமயத்தைக் காட்ட நடிக்க வேண்டியவர் தடபுடலாய் ஆத்திரப்பட்டு குளறுபடியாய் இருப்பது போல் நடிக்க வேண்டுமா? அல்லது தாளம், சுருதி, ராகம் முதலியவைகளைக் கவனித்து சங்கீத லட்சியத்தில் திரும்பி ஜனங்களுடைய கவனத்தையும் சங்கீதத்தில் திரும்ப விட்டு விட்டால் நடிப்பு சரியானதாக இருக்க முடியுமா என்று கேட்கின்றேன்.

அதுபோலவே நடிப்புக்குப் பொருத்தமற்ற உடை, நடை, நகை முதலியவற்றுடன் விளங்கினால் விஷயம் நடந்ததாகத் தத்ரூபமாய்க் கருதப்படமுடியுமா?

மேல் நாடுகளில் ரசபாவங்களுக்காகவும் தத்ரூபமாய் நடந்ததாகக் காட்டப்படும் நடப்புக்காகவும் நடத்தப்படும் ட்ராமாக்களில், பாட்டு என்பதே மிக மிக அருமையாய்த் தான் இருக்கும். சங்கீதத்துக்காக நடக்கும் விஷயத்தை அங்கு ஆப்ரா என்று சொல்லப்படுமே தவிர, ட்ராமா என்று சொல்ல மாட்டார்கள்.

இங்கு சங்கீத வித்வான்களே நாடக மேடையைக் கைப்பற்றிக் கொண்டதானது நாடகக் கலையைச் சங்கீதம் அழித்துவிட்டது என்றும், மக்களது நாடக அபிமான மும் சங்கீதத்தில் திருப்பப்பட்டு விட்டது என்றும் தான் கருத வேண்டும்.

நாடகம் நடிக்கப்படும் கதைகள் விஷயமும் தற்கால உணர்ச்சிக்கும், தேவைக்கும், சீர்திருத்த முறைக்கும் ஏற்றதாயில்லாமல் பழமையைப் பிரச்சாரம் செய்யவும், மூட நம்பிக்கை வருணாசிரமம், ஜாதி வித்தியாச உயர்வு தாழ்வு, பெண் அடிமை, பணக்காரத் தன்மை முதலிய விஷயங்களைப் பலப்படுத்தவும், அவை களைப் பாதுகாக்கவும் தான் நடிக்கப்படுகின்றதே ஒழிய வேறில்லை.

அரிச்சந்திரன் கதை, நந்தனார் கதை முதலானவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். அரிச்சந்திரன் கதையில் சத்தியம் பிரதானம் என்று சொல்லப்பட்டாலும், சத்திய அசத்திய விஷயம் நடக்காமல் கதையில் அலட்சியமாய் இருக்கிறது. ஜாதி வித்தியாசம் தீண்டாமை, பெண் அடிமை, பார்ப்பன ஆதிக்கம், பணக்காரத் தன்மை, எஜமானத் தன்மை ஆகியவைகள் தான் தலைதூக்கியிருக்கிறது.

அதுபோலவே நந்தன் கதையிலும், ஆள்நெருப்பில் விழுந்து வெந்து போனதுதான் மிளிர்கின்றதே தவிர, உயிருடன் தீண்டாமை ஒழிக்கப்பட்டதாக இல்லவே இல்லை. ராமாயணமும் சீதையைப்படுத்தின பாடு பெண் ஒரு சொத்து போல் பாவிக்கப்படுகிறதும் விளங்கும். இப்படிப்பட்ட கதைகள் ஒழிக்கப்பட வேண்டும். சுயமரியாதையும், சீர்திருத்த வேட்கையுமுள்ளவர்கள் அதை நடிக்கக் கூடாது.

இரணியன் கதையில் வீரரசம் சூழ்ச்சித்திறம், சுயமரியாதை ஆகியவை விளங்கின தோடு பகுத்தறிவுக்கு நல்ல உணவாகவும் இருந்தது. ஆனால் சில விஷயங்களில் தலைகீழ்மாறுதலாகவும், கடின வார்த்தை யாகவும் காணலாம். சீர்திருத்த நாடகம் என்றாலே மாறுதல் இருந்துதான் தீரும்.

மாறுதலுக்கு அவசியமானதும் பதிலுக்குப் பதிலானதுமான வார்த்தைகள் இருந்தால்தான் பழமை மாற சந்தர்ப் பம் ஏற்பட்டு அப்படி இல்லாமல் இருந்தால் தகுந்த மாறுதல் ஏற்பட இடமிருக் காது. ஆரிய புராணங்களில் ஆரியர்களால்லாதவர்களை, குரங்கு, அசுரன், ராட்சதன், சண்டாளன், பறையன் என்பன போன்ற வார்த்தைகளையும் அது உபயோகிக்கும் முறையையும் பழக்கத்தில் இருந்து வரும் மாதிரியையும் பார்த்தால் இந்த சரித்திரம் படிப்பதில் அவசியமான மாறுதல் ஏற்பட உதவி செய்யுமா என்பது சந்தேகம் தான்.

நிற்க. இச்சரித்திரம் உண்டாக்கிய தோழர் புதுவை பாரதிதாசனை நாம் போற்றிப் பாராட்ட வேண்டும். அவர் உணர்ச்சியுடன் உண்டாக்கி இருக்கிறார். இன்னமும் இதுபோல் பல நாடகங்கள் உற்பத்தி செய்ய வேண்டும். பாத்திரர்களுக்குக் கற்பித்த தஞ்சை தோழர் டி.என்.நடராசன் அவர்களின் ஆசிரியத் தன்மை மிகவும் போற்றத்தக்கது.

அவர் 20 வருஷமாய் பொதுநலச் சேவையில் இருந்து வருகிறவர். ஜெயிலுக்குச் சென்றவர். அவர்கள் இருவருக்கும் இந்த இரண்டு பதக்கங்களைச் சீர்திருத்த நாடக சங்கத்தார் சார்பாய் சூட்டுகிறேன். நாடகத்துக்கு உதவி செய்த தோழர்கள் சி.டி.நாயகம், என்.எ. ஆனந்தம், அழகப்பா முதலியவர் களுக்கும் நன்றி கூறுகிறேன்.

சிறப்பாக தோழர் மாசிலாமணி முதலியவர்கள் இந்நாடகத்துக்கு விளம்பரம், அச்சுவேலை, காகிதம் முதலிய விஷயங்களில் திரேகப் பிரயாசை, பொருள் செலவு முதலியவைகள் செய்ததுடன் இவ்வளவு சிறப்புக்குக் காரணமாய் இருந்ததாகவும் கேட்டு மிகவும் மகிழ்வதோடும் அவரையும் பாராட்டி நன்றி செலுத்துகிறேன்.

இந்தப் புதிய நாடகத்துக்கு இவ்வளவு தோழர்கள் விஜயம் செய்து கவுரவித்ததற்கும், நாடக பாத்திரங்களுக்கும் சபையாருக்கும் ஊக்கமளித்ததற்கும் என் நன்றி செலுத்துகிறேன்.

(இரணியன் நாடகத்தில் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு)

- பகுத்தறிவு - சொற்பொழிவு - 16.09.1934Read more: http://www.viduthalai.in/home/viduthalai/history-.html#ixzz3cHVUXKCp

தமிழ் ஓவியா said...

உதாரணமாக நெருப்பு பிடித்து விட்ட சமயத்தைக் காட்ட நடிக்க வேண்டியவர் தடபுடலாய் ஆத்திரப்பட்டு குளறுபடியாய் இருப்பது போல் நடிக்க வேண்டுமா? அல்லது தாளம், சுருதி, ராகம் முதலியவைகளைக் கவனித்து சங்கீத லட்சியத்தில் திரும்பி ஜனங்களுடைய கவனத்தையும் சங்கீதத்தில் திரும்ப விட்டு விட்டால் நடிப்பு சரியானதாக இருக்க முடியுமா என்று கேட்கின்றேன்.

அதுபோலவே நடிப்புக்குப் பொருத்தமற்ற உடை, நடை, நகை முதலியவற்றுடன் விளங்கினால் விஷயம் நடந்ததாகத் தத்ரூபமாய்க் கருதப்படமுடியுமா?

மேல் நாடுகளில் ரசபாவங்களுக்காகவும் தத்ரூபமாய் நடந்ததாகக் காட்டப்படும் நடப்புக்காகவும் நடத்தப்படும் ட்ராமாக்களில், பாட்டு என்பதே மிக மிக அருமையாய்த் தான் இருக்கும். சங்கீதத்துக்காக நடக்கும் விஷயத்தை அங்கு ஆப்ரா என்று சொல்லப்படுமே தவிர, ட்ராமா என்று சொல்ல மாட்டார்கள்.

இங்கு சங்கீத வித்வான்களே நாடக மேடையைக் கைப்பற்றிக் கொண்டதானது நாடகக் கலையைச் சங்கீதம் அழித்துவிட்டது என்றும், மக்களது நாடக அபிமான மும் சங்கீதத்தில் திருப்பப்பட்டு விட்டது என்றும் தான் கருத வேண்டும்.

நாடகம் நடிக்கப்படும் கதைகள் விஷயமும் தற்கால உணர்ச்சிக்கும், தேவைக்கும், சீர்திருத்த முறைக்கும் ஏற்றதாயில்லாமல் பழமையைப் பிரச்சாரம் செய்யவும், மூட நம்பிக்கை வருணாசிரமம், ஜாதி வித்தியாச உயர்வு தாழ்வு, பெண் அடிமை, பணக்காரத் தன்மை முதலிய விஷயங்களைப் பலப்படுத்தவும், அவை களைப் பாதுகாக்கவும் தான் நடிக்கப்படுகின்றதே ஒழிய வேறில்லை.

அரிச்சந்திரன் கதை, நந்தனார் கதை முதலானவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். அரிச்சந்திரன் கதையில் சத்தியம் பிரதானம் என்று சொல்லப்பட்டாலும், சத்திய அசத்திய விஷயம் நடக்காமல் கதையில் அலட்சியமாய் இருக்கிறது. ஜாதி வித்தியாசம் தீண்டாமை, பெண் அடிமை, பார்ப்பன ஆதிக்கம், பணக்காரத் தன்மை, எஜமானத் தன்மை ஆகியவைகள் தான் தலைதூக்கியிருக்கிறது.

அதுபோலவே நந்தன் கதையிலும், ஆள்நெருப்பில் விழுந்து வெந்து போனதுதான் மிளிர்கின்றதே தவிர, உயிருடன் தீண்டாமை ஒழிக்கப்பட்டதாக இல்லவே இல்லை. ராமாயணமும் சீதையைப்படுத்தின பாடு பெண் ஒரு சொத்து போல் பாவிக்கப்படுகிறதும் விளங்கும். இப்படிப்பட்ட கதைகள் ஒழிக்கப்பட வேண்டும். சுயமரியாதையும், சீர்திருத்த வேட்கையுமுள்ளவர்கள் அதை நடிக்கக் கூடாது.

இரணியன் கதையில் வீரரசம் சூழ்ச்சித்திறம், சுயமரியாதை ஆகியவை விளங்கின தோடு பகுத்தறிவுக்கு நல்ல உணவாகவும் இருந்தது. ஆனால் சில விஷயங்களில் தலைகீழ்மாறுதலாகவும், கடின வார்த்தை யாகவும் காணலாம். சீர்திருத்த நாடகம் என்றாலே மாறுதல் இருந்துதான் தீரும்.

மாறுதலுக்கு அவசியமானதும் பதிலுக்குப் பதிலானதுமான வார்த்தைகள் இருந்தால்தான் பழமை மாற சந்தர்ப் பம் ஏற்பட்டு அப்படி இல்லாமல் இருந்தால் தகுந்த மாறுதல் ஏற்பட இடமிருக் காது. ஆரிய புராணங்களில் ஆரியர்களால்லாதவர்களை, குரங்கு, அசுரன், ராட்சதன், சண்டாளன், பறையன் என்பன போன்ற வார்த்தைகளையும் அது உபயோகிக்கும் முறையையும் பழக்கத்தில் இருந்து வரும் மாதிரியையும் பார்த்தால் இந்த சரித்திரம் படிப்பதில் அவசியமான மாறுதல் ஏற்பட உதவி செய்யுமா என்பது சந்தேகம் தான்.

நிற்க. இச்சரித்திரம் உண்டாக்கிய தோழர் புதுவை பாரதிதாசனை நாம் போற்றிப் பாராட்ட வேண்டும். அவர் உணர்ச்சியுடன் உண்டாக்கி இருக்கிறார். இன்னமும் இதுபோல் பல நாடகங்கள் உற்பத்தி செய்ய வேண்டும். பாத்திரர்களுக்குக் கற்பித்த தஞ்சை தோழர் டி.என்.நடராசன் அவர்களின் ஆசிரியத் தன்மை மிகவும் போற்றத்தக்கது.

அவர் 20 வருஷமாய் பொதுநலச் சேவையில் இருந்து வருகிறவர். ஜெயிலுக்குச் சென்றவர். அவர்கள் இருவருக்கும் இந்த இரண்டு பதக்கங்களைச் சீர்திருத்த நாடக சங்கத்தார் சார்பாய் சூட்டுகிறேன். நாடகத்துக்கு உதவி செய்த தோழர்கள் சி.டி.நாயகம், என்.எ. ஆனந்தம், அழகப்பா முதலியவர் களுக்கும் நன்றி கூறுகிறேன்.

சிறப்பாக தோழர் மாசிலாமணி முதலியவர்கள் இந்நாடகத்துக்கு விளம்பரம், அச்சுவேலை, காகிதம் முதலிய விஷயங்களில் திரேகப் பிரயாசை, பொருள் செலவு முதலியவைகள் செய்ததுடன் இவ்வளவு சிறப்புக்குக் காரணமாய் இருந்ததாகவும் கேட்டு மிகவும் மகிழ்வதோடும் அவரையும் பாராட்டி நன்றி செலுத்துகிறேன்.

இந்தப் புதிய நாடகத்துக்கு இவ்வளவு தோழர்கள் விஜயம் செய்து கவுரவித்ததற்கும், நாடக பாத்திரங்களுக்கும் சபையாருக்கும் ஊக்கமளித்ததற்கும் என் நன்றி செலுத்துகிறேன்.

(இரணியன் நாடகத்தில் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு)

- பகுத்தறிவு - சொற்பொழிவு - 16.09.1934Read more: http://www.viduthalai.in/home/viduthalai/history-.html#ixzz3cHVUXKCp

தமிழ் ஓவியா said...

பார்ப்பன பத்திரிகைகளும் சர். சண்முகமும்


தோழர் ஆர்.கே. சண்முகம் இந்தியா முழுவதுக்கும் தெரிந்த ஒரு முக்கியஸ்தர். அவருடைய நடவடிக்கைகளும், பேச்சுக் களும் மக்கள் கவனிக்கப்பட தக்கது என்பதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்காது. பலர் எதிர்பாக்கவும் கூடும்.

இந்நிலையில் தேசியப் பத்திரிகைகள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனப் பத்திரிகை அவரது நடவடிக் கைகளை யோக்கியமாய் பிரசுரிக்காமலும், பிரசங்கங்களையும் கேள்விகளையும், பதில்களையும் சிறிதும்கூட பிரசுரிக்காமலும் இருந்து வருகின்றன. சர். சண்முகம் அவர்கள்.

இந்திய சட்டசபையில் இராணுவ சம்பந்தமான பிரச்சினையில் கொடுத்த ஒரு தீர்ப்பு விஷயமாய் பார்ப்பனப் பத்திரிகைகள் பாராட்டாவிட்டாலும், விஷமத்தனமான பரிகாசங்களைச் செய்தன.

தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி அய்யர், ஜம்பை வைத்தியனாத பாகவதர், ரமண ரிஷி போன்றவர்கள் விஷயங்களைப் பெருக்கி கண்ணு, மூக்கு வைத்து கலம் கலமாய் அலங்கரிக்கின்றன.

இந்த மாதிரியான காரியங்களால் பார்ப்பனர்களுக்குக் கீர்த்தியும், மேன்மையும் ஏற்பட்டு விட்டதாகவோ, பார்ப்பனரல்லாதாருக்கு அபகீர்த்தியும், தாழ்மையும் ஏற்பட்டு விட்டதாகவோ நாம் சொல்ல வரவில்லை.

இந்த மாதிரியான நிலையில் பார்ப்பனர் இருக்கின்ற வரையில் சித்திரத்தில் மாதிரி பார்த்து எழுதக் கூட ஒரு பார்ப்பனர் கிடைக்காமல் பூண்டற்று போகக் கூடிய காலம் வரும் என் கின்ற தைரியம் நமக்கு உண்டு. அந்தத் தைரியம் இல்லாவிட்டால் இத் தொண்டை நாம் மேற்கொண்டிருக்க மாட்டோம்.

ஆனால் எதற்காக இதை எழுதுகின்றோம் என்றால், பார்ப்பனப் பத்திரிகைகள் தேசியப் பத்திரிகைகள் என்றும், பல பார்ப்பனர்கள் பார்ப்பனத் தன்மை இல்லாமல் நடு நிலைமை வாய்ந்தவர்கள் என்றும் கருதிக் கொண்டு பார்ப்பன சிஷ்யர்களாகவும், பார்ப்பன கூலிகளாகவும், பார்ப்பனர் களுக்கும், பார்ப்பன பத்திரிகைகளுக்கும் ஆதரவளிப்பவர் களாகவும் இருக்கும் முட்டாள்தனத்தையும், சுயமரியாதை அற்ற தன்மையையும் வெளிப்படுத்தவே இதை எழுதுகிறோம்.

விகடப் பத்திரிகை என்று வேஷம் போட்டுக் கொண்டு சில பத்திரிகைகள் பார்ப்பனியத்தைப் பிரச்சாரம் செய்துகொண்டு பார்ப்பனரல்லாத பிரமுகர்களை இழிவுபடுத்திக் கொண்டு வருகின்றன.

அவைகளுக்கும் சுத்த இரத்த ஓட்டமில்லாத - சுயமரியாதை அற்ற பணம் பிரதானமே தவிர வேறொன்றும் இல்லை என்று கருதுகின்ற சில பார்ப்பனரல்லாதார் ஆதர வளிக்கின்றதையும் பார்த்து வெட்கப்படுகின்றோம்.

என்ப தோடு 10 பணத்துக்கு மிஞ்சிய பதிவிரதை இல்லை என்று கற்பின் பித்தலாட்டத்துக்கு ஒரு பழமொழி சொல்வது போல் பணத்தை விட தங்கள் சுய நல வாழ்க்கையை விட, மானம் பெரிதல்ல என்று எண்ணி வாழ்க்கை நடத்தும் பார்ப்பனரல்லா தாரைக் கண்டு இரங்குகின்றோம்.

பார்ப்பனரைப் பார்த்து பாரதியார் நாயும் பிழைக்கு மிந்தப் பிழைப்பு என்று சொன்னது போல், ஒரு மனி தனின் பிழைப்பிற்காக மானத்தைத் தனது சமுகத்தை விற்று விட்டு ஜீவிக்க வேண்டியதில்லை என்றுதான் பரிதாபத்துடன் கண்ணீர் விட்டுக் கொண்டு இதை எழுதுகிறோம்.

- பகுத்தறிவு - கட்டுரை - 30.09.1934Read more: http://www.viduthalai.in/home/viduthalai/history-.html#ixzz3cHVjbxIE

தமிழ் ஓவியா said...

விஷமத்துக்கு விஷமமா?
அல்லது உண்மையா?திருச்சி நகர தூதன் பத்திரிகையில் தோழர் அவிநாசி லிங்கம் நிற்கவில்லை என்கின்ற தலைப்பின் கீழ் கோயம்புத்தூர், சேலம், வடாற்காடு ஜில்லாக்களின் இந்திய சட்டசபைத் தொகுதிக்குக் காங்கிரஸ் சார்பாக அபேட்ச கராய் நிறுத்தப்பட்டதாக சொல்லப்படும் தோழர் அவிநாசிலிங்கம் செட்டியார் கடைசிவரை அபேட்சகராய் நிற்க மாட்டாராம்.

காங்கிரசின் பெயரால் தோழர் அவிநாசிலிங்கம் செட்டியாரை முன்னிருத்தி அத்தகுதியைப் பயன்படுத்தி முடிந்ததும் கடைசியில் இருக்கக் கூடிய நிலைமையை அனுசரித்து இறுதியாகத் தோழர் ராஜகோபாலாச்சாரியாரே அதில் அபேட்சகராக நின்றுவிட ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு விட்டதாக நம்பத்தகுந்த இடத்திலிருந்து தெரியவருகிறது என்ற ஒரு சிறு குறிப்புக் காணப்படுகிறது.

பொய்க்கு பொய், கோளுக்குக் கோள், விஷமத்துக்கு விஷமம் செய்யத் தகுதி உள்ளவனுக்குத்தான் உலகில் இடமுண்டு என்கின்ற ஒரு ஆப்த வாக்கியம் உண்டு.

நகர தூதனில் காணப்படும் இந்தக் குறிப்பானது நகர தூதனுக்கு நம்பத் தகுந்த இடத்திலிருந்து வந்திருந்தாலும் இருக்கலாம். என்றாலும் அந்த நம்பத் தகுந்த இடத்துக்கு, நம்பத்தகுந்த இடத்திலிருந்து வந்தது உண்மையாய் இருக்குமா அல்லது மேல்கண்ட ஆப்தவாக்கியத்தை ஒட்டியதாக இருக்குமா என்பதை உறுதி கூற நம்மால் முடியவில்லை.

ஆகவே, தோழர் அவிநாசிலிங்கம் அவர்கள் நிற்கப் போவதில்லை என்பது உண்மையாய் இருந்தாலும் இருக்கலாம். அல்லது பொய்க்குப் பொய், கோளுக்குக் கோள், விஷமத்துக்கு விஷமம் என்கின்ற மனுதர்ம சாஸ்திரத்தை அனுசரித்து இருந்தாலும் இருக்கலாம் என்று எண்ணுகிறோம்.

- பகுத்தறிவு - கட்டுரை - 23.09.1934Read more: http://www.viduthalai.in/home/viduthalai/history-.html#ixzz3cHVvSPcL

தமிழ் ஓவியா said...

தாலி புனிதமா?புனிதப் பொருளான தாலியை மாசுபடுத்தி விட்டார்கள் என்று காவல்துறையும் சிவசேனாவும் திரா விடர் கழகத்தின்மீது பாய்ந்திருக் கின்றன. இது காவல்துறையின் உயர் அதிகாரிகளுக்குத் தெரிந்து நடந்ததா என்ற அய்யம் எழும் வகையில் காவல்துறையினரின் நடைமுறை இருக்கின்றது.

2013 மார்ச் மாதம் திராவிடர் கழகத்தின் கவனத்துக்கு ஒரு செய்தி கொண்டு வரப்பட்டது. ஒருபெண் தன் வீட்டு முன்பு அதிகாலையில் கோலம் போட்டுக் கொண்டு நின்றிருக்கின்றார். எவனோ ஒருவன் அவரது தாலிச் சங்கிலியை அறுத்து எடுத்துக் கொண்டு ஓடி விட்டான். 5 பவுன்தாலிச் சங்கிலி பறி போய் விட்டது என்று தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் கொடுக் கப்பட்டது.

காவல் துறையினரும் அந்தத் தாலிச் சங்கிலியை மீட்டுக் கொடுத்து விட்டார்கள். அந்தப் பெண் திருவைகுண்டம் நீதிமன்றத்துக்குச் சென்று அந்தத் தாலிச் சங்கிலியை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.

அந்தப் பெண்ணின் மகிழ்ச்சிக்குக் காரணம் 5 பவுன் தாலிச் சங்கிலி கிடைத்ததுதானா? ஆமாம்! இதில் என்ன ஆச்சரியம் என்று வினவுகின் றீர்களா? அறுத்து எடுத்துக் கொண்டு சென்ற தாலிச் சங்கிலி கவரிங் நகை. 5 பவுன் தங்கத் தாலி காணாமல் போன தாக புகார் கொடுத்து விட்டார்கள் கணவனும் மனைவியும்! யாரோ ஒருவன் இன்னொரு பெண்ணுக்குக் கட்டிய தாலியை தனதென்று வாங்கி அணிந்து கொண்டார் புகார் கொடுத்த பெண், கணவனும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந் தான்.

யாரோ ஒருவர் அவர் மனைவிக்கு அணிந்த தாலியை தன் மனைவி அணிந்தது மிகப் பெரிய புனிதம் என்றா அந்தக் கணவன் மகிழ்ந்தான்! இல்லை... கவரிங் நகைக்குப் பதிலாக 5 பவுன் தாலிச் சங்கிலி கிடைத்ததுதான் அவன் மகிழ்ச்சிக்குக் காரணம்!!

இங்கே கோயில்களில் நடைபெறு கின்ற திருக்கல்யாண விழாக்கள் நினைவுக்கு வருகின்றன. அதைப்பற்றி வினா எழுப்பிய தந்தை பெரியாரின் அறிவுக் கூர்மையை புகழாமல் இருக்க முடியுமா?

தனக்கு மனைவியாகப் போகின்ற பெண்ணுக்குத்தான் ஒருவன் தாலி அணிவான். ஆனால், கோயில் விழாக் களில் ஆண்டுதோறும் பெண் கடவு ளுக்கு பார்ப்பனன் தாலி கட்டுகின் றான். மக்கள் பரவசத்துடன் பார்த்துக் களிக்கின்றனர் இந்த விழாவைப் பார்த்து தந்தை பெரியார்தான் முதன் முதலாக வினா எழுப்பினார்!

அடுத் தவன் மனைவிக்கு இன்னொருவன் தாலி கட்டலாமா? ஆண்டுதோறும் திருமணம் நடைபெறுகின்றதே... முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற திருமணம் என்ன ஆனது? எப்பொழுது ரத்து ஆனது? என்றெல்லாம் தந்தை பெரியார் எழுப்பிய வினாக்கள்தான் பெண்ணினத்தின் மூளை விலங்கை உடைத்தன. அதன் விளைவுதான் தாலி அகற்றும் நிகழ்வுகள்!

எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் கணவனுக்கு மதிய உணவு கொண்டு செல்வதற்காக ஆட்டோவில் ஏறியிருக் கின்றார் ஒரு பெண். கழுத்திலே மஞ்சள் நூலில் தாலி கோர்க்கப்பட்டிருந்தது. ஆட்டோ ஓட்டுநர் அந்தப் பெண்ணை திருச்செந்தூரிலிருந்து அந்தப் பெண் செல்ல வேண்டிய இடத்துக்கு ஆட் டோவைக் கொண்டு செல்லவில்லை.

ஆலந்தலை செல்லும் வழியில் உள்ள உடை மரங்கள் அடர்ந்த பகுதிக்குக் கொண்டு சென்றான் ஆட்டோவை. அந்தப் பெண் பாலியல் வன்கொடு மைக்கு ஆளானாள். இங்கே தாலியின் புனிதம் அந்தப் பெண்ணுக்கு வாழ் வளிக்கவில்லை. கணவன் அவளை அந்தச் சம்பவத்துக்குப் பிறகு ஏற்றுக் கொள்ளவே இல்லை.

சன் தொலைக்காட்சியில் வள்ளி என்றஒரு தொடர் நாடகம் வெளிவந்து கொண் டிருக்கின்றதல்லவா. அதிலே ஒளி பரப்பான ஒரு காட்சி. திருமணமான -தாலி அணிந்திருந்த பெண்ணை காவல் ஆய்வாளர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்கின்றார். இதன் விளைவு பத்திரிகை நிருபரான அவள் கணவன் அவளை ஏற்கவில்லை.

தமிழ் ஓவியா said...

அண்ணனைக் கொலை செய்தாள் என்று 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கிடைக்கின்றது அவளுக்கு.. இதில் திராவிடர் கழகம்தான் தலையிட்டது. காவல்துறையினரை _ நீதிமன்றத்தை _ பெண்ணினத்தைக் கொச்சைப்படுத்தும் சன் தொலைக் காட்சியில் நாடகத்தை தடை செய்ய வேண்டும் என்று காவல்துறை இயக்குநரிடம் மனு வழங்கப்பட்டது.

சன் தொலைக்காட்சியில் அலுவல கத்திலும் அதன் நகல் வழங்கப்பட்டது. அதன் பிறகு சன் தொலைக்காட்சியில் தன் கதையின் போக்கையே மாற்றி விட்டது. இதை காவல்துறையினர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு தடை வாங்கிய வேப்பேரி காவல் நிலைய ஆய்வாளருக்கு பல ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி திராவிடர் கழகத்தால் நடத்தப்படுவது தெரிந்திருக்கவில்லை என்பதே உண்மை.

மக்கள் நலனுக்காக - _ பெண்ணினத் தின் உரிமைக்காகப் போராடிய தந்தை பெரியாரின் பணிகள் பிற்படுத்தப்பட்ட - _ ஒடுக்கப்பட்ட பெண்களின் வாழ்க் கையில் மட்டுமா மறுமலர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதை காவல் துறையினரும் சிவசேனாவின ரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பார்ப்பனப் பெண்களின் நிலைமை ஒரு காலக் கட்டத்தில் எப்படியிருந்தது என்பதை அண்மையில் காலமான ஜெயகாந்தனே, அவரது இளமைக் கால நண்பரான வழக்கறிஞர் கரூர் பி.ஆர். குப்புசாமி அவர்களிடம் கூறியிருக்கின் றார். தங்களுக்கு விருப்பமான ஒரு நபரை பார்ப்பனப் பெண்கள் சந்திக்க வேண்டுமென்றால், கை விளக்குடன் இரவில் நீண்ட தூரம் நடந்து சென்று சந்திப்பார்கள் என்கின்றார் ஜெய காந்தன்.

அந்த நிலைமை இன்று விலகி பார்ப்பனப் பெண்கள் சுதந்திரமாக நடமாடுவது தந்தை பெரியாரின் உழைப்பே அன்றி வேறு என்ன?
கணவனை இழந்த பார்ப்பனப் பெண்களின் நிலையைச் சற்று எண் ணிப் பாருங்கள். மொட்டைப் பாப் பாத்திகள் என்று அவர்களைத் திட்டு வார்களே, இன்று அந்த நிலை மாறிய தற்குக் காரணம் யார்? தந்தை பெரி யார்தான்.

காவல்துறையும் சிவசேனா வும் மறக்கலாமா?
தாலி என்ற ஒன்றில் எந்த முக்கியத்துவமும் இல்லை என்பதை உணர்ந்தவர்கள் திராவிடர் கழகத்தினர். திருமணத்தின்போது உறவினர்களின் வற்புறுத்தல் காரணமாக தாலியை ஏற்றுக் கொண்டவர்கள், பிறகு அதை அகற்றுகின்றார்கள்.

ஒருவருடைய தனிப்பட்ட விருப்பு _ வெறுப்பில் சிவ சேனா தலையிடலாமா? இதைக் காவல் துறை அவர்களுக்கு உணர்த்த வேண் டாமா?

தாலி என்பது புனிதம் அல்ல. அது ஒரு நகை அவ்வளவுதான். அதன் மதிப்பு அது எந்த உலோகம் என்பதைப் பொறுத்ததுதான்.

இங்கே ஒன்றை சுட்டிக்காட்டியே ஆக வேண்டிய நிலை உள்ளது. தந்தை பெரியாரால் தலை நிமிர்ந்த மக்கள் இன்றைய சூழலால் மீண்டும் ஒடுக்கப் பட்டு விடக் கூடாது என்பதற்காக, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஊட்ட திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடுகள் நமது தமிழர் தலைவரின் உத்தரவால் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருவதுதான் சிவசேனாவின் கொந்தளிப்புக்குக் காரணம்.

இதை காவல்துறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும். எங்கள் தலைவர் எத்தகையவர்? தமிழ்நாடு அரசின் ரயில்வே காவல்துறையைச் சேர்ந்த முதல் நிலைக் காவலர் ஒருவர் தமிழர் தலைவர் அவர்களைப்பற்றி என்ன கூறுகின்றார் தெரியுமா?

நான் தலைவரின் பாதுகாப்புக்காக அடிக்கடி அவருடன் ரயிலில் பயணம் செய்திருக்கின்றேன். தான் ஒரு பெரிய தலைவர் என்ற ஆணவம் இல்லாமல் எங்களிடம் கலகலப்பாகப் பேசுவார். எங்கள் நலனைப்பற்றி விசாரிப்பார். அவர் செலவிலேயே எங்களுக்கு உணவு வாங்கித் தருவார். அதில் மட்டன் சிக்கன் எல்லாம் இருக்கும்.

எங்களின் மரியாதைக்குரிய மாபெரும் தலைவர் அவர்

தாலி அகற்றும் நிகழ்வுக்குத் தடை வாங்க முயன்ற காவல்துறை, அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு மாட்டுக்கறி விருந்துக்கு தடை வாங்கியது ஏன்?

ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை பார்ப்பனர்களிடமிருந்து பிரிக்க முடியாது. அந்த வேத கால கட்டத்திலே பசுக்கள்தான் யாகத்தில் பலியிடப்பட்டன. அப்படி பலியிடப் பட்ட பசுக்களின் இறைச்சி பார்ப் பனர்களின் உணவாக ஆனது.

வேத காலத்தில் கோ மேத (யாக)ம் நடந்ததை பார்ப்பனர்கள் மறுப் பார்களா? பசுவும் காளையும் புனித விலங்குகள் என்றும் அதனால் அதைக் கண்டிப்பாக உண்ண வேண்டும் என்றும் ஆபஸ்தம்ப தர்ம சூக்தம் (1_5_14_29) கூறவில்லையா! மறுப் பார்களா சிவசேனாக்கள்!

முதலில் தங்கள் மத நூல்கள் என்ன சொல்கின்றன என்பதை ஆய்ந்தறிந்து விட்டு, பிறகு சட்ட ரீதியான நடவடிக்கைகள்மூலம் சிவசேனாக்கள் மோதட்டும் அவர்கள் வன்முறைக் களம் அமைக்க வேண்டாம்.

காவல்துறையினரும் இந்த நாட்டின் சட்டம் என்ன சொல்கின்றதோ, அதற்கு முன்னுரிமை கொடுக்கட்டும்; வன்முறைக்கு துணை போக வேண் டாம்.

- த. அமலா, திருச்செந்தூர்Read more: http://www.viduthalai.in/page2/102775.html#ixzz3cHWhCVv7

தமிழ் ஓவியா said...

நாத்திகத்தைப்பற்றி அவதூறா?
பிரேசிலில் தண்டனைபிரேசிலைச் சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனம் நேரலை நிகழ்ச்சியை வழங்கி உள்ளது. அந்த நிகழ்ச்சியில் நாத்திகர்கள்குறித்து எதிர் மறையான கருத்துகளைக் குறிப்பிட்டது.

2010ஆம் ஆண்டில் ரெடி பான் டெய்ரெண்டிஸ் தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பிய பிரேசிலின் அவசரம் (அர்ஜென்ட் பிரேசில்) நிகழ்ச்சியை ஜோஸ் லூயிஸ் தாடெனா என்பவர் வழங்கினார். இளைஞர் ஒருவர் கடவுள் இல்லாமைகுறித்து விளக்கினார்.

நிகழ்ச்சியை வழங்கியவர் குறிப்பிடும்போது என்னுடைய கருத்தாக கூறுவது என்னவென்றால், ஒருவர் நாத்திகராக இருப்பதால், எந்த வித வரையறையுமில்லாமல் ஏராளமான குற்றங்கள் நடைபெறுவதை நாம் காண்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அதேபோன்ற கருத்துகளை தொடர்ச்சியாக அந்த நிகழ்ச்சி முழுவதுமாக, நாத்திகர்கள் என்றாலே குற்றம் செய்பவர்கள் என்கிற கருத்தைப் பேசிவந்தார். அதேபோல் எவ்வளவுபேர் கடவுள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என்பதை வாக்கெடுப்பாகவும் நடத்திக்கொண்டிருந்தார்.

நிகழ்ச்சியை வழங்கியவரின் கருத்துகளால் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு எதிராக அரசு வழக்குரைஞர்கள் உடனடி நடவடிக்கை எடுத்தனர்.

மத சுதந்திரம் மற்றும் சட்டத்துக்கு விரோதமாக மதசகிப்புத்தன்மையில்லாமல் எவரும் பேசுவது என்பது சட்டவிரோதமானது. தொலைக்காட்சி நிறுவனத்தின் நிகழ்ச்சியை வழங்கியவரின் கற்பனையால் புனையப்பட்டு கூறப்பட்ட கருத்துகள் பிரேசில் நாட்டின் அரசமைப்புக்கு விரோதமாக இருந்துள்ளது. அப்படி சட்ட விரோதமாக எவரும் பேசுவது என்பது அபராதம் விதிப்பதற்கு அல்லது சிறைத்தண்டனைக்கு உரியதாகும்.

மத சுதந்திரம் என்கிற பெயரில் அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் அந்த நிகழ்ச்சியை வரும் நவம்பர் மாதம்வரை 72 முறை ஒளிபரப்புவதற்கு ஒப்புக் கொண்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து வரக்கூடிய கருத்துகள் ஒருவருக்கொருவர் மாறுபாடுகளைக் கொண்டுள்ளதாக இருக்கிறது.

ஏராளமானவர்கள் தங்களின் கருத்துகளாகக் குறிப்பிடும்போது, மதங்கள்தான் போர்கள் நடைபெறுவதற்கு காரணங்களாக இருக்கின்றன. மதங்களால் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் நாத்திகத்தை குறை கூறக்கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.

மக்கள் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும். உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குமான தளமாக தாடெனா மற்றும் ஏவர் ஆகியோர் இணைந்து வழங்கிய அந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டது. தாடெனா என்பவரும் நம்மைப் போன்ற மனிதர்தான். அந்த நிகழ்ச்சி நேரலை என்பதால், அளவுகடந்து சென்று விட்டார் என்று ஒருவர் குறிப்பிட்டார்.

இதுபோன்று அவதூறுகளைப் பரப்புகர்களுக்கு அபராதமோ, சிறைத் தண்டனையோ விதிக்கப்படும் என்றும் வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.

பொதுவாக பிரேசிலில் நாத்திகர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக் கிறார்கள் என்று சொல்லப்பட்டுவந்தாலும், அண்மையில் வெளிவந்த ஆய்வுத் தகவலின்படி, அமெரிக்க அய்க்கிய நாடுகளில் நாத்திகத்தின் விழுக்காடு அதிகரித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்த ஆய்வில் பிரேசிலில் நாத்திகர்களின் எண்ணிக்கை 50 விழுக்காட்டுக்கும் மேல் இருப்பது தெரியவந்துள்ளது.Read more: http://www.viduthalai.in/page3/102777.html#ixzz3cHX1CMO1

தமிழ் ஓவியா said...

அன்னையர் தினம் கொண்டாடும் இந்தியாவே! - திரும்பிப் பார்!

-க. பூபாலன்மே10 அன்னையர் தினம் கொண் டாடும் தாய்மார்களுக்கு தேவையான அனைத்து வசதிகள் மற்றும் பாதுகாப்புகளைக் கொண்ட சிறந்த நாடு எது? என்று ஒரு ஆய்வினை மேற்கொண்டது அமெரிக்காவைச் சேர்ந்த குழந்தைகளைப் பாது காப்போம்' என்ற தொண்டு நிறுவனம் அதில், பிரசவத்தின் போது ஏற்படும் தாய்-சேய் மரணம், தாய் மார்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு, பொரு ளாதார நிலை போன்ற காரணிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவுகள் வெளி யிடப்பட்டுள்ளன. அதில் தாய் மார்களுக்குத் தேவையான அனைத்து வசதிகள் மற்றும் பாது காப்புகளை கொண்ட நாடாக நார்வே தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பட் டியலில் இந்தியா 140ஆம் இடத்தில் உள்ளது.

இந்த ஆய்வில், இதில் முதல் பத்து இடங்களில் அய்ரோப்பிய நாடுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. 9-ஆம் இடத் தில் இருக்கும் ஆஸ்திரேலியா மட்டும் தான் அய்ரோப்பாவை சேராத ஒரே நாடு.

ஏன் இந்தியாவுக்கு இப்படியொரு மோசமான நிலை? இத்தனைக்கும் இந்தியாவில்தான் அதிகமாக பெண் தெய்வங்கள், பெண் சாமியார்கள், கன்னியாஸ்திரிகள், கடவுளின் சீடர்கள் நிறைந்துள்ளார்கள்.

பெண் பிறந்ததிலிருந்து அவளுக்குக் காதுகுத்து, மூக்குகுத்து, பருவமடைந்த உடன் பூப்புனித நீராட்டு, திருமணத் தின்போது நலுங்கு, கருவுற்று இருக்கும் போது வளையல்காப்பு போன்ற பல சடங்குகளும் தவறாமல் செய்கிறோமே!.

அது மட்டுமல்லாமல் பெண்களுக்கு தாலி, மெட்டி, பர்தா போன்ற பலபல சாஸ்திர-சம்பிரதாயங்கள், பெண்களுக்காகவே தனி பூஜைகளும் இன்றளவும் குறைவில்லாமல் நடைமுறை யில் உள்ள நாடாச்சே நம் இந்தியா! அப்படி இருந்தும் நம் நாட்டில் பெண்களுக்கு தாய்மார்களுக்கு பாதுகாப்பு இல்லையா?

தமிழ் ஓவியா said...


ஏன்? நாம் நம்பும் கட வுளும், மதங்களும், கடைப் பிடிக்கும் சாஸ்திர சம்பிரதா யங்களும் பெண்களை மதிக் கவோ! ஆணுக்கு இணையாக நடத்தவோ! கற்றுத்தரவில் லையா? இல்லை என்பது தானே யதார்த்தமான உண்மை! பிறகு எதற்குதான் பயன்படுகிறார்கள்?பெண்தெய்வங்கள் கட வுளின் அவதாரங்களாகவும், புராணக் கதைகளின் கதாப்பாத் திரங்களாகவும் சித்தரிக்கபடுகிறார்கள். பெண் சாமியார்கள், கன்னியாஸ்திரிகள் தங்கள் சார்ந்துள்ள மதத்தை போற்றி பரப்புவதற்கும், கடவுளின் கதைகளை விளக்கி விளம்பரப் படுத்துவதற்கும் பயன்படுகிறார்கள்!

பெண் பிறந்ததிலிருந்து நடை பெறும் சடங்குகளும் சம்பிரதாயங் களும் அவளை ஒரு பொருளாக வைத்து தானே நடத்தப்படுகிறார். அவள் பிள்ளைப் பெற்ற பிறகு, வாழும் கடைசி மூச்சு வரையும் ஆண்களின் விருப்பத்தை நிறைவேற்றும் பெண் ணாகவும், உழைப்பை கொடுக்கும் இயந்திரமாகவும், பொருள் ஈட்டும் ஒரு பொறுப்பாளராகவும் தானே நடத்தப்படுகிறார்கள்!

சரி இவை தான் இப்படியென்றால்..

பழமொழிகளில் கூட சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை, அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு?, கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்!, கணவனே கண்கண்ட தெய்வம்!, ஆயிரம்தான் இருந்தாலும் அவன் உன் புருசன்!, பெண் புத்தி பின் புத்தி, அடக்கமே பெண்ணுக்கு அழகு, கணவனுக்கு மிஞ்சின கடவுள் இல்லை!, வெட்கம் அற்ற பெண்பிள்ளை வீண், என்று பெண்ணை தாழ்த்தி ஆணுக்கு கீழானவள் என்ற மனநிலையைத்தானே உருவாக்கி வைத்துள்ளார்கள்.

சமுதாயத்தில் பெண்ணின் வாழ்க்கை முறையில் கூட...

பழங்காலத்தில் பெண்கள் மேலாடை அணியக் கூடாது, கணவன் இறந்த உடன் மனைவி உடன் கட்டை ஏறவேண்டும் என்றும், இக்காலத்தில் கணவன் இறந்த பின்பு மறுமணம் செய்யக்கூடாது விதவை எதிரே வருவது அபசகுனம், நல்ல காரியம் செய்யக் கூடாது, குழந்தைப்பேறு இல்லையென் றால் மலடி என்று பெண்ணை இகழும் நிலைமை தானே இருக்கிறது.

அன்றாட நடைமுறையிலும், வீட்டிலும் கூட.....முதலில் கணவன் சாப்பிட்ட பிறகுதான் மனைவி சாப்பிட வேண்டும். ஆண்களுக்கு பிறகுதான் பெண்கள்! ஆண்களுக்கு நிகராக உட்காரக்கூடாது என்று பெண் பிறந்ததிலிருந்து அவள் இறக்கும் வரையும் ஒவ்வொரு நிலை யிலும், இடத்திலும் பெண்ணைத் தாழ்த்தி சொல்லி சொல்லி பெண் களுக்கு தாழ்வு மனப்பான்மையும்! ஆண்களுக்கு ஆண் என்ற அகங்கார அதிகார மனப்பான்மையும் தானே வளர்த்துள்ளார்கள்!.

இவை எல்லாம் ஏதோ பழங் காலத்தில் மட்டும்தான் நடைமுறையில் இருந்தது என்று நினைத்து விடவேண்டாம், இன்றும் பெண் ணைத் தாழ்த்தும் சிந்தனையும், செயலும்தான் நடைபெறுகிறது. அதனைச் செயல்படுத்தும் விதம் தான் இக்காலத் தன்மைக்கு ஏற்ப மாறி இருக்கிறது. அன்று பெண் குழந்தை பிறந்து விட்டால் கள்ளிப் பால் கொடுத்து கொல் லும் நிலை ஆனால் இன்று கரு விலேயே கலைத்து விடுகிறார்கள்.

அதனால் தானே அரசாங்கமே கருவை ஸ்கேன் செய்து பார்க்கும் போது குழந்தை ஆணா? பெண்ணா? என்று சொல்லக் கூடாது என்று டாக்டருக்கு தடை விதித்து சட்டம் போட்டுள்ளார் கள். மேலைநாடுகளில் இந்த மாதிரி சட்டம் இல்லையே அதை பார்க்கும் போது நாம் இன்னும் எவ்வளவு முன்னேற வேண்டும் என்று தெரிகிறதே!

இன்று சாதாரண நிலையில் உள்ள மனிதனிலிருந்து சங்கர மடத் தலைவர்கள் வரை பெண்ணை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லையே.....

இல்லையென்றால் சீறும் பாம்பை நம்பு! சிரிக்கும் பெண்ணை நம்பாதே! என்று பெண்ணின் சிரிப்பையே கேவல மாக ஆட்டோக்களில் எழுதமாட் டார்களே?

சரி சங்கரமடத் தலைவராவது பெண்ணை மதிக்க கற்றுதருவார் என்று பார்த்தால் சங்கராச்சாரியார் கூறு கிறார் விதவை பெண் என்பவள் தரிசு நிலம் என்கிறார். இதைவிட பெண்ணை எப்படி கேவலப்படுத்த முடியும்?

ராஜஸ்தான் ஜோத்பூரில், 11 மாத குழந்தையாக இருந்த போது நிச்சயிக் கப்பட்ட திருமணத்தை, புறக்கணித்த கல்லூரி மாணவிக்கு, 16 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, கிராம பஞ்சாயத்து தீர்ப்பு வழங்கியுள்ளது. அபராதத் தொகையை கட்ட முடியாத நிலையில் அந்த குடும்பத்தை, கிராமத்திலிருந்து விலக்கி வைத்துள்ளனர், என்ற செய்தி பெண்ணை உயிராக நினைக்காமல் ஒரு பொருளாக நடத்துவதை தானே வெளிச்சம் போட்டு காட்டுகிறது!
இன்றும் 90 விழுக்காடு பெற்றோர் கள் மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் போது மணமகனுக்கு பெண் பிடித்திருக்கிறதா? என்றுதான் பார்க் கிறார்களே தவிர தன் மகளுக்கு அந்த மணமகனை பிடித்திருக்கிறதா? என்று பார்ப்பதில்லை! அதற்கு பதில் வரதட் சணை கொடுத்து திருமணம் செய்து வைக்கிறார்கள், அதிலும் அடித்தாலும், பிடித்தாலும் புகுந்த வீடுதான் பெண்ணுக்கு சிறப்பு என்று அன்பாக அறிவுரை சொல்லி அனுப்புகிறார்கள்!. இப்படி ஒரு நிலையில் அந்த பெண் எப்படி மனமகிழ்வுடன் வாழமுடியும்?

தமிழ் ஓவியா said...

அவளுக்கு ஒரு பிரச்சினையென்றால் எப்படி தீர்த்து கொள்ளமுடியும்?அதற்கு ஒரு உதாரணம் தானே மே 20ஆம் தேதி சென்னையில் நடந்த கொலை. 10 மாத குழந்தைக்கு தாயான ஆர்த்தி என்ற பெண் பொறியாளர் கணவன்-மனைவி பிரச்சினையை பெற்றோரிடம் கூறமுடியாமல் மந்திரவாதியை வைத்து சரி செய்ய அழைத்துள்ளார். கடைசியில் அந்த மந்திரவாதியே அவர் சாவுக்கு காரணமாக ஆகிவிட்டார்.

கோவில் சிலைகள், சிற்பங்கள் முதல் இன்றைய சினிமா, டி,வி, பத்திரிக்கைகள் வரை எல்லாவற்றிலும் பெண்ணை உடல் காட்டும் கவர்ச்சியாக தானே காண்பிக்கிறார்கள்!

பெண்ணை நடிக்க வைத்து பெண்களே பல பிரச்சினைகளுக்கு காரணம் என்று சிந்திக்க தூண்டும் வகையில் தானே தினந்தோறும் தொலைக்காட்சி சீரியல்களில் ஒளிப்பரப்புகிறார்கள்.

கிரிக்கெட் விளையாட்டில்கூட கிரிக்கெட்டுக்கு சம்பந்தமில்லா நடிகையை கவர்ச்சி உடையில் உட்காரவைத்து வர்ணனையாளராக காட்டுகிறார்கள்! எல்லாம் கவர்ச்சி வியாபாரம்தானே?

காரணம் பெண் என்பவளை பாலி னக் கவர்ச்சிப் பொருளாக நடத்தும் செயல் தானே! அப்புறம் எப்படி பெண்ணை மதிக்கும் சிந்தனை வளரும்?

ஒரு பக்கம் சாஸ்திர சம்பிரதாய சடங்குகள் என்று பெண்ணை அடிமைப்படுத்தும் நிலையை வளர்த்தல். மற்றொரு பக்கம் பெண்ணை பாலினக்கவர்ச்சியாக பயன்படுத்தி வியாபாரமாக்குதல்!

இப்படி ஒரு நிலைமையை நாம் தொடர்ந்து வளர்ப்பதால் நம் நாட்டில் அன்றாடம் பாலியல் வன்முறை செய் திகள் வந்து கொண்டே இருக்கிறதே!

புள்ளி விவரப்படி 1 மணி நேரத்தில் இந்தியாவில் 4 பெண்கள் பாலியல் வன்முறை செய்யப்படுகிறார்கள். ஒரு நாளைக்கு குறைந்தது சுமார் 100 பெண்கள் பாலியல் வன்முறை செய்யப்படுகிறார்கள். அதிலும் பெண்குழந்தைகளும், கர்ப்பிணிகளும் கூட பாலியல் வன்முறை செய்யப் படுகிறார்கள் என்ற செய்தியைக் கேட்கும் போது வேதனையாக உள்ளதே! இதைவிட வேறு அவமானம் நம் நாட்டிற்கு உண்டா?

கற்புக்கு அரசி என்று சிலை வைத்து ஒருத்தி- ஒருவனுடன் தான் வாழ வேண்டும் என்று பெண்ணுக்கு ஒழுக்க நெறி கற்பிப்பார்கள். அதற்கு நேர்மாறக இரண்டு மனைவி கொண்ட ஆண் கடவுளை வணங்கச் சொல்வார்கள்!

அதற்கு பதிலாக கற்புக்கு அரசன் என்று சிலை வைத்து ஒருவன்-ஒருத்தியுடன் தான் வாழவேண்டும் என்று கற்பித்து ஆண்களுக்கு பெண்ணை மதிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்திருந்தால் நல்ல மாற்றம் வந்திருக்குமே!

விபச்சார அழகியை கைது பண்ணும் நம் சட்டமும் காவல்துறையும். ஏன் அந்த பெண்ணுடன் இருந்த ஆணைக் கைது பண்ணுவதில்லை?

விபச்சார அழகி கைது என்று படம் போட்டு வியாபாரம் பண்ணும் பத்தி ரிகைகள். ஏன்? அவர்களுடன் இருந்த ஆண்களை படம் போட்டு வெளி யிடுவது இல்லை? என்னதொரு நடுநிலை பெண் அசிங்கப்படலாம் ஆனால் ஆண் அசிங்கப்படக்கூடாது.

காரணம் எல்லாவற்றிலும் பெண் என்பவள் ஆணுக்கு கீழானவள் என்பதை போற்றும் சிந்தனைதானே! இந்த சிந்தனை எப்படி சமுதாயத்தில் ஒழுக்கத்தை வளர்க்கும்?

மேற்சொன்னவை எல்லாம் ஒரு சில தான் ஆனால் சொல்லமுடியாத அடக்குமுறைகளும்! அடிமைத்தனமும் பெண்களுக்கு எதிராக ஏராளமாக உள்ளது. இப்படி பெண்களை ஆண் களின் விருப்பத்திற்க்கு அடிபணிந்து நடக்கும் அறிவுள்ள மனித ரோபோட்-ஆக நடத்தும் நிலையில்தான் நாம் இருக்கிறோம்.

இவைகள் அனைத்தும் நம் பழக்க வழக்கத்தில் அன்றாட நடவடிக்கைகளிலிருந்து பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்துள்ளது. இதே நிலையை நாமும் தொடர்ந்தால். நாம் எப்படி நல்லொழுக்கம் மிக்க சமுதாயமாக மாறமுடியும்?

இந்த அறிவியல் உலகத்தில் எப்படி எதிர்காலத்தில் நம் பெண் பிள்ளைகள் மதிக்கத்தக்க வகையில் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகாமல் வாழ முடியும்? சிந்தியுங்கள்!

மேற்கூறிய அத்தனை விசயங்களும் உங்களுக்கு தெரிந்ததே! உங்கள் சிந் தனையை தூண்டுவதற்கான ஒரு தொகுப்புதான் இது! அதனால் சிந்தியுங்கள்!

ஆண்களால் அனைத்தையும் ஆளமுடியும்! அடக்கவும் முடியும்! ஏன் உயிரணுவையும் கொடுக்க முடியும்! ஆனால் அந்த உயிரணுவுக்கு இணை யணு கொடுத்து உயிர் கொடுக்க ஒரு பெண்ணால்தான் முடியும்! அந்த உயிரை வளர்த்து உருவம் கொடுத்து இந்த உலகிற்கு ஒரு குழந்தையை கொடுக்க ஒரு தாயான பெண்ணால் தான் முடியும்!

அவள் இல்லையெனில் நாம் இல்லை! பெண் மனித இனத்தை வளர்க்கும் மகத்துவம்! அவளை நமக்கு மேலாக போற்ற வேண்டாம் குறைந்த பட்சம் நமக்கு இணையாக மதிப்போம்!

பெண்ணையும், மண்ணையும் மதிக்க தெரியாதவன்! தாய்யையும், தாய் நாட்டையும் மதிக்க மாட்டான்!
சிந்தியுங்கள்! செயல்படுத்துங்கள்!
பெண்ணை மதித்து நடப்போம்! மண்ணிற்கு பெருமை சேர்ப்போம்!Read more: http://www.viduthalai.in/page4/102778.html#ixzz3cHXFK7DH

தமிழ் ஓவியா said...


சத்துக் குறைவால் செத்துப் பிழைக்கும் இந்தியக் குழந்தைகள்இந்தியாவில் உள்ள பள்ளிகளில் வறுமையின் பிடியில் உள்ள குழந் தைகள் ஏராளமானவர்களாக உள் ளனர். அவர்களில் 30 விழுக்காட்டினர் மிகவும் சத்துக்குறைபாடுகளுடன் உள்ளதாக அண்மைய ஆய்வுத் தகவல்கள் கூறுகின்றன.

பள்ளிகளில் சிறுவர்கள் சேர்க்கை தீவிரமாக இருந்தவருவதாக கூறப்படு வது ஒருபக்கம் என்றால், சத்துக் குறைபாடு, சுகாதாரக் குறைபாடுகள் குறிப்பாக கிராமங்களில் வறுமையில் உள்ளவர்களின் நிலை தொடர்ந்த வண்ணம் உள்ளது.

2013 ஆம் ஆண்டில் 12 வயதுக்கு உள்பட்டவர்கள் 97 விழுக்காட்டி னரும், 2006 ஆம் பள்ளிகளில் 89 விழுக்காட்டினரும் சேர்க்கை பெற் றுள்ளனர். கிராமப்புறங்களில் அதிக அளவில் பொருளாதாரத்தில் பின்தங்கி யவர்களாக, சமூக ரீதியாக ஒதுக்கப் பட்டவர்களாக உள்ள 12 வயதுள்ள சிறுவர்கள் பெரும்பாலும் சத்துக்குறை பாடுகளுடன் உள்ளனர்.

19 வயதுவரை உள்ள மாணவர் களாக பள்ளிகளில் 49 விழுக்காட்டி னர் உள்ளனர். 9 விழுக்காட்டினர் மேல்நிலைக்கல்வி முடிக்காமல் உள்ளனர். 8 விழுக்காட்டினராக உள்ளவர்கள் தொழில் அல்லது அடுத்த கல்விக்கு செல்கின்றனர். மற்றவர்கள் பல்கலைக்கழகக் கல்வியைத் தொடங்கி உள்ளனர்.

ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங் கானா மாநிலங்களில் முன்னோட்ட ஆய்வாக யங் லைவ்ஸ் என்கிற அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. பன்னாட்டளவில் வறுமையால் வாடும் குழந்தைகள் குறித்த ஆய்வை நான்கு நாடுகளில் மேற்கொண்டு 12 ஆயிரம் குழந்தைகளை ஆய்வுக்கு உட்படுத்தியது.

ஆய்வின்மூலம் பள்ளிச் சேர்க்கை அதிகரித்துவரும் தகவல் வெளியாகி உள்ளது. சுத்தமான குடிநீர் வழங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது. ஆனாலும், சத்துக்குறைபாடு, சுகாதாரக் குறைவு கிராமங்களில் உள் ளது. இளைஞர்களிடத்தில் குறிப்பாக இளம் பெண்களிடத்திலும் இதே போன்று குறைபாடுகள் அதிகமாகவே உள்ளன.

தமிழ் ஓவியா said...

ஆய்வின்முடிவில், கல்வி, சுகாதாரம் மற்றும் வளர்ச்சி ஆகிய மூன்று தலைப் புகளில் புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளன.

கல்வியும், கற்றலும்

யங் லைவ்ஸ், இந்தியா ஸ்பென்ட் ஆய்வறிக்கைகளின்படி, இந்தியாவில் 12 வயதுள்ளவர்கள் பள்ளிகளில் சேர்க்கை என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. மேல்நிலைக்கல்வியில் சேர்க்கை விழுக்காட்டளவில் குறைந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே பள்ளி களில் சமத்துவமின்மை நிலவி வருவ தாகவும், குறிப்பாக பாலியல் இடை வெளியாக உள்ளது. 2006ஆம் ஆண் டில் உள்ளதைப்போல் 4 விழுக்காட்ட ளவில் இருந்ததுடன் ஒப்பிடுகையில் ஏற்ககறைய சம அளவில் உள்ளதாகவே காணப்படுகிறது. சமத்துவமின்மை என்று வரும்போது, வறிய குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் மட்டுமன்றி அரசு மற்றும் தனியார்ப்பள்ளிகளில் அவர் களுக்கான கல்வி அளிக்கப்படுவதும் உரிய அளவில் அளிக்கப்படாமல் தொடரும் நிலையே உள்ளது.

2006 முதல் இன்று வரையிலும் கவலைப்படத்தக்க வகையில் கற்கும் திறன் உள்ளதாக ஆய்வுத் தகவல் கூறுகிறது. கல்வி கற்கும் குழந்தைகளில் மூன்றில் இரண்டு பங்கினரில் பாதி யளவு குழந்தைகள் மட்டுமே கணக்குப் பாடத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்கிறார்கள்.

சத்து மற்றும் சுகாதாரம்

சத்துக்குறைபாடுகளால் போராடி வரும் குழந்தைகளிடையே எவ்வித மாற்றமும் காணப்படவில்லை. கடந்த 8 ஆண்டுகளில் 4 விழுக்காட்டள விலேயே புள்ளிகளைப் பெற்றுள்ளதாக யங் லைவ்ஸ் ஆய்வு கூறுகிறது.

சமூகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள மக்கள், மிகவும் வறுமையில் வாடுப வர்கள், வசிக்க வீடில்லாதவர்கள் ஆகி யவர்களிடம் சத்துக்குறைபாடுகளைக் களைவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப் பட வேண்டும். ஆய்வுத்தகவலின்படி, சத்துக்குறைபாடுள்ள குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கினருக்கும் மேலாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி யினரும், நான்கில் ஒரு பங்கினராக பிற் படுத்தப்பட்ட வகுப்பினரும் பிற வகுப் பினருடன் ஒப்பீட்டளவில் உள்ளனர்.

ஆய்வில் இந்தியா முழுவதும் சத்துக்குறைபாடுகளால் குழந்தைகள் பாதிப்புக்கு ஆளாவது குறித்து இந்தியா ஸ்பெண்ட் அறிக்கை வெளியிட்டுள் ளது. பன்னாட்டளவில் வெளியான சத்து குறித்த அறிக்கையில் சத்துக் குறைபாடுகளால் 2012ஆம் ஆண்டில் 5 வயதுக்கும் குறை வாக உள்ள குழந் தைகள் 1000பேரில் 56 பேர் உயிரிழந் துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இளைஞர்களும், வளர்ச்சியும்

சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் மோசமாக உள்ள பின்ன ணியில் இருந்து வரும் குழந்தைகள் பள்ளிகளைவிட்டு நின்று விட்டார்கள், பத்தாம் வகுப்புகூட முடிக்காமல் பலர் உள்ளனர் என்று யங் லைவ்ஸ் ஆய்வுத் தகவல் கூறுகிறது. 19 வயது உள்ள வர்களில் 51.5 விழுக்காட்டினர் பள்ளிக்கு செல்லாமல் நின்று விட்டனர். 15.8 விழுக்காட்டினர் மட்டுமே மேல் நிலைக்கல்வியைப் பெற்றுள்ளனர்.

ஒடுக்கப்பட்ட மக்களில் இளைஞர் களாக உள்ளவர்கள் ஏற்கெனவே முழு நேரப் பணிகளில் சேர்ந்துவிட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் மேற்கொண்டு கல்வி கற்கவோ, தொழில் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்போ இல்லாமல் சுய தொழி லிலோ, விவசாயக் கூலிகளாகவோ உள்ளனர்.

இளைஞர்கள் குறைந்த அளவி லேயே கல்வியிலும், திறமைகளிலும் இருக்கிறார்கள் இந்தியா ஸ்பெண்ட் ஆய்வின்மூலம் ஏற்கெனவே தெரிவித் திருந்தது.

தமிழ் ஓவியா said...

யங் லைவ்ஸ் ஆய்வின்படி, 19 வய துள்ள பெண்களில் 36 விழுக்காட்டினர் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதே நேரத்தில் அந்த ஆய்வின்படி, அதே வயதுள்ள ஆண்கள் 2 விழுக் காட்டினர் மட்டுமே திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்று ஆய்வு கூறுகிறது.

சட்டப்படியான திருமண வயது 18 ஆக இருந்த போதிலும், 19 வயதுள்ள பெண்கள் 37 விழுக்காட்டளவில் திருமணமானவர்களாக உள்ளனர். (பெண்கள் திருமணம் செய்து கொண் டவர்களில் சராசரியாக 16.6 வயதினர் சட்ட ரீதியான திருமண வயதுக்கு குறைவாகவே திருமணம் செய்து கொள்பவர்களாக உள்ளனர்) குறிப் பிடும்படியான இணையர்களில் பெரும் பாலும் மூன்றில் இரண்டு பங்கினர் ஏற்கெனவே குழந்தைகள் இருப்பவர் களாக இருக்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

குறிப்பிட்ட வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் கல்வி, மகப்பேறு கால சுகாதாரத்தில் மோசமாக பாதிப்புக்கு உள்ளா கிறார்கள்.

யங் லைவ்ஸ் ஆய்வில் 3000 சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் குறித்த ஆய்வில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் உள்ள ஆறு மாவட் டங்களில் 20 வகுப்பினர் குடும்பம் குடும்பமாக இருக்கிறார்கள்.

2001 மற்றும் 2002 ஆம் ஆண்டு களில் பிறந்தவர்களில் 2000 குழந்தைகள் மற்றும் 1994 மற்றும் 1995 ஆம் ஆண்டுகளில் பிறந்தவர்களில் 1000 குழந் தைகள் என்று இரண்டு பிரிவினராக இருப்பவர்கள் வறியவர்களின் குடும்பத்திலிருந்து வந்தவர்களுக்கு உதாரணமானவர்களாக இருக்கிறார்கள்.

பூமத்தியரேகையின் ஒரே நேர்க் கோட்டில் இயற்கை தகவமைப்பிற் கிணங்க, நீண்ட காலமாக உள்ள தக வல்கள்குறித்த ஆய்வுகளைப்பொறுத்தே, குழந்தைப் பருவத்திலிருந்து பலகட் டங்களில் ஒருவரோடு மற்றவர் உறவு கொள்ளக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு விடுகின்றன.

2013 மற்றும் 2014 ஆம் ஆண்டு களுக்கான நான்கு கட்ட புள்ளி விவரங் களின்படி, பருவ வயதை எட்டுவதற்கு முன்னதாகவே, குழந்தைகளைப் பெறும் பெற்றோர்களாகவே ஆகிவிடுன்றனர்.

இதேநேரத்தில் எத்தியோப்பியா, பெரு மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் 3000 குழந்தைகள், குடும்பத் தாரிடையே யங் லைவ்ஸ் ஆய்வை மேற்கொண்டது. அந்த நான்கு நாடு களுடன் இந்தியாவையும் சேர்த்து கலாச்சாரம் மற்றும் சமூக, பொரு ளாதார வேறுபாடுகள்குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

குழந்தைப் பருவத்தில் நிலவக்கூடிய வறிய நிலைகுறித்தும், அதற்கான காரணங்கள்குறித்தும் ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்ட ஆய்வில் மேற்கண்ட தகவல்கள் தெரிய வந்துள் ளன. இதுபோன்ற குழந்தைகளின் நிலையில் மாற்றம் ஏற்பட்டு வளர்ச் சியை எட்டவேண்டும், அவர்களுக்காக சமூகத்தில் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்பதற்கான ஆய்வாக மேற்கொள்ளப்பட்டது.

இன்னமும் இறுதி அறிக்கை வரவேண்டியுள்ளது. ஆரம்ப கட்ட ஆய்வு அறிக்கை இந்தியாவில் உள்ள குழந்தைகளின் சமூக, பொருளாதார வளர்ச்சியைக் காட்டுவதாக அமைந் துள்ளது.

பள்ளிக்கல்வி பெறும் 12 வயதுள்ள குழந்தைகள்

யங் லைவ்ஸ் ஆய்வின்படி, 2006 ஆம் ஆண்டின் ஆய்வுப்படி, ஆண்கள் 91.2 விழுக்காட்டினராகவும், பெண்கள் 87.3 விழுக்காட்டினராகவும் உள்ளனர். அவர்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 85.3 விழுக்காட்டினராகவும், பழங் குடியினர் 86.8 விழுக்காட்டினராகவும், பிற்படுத்தப்பட்டவர்கள் 88.4 விழுக் காட்டினராகவும், மற்றவர்கள் 96.1 விழுக்காட்டினராகவும் இருக்கின்றனர்.

2013ஆம் ஆண்டில் வெளியான ஆய்வு அறிக்கையின்படி, ஆண்கள் 97.3 விழுக்காட்டினராகவும், பெண்கள் 96.6 விழுக்காட்டினராகவும் உள்ளனர். அவர்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 97.2 விழுக்காட்டினராகவும், பழங்குடி யினர் 96.1 விழுக்காட்டினராகவும், பிற்படுத்தப்பட்டவர்கள் 96.4 விழுக் காட்டினராகவும், மற்றவர்கள் 98.7 விழுக்காட்டினராகவும் இருக்கின்றனர்.

தண்ணீர் மற்றும் சுகாதார வாய்ப்புகள் பெறுவோர்

யங் லைவ்ஸ் ஆய்வின்படி, 2006 ஆம் ஆண்டின் ஆய்வுப்படி, 12 வய துள்ள குழந்தைகளில் 34 விழுக்காட்டி னரும், பன்னாட்டளவில் சுத்தமான தண்ணீர் பெறுவதில் 84 விழுக்காட்டி னரும், சுகாதாரம் பெறும் குழந்தை களில் நகர்ப்பகுதிகளில் 92 விழுக் காட்டளவிலும், கிராமப்புறப்பகுதிகளில் 16 விழுக்காட்டளவிலும் இருக்கிறார்கள்.

2013 ஆம் ஆண்டின் ஆய்வுப்படி, 12 வயதுள்ள குழந்தைகளில் 30 விழுக்காட்டினரும், பன்னாட்டளவில் சுத்தமான தண்ணீர் பெறுவதில் 99 விழுக்காட்டினரும், சுகாதாரம் பெறும் குழந்தைகளில் நகர்ப்பகுதிகளில் 93 விழுக்காட்டளவிலும், கிராமப்புறப் பகுதிகளில் 21 விழுக்காட்டளவிலும் இருக்கிறார்கள்.

19 வயதுள்ளவர்களின் கல்வி

யங் லைவ்ஸ் ஆய்வின்படி, 19 வய துள்ளவர்களின் கல்வி பயில்பவர்களாக ஆண்கள் 34 விழுக்காட்டினரும், பெண்கள் 34 விழுக்காட்டினருமாக உள்ளனர். வேலை செய்பவர்கள் ஆண்களில் 40 விழுக்காட்டினரும், பெண்கள் 32 விழுக்காட்டினருமாக உள்ளனர். கல்வி கற்பதுடன் வேலையும் செய்பவர்களாக ஆண்களில் 23 விழுக்காட்டினரும், பெண்களில் 8 விழுக்காட்டினருமாக உள்ளனர்.

திருமணம் ஆனவர்களாக, கல்வியைத் தொடராதவர்களாக அல்லது பணியாற் றுபவர்களாக ஆண்கள் எவருமிலர், பெண்கள் 17 விழுக்காட்டினராக உள்ளனர். கல்வியைத் தொடராமல் பணிபுரிந்துகொண்டிருப்பவர்கள் அல்லது திருமணமானவர்கள் ஆண் களில் 3 விழுக்காட்டினரும், பெண்களில் 10 விழுக்காட்டினருமாக உள்ளனர்.

19 வயதில் திருமணமானவர்கள்

யங் லைவ்ஸ் ஆய்வின்படி, 19 வயதுள்ளவர்களில் திருமணமானவர் களாக நகர்ப்புறங்களில் 14 விழுக்காட்டி னரும், கிராமப்புறங்களில் 21 விழுக்காட்டிரும், முதல் மூன்று இடங் களில் 12 விழுக்காட்டினரும், கடைசி மூன்று இடங்களில் இருப்பவர்களில் 23 விழுக்காட்டினருமாக உள்ளனர்.Read more: http://www.viduthalai.in/page6/102781.html#ixzz3cHXerRND

தமிழ் ஓவியா said...

சித்ரா பவுர்ணமி சொற் குற்றமும் பொருள் குற்றமும்

சைத்ரா என்றால் சமற்கிருதத்தில் ஆடு எனப் பொருள்படும். மேழம் என்றால் தமிழில் ஆடு எனப் பொருள்படும். பூமி சூரியனைச் சுற்றிவரும் பெயர்ச்சியின்போது இந்த மாதத்தில், பூமியில் இருந்து பார்க்கும்போது நிலவுக்குப் பின்னால் காணும் விண்மீன் கூட்டங்களை கற்பனைப் புள்ளியால் ஒருங்கிணைத்தால் ஆடு போன்ற தோற்றம் நினைவில் வரும்.

அதை தமிழ் முன்னோர்கள் மேழம் மாதம் என்று பெயர் சூட்டினார்கள். அதைத்தான் ஆரியம் புகுந்து மேஷம் என மாற்றியது. இந்த மாதம்  முழுவதும் ஆடு போன்ற தோற்றத்தை கற்பனை செய்து நிலவின் பின்புலம் அல்லது தோற்றம் என அழைத்தனர்.

பின்புலம் அல்லது தோற்றம் என்பதுதான் ஆரியத்தால் இராசி என அழைக்கப்பட்டு மேழம் பின்புலம் என்பது மேஷராசி ஆனது. சைத்ரா என்பது சித்திரை ஆனது.

பூமிக்கு இருக்கும் ஒரு நிலவு பூமியைச் சுற்றிவர 27.3 நாள்கள் ஆவதைத்தான் குசேலனுக்கு 27 பிள்ளைகள் என கதை அளந்த ஆரியப் புராணம் வேறு. சித்திரை பவுர்மணி என்பது மருவி சித்ரா பவுர்ணமி ஆகி, சித்ரா வெள்ளாடு ஆகி வழக்கில் உள்ளது.

அதைப் போலத்தான் கள்ளழகர் என்ற கற்பனை உருவ பொம்மையை உருவாக்கி இந்த மாதத்தில் வைகை ஆற்றில் இறக்கி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் என்று பத்திரிகைகளும், ஊடகங்களும் சொல்கின்றன.

உண்மையில் கள்ளழகர் என்ற (கடவுள்) சிலையை பக்தர்கள் சுமந்து வந்து வைகை ஆற்றில் இறக்கினார்கள் என்றல்லவா எழுத வேண்டும் அதை விடுத்து கள்ளழகர் ஆற்றில் இறங்கினார் என்றால், பக்தர்கள் யாருடைய துணையும் இல்லாமல் தானே அல்லவா இறங்கி இருக்க வேண்டும்.  அப்படி இறங்கினால்தானே இறங்கினார் என எழுத வேண்டும். சொல்ல வேண்டும்.

அப்படி எழுதினால் அதை நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபிக்க திராணியற்ற பத்திரிகை ஊடகங்களே இனிமேல் கள்ளழகர் சிலை பக்தர்களால் வண்ண உடை உடுத்தி சுமந்து செல்லப்பட்டு வைகை ஆற்றில் இறக்கப்பட்டது என எழுதுங்கள் உங்களுக்கு பத்திரிகை தருமம், எழுத்தில் நேர்மை, நாணயம் இருந்தால் இப்படி எழுதுங்கள்.

தயாரா? சொல்லில் குற்றம் இருந்தால் பொரு ளிலும் குற்றம் வரும். பொருள் படும்படி... படி என்கிறார் புரட்சிக் கவிஞர்.

- _ வசந்த விண்முகில்
- _ எதிலும் கட...உள் பேரவை-

தமிழ் ஓவியா said...

பிழை திருத்தும் மென்தமிழ் மென் பொருள் உருவாக்கிய அறிஞர்தமிழைப் பிழை இல்லாமலும், மொழிக் கலப்பு இல்லாமலும் எழுதக் கூடிய சிறந்த தமிழ் மென் பொருளை உருவாக்கியுள் ளார் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம். இதைக் கொண்டு கோடிக்கணக் கான தமிழ் சொற்களின் பிழைகளைத் திருத்த முடியும்.

இந்த மென்பொருளைச் சிறப்பாக வடிவமைத்த தெய்வசுந்தரம், முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பெற முதன்முறையாகத் தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஓர் இலட்சம் ரூபாய், ஒரு பவுன் தங்கம், பாராட்டுப் பத்திரம் கொண்ட விருது விரைவில் அவருக்கு வழங்கப்பட வுள்ளது.

இந்த மென்பொருளை கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவற்றில் பதிவேற்றி விட்டால், தமிழ் வார்த்தைகளில் உள்ள தவறை எளிதாகக் கண்டுபிடித்து ஒரு வினாடியிலேயே திருத்த முடியும். வார்த்தையில் ஓர் எழுத்து விடுபட்டி ருக்கலாம் அல்லது எழுத்து இடம் மாறி யிருக்கலாம் அல்லது தேவையில்லாமல் ஓர் எழுத்து சேர்க்கப்பட்டிருக்கலாம்.

இதுபோன்ற தவறுகளைக் கண்டுபிடித்து வினாடியிலே திருத்துவதுதான் இந்த மென்பொருளின் சிறப்பு. உதாரணத்துக்குக் கசலம் என்ற தவறான வார்த் தையைச் சொற்பிழை திருத்தியைக் கொண்டு திருத்தும்போது கசம், கலம், கமலம், கலசம் ஆகிய வார்த்தைகள் கம்ப்யூட்டர் திரையில் தோன்றும். அதில் நமக்குத் தேவையான சரியான வார்த்தையை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சந்திப்பிழையையும் திருத்த முடியும். எடுத்துக்காட்டாகப் படித்து பார்த்தான், வந்துப் பார்த்தான் என்ற வார்த்தை களில் உள்ள ஒற்றுப் பிழையைத் திருத்தி, படித்துப் பார்த்தான், வந்து பார்த்தான் என்று காண்பிக்கிறது. எண்களைக் கொடுத்தால் எழுத்துகளாக்கு கிறது. தமிழ் எழுத்துகளுக்கு எண்களைத் தருகிறது.

அதாவது 1,20,00,000 என எண் வடிவில் தட்டச்சு செய்தால் ஒரு கோடியே இருபது லட்சம் என்று தமிழ் எழுத்துகளாக வருகிறது. இந்த மென் பொருளில் உள்ள 56 ஆயிரம் தமிழ் அகராதி சொற்களைக் கொண்டு கோடிக்கணக்கான வார்த்தைகளைத் திருத்த முடியும்.

தமிழைத் தமிழாகவும், பிற மொழிக் கலப்பு இல்லாமலும், பிழை இல்லாமலும் எழுதப் பயன்படும் இந்த மென்பொருள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அரசு மற்றும் தனியார் அலுவலகப் பணியாளர்களுக்கும் மிகப் பெரிய வரப்பிரசாதம். ஆங்கிலம் மற்றும் தமிழ் அகராதியும் இருப்பது தனிச்சிறப்பு.

இந்தச் சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்கிய சென்னைப் பல்கலைக்கழக மொழியியல் துறை முன்னாள் தலைவர் ந.தெய்வசுந்தரம் கூறியதாவது:

எனது தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவின் 5 ஆண்டு உழைப்பே இந்த மென்பொருள். கணினி பயன்படுத்தத் தெரிந்த அனைவரும் இதன் முழுப்பலனைப் பெற முடியும். 15 வகையான கீ போர்டு வசதி இருப்பதால் உலகம் முழுவதும் பயன்படுத்தலாம்.

இத்தகைய மென்பொருட்களை உருவாக்கத் தமிழ் இலக்கணம் மட்டும் படித்தால் போதாது. மொழியியல் அறிவும் அவசியம். அதற்குப் பல்கலைக் கழகங்களில் மொழியியல் பாடம் கட்டாயம் இருக்க வேண்டும். அதன் மூலமே ஏராளமான தமிழ் மென் பொருட்களை உருவாக்கிக் கணினித் தமிழ்ப் பயன்பாட்டை ஆங்கில மொழிப் பயன்பாட்டுக்கு இணையாக வளர்க்க முடியும்.

_இவ்வாறு பேராசிரியர் தெய்வ சுந்தரம் கூறினார்.

தமிழ் ஓவியா said...

மழைக்காக சிறப்பு பூஜைகள் செய்வதா?
மூடநம்பிக்கையை தமிழக அரசு பரப்புவதா!
ராமதாஸ் கண்டனம்

சென்னை, ஜூன் 7_ தமிழக அரசின் நீர்வளத் துறை மூடநம்பிக்கையை பரப்பும் வகையில் மழைக் காக சிறப்பு பூஜைகள் செய்ய ஏற்பாடுகள் செய்வ தற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டித்து உள்ளனர்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளி யிட்டுள்ள அறிக்கையில்:_ தமிழ்நாட்டை நான்காவது ஆண்டாக வறட்சி வாட் டிக் கொண்டிருக்கும் நிலை யில், மழை பெய்ய வேண்டி தமிழகத்திலுள்ள பொதுப் பணித்துறையின் நீர்வளப் பிரிவு செயற்பொறியாளர் கள் அனைவரும் சிறப்பு பூஜைகளை நடத்த வேண் டும் என்றும், அதுகுறித்த விவரங்களை தலைமை அலுவலகத்திற்கு தெரி விக்க வேண்டும் என்றும் அத்துறையின் தலைமைப் பொறியாளர் அசோகன் சுற் றறிக்கை அனுப்பியுள்ளார்.
வறட்சியைப் போக்க மழை வேண்டும் என்ற நோக்கத்தில் எந்த தவறும் கிடையாது. அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ச் சியடைந்துள்ள இக்காலத் தில், செயற்கை மழை பெய்ய ஏற்பாடு செய்திருந் தால் அதை வரவேற்று பாராட்டியிருக்கலாம். அதை விடுத்து மூடநம்பிக் கையை பரப்பும் வகையில் மழை வேண்டி சிறப்பு பூஜைகளை செய்ய வேண் டும் என்று வலியுறுத்துவது கண்டிக்கப்பட வேண்டிய தாகும்.
மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி என்பார் கள். அதேபோல், ஜெயலலி தாவின் விடுதலைக்காக அமைச்சர் பெருமக்கள் அனைவரும் யாகம், பூஜை போன்றவற்றில் ஈடுபட்ட தன் பாதிப்போ என்னவோ அதிகாரிகளும் அதே வழி யில் செல்லத் தொடங்கி யுள்ளனர். இது மிகவும் ஆபத்தான போக்காகும். பகுத்தறிவுக்கும், அறிவிய லுக்கும் ஒவ்வாத இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, வறட்சிக்கு அறிவியலின் உதவியுடன் தீர்வு காண்ப தற்கு தலைமைப் பொறியா ளர் முயல வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

சால்வை வேண்டாம் சந்தாக்களைத் தாரீர்!அருமைக் கழகத் தோழர்களே! உரிய சிகிச்சைக்குப் பின் நமது அருமைக் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க தஞ்சை வருகிறார்கள் (13.6.2015).

கழகத் தோழர்களும், உடல் நலம் பெற்று திரும்பும் தலைவர் அவர்களைச் சந்திக்க பெரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் தோழர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய முக்கிய - அவசியமான - செய்தி ஒன்று உண்டு.

இதே தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில்தான் எனக்குச் சால்வை வேண்டாம் சால்வைக்குப் பதில் விடுதலை சந்தா வேண்டும் என்ற அறிவார்ந்த அன்பு வேண்டுகோளை தமிழர் தலைவர் முன் வைத்தார்கள் (விடுதலை 27.11.2003).
அதனை மீண்டும் மிகவும் அழுத்தமாக வலியுறுத்த வேண்டிய கால கட்டம் இது.

ஆசிரியர் அவர்களின் அய்ம்பதாண்டு விடுதலை ஆசிரியர் பணிக்காக 50 ஆயிரம்விடுதலை சந்தாக்களை அளித்து அவரை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினோம்.

வேறு எதைக் கொடுத்தாலும் இதற்கு ஈடானது. அவர்களைப் பொறுத்தவரையில் வேறு எதுவும் இருக்க முடியாது என்பதை அறிந்தவர்கள் ஆயிற்றே நாம்.

எனவே, அருமைக் கழகக் குடும்பத்த வர்களே! தஞ்சையில் நமது தலைவரைச் சந்திக்கும் பொழுது ஆசிரியர் அவர்களே ஆச்சரியமும், ஆனந்தப் பெருக்கும் அடையும் அளவுக்கு சந்தாக்களின் எண்ணிக்கையை அதிக அளவில் அவர்களின் கைகளில் அளி யுங்கள்! அளியுங்கள்!! அதன் மூலம் பெரும் மகிழ்வையும் உற்சாகத்தையும் தாருங்கள்! தாருங்கள்!!

- கலி. பூங்குன்றன்
சென்னை துணைத் தலைவர்
5.6.2015 திராவிடர் கழகம்Read more: http://www.viduthalai.in/page-8/102880.html#ixzz3cNFasNCB

தமிழ் ஓவியா said...

மழைக்கு யாகம் வளர்க்க சொன்ன பொறியாளருக்கு அறிவிக்கை


சென்னை, ஜூன் 8 தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பாசன தேவையை மேட்டூர் அணை பூர்த்தி செய்து வருகிறது. அதன் படி இந்தாண்டு குறுவை நெல் சாகுபடிக்காக ஜுன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால், 120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் குறைந்த பட்சம் 90 அடி தண்ணீர் இருந்தால் மட்டுமே திறந்து விட முடியும். ஆனால், தற் போது மேட்டூர் அணை யின் நீர்மட்டம் 72.64 அடியாக உள்ளது. இத னால், குறுவை சாகு படிக்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையை திறந்துவிட இயலாது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு திருச்சி நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன் மண்டலத்திற்குட்பட்ட 30 உபகோட்ட அலுவல கத்திற்கு சுற்றறிக்கை அனுப்பினார்.

அதில், மழை வேண்டி ஒவ்வொரு அலுவலகம் சார்பிலும் அந்தெந்த பகுதிகளில் உள்ள கோயி லில் சிறப்பு யாகம் நடத்த வேண்டும் என்று குறிப் பிட்டிருந்தார். அதன்படி கடந்த 3ஆம் தேதி திருச்சி மண்டலத்தில் 30 கோயில் களில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. அரசே அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக மூடநம்பிக்கை பரப்பும் வகையில் அரசு அதிகாரி களே யாகம் நடத்திய தற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களும் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண் டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பொதுப் பணித்துறை தலைமை அறிவுரை இல்லாமல் தலைமை பொறியாளர் தன்னிச்சையாக யாகம் நடத்த உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த அதி காரியிடம் விளக்கம் கேட்டு பொதுப்பணித் துறை தலைமை அறி விக்கை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து பொதுப் பணித்துறை உயர் அதி காரி ஒருவர் கூறியதாவது: பொதுப்பணித்துறையில் நீர்வளத்துறை திருச்சி மண்டலத்தில், தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பாசன தேவையை பூர்த்தி செய்ய மேட்டூர் அணையில் போதுமான நீர் இருப்பு இல்லாததால், இந்த ஆண்டு குறுவை சாகு படிக்கு, தண்ணீர் திறக் கப்படவில்லை. இந் நிலையில், திருச்சி மண் டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன், மழை வேண்டி யாகம் நடத்த உத்தரவிட்டுள்ளார்.

கோயில்களில் யாகம் நடத்த கூறியிருப்பது ஏற்கத்தக்கது அல்ல. இது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டு அறி விக்கை அனுப்பப்பட்டுள் ளது. இதற்கு 15 நாட் களுக்குள் அவர் விளக்கம் அளிக்க வேண்டும். அதன் பிறகு அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப் பது குறித்து ஆலோசிக் கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.Read more: http://www.viduthalai.in/e-paper/102907.html#ixzz3cThqSR9C

தமிழ் ஓவியா said...

சமூகநீதிக்கு விரோதமாக அய்.அய்.டி. பேராசிரியர்கள் நியமனப் பட்டியல்

சென்னை அய்.அய்.டி.யையே எடுத்துக் கொள்ள லாம் மொத்தம் 212 பேராசிரியர்கள் என்றால் அவர்களில் உயர் ஜாதியினர் 209. (98.59 சதவீதம்) பிற்படுத்தப்பட்டோர் பூஜ்ஜியம்; தாழ்த்தப்பட்டோர் 3 (1-41 சதவீதம்) பழங்குடியினர் பூஜ்ஜியம்.

இணை பேராசிரியர்கள் (Associate Professors)  91 பேர் என்றால் அதில் உயர் ஜாதியினர் 88 (96.70 சதவீதம்) பிற்படுத்தப்பட்டோர் பூஜ்ஜியம் தாழ்த்தப் பட்டோர் 3 (3.3. சதவீதம்) பழங்குடியினர் பூஜ்ஜியம், உதவிப் பேராசிரியர் 177 என்றால் அதில் உயர் ஜாதியினர் 165 (93.22 சதவீதம்) பிற்படுத்தப்பட்டோர் 7 (3.95 சதவீதம்) தாழ்த்தப்பட்டோர் 4 (2.25 சதவீதம்) பழங்குடியினர் - 1.

ஆகக் கூடுதல் உயர் ஜாதியினர் (பெரும்பாலும் பார்ப்பனர்களே!) 462, பிற்படுத்தப்படுத்தப்பட்டோர் 7, தாழ்த்தப் பட்டோர் 10, பழங்குடியினர் ஒன்றே ஒன்று -இதுதான் சென்னை அய்.அய்.டி.யின் நிலை.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு - மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப் படையில் வழங்கப்பட்டதால்தான் முதன் முதலாக உதவிப் பேராசிரியர்களில் மட்டும் 7 இடங்கள் கிடைத் துள்ளன. பேராசிரியராகவோ, இணைப் பேராசிரி யராகவோ ஒரே ஒரு பிற்படுத்தப்பட்டோர்கூட இல்லை; பழங்குடியினரிடமிருந்து ஒரே ஒருவர் மட்டும் - அதுவும் உதவிப் பேராசிரியர் பணியில்.

தமிழ் ஓவியா said...

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்ட தடையை நீக்க இணையத்தின் வாயிலாக வலியுறுத்திய பல்லாயிரக்கணக்கானவர்கள்


சென்னை ஜூன் 8 கல்வியாளர்களாக, ஆராய்ச் சியாளர்கள், மாணவர்கள் மற்றும் இந்தியக் குடிமக் களாக உள்ள ஏராளமானவர்கள் இணையத்தின் வாயிலாக சென்னை அய்.அய்.டி. இயக்குநருக்கு பன்னாட் டளவில் ஆயிரக்கணக்கானவர்கள் இணையத்தின் வாயிலாக சென்னை அய்.அய்.டி இயக்குநருக்கு கோரிக்கையை விளக்கி கடிதம் அனுப்பினார்கள். www.change.org எனும் தளத்தின் வாயிலாக அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்துக்கு விதிக்கப்பட்டத் தடையை நீக்க வலியுறுத்தப்பட்டது. அந்த வகையில் 100, 200 எனத் தொடங்கி பன் னாட்டளவில் உள்ள சமூக நீதிப் பற்றாளர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போய் 7.597பேர் என்கிற அளவிலான எண்ணிக்கையினர் இணை யத்தில் இந்தத் தளத்தில் மட்டும் பதிவு செய் துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முகநூலில் ஏராளமானவர்கள் அவரவர் முகநூல் பக்கம் மட்டுமன்றி புதிதாக அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் என்று டில்லி, மகாராட்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கத் தொடங்கியது. டிவிட்டரிலும் சென்னை அய்.அய்.டி. பக்கத்தில் அவ்வப்போதைய தகவல்கள் பரிமாற்றம் இருந்தவண்ணம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஊண் உறக்கம் இன்றி சமூக நீதிக்களத்தில் இறங்கிய மறவர்கள் ஏராளமானவர்கள் களம் கண்டனர்.Read more: http://www.viduthalai.in/e-paper/102908.html#ixzz3cTiHBBtz

தமிழ் ஓவியா said...

நல்லா கூட்டி கழிச்சு பாருங்க. கணக்கு சரியா வரும்

- குடந்தை கருணா

மத்திய அரசின் தலைமை பீடாதி பதியான ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்துக்கு நாட்டின் மிக உயரிய பாதுகாப்பு அளிக்கப்படும்:

நியாயம் தானே. இந்த நாட்டில், மூன்று முறை தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் தலைவருக்கு இந்த அளவிற்குக்கூட பாதுகாப்பு தர வில்லை என்றால், அதுவும் அவரின் சுண்டுவிரலில் அசையும் அரசில் செய்யவில்லை என்றால், பின் எப்போது யார் செய்வார்கள்?

என்ன மாதிரியான பாதுகாப்பு? இசட் பிளஸ் எனும் பாதுகாப்பு. இந்த பாதுகாப்பில் ஈடுபடும் 190 கமாண் டோக்கள், ஆயுதப்பயிற்சியிலும், ஆயுதம் இல்லாமலும் சண்டையிட பயிற்சி பெற்றவர்கள். இத்தகைய பாதுகாப்பை பெறுவது அரசின் உயர்ந்த பதவியிலிருக்கும் இருவர் மட்டும்தான். அதாவது நமது நாட்டின் குடிஅரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் மட்டும்தான் இசட் பிளஸ் பாதுகாப்பு தரப்படுகிறது.

அரசில் இல்லாத, எந்த அரசியல் கட்சியிலும் இல்லாத ஒருவருக்கு இசட் பிளஸ் தரப்படுவது ஒரே ஒருவருக் குத்தான்.அந்த ஒருவர் தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத்.

எந்த ஆர்.எஸ்.எஸ்.? காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே எனும் பார்ப்பான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவன் என்கிற முறையில் தடை செய்யப்பட்ட அமைப்பு.

அவசர நிலை பிரகடனத்தின்போது தடை செய்யப்பட்ட அமைப்பு.

முன்னூறு ஆண்டுகளுக்கு மேலாக இருந்த பாபர் மசூதி இடிப்பின் பின் னணியில் செயல்பட்டது ஆர். எஸ்.எஸ். என்கிற முறையில் தடை செய்யப்பட்ட அமைப்பு.

இந்தியாவின் அனைத்து மத போராட்டங்களின் பின்னணியில் இயங்குகிற ஓர் தீவிரவாத அமைப்பு; இதை தடை செய்யவேண்டும் என அமெரிக்காவில் வழக்கு தொடரப் பட்டுள்ள ஓர் அமைப்பு.

இந்த அமைப்பின் தலைவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு.

இவருக்கு யாரால் எதிர்ப்பு? ஏன் எதிர்ப்பு? ஆர்.எஸ்.எஸ். வெறும் கலாச்சார நிறுவனம் என்கிற நிலைப் பாட்டில் அந்த அமைப்பு இருக்கிறது என்று சொன்னால், அந்த அமைப்புக்கு எப்படி அச்சுறுத்தல் இருக்கமுடியும்?

நாம் பழைய வரலாற்று நிகழ்வு களுக்குச் சென்று மிகவும் சிரமப்பட வேண்டாம். நம் காலத்தில் நம் கண்முன் நடந்த நிகழ்வு.

2006-ல் மாலேகானின் நடைபெற்ற குண்டு வெடிப்பு, 2007-ல் சம்சவுதா ரயில் வண்டியில் குண்டு வெடிப்பு, 2007-ல் அஜ்மீர் செராப் தர்காவில் நடந்த குண்டு வெடிப்பு என பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின்கீழ் கைது செய்து சிறையில் வைக்கப்பட் டிருந்த சுவாமி? அசீமானந்தா, தான் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடு பட்டதற்கு எப்படி ஆர்.எஸ்.எஸ்சின் முழு ஆசிர்வாதமும் ஒத்துழைப்பும் இருந்தன; இனியும் இருக்கும் என காரவன் இதழுக்கு அளித்த பேட்டியில் தைரியமாகச் சொன்னாரே. அந்த பேட்டியை முழுக்க படிக்க விரும்புவோர், http://www.caravanmagazine.in/swami-aseemanand-interviews என்ற இந்த இணைய இணைப்பில் தெரிந்து கொள்ள லாம். அசீமானந்தா ஆர்.எஸ்.எஸ்.சில் பயிற்சி பெற்றவர்; இந்த குண்டுவெடிப் பில் அசீமானந்தாவுடன் 31 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்கள். அதில் பாஜகவின் மாணவர் பிரிவான அகில பாரத வித் யார்த்தி பரிசத்தின் தேசிய குழு உறுப்பினர் பிரக்யாசிங் தாக்கூர், இந்தூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னாள் தலைவர் சுனில் ஜோஷி ஆகியோரும் அடங்குவர்.

ஆர்.எஸ்.எஸ்.சின் தலைவர் மோகன் பகவத்தின் ஆசியுடந்தான் இந்த குண்டு வெடிப்புகள் நடந்தன என பகிரங்கமாக சுவாமி அசீமானந்தா சொன்னதை ஆதாரமாக காரவன் இதழ் வெளி யிட்டது.

மக்களை மதரீதியாக துவேசப் படுத்தி, மத வெறியை ஊக்கப்படுத்தி, இந்தியா என்கிற பன்முகத்தன்மைக் கொண்ட ஒரு நாட்டை, ஹிந்து ராஷ்டிரம் எனும் பார்ப்பன மேலாதிக்க பூமியாக மாற்ற திட்டமிடும் அமைப் பின் தலைவர் ஒருவருக்கு கொலை மிரட்டல் வருகிறது என்று சொல்லி, தற்போதைய ஆர்.எஸ்.எஸ். ஆசிர் வாதத்துடன் இயங்கும் மோடி அரசு, நாட்டின் உயர்பட்ச பாதுகாப்பை வழங்குவதில் என்ன வியப்பு உள்ளது?

சிறுபான்மை மக்கள், குறிப்பாக இஸ்லாமியர்கள் தங்களுக்கு ஏதேனும் ஆபத்து என்றால், தன் வீட்டின் கதவை நள்ளிரவிலும் தட்டலாம் என தட் டுங்கள் திறக்கப்படும் பாணியில் சென்ற வாரம் சொன்னவரும் மோடி தான்.

இப்போது அவர்களுக்கு யாரால் ஆபத்து எனக் கருதும் ஓர் அமைப்பின் தலைவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தரப்படும் என சொல்பவரும் மோடி தான்.

நல்லா கூட்டி கழிச்சு பாருங்க. கணக்கு சரியா வரும்.Read more: http://www.viduthalai.in/page-2/102920.html#ixzz3cTiqv0MO

தமிழ் ஓவியா said...

மனிதத் தன்மை

மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டு விட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்கவேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போது தான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும். - (விடுதலை, 13.8.1961)Read more: http://www.viduthalai.in/page-2/102914.html#ixzz3cTjAQt00

தமிழ் ஓவியா said...

இந்திய நாத்திகர்கள் முகநூல் பக்கம் முடக்கம்: பயனாளர்கள் வேதனை


சென்னை, ஜுன் 8_ இணையத்தில் உள்ள சமூக வலைத்தளங்களில் முகநூல் சமூக ஊடகத்தில் இந்திய நாத்திகர்கள் பக்கம் 28,000 பேர் விரும்பும் முக நூல் பக்கமாக இயங்கி வரு கிறது. இந்திய நாத்திகர்கள் முக நூல் பக்கம் தடை செய்யப்பட்ட பக்கமும் இல்லை. இந்நிலையில் கடந்த 4.6.2015 முதல் அந்த இணையப் பக்கத்தில் எந்த ஒரு படத்தையோ வீடியோ பதிவுகளையோ பகிர்ந்து கொள்ள முடியாமல் உள் ளது. மற்ற கருத்துகளுக் கான பதிவுகளையும் அந்த முகநூல் பக்கத்தில் இணைக் கவும் முடியாமல் உள்ளது. இதனால் அந்த முகநூல் பக்கத்தின் பயனாளர்கள் பெரிதும் அவதிக்கு உள் ளாகி உள்ளனர்.

சமூக ஊடகம் என்பது ஒருவருடைய கருத்தை வெளிப்படையாக மற்றவர் களிடம் பகிர்ந்து கொள் வதற்காகவே இருப்பதாகும். ஆனால், தற்பொழுது பயன்படுத்துவதற்கு வாய்ப் பில்லாமல் முடக்கப்பட்டி ருக்கும் நிலையானது கருத்து சுதந்திரத்தைப் பறிப்பதாக உள்ளது.
பாதுகாப்பற்ற முகநூல் பக்கமாக குறிப்பிடப்பட்டு அதன் செயல்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளது. இந்திய நாத்திகர்கள் முகநூல் பக்கத்தை நிர்வ கித்து வருபவரான சூர்யா சிறீராம் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளுக் கும் மேலாக இந்த முக நூல் பக்கத்தில் பதிவிடப் படும் கருத்துகளை, படங் கள் மற்றும் வீடியோப் பதிவுகளை பார்ப்பவர்கள் எவரும் அப்படியே மற்ற வர்களுக்கும் பகிர்ந்து கொள்ள முடியாதபடிக்கு, எங்களால் மட்டுமே பகிரும்வண்ணம் இந்திய நாத்திகர்கள் முகநூல் பக்கத்தை வடிவமைத் திருந்தோம். இதுவே எங் களுக்கு பாதகமாக முடிந்து விட்டது என்று கூறினார்.

இந்திய நாத்திகர்கள் முகநூல் பக்கம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக நிர்முக்தா அமைப்பைச் சேர்ந்தவர்களால் நிர்வகிக் கப்பட்டு வந்தது. நிர்முக்தா அமைப்பு அறிவியல், சுதந்திரச் சிந்தனைகள், மத சார்பின்மை மற்றம் மனித நேயத்தை இந்தியாவில் வலியுறுத்தி பரப்பிவரும் அமைப்பாகும்.

சென்னை அய்.அய்.டி யில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் தடை விதிக்கப்பட்டபிறகு இந் திய நாத்திகர்கள் முகநூல் பக்கத்தின் செயல்பாடு களில் முகநூல் பக்க செயல் பாடுகள் கட்டுப்படுத்தப் பட்டதாக நிர்வகிப்பவர் கள் கூறுகின்றனர். சென்னை அய்.அய்.டி வளாகத்துக் குள்ளேயே மதத் தலைவர் களால் போலி அறிவியல் ஜோதிடத்தை பரப்புவதற் கான நிகழ்ச்சியை நடத்து வதற்கு அழைக்கப்படு கிறார்கள். இந்த நிலையில் தான் இந்திய நாத்திகர்கள் பக்கத்துதின் செயல்பாடு கள் முடக்கப்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய நாத்திகர்கள் முகநூல் பக்கத்தை நிர் வகிப்பவர் கூறும்போது, நாங்கள் அம்பேத்கர் பெரி யார் வாசகர் வட்டத்தை தடைக்கு எதிராக குரல் கொடுத்துவந்தோம். அதற் காக பல்வேறு மதத் தலை வர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தோம்.

அதுமட்டுமன்றி தற் போதைய பிரச்சினை களாக இருப்பவற்றின் மீதும் கவனம் செலுத்தி வந்துள்ளோம். மேகி நூடுல்ஸ் முரண்பாடுகள், இந்தியாவில் உள்ள மின் சாரம்குறித்த பிரச்சினை கள், இசுலாமியத் தீவிர வாதிகளின் அச்சுறுத்தலை அடுத்து வங்கதேச எழுத் தாளர் தஸ்லீமா நஸ்ரீன் இந்தியாவை விட்டு வெளி யேறி அமெரிக்காவில் தஞ் சம் அடைந்தது ஏன்? என்று பல அண்மைக்காலப் பிரச் சினைகள் குறித்து இந்திய நாத்திகர்கள் முக நூல் பக்கத்தில் விவாதித்துக் கொண்டு வந்துள்ளோம். ஆனால், தற்பொழுது மதத்தன் பெயரால் எங்கள் குரல்வளை நெறிக்கப் பட்ட நிலையை உணருகி றோம் என்று இந்திய நாத்திகர்கள் முக நூல் பக்கத்தை நிர்வகிப்பவர் ஒருவர் கூறியுள்ளார்.

நிர்முக்தா இணையத் தில் செயல்பட்டு வரும் குழு சுதந்திர சிந்தனையா ளர்களைக் கொண்டு முக் கியமான மாநகரங்கள் மற்றும் பிற நகரங்களில் இயங்கி வருகிறது. அதன் உறுப்பினர்களை தொடர்ந்து சந்தித்து சமூ கப்பிரச்சினைகள் குறித்து விவாதித்து வருகிறது.Read more: http://www.viduthalai.in/page-3/102930.html#ixzz3cTjIsxQ7

தமிழ் ஓவியா said...

தக்காளி சாப்பிட்டால் புற்றுநோயைக் குறைக்கலாம்உணவில் தக்காளியைத் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களைத் தாக்கும் இரண்டாவது பெரிய புற்றுநோயான புராஸ்டேட் புற்றுநோயைக் கணிசமான அளவுக்குத் தடுக்க முடியும் என்ற பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சராசரியாக ஒரு வாரத்துக்கு சுமார் ஒன்றரை கிலோ தக்காளியைத் தமது உணவில் சேர்த்து கொள்ளும் ஆண்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் 20 சதவீதம் குறைவதாக இவர்கள் கூறுகிறார்கள்.

உலக அளவில் ஆண்களுக்கு ஏற்படும் இரண்டாவது பெரிய புற்றுநோயாக, புராஸ்டேட் சுரப்பியில் காணப் படுகிறது. பிரிட்டனில் மட்டும் ஆண்டுக்கு 35 ஆயிரம் ஆண்களுக்கு இந்தப் புற்று நோய் ஏற்படுகிறது. அ

வர்களில் 10 ஆயிரம் பேர் இந்த நோய் காரணமாக இறந்து போகிறார்கள். பொதுவாக புற்றுநோய் வராமல் தடுக்க வேண்டுமானால் உணவில் பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் சேர்த்துக் கொள்வதோடு, இறைச்சியின் அளவையும் கொழுப்பு மற்றும் உப்பின் அளவையும் குறைக்க வேண்டும் என்பது மருத்துவர் களின் பரிந்துரையாக இருந்து வருகிறது.

பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வா ளர்கள் சுமார் 20 ஆயிரம் ஆண்களிடம் புராஸ்டேட் புற்றுநோய் குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் வயது 50 முதல் 69 வயது வரை யானதாக இருந்தது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் உணவுப்பழக்கம் மற்றும் வாழ்வியல் முறைகள் ஆய்வு செய்யப்பட்டன.

இதில் வாரத்துக்கு குறைந்தது 1500 கிராம் தக்காளியை உணவில் சேர்த்துக் கொண்டவர்களிடம் புராஸ்டேட் புற்றுநோய் தோன்றுவதன் சாத்தியம் 18 சதவீதம் வீழ்ச்சியடைந்ததை இவர்கள் கண்டறிந்தனர்.

அத்துடன் சராசரியாக ஒரு நாளைக்கு தங்களின் மொத்த உணவில் குறைந்தது 500 கிராம் பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும், சாப்பிட்டவர்களுக்கு புராஸ்டேட் புற்று நோய் தாக்குவதற்கான சாத்தியம் 24 சதவீதம் அளவுக்குக் குறைவதையும் இவர்கள் கண்டறிந்தனர்.

புராஸ்டேட் புற்றுநோய் தடுப்பில் தக்காளி முக்கிய பங்காற்றுவதாகத் தங்களின் ஆய்வு கண்டறிந் திருப்பதாகக் கூறும் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவத்துறையைச் சேர்ந்த வனசாஏர், அதே சமயம், இதை உறுதி செய்ய வேண்டு மானால் இது தொடர்பான மேலதிக ஆய்வுகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். எனவே தக்காளியை ஆய்வாளர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.Read more: http://www.viduthalai.in/page-7/102921.html#ixzz3cTjquTRn

தமிழ் ஓவியா said...

எண்ணற்ற நோய்களுக்கு மருந்தாகும் முருங்கைபச்சைக்கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம் தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்க வேண்டும் என்று சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதை யர்கள். கீரை வகைகளில் இரும்புச்சத்து கணிசமாக உள்ளது. அந்த வகையில் முருங்கைக்கீரையின் பயன்களைப் பார்ப்போம்.

முருங்கைமரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப்பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேக வைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம் , உடல் சூடு, கண் நோய் , பித்த மூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக்கீரை.

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது.

இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவே தான், இக்கீரைக்கு விந்துகட்டிஎன்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளிசேர்த்தோ சமைப்பது நலம்.முருங்கைப் பட்டையை நீர் விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம்.

முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும். முருங்கை இலைகளில் இரும்பு , தாமிரம்,சுண்ணாம்புச்சத்து ஆகியவை இருக்கின்றன.

இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். தோல் வியாதிகள் நீங்கும். முருங்கைப்பட்டை, உலோகச்சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து.

கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப்புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்காய் கை கண்ட மருந்து. முருங்கைக்காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக்காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்தமானதே.

இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப்புண், கண்நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒரு முறையோ இரண்டு முறையோ முருங்கைகாயை உணவாக உபயோகித் தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன.

வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது. முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம்.

இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கைவிதைக்கு முதலிடம் தரலாம். முருங்கைமரத்தி லிருந்து கிடைக்கும் பிசின் நல்ல டானிக்குகள் செய்ய பயன்படுகிறது. இந்த மரத்தின் வேர் மற்றும்பிசின் சம் பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல்தள்ளிப்போகும்.

மேலும் இந்தப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப்பூ வெப்பத்தை உண்டு பண்ணக் கூடியது தான் என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப்பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப்பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும்.

முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால், இரத்த சுத்தியும், எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப் பிணி களுக்கு தேவையான கால்சியம், அயன், வைட்டமின் உள்ளது.

கர்ப்பப்பையின் மந்தத்தன்மையை போக்கி, பிரசவத்தை துரிதப்படுத்தும். இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும்ப தார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். ஆஸ்துமா, மார்சளி, சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும், விந்து விருத்திக்கும் சிறந்தது.Read more: http://www.viduthalai.in/page-7/102922.html#ixzz3cTjyHsWw

தமிழ் ஓவியா said...

வெயில் கால வெப்பக் கோளாறுகளை குணமாக்கும் பாசிப்பயறு!பாசிப்பயறு இந்தியாவில் விளையக்கூடிய சத்தான பயறு வகை உணவாகும். பண்டைய காலம் முதலே இது இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வந்துள்ளது. இதன் பின்னர் தெற்கு சீனா, இந்தோ - சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த நூற்றாண்டுகளில் தான் மேற்கு இந்திய தீவுகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு விளைவிக்கப்படுகிறது.

பாசிப்பயறில் உள்ள சத்துக்கள் இதில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கி யுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கி யுள்ளன. கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம்.

எளிதில் செரிமானமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சேரும். குழந்தைகளுக்கும், வளர் இளம்பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வயிறுக் கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயிறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம்.

காய்ச்சல் குணமாகும்

சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊற வைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம். அதே போல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப்பயறு சிறந்த மருந்துப் பொருளாக பயன்படுகிறது.

நினைவுத் திறன் கூடும்

மனத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும். குறிப்பாக ஆசன வாய்க் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.

பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும். பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத் திறன் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.Read more: http://www.viduthalai.in/page-7/102925.html#ixzz3cTk5BuMX

தமிழ் ஓவியா said...

ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு தேவை?

உடலில் உப்பு அதிகம் சேர்வதால் சிறுநீரகக் கற்கள் உருவாகும். நீரிழிவு நோய்க்குக் காரணமாகும். உயர் ரத்த அழுத்தத்துக்கு உப்பே முழு முதல் காரணம்.

நான்கு பேர் இருக்கும் ஒரு குடும்பத்துக்கு ஒரு நாளைக்குத் தேவையான அதிகபட்ச உப்பின் தேவை 4 டீஸ்பூன்தான். ஆனால், ஒவ்வொரு உணவிலும் நான்கு டீஸ்பூன் உப்பைக் கொட்டினால், அதனால் எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படும் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள்.

மனிதன் ஆரோக்கி யமாக வாழ, ஒரு நாளைக்கு 2 கிராம் அளவுக்கு மேல் உப்பு தேவையில்லை. உப்பைக் குறைக்கக் குறைக்க அதற்கேற்ப உங்களுடைய படபடப்பும் குறைவதை உணரலாம்.

பழங்கள், காய்கறிகளில் இயல்பிலேயே அதிகமாக இருக்கும் பொட்டாசியம் சத்து உடலில் உப்பு சேர்வதைக் கட்டுப்படுத்துகிறது. அதனால், இவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். இதிலிருந்து பெறப்படும் வைட்டமின் - பி, சிறுநீரகச் செயல்பாட்டைச் சீராக்கி, ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் இருப்பதற்கு உதவும்.

தமிழ் ஓவியா said...

பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப்பில் பகுத்தறிவுப் பணிகளை விரைவுபடுத்தவேண்டும்
பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலப் பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

சென்னை, ஜூன் 8_ பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலப் பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம் 07.06.2015 ஞாயிறு காலை 11 மணியளவில் சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. கலந்துரையாடலுக்கு பகுத்தறிவாளர் கழகத் தின் புரவலர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை தாங்கினார்.

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் வா.நேரு, பொதுச் செயலாளர்கள் தகடூர் ஜெ.தமிழ்ச்செல்வி, தஞ்சை மா.அழகிரிசாமி, மாநில துணைத்தலைவர்கள் வட சேரி வ.இளங்கோவன், கோ.ஒளிவண்ணன், அண்ணாசரவணன், பேரா.திருமாவளவன், ச.குரு சாமி(கே.டி.சி), மாநில பொருளாளர் சி.தமிழ்ச் செல்வன்,

மாநில அமைப்புச்செயலாளர் இரா. தமிழ்ச்செல்வன், தாம்பரம் மாவட்ட ப.க.தலைவர் அ.தா.சண்முகசுந்தரம் ஆகியோர் பகுத்தறிவாளர் கழகத்தின் வளர்ச்சிக்கு என்னென்ன செய்யலாம் என்பது குறித்தும் தங்களது பங்களிப்பும் குறித்தும் எடுத்துரைத்தனர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள் தனது வழிகாட்டுதல் உரையில், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்டதைக் கண்டித்தும், மதச்சார்பின் மைக்கு எதிராக நடக்கும் மத்திய_ மாநில அரசு களின் போக்குகளைக் கண்டித்தும் கருத்தரங்கு களை பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக பல் வேறு இடங்களில் நடத்தவேண்டும்.

நமது இயக்க கொள்கைகளை மக்களிடம் கொண்டுசெல்ல, பெரியார் நகர்வு புத்தகச் சந்தைகளை ஊர்தோறும் நடத்துகின்றோம். இந்த நகர்வு புத்தகச் சந்தைகள் நல்ல முறையில் நடைபெற திராவிடர் கழகப் பொறுப்பாளர்களுக்கு அனைத்து ஒத்துழைப்பு களையும் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் கள் செய்தல்வேண்டும்.

பெரியார் ஆயிரம் வினா_ விடைப்போட்டிகள் நடைபெறவுள்ளன. பகுத்தறிவாளர் கழகத்தின் சார் பாக ஆக்க நடவடிக்கை (core) குழு ஏற்படுத்தி, அப்போட்டிகள் செம்மையாக நடைபெறச் செய் யுங்கள். நமது புத்தக வெளியீடுகள் - புத்தக அறிமுக நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி கணக்குகளை இந்த மாத (ஜூன் 30) இறுதிக்குள் ஒப்படையுங் கள்.

அறிவியல் மனப்பான்மை வளர நமது தொடர் பிரச்சாரங்கள்தான் அடிப்படை, அதனைத் தொடர்ந்து நிகழ்த்துங்கள் என்று அறிவுறுத்தி னார்.

கீழ்க்கண்ட பிரச்சினைகள் குறித்து கலந்துரை யாடலில் விவாதிக்கப்பட்டன.

1) பகுத்தறிவாளர் கழக மாநிலப் பொறுப் பாளர்கள் மாவட்டங்கள்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவேண்டும். மண்டல அளவில் நாலைந்து மாவட்டங்களை இணைத்து கலந்துரை யாடல் நடத்தி அமைப்புப் பணிகளை விரிவுபடுத்த வேண்டும். அமைப்புகள் இல்லாத கழக மாவட் டங்களில் அமைப்புகள் ஏற்படுத்தவேண்டும்.

2) உறுப்பினர் சேர்க்கை பணி மேற்கொள் ளப்படவேண்டும். உறுப்பினர் படிவங்கள் மாவட் டப் பொறுப்பாளர்களிடம் வழங்கப்பட்டு உறுப் பினர் சேர்க்கை முழுமைப்படுத்தப்படவேண்டும்.

3) இணையதளப் பிரச்சாரத்தில் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்_அப் போன்றவற்றில் பகுத்தறி வாளர் கழகப் பொறுப்பாளர்களின் பணி இன்னும் அதிகளவில் விரைவுபடுத்தப்படவேண்டும்.

4) மாநிலப் பொறுப்பாளர்களின் பொறுப்புகள், பணிகள் வரையறுக்கப்படல் வேண்டும். செய்யப் பட்ட பணிகள் குறித்த விவரங்கள் கொடுக்கப்படல் வேண்டும்.

பகுத்தறிவாளர் கழகப் புரவலர், தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுத லில் மாநிலப் பகுத்தறிவாளர் கழகப் பொறுப் பாளர்களின் குழுக்கள் அமைக்கப்பட்டன.

பகுத்தறிவாளர் கழக அமைப்புக் குழு

மா.அழகிரிசாமி _ இரா.தமிழ்ச்செல்வன்

ஊடகம், செய்தி ஊடகம் - இணையதளம்

வீ.குமரேசன் _ கோ.ஒளிவண்ணன்,

புத்தகங்கள் அறிமுகக்குழு

தகடூர் ஜெ.தமிழ்ச்செல்வி, வடசேரி வ.இளங் கோவன், அண்ணா சரவணன்.

அறிவியல் மனப்பான்மைக்குழு

டாக்டர் சி.தமிழ்ச்செல்வன், மு. ந. நடராசன்

உறுப்பினர் சேர்க்கைக்குழு

வா.நேரு _ வீ.குமரேசன்

பெரியார் ஆயிரம் ஆக்கக் குழு

வா.நேரு, மா.அழகிரிசாமி, பேரா. திருமாவளவன், க.நல்லதம்பி, ச.குருசாமி (கே.டி.சி)

தகவல் தொடர்பு குழு

மா.அழகர்சாமி, ஆ.முனியன்

மாவட்டங்கள் கலந்துரையாடல் கூட்டம்

இடம்: மத்தூர், நாள்: 28.06.2015 காலை 10 மணி- கலந்துகொள்ளும் மாவட்டங்கள்: தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, செய்யாறு

இடம்: சேலம் நாள்: 28.06.2015 மாலை 5 மணி- பங்கேற்கும் மாவட்டங்கள் : சேலம், ஆத்தூர், மேட்டூர், நாமக்கல், ஈரோடு, கோபி.Read more: http://www.viduthalai.in/page-8/102929.html#ixzz3cTkPprea

தமிழ் ஓவியா said...

மேகி விற்பனை அதிகரிப்புக்கு சோம்பல் மிகுந்த இளம் தாய்மார்களே காரணமாம் பாஜக பெண் எம்.எல்.ஏ-வின் பேச்சால் பரபரப்பு

புதுடில்லி, ஜூன் 8_ மேகி விற்பனை அதி கரிக்க சோம்பலான தாய் மார்களே காரணம் என்று கூறிய பாரதீய ஜனதா எம்.எல்.ஏ பேச்சு சர்ச்சை யாக வெடித்துள்ளது.

மேகி நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்டதை விட ரசாயனம் அதிகம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, இந்தி யாவில் பல்வேறு மாநி லங்களில் தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்த நட வடிக்கையை மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ உஷா தாகூர் வரவேற்றுள்ளார்.

இன்றைய தலைமுறை தாய்மார்கள் சோம்பல் காரணமாக விரைவு உணவு நூடுல்ஸ்களை குழந்தைகளுக்குத் தருவ தாகக் கூறிய அவர், அதன் காரணமாகவே மேகி போன்ற உணவு பொருள் களின் விற்பனை அதி கரித்து இருப்பதாக தெரி வித்தார்.

மக்கள் மீதான அக் கறை காரணமாகவே மேகிக்கு பாஜக அரசு தடை விதித்திருப்பதாக கூறிய உஷா தாகூர், மேகி போன்ற விரைவு உணவு களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கேட் டுக்கொண்டார். பாஜக பெண் எம்.எல்.ஏ.வின் இத்தகைய பேச்சு சர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கள்  சட்டமன்ற உறுப்பி னர்கள் தொடர்ந்து ஏதா வது உளறி சிக்கலில் மாட்டிக் கொள்ளும் நட வடிக்கை தொடர்கதை யாகி வருகிறது.

தமிழ் ஓவியா said...

அம்பேத்கர்மீது புதிய கரிசனம் ஏன்?

செவ்வாய், 09 ஜூன் 2015


அம்பேத்கரின் மீதான காவிகளின் கரிசனம் மிகவும் வஞ்சகமானது.

கொஞ்சம் பழைய கதை. 11ஆம் நூற்றாண்டு வரை அதாவது `பரிபாடல் காலம் வரை தமிழகத்தில் சுப்பிரமணியன் கிடையாது முருகன் மட்டுமே உண்டு. வேலவன் என்றும் அவனை அழைப்பர். குறிஞ்சி நிலக்கடவுள் அவர். அவருக்கு ஒரே மனைவி வள்ளிக்குறத்தி. பின்னர் வடநாட்டு சுப்பிரமணியனையும் முருகனையும் இணைத்து கதையுண்டாக்கி; சுப்பிரமணியன் மனைவி தெய்வானையை முருகனுக்கும் மனைவி யாக்கி; வள்ளிக்குறத்தியை சக்களத்தி ஆக்கி விட்டார்கள்; அரவணைத்தும் தோளில் கைப் போட்டும் அழித்தொழிப்பதில் அவர்கள் வல்லவர்கள். சரி ! நாம் ஏமாளியானால்; தூங்கினால் அவர்கள் தொடையில் கயிறென்ன வடமே திரிப்பார்கள். அம்பேத்கர் பெயரை மகாராஷ்டிர பல்கலை.க்கு வைத்தபோது கொந்தளித்த காவிக்கூட்டம் இன்று திடீரென உரிமை கொண்டாடுவது ஏன்?

வாஜ்பாய் அமைச்சரவையில் பங்கு விலக்கல் துறை அமைச்சராக இருந்த அருண்ஷோரி எனும் பிராமணிய அறிவுஜீவி பெரியாரும் - அம்பேத்கரும் தவறான தலைவர்கள் எனப் பேசியும் எழுதியும் வந்தார். கீஷீக்ஷீலீவீஜீஜீவீஸீரீ திணீறீமீ நிஷீபீ என அம்பேத்கரை அசிங்கப்படுத்தி ஒரு நூலே எழுதினர். தலித் இயக்கங்கள் கடுமையாக எதிர்த்தன. முற்போக்காளர்கள். இடதுசாரிகள் கடுமையாக எதிர்த்தனர். சங்பரிவார் அந்நூலைத் தூக்கிச் சுமந்தது. இப்போது திடீரென அதையெல்லாம் நாம் மறந்திருப்போம் எனக் கருதி வாயினிக்கப் பேசி வஞ்சக நாடகமாடுகின்றனர். அம்பேத்கரை ஒரு சாமியாக்கி விட்டு அவரது கொள்கைகளைப் புதைப்பதுதான் நோக்கம். இதை உணர்க! சரி! வைதீகத்தை - சனாதனத்தை எதிர்த்துக் கிளம்பிய சமணத்தையும், புத்தத்தையும் தனது ஒரு பகுதி என இந்துத்துவா வாதிடுகிறது. நம் கேள்வி சீனா, பர்மா, ஜப்பான் உள்ளிட்ட நாடு களில் புத்தமதத்தை பின்பற்றுவோரே அதிகம்; அப்படியானால் அவர்கள் இந்துக்களா? அப்படிச் சொன்னால் உலகம் கைக்கொட்டிச் சிரிக்காதோ?

அம்பேத்கர் நான் இந்துவாகப் பிறந்தேன் இந்துவாகச் சாகமாட்டேன் என சபதமிட்டு புத்தமதத்துக்கு மாறினாரே! அவரை இந்துத்துவ சக்திகள் இப்போது உரிமை கொண்டாடுவது வஞ்சக நோக்கின்றி வேறென்ன?

அம்பேத்கர் சிலை இந்தியா முழுவதும் ஊருக்கு வெளியேயும் - சேரிப்புறத்திலும் மட்டும் அமைக்கப்பட்டு இருப்பதேன்? ஆதிக்க வெறியும் மேல்சாதி ஆணவமும் இன்னும் நீடிப்ப தால்தானே? பெரியாருக்கும் - அம்பேத்கருக்கும் மார்க் சிஸ்ட்டுகளுக்கும் கோட்பாடு ரீதியாக சில மாறுபாடு உண்டு ஆனால் அவை முரண்பாடல்ல; பகையல்ல; ஒருவருக்கொருவர் எதிரியல்ல; இன்னும் வலுவாக இந்துத்துவாவை எதிர்ப்பது என்பதில்தான் இவர்களுக்குள் போட்டி; இன்னும் ஒடுக்கப்பட்ட மக்களை விரைந்து கைதூக்கிவிடுவது என்பதில்தான் போட்டி; ஆகவே மித்தரபேதம் கற்பித்து இவர்களை மோதவிட கனவுகாணும் சங்பரிவார் முயற்சி பலிக்காது.

- சுபொஅ

நன்றி: தீக்கதிர் 9.6.2015Read more: http://www.viduthalai.in/e-paper/102961.html#ixzz3cZcdMyzb

தமிழ் ஓவியா said...

ராமன் கோயிலைக் கட்டா விட்டால்
அரசை மக்கள் தூக்கி எறிவார்கள்

மோடியை மிரட்டுகிறது சிவசேனா
மும்பை, மே 9_ ராமர் கோவில் விவகா ரத்தை வைத்து தான் இந்துக்களின் நம்பிக் கையைப் பெற்று ஆட் சிக்கு வந்தீர்கள், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகு ராமர்கோவில் கட்ட காலம் தாழ்த்தினால் மக்கள் உங்களை வெறுத்து ஒதுக்கிடுவார்கள், ஆகவே மன்கி பாத் நிகழ்ச்சியில் ராமர் கோவில் விவகாரத் திற்கு முக்கியத்துவம் கொடுத்து பேசவேண்டும் என்று சிவசேனா அதி காரப் பூர்வ ஏடான சாம்னா தனது தலை யங்கத்தில் குறிப்பிட் டுள்ளது. மோடி தன்னுடைய ஓராண்டு ஆட்சியில் நடந்த தோல்விகளை மறைக்க கடந்த சில நாட்களாக தொடர்ந்து பல்வேறு கூட்டங்களை நடத்தி வருகிறார். மேலும் தனது ஆட்சியின் மிக முக்கிய பிரச்சனை யான இந்துத்துவா மற் றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித் தும் பேசியிருந்தார். அதில் எனது ஆட்சி இந்திய அரசியலமைப்புச் சட்டம் வகுத்துக் கொடுத்துள்ள பாதையில் தான் செல் கிறது. சிறுபான்மையின ருக்கு எந்த வடிவில் பாதிப்பு நிகழ்ந்தாலும் நான் பொறுத்துக் கொண்டு இருக்க மாட் டேன். சிறுபானையினர் இரவு 2 மணிக்குக் கூட என்னை நேரில் சந்தித்து தங்களது பிரச்சனை களைக் கூறலாம் என்று தேர்தல் பிரச்சார மேடைப் பேச்சு போல் பேசியிருந்தார். மோடியின் சிறுபான்மையினர் மீதான இந்தக் கரிசனப் பார்வை பலரது புருவங்களை உயர்த்தியது. ஆனால் மோடியின் பேச்சு எல் லாம் நடிப்பு தான் என்று சிவசேனா தலைமை தங்களது நாளிதழான சாம்னா மூலமாக மறை முகமாக காட்டிக் கொடுத்துவிட்டது. சாம்னாவின் தலை யங்கத்தில் எழுதியதன் விபரம் வருமாறு:

சிறுபான்மையினருக்கான மோடியின் பேச்சு குறித்து பலர் வியப்படைந்துள் ளனர். ஆனால் மோடி யின் பேச்சில் உள்ளார்ந்த விளக்கம் இந்துத்துவாதி களுக்கு மாத்திரமே தெரி யும், மோடி மறைமுகமாக மதம்மாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ள சிறு பான்மை மதத்தலைவர் களுக்கு எச்சரிக்கை விடுத் துள்ளார். இது இந்து நாடு; இங்கு வேறுமதத் தலைவர்களுக்கு வேலை யில்லை, வேறு மதத்தலை வர்களுக்கு மோடி கசப் பான மருந்தைக் கொடுத் துள்ளார். முக்கியமாக பிரிவினை பேசும் காஷ்மீர் தலைவர்களுக்கும், இங் குள்ள ஒவைசி போன்ற வர்களுக்கும் தான் மோடியின் இந்த பேச்சு கசப்பான மருந்தாகும். அவர்கள் தான் கவலைப் படவேண்டும், இந்துக் களின் மடியில் கன மில்லை ஆகையால் இந் துக்கள் மோடியின் பேச்சால் பாதிக்கப்படப் போவதில்லை, பொதுச் சிவில் சட்டம் குறித்த சரியான பாதையில் மோடி சென்று கொண்டு இருக்கிறார். இது அவரது தற்போதைய நடவடிக்கை யில் தெரியவராது ஆனால் அவர் இதைச் செய்வார் என்று சிலருக்கு மாத்தி ரம் (சங்கப் பரிவாரத் தலைவர்கள்) தெரியும். காஷ்மீருக்கான சிறப்பு தகுதியை ரத்து செய்ய வேண்டும் என்பதில் மோடிக்கும் பாஜக தலை வர் அமித்ஷாவிற்குமி டையே கருத்துவேறுபாடு கிடையாது. எதை எப் போது செய்யவேண்டும் என்பதை தீர்மானிக்கத் தான் பாஜக தலைமையி னால் ஆன ஆட்சிக்கு முழு பெரும்பான்மையை வழங்கியுள்ளனர். ராமர் கோவில் விவ காரம் குறித்து மீண்டும் சர்ச்சை எழும்பத்துவங்கி யுள்ளது. இது குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை.

மக்கள் ராமர்கோவில் கட்ட முழு விருப்பம் தெரிவித்து மோடியின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர். மோடிக்கு மக்களின் எண்ண ஓட்டம் என்ன என்பது நன்கு தெரியும், ஆகவே ராமர் கோவில் விவகாரத்தை வாஜ்பாய் அரசைப் போல் பரணில் தூக்கிப் போட முடியாது. அல்லது அதை மீண்டும் பேச்சு வார்த்தை என்ற பெயரில் இழுத்தடிக்க முடியாது. ஒராண்டில் மோடிக்குப் பழைய தவறுகளைத் திருத்தவே நேரம் சரியாகப் போய் விட்டது. இனிவரும் ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட வேண்டும். மக்களின் எண்ணம் ராமர் கோவில் தான்; அதை மோடி தலைமையினால் ஆன அரசு விரைவில் கட்டித் தர வேண்டும். அதே நேரத்தில் மோடி வானோலியில் பேசும் நிகழ்ச்சியான மன் கி பாத்தில் ராமர் கோவில் விவகாரம் குறித்துப் பேசவேண்டும் காலம் தாழ்த்தினால் மக்கள் மோடியை வெறுக்கத் துவங்கிவிடுவார்கள், அதன் பிறகு வாஜ்பாய் அரசுக்கான அதே நிலைதான் மோடிக்கும் ஏற்படும் என்று அந்த தலையங்கத்தில் எழுதி யுள்ளார்கள்.Read more: http://www.viduthalai.in/e-paper/102957.html#ixzz3cZcuZg4w

தமிழ் ஓவியா said...

சென்னை அய்.அய்.டி. விவகாரம்:

இயக்குநர் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை

ஜூலை 6இல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவுபுதுடில்லி, ஜூன்.9- சென்னை அய்.அய்.டி.யில் உள்ள அம்பேத்கர் _ -பெரியார் வாசகர் வட்டம் என்ற மாணவர் அமைப் புக்கு தடை விதித்தது தொடர்பாக விளக்கம் அளிக்க சென்னை அய்.அய்.டி. இயக்குனர் மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத் தின் செயலாளர் ஆகி யோர் நேரில் ஆஜராக தேசிய ஆதிதிராவிடர் ஆணைய தலைவர் நோட் டீசு அனுப்பியிருந்தார்.

அதன்படி நேற்று சென்னை அய்.அய்.டி. இயக்குநர் (பொறுப்பு) பாஸ்கரன் ராமமூர்த்தி மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணை செயலாளர் பிர வீண் குமார் (முன்னாள் தமிழக தேர்தல் ஆணை யர்) ஆகியோர் தேசிய ஆதி திராவிட ஆணையத் தின் தலைவர் பி.எல். புனியா முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

விசாரணை கூட்டம் முடிந்ததும் தேசிய ஆதி திராவிட ஆணையத்தின் தலைவர் பி.எல்.புனியா செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

சென்னை அய்.அய்.டி. இயக்குநரிடம் எதன் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டது என்று விளக்கம் கேட்கப் பட்டது. முன்பு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இந்த விளக்கத்தை தேசிய ஆதி திராவிடர் ஆணையம் ஏற்கவில்லை. இந்த விளக் கம் முழுமையானதாகவும் திருப்தி அளிப்பதாகவும் இல்லை என்பதால் பத்து நாட்களுக்குள் பதிலளிக்கு மாறு மேலும் ஒரு நோட்டீசு சென்னை அய்.அய்.டி.க்கு அனுப் பப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூலை 6-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவு பிறப் பித்து இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறி னார்.Read more: http://www.viduthalai.in/e-paper/102960.html#ixzz3cZd69cQI

தமிழ் ஓவியா said...

தமிழர் நலம் பெற...


தமிழ்நாடும், தமிழ்மொழியும், தமிழர் தன்மானமும், விடுதலையும் பெற்று வளர்ச்சியடைய வேண்டுமானால், தமிழன் காரியத்தில் தமிழனல்லாதவன்- அவன் எப்படிப்பட்டவன் ஆனாலும் தலையிடுவது முதலில் ஒழிந்தாக வேண்டும். இதை வேறு எதை ஒழித்தாவது ஒழிக்கவேண்டும்.
(குடிஅரசு, 19.2.1944)Read more: http://www.viduthalai.in/page-2/102951.html#ixzz3cZdNOIL4

தமிழ் ஓவியா said...

சர்க்கரை நோய் பற்றிய வாழ்வியல் சிந்தனைக் கட்டுரை


விடுதலை நாளிதழில் 25.5.2015இல் ஆசிரியர் அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரையான சர்க்கரை நோய் பற்றிய சில புரட்டுகளுடன் உண்மை களும் என்ற கட்டுரை மிகவும் பயன் தரத்தக்கதாக இருந்தது. முழு வதுமாக படித்த போது சிறந்த மருத்துவர் கூட தர முடியாத அருமையான அறிவுப்பூர்வமான குறிப்புகளாக இருந்தது. இன்றையக் காலக்கட்டத்திலே பெரும்பாலோருக்கும் சர்க்கரை நோய் தவிர்க்க முடியாததாகி விட்ட சூழ்நிலையில் அது வந்த பின் எப்படி கட்டுப்பாட்டிற்குள் வைப்பது என்பது குறித்தும் - சர்க்கரை நோய் பற்றிய புரட்டுகளை விளக்கமாக புரட்டு எண் 1 முதல் 5 வரை புரட்டு - உண்மை என்று அருமையான விளக்கமாக தெளிவுரை கிடைத்தது. எனக்கும் type-2 சர்க்கரை இருந்தாலும் மருத்துவரின் மாத்திரைகள், நடைபயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகிய வற்றால் கட்டுக்குள் வைத்திருந்தாலும், ஆசிரியர்கள் கட்டு ரைகள் எனக்கு மட்டுமல்ல பல்லா யிரக்கணக்கான வாசகர்களுக்கும் இன்றைய கால கட்டத்தினை பயன் தரத்தக்கதாய் அமைந்துள்ளது.

விடுதலை 26.5.2015 ஆசிரியர் அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந் தனைக் கட்டுரையில் மவுனம் அமைதி யின் விழுமிய சிந்தனையும் பயனும் என்ற கட்டுரை மிகவும் அற்புதமாக இருந்தது. அருமையான நூல் கிருஸ்டோபர் அன்சார்டு என்பவர் எழுதியThe Tibetan Art of Living  புத்தகத்திலிருந்து அருமை யான விளக்கங்களை நமக்கு தருகிறார் ஆசிரியர்.

Wise body -- புத்திசாலித்தனமான உடல்
Wise mind -புத்திசாலித்தனமான மனம்

Wise Life -  புத்திசாலித்தனமான வாழ்க்கை என்ற தலைப்பில் பல செய்திகள் - அதில் மன அமைதி ஷிவீறீமீஸீநீமீ  என்பது அவசியம் நம் வாழ்வில் எவ்வளவு முக்கிய மானது என்பதற்கான அரிய விளக்கம் குறித்தும் கட்டுரை முழுவதும் சிறப்பாக எழுதியிருக் கிறார்கள். ஆசிரியரின் வாழ்வியல் சிந்தனைகள் மக்களின் - மன இருளைப் போக்கும் பகுத்தறிவுச் சூரியனாக பிரகாசிக்கிறது.
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

- தி.க.பாலு
(மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், திண்டுக்கல் - 3)

தமிழ் ஓவியா said...

அய்.அய்.டி.யில் தடை நீக்கம்: தலைவர்கள் வரவேற்பு

சென்னை, ஜூன் 9_ அய்.அய்.டியில் அம்பேத் கர், பெரியார் மாணவர் வட்டத்திற்கான தடை நீக்கப்பட்டதை கட்சித் தலைவர்கள் வரவேற்றுள் ளனர். இது தொடர்பாக தனது டுவிட்டர் செய்தி யில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:

ராகுல் காந்தி

இதற்கு தனது மகிழ்ச் சியை தெரிவித்தார் ராகுல் காந்தி. இந்த விஷ யத்தில் மோடி அரசு, பின் வாங்கியுள்ளது. இது மாணவர்களுக்கு கிடைத்த வெற்றியாகும் எனத் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்

தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேஸ்புக் கில் கூறியிருப்பதாவது: அய்.அய்.டி. சென்னை யில் மீண்டும் அம்பேத்கர்_- பெரியார் மாணவர்  வட் டம் சுதந்திரமான மாண வர் அமைப்பாக செயல் படுவதற்கு அனுமதி அளிக் கப்பட்டுள்ளதை மனதார வரவேற்கிறேன். விவா தங்களுக்கும், கருத்துப்  பரிமாற்றங்களுக்கும் நமது கல்வி நிறுவனங்கள் போதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

ஆட் சேபணைக்குரிய கருத்துக் கள் பற்றி  விவாதிப்பதற் குக் கூட கல்வி நிறுவனங் களில் மாணவர்களுக்கு சுதந்திரம் இருக்கவேண் டும். சட்டத்திற்கு உட் பட்டும், கல்வி நிறுவனத் தின்  விதிமுறைகளுக் குட்பட்டும் கருத்துக் களைப் பரிமாறிக் கொள் வதற்கு மாணவர் அமைப்பு களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கவேண்டும்.

நம் நாட்டின் நாளைய எதிர்காலம் இளைய தலைமுறைதான். எனவே, அவர்கள் ஆக்கப்பூர்வ மான விவாதங்களில் பங்கேற்பதற்கும், தங்களது  வேறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் உரிய சுதந்திரத்தை நாம் வழங்க வேண்டும் என் பதை இந்த தருணத்தில் வேண்டுகோளாக வைக்க  விரும்புகிறேன்.

ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன் (த.மா.கா): மாணவர்களின் தொடர் போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில் அய்அய்டி  நிர்வாகத்துக் கும் அய்அய்டி அம்பேத்கர் -_பெரியார் வாசகர் வட்ட  நிர்வாகிகளுக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தை யின் முடிவில் அந்த அமைப்புக்கு விதிக்கப்பட் டிருந்த தடை   நீக்கப்பட் டுள்ளது. உடன்பாடு ஏற்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி. மேலும் மாண வர்கள் இனிமேல் படிப் பில் முழு கவனம் செலுத்தி வெற்றி பெற  வேண்டும்.

முத்தரசன்

முத்தரசன் (இந்திய கம் யூனிஸ்ட் மாநில செயலா ளர்): சென்னை அய்அய்டி நிர்வாகம் கடந்த 6 ஆம் தேதி மாணவர் அமைப்பு டன் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை  நடத்தி, தடையை விலக்கி, அம் பேத்கர்-_பெரியார் வாசகர் வட்டத்தை மீண்டும் அங்கீகரித்துள்ளது. கருத் துரிமை பாதுகாப்புக்கான ஒன்றுபட்ட போராட்டத் திற்கு கிடைத்த குறிப்பிட் டத்தக்க வெற்றியாகும்.

இப்போராட்டத்தை ஆத ரித்தவர்களுக்கும், பங் கேற்றோர்களுக் கும் இந் திய கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநிலக் குழு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வது டன், அய்அய்டி நடவடிக் கையை வரவேற்கிறது.

தமிழ் ஓவியா said...

மதச்சார்பற்ற நாட்டில் கல்விக் கூடங்களில் கீதை, சூரிய நமஸ்காரமா?
நீதிமன்றம் செல்லுகின்றன இஸ்லாமிய அமைப்புகள்

புதுடில்லி, ஜூன் 10_  அகில இந்திய முஸ்லிம் சட்ட அமைப்பகம் மற் றும் சில சிறுபான்மை அமைப்புகள் ஒன்றி ணைந்து மகாராஷ்டிரா, அரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் அனைத்து மத மக்கள் மீதும் கீதை, சூரிய நமஸ் காரம், யோகா மற்றும் வேத சுலோகங்களை நெட்டுரு செய்ய வற்புறுத் துவதை எதிர்த்து உச்சநீதி மன்றம் செல்ல முடிவு செய்துள்ளது.    அரியானா, மகாராஷ் டிரா, ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தான் மாநிலங் களில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றி ஆண்டு வரு கிறது. இந்த மாநில அரசுகள் ஆட்சிக்கு வந்த உடனேயே இளம்வயதின ரின் கல்வித்திட்டத்தில் இந்துத்துவக் கொள்கை களை திணிக்கும் முயற்சி யில் ஈடுபட்டு வருகின்றன.    அரியானா மாநில அரசு, தான் ஆட்சிக்கு வந்த உடனேயே அரி யானா மாநிலத்திலுள்ள பள்ளிகள் அனைத்திலும் பகவத் கீதையை ஒரு பாடமாக சேர்த்தது. இதனைத் தொடர்ந்து யோகா, சூரிய நமஸ்காரம், மற்றும் வேதங்களில் உள்ள சுலோகங்களை எல்லாக் குழந்தைகளும் கட்டாயம் படிக்கவேண் டும் என்று உத்தரவிட்டி ருந்தது. அரியானாவைத் தொடர்ந்து மகாராஷ் டிராவில் அனைத்து மாந கராட்சிகளுக்கு உட்பட்ட பள்ளிகள் அனைத்திலும் பகவத் கீதை, ஒரு பாட மாக கட்டாயமாக்கப் பட்டது. மெல்ல மெல்ல அனைத்துப் பள்ளிகளுக் கும் கொண்டு செல்லும் திட்டத்தையும் முன்வைத் துள்ளது.

மகாராஷ்டிரா வில் உள்ள தனியார் பள்ளிகள் அனுமதியின் போது கட்டாயம் யோகா மற்றும் சூரிய நமஸ்காரத் திற்கு தனி ஆசிரியர்கள் நியமிக்கவேண்டும் என்ற நிபந்தனையும் சேர்க்கப் பட்டது. மேலும் யோகா சூரியநமஸ்காரத்திற்கான தனி வகுப்புகளும் கட்டா யப்படுத்தப்பட்டன. இந்த இரு மாநிலங்களைத் தவிர ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தான் மாநிலங் களி லுள்ள பள்ளிகளில் பகவத் கீதை சூரியநமஸ்காரம் கட்டயமாக்கப்பட்டது. இந்தியா போன்ற மதச் சார்பற்ற நாட்டில் குறிப் பிட்ட மதத்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் காரணத்தாலும் மதம் சார்பான கட்சி ஆட்சியமைந்ததாலும் அரசியல் சட்டம் கூறிய மதச்சார்பின்மை குப்பை யில் தூக்கி எறியப்பட்டது.  இது தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் சட்ட அமைப்பு மற்றும் சிறு பான்மையினர், மாநில அரசுகளின் இந்த அரா ஜகப் போக்கிற்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்ல முடிவு செய்துள்ளனர்.  இது குறித்து முஸ்லிம் சட்ட ஆணையத்தின் பேச்சாளர் அப்துல் ரகீம் குரோஷி கூறியதாவது, இந்த நாடு, மதச்சார்பற்ற நாடு, இங்கு அனைத்து மதத்தவரும் அவர்களின் நம்பிக்கைப்படி வாழ உரிமை உள்ளது, முஸ்லிம் கள் அல்லாவை மட்டுமே வணங்குகின்றனர். இது அவர்களின் மதநம்பிக்கை தொடர்பான விவகாரம், ஆனால் சில மாநில அர சுகள் பள்ளிகளில் சூரிய நமஸ்காரம் செய்வதையும், பகவத் கீதைப் படிப்பதை யும் கட்டாயமாக்கியுள் ளார்கள்.  இந்தப் பள்ளி களில் முஸ்லிம் கிறிஸ்தவ மற்றும் இதர மதத்தைச் சேர்ந்த குழந்தைகளும் கல்விகற்கின்றனர். இதைக் கருத்தில் கொள்ளாது மத உணர்வுகளை வேண்டு மென்றே புண்படுத்தும் செயல்களைச் செய்துவரு கிறது.  மாநில அரசுகளின் இந்த செயல்கள் தேசியத் தின் ஒற்றுமையைச் சீர் குலைக்கும் விதமாக உள் ளது. தேச ஒற்றுமையை யும், சமூக அமைதியையும் பாதுகாக்கும் வகையில் இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்திடம் எடுத்துச் செல்ல உள்ளோம். நீதி மன்றம் செல்லாமல் இதற் குத் தீர்வு காணமுடியாது. மேலும் நாடு தழுவிய போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...

செய்தியும்சிந்தனையும்

இதற்குப் பிறகாவது...

செய்தி: திராவிடக் கட்சிகளை யாராலும் அழிக்க முடியாதுதான்; ஆனால், அவர்களே அவற்றை அழித்து விடுவார்கள்.
- மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

சிந்தனை: இதற்குப் பிறகாவது எந்த ஒரு திராவிடர் கட்சியாவது பி.ஜே.பி.யுடன் கூட்டு வைத்துக்கொள்ள நினைத்தால், அவர்கள் தானாகவே அழிந்து விடுவார்கள் என்பது மட்டும் உண்மை.

குறிப்பு: தமிழ்நாட்டில் பி.ஜே.பி. பிறக்கும்போதே இறந்துதானே பிரசவமானது.

தமிழ் ஓவியா said...

மத ரீதியில் மக்களை பிளவுபடுத்தும் மோடி அரசு: சோனியா குற்றச்சாற்று


புதுடில்லி, ஜூன் 10_ நாட்டு மக்களை மத ரீதியில் பிளவுபடுத்துவதற் காக, தனது அமைச்சரவை சகாக்கள்மூலம் அச்சம், பீதி கலந்த சூழலை உரு வாக்கும் நடவடிக்கையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஈடுபட்டு வருவதாக காங் கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டினார். டில்லியில் செவ்வாய்க் கிழமை நடைபெற்ற காங் கிரஸ் ஆளும் முதல்வர் கள் மாநாட்டில் பேசிய போது இதனை அவர் தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது: நல்ல நிர்வாகத்தை அளிப்பதிலும், அரசியல் சாசன விதிகளை மதிப் பதிலும் தான் முதன்மை யானவர் என முன்னி லைப்படுத்திக் கொள்ள பிரதமர் மோடி விரும்பு கிறார். அதே வேளையில், வகுப்புவாத வன்முறை களைத் தூண்டும் இழி வான கருத்துகளை தனது அமைச்சரவை சகாக்கள் பலர் பேசுவதை மோடி அனுமதிக்கிறார். இத னால், நாட்டின் மதச் சார்பற்ற கட்டமைப்பு ஏற்கெனவே பாதிக்கப்பட் டுள்ளது. அச்சம், பீதி கலந்த சூழல் திட்ட மிட்டே உருவாக்கப்படு கிறது. மாநிலங்களில் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசுகள் உருவாக்கி வைத் துள்ள வளர்ச்சிக்கான கட்டமைப்பை அழிக்கும் நோக்கில் திட்டமிட்ட தாக்குதல் நடத்துவதன் மூலம் பயங்கரமான இரட் டைவேட விளையாட்டு களில் மத்திய அரசு ஈடுபடுகிறது. நாடாளுமன்ற விதி முறைகளை ஓரங்கட்டி விட்டு, கற்பனைக்கு எட் டாத அளவுக்கு அதிகாரத் தைக் குவிக்கும் நடவடிக் கையில் மோடி ஈடுபட்டுள் ளார். இதனால், சமூகத் துக்கும், நீதித்துறைக்கும் அச்சுறுத்தல் எழுந்துள் ளது. கல்வி, சுகாதாரம், குடிநீர், கிராமப்புறச் சாலை கள், மகளிர் மற்றும் குழந்தைகள் நலன், தாழ்த் தப்பட்டோர் மற்றும் பழங் குடியினர் நலன் ஆகிய வற்றுக்கான நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் முதல்வர் என்ற வகையில், மாநில நலன் தொடர்பான விவ காரங்களில் மத்திய அரசுடன் இணைந்து பணி யாற்றுங்கள். அதேவேளை யில் மக்கள் நலனுக்கு எதிராக மோடி அரசு செயல்படுமானால், காங் கிரஸ்காரர் என்ற வகையில் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். திட்டக் குழு கலைக்கப் பட்டதால் காங்கிரஸ் ஆளும் 7 மாநிலங்கள் உள்பட சிறப்புத் தகுதி நிலையில் உள்ள 11 மாநிலங்களுக்குப் பின்ன டைவு ஏற்பட்டுள்ளது. மாநிலங்களுக்குப் போது மான நிதியை ஒதுக்காமல் அவர்கள்மீது சுமைகளை ஏற்றும் அதே வேளையில் பெருநிறுவனங்களுக்கு மத்திய அரசு வரிச் சலுகை வழங்குகிறது. உள்நாட்டு அரசியலை வெளிநாடுகளில் பேசுவ தில்லை என்ற பாரம்பரியத் தையும் மோடி உடைத்து விட்டார். 2013- ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட நிலம் கையகச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம், சரக்கு, சேவை வரி மசோதா உள்பட பல்வேறு விவ காரங்களில் தனது முடிவில் இருந்து மத்திய அரசு பின்வாங்கியுள்ளது என்றார் சோனியா காந்தி.Read more: http://www.viduthalai.in/e-paper/103018.html#ixzz3cel1D1j9

தமிழ் ஓவியா said...

ஜாதியை ஒழித்தாலே சமபங்கு நிலைக்கும்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜாதிப் பிரிவு இருக்குமிடத்தில் எந்த அரசியலும், பொருளியலும் எப்படிப் பங்கிட்டுக் கொடுத்தாலும், ஒரே வருஷத்தில் பழையபடி ஆகிவிடும். ஜாதியைக் கவனிக்காமல், ஜாதியை ஒழிக்காமல் பொதுவுடைமை பேசுவது அரிச்சுவடி படிக்காமல், பி.ஏ. வகுப்பைப்பற்றிப் பேசுவதாகும்.

_ (குடிஅரசு, 9.2.1936)Read more: http://www.viduthalai.in/page-2/103022.html#ixzz3celQRcYX

தமிழ் ஓவியா said...

செல்லக்கிளி (எ) சு.அறி வுச்செல்வன் _ வ.சந்தியா ஆகியோரது வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவை திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை ஏற்று நடத்தி வைத்து பேசியதாவது:_ மணமகன் செல்லக்கிளி பழகுமுகாம் மாணவர் அவர் இரண்டு முறைதான் வாய் திறப்பார் ஒன்று கொட்டாவி விடும் போது இரண்டாவது சாப் பிடும்போது. பழகு முகாம் நிறைவில் அவருடைய பேச்சை நிறுத்த முடியாத அளவு பேசும் திறனை பழகு முகாம் வளர்த்தது என் பதை நினைவுபடுத்தி தந்தை பெரியார் கல்வி வள்ளல் காமராசர் உழைப்பால் பட்டிதொட்டி எங்கும் பள்ளிகளை தொடங்கி வைத் ததால் நாம் இன்றைக்கு நமது செல்லக்கிளி (எ) அன்புச்செல்வன் - மண மகள் வ.சந்தியா ஆகியோர் பட்டயப்படிப்பை முடித்து உள்ளனர். இந்த அளவுக்கு நாம் உயரக் காரணம் தந்தை பெரியார் பெற்று தந்த இடஒதுக்கீட்டால் என்பதை மறக்கக்கூடாது. இது சுயமரியாதைத் திரும ணம் இதுவே புரோகிதத் திருமணமாக இருந்தால் பார்ப்பான் சொல்லும் மந்திரம் நமக்கு ஒன்றும் புரியாது. மணமக்களுக்கும் ஒன்றும் புரியாது. தீ குண் டம் வளர்த்து எண்ணெயை ஊற்றி புகை கிளப்பி மண மகள் கண்ணில் கண்ணீர் வரும் அளவிற்கு எற்பாடு செய்வார். மணமகளை கேவலப்படுத்தும் வகையில் மந்திரங்களை கூறுவார். இது போன்ற சுயமரியாதை திருமணத்தில் அனைவருக் கும் புரியும்படியான நமது தாய் தமிழ் மொழியில் வாழ்த்துக்களை தெரிவித்து மணமக்கள் உறுதிமொழி கூறி மாலை மாற்றி கொண் டனர். இது போல ஒவ் வொரு தமிழன் இல்லத்தி லும் நடைபெறும் விழாக் களை நம்முடைய பெரி யோர்கள், பெற்றோர்கள் முன்னின்று நடத்துங்கள் தமிழன் இல்ல நிகழ்ச்சிக்கு பார்ப்பனனை அழைக் காதீர்கள் என்று கூறி மண மக்கள் எக்காரணத்தை கொண்டும் பெற்றோர் களை புறந்தள்ளக்கூடாது நன்றாக கவனித்து கொள்ள வேண்டும் என்று கூறி நிறைவுரையாற்றினார்.

குறிப்பு: மணவிழா நிகழ்ச்சி நடந்துகொண் டிருக்கும்போது உற்றார் _ உறவினர்கள், நண்பர்கள் அன்பளிப்பு அளிக்க மேடையை நோக்கி வருகை தந்தபோது மணமகன் செல்லக்கிளி (எ) அன்புச் செல்வன் எழுந்து வந்து மைக்கை வாங்கி அனைவ ரும் தயவு செய்து இருக்கை யில் அமருங்கள் நமக்கு தெரிந்த மொழியில்தான் தமிழில்தான் பேசுகிறார் கள். நமக்கு புரியாத சமஸ் கிருத மொழியில் என்ன பேசுகிறார் என்பதை தெரி யாத நாம் மணிகணக்கில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் நம்முடைய தலைவர்கள் நமக்கு தெரிந்த மொழியில் கருத்துக்களை கூறுகிறார் கள் என்ன பேசுகிறார்கள் என்பதை தயவு செய்து அமைதியாக உட்கார்ந்து கருத்துகளை தெரிந்து கொண்டு சொல்ல வேண் டும் என்று மணமகன் அன் புச்செல்வன் கேட்டுக்கொண் டதால் அனைவரும் இருக் கையில் அமர்ந்து கொண்ட னர்.

கழக மாநாடு போல பையூர் பெரியார் சிலை அருகிலிருந்து மணமகன் செல்லக்கிளி இல்லம் வரையும், காவேரிப்பட் டணம் பெரியார் சிலையி லிருந்து தருமபுரி சாலை எஸ்.எம்.கல்யாண மகால் மண்டபம் வரை நூற்றுக் கும் மேற்பட்ட கழகக் கொடி கட்டியும், டிஜிட் டல் பேனர்கள் வைத்தும், பையூர் தந்தை பெரியார் சிலைக்கு மணமகன் மாலை அணிவித்து சிறப்பித்தார். மாநாடு போல சிறப்பாக செல்லக்கிளி (எ) அன்புச் செல்வன் _ வ.சந்தியா இணை நல ஒப்பந்த விழா நிகழ்ச்சி மிகுந்த எழுச்சியுடன் மாநாடுபோல நடைபெற் றது. இறுதியாக பையூர் திமுக பேச்சாளர் தி.க. இளைய ராசா நன்றி கூறினார்.

10-06-2015

தமிழ் ஓவியா said...

அம்பேத்கரையும், பெரியாரையும் பிரித்தாளத் துடிக்கும் காவிகள் - பார்ப்பனர்கள்!
இந்து ஏடு திரட்டி வெளியிட்ட கருத்துகள்

சென்னை, ஜூன் 10_ சென்னை அய்.அய்.டி. விவகாரத்தில் தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும் பிரிக்கும் சூழ்ச்சியில் சங் பரிவார்க ளும், பார்ப்பனர்களும் மேற் கொள்ளும் சூழ்ச்சிபற்றி இந்து ஏடு பலரிடம் கருத் துகளைக் கேட்டு வெளி யிட்டுள்ளது.

விவரம் இதோ:
சென்னை அய்.அய்.டி யில் புயலடித்து ஓய்ந்த  அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் தடை தொடர்பான சர்ச்சை அர சியல் கட்சிகளின் ஒரு மித்த போராட்டத்தின் விளைவால் முடிவுக்கு வந்துள்ளது. அனைத்துக் கட்சிகளும் ஒரு முகமாக அம்பேத்கர்_ பெரியார் வாசகர் வட்டத்தின் பேச் சுரிமை சுதந்திரத்திற்கு குரல் கொடுத்து அதில் வென்றுள்ளனர்.

அவ்வி ரண்டு தலைவர்களின் கருத்துக்கள் மேலும் மக்களிடையே கொண்டு செல்ல புதிய பாதை உரு வாகியுள்ளது.   பாஜக மற்றும் அதன் துணை அமைப்புபோல் செயல்படும் உதிரிக் கட்சி, அம்பேத்கர்_பெரியார் வாசகர் வட்டத்தின் மீதான தடையைக் கொண்டாடி யுள்ளது.

அதேபோல் முக் கியமாக உதிரிக் கட்சி ஒன்று அம்பேத்கர் இந்து மத பாதுகாவலர் போல வும், பெரியார் தாழ்த்தப் பட்டவர்களின் விரோதி கள் போலவும் சித்தரித்து வருகிறார்கள். மத்தியிலும் தொடர்ந்து அம்பேத் கருக்கு இந்து மதச்சாயம் பூசும் உள்ளார்ந்த வேலை கள் நடந்துவருகின்றன.

சங்பரிவார்களின் இந்த நரித்தந்திரத்தை தமிழகத் தில் உள்ள உதிரிக்கட்சி ஒன்று தமிழக மண்ணில் செயல்படுத்த முனைந் துள்ளது. இதற்கு அம்பேத் கர்_ பெரியார் வாசகர் வட் டத்திற்கான தடையை சாத மாக எடுத்துகொண்டது.

கலி.பூங்குன்றன்

அம்பேத்கர் பெரியார் ஒரு நாணயத்தின் இரு பக் கங்கள், இதை உடைக்க தமிழ்நாட்டில் உள்ள சில சில்லறைக் காவி அமைப்பு கள் முனைந்துள்ளன. தமிழகத்தில் உள்ள தலித் தலைவர்கள் அம்பேத்கர்_ பெரியார் இருவரின் சமூக போராட்டங்களை நன்கு உணர்ந்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...

இருவ ருமே ஜாதிய வேறு பாட்டை உடைத்தெரிய வேண்டுமென்றால் முத லில் பார்ப்பனர்கள் வகுத்த வர்ண முறையை வேரோடு பிடுங்கி எரித்து சாம்ப லாக்கவேண்டும், இதையே தான் பெரியாரின் திரா விட இயக்கமும், அம்பேத் கரின் போராட்டங்களும் தெற்கிலும் வடக்கிலும் வலியுறுத்தி வந்தன.

அம்பேத்கர் மற்றும் பெரியார் இருவருக்குமே ஒரே இலக்குதான், இந்து மதத்தை ஒழித்தாலொழிய இந்தச் சமூகத்தில் புரை யோடிக்கிடக்கும் ஜாதீயக் கொடுமைகளை நீக்க முடியாது.

இந்த வர்ண பேத ஒழிப்புப் போராட் டத்தில் இருவரின் அணுகு முறைகளும் வேறாக இருந்தாலும் அவர்கள் வலியுறுத்தியது சமூகநீதி, ஜாதி ஒழிப்பு, ஆனால் தற்போது இருவரின் கருத் துக்களிடையே பிளவை ஏற்படுத்தி குழப்பத்தை உருவாக்க பார்ப்பன நரித் தந்திரம் சூழ்ச்சி செய்து வருகிறது, என்று விடு தலை பத்திரிகையின் பொறுப்பாசிரியர் கலி. பூங்குன்றன் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறிய தாவது,

அய்.அய்.டி சென்னை முழுவதுமே பார்ப்பனர் களால் ஆக்கிரமிக்கப் பட்ட நிறுவனமாக மாறி விட்டது. உயர் ஜாதியினர் அந்த நிறுவனத்தின் அனைத்து முக்கிய பதவிக ளிலும் 95 விழுக்காடு ஆக்கிரமித்துள்ளனர். பேராசிரியர்கள் இணைப் பேராசிரியர்கள் முதல் உதவிப் பேராசிரியர்கள் வரை எங்கும் பார்ப்பன மயம்தான். அங்கு இருந்து கொண்டு இட ஒதுக்கீட் டின் மூலம் வாய்ப்புப் பெற்று நுழைந்தவர்கள் சமூகநீதிபற்றி பேசும் போதுதான் பிரச்சினையே வெடிக்கிறது என்று கலி. பூங்குன்றன் கூறினார்.

ரவிக்குமார்

விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் குறிப்பிடும்போது, பெரியார் குறித்தும் திராவிட இயக்கம் குறித் தும் சில எதிர்மறைக் கருத் துக்களை கூறியிருந்தாலும், இந்துத்துவா சக்திகளிட மிருந்து பாதுகாப்பது பெரியார் மற்றும் பெரி யாரின் கருத்துகள்தான் என்று தனது நிலைப் பாட்டை கூறினார்.

புனிதபாண்டியன்

தலித் முரசு ஆசிரியர் புனிதபாண்டியன் குறிப் பிடும்போது, சங்கபரிவார் அமைப் புகள் இந்தியா முழுவது முள்ள தலித்துகளின் வாக்குவங்கி மீது நீண்ட நாட்களாகவே ஒரு பார் வையை வைத்துள்ளன.

சங்கபரிவார் அமைப்புகள் வட இந்தியாவில் உள்ள தலித்துகளை மூளைச் சலவை செய்து அம்பேத்கா ரின் இந்துத்துவ எதிர்ப்பு மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மீதான எதிர் மறைக் கருத்துக்களை மறைத்து அம்பேத்கர் சங் பரிவாருக்கு ஆதரவான வர்; அவர்களின் கொள் கைகளை முழுக்க முழுக்க ஆதரிப்பவர் என்ற போலி யான கருத்துகளை தலித் துகளிடையே பரப்பி வரு கிறனர்.

அம்பேத்கர் வலி மையான இந்தியாவை உருவாக்க பாடுபட்டார். அதே நேரத்தில் பார்ப் பனக் கொள்கைகளை கடுமையாக எதிர்த்து வந்தார்.   பெரியார் தனி திரா விட நாட்டை வலியுறுத்தி வந்தார், மேலும் பார்ப் பனீயத்தை எதிர்த்து பார்ப் பனரல்லாத மக்களை ஒன்றுதிரட்டினார். இந்த அமைப்பு அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு கொள்கையை முற்றிலும் ஆதரித்து ஒன் றாக செயல்பட்டு வந்தது.

சென்னை அய்.அய்.டி. யின் அம்பேத்கர்_பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்டதன் எதிர் விளைவாக தமிழகம் மற்றும் இந்தியா முழுவது அம்பேத்கர்_பெரியார் பெயரில் அமைப்புகள் துவங்கப்பட்டுள்ளன.

சென்னையின் அம்பேத் கர்_பெரியார் வாசகர் வட்டம் துவக்கவிழா ஒன் றில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமா வளவன், பெரியாரிய கருத்துகள், அம்பேத்கரிய கருத்துகள், இடதுசாரி சிந் தனைகள் கொண்டவர் கள் அனைவரும் ஒன்று பட்டு செயல்படவேண் டிய தருணம் வந்துவிட் டது. காரணம் மூவருக்கும் பொதுவான எதிரி ஒரு வரே என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...

//பார்ப்பான் என்னைக் கொல்ல மாட்டான்//
நானும் பிரான்சிசும் அய்யாவை வழக்கம் போல சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது, நாளைக்கு திருச்சி கடை வீதியில் உண்டியல் வசூல் செய்ய வேண்டும். நானும் வருகிறேன் , நோட்டீஸ் போடுங்கள் என்றார் அய்யா. என் கையைப் பிடித்துக் கொண்டு, சாதி ஒழிப்பு போராட்ட நிதிக்காக திருச்சி நகரில் ஈ.வெ.ரா பிச்சை எடுப்பார்" என்று நோட்டீஸ் அடிக்க வேண்டும் என்றார் அய்யா.
மறுநாள் 01.08.1957 அன்று காலை சைக்கிள் ரிக்‌ஷாவில் அய்யா உட்கார்ந்து வர, மார்க்கெட்டில் உள்ள மளிகைக் கடைக்காரர்கள் அனைவரும் உண்டியலில் பணம் போட்டனர். நேராக மலைவாசல் திரும்பினோம். இப்போது "மங்கள் &மங்கள் " கடை இருக்கும் இடத்திற்கு முன்பு அப்போது பார்ப்பனர் ஓட்டல் ஒன்று இருந்தது.
சற்று தூரத்தில் அய்யா வரும் போதே, சைக்கிள் ரிக்‌ஷாவைப் பார்த்த பார்ப்பன முதலாளி, கையில் ரோஸ் மில்க்குடன் ஓடிவந்ந்தார். அய்யாவும் அதை வாங்கிக் குடித்தார்.டம்ளரை வாங்கிக் கொண்டு உண்டியலில் 100 ரூபாய் போட்ட விட்டு சென்றார் அந்தப் பார்ப்பனர். எனக்கு கோபமாக இருந்தது.
அம்பீஸ் கபே தாண்டி, சாமி ஆர்ட்ஸ் ஸ்டூடியோ தாண்டி தெப்பக்குளம் அருகே போகும் போது ரிக்‌ஷாவை நிறுத்தச் சொன்னார் அய்யா. என்ன பழனி? என் மேல் கோபமா? என்றார்.
ஆமாம் என்று சத்தமாகவே கூறினேன்.பார்ப்பான் கொடுத்ததை நீங்கள் வாங்கிக் குடிக்கிறீர்கள். ஏதாவது நடந்தால் யார் பதில் சொல்வது? இந்த நகரத்துக்கு நான் பொறுப்பு.நான் நகரச் செயலாளர் என்று கோபமாகவே பேசினேன்.

அய்யா சிரித்துக் கொண்டே, "என்னப்பா நீ, பார்ப்பான் என்றைக்கும் என்னைக் கொல்ல மாட்டான்.என்னைக் கொன்றால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று அவனுக்கு தெரியும். நான் உயிரோடு இருப்பதே அவனுக்கு பாதுகாப்பு என்று நினைத்துக் கொண்டு இருக்கிறான்" என்று கூறி விட்டு வேனில் ஏறி மாளிகைக்கு சென்று விட்டார்..
--பெரியார் தொண்டர் திருசி வீ.அ பழனி வாழ்வும் போராட்டமும் என்ற நூலில் இருந்து,,